விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

Lord vinayaga

விநாயகரை வணங்காமல் ஆலயத்திற்குள் சென்றால் பலன் ஏதும் இல்லை…! ஏன்…?

நமது வாழ்க்கையில் நம் குடும்பத்தில் பையன் சீராக இருக்க வேண்டும் என்று எண்ணுவோம். ஆனால், அவன் மற்றவருடன் பழகும் பொழுது அவனை அறியாது தீமைகள் இவனைச் சாடி அவனின் நற்குணத்தை அழித்துவிடுகின்றது.

அப்பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுகின்றோம். இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

அதற்குத்தான் இந்த விநாயகர் ஆலயத்திற்குள் சென்றபின் எப்படி வணங்க வேண்டும்…? என்று காட்டியுள்ளார்கள்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற இன்று இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக விளைந்து ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும். பின்,
1.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
2.மெய்ப்பொருள் காணும் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்
4.எங்களைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நலம் பெறவேண்டும்
5.எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லோரும் இனிமை பெறவேண்டும்
6.எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் மலரைப் போல மணம் பெறவேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் படரவேண்டும்
8.எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அகல வேண்டும்
9.சாப வினைகள் நீங்க வேண்டும் பாவ வினைகள் நீங்க வேண்டும்.
10.பூர்வ ஜென்ம வினைகள் நீங்க வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து தீமைகள் அகல வேண்டும்
12.எங்கள் குழந்தை பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
13.எங்கள் குழந்தை பொறுப்புணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்.
14.எங்கள் பார்வை குழந்தையை உயர்ந்தவனாக்க வேண்டும்.
15.எங்கள் சொல் அவனை உயர்ந்தவனாக்க வேண்டும் என்று இதைத் தனக்குள் கூட்டிக் கொள்ள வேண்டும்.

பின் இதே போல அந்தக் குழந்தையையும் விநாயகரை வணங்கச் செய்தல் வேண்டும். விநாயகர் தத்துவத்தை முறைப்படி அவன் எண்ணத்தால் எண்ணித் தியானிக்கும்படி செய்தல் வேண்டும்.
1.என் அன்னை தந்தையரின் அருளாசி பெறவேண்டும்
2.என்னை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அவனும் இங்கே எண்ணுதல் வேண்டும்.

இந்தப் பொருளை மையமாக வைத்துத்தான்.., குடும்பத்தில் தன்னை அறியாது சிக்கல் ஏற்படும் பொழுது அதை இங்கே வந்து நமக்குள் நிவர்த்தி செய்யும் நிலைக்காகத்தான் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

ஆனால் நீங்கள் எண்ணுகின்ற மாதிரி அந்தக் கடவுள் செய்வார் என்றால் அது இல்லை. சாஸ்திர விதிப்படி நமது உயிர் கடவுள். “உள் நின்று..,” இயக்குகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்தை ‘ஓ..,’ என்று ஜீவனாக்கி ‘ம்..,’ என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

ஆகவே எண்ணியதை இயக்கிக் காட்டுவது உயிர்.

எண்ணிய உணர்வின் தன்மையை தன் உணர்வால் அது கடவுளாக இருந்து இந்த உணர்வின் சத்தை அந்த உடலுக்குள் சென்று அதனின் உணர்வின் தன்மை கொண்டு அது உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இதைத்தான் கடவுள் என்பது.

“உள் நின்று..,” நாம் கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கி உடலாக உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த வினைக்கு நாயகனான (நம் உயிரையும் உடலையும்) விநாயகனை வணங்காதபடி ஆலயத்திற்குள் நீங்கள் சென்றால் பலன் ஏதும் இல்லை என்று அதனால் தான் சொல்வார்கள்.

ஆக, அந்த ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நாம் நமக்குள் எடுத்தால் “நம் உயிர்..,” தனக்குள் கவர்ந்து கொண்ட அந்த உணர்வின் செயலாக “நம்மை இயக்கும்”.

இதைத்தான், நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய். நாம் எண்ணிய உணர்வின் தன்மை நமக்குள் ஆகி “தீமைகள் அகற்றும் உணர்வின் செயலாக..” “நாம் அதுவாக.., மாறுகின்றோம்”.

இவ்வாறு மாறவேண்டும் என்பதற்குத்தான் இதை அங்கே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

Respect

நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

 

“பிறர் நம்மைத் திட்டுகிறார்கள்…! கேவலமாகப் பேசுகிறார்கள்..! என்றெல்லாம் நாம் எண்ணுகிறோம். அதனால் ஆத்திரப்படுகின்றோம்… வேதனையும் படுகின்றோம்.

ஆனால் “இந்த உடலைத்தான் திட்டுகிறார்கள்… கேவலப்படுத்துகிறார்கள்… நம்மை அல்ல…!” என்று ஞானகுரு சொல்கிறார்.

எப்படி…?

அதாவது மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே மற்றவரிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பது என்ன..?

என்னிடம் “மரியாதையாகப் பேச வேண்டும்… மரியாதைக் குறைவாக நடக்கக் கூடாது…!”. மரியாதை இல்லாமல் பேசினால்… ஏதாவது செய்தால் எனக்குக் கோபம் கடுமையாக வரும்…! என்று எல்லோருமே தாராளமாக இப்படித்தான் நினைப்போம்.

இருந்தாலும்… உடலை விட்டு உயிர் போய்விட்டால் இந்த உடலுக்கு நாம் எந்த மரியாதை கொடுக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.உடனே அந்த உடலை அழிக்க வேண்டும் என்பதிலே தான் குறியாக இருக்கின்றோம்.
2.ரொம்ப நேரம் இறந்த உடலை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதை “மிகவும்…….!” வலியுறுத்திச் சொல்கிறோம்.

