JULY – 2024 உபதேசம்

நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்

 

நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் படுவோரைப் பார்த்து நம் நல்ல குணங்கள் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் நம் நல்ல குணங்களை அந்த விஷம் என்ற குணங்கள் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் வேதனை என்ற உணர்வு தான் நமக்குள் வருகின்றது

உதாரணமாக நல்ல பலகாரத்தைச் செய்து வைத்திருக்கின்றோம் என்றால்
1.அதன் மேலே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டால் அந்த வாசனை தான் வரும்.
2.அதிலே விஷத்தைத் தூவி விட்டால் அது தான் இயக்கம் ஆகும்.
3.ஆனால் பலகாரத்தின் மீது நல்ல நறுமணங்களைப் போட்டால் நறுமணத்தின் தன்மை தான் வரும்

ஆனால் சுவைக்கும் போது தான் வித்தியாசங்கள் தெரிய வரும்.

அதைப் போன்று தான் மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும் பொழுது
1.அந்த மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
2.அது சிறு திரையாக மறைத்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காதபடி தடைப்படுத்தி விடுகின்றது.

இதைத்தான் சித்திரை என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இப்படி மூடி மறைக்கும் அத்தகைய சிறு திரைகளை நீக்கி
1.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கிப் பொருளை அறியும் ஞானங்கள் பெற்று
2,எல்லாவற்றையும் அறிந்திடும் அறிவின் ஒளியாக நாம் மாற்ற வேண்டும்.

நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும்… பெரு வாழ்வு பெறும் அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்கும் நிலையாக… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்று
1.நமக்குள் தீய குணங்கள் தூண்டப்படும் போது நல்ல குணங்களை மறைக்கச் செய்யும் அந்தச் சிறு திரைகளை நீக்கி
2.அருள் மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி
3.என்றும் பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்தத் தகுதியை நாம் பெறுவோம்.

அதற்காக வேண்டி… ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அருள் சக்திகளைப் பெருக்கி
1.ஒவ்வொருவரும் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக மாறுதல் வேண்டும்.
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை உருவாக்கும் ரிஷிகளாக மாற வேண்டும்.
3.நமது குருநாதர் அனைத்து அண்டங்களையும் அறியும் தகுதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்.
4.அவர் காட்டும் வழியில் அதனை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே… பிறவியில்லா நிலைபெறும் எல்லையைக் குறியாக வைத்து இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை அகற்றிவிட்டு அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கிப் பேரின்பம் பெறும் அருள் ஞானிகளாக வளருங்கள் வாழுங்கள்.

உங்களுடைய பார்வையில் பிறருடைய தீமைகளை அகற்றும் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்
1.உங்கள் பார்வையில் தீமை உங்களை நாடாது அருள் பாதுகாப்பு என்ற உணர்வின் வலிமையைப் பெறுங்கள்.
2.வலிமை பெற்ற அருள் ஞானிகள் உணர்வை உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அருள் வழி வாழ்வோம்… மெய் வழி வாழ்வோம்… மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் வாழ்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு “ஒன்றாம் வகுப்பில் பாட நிலை போதிப்பது போல்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தொடர்ந்து பதியச் செய்கின்றோம்.

உணர்வின் இயக்கச் சக்திகளை மனிதனான நாம் உணரும் தன்மை பெற்றவர்கள். பதிந்து கொண்டபின் நினைவு கொண்டு அதைக் கவர்ந்து செயலாக்க முடியும்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களில்
1.தாயின் கருவில் வளர்ந்த அந்தச் சிசு (அகஸ்தியன்) அவர் கற்றுணரவில்லை.
2.தாய் நஞ்சினிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது
3.அது கருவில் விளையும் அகஸ்தியருக்கு இணைந்தது
4.உணர்வின் தன்மை நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அங்கே பெறுகின்றது.

நஞ்சினை வென்றிடும் உணர்ச்சி வரப்படும் பொழுது பிறந்தபின் அந்தச் சிசு (அகஸ்தியன்) மல்லாக்கப் படுத்திருக்கும்போது அறிவில்லாத நிலைகளில்…
1.அறியும் அறிவே இல்லையென்றாலும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
2.இவன் உடலுக்குள் இருக்கும் விஷங்கள் இந்தக் கருவிழியின் நிலையாக ஊடுருவுகின்றது.
3.சூரியனின் மோதலை உற்றுப் பார்க்கின்றான்.
4.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை இவனுக்குள் இது மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது…
5.சூரியனின் இயக்கத்தைக் காணும் சக்தி பெறுகின்றான்.
6.இதெல்லாம் இயற்கை… சந்தர்ப்பத்தால் உருவான நிலைகள் தான்.

பல நஞ்சினைக் கொண்டு மனிதனாக உருவானாலும் நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் அவரின் தாய் தந்தையர் நுகர்ந்த இந்த விஷத் தன்மைகள் கருவிலே வளரப்படும் பொழுது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுவாக விளைகின்றது.

இதைப் போன்றுதான் உங்களுக்குள் அது உருவாகும் உணர்வின் தன்மையாக
1.அருள் ஒளியின் தன்மை ஒவ்வொரு குணத்திலும் இணைக்கப்படும் பொழுது
2.நஞ்சினை வென்றிடும் (அத்தகைய) அகஸ்தியன் பெற்ற ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற நோக்குடன் தான் உபதேசிக்கின்றோம்.

உபதேசிக்கும்போது உங்களை உற்று நோக்கும்படி செய்து
1.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகரும்படியாக
2.நுகர்ந்த உணர்வின் தன்மையை ஜீவ அணுவாக மாற்றும்படிச் செய்வதற்கே
3.நமது குருநாதர் கட்டளைப்படி உங்களை இதைச் செயலாக்குகின்றேன்.

இதைத் தெளிந்து கொள்ளுங்கள்.

இதன் வழி அகஸ்தியன் கற்றுணர்ந்தது… சூரியன் அது எவ்வாறு தனக்குள் கவர்கிறது…? என்ற நிலையும் அண்டங்கள் எப்படி உருவானது…? என்ற நிலையும் இதன் தொடர் வரிசையை இவன் காணுகின்றான்.

இன்று விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கும் தன்மையை அறியப்படும் பொழுது அது எங்கிருந்து விளைந்தது…? இதன் உணர்வின் தொடர் எது…? என்று விஞ்ஞானி காணுகின்றான்.

எப்படி விஞ்ஞானி காணுகின்றானோ அதைப் போல் அன்று மெய்யை உணரும் ஆற்றலாக…
1.விஷத்தை ஒடுக்கும் ஆற்றல் தாய் கருவில் இவனுக்குள் உருவானதால்
2.தனக்குள் விளைந்த நிலைகளில் மோதப்படும் பொழுது
3.ஒவ்வொன்றும் எப்படி உருவாகின்றது…? என்ற அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது.

ஏனென்றால் இதையெல்லாம் சொல்வதன் நோக்கமே…
1.எதிர்காலத்தில் வரும் நஞ்சிலிருந்து நீங்கள் வென்று… நஞ்சற்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து…
2.இந்த உடலிலிருந்து பிரிந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி…
3.இனி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலைக்குத்தான்
4.திரும்பத் திரும்ப அகஸ்தியன் பெற்ற நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.

இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் போல ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட உலகில் உண்டு.

அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை நமக்குள் இணை சேர்த்து… உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக… அழியாத வல்லமை பெறும் சக்தியாக உருவாக்கும் உயிரை நாம் கடவுளாக மதித்து… அந்தச் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால்… கருவிலே வளரும் இந்தச் சிசு (அகஸ்தியன்)
1.தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் (தாயின்) உடலுக்குள் சென்றபின்
2.அதிலே விளைந்த இந்த உயிர் தான் அந்த உணர்வின் ஆற்றலாக அணுவாக மாற்றுகின்றது.

ஆகையினால் அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை.

தனக்குள் வரும் உணர்வினை தாயின் கருவின் உணர்வாக எடுத்து வளரும் இந்தச் சிசு அதன் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அதுவாக ஆகின்றது… ஈசனாகின்றது…!

ஆகவே அது உணர்த்திய உணர்வுகள் அணுத்தன்மையாக அந்தச் சிசுவின் உடலில் வரும் பொழுது “அதுவே” உற்பத்தியாகும் கடவுளாகவும் காத்திடும் நிலையாகவும் அதை மாற்றிடும் நிலையாகவும் வருகின்றது.
1.உயிரே கடவுள்
2.எண்ணும் எண்ணமே இறைவன்
3.இறையின் செயலே நமக்குள் தெய்வமாக உள் நின்று இயக்குகின்றது.

நம் உயிரைக் கடவுளாக மதித்து அவன் துணையுடன்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்
2.அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தையும் நாம் அறிவோம்.
3.மரணமில்லா பெரு வாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.
4.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து வாழ்ந்திடுவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!

 

கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள் தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள்.

இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறிதொரு உலகம் வந்திடுமப்பா. அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. இவ்வுலகிற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது. மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன.

அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம்.
1.இந்நிலையில் உள்ள அற்ப ஆசைகளை மறந்து பெருநிலை ஏய்திடப்பார்.
2.வாழ்ந்து என்ன பயன்…? வாழ்ந்து என்ன பயன்…? என்கின்றார்கள்… வாழ்ந்த பயனை எல்லாம் கல்கியில் கண்டிடலாம்.

பெருநிலையை எய்திடவே பெருநிலையை எய்திடவே என்ற எண்ணம் புரியாத மனிதர்கள் வாழும் வாழ்க்கை இது.

பெருநிலை எய்திடு என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்கள் எல்லோரும் பெருநிலை எய்திk கலகிக்கு வருபவர்களே.
1.எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலம் காலமாகத் தவம் இருந்த தவசிகளும்
2.பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள்… அவர்களுடன் கலந்துவிடலாம்.

இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்தி விட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம்… பல கோடித் தேவாதி தேவர்களுடன். பாட நிலை புரிந்ததா…?

விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால்
1.நினைவின் எண்ணத்தினால் வருவது தான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?
2.விக்கலுக்கு மருந்து இல்லை… எண்ணும் எண்ணத்திற்கும் மருந்து இல்லை… விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
3.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வண்ணம்.
4.ஜெபநிலையில் மனநிலையைக் கலந்திடப்பா உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன…? என்று.

இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அறிவு நிலையும் ஆயுள் நிலையும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள். அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் மனிதன்.

அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் வந்தது என்று… இல்லையப்பா எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை. ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.

மனித உடலில் ஆசை உள்ளவன்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை. அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான். அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது

1.எண்ணத்தைக் குறுக்கிட்டு… வாழ்ந்து என்ன பயன்…? இருந்து என்ன புண்ணியம் வரும்…? என்று
2.வரும் வியாதியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலே சுருங்கி விடுகின்றான்
3.அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளே சுருங்கி விடுகின்றன.

ஆயுள் முடிந்து இறக்கின்றான் என்பது அல்ல. அவனின் “எண்ணம் சுருங்கி… மனம் சுருங்கி… பெரும் பயத்தில் உள்ளவனிடம்… “சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் ஆவியின் நிலை…”

வாழ்ந்திட வேண்டும் என்று ஆசை உள்ளவன் வாழுகின்றான் பல நாட்கள்.
1.உயிர் பிரிவது எல்லாம் காலன் (எமன்) பிரித்துச் செல்வதல்ல
2.இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
3.அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே… “தன் உயிர் பிரிந்து விடும்” என்ற பயத்திலேயே பிரிந்து செல்வது தான் அவ்வாவி.

எந்நிலையில் உள்ளவனும்… “வாழ வேண்டும்” என்று ஆசை இருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒருநிலைப்படுத்தி வேண்டுபவனெல்லாம் வாழ்கின்றான். மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.

பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவன் இட்ட பிச்சை என்கின்றோம். இயற்கை என்கின்றோம். எதுவப்பா பிச்சை எதுவப்பா இயற்கை…?

அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். இன்றைய ஜீவாதாரத்தின் பாடங்கள் புரிந்ததா…?

பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…? தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான் மனிதன்.

ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெபித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஓம் ஈஸ்வரா
ஜெபித்த நிலையில் நீ வந்து ஜெபமாக்கித் தந்திடுவாய்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.

ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே… யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.

ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.

ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.

இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகத்திற்குள் அறிந்த உணர்வை முதலில் பெற்றவன் அகஸ்தியன். அவன் அறிந்திட்ட அறிவு அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் இங்கே பரவிக் கொண்டுள்ளது.

அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருளை ஏங்கிச் சுவாசித்து நம் உயிருடன் இணைத்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை உடலுக்குள் பரவச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை நம் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
2.அவனறிந்த உணர்வும் அவன் ஒளியாக மாற்றிய உணர்வும் நாம் பெற முடியும்.
3.இவ்வாறு நம் உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் அவை அதனுடைய வேலைகளை அதைச் செய்யும்.

கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாற்றி விண்ணின் உணர்வின் உணர்வினைத் தனக்குள் ஒளியாக்கி எந்த விண்ணின் நிலை அகஸ்தியன் பெற்றானோ… அவன் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

இன்று நட்சத்திரங்கள் பல வகை செய்தாலும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்றது துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் பெற்ற அருள் ஒளியின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிக்க வேண்டும்.
2.உங்கள் நினைவு துருவத்தை நோக்கிச் செல்லட்டும்.
3.துருவ நட்சத்திரத்துடன் உங்கள் நினைவாற்றல் இணையட்டும்.

சூரியனின் கதிரியக்கங்கள் கவர்ந்து பரப்பும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து…
1.உங்கள் உயிருடன் இணைத்து உங்கள் உடலிலே பரவச் செய்யுங்கள்.
2.உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்
3.உங்கள் உடலிலுள்ள அணுக்களை அவ்வழியில் பெறும்படிச் செய்யுங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை உங்கள் உடலுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள்.. ஒவ்வொரு அணுக்களிலும் ஒன்றிடச் செய்யுங்கள்.
5.துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிட வேண்டும் என்று உயிரான ஈசனிடம் உணர்வைச் செலுத்தி ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

உங்கள் உடல் அணுக்கள் அனைத்தும் ஏகாந்த நிலை என்னும் உணர்வின் தன்மை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று பேரின்பப் பெரு நிலை என்ற உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும்.

இப்பொழுது உங்கள் உடலில் மகிழ்ச்சியும்
1.“மகதம்” என்ற அருள் மகத்தான அருள் அணுக்களாக
2.அருள் சுவையின் உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறும்.

நஞ்சு மோதி ஈர்க்கும் சக்தி பெற்றது. இதைப் போன்று நமது துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வரும் உணர்வினைத் துருவ நட்சத்திரம் “அந்த நஞ்சுடன் மோதி அதை ஒளியாக்குகின்றது…”

1.தனக்குள் மோதும் நஞ்சினை அந்தத் துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போன்று
2.உங்கள் உணர்வின் தன்மையும் இன்று உங்களில் மோதும் நஞ்சினை…
3.ஒளியின் உணர்வாக ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைக்கு வரும்.
4.அதைத் தான் இப்போது உங்களுக்குப் பழக்கப்படுத்துகின்றோம்
அந்த உணர்வினை உங்களுக்குள் பிரம்மமாக்குங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். ஒளியாக மாற்றும் அந்த உணர்வுகள் உருப்பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

நஞ்சின் மோதலில் ஒளியின் உணர்வாக உருவாக்கிய உணர்வினை உங்கள் உடலில் உள்ள அணுக்களை அவ்வழியில் அதனை… அந்தப் பிரம்மத்தை உருவாக்குங்கள்.

அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது

 

அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது

இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.

இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.

1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.

ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.

அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.

பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.

ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.

1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.

அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து

 

ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு இந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது…? என்ற ஒரே குறிதான்.

ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து… உண்டு வாழ்ந்து மடிவதுவே.

ஆறறிவு படைத்த ஜீவன் உள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவை விட மனித அறிவு உயர்ந்தது.

ஐந்தறிவு ஆறறிவு என்கின்றார்கள். எண்ணப்படி அல்ல. அவ்வறிவு ஆவி உலகத்தின் பாடத்தில் பகர்ந்துள்ளேன்… மற்ற மிருக ஜீவராசிகள் எப்படிப் பிறக்கின்றன…? என்று.

எறும்புக்கும் ஐந்து அறிவு தானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துகளுக்கு ஐந்து அறிவு அல்ல… மனிதனுக்கு ஆறு அறிவும் அல்ல.
1.அவனவன் செய்த பாவம் புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான்
2.அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது.

மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…? ஆறு அறிவு தான் எல்லா மனிதர்களுக்கும் அளித்துள்ளானா அந்த இறைவன்…?

ஆறு அறிவு அல்லப்பா அவ்வறிவு. ஆறுமுகா என்று சொல்கின்றோம் ஆறுமுகனுக்கு ஆறுமுகங்கள் இருந்தனவா…? எண்ணி வந்தானா இம்மனிதன்…?

ஆறுமுகா என்பதன் பொருளே…
1.ஆறு வகைக் குணங்கள் படைத்த மனித மனத்திற்கு ஒத்துத் தான்…
2.கடவுளுக்குப் பெயர் வைத்து விட்டான் ஆறுமுகன் என்று.

இறைவன் சக்தியில் மனிதனுக்கு அளித்துள்ள குணங்கள் ஆறு. நற்குணங்கள் ஆறு. அவன் உடலில் உள்ள பல கோடிக் குணங்களைப் பகர்ந்திட்டால் அவன் எண்ணி வைத்த மனிதர்களின் ஆறு குணங்கள் என்னப்பா…?

ஆறு அறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…! மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலையைப் பிரித்துக் காட்டிடப் பகர்ந்திட்டேன் இவையெல்லாம்.

மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய “ஜீவாதாரம்” மிக முக்கியம். மனிதன் நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம்.

இன்றுள்ள மனிதர்களுக்குப் பொருள் முக்கியம். ஆனால் ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தைத் தன்னைத்தானே அடித்து உண்டிட்டான்.

இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்கள் எல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள் தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள்.

பிறகு ஒரு நிலையில்… மிருகத்தின் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்தார்கள். அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறி இலைகளைப் பறித்துப் புசித்தார்கள்.

அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறி… அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.

இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது.

இராமாவதாரத்தில் இருந்து தான் இந்த ஜீவாதாரத்திற்கு பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா.

காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.

அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் அனைவரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சினாலும் சிக்க வைத்துத் தன் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.

அடுத்த அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் தன் நிலையை உயர்த்திட… உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திடப் பெரும் புதையல்… பொக்கிஷம் என்றதெல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு மறு அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் “புதைத்து வைக்கும் நிலையை” உண்டு பண்ணினார்கள்.

அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள் தான் செயற்கை யுகத்தைக் கலந்து விட்டார்கள் காலப்போக்கில் செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட… “மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே” மாற்றி விட்டார்கள்.

ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியம் அப்பா.
1.தன் ஜீவனை வளர்த்திடத் “தன் வாழ்க்கைக்கு வேண்டியதை” எண்ணுவதில்லை இம்மனிதர்கள்.
2.பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகின்றார்கள் இம்மனிதர்கள்.
3.இச்செயற்கை ஆசையின் உந்தலினால் தான் ஜீவாதாரத்தின் தன்மையை மாற்றித் “தான் மகிழ” என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.

ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள். தான் பிழைக்கும் வழிக்கு என்கின்றார்கள்… தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.

பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…? சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…? அவர்கள் வழியில் “பணம் காசு தான் சொத்து” என்கிறார்கள். பெரும் சொத்து அதுவல்லப்பா.

தான் பிறந்து வளரும் நிலையில்
1.தன் ஜீவாதாரத்தில் “போதும்…” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
2.பெற்ற மக்களுக்கும் நல் போதனையில் நல்லறிவு புகட்டி தர்ம நியாயம் அளித்து
3.தான் பெற்ற மக்களை நல் உணர்வுடன் வளர்ப்பவனும்
4.தான் என்றால் யார்…? என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்து தானப்பா பெரும் சொத்து.

இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது… அரிதப்பா அரிது. இக்கலியிலிருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலை எல்லாம் மற்றவனைப் பார்த்துத் தான் தன் நிலையில் வாழ்கின்றான்.

இது புரிந்ததா…?

1.அவன் அந்நிலையில் வாழ்கின்றானே – தன் நிலை அப்படி இல்லையே…!
2.தானும் அவனைப் (மற்றவனை) போல் வாழ்ந்திட முடியாவிட்டால்
3.அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.

இந்நிலையில் உள்ளவனின் நிலைதானப்பா இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். பெரும் பேராசைக்காரனப்பா இக்கலியின் மனிதன். இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே கரியாகிவிட்டதப்பா. இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படியப்பா இருப்பான்…?

காலம் எப்படிச் சுழலுகின்றதோ நற்காற்றுடன்… அந்நிலையில் வரும் தன்மை வேறப்பா…! இவன் விட்டிடும் நஞ்சு… காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படிப்பா இருந்திடும்…?

ஜீவாதாரத்தை மாற்றி விட்டான் ஜீவனுக்கே பெயர் வைத்திட்டான் ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாடநிலை புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்கத் தெரிந்து கொண்டால் கார்த்திகேயா…!

அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்…
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்…
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்…
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து… தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.

அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்… அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.

1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.

அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி… அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாறுகின்றது.

அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.

ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அதை உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.

அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவை பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!

1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
1.நரசிம்மன் என்றால் உயிர்…
2.வாசல்படி என்பது நம் மூக்கு..
3.மடி என்பது ஆன்மா…
4.இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு…!

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.

இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள். (அதாவது நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும்).

ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.

முன் வழி கூடி நீக்க முடியுமா…? என்றால் முடியாது. அதாவது…
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால்… எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்…
2.உட்கார முடியாது… ஆட்டம் கட்டும்… எப்படியோ வரும்…
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்…! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்…! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.

கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.

அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.

அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு வருகின்றோம்.

ஆகவே கார்த்திகேயா…! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்

 

காட்டுப் பகுதிகளுக்குள் குருநாதர் அழைத்துச் செல்லப்படும் பொழுது அங்கே மனிதனும் மிருகங்களும் சந்தர்ப்பத்தால் மடிந்த நிலையில் அந்தச் சடலங்கள் மண்ணிலே பதிந்து கிடக்கும் போது
1.அந்த அழுகிய உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
2.மற்ற தாவர இனங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்வதும்
3.இன்னொரு விஷச் செடியின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
4.அதே சமயத்தில் முதலில் சொன்ன தாவர இனத்தின் மணம் அழுகிய மணத்தைக் கண்டு அஞ்சி ஓடி வரப்படும் பொழுது
5.மனித உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் விஷச் செடியின் மணத்திலே தாக்கிய பின் கிறு கிறு என்று சுழன்று
6.இது அனைத்தும் ஒன்றாக சேர்த்து மனித உடலில் உருவான உணர்ச்சிகளும் கலந்து “புது விதமான செடியாக” உருவாகின்றது.

அந்தச் செடிகளை மனிதன் தொட்டால் “கரண்ட் இழுப்பது போன்று” சில செயல்களைச் செயல்படுத்துகின்றது. இதையே மருந்தாக அரைத்துக் கொடுத்தால் பல பகைமை உணர்வுகளை நீக்கும் சக்தியும் வருகிறது.
1.அதனுடன் எந்தெந்த மருந்துகளைச் சேர்த்தால் எந்தெந்தத் தாவரங்களைச் சேர்த்தால்
2.மனித உடலில் விளைந்த தீமைகளை ஊடுருவி அந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் அந்த இடத்திலே மிதித்த பின் கீழே ஒரு கொடி படர்ந்துள்ளது. கொடி மேல் என் கால் பட்ட பின் எனக்கு நினைவு இழந்து விட்டது. மறதிப் பூடு என்று சொல்வார்கள்…!

இந்த செடியினுடைய தன்மை என்ன…? ஏன் இப்படி வளர்ந்தது…? என்ற நிலைகளை குரு விளக்குகிறார்.
1.பல மனிதர்கள் உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் இரக்கமற்றுத் தாக்கி இரத்தக்கசிவுகளாகி இருந்தால்
2.இதைப் போன்ற சில பூடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அங்கே உருவானதால்
3.அங்கே தாக்கும் போது “அவர்கள் எப்படி நினைவிழந்தார்களோ” இதைப் போன்று
4.இந்தக் கொடியை மிதிப்பவர்களையும் நினைவிழக்கச் செய்கின்றது…?

ஆனால் மற்ற உயிரினங்களை நினைவிழக்கச் செய்வதில்லை.

மனிதர்கள் வரப்படும் பொழுது அவனுடைய உதிரம் அந்த உணர்வுகள் படர்ந்து இருப்பதனால் இந்த பூடுகள் எப்படி விளைகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டுகின்றார்.

மனிதனாக நாம் வாழும் நிலையில் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கங்கள் அது அணுக்களாக விளைவதும் அதன் வழி தான் பல கோடிச் சரீரங்களை மாற்றி வந்திருக்கின்றோம்.

ஒன்றுடன் ஒன்று… ஒன்றுடன் ஒன்று கலந்து… கலந்து… “வெங்காயச் சருகு போன்று அது தோடாக” (மேல் தோல்) எப்படி இருக்கின்றதோ நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் மற்ற மிருகங்களிலிருந்து நுகர்ந்த உணர்வுகள்
1.அணுக்களில் அடுக்கடுக்காக மாறி அது ஒரு முழுமை அடைந்து
2.அந்த உணர்வைப் போல எத்தனையோ கோடி அணுக்கள் சேர்த்துத் தான் மனிதனாக உருவாகக் காரணமானது.

மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றிய நிலையில் அந்த உணர்வு கொண்டு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தியும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நம்முடைய முப்பிறவிகளின் நிலையும் பார்க்கலாம்
2.இப்பிறவியின் வாழ்க்கையின் நிலையை அறியலாம்
3.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையினையும் அறியலாம் என்பதை குருநாதர் காட்டுகின்றார்.

மனிதனாகப் பிறந்த நிலையில் இன்று இருக்கும் இந்த உடலில் இருந்தே நாம் பிறவியில்லா நிலை எப்படி அடைய வேண்டும்…? என்பதற்காகத்தான் இதை எல்லாம் குரு எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்

 

உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.

1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்

ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.

1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.

அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.

அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.

ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.

இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.

அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.

அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.

பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்…” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.

அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.

இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”

உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.

மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.

இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.

இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.

ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?

செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.

இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.

1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.

இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?

ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!

ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.

ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”

அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.

உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.

காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்…
1.என்னை ஏதோ செய்கின்றான்… இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்…! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே… இப்படிச் சொல்கிறதே…! என்று நினைப்பீர்கள்.

அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்… பாவிப்பயல்…!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.

அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்…
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.

1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும்… நமக்குள் அது வளர வேண்டும்… என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.

உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்…!

ஐய்யய்யோ பாவிப் பயல்…! எனக்கு ஏதோ செய்கின்றான்… விஷம் வைக்கின்றான்… மருந்து வைக்கின்றான்…! என்று சொல்லும்… பார்க்கலாம் இதை எல்லாம்…!

அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.

ஆக… ஆன்மா இல்லாதவர்களே இல்லை.

ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்… உடலில் எரிச்சல் ஆகும்…! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.

ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.

1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.

நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.

தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!

நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.

இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.

குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.

ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.

அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.

அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.
1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்

ஆகவே மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்.

துருவ நட்சத்திரம்

 

அகஸ்தியன் குழந்தைப் பருவமாக இருக்கப்படும் பொழுது நடந்த நிகழ்ச்சிகள் இது.
1.வானை நோக்கித் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது சூரியனைப் பார்ப்பதும்
2.அதைக் கண்டு சிரிப்பதும் அதில் நடக்கும் மோதல்களைக் காணுவதும் மற்ற பிரபஞ்சங்கள் தெரிவதையும்
3.அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் உற்றுப் பார்க்கின்றான்

நமது குருநாதர் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் அவன் இருந்த இடங்களில் இந்த உணர்வலைகள் எப்படிப் பதிந்துள்ளது…? என்று எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.

அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
1.அவன் கண்டதை நாமும் பார்க்கலாம் என்ற நிலைக்காக அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றார்.
2.வான்வீதியில் நடக்கும் அதிசயங்களை நீ பார்…! என்கின்றார்.

ஏனென்றால் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்… அவன் உணர்வுகள் பூமியில் படர்ந்துள்ளது. சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.

அதை நுகர்ந்து காவியமாகச் சொல்லி கதையாகச் சொல்லி நடந்த நிகழ்ச்சிகளை
1.இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லச் சொல்ல அதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் எனக்குள் வருகின்றது.
2.குருவின் வலு கொண்டு அவர் நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் வரப்படும் பொழுது அதை நான் அறியும் பருவமும் வருகின்றது.

அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குருநாதர் இப்படித்தான் எனக்குத் தெளிவாகக் கூறினார்.

நாளடைவில்… குழந்தையாக இருக்கும் அகஸ்தியனைக் கையிலே தூக்கிச் சென்றால் கொடூர மிருகங்களிடமிருந்து தாய் தந்தையைக் காக்கும் நிலை வருகின்றது… மற்ற உயிரினங்களும் இவர்களைத் தாக்குவதில்லை.

ஐந்தாவது வயது ஆகும் பொழுது அந்தக் காட்டிற்கே அரசன் ஆகின்றான் புலி சிங்கம் மற்ற மிருகங்கள் ஒடுங்கி விடுகின்றது விஷத்தன்மைகளை ஒடுக்கும் சக்தி வரும் பொழுது
1.அவன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும்
2.கோபம் கொண்டோர் கொதித்தெழும் உணர்வு கொண்டோர் நிலைகளும் அங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.போர் முறை என்ற நிலையே மாறி விடுகின்றது.

ஏனென்றால் அன்று வாழ்ந்தவர்கள் ஒரு எல்லைக்கு எல்லை மாறி வரும் போது மனிதனுக்கு மனிதன் தாக்கிடும் நிலையே வருகின்றது. அந்த நிலையில் அகஸ்தியன் அதைத் தடுத்து அங்கு இருப்போரைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

இளமைப் பருவத்தில் அவன் அறிந்த உணர்வின் தன்மை வானை நோக்கி உற்றுப் பார்த்து துருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ட பின் அந்த்த் துருவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான்.

அதனால் தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வந்தது. அவனுக்குள் மேலும் மேலும் வலுகொண்ட நிலையாகி எதையுமே அறியும் ஆற்றலாக அறிவின் தன்மை அதிகரிக்கின்றது.

அவன் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது நமது சூரியநுக்கு 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் விஷத்தன்மையை எப்படி கவர்கின்றது என்று அறிகின்றான்.

அதிலே சூரியன் வெளிப்படுத்தும் உணர்வுகள் கவர்ந்து வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னல்களாக மாறுவதும்… இந்தப் பொறிகள் பல பாகங்கள் பரவி ஒளி அலைகளாக மாறுவதும்… மற்ற கோள்களில் இருந்து வரக்கூடியது இதற்குள் கலந்த பின் அணுக்கள் மாற்றப்பட்டு… ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி மாறுகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? என்பதையும் அவன் காணுகின்றான்.

பிரபஞ்சத்திற்குள் சூரியனின் இயக்கத்தன்மை ஏற்பட்டு பூமிக்குள் உருப்பெற்ற மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை அவன் அறிகின்றான்.

இப்படி அறிந்தவன் தனது 16வது வயதில் திருமணமான பின்… தான் இளமைப் பருவத்தில் இருந்து எதை எதையெல்லாம் அறிந்தானோ அவை அனைத்தையும் மனைவிக்குப் போதிக்கின்றான்.

1.மனைவி அதைச் செவி வழி கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.அதையெல்லாம் காண வேண்டும் என்று விரும்பி அந்த உணர்வுகளைத் தனக்குள் நுகர்கின்றது.
3.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்கின்றனர்.

இரு உணர்வும் சேர்த்து நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வின் அணுவாக உருவாக்கும் தன்மையும்… “ஒளியின் சிகரமாக” உருப்பெறும் அணுவாக ஆகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர்கள் கண்டாலும்
1.இருவரும் அதைப் பெற வேண்டும் என்று தங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.மின்னல் வரும் பொழுது எப்படி ஒளிக்கதிர்களாகப் படர்கின்றதோ
3.இந்த உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த ஒளிக்கதிர்களை உருவாக்கும் நிலையும்
4.அது எப்படி மின்னும் பொழுது இருளை மறைக்கின்றதோ நஞ்சினை அடக்குகின்றதோ
5.அதைப்போல ஒளியின் உணர்வாக இருவரது உணர்வுகளிலும் இந்த அணுவின் தன்மை உருவாகின்றது.

அப்படி உருப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் சக்திகளைத் தான் உங்களைப் பெறச் செய்து கொண்டே வருகின்றேன் குருநாதர் காட்டிய வழியில்.

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?

 

காட்டிற்குள் “அட்டை” என்று சொல்வார்கள். மனிதன் இறந்திருந்தால் மனித உடலில் இருந்து அந்த அணுக்கள் பெற்றிருந்தால் மனிதன் சும்மா நடந்து சென்றாலே போதும்.

அந்த மணத்தின் தன்மை கொண்டு வில்லைப் போல பாய்ந்து மனித உடலில் அந்த அட்டைகள் ஒட்டிக் கொள்ளும். ஆனால் ஒட்டுவது நமக்குத் தெரிவதில்லை.

இரத்தத்தை உறிஞ்சும். அது எவ்வளவு உறிய முடியுமோ அதற்குப் பின் கீழே விழுந்து விடும்… நமக்குத் தெரியாது.
1.மனிதன் மடிந்த பின் இறந்த உடலிலிருந்து அந்த அணுக்களின் தன்மை அடைந்த பின்
2.மனிதனுக்குள்ளேயே இந்த இரத்தத்தைக் குடித்துச் செயல்படும் தன்மை வருகின்றது.

அட்டைகள் மடிந்த பின் இதே உணர்வின் தன்மை மற்ற தாவர இனங்களுக்குள் கலக்கப்பட்டு புதிதாக உருபெற்றால் அதை உணவாக உட்கொண்டால் ஒரு இரத்தத்திற்குள் சென்றால் இரத்தத்தை உருமாற்றும் நிலையாக அடைகின்றது “அந்தத் தாவர இனங்களுக்கு…”

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் செல்லப்படும் பொழுது
1.அங்கே உருவாகும் அணுக்களும் அது மடிந்த பின் மற்ற தாவர இனங்களுக்குச் செல்வதும்
2.அவைகள் மனிதனுக்கு நல்ல நிலைகளை உருவாக்கும் நிலையும் காட்டுகின்றார்.

அதாவது மனிதன் மடிந்த பின் அந்த மனித உடலிலிருந்த அணுக்கள் வெளிப்பட்டு… தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு அது மடிந்து அதன் உணர்வுகளில் வரப்படும் பொழுது அந்தத் தாவரங்கள் மனித உடலுக்குள் ஆனபின்
1.அப்படின் உருவான அந்த தாவர இனத்தை உணவாக உட்கொண்டால்
2.மனிதனுக்குள் இருக்கும் சர்க்கரை நோயை முறிக்கும் தன்மை வருகின்றது
3.இரத்தக் கொதிப்பையும் முறிக்கும் தன்மை வருகின்றது.

ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்குள் விளைந்து உணவாக உட்கொண்டு அணுவின் தன்மை அடைந்த பின் மீண்டும் அது படர்ந்த பின் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு “அது மடிந்தால்”
1.அதனின் உரங்கள் மற்ற தாவர இனங்களில் சேர்க்கப்பட்டு
2.அது உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட (மருந்து) தாவர இனங்களாக விளைகின்றது.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது இத்தனை வித்தியாசங்களையும்… இயற்கையின் நிலைகள் மனிதனான பின் உணர்வு மற்றதுடன் சேர்ந்து “அது எந்தெந்த நிலைகள் அடைகிறது…?” என்று காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு சமயம் என்னை ஒரு பக்கம் உட்காரும்படி சொன்னார். அவர் வேறு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த பின் அந்தத் தரையில் இனம் புரியாத “ஒரு ஈர்ப்பு” வருகின்றது.

காரணம்…
1.மண்ணிற்குள் மறைந்த அந்தத் தாவர இன வித்துகள்
2.மனிதனின் உடல் பட்ட பின் அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகிறது.
3.அரிப்பின் தன்மை வரப்படும் பொழுது ஈர்ப்புடன் ஏங்கி வருகின்றது.

இப்படிப் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

தொட்டால் வாடி என்றும் தொட்டால் சிணுங்கி என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது சில செடிகளைத் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் (நீர்) வடியும். சில செடிகளைத் தொட்டவுடன் அப்படியே சுருங்கி… வாடிவிடும். மனிதனின் உணர்வின் நிலை பெற்று உருவான செடிகள் தான் அவைகள்.

மனிதன் இறந்த பின் அவன் உடலில் இருந்து எந்தெந்த குணங்கள் பெற்றுச் சென்றானோ… அதாவது சோர்வடைந்து இருப்பான் பல விஷத்தன்மை கொண்டு…!
1.இது போன்ற உணர்வுகள் செடிகளில் சேர்க்கப்பட்ட பின்
2.மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அது வாடுகின்றது… சிணுங்குகிறது.

சிலருக்கு மூட்டு வாதங்கள் இருக்கும். இரத்தத்தில் உப்புத் தன்மைகள் அடைந்து உறையும் தன்மையாக வரும்… சீழாகவும் மாற்றும். அதனால் அத்தகைய நோய் உருவாகும்.

மிளகையும் தொட்டால் வாடி என்ற செடியையும் பதப்படுத்தி அரைத்து மூட்டு வாதம் உள்ள இட்த்தில் சேர்த்தால்
1.அந்தக் கார உணர்ச்சிகள் ஊடுருவிச் செல்லும் பொழுது
2.மூட்டு வாதத்திற்கு உண்டான அணுக்களை வாடச் செய்யும் வாத்த்தை அகற்றிவிடும்.

இயற்கையின் நிலைகளில் மனிதனுக்குகந்த சில நிலைகள் எப்படி வருகின்றது…? என்று காட்டிற்குள் அழைத்துச் சென்று குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் தான் மேலே சொன்ன தாவர இனங்கள் அனைத்தும்.

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது

 

பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.

தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.

ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.

இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”

1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.

மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,

உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.

ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!

புரிந்ததா…!

இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு
போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே

நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே

பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!

ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!

ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…

தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!

ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!

போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”
என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.

இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.

ஆன்மாவிலிருந்து மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.

அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடைமறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.

அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.

இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.

நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்

ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.

அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.

இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு

 

விட்ட குறையினால் வந்து பிறந்தவர்கள் தானப்பா எல்லோரும். இன்று உள்ள கலியுகத்தில் விட்ட குறைகள் உள்ள மக்கள் எல்லோருமே ஜீவித்துள்ளார்கள்.

ஜனப்பெருக்கம் ஜனப்பெருக்கம் என்கிறார்கள் ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றார்களாம்… அவர்கள் ஆயுளை வளர்க்கின்றார்களாம்
1.இருப்பவன் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்…
2.ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றானாம்… ஆளுகின்றானாம் நாட்டை
3.அவன் ஜனப்பெருக்கத்தைக் காக்கின்றானாம் உளவறிந்து.

எப்படி இருக்கிறதப்பா இக்கதை எல்லாம்…?

கலியில் வந்து விட்டார்கள் விட்ட குறை உள்ளவர்கள் எல்லோருமே மனிதர்களாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இனி பிறப்பவர்களும் இப்பொழுது கலியில் மடிபவர்கள் தான் பிறக்கிறார்கள்.

கலியின் கடைசி நிலையில் எல்லோருமே எல்லா ஜீவ ஜெந்துகளும் அவரவர்கள் செய்த பாவ புண்ணிய நிலையில் வந்து விடுகின்றார்கள். விட்ட குறை என்றதும் இதனால் தான்.

மனிதன் ஆடு மாடு பூச்சி புழு எல்லாமே வந்து விடுகின்றன இக்கலியின் கடைசியில். இக்கலியிலிருந்து தப்பி வடிகட்டி எடுப்பவன் தான் கல்கிக்கு வருகின்றான்.

கல்கியில் வருபவன் எல்லாம் யாரப்பா…?

1.இக்கலியில் விட்ட குறை உள்ளவர்கள் அல்ல.
2.இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எடுத்த பிறப்பில் இருந்தெல்லாம்
3.எவன் ஒருவன் இக்கலியின் கடைசியில் தன் நிலை உணர்ந்து தன் மனத்தை மனம் என்னும் கோவிலாக்கி
4.மற்ற எல்லா நிலையையும் கடந்து முக்தி எனும் நிலை எய்தி
5.தன் நிலையை உயர்த்தி… தான் என்ற அகந்தையை விட்டுத்
6.தன்னுள்ளேயே ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு.
7.கல்கியில் வருகின்றார்கள் ஞான நிலை பெற்ற தீபங்கள் எல்லோருமே.

நீ நினைக்கின்றாய் ஆயிரம் ஜெபங்கள் இருந்து அடுக்கடுக்காக மந்திரங்கள் ஓதித் தான் பிறந்த நிலையை மறந்து விட்டு ஈசனுக்கு பூஜை செய்து… பல மந்திரங்கள் சொல்பவன் எல்லாம் வந்திடுவான் கல்கிக்கு என்று.

வருபவன் யாரெல்லாம் என்று ஜெப நிலையில் உணர்ந்திடலாம். தான் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்துத் தான் “வடிகட்டப்பட்டு வருகின்றான்” கல்கிக்கே.
1.கலியின் பாதையில் பகர்கின்றேன் தோட்டியும் வருவான் தொண்டனும் வருவான் என்று
2.கல்கிக்கு வருபவன் எல்லாம் கால வெள்ளத்தில் சிக்குண்டு பல கஷ்ட நஷ்டங்களையும் தன்னுள்ளே எண்ணிடாமல் பிறந்த பயனை எண்ணி
3.அந்நிலையின் உயர்வை ஊன்றி பிறந்த பயனை எல்லாம் எடுத்தவனே வருகின்றான் கல்கிக்கு.

என்னப்பா…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!

கலியின் கடைசியில் வந்துள்ளோம் பிறந்த பயனை… விட்ட குறையை இக்கலியின் கடைசிக்குள் உன் ஜெபநிலையின் உதயத்தில் முடித்திடப்பா.

முதல் பாடத்தில் பகர்ந்த நீ விட்ட குறை என்ன…? என்று உனக்குள்ளே உணர்த்தி உள்ளேன். ஊன்றிப் பார்த்தால் இன்று உனக்குள்ள நிலை எல்லாம் சிறு தூசிதானப்பா… தூசியை ஊதிவிடு…!

உன் நிலையை… நீ விட்ட குறையை இக்கலியின் கடைசியில் நிலைக்கச் செய்வாய். பெரும் செயற்கை யுகத்தைக் கண்ட இம்மாமனிதர்கள் எல்லோருமே மூச்சிருக்கும் நிலையில் உன் சுவாச நிலையால் விட்ட குறையை முடித்திடப்பா.

உன் ஜெப நிலையின் தன்மையில் தான் ஐவர் மலையின் அந்தரங்கம் வந்துவிடுமப்பா. அந்நிலையில் வந்த பயனை எடுத்துத்தான் அங்கு நீ பதித்திடப்பா.

1.அவ்வார்வ எண்ணத்திலே உன் ஜெப நிலையை மாற்றிடாமல்
2.”ஒன்றே செய்வேன்… நன்றே செய்வேன்…” என்றுள்ள செய்யுளின்படி செய்திடப்பா நற்காரியத்தை.

இக்கலியின் கடைசியில் நிலைப்பவன் யார் என்பதெல்லாம் புரிந்திருக்கும் ஜெப நிலையும் புரிந்திருக்கும்

பல பாடங்களைப் பதித்துள்ளார் உன் மனதினிலே என் சிஷ்யன் (ஞானகுரு). படித்த பாடத்தை விட்டிடாமல் பாடம் மட்டும் கேட்டு விட்டால் உன் நிலைக்கு என்றப்பா வருவது…?

பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் அறிவை வளர்க்கத் தான்.
1.வளர்ந்த பின் அறிவின் பயனைப் பெற வேண்டாமா…?
2.என்றப்பா அந்நிலைக்கு உன் நிலையை உயர்த்திடுவாய்…?

கால நிலையில் விஷத்தன்மை கலக்கின்றதப்பா மிகத் துரிதமாக… விஷத்தன்மையையும் வான மண்டலத்தையும் வென்றிடவே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள்ளப் பார்.

விட்ட குறையை முடித்திடப்பா வீண் விஷமிகளை எண்ணிவிடாதே, பாடத்தின் நிலை புரிந்ததா…?

48 நாள் என்ற பாடம் அன்றொரு நாள் உன் ஜெப நிலைக்கு முடிவு வைத்தேன். அந்த 48 நாளில் நடந்ததெல்லாம் என்னப்பா…? பார்த்திட்டாயா அவன் நிலையும் உன் நிலையும்.

48 நாளில் தேவனின் நினைப்பால் ஊன்றி வைத்தாய் கலசத்தை உன் நினைவில். அந்த 48 நாளில் உன் எண்ணமெல்லாம் அவன் தருவான் என்ற நிலையும் மறக்கச் செய்தேன். தந்தாலும்… உன் நிலைக்கு வேண்டாம் என்று நீயே உன் எண்ணத்தில் ஊன்றிக் கொண்டாய்.

பகைவன் என்பவனின் கஷ்டத்தையும் பார்த்திட்டாய் பாலகரின் நிலையையும் உயர்த்திட்டாய். உன் மனத்தையே ஒரு நிலை ஆக்கியுள்ளாய். இந்நிலையில் உனக்கு இந்த 48 நாட்களில் பகர்ந்துள்ள பல பாடங்களை மனநிலையில் ஒருநிலைப்படுத்தி உணர்ந்துள்ளாய்.

வாழ்க்கையில் வாழ்வு என்ன…? என்ற அர்த்தங்களும் அறிந்திருப்பாய், தியான முறையின் வழிகளையும் புரிந்திருப்பாய். சொல்வாக்கை அருளி இருப்பேன்.

இந்த 48 நாளில் சிறு குறையும் உள்ளதப்பா.
1.உன் நிலையை உயர்த்திக் கொள்… மனச் சஞ்சலத்திற்கு அடிமையாகாதே
2.ஆசை மனதினை அடக்கிடப்பா அந்நிலையில் வருவது தான் சுவையும் மற்ற எல்லாமே.

கலசத்தின் பயனைப் பெற்றவர் இங்கு உள்ளவரில் ஒருவன் தானப்பா. பகர்ந்தவரும் கலசத்தின் பயனைப் பெறவில்லை… கலசம் வைத்தவனும் நிலை நிறுத்த முடியவில்லை மனநிலையை.

அருளெல்லாம் அளித்துள்ளேன் இக்கலசத்தில். நாளை தியானத்தில் நல்ல அமுதை விட்டிடுவேன்… கலசத்தின் மகிமையைக் கண்டிடுவாய். இனி எல்லாமே உன் வழியில் நல்லாசிகள் தான் நடந்திடுமப்பா.

தேங்காயின் பலனைத் தெரு பூராம் தெரிவது வேண்டாம். மஞ்சள் துணியில் முடிந்து வைத்து… மாற்றான் பார்த்திடாமல் வைத்திடப்பா சில நாட்கள்.

உன் இல்லத்தினிலே உன் ஜெப நிலைக்கு அமரும் இடம் அமைத்தவுடன் நிலையில் (கதவு நிலை) கட்டிடலாம் “என் அங்கத்தின் அங்கத்தை…” அந்நாள் வரையில் உன் இல்லத்தில் பூஜிக்க முடிந்திட்டால் வைத்துக்கொள்.

பூஜை அறை வரும் வரையில் இங்கு இருக்கட்டும் என்ற எண்ணம் இருந்திட்டால் இங்கேயே விட்டுவிடு.

பூஜை அறையில் தேங்காய் உடைக்க வேண்டாம். தேங்காய் பழம் உடைத்து என்ற சொல் வருவது வேண்டாம். அவ்வோட்டில் “என்ன வாசனை வருகிறது….?” பழம் புஷ்பம் மட்டும் போதும்.

தேங்காய் உடைப்பதனால் தேவர்கள் அருளைப் பெறுகின்றார்களாம்… உடைக்கும் சத்தத்தில் தான் தேவர்கள் வருகின்றார்களாம் அத்தேங்காயின் தீர்த்தத்தைப் புசிக்கின்றார்களாம்

இவன் புசிக்க எடுத்து வருகின்றான்…! தேங்காயைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. வந்த இடத்தில் தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் அதைக் கொண்டு வருகின்றான்.

வழி முறையில் வந்த சில மாற்றங்கள் இவைகள். சில வழியில் ஊருடன் ஒத்துச் செல்லுங்கள். “நமக்கு வேண்டாம் தேங்காய் உடைக்கும் தன்மை…” உடைத்த தேங்காயை எடுத்து வந்து விடாதீர்கள் இல்லத்திற்கு. பிறருக்கு அளித்து விடுங்கள் அல்லது பூசாரிக்கே அளித்து விடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரப்படச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.

இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.

சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.

அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.

ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.

பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.

அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.

ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது

காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.

இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.

அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,

அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.

அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!

எமது அருளாசிகள்.

அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்

 

குருநாதர் காடு மேடல்லாம் அழைத்துச் சென்று மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருவாகின்றது என்பதனை எனக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.

சரியான உணவு எல்லாம் கிடையாது… அவருடன் சென்று கொண்டே இருக்க வேண்டும்… அவர் காண்பிக்கும் நிலை எல்லாம் அறிந்து கொண்டு அதனுடைய செயலாக்கங்களை பார்த்துக் கொண்டே வர வேண்டும். மலைப்பாங்குகளில் ஆரம்ப காலத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கின்றார்.

ஏனென்றால் அங்கே மற்ற மிருகங்களோ மற்ற உயிரினங்களும் மடிந்தால் யாரும் புதைப்பதும் இல்லை… அப்படி அப்படியே தான் கிடக்கின்றது.
1.அந்த இறந்த உடலின் சத்துக்கள் தாவர இனங்களுடன் கலக்கப்பட்டு சில தாவரங்களுக்கு அது வீரிய சக்தியாகின்றது.
2.அந்த தாவர இனங்களுடன் சில உணவுர்கள் கலந்த பின் அது ஒரு புது வித்தாக மாறுகின்றது.

மறதிப் பூடு என்று ஒரு செடி உண்டு. அந்தச் செடியை வீட்டில் வளர்த்தால் அதில் மிதித்து விட்டால் உங்களுக்கு நினைவே இருக்காது.

மலைப் பகுதிகளில் வாழும் புலையர்கள் இதைத் தோண்டி எடுத்து சில மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வும் மனிதன் மடிந்து இருந்தால் அத்தகைய செடிகளில் இந்த உணர்வின் நிலைகளும் வரும்.

1.அந்தக் காலங்களில் மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருமாறியது…?
2.மனிதனோ உயிரினங்களோ மடிந்த பின் தசைகள் மண்ணுடன் கலக்கப்படும்போது அதனுடைய இன சேர்க்கை தாவர இனங்களிலே எப்படி வருகின்றது…?
3.அதற்கு வீரியத்தன்மை எப்படி வந்தது…? என்று காட்டினார் குரு.

அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்தினால் மனித உடலில் வந்த தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் அத்தகைய தாவரங்களுக்கு உண்டு.

அதாவது மனிதன் மடியப்பட்டு…
1.அந்த மடிந்த நிலையில் கொண்டு அதன் உணர்வு தாவர இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தால்
2.அந்த்த் தாவர இனங்களில் இருந்து மணங்கள் வெளிப்பட்டு
3.இன்னொரு பக்கம் புலியோ அல்லது விஷத்தன்மை கொண்ட செடிகள் பதிந்திருந்து
4.அதிலிருந்து உறிஞ்சப்பட்ட உணர்வுகள் கலந்து வெளிப்படும் காற்றினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
5.இந்த இரண்டும் மோதலாகி ஒரு வித்தாகி பூமிக்குள் பதிந்து விளைந்தால்
6.அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை மனிதன் நுகர்ந்தால் அல்லது உடலின் மேல் பாகத்தில் பூசினால்
7.உடலில் கேன்சர் நோய் இருந்தாலும் அந்த விஷத்தை இந்தச் செடி கரைத்து விடுகின்றது.

அன்று மனிதனுக்கு வந்த புற்று நோயை நீக்க இதைப் பயன்படுத்தினார்கள்.

இன்று மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்கின்றார்கள் அல்லவா/ சில தாவர இனங்களின் அந்த பச்சிலையை மேலே பூசி விட்டால் அறுவை சிகிச்சை செய்தாலும் அந்த உணர்ச்சிகள் இவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.

1.அன்று கண்ணுக்கு முன்னாடியே இப்படி அறுவை சிகிச்சை செய்வார்கள்… அறுத்த பாகங்களை இணைப்பதற்காக ஒரு பச்சிலை உண்டு.
2.இரண்டையும் சேர்த்து இணைத்து விட்டால் தசைகள் ஒட்டிக் கொள்ளும்.
3.உடலுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை எடுத்த பின் அந்தப் பச்சிலைகளை இணைத்தால் இரண்டு தசைகளும் ஒட்டிக் கொள்கின்றது.

அக்காலங்களில் மலைப் பகுதியில் உள்ள புலையர்கள் என்று சொல்பவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தார்கள்… இன்றும் உண்டு.
1.அன்று இருந்த நிலைகள் காலத்தால் அந்தச் சக்தி இல்லை.
2.இருந்தாலும் அந்தத் தாவர இனங்கள் பூராம் மடிந்து விட்டது.

இதை வைத்துச் சில உணர்வுகளைச் சொல்லால் சொல்லப்பட்டு அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் அந்த உணர்வைத் தனக்குள் கவர்ந்து சில நிலைகளைப் புதிதாக அன்று உருவாக்கினார்கள்.
1.சிலவற்றை மறைத்தே சொல்ல வேண்டி இருக்கின்றது…
2.சும்மா தொட்டுத் தான் காட்டுகின்றேன்.

காரணம் இதைத் தெரிந்து கொண்ட பின் பலர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நாம் போக வேண்டியது இல்லை. குருநாதர் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்.

இப்படித்தான் மலைப்பகுதிகளில் பல பல தாவரங்கள் உருமாறியது. அத்தையை தாவர இனங்கள் இன்று இல்லை. விழுதுடன் பறித்து அதனின் இன விருத்தியே மடியச் செய்து விட்டார்கள்.

அன்று ராஜ வைத்தியம் செய்வதற்காக்க் காட்டு விலங்குகளில் சில எடுத்துக் கொண்டு அதனுடன் இணை சேர்த்து சில தாவரங்களை அன்று உருவாக்கினார்கள் அரசர்கள்.

அந்தத் தாவரங்களை வைத்து அரசர்களுக்கு ராஜ வைத்தியம் செய்வதும் அறுவை சிகிச்சை செய்ததும் இன்று விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் அன்று தாவரங்களின் உணர்வை அறிந்து அப்படிச் செயல்படுத்தினார்கள். சில பகுதிகளில் இது உண்டு

அவர்கள் எடுத்துக் கொண்ட ஒலி பாஷை ஒன்றுடன் ஒன்று மோதிய உணர்வுகளும்… ஒரு செடிக்குள் ஓதி அந்த உணர்வுகளை மோதி மோதி அந்த சொல்களை ரெக்கார்ட் செய்வார்கள். அதாவது…
1.காட்டுவாசிகள் செடியை வளர்ப்பதற்காக தனக்குள் அதைக் கொண்டு வருவதற்காக
2.செடிக்குள் மனிதனின் சொல்களைச் சொல்லிச் சொல்லிப் பதிவு செய்வார்கள்.

அது பதிவாகி வளர்ந்த பின் பல பல மருந்து வேலைகளுக்கு ஆகின்றது அக்காலங்களில் இன்னொரு பச்சிலையும் வாய்க்குள் வைத்து அதை மென்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலியை எழுப்பி இன்னொரு செடிக்குள் பதியச் செய்வான்.

இன்று விஞ்ஞான அறிவியல் எப்படிப் புதுப் புது தாவரங்களை உருவாக்குகின்றார்களோ அக்காலங்களில் இப்படிச் செயல்படுத்தினார்கள்.

ஏனென்றால் குருநாதர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்

 

தாயைப் போல் பிள்ளை… நூலைப் போல் சேலை…! என்கிறார்கள் தாய் வழி தந்தை வழி என்பதெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாம் ரத்தத் தொடர்புடையது… “வம்ச வழி” வந்தது என்கிறார்கள்.

வம்ச வழி என்பதெல்லாம் என்னப்பா…?

ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாமே வம்ச வழியில் வந்தது தான் என்றிட்டால் ஒரு தாய்க்கு ஒரு மகன் பிறக்கின்றான். அடுத்த பிறவியில் அத்தாயே பிறவி எடுத்தாலும் பத்துக் குழந்தை பிறப்பதில்லையா…! வம்ச வழி என்றால் என்னப்பா…?

இப்பிறவியில் பிறந்த எல்லோருமே அவரவர் குடும்பத்திலேயே தான் மறுபிறவியலும் பிறக்கிறார்களா…? இல்லையப்பா…!

இப்பிறவியில் இருந்து மறுபிறவிக்குச் செல்லும் பொழுது இப்பிறவியில் உள்ள ஆசை பாசம் இவைகளை வைத்து மறுபிறவியில்
1.எந்த இடத்தில் பிறந்திட்டால் இந்தப் பிறவியில் விட்ட ஆசைகளை முடித்து விடலாம் என்று தெரிகிறதோ
2.அங்கு தான் பிறக்கின்றது அவ்வாவி மறு ஜென்மத்தில்.

தாயின் வழி என்பதெல்லாம் வளர்க்கும் முறையில் தான் வந்திருக்கின்றது
1.குழந்தைகளுக்கு வம்ச வழியும் இல்லை… வந்த வழியும் இல்லை.
2.வளர்க்கும் முறையில் தான் எண்ணத்தின் எண்ணமாக வந்திருக்கின்றான் ஒவ்வொருவனும்.

ஒரு தாயின் வயிற்றுக் குழந்தைகளும் மனநிலையிலும் குண நிலையிலும் மாறுபட்டுத் தான் இருக்கின்றன. அவரவர்களின் முற்பிறவியின் பயனால் தான் இம் மாறுபாடு நிலை எல்லாம்.

தந்தை மகனுக்கு எழுதி வைக்கும் சொத்தெல்லாம் ஒன்று போல் பகிர்ந்திட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் தான் செல்லுகின்றது. ஒரு மனிதன் அழிக்கின்றான் பல மடங்கும் பெருக்குகின்றான். ஒருவன் அந்தப் பொருளை ஒரே நிலையில் வைத்துள்ளான்.

இதன் பொருள் எல்லாம் முற்பிறவியின் பலனாகும்…! அவன் எடுத்த மூச்சுத் தன்மையினாலும் அவன் எண்ணத்தின் தன்மையினாலும் வந்தது தானப்பா இந்நிலை எல்லாம்.

வளரும் தன்மையிலேயே வடிகால் அமைத்துத் தந்திடலாம். அவ்வண்ணத்தை ஊன்றிக் கொண்டு அவ்வழியில் சென்றிட்டால் உயர்ந்திடலாம் தன் வழியில் செல்பவனுக்கு.

1.அவனவன் எண்ணத்தைப் பொருத்துத் தான் அமைகிறது வாழ்க்கை எல்லாம்
2.தாய் தந்தையரின் வளர்ப்பினிலே வருகின்றது “மனநிலையின்” மாற்றம் எல்லாம்.

பூர்வ புண்ணியப் பலன் உள்ள குழந்தைகளையும் மன நிலையில் மாற்றிடலாம்… எண்ணத்தின் வழியினிலே. தாய் தந்தையரின் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

வளரும் சூழ்நிலையைப் பார்த்திருப்பாய், மண் வாடை நீர் வாடை என்கிறார்கள் அதுவும் உண்மைதானப்பா.

ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்த மனநிலையும் நம் மனநிலையைப் பொறுத்து வரும் மூச்சினால் அவ்வழியில் வளரும் குழந்தைகளின் தன்மை எல்லாம் ஒன்று போல் இருக்குமப்பா.

மண் வாடை எல்லாமே அந்நிலையில் உள்ள நிலையைப் பொறுத்துதானப்பா வருகின்றது. அங்கு வளரும் குழந்தைகளின் எண்ணமும் செயலும் ஊரின் தன்மையும் ஊன்றிப் பார்த்தால் புரிந்திடும் மன நிலைகள்.

பெரும் நகரத்தில் அந்தந்தப் பகுதிகளிலும்… சிறு ஊர்களில் அந்தந்த ஊர்களின் தன்மையிலும்… ஊன்றிப் பார்த்தால் உனக்குள்ளே தெரிந்துவிடும் எல்லாமே.

அவ்விடத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்துதான் மண்வாடையும் வருகின்றது… நீரின் சுவையும் தெரிகின்றது.

ஒரு வீடு ஒரு வீதி ஒரு ஊர் என்று சொல்கின்றோம். ஒரு வீடு என்னும் பொழுது அவ்வீட்டின் தன்மையும் வீதியின் தன்மையும் கலந்திருக்கும். வீதியின் தன்மையிலே ஊரின் தன்மையும் கலந்து விடுகின்றது.

அவ்வூரில் உள்ளவரின் மனநிலையைப் பொறுத்துத்தான் அந்த ஊரில் உள்ள மண்வாடையும் வருகின்றது. அம்மண் வாடையின் ஈர்ப்புத் தன்மையை ஈர்த்துத் தான் அவ்விடத்தில் உள்ள மழையும் காற்றும் வருகின்றது.

அக்காலத்தில் பெரியவர்கள் மழைக்கும் நல்லோருக்கும் தொடர்புபடுத்திச் சொன்னதெல்லாம் இந்த வழியில் தான்… புரிகிறதா…?

மண்வாடையின் தன்மையினால் தான் அங்குள்ள பயிர்களும் வளர்கின்றன பாலகர்களும் வளர்கின்றார்கள். பாலகர்கள் வளர்வது என்பது உருவ அமைப்பைச் சொல்கின்றேன்.

ஒரு ஊரில் பிறக்கும் பிறவி எல்லாம் அந்த ஊரின் தன்மையில் தான் பிறந்திருக்கும்.
1.மன வாடையிலிருந்து மண் வாடை வந்து
2.பெரும் மழையில் செழித்திடும் காய்கனிகளில் இருந்தும் வளரும் பயிரிலிருந்தும்
3.உண்டு வளரும் பாலகர்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்திடுவார்கள்.

இப்பொழுது இக்கலியின் செயற்கை யுகமும் வாழும் வாழ்க்கைக்காக இடம் பெயரும் நிலையும் இந்நிலையில் வளர்ந்த பயிர்களை மறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நிலையும் வந்ததனால் “மாறுபட்டு இருக்கின்றது உலகமே இக்கலியில்…”

இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் என்ற காலத்தில் எல்லாம் ஒரு நிலையில் உள்ளவர்களின் தன்மை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுக்கு ஒன்று ஒத்த அமைப்புகள் இருந்தாலும் “இக்கலியில் தானப்பா… பெரும் செயற்கை யுகம் வந்தது…”

இடத்திற்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபட்ட உருவ ஒற்றுமைகளைப் பார்த்திருக்கின்றாய். இந்நிலை எல்லாம் மண்ணிலும் மழையிலும் உள்ள ஈர்ப்புத் தன்மையினால் வந்ததப்பா.

ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாம் ஒன்றைப் பார்த்து ஒன்றைப் போல ஒன்று இருப்பது எல்லாம் இவ் ஈர்ப்புத்தன்மையினால்… அத்தாயின் அந்த வீட்டின் சுவாச நிலையினால் தான்.

இந்த ஜென்மத்தில் பிறந்த உடல் அடுத்த ஜென்மத்தில் வருவதில்லை. இந்த ஜென்மத்தில் இங்குள்ள மனநிலை மண் நிலை மழை நிலைகளைப் பொறுத்து அத்தாயின் சுவாச நிலை வருகின்றது உடல் அமைப்பு.

1.அவ்வுடலின் ஆவி மட்டும்தான்… முன் ஜென்ம ஆவி.
2.இவ் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்றால் இந்த ஜென்மத்தில் இருந்த உடல் இந்த ஜென்மத்திலேயே அழிகின்றது.

மறு ஜென்மம் எடுக்கும் பொழுது எந்த இடத்தில் பிறக்கின்றோமோ அங்குள்ள சூழ்நிலையை மனநிலை மண் நிலை மழை நிலையைப் பொறுத்துத் தான் “அவ்வுடல் வருகின்றது…” புரிந்ததா பாட நிலை…?

வீட்டில் பூச்சி வருவதெல்லாம் எந்நிலையில்…? அணுவின் அணுக்கள் எல்லாம் வருவது எந்நிநிலையில்…? விட்டில் பூச்சி வருவதெல்லாம் ஊன்றிப் பார்த்தால் தெரிந்துவிடும்.

சோர்வுடன் இந்த மண்ணில் உள்ள அணுக்கள் எல்லாம் காற்றுடன் கலந்து வரும் ஈரப்பசையில் இருந்து… அக்காற்று அம்மண்ணில் மோதும் பொழுது அந்த அணுக்கள் எந்த ஆகாரத்தை எடுத்துச் சுவாசிக்கும் நிலையில் உள்ளதோ… அந்தக் காற்று அதன் மேல் படும் பொழுது அதற்கு உயிர் தன்மை வருகின்றது.
1.அக்காற்றின் அழுத்தம் அந்நிலையில் உள்ளவரை தான் அதன் உயிரும் சுற்றுகின்றது
2.அதன் சுவாச நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்து விட்டால் மடிகின்றது.

ஈசல் வருவதும் இதைப் போலவே…! எறும்புப் புற்றுகள் தோன்றுவதும் இதைப் போலவே. சில நொடிகளில் தோன்றி மறைவதைப் பார்த்திருப்பாய்… சில நாட்களில் வந்து மறைவதைப் பார்த்திருப்பாய்.

அதனுடைய ஆகாரம் கிடைக்கும் வரை தான் அதன் ஜீவன் எல்லாம்.
1.சுவாச நிலையில் தான் அதனுடைய ஆகாரங்கள் கலந்திருக்கும்…
2.சுவாச நிலை மாறுபட்டால் மடிகின்றது.
3.சுவாச நிலை சுவாச நிலை என்கின்றேன்… இவ்வுலகமே சுவாச நிலைதானப்பா.
4.செயற்கை நிலைக்கு நான் எதிரியப்பா
5.கலியுகத்தில் வந்ததெல்லாம் இச்செயற்கை வினையினால் தான்.

இன்றைய பாடங்கள் புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

ஒருவர் கெடுதல் செய்கிறார்… என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

நான் நானாக வேண்டும்

 

நல்ல குணம் கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அது சமயம் ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால்
2.அது நல்ல அறிவை… அந்த மகிழ்ச்சியை… மேலே மூடி விடுகின்றது.

ஏனென்றால் எந்தக் குணத்தைக் கொண்டு எண்ணுகின்றோமோ அது இங்கே ஊடுருவும். அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் வரப்படும் பொழுது முதலில் கண்ணால் தான் அது நமக்குள் பதிவாகின்றது.

ஒருவன் தவறு செய்கின்றான் அதை நுகரும் பொழுது எண்ணம் ஆகின்றது. ஆனால் இங்கே பதிவானது உயிரிலே பட்ட பின் அந்த எண்ணங்கள் தோன்றுகின்றது.

ஆனால் பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது கண்ணுக்கு வருகின்றது எனக்கு நன்மை செய்தான் என்று அந்த மனிதனை எண்ணும் பொழுது கண்ணுக்கு வந்து அந்த மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவன் தவறு செய்திருக்கின்றான் என்று எண்ணினால் கண்ணிலே பார்த்தவுடனே நமக்குள் பதிவான எண்ணங்கள் இவன் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று வெறுப்பான உணர்வுகளை ஊட்டுகின்றது.
1.இதுதான் கண்ணால் பதிவு செய்வதும்
2.பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது எண்ணத்தால் மீண்டும் இயக்குவது
3.எண்ணம் என்பது உணர்வுகள்… உணர்ச்சிகள்… “தூண்டுவது…”

ஆக… புறத்தில் இருப்பதை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது

இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாகாதபடி காலை துருவ தியானத்தில் கொடுக்கும் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் சீராகப் பயன்படுத்திட வேண்டும்.

உடலில் அழுக்குப்பட்டால் குளித்து விடுகின்றோம் துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம்… அது போல் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

ஆன்மாவில் அழுக்கு சேர்ந்து விட்டால் என்ன ஆகும்…?

முழு நிலாவாக பௌர்ணமியாக இருப்பது மற்ற கோள்கள் மறைப்பு ஆக ஆக அது சுருங்கிச் சுருங்கி மிகவும் சிறிதாகி விடுகின்றது. மீண்டும் அந்த நிலை மாறிய பின் தான் வெளிச்சம் வருகின்றது.

இதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு பழி தீர்த்தல் பழி வாங்குதல் போன்ற இத்தகைய உணர்வுகள் வந்துவிட்டால் “நல்ல குணங்கள் அனைத்தும் தேய்பிறையாகி முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது…”

உயிரின் உணர்வுகளில் “கடைசித் தொக்குகள்” உண்டு (முக்கியம்).

ஆரம்பத்தில் எப்படி உயிர் முதலில் புழுவாக உருவானதோ இதைப்போல இந்த உயிரிலே முழுமையாக இருள் சூழ்ந்து விட்டால் விஷம் முழுமையாகி இந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டு… அடுத்து அத்தகைய உடலாகப் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக வளர்ச்சி பெற்றுத் தான் மனிதன் ஆனோம்… மீண்டும் தேய்பிறை ஆகிவிடக்கூடாது.

கார்த்திகேயா…! ஒளியின் உணர்வை அறிந்து கொண்ட பின் அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்து என்றுமே ஏகாந்த நிலை… என்ற பிறவி இல்லா நிலை அடைவதே மனித உடலில் முழுமை பெறுவது.

உயிரால் வளர்க்கப்பட்டது தான்…
1.நான் யார்…? – உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடல்
2.ஆகவே உயிருடன் ஒன்றி இருக்கும் போது நான் என்று வருகின்றது.
3.நான் நானாக வேண்டும்
4.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால் தான் “நான் நானாகின்றேன்…”

உயிர் நம்மை இயக்கும் போது நான் ஆகின்றது நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

இதற்குள் அந்த உணர்வின் ஒளி எவ்வாறோ அதன் ஒளியின் தன்மையாக
1.நமக்குள் ஒளியான உணர்வை வளர்த்தல் வேண்டும்
2.உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக ஒளிச் சரீரமாக வேண்டும்.

செயற்கை யுகம் வந்ததன் காரணம்

 

பதம் என்பது எப்பதமும் இரண்டு வகை உண்டு…
1.நல்லது கெட்டது
2.நல்ல அணு தீய அணு
3.நல் மணம் தீய மணம் என்பதைப் போல்
4.எல்லா வழியிலும் உள்ளதப்பா இரண்டு பதம்.

மாற்று இல்லாமல் எதுவும் இல்லை…!

உலக இயற்கையே மாற்றுடன் தான் கலந்துள்ளது. உயிரைப் பிழைக்க வைக்கவும் மருந்துள்ளது… உயிரை அழிக்கவும் மருந்துள்ளது…! அணுவையும் செய்கின்றான் அழிக்கவும் செய்கின்றான் ஆக்கபூர்வமான உலகத்தில் “ஆக்கலும் அழித்தலும்” தான் இவ்வுலகமே.

நல்லெண்ணம் படைத்து நல் சுவாசம் எடுத்து நல்லதையே செய்கின்றான் நாடு போற்ற. சிறு துளி எண்ணத்தின் கலப்பினால் வருகின்றதப்பா துவேஷிக்கும் தன்மை எல்லாம்.

நுகரும் தன்மையைப் பகர்ந்துள்ளேன் சுவாச நிலை என்று. நுகரும் தன்மை மனிதனுக்கு மேல் மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கின்றதப்பா.

ஒரு நிலையில் அணுவான ஆத்மாவிலும் ஆவியின் தன்மையிலும் நுகரும் தன்மை உள்ளதப்பா. நல் மணம் உள்ள இடத்தில் நல் சுவாசம் இருக்கின்ற போதினிலே நல்ல அணு வந்தடைகின்றது என்று பகர்ந்துள்ளேன்.
1.நல்லணு என்பதெல்லாம் நல்லோரின் ஆசிகள் தானப்பா
2.தீய அணு என்பதெல்லாம் காற்றுடனே கலந்திருக்கும் ஆவிகளின் அணுக்கள் தான்.

நல்லணுவில் வருபவன் எல்லாம் இவ் உடலை விட்டுச் செல்லும் பொழுது மறு ஜென்மம் எடுத்திடாமல்… சூட்சும உலகத்தில் கலந்துவிட்ட தேவர்கள் என்னும் தேவாதி தேவர்கள்தான்.
1.அதில் உள்ளவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும் பல கோடி நற்பயனை அடைந்து விட்ட
2.நல் இதயம் உள்ள நம் போகரின் நிலையில் உள்ளவர்கள் அப்பா.

நல் உணர்வை எடுத்திடு… நல் உணர்வை எடுத்திடு… சுவாச நிலையை மாற்றி விடாதே…! என்ற பொருள் இப்பொழுது புரிந்ததா…? நல் உணர்வை நல் சுவாசத்தை எடுக்கும் பொழுது…
1.நீ எண்ணுபவர்கள் எல்லாம் அணுவின் அணுவாக உன்னுள்ளே வந்து
2.உன் நிலையை உயர்த்துவார்கள்.

மறு பாதியில் தீய அணு என்று செப்பினேன். தீய அணுக்களின் வேலையெல்லாம் பெரும் பேராசைக்காரர்களும் ஆணவக்காரர்களும்… தான் பிறந்த பயனை பாதியிலே முடித்துக் கொண்டவர்களும் (தற்கொலை)… அடித்துக் கொலை செய்யப்பட்டவர்களும் கொலைகாரப் பாவிகளும் (கொலையுண்டவர்கள் – கொலை செய்தவர்கள்) விபத்தினால் ஐயோ என்று அவன் நிலையில் சென்றவர்களும்… இப்படி உலகில் உள்ள ஆவிகள் எல்லாம் இக்காற்றுடன் தான் கலந்துள்ளன அணுக்களாக.

நல்லுணர்வில் உள்ளவர்கள் ஆவிகளை எப்படிப் பார்க்கின்றோமோ அதே நிலையில் இந்த ஆவிகளும் தெரிந்திடும். இவ்வாவிகளின் வேலையெல்லாம் மிகத் துரிதமாகச் செயல்படுவதே…! தன் எண்ணத்தை எவன் உருவில் வந்து முடித்திடலாம் என்ற எண்ணத்துடனே சுற்றுகின்றது.

உன் நிலையில் கோபதாபங்களோ அதிக ஆசைகளோ மனச்சோர்வோ உள்ள பொழுது உன் எண்ணத்தைக் குறுக்கி விடுகின்றாய். அந்நிலையில் உள்ள பொழுது…
1.உன் சுவாச நிலை எடுத்திடும் மூச்செல்லாம் நல் மணம் கலந்திடாமல் பெரும் பாரத்துடனே உள் செல்கின்றது.
2.அந்நிலையில் அத்தீய ஆவிகளுக்கு அண்டிக் கொள்ளும் தன்மை உடனே வந்து விடுகின்றது
3.அதற்காகத்தான் பூஜை அறையில் நல் மணங்கள் உள்ள புஷ்பங்களை சாம்பிராணி கற்பூர வாசனைகளைப் போடுவது.
4.தீய அணுக்கள் வந்திதிடாது… அந்த இடத்திற்கும் அதன் நிலை வர முடியாது.

அதன் நிலை எல்லாம் கெட்ட வாசனை உள்ள இடம் துர்நாற்றம்… துர் மனது உள்ளவர்களையே தான் வந்து அண்டுகின்றது.

“வியாதியஸ்தர்கள் உள்ள வீட்டில் புகை போட்டிடுங்கள்…” என்பதெல்லாம் இதற்காகவே.

அத்தீய அணுக்கள் என்பவை நான் பகர்ந்த துர் ஆவியின் நிலையே… தீய அணுக்கள் எல்லாமே துர் ஆவிகள் நிலை தான்.

1.நம் பெரியோர்கள் வழி வழியாக பல வழிகளை வாழ்க்கையுடன் வடிவமைத்து ஒன்றச் செய்தார்கள்
2.ஆனால் உள் அர்த்தங்களையும் உள்ள நிலைகளையும் மக்களுக்கு புரிந்திடாமல் செய்துவிட்டார்கள்
3.அதனால் வந்தது தானப்பா இச்செயற்கை யுகம் எல்லாம்.

புகை மண்டலம் எழுப்பி… அக்காலத்தில் யாகங்கள் என்ற பெயரால் பெரும் தவசு முனிவர்களும் யோகிகளும் எதற்காகச் செய்தார்களப்பா…?

யாகங்கள் வளர்ப்பதுவே அதில் செலுத்தும் சந்தன மரங்களும் பசுவின் நெய்யும் யாகத்துடன் கலந்து நல் வாசனை பரப்பும் பொழுது
1.அந்த வாசனையை நுகர்ந்திட தீய அணுக்களினால் முடியாது
2.அந்த இடங்களிலே அதனால் இருக்கவும் முடியாது.

இக்காற்று மண்டலம் உள்ள இடத்தில் தான் இவ்வணுக்களின் வேலையெல்லாம். இப் புகை மண்டலம் செல்லும் பொழுது இக்காற்றிலிருந்து அணுக்கள் மேல் நோக்கிச் சென்றுவிடும். அந்நிலையில் அத்தீய அணு இந்நிலைக்குத் திரும்பிடாது. (இவ்வுலகத்திற்கு)

மண்டலம் மாறுபடுகின்றது அத்தீய அணுக்களின் வேலைகளில் யாகம் வளர்த்து அமர்வதன் பொருள் இச்சுவாச நிலைக்குத் தானப்பா. நம் உடலில் நல்ல அணுக்களாக வந்து அண்டிடவே நாம் செய்யும் யாகமெல்லாம்.

யாகத்தின் பொருள் புரிந்ததா…?

உன் வீட்டிலும் தினமும் சாம்பிராணிப் புகை போட்டு அந்த நெருப்பிலேயே மஞ்சள் பசு நெய்யும் கலந்து புகை போட வேண்டும். இதனால் தீய அணுக்கள் அண்டாது.

நல்லதை எண்ணிடும் பொழுது நல்லெண்ணம் உயர்ந்து நிற்க உன் மனதை ஒருநிலைப்படுத்திடு. உன் மனதில் எந்த நிலையிலும் கோபதாபங்கள் வேண்டாம் என்றதும்… பெரும் அவசரத்தை விட்டு விடப்பா என்றதும் இதற்காகவே.

கோபமும் அவசரமும் வந்தவுடன் நீ இழுக்கும் மூச்சினிலே சுவாச நிலை மாறுபடுகின்றது. சுவாச நிலையை மாற்றி விட்டால் தீய அணு வந்து அண்டுகின்றது.
1.நல்லெண்ணத்தை நீ பெற்ற நல்ல ஜெபத்தை எல்லாம் நாசப்படுத்துகிறது இத் தீய அணு.
2.பிற்கு மறு முறையும் ஜெப நிலைக்கு வந்திட நாள் செல்லுகிறது.

பாட நிலைகளை மனதில் ஊற்றிக்கொள் எண்ணத்தினுள்ளே மறு எண்ணத்தைக் கலக்க விடாதே. ஒன்றை நினைத்திருக்கும் பொழுது மறு எண்ணம் வருவதெல்லாம் இவ்வணுக்களின் வேலை தான்.
1.அவ்வணுக்களை அண்ட விடாதே
2.நல்ல அணுக்களைப் பெற்று விடப்பா…!

இன்றையப் பாடம் மிகவும் முக்கியம். இந்நிலையைப் புரிந்து கொண்டால் ஜெப நிலையைக் கூட்டிவிடுவாய்… புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டி.வி. ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து வருவதைத் திருப்பி வைத்து நாம் கேட்கின்றோம்.

அதே போல் தான் ஒரு வியாபாரமே செய்கின்றோம் என்றால் அதிலே நிறையப் பேரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்

1.அந்த ஸ்டேஷனைத் திறந்தால் நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களின் நினைவு தான் அதிகமாக வரும்.
3.பாவிப் பயல்… இந்த மாதிரிச் செய்தான்… அதைச் செய்தான்… இதைச் செய்தான் என்ற ஸ்டேஷனைத் தான் நாம் அடிக்கடி திறந்து வைப்போம்.

அதற்குத் தகுந்தாற்போல் பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது செய்திருந்தால் அவர்கள் மீது அந்த நினைவுகள் வரும்.

அடுத்து நம் சொந்த பந்தங்களில் யாராவது ஒரு வித்தியாசமாகச் செயல்பட்டிருந்தால்… குறைபாடுகள் இருந்தால் “நல்லது செய்தாலும் நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்…” என்று அதைப் பற்றிய சிந்தனைகள் வரும்.

இப்படிக் குறைகளைப் பேச ஆரம்பித்தால் அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறைகளும் வரிசையில் வந்து கொண்டே இருக்கும். நல்லதை நினைக்கவே வராது…!

கடைசியில் குறையைப் பேசிப் பேசி… என்ன உலகம்… போ…! என்ற இந்த எண்ணம்தான் வரும். இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இருந்தால் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே
1.பாருங்கள்… இந்தப் பையன் மோசமானவன்…! என்று சொல்வோம்.
2.நாம் சொன்னதும் அடுத்து இன்னொருவர் ஆரம்பிப்பார்.
3.கடைசி எல்லாவற்றையும் மோசம்… மோசம்… என்ற சொல்லாக வரிசையில் வரும்.
4.இந்த உணவின் தொடர் வரிசை இப்படித்தான் வரும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது நமது உயிர் தான்.

1.தவறு செய்கிறார்கள் என்றால் நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது
2.கண்ணின் கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலில் விளைந்த உணர்வினை இழுத்து நம்மிடம் கொடுக்கின்றது.
4..உயிரிலே பட்ட பின் தவறு செய்கின்றான் என்பதை உணர்த்துகின்றது.

உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?

ஒரு நாடாவில் விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பதிவு செய்கிறோம். பின் அந்த ஊசியின் பக்கம் சென்ற பின் அதை இழுத்துப் பேசுகின்றது.

முன்பெல்லாம் ஊசியில் உராய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது லேசரை வைத்து முன்னாடி ஓட ஓட அதில் இருக்கும் உணர்வுகளை எடுத்து வெளிப்படுத்துகின்றது. உராய்வதில்லை… நாடாக்கள் தேய்வதில்லை. அந்த லேசர் தான் அந்த ஒலி/ஒளி அலைகளை எடுத்துக் கொடுக்கிறது.

இதைப் போன்றுதான் நாம் சுவாசித்த பின்…
1.நம் உயிர் லேசரைப் போன்று இயக்கி அந்த அலைகள் பாய்ந்த பின் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதும் சர்க்குலேஷன் ஆகின்றது,

அப்பொழுது அதனதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மை வீரியம் அடைகின்றது. அது அது அந்த உணர்வுகளை எடுத்துத் தீமையான அணுக்கள் சாப்பிடுகிறது. அந்த வழிகளில் (உடலில்) அது தெம்பாகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதா…?

அந்த நேரத்தில் எந்த நல்லதை எடுத்தாலும் கிடைப்பதில்லை. நல்லது மடங்கப்படும் போது இங்கிருந்து ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.

உடலுக்குள் நல்ல அணுக்கள் இருக்கின்றது. இது அடைபட்ட பின் நல்லது இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது. இப்படி இருந்தால் அதற்குச் சாப்பாடு எப்படிக் கொடுப்பது…?

ஆகவே தான் அதைப் பிளந்து உங்களுக்கு உயர்ந்த சக்தியாகக் கொடுப்பதற்காக ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). சதா அந்த அலைகள் பாய்கிறது. அதை எடுத்து உங்களுக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.

செய்து பாருங்கள்.

மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”

 

1.உருவம். அது ரிக்
2.ஒரு பொருளிலிருந்து மணங்கள் வரும்போது சாம.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது அதர்வண.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது யஜூர்.

ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம…! வேதங்கள் கூறியபடித் தான் நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.

ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால் அதர்வண வேதத்தில் உருவாக்கப்பட்ட சாங்கிய சாஸ்திரங்களைத் தான் நாம் கையாளுகின்றோமே தவிர… ஞானிகள் காட்டியதை நாம் கடைப்பிடிக்கவில்லை.

ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்
1.அதிலிருந்து வெளிப்படக்கூடியது சாம இசையாக மாறுகின்றது… மணங்களாக மாறுகின்றது… குணங்களாக மாறுகின்றது.
2.எந்த மனிதன் அதை நுகர்கின்றானோ அந்த இசையின் தன்மை சாந்த குணம் கொண்டவனை…
3.கோப குணங்கள் அடக்கி விடுகின்றது அதர்வண.
4.நல்ல குணங்களை அடக்கிய பின் யஜுர் கோபத்தை உருவாக்கும் வித்தாகிறது.

அதாவது நல்ல குணத்துடன் ஒரு கோபக்காரரின் உணர்வு சேர்ந்து விட்டால் யஜுர்… நம்முடன் கலந்து அந்த உணர்வின் தன்மை எனக்கு எவன் தீங்கு செய்தானோ அவனை எண்ணச் செய்கின்றது… மீண்டும் அதனுடைய நிலைக்கு…!

எந்த மனித உடலில் இருந்து இந்தத் தீங்கின் தன்மை விளைவித்ததோ அதனின் உணர்வின் வலுவாக அதே எண்ணங்கள் கொண்டால் அடுத்து அந்த உடலுக்குள் சென்று அதை வளர்க்கும்.

ஆனால்
1.இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அது சாம
2.அதை நமக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால் தீமையை அடக்கும் அதர்வண.
3.தீமைகள் அடக்கும் உணர்வுகள் ஒன்றி தனக்குள் முழுமை அடையும் பொழுது யஜுர் (வித்தாகிறது)

மீண்டும் அந்த அருள் மகரிஷிகளை நினைவு கொண்டால் அருள் ஞான உணர்வுகள் விளைந்து… மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் நிலைகளும் பெற்று இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அருள் மகரிஷிகளின் வட்டத்தில் இணைகின்றோம்.

1.அவரின் சார்புடையோர் விண்ணின் ஆற்றலைப் பெருக்கி
2.அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைய வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய அறிவின் ஞானம் நிலைத்திருக்க வேண்டும் என்று
5.எண்ணத்தால் எவர் ஒருவர் செய்கின்றனரோ “உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வழிப்படி அவர்கள் செய்கிறார்” என்று பொருள்.

வேதங்களில் காட்டப்பட்டுள்ள சாரங்களும் இது தான்.

அந்த உயிரான்மா முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது… அடுத்து அதன் வழியிலேயே அவரை பின்பற்றிக் அந்த குடும்பத்தாரும் விண் செல்ல ஏதுவாகின்றது.

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!

 

உண்ணும் உணவில் வருவதல்ல உடலின் ஆரோக்கிய நிலை. எல்லாமே மனநிலையில் இருந்து வருவது தான்.
1.கழிவுப் பொருளை வைத்து வேலை செய்பவனுக்கு… அவன் உடம்பு “ஆரோக்கியமாக இருந்திடப் பார்த்திருப்பாய்…”
2.ஆனால் பரிபக்குவமான உணவை உண்பவனுக்கோ ஆயிரம் வியாதிகள் அவனுக்குள்ளே கலந்திருக்குமப்பா.

நல்லதை மறந்துவிட்டுப் பல நினைவுகள் அவனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதனால் நெஞ்செல்லாம் வேதனை வளர விட்டு இருப்பவன் சுவாச நிலையில் எல்லாமே அண்டிக் கொள்கின்றது.

கழிவு பொருளைக் கையில் எடுப்பவன்
1.அவனைச் சுற்றி இருக்கும் அழுக்கைப் பற்றி எண்ணாதபடி தான் வேலை செய்ததற்குண்டான கூலி பெறுவதையே எண்ணி
2.அந்த நிலையிலேயே உணவை உட்கொள்கின்றான்… தீமையான அந்தப் பொருளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.
3.அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் நினைவு மாறாமல் இருப்பதால் அந்தத் தீது அவனைப் பாதிப்பதில்லை.
4.அவனுடைய எண்ணம் தான் அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மனிதன் எண்ணி எடுக்கும் எண்ணங்களுக்குண்டான பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டாய் அல்லவா..! எண்ணத்தை உயர்த்தி விட்டால் நல் வாழ்க்கை வாழ்ந்திடலாம்.

ஆகவே அவனவன் சுவாச நிலையில் உள்ளது தான் வாழ்க்கை நிலையும் எண்ணமும் எல்லாம்.

சுவாச நிலைக்கும் எண்ணத்திற்கும் பாடங்கள் பல நாள் பகர்ந்து விட்டேன் இனியும் உன் நிலையை ஒரு நிலைப்படுத்திடப் பார்த்திடப்பா.

தியான நிலை… சுவாச நிலை மன நிலைகளைப் பொறுத்தே உள்ளது எந்த நிலை வந்தாலும் மன நிலையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்.
1.அது எப்படி வரும் அந்நிலை…? என்று கேட்பாய்.
2.கலக்கம் வரும் பொழுது நானாகவா அதைச் செய்து கொண்டேன்…! அதற்கு என்ன செய்வது…? என்று கேட்டிடுவாய்.

கதையில் படித்திருப்பாய் ஊரெல்லாம் பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்தான் ஒரு மன்னன் என்று.

எரியும் ஊர் எரிந்து விட்டது அதனுடன் அழுது அவன் என்ன செய்திடுவான்…?
1.மனநிலை ஒரு நிலையில் இருந்திட்டால் ஊர் எரிவதும் தெரியாது.
2.உலகளவு துவேஷம் வந்தாலும் தாங்கிடுமப்பா அந்த மனநிலை.

வரும் துவேஷத்தை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர் துவேஷம்தான் எழும்பி நிற்கும். துவேஷிப்பவனை துவேஷத்தன்மையில் துவேஷிப்பது அல்ல அந்நிலை என்று முதலிலேயே பகர்ந்துள்ளேன்.

நாரதரின் கதையையும் புகட்டி உள்ளேன்..! உன் மனநிலையை மாற்றிடாமல் துவேஷிக்கும் தன்மையை ஏற்றிடாமல் தியான நிலையில் ஒரு நிலைப்படுத்திடப்பா உன் மன நிலையை.
1.அந்நிலையில் உதித்திடும் பல உதயங்கள் உனக்குள்ளே.
2.நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…! புரிகிறதா…!

பெரும் குடிகாரனின் எண்ணமெல்லாம் குடியிலும்… அதை அடைவதற்கான வழியிலும் வந்து கொண்டே இருக்கும். அவ்வெண்ணத்தின் வழியிலே அவனுக்குள் இருக்கும் ஈசனின் சக்தியையே அவனுள்ளேயே அவ்வெண்ணத்திலேயே கொண்டு செல்கின்றான்… அவன் நினைப்பதும் நடக்கின்றது.

அதே வழியில் தான் பெரும் திருடனும் நடக்கின்றான். திருடனின் எண்ணமெல்லாம் எந்நிலையில் பொருளைக் களவாடலாம்…? என்றே எண்ணுகின்றான். அவனுள் இருக்கும் ஈசனும் அவன் வழிக்கே வருகின்றான். ஒவ்வொருவரின் தொழிலிலும் இதே முறைதான்.

1.எல்லோரிடத்திலும் உயிரிலும் கலந்திருக்கின்றான். அவ்வீசன்.
2.அவனவன் எண்ணத்திற்கு அவனவன் வழி செல்கின்றான்…
3.நல்லவனுக்கும் வழி செல்கின்றான் தீயவனுக்கும் வழி செல்கின்றான்.

ஈசன் என்பவர் யார் என்கிறாய்…?

ஈசன் என்பவன் கல்லும் மண்ணும் அல்ல. காலமுடன் கலந்துள்ளான்… காற்றிலும் ஒளியிலும் கலந்துள்ளான். எண்ணும் எண்ணத்தில் கலந்திடுவான் அவ்வீசன்.

1.ஜெப நிலையை எண்ணுபவனுக்கும் ஜெபத்துடன் கலந்திடுவான்.
2.உலகமெல்லாம் சுற்றியுள்ளான்… எடுக்கும் பிறப்பை முடிக்கும் வரை எல்லா எண்ணத்திலும் எல்லா உயிரிலும் கலந்திருப்பான் ஈசன்.

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதன் பொருள் இதுவே…!

ஜெப நிலையில் பாடம் புரிந்து கொண்டு எடுத்த பயனை நல்வழியில் முடித்துக் கொண்டு பிறகு ஏழு ஜென்மங்களின் பாடம் பற்றி முதலிலேயே சொல்லி உள்ளேன்.

அந்நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக்கி நல்லெண்ணம் எண்ணிக் கொண்டு சுவாச நிலையை மாற்றிடாமல் வடிகட்டி வருபவன் தான் பெருநிலை அடைகின்றான்.
1.இவ்வுலக வாழ்க்கையின் கலியின் கடைசிக் காலம் இது.
2.மனித ஜீவனின் கடைசிக் காலமப்பா இது.
3.இப்பயனைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டுமப்பா.

இருந்தென்ன பயன்…? இருக்கும் வரை சம்பாதிக்கலாம்…! நம் இஷ்டத்திற்கு வாழாத வாழ்க்கை நமக்கு எதற்கு…? என்ற வாதங்கள் தான் பலர் மனதில் உள்ளது.

பல ஆண்டுகளாகச் சம்பாதித்து பல நிலையில் இருப்பவர்களுக்கும் ஒரு குண்டைப் போட்டு விட்டால் உலகமே அழிந்திடும் தன்மையில் உள்ளதப்பா.

இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்…
1.நல் சுவாசத்தை எடுங்கள்… நல் உணர்வுடன் இருங்கள்…
2.அணுவென்ன…? அணுகுண்டென்ன…? உலக நிலை மாறினாலும்
3.உன் நிலையை ஒரு நிலைப்படுத்தினால் வந்துவிடலாம் “போகரின் நிலைக்கே…”

பாடங்கள் பகிர்ந்திட்டால் பல கோடி பகர்ந்திடலாம். உலகத்தன்மையில் இருளடையும் தன்மை தான் இனி சில காலத்திற்குள் நடந்திடுமப்பா. ஒளி என்பதும் இல்லை பெரும் காற்றும் இல்லை ஒளியும் காற்றும் இல்லாவிட்டால் நீரும் இல்லை. உலக ஜீவராசிகளும் இல்லை. இந்நிலை வருவதற்கே கலியுகம் என்ற கடைசிக் காலத்தை குறிக்கிறார்கள்.

ஒரு நிலைப்படுத்திடப்பா உன் நிலையை…! புரிகிறதா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த உயர்ந்த சக்திகளின் இயக்கங்களை “அனுபவபூர்வமாக நமக்குள் பார்க்கலாம்…”

தீமை செய்யக் கூடியவர்கள் யாராவது… நமக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட…
1.அது அவர்கள் உடலில்தான் வளரும்… அவர்கள் உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால்
3.அந்த எண்ணம் அவர்களைப் பாதிக்கும்… பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.

இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம்… என்று நினைப்பார்கள். இதை நிச்சயம் அங்கே உணர்த்தும்…!

ஏனென்றால் இந்த உணர்வுகள் போனவுடன் நினைவலைகள் முன்னுக்குப் போகும்… நம்மைப் பற்றிய நினைவுகள் வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்திரவு செய்து விட்டோம் என்ற எண்ணம் வரும்.
2.நிச்சயம் இந்தத் திருப்பம் வரும்.

இதே போன்று குடும்பங்களில் அடிக்கடி சில குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகளுக்குக் காரணம் நாம் அல்ல. அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

அந்த நேரங்களில் எல்லாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.

காரணம் இன்றைக்கு மட்டும் வந்ததல்ல இது. தாய் கருவில் இருக்கும் போதே இந்த வினைகள் தொடர்ந்து வந்தது.

அதே போல் ரோட்டிலே சாதாரணமாகச் சென்றாலும் கூட அங்கே இரண்டு பேர் சண்டையிடுவார்கள்.. ஒருவருக்கொருவர் சாபமிட்டுப் பேசியிருப்பார்கள். சும்மா வேடிக்கையாக நாம் காதிலே கேட்டாலும் கூட அதுவும் நமக்குள் அந்தச் சாபம் பதிவாகி விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்து அது நமக்குள் வரவில்லை.
1.இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் எத்தனையோ விதமாக எத்தனையோ வகைகளில் பதிவாகியிருக்கும்.
2.அது எல்லாம் மிக சக்தி வாய்ந்தது.

எப்படி இருந்தாலும் உதாரணமாக ஒரு கேமராவில் படம் பிடிக்கிறோம் என்றால் குறுக்கே யாராவது வந்தால் படத்தில் அதுவும் அதில் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும். எடுத்த படமும் ஆடி இருக்கும் (BLURRED).

கேசட்டில் ஒரு இசையைப் பதிவு செய்கிறோம் என்றாலும் இடையில் யாராவது சத்தம் போட்டால் அதுவும் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும்.

இதே மாதிரித் தான் நம் உடலில் ஊழ்வினை என்ற நிலைகள் கொண்டு எத்தனையோ எண்ணங்கள் அதனுடன் சேர்ந்து சேர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது குறுக்கே பதிவான எண்ணங்களும் ஊடுருவி நமக்குத் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாகவும் வந்து சேரும்.

ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் சாபமிட்டுப் பேசியதும் இதிலே சேர்த்து (JOINED) இரண்டும் இணைந்து விடும்.

எப்படி எல்லாம் கெட்டுப் போக வேண்டும் நினைத்துச் சாபமிட்டார்களோ அந்த வேலையெல்லாம் நமக்குள்ளும் நடக்கும்.

1.இது எல்லாம் ஒரு உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது
2.அந்த மணம் வந்து உயிரில் பட்டு அதற்குத் தக்க மணமாகி “நமக்கே எதிரியாக வரும்…!”

இதை எல்லாம் துடைப்பது யார்…?

காரணம் இயற்கையின் நிலைகள் வளர்ச்சி அடைந்தது பலராம். பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக அந்த எண்ணங்கள் இயக்குவதை நமக்கு உணர்த்துகின்றது.

அதிலே வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் நரசிம்மா…! எப்பொழுது தீமை என்று அங்கே உணர்கிறோமோ… அது நம்து உடலுக்குள் போகாதபடி அங்கேயே பிளக்க வேண்டும்.

பிளக்க வேண்டுமென்றால் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். தீமையான உணர்வுகள் புகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைத்தான் ஆத்ம சுத்தி என்று சொல்வது.

காவியத் தொகுப்புகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்தாலே போதும். பின் தன்னிச்சையாக வேலை செய்யும்.

முந்திய பழக்கத்தில் எல்லாம்… யாராவது சொன்னால் அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம். ஆனால் இப்பொழுது
1.ஆத்ம சுத்தி செய்து வலுவாக்கிக் கொண்ட பின்
2.ஏதாவது இடைவெளியில் வந்து தடை செய்தாலும் கூட அதைக் கவனித்து மாற்ற முடியும்.

தீமை செய்யும் உணர்வுகள் குறுக்கிட்டால்…
1.உடனே அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும்
2.ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வுகள் எல்லாம்
3.நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றும்.

விஷக் கதிரியக்கங்கள் பரவினால் “நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்”

 

இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். “எந்த நிலையிலும் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்….” காரணம்… தன் நாட்டைக் காக்கக் கடும் விஷமான குண்டுகளைச் சேமிப்புக் கிடங்குகளில் வைத்துள்ளனர்.

உலகம் முழுவதற்கும் சரி… நம் நாட்டிலும் சரி… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அந்த அணுக்கதிரியக்கங்களைப் பரிசோதனை என்ற பெயரில் வெடித்துப் பார்த்து விண்ணுலகிலும் பரவச் செய்து விட்டார்கள்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்கள் அதைக் கவர்ந்து எடுத்து அதிலேயும் கலவையாகி வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் சூரியன் அருகிலே சென்ற பின் மோதி விஷத்தைப் பிரிக்கும்… இருந்தாலும் அந்த வலுவை சூரியன் சிறுகச் சிறுக இழந்து கொண்டுள்ளது.

ஒரு அணுகுண்டை வெடிக்கப்படும் பொழுது எப்படி அதனின் வேகத் துடிப்பு கொண்டு மற்றவைகளைக் கருக்குகின்றதோ இதைப் போல வான் வீதியில் பெரும் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது.
1.அப்படிப்பட்ட மாற்றங்கள் ஆனால் நம் உயிரின் துடிப்புகள் அனைத்தும் துரித கதியாகி உடல்கள் அனைத்துமே கருகும் நிலையாகிவிடும்…
2.விஷத் தன்மைகள் அதிகரித்து ஜீவனற்ற (பல்புகள் பியூசாவது போல்) நிலையாகிவிடும்

உதாரணமாக ஒரு டைனமோவை (DYNAMO–GENERATOR) சுழலச் செய்யும் பொழுது… அது வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகச் சுற்றினால் மின் உற்பத்தி அதிகமாக ஆகின்றது.

ஆனால் முதலில் சீராக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விளக்குகளோ அல்லது மற்ற சாதனங்களோ… “மின் உற்பத்தி அதிகமாகும் பொழுது அவைகள் பியூஸ் ஆகி விடுகின்றது…!”

அதைப் போல தான் சூரியனும் தனக்குள் கவருவதைத் தனக்குள் உருப்பெற்ற பாதரசத்தால் மோதும் நிலைகள் கொண்டு சீரான கரண்டை உற்பத்தி செய்கின்றது.

ஆனால் அதே சமயம்
1.விஞ்ஞானத்தால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் தாக்கப்படும் பொழுது
2.பளீர்…ர்ர்… என்று மின்னணுவின் சக்திகள் (FLARE) அதிகமாகத் தோன்றும்.
3அதாவது மேலே முதலில் சொன்ன மற்ற நிலைகள் சூரியனுக்குள் மோதப்படும் பொழுது
4.விஷக் கதிரியக்கங்களை வடிகட்ட முடியாதபடி நெருப்பின் குழம்புகளாக அவை விரிவடைவதைப் பார்க்கலாம்.

இப்படித் தோன்றியது நம் பூமியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது பல பல மாற்றங்கள் ஆகிவிடும். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரணமாக இப்போது நமது உயிரின் துடிப்பு சீராக இருக்கின்றது அந்தத் துடிப்பின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அதன் அதன் உணர்வுகளைச் சேர்க்கின்றது.

ஒரு மோட்டாரில் காயில்களைச் (COPPER COIL) சுற்றப்பட்டு அதற்கொப்ப மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தந்த சக்திக்குகந்தபடி மோட்டார்கள் சுழற்சி அடைகின்றது.

அதற்குண்டான காந்த சக்தியும் (MAGNET) அதற்குண்டான வயரும் (WIRE) அதனுடன் இணைக்கப்படும் பொழுது அவை அதனதன் சுழற்சியாக சீராக இயக்குகின்றது.

இதைப் போன்று
1.நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும்
2.தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உணர்வு கொண்டு மீட்டிடும் உணர்வுகளை எடுத்து எடுத்து
3.அந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் வெங்காயச் சருகு போன்று ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுடன் ஒன்று கலந்து
4.இவை அனைத்தும் உடலில் அணுக்களின் தன்மை பெருகி பரிணாம வளர்ச்சியில்
5.வீரியத்தன்மை கொள்ளும் அணுவின் அடைந்து… உறுப்புகள் உருவாகி மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கும் வேதனையான உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி விட்டால்… மீண்டும் மீண்டும் இந்த உணர்வின் தன்மை நுகரும் தன்மை வந்தால்… அந்த நுகரும் ஆற்றல் நமக்குள் சென்று மனித உடலை உருவாக்கிய அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

நமக்குள் சிறு சிறு திரைகளாக (சித்திரை) குறைகள் வரினும் அந்தத் திரைகளை நீக்கி விட்டு
1.அருள் ஒளிச் சுடராக அடைந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.
2.அந்த இருளை மாய்த்தல் வேண்டும்.

நாம் அனைவரும் நல்லவர்களே…! ஆனால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை மூடி மறைத்து விட்டால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் தன்மை கூடிவிட்டால் நம்மை அறியாமலே அது நம்மைத் தவறு செய்ய வைத்து விடுகின்றது. அதன் வழி நமக்கு நாமே தண்டனை கொடுத்தது போன்றும் ஆகிவிடுகிறது.

தற்கொலை போன்ற உணர்வின் இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. நாம் நுகர்ந்தது எதுவோ உயிர் அதை இயக்கி விடுகின்றது. இதைப் போன்று நம்மை அறியாது சூழும் தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் நாம் பல இன்னல்கள் பட்டு ஒன்றுக்கொன்று இரையாகி… அந்த உணர்வின் தன்மை தனக்குள் இரையாக்கி…
1.வலிமையான உடலுக்குள் புகுந்து அதனின் வலுவை எடுத்து
2.அடுத்த உடலாக மாற்றிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இருந்தாலும்… இந்த உடலில் நாம் வாழும் காலம் மிக மிகக் குறுகிய காலம்.
1.அந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்
2.மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை அடைதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றி… வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…?

 

சுவாச நிலையின் பாடத்தைப் பல நாளாகப் பகர்ந்து கொண்டே வருகின்றேன். சுவாச நிலை என்ற பொருள் உன் நிலைக்குக் கடுகளவு தான் வந்துள்ளது… உன் வழியிலும் கடுகளவு தான் ஏற்றுக் கொண்டுள்ளாய்.

சுவாச நிலை என்பதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை தானப்பா. கஷ்ட நஷ்டங்கள் கலந்ததுவே வாழ்க்கை.

காலமெல்லாம் தவமிருந்தாலும்…
1.கஷ்டம் வரும் பொழுது தன் மனநிலையை அதனுள் ஐக்கியப்படுத்துபவனுக்கு அதே எண்ணம் தான் எச்சுவாசத்திலும் கலந்துவிடும்.
2.அவ்வெண்ணத்தையே சுவாசிப்பதால் சுற்றிச் சுற்றி அவ்வெண்ணமே தான் மனதில் ஒரு நிலைப்படுகின்றது
3.அந்நிலைக்கு வருபவன் எவ்வெண்ணத்தையும் மறக்கின்றான்… தன் நிலை உணர்வதில்லை.
4.முதலில் வந்த அந்த நிலையையே எண்ணிக் கொண்டுள்ளான்.
5.அதனால் வருவது தான் சோர்வும் சோகையும் எல்லாமே…!

சோர்வான மனமுள்ளவனுக்குக் கோப நிலையும் அதிகரிக்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டால் உடல் நிலையும் மாறிவிடுகிறதப்பா.

இந்நிலையை மாற்ற…
1.கஷ்டம் வரும் பொழுது நல் நிலையை மனதில் எண்ணி
2.அந்தக் கஷ்டத்தை போக்கிட என்ன செய்யலாம்…? என்ற “உதயம்” வருவதற்குச் சிறிது நேரம் தியானத்தில் இருந்திடப்பா.
3.அந்நிலையில் அவன் அருள்வான் பல வழி முறைகளை.

மனதிற்குள் கஷ்டத்தை அடக்கிவிடாதே… ஒதுக்கிடப்பா மனதில் இருந்து கஷ்டங்களை எல்லாம். இது எப்படி சாத்தியமாகும்…? என்று நியாயம் பேசிடுவாய்…! சத்திய நியாயத்தையும் சகலத்தையும் பார்த்திடப்பா.

1.அந்தந்த நேரத்தில் எல்லாம் அவன் வருவான் உன்னுள்ளே… வந்து உன்னை வழி நடத்துவான்.
2.அவன் வழி நடத்திவிட்டால் உன் சுவாச நிலையும் உடல் நிலையும் மாறாதப்பா… நல் சுவாசத்தை எடுப்பதுதான் சரியான வாழ்க்கை முறை.

கலங்கும் நெஞ்சம் இருந்திட்டால் எல்லாமே கலக்கம் தான். அதனால் உடல் நிலையும் மனநிலையும் பாதிப்படையுமப்பா.

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…? கலங்குகின்றாய்…! தடங்கல்களை எண்ணி என்றும் வருத்தப்படலாகாதப்பா. அதுவும் நன்மைக்கே என்ற எண்ணம் தான் வளர்ந்திட வேண்டுமப்பா உன் மனதில்.

1.வாழும் வாழ்க்கை உனதல்ல…!
2.அவன் இட்ட பிச்சை தான் உன்னுடைய வாழ்க்கை. அவன் அருள்வான் எல்லாமே.
3.மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதற்குத்தானப்பா… எல்லாம் நன்மைக்கே…!

(இரு நிலையான) ஒளியும் இருளும் ஒன்று போல் தான் மாறி மாறி சுழன்று வருகிறது ஆனால் இருளான நிலைகளை உனக்குள் மாற்றிடாமல் உன்னுள்ளே ஜோதி நிலை பெற வேண்டுமப்பா.

நீ விட்ட கடனை முடிக்கத்தான் வந்துள்ளேன். வழி அமைத்ததெல்லாம் அவன் செயல்…! “ஆண்டிடுவான் அவனே உன்னையும்…” என்று எண்ணிவிடப்பா.

இந்த மனநிலையை மாற்றிடாமல்… அமைதி கொண்டு நல் சுவாசங்களை எடுத்து… நல் எண்ணங்களை உனக்குள் வளர்த்து உயர்ந்த உணர்வைப் பெற்றிடுவாய்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.

சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.

நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.

வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!

விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.

அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.

கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.

ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு கொண்டு அது நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!

நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!

அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.

தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்… (வித்து)
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.

“துருவன் பெற்ற” மகா சக்திகளை நாம் பெற வேண்டும்

 

சில காடுகளில் யானை வருகிறது என்றால் தங்களைக் காத்துக் கொள்ள “புலையர்கள்” என்று சொல்பவர்கள் வாயிலே பச்சிலைகளை மென்று ஊதுவார்கள்.

குருநாதர் என்னைப் (ஞானகுரு) பண்ணாரிக்குச் சென்று அங்கே ஆறு மாதம் இருக்கும்படி சொன்னார். அந்தக் காட்டுப் பகுதிகளில் செல்லப்படும் பொழுது யானைகள் வரும்.

நான் சென்று கொண்டிருக்கும் பொழுது என் மணத்தை நுகர்ந்தறிந்து யானை அங்கே வருகின்றது. அப்போது அங்கே என் அருகிலிருந்தவர் “யானை வருகிறது… விலகிச் சென்று விடுங்கள்…! என்று சொன்னார்.

அட… நீ இங்கே தானே இருக்கின்றாய் அப்பா…! என்று கேட்டேன்.

இங்கே பாருங்கள்…! பச்சிலைகளை வாயில் வைத்திருக்கின்றேன் மென்று ஊதுகின்றேன்…! இந்த வாசனையைக் கண்டபின்
1.யானைகள் வெகு தூரத்திலிருக்கும் போதே அதை நுகர்ந்து பார்த்து
2.இந்தப் பக்கம் வராது வேறு ஒரு பக்கம் சென்றுவிடும் என்று சொல்கிறார்..

இப்போது நாங்கள் இங்கே இருப்பதால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள் இல்லையென்றால் யானை இந்தப் பக்கமாகத் தான் வரும். யானை அந்த பக்கம் செல்கிறது பாருங்கள்…! என்றார். இது நடந்த நிகழ்ச்சி…!

இதை அறியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத் தான் குருநாதர் பண்ணாரி காட்டிற்குள் செல்ல வேண்டும் என்று அனுப்பினார்.

இதற்கு முன்னாடி… மச்சம் எடுப்பதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அனுப்பும் பொழுது
1.யானையிடமிருந்து தப்பிக் கொள்ள
2.யானையின் மணத்தை நீ எவ்வாறு நுகர வேண்டும்…? என்று கற்றுக் கொடுத்தார்.

ஆனால் பண்ணாரி பக்கம் செல்லும் பொழுது பச்சிலைகளை அந்த புலையர்கள் நுகர்ந்து அந்த மணத்தை வெளிவிடும் பொழுது யானைகள் ஒதுங்கிச் செல்வதைக் காண முடிந்தது.

ஏனென்றால் அந்தப் பக்கம் இருக்கும் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் வரும்.

இது தெரியாதபடி நான் சென்று விட்டேன். தெரியாது என்றாலும் பொழுது குருநாதர் போகச் சொல்லும் போது அந்தப் பாதையில் நான் போய்த் தானே ஆக வேண்டும்.

இதைப் போன்று தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்… அவன் குழந்தையாகப் பிறந்த பின்பு
1.அவனைக் காட்டுப்பகுதியில் கையிலே தூக்கிச் சென்றால்
2.மற்ற காட்டு விலங்குகள் இவனைக் கண்டு அஞ்சுகின்றது.

சிறு குழந்தையாக இருக்கும் போதே அவன் வளர வளர அவன் உடலில் இருந்து அத்தகைய ஆற்றல் வெளிப்படுகின்றது. இவன் போகும் பக்கம் எல்லாம் மிருகங்கள் விலகுகின்றது.

இவன் பின்னாடி மக்கள் சென்றால் அவர்களுக்கு அது பாதுகாப்பாகின்றது. ஐந்து வயது ஆகும் பொழுது காட்டு அரசன் என்று பெயர் வைக்கின்றார்கள்.

அவன் மற்ற மணங்களை நுகர்ந்தறியும் பொழுது பல பல பொருள்களை அறிந்து இயக்கத்தின் தன்மையை… “தாவர இனத்தின் சக்திகளை” அறிகின்றான்.

இப்படி அறிந்துணரும் அவன் நாளடைவில் அந்தத் தாவர இனங்களுக்கு “எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?” என்று
1.வானை நோக்கி உற்றுப் பார்க்கின்றான்.
2.அப்போது துருவப் பகுதியிலிருந்து வரும் ஆற்றலை அவன் நுகர்கின்றான் அறிகின்றான்.
3.விஷத்தை வெல்லும் சக்தியாக அவனுக்குள் வருகிறது.
4.அந்தச் சக்தியால் விஷம் கொண்ட பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகளையும் அந்த நட்சத்திரங்களையும் இவன் காணுகின்றான்.

ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதும் பொழுது தான் பொறிகள் கிளம்பி மின்னலாகப் பாய்கின்றது…! மின்னல் தாக்கிப் பல வகைகளிலும் பூமிக்கு அடியில் கலவை ஆகிறது.

இதையெல்லாம் அறிகின்றான் அகஸ்தியன் துருவனாகும் போது.

துருவப் பகுதி வழியாக வருவதை அவன் நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கும் நிலையும்
1.மின்னல் எப்படி ஒளிக் கற்றைகளாக மாறுகின்றதோ அதைப் போன்று
2.இவன் உடலில் அந்த மின்னலையே (அது தாக்கிடாதபடி) “ஒளிக் கதிராக மாற்றும் அணுக்களாக” இவன் உடலுக்குள் அது மாறுகின்றது.

அதனால் தான் ஐந்து வயதில் மகா சக்தி பெற்றான் என்று சொல்வார்கள்.

காட்டுக்குள் எல்லா மிருகங்களையும் அவன் ஆட்சி புரிந்தவன் என்றும்… அதனால் அன்று காடுகளில் வாழ்ந்த மக்கள் இவன் செயலைக் கண்டு “அரசன்” என்று இவனை மதிக்கத் தொடங்கினார்கள்.

துருவன் அவனுடைய ஐந்து வயதில் பெற்ற
1.அந்தச் சக்திகள் அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் ஆழமாக பதிவு செய்கின்றேன்… என் குரு காட்டிய அருள் வழிப்படி…!

மனதை அடக்க… முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்…!

 

விரதம் என்ற எண்ணம் உனக்கு வேண்டாம்… நீ விரதமிருந்து என்னையும் உபவாசம் இருக்க வைத்து விட்டாயப்பா.

மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் மனித உடலுக்கும் பெரும் மாற்றங்கள்… வித்தியாசம் உண்டப்பா.
1.மனித உடலை… மனித மனதை அடக்கிடலாம்…! மனிதனின் ஆசையையும் அடக்கிடலாம்
2.மிருகத்தன்மைக்கு அந்த நிலை இல்லையப்பா..!

மற்ற ஜீவராசிகளுக்கு அதனுடைய ஆகாரத்தை எந்நிலையிலும்… அதைப் புசித்திடத் தான் அதன் மனம் உள்ளது… ஒரு போதும் தன் பசியை அவைகளால் அடக்க முடியாதப்பா…!

மிருகங்கள் பறவைகள் ஊரும் ஜெந்துக்கள் மரம் செடி கொடி எல்லாவற்றுக்கும் “ஒரே குறி” தன் ஆகாரத்தை எண்ணித்தான் எண்ணமுண்டப்பா. எல்லா ஜீவராசிகளுக்கும் அவ்வெண்ணத்தில் தான்… மனித எண்ணமும் மற்ற ஜீவராசிகளின் எண்ணமும் மாறுபடுகின்றது.
1.மனித எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஓங்கச் செய்ய முடியும்
2.மற்ற ஜீவராசிகளின் எண்ணத்தில் அந்நிலை இல்லையப்பா.

ஜனனம் எடுப்பதுவே மனித உடலில் உள்ள ஆசைகள் முடியாமல் (நிறைவேறாது) வருவதால் தான். மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…? என்று முதல் பாடத்திலேயே சொல்லி விட்டேன்.

காட்சி:- ஆகாரம் சாப்பிடுதல்…! உன் பூஜையில் ஆகாரம் வைக்காவிட்டாலும் நான் புசிக்கும் ஆகாரத்தைப் பார்த்தாய் அல்லவா… எப்படிப் புசித்தேன்…! என்ற எண்ணம் உனக்குள்ளே.

தேவர்களின் நிலை எல்லாம் இப்படித்தான். தேவனுக்குப் பிறகு பிறந்தவன் தான் மனிதன். மனிதனும் தேவனாகலாம்.
1.மனித மனத்தை அடக்க…
2.முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்.

பிறந்தேன் வளர்ந்தேன் புசிப்பதில் என்ன தவறு…? எனக்கு வேண்டியதை நான் புசிக்கிறேன்… இருக்கும் வரை அனுபவிக்கலாம்… எதற்கு இந்த உணவுக் கட்டுப்பாடு…? என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே.

இருக்கும் வரை தான் பசிக்க வேண்டும் என்பதல்ல. உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும் ஆகாரத்தைப் புசித்து விடலாம். ஆகாரம் உட்கொள்ளாமல் ஆண்டவனாலும் இருக்க முடியாதப்பா.

உன் ஆகாரம் எங்கிருந்தப்பா வருகின்றது…?

அது ஈசன் அருளால் வந்ததுதானப்பா…! மழையும் ஒளியும் கலந்தது தானப்பா அது. ஆகாரத்தை ஒளியிலிருந்தும் பெறலாம்… காற்றிலிருந்தும் தண்ணீரில் இருந்தும் பெறலாம்…!

ஒளியும் காற்றும் தண்ணீரும் இல்லாவிட்டால் “எவையும் ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது…!” ஆகாரம் இல்லாவிட்டால் இந்த உடல் அழிந்துவிடும்.

ஆனால் ஆகாரம் புசித்திடாமல் வாழ்ந்திடலாம் பல காலங்கள்…! எப்படி…?
1.மனநிலையை ஒருநிலைப்படுத்தித் தியான நிலையில் அமர்ந்தவனுக்கு
2.அவ் ஈசனே அருள்வான் காற்றிலும் ஒளியிலும் உள்ள ஆகாரத்தைக் கொடுத்து.

காற்றிலே கலந்துள்ளதப்பா தண்ணீரும்… நீ நினைக்கின்றாய் அது வெறும் காற்று என்று…!
1.காற்றுடன் தண்ணீரும் கலந்தே இருக்கின்றதப்பா
2.காற்றுடன் ஈரப்பசை இல்லாவிட்டால் ஈர்ப்பு சக்தியே இல்லையப்பா.

ஜெப நிலையில் உள்ளவனுக்குக் காற்றுடனே கலந்து வருமப்பா அந்த ஆகாரங்கள். காற்றுடன் கலந்துள்ள பல கோடி அணுக்களில் பிரித்து எடுத்திடுவானப்பா தனக்கு வேண்டிய ஆகாரத்தை “ஜெப நிலை உள்ளவன்…”

அமுது என்பதையும் எடுத்து விடலாம் அமுது இசையும் எடுத்திடலாம்… அந்தக் காற்றிலிருந்து.

நாவின் சுவையை அடக்கிடப்பா என்பதல்ல என் கருத்து.

ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளவருக்குப் பகர்கின்றேன். பசி தாகம் எல்லாம் பரந்தாமனை எண்ணிவிட்டால் பறந்துவிடும் என்போர் முதியோர். அந்நிலை புரிந்ததாப்பா…?

நாவின் சுவையை அடக்கி விட்டால் எண்ணத்தின் தன்மையும் அடக்கிடலாம். உடல் பசி என்பதெல்லாம் அந்த எண்ணப் பசி தான்…
1.எண்ணப் பசியை அடக்கிட… நாவின் பசியை அடக்கிடு.
2.நாவின் பசியை அடக்கிட… எண்ணத்தை ஒருநிலைப்படுத்திடு.
3.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி விட்டால் எல்லாப் பசியையும் அடக்கி விடலாம்.
4.எண்ணப் பசியில் “எண்ணமெல்லாம் ஈசனின் எண்ணமாகத்தான்” இருந்திட வேண்டுமப்பா.

ஆகவே விரதம் என்பதெல்லாம் ஜெப நிலைக்கு வந்தவனுக்கு வேண்டாமப்பா…!

விருந்தோம்பலையும் உண்டிடலாம் வடிகஞ்சியையும் குடித்திடலாம்…! சொல்வது புரிந்ததா…? ஜெப நிலையிலிருந்து ஜெப அருளைப் பெற்றவனுக்குத் தான் இந்நிலையப்பா.

அன்ன ஆகாரமெல்லாம் ஆண்டவனே அளித்திடுவான். காற்றுடன் எடுத்துவிடலாம் வேண்டிய ஆகாரத்தை… புரிந்து கொண்டாயா…?

பூரிக்கிழங்கைப் புசித்த எண்ணம் வந்துவிட்டால் புளித்த ஏப்பம் வந்துவிடும். புசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்திட்டால் பசி பசி என்ற எண்ணம் தான் எண்ணமெல்லாம் சுற்றுமப்பா…!

காட்சி:- காபியை ஆற்றுதல். இப்போது உண்ட எண்ணம் (வாசனை) வருகிறதா…? காற்றிலிருந்தே சகலத்தையும் பெற்றிடலாம்.

ஜீவ ஜெந்துகளின் நிலை எல்லாம் இக்காற்றுடன் உள்ளதப்பா. காற்றில் உள்ள அணுக்கள் தான் கால வெள்ளத்தைச் சுற்றுகிறது.

காற்றில் உள்ள அணுவைத் தான் சுவாச நிலையில் எடுக்கின்றாய். நல் அணுவை எடுத்திட்டால் சுவாச நிலைகள் மாறாதப்பா. “சுவாச நிலை சுவாச நிலை” என்பதெல்லாம் என்ன…? என்று புரிந்து விட்டாய் அல்லவா.

மனித எண்ணத்தில் வாழ்க்கையில் நடப்பவற்றை
1.நல்லுணர்வில் ஊன்றிப் பார்த்து
2.உன் நிலையை மாற்றிடாமல் நல் உணர்வை எடுத்திட வேண்டும்.

ஒருவர் செய்யும் தீங்கை நாம் பார்த்துக் கொண்டே எப்படிச் சும்மா இருப்பது…? என்ற எண்ணம் வந்திடுமப்பா. அவனைப் பார்த்துக் கொள்வான் “ஆண்டவன்” என்ற எண்ணம் வந்து விட்டால் உன் சுவாச நிலை மாறாதப்பா…!

அவனை எப்படி விடுவது…? அவனை ஒரு கை பார்க்கின்றேன்.
1.ஆண்டவா…! பார்த்தாயா… அவன் இப்படியெல்லாம் செய்கின்றான் அவனை அழித்துவிடு…!
2.அவனுக்கு என்ன இடைஞ்சல் செய்யலாம்…? என்று என்று எண்ணுவதல்ல ஆண்டவனே பார்த்துக்கொள்வான் என்பது.

அவன் செய்த நிலையை மனதிலே நிலை நிறுத்தி
1.எவ்வழியிலும் நம் மனநிலையை மாற்றிடாமல்
2.அவன் செயலை எப்படி அடக்கிடலாம் என்ற எண்ணம் உதயம் வேண்டும்.

எண்ணும் பொழுது அவ்வாண்டவன் எண்ணத்தில் நிலை நிறுத்தி மனநிலையை ஒருநிலைப்படுத்திக் கோபதாபங்களை மனதினிலே ஊன்றிடாமல் பரிபக்குவ நிலையில் மனதினில் நிலை நிறுத்திக் களைந்திட வேண்டுமப்பா – அந்நிலையை.

சொல்லும் பாடம் புரிந்ததா…?

துவேஷத்தன்மை உள்ளவன் எல்லாம் துவேஷிக்கட்டும்… நமக்கென்ன…? என்ற எண்ணம் உள்ளவனுக்கும்… துவேஷக்காரனின் எண்ணத்திற்கும் ஒரு நிலைதானப்பா…!

துவேஷிப்பவனை நல்நிலையில் புரிய வைத்து நல்வழிக்கு நடத்திட வேண்டுமப்பா…! பிறப்பிலே பிறப்பதல்ல இக்குணங்கள்.. “வளரும் வளர்ப்பிலும்… முன் ஜென்மப் பயனிலும்” வருவதப்பா இந்நிலைகள் எல்லாம்.

இந்நிலையில் இருந்து மீள்பவனுக்கு ஒரே நிலை “சுவாச நிலைதானப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.

ஏனென்றால்… அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் என்னைக் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் குருநாதர்.

தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்… அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.

அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்… பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.

மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.

பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா… தவறா…? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே…! என்று சொல்லி விட்டார்.

அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.

ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?

இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த “உடல் இச்சைக்கு…” என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்

ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்

முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.

ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.

நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!

நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.

ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.

நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.

அதையே தான் நீங்களும் எண்ண வேண்டும்…!

“நமது பற்று” என்றுமே மகரிஷிகளின் பால் இருத்தல் வேண்டும்

 

எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

கஷ்டம் என்று கேட்டாலும் அல்லது பார்த்தாலும் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்மை நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது நமக்குள் தீமை விளைவிக்கும் அணுக்கள் வளர்ச்சி பெறாது தடுக்க முடிகின்றது
2.நமக்குள்ளும் அந்தக் கஷ்டங்களைக் குறைத்திட முடியும்.

அடிக்கடி அடிக்கடி துருவ நட்சத்திரத்தினை எண்ணி
1.அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் மற்றதை எல்லாம் பற்றற்றதாக மாற்றிடும் ஒரு பழக்கம் வந்து விட்டால்
3.உடலை விட்டு அகலும் நமது உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்
4.மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்.

அந்த நிலை பெற ஒவ்வொருவரும் மறவாது அவரவர் தாய் தந்தை உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்… நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிக்க வேண்டும்… நல் வழியினை நமக்கு முதலில் போதித்த குருவாகவும் மதித்தல் வேண்டும்.

மனிதனாகப் பிறந்த நாம் இதை மறந்து விடக்கூடாது.

நமது உயிரும் கடவுளாகின்றது நமது எண்ணங்களும் தெய்வமாகின்றது நமது நல்ல சொல்களும் குருவாகின்றது.

ஆனால் தீமை என்று சொன்னால் அது தீமை விளைவிக்கும் குருவாகவே மாறி விடுகின்றது. தீமையை எண்ணும் போது தீமை செய்யும் தெய்வமாக நமக்குள் உள் நின்றே இயக்கும்.

நாம் எண்ணியதை உருவாக்கும் நிலைபெற்றது நமது உயிர்
1.ஆகவே நாம் எண்ண வேண்டியது எது…?
2.நமக்குள் உருவாக்க வேண்டியது எது…? என்று
3.மனிதன் ஆன பின் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கார்ணம்… பல கோடிச் சரீரங்களில் துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துத் தன்னைக் காத்திடும் வலுக் கொண்ட உணர்வை… அந்த்த் தப்பித்துச் செல்லும் உணர்வை எடுக்கும் பொழுது அதனின் வலிமை பெற்றுத் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.

அப்படி நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த “உயிரை” நாம் மதித்தல் வேண்டும். உயிரைக் கடவுளாக மதித்து அந்த உணர்வால் ரூபம் பெற்ற உடலையும் சிவமாக மதித்தல் வேண்டும்.

நாம் எண்ணிய குணங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் சக்தியாக தீமைகள் சேராத வண்ணம் தடுக்கும் அந்த ஆறாவது ஆறறிவின் தன்மையை நாம் போற்றித் துதித்தல் வேண்டும்.

இதை இழந்துவிட்டால் மனிதன் அல்லாத உருவாகத்தான் செல்ல வேண்டி வரும். ஆகவே நாம் ஆறாவது அறிவைப் போற்றிக் காத்தல் வேண்டும்.

1.ஆறாவது அறிவு எத்தகைய தீமைகளையும் அகற்றும் வல்லமை பெற்றது… நல்ல சிந்தனையும் ஞானமும் கொடுக்கின்றது.
2.நல் சிந்தனையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்றால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுவோம்…
3.அடுத்து இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடும்
4.பேரின்ப பெருவாழ்வு என்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நிலை அடைய முடியும்.

ஆக இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி மனிதனாக உருப்பெற்ற பின் நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஒளியைப் பெற்று அருள் ஞானம் பெற்று பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

அகண்ட உலகில்… அகண்ட பேரண்டத்தில்… இன்று நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்… அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் தான் இந்த நிலையைப் பெற முடியும்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்ளக் காலை துருவ தியானத்தில் அந்த அருள் சக்தியைப் பெறுவோம். அறியாது வரும் தீமைகளை அகற்றுவோம்.

நம்மைப் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் படரச் செய்வோம் அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வோம்.

ஆக… இந்த மனித வாழ்க்கையில்
1.அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் வளர்த்துக் கொள்வதே நல்லது
2.அதை நாம் பற்றுடன் பற்றினால் இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக ஆகின்றோம்.

தியான நிலையும் சுவாச நிலையும்

 

இதை உன் எண்ணத்தில் ஊன்றிடப்பா…!
1.எண்ணும் எண்ணத்தை ஜெபத்துடன் கலந்திட்டு ஓங்கார ரூபத்தில்
2.“ஓம் ஈஸ்வரா…” என்ற நாமத்தை உன்னுள்ளே இழுத்திடப்பா அவ்வீஸ்வரனை.
3.”ஓம் ஈஸ்வரா…” என்னும் நாமத்தை வெளியிடப்பா…
4.மறுபடியும் இழுத்திடப்பா உன்னுள்ளே…!
5.ஓம் ஈஸ்வரா நம… ஓம் ஈஸ்வரா நம…! உன்னுள்ளே சுற்றும் தன்மையில் வந்திட வேண்டுமப்பா.

இப்பொழுது நீ இருக்கும் ஜெப நிலையில் ஓம் ஈஸ்வரா என்னும் நாமத்தை இழுக்கும் பொழுது தடைப்படுகின்றது… நாமம் வெளியிடும் பொழுதும் தடையுடன் வெளி வருகின்றது.

ஓம் ஈஸ்வரா… என்ற நாமம் உன் உடலுக்குள்ளேயும் உன் உயிரிலும் உன் அங்கங்களிலும் உன் அங்கத்தின் அங்கமான எல்லா அணுக்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் தன்மையில் “உன் ஜெப நிலை வரவேண்டுமப்பா…”

ஜெபம் செய்பவர் எல்லாமே சித்தனாக யோகியாகவும் இருக்க வேண்டும் என்பதல்ல. எல்லோரின் எல்லா அருளையும் பெற்றிடலாம் ஈஸ்வரன் என்ற நாமத்தை இழுத்திட்டால்.

ஈசனின் நாமத்தைப் பகிர்ந்திட்டாலே உன் சுவாச நிலையின் தன்மைகள் மாறிவிடுமப்பா.

தியானத்தில் அமர்ந்தால்… உன் நிலை எல்லாம் பெரும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் குறையுடனும் பெரும் ஆவேசத்துடனும் ஏனப்பா அழுகின்றாய்…?

நற்சுவாச நிலை எடுத்திடப்பா… அழுகும் நாற்றம் அண்டிடாது… பூவின் மணமும் வந்திடுமப்பா உன் சுவாச நிலைக்கு…!

தியானத்திற்கு உன் கையால் வாங்கிடப்பா தினமும் புஷ்பத்தை… அளித்திடப்பா அவ்வீஸ்வரனின் நாமத்தைச் சொல்லி அர்ச்சனையாக. பிற நிலை எல்லாம் மாற்றிடப்பா.
1.ஜோதி நிலையானவன் (ஈசன்) வந்து
2.ஜெகஜ்ஜோதியாக உன் வாழ்க்கையில் அருள் புரிவான்.

அவசர நிலை உனக்கு… அதற்குள்ளே விழித்திட்டாய். ஏன்…? நான் பகர்ந்த தியான நிலையிலேயே இருந்திடப்பா.

துவேஷ எண்ணத்தை விட்டிடப்பா. உன் வழியில் உன்னைத் துவேஷிப்பவர்கள் துவேஷிக்கும் சொல்லெல்லாம் திரும்பிவிடும் “அவர்கள் நிலைக்கே…”

விதை விதைப்பவன் விதை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற சொல்லைக் கேட்டிருப்பாய். துவேஷ நிலை இனி உனக்கு வேண்டாம்.

பேரானந்தப் பெருநிலை எய்திடவே இத்தியான நிலை. பெரு நிலை என்பது மாட மாளிகை கட்டி… பெரும் சொத்துக்களுடன் வாழும் வாழ்க்கை அல்ல.

1.பெரும் பேறு என்பது அவ்வாத்ம ஜோதியுடன் நீ ஐக்கியமாவது தான்
2.பகர்ந்த வழியில் சென்றிடுவாய்… வந்திடுவேன் நானும் உனக்குள்ளே…

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்… சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்… பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.

அதே போன்று பலராம்…! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்…. கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.

1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்… அது தன்னாலே வரும்… சொல்ல வைக்கும்…!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது “ஈஸ்வரா…” என்ற சொல் வரும்… உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக உருவாகிறது.

உதாரணமாக… துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்…!

யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.

வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.

ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.

1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?

 

சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார்… துடிதுடிக்கின்றார்… என்று நாம் உற்றுப் பார்க்கின்றோம். வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்போம்… ஆனாலும்…
1.ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று கூர்மையாக அதைப் பதிவு செய்து விட்டால்
2.அந்த உணர்வினை ஈர்க்கும் தன்மை அங்கே வந்து விடுகின்றது.
3.கூர்மையாகப் பார்த்தது நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

ஆகா…! நல்லவராக இருந்தார் இப்படிப் போய்விட்டாரே…! என்ற உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த உடலை விட்டு வெளி வந்த பின் யார் இவர் மீது பற்றாக இருந்தார்களோ அந்த ஆன்மா அவருக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

அந்த உணர்வு இங்கே அதிகரித்து இருந்தால் இந்த உடலுக்குள் வந்து அதே வேலையைச் செய்யும். நான் பார்த்தேன் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று.

அதாவது… பக்கத்து வீட்டில் உள்ள நமக்கு வேண்டியவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துவிட்டால்… அவர் மீது பாசமான நிலைகள் கொண்டு… அந்தத் தூக்குப் போட்ட அதே உணர்வின் நினைவலைகள் நமக்குள் வரும்.

ஆக… எந்த அளவுக்குப் பற்றுடன் இருந்தாரோ அவர்களுக்குத் தான் இந்த நினைவாற்றல் வரும்.

அவர் மடிந்த பின்… இதே உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு அஞ்சிடும் உணர்வுகள் இங்கே உந்தி தன்னை அறியாமலே கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வருகின்றது. இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நான் தப்ப வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…? விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலுவேற்றிக் கொள்ள வேண்டும். துர்மரணம் அடைந்து விட்டால் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் நம் உயிருடன் ஒன்றி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

பின்..
1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அந்த ஆன்மா அருள் ஒளி பெற வேண்டும் இருள் சூழா நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
3.இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அடுத்த கணமே அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்
4.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
5.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது… “உந்தித் தள்ளிவிடும்…”

அந்த குடும்பத்தைச் சார்ந்தவரும் இதன் வழிகளில் எண்ணினால் அவர்களும் அதை உந்தித் தள்ளிவிடலாம்.

இல்லை… “இப்படி ஆகிவிட்டதே” என்று சோகமும் வேதனையும் கொண்டு ஏங்கி விட்டால் விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் படர்ந்து தன்னை அறியாமலே சோக நிலையினை அடையச் செய்து இந்த உணர்வுகள் அந்தக் குடும்பத்திற்குள் இது கலக்கமாகி பல தீமையின் உணர்வுகளாக விளையும்.

1.விவசாயத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அல்லது தொழில் செய்தாலும் அதே விஷத்தன்மைகள் படர்ந்து
2.அது நஷ்டமடையும் நிலையாகத் தான் செயல்படும் பயிரினங்களும் கருகிவிடும்.
3.குடும்பங்களிலும் பகைமைகள் உருவாகிவிடும்… பழி தீர்க்கும் உணர்வுகள் பரவிவிடும்.
4.அவர் தன் உடலை அழித்துக் கொண்டது போல ஒவ்வொரு செயலையும் அழித்திடும் நிலையாக அந்தக் குடும்பத்தில் வரும்.
5.குடும்பம் மிகவும் நசிந்து சாப அலைகளாக மாறி ஒருவரை ஒருவர் பாவ வினைகளில் சிக்க நேரும்.

இது போன்ற நிலை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் தத்துவ ஞானிகள் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை… துருவப் பகுதி வழியாக வருவதைக் கவரும்படி செய்து அதை பெறக்கூடிய தகுதி ஏற்படுத்தினார்கள்.

அதற்குத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அந்த அருள் உணர்வின் தன்மை நம் மீது பட்டு விடுகின்றது.

உதாரணமாக… நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வந்தால் நல்லது செய்கிறேன் என்றால் நெருப்பு நம்மை விட்டு விலகிச் செல்கின்றதா…?

அல்லது ஒரு திரவகம் தவறிக் கீழே விழுந்த பின்… நான் நன்மை செய்தேன் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நம்மைப் பாதிக்காமல் இருக்கின்றதா…? நெருப்பாக இருந்தாலும் திரவகமாக இருந்தாலும் உடலில் பட்ட இடத்தினைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

ஆக
1.பகைமையற்ற நிலைகள் நாம் வாழ்ந்தாலும் பல நன்மைகள் செய்திருந்தாலும்
2.சந்தர்ப்பம் இது போன்ற அசம்பாவிதங்கள் அருகிலே நாம் இருக்கப்படும் பொழுது அந்தத் தீமைகள் வந்து விடுகின்றது.

இதெல்லாம் வந்துவிட்டால்… நான் நன்மை செய்தேனே என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்றால் அந்த உணர்வினை நம் உயிர் தான் (நம்மை) ஆண்டு கொண்டிருக்கின்றது.

வேதனையை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் உயிர் வேதனை அணுக்களை உடலுக்குள் உருவாக்கி அதைத்தான் இந்த உயிர் ஆளும். வேதனை அணுக்களைத்தான் வளர்க்கச் செய்யும் அந்த உணர்ச்சிகளை தான் ஊட்டும்.

காரணம் நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது உருவாக்கி உடலுக்குள் இருப்பதை ஆண்டு கொண்டும் இருக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொண்டோம்.
1.நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் ஆளக்கூடிய சக்தியாக உருவாக்க வேண்டும்…? என்பதை நாம் சற்று சிந்தித்தல் வேண்டும்.

அவ்வப்போது வாழ்க்கையில் வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிடும் சக்தியாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் உருவாக்கி
2.அந்த அருள் ஞானிகள் உணர்வே நம்மை ஆளும் சக்தியாக நாம் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”

 

விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.

விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.

விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.

ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.

முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”

இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.

முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?

விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.

பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!

1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.

உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.

உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வான் வீதியில் உருவானது தான் “உயிரணு…” பூமிக்குள் விஜயம் செய்து பல கோடி பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக ஆன பின் என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை…” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.

அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக…” மாறுகின்றது.

வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.

ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.

அதே சமயத்தில் அந்த நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.

ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.

1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.

ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.

ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்… உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்… வெளியிலிருந்து…!

செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்… பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.

நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.

என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.

இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சஸ உணர்வு போல் வருகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்.

சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.

அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.

ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.

1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.

பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது… சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று…! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.

நோய் நீக்கும் மருந்து

 

நோய்வாய்ப்பட்டவர்கள் அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இடுப்பு வலியோ கண் வலியோ பிடரி வலியோ வயிற்று வலியோ இருதய வலியோ சிறுநீரகக் கோளாறோ… இதைப் போன்ற எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் அகல வேண்டும்… வலி குறைய வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்..
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் படரும்
2.எல்லா உறுப்புகளிலும் அந்த சக்திகள் படரும்
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் உற்சாகமடையும்…
4.அதற்குள் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க மகரிஷிகள் உணர்வுகள் “மருந்தாக” அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போன்று இந்த உணர்வுகள் ஊடுருவிப் பாய்ந்து…
2.நோய்களை நீக்கும் ஒரு இயக்கச் சக்தியாக வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய சகல நோய்களும் நீங்க வேண்டும் என்று… அவரவர்கள் உடலில் உள்ள நோயை நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

“பொதுவான விதிப்படி” எங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுங்கள்.

கை கால் குடைச்சலோ பிடரி வலியோ மூட்டு வாதமோ அந்த வலிகள் நீங்க வேண்டும் என்று ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.

ருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள் உங்கள் உடலில் பரவுவதை உணரலாம் இருதய வலி இருந்தால் அது நீங்குவதையும் ஆஸ்த்மா தொந்தரவு இருந்தால் நுரையீரலில் இருந்து அந்தச் சளிகள் அகல்வதையும் காணலாம்… மூட்டு வலி நீங்குவதையும் உணர முடியும்.

இராமாயணத்தில் காட்டியபடி ஜனக சக்கரவர்த்தி நற்குணங்களை பேணிக் காக்க நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அங்கே சுயம்வரத்தை (பந்தயத்தை) வைக்கின்றார்.

மற்றவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து அவரவர் திறமையைக் காட்டுகின்றார்கள்.
1.இராமனோ தீமை செய்யும் (எண்ணங்களை) அந்த ஆயுதத்தை ஒடித்து விடுகிறான்.
2.அதாவது பகைமை இல்லாது தன்னுடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இராமன் எண்ணுகின்றான்.

வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் அதை எண்ணும் பொழுது பிறரை வேதனைப்படுத்தும் நிலையே வருகின்றது.

அதற்குப் பதிலாக…
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தீமை செய்யும் எண்ணங்களை ஒடித்து விட்டு…
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானிகள் உணர்வைப் பாய்ச்சப்படும் போது நாமும் மகிழ்ந்து வாழ முடியும்.

அத்தகைய மகிழ்ச்சி தரும் அந்த உணர்வைத் தான் கல்யாணராமா…! என்று சொல்வது

1.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் கல்யாணராமன் ஆகின்றோம்…”

பகைமையை உருவாக்கும்… அதனால் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்தும் அகற்றப்படும்…. நமது நினைவின் ஆற்றல் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.

வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வைப் பற்றற்றதாக மாற்றி… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றி… பேரின்பப் பெரு வாழ்வாக அருள் மகரிஷிகளுடன் நாம் இணைந்து வாழ்வோம்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

ஆண்டவன் எங்குள்ளான்…?

 

நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.

நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.

ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.

அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?

உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.

உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.

போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.

விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா…! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.

நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.

விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.

பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.

அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!

இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.

காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.

அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது… சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.

சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).

ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.

செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்…!

ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்

ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.

உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்

உலக நிலையைப் பார்த்தாயா…!

குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.

ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?

பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.

அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.

முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”

அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.

நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.

தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.

ஆண்டவன் என்பவன் யாரப்பா…?

இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.

ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?

இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.

உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.

ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?

ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.

அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆகவே யாராவது திட்டினாலும்.. உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.

அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி

 

இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய அனைத்திலும் உள்ள நஞ்சினை அடக்கி ஆட்சி புரிந்து ஒளியாக இருக்கின்றது துருவ நட்சத்திரம். இதை உணர்த்துவதற்குத் தான் விநாயகர் அருகே “அரச மரத்தை” வைத்தார்கள் ஞானிகள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை வைத்து எப்படி உயர்ந்த சக்திகளை எடுக்க வேண்டும்…? என்பதை
2.அங்கே அரச மரத்தை வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதிகாலையில் நாம் குளித்து உடல் அழுக்கை நீக்கிய பின் விநாயகர் சிலையை உற்று நோக்கி… இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று நஞ்சினை ஒடுக்கி ஒளியின் கதிராக மாற்றி… ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உணர்வின் எண்ணங்களை தனக்குள் கவரும்படி செய்தார்கள் ஞானிகள். இது துவைதம்…!

பிறப்பின் உண்மையின் தன்மையை நமக்குள் தெளிவாக்குவதற்காகச் சிலையாக வடித்து வைத்தார்கள் ஞானிகள். நாம் பிறப்பில் மனிதனாக எப்படி வந்தோம் என்று அறிவதற்காக…!

அங்கே சிலையில் ஒன்றுமில்லை…!

கண் கொண்டு சிலையை உற்றுப் பார்க்கும்படி செய்து காவியத்தின் தன்மை கருத்துடன் நமக்குள் கூட்டப்பட்டு
1.அந்தக் கருத்தினை எண்ணித் “தன்னை அறிதல்” என்ற நிலையும்
2.எந்த உணர்வினை தனக்குள் அகஸ்தியன் எடுத்துத் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனானோ
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அப்போது பதிவாக்குதல் வேண்டும்.

பதிவான எண்ணம் கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்க முடியும். அதன் வழியில் எண்ணும் பொழுது நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுக்குச் செல்லுகின்றது.

1.அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கி
2.இந்த எண்ணங்கள் கொண்டு மீண்டும் கண்ணுக்கே நினைவைச் செலுத்தி
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து விண்ணிலிருந்து வரும்
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்மைப் பெறும்படி செய்திருக்கின்றார்கள் விநாயகர் தத்துவத்தில்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி இந்த அலைகளை “உடலுக்குள் நாம் பரப்புதல் வேண்டும்…”

காலையிலிருந்து இரவு வரையிலும் சந்தர்ப்பவசத்தால் எத்தனையோ துன்பங்களைக் கேட்டறிந்துள்ளோம்… துயரப்படுபவரைப் பார்த்துள்ளோம். இந்த உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவிலே இருக்கின்றது.

அந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது ஆன்மாவாகச் சேமித்து வைக்கின்றது. சேமித்த உணர்வுக்கொப்ப
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
2.சுவாசிக்கும் போது உணர்வுக்குத் தக்க “அந்த எண்ணங்கள்” வரும்.

இன்று ஒரு மனிதன் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்தக் குணத்தால் அது உருவானதோ அதற்கு இரை தேட…
1.எந்த மனித உடலிலிருந்து வந்ததோ…
2.சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருப்பதை நுகரப்படும் பொழுது
3.உயிரிலே மோதி உணர்ச்சிகள் தூண்டும்… அப்போது உணர்ச்சிக்கொப்ப அந்த அணுக்கள் அதை இரையாக எடுக்கின்றது
4.எடுத்து நமக்குள் உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.

ஆகவே அத்தகைய அணுக்கள் இப்படி உணவாக எடுக்கும் நிலையிலிருந்து… நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
1.“எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
2.அந்த அருள் ஞானியால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவத்தில்.

அதாவது… புறத்திலிருந்து ஆன்மாவாக எத்தனையோ நிலைகள் மாறி வருவதை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை அடிக்கடி அடிக்கடி உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வுகள் வலுப்பெறும் போது
1.தீய அணுக்களுக்கு வரும் அந்த நிலை அது அடைபட்டு… இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
2.அவசியம் இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

சாதாரண பாமர மக்களும் இதை பழக்கப்படுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

நாம் உணர்ந்து கொண்டோமா…?

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”

 

“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.

நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.

இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.

நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.

நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.

ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.

நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.

நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”

1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.

கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!

கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.

ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.

கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.

மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!

ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.

மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”

மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.

1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.

மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?

பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.

இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கணவன் மனைவி இணையாது… தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.

1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.

இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.

ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி… ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.

ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்…? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.

அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.

ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).

இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்…
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.

கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.

வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.

பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,

இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.

இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி… இதை வாங்கலாம்…! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்… வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.

1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.

இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.

நம் உயிர் “தாயாக” இருக்கின்றது

 

சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.

அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.

ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.

உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.

இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.

என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.

ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.

அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.

அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!

ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது…!

 

ஏழு ஜென்மங்கள் என்றேன் அல்லவா… உலகம் தோன்றிய நாட்கள் எந்தக் கணக்கிலும் வரவில்லையப்பா. உலகம் தோன்றி நிலையில் வந்தவர்கள் எல்லாம் இன்றும் உள்ளார்கள் என்றால் எப்படி…? என்று எண்ணி இருப்பாய்…!
1.”மனித உடலில் உள்ள காலம்” ஆயிரத்தில் ஒரு மடங்கு இல்லை அப்பா இந்த ஏழு ஜென்மத்திலும்.
2.காலமெல்லாம் சுற்றுவதெல்லாம் அவ்வாவிகள் ஆவி உலகத்தினூடே தான்…!

