நல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்

spiritual Command

நல் வழியில் இப்படித்தான் நடக்க வேண்டும்… நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்

 

உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.

நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.

நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் – நம் பேரில் இருக்கக்கூடிய அந்த அணுக்களை இது தணியச் செய்யும்.

அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத் தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.

நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்ப செல்கிறோம்… என்றால் அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு எதிரியாகிவிடுகின்றது.

அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடன் வேண்டுதல் வேண்டும்.

அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி கொண்டது.

ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி தடைப்படுத்துகின்றோம்.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.

செய்து பாருங்கள்..!

பல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

indian gods

பல தெய்வங்களை வைத்து வழிபட வேண்டியதன் உண்மை நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.

மிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.

அதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.

புளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.

இதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்
1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்
2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித
2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.

இந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.

மற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…?

இது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…!
1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து
2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.

விஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக உணர்த்தினார்கள்.

1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து
2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்
3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ
4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று
5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்
6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.

ஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…!”

உருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு…!

இதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலையின் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.

சப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்
2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்
3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

meditation techniques

வேண்டாதவர்கள் என்று பகைமையானால் நம் நல்ல குணங்களைக் காக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

வெளியிலே பார்க்கும் பொழுது யாராவது வேண்டாதவர்கள் வந்தால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் எனக்கு இப்படிச் செய்தார்களே…! என்று எண்ணினால் போதும்.

இந்த நினைவலைகள் இந்தக் கண்ணின் நினைவாற்றல் அவர் உடலிலே நம் உணர்வு பதிவாகி இருப்பதால் அதைப் போய் உடனே எர்த் (EARTH) ஆகும்.

1.எப்படி ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி
2.அதனுடன் தொடர் கொண்டு அதைத் தரையிலிருந்து இயக்குகின்றனரோ
3.அதைப் போல் நமக்கு வேண்டாதவர்கள் உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது உடனே அவர்களை இயக்குகின்றது.
4.அவர்களின் செயலாக்கங்களை இடைமறிக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது.
5.அந்த அணுக்களின் தன்மை அங்கே வளர்ச்சி பெறுகின்றது… அதன் வழி அங்கே தடைப்படுத்துகின்றது.
6.அதே சமயத்தில் நம்முடைய நல்ல காரியங்களுக்கும் தடையாகின்றது.

பகைமை இல்லாது எதுவுமே நடப்பதில்லை…!
1.ஒரு பகைமை என்று வந்து விட்டால்
2.“உஷார்…” தன்மை கொண்டு
3.நல்லதைக் காக்கும் உணர்வை வளர்த்துவிட வேண்டும்.

மாறாக… பகைமை என்ற உணர்வு வந்தால் எனக்கு இப்படி நடக்கின்றதே…! என்ற எண்ணத்தை வளர்த்து விட்டால் அந்த உணர்வின் அணுக்கருக்கள் நமக்குள் விளைந்து நம் உடலில் நோயாக மாறுகின்றது. நம்முடைய எண்ணங்களும் சீர் கெடுகின்றது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதிகாலையில் துருவ தியானத்தில் கொடுக்கும் ஆற்றலை நீங்கள் எண்ணி எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

எப்பொழுது நம் மனம் சோர்வடைகின்றதோ அப்பொழுது அந்தச் சோர்வை விடாதபடி தடைப்படுத்த “ஈஸ்வரா…!” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணிடல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் பெருக வேண்டும் எங்கள் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை நாம் உள் செலுத்த வேண்டும்.
2.அது தான் கண்ணன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசித்தான்…! என்று சொல்வது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் அது அணுக்களாக விளைகின்றது. நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து தான் அணுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது.

இப்படி அணுவாக உருவாக்கினாலும் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணி அந்த உணர்வை உயிருடன் ஒன்றி மீண்டும் நம் உடலுக்குள் எங்கள் இரத்த நாளங்களில் அந்த அணுக்கருக்கள் உருவாக வேண்டும் என்று செலுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்களும் பெறவேண்டும் என்று
1.வெறும் வாயால்… மந்திரம் சொல்வது போல் சொல்லக் கூடாது
2.உங்கள் நினைவினை வானுக்குக் கொண்டு போய்
3.அங்கிருக்கும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு… அதைக் கவர்ந்து..
4.உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற நினைவினை உள் பாய்ச்ச வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொண்ட பின் அடுத்து என்ன செய்ய வேண்டும்.

