மீடியம் பவர் என்றால் என்ன…? மெய்யான சக்தி எது…?

Image

மீடியம் பவர் என்றால் என்ன…? மெய்யான சக்தி எது…?

 

 

சிலர் மீடியம் பவரை – ஆவிகள் வைத்து (MEDIUM POWER) அபூர்வ சக்தி பெறுவதாகச் செய்கிறார்கள்.

 

அதில் நம் எண்ணத்தைச் செலுத்தினால்

1.பிறிதொரு ஆன்மா நமக்குள் வந்துவிடும்.

2.அதனின் ஆசைகளையெல்லாம் நமக்குள் வந்து வெளிப்படுத்தும்.

3.அதே உணர்வுகள் வளர்ந்துவிட்டால் அந்த ஆசையின் தன்மையே நமக்குள் விளைவிக்கின்றது.

 

(அதாவது அதனின் வலுவை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடுகின்றது)

 

ஒரு ஆன்மா மனித உடலுக்குள் வந்தபின் அது எந்த நிலையிலும் வெளியில் வரவே முடியாது. அந்த உடலுடன் இருப்பவர் மடியும் பொழுது தான் அதுவும் வெளியேறும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

1.சிலர் வழி தெரியாதபடி புத்தகங்களைப் படித்துக் கொண்டு

2.இதைப் போல் செய்தால் மீடியம்களுடன் தொடர்பு கொண்டு ஆவியுடன் பேசலாம்.

3.அருள் சக்திகளைத் தெரிந்து கொள்ளலாம் என்றெல்லாம் விளையாட்டாகச் செய்து எளிதில் அதற்குள் சிக்கிக் கொள்கின்றார்கள்.

4.பின்பு வெளியில் சொல்ல முடியாதபடி பல அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்

 

நம்முடைய சக்தி எதுவாக இருக்க வேண்டும்?

 

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகில் ஒளியின் சுடராக வாழும் அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

 

அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்ட பின் நம் எண்ணம் நம் நினைவு மகரிஷிகளின் அலைவரிசையுடன் அங்கே செல்ல வேண்டும்.

 

மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால் நாம்

1.மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு எங்கே சென்றாலும்

2.அது வேலை செய்யாது… இதைப் பார்க்கலாம்.

 

தியானத்தைச் சரியான வழிகளில் செய்து வந்தால் மீடியம் வைத்துச் செயல்படுவோர்கள் “அந்த மீடியம் உணர்வுகள்” என்று அவர்கள் உடலில் இருந்தாலும்

1.அந்த இயக்கச் சக்தி மாறிவிடும்.

2.அது பேசாது. அதனின் உணர்வுகள் செயல்படாது. இதையும் பார்க்கலாம்.

 

ஏனென்றால் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் மீடியமாக்கப்படும் பொழுது இந்த உணர்வு அங்கே விண்ணுக்கே அழைத்துச் செல்லும்.

 

குலதெய்வங்களாக இன்று நாம் நம் ஊரில் வணங்கிக் கொண்டிருப்பதெல்லாம் நம் மூதாதையர்களின் உயிராத்மாக்கள் தான்.

 

அவர்கள் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் எண்ணங்களை எடுத்தால் அவர்கள் இங்கே நம் உடலுக்குள் வந்து அருளாடுவார்கள். அதைப் பார்க்கலாம்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டு அருள் மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றுவோம். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.

 

நம்முடைய குல வழியில் வந்த மூதாதையர்களை விண் செலுத்துவோம். மூதாதையர்களின் உயிராத்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அவர்கள் உடல் பெறும் உணர்வின் சக்தியைக் கரைத்திடல் வேண்டும்.

இந்த உடல் போனால் அடுத்து மனித உடல் பெற பல கோடி ஆண்டுகள் ஆகும் – “தீமைகளை வகுந்தால்… கல்கி”

Image

Kalki Aavtar2017

இந்த உடல் போனால் அடுத்து மனித உடல் பெற பல கோடி ஆண்டுகள் ஆகும் – “தீமைகளை வகுந்தால்… கல்கி”

 

 

நாம் எத்தகைய தீமையைக் கேட்டுணர்ந்தாலும் யாம் உபதேசிக்கும் அருள் உணர்வின் துணை கொண்டு நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

 

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும்

1.வரும் சிக்கல்கள் எதுவாக இருந்தாலும்

2.துயர் பட்ட நிலைகள் இருந்தாலும் வேதனைகள் இருந்தாலும்

3.இதற்கு முன் நம் உடலில் அறியாது சேர்ந்த பல உணர்வுகள் இருந்தாலும்

4.இன்னல்களால் விளைந்த நோய்கள் இருந்தாலும்

 

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.

2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

3.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீயவினைகள் நீங்க வேண்டும்

4.சர்வ நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணித் தியானியுங்கள்.

 

எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை மறக்க இவ்வாறு செய்யுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றுங்கள்.

