நாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்… நாதத்தைத் தன்னுள் அடக்கியவன்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் “சப்தரிஷி…!”

Image

Ursa-Major-Sapdharishi Mandalam

நாதத்தை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்… நாதத்தைத் தன்னுள் அடக்கியவன்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் “சப்தரிஷி…!”

 

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர்கள் ஆறு. ஒளி ஏழு. அதைப்போல் மனிதனுடைய அறிவு ஆறு ஏழாவது ஒளி அறிந்துணர்ந்து செயல்படும் தன்மை.

1.நாதத்தை உருவாக்கி…
2.நாதத்தை உள்ளடக்கி…
3.உணர்வின் தன்மைகள் அனைத்தையும் அடக்கி…
4.உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாகச் சென்றவன் “சப்தரிஷி…!”
5.எந்த உணர்வின் தன்மை இதிலே பட்டாலும் அதைத் தன் நாதத்தின் சுருதி கொண்டு அது இயக்கவல்ல சக்தி பெற்றது.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மையை ஏழாவது ஒளியாக மாற்றி அவ்வாறு விண் சென்றவர்களைத்தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்…!” என்று புராணங்களிலேயும் காவியங்களிலேயும் காட்டியுள்ளார்கள்.

நம் பூமியிலே தோன்றிய மனிதர்கள் உயிராத்மாவை ஒளியாக மாற்றி எண்ணிலடங்காத நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் ஒரு பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றார்கள்.

அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரக்கூடிய ஒரு அணுவின் தன்மையை ரிஷியின் மகன் நாரதன்… நாராயணனின் அபிமானப் புத்திரன் என்று காட்டுகின்றார்கள்.

சூரியன் தன் ஒளிக்கதிர் கொண்டு வெப்பத்தால் அது மற்ற நிலைகள் உருவாக்குகின்றது. ஆனால் சப்தரிஷி மண்டலங்கள் தனக்குள் வெப்பம் இல்லாத நிலையில் அது குளிர்ச்சியான நிலைகள் கொண்டு இயங்குவது.

சப்தரிஷி மண்டலம் விண்ணிலே தோன்றும் உணர்வின் தன்மையைத் தனக்குள் வெப்பமற்ற நிலைகள் கொண்டு உணர்வால் அது சிருஷ்டிக்கப்பட்டு ஒளிப் பிளம்புகளாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

விண்ணின் ஆற்றலைத் தனக்குள் உணவாக எடுத்துப் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அந்த அணுவின் நிலைகளை நாரதன் என்று காட்டுகிறார்கள்.

1.நாரதன் வீணையின் சுருதி ஏழு.
2.அவன் வாசிக்கும் நிலைகள் கொண்டு
3.அந்த அணுவின் இயக்கமாக மற்றதுக்குள் இயக்கப்பட்டு
4.அதனின் செயலாக நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள்.

சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு வெளிவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்களை நாம் சுவாசிக்கும் போது இந்த மனித வாழ்க்கையிலே நம்மை அறியாமல் இயக்கும் பிறிதொரு கோபமோ வெறுப்போ வேதனையோ இதைப் போன்ற உணர்வுகள் அதனுடைய வழிக்கு நம்மை இட்டுச் செல்லாதபடி மெய் ஒளியின் தன்மையை நாம் பெறுகின்றோம்.

ஒளியின் தன்மை பெற்று அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் இணைவது தான் நமது எல்லை.

“தவறு செய்கின்றான்…” என்ற உணர்வை நுகர்ந்தால் அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…! – மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால் அதனின் இயக்கம் நமக்குள் எப்படி இருக்கும்…?

Image

murugan, Bogar

“தவறு செய்கின்றான்…” என்ற உணர்வை நுகர்ந்தால் அது நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…! – மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால் அதனின் இயக்கம் நமக்குள் எப்படி இருக்கும்…?

 

“தவறு செய்கிறான்…!” என்று ஒருவனைப் பார்க்கின்றீர்கள். “தவறு செய்பவன்” என்று அந்த உணர்வின் நினைவை நீங்கள் கூட்டிக் கொண்டு அதே உணர்வுடன் அவனைப் பார்க்கப்படும் போது
1.அவன் எப்போது தீமை செய்வான்…! என்ற எண்ணத்திலேயே தான்
2.நீங்கள் குறிக்கோளாக இருக்க முடியும்.

அவர்கள் செய்யும் நோக்கத்தின் நிலைகள் உங்களுக்குள் ஊடுருவி அவர்களை நீங்கள் கவனித்து வந்தால் நீங்கள் எடுத்துக் கொண்ட அந்த எண்ணத்தின் உணர்வுகள்
1.அவருடன் தொடர்பு கொண்டு பேசும் போது அதே உணர்வுகளை அங்கே தோன்றச் செய்து
2.அவனைக் குற்றவாளியாக நிற்க வைக்கும்… அவனைத் தவறு செய்ய வைக்கும்.

அந்த உணர்வின் எண்ணக் கலவையில் பேசி நாம் இதையே அடுத்தவருக்குச் சொல்லும் போதும் இந்தக் குறையான உணர்வுகளையே உணர்த்தச் செய்வோம்.

ஆக அவரவர்கள் எடுத்து கொண்ட அந்தந்த உணர்வின் தன்மை கொண்டுதான் அது அவரவர்களுடைய சொல்லாகப் பேச்சாக வெளி வருகின்றது.

எதையுமே மகிழச் செய்யும் உணர்வின் எண்ணங்கள் கொண்ட மனித உடலை நாம் பெற்றிருந்தாலும் நாம் எதிர்பார்க்காதபடி விஷத்தின் தன்மையான உணர்வுகளைக் கவர நேர்கின்றது.

அது நமக்குள் வளர்ச்சி அடையும் பொழுது அதனால் நோயாகி நம்முடைய சிந்தனையைக் குறைக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் ஏற்படும் தீமையான விளைவுகளிலிருந்து மக்களை மீட்கச் செய்வதற்காக மெய் ஞானியான அந்தப் போகமாமகரிஷி விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிக் கொண்டார்.

இந்தப் புவனம் (நம் பூமி) முழுவதற்கும் தன் உணர்வின் எண்ண அலைகளைப் பாய்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கக் கூடிய எண்ணங்களை மகிழச் செய்தார்.

அவர்கள் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் வெளியிட்ட மூச்சலைகளைப் பூமியில் படரச் செய்துவிட்டு தன் எண்ணத்தாலேயே அந்த மகிழ்ந்த உணர்வுகளைத் தனக்குள் ஈர்த்துத் தன் உடலுக்குள் மற்ற அணுக்களின் தன்மையை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக மாற்றி விண் சென்றார்.

