வேதனையிலிருந்து விடுபடுங்கள்

வேதனை – நஞ்சு – நஞ்சை வென்றிடும் சக்தி

அதர்வண வேதத்தின் மூலக்கூறு

ஒவ்வொரு ஆண்டையும் ஒளியான ஆண்டாக உருவாக்குங்கள்

சிந்தனைகள் கெட்டு உடல் கெடும் நிலை

அறியாமல் செய்யும் தவறால் ஏற்படும் வேதனையை நீக்கும் வழி

பாசத்தால் வரும் தீமைகளை, வேதனைகளை நீக்குதல் வேண்டும்

வேதனையை நீக்கும் கணக்கைக் கூட்டுங்கள்

கஷ்டம் வரும்போது நல்லதை ஏன் விரும்ப முடியவில்லை

வேதனைப்படும் உணர்வை அதிகம் நுகர்ந்தால் உடல் சுருங்கும்

வேதனை உணர்வைச் சுவாசித்தபின் ரோட்டில் நடந்தால் என்ன ஆகிறது

தவறு செய்தவன் தண்டனை அனுபவிக்கின்றான் என்று அதை ரசித்தால் என்ன ஆகும்

விஷத்தைப் பாய்ச்சி குளவி புழுவை மாற்றுகின்றது, வேதனையை நுகர்ந்தால் கடுமையான நோயாகிவிடும்

விஷமான உணர்வை மாற்றும் சக்தி

வேதனைப்படுபவருக்கு அருளைப் பாய்ச்சினால் நமக்கு வேதனை வராது

வேதனை அதிகமானால் நல்லதை வளர விடாது, கேன்சர், டி.பி. வரும்

தற்கொலை செய்வதன் காரணம் – அதிலிருந்து விடுபடுங்கள்

நஞ்சை நீக்கும் மனித உடலுக்குள் நஞ்சு மறுபடியும் எப்படி அதிகமாகின்றது

நம் பையன் படிக்கவில்லை என்ற் மிகவும் வேதனைப்பட்டால் – பாசக்கயிறு, சித்திர புத்திரன் எமன் தண்டனை

நம் வேதனைகளை யாரும் வாங்கிக் கொள்ள முடியாது

செல்வத்தைத் தேடும்பொழுதும் வேதனை செல்வத்தைக் காத்திடவும் வேதனை

வேதனைப்படுவோருக்கு நல்லதைச் சொன்னால் ஏன் ஏற்க முடியவில்லை

சிறு விஷயம் தாங்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்கிறார்கள்

மன பலம் கொடுக்கின்றோம்

நமக்கு வரும் டென்சன் சிறு மூளையின் இயக்கத்தை எவ்வாறு மாற்றுகின்றது

எப்படியாவது தப்பவேண்டும் என்று வந்த நாம் வேதனையான பின் தற்கொலைக்கு ஏன் போகிறோம்

எதிரி எங்கும் இல்லை நமக்குள்ளே உண்டு

அழுக்கு நீரில் நந்நீரை ஊற்ற ஊற்ற நந்நீராக மாறத் தான் செய்யும்

எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் வரும் தீமைகளைப் போக்குங்கள்

நல்லதை விரும்பிக் கேட்க வேண்டும், வேதனையுடன் கேட்கக் கூடாது

நல்லவர்களுக்குத் துன்பம் வருகிறது, மாற்றிட மகரிஷிகளின் மணங்களைச் சேருங்கள்

மகரிஷிகளின் அருள் உணர்வை உரமாக ஏற்றி ஆத்ம சுத்தி செய்யுங்கள்

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வை நாம் பற்றிட வேண்டும்

எத்தகைய தீமையும் பகைமையாகக் கருதாது தனக்குள் அடங்கி தன்னுடன் இணைந்து இயக்கும் நிலை – கல்யாணராமன்

நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் தீமையை நீக்கவில்லை என்றால் நல்ல அறிவை மாற்றிவிடும்

குறைகளைக் காணாதே, குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய் 

நல்ல உணர்வுக்குள் மெய்ஞான உணர்வை எப்படி வலு ஏற்றிக் கொள்வது

அருளைத் திரும்பத் திரும்ப எடுக்க வேண்டியதன் அவசியம்

கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தவற்றை விளையாட்டுத்தனமாக உபயோகம் செய்யக்கூடாது 

தீயவர்கள் நல்லவராக வேண்டும் என்று எண்ணினால் நல்லதை நமக்குள் கொண்டு வருகின்றது

தூய்மையற்றதை மகரிஷிகள் அருள் சக்தி கொண்டு தூய்மையாக்குவதே தியானம் 

மகிழ்ச்சியாக இருந்தாலும் அதற்கடுத்து சங்கடமும் வெறுப்பும் எதனால் வருகிறது

மன பலம் பெறுங்கள்

ஆறாவது அறிவு கொண்டு வேதனையிலிருந்து விடுபடுங்கள்

என் மனதில் ஒரே போராட்டமாக இருக்கின்றது என்று சொல்லக் காரணம் என்ன…?

சாப அலைகள் எங்கள் குடும்பத்தில் இயக்கிய நிலைகள் – ஞானகுரு

வேதனைப்பட்டு அல்லது வேதனைப்படுத்தி உடலை விட்டுப் பிரிபவரகளின் நிலை

பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

நம் உடலே சொந்தமில்லை கௌரவம் நிற்குமா…?

 

 

திருமணம் ஆனவர்கள் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை எடுக்க வேண்டிய “சரியான முறை…”

வசிஷ்டர் அருந்ததி - கௌரி

திருமணம் ஆனவர்கள் தியானத்தின் மூலம் அருள் சக்திகளை எடுக்க வேண்டிய “சரியான முறை…” 

 

யாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.
1.உடலுடன் இருந்தாலும் சரி.. அல்லது
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சரி இந்த மாதிரி எண்ணித்தான் ஆக வேண்டும்.

திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

(கணவன் இந்த வழியில் இல்லை அல்லது மனைவி இந்த வழியில் இல்லை. என் தாய் தந்தையர் இந்தத் தியான வழியில் இல்லை. அதனால் தான் மட்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணக் கூடாது.)

கூட்டுத் தியானமாக இல்லாமல் தனியாக வெளியூரிலோ அல்லது வேறு இடத்தில் இருக்கும் பொழுது தியானம் செய்தாலும் இதைப் போன்று கணவன்.. மனைவி… தாய்… தந்தையர்… என்று எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் தியானிக்க வேண்டும்.

அந்த அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அந்த அருள் ஞானம் எனக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இணைக்க வேண்டும்.

எங்கே இருந்தாலும் இதைப் போன்று எண்ணி அந்த இணைந்த நிலைகளில் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கும் இதைப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்கத்தில் இருந்தாலும் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தியானம் இருக்கும் நேரத்தில் அவர்களையும் இந்த மாதிரி எண்ணிப் பழக வேண்டும்.

ஏனென்றால் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இதை இச்சைப்பட வேண்டும். நமக்குள் அதைக் கிரியை ஆக்க வேண்டும்.

1.கணவன் மனைவி இருவரும் “எப்பொழுதும் இணைந்த நிலைகளில்… சிவ சக்தியாக
2.சப்தரிஷி மண்டலத்தில் குடும்பங்களாக வாழ்ந்திடும் மகரிஷிகள் போல்
3.ஒன்றிய நிலைகளில் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை “நான் பெறவேண்டும்…” என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது…! (இது மிகவும் முக்கியம்)

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…!

