“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

Wisdom light

“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.

உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.

நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்

சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும் என்று யாம் சொல்கிறோம்.

“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!

ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது?

நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது என்று சொல்கிறது.

வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.

அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள் இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள் என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.

ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.

1.சாமிக்கு என்ன தெரியும்?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.

ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால் இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.

சில வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.

நீ அப்படிப் போவாய் இப்படிப் போவாய் இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும் என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.

சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா.
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.

இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.

ஆனால் நல்லவர்கள் தான்.

இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது?

1.எனக்கு எப்படியோ வருகிறது என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.

தெய்வம் எங்கே இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.

நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்?

இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.

அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.

திட்டியவனை எண்ணும் பொழுது மீண்டும் மீண்டும் அவனை எண்ணி இரு நான் பார்க்கிறேன் என்று எண்ணுவது போல்
1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.அதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால்
3.அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் இயங்கி
4.இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மெய்யை உணர்த்தும்.
5.மெய் ஒளி மெய் ஞானம் பெறமுடியும்

இதில் ஒன்றும் சிரமமில்லை.

“உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?

Image

உள் நின்று இயக்கும் உயிர் கடவுள்

“உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?

1.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்

2.இறைவன் எங்கோ இருக்கின்றான்

3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்

இன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.

 

ஆனால்

1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து

2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது

3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை

நாம் மறந்துவிட்டோம்.

 

நாம் எதையெல்லாம் அந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

 

இதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

 

ஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.

 

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது

1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது

2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.

3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.

 

பார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.

 

அதில் நடு மையமாக கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.

 

ஆனால் மகரிஷிகள் காட்டியதை காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.

 

தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.

 

உண்மையின் நிலைகள் மறைந்து விட்டது. மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

 

இதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் இதைப் போன்ற மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.

 

நமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.

 

அந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.

1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று

2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.

 

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.

 

மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.

 

எனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.

 

எனக்குள் அந்த மெய்ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.

 

தீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

 

ஆகையினால்

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி

2.இதை ஒவ்வொருவரும் நாம் பின்பற்றுவோம்

3.விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபடுவோம்

4.இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைவோம்

5.உலகைக் காத்திடும் ஞானிகளாக உருவாவோம்.

நம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”

maharishi

நம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”

சிலர் வியாபாரத்திலேயோ மற்ற நிலைகளிலோ அவர்கள் எடுத்த சுவாசத்தாலே எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?

அவர்கள் மேல் இர்ககப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் இருந்துவிடக் கூடாது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலுக்குள் செலுத்திவிட்டு
1.இனி உங்களுக்கு அந்தத் துன்பம் இல்லை
2.இனி நன்றாக இருப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

ஆனால் வெளியில் இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் அதிகமாக வரும்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும்.

சந்தோஷமாக இருந்திருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டால் நம்மையறியாமலே நாம் இந்த நிலைகளைப் பேசிக் குடும்பத்திற்குள்ளே வெறுப்பான உணர்வுகள் வந்துவிடும்.

வெறுப்பு ஒவ்வொருவர் உடலிலும் வளர்த்து அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நம்மையே வெறுக்கச் செய்யும் நிலையாகிவிடுகின்றது.

பின் நமக்குள் அந்த உணர்வுகள் நோயாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தியானமெடுக்கும் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தில் யார் சிறிதளவு பிழைகள் செய்தாலும உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.
2.நமக்குள்ளே இரு மனங்கள் கொண்டு
3.நாம் செய்வது தவறு என்று இருந்தாலும் கூட அந்தத் தவறை உணராதபடி அது அடங்கி
4.அந்தக் காரமான தவறான உணர்வுகள் முன்னின்று இயக்கி,
5.நம்மை அதன் வழிகளிலே இட்டுச் சென்றுவிடுகின்றது.

பாலுக்குள் இனிப்பைப் போட்டு அதற்குள் காரத்தைப் போட்டால் காரத்தின் சுவைதான் முன்னாடி தெரியும்.

அதைப் போன்று நாம் நல்ல மனிதர்களாகவும் இரக்கமும் ஈகையும் உள்ளவர்களாக இருந்தாலும் இந்த நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே இந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது சந்தர்ப்பங்களில் பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டுவிடுகின்றது.

அந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மாற்றி நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.

நம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.

1.பின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது
2.சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்
3.அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது
4.அந்த உணர்வுகள் பூமியிலேயும் (தரையிலும்) பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின் நம் உடலிலிருந்து வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு அந்தக் கடுகடுப்பும் ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.

ஆக அப்பொழுது நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வைச் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

பூமி எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான்
1.நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது.
2.நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து, 
3.நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.

இதை நாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

வீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து உங்கள் உடலைத் தியானித்துவிட்டு உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.

வீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

1.இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி
2.உங்கள் வீடு முழுவதற்கும் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் கூடி நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவையும் வீட்டையும் உடலையும் நாம் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

“சந்தர்ப்பம்தான்…” எல்லாவற்றுக்கும் காரணம் – ஆனாலும் சந்தர்ப்பங்களையே நல்லதாக மாற்றியமைக்கும் சக்தி நமக்கு உண்டு

Image

Aura spiritual light

“சந்தர்ப்பம்தான்…” எல்லாவற்றுக்கும் காரணம் – ஆனாலும் சந்தர்ப்பங்களையே நல்லதாக மாற்றியமைக்கும் சக்தி “நமக்கு உண்டு”

 

ஒரு தாய் கருவுற்ற தாயைத் தேள் கொட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மருந்து போட்டு தாய் தப்பித்துக் கொள்கின்றது. ஆனால் கருவில் வளர்ந்த அந்தக் குழந்தை பிறந்த பின்பு

1.தேள் அவனைக்  கொட்டினால்

2.தேளின் விஷம் அவனை ஒன்றும் செய்யாது.

 

இதே மாதிரிக் கருவிலே இருக்கும் போது ஒரு  தேனீ கொட்டினால்  இந்தக் குழந்தை தேனீயைப்  பிடித்தானென்றால்   அவனைக் கொட்டாது. இதைப் போல

1.கருவுக்குள் (சிசு) உணரும் உணர்வுகள் அதன்  வழி கொண்டு

2.இங்கே  சந்தர்ப்பத்தால் இத்தகைய தன்மை பெறுகின்றது.

 

இப்போது இங்கே மெய் ஞானிகளைப் பற்றிப் பேசுகின்றோம்.  ஒரு கருவுற்ற தாய் இதைக் காதில் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த ஞானத்தைப் பேசும் போது

1.அது தாயின் உணர்வுக்குள் பதிவாகின்றது.

2.ஞானிகளின் உணர்வுகளை நுகர்கின்றது.

3.கருவுக்குள் இருக்கும் சிசுவும் ஞானிகளின் உணர்வைப் பெறுகின்றது.

4.அந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

 

எதனின்  தன்மை அங்கு உருவாகின்றதோ அந்தக் குழந்தை பிறந்தபின் இந்தத் தத்துவத்தைப் பெறும் சக்தி பெறுகின்றது.

 

ஆகவே கருவுற்ற தாய்மார்கள் தீமைகளை அகற்றிவிட்டு உண்மையின் உணர்வைப் பேசும்  அருள் ஞானிகளின் உணர்வை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

 

கருவுற்ற காலங்களில் அருள் உணர்வுகளை நுகர்தறிந்தால் அந்த உணர்வின் கருவே  சிசுக்களுக்குத் தீமையை அகற்றும் வல்லமை கிடைக்கின்றது.

 

அந்தக் குழந்தை பிறந்தபின் உங்கள் துன்பத்தைப் போக்கும். நீங்கள் பேரின்பத்தைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

 

பல இன்னல்கள் பட்ட குடும்பங்களில் பார்தோம் என்றால் அந்தக் குடும்பங்களில் ரொம்பத் தரித்திரத்திலும்  சிரமத்திலும் இருப்பார்கள்.