யாராவது இல்லை என்று மறுக்க முடியுமா…? அப்பொழுது எங்கே செல்கிறது… “நாம் எதிர்பார்க்கும் நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை…?!”

அதனால் தான் ஞானகுரு சொல்கிறார்…! ஒருவர் நம்மைப் பழித்துப் பேசவோ திட்டவோ தவறாகவோச் சொல்கிறார் என்றால்
1.அது என்னை அல்ல…!
2.அழியக் கூடிய இந்த உடலைத்தான் சொல்கிறார்கள்…! என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார்.
3.அழியப் போகும் உடலுக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. இது உண்மை.

ஆனால் கிடைக்காத அந்த மாரியாதைக்காக நாம் எவ்வளவு கௌரவம் பார்க்கிறோம்….? எப்படி எல்லாம் உடலை அழகு பார்க்கிறோம்…? உடலுக்காக இன்னும் என்னென்னவோ பல சிரமங்களை ஒவ்வொரு நிமிடத்திலும் படுகின்றோம்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் அதை உயிருடன் ஒன்றிய நிலையாக விளைய வைத்துக் கொண்டே வந்தால்
1.அதற்குரிய மரியாதை இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.அழியாத நிலையாக என்றுமே உயிருடன் ஒன்றி வாழ முடியும் என்று உணர்த்துகிறார் குரு.

உடலுக்குக் கொடுக்கும் அல்லது எதிர்பார்க்கும் மரியாதையை விட மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்ப்பதில் நமக்குக் கிடைக்கும் மரியாதையே என்றும் நிலைத்ததாகும்.

ஆகவே பிறரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது மரியாதை கிடையாது. மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்தால் தான் நமக்கு (உயிராத்மாவிற்கு) மரியாதை.

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய “பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை” நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

ULTIMATE POWER OF AGSTYA

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

 

ஈ… கொசு… மனிதனின் தலை முடி… இவைகளில் ரேடியத்தைத் தடவி அன்று வல்லரசுகள் எப்படி ஒருவருக்கொருவர் அடுத்த நாட்டு இராணுவ இரகசியங்களை வேவு பார்த்தனர்…?

இரகசியமாக நடக்கும் கூட்டங்களில் அங்கே அவர்கள் பேசுவதைப் பல மடங்கு பெருக்கி அவர்கள் பேசுவதை எல்லாம் எப்படி அறிந்து கொண்டார்கள்…? என்று
1.அவர்கள் வேவு பார்ப்பதை நம் ஞானகுரு உணர்ந்துள்ளார்.
2.அவர் படிக்காதவர் தான்…!
3.ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எத்தகைய நுண்ணிய நிலைகளையும் அறியும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

அறியாமல் இயக்கும் அத்தகையை தீமைகளிலிருந்து விடுபட அவர் பெற்ற அந்த அருளாற்றல்களை எல்லாம் நாமும் பெறும் வண்ணமாக அருள் ஞான உபதேசங்களாகப் பதிவு செய்கின்றார்கள். இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால்
1.நாமும் 2000 சூரியக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு
2.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் ஆற்றலை வளர்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு
3.விஞ்ஞானத்தால் வரும் எத்தகைய விஷத் தன்மைகளையும்
4.எத்தகைய நுண்ணிய நிலைகளில் அவர்கள் செயல்பட்டாலும் அதை அகஸ்தியன் உணர்வைப் பாய்ச்சி முறியடித்து
5.நம்மையும் காத்து உலகுக்கு வழி காட்டியாகவும் நாம் ஒவ்வொருவரும் வளர முடியும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அத்தகைய வேவு பார்க்கும் உணர்வுகள் (ELECTRONIC) வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து அதிக அளவில் பெருகி இன்று டி.வி… கம்ப்யூட்டர்… ஃபோன்… மூலம் மனித இனத்தையே புத்தி பேதமாக்கும் அலைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதை ஞானகுரு அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…!

Light atoms -divine

உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…! 

நம் உடலில் நல்ல குணங்களால் உருவான அணுக்கள் இருக்கின்றது. ஆகவே நாம் நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கின்றோம்.

ஆனாலும் பிறிதொருவர் வெளிப்படுத்தும் கோபமோ ஆத்திரமோ வேதனையோ இவைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் நாம் கேட்கவோ பார்க்கவோ நேருகிறது. அப்பொழுது
1.அவைகளை நேர்முகமாக நுகரும் பொழுது அந்த உணர்வலைகள் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
2.அதனால் நம் நல்ல அணுக்கள் அனைத்திற்கும் நல்ல உணர்வு செல்லாததால் சோர்வடைகிறது.. இயக்கம் குறைகிறது.
3.அந்த நேரத்தில் நம்மால் நல்லதை வலுவாக எண்ண முடிவதில்லை.
4.நுகர்ந்த உணர்ச்சிக்கொப்ப கடுமையான கோபமாகவோ அல்லது கடுமையான வேதனைக்கோ நாமும் ஆளாகின்றோம்.
5.இதனால் எந்தப் பலனும் நாம் அடையப் போவதில்லை.

வயலில் நல்ல விதைகளை விதைத்து அது வளரும் சமயம் வயலுக்குள் மறைந்துள்ள களைகள் முளைக்கின்றது. அது போல் நமக்குள் மறைந்த தீய குணங்களுக்கு ஆகாரம் கொடுப்பது போல் நம்முடைய அத்தகைய சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை,

களைகளை அப்புறப்படுத்தவில்லை என்றால் நலல மகசூல் காண முடியாது. களை தான் வளரும். நல்ல பயிர்கள் வளர்வதில்லை.