Divine energy and Power

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…! 

 

குடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து நம் குடும்பத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அதைத் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு வந்த நிலை அல்ல. தாய்க் கருவில் நாம் சிசுவாக இருக்கும் போதே எத்தனையோ நிலை வந்திருக்கிறது.

நாம் ரோட்டில் போகின்றோம். அங்கே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு சாபமிட்டிருப்பார்கள். அந்த அலைகள் அங்கே இருக்கும். நாம் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகின்றது.

ஆனால் நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் “எத்தனையோ விதமாக… எத்தனையோ வகையில்…!” பதிவாகி இருக்கும். அதெல்லாம் மிகச் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக நீங்கள் கேமராவில் படம் எடுக்கின்றீர்கள். அப்பொழுது ஊடே குறுக்கே யாராவது வந்தால்… படத்தில் சேர்ந்து பதிவாகின்றது அல்லவா…!

அதே மாதிரி ஒரு ஒலிப் பதிவைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஊடே யாராவது சத்தம் போட்டார்கள்… என்றால் அதுவும் சேர்ந்து தான் பதிவாகும்.

இதே மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தும் ஊழ்வினை என்ற வித்தாக நம் எண்ணமுடன் சேர்த்துப் பதிவாகும்.
1.அந்த நேரத்தில் வேறு எண்ணத்தில் நாம் இருந்தாலும்
2.இந்த உணர்வு நமக்குள் ஊடுருவுவது தெரிய வரும்.

உதாரணமாக அது சாப அலையாக இருந்தாலும் நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாக வரும். ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்றாலும் மற்றவர்கள் சண்டையிட்டுச் சாபமிடும் உணர்வுகளை நாம் செவி கொண்டு கேட்டவுடனே அதுவும் நம் நல்ல குணத்துடன் இணைந்து கொள்ளும். (JOINT)

எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி ரோட்டிலே பேசினார்களோ அது எல்லாமே இணைந்து வரும். ஏனென்றால் அந்த உணர்வின் ஒலி அலைகள் வரும் போது
1.சுவாசத்தின் வழியாக அது நம் உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு
2.நம் உடலிலிருந்து மணமாக வெளிப்பட்டு நமக்கே எதிரியாக வரும்.
3.இப்போது இதைத் துடைப்பது யார்…?

இவ்வாறு இயற்கையின் நிலைகளில் வளர்ச்சி அடைந்தது தான் பல எண்ணங்கள். அதைத்தான் பலராமன் (ராமன் என்றால் எண்ணங்கள்) என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
1.ஆகவே பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக
2.அந்த எண்ணங்களின் இயக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது.

உணர்த்தினாலும் எப்போது தீமை என்று உணர்கின்றமோ அதை நம் உடலுக்குள் போகாதபடி இங்கேயே பிளக்க வேண்டும். அது தான் நரசிம்மா…!

தீமைகளை நம் ஆன்மாவிலிருந்து பிளக்க வேண்டும் என்றால் உயிர் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் போகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது. நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாளைக்குச் செய்து பழகி விட்டோம் என்றால் தன்னிச்சையாக வரும்.

ஆனால் முந்தைய பழக்கத்தில் எடுத்துப் பழகிய மற்ற உணர்வுகள் நமக்குள் வலுவாக இருக்கும். ஏதாவது சொல்லிட்டாலும் சரி அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம்.

அப்படிப்பட்ட நேரத்தில் அதாவது அது வலுவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு வந்தாலும் கூட
1.அது இடைவேளியில் வந்து தடுக்கும்.
2.(ஆத்ம சுத்தி செய்யவிடாமல் எண்ணங்களை மாற்றும்)
3.அதையும் நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்.

அப்பொழுது சுதாரித்து மீண்டும் “ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…!” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வலுவாக எடுத்து அந்தத் தீமையைப் பிளக்க வேண்டும். அப்போது அந்த உணர்வுகள் நமக்குத் தோன்றும்.

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். ஆனால் முதலில் நல்ல தண்ணீரை ஊற்றினால் அழுக்கு தண்ணீருடன் கலந்து அழுக்குத் தண்ணீராகத் தான் தெரியும். நல்லதை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் முழுவதும் குறைந்து விடும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க இது பெருகும். இது முழுமை அடைந்துவிட்டது என்றால் அது தன்னிலை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

இந்தத் தியானம் செய்வதற்கு முன்னாடி நம் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளைப் பார்த்துப் பதிவாக்கி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது துடைக்கிறோம். மீண்டும் அது வருகிறது.
1.அது வந்து கொண்டே தான் இருக்கும்.
2.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
3.இன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து விடுகிறோம் என்றால் மறு நாள் மீண்டும் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?
4.சுத்தமான பாத்திரங்களை வைத்துச் சமைத்தாலும் மீண்டும் சமைக்கும் பொழுது அந்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையில் எது வந்தாலும் அதைத் தூய்மையாக்கும் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
1.அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச் செய்யும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையின் பற்று அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றுகிறது.
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.
4.பற்று அங்கே வரப்போகும் போது இங்கே பூமியில் பற்றற்றுப் போகும்.

இதை நாம் செய்து பழக வேண்டும். அப்படிச் சென்றவர்கள் தான் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக ஏகாந்தமாக வாழ்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த உடல் நமக்கு நீடித்த நாள் சொந்தம் அல்ல.

1.இன்று நமக்குச் சொந்தமாக இருக்கிறது.
2.இந்த உடலை வைத்து நிரந்தரமான சொந்தத்தை அந்த ஒளி உடலை நாம் உருவாக்க வேண்டும்.
3.பிறவியில்லா நிலை என்ற அந்தச் சொந்தத்தைக் கொண்டாட வேண்டும்.

விண்ணில் வரக்கூடிய நஞ்சினையும் ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் இந்த உடலை வைத்துத்தான் பெற வேண்டும். இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரம்.

ஆனால் முந்தைய செயல் இன்றைய சரீரம். கடவுளின் அவதாரத்தில் வராகன் தீமைகளை அகற்றி நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்தது.

தீமைகளை அடக்கும் கூர்மையான எண்ணம் கொண்டு கடுமையான சாக்கடையைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்தது. தீமையைப் பிளந்த உணர்வுகள் விளைந்து தீமையை நீக்கும் உடலாக மனித உருப் பெற்றது.

இதைப் போல தான் நமக்கு முன்னாடி இன்று இருக்கும் இந்த காற்று மண்டலம் ஒரு சாக்கடை. அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் மிதந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் வரும் தீமைகளை எண்ணாது அதைப் பிளந்து அருள் ஞானிகளின் உணர்வை நாம் வலுக் கொண்டு எடுக்க வேண்டும். உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
1.இந்த நிலையை ஒவ்வொருவரும் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.
2.எல்லா நலமும் எல்லா வளமும் பெறுவீர்கள்.

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

spiritual-lights-third-eye

நூலாம்படைப் பூச்சி ஆயிரக்கணக்கில் தன் இனத்தைப் பெருக்குவது போல் “ஒளியான அணுக்களை நமக்குள் உருவாக்க வேண்டும்”

 

நூலாம்படைப் பூச்சி தன் உமிழ் நீரால் நூலம்படையை உருவாக்குகின்றது. அதற்குள் ஒரு ஈ சிக்கிவிட்டால் தன் ஊசி போன்ற மூக்கால் ஈ உடலுக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சி உடலை அமிலமாக மாற்றி அதை உணவாக உட்கொண்டு விடுகின்றது.
1.ஈ முழுமையாக இருக்கும்.
2.ஆனால் அதனுடைய தசைகள் இருக்காது.

