நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?

நம் வாழ்க்கையில் இருள் என்பது எது…?

 

அங்கிருந்து ‘வாருங்கள்..’ என்று கூப்பிடுகிறேன்.
1.ஆனால் அதே சமயம் ‘வாங்க…!’ என்று சொன்னால்
2.என்ன இப்படி வெடுக்… என்று கேட்கின்றார்…? அதே சொல் தானே…!
3.அந்தஸ் சொல்லுக்குள் இந்த உணர்ச்சிகள் வித்தியாசமாக இயக்குகிறது..

கண்ணாடி தெளிவாகத் தெரிகிறது… தட்டினால் உடைந்து விடும் என்று தெரிகின்றது. அதிலே பெயர் அடிக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அடி கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அதில் எழுத முடியாது. பேனா உடைந்து விட்டால் அதை வைத்து எழுத முடியுமா… என்ன செய்வது…?

இதே மாதிரி நமது ஆன்மா ஒரு கண்ணாடிக்குச் சமம் அதிலே அந்த வேதனை என்ற அழுக்கானால் படிந்து விடும் நல்ல குணத்துடன் வெறுப்பின் தன்மை அழுக்கு அடைந்துவிடும்.

அதற்குப் பிறகு சிந்திக்கும் தன்மை இழந்து விடும். அவன் பார்வையில் இருக்கும் அந்த மனது என்ன செய்கிறது…?

நாம் சொன்னவுடன் அவன் பார்க்கும் அந்த நிலை அழுக்கடைந்து விடும். அப்போது நாம் மீண்டும் அழுக்கைத் தான் சேர்க்கின்றோமே தவிர அதை துடைத்துப் பழக வேண்டும்.

நாம் சொல்லும் உணர்வு கொண்டு இப்படி இருக்கிறதப்பா என்று சொல்லித் துடைத்து விட்டோம் என்றால் தன்னை உணரக்கூடிய சக்தி வரும்.

இப்பொழுது நம் கடையில் வந்து ஒரு கடன்காரன் வந்து கேட்டுச் செல்கின்றான். உடனே அந்த வெறுப்பு என்ற வேதனை வருகின்றது… விஷம் என்ற நிலையை உணர்த்துகின்றது. அதைப்போல் நம்மிடம் சுருக் என்று கேட்டுச் செல்கின்றான் பார்…!

அடுத்தாற்படி வந்து கடன்காரன் வந்து கேட்கின்றான் என்றால் கொடுத்துப் பாருங்கள். இந்த மாதிரிக் கடன் கொடுத்திருக்கின்றது என்று இவனிடம் வெறுப்பாகச் சொல்வோம். உனக்குக் கடனும் இல்லை ஒன்றும் இல்லை என்று சொல்வோம்.

முதலில் கொடுத்துப் பழகிவிட்டோம். கடன் கொடுத்துப் பழகியதை வெறுப்பாகச் சொல்லும் பொழுது அடுத்த பக்கத்தில் கடன் தரத் தயாராக இருப்பார்கள்… அங்கே போகின்றார்கள்.

அங்கு சென்றவுடன் வாங்கிய கடனைச் சரியாகக் கொடுப்பார்கள். அன்றைக்கு நம்மை வெறுத்தார்கள்… அவருக்கு என்ன திருப்பிக் கொடுப்பது என்று நம்மை எண்ணுவார்கள்.

வெறுப்பின் தன்மையால் இப்படி ஆகிறது. இது இயற்கை சில சந்தர்ப்பங்களில் நுகரும் உணர்வுகள் இப்படி இயக்குகிறது.

அடுத்தாற்படி நல்ல காசு கொடுத்து வாங்குபவர்கள் வருகின்றார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுது நம் சொல் சரியாக வருவதில்லை. சரக்கை எடுத்துக் கொடுக்கப்படும் பொழுது சரியான பதில் வராது.

அவர்கள் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நாம் வெறுப்படைந்த நிலைக்குத் தகுந்த மாதிரி சாமானை எடுத்துக் கொடுப்போம்.

பார்க்கலாம்… சில நேரங்களில் வெறுப்பாக இருந்தால் உப்பிற்கு பதிலாக பப்பு என்று சொன்ன மாதிரி எதையாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருப்போம்.

என்னங்க நான் எதை கேட்கின்றேன்.. நீங்கள் எதைக் கொடுக்கின்றீர்கள் என்பார்கள். இரண்டு முறை நமது உணர்வுகள் இப்படி மாறி வந்தவுடன் என்ன ஆகிறது.

எதையாவது ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லாதபடி எதையாவது கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி என்ற இந்த வம்பு வரும். அவர்கள் சொல்வது நம் காதில் சரியாகக் கேட்காது குற்றவாளியாக நம்மை மாற்றும். அப்பொழுது எது செய்கிற…?

இதே மாதிரித் தான் தறி நெய்பவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் கொஞ்சம் வெறுப்பாகிவிட்டால் போதும். நிச்சயம் நாடா ஒரு பக்கம் சென்று நூலை அற்றுக்கொண்டே போகும்.

அதே சமயத்தில் முன்னாடி எதிரில் தெரிந்துள்ள நூல் அறுந்திருக்கும். அப்பொழுது என்ன செய்யும்…? அறுந்தது நமக்குத் தெரியாதபடி இருப்போம்.

அதை எடுத்தவுடன் இங்கே சிக்கலாகி வந்துவிடும். அப்பொழுது என்ன செய்யும்…? இங்கே வெறுப்பாக இருப்பதனால் எதிரில் இருக்கக்கூடிய நூல் அறுந்ததைக் காண முடியாது.

உதாரணமாக ஒரு காரியத்திற்கு நீங்கள் அவசரமாகப் போக வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பாருங்கள். கையிலே சாமானை வைத்து கொண்டிருப்பீர்கள்.

ஆனால் அதைக் காணோம் காணோம் என்று… எங்கே…? இங்கே தானே வைத்தேன் என்று வீட்டில் சண்டைக்குச் செல்வீர்கள். ஆனால் அவர்களும் இந்தப் பதட்டத்தில் கையில் தான் இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள்.

இவர்களும் சேர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடைசியில் இருவரும் அமைதியான பிற்பாடு ஐய்யய்யோ நான் கையிலே வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரியும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…?

இந்த மாதிரி அப்பொழுது நம் கண்ணிற்கு முன்னாடி இருளச் செய்வது எது…? இந்த உணர்வுதான். நம்மை அறியாமல் ஆக்குவதும் அறிந்த நிலையில் செயல்படுத்துவதும் நாம் நுகர்ந்த உணர்வு தான்.