இதை உணர்ந்து வெளியிலிருந்து எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைப் பற்றி எண்ணாது
1.என்னிடம் உள்ள நல்ல அணுக்களுக்கு நான் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொடுப்பேன்.
2.அந்தத் தீமைகள் எனக்கு வேண்டாம்… என்று விலக்கி விட்டால்
3.பிறரின் உணர்வுகள் நம் உணர்ச்சிகளைத் தூண்டாது… அது நம்மை இயக்காது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது.

“நல்ல குணங்கள் வலுவாகும் பொழுது…” யார் நம் உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்கிறார்களோ அவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்… அவர் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்…! என்று எண்ணுவதும் மிகவும் சுலபமாகின்றது.

பகைமைகளை மறக்கின்றோம். தீமைகளை மறக்கின்றோம். துன்பங்களை மறக்கின்றோம்.

ஆத்ம சுத்தி செய்யும் முறை இது தான். இதன் பலனை இருவருமே அடைய முடிகின்றது. எல்லோருக்கும் நல்லதாகின்றது.
1.நம் ஆன்மாவும் மற்றவருடைய ஆன்மாவும் சுத்தமாகும்
2,அந்த வலுவான நல்ல சந்தர்ப்பமாக அது அமைகின்றது.

 

அதிகாலைப் பிரார்த்தனையில் மிகவும் முக்கியமானது…!

Route for sapdharihi mandalam

அதிகாலைப் பிரார்த்தனையில் மிகவும் முக்கியமானது…!

 

ஞானகுருவின் (சாமிகள்) தந்தை தாய் இருவர் உடலை விட்டுப் பிரியும் நேரத்திலும் ஈஸ்வரபட்டர் அவரை *அருகில் விடாது…!* செய்தார்.

இருந்தாலும் ஆன்மாக்கள் வெளி வந்த பின் உடனடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அதன் பின்தான் சப்தரிஷி மண்டல ஆற்றலை அதிகமாகப் பெற்றேன்.
1.சில “நுண்ணிய…!” நிலைகளையும் அங்கிருந்து பெற்று
2.உங்களிடம் நான் தைரியமாகச் சொல்ல முடிகிறது என்கிறார் ஞானகுரு.

உடல் மேல் தான் நாம் எல்லோரும் பாசம் வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை யார் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது “அலுங்காது…* விண் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் உணர்த்துகிறார்.

1.மனிதனாகப் பிறந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும்
2.முடிவில் – மீண்டும் இன்னொரு உடலுக்குள் எக்காரணம் கொண்டும் போகவிடக்கூடாது என்பதை
3.மிகத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக அந்த அனுபவத்தின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆகவே காலை எழுந்ததும் “என்னுடைய முதல் பிரார்த்தனையே…!” உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் அனைத்தும் அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது தான்.

1.பேய் பிசாசு ஆவி என்று மற்றவர்கள் சொல்கிற எதுவாக இருந்தாலும்
2.அந்த உயிரான்மாக்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
3.அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்… சப்தரிஷியாக வேண்டும் என்று உந்தி
4.குருநாதர் காட்டிய வழியில் அனுதினமும் செலுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இது உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குச் செய்யும் பிரார்த்தனை

உலக மக்கள் அனைவருக்கும் சப்தரிஷி மண்டல அலைத் தொடர்பு கிடைக்க வேண்டும். உடலை விட்டு அவர்கள் பிரிந்தால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது உடலுடன் இருப்பவர்களுக்குச் செய்யும் என்னுடைய பிரார்த்தனை.

மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

Venugopalaswamigal

மலைப்பாம்பிடமிருந்தும் புலியிடம் இருந்து நேரடியாகத் தப்பி வந்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி…!

 

மங்களூர் பக்கத்தில் ஒரு மலை உள்ளது. அந்த மலைக்கு நானும் (ஞானகுரு) குமாரபாளையம் சென்னகிருஷ்ணன் டாக்டர் அவருடைய இரண்டு பசங்களும் மங்களூர் நாராயணசாமியும் அவர் கடையில் வேலை செய்யும் ஒருவரும் போனோம். அது பெரிய காடு.

ஆனால் போவதற்கு முன்னாடியே அங்கே புலி குட்டி போட்டிருக்கிறது… ஆகையினால் இப்போது போனால் உங்களைத் தாக்கும் என்று சொன்னார்கள்.

பரவாயில்லை… நாம் போகலாம்…! என்று நான் (ஞானகுரு) சொன்னேன். சரி என்று சொல்லி போனோம். குகை மாதிரி ஒரு இடம் அது திறந்தவெளியாக இருந்தது. எல்லோரும் அங்கே படுத்திருக்கின்றனர்.

திடீரெனெ மேலிருந்து மலைப் பாம்பு ஒன்று “சொத்…!” என்று விழுந்தது. நான் விழித்துக் கொண்டேன். மற்ற எல்லோரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தக் குகையில் ஏற்கனவே ஒரு சாமியார் இருக்கிறார். ஆனால் அவரும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்.

பாம்பைக் கண்டதும் அங்கிருந்த நாய் லொள்…! என்று குரைக்க ஆரம்பித்து விட்டது. இந்தப் பக்கம் வர விடாமலேயே தடுக்கிறது. ஏனென்றால் அந்தப் பாம்பு ஆளையே விழுங்கிவிடும். அந்த அளவுக்கு அவ்வளவு பெரியது.

நான் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறேன்

பாம்பு நாங்கள் இருக்கும் இடத்தில் அருகில் வராதபடி குரைத்துக் கொண்டே கடிக்கப் போகிற மாதிரி பாம்பை ஆட்டம் காட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பாம்பு சீறிப் பாயும் வேகத்தைப் பார்த்தால் பயங்கரமாக இருந்தது. கூட வந்திருந்த டாக்டர் பையன்கள் இரண்டு பேரும் இதைப் பார்த்தவுடன் குலை நடுங்கிப் போனார்கள்.

