நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

 

வாழ்க்கையில் சங்கடம் வருகின்றது… சங்கடம் வந்தாலும் பரவாயில்லை…! பின் வேதனையும் வருகின்றது. வேதனை வந்தால் விஷமாக மாறுகிறது… சம்பாதித்த பணம் எல்லாம் விரயமாகத் தொடங்குகிறது.

பதார்த்தங்களை எல்லாம் சுவையாகச் செய்தாலும் அதிலே சிறிதளவு விஷம் பட்டுவிட்டால் அதனுடைய ருசியை… சத்தை எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது… அதற்கு வலு கூடி விடுகிறது.

அந்த விஷத்தை நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

1.போகர் தன்னுடைய ஏழ்மையிலே எடுத்துக் கொண்டது… ஏக்க உணர்வுக்குள் சிக்கியது… உண்மையை அறிய முடிந்தது.
2.அவர் பெற்ற ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பம் தான்.
3.இராமலிங்க அடிகள் சக்தி பெற்றதும் சந்தர்ப்பம் தான்.
4.எந்த ஞானியும் தெரிந்து எடுக்கவில்லை.

அந்த ஞானிகளுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் போன்று தான் உங்களுக்கும் இப்பொழுது ஊட்டுகின்றோம்.

ஏதாவது கஷ்டம் என்று வந்து விட்டதா…? அந்தச் சமயத்தில் அதை விட்டுவிட்டு ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சந்தர்ப்பத்தை மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவைக் கூட்டினால் அது மாறும்.

சங்கடத்திலேயே இருந்தால் விஷம் கலந்து விட்டால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது அதற்குள் சிக்கிவிடும்.

அதை நீங்கள் மாற்றை அமைப்பதற்குத்தான்
1.யாம் 12 வருட காலம் காடு மேடெல்லாம் உருட்டி உருட்டி உருட்டி உருட்டி
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி என்ற வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு அதைப் பெற்றது.

ஆரம்பத்தில் இதை யாருக்கும் பயன்படுத்தவில்லை. பின் இந்த வாக்கினைக் கொடுத்து அந்தச் சத்தினை ஏற்றிக் கொடுக்கும் பொழுது தான்… உங்களுக்கு அந்தப் பவர் எடுக்கும். எத்தனையோ வகையான நிலைகளுக்கு அது எடுக்கும்.

ஆத்ம சக்தி என்ற அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்த பின்பு தான் “எல்லாவற்றையும் அள்ளி வீசுகின்றோம்…” ஞானிகளைப் பற்றி அதிகமாக உங்களுக்கு எடுத்துரைப்பது.

1.சில நேரங்களில் உபதேசம் கொடுக்கும் பொழுது அதிலே யாம் சிலதை மறைப்பது உண்டு. எப்படி இருந்தாலும் மறைத்துவிடுவேன்.
2.ஒரு சமயம் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நிலையே மாறிவிட்டது.
3.ஏதோ சில ரகசியத்தைச் சொல்லி விட்டேன் போல் தெரிகிறது. பேசும் பொழுது தன் நிலை இல்லை.

வெஜிடபிள் பிரியாணி போட்டது போன்று பேசுகிறார் என்று என் வாயிலிருந்தே பேச வைக்கிறார் குருநாதர். உபதேசம் சொல்லிக் கடைசியில் முடிக்கப்படும் பொழுது வந்துவிட்டது.

என்னென்னமோ சொல்கிறேன்…! அது ரொம்பவும் முக்கியமானது…! அதை மாற்றுவதற்கு என்னென்னமோ போட்டுத் திருப்பி விட்டேன்…!
1.தாராளமாகச் சொல்லலாம் எது வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
2.ஆனால் இந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அதைப் பதிவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

வெறும் சொல்லாக யாம் சொல்லவில்லை… அது மிக உயர்ந்த சக்தி

 

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து வந்து சாமி…! என் உடம்புக்குச் சரியில்லை என்று ஒருவர் கேட்டால் எப்படி இருக்கும்…? வெளியில் வேலைகள் எப்படி நடக்கிறது…? என்று பார்த்து வரலாம் என்று யாம் சுற்றிப் பார்க்கும் பொழுது அங்கே வந்து என்னிடம் இடைமறித்து “என் கஷ்டம் போக வேண்டும் என்று நீங்கள் கேட்டால் எப்படி இருக்கும்…?”

சாதாரணமாக… ஒருவர் தன் கஷ்டத்தை உங்களிடம் சொல்கிறார் என்றாலே அதைக் கேட்கும் பொழுது உங்களால் சமாளிக்க முடியவில்லை… அந்தக் கஷ்டம் உங்களுக்கு வந்து விடுகின்றது.

1.ஆனால் எத்தனையோ பேர் எம்மைச் சந்தித்து கஷ்டம்… கஷ்டம்… என்று சொல்லி
2.அதையெல்லாம் நான் காதில் கேட்டால் எப்படி இருக்கும்…?
3.நான் உங்களைக் கவனிக்க வேண்டும்… நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

அதற்கப்புறம் அதை நான் உணர வேண்டும். பின் உங்கள் தீமை நீங்க வேண்டும் உங்கள் கஷ்டம் நீங்க வேண்டும் என்று நான் சொல்ல வேண்டும்.

நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வையெல்லாம் எனக்குள் இயக்காமல் அதை நீக்கித் தூய்மைப்படுத்தி விட்டு உங்களுக்கு நல்ல வாக்காகக் கொடுக்க வேண்டும் என்றால் நான் எத்தனையோ சிரமப்பட வேண்டி வரும்…?