1.போகர் எந்த விண்ணின் ஆற்றலை எடுத்து
2.அதை எவ்வாறு தனக்குள் வளர்த்துக் கொண்டாரோ
3.அப்படி வளர்த்துக் கொண்ட முறையைத்தான் வெளிப்படுத்தினார்.
4.அதற்காக அவரால் உருவாக்கப்பட்டது தான் பழனியில் உள்ள முருகன் சிலை.
5.முருகன் சிலையை உற்றுப் பார்த்து அந்த விண்ணின் ஆற்றலை மக்கள் பெற்று
6.மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் முருகன் சிலையை ஸ்தாபித்தார்.
7.சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணமாகத்தான் போகர் வெளிப்படுத்தினார்.

இப்போது நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் அந்தப் போகமாமகரிஷியின் உணர்வின் அலைகளே எனக்குள் தொடர்ந்து அந்த உணர்வின் ஆற்றலாக என்னை இயக்கி அவர் உணர்ந்த உண்மையின் நிலைகள் உபதேசமாக வெளி வருகின்றது.

ஆகவே
1,பிறிதொரு தவறு செய்பவனின் உணர்வு நம்மை இயக்கி
2.நம்மைத் தவறின் வழிகளுக்கு அழைத்துச் செல்லாமல்
3.நாம் அந்த மாமமகரிஷிகளின் ஒளித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு
4.அவர்கள் உணர்வின் இயக்கமாக அவர்கள் சென்ற மெய் வழியில் செல்வோம்.

எதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்

Image

meditations

எதிர்பாராத நிலைகளில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்

 

இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம்மைத் தாக்குகின்றது. நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்.

ஒரு பக்கம் ஒரு விஷத்தின் தன்மைகளைக் காய்ச்சப்படும் போது ஆவிகள் அதிலிருந்து வெளிவருகின்றது. சூரியனின் காந்தப்புலன் அதைக் கவர்கின்றது. அலைகளாகப் பரவச் செய்கிறது.

அந்த அலைகளைக் கண்டு சாந்த குணம் கொண்ட அணுக்கள் எல்லாம் நகர்ந்து ஓடுகிறது. அப்போது காற்று வேகமாக வீசும்.

காற்று வேகமாகச் செல்லப்படும் போது இந்த உணர்வின் தன்மை இடைமறித்து மனிதன் ஊடே சென்றால் இந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்து மனிதன் மயக்கப்பட்டுக் கீழே விழுகின்றான்.

அதற்கு முன்னாடி சென்ற மனிதனோ நல்ல அலைகளை நுகர்ந்து நல்ல வாசனை கண்டு அவன் தப்புகின்றான். அவன் சென்றபின் அதே பாதையில் அடுத்த மனிதன் செல்லும் பொழுது சந்தர்ப்பம் விஷத்தின் தன்மையைச் சுவாசித்ததும் மயங்கிக் கீழே விழுகின்றான்.

திடீரென்று போனான்… மயக்கப்பட்டான்… இறந்துவிட்டான்…! என்றால் இது எல்லாம் இன்னொரு பக்கம் விளையும் விஷத்தின் தன்மைகளை நுகரப்படும் போது யாரும் அறியாமலேயே ஏற்படக்கூடிய செயல்கள்.

அந்த விஷத்தின் தன்மை பட்ட பின் விஷ அணுக்களாக மாறி நோயாகி சிந்தனை குலைந்து மடிந்த பின் மனிதனுடைய உடலையே மாற்றி பாம்பினமாகப் பிறக்கின்றான்.

ஆகவே
1.பரிணாம வளர்ச்சியில் இந்த உயிர் எதை நுகர்கின்றதோ
2.அந்த உணர்வுக்கொப்ப உடலை அமைப்பதையும்
3.அந்த உணர்வுக்கொப்ப அழைத்துச் சென்று அடுத்த உடலுக்குள் புகச்செய்வதும்
4.அந்த உணர்வை உடலாக்குவதும் தான் உயிருடைய வேலை.

ஆனால் மனிதனின் ஆறாவது அறிவு இதை மாற்றிடும் சக்தி பெற்றது. இதை மாற்றத் தவறினால் நாம் அடுத்த நிலைகள் இப்படித்தான் இருக்கும்.

காசை கொடுத்து விட்டு மந்திரத்தைச் செய்தால் எல்லாம் சரியாப் போகும் என்பார்கள். அந்த மந்திரங்களைச் சொல்லிக் சிறிது காலம் வாழ்ந்தாலும் மீண்டும் நாம் செத்த பின் இதே மந்திரத்தைச் சொன்னால் அடுத்தனுக்கு அடிமையாகி நம் ஆன்மா இன்னொருவனைக் காக்கப் போகும்.

அந்த உடலுக்குள் சென்று மீண்டும் விஷத் தன்மைகள் கூடி இந்த உணர்வின் தன்மை மனிதன் அல்லாத நிலையாகத் தான் பிறக்க முடியுமே தவிர மனிதனாக மீண்டும் வருவதற்குப் பல கோடி ஆண்டுகளாகும்.

அதைப் போன்ற நிலைகள் ஆகாதபடி நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறுவோம்.
1.மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் பெருக்கி அதை வலிமையாக்கி
2.பாதுகாப்புக் கவசமாக அரணாக நாம் அமைத்துக் கொள்வோம்.
3.எதிர்பாராத நிலைகள் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபடுவோம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே குன்றின் மீது கடவுளை வைத்தார்கள் ஞானிகள் – வாசியோகம்

Image

palani hill muruga

“மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே… குன்றின் மீது கடவுளை வைத்தார்கள்…!” ஞானிகள் – வாசியோகம்

 

இராக்கெட்டில் கதிரியக்கச் சக்தியைக் கூட்டி அதனுடைய ஆற்றல் மிக்க நிலைகளை ஒன்றச் செய்து அதன் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும் நுகர்ந்தறியும் சக்தியைக் கொண்டு விண்ணிலே இருக்கக்கூடிய பல ஆற்றலை விஞ்ஞானிகள் அறிகின்றார்கள். படங்களாகவும் எடுக்கின்றார்கள்.

நம் வாழ்க்கையில்
1.எதிர்பாராது கடும் விஷமோ மற்ற எண்ணங்களோ நமக்குள் தோன்றும் நேரங்களிலும்
2.அதீதமான துன்பங்கள் ஏற்பட்டு அதனால் ஆத்திரத்தை ஊட்டும் நேரங்களிலும்
3.ஈஸ்வரா……! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
4.நம் எண்ணங்கள் அனைத்தையும் வலுவாகக் கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும் போது
5.உங்கள் எண்ணம் விண்ணை எட்ட இது உதவும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இதைப் போன்ற நிலைகளில் இயற்கையாகவே உதவி செய்வதற்கு தான்
1.மலைக் குன்றின் மீது முருகனை வைத்து
2.நாம் கீழ் நின்று மேலே நோக்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் விண்ணை நோக்கி நாம் பார்க்கப்படும் போது நம் உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய அந்த உணர்வின் தன்மைகள் வலுவான நிலைகள் கொண்டு நாம் படி மீது ஏற உதவுகிறது.

