“ஒருவர் தவறு செய்கிறார் என்றால் பருவம் பார்த்துத்தான் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்” – அது நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்

Image

Divine light sharing

“ஒருவர் தவறு செய்கிறார் என்றால் பருவம் பார்த்துத்தான் அதைச் சுட்டிக் காட்ட வேண்டும்” – அது நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் வரும்

 

வடை சுடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நெருப்பில் நாம் என்ன செய்கிறோம்? பொருளைப் போடுகின்றோம். எண்ணெய் சூடாகுவதற்கு முன் வடையைத் தட்டிப் போட்டால் என்ன செய்யும்?

 

வடை சீராக வேகாது. எண்ணெய் வெளியில் வரும். பின் அது சூடாகச் சூடாக வடையின் ருசியே மாறிவிடும்.

 

எண்ணெயின் நிலையை அதிகமாகக் காய்ச்சி வடையின் தன்மை போட்டால் மேல் பாகம் கருகி விடுகின்றது. ஆனால் உள்ளே வேகாமல் மாவாகவே இருந்து விடுகிறது.

 

1.சமப்படுத்தும் உணர்வின் தன்மை கொண்டு

2.அதைப் பக்குவப்படுத்தும் நிலை கொண்டு தான்

3.நாம் பதார்த்தங்களை உருவாக்குவோம்

4.அப்பொழுது தான் அவைகள் சுவையாக இருக்கும்.

 

பக்குவம் இல்லாது பதார்த்தங்களைச் செய்தால் ருசி இருக்காது.

 

இதைப் போலத் தான் குடும்பத்தில் நம் குழந்தை ஒரு தவறு செய்கிறான் என்றால் அந்தப் பருவம் பார்த்து அந்த உணர்வின் தன்மையச் சொல்லுதல் வேண்டும்.

 

பருவம் பார்த்து அந்த உணர்ச்சிகளை ஊட்டும் நிலை வரும் போது ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே வர வேண்டும்.. வரும்.

 

ஏற்றுக் கொள்ளும் பருவம் அங்கே இல்லை என்றால் நாம் கூறிய உணர்வுகளும் அங்கே விளையாது. அது விளையும் பருவம் அங்கே இழக்கப்படுகின்றது.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் ஒவ்வொரு நொடிகளிலேயும்

1.நம்மை எப்படிக் காக்க வேண்டும்?

2.நமக்குள் சுவை மிக்க உணர்வை எப்படி உருவாக்க வேண்டும்?

3.நம் சிந்தனை எப்படி இருக்க வேண்டும்? என்ற நிலைகளுக்குத் தான் அருள் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் இந்த உலகில் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வகையில் தீமைகள் வருகிறது. வந்தாலும் தீமை செய்தார்கள் தீமை செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று அறிகின்றோம்.

 

அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுத்தல் வேண்டும்.

 

அவ்வாறு தடுத்தல் வேண்டும் என்றால் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் உயிரின் பால் செலுத்துதல் வேண்டும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிர் வழி சுவாசிக்க வேண்டும். அப்பொழுது அந்தத் தீமை என்ற உணர்வின் தன்மையத் தடைப்படுத்திக் கொள்ள முடியும்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை இவ்வாறு சேர்க்கப்படும்போது தீமையின் வீரியம் குறைகின்றது. அருள் ஞானிகள் வளர்த்துக் கொண்ட உயர்ந்த குணங்களை நமக்குள் சமைத்தல் வேண்டும்.

 

“மிளகாய்” தனித்துக் காரமாகத் தான் இருக்கின்றது. மற்ற பொருளுடன் இணைக்கும் போது சுவையாக மாறுகின்றது.

 

ஒருவன் தவறு செய்கிறான் என்ற உணர்வை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தாலும் அடுத்த கணம் அருள் ஒளி என்ற உணர்வை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

 

அருள் சக்திகளை நமக்குள் சேர்த்து வலுவாக்கிய பின்

1.தவறு செய்தவன் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும்

2.அருள் ஞானம் அவனில் பெருக வேண்டும்.

3.மகரிஷிகளின் அருள் சக்தி அவன் பெற வேண்டும்.

4.அவன் அறியாத இருளில் இருந்து விடுபட வேண்டும்.

5.தெளிந்த மனம் பெற வேண்டும்

6.தெளிவான உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது

7.அவன் உணர்வு நமக்குள் வந்தாலும்

8அவனை அந்தத் இயக்குவது போல நமக்குள் தீமைகள் விளையாது.

 

நம்மைப் பாதுகாக்க இது உதவுகிறது. அதே சமயத்தில் “அவன் வேகத் துடிப்பு… நமக்குள் வளராமல் தடுக்கப்படுகின்றது”.

 

அவனிடம் சொல்லும் போது அப்போது உடனுக்குடன் சொன்னால் கேட்க மாட்டான். சில நிமிடம் கழித்து

1.அவன் சாந்தமாக இருக்கப்படும் போது

2.”நீ இப்படிச் செய்தால்… உனக்கு நல்லது…” என்று சொன்னால்

3.ஏற்றுக் கொள்ளும் பருவம் அவனுக்கு வரும்.

 

நாம் எந்த நல்லதைச் சொல்கிறோமோ அதை அவன் நுகரும் தன்மை வருகிறது. நாம் சொல்லும் நல்லது அவனுக்குள் உருவாகத் தொடங்கும்.

 

ஆகவே இப்படிப் “பருவம் அறிந்து தான்” நாம் சொல்ல வேண்டும்.

இறந்தவர்களுக்குப் பிண்டம் செய்து வைத்து அமாவாசை நாள் அன்று அழைக்காதீர்கள்…!

அழியா ஒளிசரீரம்

இறந்தவர்களுக்குப் பிண்டம் செய்து வைத்து அமாவாசை நாள் அன்று அழைக்காதீர்கள்…!

நம் முன்னோர்கள் (குலதெய்வங்கள்) குடும்பத்தில் எத்தனையோ இன்னல்களைத் தாங்கி நம்மை வளர்த்திட வாழ்ந்திட அவர்கள் எத்தனையோ வேதனைகள் பட்டுள்ளார்கள்.

அந்த வேதனையான உணர்வுகள் அவர்களுக்குள் உடலில் நோயாகி உடலை விட்டு வந்த பின் மீண்டும் புழுவிலிருந்து மனிதனாக வந்து கீழ் இறங்கி (மறு பிறவியில்) வேறொரு சரீரங்களைப் பெறுகின்றனர்.

1.அவர்கள் இன்னோரு உடல் பெறாத வண்ணம்
2.நாம் அனைவரும் கூட்டுத் தியானம் செய்து
3.முன்னோர்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி விண்ணிலே செலுத்தி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால் அங்கே உடல் பெறும் உணர்வுகள் அழிந்து ஒளி பெறும் உணர்வுகள் உயிருடன் ஒன்றி மகரிஷிகள் உமிழ்த்தும் ஒளியான உணர்வை உணவாக எடுத்து ஒளியாக அங்கே வாழத் தொடங்குகின்றனர்.

அவர்கள் முன் சென்றால் பின் அதே வலுக்கொண்டு நாமும் அங்கே அழியாச் சரீரமாக விண் செல்லலாம்.

ஆனால் அமாவாசை அன்று இப்பொழுது வழக்கப்படி சாங்கியங்கள் செய்து மந்திரங்களைச் சொல்லி பெரியவர்களுக்கு வைத்துப் படைத்து நாம் இழுத்தோம் என்றால் அவர்களைப் பூமிக்குள் இழுப்பதாகத்தான் அர்த்தம்.  அதே போல்
1.இறந்தவர்கள் கனவில் வந்து விட்டார்கள் என்றால்
2“நாமும் சீக்கிரம் போய்விடுவோம்…” போலத் தெரிகின்றது என்று
3.இப்படிப் பேசுவோரும் உண்டு.

