தியானம் செய்யும் அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

guru arul oli

தியானம் செய்யும் அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி 

நாம் தியான வழியினைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது கொஞ்சம் குறையைச் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். சாமி (ஞானகுரு) சொன்ன முறைக்கு மாறாக யாராவது குற்றங்கள் செய்ய ஆரம்பித்தாலும் உடனே அந்தக் குற்றத்தை உணர்த்தி அதைச் செய்யக் கூடாது…! என்பார்.

1.நாம் எதற்காக இந்தத் தியான வழிக்கு வந்தோம்…?
2.நாம் எப்படி இருக்க வேண்டும்..?
3.குருநாதர் (ஞானகுரு) சொன்ன நிலைகள் என்ன…? என்பதை உறுதிபட எடுத்துச் சொல்வார்.

பிறருடைய குறைகளை வளர விடாதபடி குறையைக் கண்டாலே உடனே அவருக்குக் கோபம் வந்திடும். கோபம் வந்தது என்றால் உடனே என்னிடம் (ஞானகுரு) வருவார்.

சாமி…! அவர்கள் தவறு செய்கிறார்கள். அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.
1.ஆனால் எனக்கு அந்தக் கோபம் வரக்கூடாது
2.குரு அருள் எனக்கு வேண்டும்.
3.குரு அருளால் எனக்கு அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் எப்பொழுதும் பெற வேண்டும்.
5.என்னுடைய கோபம் குறைய வேண்டும் என்பார்.
(என்னுடைய உபதேசத்தை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.)

குழம்பு வைக்கும் போது காரத்தை எந்த அளவுக்குச் சமப்படுத்தி அளவாகப் போடுகிறோமோ அந்த அளவுக்கு ருசியாக இருக்கிறது. அதே மாதிரி எனக்குக் கோபம் வந்தாலும்… அதை நல்ல வழியில் செயல்படுத்தக் கூடிய நிலை வர வேண்டும்…! என்று என்னிடம் கேட்பார்.

அவருடைய மனைவி மீது கூட அடிக்கடி கோபித்து கொள்வார். அதே சமயத்தில் குழந்தைகளிடமும் கூட திடீரென்று எதிர்பாராத நிலைகளில் கோபமாகப் பேசுவார்.

உணர்ச்சிவசப்பட்டு அந்தக் கோபம் அவருக்கு வருவதன் காரணம் அவர் ஆரம்ப நிலைகளில் பலவீனமான நிலைகள் கொண்டு எத்தனையோ விதமாக பயமான உணர்வுகளை எடுத்து வளர்த்துள்ளார்.

பயத்திலிருந்து ஓரளவுக்குத் தப்பி வந்தாலும் “குற்றம்…” என்று பார்த்ததும் அதனால் மேலும் தவறுகள் ஏற்பட்டு விடுமோ…! என்று அந்தப் பய அலைகளை எடுத்துவிடுகின்றார்.

அந்தப் பயங்கள் வரும்போது அவர் சிந்திக்கும் தன்மை இழக்கின்றார். சிந்திக்கும் தன்மை இழக்கும் போது கோபம் என்ற நிலை வருகிறது. அவர் உடலிலே அதிகமான நிலைகளில் பயம் அலைகளையும் கோப அலைகளையும் பதிவு செய்ததனால் அதை உடனடியாக அவரால் குறைக்க முடியவில்லை

இந்தத் தியான வழிக்கு வந்த பின் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகக் குறைத்து ஓரளவுக்கு அமைதி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் நம் தபோவனத்திற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.

தன்னுடைய வாழ் நாளில் அவர் குரு அருளைத் தன்னுடைய சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். “அந்த மகரிஷிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் எல்லோரும் பெறவேண்டும்…” என்ற ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் அவர் உடலில் சேர்த்துக் கொண்ட பழைய உணர்வுகள் தூண்டப்பட்டு பிறிதொருவர் தவறு செய்யும் பொழுது அதை நுகர்ந்து தன் ஆன்மாவில் சேர்க்கப்படும் போது சில நேரங்களில் அவருக்கு அந்த கோபம் வந்துவிடுகின்றது.

ஆனால் கோபம் வந்தால் முதலில் பயப்படுவார். அதே சமயத்தில் அந்தக் கோபம் என்ற நிலை வரப்படும்போது வீரியம் என்ற வலுவும் வருகிறது. பயம் வரும் போது சிந்திக்கும் தன்மை இழக்கின்றது. ஒரு குற்றத்தைக் கண்டபின் கோபம் அதிகமாக வரப்படும்போது இதுவும் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.ஆனால் அந்தப் பயம் என்ற நிலைகள் மாறுகின்றது.
2.பயம் என்ற நிலை மாறும்போது “எனக்கு ஏன் கோபம் வந்தது…?” என்ற நிலைகளில் திருப்பி அவர் சிந்திக்கும் போது
3.“தன்னை அறியாமலே கோபம் வருகின்றது…! அதை எப்படி மாற்றுவது…? என்ற எண்ணத்தில் உடனே என்னிடம் (ஞானகுரு) வந்துவிடுவார்.

