தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

Image

akni mariyamman

தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் சக்தியை நம் கண்ணுக்கு முன்னாடியே காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

 

ஓர் நண்பன் தனக்குத் தீங்கு செய்து விட்டால் அதை எண்ணி ஆழமாகப் பதிவு செய்து கொள்கிறோம். பாவி எனக்குத் தீங்கு செய்தானே…! அவன் உருப்படுவானா…? என்று கோபத்தின் எல்லை கடந்து வேதனையின் உணர்ச்சி பொங்க நாம் பேசுவோம்.

இவ்வாறு அந்தத் தீங்கு செய்பவனை எண்ணி அது உடலுக்குள் விளைந்து “அவன் தீங்கு செய்தான்…!” என்று நமக்குள் பதிவு செய்தாலும் யாரை எண்ணுகின்றோமோ அவனுக்குள்ளும் இந்தப் பதிவு உண்டு.

சாபம் இடும் இந்த உணர்வின் அலைகள் அங்கே சென்று அவனுக்குள் புரை ஓடி அவன் நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும். எப்போது எல்லாம் சாபம் இடுகின்றோமோ
1.பாவி எனக்குத் தொல்லை கொடுக்கிறானே…!” என்ற எண்ணத்தை எண்ணினால்
2.அவன் செயலாக்கங்களுக்கே தடையாகும்.

நண்பர்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் நன்றாகப் பழகினாலும் மிகவும் தெரிந்தவர்களாக இருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனைப்படும் நிலைகள் ஆகிவிட்டால்
1.சில நேரங்களில் புரை ஓடும்…
2.சாப்பாடு விழுங்கும் போதே விழுங்க முடியாது…!
3.எச்சில் விழுங்கும் போது கூடப் புரை ஓடும்…!
4.இவையெல்லாம் வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் போது நம் உறுப்பின் இயக்கங்கள் “தனி…!”

நண்பனாக இருக்கப்படும் போது நட்பின் தன்மை கொண்டு எனக்கு நன்மை செய்தான் என்றால் விக்கல் வருகின்றது. அப்போது தனக்குள் நீரின் தன்மை ஊற்றி அது தணித்து கொள்ளும் போது “மகிழ்ச்சி” என்ற நிலைகளே உருவாகின்றது.

இதெல்லாம் இயற்கையின் உணர்வின் இயக்கங்கள் மற்றோருவருடன் ஒன்றி இயக்கப்படும் இந்த நிலைகளே உருவாகும்.

நமது வாழ்க்கையில் பிறருடன் பழகிய நேரங்களில் தீமையின் உணர்வுகளை நமக்குள் பதியச் செய்யும் போது யாருடைய குணங்களைப் பதிவு செய்தோமோ அது நமக்குள் விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்தப் பற்றின் தன்மை வரப்படும் போது நமக்குள் தீங்கே விளைகின்றது.
1.பாசத்தாலோ பண்பாலோ அன்பாலேயோ பிறர்படும் துயரங்களைக் கேட்டு உணர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நமக்குள் புகுந்து அந்த உணர்வின் வித்தாக விளைந்து
3.எந்த உடலில் இருந்து எது வெளிப்படுகின்றதோ அந்த அலைகளைக் கவர்ந்து
4.நமக்குள் நோயாகவே உருவாக்குகின்றது.

அதற்காக நாம் நல்லது செய்யாமல் இருக்க முடியுமா…? பிறருடைய கஷ்டங்களைக் கேட்காமல் இருக்க முடியுமா…?

சூரியன் சுழலும் போது அந்த வேக உணர்வின் தன்மை கொண்டு தன் உணர்வின் ஒளியால் பிரபஞ்சத்திலிருந்து வரும் மற்ற விஷங்களைத் தனக்குள் வருவதற்கு முன்னாடியே மோதி அதனின் நஞ்சைப் பிரித்து விடுகின்றது. பிரபஞ்சத்தையே ஒளியாக்குகின்றது.

இதேபோல மனிதன் தன் உணர்வின் செயலால் தீமை வரும் போது தன் உணர்வின் அலையால் தீங்குகளை அங்கே பிரித்து விட்டுத் தனக்குள் ஒளியின் சுடராக மாறுகின்றான்.
1.சூரியனுடைய செயலைப் போன்றே
2.மனிதன் உயிரின் தன்மை சூரியனாகின்றது.

கோளாகி நட்சத்திரமாகிப் பின் சூரியனாக ஆனது போல இந்த உயிரின் தன்மையும் பல கோடிச் சரீரங்களில் இருந்து எடுத்துக் கொண்ட உணர்வின் துணையால் மனிதனாக வளர்ந்து வந்தபின் ஒளியின் சரீரமாக மாறி அதனின் செயலாக்கங்களாக இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் இருந்து தீமைகளை வெகு தூரத்திலேயே சுட்டுப் பொசுக்குகின்றான்.

மனிதனாக வாழும் பொழுது வாழ்க்கையில் வந்த தீமையை அகற்றிடும் உணர்வுகளைத் தனக்குள் பெற்ற நிலை தான் அந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும். அந்த மகரிஷிகள் அனைவருமே தீமையை வென்றவர்கள்.

இத்தகைய நிலையை உணர்த்துவதற்குத்தான் மாரியம்மன் கோயிலில் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கும் நிலைகளாக அக்னி குண்டமாக நெருப்பைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

எவ்வாறு…?

இங்கே வாழ்க்கையில் நாம் தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அது மாறி (மாரி) நமக்குள் வந்து தீமை செய்வது போல
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் மாறி (மாரி)
3.அந்தத் தீமைகளைப் பொசுக்கும் சக்தியாக நமக்குள் வர வேண்டும்.

அதற்குத்தான் அங்கே மாரியம்மனுக்கு நெருப்பை வைத்துக் காட்டுவார்கள். சிலையை உற்றுப் பார்த்தால்… பார்க்கலாம் நீங்கள்…! நெருப்பைக் கிரீடமாக வைத்துக் காட்டியிருப்பார்கள்.

இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

Astral powers of human soul

இந்த மனித வாழ்க்கை (உடல்) சதமில்லை என்றால் சதமானது எது…?

இந்த மனித உடலில் நாம் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? வாழப் போகின்றோம்…? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு நெல் அந்தக் குறுகிய காலத்திலேயே வளர்ந்து விடுகின்றது.
1.நெல் விளைந்து விடுகின்றது.
2.ஆனால் அந்தச் செடியோ பட்டு (காய்ந்து) விடுகின்றது.

மரங்களை எடுத்துக் கொண்டாலும் ஒரு குறித்த காலத்தில் விளைகின்றது. தன் இன வித்துக்களைப் பெருக்கி விட்டு அதுவும் பட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களும் அதனுடய ஆயுள் காலம் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் பின் அந்தச் சரீரத்தில் வளர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்ப அந்த உடலை விட்டே பிரிகின்றது.

அந்தச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கொப்பத்தான் அடுத்த உடலைப் பெறுகின்றது.
1.அதைப் போன்று தான் நமது உடல் “இது சதமல்ல…!”
2.சதமான (நிலையான) உடலை நாம் தேட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி அந்த உணர்வை நமக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அந்தத் தீமைகள் நம்மை அணுகாது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று அடிக்கடி நாம் இதைக் கூட்டிக் கொண்டே வர வேண்டும்,

அப்படிக் கூட்டினால் அடுத்து ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருக்கலாம். இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய இன்னலையும் நீக்கிடலாம். ஆகவே மனித சரீரத்தைப் பற்றி நாம் எதுவுமே எண்ண வேண்டாம்.

எத்தகைய சக்திகளை நாம் பெற்றாலும்
1.மலர்களோ மற்ற மரம் செடிகளோ உயிரினங்களோ பட்டுவிடுவது போல் தான் இந்த மனித உடலும் ஒரு நாள் மடிவது திண்ணம்.
2.ஆனால் நாம் என்றும் அழியாத நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றியே நாம் வாழ வேண்டும்.