இவைகளை எல்லாம் மறந்து மெய்ஞானியின் அருள் வழியில் நாம் சென்று நம்முடைய மூதாதயர்களை அங்கே பிறவா நிலை என்ற நிலை அடையச் செய்ய வேண்டும்.

இங்கே கேட்டுணர்ந்தோர் இனிமேல் அமாவாசை நாள் கொண்டாடும் போது அங்கு பிண்டம் வைத்து உணவு வைத்து உங்கம் முன்னோர்களை அழைக்காதீர்கள்.

அதற்குப் பதில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் செருகேற்றி முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்தோடு இணையச் செய்யுங்கள்.

1.ஒரு உயிரான்மா உடலை விட்டு வெளியே சென்றால்
2.யார் மேல் பற்று இருக்கின்றதோ
3.48 நாட்களுக்குள் அந்த உடலின் ஈர்ப்பு வட்டத்திலே செல்லும்.
4.உணர்வின் தன்மை சிறுகச் சிறுக சேர்ந்து அந்த உடலுக்குள் செல்லும்.

ஆகவே அதற்கு முன் நாம் விண் செலுத்து தல் அவசியம். தற்சமயத்தில் இறந்தவர்களை அந்த 48 நாட்களுக்குள் சுலபமாக விண் செலுத்த முடியும்.

இதற்கு முன் அறியாத நிலைகள் இருந்து மூதாதையர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் இருளுக்குள் தான் அமிழ்ந்துள்ளார்கள்.

அவர்கள் உணர்வுகள் தான் நம் உடலாக உருவாகியுள்ளோம். அவர்கள் எண்ணங்கள் நமக்குள் ஆழப் பதிந்து இருக்கும் நிலை கொண்டு நாம் அடிக்கடி “அவர்கள் விண் செல்ல வேண்டும்…” என்று உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இன்னொரு உடலை விட்டு எப்பொழுது வெளியே வந்தாலும் இதைப் போல நாம் சொல்லிக் கொண்டிருந்தால் இன்னொரு பிறவிக்குப் போகாதவாறு நம் முன்னோர்களை விண் உலகம் சேர்த்து  ஒளியின் சரீரம் பெறச் செய்ய முடியும்.

கடந்த காலத்தில் நாம் இந்த முறைப்படி செய்யவில்லை. அந்த உயிரான்மாக்கள் மாறிய நிலையில் இருந்து இப்பொழுதாவது நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் செய்வோம்.

இதற்காக வேண்டித்தான் பௌர்ணமி தியானத்தையே அமைத்துள்ளோம். 48 நாளுக்குள் உங்கள் வீட்டில் குடும்ப சகிதமாக கூட்டு தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களை விண் செலுத்துங்கள்.

அவர்கள் 100 வருடத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்திருந்தார்கள் என்றால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்த முடியும்.

100ஐக் கடந்து விட்டால் இன்னொரு உடலுக்குள் சென்று விடுவார்கள். உணர்வின் தன்மை கொண்டு மாறுபட்ட நிலைகள் மற்ற உடலுக்குள் புகுந்து உடல் பெறும் நிலையைப் பெற்று விடுவார்கள்.

இதைப் போன்ற நிலைகள் இல்லாது பௌர்ணமி நாளன்று நம் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.
1.அவர்கள் முதலில் விண் சென்றால் பின் நாம் அங்கே செல்கின்றோம்.
2.அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை பெறுகின்றோம்.

நம் மூதாதையர்கள் முதலில் மனிதர்கள் ஆனார்கள். அவர்கள் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள்.

ஒரு மரம் கெடாது இருப்பதற்கு அதனின் விழுதுகள் மிகவும் முக்கியம். மூதாதையர்களின் விழுதுகளாகத்தான் நாம் இருக்கின்றோம்.

நம் முன்னோர்கள் உடலை விட்டு பிரிந்து சென்றாலும் விழுதாக இருக்கும் நாம் அருள் ஞானிகள் காட்டிய உணர்வை சத்தாக நாம் எடுத்து ஞானிகளின் உணர்வின் துணை கொண்டு விண் செலுத்துதல் நம் தலையாயக் கடமையாகும்.

பின் நாமும் அவர்கள் சென்றடைந்த சப்தரிஷி மண்டல வட்டத்தில் இணைந்திட முடியும். அதைச் செய்வதற்கே குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் இதை செய்கின்றோம்.

இது தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய “விண் செல்லும் மார்க்கம்.”

22.10.2017 கருத்துப் பரிமாற்றம் – அகஸ்தியரை ஏன் “கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்…?”

Image

22.10.2017 கருத்துப் பரிமாற்றம்

 

4.அகஸ்தியரை ஏன் “கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்…?”

 

பெரும்பகுதியானவர்கள் நல்லதை அடுத்தவர்களுக்குச் செய்வார்கள். செய்தாலும் அதனால் நன்மை பெறுபவர்கள் பதிலுக்கு ஏதாவது ஒன்றைச் சொன்னாலோ அல்லது செய்தாலோ நல்லது செய்தவர்கள் டென்சன் (TENSION) ஆகிவிடுவார்கள்.

 

அடுத்தவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சரியான பக்குவம் இல்லாததால் அதே சமயத்தில் எதிர்ப்பதமாகச் சொன்னால் அன்றையே பொழுது

1.மனதே சரியில்லாமல் போய்விட்டது.

2.ஒன்றும் சரியில்லை எதுவுமே சரியில்லை என்று இப்படியே எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

 

தன் மனதைச் சமப்படுத்தவும் முடிவதில்லை. மற்றவர்களையும் நிறுத்த முடிவதில்லை. நல்லதைச் செய்யும் எண்ணத்தையே கேள்விக் குறியாக்கிக் கொள்வார்கள்.

 

நான் நல்லது செய்து நல்லது செய்து என்னத்தைக் கண்டேன்…! எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். நான் மட்டும் வேதனைப்பட்டுக் கொண்டுள்ளேன்.

 

பல தவறுகள் செய்து கொண்டிருப்பவன் கூட நன்றாக இருக்கின்றான். நல்லதே அவன் செய்வதில்லை.

 

ஆனால் எனக்குத் தவறு செய்யும் எண்ணமே இல்லை. எனக்கு இடைஞ்சல் செய்தால் அல்லது என்னை இப்படித் தவறாகச் சொன்னால் நான் அப்புறம் என்ன செய்வது என்று இப்படியே விஷம் குடித்தவன் போல் சுருண்டு சுருண்டு விழுவார்கள்.

 

அதற்குக் காரணம் என்ன? நல்லதைக் காப்பது எப்படி?

 

சாமிகள் அகஸ்தியனின் உருவத்தைப் பற்றி ஞானிகள் சொன்னதைத் தெளிவாக்கியுள்ளார்கள். அதாவது அகஸ்தியனைக் கூழையாகத்தான் ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளார்கள்.

 

1.அகஸ்தியன் தாயின் கருவில் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியால் 5 வயதிற்குள்ளேயே பிரபஞ்சத்தின் ஆற்றலை அறியத் தொடங்கினான். மகா சித்து பெற்றான். அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலை அறிந்து துருவன் ஆனான்.

 

தான் பெற்ற அந்த ஆற்றல்களைத் தன் இன மக்களுக்கும் பாய்ச்சினான்.

 

இதை உணர்த்தும் விதமாக சிறு வயதில் ஆற்றல்களைப் பெற்றதாலும் முதுமையானவர்கள் செய்யும் வேலைகளைச் செய்ததாலும் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டு தாடி மீசை வைத்துக் காட்டினார்கள்.

 

2.இன்று ஒரு மனிதனைப் பலசாலி பராக்கிரமம் பெற்றவன் என்றால் அவன் உடல் வலிமையை வைத்துத்தான் மதிப்பிடுகின்றோம்.

