அதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்”

Agastya Lobamuthra

அதிகாலையில்… “உங்களைத் தட்டியெழுப்பும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்” 

எவ்வளவு தான் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் ஒரு நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பார்க்கின்றோம்.
1.நல்லதை நினைத்துப் பார்க்கின்றோம்.
2.கொஞ்சம் குறை ஏற்பட்டு விட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்கின்ற அத்தனையும் விஷம். நம் உடலில் வேதனை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் அதிகமாகிப் போனதென்றால் உடல் முழுவதும் நஞ்சாக மாறி நோயாகி விடுகின்றது.

வேதனைப்படக்கூடிய சமாச்சாரங்களைக் கேட்கும் போது எல்லாம் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இரவில் படுக்கப்போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டுப் படுங்கள். காலையில் எழும்போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களால் உயர்ந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

நாம் எண்ண வேண்டியது மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
1.எங்கள் பார்வையால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்
2.எங்கள் மூச்சு உலகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சக்தியாகப் படரவேண்டும் என்று எண்ணுங்கள்.

அனு தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் உங்கள் எல்லாருக்கும் இந்தச் சக்திகள் கிடைக்க வேண்டும் என்று துருவ மகரிஷியை எண்ணித் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தத் தியானம் (ஞானகுரு) செய்கின்றேன்.

அப்போது அந்த உணர்வலைகள் வரப்போகும் போது அதிகாலை நான்கு மணி மேலே போனதென்றால் இந்த உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டவர்களைத் தன்னாலயே எழுப்பிக் கொண்டே இருக்கும். கொஞ்சம் அந்த விழிப்பு நிலை வரும்.

சில நேரங்களில் அந்த உணர்ச்சிகள் தென்படும். சில நேரங்களில் நல்ல வாசனைகள் வரும்.
அந்த நேரத்தில் “ஒரு ஐந்து நிமிடமாவது…”
1.துருவ மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும்
3.எங்கள் உடலில் பெற வேண்டும் என்று நினைத்து விட்டுப் படுத்துக் கொள்ளுங்கள்.

நேரடியாக துருவ நட்சத்திரத்தையோ துருவ மகரிஷியையோ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது தாங்கக் கூடிய சக்தி கிடையாது.
1.அது மிகவும் வீரியமான உணர்வுகள் கொண்டது.
2.அது எடுத்தீர்கள் என்றால் உங்கள் உடலில் சூடாகும்.
3.உங்களுக்கு அந்தத் தாங்கும் சக்தியைக் கொடுத்துத் தான் இப்படி எண்ணச் சொல்கிறோம்.

எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணும்போது உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் போது
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்.
3.நாங்கள் பார்ப்பவர் எல்லாம் நலம் பெற வேண்டும்.
4.எங்களைப் பார்க்கின்றவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
5.ஒரு ஐந்து நிமிடத்தில் அது எண்ணி முடித்துக் கொள்ள வேண்டும்.

அதிகாலையில் 4.30மணிக்கு இது போல எண்ண வேண்டும். அதற்கப்புறம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எண்ணுங்கள். இப்படிச் செய்யும் பொழுது 4.30மணிக்கு ஒரு வழி காட்டியாக உங்களுக்கு அமையும்.

இதைக் கேட்டவர்கள் அத்தனை பேருமே எந்தக் கஷ்டமான வார்த்தைகளைக் கேட்டாலும் பார்த்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்துவிட்டு எங்கள் பார்வை நல்லதாக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவதற்கு இது தான் வழி…!

தியானம் எதற்காகச் செய்ய வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் ஆற்றல்

இன்றைய உலக நிலை

இன்றைய விஞ்ஞான உலகில், உலக மக்கள் நலம் பெற, மகிழச் செய்ய, விஞ்ஞான அறிவால் பற்பல நன்மைகள் செய்து வந்தாலும், விஞ்ஞான அறிவால், வான மண்டலத்தில், “ராக்கெட்டுகளை” ஏவி வெடிக்கச் செய்து, வான மண்டலத்தில் நச்சுத் தன்மை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பூமியில் அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தும், அணுக்கதிரியக்கங்களைப் பரவச் செய்தும், இயந்திரங்களை இயக்கச் செய்ய அணுக்கதிரியக்கங்களைப் பயன்படுத்தி, காற்று மண்டலத்தில், நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்தும், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தூவி, பூச்சிகளைக் கொல்ல எண்ணி, காற்றையே நச்சாக்குகின்றனர், விஞ்ஞானிகள்.

ஞானியர்கள் உபதேசித்த வழியில், நல்லதையே செய்து, நல்வழியில் நடந்து, நல்ல நிலைகளைப் பெற எண்ணி, வாழ்ந்து வந்தாலும், விஞ்ஞானிகளால் பரவச் செய்த, நச்சுத் தன்மைகளை உலக மக்கள் அனைவரும் சுவாசிக்க நேருவதால், மனிதர்களின் உடல்களில் பதிந்துள்ள, நல்ல குணங்களைத் தூண்டச் செய்யும் நல் உணர்வுகளின் அணுக்களில், சுவாசித்த நச்சுத் தன்மைகள் கலந்துவிடுகின்றன.

அதாவது, விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால், எவ்வாறு கடுகடுப்பாகின்றதோ, அதைப் போன்று நற்குணங்களின் உணர்வுடன் பேசினாலும், சொல்லில் கடுகடுப்பாக வார்த்தைகள் வெளிப்படுகின்றன. இதைப் போன்று, தன்னையறியாது கோபம், குரோதம், வெறுப்பு, வேதனை போன்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. அது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர் முதல் விஞ்ஞானி வரை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிவிடுகின்றன.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவையும், காற்றிலுள்ள நச்சுத் தன்மைகள் உருக்குலையச் செய்து, மறு ஜென்மம் மனிதனாகப் பிறக்க தகுதியிழந்து, விஷப் பூச்சிகளாகப் பிறக்கச் செய்து விடுகின்றன.

இன்று, நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், மீண்டும் மீண்டும்,இப்பூமியில் சுழன்று கொண்டிருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து, அதற்குரிய உடல்களைப் பெற்றும், இப்பூமிக்குள்ளேயே, செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

நமது அன்றாட வாழ்க்கை

காலை செய்திதாள்களைப் படிக்கின்றோம். செய்தித் தாள்களில் உள்ள விபத்து மற்றும் தீமையான செய்திகளைப் படிக்கின்றோம். அதை நுகர்கின்றோம். எதிர்மறையான உணர்வுகளுடன் நம்மிடம் பேசுபவர்களாலும், வேதனையான உணர்வுகளையும், மற்றும் வெறுப்பு, சலிப்பு, சங்கடமான உணர்வுகளையும், நாம் விரும்பாவிட்டாலும், சந்தர்ப்பங்களால் நாம் நுகர வேண்டியிருக்கின்றது.

நம்மை ஒருவன் திட்டுகிறான். நடைமுறை வாழ்க்கையில் நாம் வலிமை கொண்டவராக இருந்தால், “இரு உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்கிறோம். வலிமை குறைந்தவர்களானால், வெறுப்பையும், வேதனையையும், நுகர்கின்றோம்.

விபத்துக்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது, வேதனை அடைகின்றோம். பய உணர்வுகளை நுகர்கின்றோம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எதிர்மறையான உணர்வுகளால், குழந்தைகள் நன்றாகப் படிக்காவிட்டால் வேதனைப் படுகிறோம். குடும்பத்தில் ஒற்றுமை இல்லாவிட்டால், வேதனைப்படுகின்றோம்.

பிறிதொருவர் சாபமிடுவதை, அந்த வேதனையான உணர்வுகளை நுகர்கின்றோம். பார்க்கவும் கேட்கவும் ஏற்படும் நிலையில், உணர்ச்சிவசப்படுகிறோம். உடல் நடுக்கமாகிறது.

இப்படி, காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ விதமான உணர்வுகளையும் எண்ணங்களையும் சந்திக்கின்றோம், பார்க்கின்றோம், நுகர்கின்றோம், சுவாசிக்கின்றோம். ஆனால், இதையெல்லாம் நாம் சந்தர்ப்பத்தில் சந்தித்தாலும், விரும்பி எடுத்தாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அது அனைத்தும் நமக்குள் இணைந்து விடுகின்றது.

