தியானத்தில் “நம் உடலிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளிப்படும்…!”

dazzling soul lights

தியானத்தில் நம் உடலிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளிப்படும்…!

1.மின் மினிப் பூச்சி தன் உடலுக்குள் இருக்கும் கந்தகத்தால்
2.தான் சுவாசிக்கும் மூச்சலைகள் பட்டவுடன்
3.உடலிலிருந்தது ஒளிக்கற்றைகளை உமிழ்கின்றது.

அவ்வாறு உமிழ்த்தும் ஒளிக்கற்றைகள் மற்ற செடிகள் தாவர இனங்களின் இலைகளில் படும்பொழுது விஷ அணுக்கள் நகர்ந்து ஓடுகின்றது.

அதன் மூலம் தனக்குகந்த உணவை அது உட்கொள்கிறது. அதாவது ஒளிக் கற்றைகளை உமிழ்த்தி விஷத்தை நீக்கித் தான் வாழ்கிறது.

இதைப் போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் கவர்ந்து நம் உடலுக்குள் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.ஒளியாக உருப்பெறும் அணுவின் கருவாக உருவாக்க வேண்டும்.
4.அந்த ஒளி நம் உடலிலும் பெருகும்… ஆன்மாவிலும் பெருகும்…!
5.நம் உயிரான்மாவிலும் பேரருள் பேரொளியாகப் பெருகும்…!

அது வளர வளர நம் உடலிலிருந்து நம் மூச்சலைகள் மூலமாக நாம் பார்க்கும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உணர்வை மின் மினிப் பூச்சி ஒளிக்கற்றைகளை உமிழ்த்துவது போல் நாமும் பாய்ச்ச வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இவ்வாறு ஒளியான உணர்வை நம் மூச்சலைகள் மூலம் வெளிப்படுத்தினால்
1.எந்தத் தீமையான உணர்வும் நம் ஈர்ப்பிற்குள் நம் ஆன்மாவிற்குள் நம் உடலுக்குள் நுழைய முடியாது.
2.நமக்கு இது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும்.

அதே சமயத்தில் மற்றவர்களும் நம் மூச்சலைகள் மூலம் பாயும் மகரிஷிகளின் உணர்வலைகளை நுகர்ந்தால் அவர்கள் இருளும் அகலும். அவர்கள் தீமைகளும் அகலும்.

 

“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…?

Adi Sakthi Goddess - Matha

“இலட்சுமி நாராயணா…” என்று ஏன் சொல்கிறோம்…? 

குடும்பத்தில் நீங்கள் அனைவருமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் மறந்திட வேண்டாம்.

பெண்கள் சாபமிட்டால்
1.அந்தச் சாப அலைகள் பிறரைத் தாக்கும்.
2.சாப அலைகள் வரும் போது தீமைகளை உருவாக்கும் உடலாகத்தான் மாறும்.
3.தீமை செய்யும் பூச்சியும் புழுவாகத் தான் நம்மை மாற்றி விடும்.

பெண்பாலுக்கு அதிகமான சக்தி இருக்கிறது என்றால் குடும்பத்தில்   ஒன்றுபட்டு வாழவேண்டும். உணர்வின் தன்மை ஒன்றான செயலில் வளர வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் அதன் வழி வாழும்.

உதாரணமாகக் குடும்பத்தில் கஷ்டம் என்று வந்து விட்டால்
1.கணவனுக்கு இப்படிக் “கஷ்டம் வந்து விட்டதே…” என்று மனைவி வேதனையுடன் எண்ணினால்
2.மீண்டும் கணவனுக்கு அந்தத் தொல்லைகள் தாக்கும்.
3.கணவன் தொல்லைகளிலிருந்து மீள வேண்டும்
4.அருள் ஒளி பெற வேண்டும்,
5.அவர் தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்று மனைவியின் உணர்வுகள் வலுப் பெற்றால்
6.அதை மாற்றியமைத்துத் தொல்லைகள் மாறி கணவனுக்கு உறு துணையாக இருக்கும்.

இதைப் போன்ற நிலைகள் பெண்கள் நாள வரும் உலகத்தை உயர்வாக்கச் செய்யும் நிலையாக வளர வேண்டும்.

ஏனென்றால் முதலில் ஆதி சக்தியாக இருந்தது விஷம் தான். அது தாக்குதலால் ஏற்படும் நிலைகளில் தான் அதிகமாகி… விஷத்தின் தன்மை அழுத்தம் அதிகமாகும் போது… வெப்பமாகின்றது.

வெப்பமான பின் தான் அணுக்களாகப் பிரிந்து ஓடும் தன்மை வரும். ஓடும் நிலைகளில் தான் காந்தமாகிறது. இநத மூன்று விளைவிற்கும் தான் காரணப் பெயர் வைக்கிறார்கள் ஞானிகள்.

முதலில் பெண்பால் தான் உருவாகிறது.
1.ஆதி சக்தி என்பது விஷம்
2.ஆதிபராசக்தி என்பது இரண்டாவது வெப்பம்
3.வெப்பமான பின் ஈர்க்கும் தன்மை வரும்போது ஆதிலட்சுமி என்பது காந்தம்

(பெண் பால் என்ற நிலையில்) காந்தம் இழுத்து ஒரு பொருளை உருவாக்கும் தன்மை வரும்போது தான் பிரம்மம். ஒரு உருவின் தன்மை ஆண்பால் என்ற நிலை வருகிறது. ஆக பெண்பால் என்ற உணர்வுகள் அதனுடன் சேர்க்கப்படும் பொழுதுதான் ஒரு உருவத்தின் அமைப்பே வருகிறது.

முதலில்
1.அணுவின் தன்மையும் துடிப்பின் தன்மையும் தான் இருக்கும்
2.ஒரு உணர்வின் தன்மை மோதலாகி அந்த உணர்வின் சத்தைத் தன்னுள்  எடுத்தால் அணுத்தன்மை என்ற நிலையை அடையும்.
3.அப்பொழுது ஆண்பால் என்ற நிலை வருகிறது.

எதன் உணர்வைப் பெற்றதோ காந்தம் வெப்பம் விஷம் என்ற மூன்று உணர்வும் நுகர்ந்து கொண்ட உணர்வினை இயக்கி ஒரு இயக்கச் சக்தியாக மாற்றுகிறது.

இதைப் போன்ற நிலைகளில் பெண்பால் தான் சக்தி தான் சிவமாகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இருக்கின்றது.

நாம் எவ்வளவு பெரிய உடலாக இருந்தாலும் வேதனையின் உணர்வுகள் அதிகமாகிவிட்டால் அந்தச் சக்தி வேதனையின் உணர்ச்சி கொண்டு நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உருவாக்க வேண்டும் என்ற உணர்வினை அந்தப் பெண்பாலின் சக்தியைக் கூட்டினால் அந்த உயர்ந்த உணர்வினை வளர்க்கும் சக்தியைப் பெறுகின்றோம்.

இன்று பெண்கள் திருமணமாகும் போது
1.வரதட்சணை வரவில்லை என்றால்
2.பெண்பால் என்று உணராதபடி அவர்கள் ஒவ்வொருவரும் வரும் மருமகளை  செல்வத்திற்காக அவமதிப்பதும்
3.செல்வம் கிடைக்கவில்லை என்றால் தூஷிப்பதும்
4.இதைப்போன்ற நிலைகளில் செல்வத்திற்கு அடிமையாகி
5.அருள் உணர்வை இழந்து
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பகைமை உணர்வுதான் வளர்ந்து கொண்டு உள்ளது.

1.நல்ல குணங்கள் இருந்தால்
2.நல்ல பண்புகள் இருந்தால்
3.செல்வம் இல்லை என்றாலும்
4.அந்த அருள் செல்வத்தை வைத்து நாம் வேண்டும் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளும் நிலை  வருகிறது.
5.செல்வத்தின் அழியாத் தன்மையும் செல்வத்தில் மகிழ்ந்து வாழும் நிலையையும் கூட்டும்.

