அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை “நீ உற்றுப் பார்…” என்றார் குருநாதர்

அகஸ்தியன் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மைகளை “நீ உற்றுப் பார்…” என்றார் குருநாதர்

 

தாயின் கருவிலே விளையும் குழந்தையை இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எந்திரத்தின் துணை கொண்டு உற்றுப் பார்த்து இந்தக் குழந்தை பலவீனமாக இருக்கின்றதா…? ஆரோக்கியமாக வளர்கின்றதா…? என்று காணுகின்றார்கள்.

பலவீனமாக இருந்தால் அதற்குண்டான ஊட்டச்சத்துக்களைக் கொடுத்துக் குழந்தையை நல்ல முறையில் இப்படி வளர்த்து விடலாம் என்றும் செயல்படுத்துகின்றார்கள்.

அதே சமயத்தில் கருவில் வளரும் பொழுதே அதை ஆணா பெண்ணா என்ற நிலைகளும் இந்த உணர்வின் சத்துக்களைக் காணுகின்றான் விஞ்ஞான அறிவில்.

அன்று மெய் ஞானத்தின் தன்மை கொண்டு சந்தர்ப்பத்தால் தாய் நுகர்ந்த உணர்வு விஷத்தின் தன்மையை முறித்திடும் சக்திகளை கருவிலேயே பெறுகின்றான் அகஸ்தியன்.

கருவிலேயே அப்படி அவனுக்குள் விளைந்து பிறந்த பின்
1.விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அதை நுகர்ந்தறியக்கூடிய உணர்வின் ஆற்றலும்
2.இதனுடைய செயலாக்கங்களையும் கண்டு கொண்டவன் தான் அந்த அகஸ்தியன்.

அவன் வாழ்ந்த காலங்களில்
1.அவன் உடலிலே விளைந்த அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் அவனுடைய மூச்சலைகளாக இங்கே படர்ந்துள்ளது.
2.அதே சமயத்தில் அவன் நடந்து சென்ற பாதச் சுவடிகளில்
3.அவன் ஈர்க்கும் வட்டத்தில் பதிந்த ஆற்றல்களும் “இங்கே உள்ளது” என்று அதை குருநாதர் காட்டுகின்றார்.

அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகள்
1.அவன் அறிவுகளில் எதை எதைத் தீமை என்று “உணர்ந்த உணர்வுகளை… நீ உற்றுப் பார்” என்று சில குறிப்பிட்ட இடங்களைக் காட்டுகின்றார்.
2.அதைக் கண் கொண்டு கூர்ந்து கவனி…! என்றார்.

பாறை மீது அவர் அமர்ந்திருந்து பல செயல்களைச் செயல்பட்ட நிலைகளையும்… தன் இருப்பிடத்திலிருந்து அதைத் தனக்குள் கவர்ந்து தனது அறிவாக தனக்குள் அந்த அறிவின் தன்மை வளர்த்துக் கொண்ட நிலையையும்… அறியும் ஆற்றலும் பெற்றதைப் பார்…! என்றார் குருநாதர்.

அவன் கடும் மின்னலையும் உற்று நோக்குகின்றான். ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரத்திற்கு மோதல் ஆகும் போது மின் கதிர்களாக மின்னலாகப் பாய்கிறது.

மின்னல் பூமிக்குள் மற்றவர்கள் மீது தாக்கியவுடன் அந்த உடலைக் கருக்குவதும்… மின்னல்கள் வான் வீதியில் தாவர இனங்கள் இல்லாத பொழுது அது எப்படிப் பரவுகின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது விஷத்தை அடக்கிடும் சக்தி பெற்றான்.
2.அதன் மூலம் மின்னலுக்குள் இருக்கும் ஆற்றலை எவ்வாறு உணர்ந்தான்…? அதை நுகர்ந்தான்…? என்று பார்க்கும்படி சொல்கிறார் குருநாதர்.