என்னப்பா…? புரிகின்றதா பாட நிலை…!

இந்நிலையில் இருந்தெல்லாம் ஜெயிப்பவனுக்கு வருகிறது பெரும் சூட்சும உலகம். அவ்வுலகத்திற்குச் சென்றால் எவ்வுலகையும் காணலாம் என்று சொன்னேன். பெரும் பொக்கிஷம் பெற்றவர்கள் தான் அவ்வுலகத்திற்குச் சென்றவர்கள்.

இவ்வுடலில் உள்ள பொழுது சேர்க்கும் பணமும் சொத்துமல்ல பொக்கிஷம் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றிடுங்கள் கல்கிக்குச் செல்வதற்கு…!

1.கல்கியில் வந்திடுவான் சித்தனெல்லாம் என்று பகர்ந்திட்டான் உன்னிடம் இச்சித்தன் (சாமி – ஞானகுரு).
2.எப்படி வந்திடுவான்…? என்று சொன்னானா…!

கல்கியில் வந்து பிறந்திடுவானா…?

இல்லையப்பா…!

கல்கியில் இன்று வாழும் நிலையில் இக்கலி யுகத்தில் கடைசியில் நல் நிலை பெற்றோர் உணர்வில் வந்துவிடும். பிறந்து விடும் பூக்களிலும்…! பூக்கள் என்பது பிறக்கும் மழலைகளைத்தான் சொல்கின்றேன். அந்நிலையில் வருகின்றார் ஒவ்வொரு சித்தனாக…!

சித்தன் வெளிப்படுவான் என்று சொன்ன சிததனைக் கேட்டாயா…! என்ன நிலையில் வெளிப்படுவார் என்று…?

எவ்வுடலையும் ஏற்றுக்கொள்வார் அச்சித்தனெல்லாம்.
1.எவ்வுடலையும் என்று சொல்வதெல்லாம்
2.பெரும் பூர்வ புண்ணியப் பலனடைந்த உடலைத்தான் அச்சித்தன் ஏற்றுக் கொள்கின்றான்.

பிறக்கும் மழலைகளைப் பரிந்துரைத்தேன். கலியியில் பார்த்திருப்பாய் சில மழலைகளின் சொல்லையும் செயலையும்..!

வந்திடுவார்… வந்திடுவார் பெரும் சித்தனும் யோகியும் எல்லாமே கல்கிக்கு வந்திடுவார்கள். வரும் நிலையைப் புகட்டி உள்ளேன்.

முதன் முதலில் இந்நிலையில் தான் என் சிஷ்யனுக்கே வாயடைத்தேன். பகர்ந்து விட்டேன் நான் உனக்கு.

பரிபக்குவமான நிலையில் மன அடக்கத்துடன் இருங்கள்…!

எண்ணிக் கொள் எண்ணிக்கொள்… எண்ணின் வடிவத்தில் எண்ணிக்கொள்… எண்ணத்தில் எண்ணிக்கொள்…! காலங்கள் குறுகியது… குறுகியது… என்று பகர்கின்றேன்.

2000 ஆண்டுகள் என்று சொல்கின்றார்கள். 2000வது ஆண்டில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் ஆரம்பமாகி விட்டது “அழிவின் நிலை எல்லாம்…”
1.அவன் செய்யும் அணுவும் அணு அணுவாக அழியும் தன்மை வந்து விட்டது
2.அவனே வியக்கும் வண்ணம் சக்தியைப் பார்த்திடுவான் சக்தியையே…!

சக்தி நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அணு ஆராய்ச்சி செய்கின்றானாம்…! சக்தி நிலையில் ஊதி விட்டால் அவன் செய்யும் அழிவின் தன்மை எல்லாம் என்னவாகும்…?

கொதிக்கும் நிலையில் உள்ளதப்பா இவ்வுலக நிலை…! எல்லாம் பார்த்திடுங்கள் பார்த்திடுங்கள்… நான் பகர்ந்ததையெல்லாம் பார்த்திடுங்கள் வெடிக்கும் நிலையையும் பார்த்திடுங்கள்.

என் நிலையில் நீ இருந்தால் உலகத் தன்மையையே பார்த்திடலாம். குறுகிய காலம் தான் உள்ளதப்பா…! கூட்டி விடு உன் நிலையினை சமமான நிலையைத் தெரிந்து கொண்டாய்…
1.படர விடு இந்தப் பாட நிலையை நிலை நிறுத்திப் படரவிடு ஒரு நிலையில்
2.கல்கி என்ற விடிவிளக்கின் ஆரம்பத்தில் வந்துள்ளாய்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்…! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்…” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு…திடு… என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது” என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்… சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா…? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது…? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்…
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

1.ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு
2.உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து
3.அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்… சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து… அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்…?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு…! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்

 

உதாரணமாக புழுவிற்குக் கண்ணில்லாத போது… அது தன் எண்ணங்கள் கொண்டு ஊர்ந்து சென்றாலும்… உணவுக்காக ஆசைப்பட்டுத் தேடிச் சென்றாலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் சிக்கும் பொழுதெல்லாம்…
1.தான் படும் வேதனைகளைத் தாங்காது
2.எது தன்னைத் தாக்குகின்றதோ அதைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.

இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றித் தோன்றி… அடுத்த உடல் பெறும் பொழுது “பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருப்பெறுகின்றது…”

முதலிலே எண்ணங்கள் தான் உருவானது. எண்ணத்தின் துணை கொண்டு பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஒவ்வொரு உயிரினமும் (தன் எதிரிகள்) தன்னைத் தாக்கப்படும் பொழுது அந்தச் சரீரத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை உந்தி உந்தி… பல சரீரங்களில் அதை எடுக்கின்றது.

1.அதாவது இரண்டு நாட்களுக்கு அந்த உடலில் உயிர் இருக்கும் அடுத்த நாள் மடிந்துவிடும் ஆரம்ப நிலைகளில்
2.இப்படி நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வளர்ந்து வளர்ந்து
3.கண்களாக உடலில் உருப்பெறும் தன்மை வருகின்றது,

ஆதே சமயத்தில் ஒளி வீசி (வெயில்) மற்ற பொருளைக் காட்டும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே இருக்கின்றது. புழுவின் உயிரின் துடிப்போ… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.மணத்தால் அறிந்தாலும் தன் உணர்வால் அறிய வேண்டும்
2.பார்வையால் பார்க்க வேண்டும் என்று உணர்வுகள் தோன்றுகின்றது (தோற்றுவிக்கின்றது).

இப்படித் தோன்றிய நிலைகள் தான் கண்களாக உருவாகிறது. இதைத் தான் துவாரகா யுகத்தில் நாரயணன்… “சூரியன் கண்ணனாகத் தோன்றுகின்றான்…” என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சூரியனின் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்குள் ஒளிக் கதிராகக் கண்கள் காணும் நிலை வருகிறது. அதாவது
1.சூரியனிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் பொழுது
2.அது மற்றொன்றுடன் மோதி ஒலியின் ஒளிக் கதிர்களாக எப்படி ஆகின்றதோ
3.இதைப் போன்ற நிலைகள் அங்கே பெறுகின்றது.

இந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் தன் உடலில் பெற்ற பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் கண்களாக உருவாகி
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அங்கே தாக்கப்படும் பொழுது
2.எதனின் உணர்வோ அந்த ரூபத்தினை அறியும் வல்லமை பெறுகின்றது – “கண்களுக்கு அந்த ஆற்றல்…”

உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கிறார்… நாம் அவரைப் பார்க்கிறோம் என்றால் அதைப் பார்த்த பின் உணர்வுகள் மோதுண்டு உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது
1.அப்போது நமக்கு கோபம் வருகிறது…
2.கோபம் வந்த பின் இருள் சூழ்கிறது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகிறது.

ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சி அந்த உணர்வுகள் கண்ணின் வழி வெளிப்படும் பொழுது
1.அதிலே வரும் அலைகள் மோதி குறித்த தூரத்தில்
2.கண்ணின் உணர்வலைகள் விசை உந்துதலின் தன்மை எவ்வளவு ஏற்படுகிறதோ
3.அந்த வட்டத்திற்கு ஒளியாகத் தெரியும்.
4.(மனிதனுக்கு இது போன்று தெரிவதில்லை)

இரவிலே பாம்பு பூச்சிகள் தேள் மற்ற மிருகங்களுக்கும் கண் பார்வையால் மோதுண்டு அதன் ஒளிகள் அதற்குத் தெரியும் மனிதனுக்குத் தெரிவதில்லை காரணம்…
1.மனித உடலில் விஷத்தின் தன்மை வடிகட்டப்பட்டுக் குறைத்து விட்டதனால்
2.மோதலால் ஏற்படும் ஒளித்தன்மை நமக்குள் இழக்கப்படுகிறது.

அதே சமயத்தில்… பிறர் படும் உணர்வின் தன்மை நமக்குள் மோதப்படும் பொழுது… உணர்ச்சிகள் எழுந்து அறியும் தன்மையாக… அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.

ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.அவன் என்ன செய்கின்றான்…?
2.குற்றம் செய்கின்றான்… அல்லது குற்றமற்றதாக இருக்கின்றது… என்ற உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகிறது.

ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்…!

பல கோடிச் சரீரங்களில் தான் கூர்மையாகப் பார்த்துத் தன் எதிரிடமிருந்து தப்பித்துக் கொள்ள… எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து… சுவாசித்து… தான் எதை எதை எல்லாம் கூர்மையாகப் பார்த்ததோ அதனின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து… இப்படித் தீமைகளை அகற்றிடும் உடல அமைப்பினை உயிர் உருவாக்குகிறது.

அதாவது தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் உருபெற்று அதற்குண்டான உறுப்புகள் உருவாகி மனிதனாக உருவாக்குகிறது… பரசுராம்…! இயற்கை நிலைகள் எது விளைந்தாலும் அதனைச் சமப்படுத்தி உணவாக உட்கொள்ளும் நிலை பெறுகின்றோம்.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரை இந்த உயிர்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள மரண பயங்களை ஏகி
2.அந்த மரண பயத்தால் நான் நுகர்ந்த உணர்வுகள் வலுவாகி
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடல் மடிந்தாலும்
4.வலுவான உணர்வுகளைச் சேர்த்து… பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக இன்று வந்துள்ளோம்.

மனிதனான பின் பல தீமைகளை அறிந்தாலும் பலராம்…! எல்லாவற்றையும் அறியக்கூடிய ஆற்றல் பெறுகின்றோம்.

அதாவது சமப்படுத்தும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது தீங்கு செய்கிறான் என்றால் அதை நுகர்ந்த பின்
1.அந்த தீங்கு தனக்குள் வராதபடி சமப்படுத்த முடிகின்றது…
2.கண்டிப்பாகச் சமப்படுத்த வேண்டும்… அதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்

 

நல் நினைவையும் நல் பாட்டையும் நல் சொல்லையும் மிஞ்சிவிடும் தீயோரின் எண்ணமும் செயலும் சொல்லும்.
1.நல் வழியில் வருவதெல்லாம் மிக நிதானத்தில் தன் உணர்வில்
2.தன்னுள்ளேயே அமைதியுடன் தான் வந்திருக்கும் “நிலை நிற்கும்…”

தீய எண்ணங்களும் தீய சொல்லும் செயலும் உலக நிலையையே மிஞ்சிவிடும். நல்லவருக்குக் காலமில்லை… அவன் எப்படி வாழ்கின்றான் பார்…! என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே…!

1.நல் நினைவின் தன்மை எல்லாம் நமதுள்ளே இருக்கட்டும்…
2.பிறரின் புகழ் உரைகளுக்காகவோ பிறரின் போற்றுதலுக்காகவோ அல்ல நல் நினைவு.

எந்த இடத்திலும் நல்லதையும் அடக்கி விடும் தீயது. அதற்காக மனம் கலங்கவோ மன அடக்கம் இல்லாமல் (உணர்ச்சிகளை) வெளியிட வேண்டியதோ இல்லை.

தீயது வளரத்தான் செய்யும்…
1.வளர வளர அதன் நிலை அழிந்துவிடும். பெரும் அழிவாக அழிந்துவிடும்.
2.பெரும் நிலையை அடைந்தவன் உலக நிலையைக் கண்டவன் உலகை ஆள்பவன் எல்லாமே பெரும் அழிவு நிலையில் தான் அழிகின்றான்.
3.நல் நிலையில் உள்ளவனின் நிலை தான் நிலைத்திருக்கும் காலம் காலமாக…!

பார்ப்பவரின் பார்வைக்குப் பிறர் பார்ப்பதற்கல்ல இவை எல்லாம். சொல்லும் பாடம் புரிகின்றதா…?

சொல்வாக்கு செல்வாக்கு ஆசை மனம் செயல் எல்லாப் பாடங்களையும் சிறுகச் சிறுக தந்து அருளியுள்ளேன். ஒவ்வொரு பாடத்தின் தன்மையையும் நீ புரிந்து விட்டால் உன் வழியில் அப்பாடத்தின் தொடர் நிலைகள் எல்லாம் புரிந்துவிடும்.

மனிதன் எண்ணம் உலகத்தில் உள்ள எல்லா சக்திகளையும் விட மிகவும் துரிதமானது என்று சொன்னேன்.

காற்று மழை ஒலி ஒளி மனிதனாக செய்த விஞ்ஞானம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய எண்ணத்தையே உன்னுள் அடக்கி உள்ளாய்.
1.இவ்வெண்ணத்தின் தன்மையில் இருந்து தான் பாய்கின்றது உலகத்தன்மை எல்லாம்.
2.எண்ணத்தின் பாடத்தைப் பகர்ந்து விட்டால் உன் எண்ணமெல்லாம் பாட நிலையிலே இருந்துவிடும்.

உன் எண்ணத்தை வைத்து வந்து விடப்பா… பெரும் ஞான நிலைக்கே என்று பகர்கின்றேன். பாடத்தின் வழியை எப்படிச் சொன்னாலும் “உன் நிலையை உயர்த்திடவே பகர்கின்றேன் பல நாட்களாக…!”

என்னப்பா…! புரிகின்றதா இந்த நிலை…?

சிவன் சக்தி வடிவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லி சரி பாதி சிவனையும் மறு பாதி சக்தியையும் உருவத்தைச் சித்தரித்தார்கள் சித்தர்கள். இந்நிலை எதற்கப்பா…?

உன் நினைவில் வந்ததா…? கடவுளின் ரூபத்தைக் கருத்துடன் புகுத்தி விட்டேன் உன் எண்ணத்தில். பெண் ஆண் என்பதெல்லாம் பிரிந்திடாமல் வருவதற்காக அளித்த சொல்லப்பா சிவசக்தி வடிவம்.

சிவ சக்தியின் வடிவத்தை உன் எண்ணத்தில் இட்டுள்ளேன். உன் எண்ணத்தின் வேகத்தில் பல பல உண்மைகளை அறிந்திடப் பாடம் மட்டும் புகட்டிவிட்டால் பாட நிலையிலேயே இருந்திடுவாய்.

பெரும் பரீட்சை ஒன்று உனக்குள்ளே வைத்துள்ளேன்…!
1.உன் எண்ணத்தின் மையத்தில் வைத்திடுவாய் சிவ சக்தியின் பிம்பத்தை
2.வைத்துள்ளேன் இன்று உனக்கு அந்நிலையில் உன்னுள்ளே.

இன்றைய தியானத்தை உன் நிலையை ஒருநிலைப்படுத்தி சக்தி சிவன் சொரூபத்தை உன்னுள்ளே கண்டு அந்நிலையின் தத்துவத்தை எனக்கு அருள்வாயா…?.

1.உன் நிலையை… தியான நிலையில் கண்டு பார்த்தால் கண்டிடுவாய்.
2.சிவ சக்தியின் வடிவத்தை நீ பெற்ற மக்களின் தன்மையில் கொண்டு வந்தால்… அந்நிலை புரியும்.

சிவன் தனியாக உள்ளாரா…? சக்தி தனியாக உள்ளாரா…? என்பதெல்லாம்… ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை என்றாய் அல்லவா…! நான் பகர்ந்து விட்டால் புரிந்து கொள்வாய் சில நொடியில்… பெற்ற “தியானத்தின் தன்மையிலே கண்டிடப்பா…!”

அணுவின் தன்மையில் பல கோடி நிலைகளை… கோடி கோடி நிலைகளைப் பகர்ந்துள்ளேன்.

1.ஆவியின் நிலையிலே பெண் இல்லை ஆண் இல்லை.
2.இறந்த பின்னால் ஆவியின் நிலை எல்லாம் பெண்ணல்ல ஆண் அல்ல

சஞ்சலம் உள்ள ஆவிகள்… தன் நிலையை முடித்து விட எண்ணுகின்றது உடலில் இருந்த பொழுது செய்த பலனை ஏற்றுக் கொண்டு சில ஆவிகள் இருக்கின்றன… சில ஆவிகள் பழி தீர்க்கும் நிலையிலும் இருக்கின்றன.

1.மனித உடலில் நல்லவர் கெட்டவர் என்பதைப் போல் என்பதைப் போல்
2.ஆவியின் உலகிலும் இரு நிலை ஆவிகளும் சுற்றுகின்றன.
3.அவ்வாவிகளின் செயல்களினால் நடக்கின்றன பெரும் விபத்துகளும் கொலைகளும் தற்கொலைகளும் எல்லாமே.

நல்ல நிலையில் உள்ள ஆவி… தான் பிரிந்து சென்ற குடும்பத்தின் பற்றை எல்லாம் மறந்திடாமல் அந்நிலையில் இருந்து கொண்டே நடத்திவிடும் குடும்ப நிலைகளை எல்லாம்.

பிறந்தவுடன் இறக்கின்றான்… இறந்தவுடன் பிறக்கின்றான்… என்றால் சில ஆவிகளின் நிலை மட்டும்தான் இந்நிலை.

சில ஆவிகள் உடலை விட்டுப் பிரிந்தும் எங்கும் செல்வதில்லை. அக்குடும்பத்தில் உள்ள பற்றையும் பாசத்தையும் ஒரு நிலை நிறுத்தித் தன் செயலில் நிறைவு கண்ட பிறகே மறு ஜென்மம் எடுக்கிறது.

சில ஆவிகள் உடலில் இருந்து பிரியும் பொழுது தனக்குண்டான ஆசைகளையும்… தான் வாழ்ந்த காலத்தில் அடைய முடியாத நிலையில் விட்டுச் சென்ற ஆசைகளையும் அடைவதற்காக… அவ்வாவி எந்த இடத்தில் அதை எல்லாம் அடைய முடியுமோ அந்நிலைக்குச் சென்று பிறக்கின்றது.

சில ஆவிகள் நிலை தான் பெரும் மோசக்கார ஆவிகளாக நிலைத்து நிற்கின்றது. அவ்வாவிகள் எல்லாம் கொலையாகவோ தற்கொலையாகவோ… இவ்விரண்டில் வரும் ஆவிகள் தான் மறு ஜென்மம் எடுக்காமல் அழிகின்றன அழிக்கின்றன.
1.ஆண்டவனின் தன்மையையே அழிக்கப் பார்க்கின்றன
2.அதனால் தான் ஆவியின் நிலையில் நடக்கின்றது பல வீடுகளில் நன்மை தீமை எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்து விடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”

 

வானவியல் இயக்கத்தின் அடிப்படையில் நமது சூரிய குடும்பத்திற்குப் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எல்லாம் 27 நட்சத்திரங்கள் கவர்கிறது.

அதைக் கவர்வதற்காகப் பால்வெளி மண்டலமாக அமைத்து நூலாம்படை போல வலையை விரித்து விடுகின்றது.
1.பிற மண்டலங்களின் உருவான அணுக்கள் இதிலே பட்டபின்
2.அதனுடைய உணர்வைத் தனக்குள் எடுக்கும் பொழுது ஒளியின் மின்கதிர்களாக மாறுகின்றது
3.அதனால் தான் நட்சத்திரங்களுக்கு அவ்வளவு ஜொலிப்பு…!

அணு விசைகள் (அணு ஆயுதங்கள்) வெடித்த பின் அதனுடைய ஓளிக் கதிர்கள் நம் கண்ணை எப்படிப் பறிக்கின்றதோ… ஊடுருவிப் பாய்கின்றதோ… அதே போல் நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்… அதாவது
1.ஒரு பொருளுடன் ஒரு பொருள் நட்சத்திரங்களின் அணுக்கள் (ஒன்றுடன் ஒன்று) மோதப்படும்போது
2.பளீர்… என்று மின்னலாக மிகக் கடுமையாக ஊடுருவிப் பாய்கின்றது.

அந்த மின்னலின் கதிரியக்கங்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமியின் நடு மையத்திற்கே வேகமாக ஊடுருவிச் செல்கின்றது. பூமியைப் பார்த்தால் கல் (பூமியின் நிலப்பகுதி) மூடி இருப்பது போன்று இருக்கும். ஆனால்
1.ஒவ்வொரு கல்லுக்குள்ளும் பாறைக்குள்ளும் அந்த நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் உண்டு
2.அதன் வழி பட்டபின் அதனுடைய தொடர் வரிசையில் நம் பூமியின் நடுவிட்டம் சென்றடைந்து
3.பூமியின் சுழற்சியில் தேங்கும் இடமான மையத்தில் தேங்கி விடுகின்றது.

இது அனைத்தும் சேமிக்கப்பட்டு கொதிகலனாக மாறி வெளியே இருப்பது அனைத்தையும் கூழாகக் கரைத்து விடுகின்றது. அதிகமான அமிலங்களாக மாறி விட்டால் அப்போது பூமியிலே நில நடுக்கம் தோன்றும். நிலங்கள் அப்படியே கீழே சரிந்து உள்ளே போவதை நாம் பார்க்கலாம்

நட்சத்திரங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கதிரியக்கப் பொறிகள் நம் பூமிக்குள் ஊடுருவி பூமியின் ஈர்ப்புக்குள்ளே சென்று விட்டால் சிறுகச் சிறுகச் சேமிக்கப்பட்டுத் தன் அருகில் உள்ள அனைத்தையும் கரைக்கப்படும் பொழுது மேல் பாகம் அப்படியே அமிழ்ந்து விடும் (பூகம்பம்).

எந்தப் பகுதியில் இதனுடைய அமிலங்களாக உருகப்படுகின்றதோ மேல் பாகம் எடை தாங்காது அப்படியே கீழே இறங்கும்.
1.விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் கண்டு கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல
2.எப்பொழுது எதைச் செய்யும்…? எப்படி ஆகும் என்று…!

இதைப் போன்ற எம்முடைய (ஞானகுரு) உபதேசங்கள் சில நேரங்களில் மிகவும் நுட்பமாக வெளி வரும். மற்றவர்கள் அதைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்வதும் உண்டு.

அத்தகையவர் கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சில நேரங்களில் அதிவேகமாக யாம் சொல்வது. ஆனால் அதே சமயத்தில்
1.உணர்வின் ஈர்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்…
2/நல்ல வழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு உரமாக ஏற்றி
3.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்த மெய் வழியினைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

இதிலே எத்தனையோ வழிகள் உண்டு…!

தீமையை விளைவிப்போர் நன்மையைத் தீமையாக மாற்றி விடுவார்கள்… அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அதிலே சிக்கிவிடக் கூடாது.

யார் உண்மையிலேயே இந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றர்களோ அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு நிலைகள் உபதேசிக்கப்பட்டு
1.சில உண்மைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்வதும்
2.மெய் உணர்வின் உணர்வுகளை உங்களுக்குள் சில நேரங்களில் சிறிது வேகமாகப் பேசுவது உண்டு.

சாமி இலேசாகப் பேசிக் கொண்டிருந்தார் திடீரென்று இப்போது வேகமாகப் பேசுகிறார் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

உங்கள் ஈர்ப்புக்குள்… உங்கள் உணர்வின் குணங்களுக்குள் அதைச் சீராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இப்படி எல்லாம் செய்வது.

மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!

 

இயேசுவே நம… புத்தா நம… முகமது நபியே நம… ஐயப்பனே நம…! என்னும் போதெல்லாம்…
1.உன் மனதை ஒருநிலைப்படுத்தும் போது
2.நீ சொன்ன நாமத்தில் உள்ள “சித்தர்களை” நீ காண முடியும்.

அவ்வழியில் வந்தவர்கள் தான் போக மாமகரிஷியும் அகஸ்திய மாமகரிஷியும் கொங்கணவ மாமகரிஷியும். அதே சமயத்தில் உன் நினைவில் “உன் அறிவிற்கு எட்டாத பல ரிஷிகளும்” உருவமுடன் வருகின்றார்கள்.

உன் தியானத்தில் தெரியும் விநாயகரும் லட்சுமி சரஸ்வதி இராமர் கிருஷ்ணர் முருகர் எல்லாமே ஈஸ்வர சக்தியில் வரும் “மாய ரூபங்கள் தான்…”
1.முதலில் சொன்ன சித்தர்கள் எல்லாம் தன் உருவில் வந்து… தான் பெற்ற சக்தியினால் ஆசீர்வாதம் செய்வார்கள்.
2.பின் சொன்னவர்கள் எல்லாம் ஈஸ்வர சக்தியில் வரும் மாயாஜால ரூபங்கள் தான்.

ஈஸ்வரனை எண்ணும் பொழுது… ஈஸ்வரா…! முருகா…! விநாயகா…! என்று யாரை அழைத்தாலும் வருவது அச்சக்தியின் மாய ரூபமே…!

1.அவனுக்கு உள்ள பெயர் ஆயிரம்.
2.இந்த உலகமே அவனது…
3.எந்த ரூபமும் எந்தச் செயலும் செய்பவனும் அவனே.
4.உன்னுள் இருப்பவனும் அவனே என்னுள் இருப்பவனும் அவனே.
5.அவன் சக்தியைப் பெற்ற பயனால் வந்தவர்கள் தான் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்.

அவனின் சக்தியை உணராமல் தன்னிலையை மறந்து வெறும் வெறியாட்டங்களில் வாழ்ந்தவர்கள் எல்லோரின் நிலையும் வெறியுடனே… அத்தகைய அணுவின் தன்மையாக இவ்வுலகைச் சுற்றிக் கொண்டுள்ளது.

இப்பூவுலகில் பிறந்த நீங்கள் அவரவர்களுடைய பூர்வ புண்ணிய பலனை வைத்து… அச்சக்தியின் அருளைப் பெற்று நல்வழிக்குச் சென்றால்… போகனையும் கொங்கணவனையும் அகஸ்தியனையும் மிஞ்சலாம்.

ஆனால் இப்பூமியில் பிறந்து… அவனுடைய சக்தியை உணராமல் தன் வழியில் தன் சுகத்தை நாடி; உடல் சுகத்தை நாடி; பல அற்ப ஆசைகளில் தன் மனதைச் சிதறடித்து; பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் இருப்பவனை எல்லாம்…
1.இரண்டாம் நிலையில் சொன்ன இவ்வுலகைச் சுற்றியுள்ள தீய அணுக்கள் வெறியுடன் உள்ள அணுக்கள்
2.தன் விரோதத்தை முன் ஜென்ம விரோதத்தை எந்த நிலையிலும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பது.

மறு ஜென்மம் எடுத்தாலும்… பிறந்து வளர்ந்து நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதனால் மறு ஜென்மம் எடுக்கும் முதலிலேயே… அவ்வணுவான ஆவி “இச்சஞ்சலமான புத்தி உள்ளவனின் உடலில்” அண்டிக் கொள்கின்றது.

அதன் விரோதத்தைத் தன் கோபத்தை எந்நிலையிலும் பழிபாவத்தைத் தீர்த்துக் கொண்டுதான் மறு ஜென்மம் எடுக்கிறது (அந்தக் கெட்ட ஆவி).

அதனால் தான் மனிதர்களை
1.நல் நிலையில் இருங்கள்… தெய்வப் பற்றுடன் இருங்கள் தேவனை நம்புங்கள் என்றெல்லாம்
2.அன்றுள்ள சித்தர்கள் பல கோடிக் கோவில்களையும் பல தெய்வங்களையும் தானாகவே கற்பனை செய்து
3.முருகனையும் விநாயகரையும் லட்சுமி சரஸ்வதி என்று பல நாமங்கள் உள்ள தெய்வத்தின் சிலைகளை எல்லாம் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
4.ஆகவே மனிதனின் நிலையை ஒருநிலைப்படுத்தத்தான் கோவில்கள் எல்லாம்.

இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் முருகனும் விநாயகனும் பிறந்தார்கள். முருகனுக்கு மனைவிமார்கள் குடும்பமெல்லாம் மனிதர்களால் சொன்ன கதைதான்… மனிதர்களுக்குச் சொன்ன கதைகள் தான் இவைகள் எல்லாம்.

நல்வழியில் புகட்டிய எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார்கள் பெரும் நாசக்காரர்கள்.

கடவுள் என்றாலே வெறுக்கும் தன்மையில் அவரவர்களின் பிழைப்பிற்காகவும் பொழுது போக்கிற்காகவும் “கடவுளை ஒரு கருவியாக்கி… விளையாட்டுப் பொம்மையாக்கி விட்டார்கள்…!”

முருகன் படம் எழுதுபவனுக்குக் காசு… படத்தைத் தீட்டுபவனுக்கும் காசு… பட்த்தை விற்பவனுக்கும் காசு… முருகனைப் பற்றிய பாடலைப் பல கோணத்தில் திரித்துத் திரித்து எழுதுபவனுக்கும் காசு… அதை விற்பவனுக்கும் காசு.

ஆனால் முருகனின் நிலையை ஒருநிலைப்படுத்துபவன் எவனும் இல்லை.

1.முருகனையும் தெய்வத்தையும் அவ்ஈஸ்வர சக்தியையும் பிழைக்கும் வழிக்குத் தான் ஒவ்வொருவனும் அழைக்கின்றான்.
2.கோவிலுக்குச் செல்பவன் எல்லாம் தன் குறையெல்லாம் அத்தெய்வம் போக்கித் தனக்கு அருள வேண்டும் பெரும் செல்வத்தைத் தர வேண்டும்
3.எந்தச் செல்வத்தை…? பொருட்செல்வத்தினை நாடித்தான் செல்கின்றான் தேவனையும் நாடி.

எவனப்பா வருகின்றான் தன்னிலை உணர…?

தன் நிலை உணர வேண்டும் என்றால் என்ன…? என்பதே இந்த மானிடர்களுக்குப் புரியாமல் இருக்கும் பொழுதே இவர்களுக்கு எப்படி வந்திடும் தியான நிலை…!

அத் தெய்வமான ஈஸ்வர சக்தியின் நிலையினைக் கேட்டவர்கள் கேட்டு நல்லாசி பெற்றிடட்டும்.

ஆவி நிலையைப் பற்றிச் சிறு அளவு உங்களுக்குள் புகுத்தி உள்ளேன். நீ வணங்கும் உன் குலதெய்வம் என்பது யாரப்பா…? சௌண்டம்மன் அங்காளம்மன் காளியம்மன் எல்லோரும் யாரப்பா…?

மாரியம்மன் என்பவளும் அம்மன் தான். அந்த அம்மன்கள் எல்லாம் யாரப்பா…? இந்நிலை உனக்கு புரிந்திட்டதா…? இவ் அம்மன்கள் நிலை எல்லாம் பெரும் தெய்வீக நிலையில் உள்ள ஆக்ரோஷமாக உள்ள ஆண்டவனின் சக்தியைப் பெற்ற பெரும் ஆவிகள் தான்.

அவ்வாவியின் நிலையிலிருந்தே சக்தியின் ரூபத்தில் அருளைப் பெற்று நீ நினைக்கும் நேரத்தில் உன் நினைப்பினுள்ளே வந்து ஆசீர்வாதம் தருகின்றார்கள்.

ஆனால் அம்மன்களின் சக்தி எல்லாம் பெரும் ஆக்ரோஷமான நிலையில் உள்ளது தான். அதனால்தான் இவ்வம்மன்களின் ஆவிகள் சிறு வேண்டுதலைக் கூட நாம் அளிக்கா விட்டால்… தன் நிலையில் வந்து ஆவி நிலையில் வந்து எப்படியும் உணர்த்திப் பிடுங்கிக் கொள்ளும்… செய்யாதவர்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்.

அதனால் தான் பெரும் ஆக்ரோஷ நிலையிலுள்ள சக்திகள் என்று சொன்னேன். ஈஸ்வர சக்தியை பெற்ற இவ்வம்மன்களுக்கே பார்த்தாயா ஆக்ரோஷத்தை.

1.பெரும் சாந்த நிலை எய்திவிட்டால் இன்றுள்ள போகனின் நிலை… அது இவ் உலகை ஆளும் ஈஸ்வரனுக்கே ஆனந்தமூட்டும் நிலை.
2.அந்நிலை பெற்ற போகனை முருகா என்று அழைத்திட்டால் எந்நிலையிலும் அருளுடன் அன்புடன் அருள் புரிகின்றான்.
3.அவனின் நிலையை எண்ணிவிட்டால் பெரும் ஆனந்தமும் பெரும் செல்வமும் கிடைக்குமப்பா…!

(என் நிலையே எனக்குத் தெரிவதில்லை – ஈஸ்வரபட்டர்) இந்நிலையில் உன் நெஞ்சமெல்லாம் பூரிக்கின்ற தன்மையைப் பார்த்தாயா.
1.நீ உணர்ந்திட்டாய் இந்நிலையில் உள்ள உன் நிலையை…
2.இன்று உனக்கு உள்ள நிலை… சுவாச நிலை… பெரும் பொக்கிஷமான நிலை.
3.அவன் அருளைப் பெற்றிட்டால் எந்நிலையும் கைகூடும்.
4.அவன் அளிக்கின்றான் இப்பொழுது உன் நிலையை எண்ணிப் பெரும் சந்தோஷமும் பூரிப்பும் கொண்டு…!

இந்நிலையில் அவனை (போகரை) எண்ணி நீ தியானத்தில் இருந்திடப்பா.

அவன் வருவான்…! உன் நினைவிலும்; உணர்விலும்; உடலிலும்; அணு அணுவாக; ஆனந்தமயமாக உன்னை வந்து அண்டிடுவான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையாக வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அது நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.

இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்

 

உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை…” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ…ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்…!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.

இந்த உடலுக்கு உணர்வும்… உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்… குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்… இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.

நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது…? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.

உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்… பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்…?

இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.

இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?

சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன…? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்…! இவையும் ஞானம் தான்…!

சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்… கவி ஞானமும்…! எல்லாமே.

ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது…?

இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட…” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.

1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்…!

காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா…?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா…?

ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்… சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்…!

அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்…!

அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்…!”

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்

 

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!

 

பாடலை உச்சரிக்கும் தன்மையில் உன் சுவாச நிலை புரிகின்றதா…? பகர்ந்திட்டேன் பகர்ந்திட்டேன் பல நாட்களாக…!

சுவாச நிலை என்பது “ஓம் ஈஸ்வராய நம… ஓம் ஈஸ்வராய நம… என்று உன் மூச்சை வெளி விடுவது அல்ல…”

மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பொழுது
1.உன் கலக்கத்தை எல்லாம் அடக்கி விட்டு அந்நிலையை மறந்து விட்டு
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா… என்று
3.உன் மூச்சை உள்ள இழுக்கவும் வெளிவிடவும் பழகவும்.

சோர்வுடன் விட்ட மூச்செல்லாம் சோர்வுடனே தான்…! பகர்ந்துள்ளேன் பகர்ந்துள்ளேன் பல நாட்கள் ஜெப நிலையில் இருந்திடுங்கள் என்று.

எண்ணம் செயல் இன்பம் துன்பம் சோர்வு அனைத்தும் கலந்தது தான் மனிதன்.
1.மனிதனின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இல்லாவிட்டால்
2.சுவையும் இல்லை வளமுள்ள வாழ்க்கையுமில்லை.

சோர்வும் வருவதால் தான் மனக்கவலை தன்னை விட்டு அகல்வதில்லை மனதில் உள்ள சோர்வை அகற்றிடாமல் சோர்வின் நிலையிலேயே இருந்திட்டால்…
1.உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகில் உள்ள சோர்வின் அணுக்களை எல்லாம்
2.உடலில் அணுவாக மாற்றிடச் செய்யும்.

நல்நிலையில் உள்ள பொழுது நல்ல நிலையில் உள்ளவனுக்கு சந்தோஷம் இன்பமும் “ஈஸ்வரனே” (உயிர்) தருவான். சோர்விற்கும் கலக்கத்திற்கும் எவர் ஒருவர் அடிமையாகின்றாரோ அவர் நிலையெல்லாம் துன்பத்துடனே…!

சோர்வும் கலக்கமும் வந்திட்ட பொழுது அந்நிலையையே எண்ணிடாமல்
1.அவன் (ஈசன்) எனக்குள் உள்ளான் என்ற எண்ணம் மனதினுள்ளே வந்து
2.சோர்வின் நிலையை வளர்த்திடாமல் அவனிடம் அதை விட்டு விடும் தன்மை வேண்டும்.

எண்ணும் சோர்வமும் கலக்கமும் மனிதன் நிலையினையே மாற்றிவிடும்… உடல் நிலையையும் மாற்றிவிடும்… மன நிலையையும் மாற்றிவிடும். மன நிலை மாறிவிட்டால் உன்னை அண்டிக் கொள்ளும்… அந்த அணுவெல்லாம்.

அணுவின் தன்மையிலே நல்ல அணுவும் உள்ளதுவே தீயணுவும் உள்ளதுவே. சோர்வின் தன்மையிலே தீய அணுவை அணுகிடுவாய்… தீயணுவின் வேலையெல்லாம் உடல் நிலையையே மாற்றிவிடும். கோபம் சலிப்பு வருவதெல்லாம் இந்நிலையில் தான்.

1.எந்நிலை வந்தாலும் ஈஸ்வரன் (உயிரிடம் – என்னிடம்) என்பவனிடம் விட்டுவிடுங்கள்.
2.அவன் பார்த்துக் கொள்வான்.

நம்மை ஒருவர் துவேஷிக்கும் பொழுதும் நம்மைப் பார்த்து ஒருவர் பொறாமையாக எண்ணும் எண்ணமும்…
1.சோர்வின் நிலையில் உள்ளவனுக்கு உடனே வந்து தாக்கும்
2.காரணம் எல்லா நிலையிலும் எண்ண நிலைதான் மிகவும் துரிதமானது.
3.அவர்கள் எண்ணும் எண்ணம் செல்லும் வேகத்தில் உன் உடலை வந்து தாக்கிவிடும்.
4.உனக்குள் சோர்வும் கலக்கமும் இருக்கும் பொழுது உன் எதிரியின் எண்ணம் உடனே வந்து உன்னைத் தாக்கும்.

இந்நிலையில் வருவது தான் உடல் நிலையில் வரும் மாற்றங்களும் வியாதிகளும் எல்லாமே.

அதற்குத் தான் பிறரின் கண் படும்… சுற்றிப்போடு…! என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பாய்.

அந்நிலை வருவதெல்லாம் உன் சோர்வினால் தான்.
1.சோர்வுடையவனுக்கு எல்லாத் தீய குணங்களும்
2.எண்ணும் எண்ணத்தை விடத் துரிதமாக வந்தடையும்.

பெரும் காற்றும் மழையும் மின்சாரமும் செயற்கை மின்சாரங்கள் எல்லாமே செல்லும் வேகத்தை விட “எண்ணத்தின் வேகம்” உலகிலேயே உயர்ந்த வேகம்…!

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
1.இருக்கும் நிலையில் இருந்து நீ செய்யும் தியானத்தில் உன் எண்ணம் எம் மண்டலத்தைச் சுற்றியும் பாயும்.
2.மனிதனின் சக்தி உலக சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய சக்தி
3.அச்சக்தியின் தன்மையை யாரப்பா உணர்ந்துள்ளார்கள்…?
4.எண்ணத்தின் தன்மையை எண்ணிப்பார்…! உன் உணர்வை எண்ணிப்பார்.
5.நாட்டமெல்லாம் அவன் அருள்வான் நலிங்கிடாதே… எந்நிலை வந்தாலும் மாற்றிடும் தன்மை வேண்டும்.

சோர்வு சோகம், கோபம் குரோதம் நலிவு வருவதெல்லாம் மனிதனுக்குச் சரிபாதி உள்ளது அதை எல்லாம் வென்று… அந்நிலைக்கு நம் மனதை இடம் கொடாது
1.நம் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.மின்னல் வந்தாலும்… பூகம்பம் வந்தாலும்… நம் நிலையை மாற்றிடாமல் இருந்திடுவதே இத்தியானத்தின் முறை.

தியானத்தில் அமர்ந்து தான் இந்நிலை வர வேண்டும் என்பதல்ல…!

உன் உடலில் உள்ள கோடான கோடி அணுக்களையும் உன்னைச் சுற்றி உள்ள பல கோடி அணுக்களையும் ஒருநிலைப்படுத்தத்தான் “இந்தத் தியான முறை எல்லாம்…!”

மனிதனின் நிலையில் ஒரு பாதி இது என்று சொன்னேன். மறு பாதி என்ன என்றால் ஆசை பேராசை பற்று உல்லாசம் நிறைந்துள்ளது.
1.ஆசையை வளர்த்து விடுகின்றான்
2.பாசத்தைப் பகிர்ந்து விடுகின்றான்.
3.உள்ள நிலையை மறந்து விட்டுப் பெரும் உல்லாசத்தை நாடி விடுகின்றான்.

அத்தகைய நிலையில் மனம் எடுக்கும் சுவாசத்தில் நன்மை தீமை ஒன்றுமே தெரிவதில்லை.

தன் நிலையில் உள்ள ஆசையை வளர்த்திட மென்மேலும் ஆசைப்பட்டு அந்த ஆசை அணுவுக்கே அடிமையாகின்றான். பாசம் என்பதும் இப்படியே…! பெரும் பாசத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.

உல்லாசத்திற்கு அடிமையாகின்றான் இந்நிலையில் உள்ளவனுக்கு எந்நிநிலையும் அவன் கண்ணிற்குத் தெரியாது.

1.இந்த நிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு
2.தன் நிலையில் எது வந்தாலும் அடக்கி ஒருநிலைப்படுத்துபவனுக்கே
3.”தியான நிலை” என்பது கூடி வரும்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம் உன் அளவில் கஷ்டப்பட்டு உன்னை நீ வருத்தி உன் வழியில் பொருள் திரட்டிப் பிறருக்கு அளிப்பது தான் தானம் அல்ல.

எந்த நிலையிலும் நம் நிலையில் ஒருவரின் பொருளுக்கோ ஒருவரின் துவேஷத்திற்கோ ஆளாகாமல் ஒருவரை ஏமாற்றியோ பிறரின் சொத்தை அபகரிக்கக் குறுக்கு வழியில் சென்றிட்டோ… தன்னிலையை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதோ… இதுவல்ல தர்மம்.

தர்மம் நியாயம் என்கிறோம்… தர்மம் என்பது தன் வழியில் உள்ள நியாயத்தை என்றும் கடைப்பிடித்து மற்றவரின் கஷ்டத்தைப் பார்த்து உன் உள்ளத்தால் வார்த்தையால் அன்பைப் பொழியும் பொழுது நீ தரும் பொருளினாலோ நீ இடும் பிச்சையினாலோ வருவதல்ல தர்மம்.

ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்த பின்
1.உள்ள நிலையில் உன்னால் முடிந்த அளவு அவருக்கு அன்பையும் உன் ஆறுதலையும் பகிர்ந்து
2.அக்கஷ்டப்படும் மனிதருக்கு “உன் அருளை” எப்படிப் பாய்ச்சுகின்றாயோ
3.அதிலே உள்ளதப்பா தர்மமும் நியாயமும்.

அவன் நிலையைப் பார்த்து பழித்துப் பேசிடவோ துவேஷித்திடவோ வேண்டாம். பொருளினால் மற்ற உதவிகள் அளிப்பதனால் மட்டும் வருவதில்லை தர்மமும் நியாயமும்…! (இது முக்கியம்)

உன் ஜென்ம நிலையை உணர்ந்து கொண்டால் எல்லாமே விளங்கிவிடும்… உன் வழிக்கு எல்லாமே.

1.தியான வழியில் அமர்ந்தால் உன் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம்
2.நான் பாடத்தில் சொன்ன எல்லா அணுக்கள் எல்லாமே “உன்னை வந்து தாக்கப் பார்க்கும்.

உன் எண்ணத்தின் வழியிலேயே அந்நிலையில் நீ செய்யும் தியானம் எல்லாம் அவன் (ஈஸ்வரன்) நிலையில் ஐக்கியப்படுத்து
1.உன் மனதைப் பெரும் நிதானப்படுத்திச் சாந்தமுடன்
2.எந்நிலையும் உன்னைத் தாக்கிடாமல் எந்த அணுவும் உன்னை அடைந்திடாமல்
3.உன் மனதை ஒருநிலைப்படுத்தி நீ விட்டிடும் மூச்சிலே தான் தியானமே கை கூடும்.

அந்நிலையில்… தியான நிலை கைகூடும் அந்த நிலையில்
1.அவன் பாதத்தை வணங்கிடப்பா.
2.அவர் பாதம் என்பதெல்லாம் உன் சக்திக்குள்ளே தான் உள்ளதப்பா.
3.அந்நிலையில் உள்ளவனுக்கு எண்ணும் எண்ணமெல்லாம் அவனருள்வான் உன் வழிக்கே.

உங்களுக்கு எண்ணத்தின் வேகத்தைச் சொன்னேன் அந்நிலையில் தியான நிலையில் உள்ளவனின் எண்ணத்தின் வேகம் உலகை மட்டுமல்ல உலகைச் சுற்றியுள்ள பல கோடி… பல கோடி… கோடி மண்டலங்களையும் அறிந்திடலாம்.

எந்நிலையில் உள்ள நிலையும் உன் தியான நிலையில் எண்ணத்திலேயே கண்டிடலாம்… பல கோடி கண்டிடலாம். தியான நிலையைப் பகிர்ந்திட்டவன் எல்லாம்… இந்நிலையை யாரும் பகிர்ந்திடவில்லை.

“தியானம் தியானம்” என்கிறார்கள். எந்த நிலைக்குத் தியானம் என்கிறார்கள்…?

தியான நிலையில் இருந்து உலக நிலையையும் வேறு பல நிலைகளையும் அறிந்து விட்டு என்ன பயன்…? என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் சுழல்கின்றது.

1.தியான நிலைக்கு வருவதெல்லாம் அவன் அவன் செய்த பூர்வ புண்ணியப் பலனே.
2.பழிப்பவர்கள் பழிக்கட்டும்… வருபவர்கள் வந்திடட்டும் தியான நிலைக்கே.
3.முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் கல்கியின் நிலையை.
4.அந்நிலைக்கு வருபவனுக்குத் தான் இந்தத் தியான நிலையும் கைகூடுமப்பா…!

தியான நிலையைப் புரிந்திட்டாயா உன் பாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வாயா…!

திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருமகன்(ள்) பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திரு குருவின் அருள் பெறவே
திருமானின் அருள் பெறவே
திருவருள் தந்திடுங்கள் தாயே தந்தையே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…! என்றார் குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்… வந்து தூக்குடா…! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில்… பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு… வேஷ்டி எல்லாம்… என்னைக் காப்பாற்றாது…! என்கிறார் குருநாதர்.

சாமி… வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா…” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்… இறங்கு சிங்… என்று நீ பார்த்திருக்கிறாயாடா…?” என்றார்.

1.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு… உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்… என்னடா நீ அடங்கிவிடும்…! என்று சொல்கின்றாய்…? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி… இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன்.

அதற்குப்பின்…
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
3.ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய்…! என்று இந்த இடத்தில் வைத்து… மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து… அதை எல்லாம் சொல்வதற்கில்லை…! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது…? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்… இறங்கு சிங்… என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்தது இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்…?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது…?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே… எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்…
1.எது எது உன்னைச் சந்திக்கும்…?
2.அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்…!
3.அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது… இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களை அது கொல்லும்… மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர்.

நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால்
1.இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
2.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.தியானம்….!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது…?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்…
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்

 

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை நீங்கள் அடிக்கடி உடலுக்குள் செலுத்தினால் போதும்.
1.நீங்கள் அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அதை பெறச் செய்வதற்கும்
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவிச் சென்று அது சக்தி வாய்ந்ததாக மாறும்படியும் செய்கின்றோம்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உள்ளே சென்ற பின் உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டிருக்கும்… நஞ்சான இருள்களை நீக்கிவிடும்.

அதற்குத் தான் இதை இப்பொழுது யாம் உபதேசிப்பது. ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்கள் நல்ல அறிவைக் காக்கப் பயன்படும்.

பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்த பின் மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகள் எப்படித் தோன்றுகின்றதோ… தூண்டுகின்றதோ… நினைவு வருகின்றதோ… அதைப் போன்று தான்
1.உங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது
2.அப்படிச் சொன்னால்தான் அந்த உணர்ச்சிகள் தூண்டும்… உங்களுக்கு புரிய வரும்.

சந்தர்ப்பத்தில் வேதனையைப் பார்த்த பின் இருண்டு விடுகின்றது உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயல் முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான்… மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியைம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரும்படி செய்து… உங்கள் கண்ணின் கருவிழிக்குள் பதிவு செய்து… இந்த உணர்வின் ஆற்றலை உங்கள் நல்லறிவினை… எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திட இதை உபதேசிப்பது.

1.உங்களை அறியாமலேதான் இதைப் பதிவு செய்கின்றேன்
2.மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும்
3.தீமைகளை நீக்கிடும் ஆற்றலும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் எனது குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்களை அறியாது நல்லறிவை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு சிறு திரைகளை நீக்கும்படி செய்கிறோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நல்ல அறிவுக்குள் இணைக்கச் செய்யும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அப்படி நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையில் அது முழுமை பெற்றால் சந்திரன் எப்படிப் பூரண பௌர்ணமியாகப் பிரகாசிக்கின்றதோ அதே போல உங்கள் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் “ஒளியின் சிகரமாக மாறுகின்றது…”

இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் உங்கள் உயிரான்மா பிறவி இல்லாப் பெரு நிலைகள் அடையும்.

இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே வரும் தீமைகளை அடக்கி… நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி செயலாக்காதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)

 

“நானேதான் நான்…” என்னும் நிலை எல்லோருக்கும் வேண்டும். நான் என்னும் “அகந்தை” தான் வேண்டாம்.

நான் என்பதை அகற்றிடுங்கள்… நான் என்னும் சொல்லை விட்டுவிடுங்கள்…! என்று சொல்கின்றார்கள். ஆனால்
1.குழந்தையின் பருவத்திலேயே ஊட்டி விடுவதெல்லாம் “நான்” என்னும் சொல்லைத்தான்.
2.வளர்ந்த பிறகு “நான் என்பதை அகற்றிவிடு” என்று சொல்கின்றார்கள்.

ஆக… தன் நிலை உயர்ந்தால் தான் பிறரை உயரச் செய்ய முடியும்.

தன் நிலை என்னும் பொழுது நான் என்னும் நிலை தான் வரும்… நம் நிலை என்று எப்படி வரும்…? ஆகவே நான் என்பதை அகற்றிடுங்கள் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.

“நான்” என்பதையே புரியாமல் செய்வது தான் நான் என்பதெல்லாம்

குயவன் ஒரு மண் பானையைச் செய்துவிட்டு “நாம் செய்தோம்” என்று சொல்ல முடியுமா…? நான் தான் செய்தேன்…! என்று சொல்வான்.

தான் செய்யும் செயலுக்கு… செயல் என்பது தொழிலுக்கோ பிழைப்பிற்கோ உண்ணுவதற்கோ “அந்த நான்” வேண்டும். அந்நிலையில் நான் இருந்தால்தான் தன் நிலையையே பார்த்திட முடியும்.

1.நான்…! என்ற அகந்தை ஆணவம் பொறாமை பழிச்சொல்…
2.என்னைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்னும் நிலையில் இருந்து கொண்டு பிறரைப் பழிக்கும் நிலை
3.அந்த நிலையில் உள்ள நான் தான் வேண்டாம் என்பது.

நான் என்பதற்கு நான் எதிரி அல்ல…! குழந்தை தன் படிப்பில் ஒரு ஓவியத்தை வரைகிறது. அதை யார் செய்தார்கள்…? என்றால் கேட்டால் “நான் செய்தேன்…” என்று சொல்லக் கேட்டால் அது எவ்வளவு பெருமை…?

அதில் உள்ள அழகு வளர்ந்த பின்னும் இருந்து விட்டால்… அந்த நான் இருந்தால்தான் உலகமே அழகுபடும். அந்த நானில் இருந்திடுங்கள்.
1.நான் செய்திடுவேன் நல்ல காரியத்தை
2.நான் செய்திடுவேன் நல் தியானத்தை
3.நான் தியானம் செய்து நல் அலைகளைப் பரப்பிடுவேன்

இந்த நானை அகற்றாதீர்கள்.

1.மனத்தில் நல் மனமும் உள்ளது தீய மனமும் உள்ளது
2.நானிலும் நல் நானும் உள்ளது தீய நானும் உள்ளது.
3.மனம் எல்லாம் ஒன்றுதான்… நானும் ஒன்று தான்…!

அதைப் பிரிக்கும் வழி தான் நமக்கு வேண்டும்.

ஒரு இயந்திரமோ சமயலோ எதுவாக இருந்தாலும் ஒருவர் செய்வதைப் பார்த்துவிட்டு அவன் செய்து விட்டான்… ஏன் நான் செய்ய முடியாதா…? என்ற நான் வேண்டும்.

மனிதனுக்கு எப்படி ஆசை வேண்டும் என்று சொன்னேனோ அது போலவே “நானும்” வேண்டும். நானுக்கு நான் எதிரி அல்ல…!

ஒரு நல் வழியை நிலைநாட்டிட… “நான் அதைச் சொல்கிறேன்” என்னும் சொல்லில் தவறில்லை.
1.தீய வழிக்குத் தான் நான் என்பதை அகற்றிட வேண்டும்.
2.நான் என்பது நான் என்ற அந்த அகந்தையை அகற்ற வேண்டும்.

ஒரு நிலையில் இருந்திடுங்கள் ஒற்றுமையுடன் இருந்திடுங்கள்.

இன்றைய உலக நிலையில் எல்லாம் ஒரு நிலையும் ஒற்றுமையையும் பறந்திட்டது… கால நிலையைக் கருத்துரைத்தேன்.

குறுகிய காலம் என்றேன் பார்த்தாயா பதட்ட நிலையை…! பரஞ்ஜோதி வடிவானவனே பார்க்கின்றான் இப்பாருலகில் உள்ள நிலை எல்லாம். பகர்வதற்கு என்ன உள்ளது…? இப்பாரின் நிலையை…!

ஆகர்ஷண சக்தி எல்லாம் அழன்று உள்ளது அழிவின் நிலையில்.

கால நிலை மறந்து விடாதே கால நிலையை மறந்து விடாதே காத்திடுவாய் கல்கியுடன் கலந்திடத் தான்…!
1.அழிவு நிலையில் எல்லாம் அழியும் போது நான் இருந்து என்ன பயன்…? என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.
2.நம் உயிரின் ஆசைக்காக “நாம் மட்டும் வாழ வேண்டும்” என்ற எண்ணத்திற்காக இருக்கச் சொல்லவில்லை.

உலக நிலையே அழிந்து விட்டால் நாம் வாழ்ந்த நிலைக்கு என்ன பயன்…?

பிறந்த பயனைப் போற்றிடச் செய்யுங்கள் போற்றிடச் செய்யுங்கள் என்பது பிறர் போற்றுவதற்காக அல்ல. புதிய எண்ணம் புதிய செயல் அதைப்போல் புதிய உலகத்தையும் கண்டிடுங்கள்.

சித்திரம் தீட்டிடுவேன் சித்திரம் தீட்டிடுவேன்
சிந்தை உள்ள சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிவனின் சக்தியெல்லாம் சிந்தையில் வந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன்
சிவனாரின் ஆசி பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ சிவா என்னும் நாமத்தில் சிந்தை எல்லாம்
கலங்கிடாமல் இருந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ பாக்கியம் பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் அருளைப் பகர்ந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் சித்திரம் தீட்டிடுவேன்
(சிவன் சக்தி நடனக்காட்சி)
சிவ நடனம் கண்டிடவே
சீற்றமெல்லாம் குறைந்திடவே
சிவ பாதம் பணிந்து நின்றே சித்திரம் தீட்டிடுவேன்
சிங்கார மழலையிலே
சிரிக்கும் சிரிப்பில் எல்லாமே
சிந்தையுள்ளே மகிழ்ந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன் சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிறு சிறு பூவின் மணத்தில் எல்லாம்
சிந்தையில் மனதை ஏற்று
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவ சிவாய நம ஓம் சிவ சக்தி நம ஓம்
சிவனின் நாமத்தை ஓதிடவே சித்திரம் தீட்டிடுவேன்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.

நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது… குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது…? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.

ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புது விதமான நோயாக மாறுகின்றது.

மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.

ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,

பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றோம்… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று அடிக்கடி ஞாபகப்படுத்திகின்றோம்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்… மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.

அதாவது…
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
6.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.

தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”

 

கோழி… விஷமான உணவுகளை உட்கொண்டாலும் அந்த விஷத்தினை ஒடுக்கித் தன் உடலின் தசைகளாக மாற்றித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றது. மயில் போன்ற பெரும்பகுதியான பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக் கூடிய சக்தி பெற்றவைகள் தான்

இதைப் போன்று தான்
1.மனிதனின் வாழ்க்கையில் தனக்குள் வந்த கடும் தீமைகளை… அதனின் செயலாக்கங்களை ஒடுக்கி
2.தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படிச் செயல்பட்டவர்கள் தான் தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதற்குப் பின் வந்த மனிதர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகளைச் சந்தர்ப்பத்தால் கவர்ந்து
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கப்படும் பொழுது
3.உடல் பெறும் நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்

அது தான் சப்தரிஷி மண்டலம் என்பது. ஏழாவது நிலை என்றால் சப்தரிஷிகள் என்பது.

ஆகவே நம்முடைய ஆறாவது அறிவால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தனக்குள் செயல்படாதபடி தடுத்து… ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அடக்கி… அருள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்…
1.எந்த மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ அவரின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெற்று
2.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளாரோ
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்கு அது நம்மை அழைத்துச் சென்று விடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விடும்… அதற்குப்பின் நமக்குப் பிறவி இல்லை.

விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தக் கூட்டமைப்புக்குள் “சாதாரண கண்களுக்குப் புலப்படாத அளவுகளில்” விண் சென்றவர்கள் அனைத்தும் ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…!

நாம் சென்றடைய வேண்டிய எல்லை அதுதான்…!

நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”

 

மனமே தான் நீ…! மனத்திற்கும் குரங்கிற்கும் ஒப்பிடுகின்றார்கள்… மனம் ஒரு குரங்கு என்கிறார்கள்…! ஆனால்
1.குரங்கின் நிலை வேறு மனிதன் நிலை வேறு
2.குரங்கின் நிலை ஒரு நிலையிலே தான் உள்ளது.

ஒரு பொருளையோ ஒரு செயலையோ குரங்கின் மனம் எண்ணிவிட்டால் “அதன் நாட்டம் எல்லாம் ஒரு நிலையில் தான் உள்ளது…” குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை வைத்து மனநிலையும் குரங்கையும் ஒப்பிட்டார்கள்.
1.மனம் அல்ல குரங்கு… குரங்கல்ல மனம்…
2.குரங்கைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு… குரங்கிற்கும் மனிதருக்கும் உள்ள நிலை வேறு.
3.குரங்கின் எண்ணம் மாறாது… குரங்கின் செயலும் மாறாது… தன் எண்ணத்திலேயே தான் அது என்றும் உள்ளது.

மனம் – எண்ணம்… எண்ணம் – மனம் எல்லாம் ஒன்றுதான்.

உன் எண்ணம் எங்குள்ளது…? துரிதமான நிலையில் சொல்வதெல்லாம் உன் எண்ணத்திற்கு “உதயம்” வரத்தான்.

பாடத்தில் தடங்கல் வந்தால் பாடத்தின் தன்மையும் மாறி விடுகின்றது. எண்ணமும் செயலும் மாறி விட்டால் உன் நிலையும் மாறி விடுகின்றது.

நம் பிறப்பிலிருந்து ஒவ்வொருவருக்கும்… “அவருடைய வளரும் சூழ்நிலை… பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள்… சுற்றத்தாரின் பழக்கங்கள்…” எல்லாமே கலந்து விடுகின்றது.

இந்த நிலையில்
1.உன்னை நீ உணர வேண்டும்
2.உன் நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
3.தன் எண்ணம்… தன் மனம்… தன் செயல்… எல்லாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்.

இந்த நிலையைப் புரிந்து கொண்டால் எந்நிலையும் கிட்டிவிடும் என்று பகர்ந்துள்ளேன் பலமுறை. குழப்பமுடன் உள்ளாய் இரு தினத்தில் இந்நிலையில் ஏன் குழப்பம்…? உன்னையே நீ காணும் பொழுது…!

எடுத்ததை முடிப்பாய்…! எண்ணியதைச் செய்வாய்…! செயலெல்லாம் அவன் செயல்…! அவன் செயல் என்று வந்த பிறகு மனநிலையை மாற்றி விடாதே…!

உலக நிலை மாறப் போகிறது உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும் தியான நிலையில். கருவின் நிலை வளர்வதற்குள் கருகிவிடும் உலகம் முழுவதுமே உருண்டு விடும்.

இந்நிலையில் உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும். தியான வழியினைப் பயன்படுத்தித் தப்புங்கள். பாவ புண்ணியம் என்ற அணுவின் அணுக்கள் எல்லாம் அணுவுடன் மோதும் நிலையில் உள்ளது.

இவன் வெடிப்பான் அவன் வெடிப்பான் என்று உள்ள பொழுதே இவன் வினை எல்லாம் வெடித்துவிடும் அணுகுண்டாக…! கூடி விட்டான் கூட்டாளியாக… கூட்டத்தினிலே புகுந்து விட்டான். இந்நிலையும் சரி இல்லை… பெரும் அழிவிற்கே இந்நிலை எல்லாம்…!

ஒன்றை ஒன்று ஊடுருபவன…! ஒருவன் நிலையில் நிலையல்ல… தன் நிலையை நிலைநாட்டப் பிறர் நிலையில் ஊடுருவுகின்றான்…. காசு பணம் தேடிடவே கடல் கடலாக அலைகின்றான்.

உன் நிலையை எண்ணிடாமல் அவர் நிலையினை எண்ணுபவன் ஒரு சிலரே… உன் நிலைக்குப் புரிந்திடாது.

இயற்கையின் தாக்கலே பெரும் விஷமாகத் தாக்கிவிடும் (அம்பு எய்து விழும் காட்சி)
1.வருடம் அல்ல நாளல்ல… வருவதெல்லாம் பேரழிவு தான்
2.பூமித் தாயும் தாங்க மாட்டாள்.

அந்த அணுவின் நிலையை. அணுவின் பாடத்திலேயே புரிந்திருக்கும் இவன் விட்ட அணுவெல்லாம் இவனையே தாக்குகின்றது. நல்லெண்ணம் எங்குள்ளது…? தர்ம நியாயம் மறைந்து விட்டது.

செயற்கையுடன் வாழ்பவனுக்கு இயற்கை நிலை எதற்கப்பா…? சீறிடுவாள் இயற்கை அன்னை… இவனின் செயற்கை இவனையே அழித்துவிடும்.

விஞ்ஞானத்தைக் கண்டவன் எல்லாம் மெய்ஞானத்தைக் கண்டானா…?
1.விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்திருந்தால் நல்ல நிலை பெற்றிருக்கலாம்
2.மெய்ஞானத்தையே மறந்திட்டான்.

விஞ்ஞானத்தில் உயிரணுவைச் செய்திடச் சொல் பார்க்கலாம்…!

இயற்கை அன்னை தந்த உயிரணுவை வைத்துத் தான் இவன் விஞ்ஞானம் எல்லாம். விஞ்ஞானம் எல்லாம் அழிவிற்குத் தான்…!
1.இராக்கெட்டின் நிலையிலேயே மறந்திட்டான்
2.பறந்து என்ன பயன் கண்டான்…?
3.தன் நிலையை உணராதவன் செய்திட்டான் இராக்கெட்டை.

தேய்வ ஞானம் மறைந்ததப்பா தெய்வீகமும் மறைந்ததப்பா தேவனையே மறைத்திட்டான் தேவலோகம் சென்று பார்க்கின்றானா…? பார்த்து என்ன பயன் கண்டான்…? பாரில் உள்ளவர்க்குப் பகர்ந்திட்டானா…?

1.அவன் (ஈஸ்வரன்) அருளைப் பெற்றிடப்பா…!
2.அவன் இல்லாமல் யாரும் இல்லை
3.அவனே தான் உலகமப்பா
4.அவனே தான் நீயுமப்பா நானுமப்பா
5.அவனையேதான் நினைத்திட வேண்டுமப்பா
6.கலியின் தன்மையை மாற்றிடப்பா
7.காவியத்தில் வந்திடப்பா
8.கல்கியாக நிலைத்திடப்பா…!

மனிதன் மனதை மாற்றிடுங்கள்…! வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதை எதற்கு…? என்னும் நிலை வேண்டாம். புகட்டிடுங்கள் குழந்தைகளின் மனதிற்கு எல்லாம்.

எல்லோருக்கும் தான்… இதைச் செய்யச் சொல்கின்றேன்…!

இன்றைய கால நிலையைப் பற்றிச் சொல்… மனிதனின் நிலையைப் பற்றி புரிந்திடச் சொல். சிறு குழந்தைக்கும் புரியும் நிலையில் பகர்ந்துவிடு.
1.சிறுவர் சிறுமியருக்கெல்லாம் புரியும் தன்மையிலே அவர் நிலைக்கு நீ சென்று சொல்லி
2.அவரின் அன்பை எல்லாம் பெற்றுக் கொண்டு இன் அன்பைத் தந்துவிடு.
3.நான் வருவேன் உன்னுடன்…!

எந்த நிலைக்குச் சென்றாலும் எவ்விடத்திற்குச் சென்றாலும் புகட்டிடுவாய் பாலரின் மனதிற்குள்ளே. பாலரின் மனதை ஈர்க்கப் பகர்ந்துள்ளேன் இந்தப் பாடம் எல்லாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும்… தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்… இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்

 

நாம் மனிதர்கள் சந்தோஷமான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்ட பின் சந்தோஷமாக வாழ்ந்த நிலையை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே அன்று நமக்குச் சந்தோஷம் வருகின்றது.

அதே சமயத்தில் கோபமாகப் பேசியருடைய நினைவுகளை நாம் எண்ணினோம் என்றால் நம்மை அறியாமலே வெறுப்பும் கோபமும் அன்று உருவாகின்றது.

அப்பொழுது நம் உடலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஒரு மனிதன் வேதனையுடன் பேசினால் அதைப் பதிவு செய்து கொண்டால் அந்த மனிதனை மீண்டும் நினைக்கும் பொழுது நம்மை அறியாமலே வேதனை வருகின்றது… மனம் சோர்வடைகின்றது…!

ஒரு தொழிலில் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து கொண்டால் அந்த நினைவு வருகின்றது ஆனால் தொழில் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அந்த நேரம் சோர்வடைந்து விடுகின்றோம்.

இதைப் போன்று
1.இந்த உடலில் “எதை எதை” நாம் பதிவு செய்து கொள்கின்றோமா
2.அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது நம் கண்ணுக்கே வருகின்றது.
3.கண்ணுக்கு வரும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் நாம் பழகியவர்களின் உணர்வுகள் பரவி உள்ளதை நாம் சுவாசித்து
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் உடலின் மாற்றங்களும் எண்ணங்களும் சொல்களும் வருகின்றது… நம் செயல்களும் அமைகின்றது.

உதாரணமாக நம்மிடம் கோபமாகப் பேசியவர் நினைவு வரும் பொழுது பெண்களாக இருப்பின்… குழம்பு வைக்கும் பொழுது அதில் “காரத்தை” அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

சலிப்பு கொண்டோரின் நினைவுடன் சமைத்தால் அதிலே “உப்பை” அதிகமாகப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும்.

ஆண்களாக இருப்பின்… ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் அந்த நேரம் குறுக்கே யாராவது வந்தார்கள் என்றால்
1.உடனே சலிப்பு வந்துவிடும்… அப்பொழுது கோபம் அதிகரிக்கும்.
2.கோபத்தின் தன்மை வரும் பொழுது வாகனத்தைச் சீராக ஓட்டுவது மிகவும் கடினமாகி விடுகின்றது.
3.கோபம் வந்தபின் அடுத்து நிதானமாக வண்டியையும் ஓட்ட முடியாது… ஓட்டினாலும் சிரமம் தான்.

இதைப் போன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நமக்குள் பதிவு செய்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது
1.காற்றிலே கலந்துள்ள அந்தந்த உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து
2.அந்தந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செல்வதும்… பின் அதைச் செயலாக்கியும் விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம் நினைவு கொள்ளும் பொழுது அது வருகின்றது.

கல்விச்சாலையில் படிக்கும் போது பாடங்களைப் பதிவு செய்து கொண்டால் அதாவது…
1.எந்தப் பாடத்தை பதிவு செய்தோமோ அதை நினைவால் வெளிப்படுத்தும் போது
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்து விடுகின்றது.
3.அந்தப் பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அதனுடைய தொடர் வரிசையும்
4.பாட நிலையில் எதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று குறித்த உணர்வுகள் நமக்குள் தெளிவாக வருகிறது.

உதாரணமாக உயர் படிப்பு படிப்பவர்களுக்குப் படிப்பில் பாடங்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதன் தொடர் வரிசையில்… படிக்கும் பொழுதே சோர்வோ சோம்பேறித்தனமோ வந்து விட்டால்… குடும்பம் அல்லது தொழில் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பு வந்துவிட்டால்…
1.பாடங்கள் சீராகப் பதிவாகாது… பரீட்சையில் தேர்வதும் மிகக் கடினமாகின்றது.
2.அத்தகையவர் படித்து வருவார் என்றால் மிகவும் கடினம் தான்

உதாரணமாக… குடும்பத்தில் கணவன் மனைவிக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் “குழந்தை வேண்டும்” என்று பதிவு செய்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அதற்கு மாறாக… “குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே… இல்லையே…!” என்று இதைப் பதிவு செய்து கொண்ட பின் இந்த உணர்வுகளே அதிகரித்து “புத்திர பாக்கியம் கிடைப்பது” காலதாமதம் ஆகிவிடும். காரணம்…
1.சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது
2.அந்த அணுக்கள் வீரியத்தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது அல்லது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொண்ட நிலைகள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இப்படிப்பட்ட இயக்கத்திற்கு வருகின்றது இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

“தன் பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும்…” என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” பிள்ளையைப் பார்க்க வந்து வந்து செல்கின்றனர்…! என்று பதிவு செய்தால்
1.அந்தப் பதிவே மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ஆன்மாவில் அது கலந்து
2.பெண் பார்க்க வரும் பொழுது அவர்கள் நம்முடைய சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
3.நம் சொல்லைக் கேட்கப்படும் பொழுது அவர்களும் சோர்வடைகின்றார்கள்.
4.அப்போது நம்முடைய எண்ணமே பார்க்க வந்தவர்கள் உணர்வினை இயக்கி…
5.பேச்சுத் தொடரில் சோர்வின் தன்மை அடையச் செய்து திருமணம் நடைபெறாது தடையாகி விடுகின்றது.
6.நல்லது எண்ணுவதை அந்த இடத்தில் நாம் விட்டு விடுகின்றோம்.

அதை எல்லாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால்… நம் பெண் எங்கே திருமணம் ஆகிச் சென்றாலும் அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்…
1.அந்தச் சக்தி என் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிக்கடி எண்ணினால்…
2.அந்தத் திருமணமாக வேண்டிய பெண்ணும் இப்படி எண்ணினால்…
3.துரிதமாக அதற்கு நல்ல வரன் கிடைக்கும்.
4.எதிர்காலம் நல்ல வாழ்க்கையாகவும் அமையும்
5.அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்… மகிழ்ச்சியை உண்டாக்கச் செய்யும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஒரு ஐந்து நிமிடம் உடலுக்குள் செலுத்திய பின்… எந்தக் காரியத்திற்குச் செல்கின்றீர்களோ அவை அனைத்தும் காரிய சித்தி ஆக வேண்டும்… எங்கள் சொல் அவர்களை நல்லதாக்க வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும்… என்று “இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”

வாழ்க்கையில் வரக்கூடிய எந்த நிலையாக இருந்தாலும் நல்லதாக வேண்டும் என்று இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து செயல்படுத்த வேண்டும்.

ஆகையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றீர்கள்… அப்போதெல்லாம் அதை வலுக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

அதிகாலையில் எப்பொழுது விழிப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளை எண்ணி விட்டு இந்த முறைப்படி அந்தந்த காரியங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி எத்தனையோ மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் உள்ளார்கள்

ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.உடலுக்குள் சோர்வடைந்த நிலையில் எதுவாக இருந்தாலும் நல்ல மன பலம் பெற்று மன வளம் பெறுவீர்கள்.
2.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தியாக வரும்…
3.உங்கள் காரியங்கள் “அனைத்தும் வெற்றியாகும்…”

செய்து பாருங்கள்…! (ஞானகுரு)

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”

 

உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.

காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.

அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.

இது எதனைக் குறிக்கின்றது…?

விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.

இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?

இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”

சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.

நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.

இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.

சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.

இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.

பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.

உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.

உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் “எண்ணிலடங்காதோர்” இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

ஆகவே சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது…”

செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்

 

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று “புருவ மத்தியில் எண்ணி” ஏங்கித் தியானித்து… அந்த வலுவைக் கூட்டுங்கள்.

அதை வைத்து நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும். காரணம்… நம் மூதாதையர்களுக்கு குலதெய்வங்களுக்கு இதற்கு முன்னாடி நாம் அதைச் செய்ய மறந்து விட்டோம்.

இப்போது
1.சப்தரிஷி மண்டலத்தின் பேர்ருள் பேரொளியை வலுப்பெறச் செய்து
2.மகரிஷிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் அந்த உணர்வைத் தூண்டி
3.நினைவைத் தன்னிச்சையாக விண்ணை நோக்கிச் செலுத்தும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.
4.அதை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

இதே ஏக்கத்தோடு நாம் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு அவரவர்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணைக்க முடியும்.

ஏனென்றால் அந்த வலுவின் தன்மை கொண்டு
1.குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளப்படும் பொழுது அந்த சப்தரிஷி ஈர்ப்பு மண்டலத்தில் செல்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழல்கின்றது.

உதாரணமாக நாம் பூமியின் நிலைகளைக் கடந்து ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றோம். அப்பொழுது பூமியின் ஓடுபாதையில் அது சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழலுகின்றது.

அதே சமயத்தில் பூமியின் நிலைகள் தென் வடக்கில் சுழலும் போது
1.அந்த சுழலும் தன்மைக்கு இதனுடைய ஈர்ப்பின் வேகத்தைக் கூட்டும் போது அதே ராக்கெட் சுழலுகின்றது.
2.ஆனால் அதனுடைய வேகத்தை குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் அதனுடைய சமமான நிலைகள் இருக்கும்போது
3.எந்த ஊரின் நிலையோ அதனின் நிலை கொண்டு அங்கே நிலை கொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.

இதை போன்று தான் நாம் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனரோ
1.அவர்கள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி இதனின் வலு துணை கொண்டு
2.நம் மூதாதையர்களுடைய உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை
3.நாம் இந்த முறைப்படி ஆயிரக்கணக்கானோர் வலு கொண்டு விண் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அந்த ஈர்ப்பு வட்டத்திலே சுழலத் தொடங்கி விடுகின்றது.

விண் செலுத்திய பின் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும்… துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால்…
1.அந்த உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளை கூட மாற்றி
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

ஏனென்றால் இதற்கு முன் நாம் செய்யத் தவறிய அந்த உணர்வு கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த பௌர்ணமி நாளில் இது மாதிரி தொடர்ந்து உந்தித் தள்ளினால்… இன்னொரு உடலுக்குள் பேயாக நின்று அதனை ஆட்டிப் படைத்து அதற்குப் பின் வெளியில் வந்தாலும்… அவர்களுடைய உணர்வுடன் நம் நினைவினை ஆற்றலை பரப்பப்படும் பொழுது (இன்னொரு உடலுக்குள்) இந்த நஞ்சினைக் கரைத்து விட்டு… “விண் செல்லும் உணர்வினைத் தனக்குள் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றது…”

ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கி நம்மை சீராட்டி தாலாட்டி வளர்த்த குலதெய்வங்களை “இன்னொரு பிறவியின் நிலை அடையாமல் செய்வதே… நம்முடைய தலையாயக் கடமையாகும்…”

அவரவர் வீடுகளில் இருந்தே இதைப்போல இந்த உணர்வினை எடுத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கூட்டமைப்பாக ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து எடுத்தோம் என்றால்
1.அவர்களை நாம் துரித நிலைகள் கொண்டு எந்த உடலை விட்டு வெளியில் வந்தாலும்
2.அவர்களுடைய உணர்வு தான் நம் உடலாக இருப்பதனால் நாம் அவர்களை எளிதில் அனுப்ப உதவும்.

ஏனென்றால் இப்பொழுது நாம் சாங்கியத்தில் சுட்ட சாம்பலைக் கங்கையில் அல்லது ஓடும் நீரில் கரைத்தால் பாவம் போய்விடும்… மோட்ச தீபம் ஏற்றினால் அவர் சொர்க்கம் போவார்…! என்று தான் நம்மைச் செய்ய வைத்துள்ளார்கள்.

ஆகவே… காலத்தால் மறைந்த இந்த நிலையை மகரிஷிகளின் அருளால் இதைப் போன்ற மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களை பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அங்கு ஒளி நிலை பெற்றால் இந்த உணர்வு கொண்டு நாம் இந்த பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு நாம் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்து… இங்கு வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ முடியும்.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்
2.ஆனால் இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தம் இல்லாத நிலைகளில் இருக்கின்றோம்.
3.ஆகவே உயிரின் தன்மையை நாம் சொந்தமாக்க வேண்டும்

ஆக நாம் எதை எண்ணுகின்றோமோ அதனை வைத்து இந்த உயிர் உடலை இயக்குகின்றது. ஆகையினால் “உயிர் தான் நமக்குச் சொந்தம்” என்று யாரும் நாம் எண்ணவே இல்லை.

அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் என்ற நிலையில் நாம் அவனை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை உருவாக்குகின்றது.

ஒருவருக்கு நாம் கடுமையாகத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது. அதையே (தீமையை) செய்யும்படி செய்கின்றது.

ஒருத்தருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்… அந்த உணர்வின் தன்மை இந்த உடலை இயக்கிக் காட்டுகின்றது.

ஆனால் தீமையின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
1.அந்தத் தீமையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
2.நம் உடலை அழுகச் செய்து நம்மை வேதனைப்படச் செய்கின்றது‌.

யார் வேதனைப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த வேதனையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அந்த வேதனையையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!

 

அணுவின் தன்மையை அணு அணுவாக ஆரம்ப நிலையிலிருந்து உணர்த்தி உள்ளேன். மனிதன் பிறவி எடுத்த நிலையில் இருந்து உணர்த்தி உள்ளேன். மனிதனின் நிலையில் “ஏழு ஜென்மம்” நமக்கு அளித்த ஆண்டவனின் தீர்ப்பு.

அந்த ஏழு ஜென்மத்தில் நமக்கு அளித்த அருளைப் பெற்றவன் பெரும் முக்தி நிலையைப் பெற்று விடுகின்றான்.

அந்த ஏழு ஜென்மத்திலும் தன் நிலையை உணராமல் தன் ஆசையை அடக்கிடாமல்
1.நான் என்ற இந்த நிலையில் அவன் எடுக்கும் பிறவி எல்லாம் சீரும் சிங்கமாகவும் விஷம் கொண்ட பாம்பாகவும் அணிலாகவும்
2.அவரவர்களுக்குக் கிடைத்த ஏழு சந்தர்ப்பத்தையும் முடிக்காமல் உள்ளவன்..
3.இன்று மிருகத்திற்கு எந்தக் குண நிலை உள்ளதோ அவ்வழியில் பிறக்கின்றான்… அதிலும் ஜென்மங்கள் மாறுபடுகின்றன.

மிருகமாக மாறுபடும் ஜென்மங்களைத் தான் மனிதனும் புசிக்கின்றான். இவன் அணுவே தான் அதற்கும்… அதன் அணுவே தான் இவனுக்கும்…!

ஆயிரம் ஆடுகள் மந்தையில் இருந்தாலும்… அச்சிறுத்தையின் எண்ணம் “ஒரு ஆட்டின் மேலே தான்” உள்ளது. அதன் நிலை என்ன…?
1.அச்சிறுத்தையின் முதல் எதிரி அந்த ஆடு
2.அந்த ஆட்டையே புசிக்கின்றது.

ஒவ்வொரு தன்மையும் இதைப் போல் தான் சுற்றிக் கொண்டே வருகிறது சிறுத்தை அவ்வாட்டை அடித்ததனால்
1.அந்த ஆட்டிற்குத் தான் சாப நிலை தீர்ந்தது.
2.சிறுத்தையின் நிலை சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றது.

அணுவே தான் எல்லாம். மரமும் அணு தான். மரத்தின் கனியும் அணு தான். அந்த அணுவைப் புசிக்கிறோம்… இந்த அணுவைப் புசிக்கக்கூடாதா…? என்ற எண்ணம் உனக்குள்ளே…! “அந்த அணுவின் தன்மை வேறு… இந்த அணுவின் தன்மை வேறு…”

ஏழு ஜென்மத்தில் முக்தி அடையாத மனிதன் மிருகமாகி.. பறக்கும் பறவையாகி… புழுவாகி… மரமாகி… கனியாகி கனியின் தன்மையிலேயே பாவ விமோசனம் பெறுகின்றது.

கனியாகவும் ஆகின்றது பூவாகவும் ஆகின்றது கனியைப் புசிப்பதின் தன்மை புரிகிறதா…? ஆசை மணத்தை அணு அணுவாக அடக்கிடத்தான் இந்த தியான முறை எல்லாம்.

சுவை எல்லாம் அவன் தருவான் சுவைத்திடப்பா சுவையை. முதல் பாட்டிலேயே தந்துள்ளேன்… ஆசை அணுவை அழித்திடுவாய் என்னும் வரியை. அதன் பொருளும் இதுவே தான்.
1.அணு அணுவாக எந்நிலையிலும் அடக்கிட வேண்டும்
2.பெரும் அவசரமும் பதட்டமும் அடைந்து விட்டால் பற்றற்ற நிலை வந்துவிடாது.
3.நம் மனதை உயர்த்திக் கொண்டு நம் நிலைக்கே வந்த நிலையில் வைத்து இருப்பதும் ஒதுக்குவதும்.
4.அவசரம் வேண்டாம் சொன்னதன் பொருள் புரிந்ததா…?

பூவின் மணம் தான் உன் சுவாச நிலைக்கே வருகின்றது தெரியவில்லையா…? எல்லாச் சுவையின் தன்மையையும் தந்தருளினேன்.
1.மூலிகையையின் வாசனைகள் வந்திருக்கும்
2.ஜோதியின் வடிவமும் தந்தருளினேன். அந்நிலையில் உதயத்தைப் புரிந்திட்டாயா… புரியவில்லை… போகர் பற்றி.

காயகல்பம் சாப்பிட்டவர்… அந்தக் காயகல்பம் எதிலிருந்து வந்தது போகர் உடலை அழியாமல் வைத்துள்ளார்.

காட்சி:- மருந்தை எடுத்து இடித்துக் காட்டி இப்படித்தான் வந்ததா…? என்று குருதேவர் கேட்கின்றார்.

காயகல்பம் என்பதெல்லாம் கருணையான மனதினிலே தியான நிலையில் பல மணங்களை எடுத்து உலோகத்தன்மையில் கலந்து அவர் அரைத்தார்.

கடுகளவு காண்பதற்குத் தவம் இருந்தார் பல நாட்கள்…!

மும்மூர்த்தியின் வடிவையே சிலை செய்தார். சிலையின் தன்மையிலே கலந்து செய்தார் இக்காயகல்பத்தினை.
1.சிலையின் உருவிலும் உள்ளது காயகல்பம்
2.போகரின் உடலிலும் உள்ளது காயகல்பம்.

அணுகுண்டு செய்வது பெரிதல்ல. காலங்கள் அழிந்தாலும் தன் நிலையையும் தன் உடலையும் தன் உணர்வையும் அழிந்திடாமல் வைத்துள்ளார்.
1.அந்நிலை உயர்ந்ததா…?
2.வெறும் அணுகுண்டு செய்திடத் தன் சக்தியெல்லாம் அழித்துச் செய்யும் அணுகுண்டி நிலை பெரிதா…?

மனிதனாகப் பிறந்தவருக்கு எல்லோர் உடலிலும் சக்தி நிலை உள்ளது. பிறவிப் பயனும் உள்ளது… அவனவன் எடுக்கும் நிலையில் தான் எல்லாமே உள்ளது.

இனி எந்த நிலைக்குச் சென்றாலும் இந்நிலையை மாற்றி விடாதே… காலத்துடன் மறைந்திடாதே… கல்கியுடன் கலந்துவிடு…! பகர்ந்திடுவேன் பகர்ந்திடுவேன் பல நிலைகளைப் பகர்ந்திடுவேன்….!

உன் நிலையில் உள்ளவர் தான் போகன். அதனால் தான் அந்த வழி காட்டினேன்…. வழியெல்லாம் வகுத்திடுவார் அந்த வழிக்கு வந்துவிடு சீக்கிரம்.

உள்ள நிலையை மாற்றி விடாமல் இந்த வழிக்கு வந்துவிடு. காலம் கனிந்து வரும்… காலம் குறுகியது குறுகியது…! சீக்கிரம் சுவாச நிலைக்கு வா.

பல கோடி நாட்கள் தூங்கிடலாம்… தூங்கும் தூக்கம் தனி அல்ல என்ற நிலைக்கு வந்துவிடு.
1.தியான நிலையில் இருந்திட்டால் அதுவே தான் தூக்கம்
2.அந்நிலையில் காத்திடுவான் உன் உடலையும் அவனே.

இன்றுள்ள பல சித்தர்கள் ஞானிகள் எல்லாமே தன் நிலையை மாற்றிக் கொண்டு அவன் நிலைக்கு வந்தார்கள். உனக்குச் சொல்வது புரிகிறதா…!
1.குடும்ப நிலையில் இருந்து சித்தனாக்கிக் காட்டு…. இந்நிலை தான் பெரிது
2.இதுவும் அவன் அருளே…. மாற்றிடாமல் அவனிடம் வா… போகரே போற்றிடுவார். உன் நிலையை என்று அடித்துக் காட்டுகின்றார் குருதேவர்.

உன் நிலையை முந்துவதற்கும் ஆள் உண்டு. நீ முந்துவாயா? அவர் முந்துவாரா…? பார்க்கலாம்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

கல்கியுகம் பிறந்து விட்டது

 

அனுதினமும் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் துணையால் கருவில் வளரும் சிசுக்களை ஞானக் குழந்தைகளை வளர்த்திட வேண்டும்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் குடும்பங்களில் கருவில் உருவாகும் குழந்தைகள் அவர்களுக்கு
1.ஒவ்வொரு நொடியிலும் அந்த அருள் ஞானத்தை நாம் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.உலக ஞானம் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி “உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர வேண்டும்” என்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுதும்… பால் ஊட்டும் பொழுதும்… தாலாட்டும் பொழுதும்… இதை நாம் செய்து பழக வேண்டும்.

செய்தால்
1.இதன் தொடர் வரிசையில் எதிர்காலச் சந்ததியினர் இந்த வழியிலே வளர்ந்து
2.இந்த நாட்டை உலகத்தைக் காக்கும் சக்திகளாக வருவார்கள்.

இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவிக் கொண்டிருந்தாலும் உலகை மீட்டிடும் அந்தத் தகுதி “தென்னாட்டில் தோன்றியவர்களுக்குத் தான் வரும்…”

உலகப் பேரழிவின் தன்மையை… விஷத்தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலைகளை மாற்றிட இது உதவும்.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றது. அதை ரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது ஏனைய நாடுகளில்…!

நம் நாட்டில் அவ்வாறு இல்லை… இப்போது தான் தலை காட்டுகின்றது. உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது குண்டுகளை வீசுவதும் மற்றவர்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.

மற்ற நாடுகளில் துரித நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது நீர் நிலைகளையும் காற்று மண்டலத்தையும் விஷத்தன்மைகளை பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதைக் கண்டு ரசித்து அதை சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது… அத்தகைய அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
1.ஆனால் தென்னாட்டில் தோன்றிய “அகஸ்தியன் உணர்வால்” அந்தப் பிழைகள் இங்கே வராது தடுத்து நிற்கின்றது.
2.அவருடைய உணர்வே தான் இங்கே பேசுகின்றது… உபதேசம் கொடுக்கின்றது
3.நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
4.ஏனென்றால் எனக்கு அந்தப் பேசும் தகுதியோ அந்த உணர்வைக் கவரும் தகுதியோ பெற்றவன் அல்ல நான்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அத்தகைய உணர்வின் தன்மை… உலகை மீட்ட…
2.அந்த உணர்வுகளே இயங்குகிறது… அதுவே இயக்கிக் கொண்டுள்ளது.
3.அந்த உணர்வலைகளே பரவிக் கொண்டுள்ளது.

உங்களுடைய நிலைகளுக்கு எண்ணும்பொழுது எனக்கும் லாபம் கிடைக்கின்றது நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும் போது அந்த உணர்வின் தன்மையால் அந்தப் பேரானந்த உணர்வு இந்தக் காற்று மண்டலத்தில் நானும் சுவாசிக்க நேருகின்றது.

நீங்கள் வளர நான் வளர முடியும்…!

ஆனால் “நான் வளர” நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால் உங்களை எல்லாம் நான் அடிமையாக்கத் தான் முடியும். ஆகவே நான் வளர்வதற்காக உங்களை அடிமை ஆக்குவது இல்லை.

குருநாதர் காட்டிய வழியில் நீங்கள் வளர வேண்டும்…!
1.நீங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்வினை நான் பெற்று வளர்த்தேன் என்றால்
2.நீங்கள் உயரும் போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்
3.உங்களில் விளைந்த அந்த உணர்வின் சத்து எனக்குள் அதை உயர்ந்ததாக மாற்றும்.

இங்கு விளைந்த (அகஸ்தியர்) வித்து ஒன்றுதான். ஆனால் அது உங்களுக்குள் அது விளைந்து பல பல வித்துக்களாக வளருகின்றது… தீமைகளை அகற்றும் சக்தியாக மாறுகின்றது.
1.அதைக் கண்டு நான் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி நான் பெறுகின்றேன்
2.அப்பொழுதுதான் பேரின்ப்ப் பெருவாழ்வை எனக்குள் அதை வளர்க்க முடியும்.

ஆகவே நீங்கள் வளர வேண்டும் அதைக் கண்டு நான் மகிழ வேண்டும் இதைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும்
1.நீங்கள் பார்ப்பவர் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் நிலையில் வளர வேண்டும் என்று இதை எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.
4.இதனுடைய வரிசைச் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் இங்கே வாழ முடியும் வளர முடியும்.

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து மீளவும் முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம் வரும்.

உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்கு வன்மை தான்…!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

ஆகவே நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் (கடவுள்) ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்

 

1.நட்சத்திரங்கள் பிற மண்டலத்தில் இருந்து வருவதை தனது உணர்வின் தன்மையாக எடுத்து
2.மற்றதோடு கலக்கப்படும் பொழுது “மின்னணுவாக” மாறுகின்றது.
3.அதாவது ஒரு கல்லுடன் கல் தட்டினால் “நெருப்பு” (பொறி) வருவது போன்று.

அதிலே முதல் நிலைகள் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மற்றதுடன் கலக்கப்படும் பொழுது “மின் காந்த ஒளிகளை” உருவாக்குகின்றது. அத்தையை அணுக்களாக மாறும் பொழுது தான் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.

அதனின் துகள்கள் பரவிக் கொண்டே வருகின்றது.

இதற்கு அடுத்து இருக்கக்கூடிய மற்ற நட்சத்திரங்கள் அதனின் வட்டப்பாதை மாறினாலும் உமிழ்த்திய உணர்வுகள் இங்கே பரவி இருப்பதும் அதுவும் மற்ற மண்டலங்களிலிருந்து கவர்வதை இதுவும் கவர்ந்து இதே கலவையாக்குகின்றது.

இப்படி அடுக்கடுக்காக 27 நட்சத்திரங்களின் கலவைகள் ஒவ்வொன்றும் கார்த்திகை நட்சத்திரத்தைப் போன்ற விஷத்தின் தன்மைகள் “கூடுவதும் உண்டு… குறைவதும் உண்டு…!”

இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது/. வானியலில் கடும் விஷத் தன்மைகள் பிரபஞ்சத்தில் இவ்வாறு பரவி வரும் போது
1.ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியின் வழியாகக் கவர்கின்றது.
2.அலைகளாக தன் உடல் (மண்டலம்) முழுவதும் அது பரவச் செய்வதும் சுழற்சியால் வெப்பம் ஏற்படுவதும்
3.இவை இரண்டும் கலந்தாலும் வெப்பத்தின் தன்மை சுழற்சி ஆகும் போது நடு மையம் அடைந்து விடுகின்றது.

ஆக… வெப்பத்தின் தணல் அதிகமாகி கொதிகலன்கள் கூடி நடு மையம் செல்லப்படும் பொழுது அந்தந்த மண்டலத்தில் “ஈர்க்கப்பட்ட உயிரணுக்கள்” அதனுடன் குவிக்கப்பட்டு உறையப்படும் போது பாறைகளுக்கு இடையில் சிக்கி பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.

1.நமது பூமியிலும் ஆதியில் இவ்வாறு ஏற்பட்ட இந்த அணுவின் தன்மைகள்
2.பாறைக்குள் தேரைகளாகவும் வண்டுகளாகவும் விஷத்தன்மை கொண்ட சில உயிரினங்களாகவும் உண்டு.

இதே போன்று எல்லாக் கோள்களிலும் அது அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற நிலையில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.

1.நட்சத்திரங்களில் இவை இல்லை… ஆனால் சூரியனில் உண்டு
2.விஷ அணுக்களை உருவாக்கி இருந்தாலும் அதனுடைய கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகளும் உண்டு.

ஏனென்றால் இதை எல்லாம் யாம் சொல்லிக் கொண்டு வந்தாலும் சிலவைகளைத் தொட்டுத்தான் காட்டலாம். ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.

பொதுவாக கல்வியில் பாட நிலைகள் கொடுக்கும் பொழுது அது விஞ்ஞானியாக வரப்படும் பொழுது தான் அந்த முழுமை வரும்.
1.முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து இணை சேர்த்து உணர்வினைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்புகள் வரப்படும் பொழுது தான்
3.கல்வி அறிவையே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் அணுக்களை உங்களுக்குள் யாம் துணுக்குத் துணுக்காகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்…
2.இந்தப் புவியில் வரும் விஷத்தன்மைகளை மாற்றிடும் சக்திகளை நீங்கள் பெறலாம்
3.நீங்கள் அதைப் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.

குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதே போன்றுதான் உங்களுக்குள்ளும் கொடுக்கின்றேன் நீங்கள் இங்கே சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிலும் மேட்டிலும் அவதிப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன் பெற்றேன்.

அதை வளர்க்கும் முறைக்கு…
1.பல எத்தனையோ இன்னல்களை உருவாக்கப்பட்டு
2.அந்த இன்னல்களில் இருந்து அது எவ்வாறு மீள வேண்டும்…? என்ற நிலையில்
3.இன்னலான உணர்வுகள் என் உடலுக்குள் ஊடுருவி… அதனால்
4.உடலில் உருப்பெற்ற அணுக்கள் எவ்வாறு எல்லாம் மாற்றமடைகின்றது என்பதை தன்னில் தானே உணரும்படி செய்தார் குருநாதர்,

உங்களுக்கு யாம் அதையெல்லாம் செய்யவில்லை. உயர்ந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் இப்போது பாய்ச்சப்படுகின்றது.

தாவர இனங்களுக்கு உரம் கொடுத்து அதைச் செழித்து வளரச் செய்வது போன்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும்… ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வை உரமாக்குகின்றோம். அதை நுகரும் ஆற்றலையும் பெறச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது “பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்…”

இப்பொழுது இல்லை என்றாலும்…
1.இதனுடைய வரிசையில்… “யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ… அவர்கள்”
2.இந்த அண்டத்தின் நிலைகள் உங்கள் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதை நிச்சயம் உணர முடியும்.

சுவாசம் எனும் அச்சாணி

 

காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.

வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.

விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.

“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.

உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.

இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.

ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.

ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”

ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.

இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.

பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?

உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.

ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.

பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.

அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.

பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.

தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.

அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.

இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?

1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.

தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!

 

“உரைக்கும் உரை எல்லாம் உனதாக இருந்திடவே” என்பது யாரைப் பார்த்துப் பாடுகின்றார்…?

“உரைத்து விடு ஈஸ்வரா… உரைக்கும் உரை எல்லாம் உரைத்து விடு ஈஸ்வரா…!” எப்பாடளைப் பாடினாலும்
1.முதல் அடியை அவனுக்கு அருளிவிடு
2.தந்திடுவான் அப்பாடலின் தத்துவத்தையே.

உண்ணும் உணவெல்லாம் உனதாகும்
உறங்கும் உறக்கம் எல்லாம் உனதாகும்
உணர்வில் உணர்வாக ஊன்றி விடு…
உலகாண்ட ஈஸ்வரனே…!

உலகை என்னும் பொழுது இந்த ஒரு உலகை மட்டும்தான் குறிக்கும். “உலகாண்ட ஈஸ்வரனே” என்னும் பொழுது அதன் அர்த்தமே வேறு.

இப்பாட்டின் தன்மையில் தான் உலகத்தன்மை எல்லாம் உள்ளது. பாடலை ஆடிக் கொண்டே பாடிவிட்டார்… உணர்வையும் மாற்றிவிட்டார்… தனதாக எண்ணிவிட்டார்… “தந்தேனா என் பாடலை…?”

உனதல்ல எனதல்ல இவ்வுலகம் என்பதன் பொருளும் இதுவே தான். தன் உதயத்துக்கு வந்தது என்று எண்ணிப் பாட்டை பாடி வந்தான்.
1.தலைப்பென்ன தலைப்பு…!
2.தலைவனையே தலைப்பாக்கு…!
3.தந்திடுவான் தனிக்கவிதைகளை.

உன் சஞ்சலத்திற்கு விடையளிக்கின்றேன்…!

மனமான சஞ்சலத்தை வளர விடாமல் மனதில் உள்ள எண்ணத்தைப் பெரும் சஞ்சலம் ஆக்கி விடாமல் “அவனிடம் (ஈசனிடம்) சமர்ப்பித்தால் அவன் அளிப்பான் அதன் விடையை…!”

சித்தர் என்பவர் யார்…? எந்த நிலையில் அவர்கள் உள்ளார்கள்…? என்னும் சஞ்சலம் ஏன் உள்ளது…? சித்தரும் ஞானியும் எப்படி உள்ளார்கள்…? என்ற எண்ணச் சஞ்சலத்தின் உள்ளே தவிக்கின்றாய்.

மனிதனால்… மனிதனால் என்னும் பொழுதெல்லாம் எண்ணுகின்றாய். ஆண் வர்க்கத்தையே. “ஆண்… பெண்” என்னும் மாற்று நிலை எனக்கில்லை (ஈஸ்வரபட்டர்).

உன் சஞ்சலம்…
1.உடலுடன் உள்ள போகர் எப்படி உள்ளார்…?
2.அவரின் உறக்க நிலை என்ன…?
3.உண்ணும் நிலை என்ன…? உடலின் நிலை என்ன…?
4.உடலுடன் உள்ள போகர் அந்நிலையில் என்ன செய்வார்…? என்று எண்ணுகின்றாய்.

“ஈஸ்வரபட்டரான… என் நிலையை எண்ணிப்பார்…” உடலை விட்டு நான் பிரிந்து சென்று விட்டேன் என்ற உண்மையைச் சாமி (ஞானகுரு) சொன்னதை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.

போகரின் நிலையில் அவர் எந்த நிலையில் உள்ளார் என்று ஒருவரும் சொல்லாததினால் நீங்களாக அறிந்திட்ட நிலையில் மனச்சஞ்சலம் கொண்டுள்ளீர்கள்.

எந்நிலையில் தெரிந்து கொண்டீர்கள் அவர் நிலையை…? அந்நிலையிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.
1.அவர் உயிருடன்… உடலுடன்… உலகமுடன் உள்ளார்.
2.அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா எந்நிலைக்குச் சென்றாலும் அந்த ஆத்மா திரும்பவும் அவர் உடலுக்கே வருகின்றது.
3.அவர் ஆத்மாவுக்கு எடுக்கும் உணவையே அவர் உடலுக்கும் அளிக்கின்றார்.
4.அவர் உடலுக்கு உணவு வேண்டாம் உணர்வும் வேண்டாம்
5.அந்த உடல் எந்நிலையிலும் எந்த நேரத்திலும் அது அமர்ந்த நிலையிலேயே தான் உள்ளது
6.உடலில் உள்ள ஆத்மா தான் எந்த நிலைக்கும் வருகிறது.

அவர் உடலைப் பாதுகாக்கும் தன்மை எல்லாம் “அவரின் தியான நிலையிலேயே” உள்ளது.
1.உடலில் உள்ள ஆத்மாவை எங்கும் பறக்க விடுகிறார். பழனியில் மட்டும் அவரின் ஆத்மா சுற்றவில்லை.
2.பழமுதிர்சோலையிலும் சுற்றுகிறது. பழனியப்பன் எங்கெல்லாம் உள்ளானோ அங்கெல்லாம் செல்கிறது.
3.முருகா…! என்னும் நாமம் எந்த உள்ளத்தில் இருந்து அபயமாக அழைக்கின்றதோ அங்கெல்லாம் செல்கிறது.

“சித்தர்கள் எல்லாம் சோம்பேறி… ஞானிகள் வேலை இல்லாதவர்கள்… என்ற எண்ணம் தான் மனிதருக்குள்ளே…” போகர் அவர் இருந்த நிலையிலேயே அவ்ஆன்மா அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று அருள் பாலிக்கின்றார்.

உலகையே சுற்றுகின்றார்… முருகா…! என்னும் இடமெல்லாம் சுற்றுகின்றார்… இன்றும் உள்ளார்… உலகுடனே கலந்துள்ளார்.

நான் பிறந்த பயனையும் தான் பெற்ற உடலையும் தன் ஆத்மாவையும் உலகுடனே ஒன்றச் செய்துள்ளார். உலகம் அழிந்தாலும் அவர் நிலை அழியாது.

இந்நிலையைப் புகட்டவே உன் நினைவில் கனவைத் தந்தேன் உலகெல்லாம் அழியும் நிலை உள்ள போது மலை மீதுள்ள கோவில் மட்டுமே சிலர் அங்கே இருந்து காட்டியதன் பொருள் இதுதான்.

1.போகரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
2.ஒவ்வொரு ஞானியின் நிலையும் எண்ணத்தில் வரும்.

ஒவ்வொரு ஞானிக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அவரவர் பூஜித்த முறையிலும் அவரவர் தியானத்தின் தன்மையிலும் அருளியுள்ளார்கள். அப்பரமேஸ்வரனின் அருள் எல்லாம்… “உங்கள் நிலை என்ன…?” என்பதை நீங்களே எண்ணிக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

அவர் அருள்வார் நல் ஆசிகளை. இன்றைய பாட நிலை புரிந்ததா…?

இரத்தினகிரி பிறந்திடுவார் பெரும் புலவனாகப் பாடிடுவார் அவர் புகழை…! அவன் அருளில் பிறந்தவன் நீ.

பகர்ந்திடுவாய் பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பாரெல்லாம் பாடிடவே பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பஞ்சம் பஞ்சம் என்கிறார்கள் பாமரர்கள்
பாற்கடல் அளவு தந்தாலும் பஞ்சம் தான்
பஞ்சம் என்னும் பசியைப் போக்கிவிட்டு
பரஞ்சோதியானவனை வணங்கிடவே
பகர்ந்துவிடு பரமேஸ்வரா…!

என்னப்பா சிவக்கொழுந்தே…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!

 

பூஜை (தியானம்) புனஸ்காரம் செய்து தான் தொழில் செய்ய வேண்டும். உன் தொழிலில் “என்றும் அவன் அருள் இருக்க” எத்தொழில் செய்தாலும்… “அவனை முதலில் நினைப்பதற்கே” இந்தப் பூஜை செய்வது எல்லாம்…!

1.பூஜை செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும் என்பதில்லை.
2.பூஜை செய்பவனுக்கும் பலன் உண்டு
3.பூஜை முறை தெரியாதவனுக்கும் பலன் உண்டு.

நீ செய்யும் எத்தொழிலிலும் அதைச் செய்வதற்கு முன் உன் மனதை ஒரு நிமிடம் அமைதிப்படுத்து.
1.மனச் சஞ்சலம் நீங்கி ஆரம்பிக்கவே தியானம் செய்வது
2.என்றென்றும் என் அருளும் ஆசியும் உனக்கு உண்டு.

உன் எண்ணத்தில் யார் இருக்கின்றார் என்று எண்ணிப்பார்

1.எண்ணும் எண்ணமே தான் மனிதன்.
2.எண்ணமே தான் மனிதன்… மனிதன் தான் எண்ணம்…!
3.எண்ணமும் மனிதனும் ஒன்று தான். தேவனும் மனிதனும் ஒன்று தான்.
4.எண்ணம் என்பது மனிதனின் பூர்வ புண்ணியப் பலன்.
5.ஒரு மனிதனை உயர்த்துவதும் அவன் எண்ணம் தான்… மனிதனை இறக்குவதும் அவன் எண்ணம் தான்.
6.எண்ணத்தால் உலகையும் ஆளலாம்.
7.எண்ணத்திலிருந்து உறங்கவும் செய்யலாம்… ஆனால் உறங்கிவிட்ட எண்ணத்திற்கு உலகமே இல்லை.
8.மனிதனின் எண்ணம் எல்லாம் பெரும் மலை போல் உயர்ந்திட வேண்டும்.
9.மடு போலக் குறுகியிருக்காமல் மலை போல் உள்ளவனுக்கே வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்.
10.எண்ணத்தைக் குறுக்கியவனுக்குக் குறுகிய வாழ்க்கையே அமையும்.
11.எண்ணத்தில் உயர்ந்தவனுக்கு முடிவேது…?
12.எண்ணத்தை உயர்த்தி உயிரான ஈசனை நினைத்து விட்டால் அவன் வந்து வழி நடத்திடுவான்.

ஆகவே எண்ணும் எண்ணம் எல்லாம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்….! என்று சொல்லும் பொழுது எண்ணும் எண்ணம்… எனும் பொழுது
1.அதை நம்மால் செயல்படுத்த முடியுமா…? என்று எண்ணக் கூடாது.
2.எண்ணும் பொழுதே “அதைச் செய்திடுவோம்…!” என்றே எண்ண வேண்டும்.
3.எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஆசையுடனே செய்ய வேண்டும்.
4.ஆசையுடன் செய்திடும் பொழுது தான் அந்த எண்ணம் உயர்ந்து நிற்கும்.

மனிதனாகப் பிறந்தவன் எந்தக் காரியத்தையும் செய்யும் வலிமையான அருளைப் பெற்றுத்தான் பிறந்திருக்கின்றான். மனிதனாகப் பிறந்த அந்தப் பாக்கியத்தை மாற்றிடாமல் தன் எண்ணத்தைக் குறுக்கிவிடாமல் மலை போல் உயர்த்தி விட்டால் மாமனிதனாக வாழ்ந்திடுவான்.

எண்ணும் எண்ணமே இறைவன்… இறையின் செயலே தெய்வம்…! நாம் எண்ணுவதே தெய்வமாக உள் நின்று இயக்குகிறது. நல்ல எண்ணங்களை எண்ணி நல்ல சொல்களைப் பேசினால் நாவெல்லாம் இனித்திடும்… மனமெல்லாம் மணக்கச் செய்யும்.

1.நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது மெய் ஞானிகளின் அருளை எளிதில் பெறலாம்
2.பெற்றுவிட்டால் அவர்களே நம்மை மெய் வழியில் நடத்திச் செல்வார்கள்.
3.அத்தகைய பேரின்ப நிலை பெற்றுவிட்டால் “மனிதனே தான் தெய்வம்…!”

என்னப்பா சிவக்கொழுந்தே…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…! சிவக்கொழுந்தாய் இருக்கின்றாய்… சிவனாக வருவதற்கே “எண்ணம்” என்னும் பாடத்தைத் தந்தருளியுள்ளேன் உனக்கு.

இந்தப் பாடமுறை எல்லாம் உன் மனதையே வட்டமிட்டு கொண்டுள்ளது. வட்டமெல்லாம் சுற்றிவிட்டால் உன் மனமே சுற்றிக் கொள்ளும். உன் மனமான எண்ணத்தில் மாசிலா இன்பத்தைக் காண்பாய்.
1.மனம் கலங்கிடாதே
2.இக்கலக்கம் எல்லாம் இனி உனக்கு இல்லை.

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்

 

பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வின் தன்மையை முதல் மனிதன் அகஸ்தியன்
1.அவனுடைய சந்தர்ப்பம் தன் உடலிலே அது பெருகச் செய்தான்
2.அவனுக்குள் விளைந்த உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டுள்ளது.

அதையெல்லாம் நீங்கள் பருகுவதற்குத் தான் “அடிக்கடி அடிக்கடி” அதை ஞாபகப்படுத்துவது.

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த உணர்வினை நீங்கள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும்… அதனின் இயக்கத் தொடர்களில்
1.ஒவ்வொரு நட்சத்திரத்தின் எதிர்மறையான… அதாவது…
2.இரண்டு இரண்டு நட்சத்திரங்கள் (+/-) நெகட்டிவ் பாசிட்டிவ்…
3.ஒன்று வலிமையானது ஒன்று வலிமை இழந்தது…
4.இந்த உணர்வின் தன்மை மோதல் வரும் பொழுது தான்… ”வெல்டிங்”
5.மின்னல் போன்று தன்மை வரப்படும் பொழுது உயிரணுவாகத் தோன்றுகின்றது.

இந்த உணர்வின் இயக்கத்தில்… உயிரணுவின் நட்சத்திர இயக்க ஓட்டத்தை… அதிலே எதனின் வலிமை இருக்கின்றதோ அதைப் போன்று
1.“இந்த 27 நட்சத்திரங்களின் சக்தியை பெற வேண்டும்” என்று
2.அன்று துருவன் நுகர்ந்து கொண்டான்.

ஏனென்றால் பல நட்சத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிலும் 27 நட்சத்திரங்களில் “ஒன்று முன்னணியில் இருந்து” மற்றதை அது அடக்கும்.

ஆனாலும் மனித உடல் அல்லாது மற்ற உயிரினங்களில் இந்த நட்சத்திரங்கள் பொருந்தி வராது. காரணம்… நஞ்சு கொண்ட உணர்வின் எதிர் நிலைகள் வருவதனால்…! ஆனால் மனிதனுக்குள்ளோ
1.நட்சத்திர அணுக்களின் தன்மையைத் தனக்குள் சமப்படுத்தி
2.தான் ஒளியின் சுடராக மாற்றும் அறிவின் தன்மை பெற்றது.

ஆகவே அவ்வகையில் ஒவ்வொரு மனித உயிரான்மாவிலும் அந்த நட்சத்திர இயக்கத்தின் தன்மை கொண்டு
1.27 நட்சத்திரங்களின் சக்தியையும் கவர்ந்து மற்ற உணர்வுடன் கலந்து
2.அந்த உணர்வின் தசைகளாக நவக்கோள்கள் என்று நம் உடலின் தன்மையும்
3.அதே சமயத்தில் சப்தரிஷி மண்டலம் – மனித உடல் பெற்ற பின் இந்த உணர்வின் ஒளியாக – ஆறாவது அறிவாக நமக்குள் மண்டலங்களாக அமைத்து
4.ஆறாவது அறிவின் தன்மையைத் தனக்குள் அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும்… வளர்க்க முடியும்.
(சப்தரிஷி மண்டலம் என்பது நமக்குள் இருக்கும் அனைத்து அணுக்களின் தன்மையும் மண்டலங்களாக அமைகின்றது).

மனிதனின் ஆறாவது அறிவை… சப்தரிஷிகள்… ஏழாவது ஒளியாகப் பெற்றதை நாம் கவர்ந்து
1.நமக்குள் இருக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலிமை பெறச் செய்வதற்கும்
2.இவை அனைத்திற்கும் மூலமாக இருந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கும்
3.இப்படி “நான்கு ஐந்து கட்டங்களில்” இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அணுக்களாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
4.இவை அனைத்தும் ஒருக்கிணைந்து எடுக்கப்படும் போது உங்களுக்குள் அனைத்தையும் சமப்படுத்தும் நிலை பெற்றது.

துருவ மகரிஷி அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளையும்… நவக்கோள்கள் உமிழ்த்தும் சக்திகளையும்… தனக்குள் கவர்ந்து ஆதியிலே அதனின் உணர்வை விளைய வைத்தவர்.

ஆனால் அவை அனைத்தும் விளைந்து வந்ததைச் சூரியன் தனக்குள் படைத்து ஒளிக் கதிர்களாகப் பரப்புவதை (பாதரசம் – வெயில்)
1.துருவன் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்த்து
2.அந்த ஒளிக் கதிரின் அணுக்களை தன் உயிருடன் ஒன்றிய ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டவன் – முதல் மனிதன் அவன்.

1.வானஇயலில் தோன்றிய சக்திகள் புவிஇயலுக்குள் வந்து
2.உயிரியல் மாற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி ஆகி
3.புவியின் மாற்றத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வானியில் உணர்வுகளைத் தனக்குள் நுகர்ந்து
4.ஒளியின் சுடராக இன்றும் சுழன்று கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளான்
5.நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… முதல் மனிதன் துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.

அதனின்றி வெளி வரும் உணர்வினை நாம் பெற்றோமென்றால் அவனைப் போன்றே ஒளியின் தன்மையைப் பெற முடியும். அவன் சென்ற எல்லையை நாமும் அடைய முடியும்.

அதற்கே குரு வழியில் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்

 

ஒவ்வொரு காலத்திற்குள்ளேயும்…
1.ஆதியில் இருந்து இன்று வரையில்
2.காலத்துடன் ஒன்றி கடவுள் என்பவர் பிறக்கின்றார்… அவதாரம் எடுக்கின்றார்

நீ அறிந்த காலம் வரை சொல்கின்றேன்.

சிவனாகப் பிறந்ததும் அவனே; சிவனின் மகனாக வந்ததும் அவனே; இராமனின் காலமும் அவனே; கிருஷ்ணனும் அவனே; நபியும் அவனே; இயேசுவும் அவனே; புத்தனும் அவனே…!

புத்தரின் காலத்திற்குப் பின் கடவுளின் சக்தியைக் கொண்டு அவதாரம் யாரும் எடுக்கவில்லை. இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நபி புத்தர் இயேசு ஆகியோர் ஞான அருள் பெற்ற “ஞான தீபங்கள்” ஆவர்.

சிவனும் சித்தர் தான்…! அன்றும் அவதாரம் எடுத்தார் “இன்றும் அவதாரம் எடுத்திருக்கின்றார்…!” அன்றுள்ள காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மக்களின் மனமே மாறிவிட்டது.

கலியின் தன்மையைப் பார்த்தாயா…?

கலியின் தன்மை எல்லாம் மாற்றிடத் தான் மானிடருக்குத் தியானத்தைப் பற்றி சொல்கின்றேன் கல்கியின் தன்மையில் வந்து விட்டால் காவியத்தில் வந்துவிடும்… கருத்துடன் எல்லாம் நடந்து விடும் கர்ம பயனைப் பெற்றுவிடலாம் காவியத்தன்மையில் இடம் பெற்றிடலாம்.

இக்கலியுகத்தின் எண்ணமெல்லாம் காவியத்தில் நிலைத்திடாது காலப்போக்கில் அழிந்துவிடும்.
1.பறக்கும் மனிதனை இனி நீ காண்பாய்
2.பாரினில் உள்ள நிலை எல்லாம் பார்த்திடலாம்

பழிக்கும் எண்ணம் தான் இன்று உள்ளது பழிவாங்கிடும் நிலையே தான் இருக்கின்றது. நல்லதை எண்ணும் நிலை இல்லை… தூற்றிடும் உள்ளங்கள் தான் உண்டு.

கலியில் பிறந்த மனிதன் எல்லாம் காவியத்தில் வந்திடுவானா…? உன் அறிவுக்கு எட்டும் விஷயங்களை எல்லாம் சிறுகச் சிறுகப் பகிர்ந்திடுவேன்.

இராமாவதாரத்தைப் பற்றி விளக்கங்கள் சொன்னேன்… சிறு புள்ளிதான் அது…! கிருஷ்ணாவதாரத்தின் நிலையைப் பார். கிருஷ்ணனின் கதையிலேயே “கிருஷ்ணரின் பிறப்பின் ஜாதகத்தைக் கணித்து விட்டார்கள்…”

கிருஷ்ணனின் அவதாரம் என்ற நாளில் தான் ஜாதக நிலையும் வந்தது
1.பெரும் குறை (குழப்பம்) நிலையும் வந்தது.
2.மனிதனின் நிலையையே மாற்றியது கிருஷ்ணாவதாரக் காலத்தில் தான்.

இராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் ஆரம்பிப்பதற்குள் மனிதரின் நிலை எல்லாம் சிறிது சிறிதாக மாறிவிட்டது. கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய சித்தன் தான் கிருஷ்ணாவதாரம் என்ற நூலையும் எழுதியவன்.

கிருஷ்ணன் என்பவன் பிறந்தானா…? பிறந்து வெண்ணையை அவன் உண்டானா…? வாயைத் திறந்து உலகத்தன்மையே காட்டினானா…? கிருஷ்ணன் என்பவன் யாரப்பா…?

மனிதர்கள் தங்களுடைய நிலைக்காக இராமாவதார நூலில் உள்ள “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையையே மாற்றி கிருஷ்ணாவதாரம் என்ற நூலில் கிருஷ்ணனுக்குப் பல மனைவிகளை அமைத்தார்கள்.

இராமாவதாரத்தில் உள்ள நிலையிலும் கிருஷ்ணாவதாரத்தில் உள்ள நிலையிலும் உள்ள மாற்றங்களைப் பார்த்தாயா…? இராமாவதாரத்தில் தந்தை சொல் தட்டாத தனயனும் சகோதரப் பற்றுமுள்ள தமயனையும் காணலாம்.

தர்மம் நியாயம் என்பதெல்லாம்
1.கிருஷ்ணாவதாரத்தில் தர்மயுத்தம் என்ற நிலையிலேயே அழிந்து விட்டது.
2.பெரும் சூதும் சூதாட்டமும் கிருஷ்ணாவதாரத்தில் அமைந்ததுவே.
3.தன் நிலை உயர்ந்திட எந்த நிலையிலும் இருக்கலாம் என்னும் பழக்கமே கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது.
4.சொல்லும் செயலும் மாறியதும் கிருஷ்ணாவதாரத்தில் தான்.

சித்தன் எழுதிய கீதையையே மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்தில் கீதையின் உபதேசங்கள் எல்லாம் படித்தவுடன் புரிகின்றதா…?
1.பாமரனுக்கும் புரிந்திடும் கீதையைப் பழிக்கும் நிலையில் விட்டு விட்டார்கள்.
2.குருவும் சிஷ்யனும் என்ற நிலையைக் குருடாக்கி விட்டார்கள்.
3.தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லும் நிலையில் இல்லாமல் மாற்றி விட்டார்கள்.

கோவில் குளங்கள் என்பதையே ஜாதி மதம் என்னும் தன்மையில் ஏற்றி விட்டார்கள். ஜாதியும் மதமும் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் வந்தது.

ஏழை பெருத்தவன் சிறுத்தவன் பெரும் செல்வந்தன் என்னும் நிலையில் கிருஷ்ணரைச் செல்வந்தனாகவும் குசேலரைப் பரம ஏழையாகவும் காட்டியது கிருஷ்ணாவதாரத்தில் தான்.

நூலின் தன்மையையே அவரவர் இஷ்டத்துக்கு மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்திற்குள்ளே கிருஷ்ணன் என்பவன் இல்லை அப்பா. “கிருஷ்ணா…” என்னும் ஜெபம் ஓங்கிடவே கிருஷ்ணனின் கதையும் வந்ததப்பா.

சக்தியின் சக்தியே அக்கிருஷ்ணன் அப்பா. கிருஷ்ணனின் கதை எல்லாம் மனிதர்கள் (அவர்கள்) சொன்ன கதையப்பா. ஆகவே கிருஷ்ணனின் கதையைப் படித்துக் கிருஷ்ணனே இப்படித்தான் இருந்தான்…! என்னும் நிலை வேண்டாம்

கிருஷ்ணாவதாரக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலையை வைத்துத்தான் கதையெல்லாம் உள்ளது. “தர்மயுத்தம்” என்பதும் மனிதர்கள் வைத்த கதை தான்

கிருஷ்ணாதாரத்தில் வந்த கிருஷ்ணனைப் பார்த்தவர் யாரப்பா…? இராமனும் வாழ்கின்றான்… கிருஷ்ணனும் வாழ்கின்றான்… கலியும் வாழுகின்றது கல்கியும் வருகிறது… “எல்லாமே ஈஸ்வர சக்தியின் ஆசியால்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம்… ஆனால் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது.

அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம். எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது தான் அழுத்தமாகப் பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”

 

“வான இயல்” தத்துவம் தான் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் உருவாவதற்கே காரணம் ஆகின்றது. ஆக… வான இயல் தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்சத்திற்குள் மாற்றமாகும் போது ஒன்றுடன் ஒன்று கலவையாகி கோள்களின் ரூபங்களும் மாறுகிறது.

அதே போன்று தான் “புவிஇயலின்” வாழ்க்கையும்…
1.ஒன்றுடன் ஒன்று பல கலவையாகி தாவர இனங்கள் உருமாறுவதும்
2.இதை உணவாக உட்கொள்ளும் உயிரணுக்கள் அது நுகர்ந்தறிந்த உணர்வுகளும் உணவாக உட்கொண்ட உணர்வுகளும்
3.இதனின் உணர்வணுக்கள் இணை சேர்த்து “உயிரியல்” மாற்றங்கள் வருகின்றது

உயிரியல் மாற்றங்கள் வந்த நிலைகள் கொண்டு நம் பூமியில் வளர்ச்சி பெற்று வந்தவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் வான இயல் தத்துவம் அனைத்தும் புவியியலாக மாறி… புவியில் விளைந்த தாவர இனங்கள் அதனின் குணம் உணர்வு சுவை இவை எல்லாம் கலவைகளாகி…
1.மணங்களும் ஞானங்களும் வளரப்பட்டு
2.உயிரினங்களில் ரூபங்கள் மாற்றப்பட்டு
3.இவை அனைத்தும் கடந்து மனிதனாக வந்தோம் என்பதை அறிந்து கொண்ட முதல் மெய் ஞானி அகஸ்தியன்…!

அக்காலங்களில் அகஸ்தியனும் அவன் மனைவியும் இணை சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால் காவியங்களில் இவர்கள் தனித்து பிரித்துக் காட்டுகின்றார்கள். இது முறையல்ல… முறையற்ற நிலை…!

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்த உணர்வுகள் கருவுற்று…
1.கருவின் நிலையில் கொண்டு விண்ணுலக ஆற்றலை இவர் கவர்ந்து
2.தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட இருவரின் உணர்வும்
3.இதனுடைய உணர்வின் சேர்க்கைகள் வளரப்படும் பொழுது தான்
4.விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அகஸ்தியன் பெறுகின்றான்.

அதே சமயத்தில் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் பொழுது இடைமறித்து “அகஸ்தியனின் மனைவி மடிந்து விடுகின்றது…”
1.உயிரான்மா பிரிந்தாலும் எதனின் நோக்கத்தில் கணவன் மேல் பற்று கொண்டதோ
2.அந்த ஆன்மா அகஸ்தியன் உடலுக்குள் சென்ற பின் அகஸ்தியனுக்கு உறுதுணையாக
3.உள் நின்றே உணர்வின் தன்மை பெறும் நிலையும்
4.கருவின் நிலைகள் இணை சேர்த்து… இரு கருக்களும் (உயிரும்) ஒன்றாக்கும் நிலையும்
5.விண்ணின் ஆற்றலைத் தன் அணுக்களில் மாற்றும் தன்மையும் அங்கே உருப்பெறச் செய்தது.

இது இயற்கையின் உண்மை…! குருநாதர் இதை எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் அவனின் உணர்வுகளை கணவனும் மனைவியும் ஒன்றிய நிலையில் கவர்ந்தவர்கள் அனைவரும்
1.வசிஷ்டரும் அருந்ததி போன்ற வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்து
2.சாவித்திரி போன்று இணை சேர்த்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து
3.தீமைகளைத் தன்னுள் நாடாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக சப்தரிஷி…! சிருஷ்டித்துக் கொண்ட நிலையாக
5.இன்றும் விண்ணுலகில் வாழ்த்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் சென்றடைய வேண்டிய எல்லை அது தான்…!

எல்லாமே முதல் படி தான்… முடிவு என்பதற்கு இடமே இல்லை

 

பரஞ்சோதி வடிவானவனே
பரம பிதாவாகி நின்றாய்
பரம்பொருளை எல்லாம்
பகர்ந்திடுவாய் இம்மானிடர்க்கே

பாட்டின் ஆரம்பத்தைப் பார்த்தாயா…! இதை வைத்துப் பாட்டு எழுது. ஜாதி மதம் இனம் வேண்டாம் என்பதற்குத்தான் இந்தப் பாடலின் முதல் அடியைத் தந்துள்ளேன்.

இப்பாடலின் தொடரை இன்னும் ஒரு முறை உன் வழிக்கே விடுகின்றேன். பாடலின் வரிசை எல்லாம் நான் சொன்ன பிறகு பகர்ந்திடலாம் எல்லோருக்கும்.

1.எந்தச் சொல்லையும் எந்தச் செயலையும் எப்பொழுதும் முழுமையுறாமல் வெளியிடுவது நன்றல்ல… பிறரின் புகழ் நமக்கு வேண்டாம்.
2.பரம் பொருளின் பரம பிதாவாகிய எல்லாமே பரம இரகசியமாகத் தான் இருக்க வேண்டும்.
3.பெரும் சித்தர்களின் நிலை எல்லாச் சொல்லும் வெளியிடாமல் சென்றதன் இரகசியமும் இதுதான்.

முற்றும் அறிந்து விட்டேன் என்பவனின் நிலை எல்லாம் பார்த்தாயா…?
1.எல்லாமே முதல் படி என்பதன் பொருளும் இதுதான்….!
2.எப்படியும் முடிவு பெறுவது வேண்டாம்…
3.நம் உயிரே முடிவு பெறாமல் இருக்கும் பொழுது “எல்லாமே முடிவு பெறாமல் இருக்கட்டும்…” என்றதன் பொருளும் இதுதான்.

பூமியின் நிலையை அறிந்து விட்டாயா…! பெரும் பாற்கடலில் உள்ளே என்ன என்று எண்ணினாயா…? பாற்கடலைக் கடைந்தான் ஈஸ்வரன் என்கின்றீர்… உலகம் உருளுகின்றது என்கின்றீர்…!

உலகம் உருளுகின்றதன் மனம் (MIND) என்ன என்று தெரியுமா…? கடலும் உள்ளது; மலையும் உள்ளது; மடுவும் உள்ளது; மரமும் செடிகளும் உள்ளது; மனிதனோடு மிருகமும் உள்ளது; இயற்கை தந்த பொருளுடன் மனிதனால் சமைக்கப்பட்ட செயற்கையும் உள்ளது. இவற்றுடன் கலந்த ஓரினமும் உள்ளது…!

உலகத்தில் கலந்துள்ள செயற்கையைத் தான் காண்கின்றீர்கள். சாமியிடம் கேட்டீர்களா அவன் வழி சொன்னானா…? அதன் நிலை என்னப்பா…?
1.உன்னுள்ளே இருக்கும் ஈஸ்வரனையே அறிந்து கொள்ள முடியவில்லை
2.பூமியின் உள் நிலையை எப்படி அறிவாய்.

பூமித் தாய் என்னும் “என் தாய்” அங்குள்ளாள். ஒளியின் தன்மையையும் ஒளியின் ஒளியையும் ஒலியின் ஒளியையும் இழுத்துக் கவர்ந்து கொண்டிருக்கின்றாள்… அதிலே தான் நீ நிற்பதும் நடப்பதும்…!

பூமித்தாயின் ஈர்ப்பினால் ஒலியெல்லாம் ஒளியாகி அத்தன்மையை தன்னுள் ஈர்த்து மண்ணில் உள்ள காந்த சக்தியால் உலகை ஆட்டுவிக்கின்றாள்.

உன் எண்ணத்தினால் “எட்டாத பொக்கிஷங்கள்” எல்லாம் இப்பூமிக்குள் குவிந்திருக்கின்றது. பொக்கிஷம் என்றால் காசு பணம் அல்ல…!

உலோகத்தைத் தருகின்றாள்; உருவத்தையும் தருகின்றாள்; உலகத்தையே ஆட்டுவிக்கும் ஊட்டம் எல்லாம் தருகின்றாள்…!

பந்தைப் போன்று உலகம் உள்ளது என்கின்றார்கள். உலக உருண்டை செய்கின்றார்கள் பந்தின் உள்ளேயும் காற்று தான் உலக உருண்டை செய்வதிலும் உள்ளே காற்று தான் உள்ளது. அது போல் உலகின் உள் நிலையிலும் காற்று தான் உள்ளது (விஞ்ஞானிகளால் இன்னும் இதைக் காண முடியவில்லை).

நீ நினைக்கின்றாய் எடுக்க எடுக்க மண்ணும் உலோகமும் தண்ணீரும் தான் உள்ளது என்று.
1.உலகின் வெளி நிலையில் உள்ள காற்றை அறிந்தாயா…?
2.உலகில் வெளி நிலையில் வான் மண்டலம் எப்படி உள்ளதோ அந்நிலை தான் உள் நிலையும்.

உள் நிலையில் உள்ள காற்றெல்லாம் எங்கிருந்து வருகின்றது…? என்று எண்ணுகின்றீர்கள். உள் நிலை காற்று எல்லாம் உலகைச் சுற்றி உள்ள ஒளி ஒலி கலந்த காற்றே…!

நீ விடும் மூச்செல்லாம் பூமித்தாய் ஈர்க்கின்றாள்…! ஈர்க்கும் இம்மூச்சால் தான் இவ்வுலகம் சுற்றுகின்றது என்று முதல் பாடத்திலேயே சொல்லி இருந்தேன்.

ஒலி ஒளி எல்லாம் பூமியில் தாக்கும் பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் இழுத்துப் பாற்கடலையும் மனிதனையும் பெரும் மலைகளையும் தாண்டித்தான் ஈர்க்கின்றது.

இந்தப் பூமி ஒலியையும் ஒளியையும் காற்றையும் தன்னுள் இழுத்துச் சுற்றுவது தான் “இந்த உலகச் சுற்றே…” உலகின் உள்நிலையும் காற்றுத் தான் உலகின் வெளிநிலையும் காற்றுத் தான்.

இந்தப் பாடத்தின் விளக்கம் புரிந்ததா

நான் சொல்லும் நிலையில் சொன்னால் ஏன் கலக்கம்…? சாமி சொன்னால் தான் ஏற்பாயா…? எல்லாம் அவனே. அவன் சக்தியே… என்பதன் பொருளைப் பார்த்தாயா…?

1.வானுலகில் உள்ள ஒளியும்
2.தன் நிலையில் சுற்றும் ஒளியும் மண்ணுலகை வந்தடையும் தன்மையும் படிப்படியாக விளங்கும்.

படிப்படியாக என்பது நீங்கள் சொல்லும் ஒன்று, இரண்டு, மூன்று என்பது அல்ல சிறுகச் சிறுக என்பதுமல்ல. படி… படி… என்பதன் அர்த்தமே வேறப்பா கீழிருந்து மேல் செல்வது அல்ல படி.
1.ஒவ்வொன்றாக உள்ளதுவே
2.ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தன்மையில் உள்ளது.
3.ஒவ்வொன்றாக விளக்கம் தருகின்றேன்… தியான நிலைக்குச் செல்

தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக
பெற்ற பயனைப் பெற்றிடவே அருள் செய்யுங்கள்
பெற்ற பயனை எல்லாமே பெற்றவுடன் முடிவுறாமல்
பெற்ற பெயரை எடுத்துத் தருகின்றேன்
“எனக்கு அருள் செய்வீர்களாக…”

 

நல் மனதைப் பெற்றிடவே நாட்டமெல்லாம் தந்திடுவாய்
“நான்… நான்…” என்று சொல்லை நம்மிடம் விட்டகற்றிடுவாய்
நன் மனதைப் பெற்றிடவே நமக்கருள்வாய்
நம்முள்ளே நீ வந்திடவே நாமெல்லாம் ஜெபித்திடவே
“நாமெல்லாம் போற்றிடுவோம் ஓம் ஈஸ்வரா”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.

இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.

தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் “ஒரு ரவுண்டு” அப்படி வரும்.

இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.

உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள “அணுக்களின் முகப்புகளில்” பூராவும் போய்ச் சேரும்.

நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.

அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.

நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.

நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும்… அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ…
1.அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
2.பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.

இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ… அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.

அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.

அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு

 

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது. அவை அனைத்தும் அடுக்கு வரிசையில் இருக்கும் ஒன்று மேலே ஒன்று கீழே என்ற நிலையில் 27 நட்சத்திரங்களும் 27 விதமான பாதைகளில் சுழன்று வருகின்றது.

அதிலே முன்னணியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் பிற மண்டலங்களில் இருந்து தனக்குள் எடுக்கும் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் அது தனது பால்வெளி மண்டலங்களாக அதை மாற்றுகின்றது.

1.ஒரு இருண்ட பொருளுக்குள் பல பேட்டரியைச் (CELLS) சேர்த்து எர்த்தை (EARTH) வைக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அதிலே எப்படி வருகின்றதோ
2.இதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தில் விளையும் உணர்வுகள் மற்ற கோள்களின் நிலையில் சேர்க்கப்படும் பொழுது
3.அது ஒவ்வொன்றிலும் ஒளி அலைகளாக மின்னும் நிலைகளுக்கு மாற்றுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!

நான் (ஞானகுரு) கல்வி அறிவில்லாதவன் தான். இருந்தாலும் குருநாதர் காட்டிய வழியில் அதை நான் கண்டுணர்ந்து
1.அதனுடைய செயலாக்கங்களைக் காணும் பொழுது விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு.
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது எதிர்காலத்தில் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது வளர்ந்து
3.27 நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் நீங்கள் காணலாம்
4.அதன் உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் தெளிந்திடும் நிலையாக
5.நற்சக்திகளாக மாற்றிடும் தன்மையும் ஏற்படும்.

அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது. இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள்

ஆனால் இனத்திற்குள்ளும் ஒன்றுக்கொன்று இரைக்காக மோதுவதும் உண்டு. தன் இனத்தை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.

மகா ஞானிகள் இத்தகைய (27) நட்சத்திரங்களின் ஆற்றலை ஒவ்வொரு அணுக்களிலும் செலுத்தப்பட்டுச் செருகேற்றி… உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்துக் கொண்டனர்.

1.அப்படி அந்த விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்
2.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றினான்
3.அவனில் விளைந்த உணர்வலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சுழலச் செய்கின்றது. அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.

அதே போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும் பொழுது… சூரியன் தனக்குள் அதைக் கவர்ந்து உணவாக உட்கொண்டு அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு இதைக் கேட்கப்படும் பொழுது சில வித்தியாசங்கள் ஏற்படலாம்
1.இதெல்லாம் நமக்கு எதற்கு…? விடிந்தால் சாப்பாடு கிடைத்தால் போதும்
2.குருடனுக்குத் தேவை கண் தானே…! நாளைக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ…?
3.சாமி ஆசீர்வாதம் இருந்தால் போதும்
4.தொழிலிலே பணம் சம்பாதித்தால் போதும்… அது நல்ல முறையில் நடந்தால் போதும்
5.எங்கள் நோய் நீங்கினால் போதும்…! என்ற இந்த உணர்வில் தான் இருக்கின்றார்கள்.

ஆஅனால் இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு வேதனையை உருவாக்கி நல்லவைகளை எண்ண விடாதபடி தடுத்துக் கொண்டுள்ளது.

அதை மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அதிகமாகிவிடும்… ஆரம்ப நிலைகளுக்கே உயிர் இந்த மனித உடலை மாற்றிவிடும். விஷ அணுக்களாக மாற்றிப் புழுவாக… பூச்சியாக… பாம்பாகத்தான் பிறக்க வேண்டி வரும்

காரணம்… இயற்கையின் மாற்றங்கள் எதனின் கலவை எதிலே ஆகின்றதோ அதற்குத் தக்க தான் உருக்கள் மாறுகின்றது.

குருநாதர் வான இயல் தத்துவத்தை என்னை அறியும்படி செய்வதற்காக
1.எத்தனையோ காடு மேடெல்லாம் அலையும்படி செய்தார்… அனுபவபூர்வமாகத் தெரியும்படி செய்தார்.
2.கடும் வேதனைகளால் அவதிப்படும் போது அதிலிருந்து மீள குருவை நான் நினைப்பேன்
3.அதே சமயத்தில் குருவை நினைத்து “என்னை இப்படி எல்லாம் அழைத்துச் செல்கின்றாரே…” என்று வேதனையும் படுவேன்.

ஏனென்றால் ஒரு சில தாவர இனங்களில் விஷத்தன்மை கொண்ட இலைகள் உண்டு. அது மேலே பட்டபின் உடல் சோர்வடையும் மயக்கமும் வரும்.

1.மலைப்பாதைகளிலே செல்லும் பொழுது உடல் சோர்வடைவது மட்டுமல்லாதபடி
2.இந்தத் தாவர இனங்களின் மூச்சலைகளும் அதை உணவாக உட்கொண்ட நஞ்சு கொண்ட உயிரினங்கள் அங்கே பரவி இருப்பதும்
3.அவைகள் மேலே பட்டால் அரிப்பு எடுப்பதும்
4.நான் இதைப் பார்ப்பதா…? அல்லது சோர்வைப் பார்ப்பதா…? என்று எத்தனையோ நிலைகள் இப்படி வருகின்றது.

இத்தனையும் எனக்குள் குருநாதர் உருவாக்கினார். இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீள வேண்டும் என்ற வினாவையும் எழுப்புகின்றார்.

நான் அதிலே மீண்டிடும் நிலையாக
1.ஞானிகள் இது போன்ற தீமையிலிருந்து எப்படி விடுபட்டார்கள் என்பதை உணர்த்தி
2.அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தார்…. அதை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டேன்.

அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.

காட்டில் நான் சிரமப்பட்டுப் பெற்றதை… நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே “சிரமங்கள் வரும் போதெல்லாம்… அந்தச் சக்திகளைப் பெற முடியும்…” என்று உறுதியாகச் சொல்கிறோம் (ஞானகுரு).

உன் எண்ணத்திற்குள்ளே நான் இருப்பேன்… சொல்லாக வருவேன்… உன் செயல் பூர்ணமடையும்

 

பாட்டின் தொடரைத் தந்தேன் உன் எண்ணத்தில் உதித்ததா…? உதித்தவுடன் காவியத்தில் கொண்டு வரவில்லையே…! பாட்டைத் தொடர்ந்துவிடு பகர்ந்திடுவேன் உனக்குள்ளே.

ஞானாம்பிகையின் அருள் பெறவே
ஞானம் எல்லாம் தந்திடுவேன்…!

 

தன் மனதை அடக்கிடவே
தாங்கும் நிலை எனக்கு அருள்வாய்…!

 

ஞானோதயத்துக்கு விட்டுள்ளேன்
அவ்வழியே எடுத்துப் பகிர்ந்திடுவாய்…!

 

மாற்றமில்லாச் சொல்லைத் தந்திடுவாய்
மனம் எனும் கோவிலிலே…!

எல்லாவற்றையும் (பாடலில்) நானே பகர்ந்து விட்டால் உனக்கு அருளியதன் பயன் என்னப்பா…? சிலவற்றை உன்னிடமே விட்டுவிட்டேன்… சிந்தையுடன் சொல்லைத் தந்திடுவாய்.
1/உன்னுள்ளே நான் வந்திடுவேன் வந்து “எல்லாம் தந்து விடுவேன்…” என்று எண்ண வேண்டாம்
2.உன் நிலைக்கே விட்டுவிட்டேன்.
3.பாட்டெல்லாம் நான் பகர்ந்து விட்ட பிறகு “ஈஸ்வரனை” மட்டும் அழைக்கத் தெரிகிறதா…?

உன் சக்தியின் தன்மை கொண்டு இந்தப் பூவுலகையே ஆட்டி விடலாம். அந்தப் புன்னகையை வைத்துப் பூத்திட்டால்… பூவுலக வரிசையிலே பூத்திடுவாய் அடுத்த கவிதையை…!

ஓங்கார இசையினிலே
ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி…!

 

பூ மழையாகப் பொழிந்திடுவாய்
சக்தியே ஓம் சக்தியே…!

 

நீ பொழிந்த பூவையே
பூஜை செய்வேன் சக்தியே…!
பூவில் பூஜை செய்வேன்
சக்தி பூஜை செய்வேன்…!

 

பூர்ண சந்திரனின் வடிவினிலே
பூர்ண கும்பமாய் என் மனதில்
பூவின் மணத்தை யெல்லாமே
தந்திடுவாய் சக்தியே…!

 

பூவின் மணத்துடனே என் மனதில்
பூர்ணமாய்க் கலந்திடுவாய் சக்தியே
பரிபூர்ணமாய் நீ வந்து
கலந்திடுவாய் சக்தியே…!

 

மணம் எல்லாம் மணக்கச் செய்வாய்
சக்தியே ஓம் சக்தியே…!

பூக்கின்ற பூவிலெல்லாம் புகட்டி விட்டேன்… சொன்னது புரிந்ததா…? அடுத்த பாடல் ஒலியில் உள்ள ஒலியெல்லாம் உனதாக்கி உன் ஒளியை ஒளிரச் செய்.

ஓ… என்ற வரிசையிலே உன் கவிதையை ஓங்கச் செய். சொன்ன சொல் புரிந்ததா…? ஒவ்வொன்றும் புகன்றிடுவேன். எல்லாப் பாடலுமே சொந்த பாடலாக இருந்திடல் வேண்டும்.

1.நான் என்ற நிலை என்றும் உனக்கு வர வேண்டாம்
2.நான் தான் என்பதற்குப் பதில் நாம் என்ற சொல்லைச் சொல்.

உன்னைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு உனக்கு ஒவ்வொன்றும் பகர்ந்திடுவதும் இதற்காகவே.
1.இப்பாடல் எல்லாம் நானும் தரவில்லை
2.நமது ஈஸ்வரனின் சொல்லப்பா இதுவெல்லாம்.

மனம் தளர வேண்டாம். உனக்கருளும் பாடல் எல்லாம் “உன்” மூலமாக வரும் என்று எண்ண வேண்டாம். அதற்காகத்தான் உனக்கு இந்தத் தயக்க௷ல்லாம் தந்து விட்டேன். எண்ணியதையெல்லாம் எழுதினாயா…? எதற்காக அந்த நிலை…? என்று பார்த்தாயா…!

நம் செயலை ஆழம் பார்க்கிறார் என்று எண்ண வேண்டாம் உன் ஆழத்தைப் பார்த்துத் தான் மக்களுக்கு பகர்ந்தது. இன்னும் இருக்கின்றது உனக்குப் பாடல்கள்.

முதலில் இருந்து பாடலை நீ பாடு. உன் ஓங்கார இனிமை…
1.என்றும் இல்லாத இனிமையை நான் அருள்கின்றேன்
3.நான் என்றால் நான் இல்லை… “அவனப்பா…”

பாடத்தை மறந்து கவிதை ரசிக்கின்றாயா…?

மனம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் தான் இருக்க வேண்டும் (காட்சி:- வட்டம் ஆறு)

ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”

மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.

நீ வேறல்ல… உன் எண்ணம் வேறல்ல… உன் சொல் வேறல்ல… உன் செயல் வேறல்ல… எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்…!
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.”எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,..”

உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.

எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது… சுற்றி வரும்.

காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.

எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.

பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.

நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.

எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?

1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.

எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.

நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மந்திரம் செய்வோரையோ தந்திரம் செய்வோரையோ மற்ற மார்க்கங்களையோ எண்ணிக் கொண்டு… அவர் என்ன செய்கின்றார்…? இவர் என்ன செய்கின்றார்…? என்ற நிலைகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டாம்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே தேடி வருவோர்
2.அவர்களின் ஏக்கம் எதுவோ அது பதிவாகின்றது…
3.அவர்களுக்குள் அந்த அருள் சக்தி ஓங்கி வளரவும் செய்யும்.

ஆனால் மற்றதைப் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினால் அந்த நோக்கம் அதிலே தான் இருக்கும். மற்றவரின் செயலைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்பினால் அது தான் ஆழமாக அவர்களுக்குள் பதிவாகி இருக்கிறது என்று பொருள்.

அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தி அந்த விபரத்தைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டமாக இருக்கிறது… கஷ்டமாக இருக்கிறது…! என்று சொல்லி அதையே கேட்டால் அந்தக் கஷ்டத்தைத் தான் வளர்க்க உதவும்.
2.ஆனால் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.

கேட்டுணர்வோர் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்பத்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சி அடையும்.

1.கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “அது வந்துவிடும்…”
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் சிக்கல்களிலிருந்து… நான் மீள முடியுமா…? என்றால் “இது சந்தேகம்…”
3.மீள முடியாது…! என்று அந்த வலுவை இழந்து விட்டால் “மீள முடியும்” என்ற உணர்வுகள் உங்களுக்குள் வராது.

ஆகவே மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு யாம் கொடுக்கும் இந்த ஞானிகளின் வாக்கின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நீங்களே விடுபட முடியும்.

அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

ஆனால் பெரும்பகுதியானோர் அவர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையுமே எண்ணி… இது எப்படி வந்தது…? எதனால் வந்தது…? என்று கேள்வி எழுப்பிக் கொண்டே உள்ளார்கள்

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாதபடியே துன்பங்களும் கஷ்டங்களும் எப்படி வருகின்றது…? என்பதை பல முறை உபதேசித்திருக்கின்றேன் (ஞானகுரு).

உபதேசங்களை எல்லாம் கேட்ட பின்னாடியும் மீண்டும் கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்வது அவர்களுக்குள் பதிவாகவில்லை…! என்று தான் பொருள் ஆகின்றது.

ஆனால் மேற் கொண்டு நாம் செல்ல வேண்டிய சரியான மார்க்கங்களை எண்ணி அதைக் கேட்டால் அது பதிவாகும்… நல்லதாகும்.

அதே சமயத்தில் இந்த அருள் உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும். அதனின் உணர்வின் துணை கொண்டு தான் உங்கள் உடலுக்குள் ஞானிகளின் உணர்வு விளையும் பருவமும் வரும்.

இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?

 

இறந்த உங்கள் தாய் தந்தையின் நினைவாக ஒவ்வொரு அமாவாசையிலும் அல்லது வருடத்தில் ஒரு நாள் அமாவாசை அன்று படையல் வைத்துக் கும்பிடுகின்றீர்கள்.

அன்று விரதம் இருந்து… அவர்கள் எதை எல்லாம் உணவாக உட்கொண்டார்களோ அந்த உணவைப் படைத்து வணங்கி பின் நீங்கள் அதை உணவாக உட்கொள்கின்றீர்கள்.

அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த காலங்களில் தான் மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.
1.சாங்கிய சாஸ்திரப்படி செய்பவர் குடும்பங்களின் வீட்டு வாசல்படியில் இருக்கும்
2.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் காலடி மண்ணை எடுத்துச் செல்வார்கள்.

இருண்ட நேரங்களில் அவர்கள் கற்றுணர்ந்த அதர்வண வேதத்தின்படி மந்திரத்தைச் சொல்வார்கள்.

குடும்பத்தில் யார் யார் எந்த தெய்வத்தைப் பக்தியில் எண்ணி அந்த்த் தெய்வத்தின் மந்திரத்தை ஆழமாகப் பதிவு செய்து அதைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தார்களோ அதன் துணை கொண்டு
1.அவருடைய நாமத்தையும் சொல்லி குடும்பத்தையும் சொல்லி மந்திரவாதிகள் ஜெபிப்பார்கள் என்றால்
2.இறந்த ஆன்மா அவருடைய கைகளிலே கைவல்யமாகி விடுகின்றது.

ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு மந்திர ஒலி ஒன்று உண்டு. அதை வைத்து அந்த ஆன்மாவில் இருக்கக்கூடியதைக் கைவல்யப்படுத்துவார்கள்.

அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அதாவது… கருக் கலைக்கப்பட்டு வெளிவந்த ஒரு பிண்டத்தைக் கையில் எடுத்து அதை ஜெபிப்பார்கள்.

ஜெபிக்கும் பொழுது அந்தப் பிண்டத்திலிருந்து அகன்று சென்ற அந்த உயிரான்மா அந்தப் பிண்டத்திற்கே மீண்டும் வரும்.