கல்யாணம் ஆகும்போது வரதட்சணையாக ஒரு லட்சம் கொடுத்தாயா..? இரண்டு லட்சம் கொடுத்தாயா..? உன் அப்பன் வீட்டிலிருந்து “கார் வாங்கி வா…” என்பது எல்லாமே விலை பேசி வாங்கும் தன்மை தான்.

பெண்கள் இதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெண்களை எந்த அளவிற்கு அடிமைகளாக அறிவிலிகளாக வைத்துள்ளது இந்தச் சமுதாயம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும்.

நல்ல குணங்கள் இருந்தால் ஒன்றுபட்டு வாழும் போது செல்வம் எவ்வளவு வேண்டுமானாலும் கூடி வருகிறது.

செல்வத்தை வாங்கி வைத்து அடுத்து அந்தச் செல்வத்தின் மீது ஆசைப் படும் போது உங்கள் அப்பன் வீட்டிலிருந்து என்ன வாங்கி வந்துவிட்டாய்…? என்று இதே பெண்கள் தான் பேசுகின்றனர். பெண்களைப் பெண்களே அவமதிக்கின்றனர்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது
1.அதனால் வரக்கூடிய பகைமை
2.இந்தச் செல்வத்தையும் பாதுகாக்க முடியவில்லை.
3.நாம் தேடிக் கொண்டிருக்கும் செல்வத்தையும் இடைமறித்து வேதனை என்ற உணர்வுகள் வருகின்றது.

வேதனைகள் வந்த பின் தன்னை அறியாமலேயே உடலிலே கடும் விஷத் தன்மையான நோய்கள் வருகின்றன என்பதையும் மறந்து விடுகின்றார்கள்.

ஆக உடல் நலம் பெற்று உணர்வுகள் வளம் பெற்றால் அந்த வலுப் பெற்றால்
1.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை
2.செல்வம் தானாக வந்து சேரும்

தீமைகளை அகற்றும் நிலைகளை அடைய எனக்கு க் குருநாதர் இந்த உண்மையை உணர்த்தினார். அனுபவபூர்வமாக அறியச் செய்தார்.

தாய்மார்கள் இந்த உலகிலே
1.சக்தி என்ற நிலைகளாகி உணர்வின் தன்மை அதிகமாகி
2.இந்தச் சூரியனை உருவாக்கியதும் இதே சக்தி தான்.

அது தான் “இலட்சுமி நாராயணா” என்பது பெண்பால்தான் – சூரியனை வளர்க்கிறது. பெண்பால் என்று வளர்ந்தாலும் ஸ்ரீதேவி பூதேவி என்று உணர்வின் தன்மை இந்த உடலாக உருவாக்கியதும்  இந்தப் பெண்பால் தான் என்ற நிலைகளை நீங்கள் மறந்திடலாகாது.

நீங்கள் வேதனை என்றோ வெறுப்பு என்றோ பகைமை என்றோ உணர்வுகளை எடுத்தால் அந்த உணர்வுகள் அதிகமாகத்தான் வளரும்.

நன்மை என்ற உணர்வு நம்மிலும் வளராது, நம் குடும்பத்திலும் வளராது, நமக்குள்ளும் அது வளராது. பகைமை உணர்வு தான் பூமியிலும் ஊரிலும் பரவும்.

குரு காட்டிய அருள் வழியில் நீங்கள் தாய்மார்கள் உயர்ந்த சக்தி பெற்றவர்கள் வேதனைப் படுதல் கூடாது வெறுப்படையும் செயல்கள் கூடாது.

1.அருள் ஒளி பெற வேண்டும்
2.நம் வீட்டில் இருள் அகல வேண்டும்
3.மெய்ப் பொருள் காணவேண்டும்
4.அருள் வழியில் நம் குடும்பம் வளர வேண்டும் என்ற உணர்வினை நீங்கள் பெற வேண்டும்.
5.உங்கள் சக்தி அங்கே செயல்படும்.

சிறு குறைகளைக் கண்டாலும் மனம் தாங்காது பெண்பால் அந்த உணர்வின் தன்மை வேதனைப் படும்போது அந்தக் குடும்பமே எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகி விடும்.

அதிகமான பாசமும் பற்றும் இருக்கும். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் குடும்பத்திலே வளரப்படும்போது நஞ்சான நிலைகளுக்கு மாற்றிடும்.

நம் குரு காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு தாய்மார்களும்
1.உங்களுக்குண்டான சக்தியைச் சீராக்குங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும்
4.என் கணவர் உடல் முழுவதும் பரவ வேண்டும் அவர் அருள் ஞானம் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் அருள் ஒளி படர்ந்து இருளை அகற்றிடும் அருள் ஞானக் குடும்பமாக வளர வேண்டும்
6.கருவுற்றிருந்தால் கருவிலிருக்கும் குழந்தைக்கும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஊட்டுங்கள்.

இந்த உலகையே இருளிலிருந்து மீட்டிடும் சக்தி உங்களுக்குத் தான் உண்டு. ஆகவே கணவனின் நிலைகள் கொண்டும் அது வளரும் பருவமல்ல, அது வளரமற்றது.

நீங்கள் அருள் ஞானத்தைப் பெற வேண்டும். என் கணவர் உயர வேண்டுமென்றால் உயர்த்திக் கொள்ளும் நிலைகள் அங்கே உண்டு.

பெண்பால் என்ற நிலைதான் ஒரு செடியானாலும் பெண்பால் என்ற உணர்வு தான் கவர்ந்து கொண்ட நிலைகள் தான் அதன் வித்தினை உருவாக்குகிறது.

பெண்கள் எந்த உயர்ந்த குணத்தை எடுக்கிறார்களோ அது அவர்களுக்குள் வளர்கிறது. கணவன்பாலும் அது வளர்க்கச் செய்கிறது.

அன்பு கலந்த உணர்வைத்தான் வளர்க்க வேண்டுமே தவிர பண்பிழந்த நிலைகளை அல்ல. அதேபோல ஆண்களும் பெண்களை மதித்து நடத்தல் வேண்டும்.

அது உயர்ந்த நிலை. பெண் தாய்க்குச் சமம். நாம் சொல்லும் உணர்வினை அது தன் கருவாக உருவாக்குகிறது. நம்மைப் பார்க்கும் போது நல்லவரென்றால் நல்லது என்று உருவாகிறது. நல்லது என்று சொல்லே இங்கே வருகின்றது.

வேதனை என்ற உணர்வுகளை அங்கே வளர்க்கப்படும் போது மனதிற்கும் அந்த நிலை வரும். வெறுப்பின் உணர்வு வரும் போது  அதை மாற்றி அமைத்திடும் சக்திகளை நாம் மாற்றிட வேண்டும்.

ஆண்கள் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் தன் மனைவி பெற்று அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று தன் மனைவிக்கு இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

பெண்கள் எப்பொழுதுமே ஈர்க்கும் தன்மை – கவரும் சக்தி பெற்றவர்கள்.

ஒரு வேதனை என்ற உணர்வை நுகர்ந்து விட்டால் அவர்கள் அறியாமலே அந்த உணர்வுகள் அவர்களுக்குள் சென்று அவர்கள் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகிறது.

ஆண்கள் மன உறுதி கொண்டு் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தான் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
1.தன் மனைவிக்கும் அந்தப் பேரருள் பெற வேண்டும்
2.மன உறுதியும் மன வலிமையும் இருளை அகற்றும் அந்த வல்லமை பெற வேண்டும் என்ற உணர்வை  எடுத்துக் கொண்டால்
3.கணவன் மனைவி உணர்வு இரண்டும்  கலந்து அந்த உணர்வின் தன்மை செயலாக்கம் பெறும்.
4.இது பெண்களின் செவிகளில் பட்ட பின்  உணர்வில் நெகிழ்ந்தும் உயர்ந்த நிலையை அது உருவாக்கிவிடும்.
5.அதன் சொல்லும் நம்மை இனியதாக்கும் நிலையும்
6.நம் வீட்டிற்குள் அருள் ஞானத்தைப் பெருக்கும் நிலையும் வரும்.