அதில் இருக்கக்கூடிய சக்தி… இன்று நாம் அணுகுண்டு என்று சொல்கின்றோமே அத்தகைய “கதிரியக்கச் சக்தி” கொண்டது.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கதிரியக்கப் பொறிகள் உருவானாலும் மின் கதிர்கள் பரவப்படும் பொழுது மற்ற கோள்கள் உமிழ்த்தும் அலைகளுக்குள் ஊடுருவி அதை ஒரு இயக்கச் சக்தியாக எப்படி மாற்றுகின்றது என்ற நிலையை அகஸ்தியன் உணர்ந்து கொள்கின்றான்,

அப்போது
1.அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் எண்ண அலைகள்
2.அது எப்படி இருக்கின்றது…? என்ற நிலையையும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அனைத்திலுமே வெளிப்படும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொள்கிறது. ஒரு கொடூர மிருகத்தின் உணர்வை நுகர்ந்தால் “காளி” என்றும் அசுர குணங்கள் என்றும்… அசுர சக்தி கொண்டது…! என்றும் இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைக்கின்றார்.

ஆனால் ஒரு சாந்தமான மானின் தன்மை வரப்படும் பொழுது அதைச் சீதா – சுவை என்றும் அது எப்படி மகிழச் செய்கிறது…? என்பதையும் இதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது…? என்றும் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் எப்படி வளர்கிறது…? என்றும் காட்டுகின்றார் குருநாதர்.

அதே போல் சூரியன் ஈர்ப்பு வட்டத்தில் வளரும் தாவர இனங்களும் அதைத் தொடர்ந்து வரும் மனிதனின் உணர்வுகளும்…
1.எதை நுகர்ந்து உடலுக்குள் பதிவாகின்றதோ இந்த உயிரின் துணை கொண்டு அந்த உணர்வுகள் அணுவாகி
2.அணுவின் தன்மை கொண்டு உணர்ச்சிகளின் எண்ணங்களாக ஆகி… எண்ணத்தின் தன்மை கொண்டு
3.அதனுடைய வாழ்க்கையும் அதனுடைய செயலாக்கங்களும் எப்படி உருவாகிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மையின் இயக்கங்களை காடுகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று இப்படித்தான் எனக்குத் தெளிவாக்கினார் குருநாதர்.

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

 

அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை. நஞ்சிடமிருந்து தாய் தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது…
1.கருவிலே வளரும் அகஸ்தியனுக்குள் அந்தச் சக்திகள் இணைகின்றது.
2.நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெறுகின்றது.

பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அறிவில்லாத நிலையில் வானியலை உற்றுப் பார்த்தாலும்… அதை அறியும் அறிவே அவனுக்கு இல்லை ஆனால் (அவன் உடலில் நஞ்சை முறித்திடும் சக்தி இருப்பதால்)
1.கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் கருவிழியின் வழியாக அந்தச் சக்திகள் ஊடுருவுகின்றது.
2.சூரியனிலே ஏற்படும் மோதல்களைப் பார்க்கின்றது
3.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை அகஸ்தியனுக்குள் மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது.
4.சூரியனின் இயக்கத்தையும் அவன் காணும் சக்தி பெறுகின்றான்.

இது எல்லாம் இயற்கை… சந்தர்ப்பத்தால் தான் அவனுக்குள் உருவான நிலைகள்.

நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வுகளை அவருடைய தாய் தந்தையர் புலனறிவால் அறிந்த பின் அவர்கள் நுகர்ந்த பச்சிலை மூலிகைகளின் விஷத்தின் தன்மைகள் கருவிலே வளரப்படும் போது அது இணைந்து “நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக” அகஸ்தியனுக்குள் விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும்
2.அருள் ஒளியின் தன்மையை உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும்.

அந்த நோக்குடன் தான் எமது (ஞானகுரு) உபதேசத்தை உங்களை உற்று நோக்கும்படி செய்து உணர்வின் தன்மை நுகரும்படி செய்து
1.நுகர்ந்த உணர்வுகளை ஜீவணுக்களாக மாற்றும்படி செய்வதற்கே
2.எமது குரு இட்ட கட்டளைப்படி இதைச் செயலாக்குகின்றேன்… தெளிந்து கொள்ளுங்கள்.

பிற சக்திகளைச் சூரியன் எவ்வாறு கவர்கின்றது…? என்ற நிலையையும் அண்டங்கள் எவ்வாறு உறுப்பெற்றது என்ற அதன் தொடர்வரிசையையும் அகஸ்தியன் காணுகின்றான்.

விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கத்தின் தன்மை அறியப்படும் போது எங்கிருந்து விளைந்தது…? அதனுடைய உணர்வின் தொடர் எங்கிருந்து வந்தது…? என்று காணுகின்றாண்.

ஆனால் மெய்யை உணரும் ஆற்றல்… விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலாகத் தாயின் கருவிலே உருவாக்கப்படும் பொழுது
1.தனக்குள் விளைந்த நிலையுடன் மோதப்படும் பொழுது
2.விண்ணின் ஆற்றல் எவ்வாறு உருவானது…? என்று அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது
3.ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது…? என்று உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் தோற்றுவிக்கின்றது

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளைய விஞ்ஞானத்தினால் வரும் விஷத்தினை வென்று… நஞ்சற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து… இந்த உடலில் இருந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற “என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான்…”

அந்த நிலையை அடைந்தது தான் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும். இதைப் போன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் “ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட அண்டத்தில் உண்டு…!”

1.அதிலே இணைந்த உணர்வுகள்
2.அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
3.ஒளியின் சரீரமாக அழியாத வல்லமை பெறச் செய்யும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து
4.நமக்குள் எண்ணியதை உருவாக்கும் அதனைத் தெளிவாக்குதல் வேண்டும்.
5.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நாம் இணைய வேண்டும்.

அதற்குத் தான் இதை எல்லாம் பதிவு செய்கின்றேன். பதிந்து கொண்ட பின் நினைவு கொண்டு அதை நீங்கள் கவர்ந்து செயலாக்க முடியும்.

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

இலட்சக் கணக்கான ஞானிகளை நாம் உருவாக்குவோம்

 

வீட்டிலே கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பத்தில் உள்ள அனைவரும் “விரதம்” போன்று இருக்க வேண்டும். சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ வராதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

1.கருவில் வளரும் குழந்தை அகஸ்தியன் பெற்ற அருளைப் பெற வேண்டும்
2.அவன் துருவனான அந்தப் பேரருளைப் பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரமான பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
4.உலக இருளை அகற்றிடும் அருள் ஞானியாக வளர வேண்டும்
5.அவன் பார்வையில் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவன் சொல்லும் செயலும் மற்றவரைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும்
7.அந்த அருள் ஒளி பெறும் அருள் ஞானி உருவாக வேண்டும் என்று பத்து மாதமும் மற்றதெல்லாம் விட்டு விட்டு இதை எண்ணிப் பழகுங்கள்.

காலையில் ஐந்தரையிலிருந்து ஆறரைக்குள் இந்த மாதிரி எண்ணுங்கள் எல்லோரும் ஒரு விரதமாக இருந்து நாம் கோபிக்கக் கூடாது வெறுப்படையக் கூடாது சலிப்படையக் கூடாது சங்கடப்படக் கூடாது என்ற இந்த உணர்வை எடுத்து… மற்ற தீமையான உணர்வு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

என் குழந்தை அருள் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணினால் பிறப்பிலிருந்தே அவனுடைய பார்வையால் உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய சர்வ தோஷங்களும் போய்விடும்… உலகையும் காப்பான்.

1.அன்று ஒரு அகஸ்தியன் இந்தப் பூமியைத் திருப்பிச் சமப்படுத்தினான்… அதனால்தான் நாமும் இன்று சுகமாக வாழ முடிகின்றது.
2.அதைப் போன்று இப்பொழுது நாம் பல லட்சம் அகஸ்தியர்களைத் தோன்ற வைக்க வேண்டும்.

அவனைப் போன்று ஞானக் குழந்தைகளை உருவாக்கினால் தான் விஞ்ஞான அறிவால் வரும் கடும் விஷத்தன்மைகளை மாற்றும் தன்மை வரும்.

தங்கத்தில் திரவகத்தை விட்டால் செம்பும் பித்தளையும் எப்படி ஆவியாகப் பிரிகின்றதோ இதைப் போல நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று நஞ்சினைப் பிரிக்க வேண்டும்.

ஏனென்றால் அது நஞ்சினை வென்றது அந்த உணர்வுகளைக் குழந்தைகள் உடலிலே பெருகச் செய்து “ஆயிரக்கணக்கான குழந்தைகளை” நாம் இப்படி உருவாக்குதல் வேண்டும்.

