மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

spiritual-need

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

எத்தனையோ நிலைகளில் இன்று இருந்தாலும் இந்தச் சரீரத்தை விட்டு ஆன்மா பிரிந்து சென்று விட்டால் நம் அழகையும் அல்லது நாம் போற்றித் துதித்த தருமத்தையும் யாராவது சிந்தித்துப் பார்க்கின்றார்களா…?

நேரமாகிவிட்டது… சடலம் அழுகிவிடும்… சீக்கிரம் கொண்டு போங்கள்…! என்று தான் சொல்கின்றார்கள்.

அங்கே எரிக்கும் இடத்தில் என்ன செய்கின்றனர்…? நெருப்பிலே இட்டு எரிக்கும் பொழுது நம்முடைய நிலைகள் என்னவாக இருக்கின்றது…! என்று பார்க்கலாம்.

அதே சமயம் புதை குழியில் உடலைப் போடும்போது அதை எவ்வளவு தூரம் அசுத்தப்படுத்துகின்றோம்…? நம்மைச் சேர்ந்த சொந்தக்காரர்கள் தூக்கிப் போடுகின்றார்களா…? என்றால் இல்லை…!

யாரையாவது வைத்துத் தூக்கி போடுங்கள்…! என்று தான் போடுகின்றோம். அது அதற்கென்று இனங்களைப் பிரிக்கப்பட்டு “அவர்கள் அதற்குதான்…!” என்கின்றார்கள்.

ஏனென்றால் இவர்களை அது சாடிவிடுமாம்…!

ஆனால் இறந்தவர்களின் சொத்து தேவை… வீடு வாசல் பணம் எல்லாம் தேவ…!. ஆகவே இப்படித்தான் நமது உணர்வு வருகின்றது.

1.இந்த உடலை “நமக்குச் சொந்தம்…!” என்று ஆக்க வேண்டாம்
2.இந்த உடலில் சொந்தம் கொண்டாடி அதிலே அறியாது வளர்த்துக் கொண்ட தீய வினை சாப வினைகள நீக்கி
3.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி அதிலே நிலை கொள்ள வேண்டும்.

என்றுமே நிலையான சரீரம் நமக்கு வேண்டுமென்றால் நம் பற்று எதிலே வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் உணர்வில் நமக்குப் பற்று வேண்டும். அந்தப் பற்றினை வளர்த்துக் கொண்டால் அதன் கணக்கின் பிரகாரம் அங்கே மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்கின்றோம்.

இல்லை என்றால்… சாப அலையில் தீய அலையில் சிக்கியவர்கள்… நஞ்சு கொண்டு ஒருவரை ஒருவர் அழித்திட வேண்டும் என்ற இந்த எண்ணம் கொண்ட உணர்வுகள் வளர்ந்து… தாவர இனத்தை புசித்து வாழும் உடல் நிலை மாறி… மற்ற உயிரினங்களைக் கொன்று புசிக்கும் உடலாக வரும்.

அப்படிக் கொன்று மற்றொன்றின் உடலுக்குள் புகுந்து…
1.இப்படி பல நிலைகள் மாறி மாறிப் பல நரக லோகத்தைச் சந்தித்த பின்… அ
2.ந்தத் தண்டனைகளை எல்லாம் அனுபவித்த பின் தான்
3.மீண்டும் மனிதனாக வர முடியும்.

சாதரணமாக மனிதனின் கையில் சிக்கி அத்தகைய உயிரினங்கள் சாகாது தன் பசிக்காக ஏங்கி இருக்கும் மிருகங்களின் வாயிலே சிக்கித் தான் அங்கே அழியும்.

ஒரு புலி இதை அடித்துக் கொல்கிறதென்றால் அப்பொழுது புலியாகப் பிறக்கும் நிலை வருகின்றது. ஒரு பாம்பினத்தில் சிக்கித் தவிக்கிறது என்றால் அடுத்த பிறப்பில் அந்த உயிர் பாம்பாகதான் பிறக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களுக்கு இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

1.எமக்கு குருநாதர் அந்த விண்ணுலக ஆற்றலையும்
2.மண்ணுலக நிலையில் உணர்வின் பெருக்கமும் உணர்வின் மாற்றங்களும்
3.உணர்வுக்கொப்ப உடலின் மாற்றங்களும் உணர்வுக்கொப்ப ரூபங்களும்
4.அதனுடைய குணங்களும் அதனுடைய நிறங்களும் எவ்வாறு மாறுகிறது என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அவர் காட்டிய அந்த அரும் பெரும் சக்திகளை… உங்கள் வாழ்க்கையில் வந்த நிலைகளும்… உலக அரசின் நிலைகளும்… மதத்தின் அடிப்படையில் வந்த குணங்களும்… நீங்கள் வளர்ந்து வந்த நிலைகளும் அவைகளுடன் இணைத்தே உபதேசிக்கின்றோம் .

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அருளிய நிலைகளை
1.அந்த அண்டத்தில் இருக்கும் நிலைகளை
2.பிண்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் உணர்வோடு இணைத்து
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு மெய் வழி காணும் மெய் ஒளி பெறும் நிலைகளுக்கு உங்களை உருவாக்குவதுதான்…! என்னுடைய வேலை..!

குருநாதர் என்னை எப்படி உருவாக்கினாரோ அதைப்போல உங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் அந்த மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கச் செய்கின்றோம்.

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

headache

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவதாகத் தான் இருக்க வேண்டும்

 

வைரம் எவவறு நஞ்சின் தன்மை எதுவாக இருப்பினும் அது ஒளியாக மின்னுகின்றது. நஞ்சின் தன்மை இதற்குள் உயிர் ஊட்டுகின்றது.

ஒரு பாம்பினம் தன் நஞ்சினைப் பாய்ச்சியே மற்ற உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றது. அதன் வழியில் நஞ்சினைப் பெருக்கிய பின் அந்த நஞ்சே வைரக் கல்லாக… நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் வாழ்வில் எத்தகைய நஞ்சுகள் வந்தாலும் அதை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றியவர்கள் அருள் ஞானிகள்.