நான் வெளியூரில் இருந்தாலும் சரி… என்னிடம் சொல்லி அதைக் கேட்டு “சாமி நான் திருந்த வேண்டும்…!” என்பார். எனக்கு ஏன் கோபம் மீண்டும் மீண்டும் வருகிறது..? அந்த உணர்வுகள் மறுபடியும் எப்படி இயக்குகிறது…? என்ற விளக்கங்கள் கேட்பார்.

அதற்குண்டான விளக்கங்களை எடுத்துச் சொல்லி உணர்ச்சிவசப்படும் அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் ஒளியை எப்படி எடுக்க வேண்டும்…? அந்தக் கோபத்தின் வலுவைக் குறைத்துச் சிந்திக்கும் வலுவை எப்படிக் கூட்ட வேண்டும் என்றும் தெளிவாக்குவேன்.

அதன் வழியில் அதைக் கடைப்பிடித்து அந்தக் கோபத்தை மேலும் மேலும் குறைத்து வந்தார்.

“உவர் அமில அடர்வு – காயகல்பம்…”

Jupiter-GURUDEVAR.jpg

“உவர் அமில அடர்வு – காயகல்பம்…” 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றிக் கொண்டு பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்து சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையே “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளை தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

புவியியல் உயிரியல் வானியல் என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது உயிரியல் தத்துவமாக அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் மாற்றமே காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் – “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

நம் பூமியில் மனிதர்கள் அமைதியாக வாழ முடியாத நிலைகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது

Sun flare ejection.jpg

நம் பூமியில் மனிதர்கள் அமைதியாக வாழ முடியாத நிலைகள் ஏற்பட்டுக் கொண்டுள்ளது

இன்றைய விஞ்ஞான உலகத்தில் எந்த நாடு விஞ்ஞானத்தில் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதோ “அந்த நாடு” மற்ற நாடுகளை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்…! என்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதற்காக அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் நியூட்ரான் என்ற சில விஷத் தன்மையான குண்டுகளையும் விஷக் கிருமிகளைப் பரப்பக்கூடிய குண்டுகளையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்.

1.தங்களுடைய நாட்டைப் பாதுகாக்கும் முயற்சியாக அதை எல்லாம் ஒரு நாடு செய்தாலும்
2.மற்ற நாடுகளும் அதே போல ஆயுதங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று
3.உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் அந்த ஆயுதங்களைத் தயார் செய்து கொண்டுள்ளார்கள்.

அப்படி எல்லா நாடுகளிலும் அணு ஆயுதங்களை உருவாக்கப்படும் போது அதனால் வெளி வரும் விஷத் தன்மைகளை எல்லாம் சூரியனின் காந்தப் புலன் அறிவு கவர்ந்து பூமி முழுவதும் அலைகளாகப் பரவச் செய்து கொண்டுள்ளது.

அப்படிப் பரவும் ஒரு விஷத் தன்மைக்கும் மறொரு விஷத் தன்மைக்கும் எதிர் நிலை ஆகும் போது பெரும் கொண்ட “சூறாவளியாக மாறுகின்றது…!”

அதனால் ஆயிரம் மைல் வேகத்தில் அது சுழலும் தன்மை பெற்றுக் கட்டிடங்களையும் மரங்களையும் அனைத்தையும் தூசி போல பறக்கச் செய்ய கூடிய நிலைகள் உலகெங்கிலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

அதே சமயம்
1.ஒவ்வொரு நாட்டிலேயும் அரசாங்க நிர்வாகம் சரி இல்லை என்ற நிலை கொண்டு
2.மதங்களின் அடிப்படையில் அல்லது அரசியல் கட்சியின் அடிப்படையில் தீவிரவாதம் என்ற நிலைகள் உருவாகிக் கொண்டுள்ளது.

அப்படி உருவாகும் தீவிரவாதங்களால் அமைதி கொண்டு வாழும் மக்களிடையே மீளாத் துயர்படும் நிலையும் மக்களுடைய வாழ்க்கையில் எந்த நிமிடம் எப்போது மடிவோம்…! என்ற நிலையில் அச்சம் ஏற்படும் நிலையும் உருவாகிக் கொண்டு வருகின்றது.