களைப்போ சோர்வோ மற்ற நோயால் வேதனைகள் இருந்தாலும் இதை எண்ணாது விண்ணை நோக்கி எண்ணும் போது அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் சேர்ந்து அந்த பலவீனமான நிலைகளைக் குறைந்து மெய் ஒளியைப் பெறச் செய்கின்றது.

சாதாரண மக்களும் தனக்குள் அந்த மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் குன்றின் மீதெல்லாம் தெய்வ நிலைகளை வைத்தார்கள் ஞானிகள்.

இயல்பாகவே நம்மை மேல் நோக்கி பார்க்கச் செய்து அந்த மெய் உணர்வை நமக்குள் சுவாசித்து எடுக்கும்படி வழிகாட்டினார்கள் ஞானிகள்.

ஆலயங்களில் தெய்வ நிலைகளைக் கீழ் நோக்கிப் பார்க்கின்றோம். இதை மாற்றி
1.உணர்வை விண்ணை நோக்கிச் செலுத்தி அந்த விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்.
2.மெய் ஞானிகளின் அருள் ஒளியைக் கொண்டு நாம் மேல் நோக்கிப் பார்த்து மகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோம்.
3.அவர்கள் சென்ற பாதையிலே நம் உயிராத்மாவை ஒளி நிலை பெறச் செய்வோம்.

அனைவரும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்று உறுதிப்படுத்தி
1.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியுடன் சுழன்று
2.உங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்கள் நீங்கி
3.உங்கள் பேச்சும் மூச்சும் நீங்கள் சுவாசிப்பது அனைத்தும் உங்கள் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்ந்து
4.நீங்கள் பேசும் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்கி மகிழ்ச்சியினுடைய நிலைகளைப் பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

நீங்கள் எங்கே சென்றாலும் அந்த மகிழ்ச்சிக் கடலிலே அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

காட்டுக்குள் வாழும் மிருகங்களின் விசுவாசம் எப்படி இருக்கிறது என்று யானை கொக்கு ஓநாய் மூலம் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்

Image

 

gnanaguru-saamigal

யானையோ மிகவும் உடலில் வலிமை கொண்டது தான். இருந்தாலும் அது காட்டுக்குள் பல நரக வேதனைப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

 

தன் உணவுக்காக தேடிச் செல்லும் பொழுது காதிற்குள் ஒரு எறும்பு போய்விட்டால் கடுமையான வேதனைப்படுகிறது. காட்டிற்குள் இருக்கப்படும் போது எத்தனையோ விதமான விஷமான கொசுக்கள் அதைத் தாக்குகின்றது. விஷ வண்டுகள் தாக்குகின்றது.

கொசுக்களிடமிருந்து தப்பிக்கத் தண்ணீரில் குளிக்கின்றது. மேலே மண்ணை வாரிப் பூசுகின்றது, இருப்பினும் சில வண்டுகள் முரடான யானையின் தோலிலும் தன் விஷத்தைப் பாய்ச்சி ரத்தத்தை உறிஞ்சுகின்றது.

அதே சமயம் அதன் காதுக்குள்ளும் சென்று உடலுக்குள் குடைச்சலையும் தருகின்றது. இப்படி யானை உடலின் வலு பெற்றாலும் அது நரகலோகத்தில் தான் வாழுகின்றது.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) காட்டுக்குள் செல்லப்படும் போது ஒரு யானை நொண்டி நொண்டி வந்தது. “அதை உற்றுப் பார்…!” என்றார் குருநாதர். உற்றுப் பார்க்கப்படும் போது காலிலே வீக்கம்.

நடக்க முடியாத நிலையில் மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீர் நிலைகள் இருக்கும் பக்கம் இருந்து பார்க்கின்றது. வறட்சியில் வேதனைக்காக அந்தத் தண்ணீரைத் தான் குடிக்கின்றது.

குருநாதர் போகச் சொல்கிறார். அதை உற்றுப் பார்க்கும் பொழுது இரண்டு குச்சி யானை காலில் குத்தி வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் குச்சி ஒடிந்து போயிருக்கிறது. அதற்குள் சீழ் பிடித்திருக்கிறது.

என்னிடம் அந்த யானை காலைத் தூக்கிக் காட்டுகிறது. காட்டு யானை தான். வாயில் கடித்து அந்தக் குச்சியை எடுத்தேன். அப்படியே சலம் பொல… பொல… என்று வந்தது. இது நடந்த நிகழ்ச்சி.

மிருகங்கள் தாக்கும் உணர்ச்சிகள் பெற்றது தான். யானை மனிதனை அச்சத்தால் தான் அடிக்குமே தவிர மனிதனை அது நேசிக்கத் தான் செய்கின்றது. நாம் பேசாமல் போனால் ஒன்றும் செய்யாது.

ஆனால் சிலருடைய பயந்த நிலைகளைப் பார்த்தவுடன் அடிப்பான் என்று உணர்வுகள் கொண்டு நம்மை அடித்தேவிடும்.

யானையின் காலிலிருந்து வெளியில் வந்த சலம் ஒரு இரண்டு அல்லது மூன்று வாளி இருக்கும். பின் அதை நான் அழுத்தித் துடைத்து விட்டேன். அங்கிருக்கும் ஒரு பச்சிலையை எடுத்து வந்து நசுக்கிக் கொண்டு போனால் மறுபடியும் காலைத் தூக்கிக் கொடுக்கிறது. அந்தச் சாறை ஊற்றினேன்.

அங்கே ஒரு ஐந்தாறு நாள் இருந்தேன். “அங்கே இரு…!” என்று குருநாதர் சொன்னார். அப்போது அந்த யானையின் கால் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக் கொண்டு வந்தது.

நான் இந்த யானையிடம் வரப் போகும் போது வேறு யானைகள் விரட்ட வருகிறது. ஆனால் இதன் அருகிலே வரும் பொழுது அடிபட்ட யானை “என்ன சைகை செய்கிறது…!” என்று எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வு கொண்டு மற்ற யானைகள் என்னை ஒன்றும் செய்யவில்லை.

அந்த ஊர் எல்லையை விட்டு வெளியே வந்தேன். அந்த யானையைக் கழட்டி விடும் வரையிலும் என் கூடவே வந்தது. என்னைத் தனியே விட மாட்டேன் என்கிறது.