முருக பக்தி கொண்ட ஒரு உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்த “(நேரடி) அனுபவம்” – நடந்த நிகழ்ச்சி

Image

endless world

முருக பக்தி கொண்ட ஒரு உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்த “(நேரடி) அனுபவம்” – நடந்த நிகழ்ச்சி

 

ஒரு சமயம் ஒரு   கிராமத்துப் பக்கம் செல்கின்றேன். வெறும் ஒரு துண்டு வேஷ்டி கட்டிக் கொண்டு செல்கின்றேன்.

 

நான் யார் வீட்டிலேயும் சாப்பாடு வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிட்டார் குருநாதர்.

 

ஒரு டப்பாவில் அரிசி வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ரெண்டு தீப்பெட்டி. கத்திரிக்காயை மோரில் போட்டு ஊற வைத்துக் காய வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை ஊறப் போட்டு காயப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அதில் உப்பெல்லாம் போட்டு வைத்த்துக் கொள்ள வேண்டும். உப்பைத் தனியாக எடுத்துச் செல்ல வேண்டியதில்லை.

 

அந்த டப்பாவில் கயிறைக் கட்டிக் கிணற்றிலிருந்து   தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். யார் வீட்டிலேயும் தண்ணீர் கூட வாங்கக் கூடாது என்றும் சொல்கிறார் குருநாதர்.

 

ரெண்டு விறகுக் கட்டையை செத்தையை எடுத்து வந்து நெருப்பை மூட்டி அந்த டப்பாவில் அரிசியைப் போட்டு வேக வைக்க வேண்டும்.

 

அந்தத் தண்ணீர் கொதிக்கும் பொழுது சிறிதளவு அரிசி போட்டால் போதும். அந்த அரிசி உப்பு எல்லாம் வெந்து வரும்போது நல்ல மணமாக இருக்கும்.

 

இதுதான் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்.

 

பசி என்று உனக்கு வரப்படும்பொழுது நீ பிறரிடம் போய் நிற்கக்கூடாது. “நீ சமைத்து… அதை நீ ரசித்து… நீ உணவாக உட்கொள்” என்கிறார்.

 

இப்படி அனுபவத்தைக் கொடுக்கிறார்.

 

இப்படி வரப்படும் பொழுது ஒரு சமயம் ஒரு வீட்டுப் பக்கம் போகச் சொன்னார் குருநாதர்.

 

அது ஒரு சிறிய வீடு. வெளியில் ஒரு திண்ணை. அங்கே போய் “எம்மா…! என்று உட்காந்தேன். எனக்கு மிகவும்  களைப்பு.

 

அடுத்து “குருதேவா…!” என்று சொல்லி உட்கார்ந்தேன்,

 

அவரை (குருநாதரை) நினைத்து என்னை இப்படியெல்லாம் சோதிக்கின்றாயே…! சம்சாரத்தைக் காப்பாற்றிக் கொடுத்தீர்கள். நான்கைந்து குழந்தை குட்டியும் இருக்கின்றது.

 

என்னைப் பிச்சைக்காரனாக இப்படிச் சுற்ற விட்டுவிட்டாயே…! “இது உனக்கே நியாயமா…?” என்று கேட்டு (புலம்பி) அங்கே திண்ணையில் உட்கார்தேன்.

 

இந்தக் குரலைக் கேட்டவுடன் உள்ளே உட்கார்ந்திருக்கின்ற ஒரு  அம்மா சப்தம் போட்டது.

 

முருகா…! நான் நன்றாக இருக்கும் பொது எல்லோரும் இருந்தார்களே. என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்களே.

 

என்னை ஒருவரும் பார்க்க வரவில்லை. கையெழுத்து வாங்குகிற வரையிலே “அம்மா… அப்பா… தாயே…” என்றெல்லாம் சொன்னார்கள். எல்லாம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு இப்பொழுது ஒருவரும் வரவில்லையே….!

 

முருகா…!

 

“அன்றைக்கு என் மடிமீது உட்கார்ந்து ஆடுவாயே… பாடுவாயே… முருகா…!” என்று சொல்லி வருத்தப்படுகின்றது.

 

நான் இங்கே திண்ணையில் உட்கார்ந்து “என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே…  ஈஸ்வரா… குருதேவா…” என்று குருவை நினைத்துப் புலம்பினால் அங்கே அந்த அம்மா அப்படிச் சொல்லி  வருத்தப்படுகின்றது.

 

இது நடந்த நிகழ்ச்சி.

 

உள்ளேயிருந்து  அந்தக் குரல் வருகின்றது. நான் எவ்வளவு சொத்து வைத்திருந்தேன். எனக்குப் பிள்ளை இல்லையே. முருகா…! என்று உன்னைத் தானே பிள்ளையாக நினைத்தேன்.

 

நீ என் பிள்ளை மாதிரி என் மடிமேல் வந்து உட்காருவாயே. எல்லாவற்றையும் பார்த்தேனே. என் பிள்ளையாக உன்னை நினைத்தேனே. உன்னையே நான் வணங்கினேனே. உன்னையே தஞ்சம் என்று இருந்தேனே. என்னை இப்படிச் சோதிக்கின்றாயே.

 

நான் உன்னையே நம்பி இருந்தேன். சொத்தையெல்லாம் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

 

எல்லாவற்றையும் வாங்கிவிட்டார்கள். இப்பொழுது ஒருவரையும் காணோமே. நான் அனாதையாக இருக்கின்றேனே… முருகா…! என்று அந்த அம்மா புலம்புகின்றது.

 

நான் இங்கே “ஈஸ்வரா…” என்று சொல்லித் தவித்துக் கொண்டிருக்கிறேன். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில் இப்படியெல்லாம் உணர்த்துகின்றார் குருநாதர்.

 

என் வாழ்க்கையில் கண்ட நிகழ்ச்சி இது.

 

நான் உள்ளே சென்றேன். அந்த அம்மா இயற்கைக் கழிவுகள் எல்லாம் போய் அப்படியே அசிங்கமாகத் துணி ஏதும் இல்லாமல் இருந்தது.

 

முருகன் மேல் மிகுந்த பக்தியாக அந்த அம்மா இருந்ததாலே “நான் வேண்டியதற்காக முருகன் வந்துவிட்டான்…! முருகன் வந்துவிட்டான்…! முருகா…!” என்று சப்தம் போடுகின்றது.

 

வீட்டிலிருந்த பாத்திரத்தை எடுத்துத் தண்ணீரை எடுத்துக் கழுவிவிட்டு அந்த அம்மா துணிகளைத் துவைத்துக் கொடுத்தேன்.

 

அப்புறம்  வேறு துணியை எடுத்து கட்டச் சொன்னேன். “என்ன அம்மா விவரம்? என்று கேட்டேன்.

 

அந்த அம்மாவிற்கு வயிற்றால் போய்க் கிடக்கின்றது. கண்கள் எல்லாம் மங்கிப் போயிருக்கிறது. நினைவு “முருகன்…” என்ற நிலையில் வருகிறது.

 

முருகனை அழைத்த போது “உடனே… அவன் ஓடி வந்தான்…” என்று கதைகளில் சொல்வார்கள் அல்லவா. அந்த மாதிரி நினைத்து இந்த எண்ணத்தைக் கொண்டு என்ன எண்ணுகின்றது.

 

உன் முருகன் உன்னிடம் தான் இருக்கிறான். முருகன் உன்னைக் காப்பாற்றிவிட்டான். உன் முருகன் சொல்லித்தான் நான் இங்கே வந்தேன் என்று அந்த அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன்.

 

என்னை இங்கே வரச் சொன்னான். அதனால் நான் இங்கே வந்தேன். உன்னுடைய கஷ்டத்தையெல்லாம் நீக்கி விட்டான்.

