வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…?

Argument

வீணாக வம்பு செய்பவர்களிடமிருந்து நாம் விடுபட எப்படித் தியானிக்க வேண்டும்…? 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.

கூட்டு தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.

அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.

இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது. அனுதினமும் செய்ய வேண்டும்.

வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.

நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும். அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.

அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது. இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும். அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.

இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.

“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.

பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.

ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.

ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது

அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.

என்ன இருந்தாலும் தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும். தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.

கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.

“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”

 

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

Image

Lord velaudham

தீமை செய்பவர்களுக்கு நாம் பயத்தை ஊட்ட வேண்டும்…

 

தியான வழியில் அன்பர்கள் இருப்பது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது அதிலே சில கஷ்டங்கள் வந்து விட்டது என்றால்
1.இவ்வளவு நாள் தியானம் இருந்து நீ என்னத்தைப் பார்த்தாய்…? என்று
2.அடுத்தவர்கள் நம்மிடம் உணர்ச்சியைத் தூண்டும்படி சொன்னால் போதும்.

அந்த உணர்வை அப்படியே எடுத்துக் கொண்ட பின்…
1.அட.. ஆமாம்… என்ன வந்தது…?
2.தியானம் செய்து ஒன்றும் கிடைக்கவில்லையே…! என்று
3.அடுத்தவர்கள் உணர்வைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
4.அவர்களுக்கு எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை.

யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவாக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு உங்களுக்குள் தீமைகள் எப்படி இயங்குகிறது…? இதை எப்படி மாற்ற வேண்டும்..! என்று நீங்கள் திருப்பிச் சொல்லிப் பாருங்கள். (செய்து பாருங்கள்)
1.இந்த உணர்வு நமக்குள் நல்லதை வளர்க்கச் செய்யும்.
2.அடுத்தவர்கள் உணர்வை மாற்றலாம்.

ஆனால் நீங்கள் சோர்வடைந்து உட்கார்ந்திருக்கும் போது ஒருவர் வந்து பற்ற வைத்தால் தீ அது பாட்டுக்க கிளம்பிவிடும். குறைகளைப் பேசிக் கொண்டு இருந்தால் என்ன ஆகும்…? தீமைகளின் இயக்கம் தான் அதிகமாகும்.

உதாரணமாக நீங்கள் நல்ல விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாலும் கூட ஒருவர் வந்து நல்லதைச் சொல்லாதபடி “இது அப்படி… அது இப்படி…! அவன் இப்படியே தவறு செய்கிறான்…!” என்ற வகையில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் உங்கள் நல்லது காணாமல் போய்விடும்.

அவர் சொன்ன உணர்வு உங்களை இயக்கி அந்த விஷத்தின் இயக்கமாகத்தான் வரும். ஏனென்றால் அதற்கு வல்லமை அதிகம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தை நீங்கள் மறக்கக் கூடாது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி உணர்வுகளை
2.காலை நான்கிலிருந்து ஆறுக்குள் எடுப்பதே துருவ தியானம்.
3.காலையில் கண் விழித்ததுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எடுத்து
4.நம் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் கை தவறி ஒரு பொருளைக் கீழே விட்டு விடுகிறோம்…. உடைந்து விடுகிறது…!

நம்முடைய மேலதிகாரி ஏதாவது நினைப்பார்கள் என்ற உணர்வு வரப்படும் பொழுது இதை மறைக்கத் துணிவோம். மறைக்க முயற்சிக்கும் போது நம்மை முதலில் குற்றவாளியாகப் பதிவு செய்து வைத்துக் கொள்கிறார்.

ஆனால் அதற்குப் பதிலாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு மேலதிகாரியிடம் இந்த மாதிரிச் செய்தேன். என் கை தவறி விழுந்து விட்டது
1.இன்னென்ன மாதிரியான சூழ்நிலையில் தான்
2.இந்தத் தவறு ஏற்பட்டது என்று சொல்லி விட்டால் பரவாயில்லை.

அதே சமயத்தில் தவறி விழுந்து விட்டது…! இருந்தாலும் உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ…? என்று தப்பை மறைக்கும் உணர்வு கொண்டு உடைந்ததைப் பற்றி சொல்லப் போனால் என்ன ஆகும்..?

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று சொல்வது போல் நம்முடைய எண்ணமெல்லாம் அந்தச் சந்தேக உணர்வு கொண்டு மேலதிகாரியிடம் பயமானவுடனே
1.நாம் தப்புப் பண்ணி இருக்கிறோம் என்ற நம் உணர்வே அங்கே வேலை செய்யும்.
2.அது நம்மைக் குற்றவாளியாகவே ஆக்கும்.
3.இதைப் போன்ற நிலைகளை சில நேரங்களில் நீங்கள் அனுபவமாக நிச்சயம் பார்த்திருப்பீர்கள்.

அதே போல் நம்முடைய குழந்தையே ஒரு தவறு செய்கிறான். சுட்டித்தனம் செய்து எதையாவது உடைத்துவிட்டான் என்றால் உடனே நம்மை அறியாது கோபம் வருகிறது.

எவ்வளவு தான் செல்லமாக குழந்தையை வளர்த்தாலும் கூடக் குறும்புத்தனம் செய்தவுடனே அந்த உணர்வு நம்மை எதிர்த்துத் தாக்கும். அவனை உதைத்தால் தான் என்ன…? என்று உடனே அந்த வேக உணர்ச்சி வரும்.

(உடனே) நம் எண்ணத்தில் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா…! என்று ஒரு நிமிடத்திற்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் கலந்து
2.அவனுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு நீங்கள் உதைத்துப் பாருங்கள்.
3.ஆனால் உதைக்க வராது…!

அவனிடம் இந்த உணர்வைச் சொல்லி நீ தவறு செய்ததற்கு நான் உன்னை அடிக்க வந்தேன் அல்லவா…! என்று இந்தப் பயத்தை ஊட்டி நீ தப்பு செய்யாமல் இருந்து நல்லவனாக வர வேண்டும் இந்த உணர்வைக் கொடுத்துப் பாருங்கள்.

நீ இனிமேல் நல்லவனாக வா. இந்த இந்தச் செயல்களை நீ இப்படிச் செய்தாய் என்றால் அது குற்றமாகத்தான் வரும் என்று சொல்லிவிட்டு அவன் குற்ற இயல்புகளிலிருந்து மீட்டுவதற்கு நாம் இப்படிச் சொல்ல வேண்டும்.