ஆகவே நம் வாழ்க்கையில் இதையெல்லாம் துடைக்க வேண்டும். இந்த ஆயுட்கால மெம்பர் என்றால் எப்படி அகஸ்தியன் ஒவ்வொரு இருளையும் மாற்றி ஒளியின் தன்மை பெற்றானோ அந்தத் துருவ நட்சத்திரமாக ஆனானோ அதை எடுக்கும் பொழுது இந்த இருளை அகற்ர முடியும்.

உயிரோடு சேர்த்து உணர்வை ஒளியாக்க முடியும்… அது தான் தனுஷ்கோடி.

சேவை செய்வதில் மிக உயர்ந்த சேவை எது…?

சேவை செய்வதில் மிக உயர்ந்த சேவை எது…?

 

ஒரு உயிரணு தோன்றிய பின் அது கடலைச் செடியை உணவாக உட்கொள்ளுமே என்றால் அதிலே மாற்றுச் செடியின் வலுவான உணர்வுகளை நுகர்ந்து சுவாசித்து இதற்கு அது ஆகவில்லை என்றால் இதனின் ஜீவ அணுக்கள் பெருகி புழுவின் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மை மலமாக மாற்றி கடலைச் சத்தில் உருவான அணுக்களை அது செயலிழக்கச் செய்து அதன் மலத்தை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விடும்.

பின் அதனின் இயக்கம் துரித நிலையாகி குழுவின் உடல் அழுகிய நிலையோ அல்லது குறையும் நிலையோ வரும் பொழுது உயிரான்மா வெளியே வருகின்றது.

ஒரு உயிரணு கடலைச் செடியினை நுகர்ந்து உருவானாலும் பல செடிகளை நுகரப்படும் பொழுது வேறு ஒரு ரூபத்தை அடைகின்றது.

ஆனால் வேறு ஒரு செடியை நுகர்ந்த உணர்வுகள் ஜீவணுவாகி அதனுடைய மலத்தை அது உமிழ்த்தும் பொழுது இந்த உயிரணு உடல் இழந்தாலும் இன்னொரு அணுவின் சத்தை இது விளங்கும் நிலை வருகின்றது இவ்வாறு வந்த அணு தான் இதே கடலை செடியை விழுங்கும் நிலை வருகிறது.

இவ்வாறு வந்த அணு தான் இதே கடலைச் செடியினை விழுங்கியிருக்கும் என்றால் அது அந்தப் புழுவைக் கொன்று சாப்பிடும் ஒரு உயிரணுவாக வரும்.

அது கடலைச் செடியை உணவாக உட்கொண்டாலும் இன்னொரு செடியை நுகர்ந்து இது இதனுடைய எதிர்ப்பிணையான ஜீவ அணுவாக வரும் பொழுது இந்த உடலுக்குள் அதைக் கொன்று புசிக்கும் நிலை கொண்ட அந்த அணு மறுபடியும் இந்த உடலைப் பிளந்தபின் வெளியே வந்தது என்றால் மீண்டும் இதைப் போன்று எந்தப் புழுவின் தசைகளை விழுங்க எண்ணியதோ அதே உணவின் சத்தைக் கொண்டு இந்த புழுவே அதற்கு ஆகாரமாக எடுத்துக் கொள்கின்றது.

எறும்பு மற்ற புழு பூச்சிகளைக் கொன்று சாப்பிடுகின்றது. தாவர இனத்தையும் சாப்பிடுகின்றது. இதைப்போல ஒன்றை ஒன்று உணர்வின் சத்தை வென்று எந்த உடலின் தன்மையில் அது உருப் பெற்றதோ அதனை விளைவித்த அந்த உயிரணு மாற்று உடலைப் பெற்றாலும் எதனை உணவாக உட்கொண்டு உடலின் தன்மை அடைந்ததோ அது மீண்டும் புழுவைக் கொன்று சாப்பிடும் நிலை தான் வருகின்றது.

இதே நிலைகள் தான் மனிதரிடத்திலும் செயல் நடைபெறுகிறது.

உதாரணமாக மனிதனின் நிலைகளில் அன்பு கொண்டு பரிவு கொண்டு பார்த்துப் பேசுகின்ற பொழுது மற்றவர்களிடத்தில் நோயின் தன்மை இருக்குமேயானால் அவர் படும் வேதனையைக் கேட்டறிந்து நாமும் வேதனை கொள்வோமேயானால் அந்த நோயின் தன்மை நம்மிடத்திலும் பற்றிக் கொள்கின்றது.

இவ்வாறு பேரண்டத்திலும் இப்புவியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் சூட்சும இயக்கங்களைக் கண்டுணர்ந்த மெய்ஞானிகள் சாதாரண மக்களும் உண்மைகளை அறிந்து மேன்மை நிலை பெற வேண்டும் என்று காண்பித்து அருளிய மெய் ஞானத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு எடுத்து உபதேசிக்கின்றோம்.

அதில் உங்கள் கருத்தினைச் செலுத்தி உங்களிடத்தில் மறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உயிரான்மாவின் மேன்மைக்காக நீங்கள் செய்யும் சேவையே அனைத்திலும் உயர்ந்த சேவை என உணர்வீர்கள்.

ஆகவே அதனை உணர்ந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் செயல்படும் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்கப் பெற்று எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை

எலெக்ட்ரானிக்கின் இயக்கம் – முகப்பு பற்றிய உண்மை

 

சூரியனிலிருந்து வரக்கூடியது எலக்ட்ரிக். அதைக் கடந்து வரும் பொழுது காந்தம் இழுத்துக் கொண்டால் நியூட்ரான். அது ஓடும் ஓட்டத்தில் இரண்டற இணைந்து உணர்வின் தன்மை ஒரு அணுவாக மாறப்படும் பொழுது புரோட்டான்… சத்தாக மாறுகின்றது… விஞ்ஞானிகள் சொல்வது.

ஞானிகள் சொல்வது… சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
1.அது ஒரு செடியின் சத்தைக் கவர்ந்தால் எலக்ட்ரானிக். அதை நாம் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் நம்மை இயக்கும்.
2.நம் உயிர் எலக்ட்ரிக்… அதே சமயத்தில் நாம் உருவாக்கும் உணர்வலைகள் வெளிப்படும் பொழுது
3.சூரியன் எடுத்துக் கொண்டால் எலக்ட்ரானிக் ஆக மாறுகிறது.
4.இவ்வாறு வெளிப்படுவதை இன்னொருவர் நுகர்ந்தால் அதே எலக்ட்ரானிக் அங்கேயும் இயக்குகின்றது.

இப்படித்தான் எலக்ட்ரானிக் என்பது மனித உணர்வின் தன்மை எடுத்து மனித உணர்வை விஷத்தன்மை கொண்ட நாடாக்களில் பதிவு செய்கின்றார்கள்.

