
“உயிரைப் போன்றே…” உணர்வுகளை எப்படி ஒளியாக்குவது…?
பாம்பினங்கள் தன் உணவிற்காக மற்றொன்றின் மீது விஷத்தினைப் பாய்ச்சி உணவாக எடுத்தாலும் மற்றதிலுள்ள விஷங்கள் இதனுடன் கலந்து அது பல வித வண்ணங்களாக உறையப்படும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது… அது கல் மயமாக மாறுகின்றது.
1.நமது உயிரின் துடிப்பு மின் மயமாக இருக்கின்றது
2.அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் “உயிரைப் போன்று மின் மயமாக்க வேண்டும்…”
எப்படித் தேனீக்கள் ஒன்றாகச் சேர்த்துத் தேனை உருவாக்கி ஒரு கூட்டினை அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் இந்த உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் தேனைப் போன்று இணைந்து திடப் பொருளாகி விட்டால் அது கல்லாக மாறிவிடும்… வைரங்களாகிவிடும். கோள்களைப் போன்று பாறைகளாகிவிடும்.
மின் இயக்கத் துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியில் நடு மையம் வெப்பமாகி அதன் உணர்வினை கவர்ந்து கொண்டு வருகின்றது.
ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது.
நாம் தேனை எடுத்து உணவாக உட்கொள்ளும் பொழுது எப்படி அது சுவை மிக்கதாக உள்ளதோ அதைப் போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் நுகர்ந்து
1.நம் உடலில் உள்ள அணுக்களுக்கு அதை ஆகாரமாகச் சேர்த்து அதன் உணர்வினை வளர்ச்சி செய்யப்படும் பொழுது
2.இந்த உடலில் உள்ள விஷத்தை மாற்றி “இனிமை…” என்ற உணர்வை ஊட்டும்.
இந்த உணர்வினை வளர்த்துக் கொள்வதுதான் ஆறாவது அறிவின் தன்மை.
நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள்தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமாக இருந்தது. ஆனால் ஆறாவது அறிவான பின் நாம் தீமைகளை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி… உலக இருளை நீக்கி ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருங்கிணைந்து இயக்கும் தன்மை பெற வேண்டும்.
இந்த உயிர் உணர்வின் அறிவாக இந்த உடலை இயக்குகின்றது. ஆனால் இந்த உடலிலே உயிரைப் போலவே ஒளியின் உடலாக மாற்றிச் சென்றவர்கள் மகரிஷிகள்.
1.இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனே அழிந்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் விஷத்தன்மையைக் கூட
2.ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள் தான் மகரிஷிகள்.
2000 சூரிய குடும்பத்துடன் இணைந்து வாழ்கின்றது நமது சூரியன். இதைப் போன்று இந்த 2000 சூரிய குடும்பங்களும் அகண்ட அண்டத்தில் மற்ற கோள்களுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கின்றது.
ஒன்றில்லையேல் ஒன்று இல்லை… ஒன்று என்றுமே தனித்து இருந்ததே இல்லை.
1.விஷம் தாக்கும் பொழுதுதான் வெப்பம் உருவாகின்றது
2.வெப்பம் உருவாகும் பொழுதுதான் ஈர்க்கும் சக்தியாக இயக்கச் சக்தியாக மாறுகின்றது.
யாம் உபதேசிப்பதை ஒவ்வொரு நொடியும் கூர்ந்து கவனிக்கும் பொழுது நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளிலுள்ள ஜீவ அணுக்களின் முகப்பில்… உயிரில் மோதுவது போன்று அந்த அணுக்களும் இந்த உணர்வினைப் பெறும் தகுதி பெறுகின்றது.
அப்படி எல்லா அணுக்களிலும் சக்தி பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.
எனக்கு எப்படி குருநாதர்… என் நினைவினை விண்ணுக்கு அழைத்துச் சென்றாரோ…? அதைப் போன்று
1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டு
2.அதை ஈர்க்கும் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம்.
இதை எல்லாம் ஏன் முன்பே எங்களுக்குச் சொல்லவில்லை…? என்று கேட்பீர்கள்.
விதையைப் போட்டு முளைத்து… அது வளர வளர அதன் நிலை வேறு விதமாக இருக்கும். அது வளர்ந்த பின்பு அதனுடைய வளர்ச்சியில் வரும் பொழுது எந்த வித்தோ அதைப் போன்று… பின்னாடி தான் உருவாகின்றது.
முதலில் ஏன் சொல்லவில்லை…? என்று கேட்டால்
1.செடி ஓரளவிற்கு வளர்ந்தபின் உரம் போட்டால் தாங்கும்.
2.ஆனால் செடி சிறிதாக இருக்கும் பொழுது உரம் போட்டால் கருகிவிடும்.
3.விஷத்தை ஒளியாக மாற்றும் இந்த உணர்வுகள் சரியான பருவம் வரவில்லை என்றால்
4.நீங்கள் வளரும் பருவத்தை மாற்றிக் கருக்கிவிடும்… செயலற்றதாக்கி விடும்.
ஆகவே… குருநாதர் எமக்கு எந்தெந்தப் பருவத்தில் எதெனெதன் சந்தர்ப்பங்களில் எப்படிக் கொடுத்தாரோ அதைப் போன்று உங்களுக்குள் மனப்பக்குவம் பெறும் நிலையும்… அந்த வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இந்த உணர்வினை வெளிப்படுத்துவது.
மனப்பக்குவமான பின் இந்த உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால் உங்களுடன் பழகும் நண்பர்களுக்கும் “உங்களில் விளைந்த உணர்வுகள்…” நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.
“இனி வருவோர்க்கு…” உங்கள் மூலமாக அவர்களுக்கும் கிடைக்கும். ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு, அது விளைகின்றது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.
நாம் இவ்வளவு காலம் 15 – 20 வருட காலமாகச் சாமியிடம் தொடர்பு கொண்டு இருந்தோமே நமக்கு இதெல்லாம் தெரியாமல் போயிற்றே…! என்று இருக்கலாம்.
1.உங்களில் விளைந்ததுதான் இனி வருவோர்க்கு அதன் உணர்வின் சக்தி கொண்டு அவர்கள் உடலில் விளையச் செய்கின்றோம்.
2.நீங்கள் குருவுடன் தொடர்பு கொண்ட… உங்களில் விளைந்த உணர்வுகள்தான்
3.பிந்தி வருவோர்க்கு இந்த உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது என்பதனை உணர்தல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.