Image

https://app.box.com/s/otg4d5cv8cjrcebpv0efkz80gy879wd6

Click the above link for downloading or hearing துருவ தியானப் பயிற்சி – சாமிகள் தியானம் 

கடலுக்குள் இருக்கும் ,அமிலமாக கரைக்கும் ஆற்றல்

கடல் வாழ் நிலைகளில் மேல் எடை கூடும் போது ஆழமான ஒரு இரண்டாயிரம், பத்தாயிரம் அடி கீழ் இருக்கப்படும் போது நீர்ஓட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பகுதியிலிருந்து ஒருபகுதிக்கு செல்லும் அது இழுவையின் வேகமும் அதிகமாகும். அவ்வாறு இழுவையின் இழுவம் அதிகமாகும் போது துருவ ப்பகுதியில் இருந்து மாற்றம் அடையப்படும்போது இப்போது
பார்க்கின்றோம் ,ஆறுகளில் சில இடங்களில்
புதைமணல் என்று அங்கே கால் வைத்தால் ஆளவே உள்ளுக்குள் இழுத்து விட்டு போய்விடும். இதேமாதிரி கடல் பகுதியிலும் சில பகுதிகளில் மேல் இருந்த வாறே கீழ் இழுக்கும் சக்தி இருக்கும். மேலே விமானம் ஆனாலும், கப்பல் ஆனாலும் உள்ளே இழுத்து கொண்டு போய் விடும். அது எங்கே இழுத்து செல்கின்றது,இங்கே உள்ளுக்குள் போனதென்றால் அந்த ரெக்கத்தில நீங்கள் தேடிப்பார்த்தால் கிடைக்காது. அது எங்கே போகின்றது,எதன்நிலை பெறுகின்றது என்றும் இது வரை விஞ்ஞானிகள் கண்டு கொள்ளவும் இல்லை.கண்டு பிடிக்க முடியவுமில்லை.

 

இவையெல்லாம் சில பகுதிகளுக்கு செல்லும் போது அமிலத்தன்மை அடைந்துஅது
கரைந்தேவிடுகின்றது.

நாம் தென்பகுதிகளுக்கு செல்லும் போது வெப்பத்தின் தணல் கூடி இதனுடைய நெருப்பு உருவாக்க ப்பட்டு அதன் ஓட்ட நிலைகளெல்லாம் கருகி விடுகிறது என்று இதுஅகஸ்தியன் முதலிலே கண்டுள்ளான்.
இதான் கடல்களில் நிலையில் விளைந்த நிலைகள்.

ஏன் என்றால் இவையெல்லாம் கடவுள் என்று ஒருவன் இயக்கவில்லை ,உணர்வின்
கலவையும்,மற்றதோடு இணைந்து செயல்படும் சக்தி தான் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றின் வலுகொண்டு ஒன்றினை இயக்குவது தான் கடவுள் என்றும், ஒன்றுக்குள் ஒன்று இயக்கி அது வலுவை பெருக்கப்படும்
போது ஈசன் என்றும் ஒன்றுக்குள் ஒன்று மோதல் ஏற்படும் போது அதற்குப்பேர் வெப்பம் என்றும் வெப்பத்தினால் மோதலின் தன்மைகள் ஈர்க்கும் சக்தி வரும் போது காந்தம் அதிலே உருவாகின்றது. இதெல்லாம் இயற்கையின் நிலைகளில் உருவாகின்றநிலை.

 

தீமையை நீக்க புருவமத்தியில் கட்டளை இடுங்கள்.

———————————-

இந்த ஆறாவது அறிவில், தீமை என்ற நிலையை அறிந்து கொள்ளும் அறிவாக இருப்பது கார்த்திகேயா,

தீமைகளை நீக்கி, இந்த ஒளியின் உடலாக, இருப்பது இந்த துருவநட்சத்திரம்.

அதை வழி நடத்தி,

அதன் வழி கொண்டு, உண்மையின் உணர்வை அறிவதற்காக, இதை நான் சொல்லுகின்றேன்.

அந்த துருவநட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். என்று இக்கண்ணால் விண்ணை நோக்கி, ஏங்கி, அந்த உணர்வை பெறவேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி,

அதே கண்ணின் புருவமத்தியில் செலுத்தப்படும் பொழுது, நாம் கண்ணால் பார்த்து அறியப்படும் பொழுது, உயிரிலே பட்டு உணரமுடிகின்றது.

ஆனால் அதேசமயத்தில், வேதனை என்ற உணர்வை கண்ணால் நுகர்ந்தோம் என்றால், உயிரின் காந்தம் நமக்குள் இழுத்து நம்மால் அறியமுடிகின்றது.

கண்ணால் பார்க்கின்றோம்.

உயிரால் உணர்கின்றோம்.

ஆனால் இதேபோல, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை புருவமத்தியில் வைக்கப்படும் பொழுது, அது வலிமையாகி விடுகின்றது.

ஏனென்றால், வேதனைப்பட்டோர்க்கு நாம் உதவி செய்கின்றோம்.

அவரின் நிலையை கேட்டறிகின்றோம்.

ஆகையால், அடுத்த நிமிடமே அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து புருவமத்தியில் எண்ணி, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று, இந்த ஆறாவது அறிவின் துணைக்கொண்டு, இந்த உணர்வுகள் சேனாதிபதியாக இயங்குகின்றது.

அப்பொழுது தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும், முதலில் உள்ளுக்குள் போய் விடுகின்றது.

அது உடலில் கலக்காது, அந்த தீமையான உணர்வுகளை தடுக்க வேண்டும்.

அப்பொழுது அந்த ஆறாவது அறிவின் துணைக்கொண்டு, இந்த கண்ணின் நினைவை புருவமத்தியில் எண்ணவேண்டும்.

அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைக்கும் பொழுது, இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடை படுத்த படுகின்றது.

அது தடை படுவதோடு மட்டுமல்லாது, நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்துக்கும், அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று, கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

ஆகவே இது ஆணையிடுகின்றது.

இந்த ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது, கார்த்திகேயா.

இதன் உணர்வு கொண்டு அணுக்களுக்கு செலுத்தப்படும் பொழுது, அது வீரியமடைகின்றது.

நாம் எண்ணியபடி, தீமைகள் வராதபடி தயாராகின்றது.

நுகர்ந்து கொஞ்சமாக உள்ளுக்குள் போணாலும் அந்த நிலையும், இந்த உணர்வுகள் சேர்த்து இது உமிழ்நீராக மாறி,

அது உமிழ்நீராக உடலில் சேர்க்கப்படுகின்றது.

அந்த வித்தை அடக்கும் சக்தியாக, அந்த துருவநட்சத்திரத்தின் உணர்வுகள் இதை தடுத்த பின், இது சிறுத்து விடுகின்றது.

இந்த உடலுக்குள் உமிழ்நீராக மாறும் பொழுது, அது சிறுத்து படுகின்றது.

அதேசமயத்தில், தீமையான நிலையை பார்க்கும் பொழுதோ, நோயின் தன்மையான நிலையில் ஒருவரை பார்க்கும் பொழுதோ, கருவிழி, ருக்மணி ஊழ்வினை என்ற வித்தாக பதிவாக்குகின்றது.

பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.

அதேசமயத்தில், அதை தடை படுத்தி, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்றால்,

நாம், எந்த உடல் நோய்வாய்பட்டவரை பார்த்து, கருவிழி பதிவாக்கியதோ, அந்த உணர்வுகள் அருகிலேயே (உயிரில்) பதிவாக்குகின்றது.

பதிவாக்கப்படுவது இதைக்காட்டிலும், வலிமையானது.

அப்பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்.

அந்த நோய்கொண்ட உயிரான்மா, துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.

அவர் உடல் நலம் பெற வேண்டும்.

அவர் சிரமங்களிலிருந்து விடுபடவேண்டும்.

அருள் வழி வாழ வேண்டும் என்று, இந்த உணர்வுகளை, இங்கே பதிவு செய்து, ரெக்கார்ட் செய்திடவேண்டும்.

இதற்கு மத்தியில், அவருடைய வேதனை என்ற நிலைகள் அவருக்குள் அடங்கி விடுகின்றது.

தெய்வத்தின் மேல் பக்தி கொண்டு தெய்வத்திற்காக விரதம் இருக்கின்றோம் என்று சொல்கிறோம் – உண்மையான விரதம் எது?

Image

Krishna jayanthi pooja

தெய்வத்தின் மேல் பக்தி கொண்டு தெய்வத்திற்காக விரதம் இருக்கின்றோம் என்று சொல்கிறோம் – உண்மையான விரதம் எது?

 

 

என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கிறது என்று தெய்வத்திற்காக வேண்டி நாள் முழுவதும் விரதம் இருந்து நெய்வேத்தியம் எல்லாம் போட்டு சாப்பாடு போட்டுக் கும்பிடுகிறீர்கள்.