இந்த உணர்வின் அழுத்தம் வரும் பொழுது எதனுடன் கலக்கப்படுகின்றதோ அந்த அறிவே அதிலே இணைகிறது.
1.நோயாகி விட்டால் அது கம்ப்யூட்டரில் உள்ள நாடாவில் இணைந்து விட்டால் அடுத்தவருக்கும் இந்த நோய் வரும்.
2.குடும்பத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் இணைந்து
4.அந்த நாடாவின் மூலமாக அடுத்த குடும்பத்திலும் இந்தச் சண்டை வரும்.

ஆகவே… கம்ப்யூட்டர் இயக்குபவர்கள் தவறான பாதையில் செல்வது… தவறான நிலைகள் செயல்படுவது இதற்கும் அதற்கும் சம்பந்தம் உண்டு.

ஏனென்றால் இந்த உணர்வு எலெக்ட்ரானிக்காக மாறப்படும் பொழுது இதே உணர்வுகள் நாடாக்களில் பதிவாகும். பல நோய்கள் வருவதற்கும்… சில வைரஸ் என்று இவர்கள் சொல்வார்கள்… அதெல்லாம் உருவாவதற்கும் காரணமாகின்றது.

இதே போன்று தான் கம்ப்யூட்டரின் பயன்பாட்டால் கோள்களின் உணர்வின் தன்மையை முகப்பில் இணைக்கின்றான். இவர்கள் விண்வெளிக்கு அனுப்பும் சாதனங்களிலே அதைப் பொருத்துகின்றார்கள்.

அவ்வாறு முகப்பில் வைத்து இணைத்து அனுப்பப்படும் பொழுது எதைப் படமெடுத்து இந்த உணர்வைப் பதிவாக்கினானோ அதனின் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் பொழுது குறிப்பிட்ட எல்லைக்கு ராக்கெட் மூலமாக அனுப்பும் பொழுது கம்ப்யூட்டர் பதிவு செய்த நிலையில் அந்த எல்லைக்குச் செல்கின்றது.

இதே போன்று தான்
1.நல்ல குணங்கள் கொண்டிருக்கும் பொழுது ஒரு தீயவனின் உணர்வு பதிவான பின்
2.அந்த எல்லைக்கு இந்த உணர்வு நம்மை அழைத்துச் செல்கின்றது.

பிற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம். இந்த உடலுக்குள் பதிவாகி அது முகப்பான பின் உடலை விட்டுச் சென்றால் அங்கே அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களின் ஒவ்வொரு முகப்பிலும் இணைத்து விட்டால்
2.உடலை விட்டுச் செல்லும் பொழுது நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.
3.கணவன் மனைவி இருவரும் அதை எடுத்து ஒன்றாக்கி விட்டால் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.

விஞ்ஞான அறிவுப் பிரகாரம் உங்களுக்கு இதை நிரூபித்துச் சொல்கிறேன்.

இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டினார். விஞ்ஞானிகள் எப்படிச் செயல்படுத்துகின்றார்கள்…? புதிதாக எப்படிக் கண்டுபிடிக்கிறான்…? எப்படி எல்லாம் அதை இணைக்கிறார்கள்…? எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும் பொழுது எப்படியெல்லாம் உருவாகின்றது…?

படிக்காததனால் தான் இந்த அளவிற்குச் சொல்கின்றேன். ஆங்கில அறிவு எனக்கு இல்லை… இருந்திருந்தால் “தூள் கிளப்பி இருக்கலாம்…” ஆனால் குருநாதர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

குருநாதர் எல்லா பாஷைகளும் பேசுவார். எனக்கு அது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

பாஷைகள் கற்றவர் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். பற்று கொண்டோர் வரும் பொழுது அதன் வழிகளில் இதைக் கொண்டு செல்லலாம். உன் நேரத்தை வீணாக்காதே… நீ இதைச் செயல்படுத்து…! என்று சொல்லிவிட்டார். அதன் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை முகப்பில் நீங்கள் வைத்துக் கொண்டால் அது உங்களை அங்கு அழைத்துச் செல்லும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை பெருக்கும்பொழுது அது வளர்ச்சி அடையும்.

இதிலே வித்தையும் இல்லை ஒன்றும் இல்லை…!

ஃபோன் எல்லோருடைய கைகளிலும்… எப்போதும்… நீங்காது இடம் பிடித்திருப்பதன் காரணம் என்ன…?

ஃபோன் எல்லோருடைய கைகளிலும்… எப்போதும்… நீங்காது இடம் பிடித்திருப்பதன் காரணம் என்ன…?

 

கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் இயக்குகின்றது.
1.அதில் உள்ள நாடாக்களில் உள்ள காந்தப் புலனறிவில் கெமிக்கல் கலந்த உணர்வினைப் பதிவாக்குகின்றான்.
2.எலக்ட்ரிக்கல் இதனுடைய தட்டெழுத்தின் தன்மை வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் ஆக மாற்றுகின்றது.
3.அதனுடைய அழுத்தம் எதுவோ அதனின் நிலையை இயக்குகின்றது.

இதை உருவாக்கியவன் நினைக்கலாம் இதிலே பதிவு செய்து கொண்ட நிலைகளால் தான் அது இயங்குகிறது என்று. அது மட்டுமல்ல…!

மனித உயிரின் தன்மை எலெக்ட்ரிக். ஒரு உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்.
1.அதற்குத் தக்க தான் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் இவருடைய கைகளும் இயங்குகின்றது.
2.இந்த உணர்வின் காந்தப் புலன் இணைகிறது.
3.இவன் நினைவின் ஆற்றலுக்குள் ஜீவணுக்களாக அங்கே படங்களாகக் காட்சி தருகின்றது.

இவனுடன் இணைந்த நிலை தான் அங்கே வருகிறது.

நாம் நினைக்கின்றோம் அது இயந்திரம் என்று. இவனை அறியாது இயக்கக்கூடிய நிலைகளை மனிதனின் எண்ண உணர்வுகள் இங்கே பதியப்படும் பொழுது இவனுடைய உணர்வின் நினைவலைகளும் அதிலே வைத்திருக்கும் நாடாவிலும் இது பதிவாகின்றது… ஆனால் மனிதனின் மூளை என்பான் கம்ப்யூட்டரை.

தட்டெழுத்தின் மூலமாக ரிக்கார்டை இயக்கப்பட்டு காந்தப்புலனறிவுகள் இயக்கப்படும் பொழுது மனிதனைப் போன்று செயல்படும்.
1.மனிதன் சொல்வது போல் சொல்லும்… வருவோரைப் பற்றிக் கேட்டுப் பதிலும் கொடுக்கும்.
2.கம்ப்யூட்டர் மூலமாக இன்று எவ்வளவோ நுண்ணிய நிலைகளை (CHATGPT.. GEMINI… SIRI) இவ்வாறு தான் செயல்படுத்துகின்றார்கள்.

