தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

Image

protected-zone

தீமைகளைச் சந்தித்த பின்… “நாம் நல்லதை வளர்க்கும் பாதைக்குப் போகின்றோமா…? அல்லது நல்லதைக் காக்க முடியாத நிலைக்குப் போகின்றோமா…?”

 

தீமை… என்றும் நன்மை… என்றும் மற்ற உயிரினங்கள் கண்டுணர்ந்தாலும்
1.தீமையிலிருந்து விடுபடும் உபாயம் அவைகளுக்குத் தெரியாது.
2.தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று தீமை செய்யும் உடலை உற்று நோக்கி
3.அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டு
4.அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைக்குத் தப்பி ஓடுகின்றது.

உதாரணமாக ஒரு புலியிடம் சிக்கிய மான் அதனிடமிருந்து தப்பிக்க அந்தப் புலியின் உணர்வுகளைப் பயத்தால் அதிகமாக நுகர்ந்து தனக்குள் வலுப்பெற்ற பின் அதனின் உணர்வுகள் மானின் உடலில் விளைகின்றது.

புலியின் உணர்வுகள் மானின் உடலில் விளைந்து இது இறந்த பின் அந்தப் புலியின் உடலுக்குள் சென்று மான் புலியாகப் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. இது இயற்கையின் பரிணாம வளர்ச்சி.

அன்பும் பண்பும் பரிவும் கொண்டு ஒரு நண்பனுடன் நாம் பழகின்றோம். சந்தர்ப்பத்தால் அவன் நோயோடு வாடுகின்றான் என்றால் நூறு பேர் அதைக் கேட்டறிகின்றார்கள்.

ஆனால் நண்பன் மீது பற்று கொண்ட நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து நாம் அதிகமாக அவரை நேசிக்கப்படும் பொழுது அவர் உடலில் பட்ட நோயின் உணர்வுகள் நம்மையும் பலவீனப்படுத்தத் தொடங்கி விடுகின்றது.

நமக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்குள் அந்த நண்பர் படும் வேதனையான உணர்வுகள் கலந்து விடுகின்றது. நண்பரையே எண்ணி ஏங்கும்படிச் செய்கிறது.

நண்பருக்கு நாம் உதவி செய்தபின் “இவர் எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…!” என்று அந்த நண்பருக்கும் நம் மீது எண்ணங்கள் அதிகமாக வருகின்றது.

இரு மனமும் ஒன்றென இணையும் போது அவர் நோயால் மடிந்தால் நாம் உதவி செய்த நமது உணர்வின் எண்ணங்கள் வலு பெற்று அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. பின் நமக்குள் நம்மை அறியாமலேயே பல பகைமை உணர்வுகளை ஊட்டுகின்றது.

நாம் பண்புடன் இருந்தோம்… அன்புடன் இருந்தோம்… எனக்கு ஏன் இந்தத் தொல்லை…? என்று நாம் வேண்டினால் மீண்டும் வேதனையைத்தான் உணர முடியுமே தவிர வேதனையைத்தான் வளர்க்க முடியுமே தவிர பகைமையிலிருந்து மீள முடியாது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. பகைமை என்று அறிந்த பின் அந்தப் பகைமையிலிருந்து விடுபடுதல் வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் தொடுதல் வேண்டும்.

நெருப்பு சுடுகிறது என்று அறிகின்றோம்.
1.ஒரு சூடான பாத்திரத்தை அதற்கென்ற ஒரு இடுக்கியை வைத்துத் தூக்குகின்றோம்.
2.இடுக்கியிலும் சூடு வருகிறதென்றால் அதைத் தணிக்க மற்ற துணிகளை வைத்து
3.அதைப் பிடித்து நாம் சூடான பாத்திரத்தை எடுக்கின்றோம்.

பகைமை உணர்வு நம்மை இயக்குகிறது என்று அறிந்தால் உடனே “ஈஸ்வரா” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் நினைவினைச் செலுத்த வேண்டும்.

சர்வ தீமைகளையும் வென்ற அந்த மெய் ஞானியான அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான். அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இந்த உணர்வின் வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை எடுக்கும் பழக்க வழக்கம் வந்து விட்டால் அந்த நோயுடன் வாழும் உணர்வினை நமக்குள் வராது அடக்கிவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த உணர்வுகளை நோயுற்றோருக்குப் பாய்ச்சினால் அது அவருக்குள் விளைந்து அவர் நோயைப் போக்க இது உதவும்.

இல்லையென்றாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை அவருக்குள் விளைந்து அவர் உடலை விட்டுச் சென்றால் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லும். நமக்குள் வராது. ஆகவே
1.அவரும் பரிணாம வளர்ச்சியான மனிதனுக்கு அடுத்த ஒளி நிலை அடைகின்றார்.
3.அதே சமயத்தில் நமக்குள் வலுவாக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மையும் அங்கே அழைத்துச் செல்லும்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும். ஏனென்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஞானப்பால் பெற்ற திருஞானசம்பந்தர் தன் குழந்தைப் பருவத்தில் செயல்படுத்திய ஆற்றல்மிக்க செயல்கள்

Image

Gnana sambandar

“ஞானப்பால் பெற்ற…!” திருஞானசம்பந்தர் தன் குழந்தைப் பருவத்தில் செயல்படுத்திய ஆற்றல்மிக்க செயல்கள்

 

திருஞானசம்பந்தர் தன் இளமைப் பருவத்திலேயே பல ஆற்றல்மிக்க செயல்களைச் செய்தார். எவ்வாறு அவருக்கு அந்த ஆற்றல்கள் வந்தது என்று பார்ப்போம்.

வெகு நாளாகப் புத்திர பாக்கியம் இல்லை என்று ஏக்கத்தில் இருந்த அவரின் தாய் சீர்காழியில் உள்ள ஈசனின் கோவிலில் நடக்கும் கதாகாலட்சேபங்களையும் தெய்வ நிலைகளால் செய்யப்பட்ட மந்திர ஒலியால் நடக்கக்கூடிய சில அற்புதங்களையும் உற்றுப் பார்க்கின்றது. கேட்டுத் தனக்குள் பதிவாக்கிக் கொள்கிறது.

புத்திர பாக்கியம் பெறவேண்டும் என்ற ஏக்கத்தினால் அந்தத் தாய் சுவாசித்த உணர்வுகள் கருவாக உருவாகின்றது. சிவனை எண்ணி எண்ணி ஏங்கிய நிலைகள் அனைத்தும் தாயின் உடலில் ஊழ்வினையாகச் சேருகின்றது.

இவ்வாறு சேர்ப்பித்த நிலைகள் தான் அந்த தாயின் கருவுக்குள் அந்த அணுவுக்குள் மாற்றம் அடைந்து அது வலுப்பெறும் போது கருவாக உருப்பெறும் உணர்வின் தன்மை அங்கே வருகின்றது.

அவ்வாறு கருவுற்றதன் காரணம் தான் வணங்கி வந்த அந்த தெய்வத்தின் கருணையே என்ற நிலையில்
1.கருணைக் கடலே…!
2.நாங்கள் வேண்டியதை அந்த வரங்களை நீ கொடுத்தருளினாய் என்ற உணர்வைத் தனக்குள் பதியச் செய்து
3.அங்கிருக்கும் விநாயகனை வணங்கும் போதெல்லாம் இதை வினையாகச் சேர்த்துத் கொள்கின்றது.

தெய்வீக அருளால் என்னை ஆசீர்வதித்த விநாயகனே… சிவனுடைய அருளும் பராசக்தியின் ஆற்றல் மிக்க சக்தியும் எங்களுக்குள் இயக்க வேண்டும். அருள் ஞானம் இங்கே வளர வேண்டும் என்றும் வேண்டுகிறது.

