நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

 

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தை கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்கு துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தரையில் அழுக்கு இருந்தால் துடைத்துவிடுகின்றோம் நம் உடல் மீது அழுக்கு இருந்தால் துடைத்து விடுகின்றோம். துணியில் அழுக்குப் பட்டால் துடைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைக்கின்றோமா…! அதைத் துடைத்துப் பழக வேண்டும். இல்லை என்றால்… அழுக்கு சேர்ந்தால்… நம் மனம் இருளாகிவிடும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசி தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”
4.உயிர் நம்மை இயக்கும் போது நானாகின்றது
5.நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

ஆகவே உயிரின் உணர்வின் ஒளி எவ்வாறோ அதனின் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்தல் வேண்டும்

இன்றைய மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தீமைகளில் இருந்து விடுபடுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

பூமி உருவானது எப்படி…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பூமி உருவானது எப்படி…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எறும்பைக் காட்டிலும் சிறிய நுண்ணிய உயிரணு கொண்ட உயிராத்மா
2.அவ்வுயிரணுவுடன் மற்றோர் உயிராத்மாவின் சேர்க்கையில்
3.ஒன்றுடன் ஒன்று ஜீவ சக்தி பின்னிய நிலையில் இரண்டும் ஐக்கியப்பட்டு
4.தன் ஆவி நிலையுடன் பால்வெளி மண்டலத்தின் பல நிலைகள் கொண்ட… ஆவியான அமில சக்திகள்…
5.இவ்விரண்டு ஆத்மாவுடன் இதன் சேர்க்கையுடன் ஆவியாய் மோதுண்டு
6.இதன் ஈர்ப்பு நிலையுடன் இதன் வட்டத்திலேயே இவ்வாத்ம அமிலமுடன் “பல சக்தி நிலைகள் கூடி…”
7.இவ் ஆவியான அமிலமே உறைந்த நிலையில்… திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
8.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் பல சக்தி நிலைகள் கூடி
9.இவ்வாவியான அமிலமே உறைந்த நிலையில் திடப்பொருளாய்ச் செயல்படுவதற்கு முன்
10.இவ்வாத்மாவின் ஈர்ப்பில் அமிலமுடன் கலந்து வந்த உயிர்த் துடிப்பு கொண்ட
11.மற்ற உயிரணுக்கள் இவ் ஈர்ப்பு நிலையில் சிக்கி… இதன் வட்டத்திற்குள் வந்த பிறகு
12.இதன் ஆவி அமிலமும் இச் சுழற்சியில் காற்றும் நீரும் படும் நிலையில்
13.திடப் பொருளாய் கெட்டிப்பட்ட உயிர்த் துடிப்பு கொண்ட திடமாய் ஆகின்றது.

இதன் வளர்ச்சியே அமிலத்தின் ஈர்ப்பாக அதிகப்படுகின்றது. அமிலத்தை ஈர்க்கும் சக்தி இவ்விரண்டு ஆத்மாவின் உயிர்ச் சக்தியுடன் உட்சென்ற உயிரணுக்களின் பெருக்கமும் இச்சிறிய கோளமாய் உருப்பெற்ற இதன் ஈர்ப்பின் வட்டத்தில் இதற்கு உணவாய் இவ்வுயிரணுக்களின் சக்திதான் இது வளரும் நிலைக்கு உதவுகின்றது.

உயிரணுக்கள் இவ்வட்டத்திற்குள் வந்தவுடன்… அதன் சக்தியை உணவாய் ஈர்த்து அதன் சக்தியை உண்டு…
1.அதில் வெளிப்பட்ட கல்லிலிருந்தும் மண்ணிலிருந்தும்
2.அதன் உஷ்ண அலையின் வெக்கையில் இஜ் ஜீவராசிகள் தோன்றி சில தாவரங்களை உணவாக உண்டு
3.இவை கழித்த மலத்திலிருந்து பல உயிரணுக்கள் ஜீவன் கொண்ட நிலையில் தவளையாகவும்
4.மற்றும் சில நிலை கொண்ட ஜீவராசிகளும் தோன்றின.

ஒன்று உண்டு… அது வெளிப்படுத்தும் கழிவிலிருந்து பல உயிரணுக்கள் அதன் சுவாச நிலைக்கொப்ப பல ஆயிரம் ஆண்டுகள் ஒத்த நிலையின் வளர்ச்சியிலேயே வளர்ச்சி கொண்டே வந்தது.

இப்படி வளர்ந்தது தான் நம் ஜீவ பூமி.

உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதவி செய்தால் கிடைக்கும் நன்றிக் கடன் கடைசியில் எப்படிப்பட்டதாக இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

இவ்வாறு உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்போது அந்த இடத்தில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பரவச் செய்கின்றோம்.

1.எல்லாரும் இப்படிச் சொல்லிப் பாருங்கள்…!
2.இந்த காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகள் போய்விடும்.

சந்திரனில் நீர் நிலைகள் கூடக் காரணம் என்ன…?

சந்திரனில் நீர் நிலைகள் கூடக் காரணம் என்ன…?