அங்கு படுத்திருந்த சாமியார் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்தார். என்ன சாமி…! பாம்பு வந்திருக்கிறது. நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…? என்று என்னைக் (ஞானகுரு) கேட்டார்.

1.வேடிக்கை பார்க்காமல் என்ன செய்வது…?
2.அது சாப்பாட்டிற்கு அது வருகிறது….
3.சக்தி பெறுவதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம்….
4.ஏதாவது ஒன்று நடக்கட்டும்…! என்று சொன்னேன்.

என்னங்க…? இப்படி விளையாட்டுத்தனமாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்…! என்று அந்தச் சாமியார் கேட்கிறார்.

கொஞ்ச நேரம் பார்க்கலாம்… பாம்பு என்ன தான் செய்கிறது என்று…! நாம் தான் விழித்துக் கொண்டோமே… பாம்பு யாரையும் சாப்பிடாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம்…! என்று சொன்னேன்.

கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். அந்த நாய் விடுவேனா…! என்று சுற்றுகிறது. ஒரு மணி நேரம். இருக்கும்.

அப்புறம் என்ன செய்தோம்…? இரண்டு பேராகச் சேர்ந்து ஒரு பெரிய கவட்டையைக் கொண்டு வந்து பாம்பின் தலைப் பக்கம் போட்டு அதே சமயத்தில் வாலைப் பிடித்து அப்படியே உருட்டி விட்டு… உருட்டி விட்டு… ஓரு பெரிய பள்ளத்தாக்குப் பக்கமாகப் பார்த்து அப்படியே உருட்டி விட்டோம்.

அந்தப் பாம்பு மிகவும் பெரியது. கவட்டையை வைத்து தலைப் பக்கம் சீறிப் பாயாதபடி போட்டு வாலையும் பிடித்து அவ்வாறு தள்ளி விட்டோம். வாலைப் பிடிக்கவில்லை இல்லை என்றால் அப்படியே ஆளைச் சுருட்டிவிடும்.

ஆனால் இந்த நாய் குரைத்த சத்தம் கேட்டு குட்டி போட்டிருந்த புலி அங்கே வருகிறது. அந்த வாசனையை மோந்து பார்த்து கீக்….கீக்…கீக் என்று கத்திய உடனே அந்தச் சாமியாரும் புரிந்து கொண்டான்.

இந்தப் புலி தான் இப்போது வருகிறது. நாய் வாசனைக்கு நிச்சயம் வரும். இந்த நாய் இப்பொழுது சத்தம் போட்டுத் தூங்கிக் கொண்டு இருந்த புலியை எழுப்பி விட்டு விட்டது. நம் எல்லோருக்கும் ஆபத்தைக் கொண்டு வந்து விட்டது என்று சொல்கிறார்.

ஒன்றுமில்லையப்பா…! நீ பேசாமல் இரு…! என்று நான் சொன்னேன்.

அங்கே இரும்புக் கூண்டு ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அதற்குள் அந்தச் சாமியார் போய் விட்டார். அந்த நாயும் அங்கிருக்கும் ரூம் மாதிரி ஒன்றுக்குள் போய் கதவைச் சாத்துகிறது. அதனின் விவரம் அப்படி இருக்கிறது.

நாங்கள் கொஞ்ச நேரம் அப்படியே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருநாதர் சொன்னபடி வாசனையை மாற்றிய உடனே
2.நாய் இருக்கிற பக்கமே புலி மோந்து கொண்டு போகிறது.
3.நாய் இருக்கும் பக்கம் போய் அப்படியே கொஞ்ச நேரம் கழித்துப் போய் விட்டது.
4.இவையெல்லாம் மோப்பத்தால் அறியக் கூடிய நிலைகள். அனுபவ ரீதியில் வந்தது.

ஏனென்றால் புலி எதனின் நோக்கத்தோடு வந்தது…? நாயின் மணத்தை நுகர்ந்து தான் அது வந்தது. அது நாயைத் தான் தேடிப் போகிறது. அவர்கள் கூண்டுக்குள் போய் விட்டார்கள் நாங்கள் இங்கே வந்து விட்டோம்.

ஒன்றின் மணத்தை நுகர்ந்து விட்டால் புலி போன்றவை எல்லாம் அதன் மேல் தான் குறியாக வரும். அந்த நாய் சத்தமில்லாமல் பேசாமல் அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டது.

ஆனால் அந்தச் சாமியார் புலியைப் பார்த்ததிலிருந்து…
1.எல்லோரும் கூண்டுக்குள் வந்து விடுங்கள்
2.மூடி விட்டால் புலி நம்மை ஒன்றும் செய்ய முடியாது…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

அந்தப் புலி ஒன்றும் செய்யாது. கதவை ஏன் மூடுவானேன்…? பேசாமல் இருங்கள்…! என்று நான் சொன்னேன்.

நீங்கள் என்னங்க…? இப்படி விளையாடுகிறீர்கள். நம்மைக் கொன்று விட்டால் என்ன செய்வது என்கிறார்…?

புலி ஒன்றும் நம்மைக் கொல்லாது. நாயின் வாசனையை நுகர்ந்து புலி வந்ததால் நாயைத்தான் தாக்கும். உன்னைத் தாக்காது என்று சொன்னேன்.

“என்னமோ செய்யுங்கள்…! போங்கள்…! என்றார்.

இந்த அளவிற்குச் சில உண்மை நிலைகள். இது எல்லாம் அனுபவ ரீதியில் குருநாதர் காட்டிய அருள் வழியில் தெரிந்து கொண்டது.

எதைக் குறிக்கோளாக வைக்கிறதோ நாயும் அதைத்தான் நுகருகிறது புலியும் நாயை நுகருகிறது. புலி நாயைத் தாக்கினாலோ நாயின் உயிரான்மா புலியின் உடலுக்குள் சென்று புலியாகத்தான் பிறக்கும்.