ஏனென்றால் புலன் அடங்கித் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எதிர்பாராத அதிர்வுகளை ஏற்படுவத்துவதும் கட்டிடங்களை நொறுக்குவதும் கூட்டம் நெரிசல் இருக்கும் இடங்களில் கார் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து மக்களைக் கொலை செய்வதும் போன்ற இரக்கமற்ற நிலைகள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது.

இதற்கெல்லாம் காரணம் முதலில் சொன்ன அந்த விஷத் தன்மைகள் உலகம் முழுவதற்கும் பரவியது தான். இத்தகைய சூழ்நிலை எல்லா இடத்திலும் உருவாகிக் கொண்டு உள்ளது.

இதைப் போன்ற விஷத் தன்மைகள் பரவும் இந்த நேரத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் பெருக்கி
2.எந்த விஷத் தன்மைகளும் நம்மைத் தாக்கிடாது பாதுகாத்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையை நாம் பெறுகின்றோம்.

நம் உயிரான்மா இந்தப் புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து “அழியா ஒளிச் சரீரமாக வாழத் தொடங்கும்…”

அறிவால் அறிந்து செயல்படும் தன்மைக்கும் ஒளியாக மாறிய பின் செயல்படும் தன்மைக்கும் உண்டான வித்தியாசம்

annamalai girivalam.jpg

அறிவால் அறிந்து செயல்படும் தன்மைக்கும் ஒளியாக மாறிய பின் செயல்படும் தன்மைக்கும் உண்டான வித்தியாசம்

நாம் சுவாசித்த உணர்வின்படி நமக்குள் வெறுப்போ சலிப்போ இதற்கு முன் உடலுக்குள் நுழைந்த அந்த உணர்வுகளின் தன்மையால் நோயாக உருவாக்கப்பட்டு அதனால் வேதனைப்படுகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் வலுவாக்கும் போது அந்த நோயையும் அதனால் வரும் வேதனையின் வளர்ச்சியையும் குறைக்கலாம்.. வளராது தடுக்கலாம்….!

நோய்க்குக் காரணமான அந்த ஊழ்வினை என்ற வித்துக்கள் உடலுக்குள் அதிகமாக இருக்கும் போது
1.அது தன் இனத்தை விருத்தி செய்யாதபடி அருள் என்ற உணர்வை நமக்குள் சேர்த்து
2.இருளை உருவாக்கும் உணர்வினை மாற்றித் தெளிந்த மனதை நாம் உருவாக்க முடியும்.

வாழ்க்கையில் மனக் கவலையோ மனச் சோர்வோ மற்ற நிலைகளோ நமக்குள் தோன்றும் போதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்துக் கொண்டால் அந்தத் தீமைகள் வளராது தடுக்கப்படுகிறது.

நாம் நுகராது விட்ட அந்தத் தீமையான உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடும். நம் ஈர்ப்பிலிருந்து விலக்கிச் சென்றுவிடும். நம் ஆன்மா சுத்தமாகும். அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமையான உணர்வுகளுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்.

இவ்வாறு நமது வாழ்கையில் தொடர்ந்து இப்பணிகளைச் செய்தல் வேண்டும்.
1.இந்த உடலை விட்டுச் செல்லும் வரையிலும்
2.அருள் ஒளி என்ற உணர்வினை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் எப்படி இருந்தாலும் இந்த உடலை விட்டு எப்படியும் இந்த உயிர் சென்றே தான் ஆகும். ஆனால் எதன் உணர்வின் தன்மையை முடிவாகத் தனக்குள் வளர்த்து கொண்டதோ அதற்குத்தக்க உணர்வு கொண்ட அடுத்த உடலை எடுக்கும்.
1.ஆகவே ஒளி என்ற உணர்வின் தன்மை நாம் எடுக்கும் போது
2.ஒளி என்ற உடலினை உருவாக்குகிறது.

இருள் சூழ்ந்த ஒரு உடலுக்குள் (மனிதனுக்குள்) அறிவு என்ற நிலைகளில் இருந்தாலும் உடலினின்றே இயக்குகின்றது. அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை தான் இது.

ஆனால் ஒளியாக வாழும் சப்தரிஷி மண்டலத்தில் அங்கே அப்படி அல்ல.
1.அது அனைத்து உணர்வினையும் ஒளியாக மாற்றும் நிலை பெற்றது. (அறிந்து அறிவின் தன்மையாக இயக்குவது அல்ல)
2.சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மை நமக்குள் எடுத்தால் நம் உணர்வினை ஒளியாக மாற்றும்.
3.அதை நுகர்வோருடைய இருளை எல்லாம் அகற்றி அறிவென்ற நிலையில் தெளிவாக்கும் தன்மை பெறும்.