 

தெய்வத்திற்காக வேண்டி சாப்பிடாமல் இருக்கிறது என்றால் சாமி மேலே பக்தியாக இருக்கின்றீர்கள். ஆனால் இங்கே உடலுக்கு என்ன பக்தியாகின்றது.

 

உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அது சோர்வடைகின்றது.

 

சோர்வடைந்தவுடன் என்ன செய்கிறது. மருமகள் முதலில் எப்படி இருந்தாள்…! இப்பொழுது எப்படி இருக்கின்றாள் பார்…? தெய்வமே…! என்று மாமியார் எண்ணுகிறார்கள்.

 

மாமியார் திட்டியிருப்பார்கள். மருமகள் விரதம் இருப்பார்கள். அவரும் கோயிலுக்குச் சென்று நல்லதை எண்ணுவதில்லை. கோயிலுக்குப் போய் வந்ததும் மீண்டும் மாமியார் என்ன சொல்வார்கள்? மருமகளைப் பார்த்துப் போகிறாள் பார்…! என்பார்கள்.

1.விரதம் இருக்கும் அன்றைக்குப் பலவீனமாகும் பொழுது

2.நல்ல குணங்களை யாரும் எண்ண முடிவதில்லை.

3.இப்படித் தான் விரதங்கள் இருக்கின்றது.

4.வேதனையான உமிழ் நீர் வந்தவுடனே

5.நமக்குள் எல்லா அணுக்களும் விஷத்தின் தன்மை அடைந்து விடுகின்றது.
விரதம் இருக்கும் அன்று தெய்வத்தை நினைப்பதில்லை. தெய்வமே…! இப்படி இருக்கிறார்கள் பார்? என்றைக்குத்தான் திருந்தப் போகிறார்களோ..? என்றைக்குத் தான் எங்கள் மாமியார் திருந்துவார்களோ…?

 

பையன் போனால் போதும்..! இன்றைக்கு என் பையன் என்ன செய்ய போகிறானோ…? எனக்கு என்ன தெரியும்..? தெய்வமே…! எல்லாவற்றையும் நீயே பார் என்பார்கள்.

 

ஆலயத்திற்குள் போய் நான் இத்தனை காலம் உனக்கு எல்லாம் செய்தேனே…! இதைச் சொல்லி எனக்கு ஒன்றும் நடக்கவில்லையே என்று இதைத்தான் எண்ணுகின்றோம்.

 

குழந்தைகள் மீது பாசமாக இருக்கிறீர்கள். அதனால் அர்ச்சனை செய்கிறீர்கள்.  அர்ச்சனை செய்யும்போது என்ன சொல்கிறீர்கள்?

1.நான் இத்தனையும் இவனுக்காகச் செய்கிறேன்.

2.ஆனாலும் அவன் அப்படியெல்லாம் செய்கிறானே என்று

3.வேதனையான உணர்வு தான் வருகிறது.

 

சாமி மீது போட்டிருக்கும் நகையைப் பார்த்தவுடனே என் கணவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று நகை எல்லாம் கொடுத்தேன். அத்தனையும் தொலைத்துவிட்டார் என்று எண்ணுவீர்கள்.

 

தினமும் என் மாமியார் என்னை இப்படிப் பேசுகிறார் மாமனாரும் பேசுகிறார் எல்லாம் கேட்டுவிட்டுக் கணவரும் வெறுத்துப் பேசுகிறார் என்று இதைத் தான் முறையிட்டு கஷ்டங்களைத்தான் ஆலயத்தில் சொல்லுகின்றோம்.

 

அந்தச் சாமி செய்யும் என்று நினைக்கின்றோம். யாராவது அந்த மகரிஷிகள் சொன்ன நிலையை நினைக்கின்றோமா?

 

1.அந்தத் தெய்வீகப் பண்பு என் மாமியாருக்கு வரவேண்டும். என் மாமனாருக்கு வரவேண்டும்.

2.என் கணவருக்கு வர வேண்டும் என் குடும்பத்தில் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

அதே போல மாமியாரும் என் மருமகளுக்கு அருள் ஞானம் பெறவேண்டும். அருள் ஒளி பெறவேண்டும். குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

இப்படி ஒன்று சேர்த்துப் பகைமையை மாற்றி நமக்குள் அந்த நல்ல உணர்வை வளர்ப்பதற்குத் தான் ஆலயத்தைக் கட்டினார்கள் ஞானிகள். ஆலயத்தை நாம் மதிக்கின்றோமா? யாரும் மதிக்கவில்லையே…!

 

ஆகவே விரதம் இருப்பது எது?

 

நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காதபடி வேதனையை எடுத்து விஷ அணுக்களை உடலுக்குள் கொடுத்து நம் நல்ல உணர்வுகளைச் செயலிழக்க வைக்கிறோம்.

 

விரதம் முடிந்து அடுத்து சாப்பிட்டால் சரியாக ஜீரணிக்காது. நல்ல அணுக்களைப் பட்டினி போட்டு அப்புறம் உணவு போட்டால் சரியாக ஜீரணிக்காது.

 

விரதம் இருக்கும் தினத்தில் என்றும் வராத சங்கடம் எல்லாம் வரும். அப்பொழுது நாம் எதை விரதம் இருக்கின்றோம் என்று சற்று யோசனை செய்து பாருங்கள்.

 

1.என் கணவர் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்.

2.என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும்.

3.என் பையன் அருள்ஞானம் பெற வேண்டும். அருள் உணர்வுகள் குழந்தைகள் பெறவேண்டும்.

4.அந்தத் தெய்வீகப் பண்பைப் பெறவேண்டும்.
தங்கத்தைப் போல மனம் மங்காத நிலை பெற வேண்டும்.

5.அந்த வைரத்தைப் போல சொல் ஜொலிக்க வேண்டும்.
செயல் ஜொலிக்க வேண்டும் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று

குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர் இதே போல எண்ணுகின்றீர்கள்.

 

இதை எல்லோரையும் எண்ண வைப்பதற்காகத்தான் அங்கே பொருளைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எண்ணுகின்றோமா? நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

 

தீபாராதனை காட்டும் பொழுது இதே போல பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். இந்தக் கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் இந்த நிலையைப் பெற வேண்டும் என்ற நிலையை எடுக்க வேண்டும்.

 

என் மருமகளுக்கு அந்த நிலை வரவேண்டும். என் மாமியாருக்கு அந்த நிலை வர வேண்டும். என் கணவருக்கு அந்தச் சுவையான சொல்லும் செயலும் வரவேண்டும். தெய்வீகப் பண்பு வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

பக்தி என்றால் அந்தத் தெய்வீக குணங்களை நாம் பக்தி கொண்டு வளர்க்க வேண்டும்.

 

ஆகவே விரதம் என்றால் அது எப்படி இருக்க வேண்டும்?

 

1.காலையிலிருந்து எந்தத் தீமையும் நுகராதபடி

2.வீட்டில் மாமியார் திட்டியதோ மாமனார் திட்டியதோ கணவர் திட்டியதோ பையன் சொன்னபடி கேட்காததோ இதை எல்லாம் விட்டு விட்டு

3.குடும்பத்திலுள்ளோர் அனைவரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் அருள் ஞானம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று

4.மேலே சொன்ன ஒவ்வொன்றையும் நினைக்க வேண்டும்.

 

அன்றைய கஷ்டமான உணர்வுகளை நீக்கி ஞானிகள் சொன்ன இந்த முறைப்படி விரதம் இருந்து பழகிப் பாருங்கள். எந்தத் தீமையையும் நாம் நுகர்வதில்லை. நோயும் வராது பகைமையும் வராது வேதனையும் வராது.

 

இது தான் உண்மையான விரதம்.

நல்லது நடக்கவில்லை என்றால் “என் தலைவிதி…!” என்று ஜாதகம் ஜோசியம் பார்க்கின்றோம் – நல்லது வருகின்றதா…?

horoscopes - astro

நல்லது நடக்கவில்லை என்றால் “என் தலைவிதி…!” என்று ஜாதகம் ஜோசியம் பார்க்கின்றோம் – நல்லது வருகின்றதா…? 

இந்த மனித உணர்வில் உணர்வின் இச்சைதான் வருகின்றதே தவிர மனிதன் என்ற நிலையில் ஆறாவது அறிவான கார்த்திகேயா என்ற நிலையை இழந்தே இருக்கின்றோம்.

அதை மாற்றியமைப்பதற்கு அந்த ஞானிகள் கண்ட உண்மையை மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்று காட்டினார்கள்.

கோயிலுக்குப் போய் நாம் என்ன செய்றோம்.?

வாதாபி கணபதி செல்வ இராஜ கணபதி என்ற நிலையைச் சொல்லி அவருக்கு அர்ச்சனை செய்தால் அபிஷேகம் செய்தால் அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று எண்ணுகிறோம்.

அவர் காப்பாற்றவில்லை என்றால் கடைசியில் என்ன சொல்கிறோம்.