ஆனால் மனிதன் நோய்வாய்ப்பட்டோ அல்லது வெறித்தனமாகவோ உணர்வுகள் மாற்றப்பட்டு வீட்டில் சண்டையோ சங்கடமோ வெறுப்புடன் வந்து செயல்பட்டால்… இந்த உணர்வின் தன்மை அழுத்தத்தின் தன்மை இயக்கும்.

அதனின் இயக்கம் நாடாக்களில் பதிவு செய்து மற்றொருவர் இயக்கப்பட்டு படங்களாகப் பதிவாக்கப்பட்டால் இதனுடைய நிலைகள் இவன் உடலுக்குள் இவருடைய உணர்வுகளும் மாறும். கம்ப்யூட்டர் இப்படித்தான் வேலை செய்கிறது.

அதனால் தான்
1.கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் ஒரு சிலர் தன் நிலையையே இழந்திருப்பார்கள்.
2.இன்னொருவர் கம்ப்யூட்டரில் இயக்கத்தின் தன்மை கொண்டு சரியாக வேலை செய்திருந்தாலும்
3.வீட்டிலே வெறுப்பு குடும்பத்தில் வேதனை போன்ற உணர்வுகளை எடுத்தால் அது கலந்துவிடும்.
4.அதை இயக்கப்படும் பொழுது… இவன் (அடுத்தவன்) பார்த்தான் என்றால் இவனும் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடுவான்.
5.இது எல்லாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய விளைவுகள்.
6.(சிறு குழந்தைகள் முதல் கொண்டு பெரியவர்கள் வரை இதனால் தான் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை).

ஆகவே… காந்தப் புலனறிவு எதனுடன் இயக்குகின்றதோ அதனின் இயக்கமாக மாறுகின்றது.

கம்ப்யூட்டர் திருடர்களும் இன்று நிறையவே வருகிறார்கள். பேங்கில் இருக்கும் கணக்கை மாற்றி கண்டுபிடிக்காதபடி உணர்வுகளைக் கொண்டு வந்து திருட்டுத்தனத்தைப் பாய்ச்சுகிறார்கள்.

இவன் எந்தக் கணக்கைப் போட்டாலும் அது காட்டாது.
1.அதற்காக அமெரிக்காவில் கண்டுபிடித்து என்ன செய்கின்றார்கள்…?
2.எவன் திருடுகிறானோ அவனுக்கே உத்தியோகம் கொடுக்கின்றார்கள் கம்ப்யூட்டர் திருடர்கள் (HACKERS).

பல கோடிக்கணக்கான பணங்களை பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலையில் இவ்வாறு ஏமாற்றி வேலைகளைச் செய்கின்றார்கள். பணம் காணாமல் போகிறது… ஆனால் யார்…? என்று தெரிவதில்லை.

விஞ்ஞான அறிவால் வந்திருந்தாலும் மனித உணர்வுகள் கலந்து தான் அது இயக்குகின்றது.

1.மனித உணர்வில் இருந்து பல கோடி உணர்வுகள் எடுக்கப்பட்ட பின் இந்த உணர்வலைகள் மாறுகின்றது.
2.அதை நுகர்கிறான்… அதற்குள் கலக்கின்றான்.
3.அடுத்தடுத்து… எதனைப் புதிதாக உருவாக்குகின்றானோ அந்த செல்களில் இந்த உணர்வுகள் இழுக்கப்படுகின்றது.
4.பதிவாக்கி மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது மனிதனால் இயக்கப்படுகின்றது.

மனிதன் இன்று எதை இப்படி உருவாக்கினாலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகளே அங்கே இயக்குகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மிக மிக நுண்ணிய வேலைகளை எல்லாம் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

மிக மிக நுண்ணிய வேலைகளை எல்லாம் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

 

எதிர் நிலையான நட்சத்திரங்களின் மோதலில் மின்னலாகி அது ஒரு மரத்தின் மீது பட்டால் அதற்குள் ஊடுருவித் தன் இனத்தைப் பிரித்துவிட்டு அதைக் கருக்கி விடுகின்றது.

நிலத்திலே பட்டால் பூமியின் நடு மையம் சென்று அடைகின்றது. அதீதமான நிலையில் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையத்திற்குள் ஏற்பட்டால் எந்தப் பகுதியில் இது நடக்கின்றதோ கொதிகலனாகி பாறைகள் இளகுகின்றது.

மேல்நிலை இளகி ஆவியாக மாறும் பொழுது பூமி வெடிக்கின்றது. மேலே உள்ள பாறைகள் கீழே செல்கின்றது. நிலநடுக்கம் என்று அடிப்பாகமாகப் போய் உள்ளே சென்று அடக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம்
1.இந்த மின் அணுக்களின் கதிர்கள் (மின்னல்கள்) கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது.
2.ஹைட்ரஜன் என்ற உப்பின் சத்து இந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.

கடல்களில் பாய்வது மணலாக மாறி அந்த மின்னணுக்களின் துகள்கள் வரப்படும் பொழுது உருவாகும் இத்தகைய மணல் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

1.ஒவ்வொரு மண்ணிற்கும் எந்த நட்சத்திரத்தின் சக்திகள் கலவையாகி எதிர்நிலையாகிப் பதிவாகின்றதோ இப்படி உருவாகின்றது.
2.இதைத் தான் யுரேனியம் என்று பிரித்து எடுக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் அந்த மணலை எடுத்துப் பிரித்தெடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள். அணுவைப் பிளந்து அந்த ஆற்றலைச் சேமிக்கின்றார்கள்.

இதில் சிதைந்த உணர்வின் தன்மைகளைத் தான்
1.கம்ப்யூட்டரில் இந்த உணர்வுகளைப் பாய்ச்சி ஒலி அதிர்வுகளைக் கொண்டு
2.பல செயல்களுக்கு அந்த நுண்ணிய கதிரியக்கப் பொறிகளைச் செயலாக்கும் போது கம்ப்யூட்டர் என்று வருகின்றது.

அவர்வர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை இயற்கை நிலையில் எப்படி வருகிறது…? இப்படி மின் அணுவின் கதிரியக்க நிலைகள் ஒரு காந்தப் புலனறிவால் கவரப்பட்டு… காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மை பதிவு செய்து உணர்வின் அறிவான பின்…
1.எதிரொலிகளின் தன்மை மின்னணுவைப் போன்று உணர்வின் தன்மை தோன்றும்.
2.இந்த உணர்வுக்கொப்ப எதுவாகின்றதோ உருவத்தையும் காட்ட முடியும்..

ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருந்தான் என்றால் அதனுடைய வம்ச வழி வந்திருந்தால் அவரின் ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்று இந்த கம்ப்யூட்டர் மூலம் காணலாம்.