முழுமுதற் கடவுள் என்று விநாயகர் தத்துவத்தில் கூறியது போல உயிர் மனிதனாக உருவாக்கிய பின் முழுமையாக உருவாக்கும் சக்தி பெற்றது

1.இப்படிப் பேரருள் என்ற உணர்வை நமக்குள் உருவாக்கினால்
2.அந்த ஒளியின் தன்மை கொண்டு நுகர்வோர் உணர்வுகளிலும் தீமையை அகற்றி
3.ஒளி என்ற உணர்வை உருவாக்கும் கடவுளாக நாம் ஆக முடியும்.
4.இதன் தொடர் வரிசையில் தீமைகளை அகற்றிப் பகைமையை மாற்றி நல் உணர்வை இயக்கி
5.ஒவ்வொரு மனிதனையும் நல் வழிபடுத்தும் நிலையாக நமக்குள் வரும்.

நல்லது செய்தாலும் அதிலே குறை காணும் நிலைளை எப்படி நீக்குவது…?

Spiritual Treasure - hunt

நல்லது செய்தாலும் அதிலே குறை காணும் நிலைளை எப்படி நீக்குவது…?

 

அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது…? வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அடக்குவது…? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.

எனக்காக அல்ல… எனக்கென்று நிலைகள் வரும்பொழுது என் நிலைகளே தனியாகப் போய்விடும். ஈஸ்வரபட்டர் கொடுத்த கட்டளைப்படி அவரது ஆணைப்படி தான் இதைச் செய்கின்றோம்.

எல்லோரது நிலைகளும் இருள் சூழ்ந்து உள்ளது. அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஒலிகளை நீ எழுப்பு. அதன் வழியிலே அந்த ஒளியின் நிலை நீ பெறு…! எல்லோருக்குள்ளும் அந்த மெய் உணர்வுகளைப் பெருக்கு. அனைவரும் அந்த நிலையைப் பெறச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…?
1.வரக்கூடிய நிலைகள்… ஒருவன் தவறு செய்கிறான் என்றால்
2.அந்தத் தவறுக்குள் நாம் நன்மை எடுக்கும் நிலைகளையே கொண்டு வர வேண்டும்.
3.அவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால்
4.அந்தத் தவறுகளை நாம் செய்யக் கூடாது…! என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும். (இது முக்கியம்)

அவன் குறை செய்கிறான் என்றால் அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். அதை நாம் நீக்குதல் வேண்டும். எப்படி…?
1.உமி இல்லை என்றால் அரிசி இல்லை.
2.ஏனென்றால் எதிலும் எதனின் இயக்கத்திலும் அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கம் இல்லை.
3.இதைப் போன்றுதான் வாழ்க்கையில் வரும் உணர்வின் இயக்கங்கள் எல்லாவற்றிலும் இந்த விஷம் கலந்துதான் வருகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் விஷத்தை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப்போல் நாம் நுகர்ந்து அறியப்படும்போது அந்த ஞானியின் உணர்வை இதனுடன் சேர்த்து இந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

அதுதான் அங்குசபாசவா…!

நாம் நஞ்சை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று விநாயகத் தத்துவத்தில் தெளிவாக்கப் பட்டுள்ளது. அதை நாம் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

1.எப்படி எல்லாம் குறைகள் நம்மை அறியாமல் வருகிறது…?
2.அதனால் நம் உணர்வுகள் எப்படி மாறுகிறது.
3.அதை நாம் எப்படி அருள் வழியில் நல்லதாக மாற்ற வேண்டும் என்ற நிலையில்
4.ஒவ்வொரு நொடியிலும் நாம் தெளிவாக்கிக் கொண்டுவர வேண்டும்.

எப்படி உலகிற்குச் சூரியன் குருவாக இருந்து உலகத்தையும் மற்ற பிரபஞ்சத்தையும் இயக்குகின்றதோ இதைப் போலவே நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு நமக்குக்ள் பகைமையற்ற உணர்வுகளையும் ஒழுக்கம் என்ற நிலைகளையும் நாம் வளர்க்க வேண்டும்.

ஞானப் பாதையில் உயர்வு பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

AGATHIAR -sages

ஞானப் பாதையில் உயர்வு பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

 

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் செல்லும் பொழுது அன்று சோறு கிடையாது.
1.குருநாதர் உபதேசம் சொல்லும் பொழுதெல்லாம் அதைக் கூர்ந்து கேட்டுக் கொண்ட இருக்க வேண்டும்.
2.சிறிது திரும்பினாலும் அடி விழும்.. கவனம் அவர் பக்கம் போகும்…!