அத்தகைய ஆற்றல்மிக்க உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்தால் தான்
1.விஞ்ஞானத்தினால் வந்த விஷத்தன்மைகளையும்
2.மனிதனுக்குள் ஆசை நிமித்தம் உடலை விட்டுச் சென்று தீய விளைவுகளாகப் பேயாக ஆட்டிப்படைக்கும் நிலைகளையும்
3.சிந்தனையற்ற நிலையில் இயக்கும் தீய நிலைகளையும் மாற்றி அமைக்கும் சக்தி பெற முடியும்.

இதை நீங்கள் அலட்சியப்படுத்தாதபடி செய்து பாருங்கள்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வந்து சேரும்
1.சாப அலைகள் தீய அலைகள் பூர்வ ஜென்ம அலைகள்
2.கஷ்டம் நஷ்டம் நோய் துன்பம் துயரம் பரம்பரை நோய்கள் எல்லாம் அடியோடு அற்றுப் போய்விடும்.
3.உங்கள் குழந்தை குடும்பத்தைக் காக்க்க் கூடிய சக்தியாக அவன் வருவான்.

“எங்கெங்கோ அலைவதற்குப் பதில்” கர்ப்பிணிக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று ஏல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள் அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் அந்தக் கருவிலே விளையத் தொடங்கும்.

குழந்தை வளர வளர குடும்பத்தில் பல அதிசயங்களும் நடக்கும்… விவசாயம் செழிக்கும். உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்புடன் நீங்கள் வாழ முடியும் ஞானத்தை எல்லோருக்கும் போதிப்பவனாக அவன் வருவான் அனைவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள்ஞானியாக அவன் வளர்ந்து வருவான்

குருநாதர் இட்ட கட்டளைப்படி இத்தகைய நிலைகளை நாம் இன்று செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

 

அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது

இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.

ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.

பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.

ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.

1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.

அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.

“துருவன் பெற்ற” மகா சக்திகளை நாம் பெற வேண்டும்

“துருவன் பெற்ற” மகா சக்திகளை நாம் பெற வேண்டும்

 

சில காடுகளில் யானை வருகிறது என்றால் தங்களைக் காத்துக் கொள்ள “புலையர்கள்” என்று சொல்பவர்கள் வாயிலே பச்சிலைகளை மென்று ஊதுவார்கள்.

குருநாதர் என்னைப் (ஞானகுரு) பண்ணாரிக்குச் சென்று அங்கே ஆறு மாதம் இருக்கும்படி சொன்னார். அந்தக் காட்டுப் பகுதிகளில் செல்லப்படும் பொழுது யானைகள் வரும்.

நான் சென்று கொண்டிருக்கும் பொழுது என் மணத்தை நுகர்ந்தறிந்து யானை அங்கே வருகின்றது. அப்போது அங்கே என் அருகிலிருந்தவர் “யானை வருகிறது… விலகிச் சென்று விடுங்கள்…! என்று சொன்னார்.

அட… நீ இங்கே தானே இருக்கின்றாய் அப்பா…! என்று கேட்டேன்.

இங்கே பாருங்கள்…! பச்சிலைகளை வாயில் வைத்திருக்கின்றேன் மென்று ஊதுகின்றேன்…! இந்த வாசனையைக் கண்டபின்
1.யானைகள் வெகு தூரத்திலிருக்கும் போதே அதை நுகர்ந்து பார்த்து
2.இந்தப் பக்கம் வராது வேறு ஒரு பக்கம் சென்றுவிடும் என்று சொல்கிறார்..

இப்போது நாங்கள் இங்கே இருப்பதால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள் இல்லையென்றால் யானை இந்தப் பக்கமாகத் தான் வரும். யானை அந்த பக்கம் செல்கிறது பாருங்கள்…! என்றார். இது நடந்த நிகழ்ச்சி…!

இதை அறியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத் தான் குருநாதர் பண்ணாரி காட்டிற்குள் செல்ல வேண்டும் என்று அனுப்பினார்.