 

பல நோய்வாய்ப்பட்டுப் பல இன்னல்கள் கொண்டு பல தரித்திரத்தில் வாழப்படும் போது  இதையெல்லாம்  மறந்துவிட்டு கருவுற்ற தாய்

1.தான் “என்றைக்கு நல்லதைப் பெறப் போகிறோம்… என்று ஏங்கித் தவிக்கின்றதோ”

2.அந்தச் சிரமமான காலங்களில் தாய் தான்  எப்படியும் மீளவேண்டும் என்ற உணர்வினை அது  சிந்தித்து

3.ஞானிகளையோ தன்னைக் காக்கும் உணர்வு கொண்ட  ஞானத்தின் உணர்வுகளை நுகர்ந்தது என்றால்

4.அந்தக் கருவில் வளரும் குழந்தைக்கும் அந்த நிலைகள் பெற்று

5.அது பிறந்தபின் பெரிய கலெக்டர் ஆகின்றான் அல்லது

6.பெரிய தத்துவ ஞானியாக உலகம் போற்றும் நிலைக்கு வருகின்றான்.

 

அவனுடைய சந்தர்ப்பம் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் தாய் பல சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வை அது நுகர்ந்ததால் அந்தக் குழந்தை அத்தகைய நிலை பெறுகின்றது.

 

சில குடும்பங்களில் படிப்பதற்கே வசதி இல்லை என்றாலும் அவன் ஞானத்தின் நிலை கொண்டு அதீத  வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்ற நிலைகள்

1.”அத்தகைய சந்தர்ப்பங்கள் தான்”

2.அந்த நேரத்தில் நாம் “நுகரும் உணர்வுகள்” தான்

3.நம்மை உருமாற்றுகின்றது  வாழ வைக்கின்றது.

 

ஆனாலும்

1.அருள் மகரிஷியின் உணர்வு கொண்டு

2.நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் உருமாற்றக் கூடிய சக்தி பெற்றவர்கள் என்பதை

3.உணர்தல் வேண்டும்.

 

சந்தர்ப்பத்தால் பகைமை கொண்ட உணர்வுகளையோ நோய்வாய்ப்படும்  உணர்வுகளையோ தீமை செய்யும் உணர்வுகளையோ நுகர்ந்து விட்டால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்?

 

அடுத்த கணமே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஆறாவது அறிவு கொண்ட நாம் நல்லதை உருவாக்கும் பண்பு பெற்றவர்கள் என்று உணர்தல் வேண்டும்.

1.நாம் இதைச் செய்ய தொடங்கினால்

2.நமக்குள் தீமைகள் வராது தடுக்கலாம்.

3.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது.

 

அதே சமயத்தில் உங்களுக்குள் உபதேசத்தின் உணர்வின் நினைவுகள் பதிவானால்தான் அது செயல் முறைக்கு வரும்.

 

டாக்டருக்குப் பயிற்சிக்குச் செல்பவர்கள் மற்ற கற்றுணர்ந்த டாக்டர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி அதன் வழி பெறவேண்டும் என்ற அந்த ஞானத்தைச் செலுத்தினால் உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.

 

ஆனால் பயிற்சி செய்யும் நேரத்தில் சிந்தனை இழந்திருந்தால் அவர் டாக்டர் ஆவதற்குப் பதில் சோர்வின் தன்மை அடைந்து அவர் வைத்தியம் பார்த்தாலும் அதனால்  பிறருக்குத் தீமையே உருவாகும்.

 

கல்வி கற்கும் நிலையும் இதே போலத்தான்.  எதைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்துச் செலுத்துகின்றோமோ  அதன் வழி அங்கே வழி செய்கின்றது.

 

ஆகவே உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தின் உணர்வைப் பதிவாக்கப்படும் போது

1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களை வாழவைக்கும்

2.தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும்

3.பொருளறிந்து செயல்படும் சக்தியும் நீங்கள் பெறமுடியும்.

4.பேரின்பத்தை இந்த வாழ்க்கையில் நீங்கள்  பெறமுடியும்.

 

இன்றைய விஞ்ஞான உலகில்  அஞ்ஞான வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் மெய்ஞான உணர்வை நமக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி நமக்குள் தெளிந்திடும் மனம் பெறும் அந்தச் சக்தி பெறவேண்டும்.

 

நம் பேச்சும் மூச்சும் இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நச்சுத் தன்மைகளை அகற்றிடும் சக்தியாகப் படரவேண்டும். எமது அருளாசிகள்.

அகஸ்தியன் ஒளியான உணர்வைச் சேர்த்து “நிலைத்த ஒளிச் சரீரம் பெறுங்கள்”

Agastiyar

அகஸ்தியன் ஒளியான உணர்வைச் சேர்த்து “நிலைத்த ஒளிச் சரீரம் பெறுங்கள்”

 
(1).நாம் அனைவருமே தெய்வத்தை எங்கே போய்த் தேடுகின்றோம்?

சாமியாரைப் போல உள்ளவர்களைத் தேடிச் செல்கின்றோம். ஏனென்றால் அவர்களிடம் தெய்வம் அடிமையாக இருக்கிறது என்று செல்கிறோம்.

அவர்களிடம் சென்றால் நமக்கும் “ஏதாவது கிடைக்கும்” என்று செல்கிறோம்?

ஆனால் அந்தத் தெய்வம் எங்கே இருக்கின்றது? நீங்கள் தேடும் அந்தத் தெய்வம் உங்கள் எண்ணத்தில் தான் இருக்கின்றது.

உயர்ந்த எண்ணங்களை எடுத்து நமக்குள் சேர்த்தோம் என்றால் நம் உயிர் என்ன செய்கிறது?
1.“ஓ…” என்று இயக்கச் செய்கிறது.
2.“ம்…” என்று நம் உடலாக்குகிறது.
3.“ஓம் நமச்சிவாய” என்று சிவமாக நம் உடலாகின்றது.
4.அப்பொழுது நம் உடலைச் சிவமாக வணங்க வேண்டும்.

சிவனுக்கு ரோஜாப் பூ மாலை அந்த மாலை எல்லாம் அங்கே கொண்டு போய்ப் போடுவதில்லை. ரோஜாப்பூவின் மணத்தைக் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது மாதிரித்தான்
1.இந்த உடலான சிவத்திற்கு
2.உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டும்.

மலரைப் போல் மணம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உள்ளுக்குள் எண்ணினோம் என்றால் இந்த வாசனை நம் உடல் முழுவதும் பரவி “ம்…” என்று உடலான சிவனுக்கு அமுதாகச் சேர்கின்றது. “அழகான உடலாக்குகின்றது”.

கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டினால் “உடலுக்குள் சந்தோஷமாக வரும்.”

அப்பொழுது உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய வாசனை இனிமையானதாக இருக்கும். நம் சொல் யாரிடம் சொன்னாலும் அந்தக் கனிவாகச் சொல்லச் சொல்லும்.

அப்பொழுது அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டாலே மகிழ்ச்சி அடைவார்கள்.

(2).குடும்பத்தில் வரும் வேதனைகளை அதிகமாக எண்ணினால் அதனின் விளைவுகள் எப்படி எல்லாம் இருக்கும்?

ஒரு வேதனையான உணர்வை எடுக்கின்றீர்கள் என்றால் உங்கள் உயிருக்குள் பட்டவுடனே அந்த வேதனையை உங்களுக்குள் உருவாக்குகின்றது.

எப்புறம் என்ன சொல்வீர்கள்?

இராத்திரிக்கெல்லாம்…, என் மேல் வலிக்கின்றது என் இடுப்பு வலிக்கின்றது. என் பையன் சொன்னபடி கேட்கவில்லை. வியாபாரம் சரியில்லை. கொடுத்த பணமெல்லாம் திரும்ப வரவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை.