விநாயகா…! நீ தான் ஞானவான் ஆயிற்றே…!
1.என் கருவிலே இருக்கக் கூடிய குழந்தை பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உன்னுடைய ஞானத்தின் நிலைகள் என் கருவில் வளரும் சிரு பெறவேண்டும் என்று
3.அன்றைய பக்தியின் நிலைக்கொப்பத் தனக்குள் எடுத்து வளர்கிறது.

ஆலயத்தில் காவியப் படைப்பால் நடக்கும் யாகங்களையும் வேள்விகளையும் அதன் வழிகள் கொண்டு பல அற்புதங்கள் நடப்பதையும் கண்டுணருகின்றது அந்தத் தாய்.

அங்கு நடக்கும் அதிசயங்களை மந்திரத்தால் ஏகிய அந்த உணர்வின் தன்மை கண்டபின் இது எல்லாம் என் கருவுக்குள் இருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது.

இவ்வாறு ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் அந்தத் தாய் சுவாசித்த இந்த உணர்வுகள் அனைத்தும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து… தாய் ஏக்கத்தால் எண்ணியது அனைத்தும் குழந்தை உடலுக்குள் வலு கொண்டதாக விளைகின்றது.

இவ்வாறு விளைந்து பத்து மாதம் முடிந்து குழந்தை பிறந்த பின் ஒரு மாதமே ஆன நிலையில் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு தன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அந்தத் தாய் ஆலயத்திற்குள் வருகின்றது.

எதையெல்லாம் வேண்டிக் கேட்டோமோ வரம் கொடுத்த ஆண்டவனிடம்… “தன் பிள்ளையுடன் அணுகி… அவன் அருள் பெற வேண்டுமென்று கையேந்தி வருகின்றது…!”

முதலிலே விநாயகனை பார்க்கப்படும் போது அந்தக் குழந்தை கை கூப்பிச் சிரித்திடும் நிலை வருகின்றது. அந்தக் குழந்தைப் பருவத்தில் தன் தாயை உற்றுப் பார்ப்பதும் பின் வைத்திருக்கும் சிலையையும் உற்றுப் பார்க்கின்றது.
1.தனக்குள் சிரித்துக் கொண்டு தவழ்ந்து சென்று
2.அந்த விநாயகனிடம் போக வேண்டும் என்று வேண்டி கண்ணுற்றுப் பார்க்கின்றது
3.ஆலயத்திற்குள் சென்றவுடன் இத்தனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றது.

இவ்வாறு திருஞானசம்பந்தர் தான் வளரும் அந்தக் குழந்தைப் பருவத்திலேயே யாரைக் கண் கொண்டு உற்றுப் பார்த்தாலும் மகிழ்ந்திடும் நிலையும் அதே சமயத்தில் அவர்கள் இந்தக் குழந்தையைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் மகிழ்ச்சியும் பேரானந்தம் ஏற்படுகின்றது.

ஒரு சமயம் எதிர்பாராது நஞ்சு கொண்ட பாம்பு திருஞான சம்பந்தரைப் பார்த்ததும் அஞ்சி ஓடுவதைப் பார்க்கின்றார்கள். அதிசயித்து இந்தக் குழந்தை… “ஆண்டவனால் கொடுக்கப்பட்ட பிள்ளை…!” என்று அதிசயப்படுகின்றார்கள்.

தாய் கொடுத்த ஞானப்பாலின் நிலைகள் கொண்டு அவனின் மழலைப் பேச்சும் அவன் வயதிற்கு மீறிய சொல் தொடரும் அங்கு வருவதைக் கண்டு அனைவரும் பேரானந்தப் படுகின்றனர்.

ஒரு சந்தர்ப்பம் அருகில் இருக்கக்கூடிய குடிசையில் தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பாம்பு தீண்ட அதனை உற்றுப் பார்த்த திருஞானசம்பந்தர் ஓடி வந்ததும் அவரைக் கண்ட பாம்பு அது அஞ்சி ஓடுகின்றது.

இவனுடைய கண் பார்வையில் நண்பனின் உடலில் பாய்ந்த நஞ்சு நீங்குகின்றது. உற்றுப் பார்த்தோர் பெருமிதம் கொள்ளுகின்றனர். அந்தத் தாய் ஊட்டிய ஞானப்பாலின் நிலைகளில் ஞானங்கள் அங்கே தொடர்கின்றது.

அதிசயத்தக்க அருள் ஞானக் குழந்தை என்று போற்றும் நிலை வருகின்றது. இது தான் அந்தக் காலத்தில் திருஞானசம்பந்தருடைய சிறு வயதில் நடந்த நிலைகள்.

சப்தரிஷி மண்டலத்தில் இனைந்திருக்கும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்களின் பூர்வாங்கம் என்ன…?

Image

Big dipper - vashista

சப்தரிஷி மண்டலத்தில் இனைந்திருக்கும் வசிஷ்டர் அருந்ததி நட்சத்திரங்களின் பூர்வாங்கம் என்ன…?

 

இன்று திருப்பூட்டும் போது பாருங்கள்….! நேரமாகிப் போய்விட்டது. அங்கே போக வேண்டும் இங்கே போக வேண்டும் அதைச் செய்ய வேண்டும்.. சீக்கிரம் கூட்டிக் கொண்டு வாருங்கள்…! என்ற இந்த எண்ணத்திலேயே தான் இருப்பார்கள்.

இதில் தாமதமாகும் பொழுது… இவர் என்ன…? இப்படி நீட்டி நெளித்து இழுத்துக் கொண்டே போகிறார் என்பார்கள். பின் கடைசியில் மணியைப் பார்த்துவிட்டு
1.அய்யோ… இரண்டு நிமிடம் தான் இருக்கிறது என்று
2.அந்தப் பதட்டமான பயமான உணர்களைத் தான் கலந்து திருப்பூட்டுவார்கள்
3.மணமக்களை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும்…? என்ற நிலையே இன்று அற்றுப் போய்விட்டது.

அங்கே திருமணத்திற்கு வருகை புரிந்து வாழ்த்த வந்த தம்பதியர்கள் தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தின் நிலைகளை மணமக்களுக்குப் பாய்ச்சி
1.எதிர்காலத்தில் அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்
2.நம்முடைய எண்ணமும் பார்வையும் அவர்களுக்கு ஊக்கமூட்டும் நிலை பெறச் செய்ய வேண்டும்
3.அந்த அருள் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தி மணமக்கள் பெற வேண்டும்
4.நாம் கொடுக்கும் ஆசிர்வாதத்தால் அவர்கள் வாழ்க்கையில் அந்த வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒளிச் சுடராக என்றுமே வாழும் நிலை பெறவேண்டும் என்று
5.இப்படி வாழ்த்தும் நிலையைத்தான் அன்று காட்டினார்கள்.

வசிஷ்டரையும் அருந்ததியும் ஏன் காட்டினார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

வசிஷ்டர் பெரும் இராஜ சபையில் தீர்ப்பளித்து நியாயங்களையும் அதனுடைய உணர்வுகளையும் வழிகாட்டி வந்தார். இராஜ சபையை வழி நடத்தினார் என்று சொல்வார்கள்.

இராஜ தர்பாரில் இருக்கும் சிக்கல்களை நீக்கி அந்த அரச வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு நல்வழி காட்டும் நிலை பெற்றவர். கடும் முனிவர்கள் வந்தாலும் அதையும் சமப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்தான் வசிஷ்டர்.