அதே போல் வலைக்குள் சிக்கும் இன்னொரு ஈயை இந்த நூலாம்படைப் பூச்சி என்ன செய்கிறது? தனக்குள் விளைந்த விஷத்தின் தன்மையை அந்த ஈயின் உடலுக்குள் பாய்ச்சி விடுகின்றது.

பாய்ச்சிய பின் ஈயின் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சியை உருவாக்கும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
1.அப்படி மாறிய பின் அந்த ஈயின் ரூபங்கள் மறைந்து விடுகின்றது.
2.அந்த அணுக்கள் அனைத்தும் நூலாம்படைப் பூச்சிகளாக மாறி விடுகின்றது

அதாவது ஈயின் உடலில் இந்த நூலாம்படைப் பூச்சிகள் உருவாகி “பல ஆயிரம் நூலாம்படைப் பூச்சிகளாக…” வெளி வருகின்றது. (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

ஒரு குளவி என்ன செய்கிறது? ஒரு புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சி கூட்டுக்குள் அடைத்துப் புழுவைத் தன் இனமாகக் குளவியாக மாற்றுகின்றது.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் போது அதிலிலுள்ள அணுக்கள் அனைத்தையும் ஜீவ அணுக்களாக மாற்றும் போது
1.நூலாம்படைப் பூச்சியின் உருவாகக் கொச கொச என்று
2.பல அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

நூலம்படைப் பூச்சி தன் இனத்தை உருவாக்குவதற்கும் குளவி தன் இனத்தை உருவாக்குவதற்கும் உண்டான வித்தியாசத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

நீங்கள் இதையெல்லாம் ஆர அமர்ந்து நிதானமாகக் கேட்கின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) இதைத் தெரிந்து கொள்வதற்கு அந்தப் பூச்சியகள் கருவாகி உருவாகும் நிலையை அதை அறியும் வரையில் எனக்குச் சாப்பாடு கிடையாது.

ஒரு நிமிடம் வேறு பக்கம் என் நினைவு திரும்பினால் குருநாதர் என்ன செய்வார்…?
1.உன்னை எதற்காகக் கூப்பிட்டுக் கொண்டு வந்தேன்…?
2.நீ எங்கே பார்க்கின்றாய்…? என்பார்.

நூலாம்படைப் பூச்சி ஈக்குள் கூர்மையாகப் பாய்ச்சிய உணர்வின் தன்மையால் அது எப்படி உருமாறுகின்றது…? அதன் உணர்ச்சியின் தன்மை துடிப்பின் நிலைகள் எவ்வாறு வருகின்றது…?

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ அலைகளையும் டி.வி. அலைகளையும் ஒலி/ஒளிபரப்புகின்றார்கள். வீட்டில் இருக்கும் ரேடியோ டி.வி இவைகளைத் திருப்பி வைக்கும் பொழுது
1.ஒலி/ஒளிபரப்பாகி வரும் அந்த அலைகளைக் கவர்ந்து
2.அந்த அலைகளுக்குத் தக்க உருவமாகவும் ஒலியாகவும் நமக்குக் காட்டுகின்றது.

அதைப்போல நூலாம்படைப் பூச்சி பாய்ச்சிய உணர்வலைகள் அந்த உயிரின் (ஈயின்) துடிப்பால் ஈர்க்கப்பட்டு அந்த உணர்வுகள் நூலாம்படையின் ரூபமாக மாற்றுகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவை அனைத்தும் எந்த உயிரானாலும் எதன் நிலைகள் கொண்டாலும் ஆண் பெண் என்ற நிலைகளில் தான் இணைகின்றது.

ஒரு ஆண் நூலாம்படைப் பூச்சி தனக்குள் உருவாகும் உணர்வின் தன்மையை ஈயைத் தாக்கப்படும் போது ஒரு பெண் நூலாம்படைப் பூச்சியும் அதே போல அங்கே ஈக்குள் உமிழ் நீரைச் சுரக்கச் செய்கின்றது.

அப்படிச் சுரந்த பின்தான் ஈயின் உடலில் அமிலங்கள் மாறி அதன் ரூபமாக மாற்றுகின்றது. ஆண் பூச்சி மட்டும் அது தாக்குவதில்லை.

ஆனால் குளவியில் இருக்கக்கூடிய நிலையோ
1.உயிரின் இயக்கம் கொண்டு குளவி ஆண் என்ற நிலைகள் அடைந்த பின்
2,குளவிடமிருந்து சுரக்கும் உணர்வுகள் புழுவின் உடலுக்குள் சேர்க்கப்படும் போது
3.அது பெண் என்ற நிலைகள் அடைகின்றது.

அப்பொழுது புழு உடலுக்குள் உருவாகும் கருவின் தன்மையை குளவியின் ரூபமாக எவ்வாறு உருமாற்றுகின்றது..? என்று காட்டுகின்றார்.

நூலாம்படைப் பூச்சி ஆண் பெண் என்ற நிலைகள் அமைகின்றது. ஆனால் குளவி ஆண் பெண் என்ற நிலைகளில் வருவதில்லை. தன் விஷத்தின் தன்மையைப் புழு உடலில் பாய்ச்சப்படும் போது இந்த உடலிலுள்ள அணுக்களின் தன்மை பெண்பாலாக மாறிவிடுகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு இயற்கையின் செயல்கள் எப்படி உரு பெறுகின்றது…! உடல்கள் எப்படி மாறுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குளவி ஒரு புழுவைக் கொட்டி ஒரு புழுவாக மாற்றும் நிலையையும் நூலாம்படைப் பூச்சி ஒரு ஈயை பல நூற்றுக்கணக்கான நூலாம்படைப் பூச்சிகளாக மாற்றும் நிலைகளையும் குருநாதர் தெளிவாக்கினார்.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஏனென்றால்
1.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி
3.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
4.ஒளியான அணுக்களாக உருவாக்கி அழியா ஒளிச் சரீரம் நாம் பெற வேண்டும்.

பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…! (“டெலிபதி – TELEPATHY”)

Sages light

பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…! (“டெலிபதி – TELEPATHY”)

 

ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது வீட்டிலிருந்தே அந்தந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைத்து அதைப் பார்த்து கேட்டு மகிழ்கின்றோம்.

இதைப் போல் தான் மனிதர்கள் நமக்குள்ளும்
1.எத்தனை பேரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ அந்த எண்ணங்களை எண்ணினால்
2.மீண்டும் அது நமக்குள் நினைவலைகளாக வந்து இயக்கிக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக வியாபார நிமித்தமாக எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். அவர்களைப் பற்றி நமக்குள் பதிவாக்கிக் கொள்கிறோம். அப்படி வியாபாரம் செய்யும் பொழுது கொடுக்கல் வாங்கலில் யாராவது பணத்தைத் தராமல் கொஞ்சம் இழுத்தடிக்கின்றார்கள் என்றால் என்ன நினைப்போம்…?

