“மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்

Image

Violet Flame rays

“மகரிஷிகளின் உணர்வலைகள்” ஒளிக்கற்றைகளாக உங்களுக்குள் இணைவதைக் காண முடியும்

 

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இணைக்கப்படும் பொழுது

1.அந்த நஞ்சினை ஒளியாக மாற்றி அறிவின் ஞானமாகவும்

2.இந்த மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்

3.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.

 

அதைப் பெறச் செய்வதற்காகத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

 

ஆகவே மறவாதீர்கள். உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

 

இந்த உடல் உங்களது அல்ல. உயிரால் தான் உருவாக்கப்பட்டது.

 

அறிவால் உணரப்பட்ட உணர்வின் தன்மை “தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் விளையும் தீமைகளை நாம் அகற்றக் கற்றுக் கொண்டால் நம்மை இயக்கிய நம்மை உருவாக்கிய உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலைகளை அடையலாம்.

 

யாம் உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்கும் நிலைகளை நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அதைப் பெற முடியும்.

 

ஒவ்வொரு நொடியிலேயும் சங்கடங்களோ சலிப்போ மற்ற தீமைகள் வரப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிப் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி

1.உங்கள் ஏக்கத்தை விண்ணை நோக்கிச் செலுத்துங்கள்.

2.இலேசாக உங்கள் எண்ணத்தை உயர்வாக (மேல் நோக்கி) எண்ணுங்கள்.

3.இப்பொழுது உங்கள் எண்ணம் ஆன்மாவைக் கடந்து செல்கின்றது.

4.மேல் நோக்கிய நிலைகளில் ஆன்மாவைக் கடந்து நுகரப்படும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகர முடியும்.

 

அமைதியாக இருக்கும் தண்ணீரில் ஒரு கல்லைப் போட்டால் அலைகள் தனக்குள் அலை அலைகளாக மாறுகின்றது. இதைப் போல

1.மகரிஷிகளின் உணர்வின் அலைகள் உங்களுக்குள் வருவதை

2.அந்த ஒளிக்கதிர்களை உங்களால் உணர முடியும்.

3.கண்களால் பார்க்கவும் முடியும்.

 

உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும். உங்கள் உடலுக்குள் ஊடுருவி ஒளியான உணர்வின் ஆற்றல் பெருகும். இதை உங்களால் நுகர முடியும்.

 

ஆனால் அதே சமயத்தில் அதிகமாகக் காட்சிகளைக் கொடுத்துவிட்டால் பயப்படுவோர் நிறைய உண்டு.

 

“ஐய்யோ.., திடீர் என்று என்னமோ தெரிகின்றது. இதனால் என்ன ஆகுமோ…?” என்று எண்ணுவார்கள்.

 

1.கிடைப்பதைப் பற்றிச் சந்தோஷப்பட்டு

2.”மேலும் பெறவேண்டும்” என்று எண்ணுவது ஒரு சிலரே.

 

ஆனால் பலர் இந்த மாதிரித் தெரிகிறது. இது ரைட்டா…? தப்பா…? இந்தக் கால்குலேசன் (CALCULATION)  போட ஆரம்பித்துவிடுகின்றார்கள்.

1.இதனால் ஏதாவது நல்லதாகுமா…?

2.அல்லது இதனால் கெட்டதாகி விடுமோ…?

 

கிடைத்ததையும் இழக்கும் நிலைகளில் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை இருக்கின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மன பலத்துடன் மகரிஷிகள் கண்டதை முழுமையாக உணர வேண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் அந்த வலிமையைக் கூட்டினால் “உங்கள் வளர்ச்சியை நீங்களே பார்க்கலாம்.”

உடலை இயந்திரமாக்கி (ROCKET) தீமையைப் பிளக்கும் உணர்வை உந்து விசையாக்கி உடல் பெறும் உணர்வைக் கழற்றி எறிந்துவிடலாம்

Image

Saami, Sarguru - Copy

உடலை இயந்திரமாக்கி (ROCKET) தீமையைப் பிளக்கும் உணர்வை உந்து விசையாக்கி உடல் பெறும் உணர்வைக் கழற்றி எறிந்துவிடலாம்

 

இன்று நாம் தியான வழிகளில் செல்லும் போது தியானம் எடுக்கும் போது நம் வாழ்க்கையில் சில குறைகள் வருகின்றது. ஆனால்,

1.நான் தியானம் இருக்கின்றேனே எனக்கு ஏன் கோபம் வருகின்றது?

2.நான் தியானம் இருக்கின்றேனே எனக்கு ஏன் நோய் வருகின்றது?

3.நான் தியானம் இருக்கின்றேனே என் குடும்பத்தில் ஏன் சண்டை வருகின்றது? என்றெல்லாம்

நாம் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றோம்.

 

“தியானம் இருக்கின்றேன்…” என்ற நிலைகளில் இன்று இப்படியெல்லாம் நாம் சொல்கிறோம்.

 

நான் இராக்கெட்டைச் சிந்தனையுடன் தான் செய்தேனே…! ஏன் இப்படிக் குறை வந்துவிட்டது…? என்று அவன் (விஞ்ஞானி) செயல்படவில்லை.

 

விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு

1.அதிலே குறைகளை நீக்கும் பொழுதுதான்

2.இராக்கெட்டை விண் செலுத்தி வெற்றியின் நிலை பெறுகின்றான்.

 

நம் வாழ்க்கையில் நாம் பிறருடைய குறைகளை உணரும் அறிவாக நமக்குள் உண்டு. குறை செய்கிறார்கள் என்று உணர்த்த அது உண்டு.

 

ஆனால் அதே குறையை அதிகமாக வளர்க்கும் போது குறையின் தன்மை வந்துவிட்டால் நம் நல்ல குணத்தைச் சீர்படுத்தும் நிலைகள் இல்லாது போய்விடும்.

 

இதைப் போன்ற நிலைகளை

1.நமக்குள் ஏன் நடக்கவில்லை…? என்று அறியும் நிலையாக

2.மகரிஷிகளின் அருள்சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று

3.அந்த உணர்வினைத் தனக்குள் அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது

4.வாழ்க்கையில் வந்த இருளினைப் பிளந்து

5.மெய்ப் பொருள் காணும் பாதையில் விண்ணிலே நாம் செல்ல முடியும்.

 

இராக்கெட் விண்ணிலே செலுத்த முடியவில்லை. அது தடைப்படும் பொழுது… தடைக்குக் காரணம் என்ன…? என்ற நுண்ணிய அறிவினை விஞ்ஞான அறிவு கொண்டு செலுத்துகின்றான் விஞ்ஞானி.

 

இதைப் போன்றுதான் இந்த வாழ்க்கையில் நாம் அந்த மெய் ஒளி பெறவேண்டும் என்ற அந்த எல்லையை அடையும் நிலைகளில் செயல்படவேண்டும்.

 

பிறவியில்லா நிலை அடைந்து விண்ணிலே வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்தோம் என்றால் நம் வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் சீராகச் செல்ல இது உதவும்.

 

அவ்வாறு சீராகச் செல்ல வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி செய்யும் போது

1.தவறு எங்கிருந்து நடந்ததோ

2.தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தவும்

3.தவறற்ற நிலைகளைத் தனக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

 

இந்தத் தவறற்ற நிலைகளைத் தனக்குள் உருவாக்க வேண்டும் என்றால் மெய்ஞானியின் உணர்வைச் சுவாசித்து சீரான நிலைகளில் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுதுதான்

1.இராக்கெட் எப்படி விண்ணை நோக்கிச் செல்வது போல

2.மெய் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது

3.இந்தப் புவியில் வாழும் நிலைகள் நம்மை ஈர்க்காது

4.விண்ணுலகம் செல்லும் நிலையாக அங்கே சீராக நம்மைச் செலுத்தும்.