இதை நாம் அறிந்திருக்கின்றோமா?, உணர்ந்திருக்கின்றோமா? இவ்வாறு நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள், நம்மை என்ன செய்யும் என்பதைப் பற்றி நாம் சிந்திக்கின்றோமா?

நம் உயிரின் இயக்கம்

நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது,  நமது உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி,எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது. அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலையில், நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட நம் உயிர், உடலில் புருவ மத்தியில் இருந்து, இயங்கிக் கொண்டுள்ளது. நமது உயிர் ஒன்றுதான், நமக்குச் சொந்தமானது. இந்த உடல் உயிரால் உருவாக்கப்பட்டதுதான். நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகளை (நாம் சுவாசிக்கும் உணர்வுகள்) அணுவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது, அந்த அணுவின் மலம்தான் உடலாகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால்,  உடலை விட்டுப் பிரியும் நேரம்,  உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் (பூமியின் காற்று மண்டலத்தில்) கலந்து, சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை,உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால், உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

மகரிஷிகள், ஞானிகள் பெற்ற நிலை

உயிரின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் ஆற்றலைப் பெற்றவர்கள், உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள்தான், நமது மெய்ஞானிகள். அவர்கள் அனைவரும், நம்மைப் போன்று, இந்த பூமியில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான்.

அவர்கள், தம் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றச் செய்து, ஒளியாக மாற்றி, அழியாத நிலையாக, வேகா நிலை என்னும் நிலை அடைந்து, என்றும் பதினாறு என்று, கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றி, ரிஷி, ரிஷிபத்தினி என்று குடும்பங்களாக, ஒளி உடல் பெற்று, இன்றும், நம் பூமியின் வடக்குப் பகுதியில், விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும், அதைப் பின்பற்றியவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாகவும், ஏகாந்த நிலைகள் கொண்டு, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாம் அடைய வேண்டிய நிலை

மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.

இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,

அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள்.

அகஸ்திய மாமகரிஷி, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

நம் பூமியில், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன், துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அவன் தான், நம் பூமியிலிருந்து முதன் முதலில் ஒளிச்சரீரம் பெற்று, விண்ணுக்குச் சென்றது.

நாம் இன்றும் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று யாரைப் போற்றி வணங்கிக் கொண்டிருக்கின்றோமோ, அந்த அகஸ்தியன் தான், நமது பூமியை ஒரு காலம் சமப்படுத்தினான். இன்றும், இந்த உலகில் அருள்ஞானம் அனைத்தையும், நமக்கு வழி காட்டிக் கொண்டிருப்பது, அந்த துருவ நட்சத்திரம் தான்.

அந்த துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றவர், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அவர் தமக்குள் பெற்ற இந்த பேருண்மைகளை ஞானகுரு வேணுகோபால் சாமிகள் அவர்களுக்கு உபதேசித்து, அவரையும் அந்த ஆற்றல்களைப் பெறச் செய்தார். ஞானகுரு அவர்கள், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் ஒன்றை அமைத்து, அதன் மூலமாக இந்த உலக மக்களுக்கு, மகிழ்ந்து வாழும் வழி முறைகளையும், இந்த உடலுக்குப் பின், ஒளிச்சரீரம் பெற்று, விண் செல்லும் முறைகளையும் உபதேசித்துள்ளார்கள்.

நமது ஞானகுரு காட்டிய அருள் வழி

நாம் அனைவரும் அவர் காட்டிய வழியில், ஒவ்வொரு நொடிப்பொழுதும், தியானத்தையும், ஆத்ம சுத்தியையும் கடைப்பிடித்து, தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள உபதேச ஒளி, ஒலி நாடாக்கள் (VCD, CD)  மற்றும் அருள் ஞானப் புத்தகங்களை அடிக்கடி படித்து, கேட்டு நமக்குள் பதிவு செய்தோமென்றால், இந்த வாழ்க்கையில் எத்தகைய கடுமையான இன்னல்கள் வந்தாலும், அதை மாற்றியமைக்கக் கூடிய ஆற்றல்களை நாம் பெற முடியும், நம்மைச் சார்ந்தவர்களையும், நாம் அதைப் பெறச் செய்ய முடியும்.

இது, நம்மை உருவாக்கிய நமது உயிரான ஈஸ்வரனுக்கும், ஒவ்வொரு மனிதனின் உயிரான ஈஸ்வரனுக்கும், செய்யக் கூடிய சேவையாகும். அதன் பணியாக, நாம் அனைவரும் ஒளிச்சரீரம் பெற முடியும். இந்த மனித வாழ்க்கையில், நாம் எப்பொழுதும் மகிழ்ந்து வாழமுடியும். நம் பார்வையால், சொல்லால், செயலால், அனைவரையும் அருள் வழியில் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். இதுதான், ஞானிகள் காட்டிய மனித நேயம்.

தியானம்

இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஞானிகள், மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த, ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு, இன்றும், நமக்கு முன்னால், இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது. அந்த அருள் சக்திகளை, நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து, அதை சமைத்து, விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை, நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும், இந்த தியானம்தான்.

நம்மிலே பலர், தியானம் என்றாலே, மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (concentration), என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான், நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும், நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளை சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுது கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து, அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான், இந்த தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும். நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது, அகண்ட அண்டத்தில் வரும், எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும்.

தியானம் செய்யும் முறை

புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்கி, தாய் தந்தையரை வணங்கி,ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி, ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி,கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்கி, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச்செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து, உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி, நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும். அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

துருவ தியானம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில், நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும். பிரம்மம் என்றால் உருவாக்குதல். முகூர்த்தம் என்றால் இணைத்தல்.

பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பூமியில் நேரடியாகப் பரவும். அந்த நேரத்தில் தியானித்து,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வினை, நமக்குள் பிரவணமாக்க (இயக்கமாக்க) வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் பலன்

மழைக் காலங்களில், சிறு துளிகளாக மழை பெய்து, பெரும் வெள்ளமாகத் திரண்டு ஓடுகின்றது. அப்பொழுது, குப்பை கூளங்களையும், அசுத்தங்களையும் அடித்துச் செல்லுகின்றது. அதைப் போன்று, அதிகம் பேர் ஒன்று சேர்ந்து, ஓர் இடத்தில் அமர்ந்து, “துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்” என்ற ஒரே உணர்வின் எண்ணம் கொண்டு, அனைவரும் தியானத்தில் ஈர்ப்பதினால், கூட்டுத் தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும், துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் அதிக அளவில் பெறுகின்றனர்.

அதனால், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும், தன்னையறியாமல் சேர்ந்துள்ள தீய சக்திகளும், தீய உணர்வுகளும் மாய்ந்துவிடுகின்றன. ஆகையால், சஞ்சலம் நீங்குகின்றது. மனம் அமைதியாகின்றது. நல்ல எண்ணங்களின் உணர்வுகள், வலுப் பெறுகின்றன. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றலைப் பெறுகின்றது.

ஆகவே, வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானமிருப்பது அவசியம். தனித்து தியானத்தில் இருந்து, சஞ்சலத்தைப் போக்க முடியாதவர்கள், கூட்டுத் தியானத்தில் கலந்துகொள்வதால், சஞ்சலத்தைப் போக்கிவிட முடியும். மன அமைதியும் கிடைக்கும்.

நாம் பிறரைப் பார்க்கும் பொழுது, அவர்களும் மன அமைதி பெறுகின்றனர். நாம் தொட்டுக் கொடுக்கும் பொருள்களில், நல்ல மணம் இருப்பதனால், வியாபாரம் நல்லவிதமாக அமைய, நம் மனமே உதவுகின்றது. மன அமைதி பெறுவதால், தொழில் செய்யும் பொழுது, சிந்தித்துச் செயல்பட முடிகின்றது. உயிராத்மாவும், ஒளி நிலை பெறும் ஆற்றல் பெறுகின்றது.

பௌர்ணமி தியானத்தின் பலன்

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, பௌர்ணமி தியானமிருக்கும், அனைத்து ஆத்ம ஐக்கிய அன்பர்களின் எண்ணங்களையெல்லாம், ஒன்று சேர்த்துக் குவித்து, ஒரு இலட்சம் பேர் தியானிக்கின்றோம் என்றால், தியானித்த ஒவ்வொருவருக்கும், அந்த ஒரு இலட்சம் பேருடைய சக்தி கிடைக்கின்றது. அச்சமயம், நமக்கு சக்தி, அதீத நிலைகளில் கூடுகிறது.