அந்த நஞ்சினை அடக்கிய அருள் ஞானியின் உணர்வைப் பெறும் நிலையாக..
1.கூர்மையாக விண்ணை நோக்கி நாம் ஏங்கி
2.அந்த ஞானிகளின் உணர்வின் சத்தைப் புத்திரனாக்கி
3.அதனுடைய நிலைகள் பெற வேண்டுமென்ற பாசத்தின் உணர்வுடன் உந்தி… அதைக் கயிறாக மாற்றி…
4.உயிருடன் ஒன்றி அந்த அருள் ஞானி உணர்வுடன் நாம் சேர்ந்தே இருந்தோம் என்றால் நல்லது.

அப்படி இல்லாமல் ஒரு வேண்டாதவரைப் பார்த்து அவருக்கு அப்படித்தான் வேண்டும்… வேண்டும்…! என்று அவர் படும் வேதனையைக் கண்டு ரசித்தால்… இந்தப் பாசம் என்ன செய்யும்…?

இது அப்படியே கயிறாக மாறும். அவர் எத்தனை வேதனைப்படுகின்றாரோ அதெலெல்லாம் இங்கே சிருஷ்டியாகத் தொடங்கும். இது உங்களுக்கு தெரியாது… யாருக்கும் தெரியாது.

பாருங்கள்…. நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன்.. அயோக்கியத்தனம் செய்கின்றான் என்பார்கள். ஆக…
1.தான் சொல்வதைச் சொல்லி விட்டு “அவன் அயோக்கியத்தனம் செய்கிறான்..
2.இப்படி இருந்தால் என்னங்க செய்வது…?” என்று அடுத்தவரிடம் நியாயத்தைப் பேசுவார்கள்.

இப்படி இங்கே அந்த உணர்வுகளை நுகர்ந்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்.

எப்படிப் பாம்பினம் தனக்குள் விஷத் தன்மையைக் கூட்டிக் கொள்கின்றதோ அதைப் போல் இந்த அணுக்கள் உடலில் விளைந்து அதன் துணை கொண்டு அடுத்து பாம்பாக நிச்சயம் பிறக்கச் செய்துவிடும் உயிர்.

ஆனால் இதனை அடக்கிய அருள் ஞானிகள் உணர்வின் மீது நாம் இச்சைப்பட்டு அதன் உணர்வின் தன்மையை நாமெடுத்தால் நஞ்சை அடக்கிடும் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும்.

ஏனென்றால் இந்த மனிதனின் வாழ்க்கையில் தண்டனைக்குரியது எது…? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1.ஒருத்தர் மேல் வெறுப்பாகும் பொழுது அது எந்த அளவு கோலுக்கு அதிகரிக்கின்றதோ அவர் படும் துயரமெல்லாம் தனக்குள் வரும்.
2.பாசத்தால் அன்பால் பரிவால் இப்படி வேதனைப்படுகின்றானே…” என்று அடிக்கடி எண்ணினால் அதன் கணக்கின் பிரகாரம் அதுவே தண்டனையாகக் கிடைக்கும்.
3.எடுத்துக் கொண்ட அந்த நஞ்சான உணர்வு கொண்டு அடுத்த உடலைப் பெறுவோம்.

புலி இரக்கமற்று மற்றதை அரக்கத்தனமாகக் கொன்று விழுங்குகின்றது. இதைப் போல தன் வலுவின் தன்மை கொண்டு மற்றவரைப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்பட்டால் அதன் கணக்கு அதிகமாகக் கூடி விட்டால் அடுத்து புலியாகப் பிறப்பாய்…! சித்திர புத்திரன் கணக்குப் போட்டு இவ்வாறு காண்பிக்கின்றான்…! என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து… அதிலே எந்தப் பொருளை அதிகமாகக் கூட்டிச் சமைக்கின்றோமோ… அதனின் சுவையாகத் தான் மாறும். அதைப் போன்று தான் நம் உடலிலும் நிகழ்கின்றது.

மதத்தின் அடிப்படையில் காட்டிய உணர்வை எடுக்கப்படும் பொழுது நல்ல நேரம்… கெட்ட நேரம்..! என்று. எழுதி வைத்ததைக் கேட்டறியப்படும்போது “உனக்கு இப்பொழுது “ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது…!” என்றால் அதை மனதிலே பதிய வைத்துக் கொள்கின்றோம்.

அதன்படி எண்ணி… அதையே சிருஷ்டித்து… காலங்களையும் நேரங்களையும் நமக்குள் சிருஷ்டித்துக் கொள்கின்றோம். கெட்ட நேரம் என்று பதிவாக்கி… அந்தக் கெட்டதையே உருவாக்கி விடுகின்றோம். (கேட்டால் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… என்று சொல்லி அதையே ஏற்றுக் கோள்வோம்)

இப்படி அவன் கொடுத்த காலத்தை நமக்குள் சிருஷ்டிப்பது போல்
1.தீமையை அகற்றிடும் உணர்வை… தீமைகளை அகற்றிய மகரிஷிகளின் உணர்வை
2.நமக்குள் இணைத்திடும் பழக்கம் வந்து விட்டால்
3.எந்த நேரமானாலும்… தீமையில்லாத உலகை நாம் சிருஷ்டித்து விடலாம்.

ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அது நமக்குள் வளராது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று விண்ணை நோக்கி ஏகி… அதன் மேல் பாசத்தைச் செலுத்தி… அதையே வளர்த்திடல் வேண்டும்….!

நமது எல்லை எது…?

eternal-light-destinations 1

நமது எல்லை எது…?

 

மதத்தின் அடிப்படையில் காட்டப்பட்ட சாஸ்திரங்களையும் கோட்பாடுகளையும் அதிலே வடித்துக் கொண்ட வேதங்களையும் மீண்டும் மீண்டும்… படித்துப் படித்துப் படித்து… அதனை உருவாக்கிவிட்டால் அந்த மதத்தின் பிடிப்பிலிருந்து எவரும் விலகுவதில்லை.