 

அந்த முருகன் சென்ற இடம் ஆறாவது அறிவின் தன்மையான கார்த்திகேயா..,

1.இன்று ஒளியின் தன்மையாக இன்று விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

2.நீ அவனை நினை அம்மா. அவன் விண்ணிலே இருக்கிறான்.

3.அந்தக் கார்த்திகேயா என்று சொல்லி நீ அவன் நிலையை அடைய வேண்டும் என்று

4.நீ இதையே நினைத்துக் கொண்டிரு அம்மா.

5.நீ அவனுடன் போய்ச் சேர்ந்து விடுவாய்.

6.இந்த இடம் வேண்டாம் அம்மா.

7.பழி தீர்க்கும் எண்ணம் வேண்டாம் அம்மா என்று சொல்லி அப்பொழுது இதை உணர்த்தினேன்.

 

ஏனென்றால் என் சொத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள் என்று நினைத்துப் “பாவிகள் உருப்பட மாட்டார்கள்…” என்ற எண்ணத்தை எடுத்தால் அவர்கள் உடலுக்குள் சென்று பேயாகப் பிறப்பாய் அம்மா. “அது வேண்டாம் அம்மா…” என்று சொன்னேன்.

 

இது என் வாழ்க்கையில் அனுபவித்த நிலைகள் கொண்டு அந்த அம்மாவிற்குச் சொன்னேன். அதற்கப்புறம் அந்த அம்மாவிற்கு உதவியெல்லாம் செய்தேன்.

 

அந்த நேரத்தில் குருநாதர் உணர்த்தி “நீ உடனே வெளியே போ…” என்று என்னைப் போகச் சொல்லிவிட்டார்.

 

அந்த அம்மாவிற்கு வேண்டிய உதவி எல்லாம் நீ செய்துவிட்டாய். அந்த ஆன்மா வெளியேறப் போகும் போது  உன்னை எண்ணி “அது உனக்குள் வந்துவிடும்டா…!” என்று சொல்கிறார்,

 

“இது என்னடா… வம்பு…!” என்று நான் நினைத்தேன்,

 

இப்பொழுது நீ உதவி செய்தற்கு நன்றிக் கடனாக அது இறந்தது என்றால் அது உன்னிடம் தான்  வரும்.

 

அப்புறம் “முருகா…! என்ற நிலைகளில் நீயும் “முருகா…முருகா…” என்று தெருவில் போக வேண்டியது தான் என்று இதையும் உணர்த்துகின்றார் குருநாதர்.

 

உதவி செய்த அந்த உணர்வு கொண்டு அந்த ஆன்மா வரப்படும் பொழுது அந்த  (அம்மாவின் எண்ணம்) வலுவின் தன்மையால் நீ ஏங்கப்படுவாய்.

 

ஏனென்றால் அந்த ஒவ்வொரு நிலையையும் இப்படி அனுபவ ரீதியாகத்தான் குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

 

காரணம் பிறிதொரு ஆன்மா இந்த உடலில் பக்தி கொண்ட நிலைகளில் இருந்தாலும்

1.“அது எவ்வாறு இருக்கும்?

2.அதிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்? என்பதற்காகத்தான்

3.அங்கே அவர் அந்த உடலில் இப்படித் திசை திருப்பச் சொல்கிறார்.

 

மகரிஷியின் அருள் சக்தி நான் பெறவேண்டும் என்று அந்த அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் புரியாது. அதை அந்த அம்மாவிற்குப் புரிவதற்காக அந்த அம்மா பாஷையிலேயே சொன்னேன்.

 

போக மாமகரிஷி ஆறாவது அறிவைத் தெரிந்து கொண்டவன், அவன் ஒளியின் சரீரமாகி விண்ணிலே இருக்கின்றான்.

 

முருகனின் அருள் பெற்று அந்தப் போக மாமகரிஷி சப்தரிஷி மண்டலத்தில் இருக்கின்றான். அவர்களுக்குத் தகுந்த மாதிரி அந்தப் பக்தியின் நிலைகளில் அப்படிச் சொன்னேன்.

 

(ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா என்று போக மாமகரிஷி ஒளியின் சரீரமானான் என்று அதைச் சொன்னால் அந்த அம்மாவிற்குப் புரியாது.)

 

ஆகவே முருகன் அருள் பெற்று போகன் இன்று அங்கே இருக்கின்றான். அவனுக்குக் கொடுத்த அருளும் முருகன் உனக்குக் கொடுப்பான்.

 

போகன் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அங்கே சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான்.

1.நீ அந்தச் சப்தரிஷி மண்டலத்தையே எண்ணிக் கொண்டிரு அம்மா..

2.நீ அங்கே அவனிடம் போய்ச் சேரம்மா…! என்று சொல்லிவிட்டுக்

3.கடைசியில் திண்ணைப் பக்கம் வந்து நான் உட்கார்ந்து விட்டேன்.

 

அந்த அம்மா இறந்து விட்டது என்றால் நான் தான் ஏதாவது செய்துவிட்டேன் என்று சொல்லி அந்தப் பக்கம் யாராவது வந்தாலும் வம்பு என்று வந்துவிட்டேன்.

 

அந்த அம்மாவின் செயலாக்கங்களும் உடலை விட்டு எப்படி அந்த அம்மாவின் உயிராத்மா பிரிகிறது என்றும்

1.சிறிது தூரம் சென்று

2.அதை தியானத்தால் அப்படியே பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.

 

அந்த அம்மாவின் சொல் இப்படி மாறுகிறது.

 

எதைப் பதிவு செய்தோமோ

1.“முருகா…! போக மாமகரிஷி போன அந்த இடத்திலேதான்

2.நீ இருக்கின்றாயாமே…! என்னை அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடப்பா என்று

3.”அந்தக் கடைசிக் குரல்…” அப்படியே சன்னம் சன்னமாக இறங்குகிறது.

 

அந்த உணர்வின் தன்மை வந்தபின் அந்த ஆன்மா வலு பெறுகின்றது. அங்கே சப்தரிஷி மண்டலமே போய்ச் சேருகிறது.

 

இது அனுபவ ரீதியில் தெரிந்து கொண்ட நிலை.

தவறு செய்தவர் யாரும் “தன் குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை” – எதை எப்படிச் செய்தாலும் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாது

Image

உயிரே கடவுள்

தவறு செய்தவர் யாரும் “தன் குற்றத்தை ஏற்றுக் கொள்வதில்லை” – எதை எப்படிச் செய்தாலும் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாது

 

நாம் அனைவரும் குரு காட்டிய அருள் வழியில் செல்ல வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றோம்.

 

இப்பொழுது யாராவது திட்டுகிறார்கள் அல்லது சண்டை போடுகிறார்கள். அவன் மோசம் செய்தான். அவன் அங்கே சென்று திருடினான் என்று இதைக் கேட்டுப் பதிவு செய்து கொண்டீர்கள் என்றால் அந்த நினைவு வரும் பொழுது என்ன செய்யும்?

 

அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

 

அதற்குத் தகுந்தவாறு அவரைக் குறை கூறுவோம். குறை கூறும் பொழுது குறையான உணர்வுகளை நுகர்கின்றோம்.

 

குறையின் உணர்வுகள் அணுக்களாகி அதனின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பெருகுகின்றது.

1.நமக்குள் உள்ள நல்ல குணங்களின் தன்மையை இது அழிக்கின்றது.

2.இதுவே நமக்குள் கடைசியில் நோயாக வருகின்றது.

3.நம் சிந்திக்கும் திறனையும் இழக்கச் செய்கின்றது.

4.சிந்தனையற்ற செயல்களையும் செயல்படுத்தச் செய்கின்றது.

 

பின் சிந்தனையற்ற செயல்கள் செயல்படும் பொழுது

1.நாம் சிந்தனையற்ற செயல்கள் செய்தாலும்

2.”நாம் செய்வதுதான் நியாயம்..,” என்று வாதிப்போம்.