தீயிலே குதித்து விட்டால் உடல் கருகிவிடுகின்றது. உயிர் கருகுவதில்லை. இந்த உடலில் வேகும் பொழுது எந்த அலறல்கள் இருந்ததோ அந்த உணர்வினை வளர்த்துக் கொண்டு இன்னொரு உடலுக்குள் சென்ற பின் ஐய்யய்யோ.. எரிகிறதே.., எரிகிறதே…! என்ற உணர்வைத்தான் அந்த உடலில் உருவாக்குகின்றது.

ஆகவே இந்த உடலில் நாம் சேர்க்கும் உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உடலில் நல்ல நிலையிலிருக்கும் பொழுதே நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து இதிலே விளைய வைத்து உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்ட அழியாத ஒளிச் சரீரத்தைப் பெறவேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் எத்தகைய இன்னல்கள் வந்தாலும்
2.எத்தகைய கஷ்டம் வந்தாலும்
3.பிறரால் துயரங்கள் வந்தாலும்
4.எத்தனை வெறுக்கும் நிலைகள் இருந்தாலும்
5.நாம் அந்த மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றி
6.வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி
7.அந்த அருள் ஒளி உணர்வுடனே வாழ்வோம் வளர்வோம் என்று நாம் அனைவரும் தியானிப்போம்.

அழியாத ஒளிச் சரீரம் பெறுவோம். சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் இணைவோம்.

 

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

Image

Power and wisdom

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

1.புற உலகில் உள்ள நிலைகளை நாம் எண்ணிப் பார்க்காது
2.புற உலகிலிருந்து நம்மைத் தாக்கும் சாபமோ… பாவமோ… கோபமோ…
3.மற்ற பழித்துப் பேசும் நிலையோ… இழுக்கான நிலைகள் பேசும் நிலைகளிலோ நாம் சிக்காது…
4.அவ்வப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து
5.நம் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் நம்மைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைச் “சிக்கல்…!” என்று சொல்லாது அதிலிருந்து விடுபட ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே
1.சங்கடம் என்ற எண்ணத்தை உங்கள் எண்ணத்திலிருந்து அறவே நீக்கிடல் வேண்டும்.
2.குடும்பத்தில் கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் வராதபடி அது தடுக்க வேண்டும்.
3.யார் எதைச் சொன்னாலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.எத்தகைய நோயாக இருப்பினும் “எனக்கு நோய் இருக்கிறது…!” என்று சொல்ல வேண்டாம்.
5.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் பெற்று “என் நோயை நீக்குவேன்… நான் நலமடைவேன்…!” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணி வந்தாலே போதுமானது. கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்பது போல் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நலம் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் ஒளியைப் பெற்று அவர் சொன்ன முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் நாமும் அவரைப் போன்ற ஒளி நிலை பெறலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டு அகன்று விண்ணுலகம் சென்றார். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக ஏகாந்தமாக நிலை கொண்டுள்ளார்.

அவர் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளியைப் பற்றுடன் பற்றிப் பிறவா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

அதே சமயம் இந்த வாழ்க்கையில் வந்த சகல தீமைகளிலிருந்தும் விடுபட்டு நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறனும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலைகளும் நோய்கள் வராது தடுக்கும் நிலைகளும் நிச்சயம் நாம் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

“டெலிபதி (TELEPATHY) போன்று…” பிறரின் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது நம் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

Image

Telepathy

“டெலிபதி (TELEPATHY) போன்று…” பிறரின் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது நம் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

 

பாம்பு ஒரு தவளையை விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். பாம்பின் வாயில் சிக்கிய அந்தத் தவளை பாம்பின் உணர்வைத் தனக்குள் முழுமையாக எடுத்து அந்த நஞ்சான உணர்வின் தன்மை கொண்டு அதனின் உணர்வாக அதற்குள் கருவாகி அதனின் (தவளை) ரூபங்களை மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் மனிதர்களான நாமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வின் தன்மையால் தனக்குள் ஏற்படும் மாற்றங்களை மெய் ஞானிகள் தெளிவாக்கிக் காட்டுகின்றார்கள். எப்படி…?

உதாரணமாக ஒரு நான்கு பேர் நண்பராக இருக்கிறார்கள் என்றால் அதில் ஒருவர் இன்னொருவருடன் நெருங்கிப் பழகுகிறார். ஆனால் மற்ற மூன்று பேரை அதிகமாக நேசிக்கவில்லை.

இருப்பினும் இன்னொரு மனிதனை நேசிக்கும் இந்த நண்பர் சந்தர்ப்பவசத்தால் தன் குடும்பத்தில் மிகுந்த வெறுப்பின் தன்மை அடைந்து அதனால் மிகவும் வேதனப்பட்டு நோயாக ஆகின்றார்… பின் அதனால் அவர் மடிகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவர் நோயிலே வாடும் நேரத்தில் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் அவருக்குச் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை அவரைக் கவனிக்கவில்லை என்றால் நண்பர் மீது பாசத்தை ஓங்கி வளர்த்திருந்த நிலைகள் கொண்டு
1.என் குடும்பத்தில் இப்படிப்பட்ட நிலை இருக்கின்றது நண்பா…! என்று அடிக்கடி எண்ணுவார்
2.எந்த நண்பர் மீது பாசம் அதிகமாகக் கொண்டானோ அவன் அமெரிக்காவில் இருந்தாலும் இவனுடைய உணர்வு அவன் உடலில் பதிவாகிறது,
(3.அதாவது டெலிபதி (TELEPATHY) போன்று பதிவாகிறது.)

இன்று விஞ்ஞான அறிவால் டெலிபதி (TELECOMMUNICATING SYSTEMS) என்று உருவாக்கி எவ்வாறு இந்தத் தட்டெழுத்தின் (TYPING) உணர்வின் தன்மயை எங்கிருந்தோ பதியச் செய்யும் பொழுது இங்கே நம்மால் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனிதன் எவன் மேல் பாசம் வைத்தானோ அது அவன் உடலிலே கணங்களுக்கு அதிபதியாகி உடலை விட்டு அகன்ற பின் அந்தப் பாசமான நண்பன் உடலுக்குள் சென்று விடுகின்றது.

முதலில் குடும்பத்தின் மீது ஏற்பபட வெறுப்பால் சுவாசித்த அந்த விஷமான உணர்வுகளால் இவன் உடலிலே நோயாகின்றது.
1.தன் குடும்பத்தில் பாசமற்ற நிலைகள் கொண்டு இங்கே குடும்பத்தை வெறுக்கின்றது.
2.ஆனால் தன் நண்பன் மீதோ அதிகமான பாசத்தை வைக்கின்றது.

எதனின் பற்று இங்கே அதிகமாகின்றதோ இதனின் தொடர் கொண்டு இந்த ஆன்மா சென்ற பின்
1.அந்த நண்பன் அமெரிக்காவில் இருப்பினும்
2.உன் நண்பன் இறந்துவிட்டான்…! என்ற செய்தியை எப்பொழுது கொடுக்கின்றனரோ அப்பொழுது அவன் ஈர்ப்புக்குள் செல்லும்.
3.உடலை விட்டு வெளியில் வந்தாலும் அந்த நண்பன் உணர்வு கொண்டே இந்த உயிரான்மா இருக்கும்.
4.அது வரையிலும் எவர் உடலுக்கும் செல்லாது.

அந்த நண்பன் இப்படி இறந்துவிட்டான் என்று சொன்னதும் ஆ…! அப்படியா…! என்றஅந்த உணர்வின் வேகத்தால் அந்த உடலுக்குள் சென்றுவிடுகிறது.