இயற்கையின் சில நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித் தெரிய வைக்கிறார். அதைத்தான் ஒவ்வொன்றாக உங்களுக்கு உணர்த்திக் கொண்டு வருகின்றோம்,

நம்மை உருவாக்கிய.. காத்த… நல்வழிப்படுத்திய… குரு “நம் தாயே…!”

First guru

நம்மை உருவாக்கிய.. காத்த… நல்வழிப்படுத்திய… குரு “நம் தாயே…!”

இன்றைக்குத் தாயை உதறி விட்டு உதைக்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கின்றார்கள். பெரும்பகுதி தாய்மார்கள் படுகின்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.

பெண் குழந்தையாக இருந்தாலும் சரி… ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி…!

சொத்தைக் கொடுக்கவில்லை என்றால் நீ நாசமாகப்போ…! என்று தன் தாயைப் பிடித்து இழுத்துப் போட்டு உதைக்கின்ற தாயையும் (மகள்கள்) நான் பார்த்திருக்கிறேன்.

ஆண் வாரிசு இல்லை. அவளுக்கு மட்டும் கொடுக்கின்றாய்…! எனக்கும் கொடு…. என் வீட்டுக்காரர் கேட்கின்றார்,

எனக்குக் கொடுக்கின்றாயா இல்லையா…? என்று சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டு… உனக்குச் சோறும் இல்லை… தண்ணீரும் இல்லை… நீ போ ரோட்டிலே…! என்று சொல்கின்ற தாய்மார்கள் நிறைய இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்த பின் தான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் குருநாதர் என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லி அனுபவபூர்வமாகக் காட்டினார்…

1.அவர்கள் தவறு செய்யவில்லை…!
2.நுகர்ந்த உணர்வும் சந்தர்ப்பமும் அவர்களை எப்படிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்பதற்கு என்ன வழி…?
4.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்ற வினா எழுப்பினார் குருநாதர்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள். அவர்கள் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக ஒளியாக இருக்கின்றார்கள்.

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறுவதற்கு மாறாக
2.இந்த உடலின் இச்சைக்காக வேண்டி வாழ்ந்து
3.இருள் சூழச் செய்யும் நிலைகளில் சிக்குண்டு
4.அதிலிருந்து மீள முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

இதை நீ மக்களுக்கு “எடுத்துச் சொல்…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. அந்த உடலை நீ கோவிலாக மதி. அவன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீ உன்னுடைய பயணத்தைத் தொடர் என்றார் குருநாதர்.

அவர் இட்ட கட்டளைப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த மகரிஷிகளை எண்ணிப் பாருங்கள். தீமையிலிருந்து விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

மகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொண்டால் அது உங்களுக்குள் உண்மையின் உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும்.
1.பகைமை உணர்விலிருந்து உங்களை மீட்கும்.
2.மெய் ஒளி பெறும் அந்த மார்க்கத்தைக் காட்டும்.
3.உங்கள் பார்வையில் பல பிணிகளைப் போக்கும் அந்த அருள் சக்தியை ஊட்டும்.

அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு தெளிவாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.

“இது நல்லது… இது கெட்டது…” என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கின்ற முதல் குரு தாய் தான். ஆகவே அம்மா அப்பாவைக் கடவுளாக எண்ணி தெய்வமாக மதித்து நடங்கள்.

அந்தத் தாய் சொன்னபடி மதித்து நடந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் “என்றைக்குமே… தலை சிறந்த நிலை பெறுவீர்கள்….!”

புதுப் புது எண்ணங்கள் நமக்கு எப்படி வருகிறது…?

curry-leaves

புதுப் புது எண்ணங்கள் நமக்கு எப்படி வருகிறது…?

கேள்வி:- உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்துப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வருகிறது. தாவரங்கள் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகின்றது…? அது எந்த அணுவின் மூலமாக உற்பத்தி ஆகிறது?

பதில்:- ஒரு வேப்ப மரத்தின் மீது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் தாக்குகிறது. பூமியின் ஈர்ப்புத் தன்மையில் இருக்கும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவு தாக்கப்படும் போது இதற்கு முன்னாடி விளைந்த வேப்ப மரத்தின் கசப்பின் உணர்வுகளை அது எடுத்து வைத்திருக்கிறது.
1.அந்த அலைகளை எடுத்துத்தான் அடுத்த வேப்ப மரமும் விளைகிறது.
2.அதாவது தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.
3.ஒரு வேப்ப மரம் பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தான் வேம்பாக விளைகின்றது.
4.விளைந்தாலும் தன் இனமான கசப்பின் சத்தை மட்டும் தான் இழுத்து வளரும்.

இதே மாதிரித் தான் ஒரு ரோஜா செடியும் தன் இனமான நறுமணங்களை எடுத்து அது விளைகின்றது.
1.அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தின் கசப்பான உணர்வுகளை விடுவதில்லை.
2.தன்னுடைய நறுமணத்தைக் கொண்டு தள்ளி விட்டு விடுகின்றது.

அதே போல் ஒரு விஷமான செடியாக இருந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை மட்டும் அது எடுத்துக் கொண்டு வளர்கிறது. மற்ற எந்த மணங்களையும் அருகில் விடுவதில்லை. விலக்கித் (REMOTE) தள்ளி விடுகிறது.

சந்தர்ப்பவசத்தால் ஒரு திகட்டலான (வெறுப்பாக) புத்தியுடன் நாம் இருக்கப்படும் போது பாக்கி யாராவது சொன்னால் அதை எடுத்துக் கொள்வோமா…? என்றால் இல்லை…! அதைத் தள்ளி விட்டு விடுகிறோம். வெறுப்பான உணர்வு தான் முன்னணியில் இருக்கும்.