 

எனக்கு வந்த தீமை மற்றவர்களுக்கு வரக்கூடாது. உலக மக்கள் அனைவரும் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் பரப்புங்கள்.

 

நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்வோம் என்றால் இந்த உலகில் உள்ள நஞ்சான நிலைகள் மாறும். பத்தாவது நிலையாக கல்கி தீமை அகற்றும் உணர்வு நமக்குள் விளையும்.

 

ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் விளைந்த உணர்வு கொண்டு உடலை விட்டு அகன்றாலும் தீமையற்ற உலகில் நாம் வாழ்ந்திட முடியும். இங்கேயும் வாழ்ந்திட முடியும்.

 

1.எப்போதும் தீமைகள் நம்மை நாடாத  நிலைகள் கொண்டு

2.என்றும் அழியாத ஒளிச் சரீரமாக நிச்சயம் நாம் பெற முடியும்.

3இந்த உடலை வைத்துதான் அந்த நிலை பெற முடியும்.

 

இந்த உடலை இழந்துவிட்டு நஞ்சால் இழக்கப்பட்டால் நஞ்சின் செயலாக மாறி மீண்டும் அந்த நஞ்சான சரீரத்திலிருந்து மீண்டிடப் பல கோடிச் சரீரங்கள் ஆகலாம்.

 

அது வரையிலும் இந்தப் பூமி இருக்குமோ… மனிதனாகப் பிறப்போமோ…! என்று சொல்ல முடியாது.

 

மனிதனாகப் பிறந்தோம், மனிதனாக வாழவேண்டும். இந்த உடலிலே தீமைகள் அகற்றும் உணர்வை விளைய வைக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

 

இந்த வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

ஒட்டு மொத்தமாகச் சுத்தப்படுத்துவேன் என்றால் முடியாது.

 

இரவிலே படுத்துத் தூங்கும் போதெல்லாம் அதற்கு முன் உங்களால் எவ்வளவு தூரம் எண்ண முடியுமோ அந்தத்  துருவ நட்சத்திரத்தினை எண்ணுங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

 

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று உங்கள் உடலைத் தூய்மைப்படுத்துங்கள். இந்த உணர்வின் நினைவாற்றலை உடலுக்குள் செலுத்துங்கள்.

 

இதற்கு முன் கேட்ட பதிவு செய்த தீய உணர்வுகளைப் பிளந்து தள்ளுங்கள். கல்கி பத்தாவது நிலையான ஒளி நிலை அடையுங்கள்.

காயகல்ப சித்து எப்படிப் பெறுவது…?

blue flame soul

காயகல்ப சித்து எப்படிப் பெறுவது…?

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் கண்களின் நினைவைச் செலுத்த வேண்டும். நான் தான் அவன்… அவன் தான் நான்…! என்ற நிலையில் உயிருடன் ஒன்ற வேண்டும்.

எந்த உணர்வு மோதினாலும் கண்ணின் நினைவு புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். (வெளியிலிருந்து கவர்ந்தாலும் உள் முகமாக உயிருடன் ஐக்கியமாக வேண்டும்)

தன் உணர்வின் தன்மையை
1,தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும்
2.தன் கவர்ச்சியின் நிலைகள் கொண்டு
3.உயிருடன் தொடர்பு கொண்டு விண்ணின் ஆற்றலைச் சுவாசித்து,
4.துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருளைப் பெற்று
5.அந்த உணர்வின் தன்மையை நம் (உயிரின்) சுழற்சிக்குள் இருக்கச் செய்ய வேண்டும்.
6.புருவ மத்தியில் ஒளிப் பிழம்பைக் காணலாம் பேரொளியாக மாறும்.

இதுதான் “காயகல்ப சித்து” என்பது. அந்த நிலை பெற்றவர் தான் போகமாமகரிஷி.

தன் உயிராத்மாவைப் பிரபஞ்சம் முழுவதும் படரச் செய்து அவர் தம் உணர்வின் தன்மையை ஒளியாக்கிச் “சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக ஒளியின் சரீரமாக…” விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்.

1.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த
2.போகமாமகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.”என்றும் அழியா ஒளிச் சரீரமாக” நாமும் வாழலாம்.

மகரிஷிகளின் அலைவரிசையை நாம் திருப்பி வைத்து அதனின் தொடர்வரிசையில் அவர்களின் அருள் ஒளி வட்டத்திலிருந்தே நம்முடைய வாழ்க்கையைச் செயல்படுத்த வேண்டும்

Image

“மகரிஷிகளின் அலைவரிசையை நாம் திருப்பி வைத்து…” அதனின் தொடர்வரிசையில் (FREQUENCY) அவர்களின் அருள் ஒளி வட்டத்திலிருந்தே நம்முடைய வாழ்க்கையைச் செயல்படுத்த வேண்டும்

 

 

1.உலகில் ஆசையின் நிலைகளை இங்கே வைத்து

2.“சாமி செய்யும்… சாமியார் செய்வார்… ஜாதகம் செய்யும்… யந்திரம் செய்யும்…” என்று யாரோ செய்வார்கள்…!” எண்ண எண்ணத்தில்

3.அந்த “ஆசை” என்கிற அந்த ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால்

4.ஞானிகளின் ஆற்றல்களைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

 

டி.வி ரேடியோ இவைகளில் ஒலி பரப்பச் செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேசனிலிருந்து எதை ஒலி பரப்புச் செய்கின்றார்களோ அதை எடுக்கவேண்டும் என்றால் அந்த ஸ்டேசனை வைத்தால் தான் அதைப் பெற முடியும்.