பாவிப்பயல்…! இப்படிச் செய்கிறானே..! எப்பொழுது தரப் போகின்றானோ…? இவனை எல்லாம் என்ன செய்யலாம்…? என்று மீண்டும் மீண்டும் இந்த ஸ்டேஷனைத் திறந்து (OPEN) பார்த்துக் கொண்டிருப்போம்.
அந்தச் சமயத்தில்
1.நம்மிடம் சரியான முறையில் வியாபாரம் செய்து பணத்தைச் சீராகக் கொடுப்பவர்களைப் பற்றிய நினைப்பே வாராது.
2.அந்த ஸ்டேஷனைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.
3.பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள் மீது தான் எண்ணம் வரும்.

அடுத்தாற்போல இது என்ன செய்யும்…? பக்கத்து வீட்டுக்காரன் ஏதாவது இடைஞ்சல் செய்து கொண்டிருந்தான் என்றால் அவர்கள் மேல் எண்ணம் வேகமாக வரும்.

இதே மாதிரி சொந்த பந்தங்களில் ஏதாவது செய்தாலும் செ…! இவர்களும் இப்படித்தான் ஏதாவது இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றார்கள்…! என்று இதன் வரிசையிலையே தொடர்ந்து அந்த எண்ணங்கள் வரும்… பார்க்கலாம் நீங்கள்…!

உதாரணமாக குறைகளைப் பற்றி அடுத்தவரிடம் கொஞ்ச நேரம் பேசிப் பாருங்கள்.
1.அப்புறம் அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறை உணர்வுகளும் வரிசையில் வந்து கொண்டு இருக்கும்.
2.நல்லது நினைக்கவே வராது.
3.குறைகளை எல்லாம் பேசிய பின் சருக்…! என்று “என்ன உலகம் போங்கள்…?!” என்று
4.குறையைப் பேசியவரும் சரி… குறையைக் கேட்டவரும் சரி… இரண்டு பேருக்குமே இந்த மாதிரி உணர்வுகளின் இயக்க ஓட்டங்கள் தான் வரும்.

நன்றாகப் பேசி கொண்டு இருக்கும் போதே பாருங்கள். ஐயோ… இந்த ஆள் ரொம்பவும் மோசமானர்…! என்று சொல்லுங்கள். அப்புறம் அவரும் அடுத்து “இன்னொருவரை மோசம்…!” என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லோரையும் மோசம்…!” என்று சொல்லும் நிலைக்கு வரிசையில் வந்துவிடும். ஏனென்றால் அந்த உணர்வுகளின் தொடர் வரிசை அப்படித்தான் வரும்.

இந்த மாதிரி நம் வாழ்க்கையில் வர ஆரம்பிக்கும் போதே உடனடியாக நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போய் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொல்ளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் (உயிரிடம்) சொல்லிப் பழக வேண்டும்.

ஏனென்றால் உங்களை உருவாக்கியது யார்..? உயிர் தான். கண் என்ன செய்கிறது..? உற்றுப் பார்ப்பதை எடுத்துக் கொடுக்கிறது. உயிரில் படுகின்றது. தப்பு செய்கிறார்கள் என்று சொல்கின்றது.

கண்ணின் கருவிழியோ (ருக்மணி) உடலில் எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ (சத்தியபாமா) அந்த மனித உடலில் இருந்து வந்த தவறு செய்யும் உணர்வை இழுத்து நம்மிடம் கொடுக்கிறது. உயிரான காந்தம் என்ன செய்கின்றது..? இழுக்கிறது.

உதாரணமாக ஒரு நாடாவில் (CD) பதிவு செய்கிறோம். பதிவு செய்ததை இயந்திரத்தில் போட்டதும் அந்தக் காந்த ஊசிப் பக்கம் (LASER) போனவுடனே என்ன செய்கிறது…? அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ஒலியையும் ஒளியையும் நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றது. இதே மாதிரித் தான்
1.நம் உயிர் ஒரு லேசர் (LASER).
2.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதனதன் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
3.பின் உடல் முழுவதற்கும் அந்த அலைகள் சுழலத் தொடங்குகிறது. (CIRCULATION)

உதாரணமாக அப்போது தீமையான குணத்திற்குப் போனோம் என்றால் அது வீரியம் அடைகிறது. அந்தந்த அணுக்கள் உணவுகளை எடுத்துச் சாப்பிடும். அந்த வழிகளில் தெம்பாகின்றது.

அப்போது நல்லதை எண்ணினாலும் நம்மால் எடுக்க முடிவதில்லை. நமக்குள் நல்ல அணுக்கள் இருக்கிறது. இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமை அடைபட்டவுடன் நல்லதை இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது.

ஆகவே நல்ல அணுக்களுக்கு நாம் எப்படிச் சாப்பாடு கொடுப்பது…?

அத்தகைய தீமையைப் பிளந்து உங்களுக்கு நல்லதைக் கொடுக்கக்கூடிய சக்தியாகத் தான் அந்த ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வலைகள் இப்பொழுது உங்களுக்குள் பாய்கிறது. இந்த அலைகள் பாயும் பொழுது நீங்கள் கொஞ்சம் அந்த நினைவைக் கொடுத்தவுடனே தீமையான அலைகளைப் பிளந்து ஞானிகளின் ஸ்டேசனைத் திறந்து (OPEN) விட்டுவிடும்.

ஞானிகளின் உணர்வலைகள் உங்கள் உடலுக்குள் சுழலத் தொடங்கும் பொழுது (CIRCULATION) தீமைகளைத் துடைத்து விடும். உங்களுக்குள் நல்ல நினைவாற்றல் வரும். நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள்.

யாம் (ஞானகுரு) சொன்னதை இப்படிச் சரியான முறையில் செய்தீர்கள் என்றால்
1.மறந்து போனதையோ அல்லது காணாமல் போன பணப் பையையோ எங்கே வைத்தோம்…? என்று நினைவிற்கு வரும்.
2.இல்லை என்றால் இங்கே இருக்கிறது பாருங்கள் என்று அந்த ஞானிகள் உணர்வுகள் அதை எடுத்துக் காட்டும்.
3.உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

முதலில் தெரியவில்லை. சீராக எடுத்துக் கொண்டால் இந்த உணர்வு தன்னிச்சையாக (AUTOMATIC) அந்த இடத்திற்கு உங்களை இழுத்துக் கொண்டு போகும்.

உதாரணமாக ஒரு நண்பரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றீர்க்ள். அந்த நண்பரை உங்களிடம் இழுத்துக் கொண்டு வரும். நான் நினைத்தேன்… அவர் வந்துவிட்டார்…! என்று சொல்வீர்கள். இது எல்லாம் இந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்கள்.

ஏனென்றால் நண்பர் மேல் பற்று உள்ளவராக இருக்கின்றீர்கள். அடுத்த தெருப் பக்கம் போய்க் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நண்பரைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் திடீரென்று எண்ணம் வந்தது என்றால்
1.எங்கேயோ போக வேண்டும் என்று எண்ணிய நண்பரைக் குறுக்காட்டி
2.நீங்கள் இருக்கும் இந்தப் பக்கமாக அழைத்துக் கொண்டு வரும்.

அட…! நான் இப்பொழுது தான் நினைத்தேன்… உடனே நீ வந்துவிட்டாயே…! என்று அவரிடம் சொல்வோம். நண்பன் மேல் இருக்கக்கூடிய பற்றின் உணர்வுகள் இப்படி இயக்குகிறது. இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய நிலைகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொண்டு மற்றவர்களுக்குள்ளும் அதைப் பாய்ச்சினீர்கள் என்றால் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.