மதத்தின் பிடிப்பிலே போகும்போது அதிலே நஞ்சின் தன்மை வரப்படும்போதுதான் அந்த மதத்தை விட்டு விட்டு அடுத்த மதத்திற்குத் தாவி… “எனக்கு இந்தக் கடவுள் செய்வாரா…?” என்ற நிலைகளில் பிரிந்து செல்லும் நிலைகள் வருகின்றது.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு வேத சாஸ்திரங்கள் உண்டு. அந்த வேதத்தின் தன்மையைத் தன் மதத்தின் அடிப்படையில் அவர்கள் கொடுக்கப்பட்டு அந்த மதத்திற்கு என்று அரசனாக்கி அந்த அரசனின் வழியிலேயே அந்தந்த நாட்டின் தன்மைகள் உள்ளது.

அதிலே விளைந்த உணார்வின் தன்மைகள் தான் இன்று நமக்குள்ளும் விளையப்பட்டு
1.அவர்கள் செருகிய வித்தின் உணர்வு கொண்டு
2.நாம் அதிலிருந்து மீள முடியாத உணர்வுகளாக இன்றும் இயக்கிக் கொண்டேயுள்ளோம்.

ஒவ்வொரு மதத்திற்கும் மந்திர ஒலிகள் உண்டு. அந்த மந்திர ஒலிகளின் தன்மை பெருகப்பட்ட உணர்வு கொண்டுதான் அதனதன் மதத்தைப் இறுக்கிப் பிடித்து… மற்ற மதத்தைப் பழித்துப் பேசுகின்றது.

ஒரு தாவர இனம் தன் மணத்தின் தன்மை கொண்டு மற்றதைத் தனக்குள் வராதபடி… “தன் சத்தை மட்டும்” காற்றிலிருந்து கவர்ந்து கொள்கின்றது. தன் உணர்வால் கவர்ந்து கொள்கின்றது.

இதைப் போன்று தான் மதத்தால் கொடுக்கப்பட்ட உணர்வுகள் அனைத்தையும் தன் எண்ணத்தால் கவர்ந்து கொண்டாலும் அதிலே ஏற்பட்ட மணம் தான் அது…!
1.மற்றவர்கள் எதைச் சொன்னாலும் அந்த மணம் தடுக்கதான் செய்யும்.
2.மற்ற மதங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது.
3.மற்ற இனங்களிலும் இதே போன்றுதான்…!

இனத்தின் தன்மை மந்திரத்தால் உருவாக்கிப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை மணத்தால் அதிகமாகின்றது. உணர்வின் தன்மை கொண்டு அது உணவாக எடுத்துக் கொண்டு விளைகின்றது.

இதைப் போன்றுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி
1.மீண்டும் மீண்டும் அந்த விண்வெளி சென்ற அந்த உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பருகச் செய்து
2.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலை
3.உங்களுக்குள் உரமாக ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.
4.வீணான பேச்சு இல்லை…. விரயம் ஆக்கும் தன்மை இல்லை…!

அருள் ஞானிகள் அவர்கள் எவ்வாறு கண்டுணர்ந்தார்களோ… அந்த மகரிஷியின் உணர்வின் சக்திகளை உங்களுக்குள் இணைத்து… இணைத்து… இணைத்து… இந்த இணைப்பின் வலு கொண்டு… உங்களுக்குள் உரமாக்கி விட்டால்… இந்த எண்ணத்தால் நீங்கள் வளரும் பருவம் பெறுகின்றீர்கள்.

அது வந்து விட்டால்…
1.உங்கள் நினைவின் ஆற்றல் மகரிஷிகள் வாழும் இடத்திற்கே வருகின்றது.
2.அந்தப் பேரானந்தச் பெரும் செல்வத்தை உங்களுக்குள் வளர்த்திட இது உதவும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு விதமாக இருப்பினும் பதிவான மகரிஷிகளின் உணர்வை உந்தச் செய்து அந்த மகரிஷிகளின் சக்திகளை ஏங்கிப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

கடந்த கால வாழ்க்கையில் வந்த தீமைகளையும்… மதத்தால் ஏற்பட்ட உணர்வுகளையும் மாற்றி… நம்மைக் காத்திடும் உணர்வாக மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுள் இணைக்க வேண்டும்.. அந்த அருள் உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்.

அதற்குத்தான் யாம் தொடர்ந்து… தொடந்து சொல்வது மகரிஷிகள் காட்டிய உணர்வை இணைத்துக் கொண்ட பின் உங்களுக்குள் சிந்திக்கும் திறன் கிடைக்கின்றது.

அன்றைய அருள் ஞானிகள் மதத்தால் வந்த தீமைகளை எப்படிப் பிளந்தார்களோ… தீமைகளைப் பிளந்திடும் உணர்வை அவர்களுக்குள் எப்படி விளைய வைத்தாரோ… அதை எல்லாம் நுகரும் சக்தியும் கவர்ந்திடும் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் இதை நம் நினைவில் கொண்டு நமது எல்லை எது…? இன்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு ஒளியான நிலைகள் கொண்டு எந்த எல்லையாக அடைந்தனரோ…
2.ஒளீயான குழுமைக் கூட்டமாக இன்று இயங்கிக் கொண்டிருக்கின்றனரோ…
3.அதைத்தான் நமது எல்லையாக வைக்க வேண்டும்…!

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும்… தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

Arul Gnanigal

விஞ்ஞானத்தின் சக்தி மிக மிக வீரியம் கொண்டதாக… நுண்ணிய அறிவாக இருந்தாலும் தனக்குள் வரும் தீமைகளைப் பிளக்க முடியவில்லை…!

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் 2000 சூரியக் குடும்பங்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கின்றேன். அதை எல்லாம் இலேசில் சொல்லகின்றேன் (ஞானகுரு) என்று எண்ண வேண்டாம். என்னை அங்கேயே அழைத்துச் சென்றார் குருநாதர்…!