 

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் அலை வரிசை இங்கே இருக்கின்றது. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த ஸ்டேசனை வைத்தால் அந்த உணர்வுகளுடன் தொடர்பு கொள்ள முடியும். அது நமக்குள் வேலை செய்யும்.

 

இல்லை என்றால் நாம் இந்த மண்ணுலகின் பற்றைத்தான் வளர்க்க முடியுமே தவிர விண்ணுலகப் பற்றை எடுக்க முடியாது. எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

 

எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படரவேண்டும்.

 

நாங்கள் செல்லும் இடங்களெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்ல வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

2.நம் வாழ்க்கைக்கு நல்ல வழியையும் அது காட்டும்.

3.இந்த நிலையிலிருக்கும்போது நமக்கு நல்ல வரவேற்பும் (செல்லும் இடங்களில்) இருக்கும்.

4.அங்கே அவர்கள் அறியாமல் தீமைகள் இருந்தாலும் அது மாறும்

 

சாமி (ஞானகுரு) உபதேசித்த உணர்வைப் பெற்றால் அந்த ஆற்றல்களைப் பெறமுடியும் என்ற இந்த நம்பிக்கை நமக்கு வர வேண்டும். நம்மை நாம் நம்பிப் பழக வேண்டும்.

 

ஒவ்வொரு நாளும் குரு உபதேசிக்கும் உணர்வுகளைப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் செயல்பட வேண்டும்.

 

இந்த மண்ணுலகில் வரும் தீமைகளை அகற்றுகின்றோம். அந்த மெய் ஞானிகளுடன் ஒன்றுகின்றோம்.

குருநாதர் என்னை அடித்து உதைத்து… “கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து…” அதன் மூலமாகத்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

Image

Eswarapattar Mamaharishi

குருநாதர் என்னை அடித்து உதைத்து… “கவனம் முழுவதையும் அவர் பால் திருப்பச் செய்து…” அதன் மூலமாகத்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்தார்

 

 

அறிவதற்கு  இது பயன்படும். வரும் தீமையிலிருந்து மீள்வதற்கு இது உதவியாக இருக்கும்.

 

மகரிஷிகளைப் பற்றியும் மெய் ஞானிகளைப் பற்றியும் அவர்கள் கண்டுணர்ந்த பேருண்மைகளையும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

 

1.நாம் படிக்கவில்லை…! ஒன்றும் தெரியவில்லை…! ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்றோ

2.இவ்வளவு பெரிய தத்துவத்தைச் சொல்கின்றாரே…!

3.நமக்கு ஒன்றும் புரியவில்லையே என்று விட்டு விட்டீர்கள் என்றால் தீர்ந்து விட்டது.

4.”புரிய வேண்டும்…” என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியும்.

5.புரியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தால் புரியாது.

 

முதலில் பள்ளிக்கூடத்திற்கு நாம் படிக்கச் செல்கின்றோம் என்றால் “நாம் தெரிந்து போய்த் தெரிந்து கொள்வதில்லை…!” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அங்கே போகின்றோம்.

 

முதலில் எழுத்துக்களைப் பார்க்கப்படும் போது அந்த எழுத்துக்களில்

1.என்ன கருத்து உள்ளது என்று அறிய

2.அதை ஆழமாகப் பதிவு செய்தால் தான் பதிவு ஆகும்.

 

இல்லை என்றால் நீங்கள் ஆயிரம் வருடம் அ… ஆ… என்று சொல்லிக் கொண்டே வந்தால் முடியாது. அ… ஆ… என்று எழுத்தைப் படிக்க வேண்டும் என்றால் எத்தனை குழந்தைகள் வருடக் கணக்கில் உட்கார்ந்து தெரிந்து கொள்கிறது என்று பார்க்கலாம்.

 

ஆர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற குழந்தைகளுக்குச்

1.சொன்னது பதிவாகி…

2.அது உடனடியாகப் பதில் சொல்லக்கூடிய நிலைக்கு வரும்.

 

ஆகையினாலே ஏதோ சொல்லுகின்றேன் என்று எண்ணி விட வேண்டாம்.

 

வான்மீகி தெரிந்து வரவில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் அனைத்தும் அறிந்து கொண்டு வரவில்லை. இராமலிங்க அடிகள் அறிந்து வரவில்லை.