யாராவது உங்களுக்குத் தீமை செய்ய நினைத்தார்கள் என்றால், அவர்கள் உணர்வில் என்ன செய்யும்…? அந்தத் தீமை அவர்கள் உடலில் தான் வளரும். அது நம்மை ஒன்றும் நம்மைப் பாதிக்காது.

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நமக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள் என்றால் அவர்கள் உடலில் பாதிக்கும்.
1.பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.
2.அடடா…! இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம் பார்…! என்று நிச்சயம் அவர்களுக்குள் உணர்த்தும்.

நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் முன்னாடி போனவுடனே அந்த நினைவலைகள் இயக்கி நம் நினைவு அங்கே வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்தரவு படுத்தினோம் பார்…! என்று
2.அப்புறம் நிச்சயம் இந்தத் திருத்தம் வரும்.

மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துச் சீராக வளர்த்துக் கொள்பவர்கள் இதையெல்லாம் நிச்சயம் அனுபவபூர்வமாக உணர முடியும். அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

ஈசனுக்குச் செய்யும் பணி எப்படி இருக்க வேண்டும்…?

Soul is sole God

ஈசனுக்குச் செய்யும் பணி எப்படி இருக்க வேண்டும்…?

 

மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகுங்கள்… உங்கள் கஷ்டம் எல்லாம் போகும்…! என்று யாம் (ஞானகுரு) சொல்கின்றோம். கஷ்டத்தை நீக்கும் வழி முறைகளையும் ஆற்றல்களையும் கொடுக்கின்றோம்.

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு அடுத்தாற்போல் என்ன சொல்கிறார்கள்…?

அதை ஏன் கேட்கின்றீர்கள்…? என் பையன் எதிர்த்துக் கொண்டே இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் இப்படி இருக்கின்றான். பக்கத்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்கின்றான். நான் கொடுத்த கடன் பாக்கி பணம் வரவில்லை என்று இப்படியே சொல்கின்றார்கள்.

பையன் நல்லவனாக வேண்டும். கடன் பாக்கி பணம் திரும்ப வர வேண்டும் என்று “இப்படிக் கேளுங்கள்” என்று சொன்னாலும் அதற்குத் தானே வந்தேன் என்பார்கள்.

அப்பறம் திருப்பி இரண்டாவது தரம் மறுபடியும் அந்தக் கஷ்டத்தையே சொல்வார்கள்.

யாம் எத்தனை தரம் ஞானிகளின் உணர்வை இணைத்து நல்ல வாக்காகக் கொடுத்தாலும்
1.என் கஷ்டம் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது என்று
2.நான் சொன்ன நல்லதைத் திருப்பி என்னிடமே விட்டு விட்டு
3.மீண்டும் கஷ்டத்தை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.

துன்பங்களைப் போக்கும் நல்ல வாக்கை என்னிடமே விட்டு விட்டு கஷ்டத்தைச் சொல்லிக் கஷ்டத்தைத் தான் எடுத்துக் கொண்டு போகின்றார்கள்.

ஏனென்றால் அது அவருடைய குறை இல்லை. காரணம் சாப அலைகளே இதற்கு மூலமாகிவிட்டது.

ஒரு வீட்டில் ஒரு பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை என்றால் உங்கள் மனது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறது…!

உங்கள் நண்பருக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஒன்றைச் செய்து கொடுத்து அது சரியான நிலையில் வரவில்லை… அவர் சரியாகச் செய்யவில்லை… உங்கள் மனம் எப்படிப் புண்படுகிறது…?

“நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று நான் பல ஆயிரம் பேரிடம் சொல்கிறோம். அப்படி நான் கொடுக்கும் நல்ல வாக்குகளைச் சரி வரப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால் குருநாதர் எத்தனையோ ஆபத்தான நிலைகளில் எம்மைச் சிக்க வைத்து அந்த உணர்வின் எண்ணங்கள் உனக்குள் எப்படி இயங்குகின்றது என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளச் செய்தார்.

அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது எப்படி இயக்குகின்றது என்று மூன்று இலட்சம் பேரைக் காண்பித்தார்.

அவர்கள் ஆரம்பத்தில் நன்றாக இருப்பதும் பின்னாடி நல்லதை இயக்க முடியாமல் எந்த நிலையில் அல்லல்படுகிறார்கள் என்று காட்டி
1.இப்படிப்பட்ட மாய வாழ்வாக இருக்கின்றது…,
2.இதில் நீ எதைக் காணப் போகின்றாய்…?
3. நம்முடைய கடைசி எல்லை எது? என்று வினா எழுப்புகின்றார்.

என்றும் நிலையான நிலைகள் கொண்டு அழியாமல் இருப்பவர்கள் மகரிஷிகள்.

1.ஒளிச் சரீரம் பெற்ற அந்த மகரிஷிகளினுடைய அருள் சக்தியை எடுத்து
2.நாம் அவர்களைப் பின்பற்றி
3.அவர்களுடன் தான் நாம் ஐக்கியமாக வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“எல்லோரும் நல்லவரே” ஆனாலும் ஒவ்வொரு மனிதரும் சந்தர்ப்ப பேதத்தால் குடும்பத்தில்கள் சிக்கல்களாகி பல இன்னல் படுகின்றார்கள்.

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நல்ல வாக்கைப் பதிவு செய்தாலும் ஒரு நூறு பேர் வருகின்றனர் என்றால் அதில் இரண்டு பேர் தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.

எம்மிடம் நல்ல வாக்கை வாங்கிய பின் அடுத்தவர் கூப்பிட்டு சாமி (ஞானகுரு) உங்களுக்கு என்ன சொன்னார்…? என்று கேட்டால்
1.நன்றாக இருப்பாய் என்று தான் சாமி சொல்கின்றார்.
2.என் கஷ்டத்தைப் பார்த்தால் பெரிய தொல்லையாக இருக்கின்றது என்கிறார்கள்.
3.சாமி நல்ல வாக்கு கொடுக்கின்றார் – வாஸ்தவம் தான்.
4.ஆனால் என் காலம் நல்லதை எங்கே ஒட்டி வருகின்றது…? என்று
5.கொடுத்த வாக்கை நினைவில் வைக்காதபடி இப்படிச் செய்து விடுகின்றார்கள்.

சாமி கொடுத்த அருள் வாக்கினால் நான் நன்றாக இருக்க வேண்டும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். நான் பார்க்கின்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இப்படிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் துன்பத்தை நீக்கும் அந்த அருள் ஞான விதையை முளைக்க வைத்து விளையச் செய்து மறுபடியும் பல வித்துகளாக உருவாக்கி ஒவ்வொருவருக்கும் குடும்ப வாழ்க்கையில் வந்த இன்னலைப் போக்குவதற்குகாக வேண்டி பதியச் செய்கின்றோம்.

1.நான் அதை முளைக்க வைக்க
2.அந்த வித்தை உருவாக்குவதற்கு “என்ன பாடுபட்டேன்…!” என்று எனக்குத்தான் தெரியும்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் அந்த நல்ல வித்தை ஊன்றுகின்றோம்.
1.அதை முளைக்க வைக்காமல் விட்டால் என்ன செய்யும்?
2.இங்கேயே உதறிவிட்டுப் போய்விடுகின்றார்கள்…!
3.அப்போது என் மனது எப்படி இருக்கும்…?