அந்த அண்டங்களிலே எவ்வாறு இயக்குகின்றது….? அங்கேல்லாம் எடுத்துக் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சி எப்படி இருக்கின்றது…? அந்த 2000 சூரியக் குடும்பங்களில் உள்ள பூமிகளில் மனிதர்கள் முடி இருப்போரும் உண்டு… கூழையாக இருப்போரும் உண்டு… நம் பூமியைக் காட்டிலும் மிகவும் விஞ்ஞான அறிவில் உயர்ந்தோரும் உண்டு.

விஞ்ஞான அறிவின் நுண்ணிய அலைகள் கொண்டு
1.இங்கே நாம் எப்படி எலக்ட்ரானிக் நிலைகளைச் செயல்படுத்துகின்றோமோ இயந்திரங்களை மாற்றுகின்றோமோ…
2.மந்திர ஒலி கொண்டு மனிதனை உருக்குலையச் செய்து ஆவியாக மாறுகின்றானோ…. கூடு விட்டு கூடு பாய்கின்றானோ… இதைப்போன்று
3.நம் பூமியில் இருப்பது போல 2000 சூரியக் குடும்பங்களில் நான்கு சூரிய குடும்பங்களில் இது உண்டு.

அவர்கள் தன் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து… உடலையே ஒளியாக மாற்றி… “எங்கு வேண்டுமானாலும் செல்லும் சக்தியாக” மந்திர ஒலியால் உருவாக்கிக் கொண்டவர்கள்.

நம்மைக் காட்டிலும் அங்கே மந்திர ஒலிகளைக் கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி மற்ற இடங்களுக்கு ஊடுருவிச் செயல்படும் தன்மைகள் உண்டு.

இது எல்லாம் குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள்…!

ஏனென்றால் இதைப் பற்றி முந்தி சாமி (ஞானகுரு) சொல்லவில்லையே…! என்று எண்ணலாம். எதை எதைச் சொல்வது…? எதை மனதில் பதிய வைப்பது…? என்று அந்தந்தக் காலம் வரும்போது தான் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

எலக்ட்ரானிக்….! என்று ஒரு பொருளின் தன்மையை ரூபமாக மாற்றி இன்று எப்படிக் காட்டுகின்றாரோ இதைப் போலத்தான் மற்ற சூரியக் குடும்பத்திலிருந்தும் அவர்கள் விண் விசையின் தன்மையை எலக்ட்ரானிக்காகத் தனக்குள் மாற்றி
1.நம் பூமிக்கும் வந்து செல்கின்றார்கள் (ALIENS)
2.பறக்கும் தட்டு… அந்தத் தட்டு…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆக… எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். தன் உந்து விசையின் தன்மையால் இழுக்கின்றார்கள்… குவிக்கின்றார்கள். தன்னுடைய நிலையை “அடுத்தவர்கள் வருவதற்கு முன் மறைந்து விடுவார்கள்…!”

இங்கே நம் பூமியில் இவர்கள் செய்யும் (எலக்ட்ரானிக்) விஞ்ஞான அறிவைப் போல அவர்கள் மேன்மை கொண்டவர்கள். நம் பூமியில் வந்து செல்கின்றார்கள் அந்த உணர்வலைகளை நம் பூமி கவர்கின்றது.

1.உணர்வின் தன்மை எலக்ட்ரானிக்கில் இணைத்த பின் அலைகளாக மாற்றி
2.மீண்டும் எங்கேயும் ஊடுருவி… இந்த உணர்வின் தன்மை எங்கு வேண்டுமானாலும் செலுத்தப்பட்டு
3.எலக்ட்ரானிக்கின் கருவி கொண்ட மற்ற இயந்திரங்களையோ சாதனங்களையோ இயக்கி விட்டு
4.இனம் புரியாத நிலைகள் செல்லும் நிலைகளும் உண்டு.

இந்த எலக்ட்ரானிக் நிலைகளை அலைகளாக பிரிக்கப்படும் நிலைகள் நம் பூமியிலும் இது நடக்கின்றது. நம் பூமியில் லேசர் (LASER) கதிரியக்கப் பொறிகளைக் கொண்டு மற்றொரு நாட்டிற்குள் ஊடுருவச் செய்கின்றார்கள்.
1.அந்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற கதிரியக்கங்களைப் பாய்ச்சியபின்
2.அது மின்னணுவாக அதனுடைய அதிர்வின் நிலைகளைக் கொண்டு
3.அந்த நாட்டில் இருக்கக்கூடிய நுண்ணிய அறிவுகளையும்
4.இயந்திரத்தின் மூலமாக (அவர்களுக்குத் தெரியாமல்) காண்கின்றார்.

மிக மிகச் சிறிய நிலைகளை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும்
1.அதற்கென்று ஒரு சாதனத்தை… ஊசி முனை (PROBE) என்ற அளவுகோலை வைத்து
2.விமானத்தின் மூலம் விண்ணிலே பறந்து கொண்டே பார்க்கும் நிலைகளுக்கு
3.விஞ்ஞான அறிவு நம் நாட்டிலேயே வந்துவிட்டது.

காரணம்… இதனுடைய நுண்ணிய அறிவினைக் காட்டப்பட்டு அதனைக் கொண்டு வளர்க்கின்றார்கள். இப்போது சாதாரண கருவிகளின் உணர்வின் தன்மையைப் பிளக்கப்பட்டு… “கதிரியக்கத்தால் அ8லைகளாகப் பிரிக்கப்பட்டு…” அதனுடைய அளவுகோலை எல்லாம் அளந்து அறிகின்றார்கள்.

ஒரு அலையின் தன்மை எந்த அளவு இருக்கின்றதோ… அதனின் நுண்ணிய உணர்வின் அதிர்வுகளைக் கண்டுணர்ந்து… அதனின் செயலாக்கங்கள் இன்னது தான்…! என்று அவன் காணுகின்றான்.

அதைப் போலத்தான் பூமிக்குள்ளும் கதிரியக்கச் சக்திகளை ஊடுருவச் செய்து அதனை நுண்ணிய அளவுகோல் கொண்டு அளந்தறிந்து… பூமிக்குள் இன்னென்ன பாகங்களில் இன்னென்ன உலோகங்கள்… நீர் வளங்கள்… எண்ணெய் வகைகள்… மற்ற பொருள்கள் அங்கே விளைகின்றது..! என்ற கண்டுபிடிக்கும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் வந்து விட்டது.