நமது குருநாதர் காட்டிய முறைப்படி, நீங்கள் அனைவரும் தியானமிருக்கும் பொழுது, யாம் (ஞானகுரு) அச்சமயம் தியானமிருக்கிறோம். அந்த நேரத்தில் உங்களுக்கு சக்தி கூட, நமது குருநாதர் காட்டிய நெறிப்படி, உங்கள் உயிராத்மாவைப் பிரார்த்தித்து, அந்த சக்தியை நீங்கள் பெற, எம்மால் உதவ முடிகின்றது.

ஆகவே, பௌர்ணமி தியானத்திலே உங்களுக்கு இந்த சக்தி கூட, யாம் உதவுவதால், அந்த நேரத்தை விரயம் செய்யாது, நீங்கள் தியானமிருந்து பயனடையுங்கள். இந்த பௌர்ணமி தியானத்திலே, உங்களுக்கு வாழ்க்கையில், வழியறிந்து செயல்பட ஞானம் கிடைக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவதால், நமது உயிராத்மாவில், ஒளி பெறும் அணுக்களும் வளர்கின்றன.

நம் முன்னோர்கள், மூதாதையர்களின், உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள், ஒளி சரீரம் பெற உதவுகின்றோம். அதே சமயம், சப்தரிஷி மண்டலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.

நலம் பெறுக ! வளம் பெறுக !

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உலக மக்கள் அனைவரும் பெற தவமிருப்போம். !

தியானப் பயிற்சிகள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட லிங்கை உபயோகிக்கவும் https://wp.me/P3UBkg-1rP

தியானப் பயிற்சியும் பலன்களும்

om shanti brahma

ஞானகுரு:-

நான் சக்தி கொடுக்கிறேன், நீங்கள் பயிற்சி கொண்டு அதை எடுக்க வேண்டும். உங்கள் எண்ணம் எப்படியோ.…, என்னுடைய குறை அல்ல. நான் எப்படிச் செய்ய முடியும்,
1.உங்களுக்காக நான் சாப்பிட்டால், என் பசிதான் தீரும்…
2.நீங்கள் மீண்டு கரை ஏற வேண்டியது “உங்கள் தன் பலம் கொண்டு”.

பயிற்சி எது:-
1.நமக்குள் என்ன நடக்கிறது…? என்பதையும்
2.எது நம்மை மாற்றுகிறது…? என்பதையும்
3.இவ்விதம் நம்மை நாமே அறிந்து எப்படி வாழ வேண்டும்…? என்பதையும்
4.அறிந்து உணர்ந்து அருள்வழியில் குரு காட்டிய வழியில் நடப்பதுதான் பயிற்சி

உயிரணு பூமிக்கு வந்து சேர்ந்ததும் தாவர இனச் சத்தைக் கவர்ந்து கருவாகிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்தபின் மனிதனாகப் பிறப்பதற்குரிய அனைத்து உணர்வுகளின் தன்மைகளும் உயிரான்மாவில் இணைந்ததும், அவ்வுயிரணு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது மனித உடலைப் பெறக்கூடிய தன்மை பெறுகின்றது. அப்பொழுது பூமியில் நாம் மனிதனாகப் பிறக்கின்றோம்.

உயிருடன் ஒன்றி இந்த மனித உடலை அல்லது உயிருடன் கூடிய இம்மனித உடலை இந்த உயிர், தான் முன்னதாகவே நுகர்ந்தெடுத்து, இணைத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மைக்கொப்ப உடலை அமைத்துக் கொள்கின்றது.

இம்மனிதப் பிறவியில் இந்த உடலை எடுத்து வந்த உயிரணு சூரியனிலிருந்து வந்து அதன் ஒரு பகுதியாக அதன் ஓர் அங்கமாக இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் உடல் இந்த பூமியில் பரமாத்மாவில் படர்ந்துள்ள உணர்வுகளின் உறைவிடமாக அங்கமாக அதன் உணர்வுகளுக்கொப்ப இந்த உடல் உயிர் உருவாக்கும் தன்மையில் உருவாகிப் பூமியில் உலா வருகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால் உடலை விட்டுப் பிரியும் நேரம் உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் கலந்து உணர்வுக்கு ஒப்ப மறு உடல் பெறுகின்றது.
1.உணர்வுகள் அழிவதில்லை. உணர்வுகள் மாறிக் கொண்டேதான் உள்ளது
2.ஆனால் உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம்.
3.அதை அறிந்து.. புரிந்து… உணர்ந்து… முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான்
4.மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

பரிணாம வளர்ச்சியில் உணர்வுகளின் நுகர்வால் உடல்கள் மாறி மாறி மனித உடல் பெறும் இந்த உணர்வுகள் இம்மனித உடல் அழியும் பொழுது ஜீவன் பெற்று ஜீவ அணுக்களாக இருக்கின்றது.

அப்படி இருந்தாலும் ஜீவன் பெறமுடியாத ஆனால் ஜீவன் பெற்று உடலாகும் தகுதியான அத்தனை உணர்வுகளும் உயிரணுக்களாகவோ அல்லது மாறுபட்ட நிலைகளிலோ இப்பூமியின் தன்மையில் பரமாத்மாவாகவும் சூரியனின் காந்தப் புலனில் கவரப்பட்டால் அது எடுத்துச் செல்லும் நிலைக்கும சுழன்று கொண்டுதான் உள்ளது.

அருள் ஞானிகளின் உணர்வுகள் மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தவிர ஏனைய உணர்வுகள் அனைத்தும் இருளானவைகள். அதன் செயலாக்கங்களும் இருளானவைகள்.

1.இவையனைத்தும் சிவன் இராத்திரி நிகழ்வுக்கும் மகா சிவன் இராத்திரி என்ற நிலைகளுக்கு மட்டுமே பயன்பட்டும்,
2.மற்றும் இம்மண்ணுலகில் உயிரணுக்கள் உடல் பெறவும்
3.ஜீவராசிகளாகி மனிதனாகி வரும் நிலைக்குத்தான் இதுவரை பயன்பட்டு வந்துள்ளன.

இன்று நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும் (பரிணாம வளர்ச்சி என்ற நிலையில்) மீண்டும் மீண்டும் இப்பூமியில் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா…?

அப்படிச் சுழன்று கொண்டு இங்கே இருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து அதற்குரிய உடல்களைப் பெற்றும் இந்தப் பூமிக்குள்ளேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

நாம் எண்ணியவற்றை நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது, நமது உயிர் எலெக்ட்ரிக் நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது.

அதாவது நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்முள் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இதைக் கேட்டுணரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் தமக்குள் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட துருவ தியானம் ஆத்ம சுத்தி இரவு தியானம் ஆகியவற்றைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆத்ம சுத்தி:-

1.“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
2.பின் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.
3.அடுத்து இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும் ஞானகுரு சற்குரு சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும்.
4.பின் ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கிக் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்த வேண்டும்,
5.அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்.

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி நமது கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து,
1.உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து
2.“உயிர் வழி நுகர வேண்டும்”.

இப்பதிவின் துணை கொண்டு மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில் அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்கள் என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி
1.நம் உடலுக்குள்
2.அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்…!

இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனைத் துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து நம் உடலுக்குள் படரவிடும் பொழுது நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதைத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

பிரம்ம முகூர்த்தம்:-

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கி ஆசைப்பட்டு காலை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் அறிவின் ஞானம் கொண்டு தியானிக்க வேண்டும்.
1.பிரம்மம் என்றால் உருவாக்குதல்.
2.முகூர்த்தம் என்றால், இணைத்தல்.
3.பிரம்ம முகூர்த்த வேளை என்பது அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பூமியில் நேரடியாகப் பரவும் நேரம். அந்த நேரத்தில் தியானித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் பிரம்மமாக்க வேண்டும்.

ஆறாவது அறிவு என்ற நம் உடலில் விளைந்த உணர்வினை எண்ணி, அதன் துணை கொண்டு,உடலுக்குள் அந்த அருள் உணர்வுகளை இயக்கச் செய்யவேண்டும்.