1.மனிதனாக வளர்ந்த மந்திர ஒலியினை அதிலே பாய்ச்சி…
2.இவர்கள் நினைவு எதுவோ அதை எல்லாம் செயல்படுத்தப்பட்டு
3.பிறருக்குத் தீமைகளை விளைய வைக்கவும்… செய்வினை தோஷம் என்று செய்வதும்
4.ஒரு பொருள் மீது இந்த ஒலி அலைகளைப் பரப்பி மந்திரத்தைச் சொன்னால் அந்தப் பொருள் கரைவதும்
5.இன்னொரு இடத்தில் அந்தப் பொருள் உருவாவதும் போன்ற மாயாஜால வேலைகளைச் செய்வார்கள்.

மந்திரத்தை ஜெபித்து காளியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; மாரியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; முனியப்பனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; கருப்பணனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்… என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.

தீமையின் விளைவுகளுக்கு ஒப்ப அதற்கென்று ஒவ்வொரு மந்திரச் சொல்லைச் சொல்லிப் பரப்பிவிட்டால் இந்த ஆன்மாவின் துணை கொண்டு எதிலேயுமே ஊடுருவிச் செயல்படும் சக்தியாகச் செயல்படுவார்கள்.
1.சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கியுள்ளோர்கள் அனைத்தும்
2.ஆன்மாக்களைப் பிறருக்கு கைவல்யப்படுத்துவதற்குத் தான் உதவ முடியும்

உதாரணமாக குடுகுடுப்பாண்டிகள் காலையில் வருவார்கள். அதற்கு முன் இரவிலே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று எத்தனையோ ஒலிகளை ஒலிப்பார்கள். ஒவ்வொரு வீட்டில் உள்ள உணர்வின் அலைகளை (சில நிகழ்ச்சிகளை) எதிரொலிக்கச் செய்வார்கள்.

காலையில் இங்கே வந்த பின் நீங்கள் அரிசியோ பருப்போ மற்றதோ கொடுத்தாலும்
1.உங்கள் வீட்டில் இருக்கும் பழைய துணி வேண்டும் என்று… அதைத்தான் விரும்பிக் கேட்பார்கள்.
2.நம் தலையிலிருந்து உதிர்ந்த முடி எதுவாக இருப்பினும் அவர்கள் கண்ணுக்கு அது சிக்கும்… அதையும் எடுத்துக் கொள்வார்கள்.

சிரசில் விளைந்த ரோமம் ஒன்று கிடைத்தால் போதும்…! அதை வைத்து
1.உங்கள் குடும்பத்தில் என்னென்ன நடந்தது என்று பழைய நிகழ்ச்சிகளைச் சொல்வார்கள்
2.நம்மை நம்பச் செய்வதற்காகப் பல வித்தைகளையும் செய்வார்கள்.

இது தான் “கடவுளை தனக்குள் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன்…” என்று சொல்லி அற்புதங்கள் செய்பவருடைய நிலைகள்.

உலக ரீதியில் எடுத்துக் கொண்டாலும்… எந்த மதத்தின் அடிப்படையில் இத்தகைய நிலைகள் செய்கின்றாரோ பிறிதொரு மனித உடலில் விளைந்த… அதாவது இறந்தவரின் ஆன்மாக்களைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திச் செயல்படுத்துகின்றார்கள்.

1.மந்திரம் இல்லாத மதம் எதுவும் இல்லை
2.அந்தந்த மதங்களுக்கு உண்டான சாங்கியங்கள் உண்டு
3.அதன் அடிப்படையில் தான் பல நிலைகள் இவ்வாறு இயக்கப்படுகின்றது.

மனிதன் இறந்த பின் மனித உடலில் உருவான இந்த உணர்வலைகள் பூமியில் உண்டு. உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களும் காற்றிலே தான் சுழன்று கொண்டுள்ளது. அதைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.நம்முடைய ஆன்மா மந்திரக்காரர்கள் கையிலே இப்படிச் சிக்குவது சரியா…?
2.சாங்கிய சாஸ்திரப்படி அமாவசையன்று படையல் செய்து முன்னோர்களைக் கூப்பிடுவது சரியா…? என்று சிந்தித்துப் பாருங்கள்

ஆகவே… மகரிஷிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் யாராக இருந்தாலும் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைப்பதே மேலானது.

(விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…!https://wp.me/p3UBkg-1DK)

தீப விளக்கை ஏற்றிவிடு… உன்னுள்ளே நான் வந்து பேசுகின்றேன்

 

ஒலியெல்லாம் ஒளியாக்கி ஒளியையே உனதாக்கு…!
1.நான் தந்த மனத்துடன் உன் மனத்தைக் கலக்க விடு.
2.பூமித்தாய் பூரிப்பாள்… பூவுலகமும் பூத்து விடும்
3.வான மண்டலம் செல்வாய் வானுலகம் கண்டிடுவாய்
4.வானுலகம் செல்லும் நிலை தான் சூட்சும நிலை என்பதெல்லாம்.

இன்றைய கருத்துக்கள் எல்லாம் புரிந்ததா…? இந்நிலையில் இருந்து நீ மாறுபடாதே.

அங்கொருவர் அவஸ்தைப்படும் நிலையைத் தான் தினம் தினம் பத்திரிக்கையில் படிக்கின்றாய். அவன் (அன்றைய முதல்வர்) நிலையைச் சொல்கின்றேன். ஆசை என்ற நிலையைப் பார்த்தாயா. பெரும் ஆணவம் பிடித்து ஆடினான்… ஆணவ நிலையை அனுபவிக்கின்றான்… அனுபவித்த பின் அவன் நிலை என்னப்பா…?

இவ்வுலகின் ஆசை எல்லாம் இன்னும் அவன் உடலில் இருப்பதால் எப்படிப் போகும் அவன் உயிர்…? எமன் என்பது யாருமில்லை… அவனே தான் அவனுக்கு எமன்.

எமனையே எமன் வெல்கிறான்… இப்பொழுது. பாவக் கடலில் கலந்திடுவான்… பாவியாகி நின்றிடுவான்… பெரும் பாவம் செய்த பலனை எல்லாம் பதம் பதமாகப் பார்த்திடுவான்.

இப்போது அவன் விடும் மூச்செல்லாம் அவன் விட்ட மூச்சும் தான் அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்தியாவில் எங்கு இருக்கிறது அணுகுண்டு…? என்று நினைக்கின்றாய்.

அவ்வணு தான் அணுகுண்டு… அவனே தான் அணுகுண்டு… பெரும் அணுகுண்டு எல்லாமே அவன் போல் உள்ள அணுகுண்டுகளால் வந்த அணுகுண்டு தான்.

உலகை அழிப்பதற்கே பிறந்திட்டான்… அணுவை எல்லாம் அணுகுண்டாக்கி விட்டான்.

1.அணுவைப் (ஆவனை) பிழைக்கச் செய்ய ஜெபிக்கின்றார்களாம்
2.கோவில்களில் எல்லாம். அவன் ஜெப நிலையைப் பார்த்தாயா அவனுக்காக இவர்கள் எல்லாம் ஜெபிக்கின்றார்களாம்.
3.அவன் விட்டு அணுகுண்டுகள் எல்லாம் இவர்கள் உடலில் ஏறிவிடும்.
4.ஜெபிக்கட்டும்… ஜெபிக்கட்டும்… கலியுகம் மாற வேண்டாமா…? அதற்காகத்தான் இந்த ஜெபம் எல்லாம்.

நல் மணத்தை எடுத்து நல் மூச்சை நீ விட்டு ஜெபித்திடப்பா அழகாக. உன் நிலையில் சாந்தம் வேண்டும் என்பதன் பொருள் எல்லாம் இதுவே தான்.

ஆவி உலகத்தன்மைகளைப் பற்றி அடுத்தது சொல்கின்றேன். ஒரு நிலையில் நீ இருக்க உன் கண்ணை அடைத்திட்டேன். சொன்னவுடன் திறந்திடுவாய்… சொன்னதெல்லாம் மறந்திடுவாய்… அதற்காகத்தான் இந்நிலையைத் தந்திட்டேன்.

பசியின் நிலையும் ஒன்றுதான் பெரும் பணத்தின் நிலையும் ஒன்று தான் பசி வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் போதும் என்றான பிறகும் அந்தப் பசி வந்து விட்டால் மீண்டும் புசித்திடுவான் உணவையே.

பணத்தின் நிலையும் இதுவே தான். பணம் பணம் என்கிறது இவ்வுலகம் பசியும் பணமும் ஒன்றேதான் இன்ப வாழ்வைத் தந்து விட்டேன் என்று சொன்னால் இன்பமெல்லாம் என்னவென்று எண்ணுகின்றாய்…?
1.பணம்தான் இன்பம் அல்ல.
2.இன்று இருக்கும் உன் தியான நிலை தான் இன்பமப்பா.

பசியின் தன்மை அடக்கி விட்டால் பாடலின் தன்மையும் புரிந்துவிடும் (உன் நிலையை மாற்றிக் கொண்டாய்… இதை ஏற்கும் நிலை உனக்கு இல்லை). பெரும் பசியைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாள் போதாது. இன்னொரு நாள் சொல்கின்றேன்.

1.எங்கு சென்றாலும் உன் நிலையை மறந்திடாதே
2.தியான நிலைக்கு வந்து விட்டாய் தினம் தினம் தியானம் செய்.
3.உன் மொழியிலேயே நானும் வந்து பேசுகின்றேன்

தீப விளக்கை ஏற்றி விடு…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்… செய்தான்…! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.

ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.

ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்… மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.

ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.

அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.

1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது…!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கெட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.

மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.

ஆகவே நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல…!

இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்…?

நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.

நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.

விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.

1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது

அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.

விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்…” என்று வரப்படும்போது சொல் விண்… என்று வரும்.

இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.

அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்…!

“அடுத்தவர்களை… அயோக்கியர்கள் என்றும் தீயவர்கள் என்றும்” எண்ணும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்

 

காந்திஜி சகோதர உணர்வு கொண்டு மக்களைப் பற்றி எண்ணினார்
1.உன் எண்ணமே உனக்குக் கடவுளாக இருக்கிறது என்றும்
2.ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு உயர்வாக எண்ண வேண்டும் என்று தற்காலத்தில் தோன்றிய அந்த ஞானி சொன்னார்.

அவரைச் சந்தித்தவர்களும் உண்டு.

செல்வமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆண்டி போலத் தான் வாழ்ந்தார். சொத்து சுகத்திற்கு அவர் ஆசைப்படவில்லை… கால் நடையாகவே நடந்து சென்றார்,

தனக்குள் தெளிந்த மனங்கள் பெற வேண்டும்… எல்லோரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் வளர்ந்திட வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்… மன பேதம், இன பேதம் மொழி பேதம் இன்றி வாழ வேண்டும் என்று சொன்னார்.

ஆனால் கடைசியில் அவருக்குக் கிடைத்த பரிசு “இந்த உடலை விட்டு நீ போய்விடு…!” என்று சுட்டுக் கொன்றார்கள். மதத்தின் நிலை இனத்தின் நிலை கொண்டு அவருடைய நிலைகளைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

உடலில் குண்டு பாய்ந்த போதும் அவர் இந்த உடல் பற்றில்லாதபடி “ராமா… ராமா… ராமா…!” என்றார். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுதான் சீதா ராமா.
1.எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தனக்குள் அந்தச் சுவையை எண்ணினார்
2.குண்டின் தாக்குதல் ஆன போதிலும் அதை எண்ணாதபடி ராமா… ராமா… என்றார்.

நாம் அடிபட்டால் ஐய்யய்யோ என்று தான் சொல்வோம். ஆனால் அவர் எதைக் குறிக்கோளாக வைத்தாரோ தாக்கப்பட்ட பின்னும் ராமா… என்ற சொல்லே வந்தது. அந்தச் சொல்லுடன் தான் அந்த ஆன்மா வெளி வருகின்றது.

அந்த ராமன் யார்…? மகிழ்ச்சியின் நிலைகள். அதாவது
1.எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தினை அவருக்குள் வளர்த்தார்
2.அதுதான் சீதா ராமா… அந்த எண்ணம் கொண்டே அவர் செயல்பட்டார்.

ராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான். மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அரசியல் வாழ்க்கையிலும்
1.தெய்வீகப் பேரன்பு கொண்டு மக்கள் அனைவரது உயிரையும் கடவுளாக மதித்து
2.மத பேதமில்லாது இன பேதம் இல்லாது சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வுடனே வாழ்ந்தார் காந்திஜி.

ஆனால் அவர் சொன்னபடி… “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நிலைகளைச் சொல்வோரும் கடைப்பிடிப்போரும் இன்று இல்லை.

காந்தியினுடைய பெயரைச் சொல்லி
1.தன்னுடைய கௌரவத்தைக் காத்துக் கொள்ளவும்
2.தன் வாழ்க்கையில் புகழுக்காக ஏங்க முடிகின்றதே தவிர
3.காந்திஜி செய்த உயர்ந்த நிலையை ஒரு துளி அளவு கூட யாருக்கும் செய்யும் எண்ணமில்.

காந்திஜி போன்று வினோபாஜி சில நிலைகளைச் செய்தார்… மக்களுக்கு நிலங்களை பங்கிடச் செய்தார்… எல்லோருக்கும் கொடுக்கச் செய்தார்…!

அதன் அடிப்படையில் அதற்குப் பின்… வினோபாஜியின் சீடர்கள் காந்திஜியின் சீடர்கள்…
1.நாங்கள் தர்மத்தைச் செய்கிறோம் என்ற பெயரில் வந்தவர்கள்
2.”அடுத்தவர்களை எல்லாம் அயோக்கியர்கள்” என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

காந்தியின் தத்துவத்தைப் படித்தோர் அனைவரும் நியாயத்தை தனக்குள் வைத்துக் கொண்டு
1.உலகில் உள்ள “மற்ற அனைவரும் தீயவர்கள்” என்று தான் சொல்வார்கள்
2.ஆனால் காந்திஜி சொன்னது “எவரும் தீயவர்கள் அல்ல…!” சந்தர்ப்பம் தான் தீயவர்களாக ஆக்குகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று அவர்களுக்காக நீ தியானி
4.யார் எந்தத் தவறு செய்தாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆண்டவனாக நீ கருதி ஆண்டவனிடம் வேண்டு.

ஆண்டவன் யாரென்று காந்திஜி சொல்லவில்லை என்றாலும் எந்த மதத்தின் அடிப்படையில் ஆண்டவன் என்றோ கடவுள் என்றோ இறைவன் என்றோ நீ வேண்டுகின்றாயோ…
1.ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனை அதிலிருந்து மீட்க வேண்டும்
2.ஆண்டவா…! அவருக்குள் நல்ல உணர்வுகள் வளர வேண்டும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நன்றாக வாழ வேண்டும்
3.அவர்கள் அனைவருக்கும் ஆண்டவனின் அருள் கிடைக்க வேண்டும்… மகிழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எல்லோரையும் எண்ணும்படி சொன்னார்.

ஆக ஆண்டவனுக்குச் செய்யும் சேவை இது தான்.

ஏனென்றால் நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்குள் இந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் கெட்ட குணங்கள் அனைத்தும்
2.ஒன்று சேர்ந்து அருள் வழியில் இயக்குகின்றது.

அது தான் இராம ராஜ்யம் என்பது…!

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்

 

நல் மணம் எல்லாம் எங்கு செல்கின்றது என்று எண்ணுகின்றாய்…? இயற்கை தந்த மணம் எல்லாம் நல் மனம் தான்.
1.இயற்கையின் மணத்தை எல்லாம் மனிதர்களாகிய நீங்கள் எடுத்துச் சமைத்து
2.நல் மணமான இயற்கை மணத்தைச் சமைத்தவுடன் உடனே எனக்கு அச்சுவை வந்து பின்பு நீ சுவைக்கின்றாய்.

நீ சுவைத்தவுடன் அதன் நிலையைப் பார்த்தாயா…?

கழிவு நிலை எல்லாமே மனிதனிடமிருந்து தான் வந்ததப்பா ஒரு நிமிடம் எண்ணிப்பார்… நாற்றம் என்பது என்னவென்று புரிந்துவிடும்…!

இயற்கை தந்த வரம் எல்லாம் இன்பமயமான மணம் தான் இயற்கையுடன் ஒன்றிப் பார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணம் இருக்கும். கெட்ட மணம் என்பதெல்லாம் இந்தக் கெட்ட உடலிலிருந்து தான் வருகின்றது.

அசுத்தம் அசுத்தம் என்கின்றாய்…! அசுத்தம் எல்லாம் மனிதனிடம் தான் மனிதனிடம் தான் அசுத்தமா…? மிருகத்திடம் இல்லையா…? என்று நீ நினைக்கின்றாய்…! மனிதரிடம் இருந்துதான் மிருகத்திடம் வந்ததப்பா.

1.நான் தந்த இயற்கையில் இருந்து மனிதன் பிறந்தான்
2.மனிதனின் பாவ புண்ணியத்திலிருந்து மிருகம் எல்லாம் வந்ததப்பா.
3.மிருகத்திலிருந்து தான் பறவை எல்லாம் வந்ததப்பா
4.பறக்கும் பறவையிலிருந்துதான் ஊரும் ஊர்வனை எல்லாம் வந்ததப்பா
5.ஊரும் ஊர்வன எல்லாம் அன்ன ஆயிற்று…? என்று கேட்பாய்…?
6.ஊரும் ஊர்வன தான் பிறகு மனிதனாகவும் வருகிறது.

இம்மனிதனின் நிலையில் எப்படி எப்படி மாறுகின்றது என்று இப்போது புரிந்ததா…?

உலகம் மட்டும் உருள்வதில்லை மனிதன் நிலையும் உருள்கின்றது சொல்லும் விளக்கம் புரிந்ததா…?
1.உருளும் மனிதனாகப் பிறந்து விட்டாய்.
2.உருளும் தன்மை உனக்கு வேண்டாம்.

ஒரு நிலையான நிலை நீ இருக்க உன் தியானத்தைக் கூட்டிக் கொள் என்னும் பொருளும் இது தானே.

பெரும் தாதுப் பொருள் என்கின்றோம். அதன் தகதகக்கும் நிலை எல்லாம் எங்கிருக்கிறது என்கின்றாயா…?

உருளும் உலகத்தில் உள்ளே தான் பெரும் தாதுப்பொருளும் உள்ளது. அப்பொருளின் நிலைகளை எல்லாம் எண்ணிப்பார். எப்படி அதன் நிலை வந்தது…?

உலகம் உருளும் தன்மையிலே காற்றும் மழையும் பட்ட பின் சில நிலையில் நிலைத்திருக்கும் நல்லோரின் நினைவிலே அது உருவாகிறதப்பா…!

நல்லவரின் நிலை என்பது நான் சொல்லும் சுவாச நிலை…! அத்தன்மை பாய்ந்தவுடன் இப் பூமி இழுக்கிறது. தண்ணீருடனும் காற்றுடனும் நல்லோரின் சுவாச நிலைத் தாதுப் பொருள் எல்லாமே அவ்விடத்திற்கு உகந்தபடி தான் இழுக்கும்.

அவ்விடம் எப்படி வந்தது தெரிகின்றதா…? நீ விடும் மூச்செல்லாம் காற்றுடன் கலந்தவுடன் மூச்சு மட்டுமல்ல எல்லா ஓசைகளும் கலந்து தான் வருகிறது.

நீ சொல்லும் பூமித்தாய் என்பவள் யாரப்பா…? பூமித்தாயை நீ சொல்லும் வழியிலேயே நானும் சொல்கின்றேன் பூமித் தாய் எல்லாத் தன்மையும் தன்னுள்ளே அடக்கிடுவாள். அடக்கிவிட்டு அவள் தரும் நிலைகள்தான் இவை எல்லாம்.
1.வெறும் மண் என்று நீ நினைக்கின்றாய்
2.இம்மண் தான் இவ்வுலகத்தின் முதல் நிலையே.

முதல் நிலையின் தன்மையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். நீ விடும் மூச்சும் உலகத்தின் ஒலியைப் பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். மூச்சில் இருந்து தான் ஒலியும் பிறக்கின்றது. ஒலியின் தன்மையும் ஒளியாகி அவ்வொலி தரும் மழையிலே இப் பூமித்தாய் ஈர்க்கின்றாள்.

அவள் தரும் இயற்கையிலே மணம் எல்லாம் இருக்கின்றது. முதன் முதலில் மணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்… அம்மணம் எங்கிருந்து வருகின்றது என்பது புரிகின்றதா…?

எல்லாமே சுழற்சி தான்… சுழலின் தன்மையை பார்த்தாயா…! இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா…?

சுழலும் தன்மையைப் புரிந்து கொண்டாயா…! சுழலுடன் சுழலாகக் கலந்து விட்டால் “கலந்தது” உனக்குத் தெரியாது.
1.இக்கலக்கங்களிலிருந்து மீள்வதற்கு ஒரே நிலை “தியான நிலை தான்…”
2.தியான நிலை பெற்றுவிட்டால் பெரும் சூட்சம உலகம் என்னும் சுழற்சியில் சிக்கி விடலாம்
3.சூட்சம உலகில் சிக்கிவிட்டால் பெரும் சூட்சுமம் எல்லாம் கண்டிடுவாய்.
4.ஈரேழு லோகம் என்பதைக் கண்டிடுவாய்… ஈன்றவன் யார் என்று கண்டிடுவாய்.

அவ்வுலகத்திற்குச் சென்றுவிட்டால் இவ்வுலகத்தின் நிலையைப் பார்த்திடுவாய் இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் உனதாக்கு. இப்பொழுது புரிகிறதா… தியான நிலையின் அவசியம் எல்லாம்…!

இச்சுழற்சி உனக்கு வேண்டுமா…? அல்லது அச்சுழற்சியில் சுழன்று விடுகின்றாயா…?

1.இருக்கும் நிலையை விட்டு ஏன் குருநாதர் பறக்கும் நிலையைச் சொல்கிறார் என்று எண்ணுகின்றாய்.
2.சக்தி தந்த இயற்கையின் தன்மையை அர்த்தமுள்ளதாகப் புரிந்து கொண்டு
3.சாமி சொன்ன சுவாச நிலையை மாற்றிடாது பிறவிப் பயனே போதும் என்ற எண்ணமுடன்
4.உன் நிலையை நிலை நிறுத்து… அதற்காகவே இந்தப் பாடம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஒருவரின் செயலைப் பார்த்து அவரின் உணர்வுகளை நுகர்ந்தோம் (சுவாசிக்கின்றோம்) என்றால்
2.அதனின் சக்தியாகத் தன்னுடன் அரவணைத்து இந்த உடல் உறுப்புகளை உருவாக்குகின்றது என்றும்
3.உணர்வுகள் எண்ணங்களாக இயக்கப்படுகின்றது என்றும் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை வான்மீகி அன்றே இராமாயணக் காவியங்களில் கொடுத்துள்ளார்.

உதாரணமாக ஒரு கோபப்படுவோரைப் பார்த்து விட்டால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் அந்தச் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் கோபம் என்று அறிகின்றோம். இருந்தாலும் நமக்குள் அந்தச் சக்தியாக அரவணைத்துக் கொள்கின்றது.
1.அதனால் விளைந்த கோபத்தை உருவாக்கும் அந்த அணுவின் தன்மை
2.அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அந்தச் சக்தி தன் நிலைகளில் எப்படியும் (அடிக்கடி) கோப உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபத்துடன் பேசும் நிலையாக அதே வழியிலேயே தான் நாம் இருக்க நேரும்.

தனக்குள் வளர்ந்த அத்தகைய அணுக்கள் அந்தச் சமயத்தில் அது இயல்பாகத் அதனின் வளர்ச்சியையே நமக்குள் கூட்டும்.

இதை உணர்த்துவதற்குத் தான் இராமாயணக் காவியங்களில் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சக்தியும் அது அது தன் இனத்தைப் பெருக்கும் என்ற நிலையாகத் தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டே இருந்தார் என்று காட்டுகின்றார்கள்.

நல்ல ஒழுக்கமும் குணசீலமும் கொண்டு நாம் இருந்தாலும்
1.நமக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துக் கொண்ட
2.அந்தந்த குணத்தால் பதிந்த நிலைகள் வரப்படும் பொழுது
3.அதன் இனப்பெருக்கங்கள் என்று வரும் பொழுது
4.அடுத்து அடுத்து நாம் நல்லதை எண்ணினாலும்…
5.உடலுக்குள் அந்த நல்ல குணத்தை கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணினாலும் நம்மால் முடிவதில்லை

அப்பொழுது நல்லதைச் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற எண்ணமும் அதே சமயத்தில் தனக்குள் நுகர்ந்து கொண்ட சக்தியின் வலிமையால் நாம் அடிமைப்பட்டு “இந்த உயிரின் இயக்கம் அதன் கீழ் செல்கிறது…!”

நல்ல குணங்களை இந்த உடலில் இருந்து ஆட்சி புரிய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே…! என்ற
1.அந்த வேதனை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது இந்த நஞ்சு உடல் முழுவதும் பரவுகின்றது
2.இந்த நஞ்சின் தன்மை பெருகி… உடலில் உள்ள அணுக்கள் நஞ்சாக உருவான பின்
3.இதில் குடியிருக்க விரும்பாது இந்த உடலை விட்டு உயிரான்மா (உயிர்) பிரிந்து சென்று விடுகின்றது.

இப்படிச் செல்லும் உயிர் அடுத்து வேதனைப்படும் உயிரினங்களுக்குள் தான் நம்மை அழைத்துச் செல்லும்.

ஆகவே வேதனையிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவ்வப்பொழுது எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும். இதை வலுப்படுத்தினால் யாருடைய ஈர்ப்புக்குள்ளும் நாம் சிக்குவதில்லை… ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

JUNE – 2024 உபதேசம்

தீமையை நீக்கும் ஆறாவது அறிவே நமக்குப் பாதுகாப்புக் கவசம்

 

இயற்கையின் செயலாக்கத்தைத் தன்னில் தான் கண்டுணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக “அகஸ்தியன்… துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக” ஒளியின் சுடராக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அதனின்று வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதன் வழிகளில்
1.இந்த வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நிலைகளை வென்று
2.இருள் சூழா நிலை கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு
3.இன்றும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவின் தன்மையை ஏழாவது நிலைகள் பெற்று
4.சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் சப்தரிஷிகள்.

அவர்கள் கண்டறிந்த உணர்வின் சக்திகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை எடுத்துக் கொண்டால்… பிற மண்டலங்களில் இருந்து வருவதை நட்சத்திரங்கள் கவர்ந்தாலும் மற்ற கோள்கள் தனக்குள் கவர்ந்தாலும்… விஷம் கொண்ட கோள்கள் எத்தனை எத்தனையோ… விஷங்களை உருவாக்கும் கோள்கள் எத்தனையோ…!

இவை அனைத்தும் உமிழ்த்தி வரும் நிலைகளைச் சூரியன் வடிகட்டி அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியின் சிகரமாக வாழ்கின்றது.

அதிலே உயிரணுவாகத் தோன்றியவன் பிற தீமையிலிருந்து விடுபட்டு… விடுபட்டு… விடுபட்டு… மனிதனாக உருவாக்கப்பட்டு மனிதனில் ஆறாவது அறிவாக வளர்ச்சி அடைந்து வந்தது.

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி நீக்கி…
2.தீமையற்ற உணர்வினைத் தனக்குள் வளர்த்து இந்த உடலை விட்டுச் சென்ற பின்
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்ட துருவ மகரிஷியின் நிலைகளை நாமும் அடைய முடியும்.

இது எல்லாம் ஞானிகள் நமக்குக் காட்டியது. அதை அனைவரும் நாம் பெறுதல் வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்கள் அனைத்தும் தெய்வங்களே. மனிதனாக உருவாக்கிய அனைத்து நல்ல குணங்களும் பெரும் சக்தி கொண்ட தெய்வங்களாக உங்களுக்குள் இருக்கின்றது.

உங்களை எவ்வாறு காக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களோ அது உங்களுக்குள் கடவுளாக நின்று உயிர் உருவாக்கி உள்ளது… மனித உடலை…!

1.மனிதனின் உணர்வுகள் அனைத்தும் ஒன்றாக இணைத்துத் தீமைகள் அகற்றிடும் ஆறாவது அறிவாக “முருகு…!”
2.மாற்றியமைக்கும் சக்தியாக இருக்கிறது… என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது சாஸ்திரங்களில்.

அதன் வழி நாம் தெளிவாகச் செய்ய வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் எவ்வாறு பெற முடியும்…? என்ற தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள் நம் ஞானியர்கள்.

ஆதியிலே முதல் மனிதன் அகஸ்தியன் துருவத்தைக் கண்டுணர்ந்தான்… தன் உடலில் அதைச் சிருஷ்டித்தான்… வளர்த்தான்… துருவ மகரிஷி ஆனான்… வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரப்பிக் கொண்டுள்ளது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவரொருவர் தங்கள் உடலுக்குள் அதிகமாக நுகருகின்றனரோ
2.அவன் வழியிலே அங்கு அழைத்துச் செல்கின்றது… ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக.

சூரியன் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினை பிரித்து விட்டு ஒளியின் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது. இதைப் போன்று தான் உயிரின் தன்மை சூரியனாக உள்ளது.

1.அல்ட்ரா வயலட் என்ற நஞ்சு சூரியனுக்குப் பாதுகாப்பாக நஞ்சினை நீக்கிடும் நிலைகள் பெற்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிடும் நிலைகளை அது (சூரியன்) எப்படிப் பெறுகின்றதோ
3.அது போல் நாம் எத்தகைய தீமைகளைக் கண்டறிந்தாலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பெற்று
4.தீமைகளை அகற்றித் தூய்மை பெறும் சக்தி பெற்றது தான் மனிதனுடைய ஆறாவது அறிவு.

அதாவது… தீமைகளை பிரிக்கும் எண்ணங்களை நாம் நுகர்ந்து தீமைகளை அகற்றிடும் செயலாக வருகின்றது நம் ஆறாவது அறிவு – கார்த்திகேயா.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிர் மனிதனாக உருவாக்கி விட்டால் முழு முதல் கடவுள். ஓம் என்ற பிரணவத்திற்கு உரியவன் என்றும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

ஆகவே அருள் உணர்வின் துணை கொண்டு நம் ஆன்மாவில் படும் தீமைகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே விநாயகர் தத்துவத்தை தெளிவாக எடுத்துரைத்தார்கள் ஞானிகள்.

அபிராமி (ஈஸ்வர) பட்டரும்… அந்தாதியும்

 

அபிராமி அந்தாதி பாட்டு பாட வேண்டும் பாடலின் கருத்து புரிந்து இசையோடு பாடிடுவாய் கருத்துடனே பாட்டிசைப்பாய்.

“இடைச்சக்கரத்தினுள்ளே நான் இருப்பேன்…!” என்ற பாட்டைக் கேட்டிருப்பாய். பாட்டைப் பாடு… பிறகு சொல்கின்றேன். ஜெப நிலையில் ஜெபித்ததெல்லாம் உன் சக்கரத்தில் உள்ளது.

பெரும் கோயில்களில் எல்லாம் பார்…
1.எல்லாக் கோவில்களிலும் உலோகத்தினாலான சக்கரம் உண்டு.
2.அச்சக்கரம் கடவுளின் சிலைக்குப் பின் புறமாவது முன்புறமாவது இருக்கும்… அல்லது கடவுளின் பாதத்தில் இருக்கும்.

தெய்வம் என்பது நீங்கள் நினைக்கும் கல் சிலையைத் தான். சிலையின் கல் உருவத்தைப் பற்றி முதலிலேயே சொல்லிவிட்டேன்.

சிலையின் பாதத்தின் கீழே உள்ள சக்கரத்தில் சித்தனால் ஜெபித்த ஜெபமெல்லாம் அந்த உலோகத் தகடான சக்கரத்தில் பதிந்துள்ளது. அந்நிலையில் அதைப் பாதத்தில் வைத்து விட்டுப் பிறகு தான் சிலையை வைப்பார்கள்.

தெய்வத்தின் எதிரில் நின்று
1.நீ ஜெபிக்கும் ஒவ்வொரு நிலையும் அந்த உலோகத்தில் பதிகின்றது (கல்லான சிலையில் ஒன்றும் இல்லை).
2.நீ ஒலிக்கும் ஒலியெல்லாம் சக்கரத்தில் பதிகின்றது.
3.ஒலிக்கும் குரல் சக்கரத்திலே பதியும் பொழுது அந்தச் சித்தனால் ஒலித்த ஒலியும் உன் ஒலியும் கலக்கின்றது
4.அப்படிக் கலக்கின்ற போது அந்தச் சித்தனே வெளிவந்து உன்னுள்ளே புகுகின்றான்.

பழனியில் உள்ள முருகர் சிலையே உலோகம் தான். சிறு தகட்டில் ஜெபித்த ஜெபமே அவன்…! அவ்வுருவம் முழுவதும் போகனால் ஜெபித்த நிலை.

அந்த முருகனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சக்தி வந்தது…? என்கின்றாய். அந்த முருகனின் உள் அர்த்தம் புரிந்ததா…?

நீங்கள் சக்கரம் வைத்து பூஜை செய்வதன் பொருள்… நீ இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு எந்தச் சொல் சொல்கிறாயோ எந்த நிலையில் மூச்சை இழுக்கின்றாயோ “அச்சொல் எல்லாம்… மூச்செல்லாம் என்னுள் வந்து ஐக்கியம் ஆகிறது…”

அதற்காகத்தான் அந்தாதியைப் படிக்கச் சொன்னது. படித்துச் சொன்னால் அதை நான் ஏற்பேன்.
1.நான் இயற்றிய அந்தாதியை நீ படித்தால் என் மனம் குளிர்ந்திடும்.
2.என் மனம் குளிர்ந்த நிலையில் உனக்கு அருள்வேன் எல்லாமே…!

சக்கரம் வைத்தால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் எந்தச் சுத்தத்தை நான் கேட்டேன்…? “மனச் சுத்தம் இருந்தால்” என்னுள்ளே வந்திடலாம்.

போகன் நிலையைப் பார்த்தாயா…? சக்கரத்தின் தன்மையே முருகராக வடிவெடுத்துள்ளார். வடிவெடுத்த நிலையிலேயே காலமெல்லாம் அருள்கின்றார்.

நீ “முருகா…” என்று ஒலிக்கும் உணர்வுகள் அவருக்குள் பதிவாகின்றது. உன் மனதிலிருந்து செல்லும் ஒவ்வொரு சொல்லையும் அவர் பதிவு செய்து… உனக்கு அவர் அருளும் சொல் பலவாக வருகின்றது.

1.அந்த முருகன் சிலை இந்த உலகையே ஆட்டுவிக்கும் சிலை.
2.இவ்வுலகில் எந்த இடத்திலும் அச்சத்தின் சொரூபம் இல்லை.
3.அச்சக்தியின் ரூபம் எல்லாவற்றையும் உணர்ந்து அங்கு செல்பவனும் யாரும் இல்லை.

இவ்வளவு காலமும் நீங்கள் பழனிக்கு சென்றீர்கள்…! இந்த நிலை புரிந்ததா…?
1.குறைகளுடன் கோவிலுக்குச் செல்லாதீர்கள்
2.மன நிறைவுடன் சென்று உன் மனதை அவனிடம் தா… அவன் அருள்வான் எல்லாமே…!

அந்த முருகனின் சிலையின் தத்துவத்தைப் புரிந்து சிலர் தன் தொழிலுக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்… தொழிலுக்கு மட்டும் தான் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அதை பெற்ற மனிதனுக்கும் அந்தத் தத்துவம் தெரியாது. நல் உணர்வாக அவன் பயன்படுத்தி இருந்தால் அவன் நிலையும் உயர்ந்திருக்கும்.

முதலில் அவன் நிலை நன்றாகத் தான் தெரிந்திருக்கும்… பிறகு அவன் நிலை என்ன என்று யாருக்காவது தெரியுமா…? முருகர் சிலையில் உள்ள தத்துவமே சாமி (ஞானகுரு) எழுதியுள்ள சக்கரத்தில் உள்ளது… அச்சிலையில்.

ஐவர் மலையில் உள்ள நிலைக்கும்… உன் ஜெப நிலைக்கும்… “உன் வீட்டில் உள்ள சக்கரத்திற்கும்” உள்ள தொடர்பு தெரிந்ததா…?
1.சக்கரத்திற்கு எதிரில் நீ அமர்ந்து என்ன ஜெபம் ஜெபிக்கின்றாயோ
2.அந்த ஜெபத்தின் அருளை நீ பெறுவாய்…! என்ற பொருளும் இதுவே.

ஐவர் மலையில் உள்ள நல்ல நிலையைப் பெற்றிட உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள். சக்கரத்தின் முன் உணவு படைக்கச் சொன்னதன் நிலையில் நீ ஜெபிக்கும் பொழுது சக்கரத்திலிருந்து சித்தர் வெளிப்படுகின்றார்.

அதற்காகத்தான் ஆகாரம்…! ஆகாரம் எடுத்து அவர் புசித்துச் செல்வதில்லை ஆகாரத்தின் சுவையை அவர் எடுத்து மறு சுவையை உனக்கருள்வார்.

கடவுள் என்ன கேட்டாரா…? என்று சொல்ளும் வீண் வாக்குவாதம் எல்லாம் நமக்கு வேண்டாம். நீ வைக்கும் ஒரு துளி பாலையும் அவர் ஏற்கின்றார்.

ஏன் சக்கரத்தில் தான் கடவுள் வருவாரா…? படத்திலும் வேறு இடத்திலும் வரமாட்டாரா…! என்று நினைக்கலாம்.

முதலிலேயே உங்களுக்கு எல்லா நிலையும் புரிந்து இருக்கும்
1.கடவுள் என்பவர் எங்கே எப்படி இருக்கின்றார்…? எந்த நிலையில் உள்ளார்…? என்னும் நிலை எல்லாம் பல தடவை சொல்லிவிட்டேன்.
2.எல்லா இடத்திலும் இருக்கும் கடவுளை ஒருநிலைப்படுத்தவே இச்சக்கரம்.
3.கடவுளுக்கு அல்ல அந்த நிலை.
4.உன் மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சக்கரம்.

பாட்டை பாடச் சொன்ன உண்மையும் இப்போது புரிந்ததா…?

அபிராமி அந்தாதி பாடும் பொழுது அவருடைய சந்தோஷம் நிலைகொள்ளாமல் இருக்கின்றது சந்தோஷ நிலை பெற்றிடவே உங்களை எல்லாம் பாடச் சொல்வது… புரிந்து பாடுவாயாக…!

ஒலியை ஒளியாக்கு…! இன்றல்ல நாளை அல்ல என்றாவது ஒருநாள் பழனிக்குச் சென்றால் காலை உதய பூஜைக்குச் சென்று அமர்ந்து நீ ஜெபித்தால்… அந்த நிலையில் உனக்கு ஐவர் மலையின் விளக்கங்களை உன் உதயத்திற்குத் தருகின்றேன்.

அதிலிருந்து எல்லாம் உனக்கு தெரியும்… அவசரம் வேண்டாம் பெரும் பதட்டம் வேண்டாம்…! உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பதின் ரகசியம் எல்லாம் இதுதான்.

சக்கரத்தின் தன்மையைச் சொல்வதும் இதற்காகத் தான்… முருகரைப் பற்றி விளக்கங்கள் சொன்னதும் இதற்காகத் தான்… விளக்கம் மட்டுமல்ல ரகசியமும் தான்.

முருகன் சிலையில் உள்ள தன்மை…. உண்மை தன்மை எல்லாம் புரிந்து விட்டதா…?

காட்சி:- முருகா முருகா சத்தம் கேட்கிறது… இங்கும் உள்ளேன் அங்கும் உள்ளேன் எங்கும் உள்ளேன் பாட்டு கைதட்டியபடி…! உட்கார்ந்து அந்த நோட்டை (குருநாதர் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கும்) எடுத்து படித்துக் கொண்டிருத்தல்.

உன் எழுத்தே உனக்குப் புரியவில்லை… உன் தலையெழுத்தை எழுதியவனைக் கேட்கின்றாயோ…? உன் நிலையை மாற்றிடவே இந்தப் பாடங்கள்.

1.நாளை முதல் இன்னும் துரிதமாகச் சொல்வேன்… என்னுடன் ஓடி வர நீயும் முயற்சி செய்.
2.முடியாது என்ற நிலை உனக்கு வேண்டாம் “முடித்திடுவேன்” என்று சொல்லைப் பகர்ந்திடப்பா.

என் தலையிலும் குட்டி விட்டார் என்று எண்ணாதே “உன்னுள்ளே நான் இருக்க உனக்கு ஏன் பயம்…?”

எழுதுவதற்கு மட்டு-ம் இந்தப் பாடம் அல்ல உன் நிலையைப் புரிந்து கொள்ளத்தான் இந்தப் பாடம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பரிணாம வளர்ச்சியில் ரூபங்கள் மாறி மாறி… இவை அனைத்தும் ஒருக்கச் சேர்த்துத் தான் நாம் இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

பேரண்டத்தின் சக்தியும் இந்த உடலான பிண்டத்திற்குள் அமைந்துள்ளது என்று நம் குருநாதர் காட்டிய இந்த உண்மைகளை உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்…
1.பேரண்டத்தில் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
2.நமது பூமிக்குள் அணுக்களாக இயங்கிக் கொண்டிருந்தாலும்
3.உயிர் அணுக்களாகத் தோன்றி… ஜீவ அணுக்கள் உருவாகி… அதனின் மலம் உடலாகி…
4.அந்த உணர்வின் துணை கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம்
5.மனிதனாக உருபெற்ற இந்தச் சந்தர்ப்பத்தை எதன் வழியில் பயன்படுத்த வேண்டும்…? என்பதை அறிதல் வேண்டும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் அனைத்தையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து
1.நம் பூமியை நோக்கித் துருவப் பகுதி வழியாக வந்து கொண்டும்
2.பூமிக்குள் பரவிக் கொண்டும் உள்ளது.
3.அதனை நாம் பருகும் சந்தர்ப்பம்தான் துருவ தியானம்.

அவ்வாறு வந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மகரிஷிகள் என்பவரும் நம்மைப் போன்று மனிதனாக உருப் பெற்று வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனாக உருவாகி வளர்ச்சி பெற்ற நிலையில்
1.விண்ணின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே வேகா நிலை அடைந்துள்ளார்கள்.
2.அவர்கள் தான் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
3.பேரண்டத்தில் எத்தகைய கடும் விஷங்கள் வந்தாலும் கொடூர நெருப்பானாலும் இவர்கள் மடிவதில்லை… என்றும் அழிவதில்லை.

அதைத்தான் பேரின்பப் பெரு வாழ்வு என்பது.

கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவு கொண்டு அனைத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெற்ற நாம் அதனின் துணை கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவோம் என்றால் நாமும் ஏழாவது நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

இதற்கு முன் நாம் தெரிந்து கொள்ளவில்லை. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் நம்முடைய சந்தர்ப்பம் இப்பொழுது அறிய முடிந்தது.

ஆகவே இதைக் கேட்டுணர்ந்தவர் அனைவருக்கும்
1.தன்னை அறிதலும்… விண்ணை அறிதலும்… மண்ணுலகை அறிதலும்… என்ற நிலையில்
2.மெய் ஞானத்தின் உணர்வுகளை வளர்க்கும் சந்தர்ப்பம் வருகிறது.
3.இதனை நாம் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

நம் குழந்தைகளைப் பற்றி அதிகமாக எண்ணுகிறோம்… தாய் தந்தை முன்னோரை அவ்வாறு எண்ணுகிறோமா…?

 

இன்று நாம் காணுகின்றோம்… கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எவ்வளவு அவஸ்தைப்படுகிறார்கள்…? எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று…!

ஆகவே நம் தாய் தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமை எது…?

1.என் தாய் தந்தையர் என்னைக் காத்திட என்னை வளர்த்திட
2.எத்தனை வேதனைகள் அனுபவித்தார்களோ அவை அனைத்தும் நீங்கிட வேண்டும்
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி எங்கள் தாய் தந்தையை பெற வேண்டும்.
4.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைந்து விட வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் என் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும்
6.”என்னை வளர்த்த தாய் தந்தையர் மகிழ்ந்திட” நாங்கள் பார்க்க வேண்டும்
7.அந்தப் பேரானந்தப் ப்ரு நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று இதை நாம் வினையாகச் சேர்க்க வேண்டும்.

இப்படித்தான் தாய் தந்தையரை வணங்கும்படி சொன்னார்கள் ஞானிகள்… நாம் அப்படி நினைக்கின்றோமா…?

என் தாய் என்னை எப்பொழுது பார்த்தாலும் சும்மா திட்டிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள்
1.தாயை கடவுளாக மதிக்க சொல்கின்றீர்களே…
2.அவர்களுக்காக என்னை வேண்டச் சொல்கின்றீர்களா…? என்பார்கள்…!

ஆனால் ஞானிகள் காட்டியது என்ன…?

தாய் கருவிலே சிசு இருக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் கருவில் வளரும் சிசு பெற வேண்டும்
2.இருள் நீக்கிப் பொருள் காணும் திறன் என் சிசு பெற வேண்டும்
3.இந்த உலகையே காத்திடும் உணர்வுகள் அங்கே விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்த கருவிலே வளரும் குழந்தைக்கு வினையாகச் சேர்க்க வேண்டும்

உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று கருவுற்ற அந்தத் தாய் எண்ணும் பொழுது இந்த உணர்வு கருவிலேயே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆனால் இன்று நடப்பது என்ன…?

ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதையோ சிலர் வேதனைப்படுவதையோ “ஐயோ… இப்படி நடக்கிறதே…” என்று கர்ப்பமுற்றிருக்கும் நுகர்ந்து விட்டால் குழந்தைக்கு இது தான் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

பத்திரிகையில் பார்த்தால்… உலகம் கெட்டு விட்டது கொலை செய்தான்… கொள்ளை அடித்தான்… திருடினான்… என்று அதிகமாகச் செய்திகளைப் போட்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… இப்படியெல்லாம் உலகில் நடக்கிறதே…! இந்த உணர்வை தாய் நுகர்ந்தால் கருவிலே பதிந்து விடுகின்றது. காணாததற்கு டிவி எல்லாம் இன்று போட்டு வைத்திருக்கின்றோம்.

அசுரத்தனமான எத்தனையோ உணர்வுகளை அங்கே காட்டுகின்றார்கள் இரக்கமற்றுக் கொல்வதையும் ஒருவருக்கொருவர் தாக்குவதையும் காட்டுகிறார்கள்… இத்தகைய படங்களை ரசித்துப் பார்ப்பார்கள்.

இது எல்லாம் கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகப் பதிவாகி விடுகின்றது.
1.இத்தகைய உணர்வு கொண்ட குழந்தைகள் பிறந்த பின் மற்றவர்களை “டமார்… டமார்” என்று தாக்கும் நிலைக்குத் தான் வரும்.
2.குழந்தைப் பருவத்தில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட இந்த உணர்வுகள் இயக்கி விடுகின்றது.
3.டி,வி.யில் படத்தைப் பார்த்தது அங்கே காட்டும் தந்திரங்கள் அனைத்தும் இந்தக் குழந்தை செய்யத் தொடங்கிவிடுகிறது.

இந்த நிலைதான் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்குத் தான் ஒரு குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாங்கள் வேண்டும்
2.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும்
6.அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
7.என்னை பார்ப்போருக்கெல்லாம் அந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டும் என்று
8.இந்த உணர்வுகளை வினையாகச் சேர்க்கச் சொன்னார்கள்… அதையே கணங்களுக்கு அதிபதியாக்கச் சொன்னார்கள்.

இதுதான் மகரிஷிகள் காட்டிய அருள் வழி…!

அன்னை தந்தையை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தது யார்…? நம்முடைய மூதாதையர்கள்…! அவர்களைக் குலதெய்வங்களாக கருதும்படி சொன்னார்கள் ஞானிகள்.

அந்தக் குல வழியில் தான் நம் தாய் தந்தையர் மனிதனாகப் பிறந்தார்கள் அவர்கள் வழி தான் நம்மையும் அவர்கள் மனிதனாக உருவாக்கினார்கள். அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன…?

உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

அவ்வாறு உந்தி தள்ளிய பின்
1.உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் அங்கே கரைய வேண்டும்.
2.ஞானிகள் உணர்வுடன் ஒன்றி என்றும் அழியா ஒளியின் சரீரம் பெற்று என்றுமே ஒளியாக வாழ்ந்திட வேண்டும் என்று
3.எந்தக் குல வழியில் நாம் மனிதனாக உருப்பெற்றோமோ…
4.அகன்று சென்ற உயிரான்மாமக்களை மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் குடும்பத்தைச் சார்ந்தோர் விண்ணிலே செலுத்தினால்
5.பிறவி இல்லா நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளி சரீரமாக நிலைத்து அந்த பேரானந்த பெருநிலை அடைகிறார்கள்.

அவர்கள் அங்கே முன் சென்றால் அதன் வலுக் கொண்டு நாம் பின் செல்ல முடியும். இதன் வழி தான் நல்ல வினைகளை நமக்குள் உருவாக்க வேண்டும் என்று விநாயகர் தத்துவம் நமக்குக் காட்டுகின்றது.

ஆகவே மெய் உணர்வுடன் ஒன்றி இருளைப் போக்கி பொருள் காணும் உணர்வுடன் ஒன்றி இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளைப் போக்குவோம். மனித வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் திறன் பெறுவோம்.
1.பேரானந்த பேரின்ப வாழ்வாக
2.இந்த வாழ்க்கையிலேயே நாம் வாழ்ந்து காட்டுவோம் என்று அதைச் செயல்படுத்துவோம்.

ஒலி – ஒளி

 

“ஒளியைப் பற்றி சொல்கின்றேன்” என்று சொன்னேன்.
1.இவ்வுலகின் தன்மையிலேயே கலந்து இருப்பதும் ஒலி தான்
2.நீ பேசுவதும் ஒலி தான்
3.உன்னுள் இருந்து வரும் மூச்சும் ஒலி தான்
4.சிறு அசைவும் ஒலி தான்
5.பெரும் மின்னலும் ஒலி தான்
6.மழைத்துளியிலும் ஒலி உள்ளது.
7.மலர் மொக்கு விரியும் பொழுதும் ஒலி உள்ளது.

உலகம் ஒலியுடனே உருளுகின்றது ஒளியுடன் மட்டும் உலகம் இல்லை… ஒலியுடனும் கலந்து இருக்கின்றது. சிறு எறும்பின் வார்த்தையிலும் ஒலி உள்ளது… நம் உலகச் சுழற்சியிலும் ஒலி உள்ளது.

ஒலி அழிவதில்லை… காலமுடன் கலக்கின்றது.
1.உடல்கள் அழிகிறது… ஆனால் நாம் விட்ட மூச்சும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கின்றது.
2.ஆத்மாவானது மறு உடல் பெறுகின்றது… ஆனால் “ஒலி” அவன் எடுக்கும் எந்த ஜென்மத்திலும் அழிவது இல்லை… மாறுவதும் இல்லை.

அழிவதும் இல்லை மாறுவதுமில்லை என்றேன் அல்லவா. அப்போது இந்த ஒலியெல்லாம் என்னவாயிற்று…? என்று நினைக்கின்றீர்கள். இவ்வுலகம் தன்னைத்தானே சுற்றுகிறது என்கின்றீர்கள்…! அது சுற்றுவதற்குச் சக்தி எதிலிருந்து வந்தது தெரியுமா…?

இந்த ஒலியின் தன்மை எல்லாம் ஒன்று சேர்ந்து… காற்றுடனே கலந்து உலகைச் சுற்றிவிடும் நீ விட்ட நல் மூச்சும்.

நல் மூச்சு…! என்பதன் பொருள்… நல்லவர் உள்ள நாட்டில் எல்லாம் மழை பெய்கிறது என்று சொல்லும் பழக்கத்தில் இல்லையா…!

நல்லுணர்வு உள்ள வீட்டில் இலட்சுமி களை உள்ளது என்கிறோம். தன் உணர்வை மறந்து விட்ட நிலையில் உள்ள வீட்டில் எல்லாம் நாதியற்ற நிலைதானப்பா. அந்த வீட்டைப் பார்த்தவுடன் மூதேவி குடி இருக்கின்றாள் என்பதும் இது தான்.

இலட்சுமியும் பிறக்கவில்லை… மூதேவியும் பிறக்கவில்லை… ஒலியில் தான் எல்லாம் உள்ளதப்பா…!

ஒளியைப் பற்றி நினைத்து வந்தால் ஒலியின் பாடம் என்பது தான் முதல் பாடம். எல்லாம் முதல் பாடம் என்கின்றீர்கள் இரண்டாம் பாடம் இல்லையா…?
1.எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டுமப்பா
2.முதலாவதாகவே இருக்கட்டும்… முடிவு நிலை வேண்டாம்
3.எல்லாத் தன்மையுமே முதல்… முதல் தன்மை தான்.

குழந்தை பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நிலையும் முதல் தான் குழந்தைக்கு. என்றும் முதலாகவே இருந்திடும் நிலையிலேயே பாடங்கள். முதல் பாடம்… முதல் பாடம்…! என்பதன் பொருள் இதுவே தான்.

மூல முதல்வர் என்று சொல்கின்றோம் அது போல மூல இரண்டாமவர் என்று சொல்கின்றோமா…? “எல்லாமே முதல் பாடமாக இருக்கட்டும்…”

ஒலியின் தன்மையை உணர்ந்திடுவாய். ஒலிக்கும் இசையில் உணர்ந்திடுவாய். ஒளியை அமைப்பது இந்த ஒலி தான். ஒளிமயமான எதிர்காலம் என்று சொல்கின்றோம். ஒளிமயமான எதிர்காலம் ஒலியில் இருந்து தான் வருகின்றது.

ஒலிக்கும் ஒலியெல்லாம் எதிலிருந்து என்கின்றாய்…? ஒளியின் தன்மை தானே புரிந்திடும். இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா.

நீ ஜெபிக்கும் ஜெபமும் என்னிடம் தான்… நீ துவேஷித்த சொல்லும் என்னிடம் தான். உன் ஜெபம் மட்டும் தான் என்னிடம் அடையும்… துவேஷம் எங்கு செல்கிறது என்று நினைக்கின்றாய்…?

ஜெபம் துவேஷம் காற்றில் தான் கலக்கின்றது புரிந்ததா…? ஒளியின் தன்மை சொன்னேன்… ஒளியின் தன்மை புரிந்ததா…? ஒலியில் தான் ஒளியின் தன்மை இருக்கின்றது.

இதைப் புரிந்து கொண்டால் ஒலியின் தன்மை புரியும். ஒளி எங்கிருந்து வருகின்றது…? ஒலியிலிருந்து தான் ஒளி உள்ளது.

1.சுவாச நிலை என்பதும் இது தான்
2.சுவாச நிலை ஒன்றுபட்டால் ஜெப நிலை கூடிவிடும்
3.ஜெப நிலை கூடிவிட்டால் ஒளியின் தன்மை தெரியும் என்கிறோம்.

சுவாச நிலை என்னும் பொழுதே ஒலியாக ஆகிறது. அந்த ஒலி தான் ஒளியப்பா. விளக்கில் தான் ஒளியுள்ளது. விடியும் விடிவில் தான் ஒளி உள்ளது. சந்திரனும் சூரியனும் தான் ஒளி தருகின்றது.

நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஒலி எல்லாம் ஒளி என்கிறார்கள். அந்த ஒலி ஒளி அல்ல. ஒலிதானப்பா ஒளியே. நம்முடைய சுவாசத்தில் உள்ள ஒலி நல் ஒலியாக உள்ள நேரத்தில் தான் நல்ல பூவும் பூக்கும் நல்ல கனியும் கனியும்.

என் தாயார்… என் தாயாரின் தாயார் சமைத்த ருசி… இப்பொழுது இல்லை என்கிறாய்.
1.காலநிலை மாற மாற மன நிலையும் மாறிவிட்டது.
2.மனிதனும் மூச்சுக் காற்றும் மாறிவிட்டது.
3.அந்நிலையில் இருந்து வரும் தன்மையில் இருந்து தான் விளையும் பயிரின் ருசி எல்லாம்.

தர்மம் நியாயம் எங்கு உள்ளது…? அன்றுள்ள நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை.

பிறகு எப்படி இருக்கும் நிலை எல்லாம்…? “சுவாச நிலையை மாற்றிக்கொள்” என்பதும் இது தானே. சுவாச நிலையைப் பற்றிச் சாமி விடிய விடியச் சொன்னாலும் ஏற்றுக் கொண்டீரா…? இப்பொழுது புரிகின்றதா ஒலியின் தன்மையும் ஒளியின் தன்மையும்.

உன்னுள்ளே ஒளி பிறந்திட “ஒலியை முதலில் கற்றிடு…” குழந்தைக்கும் புரியும்படி இந்தப் பாட நிலை உள்ளது.

ஒளியின் தன்மைக்குப் புதுப் பாடம் வேண்டுமா…? ஒளியைப் பற்றி இன்னும் கேட்டால் நான் ஒலியைப் பற்றி தான் மீண்டும் சொல்வேன்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல… பெரும் மேகங்கள் வந்தால் மறைந்துவிடும். மேகத்தின் தன்மையே மின்னல் வந்தால் மறைத்திடும்.

அது போல
1.நல் உணர்வை எடுத்து நல் மூச்சு விட்டிடுவாய்.
2.நல் மூச்சு விட்டால் ஆயிரம் நஞ்சின் தன்மை இருந்தாலும் “ஒருவரின் நல் மூச்சு அதை மாற்றிவிடும்…”

வைரத்தின் தன்மை வார்த்தையில் வேண்டுமென்றேன் அல்லவா வைரத்தின் தன்மை எல்லாம் அதன் ஜொலிப்பில் தான் உள்ளது அதற்குள்ள மதிப்பை பார்த்தாயா…?

அது போலத் தான் எல்லாமே. நல்லுணவை நான் சமைத்தேன். உனக்குள்ளே ஊட்டி விட்டேன் இந்த நிலையை மாற்றி விடாமல் ஊக்கமுடன் இருந்திடுவாயா…? புது பானையில் விறகு வைத்துச் சமையல் செய்யும் காட்சி…!

1.நான் (ஈஸ்வரபட்டர்) இங்கும் உள்ளேன்… அங்கும் உள்ளேன்…
2.எங்கும் உள்ளேன்… எல்லாமில் எல்லாமாக உள்ளேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் நல்லவராக இருக்கின்றீர்கள். ஒருவன் கடுமையான வேதனைப்படுகின்றான்… அவனை உற்றுப் பார்க்கின்றீர்கள். உங்கள் பாச உணர்வுகளில் இது கலக்கின்றது.

பார்த்தபின் இரக்கத்துடன் அவர்களுக்கு நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள். அப்பொழுது உங்கள் நல்ல உணர்வுக்குள் அவரின் வேதனைகள் பாய்கிறது.

பாய்ந்த பின் என்ன நடக்கின்றது…?

பாலிலே பாதாமைப் போட்டு அதில் விஷத்தைக் கலந்து குடித்தால் என்ன ஆகும்…?

இதைப் போன்றுதான் பாச உணர்வோடு நீங்கள் பார்த்து இந்த உணர்வுடன் இன்று அவருக்கு உதவி செய்து இருக்கலாம்.
1.ஆனால் அந்த வேதனை சிறுகச் சிறுக உடலுக்குள் விளைந்தவுடனே
2.உங்களுக்குத் தலை வலி மேல் வலி எல்லாம் வரும்.

அது வந்தாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் என்ன ஆகின்றது…?

அந்த வேதனையான உணர்வுகள் உங்கள் ஆன்மாவில் இருக்கப்படும் பொழுது தொழிலின் நிமித்தம் நீங்கள் எதையாவது ஒரு பொருளைத் தேர்ந்தெடுக்கச் சென்றாலும் அந்த வேதனையுடன் பார்த்தவுடனே அதனின் தரத்தைப் பார்த்துச் சரக்கை வாங்க முடியாது.

1.அந்த வேதனைப்படும் நிலையும் சோர்வான நிலையும் கொண்டபின்
2.அதற்குத் தக்கவாறு தான் கலரும் தெரியும்… சரக்கும் தெரியும்.
3.அதை வாங்கிக் கொண்டு வந்து விடுகின்றோம்.

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுக்குத் தக்கவாறு வியாபாரத்திற்கு அதைக் கொண்டு வந்தாலும் “நமக்கு அது நல்ல சரக்காகத் தான் தெரியும். ஆனால் வியாபாரம் சரியாக ஆவதில்லை…!”

நாம் வைத்திருக்கின்ற சரக்கைப் பார்த்து… “என்ன இந்த மாதிரி ஒரு சரக்கை வைத்திருக்கிறீர்கள்…?” என்று கேட்பார்கள். இங்கே நமக்கு நல்ல சரக்காகத் தெரியும்… அது அடுத்தவர்களுக்கு மட்டமாக தெரியும்.

நாம் என்ன நினைப்போம்…?

பாருங்கள்… மட்டமான சரக்காக அங்கே வைத்திருக்கின்றார்கள் அங்கே கூட்டம் போகிறது… அதை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் இங்கே நான் நல்ல சரக்கு வைத்து இருக்கின்றேன்… யாரும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்போம்.

ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை எதுவோ… “கண்களில் இந்த அலைகள் வரும்…” கரு விழியை சாதாரணமாக நாம் பார்த்தால் இந்த வித்தியாசங்களை உணரலாம்.

ஒரே கண்கள்தான்…! இருந்தாலும்
1.சோகமாக இருக்கும்போது நம் கண் ஒளிகள் எப்படித் தெரிகின்றது…?
2.கோபமாக இருக்கும் பொழுது நம் கண்ணின் ஒளி அலைகள் எப்படித் தெரிகின்றது…?
3.சந்தோசமாக இருக்கும் பொழுது அந்த மகிழ்ச்சி நிலைகள் கொண்டு நம் கண்ணில் ஒளிகள் எப்படித் தெரிகிறது…? என்று
4.அந்தந்த உணர்வின் அலைகள் எந்த அலைக்குப் பாய்ச்சப்படுகிறது…? என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்…! தெரியாமல் இல்லை…!

ஆனால் இது போன்ற நிலைகள் இருக்கும் போது நாம் நம்முடைய நல்லதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்…? என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

காரணம் நம் நல்ல குணங்களைப் பாதுகாக்கவில்லை என்றால் அதனால் வியாபாரம் மந்தம் ஆகின்றது. சரக்கைத் தரமான நிலைகள் கொண்டு பாதுகாக்க முடியவில்லை.

இப்படிச் சங்கடமாகிப் போய்விட்டால் அடுத்து என்ன நடக்கின்றது…?

நல்ல மனதுடன் இருக்கும் பொழுது முதலில் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பார். ஆனால் இப்பொழுது சுத்தமாக வைத்திருக்க மாட்டார்… சுத்தமாக வைக்க வேண்டும் என்ற மனமே வராது. வீட்டில் இருண்ட நிலையாக இருக்கும்.

ஆகவே…
1.பலருக்கு உதவி செய்திருக்கிறார்.
2.இருந்தாலும் அந்தச் சங்கடமான உணர்வுகள் இவருக்குள் வந்தது அழுக்காகி விட்டால்
3.வீட்டைச் சுத்தப்படுத்துவததோ மற்ற பொருள்களைச் சீராக அடுக்கி வைப்பதோ அது எல்லாம் அங்கே இருக்காது.
4.காரணம் அவருடைய தவறு அல்ல…! இந்த உணர்வின் இயக்கங்கள் அதுவாகத்தான் மாற்றும்.

நாம் வேலை செய்கிறோம். அப்பொழுது அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பொருளைக் கையில் எடுத்தோம் என்றாலும் வேலை செய்து முடிந்த பின் கையைக் கழுவிக் கொள்கின்றோம். அதிகமான நேரம் கடுமையாக வேலை செய்து அதனால் உடலில் வியர்வையானல் குளிக்கின்றோம்.

ஆனால் அது போன்று நம் ஆன்மாவில் அழுக்கானால் தூய்மைப்படுத்துகின்றோமா…?
1.ஆன்மாவை உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான்
2.குருநாதர் காட்டிய வழியில் அந்த ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

நாம் பழக வேண்டிய நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடர்

 

ஒவ்வொரு நொடிக்கும் எண்ணமில்லாத மனிதன் எவருமில்லை. எண்ணத்தில் எடுப்பது தான் இச்சுவாசம்.
1.இச்சுவாசத்தில் எடுக்கும் நிலை கொண்ட மனிதனுக்கு…
2.“மனிதனின் எண்ணத்துடன் நிறைந்துள்ள குண அமில சுவாசம் தான்” அவன் ஈர்ப்புக்கு வருகின்றது.

1.மனிதன் தன் எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்தி” எடுக்கும் சுவாசத்தினால்
2.எத்தனை காலங்கள் ஆனாலும் “குறைவின்றி நல்வழி பெற்று”
3.பலவாக நிறைந்துள்ள அமில குணத்தைத் “தன் எண்ண மேம்பாட்டினால்”
4.ஒன்றின்பால் “நல் ஞானத்திற்குகந்த” செயலாக்கும் அமிலத்தின் வளர்ச்சியின் குணத்தைக் கொண்ட சுவாசத்தை எடுத்து
5.எடுக்கக்கூடிய காந்த மின் அலையின் ஈர்ப்பை “நல்ல சக்தியுடன்” மோதச் செய்தோமானால்
6.அச்சக்தியின் ஒளி ஈர்ப்பை “நுண்ணிய காந்த ஈர்ப்புத் தொடரினால்” நம் உடல் முழுவதுக்கும் பரவச் செய்து
7.இந்த உடலுக்குள் ஏற்கனவே பலவாக நிறைந்துள்ள “பல குண நிலை கொண்ட அமிலங்களையும்”
8.இவ்ஈர்ப்பின் நுண்ணிய அலையினால் “ஒரு நிலையான குண அமிலத்தை” இந்த உடல் முழுமைக்குமே நாம் பரவ விட்டால்
9.மனித வாழ்க்கையில் மோதிடும் பல நிலை கொண்ட குண நிலைக்கொத்த செயல் எதுவும் “நம் நிலையை மாற்றிட முடியாது…!”

அதே சமயத்தில் பல எண்ணச் செயல்கள் மோதினாலும் நாம் எடுக்கும் சுவாசத்தால்… அதன் குண நல ஈர்ப்பில் நாம் சிக்கிடாமல்…
1.ஏற்கனவே இந்த உடலில் நாம் நிறைத்துக் கொண்டுள்ள
2.ஒரு நிலையான அமில குணத்தின் நுண்ணிய அலையின் ஈர்ப்பு வளர்ச்சியில் பெற்ற
3.ஒளிச் சக்தியின் செயலே நமக்குள் நிறைந்து நிற்கும்.

மனித ஆத்மாவின் இவ்வெண்ண சுவாச சக்தியில் பெறத்தக்க நிலையினால் வளர்க்கும் நிலை உண்டு. தாவரங்களுக்கு அந்த நிலையில்லை.

ஒரு நிலையான எண்ண ஈர்ப்பில் தாவரம் வளர்ந்து வாழ்ந்தாலும் அதன் பலன் வெளிப்பட்ட பிறகு ஒவ்வொன்றின் வளர்ச்சி நிலைக்கொத்த காலக்கெடுவில் தான் தாவரங்களின் நிலை உண்டு.

1.எண்ணத்தின் மேம்பாட்டின் வழி நிலை கொண்ட மனிதன் தான்
2.தன் எண்ணத்தில் பலவாகப் படைக்கவல்ல ஆண்டவனின் ஆண்டவனாக முடியும்.

ஆனால் இந்த எண்ண மேம்பாட்டின் உணர்வு அறியாத இன்றைய மனிதன் தான் உழன்று கொண்டே… உருவை மாற்றி… “உருச்சிதைந்து வாழ்கின்றான்….!”

நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.
1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனைப் பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றேன். அதே எண்ணத்தை நீங்களும் எண்ணி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் எளிதில் பெற முடியும்.

1.ஏனென்றால் எனது வேலை கடவுளை நான் எங்கும் தேடவில்லை…!
2.உங்கள் உயிரைத்தான் குருநாதர் கடவுளாக வணங்கும்படி சொன்னார்.
3.அவன் அமைத்த கோட்டை தான் உங்கள் உடல் என்று சொன்னார்.

பல ஆயிரம் ஆண்டுகள் இதன் உணர்வைத் தேர்ந்தெடுத்து இந்த மனித உருவை உருவாக்கி உள்ளது உயிர். அதற்குள் இருக்கக்கூடிய உயர்ந்த குணங்களைத் தெய்வமாக மதித்து
1.இந்த மனிதனை உருவாக்கும் உணர்வுகள் அனைத்தும்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்று தான் நான் எண்ணுகின்றேன்.

உலக வாழ்க்கையில் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் அந்தத் தீமைகளின் நிலையை நீக்குவதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்போது தான் இந்தத் தியானத்தைச் செய்கின்றோம். இதற்கு முன் எடுத்துக் கொண்டது நமக்குள் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு…!

அதை எல்லாம் மாற்றி அமைக்க அவ்வப்போது அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் எடுத்துக் கொண்டே வரவேண்டும்.

நீங்கள் சும்மா உட்கார்ந்து பாருங்கள்… அப்போது தெரியும் உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் எல்லாம் ஓடுகிறது என்று…!
1.நம்மிடம் வெறுப்பாகப் பேசியவர்கள்… சண்டை போட்டவர்கள் இடைஞ்சல் பண்ணியவர்கள் அவர்களைப் பற்றி எல்லாம் நினைவு வரிசையாக வரும்.
2.அதாவது நாம் எண்ணமாலே இது எல்லாம் நமக்குள் வரும்
3.நான் உதவி செய்கிறேன்… ஆனால் அவன் இடைஞ்சல் செய்கின்றான்…
4.காசை வாங்கியவன் திரும்பக் கொடுக்கவில்லை…
5.வீட்டில் இருப்பவர்களே என்னைக் கேவலமாகப் பேசினால் நான் என்ன செய்வது…? என்ற இந்தப் புலம்பல்கள் தன்னாலே வரும்.

ஏனென்றால் நமக்குள் பதிவு செய்த உணர்வுகளின் இயக்கம் இப்படித்தான் வரும்.

எத்தனை வகையான வித்துக்களைப் பூமியில் விதைக்கின்றோமோ அது எல்லாம் வளர்ந்தால் தன் தன் இனமாக வளர்ந்து அதனதன் மணங்கள் தான் வரும்.

உதாரணமாக ஒரு செண்டு நிலத்தில் விதைகளை விதைத்துப் பாருங்கள். அதில் எந்தப் பகுதியில் எந்தச் செடி சக்தி அதிகமாக முளைத்திருக்கின்றதோ அந்த வாசனை தான் அங்கே முன்னணியில் வரும்.

செடிகள் குறைந்திருந்தால் வாசனை குறைவாக இருக்கும். ஆனால்
1.அந்தச் செடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் பக்கத்தில் இருக்கும் நல்ல செடிகளை வளரவிடாது
2.மற்றது வளர்வதற்கு வேண்டிய சத்தை எல்லாம் இது எடுத்துவிடும்… மற்றது வளராது.

அதை மாற்றுவதற்குத் தான் விவசாயத்தில் ஊடு பயிர் செய்யலாம் என்று சொல்வார்கள்.

என்னென்ன பயிர் வகைகளைச் சேர்த்தால் அதனுடன் உணர்வுகள் ஒன்று பட்டு ஊடு பயிர் போடும்போது இது நன்றாக வளரும் என்று சொல்வார்கள்

ஆனால் செடிகளில் ஏற்கனவே ஊடு பயிர் கலப்பில்லாத நிலைகள் வைத்தால் அந்தச் செடிகள் முளைக்காது. இதை விவசாயிகள் தெளிவாகத் தெரிந்து இருக்கலாம்.

பல தாவர இன சக்திகளை ஒருங்கிணைத்து அதை இணைத்துப் புதிதாக வித்தை உருவாக்குவார்கள். அப்படி உருவாக்கி விட்டால்… ஊடு பயிர்கள் போடப்படும் போது
1.இது எடுக்கும் சக்தி அதற்கும் இது எடுக்கும் சக்தி அதற்கும் எடுத்து இது இரண்டுமே தழைத்து ஓங்கும்.
2.அதாவது அதனுடைய சக்தி இதற்கு உரமாகவும் இதனுடைய சக்தி அதற்கு உரமாகவும்
3.இப்படி வளர்ந்து வரப்படும் பொழுதுதான் தாவரங்கள் செழித்து வளரும்.

நான் இதை எல்லாம் படித்துப் பேசவில்லை. குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் எப்படி இணைக்கப்படுகின்றது..? விஞ்ஞான அறிவால் எப்படி இணைக்கிறார்கள்…? இயற்கை உணர்வு எப்படி இணைக்கின்றது…? இணைந்த நிலைகள் எப்படி வளர்கின்றது…? என்று உணர்ந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன்.

ஏனென்றால் ஆதியிலே முதல் மனிதனாகத் தோன்றிய அகஸ்தியன் தன்னைத் தான் அறிந்தவன்… தன்னை உணர்ந்தவன் தான்.

அணுவின் இயக்கத்தைத் தனக்குள் கண்டுணர்ந்து விண்ணின் ஆற்றலை நுகர்ந்து பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இது உருவாகி அது தனக்குள் கருவாகி அப்படி அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் இந்தப் பூமியில் பரவி உள்ளது.

1.அவன் வாழ்ந்த காலங்களில் இந்தப் பகுதிகளில் (தென்னாட்டில்) நடந்து சென்ற நிலைகளில்
2.இந்தப் புவியில் படர்ந்துள்ள அவனின் சக்தியை எடுப்பதற்கு
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானியின் உணர்ச்சிகளைத் தூண்டப்படும்போது
4.அந்த உணர்வலைகளை எளிதில் நீங்கள் நுகர முடியும்.

வாடிய பயிர்களுக்கு எப்படி உரமிட்டுச் செழிக்கச் செய்கின்றோமோ அதைப் போன்று யாம் கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகள் உங்களுக்குள் சோர்வடைந்த… நலியச் செய்யும் உணர்வுகளை… அடக்கச் செய்யும்.

அகஸ்தியர் பெற்ற அருள் சக்திகளை நீங்கள் பெறுவதற்கு உணர்ச்சியைத் தூண்டி மெய் ஒளியைப் பெறும் உணர்வினை உங்களுக்குள் உருவாக்குவதற்குத் தான் இவ்வாறு உபதேசத்தைக் கொடுப்பது…!

உனக்குள்ளே… “நான் வந்து அமரும் நிலை பெற வேண்டுமப்பா…!”

 

நம் காலம் கலியுகம்…! அங்கு சொல்வது விஞ்ஞான காலம். அவன் விஞ்ஞானம் எல்லாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு…?

விஞ்ஞானத்தில் விளையாடுபவன் சித்தனாக இருந்தான். சித்தனே தான் விஞ்ஞானி. எஞ்ஞானத்தையும் வெல்பவன் விஞ்ஞானத்தை வெல்ல மாட்டானா…?

இந்நிலையில் நீ இருந்தால் இந்நிலை என்பது
1.இப்பொழுது நீங்கள் தியானிக்கும் நிலையில் விஞ்ஞானத்தை வெல்லும் மெய் ஞானத்தைக் காண்பாய்
2.இந்த நிலையில் இருந்து கொண்டு எஞ்ஞானத்தையும் வென்று விடலாம்.

விடியும் காலத்தையும் நீ காண்பாய்… விடியும் காலத்தை என்னும் பொழுது உன் நினைவில் “வான மண்டலத்தின் நிலை” தெரிந்து இருக்கும்.

முதல் பாடம் பூமியின் நிலையைத் தெரிந்து கொள் என் நினைவை நீ தெரிந்தவுடன் இப்பூமியின் நிலையைத் தெரிந்து கொள்வாய்…
1.உனக்குள்ளே நான் வந்து அமரும் நிலை பெற்றுவிட்டால்
2.இந்தப் பூமியை இயக்கும் தன்மை புரியும்… மனித நிலை மாறியதன் தன்மையும் புரியும்.

மாற்றுடலைப் பெற்றிடலாம்…! மாறிடும் காலத்திற்கு முன்னே இந்த உடலிலேயே எல்லா நிலையையும் உனக்குத் தந்திடுவேன்.

பூமி இயங்கும் தன்மையே ஆகர்ஷண சக்தி என்பதை வைத்து உன் நிலையைப் பறக்கச் செய். இம்மண்டலம் விட்டு பிற மண்டலம் நீ சென்று வரலாம். பிற மண்டலத்தில் நடக்கும் நிலையை நான் தருவேன். நீ இருந்த நிலையிலேயே எல்லாம் உண்டு.

உன் மனதை நீ அடக்கு என்பதன் பொருள் இதற்காகவே.

1.முதலில் உள் மனதை அடக்கும் தன்மை வந்து விட்டால் வெளி மனதும் அடங்கிவிடும்
2.உள் மனதை அடக்கி விட்டால் ஜெப நிலையில் ஜோதி நிலை கண்டிடுவாய்.
3.மிக சீக்கிரத்தில் ஆகர்ஷண சக்தியை வென்றிடலாம்.

ஆரியபட்டா பறந்ததன் நிலை என்ன…? (ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆகும்). அவனே செய்தானா…? ஈஸ்வரப்பட்டா சென்றல்லவா அதைப் பார்த்தான்.

“ஆரியபட்டா” என்னும் பெயர் வர அவனுள்ளே நான் இருந்தேன். நீ இருக்கும் இந்தியா மட்டும் உலகம் அல்ல…
1.உலகில் உள்ள மறுபகுதியில் உள்ளவனுக்கும் நான் உள்ளேன்.
2.இங்கும் சித்தன் உள்ளான் அங்கும் உள்ளான்
3.நாம் நினைப்பது இங்கு தான் சித்தன் உள்ளான் என்று
4.அங்கிருக்கும் நிலையை அவன் வெளிப்படுத்துவதில்லை.

உன் மூளையை நீ உபயோகித்தால் அவனையும் நீ வென்றிடலாம். அவனையும் வென்று விட்டால் போதுமா…? அவனுக்கும் மேலே உள்ளவனை யார் வெல்வது…?

அவன் அவனையே தான் வென்று கொண்டிருக்கின்றான்… அவனுக்கு மேல் உள்ளவன் அவனை வெல்ல எவ்வளவு நாள் செல்லும்…?

விஞ்ஞான நிலை கொண்டு அழிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நம் ஞானத்தின் நிலை இந்த விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் இல்லையப்பா.

1.இந்தத் தியானத்தின் நிலையில் அந்த ஈஸ்வரனே பந்தம் வருவான்
2.நீ வேறு அவன் வேறு அல்ல என்ற நிலையை நீ பெற்றிடு.

நான் சொல்லும் பாடம் எல்லாம் இதுவே தான்.

இவ்வுலகில் நீ பிறந்த நிலை வேறு எந்த உலகத்தில் இல்லை. நம் மனத்தையே தெய்வமாக்கிக் கொள்ளும் நிலையைச் சீக்கிரம் பெற்றிடுங்கள். வாயளவில் மனமே தான் தெய்வம் என்பது இல்லாமல் மனதையே தெய்வமாக்கிடுங்கள்.

உன் மனதைத் தெய்வமாக்கிய பின்னால் தான் உனக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். தியான நிலையின் பொருள் எல்லாம் புரிந்திருக்கும் நாசியில் நீ பெற்றிடும் வாசனையை உன் மனதில் ஆக்கு.

சுவாச நிலை என்பதன் உட்பொருள் இதுவே தான் உன் மனதை வாசனையாகப் பெற்று விட்டால் கோடி இன்பம் அதுவே தான்.

நுகரும் தன்மையில் நீ இருந்திடப்பா மலரும் கழிவும் வேறல்ல என்ற நிலை தெரிந்திடும்.

கோப நிலை எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு… உனக்கும் உண்டு…! மணம் என்னும் வாசனையைப் பெற்று விட்டால் எல்லா நிலையும் மாறிவிடும்.

யோகியாகச் சென்று தான் அடைய வேண்டும் என்னும் நிலை உனக்கில்லை. இருக்கும் நிலையில் எல்லாம் தெரியத்தான் இந்தப் பாடங்கள்.

பாட்டின் தன்மை புரிந்திருக்கும் பாடத்தின் தன்மைகளும் புரிந்திருக்கும் முதல் படி தாண்டி விட்டாய் என்று சொன்னேன்… அடுத்த படி ஏறத்தான் இந்தப் பாடங்கள்.

எல்லா நிலையும் வென்றிடும் சக்தி உனக்கு உண்டு.
1.பறக்கும் நிலை பார்த்திடுவாய்.
2.காட்சி:- உடல் இருக்க சாமி (ஞானகுரு) பறந்து போகும் நிலை
3.இந்த நிலையை உனக்கு அருள்வேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கிக் கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது… என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது… ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் “இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே…” என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி “என் விரலை நீட்டினால்… மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை…” குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.”நீயே பார்த்துக் கொள்” என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது “அவருடைய ஏவல்தான்” என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை “நான் எப்படி உபயோகிக்கின்றேன்…?” என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன். அதைத் தான் உங்களுக்கு இப்போது கொடுக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியை வளர்த்து “உலகெங்கிலும் நாம் அதைப் பரவச் செய்வோம்”

 

இன்று உலகெங்கிலும் நடக்கும் எத்தனையோ அசம்பாவிதங்களை நாம் பார்த்தும் கேட்டும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்று
2.நாம் நம் சிந்தனைகளைச் செலுத்த வேண்டும்.

ஞானிகள் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும். ஞானிகள் உணர்வை வளர்த்து அதைப் பரப்பி இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் தீமைகளை… அந்த நஞ்சான உணர்வுகளைப் பிளக்க வேண்டும்.

1.நம் ஆன்மாவை மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது அல்ல…!
2.பரமான இந்தப் பூமியில் இருக்கும்… பரமாத்மாவில் படர்ந்துள்ள தீமைகளைப் பிளக்க வேண்டும்.

அதைப் பிளக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும்.
1.அந்த உணர்வின் சொல்லாக… செயலாக…
2.எல்லாவற்றையும் (வாழ்க்கையை) அதனின் செயலாக்கமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சாதாரணமாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். குருநாதர் எனக்குள் உயர்ந்த உணர்வுகளைப் பதிவு செய்தார். எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

அதை நீங்களும் பெற வேண்டும்… நீங்கள் பெறுவீர்கள்…! என்ற நம்பிக்கையுடன் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் “அந்த ஞானமே” உங்களைக் காத்திடும் சக்தியாக தக்க உபாயங்களைக் காட்டும்.

தீமை செய்தவனைப் பதிவு செய்து மீண்டும் அவனை நினைவுக்குக் கொண்டு வந்தால்… தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அது அழைத்துச் செல்கின்றது.

தவறு செய்கிறான்… தன்னை எதிர்த்துப் பேசி விட்டான்…! என்றால் உடனே பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அவனைப் பழி தீர்க்கச் செல்கின்றோம்.

ஆனால் பழி தீர்க்கும் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் அது நம் நல்ல குணங்களையும்… நம் உடல் உறுப்புகளையும்… நம்மையும்… அழித்து விடுகின்றது.

இதைப் போன்று தான்… இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலையாக “தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்” அதை வளர்த்து நம்மைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாகப் பெருக்கிக் கொள்ள முடியும்.

ஆலயங்களிலே அதைத்தான் நமக்கு ஞானிகள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். பிறருடைய தீமைகளை அகற்றிடும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

1.உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின்ன் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அந்த மகரிஷிகள் அடைந்த… அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெறுகின்றோம்

இந்த முறைப்படி எல்லோரும் நீங்கள் சொல்லிப் பாருங்கள்
1.காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை அகன்று விடும்
2.காற்று மண்டலம் பரிசுத்தமாகிவிடும்.

நினைத்தவுடன் நான் வருவேன்… என் நினைவைக் கூட்டிக் கொள்

 

48 நாட்களில் கலசம் வைத்ததின் மகிமை புரியும். எதற்காகக் கலசம் வைத்தது என்று புரிந்ததா…?
1.நினைவலைகள் வருவதற்காக… சுவாச நிலைக்காக…!
2.நாம் ஒரு காரியத்தை நினைத்துக் கலசம் வைத்திருக்கின்றோம். அதே நினைவில் ஈஸ்வர நினைப்பின் ஈர்ப்புக்காக.
3.அதாவது… 4+8=12 குணாதிசயங்கள்
4.சக்தி சொரூபத்தில் உள்ள பல விதமான குணங்களை 12 கோடு போட்டு ஒன்றாகச் சேர்த்தல்…
4.12 விதமான மனத்தையும் ஒருநிலைப்படுத்தல்.

குழந்தைகளுக்கு எப்படிப் பல துறைகளில் அறிவை ஊட்டி வளர்த்திருக்கின்றார்களோ அப்படியே தியான வழிபாட்டையும் கொடுக்க வேண்டும்.

விளையாட்டுப் போக்கு கடின சொல் இல்லாமல் ஆத்மீகப் பாடத்தை ஆரம்பி… நிதானமாக வரவேண்டும்.

1.நாள்… நட்சத்திரம்… பார்ப்பதெல்லாம் மனதை ஒருவழிப்படுத்தவே
2.நேரம் காலம் என்பது ஒன்றுமில்லை… மனதை தடைப்படுத்தவே நேரம்-காலம்.
3.மன பயம் உனக்கில்லை. அதன் பொருள் இதுதான்.
4.சந்தோசமான நிலையைக் கூட்டி வா நலிவும் நோவும் பயமும் வேண்டாம்.

வைரத்தின் ஜொலிப்பு வார்த்தையில் வேண்டும்
பூவின் வாசனை நாசியில் வேண்டும்
சிங்கார இசையின் ஒலிகள் செவிக்கு வேண்டும்
வளர்ந்த பின் எனக்கு அந்நிலை தா ஈஸ்வரா…!
இந்தப் பாடல் புரிந்ததா…? பாட்டின் தன்மையைப் புரிந்து பாடவும். சொல்கிற வார்த்தைகளும் செய்கிற செயலிலும் உன் நினைவு வேண்டும்.

எந்த ஒரு துளி நிலையும் வீண் பண்ணாமல் காலத்தை உபயோகப்படுத்து. உன் நிலை நல் வழியாக இருக்கட்டும்… “என்னுடன் நீ இருப்பாய்…”

1.எனக்கு நல்ல மனம் கொடு ஈஸ்வரா…! என்று சொல்லும் பொழுது எல்லோரும் ஏற்றுக் கொள்வதில்லை
2.பக்குவ நிலையில் உள்ளவர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

நேரத்தை வீண் செய்யாதே… உன் காலம் குறுகியது… படிப்படியாக வெற்றி கொள்… இந்தப் பாடம் எல்லோருக்கும் தான். காலநிலை குறுகிவிட்டது… காற்றுடன் கலந்து வா…!

“கஷ்டங்கள் வந்தாலும் என் அருள் உன்னுடனே…”

ஜெப நிலையைக் கூட்டிக் கொள்
ஜெபத்துடனே நான் இருப்பேன்
ஜெபமெல்லாம் உன்னுடனே
ஜோதி மயம் தந்திடுவேன்

ஜெபித்ததெல்லாம் உன்னுள்ளே
ஜெபித்ததெல்லாம் நானல்லவோ
இந்நிலையில் நானிருக்க
உனக்கு இனி கவலை இல்லை

பாடும் பாடல் நானல்லவோ
பாடிய குரல் எனதல்லவா – புரிந்ததா…?
உன் நிலை மறந்து விடாமல்
ஜெப நிலையில் வந்து விட்டால்
எந்நிலையும் கிட்டி விடும்
என்ற பொருள் இதுவே

ஜோதி நிலை தந்திடுவேன்
ஜோதியுடன் கலந்திடுவாய்
ஜோதியாகி உலகத்தையே
ஜோதி மயம் ஆக்கிடுவாய்

“உனதல்ல… எனதல்ல… இந்த உலகம்” என்று ஏற்கனவே சொல்லி உள்ளேன். ஆத்மீக வழிக்கு வயது வரம்பு இல்லை… ஏற்றுக் கொள்ளும் நிலையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு.

உங்கள் ஆசையைத் தூண்டத்தான் இந்தப் பாட்டு. உன் பாடலை எனதாக்கு… என் பாடலை உனதாக்குகிறேன்.

உன் நிலையை மாற்றிக் கொள்… காலம் உனக்குக் கனிந்து வரும்… மனப்பக்குவம் வந்துவிட்டது… பாத்திரத்தில் சாதம் உள்ளது. எடுத்துச் சாப்பிடுவது அவன் வேலை…!

1.நம்பி வந்த பாதையை வென்று வா… சித்தன் நிலை காண்பாய்
2.சித்து நிலை தந்து விட்டேன்… சித்தனாகிச் சித்தனுடன் கலந்திடுவாய்.

சித்து நிலை ஞான நிலை எல்லாமே ஜோதியுடன் கலப்பதுவே. இந்நிலையைச் சீக்கிரம் பெற்றுக் கொள்… வழி அமைத்துக் கொள்… உன் நிலைக்கே எல்லாம் புரியும்.

இன்றைய பாடம் புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்…? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது… கால் வலிக்கின்றது…
2.கழுத்து சுளுக்கி விட்டது… நரம்பு பிடித்துக் கொண்டது… சுண்டி விட்டது… என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்… இது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்… மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி… எங்கள் சாமி…! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்….
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது…! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்… சலிப்புப்பட்டவர்கள்… சஞ்சலப்பட்டவர்கள்… வெறுப்புப்பட்டவர்கள்… குரோதப்பட்டவர்கள்… தொல்லை கொடுப்பவர்கள்… என்று இத்தனையும் இதற்கு முன்… பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா…! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).

எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

 

பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கப்படும் பொழுது “இப்படித் தவறு செய்கின்றார்களே…” என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த நேரத்தில் “அவர்கள் தவறிலிருந்து விடுபட வேண்டும்…” என்று நாம் எண்ண முடியவில்லை.

அதற்குண்டான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் நிலையாகத்தான்
1.உடல் அழுக்கையும் துணி அழுக்கையும் தினசரி போக்குவது போன்று
2.வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நம்மை அறியாது வந்து சேரும் அழுக்கைப் போக்க
3.விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
4.நாம் கேட்டறிந்த தீமைகளைத் தூய்மைப்படுத்தும்படி… ஆன்மாவைத் தூய்மைப்படுத்தச் சொன்னார்கள் ஞானிகள்.

பல முறை இவ்வாறு செயல்படுத்த… இந்த வாழ்க்கையில் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் எண்ணுவதற்கு நேரமில்லை. இருப்பினும்
1.என்னைப் பார்ப்போருக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படர வேண்டும்.
2.அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் பிணிகள் நீங்க வேண்டும்
4.அவர்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மகிழ்ச்சி பெற வேண்டும்
5.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
6.நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் கேட்டால் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய…”

ஓ… …ம் நமச்சிவாய ஓ… …ம் நமச்சிவாய என்று வெறும் வாயில் சொல்வதில் பொருள் இல்லை. அது வெறும் சொல்.

காரணம்… நாம் எந்த உணர்வினை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அது ஓ…ம் நமச்சிவாய…! அந்த அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற அந்த உணர்வினை நமக்குள் சிவமாக்க (உடலாக) வேண்டும்.

ஆக…. எதை நமச்சிவாயமாக ஆக்க வேண்டும்…?

சாஸ்திரங்களில் ஓ…ம் என்றால் பிரணவம் என்று காட்டப்பட்டுள்ளது. “அதையே சொன்னால் ஜீவன் வந்துவிடும்” என்று தவறான வழிகளில் ஜெபித்துக் கொண்டுள்ளோம்.

அவன் சொன்ன உள் பொருளே… வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கிட “மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது…”
1.நமது உயிர் அதை ஓ… என்று அதைப் பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக ஆக்குகின்றது

அதாவது… மகரிஷிகளின் அருள் சக்திகளை உன் உடலாக்கு உனக்குள் அதை ஜீவ அணுவாக ஆக்கு என்று தான் காவியத்தைப் படைத்துள்ளார்கள்.

ஆனால் வெறுமனே ஓ… …ம் நமச்சிவாய என்று சொன்னால் “சிவன்” தன்னையே சொல்லிக் கொண்டிருக்கின்றான் என்று… எதையாவது ஓடி வந்து செய்வார் என்று “இப்படிப்பட்ட நம்பிக்கையை” ஊட்டி விட்டார்கள்.

சந்தர்ப்பத்தில் ஒருவன் விபத்துக்குள்ளாகின்றான். “இப்படி ஆகிவிட்டதே” என்று பதட்டமாகி வேதனையுடன் சுவாசிக்கும் பொழுது ஓ…ம் நமச்சிவாய. பய உணர்வுகளை எடுக்கும் பொழுது அது உடலாக… சிவமாக ஆகிவிடுகிறது.

அடுத்து நமக்குள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றது.

உன் உயிர் நீ நுகர்ந்ததை எவ்வாறு உடலாக ஆக்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.
1.நடந்த விபத்தை கண்கள் உற்றுப் பார்க்கும்படி செய்தது… அந்த உணர்வினை கவரும்படி செய்தது
2.உயிர் ஓ… என்று பிரணவமாக்குகின்றது உணர்வினை உனக்குள் உணர்த்துகின்றது
3.உணர்வினை உடலாக (சிவமாக) உறையச் செய்கின்றது என்று தான் சாஸ்திரங்கள் தெளிவாக நமக்குக் காட்டியுள்ளது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தில் தான் அந்த விபத்து நடந்தது. வேண்டுமென்று அவன் விழுகவில்லையே…! அவன் வாழ்க்கைக்குச் சென்றான்… எதிர்பாராது வண்டி மோதுகின்றது… அடிபட்டு அவன் துடிக்கின்றான்.

அவன் உடலிலிருந்து துடித்து வெளிப்படுத்தும் உணர்லைகளைச் சூரியன் கவர்கின்றது… அலைகளாகப் பரப்புகின்றது.

நம் கண் அவனைப் பார்க்கின்றது… உணர்வினை கருவிழி (படமாக) பதிவாக்குகின்றது. அவன் வெளிப்படுத்திய அலைகளைக் கண்ணின் காந்தப்புலன் நமது ஆன்மாவாக மாற்றி… சுவாசிக்கும்படி செய்து… உயிரிலே பட்ட பின் உணர்த்துகின்றது… உடலில் ஜீவான்மாவாக மாற்றுகின்றது.

ஆக நாம யாரும் தவறு செய்யவில்லை… நம்முடைய புலனறிவு தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வாகக் காட்டுகின்றது… தீமை என்று உணர்த்துகின்றது.

ஆனால் ஆறாவது அறிவின் துணை கொண்டு “அதிலிருந்து நாம் விடுபட வேண்டுமே…!”

தீமைகளிலிருந்து விடுபடுவற்குத் தான் விநாயகர் தத்துவத்தில் காட்டிய வழிப்படி…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று “உயிருடன் ஒன்றினால்” ஓ…ம் நமச்சிவாய.
2.அவன் (மகரிஷி) தீமைகளை எப்படி அகற்றினானோ “சிவாய நம ஓ…ம்” நம் தீமைகளை அகற்றச் செய்கின்றது.

நாம் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… மெய்ப்பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்…! என்று இப்படி எண்ணினால் இது ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்.
1.அந்த அரும் பெரும் சக்திகள் நம் உடலாகின்றது
2.மற்றவரின் தீமைகளை அகற்றும் சக்தியாக நம்மிடமிருந்து வெளிப்படுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

இலட்சுமணக் கோடு

 

சூது வாது பொய் புரட்டு ஆசை கோபம் குரோதம் வஞ்சனை இது தான் இன்றைய உலகம். தர்மம் நியாயம் என்பதெல்லாம் ஒரு சிலருக்குப் பேச்சளவில்தான்.

தான் வாழ வேண்டும்… தன் குடும்பத்தார் வாழ வேண்டும்… தன் சுற்றத்தார் வாழ வேண்டும்… நான் பெரியவனா…? நீ பெரியவனா…? “பிறருக்கு மேல்… தான் “உயர்ந்த நிலையில்” இருக்க வேண்டும்…”

உயர்ந்த நிலை என்பது
1.இன்றைய மனிதர்களுக்குச் சோம்பேறித்தனமாக
2.எல்லா வசதிகளுடனும்… தானாகக் குவியும் பணத்துடனும்… வேலை வெட்டி ஒன்றும் செய்யாமல்
3.எல்லோரும் பார்த்து “நீ பெரிய பணக்காரன்… எல்லா வசதியும் உள்ளவன்” என்று சொல்வது தான்
4.இன்றைய மனிதர்கள் நினைக்கும் உயர்ந்த நிலை.

அவனது உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும் பிரிந்து சென்ற பின் அவனுடைய ஆத்மாவின் நிலையும் அதே நிலையில் தான் இருக்கின்றது. மறு பிறவியிலும் அதே ஆசையுடன் தான் வந்து பிறக்கின்றான்.

1.உள்ளதை வைத்துத் தர்மம் நியாயம் என்பதைக் கடைப்பிடிப்பவன்
2.ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை.

ஒவ்வொருவனும் ஒவ்வொரு குறிக்கோளுடன் தான் அவன் பாதையில் செல்கிறான். அந்தந்தக் குறிக்கோள் அவனுக்கு முடிவு பெறுவது இல்லை. அதனால் தான் அவன் மறு ஜென்மம் எடுக்கின்றான்.

சொல்லிய பாடத்தையே திரும்பவும் ஏன் சொல்கிறேன்…? என்று நினைக்கலாம். உங்கள் பாடத்திற்கு முதல் பாகம் இது தான்.

இராமாவதாரத்தில் வால்மீகி எழுதிய கதையில் – (கதை என்று சொல்லாதே…!) எழுதிய நூலில் ஒவ்வொரு சொல்லும் அர்த்தமுடனும் பிற்கால மனிதர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கமாக எழுதி உள்ளார்.

அதைப் படிப்பவர்களும் அந்த நூலின் தத்துவத்தைக் கேட்பவர்களும் அதைக் கதையாகத்தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர… புரிந்து ஏற்பது இல்லை…!

காட்சி:-
சீதை உட்கார்ந்து இருத்தல்… லட்சுமணன் கோடு போட்டுக் கோட்டைத் தாண்ட வேண்டாம்…! என்று சொல்லிச் செல்தல். இரட்டை மாட்டு வண்டியில் மாடு கோட்டைப் பார்த்துவிட்டுத் திரும்பி செல்கிறது.

இதனுடைய அர்த்தம் புரிகின்றதா…?

1.ஒன்று வேண்டாம் என்று சொல்லும் பொழுது
2.சொல்லியும் அதைத் தாண்டிச் செல்லும் பொழுது “படும் இன்னல்” அந்த நூலில் இருக்கின்றது.

ஆறறிவு படைத்த மனிதனுக்குச் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடிவதில்லை. ஐந்தறிவு படைத்த மாடு கோட்டைத் தாண்டாமல் திரும்பிச் செல்கிறது.

ஆறு அறிவு படைத்தவன் புரிந்து கொள்ளாததை எல்லாம்… அதாவது…
1.தனக்கு எல்லாம் தெரிந்து விட்டது
2.எல்லா வசதிகளும் கண்டுபிடித்து விட்டோம்
3.இந்த மண்டலத்தில் இருந்து பிற மண்டலத்திற்குக் கூட “செல்லும் வழியைக் கண்டுபிடித்து விட்டோம்…”
4.மனிதனால் முடியாதது ஒன்றுமில்லை…! என்று ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர்.

ஆனால் ஐந்து அறிவுடைய மிருக வர்க்கங்கள் பறவைகள் புழு பூச்சி இவைகளுக்கு இருக்கும் மனச்சாந்தி கூட எந்த மனிதனுக்கும் இல்லை. எனக்கும் தான்…! (குருநாதர்).

எனக்கும் மனிதர்களை நல்ல வழியில் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஒன்று இருக்கிறது அல்லவா… அதைத்தான் சொல்கின்றேன்.

இந்தக் கால சூழ்நிலையில் தனி ஒரு மனிதனால் எதுவும் செய்ய முடியாது. காலத்துடன் ஒத்துத் தான் செல்ல வேண்டும்.

1.ஆசையை அடக்க ஈஸ்வர தியானத்தில் இருந்து
2.இந்த யுகம் மாறி அடுத்த யுகத்திலாவது மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளாமல்
3.நல்ல நிலையில் இருக்கத்தான் இந்தப் பாடங்கள் எல்லாம்.

பேய் பிசாசு என்பதெல்லாம் உண்மை. பேய் பிடித்து ஆட்டுகிறது என்று சொல்கின்றார்கள். அதுவும் உண்மைதான்…! அவனுடைய மனதே அவனுக்குப் பேய்தான்.

பேயாக இருக்கும் மனதை அடக்கி மனிதனாகி தெய்வமாகலாம். ஒவ்வொரு மனிதரிலும் பேயாகவும் மனிதனாகவும் தெய்வமாகவும் இருக்கின்றார்.

பேயான மனதை அடக்கி மனிதனாகித் தெய்வீக அருள் பெறலாம்.
1.அதற்கு வயது வரம்பு வேண்டாம்.
2.வயதான பிறகு தான் இந்த நிலை என்று எண்ண வேண்டாம்
3.தன்னைத்தானே உணரும் வயது முதற் கொண்டே இந்த நிலைக்கு வரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்றால் அதை ஒரு மனிதன் கண்ணுற்றுப் பார்த்த பின் நண்பரிடத்தில் இதைச் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரி மோதி விபத்தாகி விட்டது.. அடிபட்டு உடல்கள் சிதைந்து விட்டது…! என்று அவன் பார்த்த உணர்வுகளைச் சொல்லப்படும்போது அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் இது நம் ஆன்மாவாகிறது.

இரவு புலனடங்கித் தூங்கும் பொழுது…
1.நாம் எங்கேயோ சென்ற மாதிரியும்
2.அங்கே விபத்தான மாதிரியும்
3.யாரோ துரத்துவது மாதிரியும் போன்று கனவுகளாக வருகின்றது.

இது எல்லாம் நமக்குள் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் நுண்ணிய உணர்வுகளாக இயக்கி நாம் புலனடங்கித் தூங்கினாலும் அந்த உணர்ச்சிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றது… அறியச் செய்கிறது…!

ஆனால் விடிந்தவுடன் இதை எல்லாம் நினைவுக்கு வரும் போது கலக்கம் வருகின்றது. காரணம் நாம் இரவிலே நுகர்ந்த உணர்வுகள் அது பதிந்து தீமையான அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

நம்மை அறியாது வரும் கனவுகள் எல்லாம் இப்படித்தான் இயக்குகிறது. ஒரு சிலருக்கு இதனால் சில தீமையின் விளைவுகளும் ஏற்படக் காரணமாகின்றது.

இது போன்ற உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிய வேண்டும்… இந்த மனித உடலில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்…! என்று ஏங்கித் தியானித்தால் இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி நஞ்சின் தன்மைகளை மாற்றிடும் நிலை வருகின்றது.

அதிகாலை துருவ தியானத்தின் மூலம் தொடர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

கடவுளின் அவதாரம் வராகன் என்று காட்டியதில்…
1.நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினை நுகர்ந்து மனிதனாக எப்படி உருவாக்கியதோ
2.மனிதனான பின் நச்சுத் தன்மைகளை எல்லாம் நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிய
3.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்த்து
4.எதிர்காலத்தில் வரும் நச்சுத்தன்மையை நீக்கிடும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.

கல்கி

 

உலகெங்கிலும் தோன்றிய ஞானிகள் அனைவருமே
1.மனிதனின் உயிரைக் கடவுளாக மதி
2.மனிதனுக்கு மனிதன் மனிதனாக நீ மதி
3.மனிதனை ஒரு கடவுளாக மதி என்று தான் அனைவரும் சொல்லி உள்ளார்கள்.

அத்தகைய ஞானிகள்
1.மனிதனை மதித்தார்கள்… மனித உடலை மதித்தார்கள்
2.மனிதன் மகிழ்ந்திட வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்தார்கள்
3.மனிதன் அவன் அறியாத இருள்களில் இருந்து மீள வேண்டும் என்ற சதா தியானித்தார்கள்.
4.மனிதன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் பிறவிக் கடலை நீந்தி ஒளியின் சரீரமாக இன்றும் சப்தரிஷி மண்டலமாகத் திகழ்ந்து கொண்டு உள்ளார்கள் அது தான் கல்கி…!

கடவுளின் அவதாரத்தில்… என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீர வாழ்க்கையினை மனித உயிரான்மா பெறுவதைத்தான் ஞானிகள் “கல்கி” என்றார்கள்.

மனிதர் தாம் கல்கி என்ற பெருவீடு பெருநிலையை அடைவதைத்தான், பத்தாவது அவதாரமாகக் காண்பித்துள்ளார்கள்.

உயிரின் பரிணாம வளர்ச்சியில் இறுதியானதும் உறுதியானதுமான அழியா ஒளிச் சரீர வாழ்வே மனித இனத்திற்கு இலட்சியமாக இருக்கவேண்டும் என்றுரைத்தார்கள் ஞானிகள்.

ஆனால்
1.இந்தக் கலியில் மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் விளைய வைத்து
2.எவர் ஒருவர் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுகிறார்களோ அவரே கல்கி.
3.வாழ்க்கையில் வரும் இருளை யாரெல்லாம் மாய்க்கின்றார்களோ…
4.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்குகின்றார்களோ… அவரே கல்கி.

கல்கி அவதாரத்தில் வரப் போகும் “சித்தன்”

 

உன்னையே நீ உணர்ந்து கொள் மற்றவர்களின் புகழுக்காகவும் வேடிக்கைக்காகவும் அல்ல தியானம்.

காட்சி:-
உருண்டைப் பந்து – உலகம் – சுற்றி வெளிச்சம். இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் கலியுகம் வெளிச்சம்…!

ஒவ்வொரு அவதாரத்தின் போதும் உலக நிலை மாறி இருந்தது. வர இருக்கும் கல்கி அவதாரத்தில் காலநிலை மாறும். ஒவ்வொரு அவதாரத்திலும் நடந்து நிலையைத் தனித்துப் பிரித்துச் சொல்கின்றேன்.

இராமாவதாரத்தைப் பற்றி சாமி சொன்னது புரிந்ததா…?

காட்சி:-
குருநாதர் தன் நெஞ்சைப் பிளந்து காட்டுகின்றார். நெஞ்சுக்குள் உருவம் தெரிகின்றது. இராமர் தசரதரின் மகனாகப் பிறந்தார் வில்லை ஒடித்துச் சீதையை மணந்தார் தந்தையின் சொல்லுக்காக 14 வருடம் காட்டிற்குச் சென்றார் சீதையின் கற்பைச் சோதிக்க அக்னிப் பிரவேசம் செய்ய வைத்தார் என்பதெல்லாம் “வால்மீயால் இராமாவதாரம் நடக்கும் காலத்தில் எழுதப்பட்ட கதையே…”

இராமாவதாரத்தில்
1.ஜனங்களுக்குத் தெய்வ பக்தியும் தந்தை சொல் தட்டாத நிலையில் நற்குணமும் பண்பு பற்று பாசம் எல்லாம் நிறைந்து இருந்தது.
2.மனிதர்களும் சூது வாது அற்றவர்களாக இருந்தார்கள்.
3.இராமாவதாரம் நடக்கும் பொழுது புனிதத் தன்மை இருந்தது.
4.அப்போது இருந்த காலத்தில் மாமிசம் யாரும் புசிப்பதில்லை.
5.பிறரின் சந்தோஷத்திற்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் நிலை இருந்தது.

அப்போது இருந்த ரிஷிகளில் ஒருவர் தான் வால்மீகி. அந்த யுகத்துக்குப் பெயர் வைத்தவரும் வால்மீகி தான். இன்னும் அவர் வாழ்கிறார். பிற்கால மனிதர்களுக்கு உபயோகமாக இருக்கட்டும் என்று அவர் எழுதிய நூல் தான் இராமாயணம்.

“ஸ்ரீராமஜெயம்” என்று ஜெபிக்கும் பொழுது எந்த நம்பிக்கையோடு ஜெபிக்கின்றோமோ அந்த ஜெபத்தை ஜெயிக்க வைப்பது இராமாயணம் எழுதிய “வால்மீகி தான்…”

அவர் எழுதிய நூலை… அவருக்குப் பிறகு எழுதியவர்கள் அவரவர்கள் மனப்பக்குவப்படிச் சில விஷயங்களைத் திரித்தும்… கூட்டியும்… குறைத்தும் எழுதி விட்டார்கள்.

ஸ்ரீராமஜெயம் எழுதிய பக்தை நீ…! உனக்கு என்றும் ஸ்ரீராமராகவே வால்மீகியின் அருள் கிட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆசி என்றும் உண்டு.

நீ ஜெபித்த ஒவ்வொரு ஜெபமும் என் நெஞ்சில் பதிந்துள்ளது. இது மிகவும் ரகசியம்

இப்போது இருக்கும் ஈஸ்வரபட்டராகிய சற்குருநாதர் யார்…?

படிப்படியாக விளக்கம் சொல்கின்றேன். கலியுகத்தில் ஈஸ்வரபட்டராகவும் அபிராமி பட்டராகவும் இருந்தார். கிருஷ்ணாவதாரத்தில் கீதை உபதேசித்த அந்த ரிஷி யார்…? உன் யோசனைக்கு விடுகின்றேன்.

கீதா உபதேசத்தின் போது வந்த ரிஷி – குருநாதர் தான். இராமாவதாரத்தில் வால்மீகியாக இருந்தார். இன்னும் பல நிலையில் இருந்திருக்கிறார். தொடர்ந்து தியானத்தில் இருந்தால் இன்னும் பல வழிகள் புலப்படும்.

கலியுகம் முடிந்து கல்கி அவதாரம் வரும் பொழுது
1.சாமி சொன்னபடி சித்தன் வெளிப்படுவான் என்றார் அல்லவா… அந்தச் சித்தன் யார் என்பது உங்களுக்குப் புரியும்.
2.ஒரு குழந்தை பிறந்திருக்கிறது 2000 ஆண்டில் அவன் வெளிப்படுவான் என்று சாமி சொன்னார் அல்லவா.
3.அந்தக் குழந்தையின் ரூபத்திலும் “குருநாதர் தான்” சித்தனாக வெளிப்படுவார்.
4.கல்கி அவதாரத்தைப் பார்க்கச் சீக்கிரம் நடை போடு…!
5.“இப்போது நடக்கும் நிலையே கல்கி அவதாரத்தின் ஆரம்பம் தான்…”

மற்றவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்… கேலி செய்வார்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தக் காற்று மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவிக் கொண்டே உள்ளது. அந்த அகஸ்தியன் பெற்ற இயற்கையின் உண்மைகளையும் அவன் நஞ்சினை நீக்கிய உணர்வுகளையும் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஒரு இயந்திரத்தையோ உபகரணத்தையோ விஞ்ஞான அறிவால் காட்டப்படும் பொழுது… “இன்னது… இன்னது…” (FEATURES) என்று சொல்லி அதிலே முழுமையின் நிலைகள் காட்டி அதனைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

அதைப் போன்று தான்
1.மெய் ஞானத்தின் நிலைகள் கொண்டு முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
2.அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒளியின் உணர்வாகப் பெற்றதையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

1.வாழ்க்கையில் தீமைகளும் கஷ்டங்களும் துயரங்களும் நுகரப்படும் பொழுது
2.அது உள் புகுந்து தீமையை உருவாக்கும் அணுக்களாக உருவாகிடாது
3.அருளொளி என்ற உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து அதை அடக்கி
4.தனக்குள் இணைந்த நிலைகள் கொண்டு செயல்படும் நல்ல சக்திகளாக அதை மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள்…! கோபிப்பது நீங்களா…? வேதனைப்படுவது நீங்களா…?

இல்லை…!

நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது. ஆக ஆறாவது அறிவு கொண்ட நாம் அந்தத் தீமைகளை நீக்கும் வலிமையை எப்படிப் பெற வேண்டும் என்று சீராக்கிக் கொள்ள வேண்டும்.

1.ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளவும்
2.பிறவியில்லா நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்ற இந்த ஆசையில்தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் உங்களை நீங்கள் காத்து உங்கள் அருகில் உள்ளவருக்கும் இந்த அருள் வழியினைச் சொல்லி அந்த ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குங்கள்.

நீங்கள் எடுக்கும் தியானத்தால் அந்தப் பொது விதிப்படி வெளிப் பரப்பப்பட்ட அருள் உணர்வுகளை அனைவரும் நுகர… எதிர்காலத்தில் தீமையை வென்றிடும் சக்தியாக எல்லோரையும் வளரச் செய்வது… “நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்…” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உயிரே கடவுள்… நுகர்ந்ததை உருவாக்கும் போது உடலாக அதுவே சிவமாகின்றது. ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அது என்ற நிலையில் நாம் ஒவ்வொரு மனிதனையும் எண்ணி மதித்திடல் வேண்டும்.

பகைமை உணர்வு புகாதபடி தடுக்கச் செய்யும் இத்தகைய உயர்ந்த ஞானத்தை நாம் வெளிப்படுத்தும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாகி அந்த உடலான ஆலயம் பரிசுத்தமாக நம் உணர்வுகள் செயல்படும்.

அதே சமயத்தில் நமக்குள் தீமை புகாது தடுக்கவும் இது உதவும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். இருந்த இடத்திலிருந்தே நீங்கள் அருள் உணர்வைப் பெருக்க முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணங்கள் வளர்ச்சியாகி…
1.டி.வி.யில் ஒளிபரப்பு செய்வது போன்று எல்லா இடத்திலும் இது பரவி
2.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்தியாக இது வளரும்.

ஆங்காங்கு உள்ளோர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து கூட்டமைப்பாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்.

1.இந்த உலகில் பரவி வரும் நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும்
2.மக்கள் மத்தியில் அருள் ஒளி பரவ வேண்டும் …இருளை அகற்றும் அருள் ஒளி பரவ வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நாம் பரப்ப வேண்டும்.

ஏகோபித்த நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை இப்படிப் பரப்பப்படும் பொழுது நாம் வாழும் பகுதிகளில் நஞ்சை வென்றிடும் அருள் சக்திகள் படரும். சிறுகச் சிறுக மற்றவரையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். காலம் நெருங்க நெருங்க…
1.உங்களைக் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர்த்து அதன் மூலம் உங்கள் சார்புடையோரைக் காத்திடவும்
2.அவர்கள்… அவர்களுடைய சார்புடையோரைக் காத்திடவும்
3.இந்த பூமியில் அசுர குணங்களை மாற்றி அருள் ஒளி என்ற உணர்வை பரப்பச் செய்திடவும்
4.அருள் ஒளி என்ற உணர்வினைப் பரவச் செய்து விஷத்தன்மை கொண்டு இயக்கும் உணர்வுகளை மாற்றிடவும்
5.உலகில் வாழும் மனிதருக்குள் பேரருள் என்ற உணர்வினை உருவாக்கிடவும்
6.இது உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரது உயிரான ஈசனை வேண்டுகின்றேன்
7.உங்கள் உடலுக்குள் அரும் பெரும் சக்தி பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

உடல் நமக்குச் சொந்தமல்ல… சொந்தமல்ல…! என்று ஏன் அடிக்கடி சொல்கிறோம்…?

 

உடலை நாம் சொந்தமாக்கினாலும்… இந்த உடலின் சொந்தத்தை வைத்து… மனித உடலின் தன்மை கொண்டு தான்…
1.இந்த வாழ்க்கையில் நம்மை அறியாது வந்த இருள்களை நீக்கி
2.உயிர் ஒளியாக இருப்பது போன்று நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றிட முடியும்.

ஆனால்
1.மாற்றத் தவறினாலோ மீண்டும் பிறவிக்கே திரும்பச் செல்கின்றோம்.
2.”பிறப்புக்கு” என்று வந்தாலும் அதிலே மீண்டும் மனிதனாகப் பிறப்பது “எத்தனை கோடி ஜென்மங்களோ…!” என்று சொல்ல முடியாது.

இந்த மனித உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று தான் மனிதக் கருவாக உருவாக முடியும். மனித உடலுக்குள் செல்லாது நாம் வேறு ஒரு உடலுக்குள் சென்று மனிதனாக உருப் பெற முடியாது (இது முக்கியம்).

குடும்பத்தில் நம் குழந்தை மீது அன்பைச் செலுத்துகின்றோம் அல்லது உற்ற நண்பன் மேல் அன்பைச் செலுத்துகின்றோம்… பாசத்தைச் செலுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

தன் குழந்தை மீது அன்பையும் பாசத்தையும் செலுத்தி விட்டால் கடைசியில் உடலை விட்டு நம் உயிரான்மா செல்லும் பொழுது யார் மேல் அன்பையும் பாசத்தையும் வைத்தோமோ “அந்த உணர்வு தான் முன்னணியில் இருக்கும்…. அந்த உடலுக்குள் தான் புகுவோம்…” (நண்பனோ அல்லது நம் குழந்தையோ)

ஆனாலும்
1.உடலை விட்டு ஆன்மா வெளியே செல்லும் பொழுது கடும் நோயுற்றுத் தான் வெளியே செல்கின்றது.
2.அதாவது… உடலின் இயக்கம் சீராகாதபடி உடல் நலிந்து உறுப்புகள் பின்னமாகி
3.அதன் பின் தான் இந்த உயிரான்மா வெளியே செல்கின்றது.

நாம் எந்த நிலையில்… எந்த நோயின் காரணமாக… இந்த உடலை விட்டு வெளியே செல்கிறோமோ பாசமாக இருக்கும் அந்த உடலுக்குள் தான் உயிரான்மா செல்லும்.

அவ்வாறு அந்த உடலுக்குள் உயிரான்மா சென்றால் இந்த உடலிலே எந்தெந்த நோய்கள் உருவாகி அவஸ்தைப்பட்டோமோ… அதே உணர்வை அந்த உடலிலும் செயல்படுத்தும்.

இந்த உடலில் எந்த ஆசைகள் பட்டோமோ… எதை எதையெல்லாம் செயல்பட வேண்டும் என்று எண்ணினோமோ… இதே உணர்வுகள் நமக்குள் வளர்க்கப்பட்டு யார் மேல் பாசமாக இருந்தோமோ… அந்தப் உடலுக்குள் நாம் சென்ற பின் “பேயாகத்தான்” ஆட்டிப் படைப்போம்.

நம் ஆசைகளை நிறைவேற்ற… இந்த உணர்வுகளை இங்கே தூண்ட இந்த ஆசையின் நிமித்தமே நோய் இங்கே (முதலில்) விளைந்தது.

அதே விளைந்த உணர்வின் தன்மை உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிர் தன்னுடன் அதனை அழைத்துச் சென்று… யார் மேல் பாசம் கொண்டோமோ அவர் உடலுக்குள் சென்று… அந்த உடலுக்குள் அதே தீய விளைவை உருவாக்கி… அந்தக் குடும்பத்திலும் கஷ்டத்தை உண்டாக்கி நோயையும் உருவாக்கி… பேயான ஆசைகளைத் தூண்டி… வேதனையான உணர்வுகளை அங்கே அதிகமாக உருவாக்கி… “அந்த உடலையும் வீழ்த்தும்…”

பின் அந்த உடலில் வளர்த்த அந்த உயிரான்மா… அவர் உடலில் என்னென்ன ஆசைகள் வந்ததோ… இதே பேயின் உணர்வு கொண்டு “இன்னொரு உடலுக்குள் சென்று பேயின் தன்மையாக (இப்படி வரிசையாக) இயக்கும்…”

இந்த உடலில் இருந்து ஆன்மா (முதலில் புகுந்தது) வெளிவந்த பின் மனிதனுடைய சிந்தனையே அதற்கு இருக்காது.

காரணம் ஒரு துளி விஷத்தை உட்கொண்டால் நம் நினைவு தடுமாறுகின்றது. கூட ஒரு துளி விஷம் உட் கொண்டு விட்டால் மனிதனுடைய நினைவே இருப்பதில்லை… இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.விஷத் தன்மை அதிகமாகி… உயிரான்மா மனிதனுடைய நினைவை இழந்து…
2.எத்தகைய விஷத் தன்மையை வளர்த்துக் கொண்டதோ அந்த விஷத்துடன்
3.இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவில் மிதந்து கொண்டே இருக்கும்.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் பொழுது அதனின் விஷத்தின் அளவுகோலுக்கு ஒப்ப… ஒரு விஷத் தன்மை கொண்ட உடலின் ஈர்ப்புக்குள் செல்லும். மனித உரு பெறும் தகுதி இழக்கப்படுகின்றது.

இதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆகவே வாழக்கூடிய நாள்களில் உடலில் நல்ல நினைவு இருக்கும் போதே மகரிஷிகள் உணர்வை உடலில் விளைய வைத்து
1.(நம்மை) உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து
2.யாருடைய ஈர்ப்புக்குள்ளும் சிக்காது நாம் விண் செல்ல வேண்டும்.

நானே வழிகாட்டிச் செல்கின்றேன்… எல்லாம் புலப்படும்…!

 

சத்தியம் என்பது என்ன…? உனக்கு மேல் என் சிஷ்யனுக்குத் (ஞானகுரு0 தெரியும்.
1.சிஷ்யன் என்றால் அவன் மட்டும் அல்ல…
2.எல்லோரும் என் சிஷ்யர்கள் தான்.

சத்தியம் தான் ஜெயிக்கும் என்று சொல்கின்றோம். உண்மைதான் சத்தியம். எவன் ஒருவன் உண்மையில் இருந்து விலகாமல் அந்த உண்மையைக் கடைப்பிடிக்கின்றானோ அது தான் சத்தியம்.

சத்தியம் என்பதே உண்மை. ஒரு உண்மையை நாம் மறைக்கும் பொழுது சத்தியத்திலிருந்து விலகுகின்றோம்.
1.இடம் பொருள் சூழ்நிலை அறிந்து எந்தக் காரணத்தினாலும்… கடவுளாகவே இருந்தாலும் சத்தியம் செய்யாதே.
2.உன் உடலால் மனதால் சத்தியவானாக இரு.

நான் சொல்வதெல்லாம் உனக்கு மட்டுமல்ல… என்னிடத்தில் மனதை ஐக்கியப்படுத்தியுள்ள எல்லோருக்காகவும் தான்.

(ஒருவர் கொல்லிமலைக்கு அருகாமையில் உள்ள ஈஸ்வரன் கோயில் அது அமைதியான இடம் தியானத்திற்கு ஏற்ற இடம் என்று சொன்னார்). அதற்கு குருநாதரின் விளக்கம்.

தியானத்தில் இருக்க தனிமையான இடமும் சோலைகள் அடர்ந்த அமைதியான இடமும் பிற சத்தங்கள் வராத இடமும் தான் தியானத்திற்கு ஏற்ற இடமா…? இல்லை…!
1.எந்த நிலையிலும்… எங்கு இருந்தாலும்…
2.எவன் ஒருவன் ஒரு நிமிடமாவது ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்துகிறானோ “அதுவே தியானத்திற்கு ஏற்ற இடம்…”

சித்தர்கள் முனிவர்கள் இருப்பது போல் உலகப் பற்றை விட்டுத் தியானத்தில் இருந்தால் தான் தியான நிலை என்பது அல்ல. உலகத்தில் உள்ள எல்லோரும் அது போன்று செய்ய முடியாது.

1.அவரவர்கள் ஏற்றுக்கொண்ட கடமையைச் செய்து கொண்டே
2.ஈஸ்வர தியானத்தில் இருப்பவர் எல்லோருமே ஈஸ்வரனின் அருளைப் பெறுகின்றார்கள்.

நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றீர்கள்… குழந்தைகளுக்குக் கல்யாணம் முடிந்த பிறகு நமது கடமை எல்லாம் முடித்துப் பிறகு தெய்வீக வழியில் ஈடுபடுகின்றோம் என்று…!

குழந்தைகளுக்குக் கல்யாணம் ஆனவுடன் நம் கடமை தீர்ந்து விட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
1.தீர்ந்து விடுமா…? எந்தக் கடமையும் தீர்ந்து விடாது.
2.நீங்கள் இருக்கும் வரை நினைப்பது போல் எல்லாம் நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்.
3.நினைப்பது எல்லாம் நடந்து விடுமா…?
4.நீங்கள் இருக்கும் வரை கடமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

நீங்கள் இப்பொழுது இருக்கும் நிலையிலேயே “கடமை பந்தம் ஆசைகளை விட்டு விடலாம் என்று நினைக்காமல்…” இப்போது செய்யும் முறையிலேயே தியானத்தைத் தொடர்ந்து செய்து வாருங்கள்.

கடமைகள் தீர்ந்த பிறகு தான் இதிலே ஈடுபாடு வைக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.
1.நானே வழிகாட்டிச் செல்கின்றேன்… இதிலிருந்தே எல்லாம் புலப்படும்.
2,என் அருளும் ஆசீர்வாதமும் என்றும் உண்டு.

தன்னையே தான் பார்த்து விட்டான்…! தன்னுள் ஈஸ்வர சக்தி இருக்கும் என்று உணர்ந்து விட்ட பிறகுதான் இது தெரிந்திருக்கும்.

சாமியிடம் (ஞானகுருவிடம்) சொன்னால் மிகவும் சந்தோஷப்படுவான்.

காட்சி:- ஜோதி – மயில் – கிண்ணம் – கிண்ணத்தில் இருந்து பெரிய பாத்திரம் – கிண்ணம் போய் விடுதல் – பாத்திரம் பெரிய கிண்ணமாக – அந்தரத்தில் – கிண்ணத்தில் வெள்ளை ஆகாரம். முனிவர்கள் கிண்ணத்தில் இருந்து ஆகாரம் கிரகிக்கின்றார்கள்.

உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்… உன்னையே நீ காண்பாய்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவருமே கூட்டுத் தியானம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு பேர் சேர்ந்தாலும் கூட்டுத் தியானங்கள் அமைக்கலாம்.
1.ஏனென்றால் ஒருவர் கை தட்டுவதைக் காட்டிலும்
2.பலர் சேர்ந்து கை தட்டும் போது ஓசை அதிகரிக்கும்.

அதைப் போன்று தான் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் கணவன் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்… என்று எல்லோரும் சேர்ந்து எண்ணுதல் வேண்டும்.

அதே போல் அருள் ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் தியானத்தில் கலந்து கொள்ளும்படி பழக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்…! என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சி… இந்த உணர்வுகளைக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

1.இதைப் போன்று எண்ணி எடுக்கும் இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
2.நமக்குள் தெளிந்த மனம் பெறச் செய்யும்…
3.அது நமக்குள் பேரருளாக மாறும்… பேரொளியாக மாறும்

இந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லப்படும்போது அவர் மனதைத் தெளிவாக்கி… அவர்களையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.

அந்தத் தெளிவான மனதையும் தெளிந்திடும் மனதையும் அங்கே உணர்த்தும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அந்த தெளிவான உணர்வும் தெளிந்த மனமும் உருவாகும்.

இதைப் போன்ற ஒரு பழக்கத்திற்கு வந்தால் மனிதன் என்ற முழுமையை நாம் அடையலாம். பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையலாம்.

வீட்டைப் புதிதாகக் கட்டினாலும் அதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம்.

இங்கே இந்தத் தியான மண்டபத்தையே அமைத்திருக்கிறோம் என்றாலும் சில காலம் அதைத் தூய்மைப்படுத்தவில்லை நெடி ஏறி விடும். பின் இங்கே வரும் போதே உள்ளுக்குள் நுழையும் போதே சங்கடம் வந்து விடும்.

அதே போல் தான் நம் வீட்டைச் சில காலம் திறந்து உபயோகப்படுத்தாதபடி விட்டு விட்டால் வீட்டிற்குள் நுழைந்தால் நெடி வரத் தான் செய்யும்.

அன்றாடம் நாம் குளிக்காமல் இருந்தால் உடம்பில் அரிப்பு வரும். நாம் அணிந்திருக்கும் துணியைத் துவைக்காமல் விட்டு விட்டால் அது இற்றுப் போகும். எல்லோருக்கும் இது தெரிந்தது தான்.

ஆகவே நம் ஆன்மாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா…?
1.அருள் ஞானிகளின் அருள் உணர்வைக் கொண்டு
2.நமது ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்

ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இந்த இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழச் செய்யுங்கள். அதற்குண்டான உணர்வுகளையும் உபாயங்களையும் கூட்டுங்கள்.

நீங்கள் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல… ஊருக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

1.ஒரு பத்து குடும்பங்கள் இது போன்று ஒன்றுபட்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்தால் அந்தத் தெருவே சுத்தமாகும்
2அங்கு வசிக்கக்கூடிய மக்களும் தெளிவு அடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாமல் வரும் பகைமை உணர்வையும் மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக இது மாறும்.
4.அந்த வீடோ தெருவோ ஒரு சொர்க்கலோகமாக மாறும்
5.மற்ற இடத்திலிருந்து அங்கே யார் வந்தாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் சக்தியாக இது வரும்.

ஆகவே தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வினை முதலில் உங்கள் குடும்பங்களில் இத்தககைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் அது பேரொளி ஆகின்றது. நமக்குள் பேரொளியின் அணுக்களாக விளையத் தொடங்குகின்றது.
1.இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சிகளை
2.நாம் ஒவ்வொருவரும் அவசியம் கொண்டு வர வேண்டும்.

நெற்றிக் கண்ணைக் காட்டுதல்

 

அன்பே சிவம்… அன்பே சத்தியம்… அன்பு இல்லார்க்கு இந்த உலகம் இல்லை… அன்பு… அன்பு…! என்று பாட்டுப் பாடுகின்றார்கள். அந்த அன்பு என்பது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் முதலாம் மந்திரம்.

எல்லோரும் ஞானிகள் சித்தர்கள் ஆகிவிட முடியாது. ஞானிகளாகவும் சித்தர்களாகவும் ஆகித்தான் கடவுள் அருளைப் பெற முடியும் என்பது இல்லை.

சாதாரண மனிதனுக்கு வெறும் அன்பை மட்டும் வைத்துக் கொண்டு ஜீவிதம் செய்து விட முடியாது. அவனவன் காலத்திற்குத் தகுந்த மாதிரி மேடு பள்ளம்… நெளிவு… சுளிவு… எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாம் இருக்கும்.

ஒரு தந்தை தன் மகனுக்கு அன்பை மட்டும் ஊட்டி வளர்த்தால் அந்த மகன் உருப்படுவானா…?

ஈஸ்வரன் படத்தைப் பார். அவர் கழுத்தில் இருக்கும் பாம்பு… கையில் இருக்கும் சூலாயுதம்… அவர் ஜடாமுடி… நெற்றிக்கண்… தலையில் பிறைச்சந்திரன்… தண்டை சலங்கை… புலித்தோல்… உடுக்கை…! எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் உருவம் தான் சித்தர்களால் சிவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றையும் தரித்துக் கொண்டு
1.அவர் முகம் மட்டும் அன்பாக சாந்தமாகக் காட்டுகிறார்.
2.இதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா…?

உருவம் இல்லாத சிவனுக்குச் சித்தர்களால் கொடுத்த உருவத்தில் அவர் அங்கத்தில் தரித்திருக்கும் பொருள்கள் எதற்காக என்று தெரிகிறதா…?

இதன் உள் அர்த்தம்…
1.காட்சி:- வாயைத் திறந்து ஏதோ உள்ளே விடுதல் இந்த மாதிரியான உருவத்தில் பார்க்கும் பொழுது உனக்குப் பயமாக இருக்கும்.
2.காட்சி:- நெற்றிக்கண்ணை எடுத்துக் காட்டுதல். இதைப் பார்த்தவுடன் பயமாக இருக்கிறது அல்லவா…?

தெய்வமாக நெற்றிக்கண்ணைக் காட்டியது… முதலில் பயந்த பிறகு… கடவுளே நெற்றிக்கண்ணைக் காட்டியபோது எனக்கு என்ன பயம்…? என்று இருந்தாய்.

இது போல தந்தை… அன்பினால் மட்டும் மகனை வளர்க்க முடியுமா…? என்று கேட்டேன் அல்லவா. ஈஸ்வரர் நெற்றிக்கண்ணைக் காட்டியது போல் காட்டித் தான் அவனைத் திருத்த வேண்டும்.

இதே மாதிரி தான் அவர் தரித்திருக்கும் ஒவ்வொரு பொருளின் விளக்கமும். சித்தர்கள் மனிதர்களுக்குப் புரிவதற்காக கொடுக்கப்பட்ட உருவங்கள் அனைத்தும் இது போன்றுதான்.

மனதில் பதிய வைத்துக் கொள்.

அன்பினால் மட்டும் வென்று விட முடியுமா…? அன்புடன் மட்டும் இருந்தால் வாழ்க்கையினை நடத்திச் செல்ல முடியுமா…? சாமியிடம் (ஞானகுரு) கேட்டுத் தெரிந்து கொள்.

சாமி வரும் பொழுது வீண் கதைகள் பேசாமல் அவரிடத்தில் விளக்கங்களைக் கேட்டு தெரிந்து கொள்.
1.அவன் என்னிடம் உத்தரவு கேட்பான்
2.நான் சிவனிடம் வாங்கித் தருகின்றேன்…!

பார்த்தாயா…! யாரும் யாரையும் வெல்ல முடியாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றுப் பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது…!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல… நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி… தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

உதாரணமாக… சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை… என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது… என் பையன் இப்படி இருக்கின்றானே…! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக… பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

1.சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும்.
3.புதிய உணர்வு நல் உணர்வுகளாக நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்று கேன்சர் போன்ற நோய்களைப் போக்கும் சில பச்சிலைகளைக் காட்டினார். அதை வைத்து நோயினை அகற்ற நீ உதவி செய்தாலும்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்.
2.இதனை வாக்காக நீ அவருக்குக் கொடு.
3.இந்த அணுவின் தன்மை அங்கே விளையும்.
4.அவர்கள் அதை வளர்த்தார்கள் என்றால் அவரை அறியாது சேர்ந்த பாவ நிலையைப் போக்கும் நிலை வருகின்றது.

அவர்கள் எண்ணியதை அவரின் உயிர் உருவாக்குகின்றது. அணுவின் தன்மையை உடலுக்குள் பெருக்குகின்றது.

உதாரணமாக ஒருவன் கோபமாகப் பேசுவதை “நாம் கேட்டறிந்தால்” நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
1.ஆனால் கேன்சரை நீக்கும் உணர்வை நீ நுகர்ந்தாய்.
2.அந்த விஷ அணுக்கள் செயலற்றதாக ஆக வேண்டும் என்று “இந்த வாக்கினைக் கொடு…”

இந்தப் பதிவின் நினைவு கொண்டு யாரெல்லாம் தியானிக்கின்றார்களோ நஞ்சினை வென்ற துருவ மகரிஷிகளின் உணர்வுகளை அவர்கள் பெறுவார்கள் அந்த விஷத்தின் தன்மை அப்பொழுது தணியும்.

எதை எண்ணி ஏங்கிப் பெறுகின்றார்களோ அதை அவர்கள் உயிர்தான் இயக்குகின்றது.

“நான் செய்தேன்…” என்று (பெருமைக்காக) நீ இதைச் செய்தால் அவர் செய்யும் தீமைகளில் இருந்து விடுபட மாட்டார்.

உடல் நலம் பெற்று நல்லது வந்த பின்… மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் அவர் (அறியாமலே) செயல்பாடுவார். வேதனையைத் தான் மீண்டும் மீண்டும் நுகர்வார்.

அதே நோய் வரத் தொடங்கும் அவரின் விளைந்த உணர்வுகள் மற்றவருடன் உறவாடும் பொழுது அவர்களிலும் அந்த உணர்வு பதிவாகும். பதிவின் நிலையே அங்கே செயலாகும்.

இதை முழுமையாக மாற்றும் நிலை இல்லை…!

முழுமையாக நீக்க வேண்டும் என்றால்
1.நாம் வாழும் இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால்
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரையும் நுகரச் செய்.
3.இந்த உணர்வின் துணை கொண்டு இருளை மாய்க்கச் செய்…!

பிறவியில்லா நிலை அடையும் பருவம் பெற்றது தான் இந்த மனித உடல். ஆகவே ஓவ்வொருவர் உயிரையும் ஈசனாக மதி… உடலைக் கோவிலாக மதி… உடலைச் சிவமாக மதி.

அருள் சேவை என்ற நிலையில் அருள் ஞானத்தின் உணர்வை ஊட்டும் ஊழ் வினை என்ற ஞான வித்தாக ஊன்று…!

அந்த வித்தினை எவர் எவர் வளர்த்துக் கொள்கின்றார்களோ அவர்கள் இந்த பாவ வினையும் சாப வினைகளையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள்… தீய வினைகளிலிருந்து விடுபடுகின்றார்கள்.
1.இதை மீண்டும் வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை வளருகின்றது
2.இப்படி வளர்த்தால் தான் அந்த நிலையை அடைய முடியும்

மாறாக… உன் கையால் பலருக்கு நீ நன்மைகளைச் செய்து கொடுத்தாலும் நல்லதான பின் “அந்த நேரத்திற்குத் தான்” எண்ணுவார்கள்.

அடுத்து பிறரை வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்வார்கள். நுகர்ந்த பின் வேதனைப்படும் சொல்லே மீண்டும் அவர்களுக்குள் வரும்.

இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாக முதலில் பதிவான நிலை மீண்டும் தன் சத்தினை நுகர்ந்து அந்தத் தீய அணுக்களையே உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போய்விடும் என்றார் குருநாதர்.

ஆகவே நீ சக்தி பெற்ற நிலைகளில்
1.அருள் ஞான வித்தினை அங்கே ஊன்றி விடு
2.அதை வளர்க்க உபாயத்தைக் கூறு
3.அதன் வழிகளிலே அவர் நுகரட்டும்
4.அருளைப் பெறட்டும் இருளை அகற்றட்டும்.

விநாயகர் தத்துவப் பிரகாரம் மனிதன் தான் முழு முதல் கடவுள். தீமைகளை அகற்றிடும் உணர்வினை விளைவித்து தீமைகள் அகன்றிட வேண்டும் என்று “கூட்டுத் தியானங்கள் அமைத்தால்… அருள் சக்திகளைப் பரவச் செய்தால்… தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும் அதிகரிப்பார்கள்…!”

1.அந்த உணர்வுகள் அதிக அளவிலே விளையப்படும் போது
2.அந்த அலைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலை வளரும்… அதை நீ செய்…! என்று சொன்னார் குருநாதர்

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்…
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி…!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்…!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து… அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக… நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி… ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்… மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து… அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி… அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது…!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்…?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்… அவர் பாட்டுக்குப் போகின்றார்… கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்…! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல…!

ஆக… அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல…!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்… இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்… இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).

ஈஸ்வரன் அருள் கிட்ட வேண்டுமா…?

 

உன்னை நீ நம்பு… ஈஸ்வரனின் அருள் இங்கே வட்டமிட்டுக் கொண்டே உள்ளது.

முதல் பாடத்தைச் சொல்லிவிட்டேன் இனி அடுத்ததெல்லாம் ஆன்மீக வழிக்குத் தான். உன் தியான நிலையில் மனதை ஒரு நிலை நிறுத்தி ஆண்டவனிடம் ஐக்கியப்படுத்து.

1.உன்னை நீ நம்பு என்பது…
2.உன்னுள் இருக்கும் என்னை நீ காண்… “புரிந்ததா…?”

நீயே நீ அல்ல என்னும் பொழுது உன்னுள் இருக்கும் என்னை நீ சீக்கிரம் காண்பாய்.

மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படாதே. எதுவும் நினைத்தவுடன் தானாக நடக்கும் என்று நினைக்காதே.
1.உன்னுள் இருக்கும் “என்னையே”
2.நீ தெரிந்து கொள்ளாமல் இருக்கும் பொழுது ஏன் குழப்பம் அடைகின்றாய்…?

நீ கஷ்டத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று பார்த்தாய்…! தப்பித்து எங்கே சென்று விடலாம் என்று பார்த்தாய்…? தப்பித்து என்னிடம் தான் சேரலாம் என்று இருந்தாய்.

1.நானே உன்னுள் இருக்கும் பொழுது
2.என்னிடம் வந்து சேரலாம் என்று ஏன் இருந்தாய்…?

ஓவ்வொரு உடலிலும் இருக்கும்
1.என்னைப் பரிபக்குவமாக ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யார் யாருக்கு உள்ளதோ
2.அவர்களுக்கு என் அருள் சீக்கிரமாகவே கிடைக்கும்.

காட்சி:-
ஜக்கில் சுடச்சுட காப்பி…! தட்டில் விட்டு ஆற்றிக் குடிக்கின்றார்.

மனம் கொதிக்கும் நிலையில் இருந்தாலும் “மனதை ஈஸ்வரனிடம் கொடு…! நான் உன்னுள்ளே இருக்கும் பொழுது நீ ஏன் கவலைப்படுகின்றாய்…?

எல்லாம் அவன் செயல் என்கிறாய்…! மரம் நட்டவன் தண்ணீர் ஊற்ற மாட்டானா…? என்பது பழமொழி.

மரம் நட்டவன் நிச்சயம் தண்ணீர் ஊற்றுவான். அதை ஏற்று உறிஞ்சுவது மரத்திடம் தான் உள்ளது. மரம் நட்டதும் தண்ணீர் ஊற்றியதும் ஆண்டவனாக இருக்கின்றான்.
1.மரம் தண்ணீரை ஏற்று எந்த அளவில் காயாகவும் பழமாகவும் பலன் கொடுக்கிறதோ
2.அது மரத்தின் வேலை தான்.

ஒரே இடத்தில் பக்கம் பக்கமாக மரம் வைத்தாலும் சில நன்றாகவும் சில சரியாகவும் காய்ப்பது இல்லை. சில பட்டுப் போகின்றன இதே நிலைதான் மனிதனுக்கும்.

விதியை மாற்ற ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து.
1.எல்லாம் அவன் செயல் என்று இருக்காதே
2.அவனே உன்னுள் இருக்கும் பொழுது “பாரத்தை” ஏன் அங்கு போடுகின்றாய்…?

உன்னையே நீ காணும் நாள் சீக்கிரத்தில் உண்டு. அந்த நிலைக்கு நீ உன் மனதைக் கொண்டுவர முயற்சி செய்.

இதையெல்லாம் தினசரி வரிசையாக எழுதிக் கொண்டு வா. நான் உத்தரவு தந்த பிறகு புத்தகமாகப் போடலாம். சரியாக எழுத வேண்டும்.

பிற்கால சந்ததியருக்கு இப்பொழுது இருக்கும் அளவுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காது. கோவில் என்பது அவர்களுக்கு சினிமா நாடகம் போல பொழுது போக்கு இடமாகப் போய்விடும்.

கோயில் என்பது அவரவர் அந்தஸ்தை காட்டும் இடமாகத்தான் உள்ளது… புரிந்ததா…?

வரும் சந்ததிகளின் காலத்திற்கு “கடவுளின் உண்மை சொரூபம் என்ன…?” என்பதற்கு புத்தகம் தனியாகப் போடலாம்.

“எனக்கு வேண்டியர்… உனக்கு வேண்டியவர்…” என்று யாருக்கும் காட்ட வேண்டாம். கல்லாக என்னை நினைத்து வணங்குபவர்களுக்கு இப்போது சொன்னால் புரியாது.

உனக்கே இத்தனை நாள் கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…? சாமி (ஞானகுரு) வந்து விளக்கம் சொல்லியும் குழப்ப நிலையில் தான் இருந்தாய்.

இப்பொழுது கடவுள் என்றால் யார் என்று புரிந்ததா…?

ஒவ்வொரு மனிதனும் சந்தோஷம் என்று எதை நினைக்கின்றானோ… அதற்காக தர்மம் நியாயம் பக்தி என்று எதையும் பார்க்காமல் தன் சந்தோஷத்திற்காகச் செய்ய பார்க்கின்றான்.

சந்தோஷம் என்றால் என்ன…? என்று புரியாத மனிதர்களிடம் எப்படி விளக்குவது…?

எல்லா மனிதர்களும் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

மனதை அமைதிப்படுத்தித் தன் நிலையைத் தான் உணர்ந்து மனதில் உள்ள சோர்வு சோகம் குரோதம் மனதில் உள்ள தாழ்வு இதையெல்லாம் விட்டுவிட்டு… எவன் ஒருவன் தர்மம் நியாயம் அன்பைக் கடைபிடிக்கின்றானோ “அவனுக்கு எல்லா அருளும் கிடைக்கும்…”

பூஜை என்பது என்ன…?

 

மனச்சாந்திக்காக எல்லோரும் பூஜை செய்கிறார்கள். சாமி (ஞானகுரு) சொன்னது போல் தியான மார்க்கத்திற்கு வந்தால் போதும். மனதை ஐக்கியப்படுத்தித் தியான மார்க்கத்திற்குப் போகவும்.

கடவுள் என்றால் என்ன…? என்பதை முதலில் தெரிந்து கொள்.

பூஜையில் இருக்கும் பொழுது
1.சாமி சொன்ன மாதிரி தாய்… தந்தை… போதனை கொடுத்த குருவிடம்… ஆசிர்வாதம் பெற்றுத் தியானத்தில் ஈடுபடவும்.
2.அடுத்து சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளை நினை.
3.அடுத்தது ஈஸ்வரா என்று நினைத்து மனதை ஐக்கியப்படுத்து.

கடவுள் எல்லாம் ஒன்றே என்று இருக்கும்பொழுது ஈஸ்வரனைப் புருவ மத்தியில் நினைத்தால் போதும்.

மாய ரூபம் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி உள்ளேன்… “ஜோதியே போதும்…!”

விநாயகர் முருகனை நினைத்துத் தியானித்தால் போகரின் காட்சி சீக்கிரம் கிடைக்கும். மனதை ஐக்கியப்படுத்தினால் கிடைக்கும். முனிவர்கள் சித்தர்கள் காட்சி வேண்டுமா…! அல்லது ஜோதி காட்சி வேண்டுமா…?

குழந்தைப் பாக்கியம் இல்லாத வரத்துடன் வந்திருக்கிறார்கள் குழந்தை இல்லை என்றால் அது அவரவர்கள் செய்து வந்த பூஜா பலன்… பிறவியிலிருந்து வந்த பலன் தான். மாற்றுதல் கடிநம்.
1.ஈஸ்வரனிடம் இருந்துதான் கேட்டு வாங்க வேண்டும்…
2.நம்பித்தான் கேட்டு மனதை ஐக்கியப்படுத்தித் தியானித்து வாங்க வேண்டும்.

“சந்தேக நிலை…” நிலையாக இருப்பதால் ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்து. (காட்சி:-) மார்க்கண்டேயன் வரப் பலன் பெற வேண்டும்

பூஜைக்கு வரச் சொன்னது வழிமுறைக்காகத்தான். ஈஸ்வரனிடம் மனதை ஐக்கியப்படுத்திக் கேட்கவும் இதற்கு நீயோ நானும் என்ன செய்ய முடியும்…? பாடம் போதுமா… வேண்டுமா…? இன்னும் கேட்கலாம்… அவன் எழுத வேண்டாமா…!

நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…?

 

நான் யார்…? இன்னவர் மகனா…? இன்னவர் கணவனா…? இன்னவர் மனைவியா…? இன்னாரின் அப்பாவா… அம்மாவா…?
1.நீ இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்க்கை நடத்தி முடிக்கும் வரை தான் சொந்தம் பந்தம் எல்லாம்…
2.இறந்த பின் மறுபடியும் பிறப்பு.
3.பிறந்த பின்… இந்த வாழ்க்கையில் (மீண்டும்) ஒரு சொந்த பந்தம் குடும்பம்… வாழ்க்கை… பெயர்… எல்லாம்……

குழந்தைப் பருவத்தில் ஓர் ஆடை அணிகின்றோம். பிறகு வயதுக்குத் தக்க ஆடைகளை அணிகின்றோம். ஆக… ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு பெயர் வாழ்க்கை… சொந்த பந்தங்கள்…!

1.பிறப்பு எடுக்கும் முன்னும்… இந்தப் பிறப்பிலிருந்து வேறு பிறப்புக்குப் போகும் போதும் உன் நிலை என்ன…?
2.எத்தனையோ வாழ்க்கையும்… பிறப்பும்… அப்போது நான் யார்…?
3.பிறப்பு என்பது தொடர்ந்து வரும் போது… நான் என்பது யார்…?

எந்தப் பிறப்பும் எடுத்து முடியும் வரை எந்தவித ஆசைகளும் நிறைவேறாமல் தான் போகின்றோம். அடுத்து ஓர் பிறவியில்… மறுபடியும் அனுப்பும் போதும் ஆசைகள் நிறைவேறாமல் தான் போகிறோம்.

1.”என்று” ஆசைகள் பற்று பாசம் இல்லாமல் உலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறோமா…
2.முழு நிறைவோடு போகிறோமோ… அதன் பிறகு பிறவி இல்லை.

தற்போது நான் என்கிறது யார் என்று தெரிகிறதா…? எங்கும் எதிலும் இத்தகைய விளக்கம் இருக்காது…!

ஆகவே வாழ்க்கையில் சலிப்புடன் இல்லாமல் “நிறைவோடு வாழ்…!”

வேலைக்காரனை முதலாளி ஒரு வேலை கொடுத்து அனுப்பும் பொழுது… சரியாக வேலை செய்து முடித்து அவன் வரவில்லை என்றால்… மறுபடியும் அனுப்பிச் சரியாக செய்து வரச் சொல்லி அனுப்புவது போல்… பிறவி எடுத்ததிலும் நிறைவோடு இல்லாமல் ஆத்மா பிரிந்தால் “மறுபடியும் பிறவி எடுத்துத் தான் ஆக வேண்டும்…”

விதியை யாராலும் வெல்ல முடியாது என்கிறார்கள். விதி என்பது என்ன…? விதி என்பது வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பம் தான்…!

ஆண்டவனை நினைத்தால் விதியை வெல்லலாம். பாசம் பிடித்த இடத்தில் நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து விடுகின்றோம். அதே இடத்தில் ஆண்டவனை நினைத்து ஜாக்கிரதையாக நடக்கும் பொழுது விழாமல் நடக்கின்றோம்.