ஆனால் மெய் ஞானிகளோ…
1.அவர்கள் கண்ணின் நினைவை எதன் பக்கம் பாய்ச்சுகின்றனரோ… அதற்குள் ஊடுருவி..
2.அதன் உணர்வின் தன்மையை அறிந்து… தனக்குள் அதை நுகர்ந்து
3.தான் யார்…? என்று தன்னை அறிந்து கொண்டவர்கள்…!

விண்ணுலக ஆற்றலையும் பேரண்ட உணர்வுகளையும் தனக்குள் அவர்கள் கவர்ந்து
1.மனிதனுக்குள் வந்த தீமைகளைப் பிளந்து…
2.தீமைகளைப் பிளந்த உணர்வுகளைக் கதிரியக்கங்களாக மாற்றிக் கொண்டார்கள்
3.தன் உணர்வின் செயல் அனைத்தையும் அவ்வாறு மாற்றிக் கொண்டார்கள்.

தன் எண்ணங்கள் கொண்டு எல்லாவற்றிலும் ஊடுருவி ஒவ்வொன்றையும் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் செயலாக்கங்களைத் தனக்குள் பிளந்திடும் சக்தியாக… அணுக்களாக வளர்ச்சி செய்யப்பட்டு தன் உடலில் வந்த தீமையான நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கினார்கள் அந்த மெய் ஞானிகள்.

1.இருளைப் போக்கும் உணர்வைத் தனக்குள் விளைய வைத்தான்.
2.உயிருடன் ஒன்றினான்… துருவ நட்சத்திரமானான்…
3.அவனைப் பின்பற்றி சென்றவர்கள் அனைத்தும் தீமையை விலக்கிடும் சக்தி பெற்று
4.அவன் ஈர்ப்பிலே சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்

விஞ்ஞானிகளோ அணுவைப் பிளந்து… அணுவின் தன்மை கொண்டு கதிரியக்கங்களாக மாற்றி… அந்தக் கதிரியக்கப் பொறிகளை ஒன்றுடன் பாய்ச்சப்படும்போது ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து (லேசராக)
1.அதனுடைய இயக்கம் எவ்வாறு…?
2.அதனுடன் கலந்த நிலைகள் எது..? என்று
3.தனக்குள் விரிவுப்படுத்தி அறிகின்றார்கள்

இதைப் பற்றிய விஞ்ஞான அறிவு கொண்டோர் யார் இருந்தாலும் சரி.. நான் (ஞானகுரு) சொல்லும் பொறிகளின் நிலைகளைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பொறியின் அளவுகோலைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

ஏனென்றால்… நம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) விஞ்ஞானிகள் எவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்…? என்ற நிலைகளை உணர்த்தினார்.

அதனுடன் தொடர்பு கொண்டு விண் அணுக்களின் நிலைகளையும் அதே சமயத்தில் கதிரியக்கப் பொறிகளின் நிலைகளையும்…
1.உணர்வுகள் எதனுடன் ஊடுருவுகின்றது…?
2.அது எவ்வாறு பிளக்கின்றது…?
3.பிளந்த நிலைகளைள எவ்வாறு அதிர்வுகளால் அறிகின்றான்..?
4.அதை இணைத்துக் கொண்டபின் எவ்வாறு இயக்குகின்றான்…? என்ற நிலையை எல்லாம் தெளிவாக எடுத்துரைத்தார் குருநாதர்.

இவ்வளவையும் படிக்காதவன் நான் சொல்லி விட்டால்.. அப்புறம் படித்தவர்கள் விஷயத்தை நிறைய எடுத்துக் கொள்ளுவார்கள். எடுத்து அவருடைய ஆராய்ச்சிக்குத் தான் கொண்டு போவார்கள். விஞ்ஞான அறிவுக்குத் தான் பயன்படும்… தீமைகளைப் பிளக்க முடியாது…!

1.ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வின் அதிர்வுகளை நமக்குள் செலுத்தினால்
2.இந்த உணர்வின் எண்ணத்தோடு பாய்ச்சப்படும்போது எத்தகைய தீமைகளையும் பிளக்க முடியும்.
3.விஞ்ஞானத்தால் வரும் கடுமையான விஷங்களையும் ஒடுக்க முடியும்
4.மெய் ஞானிகளுடன் ஒன்றி என்றுமே ஏகாந்தமாக வாழ முடியும்.

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?

Magic stone - destination

நம்மிடம் செல்வம் இருக்கின்றது…! என்று ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றதா…?

 

தொழில் செய்கின்றோம்… செல்வத்தைச் சம்பாரிக்கின்றோம். செல்வம் வந்தால் மகிழ்ச்சி பெற முடியும்…! என்கின்றோம். ஆனால் அந்த செல்வத்தின் தன்மை வளர்ந்ந்து வந்தாலும் கடைசியில் என்ன ஆகின்றது…?

என் பையன் இப்படிச் செய்கின்றானே… நம் சொத்தைக் காப்பானா…? எல்லோருக்கும் தாராளமாகக் கொடுத்து உதவி செய்தேன்… வாங்கிச் சென்றவர்கள் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று இப்படி எத்தனையோ எண்ணங்களை எண்ணி அதனால் வேதனைப்படுகின்றோம்.

1.இவ்வாறு வேதனைப்படும் பொழுது அது நோயாக வருகின்றது.
2.நோயாக வரும்போது செல்வம் அதிகமாக இருப்பினும் வேதனைதான் அதிகமாகின்றது.

வேதனையோடு நாம் இருக்கும் நேரத்தில் நாம் எண்ணியபடி நம் பிள்ளையோ… மனைவியோ… மக்களோ… அல்லது உற்றார் உறவினரோ.. எண்ணவில்லை என்றால் அவர்களைப் பற்றிய வேதனையைத்தான் நாம் அதிகமாக எண்ணுகின்றோம்.
1.செல்வத்தைச் சம்பாதித்தோம்…
2.நாம் எந்த மகிழ்ச்சியைக் கொண்டோம்…?