ஆண்டவன் இன்னும்… என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்…, என்று சொல்லி வேதனையைத்தான் அதிகமாக எடுக்கின்றோமே தவிர நல்லதை எண்ணுவதில்லை.

1.நமக்கு ஆண்டவன் தான் எல்லாம் செய்து கொடுக்கின்றான் என்று நினைக்கின்றோமே தவிர
2.நம் உயிர் நாம் கொடுப்பதைப் (எண்ணிச் சுவாசிப்பதை) படைக்கின்றான் என்று
3.நாம் மறந்தே போய்விட்டோம்…, மறக்க வைத்துவிட்டார்கள்.

ஆகவே அந்த வேதனைப்படும் உணர்வை எடுத்தவுடன் வேதனையான சொல்களையே நாம் சொல்வோம். அதைக் கேட்பவர்கள் கொஞ்ச நேரம் நம் வேதனைகளைக் கேட்பார்கள். அப்புறம் என்ன ஆகும்?

இவன் எப்பொழுது பார்த்தாலும் வேதனை வேதனை என்று சொல்லிக் கொண்டேயிருக்கின்றான். நம்மைக் கண்டாலே அவர்கள் வெறுத்துப் போக ஆரம்பிப்பார்கள்.

இந்த வெறுப்பான உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறினால் கடையிலிருந்து சரக்கை எடுத்துக் கொடுக்கும்போது என்ன ஆகும்?

என்ன சரக்கு… வேண்டும்…? “உஹும்…” என்று சொல்லிச் சங்கட சலிப்பு வெறுப்போடு தான் சரக்கை எடுத்துக் கொடுப்போம்.

ஒரு நாள் பூராம் இப்படிச் சொல்லிக் கொடுத்தால் “இவன் எப்பொழுது பார்த்தாலும் இப்படிச் சலித்துக் கொள்கிறான்” என்று சொல்லிவிட்டு யாரும் வரவில்லை என்றால் அப்புறம் கடையில் வியாபாரமே ஆகவில்லை என்போம்.

வியாபாரம் நல்லாக வேண்டும் என்ற நோக்குடன் கடன் வாங்கியாவது கடையில் நல்ல சரக்காக வாங்கி வைத்திருப்போம்.

இந்தச் சலிப்பான உணர்வுடன் பேசியவுடன் மற்றவர்கள் காதில் பட்டு இந்தச் சலிப்பான உணர்ச்சிகள் மாறி நாம் அடுத்து அவர்களைப் பார்த்தோம் என்றால் கண்களிலிருந்தும் வேதனையான உணர்வுகள் தான் வெளி வரும்.

வேதனை உணர்வுடன் சரக்கைப் பார்த்தால் நல்ல சரக்குகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

(3).வேதனையான உணர்வுடன் கடைக்குச் சென்றால் நல்ல பொருளை நிச்சயம் வாங்க முடியாது

உதாரணமாக துணிக்கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் பையன் வந்து நானும் அங்கே வருவேன் என்று அடம்பிடித்தால் அப்பொழுது சங்கடமாகும்.

அப்பொழுது என்ன எண்ணுவீர்கள்…? பார்…, இந்தப் பையன் இப்படியே பண்ணிக் கொண்டிருக்கின்றான் எங்கேயும் போகவும் முடியவில்லை வரவும் முடியவில்லை என்ற வேதனைப்படுவீர்கள்.

கடைசியில் அந்த வேதனையுடன் தான் கடைக்குச் செல்வீர்கள்.

1.அந்த வேதனைப்படும் உணர்ச்சியுடன் ஜவுளிக் கடைக்குச் சென்று
2.நீங்கள் நல்ல துணி மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்.
3.யாம் உங்களிடம் பந்தயமிடுகின்றோம்.., உங்களால் முடியாது.

வேதனைப்பட்டதற்குத் தகுந்த மாதிரித் துணியைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். கடையில் உள்ளவர்கள் நல்ல துணிகளாக எடுத்துப் போட்டால்… “வேண்டாம்… இது வேண்டாம்…! இது வேண்டாம்…!” என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டேயிருப்பீர்கள்.

எந்த அளவிற்கு வேதனைப்பட்டு வந்தீர்களோ அது இயக்கும். ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வேதனைப்பட்ட குணத்திற்குண்டான நிறம் தான் உங்களுக்குப் பிடிக்கும்.

கரு நீலமான நிறம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது விஷம்.

இந்த நிறம் கொண்ட துணியை எடுத்து வந்துவிடுவீர்கள். நீங்கள் “உங்கள் மனதுக்குப் பிடித்தது…” என்று எண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தபின் அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள்?

“இது என்ன…! இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்…?” என்பார்கள்.

ஏன்…? “இந்தத் துணிக்கு…, என்ன வந்துவிட்டது…!” என்று சொல்லிக் கொண்டு சண்டைக்குப் போவோம்.

மறு நாள் எல்லாம் சாந்தமான பிற்பாடு எடுத்து வந்த துணியைப் பார்த்தால் என்ன நினைப்போம்?

நேற்றுப் போகும் பொழுதே சனியன் மாதிரி வந்து என்னை இப்படித் தொல்லை பண்ணிக் கொண்டிருந்தான் என்று சொல்லிவிட்டு “எல்லாம் என் நேரம்…” என்று வேதனைப்படுவோம்.

கடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்தால்… “வாங்குவானோ இல்லையோ… தெரியவில்லை…!” என்போம். அப்பொழுது தான் கண்ணுக்கே “நல்லதா கெட்டதா” என்று தெரிய வரும்.

(4).நம் குணத்திற்குத் தக்கதான் ருசியும் நம் சொல்லும் வரும்

நீங்கள் கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள். கொஞ்சம் காரமானதைக் கொடுத்துச் சாப்பிட்டவுடனே “ஸ்ஸ்… ஆ…கா” என்று கொஞ்சம் உற்சாகமாகச் சாப்பிடுவீர்கள்.

ஆனால் அதே கோபமான நேரத்தின் ஒரு இனிப்பானதைச் சாப்பிடச் சொல்லிப் பாருங்கள்.

“தூ…” என்று துப்புவீர்கள். அந்த இடத்தில் உமட்டலாக வரும். எதிர்த்து வரும். வாந்தி வருகிற மாதிரித் தெரியும்.

மகிழ்ச்சியாக (இனிப்பாக) இருப்பவர்களுக்கு இந்தக் காரத்தைக் கொடுத்தோம் என்றால் “அப்பப்பா…ப்பப்பா…” என்று சப்தம் போட ஆரம்பிப்பார்கள்.

1.நம் உடலில் இருக்கக்கூடிய குணத்திற்குத் தகுந்த மாதிரித்தான் “ருசியும்” வருகின்றது.
2.நம் குணத்திற்குத் தக்கவாறு தான் “நம் சொல்லும்” வருகின்றது.

நம் சொல் அடுத்தவர்கள் காதில் பட்டவுடனே அதே திருப்பி அந்தப் பதில் திரும்ப வரும். ஆனால் நாம் தவறு செய்யவில்லை. நம் ஆன்மாவில் பட்டது இந்த மாதிரி இயக்குகின்றது.

பையன் மீது பிரியமாகத் தான் இருந்தோம். ஆனால் நம் மீது பட்ட அழுக்கைத் துடைக்கத் தெரியவில்லை.

தினசரி உடலில் உள்ள அழுக்கைப் போக்கக் குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கத் துவைத்துக் கொள்கிறோம்.

1.நம் எண்ணத்தால் பட்ட அழுக்கு நமக்குள் போனதே.
2.அந்த அழுக்கைத் துடைக்கின்றோமா? யாரும் காண்பிக்கவில்லை.
3.நாம் துடைக்கவில்லை. துடைக்கத் தெரியவில்லை.