மற்றவர்களுக்கும் (பகைமையானவர்கள்) அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி எடுத்து விட்டால் இந்த நினைவு உடனே அங்கே அவர்களுக்கும் செல்கிறது. அதே சமயத்தில் அந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே நமக்குள் வளம் பெறுகின்றது.
2.அப்பொழுது நமக்குள் வரும் அந்த வேண்டாத சக்தி இங்கே தடைப்படுத்துகின்றது.
3.நம் காரியங்கள் நல்லதாகின்றது.

இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

nandi devar

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

 

நாம் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறவில்லை என்றால் அடுத்த நிமிடம் நாம் என்ன எண்ணுகின்றோம்…?

சோர்வடைகின்றோம்… சோர்வை எந்த வழியில் அடைகின்றோம்…?

நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு (நல்ல அணுக்களுக்கு) அதற்குகந்த ஆகாரம் கிடைப்பதில்லை.
1,நாம் எதை எண்ணி அந்த உணர்வின் அணுக்கள் வளர்ந்திருக்கின்றதோ
2.மகிழ்ச்சியான உணர்வுகள் வரவில்லை என்றால் அந்த அணுக்கள் சோர்வடையும்.

அதனுடைய சக்தியை இழக்கும் பொழுது தான் சோர்வான உணர்வை நாம் சுவாசிக்கின்றோம். அப்பொழுது சோர்வடையும் அணுக்கருக்களாக நம் உடலில் உருவாகிவிடுகின்றது.

இப்படி… வியாபாரம் நடைபெறவில்லை…! என்றால் அடுத்தடுத்து சோர்வடைவோம் உணர்வுகள் வந்து ஒரு கோழி தன் இட்ட முட்டையை அடைகாப்பது போல் அந்த அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்குகின்றது.

சோர்வான அணுக்கள் பெருகும் பொழுது இதற்கு முன்னாடி எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தாலும் அல்லது வியாபாரத்திற்குச் சென்றிருந்தாலும் கூட… அடுத்தாற்போல் என்ன செய்வோம்…?

இங்கே பக்கத்திலேயே நல்ல சரக்கு கிடைக்கிறது என்றாலும் கூட இந்தச் சோர்வான உணர்வு வந்தவுடனே
1.சே…! எங்கே பார்த்தாலும்… எப்பொழுது பார்த்தாலும் இதே தான் ஆகிறது…! என்ற இந்த உணர்வு கொண்டு
2.அந்தக் குறித்த நேரத்திற்கு அந்த உணர்வுகள் செயல்படுவதில்லை… வேலை செய்ய விடுவதில்லை.

மேலும் மேலும் இந்த உணர்வுகளை அதிகமாக வளர்க்கப்படும் பொழுது எதன் வழியில்… யாரால்… இது போக முடியாமல் தடைப்படுத்தப்படுகிறதோ… “அவருடைய நினைவு” வருகின்றது.

அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
1.நம்முடைய சோர்வும்
2.அவர்கள் உணர்வையும் இந்த இரண்டையும் சேர்த்து ஒரு அணுவாக உருவாகும்.
3.அதாவது “இவரால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது…! என்ற இந்த உணர்வுகளை எண்ணி எண்ணி வளர்த்து விட்டால்
4.அந்த அணுக்கருக்கள் இதன் வரிசைப்படுத்தி “இரண்டாவது அணுக்களாக” இது விளைகின்றது.

அப்படி விளைந்து விட்டால் நமது வாழ்க்கையில் அந்த அணுத் தன்மை பெருகிப் பெருகி நமக்குள் அது நோயாக உருவாகத் தொடங்குகின்றது.

நோயின் தன்மை ஆன பின்… இந்த வாழ்க்கையில் அதிகமாக நாம் அதே எண்ணங்களை எடுத்துவிட்டால் உடலுக்குப் பின் அவருடைய உடலுக்குள் செல்கின்றோம்…!

அதே மாதிரி கடையை வைத்து வியாபாரம் நடத்துகின்றார்கள். அங்கே அடிக்கடி எலிகள் தொல்லை கொடுத்து அங்கிருக்கும் பொருள்களை உணவாக உட்கொள்கிறது.