இதற்கு முன்னாடி… மச்சம் எடுப்பதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அனுப்பும் பொழுது
1.யானையிடமிருந்து தப்பிக் கொள்ள
2.யானையின் மணத்தை நீ எவ்வாறு நுகர வேண்டும்…? என்று கற்றுக் கொடுத்தார்.

ஆனால் பண்ணாரி பக்கம் செல்லும் பொழுது பச்சிலைகளை அந்த புலையர்கள் நுகர்ந்து அந்த மணத்தை வெளிவிடும் பொழுது யானைகள் ஒதுங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

ஏனென்றால் அந்தப் பக்கம் இருக்கும் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் வரும்.

இது தெரியாதபடி நான் சென்று விட்டேன். தெரியாது என்றாலும் பொழுது குருநாதர் போகச் சொல்லும் போது அந்தப் பாதையில் நான் போய்த் தானே ஆக வேண்டும்.

இதைப் போன்று தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்… அவன் குழந்தையாகப் பிறந்த பின்பு
1.அவனைக் காட்டுப்பகுதியில் கையிலே தூக்கிச் சென்றால்
2.மற்ற காட்டு விலங்குகள் இவனைக் கண்டு அஞ்சுகின்றது.

சிறு குழந்தையாக இருக்கும் போதே அவன் வளர வளர அவன் உடலில் இருந்து அத்தகைய ஆற்றல் வெளிப்படுகின்றது. இவன் போகும் பக்கம் எல்லாம் மிருகங்கள் விலகுகின்றது.

இவன் பின்னாடி மக்கள் சென்றால் அவர்களுக்கு அது பாதுகாப்பாகின்றது. ஐந்து வயது ஆகும் பொழுது காட்டு அரசன் என்று பெயர் வைக்கின்றார்கள்.

அவன் மற்ற மணங்களை நுகர்ந்தறியும் பொழுது பல பல பொருள்களை அறிந்து இயக்கத்தின் தன்மையை… “தாவர இனத்தின் சக்திகளை” அறிகின்றான்.

இப்படி அறிந்துணரும் அவன் நாளடைவில் அந்தத் தாவர இனங்களுக்கு “எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?” என்று
1.வானை நோக்கி உற்றுப் பார்க்கின்றான்.
2.அப்போது துருவப் பகுதியிலிருந்து வரும் ஆற்றலை அவன் நுகர்கின்றான் அறிகின்றான்.
3.விஷத்தை வெல்லும் சக்தியாக அவனுக்குள் வருகிறது.
4.அந்தச் சக்தியால் விஷம் கொண்ட பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகளையும் அந்த நட்சத்திரங்களையும் இவன் காணுகின்றான்.

ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதும் பொழுது தான் பொறிகள் கிளம்பி மின்னலாகப் பாய்கின்றது…! மின்னல் தாக்கிப் பல வகைகளிலும் பூமிக்கு அடியில் கலவை ஆகிறது.

இதையெல்லாம் அறிகின்றான் அகஸ்தியன் துருவனாகும் போது.

துருவப் பகுதி வழியாக வருவதை அவன் நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கும் நிலையும்
1.மின்னல் எப்படி ஒளிக் கற்றைகளாக மாறுகின்றதோ அதைப் போன்று
2.இவன் உடலில் அந்த மின்னலையே (அது தாக்கிடாதபடி) “ஒளிக் கதிராக மாற்றும் அணுக்களாக” இவன் உடலுக்குள் அது மாறுகின்றது.

அதனால் தான் ஐந்து வயதில் மகா சக்தி பெற்றான் என்று சொல்வார்கள்.

காட்டுக்குள் எல்லா மிருகங்களையும் அவன் ஆட்சி புரிந்தவன் என்றும்… அதனால் அன்று காடுகளில் வாழ்ந்த மக்கள் இவன் செயலைக் கண்டு “அரசன்” என்று இவனை மதிக்கத் தொடங்கினார்கள்.

துருவன் அவனுடைய ஐந்து வயதில் பெற்ற
1.அந்தச் சக்திகள் அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் ஆழமாக பதிவு செய்கின்றேன்… என் குரு காட்டிய அருள் வழிப்படி…!