 

உருவத்தைப் பார்த்துத் தான் அன்றாட வாழ்க்கையில் எல்லாச் செயல்களையும் நாம் செய்து கொண்டிருக்கின்றோம். இவன் சின்னப்பயல் இவனுக்கு ஒன்றும் தெரியாது. இவன் பெரிய ஆள் இவனிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இப்படித்தான் நம் சிந்தனைகளும் செல்கிறது.

 

ஒருவன் சின்னப் பயலாக இருக்கின்றான் என்றால் அவன் என்ன செய்கிறான்? அவன் என்னவெல்லாம் செய்வான்? அவனுடைய உண்மையான வலு என்ன என்பதை நாம் பெரும்பகுதி கண்டு கொள்வதில்லை.

 

காரணம் அவன் சின்னப்பயல் அவனால் என்னை ஒன்றும் செய்யவே முடியாது என்ற உணர்வு தான் காரணம். அதனால் அசட்டையாகவே தான் இருப்போம்.

 

இதுவே பெரிய ஆள் என்றால் ஒவ்வொரு அங்க அசைவையும் என்ன சொல்கிறார்? என்ன செய்கிறார்? என்ன சாப்பிடுகிறார்? எங்கே செல்கிறார்? எதற்காக இங்கே வந்தார்? நம்மை எதுவும் செய்துவிடுவாரா? நமக்கு இவரால் நன்மையா தீமையா?

 

நன்மை என்றால் இவரை எப்படிப் பயன்படுத்துவது? நம் காரியங்களை இவர் மூலம் எப்படிச் சாதிக்கலாம். இவரை நயந்து நாம் எப்படி நடந்து கொள்வது? இவரிடம் நாம் எப்படி நல்ல பேர் எடுப்பது? இவரைச் சமயத்திற்கு ஏமாற்றக் கூட முடியுமா? ஏமாந்துவிடுவாரா? அந்த விவரம் இருக்கின்றதா? என்று இப்படி ஆராய்வோம்.

 

கெட்டவனாக இருந்தால் இவனிடமிருந்து எப்படித் தப்புவது? அல்லது இவனை எப்படிச் சிக்க வைப்பது? இவனை எப்படி மாட்டி விடலாம்? இவனுக்கு நாம் என்னென்ன இடைஞ்சல் செய்யலாம்? யாரை வைத்து இவனைத் தட்டலாம்? யாரிடம் சொன்னால் இவன் அடங்குவான்? என்று இப்படி ஆராய்வோம்.

 

இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆக மொத்தம் பெரிய ஆள் என்று பேர் எடுத்தால் நல்லது செய்தாலும் அதிக அளவில் சிக்கல் வரும். கெட்டது செய்தாலும் அதிக அளவில் சிக்கல்கள் வரும்.

 

சுருக்கமாகச் சொன்னால் அதிக அளவில் எதிரிகளைச் சம்பாரிக்க வேண்டியது வரும். இது தான் உண்மை.

 

நாம் நல்லதைச் செய்யும் போது அது மற்றவர்கள் அறியாதபடி செய்தால் தான் நமக்கு மிகவும் பாதுகாப்பு.

 

அந்தப் பாதுகாப்புக்காகத்தான் ஈஸ்வராய குருதேவர் பைத்தியக்காரராக இருந்தார். ஞானகுரு வெள்ளை வேஷ்டியும் ஒரு ஜிப்பாவையும் போட்டு எளிமையாக (கிராமத்துக்காரர் போல்) இருந்தார்கள்.

 

ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. மற்றவர்களிடம் கேட்டுக் கேட்டுத்தான் அவர் செய்தார். நான் சொல்லித்தான் சாமிக்கே தெரிந்தது. நான் சொல்லவில்லை என்றால் சாமி அதைச் செய்திருக்கவே மாட்டார் என்று அன்றும் சொன்னார்கள். இன்றும் சொல்லிக் கொண்டுள்ளார்கள்.

 

காரணம் என்ன என்றால் தனக்குத் தெரிந்ததை அவர்கள் தெரிந்ததாகவே சிறிதளவு கூடக் காட்ட மாட்டார்கள்.

 

மீறிக் காட்டினால் (1)யாரும் அருகில் வரப் பயப்படுவார்கள். (2)ஞானிகளின் காரியங்களுக்கு (மனிதர்களின் காரியங்களுக்கு அல்ல) இடைஞ்சலாக இருப்பார்கள் என்று ஞானிகளுக்குத் தெரியும்.

 

உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்களிடம் தான் நான் வரம் கேட்கிறேன் என்று கோடித் தடவை சாமிகள் சொல்கிறார். எதற்காக?

 

சக்தி பெற்றவருக்கு நம்மிடம் வரம் எதற்கு? இதையெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஒரே வரியில் எல்லாம் அவருக்குத் தெரியும் என்று நிறுத்திக் கொள்வோம்.

 

ஞானியர்கள் தன் காரியம் எதுவோ அதை எப்படிச் சாதிப்பது. காரியத்தில் எப்படிச் சித்தி அடைவது என்பதிலே தான் அவர்களுக்குக் குறிக்கோள். அதனால் தான் அதைச் “சித்தாந்தம் – சித்தி” என்று சொல்வது.

 

அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அறிந்தவன் அகஸ்தியன். மின்னலின் ஒளிக்கற்றைக்குள் நுண்ணிய நிலைகளை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் பெற்றவன் அகஸ்தியன். பல கோடி மின்னல்களின் ஆற்றல்களையும் சேர்த்து 27 நட்சத்திரத்தின் ஆற்றலையும் சேர்த்து இன்று பேரொளியாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளான்.

 

மற்றவர்களும் தன்னைப் போல் ஆகவேண்டும் என்று தன் இன மக்கள் அதைப் பெறவேண்டும் என்பதே அவனுடைய ஆசை. அரச மரத்தின் விதை எவ்வளவு பெரிது? ஆல மரத்தின் விதை எவ்வளவு பெரிது.

 

அரச மரம் பெரிதாக இருந்தாலும் அதன் விழுதுகள் அண்டத்திலிருந்து நீர் சக்தியைக் கவர்ந்தாலும் அதன் விதை என்னவோ மிக மிகச் சிறிது தான்.

 

1.அத்தகைய நிலையைக் காட்டுவதற்குத்தான்

2.அத்தகைய பேராற்றல்கள் பெற்றவன் என்பதைக் காட்டுவதற்குத்தான்

3.அத்தகையை சக்தியைப் பெற்று சாதாரண மனிதனும் அகஸ்தியன் கண்ட பிரம்மாண்டத்தைக் காண முடியும் என்பதைக் காட்டுவதற்குத்தான்

4.அத்தகைய சக்திகளை அந்த மெய்யை முழுமையாகப் பெற்ற அறிந்த அகஸ்தியனுக்குப் பின் வந்த மெய்ஞானிகள் அவனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

 

அவ்வளவு பிரம்மாண்ட சக்தி கொண்ட அகஸ்தியன் தன் உருவத்தை எளிமையாகக் காட்டும் பொழுது நாம் இன்றிருக்கும் நிலையில் நமக்கு என்ன இமேஜ் (IMAGE) வேண்டிக் கிடக்கின்றது.

 

நான் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் உயரவே முடியாது. நல்லதையும் பெறவே முடியாது. நான் உயர்ந்தவன் நான் நல்லவன் என்று எண்ணினாலும் உயர முடியாது.

 

நம்மிடம் வந்து மோதுவது எதுவாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நாம் (மறைமுகமாக) உயர்ந்த சக்திகளை எடுத்து அதை அவர் பால் பாய்ச்சும் பொழுது தான் அந்த உயர்வை (மறைமுகமாக) அவருக்குக் கொடுக்கும் பொழுது தான் நாம் நல்லதையும் பெற முடியும் உயரவும் முடியும்.