அதைப் பார்த்ததும்… “எலி தொல்லை தாங்க முடியவில்லை…!” என்று அந்த எலியின் உணர்வுகள் நிறைய வரும்… உடலுக்குள் அந்த அணுக்கள் கருவாகும்.

இவர்கள் என்னதான் எலியைப் பிடித்து நசுக்கிக் கொன்றாலும் கூட அந்த எலியின் உணர்வுகள் இங்கே வந்து கொண்டே தான் இருக்கும்.
1.அந்த எலியின் உணர்வுகள் வளர்ந்து விட்டால்
2.மனித உடலை உருவாக்கிய அணு செல்கள் அது மாறுபடுகின்றது.
3.கடையில் எலிகள் அதிகமான பின் அந்த எண்ணங்களே தோன்றும்.

இதைப் போல் நுகரும் உணர்வுகளால் உடலில் உள்ள உறுப்புகள் சிறுகச் சிறுக குறையத் தொடங்கிவிடும். நினைவு பூராமே அந்த எலியின் பால் வரும்.

அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் பாருங்கள்…! இங்கே எலி வருகிறது.. அந்தப் பக்கம் போகிறது.. அதைக் கடிக்கிறது…! என்று அவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

சில பேர் மரணமடையப் போகும் முன் எலியின் பால் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தியிருந்தால் அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள்…?

இறந்த பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இந்த உணர்வை முழுமையாக்கிக் கொள்வார்கள். அந்த உடலுக்குள் சென்று இந்த எலியின் நினைவு தனக்குள் வரப்படும் பொழுது அதை முழுமையாக்கிய பின் அங்கிருந்து சென்ற பின்
1.எலியின் உடலுக்குள் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.
2.எலியின் உணர்வை வளர்த்து அதனுடைய கருவாகி இந்த உயிர் எலியாகத்தான் பிறக்கச் செய்கிறது.

நாம் நினைக்கிறோம் மனிதனாக இன்று இருக்கின்றோம் என்று…! ஆனால் மனிதனுக்கு அப்புறம் பிறவி என்ன…? என்கிற வகையிலே தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்குத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை..!” என்று ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

வீர குணத்துடன் தியானித்தால் மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெற முடியும்

valor meditation

வீர குணத்துடன் தியானித்தால் மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெற முடியும்

ஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்
1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ – அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்
2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்
3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.

ஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.

இந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை
1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்
2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.

வீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு
1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்
2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்
3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.

எண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு
1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்
2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.

அன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…!

ஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.

ஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.

1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை
2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு
3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்
4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.

ஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்
1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு
2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே
3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.

அறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…!

இவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்…! என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.

எந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்…! “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.

ஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…!
1.உன் படைப்பையே நான் அறிய
2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற
3.அறிவோம்…! என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்
4.ஞானச் செயல் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

காலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.

இந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.

இந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே “வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி நாம் எடுக்கும் ஜெப நிலை கொண்டு பல உன்னத நிலைகளைப் பெறலாம்.

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SIVASAKTHI VINAYAGA

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.

1.பெண்மை எது ஆண்மை எது..?
2.உயர் சக்தியின் தன்மை எது…?
3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…?
4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்
5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…?
6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…?

பின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகி பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.

ஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…!

அந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்
1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே
2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி
3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.

வாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்
1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்
2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்
3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.

இந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…?

பெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை
1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்
2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப
3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்
4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்
5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.

முந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.

ஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.

எவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.

மனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.

மாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”

தாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…!

1.வளர்ப்பின் வளர்ப்பாகி…
2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்
3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்
4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.

நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?

agastyar foot print

நம் நினைவின் ஆற்றல் “அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்ல” என்ன செய்ய வேண்டும்…?

 

காலையில் எழுந்தவுடனே ஒரு நினைவாகவே அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து நீங்கள் வீட்டை விட்டு வெளியிலே செல்லும் பொழுது அல்லது ஒரு தொழிலை ஆரம்பிக்கும் பொழுது
1.அகஸ்திய மாமகரிஷியையும்
2.துருவ மகரிஷியாக ஆன உணர்வையும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும்
4.இந்த மூன்று நிலையையும் எண்ணிப் பழக வேண்டும்.