1.நீங்கள் சொல்லும் கஷ்டத்தை எல்லாம் எனக்குள் வராது
2.அதைச் சமாளிக்கக் கூடிய அந்தச் சக்தி இருந்தால்தான் உங்களுக்கு நல்ல வாக்கையே நான் கொடுக்க முடியும்.

அந்த உயர்ந்த சக்தி வாய்ந்த வித்தை யாம் உங்களுக்குக் கொடுக்கும் பொழுது நீங்கள் அதை விளைய வைத்தால் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

இல்லாமல் போனால் என்னுடைய சொல் வெறும் சொல்லாகத்தான் இருக்கும்.

ஞானிகளும் மகரிஷிகளும் நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான். வாழ்க்கையில் வந்த துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உயர்ந்த எண்ணங்களை எடுத்து அந்தக் கெட்டதை எல்லாம் பஸ்பம் ஆக்கியவர்கள்.

1.தன் உடலுக்குள் வந்த நோய்களை மாற்றி மெய் ஞானத்தின் தன்மை வளர்த்து
2.தன் உடலில் இருக்கும் உணர்வுகளை ஒளியாக மாற்றி
3.தன் உடலில் இந்த வாழ்க்கையில் வந்த அனைத்தையுமே புடம் போட்டு அதை மாற்றி உயிரணுவோடு சேர்த்து உயிருடன் சேர்த்து
4.உயிராத்மாவை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின்னாடி வந்தவர்கள் அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வின் சக்தியை எடுத்து அதைச் சுவாசித்து தன் உடலில் வந்த கஷ்டங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து அதைப் புடம் போட்டு சங்கடத்தையும் சலிப்பையும் மாற்றிவிட்டு தன் உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாகச் சென்றிருக்கின்றார்கள்.

தனக்குள் வந்த துன்பத்தையெல்லாம் மாற்றி விண் செல்ல வேண்டும் என்ற நிலைகள் கொண்டு அங்கே சென்றார்கள். அவர்கள் மனிதனாக இருக்கும் பொழுது வெளிப்பட்ட அந்த உயர்ந்த சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலும் பரவச் செய்துள்ளது.

விண்ணிலே அவர்கள் இன்று சப்தரிஷி மண்டலங்களாக இருந்தாலும் அதிலிருந்து வெளிப்படும் ஒளி உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றிச் சென்றவர்கள் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்கள்.
1.பூமி சுற்றுகிறது என்றால் வட துருவத்தில் இருக்கும் பொழுது
2.சப்தரிஷி மண்டலம் வானிலே தெரியும் போது ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இடத்திற்கும் வித்தியாசமாகத் தெரியும்.

இரவில் இன்று ஏழு மணிக்கு நாம் இருக்கும் இடத்தில் சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க முடிகிறது என்றால் அதே ஏழு மணி அளவில் ஒரு வாரம் கழித்து மற்ற இடங்களில் மாறி வரும் பொழுது அங்கே தெரியும். அந்த ஒரு வார வித்தியாசத்தில் அங்கே அதே நேரத்தில் பார்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் இருந்த இடத்திலேயே இருக்கும். அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தின் ஒளியான உணர்வுகள் அனைத்தும் இப்படி பூமியைச் சுழன்று கொண்டு வருகின்றது.

ஆனால் சூரியனுடைய வெப்ப காந்தம் அதிலிருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து நம் பூமிக்குள் இங்கே நமக்கு முன் கொண்டு வருகின்றது… பூமிக்குள் படர்ந்து கொண்டிருக்கின்றது.

1.அந்தச் சக்தியைத் தான் குருநாதர் எம்மை எடுக்கும்படி செய்தார்.
2.அதை எடுத்துத் தான் தீமைகளை மாற்றி உணர்வுகளை ஒளியாக மாற்றுகின்றேன்.
3.அதிலே விளைந்த அதே வித்தைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாக வாக்காக ஊன்றுகின்றேன்.
4.அதை வளர்த்துக் கொண்டால் அவர்கள் சென்றடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்.

எமது உபதேசங்களை அடிக்கடி கேட்க வேண்டும்… நூல்களையும் படிக்க வேண்டும்

எமது உபதேசங்களை அடிக்கடி கேட்க வேண்டும்… நூல்களையும் படிக்க வேண்டும்

 

வக்கீல்கள் எல்லாம் சட்டத்தைப் படித்து விடுவார்கள். ஆனால் அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும். கால நிலை வரும் பொழுது அதனுடைய உணர்வுக்கொப்பப் படித்துக் கொண்டே இருப்பார்கள்.

அதைப் போல நமது குருநாதர் கொடுத்த நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள். அதைப் படிக்கப்படும் பொழுது நினைவாற்றலைக் கூட்டிப் பகைமைகளைப் புகவிடாது உங்களின் வலிமை கொண்டு பகைமைகளை மாற்றியமைத்து விடலாம்.

1.அதே சமயத்தில் நூல்களைப் படித்து விட்டோம்… தெரிந்து கொண்டோம் என்பதைக் காட்டிலும்
2.“அந்தந்தக் காலங்களில்” புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
3.நாம் அனைவரும் என்றுமே பேரருளுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

துரித நிலை கொண்டு உங்களை உருவாக்க வேண்டும் என்று தான் இதைச் செய்வது. நீங்கள் அருள் வழியில் தயாரானால் அனைவரையும் காக்கும் நிலை வருகின்றது.

ஒரு நெல்லை வைத்துப் பல நெல் என்று சொல்லிக் கொண்டு சமைக்கலாம் என்றால் அது முடியாது. ஒரு நெல்லைப் பல நெல்லாக உருவாக்குதல் வேண்டும். அதனைப் பெறச் செய்ய எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றது.