நாம் சொல்லி அது முளைக்க வைக்காமல் சிதறவிட்டார்கள் என்றால் அதைப் போக்குவதற்காக நான் கடுமையான தியானம் இருக்கின்றேன்.

உங்களை வளர்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு உயிரையும் நான் வேண்டுகின்றேன்.

1.இந்த உடல்களை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனே…!
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாமல் இயக்கிக் கொண்டிருக்கும் தீமைகள் அகல வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
4.மகிழ்ச்சியான உணர்வுகள் அங்கே தோன்ற வேண்டும்
5.அந்த நிலையை நீ அவர்களுக்குக் கொடு என்று
6.உங்கள் உயிரை (ஈஸ்வரனை) வேண்டிச் சதா நான் தியானமிருக்கின்றேன்… தவமிருக்கின்றேன்…!

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் உங்கள் கஷ்டமான உணர்வுகளை நான் கேட்டறிந்தேன் என்றால் என் உயிர் சும்மா இருக்காது.
1.உங்கள் கஷ்டத்தின் பால் என் நினைவுகள் சென்றால்
2.அதை உயிர் அறியச் செய்து அணுவாக மாற்றி
3.என் உடலாகவே ஆக்கி விடுகின்றது.

ஏனென்றால் உயிரின் வேலை அதுவாக இருக்கின்றது.

ஆகவே ஆறாவது அறிவின் ஞானமாக சேனாதிபதி என்ற நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் சக்தியின் துணை கொண்டு வரும் தீமைகளை என்னால் அகற்ற முடிகின்றது. உங்களுக்கு மீண்டும் மீண்டும் அதை உபதேசிக்கவும் முடிகின்றது.

அதை போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் எதைச் செய்தாலும் யாம் கொடுத்த ஞானிகளின் அருள் ஞான வித்தை உங்களுக்குள் விளைய வைக்க வேண்டும்.

நிச்சயம் அதனின் பலனைப் பெற முடியும்…!

மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

siddhars

மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

உங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது…? அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே… அப்படிப் பேசினானே…! என்று இதை எல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்வோம்.

1.அப்புறம் எத்தனை நல்லது சொன்னாலும் கேட்கவிடாது.
2.சங்கடமும் சலிப்பும் வெறுப்பும் எடுத்துக் கொண்டால் நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நல்லதை நினைக்க விடாது.
3.நல்லதைச் செய்யவும் விடாது. நல்ல சொல்லும் வராது. பார்வையிலும் சோர்வு இருக்கும்.

யாரைப் பார்த்தாலும் சோர்வுடனே பார்ப்போம். சோர்வுடன் வேலையைச் சொல்லும் பொழுது நம்மிடம் வேலை செய்பவர்களையும் பலவீனப்படுத்தும்.

ஏனென்றால் இவைகள் எல்லாம்
1.இயற்கையின் செயலாக அந்த உணர்விற்குத்தக்க அது அது இயக்கும்.
2.அந்த உணர்விற்குத் தக்க தான் அவர்கள் வாழ்ககையும்
3.அந்த உணர்விற்குத்தக்க தான் நம் தொழிலும் இருக்கும்.
3.இதற்குக் காரணம் நாம் அல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

காரணம் என்ன என்றால்… சும்மா ரோட்டில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விஷச் செடியில் இருந்து வெளிப்படும் மணங்கள் அங்கே பரவிக் கொண்டு வருகிறது.

நமக்கு முன்னாடி நடந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை. நாம் பின்னால் போகிறோம். அந்தக் காற்று நம் மீது பட்டவுடனே நமக்கு எதிர் நிலையாகின்றது. மேலே பட்டவுடனே அரிப்பாகின்றது. உடலிலே தடிப்பாகின்றது.

என்ன என்றே தெரியவில்லை…! நான் ஒன்றுமே செய்யவில்லை. ரோட்டில் தான் நடந்து வந்தேன். எனக்கு அரிப்பாகி உடலில் தடிப்பாகிவிட்டது என்பார்கள். இதெல்லாம் காற்றலைகளில் இருந்து நமக்குள் வருவது.

அதே சமயத்தில் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சில கெமிக்கல் கலந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாறி அதுவும் படர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மாறி மாறி வெளிப்படுத்தும் பல கெமிக்கல் கலந்த அலைகளின் தொகுப்புகள் ஒன்றைக் கண்டு மற்றது அஞ்சி ஓடி இப்படி ஒன்றோடு ஒன்று மோதி வேகத் துடிப்பு அதிகமாகும்.

அது அடுக்கடுக்காக வரப்போகும் போது அந்தப் பக்கமாகச் சென்றால் யார் உடலில் இது அதிகமாகப் படுகிறதோ சுவாசித்த பின்
1.எனக்கு எப்படியோ மயக்கம் வருகிறது.. என் சிந்தனை எல்லாம் குறைகின்றது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
2.அந்த நேரத்தில் சுவாசித்த உணர்வுகளால் உடலில் நோயாகும் வாய்ப்பும் உருவாகின்றது.
3.ஏனென்றால் இன்று நம்முடைய காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மை அதிகமாகப் பரவி இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணிவிட்டுத் தான் செல்ல வேண்டும்.

இந்த உபதேசத்தின் மூலம் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடம் எடுத்து கொண்ட பின் அந்தச் சக்தி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதே மாதிரி மனைவியும் தன் கணவர் வெளியில் போகிறார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி இந்த வலுவைக் கணவருக்குப் பாய்ச்ச வேண்டும். இத்தகைய வலு இருக்கும் போது மற்ற தீமைகளை விலக்கித் (REMOTE) தள்ளிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் நீங்கள் சோர்வாகப் போய்ப் பாருங்கள். நடந்து போகப் போக சோர்வு அதிகமாகும்.
1.மனக் கவலையுடன் இருந்தீர்கள் என்றால் உங்கள் காரியங்கள் தடைப்படும் நிலையாகிவிடும்.
2.நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் – “நம் சொல்லே…!” நமக்கு எதிர் நிலையாக வரக்கூடிய தன்மையிலே வரும்.

இதைப்போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை அதிக அளவில் கொடுக்கிறோம். அதை நீங்கள் எடுத்து வளர்கக வேண்டும்.

ஒரு விதையைக் கொடுத்து வயலில் விதைத்து விளைவிக்கச் சொல்கிறோம். அந்த விதைக்குத் தக்கவாறு இன்னென்ன காலத்தில் இன்னென்ன பருவத்தில் இப்படிச் செய்…! என்று சொன்ன பிற்பாடு அதே முறைப்படி செய்தோம் என்றால் நன்றாக வெள்ளாமை வரும்.

இதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்தைக் கூர்மையாக உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவான பின் வாழ்க்கையில் சிக்கல் வரும் பொழுதெல்லாம் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து எடுத்து அந்தப் பருவத்தினை ஏற்படுத்தினால் அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வெளியில் போகும் போதும் வியாபாரம் செய்யும் போதும் இரவிலே தூங்கப் போகும் எத்தனையோ பல தீமைகளைப் பார்க்கின்றீர்கள். அந்தத் தீமைகள் உங்களைச் சேராமல் அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் உண்மையான தியானம்.