முனி என்பது கொடூர நிலைகள் கொண்டு தான் எண்ணியதைச் சாதிக்கும் நிலைகள் கொண்டது. தீமையோ நன்மையோ அறியாது.

முனி என்பது தன் எண்ணத்தின் வலிமை கொண்டு செயல்படுத்தும் நிலை. ஆனால் தான் எண்ணியது தடைபட்டால் கோபமாகி அதை வீழ்த்திடும் நோக்கங்கள் வரும்.

இதைப் போன்ற நிலைகளை எல்லாம் வசிஷ்டர் பொறுமை கொண்டு தன் உணர்வின் ஆற்றலால் அமைதிப்படுத்தி தன் சக்தியின் துணை கொண்டு மற்றவருக்கு வழிகாட்டும் நிலை பெற்றவர்.

ஆகவே தீமைகளை அகற்றும் நிலையும் தன் ஞானத்தால் அரச நீதிகளை நிலை நிறுத்தி ஒருக்கிணைக்கச் செய்யும் அந்த உணர்வின் சக்திகள் அனைத்தும் வசிஷ்டர் உணர்வுடன் ஒன்றி உள்ளது.

அவருடைய மனைவி அருந்ததியும் இதைப் போல் ஒன்றிய நிலைகள் வரப்படும் போது இரு மனமும் ஒன்றாகி வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் அரச நீதியாக வாழ்ந்தாலும் அவர்கள் துரித நிலைகள் கொண்டு விண்ணுலகம் சென்றார்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்குள் இது நடந்த நிகழ்ச்சி இது.

மனிதனாக இருந்து ஞானத்தால் வழி தொடர்ந்த பின் அவர்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவர்கள். அதைத்தான் வசிஷ்டர் அருந்ததி என்று சொல்வது.

அவர்கள் சக்தி பெற்ற நிலையில் கொண்டு விண்ணுலகில் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டு இருக்கும் அவர்கள் உடலிலே விளைய வைத்த உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் புகும் தீமைகளைப் பற்றற்றதாக்கிக் கணவன் மனைவி அவர்களைப் போன்றே ஒன்றி வாழ முடியும்.

விநாயகரை வணங்கி விட்டு இங்கே வசிஷ்டர் அருந்ததி போல என்று அம்மியும் கல்லையும் வைத்துக் காண்பித்து அதன் பின் தான் திருப்பூட்டுவார்கள்.

1.இரு மனமும் ஒன்றாகி மகிழ்ந்து வாழ்ந்து நீதியின் நிலைகள் வழங்கி ஒருக்கிணைந்து செயல்பட்ட
2.வசிஷ்டர் அருந்ததி என்ற அவர்கள் உணர்வுகளை
3.மனித வாழக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இணைத்து
4.புனிதம் பெறும் நிலையாக வளர வேண்டும்
5.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணை பிரியாத நிலைகளாக என்றும் பதினாறாக
5.விண்ணிலே ஒளியின் சரீரமாக மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குத்தான் அவ்வாறு காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் அதை ஐதீகமாகத்தான் வைத்து விட்டார்களே தவிர அந்தப் பேருண்மையை அறியாத நிலைகள் ஆகிக் காலத்தால் மறைந்து விட்டது.

சில குழந்தைகள் எல்லோரையும் அடிப்பதற்குக் காரணம் என்ன…? “நச்சு…நச்சு” என்று அழுவதற்குக் காரணம் என்ன…?

Image

Child in mother's womb

சில குழந்தைகள் எல்லோரையும் அடிப்பதற்குக் காரணம் என்ன…? “நச்சு…நச்சு” என்று அழுவதற்குக் காரணம் என்ன…?

 

ஒரு தாய் கருவுற்றிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் கருவுற்ற அந்தச் சமயத்தில் மற்றவர்கள் சண்டையிடுவதைச் சந்தர்ப்பத்தால் பார்க்க நேர்கின்றது.

தன் குடும்பத்தில் சண்டை இல்லை என்றாலும் அடுத்த குடும்பத்தில் சண்டை இடுவதை இவர்கள் என்ன பேசுகின்றார்…? அவர் என்ன பேசுகிறார்…! என்று வேடிக்கையாகப் பார்ப்போம்.

ஒருவருக்கு ஒருவர் ஏசிப் பேசி அழித்திடும் உணர்வு கொண்டு பழித்திடும் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது அதை உற்று நோக்கிக் கூர்ந்து கவனிக்கும் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்குள் இது பட்டுவிடுகின்றது. இந்த உணர்வு குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

1.தாய் சண்டையிடுபவர்களைக் கூர்ந்து பார்க்கும் பொழுது
2.சண்டையிட்ட உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகப் பதிவாகின்றது
3.அதுவே குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகின்றது.

“பூர்வம்” என்றால் கருவிற்குள் இருக்கும் போது அது செய்த புண்ணியத்தின் நிலைகள் அதாவது
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் தாய் செய்த தவத்தின் பலனே
2.நல்லதோ கெட்டதோ அது பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அமைகிறது.

இந்த உணர்வின் தன்மை குழந்தை உடலில் சிறுகச் சிறுக வளர்ந்து பிறந்தவுடனே ஒன்றும் புரியாது. ஆனால் அவர்கள் எப்படிச் சண்டை போட்டார்களோ இதே மாதிரி நச்சு.. நச்சு… நச்சு.. நச்சு… என அழுக ஆரம்பித்து விடும்.

தாய் குழந்தையைத் தொட்டுக் கொஞ்சி குலாவப் போனால் “பட்…பட்…” என்று போட்டுக் கையை வைத்துத் தாயை பரலும். ஏனென்றால் அந்த உணர்வு அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அந்த உணர்வை இயக்குவது உயிர்.

தாயின் ஊழ்வினைப் பயன்படி அது வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் கொண்டு அவர்கள் எபப்டிச் சண்டை போட்டார்களோ அதே மாதிரி அடுத்த குழந்தையுடன் இந்தக் குழந்தை சண்டைக்குப் போகும்.

யாரிடம் போனாலும் வம்புக்குப் போகும். இன்னொரு குழந்தையைக் கண்டால் வெடுக்… வெடுக்… என்று இழுத்துப் போடும்.

சில குழந்தைகளைப் பார்க்கலாம். ஒரு பிள்ளை அது சும்மா நின்று கொண்டிருந்தாலும் அதைக் “குபீர்…!” என்று தள்ளி விட்டுச் சிரிக்கும். திடீரென்று அவ்வாறு செய்யும்.

இதற்கெல்லாம் காரணம் தாய் கருவிலிருக்கும் பொழுது அந்தக் குழந்தை பெற்ற பூர்வ புண்ணியம் தான். ஆகவே நல்ல குழந்தைகளை உருவாக்க நாம் எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்…?

ஒரு குடும்பத்தில் கர்ப்பமாகி விட்டார்கள் என்று தெரிந்து கொண்டாலே
1.அதை ஒரு “புனித நாள்” என்று எண்ண வேண்டும்
2.அருள் ஒளி பெறக் கூடிய அந்த ஞானக் குழந்தை வளர வேண்டும்,
3.உலகைக் காத்திடும் அருள் ஞானி வளரவேண்டும் என்று அந்தத் தாய் எண்ண வேண்டும்.

கர்ப்பமான அந்தத் தாய் அருள் உணர்வு பெறவேண்டும். உலக ஞானம் பெறும் தகுதி கருவில் வளரும் குழந்தை பெறவேண்டும், நஞ்சை வென்றிடும் அருளாற்றல் பெறவேண்டும், அகஸ்தியன் பெற்ற பேருண்மைகள் அனைத்தும் அந்தக் குழந்தை பெறவேண்டும்,

அகஸ்தியன் கண்ட உண்மைகளை உலகுக்கு அவன் எடுத்துக் காட்ட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் இவ்வாறு எண்ண வேண்டும். இப்படித் தியானித்து அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்கிடல் வேண்டும்.