 

உயிரின் துணை கொண்டு எதை நாம் கவர்கின்றோமோ அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்துவிட்டால் இந்தச் சிக்கலைப் பிளந்து சிக்கலற்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றடையலாம்.

 

பின் உடல் பெறும் நிலையைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் ஒளியின் சரீரம் ஆகும்.

 

இராக்கெட்டை விண்ணிலே ஏவிய பின் அந்த எல்லையை அடைந்தபின் இது “உந்தித் தள்ளிய”உணர்வின் சத்தைப் பிரித்து விடுகின்றது. பின் அதனுடைய சுழல் வட்டத்திற்குள் செல்கிறது.

 

இதைப் போன்று

1.நம் உணர்வின் தன்மைகள்

2.உடலிலே பெற்ற பல பல உணர்வுகள் நமக்குள் ஒன்றியிருந்தாலும்

3.இந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு

4.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து

5.இந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்டபின்

6.அதனின் உந்து விசைகள் நமக்குள் அதிகமாகும் போது

7.உடலை விட்டுப் பிரிந்த பின் அதனின் ஆற்றலே அதிகமாகின்றது.

 

நாம் அங்கே செல்வோம் என்றால் அந்த ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பின் இந்த உடல் பெறும் உணர்வுகளைப் “பிரித்து விடுகின்றது.”

 

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை தன் சுழல் வட்டத்தில் சென்று உணர்வின் தன்மை அது ஒளியாகச் சுழல்கின்றது.

 

விஞ்ஞான அறிவில் இன்று விண்ணுலக ஆற்றலை அறியத் தனக்குள் சாதனங்களை உருவாக்கி அதை வைத்து விண்ணின் ஆற்றலைப் பெறும் தன்மையாக அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு அதனுடைய சீர் பாதைகளில் இன்று இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள். இதைப் போல

1.உடலின் இயந்திர உணர்வுகளில்

2.மெய்ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்தல் வேண்டும்.

 

வாழ்க்கையில் இங்கே வரும் தீமைகளைப் பிளக்கும் இந்த உணர்வை நாம் “உந்து விசையாக… அந்த மெய்ஞானிகள் உணர்வை நாம் எவ்வாறு சேர்க்க வேண்டும்…?” என்ற நிலையைத் தான் உங்களுக்குள் உபதேசித்து வருகின்றோம்.

 

ஒவ்வொரு நிமிடமும் உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கிட அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஆத்ம சுத்தி செய்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

 

1.உடலை விட்டு நாம் சென்றால் எந்தத் தடையும் இல்லாது

2.உடலில் பெற்ற உணர்வின் தன்மையை அங்கே சென்றடைந்த பின்

3.அருள் ஞானியின் உணர்வுகள்

4.உடல் பெறும் உணர்வைக் கழற்றி எறிந்துவிடும்.

 

அந்த நிலைகளைப் பெறச் செய்வதற்கு அந்த மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் இதனைச் செயல்படுத்துதல் வேண்டும்.

மகரிஷிகளை… நாம் எப்படி எண்ணுகின்றோம்? “மகரிஷிகளை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை எது?”

Image

Meditation-Kundalini Rising

மகரிஷிகளை… நாம் எப்படி எண்ணுகின்றோம்? “மகரிஷிகளை எண்ணித் தியானிக்க வேண்டிய முறை எது?”

 

ஒரு வேப்ப மரம் தன் கசப்பின் வலுவைக் காட்டப்படும்போது தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. அந்தக் கசப்பின் உணர்வு கொண்டு மற்றவைகளைத் தன் அருகிலே வராதபடி வெளியே தள்ளுகிறது.

 

இதைப் போல நாம் நமக்குள் எத்தகைய உணர்வின் தன்மைகளை இணைத்துக் கொண்டுள்ளோமோ அதனின் செயலாக்கமாகத் தன்னைப் பாதுகாக்கும் நிலைக்கு அது இயக்கும்.

 

நாம் பரிணாம வளர்ச்சியில் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் வளர்ந்து வளர்ந்து இன்று மனிதனாக உருவாகியுள்ளோம்.

 

அப்படித் தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் பெற்ற நாம் நஞ்சை ஒளியாக மாற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது அதிகமாக நமக்குள் கூட்ட வேண்டும்.

 

இந்தக் கணக்கைக் கூட்டினால் இந்த மனித வாழ்க்கையில் தீமைகள் அகலும். இதில் உங்களுக்கு ஒன்றும் சிரமமில்லை.

 

எத்தகையை தீமையான நிலைகள் வந்தாலும் அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று பல முறை செலுத்திக் கொள்ளுங்கள்.

 

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்தப் பாசத்தை வளர்த்துவிடுங்கள். இந்தப் பாசத்தால் தீமைகளை அகற்றிடும் உணர்வாக அந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உயிருடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

 

1.இந்தச் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ

2.அதன் அரவணைப்பில் தீமைகளை அகற்றிய உணர்வின் செயலாக

3.உங்கள் உயிரின் தன்மையில்

4.என்றுமே உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அது இயங்கத் தொடங்கும்.

 

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். “கோடி கோடி..,, கோடி கோடி..,” என்று சொல்லைச் சொல்லி விண்ணிலே அந்த உணர்வைப் பரப்பினார்.

 

அந்த உணர்வுகள் எவ்வாறு செயலாக்குகிறது என்ற சில உண்மை நிலைகளை உணர்த்தினார். அதை நீங்கள் பெறுதல் வேண்டும்.

 

அவர் உணர்த்திய அந்த ஆற்றல்களை உங்களை எளிதில் பெறச் செய்வதற்குத்தான்

1.முதலிலே ரிஷிகளின் அருள் சக்தி என்று சொல்லி உங்களுக்குள் பதிவு செய்தேன்.

2.அடுத்துச் சப்தரிஷிகள் என்று இணைத்தேன். அதைக் காட்டிலும் நீங்கள் வலு பெறுகின்றீர்கள்.

3.அந்த வலுப் பெற்ற நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலம் என்றேன். அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அங்கே உங்களை இணைக்கின்றோம்.

 

சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அது படிப்படியாகக் கொண்டு போக வேண்டும்.

 

ஏனென்றால் முதலில் இப்படிச் சொன்னார் இப்பொழுது இப்படி என்று எதைச் சொல்வது என்ற சந்தேகக் குறிகள் ஏற்பட்டுவிடும்.

1.சப்தரிஷிகள் ஆனாலும் அவர்களும்

2.நம்மைப் போன்று சாதாரண வாழ்க்கையின் நிலைகளில் பெற்றவர்கள் தான்.

 

இன்று எடுத்துக் கொண்டால் இது இந்த ரிஷி கட்டிய ஆலயம், அந்த ரிஷி கட்டிய ஆலயம் என்று சொல்வார்கள். இதுவெல்லாம் ஒவ்வொரு ஞானிகளால் உருவாக்கப்பட்ட நிலைகளே.