கல்கியுகம் பிறந்து விட்டது

கல்கியுகம் பிறந்து விட்டது

 

அனுதினமும் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் துணையால் கருவில் வளரும் சிசுக்களை ஞானக் குழந்தைகளை வளர்த்திட வேண்டும்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் குடும்பங்களில் கருவில் உருவாகும் குழந்தைகள் அவர்களுக்கு
1.ஒவ்வொரு நொடியிலும் அந்த அருள் ஞானத்தை நாம் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.உலக ஞானம் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி “உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர வேண்டும்” என்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுதும்… பால் ஊட்டும் பொழுதும்… தாலாட்டும் பொழுதும்… இதை நாம் செய்து பழக வேண்டும்.

செய்தால்
1.இதன் தொடர் வரிசையில் எதிர்காலச் சந்ததியினர் இந்த வழியிலே வளர்ந்து
2.இந்த நாட்டை உலகத்தைக் காக்கும் சக்திகளாக வருவார்கள்.

இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவிக் கொண்டிருந்தாலும் உலகை மீட்டிடும் அந்தத் தகுதி “தென்னாட்டில் தோன்றியவர்களுக்குத் தான் வரும்…”

உலகப் பேரழிவின் தன்மையை… விஷத்தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலைகளை மாற்றிட இது உதவும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றது. அதை ரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது ஏனைய நாடுகளில்…!

நம் நாட்டில் அவ்வாறு இல்லை… இப்போது தான் தலை காட்டுகின்றது. உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது குண்டுகளை வீசுவதும் மற்றவர்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.

மற்ற நாடுகளில் துரித நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது நீர் நிலைகளையும் காற்று மண்டலத்தையும் விஷத்தன்மைகளை பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதைக் கண்டு ரசித்து அதை சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது… அத்தகைய அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
1.ஆனால் தென்னாட்டில் தோன்றிய “அகஸ்தியன் உணர்வால்” அந்தப் பிழைகள் இங்கே வராது தடுத்து நிற்கின்றது.
2.அவருடைய உணர்வே தான் இங்கே பேசுகின்றது… உபதேசம் கொடுக்கின்றது
3.நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
4.ஏனென்றால் எனக்கு அந்தப் பேசும் தகுதியோ அந்த உணர்வைக் கவரும் தகுதியோ பெற்றவன் அல்ல நான்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அத்தகைய உணர்வின் தன்மை… உலகை மீட்ட…
2.அந்த உணர்வுகளே இயங்குகிறது… அதுவே இயக்கிக் கொண்டுள்ளது.
3.அந்த உணர்வலைகளே பரவிக் கொண்டுள்ளது.

உங்களுடைய நிலைகளுக்கு எண்ணும்பொழுது எனக்கும் லாபம் கிடைக்கின்றது நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும் போது அந்த உணர்வின் தன்மையால் அந்தப் பேரானந்த உணர்வு இந்தக் காற்று மண்டலத்தில் நானும் சுவாசிக்க நேருகின்றது.

நீங்கள் வளர நான் வளர முடியும்…!

ஆனால் “நான் வளர” நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால் உங்களை எல்லாம் நான் அடிமையாக்கத் தான் முடியும். ஆகவே நான் வளர்வதற்காக உங்களை அடிமை ஆக்குவது இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் நீங்கள் வளர வேண்டும்…!
1.நீங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்வினை நான் பெற்று வளர்த்தேன் என்றால்
2.நீங்கள் உயரும் போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்
3.உங்களில் விளைந்த அந்த உணர்வின் சத்து எனக்குள் அதை உயர்ந்ததாக மாற்றும்.

இங்கு விளைந்த (அகஸ்தியர்) வித்து ஒன்றுதான். ஆனால் அது உங்களுக்குள் அது விளைந்து பல பல வித்துக்களாக வளருகின்றது… தீமைகளை அகற்றும் சக்தியாக மாறுகின்றது.
1.அதைக் கண்டு நான் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி நான் பெறுகின்றேன்
2.அப்பொழுதுதான் பேரின்ப்ப் பெருவாழ்வை எனக்குள் அதை வளர்க்க முடியும்.

ஆகவே நீங்கள் வளர வேண்டும் அதைக் கண்டு நான் மகிழ வேண்டும் இதைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும்
1.நீங்கள் பார்ப்பவர் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் நிலையில் வளர வேண்டும் என்று இதை எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.
4.இதனுடைய வரிசைச் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் இங்கே வாழ முடியும் வளர முடியும்.

