மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல் என்று அறிந்திருக்கின்றோமா…?

மரணமில்லாப் பெரு வாழ்வு வாழும் தகுதி பெற்றது தான் இந்த மனித உடல் என்று அறிந்திருக்கின்றோமா…?

 

ஆதிமூலம் என்பது உயிர்.

நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலும் தான் பார்த்துத் தப்பிக்கும் உணர்வுகள் வலு பெற்று… அதுதான் மூஷிகவாகனா (மூச்சு – வாகனம்). அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அதிலிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வைக் கொண்டு அது தப்பி ஓடுகின்றது.

இருந்தாலும் அந்தத் தப்பிக்கும் உணர்வுகளுக்குள் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் அது அந்த உடலிலே கணங்களுக்கு அதிபதியாகின்றது.

அப்படி ஆன பின்… நோயாகி அல்லது அந்த வலிமையான மிருகத்திற்கு இரையாகி அதன் வாழ்க்கையில் இந்த உடலை விட்டுக் சென்ற பின்…
1.எந்த உடலினை உற்றுப் பார்த்து அதனால் பயந்து… உணர்வின் வேகங்கள் கூடியதோ
2.அதன் உணர்வுகள் இதற்குள் வளர்ந்த பின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
3.இந்த உயிராத்மா அந்த உடலுக்குள் சென்று அதன் உணர்வின் கருவாக பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

இந்த நிலையை நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்படுள்ளது.

ஆகவே இதைப் போன்று பரிணாம வளர்ச்சியாகி ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழ தான் சுவாசித்த நிலையும் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளிலும் வளர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்றுத் தான் வருகின்றது.

உதாரணமாக ஒரு காகத்தை எடுத்து கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது… ஒரு கொத்து கொத்தி விட்டுப் பின் எதிரிகள் யாராவது வருகின்றனரா…? தன்னைத் தாக்க முற்படுகின்றனரா…? என்று எண்ணிப் பார்க்கின்றது.

குருவியானாலும் தன் ஆகாரத்தை எடுத்தவுடனே கொத்தி வைக்கின்றது. மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது ஒவ்வொரு நிமிடமும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.

அதே சமயத்தில் ஒரு பூனை அந்தக் குருவியைச் சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் சிக்கிவிட்டால் பூனையின் வாயில் சிக்கிய குருவிக்குப் பூனையின் நினைவே வருகின்றது.

குருவியின் தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால் குருவியின் எண்ணங்களோ அந்தப் பூனையின் பால் நினைவாற்றல் அதிகரிக்கப்படும்போது அதனின் உணர்வின் தன்மை கருவாக்கி அடுத்துப் பூனையாகத் தான் பிறக்கும்.

இன்றும் பார்க்கலாம்…! மரத்திலே அடங்கி ஒருக்கும் பட்சிகளை…! அது ஒன்று சேர்த்து ஒன்றுக்கொன்று நுனியில் தான் இருக்கும்.

மரக் கொப்புகள் அசைந்தால்… அல்லது அதை காட்டிலும் கடுமையான நிலைகள் (எதிரிகள்) அங்கே வரமுடியாத எல்லையைப் பார்த்துத் தான் சிறு நுனிகளில் தான் எல்லாமே இருக்கும்.

காரணம் அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்குத்தான்…!

குருவி இனங்களாக இருப்பினும் அதனதன் பாதுகாக்கும் எண்ணங்களையே உருவாக்கி அதனின்று மரண பயத்தோடுதான் வாழ்கின்றது. அதன் வாழ்க்கையில் ஒன்று சப்தமிட்டால் கூட எல்லாம் எழுந்துவிடும்.

இதைப் போலத் தான் நாம் குருவியாக… பூச்சியாக… இருக்கப்படும்போது தன் எதிரியிடம் இருந்து தப்பிக்க இந்த உணர்வின் தன்மை கூர்மையாக்கி இந்த உணர்வின் வலிமை பெற்று நாம் தப்பி பல கோடி சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக வந்துள்ளோம்.