தும்பிக்கையில் என்னைத் தூக்குகிறது. என்னைத் தூக்கிக் கொண்டு வந்து நல்ல பாதையில் விட்டு விட்டுப் போகிறது. அதனுடைய அறிவு எப்படி இருக்கிறது…? என்று பாருங்கள். யானைக்குத் “இவன் தன்னைக் காத்தவன்” என்ற அறிவின் ஞானம் இருக்கின்றது.

ஒரு சமயம் திருப்பதியிலிருந்து கால்நடையாகத் திருத்தணிக்கு வந்தேன். திருத்தணிக்கு வரும் பாதையில் தண்ணீர் தாகமாக உள்ளதே என்று வயல் பக்கம் போனேன்.

அருகிலிருந்த ஒரு பம்புசெட்டில் தண்ணீர் குடித்தேன். உப்பாக இருந்ததால் குடிக்க முடியவில்லை. அதனால் திரும்பி அப்படியே வந்தேன்.

அப்போது ஒரு கொக்கு அந்த வயலுக்குள் உள்ளிருந்து என்னைக் கண்டவுடன் வெளியிலே வருகின்றது. அது வரை அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் காக்கும் உணர்வு கொண்டவன் என்று நிலைகள் அதற்குத் தெரிகின்றது.

அதனிடம் நான் பழக்கமெல்லாம் செய்யவில்லை. அங்கிருந்து தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

திருத்தணிக்கு வந்தவுடன் ஒருவரிடம் கொடுத்து கொக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி உட்கார வைத்தேன். குருநாதர் அதற்கு ஆசி கொடுக்கச் சொல்கிறார். அதற்கு ஆசீர்வாதம் கொடுத்தவுடன் நன்றாகி விட்டது.

பின் பறந்து போய் விட்டது. பறக்க முடியாமல் இருந்த கொக்கைத் திருத்தணியில் பறக்க வைத்தேன்.

மனிதனுக்குண்டான நிலையும் மனிதனை அணுகி சில உயிரினங்கள் எந்தெந்த நிலைகளுக்கு வருகிறது என்ற நிலையும் குருநாதர் தெளிவாக்குகின்றார்.

இன்னொரு சமயம் காட்டிற்குள் நான் செல்லப்படும் பொழுது ஒரு செந்நாய் பன்றியினால் அடிபட்டுக் கால் நொண்டி வருகிறது.

செந்நாய்கள் பன்றிகளைப் பார்த்தால் ரொம்பத் தந்திரமாகப் பிடிக்கும். மாட்டையோ ஆட்டையோ அடித்துத் தின்றுவிடும். அது ரொம்ப தந்திரமாக வந்து பிடிக்கும்.

ஆனால் பன்றி முன்னாடி இருக்கும் தன் கொம்பைக் கொண்டு செந்நாயை அடித்தால் ஒரே அடியில் எலும்பெல்லாம் உடைந்து விடும். சதையைக் கிழித்துவிடும்.

அப்படிப் பன்றியிடம் அடிப்பட்ட ஒரு செந்நாயிற்கு என் வேஷ்டியைக் கிழித்துக் காலிலே சுற்றி அங்கிருக்கும் பச்சிலையை மருந்தாகப் போட்டேன். போடும் வரை பொறுமையாக இருந்தது.

அதற்கு வைத்தியம் செய்து பச்சிலையைப் போடும் வரை நான் என்ன என்ன செய்கிறேன் என்று பார்த்துக் கொண்டே இருந்தது. முடித்த பிறகு அது பாட்டுக்கு விலகிப் போகிறது.

மனிதனுக்குண்டான விசுவாசமும், மற்ற உயிரினங்களுக்குண்டான விசுவாசத்தையும் அங்கே அனுபவபூர்வமாகப் பார்த்தேன்.

இன்று நாட்டுக்குள் மனிதனுக்கு மனிதன் நல்ல குணத்தில் உதவி செய்கிறோம். ஆனால் சந்தர்ப்பங்கள் என்ன ஆகிவிடுகிறது…?

அன்றைக்கு உதவி செய்தேன். இன்றைக்கு எனக்கே இடைஞ்சல் செய்கிறான். நான் எப்படிப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்…? என்று சொல்லக் கூடிய நிலைமை வந்துவிடுகிறது.

நண்பன் என்ற முறையில் அவன் சிரமப்படும் பொழுது உதவி செய்தாலும் கூட அவர் முன்னுக்கு வந்தவுடன் உதவி செய்தவரை முதலில் பள்ளத்தில் தள்ளி விடுவார். அப்பொழுது தான் நாம் பிழைக்க முடியும் என்ற இந்த அளவிற்கு மனிதர்களின் உணர்வு வளர்ந்து விட்டது.

ஆனால் காட்டு விலங்குகளுக்கு ஒரு விசுவாசத்தில் உதவி செய்ததை அது மறக்கவில்லை. அதன் உணர்வு அதில் பதிந்து அதன் நிலைகளில் இயக்குகிறது.

இதெல்லாம் காட்டுக்குள் சென்ற பொழுது இயற்கையின் உண்மை நிலைகளை யாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்காகக் குருநாதர் கொடுத்த அனுபவங்கள்.

யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

Image

Bogar samadhi

யூதர்கள் வாழும் இடத்தில் போகர் உருவாக்கிய சிவலிங்கம்

 

அன்று ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் போகர் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் இருக்கக்கூடிய உணர்வின் ஆற்றலை ஊடுருவி அதனின் செயலின் ஆக்கத்தை அவன் கண்டுணர்ந்தான்.

அதாவது மனோசீலை என்ற வெடிபொருளை மனித உடலுக்குள் சேர்த்து அறியாது சேர்ந்த விஷத்தின் தன்மைகளை நீக்குவதற்கு அன்று செய்தான். மனோசீலையை மருந்தாக உபயோகப்படுத்தினான்.

மெக்கா மதினா இஸ்ரேல் நாடுகளுக்கெல்லாம் போகர் சூட்சமமாகச் சென்று வந்தார்.
1.அதாவது தன்னுடைய சரீரத்தை இருந்த இடத்திலே வைத்துவிட்டு
2.இங்கிருந்து இன்னொரு சரீரத்திற்குள் நின்று
3.அங்கே உணர்வுகளைப் பாய்ச்சும் நிலை
4.இங்கு பழனி மலையிலே தான் இவருடைய சரீரம் உண்டு.

இன்று ரேடியோ டி.வி. அலைகளை எப்படி இயக்குகின்றோமோ இதைப் போன்று போகர் தான் எடுத்துக் கொண்ட அலை வரிசைகளிலே ஒரு மனித உடலுக்குள் நின்று முதன் முதலிலே இஸ்ரேலில் போய்ச் செயல்பட்டார்.