இதைத்தான் “ஓ…ம்” என்ற பிரணவத்தைச் “சிவனுக்கே ஓதினான் முருகன்” என்றார்கள் ஞானிகள்.

நட்சத்திரத் துகள்கள் மின்னலாகிப் பூமியில் படர்ந்து விட்டால் காற்றில் இருப்பதை புவியின் ஈர்ப்பால் கவர்ந்து, வைரங்கள் விளைகின்றது. அது போல்
1.இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கவர்ந்து
2.உயிருடன் இணைத்து தியானிக்கும் பொழுது
3.அவை அனைத்தும் இந்த உயிரைப் போலவே சிறுகச் சிறுக மாறி ஒளியாக மாறிவிடும்.

இனியாகிலும் உடல் பற்று கொள்ளாமல் உயிர் மீது பற்று கொண்டு உயிருடன் ஒன்றுதல் தான் உண்மையில் செயல்படவேண்டிய இயக்கம் என்று அறிதல் வேண்டும்.

தியானத்தின் பலன்கள்:-

உயிரைக் கடவுளாக மதித்து, உடலை கோவிலாக மதித்து, உணர்வுகளை தெய்வமாக மதித்துத் துருவ தியானம் ஆத்ம சுத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  1. சிந்திக்கும் தன்மைகளும் தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.
  2. நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.
  3. கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளை, அதே கண் கொண்டு அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.
  4. தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.
  5. மன வலிமை உடல் நலம் தொழில் வளம் பெருகுகின்றது.
  6. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமக்குள் புயலென பெருகி ஜீவ அணுக்களாகி மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றுகிறது
  7. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் நமது எலும்புகளுக்குள் (ஊழ்வினையில்) அருள் வித்துகளாகி நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி நம்மை மாற்றிக் கொண்டே இருக்கும்.
  8. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் செயல்படும் நிலை பெறுவோம்.
    கணவன் மனைவி இணைந்து எடுக்கும் துருவ தியானம் நம் ஆத்மாவை வைரமாக ஜொலிக்க வைத்திடும்.
  9. பரிணாம வளர்சியான ரிஷி நிலை பெறும் தகுதியை அடைகின்றோம்.
  10. நமக்குத் தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதித்து அந்த உயிரில் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம்.
  11. அதனால் அவர்களையும் காக்க முடியும்; அவர்கள் படும் துயரம் நம்முள் புகாமலும் தடுக்க முடியும்.
  12. அறியாது சேர்ந்த சாப பாப தீய பூர்வ ஜென்ம வினைகள் வலு இழந்து விடுகின்றன.
  13. மெய் பொருள் காணும் திறனும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.

ஒளியின் சரீரம்:-

  1. அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள் நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.
  2. ஞான குருவின் உபதேசங்களை நூல்கள் கேசட் மூலம் அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.
  3. மகிழ்வான உணர்வுகளை குருவிற்குச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  4. நம் எண்ணம் சொல் செயல் வெளிப்படும் பொழுது இவற்றில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
  5. மற்றவர்களின் எண்ணங்கள் சொல் செயல்களால் நாம் நுகரும் எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்து, அவற்றை உணர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.
  6. சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இதைச் செய்து கொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
  7. நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன் அரை மணி நேரமாவது துருவ நட்சத்திரத்தை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள், பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து என் உடலில் உள்ள ஜீவ அணுக்கள், ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து இணைக்க வேண்டும்.
  8. உயிருடன் இணைந்த உணர்வுகளை குரு காட்டிய வழியில் குருவின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து அதை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
  9. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சதா முன்னிலைப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
  10. மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்று விஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல் கட்டாயப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை இணைக்க வேண்டும்.
  11. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான் நமது இன்றைய செயல்களாக அமைத்து நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு…!

meditation poses

தியானத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு…!

1.நமது எல்லை – சப்தரிஷி மண்டலம் அடைவதுதான்

காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கும் இவ்வேளையில் நாம் அனைவரும் நம் குருவின் அருளின் துணைகொண்டு மகரிஷிகளின் அருள்சக்தி துணைகொண்டு நமக்குள் அந்த உயர்ந்த ஞானத்தைப் பெறவேண்டும்.

இந்த உடலைவிட்டு நாம் எந்த நிமிடம் அகன்றாலும் நாம் சப்தரிஷிகளின் அருள்வட்டத்தில் இணைந்து என்றும் பிறவியில்லா நிலைபெறும் சக்தி பெறவேண்டும்.

1.நமது எல்லை அதுதான் என்ற நிலைகள் தெளிந்து
2.நாம் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ்வோம்.
3.குறைகள் வராதபடி நிறைவாக்குவோம்.

2.அருள் ஞான உபதேச நூல்களை அடிக்கடி படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்

தியான வழியில் உள்ளோர் அனைவரும் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களை நாம் அடிக்கடி எடுத்துப் படித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

யாம் கொடுக்கும் இந்த நூல்களை ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்க வேண்டும். பூஜை அறையில்தான் இருக்கவேண்டும். படித்தபின் மீண்டும் பூஜை அறைக்கே சென்றிட வேண்டும்.

வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி நாம் படித்து, ஒரு பாரா அல்லது இரண்டு பாரா படித்துவிட்டுத் தியானத்திற்குச் செல்ல வேண்டும்.

அதை நாம் அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலையும், கேட்கும் நிலையும் அவர்களுக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை நாம் ஊட்டப் பழக வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் பெறுவதற்காக உங்கள் உயிரை ஈசனாக மதித்து உங்கள் உடலைச் சிவனாக மதித்து இந்த உடலுக்குள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று தியானிக்கச் சொல்லுகின்றோம்.

அவ்வழியே தியானிக்கும்போது குரு காட்டிய அருள் வழியில் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் போரொளியும் நீங்கள் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

3.ஒற்றுமையை வளர்த்திடக் கூட்டுத் தியானங்கள் அமைத்திடல் வேண்டும்

தியானவழி அன்பர்கள் அடிக்கடி கூட்டுத் தியானங்கள் அமைத்திட வேண்டும். அந்தந்தக் குடும்பங்களில் இரண்டு பேர் சேர்த்தால் போதும். தியானம் செய்து குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பழகுதல் வேண்டும்..

இந்த மாதிரி ஒற்றுமையை வளர்ப்பதற்கு குடும்பங்களில் தெளிவான நிலை வருவதற்கு இதைப் போன்று அவசியம் கூட்டுத் தியானங்கள் செய்ய வேண்டும்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குடுமபத்திலும் எடுத்துக் காட்டாக இந்த தியானத்தைக் கடைப்பிடித்து உங்கள் அருகில் உள்ளவர்களையும் அந்த உயர்வடையச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

4.உலகில் நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டவுடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உலக நிலைகளிலே இன்று எடுத்துக் கொண்டால் வேதனை, வெறுப்பு பயம் என்ற நிலைகள் அதிகமாக இன்று மனித உடலில் உருப்பெற்று வெளிப்படுகின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் பயம் இல்லாது எவரும் இல்லை. ஆகவே ஒவ்வொரு மனிதனின் உடலிலும் உலகில் நடக்கும் மதம், இனம், மொழி என்ற நிலைகளில் கடும் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது.

ஒவ்வொரு மனித உடலிலும் வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்திருப்பதும் T.V மூலமாகவும், பத்திரிகைகளில் படிக்கும் போதும் நாம் அறிய நேர்கின்றது.

1.உலகில் ஒவ்வொரு இடத்தில் நடக்கும் விபத்துக்களும் விபரீதச் செயல்களும்,
2.திருட்டு கொலை சம்பத்தப்பட்ட செய்திகளைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும்
3.மன அதிர்ச்சியும் பயமூட்டும் உணர்வுகளும் நமக்குள் அதிகமாகப் பதிவாக்கி விடுகின்றது.

பயத்தின் உணர்வுகள் அதிகரித்துவிட்டால் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. சிந்திக்கும் திறன் இழந்தால் ஆத்திரத்தில் நம்மை அறியாது கடும் பிழைகளைச் செய்யும் நிலைகளும் நமக்குள் உருவாகிவிடுகின்றது.

இதைப்போன்ற விபரீத நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது நமக்குள் செயல்படுத்திடல் வேண்டும்.