1.அப்போது அந்த பயத்தால் அவன் நல்ல உணர்வை நுகரும் வாய்ப்பாகின்றது
2.நாம் சொன்ன நல்ல உணர்வு அவனுக்குள் புகுந்து நன்மையைச் செய்யும்.
3.இப்படி… நாம் தப்பு செய்வதற்கு அந்த இடத்தில் பயத்தைக் கொடுக்க வேண்டும்.
4.தப்பு செய்ததற்குப் பயத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தைரியம் வரும்.
(இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது)

“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி என்று நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று குழந்தை குறும்புத்தனம் செய்யப் போகும் போது அதை எடுத்து நாமும் தணித்துக் கொள்ள வேண்டும். அருள் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு தான் இருந்தாலும் கூடத் தவறு செய்யும் பொழுது கோபம் வரத் தான் செய்யும். ஏனென்றால் அந்த உணர்ச்சி தூண்டவில்லை என்றால் நாம் அதை அறிய முடியாது.
1.ஆனால் குற்றத்தை அறியும் பொழுது அதைச் சொல்லும் பருவத்தில்
2.நல்லதாகச் சொன்னால் அவனைத் திருத்த முடியும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இதை நுகரப்போகும் போது அதை அடக்கி விடுகின்றது. ஞானிகளின் உணர்வின் அறிவாக நாம் சொல்லப்போகும் போது அவனுக்கு அந்த தெளிவாக்கும் உணர்வை ஊட்ட முடியும்.

உப்பு கைப்பாக இருக்கிறது. தனியாகச் சாப்பிட முடியுமா…? முடியாது. ஆனால் குழம்புடன் சேர்க்கும் போது சுவையாக வந்து விடுகிறது.

அதைப் போல் தான் இந்த வாழ்க்கையில் வரும் மற்ற உணர்வுகளுடன் (எதுவாக இருந்தாலும்) அந்த அருள் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துச் சுவை மிக்கதாக உருவாக்க வேண்டும். இது தான் கார்த்திகேயா.

பாதுகாப்பான உணர்வுகளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். மெய் உணர்வின் தன்மையை எடுத்து இப்படிச் சொன்னோம் என்றால் இந்த எண்ணம் மற்றவரை நிச்சயம் பாதுகாக்கும்.

“பிரம்மாவைச் சிறைபிடித்தான்…!” முருகன் என்கிற பொழுது ஆறாவது அறிவின் துணை கொண்டு பாதுகாக்கும் உணர்வின் எண்ணங்களை நமக்குள் உருவாக்கி அத்தகைய சொல்லாகச் சொல்லப்படப்போகும் போது அந்த உணர்ச்சிகள் அது தான் கூர்மை.

அதாவது அடி பெருத்து நுனி சிறுத்து இருக்க வேண்டும் – “வேலாயுதம்…!” அந்தக் கூர்மையின் தன்மைகள் கொண்டு தீமைகளைப் பிளக்கும் தன்மையாக அந்தச் சொல்லாக வரும் என்பதையே வேலாயுதம் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஒரு உருவத்தைக் காட்டி அருவத்தின் செயலை நுகர்ந்து நமக்குள் அருவத்திற்குள் இருக்கும் தீமைகளை அடக்கும் வல்லமை பெறுவதைத்தான் ஞானிகள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

Murugan Veerabhadra

“அதர்வண…!” என்பதன் பொருள் என்ன…?

 

நமக்கு வேண்டியவர் ஒருவர் நோயினால் கடுமையாகத் துன்பப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுது நமக்குள்ளும் வேதனையாகி நம்மிடம் இருக்கும் மகிழ்ச்சியை (நல்ல குணத்தை) அப்பொழுது இழக்கின்றோம் இது “அதர்வண…!”

(அதர்வண என்றால் மாற்றம் அடைதல் என்று பொருள்)

ஆனாலும் அந்த நேரத்தில் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நமக்குள் இணைத்து அந்த வேதனையான உணர்வு நமக்குள் செயல்படாதபடி தடுக்கும் பொழுது அதுவும் “அதர்வண…!”

அதாவது அருள் ஒளியான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து அவருக்குள்ளும் அதைப் பாய்ச்சி அந்த நல் வழியைச் செயல்படுத்தும் நிலையில்
1.மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து நல்லதாக்கும் பொழுது அது அதர்வண.
2.நல்லதுக்குள் வேதனை கலக்கப்படும் பொழுது அதுவும் அதர்வண தான்
3.ஆக இரண்டுமே அதர்வண தான்.

ஆனாலும் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு உணர்வையும் அருள் ஒளியின் உணர்வாக நல்லதாகவே நமக்குள் மாற்றுதல் வேண்டும்.

யார் யாரிடம் எல்லாம் பழகினோமோ அவர்கள் எல்லோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் மலரைப் போல் மணம் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

காலையில் எழுந்ததுமே ஒவ்வொருவரும் இந்த மாதிரி எண்ணி எடுக்க வேண்டும்.
1.ஏனென்றால் பழகியவர்கள் உணர்வு எல்லாம் நம் உடலுக்குள் இருக்கிறது.
2.அவர்களின் உணர்வுகள் அது வளராது இந்த அருள் சாப்பாட்டைக் கொடுத்து அதை மறைக்க வேண்டும்.
3.இப்படி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை என்றால் என்ன செய்யும்…?

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்தவுடனே பிறருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அந்த வேதனைப்படும் அணுக்களை நுகரச் செய்து நாமும் வேதனைப்பட ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் வந்து என்ன செய்யும்…? விஷத்தை நுகரும் தன்மையாக அது வரும் பொழுது நல்ல அணுக்களைக் குறைத்து விடுகின்றது. விஷத்திற்கு அந்த அளவு வலு இருக்கின்றது.

அந்த மாதிரி ஆகாதபடி அடுத்த நிமிடமே நம் நல்ல அணுக்களைப் பாதுகாக்க வேண்டும்.
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம் வேண்டி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதைச் சொல்லியே தீர வேண்டும்.

தீமைகளைப் பார்த்தாலும் தீமையான சொல்லைக் கேட்டாலும் இந்த உணர்வு உடலுக்குள் போகும் பொழுது “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த உபதேச வாயிலாக நீங்கள் இதைத் தெரிந்து கொண்ட பின் மற்ற தீமையான உணர்வுகளைக் கேட்க நேர்ந்தாலோ அல்லது பார்க்க நேர்ந்தாலோ
1.அவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற இந்த எண்ணத்தைத்தான் எண்ண வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்களுக்குள் நன்மை பெறும் சக்தி பெறவேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
3.நாம் இப்படிச் சொல்லப்படும் பொழுது இது அதர்வண.
4.அவர்கள் சொன்ன உணர்வை அந்த அருள் மகரிஷிகளின் சொல்லால் அடக்கி விடுகின்றோம்.

இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது நரசிம்ம அவதாரத்தில் சொன்னது போல் வாசல்படியிலேயே அதாவது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் புகாதபடி இங்கேயே நீக்கி விடுகின்றோம். உள்ளுக்குள் போகாது.

நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி அந்த வலிமையின் துணை கொண்டு எதையுமே நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

Fool proof protection

பிறரைக் காக்க வேண்டும் என்ற நிலையில்… அவர்கள் கஷ்டங்களையும் துன்பங்களையும் நாம் எடுத்துக் கொண்டால் “நம்மை யார் காப்பது…?”

 

எப்பொழுதெல்லாம் தீமையின் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று அவனிடம் வேண்டி அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று பல முறை நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வின் வலுவை உடலுக்குள் இப்படிக் கூட்டினால்
2.இந்த உணர்வின் “மணம்” வரப்படும் பொழுது தீமைகளை உந்தித் தள்ளிவிடும்.
3.தீமைகளை நுகரும் சக்தி இழக்கப்படுகின்றது. உள் புகாமல் தடுக்கப்படுகின்றது.

இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்…! என்று ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

1.நமக்கு வாசல் படி எது..?
2.மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் இந்தச் சுவாசத்தின் வழியாகத் தானே உள் செல்கிறது.
3.மூக்கின் வழியாகச் செல்லும் தீமைகளைப் புருவ மத்தியில் அமர்ந்து தடுக்க (வகுந்திட) வேண்டும்.

எல்லாவற்றையும் இரட்சிப்பது யார்…? அவனே தான்…! யார்…? நம் உயிர் தான்…!
1.யாரையும் வேண்டாம் என்று சொல்வதில்லை.
2.வருவோரை அரவணைப்பதும் அவன் வேலை தான்.
3.நம் உடல் வரவழைக்கின்றது.
4.வரம் கொடுத்துவிடுகின்றது நம் உயிர்.
5.ஆனால் நாம் நுகர்ந்த பின் பிரம்மமாகின்றது சிருஷ்டியாகின்றது.
6.உருவான உணர்வுகள் உடலாகின்றது. அப்பொழுது இங்கே அரவணைக்கின்றது.

இதைச் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதை நமக்குள் உருவாக்க வேண்டும். நாம் எண்ணியதைத்தான் உயிர் உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி நாம் பார்க்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…! என்று எண்ண வேண்டும். துன்பமோ துயரமோ கஷ்டமோ நஷ்டமோ கொண்டு மற்றவர்கள் வந்தாலும் நாம் அவர்களிடம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவீர்கள்…
2.நிச்சயம் நன்றாக இருப்பீர்கள்…! என்று சொன்னால்
3.இந்த உணர்வுகள் அவர்கள் தீமைகளைத் தள்ளுகின்றது.
4.நமக்குள் அந்தத் தீமைகள் வராது.

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இப்படிச் சரியான முறையில் எண்ணிப் பாருங்கள். நோயோ கஷ்டமோ துன்பங்களோ “எல்லாமே நீங்கிப் போகும்…!” என்று நீங்கள் சொல்லுங்கள்.

இப்படி உங்கள் எண்ணம் தான் மற்றவர்களின் தீமைகளை நீக்க வேண்டும். அவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது (இது மிகவும் முக்கியம்)

ஆனால் அவர்கள் சொல்லைக் கேட்டு நீங்கள் பலவீனப்படுத்திச் சொன்னால் “என்ன காலமோ…? இந்த மாதிரி வந்துவிட்டது…! என்ற நிலையில் என்று அந்த விஷமான உணர்வுகள் இயக்கிவிடும்.

சாமிக்கு (குருநாதருக்கு) என்ன தெரியும்…? நான் சொல்கிறேன் போகிறது பார்…! என்பார்கள். அப்புறம் ஆணி வேரையே பிடுங்கிவிட்டு விடுகிறார்கள்.
1.பாசத்துடன் பிறருடைய கஷ்டங்களைக் கூர்ந்து கேட்டு
2.இந்த மாதிரிச் சொல்லும் பொழுது இதைக் கடந்து வரப்படும் பொழுது நாளடைவில் அதே கஷ்டம் இங்கேயும் அதிகமாகும்.

அந்த மாதிரி எல்லாம் ஆகாதபடி தடுக்க வேண்டுமா இல்லையா…?

ஏனென்றால் மனிதனுடைய வாழ்க்கையில் பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பண்புடன் அன்புடன் பரிவுடன் கேட்டுணரப்படும் பொழுது அவைகள் எல்லாம் நமக்குள் பிரம்மமாகின்றது. உடலுடன் உடலாக ஆக்கிவிடுகின்றது.

அப்படி ஆகவிடாமல் தடுக்க ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சேர்த்து இணைத்து அந்த வலுவைக் குறைக்க வேண்டும்.

“நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அருள் மகரிஷியாக வேண்டும்…!” என்பது தான் என்னுடைய ஆசை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னிடம் (ஞானகுரு) அதைத்தான் சொன்னார். அவர் காட்டிய அதே உணர்வைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம். உபயோகப்படுத்துங்கள்…!

சண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது…? இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…?

Third eye - மூன்றாவது கண்

சண்டை போடுபவர்களைப் பார்த்தாலே நமக்குப் பட படப்பு ஏன் வருகிறது…? இதயம் ஏன் படக் படக் படக் என்று துடிக்கிறது…?

 

இரண்டு பேர் சண்டை போடுபவர்களைப் பார்க்கிறீர்கள். ஆனால் அந்த இரண்டு பேரும் உங்கள் நண்பர்கள் தான் என்று பார்த்தவுடனே “இப்படிச் சண்டை போடுகிறார்களே…!’ என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள் வரும். அப்போது வெறுப்பும் வேதனையும் தோன்றும்.

அப்போது நீங்கள் நுகர்ந்த உணர்வை ஆட்சி புரிவது யார்…? உங்கள் உயிர் தான். இந்த உணர்வின் தன்மை அதிகமான நிலைகளில் வேதனை வேதனை என்று வெறுப்பும் வேதனையும் தனக்குள் உருவாகும் போது
1.இது விஷ உணர்வாக மாற்றப்பட்டு நமக்குள் எதிரியான நிலைகள் வருகிறது.
2.அடுத்து இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கப்பட்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னிக்குப் பாயும்.
3.அதிகமான உணர்ச்சிகளாகும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலை இல்லாதபடி
4.கிட்னி அப்படியே திறந்து விட்டு விடும். அசுத்தம் உள்ளுக்குள் போகிறது.
5.அப்போது இதயம் படக்… படக்… படக்…! என்று அடிக்கும்.

சண்டை போடுபவர்களைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மைகள் தனக்குள் வந்த பின் எதிர்பாராது
1.எனக்குப் படக்… படக்… என்று அடிக்கிறது.
2.எனக்கு அப்படியே பட… பட… என்று வருகிறது.
3.வெட… வெட,,, என்று உடல் ஆடிவிட்டது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
4.இவையெல்லாம் நமக்குள் உள் புகுந்து போகும் நிலை தான்.

நண்பன் சண்டை போடுவதைப் பார்த்திருப்போம். இந்த உணர்வு இதயத்தின் பக்கம் வரும் போதெல்லாம் அந்தப் பட படப்பு வரும். ஆனால் என்ன என்றே தெரியவில்லை…! என்பார்கள்.

அதே மாதிரி நாம் சந்தோஷமாக இருப்போம். நமக்குச் சம்பந்தமில்லாதபடி இரண்டு பேர் சண்டை போடுவார்கள். வெறுப்பும் வேதனையும் கொண்ட நிலைகளில் பேசுவார்கள்.

அதை நாம் பார்க்க நேர்ந்ததும் நம்மை அறியாமலேயே நம் உணர்வின் இயக்கம் மாறும். நமக்குள் பய உணர்வை ஏற்படுத்தும். எனக்குப் பயமாக உள்ளதே…! ஏன் என்று தெரியவில்லையே…! இதயம் பலவீனமாக இருக்கிறது என்பார்கள். இது உலக இயல்போடு வரும்.