சென்ற பின் இவன் எப்படி எல்லாம் தன் குடும்பத்தில் சிக்கலாகி எந்தெந்த வெறுப்பின் தன்மை அடைந்தானோ எப்படி நோயாக ஆனதோ இதைப் போல் அங்கேயும் நோயாக்கி இவனைப் போன்றே அந்தக் குடும்பத்திலும் பல தொல்லைகள் உருவாகி அவனின் வளர்ச்சியும் குன்றிவிடும்.

முதலில் சொன்ன மாதிரி ஒரு தவளை எப்படிப் பாம்பின் உடலுக்குள் சென்றபின் அதனின் கருவை எடுத்து அதனின் ரூபமாக மாற்றியதோ இதைப் போல
1.இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனித உடலுக்குள் சென்ற பின்
2.தனக்குள் விளைந்த விஷமான உணர்வுகளை நண்பன் உடலுக்குள்ளும் நிரந்து (பரவச் செய்து)
3.அதே கஷ்டத்தின் தன்மையை உருவாக்கி அந்த மனிதனின் நிலைகளையும் சீர்கெடச் செய்கின்றது.

நண்பராகப் பழகியது தப்பா..? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆக இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

நம்மை அறியாமல் இப்படி இயக்கும் இருள் சூழ்ந்த நிலைகளைத் தடுப்பதற்குத்தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால் அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கிப் பழகியவர்கள், உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக ஆக்கிக் கொண்டவர்கள்,

இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை
1.மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு செயலிலும் அதை இணைத்துக் கொண்டே வந்தால்
3.அந்தந்த நேரத்தில் அதற்குண்டான அளவுகோல் (ஞானம்) கொடுக்கும்.
4.மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிடும்.

மகரிஷிகளின் உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகிவிட்டால் அது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறி தீமைகள் புகாது தடுத்துவிடும். இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

Image

Treasure in Temple

நாம் கோவிலுக்குச் சென்று மகிழ்ச்சியைப் பெருக்குகின்றோமோ…! அல்லது சங்கடத்தைப் பெருக்குகின்றோமா…?

உதாரணமாக T.V. பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டில் ஒருவன் நுழைந்து திருடிச் சென்றால் கூட ஒன்றும் தெரியாது.

அதே மாதிரி மற்றவர்களைப் பற்றி “அவர்கள் அப்படி மோசம்… இப்படி மோசம்…” என்று பேசிப் பாருங்கள். நான்கு மணி நேரமானாலும் நேரம் போவது தெரியாது.

இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் கடைசியில்…
1.ஹு,,,ம் என்ன பேசி என்ன செய்ய…? என்ற இந்தச் சோர்வு வரும்.
2.அடுத்து யாராவது கொஞ்சம் அதிகமாகப் பேசினால் வீட்டில் சண்டை வரும்.
3.கடைக்குப் போனால் வியாபாரம் சரியாகச் செய்ய மாட்டோம்.

அதே மாதிரி கவலையாகச் சங்கடமான நிலைகளில் பேசிக் கொண்டிருந்த பின் அந்த வேதனை உணர்வுகள் கைக்குழந்தை உள்ளத்தில் பட்டவுடன் நம் குழந்தை வீல்…வீல்…! என்று கத்த ஆரம்பித்துவிடும்.

அதிகம் வேதனைப்பட்டவர்களின் வேதனைகளைக் கேட்டுணர்ந்து அதன்பின் நீங்கள் குழந்தையைப் பாருங்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தை எவ்வளவு தூரம் கத்துகிறது…? என்று பாருங்கள்.

உங்கள் மூச்சு பட்டவுடன் அதற்கு வயிற்று வலி வரும். கண் வலி வரும். ஏதாவது ஒன்று வரும்.

ஏனென்றால் அந்தக் குழந்தை நம்மைப் பாசமாகப் பார்க்கின்றது. அதற்கு வேதனை தெரியாது, பிஞ்சு உள்ளம். நாம் எடுத்துக் கொண்ட இந்த விஷமான உணர்வுகள் பட்டவுடன் இந்தக் குழந்தையின் உடல் பாதிக்கும்.

கல்யாண வீட்டிற்குள் சென்று பாருங்கள். நம் கைக் குழந்தையைப் பலர் கொஞ்சினால் குழந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை வரும்.

கூட்டத்திற்குள் எடுத்துச் சென்று விட்டு வந்தால் ஒருவர் சங்கடமாக இருந்திருப்பார். அவர் குழந்தையைத் தூக்கினால் போதும். அந்தச் சங்கடமான மூச்சலைகள் பட்டுக் குழந்தைக்குள் அந்த சங்கட அலைகள் சேர்ந்து விடும்.

இவையெல்லாம் இந்த உணர்வுகள் பாய்வதுதான். எல்லாமே உணர்வின் செயல்தான். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் நம்மை அறியாது இப்படி வருவதிலிருந்து விடுபடுவதற்குத்தான் ஞானிகள் ஆலயங்களை உருவாக்கினார்கள். ஆலயத்திற்குள் சென்றால் நாம் எப்படி இன்று வணங்குகிறோம்..? என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் சிறிது நேரம் “தியானம்…” செய்து பழகுங்கள். மகிழ்ச்சி வருவதைப் பார்க்கலாம். அர்ச்சனை செய்வதற்குப் பதில் அந்தக் கோவிலிலே நின்று
1.ஆலயத்தில் காட்டப்பட்ட அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும்
2.இதை அருளிய மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்
3.மகரிஷிகள் உணர்வுகள் கலந்த உங்கள் மூச்சலைகளை வெளிப்படுத்தி அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…! என்று அங்கே பரப்புங்கள்

இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற இந்த மூச்சலைகளை நூறு பேர் ஒவ்வொரு நாளும் அங்கே விட்டார்கள் என்றால் எல்லாமே பரிசுத்தமாகும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…? நூற்றுக்கணக்கில் செல்கிறோம். கோவிலுக்குச் சென்று அங்கே கஷ்டத்தை எல்லாம் கொட்டி விட்டுத்தான் வருகிறோம்.

அதே உணர்வுடன் கோவிலுக்குச் என்றால் அவை எல்லாம் நம்மைப் பிடித்துக் கொள்ளும். கோவிலுக்குச் சென்று வரும் பொழுது சோர்ந்துதான் வருகின்றோமே தவிர நன்றாக வருகின்றோமா…?
1.கோவிலுக்குப் போகும் பொழுது எந்த வேகத்தில் செல்கிறோமோ…
2.அதே வேகத்தில் வீட்டிலிருக்கக் கூடிய கஷ்டத்தைத்தான் எண்ணுகின்றோம்.

சோர்வாக வரப்படும்பொழுது “இன்னொருவர் தனக்கும் கஷ்டம்…!” என்று சொல்வதைக் கேட்டுக் கொண்டேயிருந்தால் அந்தக் கஷ்டம் உடனே நமக்கும் வந்துவிடும்.

இப்படி நம்மை அறியாமல் சோர்விலேயும் சஞ்சலத்திலேயும் தான் கோவிலுக்குச் சென்று வருகிறோமே தவிர நல்லதை நாம் பெற முடிவதில்லை. “இந்தச் சோர்வுடன் போய் தெய்வத்திடம் வரம் கேட்பதுதான் நல்லது…!” என்று நினைக்கிறார்கள்.

அர்ச்சனையோ மற்றதோ செய்யும் காசை உண்டியலில் போடுங்கள். நல்ல காரியத்திற்கு அது பயன்படட்டும். ஆலய நிர்வாகம் அங்கே வருபவர்களுக்குத் தங்குவதற்கு வசதி செய்யட்டும்.

நீங்கள் வசதியாகப் போய் அங்கே உட்கார்ந்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும், இங்கே வருபவர்கள் எல்லாம் அந்தத் தெய்வ குணம் பெறவேண்டும் என்று மூச்சை விட்டுப் பாருங்கள். அங்கே நல்லது நடக்கும்.