உங்களிடம் கொக்கி என்ன போட்டிருக்கின்றோம்..? என்றால் உங்களின் எதிர்பார்ப்பை வைத்து இழுத்து வைத்திருக்கிறேன். காந்தத்தை வைத்து இழுத்து வைத்திருப்பதால் அந்த உணர்வின் தன்மையைக் கொண்டு வர முடிகின்றது. இல்லையென்றால் கொண்டு வர முடியாது.

மற்ற கூட்டங்களில் மற்றவர்கள் உபதேசம் செய்வதைப் பார்த்தால், “ஆகா…!” என்று ஒருவர் கைதட்டுவார். இந்தப் பக்கம் இவர் என்ன செய்கின்றார்…? என்று பார்ப்பார்கள். ஒரு சொல் வந்தவுடன் “ஆகா…!” என்பார்கள். அடுத்தவர் கேட்பதையும் தடைப்படுத்துவார்கள்.

இதுவெல்லாம் நமது வாழ்க்கையில் எது நம்மை மாற்றி அமைக்கின்றது…? அதை நாம் எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களிடம் கொடுக்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்குச் சில முக்கியமான உணர்வுகளை அனுப்புகின்றேன். அனுப்பும் பொழுது அதை எப்படியும் பெற வேண்டும் என்று எண்ணுகின்ற பொழுது அந்த உணர்வுகள் தெரிய வரும்.
1.“சாமி…” நம்மை எங்கே கவனிக்கின்றார்…?
2.மற்றவர்களைத் தான் கவனிக்கின்றார்…! என்று நினைத்தீர்கள் என்றால்
3.உங்களுக்குக் கிடைப்பதை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

எல்லோரும் மெய் ஞானம் மெய் ஒளி பெற வேண்டும்…! என்ற ஐக்கிய உணர்வு கொண்டு ஒளியானவர்கள் தான் மகரிஷிகள். அவர்கள் வளரும் ஒளிகள்.
1.மகரிஷிகள் எல்லோருடைய துணை கொண்டுதான் ஒளியாக ஆனார்கள். ஏன் நாம் ஆக முடியாதா…?
2.மற்றவர்களுக்குத்தான் கொடுத்தார். எனக்குச் சாமி கொடுக்கவில்லை என்று பிரித்து விட்டால் என்னவாகும்…?
3.எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் யாம் செய்கின்றோம்
4.அவர்களுக்குக் கிடைக்கின்றது… ஏன்… நமக்கும் கிடைக்கும்…! என்று தான் நினைக்க வேண்டும்.
5.எல்லோரும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்பொழுது தான் நாமும் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

நாம் ரேடியோ டிவியை எங்கெங்கு திருப்புகின்றோமோ எந்தெந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைவரிசை கிடைக்கின்றது.

அதே போல நாம் அந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்திருக்கின்றோம். அந்த மகரிஷிகள் அவர்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்று எண்ணும் பொழுது
1.இதைக் காட்டிலும் அதிகமாக அவர்களுக்குக் கிடைக்கும்
2.உங்கள் துணை வைத்து அவர்கள் எண்ணும் பொழுது இந்த வலு அவர்களுக்குக் கிடைக்கின்றது.
3.நீங்கள் இங்கு பெறுகின்றீர்கள்… உங்களுக்குக் கிடைக்க வேண்டும்…! என்று அவர்கள் தியானிக்கும் பொழுது அவர்கள் அங்கே பெறுகின்றார்கள்.

சூரியன் தனித்துப் பிரகாசமாகவில்லை. அது போல் மகரிஷிகள் தனித்து ஒருவர் பிரகாசம் ஆகவில்லை. எல்லோருடைய உணர்வையும் ஒன்றி ஐக்கியமாக்கி அந்த எண்ண அலைகளை வைத்த்துத்தான் ஒளியாக ஆனார்கள்.

காயகல்ப சக்தியை இயற்கையாகவே அன்றைய சித்தர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

meditationg-times.jpg

காயகல்ப சக்தியை இயற்கையாகவே அன்றைய சித்தர்கள் எப்படிப் பெற்றார்கள் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணம் கொண்டு தான் மனித வாழ்க்கை அமைகிறது என்ற நிலைகளை எடுத்து உரைத்து வந்தேன். மனப் பக்குவம் கொண்டு செயல்படும் நிலையில் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்து மோதிக் கொண்டே தான் உள்ளது.