 

நம் பூமியில் இன்றுள்ள மூல சக்தியே கடலில் உள்ள நீர்கள் தான். நம் பூமிக்கு இரண்டு பக்கமும் உள்ள வட துருவ தென் துருவக் கடல்களின் நிலையினாலும் இப்பூமி முழுவதற்குமே அங்காங்குள்ள நீர் நிலைகளும் ஆறு குளங்களும் இப்பூமியில் பெய்திடும் மழையின் நிலையினாலும் தான் இப்பூமி முழுவதற்குமே நீர் நிலை பெறும் சக்தி வந்தது.

1.காற்றுடன் நீர் இல்லாவிட்டால்…
2.தாவரங்கள் மட்டும் அல்ல இப்பூமியில் வளர்ந்திடும் எந்தக் கனி வளங்களும் எந்த உயிரணுவும்
3.இன்றைய நிலை கொண்ட வளர்ச்சிக்கு வந்திருக்க முடியாது.

எந்த அமிலமும் நீருடன் தன் சக்தியைச் சேமிக்கும் சக்தி கொண்ட பூமி தான் இது. நம் பூமியின் கடல்களில் உள்ள நீர் பகலில் குறைந்ததும் இரவில் அதிகப்பட்டும் உள்ளது.

அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மற்ற நாட்களைவிட இந்நீர் அதிகமாகப் பொங்கி வரக் காண்கின்றோம்.

பகலில் சூரியனின் நேர் ஒளி படும் காரணத்தால் அக்கடலின் நீரில் சூரியனின் ஒளி பட்டவுடன் அந்நீரிலிருந்து ஆவியான அமிலங்கள் காற்றுடன் கலந்து விடுகிறது.

ஆனால் இப்பூமி சுழலும் நிலை கொண்டு இரவில் சூரியனின் ஒளிக்கதிர் அந்த நீர்நிலையில் படாமல் அக்கடல் நிலையுள்ள இடமும் இச்சுழலும் தன்மையில் இப்பூமியின் அசைவு கொண்டு வடதுருவத்தில் மோதப்பட்டு பகலில் ஆவியான இவ்வமிலமும் குளிர்ச்சி கொண்டு வட துருவ பூமியில் படிவமாய் குளிர்ந்த நிலையில் பனிக்கட்டியாய் உறைந்து விடுகின்றது.

இப்பூமியின் வட துருவத்திலும் தென் துருவத்திலும் பாறை போல் உறைந்து குளிர்ச்சியான உப்புக் கலந்த அமில சக்தியைக் கொண்ட நீராய் உறைந்துள்ளது.

சூரியனின் ஒளி இரவில் இல்லாததினாலும் அவ்வுஷ்ண அலைகள் இக்கடலில் தாக்காததினாலும் பகலில் ஈர்த்து ஆவியான நீர்களே இரவில் அவ்வுறைந்த நிலைகொண்ட பகுதியில் இக்காற்றலைகள் மோதி நீராய் வடியப் பெற்று இரவில் கடல்களில் நீர் நிலைகளின் பெருக்கத்தைக் காண்கின்றோம்.

வட துருவம் தென் துருவம் இரண்டு பக்கத்திலுமே இந்நிலை கொண்ட சக்திதான் உள்ளது.

அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் ஏற்படும் இவ்வணுக்களின் மாற்றத்தினால் இக்காற்று மண்டலத்தின் சக்தியில்
1.சந்திரனிலிருந்து கிடைக்கப் பெறும் குறைந்த அம்மாவாசையின் அணுசக்தியும்
2.பௌர்ணமியில் கிடைத்திடும் அதிக அணுசக்தியும்
3.இவ்விரண்டு பக்கத்திலும் உறைந்துள்ள நீரின் அமில சக்தி மாற்றம் கொள்ளும் நிலையில் இக்கடல் நீர் பொங்குகின்றது.

பூமிக்கு ஜீவனாகப் பொக்கிஷமாய் அமைந்துள்ள நீர்நிலைகள் வட துருவமாயும் தென் துருவமாயும் இப்பூமி சுழல்வதற்கே சக்தி கொடுத்து நிறைந்திருக்கா விட்டால் நம் பூமிக்கு இம்மழையும் மற்ற நீர் நிலைகள் எவையுமே கிடைத்திருக்காது.

ஜீவனாக நம் பூமிக்கு இருக்கும் இச்சக்தி ஒவ்வொரு மண்டலத்திலும் மாறு கொள்கின்றது. சந்திரனில் நம் பூமியில் பெய்யும் மழையும் மற்ற நீர் நிலைகளும் இங்கு தேங்கியுள்ளதைப் போல் அங்கு மாறு கொண்ட நிலையில் உள்ளது.

இதுவே இப்பூமியின் கலி மாற்றத்தினால்… நம் பூமியின் சக்தியைப் போல்
1.நம் பூமிக்கு அருகாமையில் பூமியுடன் அதிகத் தொடர்பு கொண்ட சந்திர மண்டலம் இருப்பதினால்
2.இப்பூமியின் சக்தியைப்போல் சக்தியை வளர்க்கப் போகின்றது.

