மெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Azhagam Murugan

மெய் ஞானக் கல்வியில் “அழகன்…” என்ற பட்டத்தைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு வளரும்
5.ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்
2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்…!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆனம் வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

“மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Trust and confidence

“மனிதனும் தேவனாகலாம்…” என்று சித்தர்கள் உணர்த்திய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

1.அறிவு-கூர்மை…
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்…
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தைச் செயல்படுத்துகின்றது…? தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.

தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

ஆனால் அதற்குகந்த அங்கஅவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த் ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது… திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…!

aim of meditation

நாம் செய்யும் தியானத்தின் முக்கிய நோக்கம்…!

 

உங்கள் வாழ்க்கையில் சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை கோபம் குரோதம் பயம் ஆத்திரம் அவசரம் என்ற உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவைச் செலுத்துங்கள். அதனின்று வெளி வரும் பேரருளைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். கண்களை மூடி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்.

பின் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாகப் படரச் செய்யுங்கள்.

நாம் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும்…
1.நம் ஆன்மாவில் தான் (நெஞ்சுப் பகுதிக்கு முன்னாடி) முதலில் பெருகும்.
2.ஆனால் அதிலிருந்து உடலுக்குள் போகாது தடைப்படுத்திவிட்டால் முன்னாடியே நிற்கும்.
3.பின் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நம் உடலுக்குள் பெருகப் பெருக
4.நமது ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து வெளியே செல்லும்… சூரியன் அதைக் கவர்ந்து செல்லும்.
5.நம் ஆன்மா தூய்மையாகும்.

ஏனென்றால் பிறர் படும் கஷ்டங்கள் பிறர் படும் துயரங்கள் இதை எல்லாம் நுகர்ந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற நிலைகளில் வித்தாக நம் எலும்புகளில் பதிவானாலும்
1.அவர்கள் உடலிலிருந்து வந்த உணர்வுகளை நம் ஆன்மாவில் கவரப்பட்ட பின் தான்
2.நாம் நுகர்ந்து அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நிலையை அறிய முடிகின்றது.
3.அந்த உணர்வுகள் நம் உடல் முழுவதும் பரவி நம்மை இயக்கச் செய்கின்றது.

இருந்தாலும் நம் உயிர் உடலுக்குள் “ஜீவ அணுவாக மாற்றும் கருவாக” மாற்றிவிடுகின்றது, இதை ஏற்கனவே சொல்லியுள்ளேன்.

இதைப் போல் தனித்த அந்த வேதனையும் கோபமோ சலிப்போ இதைப் போன்ற நிலைகளைக் கருவாக்குவதற்கு முன் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.

உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

இதைப் போல் ஏங்கிப் புருவ மத்தியில் எண்ணி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்கள் முழுவதும் படர வேண்டும் இரத்தங்கள் முழுவதும் கலக்க வேண்டும் என்று இப்படி ஒரு இரண்டு நிமிடம் செய்து வலுவை ஏற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு நோயாளியை சந்திக்கச் சென்றாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் அவர் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் நலம் பெறவேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

நாம் இப்படி எண்ணிப் பழகினோம் என்றால்..
1.அந்த நோயாளியின் உணர்வுகள் நமக்குள் பெருகாது அதைச் சிறுத்து
2.அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணியதை
3.நம் உயிர் இங்கே உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது.

தியானம் என்பது… இப்படித்தான் வாழ்க்கையிலே நாம் மாற்றியமைக்க வேண்டும். தீமைகள் உருவாகாதபடி அருள் ஒளியின் உணர்வுகளைக் கருவாக்கி நமக்குள் பேரொளியாகப் பெருக்கிடல் வேண்டும்.

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?

bravaveness-of-sages

சண்டை போடுகிறவர்கள் உணர்வுகளை நுகர்ந்தால் நம் உடலுக்குள்ளும் சண்டை நடக்கும்…! எப்படி…?

 

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள். அவர்களுடைய செயலைப் பார்த்தவுடனே நமக்கும் கோபம் வருகிறது.