கடலில் துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளை எல்லாம் கடந்து சென்று தான் சேர வேண்டிய இடத்தைச் சேர்கிறது. அதைப் போல் நம்மிடம் அலை அலையாக வந்து மோதும் உணர்வுகளை நாம் சமப்படுத்திடல் வேண்டும்.

1.சமப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு
2.அதற்குண்டான வழி முறைகளை அமைக்கும் சிந்தையை நிலை நிறுத்தி
3.சித்தன் என்ற நிலையை ஒவ்வொருவரும் பெறவேண்டும்.
4.இந்தப் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு… தாழ்வு… முறைகளுக்கு அல்ல.

மருத்துவ முறைகளைப் பற்றிச் சொல்லி மருந்துகளைக் கொடுத்தாலும் நம் எண்ணத்தால் கிடைக்கும் நிறைவு தான் சரீரத்திற்குச் சுகம் அளிக்கின்றது.

உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்தை உட்கொண்டால் உடலுக்குள் செல்லும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் செயல்பட்டு நோயை விலக்கினாலும்
1.மீண்டும் அதே நோய் வருவதெல்லாம் எண்ணத்தின் செயலினால் தான்…!
2.ஆக நோய் வருவது உடலிலா…? எண்ணத்திலா…?
3.சுவாச நிலையின் இயல்புத் தன்மைகளை நாம் மாற்றி விட்டாலே
4.அதனால் தோன்றும் எண்ணங்களும் அதனின் ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்களும் இயற்கையினாலா…?
5.அல்லது நம்மை அறியாது நாம் உருவாக்குகின்றோமா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
6.விடையை அறிந்து நம் எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பினால் நல்லாக்கம் பெற்றிடலாம்.

வருடா வருடம் கார்த்திகை தீபத்தைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருளைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கின்றோமா…? ஏனென்றால் இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட அதனின் உண்மைப் பொருள் என்ன..?

பௌர்ணமி நிலவிலிருந்து வரும் ஒளி சக்தியும் சில நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் இது இரண்டும் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து செயல் கொண்டிடும் நிலையில் “சூட்சம வித்தின் தன்மைகளை…” பூமித் தாய் நமக்கு அளிக்கின்றாள்.

அதை மறைபொருளாகக் காட்டி உயிராத்மா ஜோதி நிலை அடைய வேண்டியதன் உட் பொருளைக் காட்டினார்கள் சித்தர்கள்.

கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி மூலம் பூமி ஈர்த்துப் பெற்றிடும் அந்தச் சக்தியின் செயலையே “கார்த்திகை தீபமாக…” ஏற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை எடுத்து அனைத்தையும் வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில்
1.அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில்
2.உயர் ஞானம் கொண்டு அறிந்த காயகல்ப முறையே
3.ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

கார்த்திகை மார்கழி மாதக் காலங்களில் சிற்றின்பங்களை நுகர்வதை விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்தனர்.
1.தன் சிந்தனையின் செயலை ஒருமுகப்படுத்தி
2.பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
3.ஞானிகள் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் இவை எல்லாம்.
4.தியானத்தைப் பற்றி அறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் அந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.

ஆனால் இன்றைக்கு அது எல்லாம் மாற்று நிலை பெற்றுவிட்டது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானத்தின் மூலம் நுகர்வதால் நமக்குக் கிடைக்கும் பேறுகள்

POLARIS.jpg

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை தியானத்தின் மூலம் நுகர்வதால் நமக்குக் கிடைக்கும் பேறுகள்

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏங்கித் தியானித்து வருகின்றோம்.

