நம் சொல்லையும் செயலையும் புனிதப்படுத்தும் பயிற்சி

eswara's prayer

நம் சொல்லையும் செயலையும் புனிதப்படுத்தும் பயிற்சி

 

1.அம்மா அப்பா அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனை வேண்டி ஏங்கி ஒரு நிமிடம் தியானியுங்கள்…!

2.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்…!

அதாவது நாம் சொல்லும் போது கேட்போரின் உணர்வுகள் புனிதமாக வேண்டும்… மகிழ்ச்சியாக வேண்டும்…! அதே சமயத்தில் நாம் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயலைப் பார்போருக்கும் அந்த மகிழ்ச்சி உண்டாக வேண்டும் என்பது தான் இதனின் நோக்கம்.

2.நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்…!

நமக்கு ஆகிறவர்களோ… ஆகாதவர்களோ… மற்றவர்களுடைய செயல்களைப் பார்க்கும் போது
1.நல்ல குணங்களும் நல்ல நிலைகளும் அவர்கள் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த எண்ணம் தான் நமக்கு வர வேண்டும்.

காரணம்… அவர்களைப் பார்க்கும் போது நாம் அவர்களுடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ நுகர்ந்துவிடக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழிலில் வளம் பெற வேண்டும் என்ற உணர்வு தான் நமக்குத் தோன்ற வேண்டும்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரிடம் செல்வம் அவர்களிடம் இல்லை என்றால் முகம் வாடிய நிலைகள் கொண்டு மனம் குறுகிய நிலையில் சோர்வாக இருப்பார்கள்.

அந்தச் சோர்வும் சலிப்பும் சஞ்சலமும் அவர்கள் குடும்ப நிலைகளில் இருக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகொப்ப அவர்களுடைய முக வாட்டங்களையும் அவர்களுடைய செயல்களையும் நாம் உற்றுப் பார்க்கும் போது
1.அது நமக்கும் வேதனை தரும்.
2.அந்த வேதனை என்ற உணர்வை நுகரப்படும் போது நம் சிந்தனையும் குறையும்.

ஏனென்றால் நல்ல மனங்கள் கொண்ட… நல்ல குணங்கள் கொண்ட… நல்லது செய்வோரின் உணர்வுகளுக்கு மற்றவர்களின் இத்தகைய செயல்களைப் பார்க்கும் போது
1.அவருடைய உணர்வுகள் உயிரிலே பட்டு
2.அந்த உணர்ச்சிகள் நம் உடலிலே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் ஓர் இயக்கச் சக்தியாக மாறும்.
3.அவர்களுடைய உணர்வுகள் நம் உடலிலே இரத்தங்களிலே மாறும் போது அதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு விதமான நிறம் உண்டு. நம் இரத்த நாளங்களிலே அத்தகைய நிறத்தின் உணர்வுகள் உணர்ச்சிகள் பரவும். அந்த நிறத்தின் உணர்வு உணர்ச்சிகளுக்கு ஒப்பத் தான் நம்முடைய பேச்சும் மூச்சும் இருக்கும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால் அவர்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற வேண்டும். நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் இது புகாது.

அவர்களுக்கு நல்லதைச் செய்யக்கூடிய எண்ணங்கள் வர வேண்டும்… அவர்களுக்கு மன பலம் கிடைக்க வேண்டும்…! என்ற உணர்வுகளை நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.அப்படி எடுத்து அதை உறுதிப்படுத்தினால்
2.அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் நமக்குள் நுகரும் சக்தியைத் தடைப்படுத்தலாம்.

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்க வேண்டும்.

பிறருடைய குற்றமான செயல்களைப் பார்க்கும்போதெல்லாம் இப்படி எடுத்து நாம் இந்த உணர்வுகளைச் செலுத்தினோமென்றால் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராமல் தடைப்படுத்தி நம் இரத்தங்களில் நல்ல உணர்ச்சிகளாக மாற்றியமைக்கலாம்.

இது மனிதன் ஒருவனால் தான் முடியும்…!

ஆக.. நாம் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்ற இந்தச் சொல்லுக்குள் இவ்வளவும் அடங்கி இருக்கிறது.

3.எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் அமைதி பெற செய்ய அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

நமக்கு வேண்டிய ஒருவர் சங்கடமாக இருக்கிறார் என்று அவரைப் பார்த்தால் உடனே அவரிடம் “என்ன… ஏது…?” என்று அவருடைய சங்கடங்களைப் பற்றித்தான் கேட்போம். நல்லதைக் கேட்க மாட்டோம்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டமாக இருக்கிறார்கள்… சங்கடமாக இருக்கிறார்கள்… வேதனையாக இருக்கிறார்கள்… வெறுப்பாக இருக்கிறார்கள்… என்ற நிலையில்
1.அவர்கள் எண்ணத்திற்குத் தகுந்தாற்போல் நாமும் கஷ்டத்தையும் சங்கடத்தையும் வெறுப்பையும் வேதனையும் பட்டு
2.இப்படி ஆகிவிட்டதா…! அப்படியா செய்து விட்டார்கள் பாவிகள்…! என்று நாம் பதிலுக்குச் சொன்னோமென்றால்
3.அது சாதாரண வாழ்க்கைக்கு ஒத்ததாகப் போய்விடும்.
4.அவர்களிடம் அதைத் தூண்டிக் கேட்கக் கேட்க அவர்களின் வேதனையும் சலிப்பும் நமக்குள் அதிகமாக வர நேரும்.