3.தவறு செய்தோம் என்பதைச் சிந்திக்கும் நிலையே இல்லாது போய்விடுகின்றது.

 

ஒருவர் திருடுகிறார் என்றால் அவரிடம் கேட்டால் “நான் திருடவே இல்லை…,” என்பார்.

 

ஏனய்யா.., நீ தப்பு செய்தாயா? என்று கேட்டால், நான் பார்த்தேன் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் “நான் ஒன்றுமே செய்யவில்லை..,” என்பார்கள்.

 

தவறு செய்தவர் தன் தவறை தன் குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் இல்லை. தவறு செய்வதே தன்னை அறியாது செயல்படுத்துகின்றது. ஆனால் தவறு செய்தாலும் அதற்குண்டான நியாத்தைக் கற்பிக்கும் நிலையே இன்று உருவாகிறது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதை எதை எப்படிச் செய்தாலும் நம் உயிரிடமிருந்து மட்டும் யாரும் தப்பவே முடியாது.

 

நாம் எண்ணியது எதுவோ அதை ஒவ்வொரு நிமிடமும் “ஓம் நமசிவாய ஓம் நமசிவாய” என்று உடலாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

 

நாம் எண்ணிய குணங்கள் இணைந்து ஒரு வித்தாகின்றது. எந்தக் குணத்தின் தன்மையை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் நிலைக்கொப்பத்தான் இந்த உடலுக்குப் பின் நாம் அடுத்த உடல் பெறுவோம்.

 

இதை நினைவுபடுத்துவதற்குத்தான் சிவன் ஆலயங்களில் நந்தீஸ்வரன் “சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று உணர்த்தியுள்ளார்கள் ஞானிகள்.

 

நாம் எதையெல்லாம் நுகர்கின்றோமோ அது நமக்குள் சென்று உருவாகின்றது.

 

1.இதில் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ

2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலை உருவாக்கிவிடும் உயிர்.

 

ஆகவே பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின் நாம் எந்த நிலைகளில் இன்று வாழவேண்டும் என்று சற்றுச் சிந்திக்க வேண்டும்?

 

தீமைகளை வென்றவன் ஒளியின் சரீரம் பெற்றவன் துருவன். அவனைப் பின்பற்றிச் சென்றோர் ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக பெற்றவர்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷி மண்டலம்.

 

நாம் மனிதனான பின் இப்பொழுது எங்கே செல்ல வேண்டும்…?

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அழியாச் செல்வம் என்ற நிலையில்  ஒளி உணர்வை எடுத்து வளர்த்திடல் வேண்டும்.

புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

Image

Mindful bliss

புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

 

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்றால் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் அதைக் கேட்ட சிறிது நேரத்தில் உடலில் “பிசு…பிசு…” என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்?

1.ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.

2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.

3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.

4.குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “நம் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடம் தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் மனம் அமைதியாக இல்லை என்றால் புறத் தூய்மை செய்து பல நறுமணங்களைப் போட்டாலும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டாலும் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மை செய்யும்  பழக்கம் வந்து விட்டால் நம் மனதைப் பாதிக்கும் நிலைகளிலிருந்து விடுபடலாம்.

காய்கறிகளை வேக வைக்காமல் “பச்சையாக உட்கொண்டால்… நாம் எங்கே போவோம்…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்

Image

vegetables nutrition

காய்கறிகளை வேக வைக்காமல் “பச்சையாக உட்கொண்டால்… நாம் எங்கே போவோம்…!” என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

பச்சைக் காய்கறிகளை “வேக வைக்காமலே நான் சாப்பிடுவேன்…!” என்று சிலர் சாப்பிடுவார்கள்.

 

அந்தப் “பச்சை காய்கறி ஒன்றை மட்டும்” தேடி அது விரும்பி்ச் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

காய்கறிக்குள் புழு இருக்கும். அந்தப் புழு அந்த உணர்வை மட்டும் எடுத்து உண்வாக உட்கொண்டு வாழ்கிறது.

 

நாம் இந்த மனித வாழ்க்கையில் காய்களை வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்

1.நான் மிக வலுவாக இருப்பேன் என்று எண்ணுவார்கள்.

2.அந்த வலுவின் தன்மை இங்கே அதிகரிக்கும்.

 

மாடு அந்தக் காயை அதிகமாகச் சாப்பிட்டு இருந்தால் நாம் உடலை விட்டுச் சென்றபின் நம் உயிரான்மா அந்த “மாட்டின் ஈர்ப்புக்குள்” போகும்.

 

ஆனால் மாடு மற்ற உணர்வின் சத்து அதிகமாகப் போகும் போது அதன் நிலைக்குச் செல்லாது மற்ற உணர்வுகள் அதிகமாக இருக்கும்.

 

ஓர் புழு காய்கறியின் நிலைகளில் வீழ்ந்தாலும் அந்தப் புழு அதை உணவாக உட்கொண்டால் அதனின் வலுவே அதனின் உணர்வில் உண்டு.
முட்டைக்கோஸைப் பச்சைச் சாப்பிட்டு நான் நன்றாக இருப்பேன் என்று எண்ணினால் அந்த முட்டைக்கோஸில் உள்ள

1.புழுவின் ஈர்ப்புக்குள் போகும்.

2.புழுவாகப் பிறப்போம். இது கூர்மை அவதாரம்.

 

இவைகளெல்லாம் தெளிவாக வியாசகரால் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதாவது உபநிஷத்துக்களில்

1.தான் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம்

2.உணர்வுகளின் மாற்றத்தினால் நாம் எவ்வாறு இருக்கிறோம்

3.அடுத்து எவ்வாறு ஆவோம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்.

 

மனிதனின் குணத்தின்  நிலையும் மனிதன் வாழ்க்கையில் எண்ணும் நிலைகளையும் காட்டியுள்ளார் வியாசகர்.

 

தாவர இனத்தின் சத்துக்குள் இருக்கும் மணமே மனிதனுக்குள் வரும் போது அதுவே எண்ணமாகின்றது. அதன் குணத்தின் சிறப்பாக அது வேலை செய்யும்.

 

உதாரணமாக மிளகாயினுடைய குணம் காரம்.

 

அந்தக் காரத்தை நாம் உணவாக விரும்பிச் சாப்பிட்டால் நம் உடலில் நாக்கு எரிச்சல் கண் எரிச்சல் என்று இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.
1.அதே காரத்தின் உணர்வுகளை நாம் அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க

2.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லை மற்றவர்கள் கேட்கப்படும் போது

3.கேட்போருக்கு நம்மைப் பார்க்கும் போது எரிச்சல் வருகின்றது.

 

அந்தக் குணத்தின் தன்மை எதுவோ அந்த எண்ணம் தான் நமக்குள் வரும்.
அதைப்போல ஒருவர் எரிந்து பேசுவதும் எரிச்சலான செயல்களைச் செயல்படுத்துவதும் அந்தக் குணத்தின் தன்மையே இங்கு வரும்.

 

ஆகவே அந்தத் தாவர இனச் சத்தைக் காரத்தை அதிகமாகச் சாப்பிடுகிறேன் என்று வந்தால் கடைசியில் எங்கே செல்வோம்?

 

அந்தக் காரத்தைக் கிளி சாப்பிடுகின்றது. மிளகாயைக் கிளி விரும்பி உட்கொள்ளும். மிளகாயை நாம் விரும்பி உட்கொண்டால் கிளி காரத்தைச் சாப்பிடும்போது அதனுடைய உடலுக்குள் தான் நம் உயிரான்மா செல்லும்.

 

அதே போல் எலி காரத்தைத் தாங்கும் அளவுக்கு மிளகாயைச் சாப்பிட்டு அதிகமாக இந்த நெடியைத் தாங்கும் நிலைக்கு வருகின்றது.

 

ஆனால் கார உணர்வின் சத்தை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் நாம் கை கால் இயங்காது வாதம் ஆகின்றது. மேலும் ரத்தக் கொதிப்பாக மாறி நம் உடலே குறுகுகின்றது.

