தியானத்தில் சுவாசத்தின் கனத்தைக் குறைத்துப் பேரானந்த நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual awakenings..jpg

தியானத்தில் சுவாசத்தின் கனத்தைக் குறைத்துப் பேரானந்த நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
`1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

பல தர்மங்கள் செய்த கர்ணன் ஏன் அழிவின் தன்மைக்குப் போகின்றான்…?

karna- கர்ணன்

பல தர்மங்கள் செய்த கர்ணன் ஏன் அழிவின் தன்மைக்குப் போகின்றான்…?

 

கர்ணன் சகல வல்லமை பெற்றவன்தான்…! அவன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டாலும் அவனும் அழிவின் தன்மைகள் அடைகின்றான்.

குருவை அலட்சியப்படுத்தியோ குருவென்ற நிலைகள் தன் அருகினில் இருக்கின்றாரென்றும் எளிதில் கிடைக்கின்றாரென்றும் இதன் வலுவின் தன்மை கொண்டு தவறு செய்தால் கடைசியில் கௌரவர்களுக்கு எந்த நிலை ஆனதோ அதை நிச்சயம் அடைவார்கள்.

கர்ணன், அந்த கௌரவர்கள் பக்கம் இணைந்து வாழ்ந்ததினால், கடைசியில் அந்தத் தீமையின் விளைவுகளிலேயே மடிகின்றான்.
1.தர்மம் செய்கின்றேன்… நன்மை செய்கின்றேன் என்று
2.இன்று சிலர் பிறருக்குச் செய்வதுபோல் செய்து,
3.அவர்களை அடிமைப்படுத்தி தன்னுடைய சுயலாபங்களுக்காகச் செய்கின்றார்கள்.
4.இது ஏமாற்று வித்தை.

தங்களுக்கு வலு இருக்கின்றது என்றால் செல்வந்தர்கள் பலருக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏமாற்றி இவருடைய சுயநலங்களைப் பெற்றுக் கொள்வார்கள். மகாபாரதத்தில் கர்ணன் பலருக்குத் தர்மங்கள் செய்தாலும் தீங்கு உள்ளவர் பக்கம் இருக்கின்றார்.

தர்மம் செய்யும் பொழுது தீங்கு உள்ளவன் எளிதில் அதைப் பெறுகின்றான்.
1.அதனால் இவன் செய்யும் தர்மத்தின் நிலைகளும் சீர் குலைகின்றது.
2.கௌரவர்களின் தீமைகளால் கர்ணனுடைய தர்மம் அழிக்கப்படுகின்றது.
3.இவருடைய தர்மம் நன்மை செய்வதில்லை மாறாகட்ஜ் தீங்கு செய்வோருக்குதான் உதவுகின்றது.

ஆகவே தர்மம் ஒருவருக்குக் கொடுக்க வேண்டுமென்றால் அது எதுவாக இருக்க வேண்டும்..?

1.நல்வழியில் வாழும் அதற்குண்டான உபாயத்தைக் காட்டுவதும்
2.நற்குணங்களைக் காக்கச் செய்வதும் தான் உண்மையான தர்மமாகும்.

அர்ச்சுனன், பல வலிமை கொண்டு உணர்வின் தன்மை எது பெற்றாலும் அவன் நியாயத்தின் எல்லை கொண்டு “குருவை மதித்தான்…” அதன் உணர்வு கொண்டு படை பலம் கொண்டாலும் குருவின் நிலையை நஞ்சை வென்றிடும் குருவின் வலுவைத் தனக்குள் அந்தத் தீமையை வென்றிடும் உணர்வைக் கொண்டு வந்தான்.

எதிரிகள் பக்கம் தன் தாத்தா பீஷ்மர் சகலகலா வல்லமை பெற்றிருந்தாலும் அந்த எதிரிகளுக்கு அவருடைய வலுக்கள் தன் ஆசையின் நிமித்தம் பிறருக்குத் தொல்லைகள் கொடுத்து அபகரிக்கும் அவர்கள் பக்கம் செல்வமும் செல்வாக்கும் இருப்பினும் கண்ணன் பாண்டவர்களை மீட்டுவதாகத் தெளிவாகக் கூறுகின்றது மகாபாரதம்.

நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்றும் தீமையின் பக்கம் சார்ந்து இருக்கும்பொழுது இவருடைய தர்மமும் நிலைத்து இருந்ததேயில்லை.

அவனின் தர்மத்தைக் கண்ணன் எப்படிப் பறித்துக் கொள்கின்றான்…? என்று காட்டப்பட்டது. பிறர் செய்யும் தீமையின் நிலைகள் வரும் பொழுது உடலுடன் ஒட்டிய தர்மத்தின் நிலைகளைக் கண்கள் தான் பறித்துக் கொள்கின்றது.

தர்மத்தின் நிலைகள் வளர்ந்தாலும் தீமையின் நிலைகள் அதிகரிக்கப்படும் பொழுது இயற்கையில் விளைந்த உணர்வுகள்,
1.கண்ணால் பார்த்த தீமையின் உணர்வு அதிகமாகி
2.உடலில் விளைந்த தர்மத்தின் நிலைகளைத் தணிக்கச் செய்கின்றது.
3.அதனால் கர்ணனுடைய செல்வமும் சகலகலா வல்லமையும் மடிகின்றது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது மகாபாரதம்.

இவையெல்லாம், ஞானிகள் காட்டிய உணர்வை நாம் உற்று பார்க்கும் பொழுது இந்த வாழ்க்கைக்கே வருகின்றது.

குருவின் தன்மையைத் தவறான வழிகளில் பயன்படுத்தினால் இன்று சுகமாக இருக்கும். ஆனால் அது சாப அலைகளுக்கே அழைத்துச் செல்லும். இதைத்தான் மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

உயிர்க் காற்று (பிராணன்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

breathing yoga noe

உயிர்க் காற்று (பிராணன்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

mirror mind.jpg

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பரிபக்குவ நிலை

உதாரணமாக பாலில் விஷம் பட்ட பின் அதை நாம் குடித்தால் மயக்கம் தான் வரும். சிந்திக்க முடியுமா…? அதே மாதிரி பாலில் காரம் பட்டு விட்டது என்றால் அதிலே இனிப்புப் போட்டிருந்தாலும் குடித்தால் ருசி வருமா…? வராது.

இதைப் போல் தான் நாம் நல்ல மனதுடன் இருந்தாலும் பிறருடைய தீமையான செயல்களைப் பார்க்கப்படும் பொழுது அது நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் நாம் அமைதி இழக்கின்றோம்.

அந்தத் தீமையின் இயக்கத்திலிருந்து காத்துக் கொள்வற்குத்தான் இந்த அதிகாலைத் துருவ தியானத்தையே உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் இந்தத் தீமைகள் நடக்கிறது என்றால் அது நடக்காமல் தடுத்து நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும். அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வினை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

அதைச் சேர்க்கப்படும் பொழுது பிறிதொரு தீமை நம்மை இயக்காதபடி அதை அடக்கிச் சிந்திக்கும் தன்மை வரும்.

அப்பொழுது…
1.அந்தத் தீமை செய்பவர்களுக்கு எப்படிச் சொல்ல வேண்டும்…? என்ற ஞானமும் கிடைக்கும்.
2.அதை அவர்கள் எற்றுக் கொள்ளும்படியான சந்தர்ப்பத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற பருவமும் நமக்குள் வரும்.

உதாரணமாக நாம் சமையல் செய்து கொண்டிருக்கும் பொழுது சரியாக வேகாமல் தாளித்தால் எப்படி இருக்கும்…? சரியான முறையில் வெந்து இறக்கப்படும் பொழுது அதைச் செய்தால் அது ருசியாக வரும்.

காய்கள் வேகப்படும் பொழுது வேகுவதற்கு முன்னாடி அதிகமான உப்பைச் சேர்த்து விட்டால் சில காய்களும் அதனுடன் இணையும் தன்மையைப் பிரித்துவிடும். உப்பு அதிகமாகிவிடும். குழம்பின் ருசி மாறிவிடும். இந்த மாதிரிச் சிலர் குழம்பு வைத்தார்கள் என்றால் ருசியே மாறிவிடும்.

1.பருவம் தெரியாதபடி உப்பைக் கலப்பதனால் குழம்பின் ருசி மாறிவிடும்.
2.அந்தப் பருவம் இதனுடன் இணைந்திடும் சந்தர்ப்பம் வரும் பொழுது உப்பை நாம் கலக்கலாம்.