அப்படிக் கசப்பான சூழ்நிலையில் இருக்கப்படும் போது யார் எவ்வளவு உயர்ந்ததைச் சொன்னாலும் நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். வெறுப்பு முன்னணியில் இருந்து எல்லாவற்றையும் தள்ளி விட்டுவிடும்.

1.ஆனாலும் அந்த நேரத்தில் யாராவது வந்து
2.கசப்பான வார்த்தைகளைச் சொன்னால் நீங்கள் ரசித்துக் கேட்பீர்கள்.
3.நல்ல வார்த்தைகளைச் சொன்னால் கேட்கவே மாட்டீர்கள்.
4.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலையில் நீங்கள் இருக்கும் போது மற்றவர்களும் அதே போல வெறுப்பாகவும் வேதனையாகவும் பேசினால் தான் அதைக் காது கொடுத்துக் கேட்பீர்கள். ஏனென்றால் அந்தச் சக்தி உங்களுக்கு முன்னாடி இருக்கிறது.

இதைப் போலத் தான் எந்த மரமாக இருந்தாலும் தன் இனமான சத்தை எடுத்து அதனதன் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதற்கு வேறு வழி இல்லை.

வேப்ப மரத்திலிருந்து வரும் வேம்பின் உணர்வு உந்து விசை கொண்டது. ரோஜாப்பூ மணமோ திகட்டச் செய்யும் சக்தியாக துவர்ப்பு கொண்டது. ரோஜாப்பூவைச் சாப்பிட்டால் உள்ளுக்குள் போகும் பொழுது திகட்டலாகப் போகும்.

அதே சமயத்தில் அலைகளாக வரப்போகும் போது வேம்பின் உணர்வைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வுகள் தள்ளிப் போகும். ஏனென்றால் இதற்கும் அதற்கும் ஒத்துப் போகாது.

தள்ளிப் போனாலும் மீண்டும் இந்த ஈர்ப்பு என்ற நிலை கூடவே வரும். அதற்குப் பின்னாடியே இது போகும். அடுத்தது ஒரு விஷச் செடியின் மணம் சந்தர்ப்பத்தால் அங்கே வருகிறது.

விஷச் செடியின் மணத்துடன் மோதியவுடனே தேளோ பாம்போ கடித்தால் நமக்குள் துடிப்பு எப்படி அதிகமாகுமோ அதைப் போல் வேகத் துடிப்பு ஏற்படுகின்றது.

வேப்ப மரத்தின் மணமும் ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியில் மோதியவுடனே கிறு…கிறு… என்று சுற்ற ஆரம்பிக்கிறது. நீங்கள் சுழிக் காற்றுகளைப் பார்த்திருப்பீர்கள். அதைப் போன்று ஆகின்றது. இவைகள் எல்லாம் இந்த மாதிரித் தாவர இனத்தின் மணங்களின் மோதல்களில வருவது தான்.

1.மோதலாகும் பொழுது சுற்றும்.
2.ஏனென்றால் வேப்ப மரத்தினுடைய உணர்வுகள் அதை இழுக்கும்.
3.மோதியவுடன் சுழலும் சக்தியாகி இழுக்கும் தன்மை பெற்று மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.
4.ஆக சுழலும் போது தான் அதற்கு ஈர்க்கும் சக்தி வருகிறது.

(இது எல்லாம் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வும் நாம் சுவாசிக்கும் உணர்வும் நம் உடலுக்குள் உள்ள உணர்வும் இப்படித்தான் ஒன்றாகக் கலந்து அந்தந்தக் கலவைக்கொப்ப எண்ணங்களும் குணங்களும் இயக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றது)

உதாரணமாக சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் அந்த வேப்ப மரத்தின் சக்தியை இழுத்தது என்றால் அதன் மணம் ஞானம். அதன் வழியில் அந்த அணுவினுடைய வலுவாக இயக்கும். அதற்குப் பெயர் காயத்ரி – புலன் அறிவு ஐந்து.

இதே மாதிரித்தான் ரோஜாப்பூவின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும். அதே போல் விஷச் செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும்.

ஆனால் தனித் தனியாக இருக்கும் இந்த மூன்றும் சந்தர்ப்பத்தால் ஒன்றுக்கொன்று மோதியவுடனே விஷத்தின் தன்மை தாக்குதல் தாங்காது சுற்றும்.

சுற்றும் போது பத்து சதவிகிதம் வேம்பின் உணர்வுகளும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூ உணர்வுகளும் ஒரு சதவிகிதம் விஷச் செடியின் உணர்வும் கலந்து விட்டால் மூன்றும் கலந்து ஒன்றாகிவிடுகிறது.
1.எடை கூடிய நிலையில் புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிப்
2.புது வித்தாக ஒரு கருவேப்பிலைச் செடியாக உருவாகின்றது.

இதைத் தான் வேதங்களில் சுட்டிக் காட்டுகின்றார்கள். வேப்ப மரம் ரிக். ரோஜாப்பூ செடியும் ரிக். விஷச் செடியும் ரிக். ரிக் என்றால் உருவாக்கப்பட்ட பொருள் – திடப்பொருள்.

அதிலிருந்து வெளி வரக்கூடிய வாசனை மணம். அதனுடைய குணம் என்ற நிலையில் அந்த வாசனைக்குப் பெயர் சாம.

இது மூன்றும் சேர்த்து ஒன்றாகக் கலந்த பிற்பாடு என்ன செய்கிறது…? வேம்பின் சத்தும் இழந்து விடுகிறது ரோஜாப்பூவின் துவர்ப்பு சத்தும் அந்த நறுமணமும் இழந்து விடுகின்றது. அந்த விஷத்தின் ஆற்றலும் இழந்து விடுகிறது.