அப்படிக் கோபம் வரும் பொழுதெல்லாம்…
1.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெறவேண்டும் என்று
2.புருவ மத்தியில் நிறுத்திடல் வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பின் சண்டை போடுபவர்கள் அவர்கள் அறியாது செயல்படும் நிலையிலிருந்து விடுபட்டுப் பொருள் கண்டுணர்ந்து செயல்பட்டுச் “சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வுகள்” அவர்கள் பெறவேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினோம் என்றால்…
1.அவர்கள் சண்டையிட்ட உணர்வுகள் நமக்குள் அணுவாக உருவாகாது.
2.நம்முடைய உணர்வுகள் இதை மாற்றி நம்முடைய நல் எண்ணத்தின் தன்மையிலேயே கருவாக்குகின்றது.
3.அவர்களைப் போன்ற குரோத உணர்வுகளோ சண்டையிடும் உணர்வுகளோ நமக்குள் வராது.

ஆனால் ஆத்ம சுத்தி செய்யாது… அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நுகர்ந்து அணுவாகி விட்டால் திடீரென்று அந்த உணர்ச்சிகள் நமக்குள் உந்தி நம்மை அறியாமலே கோபப்படச் செய்யும். “யாராக இருந்தாலும்… அவர்களிடம் சண்டைக்குப் போகச் சொல்லும்…!”

ஒருவன் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான்… என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அந்த (அவன்) உணர்வுகள் என்ன செய்யும்…? அந்தத் தவறு செய்த உணர்வுகள் எல்லாம் நம் உடலிலே விளைந்து நாமும் தவறு செய்பவராகப் போய்விடுவோம்.

ஒருவன் நம்மிடம் கோபிக்கின்றான்… கோபிக்கின்றான்… என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் அதே உணர்வுகள் நாமும் கோபிக்கும் தன்மை வந்துவிடும்.

அந்த அணுக்கள் பெருகப் பெருக அதற்கு அந்தச் சாப்பாடு தேவை. தன் உணர்ச்சிகளை உந்தி அதனுடைய உணவை எடுத்துக் கொண்டு தான் இருக்கும்.

நமக்குள் இப்படிப் பகைமை உணர்வுகளைச் சேர்க்கச்… சேர்க்க…
1.எப்படி நாம் வெளியிலே சண்டை போடுகிறோமோ இதைப் போல்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கும்
2.நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த (மேலே சொன்ன) கோபம் குரோதம் வேதனை போன்ற அணுக்க்ளுக்கும் போர் நடக்கும்.

இங்கே உடலுக்குள் பளீர்…ர்ர்ர்…! என்று மின்னும்.

கை காலில் மின்னும். இடுப்பிலே வலிக்கும். எந்தெந்த உறுப்புகளில் இந்த உணர்வுகள் போர் முறைக்கு வருகின்றதோ அங்கெல்லாம் பளீர்…ர்ர்… பளீர்…ர்ர்…! என்று மின்னும்.

ஆகவே நம் உடலில் வேதனையும் வலியும் எல்லாமே தோன்றும்…!

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாக்காதபடி நாம் எப்பொழுதுமே பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்ற நிலையில் ஒவ்வொரு நொடியிலேயும் தீமைகளைக் காண நேர்ந்தால் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர் கொள்ளுங்கள்.
2.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை ஒரு நிமிடம் நிலை நிறுத்தி ஏங்குங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தப் பேரருள் உணர்வை உணவாகக் கொடுத்து… தீமை செய்யும் அணுக்களை அடக்கி…
1.இணைந்து வாழும்…
2.இணைந்து வாழச் செய்யும் சக்தியாக… மாற்றிக் கொள்ளுங்கள்.
3.மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும் அணுக்களாக உருப்பெறச் செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன் (ஞானகுரு)… இதை மறவாது செயல்படுத்துங்கள்.

கோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்ற வேண்டும்

powerful dhiyanam

கோபத்தை வீரமாக்கி… ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி.. “வீரிய சக்தியாக…” மாற்ற வேண்டும் 

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…? தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…?
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.

நற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

PEACE AND WISDOM

நற்குணங்களைப் பயன்படுத்த வேண்டிய விதம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயேன் வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

PRAISE THE LORD

நாம் போற்ற வேண்டிய உண்மையான சக்தி…!

 

நம்மை எப்படி வாழ்த்திட வேண்டும்…? நாம் எப்படி வாழ்ந்திட வேண்டும்…? என்றும் பிறரை எப்படி வாழ்த்திட வேண்டும்,,,? பிறரை எப்படிப் போற்றிட வேண்டும்…? என்ற நிலைகளையும் நாம் அறிதல் வேண்டும்.