 

அப்படி உயர்ந்தால் நாம் உயர்வதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

 

1.யாரும் தடுக்க முடியாத அந்த நிலை பெற்றவன் தான்

2.தன் உருவத்தைக் கூழையாகக் காட்டி

3.நீயும் என்னைப் போல் வா என்று

4.பின் வந்த ஞானிகள் மூலம் காட்டுகின்றான் – அந்த அகஸ்தியன்.

 

அவன் அருளைப் பெறுவோம். அவன் வழியைப் பின்பற்றுவோம். உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்வோம்.

 

1.அகஸ்தியனுடன் இணைந்து

2.அகஸ்தியனாகி

3.பல கோடி அகஸ்தியர்களை உருவாக்குவோம்.

எதிரிகள் அழிய வேண்டும்… நாசமாகப் போக வேண்டும்… என்று தெய்வத்திடம் வேண்டலாமா…?

Karuppannachami

எதிரிகள் அழிய வேண்டும்… நாசமாகப் போக வேண்டும்… என்று தெய்வத்திடம் வேண்டலாமா…?

அடிக்கடி இடைஞ்சல் செய்கிறார்கள். அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் குடும்பம் நாசமாகப் போக வேண்டும், உங்கள் குடும்பம் மண்ணில் போகும் என்ற இந்த நிலைக்கு எண்ணத் தொடங்கிவிடுகின்றார்கள்.

இந்த உணர்வுகளை அவர்கள் எடுக்கப்படும் போது இதே உணர்வு அவர் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பெருக்கப்படுகின்றது.

இவ்வாறு எடுத்த உணர்வையே உயிர் உடலாக உருவாக்கி அவர்களுக்கேதான் அது பாதகமாக்கும்.

ஏனென்றால் ஒரு வித்தினை உருவாக்கினால் மீண்டும் அதை நிலத்தில் ஊன்றும்போது அதனின் வித்துக்களாக விளையத் தொடங்குகின்றது.

கெடுதல் செய்தவர் “நாசமாகப்போக வேண்டும்…” என்ற உணர்வினை முதலில் இவர்கள் எண்ணுகின்றனர்.

அந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக இவருக்குள் உருவாகின்றது. அதைக் கெடுதல் செய்தவரிடம் சொல்லாகச் சொல்லப்படும் போது இங்கே விளைந்த சொல்கள்
1.அந்த ஆகாத எதிரியின் செவிகளில் படுகிறது.
2.அந்த உணர்ச்சிகள் கண் வழி கவருகின்றது.

ஆகா… என்னை இவ்வாறு சொல்லத் தொடங்கிவிட்டாயா…? என்று எதிர் பதிலாக இரண்டு பேருமே இந்த உணர்வுகளைப் பேசுகின்றனர்.

இப்படிப் பேசும் உணர்வுகள் என்ன செய்கின்றது?

இருவரையுமே அது கொல்லுகின்றதே தவிர அவர்களுக்குள் நல்ல குணங்களை எண்ணுவதற்கு வழியில்லை. இருவரிடத்திலும் உள்ள நல்ல குணங்கள் அனைத்தும் மடிகின்றது.

மனிதனுக்கு மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அறியாது ஆலயங்களுக்குச் சென்று
1.என் எதிரி வீழ வேண்டும்
2.என் வாழ்க்கை நல்லதாக அமைய வேண்டும் என்று
3.தவறான வழியில் வரம் கேட்கின்றார்கள்.

இப்படிச் சந்தர்ப்பத்தால் மோதிய உணர்வுகள் அந்த வெறுப்பின் அலைகளுக்குத்தான் செல்லச் செய்கின்றது என்று குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.

கருப்பணச்சாமி – இதைப் போலக் கொடூர தெய்வங்களைக் காட்டும் போது ஆடையோ கோழியோ பலி கொடுக்கின்றோம் என்று வேண்டுகிறார்கள்.

ஆக சிந்திக்கும் தன்மை இழந்தால் அப்பொழுது அதற்குத் தக்க பிறிதொன்றைக் கொல்லும் உணர்ச்சிகளைத் தான் நமக்குள் ஊட்டுகின்றது.

நல்ல சிந்திக்கும் தன்மையை நமக்குள் மாற்றும் அத்தகைய நிலைகளில் இருந்து மீள்வதற்குத்தான் கருப்பணச்சாமி போன்ற உருவங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

நம்மை மறைக்கும் தீமைகளிலிருந்து மீள…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா பெற வேண்டும்.
4.எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்.
5.எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும்.
6.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பணச்சாமியை எண்ணி
1.என் எதிரி வீழ்ந்தால் என் தொழில் விருத்தியானால்
2.உனக்கு ஆட்டைக் கொடுக்கிறேன் பலி கொடுக்கிறேன் என்ற உணர்வுகளில் தான்
3.நாம் பக்தியில் செல்லுகின்றோம்.

நமக்குள் தீமை வருகிறது என்று அறியவில்லை.

நாம் வேதனைப்படும் உணர்வினை நுகர்ந்தால் வேதனைப்படுவோர் உணர்வினை நுகர்ந்தால் பாசத்துடன் இருக்கும்போது குழந்தைக்கு நோய் என்று உணர்வானால் நாம் சிந்திக்கும் தன்மை இழந்துவிடுகின்றோம்.

அவனைப் பாதுகாப்பதற்கு மாறாக அவசரத்தில் இந்த வைத்தியரிடம் போவோமா அந்த வைத்தியரிடம் போவோமா என்று அதில் முழுமை பெறாதபடி இந்த “ஆவேச உணர்வுகள் தான்” வருகின்றது.

தீமையின் உணர்வை நமக்குள் வளர்த்து அந்த ஆவேசத்தால் காக்கும் உணர்வை இழந்து அவனையும் காக்க முடியாது. கடைசியில் அவனால் எடுத்துக் கொண்ட வேதனைகள் கடும் நோயாகவும் மாறுகின்றது.

சாதாரணமாக மனிதனானவன் தீமையை அதிகமாக அவன் செயல் படுத்த வேண்டும் என்று எண்ணுவதில்லை. நன்மை செய்யவே முற்படுகின்றான். ஆனால்
1.நன்மை செய்ய முற்பட்டாலும்
2.பிறருடைய துயரப்படுத்தும் நிலையோ வேதனைப்படுத்தும் உணர்வோ அவன் நுகர்ந்து விட்டால்
3.அவன் நல்ல குணங்களை மறைத்து செயலற்றவனாக மாறி
4.இவனும் தீயவனாகதான் மாறுகின்றான்.

ஒருவர் நம்மை அடிக்க வருகிறான் என்று வைத்துக் கொண்டால் அவன் நம்மை அடித்து விடுவான் என்று பயந்து ஓடுகின்றோம்.

அப்படி ஓடினாலும் ஒரு சமயம்… “ஏன் இப்படி…?” என்று திரும்பினால் அவன் செய்வதற்கு முன் நாம் தவறு செய்பவனாக மாறுகின்றோம். இப்படித் தான் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அறியாத நிலைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்க “மெய் ஞானிகளின் உணர்வினை நீ பதிவு செய்…” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் கடவுள். உயிரால் உருவாக்கப்பட்ட அந்த உடல் ஆலயம். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதித்து அதைப் பாதுகாக்கும் உணர்வுடன் நீ செயல்பட வேண்டும் என்றார்.

தீமைகளை நீ பார்க்க நேர்ந்தால் கேட்க நேர்ந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ எடுத்துக் கொள்.

அவர்கள் நலம் பெற வேண்டும் என்றும் அந்த ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் பரி்சுத்தம் ஆக வேண்டும் என்றும் நீ அந்த உயிரைக் கடவுளாக மதி. அவர் உடலை நீ கோயிலாக மதி. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே வளர வேண்டும் என்று நீ எண்ணு.