1.அது இல்லாதபடி… உட்கார்ந்து கொண்டு…!
2.”விடிய விடிய நான் தியானம் எடுப்பேன்…!” என்று சொன்னால் அது அர்த்தமில்லாத தியானம்
3.ஆகையினால் ஒவ்வொருவரும் இங்கே கொடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை விரயம் ஆக்காது செயல்படுத்த வேண்டும்.

வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை

flower-meditation

வியாபாரத்தைச் சீராக்கத் தியானிக்க வேண்டிய முறை 

 

மிளகாயைக் குழம்பில் போடுறோம். அதிலே அளவுடன் வைக்கப்படும் போது சாப்பிடக் கூடிய நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதிகமாகப் போட்டு விட்டால் சுவையைக் கெடுத்து விடுகின்றது. எரிச்சல் வருகின்றது.

இதைப்போல தான் நம் வாழ்க்கையில் நமக்குள் வரும் கார உணர்ச்சியோ வெறுப்பு உணர்ச்சியோ வேதனை உணர்ச்சியோ இவை அனைத்தும் நம் நல்ல குணங்களின் வலுவை இழக்கச் செய்து நல்ல உணர்வுகளை வளர்க்கும் தன்மையைத் தடைப்படுத்தும் சக்தியாக வந்துவிடுகின்றது.

ஆனால் உங்கள் வாழ்க்கையில் சங்கடத்தையோ கஷ்டங்களையோ பார்க்காமல் இருக்க முடியாது. அதைப் பற்றிப் பேசாமலும் இருக்க முடியாது.

எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் காசைக் கொடுத்த பின் நான்கு தரம் உங்களை அலைய வைத்தவுடனே என்ன செய்வீர்கள்…? இப்படிச் செய்கிறானே…! என்ற வேதனை தன்னாலே வரும்.
1.அந்த விஷத்தைச் சுவாசித்துத் தான் ஆக வேண்டும்.
2.விஷம் இல்லாது எதுவுமே இயங்குவது இல்லை.

வேதனை என்ற உணர்வுகள் தூண்டப்படும் போது நாம் நல்ல குணங்களில் விஷம் கலந்து விட்டால் இது சோர்வடையத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அது சோர்வடையாமல் தடுக்க வேண்டும் என்றால் இந்த விஷத்தை ஒடுக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க வேண்டும்.

வியாபாரத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை நினைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஒரு நிமிடம் உடல் முழுவதும் அந்தச் சக்திகளைச் செலுத்திப் பழக வேண்டும்.

ஒரு நிமிடம் இப்படித் தியானித்து விட்டு அவரைப் பார்த்து… “பரவாயில்லை… அடுத்து உங்களுக்கு வருமானம் வரும். நீங்கள் நிச்சயமாகக் கொடுப்பீர்கள். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது என்று இந்த உணர்வைச் சொல்லி விட்டு வந்து விடுங்கள்.

இந்த உணர்வுடன் நாம் சொன்னவுடனே அவருக்கு காசு வரத் தொடங்கும். அடுத்து நம்மைப் பார்த்ததும் வாங்கிய பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் வரும்

ஆனால் அப்படிச் செய்யாமல் சொன்னபடி பணத்தைத் திரும்பத் தரமாட்டேன் என்கிறான்…! இவனை என்ன செய்யலாம்…? என்ற நிலையில் வெறுப்புடன் அவரிடம் பேசிவிட்டு வந்தீர்கள் என்றால் அந்த வெறுப்பான அலைகளால் அடுத்து அவர் வியாபாரமும் மந்தமாகும். காசு தரக் கஷ்டமாக இருக்கும்.

நாம் இங்கிருந்து கடைக்கு வசூலுக்குப் போகலாம் என்று நினைத்தோம். யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்று நம்முடைய வெறுப்பு அங்கே போய்விடும் முன்னாடியே…!

1.அங்கே ஏற்கனவே கசமுசா ஆகி இருக்கும்.
2.நாளைக்குப் போக வேண்டும் என்று நினைப்பீர்கள்.
3.ஆனால் இன்றிலிருந்தே அங்கே வியாபாரம் மந்தமாக இருக்கும்.
4.இது எல்லாம் இபற்கையினுடைய செயல்.

அப்போது நாம் இங்கே போனவுடனே நம்மைப் பார்த்தாலே அவருடைய எண்ணங்கள் எப்படி வரும்….? கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால்
1.காசு வரவில்லையே… எப்படிக் கொடுக்கிறது…? என்ற திகட்டல் இருக்கும்.
2.அவரும் வேதனைப்படுவார். இந்த வேதனையால் அவர் தொழிலும் கெடும்.
3.நாம் கொடுத்த பணமும் விரையமாகும். பொருளும் வருவது தடையாகின்றது.
4.ஆகவே அவர் நன்றாக இருந்தால் தான் நமக்கு அந்தப் பணம் வரும்.

அப்போது அந்தச் சந்தர்ப்பம் அவரால் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. உடனே முதலில் சொன்ன மாதிரி “ஈஸ்வரா…! என்று கொஞ்ச நேரம் நின்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.

இந்த வாடிக்கையாளரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று அவர் நலம் பெற வேண்டும். அவர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும். அவர் தொழில் வளம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து தியானியுங்கள்.

தியானித்த பின் அவரிடம் இனி உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாக்கி எல்லாம் சீக்கிரமாக வரும். எனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லி விட்டு வாருங்கள். நம்மைத் தேடி வந்து பணத்தைக் கொடுப்பார்கள். செய்து பாருங்கள்.

அதே மாதிரி உங்கள் கடையில் வியாபாரம் செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டு என்னிடம் சரக்கு வாங்குகிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஓரளவிற்கு அவர்கள் மனதிற்குத் தெரிகிற மாதிரி ஆசீர்வாதம் செய்து சரக்கைக் கொடுத்துப் பாருங்கள். அவர்களுக்கு ஒரு பெருமிதமாக இருக்கும்.

ஒரு துணி வியாபாரமே நீங்கள் செய்தாலும் இந்த உணர்வைப் பரப்பும் போது அந்தத் துணிகளில் நாம் பாய்ச்சும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரும்.

அடுத்தாற்போல் வேறு எத்தனை துணியைப் போட்டாலும் கூட இந்தத் துணியை தான் கேட்பார்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். அப்போது நம்மிடம் தான் சரக்கு வாங்குவார்கள்.

தொழில் செய்கிற இடங்கள் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அங்கே நல்ல மன பலமும் ஒரு தெம்பும் வர வேண்டும். அங்கே உற்பத்தி செய்ய கூடிய பொருள்கள் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு நிமிடம் தியானித்து விட்டு
1.எல்லாப் பொருள்களின் மீதும் நம் பார்வையைச் செலுத்திப் பழக வேண்டும்.
2.இப்படிச் செய்யச் செய்ய நம் உடலில் ஒவ்வொரு நிமிடமும் அந்த உயர்ந்த சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஆகவே தொழில் செய்கிறோம் என்றால் இது வாழ்க்கையே தியானம் ஆகின்றது. நமக்குள் இப்படிச் சக்திகளைக் கூட்டிப் பழகிக் கொள்ள வேண்டும்.

வியாபாரம் செழிக்க என்ன செய்ய வேண்டும்…?