5.குறை காணுவதற்குப் பதில் அதை நிவர்த்திக்கும் செயலாக அமைதல் வேண்டும்

இதேபோன்று குறை என்பது அவ்வப்பொழுது சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிகழ்ச்சி.

தொழில் செய்வோம் என்றால் நாம் ஒன்றைச் செய்து கொண்டு இருப்போம். அடுத்த கணம் இன்னொரு பக்கம் குறை உருவாகும்.

அந்தக் குறை உருவாவதைத் தெரிந்து கொண்டால், உடனே ஆத்ம சுத்தி செய்து அந்தக் குறைகளை நிவர்த்திக்கும் நிலையில் நமது செயலாக்கங்கள் அனைத்தும் அமைதல் வேண்டும்.

குறைகள் எப்பொழுது எவ்வழியில் வர நேர்ந்தாலும் மற்றவர்களின் குறையைச் சுட்டிக் காட்டுவதற்கு மாறாக மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று நாம் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு,
1.மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும்.
2.மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.
3.குரு காட்டிய அருள் வழியில் அவர்கள் வளரவேண்டும்.
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறவேண்டும்.
5.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று அனைவருக்கும் நற்போதனை கொடுக்கும் நிலைகள் அவர்களில் உருவாக வேண்டும்.
6.அன்பும் பண்பும் பரிவும் பெறும் அந்த அருள்சக்தி அவரில் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு நாம் அனைவரும் அவ்வழியில் வழி தொடர வேண்டும். பெண்கள் இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் பல கோடிகளில் பலவிதமான நிலைகளில் இருப்பினும் குறைகள் காணும்போது நாம் ஆத்மசுத்தி செய்து ஒரு பத்து நிமிடமாவது அதன் நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

6.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ வேண்டும்

அனைவருடைய குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்தல் வேண்டும். கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து, நாளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ வேண்டும்.

சாவித்திரியைப் போன்று ஒன்றிய நிலைகள் கொண்டு தெளிந்த மனதுடனும் மகிழ்ந்திடும் உணர்வுடனும் வாழ்ந்து அருள்ஞான சக்தி பெற்று தீமையை அடக்கிடும் அருள் ஒளி பெற்று மெய்ப்பொருள் கண்டிடும் அந்த அருள்ஞானம் வளர வேண்டும்.

நம் ஊரில் உள்ளோர் அனைவரும் அதைப் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சதா இதை நமக்குள் தியானமாக்க வேண்டும்.

7.குழந்தைகள் அனைவரையும் அருள் ஞானிகளாக வளர்க்க வேண்டும்

நம் குழந்தைகளுக்கும் இதைப் போல மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அவர்கள் அருள்ஞானம் பெறவேண்டும் மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லி நாம் தியானிக்க வேண்டும்.

குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும். உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக அவர்கள் உரு பெறவேண்டும். வளர வேண்டும் வளர்ச்சி பெறவேண்டும்.

நம் நாட்டின் பண்புகளைத் தெளிவாக ஞானிகளின் அருள்சக்திகளை எடுத்து அடுத்தவருக்குப் போதிக்கும் நிலை நம் குழந்தைகள் பெறவேண்டும்.

அவர்கள் வெளிப்படுத்தும் சொல் மற்றவரைப் பிணிகளிலிருந்தும், தீமைகளிலிருந்தும் அவர்கள் வறுமையிலிருந்தும் நீக்கிடும் அந்த வலிமை பெறவேண்டும்.

கேட்போர் உணர்வுகள் வலிமை பெற்றுத் தீமைகளிலிருந்து விடுபட்டு அருள் ஞானத்தைப் பெறும் தகுதியை ஏற்படுத்தும் நிலை பெறவேண்டும்.

8.கருவுற்றிருக்கும் தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களுக்கு அகஸ்தியன் அருளைப் பெறச் செய்ய வேண்டும்

அதே போல பெண்கள் கர்ப்பமாக இருந்தால் அனைவரும் கூட்டுத் தியானமிருந்து அந்தக் கருவில் வளரும் குழந்தை மகரிஷிகளின் அருள்சக்தியைப் பெறவேண்டும் அருள் ஞான சக்தி பெற வேண்டும்.

1.அகஸ்தியன் பெற்றது போன்று நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற்று,
2.அருள் வழியின் உணர்வைத் தனக்குள் வளர்க்கும் ஆற்றல் பெற்று,
3.உலக இருளை நீக்கிவிட்டு அருள் ஒளிபெறும் தகுதியை கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும்.
4.வானுலக ஆற்றல் அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறவேண்டும்.
5.உலக மக்களை இணைத்திடும் அருள்ஞானம் அந்தக் கருவிலே விளைய வேண்டும்.
6.உலகில் நன்மைகள் செய்விக்கும் அகஸ்தியனின் அருள் உணர்வுகள் கருவிலே உருபெற வேண்டும்.
7.உலகைக் காத்திடும் அருள்ஞானக் குழந்தையாக வளர வேண்டும் என்று

கூட்டுத் தியானங்களில் இதை முறைப்படுத்தி அந்தக் கருவில் வளரும் குழந்தைகளுக்கு நாம் அடிக்கடி இதைச் சொல்லித் தியானமிருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு நாம் தபோவன நூல்களைப் படித்துக் காட்டிக் கருவில் இருக்கும் அந்தக் குழந்தை அருள் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் நீங்கள் சொல்லிவிட்டு அடுத்து தியானத்தை நாம் வழிநடத்தும் முறை வரவேண்டும்.

இதைப் பார்த்தபின் நம்மைச் சுற்றியிருப்பவர்களும் இதைப் போன்று நாமும் வழிப்படுத்த வேன்டும் என்ற நிலைகளில் அவர்களுக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுதல் வேண்டும்.

9.மற்றவர்களுக்கு வழி காட்டும் அளவிற்கு நாம் வளர வேண்டும்

தியானவழி அன்பர்கள் என்று நம்மை எடுத்துக் கொண்டால், எல்லாரும் போற்றும் நிலைகளுக்கு,
1,நம்மைப் பார்த்தாலே எப்பொழுதும் மற்றவர்களுக்கு,
2.அவர்களுக்கு நல்வழி காட்டும் நிலை அடைந்திடல் வேண்டும்.
3.ஒருவருகொருவர் அந்தத் தெய்வீகப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
4.நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த அளவிற்கு நாம் வளர்ந்தால்தான் அது வரும். அதனால் அதை நீங்கள் பெறுவீர்கள் என்று நினனைக்கிறேன். அதைப் பெறவேண்டும் என்று தியானிக்கிறேன் பெறவேண்டும் என்று தவம் இருக்கிறேன்.

அதை நீங்கள் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன். இதை எடுத்துக்காட்டாக வளரவேண்டும். அதை நான் சொல்வதற்குப் பதில்
1.அந்த உயர்வை நீங்கள் உயர்த்திக் காட்டி
2.செயலிலே நீங்கள் வரவேண்டும் பிரார்த்திக்கின்றேன்.

அன்பர்கள் அனைவரும் குரு காட்டிய அருள்வழியைக் கடைப்பிடித்து உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்றி, அனைவரும் அறிந்திடும் நிலையாக அருள் ஞான சக்தி போதித்து, உலக மக்களைத் தெளிந்த மனதுடன் மகிழ்ந்திடும் உணர்வுடன் வாழ வைக்கும் அந்தத் திறன் அனைவரும் பெறுதல்வேண்டும்.

நாம் அனைவரும் மாமகரிஷிகளின் அருள்சக்தியை நமக்குள் வளர்த்து நம் தொழிலும், நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நம்மிடம் தொழில் செய்பவர்கள் அதாவது நம்மிடம் வாடிக்கையாளராக வரும் போது அவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

அப்படி நன்மை ஏற்படும் பொழுது, நம் தொழிலும் சீரடையும்.