மத்திரத்தைச் சொல்லிச் சொல்லி ஜெபித்துப் பார்த்தால் இந்த மந்திரத்தினால் இன்னொரு மனிதரிடம் விளைந்த உணர்வுகள் தான் உடலுக்குள் வரும். அது நமக்குள் வந்த பின் நம்மை அருளாடச் செய்யும்.

அருளாடும் பொழுது என்ன நடக்கும்…?

1.நாம் நான்கு பேருக்கு நல்லது செய்தோம்,
2.அவர்கள் கஷ்டத்தையெல்லாம் கேட்டு நாம் நுகர்ந்தோம்.
3.அவர்களுக்கு நல்லதாகிவிட்டது…. ஆனால் தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கின்றதே…! என்று
4.மறுபடியும் விஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

அதற்குப் பதிலாக அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்திற்குள் சென்றால் உங்களுக்குள் வரக்கூடிய இருளை நீக்கலாம். உங்கள் உயிர் தான் ஈசன். உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

உடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)

Kidney transplant

உடலிலுள்ள இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் தியானம் (DIALYSIS)

மனிதனின் வாழ்க்கையில் பிறரின் செயல்களைப் பார்க்க நேர்கின்றது.

1.கோபப்படுவோரை
2.நோய்வாய்ப்படுவோரை
3.வேதனைப்படுவோரை
4.வேதனைப்படுத்துவோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம் உடலில் “ஊழ்வினை என்ற வித்தாகிவிடுகின்றது”.

எந்தந்த குணத்திற்குத்தக்க உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலக்க ஆரம்பித்துவிடுகின்றது.

அப்பொழுது நம் உறுப்புகளில் இருக்கும் நுரையீரல் கல்லீரல் கிட்னி போன்ற உறுப்புகளில் இரத்தம் சுழன்று வரும் பொழுது மற்ற ஈரல்களில் அந்த உறுப்புகளில் உள்ள நல்ல அணுக்கள் விஷத்தின் தன்மையால் சோர்வின் தன்மை அடைகின்றது. அதனின் இயக்கங்களும் குறைகின்றது.

ஏனென்றால், “இரத்தத்தில் அதற்கு வேண்டிய உணர்வு (உணவு)” கிடைப்பதில்லை. அது உடனே வாடிவிடுகின்றது அல்லது மடிய வைத்துவிடுகின்றது.

மடிந்துவிட்டால் அந்த உறுப்புகள் சீர்கெட்டுவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை.

ஆகவே நம் இரத்தத்தை அவசியம் பரிசுத்தப்படுத்த வேண்டும். இந்தத் தியானத்தைச் செய்யுங்கள் உங்களுக்குப் பூரண குணம் கிடைக்கும். டயாலிசிஸ் (DIALYSIS) செய்தது போல் ஆகிவிடும்.

நம் மனதைப் பற்றி (எண்ணங்கள்) ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Mntal inner state

நம் மனதைப் பற்றி (எண்ணங்கள்) ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

உன்னுள் இருக்கும் எண்ணம் ஒன்றல்ல இரண்டல்ல உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எல்லாமே எப்படி வருகின்றது.

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ… மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ… அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல் பார்க்கலாம்.

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள் நாம் வெளியிடும் சுவாசத்தைக் கொண்டுதான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.
1.அவ்வேலை செய்யும் பொழுது நீ விடும் சுவாசம்
2.உன்னைத்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம்.. தேதி… இருந்த ஆட்கள்…! எல்லா நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது…?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் :உள்ள அழுத்தத்தில்”
2.தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்.

உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியில் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளேதான் சுற்றிக் கொண்டே இருக்கிறது உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது (உன்) இப்போது இருக்கும் பிறவி ஒன்று தான் என்று. இல்லையப்பா…! உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாம் இன்றும் உன்னைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது

1.இப்பிறவி மட்டும்தான்…
2.இந்தப் பிறவியில் உடலாக உருவான அணுக்களுடன் கலந்து இருப்பதனால்
3.இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன.
4.அதனால் உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

ஆனால் தியானை நிலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில் உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம். பாட நிலை புரிந்ததா…?

பூமியின் தன்மை எப்படிச் சுற்றிக் கொண்டே வருகின்றதோ அதே போலத்தான் மனிதன் நிலையும். தன்னைத்தானே தன் நினைவு அலைகள் சுற்றிக் கொண்டே வருகிறது.

1.நம் எண்ணத்தில் நாம் விட்ட சுவாச நிலைகள்
2.நம் உயிரினத்தைத் தாக்கும் பொழுது நடந்த நினைவுகள் நமக்குள்ளே வருகின்றன.

நமக்குள் வரும் பொழுது அவ்வொலியின் தன்மையிலே அவ்வுயிரணுவைத் தாக்கும் பொழுது அவ்வுந்தலில் வெளி வருகின்றது அந்நினைவுகள் “சப்த ஒலிகள் அலைகள் நிலையிலே…!” பேசும் பேச்செல்லாம் பல கோடி அணுக்களாகச் சப்த அலைகள் வெளிவருகிறது.

1.அந்த அலையின் ஒலியை
2.எந்த நினைவில் வெளியே கொண்டு வருகின்றோமோ அந்த நிலையில் உயிரணுவைத் தாக்கி
3.சப்த நிலையில் அலைகளின் உதவியால் தொடர்ந்து எண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாம் எண்ணும் உயர்ந்த எண்ணம் அவ் இனிமை கலந்த அணுவாக சுவாசத்தின் மூலமாக நம் உயிரினத்திற்குக் கிடைக்கிறது அடைகிறது. அடைந்த பிறகு உயிர்த் துடிப்பு சமநிலைப்படுகிறது.

எந்த நிலையில் தாக்கப் படுகிறதோ அந்நிலையிலேயே நம் உயிரினத்திற்கு அதன் உந்தல் வருகிறது.

1.உயிரின் உண்மை நிலையை உணர்ந்திட்டால்
2.ஒவ்வொரு அணுவின் நிலையையும் உணர்ந்திடுவாய்.

இன்றைய உலகில் அணுவின் தன்மையை ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டுபிடித்துச் சிவப்பு அணு வெள்ளை அணு அது போல் இன்னும் சில வகைகள் தான் மனிதனுக்கு உள்ளது என்கின்றார்கள்.

சில வகை அணுக்கள் மட்டும் மனிதனுள்ளே இல்லை. பல கோடி அணுக்கள் பல நிலையில் மனிதனுக்குள் சுற்றிக் கொண்டு உள்ளன.
1.மனிதனின் ஆசைக்கு
2.”அவ்வாசை அணுக்களின் உந்தலினால்தான்…!” அடிபணிகின்றான் அம்மனிதன்.
3.மனதில் ஆசை… என்று எண்ணுகின்றான்.
4.மனதில் தான்… கோபம் ஆசை நடைமுறை எல்லாமே இருக்கின்றது என்று எண்ணுகின்றான்.
5.மன நிலையை அடக்கிட முடியவில்லை… என்கின்றான்.

மன நிலை… என்று “தனி நிலை இல்லையப்பா…!” மனிதனின் உள் சுற்றிக் கொண்டே இருக்கும் அணுக்களின் நிலைதான் எல்லாமே. மனித உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாமே எண்ணத்தைக் கலந்ததுதான்.

மனிதன் நினைக்கின்றான் காலில் வலி வந்தால் அவ்வெண்ணத்தில் பதிகின்றது என்று. அக்காலிலேயே எண்ணம் உள்ளது என்று தெரிவதில்லை.