 

அவரின் புனைப் பெயராக வைத்து இவர்கள் ஓர் ரிஷி என்றும் ரிஷி வம்சம் என்றும் இந்தக் குலம் இந்தக் குல வழி என்றும் ரிஷியின் குலங்கள் என்று இப்படியெல்லாம் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

 

ஆனால் அந்தக் குல வழியில் ரிஷிகள் என்றாலும் இந்த மனித உணர்வுடன் இது ஒன்றிவிடும்.

1.இது எளிதில் கிடைக்கும்.

2.ஆனால் அது (விண் சென்ற மகரிஷியின் ஆற்றல்) எளிதில் கிடைக்காது.

 

ஏனென்றால் நம்முடைய கூர்மை அனைத்தும் முழுமை பெற்ற நிலையில்

1.சித்ரன் (கண்ணின்) நினைவின் ஆற்றல்

2.அங்கே விண்ணிலே இருக்க வேண்டும்.

3.விண்ணிலிருந்து அதைப் பருக வேண்டும்

என்று இப்படி எண்ண வேண்டும்.

 

வெறும் வார்த்தையில் “அந்த ரிஷிகள்… இந்த ரிஷிகள்…” என்று எண்ணினால் அதற்குண்டான “மனித உணர்வுகள் கலந்த நிலைதான்” நம் ஈர்ப்புக்கு வரும்.

 

அகஸ்தியன் பெயரை வைத்து அந்தக் குல வழியில் தான் வளர்த்து கொண்டு நம்முடன் உறவாடிய (மனிதனின்) உணர்வுகள் தான் அதிகமாகப் பதிவாகின்றது.

 

இதன் மேல் இச்சைப்பட்டால் இதுதான் வரும்.

 

பின்..,

1.நான் ரிஷிகளை நினைக்கின்றேன்

2.”எனக்கு இப்படி வருகிறதே…” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

 

விண் சென்று ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருளாற்றல்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் யாம் பதிவு செய்கின்றோம்.

 

பதிவான அந்த உணர்வு கொண்டு நீங்கள் விண்ணை நோக்கி ஏகி சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அதைப் பெறவேண்டும்.

 

இந்த உணர்வின் வழிப்படி

1.விண்ணின் நிலைகளில் ஏகும்போதுதான்

2.அதனுடைய இயக்கத் தொடர் கொண்டு

3.இங்கே பரவியிருக்கும் ஆற்றல்கள் (அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள்) கிடைக்கும்.

 

இல்லையென்றால் இன்று மதத்தின் அடிப்படையில் குலத்தின் நிலை கொண்டு பதிவு செய்த இந்த ரிஷிகள் உங்களுக்குள் இதுவும் கலந்துவிடும்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் “நீங்கள் மாறுபடவேண்டும்.”

 

1.உங்களுக்குள் தெளிவாக்குவதற்குத்தான்

2.இதையெல்லாம் உணர்த்துகின்றோம்.

3.நீங்கள் தெளிந்திட வேண்டும்.

4.தெளிந்த உணர்வுகள் தெளிவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

5.பிறருடைய மனங்களையும் தெளிந்திடும் நிலையாக்க வேண்டும்.

 

ஏனென்றால் உலகம அனைத்தும் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

 

ஆனால் நன்மை பெறவேண்டுமென்றால் நமக்குள் இருக்கும் உணர்வின் அலைகளை எவ்வாறு பெருக்குகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டே வரும்.

 

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் “கோடி…கோடி…” என்று விண்ணின் ஆற்றலைப் பெறுங்கள்.

1.அருள் வழி வாழுங்கள்.

2.மெய் ஞானம் பெறுங்கள்.

 

என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாகப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து அவர்களைப் போன்று “மெய்ஞானிகளாக நீங்கள் உருவாகுங்கள்.”

 

எமது அருளாசிகள்.

தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி

Image

Fire fly

தூக்கணாங்குருவி – மின் மினிப் பூச்சி

 

மின் மினிப் பூச்சி உடலிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மை அந்த ஒளிக்கற்றைகல் பட்ட பின் சிறு அணுக்கள் விலகிச் சென்றுவிடும். அதன் மூலம் இலையிலுள்ள அந்த நுண்ணிய அணுக்களை உணவாக உட்கொள்ளும்.

 

மின் மினிப் பூச்சி வந்ததென்றால் ஒரு தூக்கணாங்குருவி என்ன செய்யும்?

 

இந்த மின் மினிப் பூச்சியைப் பிடித்துக் கொண்டு தன் கூட்டில் களி மண்ணை ஒட்ட வைத்து அதில் இந்த மின் மினிப் பூச்சியை ஒட்ட வைத்துக் கொள்ளும்.

 

எதற்காக?

 

தன் கூட்டில் வெளிச்சத்திற்காக அதை ஒரு விளக்காக (LIGHT) வைத்துக் கொள்கிறது.

 

தூக்கணாங்குருவி இருக்கும் கூட்டுக்குள் பார்த்தால் களிமண் இருக்கும். பறந்து செல்லும் மின்மினிப் பூச்சியைக் கொத்தித் தன் கூட்டிற்குள் ஒட்ட வைத்துத் தன் குஞ்சுகளுக்கு வெளிச்சத்தைக் காட்டி வழி கொடுக்கின்றது.

 

குஞ்சுகள் இருட்டுக்குள் தவிக்காதபடி இந்த உணர்வின் தன்மை அஞ்சிடாமல் சப்தமிடாமல் இருப்பதற்காகவும் சப்தமிட்டால் மற்ற எதிரிகள் இங்கே வந்துவிடும் என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.

 

தூக்கணாங்குருவி கனமான இடத்தில் அது கூடு கட்டாது.

 

ஏனென்றால் எலியோ மற்ற தன் எதிரிகளோ அந்த இடத்திற்குள் வந்துவிடாமல் இருப்பதற்காக மரத்தில் அந்த இலை நுனியில் வைத்துத்தான் தன் கூட்டைக் கட்டும்.

 

இலை நுனியில் ஏன் கூட்டைக் கட்டுகிறது?

 

பலவீனமான இடத்தில் கூடு இருப்பதால் அங்கே வேறு எதிரிகள் வந்து உட்கார்ந்தால்

1.உடனே தெரிந்துவிடும்.

2.கூடு கட்டியிருக்கும் இடத்தின் வலு குறைந்துவிடும்.

3.இவ்வாறு அதற்குண்டான ஞானத்தைக் கொண்டு செயல்படுத்துகிறது.

 

தன் அறிவின் தெளிவு கொண்டு ஒரு மரத்தில் கூட்டைக் கட்டி மின்மினிப் பூச்சியை ஒட்ட வைத்து அதன் வெளிச்சத்தால் குஞ்சுகள் சப்தம் எழுப்பாதபடி செய்கிறது.

 

ஏனென்றால் வெளிச்சம் இல்லாத பொழுது குஞ்சுகள் சப்தங்களை எழுப்பும். அந்த உணர்வின் ஒலிகளைக் கேட்டுப் பூனையோ அதைப் போன்று வௌவாலோ வந்து குஞ்சுகளை இரையாக்கி கொள்ளும்.

 

வௌவாலெல்லாம் தன் உணர்வின் ஒலி கொண்டு குஞ்சுகளைக் கொன்று தன் உணவாகப் புசித்துவிடும்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து தன் குஞ்சுகளைக் காக்க குஞ்சுகளிடமிருந்து அந்த ஒலிகள் வராதபடி தடுப்பதற்காக அதனின் சப்தத்தை அமுக்க மின் மினிப் பூச்சியை ஒளியாக அங்கே வைக்கின்றது.