சில மசால்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைக்கப்படும் பொழுது அந்தச் சூட்டிலே சமமாகப் போய்ச் சேரும். ஆனால் இந்த உப்பென்ற நிலைகள் வரும் பொழுது முன்னணியில் இருந்து தடுத்துவிடும்.

அது தடுத்து விட்டால் அந்தக் காய்கறிகள் ருசி இருக்காது. உப்பு தான் முன்னாடி இருக்கும். குழம்பின் நிலைகள் மாறிவிடும். இவைகள் எல்லாம்
1.அந்தச் சந்தர்ப்பத்தில் நாம் செய்யக்கூடிய உணர்வுகள் எதுவோ
2.அது கலப்பதற்குத் தகுந்த மாதிரித்தான் அந்த ருசி வரும்.

ஆகவே ஒருவர் தவறு செய்கிறார்… என்று எண்ணும் பொழுது “அவர்களை அறியாமல் அது இயக்குகிறது…!” என்பதை நாம் உணர்தல் வேண்டும். அதற்காகத் தான்
1.நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
2.உடலைக் கோவில் என மதிப்போம்
3.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் என்று துதிப்போம் என்று சொல்வது.

ஈசனால் உருவாக்கப்பட்ட ஆலயம் தான் அந்த உடல். அவர்களை அறியாமலே அந்தச் செயல்களும் அந்தச் சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

நமக்குள் இருக்கும் உயிரை நாம் மதிக்கின்றோமா..?

WHO AM I

நமக்குள் இருக்கும் உயிரை நாம் மதிக்கின்றோமா..?

 

ஒருவர் மேல் அன்பாக இருக்கின்றோம். அவர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் தோஷம் வந்துவிடுகின்றது. நம் உடலின் அணுக்களில் பட்டபின் வேதனைதான் படுகின்றோம்.

நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம். பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அந்த வினைகளுக்கு நாயகனாக தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது…! என்பதைச் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

எல்லா உயிரினங்களும் விஷத்தைத் தன் உடலாக்கி வலுவாக இருக்கின்றன. மனிதனோ விஷத்தினை நஞ்சாகப் பிரித்துவிட்டு நல்ல உணர்வை வலுவாக்கி நஞ்சை மலமாக்கும் திறன் பெற்றவன்.

1.நஞ்சென்று தெரிந்து கொண்டபின்,
2.நஞ்சை நீக்கும் சக்தி பெற்றது மனித உடல்.
3.அதனால்தான் “அங்குசபாசவா…” என்று காட்டப்பட்டது.
4.தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் வந்தபின் தீமையை நீக்கிடும் சக்தி பெற்றது மனித உடல்.

இதையெல்லாம் உருவாக்கியது நமது உயிர். நம் உடலில் உள்ள கணங்களுக்கு எல்லாம் ஈசா… கணேசா…! என்று தெளிவாகக் கூறப்பட்டு இருக்கின்றது.

1.ஆறாவது அறிவு கொண்ட மனிதன் இந்த உயிரை மதித்து நடப்பதற்கு
2.வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது என்று
3இந்த விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனானபின் எத்தனையோ உயிரினங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ இயந்திரங்களை உருவாக்குகின்றான். எத்தனையோ தாவர இனங்களைப் புதிது புதிதாக உருவாக்குகின்றான்.

எந்த உயிர் மனிதனாக உருவாக்கியதோ அது முழுமுதல் கடவுள். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் இதைச் சொல்லியுள்ளான்.
1.என்று மனிதனை உருவாக்கியதோ,
2.அது முழுமையான கடவுள்.

ஆகவே நம் உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.

நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் ஏன் பள்ளி கொண்டுள்ளான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ADHI SESAN Vishnu

நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் ஏன் பள்ளி கொண்டுள்ளான்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமைரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!

இன்று உள்ளது நாளை இல்லை…! ஆனால் என்றும் நிலையானது நம் உயிர்…!

 

இந்தப் பிரபஞ்சம் சீக்கிரம் அழியப் போகின்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட அணுக்கதிர் இயக்கங்கள் எந்தப் பக்கம் குண்டுகளைப் போடுகின்றார்களோ அங்கே சூரியனின் ஒளிக்கதிர்கள் விழாது, உறைபனியாகிப் பூமி திரும்பப் போகின்றது.