அந்த உணர்வுகள் தனக்குள் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டு தொழிலோ மற்ற காரியங்களோ அல்லது எதைச் செய்கின்றீர்களோ அதைச் செய்ய ஆரம்பியுங்கள்.

நீங்கள் நுகர்ந்த இத்தகைய உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் அணுவாக உருவாக்கும் கருக்களாக உங்கள் இரத்தநாளங்களிலே பெருக்கச் செய்யும்.

அந்தக் கரு வளர்ச்சிகள் பெற்று அகஸ்தியனின் அருளை எளிதில் பெறக்கூடிய தகுதி உருவாகி உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அணுக்கள் பெருகத் தொடங்கும்.

1.முதலில் கரு என்பது முட்டை
2.பின் அதனின் உணர்வின் தன்மையை நாம் இவ்வாறு ஒவ்வொரு நாளும் எண்ண எண்ண
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைந்து முழுமை ஆகி விடுகின்றது.

ஒரு கோழி தான் இட்ட முட்டையை எப்படி அடைகாக்கின்றதோ அதன் உணர்வின் தன்மை உடலின் வெப்பமாக்குகின்றதோ அதன் பின் அந்த வெப்பத்தின் துடிப்பு கொண்டு அந்தக் கருக்கள் எல்லாம் அதன் இனக் குஞ்சாக விளைகின்றது.

குஞ்சாக ஆன பின் வெளி வந்து இந்தக் கோழி எந்த உணவை உட்கொண்டதோ அதே உணவை இதுவும் உட்கொள்ளத் தொடங்குகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் தியானத்தின் மூலம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் கருவாக உருவாகின்றது.
1.அதனுடைய நினைவுகளை நீங்கள் கூறக் கூற அந்த முட்டையின் வளர்ச்சி பெறுகின்றது.
2.அந்த எண்ணங்களை அடிக்கடி நீங்கள் எண்ணும் பொழுது அதை அடைகாக்கின்றது.

ஏனென்றால் கோழி தன் குஞ்சின் நினைவு கொண்டு அதை அடை காக்க “எங்கிருந்தாலும்” எப்படி இரை தேடி விட்டு வந்து அடை காக்கின்றதோ அதைப் போல
1.நீங்கள் எத்தொழிலைச் செய்தாலும்
2.எந்த வேலையைச் செய்து கொண்டிருந்தாலும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் விளைய
4.நீங்கள் அடிக்கடி இந்த நினைவுகளை எடுத்துப் பழகுங்கள்.

அதாவது முதலில் நாம் பதிவாக்கி வளர்த்துக் கொண்ட அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் சக்தியை அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி நாம் வளர்க்கும் திறனாக… “அடைகாப்பது போன்று” செயல்பட்டால் அந்த அருள் சக்திகள் உடலில் விளைகின்றது.

முட்டையிலிருந்து வெடித்து வந்த குஞ்சு தான் இரை தேடும் பொழுது… தாய்க் கோழி “கத்தி…” அதற்கு இரையைக் கொடுக்கின்றது;

இதைப் போல நமக்குள் அந்த மகரிஷிகளின் அணுவின் கருவாகி விட்டால் இந்த உணர்ச்சியின் கிளர்ச்சிகள் நம் இரத்தநாளங்களிலே கிளம்பும் போது
1.நமது உயிர் அந்த உணர்வுகளை உணர்ச்சிகளாக அதை வெளிப்படுத்தி
2.காற்றுக்குள் கலந்துள்ள அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எல்லாம்
3.கண் வழியும் காது வழியும் உடல் வழியும் நாம் சுவாசிக்கும் அந்த உணர்வின் வழி நமக்குள் கொண்டு வந்து
4.சுவாசிக்கச் செய்து உடலுகுள் பரவச் செய்து மீண்டும் அந்தக் கருக்களை உருவாக்குகின்றது.

நாம் இந்த வழியில் தொடர்ந்து நடந்தால்… அது வளர்ச்சி பெற்ற பின்… நம்முடைய நினைவின் ஆற்றல் “அந்த அகஸ்தியன் சென்ற பாதையிலேயே செல்லும்…!”

படைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Adi Shakti devi goddess

படைக்கப்பட்டவனின் படைப்பு வளர்ச்சியின் சக்திக்கும் தாம்பத்ய சக்திக்கும் உள்ள உண்மை நிலை என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறும் வழி

dhuruva dhiyanam

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன ஆற்றலைத் தியானத்தின் மூலம் பெறும் வழி 

 

அகஸ்தியன் (மகரிஷியாக) ஆவதற்கு முன் அவனுடைய தாய் தந்தையர்கள் நுகர்ந்தறிந்த பச்சிலை மணங்கள் இப்பொழுது வெளிப்படுகிறது. வெளிப்பட்டுள்ள அந்த மணங்களை நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க நாம் இப்பொழுது தியானிக்கப் போகின்றோம்.

1.அதை நீங்கள் நுகரும் பொழுது இப்பொழுது அவர்கள் காலத்தில் (பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்)
2.எப்படி நஞ்சினை வென்ற உணர்வுகளை அகஸ்தியன் கவர்ந்தானோ
3.அதே சக்தியை நாமும் பெற முடியும்.

அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் பல பச்சிலைகளை அரைத்துத் தன் உடலில் முலாமாகப் பூசினாலும் அந்த உணர்வுகளை அவர்கள் நுகர்ந்து கருவில் இருக்கும் அணுக்களுக்கு இந்தச் சக்திகளைக் கொடுத்தார்கள்.

அதையும் இப்பொழுது உங்களுடைய உணர்வுகளை நினைவாக்கி நினைவு கொண்டு அதைப் பெறத் தியானிக்கப் போகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழி நீங்கள் நுகரப்படும் பொழுது…
1.நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நீங்கள் பெறப் போகின்றீர்கள்.
2.உங்கள் உடலிலே வளர்ந்து வரும் அந்த அணுக்களும் இதை நுகரப் போகின்றது.
3.அதன் வழி அன்று அகஸ்தியன் பெற்ற… அவன் வளர்ந்த… வளர்ச்சி பெற்ற அந்தத் திறனை எல்லாம்
4.நாம் அனைவரும் பெறப் போகின்றோம்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவினை உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அதை நாம் நுகரப்படும் பொழுது அனைவருக்கும் அவர்கள் பெற்ற (அகஸ்தியன், அவன் தாய் தந்தையர்) அருள் சக்தியிலிருந்து வெளிப்பட்டதை நீங்கள் நுகரும் சக்தி பெறுகின்றீர்கள்.

அந்த மணங்களை இப்பொழுது நீங்களும் உணர முடியும்.

மணத்தை உணர முடியவில்லை என்றால் உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவுவதை (சக்கரம் போல் சுழல்வதை) உணரலாம்.
1.உங்கள் உடலில் தீங்கினை விளைய வைக்கும் அணுக்கள்
2.அது ஒடுங்குவதையும் உங்களால் உணர முடியும்.

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணித் தியானியுங்கள்.

அந்தச் சக்தி இங்கே படர்கின்றது… தியானிக்கும் உணர்வுகளில் அதை ஈர்க்கும் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் திருமணமான பின் துருவ மகரிஷியாகப் பருவம் பெற்ற
1.அவர்கள் கணவனும் மனைவியும் துருவத்தை உற்று நோக்கி…
2.இருவரும் ஒன்றாக நுகர்ந்தறிந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் இப்பொழுது பரவி
3.உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அந்தச் சக்தியைப் பெறும்.

அதன் வழி உங்கள் நினைவின் ஆற்றல்… “துருவப் பகுதியில்” செல்லும். அங்கிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்திகளை நீங்கள் நுகர்வீர்கள்… அந்த உணர்வுகள் உங்கள் உடலிலே பரவும்… உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் பெறும். உங்கள் இரத்தநாளங்களில் இவை அனைத்தும் கருவாக உருப்பெறும்.

1.உங்கள் புருவ மத்தியில் இளம் நீல நிற அலைகள் வரும்
2.அந்த உணர்வுகள் உயிரினின்று உடலுக்குள் பரவும் உணர்வுகளை நீங்கள் அறிவீர்கள்… காணலாம்…!

துருவத்தில் நிலை கொண்டு… துருவ நட்சத்திரமாக வானுலக ஆற்றலைக் கவர்ந்து இன்றும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து வரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் நினைவாற்றல் அனைத்தும்… துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி… அதன் வழி கவர்ந்து… உங்கள் உடல்களில் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள்.