விழுந்து விட்டால் விதி என்றும் விழாமல் நடந்தால் ஆண்டவன் செயல் என்றும் சொல்கிறோம். அது மாதிரித் தான் நம் வாழ்க்கையிலும் வழுக்கலும் இருக்கலாம் சம தரையும் இருக்கலாம்

1.கஷ்டம் வரும்போது… அந்தக் கஷ்டத்தை நாம் எப்படி வெல்லுகிறோமோ
2.கஷ்டம் வரும் போது கடவுளை நிந்திக்காமலும் மனம் தளராமலும் வெல்லுகிறவன் தான் வாழ்க்கையின் பலனைப் பெறுகின்றான்

கஷ்டம் வரும்போது எல்லாம் தாண்டி வந்துவிட்டு… இப்போது சிறிய இடையூறுக்கு ஏனப்பா உனக்கு இவ்வளவு கலக்கம்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணையால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்

 

ஓர் விஞ்ஞானி தீமைகளை அறிகின்றான்… தீமைகளை அகற்றவும் செயல்படுகின்றான். ஒரு இயந்திரத்தை உருவாக்கப்படும் பொழுது அதிலே சில புரைகள் ஓடிவிட்டால் கடினப் பொருளை அதிலே சேர்க்கப்படும் பொழுது… அந்த இயக்கத்தைத் (எடையை) தாங்காது அது உடைந்து விடுகின்றது.

அது ஏன் உடைந்தது…? என்று விஞ்ஞானி உற்று நோக்கி அதற்குண்டான வலுவின் தன்மையைக் கூட்டி அதை மீண்டும் உருவாக்குகின்றான். இயந்திரத்தை இவ்வாறு தான் உருமாற்றி உருமாற்றிப் பல செயல்களை மாற்றுகின்றான்.

இந்த உடலுக்கு வேண்டிய வசதிகளைச் செய்ய முடிகின்றது. ஆனால் உணர்வால் நுகர்ந்தறிவது தீமையாகி… அது விளைந்த பின் தீமையிலிருந்து விலக விஞ்ஞான அறிவு கொண்டு உடல் உறுப்புகள் கெட்டுவிட்டால் அதை அகற்றி விடுகின்றான்.
1.செயற்கையான மாற்று உறுப்புகளையும் உடலில் இணைக்கின்றார்கள்.
2.ஆனால் நுகர்ந்த வேதனையான உணர்வுகளை இவர்களால் மாற்ற முடியாது.
3.ஆனால் மெய் ஞானிகள் இவ்வாறு நுகரப்பட்ட தீமையான உணர்வுகளை மாற்றிப் பழகியவர்கள்.

தங்கத்திற்குள் கலந்துள்ள செம்பு பித்தளை வெள்ளியை நீக்க திரவத்தை ஊற்றி அதை எவ்வாறு அப்புறப்படுத்தித் தங்கத்தைத் தெளிவாக்குகின்றார்கள். அதைப் போன்று தனக்குள் நுகர்ந்த தீமைகளை நீக்குகின்றார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களும் வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் மாற்ற முடியும் என்ற நிலைகளில் சூட்சுமத்தில் நடப்பதை உருவங்களாகக் காட்டி கதைகளாகத் தீட்டி தெளிவான நிலைகளை நமக்குக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

இன்று ஒன்றாவது வகுப்பிலிருந்து நாம் படித்து வந்தாலும் எந்த விஞ்ஞானி அவன் கண்டுபிடித்தானோ அதனின் வழியில் கல்வியை நாம் பதிவு செய்து கொள்கின்றோம்… அதன் வழியே நாம் செயல்படுகின்றோம்.

இஞ்சினியர் ஆக வேண்டும் என்றால் இயந்திரத்தின் உறுப்புகளை அது எவ்வாறு உருவாக்க வேண்டும்…? அதிலே உலகத்தின் கலவைகள் எவ்வாறு இணைக்க வேண்டும்…? என்று கற்றுணர்ந்த பின் அந்தப் பாடங்களைப் படித்து மீண்டும் நினைவு கொண்டு வந்து கொண்டு வரும்போது தான் விஞ்ஞான அறிவால் இயந்திரத்தை உருவாக்க முடிகின்றது.

மெய் ஞானிகளோ
1.தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது எவ்வாறு உடலாக விளைந்தது…? என்றும்
2.அதனால் விளையக்கூடிய தீமைகள் எது…? என்றும்
3.அந்தத் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும்…? என்றும் காட்டினார்கள்.
4.அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாக யாம் கொடுக்கின்றோம்.
5.மெய் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் விளைந்து அவர்கள் சென்ற பாதையில் சென்றால் என்றும் அழியா நிலைகள் பெறலாம்.

விஞ்ஞான அறிவு கொண்டு உலோகங்களையும் மற்றவைகளையும் கண்டுபிடித்து எடுத்தாலும் அது உணவுக்குத் தான் உதவும். கண்டுபிடித்தது எதுவாக இருந்தாலும் உடலின் இச்சைக்குத் தான் அது உதவும்.

அந்த வழியில்… “நண்பன்” விஞ்ஞான அறிவு கொண்டு இருப்பான் என்றால் எதிர்பாராது விபத்தாகி அவன் இறந்தால் இவனின் ஈர்ப்புக்குள் வந்து அவன் வளர்த்த விஞ்ஞான அறிவைத் தான் இங்கே வளர்க்க முடியுமே தவிர “விண்ணுலகம் செல்ல முடியாது…”

பக்தியின் நிலையில் கொண்டு மெய் ஞானிகள் காட்டிய வழியினை மாற்றி இந்த உடலின் இச்சைக்காக அபிஷேகம் ஆராதனைகளைக் காட்டி அதன் வழி இந்தத் தெய்வம் தான் நல்லது செய்யும் என்று முழு நம்பிக்கையை ஊட்டுகின்றார்கள்.

அந்த நம்பிக்கையுடனே வாழ்ந்து வளர்ந்து பின் உடலை விட்டு இறந்தால் இதே பக்தி கொண்ட இன்னொருவர் அதே ஏக்கத்தில் ஏங்கினால் இறந்த ஆன்மா அவருக்குள் இது சென்று அங்கே அருளாடச் செய்யும். பக்தியை இரு மடங்காக ஆக்கும்… மற்ற நல்லது செய்தாலும் எண்ணத்தில் வராது.

ஆக… நாம் எதைப் பக்தி கொள்ள வேண்டும்…? என்றால் அருள் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி தீமைகள் புகாது நம் நல்ல உணர்வுகளைக் காத்திடல் வேண்டும்.

இன்றைய பக்தி வழிகள் எல்லாம் வேதனையை வளர்க்கும் நிலையாகத் தான் இருக்கின்றது. இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

கற்க வேண்டும் என்றால் கல்விச்சாலைகளில் பல வருடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஆனால்
1.இங்கே யாம் உபதேசிக்கும்போது மெய் ஞானிகள் உணர்வின் வித்தை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.
2.அந்த உணர்வுகளை மீண்டும் நீங்கள் எண்ணினீர்கள் என்றால் துரித நிலைகள் உங்களுக்குள் விளையும்.
3.உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றேன்.
4.எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை நீக்கி… உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி விண் செல்ல முடியும்.

இதை எல்லாம் பத்து நிமிடத்தில் சொல்லி முடித்து விட்டு உங்களை வீட்டுக்கு அனுப்பவும் செய்யலாம். அதிலே பயன் இல்லை. அருள் ஞானிகளின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்… காலத்தைப் பார்க்க கூடாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த இச்சையில் தான் இடைவிடாது மணிக் கணக்கில் யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

தூக்கம்

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகைக் காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை.

ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக “கொட்டாவி வெளிப்பட்டு”
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…?

ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கி விட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

பால்வெளி மண்டலம் எனும் பொக்கிஷம் – MILKY WAY

 

பூமி எப்படித் தன்னுள் இப்பால்வெளி மண்டலத்திலிருந்து அச்சூரியனின் ஒளிக்கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களைத் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ… அந்நிலை போல் இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எச்சக்தியையும் கண்டுணர முடியும்…”

இந்தப் பூமியில் சூரியனின் ஒளிக்கதிர் பட்டு இந்தப் பூமியும் நாமும் மட்டும் பயன் பெறவில்லை. இந்தப் பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான இந்தப் பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்…?

இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து அந்த நிலையிலேயே மாற்று உடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.

இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன. இன்றைய நம் விஞ்ஞானிகள் அதை உணர்ந்தாலும் அந்தத் திரவங்களையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்தி விடுவார்கள்.

இன்னும் இந்த வான் மண்டலத்தில் எண்ணிலடங்காத சக்தி நிலைகள் படர்ந்துள்ளன.
1.நாம் காணும் நிலைக்கு மேகங்களும் பால் வெளி மண்டலமாகவும் காட்சி அளித்திடும் இந்த பால்வெளி மண்டலத்தினால் தான்
2.அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழன்று கொண்டிருக்கின்றன.

பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலமுமே
1.தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பது அல்ல.
2.சுழன்று கொண்டே ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காத வண்ணம் சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.

புதிய புதிய நட்சத்திர மண்டலங்களைக் காணுகின்றோம். ஆனால் தொடர்பு கொண்டு என்றும் காணும் நட்சத்திர மண்டலங்கள் இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தி நிலை கொண்டும் இப்பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்
1.இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபடுத்தி உள்ளதால்
2.இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்று அதன் ஈர்ப்புடனே வருகின்றன.

இப் புதிய நட்சத்திர மண்டலங்கள் தான் இப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இந்தப் பால்வெளி மண்டலத்திலிருந்து “ஒன்றுபட்ட அமிலத்தினால்” சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கே சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.

இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில சக்தி கலந்துள்ளதாக இருந்தால்… இந்த ஈர்ப்பில் வந்தடையாமல் அதன் நிலையே உருகும் நிலையாகப் பரந்த நிலைப்படுத்தி பிரிந்து விடுகின்றது.

இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள் யாவையுமே… இப் பூமியைப் போலவும் இவ் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல் ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.

பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்து உள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.

அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.

இந்த பூமியில் உள்ள எல்லா கனிவர்க்கங்களுமே கரைபவை தான்… ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில் மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கு மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.

நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதினால்
1.நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனி வர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி உள்ளன.
2.இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் நிலையில்
3.தங்கத்தையே ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து… நட்சத்திர மண்டலமாக “பல கோடி சுற்றிக் கொண்டுள்ளது…”

இந்தப் பூமியின் கனிவளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோளங்களின் நிலை அறிந்திடச் செல்கின்றான். இந்த சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி நிலையை அறியாததினால்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உங்களுக்கு எது சொந்தம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுதுமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெருக்குங்கள். அதைச் சொந்தம் ஆக்குங்கள்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் பிறருடைய குறைகளைச் சொந்தமாக்க வேண்டாம். அந்தச் சொந்தத்தைக் கொண்டாடவும் வேண்டாம்

ஏனென்றால் அதைக் கொண்டாடி விட்டால் பகைமையான உணர்வு கொண்டு எந்தக் கூட்டத்தில் நீங்கள் சேர்ந்தாலும் அதன் இனப்பெருக்கமாக மாறி விடுவீர்கள்.

நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் எதனை எடுக்கின்றோமோ உணர்வின் செல்கள் அனைத்தும் அதனதன் கூட்டமைப்பாக மாறும்.

உதாரணமாக மான் அதனுடைய இனக் கூட்டமைப்பாக இருந்தாலும் அதுவே மற்ற மானின் குணங்களுக்கு ஒப்ப இணைந்து கொண்டால் வகை வகையான மான்களாக வருகின்றது. அப்படி உருவான பின் அதனதன் கூட்டம் அதனுடன் சேர்ந்து கொள்கின்றது.

1.இதைப் போலத்தான் இந்த உடலுக்குள் எதனின் பெருக்கமாக எந்தெந்தக் குணத்தை அதிகமாக்கிக் கொண்டு வருகின்றோமோ
2.நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் அந்த உணர்வின் தன்மையாக மாற்றி
3.அதனின் கூட்டமைப்பான நிலைகள் கொண்டு அந்தக் கூட்டங்கள் எங்கே வாழுகின்றதோ
4.அங்கே நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

அதாவது நம் உயிரான்மா மற்றொரு கூட்டமைப்புக்குள் சென்று அதனின் உடலுக்குள் நுழைந்து ஆடாகவோ கோழியாகவோ மாடாகவோ புலியாகவோ பாம்பாகவோ மாற்றிவிடும்.

கேரளாவில் ஒடியன் மந்திரம் என்று உண்டு. அந்த மந்திரங்களை நூறு முறை ஆயிரம் முறை என்று சொல்வார்கள். ஆனால் வெறும் மந்திரம் என்று தான் அவர்களுக்குத் தெரியும்.

ஆனால் அந்தந்த உயிரினங்களில் பெருக்கக்கப்பட்ட உணர்வுகள் ஒலி அலைகளாக எடுக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை எப்படி வருகின்றதோ இதைப் போல ஒரு மாட்டின் இறைச்சியின் உணர்வு கொண்டு அந்த உணர்வின் ஒலிகளைக் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே ஆன்மாவில் பெருகும்…. அங்கே அந்த உடலுக்குள் செல்லும்.

மீண்டும் இதனை அகற்றும் உணர்வோடு இன்னொருவர் சொன்னார் என்றால் இந்தக் கூட்டை விட்டு மீண்டும் வெளியே வரும். மீண்டும் இன்னொரு கூட்டிற்குள் சென்று தனித் தன்மையாக அதனுள் சென்று அதுவாக இயக்கும். இதைப் பார்க்கலாம்…!

இதை எல்லாம் நான் (ஞானகுரு) தெரிந்தே சொல்கின்றேன். பாடப் புத்தகத்தில் பார்த்துப் படித்துச் சொல்லவில்லை.

இதைப் போல உணர்வுகளை இயக்கச் செய்து அதனின் உணர்வின் தன்மை கவர்ந்து கொண்டபின் உயிரான்மா உடலை விட்டுச் சென்ற பின்
1.எந்த நிலை பெறுகின்றது…? எதனின் உடலில் ஈர்க்கப்படுகின்றது…?
2.மனித உடலில் இதைப் பெருக்கிய பின் அந்த உடலுக்குள் போய் அதை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீண்டும் வெளி வர வேண்டும் என்றால் என்ன செய்வது…?
4.மனித உடலில் இதை எல்லாம் உருவாக்கப்படும் போது
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு அடுத்த பிறவி எப்படி வருகிறது…? என்றெல்லாம் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

இந்த உடலுக்குப் பின் நாம் இனி பிறவி இல்லை என்ற நிலை அடைய வேண்டும். அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்

 

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லப்படும் பொழுது சந்தர்ப்பத்தில் விபத்துகளைப் பார்க்க நேர்கின்றது. அங்கே சிதறிக் கிடக்கும் உறுப்புகளை உற்றுப் பார்த்த பின் நம்மை அறியாமல் அச்சமும் பதட்டமும் பயமும் வருகின்றது.

சிதறுண்ட அந்த உணர்வலைகளை நாம் எடுக்கப்படும் பொழுது நமக்குள்ளும் அது உருவாகி சிந்திக்கும் செயல் இழக்கச் செய்து எதற்கெடுத்தாலும் பதறும் நிலை வருகின்றது.

1.சிதைந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.
2.நாம் உற்று நோக்கும் போது அதனின் வித்தாக நமக்குள் பதிவாகின்றது.
3.பதிவான பின் அந்த உடலில் விளைந்த “உறுப்புகள் சிதைந்த உணர்வுகள்” நமக்குள் வந்துவிட்டால்
4.நம்மை அறியாமலே நம் உடல் கூறுகள் சிதைந்து கொண்டே வரும்.

இதைத் தீய வினை என்று சொல்வார்கள்.

நாம் தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பம் அதை உற்று நோக்குகின்றோம் அறிகின்றோம். இருந்தாலும் உற்று நோக்கிய தீமையை விளைவிக்கும் அந்த உணர்வுகள் வித்தாக உடலில் விளைகின்றது.

ஒரு டேப்பில் இனிமையான பாடலைப் பதிவு செய்கின்றோம். மீண்டும் அதைச் சுழல விட்டால் அதைக் கேட்கப்படும் பொழுது உடல் அசைகின்றது… இனிமையாக இருப்பதால் முகமும் மலர்கின்றது… நமக்கு மகிழ்ச்சி மேலோங்குகின்றது.

ஆனால் ஒரு வேதனை கொண்ட பாடலை இசைத்தாலோ நம்மை அறியாமலே நம் உணர்வுகள் சோர்வடைகின்றது.

ஒரு வீணையை வாசிக்கிறார்கள். சீராக இசைக்கப்படும் போது மகிழ்ச்சி வருகிறது. ஆனால் அதிலே நாதத்தை எழுப்பும் ஒரு சுருதி மாறி விட்டால் நினைவுகள் உடனே சிதறி… மனதில் இருக்கும் மகிழ்ச்சி அப்பொழுதே குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் முதலிலே சொன்ன மாதிரி ஒரு மனித உடல் விபத்தில் சிதைந்த நிலைகளை நாம் உற்றுப் பார்த்த பின்… அவன் எப்படிக் கடைசி நேரத்தில் வேதனைப் பட்டானோ அதைக் கவர்ந்து கொண்டால் அந்த உணர்வின் சக்தியே நம்மை இயக்குகின்றது.

ஏனென்றால் எதை உற்றுப் பார்த்தாலும்… கண் நம் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுன்றது. மீண்டும் அதனை நினைவு கொள்ளும் போது… திரும்பத் திரும்ப எண்ணிய பின் அது விதியாக மாறி விடுகின்றது.

விதி முளைத்து விட்டால் ஒரு தடவை அச்சமடைந்ததைப் பார்த்த அந்த உணர்வுகள் விதியாக மாறி விட்டால் அந்த கதியின் தன்மையாக நாம் அடிக்கடி பயமடைவதும் என்ன ஆகுமோ என்று அந்த பயத்தின் கதியிலேயே நம்மை இயக்கும்.

இதைப் போன்று நம்முடைய வாழ்க்கையில்
1.நாம் உற்று நோக்கிப் பதிவாக்கியதை மீண்டும் எண்ணும் பொழுது விதியாக மாறி
2.விதியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் மணங்கள் “கதியாக” நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் கதியிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் எதைக் கொண்டு…? மதி கொண்டு தான் அந்த இருளை நீக்க முடியும்.

1.அதற்கு மகரிஷிகளின் அருள் சக்திகளை ஊழ்வினையாக நாம் பதிவு செய்ய வேண்டும்
2.பின் அதனை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து விதியாக நாம் மாற்ற வேண்டும்.

ஏனென்றால் மனிதனின் விதியை மதி கொண்டு மாற்ற வேண்டும். மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை எல்லாம் ஒடுக்கி அதை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணிலே “அதனின் கதியில் அழியாத நிலை கொண்டு சுழன்று கொண்டுள்ளார்கள்…”

1.தன் மதியால் விதியை மாற்றி ஒளியின் சிகரமாக எத்தகைய தீமையும் தனக்குள் அணுகிடாது
2.அந்த கதியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
3.அதை நாம் நுகர்ந்து நமக்குள் வரும் தீய வினைகளை “அந்த விதியை மாற்றி
4.அவர்கள் அடைந்த கதியை நாமும் அடைய வேண்டும்.

இவை என்ன உலக இயற்கை…?

 

(16.12.1979 அன்று தினமணிச் சுடரில் வெளி வந்த கட்டுரை)

அயல் நாட்டுக் கார் ஒன்று நீண்ட படகு போல் வீதியில் வேகமாகச் செல்கின்றது. இதை பார்க்கும் ஒருவர் அருகில் நிற்பவரிடம் சொல்கிறார்.

அந்தப் பெரிய காரில் போவது யார் தெரிகிறதா…? கள்ளக் கடத்தல் செய்து பொருள்களைப் பதுக்கி வைத்து அந்தக் குற்றத்திற்காகத் தண்டனை பெற்றாரே… அவர் தான்…!

ஆமாம்…! அவர்கள் தான் இப்படி ஆடம்பரமாக வாழ முடியும்…! என்று பெருமூச்சுடன் கூறுகின்றார் மற்றொருவர்.

அந்த வியாபாரிக்குத் தண்டனை விதித்த “மேஜிஸ்டிரேட்” அந்த வீதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸுக்காக வெயிலில் நிற்கின்றார். 2… 3… பஸ்களில் ஏகக் கூட்டம் அவரால் ஏற முடியவில்லை. “கோர்ட்டுக்கு நேரமாகிவிட்டதே” என்ற துடிப்போடு அடுத்த பஸ்ஸை எதிர்பார்த்து நிற்கின்றார்.

அந்த வீதியிலேயே பெரிய வீடு… ஆடம்பரமான பங்களா…! தொடர்ந்து லஞ்சம் பெற்றதற்காக வேலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவருடைய வீடு அது…! என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதே வீதியில் கொஞ்சம் தள்ளி… சிறு வீடு ஒன்றில் அந்த வேலை நீக்கம் பெற்றவருக்கு மேலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வீடு இருக்கிறது.

அவர் நேர்மையான அதிகாரியாகப் பணியாற்றியவர்… எல்லோராலும் பாராட்டுப் பெற்றவர்… வேலையில் திறமையானவர்…! ஆனால் லஞ்சம் வாங்கும் திறமை அவரிடம் இல்லை.

நான்கு பெண்களைப் பெற்ற அவர் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆக கலப்படம் செய்பவர்களும் கள்ளச் சந்தையில் வியாபாரம் செய்யும் வணிகர்களும்… லஞ்சம் பெற்றுக் கணக்கில்லாமல் சேர்த்து வரும் செல்வத்துடன் சீரோடும் சிறப்போடும் வாழுகின்றனர்.

அது மட்டுமல்ல…! ஊராரும் அவர்களைத் தான் போற்றுகின்றார்கள்… புகழ்கின்றார்கள். கள்ளச் சந்தையில் ஈடுபடாத வணிகர்களைக் “கையாலாகாதவர்கள்” என்று இழிவாகக் கருகின்றனர்.

கலப்படம் செய்வதற்குப் பயப்படும் வியாபாரிகளைத் “துணிச்சல் இல்லாதவர்கள்” என்று கேலி செய்கின்றார்கள். கயவர்களைப் போற்றும் உலகம் கண்ணியமானவர்களைத் தூற்றுகின்றது.

இதன் பயனாகத் தீயோர்கள் பிறர் மதிக்க வாழுகின்றனர்… நல்லோர்கள் இதயம் நலிந்து ஏங்கி இருக்கிறார்கள். இந்த விசித்திரமான நிலை இன்று போல் அன்றும் இருந்திருக்கின்றது. மனித குலத்தின் இயல்பும் மாறவில்லை அல்லவா…!

பணத்தைப் புகழ்வதும் பண்பாட்டைப் புறக்கணிப்பதும் மனிதனின் மாறாத தன்மை போலும்…! இந்த இழிநிலையினை காணும் நல்லோர்கள் மனம் நொந்து வருந்துவது இயல்பு தானே…!

ஒழுக்கமான வாழ்வே உயர் ஞானத்தின் பயன் என்று உரைத்த மெய்யடியார்கள் இதைக் கண்டு இதயம் இடிந்து போகின்றனர்.

“தீது அவம் கெடுக்கும் அமுதம்” என்று இறைவனை ஏத்தும் ஞானிகளால் தீமை ஓங்குவதையும் நன்மை நலிவடைவதையும் கண்டு எப்படிச் சகிக்க முடியும்…?

பண்புகளுக்கெல்லாம் பகைவர்களாக உள்ளவர்கள் புன்முறுவலோடு பொலிவுடன் வாழுகின்றனர். அன்பு நிறைந்த நல்லோர்கள் நலிந்து ஏங்குகின்றனர்.

எண்ணிலா இத்தகைய துயர் விளைவிக்கும் இது என்ன உலகத்து இயற்கை…! கண்ணனே…! கடல் கடைந்த வண்ணனே…! தாளாது அடியேனை உன் கழலிணைச் சேருமாறு அருள் புரிவாய்…! இந்த வாழ்வு வேண்டாம்…! என்று இதயம் கரைந்து பாடுகின்றார் நம்மாழ்வார்.

நல்லவர்கள் நலிவதும் நல்லோர் அல்லாதவர்கள் நன்கு வாழ்வதும் எதனால்…? மனிதன் தனக்கு வரித்துக் கொண்ட சமுதாய அமைப்பு முறையின் விளைவு தானே…?

அறத்திற்கு மாறான இந்த அவல நிலை அடியார்களின் உள்ளத்தை உலுக்குகின்றது இதைக் கண்டு சகித்துக் கொண்டு இருப்பதை விட உலக வாழ்வை விட்டு மறைவதே உகந்ததாகப் படுகின்றது.

இது மட்டுமா…? தான் உண்ணுவதற்கு என்று பிற உயிர்களைக் கொல்லுகின்றானே மனிதன்…! ஏமாற்றிப் பிடித்தும் வலையில் சிக்க வைத்தும் உயிரினங்களைப் பிடித்து அவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.

அறம் என்பது என்ன…? என்று அறியாத நிலையில் இவ்வாறு மனிதன் பிற உயிர்களைக் கொன்று உண்ணுகின்றான். கொல்லாமையை விட அறம் ஏது…? இதனை அறியாதவர்கள் உயிர்களைக் கொன்று பசியாறுகின்றனர்.

இதைக் கண்டு சகிக்க முடியவில்லை ஆராவமுதனே…! என்னை உன் திருவடியின் கீழ் அழைத்துக் கொள்… என்னைக் கூவி அழைத்துக் கொள்…! என்று இறைஞ்சுகின்றார் ஆழ்வார். புலால் உண்பதன் புன்மையினை அறப்போருளை அறியாதவர்களின் செயல் என்கிறார்.

“அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” என்பது குறள்.

பிற உயிர்களைக் கொல்லாமல்தானே அறத்திற்கு அடிப்படை. தன் உடம்பு பெருக்க வேண்டும் என்பதற்காக… தான் மற்றொரு உயிரின் உடம்பைத் தின்பவன் எவ்வாறு அருள் உடையவனாக இருக்க முடியும்…? என்று கேட்கின்றார் திருவள்ளுவர்.

பிற உயிர்களைக் கொன்று உண்ணும் பழக்கம் அறத்திற்கும் அறத்தின் பயனாக அருளுக்கும் மாறுபட்டது என்பதால் அது விலக்கப்படுகின்றது.

உலக வாழ்விலே அருளும் அறமும் நலிகின்ற போதெல்லாம் நல்லவர்கள் மனம் நலிகின்றது. அறம் போற்றி வாழ்பவர்கள் அல்லல்படுவதும் அல்லாதவர்கள் ஆடம்பரமாக வாழ்வதும் உயிர்களைக் கொன்று உண்டு தம் ஊனை வளர்ப்பதும் உலகத்து இயற்கையாகி விட்டது…! உலக வாழ்வோடு ஒன்றிய இயல்பாகி விட்டது.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை விட்டு இறைவன் திருவடியில் விரைவில் சேர்வதே வித்தகர்களின் விசாரமாகி விடுகிறது என்று இதயம் இடிந்து இவ்வாறு பாடுகின்றார்கள்.

ஈஸ்வரபட்டரின் பதில்:-
நம்மாழ்வார் இயற்றி வெளியிட்ட அருட்பாக்களை ஆராய்ந்து இந்நிலையின் பொருளை விளக்குகின்றனர்.

நீதியைப் புகட்டும் நீதிபதியின் வாழ்க்கைத் தரத்தையும்… அந்த நீதிபதியினால் தண்டனைக்குட்பட்ட குடிமகனின் வாழ்க்கை நிலையையும்… இரண்டு வெவ்வேறு நிலை கொண்ட பொருளாதார அடிப்படையில் “இந்த ஞானவழிக்கும்… ஆத்மீக வழியின் தொடர் நிலைக்கும்” ஒப்பிட்டுப் பதம் காண்கிறனர்.

1.அவன் சென்ற வியாபார நோக்கின் வழி எண்ணத் தொடரின் செயலுக்கும்
2.நீதிபதியின் நற்போதனை நிலைக்கும்
3.வாழ்க்கை நிலையை இப்பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒப்பிட்டுச் செயல் காண்பது எந்த வழியில்… எந்த ஞானியாக இருந்தாலும் உத்தமம்…!

ஆத்ம நிலையை அறிய… இறை பக்தியை ஏற்றம் கொண்டு வழி நடந்திடும் இவ்வுணர்வுடையோர் இந்நிலையை ஒப்பிட்டு… இந்நிலையினால் தன் எண்ணத்தை விரக்திப்படுத்தி… இறைவனடி ஒன்று தான் உத்தம நிலை என்று “விலகிச் சென்று… ஆத்ம ஜெபம் என்ற இறை பக்தியை வளர்க்கின்றார்களாம்…!”

நீதிபதி தான் வந்த வழியில் நீதிக்காகச் செயல் கொண்டு செயலாற்றுவதற்கும் அவர் வாழ்க்கையின் பொருளாதார நிலைக்கும் ஒப்பிடலாகாது.

வியாபாரியின் நோக்கில் பல தவறுகள் நீதிக்கு புறம்பட்டதாக இருந்தும் பொருளாதார ரீதியில் உயர்ந்துள்ளதை வைத்து
1.இறைவனைப் பாகுபடுத்திட்ட நிலை தான்
2.இன்றைய மனிதர்களின் எண்ண நிலை எல்லாம்.

சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் அடிபணிந்தே வாழ்ந்தும் பல இன்னல்களை ஏற்க வேண்டியது உள்ளதே… “ஆண்டவனின் சோதனை நிலை” என்ற எண்ண நிலையிலேயே அப்பாகுபாடு என்னும் எண்ணமே…
1.தர்மவான் சத்தியவான் என்று வாழ்ந்தாலும்
2.தன்னையே குறுக்கிக் கொள்ளும் இந்த எண்ணத்தினால் தான்
3.இன்றைய இந்த உலகில் உள்ள சத்திய நியாயமும் மறைந்து வரும் நிலை.

சத்தியத்திற்குச் சோதனை வரும் என்ற எண்ண நிலையிலேயே அச்சோதனை நம்மைப் பற்றிக் கொள்கின்றது.
1.இந்நிலையில் சத்தியம் என்பது எப்படி ஜெயம் கொள்ளும்…?
2.எண்ணத்தில் உள்ள சத்தியத்தையும் தர்மத்தையும் இன்றைய மனிதன் சோதனையாக எண்ணி “நழுவ விட்ட காலம் இது…”

வாழ்க்கையில் பல தவறுகளைத் தவறென்று உணர்ந்தே செய்பவனும்… தன் எண்ண நிலையைச் சோர்வுக்கும் தோல்விக்கும் அடிபணிந்திடச் செய்திடாமல்… நன்மை தீமை கொண்ட எவ்வழிக்கும்… ஒரே எண்ணமுடன் சோர்வை அண்ட விடாமல் செல்பவனின் பொருளாதார வாழ்க்கை நிலையும் குடும்பத்தின் செயல் நிலையும் வளமுடன் தான் வாழ்கின்றன.

1.பல தவறுகள் செய்கின்றான்… அவனை ஆண்டவன் பார்ப்பதில்லை.
2.நல் உணர்வு கொண்ட நமக்கேன் சோதனை…? என்ற எண்ணத்திலேயே நம்மைத் தாழ்த்தி
3.அதனால் வரும் நம் ஆத்ம நிலையின் சோர்வினால்
4.நல் உணர்வுகளை நாம் பெற்றிருந்தாலும் நம் நிலையும் குன்றி நம் பொருளாதார நிலையும் கீழ்ப்பட்டு
5.நம்மையே நாம் குன்றச் செய்து கொள்கின்றோம்.

இவ்வண்ண நிலையில்தான் ஆண்டவனின் ஜெபமும் ஞான நிலையும் இறை பக்தியும் இவ்வுலகமும் இவ்வுலகைச் சார்ந்த அனைத்து உலகங்களுமே அடக்கம் பெற்று வாழ்ந்திடும்… “இவ்வாத்மாண்டவனின் (தனக்குள் இருக்கும் ஆண்டவன்) எண்ணத்தை உணர்ந்திடாமல்” வாழ்ந்திடும் மக்களின் எண்ணத்தையும்… நம் முன்னோர் சூட்சுமத்தில் வெளிப்படுத்திய நூல்களில் உள்ள உண்மை நிலையை உணர்ந்திடாமல்… மக்களின் எண்ணத்தையே கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்கள் என்று சில நிலைகளினால்.

1.பக்தி… ஞானம்… பரம்பொருள்… பரமாத்மா… என்றே பல நிலைகளைப் போதனைப்படுத்தி
2.இறை பக்தியாக ஆத்ம ஜெபம் எடுக்கும் நிலையை இன்று உணர்த்துவாருமில்லை… செயல் கொள்வாரும் இல்லை.
3.இறைவனை எண்ணுவதே இப்பொருளாதார ஆசையின் அடிப்படையில் தான் (இன்றைய நிலை).

இவ்வண்ண நிலை கொண்ட நாம் எடுக்கும் சுவாசத்தினால் மட்டும்தான்… ஒவ்வொரு ஆத்மாவின் வழித்தொடர் நிலையுண்டு.

ஒரு குடும்பத்தில் உள்ள மூத்த தலைவனின் நிலைக்கொப்பதான் அவன் சேமித்துச் செயல் கொள்ளும் வழித் தொடரின் நிலையில்… எண்ணத்தினால் அவனைச் சார்ந்துள்ளோரின் நிலையின் எண்ணக் கலப்பும் வழித்தொடரின் செயல் நிலைகொள்கின்றது.

நம்மாழ்வார் இயற்றிய பாடல்களில் உள்ள நிலையின் அர்த்தத்தையே கால நிலைக்கு ஏற்ப இன்று உணர்த்துகின்றார்கள்.
1.உண்மைத் தத்துவ நிலை எது…?
2.உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு தீமை செய்பவனைப் பார்த்துப் பதிவு செய்து கொண்டபின் “இப்படிச் செய்தான்… செய்தான்…” என்று தீமையின் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் பொழுது அந்த கணக்கின் அளவுகோல் கூடும் பொழுது நாமும் தீமை செய்யத் தொடங்கி விடுகின்றோம்,

தீமை செய்பவன் என்று அவனைச் சொல்கின்றோம்…! ஆனாலும் அவன் மீது இருக்கும் தீமையான எண்ணம் நமக்குள் அதிகமாக வரும் பொழுது தீமைகள் வளர்ந்து வளர்ந்து… தீமையின் கணக்கே கூடிக் கூடி தீமையின் விளைவே வருகின்றது.

தீமை செய்யும் நினைவுகள் வரும் பொழுது தீமையின் உடலாக மாறுகின்றது… அந்தத் தீமையின் நிலைகளினால் உடலில் நோயாக மாறுகின்றது.

அதனால் வரும் வேதனையின் தன்மை கூடினால் இதனின் கணக்கின் பிரகாரம் அந்தத் தீமையின் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின்…
1.எவனால் தீமையானதோ அவனின் இடத்தைத் தேடிக் கொள்கிறோம்
2.அங்கேயும் தீமையை உருவாக்குகின்றோம்
3.அவனுக்குள் சென்று அதையே முழுமையாக்குகின்றோம்
4.அந்த உடலையும் வீழ்த்துகின்றோம்…!

எவன் எவ்வாறு சொன்னானோ அவனை வீழ்த்தி… “நீ அவ்வழியே செல்…! நானும் என் வழியிலே செல்கின்றேன்…” என்று கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் என்பது போல ஆகிவிடுகின்றோம்.

ஆக… எந்த நஞ்சின் தன்மை அளவுகோல் கணக்கு எந்த அளவு அதிகமாகின்றதோ இதைப் போல ஆன பின் தேளிடமோ பாம்பிடமோ நரியிடமோ நாயிடமோ இதைப் போன்ற உயிரினமாக நாம் உருவாக நேரிடும்.

1,நம் உயிரின் வேலை அது தான்.
2.ஏனென்றால் உயிர் நெருப்புக்குச் சமம் தான்
3.நெருப்பிலே எந்தப் பொருளைப் போட்டு நாம் கலக்கின்றோமோ
4.அதில் வேக வைத்த அந்தப் பொருளின் சுவையும் மணமும் தான் வரும்.

அது போல நம் உயிரின் தன்மை நாம் நுகரும் உணர்வின் தன்மை எதுவோ… அதை உயிரணுக்களாக மாற்றிப் படைத்து விடுகின்றது.

நாம் கண்ணால் பார்க்கும் பொழுது பதிவாகி உணர்வால் நுகரும் தன்மை வருகிறது. எதனின் உணர்வைத் தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலையாக உடலின் அமைப்புகள் வருகின்றது.

சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் என்று சொல்வது போல்… நாம் எதனின் நிலைகள் கொண்டு உற்று நோக்கி அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் சத்து நமக்குள் பதிவாகி உடலிலே விளைந்து அதனின் கணக்கின் பிரகாரம் அந்தக் கூட்டமைப்புக்குள் செல்வோம்.

பயிரினங்களில் வீரிய வித்தாக்கி அதிலே மகசூலைப் பெருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு முறை உரத்தை இடுகின்றோம். அது எடுத்துக் கொண்ட பின் அடுத்த முறை அந்தத் தாவர இனத்தை மீண்டும் புதுப்பிக்கின்றோம்.

அதிலே வரும் வளர்ச்சிக்குத் தக்கவாறு இணைத்து இணைத்துத்தான் வித்தின் தன்மை வீரியமாகப் புதிதாக மாற்ற முடியும். ஒரு வித்தின் தன்மைக்குள் இணைத்து வளரும் பருவத்தில்

ஒரே தடவையில் நேரடியாகக் கொண்டு வர முடியாது.

அதனைப் பல முறைகள் கொண்டு இணைத்து இணைத்து… அது மாற்றுப் பொருளாக உருவாக்கி உருவாக்கி… அதன் பின் அதைச் சீரான வளர்ச்சிக்குக் கொண்டு வந்து ஒன்றிணந்து இயக்கும் நிலைக்குக் கொண்டு வர முடியும்.

ஏனென்றால்…
1.நமக்குள் வேதனைப்படும் உணர்வுகள் ஏராளம் ஏராளம்
2.பகைமையான உணர்வின் வித்துகளாக எடுத்துக் கொண்டது ஏராளம் ஏராளம்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மைக்கு கோபத்தின் தன்மை எடுத்துக் கொண்டதும் ஏராளம் ஏராளம்.

இதைப் போல நமக்குள் வித்துக்கள் அதிகமாகப் பெருக்கி இருக்கும் நேரத்தில் இது அனைத்தையும் ஒருங்கிணைத்து இதையெல்லாம் இணைத்து அரவணைத்து அதை அடக்கி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு இதைச் செயல்படுத்த முடியும்.

1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களில் இணைந்து வரும் குணத்துடன்
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை இணைத்து இணைத்து
3.இந்த உணர்வின் தன்மை இரண்டு முறை மூன்று முறை என்று
4.தொடர்ந்து கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளைப் பிணைத்துப் பிணைத்து
5.அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை எடுக்கும் தகுதியை
6.உங்களை எப்படியும் பெறச் செய்ய வேண்டும் என்று தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

அது அல்லாதபடி வெறுமனே பாடப் புத்தகங்களைப் படித்து விட்டு… “நன்றாக இருக்கிறது…!” என்ற நிலையில் தூக்கி எறிந்து விடுவது போன்று செய்து விட்டால் அதற்கு அடுத்து அந்த மகரிஷிகளின் நினைவு வராது.

ஆகவே அதைப் போன்று ஆகாதபடி… “எந்த ஞானிகளின் அருளாற்றலை இங்கே உங்களிலே பதிவு செய்கின்றோமோ…” இந்தப் பதிவின் நினைவாற்றல் தூண்டப்பட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி ஓங்கி வளர வேண்டும் என்று உங்கள் மனதில் இதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்…!

அது உங்களை அங்கே அந்த ரிஷிகள் வாழும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்…!

நாம் செய்யும் ஆத்ம சுத்திக்கு வலு கூட்டும் முறை (முக்கியமானது)

 

இரவில் படுக்கும் போது:-
தனக்குள் அறியாத வந்த தீய வினைகளை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இரவிலே படுக்கச் செல்லும் பொழுது 100 முறையாவது இதைச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வீடு முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அந்தச் சக்தி படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் பாவ வினைகள் சாப வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

காலையின் கண் விழித்த்தும்:-
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் தொழில் செய்யும் இடங்கள் முழுவதும் படர்ந்து… எங்கள் தொழில்கள் சீராகி மன பலம் மன வளம் உடல் நலம் செல்வம் செல்வாக்கு பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு 100 முறை எண்ணுங்கள்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் எங்களுடன் வேலை செய்பவரும் பணிபுரிபரும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று இதை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

காலையில் கண் விழித்த உடனே இதை எல்லாம் குறைந்தபட்சம் 100 முறையாவது சொல்வது மிகவும் நல்லது.

சமையல் செய்யும் போது பரிமாறும் போது உணவு உட்கொள்ளும் போது:-
வீட்டிலே பெண்கள் சமையல் செய்யும் போது 25 முறை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு நாங்கள் சமைக்கும் ஆகாரம் அதை உணவாக உட்கொள்ளும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்கள் உடல் நலம் மன பலம் மன வளம் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரத்தைக் கொடுக்கும் போதும் பரிமாறும் போதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று 25 முறையாது மனதில் எண்ணுங்கள்.

உணவாக உட்கொள்வோரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று 25 முறையாவது எண்ணுங்கள். நாங்கள் உணவாக உட்கொள்வது அனைத்தும் எங்களுக்குள் உடல் நலம் பெறும் சக்தியாக வரவேண்டும் என்று எண்ணி உணவை உட்கொள்ளுங்கள்.

வெளியில் செல்லும் போது:-
எங்கே வெளியிலே சென்றாலும் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணிவிட்டு எந்தக் காரியத்திற்காகச் செல்கின்றீர்களோ நாங்கள் பார்ப்பது அனைத்தும் நலம் பெற வேண்டும் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் மலரைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும் என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டுச் செல்லுங்கள்.

எனக்கு நல்ல மனதும் என்னைப் பார்ப்போருக்கு நல்ல மனதும் எங்கள் வழி என்றுமே நல்ல வழியாகவும் அமைய வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

நோய் நீங்க:-
நோய் ஏது இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எவ்வளவுக்கு அந்த நோய் சாடி இருக்கின்றதோ அதையே எண்ணாது பற்றதாக மாற்ற வேண்டும். மேலே சொன்னதை எத்தனை முறை அதிகரித்துச் சொல்கிறீர்களா அவ்வளவுக்கு உங்களுக்கு நல்லது… அதற்குத் தக்க உங்கள் பிணிகள் சீக்கிரம் அகலும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை பற்றுடன் பற்ற முடிகின்றது. வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற முடிகிறது.

பிறர் நோயைப் பற்றிக் கேள்விப்பட்டால்:-
பிறர் நோய்வாய்ப்பட்டாலும் அதைக் கட்டறிந்த பின் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று திருப்பித் திருப்பி ஏங்கித் தியானியுங்கள்.

பின் அவர் அந்த சக்தி பெற்று உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டு… அவர்களுக்கு வேண்டிய உபகாரத்தை நீங்கள் செய்யலாம்.

அடுதவர் கஷ்டங்களை வேதனைகளைக் கேட்டறியும் போது:-
ஒருவர் தனக்கு மிகுந்த கஷ்டம் என்று சொன்னாலும் அதைக் கேட்டறிந்தால் ஒரு 25 முறையாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று முதலில் எண்ணி வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

பின்… அந்தக் கஷ்டப்படுபவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று சொல்லி “உங்கள் கஷ்டம் நீங்கும்” என்று வாக்கினை அவருக்குக் கொடுங்கள்.

1.உங்கள் சொல் தான் (உணர்வு) அவருடைய கஷ்டத்தைப் போக்க வேண்டுமே தவிர
2.அவருடைய கஷ்டத்தை நாம் வாங்கி விடக்கூடாது… நம் நல்லதை அது அழித்து விடக்கூடாது.

உடலில் ஆவி புகுந்திருந்தால்:-
ஒரு சிலர் உடலில் பிறிதொரு ஆவி இருக்கலாம். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் புகுந்த அந்த ஆன்மா துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஒரு ஐம்பது முறையாவது எண்ணுங்கள்

1.அதிலே கலந்து வந்த தீமைகள் மடிந்திட வேண்டும்
2.அவைகளும் எனக்குள் இருந்து பிறவா நிலை பெற வேண்டும்
3.எனக்கு நல் வழி காட்ட வேண்டும் என்று ஒரு 100 முறையாவது எண்ணுங்கள்.

இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதை வலுவாக்கும் பொழுது நாம் அடைய வேண்டிய எல்லையான அந்தச் சப்தரிஷி மண்டலத்தை எளிதில் அடைகின்றோம்.

இப்படிச் செய்யாது கஷ்டப்பட்டவரையும் வேதனைப்பட்டவரையும் நோய்வாய்ப்பட்டவரையும் எண்ணி அவர்களின் உணர்வை நுகர்ந்து விட்டால் அதே உணர்வு நம்மைத் தாக்கி புவியின் ஈர்ப்பிற்குள் தான் நாம் சிக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணும்போதெல்லாம் நமக்குள் அதைப் பற்றுடன் பற்றுகின்றோம். ஆகவே தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும்.
1.அப்போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
2.எந்தத் தீமையாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட இந்த முறைகளைக் கையாளுங்கள்.

குருவிடம் யாம் (ஞானகுரு) பெற்றது:-
1.இலேசாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.
2.25 வருடம் காடு மேடல்லாம் அலைந்து குருநாதருடைய அருளைப் பெற்று மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அதனின் அனுபவங்களைப் பெற்று
3.தீமைகளை எவ்வாறு நீக்க வேண்டும் என்று பெற்ற அந்த அருள் சக்தியைத் தான்
4.நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை நான் இப்பொழுது நியானிப்பது

குருநாதர் காட்டிய வழியில் பல முறை நீங்கள் எண்ணித் தியானிக்கும் போது உங்கள் பிணிகள் நீங்கும்… நீங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள். அந்த மகிழ்ச்சியே எனக்குத் தேவை. உங்களில் குருவைக் காணுகின்றேன்.

பறக்கும் தட்டு

 

05.12.1979 அன்று தினமணி பத்திரிக்கையில் வெளி வந்த செய்தி:-

பாரிஸில் (பிரான்ஸ்) சென்ற மாதம் 26ஆம் தேதி பறக்கும் தட்டு தூக்கிச் சென்றதாகக் கூறப்பட்ட வாலிபர்… நேற்று மீண்டும் அதே இடத்தில் தோன்றினார்.

பாரிஸுக்கு மேற்கு செயிண்ட் சூன் பகுதியைச் சேர்ந்த பாண்டைன் என்ற 19 வயது வாலிபரும் அவரது இரு நண்பர்களும் தங்கள் வீட்டு வாசலில் காரில் துணிப் பெட்டிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது காருக்குச் சிறிது தூரத்தில் “ஒளியுடன் கூடிய பந்து போன்ற ஒரு பொருள்” தெரிந்தது. அது வர வர மிக பெரிதாகிக் கொண்டே வந்தது. அதன் ஒளியும் கண்ணை எரிக்கும் அளவுக்குப் பிரகாசமானது.

கார் அருகே அந்தப் பொருள் வந்த பொழுது… பெரிய பந்து போல் இருந்தது. பாண்டைன் மட்டும் நின்று கொண்டிருந்தார். மற்ற இருவரும் அதைப் படம் எடுக்க வீட்டிற்குள் ஓடினர்.

கேமிராவுடன் திரும்பி வந்த பொழுது பாண்டைனைக் காணோம்… காரைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளி இருந்தது. பின் அதுவும் மறைந்தது.

தகவல் அறிந்த பிரெஞ்சு போலீசார் உடனடியாக பாண்டைனைத் தேடுவதில் முனைந்தனர். பறக்கும் தட்டு இறங்கிய இடத்தில் கதிரியக்கச் சோதனையை போலீசார் நடத்தினர்.

அங்கு கதிரியக்கம் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது பாண்டைனுடைய இரு நண்பர்களையும் போலீசார் தீர விசாரித்தனர்.

இதற்கு இடையே எந்த இடத்தில் பறக்கும் தட்டு பாண்டைனை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டதோ அதே இடத்தில் நேற்று அவர் தோன்றினார்.

பறக்கும் தட்டு எடுத்துச் சென்ற அன்று என்ன உடை அணிந்து இருந்தாரோ… அது சிறிது கூடக் கலையாமல் இருந்தது. அவர் பையில் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது.

தான் பறக்கும் தட்டால் எடுத்துச் செல்லப்பட்டதைக் கூறும் பாண்டைன்… அதற்குப்பின் ஒரு வாரத்தில் என்ன நடந்தது…? என்று தெரியவில்லை. திடீரென்று தான் பழைய இடத்தில் இருப்பதாகத் தெரிய வந்தது என்று கூறினார்.

இது பற்றி இனம் புரியாத… “பறக்கும் பொருட்கள் பற்றி ஆராயும் பிரெஞ்ச் விண்வெளி விஞ்ஞானிகளிடம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரபட்டரின் பதில்:-

பந்து போன்ற அந்த ஒளி பிறரால் ஏவப்பட்ட பறக்கும் தட்டு என்ற சாதனம் அல்ல. “பறக்கும் தட்டு” என்ற பீதி கொண்ட நிலையில் எண்ணம் கொண்ட இச்செயல்… எந்த நிலையில் ஏற்படுகின்றது…? என்பதனை உணர்ந்திட வேண்டும்.

இந்த மனித ஆத்மாவிற்குப் பல அமில சக்திகளைத் தன்னில் ஈர்த்து மனித பிம்பமாக வாழ்ந்திடும் சக்தி நிலை உண்டு.

அணுவிலிருந்து பல நிலை மாறி மனித ஆன்மாக்களாக வாழ்ந்திடும் இப்பிம்பச் சக்திகளுக்கு
1.தாவர வர்க்கங்களைப் போன்றும்
2.மற்றைய கனி வளம் திரவங்கள் இப்படித் தனித்த ஒரு நிலை கொண்ட ஈர்ப்பு சக்தியிலிருந்து மாறு கொண்ட அனைத்து அமிலங்களையுமே
3.தன் எண்ணத்திற்குகந்த எந்த அமிலத்தையும் ஈர்க்கும் சக்தி நிலை (மனித ஆன்ம பிம்ப உடலுக்கு) உண்டு.

நம்மைச் சுற்றியுள்ள நம் பூமியும்… நம் பூமியுடன் தொடர்பு கொண்ட மண்டலங்களின் சக்தியும்… நம் சூரியனின் சக்தியிலிருந்து வந்திடும் அணு பிம்பங்களின் தொடர்பினால்… இந்த மனித ஆத்மாவை எந்நிலைக்குகந்த ஒரு நிலை கொண்ட அணு சக்தியையே… இவ் எண்ணத்தின் தொடர்பினால் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் சக்தியினால்… “இன்று ஒரு நிலை கொண்ட ரிஷிகளின் நிலையைப் போல உடலையே ஒளியாக்கி… ஆவி பிம்பமாக ஜோதியாகச் செயல்படுத்திட முடிந்திடும்.

ஒவ்வொரு உடலையுமே இப் பிம்ப நிலை தெரியாமல் ஒளியுடன் ஒளியாகப் பறந்த நிலைப்படுத்திட முடிந்திடும்.

இன்று அங்கு நடந்திட்ட இந்நிலை “விஞ்ஞானத்தில் வழி வந்த” சித்து நிலை பெற்றோரின் சக்தி நிலை செயல் கொள்கின்றது
1.சித்து நிலை பெற்ற விஞ்ஞானி
2.தன் உடலையே ஒரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்த்துth தன் பிம்பத்தையே ஒளிப்படுத்தி…
3.அந்த ஒளியுடனே மற்ற ஆத்ம பிம்பத்தையும் ஒளிப்படுத்தித் தன்னுள் ஈர்த்து
4.தான் அடைந்த ஒளி பெறும் சக்தியின் நிலையினால் தன்னுள் சேர்த்த மற்ற ஆத்ம உடலையும்
5.அந்நிலையிலேயே ஈர்த்திடும் ஆராய்ச்சி நிலையில் நடந்த நிலை தான் அங்கு நடந்த நிலை.

ஆவியின் தொடர்பு கொண்டு “மனோவசியம் செய்வதைப் போல” ஆத்ம பிம்பத்தையே ஒளிப்படுத்தி மற்ற ஆத்ம பிம்பத்தையும் தன்னுள் ஈர்க்கும் நிலை தான் அங்கு நடந்ததன் நிலை.

விஞ்ஞானத்தின் செயல் எல்லாம் இயற்கையுடனும் மற்ற அணுக்களின் தொடர்புடனும் செயற்கையாகச் செயல்பட்டு விளையாடியது.

இந்தப் பூமியில்… இந்தக் கலியில்… விஞ்ஞான வழியில் வந்த சித்து நிலையினால் “ஆத்மாவுடன் ஆத்மாவை இணைக்கும்… ஒளி நிலை விளையாட்டு நிலைக்கு வந்துள்ளது…”

பிம்பத்தையே ஒளியாக்கிடும் சக்தி பெற்றவன் அந்நிலையின் சக்தித் தொடரைச் செயல்படுத்திட… மற்ற ஆத்மாவை ஈர்த்து ஏன் செயல் கொண்டிட வேண்டும்..?

மனித ஆன்மாக்களின் எண்ணத்தையே கலக்கம் கொண்டிடும் நிலைக்குத் தான் பெற்ற சக்தியை ஏன் இப்படி விரயம் ஆக்க வேண்டும்…?

இப்பூமியில் இந்தியாவில் கோயில்களை நம் சித்தர்களினால் செயல்படுத்திடும் புண்ணிய ஸ்தலப்படுத்தி… அங்கு பக்தி நெறியில் வந்திடும் ஆன்மாக்களுக்கு ஒளியுடனே ஒளியாக… தான் பெற்ற சக்தியை ஒளியின் வழியில் நல்லருளைப் பாய்ச்சிடும் (நம் சித்தர்களின்) வழியையே தான் மாற்று வழியில் அவர்கள் (விஞ்ஞான) செயல்படுத்துகின்றனர்.

அவ்வெண்ணத்துடன் தொடர்புடனே… அந்த வழியில் வந்த விஞ்ஞானச் சித்தனும் இங்குள்ளதைப் போல் பக்தி நெறி கொண்ட கோயில் நிலை அங்கு இல்லாததின் நிலையால்… வந்த விளையாட்டு நிலை தான் இது.

காந்த மின் ஒளி அலை (ELECTRO MAGNETIC WAVE)

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது (முக்கியமானது). மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடைய ஆறாவது அறிவு என்பது தெளிந்திடும்… அறிந்திடும்… சக்தி கொண்டது. அதனால் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

அதாவது மனிதனாக ஆன பின் நாம் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவர்கள். இருந்தாலும் இன்று நாம் எதை சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம்.

மதம் காட்டிய அறநெறிகளை அதனின் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டு அந்த உணர்வைத்தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோம். அதன் வழி கொண்டு சிருஷ்டிக்க முடிகின்றது. ஆக மொத்தம் நாம் கற்றுணர்ந்தது… நமக்குள் உள்ளது தான் இங்கே வரும்.

ஒரு வேப்பமரம் தன் கசப்பின் தன்மை வெளிப்படுத்தும் பொழுது
1.அந்தக் கசப்பான அந்த மணத்தின் தன்மை கொண்டு தான் தன்னை வளர்த்துக் கொள்கிறது
2.மற்றொரு மணத்தின் தன்மை அருகே வந்தால்தன் கசப்பின் உணர்வால் உந்தி வெளியே தள்ளுகின்றது

இதைப் போன்றுதான் நமக்குள் எந்தெந்த உணர்வின் தன்மையை இணைத்துக் கொள்கின்றோமோ அதற்கொப்ப பல உணர்வின் சத்துகள் சேர்த்து கசப்பின் உணர்வாக மாறி விட்டால் அதனின் செயலாக்கங்களாகவே மாறுகிறது.

மற்ற நல்ல உணர்வுகளோ ஞானத்தின் வழித் தொடரோ வந்தால் ஒதுக்கித் தள்ளுகின்றது. இதை எல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே தீமைகளை அகற்றிடும் உணர்வாக ஆறாவது அறிவு பெற்ற நாம் என்ன செய்ய வேண்டும்..?

1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் அதிகமாக்கி அந்தக் கணக்கைக் கூட்டவேண்டும்.
2.இந்தக் கணக்கு… கூட்டல் சரியாக இருந்தால் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும்.

இதிலே உங்களுக்குச் சிரமம் ஒன்றும் இல்லை…!

எத்தகைய நிலைகள் தீமைகள் வரினும்… அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த அருள் சக்தியை உபயோகித்து அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று பல முறை எண்ணி எடுத்தல் வேண்டும்.

இந்தக் கணக்கின் பிரகாரம் உங்கள் உணர்வுகள் உயிருடன் ஒன்றிடும் நிலையாக
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கிருந்து பெற்றீர்களோ
2.அவரின் அரவணைப்பில் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக
3.என்றுமே நிலை கொண்ட ஒளிச் சரீரமாக அது இயக்கத் தொடங்கும்.

இதைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். குருநாதர் கோடி… கோடி… என்று சொல்லி எம்மை அடித்துத் தான் காட்டினார்.

1.என்னுடைய (ஞானகுரு) நினைவின் ஆற்றலை விண்ணிலே பாயும்படி செய்தார்.
2.பின் அந்த உணர்வு எவ்வாறு செயலாற்றுகிறது…? என்றும் காட்டினார்.

ஆக ஒரு சொல் தான்…! கோடி…கோடி கோடி…கோடி என்று குருநாதர் சொன்னார்…! அதற்கு நான்
1.“தெலுங்கில் கோடி என்றால் கோழி…!” என்று இடக்காகக் கேட்டதற்கு
2.இப்படியெல்லாம் பல உண்மைகளை உணர்த்தி அந்த விண்ணிலிருந்து பெறும் ஆற்றலை உணர்த்தினார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் விண்ணின் ஆற்றலைப் பெறுதல் வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே நாம் வாழ்தல் வேண்டும்.

“ஈர்க்கும் காந்த நரம்புகள்…”

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்த அருள் ஞானிகளின் வித்தினை உரமாக இடப்பட்டு உயர்ந்த சக்தியினை அவர்கள் பெற்ற நிலையினை உங்களுக்குள் உபதேச வாயிலாக இணைத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு).
1.நான் இணைத்தாலும் நீங்கள் உங்கள் நினைவு கொண்டு
2.உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால்தான் அது பதிவாகி முளைக்கும்.

நிலத்தில் விதைகளை மேலெழுந்தவாரியாகப் போட்டு விட்டால் எறும்புகள் தின்று விட்டுப் போய்விடும். அது போல் இங்கே கேட்ட உபதேசத்தை மேல் மட்டத்தில் ஆகா…! என்று போற்றி விட்டால் இது முளைக்காது.

போற்றலை விட்டுவிட்டு அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வினைக் கொண்டால் அது உங்களுக்குள் முளைக்கும்.
1.போற்றுதல் என்பது புறத்தால் தள்ளுவது…!
2.ஏங்குவது என்பது அகத்திற்குள் விளையச் செய்வது…!

இந்த இரண்டு நிலைகளில் உள்ளோரும் எந்த அளவுகோல் கொண்டு இதை ஏற்றுக் கொள்கின்றனரோ அதற்குத் தக்கவாறு வித்தின் தன்மை இணைந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவரும் நிலையும் வருகின்றது.

ஆனால் இங்கே பெரும் பகுதி போற்றித் துதிப்போர் தான் பலரும் உண்டு. சாமியைப் (ஞானகுரு) பற்றிப் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால்
1.புகழ்ந்த நிலையில் கொண்டு ஏற்றுக் கொள்ளும் நிலை இழந்து
2.அருள் மகரிஷிகளின் சக்திகளைக் கவர்ந்திடும் நிலை அற்றுப் போய்விடும்.

அதுவே தனக்குள் கவர்ந்திடும் அந்த ஏக்க நிலை இருந்தால்தான் அது ஆழப் பதிந்து அதனின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது கவர்ந்து விடும்.

இந்த உடலின் ஈர்ப்புக்குள் நாம் பதிந்து கொண்ட உணர்வு எதுவோ அதைக் கவர்ந்து அதனின் நிலைகள் விளையச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே…!

அந்த மகரிஷிகளின் உணர்வைச் சிறிது காலம் இணைத்துக் கொண்டே இருந்தால் அது தன்னிச்சையாக வளரும் தன்மை வரும். உடலை விட்டு நாம் அகன்ற பின் அந்த உணர்வின் வித்துக்கள் தீமையை அகற்றி மெய் உணர்வின் தன்மையாக என்றும் ஒளியின் நிலையாக நம்மை அடையச் செய்யும்.

இந்த உடலிலிருந்து தான் அதைச் செய்ய வேண்டும்.

நாம் தொழில் செய்யும் பொழுது அல்லது மற்ற வேலைகள் செய்யும் பொழுதோ உடலில் பட்ட அழுக்கை உடனுக்குடன் எப்படித் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோமோ இதைப் போல மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதி கொண்டு எண்ணத்தால் நாம் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதனின் சக்தியை நாம் இப்படிக் கூட்டினால் தான் இது விளையும். அது அல்லாது
1.சாமி செய்வார்… சாமி தான் செய்வார்…! என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது.
2.ஒரு தடவை எண்ணினேன்… பதிவு செய்து கொண்டேன் என்ற எண்ணத்தில் விட்டுவிடக் கூடாது.
3.மீண்டும் மீண்டும் நம் எண்ணத்தால் அதைக் கவர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து செடியாக முளைத்த பின் தன் தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து இணைத்துக் கொண்டு அது தன்னிச்சையாக எப்படி எடுத்து வளர்கின்றதோ அதைப் போல
1.நமது உடலில் அந்த விளையும் பருவத்தை எட்டும் வரையிலும்
2.நம் எண்ணத்தால் மகரிஷிகளின் உணர்வை இணைத்துக் கொண்டே வர வேண்டும்
3.அந்த வித்திற்கு உணவை ஊட்டிக் கொண்டே இருக்க வேண்டும்

அது உருவாகித் தன் இனத்தைப் பெருக்கி விட்டால்… பின் உங்களுடைய எண்ணம் தேவையில்லை. அது தன்னிச்சையாக எடுத்து வளரும்…!

உடலில் வந்த தீமைகளை அகற்றி விட்டுத் தீமையை அகற்றிடும் உணர்வாக விளைந்து உடலை விட்டு வெளியே சென்றாலும் தூய்மையான ஒளியின் உணர்வாக இது விளையும்.

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து “அமைதியுடன் மீண்டு” ஆத்மீக வழியில் செல்வதுதான் சிறந்தது

 

ஞான மார்க்கத்திற்கு சென்ற அந்த ஆத்மீக வழியில் ஞானத் தொடருக்கு வந்தவர்களும் சித்தர்களும் முனிவர்களும் அவர்கள் தியானம் பெறுவதற்கு மலைக் குகைகளையும்… சோலைகள் அடர்ந்த காட்டுப்பகுதிகளையும்… இந்தப் பூமியின் மட்டத்திற்கு மேல் உயர்ந்த இடமான மலைச்சிகரங்களுக்கும்… சென்று அமர்ந்து தியானம் புரிவதின் உண்மை நிலை என்ன…?

இன்று நாம் வாழ்ந்திடும் ஊர்களிலும் நகரங்களிலும் இந்த மனித ஜீவாத்மாக்கள் நிறைந்து வாழ்ந்திடும் இடத்திலும் மற்ற தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலும்
1.அங்குள்ள காற்று அங்கு வாழும் மக்களின் அவர்கள் ஈர்த்து வெளியிட்ட எண்ண நிலை கொண்ட சுவாசமும்
2.ஆலைகளில் இருந்து வெளிப்படும் கழிவுப் புகைகளும் இந்தக் காற்றுடனே அந்நிலை கொண்ட அந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

மனித ஆத்மாக்களின் நல் உணர்வும், தீய உணர்வும் கொண்டவரின் சுவாச நிலை பெற்ற காற்று இந்த காற்று மண்டலத்தில் ஒரு நிலை கொண்ட மட்டத்திற்குள் சுற்றிக் கொண்டிருப்பதனால் அந்த நிலையில் அமர்ந்து தியானம் பெறும் பொழுது
1.அவர்களின் எண்ணமுடன் இந்த எண்ணத்தின் அலைகள் மோதும் பொழுது அவர்கள் ஈர்க்கும் சக்தி நிலையில் சில தடங்கல்கள் ஏற்படுவதினால்
2.இந்தக் காற்று மண்டலத்தைச் சுத்தப்படுத்தும் தாவர வர்க்கங்கள் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமர்ந்து தியானம் செய்யும் போது
3.அத்தியானத்திற்குப் பல நல் உணர்வுகளும் அவர்களின் ஆத்மாக்களுக்கு நல் பயனும் கிட்டுகின்றன.

இதைப் போன்றே இந்தப் பூமி மட்டத்திற்கு மேல் ஓர் அளவு கொண்ட உயரத்திற்கு மேல் மலைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்த அசுத்தக் காற்று அத்தியானத்திற்கு வந்து அண்டுவதில்லை.

மலைக் குகைகளில் அமர்ந்து தியானம் செய்யும் போதும் இந்தப் பூமிக்கடியில் இவ்வசுத்தக் காற்று வந்து தாக்குவதில்லை. இதன் உண்மை நிலை இதுவே.

வாழ்க்கையிலிருந்து மீண்டு துறவறம் கொண்டவர்களினால் இந்நிலைக்குச் சென்று இத் தியானம் பெறுவது எளிது.

ஆனால் வாழ்க்கையுடன் ஒன்றிய நம் நிலைக்கு நம் வாழ்க்கையையே நாம் வாழும் நிலையையே தியானமாக்கி வாழும் பக்குவ நிலை தான் நமக்கு உகந்த உன்னத நிலை.

உடல் உபாதை வரும் பொழுது எந்நிலை கொண்ட உபாதை பெற்றோமோ அந்நிலையை அடக்க… அதற்கு மேல் சக்தி கொண்ட வீரியமான மருந்தை உட்கொண்டால் தான் அந்த உபாதை மறைகிறது.

அதைப் போல் இவ்வாத்மீக வழியில் நல் உணர்வு கொண்ட ஜெப நிலைக்கு வரும் பொழுது இக்காற்றுடன் கலந்துள்ள நல் சக்திகளுக்கு மேல் தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

நாம் செல்லும் பாதையில் பல மேடு பள்ளங்கள் வரத்தான் செய்யும்.

பள்ளம் உள்ள இடத்தையும் கல் தடுக்கும் இடத்தையும்… அவற்றில் விழுந்தோ தடுக்கியோ செல்லும் அபாயத்திலிருந்து “எந்தப் பாதை சரியான பாதை…?” என்று நாம் உணர்ந்து செல்கின்றோமோ அதைப் போன்று வாழ்க்கையில் வரும் இன்னல்களில் இருந்து நாம் மீண்டு சென்று “ஆத்மீகப் பாதையை அடையும் ஞான மார்க்கம் தான் உயர்ந்த ஞானமார்க்கம்…”

இந்த மார்க்கத்தை வெறுப்புடனோ சலிப்புடனோ சஞ்சல நிலை கொண்ட நிலையிலோ நம்மைத் தாக்கும் இன்னல்களில் இருந்து பயந்தோ செல்வது முறையல்ல.
1.வரும் தடங்கலுக்கு வருந்திடாமல்… அவற்றிலிருந்து அமைதியுடன் மீண்டு
2.ஆத்மீக வழிக்குச் செல்வதுதான் நாம் செல்லும் ஞான மார்க்கத்திற்கு உகந்த நிலை.

இந்த ஞான மார்க்கத்தை நம் முன்னோர் பல நிலைகளில் சூட்சுமம் கொண்டு இந்த உலகம் முழுவதுமே வெளிப்படுத்தி உள்ளார்கள். ஏற்று வழி நடந்து வந்திடுபவர் “கோடியில் ஒருவராகத்தான்” இன்றைய உலகில் உள்ளனர்.

வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்ந்திடாமல்… வளரும் பக்குவக் குழந்தைகளுக்கு உணர்த்திடும் நிலையும் இன்று இல்லை. ஞான வழியையும் இந்தத் தெய்வீக வழியையுமே
1.இம் மனித ஜென்மங்கள் அடைய முடியாத நிலை என்று உணர்ந்து
2.அந்த வழிக்குச் செல்வதற்கே பயந்த நிலை கொண்டு வாழ்கின்றனர்.

உயிரணுவாக மனிதனாக தாயின் கர்ப்பத்தில் பிறந்த சிசுக்கள்தான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் போகரும் முகமது நபியும் ஏசுபிரானும். அல்லா என்ற இறைவனையும் பரம பிதா என்ற தேவனையும் முருகா என்ற சக்தியையும் வணங்குகின்றார்கள்.

இயேசுவுக்கும் முகமது நபிக்கும் முருகர் வெங்கடாஜலபதி இப்படி நாமம் கொண்டவர்களின்… இறைவனாக இருந்து அருள் புரிபவன் சக்திக்கு மேல் உயர்ந்த சக்தி “அச்சக்தியின் சுடர்” ஒன்றை அனைவரும் போற்றி வணங்குகின்றனர்.

அந்தச் சக்தியின் செல்வப் புதல்வர்களான நாம்
1.நம் வாழ்க்கையின் இருளைப் போக்கி அச்சக்தியின் சுடரின் தொடர்பினை நம்முள்ளும் ஏற்றி நற்சக்திகளாக
2.ஆத்மீக நெறி கொண்ட ஞான வாழ்க்கையின் நெறியை நம் வழியாக ஏற்று வழிப்படுத்தியே சென்றிடுவோம்.

எண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள்

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழி பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பூமி விண்வெளியிலிருந்து பல நிலைகளை எடுக்கும் பொழுது துருவப் பகுதியில் சில அலைகள் வரும் பொழுது குவித்து என்ன செய்யும்…? இன்னொரு பக்கம் போகும். பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்த மாதிரி ஆகும்.

தென் துருவப் பகுதியில் இதே மாதிரிச் சில அலைகள் வரும். அந்தப் பகுதிகளில் விமானம் சென்றால் கரைத்துவிடும். இதைப் போன்ற சில விபத்துகள் உண்டு.

ஆனால் பூமிக்குள் இருக்கும் இதையெல்லாம் நாம் ஆராய்ச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
1.இயற்கையின் நிலைகள் இப்படி இருக்கிறது…? என்று உணர்த்துவதற்காகவும்
2.சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் சொன்னது.

உதாரணமாக ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் இன்னென்ன மண் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்கின்றோம். எல்லாம் சேர்த்த பிற்பாடு தவறு ஏற்படுகிறது. அந்தத் தவறைத் திருத்த வேண்டுமா இல்லையா…?

அது போல் தான் இந்த உடல் வாழ்க்கையில் புவியின் பிடிப்பிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி…? என்றால் அந்த மகரிஷிகள் அருள் வழி தான்,

ஆக அந்த மகரிஷிகளின் உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் குறுகிய காலத்திற்குள் சப்தரிஷி மண்டலம் போகலாம்.
1.ஆனால் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்தால்
2.இங்கே போய்… அங்கே போய்… முடிவில் அந்தச் சப்தரிஷி மண்டலம் அடைய முடியாது.

ஆனால் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். ஆனால் அறிவின் தன்மை மழுங்கிவிடும்.

நம் குருவின் (ஈஸ்வரபட்டர்) தன்மை எதுவாக இருக்கின்றது…? என்று உணர்தல் வேண்டும்
1.குரு இட்ட கட்டளையை மீறி…
2.நம் ஆசையின் நிலைகளைக் குருவாக்கி விட்டால்
3.இதன் நிலைகளைத் தான் பார்க்கச் செல்லும்.

இங்கே பார்க்க வேண்டியது தான்…! அதற்குள் காலம் கடந்துவிடும்…! அதற்குள் இந்த உடல் மடிந்துவிடும்… இந்த உடலுக்குள் சேர்த்த நிலைகள் நிலை இழந்துவிடும்…!

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகில் நேரமில்லை. நஞ்சுகள் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்த உடல் நன்றாக இருக்கும் பொழுதே அருள் ஞான உணர்வுகளை விளைய வைத்துக் கொள்ளுங்கள்…! என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு).

அதற்காக வேண்டித் தான்…
1.உங்கள் உணர்வுகளை எந்தெந்த அளவிற்கு அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிகளில் கொண்டு வர வேண்டுமோ
2.அதைச் செயல்படுத்தி உங்கள் நினைவின் ஆற்றலை அங்கே பெருக்கச் செய்கின்றோம்.

எந்த நேரத்தில்… எந்தச் சந்தர்ப்பத்தில் இனி எது வந்தாலும் “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவை அங்கே கொண்டு போக வேண்டும். அந்த உணர்வு நமக்குள் வலுப் பெற வேண்டும்.

அது இல்லையென்றால் வளர்க்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள் இந்த வலுவின் தன்மை கொண்டு வருவதற்குத்தான் தொடர்ந்து உபதேசிப்பது.

ஆகவே இந்த உடலுக்குப் பின் என்ன…? என்று நாம் போகும் மார்க்கங்களைத் தான் இனி பார்க்க வேண்டும்…!

ஞானிகள் கருப்பணசாமியை வைத்ததன் நோக்கம்

 

நம்மைத் திட்டுபவர்கள்… சாபம் இடுபவர்கள்… இவர்களை எல்லாம் ஓட்டுக் கேட்டுக் கொண்டே இருப்போம். அதற்காக வேண்டித் தான் கருப்பணசாமியை வைத்து மோப்ப நாயையும் பக்கத்தில் காட்டி இருப்பார்கள்.

ஏனென்றால்
1.ஒட்டுக் கேட்டவுடன் நம் நல்ல புத்தியெல்லாம் இருண்டு விடுகிறது.
2.இருண்டு போன பின் நாம் எப்படித் தவறு செய்கின்றோமோ அதே போன்று
3.அந்த உணர்வுகள் நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விடுகிறது.
4.நீ நுகர்ந்து பார்த்த உணர்வுகள்… உன் நல்ல குணங்களை இப்படிக் கொன்று விடுகின்றது…! என்பதைத் தான்
5.சிலையை வைத்து மோப்ப நாயையும் அருகே வைத்து ஞானிகள் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் இன்று வழக்கத்தில் நாம் என்ன செய்கிறோம்…?

கருப்பண்ணசாமிக்கு ஆட்டை வெட்டி அவனுக்குப் படையல் செய்தால் தன்னைக் காப்பான்… அது காவல் தெய்வம்… என்று சொல்லி அதற்குப் பலியிட்டு அதை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

அந்த ஆவேச உணர்வு கொண்டு என்ன செய்கின்றோம்…? அங்கே ஆட்டைப் பலி கொடுத்தேன் என்ற நிலையில் நாம் செய்த அந்த உணர்வுகள் இங்கே வந்து பிறரை இரக்கம் இல்லாதபடி துன்பப்படுத்தச் செய்யும்.

உதாரணமாக… கொலை செய்பவனைப் பார்த்தோம் என்றால் அவன் அரக்கத்தனமாகத் தான் போவான். அவனுக்கு எந்த நோயும் வராது. ஆனால் பல கொலைகளைச் செய்வான்… தெம்பாக இருப்பான்.

யாரையும் பற்றி அவன் அஞ்சுவதில்லை… அவனுக்குக் கொலை செய்வது தான் வேலை.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் பொழுது அவன் எப்படி அந்த வலுப்பெற்றானோ இதைப் போல நமக்குள் இந்த அரக்க உணர்வுகள்… பலியிட்ட உணர்வுகள்… அதிகமாகி விடுகின்றது.

இறந்த பிற்பாடு என்ன செய்வேன்…?
1.நாம் பலியிட்டுக் கும்பிட்டது போன்று அடுத்தவர்கள் கருப்பணசாமிக்குப் பலியிட்டுக் கும்பிடுகிறார்கள் என்றால்
2.அந்த உடலுக்குள் புகுந்து… ஆவியாகப் போய்ச் சேர்ந்து விடுவேன்.

ஆனால் அவர்கள் ஆட்டைப் பலி கொடுக்கவில்லை என்றால் “எங்கடா ஆட்டைக் காணோம்…? ஏண்டா பலி கொடுக்கவில்லை…? பார்… உன் குடும்பத்தையே தொலைத்து விடுகின்றேன்…! எனக்கு ஆடு இப்பொழுதே வேண்டும்…! என்று சொல்லி இந்த உடலுக்குள் வந்த ஆவி அவனையும் ஆடச் சொல்லி ஆடைக் கேட்கும்.

இப்படித்தான் மனித உடலில் விளைய வைத்த உணர்வுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இருளை போக்க நாம் பிறரின் வேதனைகளை கேட்டறிந்தோம். ஆனால் அது நம் நல்ல குணங்களை இருளச் செய்து நம்மை அறியாமலே தவறு செய்ய வைக்கின்றது. அசுர செயல்களைச் செய்ய வைக்கின்றது.

அதே உணர்வு நம் நல்ல குணத்தை எப்படித் தாக்குகிறது என்பதைத் தான் இவ்வாறு சித்தரித்துக் காட்டினார்கள் ஞானிகள்.

அதற்கு மாறாக நாம் செய்யும் பொழுது மனித உடலில் எதை விளைய வைத்தோமோ அதனின் செயலாகத்தான் அடுத்து இருண்ட நிலையாக அந்தத் தெய்வமாக உருவாக்கி விடும்… அதே பலியைத் தான் இது கேட்கும்.

கருப்பணசாமி என்ற நிலைகளில் “அருளாடி” சொல்லும் பொழுது பேயை அங்கே ஓட்டலாம் என்று சொல்வார்கள். பேய் பிடித்தவர்களின் குடுமியைப் பிடித்து ஆட்டி… இரண்டு உதையைக் கொடுக்கும்.

ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்திற்கு அந்த ஆட்டம் குறைந்திருக்கும்.

அடுத்து பார்த்தோம் என்றால் அங்கே சென்று என்னை நீ அடக்கினாயா…? உன்னை நான் என்ன செய்கிறேன்…? என்று மீண்டும் ஆடத் தொடங்கும்.

1.இது தான் நாம் கண்ட பலனே தவிர
2.ஞானிகள் காட்டிய தீமைகள் இந்த விடுபடும் அருள் வழிகளை நாம் கடைப்பிடிக்கவில்லை

இதை எல்லாம் அறிந்து கொள்வதே மிகவும் நல்லது.

தன்னை மறந்து செய்யும் தியானம் சரிதானா…! அது சமாதி நிலையா…?

 

கேள்வி:-
பல வருடங்களுக்கு முன் தியானம் செய்வதைப் பற்றிச் சில புத்தகங்களைப் படித்தேன். ஆனால் அதிலே கொடுக்கப்பட்ட தியான முறை எனக்குச் சரியாக விளங்கவில்லை.

ஒரு குருவைச் சந்தித்துப் பயிற்சி பெறக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. வேறு ஒரு மார்க்கத்தின் வழி என்று ஒருவர் தியானம் செய்யும் முறையைக் கற்றுக் கொடுத்தார்.

அதன்படி சில காலம் தியானம் செய்து வந்தேன். 20 30 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தால் அப்படியே என்னை மறந்து இருப்பேன். கடிகாரம் ஓடுவது எனக்குத் தெரியாது.

பிறகு திடீரென்று கவனமும் குறைந்து மூச்சு விடுவதை நிறுத்தி விட்டேனே…! என்று தோன்றும். “இதுதான் சமாதி நிலை” என்று எண்ணி இருக்கின்றேன்.

ஆனால் இது எனக்குத் திருப்தியாக இல்லை. நான் செல்லும் பாதை சரியானதுதானா…? இல்லாவிட்டால் குருநாதர் என்னைச் சரியான பாதையில் நடத்திச் செல்ல வேண்டுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அதே போன்று பலர் எழுதியுள்ள ஆன்மீக சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கலாமா…? கூடாதா…? என்பதையும் விளக்கவும். எதைப் படிக்கலாம்…? எதைப் படிக்கக் கூடாது…?

ஈஸ்வரபட்டர் பதில்:-
உன் நிலை பதப்படுத்திய… பயிர் செய்வதற்குகந்த ஒரு நிலத்தை போன்றது. அந்தப் பலனைப் பெறும் வழியைத் தான் இனி அறிந்து கொள்ள வேண்டும்.

சத்தியத்தின் சக்தி தான் நாம் அனைவருமே. அச்சக்தியின் ஸ்வரூப நிலை பெற்றது தான் எல்லாமே. அவரவர்கள் எண்ணத்தில் இருந்து தான் அவரவர்களின் வழியும் செல்கின்றது.

1.ஏனெனில் உயிரணுக்களாக என்று நாம் தோன்றினோமோ அந்த நாளிலிருந்து
2.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நம் எண்ணம் சுற்றுகின்றது.

ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஒன்றைப் போன்ற இன வர்க்கங்களுக்கும் அதற்கென்று சில குண நிலைகள் உண்டு.

அதைப்போல ஒவ்வொரு உயிருக்கும் அதன் ஜீவ சக்தி உண்டு.
1.ஒன்றைப்போல் ஒத்த நிலையில் எதுவும் இருந்திடாது.
2.ஒவ்வொரு ஜீவ உயிரும் ஒவ்வொரு உடல் பிம்பம் எடுத்து மாறுபடும் நிலையில்
3.அந்த உயிரணு என்னும் ஆத்மாவுடன் ஜீவசக்தியும் வளர்ந்து கொண்டேதான் உள்ளது.

எப்படி சப்த அலைகளும் சுற்றிக்கொண்டே உள்ளனவோ அதைப் போன்ற ஜீவ சக்திகளும் சுற்றிக்கொண்டே உள்ளன.

இந்தப் 15 வருடத்தில் வந்ததல்ல உன் தியான நிலை. உன்னுடைய உயிரணு உதித்த நாள் கொண்டே உன்னுடனே வருவது தான் உன் நிலையும் இன்று.

வந்த நிலையை வழிநடத்தி
1.சமாதி நிலையிலிருந்து மீண்டு
2.இனி தியானத்தில் அமரும்போது நீங்கள் இந்த உலகில் அமர்ந்துள்ளது போல் எண்ணி
3.உங்களுடைய எண்ணத்தை மகரிஷிகள் ஞானிகள் பால் செலுத்தி அவர்கள் சக்தியை ஈர்த்து
3.உங்களுடைய உயிராத்மா உள்ள இடத்தில் அமர்ந்துள்ள நிலையைப் போல் எண்ணி
4.உங்கள் எண்ணம் அனைத்தையும் ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அதே நிலையில் தியானித்து
5.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் சக்தியை உங்கள் உயிராத்மாவிற்கு ஊட்டமாக ஏற்று
6.அந்நிலையில் பல உண்மைகளை உங்கள் தியானத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.

நீங்கள் அறிந்த உண்மைகளை இந்த உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில் வெளிப்படுத்தலாம்.

நாம் எடுத்த பிறவிப் பயனை இந்த உலக மக்களுக்கு நல்வழியில் உணர்த்தும் வகையில் ஒவ்வொருவரும் அவர்கள் வழியை நல்வழியாக்கி அவர்களை சார்ந்தோரையும் அந்த நிலைப்படுத்தி இன்று கறையுடனே வாழ்ந்திடும் இந்த கலியின் மக்களைக் கரையேற்றுங்கள்.

அந்த நிலைக்காகத் தான் யான் பல நிலையில் பலரின் வழியினில் உணர்த்துகின்றேன்.

பல நூல்களைப் படிக்கலாமா…? என்ற வினாவிற்கு ஏன் மனதைச் சஞ்சல படுத்துகிறீர்கள்…!
1.அனைத்து நூலையுமே படித்திடலாம்
2.அந்த நிலையின் உண்மையை நாம் சொல்லும் தியானத்தில் அறிந்து கொள்ளலாம்.
3.அவரவர்கள் எண்ணத்தை வெளியிட்டுள்ளார்கள்… “அதை அறிந்து நாம் ஏற்பதுவே உத்தமம் ஆகும்…”

சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை… சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை…!

 

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மெய்யுடன் மெய்யாக நாம் வாழ வேண்டும். ஏனென்றால் உயிர் என்பது மெய்…!
1.உணர்வுகள் அனைத்தும் மெய் ஆகி… ஒளி என்ற உணர்வாகும் பொழுது
2.உயிருடன் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

அதனால்தான் இங்கே இராமேஸ்வரத்தில் நேரமாகி விட்டது என்று உணர்வின் (மனதை) தன்மையைக் கூட்டி இராமன் பூஜிக்கத் தொடங்கினான்.

இதைப் போல நாமும்
1.நம் வாழ்க்கையில் சந்தித்தோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும்
3.பகைமை அற்ற வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்துக் கூட்டினால்
4.பேரருள் என்ற உணர்வுகள் பெருகி… பேரொளியாக மாற்றிடும் தன்மை வரும்.

ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியினை இங்கே உணர்த்துகின்றோம்.

உடல் என்று இருந்தாலும் அது நாளடைவில் கரையும் தன்மை தான் வளர்கின்றது.
1.உடல் கருகும்… ஆனால் உணர்வுகள் வளரும்
2.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… அந்த அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்.
3.அந்த அருள் ஒளியைப் பெறுவதற்கு நாம் ஒவ்வொரு நிமிடமும் முயற்சிப்போம்.

உடல் வாழ்க்கையில் சேர்த்த எந்தச் செல்வமும்… இந்த உடலும் நம்முடன் வருவதில்லை.

ஆகவே அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளர்த்திடும் பருவம் கொண்டு உயர்ந்த நிலையாக இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியாக நாம் செல்வோம்…! என்று வேண்டுகின்றேன் (ஞானகுரு).

ஒவ்வொரு குடும்பங்களிலும் இதைப் போலச் செயலாற்றிப் பழகுங்கள். பண்பட்டு வளரும் தன்மையாகக் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழுங்கள்.

நாம் தனித்து இருந்தாலும்… அன்புடன் பண்புடன் தனித்திருக்கும் நிலை வர வேண்டும்… உணர்வுகள் ஒன்றி வாழ வேண்டும். அதாவது தனித் தனியாக என்ற நிலை இருந்தாலும் உணர்வுகள் ஒன்றி வாழலாம்.

ஆகவே ஒன்றி வாழும் உணர்வே என்றும் நிலையானதாக மாறுகின்றது. அந்த அருள் ஒளி எல்லோரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

அருள் ஞானம் பெருக வேண்டும் இந்த உடலிலேயே பிறவியில்லா நிலையை அடைய வேண்டும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ மகரிஷியின் அருள் உணர்வை நீங்கள் பெற்றுப் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு பெற எமது ஆசியும் குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அழியாச் செல்வமான பேரருளைப் பெற்று பேரின்பப் பெருவாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் (ஞானகுரு).

காற்று மண்டலத்தில் பரவிக் கொண்டிருக்கும் நஞ்சு நம்மைப் பாதிக்காது தடைப்படுத்த வேண்டும்

 

விவசாயங்களில்… பூச்சிகளைக் கொல்ல என்று விஞ்ஞான அறிவால் உபயோகப்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் தாவர இனங்களில் கலந்து விடுகின்றது… அதே சமயத்தில் இந்தக் காற்றிலும் கலந்து விடுகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் நெல்… கத்திரிக்காயிலிருந்து மற்ற எல்லாக் காய்களிலும் பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்று நாம் உணவாக உட்கொள்ளும் திராட்சைப்பழம் மாம்பழங்களிலும் இந்த விஷத்தன்மைகள் படர்ந்துள்ளது.

அதை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உயிர் உடலில் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
1.அந்த ஜீவ அணு எந்த விஷத்தினைத் தனக்குள் வளர்த்துக் கொண்டதோ அது நம்முள் நின்று
2.இந்த விஷங்கள் (பூச்சி மருந்து) எங்கிருந்தாலும் அது தன் உணவுக்காகச் சுவாசித்து இழுக்கும்.
3.தன்னை வளர்த்துக் கொள்ள அவ்வாறு சுவாசிக்கும் பொழுது தன் இனக் குஞ்சுகளை நம் உடலுக்குள் அதிகமாகப் பெருக்கும்.

நம் உடலில் தசைகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஆனால் அது இருந்த இடத்திலிருந்து விஷத்தைப் பரப்பி அதை உணவாக உட்கொண்டுவிடும். அப்போது நம் உடலுக்குள் வலி… வேதனை தெரியும். இது கேன்சர் என்ற நோயாக வரும் காரணம் இந்த விஷத்தின் தன்மையால் வருவது தான்.

ஒரு மனிதன் மிகவும் வேதனைப்பட்டுச் சாபமிட்டாலும் அதை வேடிக்கையாகப் பார்த்து உற்றுக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் அந்தச் சாபத்தின் வித்து வேதனையாகப் பதிவாகி விடுகின்றது.

“இப்படித்தான் அவன் ஆக வேண்டும்…” என்று சாபமிடும் பொழுது அந்த உணர்வுகள் ஜீவ அணுவாக மாறி அவன் எதை எல்லாம் பேசினானோ இந்த உணர்வை எடுத்து… நமக்குள் உருப்பெற்ற ஜீவ அணு அவன் சாபமிட்ட அந்த வாக்கை நிறைவேற்றிக் கொண்டே இருக்கும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை… வேடிக்கைதான் பார்த்தோம்… சாபமிட்ட உணர்வுகள் இவ்வாறு வந்து விடுகின்றது.

எனக்கு மோசம் செய்தானே பாவி… அவன் கண்கள் குருடாகிவிடும்…! என்று சொன்னால் போதும்.
1.மற்றதை எடுத்து உணர்த்தும் “ஜங்ஷன்” கரு விழிக்குள் ஒரு இணைப்பு இருக்கின்றது
2.அதிலே பட்டுவிட்டால் சிறுகச் சிறுக அது படம் தெளிவாகத் தெரியாதபடி கண்களைக் குருடாக்கிக் கொண்டே இருக்கும்.

கண் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் இன்று நிறைய இருக்கின்றார்கள். காரணம் இந்த வேதனை உணர்வு கண்ணிலே திரை மறைவாகும்… பார்வை குறைந்து கொண்டே வரும்.

இப்படி இல்லாதவர்கள் யாரும் இல்லை.

பண்டைய காலங்களில் எல்லாம் 90 100 வயது வரையிலும் வாழ்ந்து இருக்கின்றார்கள். அவர்களுக்குக் கண்கள் சீராகத் தெரிந்துள்ளது. இன்றும் கண்ணாடி போடாமல் அவர்களால் வாழ முடிகிறது.
1.ஆக… நஞ்சினை எதிர்க்கும் சக்தி பெற்றவர்கள் அவர்கள்.
2.அந்த நஞ்சினை வென்றிடும் சக்தி இருப்பதால் அது ஒன்றும் பாதிக்காத நிலையாகி விடுகின்றது.

இன்று வாழும் நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும் தாவர இனங்களில் தூவப்பட்ட நஞ்சுகள் செடியுடன் கலந்து விஷமான உணர்வாக உட்கொண்ட பின் அது நமக்குள் கலந்து விடுகின்றது.

விஷத்தைக் குடித்தால் எப்படி நம்மை மயக்கமடையச் செய்கின்றதோ அதைப் போன்று நம் தெளிந்த மனதை இழக்கச் செய்து விடுகின்றது. உணவு வழியாக வரும் இந்த நஞ்சின் தன்மை உடலில் ஜீவ அணுவாக மாறிய பின் அந்த விஷத்தையே உட்கொள்கின்றது.

முதலில் தாவர இனங்களில் பூச்சிகள் விழுந்து அது முட்டை இடுகின்றது. பூச்சிகள் விழாமல் இருக்கப் பூச்சிக்கொல்லி மருந்தை அதன் மீது தெளித்த பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது.
1.ஆனால் அது இட்ட முட்டைக்குள் மேல் தோடு அந்த மருந்தைக் கவருகின்றது.
2.விஷங்கள் அதற்குள் ஊடுருவுகிறது
3.மருந்திலிருந்து வரும் ஆவியின் தன்மையை அதற்குள் (கருவுக்குள்) இணைத்து
4.அதைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் நிலையாக வருகின்றது… முட்டைக்குள் இருக்கும் பூச்சியை உருவாக்கும் உயிரினங்களுக்கு…!

நாம் தூவும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இப்படி எல்லா வகைகளிலும் கலந்து உணவுடன் உட்கொள்ளும் பொழுது விஷம் கொண்ட அணுவாக மாறி விடுகின்றது.

உடலுக்குள் ஜீவ அணுவாக மாறி அது அதனுடைய மலத்தை வெளிவிடும் பொழுது கை கால் எல்லாம் கடு..கடு… என்று இருக்கிறது… கண் வலிக்கின்றது தலை வலிக்கின்றது நெஞ்சு வலிக்கின்றது பிடரி வலிக்கின்றது என்று நாம் சொல்லத் தொடங்கி விடுவோம்.

தவறு செய்யாமலேயே…
1.நம் உணவு வழியாக இப்படிப்பட்ட தீமைகள் கலந்து மனிதனுடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து
2.அடிக்கடி வேதனையைச் சுவாசித்து உடலுக்குள் வேதனையை அனுபவிக்கும் நிலையாக வருகின்றது.

இன்றைய காலகட்டத்தில் இந்த நஞ்சு விளைந்து அது உடலுக்குள் அதிகமாகி விட்டால் சிறுகச் சிறுகக் கேன்சராக முளைக்கத் தொடங்கி விடுகிறது.

நம் உடலில் இருக்கும் ஜீவ அணுக்கள் அதிகமான விஷத்தை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்திடும் நிலையாக வந்து அருகில் இருக்கக்கூடிய தசைகளில் இருக்கும் நல்ல அணுக்களையும் மடியச் செய்து விடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியாக வர வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை
2.ஒவ்வொரு நொடிப்பொழுதும் உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
3.அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணுதல் வேண்டும்.

தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில்

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ… அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப் போல் தான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழிவழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல் இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவைகள நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான் இன்றையக் கலி மனிதன்

 

நம் பூமியின் ஈர்ப்பிற்கு சக்தி தரும் காந்த மின் அலையின் வளர்ச்சிக்கு ஊற்றாக அமையப் பெற்றது தான்
1.உலகின் மூன்று இடங்களில் உள்ள “காந்த மின் கிணறுகள்…!”
2.கடலுக்கடியில் ஒன்று.. பாலைவனத்தில் ஒன்று… மலைப் பகுதியில் ஒன்று…!
3.இக்காந்த மின் கிணறுகளின் ஈர்ப்பு அதிகப்பட்டுப் பட்டு வளர்ச்சிப்படுமேயானால்
4.நம் பூமிக்கு… பூமியின் ஈர்ப்பு சக்தி அதிகப்படும்.
5.அதனால் அதிகப்படியான ஜீவ இன வளர்ச்சிக்குகந்த சத்து அமில நிலையைத் தர வல்ல தாவரங்களின் இயற்கை வளம் பெருகியிருக்கும்.

நம் பூமியைக் காட்டிலும் வியாழனும் சூரியனும் வளர்ந்துள்ளது. அவைகள் நம் பூமியை விட அதிக ஈர்ப்புக் குணமுடையதாக வளர்ந்து மற்ற எல்லா மண்டலங்களுக்கும் அதன் சக்திக் குணத்தைத் தருகின்றது.

1.அந்த வியாழனைப் போன்று வளர்ந்து பெருக்கும் நிலை நம் பூமிக்கு இப்பொழுது குறைவுபட்டுள்ளது.
2.நம் பூமியும் கன விகிதத்தில் வளர்ந்து தான் வருகிறதேயன்றி
3.தன் ஈர்ப்பின் சக்தியை வளர்க்க முடியாத நிலை ஆகிவிட்டது.

காரணம் இன்றைய கலி மனிதன் தன் விஞ்ஞான செயற்கை மின் அலையைக் காண சூரியனின் சக்தி அலையை
1.நம் பூமி ஈர்க்கும்… பூமியின் இயற்கை வளர்ச்சியைத் தடைப்படுத்தி
2.அதைச் செயற்கை மின்சாரமாகக் கண்டு எடுத்து விட்டான்,

பூமியின் ஈர்ப்புக் காந்த சக்திக்குக் கிடைக்க வேண்டிய ஆகார நிலையை… அது எடுத்து… உண்டு… வளர்ந்து… பலன் காணும் முன்… இன்றைய கலி அறிவு மனிதனால் துரித நிலையில் மின்சாரம் கண்டு பூமியின் வளர்ச்சிக்கும் வருங்கால உயிரினங்களின் வளர்ச்சி நிலைக்கு மாற்றம் தரவல்லவனாகி விட்டான் “இன்றையக் கலி மனிதன்…!”

இக்கலி மனிதனால்… “அவன் அறிவாற்றல்” என்ற மேம்பாட்டில் கண்ட “செயற்கையினால்…!” பல கோடி உயிரணுக்களின் சக்திக் கலவையாகக் கலந்து வாழ்ந்து… தான் வாழ்வதோடு மட்டுமல்லாமல்
1.வளர்ந்து கொண்டே சுழன்றோடும் இந்தப் பூமியின் நிலையைத் தன் செயலுக்காக
2.மின் அலையைப் பாழ்படுத்தியதனால் பூமியின் இயற்கையையே பாழ்படுத்திவிட்டான்.

இதனின் நிலையை மாற்றி நம் பூமி வளரத்தான்… இக்கலி மாறி கல்கியாக வருவதற்குத்தான் பல கோடிச் சித்தர்களும் சப்தரிஷிகளும் செயல் கொள்கின்றனர்.

இக்கலி மாறும் தருணத்திற்குள் இந்தப் பூமியின் அமிலக் குணத்துடன் ஒன்றி வாழ்ந்த மனித இனக் குண சக்தி இருந்தால் தான் மீண்டும் மீண்டும் மண்டல சக்திகளும்… எந்த ஒரு புதிய படைப்பு நிலையும் வளர்க்க முடியும்.

எண்ண சக்தியின் வளர்ச்சி நிலை கொண்ட அமில… குண ஜீவன்.. மனிதனிலிருந்து தான் இந்நிலை வளர முடியும் என்ற உண்மையில் தான் சப்தரிஷிகளும் அவர்களின் ஆசி பெற்ற சித்தர்களும் செயல்படுகின்றனரப்பா…!

கூரை அமைக்கத் தூணோ சுவரோ தேவை, அது போல் இம்மனித ஆத்மாக்களின் எண்ண வளர்ச்சியின் மேம்பாட்டில் தான் மண்டல வளர்ச்சி உண்டு… மற்றெல்லா வளர்ச்சியும் உண்டு.

இதன் நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் இஜ்ஜீவ உடல் பிம்ப நிலையிலிருந்து தன் உயிரணுவான காந்த உயிர் சக்தியை நல்ல நிலையில் எடுக்கும் எண்ணம் கொண்டு இந்த உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களையும் வீரிய சக்தி பெறும் வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.

தான் எடுக்கும் ஜெப நிலையால் தன் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களும் ஒளி பெற்று தானாக ஓர் உயிரணு ஆத்மாவுடன் பல கோடி அணுக்களும் ஒன்றுபட்டுச் செயல்படுமானால்
1.அதன் சக்தி ஜெபத்தினால் எடுக்கும் நுண் அலையின் தொடர்பைக் கொண்டு
2.பலவாகப் படர்ந்துள்ள சப்தரிஷிகளின் ஒளி அலையைப் பெற்று
3.அவர்களின் தொடர்பின் மூலம் பல செயல்களை இந்த உயிராத்மாவினால் வளர்க்க முடியும்.

ஏனென்றால் வாழ்க்கையின் பொருள் என்பது வாழும் காலங்களில் பிறர் போற்றித் துதித்து… “மடிந்த பிறகு…. புகழாஞ்சலி பெறுவதல்ல…!”

இம்மனிதப் பிம்ப வாழ்க்கையில் எடுக்கும் ஒளி அலையின் நிலையின் வளர்ச்சி தான் எல்லாவித இயற்கைக் குண வளர்ச்சி மண்டலங்களின் சக்தியும் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது வாழும் குறுகிய கால வாழ்க்கையில்
1.இந்தச் சந்தர்ப்பத்தைக் குறுகிய நிலைப் புகழுடன் மங்க விடாமல்
2.பேரண்டப் பெரு நிலை என்ற உயர்ந்த அண்டமாகும் சக்தி நிலையைப் பெறும் தகுதிக்குத் தான்
3.யாம் இங்கே தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பாட நிலையின் உண்மை நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடந்த கால மனிதர்கள் (பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) அவர்கள் நம்மைப் போன்று வேலை செய்வதில்லை. மிருகங்களைப் போலத்தான் தன் உணவுக்காகத் தேடி அலைவதும்… உணவு உட்கொள்ளும் நிலையும் இருந்து வந்தது.

அவர்கள் சேமித்து வைத்திருக்கும் உணவும் சிறிதளவு தான் இருக்கும். ஆனால் அதுவும் சிறிது காலத்தில் இருக்காது… சேமித்து வைத்தால் நிற்காது (கெட்டுவிடும்) என்று அக்கால மனிதர்கள் சேமித்து வைப்பது இல்லை. “கெட்டுப் போய் விட்டது…” என்று விட்டு விட்டுச் சென்று விடுவார்கள்.
1.உயிரினங்களைப் போலத் தான் அன்றைய மனிதர்கள் இருந்தார்கள்
2.ஆனாலும் இயற்கையின் நிலைகளைத் தன் எண்ணத்தால் நுகர்ந்து அறியும் சக்தி பெற்றவர்கள்.

அவர்கள் எண்ணங்கள் அப்படி இருந்தாலும் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவு எப்படி வருகின்றது…?

முந்தி எல்லாம் பள்ளிக்கூடங்களில் “மாகாணி வாய்ப்பாடு” சொல்வார்கள். அந்த வாய்ப்பாடுகளைச் சொல்லப் போகும் போது பேசிக் கொண்டிருக்கும்போதே இத்தனைக்கு இத்தனை என்ன…? என்று கேட்டால் உடனே சொல்லிவிடுவார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவில் வந்த மாணவர்களை எடுத்துக் கொண்டால் கால்குலேட்டர் வேண்டும். அதை வைத்துத் தட்டிப் பார்த்துத் தான் சொல்வார்கள். கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் சொல்ல முடியாது.
1.மனிதனுடைய மூளை வளர்ச்சி அங்கே தான் (இயந்திரத்திற்கு) போகிறது
2.இன்னொன்றை நாடும் போது சுயமாகச் சிந்திக்கும் நிலை இழக்கப்படுகின்றது.
3.எந்த இயந்திரத்தால் மனிதன் செயல்பட்டானோ அந்த இயந்திரத்தின் துணை வேண்டித்தான் அவன் எண்ணம் செல்கின்றது.

இயந்திரத்தின் நிலையை வடிவமைத்த… அது எந்த இன்ஜினியரோ அல்லது விஞ்ஞானியோ… அவன் உணர்வுதான் தான் வருகின்றது. இந்த உடலின் இச்சைக்குத் தான் இது நடக்கின்றது

இதைப்போல செயற்கையில் செய்யப்பட்ட கெமிக்கல் கலந்த உணர்வு இயக்கப்பட்டு… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் இவனால் உருவாக்கப்பட்ட நிலைகள் அந்த அதிர்வுகளைக் கொடுக்கும் பொழுது அதன் செயலாக்கம் நடக்கின்றது.

கம்ப்யூட்டர் அல்லது டிவி.. ஃபோன் இதை எல்லாம் பார்த்தோம் என்றால் படமாகத் தெரிகிறது. அதை ஒவ்வொரு நாளும் பார்த்துப் பார்த்துப் பழகி விட்டால் அதே உணர்வின் சிந்தனை தான் நமக்குள் வரும். அதையே தான் பார்த்துக் கொண்டிருப்போம்.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டர் இயக்கக்கூடியவர்கள் அதிலேயே உட்கார்ந்திருந்தால்…
1.ஒரு பிரமை பிடித்த மாதிரித் தான் இருப்பார்கள்.
2.சகஜ வாழ்க்கையில் அதற்கு மேற்கொண்டு என்ன செய்வது…? ஏது செய்வது…? என்று தெரிவதில்லை.
3.இயல்பான அறிவின் ஞானம் இல்லாது போகிறது.
4.மனிதனால் இயக்கப்பட்ட அந்தக் கெமிக்கல் தான் இவன் உணர்வுக்குள் வளர்க்கப்பட்டுக் கொண்டு வருகிறது.

மனிதனால் செயற்கையில் இயக்கப்பட்டு எந்த விஷத்தன்மை கொண்ட அதிர்வின் ஒலி/ஒளிகளைக் காணுகின்றானோ அதே உணர்வுதான் இன்று மனிதனுக்குள் வளர்ந்து கொண்டே வருகின்றது.

இப்படி அந்த விஷத்தின் அலைகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு சிந்தனை இழக்கும் தன்மையாகத் தான் மனிதன் மாறுகின்றானே தவிர மெய் ஞான வழிக்கு வர முற்படவில்லை.

தியானத்தின் மூலம் “நாம் வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கின்றோம்” என்பதை எப்படித் தெரிந்து கொள்வது…?

 

உதாரணமாக… பகலில் நாம் ஒரு அதிர்ச்சியான நிகழ்ச்சியைப் பார்த்த பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது நமக்கு அதே அதிர்ச்சி வருகின்றது… தூக்கம் முழிப்பு… பயம் எல்லாமே வருகின்றது.

அதே போன்று… துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளையும் நீங்கள் கவர்ந்து கொண்டால்…
1.இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது உங்களை வான மண்டலத்துடன் இணைக்கும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கும்… அந்த உணர்வுகள் உங்களுக்குள் இணையும்.
3.சிலருக்கு மிதப்பது போன்று காட்சிகளும் உணர முடியும்…!
4.உடலுக்குள் இருந்து பளீர்…ர் பளீர்…ர் என்று ஒளியாக மின்னவும் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் சக்தியாக இந்தத் தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் தெளிவாகத் தெரிய வரும்.

இரவிலே வான மண்டலத்தில் செல்வது போன்று தெரியும். முழித்துப் பார்த்தால் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே நாம் தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தி வளர்ந்திருப்பதை நாம் இப்படி அறியலாம்…!
1.வான மண்டலத்திலே உங்கள் உணர்வலைகள் சஞ்சரிக்கும்
2.உங்கள் நினைவாற்றலை அங்கே விண்ணுக்கு அழைத்துச் செல்லும்.

ஏற்கனவே சொன்னது போன்று பயமான உணர்வுகளைப் பதிவாக்கினால் அது அஞ்சி வாழும் உணர்வுகளாக… இரவிலே தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பி… கலக்கமான நிலைகள் கொண்டு தூக்கம் இல்லாத நிலை ஏற்படும்.

அது போன்ற நிலையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத் இதையெல்லாம் தெளிவாக்குகின்றேன்.

மனித வாழ்க்கையில் அருள் ஞானத்தைப் பெருக்கி இருளை அகற்றிடும் சக்தியாக நீங்கள் வரவேண்டும். இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. ஆகவே அந்த அரும் பெரும் சக்திகளை… மகரிஷியின் சக்திகளை நீங்கள் எண்ணி ஏங்கி எடுக்கப்படும் பொழுது அந்த ஒளியான அணுக்களாக உங்களுக்குள் மாற்றும் தன்மை வரும்.

அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இவ்வளவு விளக்கமாகச் சொல்கின்றேன்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த நினைவு உங்களைக் காக்கும் சக்தியாக வரும்.

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல… தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே…!

படைக்கப்பட்டவன்…
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன் தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்…!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படித் தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி… அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்… அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்… இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி…
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்…
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்… மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா…!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்…!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்… நம் பூமியும்… நாமும்… எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?

தாஜ்மகால்

 

மக்களின் வாழ்க்கையில்… ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது.

1.மனிதர்களின் எண்ணம் நல்வழியில் சென்று… தெய்வ பக்தி கொண்டு அவர்கள் செல்லும் வழிக்கெல்லாம் தெய்வமாக அருள் புரிகின்றார்கள்…
2.நாம் இப்பொழுது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும்.

நல்வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்குச் சென்றால்.. அதைப் போன்றே ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே ஈர்த்துவிடுகிறோம்.

அப்போது… “அந்த ஆவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்…” என்பதனை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் இதை உணர்த்தி வருகின்றேன்.

காலம் காலமாக இவ்வாவிகளின் நிலை செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.

நல்ல நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் சூட்சும நிலையிலிருந்து கொண்டே
1.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாகத் தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக
2.தெய்வமாக இருந்து பல நல் சக்திகளைத் தான் வாழ்ந்த குடும்பத்திற்குப் பாய்ச்சி
3.தன் இரத்த தொடர்புடைய பிள்ளைகள் வாழும் காலம் வரை அந்தக் குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளைப் பூர்த்தி செய்திட
4.பல உதவிகளை அக்குடும்பத்தில் உள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி வருகின்றது.

அந்தக் குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழல விட்டு அந்த ஆவியின் நிலை இருக்கின்றது. அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகு தான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று அடுத்த வாழ்க்கைக்கே வருகின்றது.

ஆனால்… குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும் எந்த நிலையில் அந்த ஆவி பிரிந்ததோ அதே குரோத நிலையில் தான் சுழல்கிறது.

அந்த ஆவி குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ… அதைக் குரோதம் கொண்டவர்கள் மூலமாகச் செயல்படுத்துகின்றது. அதாவது… வும் நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்துகிறதோ அதே போல்தான் இந்தத் துர் ஆவிகளும் வந்து செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளின் அத்தகைய சுவாச நிலையினால் தான் மனிதன் மிருகமாகும்… அதாவது மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

ஆகவே… வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டு தான் மறு ஜென்மம் நமக்கு அமைவதே…!

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
1.மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலை எல்லாம் தெரிந்திடும்
2.நாய்க்கு அனைத்து நிலைகளையும் தெரிந்துவிடும்,

ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்து செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால்… “தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன…”

ஆனால் அந்த மிருகத்தைத் தன் நிலைக்கு அரும்பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான் ஈன்றைய மனிதன். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அந்த மிருகத்துக்கும் தெரிகின்றது.

மிருக உணவையும் பறவைகளின் உணவையும் நாம் புசிப்பதினால்
1.அவற்றின் உடல்களில் எந்தெந்த அணுக்களின் தாக்குதல்கள் இருந்தனவோ
2.அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இப்படியெல்லாம் பல நிலை கொண்ட ஆவித் தன்மைகள் இந்த உலகில் உள்ள பொழுது
1.அந்த ஆவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கிக் கொண்டு
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல் அதைப் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் எனும் ஆவியின் நிலை என்ன…?

அந்த ஆவி இன்னும் அந்த தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது.

எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அந்த இரண்டு ஆவிகளுமே…! ஷாஜஹான் என்னும் ஆவியும் மும்தாஜின் ஆவியும்.
1.அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை
2.மறு ஜென்மத்திற்கும் வரவில்லை… சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அந்த இரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில் தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையில் தான் இருந்திடும்… ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன. அந்த மாளிகையில்…!

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராக இன்றும் வாழ்கின்றார்கள் அந்த இரண்டு ஆவிகளுமே.

இந்நிலை போல் ஆவி உலகில் பல நிலைகள் உள்ளன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது…?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது…?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது…?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது…?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது…?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்

அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.

வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.

இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா… அது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்…!

அன்பு பண்பு பரிவு கொண்டு வாழ்ந்தாலும்… அந்த நல்ல குணங்களைக் காக்கும் சக்தியை நாம் அடிக்கடி எடுக்க வேண்டும்

 

மனிதனாக பின் அன்பும் பண்பும் கொண்டு பாசத்துடன் நாம் வாழ்ந்தாலும் பிறர்படும் துயரத்தையும் அந்தத் துயரச் செயல்களைச் செயல்படுத்துவோரைப் பார்ப்பதும் பிறரைத் துன்பப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவரையும் நாம் காண நேருகின்றது.

அவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது “பிறருக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றான்” என்ற இந்த உணர்வினை நாம் அறிந்தாலும்… அதை நுகர்ந்து எந்த நல்ல குணத்துடன் நாம் இணைந்து அவர்கள் செய்யும் தவறை உணர்கின்றோமோ… அவர் செய்யும் தவறான உணர்வுகள் இதற்குள் பட்டபின் என்ன நடக்கின்றது…?

சந்தர்ப்பத்தில் நாம் கீழே விழுந்து விட்டால் மேலே எழுந்திருக்க முடியாது ஒருவன் மேலே நம்மை அமுக்கிக் கொண்டிருப்பான் என்றால் எப்படி இருக்கும்…?

இதைப் போன்று நமக்குள் மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களில் ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்று அன்புடன் பண்புடன் பரிவுடன் பார்த்தோம் என்றால்… இந்த இரண்டு குணங்களுடன் நுகரப்படும் பொழுது…
1.அவன் தீமை செய்து கொண்டிருக்கின்றான் என்ற நிலை வந்தாலும்
2.நம் நல்ல அணுக்களில் இது பட்டபின் அவைகள் பலவீனம் அடைகின்றது.
3.ஒருவனைக் கீழே தள்ளிவிட்டு மேலே ஏறி உட்கார்ந்தால் எப்படித் துன்பமாக இருக்குமோ
4.அதைப்போல மனிதனை உருவாக்கிய இந்த அணுக்கள் அது வேதனையுடன் துடிக்கத் தொடங்கிவிடும்.
5.நாம் வேதனையுடன் துடிக்கப்படும் பொழுது எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணினால் கீழே தள்ளும் நிலை தான் வரும்.

மனித வாழ்க்கையில் பண்பும் பரிவும் கொண்டு உற்றுப் பார்க்கும் பொழுது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்கு செய்கின்றான் என்றால் தீங்கு செய்பவனையும் பார்க்கின்றோம்… தீங்கினால் பாதிக்கப்பட்டுப் பதறி அழுபவனையும் பார்க்கின்றோம்.

இரண்டையும் கலந்து இந்த உணர்வுகள் வெளிப்படுவதை நாம் நுகர்ந்தறியும் பொழுது நம் நல்ல குணங்களுடன் இணைந்து விடுகின்றது.

அப்பொழுது நம் நல்ல குணங்கள் அடுத்து ஒரு தரம் செய்தாலும்…
1.நம்மை அறியாமலேயே “என்ன உலகம்…? எந்த நன்மையைச் செய்தாலும் இப்படி ஒரு உலகம் இருக்கின்றதே…!” என்று
2.அந்த உணர்வுகள் நல்லதைப் பேசாது தவறு செய்யும் உணர்வுகளையே நம்மைப் பேச வைத்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு இனிமையான பாடலை டேப்பில் பதிவு செய்து கொண்டிருக்கும் போது அதில் எதிர்மறையாக ஒலி பதிவாகிவிட்டால் நல்ல பாடலையும் அது இடைமறித்து அந்த இனிமையை மடக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் நாம் நுகரும் சந்தர்ப்பத்தில்… நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… தீமை செய்பவனையும் அதிலே சிக்குண்டவரையும் இந்த இரண்டு உணர்வையும் நுகரப்படும் பொழுது… அவன் பதறுவதை இந்த வலுக் கொண்ட உணர்வாக உயிர் மாற்றிவிடுகின்றது.

அதே சமயத்தில் நல்ல குணங்களுடன் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த நல்லவனுக்காக நம் எண்ணங்கள் பட்டாலும் அவன் பேசும் வேதனை உணர்வுகளை நல்ல அணுக்களில் பதிந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…! உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை… நல்ல உணர்வுகளை உருவாக்கும் அந்த அணுக்களைச் செயலிழக்கச் செய்து விடுகின்றது.

அவ்வாறு அது செயலிழக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.உடனுக்குடன் ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுதல் என்ற நிலை கொண்டு
3.உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி.. நாம் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்

நம் நினைவு மிக மிகக் கூர்மையாக இருக்க வேண்டும்

 

நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் பலவாக உள்ள நினைவின் ஓட்டத்தை ஒரு நிலைப்படுத்திப் பல நிலை கொண்ட அமில குணத்தையெல்லாம் ஒரு வழிக்கு வர பழக்கப்படுத்தித் “திசை திருப்பும் ஞான வழி பெறுதல் வேண்டும்…!”

அப்படிப் பெற்றால்…
1.தான் எடுக்கும் சுவாச ஈர்ப்பினால் எந்த ஒரு நற்சக்தியின் பால் தன் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ
2.அதே நினைவில் சுவாசம் எடுத்து… அதன் வழித் தொடர் நினைவில்…
3.அத்தொடரில் உள்ள உண்மையின் வளர்ச்சியை நிச்சயமாகப் பெற முடியும்.

ஞானத்தின் பால் செலுத்தப்படும் இந்த ஈர்ப்பு குண நலம் அமையப் பெறும் வழித் தொடரில் சென்றால் “எந்த ஒரு நுண்ணிய அலைத் தொடரையும்…” வளர்ச்சி ஞானத்தினால் பெற முடியும்.

அத்தகைய நுண்ணிய அலைத் தொடரிலிருந்து…
1.நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களுடனும் இந்த நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டு
2.இப்பிம்ப உடலிலிருந்து உயிர் ஜீவ சக்தியைத் தனித்துப் பிரித்துச் சென்று எல்லாவற்றையும் அறிய முடியும்.

அதாவது…
1.ஒவ்வொரு அமில குணங்களின் சேர்க்கையையும் அதன் வட்டத்திலிருந்து உயிர் பெறும் ஜீவ நிலையையும்
2.ஒன்றுடன் ஒன்று கலவைப் பட்டு வளரும் நிலையையும்
3.இப்பூமியில் உள்ள கனி வளங்களின் நிலை அறியவும்
4.கனி வளத்திலிருந்து கசிந்து உருகி வரும் திரவ நிலைகளை அறியவும்
5.இப்பூமியின் பூமத்திய ரேகையில் உள்ள உண்மை நிலைகளையும் அறிய முடியும்.

விஞ்ஞான சாதனை கொண்டு செயற்கை மின் அலையின் தொடரினால் செயற்கை மின் அலையிலிருந்து விஞ்ஞானத்தில் கண்டறியும் ஆற்றலைக் காட்டிலும்
1.இஜ்ஜீவ மின் அலையின் சக்தியை வளர்த்துக் கொள்ளும் மனிதனால்
2.தன் உயிராத்மாவை எந்த இடத்திற்கும் சென்று..
3.பூமியின் மேல் மட்டத்தில் உள்ள நிலைகளை அறிவது போல்
4.இந்தப் பூமியின் உட்கோளங்களில் வளர்ந்து வரும் நிலைகளையும் அறியலாம்.

அது மட்டுமல்ல…!

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையும் காற்று மண்டலத்திற்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலத்தையும் இந்த நுண்ணிய அலையின் சக்தியை வளர்த்துக் கொண்ட மனிதனால் காண முடியும்.

இந்த உடல் அப்படியே ஒரு இடத்தில் இருந்தாலும்… விட்டுச் சென்ற உடலில் அனைத்து உயிரணுக்களும் இந்த நுண்ணிய மின் அலையின் சக்தியின் ஈர்ப்புடன் இயங்கிடும்.

உடலில் உள்ள தசைகளும் மற்ற எல்லா உறுப்புகளும் அதே நிலையில்… அதாவது…
1.உண்டு கழிக்க வேண்டும் என்ற நிலை இல்லாமல்
2.சுவாசம் எடுத்துச் சுவாசம் விட்டு இருக்கக்கூடிய நிலையும் இல்லாமல்
3.இந்த உடல் பிம்பம் எந்த வகைப் பின்னமும் படாமல் அதே நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும்.

இதை எல்லோராலும் பெற முடியும்…!

ஆனால்
1.மந்திரமும்… மாயமும்…
2.தெய்வீகப் பெரும் சக்தி என்றும்…
3.சாதாரண மனிதனால் முடியாத நிலை என்றும்
4.மனிதன் பெற வேண்டிய உயர் சக்தியை மனிதன் எடுக்க முடியாமல்…
5.எட்டாத நிலைப்படுத்தி மறைக்கப்பட்டு விட்ட நிலை தான்…! இன்று நடப்பில் உள்ளது.

செயற்கையின் மின் அலையை விஞ்ஞானப்படுத்திச் செயலாக்கும் மனிதனால்… தன் அலையின் தொடர்பிலிருந்தே அச்சூரியனின் ஒளி அலையின் ஈர்ப்பினால்… தன் உயிராத்மாவால்… எந்த ஒரு நுண்ணிய அலையின் வளர்ச்சியையும் ஜீவ உடல் கொண்டு மனிதனால் எடுக்க முடியும்.

இது சாத்தியமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் பொழுது அவனின் தாய் தந்தையர்கள் விஷத்தன்மை கொண்ட மிருகங்களிடமிருந்தும் மற்ற விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தப்பிக் கொள்ளவும்… மின்னல்களில் இருந்து தப்பிக் கொள்ளவும்… பல பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் உபயோகப்படுத்தினார்கள்.

குருநாதர் ஒரு சமயம் என்ன செய்தார்…? அவர் கையிலே பச்சிலையை வைத்திருக்கின்றார். அது எனக்குத் (ஞானகுரு) தெரியாது.

நீ மின்னலைப் பார்…! என்று என்னிடம் சொன்னனார். அந்தச் சமயத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது. அவர் கையில் பச்சிலை வைத்திருந்தது எனக்குத் தெரியாது.

ஆனால் என் கையைத் தொடுகிறார்… மின்னலைப் பாருடா…! என்று அப்போது கட்டாயப்படுத்துகின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன். நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்துவிட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் இல்லாமல் போய் விட்டால் நான் என்ன செய்வது…? என்று சொல்கிறேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய் அல்லவா. “சரி” என்று சொல்லித் தானே வந்தாய். உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன். அதன்படி நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொல்லி வந்தாய். அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டுமா… இல்லையா…? என்று இப்படிக் கேட்கிறார்.

நான் என்ன செய்யட்டும்…? எனக்கு வேறு வழி இல்லை…!

குருநாதர் பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலைப் பார் என்று சொல்கின்றார்.

விண்ணிலே விஷத் தன்மைகள் தாக்கும் பொழுது தான் மோதலாகின்றது. அப்பொழுது பளீர்… என்று மின்னலாகப் பாய்கின்றது.

1.விஷம் தாக்கப்பட்டுத் தான் வெப்பம் ஆகின்றது…
2.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உருவாகிறது… அதனுடைய இயக்கமும் ஆகின்றது
3.ஆனால் அதீத விஷம் தாக்கப்படும்போது இருளாகின்றது.

சாதாரணமாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விஷம் தேவை. விஷம் அதிகம் ஆனால் நம் செயலையே மறக்கச் செய்து விடுகின்றது.

உப்புப் போட்டால் ருசியாகத் தான் இருக்கின்றது. அதிகமாகப் போட்டால் ஓ…ய்ய்….! என்று வாந்தி வருகின்றது. சாப்பிட முடியாது..!

அளவை அறிந்து போட்டால் தான் சாப்பிட முடியும். ஆகவே அதன் உணர்வுக்கொப்ப மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காக இதை எல்லாம் குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார்.

அவர் இதை எல்லாம் விளக்கமாகச் சொன்ன பின்…
1.அவர் சொன்னபடி மின்னலைப் பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருந்தது
2.அறிவின் தன்மை எனக்குள் வருகின்றது,…
3.அறிந்து கொள்ளக் கூடிய உணர்வுகள் அந்த மின் கதிர்கள் என்னென்ன ஆகின்றதோ அது எல்லாம் தெரிகிறது
4.வான மண்டலத்தில் உள்ளதை எல்லாம் அறியும்படி செய்தார் குருநாதர்.

மின்னல் வரும் பொழுது அது எங்கெங்கெல்லாம் ஊடுருவுகிறது…? என்று அதையெல்லாம் அறியக்கூடிய சக்தி வந்தது. அதை அப்பொழுது தெரியப்படுத்துகின்றார்.

முதலில் அவர் பச்சிலையைக் காண்பிக்கவில்லை. கையில் வைத்துக் கொண்டு என்னைத் தொடுகின்றார். நான் மின்னலை பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன். பின் தான் விளக்கம் சொல்கிறார்.

ஏனென்றால்
1.உனக்குச் சக்தி கொடுக்கத்தான் நான் இதைச் செய்தேன்
2.இந்த பச்சிலைகளால் தான் அகஸ்தியன் அந்த ஆற்றலைப் பெற்றான்
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் ஒளியாக மாறினான்

அதே பச்சிலையின் உணர்வுகளை எடுக்கப்படும்போது அவன் பெற்ற உணர்வை நீயும் பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வராது… அந்த விஷத்தை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது என்று அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.

இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உபயோகப்படுத்தி எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் (DINOSAUR) என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களையும் அதன் உடல் புதைந்த இடங்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதைப் போன்று தான்
1.அகண்ட அண்டமும் அந்த உணர்வும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் ஆதியிலே கண்டான்
2.அவனைப் போல் நீயும் உனக்குள் அதை எல்லாம் அறிய வேண்டாமா…? என்று வினா எழுப்புகிறார்
3.அதற்காக வேண்டித்தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அவர் சொன்ன வழிப்படி அறிந்து கொண்ட பின் அந்த உணர்வு வருகின்றது. என்னுடைய எண்ணங்களில் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது
1.இந்த காற்றில் இருக்கும் அகஸ்தியரின் உணர்வை எடுத்து நானும் அறிய முடிகின்றது
2.அதன் உணர்வை வைத்து நானும் பேச முடிகின்றது
3.பேசும் உணர்வை செவி வழி நீங்கள் கேட்டீர்கள் என்றால்…
4.அகஸ்தியன் கண்ட உண்மைகளை எல்லாம் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டால்…
5.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டபின் உங்களுக்குள் பிரம்மமாகி
6.அகஸ்தியன் கண்ட அந்த உண்மைகளை நீங்களும் நிச்சயம் அறிய முடியும்.

வேதனைப்படவும் கூடாது… வேதனைப்படுவோரைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

அரசியலில் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கூடிக் குலாவி மகிழ்வார்கள். ஆனால் கட்சி மாறிவிட்டால் “இவன் துரோகி…! நாட்டுக்கே ஆகாது…” என்று அவன் எவ்வளவு நண்பனாக இருந்து எவ்வளவு உதவி செய்திருந்தாலும் அரக்கத்தனமாகத் தாக்கி… வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

மனிதனுடைய பண்புகள் எந்த அளவிற்கு இருக்கின்றது…? என்று பாருங்கள்.

அரசியலில் மதம் இனம் குலம் என்று மனிதருக்கு மனிதர் உதவி செய்து கொண்டிருந்தாலும்,,, சந்தர்ப்பத்தில் பேதங்கள் வந்துவிட்டால் செய்த நன்மைகளையும் மறக்கச் செய்து தவறுகள் செய்யும் உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது.

காரணம் மனிதனின் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ அதன் உணர்வுப்படி உயிர் இயக்குகின்றது. பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனாகப் பிறந்தோம்.

ஆனால்
1.மனிதனான பின் அசுர உணர்வுகள் தனக்குள் நுழைந்து விட்டால்
2.மீண்டும் நரகலோகத்திற்குச் செல்லும் அணுக்களாகத் தனக்குள் மாற்றுகின்றது என்று பொருள்.

இன்று இரக்கமற்று ஒருவரைப் பேசலாம் தொல்லைகளைக் கொடுக்கலாம் அது மட்டுமல்ல அவர்கள் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கவும் செய்யலாம்.

ஆனால் எதனை இப்படி நாம் உருவாக்கினோமோ இந்த உணர்வுகள்
1.அதை நுகர நுகர நுகர விஷத்தன்மை கொண்ட அணுக்களாக நமக்குள் விளையும்
2.பின் நோயாக விளையும் பொழுது அந்த உணர்வுகள் விஷத்தன்மை கொண்ட மனிதனல்லாத உருவை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்று விடும்.

அதிகமாக வேதனைப்படுவோரைப் பார்த்து “அவனுக்கு இப்படித்தான் வேண்டும்…” என்ற நிலைகளை நாம் எண்ணி ஏங்கி அந்த வேதனையை ரசித்தோம் என்றால் அடுத்து பாம்பினமாகத் தான் நாம் பிறப்போம்.

அந்த அணுக்களின் மாற்றங்களும்… அதன் உணர்வின் இயக்கங்கள் எப்படி மாறுபடுகின்றது…? இந்த உடல் எப்படி நலிகின்றது…? மனிதனின் உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

1.அவன் செய்ததற்குத் தண்டனை கிடைக்கின்றது…
2/அவன் அனுபவிக்கின்றான்… என்ற எண்ணமே நமக்கு வரக்கூடாது.

அப்போது நாம் எதை எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனுக்குள் நல்ல உணர்வு தோன்ற வேண்டும்… அறியாத நிலையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்குப் பதிலாக… அதிகமாக நம்மைத் தாக்கிப் பேசுகிறான்…! ஆகையினால் அவனுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற உணர்வைத் தோற்றுவித்து விட்டால்… நம்மால் தாங்க முடியவில்லை என்றால் நமக்குள் கோபமும் கொதித்தெழும் தன்மையும் அவனை அழித்திட வேண்டும் என்ற உணர்வே தூண்டும்.

அந்த உணர்வு தூண்டப்படும் பொழுது
1.தவறு செய்தது அவர்கள்
2.நுகர்ந்தறிந்தது நாம்
3.உயிர் அறியச் செய்கின்றது… அந்த அணுவாக மாற்றி விடுகின்றது
4.அவன் எந்தத் தவறைச் செய்தானோ அதிலிருந்து உருவான அணு நம் உடலில் ஒட்டி வினையாக அது இயங்கத் தொடங்கி விடுகின்றது.

ஆனால்… நாம் தவறு செய்யவில்லை.

“அவன் கெட வேண்டும்” என்று நாம் தொல்லைகள் கொடுத்தோம் என்றால் அதே உணர்வை நுகரப்படும் பொழுது அதே உணர்வின் அணுக்களாக உடலுக்குள் உருவாகி… அவன் செயல் நம் உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு அந்த அணுக்கள் தன் இரைக்காக உணவுக்காக ஏங்கும் பொழுது… அந்த உணர்வின் செயலாக உடலை இயக்கி விடுகின்றது.

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே ஒருவர் கடுமையாக நம்மை ஏசுகிறார் என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இதை எடுத்து அந்தத் தீமை விளையாதபடி அந்த மகரிஷியின் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது
1.அவர் சொல்லும் உணர்வையும் இதையும் இணைத்து நாம் நுகரப்படும் பொழுது
2.அவர் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கும்.
3.அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் கூடும்.
4.இதனை எடுத்து அவன் அறியாத இருளில் இருந்து நீங்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதற்கு மேலும் அவர் உணர்வு “நம் மீது தாக்கி… நாம் தாங்க முடியாத நிலை இருந்தால்…” அவன் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனுக்குள் அதுவே விளைந்து அவன் உணரட்டும்…! என்று
1.எனக்கு வேண்டாம்…
2.நீயே அனுபவித்து உன்னுடைய உணர்வுகளை அறிந்து… அதன் வழியாக நீ அதை அனுபவித்துப் பார் என்று மட்டும் சொல்லி விடுங்கள்.

அதாவது… எவர் ஒருவர் நீங்கள் கெட வேண்டும் என்ற உணர்வை எண்ணி அதிகமாகத் தூஷிக்கின்றனரோ… அந்தக் காலங்களில் நீங்கள் ஒன்றுமே சொல்ல வேண்டாம்

அதுவே அவருக்குள் விளைந்து அவரே அனுபவித்துத் தெரிந்து கொள்ளட்டும்…! என்ற நிலையைச் சொன்னால் போதும். அது நம்மைப் பாதிக்காது.

சித்தாவது எப்படி…?

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது குருநாதர் கண்ட உண்மையின் உணர்வுகள்… அது எப்படி உணர்வுகள் ஒளியாக ஆனது…? அதன் அறிவாக ஆனது…? என்ற அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

நஞ்சு கொண்ட உணர்வினை அந்த அகஸ்தியன் எப்படி வென்றான்…? என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் பொழுது அந்தக் கஷ்டத்தை எண்ணாதபடி… அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருளைப் பெற வேண்டும் என்ற நினைவை நீங்கள் கூட்டினால் அவன் கண்ட உண்மை உங்களுக்குள் கிடைக்கும்.

மற்றவர்கள் சொல்லும் துயரத்தையும் வேதனைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுத்து நிறுத்தி
1.அந்த அகஸ்தியன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
2.பிணிகளில் இருந்து விடுபடும் சக்தி அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்று நீங்கள் சொல்லலாம்.

இது தான் நல்லது…!

ஏனென்றால் இப்படிச் செய்யும் போது உங்களை நீங்கள் காத்துக் கொள்கிறீர்கள். பிறரையும் காக்கும் சக்தியாகச் செயல்படுத்துகின்றீர்கள். இந்த இரண்டும் அவசியம் வேண்டும்.

ஆனால் பொதுவாக மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோருக்குமே வருகிறது. இந்த உணர்வு வேகம் வந்தவுடன் கொஞ்ச நாளைக்கு உதவி செய்கிறீர்கள். பின்னாடி நிலைமை இங்கே தடுமாறும் போது…
1.எல்லாருக்கும் நான் உதவி செய்தேன்… ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…
2.தெய்வம் சோதிக்கிறது…! என்று அந்த வேதனையைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் பட்ட துன்பம் உங்களில் வராது தடுக்க வேண்டுமல்லவா…!

ஆகவே இது போன்று நல்லது என்று செய்தாலும் அதற்குள் மறைந்து வரும் தீமைகள் என்ன செய்யும்…? என்று நாம் அறிந்து கொண்டபின் அதை நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும்… அந்த ஞானம் வேண்டும்.

விஞ்ஞான அறிவுப்படி ஒரு உலோகத்தை வைத்து இயந்திரத்தை உருவாக்குகின்றனர். ஆனால் இயந்திரம் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் ஜாஸ்தியாக இருக்கிறதது என்று அது தாங்கவில்லை என்றால் என்ன செய்கிறார்கள்…?

1,அந்த இடத்தில் வரும் அதிகமான அழுத்தத்தையும் உராய்வையும் தாங்கக்கூடிய சக்தி கொண்ட
2.இன்னொரு உலோகத்தைச் சேர்த்தால் சரியாக வரும் என்று விஞ்ஞானி அதைக் கூட்டிக் கொள்கின்றான்.
3.அந்த உலோகத்தை மாற்றிய பின் இயந்திரம் சீராக இயங்குகிறது.

அதே மாதிரித் தான் மெய் ஞானிகள் கண்ட ஆற்றல்மிக்க சக்திகளை உங்களுக்குள் குருநாதர் காட்டிய வழிப்படி இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கிறோம்.

உங்கள் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள் வரும் பொழுது அந்த ஞானிகளின் சக்திகளை எடுத்துப் பயன்படுத்திக் கொண்டால் அதை மாற்றிடும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எப்பொழுது பார்த்தாலும் வீட்டில் சண்டை… சச்சரவு… வேதனை… என்றே சொல்வார்கள். நான் எத்தனையோ பேருக்கு உதவி செய்தேன். அவர்களை எல்லாம் எனக்கு எதிராக இப்பொழுது திருப்பி விடுகிறார்கள்… தொழிலையே செய்யவிடாது என்னைத் தடுக்கிறார்கள்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆகவே… பிறரைக் காத்தாலும் அவர்கள் கஷ்டம் உங்களைத் தாக்காது இருக்க ஒரு வலு உங்களுக்கு வேண்டுமா இல்லையா…! ஏனென்றால் எல்லோரும் நல்லவர்கள் தான் யாரும் கெட்டவர்கள் இல்லை…!

நல்லதை எண்ணிச் செய்து… செய்து அவர்கள் கஷ்டத்தை எல்லாம் கேட்டுக் கேட்டு இந்த உணர்வு உடலில் வரப்போகும் போது அது வளர்ந்து விடுகின்றது. நம் நல்ல குணம் மறைந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). அதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிக் கொள்ளுங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

இரவிலே புலனடங்கித் தூங்கினாலும்… பகலில் நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்கும் விதம்

 

ரோட்டிலே போகும் பொழுது அல்லது பஸ்ஸிலே செல்லும் பொழுது ஒரு விபத்து நடப்பதை நேரடியாகப் பார்க்கின்றோம் அந்த உடல் அப்பொழுது சிதைகின்றது… அந்த மனிதன் அலறும் ஓலங்கள்… அந்த ஒலி அலைகள் அங்கே படர்கின்றது.

அங்கே எத்தனை விதமான ஒலிகள் படர்கின்றதோ சூரியனுடைய காந்த சக்தி அதை எடுத்து வைத்துக் கொள்கின்றது. அடிபட்ட மனிதனை நம் கண் கருவிழி படமாக்கி உடலில் பதிவாக்கி விடுகின்றது.

அந்த உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் பரவி உள்ளது.
1.நாம் இப்படி நுகர்ந்த உணர்வு நமக்குள் பதிவாகி இருக்கப்படும் பொழுது
2.இரவிலே நம்மை அறியாமல் திடுக்… திடுக்… என்று பயப்படுவோம்.

காரணம்… மனிதன் மற்ற சிந்தனை இல்லாது உறங்கப்படும் பொழுது நம் உடலில் இருக்கும் உணர்வுகளில் “அது” வலுவாக இருக்கின்றது.

பாலிலே பாதாமைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்த விஷம் தான் முன்னணியில் இருக்கும். “சப்…” என்று இருக்கும் ஒரு பொருளில் காரத்தை இணைத்தால் அந்தக் காரம் தான் முன்னணியில் இருக்கும்.

இதைப் போன்று மனிதனின் வாழ்க்கையில் நல் ஒழுக்கங்களையும்… நல்ல செயல்களையும்… நல்ல நிலைகளையும் பார்த்துணர்ந்த நாம் எதிர்பாராது ஒரு விபத்தைப் பார்க்க நேர்ந்து… அங்கே அவன் உடல் சிதைந்து வேதனையுடன் வெளிப்படுத்திய உணர்வுகளை நம் கருவிழி உடலில் இங்கே பதிவாக்கி… அந்த உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின்… “அவன் வேதனைப்பட்டது போன்று அச்ச உணர்வுகள் நமக்குள் உருவாகின்றது…”

அதை நுகர்ந்து அந்த உணர்வின் அணுக்களை அதிகமாக இங்கே பெருக்கி விட்டால்… நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது
1.நாம் ஈர்த்துக் கொண்ட அந்த அணு அதிகமாக இழுத்து…
2.நம் ஆன்மாவிலே வந்து உயிரிலே பட்ட பின் நம்மை அறியாமல் அலறுகின்றோம்… துடிக்கின்றோம்.

சில பேர் மற்றவரிடம் அடிவாங்கிய பின் அந்த அடி தாங்காது எழுந்து ஓடும் நிலை வரும். அதே போல மனிதனாக இருக்கக்கூடிய நிலையில் அதை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் தூக்கத்திலே… ஐய்யய்யோ..! யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்…! என்று எழுந்து ஓடுபவர்களும் உண்டு.

காரணம்… அடிப்பதை வேடிக்கைதான் பார்த்தார்கள். அந்த உணர்வின் தன்மை கரு விழி பதிவாக்கி விடுகின்றது அவன் உடலில் இருந்து வரக்கூடிய அஞ்சி ஓடும் உணர்வலைகள் செல்கின்றது.

அடிப்பவனையும் நாம் பார்க்கின்றோம் அஞ்சி ஓடுபவனையும் பார்க்கின்றோம். இரண்டு உணர்வையும் நம் கருவிழி இங்கே பதிவாக்கி வைத்து விடுகின்றது. இது கலந்த உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக வருகின்றது.

அக்ரிகல்ச்சரில் பல பொருள்களைச் சேர்த்துப் புதிதாக எப்படி உருவாக்குகின்றார்களோ… அதைப் போல நம்முடைய செயல்கள் சந்தர்ப்பத்தில் நாம் உற்று நோக்கிய உணர்வுகள் அங்கே அடிப்பவனையும்… அடியினால் அரண்டு ஓடக்கூடிய நிலையும்… இரண்டும் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்து இதில் எதனின் ஆக்கம் அதிகமாகி “இப்படிச் செய்கின்றானே பாவி…!” என்று ஓடுவதைக் கண்டு அந்த பய உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இந்தப் பதிவின் துடிப்பு அதிகரிக்கப்படும் பொழுது இரவிலே தூங்கும் பொழுது நமக்குள் “அவன் உருவம்” தெரிவதில்லை ஆனால் யாரோ என்னை அடிக்க வருகின்றார்கள்… என்ற அந்த உணர்வு கொண்டு அஞ்சி… தூக்கத்தில் எழுந்து ஓட ஆரம்பிக்கின்றோம்.

புலனடங்கித் தூங்கினாலும்…
1.நம் ஆன்மாவில் பட்ட உணர்வு சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு இந்த உணர்வை இயற்கையில் நாம் எப்படி வாழ்ந்தோமோ (முழித்திருக்கும் போது)
2.அதே செயலாக்கங்களை இரவிலே கொண்டு வருகின்றது.

இப்படி சிலர் தூக்கத்தில் எழுந்து ஓடுவதையும் பார்க்கலாம். ஒரு சிலர் தூங்கும் பொழுது “என்னைக் கொல்கின்றார்களே… என்று சொல்வதையும்; என்னை அமுக்குகின்றனர்… கொல்கின்றனர்…” என்றெல்லாம் வரும்.

இதே போன்று சிலருடைய தாக்குதலான உணர்வுகளை ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் கூறுவதை உற்று நோக்கி அந்த உணர்வினைப் பதிவாக்கினால் மீண்டும் அந்த அதிர்ச்சியின் உணர்வுகள் அது வலுவாக இருப்பதால் புலனடங்கித் தூங்கும்போது அதுவும் இயக்கும்.

நண்பன் சொன்னதை அவர் பார்த்தார் ஆனால் நாம் பார்க்கவில்லை. பார்த்து அநியாயம்பா… இப்படி அடித்துக் கொள்கின்றார்கள் என்று அவர்கள் சொன்னால் போதும்.

அவர்களில் பதிவான உணர்வு சொல்லாக வருவதை நமது கண் கவர்கின்றது உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை பதிவான பின் அவர் எதைப் பார்த்தாரோ நாம் அந்த ஆளைப் பார்க்கவில்லை.

அவர் எந்த உணர்வின் வேகத்தைப் பார்த்தாரோ அந்த சொல் நமக்குள் பதிவான பின் இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுது அந்த மனிதனின் வேதனை நமக்குள் தெரிய வரும்.

வேதனைப்படுகின்றான்… புலம்புகின்றான்… அவனை அடித்துக் கொல்கின்றார்கள் என்ற இந்த உணர்வு நமக்குள் இருப்பதால் “அது உயிரிலே பட்டபின்”
1.அவன் தன்னை அடிக்க வருகிறான் என்று நாம் தூக்கத்தில் எழுந்து ஓடுவோம்
2.அல்லது அடிக்க வருகின்றார்கள் என்று இரவிலே கத்துவோம்.

இதைப் போன்று ஒருவன் குடும்பக் கஷ்டத்தினால் நீரிலே மூழ்கி மூச்சுத் திணறி இறந்து விடுகின்றான். இன்னொருவர் அதைப் பார்த்து வீட்டிலே வர்ணனை செய்வார்கள். இது மாதிரி ஆகிவிட்டான்… அவன் பட்ட பாடு எப்படி இருந்தது தெரியுமா…! என்று அங்கே சொல்வார்.

அதைக் கேட்பவர் உணர்வுகளில் அது அப்படியே பதிவாகும். அதே உணர்வின் தன்மை இங்கே வரப்படும் பொழுது அவர் வீட்டில் சங்கடமும் சலிப்பும் இருந்து அன்றைக்கு அவர் தூங்கினால் புலனடங்கிய நேரத்தில் சோர்வு என்று வரப்படும் பொழுது அவர்கள் சொன்னது போல (குளத்திலே விழுந்து மூழ்கி இறந்து விட்டான் இங்கே கத்தினான் என்று சொன்னது)
1.பதிவான அந்த உணர்வுகள் இங்கே வந்து தன்னை அறியாமலே கிணற்றிற்குள் மூழ்குவது போன்று தெரிய வரும்
2.தண்ணீருக்குள் மூழ்கிக் கத்துவது போன்று தெரியும்.

இதுகள் எல்லாம் நமக்குள் பதிவான உணர்வுகள்… நாம் புலனடங்கித் தூங்கினாலும்
1.உயிரின் தன்மைகள் அந்த உணர்ச்சிகளை உடலிலே சுழலச் செய்து
2.அதே செயலாக்கங்களைச் செயல்படுத்துகின்றது.

காரணம் நாம் எதைப் பதிவு செய்கின்றோமோ உடலுக்குள் பதிவான அதே உணர்வு மீண்டும் நம்மை இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.

“இன்று சொல்லும்” பக்தி நெறியில் வளர்ந்ததல்ல… சப்தரிஷிகளின் வளர்ச்சி நிலை

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்தச் சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.
3.இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மூலாதாரம் என்றால் நமக்குள் வரும் (நாம் சுவாசிக்கும்) இந்த உணர்வின் தன்மை எலும்பும்… இரத்தங்களும்… நரம்பு மண்டலமும்.. இந்த மூன்றும் சேர்த்து அங்கே அணுத் தன்மை ஜீவன் பெறச் செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து “விந்துடன் கலக்கும்…” ஜீவ அணுக்களாக மாற்றுகின்றது.
1.இது தான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது…!
2.அங்கே உயிரணுக்கள் தோற்றுவிக்கும் நிலைகள் வருகிறது என்றால்
3.இது வைத்தியரீதியில் அகஸ்தியன் கண்டது.

ஆக்கினை என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ இந்த உயிரின் தன்மை அங்கே ஆன பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகின்றது. இதையாவது குறைந்தபட்சம் தெரிந்து கொண்டால் பரவாயில்லை.

ஆக்கினை என்றால் நம் உணர்வின் தன்மை இதிலிருந்து (உயிரிலிருந்து) தான் ஆணையிடுகின்றது. இங்கே மூலாதாரத்தில் மாற்றுகின்றது என்று இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கொண்டு வரும் பொழுது அவர்கள் வித்தியாசமான நிலைகளில் கீழிருந்து என்று மாற்றிக் கொண்டு போகிறார்கள்.

1.மூலாதாரம் என்றால் நம் உயிர் மூலம்.
2.நாம் நுகரும் உணர்வுகளே ஆதாரம்.
3.ஆக எந்த உணர்வின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான்
4.இந்த உணர்வுகள் இயக்குகிறது என்று சாஸ்திரங்களும் வேதங்களும் கூறும் நிலைகள்.

இதிலே கண்ணன் மூலாதாரத்தைப் பற்றிக் கூறுகின்றான் என்று சொல்வார்கள். அவன் கூறிய மூலாதாரம் வேறு..! நுகர்ந்த உணர்வின் தன்மை எதனை.. எப்படி இயக்குகிறது…? என்பதை
1.எண்ணம் கொண்டு இந்தக் கண்கள் உண்டானது
2.கண்கள் கொண்டு எண்ணங்கள் உண்டானது
3.இப்படி ஒன்றுடன் ஒன்று எப்படி இணைந்தது என்று கீதையிலே இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உணர்வுகளை இவர்கள் வேறு விதமாக அவரவர்களுக்குத் தக்கவாறு மாறி “குண்டலினி யோகா… இராஜயோகா…” என்று பேர்களை மாற்றிக் கொண்டு ஆசனத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படிப் பல நிலைகளைக் கொண்டு வருகின்றனர்.

இதிலே வேதங்களில் மந்திரங்கள் கூறப்பட்டிருக்கும். மறைமுகமான மந்திரங்களை இவர்கள் சொல்லி விட்டால் இன்னொரு உடலில் பெற்ற உணர்வுகள் இவருக்குள் பதிந்து இந்த மந்திரத்தின் உணர்வும் அதே நிலைக்குப் பதிவு செய்தால் அதே உணர்வு கொண்டு அங்கே இயக்கும்.

கோவில்களிலும் மற்றவைகளிலும் யாகங்கள் செய்வார்கள். அங்கே பல புகை மண்டலங்களை எழுப்பி அவன் சொல்லும் சொல்களை நாம் கூர்ந்து கவனிப்போம். ஆனால் கல்லுக்குச் சக்தி ஏற்றுவதாக நாம் நினைக்கின்றோம்.

ஆனால் நாம் கேட்டுணர்ந்து… நம் செவிகளில் பட்டு… அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து… நமக்குள் ஒரு அணுத் தன்மையாக ஆகும் நிலையைக் கொண்டு வருகின்றனர்.

ஆகவே அவன் சொல்லும் உணர்வை நாம் அதிகமாகப் பெருக்கப்படும் பொழுது இந்த அணுக்களின் தன்மை வந்துவிடுகின்றது.
1.இப்படித்தான் அதர்வண வேதத்தில் ஒரு மனிதனின் உணர்வை மயக்கி அதாவது வசியம் செய்வார்கள்.
2.அடுத்து அந்த மனிதன் இறந்த பின் அதே மந்திரத்தைச் சொன்னால் கைவல்யம்.
3.பின் இந்த உணர்வின் தன்மை சொல்லாக வெளியிடப்படும் பொழுது ஏவல்..!

இப்படித்தான் மூலாதாரத்தில் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தொட்டவுடனே இதை ஏவல் பண்ணிவிடுவார்கள். நாம் கூர்ந்து கவனித்து அதன் மேல் நாட்டத்தைச் செலுத்தும் பொழுது செய்து விடுகின்றனர்.

ஆனால் யாம் இப்பொழுது இங்கே சொல்லப்படுவது உங்கள் நினைவு அனைத்துமே இயற்கையாக விளையும் தன்மைகளில் அங்கே சென்றடைகின்றது.
1.அந்த ஞானிகளின் அருள் உணர்வின் தன்மை அங்கே (உயிரிலே) ஆக்கினையாக மாறி
2.உடலுக்குள் அது கருத்தன்மை அடைகின்றது.