அதன் வழி நீ செயல்படவேண்டும், அதற்கேதான் துருவ நட்சத்திரத்துடன் உன்னை ஆயுள் கால மெம்பராக இணைக்கிறேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

1.நான் அதிலே இணைந்தேன்.
2.நான் அங்கே செல்கின்றேன்.
3.நான் சென்ற பின்பும் இதன் உணர்வை நீ தொடர்பு கொண்டால்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நீ பெற முடியும்.
5.அதை நீ எளிதில் பெற்று அனைவருக்கும் கொடுக்க முடியும்.
6.இருளிலிருந்து அனைவரையும் மீட்க முடியும் என்று உணர்த்தினார் குருநாதர்.

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

Image

Soul cleaning - serene

“மனதைச் சமப்படுத்துங்கள்” – பேரின்பப் பெருவாழ்வு வாழுங்கள்

 

ஒரு சமயம் ஒருவர் தவறு செய்தார் என்றால் அந்தத் தவறின் நிலையை நாம் சுட்டிக்காட்ட நேர்கின்றது. ஆனால்

1.சுட்டிக்காட்டும் நிலை தவறினால் வெறுப்பின் உணர்வையே ஊட்டுகின்றது.

2.வெறுப்பின் நிலை வளர்த்து விட்டால் ஏற்றுக் கொள்ளும் பண்பே வராது.

 

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம்

1.எதனை…

2.எவ்வாறு…

3.எதன் வழியில் உருவாக்குதல் வேண்டும்…? என்ற நிலைகளை அறிந்துணர வேண்டும்.

 

அதை நாம் பக்குவப்படுத்தும் நிலைகளுக்குச் சமப்படுத்தல் வேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடமும் மனதைச் சமப்படுத்தினால்… “பக்குவப்படுத்தும் பண்பு” வருகின்றது.

 

பக்குவப்படுத்தும் பண்பு வர வேண்டும் என்றால் “அருள் ஞானத்தின் உணர்வை” அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் விளைவிக்க வேண்டும்.

 

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை விளைய வைத்துக் கொண்டால் நம் வாழ்க்கையில் வரும் தீமையான உணர்வுகளையும் நஞ்சான உணர்வுகளையும் கார உணர்ச்சிகளையும் “அடக்கும் தன்மை” வருகின்றது.

 

தீமைகளை அடக்கும் தன்மை வந்தால் “சிந்திக்கும் தன்மை” வருகின்றது.

 

சிந்திக்கும் தன்மை வந்தால் நம் செயல்கள் அனைத்தும் “சீராக அமைய” இது உதவும்.

 

இந்த மனித வாழ்க்கையில் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை நமக்குள் அணுக்களாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அருள் ஒளியினை வளர்த்துப் “பேரின்பப் பெருவாழ்வு” என்ற நிலையை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

 

நாம் உலகில் யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் அனைவரும்

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்

2.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.

3.அவர்கள் குடும்பத்தில் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

4.தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும்.

5.மகரிஷிகள் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும்.

6.அருள் ஞானம் அவர்களுக்குள் பெருக வேண்டும்.

7.இருளை நீக்கிடும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும்.

8.நஞ்சினை வென்றிடும் அருள் ஞானம் அவர்கள் பெற வேண்டும்.

9.அருள் வாழ்க்கை வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

நாம் சந்தித்தோர் பார்த்தோர்… நாம் தொழிலின் நிமித்தம் சந்தித்தோர்… தொழிலின் நிமித்தம் இணைந்து வாழ்ந்தோர்… “இவர்கள் அனைவரையும்” நாம் இவ்வாறு நாம் எண்ணினோம் என்றால்

1.நமக்குள் பகைமை என்ற உணர்வை மாற்றி

2.அருள் ஞானத்தின் உணர்வை வளர்க்கச் செய்கின்றது.

விபத்துக்களையும் அசம்பாவிதங்களையும் பத்திரிகை டிவி இன்டெர்னெட் மூலம் கூர்மையாகப் படிக்கின்றோம் பார்க்கின்றோம் – “அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்திருக்கின்றோமா…?”

Image

மகரிஷிகளின் அருள் ஆற்றல்

விபத்துக்களையும் அசம்பாவிதங்களையும் பத்திரிகை டிவி இன்டெர்னெட் மூலம் கூர்மையாகப் படிக்கின்றோம் பார்க்கின்றோம் – “அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்திருக்கின்றோமா…?”

 

இன்று நாம் பத்திரிகை வாயிலாகப் படிக்கின்றோம். பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. அந்த இடத்திலேயே இத்தனை பேர் இறந்தனர். பலர் அவஸ்தைப்பட்டனர் என்று பார்க்கின்றோம்.

 

இன்றைய விஞ்ஞான உலகில் இந்தப் பூமிக்குள் அது எங்கே சம்பவங்கள் நடந்தாலும் அடுத்த “பதினைந்து நிமிடத்திற்குள்” நாம் இங்கே அதைக் கண்டுணர முடிகின்றது.

 

இத்தகைய துரித நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவால் நாம் கண்டுணர்கின்றோம். உலகில் எங்கே நடந்தாலும் உடனடியாக டி.வி. மூலமாகவோ அல்லது ரேடியோ மூலமாகவோ நாம் இதை அறிந்து கொள்ள முடிகின்றது.

 

அடுத்து பத்திரிகை வாயிலாகவும் அறிந்து கொள்ள முடிகின்றது.

 

நமக்கு அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறன் இருந்தாலும் ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் கூர்ந்து படிக்கும் போது நமக்குள் அது பதிவாகிவிடுகின்றது.

 

டி.வி.க்களில் ஒளி பரப்புச் செய்வதை அதே உணர்வின் இயக்கமாக நாம் வீட்டிலே டி.வி.யை இயக்கப்படும் போது எங்கேயோ ஒளிபரப்பு செய்யக் கூடியதை நாம் இங்கு வீட்டிலே இயந்திரம் மூலமாகப் பார்க்கின்றோம்.

 

இதே போல் எங்கேயோ நடக்கும் சம்பவங்களைப் படமாக்கி விஞ்ஞான அறிவு கொண்டு பத்திரிகையில் அவர்கள் வெளியிடுகின்றார்கள்.

 

அங்கே நடந்த சம்பவங்களயும் அசம்பாவிதங்களையும் அதனால் வேதனைப்பட்ட செயல்களை விரிவாக்கி அது எழுத்து வடிவில் கொடுக்கின்றார்கள்.

 

எழுத்து வடிவில் எழுதியதைக் கூர்ந்து கவனித்து அங்கே நடக்கும் அந்த விஷயங்களை ஆர்வமாகப் படிக்கின்றோம். கூர்ந்து கவனித்து அந்தப் படத்தையும் பார்க்கின்றோம். அதற்குக் கீழ்… “நடந்த சம்பவங்களையும்” கூர்ந்து படிக்கின்றோம்.

 

எந்த மனிதன் அங்கே அடிபட்டு வேதனைப்பட்டு வேதனையான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றானோ அந்த உணர்வுகள் அனைத்தும் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அலை அலைகளாக நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

 

இன்று ஒரு மனிதன் பேசியதை அல்லது படம் எடுத்ததை அதைத் தனக்குள் கவர்ந்து அது மீண்டும் படச் சுருளாக்கி அதனை மீண்டும் ஒளி பரப்புச் செய்யப்படும் போது அந்தப் பேழைகள் (PLAYER மூலம்) ஒளி அலைகளை வெளிப்படுத்தும் போது அதையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலை அலைகளாக வெளிப்படுத்துகின்றது.