(5).பையனை எண்ணி வேதனைப்பட்டு வெறுப்படைந்த உணர்வுகள் அவன் தொழிலுக்குச் செல்லும்போது அவனை எப்படி இயக்குகின்றது?

நம் பையன் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் இந்த மாதிரிச் சொல்லி ஏதாவது கேட்கவில்லை என்றால் அதே வேதனையான நிலைகளில் அங்கே போய் வேலை பார்ப்பான்.

அந்தச் சங்கடமான நிலைகளில் இருக்கும்போது “ஏனப்பா… இது இந்த மாதிரி இருக்கிறது இதை எடுத்து இந்த மாதிரி வையப்பா…” என்று அங்குள்ளவர்கள் சொன்னால் பையன் என்ன சொல்வான்?

“அ..ஆ…, என்று மறுத்து…” அதெல்லாம் முடியாது…! நீ என்ன சொல்கிறது… நான் என்ன செய்கிறது… “நீயே செய்…! என்று வரும்.

ஏனென்றால் இங்கே வீட்டில் வந்த வெறுக்கும் உணர்வு அங்கே தொழிற்சாலையில் மேலதிகாரி வேலையைச் சொன்னவுடனே

1.“ஜிர்…’ என்று கோபமாகி முறைத்துப் பார்க்கச் சொல்லும்.
2.அங்கே எதிர்ப்பான். நீயே செய் என்பான்.
3.இதைப் பார்க்கலாம் நீங்கள்.

ஏதாவது உங்கள் வீட்டில் சங்கடப்பட்டு வேலைக்குச் சென்றால் உங்கள் மேலதிகாரி வேலை சொன்னால் உங்களுக்கு என்ன எண்ணம் வருகிறது என்று பாருங்கள்…!

உங்களுக்குத் தெரியாமலே அங்கே சண்டை போட வைக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இந்தச் சண்டையை அங்கேயும் மூட்டிவிட்டு யாரிடம் பதில் சொன்னாலும் விடாப்பிடியாக
1.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்கிறார்கள்
2.என்னை அப்படிச் சொல்கிறார்கள் என்று
3.இதைத் தான் சொல்லச் சொல்லும்.

உங்கள் வீட்டில் வந்த இந்தக் குறை அங்கே போய் மோதி உங்கள் தொழிலேயும் இடைஞ்சல் கொடுக்கும்.

இந்த மாதிரி ஆனவுடன் நம் உடலுக்குள் உள்ள நல்ல குணங்களுக்கு இதெல்லாம் எதிரியாகிவிடும். உடலுக்குள் வெறுப்பும் வேதனையும் உண்டாகிக் கொண்டேயிருக்கும்.

அதே போல நம் நண்பர்களுக்கும் நம்மைப் பார்க்கும் பொழுது அதே வேதனையும் வெறுப்பும் வந்து கொண்டேயிருக்கும்.

இந்த விஷம் எல்லா இடத்திலும் பரவிவிடுகின்றது. இதே மாதிரித் தொழில் செய்யும் இடங்களில் அவரவர்கள் குடும்பத்திலேயும் இந்த மாதிரி இருக்கின்றது.

நாம் என்ன நினைக்கிறோம். நான்  நல்லது தான் நினைக்கின்றேன். ஆனால் என் வீட்டிலும் தொழிலும் இப்படி இருக்கின்றது என்று எண்ணி வேதனைப்படுவோம்.

நம் பையன் மீது பிரியமாக இருக்கும் பொழுது இந்த மாதிரி நடந்தால் “அடப் பாவிகளா.. இந்த மாதிரிச் செய்கிறார்களே…! என்று உணர்ச்சி வசப்படுவோம்.

“பார்த்து வேலை செய்டா” என்று சொல்லிவிட்டு “உனக்கு இப்படித் தொல்லை கொடுக்கின்றார்களே” என்று எண்ணி அதிலும் வேதனை வரும். ஏனென்றால் அங்கே இடைஞ்சல் வரும் போது தாய் என்பதால் பையன் எல்லாவற்றையும் இங்கே வந்து சொல்வான்.

அதே சமயத்தில் நண்பர்களிடம் சொல்லும் போது இப்படிப் பண்ணுகின்றார்கள் பாருங்கள் என்று சொல்வோம். எதற்கெடுத்தாலும் என் பையனுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள் என்று அவர்களிடம் சொல்லி அவர்கள் உடலிலேயும் இந்த வேதனையைச் சேர்ப்போம்.

நாலு தடவை இப்படிச் சொன்னால் ஐந்தாவது தடவை நம் நண்பர்கள் அப்புறம் நம்மைக் கண்டாலே ஒதுங்கிப் போய்விடுவார்கள். இவன் என்னடா எப்பொழுது பார்த்தாலும் இந்த மாதிரிக் குறையையே சொல்லிக் கொண்டுள்ளான் என்று விலகிச் செல்வார்கள்.

இத்தகைய நிலைகள் கடைசியில் பகைமையாகி எதிரியாக்கிவிடும்.

காரணம் என்ன?

(6).நல்லதை எண்ணுவோம் ஆனால் நல்லதைக் காப்பதில்லை உடலிலுள்ள நல்ல குணங்களுக்குத் தேவையான நல்ல சக்திகளை நாம் கொடுப்பதில்லை

நல்ல செடிகள் விளையும் இடத்தில் விஷச் செடிகளை விதைத்தால் நல்ல செடிகளுக்குண்டான சத்தையெல்லாம் அது எடுத்துக் கொண்டு நல்ல செடிகளுக்கு உணவே இல்லாது செய்துவிடும்.

களை அதிகமாகிவிட்டால் நல்ல செடிகள் விளையுமோ?

நல்ல செடிக்கு வரும் சத்தெல்லாம் களை “லபக்..” என்று எடுத்து அது நன்றாக வளரும். ஏனென்றால் அது விஷம். இதே மாதிரித்தான்
1.நம் நல்ல குணங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்தையெல்லாம் அது எடுத்துக் கொள்ளும்.
2.அப்பொழுது நல்ல குணங்களையே எண்ண முடியாதபடி அது தவிக்கும்.
3.நல்ல குணங்கள் உடலை வளர்த்தது அனைத்தும் சோர்வடையும்.

நல்ல குணங்களை எண்ணவிடவில்லை என்றால் இந்தத் தீமை செய்யும் குணங்கள் “ஆட்சிக்கு” வந்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை பாசத்தினால் இப்படி வந்துவிடுகின்றது.

இந்த மாதிரியெல்லாம் நடந்ததால் பையனுக்கு அவன் வேலை செய்யும் தொழிற்சாலையில் கெட்ட பேர் வருகின்றது. அவனுக்குள் வெறுப்பாகும் பொழுது அந்த வெறுப்பான நிலைகளிலே அங்கே எதிரியாகின்றது.

அங்கே வேலை செய்ய முடியாது. வீட்டுக்கு வர மாட்டான். ஹோட்டலில் போய்ச் சாப்பிடுவான். காசே பையன் சரியாக வீட்டுக்குத் தர மாட்டேன் என்கிறானே என்று வேதனைப்படுவோம்.

இதெல்லாம் செய்வது யார்?
1.நம் உயிர் தான்.
2.நம் உயிர் தான் நாம் எண்ணிய இவ்வளவையும் இயக்குகின்றது.
3.நாம் எண்ணியது அனைத்தும் தெய்வமாக இருக்கின்றது.
4.அதையும் காட்டுகிறார்கள் ஞானிகள்

(7).காளி – கோபம் – காளிக்கு முன்னாடி புலி

காளி மாரியம்மன் இப்படி எத்தனையோ தெய்வங்களைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பையன் மேல் ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். ஆனால் எனக்குப் பிடிக்காததைச் செய்தான் என்றால் “ஜிர்ர்ர்….” என்று கோபம் வந்துவிடுகின்றது.

நம் சொன்னபடி பையன் கேட்கவில்லை என்றால் காளியாகவே மாறிவிடுகின்றோம்.