அந்த ஒளியின் உணர்வாக உயிர் எப்படி ஆனதோ அந்த உணர்வின் தன்மை பெறுவதற்காக வேண்டி இதைச் செய்கிறோம். ஏனென்றால் உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கிறேன்.

அதிலிருந்து வரும் உணர்வுகள் ஒன்றி வரும் இந்த நேரத்தில்… அதன் உணர்வுகள் அந்த அகஸ்தியன் எப்படித் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானானோ அதன் உணர்வை உங்களைப் பெறச் செய்வதற்கே உங்கள் நினைவாற்றலை இங்கே பரவப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டியவுடன்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் ஆன்மாவாக மாறுகின்றது.
2.பின் அந்த நுகர்ந்த உணர்வுகள் அணுத் தன்மை அடைகின்றது.

இந்த அணுத் தன்மை உங்கள் உடல்களில் பெருகி விட்டால் உங்கள் ஆன்மாவில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பெருகிவிட்டால் பகைமை என்ற நிலைகளைத் தடுத்து நிறுத்தும்.

இந்த உடலுக்குப் பின் ஏகாந்த நிலை கொண்டு… அண்டத்திலே என்றுமே ஒளியின் சுடராக.. “அழியாத நிலைகளில் வாழத் தொடங்கும்…!”

“மரண பயத்தை விட்டால் தான்” உயிராத்மாவின் சக்தி நிலை கூட முடியும்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற் பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை…!” என்று வைத்துக் கொள்வோம்.

எல்லாம் செய்தேன்… இவன் இப்படிச் செய்கின்றான்…! என்று தான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா… என்றால் இல்லை.

1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.
2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.

அதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

ஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?

“சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே…” என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை… அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.

அழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.

1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.
2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.
3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது… உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது
4.உதவி செய்தோம்… நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்… என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது… பகைமையும் ஆகாது.

ஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.

உதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.

கீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.

சுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.

அதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.

1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்… எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.
2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால்… நன்றாக இருக்கும் அதிலேயும் மண் ஓட்டி விடுகின்றது.
3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்… எந்தச் சொல்களைப் பேசினாலும்… பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.

ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.

ஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்… அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு… இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்று நாம் சிந்தனை குலைந்து (TENSION… STRESS…) உணர்ச்சிவசப்படுவதற்கு முக்கிய காரணம்

 

உதாரணமாக மிளகாய் காரமாக இருக்கின்றது. அந்தக் காரமான மிளகாயிலும் புழு உருவாகிறது.

அதைக் காட்டிலும் கடுமையான பூச்சி மருந்துகளை அடித்து அந்தப் புழுவைக் கொல்லும் பொழுது புழு சாகின்றது.
1.புழுவைக் கொன்ற அந்த விஷம் ஆவியாக மாறுகின்றது.
2.அந்த மிளகாய்ச் செடியில் புழுவைத் தாக்கிய இந்த விஷம் ஊடுருவுகின்றது.

அந்த மிளகாய்ச் செடியில் விளைந்த மிளகாயை நாம் உணவுப் பதார்த்தங்களில் சேர்த்தால் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் உருவாகி நமக்குள் “நோயாகவும்…” மாறுகின்றது.

மனிதன் விஞ்ஞானத்தால் பல விஷப் பூச்சிகளைக் கொன்றாலும் இது இந்த நிலை ஆகின்றது.

முந்தைய காலங்களில் இத்தகைய விஷப் பூச்சிகள் ஏற்பட்டால் அதை இயற்கையான முறைகளைக் கையாண்டு பூச்சிகள் உருவாகாமல் தடுத்தார்கள்.

சாணத்தை எரிக்கும் பொழுது
1.அந்த நெருப்பால் விஷம் ஒடுங்குகின்றது.
2.அப்பொழுது விஷத்தை ஒடுக்கும் உணர்வுகள் அந்தச் சாம்பலில் கலந்துவிடுகின்றது

மாட்டுச் சாணங்களைச் சாம்பலாக உருவாக்கி அந்த சாம்பலைப் பயிர்களில் தூவி விடுவார்கள். சாம்பலைத் தூவினால் பயிர்களின் உருவான இந்தப் பூச்சிகள் இந்த மணத்தைக் கண்டு மடிந்துவிடும்.

ஆனால் அதற்கு எதிர் நிலையாகப் படும் போது அதை உணவாக உட்கொண்டாலும் நல்ல அணுக்களாக மாறுகின்றது.

அந்தச் செடியில் விளைந்து வருவதை உணவாக உட்கொண்டால் நமக்கு நோயில்லாத நிலை வருகின்றது.

தாவர இனக் கழிவுகளைச் சேர்த்துக் குளங்களில் வண்டலாக மாறுகின்றது. இந்த வண்டலையும் சாணத்தையும் கலந்து வரும் போது
1.இந்த மண்களில் விஷப் புழுக்கள் உருவாவதில்லை.
2.சோளமோ மற்ற பருப்போ அதிலே போட்டோம் என்றால் புழுக்கள் அதிகமாக விழுவதில்லை.

புழுக்கள் அதிகமானாலும் சாம்பலையும் வெறும் உப்பையும் கலந்து அதிலே தூவினால் பருப்பு காய்கறிகளில் வரக்கூடிய புழுக்கள் அதனுடைய செயலாக்கங்களை இழந்து விடுகின்றது.

நெற் பயிர்களுக்கும் இதைப் போல சாம்பலும் சாப்பாட்டு உப்பையும் கலந்து தூவினால் அந்த காலங்களில் நெல் பயிரும் நன்றாக இருந்தது.

இப்போது விஞ்ஞான முறைப்படி விஷத்தைத் தூவிப் புழுவைக் கொல்கின்றார்கள்.
1.அதனுடைய முட்டையில் இந்த விஷம் பட்டு
2.இந்த விஷத்தைத் தாங்கக்கூடிய புழுவாக அடுத்து வந்து விடும்.

அடுத்து இதே மருந்தைத் தூவினால் புழு சாவதில்லை.

அதே சமயம் செடிக்குள் விஷத்தன்மை கலந்து கலந்து அதிலே உருவாகும் நெல் மணியிலும் அது கலந்து விடுகின்றது. கத்தரிக்காய் மற்ற எல்லாக் காய்களுக்கும் விஷ மருந்து தூவவில்லை என்றால் அவை விளைவதில்லை.

செடியில் விஷம் கலந்தபின் அதில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும்போது தூவிய விஷம் நம் இரத்த நாளங்களிலே கலந்து நம் உடலிலுள்ள அணுக்களுக்கு ஆகாரமாகச் சேர்கின்றது.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொள்ளும் போது இந்த மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களும் அதனுடைய செயலாக்கங்களைக் குறைக்கின்றது.

செடியில் தூவிய விஷங்கள் அனைத்தும் ஆவியாக மாறியதைச் சூரியன் எடுத்து வைத்துள்ளது.

ஆக செடியில் விளைந்ததை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் அந்த விஷங்கள் கலந்துவிடுகின்றது.

அதன் வளர்ச்சியில் செடிக்குத் தூவிய மருந்தினைச் சூரியன் ஆவியாகக் கவர்ந்து வைத்துள்ள அந்த விஷங்களை நம் உடலில் உள்ள அணுக்கள் அது இழுக்கும். இழுக்கும் பொழுது நம் ஆன்மாவாக மாற்றும்.

நம் ஆன்மாவாக மாற்றும்போது
1.நம் நல்ல குணங்களுடன் சேர்த்து
2.அந்த விஷமான ஆவியைச் சுவாசிக்கும் போது
3.நமக்குள் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
4.மனமும் பலவீனப்படுகின்றது.
5.சொல்லிற்குள் நயம் கெடுகின்றது.

விஷம் கலந்த உணர்வுகளை நாம் கலந்தால் எப்படி “ஆ…” என்று அலறுகின்றோமோ இதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகள் சொல்லாக வெளிப்படும் போது ஒருவர் செவிகளில் கேட்டபின் அந்த உணர்வுகளை அவர் நுகரும் போது அவரைச் சிந்திக்கும்படி செய்வதற்கு மாறாக “உணர்ச்சிவசப்படும்படிச் செய்கின்றது”.

1.நன்மையின் தன்மையை நீங்கள் சொன்னாலும்
2.சிந்திக்கும் தன்மைகளுக்கு மாறாக
3.வெறுப்பின் தன்மை உருவாக்கும் நிலையே
4.இந்த விஞ்ஞான அறிவால் வருகின்றது.

பண்டைய காலங்களில் எல்லாம் மனிதனுக்குகந்த நிலைகள் கொண்டு காட்டிற்குள் விளைந்த பல பயிரினங்களைச் சேர்த்துத்தான் நெல்லாகவும் மற்ற மற்ற தானியங்களாகவும் உருவாக்கினார்கள்.

பயிரினங்களில் பூச்சிகள் விழாது தடுப்பதற்காக மற்ற தாவர இனங்களை இது உரங்களாக இட்டார்கள். அப்படி இடப்படும் போது இந்த உரங்கள் தாவர இனச் சத்தைக் கொல்லும் பூச்சிகளை வளரவிடாது தடுக்கின்றது

அந்த மெய்ஞான வழியில் உருவாக்கிய நிலைகள் தான் இவைகள்.

விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அன்று வாழ்ந்த மெய் ஞானிகளின் உணர்வை அறியாது செயல்படும் பொழுது மனிதனின் சிந்தனையைக் குறைக்கும் நிலைக்கும் அழிக்கும் நிலைக்குத்தான் கொண்டு செல்கிறது.

உதாரணமாக வீட்டில் சமையல் செய்யும் போது பெண்கள் மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்… பூச்சிக்கொல்லி மருந்து என்று சொல்வார்கள்.

விஷமான அணுக்களைக் கொல்லக் கூடிய சக்தி மஞ்சளுக்கு உண்டு மஞ்சளை உணவுடன் கலந்து சாப்பிடும் பொழுது நம் உடலுக்குள் விஷ அணுக்கள் உருவாகாதபடி அது தடுக்கும்.

இப்பொழுது அதையும் மீறி…
1.வேதனையும் வெறுப்பும் கொண்டு பெண்கள் இருந்தால்
2.மஞ்சள் பவுடரையோ அல்லது மஞ்சளையோ கையில எடுத்து வைத்திருந்தால் போதும்… அதில் வண்டு விழுந்துவிடும்.

கடையில் மஞ்சளை அவர்கள் வைத்திருக்கும் வரை ஒன்றும் செய்யாது. அவர்களும் அதைக் காக்க ஒன்றும் செய்வதில்லை… சுத்தமாகத்தான் இருக்கும்.

ஆனால் வீட்டிலே வாங்கிக் கொண்டு வந்து வைத்து
1.அதில் குறிப்பாக வேதனைப்படுவோர் கையில் எடுத்து உபயோகப்படுத்தினார்கள் என்றால்
2.நிச்சயம் வண்டு விழுகும்… முழுவதும் பவுடராக மாறிவிடும்.

காரணம் மனிதனிலிருந்து விளைந்தது நாம் எண்ணி வெளிப்படுத்திய உணர்வுகள் தன்மைகொண்டு மனிதனிலிருந்து உருவாக்கக்கூடிய உயிரணுக்கள் தான் அவைகள் அதிகமாக…!

வான் வீதியில் இது போன்ற அணுக்கள் அதிகமாக உருவாவதில்லை.

1.மனிதன் ஆனபின் மனித உடலில் இருந்து வெளிப்படக்கூடிய மூச்சு கடும் விஷமான நிலைகளில் இப்போது உருவாகின்றது.
2.டைஃபாய்டு மூளைக் காய்ச்சல் இது எல்லாம் இப்போது வருவதற்குக் காரணம் அதுதான். (சிந்தனை குலைந்து மருந்தாக உணவாகும் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் அணுக்கள்)

ஒரு மனிதன் வருகின்றான்… உற்றுப் பார்த்து அவனின் உணர்வை நுகர்கின்றோம் என்றால் நமது உயிரின் நிலைகள் ட்ரான்சாக்ஷ்ன்… ட்ரான்சிஸ்டர் என்றும் சொல்வார்கள்.

அதாவது
1.ரேடியோ எப்படி ஒரு இடத்திலிருந்து அடுத்த நிலைகளுக்கு மாற்றி
2.அந்த ஒலி அலைகளைச் சீராக கவர்ந்து எடுத்துக் கொடுக்கின்றதோ
3.அதைப் போல நமது உயிர் நாம் நுகரும் உணர்வுகளை மாற்றி நம் உடலுக்குள் கொண்டு செல்வதும்
4.அதன் சிந்தனைப்படி நம்மை இயக்குவதும் உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் (உருவாகி இருக்கும்) அணுக்கள் அது உணவுக்கு ஏங்கும் பொழுது… அந்த உணர்ச்சிகள் உயிருக்கு… அந்தச் சிறுமூளைக்கு… ட்ரான்சாக்ஷ்ன் ஆக வரும்.

உயிருக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் கண் காது மூக்கு உடலுக்கு இது ஆணையிடும். ஆணையிடும் பொழுது எந்த அணுக்களின் தன்மை அதிகமாக நேசித்ததோ நமது கண் இந்தப் பூமியில் இருப்பதை இழுக்கும்.

ஏனென்றால்… முதலில் உற்றுப் பார்க்கும் போது கருவிழியால் பதிவானது கருவிழியால் நுகர்ந்து நமக்குள் சேர்ந்தது.

உடலில் அப்படிப் பதிவாகும் இந்த உணர்வுகள் கண்ணுக்குள் வந்த பின் இதே காந்தப் புலனறிவு
1.தன் உணவுக்காகக் காற்றிலிருந்து தனக்குள் எடுத்துச் சுவாசிக்கச் செய்து
2.இரத்த நாளங்களில் கலந்து அதிலிருந்து அது உணவாக எடுத்துக் கொள்ளும்.

இது எல்லாம் ஒரு இயந்திரத்திற்குச் சமமாக நம் உடல் இயங்குகின்றது

ஆனாலும் அந்த அணுக்களின் செயலாக்கங்கள் எவ்வாறோ… அதற்குள் இந்த உயிருடன் கொண்ட உடலில் எத்தனையோ வேதனைப்படுகின்றோம்…!

வயிற்றிலே வலி வந்தால் தாங்க முடிவதில்லை. இது எல்லாம் அந்த உணர்வின் உயிரின் நிலைகள் இயக்கப்படும் பொழுது வயிற்று வலியை உருவாக்கும் அணுக்களை அது ஆகாரமாக எடுத்து அதிகமாகச் சேர்க்கும் பொழுது நுகர்ந்தபின் இந்த உணர்ச்சிகள் நமக்குத் தெரிகின்றது… வேதனைப்படுகின்றோம்.

இது எல்லாம் இயற்கையின் நிகழ்ச்சிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எங்கும் இருக்கும் ஆண்டவனை… “தனித்த பிம்பத்தில்” காண முடியுமா…! கண்டாலும் நம்புவோமா…!!

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான் அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
2.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணுகின்றார்கள்.
1.பல இரசாயண மருந்துகளைக் கொண்டு அதை இஞ்செக்சன் மூலம் மனிதனுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலக்கப்பட்டு
2.உடலில் இருக்கும் அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
3.மனிதனை 1500 ஆண்டுகள் வாழ வைக்க முடியும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தின் மூலம் எடுத்து அந்த உணர்வை நுகர்ந்து இரத்தத்தில் கலக்கச் செய்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதைச் சேர்ப்போம் என்றால் அந்த ஒளியின் உணர்வாக வளர்ச்சி அடைகின்றது.

அது முழுமையடைந்த பின்…
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்
2.என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளி உடல் பெறுகின்றோம்.
3.அத்தகைய சக்திகளைத் தான் அதிகாலை துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

எந்த ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகாலை நான்கிலிருந்து ஆறு மணிக்குள் தான் மணிகளை ஒலிப்பார்கள். ஆலய வழிபாடு என்று சட்டத்தை ஏற்றுவார்கள். எல்லா ஆலயங்களிலும் அந்த நேரத்தில் தான் பூஜைகள் எல்லாம் செயல்படுத்துகின்றனர்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது பேரருள் பேரொளியாக நமக்குள் வளர்கின்றது. இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

ஆனால் தீமைகளைச் செயல்படுத்தும் நேரம் இரவு பணிரெண்டு மணி என்று அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் செய்கின்றனர்.

மற்றொருவருக்குத் தீய நிலைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அந்த இரவு 12 மணிக்குத் தீய தெய்வங்களை வணங்கி மந்திரவாதிகள் அதைச் செயல்படுத்துவார்கள்.

ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு அருள் உணர்வுகளை நல்வழிப்படுத்தும் நேரமாக இருக்கின்றது. அந்த நேரத்தை நல்லதை உருவாக்கும் காலமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.ஆகவே உங்கள் உயிரைத் தயவு செய்து கடவுளாக மதியுங்கள்.
2.அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்று…!

அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உணர்வினை உயிர் ஈசனாக இருந்து நமக்குள் வெளிப்படுத்துகின்றான்.
1.அவன் நம்முள் இருக்கும் பொழுது அவனைப் போன்று நாம் ஆகவேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் அருள் ஒளியாக மாற்ற வேண்டும்
3.இனி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று எண்ணுங்கள்.

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

“எந்தச் சோதனையிலிருந்தும்” மீண்டு(ம்) அருள் வழியில் பயணம் செய்வது தான் இறை ஞானம் பெறும் முறை

 

இங்கு வந்து எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு… அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு… அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்… அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.”தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான்…” அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில வண்டுகள் முட்டை இடுகின்றது. அது முட்டை இடும் பொழுது
1.அந்த முட்டைகள் மீது மின்னல் பாய்ந்தால் அந்த மின் கதிர்கள் நேரடியாகத் தாக்கினால்
2.அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து மின் மினிப்பூச்சியாக மாறுகின்றது.
3.அதாவது முட்டைக்குள் மின்னல் பாய்ந்தபின் மின்னட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.

மின்னல்கள் கடலிலே தாக்கும் பொழுது மணலாக மாறுகின்றது. அதனுடைய வீரியம் குறைந்து விடுகின்றது. ஆனால் அதற்குக் கீழே ஏதாவது ஒரு மீனினம் இருந்தது என்றால் இந்த மின்னல் தாக்கிய உடனே அந்த உடலில் ஊடுருவி அது சாகின்றது.

அது இறந்த பிற்பாடு இந்த உணர்வுகள் பாய்ந்த நிலைகள் கொண்டு அடுத்த சரீரம் அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

முதலிலே மின்னல் பாய்ந்த பின் இந்த உணர்வின் வலுவான பின் மீன் அழிகின்றது. ஆனால்
1.இந்த உயிரோடு சேர்த்து அந்த மின்னலின் தன்மை கருவாகின்றது
2.அடுத்த கணமே அது எலக்ட்ரிக் மீனாகின்றது.

பொதுவாக மின்னல்கள் தாக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் கடலில் அதிகமாக இருக்கின்றது. மீன் இனங்கள் மீது அது பட்டால் அதற்குள் கலந்து விடுகின்றது… எலெக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

உதாரணமாக நீர் உயரத்தில் இருந்து கீழே வேகமாக விழுந்தாலும் (நீர் வீழ்ச்சி) நாம் அதன் வழி சென்றால் அது நம்மைக் கீழே அழுத்திவிடும்.

ஆனால் இந்த எலக்ட்ரிக் மீன்கள் அதில் வரக்கூடிய காந்தப்புலனை எதிர்த்து மேலே செல்கின்றது.
1.அதிலுள்ள மேக்னட் வரப்படும் போது மீனுக்குள் காந்தம் அடைகின்றது.
2.அதை எடுத்து மேலே செல்லுகின்றது.
3.அப்படியானால்… அதனுடைய காந்தப் புலனறிவு எப்படி இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அந்த மீனுக்குக் கையும் இல்லை கால்களும் இல்லை. ஆனால் எதிர்த்து நீந்திக் கொண்டு மேலே போகின்றது. அந்தக் காந்தப் புலனறிவு அதற்குள் ஈர்த்துப் போகின்றது.. இது எப்படி…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

அகஸ்தியனால் கண்டுணர்ந்து அவன் அறிந்து கொண்டது தான் மேலே சொன்ன அத்தனை நிலைகளும். இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்து கொண்ட பின் என்ன செய்கின்றான்…?

அந்த மின்னலின் உணர்வுகள் வான்வீதியிலே வரும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகர்கின்றான். துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவனுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது…? தாய் கருவிலிருக்கும் போது அவன் பெற்ற சக்தி தான் அது.

தாயின் கருவில் இருக்கும் பொழுது அவனுடைய தாய் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக
1.விஷத் தன்மைகள் எதுவும் தன்னைத் தாக்கி விடாதபடியும்
2.உயிரினங்களுக்கு எதிரான மூலிகைகளையும் பச்சிலைகளையும் போட்டு வைத்து இருக்கின்றார்கள்.
3.உடலிலே அரைத்துப் பூசிக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் அந்த மணங்களை அந்தத் தாய்மார்கள் சுவாசிக்கிறார்கள். கணவன் மனைவி ஒன்றி வாழும் போது சந்தர்ப்பத்தில் கர்ப்பம் ஆகின்றார்கள்.

அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருக்கும் தாய் மின்னலைப் பார்த்தாலும் அது அடங்குகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

ஏனென்றால் கர்ப்பமான அந்தத் தாய் சுவாசிக்கும் நஞ்சை வென்றிடும் உணர்வுகள் எல்லாம் இரத்தத்தின் வழியாகக் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உணவாகப் போகின்றது.

1.அப்போது அந்த மின் கதிரின் உணர்வுகள் அதற்குள் அடங்கி வளரக்கூடிய தன்மை வருகின்றது.
2.இப்படிப் பத்து மாதங்களும் வளர்ச்சி அடைந்து பிறந்த பின்
3.எத்தகைய விஷங்களையும் முறிக்கக் கூடிய சக்தி பெற்றவனாக அகஸ்தியன் வளர்கின்றான்.

ஆகவே அவனுடைய அருளைப் பெற்று அவனைப் போன்று வளரச்சி நாமும் பெறுவோம்.

சப்தரிஷிகளின் செயல்கள்

 

இன்று உடலுடன் ஜீவன் பெற்று வாழும் நிலையில் நம் உடலின் எடையை ஒரு பாரமாக… அதாவது சுமக்க முடியாமல் இருப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுவதில்லை.

நாம் எடுக்கும் சுவாச அலையில் நம் உயிரணு என்ற இயந்திரத்தின் ஓட்டத்தினால் நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்களும் அந்தச் சுவாசத்தின் அலையை இந்தப் பூமியின் ஈர்ப்பில் காற்றாகக் கலந்து தான் வாழுகின்றோம்.

ஆனால் இப்பொழுதுள்ள நம் உடலின் எடையே ஜீவனற்ற உடலாக ஆன பின்பு அதன் கனம் கூடி விடுகிறது.

இந்தப் பூயின் ஈர்ப்பு சக்தி குணத்துடன் ஜீவனற்ற பிம்பங்கள் உள்ள நிலையைப் போல்… ஜீவன் பிரிந்த உடல்களும்… அந்த ஈர்ப்பின் அதிகப்படியான இழுவையுடன்… “சுவாச அலையை எடுக்காத உடல் ஆனவுடன்…” கனம் பொருந்திய ஈர்ப்புடன் அந்த உடல் ஐக்கியப்பட்டு விடுகிறது.

இந்தச் சுவாச அலையின் சக்தியினால் தான் ஜீவன் கொண்ட ஜீவன்களின் நிலைக்கும் ஜீவனற்ற பிம்பங்களின் நிலைக்கும் கனத்தில் (எடையில்) வேறுபாடு ஏற்படுகின்றது.

இருந்தாலும் ஜீவன் பிரிந்த உடல்கள் அந்த உடலிலுள்ள மற்ற ஜீவ அணுக்களின் ஈர்ப்பின் அமில குணத்தால் அந்த உடல் உயிர் பிரிந்த பிறகு அதன் உடல் பெருகுகிறதே…! அதன் நிலை எப்படி…?

நாம் சில வகை உணவுப் பொருட்களை ஒன்றுடன் ஒன்று கலந்து அதில் நீரை ஊற்றி வைத்தால் அதிலிருந்து சில அமிலங்கள் வளர்ந்து புளிப்பு நிலை ஏற்படுகிறது அல்லவா…!

அது போல் இந்த ஜீவனற்ற உடலும் அந்தப் புளிப்பு நிலையான அமிலங்கள் ஏற்பட்ட பிறகு அதன் நீர் சக்தி வடிந்து இந்த உடல் பிம்பம் நாற்றத் தன்மை இழந்து இந்தப் பூமியுடன் அந்த உடலும் கலக்கின்றது.

அதன் பிறகுதான்… உடலிலுள்ள அந்த உடலுக்குச் சொந்தமான ஜீவ அணுவுடன் அந்த ஜீவ ஆத்மாவும் முதலிலேயே உடலை விட்டுப் பிரிந்த உயிருடனும் இந்தச் சப்த அலையுடனும் இவ்வாத்மாவும் கலந்து இவ்வாத்ம ஜீவன் அதற்குகந்த செயல் வட்டத்திற்குள் செல்கிறது.

1.உடலுடன் உள்ள பொழுது ஒரு நிலையும்…
2.உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகு ஒரு நிலையும்
3.அவ்வுடல் பிம்பமே மாறி அவ்வாத்மா ஜீவனுடன் சேர்ந்த பிறகு ஒரு நிலையும்
4.இப்படி மூன்று நிலைகளில் மனிதனின் நிலைகள் உள்ளன.

ஆனால் சப்தரிஷிகளும் சித்தர்களும் இந்த உடல் என்ற பிம்பத்தையே பிரித்துக் கூட்டும் செயலுடையதாக்குகின்றார்கள். அவர்கள் எடுத்த எண்ணத்தின் சுவாச ஜெபத்தால் இக்காற்றில் உள்ள அமில குணங்களையே பிரித்துக் கூட்டி வழிப்படுத்திச் செயல்படும் முறையைச் செயல்படுத்துபவரே நம் சப்தரிஷிகள்.

காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் ஐக்கியப்பட்டுள்ள நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இன்று இந்தப் பூமியின் ஆன்மாக்கள் பிறந்து வாழச் செயலாக்கி வருகின்றார்கள்.

நம் பூமி மட்டும் தான் சுழன்று ஓடுகிறதா…? மற்ற மண்டலங்கள் இல்லயா…? என்ற வினா எழும்பலாம். ஜீவன் கொண்ட ஜீவாதாரமுடன் வாழும் பூமி நம் பூமி.

அதற்குகந்த அமில சக்தியைக் கூட்டி வழிப்படுத்தியவர்கள் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற தவத்தின் வலிமை நிலையில்
1.இந்தப் பூமியின் அமிலங்கள் கூடப் பெற்று… அந்தக் கூட்டின் வளர்ப்பில் மனித பிம்பங்கள் வளரச் செய்து
2.அந்த மனித பிம்பங்களுக்கு அறிவாற்றலின் வழியைப் பல வழிகளில் வளரச் செய்து
3.மனிதர்களின் ஞானத்தின் வளர்ச்சிக் கூட்டின் வலு சக்தியைத் தன் வலுவுக்கு அதிகப்படி எடுத்து
4.மேன்மேலும் இந்தக் காற்று மண்டலத்திலுள்ள இப்பேரண்டம் பெரு நிலை என்ற
5.பரந்த நிலையைக் கூட்டிப் பிம்பம் செய்கிறார்கள் நம் சப்தரிஷிகள்.

மண் மண்ணாக உள்ள பொழுது அதன் பிம்பத்தைக் காண முடிகிறதா…? மண்ணை எடுத்துக் குயவன் பானையும் சட்டியும் பல பொருள்களாக்கிக் காட்டினால்தான் அம்மண்ணின் பிம்பத்தை நாம் காணுகின்றோம்.

1.ஆதி சக்தியின் அருள் தான் குயவனும் மண்ணும்.
2.அந்தக் குயவன் மண்ணைத் தோண்டி எடுத்துத்தான் செய்து பொருளாகக் காட்டுகின்றான்.

அதைப் போன்று…
1.பூமியைப் பொருளாக்கி மனித சக்தி படைத்துத் தன் சக்திக்குகந்த பொருளான ஞானப் பொருட்களை
2.சப்தரிஷிகள் ஞானியாகவும் சித்தனாகவும் பொருள்படுத்தி எடுத்துக் கொள்கின்றான்.

சப்தரிஷியின் பொருளான நம் பூமியின் தொழிற்சாலையில்… அந்தத் தொழிலுக்குகந்த மூலப் பொருளின் தரம் குறைந்ததனால்
1.மேலும் தரமான பொருளைப் போட்டு கல்கியைக் காண
2.சப்தரிஷிகளின் செயல்கள் இன்று நடந்து வருகின்றன.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மின்னல் பூமியிலே ஊடுருவிப் பாயும் பொழுது ஒரு கர்ப்பிணிப் பெண் அதை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தை சிதைந்துவிடும்…! இது சாதாரண நிலைகள் கொண்டது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன்…
1.தாய் கருவிலேயே அந்த மின்னலைத் தணிக்கும் சக்தியைப் பெற்றதனால்
2.பிறந்த பின் அவன் மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்தான்
3.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அந்த நஞ்சினை அடக்கிடும் அந்த உணர்வின் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…? என்பதைத் தான் அகஸ்தியன் பெற்ற அந்த நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாக எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.

அகஸ்தியன் பிறந்த பிற்பாடு அவனின் வளர்ச்சியில் எந்தெந்தச் செடிகளில் அந்த நட்சத்திரத்தின் தன்மைகள் (மின்னல்) இருந்தது என்பதை அந்தப் பல கோடித் தாவர இனங்களையும் அறிந்து கொள்கின்றான்.

மின்னல் வரும் பொழுது பார்த்தோம் என்றால் சில செடிகள் அபூர்வமாக விளையும்… அவைகளின் வளர்ச்சி வீரியத் தன்மை கொண்டதாக இருக்கும்.

எந்த நட்சத்திரத்தின் உணர்வு அந்தச் செடியில் இருந்ததோ அந்த மின் கதிர்களை இழுத்துச் சத்தாக உரமாக எடுத்து அதன் இயக்கமாக வளரும்.

ஆனால் இரண்டு நட்சத்திரங்களின் சக்தி உராய்ந்து மின்னலாகப் பரவி மோதப்படும் பொழுது செடிகளில் பட்டால் அது கருகி விடுகின்றது.

அதாவது
1.மின் கதிர்களை நுகரப்படும் பொழுது செடிகளுக்கு அது உரமாகிறது
2.மின்னலின் தன்மை அந்த செடியிலே அழுத்தமாக மோதி ஊடுருவும் போது செடிகள் கருகி விடுகின்றது.

ஏனென்றால் இரண்டு மின் அலைகள் அது மோதும் போது அதனின் அழுத்தம் வரும் பொழுது இந்தச் செடியோ மரமோ கருகி விடுகின்றது

ஆனால் மின் கதிர்கள் பாயும்போது
1.எந்தெந்த நட்சத்திரத்தின் மின் கதிர்களை அந்தச் செடி உட்கொண்டதோ அந்தச் செடி செழிப்பாக வளர்கிறது.
2.அதனால்தான் குருநாதர் அடிக்கடி “மின்னலைப் பார்…” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அந்த மின்னலின் இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த மாதிரி எத்தனையோ வழிமுறைகளில் தெரியப்படுத்துகின்றார்.

மின்னல்கள் சில பேர் உடலில் பாயும்போது சூறாவளி போன்று மோதிய பின் அவர்களுக்குத் தெரியாதபடியே காக்கா வலிப்பு போன்ற நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இது எல்லாம் சுழற்சியின் தன்மையால் வருவது.

ஆனால் குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொல்லும் போது இது எப்படி எல்லாம் வளருகிறது…? அது எந்த நிலை…? என்ன செய்கிறது…? என்கிற வகையில் தெளிவாக எனக்குக் காட்டினார்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் போது தாய் உடலில் பல விதமான உணர்வுகள் தாக்கப்பட்டு அவன் பிறந்த பின் அந்த மின் கதிர்களை நுகர்ந்து வளர்த்துக் கொண்டான்.
1.ஒரு மின்னெட்டாம்பூச்சி எப்படி உருவாகி வந்ததோ… எலக்ட்ரிக் மீன் எப்படி உருவாகி வந்ததோ…
2.அதே மாதிரி உணர்வுகள் இவன் உடலுக்குள் உணர்ச்சிகளாக ஆகி விளையத் தொடங்கியது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

அப்படி விளைந்த பின் தான் இவனுடைய உணர்வுகள் கொண்டு எந்தெந்தச் செடிகளிலிருந்து என்னென்ன சக்திகள் வருகிறது…? என்று அவனால் நேரடியாகப் பார்க்க முடிகின்றது.

அதே சமயத்தில் ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி அந்த மின் கதிர்கள் போகும்போது அதை எந்தெந்தச் செடிகள் உட்கொள்கிறது…? அது எதனால் உரமாகிறது…? என்பதையும் காணுகின்றான்.

இரண்டு நட்சத்திரங்களின் சக்திகள் மோதுவது போல்… அதிலே உருவான செடிகளிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் கவரப்படும் பொழுது அது இரண்டும் மோதலாகி புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…? என்று அது அனைத்தையும் காணுகின்றான்.

தாய் கருவில் வளர்ந்து பிறந்த பிற்பாடு அகஸ்தியனுடைய வளர்ச்சியில் இதையெல்லாம் அறிந்து கொள்கின்றான் தன் அனுபவத்தில்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் குருநாதர் நேரடியாக என்னைக் காணும்படி செய்தார். நேரடியாகப் பார்த்ததைத் தான் உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் குருநாதர் சொல்லும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உண்மையை அறிய முடியாது.

விஞ்ஞான உலகில் இன்று பரவிக் கொண்டிருக்கும் கதிரியக்கச் சக்திகளிலிருந்து நீங்கள் விடுபடுவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குள் உணர்த்துகின்றேன்.

மனித வாழ்க்கையில் “நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்…” என்று சொல்லத் தான் முடியும்

 

ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன்…! என்னுடைய (ஞானகுரு) அறியாத குழந்தைப் பருவத்தில் சில உயிரினங்களை (குருவி மைனா) உயிருடன் எரித்திருக்கின்றேன்… கை கால்களை இழக்கச் செய்து அதை வேடிக்கை பார்த்து ரசித்து உள்ளேன்.

அப்படி நான் ரசித்து வேடிக்கை பார்த்த உணர்வுகள்
1.எனக்குள் அணுக்களாக வளர்ந்து “விதி” என்ற நிலையாக வருகின்றது
2.அதனுடைய பருவ வளர்ச்சியில் அதே உணர்வாக இயக்கி என்னையும் முடக்கச் செய்கிறது.

இப்பொழுது நான் சக்தி பெற்றவனாக இருப்பினும்… எத்தனையோ பேருக்கு நான் உதவி செய்கின்றேன் என்ற எண்ணத்தில் இருந்தாலும்… கீழே விழுந்த பின் “என் கை எலும்பு முறிந்து விட்டதே…” என்று வேதனையாக எண்ணினேன் என்றால் “அந்த மரண பயத்தால் மீண்டும் பிறவிக்குத் தான் வருவேன்…”

1.ஆக… நான் அறியாத வயதில் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அதன் வழி அழைத்துச் சென்றது
2.அது இத்துடன் செல்லட்டும்… அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்
3.என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலைகள் வரக்கூடாது என்று நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.மரண பயத்திலிருந்து நான் விடுபடுகின்றேன்… அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்கின்றேன்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மனிதனுடைய அடுத்த எல்லையான பிறவி இல்லா நிலையை அடையத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில்
1.நான் அதைச் செய்வேன்… இதைச் செய்வேன்… என்ற எண்ணங்கள் இருப்பினும்
2.எதையும் எவரும் செய்ய முடியாது (இது முக்கியம்).

உதாரணமாக நடந்து செல்லும் ரோட்டின் நடுவிலே ஒரு பொருள் இருக்கின்றது. அதை எடுக்க நான் ஆசைப்பட்டேன் என்றால் என் எண்ணம்… என்னுடைய ஆசை… அந்தப் பொருள் மீது தான் வரும்.

ஆனால் எடுக்கச் செல்லும் போது இடையிலே குறுக்கே வரும் வண்டியினைக் கவனிக்கவில்லை என்றால் ஆளை மாய்த்துவிடும். அல்லது மற்ற எதிரிகள் அந்தப் பொருளை நான் பெற முடியாதபடி தடுக்கும் செயலாக இருந்தால் அதை அறிய முடியாது.

அந்தப் பொருளை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிப்படையும் தன்மை வருகிறது. அதனால் அவர்களை அழித்திடும் உணர்வுகள் தோன்றி… கடும் நோயாக உடலுக்குள் உருவாகி… நம் நல்ல உணர்வுகளை எல்லாம் அது அழித்து விடுகின்றது.

காரணம்… நாம் எண்ணியதை எல்லாம் நமது உயிர் உடலில் அணுக்களாக விளையச் செய்து விடுகின்றது. அதன் வழி தீமையை நமக்குள் விளைவிக்கின்றது.
1.இப்படி மனித உருவை மாற்றுகின்றதே தவிர இந்த உடலிலே யாரும் நீடித்து வாழ்வது அல்ல
2.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் அது நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தைக் கவர்ந்து செடியாக வளர்ந்து மீண்டும் தன் இனத்தைப் பெருக்குகிறது.

இதைப் போன்று தான் நம் உடலும் ஒரு நிலம் தான்.
1.நம் உயிரின் இயக்கத் துணையால்… அதிலுள்ள காந்தப்புலனால் கவர்ந்து கொண்ட உணர்வுகள்
2.ஊழ்வினை என்ற வித்துக்களாக விளைந்து விடுகின்றது.

அது போன்று தான் இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் ஞான வித்தாக உங்களுக்குள் விளையச் செய்யப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வாக உங்களில் விளைகின்றது.

அருள் ஞான சக்தியாகப் பெருக்கிவிட்டால் உடலுக்குள் ஒளிச் சுடராக விளைகின்றது. இருள் சூழ்ந்த நிலைகளை ஒடுக்கி விடுகின்றது.

உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் நாம் பற்றினோமோ அங்கே செல்கின்றோம். ஆகவே நாம் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ வேண்டும். ஒவ்வொருவரும் அந்த நிலை பெற வேண்டும்.

1.எனது குரு காட்டிய அருள் வழியினை நீங்கள் அனைவரும் பெற வேண்டும்
2.உங்கள் நினைவாற்றல் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும்
3.அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைய வேண்டும்… நஞ்சினை வென்றிடும் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும்.
4.உங்கள் மூச்சின் தன்மை நல்ல உணர்வாக இந்தப் பூமி முழுவதும் படர வேண்டும்

ஞானிகளைப் போல் நஞ்சினை அடக்கும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குரு காட்டிய அருள் வழியினை உங்களுக்குள் பதிவு செய்வது.

விஞ்ஞானத்தின் அறியாமையினால் மனித இனம் உருவாவதே குறைந்து கொண்டு வருகிறது

 

இன்று உணவுக்காக என்று சொல்லிக் கொண்டு கோழி முட்டைகளை நிறைய உருவாக்குகின்றார்கள். அதாவது…
1.ஆண் இணைப்பு இல்லாதபடி கருவுறச் செய்கிறார்கள்…
2.கோழி முட்டை இடுகின்றது… ஆனால் அதிலே குஞ்சுகள் பொரிப்பதில்லை.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை வரும்

செடி கொடிகளில் எடுத்துக் கொண்டாலும் ஆண் இனம் இல்லாதபடி உரம் கொடுத்து செடிகளை விஞ்ஞானிகள் வளர்க்கின்றார்கள்.

ஆண் இணைப்பு இல்லாது இருந்தாலும் அது ஒரு சீராக வளரும். ஆனால்
1.அதை உணவாக உட்கொள்ளும் நிலையில் மனிதரோ அல்லது மற்ற எந்த உயிரினமாக இருந்தாலும்
2.அதனின் அணுக்கருக்கள் இணைத்துத் தன் இனத்தைப் பெருக்கும் நிலைகள் உருவாகாது.

ஆக விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் உருவாக்கும் அது போன்ற உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்று உலகெங்கிலும் சரி… பெரும்பாலானோருக்குத் தன் இனக் குழந்தைகளை உருவாக்கும் சக்திகள் அந்த ஆற்றல்கள் குறைந்து விடுகின்றது.

1.இப்படி விஞ்ஞான அறிவால் கற்றுணர்ந்த உணர்வுகள்… நாம் நுகர்ந்த உணர்வுகள்
2.நம்மை அறியாதபடி எத்தனையோ வகைகளில் நமக்குள் தீமைகளாக வந்து சேருகின்றது.

குழந்தை இல்லை என்றால்… எனக்குக் குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே…! என்ற வேதனை உணர்வுகளைச் சுவாசித்து அவர்கள் அதை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

“இல்லையே…” என்று வேதனை உணர்வு அதிகரிக்கப்படும் பொழுது உடல்களிலே விஷம் கொண்ட அணுக்கள் வளர்ந்து விடுகிறது. இந்த விஷம் கொண்ட அணுக்கள் கூடும் பொழுது இன விருத்தியும் இல்லாது போய் விடுகின்றது.

ஏக்கத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மரணம் அடையும் அளவுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. எனக்குக் குழந்தை இல்லை…! அதனால் நான்கு பேர் என்னை அவமானமாகப் பேசுகின்றார்கள்… என்ன வாழ்க்கை…? என்று வெறுத்துத் தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

தன்னை ஏளனமாகப் பேசுகிறார்கள் என்ற அந்த எண்ணத்தில் மரண பயம் ஏற்படும் போது நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக உடலில் விளைந்து விடுகிறது.

1.எத்தனையோ கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில்
2.இத்தகைய விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் தாக்கப்பட்டு மரண பயத்திற்கு அழைத்துச் சென்று
3.மனித உடலை அழித்திடும் உணர்வுகள் இங்கே விளைகின்றது.

இதைப் போன்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும்.

அந்த அருள் ஞானிகள் உணர்வை எடுத்து அருள் ஞானத்தை வளர்க்கும் நிலையும் எத்தகைய நஞ்சினையும் மாற்றிடும் உணர்வுகளையும் உங்களுக்குள் வளர்த்திடல் வேண்டும்.

தீமைகளை அகற்றிடும் மெய் ஞானிகள் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்த்து “விதியை அந்த மதி கொண்டு வெல்ல வேண்டும்.

குழந்தை இல்லையே என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இது விதி ஆகிறது. இதை மாற்றி அமைக்க
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறுவேன்
2.என் உடலுக்குள் அந்த வலு கொண்ட அணுக்கள் வளரும்…
3.குழந்தையை உருவாக்கும் அணுக்கள் உருவாகும் என்று உங்கள் எண்ணத்தினால் நீங்கள் இதை எண்ணிப் பாருங்கள்.

இப்பொழுது உபதேசிக்கும் இந்த உணர்வுகள் வாயிலாக அதை நுகர்ந்தறியும் போது உங்கள் உடலில் அருள் ஞான உணர்வாகப் பெற்று… தன் இனத்தின் தன்மை கருவாக உருவாக்கும் அந்த ஆற்றல் பெறுகின்றீர்கள்

மகரிஷிகளை அருள் சக்தி பெறுவேன்… என் உடல் முழுவதும் அது படரும்… என்னை அறியாத இருள் நீங்கும். மகரிஷிகளின் அருள் உணர்வால் புத்திர பாக்கியம் பெறும் சக்தி கிடைக்கும்.

கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை
1.தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.தன் மனைவிக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இருவருமே இதை எண்ணி ஏங்கினால்
3.நிச்சயம் அந்த அணுக்கருக்கள் உடலில் கூடும்
4.குழந்தையும் உருவாகும் உங்கள் அனுபவத்தில் இதைப் பார்க்கலாம்.

பருவ நிலை மாற்றம் (CLIMATE CHANGE)

 

ஆவியாகி… நீராகி… பிம்பமாகி.. மீண்டும் ஆவியாகி… நீராகி.. பிம்பமாகி…! முடிவில்லா மூன்று நிலைகளின் வட்டம் தான் இன்றுள்ள நிலை.

அன்று சித்தர்களினால் பண்டைய இராமாயணக் காவியங்களிலும் இன்னும் பல புராணங்களிலும் உள்ள உள் கருத்தை ஊன்றி நாம் அறிந்தோமானால் கதையாகப் படைக்கப்பட்டு உள் ஞானத்தின் சத்தை எடுத்து ஆய்ந்து பார்த்தோம் என்றால் “அதன் வடிகாலிலிருந்து பல உண்மைகளை நாம் அறியலாம்…”

இந்த உலகில் வட துருவ தென் துருவ நீர் நிலையினால் தான் இந்த உலகமே சுழன்று ஓடிக் கொண்டுள்ளது… வளர்ந்து கொண்டுள்ளது.

இந்தப் பூமியில் உள்ள விஷ அமில குணங்களைத் தன்னுள் ஈர்த்து இன்றைய மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ வைக்கக்கூடிய திசை தான் வடதிசையும் தென் திசையும்.
1.ஆனால் வட திசையை எதற்கும் ஆகாததாகச் சகுணம் பார்க்கின்றான்
2.தீயவை தீயவையுமல்ல… நல்லவை எல்லாம் நல்லவையுமல்ல…!

“சிவன் விஷத்தை உண்டு…” தன் கழுத்திற்குக் கீழ் அது செல்லாமல்… தன் கழுத்திலேயே பாம்பாக வைத்துள்ளார்…! என்ற தத்துவத்தின் உண்மை என்னப்பா…?
1.வட துருவம் விஷக் காற்றுக்களை ஈர்த்து வைத்துக் கொண்டு மற்ற பாகங்களில் அதைப் பரவாமல்
2.விஷ குண அமிலத்தையே நன்மையாகச் செயல்புரிகிறது வட துருவ தென் துருவ திசைகள்.

வட துருவத்தையே ஈஸ்வரனாக்கிப் பாற்கடலில் பள்ளி கொண்டு அவரின் செயல் சிலாக்கிய முறைகளை எல்லாம் தத்துவக் கதைகளில் பிம்பத்தை உணர்த்திப் பிம்ப நாம காவியம் படைத்தார்கள் நம் முன்னோர்கள்.

நம் பூமியில் இந்தக் கோடிக்கணக்கான ஆண்டு சுழற்சி வட்டத்தில் பூமியின் சத்துப் பலனை இதற்கு முன்னாடி நம் பூமி பெற்றது. ஆனல் இப்பொழுது உள்ள காலகட்டத்தில் அறிவின் வளர்ச்சி கொண்ட மனிதனால் நம் பூமியின் நிலையே பட்டுப் போன மரத்தைப் போல் உள்ளது.
1.பல ஆண்டுகள் பலன் தந்து தன் சக்தி வலுவிழந்து நிற்கும்
2.பட்டுப் போன மரத்தைப் போன்ற நிலையில் தான் நம் பூமியின் உள் ஜீவ நிலை உள்ளது.

பலனை எல்லாம் தந்தது. அந்தப் பலனை நாம் பலவாகப் பிரித்து எடுத்து விட்டோம். பின் இன்றைய நிலை எப்படியப்பா இருக்கும்..?

நம் பூமியின் வட துருவ தென் துருவ திசைகளிலும் அதிகப்படியான விஷத் தன்மையின் நிலையினால் அதை வடிகட்டி இது நாள் வரை நம் பூமிக்குச் சுத்தமாக்கித் தந்த காற்றின் நிலையே இன்று மாறி விட்டது.

வட துருவமும் தென் துருவமும் எப்படிக் விஷக் காற்றைத் தன்னுள் எடுத்துச் சுத்தப்படுத்தித் தருகிறது என்பீர்…?

மாம்பழத்திலும் இன்னும் சில வகைப் பழங்களில் அதன் உள் கொட்டை எப்படிக் கசப்பாகவும் பழங்கள் இனிப்பாகவும் உள்ளன…?

அதைப் போல் நம் பூமியின் இயற்கையே இந்தக் கரியமில வாயுவான விஷ அமிலக் காற்றைச் சுத்தப்படுத்தி வெளிப்படுத்தும் மையக் கோளங்களாக இந்த வட துருவ தென் துருவ நிலையுள்ளது. அதன் அமிலப் படிவமே மீண்டும் உறைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

மாற்றங்களின் வழித் தொடரிலும் நம் பூமியின் விஷ அமில குணத்திலும் அதிகப்படியான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதினால் வட துருவ தென் துருவ செயல் நிலையிலும் “இந்த விஷத் தன்மை அதிகப்பட்டு விட்டது…!”

எதுவுமே… அதனதன் வளர்ச்சி நிலைக்கொப்ப தன் இயற்கையுடன் தானாக வளர்ந்து “ஒரு நிலையான வழி முறையுடன் வழி நடந்தால் தான்…” அதன் நிலையில் ஒன்று போல் இருக்க முடியும்.

குழந்தைப் பருவத்தில் அந்தந்த வயதுக்குகந்த அறிவு ஞான வளர்ச்சியை எப்படி வளர்த்துக் கொண்டு எந்த அறிவு செயல் முறை மனிதனாக வழி பெற்று அவன் வாழ்கின்றானோ அதன் தொடர் வாழ்க்கை தான் அவனால் வாழ முடியும்.

1.எண்ணத்திற்கு மேல் செயலை ஏற்றினால் செயல் முறையில் நிறைவைக் காண முடியுமா…?
2.அதிகப்படியான எண்ணச் சுமையை ஏற்றப்படும் பொழுது பைத்தியம் தான் பிடிக்கும் அந்த மனிதனுக்கு…!
3.அதைப் போன்ற நிலை தான் நம் பூமியில் வட துருவ தென் துருவ திசைகளுக்கு ஏற்பட்டுள்ளது.

அதனின் விளைவுகள் தான் சீதோஷ்ண நிலை மாற்றம்… பருவ நிலை மாற்றம்… அதிக வெயில் அதிக மழை அதிகக் குளிர்… எல்லாமே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றேன்… அதற்குத்தான் உபதேசங்கள் வாயிலாக இங்கே பதிவாக்குகின்றேன் (ஞானகுரு)

மீண்டும் மீண்டும் இதை நினைவு கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கின்றது. இருளைப் போக்கிடும் சக்தியாக வளர்கின்றது.

1.ஆகவே உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சங்கடங்களைப் பார்க்கின்றீர்களோ
2.உடனே ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியன் துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது அந்த நேரத்தில் அதை நுகரும் பொழுது உங்களுக்குள் அதீதமாக வளருகின்றது.

ஏனென்றால் அன்றாடம் காலையிலிருந்து இரவு வரை பார்த்தால் எத்தனையோ உணர்வுகள் நம் மீது மோதுகின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை போன்ற இத்தனை உணர்வுகளும் நமக்குள் பதிவாகின்றது.

1.இந்தப் பதிவின் தன்மைகள் அனைத்தும் நம் ஆன்மாவில் இருக்கின்றது.
2.நம் உடலில் உள்ள அணுக்கள் அது ஒவ்வொன்றையும் வரிசையாக நுகர்ந்து சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரிலே மோதிய பின் அந்த எண்ணங்கள் எல்லாம் வரத் தொடங்குகின்றது.

நாம் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட… அவன் சண்டை போட்டான்… இவன் ஏமாற்றினான்… தொழில் இந்த மாதிரிப் போய்விட்டது… என்ற எண்ணங்கள் எல்லாம் வருகின்றது.

ரோட்டில் சென்றாலும்… நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட எத்தனையோ இது போன்று நமக்குள் அன்றாடம் பதிவாகிக் கொண்டே வருகின்றது.

இப்படிப் பதிவான உணர்வுகள் விளைய ஆரம்பிக்கும் போது நமக்குள் அந்த உணர்வுகள் அதனதன் உணர்வை உணவாக எடுத்து ஆன்மாவிலிருந்து நுகருகின்றது.

நுகரும் பொழுது உயிரில் பட்ட பின் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கிறது அப்பொழுது நல்ல அணுக்கள் சோர்வடைகிறது… சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
1.இந்த இடத்தில் யார் தவறு செய்தது…?
2.யாரும் தவறு செய்யவில்லையே…!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் வேதனைப்படுவர்களைப் பார்க்கின்றோம். இந்த வேதனையான உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அது வேதனைப்படச் செய்யும் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் துருவ நட்சத்திரம் நீக்கியது. அந்த அரும் பெரும் சக்திகளை நுகரும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம் இந்த உபதேச வாயிலாக.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்தால்
2.அது தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வருகின்றது.

இயற்கையில் சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மம் ஆகின்றது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மனிதன் உருவாக்கி அருள் உணர்வுகளை உயிர் வழி நுகர்ந்து உருவாக்கினால் அது பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…!

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகள் கொண்டு… தீமை வருகிறது என்று தெரிந்து கொண்டபின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று உணர்வாக எடுத்தால் தான் அதை உருவாக்க முடியும்.

இதுவும் சந்தர்ப்பம் தான். அப்பொழுது தீமையை நீக்கும் சக்தியாக அது வரும். இது நம்மால் முடியாதா…?

என்னைத் திட்டினான்…! என்று சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்டபின் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று நாம் சொல்கின்றோம். இந்தத் தீமையான உணர்வு நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் அல்லவா…?

தடுக்காமல்… சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை அப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் அந்தத் தீமையான உணர்வுகள் உடலிலே விளையும்.

சாபங்கள் இடுவதும்… கொதித்துப் போய்ப் பேசுவதும்… அடிப்பேன் என்பதும்… குத்துவேன் என்பதும்… கொன்று விடுவேன்… என்றும் இது போன்ற உணர்வெல்லாம் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.

1.விளைந்த பின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவது போன்று குத்த ஆரம்பிக்கும்.
2.அந்த மாதிரியாக ஆன பின் ஐய்யய்யோ.. அம்மம்மா…! வேதனையாகச் சொல்லும் நிலை தான் வரும்.

பிறரை கொல்ல வேண்டும் எண்ணினோம்…! அந்த உணர்வுகளை நுகர்ந்த பின் அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்குகிறது.

அப்பொழுது நாம் தான் அந்த வேதனையை அனுபவிக்கின்றோம்.

பிறரைக் குத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் அதனின் வீரியத் தன்மை உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது.

1.ஆகவே நாம் அருள் உணர்வு பெற வேண்டும் என்று இங்கே தடுத்து நிறுத்தி விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மற்றவர்களும் பெற வேண்டும் என்று அவர்களுக்கு ஊட்டி
3.அந்தத் தீமையை உந்தித் தள்ள வேண்டும்… அப்போது தான் நம்மைக் காக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடல் வாழ்க்கையில் நாம் சேர்த்த சொத்து நம்முடன் வருகின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.நமக்கு அழியாச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரம் தான்.
2.அதைத் தான் கொண்டு போக வேண்டும்.

ஆகவே அழியும் தன்மையிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) அனுபவ ரீதியில் எல்லாம் கொடுத்தார்.

அது மட்டுமல்ல… இந்த விஞ்ஞான உலகில் இன்று கடுமையான விஷங்கள் பரவிக் கொண்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த விஷத்தன்மைகள் நம்மைப் பாதித்து விடக் கூடாது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்றார்கள். ஆனால் விஷ உலகம் தான் அழிகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின் கருவில் வளர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் (ஞானகுரு) கொடுத்துள்ளோம்.

கருவில் வளரும் அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். இந்த உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த ஆர்வத்தில் வரும் பொழுது அந்தத் தாய்மார்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்திருக்கின்றோம்.

ஆதியிலே தாயின் கருவிலே அகஸ்தியன் இருக்கும் போது அவன் எப்படி அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றானோ… உலகை அறிந்தானோ… அவன் உணர்வை எடுத்து வளர்ந்த அந்த மாதிரியான குழந்தைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞான உலகில் வரும் தீமைகளை அவர்கள் நீக்கப் போகின்றார்கள். விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று அது மோதி அழியும்…! ஆனால் அருள் ஞானத்தின் தன்மை வளரும்.

1.அகஸ்தியன் இந்தத் தெற்கிலே தான் தோன்றினான்
2.மீண்டும் இந்த தெற்கிலிருந்து தான் தீமைகளை நீக்கும் சக்தியும் உருவாகின்றது.

விஞ்ஞான உலகில் பேரழிவு வருகின்றது அங்கே…!
1.ஆனால் ஞானத்தின் வழி இங்கே வருகின்றது.
2.இது பேரழிவிலிருந்து மனிதனைத் தப்பச் செய்யும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். இதனுடைய நிலைகளை நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

துன்பங்கள் ஒவ்வொரு நிமிடத்தில் அறியாது வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு நோயாளியைப் பார்க்க நேர்ந்தால் அவர் நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதுவே நமக்குச் சொந்தமாக அழியாத சொத்து ஆகின்றது. உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

ஆனால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிச் செய்தான் என்று அதை எல்லாம் சொந்தமாக்கி விடாதீர்கள். ஏனென்றால் அந்தச் சொந்தத்தை எடுத்தால் மீண்டும் பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆகவே…
1.அருளைச் சொந்தமாக்குவோம்
2.இருளை அகற்றுவோம்
3.மெய்ப் பொருள் காண்போம்
4.மெய் வழி வாழ்வோம்
5.அருள் ஞானம் பெறுவோம்
6.அருள் வாழ்க்கை வாழ்வோம்…!

எதிர் அலை (ECHO) கொடுக்கும் ஆலயத்தின் கல் தூண்கள்

 

யானை மிகவும் வலிமையானது தான் ஆனால் வலு கொண்ட யானையையும் மனிதன் அடக்கி ஆட்சி செய்கின்றான் பாம்பு விஷம் கொண்டது தான்… அதையும் மனிதன் அடக்கி ஆட்சி புரிகின்றான்.

கதிரியக்கச் சக்தி என்பது மிகவும் விஷம் கொண்டது தான். இன்று விஞ்ஞானத்தால் அதைப் (அணுவை) பிளக்கின்றார்கள் அதையும் அடக்கி ஆட்சி செய்கின்றார்கள் சூரியனின் ஒளிக் கதிர்களும் வலு கொண்டது தான். அதற்குள் இருப்பதை அடக்கி உண்மையின் பொருளைக் காணுகின்றனர் (SOLAR).

1.எதனையுமே அடக்கி ஆட்சி புரியும் சக்தி கொண்டவன் மனிதன்
2.எதனையுமே அடக்கிடும் வல்லமை பெற்றவன் மனிதன் என்பதனைக் காட்ட “அங்குசபாசவா” என்று
3.கணபதி கையிலே அங்குசம்… எதையுமே அடக்கி ஆட்சி புரியும் நிலை என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

மிருக நிலைகளில் இருந்து தோன்றி தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு வளர்ச்சி பெற்று… சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனித உருவை உருவாக்கி… கணங்களுக்கு அதிபதி கணபதியாக…
1.எண்ணங்கள் கொண்டு எதனையுமே அடக்கிடும் சக்தி கொடுத்தாய்…! என்று
2.உயிரை… தன்னை அறியும்படி ஆலயங்களில் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்…!

ஆனால் ஆலயத்திற்குச் சென்றால் நாம் இப்பொழுது எப்படி வணங்குகின்றோம்…?

உன்னை வணங்காத நாளில்லை… உனக்காக விரதம் இல்லாத நாளும் இல்லை…! என்று சொல்லித் தன் குடும்பத்தில் நடக்கக்கூடிய கஷ்ட நஷ்டங்களைச் சொல்லி அழுகின்றோம்.

ஆலயத்திற்குச் சென்று அழுதால் அந்த வேதனை தான் நமக்குள் வளரும்… வளர்ந்த பின் கடும் நோயாக மாறும். ஆகவே… கோயிலுக்குச் சென்று சுத்தப்படுத்துகின்றோமா… அல்லது கோயிலை அசுத்தப்படுத்துகின்றோமா…?

நாம் ஆலயத்திற்குச் சென்று அங்கே ஞானிகளால் காட்டப்பட்ட தெய்வ குணங்களை எண்ணி எடுத்து உயர்ந்த மூச்சலைகளாக அங்கே பரப்பப்படும் போது
1.ஆலயத்தினுடைய கல்களில் அது படர்கிறது;.. அதனின் காந்தப் புலனறிவுகள் கவர்கிறது
2.அதாவது அங்கே ஒவ்வொரு தூணிலும் எக்கோ (எதிர் ஒலி) வரும்
3.நாம் பாய்ச்சும் ஒலி அலைகளை எடுத்து மீண்டும் அந்த ஒலிகளைத் திரும்பக் கொடுக்கும்.
4.நாம் பரப்பிய நல்ல உணர்வைப் பதிவாக்கிக் கொள்ளும்… அதைக் கலக்கும்… அந்த அலைகளைப் பெருக்கும்.

சாதாரண மக்களுக்கும் இப்படித்தான் உயர்ந்த சக்திகளை எல்லாம் கிடைக்கும்படி செய்து வைத்துள்ளார்கள் தத்துவ ஞானிகள். நம்முடைய ஆலயங்கள் அவ்வளவு அற்புதமானது..

இப்போது நான் (ஞானகுரு) உபதேசிக்கும்போது
1.அதை நீங்கள் செவி வழி கேட்கப்படும் பொழுது உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ
2.அது போல் ஆலயத்தில் உள்ள காந்தப்புலனறிவுகள் (நம் மீது) பாய்ச்சப்பட்டு… இந்த உணர்வின் தன்மை
3.எதிர் அலையாகத் தனக்குள் “உயர்ந்த உணர்வுகளைக் கூட்டும் சக்தியாக” வைத்தார்கள் ஞானிகள்.

ஆகவே ஆலயத்தை நாம் மதித்துப் பழகுதல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் (ஆண்டவனின்) ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

 

ஓர் மனிதன் தன் சுவாசத்தினால் எடுக்கும் எண்ணத்தின் அலையை ஒத்துத்தான் அவனது அறிவாற்றல்… குணமும்… உடல் உறுப்பும்… உருவமும்… எல்லாமே இருந்திடும்.
1.அதை எல்லாம் எந்த ஒரு தனி மனிதனுக்கும்
2.ஆண்டவனாக வழி அமைத்துத் தருவதில்லை…! (இது முக்கியம்)

எல்லாமும் ஒன்றாக… ஒன்றிலே எல்லாமும் உள்ள பொழுது.. எதன் அடிப்படைச் சக்தியை எவ்வாத்ம எண்ணம் ஈர்த்து வாழ்கின்றதோ… அதன் தொடர்ச்சி நிலைக்குகந்த அளவு… அறிவாற்றலும் வாழ்க்கை நிலையும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அமைகின்றது.

ஒருவர் அதிக சுறுசுறுப்புடனும் செயலாற்றும் திறமையுடனும் நல் நிலையில் வாழும் பொழுது அவர் எடுத்துக் கொள்ளும் எண்ண சுவாசத்தின் வளர்ச்சி அமிலத் தன்மையினால்தான் அந்த மனிதன் உயர்கின்றான். அவன் எடுக்கும் நிலைக்கொப்ப ஆவிகளின் (பிற ஆன்மாக்கள்) தொடர்பும் ஏற்படுகின்றது.

மின் அலை எப்படி எந்தெந்த விகித நிலைக்கொப்ப பாய்ச்சப்படுகின்றதோ அதன் நிலைக்கொப்ப ஒளியைத் தரக்கூடிய நிலையையும் எந்தெந்த இயந்திரங்களுக்கு எந்தெந்த விகிதத்தில் மின் அலை பரப்பப்படுகின்றதோ அதன் சக்தி ஓட்டத்தைத் தான் அந்த இயந்திரம் எடுத்து ஓடுகிறது.

அதைப் போல்…
1.எதன் அடிப்படையில்… எதன் விகித நிலைக்கொப்ப..
2.ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணச் சுவாசமும் உள்ளதோ..
3.அதன் சக்தி நிலையைத்தான் அவன் பெற முடியும்.

அதன் செயலில் தான் அவன் வாழ்க்கையும் அமைகிறதேயன்றி பல கோவில் ஸ்தலங்களுக்குச் சென்று ஆண்டவனை வணங்கி வந்து “பூஜித்துச் சக்தி பெறுவதல்ல…!”

எண்ணத்தின் ஈர்ப்பை உயர்வாக்கி எடுக்கும் சுவாச குண அமிலத்தினால் பலவாக உள்ள இந்தக் காற்றின் அமிலத்திலிருந்து “நமக்குகந்த அமிலத்தை நாமாக எடுத்துக் கொள்ளலாம்…”

இதன் வளர்ச்சியில் நமது எண்ணமும் சுவாசமும் இருக்குமானால் அதன் நிலையில் நாம் எடுக்கும் ஜெப முறையில் நம் எண்ண ஈர்ப்பை நமக்கு மேல் சக்தி வாய்ந்த சித்தர்களின் பால் நம் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

அப்படிச் சித்தர்கள் பால் தொடர்பு கொண்டு எடுக்கும் சுவாச அலையின் தொடர்பினால்… இந்த உடலுடன் மனித உலக வாழ்க்கையில் வாழும் நாம்
1.பிம்பப் பொருளைக் கண்டு பொருளாக வாழும் இந்த வாழ்க்கையிலிருந்து பெற முடியாத “ஞானத்தை”
2.நம் ஈர்ப்பின் ஜெப எண்ணத்தை சித்தர்பால் செலுத்தி
3.அவர்களின் தொடர்பலையின் சக்தி குண அமிலங்களை நாம் பெறும்படி வழிப்படுத்திக் கொண்டால்
4.நம் ஞான வளர்ச்சியின் தொடரில் செல்லும் வழி முறைப் பாதையை அறிந்து கொள்ளலாம்.
5.அந்தப் பாதையை அறிந்து விட்டால் நாம் செல்ல வேண்டிய வழியில் எந்தத் தடங்கலும் இருக்காது.

பலவாக உள்ள உலக வாழ்க்கை எண்ணத்தில் நம் எண்ணத்தை ஒன்றாக்கி… “ஓ…ம்” என்ற ஒலியுடன் சித்தர்கள் பால் நம் எண்ண ஈர்ப்புச் சக்தியை நாம் தந்தோமானால் மெய் ஞானம் பெறும் வழி ஞானம் அறியலாம்.

ஞானத்தின் ஈர்ப்பில் கலந்தோமானால் பல உண்மையின் பொருளை உலகளவுக்கு உணர்த்தலாம்.

ஞானிகளும் சப்தரிஷிகளும் நம் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்காவிட்டால் நம் பூமியில் மனித ஞானம் இன்று “ஞானமும் கண்டிருக்காது… விஞ்ஞானமும் கண்டிருக்காது…!”
1.இன்றைய காலகட்டத்தில் நம் சித்தர்களின் ஒளி சக்திகள்
2.இந்த உலகில் அதிகமாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் மனித ஞானம் எல்லாமே ஞானத்தின் பால் செல்லும் வழிமுறையற்றுப் பேராசையின் பிடி ஞானத்தில் தன் வலுவான விந்தை காணத் துடிக்கிறது.

மனிதனின் பேராசையின் விபரீத எண்ணச் சுழல் காற்றுகள் பூமியின் சுழற்சியுடன் அதிகப்பட்டு… மோதி… உயிர்ப்பலிகள் அதிகமாகி…
1.ஆவியின் சூழ்ச்சியில்.. அல்லலுக்கந்த வாழ்க்கையில் வாழ்கின்றான் மனிதன் என்பதை
2.அறியாமல் தான் இன்றைய மனிதர்கள் வாழ்கின்றனர்…!

தனதாக உள்ளது எது…? என்பதும் இம் மனித ஞானத்திற்குப் புரியவில்லை. தனி மனிதன் யாரும் வாழவில்லை… “தனியாக” யாருமே எங்கேயுமே வாழ முடியாது.

காற்றையும் நீரையும் நிலத்தையும் தன்னுள் உள்ள பல கோடி அணுக்களையும் வாழ வைத்து… வாழும் மனிதன்…
1.தானாக வாழ்கின்றானா..? அந்தத் “தனது” என்ற பேராசைக்கார மனிதன்…?
2.ஒன்றின் துணையில்லாமல்…
3.ஒன்றுடன் ஒன்றில்லாமல் வாழவே முடியாத மனிதன்
4.”நான்…” என்ற நானாக… வாழ்கின்றானாம்..!

ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் ஆண்டவனின் ஸ்வரூபத்தை எண்ணி வாழ வேண்டுமப்பா….!

குரு பீடத்தின் சக்தி

 

மனிதனின் வாழ்க்கையில் சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ சந்தர்ப்பவசத்தில் நமக்குள் இது வித்தாக ஆகிவிட்டால் விதியாக அது வளர்ந்து விடுகின்றது.
1.அந்த ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து இந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாக அவஸ்தைப்பட்டுத் தான் தீர வேண்டி இருக்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்… எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும்…! என்று ஏங்கி அதைப் பெறுதல் வேண்டும்

“தபோவன குரு பீடத்தின் சூரியனை உற்றுப் பார்த்து” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இதற்கு முன் எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நீங்கள் இதற்கு முன் செய்த வினைகளை அகற்றிடும் சக்தியாக அருள் ஒளி உங்களுக்குள் படர்ந்து உங்கள் உடலில் எந்த வலி இருந்தாலும் மேல் வலியாக வந்திருந்தாலும் அது அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் கூட்டும்.

மனக்கவலையோ சோர்வோ அதைப் போன்ற நிலைகள் இருந்தாலும் இங்கே தியானிக்கும் பொழுது அந்த மன பலம் உங்களுக்குக் கிடைத்து மன வளம் பெறும் அந்தத் திறனும் கிடைக்கும்.

உங்கள் உயிரை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர்தல் வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும். மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும் என் பார்வையால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணைத் திறந்தே இந்தச் சூரியனைப் பாருங்கள்.

1.உங்கள் உடலுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகள் ஊடுருவதும்… மகரிஷிகளின் ஆற்றல் பெருகுவதையும் நீங்கள் உணர முடியும்.
2.மகரிஷிகள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் உருவங்கள் இருந்திருந்தால் அந்த உருவமும் சிலருக்குக் காட்சியாகக் கிடைக்கும்
3.சப்தரிஷி மண்டலங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு தியானிக்க… தியானிக்க
1.உங்கள் நரம்பு மண்டலங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரும் பொழுது
2.ஒரு காந்தப் புலனறிவு உங்களுக்குள் இயங்குவதை உணரலாம்

மனதை ஒன்றுபடுத்த வேண்டியதன் அவசியம்

 

சக்தியின் நிலை பலவற்றில் கலந்திருந்தாலும் அதன் “கூட்டு நிலை…” கொண்டு தான் ஒவ்வொன்றின் பிரகாசமும் ஜொலிக்கின்றது.

தனித்த பூக்களாக இருந்தாலும் அதை எல்லாம் ஒன்றாகக் கோர்த்து ஆரம் கட்டித்தான் ஆண்டவனுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.
1.ஒன்றாக உள்ளதைப் பலவாகத் தருவதே இயற்கை…!
2.தாவர வளர்ச்சியின் நிலையிருந்துதான் முன்னோடி நிலை பெறுகின்றது.

தானாக வளரும் தாவரங்களும் சரி… நாமாகப் பயிர் செய்யும் தாவரங்களும் சரி… ஆரம்ப வளர்ச்சியில் அதற்கு வேண்டிய சக்தியை ஈர்த்துத் தன் சேமிப்புச் சக்தியின் பலன்களைத் தருகின்றன.

1.பூவும் காயும் கனியும் சில தாவரங்கள் தருகின்றன.
2.பூவும் கனியும் அளிக்காத புல் பூண்டு இன வர்க்கங்கள் அதன் அமில குணங்கள் முற்றிய பிறகு
3.வேர்களின் அதனின் சக்தி குணத்தை அதிகப்படுத்திக் கனம் கொண்டு தான் சேமித்து
4.வளர்ச்சி நிலையை வளரந்த பிறகு வெளிப்படுத்துகின்றது.

“வளர்ச்சியின் முற்றலை…” ஒவ்வொரு தாவர இன வர்க்கமும் வெளிப்படுத்திய பிறகு தான் அதனின் உயிர் ஜீவ சக்தி மாறுபடுகிறது.

அதன் மாற்றத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட ஜீவ ஆத்மாக்களுக்கு ஆரம்ப காலத்திலேயே ஒன்றாகப் பல அமில குணத்தை ஈர்க்கும் நிலை பெற்றதனால் மனிதனும் மிருகமும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இன வர்க்கங்களும் தம் உடல் அவய அமைப்பில் பல நிலைக்கேற்ப அங்க அவயங்கள் ஒரே தன்மையில் ஈர்த்து வளரும் நிலை கொண்ட இன குணங்களுடைய ஜீவராசிகளாக வளர்ந்திருக்கின்றோம்.

தாவரங்கள் சக்தியை ஈர்த்துப் பிறகு பலன் தருகிறது. தாவரங்களுக்கு உண்டு கழிக்கும் நிலை இல்லை.

பலவும் ஒன்றாக ஈர்த்துப் பல அவயங்களை ஒன்றுபடுத்தி உருவ அமைப்பு கொண்ட ஜீவன்களுக்கு உண்டு கழித்து வாழும் அவயங்கள் எப்படி அளிக்கப்பட்டன…?

அளிக்கப்பட்டன…! என்பதைக் காட்டிலும் வளர்ச்சியில் முன்னேற்றம் கொண்ட ஜீவ ஜெந்துக்கள் தன் வளர்ச்சியில் உண்டு கழித்துப் பல கோடி உயிரணுக்களை வளர்த்து வாழும் நிலையில் பயன் பெறும் பக்குவ நிலை பெறுவது தான்…! அது.

அதாவது…
1.தன் அவயங்களில் உள்ள பல கோடி அணுக்களை வளர்த்து
2.ஒன்றாக அதைக் கூட்டிப் பேணிக் காக்கும் ஓர் உயிரணுவின் தெய்வ சக்தியில்
3.உயிர் சக்தியான மனித உயிரணுவின் ஞானத்தின் வளர்ச்சியைப் பழக்கப்படுத்திக் கொண்டு
4.ஞான வளர்ச்சிக்கு உகந்த தன்மையில் ஒவ்வொரு உயிரணுவும்
5.இதன் தொடருடன் ஐக்கியப்படும் வளர்ச்சி நிலையை ஏற்படுத்திக் கொள்வது தான் மனித ஜீவன் பெறும் பலன்.
6.ஆக ஜீவனாக உள்ள ஜீவனின் பலன்… இந்த ஞானம் பெறும் வழி ஞானம் தான்.

பலனற்ற நிலை பெறாத ஜீவ ஞானம் தான் அதனின் தொடரில் ஏற்படும் “மாற்று நிலைகளுக்குச் செயல்படச் சென்றுவிடுகிறது…”

மனிதனின் உடலிலுள்ள அனைத்து அணுக்களும் அதனதன் வளர்ச்சியில் வளர்ந்து கொண்டு இருந்தால் தான் அவயங்களில் உள்ள அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமான நிலையில் வளர்ந்து வாழ முடிகின்றது.

அணுக்களுக்கு உகந்த உணவை அதற்குகந்த ஈர்ப்பில் பெற்று வளர்ந்து வாழ்கின்றது.
1.எண்ணத்தின் நிலையை மாற்றிக் கொண்டு செயல்புரியும் நிலை பெற்று விட்டால்
2.ஈர்க்கும் குண நிலையும் அதன் வழித் தொடர் கொண்ட எந்தச் செயல் முறையும் தடைப்படத்தான் செய்யும்.

பலவாக உள்ள பூவை ஒன்றாக்கி ஆரம் கட்டி அதன் அழகை ஆண்டவனுக்கு அணிவித்து இன்பம் காணுவது போல்
1.நம் உடலில் பலவாக உள்ள அணுக்களை ஒன்றாக ஆரம் கட்டி
2.உயிராத்ம ஆண்டவனுக்கு ஞானம் சூட்டி… அழகாக்கி…
3.மனிதன் மகிழ வேண்டும்…! என்ற சித்தத்தைச் சிந்தையில் உணர்ந்தாலே
4.சிவபதம் முதலிய எப்பதமும் காணலாமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்படுகின்றோம். அவருக்கு உதவி செய்வதற்காகச் செல்கின்றோம். பார்த்ததும் அவருடைய கஷ்டத்தைக் கேட்டறிகின்றோம்.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

அவருடைய நோயினைக் கேட்டு அறிந்து கொண்டபின் ஈஸ்வரா…! என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

நோயுற்றிருக்கும் அந்த நண்பனிடம்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய்..
2.நோயிலிருந்து விடுபடுவாய்… உன் உடல் நலம் பெறும்…! என்ற உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
3.அவருடைய வேதனை நமக்குள் புகாதபடி இப்படி விழித்திருத்தல் வேண்டும்

ஏனென்றால் வேதனைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நமக்குள் தீமை வராது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு
3.மற்றவர்களுக்கும் இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால்
4.அவர்களையும் காக்க முடியும்… நம்மையும் காக்க முடியும்.

இத்தகைய தெளிவான உணர்வு கொண்டு செயல்பட்டு நோயுற்றவரிடம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்…! என்று சொல்லுங்கள். இந்த உணர்வை நாம் அவர்களுக்குள் வித்தாகப் பதித்து விட வேண்டும்.

ஏனென்றால் நோயிலிருந்து அவர் விடுபட முடியாத நிலை இருக்கும் பொழுது இந்த உணர்வைப் பாய்ச்சி அவருக்குள் இந்த உணர்வை ஏற்ற வேண்டும்.

அவரும் நாம் சொன்னபடி இதை எண்ணத் தொடங்கினால் அவர் நோய் நீங்கக் காரணமாகின்றது. அவர் ஓரளவுக்கு மன உறுதியைப் பெறவும் இது உதவுகின்றது.

நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பல தீமையின் உணர்வுகளை நாம் கேட்டறிந்தாலும் மேலே சொன்ன முறைப்படி செய்து… துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் வலிமை கொண்டு… நம்மைக் காத்து நம் நண்பர்களையும் காத்திட வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யும் பொழுது எந்த அலை வரிசையில் வைக்கின்றனரோ அந்த அலையைத் தான் அது கவர்கின்றது… நாம் கேட்கவோ காணவோ முடிகின்றது.

ஆனால் பிடிக்கவில்லை என்றால் வேறு அலை வரிசைகளை உடனுக்குடன் மாற்றுகிறோம்.

இதைப் போன்றுதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பலருடைய உணர்வுகளைக் கேட்டாலும் நுகர்ந்தறிந்தாலும் அந்தத் துயரத்தின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அடுத்த கணமே…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.இந்த அலை வரிசையை நமக்குள் எடுத்துத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

நாம் எடுத்துக் கொள்ளும் அந்த துருவ நட்சத்திரத்தின் உண்ர்வு கொண்டு நண்பனைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் இது உதவும்.

இதை ஒரு பழக்கமாக நாம் வளர்த்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் அறியாது சேரும் தீய வினைகளிலிருந்து உடனுக்குடன் நாம் விடுபட முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வினை நாம் பெற்று நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

இதன் மூலம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனை நாம் யாரென்று அறிய முடிகின்றது
1.அவனையே வேண்டி… அவனுள்ளேயே கேட்டு
2.நாம் விரும்பியதை இங்கே உருவாக்க முடியும்

தெளிந்த மனம் கொண்டு நாம் அருள் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்ததை அவன் (உயிரான ஈசன்) உருவாக்கி அவன் வழியிலேயே நம்மை வழி நடத்தி நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.

ஆகவே ஞானிகள் காட்டிய வழி சென்றால் இந்த வாழ்க்கையில் நாம் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலை அடையும் சக்தி பெறுகிறோம்.

தீமை கலந்து விட்டால் தீமை விளைகிறது… அதனுடன் மகரிஷிகள் உணர்வைக் கலந்தால் நன்மையாகிறது

 

குருநாதர் என்னிடம் சொன்னது…
1.நீ முந்தி செய்த வினைகள் அது வளரும் பருவம் வரும் பொழுது
2.உனக்குள் விதியாக வந்துவிடும்.

அந்த விதி வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்…?

என்னை அறியாது இருள் நீங்க வேண்டும்… அந்த மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும். நான் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி அதைப் பெற வேண்டும்.

நான் என்னுடைய சிறு வயதில் அறியாமல் செய்தது அனைத்தும் விளைந்து… கால் பாதங்கள் எரிவதும் உடலும் எரிகின்றது. ஒவ்வொரு நிமிடமும் அதை மாற்றுவதற்கு மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்தேன்.

நீ சிறு வயதில் எத்தனையோ பாவங்களைச் சேர்த்தாய் என்றார் குருநாதர். அதை எல்லாம் இப்பொழுது நான் சொன்னால் நீங்களும் பயந்து விடுவீர்கள்…

ஒடக்கானைப் (ஓணான்) பிடிப்பேன். மூக்குப் பொடியை எடுத்து அதனுடைய கண்ணிலே தூவி விடுவேன். அது தலையை ஆட்டும். பார் பேய் ஆடுகிறது என்று காட்டுவேன்.

இதையெல்லாம் நான் செய்தவன் தான். அப்பொழுது எனக்குக் கண் எரிச்சல் எல்லாம் வரும். குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சுட்டிக் காட்டுகின்றார்.

சிறு வயதில் நீ தெரியாமல் செய்தாய். ஆனாலும் உன் உயிர் என்ன செய்கிறது…?
1.உடலில் உனக்குள் அணுக்களாக விளைய வைத்திருக்கின்றது
2.அது விளைந்து வரப்படும் பொழுது ஒவ்வொன்றாக அந்த அனுபவம் வரும்.

இப்போது அதை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.நல்ல குணங்களுடன் சேர்ந்து இது எப்படி எரிச்சலாக வந்ததோ இந்த எரிச்சல் வரும் பொழுது
2.நீ அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிலே எண்ண வேண்டும்.

அந்த நிலையைத்தான் நீ பெற வேண்டும் என்றார் குருநாதர்.

நான் (ஞானகுரு) தவறு ஒன்றும் செய்யவில்லை. உங்களுக்கு நன்மை தான் செய்து கொண்டிருக்கின்றேன். சந்தர்ப்பத்தில் நான் கவிழ்ந்து விழுந்து விட்டேன். விழுகும் போது சாக்கடையில் கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன்

எனக்கு வலு இருக்கின்றது. ஆனால் எலும்பு ஒடிகிறதே…! நான் தவறு செய்தேனா…? இல்லை.

அப்பொழுது தான் குருநாதர் சொல்கின்றார்.
1.ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பட்ட நிலைகள் இது வரும்.
2.விதிப்படி இது நடக்கும்… ஆனால் மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.

மனிதனான பின் மதி என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வினைத் தனக்குள் எடுக்க வேண்டும். இந்த மதி கொண்டு தான் அந்த விதியை வெல்ல முடியும்.

கீழே விழுந்து விட்டேன்…! எம்மா… எப்பா…! என்று சொன்னால்… நான் சொல்லும் வேதனையை நீங்கள் கேட்டால் உங்களிடமும் இது விளையும். உங்களிடம் விளைந்த பின் இரண்டு பங்கு என்னிடம் கொடுப்பீர்கள் இதைத்தான் என்னால் வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய வினைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

1.என்று… நாம் எதைச் செய்திருந்தாலும்
2.விதிப்படி அந்தந்த உணர்வுகள் வளர்ச்சி அடையப் படும்பொழுது அது வரும்.

அது தான் சித்திரை…! சிறு திரைகள்…! நம்மை அறியாது நாம் செய்த பிழைகள் திரை மறைத்து அந்த உணர்வின் அணுவின் தன்மையாக விளையும். அதன் வித்தின் தன்மை நிச்சயம் விளையத் தான் செய்யும்.

வேதனைப்படுபவர்களைப் பற்றி அடிக்கடி நாம் கேட்டுக் கொண்டிருந்தால் இந்த விஷத்தின் தன்மை அது வளரத் தான் செய்யும்… அந்த விஷம் கூடத்தான் செய்யும் என்று குருநாதர் காட்டுகின்றார்.

இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
1.என்னைப் போன்ற இந்தத் தீமைகள் மற்றவர்களுக்கு வரக்கூடாது…! என்று எண்ணுதல் வேண்டும்.
2.தலை வலிக்கிறது என்றால் இந்த வலி மற்றவருக்கு வரக்கூடாது.
3.அவர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை… விதியை… மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.

“வெறுமனே எண்ணாதபடி” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றி அடிக்கடி அதை இணைத்துச் சொல்ல வேண்டும். காரணம் அருள் ஞானிகள் இதைப் போன்ற நிலைகளை வென்றவர்கள். அதை எடுத்துத் தான் மாற்ற வேண்டும்.

ஆகவே உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது… உங்கள் அறியாத வரும் இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்கின்றீர்கள். இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி ஒளிச் சரீரம் பெறுகின்றீர்கள்.

நான் எத்தனையோ பேருக்கு ஆசிர்வாதம் கொடுக்கின்றேன்… எனக்கு ஏன் இப்படிக் கையில் அடிபட்டது…? என்று எண்ணினால் என்ன ஆகும்…!

விதிப்படி நான் அதை வளர்க்கின்றேன் மீண்டும் இன்னும் எத்தனையோ தொல்லைகள் வரும். அது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்
1.தொல்லைகள் எப்பொழுது மனிதனுக்கு வருகின்றதோ அது விதி.
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் மதி…!

அத்தகைய மதி கொண்டால் பிறவியில்லா நிலை அடையலாம்.

விஞ்ஞானத்தை மெச்சும் மனிதனால்… “தன்னுடைய ஞானத்தை மெச்சி ஏன் வளர்க்க முடியவில்லை…!”

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெற வேண்டும்.

அதி விரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன என்பது புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாது அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.இந்த விஷத் தன்மைகள் கூடி சிறுநீரகங்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
2.இரத்தத்தில் கலந்து வரும் அசுத்தங்களை நீக்கும் சக்தியை அது இழந்து விடுகின்றது.
3.விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
4.இதனால் “உப்புச் சத்து” என்ற நிலை உருவாகி வருகின்றது.

உப்பை வெளியிலே வைத்தால் அந்த வைத்திருக்கும் இடங்களில் எப்படிக் கசிவாகின்றதோ இதைப் போல நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கசிவு அதிகமாகி விட்டால் அதனால் அவர்களுக்கு அடிக்கடி “வாந்தி” வரும்.

சர்க்கரையைச் சமப்படுத்தும் சக்தியும் இழந்து விட்டால் அதுவும் இணைந்து விடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உணர்வின் உந்து விசை அதிகமாகிவிடும். இரத்தக் கொதிப்பும் இதனுடன் சேர்ந்து கொள்ளும்.

இத்தகைய நிலைகள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பதும் வேதனை உணர்வு அதிகமாகி இந்த உடலை விட்டே ஆன்மா பிரியும் தன்மையும் வந்துவிடுகின்றது.

ஆனால் இத்தகைய நோய்கள் இருப்பினும் இது போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு
1.அதிகாலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று
2.அதைச் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் எத்தகைய நோய்கள் இருப்பினும் அதை நீக்க முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தியானித்தால் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீங்களே அகற்ற முடியும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது…
2.அதே எண்ணத்தைக் கொண்டு நோய் நீக்கும் அருள் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டு
3.அறியாது வந்த நோயினைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.உங்களால் முடியும்… நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற இந்த நினைவுடன் எண்ணி ஏங்கித் தியானித்து விட்டு மீண்டும் கண்ணை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை “உடலுக்குள் சர்க்குலேசன் (CIRCULATION) செய்வது போன்று செலுத்துங்கள்…!”

உதாரணமாக… கிட்னியில் குறைபாடு இருந்தால் உங்கள் நினைவினை அங்கே அந்தப் பாகத்தில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உறுப்பு சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

வாத நோயோ கீழ்வாதம் முடக்குவாதம் போன்ற நோயோ ஆஸ்த்மாவோ சர்க்கரைச் சத்தோ இதைப் போல எந்த நோயாக இருப்பினும் அந்தந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்… என்பது போல்
2.உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி விட்டு
4.அடுத்த கணம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
5.இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை கலக்கச் செய்ய ஏங்கித் தியானியுங்கள்.

டி.பி.யிலிருந்து கேன்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் இதைப் போல் உங்கள் எண்ணத்தை உடலுக்குள் செலுத்தினால் அந்த நோயை நிச்சயம் நீக்க முடியும். உடல் நலம் பெற முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

சாம அதர்வண யஜூர்

 

ஒரு வேதனைப்படுபவரை சந்தர்ப்பவசத்தில் நாம் பார்க்கின்றோம் அந்த உணர்வின் இசை “சாம…!”
1.வேதனையான உணர்வுகள் வந்தபின் உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்போம்…
2.அவர் அம்மா……! என்று அலறினால் போதும் நாம் ஐயோ…! என்று சொல்வோம்.

ஆக இந்த உணர்வின் தன்மை தனக்குள் ஆகிவிட்டால் நல்ல குணங்களின் இசைகளையே மாற்றி விடுகின்றது… “அதர்வண…” மாறி அதுவே ஒரு வித்தாகி விடுகிறது “யஜூர்…”

வித்தாக ஆன பின் மீண்டும் சாம…
1.அவரைப் பற்றி மீண்டும் மீண்டும் எண்ணப்படும் பொழுது
2.நம்முடைய சோக கீதம் அங்கே வாசிக்கத் தொடங்கி விடுகின்றது… எம்மா… எப்பா… மீண்டும் சாம…!

ஆகவே இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லாம் அருள் மகரிஷிகளின் உணர்வைத் எடுத்து இதை அடக்கிடல் வேண்டும். அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடனுக்குடன் இதைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின்… “எந்த நோயாளியை நாம் பார்த்தோமோ” மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும்… அவர் அருள் ஞானம் பெற வேண்டும்…! என்ற இந்த உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இந்த உணர்வை நினைவுபடுத்தி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறு… உன் உடல் நலம் பெறும்…” என்ற இந்த உணர்வின் வித்தினை விதைத்து விடவேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது அது அந்த வேதனையை அடக்குகின்றது.
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுக்கும் பொழுது அதனுடைய இசை சாம.
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனையை அடக்கப்படும் பொழுது அதர்வண
3.அதே உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுக்கும் பொழுது யஜுர்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் வித்தாகி விட்டால்…
1.இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது எங்கே செல்கின்றோம்…?
2.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

ஒரு மனிதன் வேதனைப்படும் குரலை நாம் கேட்டோம் என்றால் சாம… நாமும் அந்த வேதனையைச் சொல்லும் போது “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…?” என்று இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் பொழுது அதர்வண…! நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது,

மீண்டும் சாம…! அந்த வாசனை கொண்டு “அவர் இப்படி ஆகிவிட்டாரே… இப்படி ஆகிவிட்டாரே…” என்று மீண்டும் அந்த அணுக்களை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவர் இறந்து உடலை விட்டு வந்தால்… அவரின் உணர்வு நமக்குள் வளர்ந்திருந்தால் அந்த நோயால் இறந்த ஆன்மா நம் உடலுக்குள் வந்து… அதே நோயை இங்கே வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

பின் நாமும் மடிகின்றோம்.

இறந்த பின் நம் மீது பற்றுள்ள உடலில்… இதே உணர்வுகள் கலந்து அந்த உடலுக்குள் சென்று நாம் இப்படித் தேய்பிறையாகச் செல்ல வேண்டி வருகின்றது.

இதை மாற்றி அமைப்பதற்குத் தான் விநாயகர் தத்துவத்தை நமக்கு ஞானிகள் கொடுத்தார்கள்.

திரும்பத் திரும்ப யாம் (ஞானகுரு) சொல்கிறோம் என்று நினைக்காதீர்கள்
1.ஒவ்வொரு கோணத்திலும் “ஒரு உணர்வின் தன்மை அது எப்படி இயக்குகின்றது…?” என்பதை நீங்கள் அறிந்தாக வேண்டும்.
2.பல முறை நீங்கள் கேட்டறிந்துள்ளீர்கள்… ஆனால் உங்களால் திருப்பிச் சொல்ல முடிகிறதா… என்றால் இல்லை.
3.அதன் வழி நடக்க முடிகின்றதா…? என்றால் இல்லை.
4.ஒருவன் கோபித்து விட்டான்… வேதனைப்படுகின்றான் என்றால் அதில் தான் லயித்து விடுகின்றோம்.
5.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் துடைக்கத் தெரியவில்லை.

அதற்காகத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்

உங்களுக்குள் தெளிவான நிலைகளை உருவாக்க வேண்டும் நீங்கள் எம்முடைய அருள் உரையைக் கேட்கக் கேட்க…
1.நீங்கள் சுவாசிப்பது சாம.
2.இந்த உயர்ந்த ஞானத்தை உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதர்வண… உங்கள் கஷ்டங்களை நீக்கும்.
3.கஷ்டங்கள் நீக்கும் அந்த உணர்வின் வித்தாக உருப்பெற்றால் யஜுர்…
4.மீண்டும் சாம… அதை எண்ணத்தால் எண்ணும்போது உங்கள் துன்பத்தையும் கஷ்டத்தையும் அடக்கி… உயிர் நல்லதாக மாற்றுகின்றது.

மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்… வழக்கமான இந்தச் சுழற்சி வாழ்க்கையினை வாழ்ந்து மட்டும்… “எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது…?”

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு… நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது…!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி… வைரமாக்கி… மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து… “ஒரு நிலையில் வாழ்கிறது…” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்…” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்…
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்…!

May 2024 – உபதேசம்

மரண பயத்தை நாம் அகற்ற வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் வேதனை சலிப்பு சங்கடம் வந்தாலும் அல்லது கொடிய நோய் இருந்தாலும் இதை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை தனக்குள் சேர்த்து உடலில் உருவான அந்த அணுக்களை நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

பிறவி இல்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்க்கும் வண்ணம் அதை எளிதில் பெற்று… தான் பெற்ற சக்தியை மனைவிக்கும் மனைவி பெற்ற சக்தியைத் தன் கணவனுக்கும் என்று இரு உணர்வு ஒன்றாக இணைத்திட முடியும்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வினைத் தனக்குள் அறிவாக இயக்கி
2.கணவனும் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு
3.”இனி எந்தப் பிறவியும் வேண்டாம்…” என்ற நிலையில் பிறவில்லா நிலையாகப் பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடைந்து
4.சப்தரிஷி மண்டலங்களாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்
5.அவர்களுக்கு என்றுமே மரணம் இல்லை.

இன்று மனிதனின் வாழ்க்கையில் தொழில் செய்கிறோம் என்றால் நமக்கு மரண பயம் வந்து விடுகின்றது…!

ஐயோ… தொழில் மந்தமாகிவிட்ட்தே…! வாங்கியவனுக்கு நாளைக்கு எப்படிப் பணத்தைக் கொடுப்பது…? கொடுக்கவில்லை என்றால்; அவன் திட்டுவானே…!

என் பிள்ளைகள் எல்லாம் என்ன ஆகும்…? நான் எப்படி வாழ போகிறேன் என்று
1.நமக்குள் இருக்கும் “வாழ வைக்கும்” அந்த நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றி
2.மரண பயத்தை ஊட்டித் தன்னை அறியாமலே தற்கொலை செய்து கொள்ளும் நிலை வருகிறது.

அதாவது மரண பயம் என்ற உணர்வு வந்து விட்டால்… இந்த மனித உடலையே அழித்திடும் உணர்வின் எண்ணங்கள் வந்து மனித உடலையே அழித்து விடுகின்றது.

ஆனால்
1.அருள் ஞானிகளின் உணர்வை எடுத்து அந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
2.மரணம் இல்லாத பெரு வாழ்வு வாழ முடியும்.
3.நாம் அந்த மகரிஷியின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் எடுத்து வாழ முடியும் வளரவும் முடியும்
4.நம் பார்வையால் பல தீமைகளையும் போக்க முடியும்.

தான் வாழ வேண்டும் என்று ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் வளர்ச்சியாகி பூரணத்துவம் அடைந்து நம்மை நாம் அறிவதும் உலகை அறிவதும் என்ற நிலை வருகின்றது.

ஆனாலும்..
1.தன் குழந்தை மேல் பாசத்தை வைத்தால் அந்தப் பாசத்தால் குழந்தை என்ன செய்வான்…? என்று வேதனைப்பட்டால் நம் நல்ல குணங்கள் மறைந்து விடுகிறது
2.கடன் கொடுக்கின்றோம்… வாங்கியதை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் நாளை என்ன செய்வது…? என்ற வேதனை வருகின்றது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது
3.நண்பர்களுடன் பழகுகின்றோம்… அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம் நோய்களை அறிகின்றோம் அப்பொழுது நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றது.

இப்படித்தான் பௌர்ணமி சிறுகச் சிறுக தேய்பிறையாவது போன்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தேய்பிறை ஆகி விடுகின்றது.

மற்ற கோள்கள் மறைப்பு விலகும் பொழுது தான் சந்திரன் முழுமையான பௌர்ணமி ஆகின்றது.

நம் உயிரின் தன்மை கொண்டு மனித உடல் பெற்ற பின் தேய்பிறை ஆகாது என்றுமே பூரண பௌர்ணமியாக… ஒளியின் சரீரமாக ஆக வேண்டும் என்பதனை ஞானிகள் நமக்கு காட்டியுள்ளார்கள்.

ஆகவே தீமைகளை அகற்றும் சக்தியை யாரெல்லாம் வழிப்படுத்துகிறார்களோ அவர்களே மனிதன் என்ற முழுமை அடைகின்றார்கள்… நரசிம்ம அவதாரமாக ஆகின்றார்கள்.

தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் பொழுது கல்கி… ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். ஒளியின் சரீரம் பெறும் நிலை தான் பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகள்.

இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும்…
1.அகண்ட உலகில் உள்ள மற்ற பிரபஞ்சங்களின் சக்தியை நுகர்ந்து நஞ்சினை வென்று
2.உணர்வினை ஒளியாக மாற்றிப் பேரின்ப்ப் பெரு வாழ்வு என்ற நிலையாக
3.மரணம் இல்லாப் பெரு வாழ்வாக என்றும் ஒளியின் சரீரமாக நாம் மாற முடியும்.

எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கித் தான் இன்று வாழ்கின்றோம்

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்மக் கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும் நாம்
1.இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலகில் வாழும் மனிதர்கள் எத்தனையோ கோடித் தெய்வங்களை வணங்கினாலும் அந்தத் தெய்வம் காக்க வருவதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்… இதையெல்லாம் எங்கே உருவாகின்றது என்று…!

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தும் நம் சிரசின் பக்கம் இருக்கும் உயிர் தான் இயக்குகிறது… உருவாக்குகிறது. அதை “ஈஸ்வரலோகம்…” என்று ஞானிகள் காரணப் பெயர் இடுகின்றனர்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அதை அணுவாக உருவாக்கும் கருவாக
3.உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அப்படி உருவாக்கிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது “பிரம்மலோகமாக…” மாறுகின்றது. அதே சமயம் நம் உடலுக்குள் அந்தக் குறித்த காலத்தில் வளரத் தொடங்குகிறது.

கோழி அடை காப்பது போன்று என்னை இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்…! என்று இந்த உணர்வின் தன்மை எண்ணினால் அந்தக் கரு முழுமையடைந்து அணுவின் தன்மை அடைகின்றது.

அப்படி அணுவின் தன்மை அடைந்த பின் அது தன் உணவுக்காக ஏங்குகின்றது.

உதாரணமாக முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளி வந்தபின் புற நிலையில் இருக்கக்கூடிய உணவை அகநிலையில் உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்றுதான்…
1.உடலில் உருவான இந்த அணு முழுமை அடைந்த பின்
2.நம் உடல் உறுப்புடன் ஒன்றி இரத்தத்தில் வரும் உணர்வினை
3.உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது.

ஆகவே அந்த அணுவின் தன்மை அடைந்தால் பிரம்மலோகம் என்ற நிலை அடைகின்றது.

இரத்தத்தின் வழியாக உணவாக உட்கொள்ளும் நிலை வரும் பொழுது அந்த அணுக்கள் நம் உடலுக்குள் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

ஒரு வித்தினை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து செடியாக… மரமாக வளர்ந்து… தன் இனத்தை உருவாக்குகின்றது. ஒரு கோழி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுகள் வளர்ச்சியாகி அது மீண்டும் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகளை வளர்க்கும் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுகின்றோமோ அத்தகைய அணுக்களின் இன விருத்தி நம் உடலுக்குள் அதிகமாகின்றது.

இப்படி வளர்ச்சியாகி வளர்ச்சியாகித்தான் நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

காட்டிலே வாழும் மான் சந்தர்ப்பத்தால் புலியைப் பார்த்து விட்டால் அதனிடமிருந்து தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை எண்ணி எண்ணி அதன் உணர்வினை மான் அதிகமாக நுகர்கின்றது.

ஆக… புலியின் உணர்வை மான் பயத்தால் நுகர்ந்த பின் மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தப் புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும் அணுக்கள் அங்கே பெருகி விடுகின்றது.

1.அப்பொழுது மானின் சாந்தமான உணர்வுக்குள் அது ஊடுருவி அதை மடியச் செய்து விடுகின்றது
2.அது தன் நினைவை இழக்கச் செய்கின்றது.

புலியோ மானின் தசைகளை உணவாக உட்கொண்டு விடுகின்றது. மான் புலிக்கு இரை ஆகின்றது.

ஆனால் புலியின் உணர்வை மானின் உயிர் கருவாக மாற்றி அந்த (மானின்) உடலை விட்டுச் சென்றபின் புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் அடைகின்றது.
1.அப்பொழுது கடவுள் யார்…? இந்த உயிரே கடவுள்.
2.உயிர் தான் இத்தகைய நிலையைச் செயல்படுத்துகிறது…!
3.பல கோடிச் சரீரங்களில் ஒன்றிலிருந்து மீண்டு ஒன்றுக்குள் இரையாகும் பொழுது நரக வேதனைப்பட்டு
4.அதன் நிலை கொண்டு கொன்ற உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று
5.இப்படி உருமாறி… உருமாறி உருமாற்றி… நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர் தான் என்ற நிலையை
6.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மை இது…!

பய உணர்வுகள் அதிகரித்தால் (சிறு மூளையில்) ஏற்படும் தீய விளைவுகள்

ஒரு குழந்தை ரோட்டில் செல்வதை நாம் பார்க்கின்றோம் அது போகும் பாதையிலோ ஒரு பள்ளம் (குழி) இருக்கின்றது… நம்முடைய கண் கரு விழி அதைக் காட்டுகின்றது. பார்த்தவுடன் “ஐய்யய்யோ அங்கே குழி இருக்கின்றதே…” என்று என்று பதறுகின்றோம்.

குழந்தை அதைப் பற்றிய அறிவு இல்லாதபடி அதனுடைய சிந்தனைக்கு இல்லாதபடி ஓடி வருகின்றது. காரணம் தனக்கு வேண்டிய ஒரு பொருளை எடுப்பதற்காக அப்படி வருகின்றது.

பொருளைத்தான் அந்த குழந்தை பார்க்கின்றது… இந்தப் பள்ளத்தை அது பார்க்கவில்லை.

ஆனால் நாம் அந்தப் பள்ளத்தைத் தெரிந்து கொண்டோம். உற்றுப் பார்க்கப்படும் பொழுது குழந்தையினுடைய வேகத்தை கண்டு “குழந்தை உள்ளே விழுந்து விட்டால் என்ன ஆகும்…?” என்று நமக்குப் பயம் வருகின்றது.

குழந்தைக்கு பயம் இல்லை. யார் பெற்ற குழந்தையாக அது இருந்தாலும் அன்பும் பண்பும் பரிவு கொண்ட மனிதன் நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்தக் குழந்தைக்குத் “தீங்கு விளையப் போகின்றது…” எனத் தெரிந்து கொள்கின்றோம்

தெரிந்து கொண்ட பின் அவனைக் காக்கும் எண்ணங்களே நமக்குள் வருகின்றது. அத்தகைய எண்ணங்கள் வரும் பொழுது ஓடிப்போய் அந்தக் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பயத்தின் உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது
2.நம் உடலுக்குள் உணர்வின் இயக்கம் அதிகமாகின்றது… பய அலைகளைக் குவிக்கின்றது.
3.அதன் உணர்வின் துணை கொண்டு வேகத் துடிப்புடன் குழந்தையை நாம் ஓடிச் சென்று காத்து விடுகின்றோம்.

அந்த சமயத்தில் நாம் நுகர்ந்த பய உணர்வால் அதற்குப்பின் அடிக்கடி யாரைப் பார்த்தாலும் அல்லது ஒரு பொருளே வித்தியாசமாகத் தெரிந்தாலே
1.“அது கீழே விழுந்து விடுமோ…” என்ற எண்ணம் வரத் தொடங்கும்.
2.பயத்துடன் உற்று நோக்கப்படும் பொழுது அந்தப் பொருள் நிச்சயம் கீழே விழுகும்.

ஆனால் அந்த எண்ணங்கள் இங்கே பதட்டத்தைத் தான் உண்டாக்கும். இப்படி இந்தப் பதட்ட நிலைகள் எடுத்துக் கொண்டவர்கள் அடுத்து யாரைக் காக்க வேண்டும் என்றாலும்
1.அந்த அவசரப்பட்டே செயல்படுவார்கள்… அத்தகைய எண்ணம் தான் வரும்.
2.கடைசியில் கை கால் எல்லாம் நடுக்கம் வரத் தொடங்கும்

இந்த வாழ்க்கையில் அவர் நன்மைகளைத்தான் செய்கிறார். இருந்தாலும் பிறரைக் காத்திடும் நிலைகள் வரும் போது அந்த அவசர அவசரமாகச் செயல்படும் தன்மை வரும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவார். ஆனால் அது தடைப்படும் பொழுதெல்லாம் “நடுக்கங்கள்” அவருக்குள் வரும்.
1.சிறு மூளையில் இந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கத் தொடராக நடுக்க வாதமாக வந்துவிடும்
2.அதற்கு மருந்தே இல்லை…! (ஆனால் அவர் நல்லவர்).

இது போன்ற உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ஏதோ காரணத்தால் அது நடக்கவில்லை என்றால் உடனே கோபம் வரும்… உணர்ச்சியின் வேகம் தூண்டும். தன்னுடைய செயலாக்கத்தை மாற்றிவிடும்.
1.அந்த உணர்வின் வேகம் வந்து விட்டால் இரத்தக் கொதிப்பாக மாறும்.
2.அதன் வளர்ச்சியில் நடுக்க வாதமும் வரும்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பங்களால் உருவாக்கக்கூடிய நிலைகள். இந்த மாதிரி நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அதைப் பெறும் வழி என்ன…?

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… விண்ணின் ஆற்றலை இந்தப் பூமிக்குள் அது கலந்துள்ளதை உயிராற்றல் கொண்டு தனக்குள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட நிலையை எனக்குள் (ஞானகுரு) பதிவாக்கினார்.
1.வானியல் தத்துவத்தை அறிந்தார்…
2.புவி ஈர்ப்பின் தன்மையை அறிந்தார்
3.உயிரியல் தத்துவத்தை உணர்ந்தார்
3.இது எவ்வாறு என்று எனக்கு உபதேசித்து அந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தார்
4.அதை நான் நினைவு கொண்டு அவர் கற்றுணர்ந்த உணர்வுகளை நான் அறிகின்றேன்
5.அதை எனக்குள் விளையச் செய்கின்றேன். விளைந்த உணர்வின் எண்ணங்கள் வெளிப்படுகின்றது
6.வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களைத் தான் உங்களுக்குள் இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன்.

இதை எண்ணி ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் தீமையை நீக்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

காரணம் எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் பார்க்காத மனிதன் இருக்க முடியாது. ஆனால் பார்த்தாலும் (உதவி செய்ய முற்பட்டாலும்) அடுத்த கணம் அந்தத் துயரம் உடலுக்குள் வளராதபடி நாம் தடுக்க வேண்டியது அவசியம்.

நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது உயிரான ஈசன் தான். எண்ணியதை அணுவாக மாற்றுவது உயிர் அதற்கு ஜீவன் கொடுத்து உணவு கொடுப்பதும் உயிர். அந்த உணர்வின் அணுவாகி மலமாகி உடலாக சிவமாக ஆகின்றது. ஆகவே நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?
1.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் சிவமாக ஆக்கினால் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளலாம்.
2.அதற்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

எத்தகைய தீமையைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணமே அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த முறைப்படி நாம் உதவி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எத்தகைய வேதனையைப் பார்த்தாலும் இப்படித்தான் நாம் எண்ணித் தூய்மைப்படுத்தி நம் நல்ல எண்ணங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீமைகளை வலுவிழக்கச் செய்து பழக வேண்டும்
1.பயமும் வேதனையும் ஆத்திரமும் நமக்குள் வளராதபடி
2.அதை நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக இதைச் செயல்படுத்த வேண்டும்.

உடலை விட்டுப் பிரியும் எந்த ஆன்மாவாக இருந்தாலும் பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும்

 

தேவர்கள்… அசுரர்கள்.. மனிதர்கள்… என்று இனம் பிரித்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். தேவர் என்பவர் யார்…? அசுரர் என்பவர் யார்…? மனிதர் என்பவர் யார்…?

எந்தெந்த வளர்ச்சி செயல் புரிந்து எந்தெந்த எண்ண ஓட்டத்தில் வாழ்கின்றார்களோ அதனை இனம் பிரித்துத் தேவனாகவும் அசுரனாகவும் மனிதனாகவும் காட்டினர்.

இன்று நம்மிலேயே இந்த மூன்று வகைக் குணத்தவர் உள்ளனர். அவரவர்களின் எண்ணப் பயனால் அமைவதுவே இந்தக் குண நிலை. மனித ஆத்மாவுக்கு மட்டுமல்ல. அனைத்து நிலைகளுக்கும் இது உண்டு என்று உணர்த்தியுள்ளேன்.

நம் பூமியின் ஒத்த நிலைகள் மற்ற மண்டலங்களுக்கு மாறுபாடு கொள்கின்றன. சூரியனின் ஒளி அலையை ஈர்த்து நம் பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் சக்தி நிலைப்படி நம் பூமியின் சுழற்சி ஓட்டமும் இயற்கைத் தன்மையும் அமைந்துள்ளன.

அது அல்லாமல் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட விகிதத் தூரத்தைக் கொண்டும் நம் பூமியின் நீர் நிலையின் தன்மை கொண்டும் நம் பூமிக்குத் தொடர்புடைய மண்டலங்களின் ஈர்ப்பு அலைகளின் வெளிக்கக்கும் அமில குணத்தைக் கொண்டும் நம் பூமியின் இன்றைய குண நிலை உள்ளது. இது போல் மற்ற மண்டலங்களின் தன்மைகளும் மாறுபடுகின்றன.

உஷ்ண அலையில் வாழும் நம் பூமியில் பிரிந்து வாழும்… பிரிந்து என்பது
1.இந்தப் பூமியில் வாழ்ந்த ஆன்மாக்கள்
2.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்துடன் எந்த இடத்தில் எந்த எண்ணத்தில் தன் ஆத்மா பிரிந்ததுவோ
3.அதே எண்ண நிலைக்கொப்ப அந்த உஷ்ண அலையின் நிலையுடனே
4.இந்தப் பூமியின் சுழற்சியுடன் இந்தப் பூமியின் ஓட்டத்திலும் இந்தப் பூமியின் ஈர்ப்புடனும் அதன் சுழற்சி நிலை உள்ளது.

நம் பூமி ஓர் இடத்தில் நிற்பதில்லை. சுழன்றே ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் பூமியிலிருந்து பிரிந்த ஆத்மாக்களும் அதன் சுழற்சியிலேயே ஓடிக் கொண்டே சுழன்று கொண்டே வருகின்றன.

ஆத்மா பிரிந்த பிறகு மேலுலகம் சென்றுவிட்டான் என்கிறனர்.
1.மேல் உலகம் என்பது எந்த உலகம்…?
2.இந்தப் பூமிக்கும் மற்ற மண்டலங்களுக்கும் மேல்… கீழ்… என்ற நிலை உள்ளதுவா…?
3.சூரியனின் ஒளி அலைகள் பாயும் மத்திய பாகத்தை மேல் பாகம் என்றாலும் இரவிலே கீழ் பாகத்தில் வாழுகின்றோமா…?

சுழலும் சுழற்சி வட்டத்தில் கீழும் இல்லை… மேலும் இல்லை…!

இந்தப் பூமியின் காந்த ஈர்ப்பின் நிலையுடன் ஒட்டி… பூமியின் சுழற்சியுடன் நாம் எப்படி அதன் ஈர்ப்பில் வாழ்கின்றோமோ அதைப் போல் தான் இந்த உலகில் வாழ்ந்து பிரிந்த உயிராத்மாக்கள் இந்த உலகின் ஈர்ப்பின் வட்டத்திற்குள் காந்த அமில வட்டத்திற்குள்ளேயே நம்முடன் கலந்தே தான் அவர்களின் அமில வட்டக் குணங்களும் உள்ளன.

ஆவி பிரிந்து அந்த ஆத்மா ஆகாயத்தில் சென்று நிற்பதில்லை…!

நம் மூதாதையர்களினால் சொல்லப்பட்ட நடந்த கதைகளில் பேய் பிசாசு வந்ததாகவும்… அதன் பாதம் நிலத்தில் பதியவில்லை…! என்றும் பேய்க்கும் பிசாசிற்கும் பாதம் நிலத்தில் பாவாது…! என்றெல்லாம் கதைகளாகக் கேட்டிருப்பீர்.

இவைகள் எல்லாம் கதைகள் அல்ல…! உண்மை நிலையில் வெளிப்பட்ட சில அர்த்தம் கொண்ட செயல் முறைகள் தான்.

1.பிம்ப உடல் இல்லாததினால் அவற்றின் உடல் பூமியில் பதிவதை நாம் காண முடியாதேயன்றி
2.மனித ஆன்மாக்கள் எப்படிப் பூமியில் வாழ்கின்றனவோ அதைப் போல்
3.ஆவி ஆத்மாக்களும் இந்த ஈர்ப்பின் வட்டத்திற்குள்ளேயே இருக்க முடியும்… இருக்கின்றன…!

இந்த ஈர்ப்பின் வட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றால் அதற்குகந்த ஞானம் பெற்றிருந்தால் தான்… அந்தப் பக்குவ வழியில் சூட்சமம் கொண்டோர்களினால் தான்… இந்தப் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு மேலே (வெளியிலே) செல்ல முடியும்.

1.இந்தப் பூமியின் சக்தி அலையில் இருந்து நம் ஆத்ம நிலை மற்ற நிலைகளுக்குச் செல்ல வேண்டும் என்றால்
2.அதற்குகந்த பயிற்சித் திறன் நாம் பெற்றிருந்தால் அதன் செயலில் செல்ல முடியும்.

மனிதனிலிருந்து பிரிந்து சென்ற ஆத்மாக்களினால் இந்த ஈர்ப்பின் தன்மையிலிருந்து பறந்து எங்கே வேண்டுமானாலும் செல்ல முடியாது.

பூமி சுழன்று கொண்டே உள்ள பொழுது பூமி சுழலுவதும் ஓடுவதும் நமக்குத் தெரிகின்றதா..? இல்லை…! அதே போல் அதன் ஈர்ப்பில் ஐக்கியப்பட்டுள்ள நம்மைப் போன்ற நிலைதான் இந்தப் பூமியில் பிறந்து இந்தப் பிம்ப உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் நிலையும் உள்ளது.

ஆக உடலை விட்டுப் பிரிந்த எந்த ஆன்மாவாக இருந்தாலும் இந்தப் பூமியின் பிடிப்பிலே இதனின் ஈர்ப்பு வட்டத்தில் தான் இருக்க முடியும். மீண்டும் மீண்டும் உடல் பெற்றுத் தான் ஆக வேண்டும்.

1.இதிலிருந்து தப்பி இந்தப் பூமியின் ஈர்ப்பைக் கடந்து சென்று பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் சப்தரிஷி மண்டலங்களுடன் நீங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இந்தப் பாடநிலைகளை விளக்கவுரைகளாகத் தொடர்ந்து கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய உலகம் மிகவும் துரித நிலைகள் கொண்டு மாற்றமாகிக் கொண்டே உள்ளது.

மனிதனுக்கு மனிதன் காட்டு விலங்குகள் எப்படி ஒன்றுக்கொன்று அஞ்சி வாழ்கின்றதோ இதைப் போன்றுதான் கிராமந்தோறும்… ஊர் தோறும்… நகரம் தோறும்… ஒவ்வொரு நொடிக்கும் அஞ்சி வாழும் தன்மை வந்து விட்டது.

பின் தொழிலை எப்படி நீங்கள் பார்ப்பது…? கிடைப்பதைத் தட்டிப் பறித்து உணவாக உட்கொள்ளும் இந்த உணர்ச்சியின் தன்மை வளர்ந்து விட்டது.

இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
1.காற்று மண்டலத்தில் கலந்துள்ள அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நாம் தியானித்து
2.இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கி
3.அத்தகைய மூச்சலைகளைப் பெருக்குவோம் என்றால் சிந்திக்கும் மனிதர்கள் உருவாவார்கள்.

ஆகவே தீமையிலிருந்து மீட்டிடும் அருள் சக்திகளை நமக்குள் உருவாக்க முடியும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடிவதில்லை. அது அறுந்து விடுகின்றது. ஆனால் பல நூல்களை இணைத்துக் கனமான… கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.

கதிரியக்கப் பொறியின் உணர்வுகளை… அந்த அழுத்தத்தை அதிகமாகச் சேர்க்கும் பொழுது இராக்கெட்டை விண்ணில் உந்திச் செலுத்துகின்றான் விஞ்ஞானி. அது சிறுதுளி என்று இருக்கும் பொழுது ஒரு இயந்திரத்தைத் தான் இயக்க முடிகின்றது

1.அத்தகைய உந்து விசையின் உணர்வுகள் வலு கொண்டு வருவது போல
2.நமது உணர்வுகளும் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
3.உந்துதலின் தன்மையை அதிகமாக எடுத்துச் செலுத்தினால்
4.அது தீமை என்ற நிலைகளைக் கலைக்கவும்… மோதலில் இதைக் கருக்கவும் செய்யும்.

ஆகவே உங்களில் இதைப் பக்குவப்படுத்தி இந்த அருள் உணர்வின் தன்மை வளரச் செய்து கொண்டால் பூமியில் வரும் தீமைகளை அகற்ற முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்து கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் தான் அது முடியும்.

1.இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் எதிர் நிலையான உணர்வுகளை… (அந்தத் தூசிகளை)
2.மின்னல்களைக் கவர்ந்து தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது துருவ நட்சத்திரம்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் நுகர்ந்தால் நமக்குள் வரும் விஷத் தன்மைகளை மாற்றிவிட்டு
1.நமக்குள் அறிவின் ஞானமாக வளரச் செய்யும்… உயிருடன் ஒன்றி வாழச் செய்யும்
2.இதையெல்லாம் உங்கள் மனதில் தெளிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்ததாக மாறும்
4.வாழ்க்கையில் வரும் எத்தகைய பகைமையான உணர்வுகளும் உங்களைச் சாடாது
5.பகைமை உணர்வு என்று தாக்கும் உணர்வை உங்களால் அறியவும் முடியும்
6.பகைமையை நீக்கும் அறிவின் வளர்ச்சியும் உங்களுக்குள் வளரும்

இதை வளரச் செய்வதற்கு நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்களிலே இதைப் பதிவாக்கும் போது…
1.என்னால் என்னை அறியச் செய்யும் சக்தியாக
2.குரு அருள் தன்மை கொண்டு நான் என்னை அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் நீங்களும் உங்களை அறியும் நிலையாக ஞானிகள் கண்ட நிலைகளை நீங்களும் அறிதல் வேண்டும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் “இன்று” தேவைப்படுகின்றது. அதை நீங்கள் பெறுவதற்குண்டான உணர்வைத்தான் இப்பொழுது இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.

நாம் பெறும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… “உணரும் (காணும்) வழி”

 

பாலிற்குள் பல சத்துள்ள பொருட்களை இட்டிருந்தாலும் அதிலே அறியாது ஒரு துளி விஷம் பட்டு விட்டால் அந்தப் பால் செயலிழந்து விடுகிறது அதைக் குடிப்போரையும் மடியச் செய்து விடுகின்றது.

இது போன்று தான் நாம் நல்ல பண்புகளுடன் இருந்தாலும் சந்தர்ப்பத்தில் சில கடுமையான தீமைகளைச் சந்திக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் எல்லாம் நம் நல்ல குணங்கள் கெட்டுவிடுகிறது.

அதை எப்படி மாற்றுவது…?

மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை எல்லாம் வென்றவர்கள்… நஞ்சினை ஒளியாக மாற்றியவர்கள் அருள் மகரிஷிகள்.

அவர்கள் உணர்வுகளை நமக்குள் இணைத்தால்…
1.அறிவின் ஞானமாக மனித வாழ்க்கையில் இருளை வென்றிடும் உணர்வும்
2.மெய் ஞானிகளுடன் ஒன்றிடும் வலிமையும் நமக்குக் கிடைக்கின்றது.
3.அதைப் பெறச் செய்வதற்கே யாம் (ஞானகுரு) இதை உபதேசிப்பது

ஆகவே… உங்களை மனிதனாக உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட இந்த மனித உடலைக் காத்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள்.

இந்த உடல் உங்களுடையது அல்ல…! உயிரால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல். தன்னை யார்…? என்று அறிந்து தனக்குள் அறியாது வரும் தீமைகளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.

தீமைகள் அகற்றும் போது நம்மை இயக்கிய… நம்மை உருவாக்கிய… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக என்றும் நிலைத்திருந்து பிறவியில்லா நிலை அடையலாம்.

சங்கடங்களோ சலிப்போ மற்ற நிலைகளோ வரப்படும் பொழுது ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணை நோக்கி ஏக்க உணர்வைச் செலுத்துங்கள்.
2.தலை நிமிர்ந்து (இலேசாக) உயர்வாக நினைவைச் செலுத்துங்கள்
3.இப்போது உங்கள் ஆன்மாவைக் கடந்து இந்த உணர்வுகள் செல்கின்றது

அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது
1.நீரிலே கல்லைப் போட்டால் எப்படி அதற்குள் அலை அலையாக மாறுகின்றதோ இதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் அலைகள் உங்களுக்குள் (அலை அலையாக) வருவதை “அந்த ஒளிக் கதிர்களை” உங்களால் உணர அல்லது காண முடியும்.

உங்கள் ஆன்மாவில் பட்ட தீமைகளை இது அகற்றும்… உங்கள் உடலுக்குள் ஊடுருவி அதனின் ஆற்றல் பெருகும்.

இருந்தாலும்… அதிகமான காட்சிகளைக் கொடுத்து விட்டால் அதைப் பார்த்துப் பயப்படுவோர் நிறைய உண்டு.
1.திடீரென்று இந்த மாதிரித் தெரிந்தால் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ…! என்று எண்ணிவிடுவார்கள்
2.கிடைத்ததைப் பற்றி சந்தோஷப்பட்டு மீண்டும் அந்த சக்தியை எண்ணிப் பெறுவோர் “ஒரு சிலரே” உள்ளார்கள்.
3.ஆனால் “பலர்” “இப்படி எல்லாம் தெரிகின்றதே… இது ரைட்டா… தப்பா…?” என்று இந்தக் கணக்குகளைத்தான் போட ஆரம்பித்து விடுகின்றார்கள்
4.இதனால் ஏதாவது நல்லதாகுமா அல்லது கெட்டதாகுமா…? என்று கிடைத்ததையும் இழக்கும் நிலை தான் இருக்கின்றது.

இந்த மனிதனுடைய வாழ்க்கை அவ்வாறு தான் உள்ளது.

ஆனால் மந்திரஜாலங்களையோ அல்லது ஆவிகளை வைத்து அமானுஷ்யமான விசித்திரங்களைக் காட்டினால் அதைக் கண்டு ஆசைப்படுகின்றோம்… அதைப் பெருமையாகவும் பேசுகின்றோம்.

ஆனால் அத்தகைய மந்திர ஒலிகளைப் பதிவாக்கினால்… பின் இறந்தால் நம் உயிரான்மா அவர்கள் கையிலே தான் சிக்கும்… அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானம் பெறுவோம்
2.அதை நமக்குள் வலுவான நிலைகள் கொண்டு வளர்ப்போம்
3.மெய் ஞானிகள் கண்ட பெருண்மைகளை நாமும் கண்டுணரும் சக்தி பெறுவோம்.

முடியாதது என்று எதுவுமில்லை…!

 

ஒரு சிறு தீப்பொறி காற்றலையில் அதன் நிலைக்குகந்த பொருளின் மீது படும் பொழுது “தீ..” பற்றிக் கொள்கின்றது.

அதன் தன்மைக்குகந்த பொருள்கள் எல்லாவற்றையும் எரித்து அதன் தன்மைக்குகந்த எரிபொருள் இருக்கும் வரை எரிந்து விட்டு… அது தீர்ந்தவுடன் தன் நிலையில் சாம்பலாகிப் பூத்துவிடுகின்றது.

இவ் எரியும் நெருப்பை நம்மால் அணைக்க முடிகிறதா..?

நெருப்பிற்கு மேல் சக்தி கொண்ட நீரை அதன் மேல் பாய்ச்சித் தான் அதை அணைக்க முடியும்.

அதைப் போல்…
1.தீய சக்தியான இக்கடும் எண்ணக் கலவையின் இன்றைய மனித ஆத்மாக்கள் வாழும் நிலையில்
2.நம் ஜெப நிலைக்குகந்த ஒளி அலைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்றால்
3.இந்த உலக மாயை எண்ணத்தினால் வாழும் நமக்கு அந்த மாமகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகளை எடுத்தால் தான்
4.உலக ஞானத்தை நாம் பெற முடியும்.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…!

பக்தி கொண்டு வணங்கிப் பிறரின் உபதேசத்தினால் தான் நம் ஞானம் வளருமா…? ஆதி சக்தியின் சக்திக் குழந்தையான நம் சக்தியை… பிறரை வணங்கி நாம் ஏன் ஏற்றம் பெறவேண்டும்…? நம் ஞானத்தை நாமே பெறலாகாதா…? என்ற வினா எழும்பலாம்.

அந்த மாமகரிஷிகள் பெற்ற அந்த உன்னத சக்தியின் ஒளி அலையின் சக்தியை நாம் பெற்றால் நாம் அடையக்கூடிய ஞான வழிக்குச் சில வழி முறைப் பாடங்களை “அவர்களின் துணையுடன்” நாம் பெற்றுச் செல்ல முடியும்.

புராணக் கதைகளில் கிருஷ்ணாவதாரத்திலும் இராமாவதாரத்திலும் சில நிலைகளில் சில நிலைகளைக் கதை ரூபமாகப் புரியாதவண்ணம் உணர்த்தியிருக்கின்றார்கள்.

கிருஷ்ணர் போர்க்களம் சென்றவுடன் அவரின் மேலிருந்து “ஒளிகள் பாய்ந்தவுடன்…” அனைத்து எதிரிப்படைகளும் நின்றதாக உணர்த்தியிருக்கின்றார்கள்.

இந்நிலை சாத்தியப்படுமா…? ஆண்டவனே வந்து அவதரித்தால் இந்நிலை நடக்கும். கிருஷ்ணர் வாயைத் திறந்து காட்டியவுடன் ஈரேழு உலகமும் கண்டதாக வர்ணிப்புக் கதையும் உண்டு,

கதை அல்ல…! காவியம் தான் என்றாலும்…
1அந்நிலையின் சாத்தியக் கூற்றை ஒவ்வொரு ஆத்மாவினாலும் செய்து காட்டிட முடியும்… அதற்குகந்த ஞானம் பெற்றால்…!
2.முடியாத நிலை என்ற சொல்லுக்கே அர்த்தமற்ற குணத்தைக் காட்டலாம்.

பக்குவ ஞானம் பெற்று… பக்குவமான ஜெபத்தைக் கொண்டு… முதலில் அந்நிலைக்குச் சென்ற மாமகரிஷிகளின் துணையுடன் இந்த உலக நிலையிலே எந்தச் செயலையும் நடத்திடவும்.. நிறுத்திடவும்… நம் ஞானத்தால் முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் தகுதியாக அதைத் தாங்கும் ஆற்றலைப் பெற வேண்டும்

 

காலை துருவ தியானத்தின் மூலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடல் முழுவதும் படரச் செய்து நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களில் இந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அப்படிப் பெருக்கிக் கொண்டால்… விண்ணிலே பரவிக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெறும் தகுதியும்… இந்த மனித வாழ்க்கையில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியும் பெறுகின்றோம்.

1.உங்கள் நினைவினை விண்ணிலே செலுத்தும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் “கதிர்பொறிகளை” உங்கள் உடலுக்குள் பரவச் செய்து
3.உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அதைப் பெறும்படி செய்வதுதான் குரு காட்டிய அருள் வழி.
4.துருவ தியான நேரங்களில் உங்களுக்குள் ஒரு புது உணர்வு பரவும்.
5.உங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஒளிக் கதிர்கள் அலை அலையாகச் சுழன்று கொண்டிருப்பதையும் உங்களால் காண முடியும்.

எவர் எவர் இதைப் பெறுகின்றனரோ அவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் அறியாது சேரும் தீமைகளை அகற்றி ஆன்மாவைத் தூய்மையாக்கிடும் சக்தியாக வளரும்.

நீங்கள் சுவாசிக்கும் அந்த உணர்வுகள் தெளிந்த மனதுடன் வாழ்ந்திடச் செய்யும். வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் நுகர்ந்தறியும் உணர்வுக்குள் தீமைகளைப் பிளந்து தீமையற்ற உணர்வை அறியும் ஆற்றலாக உங்கள் நினைவுகள் வளரும். அதே சமயத்தில்
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு நொடியிலேயும்
2.அந்த விண்ணின் ஆற்றலை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெற்று பெரும் சக்தி பெறுவீர்கள்.

இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் மறவாது செயல்படுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை இணைத்துக் கொண்டே வந்தால்…
1.நினைவை விண்ணிலே செலுத்தி எண்ணி ஏங்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சியாகும்.
2.உங்கள் நினைவின் ஆற்றல் விண்ணுக்குச் செல்லும்.

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ இன்னல்களிளிலிருந்து விடுபடும் நிலையாக உணர்வுகள் வலுப்பெற்று வலுப் பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய உயிரால்… உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை தான் கார்த்திகேயா (ஆறாவது அறிவு) என்பது.

எதனையுமே அறிந்திடும் ஆற்றலும் தெளிந்திடும் மனமும் கொண்டவர்கள் தான் நாம். இருளைப் பிளந்து பொருளைக் காணும் நிலை பெற்றுள்ளோம்.

ஒரு தீபத்தில் ஒளியை ஏற்றினோம் என்றால் இருளை மாய்த்து விட்டுப் பொருளைக் காண முடிகின்றது. இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்கள் உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் சிறுகச் சிறுகச் சேர்க்கப்பட்டு வருகின்றது.
2.அதிகமாகச் சேர்த்தால் உங்களால் தாங்க முடியாது… உடலிலே சூடாகிவிடும்
3.அதே சமயத்தில் அதனுடைய வேகத்தடிப்புகளைத் தாங்கக்கூடிய சக்தி நம்மிடம் இல்லை.

அதைத் தாங்கக்கூடிய நிலைக்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியான நேரங்களில் உங்கள் ஈர்ப்புக்குள் சிறுகச் சிறுக அதைப் பெறக்கூடிய தகுதியை உங்கள் உடலுக்குள் பரவச் செய்து ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கச் செய்கின்றோம்.

காரணம்… எத்தனையோ விதமான குணங்களை எண்ணி எடுத்துள்ளோம். அதற்குத்தக்க அணுக்கள் விளைகின்றது.

அந்த அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கதிர்களை இணைக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக அதற்குள் விளைந்துள்ள தீமைகள் குறையும். உங்கள் நினைவின் ஆற்றல் விண் செல்லும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுவீர்கள்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின்
1.நீங்கள் நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எந்த விண்ணிலே உருப்பெற்றதோ
2.அண்டத்திலிருந்து வரும் எதனையுமே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் அது எவ்வாறு இருக்கின்றதோ
3.அதனைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு பேரின்ப பெரு வாழ்வாக வாழ்கின்றார்களோ
4.என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல முடியும்.

சக்தி இழந்த நிலையில் தான் பூமி உள்ளது

பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இந்தச் சமீப நூற்றாண்டுகளில் மனிதனால் விஞ்ஞானம் கொண்டு செயற்கை யுகத்திற்கு வழி காட்டிய நாளில் உள்ள நமக்குப் பல நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இன்றைய இயற்கைத் தன்மையின் குண அமில வர்க்கத்திலுள்ள சக்தித் தன்மையே குறைந்து விட்டது.

இது எப்படிக் குறைந்தது…?

பால்வெளி மண்டலத்தில் சுழன்று ஓடும் நம் பூமி அதில் உள்ள காற்று மண்டலத் தன்மை சக்தி குறைந்ததென்றால் அது எப்படிச் சாத்தியப்படும்…?

சூரியனிலிருந்தும் நட்சத்திர மண்டலங்களிலிருந்தும் மற்ற கோளங்களிலிருந்தும் அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்திலிருந்தும் சக்தித் தன்மை ஒவ்வொரு மண்டலங்களுக்கும் கூடிக் கொண்டுள்ளதா…?

பொது மண்டலம் பால்வெளி மண்டலம். நமக்கு ஒளி தரும் மண்டலம் சூரிய மண்டலம். சூரியனிலிருந்து
1.நம் பூமி எப்படி ஒளி பெறுகின்றது…?
2.நம் பூமியிலுள்ள உஷ்ண விகிதம் மற்ற சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட தூரங்களில் உள்ளனவா…?

நம் பூமியின் சுழற்சியினால்
1.நம் பூமி சுவாசித்து வெளிக்கக்கும் அலையின் அமிலம்
2.சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலத்துடன் மோதும் நிலை கொண்டே
3.நம் பூமிக்கு உஷ்ண விகித நிலை செயல்படுகின்றது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் ஐம்பது மைல் விகித தூர அளவில் ஒளி வட்டம் உள்ளதாக இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது. ஒளி வட்டம் உள்ளதனால் தான் நம் பூமிக்கு இந்த உஷ்ண அலை ஏற்படுகிறது.

இந்த உஷ்ண அலையான ஒளி வட்டத்திற்கு மேல் சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வழி எல்லாம் பூமியின் உஷ்ணத் தன்மையைக் காட்டிலும் அங்கே குளிர்ந்த நிலை தான் உள்ளது.

சூரியனுக்கு அருகாமையில் 200, 300 மைல்களுக்கு இப்பாலும் நம் பூமிக்குக் காற்று மண்டலம் ஒளி வட்டம் கொண்ட உஷ்ண அலைகளின் நிலையின் தன்மைக்கு அப்பாலும் பால்வெளி மண்டலத்தின் பொதுவான குளிர்ந்த நிலை தான் சூரியனுக்கும் பூமிக்கும். அதைப் போல் ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இடைப்பட்ட பால்வெளி மண்டலம் உள்ளது.

ஒவ்வொரு மண்டலத்தின் அமில குணம் தொட்டு அந்த மண்டலம் ஈர்த்து வெளிப்படுத்தும் அமிலத்துடன் அமிலம் மோதும் நிலை கொண்டே உஷ்ண அலைகளும் அதன் குளிர் நிலைகளும் செயல் கொள்கிறது.

இப்படி இயற்கையில் வளர்ந்து ஓடும் நம் பூமியின் நிலையுடன் கூடிய காற்று மண்டலத்தில்
1.காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள ஒளி வட்டத்தின் ஈர்ப்பினால்
2.காற்று மண்டலத்தில் சேமித்துள்ள இயற்கைக் குணத்தை நம்மால் மாற்றப்படுவதனால் அதனின் நிலைகள் மாறிவிட்டன.

மாறினாலும் இந்தக் காற்றில் தானே எல்லாம் கலந்திருக்கிறது என்பீர்கள். இயற்கையாக மாறும் நிலையைச் “செயற்கையுடன் பிரித்துவிடுவதனால்..” அதன் சக்தியின் வலு குறைந்து விடுகின்றது.

மலைகளிலும் மடுக்களிலும் இருந்து உற்பத்தியாகி வரும் நீரின் சுவைக்கும்
1.ஆறுகளில் நாம் சேமித்து வைத்து அதிலுள்ள மின்சாரத்தைப் பிரித்து எடுத்த பிறகு
2.அந்த நீரின் அமில குணத்தில் சில சக்திகள் குறைந்ததனால் சுவை குறைந்து விட்டது.

அதே சமயத்தில் அந்நீரினால் வளரும் பயிர்களுக்கு
1.நாம் எந்நிலையான அமிலத்தை அந்த நீரிலிருந்து பிரித்து எடுத்தோமோ
2.அதன் நிலைக்குகந்த உரங்களை இட்டால் தான் அந்தப் பயிர்கள் வளரும்.

இப்படி இயற்கையையே நாம் பல நிலைகளுக்காக மாற்றி அமைக்கும் பொழுது இந்த மண்டலத்தின் காற்று அலைகளில் உள்ள சக்தி நிலைகள் குறைந்து விட்டன. மனிதனின் எண்ண சுவாசமும் இதன் தொடர் அலையினால் மாற்றம் கொண்டு விட்டது.

இந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தி… ஞானத்தின் வழித் தொடர் பெற… நம்மையே அந்த ஞானமாக்கும் சக்தி செயலில் நம்முடைய ஜெப நிலை இருத்தல் வேண்டும்.

மின் அலையின் தொடரில் ஒளியைக் காண்கின்றோம். அதே மின் அலையினால் ஒலியைக் (வானொலி) கேட்கின்றோம். இவையும் இந்நீரிலிருந்தும் காற்றிலிருந்தும் தான் மனித விஞ்ஞானத்தினால் கண்டறியப் பெற்றோம்.

நம் சுவாசத்தில் எடுக்கும் காற்றலையின் உரு நினைவலையான எண்ணத்தை அந்த ஆண்டவன் மேல் பாய்ச்சி நாம் செயல்படுவோமேயானால்
1.நம் எண்ண நினைவலை எச்சித்தர்களின் நினைவில் பாய்ச்சப்படுகின்றதோ
2.அவர்கள் பெற்ற ஒளி அலைகளின் சக்திகள் நம் எண்ணமுடன் கலந்து
3.சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் செயல்பட்டு நம் ஞானம் வளர்ந்து
4.அதன் தொடரினால் பல சக்தி நிலைகளை இந்த உடல் என்னும் கூட்டிலேயே நாம் கூட்டிக் கொள்ள முடியும்.

அதன் வழி கொண்டு நம்மால் பல உண்மைகளை இந்த உலகம் உணரச் செய்து இன்றுள்ள இந்த உலகின் ஆன்மாக்கள் வாழும் பயம் கொண்ட செயற்கையிலிருந்து மீள வைக்க முடியும்.

இன்றைய கால நிலையில் ஆங்காங்கு நடக்கும் இயற்கை மாற்றங்களும்… விபத்துக்களும்.. போர்களும்… இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலியின் பீதியிலிருந்தும்… மனிதனால் செய்யப்பட்ட அணுகுண்டு அணுக் கதிர்வீச்சின் பயத்திலிருந்தும்…
1.மனித ஆன்மாக்களை மீட்டு அவர்களின் எண்ணத்தை மேலோங்கச் செய்தால்
2.நடக்கவிருக்கும் உலக மாற்றத்திலிருந்து மனித ஆன்மாக்களை மீளச் செய்யலாம்.

ஒன்று பலவாகி.. பல நூறாகி… நூறு பலவாகிச் செயல்படும் சக்தி அலையாக நாம் செயல்பட வேண்டிய ஞான அலையின் சக்தியை ஈர்க்கும் செயலை முறைப்படுத்திச் செயல்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான அகஸ்தியனை அவன் தாய் தந்தையர் “கடவுள் பிள்ளை” என்றே எண்ணுகின்றனர்.

ஏனென்றால் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் போனால் மற்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது. “அந்தக் குழந்தையினால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது…”

ஆனால் மிருகங்களிடமிருந்தும் நஞ்சு கொண்ட விஷ ஜெந்துக்களிலிருந்தும் தப்ப
1.முதலில் பச்சிலையைத் தான் இவர்கள் நுகர்ந்தார்கள்… பல பல மூலிகைகளைத் தான் உபயோகப்படுத்தினார்கள்.
2.அதன் வழி அகஸ்தியன் என்ற அந்தக் கருவின் தன்மை விளைந்தது.

அந்தக் குழந்தையை கையில் எடுத்துச் செல்லப்படும் போது மற்ற மிருகங்கள் அருகில் வருவதில்லை என்று கண்டுணர்ந்த பின் அவன் கடவுள் பிள்ளை என்று போற்றுகின்றனர்.

அந்தக் குறுகிய காலத்தில் அங்கே வாழும் ஒரு ஐம்பது குடும்பங்களில்… ஒரு நூறு பேர் இருக்கும் இடங்களில் அவனைப் போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

உதாரணமாக பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் துகள்களால் “மின்னல்கள்” வருகிறதென்றால் அது எல்லாம் விஷத் தன்மை கொண்டது.

1.ஆனால் அந்தக் குழந்தை அதை உற்றுப் பார்த்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும் மகிழ்வதும் போன்ற தன்மைக்கு வருகின்றது.
2.இதே போல் சூரியனையெல்லாம் கண் கூசாது உற்றுப் பர்க்கின்றான்,

இன்று நாம் தீபாவளிக் காலங்களில் மத்தாப்புக்களைக் கொளுத்தினால் அவைகளிலிருந்து பொறிகள் எப்படி வருகிறதோ அது போல் சூரியன் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் இவை வெளிப்படுத்தும் கதிர்கள் மோதி வான்வீதியில் பல வர்ணங்களில் எப்படி வருகின்றது…? என்று அவன் வேடிக்கை பார்க்கின்றான்.

சூரியனும் மற்ற கோள்களும் அதனின் உணர்வுகளின் மோதலினால் ஏற்படும் இந்த மின் பொறிகளைப் பார்த்து அவன் அறியாமலே அதைக் கண்டு சிரிக்கின்றான்.

1.அங்கே வானிலே நடக்கும் நிகழ்ச்சிகளில்
2.அதில் வரும் விஷத்தின் தன்மை அவனுக்குள் ஒடுங்கும் பொழுது
3.சாந்தமான நிலை கொண்டு அகஸ்தியன் பார்க்கின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களும் சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்ற கண்ணாடிகளில் விஷத் தன்மைகளை அடக்கும் அந்தச் சக்திகளைப் பூசி அதனைக் கலக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் பார்க்கின்றனர்.

சூரியனை நேரடியாக இவர்கள் பார்ப்பதில்லை. அந்தக் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற விஷம் இவர்களைத் தாக்குவதில்லை.

அதே போலத் தான் நட்சத்திரங்கள் பல வகைகளில் ஒன்றுக்கொன்று உராயப்படும் போது தூசிகள் வருகின்றது. அவைகள் மோதினால் மின்னல்களாக மாறுகின்றது.

அந்த மின்னல்களையும் இந்தக் கண்ணாடி வழி தான் விஞ்ஞானிகள் கண்டு அதனுடைய கலர்களையும் அதனுடைய இயக்கத் தன்மைகளையும் காணுகின்றார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனோ இத்தகைய தன்மைகளை நேரடியாக உற்றுப் பார்க்கின்றான்.
1.அவன் கருவிழி அதைப் பதிவாக்குகிறது.
2.அதிலிருந்து வெளி வரும் ஆற்றல்களை அவன் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் நுகரச் செய்கின்றது.

அப்படி அவன் நுகர்ந்த உணர்வோ உயிரான ஈஸ்வரலோகத்தில் இணைந்து
1.அந்த விஷத்தின் தன்மையை அவன் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
2.வீரிய சக்தியாக ஊட்டும் சக்திகளாக மாறுகின்றது.

இது எல்லாம் அகஸ்தியனின் சந்தர்ப்பம்…!

உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

 

1.விண்ணிலிருந்து ஒளி அலைகள் வருவதையும்
2.அந்த மகரிஷிகளுடைய ஆற்றல்கள் எப்படி வருகிறது…? என்பதையும்
3.அகஸ்தியன் உணர்வலைகள் எப்படி வருகிறது…? என்பதையும்
4.பச்சிலைகளை அவர் எப்படி நுகர்ந்தறிந்தார்…? என்பதையும்
5.அதே உணர்வின் தன்மை அவருடைய தாய் தந்தையர் எப்படி நுகர்ந்தார்கள்…? என்பதையும்
6.விஷத்தன்மை கொண்ட அணுக்கள் தங்களுக்குள் வராது எப்படிப் பாதுகாத்துக் கொண்டார்கள்…? என்பதையும்
7.அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்குக் காண்பித்துக் கொடுத்தேன் (ஞானகுரு)..

அங்கே ஒரு மருத்துவரின் தந்தைக்குத் தீராத தலைவலி நோய். அதை நீக்குவதற்கு அகஸ்தியருடைய மூலிகையை எடுக்க வேண்டும். நீ வானத்தை நோக்கி எண்ணி இந்த மாதிரி தியானம் இரு என்று அந்தப் பையனிடம் சொன்னேன்.

அகஸ்தியரின் உணர்வலைகள் வரும். அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உன் கையிலே அந்தப் பொருள் கிடைக்கும்… அதை அவருக்குக் கொடுத்துவிடு என்று சொன்னேன்.

அவ்வாறு எண்ணிய உடனே
1.பையன் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வேர் கிடைக்கின்றது
2.கிடைத்த உடனே “அதை அவர் தலைமாட்டில் வை…” என்று செயல்படுத்தினேன்.

தலைவலியைப் போக்குவதற்கு அன்றைய காலத்திலே அவர் 12 ரூபாய் மாத்திரை சாப்பிட வேண்டும். காலையில் ஒன்று சாப்பிட வேண்டும் இரவு தூங்கப் போகும் முன் ஒன்று சாப்பிட வேண்டும்.

அப்பொழுது தான் தலைவலி நீங்கும்… இல்லையென்றால் புழுவைப் போல துள்ளுவார்.

அதே சமயத்தில் அவர் கேட்டது… “என் தலைவலியைப் பார்க்கின்றாய்… நீ இத்தனை தியானம் செய்கின்றாய்… ஆனால் உன்னால் அதைப் போக்க முடியவில்லை. நீ என்னப்பா தியானம் செய்கின்றாய்…?

இதை நான் அந்தப் பையனிடம் சொல்லி
1.தியானத்தின் மூலம் நீ கேள்… அகஸ்தியன் உணர்வுகள் குவியும்
2.அகஸ்தியன் உபயோகப்படுத்திய அந்த வேர்கள் கிடைக்கும் என்றேன்.

காரணம்… அன்று அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது அவருடைய தாயார் பல தாவர மூலிகைகளைத் தனக்குள் மூலமாகப் பூசி… பல தீமையான மிருகங்களிடம் இருந்து அந்த விஷத் தன்மையான நிலைகளிலிருந்து துயரப்படாதபடி மீட்டிய அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் உண்டு.

அது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள்ளும் பதிந்தது அவன் பிறந்த பின் இந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை நாடாத நிலைகள் கொண்டு விண்ணை உற்று நோக்கினாலும் நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வின் தன்மையைப் பக்குவமாகப் பெறும்படி செய்தது. ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உலக அனுபவம் பெறுவதற்காக அந்த இளம் வயது பையன்… கலக்கமற்ற நிலைகள் அவனுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்தியது.

தகப்பனாருக்கு அந்த வேரைக் கொடுத்தபின் தலைவலி அகன்று விட்டது. மருந்து சாப்பிட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாதது இந்த வேரைத் தலைமாட்டில் வைத்ததும் முழுமையாக நீங்கியது.

அப்பொழுது அவர் “உங்கள் குருநாதர் நல்ல குருநாதர்…” என்று போற்றுகின்றார். ஆனால் அதற்குப்பின் அவர் இங்கு தியானத்திற்கு வரவில்லை.

இப்படி நிகழ்ச்சி ஆனபின் ஒவ்வொருவராக வந்து இந்தப் பையனிடம் கேட்க ஆரம்பிக்கின்றார்
1.என் உடலில் இருக்கக்கூடிய இந்த நோய்க்கு ஒரு பச்சிலை வேண்டும்
2.எனக்குக் குழந்தை வரம் வேண்டும் அதுக்கு ஏதாவது கேட்டுச் சொல்லுங்கள் என்று
3.இந்த மாதிரி பல நோய்களுக்கும் பல நிலைகளுக்கும் பச்சிலைகள் அங்கே வந்து கொண்டே இருந்தது.

தியானத்தில் அமர்ந்து பச்சிலை கிடைத்த பின்… எல்லோரும் அவனிடம் பச்சிலையைக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆக
1.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறுவதற்கு இதை எல்லாம் அனுபவப்பூர்வமாக யாம் காட்டினாலும்
2.அந்த பிஞ்சு உள்ளமாக இருக்கக்கூடிய அந்தப் பையனுக்கு தெரிந்தாலும்
3.அடுத்து அவன் அவனுடைய உணர்வுக்குத் தக்கவாறு வேறு நிலைகளுக்கு மாற்ற ஆரம்பித்து விட்டான்.

நான் அங்கே போக வேண்டும்… இங்கே போக வேண்டும்… “எனக்குப் பணம் வேண்டும்” என்று கேட்க ஆரம்பித்து விட்டான்.

இவைகள் எல்லாம் உண்மையின் உணர்வின் நிலைகளைத் தெரியச் செய்தாலும்… பெரியவர்களுக்கு இதை தெரியச் செய்தாலும்…
1.அந்த ஆசையிலே தான் மூழ்கி விடுகின்றார்கள்.
2.மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற குரு காட்டக்கூடிய நிலைகள் அங்கே இல்லை.

பல வருடங்கள் யாம் பெற்ற சக்திகளை “அனுபவபூர்வமாக” மக்களுக்கு இது கிடைக்கச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தினாலும்… அவர்களால் அதை நல்வழிக்குக் கொண்டு செலுத்த முடியவில்லை.