சலிப்பும் வேதனையும் நமக்கு நன்மை செய்யுமா…? அல்லது அவருக்கு அது நன்மையாகுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அவர்கள் முகம் வாடிய நிலையில் சோர்வையோ சஞ்சலத்தையோ சொல்லும் போது நாம் ஈஸ்வரா..! என்று உயிரை நினைத்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்.
1.அந்த மகரிஷிகளின் அருளை நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் பெருக வேண்டும்.
3.உங்கள் உடல் முழுவதும் அந்த அருள் ஞானம் பெருக வேண்டும்.
4.உங்களுக்கு அமைதி கிடைக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்லிப் பாருங்கள்.

ஏற்றுக் கொள்ளும் பண்பும் வரும். நாம் சொல்லும் உணர்வுகள் அவர்களுக்குள் பதிவாகும். பதிவானதை எண்ணும் பொழுது அவர்களும் அந்தச் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பம் உருவாகும்.

ஆனால் நீங்கள் சாதாரண நிலையில் இருந்து புத்திமதிகளைச் சொல்லிப் பாருங்கள். நீங்கள் சொல்கிறீர்கள்…! ஆனால் என் பையன் பேசுவதையும் செய்வதையும் கேட்டால் அப்புறம் தெரியும் உங்களுக்கு…! என்று நல்லதைச் சொல்லும் போதே பதிலுக்கு எதிர்த்துச் சொல்லுவார்கள்.
1.எனக்குக் கஷ்டமாக இருக்கிறது என்று
2.அதையே இறுக்கப் பிடித்துக் கொண்டு பேசுவார்கள்.

ஆகையினால் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் அவர்களின் உணர்வை நாம் எடுப்பதற்கு முன்பாகவே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து நமக்குள் வலுவாகச் சேர்த்து கொள்ள வேண்டும்.

எடுத்து அதன் பின் அவர்களுக்கு இந்தச் மாதிரி சொல்ல வேண்டும். ஒவ்வொரு காரியத்திலும் இதே போன்று நாம் செயல்படும் போது
1.நம் பேச்சு உலக மக்களோடு ஒத்து வாழ்ந்தாலும்
2.அவர்கள் உணர்வை ஏற்றுக் கொள்ளாதபடி
3.நமக்குள் நல்ல உணர்வுகளைச் சமைத்து
4.அந்த நல்ல உணர்வுகளை அவர்களையும் பெறச் செய்கின்றோம்…!

அப்பொழுது நம்முடைய பேச்சும் மூச்சும் உலகம் அமைதி பெறச் செய்யும் சக்தியாக மலரும்.

வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

siddhis of rishis

வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! மாமகரிஷி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் (ஒரு) குடும்பத்தில் வரக்கூடிய ஒன்றிரண்டு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சரியான முறையில் சமாளிப்பதற்குள்ளேயே போதும்… போதும்…! என்று சொல்லி விடுகிறோம்.

அடுத்தடுத்து தொடர்ந்து அதே மாதிரி வந்தால் சோர்வடைந்து விடுகின்றோம்… என்ன வாழ்க்கை இது…? என்று வேதனையும் படுகின்றோம்…!

ஆனால் ஞானகுரு அவர்கள் (சாமிகள்) சுமார் 12 வருட காலம் மூன்று இலட்சம் பேரின் வாழ்க்கையின் நிலைகளை நேரடி அனுபவமாகப் பார்த்தவர்.
1.அவர்களின் கஷ்ட நஷ்டங்களை அப்படியே பார்த்து
2.அவர்களுடைய சிரமங்கள் தன்னை இயக்காதபடி தடுத்து
3.அதில் மெய்ப் பொருளைக் கண்டு அந்த மெய்யை வளர்க்கும் ஆற்றலை வளர்த்தவர்.
4.அது அனத்துமே வித்தைகள்.

மூன்று இலட்சம் பேரையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தான் அவரைச் சந்திக்கச் சொல்கிறார். அவர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடித்து அனுபவபூர்வமாக அந்த வித்தைகளைக் கற்றுக் கொண்டார்.

மெய் ஞானத்தின் தன்மைகளை வித்தைகளாக அவர் தனக்குள் கற்றுச் சீராக வளர்த்துக் கொண்டதால் ஞானகுருவாக இருக்கிறார்…! குருநாதர் இட்ட ஆணைப்படி வைராக்கியமான நிலைகள் கொண்டு விடா முயற்சியால் அதைப் பெற்றார்.

வித்தைகள்… வித்துக்கள்… வினைகள்…! முழுமையும் அது சரியாக இருந்தால் அதனின் விளைச்சல் பலன்களாக அநுபூதியாகக் கிடைக்கின்றது.

அநுபூதியைப் பெற்றுக் கொள்தல் என்பது
1.நல்ல விதைகளை ஊன்றி அவைகளைப் பக்குவமாக வளர்த்தால் அதன் மூலம் நல்ல மகசூலைக் காண்பது போல்
2.நல்ல வினைகளை நமக்குள் சேர்த்தால்…
3.மெய் ஞானிகள் பெற்ற பேரருள் பேரொளி உணர்வுகளை இந்த மனித வாழ்க்கையில் வளர்த்து உடலிலே விளையச் செய்தால்
4.விளைந்த சத்துகள் அனைத்தும் உயிருடன் இணைந்து உயிரான்மா அழியா ஒளிச் சரீரம் பெறும்.
5.அதைத்தான் பெறுதல் “பெற்றுக் கொள்தல்…!” என்பது.

அந்த நிலை பெற அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துபவர்கள் தான் மாமகரிஷிகள். அதனால் தான் வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…!” என்று நமக்கு அதைக் கொடுக்கிறார்கள்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகைய நஞ்சையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள். நம் பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள்.

