https://app.box.com/s/otg4d5cv8cjrcebpv0efkz80gy879wd6
Click the above link for downloading or hearing துருவ தியானப் பயிற்சி – சாமிகள் தியானம்
கடலுக்குள் இருக்கும் ,அமிலமாக கரைக்கும் ஆற்றல்
கடல் வாழ் நிலைகளில் மேல் எடை கூடும் போது ஆழமான ஒரு இரண்டாயிரம், பத்தாயிரம் அடி கீழ் இருக்கப்படும் போது நீர்ஓட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பகுதியிலிருந்து ஒருபகுதிக்கு செல்லும் அது இழுவையின் வேகமும் அதிகமாகும். அவ்வாறு இழுவையின் இழுவம் அதிகமாகும் போது துருவ ப்பகுதியில் இருந்து மாற்றம் அடையப்படும்போது இப்போது
பார்க்கின்றோம் ,ஆறுகளில் சில இடங்களில்
புதைமணல் என்று அங்கே கால் வைத்தால் ஆளவே உள்ளுக்குள் இழுத்து விட்டு போய்விடும். இதேமாதிரி கடல் பகுதியிலும் சில பகுதிகளில் மேல் இருந்த வாறே கீழ் இழுக்கும் சக்தி இருக்கும். மேலே விமானம் ஆனாலும், கப்பல் ஆனாலும் உள்ளே இழுத்து கொண்டு போய் விடும். அது எங்கே இழுத்து செல்கின்றது,இங்கே உள்ளுக்குள் போனதென்றால் அந்த ரெக்கத்தில நீங்கள் தேடிப்பார்த்தால் கிடைக்காது. அது எங்கே போகின்றது,எதன்நிலை பெறுகின்றது என்றும் இது வரை விஞ்ஞானிகள் கண்டு கொள்ளவும் இல்லை.கண்டு பிடிக்க முடியவுமில்லை.
இவையெல்லாம் சில பகுதிகளுக்கு செல்லும் போது அமிலத்தன்மை அடைந்துஅது
கரைந்தேவிடுகின்றது.
நாம் தென்பகுதிகளுக்கு செல்லும் போது வெப்பத்தின் தணல் கூடி இதனுடைய நெருப்பு உருவாக்க ப்பட்டு அதன் ஓட்ட நிலைகளெல்லாம் கருகி விடுகிறது என்று இதுஅகஸ்தியன் முதலிலே கண்டுள்ளான்.
இதான் கடல்களில் நிலையில் விளைந்த நிலைகள்.
ஏன் என்றால் இவையெல்லாம் கடவுள் என்று ஒருவன் இயக்கவில்லை ,உணர்வின்
கலவையும்,மற்றதோடு இணைந்து செயல்படும் சக்தி தான் ஒன்றுக்குள் ஒன்று ஒன்றின் வலுகொண்டு ஒன்றினை இயக்குவது தான் கடவுள் என்றும், ஒன்றுக்குள் ஒன்று இயக்கி அது வலுவை பெருக்கப்படும்
போது ஈசன் என்றும் ஒன்றுக்குள் ஒன்று மோதல் ஏற்படும் போது அதற்குப்பேர் வெப்பம் என்றும் வெப்பத்தினால் மோதலின் தன்மைகள் ஈர்க்கும் சக்தி வரும் போது காந்தம் அதிலே உருவாகின்றது. இதெல்லாம் இயற்கையின் நிலைகளில் உருவாகின்றநிலை.
தீமையை நீக்க புருவமத்தியில் கட்டளை இடுங்கள்.
———————————-
இந்த ஆறாவது அறிவில், தீமை என்ற நிலையை அறிந்து கொள்ளும் அறிவாக இருப்பது கார்த்திகேயா,
தீமைகளை நீக்கி, இந்த ஒளியின் உடலாக, இருப்பது இந்த துருவநட்சத்திரம்.
அதை வழி நடத்தி,
அதன் வழி கொண்டு, உண்மையின் உணர்வை அறிவதற்காக, இதை நான் சொல்லுகின்றேன்.
அந்த துருவநட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். என்று இக்கண்ணால் விண்ணை நோக்கி, ஏங்கி, அந்த உணர்வை பெறவேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி,
அதே கண்ணின் புருவமத்தியில் செலுத்தப்படும் பொழுது, நாம் கண்ணால் பார்த்து அறியப்படும் பொழுது, உயிரிலே பட்டு உணரமுடிகின்றது.