அது உறைபனியாகி விட்டால் சூரியனின் இயக்கம் இல்லை என்றால் பூமி நகர்ந்து செல்லும் பொழுது குளிர்ச்சி அதிகமாகி இந்த உணர்வுகள் உறையும் பருவம் வருகின்றது.

அதிலிருந்து தப்ப முடியுமா என்றால் முடியாது…?

1.இன்று உள்ளது நாளை இல்லை…!
2.ஆனால் என்றும் நிலையானது உயிர்.
3.தீயிலே குதித்தாலும் உயிர் வேகாது.
4.உடலில் உள்ள உணர்வின் தன்மை உடலில் உள்ள அணுக்களை உயிரைப் போல உருவாக்கிவிட்டால்
5.என்றும் அழியாத நிலை…! இது தான் வேகாநிலை.

மனிதனான பின் அன்பால் பரிவால் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டு அறிகின்றோம். வெளியில் நடக்கும் பல தவறான உணர்வுகளை நுகருகின்றோம். இவையனைத்தும் உடலுக்குள் வலிமையாகின்றது.
1.நம் உடலில் உள்ள நல்ல குணத்திற்கும் இதற்கும் போர் நடக்கின்றது.
2.இதைத்தான் சாஸ்திரங்களில் பரசுராமனுக்கும் சீதாராமனுக்கும் போர் நடக்கின்றது…! என்று காட்டினார்கள்.

சீதாராமனோ விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனை வீழ்த்துகின்றான். பரசுராமனோ சிவ தனுசை எடுக்கின்றான். ஆனாலும் தோல்வி அடைகின்றான். நமது சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டி இருக்கின்றார்கள்.

வராகனுக்குப்பின் (பன்றி), பரசுராமன், மனிதன் என்ற நிலைகள் ஆனபிறகு எல்லோரும் பேரன்போடு வாழவேண்டும் என்ற ஆசை வருகின்றது.
1.ஆனால் நமக்குள் இருக்கும் தீமையை நீக்கத் தெரியவில்லை.
2.நமது சந்தர்ப்பம் எது வலிமையாகின்றதோ அதன் வழிதான் செல்லுகின்றோம்.

ஒரு குழம்பு வைக்கவேண்டும் என்றால் மிளகாய் உப்பு புளி அனைத்தையும் சமமாகச் சேர்த்துச் சுவைமிக்கதாகச் சமைக்கின்றோம்.

இதைப்போல வேதனை என்ற உணர்வை நமக்குள் எடுத்துத் தெரிந்து கொண்டாலும், அதை மாற்றி அமைக்கும் சக்தி நமக்குள் வேண்டும். அந்த சக்தி பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.
1.இதன் மூலம், உங்களை நீங்கள் அறிகின்றீர்கள்.
2.இந்த உயிரின் இயக்கத்தையும் மனிதனான நிலையும் உங்களால் அறிய முடிகின்றது.

1.கோபிப்பது நாமல்ல;
2.வேதனைப்படுவது நாமல்ல;
3.வெறுப்படைவதும நாமல்ல;
4.தற்கொலை செய்யச் சொல்வதும் நாமல்ல,
5.தவறு செய்யச் சொல்வதும் நாமல்ல,
6.நெருப்பிலே ஒரு பொருளைப் போட்டால் அந்தப் பொருளின் மணம் தான் நுகர்ந்தவரை இயக்குகின்றது. இதைப் போல “நம்முடைய எண்ணம்தான் நம்மை இயக்குகின்றது…”

நமது எண்ணம் கொண்டு வேதனைப்படுவோரை எண்ணினால் கோபப்படுவோரை எண்ணினால் அது “வாலி…”. நமது நல்ல குணங்களை அது அடக்கி நமக்குள் வலிமையானதாக மாறி நம்மை, அதன் வழிகளில் இயக்குகின்றது.