குழந்தை பிறந்தபின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படரவேண்டும். உலக ஞானம் பெற வேண்டும், கல்வியில் உயர்ந்த தரமும் சிறந்த ஞானமும் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்ற உணர்வுகளைத் தாய் தந்தையர் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இந்த முறைப்படி செய்து பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் குடும்பத்தில் உள்ளோரை ஒற்றுமையுடன் வாழச் செய்யும் அறிவாற்றல் கொண்ட ஞானக் குழந்தையாக உருவாகும்.

செய்து பாருங்கள்…!

அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

Image

Abishekam

அபிஷேகம் எங்கே யாருக்கு எப்படி ஏன் செய்ய வேண்டும்…?

 

யாகம் செய்யும் பொழுது ரோஜாப் பூவை எடுத்து அந்தத் தீயில் போட்டு ஆண்டவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்று சொன்னால் அது எங்கே போகிறது…?

ஆண்டவன் எங்கேயோ இருக்கிறார் என்று நினைக்கின்றோம். ஆனால் நமக்குள் இருக்கின்றார் என்பதை மறந்துவிட்டோம். நம்மை ஆள்பவன் யார்…? நம் உயிர். அப்போது அந்த ஆண்டவனுக்கு எதைக் கொடுக்க வேண்டும்…?

ரோஜாப் பூவினுடைய மணத்தைப் பெற வேண்டும் என்று சுவாசித்தால் நல்ல வாசனை நமக்குள் வரும். அதை எண்ணி உயிருக்குக் கொடுக்க வேண்டும். அப்பொழுது மகிழ்ச்சி வரும்.

நான் எல்லாச் சாமிகளையும் கும்பிடுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு
1.தவறு செய்பவனைப் பார்த்து
2.இவன் படு அயோக்கியத்தனம் செய்கிறான் என்று நினைத்தால்
3.இந்தக் காரமான உணர்வுகள் என்ன செய்யும்…?
4.உயிரிலே பட்டு எரிச்சலும் கொதிப்பும் தான் வரும்.

பாலிற்குள் பாதாம் இனிப்பு எல்லாம் போட்டு வைத்து விட்டு அதிலே காரத்தைப் போட்டோம் என்றால் என்ன செய்யும்…? நல்ல சுவைக்குக்குள் இந்தக் காரம் போய்ச் சேர்ந்து கொள்கின்றது. அப்போது இரண்டும் கலந்தவுடனே என்ன செய்கின்றது,

காரம் காரம் என்று தான் சொல்வோம். நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல சக்திகள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

இதே மாதிரி தான் ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் (கோபம் ஆத்திரம் வெறுப்பு சங்கடம் வேதனை பயம்) அழுத்தி அழுத்தி எல்லா அணுக்களிலேயும் போய்ச் சேர்ந்து கொள்கின்றது.

அப்படிச் சேர்ந்த நிலைகளுக்கொப்பத்தான் நம்முடைய மன நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்றது. மனது சரியில்லை என்று தான் சொல்வோமே தவிர அது எதனால்…? ஏன்…? எப்படி வந்தது…? என்று சிந்திப்பதில்லை.

இதைப் பிரித்துப் பிரித்துப் பிரித்துப் பிரித்து அவ்வளவு துல்லிதமாக நமக்குள் நடக்கும் நிலைகளை ஆலயங்களில் சிலைகளை அமைத்துக் காட்டியிருக்கின்றார்கள் ஞானிகள்.

அதாவது அங்கிருக்கும் கல் சிலைக்கு அபிஷேகம் தேவை இல்லை. ஒவ்வொருவர் உயிரிலும் படும் அசுத்தங்களை நீக்க நல்ல உணர்வுகளை நீ உன் உயிருக்குள் அபிஷேகிக்க வேண்டும் என்று அங்கே செய்து காட்டுகின்றார்கள்.

1.பாலாபிஷேகம் சாமி மேல் ஊற்றிக் காட்டுகிறார்கள் என்றால் பாலைப் போன்ற எண்ணத்தை எடுத்து இங்கே ஊற்று (புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே)
2.சந்தனாபிஷேகம் ஊற்றுகிறார்கள் என்றால் அதனின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று.
3.தேனை ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த இனிப்பான சுவையைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
4.பன்னீரை சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்த நறுமணத்தை எடுத்து உயிரிலே ஊற்று
5.பூக்களை அபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் மலர்களின் மணத்தைச் சுவாசித்து உயிரிலே ஊற்று
6.கடைசியில் நல்ல நீரைச் சாமிக்கு ஊற்றுகின்றார்கள் என்றால் அந்தத் தூய்மைப்படுத்தும் உணர்வைச் சுவாசித்து உயிரிலே ஊற்று என்று
7.இப்படித்தான் ஞானிகள் நம்மைச் செய்யச் சொன்னார்கள்.

சாமிக்குப் பொங்கலை வைத்துப் படைத்திருக்கிறார்கள் என்றால் அதில் பல சரக்குகளைப் போட்டுச் சுவையாக்கியது போல
1.சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் பேசுவது செய்வது ஒருமித்த நிலையில் எல்லாமே அப்படிக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இப்படிச் செய்தால் நமக்குள் பேரானந்தமும் பெரு மகிழ்ச்சியும் தேடி வரும். கோவிலுக்குச் சென்று இப்படி நாம் யாரும் நினைக்கிறோமா…?

நான் சாமிக்குக் கொடுத்திருக்கின்றேன் என்று தானே நீங்கள் நினைக்கின்றீர்கள். உங்கள் உயிரான ஈசனுக்கு எதைக் கொடுக்கின்றீர்கள்…! சற்று சிந்தியுங்கள்.

உயிரான ஈசனுக்குக் கொதிப்பையும் எரிச்சலையும் அசுத்தமான உணர்வுகளையும் கொடுக்கக் கூடாது என்பதைத்தான் ஆதிசங்கரர் தெளிவாகச் சொன்னார்.
1.மனிதனான நீ யாருக்கோ கொடுக்கின்றதாக நீ இப்படிச் செய்கிறாய்.
2.பல பொருள்களையும் நெருப்புக்குள் போடுகின்றாய்…!
3.ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் இந்த நல்ல வாசனைகளைக் கொடுக்க வேண்டும்
4.உயிரான அந்த நெருப்புக்குள் அதைப் போட்டு அந்த வாசனையை உடலுக்குள் சமைக்க வேண்டும் அல்லவா…!
5.அகத்திற்குள் செய்யச் சொன்னதை நாம் புறத்திலே செய்து கொண்டிருக்கின்றோமே…! என்று ஆதிசங்கரர் சாடினார்…!

ஞானிகள் காட்டிய வழிகளை நாம் கடைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்கே இதையெல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – காயகல்பம் என்றால் என்ன…?

Image

Bhogar Risi

உடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – “காயகல்பம் என்றால் என்ன…?”

 

துருவ மகரிஷியால் (அகஸ்தியர்) வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் ஆற்றல் போகரின் ஈர்ப்புக்குள் சிக்கிய பின் அந்த அணுவின் தன்மை அவருக்குள் விளைந்து அதன் வழி கொண்டு விண்ணுலகின் தன்மையை அறிந்துணரும் ஆற்றல் அதிகமாகப் பெற்றார்.