 

1.வியாசகர் பேரண்டத்தின் இயக்கத்தின் தத்துவத்தையே காட்டினார் அவர் தெரிந்து வரவில்லை.

2.உணர்வின் இயக்கங்களை எண்ணங்களைப் பற்றி வெளிப்படுத்திய வான்மீகியும் அறிந்து சொல்லவில்லை. அறிவின் ஞானம் இல்லை.

3.அகஸ்தியனோ கல்விச் சாலைக்கே செல்லாதவன். அவன் இயற்கையின் இயக்கங்கள் அனைத்தையும் கண்டுணர்ந்தான்.

 

எவரும் தெரிந்து வரவில்லை.

 

1.அறியாத நிலைகள்…

2.“சந்தர்ப்பத்தால் இணைந்து இயக்கிய அந்த உணர்வின் தன்மை…”

3.தன்னுள் அறியும் பருவம் வரும் போது தான் மகா ஞானி ஆகின்றார்கள்.

 

அறிந்தவர் அறிந்ததைத் தனக்குள் விளைவைத்த பின் அதை

1.அறிந்திடும் நிலை கொண்டு நாம் செல்லும் போதுதான்

2.அறிவைப் பற்றி நாம் தெரிந்து கொள்கின்றோம்.

 

எழுத்து வடிவில் புதிதாக ஒருவர் எழுதி இருந்தால் அதை மீண்டும் அவர் சொல்லும் உபாயத்தை வைத்து அதை எடுக்கும் போது தான் அந்த எழுத்தின் தன்மை கொண்டு மற்றதை அறிய உதவுகின்றது.

 

எத்தனையோ மொழிகள் இருக்கிறது. நாம் பார்க்கின்றோம்.

 

இதைப் போன்று தான் ஞானிகள் தனக்குள் விளைய வைத்த உணர்வுகள்.

1.அவர்களுக்கு எழுத்தறிவு இல்லை என்றாலும்

2.தன் உணர்வால் இயக்கப்பட்டு அறிந்தனர்.

3.ஒன்றின் இயக்கச் சக்தியைத் தனக்குள் கவர்ந்து

4.அதனின் தன்மைகளை முழுமையாக அந்த மெய்யை உணர்ந்து கொண்டார்கள்.

 

மெய்யை உணர்ந்த அந்த மெய் ஞானிகளிடமிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நமது பூமியில் மகா சக்தியாகப் பரவிக் கொண்டுள்ளது.

 

அதை உங்களுக்குள் நினைவுபடுத்திக் கூர்மையாகப் பதிவு செய்கிறோம். பதிந்ததை நீங்களும் எண்ணி எடுக்க முடியும்.

 

ஒரு மரத்தில் விளைந்த ஒரு வித்தினை நாம் எங்கே கொண்டு போய் ஊன்றினாலும் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய் மரத்தின் உணர்வை அது நுகர்ந்து செடியாகி மரமாகி தன் இனமான வித்துக்களை அது மீண்டும் விருத்தி செய்கின்றது.

 

மெய் ஞானிகள் விண்ணுலக ஆற்றலை அறிந்தார்கள். அந்த விண்ணின் ஆற்றலை எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்யும் பொழுது (அவ்வப்போது) அறிந்த உணர்வுகள்

1.ஆற்றல் மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைந்தது

2.அலைகளாக இன்றும் நமக்கு முன் படர்ந்துள்ளது.

 

அதனை குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் கண்டுணர்ந்த உணர்வினை நினைவுபடுத்தி உங்களைக் கூர்மையாகக் கேட்க வைத்துப் பதிவாக்குகின்றோம்.

 

ஒரு வித்து தன் தாய் மரத்தின் உணர்வின் துணை கொண்டு அது கவர்ந்து கொள்கின்றதோ அது போல் ஞானிகள் கண்டுணர்ந்த அறிவின் ஞானத்தை பதியச் செய்யும்போது ஆழமாக நீங்கள் பதிந்து கொண்டால் போதும்.

 

ஞானத்தின் வித்து விளையத் தொடங்கி விட்டால் இருளைப் போக்கி ஒளி காணும் உணர்வின் தன்மையை நிச்சயம் உங்களுக்குள் விளையும். ஞானிகளின் உணர்வுகள் விளைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

 

நான் கல்வி அறிவற்றவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் கல்வியறிவு அற்றவர் தான்.

 

இருப்பினும் அவரைக் கூர்ந்து கவனிக்கும் அளவில் நான் அவர் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று விலகிச் சென்றாலும் அதைப் புரியும்படி செய்வற்காக வேண்டி என்னை அடிக்கடி உதைப்பார்.

 

உதைக்கும் போது அவரைப் பற்றி அதிகமாக எண்ணுவேன். அவர் சொல்வதைத் திருப்பி “என்ன..?” என்று கேட்கும்படி வைப்பார்.