நம் பூமியைக் காட்டிலும் சுழலும் வேகம் குறைவு. ஆனால் மாற்றத்தில் சந்திரனின் சக்தி கூடி “துரித வேகம்” அதிகப்படப் போகின்றது. துரித சக்தியின் வளர்ச்சியினால் ஈர்ப்பு சக்தியின் நிலையும் கூடப் போகிறது.

இன்று செழித்து வளரும் நிலையில்லாமல் காற்றும் மழையும் குறைந்துள்ள நிலையில் மழையென்றால்

நம் பூமியில் மழை பெய்வது போல்…
1.பூமி ஈர்த்து ஆங்காங்கு வெளிப்படுத்தும் பருவ மழைகளும்
2.இக்கடலில் புயலாய் ஏற்பட்டு உருக்கொண்டு வீசிடும் காற்றிலிருந்து இங்கு பெய்யும் மழையின் நிலையும்
3.இரவு பகல் என்ற மாற்றம் கொண்ட நிலையும் சந்திரனில் இல்லாமல் உள்ள இன்றைய நிலையே
4.இக்கலியின் மாற்றத்தினால் இப்பூமியின் சக்தியின் நிலையே சந்திரனின் சக்தி நிலையுடன் செயல் கொள்ளப் போகின்றது…!

உலகின் எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… இனி எதுவும் நடக்கலாம்…!

உலகின் எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… இனி எதுவும் நடக்கலாம்…!

 

நாம் நல்லதே செய்கின்றோம்…! சிறிது நோய் வந்துவிட்டால் நாம் என்ன செய்கின்றோம்…?

ஐயோ என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… உடம்பெல்லாம் வலிக்கின்றதே…! நான் நல்லது செய்தேனே ஆண்டவா… நீ என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! அட தெய்வமே… இப்படிச் செய்கின்றாயே…! பிள்ளையாரப்பா… நீ இப்படிச் செய்கின்றாயே… விநாயகா… கணபதி இப்படிச் செய்கின்றாயே…! வஜ்ர கணபதி..! உனக்கு எல்லாம் செய்தேனே உன்னை வணங்காத நாள் இல்லையே என்று இப்படிப் புலபுகின்றோம்.

அதாவது நல்ல பதார்த்தத்தை வைத்துச் சுவையாகச் செய்த பின் அதனுடன் விஷத்தைக் கலந்தே நாம் செய்கின்றோம்.

இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் இவை எல்லாம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்… அது மெய்…!

இதை எல்லாம் சாங்கியங்களாகக் காட்டப்பட்டு ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்தையே மறைத்து விட்டு மனிதன் போகும் பாதையையே இருள் சூழச் செய்துவிட்டார்கள்.

விஞ்ஞான உலகில் இந்த பிரபஞ்சத்தின் நிலைகளிலே விஷத் தன்மைகள் கலந்து நம் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது…!

அணுவைப் பிளந்தான்… அணுக்கதிரியக்கங்களைப் பூமியில் பரப்பினான் பூமியின் ஈர்ப்பிற்குள் (நடு மையம்) வெப்பத் தணலாகக் கூடி கொதிகலனாக மாறும் நிலை அடைந்து விட்டது.

அதே சமயத்தில் பூமிக்கு வெளியே பிரபஞ்சத்திலும் இதைத் தூவினார்கள். சூரியனின் கதிர் அலைகள் வரும்போது இதே கதிரியக்கச் சக்திகளைத் தாங்கி மீண்டும் பூமிக்குள் வரப்படும்போது நஞ்சினை ஒடுக்கிடும் ஓசோன் திரையைப் பிளந்து விட்டது.

அதனால் நம் பூமி நஞ்சை வடிகட்டும் தன்மையை இழந்து மனிதனுடைய சிந்தனைகளையும் இழக்கச் செய்து கொண்டுள்ளது.

ஒரு விஷம் கொண்ட உயிரினம் நம்மைத் தீண்டினால் நல்ல நினைவை நாம் இழப்பது மனிதன் என்ற நிலையையே இழந்திடும் நிலைகளில் வந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவு அபரிதமாக வளர்ந்ததனால் மனிதன் என்ற சிந்தனையற்று இருள் சூழ்ந்த நிலைகளாகப் போய்க் கொண்டிருக்கின்றது இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… எதுவும் நடக்கலாம்.
2.ஏனென்றால் இன பேதம் மன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளில்
3.உலகம் எங்கும் பகைமை உணர்ச்சிகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலைகளில் சிதறுண்டு இன்று தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற சிந்தனைகளை நாம் செலுத்த வேண்டும்.

அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் நமக்குள் நாம் பெருக்க வேண்டும். நமக்குள் விளைய வைத்த ஞானிகளின் உணர்வலைகளை காற்று மண்டலத்தில் பரப்பச் செய்து தீமையை விளைவிக்கும் அந்த நிலைகளைப் பிளக்க வேண்டும்.

நம் ஆன்மாவில் மட்டுமல்ல… இந்தப் பரமான பூமியில் இருக்கும் பரமாத்மாவில் உள்ள தீமைகளையும் பிளக்க வேண்டும்…!

அதைப் பிளக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும். அந்த மகரிஷியின் உணர்வின் சொல்லாக… செயலாக.. எல்லாவற்றையும் மாற்றுதல் வேண்டும்.