ஆனால் அதேசமயத்தில், வேதனை என்ற உணர்வை கண்ணால் நுகர்ந்தோம் என்றால், உயிரின் காந்தம் நமக்குள் இழுத்து நம்மால் அறியமுடிகின்றது.
கண்ணால் பார்க்கின்றோம்.
உயிரால் உணர்கின்றோம்.
ஆனால் இதேபோல, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை புருவமத்தியில் வைக்கப்படும் பொழுது, அது வலிமையாகி விடுகின்றது.
ஏனென்றால், வேதனைப்பட்டோர்க்கு நாம் உதவி செய்கின்றோம்.
அவரின் நிலையை கேட்டறிகின்றோம்.
ஆகையால், அடுத்த நிமிடமே அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து புருவமத்தியில் எண்ணி, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று, இந்த ஆறாவது அறிவின் துணைக்கொண்டு, இந்த உணர்வுகள் சேனாதிபதியாக இயங்குகின்றது.
அப்பொழுது தீமையான உணர்வுகளை நுகர்ந்தாலும், முதலில் உள்ளுக்குள் போய் விடுகின்றது.
அது உடலில் கலக்காது, அந்த தீமையான உணர்வுகளை தடுக்க வேண்டும்.
அப்பொழுது அந்த ஆறாவது அறிவின் துணைக்கொண்டு, இந்த கண்ணின் நினைவை புருவமத்தியில் எண்ணவேண்டும்.
அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைக்கும் பொழுது, இங்கே உள்ளுக்குள் போகாதவாறு தடை படுத்த படுகின்றது.
அது தடை படுவதோடு மட்டுமல்லாது, நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்துக்கும், அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று, கண்ணின் நினைவினை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.
ஆகவே இது ஆணையிடுகின்றது.
இந்த ஆறாவது அறிவு சேனாதிபதி என்கிற போது, கார்த்திகேயா.
இதன் உணர்வு கொண்டு அணுக்களுக்கு செலுத்தப்படும் பொழுது, அது வீரியமடைகின்றது.
நாம் எண்ணியபடி, தீமைகள் வராதபடி தயாராகின்றது.
நுகர்ந்து கொஞ்சமாக உள்ளுக்குள் போணாலும் அந்த நிலையும், இந்த உணர்வுகள் சேர்த்து இது உமிழ்நீராக மாறி,
அது உமிழ்நீராக உடலில் சேர்க்கப்படுகின்றது.
அந்த வித்தை அடக்கும் சக்தியாக, அந்த துருவநட்சத்திரத்தின் உணர்வுகள் இதை தடுத்த பின், இது சிறுத்து விடுகின்றது.
இந்த உடலுக்குள் உமிழ்நீராக மாறும் பொழுது, அது சிறுத்து படுகின்றது.
அதேசமயத்தில், தீமையான நிலையை பார்க்கும் பொழுதோ, நோயின் தன்மையான நிலையில் ஒருவரை பார்க்கும் பொழுதோ, கருவிழி, ருக்மணி ஊழ்வினை என்ற வித்தாக பதிவாக்குகின்றது.
பதிவான பின் தான் அது நுகரும் தன்மை பெறுகிறது.
அதேசமயத்தில், அதை தடை படுத்தி, அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்றால்,
நாம், எந்த உடல் நோய்வாய்பட்டவரை பார்த்து, கருவிழி பதிவாக்கியதோ, அந்த உணர்வுகள் அருகிலேயே (உயிரில்) பதிவாக்குகின்றது.
பதிவாக்கப்படுவது இதைக்காட்டிலும், வலிமையானது.
அப்பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
அந்த துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்.
அந்த நோய்கொண்ட உயிரான்மா, துருவநட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்.
அவர் உடல் நலம் பெற வேண்டும்.
அவர் சிரமங்களிலிருந்து விடுபடவேண்டும்.
அருள் வழி வாழ வேண்டும் என்று, இந்த உணர்வுகளை, இங்கே பதிவு செய்து, ரெக்கார்ட் செய்திடவேண்டும்.
இதற்கு மத்தியில், அவருடைய வேதனை என்ற நிலைகள் அவருக்குள் அடங்கி விடுகின்றது.