தொழில் வளம்

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை நிவர்த்திக்க நாம் செய்ய வேண்டிய பயிற்சி

தொழில் செய்யும் இடத்தில் (டென்சன்) பகைமை வளராது இருக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

வியாபாரத்தில் நஷ்டம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

மனித வாழ்க்கையில் நாம் பெற வேண்டியதும் பெறக் கூடாததும்

பேரரசர்கள் சம்பாரித்த சொத்து இன்று இருக்கின்றதா…?

வியாபரத்தில் கூட இருக்கும் நண்பன் மேல் தொழில் இர்கசியம் என்று சந்தேகப்பட்டால் அதன் விளைவுகள்

தொழில் செய்யும் இடங்களில் குறைபாடுகளை நீக்க ஆத்ம சுத்தி செய்யும் முறைகள்

கடையில் வியாபாரம் ஆகும் பொழுது பக்கத்துக் கடை வியாபாரத்தை எப்படிப் பார்க்கின்றோம்…?

கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நமக்கு நோய் எப்படி வருகின்றது…?

கடன் வாங்கியவர் கொடுக்கவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும் 

தொழிலில் முதலாளியின் உணர்வு வேலை செய்பவர்களை எப்படி இயக்குகின்றது

செல்வம் அதிகம் உள்ள குடும்பத்தில் வரும் தொல்லைகள்

நீங்கள் வளர்க்கும் அருள் சக்தியை யாராலும் அழிக்க முடியாது

தொழில் செய்வோர் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழில் செய்யும் இடங்களில் மற்றவர்களால் தொல்லைகள் ஏற்படும் பொழுது அதை எப்படி நல்லதாக்குவது…?

தொழில் செய்யும் பொழுது வரும் வேதனைகளைத் தடுக்கும் வழி

நாம் எண்ணியபடி வாழ்க்கை நடக்கவில்லை என்றால் கடைசியில் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஆகிறது…?

செய்யும் தொழிலைத் தெய்வமாக எப்படி மதித்து நடப்பது…?

நமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி

மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

powers-of-human

மனித உடலுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களையும் சக்தியையும் நாம் தெரிந்து கொள்வது நல்லது…!

இன்று விஞ்ஞான அறிவில் எங்கிருந்தோ ஒலி/ஒளிபரப்பக் கூடிய அந்த உணர்வின் காந்த அலையை அந்த உணர்வு கொண்டு இங்கே சுவிட்சைப் போட்டவுடன் TV RADIO காற்றிலிருந்து இழுத்து நமக்குக் காட்டுகின்றது.

இது யார் செய்தது..? மனிதன் தான்.

1.இந்த காந்த இயக்கத்தின் சக்தியினுடைய தன்மையை
2.நாம் உணர்ந்தறிந்து செயல்படும்… உரு பெறும்… உருவாக்கச் செய்யும்…
3.ஆறாவது அறிவின் தன்மை அது நம் உடலுக்குள் நின்று தசைகளை இயக்கினாலும்
4.நாம் எண்ணக்கூடிய உணர்வுகளைச் சுவாசித்தவுடன்
5.நம் உயிரிலே பட்டு – அந்த எண்ணங்களுக்குத் தக்கவாறு (நம்) உடலை இயக்குகின்றோம்.
6. அந்த உணர்வின் ஆற்றல் வலுவானது…! அதை நாம் பயன்படுத்தும் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

நான் படிக்கவில்லை…
1.சாமி (ஞானகுரு) என்னமோ சொல்கிறார்…! என்று விரக்தியாக இருக்க வேண்டாம்
2.சாமி சொல்வது “அர்த்தமாகவில்லையே…!” என்று எண்ண வேண்டாம்
3.சாமி சொல்வதைப் “புரிந்து கொள்ள வேண்டும்…!” என்ற ஏக்கத்தில் இருந்தால் போதும்
4.இந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

டேப் செய்யப் பயன்படும் “ஒலி நாடா” ஒன்றுமே அறியாதது. ஆனால் அந்த நாடாவில் பதிவு செய்து மீண்டும் அதை இயக்கினால் அந்த ஆனந்தமான பாடல்களைக் கேட்டு இரசிக்கின்றோம்.

அபூர்வமான படங்களையோ மற்ற எத்தனையோ ஆச்சரியத்தக்க அளவில் பல நிலைகளை நாம் கண்டு மகிழ்கிறோம்.

அதைப்போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கக்கூடிய காந்த சக்தியினுடைய நிலைகள் எந்த உணர்வை நாம் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிக் கொள்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க நிலைகளை இந்த உபதேசத்தின் மூலமாகப் பதிவாக்குகின்றோம்.

இதைப் படிக்கும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மகரிஷிகளின் உணர்வைச் சுவாசிக்க நேர்கின்றது. அது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சத்தாக மாறுகின்றது.

நெருப்புடன் ஒரு கட்டையைப் போட்டவுடன் அந்தக் கட்டையில் இருக்கக் கூடிய சத்தை மாற்றி அதை ஒளியாக மாற்றுகின்றது.

நம் உயிர் ஒளியாக நின்று உடலுக்குள் அணுவின் திசுவை இயக்கி அந்த உணர்வின் சக்தியை அறியச் செய்து அந்த அறிவின் நிலையில் இயக்குகின்றது. ஆகவே நம் உணர்வுகளை உயிரைப் போன்றே ஒளியாக மாற்ற வேண்டும்.

நாம் கட்டைகளை எரித்து அதன் சக்தியை மற்ற ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தி இரும்பையோ மற்றவைகளையோ உருக்குகின்றோம். அதைப் போன்று
1.நம் உடலை உருவாக்கிய இந்த உணர்வைக் கட்டையாக வைத்து,
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிச்
3.சிறுகச் சிறுக இந்த உணர்வின் சக்தியை உயிராத்மாவில் மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றிய பின் விண்ணிலே தோன்றக் கூடிய கடும் விஷமானாலும் அதனின் சக்தியை ஒளியாகத் தனக்குள் கூட்டி ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்றடைவது தான் “மனிதனின் கடைசி நிலை….!”

இந்த மனித உடலுக்குள் நின்று அந்த உணர்வின் சக்தியை நாம் சிருஷ்டிக்கும் வலிமை மிக்கதாக நாம் செயலாக்க வேண்டும். அவ்வாறு செயலாக்கப்படச் செய்வதற்குத்தான் இந்தத் தியானத்தின் வழி.

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்து வாழ்க்கையிலே மகிழச் செய்யும் இந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

விஞ்ஞானிகள் ஒரு பொருளின் தன்மையை உருவாக்கி இராக்கெட் மூலம் விண்ணிலே செல்லக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கிறார்கள்.

அன்று மகரிஷிகளோ விண்ணை நோக்கி ஏகி விண்ணின் ஆற்றலைத் தான் இருந்த இடத்திலிருந்தே பெற்றுத் தனக்குள் அதைக் கூட்டி அந்த உணர்வின் சத்தை ஜீரணிக்கச் செய்து உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத்தான் இராமாயணம், மகாபாரதம் கந்தபுராணம் சிவபுராணம் என்று தோற்றுவித்து அதைத் சாதாரண மக்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாகக் காவியமாகப் படைத்துச் சென்றார்கள்.

மகரிஷிகளின் உணர்வுடன் அவைகளை மீண்டும் படித்துப் பார்த்தால் அதற்குள் மறைந்த மூலங்களை அறிய முடியும்.
1.இந்த உடலில் வாழும் இக்காலத்திலேயே
2.ஒளியின் சரீரம் பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.