மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?

மெய் ஞானிகள் மனிதரைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன…?

 

அன்று மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்றபின்
1.அந்த அலையின் தொடரைத் தன்னுடன் கூடிய மக்களின்பால் அந்த உயர்ந்த சக்தியை அங்கேயும் பதியச் செய்து
2.அவர்கள் உடலிலே ஆரோக்கிய நிலைகளை வரச்செய்து அதன்பால் அவர்களிடம் நல்ல எண்ணங்களை வெளியிட்டபின்
3.அந்த உணர்வின் சத்தின் துணை கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டார்கள்.

எனென்றால் தனக்குக் குழந்தைகள் இல்லையென்றாலும் இந்தப் பூமியிலே இருப்போருடன் இணைந்து பலருடைய எண்ணங்களிலும் விண்ணின் சக்தியைப் பாய்ச்சச் செய்தனர்.

காரணம்… கடந்த கால மகரிஷிகள் எல்லோருமே உடலை விட்டுச் செல்லும்போது அவர்கள் விண் செல்லுவதற்குத்தான் இவ்வாறு செய்தார்கள்.

போகரோ வான்மீகியோ வியாசரோ அகஸ்தியனோ அவர்களைப் போன்று எண்ணிலடங்காத மகரிஷிகள் எல்லோருமே
1.தமக்குள் பெற்ற ஆற்றலைச் சாதாரண மக்களின் மத்தியிலே தன் உணர்வின் சொல்லாலே அங்கே பாய்ச்சப்பட்டு
2.அவர் உடல்களில் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளை மாற்றி
3.நல்ல சொல்களை அவர்களிடமிருந்து வெளிப்படச் செய்து
4.அவர்கள்பால் அந்த நல்ல எண்ணங்களை ஈர்த்துக் கொண்டார்கள்.

இப்போது யாம் உங்களுக்கு ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று எண்ணும்போது அந்த நன்மையின்பால் எம்மைப் பார்க்கின்றீர்கள். இவரால் நல்லது நடந்தது என்று நீங்கள் எண்ணும் எண்ண அலைகள் ஒன்று சேர்த்துக் கலக்கிறது.
1.உங்களது உணர்வின் எண்ணம் எமக்குள் பதிவாகின்றது.
2.எமது எண்ணம் உங்களுக்குள் நல்லதை உருவாக்குகின்றது.

அப்படி நல்லதை உண்டாக்கப்படும் போது அந்த உணர்வு கொண்டு யாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் நீங்கள் எல்லோரும் எண்ணும்போது யாம் விண் செல்ல முடிகின்றது.

இப்படித்தான்
1.அன்றைய மெய் ஞானிகள் ஒளிச் சரீரம் பெற்று விண் சென்றார்கள்.
2.ஆகவே நாம் அனைவரும் அவர்கள் சென்ற வழியிலேயே விண் செல்வோம்.

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான்

 

அகஸ்தியர் தன் தாய் கருவிலேயே நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று அகண்ட அண்டத்தையும் தன்னுள் நுகர்ந்து ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றார். அதன் அறிவைத்தான் செவி வழி ஓதி உங்கள் நினைவினை அங்கே அழைத்துச் செல்வது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வரிசைப்படுத்தி
1.அதனுடன் சுழன்று உங்கள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது
2.அகண்ட அண்டத்தில் வருவதையும் உங்கள் உணர்வுக்குள் அது பெறும் உணர்ச்சியின் நிலையை
3.அணுவாக மாற்றும் நிலையாக உருப்பெற்று விட்டால் தன்னிச்சையாக அது நுகரும் சக்தி பெறுகின்றது.
4.உங்களால் நினைத்த நேரத்தில் அகண்ட அண்டத்தினையும் அதன் செயலாக்கங்களையும் காண முடியும்.
5.அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பகைமை உணர்வு வராது “பேரின்ப உணர்வினை” உங்களுக்குள் உருவாக்க முடிகின்றது.

எமது அருள் குரு அருளால் கிடைத்தது. குரு அருள் பேரருளைக் கவர்ந்து அவர் உணர்வு என்னைப் பக்குவப்படுத்தியது போல் உங்களைப் பக்குவப்படுத்துகின்றேன்.

இதில் எவர் ஒருவர் தொடர்ந்து வருகின்றாரோ அவர் இவ்வாழ்க்கையைச் சீர்படுத்தி வாழவும்… அடுத்து என்றும் பிறவியில்லா நிலைகளை அடையவும் இது உதவுகின்றது.

1.குறுகிய காலமே இருக்கும் இந்த உடலுக்கு வலுவைச் சேர்ப்பதைக் காட்டிலும்
2.உயிருக்கு அருள் ஒளி என்ற வலுவை உருவாக்குதல் வேண்டும்.

இது தான் வாழ்வின் கடைசி எல்லை.

ஒளியின் உணர்வாக உருவாக்கப்பட்டது உயிர். ஆறாவது அறிவின் துணை கொண்டு “நம் அணுக்களை ஒளியின் உணர்வாக உருவாக்கக் கற்றுக் கொள்வதுதான்” பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்பது.

உயிர் நுகர்ந்ததை உருவாக்குகின்றது… அதே சமயத்தில்
1.அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுவாகும் பொழுது
2.உயிரைப் போன்றே ஆக்கப்படும் பொழுது நல்ல ஒளியின் உணர்வை உருவாக்குகின்றது.
3.இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தால் ஒளியின் தன்மை கூடுகின்றது.

சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இது தவறு இது கெட்டது என்று உணர்வினை நுகர்ந்து நுகர்ந்து இதனைக் கலந்து கலந்து இந்த உடலினை உருவாக்கியது உயிர்.

1.அவனே நம்மை உருவாக்கினான்… ஈசனாக இருந்து உள் நின்று இயக்கிக் கொண்டு உள்ளான்,
2.கடவுள் என்ற நிலையில் நாம் எதனை நுகர்ந்தோமோ அவை நம்முள் நின்று அதனின் துணை கொண்டு அங்கே இயக்குகின்றது.
3.அவனல்லாது உணர்வுகள் இயங்குவதில்லை… அவன் தான் உருவாக்குகின்றான்.
4.ஆகவே அமைதி கொண்டிருக்கும் நேரத்தில் உணர்வின் தன்மையை ஒளியாக்க வேண்டும்.

நம் குருநாதர் என்னை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றார். அவர் காட்டிய அருளின் நினைவைப் பதித்து
1.உங்கள் கண்ணின் நினைவை என்னிடத்தில் செலுத்தினாலும் நீங்களும் அண்டத்தில் மிதக்கின்றீர்கள்.
2.அதனின் உணர்வை நினைவை கொள்ளும் பொழுது அதன் அருளை நீங்களும் பெற முடியும்.

அண்டத்திலுள்ளது இந்த பிண்டத்திலும் உண்டு. அகண்ட அண்டத்தைத் தெளிவு படுத்தியவன் அகஸ்தியன்.