கண்ணின் நினைவைப் பூமியின் வடதுருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் விண்ணிலிருந்து நுகர்வோம் என்றால் அதை உயிர் “ஓ…ம் நமச்சிவாய…!” என்று நம் உடலாக மாற்றுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகப் பெருக
1.நம் உடலில் அறியாது சேர்ந்த இருளை அது மாற்றுகின்றது
2.நம்மைத் தெளிந்த மனம் பெறச் செய்கின்றது
3.தெளிவான வாழ்க்கை வாழ முடிகின்றது
4.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் திறன் பெறுகின்றோம்
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற முடிகின்றது.
6.இந்த வழியில் பேரின்ப நிலை பெறும் தகுதி பெற்று இந்த உடலில் என்றும் பேரின்ப நிலையை அடைய முடிகின்றது.
7.இந்தப் பிறவியிலேயே துருவத்தின் ஆற்றலை நாம் நுகர முடிகின்றது.
8.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் பெருக்க முடிகின்றது.
9.இந்த உடலில் அந்த உணர்வின் சத்தைப் பெறச் செய்தால் ஓ..ம் நமச்சிவாய… என்று ஒளியின் சரீரமாக மாறுகின்றது.
10.இப்புவியின் பற்றை அகற்றுகின்றது.
11.இப்புவியில் நஞ்சைப் பற்றற்றதாக மாற்றுகின்றது.
12.பேரருளைப் பெற்று “என்றும் பேரொளி…” என்ற நிலைகளை நாம் அடைய முடிகின்றது.
13.என்றும் ஏகாந்த நிலை அடைய முடிகின்றது.
14.ஏகாந்த வாழ்க்கை என்றும்… ஏகாதசி என்றும்… என்றும் பத்தாவது நிலையாக கல்கி என்று நிலை கொள்ள முடிகின்றது.
15.எந்தத் தீமையும் நம்மை அணுகாது
16.பேரொளி உணர்வுகள் என்றுமே நம்மை அணுகி வருகின்றது… ஒளியின் சரீரமாகப் பெற முடிகின்றது.
.
ஆகவே அந்த நிலையைப் பெற நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளை நாமும் நுகர்வோம்.
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை உருவாக்குவோம்.
2.நம்மை அறியாது வந்த இருளை அகற்ற நாம் தியானித்து அரும் பெரும் சக்திகளை நாம் சுவாசிப்போம்.
3.நம் உடலில் அறியாது வந்த இருளை அகற்றுவோம்.
4.என்றும் ஏகாந்த நிலை பெறும் சக்தியை நாம் சதா தியானிப்போம்.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

பூமியில் நம்முடைய பிறப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Self realization Gnani

பூமியில் நம்முடைய பிறப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனை மையப்படுத்திக் கொண்டு பூமி சுழன்று ஓடும் நிலையில் ஏற்படும் இயற்கையின் பருவ மாற்றங்களின் செயலால் பரவெளியில் படர்ந்துள்ள அமில குணத்தன்மைகளைப் பூமி தன் ஈர்ப்பின் சுவாசம் கொண்டு ஈர்த்துக் கொள்கிறது.

அவ்வாறு பூமி தன்னை வளர்ச்சிப்படுத்திடும் செயலில் எண்ணம் கொண்டே ஆத்மாவாக உயிரணுக்கள் பல பிறப்பிற்கு வருகின்றன.

1.ஜீவன் என்ற சரீர பிம்பம் பெறும் இந்த உயிராத்மா
2.இயற்கையின் கதியில் சரீரம் கொண்டு வளர்ச்சி கொள்ளும் செயலின் தொடராக இருந்தாலும்
3.தான் பெற்ற இந்தச் சரீரத்தையே “இறப்பு…” என்ற கதி நிகழ்வுக்கு உட்பட்டே வினைச் செயல் புரிகின்றது.

ஒரு உயிரணு சிசுவாக வளர்ச்சி கொண்டிடும் காலத்தில் தான் கொண்ட எண்ணத்தின் செயலில் உணர்வுகளாகத் தாய்மை கொண்ட எண்ணமுடன் தன் உணர்வுகளையும் கூட்டித்தான் உருவத்திற்கு வருகின்றது.

அந்த உருக்கோலம் கொள்ளும் பிம்பத்திற்கு வேண்டிய ஆகாரத்தைத் தாயின் இரத்த நாளங்களுடன் ஒன்றியே எடுத்து வளர்த்துக் கொள்கிறது.

பஞ்ச பூதங்களின் அமைப்பாகத் தனக்கு ஒவ்வொரு அவையங்களும் அமைவு கொள்ள தாயின் ஆகாரத்திலிருந்து அமில குணத் தன்மைகளை ஈர்த்துக் கொள்கிறது.

எந்தத் தாயின் சரீரத்தினுள் இணைந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றதோ அந்தச் சரீரத்தினுள் அமைத்திட்ட சகல நாடிகளில் ஓடிடும் சுவாசத்தின் செயல் தன்மைகளையும் ஈர்த்து சிசு முழுமை பெறுகிறது.

முழுமை பெற்ற பின் தாயின் உடலிலிருந்து வெளியேறும் உந்துதலை உணர்த்தி அந்த உந்துதலின் செயலைத் தாய்கும் ஊட்டுகின்றது.

அந்த உந்துதலில் தாயின் சரீரத்தில் செயல்படும் நாடிகளில் உலவிடும் மறைமுகக் காற்று ஒன்று பிறப்பின் செயலுக்குத் துணை புரிந்து சிசு வெளியேற உதவிடும் செயல் முறை உள்ளது.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற இந்த முத்தொடரின் சூட்சமத்தை இயற்கையின் கதியில் அறிந்து கொள்ள வேண்டும்.