என்னவோ சாமி… (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல் நீங்களும் அந்தச் சக்திகளைப் பெற முடியும் என்ற முழு நம்பிக்கையில் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

மீண்டும் இதை எண்ணப்படும்போது இந்த ஞானமே உங்களைக் காக்கும். தீமை செய்தோரைப் பதிவு செய்து மீண்டும் அதை நினைவில் கொண்டு வரும்போது தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.ஒருவன் தவறு செய்தான்… எதிர்த்துப் பேசிவிட்டான்…! என்றால் பழி தீர்க்கும் உணர்வுடனே நாம் செல்கின்றோம்.
2.அதே பழி தீர்க்கும் உணர்வு நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

ஆகவே உங்களுக்குள் வரும் இந்தத் தீமைகளை அகற்றிடும் நிலையாக ஞானிகளின் அருள் உணர்வுகளை இந்த உபதேசத்தின் வாயிலாகக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால் இதையே நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இதைத் தான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஞானிகள் காட்டியுள்ளனர். ஆலயத்திற்குச் செல்லும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்ற இந்த முறைப்படி நீங்கள் வணங்கிப் பாருங்கள்.

உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கி உங்களை ஞானியாக ஆக்கும்…! அதற்குத் தான் இந்த விநாயக தத்துவமே…!

சந்திர மண்டலத்தின் இன்றைய பூகோள வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சந்திர மண்டலத்தின் இன்றைய பூகோள வளர்ச்சி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

கலியின் மாற்றம் கொண்டு நம் பூமியின் நிலை மாற்றம் கொள்ளப் போகிறது என்று உணர்த்தினேன். அந்நிலை கொண்டு அனைத்து மண்டலங்களின் நிலையும் மாறுவதையும் உணர்த்தியுள்ளேன்.

சந்திரனில் நம் பூமியைப் போல் மழையும் இங்குள்ள காலை பகல் இரவு என்று சூரியனின் ஒளி வீச்சில் கிடைத்திடும் மாற்ற நிலை அங்கில்லை.

சூரியனின் ஒளிக்கதிர் வீச்சின் நிலை ஒரே நிலையில் ஒளி பாய்ச்சிடும் சக்தி நிலையாய்ச் சுழற்சி கொண்டு மூன்று குமிழ் நிலை கொண்ட சக்தியில் சந்திரனின் நிலை உள்ளது.

ஒரே நிலையில் சூரியனின் அணு வீச்சுகள் இருந்தாலும் மையப்பகுதியின் பள்ளத்தினால் சந்திரனின் நிலை சிதறாமல் சுழன்று கொண்டுள்ளது. நம் பூமியின் இயற்கை சக்தியைப் போல் சந்திரனின் இயற்கை வளமும் கூடப் போகின்றது.

இன்று சந்திரனில் நீர் நிலை நம் பூமியில் கடல்கள் உள்ளதைப் போல் ஆழ்ந்த நீர் நிலை அங்கு இல்லை. ஆனால் உருவாகிக் கொண்டுள்ளது.

நம் பூமியில் வட துருவ தென் துருவ நீர் நிலையின் சக்தியினால் இப்பூமி சுழலும் நிலையில் காற்று மண்டலம் இந்நீர் நிலையிலிருந்து வருவதினால் இவ்விரண்டு பக்க நீர் நிலையில் ஒன்றை ஒன்று உலகம் சுழலும் நிலையில் ஈர்க்கும் சக்தியும் ஏற்படுகிறது.

அவ்வாறு ஏற்படுவதனால் நம் பூமிக்கு இக் காற்று மண்டல சக்தியுடன் நான்கு நிலை கொண்ட கால நிலையினால் இங்கு ஏற்படும் மழையும் மற்றச் சீதோஷ்ண நிலைகளின் மாறு கொண்ட சக்தியும் நம் பூமியின் பொக்கிஷமாய் உள்ளதைப் போல் சந்திரனில் வரப் போகிறது.

சந்திரனுக்கு அருகாமையில் நீரை ஏற்படுத்தும் அமில நிலை கொண்ட உப்புக் கலந்த அமில சக்தி கொண்ட நட்சத்திர மண்டலங்கள் அதிகமாய் உள்ளன.

இக் கலியின் மாற்றத்தினால்… மாறும் தருணத்தில்
1.மனிதன் சந்திரனுக்குச் சென்று அவனது சுவாச அலையை அங்கு விட்ட நிலையிலும்
2.இப்பூமியிலிருந்து ஆத்மாக்களில்லா ஏவுகணைகள் பல அந்நிலைக்குச் சென்று பூமியின் சக்தி சந்திரனில் செயல்படும் நிலையிலும்
3.நம் பூமியின் பார்வை நிலையில் நம் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சந்திரனில் நிறைந்துள்ள நிலையிலும்
4.தெரிந்தோ தெரியாமலோ சந்திர நிலவை… பௌர்ணமி நாளை… நம் ஆத்மாக்களில் பலர் ஆண்டவனாய் வழிப்பட்டதின் நிலையில்
5.நம் பூமியின் ஆத்மாக்களின் எண்ண சக்தியின் அலையும் சந்திரனில் கலந்துள்ள நிலையில்
6.சந்திரனில் நாம் காணும் அப்பள்ள நிலைகளே நம் பூமியின் நிலை போல் சந்திரனில் இரண்டு பக்கங்களிலும் நீர் நிலைகள் கூடப் போகின்றன.