தெய்வ குண அமிலத்தைப் பெற வேண்டும்

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது தாவர வர்க்கங்கள்.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம். வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!” சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”

இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று பார்க்கின்றோம்… விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரைத் தயார் செய்து கொண்ட பின் பூமியிலிருந்து வரும் எதிர் அலைகள் அந்த எக்கோ (ECHO) வருவதை அளந்தறிகின்றனர்.

கம்ப்யூட்டர் சாதனத்தில் நாடாக்களில் இந்த விஷமான உணர்வின் (கெமிக்கல்) ஓலி அலைகளைப் பதிவாக்கி வைத்து… அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகள் (PROBE) பூமியை உற்று நோக்கிக் காட்டப்படும் பொழுது… பூமிக்குள் இருக்கும் நிலைகளைக் காட்டுகின்றது.

அதாவது…
1.இவர்கள் பாய்ச்சும் உணர்வின் தன்மை அந்த எலக்ட்ரிக்கின் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
2.அதன் நிலைகளில் அந்த மணத்தையும் உணர்ச்சியின் வேகங்களையும் கண்டறிந்து நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த மிருகங்களின் உடல்கள் மண்ணுடன் மண்ணாக மறைந்திருக்கும் நிலைகளையும்… பாறைகளாகக் கூட ஆன நிலைகளையும் கண்டறிந்து… அங்கே தேடிச் சென்று குறைந்தது 100 அடிக்குக் கீழ் அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தையே கண்டறிகின்றனர்.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் இதை கம்ப்யூட்டரில் இணைத்து அதில் வரும் அலைகளை எடுத்து
1.அதனுடைய தசைகளின் அமைப்பையும் அதன் உணர்ச்சியின் செயலாக்கங்களையும்
2.வாழும் போது அந்த மிருகம் எதை எல்லாம் உணவாக உட்கொண்டது என்றும்
3.உணர்வின் அதிர்வுகளைக் கண்டு அந்த மிருகத்தின் உருவத்தையே கம்ப்யூட்டர் காட்டுகின்றது.
4.விஞ்ஞான உலகில் இதைப் பார்க்கின்றோம்… விஞ்ஞானம் இன்று அதை நிரூபிக்கின்றது.

முந்தைய காலங்களில் எல்லாம் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கைரேகை பட்டால் அதை வைத்துத்தான் பார்ப்பார்கள். ஓரே கைரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு ஒத்துப் பார்த்து “இவன் தான்…” என்று அது கண்டுணர்ந்தார்.

இப்பொழுது அதுவெல்லாம் இல்லை…! எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஓரு கைரேகை பட்டால் அவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது என்று அதை வைத்துக் கம்ப்யூட்டரில் அந்த அதிர்வினைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர்.

1.அப்பொழுது இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் மோதப்படும் போது
2.அந்த மனிதன் எப்படிப்பட்ட ரூபம் உள்ளவன்…?
3.அவனுடைய குணங்கள் என்ன…? எப்படி இருக்கின்றான்..? என்று அவனின் ரூபத்தையே காட்டுகின்றது கம்ப்யூட்டர்.

இப்படி எல்லாம் நுண்ணிய நிலையில் விஞ்ஞான அறிவு இன்று காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம்…? என்றால் இன்னும் அறியாமையில் தான் வாழுகின்றோம்…!

1.மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வு தான் வருகின்றதே தவிர
2.மனிதனைக் காக்க வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இம்மியளவும் வரவில்லை…
3.இயந்திரத்தின் துணை கொண்டு எல்லாமே செயல்பட்டாலும் அந்த இயந்திரம் கூட ஒன்றைக் கட்டுப்படுத்துகின்றது (CONTROL)
4.ஆனால் மனிதன் தன் மனதைக் கட்டுப்பபடுத்த முடியாதபடி
5.பிறரின் உணர்ச்சியின் தன்மை கொண்டு தவறுகள் செய்வது… கொலைகள் செய்வது… தன் இச்சைக்குச் செயல்படுத்துவது
6.தான் இன்பத்தைப் பெறுவதற்காக மற்றவருக்குத் துன்பத்தை ஊட்டுவது என்று
7.இது போன்ற நிலையில்தான் இந்த உலகம் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளுவதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் யாம் சொல்வது சாதாரணமானது அல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால் அது உங்களைத் தெளிவுபடுத்தும் சக்தியாக வரும்.

இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

 

இன்று நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்… வாகனம் ஒன்று வேகமாக வருகின்றது…! என்று பார்க்கின்றோம். யார் மீதாவது மோதி விட்டால் அவர்கள் அவதிப்படுவார்களே என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அத்தகைய எண்ணங்கள் தோன்றும் பொழுது அந்த வாகனத்தின் வேக உணர்வைக் காணும் பொழுது மனது “பட…பட…” என்று துடிக்கின்றது. பயத்தினால் துடிக்கப்படும் பொழுது அச்சமான உணர்வலைகள் பெருகி விடுகின்றது.
1.பய உணர்வு பெருகினால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
2.வேதனையாகி… இனி என்ன ஆகும்…? என்று மன பயம் தூண்டப்படுகின்றது.

வேதனை என்பதே நஞ்சு. வேதனை கலக்கப்படும் பொழுது எதையாவது ஒரு பொருளை பார்க்கிறோம் என்றால்… அந்தப் பொருள் கீழே விழுந்து விடுமா…? என்ற பயம் வருகின்றது.

அந்த பயத்துடன் எண்ணிவிட்டால்
1.பார்த்த உடனே அந்தப் பொருள் கண்டிப்பாகக் கீழே விழுந்து விடும்.
2.அதே சமயத்தில் மன உறுதி கொண்டு அதை மாற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உடனே அது வரும்.

ஆனால் நாம் கீழே விழுந்து விடும் என்று எண்ணுவோம். அதை (எண்ணத்தை) எடுத்து மாற்றி வைக்க மனம் வராது.

ஆக… இந்த உணர்வுகள் இத்தகைய நிலையில் கொண்டு அதுவே எண்ணத்தில் இருக்கப்படும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும் எதிர்வரும் உணர்வு மோதப்படும் பொழுது
2.காற்றலை போல வந்து அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள் “கொஞ்சம் போல இருப்பதை” இதில் உள்ள காந்தப்புலன் எழுத்து டப்… என்று கீழே விழுகச் செய்துவிடும்.

இதே போல ஒரு மனிதனுக்கு உடலில் அரிப்பாகிவிட்டால் அதை உற்றுப் பார்த்தால் உங்கள் கை அடுத்து உடலில் எங்கேயாவது ஒரு இடத்திற்குப் போய் அதைத் தேய்க்க ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும். ஏனென்றால்
1.அந்த இயற்கையின் உணர்வுகள் நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ நுகர்கின்றது
2.நுகரும் பொழுது அந்த உணர்வு நம்மை அறியாமலேயே செயல்களைச் செயல்படுத்தி விடுகிறது.

ஒருவர் தலை சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருங்கள். நம்மை அறியாமலே இந்தக் கை நம் தலையைச் சொறியும்படி செய்யும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில செயல்கள்.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நுகர்ந்தோம் என்றால் நம் நல்ல குணங்களை… அந்த வேதனை என்ற விஷம் நம்மைத் தெளிவாக்காதபடி இருளாக்கி விடுகின்றது.

அப்போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது… நல்ல பார்வைகளோ நல்ல சொல்களோ இழக்கப்படுகிறது. நல்லதைச் சொல்லத் தவறி விடுகின்றோம்.
1.ஒரு நல்லதையே எண்ணி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் முடியாது…
2.நம்மால் நல்லது சொல்ல முடியாது போய் விடுகின்றது.
3.நல்ல உணர்வின் நினைவு இல்லாது போய் விடுகின்றது…
4.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய் விடுகிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வேதனைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும் நம் உடலில் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தே ஆக வேண்டும். இவ்வாறு செய்தால் தான்
1.நம்மை அறியாமல் இயக்கச் செய்யும் பிற உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
2.நாம் அருள் வழியில் என்றுமே வாழ முடியும்.

இன்றைய உலகப் பிடியில் நம் எண்ணத்தை அடகு வைத்து விட்டால்… மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் ஆகும்

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்). இந்த உலகச் சுழற்சியில்
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கைப் பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித் தான் நம் அழகை நாம் காண வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தெளிந்த மனமும் தெளிந்திட்ட உணர்வும் கொண்டு…
1ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மாமகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வினைத் தான்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

இந்த உபதேசத்தைப் படிக்கும் போதும் அல்லது கேட்கும் போதும் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினை என்ற அருள் ஞான வித்தாக ஊன்றும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

அதனை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிட முடியும். ஏனென்றால் அருள் ஒளிச் சுடராக உங்கள் உணர்வுகளை வளர்த்துப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் நிலைக்குத் தான் இந்த உபதேசமே…!

அருள் ஞானியின் உணர்வுகளை வலுப் பெறச் செய்து அதன் துணை கொண்டு ஏங்கித் தியானித்து… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்த உணர்வின் வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்ய வேண்டும். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு தேரை இழுக்க வேண்டும் என்றால் அது கடினமானது. பலரும் சேர்ந்து அந்தத் தேரை இழுத்தால் தான் அது எல்லைக்கு வரும்.

அதைப் போன்று தான்…
1.பலரும் நாம் ஒன்று கூடி மனிதனின் கடைசி எல்லையான
2.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை நமக்குள் வலுப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்த உணர்வின் துணை கொண்டு நாம் அனைவரும் கூடி நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டல எல்லையை அடையச் செய்தல் வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்த பின்… அறிவின் தெளிவாக நம்முடன் வாழ்ந்த அந்த உணர்வின் ஒளியாக நிலைபெறச் செய்வதே… “நம் குருநாதர் காட்டிய உயிரான்மாக்களை விண் செலுத்தும் முறை…”

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அந்தந்தக் குடும்பத்தில் உள்ளோர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர்களை மேலே சொன்ன முறைப்படி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலை வரும் பொழுது அவருடைய எண்ணங்களும் அவர்களுடன் தொடர் கொள்கின்றது.

அதே சமயம் முன்னோர்கள் சப்தரிஷிகள் ஆன பின் அந்த மண்டலத்துடன் இணைந்த பின் “எண்ணும் பொழுதெல்லாம்” அங்கிருந்து எளிதில் அந்தச் சக்திகளைப் பெற முடிகின்றது.

அதன் மூலம்…
1.வாழ்க்கையில் வரும் சலிப்போ சங்கடமோ வெறுப்போ கோபமோ குரோதமோ போன்ற உணர்வுகளை அகற்றவும்
2.அறியாது உட்புகுந்து செயலாக்கும் தீமைகளை அகற்றவும்
3.தொழிலின் நிமித்தம் வரும் குறைகளை அகற்றவும்
4.சந்தர்ப்பத்தால் நம்மைப் பலவீனமடையச் செய்யும் இருளை அகற்றவும்
5.அந்த மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர நுகர… உங்கள் எண்ணங்கள் வலு பெற்று மன பலம் பெறுவீர்கள். உங்கள் தொழிலும் முன்னேற்றம் அடையும். அருள் ஒளியின் உணர்வாகக் கார்த்திகேயா என்று அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியும் பெறத் தகுதி பெறுகின்றீர்கள்.

முன்னோர்கள் முன் செல்ல அவர்களின் உணர்வை நமக்குள் பின்பற்ற இங்கே அவ்வப்போது வரும் இருளை அகற்றி உணர்வின் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
1.இதன் வழியில் தொடர்ந்து சென்றோம் என்றால்…
2.நாம் விண் செல்ல உந்து விசை தேவையில்லை.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வின் தன்மை வலுவாக்கிக் கொண்டால்
1.கடைசி எண்ணம் நமக்குள் அது தான் வரும்…
2.சப்தரிஷி மண்டலத்தை நாம் எளிதில் அடைய முடியும்.

ஆனால் முந்தி வாழ்ந்தவர்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இல்லை. அதை வளர்க்கவும் இல்லை. அந்த வலுவும் இல்லை.

இன்று உடலுடன் இருக்கும் நாம் நமக்குள் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலுப் பெறச் செய்து அந்த ஆன்மாக்களை விண்ணிலே உந்தித் தள்ளினால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியின் உணர்வாக வளர்ச்சியாகி சப்தரிஷி மண்டலங்களின் உருவாக ஆகிவிடுகிறார்கள்.

நம் வாழ்க்கையில் அறியாது சேரும் குறைகளையும் நோய்களையும் சலிப்பையும் நாம் மறக்க… அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாங்கள் பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்

 

தீமையின் உணர்வுகளைச் சமப்படுத்தி அதை ஒளியாக மாற்றும் அந்த அறிவின் ஞானமாக மாற்றிடும் நிலைகளுக்காகத் தான்… அன்று சைவ சித்தாந்தம் மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது.

மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கின்றோம். அது தனது உணர்வின் தன்மையை மூச்சலைகளாக மாற்றும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகத்துடன் உராய்ந்து
2.ஒளிக்கற்றைகளாக மின்னி வெளிச்சத்தை ஊட்டுகின்றது.

அதைப் போன்று தான் மகரிஷிகளும் விண்ணிலிருந்து வரும் உணர்வை அடக்கி ஒளியாக மின்னிக் கொண்டிருக்கின்றார்கள்… ஒளிக்கறைகளை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகள் வரும் பொழுது… அந்த இருளை மீட்டிடும் நிலையாக நாம் நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்க வேண்டும்.

அதாவது இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு உட்பொருளை நாம் அறியும் சக்தியாக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் சங்கடமும் வேதனையும் தோன்றுகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
1.அதை மாற்றியமைத்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அதனுடன் இணைத்து விட்டால்
2.தீமையின் உணர்வு தனக்குள் வராதபடி தடுத்து அதற்குள் உட்பொருளை அறியும் அறிவின் ஞானமாக நமக்குள் வளரும்.

மனிதனான பின் இதைத்தான் கார்த்திகேயா என்பது…! பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி வளர்ச்சி அடைந்த அந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றி அமைத்து அதற்குத் தக்க ரூபங்களை மாற்றி அந்த உணர்வின் எண்ணங்களால் இன்று மனிதனாக உருவாக்கி வைத்துள்ளது நமது உயிர்.

ஆகவே… எதனையும் அறிந்திடும் செயலாக்கங்கள் மனித உடலுக்குள் உண்டு. ஆறாவது அறிவைச் சீராகச் செயல்படுத்திய மனிதன் தான் விஞ்ஞானியாக ஆகின்றான்.

அதைச் சீராகச் செயல்படுத்தும் மெய் ஞானி தன் உணர்வின் தன்மை கொண்டு உடலின் மாற்றத்தை உருவாக்கி… ஒளியாக மாற்றிடும் நிலையாகப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்.

வானவியல் புவியியல்… அதாவது
1.வானிலே விளைந்த அணுக்களின் தன்மை புவியியலாக மாற்றப்படும் பொழுது தாவர இனங்களாக மாறுகின்றது
2.தாவர இனங்களாக மாற்றிய உணர்வின் தன்மையை உயிரணு நுகரப்படும் பொழுது உயிரியலாக மாறுகின்றது.

உயிரியலின் தன்மை தனக்குள் மாற்றப்படும் பொழுது
1.விண்ணுலகில் உயிரணுக்களின் மின் அணு போன்று தீமைகளை நீக்கி
2.தீமையற்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்தவர்கள் தான் மகரிஷிகள்.

மின்மினிப் பூச்சி தான் நுகரும் உணர்வின் தன்மை கொண்டு “வெளிச்சத்தை உருவாக்கி” இரை தேடிச் சென்று அந்த உணர்வினை அது வளர்க்கின்றது. அதைப் போன்று தான்
1.துருவ மகரிஷி தனக்குள் ஒளியின் சரீரமாக ஆகி வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஒளி அலைகளாக இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது… நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது.

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் உற்றுப் பார்த்து அவனுக்கு வேண்டிய உதவிகளை நாம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் படரப்படும் போது இருள் சூழ்ந்து விடுகிறது.

அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து அதை அடக்கி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மின்மினிப்பூச்சி தன் ஒளிக் கதிர்களைப் பாய்ச்சி
1.மற்ற எதிரிகளிடம் இருந்து தப்பி
2.தாவர இனங்களில் விஷத்தன்மையான அணுக்களை விலக்கிவிட்டு
3.தான் எந்த இடத்தில் உணவாகத் தேடியதோ அதைத் தெளிவாக எடுத்து அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக விளையும்.

இதைப் போன்று தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக “ஒளியின் நிலைகளாக ஜொலித்துக் கொண்டு” இந்தப் பிரபஞ்சத்திற்குள் வருவது அனைத்தையுமே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளார்.

அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளை சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து பரவச் செய்கின்றது.
1.அதை யாரெல்லாம் உற்று நோக்குகின்றார்களோ…
2.அதைப் பெற வேண்டும் என்று பதிவு செய்து அந்த ஆற்றலைப் பருக எண்ணுகின்றார்களோ…
3.அவர்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.

எத்தகைய வேதனையோ அல்லது நஞ்சான உணர்வுகளோ வந்தாலும்… அதனால் அவதிப்படுவோருக்கு நாம் உதவி செய்தாலும்… அந்த உணர்வினைத் தனக்குள் கவராது “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் இணைக்கப்படும் பொழுது” இருளை நீக்கி… தனக்குள் பொருள் காணும் நிலைகளுக்கு “அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சமப்படுத்தும் எண்ண வலிமையை உருவாக்கும்…!”

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளை நாம் நுகர்தல் வேண்டும்…
2.உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வழி மாறிச் சென்ற “மெய் ஞான விழிப்பை” மீண்டும் வழிப்படுத்துகின்றோம்

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும்… சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவுபட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி… கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு “இந்நிலை பெற… மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும்…?” என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர… போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்முடைய மேலதிகாரி வேலைக்கு வரும் நேரத்தில்… அவர் குடும்பத்திலேயோ அல்லது வரும் பாதையிலேயோ அவருடைய சந்தர்ப்பம்… தவறான செயல்களை உற்றுப் பார்த்து விட்டால் அந்த உணர்வுகளை அவர் நுகர்கின்றார். அதனால் அவருக்குள் வெறுப்படையும் உணர்வுகள் வந்து விடுகின்றது.

அந்த வெறுப்பான உணர்வுடன் தொழிற்சாலைக்குள் வந்தால் அந்த வெறுப்பான உணர்வு கொண்டே அவர் பார்வைகள் வரும்.

1.இங்கே தொழில் செய்வோர் சீராகச் செய்தாலும்
2.அவருடைய உணர்வுகள் அந்த வெறுப்படையும் உணர்வுடன் இவர்களை உற்றுப் பார்க்கும் பொழுது
3.இவர்கள் செயலைக் கண்டு குறை கூறும் உணர்வுகளாக… அந்த உணர்ச்சிகளை அங்கே அவருக்குள் தூண்டும்.

அவர்கள் நல்லதைச் செய்தாலும் அவர் எடுத்துக் கொண்ட உணர்வால் அவர்களையும் வெறுக்கும் உணர்வைத்தான் உருவாக்கும். அவ்வாறு உருவாக்கி விட்டால் அந்த மேலதிகாரியின் சொல்லும் கடுமையாகும். (இதை எல்லாம் கண்கூடாகப் பார்க்கலாம்…!)

அப்படிப்பட்ட வெறுக்கும் உணர்வுடன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் சொல் (கடுமையான) நமக்குள் பதிவாகி விட்டால் அவர் மீது வெறுப்படையும் சக்தியும்… அதே நினைவும் நமக்குள் வருகின்றது.
1.அவரைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பும்
2.அவர் நம்மைப் பார்க்கும் பொழுது அவருக்கும் வெறுப்பு வருகின்றது.

ஆக… ஒரு தொழிற்சாலையில் ஒரு முறை இப்படித் தவறு என்ற உணர்வுகள் பதிவாகி விட்டால் இது வழி தொடர்ந்து இருவருடைய உணர்வுகளும் வெறுப்படையும் அணுக்கள் விளைந்து அவரவர்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களை வளரவிடாது தடுக்கும் நிலையே வருகின்றது.

1.இத்தகைய நிலைகள நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
2.தொழிற்சாலைக்குள் வந்தபின் மன நோய் போன்று உருப் பெறுகின்றது
3.சிந்தனை இழக்கச் செய்கின்றது… செயல்களைச் சீராக இயக்க முடியாத நிலைகள் இருவருக்குமே வருகின்றது.

இதைப் போன்ற உணர்வுகள் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகளைத் தடுக்க வேண்டுமென்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரின் பால் நினைவைச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதற்கு அடுத்து…
1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்களைப் பார்ப்போருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும்
3.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெறவேண்டும்
4.எங்கள் சொல் அனைவருக்கும் நன்மை பயக்க வேண்டும் என்று நமக்குள் வலுப்படுத்த வேண்டும்.

மேலதிகாரியை நினைக்க வேண்டியதில்லை…! உங்கள் உணர்வுகள் இவ்வாறு தான் வர வேண்டும் என்று எண்ணங்களைச் செலுத்திவிடுங்கள்.

ஏனென்றால் இந்த உணர்வின் வலு நமக்குள் ஏற்பட்டால்…
1.அவர் செய்த தீமையின் உணர்வுகளால் நமக்குள் விளைந்த அணுக்களுக்கு உணவு கிடைக்காது தடைப்படும்
2.அல்லது முதலில் பார்த்தபின் கருவின் தன்மை (வெறுப்பான அணு) அடைந்திருந்தால் அது மீண்டும் வளராது தடையாகிவிடும்.

விவசாயம் செய்கிறோம் என்றால் நிலத்தின் மேலே விதைகளைத் தூவும் பொழுது மண்ணுக்குள் பதிந்தால் அந்த விதை முளைத்து விடும் மண்ணை விட்டு வெளிப்பட்டால் அந்த வித்து முளைப்பதில்லை. ஆனால் அதை நாம் எல்லாச் சமயங்களில் கவனிப்பதும் இல்லை.

இதைப் போன்று தான்… ஒருவர் சொல்லும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… அந்தப் பதிவின் தன்மையை நமக்குள் மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால் அவர் செய்த தீமையின் உணர்வுகள் நமக்குள் நிச்சயம் வளரத் தொடங்கும்.

ஆனால் அது வளராது தடுக்க வேண்டுமென்றால்…
1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்
4.என் மேலதிகாரி என்னைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற உணர்வினை நாம் செலுத்தி விட்டால்
5.நமக்குள் இருக்கும் அந்த வெறுப்பின் உணர்வால் வளர்ந்த அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது அது நசிந்துவிடும்.

ஒரு வித்திற்கு நாம் மீண்டும் மீண்டும் நீரை ஊற்றும் பொழுது தான் அது வளர்ச்சி அடைகின்றது. நீரை ஊற்றாது விட்டுவிட்டால் அதனின் வளர்ச்சி தடைப்படும்.

அதே போல் அந்த மேலதிகாரிக்கு நல்ல எண்ணங்களும் நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்… அவர் குடும்பம் நலம் பெற வேண்டும்… அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்…! என்று இப்படி நீங்கள் எண்ணி மாற்றிவிடுங்கள்.

அவர் பெற்ற அந்தத் தீமையின் உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது தான்…
1.இருப்பினும் நமக்குள் அது வளராது தடுக்க இது உதவும்
2.மேலே சொன்ன முறைப்படி செய்தால் அவரைப் பார்க்கும் போது அந்த வெறுப்பின் தன்மை நமக்குள் வராது
3.தொழில் செய்யும் இடங்களில் பகைமைகள் நிச்சயம் மறையும்.

செய்து பாருங்கள்..!

அடுத்தவர்களைப் பற்றி நாம் அறிய முற்பட்டால் வரும் தீங்குகள்

 

என் (ஞானகுரு) கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு மற்ற மனிதர்களை உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர். உதாரணமாக ஒருவர் உடலில் வலியும் வேதனையும் இருக்கின்றது என்றால் அதற்கென்று சில முறைகளை குரு எனக்கு உணர்த்தினார்.
1.அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு அவர் உடலுக்குள் கண்களிலே பார்த்தோம் என்றால்
2.மற்ற எதிரியான அணுக்கள் அந்த உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுடன் போர் செய்து
3.அதைக் கொன்று புசிக்கும் நிலையாக வரும் பொழுது வலி ஏற்படுகின்றது என்பதை உணர முடிந்தது.

ஆரம்ப காலத்தில் நிறைய பேருக்கு இதை எல்லாம் நானும் காண்பித்தேன்.
1.உடலிலே வலி ஏற்படும் இடங்களில் என்ன நடக்கிறது…?
2.உடலுக்குள் என்னென்ன உருவாகின்றது…?
3.வயிற்றில் கேன்சரே இருந்தாலும் அந்தக் கட்டியின் நிலை எப்படி இருக்கிறது…? என்று பார்க்க வைத்தேன்.

அதாவது… நோய்க்குக் காரணமான நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று குருநாதர் எனக்குக் காட்டிய அருள் வழியில் மற்றவர்களையும் பார்க்கும்படி வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கும் பொழுது “அங்கே என்ன…? ஏது…?” என்று பிறருடைய நோய்களை அதிகமாகக் கவர்ந்து விடுகின்றார்கள். பின் அந்த நோயைத் தான் அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் ஞானத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. காண்பித்த உடனே தெரிந்ததும் பெரிய அதிசயமாக… பேராச்சரியமாகப் போய் விடுகின்றது.

உன் குடும்பத்தில் இப்படி எல்லாம் சண்டை வந்தது என்று நுகரும் ஆற்றல் வந்ததும்
1.கெட்டதை எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்
2.ஆனால் நல்லதைச் சொல்ல முடியவில்லை.

சாதாரணமாக… எந்தெந்த தெய்வங்களை நாம் வணங்கி வருகின்றோமோ இந்த உணர்வலைகள் உடலில் செல்களாக அமைகின்றது. இறந்து விட்டால் அதே பக்தி கொண்டு இன்னொருவர் ஏங்கப்படும் பொழுது இந்த ஆன்மா அங்கே சென்று காட்சியாகக் கொடுக்கும்.

தெய்வத்தின் காட்சிகள் எல்லாம் எப்படி உருவாகிறது…? என்பதை ஆரம்பத்தில் தெளிவாகக் காட்டி வந்தது தான். ஆனால் கடைசியில் என்ன செய்து விட்டார்கள்…?

எந்தெந்த ஆசை கொண்டு… தெய்வங்களை எப்படி வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கே வரும்.

எந்த தெய்வத்தை இவர் வணங்கினாரோ அதை தெய்வத்தினை வணங்கி இறந்த அந்த ஆன்மா வந்துவிடும். ஆஹா… மீனாட்சியைப் பார்த்தேன் காமாட்சியைப் பார்த்தேன். எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன் முருகனைப் பார்த்தேன்.

அவர் வழிபட்ட உணர்வுகள்… அதன் வழியில் பார்ப்பார்கள்.

ஆனால் அடுத்து… அவர் எப்படி வேதனைப்பட்டாரோ அதுவும் இவருக்குள் விளையும்… தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று. எந்தெந்த தெய்வத்தைப் எண்ணி எந்த நோயால் மடிந்தாரோ அந்த மடிந்த உணர்வின் தன்மையே இங்கே வரும் இதைப் பார்க்கலாம்… அவருக்குள் அருளாடும்.
1.முருகன் என்னைச் சோதிக்கின்றான்… காளி என்னைச் சோதிக்கின்றது… குலதெய்வமே என்னைச் சோதிக்கின்றது என்று.
2.இவைகள் எல்லாம் உடலுக்குள் அணுக்களாக விளையப்படும் பொழுது அந்த உணர்வுகள் உடலுக்குள் செல்களாக வளர்கின்றது.
3.இறந்த பின் அது அலைகளாகப் படர்கின்றது அதே எண்ணம் கொண்டு பதிந்தபின் அந்த உருவம் தெரிகின்றது

இப்படித்தான் தெய்வங்கள் காட்சியாகத் தெரிய வரும்.

ஆண்டவன் வந்து நமக்குச் செய்து தருவதல்ல… நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக… ஒரு தீமையான உணர்வை நுகரும் பொழுது அதனால் வெறுப்பும் வேதனையும் படுகின்றோம். அத்தகைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக உடலுக்குள் உருவாகாது தடைப்படுத்த வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை நம் இரத்தங்களில் கலந்து விட்டால் அதைத் தடைப்படுத்த முடியும்.
1.சமையல் செய்யும் போது பல பொருள்களைச் சேர்த்து
2.நாம் எப்படிச் சுவைமிக்கதாக அதை உருவாக்குகின்றோமோ
3.அதைப் போல அருள் உணர்வைக் கலந்து சுவையாக ஆக்க முடியும்.

ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் பலருடைய எண்ணங்களையும்… பலருடைய செயல்களையும்… பலருடைய வேதனைகளையும்… நோயாளிகளையும் மற்றவர்களையும்… சந்திக்க நேர்கின்றது. அந்த உணர்வுகளை எல்லாம் நுகர்ந்து தான் (சுவாசித்து) அறிகின்றோம்.

ஆனாலும் காரம் புளிப்பு உப்பு கசப்பு துவர்ப்பு என்று பல சுவைகளை ஒன்றாக்கிச் சுவைமிக்கதாக எப்படி உருவாக்குகின்றோமோ அதைப் போல வெறுப்படையும் நிலையோ சலிப்படையும் நிலையோ சங்கடப்படும் நிலையோ வேதனைப்படும் நிலையோ வந்தாலும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று இதனை அதிகரித்து
2.அந்த வெறுப்படையும் உணர்வுகள் வளராது தடுத்து
3.சமப்படுத்தும் உணர்வாக மகிழ்ச்சியூட்டும் உணர்வாக ஒளியான அணுவாக நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பல உயிரினங்களின் ரூபங்களை மாற்றுகின்றார்கள். உயிரினங்களின் செல்களை எடுத்து அதை மற்றொன்றுடன் இணைத்துப் புது விதமாக உருமாற்றுகின்றார்கள்.

உதாரணமாக மூன்று விதமான ஆட்டினங்களை… அந்த மூன்று விதமான உணர்வின் செல்களை எடுத்துப் புது விதமான உருவின் தன்மை கொண்ட ஒரு ஆடாக உருவாக்குகின்றார்கள்.

இதைப் போல தான் ஒவ்வொரு மனிதனின் உடலில் விளையும் தீமையின் உணர்வுகளும்… அவர்கள் சொல்லால் வெளிப்படும் அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவரின் தீமையின் தன்மைகள் நமக்குள்ளும் உருவாகின்றது.

ஆனால் மகரிஷிகளோ தீமைகளை வென்று உணர்வினை ஒளியாகப் பெற்றவர்கள்.

முதலில் சொன்ன மாதிரி… பலருடைய எண்ணங்களையும் பல பல தீமை உருவாக்கும் உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தறிந்தாலும் தீமையை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்தோம் என்றால் அதை எல்லாம் நல்லதாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஆகவே…
1.இந்த வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் தீமைகள் வராது
2.அந்த அருள் மகரிஷி உணர்வை நம் உடலில் இணைத்து இணைத்து இணைத்து
3.அந்த ஒளியின் சரீரமாக மாற்றுதல் வேண்டும்.

பல விதமான உயிரினங்கள் அது இயற்கையில் விளைந்ததை விஞ்ஞானிகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டுச் செயற்கையில் உருவாக்கச் செய்த எத்தனையோ நாய் வகைகளையும் மாடு வகைகளையும் இன்று பார்க்கின்றோம்.

நாய்களை எடுத்துக் கொண்டால் மனித உருக்கொண்ட நிலைகளாகக் கூட மாற்றுகின்றார்கள்.

மனிதனை உருவாக்கும் விந்தின் செல்களை எடுத்து மற்ற நாய்களின் செல்களுடன் சேர்த்து பல பல உணர்வுடன் இணைக்கப்படும் போது இதனின் அளவுகோல் வரப்படும் போது மனித முகத்தைப் போன்றே நாய்கள் வருகின்றது.

குரங்குகளின் அணு செல்களைப் பிரித்து எடுத்து அதை மற்ற நாய் இனங்களின் உணர்வுகளிலும் கலந்து… குரங்கு எப்படித் தன்னுடைய விடாப்பிடியாக அடம் பிடிக்கின்றதோ அது போன்ற உணர்வின் குணங்களைப் பெருக்கும் ரூபமாகவும் நாய்களை மாற்றும் தன்மையை மனிதன் செய்கின்றான் தன் ஆறாவது அறிவால்…!

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் வலுப்படுத்தி வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றான். அந்த உணர்வினை அகஸ்தியனும் அவன் மனைவியும் இருவரும் எடுத்து ஒருவருக்கொருவர் அந்த உயர்ந்த மனதைப் பெற வேண்டும் என்று இணைத்து வாழ்ந்தனர்.

இவர் கண்ட உண்மையும் அவர் கண்ட உண்மையும் அங்கே இரு மனமும் ஒன்றாகி ஒன்றின் நிலைபெறும் போது
1.கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
2.மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும் என்றும்
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்து அந்த நஞ்சினை ஒடுக்கிடும் உணர்வுகளைப் பெற்று
4.இரு உணர்வும் ஒன்றென இணைந்து உடலில் ஒளியான அணுக்களைப் பெருக்கிப் பெருக்கி
5.எதனை உற்றுப் பார்த்தனரோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்து
6.உடலை விட்டுச் சென்றபின் பூமியின் துருவப் பகுதியில் இன்றும் அவர்கள் துருவ நட்சத்திரமாக
7.நமது பூமிக்குள் வரும் நஞ்சினை ஒடுக்கி ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே வருகின்றனர்
8.அதனின்று வரும் நிலையை நாம் நுகர்ந்து பழக வேண்டும்…!

இந்த மனித வாழ்க்கையில் நஞ்சான செயல்களையும் வெறுக்கும் உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் எப்பொழுது நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை அதனுடன் இணைத்து மாற்றி அமைத்திட வேண்டும்…!

உங்களால் முடியும்… உங்களை நீங்கள் நம்புங்கள்.

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

 

சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே குடும்பத்தில் எதிர்பாராது பல நிலைகள் ஆகி அதனால் வேதனையாகும் பொழுது கோபமும் எரிச்சலும் சிறுகச் சிறுக விளைந்து… உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள்” அதிகமாக இயங்க ஆரம்பிக்கும்.
1.எந்த அளவுக்கு வேகத் துடிப்பின் உமிழ் நீர்கள் சுரக்கின்றதோ
2.அந்த வேகத் துடிப்புக்கொப்ப பித்தம் அதிகமாகும்.

ஆகாரத்தை எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் இயங்கி அதை ஜீரணிக்க செய்யும். ஆனால்
1.அதிகமான பித்தமானாலோ மந்தமாக்கிவிடும். அதே சமயத்தில் வாய் உமட்டல் வந்துவிடும்
2.பசி அதிகமாகும் ஆனால் ஆகாரம் அதிகமாக உட்கொள்ள முடியாது.

இத்தகைய உணர்வு உடல் முழுவதும் பரவி… கார உணர்ச்சிகளும் கூடி அதை இந்த பித்த சுரப்பிகள் எடுக்கப்படும் பொழுது “நமது நாடி நரம்புகள் அனைத்தும் பலவீனப்படச் செய்யும்…”

அதே சமயத்தில் எதையாவது ஒரு தொழில் செய்வோம் என்றால்
1.கடினமான சாமானைத் தூக்கினால் திடீரென்று கண் கட்டும்… கீழே விழுகச் செய்யும்.
2.அதே சமயம் உட்கார்ந்து எழுந்தாலும் கண் கட்டச் செய்யும்.

ஏனென்றால் இந்தப் பித்தத்தின் சுரப்பிகள் நமக்குள் அதிகமாகும் பொழுது… கடைசியில் இரத்தக்கொதிப்பும் பக்கவாதங்களும் வந்து விடுகிறது.

ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை உயிர் இயக்கிக் காட்டுகின்றது. நாம் எதைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் உண்மையை… “குடும்பத்திலே இப்படிச் செய்கின்றார்கள்…” என்று அந்த உணர்வினைக் கண் இழுத்துக் காட்டுகின்றது.

அந்த உணர்வினை உயிர் இயக்கிக் காட்டிப் பொருளறியச் செய்கின்றது… அறியச் செய்தாலும்… நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக ஐக்கியமாகி விடுகிறது.

இவ்வாறு உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை… இவை அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய திறன் மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு.

அதைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வந்தது போல இந்த உணர்வின் தன்மை நம்மை அறியாமலே இயக்கி வேதனை கொண்ட உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கி விடுகிறது.

வாதமோ இரத்தக் கொதிப்போ ஆகிவிட்டால் அதே சமயத்தில் பித்த சுரப்பிகள் அதிகமாகும் பொழுது பசியின் கொடுமை அதிகமாகும். வாத நோய் வந்தவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்கும் பசியின் ஏக்கம் அதிகமாகும்.

1.பசி எடுத்தவுடன்… ஆகாரம் உடனே கொடுக்கவில்லை என்றால் மிகவும் கோபம் வரும்
2.யார் அவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களை ஏச வேண்டிய நிலையில் வெறுக்கும் நிலையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

அந்த வெறுப்பான உணர்வு கொண்டு வேகமாகக் கேட்கப்படும் பொழுது அவர்கள் உணவு உடனே கொடுக்கவில்லை என்றால் அவருடைய எண்ணம்…
1.“இப்படிச் செய்கின்றார்களே…
2.நான் சம்பாரித்துக் கொடுத்தேனே…
3.தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யவில்லையே என்ற இந்த உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வுடன் ஏங்குகின்றாரோ இந்த உணர்வின் ஆற்றல் அவர் உடலுக்குள் சென்று விடுகின்றது. உடலை விட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பண்புடன் உதவி செய்திருந்தாலும்… நேரத்தில் தனக்கு உபகாரம் செய்யவில்லை என்ற இந்த உணர்வு தான் உந்தப்படுகிறது.

அந்த உணர்வின் வேகத்தில் அவர் மேல் எடுத்துக் கொண்ட வெறுப்பான உணர்வுகள்… பதிலுக்கு அவர்களும் வெறுப்பாகச் சொல்லும் பொழுது வெறுப்பான உணர்வுகளைப் பாய்ச்சி… பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பும் நம்மைப் பார்க்கும் பொழுது வெறுப்பும்… இப்படி வெறுப்புகள் தோன்றி இந்த உணர்வுகள் விளைந்து உடல் நலிவடைந்து விடுகிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா… யார் மீது வெறுப்பானதோ அவர் உடலுக்குள் தான் செல்லும்… இதே நோயின் கொடுமையை அங்கேயும் உண்டாக்கும்.

தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.

1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஒரு உணர்வின் தன்மை கொண்டு ஒரு கோளின் உணர்வை அதிகரித்து இந்த மனித உடலில் வாழ்ந்தால்
2.அந்தக் கோளுக்கு மாற்றாக நல்ல உணர்வின் தன்மையை இணைந்து வாழும் உணர்வின் கணக்கிற்கொப்ப
3.நட்சத்திரங்களின் திசை நோக்கி எந்தக் கோள்களுக்கும் சிக்காது அதனின் உணர்வின் நேர்பார்வையில்
4.சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்துடன் இணைப்பு வரும் பகுதியை இணைத்து வைத்தார்கள் கோபுரங்களில்…!

அந்த இணைப்பின் தன்மை கொண்டு… துருவ நட்சத்திரத்தின் இணைப்பும் மற்ற கோள்களின் இணைப்பும்… துருவப் பகுதியில் கவரும் அதற்கு நேராக ஆலயத்தை அமைத்து தெய்வீகப் பண்பை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று எண்ணும்படி அன்றைய ஞானியர்கள் செய்தார்கள்.

ஏனென்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பையும்…
2.மற்ற வெள்ளிக் கோளின் உணர்வுகளையும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளையும் இரண்டாகச் சேர்க்கும் நிலை வரும்போது
3.இதன் உணர்வின் ஒளிக்கற்றைகள் அது பிரிவடைந்து
4.அந்த ஆலயத்தின் அமைப்பிற்குள் சூரியனுடைய ஒளி நேர் பார்வைக்கு வரும் பொழுது அதனை மாற்றி அமைத்து
5.அது எதனைக் கவர்கிறது…? என்பதை அளவுகோலிட்டுக் கால் மாகாணி என்று முந்தைய கணக்கிடும் தன்மைகள் வந்தது.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு கால்குலேட்டர் போன்ற சாதனங்களை அமைத்து மனிதன் சிந்தித்து நுகரும் தன்மைக்கு இல்லாது கொண்டு வந்து விட்டனர்.

கால்குலேட்டர் என்ற உணர்வைப் பதிவு செய்து இதன் மேல் ஞாபகப்படுத்தும் நிலையில் அது எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் கதிர் கொண்டு ஒன்று ஒன்றுடன் மோதும் பொழுது ஒன்றின் உணர்வுகள் எப்படிக் கணக்கிடுகிறது… என்ற நிலையில் இன்று கணக்கிடுகின்றார்கள்.

இந்த உணர்வின் தன்மை சென்றவன் அதிலேதான் நாட்டம் கொண்டு செல்கின்றானே தவிர மெய் ஞானிகள் உணர்வின் நிலையும் பிரபஞ்சத்தின் உணர்வின் ஆற்றலையோ கணக்கிடும் முறைப்படுத்தி அவன் உலகப் பிரபஞ்சத்துடன் இயக்கும் நிலை காலத்தால் மறைந்து விட்டது… விஞ்ஞான அறிவு ஓங்கி விட்டது…!

நம் உயிர் எலக்ட்ரிக்… சுவாசித்ததை நம் உடலுக்குள் எலக்ட்ரானிக்காக மாற்றுகிறது. மாற்றிய உணர்வின் தன்மை கொண்டு அதை நாம் மீண்டும் எண்ணுவோம் என்றால்
1.நமது உணர்வுக்கும் நுகர்ந்த உணர்வுக்கும் எதிர்நிலை வரப்படும் பொழுது
2.அதன் உணர்வின் அறிவைப் பிரித்துக் காட்டும் நிலைகள் வருகின்றது.

அதே சமயத்தில் கம்ப்யூட்டரில் எதிர் அலைகளைப் பதிவாக்கினால் அதனை உடனே மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு வருகின்றனர்… கணக்கை மாற்றி விடுகின்றனர் (COMPUTER PROTECTION).

அதே போலத் தான் நமது உயிரின் தன்மை எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் என்ற நிலை வரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை நாம் சீராக்கி நல்லதாக மாற்றிட முடியும்.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்கள் மாற்றம் ஆகும் பொழுது அதற்குத்தக்க ஒரு நல்ல குணத்தின் உணர்வுகள் பிறிதொரு எதிர் நிலையில் இருந்து உருவாக்கப்பட்ட நிலைகளை ஒரு தெய்வத்திற்குக் காரணப் பெயராக வைத்து… அந்தத் திசையை நோக்கி நாம் எண்ணும் பொழுது… வெள்ளிக் கோளின் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகளும் இதைப் போன்ற மற்ற கோள்களின் நிலைகளை இணைந்து அந்த அந்த உணர்வின் தன்மை மூன்றும் ஒன்றாகச் சேர்க்கும் அத்தகைய நல்ல உணர்வுகளாக உருவாகிப் பரவும் போது அந்தத் திசை வழியாக நம்மை நுகரும்படி வைப்பார்கள் அந்த ஆலயத்திலே.

1.அந்த உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் திசையில் நாம் உற்று நோக்கும் பொழுது
2.அந்த உயர்ந்த குணத்தின் உணர்வுகளை நமக்குள் கிடைக்கும்படி வைத்தார்கள் ஞானிகள்.

இதுகள் எல்லாம் வானியல் சாஸ்திரம் என்ற நிலையில் கடந்த காலத்தில் இயற்கையின் உண்மைகளை அறிந்து அந்த உணர்வைத் தனக்குள் பதிவு செய்து கொண்டு மனக்கணக்காக வைத்துக் கணக்கிட்டனர்.

அந்த மனக்கணக்கு கொண்டு தெளிவாக்கி… தெளிந்த உணர்வு கொண்டு செயலாக்கி… அதன் வழி அந்த வான இயலின் உணர்வின் தன்மைக்கொப்ப ஆலயங்களையும் கோபுரங்களையும் அமைத்தனர்.
1.அவர்களை “ஸ்தபதியர்கள்…” என்று சொல்வார்கள்.
2.இப்படிக் கணக்கிட்டுச் செயல்படுத்திய உலக நிலைகளில் “பெருங்கொண்ட மெய் ஞானிகளாக” அன்று இருந்தனர்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது “வெறுமனே சொல்வதல்ல…”
1.ஓ…ம் என்பது நமது உயிர் உடலுக்குள் என்று இயங்கிக் கொண்டுள்ளது. அதற்குப் பெயர் ஓ…!
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ம்… என்று நம் உடலுடன் ஐக்கியமாகின்றது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை
1.உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட்
2.அதற்குள் இருக்கும் ஊன் ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்தக் குணங்களும் நம் உடலிலேயே இயக்கப்பட்டு அது ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருப்பது நமது உயிர். அதற்கு குருவாக இருப்பதும் நமது உயிர் தான்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும் அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி அந்த ஏக்க உணர்வு கொண்டே சொல்ல வேண்டும்.

ஒரு மைக்… நாம் பேசுவதை இழுத்துக் கவர்ந்து நாடாக்களில் பதிவாக்கப்படும் பொழுது
1.அதில் உள்ள முலாம்…
2.அதற்குள் மறைந்துள்ள காந்தம் எப்படி அது கவர்ந்து பதிவு செய்து கொள்கின்றதோ அதே போல
3.நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளிலிருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயத்தில் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அது கிளர்ந்து எழுகின்றது. அப்பொழுது காற்றிலிருந்து அந்த உணர்வுகளை உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது.

அப்படித் தனது ஆன்மாவாக ஆக வேண்டுமென்றால்…
1.நாம் எண்ணும் எண்ணம் ஊழ்வினையாகப் பதிவாக வேண்டும்
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊனாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டியது வரும்.

நாம் எண்ணிய உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசித்த உணர்வுக்கொப்ப உயிரின் தன்மை அது இயங்குகின்றது. அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

இப்பொழுது எதை உபதேசிக்கின்றேனோ… கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ்வினையாக… வித்தாகப் பதிவாகின்றது. அப்படிப் பதிவாகி மீண்டும் நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

எந்த மகரிஷிகளின் சக்திகளையோ அல்லது சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல் மிக்க உணர்வலைகளையோ…
1.குருநாதர் கூறிய அருள் வழிப்படி நான் எண்ணிச் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாக எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் நான் நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணின் ஆற்றலை எனக்குள் பெருக்கி அதைச் சுவாசித்து
4.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக வெளிப்படுத்துவதை இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால்
5.அந்த உணர்வின் சத்து ஊழ்வினையாக உங்களுக்குள்ளும் பதிவாகிறது.

அந்த ஞானிகள் மனிதர்களாக இங்கே வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குள் அறியாது வந்த தீய வினைகளை… சில தீய விளைவுகளை… அவர்கள் மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

அவர்கள் எப்படி அருள் வழியில் வாழ்ந்தார்களோ அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும் அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டுப் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்…!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அந்நிலையில் அமர்ந்துள்ள மகான்.

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி… அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்… தன் ஜீவனை அந்த சிலையின் ஜீவனாக்கி… எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…! எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவ்வுயிர்… அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் பிறகு (அடுத்த பிறவியாக) பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணத்தை எண்ணத்தின் எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து… எப்படியும் வாழ வேண்டும்…
3.ஒரு நிலையில் வாழ வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்…! என்று
4.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனாக உருப்பெற்ற நிலையில் நாம் எத்தகைய தீமைகளையும் தடுத்து நிறுத்தும் சக்தி பெற்றவர்கள் என்பதை அக்கால ஞானிகள் காட்டிய அருள் வழியில் உணர்தல் வேண்டும்.

ஏனென்றால்… இந்த உயிர் இந்த உடலை வளர்த்த பின்
1.பல கோடித் தீமைகளிலிருந்து விடுபட்டுத் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து
2.அதற்கொப்ப உறுப்புகள் உருவாகி… உணர்வுகள் உருவாகி… உணர்ச்சிகள் உருவாகி… எண்ணங்கள் உருவாகி…
3.அதன் வழி நாம் நம்மைக் காக்கும் உணர்வுகள் ஆற்றல் பெற்றது.

ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான அறிவால் நமது பிரபஞ்சத்தில் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

முந்தைய நிலைகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இயற்கையின் உணர்வை நுகர்ந்து அதன் செயலாக்கங்கள் எவ்வாறு…? என்று உணர்ந்தவர்கள். அவர்கள் தான் பெருக்கல் வாய்ப்பாடு கழித்தல் வாய்ப்பாடு எல்லாம் கொண்டு வந்தனர்.
1.அந்தப் பதிவால்… தன் நினைவு கொண்டு
2.ஒரு நொடிக்குள் கூட கணக்குப் பார்க்கும் திறன் அவர்களிடம் இருந்தது.

ஆனால் இன்று எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை கொண்டு ஒன்றை மாற்றி ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு நொடிக்குள் அதை அறிந்திடும் அறிவாகக் கம்ப்யூட்டர் என்றும் கால்குலேட்டர் என்றும் வருகின்றது.

முந்தைய கணக்கின் நிலைகளை எடுத்துக் கொண்டால் கால்… மாகாணி என்றெல்லாம் கொடுத்தார்கள் அத்தகைய மெய் ஞானிகள்
1.ஒரு கோயிலின் தன்மையையோ அல்லது ஒரு கோபுரத்தின் தன்மையையோ ஒரு கட்டிடத்தின் தன்மையோ அமைக்க வேண்டும் என்றால்
2.துரித நிலை கொண்டு அந்தக் கோபுர கட்டிட அமைப்பையும் (PLAN) அதன் உண்மையை அறிந்துணர்ந்து
3.அவருடைய மெய் ஞான அறிவு கொண்டு அழகாக வடிவமைத்து நிர்மாணித்தனர்.

வான இயல் சாஸ்திரத்தை உணர்ந்து சூரியனும் மற்ற கோள்களும் மற்ற மண்டலங்களும் எவ்வாறு வானிலே இயக்குகிறது…? என்றும் அதிலே சில கோள்களின் தீமைகள் இங்கே இவர்கள் அமைத்த அந்த ஆலயத்தில் புகாத வண்ணம் அமைத்து… உயர்ந்த குணங்களுக்குத் தக்க தெய்வ ஆலயங்களை அமைத்தனர்.

அந்த ஆலயத்தில்… நல்ல உணர்வுகளை எடுக்கும் நல்ல குணங்களின் தன்மையை தெய்வச் சிலைகளை வைத்து உருவகப்படுத்தினார்கள்
1.தீமையை நீக்கும் உணர்வு கொண்டு.. அந்த எண்ணத்துடன் நாம் அங்கே சென்றோம் என்றால்
2.தீமைகளை நுகராது அந்தத் தெய்வீக உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

அதன் மூலம் பிறிதொரு கோளின் தன்மையோ மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்களின் உணர்வுகளையோ கவராத வண்ணம் அந்தத் திசையை நோக்கி ஆலய அமைப்பை (கோபுரம்) ஏற்படுத்தினார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் இதன் மேல் படும்படி செய்து (சந்துகள் விட்டிருப்பார்கள்) உயர்ந்த உணர்வின் தன்மையை நாம் எப்படிப் பெற வேண்டும்…? என்றும் காட்டினார்கள்.

1.27 நட்சத்திரங்களின் உணர்வையும் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டு
2.அந்த ராசியின் திசை கொண்டு மற்ற மூன்றின் தன்மை எந்தெந்தக் கோள்கள் சேர்கின்றதோ
3.அதன் வழி ஒரு குணத்தின் தன்மை – இணைந்து வாழும் தன்மையாக அந்த அமைப்பின் தன்மை கொண்டு தான்
4.அன்று மாகாணி என்று வைத்து அதிலே கூட்டல் கழித்தல் என்று கணக்கின் நிலைகள் கொண்டு
5.தெளிவாக எடுத்தனர் கணக்கிட்டனர்… அதன் வழி அமைத்தனர்.

அவர்கள் ஆலயங்களில் உணர்த்தப்பட்ட உயர்ந்த சக்திகளை நாம் நுகரப்படும் பொழுது நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிட முடியும்.

ஒவ்வொரு ஆலயங்களுக்கும் இந்த எண்ணத்தின் அடிப்படையில் நீங்கள் சென்றால் அந்த ஆலய அமைப்பில் சித்தரிக்கப்படுள்ள தெய்வ குணங்களை வளர்த்துப் பகைமை உணர்வுகளை அகற்ற முடியும்.

1.மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த நிலையில்
2.மகிழ்ந்து வாழும் சக்திகளை அதன் மூலம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் பெற முடியும் என்ற
3.மெய் வழிகளை உணர்த்தினார்கள் அக்கால மெய் ஞானிகள்…!

நாம் எல்லோரும் நல்லவரே…!

 

பத்திரிக்கை வாயிலாக இன்று நாம் படிக்கப்படும் போது எங்கெங்கோ நடந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

அதில் எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால்… எங்கேயோ விபத்தானதைப் படித்தறியப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் சேர்த்து… உடனே அதிர்ச்சி… அல்லது பயம்… அல்லது வேதனை… இது போன்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி விடுகின்றது.

எதை நாம் படித்துத் தெரிந்து கொண்டோமோ அந்தச் செய்திகள் ஊழ்வினையாகப் (வித்துக்களாக) பதிவாகின்றது. அவ்வாறு படித்து நுகர்ந்து
1.எத்தனையோ பேர் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டே இருக்கின்றது.
2.அதை மீண்டும் எண்ணும் பொழுது நமக்குள் பதிவான அதே நிலைகள் அலைகளாக மீண்டும் குவித்து நம்மை உணரச் செய்கின்றது
3.சாதாரண ஆண்டென்னாவின் இயக்கம் போல (அருகிலிருப்பதை இழுத்து) அந்தந்த உணர்ச்சிகளாக இயக்கி நம்மைச் செயல்படுத்தி விடுகின்றது.
4.ஆக… எந்த வேதனையைப் பட்டோமோ அந்த வேதனைகளை விளைவிக்கும் தன்மையாக வந்து விடுகிறது.

ஆக… உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கையைப் படித்த்தாலும் நடந்த சம்பவங்களை அறிந்து நுகரப்படும் பொழுது தீய விளைவுகளாக நமக்குள் வந்து நோயாக உருவாகி விடுகின்றது.

தவறான செயல்கள் எதை எல்லாம் செய்தார்களோ… “அங்கே அடித்தான் இங்கே திருடினான் இங்கே கொலை செய்தான்…” என்று
1.தன்னைக் காத்திட இத்தகைய செயலைச் செய்தார்கள் என்று உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவான பின்
2.அதையே திரும்பத் திரும்பப் படிக்க நமக்குள் அதுவே விளைந்து
3.எந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை நம்மையும் செய்யும்படி வைத்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைத் துடைக்க வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகி அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் (ஞானகுரு) பதிவானது.

அவரை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம்… அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து அந்த உணர்வை எனக்குள் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

நீங்கள் துயரத்துடன் எம்மிடம் வரும் போது “உங்கள் துன்பம் நீங்கிப் போகும்…” என்று சொல்லால் சொல்வதை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை மீண்டும் நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்றால் அந்தத் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகளுடைய உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறும் உணர்வுகளை குருநாதர் எனக்குள் பாய்ச்சி அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக “விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…?” என்று உபதேசித்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை ஊட்டினார்.

அதனின் பக்குவம் கொண்டு நான் எடுத்துக் கொண்ட நிலையில் தான் 20 வருட காலம் அனுபவ ரீதியாக உலகைச் சுற்றி வந்தேன்.
1.மூன்று லட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவருடைய உணர்வுகளை அது எவ்வாறு இயங்குகின்றது…? என்றும்
2.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் எதன் வழி எப்படி அவதிப்படுகிறார்கள்…? என்ற நிலையினை உணரும்படி செய்தார்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் விஞ்ஞானிகள் எப்படி பிறரை (ஆன்மாக்களை) நஞ்சு கொண்ட நிலைகள் கொண்டு இயக்குகின்றார்கள்…? அந்த ஆன்மாக்கள் எப்படிப் பதை பதைக்கின்றது…!

எதை அழித்திடும் உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தைக் கண்டு கொண்டானோ அதனால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் (விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள்) இறந்து… அதன் வழியில் விஞ்ஞான அறிவில் இவன் முன்னேறினாலும்
1.துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்… நஞ்சு கொண்ட ஆன்மாக்களாக எவ்வாறு உலகில் படர்ந்து கொண்டிருக்கிறது…? என்பதை
2.அனுபவ ரீதியிலே தெரிந்து கொள்வதற்காக குருநாதர் உலகம் முழுவதும் சுற்றும்படி சொன்னார்.

அதிலே பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். இதை நீங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம்
1.அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
அரச மரத்தைச் சுற்றினால் அருள் பெற்றிடுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!

புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து..
2.அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
3.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
4.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
5.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.

இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம். அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எத்தகைய தீமை வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினைக் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுத்துக் கொண்டால்
1.அந்த அருள் ஒளி இங்கே இருளை மாய்க்கும்
2.உணர்வின் தன்மை இரண்டற இணைக்கும்… அருள் ஒளி பெருகும்.

திருமணம் ஆகும் போது மணமக்களை ஆசீர்வதிக்க வருபவர்கள் எப்படி வாழ்த்த வேண்டும்…?

அதாவது திருமணத்திற்கு வரும் அனைவரும் அந்த ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணித் தியானித்து அந்த உணர்வினைப் பெற்ற பின் தன் பார்வையும் செயலும் கொண்டு மணமக்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போல வாழ வேண்டும் என்று இந்த உணர்வின் ஒலிகளை எழுப்ப வேண்டும்.

1.திருமணமாகும் பொழுது எல்லோரும் சேர்ந்து மணமக்களுக்கு இத்தகைய வாழ்த்தினைப் பாய்ச்சப்படும் போது
2.திருமண நாளை அவர்கள் எண்ணும் பொழுதெல்லாம்
3.அவர்கள் வாழ்க்கையில் அது தீமையை அகற்றும் நாளாக வருகின்றது.

ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் மனவி இருவரும் எண்ணும் போது இரு மனமும் ஒன்றுகின்றது.

இருள் சூழாத நிலைகளும் பேரருளை இருவருக்குள்ளும் உருவாக்கும் கருவின் தன்மையும் உருவாகின்றது.

வெளியில் சென்று விட்டு வரும் கணவன்… எத்தகைய தீமைகளைப் பார்த்து அல்லது நுகர்ந்து வந்தாலும்… அந்தத் தீமையின் சொல்லை மனைவியும் கேட்க நேர்ந்தாலும்…
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டுமென்று
2.இருவரும் ஒன்றாக எண்ணப்படும் பொழுது தீமைகள் வளரவிடாது தடுக்கும்…!

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இன்று ஜாதகம் பார்ப்போரும் சரி… கேட்போரும் சரி… எந்த நிலையில் இருக்கின்றனர்…?

குடும்பத்திலோ தொழிலோ கஷ்டம் என்று அங்கே சென்றால் காசுக்காக வேண்டி தோஷங்கள் இருக்கிறது… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கிறது… சனி இங்கே பார்க்கின்றது…! என்று சொல்லி அதற்குப் பரிகாரமாக இன்னென்ன உபசாந்திகளையும் சாங்கியங்களையும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.

கணித்துச் சொல்லும் போழுது… கூட கொஞ்சம் இரண்டு எட்டு வைத்து அதை கூட்டிச் சொல்லி இருப்பான். ஜாதகம் தெரிந்தவர்களே வந்தாலும் கூட…
1.சனி வக்கிரமத்தில் இருக்கின்றது
2.இதனுடன் சேர்க்கப்படும் பொழுது இன்னென்ன முறிவுகளைச் செய்ய வேண்டும் என்று சொன்னால்
3.ஆமாம்… ஆமாம்… செய்தால்தான் சரியாக வரும்… நன்றாக இருக்கும்…! என்பார்கள்.

இவரும் ஜாதகம் பார்ப்பவர் அவரும் ஜாதகம் பார்ப்பவர்…! இவன் சொன்ன தவறை மறைப்பதற்கு காசு கொடுத்து மறைக்கச் செய்கின்றான்.

ஆனாலும் ஜாதகக்காரன் சொன்ன உணர்வு… இவருக்குள் பதிந்த அந்த விஷத்தின் தன்மை கொண்டு
1.கஷ்டம் என்று வரும் பொழுது… “அன்றைக்கு அந்த ஜோசியக்காரன் சொன்னான் அல்லவா…” என்ற எண்ணம் தான் வரும்
2.அந்த ஜாதகம் சொன்னபடிதான் நடக்கின்றது… அந்த விதிப்படிதானே நடக்கும்…! என்று சொல்வார்கள்.

விதிப்படிதான் நடக்கும் சென்று சொன்னாலும் ஏன் இந்த விதியை மதி கொண்டு வெல்லும் சக்தியை நாம் ஏன் பெற முடியாது…? என்று சிந்திப்பதில்லை.

பிறந்ததிலிருந்து ஜாதகத்தைப் பார்த்து நல்ல காலம் வரும் கெட்ட நேரம் வரும் என்று எல்லாம் செய்கிறார்கள். தொழிலையும் நல்ல நேரம் பார்த்துதான் வைக்கின்றார்கள்.
ஆனால் நஷ்டம் ஆகிவிட்டால்…
1.விதி…! இப்படி நடக்கின்றது என்ன செய்வது…? என்று
2.இதை அவர்கள் சமாதானப்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஜாதகம் ஜோதிடத்துடன் பார்த்து எல்லாம் செய்து… அடுத்து கோவிலுக்குச் சென்று அங்கே நஷ்டமானதையும் குடும்பத்தையும் எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது
1.என்னமோ தெய்வம் என்னைக் கைவிட்டுவிட்டது
2.என் விதி என்னிடம் விளையாடுகிறது…
3.என் விதியினால் தெய்வமே என்னை விட்டு விலகிச் சென்று விட்டது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றார்கள்.

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

“விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!”

 

காட்சி:- சிறிய குன்றிலிருந்து பெரிய குன்று, பின் சமமாக இருத்தல்…!

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்நினைவைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்…?

தியான நிலையிலும் அந்நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் கண்டிடுவாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பிட்டால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே மனிதர்கள் உணர்ந்திடவில்லை. தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
1.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள்.
2.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளித்திடுகிறார்.

செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர். அவரின் நிலை அவர் தியான முறை எல்லாமே இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.
3.இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய சகஜ வாழ்க்கையில் கோபப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமக்குள் உணர்வுகள் அழுத்தமாகி அதிகமான சப்தமும் போடுகின்றோம். ஏன்…?

நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் நம் உயிரிலே மோதிய பின் அது “டிரன்சாக்சன்” செய்து நம் உடலுக்குள் பரவச் செய்கிறது.

விஞ்ஞான ரீதியாக மைக்கின் மூலமாக… ஒரு டிரான்ஸிஸ்டர் ஒலிகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை ஒலி பெருக்கிக்கு அனுப்பி அதன் மூலம் தான் அந்தச் சப்தங்களை நாம் கேட்கின்றோம்.

1.இதைப் போல தான் எதிர்மறையான அலைகள் நம் மீது மோதும் போது
2.நாம் சுவாசித்த அந்தக் கார உணர்வின் ஒலிக்கற்றைகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது
3.அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாத நிலைகளாகி
4.ஓங்கிச் சப்தமிடுவது… சப்தமான பேச்சுக்களைப் பேசுவது… கொடூர உணர்ச்சிகளை தூண்டும் செயல்களைச் செய்வது…
5.இப்படித் தான் நாம் அந்த இடத்தில் செயல்படுகின்றோம்.

அந்தக் கொடூர செயலைச் செயல்படுத்தும்போது கேட்போர் உணர்வுகளிலும் அது பாய்ந்து நம்மைக் கண்ட பின் அவர்களும் வெறுக்கும் தன்மை வருகின்றது.

அந்த வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க… நமக்குள் கோபத்தின் தன்மை அடுத்து எல்லை கடந்தே செல்லும்.
1.யார் மேல் கோபப்படுகின்றோமோ… யாரை வெறுக்கின்றோமோ…
2.அவர் உணர்வுகளை நினைத்து நினைத்துக் கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து செல்கின்றது.

அதனால் நமது உடலில் கடுமையான நோயாக இரத்தக் கொதிப்பாக உருவாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிலைகள் வரும் பொழுது சிந்திக்கும் நிலைகள் அழுத்தம் அதிகமாகி விட்டால்… அதன் உணர்வு இரத்த அழுத்தம் (PRESSURE) அதிகமாகும்போது கண்ணிற்குக் கவரும் உணர்வுகள் அந்த இரத்தத்தின் வழி அந்த உணர்வின் தன்மையாக இயக்கும்.

ஆனால் கண்ணிலே இந்த இரத்தத்தின் தன்மை அதிகரித்து விட்டால் கண்கள் சிவந்து விடும். கண்கள் சிவந்து விட்டால் கொடூர உணர்வுடன் காட்சி தரும்.

சில பேர் கோபப்பட்டால் பார்க்கலாம்… வெளியில் தெரியவில்லை என்றாலும்… கோபத்தின் கனலை அவர்கள் கண்களிலே கண்டுவிடலாம். சிவப்பு நிறமாக அதன் உணர்வு இயக்கும்.

அந்த நேரத்தில் எதைப் படித்தாலும்… எதைப் பார்த்தாலும்… வெறுத்திடும் தன்மையே வரும். அனைத்தையும் அழிக்கும் உணர்வே வரும்.

1.கோபம் வந்து விட்டால் தன் பிள்ளையானாலும் அடித்துத் தாக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்தால் நல்ல பொருட்களைக் கண்டாலும் தட்டி எறியச் செய்யும்
3.கோபம் வந்துவிட்டால் நல்ல பொருளைத் தூக்கி (கனமாக இருந்தாலும்) உடைக்கச் செய்யும்
4.புலி எப்படி இரக்கமற்று மற்றதைத் தாக்குகின்றதோ அத்தகைய உணர்ச்சி தான் இயக்கும்.

உதாரணமாக… அப்போது ஒரு நல்ல உணர்வுடன் ஏதாவது தென்பட்டாலோ அல்லது யாராவது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகச் சிரித்தாலோ அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுக்கும் உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கும்.

இதற்கெல்லாம் காரணம் யார்…? நமது உயிரே…! நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் உணர்ச்சிகளாகத் தான் நம்மை இயக்குகின்றது.

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதிலே எப்பொருளைப் போடுகின்றோமோ… அது அந்த வெப்பத்தால் அதன் உணர்வின் மணங்களை வெளிப்படுத்துகின்றது. அந்த மணத்திற்கொப்ப நுகர்ந்தோர் உணர்வுகளையும் இயக்கச் செய்கின்றது.

இதைப் போலத் தான் இந்த உயிரின் இயக்கங்கள் என்பது அது நெருப்புக்கு ஒப்பானது தான்…!
1.நாம் எண்ணியதைத் தான்… நாம் நுகர்ந்ததைத்தான் அது இயக்கிக் காட்டுகின்றது.
2.அந்த உணர்வைத்தான் கண் கொண்டு பார்க்கவும் செய்கின்றோம்.

கோபம் வந்துவிட்டால் சிந்திக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் நமது செயல்களும் சீராக இருப்பதில்லை.

ஒரு கணக்குப் பார்த்தால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஒரு பொருளைச் சீராக பார்த்து… அதனின் தரத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழந்து விடுகின்றது.

1.ஆனால் தரமான சரக்காக இருப்பினும்
2.நம் உணர்வுடன் அந்த தரமிழந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்ல பொருளைப் பார்க்கும்போது வெறுப்பாகின்றது.
3.நல்லவைகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது
4.வியாபாரத்தில் இத்தகைய நிலைகள் ஆனால் அது மந்தமாகும்.

வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனை என்ற உணர்வு கூடி கோபமும் வேதனையும் மீண்டும் அதிகமாக… அதை நமக்குள் வளர்க்க வளர்க்கச் சிந்தனை குறைவாகி விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமாகி இந்த உடலில் கடுமையான நோய்கள் உருவாகி விடுகின்றது.

பின் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் செயலாக்கங்களை அது மாற்றி விடுகின்றது.

உதாரணமாக குளவி ஒரு புழுவைக் கொட்டிய பின் அந்த உணர்வுகள் கலந்து கொண்ட பின் புழுவின் உடலே குளவியாக மாற்றமடைகின்றது.

அதைப்போல் தான் நம் உடலிலும் அத்தகைய மாற்றம் ஆகும் பொழுது…
1.இந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின்
2.எந்தக் காரமான உணர்வை இந்த உடலில் அதிகமாக எடுத்தோமோ
3.அதற்கொப்ப மற்றொரு உடலின் ஈர்ப்புக்குள் சென்று
4.அங்கே இதன் உணர்வை முழுமையாக்கி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வரும்போது
5.அடுத்துப் புலியாகத் தான் நாம் பிறக்க முடியும்.

நான் – தான்… நீ – நான்… நான் – நீ…!

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் ஈஸ்வரா…! நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வின் நினைவலைகள் அனைத்தும் ஒளியின் சுடராக வரவேண்டும்.

1.அந்த நினைவின் அலையாக நீயாக… நானாக வேண்டும்
2.நான் நீயாக வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு பாடுவதுதான்
3.கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்பது.

நீ (உயிர்) எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… உணர்வின் தன்மை உனதாக இருக்க வேண்டும்.
1,எனதின் நிலைகள் உனதாக இருக்க வேண்டும்
2.உனதின் நிலைகள் எனதாக இருக்க வேண்டும்
3.நீ நானாக இருக்க வேண்டும்…! என்ற இந்த நிலையை எண்ணுவதற்குத் தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்பது,

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! ஆதியிலே விஷம்… விஷமற்ற நிலைகளில் தாக்கப்படும் பொழுது அது இயக்கமாகி சூடாகி அதனின் உணர்வு கொண்டு அது இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!

வெப்பம் பராசக்தி ஆகிறது… காந்தம் லட்சுமி ஆக மாறுகின்றது… இந்த விஷம் அதற்குள் “கருமாரியாக நின்று” அது இயக்கச் சக்தியாக அணுவாகின்றது.

இந்த இயக்கத்தைப் போலவே “நம் உயிருக்குள் நஞ்சின் தாக்குதல் தாங்காது இயக்கச் சக்தியாக ஆகி சூடாகி… அந்த உணர்வின் ஈர்ப்பு சக்தியாகி…” தன் உணர்வின் சக்தியை இந்த உடலை உருவாக்கும் உயிராக இருக்கின்றது என்பதைத்தான் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா உயிர் கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்பது.

1.நஞ்சின் இயக்கமாக
2.துடிப்பின் இயக்கமாக
3.உயிரின் இயக்கமாகி
4.உயிரின் இயக்கம் வெப்பமாகி
5.நாம் எண்ணிய நிலைகள் காந்தமாகி
6.அதனை இணைத்து நாம் படைக்கும் திறனாக
7.என் உயிராக எனக்குள் இருந்து இயங்கும் நிலை என்பதை உணர்த்தச் செய்வது…
8.நான் யார்…? என்ற நிலையை இந்த உயிரின் இயக்கமாகத்தான் நானாகின்றேன் (இதை இணர வேண்டும்).

“அந்த நானின் தன்மை விளைந்து” (அந்த உணர்வின் தன்மை) அதுவே தானாகின்றது. தானின் நினைவு உணர்வு ஆகும்பொழுது ஒளியாகின்றது
1.நான் தானாக வேண்டும்
2.தான் நானாக வேண்டும் என்ற நிலையில்
3.இதைப் போன்ற ஞானிகள் காட்டிய அருள் வழியினைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பாடுவது “உயிரை நினைத்து…”

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்துவிடு ஈஸ்வரா.

இந்த உயிரின் தன்மை… உயிர் ஒளியாக இருப்பது போன்று
1.என்றும் நான் ஒளியான நிலைகளாக
2.உன்னுடன் ஒன்றியே நான் ஒளியின் சரீரமாக
3.நான் நீயாக வேண்டும் நீ நானாக வேண்டும்.

ஒளியின் சிகரமாக… நான் தானாகித்தான் நானாகி… அந்த நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை பெற்றாலும்… “என்றும் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது…” நீ நானாகி… நான் நீயாக வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை குரு காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) வேண்டுகின்றேன்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்ற நினைவு கொண்டு அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற இந்த பாடலின் நோக்கத்தை
1.நாம் பரிபூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உயிரை வேண்டி
2.அதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும்… நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அந்தந்த மனிதனுக்குகந்த அமைப்பின் நிலைகள் கொண்டு தான் இன்றைய “மணப் பொருத்தங்கள்” பார்க்கும் நிலைகள் இருக்கின்றது.

பெண் நல்ல குணமாக இருக்கும்… இவர் வெறுப்படையும் உணர்வு கொண்டு இருப்பார். ஆனால் இவருடைய நிலைக்கும் இந்த நல்ல மனம் கொண்டவர்களைப் பொருந்தாது என்று சொல்வார்கள்…!

அப்படிச் சொன்னாலும் கூடப் பரவாயில்லை. வேதனைப்படுத்தும் உணர்வின் வலிமை பெற்றவரைப் “பொருந்தும்’…” என்று சொல்லிவிடுவார்கள். நல்ல குணம் கொண்ட பெண் இங்கே வந்தபின் இவருக்குள் அடங்கும்.

சில குடும்பங்களில் பார்க்கலாம்…! விஷத்தின் தன்மை ஒன்றை அடக்குவது போல் அத்தகைய ஆணின் தன்மை வரப்படும் பொழுது
1.எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் என்ற நிலையில்
2.நல்ல பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்தால் அதை அடக்கிச் சதா இம்சிப்பான்.

ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்த்து… “சரி” என்று திருமணம் செய்த சில குடும்பங்களில் பார்த்தோமென்றால் பெண்ணை உதைத்துக் கொண்டே இருப்பான்.

இதே போல் தான் நல்ல மாப்பிள்ளையாக வருவான். அந்த நல்ல மாப்பிள்ளைக்கு விஷம் கொண்ட நிலைக்கு அத்தகைய பெண் தான் பொருந்தும் என்று சொல்லிவிடுவார்கள்.

திருமணம் செய்து அந்தப் பெண் புகுந்த வீட்டிற்குச் சென்றால் எல்லோரையும் அடக்கி ஆட்சி புரியும்… பயமில்லாது வாழும்…! மாமனார் மாமியார் எல்லோரையும் அடக்கும்.

புருஷன் சொன்னபடி கேட்க வேண்டும் என்று இப்படித் தான் இவர்கள் பொருத்தம் பார்க்கின்றனர். இருந்தாலும் திருமணமான பின் வீட்டிற்குள் வந்த பின் பார்த்தால்… பெரிய ரகளையாகத் தான் இருக்கும்.
1.ஏதாவது ஒன்று சேர்ந்து வாழ்கின்றார்களா…?
2.ஜாதகம் பார்க்காது திருமணம் செய்கின்றோமோ…?
3.நேரம் பார்க்காது திருமணம் செய்கின்றோமா…?
4.நல்ல நேரம் பார்க்காது தொழில்கள் செய்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இயற்கையின் இயக்கத்தின் நிலைகளைத் தான் அன்று அது எப்படி உருவாகிறது என்று ஜாதகத்தின் உண்மைகள் என்று தெளிவாகக் காட்டினார்கள். ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது இரண்டும் மாற்றம் அடைகிறது… இது அதர்வண…!

கணவன் உடல் வலிமை கொண்டு மனைவியை வேதனைப்படுத்தும் நிலையாக இருந்தால் அந்த விஷத்தின் உணர்வாக இயங்கி… பார்…! நான் தற்கொலை செய்து கொள்வேன்…! என்றால் கணவன் உடனே பயந்து கொள்வான்.

வீட்டில் மாமனாரோ மாமியாரோ அல்லது மற்ற உறவு முறை உள்ளவர்களோ ஏதாவது சொன்னால்…
1.என்னைக் கொடுமைப்படுத்துகின்றீர்கள்.. இம்சிக்கின்றீர்கள் என்று
2.போலீஸில் புகார் செய்வேன் என்று பெண் மிரட்டும்..!

இப்படிச் சொன்னால் அவர்களும் பயந்து விடுவார்கள். பின் அந்தப் பெண் எப்படி இங்கே அடங்குவது…?

ஜாதகம் பார்த்துத் தான் எல்லாம் செய்தார்கள்… அதற்கு என்ன செய்வது..? இப்படிப்பட்ட பெண்களைத் தான் அங்கே பொருத்தமாகப் பார்ப்பார்கள்.

ஒரு சில குடும்பங்களில் பெண் மிகவும் அமைதி கொண்டதாக இருக்கும். ஆனால் கணவனிடமும் மற்றவர்களிடமும் நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதையும் காணலாம்.

ஒவ்வொரு நாளும் நான் படும் இம்சை வெளியில் சொல்ல முடியாது… எனக்கு ஒரே மன உளைச்சலாக இருக்கிறது… நரக வேதனைப்படுகின்றேன்…! என்றெல்லாம் சில பெண்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

பொருத்தம் எப்படிப் பார்க்க வேண்டும்…?

1.குணச் சிறப்பின் தன்மையை நாம் உணர்ந்து
2.அவர்களுடைய பண்பையும் மனதையும் இரண்டையும் கலந்தபின்
3.திருமணம் செய்தால் அந்தக் கணவனும் மனைவியும் என்றுமே ஒத்து வாழ்வார்கள்.

ஆகவே திருமணத்திற்குத் தேவை “மனப் பொருத்தமே…!”

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

 

துன்பப்படும் உணர்வுகளை ஒருவர் பேசுகின்றார் என்று கேட்டறிகின்றோம். அப்போது அவர்கள் வேதனைப்படும் சொல் உணர்வுகளாக நமக்குள் படர்ந்துவிடும்.
1.வேடிக்கையாகத் தானே கேட்டோம்… அவர் சொன்னதைக் கேட்டறிந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
2.ஆனால் அவர்கள் பட்ட வேதனையான உணர்வுகள் நமக்குள் கலந்து
3.அந்த உணர்வின் மணம் ஆன்மாவில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.

உதாரணமாக அந்த நேரம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முன் பார்வையில் வரக்கூடியதை எல்லாம் நம் கண் காட்டும். அதை இழுத்து நமக்குள் நுகர்ந்து அந்த உண்மையான பாதையில் நம்மை வழி நடத்துகின்றது கண்கள்.

இருந்தாலும் துன்பப்டுவோர் சொன்ன அந்தச் சம்பவத்தைக் கேட்டு… நுகர்ந்து எடுத்த அந்த மணமும் நம் உடலில் இருக்கக்கூடிய இந்த மணமும் கலந்து செல்லும்.

முதலில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் கலந்து ரோட்டில் செல்லும் பொழுது…
1.கண்ணுக்கு நேராகத் தெரியக்கூடியதைப் பார்க்க முடியாதபடி
2.அந்த சமயத்தில் சிந்திக்கும் திறன் இழந்து விடுகிறது.

ஒரு பாலிற்குள் அறியாது ஒரு நஞ்சு பட்டால் அதைச் சாப்பிட்டால் எப்படி மயக்கம் வருகின்றதோ அதைப் போல கேட்டறிந்த இந்த உணர்வுகள் நம் உடலில் ஆன்மாவாக… வாசனையாக இருக்கப்படும் பொழுது… கண் முன்னாடி வரக்கூடிய பொருளைக் காண்பித்து இதனுடன் இணைந்து போன உடனே “சிந்திக்கும் திறன் இழந்து விடுவோம்…”

அந்த சமயத்தில் முன்னாடி வண்டி வரும்… சீக்கிரம் விலகி விடலாம் என்ற எண்ணம் வராது. பஸ் வரும்… தெரியாது…!

சில பேரை நீங்கள் பார்க்கலாம் வண்டி வந்து கொண்டிருக்கும்… அது தெரியாது முன்னாடி போய்க் கொண்டே இருப்பார்கள். பஸ்ஸிலையோ காரிலேயே போகும் பொழுது இது போன்று நாம் பார்க்கலாம்.

முன்னாடி பார்ப்பார்கள்… ஆனால் நடந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் முதலில் பார்த்தது வேடிக்கையானதாக… வேதனையான உணர்வுகளைக் கேட்டறிந்தாலும் அந்த மணம் இங்கே வந்துவிடுகிறது.
1.பஸ் மிகவும் அருகிலே வந்த பின் தான் ஆ…! என்று பயந்து துள்ளிக் குதித்து ஓடுவார்கள்… பார்க்கலாம்
2.சில நேரங்களில் கவலை தோய்ந்த நிலையோ வேதனைப்படும் நிலையோ கேட்டறிந்தால் நாமும் இப்படித்தான் நடப்போம்.

நாம் தவறு செய்யவில்லை… அவர்… தான் பட்ட கஷ்டத்தைச் சொன்னார் அதைக் கேட்டோம். நம்மை அறியாமலே ஒரு நொடி ஏமாந்தால் விபத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

மற்ற கோள்கள் சந்திரனை மறைக்கப்படும் பொழுது அங்கே எப்படி ஒளி மங்குகின்றதோ இதைப் போல
1.நமக்குள் இருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை
2.ஒவ்வொரு எண்ணத்திலும் “சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது” இப்படி மறைத்து விடுகின்றது.

அதனால் தப்பித்துக் கொள்ளும் நிலை இல்லாதபடி இதிலே சிக்கி எத்தனையோ பேர் வேதனைப்படுவரையும் பார்க்கலாம்.

நமக்குள் “1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு” அவை தான் மனிதனை… மனிதனாக உருவாக்கச் செய்தது மனித வாழ்க்கையில் தன்னைக் காத்திடும் நிலையும்… மனிதனாக ஆன பின் இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி பிறவா நிலையை உருவாக்கும் “மனித உடல் – கடைசி…”

உதாரணமாக சூரியன் பிரகாசமான நிலையில் ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் பூமிக்குள் இங்கே மேகங்கள் படர்ந்து விட்டால் அந்த ஒளி மறைந்து விடுகின்றது.

அது போல் நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும்
1.பிற மனிதனுடைய எண்ணங்கள் அதை மறைத்து
2.நம் எண்ணங்களைப் பிறர் கேட்க விடாதபடி குற்றவாளியாக்கச் செய்வதும்
3.துன்ப உணர்வுகளைக் கேட்டுணர்ந்ததால் நம் நல்ல எண்ணங்களை அங்கே பிரதிபலிக்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பிறிதொரு மனிதன் வேதனைப்படும் சொல்லோ… அல்லது மற்ற குறைபாடுகளோ… அதை அவர்கள் நமக்குச் செய்ய வேண்டாம்…! அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்… நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.
1.”அவருடைய செயலை” நம் கண் இழுத்துக் கவர்ந்து நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.சுவாசித்த பின் நம் உயிரிலே படுகின்றது அதை உணர முடிகின்றது தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தெரிந்து கொண்டது… அவன் உடலில் தவறான நிலையில் செய்தது… அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அன்றைக்கு “ஒரு நான்கு மணி நேரத்திற்காவது”
2.நம் உடல் இழுத்து ஆன்மாவாகப் பெருக்கிக் கொள்ளும்.

அதன் பின் வேறு எந்த எண்ணங்கள் எண்ணினாலும் அதனுடன் கலந்து கலந்து… அன்றைய வாழ்க்கையில் வெறுப்பு சலிப்பு சஞ்சலம்… என்று அடைந்து
1.இது என்ன வாழ்க்கை…? இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது…! என்று நாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஆழமாக அதனின் வித்தின் தன்மையாக அடைந்து விடுகிறது.

நம் உடலில் 1008 குணங்களாக வளர்ச்சி பெற்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தப்பித்துத் தப்பித்து வந்தோம். இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் தீமையின் விளைவுகளுக்கே நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகையினால் தான் உங்களை “அடிக்கடி… அடிக்கடி” ஆத்ம சுத்தி செய்து கொள்ளும்படி சொல்கிறோம்.

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்… புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

 

நோயாளியைப் பார்க்கின்றோம்… அவருடைய நோயைப் பற்றி அறிகின்றோம். அவருக்கு உதவியும் செய்கின்றோம். ஆனாலும் அவரின் நோய்க்குக் காரணமான உணர்வுகள் நமக்குள் வலுவாகிவிட்டால் அதை நாம் துடைப்பதில்லை… துடைக்கத் தெரிவதில்லை.

நோய் வளர்ந்த பின் மருத்துவர்களிடம் சென்று அதற்குத் தக்க மருந்தை உட்கொண்டு மாற்றிக் கொள்கின்றோம்.
1.நோயாளியைப் பார்த்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
2.அதை நீக்குவதில்லை… நீக்கத் தெரியவில்லை
3.அப்போது மருந்து சாப்பிட்டு நோயை நீக்கினாலும் அந்த நோய் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

வயல்களில் களைகளைப் பிடுங்குகின்றோம்… மீண்டும் அந்தக் களைகள் முளைக்கத்தான் செய்கின்றது. அது போல் அன்றாடம் எத்தனையோ தீமைகளைப் பார்க்கின்றோம். உடலில் அந்தத் தீமைகள் அதிகமாகி விட்டால் நோயாகி விடுகிறது.

டாக்டர்களை அணுகி அந்த நோயை நீக்கினாலும் களைகளைப் பிடுங்கிய பின் மீண்டும் அது எப்படி முளைக்கின்றதோ அதைப் போன்று நமக்குள் மீண்டும் நோய் வருகின்றது.

நோயை நீக்க…
1.இன்னொரு விஷம் கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும் பொழுது அதில் உள்ள விஷமும் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது
2.நோய்களை நீக்க இப்படி.. பல உபாயங்களைச் செய்தாலும்
3.அந்த விஷத்தன்மைகளால் உடல் உறுப்புகள் பாழாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ உபாயங்களை நாம் செயல்படுத்துகின்றோம். உடல் உறுப்புகள் பழுதானால் நுரையீரல்… இருதயம் இவ்வாறு மாற்று உறுப்புகளை வைத்து மருத்துவர்கள் வாழ வைக்கின்றார்கள்.

உடலில் எலும்பே இல்லை என்றாலும் இன்னொரு உடலில் இருந்து எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து… “மோல்டு செய்வது போன்று எலும்பை உருவாக்கி…” அதை மனிதனுக்குப் பொருத்துகின்றார்கள்.

ஏனென்றால் எலும்பை உருவாக்கிய அணுக்களை அது பெருக்கப்படும் பொழுது அதனுடைய மலம் எலும்பாக வளர்கின்றது. பண வசதி உள்ளவர்கள் பல லட்சங்கள் ஆனாலும் அதைப் பொருத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அப்படிப் பொருத்திக் கொண்ட நிலையில்… கால்களையோ மற்ற அங்கங்களை இழந்து இருந்தாலும்… மற்றொருவர் எந்தவிதப் பின்னமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கப்படும் பொழுது
1.அவர்களைப் போன்று நமக்கு இல்லையே… நாம் இப்படி இருக்கின்றோமே…! என்ற வேதனை உணர்வு மீண்டும் வருகின்றது.
2.இப்படித் தொடர்ந்து வரும்போது முழுமையாக நோயிலிருந்து விடுபட முடிவதில்லை.

எத்தனையோ செல்வங்களைச் செலவழித்து உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் உடலை விட்டுச் செல்லும் பொழுது வேதனை உணர்ச்சிகள் உயிரோடு சேர்ந்தே செல்கின்றது.

நோயை நீக்க மருந்துகளை உட்கொண்டே வந்தாலும்… கடைசியில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அதற்குத்தக்க மாற்று உடலை இந்த உயிர் ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால்
1.விஷத்தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கி
2.தீமை என்ற உணர்வைக் கண்டால் உடனே அதை மாற்றி அமைத்து
3.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினையாக மாற்றிக் கொள்ள முடியும்
ஒரு மனிதனுடைய மேல் தோல் பாழாகி விட்டால் அந்தத் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து அழகான தோலையும் பொருத்தி விடுகின்றார்கள்.
1.ஆனாலும் உயிரைப் போன்று உணர்வின் தன்மை
2.ஒளியாக்கும் திறன் அவர்களிடம் இல்லை.

விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உடலைக் காக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து எடுத்து வாழ்ந்தாலும் வேதனை உணர்வுகள் உடலில் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது இந்த உடலில் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்ப அடுத்த மாற்று உடலை இந்த உயிர் உருவாக்கி விடுகிறது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி… துருவ நட்சத்திரத்தின் நினைவை அடிக்கடி கொண்டு வந்தால் உயிரான்மாவில் இது வலுவாகிறது.

பிறர் கஷ்டப்படுவதோ வேதனைப்படுவதோ துயரப்படுவதோ அல்லது உடலை விட்டு பிரிந்தவர்கள் பற்றிக் கேள்விப்படும் போதோ… அந்த நேரங்களில் எல்லாம் அதைத் தடுக்க…
1.ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.அதே கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாகப் பாய்ச்சி
5.மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

இயற்கையின் முழு சக்தியை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.இந்நிலைக்கு அந்நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இந்நிலையில் தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அவ் ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும்… பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தாய் எத்தனையோ வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத் தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது…?

உயர்ந்த உணர்வுகளை எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்… நம் சொல்லிலே இனிமை பெற வேண்டும்… நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.

இப்படிப் பிறரை நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்… அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக் கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.

ஆண்களானாலும் பெண்களானாலும் இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.
1.நம்மை உருவாக்கிய கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்
2.தன்னைக் காத்த தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்
3.நமக்கு நல் உணர்வு ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்

நாம் எத்தனை குற்றத்தைச் செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக… தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக் கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.

ஆனால் அப்படி நம்மை மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால் நாம் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்ற உணர்வில் இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்… அருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

1.தாயன்பைப் பெற முயற்சி எடுங்கள்
2.தாயை மகிழச் செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்
3.உங்கள் சொல்லை இனிமையாக்குங்கள்… செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்…!

தாய்க்கு செய்யும் சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச் செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்…!

அத்த்கைய பண்புடன் தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.
1.தாயின் உணர்வுகளை நாம் எடுக்கப்படும் பொழுது தான்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்
3.நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.

நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.

நாம் கவர்ந்து கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம் நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.

1.கவர்ந்து கொண்ட பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.
2.இணைந்து கொண்ட உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது
3.பிரம்மகுரு என்ற நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக…!

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் எதை வெல்ல வேண்டும்…? எதை வளர்க்க வேண்டும்…? என்பதை உணர்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதே வசிஸ்டர் நீங்கள் கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது. அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள் இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில்
1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி… உங்கள் உயிரை ஈசனாக மதித்து… விஷ்ணுவாக வணங்குகின்றேன்.
2.உங்கள் உடலைச் சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
3.அருள் உணர்வுகளை உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி
5.தீமைகளை நீக்கும் உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி
6.பேரொளி என்ற உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது…!

அதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

 

ஆண்டனாக்களின் பவரைக் கூட்டும் பொழுது வெகு தொலைவில் இருக்கும் விண்ணின் ஆற்றலையும் செயற்கைக்கோள் மூலமாக ஈர்க்க முடிகிறது விஞ்ஞான அறிவால். அங்கிருந்து வரும் அலைகளை நாம் கவர்ந்து வீட்டிலே டிவி பெட்டி மூலமாகப் பார்க்கின்றோம்.

அதைப் போன்று… அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்போது யாம் உபதேசிக்கும்போது நீங்கள் அதைக் கூர்ந்து கவனித்தால்
1.உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்வது மட்டுமல்ல.
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
3.அது ஆழமாகப் பதிவான பின் உபதேசித்ததை எண்ணும் பொழுது
4.விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த ஆண்டனாக்களைக் கொண்டு வருவது போன்று
5.உங்கள் கண்களை ஆண்டனாவாக… மிக சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும்.

இப்பொழுது இதைக் கேட்டுணரும் பொழுது கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் யாம் சொல்வதை
1.உங்கள் கண் ஈர்த்து உங்களுக்குள் முதலிலே ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
2.அதே சமயம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளுக்கு…
3.திரைகளுக்கு அனுப்பும் அந்த ஒவ்வொரு நுண்ணிய அலைகளிலும் “சக்தி வாய்ந்ததாக” இது சேர்கின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் “ஆண்டனா பவர்” (சக்திவாய்ந்த) போல அதைக் கவர்ந்து… உங்களைச் சுவாசிக்கச் செய்து… உங்கள் உடலுக்குள் சென்று தீமையான நிலைகளை நீக்கிட இது உதவும்.

தீமைகளை நீக்கி… அந்த அருள் சக்திகளை வலுகொண்டதாக மாற்றுவதற்கு… குருநாதர் எனக்கு எவ்வாறு அருள் உணர்வுகளைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று அதைப் பெறச் செய்கின்றோம்

அதன் பின்பு… தீமை நீங்கிய உணர்வை நீங்கள் பேசப்படும் போது உங்கள் மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்த அலைகளாகப் பரவச் செய்கிறது.

1.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
2.மற்றவர்கள்… அவரின் உணர்வுகள் அறியாது சென்றாலும்
3.”உங்களுடைய மூச்சலைகள்” அவர்களுடைய தீமைகளை நீக்கக்கூடியதாக… மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

அதற்கு இது நிச்சயம் உதவும்.

விட்ட குறை

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க… ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணு தோன்றி உலகின் நிலையில் பல பல பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தாலும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வின் தன்மை மனிதனால் உருவாக்கப்பட்டது தான்.

அப்படி ஒளியாக உருவாக்கிய முதல் மனிதன் அகஸ்தியன் தான்…! அகஸ்தியன் இனமாகத் தான் நாமும் வளர்ந்து வந்துள்ளோம்.

மனிதனில் உயர்ந்தவன்… உயர்ந்த ஒளியின் உணர்வைப் பெற்றவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. மாற்றிய அந்த உணர்வுகளைத்தான்
1.குருநாதர் எனக்குள் இணைத்து அதை வளர்க்கும்படி செய்தார்
2.ஒளியின் உணர்வாக நீ மாற வேண்டும்…! என்றும் சொன்னார்.

அதன் துணை கொண்டு இருளை அகற்றிடும் உணர்வைப் பெற வேண்டும். இந்த உணர்வினை எல்லோருக்கும் ஓது…! என்றார்.

நீ உபதேசிக்கும் போது அதை உற்றுக் கேட்போர் உணர்வுகளில் அது பதிவாகி அவர்களும் அதைக் கவரும் சந்தர்ப்பம் வரும்.
1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அவர்களும் அருள் வழி செல்லட்டும்…
2.அதைக் கவரும் உணர்ச்சியை நீ தூண்டு… அவர்களுக்குள்ளும் இதைப் பதியச் செய்.
3.அருள் வாழ்க்கை வாழச் செய்… இருளை அகற்றச் செய்…!
4.உயிர் என்ற நிலை வரும் பொழுது ஈசன் என்ற நிலை வருகின்றது… ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் என்று நீ கருது…! என்றார் குருநாதர்.
5.மனிதன் என்று உருவாக்கிய நல்ல உணர்வுகள் உயர வேண்டும் என்று எண்ணு.

பிறரைக் காக்கும் உணர்வு கொண்டு அந்த உணர்வுகள் உனக்குள் விளைந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்று அதன் உணர்வுகளை அவர்களும் பெற வேண்டும் என்று ஏங்கு.

ஏனென்றால் அவரால் வளர்க்கப்பட்ட அவர் உடலில் உருவான நோயின் தன்மையை நீ கேட்டறிந்து அந்த உணர்வுகள் உனக்குள் பதிந்தாலும்… அருள் உணர்வு என்ற நிலையை வைத்து உனக்குள் இதை மாற்றி…
1.அவர்களும் அதைப் பெற வேண்டும் என்று இவ்வாறு நீ எண்ணினால் அவர்களும் நலம் பெறுகின்றனர்
2.அவருடைய தீமையின் உணர்வுகள் உனக்குள் வராது தடுக்கப்படுகின்றது.

ஆகவே இம்முறையைக் கடைப்பிடித்து உனது வாழ்க்கையில் பிறிதொருவரின் நோய்களையோ தீமைகளையோ பார்த்தாலும் ஓ…ம் நமச்சிவாய…! என்று உன் உடலாக ஆனாலும் உடலில் வரும் அந்த அழுக்கினை நீக்க
1.நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நீ கவர்ந்து
2,அதனுடன் இணைத்து அந்த விஷத்தின் ஆற்றலை நீ பெருக்காது
3.அந்த அருள் என்ற உணர்வினை இணைத்து ஒளி என்ற உணர்வினை நுகரும் சக்தியாக
4.உன் உடலில் உள்ள அணுக்களை மாற்று… அதன் உணர்வு கொண்டு உயிருடன் ஒன்று…! என்றார் குருநாதர்.

வாழ் நாள் முழுவதும் இருளை அகற்றும் உணர்வுடன் வாழ்ந்தால் இது தான் விஷ்ணு தனுசு. ஆனால் பிறரின் நோயின் உணர்வை நுகர்ந்தால் அது சிவ தனுசு. அந்த உடலில் விளைந்த அதே நோய்கள் தான் வரும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார் குருநாதர்.

மிருகத்தின் உணர்வுகளை நுகர்ந்து அதனால் தாக்கப்பட்டால் அதன் உணர்வின் தன்மை கொண்டு நாம் மிருகத்தின் நிலையை அடைகின்றோம்.

அப்படி அல்லாதபடி விஷ்ணு தனுசு என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உயிருடன் ஒன்றினால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வினை நாமும் பெற்றோம் என்றால் அந்த உணர்வின் தன்மை உண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோம்.
2.அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்
3.வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவோம்
4.மெய்ப் பொருளைக் காண்போம் என்று நமது குரு காட்டிய அருள் வழியில் ஏங்கித் தியானிப்போம்.

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

 

உங்கள் கஷ்டங்களைச் சொல்லி அதிலிருந்து நிவாரணம் தேட என்னிடம் (ஞானகுரு) கேட்டாலும்… நான் கேட்டறியும் பொழுது அந்த உணர்வை என் செவிப்புலன் ஈர்த்து… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி சுவாசித்து… பின் என் உயிரிலே பட்டு அறிந்து தான் “நான் பதில் சொல்ல வேண்டி வரும்…”

குருநாதர் கொடுத்த சக்திகள் கொண்டு பல உபகாரங்களைச் செய்தாலும் நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வுகள் என் உடலுக்குள் சென்று விட்டால் அது கடுமையான தீய விளைவுகளை எனக்குள் உண்டாக்கிவிடும்.

அவைகளைச் சமப்படுத்துவதற்கு குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று தெளிவாக உணர்த்தினார்.
1.விண்ணின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி… அதை வேக வைத்து
2.அதனைச் சமப்படுத்தி… சுவை ஆக்கி
3.யார் உன்னிடம் சொன்னார்களோ அவருடைய தீமைகளை நீக்க இந்த உணர்வின் வாக்கினை அங்கே பதிவு செய்து
4.தீமையிலிருந்து அவர்கள் விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று சொன்னார்.

அருள் ஆற்றல்மிக்க விண்வெளியின் ஆற்றலை எப்படிப் பருக வேண்டும் என்ற உணர்வினை எமது குருநாதர் எனக்குள் உபதேசித்து…
1.அந்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனிக்கச் செய்து… அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.நீங்கள் துன்பம் என்று எம்மிடம் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தாலும்
3.அந்தத் துன்பங்கள் எனக்குள் விளையாத வண்ணம் தடுக்க
4.அடுத்து குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
5.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்தி
6.அது என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அன் உணர்வுகள் அனைத்திலும் கலக்கச் செய்கிறேன் (ஞானகுரு)

உதாரணமாக தங்க நகைகள் செய்ய செம்பும் வெள்ளியும் வைத்து… அதைத் தெரிந்தே தான் கலக்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யப்படும் பொழுது திரவகத்தை ஊற்றி அந்த செம்பையும் வெள்ளியையும் நீக்கிவிட்டு மீண்டும் சுத்தத் தங்கத்தை வைத்து நகை செய்யச் செல்கின்றோம்.

அது போல் நீங்கள் ஆயிரக்கணக்கான பேர் வந்தாலும்… உங்களுக்கு நான் நன்மை செய்ய வேண்டும் என்று சொன்னாலும்… உங்களுடைய துன்பங்களைச் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தே நான் உதவி செய்ய முடிகிறது.

கேட்டறிந்த அந்தத் தீமை எனக்குள் சேராத வண்ணம் குருநாதர் காட்டிய வழியில்
1.அவர் எனக்குக் கொடுத்த… எனக்குள் பதிவு செய்த… உயர்ந்த எண்ணத்தின் சக்தியை வலுவூட்டச் செய்து
2.விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
3.அதை நுகர்ந்து என் உடலுக்குள் செலுத்துகின்றேன்.

அன்று வாழ்ந்த மெய்ஞானிகள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வரும் சென்ற அந்த அரும் பெரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலே படரச் செய்து கொண்டிருப்பதைத் தான் குரு எனக்குள் பதிவு செய்தார்.

அதை நினைவு கொண்டு நான் எண்ணும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.

தங்கத்தில் திரவகத்தைத் விட்ட பின் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் பிரிவது போன்று அந்த அருள் ஞானிகளின் உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது… அதைப் பிரித்து விடுகின்றது.

இதுதான் ஆத்ம சக்தி என்பது…!

அனைவரும் என்னிடம் கஷ்டங்களைச் சொல்லும் போது உடனுக்குடன் நான் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.உங்களுக்கு முன்னாடி எத்தனையோ நிலைகள் எனக்குள் மாறிவிடும்.
2.உங்களுக்கு நான் நன்மை செய்தாலும் நீங்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் எனக்குள் சுமையாக வந்து என் நல்லதை மூடி மறைத்து விடும்.

ஆகவே தீமைகளை நீக்குவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த “உபாயத்தை” அந்த மகரிஷிகள் உணர்வினை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

எந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆற்றல்மிக்க சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகும்.

அதற்கப்புறம் நீங்கள் தீமையை எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும்…
1.உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.முன்னாடி இருக்கும் மகரிஷிகள் அருள் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கிறது.

ஆகவே விண்ணின் ஆற்றலைப் பெற நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

தூக்கத்தில் வரும் கனவுகளின் இயக்கங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒரு நிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாச நிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் இன்று இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம்… எத்தனையோ ஆண்டுகள் வாழ்கிறோம் என்று…!

இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தையும் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் அது சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது
2.வேதனை என்ற உணர்வுகள் வளர்ந்தால் தேடிய செல்வத்தையும் பாதுகாக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விட்டால் நம் உடலில் நோயின் தன்மை உருவாகின்றது
1.நோயின் தன்மை உருவானால்
2.இதுவே நாம் தேடிய செல்வமாக மாறுகின்றது.

நோயின் உணர்வுகள் விளைந்தால்… “நம் உடலில் அந்தச் செல்வத்தின் வழியே…” உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது. ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமல்ல… இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை…!

நமக்குச் சொந்தமாக்க வேண்டியது எது…? என்று சிந்தியுங்கள்.

வேதனை வெறுப்பு என்பதைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உருவாக்குகின்றது உயிர். கோபம் குரோதம் என்ற நிலை ஆனால் அதன் வழி அடுத்த உடலைச் சொந்தமாக்கி அந்த உருவாக உயிர் மாற்றிவிடுகின்றது

ஒரு நிலம் சரியில்லை என்றால் அதனைப் பண்படுத்துகின்றோம். நிலத்தில் வீடு கட்டினால் சரியில்லை என்றால் மாற்று வீட்டை அதைக் காட்டிலும் நம் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகிறோம்.

இதைப் போலத் தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது. அதிலே நரக வேதனை தான் படுகின்றது

ஆகவே வேதனைப்படும் உடலாக மாற்றுவதற்கு மாறாக
1.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு
2.என்றும் நிலையான பேரருள் பெறும் உணர்வினைச் சொந்தமாக்கி… பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கி
3.இனி நாம் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.

என்னை இப்படிச் சொல்லிவிட்டானே…! என்று “அதையே எண்ணி” நம் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றோம்

 

எனக்கு இடைஞ்சல் செய்தான்… பாவி..! “தொலைந்து போகிறவன்… மோசமானவன்…!” இப்படி எல்லாம் செய்தால் உருப்படுவானா…? என்று “உங்கள் பெயரைச் சொல்லி… அது உங்களில் பதிவானால் போதும்…!”
1.என்னை இப்படிச் சொன்னார்களே… சொன்னார்களே…! என்று அதையே எண்ணி
2.இந்த உணர்வுகளைச் சேர்த்து அவர்கள் சொன்ன நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.

அந்தக் கோபமான உணர்வு நமக்குள் சேர்ந்து “இப்படிச் சொன்னான் பார் அவனை என்ன செய்கின்றேன்…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும்.

அவர் எங்கேயோ இருப்பார். கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்வு… நமக்குள் மோதிய பின் கோப உணர்வாகி நம் நல்ல குணங்கள் எல்லாம் கேட்டு அந்த ஆத்திர உணர்வு நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.

1.அவர் ஒரு தடவை தான் சொன்னார்…
2.இருந்தாலும் இந்த உணர்வு நமக்குள் வந்தபின் அவரை நினைக்கும் போதெல்லாம் ஆத்திரமும்
3.அவனை உதைக்கின்றேன்… எங்கே வந்தாலும் விட மாட்டேன் என்று எண்ணும் போது
4.”அந்த எண்ணம்” நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் உதைத்துக் கொண்டே இருக்கும்.

அப்போது உடல் எல்லாம் வலிக்கிறது என்று சொல்வோம். இது விளைய விளைய அவர்களை நினைக்க நினைக்க இது உடலுக்குள் விளைந்து கொண்டே வந்து கடைசியில் கழுத்து வலி மேல் வலி வந்து கொண்டே இருக்கும்.

1.யார் சொன்னாலும் சரி…
2.அந்தச் சொல்லைப் பொறுக்க முடியாதபடி “உன்னை உதைத்தால் தான் சரியாகும்…? என்ற ஆத்திரத்தைத் தூண்டும்.

தன்னுடைய பிள்ளையையே பார்த்தாலும் கூட… சொன்னபடி கேட்கவில்லை என்றால் “இங்கே வாடா…” என்று ஆத்திரத்துடன் பேசச் சொல்லும்.

இந்த உணர்வுகள் எல்லாம் சிறுகச் சிறுக இரத்தக் கொதிப்பாக வளர்ந்து கை காலெல்லாம் முடக்கி விடும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் அவர்கள் சொன்னதை எடுத்துக் கொண்ட பின் இது கொஞ்சம் கொஞ்சமாக விளைந்து… யார் ஒன்றைச் சொன்னாலும்… அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாது.

உடனே அவர்களைப் பற்றிக் குறை பேசுவோம். குறையைச் சொன்னவுடன் அவர்களுக்குக் கோபம் வரும். மீண்டும் கோபமாகப் பேச வேண்டி வரும்

இப்படி நம்மை அறியாமல்
1.ஒரு தரம் சொன்னது நமக்குள் கலந்து கலந்து இயக்கி
2.நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் அடுத்தவர்களின் கோபத்தைத் தூண்டச் செய்து
3.கோபமாக நம்மிடம் பேசச் செய்து… இப்படி அந்தக் கோபம் நமக்குள் தொடர்ச்சியாக விளைந்து கொண்டே வரும்.

உடல் ஆரோக்கியம் இழந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.. இந்தக் கோப உணர்வுகள் விளைய விளைய தொழிலும் வியாபாரத்திலும் இடைஞ்சல் வரும். நண்பரிடத்திலேயும் கோபம் வரும். அதனால் பகையாகிப் பல விளைவுகள் ஆகிவிடும்.

ஆக நம்மை அறியாமலே உடலிலும் தண்டனை… நம் சொல்லைக் கேட்பவர்கள் அனைவரும் நம்மை வெறுப்பார்கள்.

இப்படி நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. வேதனை அதிகமாகி மனிதனையே செயலிழக்கும்படி ஆகின்றது.

பாவிப்பயல்… மோசம் செய்தான் துரோகம் செய்தான் இடைஞ்சல் செய்தான் என் குடும்பத்திற்குத் தொல்லையாக இருக்கின்றான் என்று ஆன பின் அதறக்க வேண்டி… ஜாதகமோ ஜோதிடமோ பார்க்கச் சென்றால் “உங்களுக்குச் செய்வினை செய்து விட்டான்…!” என்று அவர்கள் சொல்லி விடுவார்கள்.

1.அதைக் கேட்ட பின்… உணர்வின் வேகங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகி
2.சண்டாளப் பயல் இப்படிச் செய்து விட்டான்…! என்று மனதைப் பலமாக வைத்து விட்டால் உடலிலே கடுமையான நோயாகி விடுகின்றது.

நோயாக வளர்ந்த பின் எந்த மனிதனைக் குறி வைத்து இந்த எண்ணங்கள் சென்றதோ… இந்த மணங்கள் இங்கே அதிகமாகி உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் அந்த உடலுக்குள் சென்று அவனுக்குள் பேயாக ஆட்டிப் படைக்கும்… அவனுக்குத் தொல்லைகள் கொடுக்கும்

எந்த அளவிற்கு இந்த உடலில் தொல்லைகள் அனுபவித்ததோ அந்த நோய் அங்கேயும் உருவாகும். அதே சமயத்தில் வெறுத்துப் பேசிய உணர்வுகளும் அங்கே சென்ற பின் அவர்களை இன்னும் இம்சைப்படுத்தி… அந்த உடலில் நஞ்சினை விளையச் செய்து… இந்த உயிரான்மா தனக்குள் அதிகமாக அதைப் பெருக்கி… இன்னும் கொஞ்சம் தேய்மானம் ஆகும்.

மனித உடலில் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் (அறிவு) நிலை பெற்றிருந்தாலும்… பிறிதொரு எண்ணங்கள் உடலில் விளைந்த பின்… பௌர்ணமி எப்படித் தேய்கின்றதோ இதைப் போல நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகிறது.

பல கோடிச் சரீரங்களில் பல தீமைகளைக் கடந்து வலிமை பெற்று மனிதனாக வந்த நிலையில்
1.இரு அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்று சொன்னால்
2.”உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று நாம் எடுத்துக் கொண்டது
3.நம் உடலுக்குள் வந்து நம் நல்ல உணர்வைத் தொலைத்துவிடும்… நோயாக மாற்றிவிடும்.

இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்…! நாம் லேசாகச் சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலே… நாம் எண்ணிய அந்த உணர்வு… முதலில் நமக்குள் தான் பாய்கின்றது.

பாய்ந்த பின் தான்… அந்தக் கெட்ட புத்தி வந்து நம்மைக் கெட்ட செயலைச் செய்ய வைக்கும். ஆக நம் நல்ல குணங்களை. முதலில் நாம் தான் கெடுக்கின்றோம்.

அது நமக்குள் தீய வினையாக விளைந்து விடுகிறது. இப்படி நம்மை அறியாமல் எத்தனையோ வேதனைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றோம்

1.இதிலிருந்து மீள்வதற்கு நாம் என்ன செய்வது…? என்பதை அன்று மகரிஷிகள் பல முறைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
2.அதையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இந்த உபதேசத்தையே உங்களுக்கு கொடுப்பது.

காரணம்… அந்த ரிஷிகள் முழுமை அடைந்தவர்கள். அவர்கள் உணர்வைப் பெற்றால் தான் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கார்த்திகை தீபம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனிதனின் ஆறாவது அறிவைத்தான் கார்த்திகேயா என்று காட்டினார்கள் ஞானிகள். அனைத்தையும் தெரிந்து கொள்ளக்கூடிய நிலைகள் மனிதனின் ஆறாவது அறிவு.

1.ஒரு விளக்கை ஏற்றினால் அந்த விளக்கின் ஒளி கொண்டு மற்ற பொருள்களைப் பார்க்க நேர்கின்றது… தெரிய முடிகின்றது.
2.அதைப்போல ஆறாவது அறிவால் நாம் தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
3.இதை அண்ணாமலை தீபம் என்று சொல்வார்கள்…!

அன்றைய தினம் நம் வீட்டு முச்சந்தியில் விளக்குகளைக் கொளுத்தி வைப்போம். எல்லா நாளும் அல்லாது வீட்டு முகப்பில் ஏன் விளக்குகளை வைக்கின்றோம்…?

முகப்பில் ஒளி என்ற உணர்வை வைத்து இருளை அகற்றிடும் தன்மையாக மெய் என்ற உணர்வை நமக்குள் அறிந்துணர்ந்து… எது மெய்…? எது பொய்…? என்று வெளிச்சத்தின் மூலமாக நாம் காண முடிகின்றது.

நமக்குள் எந்தத் தீமைகளும் புகாது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும் என்று காட்டுவதற்குத்தான் வீட்டு வாசலின் முகப்பில் விளக்கை வைப்பது.

அந்த சாஸ்திர வழக்கப்படி மனிதர்களுக்கு நினைவுபடுத்தும் நாள் தான் இது. நாம் சுவாசிக்கும் உணர்வு (மூக்கிற்கு நேராக உயிர்) முகப்பில் இருக்கின்றது. தெளிவான உணர்வின் தன்மையை அருள் ஒளி என்ற உணர்வை நாம் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் சேர்த்து இருளை அகற்றும் தனக்குள் தெளிந்த உணர்வு கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்.

இந்த மனிதன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும்…
1.நாம் சுவாசிக்கும் முகப்பிலே உயிரிலே பட்டுத்தான் உண்மையின் உணர்வை நாம் அறிகின்றோம்.
2.அங்கே ஒளி என்ற உணர்வுகள் வரப்படும் பொழுது பொருளைக் காணும் தன்மைகள் வருகின்றது.

ஆகவே தான் இதை நினைவுபடுத்தும் நாளாக “அண்ணாமலை தீபம்” என்று காட்டுகின்றனர். அண்ணாமலையான் என்றால் நம் உயிர் உடலின் உச்சியிலிருந்து கொண்டு அந்த ஒளியின் தன்மையாக நம்மை இயக்குகிறான்.

உடல் சிவம் என்றாலும் சிவனின் ரூபத்தைக் காட்டி அண்ணாமலையான் என்று உயிரான ஈசனைக் காட்டி உடலை (சிவத்தை) இயக்குகிறது என்று காட்டுகின்றனர்.

ஆனாலும் நாம் சுவாசிக்கும் போது உயிரிலே பட்டு எதன் உணர்வைத் தெரிகின்றோமோ அதன் ஒளியின் தன்மை கொண்டு தான் நாம் இயங்குகின்றோம்.

1.கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றும் போது ஒளியின் உணர்வாக நம் உடலே ஒளியாகின்றது
3.நம் சொல்லும் ஒளியாகின்றது… செயலும் ஒளியாகின்றது.

இதை நினைவுபடுத்தும் நாள் தான் அண்ணாமலையான் தீபம்.

ஆறாவது அறிவு கொண்டு தெரிந்து… தெளிந்து… நாம் வாழும் இந்த மனித உடலில் வேதனை என்ற விஷத்தின் தன்மை எடுத்து நம் ஆன்மாவை அது மறைத்திடாது அருள் ஒளியைப் பெருக்க வேண்டும்.

உதாரணமாக… தான் சேமிக்கும் நஞ்சினை ஒளியாக மாற்றி வைரங்களாக மாற்றுகின்றது நாகம். விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது அது நாகரத்தினமாக மாறுகின்றது.

அதைப் போன்று தான்…
1.மனிதனின் உணர்வின் தன்மைகளை ஒளியாக்கப்படும் பொழுது உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
2.மற்றொன்றில் இருக்கும் இருளை மாய்த்து அந்த உணர்ச்சிகளை மாற்றி ஒளி என்ற நிலைகளாகப் பிரகாசிக்கச் செய்யும்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதப்படும் பொழுது “ஒளி” என்ற நிலைகள் வருகின்றது. ஒரு உணர்வுடன் ஒரு உணர்வு மோதும் பொழுது “வெப்பமாகி” உணர்வுகள் மாற்றம் அடைகின்றது.

எதன் வழி கொண்டு வருகின்றதோ அதற்குத்தக்க இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றது. இப்படித்தான் உயிர் நம்மை இயக்குகின்றது. நாம் நுகரும் உணர்வை வைத்துத்தான் நம் உயிர் ஆட்சி புரிகின்றது.

ஆகவே இருளை அகற்றி நஞ்சினை வென்று ஒளியாக மாற்றிச் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை ஏங்கிப் பெறுவோம்.
1.நாம் தெளிந்த மனம் பெறுவோம்… தெளிவான வாழ்க்கை வாழ்வோம்.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளிச் சுடராக மாற்றிக் கொண்டே இருப்போம்.

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

 

வாழ்க்கையிலே வரக்கூடிய குறைபாடுகளையோ மற்ற தீமைகளையோ வேதனைகளையோ கேட்க நேர்ந்தால் நுகர நேர்ந்தால் அது நம் உடலுக்குள் வராதபடி தடுக்க… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் என்று நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்
1.”எது நல்லவையோ அது நடக்க வேண்டும்…” என்று எண்ணத்தை நாம் செலுத்த வேண்டும்
2.அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இந்த வழியில் நாம் வாழ்ந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.

உலகெங்கிலும் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்… நம் பூமி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே உருமாறும் நிலை இருக்கின்றது… கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை மேற்கொண்டு
1.அவர் கொடுக்கும் உபாயங்களை நாம் கடைப்பிடித்து
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலை அடைய
3.அதை முழுமூச்சாக நாம் செயல்படுத்த வேண்டும்.

கடலில் படகை ஓட்டிச் சென்றோம் என்றால் அதிலே அலைகள் எதிர்த்து வரும் பொழுது அதைப் பிளந்து நாம் செல்ல வேண்டிய எல்லையை அடைகின்றோம்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரம் தான் நமது எல்லை என்று முடிவுகட்டி இந்த வாழ்க்கையில் எத்தனை விதமான சங்கடமோ சலிப்போ வெறுப்போ அல்லது பாசத்தால் வரக்கூடிய உணர்வுகளோ வந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று வரும் அலைகளைப் பிளந்திடல் வேண்டும்.

நமது எல்லையான துருவ நட்சத்திரத்தை அடையக்கூடிய சக்தியாக… வாழ்க்கை என்ற ஓடத்தைச் சீர்படுத்தி வாழ வேண்டும்.

காட்டிற்குள் சென்று தவம் இருந்து அந்தச் சக்தியைப் பெறுவதல்ல. இந்த நாட்டுக்குள் வாழும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற வேண்டும். “இது தான் உண்மையான தவம்…”

அந்த தவத்தை நாம் எடுத்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் வலுப்பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி… பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் கற்ற கல்வி இந்த உடலுக்கல்ல. நாம் எதைக் கற்றாலும் உலகை அறிந்து கொள்ள உதவும்… இந்த ஆறாவது அறிவு அல்ல…! மெய் ஞானத்தின் உணர்வு கொண்டு தான் கற்ற கல்வியையும் சீராக்க முடியும்.

தேடிய செல்வம் சிறிதாக இருப்பினும் அதைப் பக்குவத்துடன் காத்து… பகைமை உணர்வு உடலுக்குள் சேராது அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை வளர்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.ஆக… வெறும் கல்வி என்பது ஏட்டுச் சுரைக்காய் தான்.
2.கல்வி கற்றாலும் இந்த மெய் ஞானத்துடன் ஒன்றி மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தும் நிலை வேண்டும்.

மனித உடலை உருவாக்கியது உயிர் தான். மனிதான பின் ஆறாவது அறிவை உருவாக்கியதும் உயிர் தான். இந்த ஆறாவது அறிவின் தன்மையால் தான் உயிரைப் போல் உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக நாம் வளர்க்கும் நிலை பெற முடியும்.

ஆகவே இதை நாம் சீராகப் பயன்படுத்துவோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் ஏங்கித் தியானியுங்கள்.

குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்,.. குழந்தைகள் ஞானிகளாக வளர வேண்டும்… விவசாயம் செழிக்க வேண்டும்… வியாபாரம் பெருகி எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் நலம் பெறவேண்டும்…! என்று நீங்கள் இப்படித் தியானித்துப் பாருங்கள்.

1.அமர்ந்த இடத்தில் வீட்டிலிருந்தே இவ்வாறு தியானித்து எல்லா இடங்களுக்கும் அந்த அருள் சக்திகளைப் பரவச் செய்ய முடியும்…
2.அந்த அலைகள் அங்கே படரும்
3.அதை நுகரும் மற்றவர்களுக்கும் சிந்திக்கும் ஆற்றல் வரும்.
4.உங்கள் வாழ்க்கையை உயர்த்தவும் முடியும்.
5.இருளை அகற்றும் நிலையும் பண்படும் உணர்வுகளும் நமக்குள் ஒன்றுபட்டு வாழும் அணுக்களும் நம் உடலில் வளரும்.

ஆகவே… இந்த உடலுக்குப் பின் அந்தத் துருவ நடசத்திரத்துடன் இணைந்து வாழ முடியும் என்ற இந்த நம்பிக்கையுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.

1.எந்த நிமிடம்… எந்த நிலைகள்… எதுவாக இருந்தாலும்… உடலை விட்டு உயிர் சென்றால்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.

மனிதனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டியிருக்கும்.

ஆகவே அதிலிருந்து விடுபட்டு அருள் உணர்வைப் பெருக்கி அருள் வாழ்க்கை வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்று என்றுமே ஏகாந்த நிலையை அடைந்திட “எம்முடைய அருளாசிகள் (ஞானகுரு) உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்….”

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கே கொடுக்கப்படும் உபதேசத்தின் மூலம் மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டறிகின்றீர்கள். கூர்ந்து கவனித்தால் இது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

ஆக… விண்ணிலே மிதந்து கொண்டிருக்கும்…
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டமான சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை
2.உங்கள் கண்கள் மூலம் நுகர்ந்தெடுக்கும் அந்த உணர்வின் சக்தியாக
3.உங்கள் கண்களை ஆற்றல்மிக்க உணர்வின் ஈர்ப்பு சக்தியாக வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிப்பது.

இந்த உபதேசத்தை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ பதிவாக்குகின்றீர்களோ… அதனின் ஆற்றல் உங்களுக்குள் பெருகுகின்றது.

அப்படிப் பெருகச் செய்து உங்கள் எண்ணத்தால் விண்ணை நோக்கி ஏகும் பொழுது… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே படர்ந்து கொண்டிருப்பதை நீங்கள் எளிதில் சுவாசிக்க முடியும். அதன் மூலம் உங்களை அறியாது வந்த தீய வினைகளைத் துடைத்திட முடியும்.

மனிதர்களுக்குள் பழகிய நிலைகள் கொண்டு பத்திரிக்கை வாயிலாகப் படிக்கப்படும் போது ஒவ்வொரு நாளும் எங்கெங்கோ நடக்கும் அதிர்ச்சியான செய்திகளைக் கேட்டறிகின்றோம்.

நம் எண்ணத்தை அதிலே கூர்ந்து செலுத்தி விட்டால்…
1.எங்கோ விபத்தான நிலைகள் அதனின் உணர்வின் நிலைகளைப் படித்தறியப்படும் போது
2.அதிர்ச்சி… பயம்… வேதனை… இது போன்ற உணர்வுகள் உடலிலே விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள என்று நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கிவிடுகின்றது.

இதுகள் எல்லாம்…
1.சாதாரண ஆண்டென்னாவை உபயோகப்படுத்துவது போல் தான்
2.எதைப் பத்திரிக்கையில் படித்தோமோ… டி.வி.யில் பார்த்தோமோ அந்த உணர்வுகள் ஊழ்வினையாகப் பதிவாகி
3.அதை நாம் மீண்டும் எண்ணும் போது நம் எண்ணத்தால் படித்து நுகர்ந்து விடுகின்றோம்.

ஆனாலும் நாம் படித்த… பார்த்த அந்த உணர்வலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டிருக்கின்றது.
1.மீண்டும் (தினசரி) எண்ணும் போது நமக்குள் பதிவான அதே அலைகள் காற்றிலிருந்து குவித்து நம்மை உணரச் செய்கின்றது
2.அதனின் இயக்கமாக நம்மைச் செயல்படுத்துகின்றது.
3.எந்த வேதனைப்பட்டோமோ… எப்படி ஆத்திரப்பட்டோமோ… அதுவே நமக்குள் விளையும் தருணம் வந்து விடுகின்றது
4.உடலில் விளைந்தால் கடும் நோயாக மாறும் சந்தர்ப்பமும் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து இதைத் துடைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று உபதேசிக்கின்றோம்.

1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை எல்லாம் பருகினேன்.
2.அவரைக் கூர்ந்து கவனிக்கும் போது அதனின் உணர்வின் தன்மை ஊழ்வினை என்ற வித்தாக எனக்குள் பதிவானது.
3.அவரை நினைவு கொள்ளும் போதெல்லாம் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர்ந்து
4.அதனின் ஆற்றலை எனக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டேன்.

அப்படிப் பெருக்கிய ஆற்றலின் துணை கொண்டு தான் நீங்கள் துயரப்பட்டு வரும் போது “உங்கள் துன்பங்கள் நீங்கிப் போகும்…” என்று வாக்கால் சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

அதை மீண்டும் நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்றால் உங்கள் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையத் தொடங்கும்.

1.ஒவ்வொரு நிமிடமும் துன்புறும் உணர்வுகளை எனக்குள் பாய்ச்சி
2.அந்தத் துன்பப்படுத்தும் உணர்வின் தன்மையை நீக்குவதற்காக
3.விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்து
4.அதனின் அனுபவபூர்வமான செயலைத் தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்.

அந்தப் பக்குவத்தின் தன்மையைத் தான் உங்களுக்கும் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

 

துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகள் வரும் நேரத்தில் அதனுடன் இணைத்து உங்கள் நினைவாற்றலைச் செலுத்தப்படும் பொழுது… சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் கலந்து…
1.மீண்டும் எண்ணும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் பதிவாகின்றது.
2.கம்ப்யூட்டரில் எப்படி ரெக்கார்ட் செய்கின்றனரோ அதைப் போன்று பதிவினை உங்களுக்குள் கூட்டப்படும் பொழுது
3.அடுத்து… தீமை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனடியாக அந்த துருவ நட்சத்திரத்தினைப் பற்றிய சிந்தனைகள் வரும்
4.தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றும் சக்தியாக வளரும்.

உதாரணமாக கராத்தே விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டிலே அதற்குத்தக்க தன் அங்கங்களை அசைப்பதும்… எதிராளியைக் கண்டால் தடுப்பதும்… இயக்கங்களை மாற்றுவதும்… விலகிச் செல்வதும்… இது எல்லாமே பழக்கத்தால் வருவது தான்.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்குச் சந்தர்ப்பத்தினை உருவாக்கி அதனைப் பதிவாக்குகின்றோம்.
1.அந்த உணர்ச்சிகள் அவ்வப்பொழுது தூண்டப்பட்டு
2.அந்தந்த நிமிடம் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

அதற்குத் தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் உபதேசிப்பது. அதன் வாயிலாக உபாயங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்… அதைப் பதிவாக்கவும் செய்கின்றோம்.

உதாரணமாக பூப்பந்து ஆடுகின்றார்கள் என்றால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இணைத்துப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தப் பந்து வீச்சின் தன்மையை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது
2.அதற்குத் தக்க அங்கங்களை அசைத்து இந்த விளையாட்டை நாம் சீராக விளையாடுகின்றோம்
3.அதில் கெட்டிக்காரராகவும் ஆகின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை உங்களுக்குள் இணைத்து பதிவாக்கிக் கொண்டால்
1.சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எத்தகைய விபத்தோ மற்ற நிலைகளோ மாறுபடும் பல தீமைகளையோ நுகர நேர்ந்தால்
2.அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்து அதை மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டு வர வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று தான் உங்களுக்குள் ரெக்கார்ட் செய்கின்றேன். “இந்தப் பதிவு” உங்களைக் காக்க வேண்டும்..

பள்ளிகளில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது முதலில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று கொண்டு செல்கின்றார்கள். ஆனாலும் அடுத்தடுத்து அவர்கள் கற்பித்த நிலைகளை… அவரவர்கள் பதிவாக்கிய நிலைகளுக்குத் தக்க வளர்ச்சியில்… டாக்டருக்கோ இன்ஜினியருக்கோ மற்ற துறைகளுக்கோ அவருடைய உணர்வுக்கொப்ப தான் அவருடைய முன்னேற்றம் அமைகின்றது.

இப்படித்தான் மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலை வளர்க்க பல உபாயங்களைத் தேடி… செல்வங்களைத் தேடுவதற்குத் தான் மனிதன் இன்று செயல்படுகிறான்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில்
1.அருள் உணர்வுகளைப் பெருக்கி அருள் செல்வத்தை நமக்குள் பெருக்கி
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டுள்ள மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து
4.என்றும் மகிழ்ந்து வாழும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்

அதற்குண்டான வழி முறைகளைத் தான் பதிவு செய்ய வேண்டும்.

வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவுமே இயற்கையில் இல்லை…!

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகாள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்… நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…! இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனைதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி… ஒலிபரப்பு செய்கின்றனர்.

வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.

அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்….ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்…
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.

ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.

அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் ஆன்மாவாக மாற்றிய பின்… உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.

நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.

அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது…
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது

அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ… நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு… இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்… வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.

நாம் துடிக்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.

சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்… “கிரகம்… தொலைந்து போ…!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.

இது எதனால் வருகின்றது…? நாம் கோபப்படுகின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்… நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதரை ஒரு பைத்தியக்காரர் என்று தான் நானும் ஆரம்பத்தில் எண்ணினேன்

 

நம் மீது அழுக்குப்பட்டாலோ தூசி பட்டாலோ மற்றது பட்டாலோ அதை உடனே தூய்மைப்படுத்துகின்றோம். அதைப் போன்று அந்தந்த நிமிடம் நம் ஆன்மாவில் அறியாது புகும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும். நம் இரத்த நாளங்களையும்த் தூய்மைப் படுத்த வேண்டும்.
1.அப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு நல்ல சக்தி வேண்டும்.
2.நல்ல சக்தி வேண்டுமென்றால் நல்ல சக்தி பெற்ற குரு தேவை.
3.குரு வழியில் அருளை நமக்குள் பதிவு செய்து கொண்டு… குரு காட்டிய வழியினை நினைக்கப்படும்போது நாம் அதைப் பெற முடியும்.

வான்மீகி வியாசக பகவான் போன்ற மகரிஷிகள் கண்டுணர்ந்தது போல நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும்… அவருடைய சந்தர்ப்பம் அகஸ்தியன் பெற்ற அருளையும் அவன் துருவ நட்சத்திரமான உண்மையும் அறிந்தவர்.

அவர் வழியில்… அறிந்த உணர்வு கொண்டு மற்றவர்களுக்கு அவர் எடுத்துச் சொல்லச் சென்றாலும் கூட அவரை அலட்சியப்படுத்திய மக்கள்தான் உண்டு.
1.சில உண்மைகளை அவர் சொல்லும் பொழுது பித்தன்… என்றும் பைத்தியக்காரன்…! என்றும் அவரை எண்ணினார்கள்.
2.என்னிடம் அவர் பழகும் பொழுதும் நானும் (ஞானகுரு) அவ்வாறு தான் எண்ணினேன்… பைத்தியம் பிடித்தவர் என்று.

ஆனால் எம்மை அடிக்கடி அணுகி இந்த வித்தைகளை எல்லாம் நீ கற்றுக் கொள் உனக்கு நல்லதாக இருக்கும் என்பார்.

வித்தை என்றால் “மந்திரவாதிகள் செய்வது போல்” ஏதோ செய்து கோளாறாகி அதனால் இப்படிப் பைத்தியமாக இருக்கின்றார்…! என்று தான் என்னுடைய எண்ணங்கள் இருந்தது முதலில்.

இருந்தாலும் அடிக்கடி ஆவர் எம்மைச் சந்திப்பதும் டீ வாங்கிக் கொடுப்பதும் நான் குடிக்கவில்லை என்றால் திட்டுவதும்… குடித்தால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்பதும்… இந்த நிலை தான் நடந்து கொண்டிருந்தது. குருவை ஆரம்பத்தில் சந்தித்த பின் நடந்தது இது தான்.

அவருக்குத் தெரியாதபடி நான் ரோட்டுக்கு அந்தப் பக்கம் சென்றாலும் அங்கே வந்து பிடித்து விடுவார், எங்கே ஒளிந்து செல்கின்றாய்…? நான் பார்க்கிறேன்…! என்பார்.

எப்படி விலகிச் சென்றாலும் கூட அவர் என்னை விட்ட பாடு இல்லை…!

அந்தச் சந்தர்ப்பத்தில் என் மனைவிக்கு உடல் நலம் குறைவானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்… டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள்…! கடைசியில் “தேறாது…” என்று கூறி விட்டார்கள்.

வீட்டிற்கு அழைத்து வந்த பின்… அதைக் கண்டு மாமனார் இறந்து விட்டார் காரணம் ஒரே பெண். அந்த சமயத்தில் குருநாதர் வந்து “நீ வா…“ என்று என்னைக் கூப்பிடுகின்றார்.

குருநாதர் கூட்டத்தில் சத்தம் போடுகின்றார் இதற்குப் பயந்து அவர் பின்னாடி சென்றேன்.

அப்பொழுதுதான் எனது வாழ்க்கை முழுவதையும் சிறு குழந்தையாக நான் இருந்ததிலிருந்து விவரம் தெரிந்த காலம் வரை நடந்த நிகழ்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துகின்றார்… அத்தனையும் அப்படியே சொல்கின்றார்.

அப்பொழுதுதான்… “அவர் பைத்தியம் இல்லை” என்று நான் தெரிந்து கொள்கின்றேன்.

ஆஸ்பத்திரியில் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்யலாம் என்று டாக்டர்கள் முயற்சித்தாலும் மயக்க மருந்து கொடுக்கும் பொழுது மனைவிக்கு எடுக்கவில்லை. அதனால் ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள் குருநாதர் அதையும் என்னிடம் சொல்கின்றார்

உண்மைகளை அறிந்து கொண்ட பின் பைத்தியம் இல்லை…! என்று உணர்கின்றேன்.

பின்… ஒரு எலுமிச்சம் பழத்தையும் விபூதியும் என்னிடம் கொடுக்கின்றார் உன் மனைவிக்கு இதைக் கொடு… நன்றாக ஆகிவிடுவார் …!என்று சொல்கின்றார்.

இங்கே மாமனார் இறந்து விட்டார்… நான் குருவுடன் சென்று விட்டேன். ஆனால் வீட்டிற்கு மாமனார் இறந்ததைக் கேட்க வந்தவர்கள் எல்லாம்
1.மனைவி இப்படி இருக்கின்றது
2.மாமனாரோ இறந்து விட்டார்
3.அவருடைய மருமகன் பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைப் பேசுகின்றார்கள்.

ஏனென்றல் என் மனைவி இடுப்புக்குக் கீழ் சுத்தமாகக் கால் வரவில்லை படுக்கையில் இருந்ததால் புண்ணும் வந்துவிட்டது.. ஒரு விரல் கூட காலிலே அசையாது.

குருநாதர் சொன்னபடி எலுமிச்சையையும் விபூதியையும் கொடுத்தேன்…! மறுநாள் பார்த்தால் விரல்கள் மற்ற எல்லாம் அசைய ஆரம்பிக்கின்றது.

மனைவி ஆஸ்பத்திரியில் இருந்த போது உடலில் பேண்டேஜ் ஒன்று போட்டிருந்தார்கள். உள்ளுக்குள் பார்த்தால் மூட்டைப் பூச்சிகள் ஏராளம் உடலிலே சொரணை இல்லை இரத்தத்தைக் குடிக்கின்றது. என் மனைவி எழுந்த பின்… பேண்டேஜ் கழட்டும் போது தான் மூட்டைப்பூச்சிகள் உள்ளே இருப்பது தெரிந்தது.

குருநாதர் சக்தி வாய்ந்தவர் என்ற நிலைகளை நான் நம்புகின்றேன். அதற்கப்புறம் குருநாதர் என்னைக் கூப்பிட்டு
1.என்னை நம்புகின்றாய் அல்லவா என்று கேட்கின்றார்
2.கேட்கின்றேன்… நம்புகிறேன் என்று சொன்னேன்.

உன் உயிர் எத்தனையோ கோடி உடல்களை உருவாக்கிய நிலையில் இப்பொழுது நீ மனிதனாக வந்திருக்கிறாய் என்பதை குரு உபதேசிக்கின்றார். பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றார்.

ஒவ்வொன்றாக்க் காண்பித்து இது எந்த தெய்வம்…? இது என்ன தெய்வம்…? என்று கேள்வி கேட்கின்றார். பின் விளக்கம் கொடுக்கின்றார்.

அதே போல் எறும்பு பூச்சிகள் இவைகளுக்கெல்லாம் சாப்பாடு யார் போடுவது…? என்று கேட்கின்றார். மரம் செடி கொடிகளுக்கு யார் சாப்பாடு கொடுப்பது…? அது எப்படி…? என்று கேட்கின்றார். பின் அதற்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றார்.

இப்படி அவருடன் நான் சேர்ந்து சுற்றி வரும் பொழுது எல்லோருமே “என்னைப் பைத்தியக்காரன்…” என்று சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதே போன்று இரவிலே நகரங்களிலே சுற்றச் சொல்வதும் “சில மோசமான பகுதிகளுக்கு” எல்லாம் கூட குருநாதர் கூப்பிட்டுச் செல்வார்.

துர்மரணம் அடையும் மனிதன் அவன் இறந்தபின் (அவன் இறக்கும் தருணத்தில்) மண்ணிற்குள் பதிந்த இரத்தம் அந்த உணர்வலைகள் பதிவாகியது என்ன செய்கிறது…? என்று காட்டுகின்றார்.
1.துர்மரணம் அடைந்த அந்த இடத்தில் மீண்டும் அவன் வெளிப்படுத்தும் ஓசைகள் எப்படி இருக்கின்றது…?
2.அந்த ஆன்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.இன்னொரு உடலுக்குள் எப்படி வருகிறது…? என்று உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் மனிதன் மற்ற உயிரினங்களைக் கொல்லும் பொழுது அந்த உயிர்கள் மனிதனின் ஈர்ப்புக்குள் எப்படி வருகிறது…? வந்த பின் மனிதனாகப் பிறக்கும் தகுதி எப்படி வருகின்றது…? என்று காட்டுகின்றார்.

மனிதன் ஒருவனைக் கொலை செய்கின்றான்… துன்புறுத்துகின்றான் என்றால்… அதன் வழியில் அந்த ஆன்மா எவன் துன்புறுத்துகின்றானோ அவன் உடலுக்குள் சென்று… அதே உணர்ச்சிகளை மீண்டும் இங்கே எப்படி இயக்குகின்றது…?

துன்புறுத்தாதபடி நோய்வாய்ப்பட்டு ஒருவன் இறந்தால் அவனிடத்தில் பாசமாக இருக்கும் பொழுது அந்த ஆன்மா பாசம் கொண்டவருடைய உடலில் எப்படிச் சேர்கின்றது…? என்று இதையெல்லாம் எனக்குள் தெரியப்படுத்துகின்றார்.
1.எத்தனையோ கோடி உடல்களை மாற்றி மாற்றி மனிதனாக வந்தபின் நாம் எந்த நிலை பெறுகின்றோம்…?
2.ஆனால் ஞானிகள் காட்டிய வழியில் எந்த நிலை பெற வேண்டும்…? என்பதை
3.இப்படித்தான் ஒவ்வொன்றாகப் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்து உண்மைகளை எல்லாம் தெரியும்படி செய்தார் குருநாதர்.

முன் ஜென்மத்தின் தொடர்

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.

அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது… உடலிலே பூசிக் கொண்டது.

நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.

மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.
1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.

இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.

நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது…? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது…? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.

1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்… உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.

வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.

மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.

இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.

குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே…” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.

அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.

இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.

இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்…
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் வழியில் உயிர் நம்மை இயக்கிவிடக் கூடாது

 

இந்த உலகம் இருள் சூழ்ந்த நிலையினை நோக்கி ரொம்பவும் நெருங்கிச் சென்று கொண்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

அணுகுண்டுகளுக்கு மனிதர்கள் தப்பித்தாலும் அதில் வெளி வரும் அணுக் கதிரியக்கங்களும் அதிலே கருகிய விஷத் தன்மைகளும் பூமியின் நடுமையும் அடைந்து பூராவுமே கொதிகலனாக ஆகி…
1.மேலே இருக்கக்கூடிய நிலப்பகுதிகளில் எல்லாம் வெப்பங்கள் அதிகமாகி
2.தீயில் வேக வைத்தது போன்று நம்மைப் பூமிக்குள் கொண்டு சென்று வேக வைத்துவிடும்
3.குண்டுகளுக்குத் தப்பினாலும் கூட… இதிலிருந்து யாரும் தப்ப முடியாது

ஏற்கனவே 30 40 வருடங்களுக்கு முன் சொல்லி உள்ளேன் இத்தகைய கதிரியக்கங்கள் நம் பூமிக்குள் என்ன செய்யும்…? என்று…!

இந்த பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் மற்ற கோள்களிலும் அணுக் கதிரியக்கங்கள் வளர்ந்து விட்டது. அதை துருவத்தின் வழி கவரும் பொழுது நம் பூமி வேகமாக உருகும் தன்மை வருகின்றது. பூகம்பங்கள் ஏற்படுகின்றது நில நடுக்கங்கள் வருகின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

எந்த நிமிடம் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடைதல் வேண்டும்… பிறவி இல்லாத நிலையை நாம் அடைய வேண்டும்.

தீமைகள் புகாது தடுக்கும் சேனாதிபதி நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா… பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்.

உதாரணமாக வேதனை என்ற உணர்வை எடுத்தால் நமது உயிர் அதை நமக்குள் பிரம்மமாக உருவாக்கி அடிக்கடி வேதனைப்படும்படி வைத்து விடுகின்றது.

ஆனால் நாம் சொன்னபடி இந்த உயிரை இயக்க வேண்டும்…!

நாம் எண்ணியதைத்தான் உயிர் இயக்குகின்றது… அப்போது அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று முன்னிலைப்படுத்தி… தீமையை நீக்கும் உணர்வாக பிரம்மமாக்கி நமக்குள் அதை உருவாக்க வேண்டும்.

நம்முடைய எண்ணம் தீமைகளை நீக்கும் உணர்வாக வளர்ச்சி பெறும்…
1.ஆகவே பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்
2.அதாவது நான் சொன்னபடி இந்த உயிர் கேட்க வேண்டும்
3.அதன் வழி இந்த உடலை இயக்க வேண்டும்
4.நுகர்ந்த உணர்வுகள் வழி… உயிர் நம்மை இயக்கக் கூடாது.

தீமை நமக்குள் சிருஷ்டியாகக் கூடாது…! என்பதைத் தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்… ஆறாவது அறிவு…” என்ற நிலை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது

இதை மனதில் வைத்து அருள் வழி வாழ்ந்து இருளைப் போக்கி பேரருளைப் பெற தியானித்து அந்த அரும் பெரும் சக்திகளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ளுங்கள்.

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால்… சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.

சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!

பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று “அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்…” என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.

ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது…! என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.

அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெள்ளைப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.

இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.

இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.

வெள்ளைப் பூ விழுகின்றது.

ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள்.

அதன்படி அங்கே இயக்குகிறது.

எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?

என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.

1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.

1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்…
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்…
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்…
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்…!

அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.

உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.

“ஆலய வழிபாடு” என்பதே இன்றைய காலத்தில் எப்படி எப்படியோ மாறிவிட்டது…!

சூட்சமத்தில் நடப்பதை நாம் எப்படி அறிந்து செயல்பட வேண்டும்…? என்று
1.அன்று அகஸ்தியன் உருவ வழிக்கு (தெய்வ) உணர்வுகளை ஊட்டி அருவ நிலைகளை நீ எப்படி நுகர்வது…?
2.அந்த அருவத்தை உனக்குள் சேர்க்கப்படும் பொழுது அந்த ஞானத்தின் வழி உன்னை எப்படிக் காக்க வேண்டும்…? என்று
3.ஆலயங்களிலே சிலைகளை வடிவமைத்தான்.

ஆனால்… சிலையை வைத்து இன்று பூஜை செய்பவரும் சரி ஆலயத்திற்குப் பக்தி கொண்டு செல்வோரும் சரி… துயரத்தைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோமே தவிர “துயரத்தை நீக்கும்… ஒரு சொல் கூட வருவதில்லை…”

கேட்டால் நான் அப்படியெல்லாம் கும்பிடுவதில்லை என்று சொல்வார்கள் பெரும்பகுதியானவர்கள். நான் அப்படிக் கும்பிடுவதில்லை இப்படித்தான் கும்பிடுகிறேன் என்பார்கள் சொல்லுக்குப் பதில் வரும் அவ்வளவு தான்…!

ஆனால் உண்மையின் இயக்கங்கள் நமக்குள் அது வளரும் முறைகளை நாம் கையாள்வது எப்படி…? என்பதைச் சூட்சுமத்தில் நடப்பதைத் தான் உருவத்தை அமைத்துக் கொடுத்தனர் ஞானிகள்.
1.உருவத்தை அமைத்துக் கொடுத்த அந்த ஞானிகளை
2.சிறிதளவாவது நாம் மதிக்கின்றோமா என்றால் இல்லை

அன்று கல்வி அறிவு இல்லை என்றாலும் தெய்வ நிலைகளை எளிதாக எடுத்துக் கொண்டார்கள் அது எல்லாம் படிப்படியாக மாறி இன்று அனைத்துமே வேறு வழிகளில் திரும்பி விட்டது.

அன்றைய பக்தியின் நிலைகள் ஆலயத்திற்குச் சென்றால் அந்தத் தெய்வீக குணத்தைப் பெற வேண்டும் என்று “தெய்வத்திற்கு முன் நின்று… தவறு செய்யக் கூடாது…!” என்ற எண்ணம் இருந்தது.

இன்று தெய்வத்திற்கு முன் நின்று தவறைச் சொல்லிவிட்டு “பார் என்னை என்னைஸ் சோதிக்கின்றாய்…” என்ற நிலை தான் வருகின்றது. கல்வி அறிவு கொண்டு இன்று வளர்ந்து கொண்டவர்கள்
1.தவறையும் செய்துவிட்டு… தெய்வத்திடம் சென்று தன்னை நியாயப்படுத்தி
2.அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்பவர் தான் பலர் உண்டு.

ஞானிகள் காட்டிய உணர்வுகளை இதுவரை நாம் பெறவில்லை…! கொலை செய்பவனும் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றான்
1.என்னை இப்படியே தொல்லை படுத்திக் கொண்டிருக்கின்றான்… நீ கேட்க மாட்டேன் என்கிறாய்.
2.அதனால் அவனைத் தொலைத்து விட்டு உனக்கு வந்து நான் காணிக்கை செலுத்துகிறேன் என்று போடுகின்றார்கள்… இப்படியும் உண்டு.

நான் காளியாக மாறுவேன் பேயாக மாறுவேன் அதன் வழியில் நான் செயல்படுத்துவேன் ஏனென்றால் காளி கோவிலில் ஆட்டையும் கோழியையும் கொடுத்துவிட்டு… பார்…! எனக்கு அவன் இடைஞ்சல் செய்தான்…! அதற்காக வேண்டி ஆட்டைப் பலியிட்டு அவன் நாசமாகப் போக வேண்டும் என்று இப்படித்தான் கும்பிடுகின்றார்கள்.

“ஒன்றுமறியாத ஜீவன்களை அங்கே கொல்கின்றோம்…” என்பதை மறந்து விடுகின்றார்கள்

இதைப் போன்று எத்தனை துயரின் நிலைகளைத் தான் தெய்வம் என்ற நிலையில் வளர்க்க முடிகின்றதே தவிர அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற முடியவில்லை.

சாதாரண பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் ஆலயத்திலே சிலைகளை வைத்தார்கள் ஞானிகள். இது இந்த குணம் கொண்டது என்று ஸ்தல புராணங்களை வடித்து நீ முதலில் எதை எடுக்க வேண்டும்…? என்ற நிலையில் அதைக் காட்டுகின்றார்கள்.

அது மட்டுமல்லாமல்…
1.அங்கிருக்கும் சிலைக்கு எத்தனையோ அபிஷேகங்களைக் காட்டி
2.உயிரான ஈசனுக்கு நாம் ஊட்ட வேண்டிய நல் உணர்வுகளை… அருள் மணங்களை… அங்கே உணர்த்துகின்றார்கள்.

ஞானிகள் காட்டிய வழியில் உயிரான ஈசனுக்கு நல் மணங்களை ஊட்டினால் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்… தெய்வீகப் பண்புகளை வளர்க்க முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.

நிலையான சொந்த பந்தம்

 

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நம் கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக எப்படி உருவாகிறது…? என்றும்
3.உருவான அணு தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிருக்கு எட்டி
4.உயிரின் தன்மை ஆணையிடும் போது சிறுமூளையின் பாகம் செல்லப்படும் பொழுது
5.உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி… கண்ணுக்கும் உடலுக்கும் செவிக்கும் நம் மனதிற்கும்
6.அதே உணர்வுகளை ஈர்த்து நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது…? என்ற நிலையை
7.வியாசகர் இதைத் தெளிவாக உணர்த்தி உள்ளார்.

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்த குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் தான் வழி நடத்திச் செல்கின்றான் என்றும் காட்டியுள்ளார்.