 

அப்போது அந்தந்த நிலைகளில் அந்தந்தச் சந்தர்ப்பங்களில்

1.அவர் எண்ணிய உணர்வுகளைத் திரும்ப திரும்ப எண்ணும் போது

2.அவர் எதைக் கற்றுணர்ந்தாரோ

3.அந்த உணர்வின் சக்தி எனக்குள் வருகின்றது.

 

அவர் என்னை அடித்து உணர்த்தினார். உங்களுக்குச் சொல்லாகச் சொல்லுகின்றேன். உங்கள் கவனம் “இதை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்…” என்ற ஏக்கம் இருந்தால்

1.மெய் ஞானிகள் கண்டதை நான் உணர்ந்தது போல்

2.நீங்களும் உணர முடியும் காண முடியும்.

ஊசி மருந்து மூலம் மனிதனை ஆயிரம் வருடம் வாழ வைக்கலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது…

life cycle

ஊசி மருந்து மூலம் மனிதனை ஆயிரம் வருடம் வாழ வைக்கலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது…

மற்ற உயிரினங்களின் செல்களை எடுத்து மாற்றி மாற்றி 1500 ஆண்டுகள் வாழக்கூடிய மனிதனை உருவாக்க முடியும் என்று முயற்சிக்கின்றார்கள்.

1500 ஆண்டுகள் வாழ்ந்தாலும்…! தனது குழந்தைகள் மற்ற உறவினர்கள் மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா?

வாலிபராக ரோட்டில் நடந்து செல்லலாம். விபத்து ஒன்றை நேரிடையாகவே காண்கிறோம். அல்லது இன்று டி.வி. இன்டெர்னெட்டில் நேரிடையாகவே விபத்தின் கொடுமைகளைக் காட்டுகின்றார்கள்.

விபத்து ஒன்றைக் காணும் பொழுது “அதிர்ச்சி…” என்ற உணர்வை உடலில் பரவச் செய்கின்றது.

ஒரு பக்கம் இழுத்தால் ஒரு பக்கம் வளர்கின்றது. மற்றொன்றின் நிலைகள் வரப்படும் பொழுது “போராடுகின்றது”. அதன் பிறகு
1.1500 வருடமும் போராடிப்… போராடி…!
2.ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி….! வாழ்க்கைக் காலத்தை ஓட்டலாம்.

வாலிபத்தைப் பெருக்க இறந்த குழந்தையின் மூளையிலிருந்து திசுக்களை எடுக்கின்றனர். இன்னொரு உடலில் சேர்த்து முதுமையாக இருக்கும் மனிதனை இளமையானவனாக மாற்றுகின்றார்கள்.

“இவ்வளவும் செய்து…” உடலுக்காக வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல முடியும்?

கெமிக்கல் கலந்த உணர்வுகள் நம் உயிராத்மாவில் பெருகி மீண்டும் மனித உடல் பெறாத நிலைகள் விஷத் தன்மை கொண்ட உயிரினங்களாகப் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதர்கள் நாம் மீள
1.நம் உயிரில் நஞ்சு கலக்காதபடி பாதுகாக்கும் நிலைக்குத்தான்
2.நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரும்படிச் செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நான் உடல் நலம் பெறவேண்டும் நோய் நீக்கிடும் ஆற்றல் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மருந்து மாத்திரை உட்கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணிவிட்டு எடுத்துக் கொண்டால் அந்தக் கெமிக்கல் கலந்த நஞ்சு நம் உயிராத்மாவில் சேராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே உடல் நலமும் பெறுகின்றோம். நஞ்சு நமக்குள் சேராதபடியும் தடுத்துக் கொள்கின்றோம்.

எவ்வளவு பணம் செலவழித்தாலும் இந்த உடலை நம்மால் காக்க முடியாது. உடலை விட்டு ஒரு நாள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆனால் அந்தக் குறுகிய காலத்தில் அருள் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் அத்தகைய சந்தர்ப்பமாக மாற்றிக் கொண்டால் நம் உயிராத்மா அழியா ஒளியின் சரீரம் பெறும்.

“நல்லது செய்கிறேன்” என்று மற்றவர்களின் கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்தாலோ அல்லது காசுக்காக மந்திரமோ குறியோ சொன்னாலோ நமக்கு நல்லது ஏற்படாது

Image

“நல்லது செய்கிறேன்” என்று மற்றவர்களின் கஷ்டத்தைக் கேட்டு உதவி செய்தாலோ அல்லது காசுக்காக மந்திரமோ குறியோ சொன்னாலோ “நமக்கு நல்லது ஏற்படாது…!”

 

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

 

1.அத்தகைய நிலைகள் சென்றால்

2.ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…”

3.நமக்குள் வந்து சேரும்.

 

 

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

 

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

 

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

 

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

 

“ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

 

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

 

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்

1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே

2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே

3.இவர் நினைக்கும் பொழுது  வந்துவிடுகின்றது.