அதைப் பதிவாக்கிக் கம்ப்யூட்டரில் எடுத்துக் கொண்டால் அந்த ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.

மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
1.அவர்கள் வாழ்ந்த உணர்வுகள் இங்கே பதிந்திருப்பதை அலைகள் கவிழ்ந்திருப்பதைக் கவர்ந்து
2.அந்த மனிதனின் ரூபத்தைக் கொடுக்கின்றது கம்ப்யூட்டர்… விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

இதே போலத் தான் அன்றைய மெய் ஞானிகளை நாம் காண முடியும்.

1.அவனில் விளைந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றறிந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை நீங்களும் ஒளியாக முடியும்.

ஒரு சிலர்… விஞ்ஞான அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது… சாமி எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றார் என்று எண்ணுவார்கள்.

விஞ்ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் அந்த இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கம் எப்படி…? என்று காட்டியதைக் கற்றுணர்ந்த பின்பு தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

காலம் வரும் பொழுது எல்லாம் அந்த உணர்வுபட்டால்
1.காலத்தின் மாற்றத்திற்கு ஒப்ப அதை நுகர்ந்து வரும் பொழுது…
2.அந்தந்தக் காலத்தின் உணர்ச்சிகளைக் கவர்ந்து உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

இதற்கு முன் சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும்.
1.ஆனால் அதனின் வளர்ச்சி உங்களுக்குள் வரப்படும் பொழுது இயற்கையின் தன்மையை
2.உங்களை நீங்கள் அறியும் உணர்வைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெரியப்படுத்துகின்றேன்,

எத்தனை காலம் நாம் இந்த உடலில் வாழப் போகிறோம்…? என்றைக்கும் நிலையாக இருப்பது உயிர். உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக்கப்பட வேண்டும். உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும்.

பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் எமது உபதேசம்.

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து

நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து

 

தீவிரவாதம் என்ற நிலையாகி மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும் அதே போல மனிதனையே புசித்திடும் நிலைகளும் வந்து விடுகின்றது,

தீவிரவாதிகளும் கொன்றவர்களைச் சும்மா விடுவதில்லை. பழி தீர்த்து அவனைக் கொன்று “அவனை உணவாக உட்கொண்டு வாழ்கிறேன்…” என்று சொல்கிறார்கள்.

1.அன்று ஒரு காலத்தில் ஆசியக் கண்டத்தில் இஸ்ரவேல் என்ற நாட்டில் யூதர்கள் இப்படிச் செயல்படுத்தி வந்தாலும்
2.அவர்களுக்குள் போர் வந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி
3.உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்பார்கள்.
4.சொல்வதோடு மட்டுமல்ல…! கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.

இதைப் போல வெறித்தனமான உணர்வுகள் கொண்டு அன்று செயல்படுத்தப்பட்ட நிலைகள் தான்.

ஆக… அந்த வம்சமே மற்றவர்களைக் கொன்று முழுமையாக அவர்களைத் தின்பது தான்.
1.அங்கே பரவிய அந்த உணர்வு தான்
2.உலகம் முழுவதற்கும் இப்பொழுது பரவிக் கொண்டிருப்பது.

புது வருடம் பிறந்து விட்டது முதல் தேதி என்று இவர்கள் கொண்டாடினாலும்… தீமைகளை உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று இயேசு அதைச் சொல்லி இருந்தாலும் “அந்த வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றது… அதை ரசித்து வாழ்ந்தது…”

இன்றைய நிலைகள் நடப்பது… அன்றைய இதனுடைய தொடர்ச்சி தான்…!

இதைப் போன்ற கொடுமைகளிலில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் 25 வருடம் யாம் உங்களுக்குத் தொடர்ந்து அந்த மெய் ஞானிகளைப் பற்றி உபதேசித்து வருவது.

1.உங்கள் அனைவருக்குள்ளும் பரவச் செய்து அந்த அருள் மகரிஷிகள் உணர்வை ஏங்கிப் பெறும்படி செய்து செய்து கொண்டிருக்கின்றேன்.
2.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெற்றால் ஒழிய இதிலிருந்து தப்ப முடியாது.
3.ஆகவே அருள் ஒளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

இன்றைய உலகச் சூழ்நிலையில் எந்தச் செல்வத்தையும் காக்கும் திறன் எவருக்கும் இல்லை.

1.ஆனால் என்றும் அழியாச் செல்வத்தை… அருள் ஞானச் செல்வத்தை.. அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால்
2.இதை யாரும் தடுக்க முடியாது… அதை அழித்திட முடியாது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த அருள் சக்திகளை வளர்க்க வேண்டும். அந்த ஒளியின் தன்மையாக நாம் அனைவரும் வளர வேண்டும்.

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…!

மனிதர்கள் வாழ்ந்த வியாழன் கோளில் இன்றும் வளர்ச்சியற்ற சில உயிர் இனங்கள் வாழ்கின்றது…!

நம் நாட்டிற்குள் தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய அவர்கள் எத்தனையோ நிலைகள் இங்கே படரச் செய்தது இந்தத் தமிழ் நாட்டில் தான்.

நான் (ஞானகுரு) தமிழன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை.

“தென்னாட்டுடைய சிவனே போற்றி…
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!” என்று சொல்கிறோம் அல்லவா…

இந்தத் தென்னாட்டிலே தோன்றிய இந்த அகஸ்தியன் தான் உலகைக் காத்திட வட துருவத்தின் நிலைகள் பனி உறைந்து ஒரு பக்கமாகத் திரும்பும் நிலையிலிருந்து தென் பகுதியில் வெப்பத்தின் தணலைக் கூட்டச் செய்து பூமியைச் சமப்படுத்தினான்.

அதனால் தான் பூமியில் நடு மையமாக இருக்கும் இடங்களில் மனிதர்கள் உயிர் வாழச் செய்யும் நிலையும் இங்கே வந்தது.

இல்லை என்றால் வியாழன் கோள் போல் முழுவதும் பனிப் பிரதேசமாக மாறியிருக்கும்.

சிறிதளவிற்கு ஒரு நொடி மாறினாலும் நமது பூமி பெரும் பனிப் பாறையாக மாறி உயிர் இனங்களே வாழ முடியாத நிலைகள் ஆகிவிடும்.

அப்படியே உயிரினங்கள் வாழ்ந்தாலும் பனிப் பகுதிகளில் மீன் இனங்களும் மற்ற இனங்களும் வாழ்வது போல மனித இனமே அல்லாது நீர் வாழும் உயிர் இனங்களாகத் தான் திரிய முடியும்.

அன்று பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளிலும் நம் பூமியைப் போல் மனிதர்கள் வாழ்ந்தார்கள்.