எல்லாமே தன் தன் தனித் தன்மையை இழக்கின்றது, இழந்து விட்டது என்றால் தன் தன் சக்தியை இழக்கிறது “அதர்வண…!” என்று அர்த்தம். ஒன்றாகச் சேர்ந்து ஒரு வித்தாக மாறி கறிவேப்பிலையாகும் போது யஜூர்.

யஜூர் என்பது வித்து. வித்தான பிற்பாடு என்ன செய்கிறது….? பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் மூன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் மணத்தையும் நுகர்ந்து அது மரமாக விளைகின்றது. அது மீண்டும் ரிக்.

இது தான் வேதங்களில் தெளிவாக்கப்பட்ட உண்மை.

“ரிக்…கிலிருந்து வந்த உணர்வுகள் தான் சாம. அது ஒன்றோடு ஒன்று மோதும் போது அதர்வண. பின் யஜுராக ஒரு வித்தாக அதில் எந்த உணர்வுகள் கலந்து வந்ததோ மீண்டும் ஒரு புதுச் செடியாக உருவாகிறது.
1.நம் சாஸ்திரம் இதைத் தெளிவாக்குகிறது.
2.நான்கு மறைக்குள் இது எல்லாமே அடக்கம்.

ஒன்றுடன் ஒன்று மோதி அது ஒரு புது நிலைகள் உருவாக்கப்படும் பொழுது அதற்குப் பெயர் பரப்பிரம்மம் – உருவாகிறது என்றால் பிரம்மா. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. இந்த வித்தில் ரூபம் மாறிவிடுகிறது. உருவானதிலிருந்து அதனுடைய சக்தியாக அதனுடன் சேர்த்து இயக்கம்.

இப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

இந்த வித்து பூமியில் படுகிறது. அடுத்து மழைக் காலங்களில் மின்னல் தாக்குகிறது. மின் ஒளிகள் தாக்கும் போது துடித்து எழுந்து கறிவேப்பிலைச் செடியாக வெளியில் வருகிறது.

இதனுடைய ருசி மாறுகின்றது. கறிவேப்பிலையில் பார்த்தால் அந்தக் கசப்பும் இருக்கும். அந்தத் துவர்ப்பும் இருக்கும். நறுமணமும் இருக்கும். அரிப்பும் இருக்கும்.

இப்படித் தான் இந்தச் செடிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதுவிதமான வித்துகள் உருவாகின்றது. சுழிக்காற்று அடிக்கும் போது பார்த்தோம் என்றால் புதுப்புது வித்துகளாக உருவாகும்.

இப்படி மரங்கள் செடிகள் எல்லாம் பல மரங்களானாலும் இது ஒன்றோடு ஒன்று சேர்த்து எதன் நிலையில் இருக்கிறதோ அதற்குத் தக்கவாறு இணைக்கிறது.

இதற்கு எல்லாம் மூலம் காளான். காளான் கடலில் இருந்து துகள்களாக வெளி வருகிறது. அது மற்ற பகுதிகளில் படப்படும் போது நம் பூமிக்கு வருகிறது.

கடலில் இருக்கும் பொழுது பாசான். பாசான் பூமிக்குள் வந்த பின் அது காளானாக விளைகின்றது.

கடல்களில் இந்த பாசான் வரும் போது அது கொடியாக வளர்ந்து பின் மாறுபட்டு வரப்படும் போது அதில் செடிகள் வளருகிறது. கடலுக்குள் மரங்களும் வளர்கிறது.

அந்த வித்துக்கள் நிலத்திற்கு வரும். நிலத்தில் வந்த பிற்பாடு இது அதனதன் நிலைகொப்ப புதுப் புதுச் செடிகள் உருவாகும். அகஸ்தியன் உணர்த்திய பேருண்மைகள் இவை.

கர்ப்பமுற்ற தாய் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

Agasthiyar

உயிரணுக்கள் ரூப மாற்றம் – கருவுறுதல்

உங்களுடைய கடமை

மகரிஷிகள் உலகம்

உலகைக் காத்திடும் ஞானிகளை உ4ருவாக்க வேண்டும்

கர்ப்பமாக இருக்கும் தாய் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

புனித தேசத்தை உருவாக்குங்கள்

அருள் ஞான வளைய(ம்)ல்

குழந்தை நல்வழிப்படுத்த தியானிக்க வேண்டிய முறை

அகஸ்தியன், திருஞானசம்பந்தர் – தாய் கருவில் பெற்ற அதிசயமான ஆற்றல்கள்

உலகைக் காக்கும் அருள் ஞானிகளை உருவாக்குங்கள்

அழகான அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குங்கள்

கருவிலேயே அருள்ஞானிகளை உருவாக்கி உங்களையும் உலகையும் காத்துக் கொள்ளுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் சாமி படங்களைப் பார்த்து எதை எண்ண வேண்டும்

அகஸ்தியன் சிறு வயதில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் எதன் மூலம் பெற்றான்

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற ஆற்றல்

புலஸ்தியர் – அகஸ்தியர் உருவான நிலையும் அவனின் ஆற்றலும்

படிப்பறிவு இல்லாத அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற சக்திகள்

அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளைத் தென்னாட்டிலே உருவாக்குங்கள்

கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு கதிரியக்கத்தைப் பாய்ச்சுவதால் வரும் தீமைகள்

டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் கருவுற்ற தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் செயல்கள்

கர்ப்பமான தாய் சண்டையிட்டவர்களை உற்றுப் பார்த்தால் குழந்தையினால் குடும்பம் எப்படிச் சிதறுகிறது 

கர்ப்பமான புலி மானையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி இரண்டுங்கெட்டானாக எப்படி உருவாக்குகிறது

நம் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகிறது என்று நாம் அறிந்திருக்கின்றோமா