 

எதனின் துணை கொண்டு ஒளி பரப்புச் செய்தனரோ அதே துணை கொண்டு டி.வி.யோ ரேடியோவோ இயக்கப்படும் போது இந்தக் காற்றிலே அலை அலைகளாக வருவதைக் கவர்ந்து அந்த உணர்வின் நிலைகளைப் படமாகவும் பார்க்கின்றோம். ஒலி நாதங்களாகவும் நாம் கேட்கின்றோம்.

 

இதைப்போல தான் இங்கே ஒரு மனிதனுக்கு மனிதன் நாம் அதைக்  கூர்ந்து கவனிக்கும் போது அந்த மனிதன் வேதனைப்பட்ட உணர்ச்சிகள் நமக்குள்ளும் வந்துவிடுகின்றது.

 

இயற்கையின் நியதிகள் இது.

 

மனிதன் வேதனைப்பட்டு வெளிப்படுத்திய   உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அலைகளாகப் பரப்பும் போது

1.பத்திரிக்கை வாயிலாகக் கூர்ந்து படிப்போம் என்றால்

2.எப்படி டி.வி.யைச் சுவிட்சைப் போட்டு எந்த ஸ்டேஷன் என்று எண்ணுகின்றமோ

3.அந்த ஸ்டேஷனிலிருந்து வரும் ஒலி அலைகளை கவர்ந்து படமாகக் காட்டுவது போல

4.நமது உணர்வுக்குள் ஆழமாகப் பதிந்தவுடனே  அதனின் நினைவலைகளாக மாறுகின்றது.

 

ஆனாலும் அவர்கள் பட்ட இந்த உணர்வுகள் நம் நினைவலைகளாக மாற்றினாலும் அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகளும் நமக்குள் அது பதிவாகி விடுகின்றது.

 

நாம் உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

 

இருந்தாலும் அடிபட்டவர்கள் வாழ்க்கை இருண்ட உலகமாக உடலை இழந்து இப்படி ஆகிவிட்டோமே என்று மறைக்கும் உணர்வாக வெளிப்படுவதை நாம் கூர்ந்து கவனித்தவுடனே

1.நம் அறிந்து கொள்ளும் உணர்வுடன் அது கலந்து

2.நாம் அறிந்திடும் நிலையைத் தடைபடுத்தும் நிலை வந்து விடுகின்றது.

 

இப்படி ஆக்ஸிடென்ட் ஆனதை நாம் அதிகமாகக் கவர்ந்து வைத்திருந்தோம் என்றால் நாம் பஸ்ஸிலே செல்லப்படும் போது இதே உணர்வுகளின் வேகங்கள் நமக்குள் வருவது உண்டு.

 

உதாரணமாக பஸ் வேகமாகப் போகும் போது நாம் ஏற்கனவே பத்திரிக்கையில் படித்துப் பதிவான உணர்வுகள் அந்த நினைவலைகள் மீண்டும் நமக்குள் உந்தப்பட்டு… “ஆக்ஸிடென்ட் ஆகி விடுமோ…!” என்ற உணர்வைத் தூண்டும்.

 

அந்த உணர்வைத் தூண்டப்படும் போது வேகமாகப் பஸ் போகிறதே என்று எண்ணினாலும் அடுத்து பஸ்ஸை எங்கேயாவது நிறுத்தினால் பாதுகாப்பாக ஒதுங்கி உட்காரலாம் என்று வேறு இடத்தில் உட்காருவார்கள்.

 

எந்த பஸ்ஸின் ஆக்ஸிடென்ட்டை இவர்கள் உணர்வாகப் பதிவு செய்தனரோ அதே உணர்வின் அலைகள் நினைவாகி

1.யார் ஓட்டுநரோ அவர்பால் இந்த எண்ணங்கள் செல்லும்.

2.(எண்ணங்கள் அவரை மோதும்)

 

அவ்வாறு எண்ணங்களைச் செலுத்தப்படும் போது என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்?

 

விமானங்களை வெகு தொலைவில் பறந்து கொண்டிருப்பதை அது ரிமோட் கண்ட்ரோல் (RADAR மூலம்) கொண்டு சீர் படுத்தி இயக்குகின்றனர்.

 

இதைப் போல பயந்த உணர்வும் ஆக்ஸிடென்ட் ஆன நிலைகளையும் படித்துணர்ந்த நாம் அந்தப் பஸ்ஸிலே செல்லும்போது பய உணர்வுடன் எண்ணினால் ஓட்டுநர் பால் நம்முடைய எண்ணம் ரிமோட் கண்ட்ரோல் போல இயக்கி விபத்துக்கு அழைத்துச் செல்லும்.

 

பாதுகாப்பான இடத்தில் ஓரத்தில் கடைசியில் உட்கார்ந்திருப்போம் என்று எண்ணுவோம்.

 

அல்லது ஏதாவது நடு மையத்தில்  உட்கார்ந்தாலும் கூட அந்தப் பய உணர்வு கொண்டு நாம் ஓரத்தில் ஒதுங்கினாலும் ஆக்ஸிடென்ட் ஆனால் இங்கு இருந்து அடித்து முன்னாலே தூக்கிக் கொண்டு எரியும்.

 

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட எண்ண உணர்வுகள் நம்மை அது இயக்கச் செய்யும். நாம் தவறு செய்யவில்லை.

 

எங்கேயோ மனிதன் ஆக்ஸிடென்ட்டில் இறந்தான், விஞ்ஞான அறிவு கொண்டு நாம் கண்டுணர்ந்தாலும் இந்த நினைவலைகள் நமக்குள் இவ்வாறு அது செயல்படுகின்றது.

 

நம்மை அறியாமலே அந்த விபத்தான உணர்வுகளுக்கு நமக்குள் பதிவான உணர்வுகள் அழைத்துச் செல்லுகின்றது.

 

இதிலிருந்து தப்பிக்க என்ன வைத்திருக்கின்றோம்?

 

சாமி காப்பாற்றுமா? சாமியார் காப்பாற்றுவாரா…? ஜாதகம் காப்பாற்றுமா…? ஒன்றும் காப்பாற்றாது.

 

பத்திரிகை வாயிலாகவோ அல்லது டி.வி மற்ற இன்டெர்னெட் மூலமாக அசம்பாவிதங்களக் கண்டாலோ படிக்க நேர்ந்தாலோ அடுத்த கணம் நமக்குள் அது பதிவாகாதபடி தடுத்துப் பழக வேண்டும்.

 

“ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும்.

 

எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று உடல் முழுவதும் “சர்குலேசன்” செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி.

 

பின் மகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படரவேண்டும். உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ண வேண்டும்.

 

அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தியால் நாளை நடப்பதெல்லாம் இந்த உலகிற்கும் உலக மக்களுக்கும் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

 

அதே சமயத்தில் நாம் பார்த்த உணர்வுகள் நமக்குள் பயத்தையோ அல்லது அதிர்ச்சியையோ ஊட்டியது என்றால்

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று

2.நம் உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

 

இவ்வாறு செய்தால் பயமுறுத்தும் உணர்வுகளுக்கு “இது அச்சுறுத்தலாக அமையும்”. அடுத்து நமக்கு அந்தப் பயம் தொடராது.

 

மேலும் எங்கே செல்வதாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியில் செல்லுங்கள்.

 

பஸ்ஸோ இரயிலோ எந்த வாகனமாக இருந்தாலும் அதை ஒரு முறை முழுவதுமாக உற்றுப் பார்த்து

1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்த வாகனம் முழுவதும் படரவேண்டும்.

2.இதில் பிராயணம் செய்யும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

3.எல்லோரும் நலமும் வளமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று

4,முதலிலேயே இப்படி ரிமோட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

இவ்வாறு எண்ணினால் நம் எண்ணம் நம்மைக் காக்கும். அதே சமயத்தில் மற்றவர்களையும் காக்கும் சக்தி பெற்றவர்களாவோம்.