ஒருவர் செய்யும் தீமையான உணர்வுகளை ஒரு தரம் நாம் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது… நம் உயிருடன் சேர்ந்து அந்த உணர்வுகள் சங்கநாதமாக அந்த ஒலிகளை எழுப்புகின்றது… குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதாவது கண்களால் அவர்களை நினைத்து நாம் சுவாசித்தபின்
1.உயிரிலே படும்பொழுது அந்த உணர்வுகளை இயக்குகின்றது.
2.ஒலி அலைகள் கிளம்பிய பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள் எழும்பி
3.நாம் எதை எண்ணினோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனப்படுத்தச் செய்கின்றது. நம்முடைய செயல்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

உதாரணமாக நம் பையன் மீது ஒரு கடுமையான வெறுப்பு வந்து விட்டால்… பையனுக்காக வேண்டிச் சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த சொத்தையும் கூட… அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கும் உணர்வு தான் வரும்.

இந்த நொறுக்கும் உணர்வுகள் வரும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று வியாசகர் அதைத் தெளிவாகச் சொல்கின்றார்.

வியாசகர் என்றால் அவன் மூடனாக இருக்கும் பொழுது
1.வியாபித்திருக்கும் உணர்வுகளை எல்லாம் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்றான்
2.அனைத்தையும் அறியும் நிலை வந்ததால் அவனுக்கு வியாசகன் என்று காரணப் பெயரை வைத்து அழைத்தார்கள் அக்காலங்களில்…!

பகவான்… தனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அந்த உணர்வை நுகர்ந்தறிந்தான். அதைப் பரமாத்மா என்று ஒரு பெயரை வைத்தான் அதாவது தனக்கு முன் பரத்தில் (பரவி) இருக்கக்கூடிய ஆன்மாவைத் தனக்குள் எடுத்தான். அந்த உணர்வின் தன்மை வளர்த்தான் என்பதற்குத்தான் அவருக்கு வியாசக பகவான் என்று இப்படி ஒரு பெயரை வைத்தார்கள்.

உதாரணமாக ஒருவர் அடிக்கடி நமக்குத் தொந்தரவு செய்கிறார் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதே சமயத்தில் எதிரியினுடைய உடல்களிலும் இதே உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

1.தொந்தரவாகும் போது நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்
2.அப்போது அந்த வெறுக்கும் உணர்ச்சிகளை அங்கேயும் தோற்றுவிக்கின்றது.

ஆக… நமக்குள் அந்த உணர்வு அது தன் உணவுக்கு அது போராடுகின்றது. அதே போல் அதனதன் உணவுக்கு அங்கேயும் (எதிரியிடமும்) போராடும்.

எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்… அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தி வருகின்றது.

ஆனால் இதைத் தடைப்படுத்தும் உணர்வுகளை எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் பகைமைகளை வென்றவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தது என்றால் நாரதன் என்று காரணப் பெயர் என்று வைக்கின்றார்கள்.

1.அந்த அலைகளை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகின்றது
2.நாரதராக நமக்குள் சென்றபின் நாம் எதைப் பிடிவாதமாக வைத்தோமோ அந்த உணர்வைத் தணிக்கச் செய்து விடுகின்றது.

நாம் யார் மேல் வெறுப்பு அடைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி நம் கண்களை அங்கே செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள் நாரதனுக்குண்டான செயல்களை இங்கே (நமக்குள்ளும்) சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள்ளும் அந்த உணர்வின் தன்மை பாய்ந்து
3.அந்த நாரதன் வேலையைச் செய்வான்.

நம்முடைய உணர்வுகள் பகைமையாக்கும் உணர்வை மாற்றிடும் தன்மையாக இந்த அருள் ஞான உணர்வுகள் அங்கே ஊடுருவி… சற்று சிந்திக்கச் செய்யும் சக்தியாகவும் வருகின்றது.

அது தான் நாரதன் கண்ணனிடம் சென்றபின்…
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.இந்த கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு இயக்கச் செய்கிறது…? ஒன்று சேர்ந்து வாழச் செய்கிறது…? என்று
3.இவ்வளவு தெளிவாக வியாசகர் உணர்த்தி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்…!

நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவனாக இருக்கப்படும் பொழுது குருநாதர் அருள் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார்.
1.அவர் கூறியதை எல்லாம் உற்று நோக்கினேன்… உணர்வுகளைப் பதிவாக்கினேன்.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது
3.காற்றலைக்குள் இருக்கும் பல தீமைகளை அறியக்கூடிய பக்குவங்களை குரு ஏற்படுத்தினார்.

அந்தப் பக்குவங்களை எல்லாம் நீங்களும் பெறுதல் வேண்டும்…!

ஏனென்றால் நீங்கள் படித்து உணர்ந்து வருவதற்கு முன்
1.உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்தால்
2.உங்களுக்குள் அது நுண்ணிய நிலையில் வேலை செய்யும்.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் பதிவாக்கியதை எல்லாம்… அது சீராக இயக்கிக் காட்டுவது போன்று தான் உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம். அதன் வலுக் கொண்டு… நாளை வரும் விஞ்ஞான அறிவால் விஷத்தன்மைகள் தாக்கினால் அதிலிருந்து மாற்றி அமைத்து அதற்குத்தக்க நீங்கள் வாழ முடியும்.

அதனை மாற்றி அமைக்கவில்லை என்றால் விஷத்தன்மைகளாக மாறி விஷப் பூச்சிகளாக ஆகிவிடுவோம். அது போன்று ஆகாதபடி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்களுடைய நினைவுகளை அழைத்துச் சென்று என்றும் பிறவியில்லா நிலை அடைவது தான் கடைசி நிலை… அதுதான் கல்கி.

இதிலே வீழ்ச்சி அடைந்தால் ஆரம்ப நிலையாகப் புழு பூச்சிகளாக ஆகிவிடுவோம்… அப்போது அது கலியாக மாறுகின்றது.

ஏனென்றால் குருநாதர் இது அனைத்தையும் எனக்குத் தெளிவாக்கினார்.

நினைவினைக் கூட்டி அதை அறிந்து கொள்…! என்று இந்த உணர்வினை எனக்குள் கொடுத்தார்.
1.அவர் பதிவு செய்த நிலை கொண்டு தான் எனது நினைவால் அனைத்தையும் அறிய முடிகின்றது.
2.அறிந்த பின் தீமை நீக்கும் உணர்வுகளை வலுப்பெறச் செய்ய முடிகின்றது.

அதைப்போல உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறோம். எந்தச் சந்தர்ப்பத்தில் பூமிக்குள் கடும் விஷத்தன்மைகள் பரவினாலும் அந்த விஷத்திற்குள் நீங்கள் சிக்கிடாது
1.உங்கள் நினைவாற்றல் அந்தக் கடைசி நினைவு
2.துருவ நட்சத்திரத்தின் பால் வரட்டும்.

ஒவ்வொரு நொடியிலும் உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுங்கள். தீமைகளை அகற்றுங்கள் அருள் உணர்வைப் பெருக்குங்கள்.

எந்த நிமிடம் உயிர் வெளியே சென்றாலும் இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி இல்லை என்ற நிலையில் உயிருடன் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்ல வேண்டும்..

குருநாதர் எனக்குள் இதைப் பதித்ததினால் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன் உங்கள் நினைவுகள்…
1.கடைசி நிமிடத்திலேயாவது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும்.
2.அதன் ஈர்ப்புவட்டத்தில் செல்லலாம்
3.அப்படி எண்ணக்கூடிய வலிமை நீங்கள் பெற வேண்டும்…!

அத்தகைய வலிமையான எண்ணம் (நினைவாற்றல்) வந்தால் அதன் துணை கொண்டு உயிர் உங்களை அங்கே அழைத்துச் செல்லும்… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அமையும்படி செய்யும்.

“மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை…”

 

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.

அதைத் தான் வாலி என்று சொல்வது.

இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.

ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.

இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.

இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.

சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.

சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.

இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.

அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.

ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் சேமித்துக் கொண்டே வந்தால் நம் சிந்தனை எப்போதும் தெளிவாக இருக்கும்

 

நஞ்சினை நீக்கிடும் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சியில் வந்த இந்த மனித உடலில்… இப்போது அன்றாட வாழ்க்கையில் வரும் விஷத்தன்மைகளை நீக்கத் தவறினால்… மீண்டும் அந்த விஷத்தினையே சிறுகச் சிறுகச் சேர்த்து விஷம் கொண்ட உயிரணுக்களாக நம்மை அது மாற்றிவிடும் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே அந்த விஷத்தை அவ்வப்போது நீக்க வேண்டும் என்றால்
1.விஷத்தை அகற்றி இன்றும் ஒளியின் சுடராக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும்
2.அதை நீங்கள் பெறுவதற்குத்தான் அடிக்கடி “துருவ நட்சத்திரத்தைப் பற்றி” உங்களுக்கு யாம் (ஞானகுரு) உபதேசிப்பது.

துருவ நட்சத்திரமாக ஆவதற்கு முன் அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை அகற்றிய உணர்வுகளும் இந்தப் பூமியில் படர்ந்துள்ளது

அகஸ்தியன் துருவனான பின் வளர்ச்சியில் திருமணமாகி… திருமணமான பின் கணவனும் மனைவியும் இருவரும் ஒன்றாகி… நஞ்சினை அகற்றிடும் அணுக்களைத் தனக்குள் உருவாக்கி… இரு உயிரும் ஒன்றாகித் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளார்கள்.

நம் பூமிக்குள் வரும் அல்லது இந்த பிரபஞ்சத்திற்குள் படர்ந்து கொண்டிருக்கும் உணர்வலைகளை ஒளியாக மாற்றிக் கொண்டு இன்றும் ஏகாந்தமாக நிலை கொண்டு இருக்கின்றார்கள்.
1.எந்த விஷத் தன்மையும் அவர்களைத் தாக்குவதில்லை…
2.விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…
3.அதை நாம் அனைவரும் பெற வேண்டும்.

வைரம்… அதில் விஷத்தன்மை அதிகரிக்கப்படும் பொழுது அந்த விஷத்தின் உணர்வுகள் கொண்டு தான் அதனின் (வைரத்தின்) வீரிய சக்தியை வெளிப்படுத்துகின்றது.

வைரத்தைப் போல் விஷத்தை அடக்கி உணர்வை ஒளியாக மாற்றிடும் அணுக்களை உருவாக்குவது தான் நாம் செய்யும் காலை துருவ தியானத்தின் முக்கிய நோக்கம்.

ஏனென்றால் இந்த மனிதனுக்குப் பின் அடுத்த நிலை… பிறவி இல்லா நிலை தான்…!

இந்த மனித வாழ்க்கையில் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்…! என்றால் வாழலாம். ஆனாலும் நாம் நுகர்ந்தறிந்த விஷத்தின் தன்மை நம் உடல் அணுக்களில் சேர்க்கச் சேர்க்க… இந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

நாம் எடுத்துக் கொண்ட குணங்களின் தன்மை எதுவோ அதுவாக உயிர் மாற்றிவிடும். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றிக் கொண்டே இருப்பதும்
2.உங்களுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு வீரிய உணர்வை ஊட்டுவதும்
3.பகைமை உணர்வுகள் வராது தடுப்பதும்
4.தீமை தனக்குள் வராதபடி தடுக்கும் சக்தியையும் நீங்கள் பெறுவீர்கள்
5.அதன் உணர்வு கொண்டு சிந்தித்துச் செயல்படும் திறனும் நீங்கள் பெறுவீர்கள்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்கள் இரத்த நாளங்களில் பெருக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

எத்தகைய துயரமோ கஷ்டமோ மற்ற நிலைகளைக் கேட்டு உணர்ந்து வாழ்க்கையை வழிப்படுத்தி நடத்த அவைகளை நாம் உபயோகப்படுத்தினாலும்… அப்படி நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் விஷம் கொண்டதாக மாறிவிடுகிறது.

அத்தகைய விஷத்தினை மாற்றி அமைக்கும் சக்தி நமக்கு வேண்டும். அதற்கு நாம் நுகரும் உணர்வுகள் விஷத்தை முறித்திடும் சக்தியாக வர வேண்டும்.

நமது உடல் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சினைப் பிரிக்கின்றது. ஆனால் நஞ்சின் தன்மை நம் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்து விட்டால்… நஞ்சையே நுகரும் நிலையாகி அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

ஆகவே அதைத் தடுக்க
1.நஞ்சினை வென்று ஒளியாக நிலை கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் நிலையும்
2.அதன் தொடர் கொண்ட நஞ்சினை வென்ற உணர்வுகளையும் நாம் நுகர்ந்து
3.நம் இரத்த நாளங்களில்… நம் உடலில்… சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே சமயத்தில் இன்றைய காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருக்கப்படும் போது நம் உடுத்தியிருக்கும் ஆடைகளிலும் நஞ்சினை ஈர்க்கும் சக்தி வருகின்றது.
1.ஏனென்றால் ஆடைகளில் விஷம் கலந்த கலர்களைத்தான் இணைத்துள்ளார்கள்.
2.அது நம் உடல் வெப்பத்தினால் அதில் இருக்கும் விஷம் எத்தன்மையோ அதன் உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து
3.நமது ஆன்மாவிற்குள் கொண்டு வருகிறது… அந்த விஷத்தன்மையையே நாம் நுகர்கின்றோம்.
4.நம் உடலில் உள்ள அணுக்களுக்கும் சிறுகச் சிறுக விஷத்தின் தன்மையே சேர்கின்றது.

விஷத்தை வென்றிடும் சக்தியைச் சேர்ப்பதகு மாறாக விஷத்தின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… விஷத்தையே உணவாக உட்கொள்ளும்… விஷத்தின் துணை கொண்டு வாழ்ந்திடும் நிலையே… இன்றைய காலங்களில் வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தை அடக்கி வைரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று நாம் ஆக வேண்டும் என்றால் காலை துருவ தியானத்தில் கணவன் மனைவி இருவருமே… அந்த சக்தி கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் எண்ணுதல் வேண்டும்.

சர்வ நஞ்சுகளிலிருந்தும் நாங்கள் விடுபட வேண்டும் என்று இருவருமே சேர்ந்து
1.குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.எங்கள் குழந்தைகளுக்கு அந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.அமைதி கொண்டு வாழும் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் நமக்குள் விஷத்தின் தன்மை சேராது தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே ஒவ்வொரு நாளும் காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் இரத்த நாளங்களிலே அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வரவேண்டும்.

வெளியில் எங்கே சென்றாலும் இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து எந்த விதமான அசம்பாவிதங்களும் நடக்காதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

 

இந்த உலகினிலே ஜீவன் பெற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம்
1.தான் ஜீவன் பெற்ற நிலையை அறிந்து
2.ஜீவாதார உண்மையுடன் ஜீவித்து – இந்த ஜீவனை
3.நம் உடலில் ஜீவன் உள்ள பொழுதே நாம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
4.பல வழிகளையும் வழி முறைகளையும் மகரிஷிகள் நமக்களித்தார்கள்.
5.அந்த வழிகளை எல்லாம்… முறைகளை எல்லாம்… பல வழிகளில் மாற்றி விட்டார்கள்.
6.அவரவர்களுக்கு ஒரு மதம் என்ற நிலயில் ஒவ்வொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தன் சுற்றத்தார்களுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஏற்படுத்திக் கொண்டு பல சடங்குகள்… பல சாஸ்திரங்கள்… என்று பார்த்து நம் மூதாதையர்கள் காலத்திலிருந்தே நம் குடும்பத்தில் இந்நிலையில் தான் எல்லா நிலைகளும் நடந்து வருகின்றன…! என்று உண்டாக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு உண்மை நிலைகளையும் தன் தன் நிலைக்கேற்பத் தன் மதத்தின் வாயிலாக அதையே ஒரு வழக்கமாக்கிக் கொண்டு அதனால் வரும் எண்ணச் சிதறல்களைப் பற்றி எண்ணாமல்
1.ஒவ்வொருவரும் மதம் என்ற ரூபத்தையே கொண்டு வந்து
2.அதனுள் சிக்கிக் கொண்டு மதத்தையே “மதமாக்கி” வாழ்கிறார்கள்.

மதத்தினால் வந்திடும் நன்மைகள் என்னப்பா…? பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அம்மதங்களின் வாயிலாக ஆண்டவனின் சக்தியையே பிரித்துக் கொண்டார்கள்.
1.இவர்கள் பிரித்த நிலைக்கு வருவதல்ல அந்த ஆண்டவனின் சக்தி.
2.அச்சக்தியின் நிலை எல்லோருக்கும் பொதுவானதே.

அன்று ஆண்ட அரசர்கள் தன் நிலைக்கு அடிபணியப் பல மந்திரிகளையும்… அந்த மந்திரிகளுக்கு ஊழியம் செய்ய அதற்கொத்த சேவகர்களையும்.. இப்படியெல்லாம் ஏற்படுத்தித் தன் ஆட்சி நிலை நிலைத்திருக்கத் தன் நிலைக்கு உகந்தபடி அவரகள் செய்த நிலையில் இருந்து தான் “ஜாதி மதங்களே” இன்றைய உலகில் பெருகி உலவி வருகின்றன.

1.அவ்ஈசனின் சக்தியில் இஜ்ஜீவ ஆத்மாக்களை ஜாதி மதங்களாகப் பிரித்து அனுப்பவில்லையப்பா…!
2.எல்லா உயிரணுக்களும் அந்த ஆண்டவனின் சக்தி பெற்று ஒரே நிலையில் தான் உதிக்கின்றன.

இந்நிலை இருக்கும் பொழுது ஜாதி மத வேறுபாடுகளை இவர்கள் உண்டு பண்ணி தன் தன் நிலைக்கேற்ப தான் வாழ… தன் சுற்றத்தார் வாழ… என்ற நிலையை எல்லாம் ஏற்படுத்தி மனித எண்ணத்தையே பெரும் கேள்விக்குறியாக ஆக்கிவிட்டார்களப்பா…!

1.எல்லோரும் ஓர் மதம்…
2.எல்லோரும் ஓர் குலம்…! என்ற
3.உண்மை நிலையை உணர்ந்து வாழ்பவர்கள் அரிதிலும் அரிது.

எந்த நிலை கொண்டு எப்படிப் புகட்டினாலும் உபதேசத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அரிதாக உள்ளார்களப்பா..!

1.அடுத்தவன் நிலையைக் கண்டு ஏங்குபவனும்
2.அடுத்தவனின் புகழுக்காக வாழ்பவனும் தான் இன்றைய நாட்டில் மிகுந்து உள்ளனரப்பா…!

தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் தான் பெற்ற ஜீவ சக்தியின் நிலையையும் பற்றி இனியும் புரிந்திடாமல்… அந்த நிலையிலேயே வாழ்ந்திடாமல்…
1.நம் எண்ணத்தைக் கொண்டு தான்..
2.நாம் விடும் சுவாச நிலையிலிருந்து தான்..
3.நம் நிலைகள் எல்லாமே நடக்கின்றன…! என்று உணர வேண்டுமப்பா…!

எண்ணத்தையும் சுவாசத்தையும் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் “அப்புருஷோத்தம ஜெபத்தை” ஏற்ற புனித ஆத்மாவாக என்றுமே இருந்திடலாம்.

நாம் ஈர்க்கும் ஒவ்வொரு சுவாச அலையும் நம் உடலுக்கும்.. நம் உணர்விற்கும்… நம் உயிர் நிலைக்கும்.. எப்படியெல்லாம் எந்தெந்த நிலை ஏற்படுத்தி நம் உடலும்.. உணர்வும்… உயிரும்… எந்த நிலையில் உள்ளன..? என்று நாம் ஜெபத்திலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

இன்றிருக்கும் ஜாதி மதத்திற்கு அடிமையாகாமல்… வழி முறையில் உள்ள பல சடங்குகளுக்கும் சாங்கியங்களுக்கும் நாம் அடிமையாகாமல்…
1.நம் எண்ணத்தையும் சுவாசத்தையும்
2.அவ்வீசனின் சக்திக்கே அடிபணியச் செய்தல் வேண்டுமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

என்னை வேதனப்படுத்தினான்… துன்பப்படுத்தினான்… என்று ஒரு புறம் நாம் மற்றவர்களை எண்ணினாலும் அன்புடன் பாசத்துடன் ஒருவருடன் பழக்கப்படும் பொழுது “அவர் நோயால் வேதனைப்படுகின்றார்…” என்றால் அந்த வேதனையை நாம் நுகர்ந்தால் வாலியாகி விடுகின்றது.

அந்தச் சமயத்தில் நமக்குள் இருள் தான் சூழ்கிறதே தவிர நல்லதை எண்ண முடியவில்லை. இந்த நஞ்சின் தன்மை நமக்குள் ஆன பின் உணர்வின் ஒளியின் (வெளிச்சத்தை) நிலையை நாம் காணும் நிலைகள் மறைக்கப்படுகின்றது.

1.இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் எதைப் பெற வேண்டும்…?
2.எந்த வழியில் நாம் வாழ வேண்டும்…?
3.எதன் வழிகளில் இந்த வாழ்க்கை வழி நடத்த வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவுபடுத்தும் நன்னாள் தான் திரு அண்ணாமலை தீபம்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று நம் உயிரின் தன்மை கொண்டு வேண்டும் போதெல்லாம்
1.மலையின் உச்சியில்… அதாவது உடலின் உச்சியில்… உயிரான அண்ணாமலையிடம் தான் வேண்டுகின்றோம்.
2.அவன் புருவ மத்தியில் தான் அமைந்துள்ளான்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் நாம் பார்ப்போர் அனைவரும் அந்த நிலை பெற வேண்டும் என்றும்
1.நம் நினைவாற்றலை இங்கே கொடுக்கப்படும் போது
2.நமக்குள் பகைமையூட்டும் உணர்வின் தன்மைகளை அது மறைத்து விடுகின்றது… அதை அடக்கிவிடுகிறது.
3.இப்படித்தான் நமக்குள் ஒளியின் சுடராக… வளர்க்கும் ஜோதியாக… நாம் தீபமாக முடியும்.

ஆனால் அங்கே (உச்சியிலே) வெறும் ஜோதியைப் பார்த்து அருள் ஒளியாக நாம் மாற முடியாது…!

ஆகவே அனைவரது குடும்பங்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர் செயல்கள் ஜொலிக்க வேண்டும்… வைரத்தைப் போன்று அவர்கள் எண்ணம் ஜொலிக்க வேண்டும்… அவர்கள் சொல்லில் இனிமை பெற வேண்டும்… என்று
1.அனைவருக்காகவும் நாம் இப்படி எண்ணும் போது
2.;அனைவரின் உணர்வுகளையும் நமக்குள் ஒன்றாக ஒளியாக இணைத்துக் கொள்கின்றோம்.

சாதாரணமாக காரம் உப்பு கசப்பு துவர்ப்பு இவை எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சுவைகள் தான் ஆனால் அதே சமயத்தில் சாதமோ ஒன்றாக வெண்மையாக இருக்கின்றது.

மாறுபட்ட சுவை கொண்ட பலசரக்குகளை ஒன்றாக இணைத்து அவைகளைச் சுவையின் உணர்ச்சியாகத் தூண்டி சப்… என்று இருக்கும் பொருளுடன் கலக்கப்படும் போது அது உணர்ச்சியின் தன்மை கொண்டு நாம் உணவாக ஏற்றுக் கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான்…
1.நம் வாழ்க்கையில் பிறருடைய தீமையின் உணர்வுகள் நமக்குள் வந்தாலும்
2.அந்த அருள் ஒளியின் சுடரைக் கொண்டு பகைமை உணர்வை மாற்றி
3.நமக்குள் சுவை கொண்ட உணர்வாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உணர்வின் தன்மை நம் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது… உடலில் உள்ள முந்திய நிலைகள் பகைமை உணர்ச்சிகளைத் தூண்டும் அந்த அணுக்களை… நமக்குள் நோயாக மாற்றி நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கும் அத்தகைய நிலைகளிலிருந்து மாற்றிட முடியும். அத்தகைய நன்னாள் தான் கார்த்திகை தீபம்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் கலந்த நிலையில் அது பகைமை ஊட்டும் உணர்வின் அணுக்களாக விளைந்ததனால் தான் நமக்கும் நோய் வருகிறது.

இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நாம் பார்த்த அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணங்களைச் சொன்னால் போதும்…!

1.அவர்கள் வாழ்க்கையில் வைரத்தைப் போல ஜொலிக்க வேண்டும்… அவர்கள் செயலும் ஜொலிக்க வேண்டும்…
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
3.எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும் சொல் ஜொலிக்க வேண்டும்
4.எங்கள் சொல்லைக் கேட்போர் ஜொலிக்க வேண்டும் என்று இந்த உணர்வினைக் கலந்து பாருங்கள்..

வாலி என்ற வேதனைப்படுத்தும் இந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் தான் உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களை அழிக்கின்றது… நல்ல செயலையும் ஓடுக்கின்றது.

ஆனால் மேலே சொன்னபடி அனைவரது வாழ்க்கையிலும் ஜொலிக்கும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அந்த வாலியை நாம் நேரடியாகப் பார்ப்பதில்லை.

அருள் ஒளியின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அனைவரும் ஜொலிப்பின் தன்மை பெற வேண்டும் என்று எண்ணும் பொழுதும்… அதே சமயத்தில் அவர்கள் உடலிலிருந்து வெளிப்படும் இதே உணர்வுகள் அவர்களும் இதைப் போல அருள் ஒளியின் சுடரை எண்ணும் போது நமக்குள் அறியாது வரும் நோயைத் துரித நிலைகள் கொண்டு மாற்றும்.

எண்ணத்தால் உருவாக்கப்பட்ட… “உடலுக்குள் நடக்கும் இராமாயணம்”

 

ஒவ்வொரு நாளும் எந்தெந்த குணங்களை நாம் நுகர்கின்றோமோ உயிருடன் ஒன்றிய சக்தியாக அது மாற்றுகின்றது
1.நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் அதற்குண்டான சக்தியாக மாற்றுகின்றது.
2.அப்படி இணைந்த நிலைகளில் அது அது… தன் தன் இனத்தைப் பெருக்கத்தான் முயற்சிக்கும்.

இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்தது சாந்தமான குணம் கொண்ட இராமன். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக்கூடியவன்… இந்த உடலை… அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்ற உணர்வைத் தாய் எண்ணுகின்றது.

இராமனின் தாய் அப்படி எண்ணினாலும்
1.ஆசையால் நுகர்ந்த உணர்வு… அதே ஆசையின் நிலை கொண்டு…
2.அதாவது பரதனுடைய தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறது.

நல்லவனுக்கு… தலைமகனுக்கு… இந்த பட்டத்தைச் சூட்டினால் இந்த சாம்ராஜ்யத்திற்கு நன்றாக இருக்கும் என்ற ஆசை கொண்டு வளர்த்தாலும்
1.சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே சிறந்தவன் என்று பரதன் சொல்கின்றான்.
2.இதை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.
3.(அண்ணன் என்று செயலாற்றினாலும்… அவன் வரும் வரையிலும் அவன் காத்திருந்தான் என்று உணர்த்துகின்றார்கள்).

ஆகவே இராமனுடன் சேர்ந்தால் அவருடன் இணைந்து அவன் போக்குக்குச் சென்று விடுவான் என்று பரதனுடைய தாய் எண்ணுகின்றது. அப்போதுதான் இராமனைக் காட்டுக்கு அனுப்புகின்றது.

காட்டிற்குள் 12 வருடம் வனவாசம் சென்றால் “அந்த ஒரு மண்டலத்திற்குள்” பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனின் ஆட்சி வந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று சூழ்ச்சி செய்கின்றது.

இதற்கென்று சூதின் நிலைகளை உபதேசிக்கக் கூடியவர்களின் (கூனி) உணர்வுகளை அந்தத் தாய் செவிகளில் கேட்கின்றது.
1.ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசை என்ற நிலையில் வரும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி மாற்றுகின்றது…? என்பதை…
2.ஒருவர் வாழ்வதைப் பார்த்தபின் “அந்த வாழ்க்கை வாழ வேண்டும்…” என்று தன் மகனையே காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணம் எந்தச் சக்தியோ அந்தந்த இனத்தைப் பெருக்கத்தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதனைத் தெளிவாக்குகின்றனர்.

உயிர்… தான் நுகர்ந்ததை எல்லாம் தன் சக்தியாக ஆக்கினாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்ற நிலையை அங்கே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி.

நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும் நுகர்ந்த உணர்வுகள் உடலாகிறது… அதன் வழி கொண்டு உருப்புகளாகின்றது அந்த உறுப்புகளின் வளர்ச்சியைக் கொண்டுதான் இராவணன்…! அதாவது
1.அவன் சகலகலா வல்லமை பெற்றவன் எல்லா இசைகளிலும் அவன் வல்லவன் சர்வ வல்லமை கொண்டவன் என்று
2.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் அதனுடைய உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
3.அதன் இசைகளுக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது
4.இசைகளிலே வல்லவன்… இவன் சிவனை வணங்குகின்றான்… “உடல் மீது பற்று கொள்கின்றான்” என்று காட்டுகின்றார்கள்.

ஆதே சமயத்தில்… தசரதன் என்றால் பத்தாவது நிலையை அடையக்கூடிய உயிர்… தான் பல உணர்வுகளை எடுத்தாலும் “சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது…” தன்னுடன் இணைத்துக் கொண்ட சக்தி (கைகேயி) தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று
1.நல்லவன் ஆட்சி புரிய வேண்டுமென்று ஆசை வளரப்படும் பொழுது
2.அப்பொழுது எந்த நிலை…? என்று காட்டுகின்றார்கள்.

சிவன் என்ற உடல் வரப்படும் பொழுது இராவணன் தன்னுடன் இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை “மற்றொன்றின்” அழகைக் கண்டு இராமனை அவள் விரும்புகின்றார்.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று விரும்பினாலும்… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள்… அவளை ஒதுக்கினால் தானே இங்கே வருவான். ஆகவே அவனுடைய மனைவியை மற்றவருடன்கு சேர்த்து விட்டால் அதற்குண்டான நிலையில் தனக்குக் கிடைக்கும் என்று அவளுடைய அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

அவள் அழகாக இருந்ததால் “என்னை இராமன் அவமதித்தான்…” என்று குறை கூறி இந்த உணர்வை இராவணனிடம் ஊட்டுகின்றாள். இதை உற்றுப் பார்க்கும் போது இராவணன் சீதாவை அடைய ஆசைப்படுகின்றான்.

இந்த உணர்வு அவனுக்குள் வரும் பொழுது
1.அவன் சகல வல்லமை பெற்றிருந்தாலும் பத்தாவது நிலையை அடையும் இந்த உணர்வுகள்
2.அதனால் பகைமை உணர்வுகள் உடலுக்குள் எப்படித் தோற்றுவிக்கின்றது…? என்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் அவனுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் தூங்குகின்றது… கும்பகர்ணன்…! என்றுமே அந்த நல்ல குணங்கள் தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அவன் மிக மிக நல்லவன்…! (தீமையின் நிலை அதிகரிக்கும் போது நல்ல குணங்கள் செயலிழந்திருப்பதை அப்படிக் காட்டுகின்றார்கள்).

தான் நுகரும் உணர்வுகளால் எது உருவாகின்றதோ…
1.வெறுக்கும் உணர்வுகளும் ஆசையின் உணர்வுகளும் வரப்படும் பொழுது
2.இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது.
3.இராவணனை அவன் மகனே எதிர்க்கும் நிலை வருகின்றது.

இயற்கையின் சக்தி நல்லவன் என்று வரப்படும் பொழுது… தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது.

இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்தபின் இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ… அனைத்தும் “சோக இசைகளாக மாறுகிறது…!”

தன் உணர்வின் தன்மை… இராமனுக்கு யார் காவலனாக தூதுவனாக இருக்கின்றார்…? ஆஞ்சநேயர்.
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்… “இராமா லட்சுமணா” என்றாலும்
2.ஒரு சுவையின் சத்தை… தனக்குள் எதை எடுத்துக் கொள்கின்றதோ (சீதாலட்சுமி) அந்த குணத்தைக் காக்க
3.அந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.
4.இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவான்.

அதாவது வேதனை என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்… அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக… மற்றதை (நல்லதை) அது அடக்கும்.

எந்த உணர்வின் தன்மை…? அந்த எண்ணங்கள் தான்…!

ஆக எதைக் கவர்ந்ததோ அதன் உணர்வின் தன்மை “சீதா…” என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளையே அங்கே தூண்டுகிறது. இதைக் காட்டுவதற்கு ஆஞ்சநேயர்… தாவிச் செல்லும் உணர்வுகள்…! என்று காட்டுகின்றார்கள்.
1.ஒரு உணர்வின் உணர்ச்சி எவ்வாறு செயல்படுகிறது…?
2.மற்றவர்களை அது எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது…?
5.உணர்வுகள் எப்படி உடலாகின்றது…?
6.உணர்வுகள் எப்படி அதனதன் உணர்ச்சியின் தன்மையைத் தூண்டுகிறது…? என்ற நிலையை
7.அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் தெளிவாக உணர்த்துகின்றார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக உங்கள் காலில் அடிபட்டு வலியுடன் இருக்கும் பொழுது யாராவது உங்களிடம் வந்து “சந்தோஷமாக இருக்க வேண்டும்…” என்று சொல்லட்டும். உங்கள் வலி இன்னும் கொஞ்சம் அதிகமாகும்…!

அதே சமயத்தில் படுக்கையில் நோயுடன் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து… “உங்கள் பையன் இன்ன இடத்திற்குப் போனான்… அங்கே போய் வீரமான ஒரு செயலைச் செய்தான்…!” என்று சொன்னால் போதும்.

அதைக் கேட்டவுடன் ஆஹா…! என் பையைன் அப்படிச் செய்தானா..! என்று கேட்டவுடனே படுக்கையிலிருந்து எழவில்லை என்றாலும் தன் உடலில் உள்ள வலிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.

அல்லது… உங்கள் பையன் படிப்பில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கின்றான். மிகவும் கெட்டிக்காரனாக இருக்கின்றான்…! என்று திடீரென்று உங்களிடம் யாராவது சொல்லட்டும்.
1.உங்கள் வலி எல்லாம் போய்விடும்
2.ஒரு இனம் புரியாத ஆனந்த நிலை வரும்
3.உற்சாகத்துடன் எழுந்து நிற்கச் சொல்லும்…!

இதைப் போன்று தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு “அருள் மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும்…” என்று எண்ணி விட்டு நீங்கள் பார்த்தோர் உணர்வுகளில் வைரத்தைப் போன்று வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் வாழ்க்கை வைரத்தைப் போன்ற ஜொலிக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.
1.அந்தச் சமயத்தில் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நேரடியாக நுகர்வதில்லை
2.மாறாக நாம் உயர்ந்த உணர்வுகளைத் தான் (மறைமுகமாக) எடுக்கின்றோம்
3.அப்பொழுது வாலி என்ற விஷத் தன்மையான உணர்வு நம்மை இயக்குவதில்லை.

ஆக… மனிதனின் வாழ்க்கையில் அறியாது வரும் இடையூறுகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இந்தத் தத்துவத்தைக் கொடுத்துள்ளனர்.

ஆனால் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்…?

ஞானிகள் கொடுத்த தத்துவங்களை வைத்து வாதிடும் திறமைகளைக் காட்டுகின்றார்களே தவிர ஞானிகள் கொடுத்த மூலக் கூறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில்லை.

இராமாயணத்தில் காட்டப்பட்ட குகன் என்பது நம் உடலில் உள்ள இரத்தநாளங்கள் தான்…!

வைரத்தைப் போல் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாம் பார்ப்போர் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் இரத்தங்களில் இது எல்லாம் கலக்கின்றது.

நம் இரத்தநாளங்களில் நாம் கவர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் படரப்படும் போது ஒரு அமைதிப்படுத்தும் உணர்வாக… புதிய உணர்வாக அமைகின்றது.

இதைத் தான் காட்டிற்குள் செல்லும் போது “இராமன் முதலில் குகனை நண்பனாக்கிக் கொண்டான்…” என்று காட்டுகின்றனர்.

காவியத்திலே குகனைக் காட்டும் பொழுது காடு மலை வனாந்திரம் அனைத்திலும் மிருகங்களிடமிருந்தும் காப்பாற்றும் நிலைகள் கொண்டு பாதுகாப்பாகச் செல்கிறான்… இராமனுக்கு உதவி செய்கின்றான்…! என்று காட்டுகின்றனர்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உடலுக்குள் செல்லப்படும் போது இரத்தத்திலே கலந்து…
2.நம் உடல் முழுவதும் அந்த இரத்தங்கள் சுழன்று வரப்படும் போது
3.ஏற்கனவே இருக்கும் பகைமை கொண்ட அணுக்கள் இதை உட்கொண்டால்
4.அதனின் வீரியத் தன்மை அந்த வலுவை இழக்கின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் (உடலுக்குள்) எந்த வழியில் செயல்படுகின்றது என்பதை இராமனைக் காட்டுக்குள் போகின்ற மாதிரி காவியங்களைப் படைத்துக் காட்டினார் வான்மீகி.

இராமன் காட்டுக்குள் சென்றாலும்…
1.பகைமைகளை எப்படி மாற்றுகின்றான்…? என்று குகனைக் காட்டி
2.அந்தக் குகனை வைத்து மற்றவர்களை இராமன் எப்படி நட்பாக்குகின்றான்..? என்ற நிலையில்
3.எண்ணங்களின் குவியலும்… இந்த எண்ணத்தின் செயலும்…
4.வாலி என்ற நிலைகள் எவ்வாறெல்லாம் இயக்குகின்றது…? என்ற நிலையையும்
5.உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவாக்குவதற்குக் காவியமாகப் படைத்து
6.மனிதன் வாழ்க்கைக்குத் தீமையான உணர்வின் செயலாக்கங்களிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்ற நிலையும்
7.அதை அருள் ஒளிச் சுடராக மாற்றும் நிலை அது எவ்வாறு…? என்றும் இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நேரடியாக” நாம் எடுக்க வேண்டிய சக்தி

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்..
1.அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.

ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.

எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது

எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்ட அண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.

இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!

ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.

கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.

1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது

உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

எமது உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டால் “அன்று வாழ்ந்த மெய் ஞானிகளை” நீங்கள் காண முடியும்

 

நட்சத்திரங்களின் எதிர் மோதலால் ஏற்படும் மின்னல்கள் (மின் அணுக்களின் கதிர்கள்) கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது அதில் உள்ள… “ஹைட்ரஜன் அந்த உப்பின் சத்து” அந்த மின்னலின் வீரியத்தைத் தணிக்கிறது.

கடலிலே பாயும் மின்னல்…
1.அந்த மின் அணுக்களுடன் தொகுப்புகள் மணலாக வரப்படும் பொழுது உயர்ந்த ஆற்றல்களைப் பெறுகின்றது.
2.இதைத்தான் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாக… எது எதிர் நிலையில் வருகிறது…? என்ற நிலைக்கொப்ப மணல்களாக உருவாக்கப்படுகின்றது.

அந்த மணலினை எடுத்து அதிலிருந்து பிரித்து எடுத்து அணுவைப் பிளக்கின்றார்கள்… அந்த அணுவின் தன்மை பிளந்து பல விதமான நிலையாக எடுக்கின்றார்கள் விஞ்ஞான அறிவு கொண்டு.

1.அதிலே சிதைவடைந்த உணர்வின் தன்மையைத் தான் கம்ப்யூட்டரில் பாய்ச்சி (பல விதமான தனிமங்கள்)
2.உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு…
3.நுண்ணிய கதிரியக்கப் பொறிகளை மாற்றும் போது “கம்ப்யூட்டராக” அது வேலை செய்கிறது,

அதாவது…
1.மின் அணுவின் கதிரியக்கங்களின் நிலைகள் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு
2.அந்தக் காந்தத்தைக் கவரும் உணர்வின் தன்மையை அதற்குள் பதிவு செய்து உணர்வின் அறிவான பின்
3.எதிர் ஒளியின் தன்மைகள் மின் அணுவைப் போன்ற உணர்வின் தன்மை கம்ப்யூட்டரில் தோன்றும்.

அப்படித் தோன்றும் உணர்வின் தன்மை எதுவாகின்றதோ… ஒவ்வொரு உணர்வுக்கொப்ப (எதிலே செலுத்துகின்றோமோ) உருவங்களையும் காட்ட முடியும்.
1.ஒரு மனிதன் 100 ஆண்டுகளுக்கு முன் அவன் வாழ்ந்தான் என்றால்…
2.இவன் அவன் வம்ச வழியில் வந்தவன் என்றால்
3.அவர்கள் ரூபம் எப்படி இருக்கிறது…? என்று அக்கால உருவத்தைக் காணலாம்.

இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி இந்தக் கம்ப்யூட்டரின் மூலம் எதிர் அலைகளை எடுத்துக் கொண்டால் ஒளியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. ஆயிரம் மடங்கு அதைக் கூட்டுகின்றான்.
1.மீண்டும் அந்த உணர்வின் எதிரொலிகள் வரப்படும் பொழுது
2.இங்கே வாழ்ந்த உணர்வுகள் “பதிவானதை எடுத்து”
3.அந்த மனிதனுடைய உருவத்தையே கம்ப்யூட்டர் கொடுக்கின்றது.

விஞ்ஞானிகள் அதைக் காட்டுகின்றார்கள்.

இதே போன்று அன்று “வாழ்ந்த மெய் ஞானிகளையும்” நாம் காண முடியும் அவனில் விளைந்த உணர்வுகளை உங்களுக்குள் இப்போது பதிவாக்கப்படும் பொழுது
1.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்து அதைப் பெருக்கிக் கொண்டே வந்தால்
2.அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வந்து
3.அவன் எப்படி ஒளியாக ஆனான் என்ற உணர்வை எடுத்து நீங்களும் ஒளியாக ஆக முடியும்.

சில பேர் நினைக்கலாம் விஞ்ஞானம் அறிவு எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றது இவர் என்ன படிக்காதவர் சொல்கிறார்…? (ஞானகுரு) என்று.

ஏனென்றால் விஞ்ஞானிகளுடைய செயல்கள் எப்படி இருக்கின்றது மெய் ஞானிகள் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய்ஞானிகளுடைய செயல் எப்படி இருக்கிறது…? என்பதை குருநாதர் அந்த இயற்கை நிலைகளை அதனுடைய இயக்கங்கள் எப்படி…? என்பதை அவர் காட்டிய நிலைகளைக் கற்றுணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

இதைப் பதிவு செய்து கொண்டால் கால பருவம் வரும் போதெல்லாம்
1.அந்தந்த உணர்வுக்கொப்ப அந்தந்தக் காலங்களுக்கொப்ப
2.உணர்ச்சிகள் அது கலந்து அறிவின் ஞானமாக உங்களுக்குள் ஊட்டும்.

முந்தி சொன்னதெல்லாம் வேறு விதமாக இருக்கும் அதனின் வளர்ச்சி உங்களில் வரப்படும் பொழுது… இயற்கையின் நிலையாக “உங்களை நீங்கள் அறியும் உணர்வுக்கு வளர வேண்டும்…” என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றேன்.

எத்தனை காலம் இந்த உடலில் நாம் வாழப் போகிறோம்…?
1.இந்த உடல் சதமற்றது… என்றைக்கும் நிலையானது உயிர்.
2.அந்த உயிருடன் ஒன்றி ஒளியாக ஆக்கப்பட வேண்டும்.

ஆகவே… உடலுக்குப் பின் பிறவி இல்லை…! பிறவி இல்லா நிலை அடைந்த அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிப்பது தான் இந்த உபதேசத்தின் நோக்கம்.

நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்… பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்…
2.உந்தல்கள்…! தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள்.

பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

எதிர்மறையான மோதல் இல்லை என்றால் வளர்ச்சியே (இயக்கச் சக்தி) இல்லை

 

நம் பிரபஞ்சத்திற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. தனக்குள் வரும் ஆவியின் தன்மைகளை எல்லாம் நீராக மாற்றும் திறன் பெற்றது.

சனிக்கோளின் உணர்வு எது எதில் எல்லாம் கலக்கின்றதோ
1.அந்த அணுவின் தன்மை ஜீவன் பெறுவதற்கு அதுவே மூலமாகும்.
2.சனிக்கோளின் உணர்வுகளை எது பெறவில்லையோ அந்த அணுக்கள் ஜீவன் இழந்துவிடும்.

சனிக்கோளின் சக்தி பெறவில்லை என்றால் வான் வீதியில் உருவாகும் நிலைகள் அது வெறும் பாறை ஆகிவிடும்… கரைந்து விடும். வளர்ச்சி பெறுவதற்குண்டான நிலைகள் அதிலே இருக்காது.

ஆகவே தான் ஜீவன் பெறச் செய்வதற்கு சனிக்கோள் மிகவும் முக்கியமானது. நம் உடல் உறுப்புகளில் எதை எதை எல்லாம் எவ்வாறு மாற்றுகிறதோ அதைப் போல இந்த பிரபஞ்சத்திற்கு… சனிக்கோள் மிகவும் முக்கியமானது.

சனிக்கோள் செயல் இழந்து விட்டால் இந்தப் பிரபஞ்சம் இருக்காது…!

உதாரணமாக 27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று “எதிரியானது…” அந்த மின் அணுக்களின் தன்மை… கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விட்டால் “மின்னலாகப் பாய்கின்றது…” அப்போது அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அது கருகி… துகள்களாக மாறுகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் எதிர்நிலை. ஆக
1.அந்த அணுக்கள் மோதும் பொழுது தான் பொறிகளாகி
2.மின்னணுவாக அது ஓடும் பாதையில் ஊடுருவி இதனுடைய செயலாக்கங்கள் மாற்றிவிட்டு மற்ற உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

இந்த 27 நட்சத்திரங்களின் மாற்றங்கள்
1.ஒன்று மற்றொன்றுடன்… ஒன்று மற்றொன்றுடன் என்ற நிலையில்
2.இப்படி மாறி மாறி மாறி வருவதைத்தான் உலகில் கல் மண் எல்லாம் உருவாகிறது.

அதாவது வான் வீதியில் உருப் பெறும் மின்னணுக்களை மற்ற கோள்கள் தூசிகளாக மாற்றி விடுகின்றது அது நுகர்ந்த உணர்வு மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலந்த பின் உணர்வின் மாற்றங்கள் ஆகி பாறைகளாகவும் கல்லாகவும் மற்ற நிலையாகவும் ஆகிறது.

பூமியின் தன்மை நீருடன் கலந்து உணர்வின் சத்தை எடுக்கப்படும் பொழுது
1.தாவர இன வித்தாக உருவாகும் தன்மை வருகின்றது.
2.தாவர இன சத்தை உருவாக்கும் இந்த நிலை பெற்ற பின் “உயிரணு தோன்றி” நுகரும் தன்மை வருகின்றது.

ஆனால் உயிரணு தோன்றி மனிதனாக உருவான பின் சர்வத்தையும் உணரும் நிலையாக இயக்கச்சக்கியாக மாற்றுகின்றான் மனிதன்.

ஆக
1.அறிவின் ஞானம் கொண்டு இந்த உலகையே அடக்கிடும் தன்மை பெற்றவன் என்று
2.விநாயகர் தத்துவத்தில் ஆதிமூலம் என்ற உயிர்… பல கோடிச் சரீரத்தில் சேர்த்துக் கொண்ட நிலைகள் மனித உடலாக ஆனாலும்
3.அங்குச பாசவா…! இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆட்சி செய்யும் சக்தி பெற்றவன் என்று காட்டுகின்றார்கள்.

அப்படிப்பட்ட ஆற்றலை முதன் முதலிலே பெற்றவன் அகஸ்தியன் இந்தப் பிரபஞ்சத்தில் வருவதை எல்லாம் ஒளியின் உணர்வாக மாற்றி… எதற்கும் அடிமையாகாது ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

ஜென்ம நட்சத்திரமும்… கிரகங்களின் பார்வையும்…!

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்திட நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிந்திட எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டு… அச்சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அந்நிலை பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை என்றும்
2.கேது இராகு என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள்…! எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிந்திட முடியாது. குழந்தை பிறந்திடும் நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைத்திடலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள். ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லாவிட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் பிறந்திடத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் ஒரு காலம் அழிந்தாலும்… இந்த அகண்ட அண்டத்தில் பல விஷத் தன்மைகள் தாக்கினாலும்.. அதை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அதன் வழி வாழ்கின்றது… வளர்கின்றது.

ஆகவே இருண்ட உலகமானது… மனிதனான பின் ஒளியின் உணர்வாகப் பரவுகின்றது. அந்த ஒளியின் உணர்வாகப் பரவும்போது அகண்ட அண்டமே ஒளியின் சிகரமாகிறது.

எத்தனையோ கோடி ஆண்டுகள் ஒளியுடன் ஒன்றாக இருக்கும் பொழுது… அதற்குப் பின் இந்த அகண்ட அண்டமும் ஒளியின் உணர்வாக ஆகும் பொழுது என்றும் நிலையான நிலை பெறுகின்றது

எத்தனையோ கோடி ஆண்டுகள் மனிதனாக வளர்ச்சி அடைந்து…
1.உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது… ஒளிக்கற்றைகளாக மாற்றி
2.விஷத்தை மாற்றிடும் தன்மை ஆங்காங்கு ஏற்பட்டால்
3.இந்த அகண்டமே முழுமையான ஒளியாக மாறுகின்றது.

இப்பொழுது இருண்ட நிலையாக இருக்கும் உணர்வுகளில் (உடலில்) ஒளியாக அறிந்து கொள்ளும் மனிதன் என்ற நிலைகளில்… எப்பொழுதுமே நாம் இதனை வளர்த்துக் கொண்டால் இனி பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஆடு சாந்தமானது… ஆனால் நரியோ வலிமையானது. அந்த வலிமையான உணர்வை நுகர்ந்தால் அந்த ஆடு சிவ தனுசால் தாக்கப்பட்டு அதன் உணர்வுகள் மாற்றப்படுகின்றது… ஆடு நரியின் ரூபமாகின்றது…!

ஆகவே மீண்டும் மீண்டும் உடல் பெறும் சிவ தனுசு என்ற அசுர குணங்களை நாம் மாற்றி… நரகலோகத்திற்குச் செல்வதைத் தடுத்து… விஷ்ணு தனுசு என்ற உணர்வின் தன்மையை நாம் எடுத்து… அருள் உணர்வின் தன்மை கொண்டு சொர்க்க பூமியாக ஆக்கி… மகிழ்ந்து வாழும் தன்மை பெற்று…
1.உயிரான சொர்க்கவாசல் வழி சென்றால்
2.என்றுமே பிறவியில்லா நிலை அடைய முடிகின்றது.

ஆகவே மனிதனின் வாழ்க்கையில் நாம் இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை. அதனால்தான் இராமாயணத்தில் “நேரமாகிவிட்டது…” என்று மணலைக் குவித்துச் சிவலிங்கமாக்கி இராமன் பூஜிக்கத் தொடங்கினார் என்று காட்டுகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம்… சந்திக்கின்றோம்… பழகுகின்றோம். அவர்கள் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

அப்படி நம்முடன் பழகிய அந்த உணர்வுகள் அனைத்தும்… அதாவது நாம் பழகியோர் அனைவரும்
1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று பூஜிக்கத் தொடங்கினால்
2.ஒவ்வொரு நிலையிலும் இதன் உணர்வுகள் ஒன்றாக்கப்படும் பொழுது “இராமலிங்கம்…!”
3.ஆக… எண்ணத்தைக் கொண்டு உணர்வின் தன்மை உயிரை ஒளியாக மாற்றுவது தான் அது..!
4.உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் உயிரைப் போல ஒளியாக மாற்றப்படும் போது தனுசுகோடி.

கோடிக்கரை… பல கோடி உணர்வுகள் கொண்டு இன்றைய மனித உடல் பெற்றது கரையாக (கடைசி நிலை) இருக்கின்றது. தனுசுகோடி என்று ஆகும் பொழுது உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆகின்றது

விஷ்ணு தனுசைப் பயன்படுத்தினால் என்றுமே நம்முடைய உணர்ச்சிகள் ஒளிமயமாகும்…! என்ற நிலை தான் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் எப்பொழுதுமே உயிர் வழி மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து பழகுதல் வேண்டும். அது தான் விஷ்ணு தனுசு.

1.அடிக்கடி இதை நினைவுபடுத்துகிறேன்… (ஞானகுரு)
2.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… இருளை அகற்றுங்கள்.
3.எந்தச் சந்தர்ப்பம் மனித வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தாலும் இந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறுகின்றது

உடலை விட்டு அகன்றால் நாம் என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

பிறரை வேதனைப்படுத்தி வாழ்ந்தால் அவர்கள் இடும் சாபம்… “நம்மையும் சந்ததியினரையும் தாக்கத் தான் செய்யும்”

 

தீமை என்ற நிலையில் ஒருவன் பேசி விட்டால் அது வாலி என்ற நிலையை அடைகின்றது.
1.அந்தத் தீமையான சொல்லை ஒருவன் கேட்டால் அது அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடுகின்றது.
2.திருப்பி அவருடைய எண்ணங்களும் வாலியாகின்றது.

இத்தகைய போர் முறை வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் சுவைமிக்க உணர்வுகளைச் செயல்படுத்தும் அந்த நல்ல உணர்வுகள் மடிந்து விடுகின்றது.

அதனால் தான் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்…! என்று காவியத்திலே காட்டினார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் இன்று உலகில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுதல் வேண்டும். ஏனென்றால் குறுகிய காலமே வாழும் நாம் உடலின் இச்சைக்கு அடிமையானால்… கடும் நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையாக நமக்குள் விளைந்து விடுகின்றது.

உடலின் இச்சைக்கு வாழப்படும் பொழுது வேதனைப்படுத்தி மற்றொன்றைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து இந்த உடலில் வாழலாம்.
1.அடுத்த கணம் இந்த நஞ்சின் தன்மையை கொண்டு பிறருடன் தொடர்பு கொள்ளப்படும் பொழுது
2.அவன் இடும் சாப அலைகளிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்…!

இன்று இவர்கள் இவ்வாறு செய்யலாம் ஆனால் அவன் குடும்பத்தில் கருவில் விளையும் சிசுவிற்கு
1.சாபமிட்ட அலைகளைக் கர்ப்பிணியாக இருக்கும் அந்த தாய் நுகர நேர்ந்தால்
2.அந்தச் சிசுவிற்குள் இந்த உணர்வுகள் விளைந்து
3.இவனால் பட்ட வேதனைகள் அந்த ஒன்றுமறியாத குழந்தையும் நரக வேதனைப்படும் தன்மை வருகின்றது.

இவன் செல்வத்தைச் சம்பாதித்தாலும் அந்த குழந்தை அதை பெறுவதற்கு இல்லை. ஆனால் தட்டிப் பறித்துச் சென்றுவிடும் இவன் அதை அனுபவிக்கப் போவதில்லை.

குழந்தைக்காகத் தான் பணத்தைச் சேமிக்கிறேன் என்று சொன்னாலும்
1.அவனிட்ட சாப அலைகளால் இவனும் வாழ முடிவதில்லை
2.அவன் குழந்தையையும் வாழ முடியாத நிலைகள் செய்து விடுகின்றது.

இப்படி ஒவ்வொரு மனிதனும் ஆசையின் எல்லை கொண்டு தன் நிலைகளிலே விஷம் கொண்ட உணர்வுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று உள்ளது.

அன்று ஆண்ட ஒவ்வொரு அரசனும் தான் வாழ… மதம் இனம் என்ற நிலைகளைத் தூண்டிவிட்டு அதிலே நாட்டுக்கு நாடு ஊருக்கு ஊர் மதத்திற்குள் மதம் மதத்திற்குள் இனம் இனத்திற்குள் இனம் என்ற நிலையில் நஞ்சின் தன்மையாகப் பாயச் செய்து விட்டார்கள்.

வழி வழியாக வந்த நிலைகளில் இன்று எது உண்மை…? எது பொய்…? நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற சிந்தனையற்ற நிலையாக… சிதைந்த நிலையில் தான் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்றால் அருள்
1.யாம் உபதேசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
2.அடிக்கடி அதை நினைவுக்குக் கொண்டு வந்து உங்கள் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

கஷ்டம் வரும்போது… ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

1.அந்தச் சூரிய சக்தியிலிருந்து…
2.இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
3.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
4.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது…! என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடிடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் ஒவ்வொருவருமே கூட்டுத் தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் தான் நம் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு..
1.எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று ஏககாலத்தில் இதைச் சொல்லும் பொழுது
3.உடனடியாக அவர்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் விண் செலுத்த முடிகின்றது.

காரணம்…
1.அவர்கள் (முன்னோர்கள்) துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறியவில்லை என்றாலும்
2.அவர்கள் சார்புடையோர் அந்தக் குடும்பத்தில் உள்ளோர்கள் நுகர்ந்து அறிந்துள்ளார்கள்.
3.அந்த உணர்வின் வலிமை கொண்டு வரும் பொழுது
4.மேலே சொன்னது போல் எல்லோரும் சேர்த்துச் சொல்லும் போது
5.அந்த உணர்வுகள் அவரவர் செவிகளில் பட்டு… கண் வழி கவர்ந்து… மூக்கு வழி நுகர்ந்து… உணர்வின் தன்மை உடலில் பெருகி…
6.அதனின் வலு கொண்டு நாம் விண்ணில் செலுத்தும் பொழுது எளிதில் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைகிறது.

முன்னோர்களின் உடலில் கடுமையான நோய் இருந்திருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த நோயின் உணர்வுகளைக் கரைத்து விடுகிறது. உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அங்கே ஒளியாக நிலைக்கின்றது.

ஆக… குடும்பத்தைச் சார்ந்தவர் அனைவரும் காலை துருவ தியானத்தில் அந்தச் சக்தியை எடுக்கும் பொழுது அடிக்கடி முன்னோர் மூதாதையரின் உயிரான்மாக்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… பேரின்பப் பெரு வாழ்வு பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் பழகிய உணர்வுகள் என்றும் நமக்குள் உண்டு. காலை துருவ தியானத்தில் அடிக்கடி எண்ணி அவர்களை விண் செலுத்தும் பொழுது
1.நம் உடலில் பரம்பரை நோய் வராது மாற்றப்படுகின்றது
2.பரம்பரை குணம் என்ற நிலைகள் மாற்றப்படுகின்றது.

முன்னோர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுப்பு கொண்டு சாபமிட்டுத் தீய உணர்வுகளை எடுத்திருந்தாலும் அந்தச் சாப வினைகள் நமக்குள் மறையத் தொடங்குகின்றது.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போன்று எடுத்து அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் அடையச் செய்தால் நம் மூதாதையர்கள்

இதற்கு முன் இதை நாம் செய்யத் தவறி இருந்தாலும் கூட நம் மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று நாம் அவசியம் தியானிக்க வேண்டும்.

1.அவர்கள் ஆன்மாக்களை நாம் விண்ணுக்குச் செலுத்தச் செலுத்த
2.நம்முடைய உணர்வுகள் வலுப்பெற இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் பரவப் பரவ
3.முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் புகுந்திருந்தாலும்
4.அந்த உடலிலும் தீய சக்திகளை வளர்த்திருந்தாலும்… அந்த உடல் மடிந்து வெளி வந்தபின்
5.நாம் பாய்ச்சும் இந்த அருள் உணர்வுகள் பட்டபின் அங்கே உந்தித் தள்ளினால் இந்த உணர்வு வலுப்பெறுகின்றது
6.ஒவ்வொரு நாளும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
7,காலை துருவ தியானத்தில் செய்தால் அவர்கள் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடைகின்றனர்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில்… மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் வாழ்ந்து பிறவியில்லா நிலை அடைதலே நம்முடைய தியானத்தின் நோக்கம்.

ஆக.. இந்த பேரருளைப் பெருக்க… அருள் ஞானத்தைப் பெருக்க… இந்த உடல் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

 

அன்றைய அரசர்கள் தன்னுடைய சுகபோகங்களுக்காக மனிதரை மாக்கள் ஆக்கி… அவன் சுகபோகங்களை அனுபவித்தான். அவனுக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் இன்றும் நரக வேதனையில் தான் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் ஏற்படுத்திய பகைமை உணர்வுகள் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாக… சகோதர உணர்வுகள் இன்று இழக்கப்பட்டுப் போர் முறைகளாக வந்து கொண்டிருக்கின்றது

பகைமை உணர்வுகள் வளர்ந்த பின்
1.அஞ்சி வாழும் நிலைகளாக உண்மையின் உணர்வுகளை அறியும் தன்மை இழக்கப்பட்டு
2.இன்று வாழும் மக்கள் பண்டைய கால வாழ்க்கை நிலை போல
3.மிருகத்தைப் போன்று ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலையாக அஞ்சி வாழும் உணர்வுகளே விளைந்து வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஆகவே… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உண்மையின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மனித உடலில் இருந்தே அருள் வழியைப் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை அணுகியவர்களுக்கும் இந்த அருள் உணர்வை ஊட்டுங்கள்.
1.தவறு செய்வது நாம் அல்ல… சந்தர்ப்பங்களும் அந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.
2.இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஓதும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் சொல்… அந்த அருள் உணர்வுகள்… அங்கே பதிவாக்கப்படும் பொழுது அவர்களையும் தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்ற முடியும். நீங்கள் இடும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருகின்றது.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் உணர்வை அறியும் நிலையாக அறிய முடியும். நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் அகஸ்தியன் உணர்வையும் நீங்கள் பெற முடியும் உங்கள் வாழ்க்கையும் அந்த நிலை பெறும். அடுத்து பிறவி இல்லா நிலை அடையும் பாக்கியமும் பெறுகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனைத்தும் சதா அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடும் நிலை பெறுங்கள். அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

1.பகைமை என்ற உணர்வோ… அதனால் வந்த நோயோ இருந்தாலும் அதை மறந்து விடுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவேன்… என் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வேன் என்று இதைப் பெருக்குங்கள்.

அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்… அது வளர அறியாது சேர்ந்த பகைமையால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

நோய்…! என்று எண்ணத்தை அதன் மீது செலுத்தாதீரக்ள். அதை மறைக்க அருள் உணர்வுகளைச் சேருங்கள்.
1.இதைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் சிறிது கடினமாக இருக்கும்.
2.மேலும் என்னைச் சிந்திக்க விடவில்லையே…! என்று ஏங்க வேண்டாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்… எனக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் சாந்தமடையும்.
4.என் உடல் நலம் பெறும்…!
5.என் இரத்த நாளங்களில் மகரிஷிகள் உணர்வுகள் பெருகும்… அருள் ஞானம் பெறுவேன்…
6.என் பேச்சும் மூச்சும் கேட்பவரையும் நலம் பெறச் செய்யும் என்று இத்தகைய உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் உடலில் உள்ள கல்லீரல் இருக்கிறது என்றால் அது உப நிலைகளை வைத்து அது மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை வடிகட்டிக் கொடுக்கின்றது.

அதே போல் பித்தப்பை என்றால் அதன் உணர்வுகள் தனக்குள் எடுத்து பித்தத்தை வடிகட்டி மீண்டும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுடன் கலந்து எடுக்கும் போது ஜீரணிக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றது.

1.பித்தத்தின் சுரப்பு மாறினால் அஜீரணமாகும்
2.அதிகமானாலும் குறைவானாலும் அஜீரணமாகும்
3.சம அளவு கிடைத்தால் தான் ஜீரண சக்தி சீராகும்.

வேதனை என்ற உணர்வு நமக்குள் அதிகரித்தால் அதனால் விஷத்தின் தன்மை அதிகமாக அந்தப் பித்தப்பை உமிழ்த்தினால் அந்த உறுப்பின் தன்மை பாழாகும்.

பொதுவாக… நாம் உணவை உட்கொள்ளும் போது அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் சுரந்து உணவைச் சீக்கிரம் கரைத்து விடுகின்றது.

ஆனால் விஷத்தை அதிகமாகக் கூட்டும் போது பித்தம் அதிகமாக உற்பத்தியாகும் நிலை வருகின்றது. அதனால் பித்தப்பை சுருங்கி விடுகின்றது.

1.தனக்கு வேண்டியதைக் கவரும் நிலையோ அல்லது அதிகமானதை வடிகட்டும் நிலையோ
2.அந்தச் சமப்படுத்தும் நிலை இல்லை என்றால்
2.அதன் மூலம் விஷத் தன்மை உடலில் சேமிப்பு அதிகரிக்கத் தொடங்குகின்றது.

பயில்வான்கள் எடுத்துக் கொண்டால் பத்துக் கோழி… பத்து முட்டை… என்று இப்படி எத்தனையோ சாப்பிட்டுப் பழகுவார்கள். அவர்களின் கடைசி நிலை என்ன ஆகும்…?

இவ்வளவு கடினமான உணவை உட்கொள்ளும் நிலை வரும் போது அதற்குத்தக்க விஷம் இல்லை என்றால் ஜீரணிக்கும் சக்தி இழந்து அவன் சீக்கிரமே துர்மரணம் அடைந்து விடுவான்.

ஆனால் சமமாக இருக்கும் வரை உற்பத்தியின் நிலைகள் சீராக வருகின்றது.
1.அதிகமாகப் பித்தங்கள் சுரக்கும் தன்மை ஆகிவிட்டால்
2.சிந்தனையற்ற நிலையாகி முரட்டுத்தனமான புத்தியிலே வளர்வான்.

இத்தகைய முரட்டுத்தனமானால் விஷத் தன்மைகள் வளர்ந்து பித்த சுரப்பிகளில் அது அதிகமாகின்றது.

ஒரு யானை தன் உணவுக்காக வேண்டி கடினமான தட்டைகளை எடுத்து அதைத் தன் வாயினால் மென்று உட்கொள்கிறது. அதே சமயத்தில்
1.அதற்குள் ஊறும் உமிழ் நீரின் விஷத் தன்மைகள் பட்ட பின்
2.அந்தத் தட்டைகளில் உள்ள சத்தை ஆவியின் தன்மையாக மாற்றி அதை மிருதுவாக மாற்றுகின்றது. (பிஸ்கட் போல் கரைகிறது)

அதே போல் அந்த மிருகத்தின் நிலைக்கொப்ப விஷத்தின் தன்மை கொண்டு… மனிதன் விஷமான உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளும் போது அந்த உடலில் உள்ள அணுக்களை மாற்றிவிடுகின்றது.

1.இன்று “பயில்வான்” என்று சொல்லலாம்
2.ஆனால் நாளடைவில் அவர்களுடைய உறுப்புகள் பாழடைந்து விடுகின்றது…
3.ஜீரணிக்கும் சக்தி இழந்து விடுகின்றது… சீக்கிரம் மரணம் அடைந்து விடுகின்றனர்.

ஆகவே இந்த உடலின் தன்மை எந்த நிலையில் இருந்தாலும் நாம் நீடித்திருக்கின்றோமா…? இந்த உடலில் இருக்கும் பொழுது எல்லாம் சேமிக்கின்றோம்… வளர்கின்றோம்…! ஆனாலும் எத்தனை காலம் வாழ்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

என்னை (ஞானகுரு) எடுத்துக் கொண்டால் நான் ஒன்றுமில்லாதவன். இங்கே வந்தேன். இந்தத் தபோவனம் என்ற கட்டிடத்தைக் கட்டி வைத்தாகிவிட்டது.
1.இருந்தாலும் இதை “எனது…” என்று சொந்தம் கொண்டாட முடியுமா…?
2.எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த பண்புடன் நீங்கள் செய்கின்றீர்கள்… செயல்படுத்துகின்றீர்கள்.
3.இதை எனது (ஞானகுரு) என்று சொந்தம் கொண்டாடினால் என்ன ஆகும்…?

நீங்கள் எதற்காக இதைச் செய்தீர்கள்…?

தபோவனம் வரும் அனைவருக்கும் நல் உணர்வு பெற வேண்டும் என்ற அந்த அன்பு கலந்த உணர்வுடன் செய்தீர்கள். ஆனால் ஒரு சிலர் என்ன செய்கின்றார்கள்…?

என்னிடம் (ஞானகுரு) சக்தி இருக்கின்றது என்று சொன்னால் ஏமாற்றி எதையாவது முன்னாடி கொண்டு வந்து தர்மத்தைச் செய்வது போல் சொல்லி “நான் சொல்வதைச் செய்…” என்பார்கள்.

இதனின் செயல்கள் என்ன செய்கின்றது…? இது எல்லாம் சுயநலனுக்காகச் செய்வது…! அவர்களின் ஆசையில் நான் சிக்கினேன் என்றால் எனது ஆசையும் இங்கே கூடும். அப்படி ஆகக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

ஆகவே… நான் உபதேசித்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு… என்னால் உங்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டது…? என்ற உண்மையை உணர்ந்து நீங்கள் நன்மைகளைப் பெற்றீர்கள்.
1.அதன் வழியில் நன்மையைச் செயலபடுத்த நீங்கள் இயல்பாகச் செய்யுங்கள்.
2.அந்த உயர்ந்த பண்புடன் செய்தால் தான் அது எல்லோருக்கும் நல்லதாகும்.

ஒரு சிலர் பொருள்களை அதிகமாகச் செலவழித்து விட்டால் அவருடைய உணர்வு “நான் தபோவனத்திற்குச் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.

இப்படிப்பட்ட உணர்வுகள் கொண்டு செயல்படுத்தும் பொழுது “நான் செய்தேன்…” என்ற உணர்வுகள் வரும்.
1.நான் செய்தேன் என்றால்…
2.அவர் செய்த அன்பின் தன்மையைப் பெருக்க விடாத நிலை ஆகி
3.நல்லதைச் செய்யத் தடைப்படுத்தும் நிலையாகி விடுகின்றது.

ஆகவே மனம் கனிந்த நிலைகளில் இந்த ஸ்தாபனத்திற்கு எது கொடுத்தாலும் “அந்த உள்ளன்புடன் வரும் நிலைகள் தான்” இந்தக் கட்டிடமோ மற்ற பொருளானாலும் அதைச் செயல்படுத்த முடியும்.

உதாரணமாக ஒருவருக்கு நீங்கள் பணம் கொடுக்கின்றீர்கள். வட்டிக்கு வரவு செலவுக்குக் கொடுக்கின்றீர்கள் என்றால் வாங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வீர்கள்…?

அதை வாங்கும் தைரியம் உண்டு… பணத்தை எப்படித் திரும்ப வாங்க வேண்டும்…? என்று தெரியும்… என்பார்கள்.

இத்தகைய உணர்வின் வலிமை கொடுக்கும் பொழுது வாங்கியவருடைய நிலைகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக நேர்கின்றது. ஆக இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் பல நிலைகள் வருகின்றது.
1.கடினமான உணர்வின் தன்மை கொண்டு செயல்படுத்தினால்
2.வேதனையும் பகைமையும் பழி தீர்க்கும் உணர்வும் தான் வளரும்.

அதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

எல்லோருக்கும் நல்லது கிடைக்க வேண்டும் என்று உள்ளன்புடன் செய்தால் தான் “எந்தக் காரியமும் உயர்வடையும்…!”

தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை

 

எண்ணத்திலும்… செயலிலும்… வார்த்தையிலும்… “உயர்வு தாழ்வு” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாகச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து “ஈஸ்வர தியானங்கள் பெற்று” அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் இந்த வாழ்க்கைக்குப் பின் உடலை விட்டுச் சென்றால் இன்னொரு மனிதப் பிறவி எடுப்பது என்றால்… இன்னொரு உடலுக்குள் சென்றால் தான் அது வர முடியும்.

ஆனால் பாம்பு தீண்டினால் உடலுக்குள் விஷமான பின் பாம்பின் நினைவு கொண்டு அதனின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறப்போம். பாம்பாகப் பிறந்தாலும்…
1.அந்தப் பாம்பை ஒரு காகமோ கழுகோ கொத்தினால் அது காகமாகவோ அல்லது கழுகாகவோ அடுத்து மாறுகின்றது.
2.மனிதன் அடித்தால் தான் மனிதனாகின்றது.

ஆக… அதனின் சந்தர்ப்பத்திற்கொப்பத்தான் மனிதனாக ஆவதும்… காகமாவதும்… கழுகாக ஆவதும்… நரியாவதும் நாயாவதும்…
1.ஒன்றைக் கொன்று புசிக்க எண்ணும் உணர்வுகள்
2.அது கொன்று புசிக்கும் போது அதனின் நினைவு கொண்டு தான் இப்படி உடல்கள் மாறுகின்றது.

அதே சமயத்தில் மனிதனுக்குள் வந்து மனித உருப் பெறும் கருவானாலும் இப்பொழுது எல்லாம் “குடும்பக் கட்டுப்பாடு” என்று இருக்கிறதல்லவா…!

எத்தனை உயிரினங்களைக் கொல்கிறோமோ அத்தனையும் நமக்குள் இருக்கின்றது. அதில் எது முந்திக் கருப்பைக்கு வருகின்றதோ அது தான் மனிதனாகப் பிறக்கின்றது.

கருப்பைக்கு வரவில்லை என்றால் அதிலே விந்துகள் கசிந்து வீணாகி விட்டால் அந்த விந்துக்குள் கலந்த அந்த உயிரணுக்கள் மனித உடலுக்குள் சென்றாலும்
1.சாக்கடைக்குள் வந்தால் சாக்கடையில் உருவாகும் புழுவாக மாறுகின்றது.
2.மற்ற தாவர இனங்களிலோ செடிகளிலோ பட்டால் தாவர இனத்தின் சத்தை நுகர்ந்து அங்கே கருவாகி புழு பூச்சியாக மாறுகின்றது.
3.கடலில் விழுந்தால் அங்கே கருவாகி அந்த விந்துகளை மீன் விழுங்கினால் அந்த மீனின் ரூபமாக உருவாகின்றது.

மனித உடலுக்குள் கசியும் விந்துகள் வீணானால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அதிலே வரும் கரு முட்டைகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது.

மனிதனாகும் தகுதி இருந்தாலும் மனிதனல்லாத பிறவிக்குப் போகும் நிலை வந்து விடுகின்றது. எல்லாமே சந்தர்ப்பம் தான்…! இயற்கையின் நிலைகள் இப்படி எல்லாம் மாறுகின்றது.

ஆககே நாம் எதுவாக ஆக வேண்டும்…? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தியுங்கள்.

எத்தனையோ கோடி உணர்வுகள் நமக்குள் உண்டு. அதிலே உயிரைப் போன்ற உணர்வின் தன்மை ஒன்றென இணைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் கவர்ந்து நாம் ஒளியாக மாறுதல் வேண்டும்.

வேகா நிலை பெற்ற ஞானிகளின் அருள் உணர்வை நாம் தியானித்து அதை நம் உடலில் பெருக்கி நாமும் வேகா நிலையாகி இன்னொரு பிறவிக்குப் போகாதபடி “போகாப்புனல்…” நாம் இந்த உடலிலேயே உணர்வை ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய உடலுக்குப்பின் உயிர் என்ற உணர்வு கொண்டு அவர் ஒளியானார். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் ஏகாந்தமாக வாழ்கின்றார்.

அக்காலத்தில் வாழ்ந்த ஞானிகளும் வானுலக ஆற்றலை எடுத்துத் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலங்களின் துணை கொண்டு அங்கே இணைத்தனர்.

அதே வழிப்படி நாமும் நம்மைச் சார்ந்தவர்களை விண் செலுத்தப்படும்போது அந்த உணர்வை நாம் கவர்ந்தால் நாமும் அங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம். இந்த முறைப்படி நாம் வரலாம்.

1.மீண்டும் மீண்டும் மனிதன் என்ற நிலைகள் வரப்படும் பொழுது
2.மனிதனின் ஈர்ப்புக்குள் வந்தால் நாம் இங்கே பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆனால் அருள் உணர்வுகளைப் பெற்றால் நம்மை அங்கே மிதக்கச் செய்யும். அதன் வழி நாம் செல்ல
1.நம் குரு காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற ஏங்கித் தியானிப்போம்.
2.வேகா நிலை என்ற உணர்வை இந்த உடலிலேயே உருவாக்குவோம்…!

ஏனென்றால் உயிர் வேகுவதில்லை… உயிருடன் ஒன்றி ஒளியாக்கினால் நம் உணர்வுகளும் வேகுவதில்லை என்ற நிலைக்கு நாம் அனவைரும் செல்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

April 2024 உபதேசம்

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

 

இன்றைய உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது…? காற்று மண்டலம் நஞ்சாக மாறிவிட்டது…! நஞ்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிலைகளால் உலகம் மாசுபடும் நிலைகளுக்கே சென்றுவிட்டது.

1.தொழிற்சாலைகளில் வரும் கழிவுகளை எவ்வளவு குழியைத் தோண்டி அதில் புதைத்து வைத்தாலும்
2.அல்லது நீரிலே கலக்கப்பட்டு வடிக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் ஆவிகளாக மாறும் பொழுது காற்று மண்டலத்தில் தான் கலக்கின்றது.

பூமிக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் ஆனால் மேலே செல்லப்படும் பொழுது தாவர இனங்களிலே இது படர்ந்து விடுகின்றது அதனால்… கேன்சர் நோய் இன்று அதிகமாக வருகின்றது.

1.இவர்கள் கழிக்கும் நஞ்சுகள் அதிகரிக்கும் நிலையில்
2.எங்கே பார்த்தாலும் கேன்சர் கேன்சர் என்ற நோய்கள் வந்து கொண்டு இருக்கின்றது
3.நன்றாகத் தான் இருப்பார்கள்… திடீரென்று இந்த நோய் வந்துவிடும்.

இதைப் போன்ற கடுமையான நஞ்சின் நிலைகள் வரப்படும் பொழுது உடலில் மூட்டுகளிலும் இந்த விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது.

எந்த வலுவின் தன்மை ஏற்கின்றோமோ நரம்பு மண்டலங்களுக்குள் இந்த விஷத்தன்மைகள் செல்லப்படும் பொழுது
1.அங்கே தேங்கி விட்டால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகள் முடியாது போய்விடுகின்றது.
2.நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த நிலை பெறுகின்றது.
3.இது போன்ற நிலையில் இருந்து மனிதன் மீள வேண்டும்.

இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளை குருநாதர் 20 வருடம் அனுபவபூர்வமாக தெளியச் செய்தார். தெளிந்து உணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை எடுத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).

எம்மிடம்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி என்றார்
2.அவன் அமைத்த உடல் அந்த ஆலயம் என்று நீ கருது
3.மனிதனை உருவாக்கிய ஒவ்வொரு உயர்ந்த குணங்களையும் சீர்படும்படி உனக்குள் எண்ணி அதை வளர்த்துக் கொள்.

பிறருடன் பழகிய உணர்வு… அதே உணர்வு வளர்ந்து இருந்தால்
1.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால்
2.உனக்குள் அவர் உணர்வு பதிவாகி இருந்தால்… உன்னை உயர்த்தும் நிலையாக உனக்குள் அது சீர்படுகின்றது.

இது அல்லாது வேறு யாரிடத்திலும் காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்றால் பாவத்தைத் தான் நீ சேர்க்கின்றாய் எந்த மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செயல்படுத்துகின்றார்களோ பாவத்திற்கு நம்பர் ஒன்றாகின்றாய்…!

இந்த உடலை விட்டுச் சென்ற பின் எந்த உணர்வுகளை நீ பதிவு செய்து கொண்டாயோ இறந்த பின் மந்திரம் தெரிந்தவன் அதைப் பதிவு செய்தான் என்றால் பாவச் செயலுக்கு உன்னைப் பயன்படுத்துவான் என்றார்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. மனிதன் மீண்டும் புழு பூச்சியாகத்தான் செல்ல முடியும் இதை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஆகவே உங்களை நம்புங்கள்…! நீங்கள் எண்ணுவதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணிச் சேர்க்க வேண்டும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். வளர்க்க வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குங்கள். அதை வலுவாக்கத் தியானித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அதை மறந்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் என்று அதை உறுதிப்படுத்துங்கள்.
2.எதனால் துன்பங்கள் வந்ததோ என் பார்வை அதைச் சீராக்க வேண்டும்…
3.நான் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும்
4.பொறுப்புடன் செயல்பட வேண்டும்… அந்தச் சக்தி எனக்குள் வளர வேண்டும்
5.என் பார்வை அனைத்தையும் நல்லதாக வேண்டும்
6.என் பேச்சைக் கேட்பார் வாழ்வில் நலமும் நலமும் அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்.

இப்படி நீங்கள் எண்ணுவது நலம் பெறும் சக்தியாக உங்களை மாற்றும்…!

தியானத்தில் இருக்கும்போது… உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை சித்தர்களுக்கு வருகிறதப்பா..!

 

பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.”தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை” என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தில் அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நஞ்சினை ஒளிக்கதிராக மாற்றிய துருவனின் சக்தியை நாம் பெற வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் விஷத்தைக் குறைத்துக் குறைத்து… குறைத்துக் குறைத்து… விஷத்தை நீக்கிடும் உடலாக (மனிதன்) இந்த உயிரால்தான் நாம் பெற்றோம்.

அதாவது… ஒவ்வொரு உடலிலும் நுகர்ந்ததை உயிர் உருவாக்கியது
1.உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை நீக்கியது
2.நஞ்சினை நீக்கிடும் உடலாக மனிதனாக உருப்பெற்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இருப்பினும் அதிகமான நஞ்சினை சேர்க்கப்படும் பொழுது குறைந்த நீரை வைத்து அதைச் சுத்தப்படுத்த முடியுமா…? என்றால் முடியாது.
1.அதிக அளவில் எடுக்கும் இந்த உணர்வுகள்
2.நஞ்சினை நீக்கும் சக்தி நமக்குப் போதுமானதாக இல்லை.

இந்த உடல் நஞ்சினை நீக்கும் ஆற்றலாகப் பெற்றாலும்… இந்த உடலில் இருந்து வரக்கூடிய மணம் நஞ்சு என்றும் அறிந்து கொள்ளும் நிலையைப் பெறுகின்றது. இதற்குப் பெயர் கார்த்திகேயா என்று தெளிவாக கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

நஞ்சினை நீக்கிடும் ஆற்றலைத் தெரிந்தும்… உணர்ந்தும்… நஞ்சினை அகற்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலில்
1.நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் அது வெளிப்படும் பொழுது
2.புறத்திலிருந்து வரும் ஒரு வேதனைப்படும் உணர்வை இதனுடன் கலக்கப்படும் பொழுது
3.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் இருந்தாலும் நஞ்சு கொண்ட (வேதனையை) உணர்வினை நுகரப்படும் பொழுது நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைகின்றது.
4.நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் குறைந்தால்… நஞ்சினை வளர்த்திடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இருந்தாலும் மனிதனாக ஆனபின் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது… “அகஸ்தியன் – துருவ நட்சத்திரமாக ஆனது…”

கருவிலே அவன் இருக்கப்படும் பொழுது நஞ்சை வென்றிடும் தாவர இனங்களை எல்லாம் அகஸ்தியனின் தாய் தன் உடலிலே பூசிக் கொண்டு… நஞ்சு கொண்ட விலங்குகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற்றது.

அப்போது… தாய் நுகர்ந்த அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைக் கருவிலிருக்கும் அந்த அகஸ்தியன் என்ற சிசுவும் பெறுகின்றது.
1.அவன் பிறந்த பின் நஞ்சினை வென்றிடும் சக்தி பெறுகின்றான்
2.நஞ்சினை வென்றிடும் சக்தியாக வளர்கின்றன்
3.நஞ்சின் இயக்கச் சக்தியை உணர்கின்றான்.

நஞ்சினை மற்ற பொருள்களுடன் சேர்த்த பின்… அதிலே எந்தெந்த மணம் இருக்கின்றதோ அதை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்பதை “அகஸ்தியன் அவன் வளர்ச்சியில் காணுகின்றான்.
1.நஞ்சு இல்லாத தாவர இனம் இல்லை
2.நஞ்சு இல்லாத கோள்கள் இல்லை
3.நஞ்சு இல்லாத அணுக்கள் இல்லை என்ற நிலைகளையும் அறிகின்றான்.

நஞ்சின் அளவுகோல் அதிகரிக்கப்படும் பொழுது… அது ஒரு பொருளை அதிக வீரியமாக மாற்றி விடுகின்றது.

நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது மிளகாயில் காரம் அதிகரிக்கிறது… நஞ்சின் தன்மை அதிகரிக்கும் பொழுது கசப்பின் தன்மை அதிகரிக்கின்றது. எப்பொருளில் இந்த நஞ்சின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்த கசப்பான உணர்ச்சிகளை ஊட்டும் வலிமை பெறுகின்றது.

நெல் வகைகளை எடுத்துக் கொண்டால் அதிலே நஞ்சின் இயக்கச் சக்தி குறைவு. ஆகவே உணர்வின் தன்மை அதற்குள் சுவைமிக்கதாக… மகிழ்ச்சி ஊட்டும் உணர்வின் நிலைகள் அங்கே விளைகின்றது.
1.இப்படி… சாந்தம் கொண்ட உணர்வுகளில் நஞ்சு கலந்தால்
2.நஞ்சினைக் குறைக்கும் நிலைகளில் தாவர இனங்களும் விளைகின்றது.

இந்த உண்மையின் உணர்வுகளை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான் அகஸ்தியன்.

தாய் கருவில் இருந்து வெளிவந்த பின்…
1.அவன் உடல் இவனிடம் நஞ்சு வராதபடி
2.”அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணம்” அந்த நஞ்சையே வென்றிடும் சக்தியாக பெறுகின்றது.

“இவனின்று வெளிப்படும் உணர்வுகளோ” மற்ற நஞ்சின் தன்மை வந்தாலும் தனக்குள் அருகில் வராதபடி பாதுகாத்துக் கொள்கிறது. இந்த உணர்வின் துணை கொண்டு உலகில் நஞ்சின் இயக்க உணர்வை முழுமையாக அறிந்தான்.

உலகம் எப்படி இயங்குகிறது…? என்று அதனின் வலுவின் தன்மை அறியும் சந்தர்ப்பம் அவனுக்குள் உருவானது. அப்படி உருப்பெற்ற உணர்வு தான்
1.வானுலகில் இருந்து வரும் மின்னலாக இருந்தாலும்… அதைக் காட்டிலும் இடி மின்னலாக இருந்தாலும்
2.அவன் உற்று நோக்கினால் அது எல்லாம் அவனுக்குள் ஒடுங்குகின்றது
3.ஒடுங்கும் போது உணர்வின் ஒளியின் கதிராக அவனுக்குள் வளரும் தன்மை வருகின்றது.

ஐந்து வயதிற்குள் இதை எல்லாம் அறியும் பருவம் பெறுகின்றான்.

வானுலக இயக்க உணர்வு… நஞ்சின் மோதலால் ஏற்படும் (விஷக்கதிரியக்கத்தால் ஏற்படும்) மின் அணுக்களின் தாக்குதல் தான் மின்னல்…!

அந்த விஷத்தின் மோதலினால் அணுக்கள் பரவலாகச் சிதறும் போது மற்ற கோள்கள் உமிழ்த்தும் உணர்வுடன் கலக்கப்படும் பொழுது
1.அந்தக் கோளின் சக்தியை இயக்கச் சக்தியாக அதற்குள் வலுவூட்டி
2.எதனுடன் எந்த உணர்வின் சத்து கலந்ததோ அதிலே இது கலந்த பின்
3.அந்த உணர்வினை இயக்கும் சக்தியாக மாறுகின்றது என்பதனை அகஸ்தியன் உணர்கின்றான்.

ஏனென்றால் அவனுக்குள் ஒரு மின்னணுவின் தாக்குதல் வரப்படும் பொழுது… அதை அடக்கி அந்த உணர்வின் சத்தை உணரும் பருவம் பெறுகின்றான்.

மின்னல் தாக்கப்படும் பொழுது தாவர இனங்கள் கருகுகின்றது மற்ற பொருள்களும் கரைகின்றது. அது விஷம் கொண்டது
1.ஒன்றுடன் ஒன்று அந்தக் கதிரியக்கப் பொறிகள் தாக்குவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்… அது இவனுக்குள் அடங்கும் சக்தி வருகின்றது.
2.நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் உற்று நோக்கி அதன் உணர்வின் இயக்கங்களை அறிகின்றான்

அப்பொழுதுதான் “துருவன்” என்று அவனுக்கு காரணப்பெயர் வருகிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எடுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் ஒன்று சேர்த்த உணர்வு கொண்டு வெளிப்படுத்துகின்றோம்.
1.எல்லோருடைய செவிகளிலும் இந்த உணர்வின் ஒலிகள் படுகின்றது
2.அந்த உணர்வுகள் கண்களால் கவரப்படுகின்றது… அதே சமயத்தில் உயிரிலே மோதுகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் இரத்தநாளங்களில் கலக்கின்றது.

அந்த அருள் சக்தியைப் பெற்று “எல்லோரும் பெற வேண்டும்…” என்று அதைப் பாய்ச்சப்படும் பொழுது அவர்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளை மாற்றும் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

கூட்டுத் தியானத்தின் மூலம் இந்த உணர்வுகளை நாம் வெளிப்படுத்தும் பொழுது பூமியில் உள்ள காற்று மண்டலத்திலிம் இது அடர்த்தியாகப் பரவுகின்றது.

உதாரணமாக ஒரு நோயாளியை நீங்கள் பார்க்க நேர்ந்தாலும் அடுத்தகணம் ஆத்ம சுத்தி செய்து விட்டு மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து… நோயிலிருந்து விடுபட்டு அவர்கள் குடும்பமும் தொழிலும் நலமாக வேண்டும்…! என்று சொல்லுங்கள்.

இப்படிச் சொல்லப்படும் பொழுது
1.அவர்கள் நோய்களை மாற்றியமைக்கக் கூடிய திறனும் உங்களுக்குக் கிடைக்கின்றது
2.அவர்கள் நோய் உங்களுக்குள் வராது தடுக்கும் சக்தியாகவும் உங்களுக்குள் இது வருகின்றது.

ஏனென்றால் பிறர் படும் துயரங்கள் வேதனைகளை எல்லாம் நாம் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதே வேதனைப்படும் அணுக்களை நமக்குள்ளும் வளர்த்து விடுகின்றது. அதனால் நம் உடலிலும் நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

கோபப்படுவோரை அடிக்கடி உற்று நோக்கினால் அந்த உணர்வுகள் நமக்குள் இரத்தக் கொதிப்பாக மாற்றி விடுகின்றது. ஆஸ்த்மா நோயால் அவதிப்படுவோர் சொல்வதைக் கேட்டு உணர்ந்தால் நமக்குள்ளும் அந்த ஆஸ்மா நோய் வந்துவிடுகின்றது.

சர்க்கரைச் சத்து உள்ளோர் நிலைகளைக் கேட்டறிந்தால் அவர்களிடம் பேச நேர்ந்தால் அதே சர்க்கரை நோய் உங்களுக்குள் மாறி வந்து விடுகின்றது.

வாத நோய் முடக்குவாதம் போன்றவர் உணர்வுகளைக் கேட்டறிந்தால் அதே உணர்வுகள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்பட்டு அதே தீமை இங்கேயும் வந்து விடுகின்றது.

அதைப் போன்ற தீமைகள் நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நாம் அவசியம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

பின்…
1.நாம் மொத்தமாக ஒரே உணர்வுடன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோரும் பெற வேண்டும் என்று சேர்ந்து சொல்லும் பொழுது
3.எல்லோர் செவிகளில் பட்டு இந்த உணர்வலைகள் எல்லோர் உயிர்களிலும் மோதப்பட்டு
4.உடலில் உள்ள இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது தீமைகளைப் போக்கிடும் சக்திகளாக நாம் பரப்ப முடிகின்றது.

இப்படிப் பரப்பபடும் இந்த உணர்வலைகள் காற்று மண்டலத்தில் பரவும் போது அந்த உணர்வுகளை எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் பெறலாம்.

அந்த வலுக் கொண்ட உணர்வுகள் மூலம்
1.பிறருடைய தீமைகளை போக்கும் வல்லமையும் நீங்கள் பெறலாம்.
2.பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் அந்த ஆற்றலையும் நீங்கள் பெறலாம்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் யாருடைய நோய்களையும் நீங்கள் கவர்ந்து விடாதீர்கள். அவர்கள் நோயைப் போக்கிடும் சக்தியாகவே நீங்கள் செயல்படுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும்… அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… குடும்பத்தில் பற்றுடன் பாசத்துடன் பண்புடன் வளர வேண்டும்… அவர்கள் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்… தொழில்கள் வளம் பெற வேண்டும்…! என்று நாம் இப்படித்தான் எண்ணிச் செயல்படுதல் வேண்டும்

மாறாக… பிறரைப் பழித்துப் பேசுவதோ தவறு செய்வோரை உற்று நோக்கித் தவறு செய்கிறான்… தவறு செய்கிறான் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுத்துக் கொண்டாலோ… நாமும் தவறு செய்வோராக மாறி விடுகின்றோம்.

அந்தத் தவறு செய்வோர் உணர்வுகள் நமக்குள் வராது அருள் உணர்வு கொண்டு நாம் தூய்மைப்படுத்தி அவர்களும் தவறிலிருந்து விடுபட்டு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நல்லது எண்ணும் பொழுது நல்லது செய்கின்றோம். தக்க சமயத்தில் நண்பன் நமக்கு நன்மை செய்தான் என்றால் அவனைத் தெய்வமாகக் கருதுகின்றோம்.

ஆனால் தொழிலிலோ மற்ற நிலைகளிலோ நண்பருக்குள் குறையானால் “துரோகி…” என்று பழித்துப் பேசி ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.

இருவருடைய உணர்வும் இங்கே தான் உள்ளது…!

நல்லது செய்கிறான் என்று எண்ணினால் நல்லவனாக மாற்றுகின்றது. தீமை செய்கிறான் என்ற உணர்வாக மாற்றினால் இருவருடைய உணர்விலும் பகையாகி விடுகின்றது.

நண்பன் எதிரியாக மாறுகின்றான். எதிரியான உணர்வை வளர்க்கின்றது. நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற பகைமையை அகற்றிட ஒவ்வொரு நொடியிலும் அருள் உணர்வைச் சேர்த்து பழக வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் அது விஷ்ணு தனுசு. எல்லாவற்றிலும் முழுமையாக அந்த அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொண்டே வந்தால் வேகா நிலை அடைகின்றோம். இதைத் தான் தனுசுகோடி என்று சொல்வது.

1.நம் உடலில் எல்லா குணங்களிலும் மற்ற எல்லாருடைய உணர்வுகளிலும்
2.அருள் உணர்வை வளர்க்கும் சந்தர்ப்பமாக மாற்றிடும் போது எல்லா குணங்களையும் மாற்றி
3.உயிருடன் ஒன்றிடச் செய்யும் போது ஒன்று என்ற நிலையை அடைகின்றது.

அதை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு). அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தான் உங்களிலே தொடர்ந்து பாய்ச்சுகின்றேன்.

ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் தீமையிலிருந்து விடுபட்டுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இருளை அகற்றும் வல்லமை பெற வேண்டும்.

கவலையும் வேண்டாம்… சந்தோஷமும் வேண்டாம்…!

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்டநஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

நேரத்தையும் காலத்தையும் எப்போது பார்க்க வேண்டும்…?

 

பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று வேண்டுகின்றோம். அதனின் உட்பொருளை நாம் உணர்ந்து அந்தப் பக்குவத்தைப் பெறுதல் வேண்டும்.

1.நம் பிள்ளையைச் செல்லமாக வளர்க்கின்றோம் என்று சொல்கின்றோம்.
2.அவன் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும் சொல்கின்றோம்.
3.ஆனால் “அவனுடைய குறும்புத்தனம் மட்டும் போகவே மாட்டேன் என்கிறது…!” என்று இப்படியும் சொல்லி விடுகின்றோம்.
4.அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறோமா என்றால் இல்லை…!

நம் பிள்ளை தான்…! என்ற ஆசையின் நிமித்தம் இருந்தாலும் அவன் நல்லவனாக வேண்டும் என்று சொல்வதற்கு மாறாக
1.நாம் தவறிப் பேசும் பொழுது…
2.அது நல்லதாக ஆவதில்லை…!

எல்லாருடனும் நாம் நன்றாகப் பழகுகிறோம். இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பக்குவமாகப் பேசத் தெரியாதபடி…
1.எதிர் மறையான உணர்வு வந்தபின் கொஞ்சம் விரக்தியாகப் பேசிவிட்டால் போதும்
2.அந்த உணர்வுகள் பகைமையாகி விடுகின்றது.
3.அவர்களுடன் நாம் பழகிய அந்த நல்ல பண்புகளும் அங்கே சீர் கெட்டு விடுகின்றது.

ஆகையினால்தான் பாட்டை மட்டும் பாடி விட்டுப் பல நினைவில் நாம் இல்லாமல் அந்த பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று சொல்லச் சொல்வது.

அந்தப் பக்குவ நிலை பெற வேண்டுமென்றால்…
1.உயிரை ஈஸ்வரா… என்று எண்ணி ஏங்கி
2.நம்மிடம் இருந்து அடுத்து வரக்கூடிய சொல்கள் சிந்தித்து செயல்படும் தன்மையாக
3.நல்ல சொல்லாக எதிர் சொற்களைச் சொல்வதும்
4.சொல்லால் அதை அடக்குவதும் என்ற இந்த நிலையில் செயல்பட்டால் பகைமை அங்கே வராது.

உதாரணமாக ஒருவர் நம்மிடம் வந்து பிறரைப் பற்றி அதிகமாகக் குறை கூறுகிறார் என்றால் உடனே நாம் “ஏம்ப்பா இந்த மாதிரிக் குறை சொல்லிக் கொண்டிருகின்றாய்…? என்று நாம் அழுத்தமாகக் கேட்டால் அங்கே பகைமை வந்து விடுகின்றது.

அப்படிப் பகைமை வராதபடி தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சரி… என்று அவர் சொல்வது வரைக்கும் அமைதியாக இருந்து… “உம்…” கொடுத்துக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் பொறுமையுடன் நாம் இருக்க வேண்டும்.

“சமயம் பார்த்து…” அடுத்து ஒரு நல்ல சந்தர்ப்பம் வரும் பொழுது
1.அப்பா…! மற்றவர்கள் மீது நீ குறை கூறும் உணர்வுகள் எனக்குப் பிடிக்கவில்லை…
2.நீ இதைக் கொஞ்சம் யோசனை செய்து பாரப்பா…! என்று சொல்லி விட்டோம் என்றால் அங்கே சிந்திக்கக்கூடிய தன்மை வருகின்றது.

இப்படி இல்லாதபடி… அந்தந்த நிமிடமே நான் பதிலுக்குச் சொல்லி விட்டால்
1.அவன் சொல்வதை அங்கேயே மறுத்தோம் என்றால் நம்மையும் அவன் வெறுப்பான்
2.யாரைக் குறையாகச் சொல்லிக் கொண்டிருந்தானோ… அடுத்து நம் மீதும் இதே குற்ற இயல்புகளைச் சொல்லத் தொடங்குவான்.

ஆகவே சமயம் (நேரம்) வரும் பொழுது… அதை நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”

திரும்பத் திரும்ப எண்ணினால் தான் “நினைவின் ஆற்றல்” நமக்குள் பெருகும்

 

உதாரணமாக நாம் ரோட்டில் செல்லும் பொழுது ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்ற நிலையில் அவனை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால்
1.அடுத்து நாம் அவனைப் பற்றித் திரும்ப எண்ணுவதில்லை.
2.அவன் வேதனைப்பட்டாலும் அந்த உணர்வின் உணர்ச்சிகள் நமக்குள் கருவுறும் தன்மை பெற்றாலும்
3.”அவனை நாம் திரும்ப எண்ணாததால்…” அவனுடைய வேதனை நமக்குள் வளராது தடைப்படுகிறது.

ஆனால் தொழில் செய்யும் இடங்களில் ஒரு நண்பரிடம் பற்றுடன் நாம் பழகுகின்றோம். சந்தர்ப்பத்தில் அவருக்குக் கடுமையான நோய் வந்து விடுகிறது. அவர் மீது நாம் பற்றுடன் இருக்கும் போது அந்த உணர்வினை நான் நுகரப்படும் பொழுது வேதனையை நாம் உணர முடிகின்றது… உடனே நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த உணர்வின் தன்மை நம் இரத்தத்தில் கலந்த பின் அந்த நண்பனைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுதெல்லாம் அந்த வேதனை நமக்குள் கருவாக உருவாகத் தொடங்கிவிடுகிறது.

ஒரு கோழி கருவுற்றால் உடனே அது கேறுகின்றது. கேறும் பொழுது அந்த முட்டையின் தன்மை வலுப் பெற்றுவிடுகிறது. முட்டை பருவமடைந்த பின் பொரிந்து குஞ்சுகளாக வெளி வருகின்றது.

குஞ்சு வெளி வந்தபின் ஆகாரத்திற்காகக் கத்துகிறது தாய்க் கோழியோ சப்தமிட்டு மண்ணைப் பறித்துத் தன் குஞ்சுகளுக்கு உணவைக் காட்டுகின்றது.

இதைப் போன்று தான் நண்பன் நோய்வாய்ப்பட்டு இருக்கின்றான் என்றால்
1.அவனைப் பற்றிக் கேட்டறிந்த உணர்வுகள் நமக்குள் கருமுட்டையாகி விட்டால்
2.திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது வளர்ச்சி அடைகின்றது.
3.வளர்ச்சி அடைந்து முட்டை வெடித்து அணுக்களாக உருவான பின் தன் உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகிறது
4.அந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டி அங்கே தூண்டப்படுகிறது.

அப்போது நம் உயிர் என்ன செய்கிறது…?

கண் காது மூக்கு அவைகளுக்கு ஆணையிட்டு எந்த நண்பன் உடலில் இருந்து நோயின் உணர்வு வந்ததோ காற்றிலிருந்து அதைக் கவர்ந்து நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கிறது. அதை உணவாக எடுத்து அந்த அணுக்கள் வளர்ச்சி பெறத் தொடங்குகிறது.

நோயை உருவாக்கும் அத்தகைய அணுக்கள் பெருகிவிட்டால் நண்பனுக்கு எந்த நோய் வந்ததோ அதே நோய் நமக்குள்ளும் அதிகமாகப் பெருகத் தொடங்குகிறது.

நம்ம அறியாமல் தான் இது நடக்கிறது. அதை மாற்றி அமைக்க நாம் எண்ண செய்ய வேண்டும்…? நோய் எப்படி உருவானதோ அதே போல் அதை நீக்கும் சக்திகளையும் நமக்குள் நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

1.நம்முடைய நினைவுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்பால் செலுத்த வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிப்பெறும் பொழுது
3.சுவாசித்த உணர்வுகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
4.துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அணுக்கரு முட்டைகளாக வளரத் தொடங்குகின்றது
5.நம் இரத்த நாளங்களில் அது கலந்து குறித்த காலம் வரும் போது அந்த முட்டை வெடித்து அணுக்களாக உருப்பெறச் செய்கின்றது.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து அடிக்கடி தியானித்தோமோ அது நமக்குள் அணுத்தன்மை அடைந்த பின்… எதை எண்ணிக் கருவானதோ அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் நிலையாக… “அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்கின்றது…”

1.அப்போது நம் சிறு மூளை பாகம் அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.கண் காது மூக்கு வாய் உடல் இவைகளுக்கு ஆணையிட்டு
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் பூமியில் பரவியிருப்பதை உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் நினைவாற்றல் நமக்கு அப்போது வரும்.

மீண்டும் நினைவைச் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறும் பொழுது ஒளி பெறும் அணுக்களாக நம் உடலுக்குள் வளரத் தொடங்கும்.

அந்த அணுக்களை நாம் அதிகமாக வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் யாருடைய ஈர்ப்பிலும் (எந்த்த் தீமையிலும்) சிக்க மாட்டோம். உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அதிகரிக்கும்… நம்மைப் பிறவி இல்லா நிலைக்கு அது அழைத்துச் செல்லும்.

“பிறருக்காக… பிறருக்காக…!” என்று சொல்லி நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டுள்ளோம்

 

நாம் உண்ணும் உணவை எல்லாம் நம் உடல்… உடலுக்கு ஏற்ற சத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவற்றை எல்லாம் கழிவுப் பொருளாக ஆக்கிவிடுகின்றது.

1.நம் உடல் அமைப்பையே ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது
2.நம் ஆத்மாவிற்கு நாம் இன்னும் எத்தனை பெரும் தெய்வீக நிலையை ஏற்றுத் தர வேண்டுமப்பா..!

நம்மைச் சுற்றிப் பல பல காரியங்களும் நல்லெண்ணம் உடையவர்களும் தீய எண்ணம் உடையவர்களும் எல்லாம் தான் கலந்துள்ளன.

நம்முள் இருக்கும் பல கோடி அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகாமல் நம் சுவாச நிலையில் நம் ஆத்மாவுக்கு வேண்டிய நல்ல நிலையைத்தான் நாம் பெற வேண்டுமப்பா…!

நம் உடல் அமைப்பை ஆண்டவன் இந்நிலையில் அளித்திருக்கும் பொழுது நம் ஆத்மாவிற்கு நாம் தானப்பா பெரும் பொக்கிஷத்தைத் தேடி வைத்திட வேண்டும்.

இன்றைய பெரும் பகுதி மனிதர்கள் உள்ளோன்று வைத்து வெளியிலே ஒன்று பேசுபவர்களாகவும் பிறருக்காக… பிறர் மெச்சத் தான் வாழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாகவும் தான் நாம் பார்க்கின்றோமப்பா..!
1.பிறருக்காக வாழ்பவரும்
2.பிறர் பார்த்துப் புகழ வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவரும்
3.பிறரைத் துவேஷிப்பவரும்
4.பிறரைப் புகழ்பவரும் எல்லோருமே
5.தன் ஆத்மாவை மறந்துவிடுகின்றார்களப்பா…!

இன்றைய உலகில் உள்ள நற்காரியங்கள் செய்பவர்களும் புகழ்ச்சிக்கு ஏங்கித்தான் செய்கிறார்களப்பா…!
1.புகழ்ச்சிக்கு ஏங்கிச் செய்யும் நற்காரியங்களும்
2.ஆத்மாவிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லையப்பா…!

பசித்து வருபவனுக்குப் பசி அறிந்து அன்னமிட்டாலும் இந்தக் காலத்தில் அதையும் ஏமாற்றிப் பிழைக்கத்தான் பார்க்கின்றார்களப்பா…! நல்லவர்களையும் நல்லவர்களாக வாழவிடுவதில்லையப்பா இன்றைய உலகம்.

இன்றைய உலகிலிருந்து மீண்டு வருவதுவே நம் ஆத்மாவிற்குத் தேடித் தரும் பொக்கிஷமப்பா…!

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை

 

மனிதனாகப் பிறந்து வளர்ந்து சகல சம்பத்தும் பெற்று சௌபாக்கியமுடன் வாழ வேண்டும்… சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு மனிதனும் வளரும் நிலையிலேயே எண்ணுகின்றான்.

1.அந்நிலையிலேயே பேராசை கொண்டும் எண்ணிவிடுகின்றான்.
2.அந்தப் பேராசையினால் வருவது தான் சகல கஷ்டங்களும் பிணிகளும் பீடைகளும்.
3.அவன் எண்ணத்திலேயே தான் அவனுக்கு எல்லாமே வருகிறது.

தான் வாழ வேண்டும்… தன் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்… வறுமை இல்லாத வாழ்க்கை வேண்டும்… தன்னை ஒட்டியுள்ள தன் சந்ததிகள் என்றும் இன்பமுடன் வாழ வேண்டும்…! என்ற எண்ணத்தில் தான் பல கஷ்டங்கள் பட்டு பல செல்வங்கள் சம்பாதித்து தான் இறந்த பிறகும் தான் குடும்பத்தார் நல்ல நிலையில் வாழ வேண்டும்…! என்று சொத்து சுகத்தைச் சேர்த்து விட்டுச் செல்கின்றான் மனிதன்,

1.ஆனால் தான் பிறந்து தன் ஆத்மாவிற்கு என்ன நிலையைத் தேடிக் கொள்கிறான்…?
2.தான் வேறு… தன் ஆத்மா வேறு…! என்ற எண்ணமே மனிதனுக்கு எழுவதில்லை.

தன் ஆத்மாவிற்கு நல்ல நிலை ஏற்படுத்திவிட்டால்… நல்ல நிலை என்பது இன்று தான் வாழும் வாழ்க்கையில் பல ஜெப நிலைகளைப் பெற்று இந்த உடல் வேறு ஆத்மா வேறு என்ற நிலை தெரிந்து இந்த உடலிலேயே தன் ஆத்மாவுக்குண்டான சகல சக்தியையும் தன் ஜெப நிலையில் ஏற்றச் செய்தால்
1.உடலை விட்டு ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.ஆவி நிலையில் அல்லல்படாமல் பெரும் “தெய்வீக நிலையை” அந்த ஆத்மா பெற்றுவிடும்.

இந்த உடலுடன் உள்ள பொழுதே அந்த ஆத்மாவிற்கு அந்தச் சக்தி நிலையை நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமப்பா…!

1.நம் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் தானப்பா
2.நம் ஆத்மாவிற்கு நாம் வழங்கும் ஜெப நிலையை ஏற்றுக் கொள்ளும் தன்மை பெற முடிகின்றதப்பா..!

உடலுடன் உள்ள பொழுது எந்தக் கெட்ட அணுவும் அணுகாதபடி எந்தத் தீய சக்திகளும் அணுகாமல் எந்தத் தீய சக்திகளுக்கும் அடிபணிந்து அடிமையாகாமல்
1.தன் எண்ணத்தில் எவன் ஒருவன் உயர்ந்து நிற்கின்றானோ
2.அவனை எந்தத் தீய சக்திகளும் தீமையான அணுக்களும் வந்து அணுகிடாதப்பா…!

ஏனென்றால்..
1.நலிந்தோன் இதயத்திற்கு மேலும் மேலும் நலிந்த நிலை தான் வந்து அண்டிடும்.
2.நல்லோன் இதயத்திற்கு நல்ல நல்ல நிலைகள் தான் வந்து அணுகிடும் அப்பா…!

ஒருவன் எண்ணத்தில் எந்த நிலையில் இருக்கின்றானோ அந்த நிலையில் உள்ள அணுக்கள் தான் அவனை வந்து தாக்கிடும். (பூவின் வாசனை கருவாடு வாசனை கதை போல் தான்…!)

மனித உடலில் உள்ள பொழுதே இப்பொழுது நாம் உண்ணும் உணவும்.. உடுக்கும் உடையும்… வாழும் வாழ்க்கையும்… அன்றன்று மறைவது தான்..! என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றி நாம் சேமிக்கும் சொத்தெல்லாம் நம் ஆத்மாவுக்கு எந்த நிலை…? என்று புரிந்து சேமித்து வைக்க வேண்டுமப்பா…!

1.நாம் வேறு நம் ஆத்மா வேறு.
2.அந்த ஆத்மாவில் ஆண்டவன் தான் கலந்துள்ளான்.
3.நம் உடலில் அந்த ஆத்மாவுடன் அவ்வாண்டவன் கலந்து குடியிருக்கின்றான் என்ற எண்ணம் மட்டும் ஒவ்வொருவர் மனதிலும் நிலைத்திருக்க வேண்டுமப்பா..!

காலம் அழிந்தாலும் நம் ஆன்மா அழிவதில்லை. இந்த உடலில் நாம் அந்த ஆத்மாவிற்கு எந்த நற்காரியத்தைச் சேர்த்து வைக்க முடியுமோ அந்த நற்பயனை நாம் சேமித்து வைத்திட வேண்டுமப்பா…!

மனப் பொருத்தம் அமைந்தால் அது (திரு)மணப் பொருத்தமாகிறது

 

என் குழந்தை திருமணமாகி எந்த வீடு சென்றாலும் அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும்… அந்த சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் அங்கே செல்வ செழிப்பு வளர வேண்டும் என்று தாய் தந்தை எண்ண வேண்டும்

அதே போன்று தன் மகனுக்குப் பெண் வேண்டுமென்றால் மகாலட்சுமி போன்று குடும்பத்தைக் காக்கும் அருள் சக்தி கொண்ட பெண்ணாக அமைய வேண்டும் என்று இந்த உணர்வினை ஏற்றுக் கொள்ளுங்கள்.

இவ்வாறு எண்ணினால்…
1.அதற்குத்தக்க இடத்திற்கு அழைத்துச் சென்று நல்ல மணமகனையும் நல்ல மணமகளையும் தேர்ந்தெடுக்க முடியும்…
2.அந்த சக்தி உங்களுக்குள் வளரும்.

ஜாதகம் ஜோதிடம் என்று பார்த்தால் அதற்குள் சிக்கி அதற்குத் தான் நீங்கள் அடிமையாக முடியுமே தவிர அதனால் நல்ல நிலை வரப்போவதில்லை… மெய் உணர்வை அறியச் செய்யாது.

ஆகவே அதை விடுத்து விட்டு மனம் ஒத்துச் சென்றால் அந்த உணர்வின் தன்மை ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

இருந்தாலும் மனம் ஒன்றி இருக்கிறது…
1.ஜாதகம் ஒன்றி வரவில்லையே…” என்றால்
2.இது ஆழமாகப் பதிவாகி கடைசியில் சோர்வின் தன்மை அடைந்து விடுவீர்கள்.
3.அந்தச் சோர்வுக்குத் தக்க தான் மாப்பிள்ளையோ பெண்ணோ பார்க்கும்படி ஆகிவிடும்.
4.அதன் வழியில் பெண்ணும் மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்த பின் “கீரியும் பாம்பும்” போன்று தான்
5.அவருடைய வாழ்க்கை அமையும்… மகிழ்ச்சி பெறும் தன்மை இழக்கப்படுகிறது.

இன்றைய வழக்கில்… ஜாதகம் ஜோதிடம் பார்த்துத் தான் திருமணம் செய்கின்றார்கள்… ஆயுளையுமப்படி நிர்ணையிக்கின்றார்கள். அவர்கள் ஜாதகம் பார்த்த பிரகாரம் நோய் இல்லாது வாழ்கின்றனரா…?

எல்லாப் பொருத்தமும் இருந்தாலும் அவர்களுக்கு நோய் வராது என்பார்கள் ஆனால் நோய் வராது இருக்கிறதா…? ஆகவே ஜாதகப் பொருத்தங்கள் சரியாக அமைவதில்லை…!

1.மனப் பொருத்தம் ஆகி ஒன்றி வாழ்ந்திட வேண்டும்
2.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் அவருடைய எதிர்காலம் சிந்தித்து செயல்படும் தன்மை பெறும்.
3.அருள் ஞானிகள் வழியில் அருள் ஒளி பெற வேண்டும்
4.குடும்பத்தில் அனைவரும் ஒன்றி வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஜாதகம் ஜோதிடம் என்ற நிலையினை விட்டுத் தள்ளுங்கள்…!

அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையில் “குடும்பத்தில் அனைவரும் மனம் ஒத்து வாழ வேண்டும்…” என்ற இந்த எண்ணங்களை கூட்டிக்கொண்டு வாருங்கள்.

பெண்ணோ மாப்பிள்ளையோ பார்ப்பதற்கு முன் அவருடைய வாழ்க்கையில் நோயைப் பற்றி விசாரிங்கள்.

ஆண் என்றால் குணத்தை பற்றி விசாரிங்கள். சீரிய பண்பு இல்லை என்றால் இங்கே வந்தாலும் சரியாக வராது… இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும்.

நல்ல ஒழுக்கத்துடன் செயல்படுகின்றார்களா…? என்று பாருங்கள். அப்படிச் செயல்படும் பொழுது… முறைப்படி தியாநித்தால் அந்த நல்ல ஒழுக்கம் மீண்டும் வளரத் தொடங்குகிறது… திருமணத்திற்குப் பின் அங்கே தவறுகள் ஏற்படாது.

ஆனால் பெண் இப்படி மாப்பிள்ளை இப்படி என்று ஆசையின் நிலைகளில் உணர்ச்சிகளை ஊட்டி விடுவார்கள். அதைக் கேட்டு ஏமாந்து விட்டால் “ஏமாந்து விட்டேனே…” என்று தீய பழக்கங்கள் கொண்ட நிலைகளுக்கு வந்து விடுகின்றது.

துருவ தியானத்திலிருந்து கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போல வாழ வேண்டும் என்றுதான் எண்ணுதல் வேண்டும்
1.மணப்பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும்…
2.மணமகனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள்.

எங்கள் குழந்தை எந்த வீட்டிற்குச் சென்றாலும் அந்தக் குடும்பம் நலமும் வளமும் பெற வேண்டும். அதனுடைய பார்வை குடும்பத்தை உயர்த்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போல் வீட்டிற்கு வரும் மருமகளும்
1.மகாலட்சுமி போன்று குடும்பத்தை அழகுபடுத்தும்… மகிழ்ச்சி பெறச் செய்யும் அந்த உணர்வைப் பெற வேண்டும்.
2,அத்தகைய பெண் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து செலுத்துங்கள்

அதற்குண்டான சக்தி கிடைத்து நல்ல பெண்ணும் நல்ல மாப்பிள்ளையும் அமையும்…!.

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

 

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

குறை கூறும் பழக்கமே நமக்கு வரக் கூடாது…!

 

எம்மிடம் (ஞானகுரு) ஆசீர்வாதம் வாங்க வரும் பொழுதெல்லாம்
1.என் குடும்பத்தில் அனைவரும் நலம் பெற வேண்டும்
2.எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வரவேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர வேண்டும்
4.எங்கள் தொழில்கள் சீராக நடக்க வேண்டும்
5.எங்கள் வாடிக்கையாளர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்
6.எங்கல் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
7.எங்கள் குழந்தைகள் கல்வியில் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் உத்தமக் குழந்தைகளாக வளர வேண்டும்
8.எங்களுக்கு அந்த அருள் வேண்டும் என்று தான் வேண்டி நீங்கள் கேட்க வேண்டும்.

ஆனால் அதை விடுத்துவிட்டு
1.வீட்டில் என் பையன் சொன்னபடியே கேட்க மாட்டேன் என்கிறான்… வீட்டை விட்டே சென்று விட்டான்
2.குடும்பத்தில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையும் சச்சரவும் விட்டே போக மாட்டேன் என்கிறது
3.தொழிலில் நஷ்டம் வந்து கொண்டே இருக்கின்றது
4.கடன் வாங்கிச் சென்றவர்கள் பாக்கியைத் திரும்பக் கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள்
5.(கொடுக்க வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்… கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்…! என்றே சொல்வார்கள்)
6.எப்போது பாக்கியைக் கேட்கச் சென்றாலும் வெறுத்துப் பேசுகின்றார்கள் என்று தான் எம்மிடம் சொல்லிக் கேட்கின்றார்கள்.

ஆக இதைத்தான் வளர்த்து வைத்துக் கொள்ள முடிகின்றதே தவிர “நல்லதைக் கேட்க முடியவில்லை…”

எல்லோரும் நலம் பெற வேண்டும்… கணவன் மனைவி நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்…! என்று தான் எம்மிடம் கேட்க வேண்டும்.

மனைவி என்ன சொல்கிறது…? என் வீட்டுக்காரர் எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றார். அடுத்து கணவரோ… என் வீட்டில் என் பொம்பளை எப்பொழுது பார்த்தாலும் நச்சு…நச்சு… என்று பேசிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்…!

இருவருமே இப்படித்தான் சொல்வார்கள். யார் பேசுவது எவர் செய்வது என்று தெரிவதில்லை.

இந்த உணர்வு ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். நாம் எண்ணிய உணர்வுகள் நமக்குள் பதிவாகி மீண்டும் அதைச் சொல்கிறது. இராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வான்.

அதாவது…
1.நாம் ஒருவரைத் திட்டினோம் என்றால் பதில் அதுவே தான் வரும்…
2.ஒருவரைக் கோபித்தால் அதுதான் திரும்ப வரும்…
3.ஒருவரை வேதனைப்படும்படி சொன்னால் அதே வேதனையின் பதிலாக நமக்கு வரும்.

நாம் பேசும் உணர்வுகள் சீதாலட்சுமி ஆக மாறினாலும் நுகர்ந்த உணர்வுகள் சீதாராமனாக மாறுகின்றது. நாம் ஒருவரைக் கோபிக்கும் பொழுது சீதாலட்சுமி ஆக மாறுகின்றது.

அதை உற்றுப் பார்த்தால்… அந்த உணர்வை நுகர்ந்தால் நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… அதாவது அந்த எண்ணங்கள் தோன்றுகிறது.,, திட்டினால் அதுவே திரும்ப பதிலாக வரும்.

காவியங்கள் இதை நமக்குத் தெளிவாக்கியுள்ளன. அதன்படி நமது வாழ்க்கை எப்படி வழி நடத்த வேண்டும்…? மனிதரான பின் நாம் நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…? மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எம்மிடம் வந்து விட்டாலே
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன்
2.வாழ்க்கையில் உடல் நலம் பெறுவேன்
3.குடும்பத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வோம்
4.கணவன் மனைவியும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ்வோம்
5.நளாயினி போன்று மதித்து நடப்போம்… சாவித்திரி போன்று ஒன்றி வாழ்வோம்
6.எங்கள் பார்வை எங்கள் குடும்பத்தில் நலம் பெறும் சக்தியாக மாறும் என்ற உணர்வினை எடுத்து வாருங்கள்.

இது உங்களுக்குள் எவ்வளவு உயர்வைக் காட்டுகிறது…? என்று பார்க்கலாம்.

எம்மைச் சந்திக்க வந்தாலே… தலைவலியோ கை கால் குடைச்சலோ எல்லாமே குறையும்… வயிற்று வலியும் குறையும். வீட்டில் இருக்கும் பொழுது வலி இருந்தது… என்னைச் சந்தித்த பின் அந்த அருள் சக்திகளை எடுத்த பின் நிம்மதி கிடைக்கிறது என்பார்கள்.

இதை எல்லாம் உங்களுக்கு அனுபவபூர்வமாகக் காட்டினால் அதை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னொன்று மிகவும் முக்கியமானது…
1.யாரையுமே குறை கூறிப் பழகாதீர்கள்
2.குறையைக் கண்டால் மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்
3.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலை பெற வேண்டும்
4.அருள் ஞான வழியில் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய குறை நமக்குள் வளராது. அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் நமக்குள் இந்த வலுவின் தன்மை அவருடைய குறையான அணுக்கள் நமக்குள் அணுக்களாக விளையாது.

அவர்களும் இவ்வாறு எண்ணத் தொடங்கினால் அவர் வாழ்க்கை நலம் பெறும் சக்தியாக வளரும்.

ஆகவே எங்கே எப்படிப்பட்ட குறையைக் கண்டாலும் அடுத்த கணமே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒன்றுபட்டு வாழ வேண்டும்
3.சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குறை காணுவதையும் குறை சொல்வதையும் விடுத்து விட்டு இதைத்தான் ஒரு பழக்கமாக அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் “தெய்வ சக்தி” பெறுவீர்கள்

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான்… மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய் ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

உணவு உட்கொள்ளும் சமயத்தில் ஏற்படும் சில தவறுகள்

 

உதாரணமாக பிறர் உங்களுக்கு உணவு கொடுத்தாலும் மனம் விரும்பி நீங்கள் அதை உட்கொண்டால் தான் உங்கள் உடல் ஆரோக்கிய நிலை பெறும்.

சில இடங்களில்… கௌரவத்திற்காக “நான் இப்போது தான் சாப்பிட்டு வந்தேன்…” என்று பொய் சொல்லித் தலையைச் சொறிவார்கள். ஆனால் பசியும் இருக்கும்…! சாப்பிடுங்கள்…! என்று சொன்னபின் “எப்படிச் சாப்பிடுவது…?” என்று கௌரவம் பார்ப்பார்கள்.

அப்பொழுது அங்கே சலிப்பான நிலைகள் தான் அவர்களுக்கு வரும்.

ஆனாலும் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று சொன்ன பின் “சரி உங்களுக்காக வேண்டி நான் சாப்பிடுகிறேன்…!” என்று சொல்வார்கள்.

சலிப்பும் சோர்வும் அடைந்தபின் அது புளிப்பின் தன்மை உண்டாக்கும். இந்தப் புளிப்பு கலந்த பின் உணவைத் தட்டிலே போட்டவன்… சிறிதளவு உள்ளே போகும் பின் அதற்குப் பின் உள்ளே விடாது.

புளிப்பின் தன்மை வந்த பின் எதிர்க்கும் தன்மை வந்துவிடும் கொஞ்ச நேரம் ஆனபின் நெஞ்சைக் கரிக்க ஆரம்பிக்கும்.
1.புளிப்பின் சக்தி வரப்படும் போது அடுத்து எதை விழுங்கினாலும் (இந்தப் புளிப்பு) அன்னக் குழாயில் உள்ள அமிலத்தைக் கரைத்து விடும்.
2.பின் உராயும் போது நெஞ்சு எரிய ஆரம்பிக்கும்
3.நம்மை அறியாமலேயே அந்த உணர்வு இத்தகைய அமிலங்களை உருவாக்கி விடுகின்றது.

இதை போன்று தான்… நாம் எண்ணி எடுக்கும் எண்ணங்களில் உருவாகும் உணர்வின் அமிலங்கள் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை மடியச் செய்து விடுகின்றது… நல்ல உறுப்புகளையும் மாற்றி விடுகின்றது.

அந்த உணவை உட்கொள்ளும் பொழுது யார் உட்கொள்ளச் சொன்னார்களோ அவர்கள் மீதும் வெறுப்பு வரும். நான் வேண்டாம் என்று தான் சொன்னேன்… இப்படி எல்லாம் செய்தார்கள்…! என்று சாப்பாடு போட்டதற்காக அவர்கள் மீது வெறுப்படைவார்கள்.

பெண்கள் பெரும்பகுதியானவர்கள் இப்படி இருப்பார்கள். விருந்துக்கு வந்தவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று இருப்பார்கள் முதலிலே சிறிது சாதம் போட்டிருப்பார்கள் இரண்டாவது லபக்கென்று மறுபடியும் வைத்து விடுவார்கள்… பெரிய பாறையைத் தூக்கி போட்ட மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ இப்படிப் போடுகிறார்களே…! என்று இந்த உணர்வுகள் அந்த நிலையில் பட்ட பின் அவர்கள் உடல் எப்படி இருக்கும்…? சாப்பிட முடியாது சாப்பாடு போட்டவர்கள் மீது வெறுப்பு வரும்.

ஆனால் இவர்கள் சிரிப்பார்கள்…! சாப்பிடுபவர்களுக்கு இவர்கள் மீது வெறுப்பு வரும். அந்த வெறுப்பான அணுக்கள் பெருகி ஆகாரத்தைப் போட்டவர்கள் மீது “அவர்கள் வீட்டிற்குச் சென்றாலே இப்படித்தான் செய்வார்கள்…!” என்ற இந்த எண்ணங்கள் தொடர்ந்து வரும்.
1.இத்தகைய வெறுப்பின் அணுக்கள் நமக்குள் வளரப்படும் பொழுது
2.நம்மை அறியாமலேயே உடலுக்குள் எத்தனையோ நோய்கள் வந்து விடுகிறது.

வெறுப்பு கொண்டு பார்த்து… இப்படிப் போட்டு விட்டார்களே…! என்று பாய்ச்சப்படும் பொழுது சிரித்துக் கொண்டு அவர்கள் பார்த்தாலும் ஏற்றுக் கொள்ளும் நிலை வருவதில்லை.

ஆக… வெறுப்பை உருவாக்கும் அணுக்களே அங்கே உருவாகின்றது. இப்படி வெறுப்பை உருவாக்கி விட்டால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொந்த பந்தமோ உணவை அவர்கள் சமைக்கும் நேரத்தில்… குழம்பு வைக்கும் பொழுது ஏதாவது ஒன்றை அதிலே அதிகமாகப் போட்டு விடுவார்கள்.

அந்த குழம்பை ஊற்றிச் சாப்பிட்டால் வெறுக்கும் தன்மையே வரும். உப்பு அதிகமாகி விட்டால் வெறுக்கும் தன்மை வரும். சீரகம் அதிகமாகிவிட்டால் உமட்டல் வரும். காரம் அதிகமானால் எரிச்சலாகி வெறுக்கும் தன்மை வரும்

இதைப் போல் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இந்த உணர்வுகள் இயக்கி பொருள்களை அதிகமாகச் சேர்க்க வைத்துவிடும். நம்மை அறியாமல் இயக்கும் சில நிலைகள் தான் இவை எல்லாம்.

ஆகவே… எப்பொழுதுமே பிறருக்கு உணவு படைக்கும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி அதிலே படர வேண்டும்
2.இதை உட்கொள்ளுவோர் உடல் நலம் பெற வேண்டும் அவர் மகிழ்ச்சி பெற வேண்டும் எண்ணிச் சமைத்து அதற்குப் பின் உணவு போடுங்கள்.

அதே சமயத்தில்
1.மகிழச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எவருக்கும் அதிகமாக உணவைப் போட்டு விடாதீர்கள்
2.போதும்…! என்றால் நிறுத்திக் கொள்ளுங்கள்.

இரண்டாவது தரம் போடட்டுமா… போடட்டுமா… போடட்டுமா…! என்று நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த உணவு மீது வெறுப்பு அதிகமாகிவிடும்.

கொஞ்சம் போல வைத்துக் கொள்ளுங்கள்…! இல்லை வேண்டாம்…! இல்லை கொஞ்சம் போல… வேண்டாங்க…! இல்லை கொஞ்சம் தான்…! என்று இப்படிப் பேச பேச…
1.அதிலே வெறுப்பு வளர்ந்து இந்த உமிழ் நீரைச் சேர்த்தால் முதலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் அஜீரணமாகத்தான் ஆகும்.
2.அஜீரணமானால் சாப்பாடு போட்டும் பயனில்லாது போய் விடுகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் அன்பால் நடக்கக்கூடிய செயல்கள்.

நாம் உணவு ருசியாக இருக்கின்றது என்று அதிகமாகச் சாப்பிட்டால் உடல் அதை ஏற்றுக் கொள்கின்றதா…? அஜீரண சக்தியை உண்டாக்கிப் புளிப்பின் தன்மை அடைந்துவிடுகிறது. அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது.

அன்றைய தொழிலும் சோர்வடையும் நிலை வந்து விடுகிறது நம்முடைய எண்ணங்களும் பிறருடன் பேசும் பொழுது சோர்வின் தன்மையே அடைகின்றது வாழ்க்கையில் இத்தகைய அணுக்கள் பெருகத் தொடங்கி விடுகிறது.

நஞ்சினை முறித்து உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ மகரிஷிகளின் உணர்வலைகள் நமக்கு முன் உண்டு. அதனைப் பெறுவதற்குத் தான் மணிக்கணக்கில் பேசிப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).

அந்த உணர்வின் துணை கொண்டு நினைவாற்றலைக் கூட்டி நீங்கள் தான் உங்களுக்குள் பெருக்கி அதைப் பெருக்கிக் கொள்ள முடியும்.

நான் சொல்லி அதைக் கேட்டறிந்த பின்
1.அடுத்து உங்களுக்கு மீண்டும் அது நினைவுக்கு வரவில்லை என்றால்
2.உங்கள் உடலில் உள்ள நான் பதிவாக்கிய அணுக்களுக்கு மகரிஷிகள் உணர்வை உணவாகக் கொடுக்க முடியாது.

ஆகவே மேலே சொன்ன பழக்கங்களை எல்லாம் நாம் மாற்றி அமைத்து அருள் மகரிஷிகள் உணர்வு கொண்டு எதையும் செயல்படுத்தப் பழக வேண்டும்.

நடந்ததும்… நடப்பதும்… இனி நடக்கப் போவதும்… நம் நன்மைக்குத் தான்..!

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்… எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக… லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைத் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த… இந்த மனித உடலில் விஷத்தை வென்றிடும் உணர்வின் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் சிறு குழந்தைப் பருவத்திலேயே வானுலகை உற்று நோக்கினான்.

1.இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றது…? என்றும்
2.பிற மண்டலங்களில் இருந்து எவ்வாறு பல சக்திகள் வருகிறது…? என்றும்
3.அது பால்வெளி மண்டலங்களாக… தூசிகளாக எப்படி மாறுகிறது…? என்றும் கண்டுணர்ந்தான்
4.அவனால் அதை உணர முடிகின்றது… அவன் அறிவாக இயக்குகின்றது
5.அந்த வயதில் சொல்லாலோ செயலாலோ அவனால் வெளிப்படுத்த முடியவில்லை.

இருந்தாலும் அவன் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அவனுக்குள் விளைந்து அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

நம்முடைய கைக் குழந்தைக்குப் பேசத் தெரியவில்லை என்றாலும் அது அழுகும் போது அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய முகங்கள் மாறுகின்றது. மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நுகரப்படும் போது அந்தக் குழந்தை சிரிப்பதையும் (வாய் அசைவுகளை) நாம் காண முடிகின்றது.

இதைப்போன்று தான் இந்த இயற்கையின் இயக்கங்களை உணர்ந்த அகஸ்தியன்
1.வானுலக உணர்வின் ஆற்றலை எல்லாம் உணர்ந்தான்
2.அவனுக்குள் அது விளைந்தது… அந்த உணர்வுகள் மூச்சலைகளாக வெளிப்படுத்தப்பட்டது.

அவன் உடலில் விளைந்த அந்த உணர்வு கொண்டு மற்ற தாவர இனங்களை இவன் கண்ணுற்றுப் பார்த்தால் அதனுடைய மணத்தை நுகர்ந்து அது எவ்வாறு விளைந்தது… என்றும் எதனெதன் இயக்கத்தில் இது கலந்து வளர்ந்தது…? என்றும் அவனால் முழுமையாக உணர முடிகின்றது.

தன் இளம் வயதில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது வானை உற்றுப் பார்த்து 27 நட்சத்திரங்கள் உமிழ்த்தும் எதிர்ப் பொறிகள் (கதிரியக்கங்கள்) மின்னலாக மாறி அது எவை எவை என்னென்ன செய்கிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அகஸ்தியன்.

அது ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்து அந்த அதிர்வுகளாக வெளி வருவதை கேது ராகு என்ற கோள்கள் அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விடுகின்றது…. “விஷத் தன்மை கொண்ட கோள்களாக” மாறுகின்றது.

நுகர்ந்ததை ஜீரணித்து தனக்குள் விஷப் பாறைகளாக மாற்றினாலும் அது வெளிப்படுத்தும் தூசி.. (அந்த மூச்சு) அது வெளி வரும்போது சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

சூரியன் தன் அருகிலே அதைக் கொண்டு வரும் பொழுது தனக்குள் விளைந்த பாதரசத்தால் அதைத் தாக்கிப் பிரித்து
1.ஒளிக் கதிர்களாக (ELECTRIC) நம் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்குகின்றது.
2.வெப்பம் காந்தம் விஷம் என்ற மூன்றும் (ELECTRON) கலந்த நிலையில் காந்தம் தனக்குள் மற்றொன்றைக் கவர்ந்திடும் சக்தியாக
3.எந்த ஆவியின் தன்மை (கோளின் சத்தோ நட்சத்திரத்தின் சத்தோ) இங்கே இருக்கின்றதோ அதைக் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொண்டால் அந்த உணவின் சத்தாக (NEUTRON) இயக்கும் அணுவாக மாறுகின்றது
4.முழுமை அடைந்தால் தன் இனமாக விளையத் தொடங்குகிறது (PROTON).

உதாரணமாக ஒரு விஷத்தின் தன்மை அது அடர்த்தியின் தன்மையாக வரும் பொழுது நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் ஊடுருவி நாம் மயங்கி விடுகின்றோம்.

ஆகவே அதைப் போலத் தான் இந்த விஷத்தின் தன்மை (ELECTRON) எதை எதை நுகர்கின்றதோ அதன் அணுக்கதிர்களாக மாறுகின்றது. இப்படித்தான் நம் பிரபஞ்சம் இயக்குகிறது என்ற நிலையை முதன் முதலில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேரின்பத்தை… அவன் எவ்வாறு இந்த உலகில் அந்தப் பேரின்பத்தைப் பெற்றானோ அதைப் போல நாமும் பெற முடியும்.

பேரண்ட மகரிஷிகள்

 

1.”பேரண்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும்…”
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதற்குத் தான்
3.இதுவரையிலும் யாம் உபதேசித்து வருவதும்… உணர்த்தி வருவதும்.

இதைப் பதிவாக்கி மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது துருவ தியானத்தின் மூலம் அனுதினமும் அதைப் பெற்று அந்த அரும்பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

அருள் ஞான வித்துக்களைத்தான் ஊன்றுகின்றேன் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எண்ணத்தால் ஏங்கிப் பெறுங்கள்.
1.பேரண்ட மகரிஷிகளின் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அறியாது வரும் இருளைப் போக்கிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நினைவுகள் கூர்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணையும்படியாக நினைவாற்றலைப் பெருக்குங்கள்.

அதை உங்களுக்குள் பெருக்கினால் கூர்மை அவதாரமாக உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாக மாறுகின்றது. அதுவே மனிதனின் கடைசி எல்லை.
1.மனிதனாகப் பிறந்த நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.. மறவாதீர்கள்…
2.என்னால் சாத்தியமாகுமா…? என்று எண்ணி சோர்வடையச் செய்து விடாதீர்கள்.

யாகங்கள் செய்தோ வேள்விகள் செய்தோ இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியாது.

காரணம்…
1.அதிலே மந்திரங்களை ஓதி அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால் அது “வசியமாகி” விடுகின்றது.
2.இறந்த பின் அதே மந்திரத்தை யார் ஜெபிக்கிறார்களோ அது “கைவல்யம்…”
3.அதை மற்றவர்கள் பயன்படுத்தப்படும் பொழுது “ஏவல்…”

உலக மதங்கள் அனைத்தும் இந்த வழிப்படி தான் சென்று கொண்டிருக்கின்றது. நான் (ஞானகுரு) யாரையும் குறை கூறவில்லை. அரசன் காட்டிய வழிகள் பின் வந்தோர் பதிவு செய்த உணர்வே விளைகின்றது. அதன் வழியிலே இன்று இயங்கிக் கொண்டுள்ளது.

“இன்று வாழும் மக்களுக்கு இது எல்லாம் தெரியாது…”

மதம் என்ற நிலைகள் உருவாக்கப்படும் பொழுது மனிதனைச் சீர்குலைக்கும் நிலையாகப் பகைமை உணர்வுகள் வளர்கின்றது/ மதத்திற்குள் இனம் என்று வரப்படும் பொழுது “என் இனம் பெரிது… இல்லை என் இனம் தான் பெரிது…” என்று ஒன்றை ஒன்று அழித்துக் கொன்று குவித்து அதை ரசித்துக் கொண்டிருக்கும் நிலை தான் இன்று வருகின்றது…

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் ஒளியைப் பெருக்கும் நிலைகள் காலத்தால் மறைந்து விட்டது. இதை அறிந்து கொண்ட நாம்
1.இனியாவது மகரிஷியின் அருள் உணர்வை நாம் பெறுவோம்.
2.மகரிஷிகள் உணர்வுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வோம்…
3.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று தியானிப்போம்
4.அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

நமது பார்வையில் உலக மக்கள் தன்னைத் தான் அறிந்திடும் மெய் ஞானிகளாக வளர வேண்டும் என்று தவமிருப்போம்.

நம்மை உருவாக்கிய அன்னை தந்தையரை மறவாது அவர்களைக் கடவுளாக மதித்து… நம்மைத் தெய்வமாகக் காத்தருளிய அவர்களைக் கடவுளாக மதித்து… நல்வழி காட்டிய அவர்களை குருவாக மதித்து… அதன் வழியில் எண்ணியதை உருவாக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்.

நாம் எண்ணியதை உயிரே உடலாக்குகின்றது… நினைவாக்கும் பொழுது அதுவே தெய்வமாகச் செயல்படுகின்றது… மீண்டும் அதை எண்ணும்பொழுது அது குருவாக அதன் வழியிலேயே நம்மைச் செயலாக்குகின்றது. ஆகவே
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் குருவாக்குவோம்… அதனை நினைவாக்குவோம்
2.மகரிஷிகள் சென்ற பாதையில் இந்த வாழ்க்கையில் ஒளியின் சரீரம் பெறுவோம்.

எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம்

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்ளுதல்) என்றிட்ட ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்… அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தத்தம் செயலுக்கு சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்…” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்… உணர்தல்… தெளிதல்… என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்…?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்…!”

தீமை செய்யும் குணங்களை நுகர்ந்தால் உயிரின் துடிப்பு மாறிவிடும்

 

ஒரு கம்ப்யூட்டரில் மணிக்கணக்குகளைக் காட்டுகின்றார்கள். உணர்வின் தன்மை எலெக்ட்ரானிக்காக அது இயங்கி… அதிலே குறித்த நிலைகள் வரும் பொழுது மணிகளை மாற்றி மாற்றிக் காட்டுகின்றது.

ஆனால்…
1.அதிலே சிறிது தண்ணீர் பட்டு விட்டால் முழுவதும் மறைந்துவிடும்.
2.எதிர்மறையான உணர்வுகளைப் பதியச் செய்யும் போது அது தாறுமாறாக வேலை செய்துவிடும்.
3.அந்தக் கரண்டின் இயக்கம் அதில் உள்ள பேட்டரியின் சார்ஜ் குறைந்தாலும் தப்பான கணக்கைத் தான் காட்டும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் இயக்கம் சீராக இருக்கப்படும் பொழுது நம் எண்ணம் சொல் செயல் எல்லாம் நன்றாக இருக்கும்.

1.சோர்வு வேதனை போன்ற மற்ற நஞ்சான உணர்வுகள் வந்தால்
2.அத்தகைய எண்ண அலைகளை நமக்குள் அதிகமாகச் சேர்த்த பின்
3.நம் உயிர் அந்த உணர்வின் தன்மையை இயக்கப்படும் பொழுது இயக்கத்தின் துடிப்பு குறைந்து விடும்.

அப்படிக் குறையும் பொழுது நம் உடலின் இயல்பான இயக்கங்களும் குறையத் தொடங்குகின்றது. நம் எண்ணும் நிலைகள் சீராக வராது ஒரு கணக்குப் பார்த்தாலும் சரியாக வராது. நம் சொல்லும் சரியாக இருக்காது.

ஏனென்றால் நம் உயிர் எலெக்ட்ரானிக்காக (உணர்ச்சிகள்) அதை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும்.
1.அதிலே எந்த உணர்வின் தன்மை அதிகரிக்கின்றதோ அந்தந்த உணர்வுகளை மாற்றி மாற்றிக் கொண்டே இருக்கும்.
2.அந்த மாற்றம் எதுவோ கண்களில் அந்த நிறங்கள் மாறும்.
3,சொல்லுக்குள்ளும் உணர்ச்சிகள் மாறும்… அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் நிறமும் மாறும்.

இந்த மாதிரி ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய நிலைகளைச் சொல்லிவிடலாம். யாம் சொல்லும் தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்போருக்கு இது தெளிவாகத் தெரிய வரும். தெரிந்தாலும் இதை ஜோதிடம் போன்று சொல்லி விடக்கூடாது.

1.சில நேரங்களில் உங்களிடம் சில கேள்விகள் கேட்பேன் (ஞானகுரு).
2.அப்பொழுது அந்தச் சமயத்தில் உங்களிடமிருந்து என்னென்ன வருகிறது…? என்று பார்ப்பேன்.
3.பார்த்த பின் அதிலே என்ன நல்ல மாற்றம் கொடுப்பது…? என்று நான் இணைத்துக் கொடுப்பேன்.

நான் வேறு விதமாக மாற்றிச் சொல்லும் பொழுது உங்களிடமிருந்து எல்லாம் வெளியே வந்துவிடும். அப்பொழுது இந்த அலைகளைத் தொடர்ந்தவுடன் “எந்த உயர்ந்த உணர்வை உங்களிடம் கலக்க வேண்டும்…?” என்று சொல்லி உங்களிடம் கலக்கச் செய்வேன்.

1.அந்தச் சமயத்தில் நான் சொல்வதில் விஷயம் அதிகமாக இருக்கும்.
2.ஏனென்றால் குரு வழியில் அதை எதை இணைக்க வேண்டும் என்று இணைத்துத்தான்
3.உங்களுக்கு எந்த அறிவைக் கொடுக்க வேண்டும்…? என்று அந்த நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவது.

உதாரணமாக பள்ளியில் ஆசிரியருக்கு ஒரு மாணவன் மீது வெறுப்பாகி விட்டால் பாடத்தைக் கொஞ்சம் அழுத்தமாகத் தான் சொல்லிக் கொண்டு வருவார். மாணவனுக்குள் பயம் வந்து விட்டால் ஆசிரியர் என்ன சொன்னாலும் இவனுக்குள் இது பதிவாகாது. இது எல்லாம் அந்த உணர்வின் நிலை.

பார்வை அங்கே இருட்டாகும். எதிரில் எது இருந்தாலும் அதைச் சரியாகக் காண முடியாது. அந்த உணர்வுக்குள் நஞ்சாகும்.

ஆக… விஷத்தில் எந்த நல்ல பொருளைப் போட்டாலும் சிந்தனை வராது. விஷத்தின் தன்மையின் உணர்வாகவே மாறிவிடும். அந்த நேரத்தில் என்ன பதிவு செய்தாலும் அது பதிவாகாது.

அது போல் ஆகாது… குருநாதர் கொடுத்த “கோடி கோடி” என்ற நிலைகள் கொண்டு அந்த உண்மையின் தன்மை வளர்ந்தாலும்… கோடி கோடி என்ற ஒளியான உணர்வின் தன்மையாக உங்களுக்குள் இணைத்தே கொண்டு வருகின்றேன்.
1.இணைத்துக் கொண்ட பின்
2.அது தெளிந்த அறிவை உங்களுக்கு ஊட்டும்.

ஆக… அடுத்தவர்களை நீங்கள் பார்த்த பின் கேட்டறிந்து அதைச் சொல்வதல்ல. கேட்டறிந்து நீங்கள் சொல்ல வேண்டும் என்றால் நானே அப்படிச் சொல்ல முடியாது.

ஆனால் திருப்பிச் சொல்லும் நிலை வந்தால் அது வெறும் பாட நிலையாகத் தான் ஆகும். ஆகவே நாம் ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது அந்த உண்மைகளை நமக்குள் உணர்த்தும்… அங்கிருக்கும் தீமையும் தெரியும்.

அப்பொழுதெல்லாம்…
1.அந்தத் தீமையை நீக்குவதற்குண்டான வழி எது…? என்று நாம் எடுக்க வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் நமக்குள் தீமை சேராது.
3.அவர்களின் தீமைகளை நீக்கும் சொல்லாக நம்மிடமிருந்து வரும்.

அந்தச் சொல்லினை அவர்கள் பதிவு செய்து விட்டால்… அவர்கள் கேட்டுணர்ந்தால்… திருப்பி அதை அவர்கள் எண்ணினார்கள் என்றால் அவர்கள் தீமையை அவர்களே போக்க முடியும்….!

ஒருவர் வாய் திறந்து சொன்னால் போதும்… “இப்படித்தான்” என்று நமக்கு அது தெரிய வரும். நமக்குத் தெரிய வந்தாலும் உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

தெரிந்து கொண்டேன்…! என்று உடனே அவர்களிடம் சொல்லக்கூடாது.

1.அவர்களுக்கு நல்ல உணர்வை எப்படிக் கொடுக்க வேண்டும்…? என்ற நிலையில்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுடன்
3.அவர்கள் கண்களை உற்றுப் பார்க்க வேண்டும்… நாம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் பிறிதொன்றை அவர் சொல்லும் போது நமக்குக் கோபம் வரும். ஆனால் இங்கே சொன்ன உபாயத்தின்படி எண்ணிப் பாருங்கள்.

சரி… அப்படியா…! என்று அந்த அருள் உணர்வுகளைக் கண்ணிலே பாய்ச்சிப் பாருங்கள். யாராவது குற்றமாகச் சொல்ல வரும் பொழுது இந்த முறையைக் கையாண்டு பாருங்கள்.
1.அவர்களுக்குள் ப்ரேக் ஆகும்… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்களை இடைமறிக்கும்.
2.குறைகளையே சிந்தித்துக் கொண்டிருந்தால் இது போய் அங்கே தடையாகும்.
3.ஆனால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் வராது… நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் அவர்கள் தீமைகளை அடக்கச் செய்யும்.

ஏனென்றால் யாரும் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு அவர்களை இயக்குகிறது. அந்தக் குறை வளரக்கூடாது என்ற நிலையில் மகரிஷிகளின் அருள் ஒளி அங்கே படர வேண்டும்… மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்று இதை மட்டும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இப்படிச் செய்வதற்கு மாறாக நாம் அவர் உணர்வை அப்படியே எடுத்துக் கொண்டால் இரண்டு பங்கு நமக்குக் கோபம் வரும். நீ பெரியவனா…? நான் பெரியவனா…! என்று சண்டை வரும்.

இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் இதை எல்லாம் கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும்… வலுக் கொண்டு ஓட வேண்டிய “தியான நினைவோட்டம்”

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு… “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே…” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான் தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது. அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்… உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது… பல நன்மைகளும் ஏற்படுமப்பா…!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்…
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது… அதனின் வினைச் செயலை மாற்றி… நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்…!”

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா…! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

நல்லதுக்காக ஏங்கினாலும்… எந்தக் காரணத்தைக் கொண்டும் “வேதனையை வளர்த்து விடக்கூடாது…”

 

மனிதனான பின் மனிதனின் வாழ்க்கையில் நல்லது செய்யும் போதும் அறியாது எத்தனையோ சிக்கல்கள் வருகிறது…! எப்படி…?

உயர்ந்த குணங்கள் கொண்டோர் பிறருக்குப் பண்பு கொண்டும் பரிவு கொண்டும் உபகாரம் செய்தால் அதன் விளைவாக எதிர் நிலையான உணர்வுகளைச் சந்திக்க நேர்கிறது.

அப்போது… பண்பு கொண்ட அந்த மனிதனுக்குள் விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது இவனையும் வேதனைப்படச் செய்து… நரகலோகத்திற்கே அவனை அழைத்துச் சென்று விடுகின்றது.