1.எல்லா தெய்வத்திற்கும் நான் அர்ச்சனை செய்தேன் அபிஷேகம் செய்தேன்.
2.ஆனால் “என் தலைவிதி… என்னை விடவில்லை…!” என்பார்கள்
3.இப்படி இந்த விதிக்குத்தான் வருகின்றார்கள்.

ஜாதகம் பார்த்து ஜோசியம் பார்த்துக் கல்யாணத்தைச் செய்வார்கள். நல்ல நேரம் எல்லாம் பார்த்துச் செய்து நன்றாக வருவார்கள்.

கல்யாணாமாகி இங்கே வந்தவுடன் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதற்கு என்ன சொல்வார்கள். “என் தலைவிதி… இப்படி ஆகி விட்டது…!” என்பார்கள்.

ஜோசியமும் ஜாதகமும் எதற்காகப் பார்க்கிறார்கள்…?

1.தலைவிதிப்படி நல்ல நிலையைக் கொடுக்கட்டும்.
3.நல்ல ஒழுக்கங்களைக் கொடுக்கட்டும்.
4.ஞானிகள் உணர்வுகள் வளரட்டும்.
5.நாங்கள் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ வேண்டும்
6.நளாயினி சாவித்திரி போன்று நாங்கள்  வாழ வேண்டும்.
7.எங்கள் அன்னை தந்தை அருள் பெறவேண்டும் என்று
8.காலையில் எழுந்ததும் கணவனும் மனைவியும் இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
9.இந்த ஜாதகம் எப்படித் திரும்புகிறது என்று பார்க்கலாம்.

மாப்பிள்ளை வருவான். பெண் பார்க்கச் சென்றால் செவ்வாய் தோஷம் நாக தோஷம் அந்தத் தோஷம் என்று சொல்லிவிடுவார்கள்.

பெண்ணுக்குச் செவ்வாய் தோஷம். மாப்பிள்ளைக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால் தான் இரண்டும் ஒத்துக் கொள்ளும் என்பார்கள்.

இப்படி ஜாதகம் பார்த்து சாஸ்திரம் பார்த்துச் செய்யும் எத்தனை கல்யாணம் சரியாக இருக்கிறது…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!

அன்னை தந்தையரின் உணர்வின் தன்மையும் அந்த அகஸ்தியனின் உணர்வுகளும் நமக்குள் இருந்தால் “குரு…” என்ற நிலைகள் வருகின்றது.

நஞ்சை வென்று ஒளி நிலை பெற்றவன் அகஸ்தியன்.  அகஸ்தியன் தான் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எண்ணினால்
1.அந்தக் குருவின் பார்வை இருந்தால்
2.வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிவிடலாம்.
3.சாஸ்திர விதிப்படி இதைச் சொல்லி இருந்தாலும் இதை எவரும் பின்பற்றுவதில்லை.
மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலுக்கே தான் ஜாதகம் பார்க்கின்றார்கள்.

சூரியனுக்கு உண்டு ஜாதகம். சனிக்கு உண்டு ஜாதகம். எல்லாக் கோள்களுக்கும் உண்டு. தாவர இனங்களுக்கு உண்டு. மிருகங்களுக்கு உண்டு.

ஆனால் மனிதனுக்கு ஜாதகம் இல்லை. உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றிக் கொள்ளும் நிலை பெற்றவன் மனிதன்.

அப்படி ஒளியாக ஆனவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் வாழ்கின்றார்கள்.

ஜாதக விதிப்படி நாம் என்ன செய்கின்றோம்.  எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ
1.நோய் வரப்படும் பொழுது
2.இன்ன வக்ரமத்தில் இருந்ததால் இந்த மாதிரி வருகிறது என்பார்கள்.
3.ஜாதகப் பிரகாரம் வக்ரபுத்தி வரப்படும் பொழுது பையன் இப்படித் தான் நடந்து கொள்வான் என்பார்கள்.
4.அதன் உணர்வே இங்கே நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

வரும் தீமைகளை நீக்க அந்த ஞானிகள் காட்டிய வழிப்படி அகஸ்தியனின் உணர்வுகளை நாம் எடுத்துக் கொள்ளாமல் தவறைத்தான் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆசை என்று வரும் பொழுது எது வளர்கின்றதோ அதைத்தான் நாம் தேடிக் கொண்டுள்ளோம். ஜோசியரிடம் போகும் பொழுது அதை எண்ணித்தான் கேட்போம்.

அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள்.

உங்களுக்கு அந்தத் தெய்வத்தின் குறை இருக்கிறது. இந்தத் தெய்வத்தின் குறை இருக்கிறது என்று சொல்வார்கள். பரிகாரம் செய்தால் தான் சரியாகும் என்பார்கள்.

சாந்தி செய்வதற்கு இவ்வளவு பணம் செலவாகும் என்பார்கள். செய்ததும் நிவர்த்தியாகின்றது. மறுபடியும் அவர்களைத் தேடிச் செல்லும் பொழுது என்ன சொல்கிறார்கள்?

உங்களுக்கு ஆகாதவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவர்கள் தோஷம் செய்து விட்டார்கள். அந்தத் தோஷத்தையெல்லாம் கழிக்க வேண்டும். அதற்கு இவ்வளவு செலவாகும் என்று காசை வாங்கிக் கொள்வார்கள்.

தோஷம் நீங்குகின்து.

வாழ்க்கையில் வரும் சிக்கல்களை அவர்கள் தோஷம் என்று சொல்லி அதை ஒட்ட வைத்துவிடுகின்றார்கள். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவான பின் நாம் என்ன நினைக்கின்றோம்?

ஜோசியக்காரன் தோஷம் இருக்கின்றது என்று மிகவும் சரியாகச் சொன்னான். தெய்வக் குறை இருக்கிறது என்று அதையும் சொன்னான் இதைத்தான் வளர்க்க முடிகின்றது.

மறுபடியும் அதையெல்லாம் நிவர்த்திப்பதற்காகச் சாந்தி செய்து விடு என்று சொல்கின்றான். இப்படித்தான் சொல்லிக் கொண்டே இருப்போம்

ஆக நல்லது தேடி வருகின்றதா…?

கோயிலுக்குச் சென்றும் நாம் எப்படி வணங்க வேண்டும் என்ற நிலை ஞானிகளால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம்மைச் சுத்தப்படுத்தும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள்.

அந்தத் தத்துவப் பிரகாரம் அன்னை தந்தை அருளை நாங்கள் பெறவேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் இந்த ஆலயம் வருவோர் குடும்பம் எல்லாம் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அடுத்தபடியாக காலையிலிருந்து எத்தனை பேரைச் சந்தித்தோமோ
1.அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று
2.அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்களுக்குள் ஒன்று பட்டு வாழும் தன்மை பெறவேண்டும்.
4.உலக மக்கள் எல்லோருமே அருள் வழி வாழவேண்டும் என்று
5.எல்லோரும் அந்த ஆலயத்தில் சொன்னால் எப்படி இருக்கும்.

எல்லோருடைய பகைமையையும் மறக்கச் செய்கின்றது. இதன் வழி செய்து வந்தால் நாம் தெய்வமாகின்றோம்.

நாம் நல்ல மனம் கொண்டு இருந்தாலும் ஒருவர் நம்மை வேதனைப்படச் செய்தால் வேதனையான உணர்வுகள் வளரப்படும் பொழுது
1.உடலில் நோயாகின்றது.
2.உடலில் நல்ல உறுப்புகளை மாற்றுகின்றது.
3.நல்ல செயல்களைச் செய்யும் அந்தத் தெய்வ குணம் அழிந்து விடுகின்றது.

இந்தத் தெய்வத்தைக் காக்க… “நீ என்ன செய்யப் போகின்றாய்…?” என்று காட்டுவதற்காகத்தான் கோயிலில் நல்ல தெய்வச் சிலைகளை வைத்துள்ளார்கள்.

தெய்வத்திற்கு வைர கிரீடம் தங்க ஆபரணங்கள் மலர் மாலைகள் கனிகள் எல்லாமே போட்டு வைக்கின்றார்கள். இதையெல்லாம் திரையிட்டு மூடி நம்மை எதைப் பெறச் செய்கின்றனர்?

திரையை நீக்கி தீப ஆராதனை காட்டும்பொழுது தெய்வமும் அங்கிருக்கும் அனைத்துப் பொருள்களும் தெரிகின்றது. தெரியும் பொழுது
1.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் எல்லோரும் பொருளறிந்து செயல்படும் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
3.அந்தச் சக்திகளை சுவாசிக்கும்படிச் சொல்கிறார்கள்.

(திடீரென்று) கணவர் ரொம்பத் திட்டுகிறார் என்றால் என் கணவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று மனைவி எண்ண வேண்டும்.