 

எத்தகைய காரத்தின் தன்மையை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டமோ அது முன்னணியிலே வந்து விடுகிறது.

 

இதனை அறிவதற்குத்தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று பெயரை வைத்துள்ளார்கள் ஞானிகள்.

 

நம் உடலிலே ஆயிரக்கணக்கான குணங்கள் இருப்பினும் அதிலே

1.நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றமோ

2.அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளிலே தான்

3.நம்முடைய சொல் செயல் பார்வை எல்லாமே இருக்கும்.

 

ஆகவே தான் ஆதியிலே வேக வைத்துச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தியவன் அகஸ்தியன். முதன் முதலில் நெருப்பைக் கண்டுபிடித்தவனும் அகஸ்தியன் தான்.

 

வேக வைத்துச் சாப்பிடும்போது காய்கறிகளில் உள்ள காரல்கள் போய்விடுகின்றது. அதனுடன் பலவகையான பொருள்களைச் சேர்க்கும் பொழுது அது சுவையாகின்றது.

 

அதை உட்கொள்ளும்போது மகிழ்ச்சி என்ற மணம் வருகிறது.

 

மாறாகப் பச்சையாகச் சாப்பிட்டுப் பாருங்கள்.

1.எந்தக் காயைப் பச்சையாக உட்கொண்டீர்களோ

2.அந்த மணம் உங்கள் உடலிலிருந்து வெளிப்படுவதைக் காணலாம்.

 

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியமாக இருந்ததின் உட்பொருள் என்ன?

Image

God

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பைத்தியமாக இருந்ததின் உட்பொருள் என்ன?

 

நமது குரு காட்டிய அருள் வழி – அவர் வேகா நிலை என்ற நிலையை இந்த உடலில் சாகாக்கலையாக மாற்றினார்.

 

ரோட்டிலே செல்லும்போது பைத்தியக்காரர் மாதிரி போஸ்ட் கம்பியில் தட்டுவார்.

 

போஸ்ட் கம்பியில் தட்டும்போது “என் சாமி தட்டுகிறீர்கள்..,” என்று கேட்டேன்.

 

1.நீ தான்டா.., கேட்கிறாய்..,

2.வேறு எவன் கேட்கிறான்?

3.என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்கிறார்கள்.

 

“நீ… ஏன்…?! என்று கேட்பதால் உனக்கு விளக்கம் சொல்கிறேன் என்பார் குருநாதர்.

 

இந்த உலகம் பைத்தியக்கார உலகமாக இருக்கின்றது. அவன் ஆசை எதுவோ அதன் ஆசை கொண்டு அவன் பைத்தியமாகின்றான். மற்றதைச் சிந்திப்பதில்லை.

 

இப்பொழுது என் ஆசை இந்த உடலின் மீது பற்று இல்லை. அருள் ஒளி என்ற பற்றுக்கு வருகிறது.

 

அதன் உணர்வை நான் பெறச் செய்யப் போகும்போது இதன் நிலையில் எவருமே என்னைப் பற்றிடாது நான் செல்கிறேன் என்று சொல்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

பைத்தியக்காரன் போல் இருந்தால் “சரியான பைத்தியம்” என்று என்னை ஒதுக்கிவிடுவான்.

 

ஆக அதே சமயத்தில் சில உண்மையின் உணர்வுகளை நான் செய்தாலும், “சாமி செய்தார்…” என்று என் மீது பற்று வரும். இந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி என்னை இழுத்துவிடுவான்.

 

ஆகையினால் இழுத்தாலும் நான் பைத்தியக்காரனாகத் தான் இருப்பேன்.

 

நான் பைத்தியம் என்றால் என்ன? இந்த உடலின் நிலையில் பிடிப்பதில்லை. இந்த உடலுக்குப்பின் அருள் என்ற உணர்வை நான் எடுத்துக் கொள்கிறேன்.

 

1.அவனுக்கு என்னைப் பார்த்தால் பைத்தியமாகத் தெரிகிறது.

2.ஆனால் “அவன் பைத்தியக்காரன்” என்று அவன் உணர்வதில்லை.

 

இன்று மக்களின் நிலைகள் எப்படி இருக்கிறது? அவர்கள் பைத்தியம் என்று நான் சொல்லும்போது அவர்கள் பைத்தியக்காரர்கள் ஆகிறார்களே தவிர

1.நான் இந்த உடல் பற்றைப் பிடிக்காதவன்

2,அருள் உணர்வுடன் நான் பைத்தியமாகின்றேன் என்று

இப்படி விளக்கங்களைச் சொல்வார்.

 

ஒவ்வொரு நிமிடத்திலும் நமது நிலைகளில் “பிறருடைய தீமைகளின் நிலைகளைக் கேட்காது விட்டால்…” நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

 

ஒருவர் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கும்போது “நமக்கு எதற்கு இந்த வம்பு…?” என்று சென்றுவிட்டால் நம்மைப் பைத்தியக்காரன் என்று சொல்வார்கள்.

 

வாழ்க்கையில் நீங்கள் இந்த மாதிரிச் சொல்லிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளைச் சரி என்று சொல்லி “அவன் ஆசைப்படி அவனே வைத்துக் கொள்ளட்டும்…” என்று நாம் ஒதுங்கிச் சென்றால் “சரியான பைத்தியம்.., இது” என்று நம்மைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

 

அதே சமயத்தில் “அவன் திட்டும்போது நாம் காது கொடுத்துக் கேட்காது சென்றால்…” பைத்தியம் என்று நம்மைச் சொல்வார்கள்.

 

தியான வழியில் இருக்கும்போது சொல்வார்கள். யாராவது சொன்னாலும் கூட கொஞ்சம் கூட ரோசம் இல்லை. அவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

 

ஒருவரைச் சரி இல்லை என்று கேட்டவுடனே

1.அவனை “உதைத்தோம்…” என்றால்

2.அப்பொழுது மனிதன் என்று சொல்வார்கள்.

 

இந்தத் தியானவழியில் நீங்கள் சென்றால் மற்றவர்கள் சுத்தமாகவே பைத்தியம் என்று சொல்வார்கள்.

 

அடுத்தவர்கள்… ஏதாவது சொன்னாலும் பாருங்கள்…! இவன் ஒன்றுமே சொல்ல மாட்டான்… என்று சொல்லிவிட்டு,

1.சூடு சுரணை எதுவும் இல்லை

2.இவன் ஒரு பைத்தியக்காரன் என்பார்கள்.

3.ஆனால் அவன் பைத்தியம் என்று அவன் உணர்வதில்லை.

 

தான் நுகரும் உணர்வின் தன்மை தன்னை ஒரு பைத்தியக்காரனாக ஆக்குகின்றது. தன்னையறியாமலே அந்த உணர்வுகள் அவனுக்குள் செயல்படுகிறது என்று அவன் உணர்வதில்லை.

 

ஆனால் நம்மைப் பைத்தியக்காரன் என்பார். இதைப் போன்று இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிதல் வேண்டும்.

உயிரினங்களை உயிருடன் தின்பதும் பாம்பின் விஷத்தைப் போதையேற்றுவதற்கும் பிரேதங்களை உட்கொள்வதும் செய்ததின் விளைவுகளை உலகம் அனுபவிக்கும் நிலைக்கு இன்று வந்துவிட்டது

polaris-northstar

உயிரினங்களை உயிருடன் தின்பதும் பாம்பின் விஷத்தைப் போதையேற்றுவதற்கும் பிரேதங்களை உட்கொள்வதும் செய்ததின் விளைவுகளை உலகம் அனுபவிக்கும் நிலைக்கு இன்று வந்துவிட்டது 

இன்று சிங்கப்பூர் இதைப் போல சில பகுதிகளில் குரங்கின் சத்தை நாம் சாப்பிட்டால் உடலுக்குச் சத்து என்று சாப்பிடுகின்றார்கள்.