அவன் துருவனாகி துருவ நட்சத்திரமானான். அகண்ட அண்டத்தில் வருவதை ஒளியாக மாற்றுகின்றான். அதன் உணர்வின் தன்மை இந்தப் பிண்டத்திற்குள் (நமக்குள்) சேர்க்கப்படும் பொழுது அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

நீங்கள் சிறிதளவே இருப்பினும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பரவுகின்றது. இந்தப் பூமியிலும் பரவுகின்றது. அதன் உணர்வின் நினைவு கொண்டு கவருங்கள்.

சூரியனில் இருந்து வரக்கூடிய நிறங்கள் ஆறு… ஏழாவது ஒளி. இதைத்தான் சூரிய பகவான் வருகின்றான் என்று வேக ஓட்டத்தைக் காட்டி, ரதத்தைக் காட்டியது.

அந்த ஏழு கலர் ஓட்டத்தை நமக்குள் எடுத்தால் நம்மை அந்த உலகத்திற்கு இட்டுச் செல்லும். ஆகவே
1.மனிதனான ஆறாவது அறிவின் நிலைகள் வரும் போது ஏழாவது ஒளியின் நிலைகள் அடைதல் வேண்டும்.
2.இதுதான் “ஈரேழு லோகத்தை வென்றவன் விண் சென்றான்” என்பது.
3.அவன் தனி உலகமாக ஒளியின் உணர்வாக மாற்றுகின்றான். அவன் ஏகாந்த நிலைகள் பெறுகின்றான்.

சூரியனில் இருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு. மற்றதைத் தெளிந்து உணர்ந்து ஒளியாக மாற்றுவது ஏழு.

காவியங்களில் ஈரேழு லோகத்தையும் தேடிப் பார்த்தேன் என்று சொல்கின்றனர். மனிதனுக்குள் உணர்வுக்குள் இந்த ஏழு லோகத்திற்குள் தேடி நாம் காணுதல் வேண்டும். மேலே ஏழு என்ற உணர்வுகள் மனிதனுக்குள் உண்டு. ஆக நமக்குள் தேடினால் உண்டு.

அகண்ட அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்தில் உண்டு. ஆகவே நாம் விண்ணின் ஒளியாக மாற்றும் உணர்வு பெற்று உயிர் என்ற நிலை பெற்று உணர்வின் ஏழாவது ஒளியாக மாற்றும் திறன் பெற்று இருப்பினும் இருள் சூழும் நிலைகளிலிருந்து மீள்தல் வேண்டும்.

ஒளியாக ஒன்றாக இருக்கின்றது. பல வர்ணங்கள் ஒளியின் நிலையை மறைத்திடும் பொழுது அந்த வர்ணத்தைத்தான் காட்டுகின்றது.
1.நமக்குள் எந்த குணத்தின் தன்மை வருகின்றதோ அந்த வர்ணத்தின் செயலாகத்தான்
2.இருள் சூழ்வதும் சிந்திப்பதும் சிந்தனையற்ற நிலைகளும் வருகின்றது.
3.ஆகவே பேரருள் என்ற உணர்வினை எடுத்து நமக்குள் பேரொளியாக மாற்ற வேண்டும்.

அந்த உணர்வின் தன்மையை உங்களில் உருவாக்கத்தான் இந்த நிலை.

யாரும் குற்றவாளியல்ல. குற்றத்தைச் செய்பவரும் அல்ல. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. நுகர்ந்தது நமக்குள் விளையாது அருள் ஒளி என்ற உணர்வைக் கொண்டு இருளை நீக்கப் பழக வேண்டும்.

இதற்குத்தான்
1.அதிகாலை நேரத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை நீங்கள் நுகர்ந்து
2.இருளை மாய்த்து ஒளி என்ற உணர்வைப் பெற வேண்டும் என்று தியான நிலைகளிலேயே உபதேசத்தைக் கொடுத்து
3.உங்களை அகண்ட அண்டத்திற்கே அழைத்துச் சென்றது.

முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”

நாம் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “நம் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்”

 

நாம் சிறு வயதினராக இருக்கும் பொழுது நமது முன்னோர்கள் நாம் அனைத்துத் துறையிலும் சிறந்து இருக்க வேண்டும் என எண்ணி நமக்குப் பல வகைகளிலும் பாசத்தைக் காட்டி நல் அறிவினை ஊட்டி வளர்க்கின்றனர்.

ஆனால் நமது முன்னோர்கள் நமக்கு எடுத்துச் சொல்லும் உயர்ந்த சிறந்த அறிவுரைகளை ஒதுக்கிவிட்டு மாற்றுக் கருத்துக்களில் நாட்டம் செலுத்தி அதன் வழி செல்லும் பொழுது “நமது முன்னோர்கள் வேதனை அடைகின்றனர்…”

1.“நாம் சொன்னபடி செய்யவில்லை… தவறான பாதையில் செல்லுகின்றானே… உருப்படுவானா…?” என்று
2.கோபமும் வேதனையும் கலந்த சொற்கள் அவர்களிடமிருந்து வெளிப்படுகின்றன.

நாம் எல்லா நிலைகளிலும் உயர்ந்து சிறப்புற வேண்டும் என்ற அவர்களுடைய பாச உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

அதே சமயத்தில் அவர்கள் சொல்லை மதிக்காது செயல்பட்ட நிலைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கோப உணர்வுகளும் நம்மிடத்தில் பதிவாகின்றன.

ஒரு செடி எதிர்மறையான சூழ்நிலையைச் சந்திக்கின்ற பொழுது தன்னுடைய வளர்ச்சியை இழக்கின்றது.

அது போன்றே நமது முன்னோர்கள் நம் மீது பற்று பாசத்துடன் இருந்தாலும் அவர்களுடைய அறிவுரைகளை மறுத்து இயங்குகின்ற பொழுது அவர்கள் கோப உணர்வு கொண்டு நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் சலிப்பு வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் அவர்களிடம் உருவாகின்றன.

இவ்வாறு நம் மீது பாசமாக இருக்கும் அவர்களின் உடலில்
1.பாசம் கோபம் ஆத்திரம் என உணர்வுகள் மாறி மாறி இயங்கி
2.உடலில் சீரற்ற நிலைகளை உருவாக்கி நோய்களை அவர்களிடத்தில் உண்டாக்கி விடுகின்றது.

மேலும் நம்மைப் பார்க்கும் பொழுதெல்லாம் கலக்கம் வேதனை சஞ்சலம் என்ற உணர்வுகளை அவர்கள் சுவாசிக்க நேர்ந்து…
1.அவர்களுடைய சரீரத்தில் இத்தகைய எண்ண அலைகளே அதிகமாக விளைகின்றது.
2.நல்ல உணர்வுகள் விளைவதே இல்லை.

உதாரணமாக நல்ல வயலைப் பண்படுத்தி நல்ல விதைகளை ஊன்றினாலும் அதனிடையே களைகள் உருவாகி ஓங்கி வளர்வது போன்றுதான்
1.பாச உணர்வுகள் உள்ள இடத்தில் சிறிதளவு வெறுப்பிற்கு இடமளிக்கும் பொழுது
2.அங்கே வெறுப்பான உணர்வுகளே அதிகமாகிப் பாச உணர்வுகளை மங்கச் செய்துவிடுகின்றன.