இதை உணர்த்துவதற்குத்தான் மூஷிகவாகனா… கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில் மனிதனானக ஆன பின்
1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
2.மனித உடலை உருவாக்கியது நமது உயிர் “ஆதிமூலம்” என்று
3.உயிருக்குக் காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

ஒவ்வொரு சரீரங்களிலும் உயிர் வளர்த்த நிலைகள் கொண்டு… சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி கணபதி…
1.பல கோடி சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து
2.மற்றதை அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது என்று காட்டினர்.

இந்தக் கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர். ஆக கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று
1.நாம் எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து தீமைகளில் இருந்து விடுபட்டு
2.தீமையற்ற மரணமில்லா பெரு வாழ்வு பெற்று வாழும் இந்த மனித உடலைக் கொடுத்தது என்று
3.நம் உயிரை வணங்குபடி சொல்கிறார்கள்.

அங்குசபாசவா…! நம் ஆறாவது அறிவு கொண்டு எதனையும் அடக்கிடும் சக்தியாக அதனை ஒடுக்கி மரணமில்லா பெரு வாழ்வு வாழ முடியும் என்று இந்த நிலையை உணர்த்தவே அங்குசத்தைக் காட்டுகின்றார்கள்.

ஆண்டவன் என்பது ஒரு தனித்த சக்தியல்ல… ஒன்றுடன் இன்று கலந்தால் தான் அப்படிப்பட்ட சக்தியாக மாறும்

ஆண்டவன் என்பது ஒரு தனித்த சக்தியல்ல… ஒன்றுடன் இன்று கலந்தால் தான் அப்படிப்பட்ட சக்தியாக மாறும்

 

இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியில்… அமில சக்தியின் அமில சக்தி மட்டுமல்ல “ஜீவ சக்தியினால் உராயும் நிலை கொண்டு தான்…” ஒவ்வொரு கோளங்களும் சுழல்கின்றது

1.ஒவ்வொரு கோளமும் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலை
2.இந்தப் பால்வெளி மண்டலத்துடன் “மோதுண்டவுடன் தான்…” ஒலி பிறகின்றது
3.அந்த “ஒலியினால் தான்” ஒவ்வொரு மண்டலமும் சுழல்கிறது.

பால்வெளி மண்டலமாக ஜீவனுடன் உள்ள வான மண்டலதையே நாம் பரந்த வெளியாகக் காண்கின்றோம். இந்தப் பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியே அனைத்து மண்டலங்களுக்குமே “உயிர் நாடி…!”

இந்தப் பூமியிலிருந்து நாம் காணும் பால்வெளி மண்டலமான இந்த வான் மண்டலத்தில் படர்ந்த மேகக் கூட்டங்கள் ஓடுவதைப் போல் காண்கின்றோம்.

அந்த மேகக் கூட்டங்கள் மட்டும் ஓடவில்லை நாமும் தான் ஓடுகின்றோம். அனைத்து மண்டலங்களும் தான் ஒரு நிலையில் நிலைத்து நில்லாமல் ஓடிக் கொண்டே உள்ளது.

இந்தப் பூமி சுழலும் வேகத்தைப் பொறுத்து இந்தப் பூமியில் நடக்கும் சீதோஷ்ண நிலைகள் உள்ளன. இந்தப் பூமியிலேயே பல பாகங்களில் பல நிலை கொண்ட சீதோஷ்ண நிலை கலந்துள்ளது.

இந்தப் பூமியிலிருந்து மற்ற மண்டலங்களில் உள்ள நிலை அறிய நம் சக்தியைச் செயலாக்குகின்றோம். ஆனால் இந்தப் பூமியிலேயே பூமத்திய ரேகையான அந்த மையப் பகுதியில் உள்ள நிலை என்ன…?

பூமி சுழலும் 24 மணி நேரக் கணக்கு விகித நிலைப்படி ஒரு நாளையும்… இரவு பகல் நிலை ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் நிலையை எல்லாம்… இந்தப் பூமி சுழலும் வேகத்தையும் அங்கங்குள்ள நிலையையும் வைத்து அறிகின்றோம்.