அதே போல் என் மனைவிக்குக் கோபம் வருகிறது. அடிக்கடி என்னிடம் சண்டை போடுகிறது என்று சொல்லுகின்றோம். என் மனைவி பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி எங்கள் இரு மனமும் ஒன்றிட வேண்டும். அந்தப் பேரருளைப் பெறவேண்டும். அந்தத் தெய்வீகப் பண்பை நாங்கள் பெறவேண்டும். இந்த மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறவேண்டும் என்று மனைவி கணவனுக்காகவும் கணவர் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எண்ண வேண்டும்.

இதைப்போல எடுத்து இந்த ஆலயத்திற்கு வருவோருக்கெல்லாம் எடுத்து எண்ணி இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த வினையை எடுக்கும்படிச் செய்கின்றார்கள் ஞானிகள்.

கோயிலில் போய் நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நானும் சொல்கிறேன். நீங்களும் சொல்லுகின்றீர்கள். இது தான் பக்தி என்பது.

ஆலயத்திற்குச் சென்று இந்தத் தெய்வீக தன்மை பெற வேண்டும்.
தெய்வீகப் பண்பை பெற வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடமெல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி படர வேண்டும். என்னிடம் தொழில் செய்கின்றவர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்.

நாங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் நலமாக ஆக வேண்டும். இப்படிச் செய்து வந்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். உங்கள் சொல் செயல் மூச்சு அனைத்தும் புனிதமாகும்.

நாம் யாரிடமும் சென்று ஆலோசனை கேட்கவேண்டியதில்லை. காசு கொடுத்து விலைக்கு வாங்க வேண்டியதில்லை.

நம் எண்ணத்தால் அந்தச் சக்திகளைப் பற்று நமக்கு வரும் தீமைகளை நாமே போக்கிக் கொள்ள முடியும். அதற்குண்டான் இடமாகத்தான் ஆலயத்தைக் கட்டினார்கள் ஞானிகள்.

நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

Happiness

நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..? 

 

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டி அடுத்தவர்களிடம் நமக்குத் தெரிந்த அந்தப் பக்குவங்களை நாம் சொல்வோம். திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது?

இவ்வளவு நல்லது சொல்கிறோம்… எத்தனை தடவை சொல்கிறோம்… “ஆனால் கொஞ்சமாவாது ஏற்றுக் கொள்கின்றார்களா…,?” இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தானா..? என்று நாம் கேட்கின்றோம்.

1.சகஜ வாழ்க்கையில் அடிக்கடி அதைத்தான் பேசுவோம்
2.இப்படித்தான் கேட்போம். இல்லையா…!
3.நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்…? அதைக் கேட்பதே இல்லை…! என்று இப்படித்தான் சொல்வோம்.

ஆனால் அவர்கள் சங்கடமாக இருக்கும் பொழுது “நல்லது சொன்னால்…” எப்படி எடுத்துக் கொள்வார்கள்…!

“அட போய்யா…,” தொழில் போய்விட்டது எல்லாம் போய்விட்டது காசெல்லாம் போய்விட்டது. ஏதோ இருந்தோம்… சாப்பிட்டோம்… போனோம்… நாளைக்கு என்னமோ ஆகிறது “எல்லாம் போய்விட்டது… விடு போ…,!” என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

அப்படி வெறுப்பாக இருப்பவரிடம் போய் நீங்கள் என்ன பக்குவம் சொன்னாலும் அது என்ன செய்யும்?

காது கேட்காதவர்களிடம் போய்ப் பேசினால் எப்படி இருக்கும்? என்ன செய்வார்கள்? ஒரு உணர்வைக் கிரகிப்பதற்காக வேண்டி அந்த விஷயத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள்?

அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தச் சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். “அந்தப் பயிற்சியை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல்கள் வரும்போது அதற்குக் காரணமாவர்களைப் பார்த்ததும் பெரும்பகுதியானவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும். அந்த மாதிரிக் கோபம் வரப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று வலுவான நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி அவர்களும் பெற்று சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும். உண்மையை உணர்ந்து தெளிவான நிலைகளில் அவர்கள் செயல்பட வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.நம்மைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உணர்வு மாறும்.
2.அந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும்.

அதே மாதிரித் தொழிலில் செயல்படுத்தும் பொழுது இதே போல் செய்து நல்ல எண்ணங்களை வர வைக்க வேண்டும். அப்பொழுது அந்தப் பக்குவ நிலைகளை நாம் சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்.
1.உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
2.உன் வாழ்க்கையில் எதிர்காலம் சிறந்திருக்கும் என்று
3.கட்டாயமாக இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அருள் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். எல்லாம் கேட்கின்றார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்படி ஆகிவிட்டது.

அப்பொழுது நாம் அதை எண்ணத்தில் எண்ணாது சரி அடுத்து நல்லதாக வேண்டும் என்று எண்ணக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும்.

வாழ்க்கையில் எதைத் தேடி வருகின்றோம்? நிம்மதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால் அதற்குண்டான பொறுமையும் பக்குவமும் நமக்கு வேண்டும். அத்தகையை பரிபக்குவ நிலைகளைப் பெறவேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.அவர்கள் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.

சில நேரங்களில் தோல்வி அடைந்தாலும் அதைக் கண்டு துவண்டு விடாது “எது நம்மை மாற்றியது…?” என்று சிறிது நேரம் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் பால் நினைவினைச் செலுத்தினால் அதற்குத்தக்க உபயாம வரும்.

எப்படிச் செயல்பட வேண்டும்…? எப்படிச் சொல்ல வேண்டும்…? என்று உங்களுக்குள் அந்தப் பரிபக்குவ நிலை தெரியும்.

இதைப் பழகிக் கொண்டால் நாம் போக வேண்டிய பாதை “தன்னாலே” தெரியும்.

“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

Eswara Guru Devar

“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். மிருகமாக இருக்கும் பொழுது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டிருப்போம்.

அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துத்தான் நாம் மனிதனாக வந்து இருக்கின்றோம். அது எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க கண்கள் நமக்கு வழிகாட்டியது.

அதே உணர்வின் தன்மை கொண்டு மனிதனான பின் வரும் தீமைகளிலிருந்து விடுபட கண்ணன் காட்டியது நாரதனை…! (ரிஷியின் மகன் நாரதன்)

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வு தான் நாரதன். அந்த ரிஷியின் தன்மை நமக்குள் எடுக்க வேண்டும். தசமி – அதாவது நாம் பத்தாவது நிலை அடைய வேண்டும்.

இந்த உடலை விட்டுப் போனோம் என்றால் எங்கே போக வேண்டும்? சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

பல தடவை இதைச் சொல்கின்றோம். “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை நினையுங்கள். அந்தச் சக்தி எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.

கண்களைத் திறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை எண்ணுங்கள். மகரிஷிகளின் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கின்றது.

நீங்கள் எண்ணியவுடனே இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேருகின்றது. இவ்வாறு எண்ணிய பிற்பாடு கண்களை மூடி மூடித் திறங்கள்.

கண்களைத் திறந்த பிற்பாடு என்ன செய்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் “கஷ்டம்…!” என்று சொல்வதை விட்டுவிடுங்கள்.

வார்த்தையில் கஷ்டம் என்பதை நீக்கி விட்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பத்தில் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெற வேண்டும்
5.மகரிஷிகள் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்.
7.ஒற்றுமையாக நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை இப்படி எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

சாமியார் செய்து தருகிறேன் என்று சொன்னார் என்றால் அவரை நம்புவீர்கள். நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும் என்று தான் நான் சொல்கிறேன்.

சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. என் பிள்ளை சொன்ன படி கேட்க மாட்டேன் என்கிறது.

1.என்னிடம் வந்து கேட்கிறார்கள்.
2.உங்கள் உயிரிடம் நீங்கள் சொல்லிக் கேளுங்கள்.
3.அந்த மகரிஷிகள் உணர்வலைகள் இங்கே இருக்கின்றது என்று சொன்னால்
4.அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
5.”உயிரிடம் எப்படிக் கேட்கிறது …!” என்கிறார்கள்.

என்னை (ஞானகுரு) நம்பத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரித் தான் போகின்றார்கள்.

எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அவர்களிடம் அங்கே போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நான் இங்கே பெறுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணுகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

கீதையிலே   நீ   எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.

1.மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் நீங்கள் காண வேண்டும்.
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
6.நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும்.
7.நீங்கள் சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டும்
8.நீங்கள் விடும் மகிழ்ச்சியான மூச்செல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர வேண்டும்
9.அதை எண்ணுகின்றவர்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.

அதே மாதிரி நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றவர்களை எண்ணி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்  என்று எண்ணிவிட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.எங்களுக்குள் சகோதர உணர்வு வளர வேண்டும்.
3.எங்கள் அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும்.
4.எங்கள் மூதாதையருடைய அருளாசி கிடைக்க வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.எங்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
7.எங்களைப் பாரக்கின்றவர்கள் எல்லோருக்கும் நல்ல மனம் வர வேண்டும் என்று
8.இதையெல்லாம் உங்கள் உயிரிடம் கேளுங்கள்
9.அவன் படைத்து உங்களுக்குக் கொடுப்பான் என்று சொல்கின்றேன்.