இவைகளை நமக்குள் மாற்றி அமைக்க வேண்டுமென்றால் நமது ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை வென்று ஒளியின் உடல் பெற்ற, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

இது வலுவானபின்…
1.நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெறவேண்டும்,
3.தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்
4.தெய்வீக அன்பைப் பெறவேண்டும்
5.தெய்வீக அருளைப் பெறவேண்டும்
6.தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெறவேண்டும்,
7.மலரைப் போல மணம் பெறவெண்டும்,
8.மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் ஒரே வழி

Dazzling ancestor soul lights

குடும்பப் பாரம்பரியத்தில் நம் சந்ததிகளைக் காக்கும் ஒரே வழி

 

நம் குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் சேர்ந்து அவர் உயிராத்மாவை அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஒளியின் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

ஆனால் தனித்து அவரை மட்டும் எண்ணக் கூடாது….!

1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உடல்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலத்தின் பேரருளும் பேரொளியும் படர்தல் வேண்டும் என்ற
4.இந்த வலுவைக் கூட்டிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்தவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் பொழுது அவர்கள் ரிஷியின் தன்மை அடைந்து விடுகின்றனர். சப்தரிஷிகளுடன் சப்தரிஷியாகி விடுகின்றார்கள். மனித உணர்வின் ஆசைகள் கொண்டு அங்கே செலுத்திடல் வேண்டாம்.

“அவர்கள் அங்கே ஒளியின் சரீரமாக இருக்கும் நிலையில்…” ஒவ்வொரு நாளும் அவர் அருள் நமக்குள் வளர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று இதனைக் கவர்ந்து இந்த வாழ்க்கையில் இருளை அகற்றும் தன்மையைப் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அடிக்கடி அவருடைய நினைவுகள் ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று அவருடைய நினைவு வரும் பொழுதெல்லாம் இவ்வாறு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர் உணர்வு உங்களுக்குள் உண்டு. இந்த உணர்வினை மாற்றியமைத்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அவர்கள் என்றுமே பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்தல் வேண்டும் என்ற “இந்த உணர்வினைத்தான் கூட்டுதல் வேண்டும்…!”

இந்த உணர்வுகள் நமக்குள் வளர வளர அவர்களுடைய உணர்வைப் பெற்ற அணுக்கள் நம் உடலிலே இருந்தால் அதைச் சிறுத்துப் பேரின்பம் என்ற உணர்வின் அணுக்களாக நமக்குள் மாற்றிக் கொள்ள முடியும்.

1.அதே சமயத்தில் குடும்பப் பாரம்பரியத்தில் அணு செல்கள் சென்று
2.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் உடலில் வந்த நோய்களை
3.மற்ற தனது சந்ததிகளுக்கு உருவாக்காதபடி மாற்றியமைக்கவும் உதவும்.

ஏனென்றால் அவருடைய இன விருத்தியில் வந்த அந்தக் கருக்களில் இத்தகையை நிலைகள் கலந்து விட்டால் பின் வரும் நிலைகளில் அது தொடர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும்…! எல்லோரும் அருள் வழி வாழ்ந்து அழியாத பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நம் நல்ல மனது ஏன் எப்படி எதனால் மாறுகின்றது…?

Power of Mind

நம் நல்ல மனது ஏன் எப்படி எதனால் மாறுகின்றது…?

 

நாம் சாதாரணமாக இருந்தாலும் திடீரென்று நம் உடலில் உள்ள அணுக்களுக்குப் பசி எடுத்தது என்றால் அந்த உணர்ச்சியைத் தூண்டி திடீரென்று கோபம் வரும்.

அதே சமயத்தில் குழந்தைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம். அந்த உணர்வு அணுவாக இருக்கும்.
1.அதை நினைக்காதபடி சந்தோஷமாக இருந்தால்
2.அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் அந்த உணர்ச்சியை உந்தும்.
3.ஏனென்றால் உயிருக்கு வருகின்றது… வந்தவுடன், அந்த உணர்வை எடுத்துச் சாப்பாடு எடுக்க ஆரம்பித்து விடுகிறது.

அந்த மாதிரி நேரமானாலும் அதற்குச் சாப்பாடு கொடுக்க கூடாது. உடனே.. “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணினால் உள்ளுக்குள் போகாது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ ஆன்மா பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

நீங்கள் சும்மா இருந்து பாருங்கள். உங்களை அறியாத கவலை சஞ்சலம் வேதனை ஆத்திரம் எல்லாம் எங்கிருந்தோ வரும். அப்படி யார் யார் மேலே இருந்ததோ, அவர்கள் மேலே தான் வரும்.