ஒரு இடுக்கி மாதிரிக் குரங்கின் கழுத்தில் கொண்டு வந்து மாட்டி வைத்து விடுவது, அதை மாட்டி வைத்து என்ன செய்கிறார்கள்?

மேல் ஓட்டை அப்படியே தட்டி விடுவது. அதில் இரண்டு மிளகாய்த் தூள் இதெல்லாம் போட்டு உறிஞ்சிச் சாப்பிட்டால் அது மனிதனுக்குச் சத்து என்ற நிலைகள் இப்படியும் உண்டு.

சில பகுதிகளில் போதை மருந்து சாப்பிட்டாலும் அதனால் தனக்குள் போதை ஏறவில்லை என்றால் அதற்காக வேண்டி நாகனை (பாம்பை) வைத்துள்ளார்கள்.

அதைச் சில கடைகளில் வைத்து இந்த போதை பத்தாததற்கும் தனக்கு அந்தப் போதையின் சத்தைச் சேர்ப்பதற்காகவும் மனிதன் அந்த மண்ணின் சத்துக்கும் இந்த உணர்வின் சத்து இது பழக்கப்பட்டதனால் இதனின் உணர்வின் துணை கொண்டு அந்தப் பாம்பைச் சீறச் செய்து நாக்கில் கொத்த வைக்கிறது.

அது கொத்தியவுடனே இவர்களுக்குப் போதை ஏற்படும். அதற்கு இருநூறு ரூபாய் முன்னூறு ரூபாய் என்று ரேட்.

நாகன்களிலேயே பல விதமான நாகன் உண்டு. அதற்குத் தகுந்த காசு உண்டு. இவைகளெல்லாம் மனிதன் விஞ்ஞான அறிவால் தன் உடலின் சுகத்திற்கு இத்தனை நிலைகளையும் செய்கின்றான்.

சில இடங்களிலெல்லாம் பார்த்தோம் என்றால் இன்றைக்கு மறைமுகமாக சுவையாக இருக்கிறது என்று மனிதனுடைய பிரேதங்களையே உணவாக உட்கொள்கிறார்கள்.

நோயில்லாது பிரேதம் வந்தால் அல்லது ஆக்சிடென்ட் ஆகியவர்களைப் புதைத்தால் புதை குழியில் உள்ளே வைப்பதற்குப் பதில் அங்கே உள்ளவர்களிடம் காசைக் கொடுத்து ஆளுக்கொரு பகுதி என்ற நிலைகள் வாங்கிக் கொள்கிறார்கள்.

பின் அந்தத் தசைகளை முழுவதும் சீவி எடுத்து புதை குழியில் எலும்பைப் போட்டு மூடி வைத்து விட்டுவிடுகின்றார்கள். அந்தத் தசைகள் எல்லாம் இன்றைக்கு ஹோட்டல்களில் நாகரீகமானதாகச் சாப்பாட்டுக்கும் போய்க் கொண்டு இருக்கிறது.

இன்று அமெரிக்காவில் விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்துள்ளது என்றாலும் அசுர உணர்வுகள் கொண்டு அவன் நர மாமிசமாக உணவாக உட்கொண்டுள்ளார்கள்.

ரோட்டில் நடந்து சென்றால் போதும். அலுங்காமல்… “வாருங்கள் என் வீட்டிற்குப் போகலாம்…” என்று நண்பரைப் போல் பழகுகின்றான். வீட்டுக்குள் போனவுடன் “டக்…” என்று ஆளைக் கத்தரித்து விடுகிறான். உறுப்புகள் எல்லாம்  ஐஸ் பெட்டிக்குள் போய் விடுகிறது.

எலும்பெல்லாம் தூக்கிப் புதைத்துவிடுகின்றான். ஐஸ் பெட்டியிலிருந்து எடுத்து அதைச் சாப்பாடாகச் சாப்பிட்டுக் கொள்கிறான். (தினசரி பத்திரிக்கை படிப்பவர்களுக்கு இது தெரியும் – பார்க்கலாம் ஃப்ரிட்ஜைத் திறந்தால் மனித உறுப்புகள் இருந்தது. மேலை நாடுகளில் இப்படி நடக்கிறது என்று)

இப்படியும் நடக்கின்றது. (சாமிகள் இதை உபதேசித்த வருடம் 1993)

அதை போல இன்றைக்குக் குழந்தைகள் காணாமல் போனதென்றால் இங்கிருந்து வியாபாரத்திற்கு ஆகின்றது. மனிதனின் கண்கள் நல்ல பேரத்திற்குப் (பணம்) போகின்றது.

இன்றைக்கு சாதாரணமாக ஒரு வீட்டில் கொள்ளையடிப்பதைக் காட்டிலும்  ஒரு பையனைக் கடத்திக் கொண்டு போய்விடுகிறார்கள்.

கண்களை எடுப்பதற்கு அதற்கென்று ஒரு டாக்டர் இருக்கிறார். அந்த டாக்டர் தான் கற்றுக் கொண்ட நிலைகளில் எல்லாம் தெரிந்து கொள்கிறான். கண்களை எப்படி நோண்டி எடுப்பது? இதை ஐஸ் பெட்டியில் எப்படி வைப்பது?

அடுத்து இதை எடுத்துக் கொண்டு போய் விற்று விட்டால் இதற்கு நிறையப் பணம் கிடைக்கிறது. அதில் வரக்கூடிய இரத்தத்தைத் தனியாகப் பிடித்துச் சேமித்து அதை விற்றால் அதற்கும் பணம் கிடைக்கிறது.

அதே சமயத்தில் கிட்னியைப் பக்குவப்படுத்தி சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறார்கள். அதையும் விற்றுக் காசாக்குகின்றார்கள்.

இது கூடப் பரவாயில்லை. மண்டையைப் பிளந்து அவர் மூளையை எடுத்து அதனுடைய நிலைகள் திரவமாக்கிக் கொள்கிறார்கள். ஒரு செத்துப் போகக்கூடிய கிழவன் இருந்தால் உடனே அவனுக்கு இந்தத் திரவத்தை ஏற்றிவிட்டால் அவன் வாலிபனாகின்றான்.

இன்றைக்கு ஹாஸ்பிட்டலில் காணாமல் போகின்ற குழந்தை எல்லாம் இப்படித்தான் நடக்கின்றது. ஏனென்றால் விஞ்ஞான அறிவில் நாம் எல்லாம் அந்த அளவிற்கு இருக்கின்றோம்.

நாம் ஆறாவது அறிவின் தன்மை பிரம்மாவைச் சிறைப் பிடிக்கலாம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்ற நிலையில்  விஞ்ஞான அறிவின் தன்மை போய்விட்டது.

இப்பொழுது ஒன்று வந்திருக்கிறது.

மனிதன் சிந்நனைக்கில்லாதபடி போட்டு (CALCULATOR, COMPUTER) நம்பரை இப்படிப் போட்டுத் தட்டி விட்டால் உடனே விடையைப் பார்த்துக் கொள்ளலாம். அடுத்து  இரண்டு வயதுக் குழந்தையை 12வது பெருக்கல் வாய்ப்பாTடில் அதிலே இத்தனைக்கு இது என்ன என்று கேட்டால் உடனே “டக்..” கென்று அந்தக் குழந்தை சொல்லிவிடும்.

சிந்தனைக்கும் மன உணர்வின் தன்மை ஒற்றுமைக்கும் மனித வாழ்க்கையினுடைய நிலைகள் நன்மை பெறும் தன்மைக்கு அன்று பாட நிலைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவால் இதைப் போட்டுக் கேல்குலேஷனைப் போட்டு விடலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகிக்காமல் மனிதனுடைய சிந்தனையில் கணக்குப் போடச் சொன்னால் தெரியாது.

கால்குலேட்டர் இல்லை என்றால் இங்கு எந்த வேலையும் நடக்காது, அப்புறம் சிந்தனை எங்கே வருகிறது? எப்படி வரும்?