இஸ்ரேலில் அவர் செய்து கொண்ட நிலைகள் தான் யூத வம்சத்தினுடைய நிலைகளில் அங்கே சிவலிங்கம் ஒன்று குகைக்குள் உண்டு. அந்த குகைக்குள் நின்று அந்த சில நிலைகளைச் செயல்படுத்தினார்.

அங்கே ஐயாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர் வெளியிட்ட அந்த உணர்வின் தன்மைகளை யூதர்கள் எடுத்துத்தான் மந்திர ஒலிகளாக மாற்றி விட்டார்கள்.

அப்பகுதிகளிலே பூராவும் இந்த யூதர்களுடைய நிலைகள் ஆட்சி புரிந்து உலகம் முழுவதற்கும் மந்திர சக்திகளாகப் பரவியது.

அவர் அங்கிருந்து சீனாவிற்குச் சென்று பல நிலைகளில் செயல்பட்டார். ஒவ்வொரு மனித உலகத்தின் நிலைகளையும் சுவாசித்து விட்டு மீண்டும் இந்தப் பழனியிலே அவருடைய உடலுக்குள் மீண்டும் வந்து சுழன்று கொண்டிருந்தார். மற்ற உடலிற்குள் புகுந்து ஆங்காங்கு செய்து வைத்த நிலைகள் தான் அது.

1.தன் உடலையே காயகல்பமாக ஆக்கிக் கொண்டு
2.தான் வெளியிலே சென்றாலும் அது அழுகிவிடாத நிலைகள் கொண்டு
3.வெகு தூரத்தில் இருந்தாலும் இந்தச் சரீரத்தை மீண்டும் இயக்கிக் கொண்டு அந்த நிலையை அன்று செய்தான் போகன்.

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கினான். நஞ்சினை அடக்கிடும் உணர்வை மனித உடலிலே பெற்றான் அந்தப் போகமாமகரிஷி.
1.மெய் உணர்வின் தன்மையை அறிந்தான்
2.தன் இன மக்கள் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணினான்
3.மகிழ்ந்த உணர்வின் அலைகளாகப் பரப்பும் நிலையைச் செய்தான்
4.மனிதர் அனைவரின் உயிரைக் கடவுளாக மதித்தான்.
5.அனைவரும் தெளிந்த நிலைகள் கவர வேண்டும் என்று ஏங்கினான்.

மனிதனின் ஆறாவது அறிவைக் காத்திடும் நிலையாக அவன் தெளிந்த உணர்வு கொண்டு விண்ணுலகம் சென்றான் போகன். ஒளியின் சுடராகச் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் இருக்கின்றான்.

அந்தப் போகமாமகரிஷியை நாம் யாரும் நினைக்கின்றோமா…!

நடந்ததை எல்லாம் சொல்லும் சக்தி பெற்றவர்… முக்காலமும் அறிந்தவர்…! என்று சிலரைச் சொல்கிறோம் – விளக்கம்

Image

nadi-astrology

நடந்ததை எல்லாம் சொல்லும் சக்தி பெற்றவர்… முக்காலமும் அறிந்தவர்…! என்று சிலரைச் சொல்கிறோம் – விளக்கம்

 

“முக்காலமும் அறிந்தவர்கள்…!’ என்று சொல்பவர்கள் எல்லாம் மந்திர சக்தியை வைத்து ஒரு மனிதனுக்கு மனிதன் விளைய வைத்த அந்த உணர்வின் ஆற்றலை எடுத்துத் தன் எண்ணத்திற்குள் வலுவாக்கி அந்த நுண்ணிய அலைகள் கொண்டு மற்ற மனிதர்கள் வெளிப்படுத்தும் சிற்றலைகளை எடுத்துச் சொல்வது தான்.

உதாரணமாக ஒரு வேப்ப மரம் அதனின் கசப்பின் வலிமை எந்தளவுக்கு இருக்கின்றதோ அதை வைத்துச் சிற்றலைகளாகப் பூமியிலே காற்றில் படர்ந்து வரும் தன் இனமான கசப்பின் அலையை எடுத்துத்தான் அது வளர்கின்றது.

அதைப் போல ஒரு மனிதனுக்குள் விளைய வைத்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அதிகமாகக் கூட்டப்படும் போது அதன் வரிசையைக் கொண்டு சிறிய அலைகள் வந்தால் ஏம்ப்பா…! நீ இதை நினைத்தாய் அல்லவா…! என்று அப்படியே சொல்ல முடியும்.

அப்போது சிறுகச் சிறுக அந்த உணர்வின் அலைகளை எடுக்கப்படும் போது நம் எடுத்துக் கொண்டது என்ன…? துன்ப அலைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொள்வோம்.

ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற நிலையில் உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் இங்கே வரப்போகும் போது “எதை நினைத்துக் கொண்டு என்னிடம் நீங்கள் வருகின்றீர்கள்…?” என்று நான் (ஞானகுரு) சொல்ல முடியும்.

உங்கள் சொல்லலாம். அதைப் போல வரக்கூடிய ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் சொல்லி நான் என்ன செய்வது…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் எடுத்துக் கொள்கிறேன்.

நீங்கள் கஷ்டப்படுவது சிரமப்படுவது எல்லாம் நான் சொன்னால்
1.என்னை நீங்கள் “முக்காலமும் அறிந்த ஞானி…!” என்று சொல்வீர்கள்.
2.இந்த ஞானி கடைசியில் என்ன ஆவார்…?
3.அத்தனை பேருடைய துன்பத்தையும் எடுத்து எடுத்துக் கடைசியில்
4.உடலில் பல போராட்டமாகி நோயாகி முடிவில் இறந்தே போய்விடுவார்.
5.ஐய்யய்யோ…! இவ்வளவு தூரத்திற்குப் போய்விட்டாரே…! என்பீர்கள்.

ஆக மொத்தம் – எல்லோருக்கும் நான் நல்லது செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதித்துக் கொண்டே இருக்கின்றானே…! எனக்கு இப்படித் துன்பங்களுக்கு மேல் துன்பம் வந்து கொண்டே இருக்கிறதே…! என்று எண்ணுவீர்கள்.
1.என்னை (ஞானகுரு) நினைத்து எங்களுக்கெல்லாம் அவர் நல்லது செய்தார்.
2.எல்லா விஷயத்தையும் சொன்னார். கடைசியில் அவரும் போய்விட்டார்.

நீங்கள் எந்தெந்த சுகத்தை அனுபவித்தீர்களோ அந்த சுகமான நிலைகள் கொண்டு “என்னை நினைத்து…!” இன்னும் கொஞ்சம் வேதனையைத்தான் எண்ணுவீர்கள்.

கொஞ்ச நாள் சுகப்பட்டீர்கள். நான் போன பிற்பாடு வேதனையைத்தான் எடுத்துக் கொள்வீர்கள். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…!