உங்கள் உயிரான ஈசனை நேசியுங்கள்.
1.உயர்ந்த குணங்களை உங்களுக்குள் எடுக்கும் பொழுது உங்கள் உயிரான குரு மெச்சுகின்றது.
2.அதே சமயத்தில் உயர்ந்த குணங்களை எண்ணும் பொழுது அதுவே குருவாக இருந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் உருவாக்கி மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது “அதுவே குருவாகி” நம்மைத் தெளிவாக்கும் தன்மை பெறுகின்றது.

சாமி நன்றாகப் பேசுகின்றார்… எங்கள் சாமிக்கு எல்லாம் தெரியும்…! என்று சொல்லி அப்படி விட்டு விடக்கூடாது. யாம் எல்லாம் தெரிந்து கொள்ளவில்லை.
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் இருக்கின்றோம்.
2.நீங்கள் அனைவரும் இந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலேதான் யாம் இருக்கின்றோம்.

அந்த ஆசையினால் காலத்தையும் அறிந்து அந்தப் பருவம் கண்டு உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆகவே இதைப் போன்று நீங்கள் உங்கள் குடும்பத்திலும் இந்தப் பதிவினை ஏற்படுத்துங்கள். பற்றுடன் வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உபதேசிக்கும் சொற்களை ஏற்கும் பருவம் நமக்கு வரவேண்டும். முதலில் கடினமாக இருக்கும். கால நிலைகளுக்கொப்பச் சொல்லி விட்டால் சிறிது சிந்திக்கச் செய்யும்…! “கேட்க வேண்டும்” என்ற உணர்வுகளை ஊட்டும்.

ஆகையால் நாம் ஒவ்வொருவரும் உயிரை ஈசனாக மதித்து உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயமாக மதித்து அதைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்த தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அருள் ஞானப் புத்தகங்களைத் தனித்த நிலைகளில் படியுங்கள். கூட்டமைப்புடன் இருந்து அந்த அலைகளைப் பாய்ச்சுங்கள்.

குடும்பத்திற்குள் இணைந்து வாழும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும். இது தான் மனித நேயம் என்பது. ஆன்ம நேயத்தை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

1.உங்களுடைய செயலாக்கங்களைப் பார்த்து நானும் இணைய வேண்டும் என்ற உணர்வை ஊட்டி இணைத்தால் அது நலம் பெறும்.
2.ஆகவே நம்முடைய ஆர்வத்தை இதிலே தான் கூட்ட வேண்டும்.
3.ஆன்ம ஞானத்தைக் கொண்டு நமக்குள் ஒன்றி வாழும் உணர்வுகள் வரவேண்டும்.
கேட்போர் உணர்வுகளில் அருள் ஞான உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிய வேண்டும் என்பதற்காக இந்த நூல்களைக் காலப் பருவம் அறிந்து அமைதி கொண்ட நேரத்தில் படித்துக் குடும்பத்தினரைக் கேட்க வையுங்கள்.

குழந்தைகளுக்கும் இதைச் சொல்லுங்கள். தாய் தந்தையருக்குப் படிப்பறிவு இல்லை என்றால் படித்துச் சொல்லுங்கள் கேட்க மறுக்கும் பொழுது படிக்க வேண்டாம். ஏற்புடைய உணர்வு வரும் பொழுது படிக்க வேண்டும்.

இதன் வழியில் தான் அருள் ஞானத்தை வளர்க்க முடியும். ஆர்வத்தின் தன்மை கூட்டும் பொழுது வேகம் கூட்டலாம்.

கண்ணாடி போன்றது ஆத்மா. அதில் எழுத்துக்களைப் பதிக்க வேண்டும் என்றால் சிதையாது பாதுகாக்க வேண்டும். ஆன்மாவிற்குள் இதன் உணர்வுகள் அழுத்தத்தின் தன்மை அதிகமாகி விட்டால் ஆன்மா சிதைந்து வெறுப்பின் தன்மை பெருத்துவிடும். பதியும் தன்மை இழந்து விடுகின்றது.

1.இதையெல்லாம் தெரிந்து அமைதி கொண்டு அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்.
2.உங்கள் வாழ்க்கையில் உங்கள் அனுபவம் பெரிதாகின்றது.
3.அருள் ஞானத்தைப் பெருக்கும் அனுபவமாக மாறுகின்றது.

அருள் வாழ்க்கை வாழும் தன்மை வருகின்றது, இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து இருளை அகற்றிப் பொருள் காணும் நிலைகளை நாம் பெறுகின்றோம்.

குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற நாம் தியானிப்போம்.

ஞானகுரு உபதேசிப்பதைப் புரியக்கூடிய முறை

ஞானகுரு உபதேசிப்பதைப் புரியக்கூடிய முறை

 

நாம் தெரிந்து கொள்வதற்காக ஞானிகள் தத்துவ நிலைகளில் எல்லாவற்றையும் தெளிவாக்கி உள்ளனர். ஞானிகள் சொன்னதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சாமி என்னவோ சொல்கின்றார்… “நமக்குப் புரியவில்லை” என்று சொன்னால் புரியாமலே போய்விடும்.
2.அதை நாம் புரியும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
3.இந்த உணர்வுகள் மீண்டும் உங்கள் நினைவிற்கு வரப்படும் பொழுது
4.அதனின் உண்மையை அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.

ஞானிகள் உணர்த்திய அருள் வழி கொண்டு நாம் மனிதனாகப் பிறந்த வழியைத் தெரிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில்…
1.எதைச் சேர்க்க வேண்டும்…?
2.எதை வளர்க்க வேண்டும்…?
3.எதைச் சுவாசிக்க வேண்டும்…?
4.எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்ற உணர்வுகளை உங்களில் பெற முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து முழுமை பெற முடியும்.

நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ந்து வாழச் செய்து மகரிஷிகள் சென்றடைந்த அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் அனைவரும் அடையலாம். மனிதனாகப் பிறந்ததின் பலனை ஒவ்வொருவரும் அடைய முடியும்.

யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்…?
2.தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கிறோம்.
3.சாமி சொன்னார்கள்…! ஆனால் மறந்து விட்டது…! என்று இருக்கக் கூடாது.

அருள் உணர்வுகளை உங்களுக்குள் “ஆழமாகப் பதிவு” செய்து கொள்ள வேண்டும். இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

குருதேவர் அனுபவபூர்வமாக எமக்கு உணர்த்திய உண்மைகள்

 

நமது குருநாதர் சொன்னபடி மூன்று இலட்சம் பேரை யாம் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருத்தரையும் சந்திக்கும்போது
1.அவர்களுடைய கஷ்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…?
2.அவர்களுக்குத் துன்பங்கள் எப்படி நேருகின்றது…?
3.நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் போது அவரகளைத் துயரங்கள் எப்படி வந்தடைகின்றது…?
4.அதிலிருந்து அவர் மீள்வதற்கு வழி இல்லாதபடி எப்படி இருக்கின்றனர்…? என்று காட்டுகிறார்.

பக்தி என்ற நல்லொழுக்கத்தை மட்டும் கடைபிடித்து வாழ்ந்தாலும்… நல்லதை எண்ணுகின்றனர்… ஆனால் அந்த நல்லதைக் காக்கும் திறன் இழக்கும் நிலையில் இன்று ஒவ்வொரு மனிதனும் இருக்கின்றனர். நல்லதைக் காக்கும் வலுவான நிலைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் செயலிழந்து இருக்கின்றது.

நல்லதைப் பெற வேண்டுமென்று அரசர்கள் பக்தி ஒன்றை மட்டும் நமக்குக் காட்டிவிட்டு நல்லொழுக்கத்தைக் காக்கும் திறனை அவர்கள் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அதைப் பெற முடியாதபடி தடைப்படுத்திவிட்டார்கள்.

ஏனென்றால்
1.பக்தி என்ற நிலைகளில் மக்கள் நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தாலும்
2.மெய் ஒளி பெற்று உண்மைகளை அவர்கள் உணர்ந்தால் தனக்குக் கீழ் அடிபணியமாட்டார்கள் என்ற நிலையில்
3.அரசர்கள் தங்கள் சுகபோகங்களுக்காக உலக ரீதியிலேயே ஞானிகள் சொன்ன உண்மைகளை மாற்றினார்கள்.

ஞானிகள் கண்ட பேரண்டத்தின் பேராற்றல்கள் பூமிக்குள் வந்தாலும் சாதாரண மக்கள் நாம் பெற முடியாதபடி எப்படித் தடையானது…? அதிலிருந்து மீண்டு நமது உயிராத்மாவை எப்படி ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும்…? என்ற நிலையை நமது குருநாதர் அவருடைய உயிராத்மா உடலை விட்டு வெளியே செல்லப் போகும்போது முதல் நிலையாக எனக்குச் சொன்னார்.

அவர் உடலுடன் இருக்கும் போதே பிரணவத்தின் தத்துவத்தை முழுமையாக எம்மைப் பெறச் செய்தார். கன்னியாகுமரி முதல் இமயமலை வரை சென்று வரச் செய்து எனக்குப் பல அனுபவங்களைக் கொடுத்தார்.

நம் பூமி வட துருவத்திலிருந்தும் தென் துருவத்திலிருந்தும் ஆற்றல் மிக்க சக்திகளை எப்படிப் பெறுகின்றது…? என்பதை குருநாதர் உடலுடன் இருக்கப்படும் போது நேரடியாகவே எமக்கு உணர்த்தினார்.

1.அவர் எங்கே செல்கின்றாரோ அவருடன் எம்மை அணைத்துக் கொண்டு ஆங்காங்கு நிறுத்தி
2.இயற்கையின் செயலாக்கங்கள் எப்படி இருக்கிறது…? என்ற நிலையை
3.நாம் எப்படி T.V.க்களில் பார்க்கின்றோமோ அதைப் போன்று எமக்கு உணர்த்தினார்.

சுமார் 12 வருட காலம் பல காடு மேடு அலைந்தேன். உயிரினங்கள் எவ்வாறு செயல்படுகின்றது…? தாவரங்கள் அதனதன் தாவர இனச் சத்தை எப்படி இழுக்கின்றது…? தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? அந்த வளர்ச்சியின் தன்மை கொண்டு பூமியின் காற்றலைகள் எப்படி மாறுகின்றது…? என்று அவர் உணர்த்தியதை எல்லாம் நானும் உணர்ந்தேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் அதை உணர்வதற்கு நேரடி அனுபவத்தைக் கொடுத்தார். அவ்வாறு அனுபவத்தால் பெற்ற உண்மைகளை நீங்களும் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறோம்.
1.எமக்குள் பெற்று வளர்த்த அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எல்லோரும் பெறுவதற்கே
2.இந்த உபதேசத்தின் மூலமாக உங்களுக்குள் அதைப் பதிவு செய்கின்றோம்.

“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

“மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் என்று…” எதற்காக அப்படி உபதேசம் கொடுக்கின்றோம்…?

 

1.நான் ஏட்டைப் படிக்கவில்லை… குரு அருளை எடுத்து அந்த உணர்வுகளை வளர்த்து அதன் வழி நடந்தேன்.
2.காற்றில் அனைத்துச் சக்திகளும் இருக்கின்றது… நீங்களும் என்னைப் போல் அறியலாம்… அதை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
3.அந்த நல்லதைப் பெறச் செய்வதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

தீமை எவ்வாறு வருகின்றது…? அந்தத் தீமையை எப்படி மாற்றுவது…? என்ற உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நீங்கள் அதை நுகர்கின்றீர்கள். உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது.