ஒவ்வொரு தாவர இனத்தின் சத்தினுடைய தன்மையைத் தான் நுகர்ந்தெடுத்து அது ஒவ்வொன்றையும் தனக்குள் சேர்த்து உண்மையின் நிலையை அறிந்துணர்ந்து வந்தார்.

மகரிஷிகள் அன்று கொடுத்த சில மெய்யினுடைய நிலைகள் பிற்காலத்தில் அரசர்களிடையே சிக்கப்பட்டு அது மாந்திரீகமாகச் சென்று விட்டது.

அதே போலத்தான் போகர் கொடுத்த ஆற்றலின் தன்மைகளையும் அவர் சொன்ன உண்மைகளையும் வாதங்கள்
1.அதாவது தங்கம் செய்வதற்கும்
2.விஷத்தின் தன்மை கொண்ட போதை மருந்துகளைக் கொடுத்து மயக்க நிலை ஏற்படுத்தினார் என்றும் திரித்து விட்டார்கள்.
3.(போகர் கஞ்சா குடித்தார் என்று சொல்வோரும் உண்டு)

போகர் கொடுத்த தத்துவத்தையே தலை கீழாக மாற்றி அவருடைய உண்மையினுடைய நிலைகளை மக்கள் அறியா வண்ணம் தடுத்து விட்டார்கள்.

போகர் பல ஆற்றல்களைத் தனக்குள் பெற்ற பின்
1.மனித உடல் பெற்ற நிலையில் உடலை விட்டுப் பிரியும் ஒரு உயிராத்மா
2.ஒளிச் சரீரம் பெறுவது எவ்வாறு…? என்று உணர்த்தி இருந்தார்.
3.ஆனாலும் அவர் சொன்னதைத் தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி வைத்திய ரீதியாக எடுத்துக் கொண்டவர்கள்
4.காயகல்ப சித்தி செய்யாதபடி எவரும் மோட்சம் போக முடியாது என்று விவாதிப்பார்கள்.

தான் கண்டு கொண்ட மருத்துவ நிலையை வெளிப்படுத்திய பின் அதில் ஏதாவது கொஞ்சம் வந்துவிட்டது என்று சொன்னால் இந்த மருந்து அதைச் செய்யும்… இதைச் செய்யும்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஏனென்றால் யாரோ அன்று எழுதி வைத்ததைச் சூட்சமமாகச் செய்த அந்த நிலைகளை கற்பனையைக் கூட்டி அதை இன்றும் வைத்து வாதாடிக் கொண்டு வைத்திய ரீதிகளுக்குப் (உடலுக்குத் தான்) பயன்படுத்துகிறார்கள்.

அன்று போகன் ஒவ்வொரு தாவர சத்தின் தன்மையையும் அதற்குள் இருக்கக் கூடிய சக்தியையும் நுகர்ந்து எடுத்தான். அதைத் தனக்குள் போகித்துக் கொண்டான். அதாவது அந்த ஆற்றலைத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்டான்.

1.ஒரு சக்தியை எடுத்தான் என்றால்
2.அந்த ஒரு நாள் முழுவதற்குமே அதைத் தனக்குள் கிரகித்து
3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் முழுமையாக விளையச் செய்து
4.இப்படித்தான் ஒவ்வொன்றையும் போகன் அறிந்துணர்ந்தான்.

அவன் போகம் செய்தான் என்ற நிலையைப் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ன சொல்லிவிட்டார்கள்…?

ஒவ்வொரு பெண்ணையும் அவன் காதலித்தான். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்று எழுதி விட்டார்கள். போகன் அறிந்துணர்ந்ததைப் பின்னாடி வந்தவர்கள் அவரை இழி நிலைப்படுத்தி விட்டார்கள்.

அத்தகைய நிலையிலிருந்து போகரைப் புலிப் பாணியார் காப்பாற்றினார் என்றும் சொல்வார்கள்.

புலிப் பாணியாருக்குப் பின் மடாதிபதிகளாக வந்தவர்கள் அவருடைய தத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் அவர் எழுதியதைத் திருத்தி இவர்களுக்குச் சாதகமாக எழுதிக் கொண்டார்கள்.

இன்றும் அதன் வழி கொண்டு
1.உடலைக் காயகல்பமாக்க வேண்டும்
2.அந்தச் சித்து பெறவேண்டும் இந்தச் சித்து பெறவேண்டும் என்று
3.உடலைக் காப்பது பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறார்களே தவிர
4.விண்ணின் ஆற்றலை எடுத்துத் தன் உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்று
5.அந்தப் போகமாமகரிஷி சொன்ன நிலையை விட்டு விட்டார்கள்

யாருமே உடலைக் காக்க முடியாது. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்தில் உடலை ஒரு கருவியாக வைத்து விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைச் சேர்த்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்று
1.என்றும் ஒளியின் சுடராக அழியாத நிலைகள் கொண்டு வாழ்வதே
2.காயகல்ப சித்தி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்

Image

kovil-temple

நம் கடந்த காலத்தையும் இப்போது துன்பப்படுவதையும் ஒருவர் ஜோசியம் சொன்னால் அவர் பெரிய கடவுளாகி விடுகின்றார் – “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கலாம்…! என்று அவரிடம் சிக்கிக் கொள்கின்றோம்
ஆலயத்தில் தெய்வக் குணங்களைச் சிலையாக்கி வைரக் கிரீடங்களை வைத்துத் தங்க ஆபரணங்களை அணிந்து மலர் மாலைகளைச் சூடி அதற்கு முன் அமுதுகளை வைக்கின்றார்கள்.

திரையிட்டு மறைக்கின்றார்கள். ஏன்…?

1.நமக்குள் மறைந்துள்ள உணர்வை நாம் அறிந்துணர்ந்து
2.எதனை நாம் கவர வேண்டும்…?
3.எதை நமக்குள் வளர வேண்டும்…? என்ற பொருள் படும்படியாகத்தான்
4.ஞானிகள் ஆலயங்களை அமைத்துள்ளார்கள். ஞானிகள் செய்ததில் தவறில்லை.

ஆனால் ஞானிகள் செய்ததை அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர்கள் அதாவது “பொருள் ஆசை கொண்டவர்கள்” தவறான வழியில் நம்மை அழைத்துச் சென்று விட்டனர்.

ஆசையைக் கூட்டி “பொருள் கிடைக்கும்…!” என்ற நிலையில் மாற்றிவிட்டார்கள். இந்தச் சாமியாரிடம் சென்றால் ஆயிரம் ரூபாய் உனக்குக் கிடைக்கும்… ஆண்டவன் அவருக்கு நிறையச் சக்தி கொடுத்துள்ளார்…! என்று கேள்விப்பட்டால் போதும்.

ஆலயத்தில் காட்டிய பண்பினை மறந்து விடுகிறார்கள்.

அந்தத் தெய்வத்தை இவன் கைவல்யப்படுத்தியிருக்கிறான் என்ற நிலையில் (தெய்வ வழிபாடு பெற்று இறந்தவனை மந்திரத்தால் கவர்ந்து வைத்திருப்பதால்) அவன் பெரிய கடவுளாகி விடுகின்றான்.

அவனிடம் சென்றபின்
1.நமக்கு முன்னாடியே பல அதிசயங்களைச் செய்வான்.
2.நாம் நினைத்து வந்ததையும் சொல்வான்.
3.உங்களுக்குத் துன்பம் இருக்கிறது… அந்தத் துன்பத்தை நீக்க வேண்டும் என்றும் சொல்வான். (ஆஹா… அற்புதம்…! அப்படியே சொல்லிவிட்டாரே என்று எண்ணுவீர்கள்)

ஆனால் நம் துன்பத்தை நுகர்ந்தறிந்து அவன் சொன்னாலும் கடைசியில் அவனைத் துன்பத்திலேயே ஆழ்த்தி விடுகின்றது அவன் உயிர். எவன் ஜோசியம் சொல்லி அருளாடுகின்றானோ அவன் குடும்பமே சின்னா பின்னமாகும்.