1.பூமித் தாயின் செயலுக்கும்
2.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் சுவாச அலைகளில் பூமியினுள் நிறைந்திருக்கும் காற்றின் தொடர்பிற்கும்
3.பற்பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது.

கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுவும் கற்பபறைகளின் முதிர்விலிருந்து உப்பு வெளிப்படுவதுவும் மண்ணின் குணத்தன்மைகளில் சில இடங்களில் உயர் அமிலமாகி அதுவே பொருளாக வெளிப்படும் செயலுக்கும் காற்றின் தொடர்பு உண்டு.

இது எல்லாம் தன்னை உணர்ந்திடும் பக்குவமாக இயற்கையின் கதியைத் தன்னுள் கண்டுணரச் செய்திடும் தெளிந்த உயர் ஞானமாக மெய் ஞானமாக ஞானிகளால் உலகினுக்குப் போதனைகளாகக் கொடுக்கப்பட்டது.

அந்த மெய் ஞானிகளின் நிலையை நாமும் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து காட்டிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

Om Eswara - OM ESWARA

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

 

இன்று எடுத்துக் கொண்டால் விஷத் தன்மையால் பெரும் சூறாவளிகள் கிளறப்பட்டுக் கட்டிடங்கள் எல்லாம் தூசிகளைப் போலப் பறக்கும் நிலையும் அதே சூறாவளி கடலில் தாக்கப்படும் பொழுது அது நீர் நிலைகள் அனைத்தும் ஊருக்குள் கொண்டு வருவதும் இப்படிப் பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

எந்த விஞ்ஞானத்தைச் செயல்படுத்தினார்களோ அந்த விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகள் அடர்த்தி அடைந்து அது வலுவாகிய நிலையில் அதை எல்லாம் சூரியன் கவர்வதனால்
1.ஒன்றுக்கொன்று எதிர்நிலை கொண்டு மோதி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையும்
2.நாம் தேடிய செல்வங்களும் இந்த உடல்களும் எப்பொழுது எந்த நிமிடத்தில் அழியும் என்ற நிலைகளை
3.நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு உலகையே அழிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இதற்குள் நம் உணர்வின் தன்மை எதிலும் அழியாத உணர்வு கொண்ட ஒளியின் உணர்வாக ஒளியாக மாற்றச் செய்வதே இந்தத் துருவ தியானத்தின் நோக்கம்.

இந்த உலகில் வரும் விஷத் தன்மைகள் நம்மைப் பாதிக்காது… “விஷத்தின் தன்மை தாக்குதலால் ஏற்பட்ட உயிர் ஒளியாக மாறுவது போல்…” எத்தகைய விஷத் தன்மை தாக்கினாலும் அந்த உணர்வுகள் ஒளியாக மாறி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த விஷத்தை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வர வேண்டும்.

நமது உடலில் நஞ்சு கலந்த உணர்வுகள் இருப்பினும் உடல் அதை மலமாக மாற்றுகின்றது. ஆனால் அதிகமான நஞ்சுகள் உடலில் கலந்தால் அது மனிதனையே வீழ்த்துகின்றது.

சூரியனோ இத்தகைய விஷத் தன்மை கொண்ட எல்லாவற்றையும் மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. அதைப் போல நஞ்சான உணர்வு வருவதைப் பிரித்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் இதைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இல்லை என்றால் நம் வாழ் நாளில் மீண்டும் கீழான உடலுக்குள் தான் போக வேண்டியதிருக்கும.
1.இந்தப் பூமி இருக்கத்தான் செய்யும்… ஆனால் மாற்றங்கள் இருக்கும்…!
2.இந்த மனித உடலில் உணர்வுகள் மாறும் பொழுது மனித உடல்கள் மாறும்.
3.இன்று மனித உடலாக இருந்தாலும் அடுத்து மனித உடல் அல்லாத நிலைகள் தான் உருவாக்க முடியும்.
4.வேதனை என்ற உணர்வுகளிலிருந்து மீள முடியாத துயர் நிலையே தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த மனித உடலில் “கோடிக்கரை…” என்ற நிலைகளில் கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை என்ற முழுமையைப் பெற நாம் முயற்சிப்போம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.சதா அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வருவோம்.

நமது வாழ்க்கையில் எதிர் வரும் தீமைகளை
1.நமக்குள் சாராது
2.நமக்குள் அதை வளர்ந்திடாது
3.நமமக்குள் அதைப் பெருக்கிடாது தடுத்துப் பழகுவோம்.

இந்த உடலான கோடிக்கரையிலிருந்து “தனுஷ்கோடி…!” எல்லாவற்றையும் அடக்கிடும் அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும். நம்மால் நிச்சயம் முடியும்.