கூடுமான வரையிலும் உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றேன்.

நேரம் போகின்றதே…! என்று எண்ணக் கூடாது.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
1.அந்தத் தீய அணுக்கள் கொஞ்சம் மூச்சுத் திணறும்.
2.அப்பொழுது சிறுகச் சிறுக அந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்க்க வைக்கின்றேன்.
3.இடைவிடாது பேசிக் கொண்டிருக்கின்றேன்… இடைவிடாது நீங்கள் நுகர்கின்றீர்கள்.
4.உங்கள் ரத்தத்தில் அருள் உணர்வுகள் கலந்து கொண்டே இருக்கின்றது… கலக்கச் செய்கின்றேன்,

எனக்கு குருநாதர் மணிக்கணக்காக உபதேசிப்பார். இரண்டு நாள் மூன்று நாள் கூடப் பட்டினியாக இருக்கும்படி செய்வார். இந்த அருள் சாப்பாட்டைக் கொடுப்பார். என் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அந்த உபதேசக் கருத்துக்களை உணவாகக் கொடுப்பார்.

மற்றவர்கள் அரை மணி நேரத்திலே பேசி விட்டுச் சென்று விடுவார்கள். சாமி மூன்று மணி நேரம் ஆறு மணி நேரம் “ஜவ்வு மிட்டாய் மாதிரிப் பேசுகின்றார்…” என்று சிலர் எண்ணி விடுவார்கள்.
1.உங்களுக்குள் அந்த அருள் சக்தியைப் பெறச் செய்வதற்குத் தான் இவ்வாறு செயல்படுத்துவது.
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை உங்கள் ரத்தங்களிலே கலக்கச் செய்து
3.கெட்ட அணுக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கச் செய்கின்றோம்.
4.மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் புகுத்தச் செய்கின்றோம்.

அந்த வழி தெரிந்து தான் இதைச் செய்கிறோம்.

விஞ்ஞான அறிவு கொண்டு அலுமினியத்தையோ தங்கத்தையோ அத்தகைய கடினமான உலோகங்களையும்… காற்று அழுத்தத்தை அதிகமாக்கி அதிலே மோதும்படிச் செய்து அதைத் தூசியாக மாற்றுகின்றார்கள்… (ATOMISATION) கரைத்து விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களுக்குள் சேர்க்கும்படி செய்து “அது அழுத்தமான பின்… வேக சுழற்சி ஆகும்…”
2.தீமையின் உணர்வுகளுக்குள் அதை ஊடுருவும்படிச் செய்கின்றோம்.

விஷம் எப்படி ஒன்றுக்குள் ஊடுருவி அதன் இயல்பை மாற்றுகின்றதோ இதைப் போல விஷத்தை மாற்றிய உணர்வுகளை உங்கள் ரத்தத்தில் கலக்கும்படிச் செய்கின்றோம்.

1.உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குள் ஊடுருவி
2.அதை மாற்றக் கூடிய சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.

ஒரு சிலர் சாமி மணிக்கணக்காகப் பேசுகிறார் நம்மால் உட்கார முடியவில்லை என்று வேறு பக்கம் சென்று விடுவார்கள்… வாழ்க்கையின் நிலைகள் கொண்டு.

1.அப்படிப் போவோர்கள் தவிர மிஞ்சுபவர்கள் தான்
2.”எப்படி இருந்தாலும் அந்தக் குரு அருளைப் பெற வேண்டும்…” என்ற நிலையில் இங்கே நிற்பார்கள்.

பிறகு… நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பேச அவர்களுக்கும் இதிலே கொஞ்சம் பற்று வரும். பின் வரவேண்டும் என்று சொல்லி வருவார்கள்.
1.நீங்கள் வளர்ச்சி அடைந்த நிலைகள் கொண்டு உங்கள் மூச்சு பூமியில் உள்ள தீமைகளை நீக்கும்.
2.உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவரையும் திருந்தும்படிச் செய்யும்.

தெருவிலே ஒருவருக்கொருவர் போக்கிரியாக இருக்கின்றார்கள்… போக்கிரித்தனமாகச் செயல்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வை நுகர்ந்தால் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதே வெறி உணர்வு இயக்கும்.

ஆனால் உங்களுக்குள் அந்த மகரிஷிகள் உணர்வு வளர்ந்த பின் அவருடைய துன்பத்தை மாற்றக்கூடிய சக்தியாக மாறும். இல்லையென்றால் அது ஆட்கொண்டு விடும். அதனால் தான் உங்களுக்கு இதையெல்லாம் ஞாபகப்படுத்துகின்றோம்.

சமையல் செய்யும் பொழுது அவசரப்பட்டுச் சாதத்தை ஆக்கினால் என்ன ஆகும்…?

சில ஓட்டலில் அரிசியை முக்கால் பாகம் வெந்தபின் போட்டு விடுவார்கள். கூட்டமாக இருக்கிறது சீக்கிரம் போட வேண்டும் என்று கல்யாண வீட்டில் கூட… அவசரப்பட்டு வேகுவதற்கு முன்பே சாதத்தைப் போட்டுவிடுவார்கள்.

அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்ட பின் எனக்கு வயிற்றால் போகின்றது நெஞ்சு வலிக்கிறது என்று சிலர் திட்டுவார்கள்.