அகண்ட அண்டத்தின் இயக்கத்தில் உள்ள எது அழிந்தாலும் இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு “தீமையற்ற உலகை…!” அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.

ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள் வேறு வேறு விதமாக இருப்பினும் “பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்…!
1.அகண்ட பேரண்டத்தில் இப்பேர்ப்பட்ட மகரிஷிகள் உண்டு.
2.மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.நாம் அதிலே இணைய வேண்டும்.

அத்தகைய அநுபூதியைப் பெற்றுக் கொள்ளத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வித்தைகளைக் கற்றுக் கொள்… அநுபூதியைப் பெற்றுக் கொள்…! என்று நம் சாமியிடம் ஆரம்பத்திலிருந்தே (சாமிக்கு ஈஸ்வரபட்டர் யார் என்று தெரியாத பொழுதிலிருந்தே) கூறி வந்தார்.

அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற அநுபூதியை. நமக்கும் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த அநுபூதியை யார் பெறவேண்டும் என்று விரும்பி வாங்குகிறார்களோ அவர்களுக்கு அது பரிபூரணமாகக் கிடைக்கிறது…!

நெய்யை விட்டுச் சிலைக்கு அபிஷேகம் செய்தால் அது வெண்ணையாக மாறுகிறது…!

talaikaveri

நெய்யை விட்டுச் சிலைக்கு அபிஷேகம் செய்தால் அது வெண்ணையாக மாறுகிறது…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் மலைப் பகுதிகளில் சில பாறைகளில் அமர்ந்துள்ளான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அதிலே பதிவான நிலைகள் கொண்டு அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்கின்றது.

மேகங்களை இழுத்துக் கவர்ந்து மோதியவுடனே அங்கே நீராக வடியத் தொடங்குகிறது. அகஸ்தியருடைய கையில் அதனால் தான் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

அகஸ்தியன் எங்கெங்கு எல்லாம் போய் உட்கார்ந்தானோ அங்கெல்லாம் இத்தகைய தண்ணீர் இருக்கும்.
1.கீழே நீர் இருக்காது.
2.ஆனால் அந்த மலை உச்சிகளில் மேகங்கள் போவதைக் கவர்ந்து நீராக வடிந்து
3.சில தெப்பங்களும் அங்கே இருக்கும். கர்நாடக மாநிலத்தில் நிறைய இடங்களில் இது இருக்கும்.

பெல்காம் பக்கத்தில் ஒரு மலை இருக்கிறது. அதில் உள்ள ஒரு சிறிய குகையில் சிலை இருக்கிறது. அந்தச் சிலை மீது நெய்யை விட்டால் அது வெண்ணெயாக மாறும். அந்தக் கல்லில் அந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும்.

நெய்யைக் கொண்டு போய் சிலை மீது ஊற்றுவார்கள். பின் தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து முடிந்தவுடன் சுரண்டி எடுத்தோம் என்றால் அந்த வெண்ணெயாக மாறும்.
1.நெய்யில் இருந்து வெண்ணெயாக மாறும்.
2.அந்தச் சிலைக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
3.அபிஷேகத்திற்கு நெய்யைக் கொடுப்பார்கள். மாற்றம் அடைந்தவுடன் வெண்ணெயாக எடுத்து வருவார்கள்.
4.அதை எடுத்து வந்து சாப்பிடுவார்கள்.

அந்த மாதிரி சில இடங்கள் அங்கே உண்டு. அதற்கு மேலே உச்சியில் பார்த்தீர்கள் என்றால் நாழிக்கிணறு. அதில் நீங்கள் தண்ணீர் எவ்வளவு மோந்தாலும் வந்து கொண்டே இருக்கும்.

அங்கே மலை மீது ஏறும் இடத்தில் இன்னொரு குகை இருக்கிறது. அதற்குக் கீழே பார்த்தீர்கள் என்றால் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரில் ஏதாவது ஒரு பொருளைப் போட்டோம் என்றால் கீழே ஒரு பாதை இருக்கும். அதிலே மிதந்து வெளியிலே வரும். ஆனால் இந்தத் தண்ணீர் வற்றுவதே இல்லை.

மைசூர் பாகமண்டலம் தலைக் காவிரிக்குப் போனால் அங்கே மலை உச்சியிலிருந்து தண்ணீர் வரும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக இப்படி வரும்.

மேக மண்டலங்களை இழுத்து மோதித் தண்ணீராக வருகின்றது. அங்கேயும் அந்தத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.அங்கே அகஸ்தியன் அமர்ந்த இடம்.
2.மேகங்களை இழுத்து தண்ணீராக மாற்றக்கூடிய நிலைகள் அங்கே இருக்கிறது.

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நீருக்காக வேண்டி அங்கே மேகத்தை இழுப்பதற்காக வேண்டி பல பச்சிலைகளையும் அங்கே தடவி இருக்கின்றார்கள்.

இயற்கை எப்படி மாற்றங்கள் ஆகின்றது…? நீர் சுரபிகள் எப்படி உருவாகின்றது..? என்று இதெல்லாம் அனுபவபூர்வமாகக் கண்டறிந்தது.

மனிதனுக்கும் இத்தகைய நீர் சுரபிகள் உண்டு. ஒரு பச்சிலையைக் கொடுத்தால் நீர் சுரப்பி எல்லாம் அடைத்துக் கொள்ளும். பின் வறட்சி ஆகிவிடும்.

அதே சமயத்தில் சாப்பிடக்கூடியதை இரத்தமாக மாற்றக்கூடிய சில பச்சிலைகளும் உண்டு. இப்படி எத்தனையோ வகைகள் இருக்கிறது. ஒரு தாவர இனத்தின் உணர்வுகள் மற்றொன்றோடு மாற்றப்படும் போது எப்படி மாறுகிறது…? என்று இது அத்தனையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்தார்… உணர்த்திக் காட்டினார்.