 

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

 

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

 

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.

 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

கஷ்டத்தை அதிகம் கேட்டறிவதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நம்மைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்களுக்கும் அந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

 

அவர்கள் கஷ்டம் நமக்குள் வராது. காதில் கேட்போம் ஆனால் உள்ளுக்குள் போகாது.

கண்ணின் நினைவு கொண்டு புருவ மத்தியில் ஆணையிட்டால் சேனாதிபதி… “கார்த்திகேயா”

Image

Om Eswara - OM ESWARA

கண்ணின் நினைவு கொண்டு புருவ மத்தியில் ஆணையிட்டால் சேனாதிபதி… “கார்த்திகேயா”

 

 

தீமை என்ற நிலையைத் தெரிந்து கொள்ளும் நிலையாக இருப்பது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா,

 

தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம் அதை வழி நடத்தி அதன் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் சொல்கின்றேன்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று

1.கண்களால் வானை நோக்கிப் பார்த்து

2.ஏக்க உணர்வுடன் இருக்க வேண்டும்.

 

அதே உணர்வுடன் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது நாம் கண்ணால் பார்த்து உணர்வுகள் உயிரிலே பட்டவுடன் உணர முடிகின்றது.

 

உதாரணமாக வேதனைப்படுவோரைக் கண்களால் உற்றுப் பார்க்கின்றோம். அந்த வேதனையான உணர்வை உயிரின் காந்தம் இழுத்து நமக்குள் அறியச் செய்கின்றது.

1.கண்ணால் பார்க்கின்றோம்.

2.உயிரால் உணர்கின்றோம்.

 

இதே போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று

1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்கப்படும் பொழுது

2.அது வலிமையாகி விடுகின்றது.

 

வேதனைப்பட்டோர்களுக்கு அதை விசாரித்து நாம் உதவியும் செய்கின்றோம். வேதனை நமக்குள் வராமல் தடுக்க அடுத்து நாம் எண்ண செய்ய வேண்டும்?

 

அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்துப் புருவ மத்தியில் எண்ணித் தடுக்க வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு

2.கட்டளையிட வேண்டும் – அது தான் சேனாதிபதி.

 

அதே சமயத்தில் தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும் முதலில் சிறிதளவு போய்விட்டது. அது உடலுக்குள் புகாது அந்தத் தீமையான உணர்வுகளைத் தடுக்க வேண்டும்.

 

அதற்காகத்தான் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும் என்று சொல்வது. ஏனென்றால் வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது கண்ணின் நினைவு வேதனைப்படுபவர் மீது தான் இருக்கும். அதைத்தான் உயிர் கவரும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் இணைக்கும் பொழுது இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடைப்படுத்தப்படுகின்றது.

 

புருவ மத்தியில் தடைப்படுத்திய பின் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

 

இப்படி ஆணையிட வேண்டும். ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது கார்த்திகேயா. இவ்வாறு உடலிலுள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைகின்றது.

 

நாம் எண்ணியபடி அந்தத் தீமைகள் வராதபடி தடுக்கும் நிலைக்குத் தயாராகின்றது. இந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலில் சேர்க்கப்படுகின்றது.

 

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துத் தீயதை நுகராது தடுத்த பின்

2.விஷத்தை அடக்கும் சக்தியாக அமைந்துவிடுகின்றது

3.நாம் நுகர்ந்த தீமைகள் சிறுத்து விடுகின்றது.

4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உமிழ் நீராக மாறும் பொழுது அது குறைக்கப்படுகின்றது.

 

ஒரு தீயவனைப் பார்க்கும் பொழுதோ நோயாளியைப் பார்க்கும் பொழுதோ கண்ணின் கரு விழி “ருக்மணி” ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாக்குகின்றது. பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.

 

அடுத்த கணம் அதைத் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால்

1.கருவிழி ருக்மணி நம் உடலுக்குள் பதிவாக்கிய

2.அந்த உணர்வுகளுக்கு (நோயாளி/தீயவன்) அருகிலேயே பதிவாக்குகின்றது.

3.துருவ நட்சத்திரம் அதைக்காட்டிலும் வலிமையானது.

4.மற்றவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… நிறுத்திவிடுகின்றோம்….!

 

அடுத்து அந்த நோயாளி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

1.அவர் உடல் நலம் பெற வேண்டும்.

2.அவர் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று

3.இந்த உணர்வுகளைப் பதிவு செய்து (RECORD) விடவேண்டும்.

4.இதற்கு மத்தியில் அவருடைய வேதனை என்ற நிலைகள் அடங்கி விடுகின்றது.