ஆக… அது போன்று அவசரப்பட்டு மெய் உணர்வுகளைச் சமைத்துக் கொடுத்தால் என்ன ஆகும்…? வித்தியாசமாக நினைப்பீர்கள். அப்படி நீங்கள் வித்தியாசமாக நினைத்துவிடக் கூடாது என்பதற்குத் தான் உங்களுக்குப் “பொறுமையாக உபதேசத்தைக் கொடுக்கின்றேன்…”

ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுக்குத் தக்க பதிவாகும். ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையில் தீமைகள் வந்தது என்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அனைத்திலும் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.
2.அவ்வாறு சேர்த்துக் கொள்ளும் அந்தப் பருவத்தைச் செயல்படுத்துவது தான் இத்தகைய உபதேசங்கள்.

குழம்பு வைக்கும் போது அதிலே ஒரு பொருளுடன் ஒரு பொருளைச் சேர்த்து ருசியாக மாற்றுகின்றோம் அல்லவா… அது போல் தான்…!

நாம் வேதனையான குணங்களை எடுத்து விட்டால் நல்ல அணுக்களை மாற்றும்படிச் செய்து விடுகின்றது. அந்த அணுக்களை மீண்டும் நல்லதாக மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் அந்த அருள் உணர்வைச் சேர்த்து இதற்கு மேல் இதை மாற்ற வேண்டும். அந்தத் தீமையை அடிமையாக்க வேண்டும்.

வெங்காயச் சருகு உருவாவது போன்று ஒவ்வொரு உணர்வின் தன்மை வரும் போதும்…
1.அணுவுக்குள் அணு… அணுவுக்குள் அணு… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓம்… ஓம்…! என்று இணைத்து
2.ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரணவத் தத்துவமாகக் கொண்டு வரும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அணுக்களிலும் அந்த நுண்ணிய அணுக்களாக மாறி மாறி அதைச் சேர்த்துத் தான் உடலாக மாறியது.

அதே போன்று நாமும் இந்த அருள் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வளர்த்துக் கொண்டு வர முடியும்.

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

குருநாதர் கொடுத்தது எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது… கொஞ்சம் தான் சொல்கின்றேன்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் எண்ணிலடங்காதவைகளைப் பதிவு செய்கின்றார்கள். பதிவு செய்த பின் மீண்டும் இயக்கப்படும் பொழுது அனைத்தும் தெரிய வருகிறது.

இன்றைய நவீன நிலைகள் கொண்டு அதனுடைய இயக்கங்களில் தவறுகள் வந்தாலும் கூட “தன்னாலேயே அதைத் திருத்திக் கொள்ளும்படியாக அதில் வைத்திருக்கின்றார்கள்…”

அதே போன்று
1.அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் நாம் காலையிலிருந்து இரவு வரை
2.எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்… நமக்குள் சேமிக்கப்படுகின்றது.

கம்ப்யூட்டர்களில் பார்த்தோம் என்றால் பல கோடி நிலைகளைப் பதிவாக்கி அதை இயக்கும் வசதிகளையும் (CAPACITY) இன்றைய நவீன நிலைகள் கொண்டு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

அதே போன்று நமது மனித உடலில் எத்தனையோ விதமான ரெக்கார்டுகள் உண்டு.

அனுபவம் பெறுவதற்காக நான் காட்டிற்குள் சென்று மிருகங்களை எல்லாம் பார்த்தேன் என்றால்
1.அங்கே பெற்ற அனுபவங்களை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன் என்றால்
2.நான் சென்ற இடமெல்லாம் இப்பொழுது நினைவலைகளில் வந்து (அது தெரிந்து தான்) தான் சொல்ல முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் ரோட்டிலே செல்கின்றீர்கள். யாராவது திட்டினார்கள் என்றால்… சண்டை போட்டு அவர்கள் மோசமாகத் திட்டியிருந்தார்கள் என்றால்… ஒருவருக்கொருவர் தாக்கியிருந்தால்… அதை ஒரு தரம் நாம் பதிவாக்கி விட்டோம் என்றால்
1.அந்த இடத்திற்குச் சென்ற பின் இருவர் சண்டையிட்டால்
2.அவருடைய நினைவலைகள் அங்கே தெரிய வரும்… உடனே தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால் நம் உடலில் இது போன்று கண் கருவிழி ருக்மணி பதிவாக்கி விடுகின்றது. மீண்டும் அந்த மனிதர்களை எண்ணும் பொழுது அது இயக்குகின்றது.

இதே போன்றுதான்
1.இயற்கையின் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்காக குருநாதர் எண்ணிலடங்காத பதிவுகளைக் கொடுக்கின்றார்…
2.எக்கச்சக்கமாக எனக்குள் இருக்கின்றது.
3.கொஞ்சம் மட்டும் தான் உங்களிடம் சொல்லி வருகின்றேன்
4.அந்தந்தச் சமயத்திற்குத் தக்கவாறு.

காரணம்… ஒரு உடலில் விளைந்ததை அடுத்த உடலுக்குள் பாய்ச்சினால் அதன் நிலைக்கே மாற்றும்.

அது போல் தான் அகஸ்தியன் தான் கண்டறிந்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். இருவரும் ஒன்றாகிறார்கள்.

நம் பூமி துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலை எவ்வாறு கவர்கிறது…? என்பதை உற்று நோக்குகின்றார்கள். அதிலிருந்து வரக்கூடிய சக்தியை நுகர்கின்றார்கள். அவர்கள் எடுத்துக் கொண்ட சக்தியால் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றாகின்றது… உணர்வுகள் அனைத்தையும் ஒன்றாக்குகின்றார்கள்.
1.மின்னல்கள் வரும் பொழுது ஒளிக் கற்றைகளை இவர்கள் சுவாசிக்கின்றார்கள்
2.இரண்டு பேர் உடலிலும் ஒளியான அணுக்கள் உருவாகின்றது.