இந்த மாதிரி அதிசயங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) பார்த்தோம். ஏனென்றால் இதெல்லாம் அந்த மலைப்பகுதியில் நடந்து போய்ப் பார்த்து வந்தது.

அவ்வாறு கண்ட பார்த்த உணர்ந்த உண்மைகளை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். இதைப் பதிவாக்கிக் கொண்டால்
1.அன்று வாழ்ந்த மெய் ஞானியான அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நீங்கள் எளிதில் பெறலாம்.
2.அவன் பெற்ற அண்டத்தின் ஆற்றல்களை நீங்களும் பெறலாம்.

 

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கம்…!

விபத்துக்கள் – அகஸ்தியன் – கணவன் மனைவி

வேதங்கள் – குடும்பமாக விண்ணில் வாழும் நிலை

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாக இணைந்து உருவாக்க வேண்டிய ஒளி உணர்வு

ஆண் பெண் உணர்வின் இயக்கம் – மனிதனுக்கும் மிருகத்திற்கும் உண்டான வித்தியாசம்

கணவன் மனைவி இணைந்த நிலையில் செய்ய வேண்டிய தியானம்

கணவன் மனைவி – காற்று மண்டலத்தில் பரவியுள்ள நச்சுத் தன்மைகள்

இன்றைய உலக நிலை நாம் தெரிய வேண்டியது

கணவன் மனைவி தியானம் – உயிர் சொர்க்கவாசல்

அருள் ஞானக் குடும்பங்களாக உருவாகுங்கள்

கணவன் இழந்தால் மாங்கல்யத்தைக் கழட்டச் சொல்கிறார்கள்… மொட்டை அடிக்கும்படி சொல்கிறார்கள் இது எல்லாம் தவறானது

கணவன் மனைவி ஒன்றாகச் செய்தால் கிடைக்கும் ரிமோட் சக்தி

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் சொர்க்கம்

கணவன் மனைவி சேர்ந்து வாழ வேண்டியதன் அவசியம்

கணவன் மனைவி தியானம் – பாதுகாப்புக் கவசம்

கணவன் மனைவி தியானம்

கணவன் மனைவி பண்டைய காலத்தில் ஒன்றி வாழ்ந்த நிலைகள்

கணவன் மனைவிக்குள் எதிர்நிலையான உணர்வுகளின் இயக்கத்தால் வரும் விளைவுகள் 

மனைவி கணவன் மேல் வேதனை உணர்வைப் பாய்ச்சினால் தீங்கு விளையும்

ஜாதகம் பார்த்து நாம் கல்யாணம் செய்வதும், அகஸ்தியனும் மனைவியும் ஒன்றி வாழ்வதும்

கணவன் மனைவி அடிமையாக அடக்கி வாழும் நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகள்

கணவன் மனைவி அருள் வழியினைப் பக்குவப்படுத்துங்கள்

கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டு கணவரும் – நாங்கள் பிரிய மாட்டோம்…!

தண்ணீ போடும் கணவர்களை (பெண்கள்) மாற்றிடும் உபாயங்கள்

கணவன் மனைவி – குடும்பத்தில் மகிழ்ச்சி

அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று கணவனும் மனைவியும் மகிழ்ந்து வாழுங்கள் – தியானம்

கணவன் மனைவி பாச உணர்வின் இயக்கங்களும் விளைவுகளும்

மாமியார் மருமகள் ஒற்றுமை

பெண்களுக்குண்டான சக்திகள்

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி நல்ல உணர்வை ஊட்ட வேண்டும்

குடும்பத்தை அருள் வழியில் நடத்துங்கள்

குடும்பத்தில் மகிழ்ச்சியைச் உருவாக்கும் முறைகள்

உணவு பரிமாறும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது

கோலம் – எல்லாவற்றையும் இணைப்பது போல் குடும்பத்தில் அரவணைக்கும் சக்தி பெறவேண்டும்

வீட்டு வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடச் சொன்னதன் உண்மை நிலைகள்

இயற்கையின் இயக்கத்தில் ஆண் பெண் என்ற நிலையும் கணவனும் மனைவி ஒன்றி வாழ வேண்டியதின் அவசியமும்

கணவன் மனைவி பாதுகாப்புக் கவசம்

கணவனை இழந்தவர்கள் மாங்கல்யத்தைக் கழட்ட வேண்டுமா…?

மனைவியிடம் கணவன் பெற வேண்டிய ஆசீர்வாதம்

அகண்ட அண்டத்தின் சக்தியைக் கணவன் மனைவி பெறும் வழி

 

மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

eswarapattauya gurudevar circle

 மகரிஷிகளின் எல்லையை அடையும் வழி முறை…!

 

தாயிடம் சேய் (பிறந்த குழந்தை) தனக்குப் பசிக்கிறது என்பதை எப்படிக் கேட்கும்…? குழந்தைக்கு எந்த மொழி தெரியும்…? ஒன்றுமே தெரியாது…!

தன்னுடைய அழுகை ஒலி மூலமாகப் பாசத்தால் பிடிவாதத்துடன் தான் உணவைக் கேட்கும். பிடிவாதத்துடன் கேட்கும் அந்தக் குழந்தையின் பசியை அறிந்த தாய் அப்பொழுது தான் பாலை உணவாகக் கொடுக்கும்.

அழுகாத சேய்க்குத் தாயிடமிருந்து உணவு உடனடியாகக் கிடைக்குமா…? கிடைக்காது…!

ஏனென்றால் சேய் அழுவது வேதனையால் அல்ல…! தன் உணவுக்காக…!