இவைகள் எல்லாம் நாம் நுகரும் உணர்வின் இயக்க நிலைகள். ஆகையினால் யாரும் போற்றலுக்காக ஏங்க வேண்டாம். நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்றால்
1.ஒவ்வொரு நிமிடமும் “மனிதன் மகிழ்ந்து இருக்க வேண்டும்” என்ற எண்ணத்தை மட்டும் நீங்கள் செலுத்துங்கள்.
2.நீங்கள் உங்களுக்குள் அந்த மகிழ்ச்சியைக் காண முடியும்.

உங்களுக்கு யார் இம்சை கொடுத்தாலும் சரி… அல்லது கடும் சொற்களைச் சொல்லிவிட்டாலும் சரி
1.அடுத்து அந்தச் சுடு சொல்லினுடைய நிலைகள் அவர்கள் சொல்லிலே வராதபடி
2.அவர்கள் திருந்த வேண்டும் என்று மட்டும் எண்ணுங்கள்
3.உன்னை அறியாமல் பேசும் நிகழ்ச்சியிலிருந்து “நீ தப்புவாய்…!” என்று இதைச் சொல்லுங்கள்.

அப்போது “இதுவும் கடும் சொல்தான்…!” ஆனால் இந்தச் சொல்லின் தன்மை அவரைத் தப்புவிக்க உதவுகின்றது. நம் மனதைத் தூய்மைப்படுத்துகின்றது.

அதற்குப் பதில் இரு நான் பார்க்கிறேன்… நீ என்னை இப்படிப் பேசினாய் அல்லவா… அதற்காக வேண்டி நீ அனுபவித்தே தீருவாய்.. நீ எப்படி எல்லாம் கஷ்டப்படப் போகின்றாய் தெரியுமா…? என்று நாம் சொன்னால்
1.முதலில் நாம் தான் அந்தக் கஷ்டத்தை அனுபவிப்போம்
2.நாம் சொன்ன உணர்வின் தன்மை அங்கேயும் விளையும்.
3.அந்த உணர்வின் தன்மை எதிர்ப்பு நிலை ஆகும்
4.இரண்டு பேருக்கும் இது கெட்டதாகத் தான் முடியும்.
5.மனிதருடைய உணர்வுகளுக்குள் இத்தனை நிலைகள் உண்டு.

ஆகையினால் இதை எல்லாம் நீங்கள் மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். குருநாதர் காட்டிய அருள் வழியில் சக்தி வாய்ந்த அந்த மெய் ஞானிகளின் அருள் வித்தை உங்களுக்குள் சமைத்துக் கொடுத்துக் கொண்டேயிருக்கின்றோம்.

இது பல வருட காலம் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கொண்டு வந்தது. உங்களிடம் லேசாகச் சொல்றேன் என்றால் “வாக்காலே…!” சொல்கிறேன்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்…! உங்களுக்கு நல்லதாகிப் போகும் என்று யாம் சொல்லும் போது அது உங்களுக்கு நல்லதாகின்றது.
2.நான் சொன்ன மாதிரி நீங்களும் நல்லதாகிப் போகும் என்று மற்றவர்களுக்குச் சொன்னவுடனே அங்கேயும் நல்லதாகின்றது
3.மற்றவர்களுக்கும் நல்லாதாகிறது என்கிற போது உங்களுக்குப் பின்னணியில் யாம் எடுத்துக் கொடுக்க கூடிய அந்த ஞானிகளின் அலைகள்தான்.

ஆகவே அருள் ஞானிகளை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் எண்ணும்போது உங்களுக்கு நல்லதாகின்றது. அதை நீங்கள் எடுத்து அடுத்தவருக்குச் சொல்லும் பொழுது நீங்கள் சொல்வது அவர்களுக்கும் நல்லதாகும். ஆனால் ஞானிகளின் ஆற்றலை நீங்கள் நினைத்து எடுக்க வேண்டும். (இது முக்கியம்)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாக இருந்து ஞானிகளின் உணர்வை எப்படிப் பெற வேண்டும்…? என்று அதை எடுக்கும் முறைகளைக் காட்டி அதை வைத்துத் துன்பங்களையும் வேதனைகளையும் எப்படிப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பதை எமக்குத் தெளிவாக்கினார்.

ஏனென்றால் இதெல்லாம் குரு வழியில் வருவதுதான். அதன் வழியில் தான் உங்களுக்குள்ளும் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

Image

blissful- ADI PERUKKU

எங்கும் எதிலும் மகிழ்ச்சி பெறச் செய்யும் “ஆடிப் பெருக்கு”

 

ஒருவர் நரக வேதனைப்படுகின்றார் என்றால் நாம் அந்த வேதனை உணர்வை நுகர்ந்தால் நம் நல்ல உணர்வையும் அது மடியச் செய்கின்றது. ஆகவே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி மகரிஷிகளினுடைய அருள் சக்தியைத் தனக்குள் கவர்ந்து உடல் முழுவதும் பரவச் செய்து முதலில் நம் நல்ல உணர்வைக் காத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை வேதனைப்படுவோர் உணர்வுகளிலே பாய்ச்சி அவர் உடல்களிலும் அதை விளையச் செய்ய வேண்டும்.
1.அவர் பேரின்பப் பெரு வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் அவருக்குள் வளர வேண்டும் என்ற அந்த எண்ணத்தை
3.நமக்குள் வலுவாக எண்ணி அதை அவருக்கு பாய்ச்சுதல் வேண்டும்.

அவர்கள் நாம் சொல்வதைக் கேட்டு அதைப் பெற வேண்டும் என்று இச்சைப்பட்டால்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மெய் ஞானம் பெறுவீர்கள்…
2.உயர்ந்த வாழ்க்கை வாழ்வீர்கள்…! என்று மீண்டும் இதை நாம் வாக்காகக் கொடுக்க வேண்டும்.

அப்பொழுது அவருக்குள் அந்த அருள் ஞானத்தின் நிலைகள் பெருகி வேதனைகளிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகளை அவர் வெளிப்படுத்துவார்.

அப்பொழுது அவரிடமிருந்து வெளிப்படும் மகிழ்ச்சியான உணர்வை நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவாகக் கொடுத்து மகிழ்ச்சி பெறும் அணுக்களாக ஒளியின் சுடராக நாம் பெருக்க வேண்டும்.