10.உங்கள் பார்வையால், சொல்லால், பிறருடைய தீமைகள், நோய்கள் அகல வேண்டும்

உங்கள் பார்வையில் இந்தத் தியானத்தின் பலனால் மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று உங்கள் பார்வையில் “எவரேனும்.., கெட்டது என்று சொன்னாலும்” அடுத்த கணம் நீங்கள் சிறிது நேரம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி உடல் நலம் பெற்று, அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எத்தகைய நோய்கள் இருப்பினும் கேட்டறிந்தால் அடுத்து ஆத்ம சுத்தி செய்துவிட்டு அவர்கள் நோய் நீங்கி அருள்ஞான வழியில் அவர்கள் நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும் அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சி பெறவேண்டும் என்று எண்ணி அவர்கள் உடல் நலம் பெற
1.நாம் எடுத்த தியானத்தின் பலனால்,
2.நம் சொல்வாக்கின் தன்மை அவருக்குள் பதிவாகி
3.கடும் நோய்களையும் நீக்கும் பலன் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ண வேண்டும்.

இதைப் போல அந்த அருள் சக்தியை வளர்த்துப் பேரின்பத்தை ஊட்டும் நிலைகளை உருவாக்க வேண்டும்.

எந்த நிலையிலும் நாம் அனைவரும் அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று யாருக்காவது நோய் வந்தாலும் அதை நீக்க நீங்கள் முற்பட வேண்டும்.

கூட்டுத்தியானமிருந்து மகரிஷிகளின் அருள்சக்தி அவர் உடலிலே படரவேண்டும். அவர் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழவேண்டும். அவர் நோய் நீங்கி நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று நாம் அவர்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லி வழி நடத்துதல் வேண்டும்.

1.அவர்கள் நலம் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் போது
2.நமக்குள்ளும் நலம் பெறும் அணுக்கள் உருவாகின்றது.
3.இந்தச் சொல்லின் தன்மை வெளிப்படும்போது கேட்போர் உணர்விலேயும் நலம் பெறும் சக்தியாக உருப்பெறச் செய்யவும் முடிகின்றது.

இந்தப் பழக்கத்தை நாம் பழக முயல வேண்டும்.

11.விஞ்ஞான அழிவிலிருந்து உலக மக்களைக் காக்கும் நிலையைச் செயல்படுத்த வேண்டும்

இதைப்போல உலகில் மதம் இனம் என்ற அன்னியத் துடிப்பிலிருந்து மக்களை விடுபடச் செய்து அருள் வழித் தொடராக அவர்கள் வாழ்வில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும் என்று
1.நாளை விஞ்ஞான உலகில் வரும் அழிவில் இருந்து
2.அவர்கள் மீளூம் மார்க்கத்தையும் நாம் உபதேசித்தல் வேண்டும்.

ஒவ்வொரு நேரத்திலேயும் நீங்கள் சொல்ல முடியவில்லை என்றாலும் இந்த உபதேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதைப் படித்து வாசித்துக் காட்டுங்கள். திரும்பத் திரும்பப் படித்துக் காட்டினால் நமக்குள்ளும் பதிவாகின்றது.

அந்த அருள் உணர்வை நாம் எண்ணிய உணர்வை நம் உயிர் அந்த அருள் சக்தியாக அணுக்களாக நமக்குள் மாற்றுகின்றது. நினைவாற்றலைப் பெருக்குகின்றது.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வழி வகுக்கும் அந்தத் தகுதியை நமக்குள் அது பெறச் செய்கின்றது.

spiritual-meditation1

தியானத்தின் மூலம் நாம் வளர வேண்டிய முறை

Image

வாழ்க்கையே தியானம்.

தியானத்தின் மூலம் நாம் வளர வேண்டிய முறை

உயிரே கடவுள் என்று நாம் சொன்னால் கடவுள் தான் உயிர் என்று எழுதி  வைத்து விடுகின்றார்கள்.

இந்த காப்பி அடித்து அந்த உண்மைப் பொருளை தெரிவதற்கு இல்லை. ஆனால் அதை உயிரே கடவுள் என்றால் கடவுள் தான் உயிர் என்ற நிலைக்கும் மாற்றி சில நிலைகளை வெளிப்படும் நிலைகள் தான் அது.

ஆனால் பொருள் கண்டு தனக்குள் அறிந்தோ தன் உணர்வின் தன்மையை அந்தக் குரு மூலமாகவோ அறிந்தோ சொல்வதில்லை.

ஆக இதைப் போல அதை
1.முதலில் தனக்குள் படித்துப் பார்க்க வேண்டும்.
2.அதனின் இயக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
3.அது சொல்லாக வர வேண்டும்.

ஆக இதை எல்லாம் பனிரெண்டு வருடங்கள் அனுபவித்தபின்தான் பின் புறநிலைகள் எழுப்புவதும் அக நிலைகளுக்குள் எப்படி இயக்குகின்றது என்று இந்த உடலுக்குள்

எப்படி விளைகின்றது எப்படி மாற்ற வேண்டும் என்று எமது குருநாதர் உணர்த்தினார். இந்த நான் சும்மாஇருக்கிறது, இந்த மாதிரி ஜாலியா நான் சுற்றிக் கொண்டு இருந்தவன்தான்.

அப்போது இதைஎடுத்து கஷ்டப்படச் செய்து இது எல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடு தான் இது விளைந்ததை இப்போது நான் உங்களிடம் சொல்வது.

ஆகவே இதை எல்லாம் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் எனக்கே சத்து  என்று குருநாதர் சொல்லி விட்டார்.

எதை? நீங்கள் எல்லாம் அந்த ஞானிகள் பெற்றது போல உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாத இருள்கள் நீங்கி மெய் ஒளிகள் பெற வேண்டும் என்று
1.அவர்களை எண்ணிப் பிரார்த்தனை செய்
2.அவர்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணு
3.அப்போது அந்த உணர்வு தான் உனக்குள் விளையும் என்று சொன்னார்.

அதையேதான் உங்களிடம் சொல்வது. இதை
1.நீங்கள் இதே மாதிரி சொல்லிக் கொண்டு வாருங்கள்
2.சொல்லிக்கொண்டே வரப்போகும் போது நிச்சயம் நீங்களே விளைகின்றீர்கள்.
3.நாமும் அங்கே போய்ச் சேர்கின்றோம்.

ஆக நமக்குள் நாம் நாம் இடக்கூடிய நம் மூச்சலைகள் இங்கே படரும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Meditation resultsதுருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானிப்பதால் ஏற்படும் நன்மைகள் 

உதாரணமாகத் தொழிலில் நஷ்டம் ஆகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது மனச் சோர்வு அல்லது வேதனை இரண்டும் நமக்கு வரப்போகும் போது
1.இந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் விஷத்தின் தன்மை ஊட்டி விடுகின்றது.
3.சோர்வடைந்து விட்டால் சிந்திக்கும் தன்மை குறைகின்றது.
4.தொழில் செய்யும் திறனும் குறைந்து விடுகின்றது.
5.கடைசியில் நோயும் வந்து விடுகின்றது.

இதனால் குடும்பத்தில் உள்ள மற்றவரும் அந்த வேதனையை நுகரப்படும்போது அவர்கள் உடலுக்குள்ளும் அவருக்குத் தக்கவாறு சில நோய்கள் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடுக்க வேண்டும் என்றால் “ஓ..ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானம்.

நாம் வேதனை வேதனை என்று எண்ணும் போது அந்த உணர்வுகளை நுகர்ந்தறிந்தால் நம் உடல் உறுப்புகளிலுள்ள அனைத்து அணுக்களும் விஷத்தின் தன்மை பெற்று விடுகின்றது.

விஷத்தின் தன்மை பெற்றால் நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் கலந்து எந்த உறுப்புகளில் விஷத்தன்மை அதிகமாகின்றதோ அந்த உறுப்புகளில் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகின்றது.

விஷத்தின் தன்மைகளை முறித்து ஒளியின் உடல் பெற்றது அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரம் ஆன நிலைகள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வினைச் சூரியன் கவர்வதனால் அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி நம் இரத்தத்தில் கலந்து எல்லா உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

அப்பொழுது நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று அதன் வலிமை பெறுகின்றது.

இப்படி நாம் தினமும் அதைச் சேர்த்துக் கொண்டு வந்தால்
1.நம் உடலிலுள்ள பிணிகளையும் மன வேதனைகளையும் சங்கடங்களையும் சலிப்புகளையும் மாற்றும்.
2.சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கும்.