1.இன்று நாம் செயல்படுத்தும் விஞ்ஞானக் கருவிகளைக் காட்டிலும் பன் மடங்கு நவீனமாகச் செயல்படுத்தப்பட்டு
2.அதன் வழிகளிலே மாற்றங்கள் ஆகி வியாழனின் சுழற்சி வேகம் கூடி பனிப் பாறையாக மாறிவிட்டது.

பனிப் பாறைகளில் உயிரினங்கள் எப்படி வாழுகின்றதோ இதைப் போல மனிதனாக இருப்பவரும் வளர்ச்சி அற்ற நிலைகள் கொண்டு உயிரினங்களாக இன்றும் வியாழனின் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்று பிரபஞ்சத்திலும் மிதந்து கொண்டு வருகின்றது.

மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த நிலைகளால் தான் அந்த உயிரணுக்கள் நமது பூமிக்குள் கவரப்பட்டு உயிரணுக்கள் வளர்ச்சி அடைந்து மனித உருவாக நாம் வந்துள்ளோம்.

இப்பொழுது வந்த நிலை அல்ல அது. இந்தப் பிரபஞ்சத்திற்கு சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும் ஞானிகள் வியாழனைக் குருவாகக் காட்டினார்கள்.

இன்று இங்கிருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் அபரித வளர்ச்சியாகி இங்கே அணுகுண்டுகள் செய்தது போல செய்து இருள் சூழச் செய்து மனித இனமே முழுமையாக அழிந்துவிட்டது.

ஆனால் அன்று இது நடந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு வளர்ந்ததனால்
1.உயிரணுவின் தோற்றங்கள் அது மாற்றமில்லாது
2.அதே உயிர் இனங்கள் இதே பிரபஞ்சத்தில்
3.இன்று நாம் மனிதனாக வாழ்ந்து வருகின்றோம்.

ஆனால் இன்றைய பிரபஞ்சமே கார்த்திகை நட்சத்திரம் அசுவினி போன்ற ஐந்தாறு நட்சத்திரங்கள் தனித் தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாகப் பிரிந்து செல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அதனால் இங்கே நாம் மனிதர்கள் வாழத் தேவையான சிந்தனைக்குரிய நிலைகள் அழிந்து கொண்டும் தெரிந்து செயல்படும் நிலைகள் மாறிக் கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி நம்மையே நாம் அழித்துக் கொள்ளும் நிலையாகி நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

1.ஒரு குடி போதையில் உள்ளவர்களை நீங்கள் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் அது தான் அவர்களுக்கு ரசனையாக இருக்கும்.
2.இதைப் போல விஞ்ஞான அறிவால் கண்டுணர்ந்த பல பல கருவிகளையும் உபகரணங்களையும் உபயோகப்படுத்திப் பழகிவிட்டோம்.
3.அது இல்லை என்றால் இன்றைய சூழலில் நம்மால் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது.

உதாரணமாக நான் உபதேசித்துக் கொண்டிருந்தாலும் மைக் இல்லாமல் பேசினால் அடுத்த நிமிடம் இங்கு யாரும் அமர்ந்து இருக்க மாட்டார்கள்.

இந்த மைக்கின் மூலம் விஞ்ஞான அறிவில் பலரைக் கேட்டு அறியச் செய்கின்றோம். டி.வி. ரேடியோ ஸ்டேஷன் மூலம் அந்த அலைகளைப் பரப்பினால் உலகம் முழுவதற்கும் அறியும் தன்மை வருகின்றது.

விஞ்ஞான அறிவால் எங்கிருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடிகின்றது. எங்கேயோ விளையாடும் விளையாட்டினை வீட்டில் அமர்ந்தபடியே பார்க்கின்றோம்.

1.இப்படி நம்முடைய உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து
2.மதுவை அருந்தினால் மற்றதனைத்தையும் சிந்தனையற்றுச் செயல்படுத்துவது போல்
3.விஞ்ஞான அறிவில் சிக்கிக் கொண்டுள்ளோம்.

போதைப் பொருளை உபயோகித்தது போலவே விஞ்ஞான உணர்வில் சிக்குண்டு மனிதச் செயலை இழந்து மனிதனே கூண்டுடன் அழிந்திடும் நிலையாக வளர்ந்து வந்துவிட்டது.

ஆகவே நம்மை அறியாது நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் அந்த உணர்வின் நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

1.”மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்” உணர்த்திய அருள் வழிப்படி
2.மெய் உணர்வின் ஆற்றலுடன் நாம் அனைவரும் இணைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலையாக
4.மகா மகரிஷிகளின் அருள் உணர்வுடனே என்றுமே நாம் ஒன்றி வளர்வோம்.

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்

உலக மக்களை அருள் ஒளியின் சுடராக மாற்றும் சக்தி பெறுங்கள்

 

எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாக வருவதில்லை. ஆனால்
1.அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால் இருளை வென்று ஒளியின் உணர்வாக ஆக்கும் தன்மை பெறுகின்றோம்.
2.அதையே இந்த மனித வாழ்க்கையில் நாம் சொந்தமாக்கிப் பயன்படுத்த வேண்டும்.

எந்த நிலையில் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தம் ஆவதில்லை. இந்த உடலால் சம்பாதித்த செல்வமும் நிலைத்ததில்லை.

கோடிக் கோடிச் செல்வங்களைப் பெற்றாலும் பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்து நான் சுகமாக வாழ்வேன் என்றாலும் அப்படிப்பட்ட அரசனும் இன்று இருந்ததில்லை.

பேய் மனமாக அவன் சென்று விட்டான். அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறி விட்டது.
1.அவன் ஆசையைப் பின்பற்றிய அனைவரும் அவன் வழியிலே சென்று மதம் என்ற வெறி கொண்டு
2.மனிதனை மனிதனே அழித்துக் கொண்டு கொன்று குவித்து அதைக் கண்டு மகிழும் நிலையை இன்று உருவாகிவிட்டது.

அரசன் சென்ற நிலையை இன்று உருவானது. அதன் உணர்வு கொன்று குவிக்கும் உணர்வாக வளர்ந்து விட்டது. மதம் என்ற போர்வையை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனமென்று வளர்ந்து விட்டது. தன் இனமே பெரிது என்றும் மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். பழி தீர்க்கும் உணர்வுகளே இங்கு வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதனே உருக்குலையச் செய்யும் நிலையாகச் சிந்தித்து வாழும் நிலைகள் செயலிழந்து சிந்தனையற்ற செயலாகவே செயல்பட்டு… சிந்தனையற்ற செயல்களை நாம் நுகரும் பொழுது நஞ்சான உணர்வுகளை வளர்த்து நஞ்சை உணவாக உட்கொள்ளும் நஞ்சின் செயலாக்கங்களாக உருப் பெற்றுவிட்டது.