துருவப் பகுதியை எண்ணி வளர்த்துக் கொண்ட நிலையில் இரு உயிரான்மாக்களும் வெளி வரும் பொழுது எதைக் கூர்மையாக உற்று நோக்கினார்களோ அங்கே செல்கின்றார்கள். இரு உயிரும் ஒன்றாகிறது.

1.அகஸ்தியன் உடலில் இரண்டு நட்சத்திரத்தினுடைய சக்தி கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம்
2.அவன் மனைவி உடலில் அதே போன்று இரண்டு நட்சத்திரம் வேறு ஒரு ஆண் நட்சத்திரம் வேறு ஒரு பெண் நட்சத்திரம்
3.அவர்கள் இரு உயிரும் ஒன்றான நிலையில் “அந்த நான்கும் சேர்ந்து பிரம்மமாகின்றது…”
4.மின்னல் எப்படி ஆகின்றதோ… அதை உருவாக்கக்கூடிய சக்தி பெறுகின்றார்கள்.

அப்படியானது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரம் நம் பூமியின் வடகிழக்குப் பகுதியில் துருவப் பகுதியின் ஈர்ப்புக்கு நேராக இருக்கின்றது. அதன் வழி தான் அதனுடைய சக்திகள் இங்கே உள்ளே வருகின்றது
1.அதை நுகர்ந்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்குத் தான்
2.இத்தனை உபதேசங்களையும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

மெய் ஞானம் பெறும் ஆற்றல்

மெய் ஞானம் பெறும் ஆற்றல்

 

ஒருவருக்கொருவர் துணை இல்லாது யாரும் வாழ முடியாது. துணையில்லாத உயிரினங்கள் சுத்தமாகவே அழிந்து விடுகின்றது… அது மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே முழுவதுமாக மடிந்து விடுகின்றது.

கடந்த காலங்களில் மனிதர்கள் உருவாவதற்கு முன் வலிமைமிக்க மிருகங்கள் வாழ்ந்திருந்தாலும்…
1.அந்தந்த இனத்தின் வலிமை அதிகமாகும் பொழுது அதற்குள்ளேயே ஒன்றை ஒன்று கொன்று புசிக்கும் நிலை விளைந்து
2.இறந்த அலைகள் வந்த பின் அதை நுகர்ந்த… பற்றுடன் வாழ்ந்த அந்த இனம் பூராமே அழிந்துவிட்டது.

பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த கால ரூபங்கள் எல்லாம் எப்படி மறைந்தது…? என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது சில பகுதிகளிலும் சூட்சும நிலைகள் கொண்டு சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்றும்
1.அன்று வாழ்ந்த மிருகங்கள் அதன் இனமே இல்லாது எப்படி அழிந்தது…?
2.அது வாழ்ந்த நிலைகள் அங்கே எப்படிப் பதிவாகியுள்ளது…?
3.அந்த அலைகள் எப்படி உள்ளது…? அதனுடைய ரூபங்கள் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் காண்பித்தார்.

இதை நீ வெளியிலே மற்றவர்களிடம் சொன்னாய் என்றால் போற்றலுக்கு உண்டான நிலை வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் பணமும் கிடைக்கும்.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளை கம்ப்யூட்டர் மூலம் பிரித்து எடுப்பார்கள். அதனுடைய எண்ண அலைகள் தொடர்பு கொண்டதைக் காற்றில் இருப்பதையும் பிரிப்பான்.

உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது அந்த அலைகளின் தொடரை வைத்து அந்த ரூபத்தை அறிவான். அதைக் காணும் நிலையும் வரும்.

ஆனால் அது ஜீவனுள்ளதாக வராது.

கம்ப்யூட்டர் மூலமாக உருவத்தைக் கொண்டு வந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலைகள் எதுவோ இந்த உணர்வுகள் வளர்க்கப்பட்டு விஞ்ஞான அறிவு கொண்டு கண்டறிந்தாலும் அவன் கொண்ட நினைவாற்றல் மனித ரூபத்தை விட்டு
1.அந்த அகோரமான உணர்வுகள் இணைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை வெளிவந்த பின்
2.இன்றைய சூழ்நிலைக்குமில்லாது கடந்த காலச் சூழ்நிலைக்கும் இல்லாது இந்த உயிர் இதற்கு இணையான ரூபத்தை மாற்றிக் கொடூர மிருகமாக மாறும்.

விஞ்ஞான அறிவால் அந்த நிலை தான் வரும். அந்த ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்காக அதைச் செய்தாலும் அதனுடைய பின் விளைவுகள் இப்படி இருக்கும் என்று அதையும் குருநாதர் காட்டுகின்றார்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பூமிக்கடியில் மண்ணைத் தோண்டுகின்றார்கள். அந்த மணலை எடுத்து
1.நுண்ணிய அலைகள் கொண்டு அதிலே திரவகத்தை இணைக்கப்படும் பொழுது மேல் எழுந்தவாறு ஆவிகளாக மாறி
2.அதிலே வலிமை பெற்றதும்… ஒவ்வொரு நிலையாகப் படிப்படியாக அந்த திரவகத்தின் அடர்த்தியைக் கூட்டக் கூட்ட
3.இன்னென்ன காலங்களில் இவ்வளவு வலிமை பெற்றது… அந்த வலிமையை இவ்வளவு காலத்தில் பெற்றது என்று
4.அந்த திரவகத்தை ஊற்ற ஊற்ற அந்த வலிமை கொண்டு கரைந்து கரைந்து செல்வதை
5.அதனுடைய காலகட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றார்கள்… இந்தப் பாறை இத்தனை காலத்திற்கு முந்தையது…! என்று.