இந்தப் பழக்கத்திற்கு நீங்களெல்லாம் வர வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்.

என்னை நீங்கள் நம்புகின்றீர்கள். சாமியிடம் என்னமோ… “பெரிய சக்தி…” இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
1.உங்கள் உயிருக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று
2.நீங்கள் உங்கள் உயிரை எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிரிடம் கேட்டு அதை எண்ணி எடுப்பதற்காகத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞானிகள் பெற்ற நிலையை உங்களிடம் உபதேசிக்கின்றேன். இந்த மாதிரிக் கொஞ்ச நாள் செய்து பாருங்கள்.

உங்களுக்குள் வரும் தீமையைத் துடைக்க இது உதவும். உங்கள் மூச்சு நாட்டில் வரக்கூடிய தீமைகளை நீக்க உதவும்.

தீமையைத் துடைக்கக்கூடிய மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே காற்றிலே படரப்போகும் போது எல்லோருக்கும் இது கிடைக்கின்றது. இந்தப் பரமாத்வே சுத்தமாகின்றது.

உங்கள் உயிரான ஈசனிடம் கேட்டுப் பாருங்கள்…!

அருளைத் தேடினால் பைத்தியம்… பிழைக்கத் தெரியாதவன்… வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்…!

Maharishikaludan Paesungal

அருளைத் தேடினால் பைத்தியம்… பிழைக்கத் தெரியாதவன்… வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவன் என்கிறார்கள்…! 

பிறருடைய தீமைகளின் நிலைகளை நாம் காது கொடுத்துச் சிரத்தையாக என்ன ஏது…? என்று கேட்காது விட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…!” என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள்.

எதாவது ஒரு பொருளை “சரி…” என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்..,” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.. இது…!” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

அவன் கோபப்பட்டுத் திட்டும்போது நாம் அதைக் காது கொடுத்துக் கேட்காது சென்றால் “பைத்தியம்” என்று நம்மைச் சொல்வார்கள்.

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை, அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

1.ஒருவரைச் சரி இல்லை…, என்று கேட்டவுடனே
2.அவனை உதைத்தோம்…! என்றால் அப்பொழுது “மனிதன்…!” என்று சொல்வார்கள்.

இந்தத் தியான வழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள். அடுத்தவர்கள்.., ஏதாவது சொன்னாலும் பாருங்கள், இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான்…! என்று சொல்லிவிட்டு
1.சூடு சுரணை எதுவும் இல்லை,
2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.
3.ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை.

தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.

ஆக அருளைத் தேடினால் “பைத்தியம்…” என்கிறார்கள். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியம் போன்று இருந்துதான் பேரண்டத்தின் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்.

அகஸ்திய மாமகரிஷிகளின் மூச்சலைகளை நாம் நுகர்ந்து நஞ்சை அகற்றுவோம் – உலகைக் காப்போம்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் “அணுவின் ஆற்றலை” அறியும் நிலை வந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

அவன் வாழ்ந்து வளர்ந்து சுழன்று வந்த இந்த இடத்தில் அகஸ்தியரின் மூச்சலைகள் இங்கே அதிகமாகப் பரவியுள்ளது. அவன் தாய் கருவிலே பெற்ற உணர்வின் தன்மை கொண்டு தாவர இனச் சத்தை அறியும் மலைப்பகுதியிலே சுற்றி வளர்ந்தான்.

1.பல கோடித் தாவர இனங்களை நுகர்ந்தான்.
2.தீமைகளை வென்றிடும் அருள் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்தான்.
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் நிலைத்து நிற்கும் நிலையும்
4.இருளை வென்றிடும் உணர்வின் தன்மை தன் உடலில் வளர்த்துக் கொண்டான்.

ஆகவே அவனுடைய நினைவாற்றலை நாம் கொண்டு வரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது
1.உங்கள் கண்ணின் நினைவலைகள் அந்த அகஸ்திமாமகரிஷியின் பால் செல்லும்.
2.அந்த உணர்வினை நுகரும் ஆற்றலை நாம் பெறுகின்றோம்.
3.நுகர்ந்த உணர்வுகள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.
4.இரத்தத்தின் கலந்த அகஸ்தியனின் உணர்வுகள் நமக்குள் கரு முட்டைகளாக விளையத் தொடங்கும்.

அந்த உணர்வின் தன்மையை எவ்வளவு நேரம் நீடித்து எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் கருவாக உருவாகும் தன்மைகள் உருப்பெறும்.

நமது குருநாதர் இப்படித்தான் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அலையச் செய்து ஒவ்வொரு நிமிடத்திலும் அகஸ்தியனைப் பற்றிய உணர்ச்சிகளை ஊட்டினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் ஆற்றலை நாம் பெறுவோம்.

அகஸ்தியரின் உணர்வைப் பரப்பி இந்த உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றுவோம்.

உலகில் எந்த மூலையில் யார் இருப்பினும் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும் அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

1.நம்மைக் காத்து
2.நம் குடும்பத்தைக் காத்து
3.எல்லோரையும் காத்திட வேண்டும்.
4.நம் நாட்டையும் இந்த உலகையும் காக்க வேண்டும்.
5.மனித இனத்தைக் காக்கும் உணர்வுகளை நமக்குள் விளையச் செய்வோம்.

மனிதன் என்ற உணர்வுகள் நாம் ஒன்று சேர்த்து இணைத்தால் தான் ”மரணமில்லாப் பெரு வாழ்வு” என்ற நிலைகளில் வாழ முடியும்.

“யாமிருக்க பயமேன்…!” என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சொல்கிறது – அதன்படி வணங்குகிறோமா…?

Image

Murugu - Karthi

“யாமிருக்க பயமேன்…!” என்று ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் சொல்கிறது – அதன்படி வணங்குகிறோமா…?

 

 

ஆலயத்தின் பண்புகளைப் பற்றி அந்த ஞானிகள் எல்லா வகையிலும் சொல்லியிருக்கின்றார்கள்.

 

இப்பொழுது தற்காலத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்னாடி வியாசக பகவான் சொன்னது சாஸ்திரங்களில் சட்டங்களாக இருக்கின்றது. தெளிவாக இருக்கின்றது.

 

ஆனால் இப்போது என்ன செய்கிறார்கள்?

 

துவைதம் – வேள்விகளைச் செய்து சாமிக்கு நெய்வேத்யம் செய்து எல்லா அபிஷேகமும் ஆராதனையும் செய்து விட்டால் சாமி பார்த்துக் கொள்ளும் என்று தான் எண்ணிக் கொள்கின்றார்கள்.

 

1.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் எல்லாவற்றையும்

2.நம் உயிரான ஈசனுக்குள் (புருவ மத்தியில்)இதற்குள்ளே போட்டோம் என்றால்

3.இவன் பார்ப்பான் என்று நினைக்கவே மாட்டேன் என்கிறார்கள்.

 

அங்கே வெளியிலே தான் பார்க்கின்றோமே தவிர நம் உயிருக்குள் உயிராக இருந்து நம் உயர்ந்த எண்ணங்கள் எடுத்து இங்கே அபிஷேகிக்கப் போகும் போது நம் உயிர் உருவாக்கிக் கொடுப்பான் என்று எண்ணவில்லை.

 

அருள் ஞானிகளின் உணர்வெல்லாம் எடுத்து நமக்குள் சொத்தாகச் சேர்த்து

1.நல்ல குணங்களுக்கு அதை அமுதாகக் கொடு

2.உடலான சிவனுக்கும் அமுதாகக் கொடு

3.தெய்வத்தைப் பார்க்கும்போது இந்த நினைவினை நீ இப்படி எடு என்று தான் ஞானிகள் சொன்னார்கள்.

 

கோயிலுக்குப் போனால் இன்றும் நாம் என்ன செய்கின்றோம்?

 

அந்தக் கல்லைக் கடவுளாக்கி விட்டோம். நம் மனதைக் கல்லாக்கி விட்டோம். நம் மனதைக் கல்லாக்கி விட்டுச் சிலையைக் கடவுளாக்கிக் கொண்டு அதைத் தான் நாம் தெய்வமாக்கி வைத்திருக்கின்றோம்.

 

கோவிலுக்குள் போகும் பொழுது ஓ…ம் போட்டு இருப்பதனால் ஓ…ம் முருகா என்று சொல்லி விட்டு கை எடுத்துக் கும்பிடுகின்றோம். அதோடு சரி.

 

1.நீ ஓ…ம் ஓ…ம் என்று சொல்லி கொண்டே இரு.

2.அவன் எல்லாவற்றுக்கும் உனக்குள் ஜீவன் ஆகின்றான் என்கிறான்.

3.ஓ..ம் என்று சொல்லி ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லு

4.உனக்கு அபாயம் இல்லை சொல்லி விடுகின்றார்கள்.

 

இப்படி ஒரு மந்திரம்.