செல்வத்தைச் சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று வளர்ந்து வந்த நிலையில் மற்றவருக்கு உதவி செய்தாலும்… அந்த உதவியால் அவர்கள் நல்லவராக ஆகவில்லை என்றால் அவர்களைக் கண்டு நாம் வேதனையைத்தான் படுகின்றோம்.

இப்படித்தான் செல்வம் ஒரு பக்கம் இருப்பினும்
1.செல்வத்தால் வேதனை என்ற நிலை அதிகரித்துக் கடைசியில்
2.பூமியின் பற்றை அதிகமாக வளர்த்து கொள்கின்றோம்.

அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை… தெளிந்த குணங்களை… நாளுக்கு நாள் மறையச் செய்கின்றது. இதைப் போன்று வரும் நிலைகளில் இருந்து நாம் எப்படி மீளுவது…? எந்த வகையில் மீளுவது…?

நம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாது பல பல தீய வினைகள் நமக்குள் சேர்ந்திருந்தாலும் அந்தத் தீய வினைகளைத் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நாம் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பினும்
1.வேதனைப்படுவோரைப் பார்க்காமல் இருக்க முடியாது…
2.வேதனைப்படுவோரின் சொல்லை கேட்காமல் இருக்க முடியாது.
3.ஒருவர் குற்றம் செய்கின்றார் என்றால் குற்றம் செய்வதைப் பார்க்காமல் இருக்க முடியாது.

குற்றத்தைப் பார்த்தாலும் குற்றத்தைச் செய்தபின் அதிலே நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்தால் தெரியும்.
1.அறிவால் அதை எல்லாம் அறிகின்றோம்…
2.அறிந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.

ஆகவே நாம் எத்தகைய நிலைகள் பட்டாலும்… பார்த்தாலும்,,, அறியும் உணர்வுகள் கொண்டு அறிந்து கொண்டாலும்…
1.எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் அறிவு நமக்கு இருந்தாலும் (கார்த்திகேயா)
2.தீமை என்று அறிந்ததை நீக்கிடும் “அந்த அறிவு வேண்டும்…” (இது தான் மிக முக்கியமானது..!)

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்

rameswaram ramalingam

“மனதைக் குவித்தான்…” என்பதை மணலைக் குவித்தான் என்று திரிபு செய்து விட்டார்கள்

 

இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதனும் வேதனையும் வெறுப்பையும் அதிகமாக வெளிப்படுத்துகின்றான். அதே சமயத்தில் தொழிற்சாலைகளிலும் மற்ற இடங்களிலிருந்தும் விஷப் புகைகளையும் அதிக அளவில் ஒவ்வொரு நாளும் காற்று மண்டலத்திலே ஊட்டுகின்றனர்.

1.இவை அனைத்தும் மேகங்களில் கலந்து
2.விஷத் தன்மையான மழை நீராகப் பெய்து கொண்டுள்ளது.

ஆக… மனிதன் விட்ட வேதனை உணர்வுகள் மேகங்களில் கலந்து மழையாகப் பெய்த பின் அந்த நீருடன் கலந்த விஷமான உணர்வுகள் பயிரினங்களில் படப்படும் பொழுது
1.மழைக் காலங்களில் எல்லாம் விஷம் கொண்ட பூச்சிகளாகவும் புழுக்களாகவும் எண்ணிலடங்காத அளவில் உருவாகி
2.நாம் பயிரிட்ட செடி கொடிகளைக் கொன்று தின்னும் நிலைகள் வளர்கின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நாம் ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து “நம் மூச்சலைகள் மூலம்” அதை மேகங்களிலே கலக்கச் செய்ய வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் கலந்த மேகங்கள் மழை நீராகப் பொழிந்து பூமியில் படரப்படும் பொழுது
1.அது நல்ல அணுக்களாக உருவாகின்றது
2.அதன் மலங்கள் தாவரங்களில் சேர்க்கப்படும் பொழுது அருள் சக்தியாக வளர இது உதவும்.

ஏனென்றால் நீங்கள் விடும் மூச்சலைகள் வீணாகாது. மழை மேகங்களில் கலந்து மழை நீருடன் கலக்கப்படும் பொழுது அதிலிருந்து இந்த நாட்டில் வரும் தீமையின் உணர்வை மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஆகவே நாம் அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். பேரானந்தம் பெறுவோம்… பேரின்பத்தைப் பெறுவோம்… அனைவரையும் பேரானந்தம் பெறச் செய்வோம்…!

1.நமக்குள் இங்கே நம் மனதை ஒன்றாக்குவோம்.
2.பேரன்பைப் பெருக்குவோம் என்ற இந்த உணர்வுடன் இதை நாம் செயல்படுத்துவோம்.

இதை அன்றே வான்மீகி காட்டியுள்ளார்..! அவர் நமக்குக் காட்டிய இராமாயணம் என்பது சாதாரண காவியம் அல்ல. இராமன் மனதைக் குவித்து இராமலிங்கமாக்கிப் பூஜித்தான் என்று அவர் காட்டியதை
1.மனதை… என்று சொன்னதை “மணலை..” என்று மாற்றிவிட்டார்கள்.
2.அன்றைய வாழ்க்கையின் எழுத்து வடிவுகள் வேறு
3.அதன் பின் வந்தோர் தவறின் பாதையில் நம்மை அழைத்துச் சென்று விட்டார்கள்.

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் அதைத் தெளிவாக்கினார். ஆகவே மனதை ஒன்றாக்கினால் பேரன்பு அங்கே பெருகும்.

நம் வாழ்க்கையில்..
1.எல்லோரது நிலையும் மனதை ஒன்றாக்கப்படும் பொழுது பேரின்பப் பெருவாழ்வாக
2.என்றுமே பிறவி இல்லாத நிலையாக நாம் அடைய முடிகின்றது.

உலகில் இனி வரும் தீமைகளிலிருந்து விடுபட இதைத் தவிர வேறு வழி இல்லை..!

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”

GNANAGURU DETINATION

இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நிமிடமும் இருப்பதே “உண்மையான தியானம்…!”