இவ்வாறு நம் குடும்ப வாழ்க்கையில் வேதனையுறச் செய்யும் சந்தர்ப்பங்களை அறிந்து அவற்றை விலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அருள் ஞானிகளின் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
2.எங்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் ஈஸ்வரா
3.நாங்கள் பார்ப்பவரெல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நாம் எண்ணி
4.இந்த உணர்வின் சக்தியை நம்மிடத்தில் வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் அன்னை தந்தை காட்டிய நல்வழி அனைத்தையும் நாங்கள் செயலாக்கி… அவர்கள் எண்ணிய நல் உணர்வுகள் எங்களுக்குள் விளைந்து… ஆக்கமான எண்ணங்கள் எங்களுக்குள் விளைந்து…
1.எங்கள் சொல்லிலும் செயலிலும் புனிதம் பெறும் தன்மையாகவும்
2.அவர்கள் காண்பித்த நல்வழியின் நிலைகள் எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டுமென நாம் தியானிக்க வேண்டும்.

எங்கள் குலதெய்வமான மூதாதையர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து என்றும் நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்றும் சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமது சரீரத்தில் உயிரில் இந்த உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

“நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…” என்ற கீதையின் தத்துவப்படி நம் முன்னோர்கள் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றோமோ அதனை நாமும் பெறுகின்றோம்.

“நம்முடைய முன்னோர்கள் சப்தரிஷி மண்டலத்தின் ஒளிவட்டத்தில் கலந்து நிலையான ஒளிச்சரீரம் பெற வேண்டும்…” என்று உந்தித் தள்ளும் பொழுது
1.நமது முன்னோர்களும் ஒளிச்சரீரம் பெறுகின்றனர்.
2.அதனின் பயனாக நாமும் அடுத்து அங்கே செல்ல ஏதுவாகும்.

நம் உணர்வின் சக்தியை விண்ணை நோக்கிச் செலுத்தினோமானால்
1.நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த உதவிய நம்முடைய நினைவுகள் துரித நிலையில் இயங்கி
2.மகா ஞானிகளின் உணர்வைத் துரித நிலையில் நாம் ஈர்க்கவும்
3.நம்மிடத்தில் வருகின்ற தீமைகளை அந்த விநாடியே அகற்றவும்
4.மெய்ஞானிகளின் உணர்வை நம்மிடத்தில் வளர்க்கவும்
5.அந்த உணர்வுகள் ஒளியின் சரீரமாக வளரவும் உதவி செய்கின்றன.

மேலும் ஒளி கண்டு இருள் விலகுவது போன்று… இருளுக்குள் இருக்கக்கூடிய பொருள் தெரிவது போன்று நமது வாழ்வில் “பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுகின்றோம்…”

சப்தரிஷி என்பவர் யார்…?

ஆறாவது அறிவின் துணை கொண்டு தீயவுணர்வுகளை மாய்த்து நல் உணர்வுகளை வளர்க்கச் செய்யும் தன்மை வாய்ந்த ஏழாவது அறிவினைத் தன்னிடத்தில் பெற்றவர்களைச் சப்தரிஷி என்று நாம் அறிந்துணர வேண்டும்.

அத்தகைய தன்மை வாய்ந்த சப்தரிஷிகளின் சிறப்பை நம் முன்னோர்கள் பெற வேண்டும் என்று நாம் தியானிக்கும் பொழுது நாமும் அத்தகைய ரிஷியின் தன்மையைப் பெறுகின்றோம்.

சிறிது காலத்திற்காவது நமது முன்னோர்களை எண்ணித் தியானித்திடும் பொழுது
1.அவர்கள் சப்தரிஷித் தன்மை பெற்று விடுகின்றனர்.
2.அதைத் தொடர்ந்து நீங்களும் ரிஷித்தன்மையைப் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் ரிஷியாக வேண்டும் என்றால் முதலில் “உங்கள் முன்னோரை ரிஷியாக்க வேண்டும்” என்பதை உணர வேண்டும்.

விஞ்ஞானி ஒரு இராக்கெட் மூலம் செயற்கைக் கோளை விண்வெளிக்கு அனுப்புகின்றார். பின் அந்தச் செயற்கைக் கோளின் துணைக் கொண்டு விண்ணின் நிலையைப் பூமியில் பெறுகிறார்.

அது போன்று நாம் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நமது எண்ணத்தின் வலுக்கொண்டு விண்ணிற்கு அனுப்பும் பொழுது அந்த ஆன்மாக்கள் பெறும் ஆற்றலை நாம் பெற முடியும்.

அதே சமயத்தில்…
1.நம்முடைய முன்னோர்களின் நினைவு நாட்களைக் கொண்டாடி விட்டோம்.
2.அவர்களுடைய உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று தியானித்து விட்டோம்.
3.அதன் மூலம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டோம் என்று கருதுவோமேயானால்
4.அதன் பிறகு நாம் வளர்வதே இல்லை.

பதிலாக…
1.நம்மிடத்தில் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்திய நினைவுகளும்
2.அவர்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்ற ஏக்கமும்
3.நம்மிடம் என்றுமே… இருந்து கொண்டே இருக்க வேண்டும்…!

போகாப்புனல்

போகாப்புனல்

 

நாம் எண்ணிய எண்ணங்கள் கூர்மையாக விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் நாம் அடிக்கடி சேர்க்கப்படும் பொழுது அது நன்கு வலுப்பெறுகின்றது.

இவ்வாறு நமக்குள் வலுப்பெறச் செய்வதைத்தான் விண்ணை நோக்கி ஏகுவதைக் கூர்மை என்றும் “கூர்மை அவதாரம்… வராக அவதாரம்…” என்பது.

அந்த வலுப்பெற்ற சக்தியின் துணை கொண்டு அந்த ஞானிகள் எவ்வாறு ஒளிச் சரீரம் பெற்றார்களோ அதே போல நமக்குள் வலுப்பெறச் செய்து வராக அவதாரமாக நாம் எதைக் கூர்மையாக எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதன் நிலையாக நாம் கல்கியின் பத்தாவது அவதாரமாக ஒளிச்சரீரம் பெற முடியும்.

இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடித்து விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பருகினால்தான் விண் செல்ல முடியும்.

இல்லையென்றால்
1.இன்று நாம் நமது வாழ்க்கையில் பக்தி மார்க்கங்களில் எண்ணியபடி
2.இந்தத் தெய்வம் செய்யும் அந்தத் தெய்வம் செய்யும் இந்த மனிதர் செய்வார் அந்தச் சாமியார் செய்வார் என்ற நிலையை
3.நம் எண்ணத்தில் வளர்த்துக் கொண்டால் உடலுக்குள் இது சாகாகக் கலையாக இந்தப் பூமியிலேதான் நாம் சுழல முடியும்.

ஆனால் வேகாக்கலை என்றும் “போகாப்புனல்…” என்ற நிலையை அடைய வேண்டுமென்று வள்ளலார் பாடல்களிலே பாடியுள்ளார்.