உதாரணமாக ஒரு பேட்டரியை இயக்குவதற்கு அதற்குள் சில விஷப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். அந்த பேட்டரியில் இருக்கக்கூடிய அந்த விஷங்களைக் கொண்டு நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வின் தன்மையை இயக்கக்கூடிய நிலையில் கரண்டை உற்பத்தி செய்கின்றார்கள்.

மின்சாரத்தை அந்தப் பேட்டரிக்குள் (SOLAR CELLS AND BATTERY) முதலில் சேமித்து வைக்கின்றார்கள். எப்படி…? சூரியன் ஒளிக்கற்றையால் எடுக்கிறது. அதிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றையை இதில் இயக்கப்படும் போது இதிலே சேமிப்பு என்ற நிலைகள் வருகிறது.

ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கக்கூடிய நிலைகளில் வடிகட்டி அதிலே அழுத்தத்தை அதிகமாகக் கூட்டி ஒரு இயக்கச் சக்தியின் நிலைகளுக்குக் கொண்டு வருகிறார்கள்.

அதிலே உள்ள செல்களில் நெகட்டிவ் பாசிடிவ் என்ற நிலைகளை வைத்து இயந்திரங்களையே ஓட்டச் செய்கிறார்கள். ஆனால் எதிலிருந்து உற்பத்தி ஆகிறது…?
1.இதிலிருக்கக்கூடிய ஆசிட் மற்றவைகளுக்கு எதிரியாகும் போது
2.பொறி கிளம்புகிறது… கரண்ட் உற்பத்தியாகிறது…!

இதைப் போல தான் முதலில் சொன்ன மாதிரி நம்முடைய சகஜ வாழ்க்கையில் எதிர் நிலையான உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் நம் உடலிலே எடுக்கப்படும் போது அது உடலிலே வீரிய உணர்வுகளாக மோதப்படும் போது உணர்ச்சியின் வேகங்களைக் கூட்டுகிறது.

அதாவது பேட்டரியில் பாசிடிவ் நெகடிவ் என்ற் மோதலாகும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் அந்த ஆற்றல் மின்சாரமாக (இயக்கச் சக்தியாக) தோன்றுவது போலத் தான் நமக்குள்ளும் தோன்றுகிறது.

ஆகவே நம் உடலில் அத்தகைய எதிர்ப்பு நிலைகளை உருவாக்கும் சக்தி வரும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

இதை அடக்க வேண்டும் என்று சொன்னால் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துப் பழக வேண்டும். துருவ நட்சத்திரத்தைப் பற்றிப் பல முறை உபதேச வாயிலாக உங்களிடம் பதிவு செய்திருக்கின்றோம்.

“ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது இது முக்கண் ஆகிறது. இதன் வழி இழுத்துப் பழக வேண்டும்.

ஏனென்றால் புறக்கண்ணால் நாம் கவருவது நம் ஆன்மாவாக மாறுகிறது. சுவாசித்தவுடன் உயிரிலே படுகின்றது. சுவாசித்ததை உயிர் அகக்கண்ணாக இருந்து உணர்த்துகிறது.
1.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகொப்பத் தான் எண்ணங்கள் வருகிறது.
3.அந்த உணர்ச்சிகொப்பத் தான் நம்முடைய செயலும் வருகிறது.

ஆகவே மற்றவர்கள் செய்யும் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் சேரும் பொழுது
1.உடனே அந்த உணர்வின் வேகத்தைக் கூட்டாது
2.”ஈஸ்வரா…!” என்று நாம் கண்ணின் நினைவை உயிருடன் (புருவ மத்தியில்) இணைத்து முதலில் நிறுத்திப் பழக வேண்டும்.

(ஏனென்றால் உணர்வின் வேகத்தைக் கூட்டும் பொழுது தான் நமக்குப் பட படப்பும் இதயம் படக் படக் என்று அடிப்பதும் மற்ற உணர்ச்சி வசப்படும் நிலைகள் எல்லாமே வருகிறது – இது முக்கியம்)

அப்பொழுது அந்த அழுத்தம் வரும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதனுடன் இணைத்து இதன் வழி கவருதல் வேண்டும்.

ஏனென்றால் இந்த உணர்ச்சியின் உணர்வுகளை புருவ மத்தியில் செலுத்தும் போது அதன் வலு கூடும். வலு கூடிய பின் தீமைகள் தடுக்கப்படுகின்றது.

தீமைகள் உள் புகாது தடைப்படுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்…?

யார் தவறு செய்கிறார்களோ அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். உண்மையின் உணர்வை அறியும் திறன் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் செயலெல்லாம் நல்ல நிலை பெற வேண்டும் என்று இவ்வாறு ஒவ்வொரு குணங்களுக்குத் தக்கவாறு நாம் தியானிக்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் மகரிஷிகளின் உணர்வுகளையும் நமக்குள் சேர்க்கும் போது இதற்கு முன்னாடி உடலுக்குள் இருந்த பகைமை உணர்வுகளும் பய உணர்வுகளும் தணிக்கப்படுகின்றது.

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்டாலே அந்தத் தீமையை அடக்க “ஈஸ்வரா…” என்று சொல்லி கண்ணின் நினைவை உயிருக்குள் கொண்டுவர வேண்டும். இந்தப் பழக்கம் அவசியம் வர வேண்டும்.

ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…!

lordshivaandparvathi

ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! 

 

நம் வாழ்க்கையில் பார்ப்பதை எல்லாம் சதாசிவமாக்கிக் கொண்டு வருகிறோம். அதாவது உடலாக ஆக்கிக் கொண்டேயுள்ளோம்.

உதாரணமாக ஒரு நோயால் அவதிப்படுவோரை உற்றுப் பார்த்து நுகர்ந்த உடனே
1.உயிரிலே பட்டு “ஓ…!” என்று பிரணவமாகி “ம்…! என்று நம் உடலாக ஆகின்றது. – அது தான் “ஓ…ம் நமச்சிவாய…!”
2.அடுத்து அவரிடம் நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்தவுடனே நோயால் வாடிக் கொண்டிருக்கின்றார்… என்று திருப்பிச் சொல்கிறோம். – அது “சிவாய நம ஓ…ம்…!

அதே போல் ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று காதில் கேட்கிறோம். திட்டும் உணர்வை நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய…! அந்த உணர்வை நுகர்ந்த பின் திட்டியவனைச் சும்மா விடுவதா…? விடக்கூடாது…! என்று திருப்பிச் சொல்கிறோம். அது சிவாய நம ஓ…ம்.

நோயுடன் வாடுபவரைப் பார்த்ததும் அடடா…! இந்த மாதிரி வேதனைப்படுகிறார் என்ற அந்த உணர்வின் தன்மையை நாம் எடுக்கின்றோம். அதே உணர்வு நமக்குள் விளைகிறது. ஒருவர் திட்டினால் அவருக்குப் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அதே கோப உணர்வை எடுக்கின்றோம். அதுவும் நம் உடலில் விளைகிறது.