 

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையின் தன்மை வரப்படும் பொழுது

1.ஒவ்வொரு உயிரினமும் எவ்வாறு விளைந்தது?

2.அதனின் ஞானம் எப்படி இருக்கிறது?

3.”அதை நீ உற்றுப் பார்…” என்று காட்டினார் குருநாதர்.

 

அந்த உணர்வின் அறிவாக விளைந்த நிலை தான் மனிதனின் அறிவு. அவ்வாறு உருவாக்கப்பட்டு ஆறாவது அறிவு பெற்று

1.“கார்த்திகேயா” எதையும் நீ அறிந்து கொள்ளும் நிலையாக விளைந்து

2.மனிதனாக வந்தாய் என்று தெளிவாகக் காட்டினார்.

 

அதைத்தான் நான் உங்களிடம் நான் சொல்கிறேன்.

 

தூக்கணாங்குருவி இரவிலே இரை தேடச் செல்ல முடியாது. அது வரையிலும் மின்னிக் கொண்டிருக்கும் அந்த வெளிச்சத்தைப் பார்த்துக் குஞ்சுகள் அப்படியே ஏங்கிக் கொண்டிருக்கும்.

 

அந்த நிலையிலேயே உறங்கிவிடும்.

 

குருநாதர் காட்டிய வழி கொண்டு இரவு முழுவதும் தூக்கணாங்குருவி என்ன செய்கிறது? அதனின் எண்ணங்கள் எப்படி இருக்கிறது? குஞ்சுகள் என்ன செய்கிறது? என்று இரவு முழுவதும் பார்த்த்துக் கொண்டிருந்தேன்.

 

1.இதை அறிவால் அறியக் கூடிய நிலை இருந்தாலும்

2.அதை உணர்வால் எப்படி நீ அறிய வேண்டும்? என்று குருநாதர் காட்டிய நிலைகள் தான் இது.

இன்றைய காலகட்டத்தில் “நம் இருப்பிடம்” இனி இந்தப் பூமி அல்ல…!

destination of guru

இன்றைய காலகட்டத்தில் “நம் இருப்பிடம்” இனி இந்தப் பூமி அல்ல…! 

இராமாயணக் காவியத்தை இரவுகளில் பனிக்காலங்களில் (கதாகாலட்சேபம்) சொல்வார்கள். விடிய விடிய உட்கார்ந்து கேட்பார்கள். அதே போன்று மகாபாரதத்தையும் சொல்வார்கள்.

படிப்பே இல்லாதவர்கள் அதைக் கேட்டபின் மனதில் பதிய வைத்துக் கொண்டு அப்படியே திருப்பிச் சொல்வார்கள்.

இராமாயாணக் காவியத்தைப் படித்தவர்கள் அதில் ஒன்றைத் தெரிந்திருந்தாலும் அதைக் கேட்டவர் அதற்குத் தக்கவாறு அக்காலங்களில் இந்த உணர்வைத் தெளிவாக்கும் நிலைகள் கூட வந்துள்ளது.

ஆகையினால் சாமி சொல்வது “புரியவில்லை…” என்று நீங்கள் எண்ணாது
1.”அறிய வேண்டும்…” என்ற ஆசையின் நோக்கத்துடன்
2.உணர்வினைப் பதிவு செய்து கொண்டால்
3.இந்த நினைவாற்றல் உங்களை அறியச் செய்கின்றது.

மனிதனாக எவ்வாறு உருவானோம்…? என்ற உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றது.

மனிதனான பின் இன்று உணர்வின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையை அறிய வல்லமை பெறுகின்றது.

1.அந்த உணர்வை நுகர்ந்தால் நமக்குள் உருமாற்றத்தையும்
2.பிறவியில்லா நிலைகள் அடையும் மார்க்கத்தையும் நீங்கள் தெரிந்து
3.சப்தரிஷி மண்டல எல்லையை அடையவேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்

பிறவியில்லா நிலையை அடைதல் வேண்டும். இந்த உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றுமே நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை உங்களுக்குள் சொல்லுகின்றேன்.

1.நமக்குள் (உயிர், உடல்) எப்படி உருவானது? என்ற நிலையையும்
2.ஆதியில் எப்படி உருவானது? என்ற நிலையும்
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி? என்ற நிலைகளை அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞான உலகில் உலகமே மனிதனின் சிந்தனை அனைத்தும் சிந்திக்கும் திறன் இழக்கும் தருணம் வந்துவிட்டது. சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் வல்லமை அதிகரித்து விட்டது.

ஒரு மனிதன் ஆயிரம் சிந்தனை கொண்டாலும் ஒரு விஷம் தாக்கிவிட்டால் அந்தச் சிந்தனை அனைத்தையும் அழித்துவிட்டு ஐய்..யய்…யோ…, என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்துவிடும்.

இந்த உடலைக் காக்கும் உணர்ச்சியின் தன்மை கூட வராது.

“எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று அதனுடன் ஒன்றி அது மடியும் தருணமே வருகின்றது. மனிதனின் நல்ல உணர்வுகள் முழுமையும் மடிந்து விடுகின்றது.

இதைப் போல உலகக் காற்று மண்டலமும் நச்சுத்தன்மை அடையும் தன்மை ஆகிவிட்டது. மனிதனால் ஏற்படுத்திய விஞ்ஞான அறிவால் நமது சூரியக் குடும்பத்திற்குள்ளும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளும் அகண்ட பிரபஞ்சத்திற்குள்ளும் விஷத்தன்மை பரவிவிட்டது.

பிரபஞ்சத்திற்குள் விஷத்தின் தன்மை பரவிச் சுழன்று கொண்டிருப்பதால்
1.சூரியன் கவரும் காந்தப் புலனறிவிலும் விஷத்தன்மைகள் பரவி
2.அதிலிருந்து வெளிப்படுவதை நமது பூமி கவர்ந்து பூமிக்குள் கவரப்படும்போது
3.இங்கே பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிகின்றது.

தாவர இனங்களிலும் மாற்றங்கள் ஆகிக் கொண்டுள்ளது. முந்தி வளர்ச்சியடைந்த தாவர இனங்கள் எல்லாம் உரு மாறுகின்றது. சரியான வெள்ளாமை இல்லாது போகின்றது.

1.மனிதனுடைய சிந்தனையும் சீர் குலைந்து வருகின்றது.
2.இனம் புரியாத புதுப் புது நோயை உருவாக்கும் அணுக்கள் உருவாகி மனித உடலில் புதுப் புது நோய்களும் உருவாகின்றது.

இதைப் போன்று மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும் புழுவாகப் பூச்சியாகப் பறவையாகப் பிறக்கும் நிலை வந்துவிடும்.

இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.மகரிஷிகள் நுகர்ந்த விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து
2.நமக்குள்  அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்ற
3.இந்த நம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்.

நம் இருப்பிடம் “சப்தரிஷி மண்டலம்…” தான்.

 கோவில்களில் தெய்வத்தின் மேல் “பூ வைத்து ஜோதிடம் பார்ப்பதன்” உண்மை நிலைகள்

Image

Tap root respiration

கோவில்களில் தெய்வத்தின் மேல் “பூ வைத்து ஜோதிடம் பார்ப்பதன்” உண்மை நிலைகள்

 

கோவில்களில் ஜோதிடம் பார்ப்பார்கள். நல்ல நேரம் வருகின்றதா கெட்ட நேரம் வருகின்றதா என்று பூ வைத்துக் கேட்பார்கள்.