ஆனால் அது எதனால் என்று அவனுக்குத் தெரியாது. ஏனென்றால் நுகர்ந்தறிந்த மற்றவர்களின் துன்ப உணர்வுகளே அங்கே வளரும். மற்றவர்கள் அவர்களை நாடிச் சென்றால் ஆசையின் உணர்வுகள் தான் அவர்களுக்குள் அதிகமாக விளைகின்றது.

அந்த ஆசையின் உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அதற்குத்தக்க நம்மிடம் அவர்கள்
1.நான் இந்தத் தெய்வத்தைக் கைவல்யம் செய்துள்ளேன்.
2.மந்திரங்கள் ஓதி யாகங்களைச் செய்தால் உங்கள் பாவத்தை எல்லாம் போக்கி விடலாம் என்பார்கள்.
3.வேண்டிய காசை அவர்கள் நம்மிடம் வாங்கிக் கொள்வார்கள்.

இப்படிக் காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற அஞ்ஞான வாழ்க்கையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர மெய் ஞான வாழ்க்கைக்கு நாம் செல்லவில்லை.

அவன் சொன்ன நிலைகள் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் ஆண்டவன் காப்பான் என்ற நிலையில் அந்த மந்திரத்தைச் சொல்லி நம் நட்சத்திரத்திற்காக அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பினால் ஆண்டவனையே நீங்கள் அடையலாம் என்று அஞ்ஞான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

காசைக் கொடுத்த பின் அவன் சொல்லும் மந்திரத்தைச் செவி கொண்டு கேட்டோம் என்றால் அதனால் ஆண்டவன் நமக்குச் செய்வான் என்ற எண்ணங்கள் தான் வருகின்றது. ஆனால்
1.அங்கே நாம் நற்குணங்களைப் பெறும் தன்மை தடைப்படுகின்றது.
2.நல் உணர்வுகளை நமக்குள் உருவாக்கும் நிலையும் மறந்து விடுகின்றது.
3.ஆசையைத் தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆகவே ஆலயப் பண்புகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

விநாயகரை வணங்கும் போது அதை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷியின் அருள் உணர்வு நாங்கள் பெற வேண்டும் என்று வானை நோக்கி எண்ண வேண்டும்.

நாங்கள் அருள் ஞானம் பெற வேண்டும். இருளை அகற்றும் சக்தி பெற வேண்டும். எங்கள் பார்வையில் தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும். மலரைப் போல மணம் பெற வேண்டும். மகரிஷியின் அருள் வட்டத்தில் நான் வாழ வேண்டும் என்ற உணர்வை நமக்குள் அணுக்களாக உருவாக்க வேண்டும்.

இப்படி நாம் எண்ணும் பொழுது
1.நாம் எண்ணிய உணர்வுகள் “ஓ…!” பிரணவம். “ம்…!” பிரம்மம்.
2.அதாவது எண்ணியது அனைத்தும் ஜீவன் பெற்று நமக்குள் சிருஷ்டியாகின்றது. உடலுக்குள் உருவாகின்றது.
3.இதைத் தான் ஓ…ம் நமச்சிவாய…! என்று சொல்வது.
4.வெறுமனே ஓ…ம் நமச்சிவாய… என்று சொல்வதால் பலன் இல்லை.

ஆகவே எந்த ஆலயத்திற்குள் சென்றாலும் அங்கே தீப ஆராதனை காட்டும் போது அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது. அப்போது நீங்கள் எண்ண வேண்டியது எது…?

பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நாங்கள் பெற வேண்டும். இந்த ஆலயம் வருவோர் எல்லோரும் பொருளறிந்து செயல்பட வேண்டும் என்று இதை எண்ணினால் ஓ… பிரணவம் ம்… பிரம்மம் ஓ…ம் நமச்சிவாய…!

பொருளறியும் உணர்வை நமக்குள் எடுக்கும் போது பொருளறியச் செய்யும் அந்த உணர்வின் நினைவை ஊட்டும் அணுவின் தன்மை உங்களுக்குள் உருவாகின்றது.

ஏனென்றால் எந்தக் குணத்தின் தன்மை நுகர்கின்றமோ நமது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகிறது. நாம் எண்ணியதைச் சிவமாக்குகின்றது (நம் உடலாக ஆக்குகின்றது)
1.நமது வாழ்க்கையில் எதனின் உணர்வு அதிகமாக எண்ணுகின்றோமோ
2.அது நம் உடலாகச் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது.

இப்படி நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் ஓ…! என்று ஜீவ அணுவாக நம் உயிர் மாற்றிக் கொண்டு உள்ளது என்பதைத் தெளிவாக கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.

சாஸ்திரங்களைக் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

அவர் பித்தனைப் போன்று இருந்தாலும் பல காலம் காடு மேடெல்லாம் என்னை (ஞானகுரு) அலையச் செய்தார். மெய்யை அறியச் செய்தார். அதை அனுபவபூர்வமாக உணரச் செய்தார். மெய் உணர்வுகளை உருவாக்கினார். அந்த மெய் உணர்வின் வழிகளில் தீமையை அகற்றும் வழியையும் எனக்குள் உருவாக்கினார்.

அவர் காட்டிய வழியில் தீமைகளை அகற்றினேன். தீமையை அகற்றும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் அதை உங்களிடம் இப்பொழுது உபதேசிக்கப்படும் பொழுது உங்கள் செவிப் புலன் வழி இந்த உணர்வை ஊட்டி உங்களை நுகரச் செய்கின்றோம்.

நீங்கள் அதை நுகரும் பொழுது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உங்கள் உடலாக மாற்றும் நிலை வருகின்றது. இதனை மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

ஆலயப் பண்புகளை நாம் தெரிந்து கொண்டால் மெய் ஞான வழியில் செல்லலாம். அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய் ஞான உணர்வின் தன்மையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

Image

agathiyam-final

பல சக்திகளை யாம் பெற்றிருந்தாலும் நாயின் உணர்வு பயத்தை எப்படி ஊட்டுகின்றது…? நடந்த நிகழ்ச்சி

 

முந்தி யாம் நாயைப் பார்த்தோம் (ஞானகுரு உபதேசித்த வருடம் 1989) என்றால் என்னை “விரட்டு… விரட்டு…!” என்று விரட்டும். நாயைக் கண்டால் இப்பொழுதும் அந்தப் பயம் எனக்கு இருக்கின்றது.

நாயைக் கண்டவுடனே அந்த அதிர்வான எண்ணங்கள்… “நம்மைக் கடிக்குமோ…?”
1.எவ்வளவு தான் சக்தி எடுத்தாலும் கூட
2.அந்தப் பழைய உணர்வு… எனக்குள் பதிவு செய்தது அப்படி வருகிறது.

ஒரு தடவை மடிச்சேரி என்ற ஊருக்குப் போனோம். அங்கே நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் “எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வர வேண்டும்…” என்றார்.

சரி என்று சொல்லிவிட்டு இங்கிருந்து காரில் போனோம். இறங்கும் பொழுது பார்த்தால் ஒரு அல்சேஷன் நாய் அங்கிருந்து வருகிறது. நல்ல உயரமான பெரிய நாயாக இருக்கிறது. மாடு உயரத்தில் முக்கால்வாசி இருக்கும். அவ்வளவு பெரியது.