நஞ்சை வளர்த்திடும் நிலையே நமக்குள் வளர்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும்.
1.அதற்குத்தான் எனது குரு அருளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… நமது குரு என்ற நிலையில் அனைவரும் வாழ வேண்டும்.
2.முதலில் எமது குருவாக இருந்தார். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் வழி சென்றால்
3.”நமது குரு…” என்று நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் நிலை வரும்.

சாமியையும் குருவையும் பிரித்து விடாதீர்கள்…! நமது குரு என்று அருள் வழியில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

இந்த உணர்வின் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும். அருள் ஞானம் பெறுதல் வேண்டும். இந்த உணர்வைத் தியானித்து அதை நாம் பெருக்க வேண்டும்.

பகைமை கொண்ட உணர்வுகள் இங்கே வந்தாலும் இந்தப் பகைமை வளராது தடுக்க அருள் ஒளியைப் பெற்று உலக மக்கள் அருள் ஞானத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பூமியை அருள் ஞானத்தை வளர்த்திடும் பூமியாக ஆக்கிட வேண்டும்.
2.அருள் ஞானிகள் பிறந்த பூமியில் அருள் ஒளியின் சுடரை எண்ணி வளர்த்து
3.இந்த இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம் உலக மக்கள் மனம் மாறி
4.அருள் ஒளியின் சுடராக மாறும் நிலைக்கு வர வேண்டும்.

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம்

 

ஆடு மாடுகளுக்கு அந்தந்தக் காலங்களில் இரை போடுகின்றோம். 3 மணிக்கு இரை போட்டுப் பழக்கினால் மணி 3 என்று தெரிந்து கொள்ளும்.
1.அந்த உணர்வுப்படி அது சத்தம் போட ஆரம்பித்துவிடும்.
2.யார் இரை போட்டாரோ அவர்களை எண்ணி உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இரை போடும் பொழுது சொல்வதையெல்லாம் ஆழமாகப் பதிவு செய்து கொள்கின்றது. அவர்களை அணுகி வருகின்றது. ஆனால் ஒருவர் இதை மிரட்டி இருந்தார்களென்றால் அவர்கள் வரும் பொழுதே இது மிரளுகின்றது. இந்த உணர்வுகள் அவர்களை இயக்குகின்றது. யார் மேல் பாசமாக இருக்கின்றதோ அந்த உடலுக்குள் பரிணாம வளர்ச்சிக்கு அது வருகின்றது.

ஆனால் மனிதனாகி இருக்கும் நாம் ஒரு மனிதனின் நிலைகளில் பாசமாக இருக்கின்றோமென்றால் இந்த உடலை விட்டுச் சென்றபின் அவர்கள் உணர்வை நாம் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டுச் சென்றபின் யார் மேல் பாசமாக உள்ளோமோ அவர்கள் உடலுக்குள் தான் செல்லும்.

மனித உடலில் இருக்கும் போது எந்த நோய் இருந்ததோ அந்த நோயை அங்கே உருவாக்கத் தொடங்கிவிடும். மனிதனின் முதிர்ச்சி பெற்ற இயக்கங்கள் அதை இயக்கி அதை மாற்றியமைக்கச் செய்கின்றது. ஏனென்றால் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த நிலை அடைந்தவர்கள்.

ஆடு மாடுகளுக்கு எப்படி நாம் சொல்லும் போது உணர்வின் தன்மை பதிவாகின்றதோ அதைப் போல
1.தாய் கருவிலே இருக்கப்படும் போது பாசத்தால் அன்பால் பிறர் படும் கஷ்டங்களை
2.நோய்வாய்ப்பட்டவர்கள் உணர்வுகளை சண்டை போடுகின்றவர்கள் உணர்வுகளை வெறுப்பான உணர்வுகளை
3.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் அந்தக் கரு வளர்ச்சியாகும் பொழுது தாய் கண்ணால் பார்க்கப்படும் பொழுது
4.கருவின் உயிரணு தாய் எதை உற்றுப் பார்த்ததோ அதனின் ரூபமாக அது கவரத் தொடங்கிவிடும்.

அது அதனுடன் இணைந்து விட்டால் அதில் ஒருவருக்குப் புற்று நோய் இருந்ததென்றால் அவருக்கு 40 வயது இருந்தது என்றால் “அதிலே விளைந்த இந்த செல்…” கருவிலே இருக்கும். குழந்தைக்கு அதே 40வது வயதில் புற்று நோய் வரும்.

ஆஸ்துமா நோயை உள்ளவரைத் தாய் பார்த்திருந்தால் அந்த உணர்வின் தன்மை கருவிலே பதிவாகி 40 வயது வரையிலும் ஆஸ்துமா இருக்காது. 40 வயதுக்கு மேல் ஆஸ்துமா வரும்.

அதே மாதிரிக் குடும்பத்தில் என்னென்ன சண்டை போட்டார்களோ அதைக் கேட்டிருந்தால் இந்தக் குழந்தையின் கருவிலே பதிந்து அதனுடைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு அதனுடைய வளர்ச்சியில் அதே சண்டை போடும் உணர்வுகள் வரும்.

ஒரு கண்ணில்லாத குழந்தையை அதனுடைய உணர்வுகளை நுகர்ந்து குறைகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வுகள் குழந்தையின் உடலிலே கருவிலே இருக்கும் போது விளையாடப்படும் போது அதன் வளர்ச்சியைத் தடைப்படுத்திக் கண்ணுக்குண்டான சத்தைத் தடைப்படுத்தும்.

மனிதனின் வளர்ச்சியில் இப்படியெல்லாம் பல உண்டு.

முடமாக இருப்பவனை அதிகமாக நேசித்தாரென்றால் அதே உணர்வுகள் கருவிலே சேர்ந்து அணுக்கள் விளையத் தொடங்கி அந்தக் காலம் வரும் போது உணர்ச்சியைத் தூண்டும்.

நாம் செடி கொடிகளுக்கு உரமிடும் போது அதனுடன் இணைந்து எவ்வாறு விளைகின்றதோ இதைப் போலத்தான் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு வருகின்றது.

குடும்பத்தில் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் அந்தக் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் அதிகமாக இருக்கும். இருந்தாலும்…
1.கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது யாராவது ஒருவர் உயர்ந்த குணங்கள் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் பொழுது
2.கடைவீதிகளிலோ மற்றவைகளிலோ வேடிக்கை பார்க்கச் செல்கின்றது.
3.அந்த உயர்ந்த சொல்களைக் கர்ப்பமாக இருக்கும் தாய் கேட்டது என்றால் அந்தக் குழந்தை கருவிலே விளைந்த பின்
4.வீட்டிலே மிகவும் தரித்திரமாக இருப்பார்கள்… ஆனால் இது ஞானக் குழந்தையாக வளரும்.