இதைப் போன்றுதான் குருநாதர் விண்ணுலக ஆற்றலின் உணர்வுகளை இன்னென்ன காலங்களில் விளைந்தது என்பதை நீ நுகர்ந்து பார். அந்த உணர்வின் ஒலி அலைகள் எப்படி வருகிறது…? என்று அதனை நீ அறிந்து கொள்.

ஆனால் அதற்காக வேண்டி காலத்தைச் செலவழிக்காதே. நீ அறிந்து கொள்ளவே இதை உனக்குக் கொடுக்கின்றேன்.

இந்த அறிவின் தெளிவை மற்றவர்களுக்கு நீ ஊட்டினால் விஞ்ஞான அறிவிக்கே அடிமையாகி மனித உடலில் இச்சைகள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் அழியும் பருவத்தைப் பெறுவாயே தவிர… என்றும் உயிருடன் ஒன்றி நிலை கொண்டு ஒளியின் சரீரமான அந்த மகரிஷியின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது என்று தெளிவாகக் காட்டினார்.

ஆகவே அதன் வழிப்படி நான் அந்த வழிக்குச் செல்லவில்லை.
1.மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும் ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்து
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றச் செய்ய வேண்டும்.

என் ஒருவனால் அது முடியாது. நீங்கள் அனைவரும் அந்த அருள் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் நினைவு கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலைப் பெற வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் பெற வேண்டும்… என்னைப் பார்ப்போருக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வினை உங்கள் எண்ணத்தால் பரப்பினால்
1.இது சிறுகச் சிறுக வளர்ந்து ஒவ்வொரு மனிதருக்குள்ளும் விளைந்து உணர்வலைகளைப் பெருக்கி
2.அதன் வலு கொண்டு இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத்தன்மைகளை மாற்ற முடியும்.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும்

 

இன்று பார்க்கலாம்… அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது இன பேதத்தாலும் மொழி பேதத்தாலும் அழிவுகள் வந்து கொண்டுள்ளது. இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.மக்களைக் காக்க வேண்டும். உலக மக்கள் அமைதி கொண்டு வாழ்ந்திட வேண்டும்
2.ஒவ்வொருவரும் கடவுளின் தன்மை அடைய வேண்டும்.
3.மனிதனுக்குள் அறியாத புகுந்த தீமைகளை அகற்றிட வேண்டும்.
4.இத்தகைய உணர்வுகளை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.

அதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம்… இது பெரிதாக வளரும். கர்ப்பமான தாயின் கருவிலே வளரும் சிசுக்களுக்கு மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஊட்டினால் உலகை காத்திடும் மகரிஷிகளை “உங்களால் சிருஷ்டிக்க முடியும்…”

1.இந்த நாட்டிலே வரும் தீமைகளைப் போக்க முடியும்… நல்ல அரசியலையும் கொண்டு வர முடியும்.
2.நம் எண்ணத்திற்குள் அத்தகைய உயர்ந்த மாற்றங்கள் வேண்டும்.

ஏனென்றால் இன்று உலகெங்கிலும் ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளே வளர்ந்து கொண்டுள்ளது. அதைக் கேட்டுப் பதிவாக்கி அதன் வழி சென்றால் நாமும் குறையைத் தான் வளர்க்க முடியும்… தீமையைத் தான் பெருக்க முடியும் பகைமைகளைத் தான் உருவாக்க முடியும். பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.

ஆகவே தயவு செய்து இதைக் கேட்டுணர்ந்தோர்… “சாமி ஏதோ அரசியல் பேசுகிறார்…” என்று எண்ண வேண்டாம்.

மனிதனில் விளைய வைக்கும் உணர்வுகள் எதுவயே அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாகப் பெருக்குகின்றது. மனிதனின் உணர்வுக்குள் எது பெருகுகின்றதோ அந்த அலைகள் படரப்படும் பொழுது
1.எதை எதை மனிதனுடைய ஆசையால் பெருக்குகின்றானோ… எதை எதையெல்லாம் எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
2.அந்த உணர்வுகள் வெளியிலிருந்து வருவது அதுவே பதிவாகின்றது… கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது… அதுவே விளைகின்றது.
3.காற்றலைகளும் அதனால் மாறுகின்றது… மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளேயே விளைகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும்… இதை நீ செய்வாய்… செய்யக் கடவாய் என்றார் குருநாதர். உனக்குள் இதை விளையச் செய்… காத்திடும் உணர்வுகள் அனைவருக்குள்ளும் விளையட்டும். தீமைகள் அகலட்டும்… “மகிழ்ந்திடும் நிலைகளில் அருள் உலகம் மலரட்டும்…!” என்று தான் குரு சொன்னார்.

அதைத்தான் உங்களிடமும் உணர்த்துகின்றோம். ஆகவே பேதங்கள் அனைத்தையும் அகற்றுங்கள்… நாடு நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.

இங்கே தோன்றும் மெய் ஞானிகளின் ஆற்றல்கள் அது உலகெங்கிலும் எல்லோருக்குள்ளும் தோன்றும்… நிச்சயம் இது பரவும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது போன்று
1.ஞானிகள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் செயல்படுத்துங்கள்.
2.அந்த நல்ல நிலைகளை நிச்சயம் நாம் பெற முடியும்… அதை நாம் உருவாக்க முடியும்.
3.அதையெல்லாம் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்… உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம்.

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

 

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை… நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.

இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது… தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது… நோயாகவும் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.

1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.

நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்… இருளை அகற்ற முடியும்.

இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்… எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.

ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.

இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.

1.எத்தகைய சூழ்நிலையிலும்… வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்… உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்… தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்… செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.

எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா…? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.

அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்… வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.

ஆகவே… தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுங்கள்.