காளிக்கு முன்னாடி என்ன வைத்திருக்கின்றார்கள்?

புலியை வைத்துக் காண்பித்துள்ளார்கள். ஏன் வைத்துள்ளார்கள்? எனக்குக் கோபம் வந்துவிட்டால் முன்னாடி நிற்பதைப் பார்க்கின்றேனா?

புலி தன் பசியைத் தீர்க்க மற்றவைகளை அது இரக்கமற்றுக் கொன்று அது சாப்பிடுகின்றது.

அது எவ்வளவு தான் “விர்ர்ரா…விர்ர்ரா” என்று கத்தினாலும் அதைக் கேட்காது தன் பசியினுடைய அந்த ஆவேசத்தில் தான் இருக்கும். கடித்துக் குதறும். உணவாகப் புசிக்கும்.

அதே மாதிரித்தான் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்கிற பொழுது உன்னை அடித்து நொறுக்கினால் தான் உனக்குப் புத்தி வரும் என்று சொல்லி ஆவேசமாக அடிப்பார்கள்.

1.இந்தக் காளி இப்படி நொறுக்கும்.
2.புலி தன் பசியைப் போக்க எப்படி ஆவேசப்படுகின்றதோ அதே ஆவேசம் இங்கே வரும்.
3.அதனால் தான் “காளி – கோபம்” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இந்த வாழ்க்கையில் கோபமும் கொதிப்பும் அடிக்கடி எடுத்துப் பேச ஆரம்பித்தார்கள் என்றால் அடுத்த பிறவி “நிச்சயம் புலி தான்”.

இந்தக் கோபமான எண்ணத்தை எண்ணினால் உயிரான ஈசன் அதைப் படைத்து உடலுக்குள் வினையாகச் சேர்க்கின்றான்.
1.அப்பொழுது இந்த உடல் அது வினைக்கு நாயகனாக விநாயகா
2.அந்தப் புலியின் உடலாகவே மாற்றுகின்றது நம் உயிரான ஈசன்.

இதைக் காண்பிப்பதற்குத்தான் கோவிலில் இப்படி வைத்துள்ளார்கள். ஏனென்றால் இதெல்லாம் நம் உயிரின் இயக்க நிலைகள். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

(8).மற்றவரை ஏமாற்றினாலும் உயிரிடமிருந்து யாரும் தப்ப முடியாது

1.நான் உங்களை ஏமாற்றலாம்.
2.யாரை வேண்டுமானாலும் ஏமாற்றிவிடலாம்.
3.எனக்குள் இருக்கும் உயிரிடம் நான் ஏமாற்றவே முடியாது.

உங்களை நான் ஏமாற்றுகின்றேன் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்துவிடும்.

1.ஏமாற்றும் உணர்வு எனக்குள் வந்தவுடன்
2.என்னிடம் உள்ள நல்ல குணங்களை எல்லாம்
3.இது ஏமாற்றிக் கொண்டேயிருக்கும்.

ஏமாற்றியவுடனே நாம் என்ன செய்வோம்? அதைக் கண்டு நாம் இரசிப்போம். ஆனால் ஏமாற்றப்பட்டவன் வேதனைப்படுவான்.

அவன் வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படுவதைக் கண்டு நாம் இரசித்தோம் என்றால் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் ஏமாற்றிவிடும்.

நான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று எண்ணினேன். ஆனால் எனக்குள் வந்து வேதனையாகிவிடுகிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகத்தான் கோவிலைக் கட்டி வைத்து விநாயகரை முன்னாடி நிறுத்தி நம்மை நாம் அறியும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

(9).அகஸ்தியன் ஒளியானது போல் ஒளியான உணர்வுகளை நாம் வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக நாம் ஒளிச் சரீரம் பெறவேண்டும்

வினைக்கு நாயகனான அமைந்த இந்த மனித உடலை எப்படிப் பெற்றோம்?

முந்தி மிருக நிலையிலிருந்தோம். மிருகமாக இருக்கும்போது சேர்த்துக் கொண்ட நல் வினைகளால் மிருக நிலையிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதாக இருக்கும் நாம் இன்று எந்த வினைகளைச் சேர்க்க வேண்டும் என்பதை நீ சிந்தித்துப் பார்…! என்று “கேள்விக் குறியும்” போட்டுப் பச்சையாகவே காட்டுகின்றார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவா நிலை அடைந்தான் அகஸ்தியமாமகரிஷி.

1.அவன் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மகள்
2.அவன் உடலில் விளைய வைத்த அந்தச் சக்திகள்
3.இப்பொழுது உபதேசிக்கின்ற மாதிரி
4.அவன் உடலிலிருந்து வந்த வாசனைகளை எல்லாம்
5.சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

அகஸ்தியாமா மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர்ந்து இந்த வாழ்க்கையில் நம் உடலிலிருந்து வரும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

ஒளியான அந்த அகஸ்தியனின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அந்த வினைக்கு நாயகனாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

“மனிதனின் கடைசி எல்லை அழியா ஒளிச் சரீரம் தான்”.

அருள் சக்திகளை நான் பெறவேண்டும்… என்பதற்குப் பதில் “நாங்கள் பெற வேண்டும்…” என்று எண்ணிப் பாருங்கள் – உங்கள் எண்ணத்தின் “வலு” அதிகமாகும்

Image

Spiritual unity

அருள் சக்திகளை நான் பெறவேண்டும்… என்பதற்குப் பதில் “நாங்கள் பெற வேண்டும்…” என்று எண்ணிப் பாருங்கள் – உங்கள் எண்ணத்தின் “வலு” அதிகமாகும்

 

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு “நாம்…” என்ற அணைப்பிலேயே செல்வோம். ஏனென்றால் எல்லாமே “நமக்குள்..” தான் இருக்கின்றது.

 

பல கோடி அணுக்கள் சேர்த்துத்தான் “நாம்” ஆகின்றோம். ஆனால் எந்தெந்த அணுக்களைச் சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த “நான்…” ஆகின்றோம்.

 

கோள்களும் நட்சத்திரங்களும் சூரியனும் மற்றவைகளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இயங்குகின்றன. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் கூட்டு ஐக்கியமான நிலைகளில்தான் அது மரமாக வளர்கின்றது. அதற்குள் பிரித்திருந்தால் தசையினுடைய நிலைகள் வளராது

 

அதைப் போன்று தான் நமக்குள்ளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இருந்தாலும்

1.வெறுப்பான உணர்வுகளை நாம் சேர்க்கும்பொழுது

2.ஒரு அணுவின் தன்மை இரத்தத்தை உருவாக்கினாலும்

3.இன்னொரு அணு அதன் மேலே பட்டவுடன்

4.அதனுடைய மலம் நம் இரத்தைத்தைக் குடித்துவிட்டு

5.அந்த அணுவின் மலம் உடலிலே பீய்ச்சும் பொழுது

6.நம் தசைகளும் கரைந்து அழுகிப் போகின்றது.

7.நமக்குள் அது பிரியும் தன்மை பெறுகின்றது.

 

இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பிறரைப்பற்றி வேதனை உணர்வுடன் எண்ணும் பொழுது அந்த வேற்றுமையான உணர்வுகள் நமக்குள் வந்து அவர்களை அழிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

 

நமக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழிக்கும் உணர்வுடன் நாம் பேசினாலும் அதே சமயத்தில் அவரிடமிருந்து கெடுதலான அந்த அலைகள் நம் தசைகளிலே படும் பொழுது அந்த உணர்வுகள் பட்டு அரிப்பு ஆகின்றது.

 

அந்த அரிப்பினாலே சில கிருமிகளாகி நம் தசைகளையும் அது கரைத்துவிடுகின்றது.

 

பல வகைகளிலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படி வருகின்றது. ஏனென்றால் மனிதனாகத் தோன்றியபின் மனிதனிலிருந்து தோன்றும் இத்தகைய உணர்வுகள் “உருவாக்கும் ஆற்றல்” பெற்றது.