நம்முடைய வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் இப்படிப்பட்ட உணர்வுகளைத்தான் சதாசிவமாக்கிக் கொண்டு இருக்கின்றோம்.
1.ஆனால் மனித உடல் பெற்றது என்பது பரசுராம்.
2.அதாவது சமப்படுத்தும் நிலைகள் பெற்றது தான் நம்முடைய மனித உடல் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காய்கறிகளை வேக வைக்கிறோம். சமைக்கும் பொழுது அதிலே பல சரக்குகளைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகிறோம்… பரசுராம். அதே போல பலராம். அதாவது பலருடைய எண்ணங்களை நன்மை தீமை என்ற நிலைகளில் நாம் கேட்டு அறிகிறோம்.

ஆனாலும் நாம் செய்யும் நன்மைகளைக் காக்க வேண்டும் என்றால் அந்தத் தீமைகள் விளையாது தடுக்க (சமப்படுத்த) வேண்டும். தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்துச் சமப்படுத்தும் பொழுது அந்தத் தீமைகள் தணிகிறது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

கொஞ்ச நாள் இதைச் செய்து பழகிவிட்டால் போதும். நீங்கள் சொல்ல வேண்டாம். தன்னாலேயே மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…! என்று உங்களைச் சொல்ல வைக்கும்.

1.கஷ்டங்கள் வரும் பொழுது இதற்கு முன்னாடி சொல்லி இருந்தால் ஐயய்யோ அம்மம்மா…! என்று சொல்வார்கள்.
2.இப்போது ஈஸ்வரா… என்று உயிரின் மீது நினைவுகள் வரும்
3.அப்படி நினைவு வரும் பொழுது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டீர்கள் என்றால்
4.இது சிவமாகின்றது… ஒ…ம் நமச்சிவாய…! உடலுக்குள் ஞானிகணின் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

வேதனையோ கோபமோ பயமோ எது வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை இணைத்து விட வேண்டும்.

இப்படி இணைத்துப் பழகி விட்டீர்கள் என்றால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும். உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும். ஆக துன்பத்தைப் போக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளைகிறது.

1.துன்பத்தையும் துயரத்தையும் காணும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் உணர்வுகள் விளைகிறது.
2.துன்பத்தை அகற்றிய மகரிஷிகளின் உணர்வுகளை இணைத்து விட்டீர்கள் என்றால் துன்பத்தை அடக்கும் சக்தி கிடைக்கின்றது. – பரசுராம்.
3.தியானம் என்பது இது தான்.

இதைச் செய்யாதபடி யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மை வரும் பொழுது… இந்த உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே கொண்டு செல்லும்.

நம் கண்ணின் நினைவு கொண்டு எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுவை நமக்குள் சேர்க்கின்றது.
1.வான மண்டலத்தில் நினைவு செல்லும் பொழுது அங்கே தான் நாம் செல்வோம்.
2.அந்த உணர்வின் தன்மை ஆகும் பொழுது அது தான் கூர்மை அவதாரம்.

கண்ணன் என்ன செய்கின்றான்..,? அர்ச்சுனனுக்குக்ச் சாரதியாகப் போகின்றான். உதாரணமாக வேதனைப்படும் உணர்வுகளை எடுத்தால் அது வலிமையாகி அர்ச்சுனனாகின்றது. கண்ணன் சாரதியாகின்றான். வேதனை உணர்வை நமக்குள் சேர்க்கின்றோம்.

ஆனால் அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அது அர்ச்சுனனாகி வலிமையாகின்றது. அந்தக் கண்ணன் அங்கே அழைத்துக் கொண்டு போகின்றான்.
1.எதனின் உணர்வு வருகிறதோ அதற்குத் தக்க அந்தக் கூர்மை…
2.அதனின் வலுவாக நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது.
3.மகாபாரதத்தில் இதைக் கீதா உபதேசமாக வியாசகரால் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

நான் (ஞானகுரு) ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. அவர்கள் சொன்னதைத்தான் திருப்பிச் சொல்கிறோம். விளக்கமாகச் சொல்கிறோம்… அவ்வளவு தான்…!

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்”

Meditationg time

தியானத்தின் மூலம் கிடைக்கும் “மன பலம்” 

 

நாம் பரிவு பண்பு அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம். ஒருவர் “ஐயா பசிக்கிறதே…! என்று கேட்கிறார். அந்த வேதனையான உணர்வை நாம் நுகர்கிறோம். இரக்க உணர்வு கொண்டு அவருக்கு உதவியும் செய்கிறோம்.

அவர் எந்த வேதனையிலிருந்து அந்த சோகக் குரலில வருகிறாரோ அந்தச் சோக உணர்ச்சியைத் தூண்டும் அணுவாக நமக்குள் விளைந்து விடும். இது சிவமாகின்றது. (சிவம் என்றால் உடல்)

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் ஒருவர் கோபமாக மற்றொருவரை உதைக்க வேண்டும் என்று கோபமாகப் பேசுகின்றார். கண்ணில் பார்க்கிறோம். அப்பொழுது அந்தக் கோப உணர்ச்சிகள் ஓ…ம் நமச்சிவாய…! என்று இது நம் உடலில் ஆகிறது.

அந்த உணர்வுகள் நமக்குள் வந்த பின் குறை காணக் கூடிய நிலையாகிவிடுகிறது. அதே உணர்வுடன் வந்ததும் வீட்டில் உள்ள நம் குழந்தையை உதைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த உணர்வுகள் நமக்குள் சிவமாகின்றது. இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் உடலாகிக் கொண்டேயிருக்கிறது.

வேதனைப்படுகிறான்…! என்ற நிலையில் உதவி செய்தாலும் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும…? ஈஸ்வரா… என்று நம் உயிரிடம் வேண்ட வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.அவன் வேதனைப்பட்ட உணர்வை இதனுடன் சேர்த்துத் தணிக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அணுவாக மாற்ற வேண்டும்.
3.அதை நம் உடலாக்க (சிவமாக்க) வேண்டும்.

இப்போது சொல்வது அர்த்தம் ஆகின்றதல்லவா…? அடுத்து நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

யார் வேதனைப்பட்டார்களோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். துன்பத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று இந்த உணர்வின் ஒளியைப் பரப்பி விட வேண்டும்.

கஷ்டப்படுகிறான் என்ற நிலையில் அவனுக்குச் சாப்பாடோ பணமோ கொடுத்தாலும் அது எவ்வளவு நேரத்திற்கு இருக்கும்….? அன்றைக்குத் தான் சரியாகும். அடுத்தாற்போல நீங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா…? முடியாது…!

ஆகவே அவனுடைய துன்பத்தின் உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுத்தல் வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீ பெற வேண்டும்.
2.உன்னுடைய எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
3.நீ நன்றாக இருப்பாய்…! என்ற இந்த உணர்வை வித்தாக அவனுக்குள் போட்டு விட்டு விட வேண்டும்.

அதை எண்ணினால் அவனுக்குக் கிடைக்கும். எண்ணவில்லை என்றால் கிடைக்கவில்லை. ஆனால் இந்த வித்தை நீங்கள் அங்கே ஊன்ற வேண்டும்.