1.இப்பொழுது உங்கள் புருவ மத்தியில் பளீர்…ர்ர்…! என்று இளம் நீல அலைகள்
2.உங்கள் உயிர் ஈர்க்கும் நிலையை உணரலாம்… காணலாம்
3.உங்கள் உடலுக்குள் இந்த உணர்வுகள் பரவுவதையும் உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து வரும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது வான்வீதியில் மிதப்பதைப் போன்று உணர்வுகள் வரும்.

அரும் பெரும் காட்சியாக வானுலகம் உங்கள் உடல்களிலும் உணர்வுகளிலும் காண முடியும். வளர்ந்து வரும் உணர்வினை உங்களால் அறிய முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற “குலதெய்வங்களின் உயிரான்மாக்கள்…” சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளி பெறும் சரீரம் பெறவேண்டும் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றும் அவர்களை உந்திச் செலுத்துங்கள்.

எமக்கு குருநாதர் வழி நடத்திச் சென்ற அதே வழிப்படித்தான் இதை இந்த அதிகாலையில் தியானிக்கும்படிச் செய்தது. அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதியச் செய்து அதை நீங்கள் நுகர்ந்து உடலில் பதியச் செய்யும் நிலையும் உருவாக்கியது.

1.அந்த அகஸ்தியன் பெற்ற விஷத்தை வென்றிடும் ஆற்றலும்
2.விண்ணுலக ஆற்றலைப் பெற்ற நிலைகளும் நீங்கள் இப்பொழுது நுகர்ந்திருந்தால்
3.அந்த மணங்கள் நுகர்ந்தவர்கள் அதை அறியும் பருவம் பெறுகின்றீர்கள்.

அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது “அவன் பெற்ற மகா பச்சிலைகளின் மணங்களை…” நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள்.

வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து துருவ எல்லையை துருவ மகரிஷிகளை எண்ணும் பொழுது
1.புருவ மத்தியில் இளம் நீல ஒளிக்கதிர்கள் – ஈர்ப்புடன் ஈர்ப்பு வட்டமாக
2.அந்த உணர்ச்சிகள் அந்த ஒளி அலைகள் தெரிந்திருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று வரும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வுகளை நுகரும் பொழுது வானில் மிதப்பதைப் போன்று அந்த உணர்வுகளை நீங்கள் நுகர்ந்திருப்பீர்கள். உங்கள் உடலில் அந்தச் சக்திகள் படர்ந்திருக்கும்.

இதுகள் எல்லாம் அகஸ்தியன் கருவிலிருந்து அந்த உணர்வுகளைப் பெற்று அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து அலைகளாகப் படரச் செய்துள்ளது.

இதனை நீங்கள் வரிசைப்படுத்தி உங்கள் உடலை உருவாக்கிய அணுக்கள் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தினோம்.

அதன் வழி கொண்டு காற்றிலிருக்கும் அந்த அரும் பெரும் சக்திகளை நீங்கள் நுகர்ந்து அறியும் ஆற்றலும் அகஸ்தியன் வளர்ந்து வந்த அந்த அருளாற்றல் உங்களுக்குள் வளர்ச்சி பெறுவதற்கும் இது உதவும்.

அவர்கள் துருவ மகரிஷியாகி அதனின்று வெளிப்பட்ட உணர்வுகளை அவர்கள் சென்ற பாதையில் நீங்களும்
1.இதைக் கணவனும் மனைவியுமாகக் கவர்ந்து உங்களில் வளர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதற்கும்…
2.அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒருவரை ஒருவர் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வெளிப்படுத்தியதை உங்களில் பெறச் செய்வதற்கும்..
3.உங்கள் உடலை உருவாக்கிய அணுக்களைப் பெறச் செய்வதற்கும்
4.உங்கள் இரத்த நாளங்களிலே இரத்தங்களில் கலக்கச் செய்வதற்குமே இதைச் செய்தது.