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து மீளவும் முடியும்.

விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”

விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”

 

“வான இயல்” தத்துவம் தான் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் உருவாவதற்கே காரணம் ஆகின்றது. ஆக… வான இயல் தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்சத்திற்குள் மாற்றமாகும் போது ஒன்றுடன் ஒன்று கலவையாகி கோள்களின் ரூபங்களும் மாறுகிறது.

அதே போன்று தான் “புவிஇயலின்” வாழ்க்கையும்…
1.ஒன்றுடன் ஒன்று பல கலவையாகி தாவர இனங்கள் உருமாறுவதும்
2.இதை உணவாக உட்கொள்ளும் உயிரணுக்கள் அது நுகர்ந்தறிந்த உணர்வுகளும் உணவாக உட்கொண்ட உணர்வுகளும்
3.இதனின் உணர்வணுக்கள் இணை சேர்த்து “உயிரியல்” மாற்றங்கள் வருகின்றது

உயிரியல் மாற்றங்கள் வந்த நிலைகள் கொண்டு நம் பூமியில் வளர்ச்சி பெற்று வந்தவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் வான இயல் தத்துவம் அனைத்தும் புவியியலாக மாறி… புவியில் விளைந்த தாவர இனங்கள் அதனின் குணம் உணர்வு சுவை இவை எல்லாம் கலவைகளாகி…
1.மணங்களும் ஞானங்களும் வளரப்பட்டு
2.உயிரினங்களில் ரூபங்கள் மாற்றப்பட்டு
3.இவை அனைத்தும் கடந்து மனிதனாக வந்தோம் என்பதை அறிந்து கொண்ட முதல் மெய் ஞானி அகஸ்தியன்…!

அக்காலங்களில் அகஸ்தியனும் அவன் மனைவியும் இணை சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால் காவியங்களில் இவர்கள் தனித்து பிரித்துக் காட்டுகின்றார்கள். இது முறையல்ல… முறையற்ற நிலை…!

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்த உணர்வுகள் கருவுற்று…
1.கருவின் நிலையில் கொண்டு விண்ணுலக ஆற்றலை இவர் கவர்ந்து
2.தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட இருவரின் உணர்வும்
3.இதனுடைய உணர்வின் சேர்க்கைகள் வளரப்படும் பொழுது தான்
4.விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அகஸ்தியன் பெறுகின்றான்.

அதே சமயத்தில் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் பொழுது இடைமறித்து “அகஸ்தியனின் மனைவி மடிந்து விடுகின்றது…”
1.உயிரான்மா பிரிந்தாலும் எதனின் நோக்கத்தில் கணவன் மேல் பற்று கொண்டதோ
2.அந்த ஆன்மா அகஸ்தியன் உடலுக்குள் சென்ற பின் அகஸ்தியனுக்கு உறுதுணையாக
3.உள் நின்றே உணர்வின் தன்மை பெறும் நிலையும்
4.கருவின் நிலைகள் இணை சேர்த்து… இரு கருக்களும் (உயிரும்) ஒன்றாக்கும் நிலையும்
5.விண்ணின் ஆற்றலைத் தன் அணுக்களில் மாற்றும் தன்மையும் அங்கே உருப்பெறச் செய்தது.

இது இயற்கையின் உண்மை…! குருநாதர் இதை எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் அவனின் உணர்வுகளை கணவனும் மனைவியும் ஒன்றிய நிலையில் கவர்ந்தவர்கள் அனைவரும்
1.வசிஷ்டரும் அருந்ததி போன்ற வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்து
2.சாவித்திரி போன்று இணை சேர்த்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து
3.தீமைகளைத் தன்னுள் நாடாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக சப்தரிஷி…! சிருஷ்டித்துக் கொண்ட நிலையாக
5.இன்றும் விண்ணுலகில் வாழ்த்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் சென்றடைய வேண்டிய எல்லை அது தான்…!

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் – துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

பேரண்ட மகரிஷிகள்

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.

நீர் சக்தியின் முக்கியத்துவம்

நீர் சக்தியின் முக்கியத்துவம்

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!