இதே மாதிரி நண்பர்கள் நோயாக இருக்கிறார்கள். பார்த்தவுடனே அவர்கள் நோயைப் பற்றி அறிந்து கொள்ள விசாரிக்கின்றீர்கள். அந்த நோயை விசாரிக்க விசாரிக்க உங்கள் உயிரிலே அந்த உணர்ச்சிகள் பட்டவுடனே சோர்வு அடைந்து விடுகின்றீர்கள்.

சோர்வடைந்தவுடனே சோர்வடையச் செய்யும் அந்த அணுவாக உங்களுக்குள் விளைகிறது. அந்த நண்பரின் உடலில் விளைந்த உணர்வுகள் அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அதே சத்தை எடுத்து மீண்டும் நமக்குள் விளைய தொடங்கி விடும்.

அப்படியானால் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டவுடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

“ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும். இரண்டு நிமிடமாவது இப்படிச் செய்ய வேண்டும்.

1.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நண்பன் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.மகரிஷியின் அருள் சக்தியால் அவன் நலமாக வேண்டும் என்று சொல்லி விட்டு
3.இதை விட்டு விட வேண்டும்.
4.இப்படிச் செய்யப்படும் போது இந்த உணர்வு கலந்து வலிமை பெற்ற உணர்வுகள் உங்களுக்குள் சேரும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் எடுப்பதற்குச் சக்தியைக் கொடுக்கிறேன் (ஞானகுரு) இந்த உபதேசத்தின் மூலமாக…!

திட்டியவர்களைத் திருப்பி எண்ணும் போது பதட்டமும் கோபமும் வருகிறது அல்லவா…! அதே மாதிரித்தான் அந்த அருள் ஞானத்தை நீங்கள் பெறக்கூடிய தகுதியையைத்தான் பதிவாக்குகிறேன்.

மீண்டும் நீங்கள் நினைவாக்கும் பொழுது உங்கள் கண்ணுக்கு வந்து அந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்க முடியும். அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி எடுத்துக் கலந்து பழக வேண்டும். இப்படிக் கலந்து பழகினால் தான் தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் அடக்க முடியும்.

1.ஆனால் நோயாளியைப் பார்த்து எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு
2.அப்புறம் வீட்டிற்கு வந்து எல்லாம் நல்லதாக வேண்டும் என்று நினைத்தால்
3.நோயைப் பற்றிக் கேட்டறிந்தது உடலுக்குள் முதலில் அணுவாகிறது.
4.இரண்டாவது தடவை இதை மாற்றிக் கொண்டு போவதற்கு ரொம்ப சிரமம்.

ஏனென்றால் தன் நண்பன் நோயால் வாடுகிறான் என்று அதைப் பற்றுடன் பற்றும் போது தவறி உள்ளே (உடலுக்குள்) போய்விட்டது.
1.உடலுக்குள் போனதைக் குறைந்த பட்சம் அது அணுவாக உருவாவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நிமிடமாவது எடுத்து உடலுக்குள் பாய்ச்சி விட வேண்டும்.
3.இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விடுங்கள். தீமைகள் வளராது.

ஏனென்றால் ஒரு செடி வளரும் பருவத்தில் அந்தச் செடியோடு உரத்தை இணைத்து விட்டோம் என்றால் நன்றாக இருக்கும். ஆகவே தீமையின் உணர்வுகள் நமக்குள் வளராது அப்போதைக்கப்போது மாற்றிக் கொள்ளுங்கள்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

எண்ணியது நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

energy boosts

எண்ணியது நடக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

மாடு ஆடு இவைகள் எல்லாம் அதிலே ஒன்று செத்துப் போனது என்றால் பார்த்து விட்டுப் போகும். ஒரு யானையாக இருந்தாலும் தன் இனம் செத்துப் போனது எனறால் ஒன்று சேர்ந்து கூட இருந்து விட்டுப் போகும். வேறு ஒன்றும் செயல்படுத்த முடியாது.

ஆனால் புலி ஓநாய் இதுகளை எல்லாம் பார்த்தோம் என்றால் மோந்து பார்க்கும். நல்ல இரையாக இருக்கிறதா…? அல்லது கெட்டுப் போய்விட்டதா…? நமக்கு ஏதாவது இரைக்கு ஆகுமா…? என்று இந்த உணர்வின் தன்மையை அது நுகர்கின்றது. கொன்று புசிக்கும் உணர்வு கொண்ட உயிரினங்கள் இப்படித்தான் நுகர்ந்து பார்க்கும்.

1.சாந்தமான மிருகங்கள் பார்த்துவிட்டுப் போகிறது.
2.ஆனால் கொன்று புசிக்கும் மிருகங்களோ தனக்கு இரைக்கு ஆகுமா…? என்று பார்க்கிறது.
3.காட்டுக்குள் வைத்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த இரண்டு வித்தியாசத்தையும் காட்டுகிறார்.
4.இது எல்லாம் அனுபவபூர்வமாகக் கொடுத்தது.
ஆகவே நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களைச் சந்திக்கின்றோம். அதன் வழியில் வளர்த்துக் கொண்ட பல கோடி குணங்கள் நம் உடலுக்குள் உண்டு.

ரோட்டில் போகும் போது ஒருவன் வேதனைப்படுகின்றான். பார்த்தவுடனே அடப்பாவமே…! நல்ல மனிதனாக இருக்கின்றான்… இப்படி ஆகி விட்டதே…! யார் பெற்ற பிள்ளையோ…? என்று
1.பரிவு கொண்ட மனமும் இரக்கம் கொண்ட குணமும் தர்மம் செய்யும் எண்ணங்கள் கொண்டவர்களுக்கு
2.இத்தகைய எண்ணங்களைத்தான் எண்ணி ஏங்கிப் பெறச் செய்கிறது.
3.இந்த எண்ணம் இருந்தால் தான் நாம் அவனுக்கு உதவியே செய்வோம்.
4.இல்லை என்றால் அசுர குணங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு போய் கொண்டே தான் இருப்போம்.
5.உதவி செய்தாலும் அவன் பட்ட வேதனையான உணர்வுகளை நமக்குள் நுகர்ந்ததைத் தூய்மைப்படுத்துகின்றோமா…? என்றால் இல்லை.

இதை யாரும் செய்வதில்லை. உதவி செய்தோம் என்று அப்படியே சென்று விடுகின்றோம், ஆனால் நுகர்ந்த வேதனை நம்மையும் வேதனைப்படச் செய்யும் என்று அறியவில்லை.

அடுத்தாற்போல் நாம் செயல்படுத்தும் காரியத்தில் தோல்வி அடைந்து விட்டால் என்ன நினைக்கின்றோம்…? எல்லோருக்கும் நான் உதவி செய்தேனே…! எனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற நிலையில் (முதலிலே நாம் சுவாசித்த) அந்த வேதனை உணர்வுகள் இயக்கி நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

சோர்வு என்ற நிலைகள் உருவாக்கப்படும் போது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது…! சிந்திக்கும் தன்மை மாற்றம் ஆகப்போகும் போது அடுத்து தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் “விஷமாகின்றது…!”

இப்படி அந்த வேதனை என்ற உணர்வு மூன்றும் சேர்த்து கருவாக்கி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது. மீண்டும் நான் நினைத்தேன்… வரவில்லையே…! என்று எண்ணுவதும் சாமி (ஞானகுரு) சொன்னார்… இது கிடைக்கவில்லையே…! என்றுதான் அப்பொழுது எண்ணுவீர்கள்.