1.அந்த மகரிஷிகள் பெற்ற உணர்வினை நமக்குள் செலுத்தினால் “வேகாக்கலை” அடைந்து
2.இனிப் பிறவியில்லா “போகாப்புனல்…” அதாவது இன்னொரு பிறவியில் நாம் பிறக்காத நிலையை அடைய முடியும்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்” என்று ஏங்கி அதை உயிர் வழி கவர்ந்து அவ்வாறு கவர்ந்த உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் செலுத்தும் பொழுது இதற்கு “ஆத்ம சுத்தி” என்று பெயர். அந்த எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் சேர்ப்பிக்கும் நிலை.

உங்கள் வாழ்க்கையில் துயரங்களோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அவசரமோ இதைப் போன்ற நிலைகள் ஏற்படும் பொழுதெல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி முதலில் சொன்ன மாதிரி விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்களிலும் உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் அடிக்கடி சேர்த்து வரவேண்டும்.

அப்படி அடிக்கடி சேர்த்து வந்தோமென்றால்
1.வாடிய பயிருக்குள் உரம் சேர்த்தால் அது எவ்வாறு காற்றிலிருந்து தன் சக்தியைச் சேர்த்து மணி முத்துக்களை விளையச் செய்கின்றதோ
2.அதைப் போன்று ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அறியாது சேரும் தீமைகள் அனைத்தையும் நீக்கி
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணத்தால் எடுத்துச் சேர்த்து ஒளியான அணுக்களாக நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு நீங்கள் அந்த நல்ல எண்ணங்ககளுக்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை உரமாகச் சேர்த்தீர்கள் என்றால் அது வலுப் பெற்று “ஒளியின் முத்தாக உங்கள் உணர்வுகள் விளைந்து…” உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகப் “பெருவீடு பெருநிலை” என்ற நிலையடைவீர்கள். கல்கி அவதாரமான பத்தாவது நிலையை அடைவது திண்ணம்.

“வேகாக்கலை போகாப்புனல்…” என்று வள்ளலார் பாடியது போல நீங்கள் அனைவரும் அந்த நிலை அடைய முடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவருமே உங்களுக்குள் எத்தகைய குறைகள் நேரினும் இதற்கு முன் உங்கள் உடலிலே வளர்த்துக் கொண்ட கடும் நோயோ மனக்கவலையோ மன வேதனையோ இதைப் போன்ற நிலைகளிலிருப்போர் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். “எங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் படர வேண்டும்” என்ற இந்த உரத்தினை நீங்கள் செலுத்துங்கள்.

இது வலுப் பெற்றதாகி இதைப் போல உங்கள் வீட்டிலும் நீங்கள் இதனைப் பின்பற்றுங்கள். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைய உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகிவிடும்.

நீங்கள் மெய்ப் பொருள் கண்டுணர்ந்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும் வலுவான எண்ணங்கள் உங்களுக்குள் தோன்றி உங்கள் எண்ணமே நற்செயலாகச் செயல்படும் நிலையும் உங்கள் வாழ்க்கையை உயர்த்திடும் நிலையாக அடைய முடியும்.

அந்த நிலையை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்வதற்குத்தான் ஞாபகப்படுத்துகின்றோம்.

1.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
2.அவர் இத்தகைய நிலைகளை உருவாக்கும்படி எமக்கிட்ட அந்த ஆணைப்படித்தான் இதைச் செய்திருக்கின்றோம்.
3.அவர் எமக்கு உபதேசித்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள் உபதேசிக்கின்றோம்.

கூட்டமைப்பாக இருந்து கூட்டுத் தியானங்கள் செய்யும் பொழுது அதன் வழியாகத்தான் அனைத்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுகின்றீர்கள்.

ஆகையினால்… எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக யாம் சதா தவம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

வேகா நிலை

வேகா நிலை

 

நிறையப் பேர் சொல்வார்கள். நாங்கள் சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்குச் சாகாக் கலை தெரியுமா…? என்று எம்மிடமே கேட்டார்கள்.

போகர் சொன்னாராம் சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில் சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன். ஆகையால்
1.அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி
2.போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன்.

உங்களுக்கு என்ன தெரியும்…? என்றார்கள்.

இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் “என்னமோ எதிலோ குறையாகி விட்டது,.. எனக்கு இப்படி வந்து விட்டது…!” என்பார்கள். இது சாகாக் கலை.

யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வை எண்ணி அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு அடுத்தவரும்` போவார்.

அங்கு போனவுடன் சாகாக் கலையில் அவரும் இதே கதியாக அதைச் செய்தேன்… இப்படியாகி விட்டதே…! என்று பைத்தியம் பிடித்த மாதிரி ஆகி… இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே இருக்கின்றவனை எல்லாம் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் கடைசியில் என்ன ஆவார்கள்…?

இதைக் கண்டுபிடித்தேன் என்று கடைசியில்
1.நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில் மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக
2.நீயும் வாயேன் என்று இழுத்துக் கொண்டு போகும்… இது சாகாக் கலை.

யாம் இப்பொழுது உபதேசிப்பது “விஜய தசமி…!” பத்தாவது நிலை.. அடுத்து ஒளியாகி விட்டால் பிறவி இல்லை. இது வேகாக்கலை…!

ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும். தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது…? சரீரம் கருகுகிறது… ஆனால் உயிர் அழிகிறதா…? இல்லை. உயிர் வேகா நிலை பெற்றது.

அணு குண்டு போட்டுக் கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம்.

பாறைக்குள்ளிருக்கும் கதிரியக்கத்தினால்தான் தன் சக்தி அதாவது… தன் இனமான சத்து எதனுடன் கலந்து இருக்கின்றதோ அந்த உணர்வைத் தனக்குள் எடுத்து அது பாறையாக விளைகின்றது.

அதற்குள் அதன் இயக்கத்தின் வலுக்கொண்டு… அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.

இதுவே நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து… மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மையைப் பிளந்து… அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தை எடுத்துச் சேமித்து மீண்டும் அணுகுண்டாக வெடிக்கச் செய்யப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.

அது மோதியபின் புயலைப் போன்று தான் எதனை உருவாக்கியதோ அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டுத் தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து சத்தை ஒளியாக எடுத்துக் கொள்ளும். ஆக இது கதிரியக்கச் சக்தி.

1.விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் தன்மை கொண்டு வந்தாலும்
2.அதைப் போலத்தான் மெய்ஞானிகள் உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்துவிட்டு ஒளியாக மாற்றி
3.எத்தகைய உணர்வு வந்தாலும் அதைப் பிளந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது
4.அதுவே “வேகாக் கலை…!” – வேகா நிலை.

இப்பொழுது தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகி விட்டாலும் அணுகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும் உயிரை ஒன்றும் செய்ய முடியாது. “உயிர்” வேகாக் கலை பெற்றது.