அவ்வணுவின் சுற்றல் அக்காலிலும் உள்ளது. மயிர்க்காலிலும் உள்ளது. ஒரு முடியை இழுத்திட்டால் வலிக்கும் வலி அவ்வெண்ணத்திற்குத்தான் தெரியுமா…?

நெஞ்சில் உள்ளது அவ்வெண்ணம் என்று எண்ணுகின்றாய். உடலைச் சுற்றியுள்ள அவ்வணுக்களின் எண்ணத்தை எண்ணுகின்றாய் நெஞ்சில் உள்ளது என்று.

இருதயம் என்பது அணுக்களைச் சுவாசத்தின் காற்றின் மூலமாகச் சுத்தப்படுத்தியும் உடல் பூராவும் பரவச் செய்யவும் ஏற்பட்ட “ஒரு கருவிதான்…!” அந்த இருதயக் கருவியில் மட்டும்தான் எண்ண அலைகள் தங்கி உள்ளன என்பது சரியில்லை.

மனிதனுடைய நினைவலைகள் சுவாசம் எண்ணமெல்லாம் அவனைத் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வெண்ண நினைவலைகள் எல்லாம்
1.அச்சுவாச நிலையில் ஒன்றுபோல் வரும்பொழுது மனித நிலையும் ஒரு நிலையிலேயே உள்ளது
2.எண்ணத்தின் உந்தலில் சுவாச நிலையை மாற்றிக் கொள்ளும் பொழுது அவ்வுந்தலின் தன்மை துரிதமாகின்றது.
3.அவ்வொலியின் தன்மை அச்சுவாச நிலையில் தாக்கி உயிர்த் துடிப்பிற்குத் தாக்கி
4.அந்நிலையில் அக்கருவி (இருதயம்) வேலைப் பளு அதிகமாகின்றது.
5.அந்நிலையில் வருவதுதான் உடலில் உள்ள குறைபாடுகள் வியாதிகள் எல்லாம்.
6.மனிதன் விட்ட சுவாச நிலையில் இருந்துதான் அவனுக்கு வரும் வியாதிகள் எல்லாம்.

மனிதன் எண்ணத்தைக் கொண்டுதான் வியாதிகளே அமைகின்றது. வேலைப் பளுவை “வேலைப் பளு…!” என்று எண்ணும்பொழுது அப்பளு உன்னை அழுத்துகிறது.

அந்நிலையில் வரும் சுவாச நிலையினால் வரும் சோர்வெல்லாம் மனிதனை துவளச் செய்கின்றது. அந்நிலையில்
1.இதுவென்ன வேலை…?
2.ஊதி விடலாம்…! என்று எண்ணி விட்டால் அச்சுவாச நிலை மாறுவதில்லை.
3.அச்சுவாச நிலையிலேயே மனிதன் உடலைப் புனிதப்படுத்துகிறது.

மனநிலையில் சோர்வும் சோகையும் வருவது சுவாச நிலையில்தான். புரிந்ததா…?
1.உயிரின் உண்மையை உணர்ந்து கொள்.
2.உன் எண்ணத்தின் தன்மையை எண்ணிக் கொள்.
3.தியானத்தில் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்.
4.உன் நிலைக்கு ஜெப நிலை கைகூடும்…! பாட நிலை புரிந்ததா…?

கோகர்ணத்தில் உள்ள சுரங்கங்களிலும் கடலிலும் பெற்ற “அமானுஷ்யமான அனுபவங்கள்”

Divine spiritual light

கோகர்ணத்தில் உள்ள சுரங்கங்களிலும் கடலிலும் பெற்ற அமானுஷ்யமான அனுபவங்கள்

கோகர்ணம் என்ற இடத்தில் ஒரு மலைப்பகுதி இருக்கின்றது. அதன் அருகிலே கடல் அலைகள் மிக அதிகமாக வரும். பண்டைய கால அரசர்கள் அவர்கள் போர் செய்யும் முறைகளில் தன்னைத் தப்புவித்துக் கொள்ள இங்கே வந்து குகைகளை அமைத்துச் சில நிலைகள் செய்ததும் உண்டு.

அங்கே இருதய வாயில் என்ற இடத்தில் ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் இறந்து விட்டால் அங்கிருக்கக்கூடிய கிணற்றில் அவன் எலும்பைப் போட்டு விட்டால் அது கரைந்து விடுகின்றது. அப்படிக் கரைப்பவர்களும் உண்டு.

ஏனென்றால் இப்படிக் கரைத்து விட்டால் மனிதனின் வாழ்க்கையில் செய்த பாவம் எல்லாம் கரையும் என்று இப்படி ஐதீக முறை கொண்டு தான் செய்கின்றார்கள். உண்மையை அறியாது தடைபடுத்திவிட்டார்காள்.

அதே மாதிரி அங்கே இருக்கும் கடலில் காசையோ தங்கமோ வெள்ளியோ அந்த நகைகளைப் போடுபவர்களும் உண்டு. அப்படிப் போட்டால் நம் பாவமெல்லாம் போய்விடும் என்று செய்கிறார்கள்.

குருநாதர் அங்கே என்னைப் (ஞானகுரு) போகச் சொன்னார். கடலுக்கு மேலே செல்வதற்குக் கம்பி வேலிகள் போட்டு வைத்திருகின்றார்கள்.
.
நான் குருநாதர் சொன்னார் என்ற நிலையில் அலட்சியமாகப் போனேன். கடலில் வரும் அலைகளைப் பார்த்தவுடனே ஆனந்தமாக இருந்தது. ஆனால்
1.பெரிய அலைகள் அலைகள் வந்த பின்னாடி தான் தெரிந்தது “ஏன் கம்பி வலைகள் போட்டுள்ளார்கள் என்று…!”
2.அலைகள் மோதி வரும் பொழுது கிர்…ர்ர்ர்… என்று என்னை கீழே இழுக்கிறது.

கொஞ்சம் ஏமாந்தால் நடுக்கடலுக்கே இழுத்துக் கொண்டு போய் விடும். அந்த அளவுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. குருநாதர் அங்கே காட்டுகின்றார்.
1.அந்த ஈர்ப்பு சக்திகள் அது என்ன செய்கின்றது…?
2.இது எவ்வாறு உருவாகின்றது…?
3.இதற்குக் காரணம் என்ன…? என்று எனக்குள் பதியச் செய்கின்றார்.

அந்தக் கோவிலில் காளி வைத்திருக்கின்றார்கள். நாம் கோபமான குணத்தை வளர்த்துக் கொண்டால் அது மற்றொன்றை அழித்திடும் சக்தியாக அது எவ்வாறு உருவாகின்றது…? என்பதையும் அங்கே அந்தக் கடல் பகுதியில் காற்றழுத்தத்தின் தன்மை வரும் போது கடல் அலைகள் மோதி எழும்பும் பொழுது அது காளியின் தன்மையாக எதையுமே தனக்குள் கவர்ந்து உள்ளே இழுத்திடும் சக்தியாக இருக்கிறது என்ற நிலையையும் அங்கு உணர்த்துகின்றார்.

அப்பொழுது அங்கே இன்னொரு பெரிய அலை வருகிறது. ஏற்கனவே நான் அந்த மலை மீது (உயரமான இடத்தில்) தான் நிற்கின்றேன். ஆனால் அந்த அலை வந்து ஒன்றுடன் ஒன்று மோதி நான் நிற்பதற்கும் மேலே அது எகிறிப் போகிறது.
1.அப்படி அந்த அலை அடித்துக்…. கீழே போனவுடனே
2.என்னை சர்…ர்ர்ர்…! என்று கடலுக்குள்ளே இழுத்துவிட்டது.

அந்த இடத்தில் குருநாதர் ஏற்கனவே ஒரு உபாயத்தைச் சொல்லி இருந்தார். முதலில் அந்தக் கம்பியுடன் சேர்த்து உன் உடலை இருக்கிக் கட்டிக் கொள் என்று முன்னெச்செரிக்கையாகச் சொன்னார்.