 

இவர்கள் எந்த எண்ணம் கொண்டு வைக்கின்றார்களோ அந்த நிலையில் வைத்துப் பூவைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பார்த்தவுடனே

1.இவர்கள் உணர்வுகள் அங்கே செல்லும்.

2.அந்த உணர்வலைகள் என்ன செய்யும்?

 

உதாரணமாக கல்யாணப் பெண் சம்பந்தமாகப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

 

கெட்ட நேரம் வர வேண்டும் என்றால் சிவப்புப் பூ வரட்டும் நல்ல நேரமாக இருந்தால் வெள்ளைப் பூ வரட்டும் என்று முதலில் எண்ணிக் கொள்வார்கள்.

 

1.கேட்ட நேரம் என்று எண்ணும் பொழுது (இவர்களின் எண்ணம்)

2..அழுத்தமாக எண்ணும் பொழுது

3.அங்கே சிவப்புப் பூ விழுகும்.

 

விழுந்தவுடனே கெட்ட நேரம் வந்துவிட்டது இந்தப் பெண் வேண்டாம் என்பார்கள்.

 

ஒரு காரியத்திற்குப் போக வேண்டும் என்றால் இந்த உணர்வின் அலைகள் கண்களில் படரப்படும் பொழுது எதிர் நிலையான உணர்வு வரப்படும் பொழுது உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

 

சாமி மேல் உள்ள பூ விழுகின்றதா விழுகவில்லையா என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

 

பெண்ணைக் கொடுப்போர் ஒரு பக்கமும் மாப்பிள்ளை கொடுப்போர் ஒரு பக்கமும் இருப்பார்கள். “எப்படியோ…” வெள்ளைப் பூ விழுந்தால் பரவாயில்லை என்று ஒரு சாரார் (பெண்ணைக் கொடுப்போர்) நினைக்கின்றார்கள்.

 

அந்த வேதனையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள்?

 

மாப்பிள்ளை வீட்டில் அவர்கள் சார்புடைய பெண்கள் அந்தப் பெண் வீட்டுக்கு வந்தால் சரியில்லை. இந்தத் தெய்வம் அதற்குத் தகுந்த மாதிரிச் சொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எண்ணிப் பார்க்கப்படும் பொழுது என்ன நடக்கும்?

 

1.அங்கே எதிர்மறையான நிலைகள் உருவாகும்.

2.இத்தகைய உணர்வு வரப்படும் பொழுது

3.எவருடைய உணர்வின் எண்ணங்கள் வலுவாகின்றதோ

4.அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உணர்வுகள் இயக்கும்.

5.வலுவான உணர்வுகள் இயக்கி “அந்தப் பூவை விழுகச் செய்யும்”

 

அந்தத் தெய்வத்தின் மேல் உள்ள பூ விழுகும் நேரத்தில் இந்தப் போராட்ட முறைகளைப் பார்க்கலாம்.

 

ஆனால் நாம் என்ன எண்ணுகின்றோம்…!?

 

“தெய்வம் அருள் சக்தி கொடுக்கின்றது… வரம் கொடுக்கிறது…” என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

ஆனால் நாம் எண்ணக்கூடிய உணர்வின் எண்ணங்கள் தான் இயக்குகின்றது. இதைத் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

 

நம் வாழ்க்கையில் எத்தனையோ செயல்கள் இதைப் போன்று தான் நடக்கிறது.

 

ஒரு மனிதன் அரிப்பின் காரணமாக மேலில் அரித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். உற்று நாம் அதைப் பார்த்தால் போதும்.

 

பார்க்கலாம்…! உடனே நம்மை அறியாமலே நம் உடலில் எங்கேயாவது கையை வைத்துத் தேய்க்க (அரிக்க) ஆரம்பிப்போம். அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும்.

 

ஏனென்றால் இது இயற்கையின் உணர்வுகள்.

 

1.நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ

2.அது நம் சுவாசத்திற்கு வருகின்றது. அதை நுகர்கின்றோம்.

3.”அதே உணர்வு” நம்மை அறியாமலே அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.

 

ஒருவர் தன் தலையைச் சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் போதும். நம்மை அறியாமலே நம் கை என்ன செய்யும்? தலையைச் சொறியப் போகும்.

 

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

 

கண்களால் பார்க்கின்றோம் தெரிந்து கொள்கிறோம். காதால் கேட்கிறோம் அறிகிறோம். உடலால் உணர்ச்சிகளை அறிகின்றோம். வாயில் சுவையை அறிகின்றோம்.

 

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மைகளை நாம் யாரும் அறிவதில்லை. அதைப் பற்றிச் சிந்திப்பதுமில்லை.

1.மனிதனுடைய ஆணிவேர்

2.அவனுடைய சுவாசம் தான்.

 

சுவாச நிலையைச் சீராக்குவதற்காகத்தான் மகரிஷிகளின் அருள் மணங்களை உங்களுக்கு உபதேச வாயிலாக நுகரும்படிச் செய்கின்றோம்.

 

அருள் மணங்களை நுகர்ந்தால் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி மெய் வழிக்கு அழைத்துச் செல்லும்.

எந்தச் சூழ்நிலையிலும் நல்லதைச் சேர்த்துக் கொண்டிருப்பதே தியானம்… மிகவும் எளிதானது

Real Meditation

எந்தச் சூழ்நிலையிலும் நல்லதைச் சேர்த்துக் கொண்டிருப்பதே தியானம்… மிகவும் எளிதானது

உதாரணமாக சண்டை போடுபவர்களுக்குச் சந்தோசமாக இருப்பவர்களைப் பார்த்தால் வெறுப்பின் நிலை வளரும். ஒருவர் சந்தோசமாக இருப்பவரைப் பார்த்தால்
1.ஏதாவது அவருக்குக் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்.
2.வேண்டாததைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
3.ஏனென்றால் அதனால் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

நீங்கள் துன்பப்படுவதைப் பார்த்து அவர்கள் ஆனந்தப்படுவார்கள். இப்படிப் பல பேர் இருக்கிறார்கள். ஒருவர் துன்பப்பட்டால் போதும் அவர்களை அறியாமலேயே அந்த மகிழ்ச்சி இருந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் இதைப் போன்ற உணர்வின் தன்மையினுடைய நிலைகள் அதற்குத்தக்க நிலைகளைப் பார்த்தால்தான் அவர்களுக்கு ஆற்றல் கொடுக்கும்.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சண்டை போடும்பொழுது
1.“இப்படித் தொலைந்து போ அப்படித் தொலைந்து போ” என்று
2.ஒருவருக்கொருவர் விளைய வைத்திருக்கிறோம்.

அவ்வாறு ஒருவர் பல இடைஞ்சல்கள் பட்டு அவஸ்தைப்பட்டதைப் பார்த்தார்கள் என்றால்… அவருக்கு மகிழ்ச்சி தன்னாலே வரும்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி வருகிறது. இதைப் போல இவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதைப் போன்று
1.நாம் எந்த உணர்வை “ஏற்றுக் கொள்கிறோமோ”
2.அதற்கு அது மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இதைப் போன்றுதான் “உணர்வின் செயலாக்கங்கள்”.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பக்தி என்ற நிலைகளில் ஆராதனை செய்துகொண்டு “சாமி செய்யும்… என்றால் ஒன்றும் செய்யாது”.

சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை
1.நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்
2.அந்த வேதனை கலந்து நல்ல குணமும் சேர்ந்து உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.
3.கடைசியிலே அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான் தெய்வமாக உணர்த்தப்பட்டு அதை முன்னிறுத்தி இந்தக் குணம் உங்களுக்கு இன்னது செய்யும். இந்தக் குணம் நம் உடலிலே இருக்கிறது என்று காட்டினார்கள்.

1.உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை
2.அதற்குப் பெயர்களை வைத்து
3.உருவத்தைக்(தெய்வ உருவங்களாக) காட்டி
4.அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால் நாம் ஆராதனை செய்துவிட்டுச் “சாமி செய்யும்” என்றால் எப்படிச் செய்யும்?

தியானம் என்றால் என்னமோ “பெரிய மலை” என்று எண்ணுகிறோம். நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
1.திரும்பத் திரும்ப நினைத்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்குக் குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். தீமைகள் எப்படி வருகிறது? தீமைகளை நீக்கும் வழி என்ன? என்று அனுபவபூர்வமாக என் உடலுக்குள்ளேயே நடத்திக் காட்டினார்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
2.உனக்குள் அதை வளர்த்துக் கொண்டால்
3.தீமைகளை அகற்ற முடியும் என்று சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியைச் சொல்லாலே பேச்சாலே இந்த உணர்வாலே கொடுத்து உங்களுக்குள் நீங்களும் வளர்த்துக் கொள்ள வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம்.

இதுதான் “தியானம்” என்பதின் நிலைகள்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம் – “நீங்கள் எல்லாம் மகரிஷிகளாக வேண்டும்”

Image

ஞானி, மகரிஷி

 

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம் – “நீங்கள் எல்லாம் மகரிஷிகளாக வேண்டும்”

 

வைரம் தனக்குள் நஞ்சினை அடக்கி அது தன் பிரகாசமான நிலைகளை வெளிப்படுத்துகின்றது. இதைப் போல் தான்

1.மகரிஷிகள் அனைவரும் நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாகினும்

2.அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய

3.ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்துள்ளார்கள்.

 

அத்தகைய ஞானிகள் இன்னொரு மனிதனின் ஈர்ப்புக்குச் செல்லாது தன் உணர்வின் தன்மையைத் தன் நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

ஒளியின் உணர்வாக அந்த அருள் ஞானிகள் உடலிலிருந்து வெளிப்பட்ட அந்த உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் நமக்கு அத்தகைய வலு வேண்டும்.

 

சாதாரணமாக ஒரு நூலை வைத்து ஒரு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அது அறுந்துவிடுகின்றது.

 

இதைப் போல சாதாரண மக்களாக இருக்ககூடிய நாம் ஞானிகள் மகரிஷிகளின் மிகச் சக்திவாய்ந்த எண்ணங்களை அவர்களின் உணர்வுகளை

1.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.

2.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை.

3.அது செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

4.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற நம் எண்ணத்திற்கு வலிமை வேண்டும்.

 

ஒரு சிறு கல்லாக இருந்தால் அதை ஒரு மனிதன் தூக்கிவிடுவான். பெரும் கல்லாகும் பொழுது அவனால் தூக்க முடியாது. ஆனால் பலரும் சேர்ந்தால் அதை எளிதாகத் தூக்க முடிகிறது.

 

ஒரு நூல் நிலையாக இருப்பினும் பல நூல்கள் கொண்டு அதை ஒருக்கிணைந்து கயிறாகத் திரிக்கும் பொழுது அந்தக் கயிறால் ஒரு கடினமான பொருளையும் தூக்கிட முடிகின்றது.

 

இதைப் போலத்தான் நாம் அனைவரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வை கூட்டுத் தியானங்களில் தூண்டச் செய்கிறோம்.

 

1.அந்த உணர்வால் உந்தச் செய்து தியானிக்கச் செய்து

2.அவ்வாறு தியானிக்கும் பொழுது தான்

3.படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை

4.நம் உடலின் அருகே கொண்டு வர முடியும்.

 

ஆலயங்களில் உள்ள பெரும் தேரை நாம் வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருக்கிணைந்த நினைவுடன் தேரை இழுத்தால்தான் அது எல்லை வந்து சேரும்.

 

ஒருவர் தெற்கே ஒருவர் கிழக்கே ஒருவர் மேற்கே ஒருவர் வடக்கே என்று அந்த வடத்தை இழுத்தால் அந்தத் தேர் எல்லை வந்து சேராது.

 

இதைப் போல் தான் நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலைகள் கொண்டு

1.அந்த மகரிஷிகளின் நினைவலைகளைக் குவித்து

2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று உங்களை எண்ணச் செய்கிறோம்.

 

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து

1.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்திற்குள்

2.மகரிஷிகளின் அருள் சக்தி அது கிடைக்க வேண்டும்

3.அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்

4.அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்

5.அந்தத் தெய்வ நிலைகள் அங்கே வளர வேண்டும் என்று

6.உங்களை நான் தியானிக்கின்றேன்.

 

உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது அந்தச் சக்தியின் தொடரை நீங்கள் பெற முடிகின்றது. கவர முடிகிறது.

 

இன்று டி.வி.யோ மற்ற சக்தி வாய்ந்த எதுவாக இருந்தாலும் அதைக் கவர்வதற்கு “ஆன்டெனா” வைத்துள்ளார்கள்.

 

அதனுடன் சக்தி வாய்ந்த இயந்திரங்களையும் நுண்ணிய கருவிகளையும் பொருதி அதன் துணை கொண்டுதான் இந்த ஆன்டெனா தனக்கு முன் இருக்கும் மிகச் சக்திவாய்ந்த அலை வரிசைகளைக் கவர்கின்றது,

 

அவ்வாறு ஆன்டெனா கவரும்போது நிசப்தமான நிலைகளிலும் சீராகவும் திரைப்படங்களில் காண்பது போல் அந்த அலைகளை ஒருமித்த நிலை கொண்டு சீராக நாம் பார்க்க முடிகின்றது.

 

இதைப் போல் தான் எண்ணங்கள் அனைத்தும் ஒருக்கிணையச் செய்கின்றோம். நீங்கள் அதைப் பெறுவதற்காக

1.உங்களை நான் தியானிக்கும்போது

2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது

3.அந்தச் சக்திகளை நீங்கள் பெற முடிகிறது.

 

நீங்கள் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.உங்களை அறியாது சேர்ந்த தீமைகள் அகல வேண்டும்

2.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெறவேண்டும்.

3.உயிரான ஈசனுக்கு நீங்கள் எண்ணும் உயர்ந்த எண்ணங்கள் அது மகிழ்ச்சியூட்டும் செயலாக வளர வேண்டும்.

4.அந்த உணர்வின் தன்மை உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்

5.உங்கள் உடலுக்குள் மனிதனாக உருவாக்கிய மகிழ்ந்திடச் செய்யும் அந்த ஆற்றல்மிக்க நல் உணர்வுகள் அனைத்தும் சீராக விளைந்திட வேண்டும்

6.அது நல்ல வலுவின் தன்மை அடைய வேண்டும்.

7.என்றுமே உங்களுக்குள் மகிழ்ச்சி நிலைத்திட வேண்டும்

8.தீமைகள் வரும்போது அதை போக்கிடும் ஆற்றல்கள் நீங்கள் பெறவேண்டும் என்ற

9.இந்த நிலையில் தான் உங்களை நான் தியானிக்கின்றேன்.