அணுவைப் பிளந்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது அது தன் இனத்தைப் பெருக்குவது போல அந்த மெய் ஞானி தன் உணர்வினை ஒளியாக மாற்றி
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக் கலையாக
2.எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து அதனை ஒளியாக மாற்றி
3.என்றும் பதினாறு என்ற நிலையில் (வேகாநிலை அடைந்து) சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணு குண்டை வெடித்தபின் எந்த உலோகமாக இருந்தாலும் அதைப் பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போலத்தான் அந்த மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும்… தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் அவர்கள் துணை கொண்டு நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற நினைவு கூறும் நன்னாள்தான் விஜயதசமி… பத்தாவது நிலை பெறுவதை நினைவுபடுத்தும் நன்னாள்.

ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான் பத்தாவது நிலை அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம். இதைக் கேட்டறிந்த அனைவரும் கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுங்கள்.

அனைவரும் உயிருடன் ஒன்றி வேகா நிலை பெறுங்கள்…!

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

உடலை வளர்க்க… கௌரவத்தை வளர்க்க… தன்னையே தான் மெச்சிக் கொள்ள… யாம் சக்தி கொடுக்கவில்லை

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடிப் பொழுதும் இணைத்து விட்டால்
1.அது இந்த மனித வாழ்க்கையின் நிலைகளைத் தணித்து
2.அருள் உணர்வு என்ற நிலையை நமக்குள் பெருக்குகின்றது.

அது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

நான் இதையெல்லாம் உங்களிடம் சும்மா கொடுக்கவில்லை.
1.ஈஸ்வரபட்டர் எனக்குச் சும்மா கொடுக்கவில்லை.
2.அவர் உணர்வின் தன்மையைப் பதிவாக்கினார்.
3.அந்த நினைவின் தன்மை தான் நாம் எடுக்கின்றோம்.

இந்த உடலில் இச்சைக்காக வாழ கற்றுக் கொண்டோம் என்றால்
1.உடலை வளர்க்கவும்… அதிலே கௌரவத்தை வளர்க்கவும்
1அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ளவும் என்று நான் இருந்தேன் என்றால் “உடலின் இச்சைக்குத் தான் வாழ முடியும்…”

உடலுக்குப் பின் குருநாதர் கொடுத்த சக்தி பயனற்றதாகப் போய்விடுகின்றது.

ஆகவே உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் “உடலின் இச்சைக்கு என்று இல்லாதபடி…” எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை நான் பெறுகின்றேன். உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் நான் அதைப் பெறுகின்றேன்.

இதைத்தான் குருநாதர் எனக்குள் உருவாக்கினார்.

ஆகவே இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி அந்தப் பதிவை நீங்கள் வளர்ப்பதற்குத் தான் “தொடர்ந்து உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டு வருகின்றேன்…”

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையே தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்வது அதுதான்.

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

இறைவனை அடைய வேண்டும் என்று “ஒரே நிலையில் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டுள்ளவர்கள் நிலை…”

 

ஆண்டவனின் நாமத்தையே மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டிருந்தால் “இறைவனை அடையலாம்…” என்று பலர் அக்காலத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.

சிவ தத்துவத்தில் எடுத்துக் கொண்டால் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று தொடர்ந்து அந்த ஒலிகளை எழுப்புகின்றார்கள். இந்த உணர்வின் இயக்கத்தின் தொடர் கொண்டு
1.தன் உடலில் உள்ள அணுக்களை தன்னுடன் இணைந்து இயங்கக் கற்றுக் கொள்கின்றார்கள்.
2.அந்த உணர்வின் ஒளி கற்றைகளாக ஆன நிலையில் சரீரத்தை மூடிவிட்டாலும்
3.அதே உணர்வுகள் நுகரப்பட்டு வெப்பத்தின் துணை கொண்டு உடலில் அது இயங்கிக் கொண்டே இருக்கும்.
4.அந்த உணர்வுகள் கடைசி நிமிடத்தில் எதுவோ எல்லாவற்றிலும் இந்த உயிரைப் போலவே இந்த உணர்வுகள் அடங்கி விடுகின்றது.
5.ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற இந்த ஒலி மீண்டும் அது வந்து கொண்டே இருக்கும்… அதன் இயக்கமாக அது மாற்றி விடுகின்றது.
6.இந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் தன் உடலில் உள்ள அணுக்களுக்கு ஆன பின்
7.உடல் இருக்கும் ரசங்கள் குன்றும்… உடல் நலியும்… உயிர் உள்ளேயே இருக்கும்.

இதை நேரடியாக எனக்குக் காட்டுவதற்காக இமயமலைச் சாரலில் இரண்டு மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றார் குருநாதர்.

முதலிலேயே ஹரித்வார் அருகில் மரத்துக்கடியிலே ஜெபித்துக் கொண்டிருந்தவரைக் காட்டினார். பெரிய வெள்ளத்தை வரவழைத்து கரைக்கச் செய்தார். கரைந்த பின் ஓ…ம் நமச்சிவாய…! என்று அங்கே சப்தம் வருகின்றது

அதை ஜெபித்தாலும் இந்த உடலுக்குள் தான் சிறைப்பிடித்து இருக்கின்றார். அதற்கு மேல் அவர் விண் செல்லவில்லை. உடலின் உணர்வுக்கே செல்கின்றார்.

ஆனால் கரைத்த பின் வேறு வழி இல்லை அடைப்பட்ட நிலையில் இருந்து எதிரொலி… உணர்வின் ஒலி வரப்பப்படும் பொழுது அவருக்கு மிகக் கஷ்டமாகி விட்டது.

அப்பொழுது குருநாதர் நேரடியாக நீ அவரைப் பார்க்கக் கூடாது என்றார். ஏனென்றால் அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். நீ அவரை எண்ணி அந்த சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்தாய் என்றால் இது அவருக்குள் சேரும் என்றார்

காலை நான்கு மணிக்கு “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர் பெற வேண்டும்…” என்று இந்த உணர்வின் ஒலிகளை அங்கே பரப்பப்படும் பொழுது
1.அதன் ஈர்ப்பால் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
2.ஒளியின் சரீரமாக இருளுக்குள் அடைப்பட்டிருந்த நிலை ஒளியாக மாறி விண் செல்லும் சந்தர்ப்பம் உருவாகின்றது.
3.அதன்படி அந்த ஆன்மாவை நீ விண் செலுத்து என்றார் குருநாதர்.

இதே மாதிரி இன்னொரு இடத்திலே ஜோஸ்மெட்டுக்கு மேலே ஒருவர் புதையுண்டு இருக்கின்றார். அங்கே இராணுவப் பாதுகாப்பு இருக்கின்றது.

ஒரு பெரிய ஓடை வருகின்றது. அந்த ஓடைக்குள் திட்டுகள் இருக்கின்றது. மழை பெய்தால் தண்ணீராக வரும். ஆனால் கரையின் ஓரத்தில் திட்டுக்குள் அடங்கி இருக்கின்றார்.

ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்று இதையே சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதாவது ஹரி ஓம் நமோ நாராயணா என்றால் “சூரியனின் இயக்க நிலை…”

அந்த உணர்வின் தன்மையை எடுத்து ஒளியின் உணர்வாக அவரும் இந்த உடலுக்குள் தான் அடங்கி இருக்கின்றார்.