ஆனால் இந்தப் பூமியின் மையப் பகுதியில் என்றுமே சூரியனின் ஒளிக் கதிர்கள் தாக்குவதில்லை…! என்பதைனை அறிந்துள்ளோமா…?

பூமத்திய ரேகையின் மையத்திற்கு சற்றுத் தள்ளிய இடத்தில் தான் பகலும் இரவும் சில காலங்கள் மாறி மாறி வருகின்றன. மையப் பகுதி என்றுமே இருண்ட நிலை தான்.

ஆனால் அந்த மையத்தினால் தான் இந்தப் பூமியில் நிறைந்துள்ள கடலின் நீர நிலைகள் எல்லாம் உள்ளது.

பூமி சுழலும் வேகத்தில் மற்ற இடத்தில் படும் ஒளிக் கதிரின் அமில சக்தியின் நிலையை இந்த மையப் பகுதி ஈர்த்துப் படிவங்களாக பாறையைப் போன்று அடர்ந்து பதிந்துள்ளன.

இக்சுழலும் நிலையிலேயே மென்மேலும் ஈர்த்து அந்தப் படிவங்களுடன் அந்த அமில நிலை வளர்ந்து கொண்டே உள்ளன.

எந்த நிலையில் உப்பு அமில சக்தி படிவங்கள் வளர்ச்சி கொண்டுள்ளனவோ அந்த நிலை போன்ற விகிதத்திலேயே இந்தப் பூமி சுழலும் வேகத்தில் பால்வெளி மண்டலங்களில் நிறைந்துள்ள அமில சக்தி மோதுண்டு உருளும் நிலையில் ஆவியான உப்புக் கலந்த நீராக வடி கொண்டு தான் இன்று கடலாக வற்றாத நிலையில் பொங்கிக் கொண்டுள்ளது.

பூமத்திய ரேகையின் சிறிது தள்ளி உள்ள நிலையில் சில காலம் ஒளியும் இருட்டும் உள்ள நிலைப்படுத்தித்தான் அந்த நிலையின் தொடர்பு நிலை கொண்ட பூமிகளில் உள்ள கடலில் நீர் நிலை பொங்கி வருவதைக் கண்டிடுவீர்.

இந்த உப்புக் கலந்த அமிலத்திலிருந்து உற்பத்தி ஆகி வருவதே கடல் நீர் உப்புக் கரிக்கும் நிலை. ஆனால் கடற்கரை ஓரங்களிலேயே உள்ள கிணறுகளில் உள்ள நீரெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியுடன் அந்தப் பூமியின் நிலைக்கொப்பச் சுவை தருகின்றது.

இன்று கடலாகப் பொங்கி உள்ள இடத்திலேயே இந்தக் கடல் நீரின் மட்டத்திற்குக் கீழ் அந்தப் பூமியின் நிலையிலிருந்து தோண்டி எடுக்கும் நீரின் சுவை இந்தக் கடல் நீரின் சுவைக்கு மாறு கொண்டதாகத் தான் இருந்திடும்.

நம் பூமியின் இயற்கை சக்தியின் தெய்வமான சூரியனின் சக்தியில் இருந்து பல சக்தியை நாம் நேராகவும்… மற்ற மண்டலத்தில் மோதி அந்த மண்டலத்திலிருந்தும் ஒன்றின் துணையுடன் ஒன்றாகச் செயல்படவே… இந்தப் பால்வெளி மண்டலத்தின் சக்தியின் துணையினால் செயல் கொண்டுள்ளோம்.

இந்த இயற்கையின் ஒவ்வொரு நிலையையும் உணர்ந்திட்டால் அந்த ஆண்டவனின் சக்தியின் நிலை ஒன்றுடன் ஒன்று செயல்படும் நிலையை அறிந்திட்டால் அந்த ஆண்டவன் என்ற சக்தியே தனித்ததல்லாமல் செயல்படுவதாக உணர முடியும்.

1.அனைத்துச் சக்தியுமே ஒன்றுடன் ஒன்று கலந்த சக்தியாகத்தான் அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது
2.அந்த ஒரே சக்தியான நிறைந்த தனித்த சக்தி… அச்சக்தியின் கலந்த சக்தி தான் நம் அனைத்து சக்தியுமே…!