 

அதே சமயம் “நீங்களும்…” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது உங்களுக்கு முன் காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க இச்சக்திகளைக் கவர முடிகிறது.

 

அவ்வாறு கவரும் பொழுது ஒவ்வொருவருடைய ஆன்மாவின் நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தி வந்து கலக்கின்றது.

 

இதை நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்ப்பிக்கும் நிலையாக அமைகின்றது.

 

அதற்குத்தான் இத்தகைய “கூட்டுத் தியானங்களை” அமைப்பது.

 

கூட்டுத் தியானத்தின் மூலம் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் சக்திவாய்ந்ததாக அதை இணையச் செய்த பின்

1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் எந்த நேரமும்

2.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம்

3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள்.

4.உங்களுக்கு அந்தத் தகுதியைத்தான் ஏற்படுத்துகின்றோம்.

உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் செல்ல வேண்டும் – “நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது”

Image

சப்தரிஷி மண்டலம்

உடலை விட்டுச் சென்றால் விண்ணுலகம் செல்ல வேண்டும் – “நாம் இன்னொரு உடல் பெறக் கூடாது”

 

 

இந்தச் சரீரத்திலே நாம் ரொம்ப நாட்கள் நீடித்து இருப்பதில்லை. உயிர்… “எந்த நிமிடம் இந்த உடலைவிட்டுச் செல்லும்” என்று சொல்ல முடியாது.

 

ஏனென்றால் நாம் முன்பு சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறுதான் இந்த உடலிலே நிலைத்திருக்கும். ஆனால்

1.உடலை விட்டுச் சென்றபின்

2.நாம் எப்படியும் விண்ணிற்கே செல்ல வேண்டும்.

3.இன்னொரு உடல் பெறக் கூடாது.

 

இன்னொரு உடல் பெற்றுவிட்டால் இதைப் போன்ற சந்தர்ப்பம் எப்பொழுது… எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது. அது வரை இந்த வேதனைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

 

ஆகவே இதிலிருந்து மீள்வதற்குண்டான சரீர அமைப்பு நமக்குக் கிடைத்தபின் நாம் விண் செல்வதற்குண்டான வழிகளை இம்முறைப்படி நாம் செயல்படுத்திக் கொள்வோம்.

 

போகர் மற்றும் எல்லா சக்தி பெற்ற ஞானிகளும் நம்மைத் தேடி வந்து ஏன் இதைச் சொன்னார்கள்?

 

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக் கூடிய ஆற்றல்களை அந்தத் துன்பத்தை விளைவிக்கக்கூடிய நிலையிலிருந்து துன்பத்தை நீக்கச் செய்தார்கள்.

 

என் “துன்பம் நீங்கியது…” என்று பெரு மகிழ்ச்சியான எண்ண அலைகளை அவர்கள் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது அவர்கள் நல்லவர்கள் ஆக வேண்டும் என்று எண்ணினார்கள்.

 

“நல்லதாக்கினார்” என்று அவரை எண்ணும் பொழுது நல்ல எண்ணங்கள் அவர் மேலே பாய்கின்றது.

 

அவருக்குள் வளர்த்துக் கொண்ட இந்தச் சக்தி நமக்குள் துன்பத்தைப் போக்க உதவுகின்றது.

 

ஆக இந்த நன்மையினுடைய நிலைகளை அவர் பெறுகின்றார்,

 

அவரை எண்ணும் பொழுது அந்த உயிராத்மாவினுடைய நிலைகளைச் சுலபமாக விண் செலுத்த ஏதுவாகின்றது.

 

அதைப் போன்று நாம் ஒவ்வொருவரும் இந்த முறைப்படி கூட்டுத் தியானங்களை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்வோம்.

 

பிறர் நம்மிடம் துன்பத்தைச் சொன்னாலும் நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு இனி உங்கள் வியாபாரம் நல்லதாக இருக்கும் தொழில் நல்லதாக இருக்கும் என்று சொல்லுங்கள்.

 

வெறுமனே வாயில் சொல்ல வேண்டாம். ஆத்ம சுத்தி செய்யும் பொழுது உள்ளப் பூர்வமான உணர்வோடு இழுக்க வேண்டும்.

 

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உணர்ச்சியைத் தட்டியெழுப்புவது போன்று “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெறவேண்டும் என்று தியானியுங்கள்.

 

தியானித்தபின் உங்கள் நண்பர்களுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டுமென்றாலும் இப்படிச் சொல்லுங்கள்.

 

1.அந்த நண்பன் துன்பத்தைச் சொன்னாலும்,

2.அதே சமயம் உங்கள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு,

3.மெய்யுணர்வின் தன்மையை உங்களுக்குள் செலுத்தி,

4.“உங்கள் வாக்கு” உங்கள் நண்பனுக்கு அவரது துன்பத்தை நீக்க உங்கள் உணர்வின் சொல் உதவும்.

 

ஆக அவர்கள் மகிழ்ச்சியடையப்படும் பொழுது அந்த மகிழ்ச்சியின் எண்ணம் உங்களுக்கு லாபமாகின்றது.

 

இதைப் போன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் இதைச் செயல்படுத்த முற்பட வேண்டும்.

 

ஏனென்றால் காலங்கள் குறுகிக் கொண்டிருக்கின்றது. விஷ அலைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. சிந்திக்கும் நிலை தடுமாறிக் கொண்டே போகின்றது.

 

இதைப் போன்ற விஞ்ஞான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் இந்த உடலிலிருந்தே, நினைவு இருக்கும் பொழுதே ஒளியாக மாற்றிச் செல்லும் நிலையை நாம் பெறவேண்டும்.

 

ஏனென்றால் இந்தச் சுற்று போய்விட்டால் அடுத்து இந்த பூமியினுடைய நிலைகள் மாறுபடும் நிலைகள் வருகின்றது. அந்த நிலைகளுக்குள் நாம் சிக்குண்டுவிடக் கூடாது.

 

இங்கே நீர்வளமே அதிகமாகும் நிலை வரப் போகின்றது. ஜனங்களுடைய பெருக்கங்கள் அவ்வளவு கூட்டங்கள் கூடும் பொழுது நிலங்களே இருக்காது.

 

நீங்கள் யுத்தமே செய்யவேண்டாம். இன்று ஐந்து வருடக் குழந்தைகளாக இருக்கின்றார்கள் என்றால் (உபதேசம் செய்த வருடம் 1989

1.இனி இருபது வருடம் போகும் பொழுது,

2.இதனுடைய நிலைகளில் யாரோ எவரோ என்றுதான் இருப்போம்.

 

ஜன நெருக்கடியில் நிலங்கள் குறைகின்றது, அதே சமயத்தில் விஞ்ஞான அறிவுகளால் செயல்படுத்தப்பட்ட அனைத்துமே மழை பெய்வதைத் தடுக்கும் நிலையாக வந்துவிட்டது.

 

மழை எல்லா இடங்களிலும் சரியாகப் பெய்யவில்லையென்றல் நமக்கு விவசாயம் இல்லை.

 

விவசாயம் இல்லையென்றால் உணவுக்காக வேண்டி கடந்த காலங்களில் எப்படிக் காட்டுமிராண்டி போல ஒன்றை அடித்து ஒன்றை விழுங்கியது போன்று உலகத்திலேகூட என்ன நடக்கிறது என்று தெரியாது.