 

இவ்வாறு நாம் அடிக்கடி பேசும் பொழுது, இதைப் போன்ற நோய்களும் புற சரீர நோய்களும் உள் சரீரத்திற்குள்ளும் உணர்வின் அணுக்களாக மாறிவிடுகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

 

அதிலிருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக யாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்திப் பயிற்சியும் கொடுக்கின்றோம். இப்பொழுது யாம் இதைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள்.

 

இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

 

இதைப் போன்று ஒவ்வொருத்தரும் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி நம் தியான வழி அன்பர்கள் கூட்டுக் குடும்பத் தியானமிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு ஒவ்வொருவராகச் சொல்லிப் பழக வேண்டும்.

 

நாம் வீட்டிலிருந்தாலும் நம் குழந்தைகளையும் இதே மாதிரி அவர்களைச் சொல்லச் சொல்லி நாம் கேட்க வேண்டும். இந்த முறைகளில் நாம் பக்குவத்திற்கு வரவேண்டும்.

 

காரணம் “உணர்வுபூர்வமாக எடுத்து…” அதைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.

1.இவருடைய நல்ல எண்ணம் அவருக்குள் உருவாகும் பொழுது,

2.அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

 

கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும் நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

 

ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் இந்த நிலைகளைச் செய்து பழக வேண்டும்.

 

இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோம் என்றால்

1.அந்தப் பிரியத்துடன் பாசத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது

2.அதே பாசம் இங்கே வளர்கின்றது.

 

ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும் இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கும் இதைப் போன்று நாம் முறைப்படிச் செய்ய வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை நான் பெறவேண்டும் நான் பெறவேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில் நாங்கள் பெறவேண்டும் நாங்கள் பெறவேண்டும் என்று எடுத்துப் பழக வேண்டும்.

 

இவ்வாறு செய்யும் பொழுது எல்லோருடைய வலுவும் நமக்குக் கிடைத்து அதன் மூலம் அந்த மகரிஷிகளின் சக்திகளை உடனுக்குடன் நாம் பெற முடிகிறது.

 

1.நம் உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களும்

2.உயிருடன் ஒன்றிய நிலைகளாக ஒரே உணர்வாக

3.ஒளியாக மாறும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

ursa-major-big-dipper-polaris

என் தாய் தந்தைரை விண் செலுத்திய நிகழ்ச்சி

நம் முன்னோர்கள் மூதாதையர்களை (குலதெய்வங்களை) விண் செலுத்தாதபடி சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றலைப் பெற முடியாது. அது நடக்காத காரியம்.

1.எவ்வளவு தான் நல்ல சக்திகள் பெற்றிருந்தாலும்
2.நமக்கு என்று ஒரு தூதுவர் அங்கே போயிருக்க வேண்டும்.
3.அது இல்லை என்றால் நாம் பெற முடியாது.

முந்தி மகரிஷிகள் அங்கே சென்றார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட நிலையை நம் குருநாதர் பெற்றார். அவர் காட்டிய வழியில் என் அம்மா அப்பாவையும் விண் செலுத்தும்படிச் சொன்னார். அதைச் செய்தேன்.

அதைச் செய்யாத வரைக்கும் எனக்கு அந்தச் சக்தி கிடைக்கவில்லை. என் அம்மா அப்பா இறந்த பிற்பாடு அந்த உடலின் நிலைகளை நீ எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்னைப் பக்குவப்படுத்தினார்.

என் அப்பா இராஜபாளையத்தில் இருந்தார். நான் அங்கே அவரைச் சந்திக்கப் போனவுடனே “நீ… சீக்கிரம் வீட்டை விட்டுப் புறப்படு…” என்றார்.

ஏன் இப்படிக் குருநாதர் சொல்கிறார் என்று எனக்கு அர்த்தமாகவில்லை. ஏனென்றால் என் அப்பா நன்றாக உடல் நலத்துடன் தான் இருந்தார்.

“நீ சீக்கிரம் புறப்படு…” என்றே சொல்லிக் கொண்டிருந்தார் குருநாதர். நீ ஊருக்கெல்லாம் ஞானத்தைச் சொல்ல வேண்டும் வீட்டில் வந்து நீ சொந்தமாக இருக்க வரவில்லை “நீ நட…” என்கிறார் குருநாதர்.

கிளம்பி வந்துவிட்டேன்.

நீ அங்கே இருந்தாய் என்றால் உன் அப்பா உன் மேல் பாசமாக இருந்தார். வெளியில் வந்தால் அந்த உயிரான்மா உடனடியாக உன்னிடம் தான் வரும்.

நான் வீட்டை விட்டுப் புறப்பட்டவுடன் என் அப்பா.., எங்கடா.. அந்தச் “சாமியார் பயலை…?” என்று தான் என்னைக் கேட்டிருக்கின்றார்.

சாமியார் பயல் எல்லாவற்றையும் இந்த மாதிரிச் செய்துவிட்டு எங்கே போனான்…? பைத்தியத்துடன் சேர்ந்து அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று சொல்லி வேகமாகக் கேட்டுள்ளார்.

அவர் அருகில் இருந்தோம் என்றால் உடனடியாக என் உடலுக்குள் வந்துவிடுவார் என்பதற்காகத்தான் குருநாதர் எம்மை வீட்டை விட்டு “உடனடியாகப் புறப்படு” என்று சொல்லியுள்ளார்.

நடந்து போகப்படும் பொழுது இதற்கு மத்தியிலே என் அப்பாவின் ஆன்மா வெளியில் வருகின்றது.

அப்பொழுது அது தெரிந்தவுடனே அதற்கு வேண்டியதுகளைச் செய்து அந்த உயிரான்மாவை அங்கேயே உட்கார்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இணைக்கச் செய்தேன்.

உன் ஊருக்குச் சென்று போய்ப் பார் என்று குருநாதர் சொன்னார். அப்புறம் அப்பா இறந்தார் என்று சொன்னேன்.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்றார்கள்.

ஆன்மா வெளியில் வந்தது தெரிந்தது என்றேன்.

பழனிக்கு வந்து என் பையன் தண்டபானியைக் கூப்பிட்டு இராஜபாளையம் சென்றேன். என் மனைவி முதலில் அங்கே சென்றது.

உன் அப்பாவின் ஆன்மா உடலை விட்டுப் பிரியும் நேரம் அங்கே இருக்கக்கூடாது. ஏனென்றால் நீ அந்த அளவிற்கு மனப் பக்குவம் பெறவில்லை. ஆகையினால் “நீ விலகி இருப்பது தான் நல்லது” என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் “என் அம்மா உடலை விட்டுப் பிரியும் சமயமும்” நான் அருகில் இல்லை.

என் அம்மா உடல் நலிவுற்றதைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

அப்பொழுது என் மனைவியிடம் என் அம்மா இரண்டு கோழி முட்டைய வறுத்து வேக வைத்துக் கொஞ்சம் மிளாகய்த் தூளும் உப்பும் வைத்து எனக்குக் கொடு என்று கேட்டது.

அந்த நேரத்தில் என் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனாலும் அந்த உணவின் மேல் இருந்த ஆசை விடவில்லை.

குருநாதர் சொன்னார். உங்கள் அம்மாவால் சாப்பிட முடியாது. ஆனால் கோழி முட்டையைப் பிரியமாகச் சாப்பிட்டிருக்கின்றார்கள். இந்தச் சமயத்தில் ஆன்மா பிரிந்தது என்றால் வேறு எங்கும் போகாது.

அதே சமயத்தில் உன் மீது பிரியமாக எண்ணியது. உன்னைக் “கடவுளின் அவதாரம்” என்று எண்ணுகிறது என்று சொல்கிறார் குருநாதர். ஆனாலும் அந்தக் கடைசி ஆசை கோழி முட்டை மீது செல்கிறது. அவர்களை அங்கே விட்டு விடக்கூடாது என்று சொல்கிறார்.