அந்தச் சேய் தனக்கு உணவை வேண்டிக் கேட்பது போல் நாமும் கேட்க வேண்டும்.

நல்லது நடக்க வேண்டும்…. தெளிவு வேண்டும்… ஞானம் பெறவேண்டும்… பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
1.நம்முடைய இலக்கைப் புருவ மத்தியில் உள்ள ஈசனிடம் வைத்தால்… வேண்டினால்… சுவாசித்தால்… இழுத்துக் கவர்ந்தால்…
1.உயிரும் நம்முடன் பேசும்…!
2.வழி காட்டிக் கொண்டிருக்கும் குருநாதரும் நம்முடன் பேசுவார்.
3.2000 சூரியக் குடும்பத்திற்கப்பால் உள்ள பேரண்ட மகரிஷியாக இருந்தாலும் பேசத்தான் செய்வார்கள்.

இரண்டு கண்களின் நினைவையும் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
1.புருவ மத்தி வழியாக… அதாவது உயிர் வழியாக…!
2.பூமியின் வட துருவத்தின் வழியாக நேரடியாக நினைவைச் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வலைகளைக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
4.தேடுவதும் கிடைக்கும்… நமக்குத் தேவையானதும் கிடைக்கும்… நாம் போக வேண்டிய பாதையும் கிடைக்கும்.

எதுவாக இருந்தாலும் உயிரிடம் சொல்லி விட்டு… பின் மகரிஷிகளிடம் தெளிவாகக் கேட்டு… பின் உயிரிடம் அவர்களிடம் (மகரிஷிகளிடம்) கேட்டு எனக்கு வாங்கிக் கொடு…! என்று உயிரிடம் வலுவாக அழுத்தமாகக் கேட்க வேண்டும்.

என் நினைவலைகளை இப்படிக் குவித்துச் செலுத்தித் தான் ஊடுருவிப் (SCANNING and PROCEEDING) போய்க் கொண்டேயிருக்கிறேன். பதிலும் வருகிறது… பலனும் கிடைக்கின்றது…!

எண்ணும் எண்ணக் குறி வைத்தே…
எடுக்கும் பகுத்தறிவு வளர் ஞானத்திலே…
ஏற்றத்திலே உணரும் உணர்வாய் நீர்…
ஏற்ற உடல் ஆத்ம ஜீவனிலே
ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே…!
ஐக்கியமாகிவிடு…!
ஈஸ்வரபட்டாய குருதேவா… ஈஸ்வரபட்டாய குருதேவா…!

துன்பத்தை விட்டுவிடுங்கள் – அது… “ஓடிப் போகட்டும்…!”

let it go

துன்பத்தை விட்டுவிடுங்கள் – அது “ஓடிப் போகட்டும்…!”

1.கவலை, சஞ்சலம் போன்ற உணர்வுகள் கெடுதலை எப்படி ஏற்படுத்துகின்றது..?

நீங்கள் மோசமான ஒரு துணியைக் கட்டிச் சந்தோசமாக இருந்தால் அது பந்தோபஸ்தான நிலையில் இருக்கும். நீங்கள் எந்தப் பொருளை எடுத்தாலும் மனதிற்குத் தக்கவாறு உணர்வுகள் வேலை செய்யும்.

சஞ்சலம் சலிப்புடன் இருக்கும் பொழுது ஒரு புதுத் துணியைக் கட்டிப் பாருங்கள். எப்படியும் அது கிழிந்தே தீரும்.

ஒரு பெரிய இரும்புக் கம்பியினுடைய தன்மைகள் இருந்தாலும் மனிதன் கவலையும் சோர்வும் அதிகமாக எடுத்து அந்த நட்டை (NUT) முறுக்கினால், “டக்…” என்று தெறித்துப் போகும்.

ஏனென்றால், அந்த உணர்வின் அலைகளின் நிலைகள்.

வேறொன்றும் வேண்டியதில்லை. ஒரு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்பட்டு அடுத்து கவலை அதிகமானால், ரிப்பேர் அதிகமாகிவிட்டால் அதைச் சரியாகக் கவனிக்கவில்லையென்றால் “SHAFT” தெறித்துப் போகும்.

1.அவ்வளவு பெரிய இரும்பு
2.இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டவுடன் அந்த எண்ண அலைகள், 3.“கண் பார்வை” என்று சொல்கின்றோமே அது தெறித்துவிடுகின்றது. 4.அந்தப் பொருள் உடைந்து விடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை எப்படி தடுப்பது…?

2.துன்பத்தை நினைக்கவே வேண்டாம்… அது “ஓடிப் போகட்டும்…!”

இன்று விஞ்ஞான காலம். காலமே இல்லை. நாம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே, இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டு, நாம் ஒவ்வொரு நிமிடமும் விழித்திருக்க வேண்டும்.

இப்பொழுதாவது உட்கார்ந்து கேட்கிறோம். வரும் காலங்களில் உட்கார்ந்து கேட்க முடியாது. அந்த மாதிரி நிலை வரும். நாளைக்கு உட்கார்ந்தும் பார்க்கலாம், சிருஷ்டிக்கவும் செய்யலாம்.
1.அந்த மன உறுதியின் தன்மையும் பெறலாம்.
2.எந்த உணர்வு தாக்கினாலும் இந்த உடலை விட்டு நாம் விண் செல்லலாம்.

ஆகையினாலே சாமி என்னமோ சொல்கிறார் என்று இல்லாதபடி, இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். நல்ல விதைகளை விதைக்கின்றோம். இதற்கு நீர் ஊற்ற வேண்டியது தியானம்.