நன்றாகச் சாப்பாடு போட்டு வளர்த்திருக்கின்றார்கள், இறங்கியவுடனே என்ன செய்து விட்டது…? அங்கிருந்து அப்படியே “ஆ…ஆ…!” என்று வாயைத் திறந்து கொண்டே வந்தது.

ஆக யாரும் இறங்கவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அங்கே சொல்லி இருக்கிறார்கள்.

இங்கே பக்கத்து வீட்டில் ஒருவன் திருட வந்திருக்கின்றான். இந்தப் பக்கம் வந்து அவன் ஓடியிருக்கிறான். இந்த நாய் எப்பொழுதுமே வெளியில் (PUBLIC) அப்படியே இருப்பதால் ஓடி வந்து அவனைக் கந்து கந்தாகப் பிய்த்து எறிந்துவிட்டது.

இந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள் அல்லவா…! நாயைப் பார்த்ததும் அப்புறம் எந்த நினைவு வரும்…? நாய் மோப்பம் பிடித்துக் கொண்டு காரைச் சுற்றிச் சுற்றி வருகின்றது.

டிரைவர் இறங்க மாட்டேன் என்கிறார். நான் இறங்குகிறேன் என்று சொன்னேன். இது வேறு வம்பு சாமி… “நீங்கள் இறங்க வேண்டாம்…!” என்று அவர் இரண்டு தடவை அழுத்திச் சொன்னவுடனே எமக்குப் பயம் வந்து விட்டது. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று.

உள்ளே இருந்து ஒரு சிட்டான் (சிறு பையன்) வருகின்றான். ஏ…! பேசாமல் இரு…! என்று அந்த நாயிடம் சொல்கிறான்.

நீங்கள் சும்மா கதவைத் திறந்து வாருங்கள்… என்று சொன்ன பின்னாடி அங்கிருந்து இறங்கிப் போனோம்.

அவன் சொல்லி விட்டு போய்விட்டான் அல்லவா. நாங்கள் முன்னாடி போனோம். நாய் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றது. ஒன்றும் செய்யவில்லை.

உள்ளே போய் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றோம். எங்களுக்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டது. பேசாமல் படுத்துக் கிடக்கிறது. ரொம்ப அமைதியாக இருக்கிறது. வீட்டிலுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கேட்கின்றது.

அவர்கள் முதலில் அந்த நாயைப் பற்றிச் சொன்ன நிலையில் அந்த இடத்திற்கு நான் போனதும் அந்தப் பயம் வந்து விட்டது என்று சொல்ல வருகிறேன். வேறு ஒன்றும் இல்லை.

சாமி எவ்வளவு தான் சக்தி பெற்றிருந்தாலும் கூட இந்த நிலை.

ஏனென்றால் குருநாதர் ஏற்கனவே மந்திர வித்தைகளைப் பற்றி எல்லாம் அனுபவம் கொடுத்திருக்கின்றார். அதை உபயோகப்படுத்தினால் நீ எந்த நிலை அடைவாய்… தெரியுமா…! என்று சொல்லியிருக்கின்றார்.

அதனால் இப்படிச் செய்தாலும் தவறு. இப்படி வந்தாலும் தப்பு. எதிலே போய் தப்புவது…? இப்படித் தான் பல நிலைகளில் இருந்து
1.ஒவ்வொன்றையும் அணு அணுவாகக் கொண்டு வந்து
2.பல அனுபவங்களைப் பெறச் செய்து
3.அந்த மெய் ஞானத்தின் ஆற்றலை எம்மைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

Image

Astral souls life

ஒளிச் சரீரம் பெற்ற பின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்…?

 

மனிதன் ஆன பின் உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று ஒளியின் சரீரமாக நாம் வாழலாம்.

1.இப்பொழுது எப்படி மூச்சலைகள் விடும் பொழுது உயிரணுக்களைத் தோற்றுவிக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருந்து நாம் எதையெல்லாம் எண்ணி மகிழ்கின்றோமோ
3.அதைப் போல விண்ணில் ஒளிச் சரீரம் ஆனபின் அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று சிவசக்தியின் சொரூபம் பெறலாம்.

இன்று கணவன் மனைவி இரு சரீரமாக இருந்தாலும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி ஒளி சக்தியினுடைய நிலைகளைத் தனக்குள் அது சிவசக்தியாகக் கூட்டப்படும் பொழுது
1.இரு சரீரம் ஒன்றாகச் சேர்த்து ஒரு கூடான நிலைகள் கொண்டு
2.ஒரே ஒளியின் சரீரமாக ஆக முடியும்.

அத்தகைய நிலை பெற்று விட்டால் விண்ணிலே வரக்கூடிய ஆற்றலின் தன்மையை அணுக்களாக மாற்றி அதனின் சத்தைத் தனக்குள் வடித்து அந்த மகிழ்ச்சியான உணர்வுகளை நாம் மூச்சலைகளாக விடும் பொழுது மற்ற மண்டலங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளுடன் கலந்து விண்ணிலே பல மாற்றங்கள் ஏற்படுவதற்கும் அது காரணமாகின்றது.

மனித நிலையிலிருந்து கணவன் மனைவியாக ஒளிச் சரீரம் ஆகிவிட்டால் அது என்றுமே அழிவதில்லை. அது பெரு வீடு பெரு நிலை. மரணமில்லாப் பெரு வாழ்வு என்பதும் அது தான்…!

அந்த ஒளிச் சரீரத்திற்குள் நின்று அதிலேயும் வடித்துக் கட்டிப் பல ஆயிரம் ஆண்டுகள் ஆன பின் ஒளியாக மின்னும் வைரக் கற்களாக மாற்றுகின்றது.

பெரு வீடான நிலையான நிலை கொண்டு அதிலேயும் சிறுத்து அந்த உணர்வின் தன்மை அவ்வாறு வளர்ச்சி அடைந்து கொண்டே போகின்றது. வளர்ச்சி என்ற நிலையில் அடையக் கூடிய அந்தத் தன்மைகளை மேலும் மேலும் விவரித்துக் கொண்டே போக வேண்டியதில்லை.

ஆகவே இந்த விஞ்ஞான உலகத்தில் வாழும் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மனித உடலைப் பெற்ற நிலையில் அழியா ஒளிச் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.

இன்று பல அதிசயக்கத்தக்க எலெக்ட்ரானிக் (ELECTRONIC) சாதனங்களை உருவாக்குகின்றார்கள்… அது எப்படி…? கம்ப்யூட்டருக்குள் இயங்கும் அந்த சிலிகன் (SILICON – மனித மூளை) என்பது என்ன…?

Image

Silicon valley

இன்று பல அதிசயக்கத்தக்க எலெக்ட்ரானிக் (ELECTRONIC) சாதனங்களை உருவாக்குகின்றார்கள்… அது எப்படி…? கம்ப்யூட்டருக்குள் இயங்கும் அந்த சிலிகன் (SILICON – மனித மூளை) என்பது என்ன…?

 

இன்று விஞ்ஞானிகள் விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு உலகம் முழுவதற்கும் பரப்புகிறார்கள். நீங்கள் அனைவரும் மந்திரம் என்றால் என்ன,,,? விஞ்ஞானம் என்றால் என்ன…? என்பதை அவசியம் தெரிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞானத்தில் எத்தனையோ நிலைகள் இருந்தாலும் ரேடியோ TV, போன்ற சில அலை வரிசைகளில்
1.அவர்கள் வெளியிட்ட கெமிக்கல் கலந்த உணர்வை நமக்குள் கவரும்படி செய்து
2.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய காந்த செல்களில் இந்த உணர்வுடன் கலந்து விடுகின்றார்கள்.