 

“நம் எண்ணம் தான்… நம்மைக் காப்பாற்றும்”. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

22.10.17 கூட்டுத் தியானத்தில் கருத்துப் பரிமாற்றம் – ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் (ஒட்டுச் செடி போல்)

Image

22.10.17 கூட்டுத் தியானத்தில் கருத்துப் பரிமாற்றம்

 

3.ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும் (ஒட்டுச் செடி போல்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம் விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

 

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

 

அதே போல் குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி மனிதனையே உருவாக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் (ஒட்டுச் செடி போல்) ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

 

நல்லது, கெட்டது, பிடித்தது, பிடிக்காதது, வேண்டியது வேண்டாதது என்று எதையும் பார்க்காமல்

1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்

2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்

3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

 

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்”) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்துவிட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து

1.புதுப் புதுக் கருக்களாகி

2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி

3.ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

 

ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாக மாறும்.

 

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்’ என்பார்.

 

கட்சி மாற வேண்டும் என்றால் நாம் தவறு செய்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ) உடனடியாக ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

 

(அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார்.)

 

அதை ஒட்டிய செயலாக நாம் மாற்றிப் பேச வேண்டும். செயல்பட வேண்டும்.

 

உதாரணமாக – நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை. அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே என் மனதை என் எண்ணத்தை என் உணர்வை என் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

 

1.தவறு செய்ததில் அதிகம் நினைவைச் செலுத்தாதபடி

2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து

3.ஞானிகள் அருள் சக்தியை மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

 

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று

1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி

2.விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ

3.அந்த அளவிற்கு உறிஞ்சி எனக்குள் சேர்த்துக் கொள்வது.

 

இது என்னுடைய அனுபவம்

“ஆகாதவர்களைக் கண்டால்…” கோபமும் பதட்டமும் நடுக்கமும் ஏன் வருகின்றது…?

Tension and frustration.png

“ஆகாதவர்களைக் கண்டால்…” கோபமும் பதட்டமும் நடுக்கமும் ஏன் வருகின்றது…?

ஒரு பையனை நாம் நல்லவன் என்று கருதி விட்டால் அந்த உணர்வின் சத்தை நாம் சுவாசிக்கின்றோம்.

நல்லவன் என்ற உணர்வுகள் நமக்குள் வந்தவுடனே நம் கண் அந்தப் பையனைப் பார்த்தவுடன் “வாப்பா… என் கண்ணு…!” என்ற நிலைகளிலே மகிழ்ச்சியாக அழைக்கின்றோம்.

ஆனால் அதே சமயம் அதே பையன் அவன் தவறு செய்கின்றான் என்ற எண்ணத்தை எண்ணி அந்த எண்ணத்தால் நாம் பார்த்தால் அவனைப் பார்த்தவுடனே என்ன சொல்கிறோம்?

இவன் ஆளைப் பார்…! “அசுரப் பயல்” என்கிற நிலையும் “அயோக்கியன்…” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி அந்த உணர்வின் சக்தி நமக்குள் ஆகி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களெல்லாம் நடுங்கும்.

1.அவனைக் கண்டவுடனே இந்த உணர்வுகள்
2.நம் நல்ல குணங்களுக்கு எதிரியாகி
3.அவனை ஏசும்படி வைக்கும்.

நாம் எதை எண்ணுகின்றமோ அந்த உணர்வின் தன்மை கொண்டுதான் நம் கண் அதை வழி காட்டும். நாம் எதை எண்ணுகின்றமோ அதனின் உணர்வை நம் உயிர் இயக்கி நம் உடலாக இயக்கும்.

எதை…?

அதாவது கெட்டவனைப் பார்த்துப் பதட்டத்துடன் நாம் பார்ப்போம் என்றால் அந்த உணர்வுகள் வந்து
1.துரித நிலைகள் வேகமாக வேலை செய்யும் உணர்வுகளுடன்
2.(பதட்டமான உணர்வுகள்) கலந்து
3.நாம் வேகமாக வேலை செய்யும் நிலையை அது நடுங்கச் செய்யும்.

வேகமாக ஏதாவது செய்தால் அந்த வேலைகளைச் சரியாகச் செயல்படுத்தவிடாதபடி அது செயலாக்கிவிடும். ஒரு பொருளைத் தூக்கினால் அதிக வலு கொடுத்தால் நடுக்கங்கள் வரும்.

ஒருவனைப் பார்க்கப்படும் போது… “இப்படிச் செய்கிறான்…!” என்று அசுர உணர்வு கொண்டு பார்த்தோம் என்றால் நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அது நடுங்கும்.

உதாரணமாக உங்களுக்கு ஆகாதவரைப் பார்த்தவுடனே உங்கள் உடலிலே நடுக்கங்கள் வருவதைப் பார்க்கலாம். அந்தப் பதட்டம் கொடுப்பதைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் காரணம் உங்கள் கண்ணால் “வேண்டாதவன்…” என்று எண்ணும் போது எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

நாம் எண்ணியது அவர் மேல் பதியச் செய்த இந்த உணர்வுகள் அவனைப் பார்த்தவுடனே
1.நாம் முதலிலே எதனால் கோபப்பட்டு பதட்டப்பட்டோமோ
2.அந்த அலைகள் நமக்கு முன் நிற்கிறது
3.அது சூரியன் காந்த சக்தியால் கவர்ந்து நமக்கு முன் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவனைப் பார்த்த பின் அதே உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் பதட்டத்தையும் அதே சமயத்தில் சிந்தனையற்ற சொல்லையும் சொல்லச் செய்யும்.

அவனைக் கோபிக்கும் நிலையும் வரும்.

இந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களுக்கு அது வேண்டாத நிலையாகி அது உடலுக்குள் சேர்த்த பின்
1.நாம் ஏதாவது ஒன்றைச் சிந்தனை செய்ய நேர்ந்தால்
2,நமக்குள் பதட்டமும் அவசரமும் வரும்
3.அவசரப்படும் சொல்களைச் சொல்லச் சொல்லும்.

நம்முடைய எண்ணம் ஒரு பொருளை நல்ல விதத்தில் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணி அடுத்தவரிடம் சொல்வோம்.

ஆனால் அவசரப்பட்டு நாம் சொல்லும் வார்த்தையை அவன் சிறிது மந்தமாகச் செயல்பட்டால்
1.உடனே ஏசச் சொல்லும்… பேசச் சொல்லும்,
2.அவனை தள்ளிவிடச் சொல்லும்.
3.இந்த உணர்வெல்லாம் நமக்குள் உண்டாகும்.

இந்த உணர்வுகள் அவ்வாறு ஏற்பட்டால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு அது தீமையே உருவாக்கும்.

இவையெல்லாம் நாம் சுவாசிக்கும் உணர்வுகளை “நம் உயிர் இயக்கும் நிலைகள் எப்படி…?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரும் கடவுள்
2.அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் அந்த உடல்
3.மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்கள் அந்த உடலுக்குள் தெய்வமாக இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

யாரும் தவறு செய்யவில்லை. நாமும் தவறு செய்யவில்லை.

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் உயிரிலே பட்டபின் அதனின் உணர்ச்சிகளாகி அதுவே உடலை இயக்கச் செய்து சொல்களாகவும் செயலாகவும் வெளி வருகின்றது.

நம் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலைகள் வரும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் அந்த உணர்வின் இயக்கமாக நம் உயிர் இயக்கி இருளைப் போக்கி ஒளி என்ற நிலைகளாக நம் சிந்தனையைத் தெளிவாக்கும்.