நம்மை ஏமாற்றுவதற்காகப் போற்றுவதும் உண்டு… எப்படியும் உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும்…! என்ற உண்மையின் நிலைகள் வாழ்த்துவது வேறு.
1.ஆனால் உங்களைப் போற்றித் துதித்துவிட்டு
2.அதன் மறைவில் தனக்குள் தன் வாழ்க்கைக்காகச் செயல்படுத்தி (ஏமாற்றி) போற்றக் கூடியவர்கள் பலர் உண்டு.

இதைப் போன்ற நிலைகள் அல்லாது “போற்றல்…” என்பது எப்படி இருக்க வேண்டும்…?

ஒருவருடைய உயர்ந்த நிலையைப் பார்க்கும் பொழுது அவர் உணர்வால் “நாம் அதைப் பற்றி…” நமக்குள் நாம் போற்றிக் கொள்ள வேண்டும்.

1.அவர் உயர்ந்தார்…! அந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் பெருமைப்படும் சக்தியாக நுகர்ந்தோம் என்றால்
2.“அவருக்குள் வளரும் உணர்வுகள்..” நமக்குள் நின்று நாமும் வளர்வோம்.

ஆனால் சிலர் மற்றவருக்கு எல்லா உதவியும் செய்வார்கள்.

அவரிடமிருந்து உதவி பெற்றுக் கொண்டவர்கள் வளர்ந்து விட்டால்..,
1.பார்…! அன்றைக்கு எல்லா உதவியும் செய்து அவனை வளர்த்து விட்டேன்
2.இன்றைக்கு அவன் என்னை மதிக்கின்றனா…? பார்…! என்று இப்படி இந்த உணர்வை மாற்றிவிடுவார்கள்.
3.செய்த நன்மையை மறைத்துத் தனக்குள் கௌரவம் என்ற நிலைகளில் செயல்படுவார்கள்.
4.“தன்னை மதிக்கவில்லையே…!” என்ற உணர்வு கொண்டு
5.தான் செய்த உணர்வை மாற்றிப் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்வர்கள்.

பின் என்ன ஆகும்…?

நல்ல நேரத்தில் செய்த நன்மையின் உணர்வை அழித்து நன்மையற்ற செய்கையைத்தான் செயல்படுத்தும் தன்மையாக வரும்.
1.செய்த நன்மையை நினைவு கொள்ளாது
2.செய்த நன்மையைக் குறைத்திடும் நிலையாக
3.நன்மைகளை மறைத்திடும் நிலையாகத்தான் நமக்குள் உருவாகின்றது.

ஆகவே இதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். உங்களுடைய உணர்வுகள் எல்லாம் தெளிந்த மனம் கொண்டு பேரருள் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

2004க்கு மேல் செல்லும் பொழுது கடும் விஷத் தன்மைகள் வளரத் தொடங்குகின்றது. அதிலே சிக்கிடாது அந்தப் பேரருள் என்ற உணர்வை உங்களுக்குள் சேர்த்து இருள் என்ற உணர்வுகளைக் கவர்ந்திடாது மெய் ஒளி என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து இருளை அகற்றிடும் வல்லமை உங்களிலே பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குத் தெளிவாக்குவது.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் இந்த உணர்வை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.அவர் அறிந்த மெய் உணர்வுகள் அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

குருநாதர் பெற்ற உண்மையின் துணை கொண்டு இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் திரும்பச் சொல்லி உங்கள் நினைவாற்றலைப் பெருக்கச் செய்கின்றோம்.

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?

point to point north star

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?

 

அதனின் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் சந்தோஷமாக இருங்கள் என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!

ஆறு நிலை கொண்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

self control and peace

ஆறு நிலை கொண்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல்
2,தூக்கம்
3.பசி
4.காம இச்சைகள்
5.உடல் கழிவுகளின் உந்தல்
6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் என்ற இந்த ஆறு நிலைகளும்
7.உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

“தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

அதே போல் “உடல் வியாதியையும்…” எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலைக்கு இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து வாழ்க்கை என்ற சமுதாயப் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும் உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும் உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.

பலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள்

karu nochi

பலவிதமான நோய்களைப் போக்கும் நொச்சி இலையின் குணங்கள்

 

“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.

நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி வளர்த்துக் கொள்ளுங்கள்.

1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.

அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.

1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்) என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள் நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையை போடுங்கள்…! அதை நுகருங்கள்…! சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.

அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும் அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின் நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள் நல்லதாக்க வேண்டும்.