நாம் பாடக்கூடிய பாடல்களை டேப் எடுத்து (பதிவு செய்து) அதை மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் வெப்ப காந்த அலைகளுடன் இந்த அலைகளை (ELECTROMAGNETIC WAVES) அதனுடன் பரப்புகின்றார்கள்.

நம் மனித உடல் – கெமிக்கல் கலந்த இந்த உணர்வின் ஆற்றலை மீண்டும் இயந்திரத்திலே புகுத்தி அதை அலைகளாகக் காற்றிலே படரச் செய்யும் பொழுது நாம் மீண்டும் TV, ரேடியோ மூலம் அதைப் பார்த்துக் கேட்டுணருகின்றோம்.

அந்த உணர்வின் ஒலிகள்
1.நம் செவிப் புலனறிவாலே ஈர்க்கப்பட்டு நம் உடலிலே சேர்க்கப்படுகின்றது
2.அடுத்து அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது
3.கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மை உமிழ் நீராகச் சுரக்கின்றது.

இதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு உணர்வின் தன்மையும் எதிலே எண்ணங்களைச் செலுத்தினோமோ இதிலே சேர்த்து விடுகின்றது.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டு நாம் விடும் மூச்சலைகள்
2.இன்று கம்ப்யூட்டர் என்ற நிலைகளுக்குப் பயன்படுத்துவதற்கு முடிகின்றது.

சிலிகனுடைய (SILICON) நிலைகளை விஞ்ஞானிகள் செயல்படுத்தினார்கள் என்றால் இன்ன அலை வரிசையில் வைத்து இன்னதுதான் என்று செய்யப்படும் பொழுது அதற்குண்டான இயந்திரத்திலே புகுத்திவிடுகின்றனர்.

நாம் எப்படி டேப்பில் பதிவு செய்கின்றோமோ அதைப் போன்று இந்த உணர்வைச் செயல்படுத்தி இந்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.மனித உடல்களில் விளைய வைத்து வெளிப்படுத்தும் மூச்சலைகள்தான்
2.சிலிகன்களாக வந்து கம்ப்யூட்டர் அலை வரிசைகளுக்குக் கிடைக்கின்றது.
3.இதைத்தான் “மனித மூளை” என்று இவர்கள் சொல்வார்கள்.

இயந்திரத்தால் கலக்கப்பட்ட உணர்வுகள் மனித உடலின் உணர்வுக்குள் கலக்கப்பட்டு அது வெளிப்படும் பொழுது இதே முறைப்படி விஞ்ஞானத்திலே காணும் பொழுது இதைப் போன்ற நிலைகள் அவனுக்குள் சிக்குகின்றது.

அவனுடைய சந்தர்ப்பத்தில் சிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் நிலைகள் வருகின்றது. ஆனால் இது அவனுக்குள் எப்படிச் சிக்குகின்றது…?

ஒரு விஞ்ஞானி விஞ்ஞானத்தின் அறிவு கொண்டு தன் எண்ணங்களைச் செலுத்திக் கொண்டேயிருக்கின்றான். இந்த விஞ்ஞான அறிவைத் தனக்குள் செலுத்தி இந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரும் பொழுது இதே உணர்வாலே ஒரு நாள் விஞ்ஞானி இறந்து விடுகின்றான்.

அப்படி இறந்துவிட்டால் அதே விஞ்ஞான நிலைகள் கொண்டு ஒருவன் செயல்படும் பொழுது
1.இந்த உணர்வின் ஆற்றல் இவனுக்குள் செருகப்பட்டு
2.எந்த விஞ்ஞானியின் உடலிலே சேர்ந்ததோ அதே உணர்வின் அலைகள் இவனுக்குள் வருகின்றது.
3.அவன் எந்த விஞ்ஞான அறிவின் செயலிலே வந்தானோ அந்த உணர்வின் தன்மை இவனுக்குள் வரப்படும் பொழுது
4.முதல் விஞ்ஞானி கண்டதைக் காட்டிலும் ஒரு நுண்ணிய அறிவின் தன்மை
5.இவனிடத்தில் இவனையறியாமல் ஒரு அதிசய நிலைகள் வரும்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஆற்றல்மிக்க ஒரு செயலை எண்ணி விட்டால் அந்த உணர்வின் தன்மை இவன் உடலுக்குள் ஏவிய உடன் பல அற்புத நிலைகள் செய்வதைப் பார்க்கலாம். பல மந்திர எந்திர ஜாலங்கள் செய்வதைப் பார்க்கலாம்.

ஒரு சந்தர்ப்பத்தில் பயத்திலே ஒரு உடலுக்குள் ஏவிவிட்டால் இவனையறியாமல் பல அதிசயங்களைச் செய்யும் சில உணர்வுகள் வருவதைப் பார்க்கலாம். (அதை நாம் அமானுஷ்ய சக்தி என்போம்)

இதைப் போன்றுதான் விஞ்ஞான அறிவு கொண்டு உணர்வின் தன்மை செயல்படுத்தும் பொழுது ஏற்கனவே இறந்த விஞ்ஞானியின் தன்மை இவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
1.அவ்வாறு வந்த உணர்வின் தன்மை இவனுக்குள் செயல்படும் பொழுது
2.இவனை அறியாமலேயே நுண்ணிய அலைகள் இவனுக்குள் தெரியும்.
3.ஆஹா…! நான் கண்டுபிடித்து விட்டேன்…! என்பான்.

அப்பொழுது இந்த இயந்திரத்தின் துணை கொண்டு சிக்கப்படும் பொழுது இவனுடைய உணர்வும் அவனுக்குள் கலக்கின்றது. இந்தக் காந்த அலைகளுக்குள் ஓரு கெமிக்கல் கலந்த உணர்வின் தன்மையை இவன் இயந்திரத்திலே உருவாக்கப்படும் பொழுது அதை எடுத்துப் பதிவாக்கி இவனின் உணர்வின் அலையைக் காற்றிலிருந்து எடுக்கும் நிலை வருகின்றது.

1.எப்பொருளின் தன்மை கொண்டு இவன் கலவை செய்கின்றானோ
2அந்தக் கலவைக்குள் மற்றொன்றின் நிலைகளை அதன் நுண்ணிய அலைகளை அறிய முடிகின்றது.
3.அவ்வாறு அறிந்த நிலைகளைக் கொண்டுதான் புதிது புதிதாகக் காணுகின்றான் இன்றைய விஞ்ஞானி.

ஆனாலும் இந்தக் கெமிக்கல் கலந்த உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் மனிதனுடைய இயற்கையான உணர்வின் இயக்கங்கள் மாறி இயந்திர மனிதனாகத்தான் இருப்பான்.

அத்தகைய இயந்திர மனிதனாக வாழ்வதால் நம் உயிராத்மாவிற்கு எந்தப் பலனும் இல்லை. விண்ணுலகம் செல்ல முடியாது. மறுபடியும் விஷமான உயிரினங்களாகத் தான் பிறக்க நேரும்.

ஏனென்றால் நம் பூமியில் இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டிலும் பல மடங்கு வளர்ச்சி அடைந்த இருந்த மனிதர்கள் வியாழன் கோளில் வாழ்ந்து அங்கே கடைசியில் மனிதர்கள் வாழ முடியாத விஷத் தன்மைகளாகி இன்று அது முழுவதுமே பனிப் பாறைகளாக ஆகி விட்டது.

இப்பொழுது நாம் விஞ்ஞான வளர்ச்சி என்று பெருமைப்படும் நிலைகளின் கடைசி முடிவு அது தான். இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.