அன்றைக்கு தாரமங்கலத்தில் கூட்டுத் தியான நிகழ்ச்சி என்று ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் கலந்து கொள்வதாகவும் எல்லோருக்கும் தகவல் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார்கள்.

அதன்படி நான் அங்கே சென்றுவிட்டேன். அங்கே தியானமிருக்கும்போது என் தாயின் ஆன்மா வெளி வருகின்றது. அங்கே இருந்த பலரும் அதைப் பார்த்தார்கள். அந்த ஆன்மாவின் உருவம் தெரிந்தது.

அப்பொழுதே அதற்குண்டான நிலைகளைச் செய்து என் தாயின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை பெறவேண்டும் என்று உந்திச் செலுத்தினேன்.

சேலத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஏதாவது தந்தி வந்தால் உடனடியாகத் தாரமங்கலத்திற்குத் தகவல் கொடுக்கும்படி சொல்லியிருந்தேன்.

இப்படி என் தாய் தந்தை இரண்டு பேரும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்த பிற்பாடு தான்
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து சில நுண்ணிய அலைகளை நான் பெற முடிந்தது.
2.அதை எடுத்து எல்லோருக்கும் என்னால் கொடுக்க முடிந்தது.
3.இல்லாமல் போனால் இந்த அளவிற்குத் தைரியமாக நான் உங்களிடம் சொல்ல முடியாது.

என் தாய் கடவுளாக தெய்வமாக இருந்து என்னைக் காத்தது. குருவாகவும் இருந்து நல் வழி காட்டியது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் தெளிவாக எடுத்து உரைத்ததால் அதன் வழியில் தாய் தந்தையின் உயிரான்மாக்களை விண் செலுத்த முடிந்தது.

1.அவர்களை விண்ணுக்குச் செலுத்திய பின்பு தான்
2.நான் அந்தச் சக்திகளை அதிகமாகப் பெற முடிந்தது.

நீங்களும் உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும். செலுத்தினீர்கள் என்றால் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற முடியும்.

விசாரணை… கேள்வி எழுப்புதல்… உணர்தல்…!

Image

Maharishi - Sabdharisi

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முறையைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

கண்களின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பூமியின் வட கிழக்குப் பகுதியில் நினைவினை விண்ணிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

“கிரகணம்” பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து முழுவதும் மறைத்தால் அந்த நேரத்தில் சூரியனின் சக்தி முழுவதும் தடைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் சந்திரனுக்கோ பூமிக்கு வந்து சேரும் சூரியனின் அனைத்து சக்திகளையும் பெற அந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் பூமிக்கோ சூரியனின் சக்திக்குப் பதிலாகச் சந்திரனின் சக்தியை நுகர வேண்டிய கட்டாயமாகின்றது.

ஏனென்றால் இவை ஒரே நேர்கோட்டில் வருவதால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது. அதிக பலன் இதிலே சந்திரனுக்குத்தான்.

இதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வலைகள் வெளி வரும்போது அதை நாம் இடைவெளியில் “கிரகணம்” போன்று பிடிக்க வேண்டும்.

இதைத்தான் தடுத்து நிறுத்துவது என்பது. அப்பொழுது நம் ஆன்மாவில் உள்ள மற்ற உணர்வலைகளுக்கு ஆகாரம் கிடைக்காது துருவ நட்சத்திர உணர்வே ஆகாரம் ஆகின்றது.

ஆகவே இவ்வாறு தடுத்து நிறுத்தும்போது… தியானத்தில் சிலர் எனக்கு..
1.ஒளி அலைகள் தெரிந்தது
2.வெளிச்சமாக இருந்தது
3.புருவ மத்தியில் குறு..குறு.. என்று இருந்தது
4.சூடாகித் தலை பாரமானது
5.மிதப்பது போல் இருந்தது
6.நல்ல நறுமணங்கள் வந்தது
7.உமிழ் நீர் சுவையாகச் சுரந்தது
8.இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள்.

அதே போன்று மாறுபட்ட எண்ணம் கொண்ட சிலருக்கு
1.தொண்டை கர.. கர.. என்று ஆகிவிட்டது
2.சிந்தனைகள் ஒரு நிலைப்படுத்த முடியாமல் கட கட என்று எங்கெங்கோ செல்கிறது
3.என்னை உட்காரவே விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள்.

தடுக்கவும் இல்லை… நிறுத்தவும் இல்லை… என்பவர்களுக்கு – ஒரே வார்த்தையில் “அமைதியாக நன்றாக இருந்தது” என்று சொல்லிவிடுவார்கள்.

தன் ஆன்மாவில் உள்ளது மீண்டும் மீண்டும் சர்க்குலேசன் ஆகிக் கொண்டேயிருப்பதால் இவ்வாறு சொல்வார்கள்.

ஆகவே நாம் துருவ நட்சத்துரத்துடன் மோதியே ஆகவேண்டும். அதைத் தடுத்து நிறுத்தினால் தான் அது நமக்குள் வரும். உணர முடியும்.

ஆனாலும் அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலே சொன்ன (நல்லது 8 & கெட்டது 3) அந்த அத்தனை உணர்வலைகளையும் மறுபடியும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.

1.“விசாரணை” என்பது தனக்குத் தானே கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி தானே உணர்தல் என்று பொருள்.

2.“கேள்வி எழுப்புதல்” என்றால் புருவ மத்தியில் உயிரின் தொடர்பு கொண்டு குரு உபதேசித்ததை (குருவை) எண்ணி மறுபடியும் துருவ நட்சத்திரத்துடன் 1, 10, 100, 100000 கோடி கோடி என்று மோதிக் கொண்டேயிருந்தால் உணர முடியும்.

3.“உணர்தல்” என்பது ஒரு வருடத்திலோ ஒரு மாதத்திலோ ஒரே நாளிலோ ஒரு நிமிடத்திலோ வரும். அதனின் வளர்ச்சி ஆக ஆக கணப்பொழுதில் (சுவிட்சைப் போட்டவுடன் லைட் எரிவது போல்) உணர முடியும்.

இந்த உணர்தல் வந்துவிட்டால் நாம் உணர்வது அனைத்துமே அல்லது அப்பொழுது நாம் “மகரிஷிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்” என்று அர்த்தம்.

நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய நிலைகளாக இருந்தாலும் கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவினைச் செலுத்தி அதை அறிய வேண்டும் உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி எழுப்பினால் அங்கிருந்து வரும் உணர்வலைகள் நமக்குள் உண்மையைத் தெளிவாக உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

மெய்ஞான வளர்ப்புத் தியானத் திருச்சபை 

Eswara Gurudeva

மெய்ஞான வளர்ப்புத் தியானத் “திருச்சபை”

நாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் செய்யும்பொழுது அதன் வளர்ச்சியில் எங்கிருந்து ஒளியான உயிர் துடிப்பு தோன்றியதோ அந்த விண்ணிற்கே செல்வோம்.

அங்கு சென்று விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றலை நாம் பெற்று “என்றும் பதினாறு…” என்ற அந்த நிலையான ஒளிச் சரீரமாகப் பெறவேண்டும்.

பெற்று அந்தச் சரீரத்திலிருந்து வெளிப்படும் ஒளியின் கதிர்கள் உலகத்திற்குச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஆற்றல்களாகப் பெருக வேண்டும் என்று தியானிப்போம்.

1.நாம் விண்ணின் தொடர்பு கொண்டு
2.அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற நினைவை நிலை நிறுத்திக் கொள்வோம்.