 

மனிதனுடைய சத்துக்களைச் சாப்பிட்டால் அது நல்லது என்று அதையும் செய்து கொண்டுள்ளார்கள்.

 

இன்று குழந்தைகளைக் காணவில்லை என்று பார்க்கிறோம். இவையெல்லாம் பார்சலாகின்றது. மேலை நாடுகளில் விஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டிருந்தலும், அங்கே இந்த மாதிரி அசுத்த நிலைகள் “மனிதனை விழுங்கும் நிலைகள்” தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 

சிறிது காலம் போய்விட்டால் நாம் சிந்திக்கக்கூட நேரமில்லாமல் போய்விடும். இதைப் போன்ற நிலைகள் வருவதற்கு முன்

1.நமக்கு நல்ல நினைவிருக்கும் பொழுதே

2.இந்தப் பூமியிலிருந்தே விண் செல்ல வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

“ஏனோ தானோ” என்று இல்லாதபடி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

 

உங்களுக்குத் துன்பம் வரும் பொழுதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்குள் நல்ல பலனைக் கொடுக்கும்.

“இப்படி ஆகிவிட்டதே… இப்படிச் செய்து விட்டாயே…” என்று உணர்ச்சிவசப்பட்டால் இருளாகிறது – அந்த உணர்ச்சிகளை “மகரிஷிகளின் உணர்வு கொண்டு வேக வைத்து” நமக்குச் சாதகமாக்க வேண்டும்

Image

“இப்படி ஆகிவிட்டதே… இப்படிச் செய்து விட்டாயே…” என்று உணர்ச்சிவசப்பட்டால் இருளாகிறது – அந்த உணர்ச்சிகளை “மகரிஷிகளின் உணர்வு கொண்டு வேக வைத்து” நமக்குச் சாதகமாக்க வேண்டும்

 

 

ஒரு பொருளுக்குள் ஒரு விஷம் பட்டால் அனைத்தையுமே நாசமாக்குகின்றது. இதைப் போன்று

1.நம் உணர்வுக்குள் சிறிதளவு வேதனையாகிவிட்டால்

2.நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் சேர்கிறது.

 

ஒரு குழந்தை தவறு செய்தால் “இப்படி ஆகிவிட்டதே” என்று வேதனையை எடுத்தீர்கள் என்றால் இது விஷம்.

 

இந்த விஷமான உணர்வு கொண்டு குழந்தையைப் பார்க்கப்படும் பொழுது விஷம் அதிகமாகக் கூடி அவன் புத்தியையே மட்டமாக்கும்.

 

இப்படிப் பண்ணிவிட்டாயே…? பாவி என்று சொல்லி இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆக்கப்படும் பொழுது அவனிடம் இருக்கக்கூடிய அந்த வளர்ச்சியின் தன்மையை மட்டமாக்கி அங்கே விஷமாகி அவன் சிந்திக்கும் செயலையும் இழந்து விடுகின்றான்.

 

நமக்குள் என்ன சக்தி இருக்கின்றது…? என்று நினைத்துப் பார்த்தால், சிந்தித்துப் பார்த்தால் இந்தச் சொல் எதிலிருந்து வருகின்றது…? என்பது தெரியும்.

 

நாம் சுவாசித்த உணர்வின் தன்மைகள் உயிரில் பட்டு உணர்ச்சிகளாகின்றது.

1.நாம் பேசும் பொழுது அந்த உணர்வின் ஒலியாக மாறி

2.இந்த உணர்வுகள் மற்றொன்றுடன் கலக்கப்படும் பொழுது

3.அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சுவாசிக்கச் செய்து அங்கே விளைந்துவிடுகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் மீள்வதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி ஆத்ம சுத்தி செய்து நமக்குள் துனபங்கள் தாக்கும் துன்பங்களை உருவாக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

 

கருணைக் கிழங்கை வேகவைத்து விஷத்தின் தன்மையை நீக்குகின்றோம்.

எத்தனையோ விஷத்தன்மை கொண்ட எத்தனையோ உணர்வு கொண்ட காய்கறிகளை வேக வைத்து அதிலிருக்கக்கூடிய காரல்களை நீக்கிச் சுவை கொண்டதாக மாற்றிக் கொள்கின்றோம்.

 

இதைப் போன்று நம் மனித வாழ்க்கையில் எத்தகைய துன்பமான நிலைகள் வந்தாலும் அதைத் நமக்குச் சாதகப்படுத்துவதற்கு வேக வைத்துச் சுவையாக்கும் நிலையாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

 

அப்படிச் செய்தால் அது சுவைமிக்க சொல்லாக நமக்குள் சென்று சுவையான செயல்களைச் செய்யக் கூடிய உணர்வுகளாகத் திருப்பிப் பேசும்படி செய்யும்.

 

அப்பொழுது நம் சொல்லைக் கேட்பவர்களுக்கும்  மகிழ்ச்சியுட்டும் நிலைகளாக மாற்றும் சக்தி கிடைக்கின்றது.

 

நம் உணர்வைச் சுவையற்றதாக ஆக்காதபடி சுவையான தன்மையாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

 

சிறிது காலம் யாம் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்குவப்படுத்திக் கொண்டால் அது தானாகவே பேசும்.

 

கோபம் வந்துவிட்டால் அடங்காத பையனை அடிக்கடி நினைத்தவுடன் கோபம் வருகின்றது. அதே மாதிரி அந்தப் பையன் நன்றாக ஆகவேண்டும் என்று தியானத்தில் எடுத்துக் கொண்டு

1.“நன்றாக ஆகவேண்டும் நன்றாக ஆகவேண்டும்” என்று

2.அடிக்கடி எண்ணினால் பையன் நல்லவனாக ஆகிவிடுகின்றான்.

3.தன்னாலே தன்னிச்சையாக வரும்.

 

இப்படிச் சொல்லிப் பழகிவிட்டால் அதே நிலைகள் வரும்.

 

ஒரு குழந்தை படிப்பிலே மட்டமாக இருக்கிறது. “படிப்பிலே இப்படி இருக்கிறானே…” என்று நாம் எண்ணும் பொழுதெல்லாம் மற்றவர்களிடத்தில் எல்லாம் சொல்வோம். நினைக்கும் பொழுதெல்லாம் இந்த வேதனைப்பட்டே நினைப்போம்.

 

இவ்வாறு நினைக்கும் பொழுது இந்த வேதனைகள் அவன் உடலிலே சேர்ந்து இதையேதான் உருவாக்கும்.

ஆகையினாலே இதையெல்லாம் நீங்கள் மனதிலே பக்குவப்படுத்தி இந்த நிலைகளெல்லாம் நீங்கவேண்டும் என்று ஆத்ம சுத்தியைச் செய்து வரும் தீமைகளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

 

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உங்கள் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள். ஓம் ஈஸ்வரா குருதேவா…, உங்கள் அருளால் மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கியிருங்கள்.

 

திரும்பத் திரும்ப மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற நினைவுடன் ஏங்கி இருங்கள். நினைக்கும் பொழுது… “அந்த அலைகள் இழுக்கும்”,

 

மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மெதுவாகக் கண்களை மூடிக் கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

 

கண்ணுக்குள் இருந்து மெதுவாக உங்கள் உடலுக்குள் முழுமையாகச் செலுத்திக் கொண்டு வாருங்கள். இப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினையுங்கள்.

 

இதுதான் ஆத்ம சுத்தி.