நம் பூமியில் உள்ளதைப்போல் தாவர வளர்ச்சி நிலையும் செயல் கொண்டு நம் பூமியின் சக்தி நிலைக்கொப்ப வளரும் நிலை “சந்திரனுக்குக் கூடப் போகிறது…!”

அந்நிலையிலிருந்து நம் பூமியில் உள்ள ஆத்மாக்கள் நம் பூமியின் இக்கலி மாற்றத்தில் நம் பூமியின் சுவாச நிலையின் சக்தி கொண்ட சந்திரனில் வாழப் போகின்றார்கள்…! எந்த நிலை கொண்டு…

பூமியில் வாழ்ந்த ஆத்மாக்கள் மாறு கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்திட முடியாது… என்று உணர்த்தியுள்ளோம். பூமியின் ஆத்மாக்கள் எப்படிச் சந்திரனுக்குச் சென்று வாழ்ந்திட முடியும்…? என்ற எண்ணம் இதைப் படிப்பவருக்குத் தோன்றிடலாம்.

உயிரே கடவுள் என்றும்… வெப்பம் தான் கடவுள்…! என்றும் ஏன் சொல்கிறோம்…?

உயிரே கடவுள் என்றும்… வெப்பம் தான் கடவுள்…! என்றும் ஏன் சொல்கிறோம்…?

 

இந்தக் காற்று மண்டலத்தில் சூரியனோ அதனுடைய கதிரியக்க அலைகளைப் பரப்பிக் கொண்டே உள்ளது.

இருந்தாலும்… அதன் ஒளி அலைகள் ஒரு செடியின் மேலோ ஒரு மரத்தின் மேலோ மனிதன் மேலோ மற்ற ஜீவணுக்கள் மேலோ படும் பொழுதுதான் அதனுடைய இயக்கத் தொடரே வருகின்றது.

செடியானாலும் அந்த சூரியனின் அந்த காந்த புலனறிவு தாக்கி உருவாக்கினால்தான் அந்த வெப்பம் உருவாகும். அந்தச் செடியும் வளர்கின்றது… புழுவும் வளர்கின்றது… மனிதனும் வளர்கின்றான்…!

1.அந்த வெப்பம் இல்லையென்றால்… ஒரு ஐஸ் பெட்டியில் போட்ட மாதிரி
2.எல்லா அணுக்களும் செத்துப் போகும்… மனிதனே வாழ முடியாது…!
3.ஆகவே இவை அனைத்திற்கும் இந்தச் சூரியனே காரணமாக இருந்து இயக்குகின்றது.

சூரியனின் வெப்பத்தால் ஓங்கி வளர்க்கும் இந்த உணர்வுகளை… பூமி தனக்குள் நடு மையமாக அந்த வெப்பத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றது.

மார்கழி மாதமோ… அல்லது அதிகமான மழைகள் பெய்யும் காலத்திலோ மேற்பரப்பு குளிர்ந்து விடுகின்றது. இருப்பினும் பூமியின் அடிப்பாகத்தை தோண்டினால் வெப்ப நிலையே வருகின்றது.

1.ஆகவே சேமித்து வைத்த இந்த வெப்ப அலைகள்
2.சூரியனின் வெப்பத் தன்மை தணியும் போது
3.மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ மற்ற தாவர இனங்களுக்கோ அது இயக்க
4.இது உதவுகின்றது நமது பூமி வாங்கி வைத்த வெப்பங்கள்.
5.அந்த வெப்ப நிலை இல்லையென்றால் எதுவுமே வளராது… இயங்காது… வாழாது… ஜீவிக்காது…!

கடலுக்குள் மீன் வாழ்கின்றது என்றால் நீருக்குள் தான் அது இருக்கின்றது. நீருக்குள் இருக்கும் காந்தப் புலனறிவு இந்த மீனுக்குள் உறைந்த அந்த காந்தப் புலனறிவுடன் உராயப்படும்போது மின் ஆற்றல் உற்பத்தியாகின்றது… “வெப்பமாகின்றது…”

இந்தக் காற்று மண்டலத்தில் எப்படிப் பல நிலைகள் உருவாகின்றதோ… நீர் குளர்ந்திருந்தாலும் நீருக்குள் வாழும் மீன் அது அதற்குள் இருக்கும் காந்தப் புலன்கள் கொண்டு வெப்பத்தை உருவாக்குகின்றது.

நாம் மின்சாரத்தை உருவாக்குவது போன்று கடலில் மின்சார மீன் என்றும் உண்டு. ஓடும் வேகத்தில் பளீர்…பளீர்…! என்று மின்னும்.

தரைகளிலும் வாழும் வண்டு இனங்களில் மின்னெட்டாம் பூச்சி என்று உண்டு. அந்த மின் மினிப் பூச்சிகள் தான் நுகரும் தன்மை கொண்டு வெளிச்சத்தை உமிழும்.