அவர்கள் நம்மை எப்படியெல்லாம் கெட்டு போகவேண்டும் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ அந்த உணர்வெல்லாம் எடுத்து, அந்த கெட்டுப் போகும் அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கும்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதா…?

நாம் இந்த நிலையை மாற்றுவதற்குத்தான், கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து என்ன செய்கிறோம்…? “இராமேஸ்வரம்…!” அங்கு வந்தவுடன் தான் “தனுஷ்கோடி” – “கோடிக்கரை”, நாம் இப்பொழுது கோடிக்கரையில் இருக்கிறோம்.

1.ஒவ்வொரு நிமிடத்திலும் அந்தத் தீமைகள் வரும் பொழுது
2.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து
3.அந்த விஷ்ணு தனுசைக் கொண்டு மாற்றிடல் வேண்டும்.

இந்த உயிர் தான் “விஷ்ணு தனுசு…!” என்பது. இந்த உயிரின் தன்மை ஒளியாக மாற்றும், விஷ்ணு தனுசு என்ற இந்த உணர்வை எடுத்து நம் உடலிலுள்ள அத்தனை அணுக்களுக்கும் சேர்க்க வேண்டும்.

இராமேஸ்வரத்தில் இராமன் என்ன செய்கின்றான்…? நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்து பூஜிக்கத் தொடங்குகின்றான். இது தான் தனுஷ்கோடி.

இந்த வாழ்க்கையில் இதனுடைய நிலைகள் வரப்படும் பொழுது, நமக்குள்
கோபம் வரப்படும் போது,
வெறுப்பு வரும் போது,
வேதனை வரும் போது,
சலிப்பு வரும் போது,
சோர்வு வரும் போது,
ஆத்திரம் வரும் போது,
இவை எல்லாவற்றையும் அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கொண்டு மாற்றிக் கொண்டு வரும் போது எல்லாம் ஒன்றாகின்றது.

“தனுஷ்கோடி…” ஒன்றாகி, ஒரு உணர்வின் தன்மை வலுவாகிறது…! என்று பொருள்.

இராமாயணத்தைப் படித்து பாருங்கள். அதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கின்றது…!
1.நாம் எதற்காக வந்தோம்…?
2.எதனால் வந்தோம்…? என்ற உண்மைகள் அனைத்தும் அதிலே காட்டப்பட்டுள்ளது.

உதாரணமாக இப்போது நம் உடலில் வேதனையை நுகர்ந்து விட்டால் என்ற உணர்வுகள் அணுக்களாகிறது. அந்த வேதனை மணத்தை கொடுத்தவுடன் உடல் அழுகுகிறது.

ஆனால் அருளுணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உடல் நன்றாகச் செழிக்கின்றது. அப்பொழுது அதனுடைய மலம், நுகர்ந்த உணர்வின் தன்மை, நல்ல அணுக்களை வளர்க்கப்படும் பொழுது நமக்கு நன்றாக இருக்கின்றது.

அப்பொழுது “நமது” என்று சொல்வது எது…?

1.நமது என்று சொல்வது “உயிரின் தன்மை…”
2.ஆறாவது அறிவு கார்த்திகேயா…! என்ற நிலையில் உயிர் ஒளியானது.
3.அவன் தான் நான்…! நான் தான் அவன்…! என்ற நிலைகளில்
4.அந்த அளவுக்குப் பெற்றுப் பிரபஞ்சத்திலே உருவானது “துருவ நட்சத்திரம்…!”

அதை நாம் பெறவேண்டும்..

ஏனென்றால் உங்களை அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன். எனக்கு ஈஸ்வரபட்டர் அதைத் தான் சொன்னார்.

அவர் சொன்ன வழிப்படி நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைதல் வேண்டும்.

அவர்கள் எப்படி அந்த தீமைகளை நீக்கினார்களோ அதை நாம் நீக்க வேண்டும். அந்த அருள் சக்தியை உங்களுக்குள் பெருக்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே…!

“காற்று நூல்…” (இயற்கையின் மூலாதாரம்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Chakrass

“காற்று நூல்…” (இயற்கையின் மூலாதாரம்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.