அதை வளர்த்துக் கொண்டால் கீழே தான் போக முடியுமே தவிர உயர்ந்த நிலை பெற முடியாது.
1.சாமியை எண்ணுவீர்கள்.
2.ஆனால் சாமி சொன்னதை விட்டுவிடுவீர்கள்.

வயலில் களை முளைத்திருக்கிறது. அந்தக் களையை எடுங்கள்… என்று சொன்னால் களையை எடுப்பதற்குப் பதில் நல்ல செடி முளைத்தைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…?

நல்ல வித்தினை விவசாயப் பண்ணைகளில் வாங்கி விதைக்கின்றீர்கள். வளர்ந்த நிலையில் அதிலே இருக்கும் களைகளை எடுங்கள் என்று சொன்னால் முளைத்த நல்ல செடியையும் சேர்த்துப் பிடுங்கி விட்டால் எல்லாம் போய்விடுமல்லவா…!

அது போல் அருள் ஞானிகளின் வித்துக்களை உங்களுக்குள் ஆழமாக ஊன்றியுள்ளோம். களை (தீமைகளை) நீக்கும் போது களைகளை நீக்குவதற்குப் பதில் நல்லதையே வீழ்த்தி விடுகின்றோம். ஏனென்றால்
1.நல்ல குணத்துடன் இருக்கும் நாம் உயர்ந்த நிலைக்குச் செல்லப்படப்போகும் போது
2.சந்தர்ப்பத்தால் தீமையான உணர்வுகள் நமக்குள் கலந்தவுடன் அந்த நல்லதை அடக்கி விடுகின்றது.
3.அடக்கி விட்டால் மீண்டும் நினைவு எதிலே வரும்…?
4.ஒரு காரியத்தில் இறங்கும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும்.
5.வேதனை என்ற நிலைகளை உருவாக்கிக் கொண்டு இருக்கும்.

நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்ற நிலையில் விஷமான உணர்வை இணைத்து விட்டால் நமக்குள் இருக்கும் நன்மைகளைப் பிரித்தேவிடும். நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி ஆக்கிவிடும்.

அப்பொழுது அந்தத் தீமைகளே நம் உடலில் அதிகமாக விளையும். இதைத் தடுக்க வேண்டுமல்லவா…! சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வை எடுத்து வரும் தீமைகளிலிருந்தெல்லாம் மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்துத்தான் மனிதனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றும் வந்திருக்கின்றோம்.

ஆனால் இத்தனையும் கடந்து வந்த நிலையில் தன் இச்சையின் உணர்வு கொண்டு நிறைவேறவில்லை என்று மீண்டும் சோர்வும் வேதனையும் இது உருவாக்கும் அணுவின் தன்மை வரப்போகும் போது நல்ல குணங்களை அடக்கிவிடுகின்றது.

நல்லதை அடக்கிய பின் அதனுடன் இணைந்து செயலாக்கும் உணர்வின் கருவாக உடலுக்குள் நம் உயிர் உருவாக்கி விட்டால் நாம் நல்லதைச் செயல்படுத்த முடியாது.

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா..! என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தடுக்க வேண்டும் என்று பல முறை சொல்லியிருக்கின்றேன்.

அரும் பெரும் சக்தியாக ஆத்ம சுத்தி என்ற கடுமையான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்து இருக்கிறேன். ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி இணைத்துக் கொள்ளுங்கள்.

சிரமம் வரும் பொழுதெல்லாம் இப்படி அந்த வேதனை என்ற உணர்வை அடக்கி அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் நம் எண்ணம் என்ன செய்யும்…? அந்தத் துருவ மகரிஷியை எண்ண வைக்கும். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும்.

ஆகவே அந்த ஞான வித்தினை இப்படிப் பக்குவப்படுத்தி வளர்த்தால் அருள் வாழ்க்கை வாழச் செய்யும். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

கஷ்டங்கள் வந்தால் “ஈஸ்வரா…..” என்று ஒரு புருவ மத்தியில் பிரேக் (BRAKE) போட்டுத் தடுத்து நிறுத்துங்கள்….!

Intuition-Third-Eye (2)

கஷ்டங்கள் வந்தால் “ஈஸ்வரா…..” என்று ஒரு புருவ மத்தியில் பிரேக் (BRAKE) போட்டுத் தடுத்து நிறுத்துங்கள்….!

 

ஒவ்வொரு நிமிடத்திலும் வீட்டில் ஏதாவது “குறைபாடுகள்” வரும். வீடு என்று இருந்தாலே
1.நீங்கள் எப்படி எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும் கூட
2.எவ்வளவு நல்லது செய்தாலும் கூட இந்த நிலை வரும்.

ஆகவே அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

சந்தர்ப்பத்தால் சங்கடத்திலேயோ சலிப்பிலேயோ வெறுப்பிலேயோ ஆழ்த்தக்கூடிய நிலைகள் நமக்குள் வந்தால்
1.மூக்கின் வழியாகச் சுவாசம் போய்
2.உயிரில் பட்டுதான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அப்போது நமக்குள் அந்தச் சங்கடம் என்ற எண்ணம் வரும் போது என்ன நடக்கின்றது…?
1.இந்த ஆன்டெனா (ANTENNA) நம் கண்கள் அதை இழுக்கின்றது.
2.நம் ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருந்து கவர்ந்து சுவாசத்திற்குள் வருகின்றது.

அப்போது அந்த கெட்ட அணுக்கள் தான் வளர்கின்றது. நாம் சிந்திக்கும் தன்மை போய்விடுகின்றது.

அந்த இடத்தில் அதை உடனடியாகத் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

1.”ஈஸ்வரா….” என்று சொல்லி ஒரு “பிரேக்….!” (BRAKE போட வேண்டும்)
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் “உயிருடன் ஒட்டி”
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும்
(ஒரு வினாடிக்குள் இந்த மாதிரி இப்படி “பிரேக்” இட வேண்டும்)

அப்போது என்ன நடக்கின்றது…?

அந்த சங்கட அலை புகாது தடுத்து வெளியிலே உந்தித் தள்ளி விடுகின்றது. உள்ளுக்குள் போகாது.

ஏனென்றால் உயிரில் பட்டால் தான் உயிர் அந்தச் சங்கட உணர்ச்சிகளை இயக்கும்,
1.நெருப்பில் ஒரு பொருள் பட்ட பிற்பாடுதான் அந்த வாசனை வருகின்றது.
2.அதே மாதிரி நம் உயிரில் (நெருப்பில்) படாமல்
3.தீமைகளைத் தடுத்துப் (BRAKE) பழக வேண்டும்.

இப்படிப் பழகிக் கொண்டால் அப்புறம் இதன் வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளியை நமக்குள் இழுக்க வேண்டும்.

1.“உயிர் வழி சுவாசம்” என்பது இது தான்
2.”ஆக்ஞை” என்பதும் இது தான்
3.”பிராணாயாமம்” என்பதும் இது தான்
4.”யோகா” என்பதும் இது தான்
5.”மூன்றாவது கண்” திறப்பது என்பதும் இது தான்
6.”மூலாதாரம் குண்டலினி” என்பதும் இது தான்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…!