இரவிலே பார்த்தோம் என்றால் பளிச்… பளிச்… என்று மின்னிக் கொண்டிருக்கும்.
1.அதாவது தனக்குள் ஒளியைச் சேமித்து வைத்து
2.இருளாகும் போது அது “ஒளிரும் தன்மையாக…” ஒளிபரப்பும் தன்மைகள் இந்த உயிரினங்களுக்கு உண்டு.

இவையெல்லாம் இயற்கையின் செயல்கள்…!

வியாழனிலிருந்து தான் மனித உயிராத்மாக்கள் பூமிக்கு வந்தது – ஈஸ்வரபட்டர்

வியாழனிலிருந்து தான் மனித உயிராத்மாக்கள் பூமிக்கு வந்தது – ஈஸ்வரபட்டர்

 

மண்டலங்களின் சக்தி நிலையும் இன்றுள்ள இம் மண்டலங்களின் சுழற்சியின் வேகத்தைக் காட்டிலும்… பூமியின் சுழற்சி சக்தி அதிகப்படுவதாகவும் இந்த நிலை ஒத்தே மற்ற மண்டலங்களின் துரித நிலையும் அதனதன் விகித நிலைப்படி அதிகப்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இப்பூமியின் ஈர்ப்பு சக்தி நிலையும்… ஓட்ட நிலையும்… இந்த 24 மணி நேரம் 18 மணிக்கணக்கில் வரும் நிலையில் இப்பூமியில் திடப்பொருளாய் உள்ளவற்றின் நிலையெல்லாம் எந்த நிலையில் செயல்படும்…?

இன்றுள்ள மலைகளும் நீர்ன்நிலைகளும் இயற்கை சக்திகள் அனைத்துமே இப்பூமியின் அசைவின் தொடர்நிலை கொண்டு மாற்றம் கொள்ளப் போகின்றன.

இப்பூமியில் இவ் அசைவின்போது ஏற்படும் இயற்கையின் தாக்குதலின் நிலையில்லாமல்
1.தப்பிவிடும் பூமியில் வாழ்ந்திடும் உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியின் சுவாச சக்தியே மாறு கொண்ட பிறகு தப்பி வாழ்ந்திடும் ஜீவராசிகளின் சுவாசத்தின் நிலையும் மாறு கொள்வதால்
3.இவ் இயற்கையிலிருந்து தப்பிடும் எந்த ஜீவராசிகளும் பல காலங்கள் வாழ்ந்திட முடிந்திடாது.

இப்பூமியின் இயற்கை சக்தியே மாற்றம் கொள்ளப் போகின்றது…!

பூமி தோன்றிய நாள் தொட்டே உதித்த உயிரணுக்கள் எவையுமே அந்த உயிரணு அழிந்திடாது… பிம்ப நிலையில் மாறும்…! என்று உணர்த்தியுள்ளேன்.

அதே சமயத்தில் இப்பூமியில் தோன்றி இப்பூமியின் சுவாசத்தையே சுவாசித்து பழக்கப்பட்ட எவ்வுயிராத்மாவும் இப்பூமியில் இருந்து மற்ற மண்டலத்திற்கு மாறு கொண்ட சுவாச நிலையில் சென்று வாழ்ந்திட முடியாது என்றும் உணர்த்தி உள்ளேன்.

இக்கலி மாறிக் கல்கியில் சுவாச நிலை மாறு கொண்ட இப்பூமியில் கலியின் காலம் வரை வந்திட்ட உயிராத்மாக்களின் பிறப்பிடம் எதுவாய் இருந்திடும்…?!

இக்கேள்வியின் நிலை இந்த நிலையிலேயே இருந்திடட்டும்…

1.நம் பூமிக்கு உயிரணுக்கள் தோன்றி உயிராத்மாவாய் அறிவு நிலை பெற்ற மனிதர்களாய் வாழும் சக்தி எந்த நிலையில் வந்திட்டது…?
2.நம் சந்திரனின் நிலையென்ன…?
3.நம் பூமியில் மனித உயிரணுக்கள் தோன்றிடும் வித்து எங்கிருந்து ஆரம்பித்தது…?

நம் சூரியனின் ஈர்ப்புடன் கூடிய 48 மண்டலங்களில் நம் பூமியைக் காட்டிலும் வியாழன் மண்டலத்தின் அளவு விகித நிலை அதிகம். ஆனால் வியாழன் மண்டலத்தின் சக்தி நிலை கூடியிருந்தாலும் உயிராத்மா பிம்ப நிலை கொண்ட மனித இனங்கள் இல்லை.

இன்றும் அங்கு உயிரணுக்கள் உண்டு. நம் பூமியைக் காட்டிலும் செழிப்பு நிலைகொண்ட கனி வளங்கள் அனைத்தும் உண்டு. ஆனால் நம் பூமி இன்றுள்ள மனித ஆத்மாக்களை வளர்க்கும் நிலை நம்மைவிட சக்தி கொண்ட வியாழனில் இல்லை.

ஆனால் நம் பூமிக்கு உயிராத்மாவின் நிலை பெறும் சக்தி வியாழனிலிருந்துதான் வந்தது…!