சில குடும்பங்களில் மிகவும் ஏழையாக இருப்பார்கள். ஆனால் சந்தர்ப்பம் உயர்ந்த உணர்வுகள் அதற்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அந்தக் குழந்தை ஞானியாக உருவாகும்.

1.நமது வாழ்க்கையில் இன்றைக்கு எவ்வளவு திறமை உள்ளவராக நாம் இருந்தாலும்
2.தாய் கருவிலிருக்கும் போது பெற்ற பூர்வபுண்ணியமும் இணைந்தே வருகின்றது.

இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு

இரு உன்னைப் பார்க்கிறேன்… தொலைத்து விடுவேன்…! என்று சொல்வதன் பின் விளைவு

 

குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றோம்.

எம்மை எத்தனையோ நிலைகள் கொண்டு பல பேர் சந்திக்க வருகின்றார்கள். அப்படி வருகின்றவர்களில்
1.நோய் உள்ளவர்களுக்கு யாம் ஆசீர்வதித்து உங்களுக்கு இப்பொழுது நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்று சொன்னால்
2.“நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்…” என்கிறார்கள்.

இனி நோயெல்லாம் நீங்கிப் போகும் என்று யாம் அவர்களிடம் சொன்னால் இல்லைங்க… என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது…! என்று சொல்கின்றார்கள்.

தபோவனத்தில் ஒரு சமயம் ஒரு அம்மா எம்மிடம் இதைப் போன்று கேட்டுக் கொண்டிருந்தது. பின் எம்மிடம் நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. என் வீட்டிற்குப் போனால் பழையபடித் தொல்லையாக இருக்கின்றது என்றார்கள்.

யாம் அவரிடம் நீங்கள் வீட்டுக்குப் போனாலும் இதே போன்றே ஆத்ம சுத்தி செய்து, “நோய் இல்லை” என்று நல்லதாக எண்ணுங்கள் என்று சொல்கிறோம்.

ஆனால் என் வீட்டுக்குப் போனால்… என் தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது என்று இறுக்கிப் பிடித்துக் கொண்டு விடுகின்றார்கள்.

நோய் இல்லை நீங்கள் போங்கள்…! என்ற நல்ல வாக்கினைக் கொடுத்துத் தியானத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பார் யாரும் இல்லை.

“சாமிக்கென்ன தெரியும்…? நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும் என்கிறார்கள்.

ஆனால்
1.இவர்களைத் திட்டுபவர்களை மட்டும் மனதில் எண்ணி
2.“இரு உன்னைப் பார்க்கிறேன்… உன் குடும்பத்தைத் தொலைத்துக் கட்டுகிறேன்…!” என்று அதை இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள்.

அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால்
1.இவர்கள் எண்ணிய உணர்வுகள் உடலுக்குள் புகுந்து
2.இவர்கள் உடலையே தொலைத்துக் கட்டுகிறது என்பதை மறந்து விடுகின்றார்கள்.

சில வீடுகளில் பாருங்கள். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் இவனை விட்டு விடுவதா…? இவன் எப்படிப் பேசுகிறான் பார்…! என்று வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள். நீ இப்படிப் போய்விடுவாய்… அந்த மாதிரிப் போய் விடுவாய்…! என்று பேசுவார்கள்.

அப்படிப் பேசுபவர்களிடத்தில் பார்த்தோம் என்றால் உடல் வலி கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி மூட்டு வலி கால் வலி எல்லா வலியும் இருக்கும். – இது பேசிவர்களுக்கு.

இதையெல்லாம் பேசாமல் வேடிக்கையாகப் பொழுது போகாமல் பார்த்துக் கொண்டிருந்தவுடனே… இப்படிப் பேசுகின்றார்களே பாவி…! என்று சண்டை போடுபவர்களைப் பார்த்துப் பொல்லாதவர்களை எண்ணுவது.

அதே சமயத்தில் நல்லவர்களைப் பார்த்து இப்படி இருக்கின்றதே இங்கே இரக்கமும் அங்கே ஆத்திரமும் இரண்டும் எடுத்து விடுகின்றோம். இது வந்தவுடன் அம்மம்மா.. வயிறு எல்லாம் எரியுதே…! என்பார்கள். அவர்களுக்கு இந்த நோய் வரும்.

நாம் நல்லவர்கள்தான். ஆனால் “என்ன செய்கிறார்கள்…?’ என்று பார்க்கும் பொழுது என் குடலை முட்டுதே எப்படியோ ஆகின்றதே…? நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே என்னை ஆண்டவன் இப்படிச் சோதிக்கின்றானே…? நான் வணங்கும் தெய்வமும், இப்படிச் செய்கின்றதே…! என்று இதைத்தான் எடுத்து, நமக்குள் கூட்டிக் கொள்கின்றோமே தவிர தெய்வம் எங்கு இருக்கின்றது…? எந்த ரூபத்தில் இருக்கின்றது…? என்பதனை மகா ஞானிகள் காட்டியதை உணரும் பக்குவம் இல்லை.

இதனை வியாசக பகவான் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

1.நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தை உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.
2.“ஓ…” என்று எண்ணிய உணர்வின் சத்து “ம்…” என உடலாகச் சிவனாக ஆக்குகின்றது.

இதுவே ஓம் நமச் சிவாய நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்து இறையாகி அந்த உணர்வின் சத்து இறையாகி இறைவனாகுகின்றது. அந்த இறையின் சக்தி நமது உடலுக்குள் இணையப்படும் பொழுது, இறையாகி இறைவன் ஆகி நமக்குள் செயலாக்கும் பொழுது தெய்வமாகின்றது.

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அந்தக் குணங்களே தெய்வமாக நின்று நம்மைச் செயல்படுத்துகின்றது.

கோப குணம் என்பது “காளி…” கோப உணர்வுகள் நாம் எண்ணியதைக் காத்திடும் நிலையும் நமக்குள் ஆத்திரத்தையும் அவனைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…! என்ற உணர்வையும் எடுக்கின்றது.

நாம் தொலைத்துக் கட்டுகிறேன் என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நமது நல்ல குணத்தை நமக்குள்ளே தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாக நமக்குள் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி “என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை வருகிறது.

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…! என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

1.நம் குரு காட்டிய அருள் வழியில் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி
2.நம் உயிரான ஈசனை மதித்து எல்லோருடைய உயிரையும் ஈசனாக மதித்து அருள் வழியில் வாழ்வோம்.
3.என்றும் உயிரோடு ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக மாறிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை எல்லோரும் அடைவோம்.

எமது அருளாசிகள்.