 

நோயால் வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் உதவி செய்கிறோம். ஆனால் அந்த வேதனை என்பது வலிமை பெற்றது. நம் உடலுக்குள் சென்று விட்டால் அதே நோயை உருவாக்கும் தன்மை வந்துவிடுகிறது.

உடனே நாம் அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு நம்முடைய எண்ணம்
1,துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி வேதனைப்பட்டவர் பெறவேண்டும்
2.அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெறவேண்டும் என்று
3.இந்த உணர்வை உந்தித் தள்ள வேண்டும்.

ஒரு இரண்டு பேர் ரோட்டிலே சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்களை நாம் பார்க்கின்றோம்.

அடப்பாவிகளா..! இப்படிச் சண்டை போடுகிறார்களே…! என்று எண்ணினோம் என்றால் அந்த உணர்வு நமக்குள் வந்து நமக்குள்ளும் சண்டை போட ஆரம்பித்துவிடும். நம்மை அறியாமலே அந்த அணுக்கள் போர் முறை செய்யும்.

அப்பொழுது அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஒரு இரண்டு நிமிடம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி எண்ணி நம் உடலுக்குள் அந்தச் சக்திகள் போன பிற்பாடு நம் ஆன்மாவை விட்டே அந்த உணர்வுகளைத் தள்ளிவிடும். அந்தச் சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குப் போகின்றது. நம் ஆன்மா தூய்மை ஆகிறது,

அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

சண்டை இட்டவர்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெறவேண்டும் என்று சொன்னால்
1.இந்த நல்ல உணர்வை நாம் நுகர்ந்து
2.புதிதாக அந்த நல்ல அணுவை உருவாக்குகிறோம் என்று அர்த்தம்.
3.அவர்களின் தீமை உணர்வுகளை உருவாக்குவதில்லை.

இப்படி நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

இன்று நான் அரை மணி நேரம் தியானம் செய்தேன்… ஒரு மணி நேரம் உட்கார்ந்து தியானம் செய்தேன்… குண்டலினி சக்தியை ஏற்றினேன் என்று “எல்லாம் செய்தேன்…!” என்று சொன்னாலும் இந்த உணர்வுகளை எடுத்த பிற்பாடு
1.அடுத்தாற்போல் வேதனைப்படுவோரைப் பார்த்த பின்னாடி
2.அதை வேகமாக நம் உடல் “இழுக்கும்…” நோய் நிச்சயமாக வரும்…!

இதைப் போன்ற நிலைகளை மாற்ற “அவ்வப்பொழுது…” நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டி நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் “வாழ்க்கையே தியானம்…” என்பது.

தியானம் செய்… என்ற பின் “நான் தியானம் செய்கிறேன்..” என்று சொல்கிறார்கள். எல்லாம் தியானம் செய்து கொண்டு தான் இருப்போம். ஆனால் ஒருவன் என்னைத் திட்டினான் என்று சொன்னால் அந்த அருள் ஒளியைப் பெறுவதற்குப் பதில் “திட்டினான்..திட்டினான்…திட்டினான்…” என்று இந்தத் தியானத்தைச் செய்ய ஆரம்பிக்கின்றோம்.

நானும் தியானம் தான் இருக்கிறேன்.. எனக்கு ஒன்றும் சரியாக மாட்டேன் என்கிறது…! என்று தியானம் இருப்பவர்களிலேயும் சிலர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
1.தன்னை அறியாது இயக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாத நிலை ஆகிறது.

ஏனென்றல் நாம் ஒவ்வொரு நிமிடமும்…
1,இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற
2.அந்தச் சிந்தனையுடன் நாம் இருக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது என்ன…?

கடலில் படகில் செல்கிறோம் ஒரு எல்லையை அடைவதற்கு. அதிலே போகும் பொழுது எத்தனையோ அலைகள் மோதுகிறது. நாம் எல்லையைக் குறியாக வைத்துத்தான் அங்கே போகிறோம். அந்தத் துடுப்பைச் சீராகப் போட்டால் அங்கே செல்லலாம்.

இதைப் போல் தான் நம் வாழ்க்கையிலே
பாச அலை
அன்பு அலை
வெறுப்பு அலை
வேதனை அலை
சலிப்பு அலை
சங்கட அலை
கோப அலை
குரோத அலைகளில் எல்லாம் நாம் மூழ்கிக் கொண்டேயிருக்கின்றோம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்த அருள் ஒளி என்ற துடுப்பை எடுத்து அந்த அலைகளை எல்லாம் பிளந்து இந்த வாழ்க்கை என்ற பயணத்தைச் சீராகச் செலுத்திடல் வேண்டும். நம்முடைய எல்லை “அந்தத் துருவ நட்சத்திரம் தான்…!”

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் வளர வேண்டும் என்றால் அடுத்து நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும். இது வேகா நிலை.

இல்லை என்றால் சாகாக்கலையாக நாம் மீண்டும் வந்து விடுகின்றோம். நாம் இப்படி இருந்தேன் இப்படிச் செய்தேன் என்று இங்கே எண்ணிக் கொண்டிருந்தால் சாகாக்கலையாக வந்துவிடுகின்றது மறுபடியும் உடலின் தன்மைக்கே வந்துவிடுகின்றோம்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. இதைப் போல் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் “நாம் என்றும் வேகுவதில்லை…”

இந்தச் சூரியனே அழிந்தாலும் இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது. அந்த நிலையை மனிதனாக ஆன பின் நாம் அனைவரும் பெறுதல் வேண்டும்.

அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று தான் திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

இருந்தாலும்…
1.இது என்னடா…?
2.சாமி அப்பொழுதும் சொன்னார்.. இப்பொழுதும் சொல்கிறார்…! என்று இதை விட்டுவிட்டீர்கள் என்றால்
3.இந்தக் கணக்கு உங்களுக்குத் தப்பாகப் போகும்.

இந்த உணர்வை நினைவைக் கூட்டி உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது தான் அதை நீங்கள் சுவாசிக்கின்றீர்கள்… உங்களுக்குள் அது கருவாகின்றது.