1.ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலையில்
2.பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்று இருந்தாலும்
3.நம்முடைய அந்த அறிவினுடைய ஞானத்தையே
4.இன்று சுத்தமாக இழந்திடும் நிலைக்கு வந்துவிட்டது.

இதைப்போல் மனித உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் மனிதன் என்று இல்லாதபடி
1.மனிதன் தன் இனம் என்ற நிலைகள் இல்லாதபடி
2.மனிதனாகப் பிறந்தோம் என்ற நிலையும் அற்றுப்போய்
3.இன்று சிந்தனையற்ற நிலைகள் கொண்டு நாம் வாழுகின்றோம்.

நாம் விஷத்தை குடித்து விட்டால்… இந்த உடல் எதற்கு? என்று நினைப்பது போல மனித எண்ணத்திற்குள் எப்போது எதை வேண்டுமானாலும் தன் இஷ்டப்படி செய்து அந்த உணர்வின் தன்மை கொண்டு வாழ்ந்தால் போதும்.

பிறருடைய நலனைப் பற்றி எள்ளளவும் எண்ணுவது இல்லை. மனிதன் என்ற நிலைகளே அற்ற நிலைகள் இன்று இப்படிப் போய்க் கொண்டே இருக்கின்றது.

நாம் இன்று படைப்பது அனைத்தும் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகமாகச் சேர்த்து நாம் ஆரம்ப நிலைகளுக்குக் கீழே தான் போகின்றோம்.

1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை
3.ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுத்தே ஆக வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உடலுக்குள் அணுவாக ஆக்க வேண்டும்.

வேறு வழியில்லை.

கண்களுக்கு வரக்கூடிய கோளாறுகளை நீக்க முடியும்

Image

கண் வலி க்ண் எரிச்சல் கண் பார்வ மங்கல் இதைப் போன்ற குறைபாடுகளை நீக்கும் வழி முறை

 

சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் நடக்கக்கூடிய சில கடுமையான நிலைகளில் மீண்டும் மீண்டும் வேதனையை அதிகமாக நுகர நேர்ந்தால் அதை ஆழமாக எண்ணி உற்றுப் பார்ப்பதால் கண்களில் உள்ள கருமணிகளில் இந்த விஷம் ஒட்டிக் கொள்கின்றது.

 

கருமணிகளில் சேரும் இத்தகைய விஷம் அதிகமாகும் பொழுது கண் எரிச்சல் கண் பார்வை மங்கல் கண்களிலிருந்து நீர் வடிதல் இதைப் போன்ற நிலைகளாகி கடைசியில் கண்களில் சுத்தமாகப் பார்வையே போகும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றது.

 

அதே சமயத்தில் அந்தக் கருமணிகளுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்திலும் விஷத் தன்மைகள் சேரத் தொடங்கும்.

 

இந்த நரம்பு (ELECTRIC WIRE போல்) வழியாகத்தான் நாம் பார்த்த செய்தி உடல் முழுவதும் பரவி அதற்குத்தக்க நம் உடலும் உடலின் அங்கங்களும் இயங்குகின்றது.

 

ஆனால் இந்தக் கருவிழியுடன் சேர்ந்த நரம்புகள் பலவீனமடைவதோடு மட்டுமல்லாதபடி வேதனைப்படும் உணர்ச்சியையே தூண்டிக் கொண்டிருக்கும். நம்மை நல்லதை அதிகமாக எண்ண விடாது.

 

அதற்காகத்தான் நாம் தியானம் செய்யும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கின்றோம்.

 

கண்களில் அந்தச் சக்திகளை அதிகமாகப் படரச் செய்கின்றோம்.

 

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அழுத்தமாக கண்களில் உள்ள கருமணிகளில் படரச் செய்யும் பொழுது அதில் படர்ந்துள்ள விஷத் தன்மைகள் கரைந்து விடுகின்றது. அதனுடன் ஒட்டிய நரம்புகளையும் தூய்மைப்படுத்துகின்றது.

 

இதனால் கண் பார்வை சீராகத் தெரிய வரும்.

 

மேலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கண் கருவிழியுடன் தொடர்பு கொண்ட நரம்புகளில் ஆழமாகப் பதிவாகின்றது.

 

அதனால் நமக்கு அடிக்கடி அந்த மகரிஷிகளின் பால் எளிதில் நம் நினைவுகள் செல்லத் தொடங்கும். இதனால் நம் கண்களுக்கும் வீரிய சக்தியாக (ANTENNA POWER) கிடைக்கும்.

 

விண்ணின் ஆற்றலை எளிதில் கவரும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

 

சாமிகள் உபதேசித்த ஒலி நாடவில் உள்ளதை நீங்கள் உற்றுக் கேட்டு அதைக் கண்களுக்கு நினைவுக்குக் கொண்டு வந்து திரும்பத் திரும்ப எண்ணி (சுமார் 4 – 5 மணி நேரம்) எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்ததால் உங்கள் கண் எரிச்சலும் நீங்கியது. உங்கள் கண் பார்வையும் தெளிவானது.

 

அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் “பரிபாஷை”

Image

வியாழன், குரு, ஈஸ்வரா

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் “பரிபாஷை”

 

நமது குருநாதர் போஸ்ட்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்.

 

தட்டிவிட்டு “ஹலோ… ஹலோ…, அது இந்த லைன்.., அது அந்த லைன்… ஹலோ…” என்று சொல்வார், நான் இங்கிருந்து ஃபோன் (Phone) பண்ணுகின்றேன்” என்று சொல்வார்.

 

ஏன் சாமி…! போஸ்ட் கம்பியில் கல்லை வைத்துத் தட்டுகின்றீர்கள்? என்று நான் கேட்பேன்.

 

நான் ஃபோன் செய்கின்றேன்டா…! என்று சொல்வார். நான் கடவுளுக்குப் ஃபோன் பண்ணுகின்றேன்டா…! என்று சொல்லுகின்றார்.

 

அப்பொழுது அந்தக் கல்லைக் கொண்டு தட்டுவதற்கும் இந்த உணர்வினுடைய நிலைகளையும்

1.நீதான்டா… “ஏன்?” என்று கேட்டாய்

2.”வேறு ஒருவரும்” என்னைக் கேட்கவில்லை என்று சொல்கின்றார்.

 

காரணம் இதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

 

விண்ணிலே நாதங்கள் எப்படி வருகின்றதென்று நீ பார். அந்த விண்ணுலகில் ஒவ்வொன்றையும் எடுத்தால் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது.

 

அப்பொழுது அகண்டு போனவுடன் சேர்த்துக் கொண்ட உணர்வுக்குத் தக்க கூஜா மாதிரி ரதம் மாதிரி இப்படிப் பல உருவங்களில் இது மாதிரியெல்லாம் அந்த விண்வெளியில் உருவாகின்றது.

 

அப்படி அது விண்ணிலே உருவாகியபின் அதனுடைய வேகமாக வரும் பொழுது நாதம் எப்படி வருகின்றது பார்… என்றார்.

 

அதற்குத்தான் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிக் காண்பிக்கின்றேன்டா. “நாதத்தை நீ பார்…” என்று சொல்கிறார்.

 

இது எல்லாம் அனுபவப் பூர்வமாக அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கின்றதென்று

1.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.

2.இதெல்லாம் நமது குருநாதருடைய “பரிபாஷைகள்”.

3.அகண்ட அண்டத்தின் இயக்கத்தின் உண்மையின் உணர்வுகளும்,

4..நாம் விண் செல்லும் உபாயங்களும்

5.அந்த உணர்வுகளுக்குள் உண்டு.

 

அதைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகிறோம்.

 

அவர் சொன்ன உணர்வுகளின் பதிவு கொண்டு புருவ மத்தியில் ஈஸ்வரா என்று தியானித்தால் அவர் பெற்ற 2000 சூரியக் குடும்பத்தின் தொடர்பலைகளும் கிடைக்கும்.

 

அந்தத் தொடர்புக்குள் சென்று விட்டால் இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாகி

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று

2.நாம் அவருடன் ஐக்கியமாகலாம்.