அப்பொழுது அங்கே நான் சட்டை எல்லாம் போடவில்லை. வேஷ்டியும் துண்டும் தான் போட்டிருந்தேன். அந்த் ஆறு முழத் துண்டை வைத்துக் கட்டிக் கொண்டேன்.

உங்களுக்கு லேசாகச் சொல்றேன். ஆனால் அன்றைக்கு அந்த அலை எப்படி வருகிறது…? புயல்கள் எப்படி உருவாகிறது…? அது புவிக்குள் எப்படி ஈர்ப்பாகின்றது…? அதனால் ஏற்படும் சுழற்சியின் தன்மை எப்படி ஆகிறது…? அது மேகங்களை எப்படிக் கவர்கின்றது…?

(இன்றும் நீங்கள் பத்திரிக்கையில் பார்த்திருப்பீர்கள். விஞ்ஞானிகள் புயல் எப்படி உருவாகிறது…? அதன் மையப் பகுதியில் இருக்கும் கண் (EYE OF THE STORM) எப்படி இருக்கிறது..? காற்றழுத்தங்கள் எப்படி மாறுகிறது…? நீரை எப்படி அது உறிஞ்சுகிறது…? என்றும் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டேயுள்ளார்கள்)

சுழற்சியின் வேகத்தால் கீழே பூமிக்குள் இழுத்தாலும் மீண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி அந்தச் சுழலால் அந்த ஆற்றல் மேகங்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த இடத்தில் சீறிப் பாயும் “ஒரு நெருப்பாக மாறுகின்றது… நெருப்புக் குழம்பாகவே ஆகிறது…!”

அப்போது அந்த அலைகள் வரும் போது ஒன்றோடு ஒன்று இங்கே ஈர்த்துச் சுழற்சியின் தன்மை ஆகப்படும் போது எப்படி மேலே பறக்கின்றது…? சில எதிர் நிலையான அலைகள் எப்படி உருவாகிறது…? என்று அந்த ரெக்கத்தில இருந்து காண்பிக்கின்றார் குருநாதர்.

காளி எப்படி இருக்கின்றது…? தான் ஆங்காரப் பசியைப் போக்குவதற்கு அந்த உணர்வின் சக்தியாக அது எப்படிச் செயல்படுகிறது…? இதற்கும் பெயர் காளி தான். அந்தக் காளியை ஏன் அங்கே வைத்தான்…?

ஆனால் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுள்ளார்கள். புலி தன் பசியைப் போக்க மற்றவனை இரக்கமற்றுக் கொல்லும். காளி கோயிலை வைத்தாலும் அங்கே அலைகள் பாய்ந்து அழுத்தம் அதிகமானவுடனே தனக்குள் கவர்ந்து கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும்.

உன் உடலை விட்டு உன் உயிர் வெளியே போய்விடும். ஆனால் வேறு உடலுக்குள் போய்ச் சேரும். இந்த உடலோ தண்ணிக்கு இரையாகும். இது தான் புலி என்று அந்த ரெக்கத்தில் (இடத்தில் வைத்து) குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்.

வெளியிலே செல்லும் உயிர் இன்னொரு உடலுக்குள் சென்று இது காளியாக நின்று அந்த உடலுக்குள் இருக்கும் சக்தியை வைத்து இது அடுத்த உருவமாக உருப் பெறுகிறது.

ஏனென்றால் உடலை விட்டுச் சென்ற பின் நாம் யார் மேல் அன்பு கொண்டமோ அந்த உடலுக்குள் சென்று அந்த உணர்வினை எடுத்துத் தனக்குள் பசியைத் தீர்த்து அந்த உணர்வின் சக்தியாக அது உடலாகின்றது.
1.காளி என்பதை வைத்து
2.இந்த இரண்டிற்கும் இப்படிச் சொல்லிக் காட்டுகின்றார். இதுவும் காளி தான்.

அலைகள் சீறிப் பாயும் பொழுது பயத்தின் நிலைகள் வருகின்றது. பயத்தின் தன்மை கொண்டு வீழ்ந்து விட்டால் அந்தப் பயமான உணர்வுகளை விழுங்கி அந்த உணாவின் சத்தாக உயிரிலே விளைகின்றது.
நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலையில்
1.இங்கே எப்படி விளைகின்றது இந்த உயிருக்குள்…!
2.ஆனால் உடலை விட்டுச் சென்ற பின் இந்த உடல் எப்படிக் கரைகிறது…? என்று
3.இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்குத் தான் என்னை இங்கே அலைய வைத்தார்.

இது முடிந்ததும் அடுத்து ஒரு சுரங்கத்திற்குப் போகச் சொன்னார். கல்லிலேயே கதவு செய்து வைத்து இருக்கிறார்கள். அதிலே சிலைகள் வைத்திருக்கிறார்கள். ஆனால் யாரும் போனாலும் அந்தக் கதவு தெரியாது.

அன்றைக்கு வாழ்ந்த அரசர்கள் மாற்றரசர்கள் வந்தால் அவன் கையில் சிக்காதபடி தன்னைத் தப்புவித்துக் கொள்வதற்காக அந்த்ச் சுரங்கங்களைக் கட்டி வைத்து அதில் தங்கி இருந்து கொள்கிறார்கள்.

கொஞ்ச தூரம் போனவுடனே சிறிய பொந்து (பிலவு) மாதிரித் தெரிந்தது. உள்ளுக்குள் போனேன். உள்ளே ஒரே இருட்டாகத் தெரிகிறது. இருட்டாகத் தெரிந்தவுடனே எனக்குப் பயம் வந்துவிட்டது.

ஏனென்றால் சுரங்கங்களில் சில இடங்களில் தண்ணீரையும் கெட்டி வைத்திருப்பார்கள். (முக்குளித்துப் போக வேண்டியதிருக்கும்) ஆனால் எங்கேயோ கொண்டு போய் மறுபடியும் கடலில் கொண்டு விட்டுவிடும்.

அந்த மாதிரிப் போய் விட்டால் என்ன செய்வது…? என்ற பயம் வந்துவிட்டது. உள்ளே போகவில்லை அப்படியே உட்கார்ந்து விட்டேன். பயத்தின் தன்மை வரும் போது
1.அந்த இருட்டு தான் எனக்கு வருகிறதே தவிர
2.அதை அறியக்கூடிய அறிவு வரவில்லை.

பயமான பிற்பாடு நான் என்ன செய்வது…? இங்கே போய் விழுந்து விடுமோ…? வேறு எங்காவது போய் விழுந்து விடுவோமோ…? என்ற சந்தேக நினைவுகள் வருகிறது.

உங்கள் வாழ்க்கையிலும் சில நேரங்களில் இப்படித் தான் ஏற்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு தொழில் செய்யப்படும் போது அது நடக்குமா…? நடக்காதா…? எல்லாம் போய்விடுமோ…! என்ற எண்ணம் வந்து விட்டால் அப்புறம் அந்த இருள் தான் வரும். ஒன்றையும் தெரிய முடியாது.

அங்கே அந்த இடத்தில் பல உதாரணங்களைக் காட்டுகின்றார் குருநாதர். நீ இந்தக் குகைக்குள் போகின்றாய்… இருட்டாக இருக்கிறது. உனக்குப் பாதை தெரியவில்லை. ஆனால்
1.பாதை தெரிவதற்காக வேண்டி உனக்கு நான் சக்தி கொடுத்தனே…
2.அதை என்னடா பண்ணினாய்……? என்று கேட்கிறார்.
3.அப்போது அங்கே குருவை மறந்து விடுகின்றேன்
4.என் உடலைக் காக்கத் தான் எண்ணுகின்றேன் என்பதை நினைவுபடுத்துகிறார் குருநாதர்.