 

ஓ..ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே வந்தாய் என்றால் எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான் என்கின்றனர்.

 

ஓ…ம் நமச்சிவாய என்றால் என்ன?

 

நாம் எதை எண்ணுகின்றமோ ஓ…ம் (நமதாக) நமச்சிவாய நாம் எண்ணுகின்ற குணமெல்லாம் நமக்குள் சிவமாக உடலாக மாறி விடுகின்றது. ஓ…ம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டிருந்தால் அபாயம் ஒன்றும் இல்லை என்றால் அது எப்படி வரும்?

 

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் என்கின்ற போது

1.நம் உயிர் “ஓ… ம்…” – ஓ…ம் நமச்சிவாய

(உயிரிலே பட்டவுடன் மகரிஷிகளின் உணர்வுகள் ஜீவனாகின்றது)

2.அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அபாயம் இல்லாமல் அவைகளைக் காப்பாற்றும்.

3.எது…? – நம் உயிர்.

 

இங்கே விநாயகரைக் கும்பிடாமல் நீ கோயிலுக்குப் போனால் பலன் எதுவும் இல்லை. முருகன் (ஆறாவது அறிவு கொண்டு) கெட்டதை நீக்கினான் என்று இருக்கின்றது.

 

விநாயகன் என்ன செய்கின்றான்?

 

ஏனென்றால் இந்த உண்மையைக் காட்டியவன் அந்த மகரிஷி. அந்த மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற அந்த நல் வினையைச் சேர்த்துக் கொண்டவன் அவன்.

 

அதே மணத்தின் தன்மை கணங்களுக்கு அதிபதியாக்கிக் கொண்டவன் மகரிஷி.

1.மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.

2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணி

3.அதை நம் கணங்களுக்கு அதிபதியாக்கி இந்த நிலைகளில் செயல்படுத்த வேண்டும் என்று சொல்வது.

4.இது நரசிம்ம அவதாரம்.

 

இப்படி எண்ணும் போது மகரிஷிகள் அருள் சக்தி நம் உயிரிலே மோதும்போது ஓ…ம் அப்போது அந்த ஞானியின் உணர்வுகள் நமக்குள் ஜீவனாகின்றது.

 

நல்ல குணம் கொண்ட நாம் ஒருவர் கஷ்டப்பட்டார் என்றால் அதைக் கேட்டறிந்து உதவியும் செய்கின்றோம். ஆனால் கஷ்டமான உணர்வுகள். எனக்குள் சேர்ந்து விட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

 

அந்த ஞானியின் சக்தி எடுத்துத்தான் அதைத் துடைக்க வேண்டும் அதைக் காட்டுவதற்குத்தான் விநாயகனைக் காட்டுகின்றார்கள்.

 

ஞானியின் உணர்வை வினைக்கு நாயகனாக்கி வாழ்க்கையில் முன்னாடி கேட்டறிந்த நஞ்சான உணர்வுகளைத் துடைக்க வேண்டும்.

 

1.நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில்

2.உனக்குள் உன்னைக் காப்பாற்றிய நல்ல தெய்வம் இந்த ஆறாவது அறிவு என்கின்ற நிலையில்

3.நீ பக்குவப்படுத்திப் பார்…!” என்று ஞானிகள் தெளிவாகவே காட்டியுள்ளார்கள்.

 

நல்ல குணத்துடன் இருக்கின்றோம். கஷ்டப்படுகின்றவர்களைப் பற்றி கேட்டறிகின்றோம். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்பட்டது ஆறாவது அறிவில் இங்கே வந்து சேர்ந்து கொள்கின்றது.

 

அப்பொழுது இதைச் சேர்த்தால் வேதனையான எண்ணம்தான் வருகின்றது. வேதனைப்படும்போது யார் காப்பாற்றுவது? இந்த ஆறாவது அறிவில் கலந்ததைச் சுத்தப்படுத்துவது யார்?

 

ஓ…ம் முருகா – பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள். முருகனைப் பார்க்கப்படும் போது எதை எண்ண வேண்டும்?

 

இந்த உண்மையை உணர்த்திய

1.மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்.

2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று

3.இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தன்னைக் காத்திடும் நிலையாகத் துடைக்க வேண்டும்.

 

இப்படி எண்ணினோம் என்றால் ஓ…ம் நமச்சிவாய. இந்த ஆறாவது அறிவின் தன்மை நமக்குள் அதைப் வலுப்படுத்தும் சக்தியாக தீமைகள் நம் உடலுக்குள் உருவாகாதபடி பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்று செயல்படுகின்றது.

 

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகள் விளையாது அந்த ஞானியின் உணர்வை நமக்குள் விளையச் செய்ய வேண்டும் என்று அதைச் சொல்லியிருக்கின்றான்.

 

யாராவது இப்படிச் செய்கின்றோமா?

 

ஓ..ம் முருகா ஓ…ம் முருகா ஓ…ம் முருகா என்று சொல்லிக் கொண்டு நான் அந்த முருகனைத்தான் வணங்குவேன். வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்பார்கள். ஆனால் அந்த முருகன் யார் என்று கேட்டால் தெரியாது…!

 

ஓ…ம் முருகா என்று சொன்னால் நான் இருக்கின்றேன்.. உனக்கேன் பயம்…? யாம் இருக்க உனக்கேன் பயம் என்று முருகன் சொல்கிறார் என்று காட்டுகிறார்கள்.

 

1.இந்த ஆறாவது அறிவு தான் – யாம் இருக்க உனக்கேன் பயம்.

2.இந்த ஆறாவது அறிவு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லி இருக்கின்றார்கள்.

 

(சூட்சமம் – கண்ணுக்குப் புலப்படாதது; துவைதம் – கண்ணுக்குப் புலப்படக்கூடியது)

 

ஏனெனில் சூட்சமத்தில் நடப்பதைத் துவைதமாக்கி அந்த உணர்வில் ஆறாவது அறிவு மறைந்திருக்கின்றது.

1.இதை நினைவு கொண்டு இது பிரணவம் – ஜீவனாக்கு

2.அந்த உணர்வின் தன்மையை உன் உடலில் சிவமாக்கு.

3.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உன் உணர்வின் தன்மை ஒளியாக்கு – கார்த்திகேயா…!

4.கார்த்திகேயா என்றால் வெளிச்சம்.

5.கெட்டதை நீக்கி நீ இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று

6.ஞானிகள் சாதாரண பாமரனுக்கும் புரியும்படி தெரியப்படுத்துகின்றர்கள்.

 

முருகா..! அழகா…! “முருகு…” என்றால் மாற்றி அமைக்கும் திறன் கொண்டது.

 

சிலையாக அந்தச் சூட்சமத்தில் இருப்பதை நாம் காண முடியவில்லை. சிலையாக வடித்து அந்தத் தெய்வம் எதைச் செய்ததோ அந்த நிலைகள் நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஓ…ம் நமச்சிவாய இதை உடலாக ஆக்க வேண்டும்.

 

தூல காரணம் துவைதம். சூட்சம காரணம் அத்வைதம். தூலத்திற்குள் அணுவின் இயக்கம் விசிஷ்டாத்வைதம். (தூலம் – உடல்; பொருள்)

 

“நீ தெய்வமாக ஆகு…! என்பதையே சிலை வடிவில் உருவ நிலையில்  வைத்துத் துவைத நிலைகளில் மெய் உணர்வை ஆலயங்கள் மூலமாக உணர்த்தினர் ஞானிகள்.

உயிரின் ஆற்றலைப் பெற்று ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க வேண்டும் – “காயத்ரி”

Image

gayatri-wallpaper

உயிரின் ஆற்றலைப் பெற்று ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க வேண்டும் – “காயத்ரி”

 

ஒவ்வொரு உயிரும் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு உணர்வின் சத்தையும் தன் உடலுக்குள் சேர்க்கப்பட்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் அடுத்த உடலின் அமைப்பே உருவாகின்றது.

 

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ கோடி நிலைகளில் தாவர இனங்களையும் உயிரினங்களையும் உட்கொண்டு அந்த உடலுக்கொப்ப எண்ணத்தின் நிலையும் தான் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்பத் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நிலையும் வந்தது.

 

ஒவ்வொரு சரீரத்திலும் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்று தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வைச் சுவாசித்து சுவாசித்து அதை வினையாக்கிக் கொள்கின்றது.

 

வினைகளாகக் கவர்ந்தது அனைத்தும் உடல்களில் அணுக்களாக விளைகின்றது. விளைந்த உணர்வின் சத்தை வடித்துத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்கின்றது.

 

உயிரின் ஈர்ப்பில் சேர்வது உயிராத்மா.

 

நமக்கு முன் காற்று மண்டலமாகத் தெரிவது அனைத்தும் பரமாத்மா. பரமான இந்த எல்லைக்குள் பரந்து கிடக்கும் இந்தச் சக்தியிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். புறத்தில் இருப்பது பரமாத்மா.