குழந்தைகளை தீவுகளில் வைத்து விஞ்ஞான அறிவை ஊட்டி அஞ்ஞானியாக மாற்றுகின்றான்

அருள்ஞானக் குழந்தைகளை உருவாக்கி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்

படிக்கும் மாணவ மாணவிகளுக்குள் அறியாது புகும் ஆன்மாக்களின் இயக்கங்கள்

சில கைக் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பது ஏன்

மூளை வளர்ச்சி இல்லாமல் குழந்தைகள் பிறப்பது ஏன்

கர்ப்பமான தாய் தெரிந்து கொள்ள வேண்டியது

பிறந்த பின் அமைவது விதி அல்ல… தாயின் கருவில் தான் நம் விதியே நிர்ணயமாகின்றது

நச்சு… நச்சு… என்று கைக் குழந்தைகள் அழுவதன் காரணம் என்ன…?

நம் பையன் சீராகப் படிக்கவில்லை என்றால்… உடல் நலம் சரியில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட தமிழ் மொழியின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

Agastyar tamil

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட தமிழ் மொழியின் பாரம்பரியம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

 

வேதங்களில் அதர்வண என்ற நிலைகளை எடுத்துக் கொண்டோம் என்றால் அது…
1.அடக்கி விட்டது…
2.அடங்கி விட்டது…
3.ஒடுங்கி விட்டது…! என்று பொருள். அது தான் அதர்வண என்பது.

சாம என்பது இசை. மணம் குணம் இத்தனையும் இதில் அடங்குகின்றது. இதைப் பொதுச் சொல்லாக வைத்துத் தான் அன்று ஆதிகாலத் தமிழில் காட்டினார்கள்.

முந்தைய தமிழை எடுத்தோம் என்றால் இப்படித்தான் இருக்கும். இன்று சொல்வது போல சமஸ்கிருதம் அல்ல. இது மறைக்கப்பட்ட உண்மைகள். மறைக்கப்பட்டு விட்டது.

இன்றைக்கு எதிலே வேண்டும் என்றாலும் பாருங்கள். சமஸ்கிருத ஏடுகளைச் சொல்லும் போது தமிழில் பேசுகிற மாதிரியே இருக்கும்.

அதிலே சில ஒலிகளை மாற்றிக் கொண்டார்கள். நமக்கு அர்த்தம் புரியாது. கேட்டால் இது “தேவநாகரி…” சக்தி…! என்று இன்றைக்குச் சொல்வார்கள். ஏனென்றால் யாம் யாரையும் குறை கூற வரவில்லை.

இது அரசர்களால் மறைக்கப்பட்ட பேருண்மைகள். இவர்கள் சில ஒலிகளை மாற்றி இதனுடன் இணைக்கப்படும் போது மாறுபடுகின்றது. இயற்கையில் உள்ள தமிழுக்கும் மற்றதுக்கும் மாறிவிடுகின்றது.

இன்றும் கூட
1.சமஸ்கிருதம் கற்றுக் கொண்டவர்கள் எழுதக்கூடிய தமிழுக்கும்
2.தமிழ் இலக்கணம் படித்தவர்கள் எழுதும் தமிழுக்கும்
3.சாதாரணமாகப் படித்தவர்கள் எழுதும் தமிழுக்கும் வித்தியாசம் அதிகமாகப் பார்க்கலாம்.
4.அதனுடைய சொல் வடிவுகள் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இதைப்போலத் தான் அன்றைய மெய் ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகள் முழுமையான எழுத்து வடிவிற்குப் பின்னாடி தான் வந்தது.

அந்தந்த உணர்வின் உணர்ச்சிகளின் இயக்கங்கள் இப்படிப்பட்ட வடிவில் தான் இருக்கும் என்ற நிலைகளை முழுமையாக உணர்ந்தவர்கள் நான்கு வேதங்களுக்கும் பெயரை வைத்தார்கள்.

ஆனால் வியாசகர் கொடுத்த அந்த வேதங்களில் உள்ள மூலங்களையும் அதனின் உண்மைகளையும் நுகர முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள் அரசர்கள்.

1.எதை அதிகமாக நுகர்ந்தோமோ அதனின் கணக்கின் பிரகாரம் தான்
2.”அடுத்த உடலின் ரூபம் அமைகின்றது”என்பதே வேதங்களில் காட்டப்பட்ட உண்மை.

வேதங்கள் என்று சொல்வது அன்று சாஸ்திரங்களில் தமிழ் சித்தாந்தம் வழி சைவ சித்தாந்தத்தின் தன்மை தான் அங்கே உருவாக்கப்பட்டது. பின் வேதங்கள் என்ற நிலைகள் உருமாற்றப்பட்டது.

ஏனென்றால் “சைவ சித்தாந்தம்…” என்பது அகஸ்தியனால் வெளியிடப்பட்டது.

அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டதை இவர்கள் வேதங்களாக இதே தமிழ் மொழியைத்தான் வடிவமைக்கும் தன்மைகள் மாற்றி ஒலியின் தன்மையை மாற்றி வேறு ஒரு ரூபத்தில் அலைகளாக மாற்றினார்கள்,

அகஸ்தியனால் வெளிப்படுத்தப்பட்ட அந்தச் சைவ சித்தாந்தத்தின் பேருண்மைகள் இன்றும் அழியாத வண்னம் நம் பூமியில் படர்ந்திருக்கின்றது. பிரபஞ்சத்திலும் படர்ந்துள்ளது.

அகஸ்திய மாமகரிஷி காட்டிய அருள் வழியில் அதை எல்லாம் நமக்குள் சேர்த்து விண்ணில் உருப்பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் கவர்ந்து உயிராத்மாவை ஒளியின் சுடராக மாற்றிடல் வேண்டும்.