கோழி என்ன செய்கிறது..? அது சும்மா கேறிக் கொண்டே இருக்கும். எந்தச் சேவலோடு சேர்ந்ததோ அதை எண்ணிக் கேறியது என்றால் அதே மாதிரி நிறத்துடன் குஞ்சுகள் வரும்.

இதே மாதிரித்தான் என்னைத் திட்டினான்… இப்படிச் செய்தான்…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் அதே உணர்வு நமக்குள் கருவாகின்றது.

ஆனால் அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வைத் திரும்பத் திரும்ப எடுத்தால் இது கருவாகும். வாழ்க்கையில் வரும் அந்த இருளை அகற்றும்.

அந்தச் சக்தி பெறவேண்டும் என்பது தான் “உண்மயான தியானம்…!”

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

gate of heaven

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

Divine Light body

மனிதன் அடைய வேண்டிய எல்லையை உணர்த்திடும் “ஞானிகளால் காட்டப்பட்ட விளையாட்டு…!”

 

நல்லதை எண்ணினால் நல்லது நடக்கும். ஆனால் தீமையின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் அந்த நன்மைகள் வராது.
1.ஆகவே சொர்க்கவாசலை விட்டு நரக வாசலுக்கே சென்றுவிடும்.
2.நரகலோகத்திற்குச் சென்றால் மீண்டும் மனிதனாகப் பிறக்க எத்தனை காலமாகுமோ …? என்பதைத்தான்
3.ஒரு பரமபதப் படத்தை வைத்துக் காட்டுகின்றனர் ஞானிகள்
4.அதாவது சொர்க்கவாசல் என்று பரமபதத்தைக் காட்டி விளையாட்டு ரூபமாக நமக்கு உணர்த்துகின்றனர் ஞானிகள்.

பன்றி நாய் நரி நண்டு தேள் இவைகள் எல்லாம் அந்தப் படத்தில் கீழே காட்டப்பட்டிருக்கும். தாயங்களை உருட்டுவார்கள். அப்படி உருட்டும் பொழுது இதன் வழி கொண்டு சென்றால் அடுத்து ஒரு சிறிய ஏணி இருக்கும்… பெரிய ஏணியும் இருக்கும்.

சந்தர்ப்பத்தால் சிறிய ஏணியில் ஏறியபின் அடுத்து பல கட்டங்களைத் தாண்டிச் செல்கிறது. அங்கே சென்ற பின் அடுத்து அதன் அருகில்… “முகப்பிலேயே ஒரு விஷப் பாம்பு இருக்கின்றது…!”

தாயக்கட்டையை உருட்டினால் தாயம் விழுந்தால் கீழே வந்து விடுகின்றது. நம் வாழ்க்கையில் எதனின் உணர்வின் தன்மையைப் பெறுகின்றோமோ அது நம்மைக் கீழே கொண்டு வந்துவிடுகின்றது.

அதாவது ஒரு மனிதன் வேதனைப்படும் நிலைகளில் செயல்படுகின்றான் என்றால் அதை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால்
1.நம் நல்ல எண்ணங்களை இயக்கிக் கொண்டிருக்கும் விஷம்
2.வேகமாகக் கொண்டு வந்து நம்மைக் கீழே இறக்கிவிடும் என்பதைத்தான்
3.அங்கே உதாரணமாகக் காட்டுகின்றார்கள் பாம்பைப் போட்டு..!

சொர்க்க வாசல் என்று சொல்லும் வைகுண்ட ஏகாதசி அன்று அந்த ஏகாந்த நிலை பெறச் செய்யும் அருள் ஞானத்தை நாம் பெற
1.இந்த வாழ்க்கையில் எத்தனை தடைகள் வருகின்றது…?
2.மீண்டும் மீண்டும் நாம் எப்படித் தேய்பிறையாகின்றோம்…?
3.அப்படி வரும் தடைகளிலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்..?

இதைத் தான் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள் ஞானிகள்…!

அதை எல்லாம் தாண்டி அடுத்து மேலே வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி வந்துவிடுகிறது. “பரமபதம் ஏறப் போகின்றோம்…” என்றாலும் கடைசியில் அங்கே ஒரு பெரிய பாம்பு இருக்கும்.

1.மேலே வந்த பின் நான் வந்துவிட்டேன் என்று எண்ணுவார்கள்…!
2.ஒரு தாயம் முதலிலே விழுந்து விட்டால் நேரடியாகக் கீழே கொண்டு போகும்.
3.அதனுடைய முடிவு எங்கே முடிகிறது…?
4.கீழே பன்றியிடம் தான் விடுகின்றது… பன்றியிடம் வாலைப் போட்டுக் காட்டியிருப்பார்கள்.

பல கோடி உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் சென்றாலும் அதிலிருந்து விடுபடும் வல்லமை உண்டு. ஏனென்றால் இங்கே வந்தால் பன்றி என்ன செய்கிறது..?
1.சாக்கடையை நுகர்ந்து
2.அதற்குள் இருக்கும் தீமைகளைப் பிளந்து
3.நல்ல உணர்வுகளை நுகர்ந்து
4.அந்த நல்ல உணர்வின் வளர்ச்சி பெற்று “மனிதனாக” அது உருவாக்குகின்றது.

ஆகவே நாம் தீமைகளை அகற்றி ஒளியாக்கும் உணர்வின் தன்மைகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும். துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வருதல் வேண்டும்.

பல கோடி உணர்வுகளைச் சந்தித்தாலும் அதிலிலுள்ள தீமைகளை நீக்கிவிட்டு அருள் ஒளி பெறும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
1.இவ்வளவு விஷயங்களையும் அந்தப் பரமபதத்தின் மூலம்
2.அழகாக மனிதனுக்குச் சித்தரித்துக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நாம் நல்ல நிலையில் உயர்வதற்குண்டான “கால நேரம் வரட்டும்…!” என்று காத்திருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

importance of good things

நாம் நல்ல நிலையில் உயர்வதற்குண்டான “கால நேரம் வரட்டும்…!” என்று காத்திருக்க வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.

1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.