ஒரு கையில் துப்பாக்கியைக் கொடுத்து புலி வந்தால் சுட்டுவிடுங்கள் என்று கொடுக்கின்றார்கள். ஆனால் புலி வந்த பின் “புலி வருகிறது…!” என்று சுடாமல் சும்மா வைத்துக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? புலி நம்மைத் தானே தாக்கும்.

துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
1.ஐய்யய்யோ… புலி வருகிறது… ஐய்யய்யோ புலி வருகிறது..! என்றால்
2.புலியைக் கொன்றால் தானே அது நம்மைக் கடிக்காது
3.ஏன்டா… உனக்குச் சக்தி கொடுத்திருக்கிறேன். நீ என்னடா செய்தாய்…? என்று
4.அந்த இடத்தில் தெளிவாகக் காண்பிக்கின்றார் குருநாதர்.

அங்கே முதலில் கடலில் அலைகள் வரும் இடத்தில் அந்தக் கம்பியில் உன் உடலை இணைத்துத் துண்டைக் கட்டச் சொன்னேன். ஆனால் நீ பயந்த உணர்வுடன் விழுந்து விட்டால் கடலுக்குள் தான் போவாய். அதற்குத் தானே முன்னெச்சரிக்கையாகக் கட்டச் சொன்னேன்.

மறுபடி அதே பயம் உனக்கு இங்கே இந்தச் சுரங்கத்திற்குள் போகும் பொழுது வருகிறது. அப்போது அந்த உணர்வை நீ எப்படிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று உதயம் கொடுக்கின்றார்.

குரு சொன்ன உணர்வின் தன்மை எடுக்கும் போது ஒளியாக வருகிறது. உள்ளே பாதை தெரிகிறது. உள்ளே போனேன். பல அறைகள் இருக்கிறது. ஒவ்வொரு அறையும் அடைத்திருக்கிறார்கள்.

இங்கே ரோலிங் சட்டர் (ROLLING SHUTTER) நாம் எப்படிப் போட்டிருக்கின்றோமோ அதுபோல ஒவ்வொன்றும் அந்த மாதிரி இருக்கின்றது.

பார்த்தால் வெறும் கல்லாக ஒன்றாகத்தான் தெரிகிறது. ஆனால் ஒரு பொறியை (SWITCH – BUTTON) அழுத்தப்படும் போது அந்தக் கல் கொஞ்சம் முன்னாடி வருகிறது. ஆனால் முதலில் சேர்ந்து இருக்கின்றது. அப்படியே அதை நகற்ற முடியவில்லை.

சுவிட்ச் மாதிரி வைத்திருக்கிறார்கள். அதை அழுத்தியவுடனே இது நகர்கிறது. நகர்ந்த பின் அதைத் தள்ளினால் குகை தெரிகிறது. அதை நகரச் செய்வதற்கு இன்னொரு பக்கம் வைத்திருக்கிறார்கள்.

அந்த இடத்தில் கல் மாதிரியே குவியலாக வைத்திருக்கிறார்கள். அழுத்தி முன்னுக்கு வந்ததும் தான் முழுவதும் நகர்த்த முடியும். நகர்த்தி விட்டு உள்ளுக்குள் போய்விட்டால் மறுபடியும் அதுவாக மூடிவிடும்.

அதாவது நடந்து செல்லும் பொழுது அந்தப் பாதையில் மிதித்தவுடனே “லபக்…” என்று இழுத்து மூடிக் கொள்கிறது. மிதித்து விட்டுத் தள்ளிப் போனால் தொலைந்தான். மீண்டும் திருப்பி வர முடியாது. அந்த அளவிற்குச் சிக்கலாகப் போட்டு மாட்டி விட்டுவிடுகின்றது.

அப்படி ஆனவுடனே மறுபடியும் எனக்குச் சந்தேகம் வருகின்றது. அப்புறம் குருநாதர் சொன்ன முறைப்படிப் படிப்படியாகப் போனவுடனே எல்லாம் தெளிவாகத் தெரிய முடிந்தது.

ஏனென்றால் அன்றை அரசர்கள் அவ்வளவு நுட்பமாக (TECHNIQUE) மாற்று அரசனிடம் இருந்து தப்பித்து கொள்ள அப்படி உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதற்கு அடுத்துப் போனவுடனே படுத்துக் கொண்டு தான் போக வேண்டும். படுத்து அப்படியே செல்லும் பொழுது ஒரு இடத்தில் தலை முட்டுகிறது. அங்கே முட்டினால் தான் அந்தக் கதவு திறக்கும். அதையும் தாண்டி வெளியில் போய்க் கொள்ளலாம்.

ஆனால் போகவில்லை என்றால் விஷ வாயு மாதிரியும் வைத்திருக்கின்றான். அதை முறிக்கக் கூடிய நிலையும் வைத்திருக்கின்றான். தான் தப்பிப்பதற்கும் மாற்று அரசனை அழிப்பதற்கும் இத்தனை வேலை செய்து வைத்துள்ளார்கள்.

ஏனென்றால் தன்னுடைய சுகபோக வாழ்க்கைக்காகத் தன் உயிரைக் காத்து இந்த உடலைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு அரசனும் எத்தனை அவஸ்தைப்படுகின்றான் என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நிதர்சனமாகவே அந்த இடத்தில் வைத்துக் காட்டுகின்றார்.

இதைப் போன்ற ஒவ்வொரு நிலையிலும் பல பல அனுபவங்களைப் பெற்றுத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளின் அருள் சக்திகளை எடுக்கும் மார்க்கத்தை எளிதில் கொடுக்கின்றேன்.

சொல்வது லேசாகத் தெரியும். எடுத்து உபயோகப்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் வந்த இருள்களைப் போக்கிடும் ஆற்றலை நீங்களே பெற முடியும்.

ஞானமும் கிடைக்கும் சக்தியும் கிடைக்கும்.

“ஆண்டியும் அரசனாகலாம்…. அரசனும் ஆண்டியாகலாம்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Inner self bliss

“ஆண்டியும் அரசனாகலாம்…. அரசனும் ஆண்டியாகலாம்…!” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

பல சாமியார்களைக் கண்டிருப்பாய். விரக்தியில் சாமியாராகி தான் ஆண்டவனைக் காணப் போகின்றேன் என்று பல நாட்கள் அமர்ந்து பல பல ஜெபங்களை ஓதி ஓதும்போது ஜெப மணியை எண்ணுகின்றான்.

ஆண்டவனை ஜெபிக்க ஜெப மணியை எண்ணித்தான் லட்சார்ச்சனை கோடியார்ச்சனை என்றெல்லாம் பெயர் சூட்டி கோடி தடவை லட்சம் தடவை ஆண்டவனின் நாமத்தை உச்சரிக்கின்றார்கள்.

ஜெப மணியில் எண்ணிக் கொண்டே எண்ணினால்தான் அவ்வாண்டவன் வந்து ஆசிர்வதிப்பாரா…?

அவன் லட்சார்ச்சனை… கோடியார்ச்சனை… என்று ஜெபமிருக்கும் நிலையில் சிறு தடங்கல் வந்திட்டால் அவன் நிலையில் கோபம் வருகிறது.
1.அப்பொழுது அவன் விடும் சுவாச நிலையே மாறுபடுகிறது.
2.அந்நிலையில் எப்படியப்பா அவன் ஆண்டவன் அருளைப் பெற்றிட முடிந்திடும்…?

அவனுள்ளே இருக்கும் ஆண்டவனையே மறந்துவிட்டு ஜெபம்…ஜெபம்…ஜெபம் என்று செய்கின்றான் ஜெபங்களாக…!