பதட்டத்தையும் அவசரத்தையும் அடக்கிப் பொருளறிந்து செயல்படும் திறனாக சிந்தித்துச் செயல்படும் நிலைகளில் நம்மை இயக்கும்.
1.நம் செயல்கள் நமக்கு நல்லதாகவும்
2.மற்றவர்களுக்கும் நன்மை செய்வதாக அமையும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குக் கொடுக்கும் அளவு – “DOSAGE”

Dhuruva star - Polaris

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குக் கொடுக்கும் அளவு – “DOSAGE”

நாம் தியானத்தின் மூலம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடல் முழுவதும் படர்ந்து நம் உடலிலுள்ள ஜீவ அணுக்களில் இந்த உணர்வின் ஆற்றல் பெருகுகின்றது.

அதன் மூலம் விண்ணில் பரவிக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும் இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலைகளும் பெறும் தகுதியினைப் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவலைகளை விண்ணில் செலுத்தப்பட்டு
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் கதிர் பொறிகளை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3,உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் பெறும்படி செய்வது தான்
4.குருநாதர் காட்டிய வழியில் எமது வேலை.

இந்த முறைப்படி செய்தால் துருவ தியான நேரத்தில் உங்களுக்குள் புதுப் புது உணர்வுகள் பரவி இருக்கும்.
1.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் அந்த ஒளிக் கதிர்கள்
2.அலைகளைப் போன்று சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காணமுடியும்.

இதை யாரெல்லாம் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்வில் இந்த மனித வாழ்க்கையில் சேரும் தீமைகளை அகற்றி உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கச் செய்யும்.

நீங்கள் சுவாசிக்கும் உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடவும் இந்த வாழ்க்கையில் எத்தகைய எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்திடவும் முடியும்.

அந்தத் தீமையற்ற உணர்வின் தன்மை அறியும் ஆற்றலும் உங்கள் நினைவிற்குள் வரப்பட்டு உடலில் உள்ள அணுக்களை ஒவ்வொரு நொடிகளிலும் இந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் மறவாது இதைச் செய்யுங்கள்.

அதைப் பெறும் தகுதியை துருவ நட்சத்திரத்திலிருந்து விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்கின்றோம். இதே நினைவினை
1.விண்ணிலே நீங்கள் எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகி
3.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும்.

விண்ணுலகில் அதாவது வானவியலில் விளைந்த உணர்வுகள் புவியில் ஈர்க்கப்பட்டு தாவர இனங்களாக வளர்க்கப்பட்டு தாவர இனங்களில் உணர்வின் செயலாக உயிரினங்களில் எண்ணங்கள் உருவாக்கப்பட்டு அது பல கோடிச் சரீரங்களை நாம் கடந்து வந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

எத்தனையோ வகையான இன்னல்களிலிருந்து விடுபடும் எண்ணங்கள் நமக்குள் உருவாகி அதனின் உணர்வின் வலுவாக உணர்வுகள் வலுப்பெற்று உடல்கள் பரிணாம வளர்ச்சியாகி வந்துள்ளோம்.

நம்மை மனிதனாக உருவாக்கிய இந்த உயிரால் இந்த உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா என்று நாம் எதனையும் அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் நாம்.

இருளைப் பிளந்து அங்கிருக்கும் பொருளைக் காணும் நிலைகள் பெற்றது நமது ஆறாவது அறிவு. ஒரு தீபத்தை ஏற்றினோம் என்றால் அங்கே இருளை மாய்த்து விட்டுப் பொருள் இருக்கும் நிலைகளை நாம் காணுகின்றோம்.

இதைப்போன்றுதான் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களில்
1.சிறுகச் சிறுகச் சேர்க்கச் செய்கின்றோம்.
2அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது.
3.அது உடலிலே சூடாகி விடும்.
4.அதே சமயத்தில் அதனுடைய வேகத் துடிப்புகளை நாம் தாங்கும் சக்தி இல்லை.

அதனால் தான் ஒவ்வொரு நொடிக்கும் இந்தத் துருவ தியான நேரங்களில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் ஈர்ப்புக்குள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

சிறுகச் சிறுக உங்கள் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைப் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இதை இணைக்கும்படிச் செய்கின்றோம்.

அணுக்கள் என்றால் நம் உடலில் எத்தனையோ விதமான குணங்களை எண்ணியுள்ளோம். வளர்த்துள்ளோம். அதன் உணர்வின் தன்மை கொண்டு அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்களை இணைக்கப்படும் போது அந்த அணுக்களில் விளைந்துள்ள தீமைகள் சிறுகச் சிறுகக் குறையும்.

உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்கே செல்லும். அந்த விண்ணின் ஆற்றலைப் பருகும் தகுதியைப் பெறுவீர்கள்.

எந்த விண்ணில் இது உரு பெற்றதோ அந்த விண்ணில் உரு பெற்ற உணர்வின் தன்மையை நுகர்ந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான நிலைகள்.

அதைப் பின்பற்றியவர்கள் அனைவரும் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக என்றும் பேரின்பப் பெருவாழ்வாக என்றும் பெரு நிலையாக என்றும் பதினாறு என்ற நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.அதன் வழி நாம் சென்றால்
2.அந்த எல்லையை அடைய முடியும்.

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

Image

arali

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

எருமை மாட்டுச் சாணத்தின் குணங்கள்:-

மாடு பல தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது. அதிலுள்ள விஷங்கள் அனைத்தையும் தன் உடலாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் அதிலுள்ள நல்லதைக் கழிவாகச் சாணமாக மாற்றுகின்றது.

மாடு அந்த விஷத்தைக் கரைத்துத்தான் தன் உடலாக அதை மாற்றுகின்றது. ஆகவே மாடு
1.தனக்குள் ஈர்த்துக் கொள்வது நஞ்சு (அதை வலுவாக்கிக் கொள்கின்றது)
2.தன்னிடமிருந்து வெளியேற்றுவது நல்லது. (அதைக் கழிவாக்குகின்றது)

விஷத்தை குடித்தவர்களுக்கு அந்த மாட்டின் (குறிப்பாக எருமை) சாணத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்து லேசாக அதைச் சுட வைத்து அதன் மேல் இரண்டு பாதங்களையும் வைத்தால் உடலிலுள்ள விஷங்களை எல்லாம் ஈர்த்துவிடும்.

ஏனென்றால் மாடு அந்த விஷத்தை எப்படிக் கரைத்ததோ உணவாக உட்கொண்டதோ அது வெளிப்படுத்தும் சாணத்தில் நல்லது அதிகமாக இருப்பதால் நம் உடலில் விஷம் இருந்தால் அதைக் கரைத்துப் புவியின் ஈர்ப்பில் இழுத்து விடுகின்றது.

அரளிப்பூவின் குணங்கள்:-

அரளியை நாம் உட்கொண்டால் நம்மை அது மாய்த்துவிடும். ஆனால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் நம் உடலிலுள்ள சில நஞ்சான நோய்களை அகற்றிவிடும்.

அரளிப் பூவை நாம் ஏன் தெய்வத்திற்குப் போடுகின்றோம்…! வீட்டிலும் சரி… கோவிலிலும் சரி…! தெரிந்தோ தெரியாமலோ நம் வீட்டில் சில விஷத் தன்மைகள் இருந்தால் அந்த மணத்தால் அது அகற்றப்படுகின்றது.

சிலர் கால் வலி மூட்டு வலி இவைகளால் துன்பப்படுவார்கள்.

அவர்கள் இந்த இலையை 4-5 எடுத்து இரவு படுக்கையில் கால்களுக்கு அடியில் வைத்துப் படுத்தால் கால்களில் மூட்டுகளில் சேர்ந்த விஷமான நீரை எல்லாம் எடுத்துவிடும். வலி குறைவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த நஞ்சுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு. ஒரு அணுவிற்குள் இருக்கும் நஞ்சின் அளவுக்குத் தக்கவாறு தான் அதனின் இயக்கத்தின் ஆற்றல் இருக்கும்.

நஞ்சை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். நஞ்சை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகையை நஞ்சான நிலைகளக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களிலிருந்தும் விடுபட முடியும்