அதை எல்லாம் நேரடியாகவே எமக்குக் காட்டுகின்றார். உடலுக்குள் அடங்கியிருக்கின்றது… செவி கொண்டு அந்தச் சப்தத்தை நீ கேள் என்றார் குருநாதர்.

இராணுவ வீரர் ஒருவர் என்னிடம் வந்து என்ன செய்கின்றீர்கள்…? என்ன பார்க்கின்றீர்கள்…? என்று கேட்கின்றார்.

அங்கே நான் காதை வைத்து அந்தச் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் அல்லவா. ஆனால் இதையெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம் என்று குருநாதர் சொல்லி விட்டார்.

நான் ஊரைச் சுற்றி பார்க்க வந்தேன். இங்கே மலைப்பிரதேசமாக இருக்கின்றது நிலநடுக்கம் ஏதும் வருகின்றதா…? என்று சும்மா பார்க்கின்றேன் என்று சொன்னேன்.

அதிலே தமிழர் ஒருவர் இருந்தார். அப்படிங்களா…! என்றார்.

ஆனால் அங்கே குளிர் அதிகமாக இருக்கின்றது அவர்களெல்லாம் சட்டை போட்டிருக்கிறார்கள். நான் வெறும் கோவணத் துணியைத் தான் கட்டி இருக்கின்றேன்.

என்னுடைய நிலையைப் பார்த்து அந்த மிலிட்டரிக்காரர்கள் எல்லாம் ஆசீர்வாதம் கேட்கின்றார்கள். என்னிடம் விபூதி எதுவும் இல்லை. அங்கிருக்கும் மண்ணை எடுத்துப் பிரார்த்தனை செய்து அதைத் தான் அவர்களுக்குக் கொடுத்தேன். நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்… உங்களுக்குத் தக்க உபாயமாகும் என்று சொன்னேன்.

ஏனென்றால் பேரீச்சம் பழம் பிஸ்கட் மட்டும்தான் அங்கு கொண்டு சென்றேன். விபூதியைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நான் கொடுத்ததை அவர்கள் சந்தோஷமாக வாங்கிச் செல்கின்றார்கள்.

அங்கே ஜெபித்துக் கொண்டிருப்பவர்கள் சூரியனுடைய இயக்கமாக இருந்தாலும் கூட்டை விட்டு வெளியே வந்தால் இதே சூரியனால் கவரப்பட்டுத் தான் சுழல முடியும்.

அப்படிக் கவரப்படும் போது அவர் எந்த ஒலியினைத் தனக்குள் ஓங்கி வளர்த்தாரோ எப்படி இங்கே கூட்டுக்குள் ஒடுங்கினாரோ இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அவரையும் இது போன்றுதான் உட்கார வைக்கும்.

நாராயணன் செயல் என்ன…? என்று அங்கே தியானமிருக்கும்படி சொன்னார் குருநாதர்.
1.அதன்பின் சில உணர்வின் ஒலிகளை எடுத்து அங்கே பரப்பும்படி செய்தார் குருநாதர்.
2.அந்த உணர்வுகளை அவர்கள் எடுத்தார்கள் என்றால் அதைச் சுவாசித்து அவர்களும் விண் செல்ல உதவும் என்று
3.உணர்வின் எக்கோவாக (ECHO) அங்கே அதைப் பரப்பச் சொன்னார்.
4.அவர் சொன்ன முறைப்படி செயல்படுத்தினேன்.

ஏனென்றால் அந்த இமயமலைச் சாரலில் இது போன்று ஏராளமானோர் உண்டு. இன்னும் அந்தக் கூட்டுக்குள் தான் இருக்கின்றார்கள்.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாகாக்கலை பெரிதல்ல

சாகாக்கலை பெரிதல்ல

 

ஒரு சில வைத்தியர்கள்… ரசமணி போன்று செய்யக்கூடியவர்கள் என்னிடம் வந்து “சாகாக்கலை…” உங்களுக்குத் தெரியுமா…? என்று கேட்டார்கள்.

தெரியவில்லையே என்று சொன்னேன்…!

என்னங்க… நீங்கள் பெரிய சாமி ஆகி விட்டீர்கள்…? என்னென்னமோ சொல்கின்றீர்கள்…! எதை எதையோ சொல்கின்றீர்கள்…! சாகாமல் இருப்பதற்கு வழி உண்டா…? சாகாக்கலை உங்களுக்குத் தெரியுமா…?

பயங்கரமாக அவர் அடித்துப் பேசுகின்றார். பல பல மருந்துகளைப் பற்றிப் பேசுகிறார்.

பின்பு கடைசியில் அவரிடம் நான் சாகாக்கலை என்றால் உங்களுக்கு என்ன தெரியும்…? என்று கேட்டேன்.

என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்…! உங்களுக்கு இந்த விவரமே தெரியவில்லை…! எனக்கு விவரம் தெரியவில்லை என்று அவர் பேசுகின்றார்.

மனித வாழ்க்கையில் எதை எதை எல்லாம் நீங்கள் உடலில் விளைய வைக்கின்றீர்களோ அது சாவதில்லை. இந்தக் கலைப்படி
1.ஒருவனைக் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் கொல்ல வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
2.அந்தக் கொல்லும் உணர்வு உங்களைக் கொல்லும்… இது சாகாக்கலையாக மாறும்.
3.அடுத்தாற்போல் மற்றதைக் கொன்று சாப்பிடக்கூடிய சாகாக்கலையாக மாறி
4.மற்றதை இம்சைப்படுத்திய உணவாக உட்கொள்ளும் உயிரினமாக உருவாக்கிவிடும்.

இதற்குப் பெயர் தான் சாகாக்கலை என்று சொன்னேன்.

அவர் உடனே என்னங்க…! இப்படி சொல்கின்றீர்கள்…! என்றார்.

வேகாநிலை…! மனிதனைத் தூக்கித் தீயிலே போட்டால் உயிர் வேகின்றதா…? வேகுவது இல்லை.

ஆனால்… இந்த உடலிலே எவ்வளவு காலம் வளர்த்துக் கொண்டது இருக்கின்றதோ அது அனைத்தும் “ஐய்யயோ… அம்மம்மா…!” என்று அலறுகின்றது. அந்த நேரத்தில் தன்னுடைய தாயை நினைத்தால் இந்த உயிரான்மா தாயின் உடலுக்குள் செல்கின்றது.

ஐயோ… அண்ணே…! என்று அந்த இட்த்தில் எதிரிலே கண்ணிலே படும் நண்பர்களையோ மற்றவர்களையோ எண்ணினால் இந்த உணர்வுகள் பதிவாகி “உடலெல்லாம் எரிகின்றதே… எரிகின்றதே… என்னைக் காப்பாற்றுங்கள்…” என்ற ஓலத்தை எழுப்பி
1.கண்ணில் இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகி விட்டால்
2.உடலை விட்டுச் சென்ற பின் சாகாக்கலையாக அவர் உடலுக்குள் சென்று இயக்கத் தொடங்கும்.