 

நாம் எதையெல்லாம் நினைக்கின்றோமோ அந்த உணர்வின் சக்தி பரமாத்மாவில் இருந்து ஈர்க்கும் பொழுது நம் உடலின் அருகில் வருகின்றது. அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் (நம் காற்று மண்டலம்) வரும் பொழுது ஆத்மா.

 

சுவாசித்த பின் உயிரிலே மோதி உமிழ்நீராக மாறி நம் இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைந்த பின் அது ஜீவாத்மாவாகின்றது.

 

இயற்கையில் மனிதன் எண்ணும் எண்ணத்திற்குள் எவ்வளவு பெரிய ஆற்றல் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

 

ஒவ்வொரு நொடியிலும் நாம் எதையெல்லாம் நினைவு படுத்துகின்றோமோ அதைக் காற்றிலிருந்து சுவாசிக்க நேருகின்றது. சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படும் பொழுது

1.பொறிகளாக இயக்குகின்றது.

2.சொல்லாகச் செயலாக இயங்கச் செய்கின்றது.

3.உடலாக மாற்றிக் கொண்டயுள்ளது.

 

 

உடலில் விளைந்தது அனைத்தும் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது உயிராத்மாவாகின்றது. அது தான் காயத்ரி.

1.அப்பொழுது முழுமையான நிலைகளைப் பெறுகின்றது.

2.அதாவது சிருஷ்டிக்கும் தன்மை.

3.விளைந்த நிலைகளுக்கொப்ப அடுத்து உரு பெறும் சக்தி பெறுகின்றது. காயத்ரி.

 

ஏனென்றால் உயிரணுவிற்குள் உயிர் சூரியனாக இயங்குகின்றது. சூரியன் இந்தப் பிரபஞ்சத்தையே சிருஷ்டிக்கின்றது. அது போல் நம் உயிர் சூரியனாக இருந்து நாம் சுவாசிப்பதை எல்லாம் சிருஷ்டிக்கின்றது.

 

இதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளி வரும் பேரருள் பேரொளி உணர்வுகள் நம் பூமியின் துருவப் பகுதி வழியாக வந்து கொண்டேயிருக்கின்றது.

 

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் அலைகளாகப் பரவச் செய்து கொண்டிருக்கின்றது. துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த உணர்வலைகளை நம் உயிர் வழியாகச் சுவாசித்து உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.

 

மனிதன் என்ற முழுமையடைந்து அடுத்துப் பிறவியில்லா நிலையான அழியா ஒளியின் சரீரம் அடைய வேண்டும்.

 

1.சூரியன் உலகைச் சிருஷ்டிக்கின்றது.

2.உயிர் உடலைச் சிருஷ்டிக்கின்றது.

3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகிவிட்டால் ஒளியான உலகை நாம் சிருஷ்டிக்க முடியும்.

4.இது தான் காயத்ரி.

 

அந்த நிலையை அடைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

ஐயப்பன் கோவில் காட்டுக்குள் இருந்தாலும் மிருகங்களைப் பற்றி  யாரும் எண்ணுவதில்லை – “தவயோகிகள் காட்டிற்குள் தவமிருந்தார்கள்…” ஏன்?

Image

Lord Ayyapa with tiger

ஐயப்பன் கோவில் காட்டுக்குள் இருந்தாலும் மிருகங்களைப் பற்றி  யாரும் எண்ணுவதில்லை – “தவயோகிகள் காட்டிற்குள் தவமிருந்தார்கள்…” ஏன்?

 

 

தவயோகிகள் அனைவரும் காட்டுக்குள் சென்று தான் தவம் செய்தார்கள். அதனால் காட்டிற்குள் போய்த் தவமிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

காடு எங்கே இருக்கின்றது…? அதில் தவம் என்பது என்ன…?

 

நம்மிடம் பல காடுகள் இருக்கின்றது ஆனால் இது யாருக்கும் தெரியவில்லை. காட்டிற்குள்ளே என்றால் இந்த உடலான காட்டிற்குள் போய்த்தான் எல்லா எண்ணங்களையும் எண்ணுகின்றோம்.

 

இந்த மனித உடல் எப்படி உருவானது?

 

காட்டில் இருக்கின்ற தாவர இனங்கள் எல்லாம் புழுக்களாகப் பூச்சிகளாக ஆடாக மாடாக இருந்து எல்லாம் தின்று விட்டு அதில் விளைந்த அத்தனை குணங்களும் உணர்வுகளும் நம் உடலில் காடாக இருக்கின்றது.

 

உடலான இந்தக் காட்டிற்குள்ளே புலி இருக்கின்றது பாம்பு இருக்கின்றது தேளும் இருக்கிறது நரியும் இருக்கிறது நாயும் இருக்கிறது எல்லா நிலையும் இருக்கின்றது.

 

அது மட்டுமா?

 

ஆக்ரோஷமான நிலைகளில் ஒருவனை அழித்து விடுவேன்… கொலை செய்து விடுவேன்…! இந்த உணர்வுகள் உடலில் சேர்த்துப் பேயாகவும் இருக்கிறது பிசாசாகவும் இருக்கிறது பூதமாகவும் நமக்குள் இருக்கின்றது.

 

பேய் என்றால் எப்படி வருகிறது? நாம் ரோட்டில் போய்க் கொண்டே இருப்போம். ஒரு மனிதன் ரோட்டில் அடிபட்டுப் போனால் “ஆ… இப்படி ஆகிவிட்டதே…!” என்கின்றோம்.

 

அவன் ஆசையில் இறந்திருப்பான். அதே ஆசையில் “என்ன ஆனதோ..!” என்று நாம் நினைக்கும் போது அந்த ஆத்மா நம்மிடம் வந்து விடுகின்றது.

 

இந்த உடலான காட்டில் பேய் குடி கொண்டு விடுகின்றது. நம்மை இல்லாதபடி செய்து உடலுக்குள் ஆட்டிப் படைக்கின்றது.

 

காடு எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்றோம். காட்டில் இருக்கும் சக்தி முழுவதும் நம்மிடம் (உடலுக்குள்) இங்கேயே இருக்கின்றது. நம் உடல் இது ஒரு பெரிய காடு.

 

அதைக் காட்டுவதற்குத்தான் ஐயப்பன் கோயிலைக் காட்டியது. அந்தக் காட்டிற்குள் போகும் போது புலியையும் சிங்கத்தையும் யானையும் யாரும் நினைக்கின்றது இல்லை.

 

அங்கே மிருகங்களை எப்படி எண்ணுவதில்லையோ அதே மாதிரி உன் வாழ்க்கையில் மற்றவர்கள் திட்டியது பேசினவர்களை எல்லாம் விட்டு விடு.

 

உன் உடலுக்குள் இந்த மிருகங்கள் எல்லாம் இருக்கின்றது. அந்த மிருகமான உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதபடி ஞானிகளுடைய நிலைகள் நீ  எண்ணு. நீ இப்படிப் போ…! என்று காண்பிக்கின்றார்கள். இதை யாரும் சொல்வதற்கு இல்லை.

 

ஆனால் தீமைகளை ஜீவன் பெற விட்டு விட்டோம் என்றால் நம் நல்ல குணங்கள் எல்லாம் பம்மி ஒடுங்குகின்றது. அப்பொழுது நல்லதை செய்வதற்கே முடியவில்லை…. என்ன செய்வது…? என்று

1.வேதனையை அதிகமாகக் கூட்டிவிடுகின்றீர்கள்.

2.உடலான காட்டில் தேளும் பாம்பும் ஜீவன் பெறுகின்றது.

3.அதைக் கண்டு நாம் பயந்து நடுங்குகின்றோம்.

 

இவ்வாறு ஆன பின் இந்த உயிராத்மா அது தாங்காதபடி என்ன செய்கின்றது? இந்த மனித  உடலை விட்டே ஓடிப் போய்விடுகின்றது.

 

நான் சாகிறேன். என்ன விடுடா… நான் போகிறேன்…! என்று உயிர் வெளியில் போய்விடுகின்றது.

 

ஏனென்றால் விஷத்தைக் கொஞ்சம் அதிகமாக நினைத்தாய் அல்லவா. அதை நீ இதிலிருந்து பார் என்று அதற்குத்தக்க உடலைக் கொடுக்கின்றது.

 

1.பயந்து நடுங்கிய இந்த உணர்வுகளுக்குத் தக்க

2.இந்த விஷத்தின் தன்மை கொண்டு உயிர் அடுத்த உடலை உண்டாக்குகின்றது.

3.நாம் எங்கே தப்பிப் போக முடிகின்றது? எதிலே தப்புகின்றோம்?

 

அம்மா அப்பா எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கின்றார்கள். அம்மா அப்பாவை நாம் மதிக்காமல் இருந்தோம் என்றால் அந்த கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை நாம் என்ன செய்கின்றோம்?