ஒரு கோடி… இரண்டு கோடி… நிலையில்லை… பல கோடி ஆண்டுகளுக்கு முன் நம் நிலைக்கொப்ப அறிவு நிலைப்பட்டு வாழ்ந்த ஆத்மாக்களைக் கொண்ட மண்டலம் தான் “வியாழன் மண்டலம்…”

இன்று நம் அறிவின் வளர்ச்சியில் மற்ற மண்டலத்திற்குச் செல்லும் ஆசை நிலையின் செயற்கை நிலைக்கொப்ப நம் பூமியிலிருந்து சந்திரன் செவ்வாய் இப்படியுள்ள மண்டலங்களுக்கு ஏவுகணைகளைச் செலுத்துகின்றார்கள் அல்லவா…!

1.அந்த ஏவுகணையின் மூலமாய்ச் சென்ற மனித ஆத்மாக்களின் சுவாச நிலை
2.அங்கு இவர்கள் இருந்து வாழாவிட்டாலும் இவர்கள் விட்டு வந்த சுவாச நிலையின் சக்தியிலிருந்து
3.உயிரணுக்களாகத் தோன்றிடும் வளர்ச்சி நிலையில் வித்திட்டு வந்துள்ளார்கள்.

இதே நிலை போன்றே…
1.பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழனில் தோன்றிய உயிராத்மாக்கள்
2.நம் பூமிக்கு வந்து சென்ற நிலையினால் நம் பூமியில் உயிராத்மாக்களின் தொடர் நிலை கொண்டது.

வியாழனில் ஏற்பட்ட பிரளயத்தினால்… இங்கு எப்படி இக்கலியில் ஏற்படும் பிரளயத்தைச் செப்புகின்றோமோ அந்த நிலை போன்றே
1.அன்று அங்கு ஏற்பட்ட பிரளயத்தினால்
2.நம் பூமிக்கு உயிராத்மாக்கள் தோன்றும் நிலை வந்தது.

வரப்போகும் இப்பிரளய நிலையினால் நம் பூமியின் விகித அளவு நிலை கூடுவதைப்போல் “சந்திரனின் நிலையும் கூடப் போகின்றது…!” (கூடிக் கொண்டிருக்கின்றது என்பதை இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது)

இந்த உடல் வாழ்க்கையில் வரும் வேதனைகளை மறக்க என்ன செய்ய வேண்டும்…?

இந்த உடல் வாழ்க்கையில் வரும் வேதனைகளை மறக்க என்ன செய்ய வேண்டும்…?

 

நாம் எத்தனையோ கோடி ஜென்மங்கள் தாண்டித்தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

புலி ஒரு ஆட்டைக் கண்டால் எத்தனையோ வேதனைப்படச் செய்கிறது. கடித்துக் குதறி அதனுடைய ஜீவனை முழுங்குகின்றது. அதை பார்க்கின்றோம்.

வீட்டிலே பார்த்தால் ஒரு எலியைப் பூனை எத்தனையோ அவஸ்தைப்படச் செய்து அதைக் கொன்று குதறி உணவாக உட் கொள்கிறது.

நாய்கள் பூனைகளைக் கண்டாலே விரட்டிச் சென்று கடித்துக் குதறுகிறது. காக்காயோ குருவிகளோ இரைக்காக வேண்டி விட்டில் பூச்சிகளைக் கொத்தி எத்தனையோ இம்சை செய்து உணவாக உட்கொள்கின்றது என்று நாம் இதையெல்லாம் பார்க்கின்றோம்.

தேள் கொடூர விஷம் கொண்டிருந்தாலும் கீரிப்பிள்ளையோ அந்தத் தேளையும் உதறி உணவாக உட்கொள்கின்றது.

இப்படித் தான் பல கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகும் போது… அந்த உடலிலே துடிதுடித்து… வேதனை தாங்காது…
1.எது தன்னைத் தாக்குகின்றதோ அந்த நினைவிலேயே ஒங்கி வளர்ந்து
2.தன் உடலை மறந்து அந்த வலிமையான உடலுக்குள் உயிர் சென்று
3.அங்கே கருவாகி அந்த உயிரினமாகப் பிறக்கின்றது.

இதைப் போலத்தான் இன்று இந்த உடலிலே வரும் வேதனைகளை எல்லாம் மறந்துவிட்டு
1.மெய் ஞானியின் உணர்வை நாம் தொடர்ந்து
2.அதனின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணிவிட்டால்
3.இந்த உடலின் வேதனைகள் அனைத்தும் இங்கே மடிகின்றது.
4.மெய் ஞானியின் உணர்வோடு நம் உணர்வுகள் ஒன்றுகின்றது
5.நாம் (உயிர்) அங்கே சென்றடைகின்றோம்.

இவ்வாறு அடையச் செய்வதற்குத்தான் தத்துவ ஞானி சூட்சுமத்தில் நடப்பதை எளிதில் கண்டுணர்ந்து மனிதன் தன்னைத் தானறிந்து கொள்ள சாஸ்திரங்களைப் படைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

தான் யார்…? இந்தப் பிள்ளையார்…? என்ற கேள்விக் குறியைப் போட்டு… கல்லால் சிலைகளை வடித்து யானையின் சிரசை மனிதனின் உடலில் பொருத்தி.. பல காரணப் பெயர்களை வைத்து உணர்த்தினர்.