ஆண்டவன் எங்கப்பா உள்ளான்? அவன் ஜெப நிலைக்கு எப்படியப்பா அவன் வந்திடுவான்..?
1.தனக்குள்ளே இருக்கும் ஈசனின் சக்தியை மறந்துவிட்டு
2.தன்னையே தான் மறந்து தன் செயலையும் தன் காலத்தையும் சிதற விட்டு
3.சாமியார் என்ற நிலையில் ஜெபம் ஜெபித்துக் காலத்தையே வீணடித்து விடுகிறார்கள் பல சாமியார்கள்.

நான் ஆண்டவனைக் காணப் போகின்றேன்… ஆண்டவன் என்பது யார் என்பதை அறிந்திடவே பூரண அருளையும் தானே பெற்றிடலாம்.. பெற்று மக்களுக்கு அளித்திடலாம் என்றும் பல சாமியார்கள் ஜெபம் செய்கிறார்கள். காலத்தையே கடத்துகிறார்கள்.

அவ் ஈஸ்வரன் இவனுக்கு மட்டும்தான் தெரிவானா…? மற்றவருக்குth தெரிய மாட்டானா…? அம்மகேசனின் சக்தி… அம் மகா சக்தி என்ன…? என்பது யாரப்பா அறிய முடியும்…?

1.உன்னையே நீ வணங்கிவிட்டால்…
2.உன் நிலையை மாற்றிடாமல்… உன் எண்ணத்தின் எண்ணமெல்லாம் ஒரு நிலை எய்தும்பொழுது
3.உன் சுவாச நிலையின் தன்மையால் “உன்னுள்ளே உள்ள ஈசனின் சக்தியை நீ கண்டிடலாம்…!”

“ஆண்டியும் அரசனாகலாம்…. அரசனும் ஆண்டியாகலாம்…!” என்பதன் பொருளும் இதுவே. ஆண்டவனின் நிலை எங்கெங்கு உள்ளது என்று அறிந்திட்டாயா…?

“எல்லாமே எண்ணத்தில் இருந்து வருவதுதான்…!”

ஐயப்பன் உரைத்த பதினெட்டாம்படியின் தத்துவம்

Image

Lord Ayyappa

ஐயப்பன் உரைத்த பதினெட்டாம்படியின் தத்துவம்

 

பதினெட்டாம் படி என்றால் வழுக்கி விடும் நிலைகள் பெற்றது.
1.உயர்ந்த குணத்தை எவ்வாறு சிரசில் ஏற்றி
2.பொறுமையாக அந்தப் பதினெட்டாம்படியில் எவ்வாறு ஏற வேண்டும் என்ற தத்துவத்தைக் காட்டுவது தான் “ஐயப்பன் கோவிலின் தத்துவமே…!”

ஐயப்பன் ஒரு தவயோகி. தவயோகி என்று சொல்வதற்கு முன் அவர் ஒரு அரசன். பல அரச போர்களைச் செய்து அதனின் நிலைகளிலிருந்து விடுபட்டவர். இருப்பினும் கூடுவிட்டுக் கூடு பாயும் நிலைகளைத் தனக்குள் கற்றுணர்ந்தவர்.

அன்று முகமதியர் படையெடுத்து வரும் போது உடலின் தன்மைகள் மடியப்படும் போது அவர்களுடைய பெருக்கம் இந்த நாட்டிலிருப்பதைத் தடைபடுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டு குழந்தையிந் உடலுக்குள் செல்கிறார்.

ஏனென்றால் அக்காலங்களில் இனத்திற்குள் இனம் பல போர் முறைகள் ஆகித் தன் தன் சுயநல்னுக்காகச் செயல்படும் பொழுதுதான் அரசுகள் சீர்குலைந்தது. ஆகவே
1.எது எது பெருகுகின்றதோ… அப்படிப் பெருகும் நிலைகள் கொண்டு
2.எது எது விளைகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொண்டால் நல்லது (அதற்குத்தான் இதைச் சொல்வது)

குழந்தையின் கூட்டுக்குள் சென்று நீரிலே மிதந்து வந்து… குழந்தையில்லாத அரசன் கையிலே சிக்கி அங்கே பல சித்துக்களைச் செயல்படுத்துகின்றார் ஐயப்பன்,

தனக்கு ஒரு இருப்பிடம் வேண்டும் என்ற உணர்வின் தன்மை கொண்டு தன் இனம் எதுவோ அதைக் காத்துக் கொள்ளவும்… தன் அரசை நிலைத்துக் கொள்ளச் செய்வதற்காகவும்… கூடு விட்டுக் கூடு பாயும் நிலையைச் செயல்படுத்தினார்.

உதாரணமாக ஓர் சினிமா நடிகராக இருக்கிறேன் என்றால் ஐயப்பனுக்காக நான் சில பொருள்களைக் காணிக்கை செய்யப் போகிறேன்…! என்று அங்கே போகின்றார்கள். ஆனால்
1.அவர் செய்த பிழைகள் எதுவாக இருப்பினும்
2.மற்றவர் மத்தியிலே புகழ் தேடும் நிலைகளுக்காக
3.ஐயப்பனுக்குக் காணிக்கை செலுத்தப் போகின்றேன் என்று பறைசாற்றுகின்றார்கள்.

உடனே புகழ் பெற்ற ஒரு நடிகர் “ஐயப்பனைத் தரிசிக்கச் செல்கிறார்…!” என்று சொல்லிக் கொண்டு அவருக்குப் பின் பலரும் அங்கே செல்லத் தொடங்குகிறார்கள். அந்த நடிகர் செய்த அதே இச்சையைத் தான் மற்றவர்களும் கவர நேர்கின்றது.

நடிகர் செல்கிறார்…..! என்றால் அதன் வழிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளும் அதன் தொடர் வரிசையில் இருக்கக்கூடிய தொழில் செய்வோரும் பின்னாடி சென்று அவருக்கு இணக்கமாக நடந்தால் அதன் வழிகளில் “நமக்கும் பிழைப்புக்கு ஏதாவது கிடைக்கும்…!” என்று இதைப் பெருக்க எண்ணுகின்றார்கள்.

ஆனால் அன்று அந்தத் தத்துவ ஞானி பல போர் முறைகளின் தன்மை கொண்டாலும்
1.அஷ்ட திக்கிலிருந்து வரக்கூடிய இருள் சூழும் நிலைகள் எதனை அழித்துக் கொண்டு உள்ளது…?
2.மனிதனின் உயர்ந்த குணத்தை அது எவ்வாறு இழக்கச் செய்கின்றது…?
3.அஷ்ட திக்கிலும் பல நிலைகளில் பல முறைகளில் பல கோணங்களில் மனிதனை அது எப்படி மாற்றுகின்றது…?
4.அத்தகைய உணர்விலிருந்து ஒவ்வொருவரும் எவ்வாறு விடுபட வேண்டும்…?
5.தன் மக்களை எவ்வாறு மீட்ட வேண்டும்…? என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மையை எவ்வாறு அது பெருக்க வேண்டும் என்று உணர்த்தினார்.

ஏனென்றால் அநாகரிக நிலைகள் கொண்டு மற்ற மதத்தின் தன்மை நம் நாட்டிலே படையெடுத்து வந்தது. “அதற்குள் நாம் அடிமையாகி விடக்கூடாது…!” என்பதற்காக மன வலுவைக் கொடுப்பதற்காகவும் ஒழுக்க நெறியைக் கூட்டுவதற்கும் அந்தக் குழந்தை வடிவில் அரசனின் குழந்தையாக நிலைத்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு தீமைகளை அடக்கும் சக்தியைக் கொண்டு வந்தார்.

1.மனித வாழ்க்கையில் எந்தத் தீமைகளும் நுழையாது தனக்குள் வலுபெற்ற அந்த நிலைகள் பெருக்க வேண்டும் என்றும்
2.அஷ்ட திக்கிலிருந்து தாக்கும் உணர்வுகளை அடக்கி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியாகப் பெருக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையாக விண் செல்ல வேண்டும் என்பதே அவர் உரைத்த உண்மைகள்.