Divine energy and Power

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எடுத்து அடிக்க அடிக்க நமக்குள் வரும் பேராற்றல்கள்…! 

 

குடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து நம் குடும்பத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அதைத் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு வந்த நிலை அல்ல. தாய்க் கருவில் நாம் சிசுவாக இருக்கும் போதே எத்தனையோ நிலை வந்திருக்கிறது.

நாம் ரோட்டில் போகின்றோம். அங்கே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு சாபமிட்டிருப்பார்கள். அந்த அலைகள் அங்கே இருக்கும். நாம் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகின்றது.

ஆனால் நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் “எத்தனையோ விதமாக… எத்தனையோ வகையில்…!” பதிவாகி இருக்கும். அதெல்லாம் மிகச் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக நீங்கள் கேமராவில் படம் எடுக்கின்றீர்கள். அப்பொழுது ஊடே குறுக்கே யாராவது வந்தால்… படத்தில் சேர்ந்து பதிவாகின்றது அல்லவா…!

அதே மாதிரி ஒரு ஒலிப் பதிவைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஊடே யாராவது சத்தம் போட்டார்கள்… என்றால் அதுவும் சேர்ந்து தான் பதிவாகும்.

இதே மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தும் ஊழ்வினை என்ற வித்தாக நம் எண்ணமுடன் சேர்த்துப் பதிவாகும்.
1.அந்த நேரத்தில் வேறு எண்ணத்தில் நாம் இருந்தாலும்
2.இந்த உணர்வு நமக்குள் ஊடுருவுவது தெரிய வரும்.

உதாரணமாக அது சாப அலையாக இருந்தாலும் நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாக வரும். ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்றாலும் மற்றவர்கள் சண்டையிட்டுச் சாபமிடும் உணர்வுகளை நாம் செவி கொண்டு கேட்டவுடனே அதுவும் நம் நல்ல குணத்துடன் இணைந்து கொள்ளும். (JOINT)

எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி ரோட்டிலே பேசினார்களோ அது எல்லாமே இணைந்து வரும். ஏனென்றால் அந்த உணர்வின் ஒலி அலைகள் வரும் போது
1.சுவாசத்தின் வழியாக அது நம் உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு
2.நம் உடலிலிருந்து மணமாக வெளிப்பட்டு நமக்கே எதிரியாக வரும்.
3.இப்போது இதைத் துடைப்பது யார்…?

இவ்வாறு இயற்கையின் நிலைகளில் வளர்ச்சி அடைந்தது தான் பல எண்ணங்கள். அதைத்தான் பலராமன் (ராமன் என்றால் எண்ணங்கள்) என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
1.ஆகவே பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக
2.அந்த எண்ணங்களின் இயக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது.

உணர்த்தினாலும் எப்போது தீமை என்று உணர்கின்றமோ அதை நம் உடலுக்குள் போகாதபடி இங்கேயே பிளக்க வேண்டும். அது தான் நரசிம்மா…!

தீமைகளை நம் ஆன்மாவிலிருந்து பிளக்க வேண்டும் என்றால் உயிர் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் போகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது. நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாளைக்குச் செய்து பழகி விட்டோம் என்றால் தன்னிச்சையாக வரும்.

ஆனால் முந்தைய பழக்கத்தில் எடுத்துப் பழகிய மற்ற உணர்வுகள் நமக்குள் வலுவாக இருக்கும். ஏதாவது சொல்லிட்டாலும் சரி அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம்.

அப்படிப்பட்ட நேரத்தில் அதாவது அது வலுவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு வந்தாலும் கூட
1.அது இடைவேளியில் வந்து தடுக்கும்.
2.(ஆத்ம சுத்தி செய்யவிடாமல் எண்ணங்களை மாற்றும்)
3.அதையும் நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்.

அப்பொழுது சுதாரித்து மீண்டும் “ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி…!” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வலுவாக எடுத்து அந்தத் தீமையைப் பிளக்க வேண்டும். அப்போது அந்த உணர்வுகள் நமக்குத் தோன்றும்.

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். ஆனால் முதலில் நல்ல தண்ணீரை ஊற்றினால் அழுக்கு தண்ணீருடன் கலந்து அழுக்குத் தண்ணீராகத் தான் தெரியும். நல்லதை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் முழுவதும் குறைந்து விடும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க இது பெருகும். இது முழுமை அடைந்துவிட்டது என்றால் அது தன்னிலை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

இந்தத் தியானம் செய்வதற்கு முன்னாடி நம் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளைப் பார்த்துப் பதிவாக்கி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது துடைக்கிறோம். மீண்டும் அது வருகிறது.
1.அது வந்து கொண்டே தான் இருக்கும்.
2.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
3.இன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து விடுகிறோம் என்றால் மறு நாள் மீண்டும் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?
4.சுத்தமான பாத்திரங்களை வைத்துச் சமைத்தாலும் மீண்டும் சமைக்கும் பொழுது அந்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா…?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையில் எது வந்தாலும் அதைத் தூய்மையாக்கும் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
1.அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச் செய்யும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையின் பற்று அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றுகிறது.
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.
4.பற்று அங்கே வரப்போகும் போது இங்கே பூமியில் பற்றற்றுப் போகும்.

இதை நாம் செய்து பழக வேண்டும். அப்படிச் சென்றவர்கள் தான் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக ஏகாந்தமாக வாழ்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த உடல் நமக்கு நீடித்த நாள் சொந்தம் அல்ல.

1.இன்று நமக்குச் சொந்தமாக இருக்கிறது.
2.இந்த உடலை வைத்து நிரந்தரமான சொந்தத்தை அந்த ஒளி உடலை நாம் உருவாக்க வேண்டும்.
3.பிறவியில்லா நிலை என்ற அந்தச் சொந்தத்தைக் கொண்டாட வேண்டும்.

விண்ணில் வரக்கூடிய நஞ்சினையும் ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் இந்த உடலை வைத்துத்தான் பெற வேண்டும். இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரம்.

ஆனால் முந்தைய செயல் இன்றைய சரீரம். கடவுளின் அவதாரத்தில் வராகன் தீமைகளை அகற்றி நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்தது.

தீமைகளை அடக்கும் கூர்மையான எண்ணம் கொண்டு கடுமையான சாக்கடையைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்தது. தீமையைப் பிளந்த உணர்வுகள் விளைந்து தீமையை நீக்கும் உடலாக மனித உருப் பெற்றது.

இதைப் போல தான் நமக்கு முன்னாடி இன்று இருக்கும் இந்த காற்று மண்டலம் ஒரு சாக்கடை. அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் மிதந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் வரும் தீமைகளை எண்ணாது அதைப் பிளந்து அருள் ஞானிகளின் உணர்வை நாம் வலுக் கொண்டு எடுக்க வேண்டும். உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
1.இந்த நிலையை ஒவ்வொருவரும் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.
2.எல்லா நலமும் எல்லா வளமும் பெறுவீர்கள்.