1.அதன் மூலம் நம் மனித உடல் உருவான நிலையையும் உயிர் தோன்றியதையும்
2.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்றும்… எந்த நிலையை அடைய வேண்டும்…? என்பதையும் காட்டினார்கள்.

கால மாற்றமும்… இயற்கை மாற்றமும்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கால மாற்றமும்… இயற்கை மாற்றமும்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இப்பூமி சுழலும் வேகத்தை ஒரு நாளைக் குறிக்க 24 மணி நேர விகிதப்படுத்தி… இவ்வுலகம் முழுவதுமே அக்கணக்குப்படி ஒரு நாள் நிலைப்படுத்தி உள்ளார்கள்.

இந்த 24 மணி நேர விகிதக் காலம் குறித்துப் பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் அந்நிலையை வைத்தே அந்நிலையின் செயலுக்கொப்பக் கால நிலை குறிக்கும் அளவைச் செயலாக்குகின்றனர்.

இந்த 24 மணி நேரம் குறித்த காலத்திற்கும்… இன்று இப்பூமி சுழலும் நிலைக்கும் துரிதம் கொண்டுள்ளது வினாடி விகிதத்தில்…! பல நூறு கோடி ஆண்டுகளில் சில வினாடி நேரம்தான் அதிகத் துரிதத்துடன் இன்று நம் பூமி சுழல்கின்றது.

ஆனால் இக்கலி முடிந்து கல்கியில் இவ்வுலகப் பிரளயம் தோன்றி இவ்வுலக நிலை மாறிச் சுழலும் தருவாயில் நம் பூமியின் சுழலும் வேகம் இப்போதைய நேரத்தில் நான்கில் ஒரு பாகம் எடுத்த நிலையில் மூன்று பாகங்கள் கொண்ட துரித கதியில் இன்று 24 என்பது 18 மணி விகிதத்தில் சுழலப் போகின்றது.

நம் பூமியில் இவ்வசைவின் பிரளயத்தின்போது நம் பூமியுடன் பல நட்சத்திர மண்டலங்களும் சேரப் போகின்றன. நம் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் சக்தி நிலையும் அதிகப்படப் போகின்றன.

நம் சூரியனின் விகித நிலையும் கூடப்போகின்றது. சூரியனும் 48 மண்டலக் கோள்களும் ஒரே சமயத்தில் வளர்ச்சி கொள்ள இவற்றிற்கு சக்தி நிலை கூடும் அமிலங்கள் யாவும் நம் கண்ணிற்கு தெரியாத நிலைகொண்டு பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே இம் மாற்றம் கொள்ளும் தருவாயில் மண்டலங்களின் ஈர்ப்பில் வந்து சேர்ந்து மண்டலங்களின் வளர்ச்சி நிலை கூடப்போகின்றது.

இன்று நம் பூமியில் வடதுருவம் தென் துருவ நிலை கொண்டு பூமியின் சுழற்சியில் பகலும் இரவும் இக்கால நிலைகள் நான்கும் ஒத்த நிலையில் உள்ளன.

மழைக்காலம் மட்டும் அந்தந்தப் பிரதேசங்களின் பூமி ஈர்த்து அப்பூமி கக்கும் உஷ்ண அலைகளுக்கொப்ப மழையின் நிலை அந்தந்த நிலைகளில் மாறு கொண்டு வருகின்றது.

ஆனால் நம் பூமியின் மாற்றம் கொள்ளும் கல்கியின் காலத்தில் இன்று இவர்கள் குறித்துள்ள 365 நாள் விகிதக் கணக்கு வருடச் சுற்றலில் குறைவுபடப் போகிறது.

சூரியனைச் சுற்றியுள்ள அனைத்துக் கோளங்களின் சுற்றலின் நிலையும் துரிதப்படுவதினால் சூரியனின் நிலையும் துரிதம் கொள்ளப் போகின்றது.

நம் சூரியனுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் விகித நிலை கூடும் பொழுது பால்வெளி மண்டலத்தின் ஈர்ப்பு சக்தியில் அமில சக்தியை எல்லாம் இம் மண்டலங்கள் உறிஞ்சிய பிறகு நம்மைச் சார்ந்துள்ள இம் மண்டலங்களின் நிலையில்லா மற்ற மண்டலங்கள் நம் சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட சூரியனின் சுழற்சியின் ஈர்ப்பிலுள்ள ஒரு மண்டலம் ஆவியாய்ப் பிரியும் நிலை கொண்டு தன் ஜீவனை இழக்கப் போகின்றது.

பல நூறு கோடி ஆண்டுகளாய் வாழ்ந்த மண்டலம் அது…!

1.நம் பூமிக்கு மட்டும் மாற்ற நிலை வரப்போகின்றது என்பதல்ல.
2.இந்த அண்டத்திலுள்ள அனைத்து மண்டலங்களின் நிலையிலுமே இந்நிலை செயல்படப் போகின்றது…!