அடுத்து ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சொல்லியுள்ளோம். ஓம் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ண வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

உங்கள் உடலிலே எத்தகையை துன்பங்கள் வந்தாலும் சரி
1.துன்பத்தை விட்டுவிடுங்கள்
2.“நீ ஓடிப்போ” என்று அதை நினைக்கவே வேண்டாம்.

“இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து, தீமைகளை நீக்கினேன்” என்று நீங்கள் சொல்லும் பொழுது,
1.பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன்
2.அவர்கள்… “எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக விலகிவிடும்,
3.எங்களுக்கு நன்றாக இருக்கும்” என்ற எண்ணங்கள் அங்கே தோன்ற வேண்டும்.

அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.

கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

antenna power of sages

கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

 

வேதனைப்படுவோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் சுவாசித்தால் அந்த உணர்வலைகள் நம் நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கிறது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது
1.நாம் எடுத்துக் கொண்ட நல்ல உணர்வுகளால் உருவான நல்ல அணுக்களுடன்
2.இந்த வேதனைப்படும் அணுக்கள் மோதும் போது இது ஒவ்வொன்றாகச் சேர்த்துச் சேர்த்து
3.வேதனைப்படும் உணர்வின் தன்மையாகக் கருத்தன்மை அடைகிறது.

அப்போது கருத்தன்மை அடையப்படும் பொழுது அது எதை எடுத்து எந்த உணர்வின் தன்மை வெறுப்பின் தன்மை ஆனதோ அது நம் உடலிலே சேரும்போது நம் உறுப்புகளில் அந்தக் காலக்கெடு வரும்போது அந்த அணு முட்டையாக மாறுகிறது.

அணு முட்டையாக மாறும்போது தசைகளில் ஒட்டி இரத்த நாளங்களில் வருவதை உணவாக உட்கொள்ளத் தொடங்கும். அந்த உணர்வின் தன்மை மலமாக்கப்படும் போது
1.வேதனை என்ற உணர்வுகளையோ
2.வெறுப்பு என்ற நிலைகளையோ
3.நஞ்சென்ற நிலைகளையோ நாம் நுகர்ந்திருந்தால்
4.நல்ல அணுக்களால் உருவான தசைகளுக்கும் இது இரண்டுக்கும் எதிரியாகும்

அதனால் அந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து இயக்கும் நிலைகளில் இது மாற்றம் அடைகிறது. மாற்றம் அடையும் போது எந்த உணர்வின் அணுக்களாக அந்தத் தசைகள் வளருகிறதோ (முதலில் உருவானது) அது குறையத் தொடங்குகிறது.

அதே உணர்சியின் தன்மை வரும்போது நம் எண்ணங்களும் சொற்களும் மாறுபடும் நிலை வருகிறது. நம் செயலும் பார்வையும் வித்தியாசமாக மாறுகிறது.

உதாரணமாக வேதனை என்ற உணர்வின் தன்மையை அதிகமாக எடுத்திருந்தால்
1.அந்த அணுத்தன்மைகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
2.ஒளி ஈர்க்கும் தன்மை கண் பார்வைக்கு வரப்படும்போது (ஏனென்றால் நம் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கண்ணுக்கு நேரடியான இணைப்பு உண்டு)
3.அங்கே வலிக்கிறதென்றால் கண் வழிதான் முதலில் அந்த உணர்வு உணர்ச்சியாகி உயிருக்கு வருகிறது.
4.அப்பொழுது கண் பார்க்கிறது. இன்ன இடத்தில் தான் வலிக்கிறது…! என்று நம் கைகள் அங்கே போகிறது.
5.இல்லையென்றால் நம் கை போகுமோ…?

கண்களை மூடிக் கொண்டாலும் வலி என்ற உணர்வின் தன்மை வெளிவரப்போகும் போது
1.அங்கேதான் வருகிறது..! என்று நம் கை இயங்கும்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அங்கே இயக்குகிறது.
3.பொதுவான நிலையாக உடலில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டது நம் கண்கள்.

அதாவது நம் கண்கள் தான் “கண்ணன்…!” என்று மகாபாரதக் காவியத்தின் மூலமாக வியாசகர் இதைத் தெளிவாக்குகிறார் அதனால்தான் கண்கள் என்ற உணர்வு வரும்போது பரமாத்மா.
1.இது ஒரு பரம்.
2.இது எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்து இயக்குகின்றான் பரமாத்மாவாக.

அந்த உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் நுகர்ந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு இயக்கச் செய்கிறான் என்பதை கண்ணன் இந்த லோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றான் என்று வியாசகர் காட்டுகின்றார்.

உதாரணமாக முதுகு பக்கம் வலிக்கிறதென்றால் இங்கே தான் வலிக்கிறது என்று உணர்ச்சி சொல்கிறது. அப்பொழுது… அது என்ன…? ஏது..? என்று திரும்பிப் பார்க்க வேண்டும்…! என்று அந்த உணர்ச்சியின் தன்மையைக் கவர்ந்து கொடுப்பது யார்…?

நம் கண்கள் தான்…!

இந்தக் கண்களுக்கு இயக்கம் எது..? நம் உயிர் தான். அந்த உயிரின் தன்மை எலெக்ட்ரிக்காக இயங்கி அந்த உணர்ச்சிகளுக்குத் தக்க நமக்கு ஊட்டும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதை கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அகக்கண்ணான உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிர் வழியாக எண்ணி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி எங்கே வலிக்கின்றதோ அங்கே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரவேண்டும் என்று
1.அந்த அணுக்களுக்குள் இணைத்தால் வலியை நீக்க முடியும்.
2.தீமையால் உருவான அணுக்களைக் கரைக்கவும் முடியும்.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கவும் முடியும் இதே கண்களால்…!