 

இப்படிப் பழகிக் கொண்டால் தீமைகள் என்று தெரிந்தாலே உங்கள் கண்ணின் நினைவு

1.புருவ மத்தியிலிருக்கும் உயிருக்கும்

2.விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும்

 

தீமைகளை நுகர்வதற்குப் பதில் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வந்து கொண்டேயிருக்கும். செய்து உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

கந்தர் சஷ்டி – சஷ்டி விரதம் – கந்தவேள்

Image

கந்தர் சஷ்டி – சஷ்டி விரதம் – கந்தவேள்

 

இராமலிங்க அடிகள்…, “கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேளே…” என்று பாடல்களைப் பாடியுள்ளார்.

 

1.பல கோடிச் சரீரங்களில் பல அணுக்களால் உருவாக்கப்பட்டு

2.அவை அனைத்தும் எனக்குள் கூர்மையாக இருந்து

3.எனக்கு முன் தெளிவாக்கிக் கொண்டிருக்கும் இந்த உயிரை – அதைத்தான்

4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள இந்த உயிரைக் “கந்தவேளே…” என்று அவர் பாடுகின்றார்.

 

தீமைகள் எனக்குள் நாடாது நன்மைகள் செய்யும் பல உணர்வுகள் என்னிலே தோன்ற வேண்டும் என்று தன் உயிரை வேண்டுகின்றார்.

 

தீமையான உணர்வுகளைத் தனக்குள் நுகராது “நல்ல உணர்வுகளை நாம் எவ்வாறு நுகர வேண்டும்…” என்று இராமலிங்க அடிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்.

 

நம் வாழ்க்கையில் யார் எதிரிகளாக இருந்தாலும்

1.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் வளம் பெறவேண்டும்

3.அருள் ஞானியின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்

4.அவர்கள் நல்ல ஒழுக்கங்கள் பெறவேண்டும்

5.நல் நிலைகள் அடைய வேண்டும்

6.எங்கள் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்

7.எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்று இந்த உணர்வினை எண்ணி

8.பகைமை உணர்வுகள் எதுவும் நமக்குள் வராதபடி வளராதபடி கந்த சஷ்டி

9.சம்ஹாரம் செய்ய வேண்டும்

 

ஆக அன்றைய நாள் இவ்வாறு எண்ணுவது தான் உண்மையான விரதம்.

 

தீமைகளை எண்ணாது நாம் யார் யாரையெல்லாம் பார்த்தோமோ அந்த அனைத்துக் குடும்பங்களும் எல்லாம் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

இதை ஒவ்வொருவரும் எண்ணும்படி செய்வதற்கே கந்தர் சஷ்டி என்று இத்தகைய விழாக்களை அன்று ஏற்படுத்தினார்கள் ஞானிகள்

 

தீயவன் சாபமிட்டால் உடனடியாக வேலை செய்யும் அதை நாம் நுகராது அருள் சக்திகளைக் கவர்ந்து பாதுகாப்பு அரணாக அமைத்திடல் வேண்டும்

 

ஒரு மெய்ஞானி சொல்லக்கூடிய வாக்கைக் காட்டிலும் ஏழ்மையிலே தரித்திரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய உணர்வின் விஷத்தன்மைகள் அவ்வளவு சீக்கிரம் வேலை செய்யும்.

 

சாதாரண மனிதனாக இருந்தாலும் அவன் சாபமிடுகின்ற நிலைகள் அப்படி விஷத் தன்மை வாய்ந்தது தான்.

 

நம்மைச் சாபமிட்டான் என்றால் நாம் என்ன செய்வோம்?

 

என்ன சொன்னாய்…? என்று எதிர்த்துக் கேட்போம். அவன் மீண்டும் ஏதாவது சொன்னால் அடிக்கத் துணிவோம்.

 

அந்த ஆத்திரத்தை நாம் ஊட்டப்படும் பொழுது அவன் மீண்டும் கடுமையான சொற்களைச் சொன்னால் அந்த உணர்வுகள் நம் உடலில் வந்து சேர்ந்து விடும்.

 

அவ்வாறு சேர்ந்துவிட்டால் அந்தச் சாப அலைகள் குடும்பப் பரம்பரைக்குள் வந்துவிடும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் அது ஆட்டிப் படைத்துவிடும்.

 

செல்வம் இருக்கும். ஆனால் உடலுக்குள் துன்பம் இருக்கும். அவர்களுக்குள் மகிழ்ச்சி இருக்காது. ஆசையின் நிலைகளில் அதிகமாகப் பேசலாம். இதைப் போன்ற துன்புறும் நிலைகள் நிச்சயம் வந்தே தீரும்.

 

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் சரியானபடி செயல்படுத்துதல் வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகுதல் வேண்டும்.

 

இப்படிச் சாபமிடுகிறான்…! அவன் என்ன சொல்கிறான்… எதற்காக அப்படிச் சொல்கிறான்…? என்று அவனைப் பற்றி அவன் உணர்வுகளை நுகரக் கூடாது.

 

1.அவன் சொல்லும் நிலை நமக்குத் தேவையில்லை..,

2.அவன் உண்மையை உணரட்டும்

3.நிச்சயம் உணர்வான் என்று அதை விட்டுவிட வேண்டும்.