பூமியின் ஈர்ப்பை விடுத்துச் சென்று துருவ நட்சத்திரமாக எல்லை கொண்டு பூமிக்கு வரும் அனைத்துச் சக்தியும் ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டும் ஒளிச் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றோர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இப்படி உயிர் தோன்றி அகஸ்தியன் வழியில் நாம் செல்லும் பொழுது அடுத்து நம்முடைய எல்லை பிறவியில்லா நிலை தான்…!

எல்லையில்லாத அகண்ட அண்டத்தில்… என்றும் நிலையான உணர்வுகள் கொண்டு… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையைத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானித்து… உங்களுக்குள் பதியச் செய்து அதை ஞான வித்தாக ஊன்றியுள்ளோம்.

1.பதிந்த சக்தியின் துணை கொண்டு
2.நீங்கள் தியானிக்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு நிலைகளிலும் அந்தச் சக்தி கிடைக்கும்.
3.ஆகவே இந்தக் காலை துருவ தியானத்தை ஒரு பத்து நிமிடமாவது அவசியம் இருக்க வேண்டும்.

கண்களை மூடித் தியானிப்பது நல்லதா…? கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…?

eyes meditating

கண்களை மூடித் தியானிப்பது நல்லதா…? கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…?

 

நான் தியானம் இருக்கும் பொழுது
1.எனக்கு எண்ணமே வரமாட்டேன் என்கிறது…
2.அது வருகிறது… இது வருகிறது…! என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நாம் கண்களை மூடியவுடனே இது எல்லாம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நம் ஆன்மாவில் இருப்பது தான் நம்மை இப்படித் தடைப்படுத்துகின்றது.

ஒரு வெறுப்பான செயலை ஒருவர் செய்கின்றார்…! அதைப் பார்த்தவுடன் நமக்குள் ஏற்கனவே இருக்கும் வெறுப்புணர்வு கொண்ட அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது. கிடைத்ததும் அது வீரியமடைகின்றது.

நீங்கள் அன்றைக்குத் தியானத்தில் வந்து உட்கார்ந்தீர்கள் என்றால் உங்கள் மனது எங்கெங்கேயோ போகும்…!

நாம் தொழில் செய்யும் இடங்களில் யாராவது நமக்குத் தவறானதுகளைச் சொல்லி இருந்தால் அந்த நினைவு தான் நமக்கு வரும். இந்த ஆன்மாவில் முன்னாடி இருப்பது இப்படி வரும்.

1.அப்பொழுது நீங்கள் தியானத்தில் உட்கார முடியுமா என்றால் விடாது…!
2.நீங்கள் எந்த வழியினால் ஆனாலும் சரி…!
3.இந்த உணர்வுகள் – உடலில் உள்ள அந்த அணுக்கள் அது தன் ஆகாரத்தை எடுத்து அது வளரத் தொடங்குகிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

அந்த மாதிரி வந்தது என்றால் கண்களை மூடத் தேவையில்லை. (இது முக்கியம்)
1.உங்கள் கண்ணின் நினைவை நேராக அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
3.அதைச் சுவாசியுங்கள் (இதுவும் முக்கியம்) இந்த உணர்வுகள் நமக்குள் அதைச் சுவாசித்து மறுபடியும் கண்களை மூடுங்கள்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்த உணர்வுகள் உந்தப் பெற்றதோ… தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ… அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டு செயல்படும் சக்தி பெறவேண்டும்…! என்று இதை எண்ணிவிடுங்கள்.

அந்த அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு நாம் உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல் இப்படிக் கொடுத்து நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து அணுக்களாக ஆன நிலையில் அது தன் உணர்ச்சியை உந்தித் தான் அது உணவை எடுத்துக் கொள்கிறது.

ஆனால் மேலே சொன்ன மாதிரி நாம் மாற்றி கண்களைத் திறந்து எடுத்துச் சுவாசித்து இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள் செலுத்தினால் அந்த அணுக்களும் மாறிவிடும்.

இல்லை என்றால்…
1.நீங்கள் தியானத்தில் அவர்கள் அப்படிச் செய்தார் இப்படிச் செய்தார் என்று எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த அணுக்கள் அதிகமாகி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.
3.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம் மன நோய் போன்ற நிலை வரும்.

பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும். நமக்குள் மனிதன் என்ற ஆறாவது நிலைக்கே எட்டாதபடி ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போகும்.

இதை எல்லாம் நாம் கண்டிப்பாக மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.