செய்து பாருங்கள்…!

சுடு தண்ணீர் ஊற்று பூமிக்குள் இருந்து மேலே எப்படி வருகிறது…?

hot spring ganshpuri

சுடு தண்ணீர் ஊற்று பூமிக்குள் இருந்து மேலே எப்படி வருகிறது…?

பூமி ஓடும் பாதையில் எத்தனையோ பாறைகள் வருகிறது. வரப்போகும் போது மேலிருந்து அந்தத் துகள்கள் பூமிக்குள் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் பூமியின் நடு மையம் வெப்பம் அடைகிறது. உள்ளே இருக்கிற பொருள்களை எல்லாம் வேக வைக்கின்றது.

எல்லாம் வேக வைத்துக் கலந்து வெளி வரப்போகும் போது இந்த உஷ்ணத்தினால் சிறுகச் சிறுக வெடிப்பாகும். அதன் வழி கூடி அந்த இடைவெளியில் வரும்.

அந்தச் சந்து வழியாக வரப்போகும் போது இதற்குத் தக்கவாறு
1.சில நட்சத்திரத்தின் கலவைகள் ஆன பிற்பாடு இதனுடைய வெப்பம் ஆகும் பொழுது
2.சில இடங்களில் தங்கமாகும்… சில இடங்களில் யுரேனியமாக மாறும். 3.
இப்படிச் சில அடுக்கடுக்காக வரிசையில் வரப்போகும் அந்தந்தப் பாறைகளுக்கு ஒப்ப மாற்றங்கள் ஆகிறது,

அதே மாதிரி கடலில் உப்பு நீர் இருந்தாலும் அதன் அருகே இருக்கும் பாறைகளுக்கு மத்தியில் நல்ல நீர் இருக்கும். ஏனென்றால் அந்த உப்பு நீரை அது வடிகட்டித் தனக்குள் எடுத்துக் கொண்டு நல்ல நீராகக் கொடுக்கும்.

இராமேஸ்வரத்தில் பாருங்கள்…! ஒரே கிணறாக இருந்தாலும் அந்தந்தப் பாறைகளுக்குத் தக்கவாறு தண்ணீரை வடிகட்டும் போது அங்கே நான்கு விதமான தண்ணீர் இருக்கும்.

இவை எல்லாம் அன்றைக்கு ஞானிகள் கண்டு கொண்ட நிலைகள்.

இதே மாதிரிச் சில இடங்களில் பார்த்தோம் என்றால் கந்தகத் (SULPHUR) தண்ணீர் உண்டு.
1.கீழே அடியில் என்ன செய்யும் என்றால் வெப்பம் உருவாகும்.
2.வெப்பம் உருவான பிற்பாடு ஆவி (GAS) உருவாகும்.

நடு மையத்தில் கொதிகலன் ஆகப்போகும் போது அந்த ஆழத்திலிருந்து அதனுடைய வெடிப்புகள் வெடித்து வரும் பொழுது கந்தக அமிலங்கள் வருகிறது.

அப்போது அந்தக் கந்தக அமிலங்கள் பட்டவுடனே சூடாக வருகிறது.
1.யாரும் ஒன்றுமே ஓட்டை போட வேண்டாம்.
2.நிலத்திற்கு மேலே அந்தத் தண்ணீர் கொப்புளித்து வெளியிலே வரும்
3.அதைச் சுடு தண்ணீர் கிணறு (HOT SPRINGS) என்று சொல்வார்கள்.

மும்பைக்கு அருகில் உள்ள கணேசபூரிக்கு நான் போயிருக்கும் போது அங்கே சுடு தண்ணீர் எப்படி வருகிறது…? மலை மேலிருந்து எப்படி வருகிறது…? என்று அங்கே ஒரு மாதம் இருந்து பார்த்து வந்தேன் (ஞானகுரு).

அங்கே பல தொட்டிகள் கட்டி வைத்து இருப்பார்கள். முதலிலே லேசான சூடு இருக்கும். இரண்டாவது ஒரு சூடு இருக்கும். மூன்றாவது ஒரு சூடு இருக்கும். மிதமான சுடு தண்ணீரிலிருந்து குளித்து விட்டுப் போனால் தான் அடுத்து உடம்பே தாங்கும்.

அந்தக் கணேஷபுரியில் நித்யானந்த சாமிகளின் சமாதி உள்ள இடத்தில் ஆசிரமம் வைத்து இருக்கிறார்கள். ஏற்கனவே நித்யானந்த சுவாமிகள் அந்த மலைப்பகுதியில் உள்ள குகைகளில் யாரும் அங்கே வரக் கூடாது என்ற நிலையில் பல ஜெபங்களை எடுத்திருக்கிறார்.

அந்தக் குகைகளுக்குள் போக வேண்டும் என்றால் படுத்துத் தான் உள்ளே போக வேண்டும். அங்கே புலிகள் நடமாட்டமும் உண்டு. அது மனிதனை நுகர்ந்து வந்து பிடித்து விடாதபடி குகைகளுக்குள் ஒளிந்திருக்கிறவர்களும் உண்டு.

இமயமலைப் பகுதியிலும் சில இடங்களில் இதே மாதிரி மண்ணுக்குள்ளே மூடி இதே ஜெபத்தைச் சொல்லிக் கொண்டு புதையுண்டு இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் தான் யாம் வந்தோம். கண்ட பார்த்த இயற்கையின் உண்மைகளைத்தான் உங்களிடம் சொல்கிறோம்.

நாம் செல்லும் ஞானப் பாதையில் அனுபவங்கள் பெறுவது என்பது மிகவும் முக்கியம்…!