 

எது வந்தாலும் உடனடியாக “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் இணைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

 

இதைச் சேர்க்கச் சேர்க்க மற்ற உணர்வுகள் சிறுத்துவிடும். அதனின் இயக்கமும் செயலிழந்துவிடும். தீமைகளை அகற்றும் பழக்கம் வந்துவிடும்.

 

அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றினால் தீமைகளப் பற்றற்றதாக்கிட முடியும். தீமைகள் அருகில் வராதபடி நம் ஈர்ப்புக்குள் புகாதபடி “பாதுகாப்பு அரணாக” அமைக்க முடியும்.

 

குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சேர்ந்து கூட்டாகத் தியானமிருந்து அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்று வலுப்படுத்துதல் வேண்டும்.

 

செய்து பாருங்கள்.

எந்தப் பொருளாக இருந்தாலும் குறிப்பிட்ட அந்த இடத்திற்குள் வந்ததும் “மாயமாக மறைந்து விடுகிறது…” சொல்வார்கள் – அதனின் உண்மை நிலைகள்

Image

Bermuda-Triangle

எந்தப் பொருளாக இருந்தாலும் குறிப்பிட்ட அந்த இடத்திற்குள் வந்ததும் “மாயமாக மறைந்து விடுகிறது…” சொல்வார்கள் – அதனின் உண்மை நிலைகள்

 

 

கடல்களில் எடை கூடி ஆழமான பகுதிகளில் ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் அடிக்குக் கீழே நீர் ஓட்டம் அதிகமாக இருக்கும்.

 

ஒரு பகுதியிலிருந்து ஒரு பகுதிக்குச் செல்லும் அதனுடைய இழுவையின் வேகமும் அதிகமாகும். துருவப் பகுதியில் இருந்து மாற்றம் அடையப்படும்போது அந்த இழுவையின் வேகம் அதிகமாகும்.

 

நாம் வாழும் இடங்களில் பார்க்கலாம். ஆறுகளில் சில இடங்களில் புதை மணல் என்று அங்கே கால் வைத்தால் ஆளையே உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு போய்விடும்.

 

இதே மாதிரித்தான் கடல் பகுதியிலும் சில பகுதிகளில் மேலிருந்து கீழே அடி மட்டம் வரை இழுக்கும் சக்தி இருக்கும். அதீத நிலையில் சுழி போன்று இருக்கும்.

 

மேலே விமானம் போனாலும் நீரில் கப்பல் வந்தாலும் அந்தப் பகுதிக்குள் வந்தவுடன் உள்ளே இழுத்துக் கொண்டு போய் விடும்.

 

அவைகளை எங்கே இழுத்துச் செல்கின்றது…! இங்கே தான் உள்ளுக்குள் போனது என்று அந்த இடத்தில் நீங்கள் தேடிப் பார்த்தால் ஒன்றும் கிடைக்காது.

 

1.அது எங்கே போகின்றது?

2.எதன் நிலை பெறுகின்றது என்று இது வரை விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்க முடியவுமில்லை.

 

காரணம் சில பகுதிகளுக்குச் செல்லும் போது அது… அமிலத் தன்மை அடைந்து… “கரைந்தே விடுகின்றது…”

 

தென் பகுதிகளுக்குச் செல்லும் போது வெப்பத்தின் தணல் கூடி இதனுடைய “எர்த்…” உருவாக்கப்பட்டு அதன் ஓட்ட நிலைகளெல்லாம் “கருகி விடுகிறது…!” என்பதை ஆதியிலே கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

 

இது தான் கடல்களில் விளைந்த நிலைகள்.

 

இவையெல்லாம் உணர்வின் கலவையும் மற்றதோடு இணைந்து செயல்படும் சக்தி தான். ஏனென்றால் கடவுள் என்று ஒருவன் இருந்து இயக்கவில்லை.

 

1.ஒன்றுக்குள் ஒன்று

2.ஒன்றின் வலுக் கொண்டு ஒன்றினை இயக்குவது தான் கடவுள் என்றும்

3.ஒன்றுக்குள் ஒன்று அது இயக்கி

4.ஒன்றின் வலுவைப் பெருக்கப்படும் போது “ஈசன்” என்றும்

5.ஒன்றுக்குள் ஒன்று மோதல் ஏற்படும் போது அதற்குப் பெயர் “வெப்பம்” என்றும்

6.வெப்பத்தினால் மோதலின் தன்மைகள் ஈர்க்கும் சக்தி வரும் போது காந்தம் உருவாகின்றது என்றும்

7.இயற்கையின் இயக்க நிலைகளைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

 

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்து வெளிப்படுத்திய இயற்கையின் பேருண்மைகள் எல்லாம் அலைகளாக இங்கே பரவியுள்ளது. அதை நுகர்ந்தால் அகஸ்தியன் கண்டதை நாமும் காண முடியும்.