வாடிய பயிர்களைக் காப்பதற்காக அதற்குத் தேவையான சக்தி வாய்ந்த உரங்களையும் பலவிதமான சத்துக்களையும் கொடுத்த பின் தாவர இனங்கள் வளர்ச்சியாகி அது நல்ல மணி முத்துக்களைப் பெருக்கிக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் வாழ்க்கையில் வேதனைப்படும் நிலைகள் வந்தால் அல்லது வேதனைப்படுவோரைப் பார்த்தால் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நல்ல குணங்களுக்கு உரமாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

ஆகவே யார் வேதனைப்பட்டாலும் துன்பப்பட்டாலும் நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும்
1.அவர் உடல்களில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு படர வேண்டும்
2.அங்கிருக்கும் நஞ்சான உணர்வுகள் குறைய வேண்டும்
3.அவர்கள் உடலில் மகிழ்ச்சி பெறும் சக்திகள் பெற வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் எண்ண ஒலிகளை (சொல்லை) அங்கே பாய்ச்ச வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்… உங்கள் துன்பம் போகும்… இருள் சூழ்ந்த நிலைகள் குறையும்… அருள் ஞானத்தை நீங்கள் பெறுவீர்கள்…! என்று இந்த உணர்வினை நாம் போதித்தல் வேண்டும்.

இப்படி இதைச் சொல்லிச் சொல்லித்தான் அந்த நல்லதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவ்வாறு சொன்னால்தான் நமக்குள் வரும் அவர்கள் பட்ட துன்பமோ துயரமோ நோயோ நமக்குள் வராது தடுக்க முடியும்.

இல்லை என்றால் அவருடைய வாழ்க்கையில் எப்படி விஷத்தின் தன்மை கொண்ட உணர்வுகள் உடலில் அவருடைய நல்ல உணர்வுகளைக் குறையச் செய்ததோ அதை நாம் எண்ணிவிட்டால் அந்த விஷத்தின் தன்மைகள் நமக்குள் வளர்ந்து பெருகிவிடும். நம் நல்ல குணங்களைக் குறைக்கச் செய்யும்.

அதற்காக வேண்டித்தான் அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி அந்த உணர்வின் தன்மையைக் கலவையாக்கித் துன்பப்படுவோர் மனதில் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்று சொல்வது.

அப்படிப் பதித்தோம் என்றால் அந்த உணர்வின் ஆற்றல் அங்கே பெருகி அவருடைய வாழ்க்கையில் இருளை வென்று ஒளி பெறும் உணர்வாக மகிழ்ச்சி பெறும் சக்தியாகப் பெருகுகின்றது.

அதைக் கண்டு நாம் பேரானந்தப்பட்டு அதில் விளைந்த அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும். அது நம் உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஒளி பெறும் சரீரமாகப் பெருக்கும்.

1.பகைமையோ தீமைகளையோ மற்ற தீமை கொண்ட உணர்வுகளையோ நமக்குள் வளர்த்திடாதபடி
2.நிறைவு பெற்ற உணர்வுகளை இணைத்து நம் எண்ணங்களை மகிழ்ச்சி பெறச் செய்து
3.நம் சொல் பிறரை மகிழ்ச்சி பெறச் செய்வதும்
4.நமது பார்வை பிறரை மகிழச் செய்வதும்
5.நம்முடைய செயல்கள் அனைத்தும் மகிழச் செய்யும் நிலையாகப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் சோர்வடைந்து இருந்தால் அப்போது அவரை அந்த இருண்ட நிலைகளிலிருந்து மீளச் செய்து அவர் மகிழும் நிலையைப் பார்த்து நமக்குள் அந்த மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு.

ஆகவே
1.யாருடைய தீமையைக் கண்டாலும் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் பெருகாது
2.அந்தத் தீமையை நீக்கிடும் அருள் சக்தியாக அருள் ஞானிகளின் உணர்வைப் பெருக்கி
3.எங்கும் எதிலும் மகிழ்ச்சியைப் பெருக்குவதே ஆடிப் பெருக்கு…!

குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

Image

Spiritual Family

குடும்பத்திற்குள் பாசத்தினாலும் பந்தத்தினாலும் அறியாது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபடப் பழகிக் கொள்ளுங்கள்

 

ஒருவன் நம்மைத் திட்டுகிறான்…! அதைக் காதில் கேட்டவுடனே என்னைத் திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று சொல்லி ஆத்திரத்தில் நாமும் பேசிவிட்டோம் என்றால் அடுத்தாற்போல நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?

ஒரு நாளைக்குத் திட்டிவிட்டு அவன் போய்விடுகிறான். ஆனால் நமக்கு கை கால் குடைச்சல் வருகிறது. ஏன் வந்தது…? எதற்கு வந்தது…? என்று தெரியாது.

பெரும் பகுதி பெண்களுக்குப் பாருங்கள். தன்னைப் பற்றி மற்றவர்கள் குறையாக அப்படிப் பேசினார்கள்… இப்படிப் பேசினார்கள்…! என்று தெரிந்து விட்டது என்றாலே போதும். அவர்களுக்கு கை கால் குடைச்சல் வந்து கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் தன் பிள்ளையைக் கல்யாணம் கட்டிக் கொடுத்து இருப்பார்கள். அவர்கள் வீட்டில் மாமியார் வீட்டில் ஏதாவது செய்து விட்டால் போதும்.

“இப்படிச் செய்கிறார்களே பாவிகள்…! இப்படி எல்லாம் செய்கிறார்களே…! என் பிள்ளை இப்படிக் கஷ்டப்படுகின்றதே…! என்று மிகவும் வேதனைப்படுவார்கள்.

நாத்தனாரோ மற்ற யாராவது தன் பிள்ளையை ஏதாவது ஒன்றைச் சொல்லி விட்டார்கள் என்றால் அதையே திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

அடுத்து இவர்கள் யாரிடம் பேசுவதற்குப் பார்த்தாலும் இதே நிலை வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.சுவாசித்த அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் வீட்டுக்குள்ளேயே அலைகளாகப் படர்ந்து விடுகின்றது.
2.வேதனை என்றாலே கடும் விஷம்.
3.வீட்டில் படர்ந்த அந்த அலைகளைச் சுவாசிக்கச் சுவாசிக்க எங்கிருந்தும் தப்ப முடிவது இல்லை.

வீட்டிற்குள் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பானலும் இதே நிலைகள் தான். அந்த அலைகள் வீட்டுக்குள் சுழலும் பொழுது நம்மை அறியாமேலே அது உணர்ச்சியைத் தூண்டி இயக்கிக் கொண்டே தான் இருக்கும்.

அதே சமயத்தில் வீட்டுக்குள் ரொம்பப் பாசமாக இருக்கும் போது திடீரென்று பகைமையாகி வெறுப்பாகிவிடும். பாவி…! கடைசியில் இப்படிச் செய்து விட்டானே…! என்று அதையே எண்ணிக் கொண்டு செத்தால் போதும்.

யார் மீது வெறுப்பானதோ செத்த பிற்பாடு அவர் உடலில் வந்து பாய்ந்து கொள்கிறது. அந்தப் பழி தீர்க்கும் உணர்வுடன் வந்து இன்னும் கொஞ்சம் இம்சை செய்யத் தொடங்கும். (ஆனால் இதனால் தான் இப்படி நடக்கிறது என்று தெரியாது).