Gnanaguru-Saamigal

நாம் செல்லும் ஞானப் பாதையில் அனுபவங்கள் பெறுவது என்பது மிகவும் முக்கியம்…!

வெறும் தியானத்தை மட்டுமே செய்து கொண்டேயிருந்தால் நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ அதுவே மீண்டும் மீண்டும் நமக்குள் சுழலும். (CIRCULATION)
1.அதை வைத்து வாழ்க்கையைச் சந்தித்தால்
2.ஞானத்தின் பாதையில் முன்னேற்றம் இருக்காது.
3.எந்த இடத்தில் இருந்தோமோ கடைசி வரைக்கும் அப்படியே தான் இருப்போம்.
4.தியானம் நன்றாக இருந்தது…! என்ற இந்தச் சொல் மட்டுமே எஞ்சி நிற்கும்.

ஏனென்றால் தியானம் என்பது பயிற்சி. பயிற்சியை மட்டுமே செய்து கொண்டிருந்தால் நிஜ வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. பெற்ற பயிற்சியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபயோகம் செய்ய வேண்டும்.
1.அப்பொழுதுதான் நமக்கு அனுபவம் கிடைக்கும்.
2.நம் பழக்கம் அதுவாக இருக்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நடந்த நிலைகள் கொண்டு தான் பெற்ற அனுபவங்களைத் தான் சாமிகள் (ஞானகுரு) ஞான உபதேசமாக நமக்குக் கொடுக்கின்றார்.

அருள் ஞானிகளைப் பற்றிய அந்தப் பதிவுகள் மிக மிக முக்கியம். அது தான் ஆற்றல். அவர் கொடுக்கும் ஞான உபதேசங்களை ஆழமாக நமக்குள் பதிவு செய்து அதன் துணை கொண்டு வாழ்க்கையில் வருகின்ற ஒவ்வொன்றையும் நேரடியாகச் சந்தித்தால் (அனுபவத்தின் மூலமாக) ஞானம் கிடைக்கும்.

அதை வைத்துத் திரும்பவும் உபதேசம் கேட்டால் உயர் ஞானமாகும்… உயர் ஞானம் மெய் ஞானமாகும்.

அதை உபயோகித்து மீண்டும் மீண்டும் வாழ்க்கையில் வருவதை எதிர் கொண்டால் சாமி சொல்வது அனைத்தையும் இப்பொழுது நாம் வாழும் காலத்திலேயே நிச்சயம் உணரலாம்… பார்க்கலாம்…!

https://wp.me/p3UBkg-1uf

கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும் மனித வாழ்க்கையின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் துருவ நட்சத்திரம் தான்…!

polaris - guide path

கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவதும் மனித வாழ்க்கையின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் துருவ நட்சத்திரம் தான்…! 

 

அக்காலங்களில் கடலில் செல்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத்தான் பாதை அறிந்து செல்ல வேண்டும்.

இரவாகிவிட்டால் அந்த நட்சத்திரம் எங்கே தோன்றுகின்றதோ வடக்கு கிழக்கு தெற்கு என்ற நிலைகளில் அந்தத் திசைகளை நோக்கிச் செல்ல முடியும்.

அங்கே வழியைக் காட்டும் கை காட்டியோ ரோடுகளோ கிடையாது. தான் வந்த ஊரும்… தான் சென்ற நிலைகளும்.. தான் செல்லும் ஊரும் அது எந்த இடம் என்று கப்பலில் செல்வோர் அதை வைத்துத்தான் அறிகின்றார்கள்.

இன்று விஞ்ஞானிகளோ வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை விட்டு அதற்குள் ஈர்க்கும் சக்தி கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு திசைகளைக் காண்கின்றனர்.

ஆனால் அன்றோ இயந்திரத் துணை இல்லாத அக்காலங்களில் வாழ்ந்தவர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத்தான் உற்று நோக்கி
2.அதனையே எல்லையாக வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் “பலர்…!”

மீனவனாக வாழ்ந்த வியாசகரும் கடலில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பத்தில் புயலில் சிக்கிக் கடலில் வீழ்ந்து உயிருக்காகத் தத்தளிக்கும் பொழுது எந்த மீனைப் புசித்தாரோ அதே மீன் இனமே அவரை முதுகில் சுமந்து கரை சேர்த்துக் காக்கின்றது.

ஒரு மீன் தன்னைக் காத்தது என்ற அந்த ஏக்கத்தில் எண்ணும் பொழுது அவருக்குள் சிக்கப்பட்டதுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்த பின் தான் அந்த மீனவன் மகாபாரதத்தையும் அதற்குள் கீதாச்சாரத்தையும் வெளிப்படுத்திக் காட்டினார்.

ஏனென்றால் வியாசகருக்கு அந்த ஞானம் எப்படி வந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகவும் தான் இதைச் சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதன் மூலம்
2.உங்கள் வாழ்க்கையில் எழும் எத்தகைய வினாக்களுக்கும்
3.நீங்கள் விடைகளைக் காணலாம்.

உங்களிடம் எதிர் நிலையாக வந்து மோதும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து உங்கள் சிந்தனைகளை அது சீராக்கி உங்களைத் தெளிந்த மனதாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்.

தீமை என்ற உணர்வுகள் உங்களை மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது
1.உங்கள் உணர்வே உங்களை இயக்கும் நிலையாக
2.உங்களிலே அது வளரும் தன்மையாக நீங்கள் பெறவேண்டும் என்றும்
3.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிடும் நிலைகள் நீங்கள் பெறவேண்டும் என்பதற்காகத்தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் தெளிவாக்குகின்றோம்.

நலம் பெறுக… வளம் பெறுக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக…!