நம் இருதயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இணைத்தால்
1.இருதய வால்வுகள் சீராக இயங்கி
2.இருதயத்தை இயக்கும் அணுக்கள் வீரியமடைந்து
3.நாம் மன உறுதி பெற்று மன பல கொண்டு
4.சிந்தித்துச் செயல்படும் சக்தியும் வருகின்றது.
5.அமைதியும் சாந்தமும் கொண்டு இந்த வாழ்க்கை வாழ முடியும்.

இவ்வாறு வேதனை என்ற நிலையை நீக்கிச் சிந்திக்கும் வலிமை பெறும்போது
1.ஒவ்வொரு செயலையும் நாம் எப்படிச் செய்யலாம் என்ற உறுதியான எண்ணமும்
2.பிறரிடத்தில் உதவியோ அல்லது நல்ல சொல்களைச் சொல்லப்படும் போது
3.அதனால் மற்றவர்கள் நமக்கு உதவி செய்யக்கூடிய பக்குவமும் வரும்.
4.அமைதியும் சாந்தமும் கொண்டு பண்பும் பரிவும் கொண்டு வாழ இது உதவும்.
5.குடும்பத்திற்குள் பெரு மகிழ்ச்சி ஏற்படும்.

ஆகையினால் தினசரி அதிகாலையில் நீங்கள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அந்தச் சக்தியை உங்களுக்குள் வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

தியானத்தில் புருவ மத்தியில் ஏற்படும் மாற்றங்கள்

Intuition-Third-Eye

தியானத்தில் புருவ மத்தியில் ஏற்படும் மாற்றங்கள்

அகஸ்தியன் துருவனாகி அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து
1.இரு உயிரும் ஒன்றாக இணைந்து
2,இரு மனமும் ஒரு மனமாகி
3.இரு உணர்வுகளும் ஒன்றாக இணைந்து துருவ மகரிஷியாகத் தனக்குள் சிருஷ்டித்து
4.இருளினை அகற்றி ஒளி என்ற உணர்வில் ஒன்றி வாழ்ந்து கொன்டுள்ளார்கள்.

ஒளியின் சரீரமானபின் எந்தத் துருவத்தை எண்ணி ஏங்கினார்களோ அதையே எல்லையாக்கி பிறவியில்லா நிலைகள் கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது.

நமது பூமி அதைத் துருவத்தின் வழியாகக் கவர்ந்து நம் காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது.

அதிகாலை 4.30 – 6.00 மணிக்குள் அந்த உணர்வலைகள் அதிக வேகமாக நம் பூமிக்குள் வருவதனால்
1.அந்த நேரத்தில் நம் எண்ணங்களைத் துருவத்தை நோக்கிச் செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
3.நம் உயிருடன் ஒன்றி ஏங்கினால் எளிதில் நாம் நுகர முடிகின்றது.
4.உடலில் அது பரவுகின்றது  நல்ல உணர்வாக நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்கின்றது.

அடிக்கடி இந்த உணர்வுகளைச் சேர்த்தோம் என்றால் சிறுகச் சிறுக நல்ல அணுக்களை நமக்குள் பெருக்கிக் கொண்டே இருக்கும். ஆக தீய அணுக்களைத் தணித்து நல்ல அணுக்களின் தன்மைகளை நமக்குள் உருவாக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்களை ஏங்கித் தியானியுங்கள்.
1.ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது
2.புருவ மத்தியில் உள்ள உயிரை நினைவு கொள்ளுங்கள்.
3.ஈஸ்வரா என்றாலே உங்கள் உயிர் தான்.

உங்கள் உயிரிடம் வேண்டி நினைவினைத் துருவ நட்சத்திரத்துடன் செலுத்துங்கள்.

அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இப்படி அதை நுகரும் பொழுது உங்கள் புருவ மத்தி (உயிர்) வழி தான் உங்கள் உடலுக்குள் செல்லுகின்றது.

1.உங்கள் புருவ மத்தியில் அந்த அலைகள் வந்து மோதும் போது குறு குறுப்பு ஏற்படும்.
2.ஒளியும் நல்ல உணர்ச்சிகளும் தெரியும்.

சிலருக்குக் குறு குறு என்று இருக்கும் பொழுது சிறிது வலியும் இருக்கும். காரணம்…
1.நம் உடலில் உள்ள தீய அணுக்களைக் கொன்றிடும்
2.அந்த அரும் பெரும் சக்தி அங்கே சுழன்று வரும் பொழுது
3.தீய அணுக்களுக்குச் செல்லும் உணர்வினை அது மாற்றுகின்றது.

உங்கள் நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் மீது செலுத்தி அந்தப் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…..
2.உங்கள் நினைவுகள் துருவ நட்சத்திரத்துடன் இணைந்திருக்க வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெறவேண்டும் என்ற ஏக்கம் இருக்க வேண்டும்.
4.நீங்கள் ஏங்கும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்.
5.புருவ மத்தி வழிதான் நமது உணர்வுகள் நுகர்ந்து செல்லும் பாதை.

இரண்டு கண்களுக்கு இடையில் தான் புருவ மத்தியில் உயிரின் இயக்கம் உள்ளது. அதன் வழியாக உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை உடலில் உள்ள அணுக்களுக்கு உயர்ந்த சக்தியை ஊட்டுகின்றோம்.

நமது இரத்த நாளங்களில் பெருக்குகின்றோம்.

உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவலைகளை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் இரத்த நாளங்களுக்குள் கலப்பதும் உடல்களில் உள்ள அணுக்கள் பெறும் அந்த உணர்ச்சிகளையும் “நீங்கள் அறிய முடியும்”.

உங்களுக்குள் அது பேரொளியாக மாறும். அருள் வட்டமாக ஒளி வட்டமாகத் தெரியும். உங்கள் உடலிலிருந்து “பளீர்.. பளீர்…” என்று வெளிச்சம் வருவதையும் காண முடியும்.

எந்தச் சூழ்நிலையிலும் நல்லதைச் சேர்த்துக் கொண்டிருப்பதே தியானம்… மிகவும் எளிதானது

Real Meditation

எந்தச் சூழ்நிலையிலும் நல்லதைச் சேர்த்துக் கொண்டிருப்பதே தியானம்… மிகவும் எளிதானது

உதாரணமாக சண்டை போடுபவர்களுக்குச் சந்தோசமாக இருப்பவர்களைப் பார்த்தால் வெறுப்பின் நிலை வளரும். ஒருவர் சந்தோசமாக இருப்பவரைப் பார்த்தால்
1.ஏதாவது அவருக்குக் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்.
2.வேண்டாததைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
3.ஏனென்றால் அதனால் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

நீங்கள் துன்பப்படுவதைப் பார்த்து அவர்கள் ஆனந்தப்படுவார்கள். இப்படிப் பல பேர் இருக்கிறார்கள். ஒருவர் துன்பப்பட்டால் போதும் அவர்களை அறியாமலேயே அந்த மகிழ்ச்சி இருந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் இதைப் போன்ற உணர்வின் தன்மையினுடைய நிலைகள் அதற்குத்தக்க நிலைகளைப் பார்த்தால்தான் அவர்களுக்கு ஆற்றல் கொடுக்கும்.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சண்டை போடும்பொழுது
1.“இப்படித் தொலைந்து போ அப்படித் தொலைந்து போ” என்று
2.ஒருவருக்கொருவர் விளைய வைத்திருக்கிறோம்.

அவ்வாறு ஒருவர் பல இடைஞ்சல்கள் பட்டு அவஸ்தைப்பட்டதைப் பார்த்தார்கள் என்றால்… அவருக்கு மகிழ்ச்சி தன்னாலே வரும்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி வருகிறது. இதைப் போல இவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதைப் போன்று
1.நாம் எந்த உணர்வை “ஏற்றுக் கொள்கிறோமோ”
2.அதற்கு அது மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இதைப் போன்றுதான் “உணர்வின் செயலாக்கங்கள்”.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பக்தி என்ற நிலைகளில் ஆராதனை செய்துகொண்டு “சாமி செய்யும்… என்றால் ஒன்றும் செய்யாது”.

சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை
1.நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்
2.அந்த வேதனை கலந்து நல்ல குணமும் சேர்ந்து உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.
3.கடைசியிலே அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான் தெய்வமாக உணர்த்தப்பட்டு அதை முன்னிறுத்தி இந்தக் குணம் உங்களுக்கு இன்னது செய்யும். இந்தக் குணம் நம் உடலிலே இருக்கிறது என்று காட்டினார்கள்.