 

நமக்கு எல்லா வசதிகளும் இருக்கிறது என்றால் அவை எல்லாம் அம்மா அப்பா கஷ்டப்பட்டுச் சம்பாதித்தது என்ற நினைப்பே வருவது இல்லை.

 

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்தவுடனே என்ன சொல்வார்? அட.. உனக்கென்னப்பா சீமான் வீட்டுப்பிள்ளை…!” என்று சொன்னால் நமக்கு மிகுந்த கௌரவம் வந்து விடுகிறது.

 

காசுக்காக வேண்டித்தான் நம்மை இப்படிப் புகழ் பாடுகின்றார்கள். புகழ் பாடப் போகும் போது அதை ரசித்துக் கேட்டுக் கொள்கின்றோம்.

 

வீட்டில் அப்பாவோ அம்மாவோ…! ஏனப்பா… பணத்தைக் கொஞ்சம் பார்த்துச் செலவழித்துக் கொள்ளப்பா..! என்று சொல்வார்கள்.

 

அதைக் கேட்ட பின் பையன் என்ன சொல்வான்?

 

உங்களுக்கு எப்போது பார்த்தாலும் நச்… நச்… என்று இப்படிச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். இது தான் உங்கள் பிழைப்பு… “போங்கள்…!” என்று இப்படிச் சொல்லச் சொல்கின்றது.

 

ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வு அவர்களுடைய ஆசை நம்மிடமிருந்து காசைப் பறிக்க வேண்டும் என்று புகழ்ந்து பேசி எப்படியோ பையனிடமிருந்து வாங்கி விட்டு போய் விடுகின்றார்கள்.

 

ஆனால் அவர்கள் விஷத் தன்மையை இங்கே (பையனுக்குள்) விட்டு விடுகின்றார்கள். அதனால் பையன் குடும்பத்துடன் இணைந்து அம்மா அப்பா சொல்லும் உண்மையை உணர விடாமல் போய்விடுகின்றது.

 

இந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?

 

காட்டிற்குள்ளே மிருகத்திடம் சிக்க வைத்த மாதிரி நாம் இந்த உடலில் அந்தக் காடான நிலையில் மிருகத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கின்றோம்.

 

ஆகவே நமக்குள்  காடும் இருக்கின்றது வனமும் இருக்கின்றது நல்ல பூஞ்சோலையும் இருக்கின்றது,

 

தாவர இனத்திலிருந்து வந்த பூஞ்சோலையின் உணர்வுகள் நாம் நுகர்ந்தது நல்ல எண்ணங்களாக வருவதும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றது.

 

இந்தக் காட்டிற்குள்ளே தான் அந்தத் தவத்தை எடுக்கச் சொல்கின்றோம்.

 

யாரை..? எதை…?

 

காட்டுக்குள் இருக்கக்கூடிய இந்த மிருகங்கள் தேள்கள் பாம்புகள் பேய்கள் நம்மை ஒன்றும் செய்யாதபடி அந்த மகரிஷியின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடத்திலேயும் அந்த மகரிஷிகள் உணர்வை எடுத்து

1.எங்கள் பார்வை நல்லதாக இருக்கவேண்டும்.

2.அருள் வழியில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

3.அப்பொழுது நம் உணர்வுகள் ஒளியாகின்றது.

 

இது வளர வளர நம்மிடம் இருக்கக்கூடிய பிறருடைய துன்பமான நிலைகள் அந்த மிருக உணர்வு கொண்ட நிலைகளை இயக்காதபடி அதைச் செயலிழக்கச் செயதுவிடுகின்றோம்.

தாய் தந்தையர் முன்னோர்கள் குலதெய்வங்கள் உயிராத்மாக்களை “விண் செலுத்த வேண்டியதன் அவசியம்”

Image

தாய் தந்தையர் முன்னோர்கள் குலதெய்வங்கள் உயிராத்மாக்களை “விண் செலுத்த வேண்டியதன் அவசியம்”

 

 

ஒரு சிலர் குடும்பத்தில் அவர்கள் தாய் தந்தையரின் கடைகிக் காலங்களில் சரியாகக் கவனிக்காது விட்டுவிடுகின்றார்கள். பின்னாடி அவர்களும் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

 

என்ன காரணம்?

 

தாய் தந்தையைப் பற்றி நினைவு கொள்ளாமல் விட்ட நிலைகளில் அவர்கள்

1.”என் வயதான காலத்தில் இப்படிக் கவனிக்காது விட்டு விட்டானே” என்று எண்ணும் பொழுது

2.இந்தத் தாய் தந்தையின் வேதனை உணர்வுகள்

3.அங்கே அவருக்குள் வேலை செய்ய தொடங்கி விடுகிறது.

4.என்னென்ன நிலைகளில் அவஸ்தைப் பட்டார்களோ அதே உணர்வு இங்கே இவர்கள் உடலில் வேலை செய்கின்றது.

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கெனவே யாம் சொல்லி வந்த முறைப்படி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விண் செலுத்தினால் இத்தகைய துன்பங்கள் வராது மாற்றலாம்.

 

நோயான பின் டாக்டரிடம் போய்ப் பணம் செலவு செய்கின்றார்கள். அந்த பூஜை; இந்த பூஜை; லெட்சுமி நாராயணன் பூஜை என்று அதைச் செய்தால் தான் சரியாகும் என்று செய்கிறார்கள்.

 

அம்மா அப்பா உடலை விட்டுப் பிரிந்தால் அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதைச் செய்ய மாட்டேன் என்கிறார்கள்.

 

நாங்கள் எங்கள் அம்மா அப்பாவிற்கு வருடத்திற்கு ஒரு முறை எல்லாம் செய்கின்றோம். அவர்கள் சாப்பிடுகிற ஆகாரம் எல்லாம் வைத்து அவர்கள் ஞாபகார்த்தமாகப் படைக்கின்றோம் என்ற இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.

 

சாதாரண வாழ்க்கையில் இதைச் செய்கின்றார்களே தவிர ஞானிகள் சொன்ன வழியில் செய்யவில்லை.

 

அவர்களுடைய ஞாபகார்த்தம் என்ன?

1.தாய் தந்தையர் அவர்கள் துன்பப்பட்டதையும் நோய்வாய்ப்பட்டதையும்

2.மீண்டும் மீண்டும் எண்ணி அதை நுகரும் பொழுது

3.அந்தத் துன்பங்கள் இங்கேயும் நோயாக மாறுகின்றது.

 

எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். எங்களை வளர்ப்பதற்காகப் பட்ட தீயவினைகளிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

 

எங்கள் தாய் தந்தையரின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாகள் ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அவர்கள் துன்பப்பட்டது வெறுப்படைந்தது எல்லாம் குறையும்.

 

நமக்குள் துன்பமாகவோ நோயாகவோ அது மாறாது.

 

இந்த முறைப்படி செய்யுங்கள் என்று சொல்கிறோம். இது எல்லாம் வியாசகர் கொடுத்த தத்துவத்தில் இருக்கின்றது. அதை யாருமே எடுத்துக் கொள்வதில்லை.

 

தனக்குள் படித்ததை மட்டுமே எடுத்துக் கொள்கின்றார்களே தவிர அவர்கள் உள் உணர்வுகளைப் பற்றிச் சொன்னால் யாரும் கேட்டுக் கொள்வதில்லை.

 

தாய் தந்தையத் துன்பப்பட்டதை நினைக்கிறவர்கள் ஞானிகள் சொன்ன முறைப்படி நினைப்பதற்கு என்ன?

1.காற்றிலே மகரிஷிகளின் உணர்வுகள் பரவியுள்ளது.

2.அதை எடுத்து அந்த மகரிஷிகளின் உணர்வால் விண் செலுத்த முடியும்.

 

நாம் இந்த உடலில் எத்தனை வருடங்கள் இருக்கப் போகின்றோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

எந்த மகான் எத்தனை சக்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு பெரிய அரசனாக இருந்து நாட்டையே ஆட்சி புரிந்தாலும் உலகையே அவர்கள் கீழ் கொண்டு வந்தாலும் கடைசியில் அவருடைய உடல்கள் என்ன ஆனது?

 

அவர்கள் எடுத்துக் கொண்ட வேகத்தின் நிலையில் அதிகமான எண்ண உணர்வுகள் அவர்கள் சீக்கிரமாக உயிரை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.  அந்த அரசர்களும் இருந்ததில்லை. மகான்களும் இருந்ததில்லை.

 

மகான்கள் என்ன செய்கிறார்கள்? உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டு விண்ணுலகம் போகின்றார்கள்.

 

1.நாம் இந்தப் புவி ஈர்ப்பின் பற்றோடு வாழ்ந்து

2.உடலுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை வைத்து

3.மீண்டும் இந்த மனிதக் கூட்டுக்குள்ளே தான் வருகின்றோம்.

நாம் இதிலிருந்து மீண்டிடல் வேண்டும்.

 

நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கி

1.மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்தி விட்டு

2.நாமும் அதன் தொடர் கொண்டு அவர்கள் சென்ற பாதையில்

3.விண் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.