உயிர் வேகுவது இல்லை. ஆனால் உடலும் உணர்வுகளும் கருகுகின்றது. இந்தக் கருகிய உணர்வுடன் இங்கே உருவாக்கிய நிலையை அந்த உடலுக்குள்ளும் சென்று
1.அடுத்து “அம்மம்மா… ஐயோ எரிகின்றதே… எரிகின்றதே…” என்று அவரும் சொல்லத் தொடங்குவார்.
2.சீக்கிரம் எதையாவது மேலே போட்டு அல்லது ஊற்றி அவரும் தீயை வைத்துத் தன்னை எரித்துக் கொள்வார். இதைப் பார்க்கலாம்.

ஆக எந்தெந்த உணர்வு கொண்டு இறக்கின்றார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒருவர் ஹார்ட் அட்டாக்கினால் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உதவி செய்த நண்பர்கள் யாரையாவது அவர் நினைவில் அதிகமாக வளர்த்திருந்தால்… இவர் இறந்தால் இது சாகக்கலையாக மாறி அந்த உடலுக்குள் சென்று விடும்.

அங்கே சென்ற சிறிது காலத்தில்
1.“நண்பர் இவ்வாறு ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்…” என்று கேள்விப்பட்டபின் இதே உணர்வுகள் இயக்கி
2.அவருக்கும் இதே நோய் வந்து அதனால் இறந்து விடுவார்… இதற்குப் பெயர் சாகாக்கலை.

எதன் எதன் அடிப்படையில் வருகின்றதோ இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் “சாங்கிய சாஸ்திரம்…” என்று இதையெல்லாம் மூடி மறைத்து விட்டார்கள்… மறைக்கப்பட்டு விட்டது.

ஆகையினால்… இந்த மனித வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் வளர்த்தால் இது சாகாக்கலை. சாகாமல் அது வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.

ஆனால் வேகா நிலை என்றால் என்ன…?

1.மகரிஷிகள் அனைவரும் வேகா நிலை அடைந்தவர்கள்
2.இந்த உலகிலே… பேரண்டத்திலே எத்தகைய நிலைகள் வந்தாலும் அவர்களை அது சுட்டுப் பொசுக்க முடியாது.
3.எதிலேயும் அவர்களை வேக வைக்க முடியாது… ஒளியின் சுடராகவே இருக்கும்.. அது தான் வேகாநிலை என்பது.

இந்தப் பேருண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றுமே நாம் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் நாமும் அந்த நிலை பெற முடியும்.

அந்த நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”

 

உடலை விட்டு குருநாதர் வெளியிலே செல்லும் பொழுது பல உண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்.

1.என்னை (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ பேர் அணுகினார்கள்.
2.பல அற்புதங்களை நான் காட்டினேன். அதற்கு மயங்கி இருந்தோர் பலர் உண்டு..
2.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நலம் வேண்டும் என்று தான் கேட்டார்கள்.

வருவோர் அனைவரும் எனக்கு அந்த அருள் வேண்டும் இந்த அருள் வேண்டும் என்று தான் கேட்டார்களே தவிர
1.மெய்ப்பொருள் காணும் திறன் வேண்டும்… உலகம் நலமாக இருக்க வேண்டும்
2.என் பார்வையில் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணிக் கேட்பார் எவரும் என்னிடம் வரவில்லை.

இப்படி தனக்குத்தான் என்னிடம் கேட்டார்கள் தவிர எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற கேள்வியே அவர்களிடம் எழவில்லை.

இந்த உலகில் உள்ள எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணினேன்… அதைப் பெற்றேன் அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால்
1.நீ எதை எண்ணப் போகின்றாய்…? எதை நீ பெறப் போகின்றாய்…?
2.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…? நீ அதை எப்படிப் பெறுவது…?
3.உடலை விட்டுச் சென்ற பின் என்னுடன் இணைந்து நீ வர வேண்டும் என்றால் நீ எதை எண்ண வேண்டும்…? என்று
4.வைகுண்ட ஏகாதசி வருவதற்கு ஒரு மாதம் முன்பு என்னிடம் இந்த கேள்விகளைத் தான் குருநாதர் எழுப்பினார்.

அதைத் தெளிவாக்கவும் செய்தார்.

துருவ மகரிஷியின் அருள் சக்தி என் குருநாதர் பெற வேண்டும்… அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… அருள் வழியில் அவர் செல்ல வேண்டும்… அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அருள் ஒளி என் குரு பெற வேண்டும் என்று “இப்படி நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்…!”

உங்களுக்குச் சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!

1.நான் சொன்ன முறைப்படி எண்ணும் பொழுது தான்…
2.”நீ எதை எண்ணுகின்றாயா நீ அதுவாகின்றாய்…” என்று இப்படித்தான் சொன்னார் குருநாதர்.

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அதற்குச் சில உபாயங்களைச் சொல்லி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறும் நிலையும் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நிலையும்… அதைப் பெற்று குருவை எப்படி விண் செலுத்த வேண்டும்…? எதை நீ குருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மைகளை எல்லாம் உணர்த்தி விட்டுத் தான் “வைகுண்ட ஏகாதசி என்று ஈஸ்வரபட்டரின் ஆன்மா பிரிகின்றது…”

உடலை விட்டுச் சென்ற பின் குருவின் நினைவும் இங்கே அந்த உணர்வின் விளைவும்…
1.சப்தரிஷி மண்டல உணர்வையும் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் கொண்டு வரப்படும் பொழுது
2.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழியில் அங்கே சென்று ஒளியின் சரீரமாகப் பெறுகின்றார்.

ஆக அவர் சென்ற அந்த வழியில் அந்த வரிசை ஒன்றை வைத்துத் தான் ஒன்று செல்ல முடியும்.
1.அந்த வழியை நீ பெறு… மற்றவருக்கு வழிகாட்டும் பொழுதும் இந்த நிலையை உணர்த்து.
2.அதை அவர்கள் பெற வேண்டும் என்று ஏங்கு… அந்தத் தகுதியை அவர்களையும் பெறும்படி செய்.
3.நீ அதன் வழி செல்லும் பொழுது அடுத்தவர்கள் எண்ணும் பொழுது நீயும் எளிதில் விண் செல்கின்றாய்,
4.உன் சொல்லைக் கேட்பவர்களும் அந்த வழியினைப் பெறுகின்றார்கள்.

ஆகையினால் இதனை நீ வழிப்படுத்து…! என்று விண் செல்லக்கூடிய மார்க்கங்களை ஈஸ்வரபட்டர் எமக்குத் தெளிவாக உணர்த்தி மற்றவர்களுக்கும் இதைக் காட்டும்படி சொன்னார்.