புவியின் வாழ்க்கையின் தன்மையிலே வரக்கூடிய விருப்பு வெறுப்பு ஆசை பாசம் இவைகளை அனைத்தையும் அழித்து “நாம் செய்ய வேண்டியது நல்லது…” என்ற நிலையும் அந்த நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் ஆத்ம சுத்தி செய்து கொண்டு நாம் விண் செல்வோம்.

இந்த வழிகளிலே ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம் என்று உறுதிப்படுத்திக் கொள்வோம். ஒவ்வொருவரும்
1.இதில் முன்னேற்றம் பெறவேண்டும்
2.பயன்கள் பெறவேண்டும் ஒளிச் சரீரம் பெறவேண்டும்
3.அதற்குண்டான ஆற்றல் உங்களுக்குள் வளரவேண்டும்.

அந்த ஆற்றலின் நிலை கொண்டு உங்களுக்குள் வரக்கூடிய துன்பங்களை உங்கள் உணர்வாலே நீக்கி அந்த மெய் ஒளியின் நிலைகள் உங்களுக்குள் பெருக வேண்டும்.

அது உங்களுக்குள் பெருக வேண்டும் என்பதற்காக எல்லா மகரிஷிகளையும் நமது குருநாதரையும் வேண்டி குருநாதருடைய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகள் உங்களுக்குள் பெறவேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

யாம் எப்படிச் சொல்லுகின்றோமோ அதே மாதிரி நீங்கள் தியானத்தில் சொல்ல வேண்டும். யாம் பேசும்போது எப்படிப் பிறருக்கு நல்லதாகின்றதோ அதைப்போல உங்கள் பேச்சும் மூச்சும் பிறருக்கு நல்லதாக வேண்டும்.

நாம் எல்லோரும் ஐக்கியமாக இருந்துதான் இதைச் செயல்படுத்தவேண்டும்.

குருநாதர் எமக்குச் சக்தியைக் கொடுத்தார். குருநாதருடைய சக்தி உங்கள் எல்லோருடைய உள்ளத்திலும் பதிவாக வேண்டும். உங்களுடைய பேச்சும் மூச்சும் பிறருக்கு நன்மைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இந்த ஐக்கிய மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும்.
2.இதுதான் “மெய்ஞான வளர்ப்புத் தியான சபையாக” இந்த மேடை ஆகின்றது.

இந்த மேடை நம் எல்லோருடைய நல்ல எண்ணத்தால் உருப்பெற வேண்டும். முதலில் நம்முடைய நல்ல உள்ளங்கள் வளரச் செய்வதற்குத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

இன்று சம்பாதித்து நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய உயர்ந்த குணத்தை நான் திருடினால் என்னவாகும்?

எனக்குள் உயர்ந்த குணம் வரும்.

ஆகவே திருடுவது எதுவாக இருக்க வேண்டும். அருள் ஞானமாகத்தான் இருக்க வேண்டும். அறிவின் தன்மை கொண்டு நாம் எதைத் திருட வேண்டும்? தீமைகளை அகற்றும் அருள் ஞானத்தை நாம் திருடுதல் வேண்டும்.

அந்த அருள் ஞானத்தை நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் இந்தத் தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது. நாம் திருடவேண்டியது எதை…? “திருடன்…” என்று சொல்லப்படும்போது இத்தனை வகையான நிலைகளை எடுத்துச் சொல்கின்றார் நமது குருநாதர்.

ஏனென்றால் சாதாரணமாக அவரிடமிருந்து தப்பி வரமுடியாது.

1.ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டால்
2.10 நாட்களுக்கு நம்மை இழுத்து “வாட்டு… வாட்டு…” என்று வாட்டிவிடுவார்
3.அந்த நிலையைச் செய்வார்.

இதைச் சொல்கிறோமென்றால் நீங்கள் எதைத் திருட வேண்டும்? அருள் ஞானத்தைத் திருடி அதைப் பதிய வைத்து அதன்படி நடக்க வேண்டுமென்று அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

திருடியவன் என்ன செய்கின்றான்? பொருளை எடுத்து அவன் சுகத்திற்கு அனுபவிக்கிறான்.

1.அருள் ஞானத்தைத் திருடினால்
2.உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி
3.மகிழ்ச்சி பெறும் உணர்வுகளுக்கு அது பயன்படும்.

என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்

Image

Soul lights

என்னைக் கேவலமாகப் பேசுகிறார்கள் குறையாகப் பேசுகிறார்கள் குற்றமாகச் சொல்கிறார்கள் அவமரியாதை செய்கிறார்கள் என்று எண்ணுகிறோம் – ஆனால் “உடலைத்தான்” அவ்வாறு சொல்கிறார்கள்

 

இந்த மனித உடல் நமக்குச் சொந்தமல்ல.

 

ஆனால் கோபமோ ஆத்திரமோ வந்து

1.என்னை அவர்கள் இப்படிப் பேசினார்கள்

2.இவர்கள் குறையாகப் பேசினார்கள்

3.கேவலமாகப் பேசினார்கள் அவமதித்துப் பேசினார்கள் என்கிற

4.இந்த உணர்வுகளைத்தான் நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

 

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிறபோது இந்த உடலைத்தானே அப்படிப் பேசுகின்றார்கள்.

 

இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே போய்விட்டால் இதை யாராவது மதிக்கின்றார்களா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உடலை யாரும் மதிப்பதில்லை.

 

எவ்வளவு அழகான உடலாக இருந்தாலும் திடீரென்று ஒரு ஹார்ட் அட்டாக்கோ மற்ற ஏதோ வந்தால் எத்தனை அவஸ்தைப்படுகின்றோம்…? என்னென்னவோ செய்து முட்டி மோதுகிறோம்…!

 

இருந்தாலும் இந்த உடலை விட்டு இந்த உயிரான்மா போய்விட்டது என்றால் இந்தச் சரீரத்தை யார் மதிக்கின்றார்கள்?

 

கூடக் கொஞ்சம் நேரம் வைத்திருக்கலாம் என்றால் “இல்லை… நாற்றமாகிவிட்டது… சீக்கிரம் கொண்டு போக வேண்டும்…” என்று தான் சொல்கின்றோம்.

 

ஏனென்றால் வைத்திருக்கலாம் என்றால் அதற்குள் உடல் அழுகிப் போய்விடும் வீடே நாற்றமாகிக் கெட்டுப் போய்விடும் “கொண்டு போய்ச் சேருங்கள்…” என்று தான் சொல்கின்றோம்.

 

ஆக இவை அனைத்திற்கும் எங்கே இருக்கின்றது?

 

உயிர் தான் மூலமாக இருக்கின்றது. அந்த உயிர் இருக்கும் வரை தான் “இந்த மரியாதை”.

 

ஆனால் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வை இந்த உயிருடன் ஒன்றிச் சேர்த்துவிட்டால்

1.இந்த உடல் என்ற மரியாதை போய்

2.உயிர் என்ற நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய

3.அந்த மகரிஷிகள் அருள் உணர்வுடன் “அந்த மரியாதை” நமக்குள் வந்துவிடும்.

 

இதை நாம் பழகிக் கொண்டால் இந்த உடலின் தன்மையைப் பற்றி அதிகமாக நாம் நினைக்க வேண்டியது இல்லை. நினைப்பு வராது.

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குத் துடுப்பாகக் கொடுக்கின்றோம். அதை வைத்து இந்த வாழ்க்கையின் கடைசி எல்லையான

1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் சென்றடைய முடியும்.

2.அந்த மெய்ஞானிகளுடன் ஒன்றி வாழ வேண்டும்.

 

இவ்வாறு தீமைகள் அகற்றும் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெற்றால் இது தான் “நரசிம்மா”.

 

ஒவ்வொரு நிலைகளிலும் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நமக்குள் வளரும் பொழுது என்றுமே அது தீமைகளை நாடாது நம்மைப் பாதுகாக்கின்றது.

 

அதனின் தன்மை கொண்டு நாம் “ஒளியாக…” மாறுகின்றோம். அவ்வளவு தான்.