வெறுக்கும் உணர்ச்சிகள் உந்தி உந்தி இந்த உடலையும் நஞ்சாக்கி உடலை விட்டுப் பிரிந்த பின் அந்த இரண்டு ஆன்மாக்களுமே அடுத்து மனித உடல் பெற முடியாதபடிப் போய்விடுகின்றது.

ரொம்பக் குடும்பங்களில் இந்த மாதிரி எத்தனையோ அவஸ்தைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதைப் போன்ற நிலைகள எல்லாம் மாற்றுவதற்கு எத்தனையோ வகையில் ஞானிகள் உணர்வை நீங்கள் எடுக்கும் வழியைச் சொல்கின்றோம்.

ஏனென்றால் இந்த உண்மைகளை நான் (ஞானகுரு) உணர்வதற்காக வேண்டி குருநாதர் என் உடலுக்குள் அணு அணுவாக இம்சைகள் கொடுத்தார்.
1.தீமைகள் எப்படி நமக்குள் வருகிறது..?
2.அது எப்படி நம்மை இயக்குகிறது…?
3.வேதனைகள் எப்படி உருவாகிறது..?
4.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறச் செய்து
5.அந்தத் தீமைகளையும் வேதனைகளையும் எப்படி அகற்றிப் பழக வேண்டும் என்ற முழு அனுபவத்தையும் எமக்குக் கொடுத்தார்.

குருநாதர் காட்டிய அதே அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கக் கூடிய ஆற்றல் எல்லாமே “அந்த மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளைத்தான்…” இந்த உபதேசத்தின் மூலமாக ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

பதிவு செய்ததை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுதெல்லாம் அதைப் போக்குவதற்கு ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.
1.மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேரச் சேர
2.மற்ற தீமையான உணர்வின் இயக்கங்களின் வலிமை குறையும்.

விண்ணிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொருவரையும் பெறச் செய்வதற்காகத்தான் எல்லா ஆலயங்களிலும் “தூப ஸ்தூபியை” வைத்துள்ளார்கள் ஞானிகள்.

அதற்கு நேராக நின்று வானை நோக்கிப் பார்த்து அந்த மகரிஷியின் அருளைச் சுவாசிக்கச் செய்து நம்மை அறியாது நம் உடலில் சேர்ந்த நோய்களைப் போக்கும் படி செய்தார்கள் ஞானிகள்.

ஞானிகள் சாஸ்திரங்களாக நமக்குக் காட்டிய வழிகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்வதே “ஆடிப் பெருக்கு…!”

Image

Aadi Perukku 2018

ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சியைப் பெருக்கச் செய்வதே “ஆடிப் பெருக்கு…!”

 

தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்கள் வேதனைப்படும்படியான செயலைச் செய்யாதீர்கள். மற்றவர்கள் வேதனைப்படும்படியான சொற்களைச் சொல்லாதீர்கள்.

ஏனென்றால் எப்படி ஒரு விதையை மண்ணிலே விதைக்கப்படும் பொழுது அது முளைத்து அதிலிருந்து மீண்டும் பல வித்துக்கள் விளைந்து வருவது போல் ஒருவர் வேதனைப்படும்படியாகச் சொல்லும் போது அந்த உணர்வுகள் அங்கே பாயப்பட்டு
1.அங்கிருந்து பல வேதனைப்படும் சொற்கள் உங்களுக்குள் ஊடுருவிப் பாயும்.
2.உங்கள் சொல்லே உங்களுக்கு எதிரியாகி விடுகின்றது
3.உங்கள் சொல்லே உங்களைக் கடுமையாகி விடுகின்றது.
4.உங்கள் நினைவே உங்களுக்கு எதிரியாகி விடுகின்றது.
5.இதிலிருந்து விடுபட அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்த்து அதைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

நம்மை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபட அருள் ஞானத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
1.உலக மக்கள் அனைவரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
2.அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
3.நம்மை அணுகுவோர் நம்மைப் பார்ப்போர் நம் தொழிலுடன் தொடர்பு கொண்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தைப் பெருக்கி
4.மகிழ்ச்சி பொங்கும் செயல்கள் நம் குடும்பத்தில் பெருக வேண்டும் என்று
5.இப்படி நல்லதை எண்ணி எண்ணிப் பெருக்குவதே “ஆடிப் பெருக்கு…!”

சூரியன் எட்டுக் கோள்களின் தன்மையை ஒளியாக மாற்றி அது ஒன்பது கோளின் ஒளியாக நின்று மற்ற கோள்களுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

இதைப் போல நாமும் பிறருடைய தீமையினுடைய நிலைகளைக் கேட்டறிந்தாலும் எட்டுவிதமான உணர்வுகளைப் பேசினாலும் அந்த உணர்வினை நமக்குள் எடுத்து சூரியனைப் போன்று ஒளியின் சுடராக மாற்றிப் பிறருடைய தீமைகளை மாற்ற வேண்டும்.

பேரருள் பேரொளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து அதை நமக்குள் வலிமை பெறச் செய்து கொண்ட பின் அந்த உணர்வின் சக்திகளை மற்றவர்களுக்குப் பாய்ச்சப்படும் போது அவர்களும் இருள் சூழா நிலைகள் பெற்று அருள் ஞானத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றார்கள்.

ஆடிப் பெருக்கு என்ற நிலைகளில் நன்னீர் பெருகித் தாவர இனங்களைப் பெருக்கச் செய்வது போல் நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த குடும்பங்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் வேண்டும்.

அவர்கள் உயர்வதற்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி அங்கே பெருக வேண்டும். அவர்கள் மூச்சலைகள் உலகம் நன்மை பெறும் சக்தியாகப் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் அந்த மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

“பத்தாவது நிலையான” உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெற
1.பல நிலைகளில் பல முறைகளில் பல திசைகளிலிருந்து (எட்டு) தீமைகள் வந்து நம்மைத் தாக்கினாலும்
2.அதனை உணர்வின் ஒளியாக மாற்றுவோம்… பேரொளியாகப் பெருக்குவோம்…!
3.துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக என்றும் தனக்குள் பேரின்ப பெரு வாழ்வைப் பெருக்கிக் கொண்டு உள்ளது போல
4.நாமும் அந்த அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்.
5.உலக மக்கள் அனைவருக்குள்ளும் அந்த அருள் ஞான சக்தி பெருகிட நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

நமது பார்வையில் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்து அவர்கள் மகிழ்ச்சி அடைவதைப் பார்த்து நாமும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம் என்று இதை “ஆடிப் பெருக்காகப் பெருக்கிக் கொள்வோம்…!”