1.உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை
2.அதற்குப் பெயர்களை வைத்து
3.உருவத்தைக்(தெய்வ உருவங்களாக) காட்டி
4.அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால் நாம் ஆராதனை செய்துவிட்டுச் “சாமி செய்யும்” என்றால் எப்படிச் செய்யும்?

தியானம் என்றால் என்னமோ “பெரிய மலை” என்று எண்ணுகிறோம். நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
1.திரும்பத் திரும்ப நினைத்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்குக் குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். தீமைகள் எப்படி வருகிறது? தீமைகளை நீக்கும் வழி என்ன? என்று அனுபவபூர்வமாக என் உடலுக்குள்ளேயே நடத்திக் காட்டினார்.
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
2.உனக்குள் அதை வளர்த்துக் கொண்டால்
3.தீமைகளை அகற்ற முடியும் என்று சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியைச் சொல்லாலே பேச்சாலே இந்த உணர்வாலே கொடுத்து உங்களுக்குள் நீங்களும் வளர்த்துக் கொள்ள வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம்.

இதுதான் “தியானம்” என்பதின் நிலைகள்.

தியானத்தின் போது “உங்கள் நினைவாற்றல்…” எங்கே இருக்க வேண்டும்…?

Mind power

தியானத்தின் போது “உங்கள் நினைவாற்றல்…” எங்கே இருக்க வேண்டும்…? 

ஒவ்வொரு நிமிடமும் “மெய்ஞானியின் அருள் ஒளியை…” யாம் உபதேசிக்கும் பொழுது நமது குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு
1.புலனறிவுகள் ஐந்திலும்
2.கண்ணின் பார்வையிலும் உணர்வைச் செலுத்தி
3.உங்கள்பால் யாம் செலுத்துகின்றோம்.

நீங்கள் எந்த ஏக்கத்துடன் வருகின்றீர்களோ அந்த ஏக்கத்திற்குள் நாம் இதைப் பாய்ச்சச் செய்கின்றோம்.

இதைப் போன்ற உணர்வின் வேகம் கொண்டு குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.யாம் உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து
2.உங்கள் உயிரான காந்தத்துடன் தொடர்பு கொள்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியை முதலில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு மெய்ஞானியின் அருள் சக்திகளை யாம் சுவாசிக்கின்றோம்.

அவ்வாறு சுவாசிக்கும் பொழுது எனது புலனறிவான ஐந்திலும் அது பாய்கின்றது. அதே சமயம் எனது உணர்ச்சியின் சொல்லின் வடிவிலும் அது வருகின்றது.

அவ்வாறு வரும் நிலைகளைத்தான் உங்களுக்குள் யாம் எண்ணிப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெறவேண்டும் என்று சமமாக எண்ணும் பொழுதுதான் நீங்கள் அந்த நிலைகளைக் கேட்க முடியும். “கேட்க வேண்டும்” என்ற விருப்ப நிலைகள் வரப்படும் பொழுதுதான் இது உங்களுக்குள் பதிவாகின்றது.

ஆனால் வேறு பக்கம் எண்ண அலைகளைப் படரவிட்டு எண்ணிக் கொண்டிருந்தால் யாம் உபதேசிப்பதைக் கவராது உங்கள் ஈர்ப்பினுடைய நிலைகள் தடையாகும்.

உதாரணமாக பேசும் பொழுது மைக்கை (MIC) அந்தப் பக்கம் திருப்பி வைத்துவிட்டால் சப்தம் குறையும். அதைப் போல
1.மற்ற உணர்வின் நிலைகளை நமக்குள் நினைவுபடுத்தும் பொழுது
2.நமது உணர்வுகள் நாம் பேசும் உணர்வலைகள் ஒன்றுக்கொன்று மாறுபடப் போகும் பொழுது
3.”அரத்தங்கள்…” உங்களுக்குள் பதிவாகாது
4.இதைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இதற்குப் பின் “ஞாபக சக்தியும்” வராது.

அதனால் அர்த்தமற்ற உணர்வின் நிலைகளாகிப் போய்விடும்.  நீங்கள் தியானமிருக்கும் பொழுது இதை எண்ணினாலும் அந்தச் சக்திகள் கிடைப்பதும் அரிதாகிவிடும்.

ஏனென்றால் காற்றிலிருப்பதைச் சமப்படுத்திய நிலைகள் கொண்டு, உங்களுக்குள் பதியச் செய்திருந்தால்தான் நீங்கள் இதை “இயக்க…” முடியும்.

யாம் குருநாதர் மூலம் “அதைத் தெரிந்து கொண்டோம்… இதை அறிந்து கொண்டோம்…” என்று சொல்ல வரவில்லை.

அருள் ஞானிகள் தமக்குள் வளர்த்த அந்தச் சக்தி வாய்ந்த ஆற்றல்களை அந்த ஞான வித்துக்களை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞான வித்து உங்களுக்குள் வளர்ந்தால் அந்த ஞானிகள் எதைச் செய்தார்களோ அதை நீங்களும் செய்வீர்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒவ்வொருவரும் தமக்குள் பெருக்கச் செய்ய வேண்டும். அதை உடலுக்குள் அணுக்களாக விளையச் செய்ய வேண்டும்.

விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உயிருடன் ஒன்றிய நிலையாக என்றுமே ஒளியின் சரீரம் பெறலாம்.

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று ஏன் சொல்கிறார்கள்…?

sivalingeswaran

“அதிகாலையில் கடவுளின் தரிசனத்தைக் காணலாம்…” என்று ஏன் சொல்கிறார்கள்…?

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டுவிட்டு உயிரின் பற்றிலே சென்றவர்கள் உடல் பற்றாக இருப்பதை விட்டு உயிர் பற்றை வளர்த்தவர்கள்.

“உயிரின் சேர்க்கை” அதாவது உயிரின் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது உயிருடன் ஒன்றிய சேர்க்கை – ஒளி.

அவ்வாறு ஒளியானவர்கள் மகரிஷிகள்.

அந்த நிலைகளில் குருநாதர் காட்டும் இந்த நெறியை நாம் அனைவரும் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

அதே சமயத்தில் இராக்கெட்டை ஏவும் போது இந்தப் பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன் மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக்கி அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்து சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே “மிதக்கும் நிலை” வருகின்றது.

எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்தான். “அகஸ்தியன் கண்டுணர்ந்ததை” இதனுடன் இணைத்துப் பதிவு செய்து கொள்ளத்தான் இதைப் பதிவாக்குகிறோம்.

1.குருநாதர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் இணைத்தார்.
2.அதை யாம் இப்பொழுது உங்களுக்குள் இணைக்கின்றோம்.

அணுவின் ஆற்றலைத் தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும்போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவைப் பெறுகின்றார். அதனால்தான்
1.அதிகாலையில் 4.00 மணிக்குத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அந்த வழிகளில் உங்களுக்குள் சேர்க்கச் சொல்வது.

மற்ற மதங்கள் 4.30 மணிக்கு கடவுளின் தரிசனத்தைக் காணலாம் என்று சொல்வார்கள். அது இதெல்லாம் தெரிகிறது என்று, இந்து மதத்திலும் சொல்வார்கள். ஆனால் மூலம் தெரியாது. ஏனென்றால் மறைக்கப்பட்ட உண்மையைத் தான் நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஆகையினால் இதைக் கடந்து சென்று அந்த மெய் உணர்வின் தன்மையை உங்களிடம் பதிவு செய்வதற்குத்தான் இதைச் செய்வது.

இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக அந்த மகரிஷிகள் கண்ட உண்மைகளை இங்கே வளர்க்கின்றோம். இந்த மனித வாழ்க்கையில் இருளைச் சேர்ப்பதை நாம் இப்பொழுது விலக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கிருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று “ஒருவர் ஏதாவது சொல்லிவிட்டார்… என்றால் நம்மால் அடக்க முடிகின்றதா…?” அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து நமக்குள் சேர்க்கப்படும்போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணரமுடிகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வு நமது தெளிந்த அறிவை அது மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.

இருளிலிருந்து விடுபட முடியாத போது அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்க்கும்போது
1.அந்த ஒளி கண்டபின்
2.இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.

அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

1.நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உயிர் வழி கவர்ந்து
4.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
5.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.