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”

உடலான பிரபஞ்சத்தை “ஒளிப் பிரபஞ்சமாக உருவாக்குங்கள்…”

 

நாம் எப்படி வந்தோம்…? நாம் இனி எங்கே போக வேண்டும்…? என்று கண்டு கொண்ட ஞானிகள் விண்ணிலே உள்ளார்கள். அவன் உணர்ந்த ஒளி அலைகளை இங்கே பூமிக்குள் அனுப்புகின்றான். அந்த அலைகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தான் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
1.உங்களை அறியாது இயக்கக்கூடிய விஷமான நிலைகளுக்குள் அதை இணைப்பதற்கு
2.உங்கள் நல்ல எண்ணங்கள் எதுவோ அதற்குள் இதை பதியச் செய்ய வேண்டும்.
3.நீங்கள் நல்லதை எண்ணும் பொழுது அதற்கு வலுவூட்டவே இதை உபதேசிக்கின்றோம்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வுகளைக் கண்டுணரும் பொழுது அதை அறிகின்றீர்கள். அப்படி அறிந்து மற்றவர்களைக் காப்பாற்றினாலும் நுகர்ந்த அந்த வேதனை நல்ல குணத்திற்குள் சுழன்று கொண்டு மீண்டும் அந்த நல்லதை எழாத வண்ணம் செய்து விடுகின்றது.

ஆகவே அதிலிருந்து மீள அந்த மெய் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கச் செய்து… புலனறிவுக்குள் நுகரும்படி செய்து… நல்ல உணர்வுகளுக்கு வலு சேர்ப்பதற்கே இப்பொழுது உபதேசிப்பது. அதாவது உங்களுக்குள் செல்களாக அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்கின்றோம்.

மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிடும் சக்தி பெற்ற நிலையில்
1.வாழ்க்கையில் தன்னை அறியாமல் சேரும் நஞ்சான உணர்வுகளை நீக்குவதற்கு
2.அந்த மெய் ஞானிகள் உணர்வை வினையாகச் சேர்த்து தனக்குள் வரும் தீய வினையை நீக்கி
3.தன் நிலை அடைந்து ஒளியின் சரீரமாகப் பெறச் செய்வது தான் அது.

சூரியன் கோள்களின் ஆற்றலை எடுத்து அந்த விஷத்தை மாற்றி ஒளியின் சுடராக இந்த பிரபஞ்சத்தை எப்படி உருவாக்குகின்றதோ இதைப் போன்றே
1.உயிரின் நிலைகள் கொண்டு இந்த உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையைப் பல நட்சத்திரத்தின் நிலைகள் இருந்தாலும்
2.மெய் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து இந்த உடலான பிரபஞ்சத்தை ஒளியான சரீரமாக்கி… ஒளிப் பிரபஞ்சமாகி
3.விண்ணிலிருந்து வரும் உணர்வினை எடுத்து ஒளிச் சரீரமாக மாற்றும் நிலை தான் மனிதனின் கடைசி நிலை.

அப்படி மாற்றிய நிலைகள் தான் என்றும் 16 என்ற நிலையான ஒளிச் சரீரம் பெற்று பெரு வீடு பெரும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலம்.

அங்கிருந்து உமிழ்த்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மை மனிதனாக வாழ்ந்த காலங்களில் அவர் உடலில் விளைய வைத்து வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியிலே படரச் செய்துள்ளது.
1.அதைக் கவர அதை ஒத்த மணம் நமக்குத் தேவை. அந்த ஆற்றல் நமக்குத் தேவை.
2.அதைப் பெறுவதற்குத் தான் மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

நஞ்சை முறித்து விண் சென்ற ஞானியின் ஆற்றல்மிக்க எண்ண அலைகள் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சக்தியை உங்கள் சுவாசத்திற்குள் செலுத்தச் செய்கின்றோம்.

உங்களைச் சூழ்ந்து துன்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும்… நல்லதைச் சிந்திக்க விடாது தடைப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மையை… அந்த நஞ்சினை விலக்கி “உணர்வை ஒளியாக மாற்றும் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்…” என்று தான் உபதேசிப்பது.

சந்தர்ப்பத்தால் நீங்கள் சுவாசித்த குணக் கேடான உணர்வுகள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்ய “நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி…” மெய் ஞானிகளுடைய ஆற்றலைப் பெறச் செய்யும் பக்குவ நிலை ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் எனக்குள் மெய் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கி… நல்ல குணங்களைத் தட்டி எழுப்பி… “ஒவ்வொரு உணர்விற்குள்ளும் ஞானிகள் உணர்வை எப்படிப் பதிவு செய்தாரோ…” அதை நான் நினைவு கொண்டு கூர்ந்து எண்ணத்தைச் செலுத்தி… காற்றிலே பரவியுள்ள மெய் ஞானிகள் உணர்வுகளை நுகர்ந்து என்னைப் பக்குவப்படுத்தினேனோ… அதே நிலைகளைத் தான் உங்களுக்கும் ஊட்டுகின்றேன்.

1.உங்களை அறியாது தீய நிலைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபடுவீர்கள்
2.நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் பெறுவீர்கள் என்ற இந்த வாக்கினைக் கொடுக்கப்படும் பொழுது
3.அதை ஏற்றுக் கொண்டோர் உள்ளங்களில் ஊடுருவி அது உங்கள் துன்பத்தை விலக்க உதவுகின்றது.

“தீமை உங்களுக்குள் என்றுமே வராதபடி…” நல்ல உணர்வுகளைத் தட்டி எழுப்பி உங்களை வாழ வழி வகுக்கச் செய்கின்றோம்.

ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் நாம் உபதேசித்து வந்தாலும் சிலர்… கோவிலுக்குச் செல்ல வேண்டாம் சாமியே கும்பிட வேண்டாம் என்று “சாமி சொல்கிறார்…” என்று இப்படி அர்த்தம் எடுத்துக் கொள்கின்றார்கள்.

நம் உடல் ஒரு கோவில்…! நம் உடலில் இருக்கக்கூடிய ஆந்த நல்ல குணங்களைத்தான் ஆலயத்திலே காண்பிக்கப்பட்டுள்ளது. அதை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று தான் அன்று ஞானிகள் சொன்னார்கள். அரசனுக்கும் டிமிக்கி கொடுத்து அதைச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

திருமூலர் சொன்ன திருமூல மந்திரத்தின் நிலைகளை “வெறும் மந்திரமாகத்தான்…” மாற்றிக் கொண்டார்கள்.
1.திருமூலம் – திரு என்பது உயிர்… மூலம் என்பது உயிர்
2.மூலத்திற்குள் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஒலி ஒளியாக எப்படி இயங்குகின்றது…? என்று தான் அவர் உணர்த்திச் சென்றார்.

பதஞ்சலியாகப் பாம்பின் உடலிலிருந்து மீண்டு இன்னொரு மனித உடலுக்குள் சென்ற பின் மெய் உணர்வின் தன்மையை உணர்கின்றார்.
1.அந்த ஏழ்மையான சரீரத்திற்குள் வந்த பின்பு தான் உயர்வையும் தாழ்மையையும் இரண்டும் இணைக்கின்றது.
2.அப்படி இணைத்துப் பார்க்கப்படும் பொழுது பேரண்டத்தின் பேருண்மைகளை அறிந்துணர்ந்து
3.அந்தப் பக்குவ நிலையைத் திருமூலர் காட்டுகின்றார்.

அவர் உணர்த்திய மெய் உணர்வுகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.