1.நல்ல பண்புகளை அவன் எண்ணி ஏங்குகின்றான்…
2.நான் நல்லதைத் தான் செய்தேன்… எனக்கு இப்படி வந்து விட்டதே…! என்று ஏங்கி அந்த விஷத்தை வளர்த்துக் கொள்ளும் நிலையில்
3.விஷ அணுக்களை உருவாக்கிக் கொண்டு அந்த வேதனை கொண்டு அவன் மடிகின்றான்.

மடியும் பொழுது எதன் மேல்… யார் மேல் வேதனையாக எண்ணி அவன் வெளி வந்தானோ அந்த உணர்வின் நினைவாற்றல் வந்தபின் அந்த உடலுக்குள் புகுந்து
1.அங்கேயும் இந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்தி விட்டு
2.விஷமான அணுக்களைப் பெருக்கி முழுமை அடைந்து வெளிவந்த பின்
3.விஷப் பூச்சிகளாக விஷப் புழுக்களாக பாம்பினங்களாக உருமாற்றி விடுகின்றது உயிர்.

எத்தனையோ கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகி… அதிலிருந்து மீண்டிடும் உணர்வை எடுத்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… எல்லாவற்றையும் அடக்கிடும் நிலை பெற்றவன் தான் மனிதன்.

ஆகவே… வரும் தீமைகளிலிருந்து மனிதன் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனை நான் (ஞானகுரு) அறிய… இரவும் பகலும் ஒவ்வொரு நொடியிலும் காடு மேடுகளில் எம்மை அலையச் செய்தார் குருநாதர்.

அனுபவ வாயிலாகப் பேருண்மைகளை அறியச் செய்து தீமையிலிருந்து உன்னை மீட்டுக் கொள்ளும் நிலையாக நீ எதைத் தேர்ந்தெடுக்கின்றாய்…? அதை நீ எவ்வழியில் பெற வேண்டும்…?

தீமைகளை நீ செய்யவில்லை என்றாலும் தீமை செய்வோனை நீ உற்று நோக்கினால் அந்த உணர்வினை நீ நுகரப்படும் பொழுது… அதை அறியும் தன்மை வந்தாலும்…
1.ஓம் நமச்சிவாய என்று உன் உயிர் உனக்குள் அதை ஜீவ அணுவாக… உடலாக உருவாக்கி விடுகின்றதே…!
2.மீண்டும்… சிவாய நம ஓம் அவன் இப்படித் தவறு செய்கின்றான்…! என்று நீ திரும்பச் சொல்கின்றாய்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி பெற அந்த அணுக்களும் உனக்குள் பெருகுகின்றது. மனித இனம் என்ற நிலைகளையே மாற்றி உனக்குள் உணர்வுகள் மாறுகின்றது… உருவங்கள் மாறுகின்றது மனிதன் மீண்டும் தேய்பிறையாகத் தான் போக முடிகின்றது.

1.இதிலிருந்து தேய்பிறை ஆகாது உன்னை நீ எவ்வாறு காத்திட வேண்டும்…?
2.எவ்வழியில் உன்னை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.பல அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்தார் குருநாதர்.

அதைத்தான் உங்களுக்கும் சிறுகச் சிறுக சொல்லி வருகின்றோம்.

எனக்கு குருநாதர் தொட்டுக் காட்டியது போன்று உங்கள் உணர்வுகளுக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகளைத் தொட்டு காட்டி அதை இணைத்து… அதன் மூலம் அவர்கள் பெற்ற அரும்பெரும் சக்திகளை நீங்களும் பெறும் தகுதியாக “இதைப் பதிவு செய்கின்றோம்…”

குரு வழியில் நீங்கள் இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த நன்மை… அது உங்களுக்குள் என்றுமே நிலைத்திருக்கும் நிலையாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வு கொண்டு
2.உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

எல்லோருக்கும் நாம் நன்மை செய்தாலும் “நம்மைக் காத்துக் கொள்ள குருவின் துணை அவசியம் வேண்டும்”

 

குரு உபதேசித்த உணர்வுகளை நமக்குள் பெற்றுள்ளோம். இன்றைய நிலைகளில் அதை எல்லாம் எளிதாக உங்களிடம் சொல்கின்றேன். ஆனால் “அதை வழி நடத்துவதற்குண்டான சிக்கல்” எனக்குத் தான் (ஞானகுரு) அது தெரியும்.

காரணம்… எத்தனையோ இன்னல்களைக் கண்டுணர்ந்த நான் அன்பு கொண்டு பரிவு கொண்டு உயர வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் வந்து
1.உயர்ந்த சக்தி பெற வேண்டும் உணர்வுபூர்வமாக நான் ஊட்டினாலும்
2.அந்த உணர்வு பதிவான அவர்களுக்கும்… சந்தர்ப்பம் அந்த உணர்வை அவர்களுக்குள் அதை வளர விடாது தடுக்கின்றது.
3.அதனால் அவர்கள் அறியாது தவறு செய்யத் துணிவாகும் போது
4.எல்லை கடந்து சிரமப்பட்ட நேரத்தில் அவர்களுக்குள் நல்லது உருப் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நான் பாய்ச்சிய பின்னும்
5.அவரை இருள் சூழ்ந்த நிலைகளுக்கே அழைத்துச் செல்கிறது
6.அதனைக் கண்டு எனது மனமும் வேதனைப்படுகின்றது.
7.அந்த வேதனை உணர்வுகள் என்னையும் இருள் சூழ்ந்த நிலைக்கே அழைத்துச் செல்லும் நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை அன்றே குருநாதர் சொன்னார்.

“நீ உருவாக்கும் உணர்வுகள் நல்லதை மற்றவர்களுக்குப் பாய்ச்சிடும் நிலை பெற்றாலும்” தீமையின் நிலைகள் அவருடைய சிந்தனையைச் செயலற்றதாக மாற்றும்.

1.அத்தகைய வேளையில் நீ எதைச் செய்யப் போகின்றாய்…? உன்னை நீ எவ்வாறு காத்துக் கொள்ளப் போகிறாய்…?
2.உனக்கு மிகப்பெரிய சக்தியைக் கொடுக்கின்றேன்
3.நீ நகருக்குள் செல்லப்படும் பொழுது எத்தனை வேதனைகளை நீ படப் போகின்றாய் என்று பார்…! என்று இதைச் சொல்கின்றார்.

பலருக்கு பல நோய்களிலிருந்து விடுபடும் அதற்குண்டான உபாயங்களைச் செயல்படுத்தினாலும் அடுத்து அவர்களுக்கு நல்லதான பின் “இவர் என்ன செய்தார்…?” என்று அவர்கள் என்னைச் சொல்லப்படும் பொழுது
1.மனதார பணம் வாங்காது அவர் நல்ல வழி பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.நல்லதான பின் நுகர்ந்தறிந்தாலும் அவர் செய்யும் தவறுகளும்…
3.வேதனைப்படுத்தும் சொல்களை அவர் சொல்லப்படும் பொழுது அந்த விஷத்தை நுகர்ந்தபின் நீ செய்த நன்மைகள் எப்படி மறைகின்றது…?
4.அந்த விஷத்தின் தன்மை உனக்குள் எப்படி ஆட்கொள்கின்றது…?
5.உன்னை அறியாமலே வெறித் தன்மை கொண்ட செயல்படும் தன்மைகள் உனக்குள் உருவாகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்

தியான வழிகளில் அமைதியும் பண்பும் கொண்டு நீங்கள் வழி நடந்து வந்தாலும் உங்களைச் சீண்டிப் பார்ப்போரும் தூண்டிப் பார்ப்போரும் துன்புறுத்தி அதை வேடிக்கை பார்ப்போரும் “இப்படி இதிலும் பலர் பெருகுவர்…!”

இதைப் போன்ற நிலைகள் இருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்குத்தான் “எனது குரு காட்டிய அருள் வழியினை” உங்களுக்குள் இந்த உணர்வின் சக்தியைப் பரப்பப்பட்டு இந்த உணர்வின் வலிமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இதைச் செயல்படுத்துகின்றேன்.

ஆகவே… மனிதனின் பண்புகள் சிறுகச் சிறுக மறைந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் தீமையிலிருந்து எப்படி விடுபட வேண்டும்…? என்று உணர்த்தினார்… அதைத்தான் உங்களுக்கு உணர்த்துகின்றேன்.

உங்களை அறியாது வாழ்க்கையில் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு நஞ்சினை வென்றிடும் வலிமை பெற வேண்டும்… அந்த அருள் ஞானிகள் உணர்வை நுகரும் வலிமை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராது சில தீமையின் உணர்வுகள் உருவாகி விட்டாலும்
1.உங்கள் நினைவாற்றல் அந்தத் தீமையிலிருந்து அகற்றிடும் சக்தியாக
2.உங்களைக் காத்திடும் நிலையாக வர வேண்டும் என்பதற்குத் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உபதேசங்களைக் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குடும்பத்தில் கஷ்டமோ நஷ்டமோ இதைப் போன்ற தொல்லைகள் இருந்தால்… “கஷ்டம்…” என்ற அந்த வார்த்தைகளை விடுத்து விடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்கள் முழுவதும் படர்ந்து எங்களை அறியாது சேர்ந்த சாப வினைகள் நீங்கி நாங்கள் உடல் நலத்துடன் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

சாப அலைகள் என்றால்…
1.நம் குடும்பத்தில் உள்ளோர் யாரும் நேரடியாக சாபம் இட வேண்டியதில்லை
2.ரோட்டிலோ அல்லது அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் வேறு யாரோ அவர்களுக்குள் பகைமையாகி சாபமிட்டுக் கொண்டிருந்தால்
3.இப்படிச் செய்கின்றார்களே…! என்று அதனை உற்றுப் பார்த்தால் அந்த உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.

அவர்கள் இட்ட அந்தச் சாப அலைகள் நமக்குள் பதிந்து இரத்தத்திலே அணுக்களாக விளையத் தொடங்கும்.
1.விளைந்த பின் நமக்குள் பகைமை உணர்வை ஊட்டி
2.நம் வாழ்க்கையே சீர்கெடச் செய்யும் நிலையாக நம் நல்ல எண்ணங்களை இடைமறித்து
3.நம் சொல்லைப் பலவீனப்படுத்தித் துன்பங்களை ஊட்டும் நிலையாக வரும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் விடுபட “அதிகாலை துருவ தியானத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்…”

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுப்படுத்திக் கொண்ட பின்…
1.என் மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்கும் சக்தியாக வளர வேண்டும் என்று
4.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எண்ணி அந்த வலுவான நிலைகள் கொண்டு
5.அந்த நினைவினை உங்கள் குடும்பத்திலும் தொழிலும் செலுத்திப் பழகுங்கள்.

இவ்வாறு இரு மனமும் ஒன்றாகி விட்டால் உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகளால் விளைந்த அணுக்களின் வீரியம் தணியத் தொடங்கும்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் உணர்வும் அதிகரிக்கும். அடுத்து பிறவி இல்லா நிலைகள் அடையவும் இது உதவும். ஆகவே இதை மறவாதீர்கள்…!

ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் அந்த உணர்வு தன் இனத்தை உருவாக்குகின்றது.

ஆக… உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையை ஒளியாக (ஒளியான இனமாக) உருவாக்க வேண்டும் என்றால் மனிதனான நிலையில் மனைவியின் உயிருக்குள்ளும் கணவனின் உயிருக்குள்ளும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி இணைந்திட வேண்டும் அந்த உடல் முழுவதும் படர வேண்டும் என்று இரு உயிரும் ஒன்றாகக் கலக்கப்படும் பொழுது தான் இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

1.இப்படி ஒன்றிணைந்த நிலைகள் கொண்டு
2.27 நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளைத் தனக்குள் பெருக்கி
3.அண்டத்தில் வரும் அனைத்து நஞ்சினையும் வென்றது தான் துருவ நட்சத்திரம்… துருவ மகரிஷி…!

அந்தத் துருவ மகரிஷியைப் போல் நீங்கள் கணவன் மனைவி இருவரும் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றால் அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை அது எவ்வளவு கடுமையாக இருந்தாலும்
1.அதை வென்றிடும் சக்தி வருகின்றது.
2.ஒளியாக மாற்றிடும் திறன் வருகின்றது
3.அந்த ஒளியின் உணர்வாகக் கருவாக உருவாக்கும் தன்மை வருகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் இதைச் சீராகச் செய்து வருவோர் அனைவரும் நிச்சயம் பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடிச் சரீரங்களின் வளர்ச்சியில் மனிதனாக உருவாக்கிய நிலைகள் வரப்படும் பொழுது நாம் எண்ணியது எதுவோ அது “பிரம்மகுருவாக” மாற்றுகின்றது.

அகஸ்தியன் தன் உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்றிடும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து கொண்டதனால்… அவன் எந்த உண்மையின் உணர்வைக் கவர்ந்து கொண்டானோ அது பிரம்மகுருவாக இருந்து ஒளியின் சரீரமாக அவனை உருவாக்கியது.

அவன் தனக்குள் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றிடும் அருள் சக்திகளைத் தன் மனைவிக்கும் பெறச் செய்து தனக்குள் இணைத்துக் கொண்டான்.

1.அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் வாழ்ந்து…
2.நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும்
3.சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள் என்ற நிலையாக இரு உணர்வும் ஒன்றி வாழ்ந்த பின்
4.இரு உயிரும் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது…
5.துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளனர்.

கணவனும் மனைவியும் இப்படி இரண்டறக் கலந்து… இன்னொரு பிறவிக்குப் போகாது… தன்னுடன் இணைத்துக் கொண்டு… உயிர் எப்படியோ அதைப் போல் உணர்வின் அணுக்களை உருவாக்கிப் “பிறவி இல்லா நிலைகள் அடைவது தான் கடைசி நிலை…!” என்று இராமாயணக் காவியங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

நுகரும் உணர்வுகள் எவ்வாறு எண்ணமாகின்றது…? என்றும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு உருவாக்குகிறது… உருவாகிறது…? என்றும் உருவத்தை அமைத்து
1.நாம் கவரும் நிலைகளும் நாம் நுகர்ந்த உணர்வுகளும் உடலுக்குள் சென்ற பின்
2.அதனால் உடலுக்குள் மாற்றங்களும் போர் முறைகளும் அது எவ்வாறு வருகிறது என்றும்
3.நம் உடலுக்குள் எவ்வாறு போர் முறைகள் நடக்கிறது…? என்றும்
4.அந்த உணர்வுகளால் நமக்குள் எப்படித் தீமைகள் விளைவிக்கிறது…? என்றும்
5.இதிலிருந்து நாம் எவ்வாறு விடுபட வேண்டும்…? என்ற நிலையையும் இராமாயணத்தில் சித்தரித்துக் காட்டினார்கள்.

சீதா… துருவ நட்சத்திரத்திலிருந்து மகிழ்ச்சி பெறும் உணர்வை (அந்தச் சத்தினை) நாம் நுகர்ந்தால் நமக்குள் பகைமை உணர்வை மாற்றிக் கல்யாணராமனாக மகிழ்ந்து வாழும் நிலைகளையும் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மைகளும் வருகிறது.

1.அந்த மகிழ்ச்சி பெறும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்து (வசிஷ்டர்) கொண்டால்
2.அதனின் சுவை சீதா (சத்து) தனக்குள் அருந்ததியாக இருந்து
3.நம்மை என்றுமே பிறவி இல்லா நிலை என்ற நிலையை அடையச் செய்யும்… அந்த அருள் சக்திகளை நாம் பெற முடியும்.

அத்தகைய தகுதியை உங்களுக்குள் ஏற்படுத்தும் நிலையாகத் தான் அன்று அகஸ்தியன் கண்ட உணர்வின் உண்மைகளையும் அவனில் இருந்து வெளிப்பட்ட நஞ்சை வென்றிடும் உணர்வுகளையும் நீங்கள் பெற இந்த உபதேசம் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அதன் மூலம் இந்த உலகையும் உலக இயக்கத்தையும் உங்கள் உயிரின் இயக்கத்தையும் உடலுக்குள் அது எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும் நீங்கள் அறிய முடியும்.

அகண்ட அண்டத்தையும் பேரண்டத்தையும் உணர்ந்த அகஸ்தியன் அவனில் கண்டுணர்ந்த உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
1.அகண்ட அண்டத்தில் விளையும் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்ய முடியும்
2.அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சான நிலைகளை வென்றிடும் உணர்வுகளையும் பெற முடியும்.

அதிகாலையில்… “நம் நினைவுகள் இருக்க வேண்டிய திசை”

அதிகாலையில் 4:00 மணிக்கு என்னை (ஞானகுரு) விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார் குருநாதர்.
1.அதிகாலை நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகள்
2.துருவப்பகுதி வழியாகப் பூமிக்குள் வருவதை அறியும்படி செய்கின்றார்.

காரணம்… சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படுவதைக் கவர்ந்து ஒளி அலைகளாகப் படரச் செய்கின்றது. அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது
1.நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழியாக… பூமி எவ்வாறு கவர்ந்து இழுக்கின்றது…? என்பதை குருநாதர் தெளிவாக்குகின்றார்.
2.அந்த நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பிக்கின்றார்.

விஷத்தன்மையான உணர்வுகளைக் கவரும் அந்தந்தக் கால கட்டங்களில் (சந்தர்ப்பத்தில்)
1.அந்த விஷத்தின் தன்மையை நுகரும்படி செய்து
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அந்த விஷங்களை எப்படி முறியடிப்பது…? என்ற நிலைகளையும் காட்டுகின்றார்.

ஆகவே துருவப் பகுதியை உற்று நோக்கி காலை 4 மணியிலிருந்து ஆறுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை “ஒரு வழக்கமாக” வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.

1.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்கின்றார்
2.அதை நுகரும் பொழுது அதனால் உடலுக்குள் உபாதைகள் உருவாவதையும் காட்டுகின்றார்
3.பின் காலை நான்கு மணிக்கெல்லாம் குரு துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகரப்படும்போது அந்தத் தீமைகள் ஒடுங்குகின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…? அதிலிருந்து வெளிப்படும் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? அதனை எவ்வாறு நீ நுகர வேண்டும்…? என்பதையும் குரு தெளிவாக எனக்குள் உணர்த்துகின்றார். அதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளையும் என் வாழ்க்கையில் நடத்திக் காட்டுகின்றார்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்திகளை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது விஷத்தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? அதை வைத்து… உனக்குள் வரும் தீமைகளில் இருந்து எவ்வாறு நீ மீள வேண்டும்…? என்று இப்படித்தான் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

வாழ்க்கையில் வந்த விஷத்தன்மைகளை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக நிலைத்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக எவ்வாறு வாழுகின்றார்கள்…? என்றும் பதினாறு என்ற நிலையில் எப்படி வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…?
1.அதனை நீ பெறுகின்றாயா…? (அல்லது)
2.மூலிகைகளைக் கண்டுபிடித்துப் பிறருடைய துன்பங்களையும் நோய்களையும் போக்கும் “வைத்தியன்” என்ற பெயர் வாங்குகின்றாயா…?

“பல பல தாவர இனங்களைக் கையில் எடுத்துக் கொண்டு” பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்களை ஒடுக்குவதும்… விஷப் பூச்சிகளிடம் காட்டும் போது அவைகள் பம்முவதும்… கடும் விஷம் கொண்ட மிருகங்களையும் அஞ்சி ஓடச் செய்வதும்… போன்ற செயல்களில் ஈடுபட்டு
1.அதன் வழி உன்னுடைய வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டி
2.பேரும் புகழும் பெருமையும் அடையும்படி புகழ் தேடச் செல்கின்றாயா…?
3.புகழ் தேடிய பின் அதனின் உணர்வுகள் உன்னை மீண்டும் விஷத்தன்மை அடையச் செய்து அதன் வழி மடிகின்றாயா…? (அல்லது)
4.மனித உடலை மாற்றி விண் செல்கின்றாயா என்று இப்படி பல வினாக்களை எழுப்பினார் குருநாதர்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி… அந்த நெறிப்படி நடந்து உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றேன். அதே உணர்வைத் தான் உங்களுக்கும் இப்போது போதித்துக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

உருவம் அருவம் – அருவம் உருவம்

 

உலகில் உள்ள அனைத்து மதங்களும்
1.தெய்வம் என்ற நிலையில் உருவத்தைக் காட்டி… அருவத்தின் எண்ணங்களைத் தனக்குள் எண்ணும் பொழுது
2.அந்த உணர்வினை உயிர் நுகர்ந்து உணர்வின் எண்ணங்களாக உருவாக்குகின்றது.
3.ஆனால் எந்த உருவத்தைப் பார்த்தோமோ அந்த உருவத்தின் உணர்வலைகளாக வருகின்றது.

இவருடைய எண்ணங்களும் அதுவும் ஒன்றாக வருகிறது. இது இரண்டும் சேர்த்துத் தனக்குள் பதிவாக்கப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் கொண்டு ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

பதிவாகி… பக்தி கொண்டு வாழ்ந்த பின் அந்த மனிதன் இறக்கின்றான் என்றால் அதே பக்தி கொண்ட நிலைகளில் இன்னொரு மனிதன் எண்ணி ஏங்கும்போது
1.எந்தப் பக்தியின் நிலைகளில் எந்த உருவத்தைக் காட்டினார்களோ
2.அந்த உருவத்தின் உணர்வலைகளும் அதனின் இசையின் உணர்வுகளும் கலந்து
3.அந்தச் சொல்லின் தன்மை உணர்வுகள் உணரப்பட்டு… இந்த உணர்வுகள் “ஒளிகளாக” உருவாகின்றது.

அதைப் (தெய்வத்தின் உருவை) பதிவாக்கப்படும் பொழுது இந்த நினைவுகள் இங்கே அந்த எண்ணங்களைத் தோற்றுவித்து வாழ்க்கையை அதன் வழி நடத்தும்படி செய்கின்றது.

அதே சமயத்தில் அவர் இறந்து விட்டாலோ… எதைக் கண் கொண்டு உணர்வின் தன்மை அலைகளாகப் பாய்ச்சியதோ… எதன் எதன் உணர்வின் எண்ணங்களை இதற்குள் பாய்ச்சியதோ… இந்த உணர்வின் அலைகள் சென்ற பின் இதே மந்திரத்தை அவர் சொல்வார் என்றால்
1.எந்த மந்திரம் இவர் உடலுக்குள் உருவாக்கப்பட்டதோ அது ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் ஒளிகளை எழுப்பப்பட்டு
2.அதே ரூபத்தையும் உருவாக்கப்படும்… எனக்குக் கடவுள் காட்சி கொடுத்தான் என்று…!

நமக்குள் உள் நின்று இயக்கப்பட்ட உணர்வுகள் தான் நாம் இறந்த பின் அதே உணர்வலைகளை எழுப்படும் போது இந்த அலைவரிசையில் அவர்களுக்கு அந்தந்த மதத்தின் தன்மை கொண்டு
1.உருவம் அருவமாகி… அருவம் உருவமாகி
2.நமக்குள் அருவமாகி அந்த ஒளி அலைகளாக மாற்றும் பொழுது
3.அதை ஒருவர் நுகர்ந்தார் என்றால் அந்த உருவத்தின் உணர்வுகள் அருவ நிலையாகக் காட்சியாகக் கொடுக்கின்றது.

அந்த உணர்வு உடலுக்குள் இயக்கப்படும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… உடலுக்குள் அது பெருகுகின்றது. இது எல்லாம் இயற்கையின் நிலைகள்.

நம் நாட்டில் மட்டுமல்ல… உலகின் பல நாடுகளிலும் “அவர்கள் தெய்வம்…” என்ற நிலையை உயர்த்திக் காட்டுவதற்காக ஒரு பெண்மணிக்கு மூக்கிலிருந்து “கொம்பு” வருவதாகக் காட்டுவார்கள்… இதுவே தெய்வம்…! என்பார்கள்.

இதை உற்றுப் பார்த்து… காவியப் படைப்புகள் வைத்துக் காட்டப்பட்டு… மந்திர ஒலிகளை எழுப்பி ஜெபிப்பார்கள் என்றால் அதன் வழிப்படி “அந்தக் கடவுள் நம்மைக் காப்பான்…” என்று பதிவாக்கி விடுகின்றார்கள்.

எந்தச் சிலையின் உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றதோ அது நுகர்வோர் உணர்வுகளில் பதிவாக்கப்படுகின்றது. அவர்கள் சொல்லும் மந்திர ஒலிகளும் இதற்குள் கூடி விடுகின்றது.

இவர்கள் இறந்து விட்டால் இதே மந்திரத்தைச் சொல்வார் என்றால்
1.எந்த சிலையின் ரூபத்தைக் காட்டப்பட்டதோ…
2.அதே சிலையின் உருவங்கள் மந்திர ஒலிகளைச் சொல்வோருக்குக் காட்சியாக அளிக்கும்.

“தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது…” என்ற நிலையும் இவர்கள் எண்ண ஒளிகளை அவர்கள் எடுக்கப்படும் பொழுது எந்தெந்த உணர்வுகள் பதிவானதோ அந்த அலைகள் அங்கே படரும்… அதை இவர்கள் அறிய வேண்டியது வரும்

ஆனால் இந்தத் தெய்வம் உன்னைத் தண்டிக்கும்…! என்று அந்த மதத்தின் கீழ் அச்சுறுத்தும் உணர்வு வந்துவிட்டால் தன்னை அறியாது செய்த தவறுக்கு இந்தத் தெய்வம் தண்டனை கொடுக்குமா…? என்ற பயம் வந்து விடுகிறது.

ஏனென்றால் நேர்மையாகச் செல்வோருக்குத் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்து விட்டால் அச்சுறுத்தும் பய உணர்வுகள் வந்துவிடுகிறது அந்த பயத்தால் “தெய்வம் என்னைத் தண்டித்து விடுமோ…!” என்ற அந்த உணர்ச்சிகள் வந்து விடுகின்றது.

ஓர் வீரிய உணர்வு கொண்டவர்கள் “நீ செய்த தவறுக்குத் தெய்வம் உனக்குத் தண்டனை கொடுக்கும்…” என்று அவரின் வலுக் கொண்ட எண்ணங்களைப் பாய்ச்சுகின்றார்கள்.

கேட்டுணர்ந்தோர் உணர்வுகளில் இது பதிவாகி விட்டால் இதே உணர்வுகள் அச்சுறுத்தும் உணர்வுகளாகப் பாய்ந்து
1.எந்தத் தெய்வத்தை… எந்த மதத்தின் கீழ்… எதை அடிப்படையாக வளர்த்து வந்தனரோ அவர்கள் ஏற்றிய உணர்வு வந்த பின்
2.அதே உருவத்தின் நிலைகள் இந்த மனித உடலில் வளர்த்துக் கொண்ட சிலையை பார்த்த உணர்வலைகள் இங்கே உருவமாக்கப்பட்டு
3.அருவ நிலைகள் சென்றபின் அதே உணர்வு இங்கே பதிவான நிலை அதே ரூபத்தைக் காட்டும்.
4.ஆனால் “மனிதனுடைய ரூபத்தைக் காட்டாது…” எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளி அலைகளை அங்கே காட்டும்.

நாம் எண்ணி எடுப்பது தான் தெய்வமாகக் காட்டுகின்றது என்று இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நெஞ்சுப் பகுதியில் “பட படக்கும் துடிப்பலைகள்”

 

கோப குணத்தின் உந்துதலால் நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே கனம் கொண்டதாக மாறுகின்றது. கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இரு பாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி…! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்… அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி… இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம் உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில் உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது…எது எப்பொழுது செயல்படுகிறது…? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி… மோகம்.. தாகம்…” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.
1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்… சுவாசமும்… செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்…!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்… மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்… ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி…
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்…!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே…
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்…!

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!

வாய்ச் சொல் வரும் விதம்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

கண்ணுக்குத் (நிழல் படமாக) தெரியும் “உணர்வுகளின்” இயக்கங்கள்

 

விஞ்ஞான அறிவால் காந்தப்புலனறிவில் இணைத்து ஆண்டனா என்ற சாதனத்தில் பதிவு செய்து திருப்பி வைத்து அந்தந்த ஸ்டேஷன் அலைவரிசையில் வைத்தால் ஒலி/ஒளி அலைகளைக் கவர்ந்து வீட்டிலிருக்கும் டி.வி.பெட்டியில் நாம் தெளிவாகக் காண முடிகின்றது.

விஞ்ஞான அறிவால் “ஆண்டனாக்களைச் சக்தி வாய்ந்ததாக வைக்கப்படும் பொழுது…” இன்று உலகின் எந்தப் பாகத்தில் இருந்து ஒளிபரப்பு செய்தாலும் விளையாட்டு அரங்கில் விளையாண்டு கொண்டிருந்தாலும்
1.அங்கு நடக்கும் நிகழ்ச்சியை ஒளிப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்
2.இங்கே நாம் வீட்டில் இருந்து கண்ணுற்றுப் பார்க்கும் நிலைகளுக்கு அலைகளைக் குவித்து டி.வி.யில் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று தான் விண்ணிலே எட்டா தூரத்தில் இருக்கும் அருள் மகரிஷிகளின் சக்திகளையும் நாம் பெற முடியும்.

சாதாரண மனிதன் அவன் வெளிப்படுத்தக்கூடிய வெறுப்போ கோபமோ பாபமோ தாபமோ அதை நமக்குள் பதிவு செய்து கொண்டால்… அவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வலைகளை எளிதில் காண முடிகின்றது.

ஒருவன் “நமக்குத் தீங்கு செய்தான்…” என்ற எண்ணத்தைப் பதிவு செய்து கொண்ட பின் அவனை நாம் நினைவுக்குக் கொண்டு வரப்படும் பொழுது… நம்மை அறியாமலே வேதனை என்ற உணர்வுகள் உந்துகின்றது.

அந்த உடலின் உருவம் நிழல் படமாக நமக்குள் தெரிகின்றது. அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது கொதித்தெழும் உணர்வாக இருந்தால்
1.உயிரிலே இயக்கப்பட்டு நாம் அதை உணர முடிகின்றது.
2.அவர் உருவைப் பார்க்க முடியவில்லை… என்றாலும் “உணர்வின் நிழல் படமாக” நாம் பார்க்கின்றோம்.

இதைப் போன்று தான்
1.இருளைப் போக்கிடும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.நாம் எண்ணும் பொழுது உடனடியாக அந்த இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வாக நாம் தெளிவாக எடுக்க முடியும்.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களும் அதனதன் நினைவைக் கொண்டு வரப்படும் போது நமது தான் தான் ஆண்டெனாவாக இருந்து அதை எடுத்துக் கொடுக்கின்றது.

அதே சமயம் நமக்குள் சக்தி வாய்ந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால்
1.அந்த நினைவினை மீண்டும் கண்ணுக்குக் கொண்டு வரப்படும் போது
2.அந்த சப்தரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி எண்ணி
3.அந்த மகரிஷிகளின் ஆற்றலை உடலுக்குள் செலுத்தினால் அவர்கள் தீமைகளை அகற்றியது போன்று நமக்குள் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கே கூட்டமைப்பின் நிலைகளை யாம் (ஞானகுரு) கொண்டு வருவது.

ஒரு மனிதனுக்குக் கேன்சரோ ஆஸ்த்மாவோ ஹார்ட் அட்டாக்கோ (இதய அடைப்பு) இருக்கிறது என்று… இது போன்ற வழக்கில் நாம் கேட்டறிந்தது.. அதிலே எதனின் உணர்வின் பெருக்கம் அதிகமாகின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகும் பொழுது… அந்த நோயின் வன்மை கூடி மனிதனை வீழ்த்துகின்றது.

வீழ்த்திய பின் எதனின் தன்மை அதிபதியாக ஆனதோ அந்த நோய்க்கு உண்டான உணர்வையே மற்ற உடலுக்குள் விளைய வைக்கச் செய்கிறது.

இதைப் போன்று தான்
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இப்பொழுது உங்களுக்குள் நான் பதிவு செய்யப்படும் பொழுது
2.அதை நீங்கள் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் உடலுக்குள் ஊடுருவி இருக்கும் எத்தகைய தீமைகளையும் அகற்றிடும் சக்தியாக அது வரும்.

அருள் செல்வம் என்பது எதுவப்பா…? இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…!

ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலகோதயத்தில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.
3.அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும்
4.ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் “கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்”

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்… நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்…!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்…!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா…! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்…?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்…? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்…” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது…?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நல்ல மனதையும் கெடுப்பதில்லை… நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே… எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்…
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்…
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது… நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்…! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது… எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி… அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ…
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா…!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்…” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்… என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“சக்கர வியூகம்”

 

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவர் வேதனைப்படுவார்.. ஒருவர் சங்கடப்படுவார்… ஒருவர் நோயுடன் அவதிப்படுவார்… ஒருவர் கோபக்காரராக இருப்பார்…! இவர்களின் உணர்வை எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்க்க நேர்ந்து அதை நுகர்ந்தறிந்தால் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.

சீதா என்றால்… சத்து சுவை என்றும்.. ராமா என்றால் எண்ணங்கள் என்றும்… சீதாராமா என்றால்.. மனிதனுக்குள் நுகர்ந்தால் (சுவாச நிலை) சுவைக்கொப்ப எண்ணங்கள் வருகின்றது என்றும்… நமக்குள் பலவிதமான நிலைகளை (மேலே சொன்னதை) நுகர்ந்தால் அந்த உணர்வின் எண்ணங்கள் “பல ராமனாக (பலராமன்) இயக்குகின்றது…” என்றும் சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பலராமனாக வருவதற்குக் காரணம்… நம் கண் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது. கண்களால் கவரப்பட்ட உணர்வை நுகரச் செய்கின்றது. அதன் உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.

உயிரோ அந்த உணர்வை ஈசனாக இருந்து இயக்குகின்றது. உடலுக்குள் அது பதிவாகின்றது. இவ்வாறு பதிவாக்கிய உணர்வுகளை
1.கண்களால் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது
2.நுகர்ந்த பின் அந்தந்த உணர்ச்சி கொண்டு உயிர் நன்மை தீமை என்று அறிவிக்கின்றது.

நன்மை தீமை என்று அறிவதற்குக் கண்ணே கவர்ந்து அந்த உணர்வைப் பதிவாக்கி அந்த உணர்வை நுகரச் செய்கிறது.
1.உயிர் அந்த உணர்ச்சியை ஊட்டி உடல் முழுவதும் அது சக்கரம் போன்று சுழன்று படரச் செய்கின்றது.
2.உடலுக்குள் சென்ற பின் உடல் அதை அரவணைத்துக் கொள்கின்றது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் மனிதனான பின் இந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் மறைந்துள்ளது. பல விதமான எண்ணங்கள் நமக்குள் உண்டு,

இந்த உயிர் இங்கே பூமிக்குள் முதலில் வந்த பின் தாவர இனத்தில் விழுந்து உடல் பெற்றாலும் “கண்கள் உருவாவதற்கு முன் எண்ணங்களே இருந்தது…!” அனைத்தையும் (தாவரங்களின் மணங்களை) உணர்ந்து நுகர்ந்து உணர்வுகள் அது எண்ணங்களாக வளர்ந்தது.

ஒரு செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொண்டால் அது சீதாலட்சுமியாக மாறுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உயிரணு சூரியன் கவர்ந்த அந்த மணத்தை நுகர்ந்தால் சீதாராமனாக வருகின்றது. உயிரணு நுகர்ந்து உடலாக்கப்படும் பொழுது சிவமாகின்றது.

உயிரோ ஈசனாகின்றது. உயிரின் இயக்கம் விஷ்ணுவாகின்றது. நாராயணன் மறு அவதாரம் விஷ்ணு. உயிரின் துடிப்புகள் வெப்பமாக வரப்படும் பொழுது விஷ்ணு என்றும் காட்டுகின்றார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். தான் எடுத்துக் கொண்ட உணர்வு சீதாலட்சுமியாக மாறினாலும் இந்த உயிரணு நுகர்ந்தபின் சீதாராமனாக அந்த எண்ணங்கள் தோன்றுகிறது. நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான். திரேதா என்றால் உடல்.
1.இதை எல்லாம் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
2.நாம் அறியும் தன்மைக்குக் கொண்டு வருகின்றனர் ஞானிகள்.

இப்படி வந்த இந்த உயிர் தான்… நுகர்ந்த பின் இந்த சீதா என்ற அந்தச் சுவை உடலாகும் போது சிவம்..

உடலுக்குள் அந்த உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிப்பதும் நாராயணன் அந்த உடலுக்குள் சீதாரமனாக அந்தச் சுவை எதுவோ அந்த எண்ணத்தின் உணர்ச்சியாக அது இயக்குகின்றது என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள்.

கடவுளின் அவதாரத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

இவ்வாறு உருவான அந்த எண்ணங்கள் சீதாராமன் என்று வந்தாலும் அதற்கப்புறம் “கண் இல்லை… என்கிற போது பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வருகின்றது.

1.பல தீமையான உணர்வுகளை நுகரும் போது அதனால் வேதனைப்படுவதனால்
2.அந்த வேதனையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்துகின்றது.
3.அதன் அறிவாக மாற்றம் அடைகின்றது… தப்பிக்கும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற உணர்வுகள் பார்த்துத் தெரிந்து உணர வேண்டும் என்ற நிலையில் அதற்குள் அந்த நினைவாற்றல்கள் கூடி அந்த உணர்வின் எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

1.அவ்வாறு தோற்றுவித்த உணர்வுகள் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துச் சேர்த்து
2.பல உடல்களில் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வளர்ச்சி அடைகிறது,
3.அதைத் தான் “துவாரகா…” என்று காட்டுகின்றனர்.

ஒரு சுவையின் சத்தை நுகரப்படும் போது திரேதா யுகத்தில் உணர்வுகள் எண்ணங்களாகிக் கிரேதா உடல் என்று ஆனாலும் அதே சமயத்தில் இங்கே துவாரகா இந்த உடலுக்குள் தான் தன் தேவைக்குகந்ததை (தேவகி) நுகர்ந்த உணர்வுகள் வாசு தேவனாக சுவாசித்த உயிர் அதை உருவாக்குகின்றது.

அதாவது “தேவகி” என்ற உணர்வின் சத்தை
1.தன் தேவைக்கு என்று எண்ணிய அந்த உணர்வுகள் இரண்டும் சேர்ந்து
2.இந்தத் துவாரகா யுகத்தில் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் இந்த உடலான சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான்… கம்சனை வெல்ல..!

கம்சன் என்றால் இருள். இருளை நீக்க அவன் பிறந்தான். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகள் பல சரீரங்களீல் பார்க்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றித் தோன்றி அந்த எண்ணங்களால் தான் கண்கள் தோன்றியது என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகிறது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காக மகாபாரதத்தில் “பலராமன் கண்ணனுக்கு மூத்தவன்…” என்று காட்டுவார்கள்.

பல உணர்வின் எண்ணங்கள் (பல ராமன்) அங்கே தோன்றித் தான் பார்க்க வேண்டும் என்ற கண்கள் தோன்றியது. ஆக…
1.இந்த இயக்கத்தின் நிலைகளை மனிதன் புரிந்து கொள்ளும் நிலைக்கே
2.பல உண்மையின் உணர்வுகளை இயக்கத்தைக் காட்டியிருந்தாலும்
3.காலத்தால் அந்த உண்மைகள் மறைந்து விட்டது.

“நல்ல குணங்களின் வலுவுக்கு வலு சேர்க்கும்” மகரிஷிகளின் அருள் சக்திகள்

 

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு மூலக்கூறைப் பிரிக்கப்பட்டு… அந்த மூலத்தின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்று காணுகின்றார்கள்.

அதைக் கண்டுணர்ந்த பின் “இதனெதன் செயலாக்கங்கள் இப்படித்தான்…” என்று விஞ்ஞானத்தால் பாட நூல்களாகக் கொடுக்கப்பட்டு அதன் வழி தான் எந்த ஒரு இயந்திரமாக இருந்தாலும் இயக்குகின்றார்கள்.

1.அந்த இயந்திரத்திலே பல பல உறுப்புகளை (ACCESSORIES) இணைத்து உருவாக்கினாலும்
2.அந்த இயந்திரத்தின் இயக்க ஓட்டச் சக்திக்கொப்ப “தாங்கும் இயல்பு” அதிலே வர வேண்டும்
3.அப்படித் தாங்கக்கூடிய வலுவைக் கொண்டு வருவதற்காக
3.உலோகக் கலவையினை மாற்றித் தான் அந்த உறுப்புகளை உருவாக்குகின்றனர் (விஞ்ஞான அறிவுப்படி).

அதைப் போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் தன்மையிலும்… இந்த உடலின் தன்மை தாங்கும் நிலையாக… அதற்குள் இயக்க உணர்வின் வலு பெற வேண்டும்.

இதை ஏன் சொல்கிறேன்…? (ஞானகுரு) என்று நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். காரணம்
1.நமக்குள் பல கோடி எண்ணங்கள் இயக்குகின்றது
2.இது அனைத்தையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பக்குவம் நமக்குள் வருதல் வேண்டும்.

மகரிஷிகள் தனது வாழ்க்கையில் விண்வெளியின் ஆற்றலைப் பெறும் தகுதியைப் பெற்றார்கள். அந்த உணர்வின் ஆற்றலை உயிரின் துணை கொண்டு நாம் நுகர்தல் வேண்டும்.

1.நமக்குள் இருக்கும் எந்தெந்த எண்ணங்களுக்கு எவ்வாறு வலுப்பெறச் செய்ய வேண்டுமோ
2.அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை விண்ணை நோக்கி ஏகி…
4.உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
5.அந்த உயிர் வழியாக உடலுக்குள் அந்த உணர்வுகளைச் செலுத்தினால்
6.நமக்குள் இருக்கும் குணங்களுக்கு இது நல்ல உரச்சதாக அமைகின்றது.

அப்படி உரமேற்றப்படும் போது தான் “தீமையிலிருந்து விடுபடும் நிலைகளே நமக்குள் உருவாக்குகின்றது” என்பதை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் எதுவாக இருப்பினும் மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலுக்குள்ளே அந்த தீமைகளை அகற்றிடும் உணர்வாகச் சேர்க்க வேண்டும்.

இராக்கெட்டை விஞ்ஞான அறிவுப்படி விண்ணிலே செலுத்திய பின்பு அவர்கள் ஏகும் உணர்வின் தன்மை கொண்டு
1.குறைகளை நீக்கும் உணர்வுகளைப் (TROUBLE SHOOTING) பாட நிலைகளில் கொடுத்து இங்கே எப்படித் தெளிவாக்குகின்றார்களோ அதைப் போன்று
2.மெய் ஞானிகள் அவர்கள் கண்டுணர்ந்த உண்மையினை உணர்த்துவதற்காக
3.ஆலயங்களிலே அதை உருவங்களாக… சிலைகளாக வடிக்கப்பட்டுக் காவியப் படைப்பினை உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ஆலயத்தில் காட்டியுள்ள அந்தத் தெய்வ குணத்தை எண்ணி… அந்த உண்மையை உணர்த்திய அருள் மகரிஷிகளை எண்ணி…
1.அவர்கள் உணர்வினை நமக்குள் பதிவு செய்தால்… வரும் தீமைகளை அகற்றிடும் உணர்வாக
2.”நம் நல்ல குணங்களுக்கு மிகச் சக்தி வாய்ந்ததாக” அது ஆக்கம் கொடுக்கின்றது.

இது சாஸ்திர விதிகளின் மூலம் ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள். அதைப் புரிந்து நாம் நடக்க வேண்டும்.

வீரியச் சக்தியின் தொடரை “வேகம் கொண்டு” எடுத்துக் கொள்ள வேண்டும் 

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில் யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம் எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

1.எண்ணத்தின் வலு கொண்டு
2.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
3.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

உந்து விசை

 

பிறவா நிலை அடைந்து விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் எடுத்தோம் என்றால் மனித வாழ்க்கையில் தடைப்படும் உணர்வுகளை நீக்கிவிட்டு நாம் அடைய வேண்டிய எல்லையைச் சீராகச் சென்றடைய முடியும்.

அப்படிச் சீராகச் செல்ல வேண்டும் என்றால் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்தல் வேண்டும்.
1.தவறு எங்கிருந்து வந்ததோ தவறை நீக்கித் தன் வாழ்க்கையைச் சீர்படுத்தவும்
2.தவற்றற நிலையைத் தனக்குள் வளர்க்கவும் முடியும்.

அந்தத் தவறற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான் அது முடியும்.

விஞ்ஞானிகள் செலுத்தும் இராக்கெட் விண்ணை நோக்கி எப்படிச் செல்கின்றதோ அதைப் போன்று அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது
1.இந்தப் புவி(யில்) வாழும் வாழ்க்கை நம்மை ஈர்க்காது
2.மெய்யான வாழ்க்கையாக வாழும் சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மைச் செலுத்தும்… இந்த உயிர்…!

மெய் ஞானிகள் உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் சிக்கலைப் பிளந்து… விண் செல்லும் நிலையாக உடல் பெறும் உணர்வுகளைப் பிரித்துவிடும். உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகும்.

இராக்கெட்டை விண்ணிலே ஏவி அதனின் எல்லையை அடைந்த பின்… உந்தித் தள்ளிய உணர்வின் சத்தைப் பிரித்து (ROCKET STAGES) விடுகின்றது. அதன் பின் அதனுடைய சுழல் வட்டத்திலே செல்கிறது.

அதைப் போன்று இன்று புவியின் ஈர்ப்பிலே இருக்கும் நாம்
1.விண்ணிலே இருக்கும் மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து அந்த உணர்வின் சத்தாக நமக்குள் வளர்த்துக் கொண்ட பின்
2.அதனின் “உந்து விசைகள்” நமக்குள் அதிகமாகும் பொழுது அதனின் ஆற்றல் நமக்குள் அதிகமாகின்றது.
3.அந்த ஆற்றலின் துணை கொண்டு ஒளி வட்டமான சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வைப் பிரித்து விடுகின்றது
4.உயிருடன் ஒன்றி மகரிஷிகளின் சுழல் வட்டத்திற்குள் சென்று உணர்வின் தன்மை ஒளியாகச் சுடர்கின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு விண்ணுலக ஆற்றலை அறிய… ஆற்றல்மிக்க சாதனங்களை உருவாக்கி விண்ணிலிருந்து அதைக் கவர்ந்து இங்கே மண்ணுலகில் அனுப்பப்பட்டு… அதனின் சீர் பாதைகளை எந்திரத்தின் துணை கொண்டு காணுகின்றனர்.

இதைப் போன்று உடல் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
1.வரும் தீமைகளைப் பிளக்கும் உணர்வை நாம் உந்து விசையாக ஆக்கி
2.விண்ணுலகம் செல்ல முடியும்… அதற்குத் தான் ஆத்ம சுத்தி…!

ஒவ்வொரு நொடியிலும்… வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நமக்குள் இதை இணைத்திடல் வேண்டும் (ஆத்ம சுத்தி).

ஆகவே… எந்த ஒரு தடையும் இல்லாது அருள் ஞானிகள் உணர்வுகள் நமக்குள் சேரச் சேர… அங்கே சென்றடைந்த பின்
1.இந்த உடலில் பெற்ற உணர்வின் தன்மையை… அதாவது உடல் பெறும் உணர்வுகளைக் கழற்றி எறிந்துவிடும்.
2.அந்த நிலையைப் பெறுவதற்கு மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியினை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

உடலில் விபூதி (சாம்பல்) பூசுவதன் உண்மை

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்துதலே நல்லது.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தானே தவிர
5.அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு – சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர
6.சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் ஆண்பால் பெண் பால் நிலைகள் கொண்டது. அவைகளிலிருந்து வெளி வரும் தூசிகள் ஒன்றுடன் ஒன்று கவரும் போது பெரிதளவாக மோதும் போது… “மின்னலாகப் பாய்கிறது…” அந்த உணர்வின் “ஒளிக்கற்றைகளாக” விரிந்து செல்கிறது.

ஆனால் அதுவே சிறிதளவு மோதலாக வரும் போது நுண்ணிய அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.இதே கதிரியக்கப் பொறியை உருவாக்கும் வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய இந்த உணர்வைச் சூரியன் கவர்வதும்
2.நட்சத்திரத்தின் கவர்ந்த அலைகள் இதை எதிர்பாராது சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது
3.இந்தக் கதிரியக்கத்தைக் கண்டு ரேவதி நட்சத்திரம் என்ற நிலைகள் அஞ்சி ஓடுவதும்
4.ஆண்பால் என்ற கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியுடன் இது மோதி அந்த உணர்வின் தன்மை சுழலும் போது
5.இந்த வியாழன் கோளின் கதிரியக்கப் பொறியும் சேர்ந்து மூன்றும் இரண்டற இணைந்து விடுகின்றது.

அதனால் இது துடிப்பின் நிலை ஆகி எர்த்..! என்று (அந்த நிலை ஆக்கப்படும்போது) ஈர்க்கும் சக்தி சிறிதளவே வரப்படும் போது தன் அருகிலே மற்ற கோள்கள் வெளிப்படுத்தும் தூசிகளைக் கவர்ந்து அது அடைபட்ட பின் “ஓர் உயிர்” என்ற நிலை வருகின்றது.

இந்த உயிரணு எந்தெந்த உணர்வின் சக்தியை எடுக்கின்றதோ… அதே உயிர் எப்படித் துடிக்கின்றதோ… அதன் உணர்வாகத் தன் உடலாக… உடலில் உருவாக்குகின்றது.

இப்படித்தான் பல பல உடல்கள் மாற்றமானது என்ற நிலையை இந்த உண்மையின் உணர்வை அகஸ்தியன் நுகர்ந்தான். மின்னல் அது எப்படி ஒளிக்கற்றைகளாக மாறுகின்றதோ அதே உணர்வின் தன்மை போல் உயிரும் அதே நட்சத்திரங்களிலிருந்து வந்தது தான்…!

அதே உணர்வைச் சிறுகச் சிறுகச் சேர்த்துத்தான் தாவர இனங்கள் வந்தாலும் அதன் உணர்வின் அடர்த்தியாக வரும்போது… உயிரின் துடிப்பால் இந்த உணர்வின் தன்மைகளை (தாவர இனத்தின் மணங்களை) ஜீவ அணுவாக மாற்றி எதனின் மணத்தைக் கவர்ந்து கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலில் அணுக்களாக உருவாகின்றது.

1.இதைத் தான் வேதங்கள் “சாம…” மணம் என்றும் அதனின் இசை என்றும் கூறுகிறது
2.அதாவது உயிர் நுகர்ந்த அந்தந்த உணர்வுக்கொப்ப எண்ணங்களும்
3.அந்த உணர்ச்சிக்கொப்ப உடலின் அமைப்பும் அதனுடைய குணங்களும்
4.அதனின் செயலாக்கங்களும்…! என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது.

ஏனென்றால் இதற்கு விளக்கம் கூற வேண்டும் என்றால் இரண்டு வருடத்திற்காகவது சொல்ல வேண்டும். ஆனால் உங்களிடத்தில் சுருங்கச் சொல்கிறேன்,

இதனுடைய உணர்வுகள் உங்களுக்குள் விளைந்தால்… அகஸ்தியன் கண்ட வழிகளில் நீங்களும் நுகர்ந்தால் இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து இந்த மனிதனுக்குப் பின் எங்கே… என்ற நிலையில் பிறவி இல்லா நிலை அடையலாம்.

அந்த அகஸ்தியன் தன்னில் உணர்ந்த உணர்வினை ஒளியாக மாற்றினான். அதே உணர்வின் தன்மையை நாம் எடுத்துக் கொண்டால் அந்த ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்.

வானில் வரும் உணர்வின் தன்மையை விஷத்தை ஒளியாக மாற்றி இன்று அகஸ்தியன் தன் வாழ்க்கையில் பெற்றான். இதற்கெல்லாம் எங்கிருந்து உணவு வருகிறது..? என்று கண்டுணர்ந்தான்.

அவன் உற்றுப் பார்த்த நிலைகள்…
1.அந்த மின் கதிர்கள் வலு கொண்ட நிலைகளில் எவ்வளவு தூரம் எட்டுகின்றதோ
2.அதைப் போல் இவனின் நினைவாற்றலும் அங்கே படர்கிறது

ஏனென்றால் மின்னல் என்ற நிலை வந்தாலும் நம் பிரபஞ்சத்தைத் தாண்டிக் கூட இந்த ஒளிக் கற்றைகள் செல்கிறது.

ஒளிக் கற்றைகள் அப்படி ஊடுருவிச் சென்றாலும்… அதே சமயத்தில் அவைகளைக் கவரும் தன்மை கொண்டு நம் பிரபஞ்சத்திற்குள் வருகிறது… பூமிக்குள்ளும் வருகின்றது…! என்பதனை அகஸ்தியன் உணர்ந்தான் இயற்கையின் உண்மையை உணர்ந்தான்.

அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவியிருப்பதை நான் (ஞானகுரு) நுகரப்படும் போது அதை அறிந்து.. அவன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைகளை நீங்களும் பெற முடியும்…! என்ற உணர்வின் சொல்லாக.. வாக்காக யாம் வெளிப்படுத்துகின்றோம்.

1.இதை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்
2.பதிவாக்கியதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வின் சத்தை நீங்கள் பெற்று
3.உங்கள் உடலில் அறியாது வரும் தீமைகளை வெல்ல முடியும்.
4.உங்கள் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்ற முடியும்….!

விஷ்ணு பிரம்மா சிவன் – முத்தொழில்

 

ஒரு மிளகாய் வித்தை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து… காற்றில் இருக்கும் தன் தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அது மிளகாய்ச் செடியாக வளர்ந்து… அதனின் பருவ நிலை வரும் பொழுது “மிளகாய்களாகக் காய்க்கின்றது…”

இதைப் போன்று தான் ஒரு மனிதன் உணர்ச்சிகளைத் தூண்டும்படியாகக் “கோபமாகப் பேசுகிறான்” என்றால் அவனின்று வெளிப்படும் உணர்வினை நாம் நுகர்ந்தறியப்படும் பொழுது “ஓ…ம் நமச்சிவாய… நம் உடலாக அமைந்து விடுகின்றது…”

அதாவது… உட.லான சிவத்திற்குள் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவாக விளைகின்றது.

முதலில் மிளகாய்ச் செடியாக இருக்கும் பொழுது காரமில்லாததாக இருக்கின்றது. மிளகாய்ச் செடி வளர்ந்து அந்தக் கார உணர்ச்சிகளைக் குவித்து மிளகாயாக்க் காய்க்கும் பொழுது தான் அதிலே காரங்கள் தெரிகின்றது

அது போல்
1.அந்தக் கோப உணர்வுகள் சிறுகச் சிறுக நமக்குள் பெருகும் பொழுது நமக்கே அது தெரிவதில்லை.
2.ஆனால் அது முதிர்ந்த பின் தான் நமக்குத் தெரிய வருகிறது

எப்படி…?

கோபித்தவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அந்த மனிதனின் உடலில்
1.அவனுக்கு எந்த வயதில் அந்தக் கார உணர்ச்சிகள் விளைந்ததோ
2.அதே வயதின் தரம் நமக்குள் வரும்பொழுது நமக்குள் மிளகாயாகக் கோபித்துப் பேசும் உணர்வின் தன்மை நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை…!

காரணம்… உற்றுப் பார்த்த உணர்வு உடலில் கார உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக நமது உயிர் உருவாக்கி விடுகின்றது உடலோ அதை ஏற்று அதனை வளர்க்கத் தொடங்கி விடுகிறது.

இதை நமது ஞானிகள் சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணமாக
1.விஷ்ணு வரம் கொடுக்கின்றான்
2.விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான்.
3.சிவனோ சிருஷ்டித்த உணர்வின் அணுக்களைத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றான் என்று பொருள்படும்படியாக
4.நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வாறு தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

உயிரின் இயக்கம் ஈசன் என்றும்… இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும்… காந்தத்தால் கோபமாகப் பேசுவோமனின் கார உணர்வை நுகரப்படும் பொழுது
1.அதனின் உணர்வுகள் இந்த விஷ்ணுவின் பிள்ளையாக… காரமான சக்தியை வளர்க்கும் அணுவின் சக்தியாக உருப்பெற்று விடுகின்றது.
2.ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான் என்ற நிலையில் கார குணத்தின் வளர்ச்சியை அது உருப் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

அவ்வாறு உருவான அந்த அணுவின் சத்து உடலுடன் ஒன்றி அதே கார உணர்ச்சிகளைத் தனக்குள் கவர்ந்து அது வளரத் தொடங்கி விடுகின்றது அதைத்தான் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாம் எண்ணியது “சூட்சம நிலைகள்” கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அந்தக் கார உணர்வுகள் உயிரிலே பட்ட பின் உயிர் நமக்குள் உணர்த்துகின்றது.

கண்கள் அந்த மனிதனைப் படம் எடுக்கிறது அவனுடைய செயலாக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது. அவன் செய்யும் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் அவன் பேசும் உணர்வினை நமக்குள் அறிவிக்கின்றது.

அறிந்து கொண்டாலும் விஷ்ணுவின் மகனான பிரம்மா அதைச் சிருஷ்டித்து விடுகின்றான். விஷ்ணுவின் மனைவி இலட்சுமி என்றும் கவர்ந்திடும் சக்தி என்றும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி என்றும்… காட்டியுள்ளார்கள்.

கோபமான குணத்தை நாம் சுவாசித்து விட்டால் அந்த உணர்வின் சத்து சிருஷ்டிக்கப்படும் பொழுது அதனின் சக்தியாக இணைந்து செயல்படுவதை சரஸ்வதி ஞானம் என்று உணர்த்துகிறார்கள்.

அந்த அணுவின் தன்மை நம் உடலுடன் இணைந்து சிவமாக ஆனாலும் அந்தச் சக்தியின் தொடராக அந்த ஞானத்தின் வழியாக அது விளையும்… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

ஆனால்
1.எந்த உயிரிலே பட்டு இது உருவானதோ
2.அது தன் இனத்தை உருவாக்கும் சக்தியாக விஷ்ணுவின் பிள்ளையாக பிரம்மமாக
3.அந்தக் கார உணர்வுகளைத் தன் இனத்தை வளர்க்கும் சக்தியாக உருப் பெறுகின்றது.

சாஸ்திரங்கள் இப்படித்தான் நமக்குத் தெளிவாக கூறுகின்றது.

நீர் சக்தியின் முக்கியத்துவம்

 

எண்ண ஓட்ட கதியையும் நீரோட்டச் சக்தியின் செயலையும் ஒன்றுபடுத்தி அதன் உட்பொருளை வெளிக்காட்டி எண்ணத்தினுள் சிந்திக்கும் கருப்பொருள் தத்துவத்தினால் எண்ணத்தின் வழிச் செயல் நீர் சக்தி பெறும் ஆரம்ப முறை ஞான வழியமைத்தவர் தான் “அகஸ்திய மாமகரிஷி…!”

1.வானத்தில் கன பரிமாணம் கொண்ட நீர் சக்தி… இடி மின்னல் ஒரு புறமும்
2.மறுபுறம் ஆகாயத்தில் சரி பாதி இருக்கும் கோள்களையும் விண்மீன்களையும் காட்டி
3.எண்ண ஓட்ட கதியின் தத்துவத்தை எண்ணி எடுக்க வைத்த அந்த அகஸ்திய மாமகரிஷி தான்
4.நீர் சக்தியை (ஜீவன்) வென்றதாகவும்… பின் அதனுள்ளே தான் ஒன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
5.அகஸ்தியன் ஜீவ சக்தியைப் பெற்றது மிக மிக முக்கியமானது…!

அதாவது சரீரமாகிய திடமும் அந்தத் திடத்திற்குள் உள்ள நீர் சக்தியும் நீரினுள் இருந்த பொழுது நீரோடு நீர் சேர்ந்து ஒருநிலைப்படுத்திட
1.தன் திடச் சரீர நிலை அணுக்கள் அனைத்தையுமே
2.நீரோட்ட நீர் சக்தியின் லேசான தன்மை போல் நீரோட்டச் சக்தியின் கதியையே தன்னுள் அடக்கி
3.நீர் மேல் உலவ… நீர் மேல் அமரும் செயலில்… ஓர் சூட்சமம் கூறப்பட்டது.

எண்ண ஓட்டச் செயல் சக்தியாகும் சூட்சமத்தை… அதனுள் ஏற்படுத்தப்படும் பதிவு… அல்லது ஈர்க்கப்படும் செயல் அனைத்தையும்…
1.ஒருமித்த கருத்தின் விளைச்சல்களாக (மகசூலாக) உருவாக்கிடும் நிலையாக
2.யாம் சொல்லும் தியானத்தின் வழித் தொடர் கொண்டு
3.அந்த எண்ண ஓட்டத்தின் கதியையே நற்கதியாக ஆக்கும்…
4.உயரிய ஞானம் பெறும் முறைகளாக வழியமைத்துக் கொள்ள வேண்டும்.

காற்றின் நீரே இளநீராகி… அதனுள் உள்ள விஷ அமில சக்தியே தேங்காய்க்குள் எண்ணையாக இருக்கும்
1.“மறைந்துள்ள அந்தத் தொடர்பை அறிந்து…”
2.அதையும் பயனுற வழிப்படுத்திக் கொள்ளும் செயலே ஞானம் என்பதாகும்..!

ரிஷிக்கு யாராவது தீங்கு செய்தால் உடனே அவர் சாபமிடுகிறார்… பின் சாப விமோசனம் கொடுக்கின்றார் – விளக்கம்

 

நாம் எண்ணியது அனைத்தையும் நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது.
1.நாம் எண்ணியது எதுவோ அதை ஓ… என்று ஜீவனாக்கி…
2.அந்த உணர்வின் சத்தை உடலாக்கி…
3.உடலுக்குள் அந்த எண்ணத்தை மீண்டும் இயக்கச் செய்து
4.இந்த உணர்வினை விளையச் செய்து
5.விளைந்த உணர்வின் சத்தைத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

மனிதனான பின் நல்லவைகளை எண்ணினால் நல்லதே நமக்குள் சேர்ப்பிக்கப்படுகின்றது. ஆனால் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் விஷத் தன்மைகளைச் சேர்க்கப்படும் பொழுது அந்த நல்லவைகளும் கெட்டுவிடுகிறது.

ஆனால் நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு… நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றும் திறன் பெற்றது தான் மனித உடலில் உள்ள உணர்வுகள்.

அத்தகைய உணர்வினைப் பெற்றிருந்தாலும்… பிறர் செய்யும் குறைகளோ மற்றதோ இருப்பினும் அந்த நஞ்சினை நீக்கும் உபாயத்தைச் செயல்படுத்தவில்லை என்றால்… முழு நிலவாக (பௌர்ணமி) இருக்கும் சந்திரன் அதற்குப்பின் சிறுக சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போன்று மனித உடலில் இருக்கும் உணர்வின் அறிவுகள் அனைத்தும் மறைந்து… வேதனை என்ற நஞ்சுக்குள் சிக்கி விடுகிறது.

நாம் எவ்வளவு தெளிந்த மனிதனாக இருப்பினும் ஒரு துளி நஞ்சினை உணவுடன் கலந்து உட்கொண்டால் நினைவனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நமக்குள் சிறுகச் சிறுக நஞ்சு (தீமை செய்யும் குணங்கள்) கலந்துவிட்டால் அடுத்து மனித நினைவில்லாது போய்விடும். மற்ற உயிரின்ங்களின் ஈர்ப்புக்குள் தான் புக நேரும்

எத்தனையோ கோடிச் சரீரங்களை நாம் எடுத்துத் தெளிந்திடும் தெரிந்திடும் தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து விளைந்து விளைந்து…
1.மனிதனாக உருவாக்கிய உயிரைத்தான் “ரிஷி” என்று ஞானிகள் காட்டினார்கள்.
2.காவியங்களில் பார்த்தோம் என்றால் “அந்த ரிஷிக்கு ஒருவன் தீங்கு செய்தான்…” என்று ஒரு நிலையைக் காட்டுவார்கள்.
3.அப்போது அவனை ரிஷி சாபமிட்டார் என்றும்… பின் சாப விமோசனத்தைக் காட்டினார் என்றும் சொல்லியிருப்பார்கள்.

அதனின் உட்பொருள் என்ன…?

மனித உடலுக்குள் இருக்கும் நமக்குக் கெட்டவைகளை நீக்கும் சக்தி இருந்தும்… அதைச் சீராகப் பயன்படுத்தாது விட்டுவிட்டால்… கெட்டதை நீக்கிடும் ஆற்றலைப் பெருகச் செய்த உயிருக்கு நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?

அதாவது… இந்த உடலின் இச்சை கொண்டு
1.நாம் எடுத்துக் கொண்ட பாசத்தால் வேதனை என்ற நஞ்சினைக் கலந்து
2.ஈசனாக இருந்து ரிஷியாக இருந்து மனித உடலைச் சிருஷ்டித்த உயிருக்கு
3.நாம் செய்யக்கூடிய நன்றி எதுவாக இருக்கின்றது…?
4.அதைத் தான் “ரிஷிக்குத் தீங்கு செய்தான்” என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

வேதனை என்ற உணர்வை எடுத்து உயிருக்குள் செலுத்தப்படும் பொழுது உயிர் அதையே ஜீவனாக்கி நல்ல உணர்வுடன் கலந்து விடுகிறது. அப்போது நஞ்சினை நீக்கிடும் இந்த உடலை… நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு அதை நீக்கவில்லை என்றால்
1.அதையே உணவாக உட்கொண்டால் அதுவாக நீ ஆகிவிடு… நீ பாம்பாகப் போ…! என்றும்… பேயாகப் போ…!” என்றும்
2.ரிஷி (நம் உயிர்) சாபம் விடுவதாகக் காட்டுகின்றார்கள்… காவியங்களில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது

சாபத்திலிருந்து மீட்டுவதற்கு வழியும் காட்டுகின்றார்கள். எப்படி…?

ஐயனே… அறியாமல் நான் செய்த தவறுக்கு எனக்கு விமோசனம் இல்லையா…! சாபத்திலிருந்து மீண்டிடும் நாள் எது…? எனக்கு அருள் கூர்ந்து நல்ல வாக்கினைக் கொடுங்கள்…! என்று வேண்டிக் கொள்வதாகவும் காட்டியிருப்பார்கள் காவியப் படைப்பிலே…!

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அப்பொழுது அவன் கை படும். நீ மீண்டும் மனிதன் ஆவாய். அதனின் அர்த்தம் என்ன…?

ஒரு நல்லவன் தான் நடந்து போகிற பாதையில் பாம்பைப் பார்க்கிறான். அது தன்னைக் கடித்துவிடும்…! என்று அடிக்கின்றான். “மனிதன் அடித்து விடுவான்…!” என்று அது இவனைப் பார்க்கிறது.

1.பாம்பு மனிதனைக் கடித்து விட்டால் இவன் பாம்பு உடலுக்குள் வருவான்.
2.பாம்பை இவன் அடித்தான் என்றால் பாம்பின் உயிர் அவன் உடலுக்குள் போகும்.
3,மனித உடலுக்குள் வரும் பாம்பின் உயிர் மனித உணர்வுகளைக் கவர்ந்து மனிதனாகப் பிறக்கின்றது.

அதே சமயத்தில் நீ பேயாகப் போ…! என்றால் என்ன அர்த்தம்.

என்னை இப்படிச் செய்தானே… அப்படிச் செய்தானே பாவி…! அவன் எல்லாம் பாவி உருப்படுவானா…! என்று நினைப்பார்கள். இந்த உணர்வு வரப்போகும் போது அவன் உடலுக்குள் போகின்றது. அதே உணர்வை வைத்து அங்கே ஆட்டிப் படைக்கிறது.

அப்பொழுது ஐயனே…! இதிலிருந்து தப்பும் வழி எனக்கு ஒன்றுமில்லயா,,,?

நல்லவனுடைய நிழல் உன் மீது படும். நீ உள்ளிருந்து மனிதனாக ஆவாய் என்று ரிஷி சொல்வதாகக் காட்டுவார்கள்.

நாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இதையெல்லாம் உணர்த்தினார்கள் ஆனால் காலத்தால் இது எல்லாம் அறிந்து கொள்ள முடியாதபடி ஆகிவிட்டது ஏதோ கதைகள் அக்காலத்தில் நடந்தது… யாரோ செய்தார்கள்… என்றோ நடந்தது…! என்று இப்படித் தான் எண்ணுகின்றோம்.

நமக்குள் நடக்கும் இந்த உணர்வின் தன்மையை நம் உயிரின் இயக்கங்கள் அது எவ்வாறு…? என்பதை நாம் உணர்தல் வேண்டும். காரணம்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தன உயிர் சிருஷ்டித்து விடுகிறது.

1.நல்லதை எண்ணினால் மகிழ்ச்சியின் தன்மை அடைகின்றது
2.அருள் ஞானிகள் உணர்வப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் ஒளியின் சரீரமாக நம்மை மாற்றுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

“பிரம்ம சூத்திரம்…”

 

“நாபிக் கமலம் என்ற ஜோதி…” தன்னுள் கிளைத்து… எழுந்த மூலப் பொருளாக விளங்கும் தன்மையின் சூட்சமம்… அறிவின் துணை என்னும் சாமரத்தால் வீசப்படும் காற்றும்… காற்று என்று பொருள்பட அறிவை உபயோகிக்கும் பொழுது… சிந்திக்கத் தலைப்படும் பொழுது தான் உயர் ஞானமாக எழும்.

அறிவின் நற்குணம் – சாந்தம் என்ற சாமரத்தால் வீசிப் பெறப்படும் காற்று… வீர குணத்தைக் கொண்டு எழும் ஜோதி…
1.மீண்டும் மீண்டும் இந்தக் குணங்களை எண்ணி வீசும் பொழுது… வீசும் காற்றாகிய எண்ணச் செயலின் செயல்பாடு
2.வீர குணத்தின் விளை நிலமாக ஆக்கும் செயலுக்கு உறுதியாகி
3.படைப்பின் படைப்பாக தைரிய குணத்தால் சாந்த குணத்தால் எண்ணி எழும் செயலுக்கு வித்தாகப் “பிரம்ம ஞானம்” உதிக்கும்.

ஆகவே பிரம்ம சூத்திரமாகவே மாறும் செயல் நிலை என்பது “அடையும் வழி இது தான்…!” என எண்ணித் தெளிந்து… பின் கைக்கொள்ள வேண்டிய செயலாகச் சித்தன் காட்டிய வழியில் எல்லாம் உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.மனித எண்ணத்திற்குள் எழும் மதமாகிய வீரியத்தை அடக்க அங்குசமும்
2.எண்ணமே உணர்வாகி அந்த உணர்வுகளின் வழி செல்லும் எண்ணமான செயல் காமத்தின் அடியாக எழும் மோகத்தை
3.அதே எண்ணச் செயல் உயர்வைக் கொண்டு வீழ்த்தும் நிலை கரும்பு வில்லும் கைக் கொண்டு
4.உயிர் ஆன்மப் பிணைப்பையே வலியுறுத்தப் பாசக்கயிறும்
5.தன் நிலை என்றென்றும் மணமாக எண்ணத்தில் நிலை பெறக் கையில் மலரைக் கொண்டு
6.சித்தன் காட்டிய தத்துவ செயலைக் கைக்கொள்ளும் ஞானி தன் சுவாச எண்ண ஓட்ட உயரிய நற்செயலால் அக்கினி ஜோதியாகி
7.நாபிக் கமலத் தாமரை மேல் அமரும் படைப்பின் படைப்பாக அமரலாம் என்பதே “பிரம்ம சூத்திரம்…!”

கர்ப்பமான தாயின் வயிற்றில் உருவாகியிருக்கும் கரு அதாவது அந்தச் சிசு ஆகாரம் எடுக்கும் வழி நாபிக் கொடி ஆகும். அது போல்
1.அமில நிலை ஆகார உயர்வின் சிறப்பாக நாம் எடுக்கும் சுவாசத் தியானத்தால்
2.கரு நிலையின் முதல் நிலையான நம் உயிர் தன்மையையே “ஜோதி ஸ்வரூபமாக்குதல்…” வேண்டும்.

படைப்பின் படைப்பாக இணைக்கும் உயர் தன்மை என்பது…
1.தாய் சக்தியும் அந்தத் தாய் சக்தியின் ஆன்மக் கலப்போ அல்லது
2.இல்லற வாழ்வில் சிவ சக்தி நிலையாக எண்ணத்தால் ஒன்றுபட்டு ஆத்ம ஐக்கிய நிலை பெறும் வழியோ
3.படைப்பின் படைப்பாவது மட்டுமல்லாது அது புரியும் தொழில் தன்மையாகக் “காத்தல்” என்பது
4.தான் முயன்று பெற்ற “உயரிய ஆன்ம சக்தியே” சூட்சமப் பொருள் ஆகும்

அழித்தல் என்பது
1.உயிர்ச் சக்தியின் செயலுக்கு உயர் நிலை எற்படுத்தாமல் மாறுபாடு ஏற்படுத்தப்படும் பொழுது
2.அந்தச் சிவமாகிய சக்தி அழிக்கின்றான்…! என்று பொருள் கண்டு தெளிந்து…
3.ஏனென்றால் அழிக்கப்பட வேண்டியது துர்க்குணங்களே..! என்று அதைச் சம்ஹரிக்கும் நிலையில்
4.உயிர்த் தன்மை ஆதி சக்திக்குள் கலக்கும் பொருளே “மறைத்தல்” என்றும்
5.படைப்பின் படைப்பான உருக்கோலமே… அன்பு நிலைக் குணமாக “அருளல்…” என்பதுவும்
6.இந்தப் பேருண்மையின் சாராம்சங்களை உணர்ந்து அந்த நிலையைப் பெறுதல் வேண்டும்…!

உங்கள் வேதனையைத் தூக்கி எறிந்து விட்டு எமது அருள் வாக்கினை எடுத்துக் கொள்ளுங்கள்

 

மனித வாழ்க்கையில் ஒருவருக்குக் கடுமையான வேதனை என்று வந்து விட்டாலே “வேதனை… வேதனை… வேதனை…” என்று சொன்னால் தான் அடுத்து அவர்களுக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும்.

என்னை இப்படிச் செய்கின்றார்கள்… அடிக்கடி எனக்குத் தொல்லை செய்கின்றார்கள்… என் உடல் எல்லாம் வலிக்கின்றது… எரிச்சல் ஆகின்றது… வேதனையாக இருக்கின்றது… என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு (அதைச் சொல்லச் சொல்ல) மகிழ்ச்சியாகும்.

உதாரணமாக உடலிலே வலி ஏற்பட்டால்
1.அம்மம்மம்மா…! என்று வேதனையை இணைத்துக் கொடுத்தால் அந்த வலி கொஞ்சம் குறையும்…
2.ஆனால் மகிழ்ச்சியாகப் பேசினால் அதே ஏற்காது மீண்டும் வலி அதிகமாகும்.
3.வேதனைக்குத் தகுந்த உணர்வைக் கூட்டும் பொழுது தான் இந்த உணர்வின் சத்து அதற்குள் ஒடுங்கும்

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒரு தரம் பட்ட வேதனையை அடிக்கடி அந்த வேதனையை ரசித்து “அம்மம்மா… ஐய்யய்யோ…” என்று இதையே சொல்லி வரும் பொழுது… நல்லதை யாராவது சொன்னாலும் அவரால் ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

பாலுக்குள் பாதாமைப் போட்டாலும் அதில் நஞ்சு கலந்து விட்டால் அந்தப் பால் முழுவதுமே நஞ்சாகத்தான் மாறும்.

இதைப் போன்று தான் எம்மிடம் (ஞானகுரு) வருபவர்களுக்கு அருள் வாக்குகளைக் கொடுத்து
1.தீமையிலிருந்து விடுபடுவீர்கள் நல்ல நிலை அடைவீர்கள் என்று நான் சொன்னாலும்
2.எங்கெங்கே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது
2.என் உடல் வலி குறையவே மாட்டேன் என்கிறது… பத்து வருடமாக இருக்கின்றது
3.குடும்பத்தில் தொல்லைகள் போக மாட்டேன் என்கிறது…. விவசாயமே ஒன்றுமில்லை…! என்று இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

பாலில் நஞ்சு பட்ட பின் அதற்குள் பாதாமைப் போட்டாலும் அதையும் நஞ்சாக மாற்றுவது போன்று இந்த உணர்வின் தன்மை நஞ்சாக மாற்றி
1.யாம் சொல்வதை எது என்று கூர்ந்து கவனிக்க முடியாது
2.நல்ல உணர்வுகளை தனக்குள் பதிவு செய்ய முடியாத நிலைகள் ஆகி விடுகின்றது.

அது போன்ற நிலைகளை மீட்டுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களாக உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். அதிலே அனைவருடைய ஒத்துழைப்பு கொண்டு அனைவருடைய எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்து அதைப் பெருக்கச் செய்து
2.எல்லோருக்கும் அந்தச் சக்தியைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் அந்த எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது கூடி இருக்கும் அனைவருக்கும்
1.அந்த (மகரிஷிகளின்) உணர்வின் சத்து செவிப் புலன்களில் தாக்கப்பட்டு
2.அந்த உணர்வின் உந்து விசையால் அந்த அருள் ஞானிகளின் உணர்வைப் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கிக் கொண்டால் அடுத்து நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.

இதை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிவமயம்

 

பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி… ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி…!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை – “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

 

நாம் இந்த வாழ்க்கையில் நன்மைகள் எவ்வளவு செய்தாலும் வேதனையைத்தான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் மற்றவருக்கு நன்மை செய்கின்றோம்.

காரணம்…
1.நாம் நன்மை செய்த உணர்வுக்குள் வேதனை என்ற நஞ்சு பட்டு விடுகின்றது
2.அதை நாம் யாராவது துடைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சுத்தமான கைகளைக் கொண்டு தான் ஒரு பொருளை உருவாக்குகின்றோம் மண்ணைப் பிசைகின்றோம்… சிமென்ட்டைக் கலக்கின்றோம்… அழகான வீட்டைக் கட்டுகின்றோம்.

அழகாக வீட்டைக் கட்டி விட்டோம் என்று அடுத்து கையைக் கழுவாது விட்டு விட்டால்… சாப்பிடும் போது சிமெண்டில் உள்ள கார உணர்வுகள் உடலுக்குள் சென்று விட்டால் அது கொதிகலனாகி குடலுக்குள் புண்ணாக உருவாகிவிடும்.

கையைக் கழுவாது அடுத்த வேலையை இப்படிச் செய்தால் முடியுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று தான் ரோட்டிலே நாம் நடந்து செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே எத்தனையோ தூசிகளும் தீமைகளும் கலந்து பரவி வருகின்றது. சில நச்சுத்தன்மை கொண்ட செடிகளில் விளைந்த “நச்சின் செல்கள்…” அதுவும் தூசுகளாகப் படர்கின்றது.

சூரியனின் காந்த சக்தி அதைக் கவரவில்லை என்றாலும் காற்று மண்டலத்தில் சிக்கப்பட்டு… அது தூசுகளாகப் பரவி வருகின்றது. அதை நுகர்ந்தால் நம் உடலுக்குள் சென்று தீமைகளைத் தான் உருவாக்கும்.

சாதாரணமாக… செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் மணமாக வைத்துக் கொள்கின்றது.
1.அதே செடியில் விளைந்த வித்திற்கு… நிலத்தில் எங்கே அதை ஊன்றினாலும்
2.சூரியனின் காந்த சக்தி… தான் கவர்ந்து வைத்த மணத்தை அதற்கு உணவாகக் கொடுத்து
3.விஷச் செடியாக இருப்பினும் சரி… நல்ல செடியாக இருப்பினும் சரி அவைகளை வளரச் செய்கின்றது…

இதைப் போன்று ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது வேதனை உணர்வுகள் இங்கே வித்தாக மாறுகின்றது.

மீண்டும் அந்த மனிதனின் சிந்தனை வருகிறது. அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. ஆனாலும் அவன் உடலில் விளைந்த வேதனை உணர்வு வித்தாக இங்கே விளைந்து விடுகிறது.

சூரியன் எவ்வாறு காந்த சக்தியால் கவர்ந்து அது மற்ற வித்துக்களுக்கு சத்தைக் கொடுத்து உபகாரம் செய்கின்றதோ இதைப் போன்று பிறிதொரு மனிதன் வேதனைப்பட்டதையும் கவர்ந்து வைத்து… நாம் எண்ணும் போதெல்லாம் அதை எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒரு மனிதன் அவன் வேதனைப்பட்டாலும் அவனுக்கு உதவிகளைச் செய்கிறோம். இருந்தாலும் அந்த வேதனையைச் சொல்லக் கேட்டு… உணர்வின் தன்மை பதிவான பின்… மீண்டும் நினைவாகும் பொழுது உடலுக்குள் வித்தாகி விடுகிறது.
1.அந்த உணர்வின் சத்து விளைந்தது மீண்டும் நினைவு வரப்படும் பொழுதெல்லாம்
2.அவன் உடலில் தீமை செய்த விளைவுகளும்… வினைகளும்… நமக்குள்ளே உருவாகி விடுகின்றது.

இப்படித்தான் நமக்குள் சூரியனின் வேலைகள் இருக்கின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனாலும் நாம் வயலிலே விவாசயம் செய்யப்படும் போது விளையப்படும் பொழுது அவ்வப்போது உருவாகும் “களைகளை அகற்றுகின்றோம்….” நல்ல செடிகளுக்கு நீர் ஊற்றி அதனைப் பக்குவமாக வளர்க்கின்றோம்.

அதைப்போல நமது வாழ்க்கையில் தீமையான உணர்வைக் கேட்டறிந்த பின் வயலில் களைகளை அகற்றுவது போன்று தீமைகள் வளராது உடனே அதைத் தடுத்தல் வேண்டும்.
1.அதைத் தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் உணர்வுகளை
2.உங்களுக்குள் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

மகரிஷிகள் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தனக்குள் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ… உணர்வுகளை எல்லாம் தூய்மைப்படுத்தி ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்களோ… அவர்கள் வெளியிட்ட உணர்வின் தத்துவப்படி அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வினைப் பெரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்… அதை நாம் எண்ணும் பொழுது பெற்று… அதனின் துணை கொண்டு தீமைகளை நீக்க முடியும்.

தீமை கொண்டவரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின்
1.நாம் எண்ணாமலே அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு
2.நாம் எண்ணாமலே அந்தந்த எண்ணங்கள் உருவாக்கப்பட்டு
3.நமக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து நோயின் தன்மை எப்படி அடைகின்றதோ அதைப் போல்
4.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்ப்பித்துக் கொண்டே வந்தால்
5.”நாம் எண்ணாமலேயே” அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து… தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வரும்.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி உருவாக்குதல் வேண்டும்… உங்களால் முடியும் அதற்குத் தான் அருள் வாக்குகளாகக் கொடுத்து ஆழமாகப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).

ஆகவே மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்… வரும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபவீர்கள்.

“குரு” கோளின் சக்தியைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

ஆற்றின் ஆழம் தெரியாமல் கடந்து சென்றுவிட எண்ணுபவன் செயல் போல் இல்லாமல் இலட்சிய நோக்கில் “விழிப்பாக இரு…!”

பால்வெளி மண்டலத்தின் சக்திகளை ஈர்த்து வலுக் கொண்டு பால்வெளிச் சூட்சமத்தின் பூதியை அறிந்து கொள்ளும் முன்
1.மாமகரிஷிகளின் அருளாசி பெறுவது
2.சக்தியின் வலுவை வலுவாக்கிக் கொள்வது
3.புவியின் காந்த நீர் சக்தியை ஈர்த்துச் செயல் கொள்வது என்ற
4.அந்தப் பாடத்தைப் படி… படி… படி… என்று சொன்னதெல்லாம்
5.இந்தப் படி தான்… இந்த வழி தான்… என்று அறிந்து கொள்ளுதலும்…!
6.நீர் சக்தியை வென்று காட்டினேன்… அதனுடன் ஒன்றியும் காட்டினேன்..! என்ற அகத்தியரின் கூற்று தான்.

இதனுடைய சூட்சமம் புரிகிறதா…?

நாம் வாழும் இந்தப் பூமித் தாயின் தொடர்பில் சக்தி பெற்று வலுக் கொண்டு மனிதனாக வளர்ந்த செயலுக்கு அன்று தாயின் பால் அருந்தினாய்.

இன்று சரீர வலுவின் வீரியத்தில் மண்டலங்களின் சுழற்சியினை (விண்ணுலகம்) அறியும் செயலுக்கு… எண்ண வலுவின் நேர் கோட்டில் அறிந்து கொள்ளும் செயலுக்கு
1.பூமித்தாய் புவி காந்த நீர் பாலை அமுதாக்கி அளித்திடக் காத்துக் கொண்டிருக்கின்றாள்.
2.வளர்த்து வலுக் கொண்டு சுயப்பிரகாச தனிச் சக்திச் சுழல் மண்டலமாக ஆக்கிடும் உங்கள் செயலுக்கு நானும் ஊட்டிவிட்டேன்…!

அகத்தியர் கூறிய அந்தச் சூட்சமப் பொருளைக் கூறுகின்றேன்.

1.நம் சூரியக் குடும்பத்தில் சுழன்று ஓடும் கோளங்களில் குரு என்று சிறப்பித்த வியாழன் கோள்
2.ஆதிசக்தியின் நீர் சக்தி அமில முலாமைத் தன் சக்திக்கு வலுக் கொண்ட செயலின் இரகசியம்
3.தன் ஈர்ப்பின் சுழல் வட்டத்தில் நெருங்கி வரும் அத்தனை வளரும் சுழல் சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு
4.அந்தச் சக்தியைத் தன்னுள் ஒன்றச் செய்து… தன் வலுவை வலுவாக்கி வீரியம் கொண்டே சுழன்று ஓடிடும் செயலில்
5.அந்த வியாழன் கோள் அலையை ஈர்த்திடும் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அகத்திய மாமகரிஷி அந்தக் கோளின் அலையைத் தன் வீரிய அமில ஈர்ப்பைக் கொண்டு தன் அமில வீரிய முலாமுடன் ஒன்றச் செய்து தன் சக்தியையே வலுக் கொண்டதாக்கிக் கொண்டார்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் என்ற தனித்துவமான மண்டலங்களாகச் செயல் கொண்ட செயலுக்கு ஜெபத்தின் வேகம் என்று சொல்லிய சொல் நாதத்தின் குணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அலை வீசாக்கடல் என்ற பால்வெளி சூட்சமத்தில் இப்படித் தனக்கென ஓர் சுய அமைப்பு மண்டலத்தை உருக்கொள்ளும் செயலின் கதிக்கு ஒவ்வொருவரும் வளர்தல் வேண்டும்.

தன் உயிராத்ம சக்தியின் வலுவிற்கு வலுக் கொண்டிடும் ஜெப நிலையில்
1.ஓர்முகப்படுத்தப்பட்ட எண்ண அம்பு…
2.பிரம்மாண்டமாகப் படைப்பின் படைப்பாக எய்தி
3.பூதியில் உருவாக்கப்படும் தன் ஒளி காந்த வட்டத்திற்குள் “ஒளி தீபம்…” ஏற்றப்பட வேண்டும்.

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

 

நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.

அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.

உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.

அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..

1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.

ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.

அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.

அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.நமது உயிரான ஈசனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
2.நம் உடலான சிவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
3.நம் கண்ணான கண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
4.பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக நம்மை உருவாக்கிய அந்த வினைகளை நாம் போற்றித் துதிக்க வேண்டும் என்றால்
5.நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

நமக்குள் தெளிந்த மனதாக “கார்த்திகேயா…” என்ற அறிந்திடும் அறிவு கொண்ட இந்த அறிவின் துணை கொண்டு அதைச் சீராகப் பயன்படுத்தும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

இந்த வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் குறைகளையோ தவறுகளையோ கோபத்தையோ வேதனையையோ வாழ்க்கை என்ற நிலைக்கு நுகர்ந்தறிய உதவினாலும்
1.அடுத்த கணம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் ஏங்கிப் பெற்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளையே காணிக்கையாகச் செலுத்துங்கள்.
3.உடலான சிவனுக்கும் அந்த அருள் சக்தியான அமுதை ஊட்டுங்கள்.
4.உங்களுக்குள் சக்தியாக இயக்கும் ஒவ்வொரு ஞான சக்திகளுக்கும்
5.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை “ஞான விருந்தாக…” கொடுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்துத் தீமைகள் வருவதை எல்லாம் சுத்திகரித்துக் கொண்டால்
1.உங்கள் உயிரான ஈசனுக்கு உதவி செய்கின்றீர்கள்
2.உடலான சிவனுக்கு உதவி செய்கின்றீர்கள்
3.கார்த்திகேயா என்ற அறிவின் தன்மை மங்காது ஒளியின் சுடராக மாற்றிட உதவி செய்கின்றீர்கள்.

முருகா என்றால் மாற்றி அமைக்கும் சக்தி… ஆக நாம் நுகர்வது அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிடல் வேண்டும்.
1.இப்படிப்பட்ட உருவாக்கும் திறன் நம்மிடம் இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாது விட்டுவிடாதீர்கள்…!”

ஒவ்வொரு நாளும் இங்கே உபதேசிக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் தீமைகளை நுகர்ந்தறிந்தால் அது வளராது அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி என்னிலே வளர வேண்டும் என்றும் இதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நோய் உள்ளவர்களை நாம் சந்தித்தாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… உங்கள் நோய் அகன்றுவிடும்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முயற்சி எடுத்து ஏங்குங்கள்… அது உங்களைக் காக்கும்… உங்கள் உடல் நலம் பெறும்…! என்று இந்த வாக்கினை அவருக்குள் பதிவாக்குங்கள்.

அல்லது நமக்கே ஒரு நோய் வந்தாலும் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.எந்த நோய் நம் உடலை வாடச் செய்கின்றதோ
2.அந்த நோய் உடலுக்குள் வளர்ச்சியாகாது தடைப்படுத்த
3.அந்த நோயே நமக்கு அருள் ஞானத்தை ஊட்டும் நிலையாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.

இந்தத் தியானத்தின் பலனை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெற முடியும்.

வேகாநிலை போகாப்புனல்

 

மகரிஷிகள் தன்னுள் கண்டுணர்ந்ததும்… தன்னை அறிந்ததும்… பேரண்டத்தையும் தன்னுள்ளே கண்டுணர்ந்து…
1.தனக்குள் கண்டுணர்ந்த உணர்வில் இருள் படர்ந்ததை… இருளை நீக்கி வாழ்க்கையில் பொருளறிந்து செயல்பட்டு
2.உணர்வினை ஒளியாக மாற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டுள்ளார்கள்.

அகஸ்தியன் அணுவின் ஆற்றலை அறிந்து ஆற்றல்மிக்க உணர்வினை தன் உடலிலே வளர்த்து உயிருடன் ஒன்றி… துருவ மகரிஷியாக வளர்ந்து… துருவ நட்சத்திரமாக என்றும் 16 என்ற நிலையை அடைந்தான்,

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வினை எவர் எவர் கவர்ந்தனரோ அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவினை… ஏழாவது நிலையாகப் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனின் உயர்ந்த நிலையாக… பிறவா நிலை என்ற பெருநிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் வழி… அவர்கள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்…
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளினை நீக்கி இருளுக்குள் பொருள் கண்டுணர்ந்து
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இந்த வாழ்க்கையில் வாழவும்
3.இருளை நீக்கிடும் உணர்வின் ஆற்றலைத் தன்னுள் வளர்த்திடவும் முடியும்.

மனித வாழ்க்கையில் அதை எவர் பெறுகின்றனரோ அவரே அடுத்த எல்லையாக… இந்த உடலிலிருந்து பிறவா நிலை என்னும் பெருநிலை அடைகின்றனர்.

இதற்குப் பெயர் வேகாநிலை…!

ஆனால் இந்த வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளை அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோமோ… அது சாகாக்கலையாக வளர்ந்து… உடலை விட்டு அகன்றாலும் அந்த (கலையின்) அந்த உணர்வுக்கொப்ப உடலின் அமைப்புகள் அமைகின்றது… மாறுகிறது.

சாகாக்கலை… வேகாநிலை… போகாப்புனல்…! என்று இந்த இருநூறு ஆண்டுகளுக்குள் இராமலிங்க அடிகள் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

1.மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை சாகாக்கலையாக வளர்த்து
2.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை வலுவாக்கி உயிருடன் ஒன்றிய ஒளியாக வேகாநிலையாக உருவாக்கி
3.இன்னொரு உடலுக்குள் புகாதபடி போகாப்புனலாக விண் செல்ல வேண்டும்…! என்பது தான் அவர் சொன்ன தத்துவம்.

மனிதன் தீயிலே குதித்தால் அந்த உயிர் வேகுவதில்லை… உடல் தான் கருகுகின்றது. ஆகவே உயிரை போன்றே உணர்வுகள் அனைத்தையும் அழியா நிலை பெறச் செய்து… உடலை விட்டு அகன்றால் இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்பதனைத் தான் அவர் உணர்த்தினார்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு ஓம் ஈஸ்வரா குருதேவா…! என்று உயிரை எண்ணி நாம் சொல்கின்றோம்.
1.நம் உயிரையும்… உயிரின் இயக்கத்தையும்… உயிரால் இயக்கப்பட்டு மனிதனான நிலையும்
2.மனிதனான பின் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையைச் சீராக்கிக் கொள்வதே நல்லது.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

உயிரான்மாவின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…”

 

உதாரணமாக கரும்பு பயிரிடும் ஒரு விவசாயி தான் பெறும் மகசூலை எத்தன்மை கொண்டு பாதுகாப்பாகப் பெறுவது…? என்பதிலும் நம் உயிரான்ம சக்தியின் வளர்ச்சிக்குச் “சூத்திரம்…” உள்ளது.

பூமியைப் பண்படுத்திச் செப்பனிட்டு உரமிட்டுக் காலமறிந்து கரும்பின் வித்தைப் பயிரிடும் செயலில் கரும்பு வளரத் தேவையான நீரைப் பாய்ச்சிப் பாதுகாப்பாக அந்த வித்தை வளர்த்திடும் தொடர் வேண்டும்.

தேவையான நீரை விட்டுக் கரும்பு வளர்ந்து வரும் காலகட்டத்தில் “சோகைகள்…” என்ற கரும்பின் இனத் தன்மைகள் அகற்றப்பட்டுத் தூய்மைப்படுத்தப்படா விட்டால்
1.சிறு உயிரினங்கள் அதனுள் வாசம் செய்து கரும்பின் சுவையைக் கெடுத்துவிடும்.
2.அதனால் நல்ல பலன் பெற முடியாது.

நீர் பாய்ச்சும் செயலிலும் இயற்கையாக அதி தீவிர மழை நீர் பெய்து விட்டால் அவை நிலத்தில் தங்கினால் கரும்பில் நீர் சக்தி கூடி விடும். சுவை குறைவுபடும். ஆகவே தேங்கிய நீரை உடனே அகற்ற வேண்டும்.

பக்குவ காலத்தில் கரும்பை அறுவடை செய்யாமல் நாட்கள் என்ற கணக்கின் தொடர் நீண்டு விட்டால் அந்தக் கரும்பின் சுவை சத்து ஈர்க்கப்பட்டு
1.கரும்பின் பூ என்ற தொடர் வளர்ச்சி ஆக்கும் செயலில்
2.வேண்டோடுதல் என்ற சொல் நாம குணத்திற்கொப்ப
3.அந்தக் கரும்பின் சுவை குணம் நீங்கிப் பலனில் மாற்றம் ஏற்படும்.

ஞானத்தின் வளர்ச்சியில்…
1.மனம் என்ற வயலைப் பக்குவப்படுத்தும் ஞானி… களைகளைக் களைந்து…
2.தன் செயலில் ஒழுக்கம் என்ற பாத்தியிட்டு…
3.நற்பண்பு என்ற ஜெப நீரைப் பாய்ச்சி…
4.ஞான வித்தாம் கரும்பினைப் பயிர் செய்திடும் பக்குவம்…
5.ஞானப் பயிர் காக்கப்பட வேண்டும் என்ற செயலுக்கு… ஞான வித்தை ஈர்த்திடும் செயலே…
6.விவசாயி கரும்பின் பயிரைக் கண்ணும் கருத்துமாகப் பேணுகின்ற வழி முறை போல் இருந்திடல் வேண்டும்.

ஞானப் பயிர் வளர்த்திடும் மனதில் “தேவையற்ற களைகள் அகற்றப்பட்டு…” நல்லொழுக்க நீர் என்ற ஜெபம் என்ற சக்தித் தொடரினால் “நேர் செய்யப்பட வேண்டும்…!”

அப்படிச் செயல்படுத்தினால் பயிர் தனக்குத் தேவையான ஆகாரத்தைப் பூமியிலிருந்து பெற்றுச் சமைத்து வளர்வதைப் போல் நாம் தியானத்தின் மூலம் ஈர்த்திடும் எண்ண ஜெப நீரால் ஞானப் பயிர் நல்லொழுக்க முறைச் செயலுக்கு வளர்ச்சி பெற்றிடும்.

உலகோதய வாழ்க்கை முறை எதிர் மோதல் என்ற… கடும் மழைக் காலம் மிகுந்து விட்டாலும் விவசாயி பயிர் செய்யும் பூமியில் மழை நீர் தேங்கி அந்தப் பயிர் அழுகிப் போகாமல் நீரை நீக்கிட முற்பட்டும் ஓர் வழி அமைத்து வெளியேற்றுவது போல்
1.உலகோதய மழை நீர் தேங்கி
2.ஞானப் பயிர் வளர்ப்பின் முறையில் மாறுபாடு ஆகாதபடி
3.நாம் சுட்டிக் காட்டும் தியான வழித் தொடரில் அந்தத் தீமைகள் அனைத்தும் நீக்கப் பெற்று
4.நல்லாக்கம் பெறும் முயற்சியாக விவசாயி தன் பயிரைக் காத்திடும் செயல் போல் அமைத்திடல் வேண்டும்.

சரீரத்தில் வந்து மோதும் எதிர் அலை மோதல் ஈர்ப்பின் செயல் உடலிலிருந்து கழிவுகள் நீக்கப்படா விட்டால் எதிர் மோதல் குணத் அமிலத் தன்மைகள் சரீரத்தில் தங்கிப் பிணியாக உடலில் மாறிவிடும்.

ஆக உயரிய ஞான வளர்ப்பின் பயனைப் பெறுவதிலும் தடங்கள் ஏற்படாத செயலுக்கு எதிர் மோதல் குணங்ள் எல்லாம் நீக்கப்பட வேண்டும்.

கரும்பின் கழிவு என்ற சோகைகள் அடர்ந்து வளர்ந்து விட்டால் அதனுள் வாசம் செய்யும் சிறு உயிரினங்கள் தன்மை போல்
1.வாழ்க்கையில் வரும் எதிர் நிலையான குணங்கள் செயல்பட்டு
2.அந்தச் சிறு உயிரினங்களால் கேடுகள் உண்டாகிக் கரும்பின் பயிர் இனிய குணச் சுவையை நீங்கி புளிப்பின் சுவையைப் பெறுவது போல்
3.ஞான வளர்ச்சியின் செயலில் ஆகாதபடி “அதி தீவிர எண்ண வலு என்ற பாதுகாப்பு அவசியம்…!”
4.ஒவ்வொருவரும் “விவசாயி போல்” ஞானப் பயிரைப் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை உணர்தல் வேண்டும்.

அறுவடை செய்த கரும்பினைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கரும்பின் சுவை குணத்தில் உண்டாக்கப்படும் பல்பொருள்கள் என்ற செயலுக்கு முன்பே கடும் மழையால் அறுவடை செய்யப்பட்ட பயிர் நீரினுள் மூழ்கி விட்டால்… பயிர் காக்கப்படா விட்டால் பலனை எப்படிப் பெற முடியும்…?

விவசாயினால் காக்க முடியாமல் போன பலனை… பாதுகாப்பற்ற செயலின் தன்மை கொண்டு கேட்பாரற்று நீரில் மூழ்கிவிட்ட பயிரினை… ஒரு வியாபாரி பொருளுக்காக விற்பதின் செயலினால் விவசாயி என்ன செய்ய முடியும்…?

ஏனென்றால் அந்தக் கரும்பின் புளிப்பின் சுவையை ஒவ்வொருவரும் சுவைத்திடும் பொழுது தான் பயிர் செய்த நிலத்தின் பலனை
1.சோர்வு என்ற சலிப்பு என்ற சங்கட அலை உந்தும் செயலினால்
2.தன் முயற்சியில் பாதுகாப்பற்ற செயலினால்
3.தன் பயிரைத் தானே விலை கொடுத்து வாங்கிடும் செயல் நிகழ்வுகளின் வேடிக்கைகளை என்னவென்பேன்…?

அதாவது ஞானப் பயிர் யாருக்கு உரியதோ அவரின் முயற்சி இன்மையினால்… உலகோதய வாழ்க்கையில் சிக்கிக் கொண்டால் ஞானத்தின் மகசூலைப் பெற முடியாது.

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றின் செயல் குண நிகழ்வுகளின் மாற்றம்… எண்ணம் கொண்டு செயல்படுவதால் மனம் என்று கூறுவதெல்லாம் மன எண்ணச் செயல் நிகழ்வால் “மனமே பகை…!”

பகை என்ற தனித்துவம் ஞானத்தில் இல்லை என்ற செயல் உண்மை வாய்ந்தது. எதிர் மோதல் பகை என்ற குணங்கள் தாக்கினாலும் ஞானியின் ஈர்ப்பின் செயலில் உண்மையின் உயரிய உயர் ஞான எண்ண வலு பெற்றிருப்போன் அந்தப் பகை குண அமிலத் தன்மைகள் தன் ஞானத்தில் மோதினாலும் அனைத்தையும் அது துகள்களாக்கிவிடும்.

ஞானச் செல்வங்கள் பெற்றிடும் உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு
1.எந்த வித எதிர் மோதல் குணங்களும் தாக்கிடாத வண்ணம்
2.பக்குவப்படுத்தப்பட்டுச் செயல்படும் நிகழ்வனைத்தும்
3.மகரிஷிகளின் அருள் ஒளி என்ற எண்ண வலுத் தொடரில் நிலை பெற்று நின்று வளர்ப்பின் வளர்ப்பாக்கி
4.பேரண்டக் கோளத்தையே உருவாக்கிடும் செயல் சக்திக்கு… சக்தியின் முயற்சிக்கு… “என்றும் எனது ஆசிகள்…!”

இறந்தவர்களின் துக்கத்தை விசாரிக்கலாமா…?

 

எந்த ஒரு சூழ்நிலையிலும்… “ஒருவர் அகால மரணம் அடைந்து விட்டார்…” என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.தனித்து நின்று அவர்களை எண்ணி
2.“ஐயோ இறந்து விட்டாரே… உயிர் போய்விட்டதே ஈஸ்வரா…!”
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர் போக வேண்டும் என்று “முந்தி விடாதீர்கள்…”

ஏனென்றால் இப்படி எண்ணினால் அந்த ஆன்மா உங்களுக்குள் வந்து விடும்… இதை மறந்து விடாதீர்கள்…!

அதற்குப் பதிலாக… மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.முதலில்… இந்த வலுவை நமக்குள் ஏற்றிக் கொள்ள வேண்டும்.
2.அதற்குப்பின் அந்த உயிரான ஈசனின்… ஆன்மாவின் முகப்பிலே சப்தரிஷி மண்டல உணர்வினை இணைத்து…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
4.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்…!

அங்கிருந்து நாம் நகர்ந்து விட வேண்டும்…!

பின் கூட்டுத் தியானத்தில் கலந்து கொண்டு ஐந்து பேர் சேர்ந்து மேலே சொன்னபடி செயல்படுத்துங்கள். அவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது.

தனித்த மனிதன் எண்ணி இழுக்கப்படும் போது ஒரு சமயம் ஏமாந்து விட்டால்
1.ஈகையின் நிலைகள் கொண்டு வேதனை கலந்த நிலையில் எண்ணி விட்டால்
2.அந்த ஆன்மா விண் செல்வதற்குப் பதில் நம்முடன் அரவணைத்து விடும்.

ஆகவே கூட்டுத் தியானங்களை அமைத்து ஒரு ஐந்து பேர் சேர்ந்து செய்து ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுடன் இணைந்து வலுப் பெறும் நிலையாக செயல்படுத்தினால் விண் செலுத்த இது உதவுகின்றது.

மறவாது இப்படிச் செயல்படுத்துங்கள்.

1.எங்கே யார் இறந்தாலும் “இப்படி ஆகிவிட்டதே…!” என்ற ஏக்கத்துடன் நுகர்ந்து விடாதீர்கள்
2.ஏனென்றால் அந்த ஆன்மாக்கள் நம் பூமிக்குள் ஈர்க்கும் நிலையே வருகிறது… அல்லது நமக்குள்ளே வந்துவிடும்
3.இதிலே பங்கு விகிதாச்சாரம் எவர் அதிகமாக அவரை எண்ணி ஏங்குகின்றாரோ
4.வேதனை உணர்வு கொண்டு சோகம் அதிகமானால் அதனின் ஈர்ப்புக்குள் சிக்கிவிடுவர்.
5.அதன் வழி தான் அந்த ஆன்மா மறு பிறவிக்கு வருகின்றது.

அது போன்று இல்லாது கூட்டுத் தியானத்தின் மூலம் குடும்பத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து… ஆன்மாக்களை இந்த முறைப்படி விண் செலுத்துவதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்

1.பிறிதொரு ஆன்மா ஒவ்வொருவர் உடலிலும் உண்டு
2.ஆன்மா இல்லாத மனிதரே இல்லை
3.எவ்வழியிலும் ஏதாவது ஒன்று நம் உடலில் ஒரு ஆன்மாவது இருந்துதான் தீரும்.

காரணம் மனிதன்… எதன் மீது பற்று கொள்கின்றானோ அதன் துணை கொண்ட உயிரான்மா உடலுக்குள் வந்துவிடும். எந்த மனிதன் தனக்குள் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டானோ எந்த உடலுக்குள் போனாலும் அதே வேதனையைத் தான் உருவாக்கும்.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆனால்… ஆன்மாக்களை நீக்குவதற்கு ஜோதிடம் பார்ப்பதோ கோடங்கி அடிப்பதோ… மந்திரங்கள் எந்திரங்கள் செய்வதோ… முற்படாதீர்கள். அது ஒன்றும் வேலை செய்யாது… கெடுதலைத் தான் தரும்.

உங்கள் உடலுக்குள் கடின நிலைகள் கொண்டு ஆன்மா செயல்பட்டாலும்
1.உடலில் ஆட்டிப் படைக்கும் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.எங்கள் உடலில் அமைதி கொண்டு நல் வழி காட்டும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஆன்மா ஒரு உடலில் இப்படி ஆட்டங்கள் ஆடினால் உள்ளிருந்து இயக்குவதை சப்தரிஷி மண்டலங்களுடன் உங்கள் நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்… அதன் வழி அதை அமைதிப்படுத்துங்கள்… தீமைகள் அகன்றுவிடும்

ஏனென்றால் அதனுடைய உடலில் துடித்த சாப வினைகள் தான் அதற்குக் காரணமாகின்றது. அந்தச் சாப வினைகளை நீக்க இதைப் போன்று நாம் அருள் உணர்வுகளை இணைத்து… ஆத்ம சுத்தி செய்து… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு இந்த எண்ணத்தின் வலுவை உடலில் உள்ள ஆன்மாக்களுக்குப் பாய்ச்சினால் தீமைகள் அகலுகின்றது

ஆகவே குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.எத்தனை முறை சொல்கிறீர்களோ
2.அந்த அளவுக்கு உங்களுக்குப் பலன் கிடைக்கும்.

சித்தன் போக்கு சிவன் போக்கு

பூமியின் ஈர்ப்பில் பரவிப் படர்ந்து தன் செயலுக்கு வரும் உயிரணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகப் பரிணாம வளர்ச்சியாக வளர்ச்சியின் முதிர்வில் பல நிலைகள் பெற்றுத்தான் இயற்கையின் கதியில் செயல்படுகின்றன.

படைப்பின் வித்தானது தன் இன வளர்ப்பிற்குத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் காத்தல் தொழிலுக்கு மண்ணின் தொடர்பில் நீரை உண்டு.. ஒளியை உண்டு.. காற்றையும் உண்டு… ஓர்மித்த ஈர்ப்பின் செயல் நிகழ்வுகளுக்குத் தன்னையே வளர்ச்சிப்படுத்திக் கொள்கிறது.

ஆகாரத்தை உண்டு வாழும் இந்த ஜீவ பிம்பச் சரீரத்திற்கும் அதே போன்ற செயல் உண்டு.

சிவன் உருவத்தில் முத்தலை சூலம் என்று காட்டப்பட்டதில் முத்தொடராகப் பல பொருள்கள் உண்டு.
1.கண்டத்தில் விஷம் – கழுத்தைச் சுற்றிப் பாம்பு என்பது
2.உயிரணுக்கள் உதித்திடும் செயல் அமில குணங்களாக விஷத்தின் எதிர் மோதல் தன்மைகளாக
3.பரவெளியில் உயிரணுக்களாக அசைந்திடும் தன்மைகளை உணர்த்தவே ஜீவனுள்ள பாம்பு.

அத்தகைய இருவினைச் செயல்கள் இயற்கையில் என்றுமே உண்டு. ஏனென்றால்
1.அமைதியாகத் தவழ்ந்திடும் காற்றே புயலாகவும் எழுகின்றது.
2.அமைதி காட்டும் நீரே கொந்தளிப்பாகவும் காணப்படுகின்றது.
3.நின்று எரியும் நெருப்பே உரத்து எழுந்து தாண்டவமாடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் கதியில் செயலில் இரு தன்மைகள் என்று கூறப்பட்டாலும் “இரண்டும் ஒன்று தான்…!”

அவைகள் செயலுறும் காலத்தில் நிகழும் தன்மைகள் கொண்டே உணர்வாக அறிந்து கொள்ளும் பக்குவத்தில் “ஜோதி நிலையைக் காட்டவே..” சிவன் கையில் அக்கினி வைத்துக் காட்டப்பட்டுள்ளது.

ஒலியின் வேகத்தில் ஒளி பிறக்கின்றது. நாதமே ஒளியாகின்றது. நாதத்தில் கலக்கும் உஷ்ணமே காக்கும் செயலாகப் புரிகின்றது.

மான் மழு… புலித் தோல் ஆடை.. அபயஹஸ்தம்… குஞ்சிதபாதம் சுட்டும் நற்சுவாச நிலைகள்… பாதத்தின் அடியில் முயலகன்…! என்றிட்ட இவ்வகை விளக்கங்கள் எல்லாம் “ஜீவ பிம்பம் பெற்ற மனித ஆத்மாக்கள் பெற வேண்டிய.. கடைப்பிடிக்கக வேண்டிய வழிகளாக.. உண்மையை உணர்த்தும் தத்துவங்களே ஆகும்…!

“சிவ நடனம்…” காண வேண்டும் என்பதே…
1.ஆத்மார்த்தமாக…! இயற்கையுடன் ஒன்றிய உயர் ஞான வளர்ப்பில் இயற்கையுடன் கலந்தே
2.அதன் உள்ளிட்ட சக்தியாகச் சக்தி பெற்றிடவே போதனைகளை அளித்திடுகிறோம் இங்கே…!
3.அந்தச் சக்தியை யாரும் பெற்றுத் தருவதில்லை.

ஆக.. “சித்தன் போக்கு சிவன் போக்கு…!” என்பது இயற்கையுடன் ஒன்றி வாழும் வாழ்க்கையில் சிவ தத்துவமாகத் தன்னையே… “தன் உயிராத்மாவையே…” வழி நடத்தும் செயலுக்குத் தன்னை உணர்ந்து கொண்டது தான்.

ஒளியின் அமைதி பெற எனது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஸ்வரூபம் சிவமாகவும் சக்தியின் ஸ்வரூபம் கலையாகவும் கண்டுணர்ந்த தன்மைகளில்… பூமியின் சுழற்சியும்.. பொருள் மறைவாக காந்த ஈர்ப்பின் செயலையும்… தன்னகத்தே தெளிந்து… சிவனாரின் உருக்கோலம் காட்டப்பட்டதில் ஜடாமகுட சிரசே… ஆகாய வெளியாகும்…!

ஆகாய கங்கை என்றால் என்ன…?

நீரமில சக்தி ஒன்றுடன் ஒன்று கனபரிமாணம் கொண்டு வானிலிருந்து பெய்திடும் நீராக வரும் நிலையில் “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே…!” என்று இடி மின்னல் என்று சூட்சமமாக விளக்கப்பட்டுள்ளது.

(ஆனால் பூமியைச் சுற்றி ஓடும்… பூமியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் ஒரு புலத்தையே இன்றைய விஞ்ஞான உலகம் ஆகாய கங்கை என்று அழைக்கின்றது)

சிவன் நெற்றியில் பிறைச் சந்திரனைக் காட்டியது என்ன..?

பூமியின் சுழற்சியுடன் ஒட்டியே வலம் வந்து அண்ட இருளில் மறைந்தும் (அமாவாசை) பின் வெளிப்பட்டுச் சூரியனின் ஒளி காந்த சக்தியை ஈர்த்துத் தன் சமைப்பால் வெளிவிடும் “தண் ஒளிக் கிரகணங்கள்…” காட்டுகின்றது.

அது பூமியுடன் இணைவாகச் சுழன்று பார்வைக்கோண வளர் பிறையாகி… பின் பௌர்ணமியாகக் காணும் நிலையையே சிவனுக்குப் பிறைச் சந்திரனாகக் காட்டியது.

பரவெளியின் சக்தியை ஈர்த்துப் பூமி தன் சமைப்பாக வெளிவிடும் மூச்சலைகளில்
1.அதே நிகழ்வின் தொடர்வில் மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் செயலில்
2.காற்றின் சக்தியாகப் பரவெளி மோதலின் உராய்வும்
3.அதனுள் பிறந்திட்ட ஒலி நாதங்களையே சிவனாரின் கையில் “உடுக்கை” என்று காட்டியது.

பூமியின் துருவங்களில் ஈர்த்துப் படர்ந்திடும் பனித் துளிகள் (பனிப்பாறைகள்) அனைத்தையும் சதாசிவமாகக் காட்டி அறிவின் ஆற்றல் என்று சூட்சமமாக
1.மனித சரீரத்தின் நெற்றிப் பகுதியையே
2.சதாசிவன் மண்டலம் என்று தத்துவம் கூறப்பட்டது.

விழிப் பார்வையில் செயல்படும் நெற்றிப் பொட்டின் உள் நின்ற ஞான விழிப்பார்வை என்ற முத்தொடரையே முன் பாடங்களில் “புவியின் காந்த ஈர்ப்புக் கிணறுகள்..” என்று மறைபொருள் காட்டியுள்ளோமப்பா…!

முக்கண் என்று காட்டுவது
1.சிவனாரின் வடிவத்தில் பூமியை உணர்த்திடவும்
2.நாம் பெற்றிடும் உயர் சக்தியின் மெய் ஞான வளர்ப்பிற்கும்
3.அதே முக்கண் தெளிவா(க்)கும்…!

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

 

ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.

தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.

தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.

குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.

மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!

எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.

ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்

சரீரம் ஒரு பாத்திரம்…! “அதில் நாம் சமைக்க வேண்டியது” மகரிஷிகள் அருள் சக்திகளை

 

இந்தச் சரீரம் சகலத்தையும் ஈர்த்துச் சமைக்கும் திறன் பெற்றது. உயர் சக்தியின் ஆகாரமான “ஆதி நீர் சக்தி என்ற குளிர்விப்புச் சக்தியே…” தியான வழித் தொடரில் வெப்ப நீர் சக்தியாக மாற்றப்படும் பொழுது எண்ணத்தின் வலுவிற்கு எது இலட்சியமோ அதுவே பெறப்படும் ஆகாரமாகின்றது.

அந்த ஆகாரத்தைப் பெறும் மூல சக்தியின் சமைப்பின் முன் போடப்படும் உணவுப் பொருள் என்ற அமில குணங்களும் இந்தச் சரீரமாகிய பாத்திரத்தில் நிறைந்துள்ள ஆதி சக்தியின் நீர் அமிலம்
1.தியானம் என்ற அக்கினியில்… குளிர்விப்பு நீர் சக்தி வெப்பச் சக்தியாகச் செயல்படும் செயலுக்கு
2.இந்தச் சரீரப் பாத்திரம் தன்னுள் ஈர்த்துச் செயல் கொண்டிட வேண்டியது
3.சகல மகரிஷிகளின் அருள் சக்தியே ஆகும்.

விறகிற்குள் மறைந்திருக்கும் நெருப்பின் உணர்வு கொண்டு நல்லாக்கச் செயலை (புறத்திலே சமைக்கும் சமையல் போல்) உண்டாக்கப்படுவது போல்
1.மகரிஷிகளின் அருள் என்ற ஜோதித் தத்துவத்தில் இருந்து
2.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு வளர்த்திடல் வேண்டும்.

அதாவது
1.விறகினுள் உறைந்துள்ள நெருப்பைக் கலயம் ஈர்ப்பது போல்
2.கலயத்தினுள் குளிர்வு நீர் சக்தி அந்த வெப்பத்தை ஈர்ப்பது போல்
3.அந்த நீர்ச் சக்தியிலிருந்து எண்ண குண ஆகாரச் சமைப்பு
4.அந்த அருள் சக்தியின் தொடரை ஈர்த்துக் கொள்கிறது.

ஈர்த்துக் கொண்டாலும்… ஆகாரப் பக்குவம் பெற்றுவிட்ட தன்மையை அறிந்துணர்ந்து தெளிவுபடும் செயலுக்கு
1.மாற்று குண எதிர் மோதல் தன்மைகளை விலக்கிடவும் வேண்டும்.
2.சஞ்சல உணர்வுகளை நமக்குள் மோதவிடலாகாது.

பிறவிக்குக் காரணம் ஆசை தான்…! என்ற தொடரை புத்தன் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாச் சூட்சமம் புத்தன் அறிந்த அனுபவ ஞான ஆத்ம இரகசியம் “பேரின்பப் பிரம்ம ஐக்கிய லயம்…!” என்பது.

தியான வழித் தொடரில் நிலை நின்று தன் உயிராத்ம சக்தியை வலுக் கொண்ட தொடருக்குச் சகலத்தையும் ஈர்த்திடும் சித்தத்துவ ஆனந்த ஈஸ்வர அனுபூதியைத்தான் புத்தர் பெற்றார்.

ஒவ்வொருவரும் அந்த ஈஸ்வர அனுபூதியைப் பெற வேண்டுகின்றேன்…!

“விண் செல்லும்… விண் செலுத்தும் ஆற்றலைத் தான்” குருநாதர் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்

 

கூட்டுத் தியானத்தின் வலு கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கவர்ந்து நம் மூதாதையர்களான குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே வீசினால்… அவர்கள் முதலிலே விண் செல்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள்.

“நம்மைக் காத்திட்ட உணர்வுகள்” அவர்களுக்குள் விளைந்தது நமக்குள் உண்டு. அதை நினைவு கொண்டு குலதெய்வங்களின் உணர்வுகளை எளிதில் நாம் பருக முடியும்.

அதனின் உணர்வின் துணை கொண்டு மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி…
1.புவியின் பற்றற்ற நிலைகள் கொண்டு விண்ணின் பற்று கொண்டு
2.உத்தராயணம்… விண்ணிலிருந்து வந்தோம்… ஒளியின் சுடராக ஆனோம் என்ற நிலையாக
3.மகரிஷிகளுடன் நாமும் இணைந்திட முடியும்.

இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… ஏதோ கதை சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்…! (ஞானகுரு).

இத்தகைய இயற்கையின் நிலைகளைப் பித்தரைப் போன்று இருந்த நமது குருநாதர் எமக்கு உபதேசித்து அருளினார். அந்த அருள் ஞான வித்தை எனக்குள் பதிவு செய்தார். அதிலே விளைந்த உணர்வினைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

இராமலிங்க அடிகள்… மனிதர்கள் தெய்வமாக வேண்டும் தெய்வ நிலை கொண்டு வேகாநிலை பெற வேண்டும் என்று அவர் பேசினார். அவரைப் போன்று மற்ற மகான்களும் அதைச் சொல்லியுள்ளார்கள்.

ஆனாலும் அவரைப் பின்பற்றியவர்கள் எல்லாம்… தன்னுடைய (மனித) வாழ்க்கைக்காக வேண்டித் தான் அவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார்கள். அந்த மகான்களின் ஆன்மாக்களை விண் செலுத்துவோர் இல்லை என்று இருந்தது (அந்தக் காலத்தில்.

குருநாதர் இதை எல்லாம் எமக்குக் காட்டினார்.

1.மண்ணுலகில் உள்ளோர் இன்புற்று இருக்க வேண்டும்
2.அவர்கள் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும்
4.ஞானிகள் உணர்வை அவர்களுக்குள் புகுத்த வேண்டும்
5.பகைமை இல்லா வாழ்க்கை வாழ வேண்டும்… சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்று பாடுபட்ட
6.மகாத்மா காந்தி போன்ற ஏனைய ஞானிகள் அதை உணர்த்தி இருந்தாலும்
7.மக்களின் பால் பற்று கொண்டு வாழ்ந்த நிலையில் உடலை விட்டுச் சென்ற
8.அந்த மகான்களை விண் செலுத்துவார் யாரும் இல்லாது போய்விட்டது

மக்கள் அனைவரும் மகான்களின் அன்பைப் பெற்றனர்… அதனின் துணை கொண்டு தன் வாழ்க்கைக்குத் தான் பெற்றார்கள். ஆன்மாக்களை விண் செலுத்தவில்லை.

இது எல்லாம் காலத்தால் மறைந்த நிலைகள்.

மகான்கள் மக்களுக்காகப் பாடுபட்டார்கள்… பிறர் தீமையில் இருந்து விடுபட வேண்டும் என்று ஐக்கிய உணர்வை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும்… சூரியன் எவ்வாறு தனக்குள் வருவதை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ… மகரிஷிகள் எவ்வாறு உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்களோ அத்தகைய விண் செல்லும் ஆற்றலை மகான்கள் கற்றுணரவில்லை.
1.மக்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் இருந்தது.
2.விண் செல்ல வேண்டும் என்று அவர்கள் யாரும் எண்ணவில்லை.

அத்தகைய மகான்கள் உணர்த்திய உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.அவர்களை முதலில் நீ விண் செலுத்து என்று
2.குருநாதர் சில உபாயங்களை எனக்குக் கொடுத்து அதைச் செயல்படுத்தும் படி சொன்னார்.
3.அதன்படி விண் செலுத்தினேன்.

முதலில் சொன்னபடி… அந்த மகானுடன் தொடர்பு கொண்டவர்கள் தன் உடலைச் சதம் என்று நோக்கத்திலேயே அவருடன் இருந்தார்கள்… சதமற்ற வாழ்க்கைக்கே ஜீவன் கொடுத்தார்கள்… சதமற்ற வாழ்க்கையே இன்று வாழ்ந்து கொண்டு சதமற்ற நிலையில் புழுவைப் போன்று துடித்துக் கொண்டுள்ளார்கள்.

இதிலிருந்து மக்களை மீட்டிட வேண்டும் என்று குருநாதர் உபதேசித்தார்.

ஆகவே நான் கொடுத்த ஞான வித்தை உனக்குள் வளர்த்து விடு. பிறரைக் காத்திட வேண்டும் என்று செயல்பட்ட மகான்களின் உயிரான்மாக்களை அவருடன் இருந்து “தனித்து நின்று நீ விண் செலுத்து…” என்றார். இப்படி…
1.புவியில் சுழன்று கொண்டிருக்கும் ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொடுத்தார்… குரு எம்முடன் இருந்தே…!
2.அந்த ஆன்மாக்கள் எவ்வாறு விண் செல்கின்றது…?
3.அதற்கு எதனின் உணர்வை உனக்குள் நீ கவர வேண்டும்…?
4.எதனின் வலு கொண்டு விண்ணிலே உந்த வேண்டும்
5.உந்தி விண்ணிலே வீசிய பின் ஞானிகள் அருகே செல்லும்போது உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கி விட்டு
6.ஒளி பெறும் உணர்வைச் சுவாசித்து ஒளியின் சரீரமாக எவ்வாறு சுழல்கின்றது…? என்ற நிலையை தெளிவாகக் காட்டினார்.

அதே போன்று நம் குடும்பங்களிலும் நம்மை வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையர் பாட்டன் பாட்டி என்று இருந்தாலும் அவருடைய சிரமத்தையும் பாராது நமக்கு எத்தனையோ உதவிகளைச் செய்தார்கள்.

அத்தகைய உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்தும் மார்க்கமாக எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…? என்று குருநாதர் (அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே) நேரடியாகக் காட்டினார்.

நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால் நான் அல்ல… குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை அவரின் செயலே இங்கே இயங்குகின்றது.

1.அவரில் விளைந்த ஆன்ம ஞானத்தை… மெய் உணர்வின் தன்மையை
2.விண்ணிலே இன்றும் வளர்ந்து கொண்டிருக்கும் அவர் உணர்வுகளைப் பருகும் மார்க்கத்தை
3.எமக்கு எப்படிப் போதித்தாரோ அதை அப்படியே உங்களுக்கும் வழி காட்டுகின்றோம்.

அதன் வழியிலேயே… நீங்களும் உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…!

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெற வேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

நஞ்சுக்குள் மூழ்கிடாது நாம் விழித்திருக்க வேண்டும்… நீலகண்டா…!

 

பிற மண்டலங்களிலிருந்து வருவதை… 27 நட்சத்திரங்களும் பால்வெளி மண்டலங்களாக அமைத்திருப்பது போன்று
1.நம்முடைய எண்ணத்தால் அருள் ஞானிகள் உணர்வை நம் முன் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.நமக்குள் தீமைகள் வராதபடி அந்தத் தீமைகளை விழுங்கி
3.தெளிந்த நிலையாக மாற்றி… ஒளியாக மாற்றுவதே உத்தராயணம்… பங்குனி உற்சவம்.
4.முருகனுக்கு உகந்த நாள் என்று அதைக் காட்டியிருப்பார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஞானிகள் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி விண்வெளியில் எவ்வாறு சுழன்று கொண்டுள்ளார்களோ அவர்களுடன் நாம் இணைய வேண்டும்… உத்தராயணம்.

ஆனால் அப்படி இணையவில்லை என்றால் தட்சிணாயணம். மனிதருக்கு மனிதர் சாபம் இடும் போது அதைப் பார்க்கப்படும் பொழுது அந்தச் சாப வினைகள் நமக்குள் சேர்ந்து தீயவினைகளாக மாறிவிடுகின்றது.

ஒருவன் தீமை செய்கிறான் என்றால் அதை உற்றுப் பார்த்தால் தீய வினைகளாக நமக்குள் சேர்ந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்று ஒருவன் பாவம் செய்கின்றான் பாவம் விடுகின்றான் என்றால் அந்தப் பாவ வினைகள் நமக்குள் சேர்ந்து பாவம் செய்வோராக நாமும் மாறி விடுகின்றோம். அப்படி மாறி விட்டால்
1.தீமைகளையே (நஞ்சினை) உணவாக உட்கொண்டு மற்றதைக் கொன்று புசித்து ரசித்து வாழும் உயிரினங்களாக
2.“தட்சிணாயணம்” மீண்டும் திரும்பி கீழே வந்து விடுகின்றோம்.

அவ்வாறு ஆகாதபடி நாம் திரும்ப வேண்டும் அது தான் உத்தராயணம்…!

துருவப் பகுதியின் வழியாக விண்ணிலிருந்து வருவதை ஆறாவது அறிவின் தன்மை கொண்டு… அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எவ்வாறு நிலை கொண்டு உள்ளானோ அதைப்போல நாமும் ஆக முடியும்.

நமது குருநாதர் காட்டிய அந்த உண்மையின் தன்மையை உங்களுக்குள் ஊழ்வினையாக ஆழமாகப் பதிவு செய்கிறேன். அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகளின் உணர்வுகளைக் கவர்ந்து தீமைகளை அகற்றிடும் நிலையாக உங்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.

அவ்வாறு விளையச் செய்து கொண்ட பின் உடலை விட்டு எப்போது அகன்றாலும்… என்றும் நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் செல்லலாம்.

ஆனால்
1.சாப வினைகளுக்குள்ளும் பாவ வினைகளிலும் சிக்கி விட்டால்
2.தட்சிணாயணம் தான்… மீண்டும் உடல் பெறும் நிலை தான்.

பரிணாம வளர்ச்சியில் மனித உடல் பெற்ற நிலையான மகா சிவன் ராத்திரி… சர்வத்தையும் அறிந்திடும் ஆற்றல் ஆறாவது அறிவு நமக்குள் இருக்கிறது என்றாலும் “சிவன் இராத்திரி நீ விழித்திரு…” என்றால் அதனின் உட்பொருள் என்ன…?

சிவனான இந்த உடலுக்குள் என்றும் விழித்திருக்க வேண்டும்… நஞ்சுக்குள் மூழ்கிடாது விழித்திருக்க வேண்டும்…
1.நீலகண்டா…! என்று சிவனின் தத்துவமாக நஞ்சினைத் தனக்குள் அடக்கி இருப்பது போன்று
2.நஞ்சு உள் செல்லாது என்றும் விழித்திருந்து… ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை ஒடுக்கி
3.வைரம் எவ்வாறு ஒளி வீசுகிறதோ… பாம்பினம் தனக்குள் எடுத்த நஞ்சினை நாகரத்தினமாக ஒளிச் சுடராக எப்படி மாற்றுகின்றதோ…
4.அதைப் போன்று ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “நாம் மாற்றிடும் விழிப்பு நிலையைக் காட்டுவதற்காக”
5.மகா சிவன் ராத்திரி என்று “ஆறாவது அறிவு கொண்டு நாம் விண் செல்ல முடியும்” என்று ஞானிகள் இதை எல்லாம் நமக்குக் காட்டினார்கள்.

காவியங்களில் தெளிவாக இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது… இருந்தாலும் மகரிஷிகள் காட்டியது காலத்தால் மறைந்து விட்டது. ஆனால் குரு நமக்கு இன்று அதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

விஞ்ஞான உலகில் தன்னையே மறந்துவிடும் நிலை இருக்கும் பொழுது அதிலிருந்து மீண்டு சிந்திக்கும் ஆற்றல் பெற… மனிதன் என்ற முழுமை பெற… குருநாதர் நமக்கு வழி காட்டுகிறார்.

ஓ…ம் என்று பிரணவமாகிய யானைகள்

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது).

அலைக்கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி… சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

விண்ணிலிருந்து வந்த நாம்… (வாழ்க்கையின்) “திசையைத் திருப்பி” மீண்டும் விண்ணுக்கே செல்ல வேண்டும்

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் பரிணாம வளர்ச்சியாக… அதாவது மகா சிவன்ராத்திரி கண்ணில் புலப்பட்டது… விண்ணுலகில் கற்று உணர்ந்தது
1.அவை அனைத்தும் நமக்குள் சேர்த்துத் “தட்சிணாயனமாக” விளைந்து வருகின்றது
2.உடலின் ஈர்ப்புக்குள் நாம் இருக்கின்றோம் என்ற நிலையையே அவ்வாறு காட்டப்பட்டது.

அதே சமயம் பங்குனி உத்திரம்… உத்தராயணம் என்பது மனிதனின் ஆறாவது அறிவாக…
1.திசை மாற்றி ஒவ்வொன்றையும் இணைத்து
2.திருப்பி வளர்த்துக் கொள்ளும் நிலை பெற்றது.

அதாவது ஆறாவது அறிவின் துணையால் பிறவி இல்லா நிலை அடையும் தன்மை பெற்றது தான் உத்தராயணம் என்பது.

பங்குனி உத்திரம் (உத்தராயணம்) தினத்தை ஆறாவது அறிவான முருகனுக்கு விசேஷமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதனின் பொருள் என்ன…?

1.மாற்றி அமைக்கும் சக்தி கொண்டு… தன்னுடைய திசையை மாற்றி
2.உடல் பெறும் நிலையை மாற்றி… ஒளி பெற்ற ஞானியின் உணர்வைத் தனக்குள் இணைத்து
3.ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக உருவாக்கப்பட்டது தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் (முருகன்) என்பது.

ஒவ்வொரு சரீரத்திலும் எதனை எதனை இணைத்து அது உருபெற்றது என்ற நிலையை மனிதனாக ஆனபின் இவை அனைத்தும் அறிவிக்கும் நிலையாக (ஆறாவது அறிவு முருகன்) உத்தராயணம்.

மனிதனான பின்… தான் திரும்பி… மீண்டும் பிறவிக் கடலில் சிக்காதபடி) ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மகரிஷிகள் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். அது தான் உத்திரம்…!

பங்குனி உத்திரம் அன்று காவடி ஆட்டம் ஆடி பால் குடம் எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால்… இந்த வாழ்க்கைக்கு அவன் செய்து தரப்போவதில்லை.

தீர்த்தங்களை எடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்கிறோம் என்றால்…
1.ஞானிகளால் உருவாக்கப்பட்ட தீர்த்தங்கள்… நல்ல உணர்வின் இயக்கங்களாக மகிழச் செய்யும் உணர்வின் தன்மையாக
2.சப்தரிஷிகளின் சக்தி நமக்குள் பெற முடியும்… அதனை நாம் நுகர்ந்து எடுக்க வேண்டும்.
3.மயில் நஞ்சானதை உணவாக எடுத்தாலும் தோகை விரித்து மகிழ்ச்சியாக ஆடுவது போன்று நாம் மகிழ்ந்த நிலை பெற முடியும் (மகிழ்வாகனா).

ஞானிகள் காட்டியது ஆடல் பாடலுடன் மகிழ்ந்திடும் நிலையாக மகரிஷிகளின் உணர்வை எடுத்து மனிதனை உற்சாகப்படுத்தும் நிலைகள் வர வேண்டும். ஆனால் மயிலின் தோகையை வைத்துக் காவடி ஆட்டம் ஆடுவார்கள்… இது வெறும் ஆட்டமே…!

உற்சாகத்தில் மறைந்து உடல் சோர்வடைவதும்… ஆடிய ஆட்டங்களால் கால்களில் தொய்வடையும் பொழுது அதனால் வேதனைகள் வருகிறது.

ஆக… பாலில் இனிப்பையும் பாதாமையும் கலந்து விட்டு அதற்குள் நஞ்சினை இணைப்பது போன்று
1.வேதனையைத் தான் நாம் உருவாக்க முடிகின்றதே தவிர
2.ஞானிகள் உணர்வை நாம் பருகுவதில்லை.

“ஐதீகம்…” என்றும் முருகனுக்காக வேண்டி தன் உடலை இம்சித்துக் கொண்டால்… அதாவது உடலில் ஊசிகளைக் கோர்ப்பதும் கொக்கிகளைக் கோர்ப்பதும் அதை வைத்து முருகனை இழுத்துச் சென்றால் அவன் மெச்சி நல்லது செய்வான்…! என்று வேதனையை உருவாக்கித் திசையை மாற்றித்தான் இன்று நாம் வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் உத்தராயணம் என்பது
1.மனித வாழ்க்கையில் இன்னொரு பிறவிக்கு வருவதைத் திரும்பிப் பார்க்காதபடி
2.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளை இணைத்து
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகம் செல்வது தான்…!.

எந்த விண்ணிலே தோன்றினோமோ (உயிர்) அது கீழே வரும் பொழுது தட்சிணாயணம்…! சூரியனின் ஈர்ப்பின் தன்மைகள் அதனின் ஓட்டத்தில் ஓடும் இதனுடைய சுழற்சி வட்டத்தில் வருவதை
1.மீண்டும் விண்ணை நோக்கித் திசை திருப்பி
2.அருள் உணர்வின் ஆற்றல் கொண்டு ஒளியின் சரீரமாகி
3.விண்ணுலகில் மிதந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் அவருடைய வாழ்க்கையில் துருவப் பகுதியிந் வழி விண்ணிலிருந்து வரும் தீய உணர்வின் தன்மையை ஒளியாகத் தனக்குள் மாற்றி ஒளியின் சிகரமாகி… பிறவியில்லா நிலையாக… என்றும் பதினாறு என்று உயிருடன் ஒன்றி நிலை கொண்டுள்ளார்கள்.

பூமிக்கு(ள்) வரும் நிலைகள் தட்சிணாயணம்…! அது கவரும் நிலைகளை
1.உத்தராயணம் பகுதியில் இருந்துதான் வட துருவப் பகுதியிலிருந்து தான் இது கவர்கின்றது.
2.ஆறாவது கொண்ட மனிதன் அந்த வட துருவப் பகுதியில் நின்று (உத்தராயணம்) தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலைத் தனக்குள் இணைத்து… விண்ணிலிருந்து வரும் துகள்களைத் தனக்குள் உணவாக எடுத்து நஞ்சினை ஒடுக்கி
4.வைரம் ஒளியின் சிகரமாக (ஜொலிப்பது) இருப்பது போன்று ஒளி நிலை பெற்றவரே அந்த மகரிஷிகள்.
5.சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை நாமும் அடைதல் வேண்டும்.

விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றும் “நீலகண்டனாக நாம் ஆகவேண்டும்”

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!

1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழி வழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெற வேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளி காந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)

March 2024 உபதேசம்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

“நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா…? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன…?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்…! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா…?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது… என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்…”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன…?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே…!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே…!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்…
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்…” என்ற பாச உணர்வினால் தானப்பா…!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்…” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா…?

அறிந்து கொண்டிருக்கும்… அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்… அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்… அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்… “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்…!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே…!

“உணவின் மாறுபாடும்…” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு…” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு…” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்…” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கர்ப்பிணியாகி தலைப் பிரசவம் என்றாலே மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு அதிர்ச்சி நிலையானால் பிறக்கப் போகும் குழந்தை தலை கீழாக மாறாது.

குழந்தையின் சிறு நீர் எல்லாம் பனி நீராக மாறி இருக்கும். அப்பொழுது அந்தப் பருவம் வந்து பனிக் குடம் உடைந்த பின் குழந்தை முழித்துக் கொள்ளும். உணர்வின் துடிப்பு வரப்படும் பொழுது காற்றின் தன்மை வாயுவாக உற்பத்தியாகி வெளித் தள்ளும் நிலை வருகிறது.

நெகடிவ்… பாசிடிவ்…! என்ற நிலை வரும் பொழுது தாயின் எலும்பின் தன்மை இலகுவாக்கிக் குழந்தையை வெளிக் கொண்டு வரும் தன்மை வருகிறது.

ஆனால் எலும்பின் தன்மை வலுவாகி விட்டால் குழந்தை சுகப்பிரசவம் ஆவதில்லை.

குழந்தை வெளியில் வர முடியவில்லை என்றால் அக்காலங்களில் மாம்பழத்தில் கொட்டையை நசுக்கி எடுக்கிற மாதிரி தாயின் வயிற்றை நசுக்கி முயற்சி செய்து எடுத்துப் பார்ப்பார்கள். குருநாதர் இதை எல்லாம் காட்டுகின்றார்.
1.அன்றைய வைத்திய முறைக்கும்
2.இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ முறைக்கும் உண்டான வித்தியாச நிலைகளைக் காட்டுகின்றார்.

இன்றைக்கும் ஒரு சில நிலைகளில் அக்கால வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அப்பொழுது கர்ப்பிணியான அந்தத் தாய் எத்தனை வேதனைப்படுகின்றது என்று பார்க்கலாம்…! ஆனால் குழந்தை பிறந்த பின் தாய் அதைக் கொஞ்சிக் குலாவுகிறது… மகிழ்ச்சி அடைகிறது.

சுகப்பிரசவம் அடையவில்லை என்றால் இன்றைய நவீன முறையில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கின்றார்கள்.

சாதாரணமாக உடலில் அடிபட்டால் காயமாகிறது… இரத்தம் கொட்டுகிறது. அது போல் கர்ப்பிணியின் உடலில் ஆபரேசன் செய்யும் போது இரத்தம் வெளியேறாதபடி தடைப்படுத்துகின்றனர்.

குழந்தையை எடுத்த பிற்பாடு அறுத்த தசைகளை இணைப்பு கொடுத்து இஞ்ஜெக்சன் செய்து ரொம்பச் சீக்கிரமே அதை ஒட்ட வைத்து விடுகின்றனர். குழந்தையும் பாதுகாப்பாக எடுத்துக் கொடுக்கின்றனர்.

1.ஆனாலும் இன்று ஜாதகம் பார்த்துக் குழந்தையை எடுக்கும் பழக்கம் கூட வந்து விட்டது.
2.பிறக்கும் குழந்தைகள் இன்ன நேரத்தில் பிறந்தால் ஜாதகப் பிரகாரம் தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
3.அதற்காக வேண்டி பண வசதி உள்ள வீடுகளில் எல்லாம் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கிறது என்று
4.அதற்கு முன்னாடியே எடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது போன வீடுகள் எல்லாம் தோஷமாகப் போய்விடும் என்று சொல்லி அந்த மூல நட்சத்திர நேரம் வருவதற்கு முன்னாடியே ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றார்கள்.

டாக்டரும் கூடச் சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் ஒரு சிசேரியன் செய்தால் இவ்வளவு காசு வருகிறது என்று கணக்குப் பார்த்து படித்துக் கொண்டு வந்த டாக்டர்களும் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

அதே போல் சில குடும்பங்களில் நாள் நட்சத்திரங்களைப் பார்த்து எங்களுக்கு ஞானக் குழந்தையாக வர வேண்டும் என்று அந்தக் குறித்த நேரத்தைச் சொல்லி ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கின்றார்கள்.

1.ஆனால் இவர்கள் எப்படி அவசரப்பட்டு அந்தக் குழந்தையை எடுத்தார்களோ
2.அந்தக் குழந்தை உணர்வும் இவர்களின் எண்ணங்களும் ஒன்றான நிலையில்
3.குழந்தை பிறந்த பிற்பாடு எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செயல்படுத்துவார்கள்.
4.அந்தக் குழந்தையும் அதே மாதிரித்தான் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வு எதுவோ அந்தக் கருவில் வளரும் உணர்வுகள் மேக்னட் இதனுடைய உணர்வுகளை அது கவரப்படும்.

பெரும்பகுதியான குடும்பங்களில் குழந்தை பிறப்பே ஆபரேசன் செய்து தான் எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப நேரம் ஆனது என்றால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்தது என்றால் குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பின் தன்மை குறையப்படும் பொழுது அடுத்த கணமே ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்றுகின்றார்கள்… தாயையும் காப்பாற்றுகின்றார்கள்.

உதாரணமாக நல்ல மனம் கொண்டு ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் மனதும் சோர்வடைகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.ஆகவே இயற்கையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்
2.தீமை என்ற உணர்வை மாற்றி தீமையை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! அந்த இயற்கையின் உண்மை நிலைகளைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் நானும் பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் எல்லாம்… ஸ்கேனில் ஓடுவது போல் கண் கொண்டு பாருங்கள்… எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்று மற்றவர்களும் பார்க்கும்படி செய்தேன். ஏனென்றால் நான் காணுவது போல் “பிறரும் பார்க்க முடியும்…” என்று தெரிவதற்காகக் காண்பித்தேன்.

பார்த்துச் சொல்லும்படி சொன்னவுடன்… அதை எடுத்துத் தவறான வழிகளில் தான் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பருவம் இல்லாதபடி பிறருக்குக் கொடுத்தால் தீமையின் விளைவே அவர்களுக்குள் விளைகிறது.

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

 

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது…” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்…” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை…” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்… “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன…?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்…?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது… அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு…” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றைய மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட உயர்வு பெற முடியும்.

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்… பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி… அறிவொழிந்து…! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்…! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை…!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி… ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு… பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்… பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்… அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்…!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்…!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த… தான் பெற்ற தன்மை கொண்டு… ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது…” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை…” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே…” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்…!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி…”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

 

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்…” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா…?

குரு என்றாலே “ஒளி நிலை…” என்பது பொருள்…!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி… உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்…!” என்ற நிலை இல்லையப்பா…!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்…! என்ற சொல்லும் எதற்கப்பா…?

“தனித்துவமான சக்தி…” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்… மாமகரிஷிகளின் ஆசியுடன்… “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை…” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது…?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்… சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்… கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே…?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்…! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே…?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்…? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

 

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ குற்றம் குறைகளைப் பார்க்கின்றோம்… எத்தனையோ தீமைகளைக் கேட்டுணர்கின்றோம். அவை எல்லாம் தீய வினைகளாக நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் பிறர் செய்யும் தவறான உணர்வுகள்… சாப வினைகளாக வருவதை… நாம் உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் அது புகுந்து விடுகிறது.

அதே சமயத்தில் ஒருவன் செய்யும் பாவச் செயல்களை உற்று நோக்கும் போது அந்தப் பாவ வினை நமக்குள் வந்துவிடுகிறது. சாப வினையும் பாவ வினையும் மிகவும் கடினமானது

காரணம் எத்தகைய தொழில் செய்தாலும்
1.பிறரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது பழகாமல் இருக்க முடியாது ரோட்டிலே நாம் செல்லாமல் இருக்க முடியாது.
2.பிறர்படும் துயரத்தையும் சாபமிடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்தாலும்
3.அது நமக்குள் புகுந்து சாப வினைகளாக விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் விஷமான பொருளைக் கையில் எடுத்து வேலை செய்த பின் உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவில்லை என்றால் விஷம் நமக்குள் வந்து உடலைச் செயலற்றதாக்கிவிடும்.

அதே போல் ஒரு விஷ வித்தாக இருந்தாலும் மண்ணிலே விழுந்து விட்டால் அது முளைக்கத்தான் செய்யும். விஷ வித்து என்று அதைப் பிடுங்கி எறிந்தாலும் மறு பக்கம் விழுந்தால் அது அதனின் நஞ்சின் தன்மை இயக்கத்தான் செய்யும்.

ஆகவே நம்மை அறியாது சேரும் தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை அகற்ற வேண்டும். நமது குருநாதர் இத்தகைய வினைகளை எல்லாம் நீக்கும் ஆற்றல்களை…
1.மகரிஷிகள் எவ்வாறு தனக்குள் கற்றுணர்ந்தார்கள்…?
2.தீய வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
3.சாப வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
4.பாவ வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
5.தீமைகளை நீக்கும் உணர்வுகளை எவ்வாறு சேர்த்துக் கொண்டார்கள்…?
6.அது எவ்வாறு அவருக்குள் விளைந்தது…?
7.அதன் துணை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…? என்ற உண்மையை எனக்கு உணர்த்தினார்.

அதை நீங்களும் பெற முடியும் அவர் காட்டிய மார்க்கத்தினைத் தான் உங்களுக்கும் இப்போது உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் ஆற்றலை நல்வினையாகப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

பதிவு செய்ததை ஓங்கி எண்ணும் பொழுது தீய வினைகளை அகற்றுவதும் பாவினைகளைப் போக்குவதும் உங்களால் முடியும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்… என்னை அறியாத வந்த தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்குவேன்…! என்ற உறுதி கொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தினால் அந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்…” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா…?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது… விளை பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே…!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைபொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்… இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்… ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் – பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி…
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ…
3.அகண்ட… பிரகாச… பேரின்ப ஜோதியாக…
4.ஆத்மாவாக – உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு… காரணம்… ஆனந்தம்…! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ…
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி…!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது…!”

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

 

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”

பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான்… அதிலிருந்து விடுபடும் சக்திகளைக் கொடுத்தார் குருநாதர்

 

என் (ஞானகுரு) காலிலே பல ஆணிகள் உண்டு. காலில் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும். ஒரு சிறிய கல் காலிலே குத்தினால் தலையில் இருக்கக்கூடிய… உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் ஒரு குச்சியை வைத்துக் காலிலே பத்து அடி அடித்தாலே போதும் ஜீவனே பிரிந்து விடும். அப்போது அந்த வேதனை எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு காலிலும் சேர்த்து 26 ஆணிகள் உண்டு…! ஒரு காலடி நான் எடுத்து வைக்க வேண்டும் என்றால் முள்ளிலே கால் வைப்பது போன்று தான் இருக்கும்.

சிலம்பு விளையாடுபவர்கள் எப்படிக் காலடி எடுத்து வைத்துச் செயல்படுகின்றார்களோ அது போன்று பாவ்லா போட்டுத் தான் நடக்க முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் ஊரைச் சுற்றி உலகைச் சுற்றி நான் அனுபவம் பெறுவதற்காகப் போகும் போது… குருநாதர் எம்மை “நீ செருப்பு போட்டு நடக்கக் கூடாது…” என்று சொல்லிவிட்டார்.
1.செருப்பு போட்டு நடந்தால் கஷ்டத்தை நீ உணர முடியாது
2.எத்தனையோ பேர் இந்த உலகிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
3.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணர வேண்டும்.
4.அதை உணர்ந்தால் தான் மற்றவர்களுக்கு நீ உதவி செய்ய முடியும்… அதை நீக்கவும் முடியும்.

ஆகவே… உனக்கு வேதனை வரும் பொழுது அதை நீக்கக்கூடிய உணர்வுகள்… அந்த உபாயங்கள்… அது எப்படி…? என்பதை நீ அறிந்து கொள்ளவே இதைச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

காலிலே ஆணி என்றாலும் நடக்கும் பொழுது உன் மனது என்ன ஆகிறது…? நீ சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் சென்று என்ன ஆகின்றது…?

ஆணி வந்தவர்கள் கால்கள் எப்படி முடமாகின்றது…? நன்றாகத் தான் இருப்பார்கள் இந்த ஆணிகள் வந்துவிட்டால் உடல் குறுகி நலிந்த நிலை ஆகி விடுகின்றார்கள்… அவரின் மனதும் வேதனைப்படும் உணர்வாகவ ஆகி விடுகிறது.

இப்படி… தன்னை அறியாமலே எந்தெந்த நிலைகள் கொண்டு மனிதர்கள் வேதனைப்படுகின்றனர்…? அந்த வேதனை உருவாகவே எப்படி மாறி விடுகின்றார்கள்…?

இது போன்ற நிலைகளை நீ அனுபவபூர்வமாக அறிந்தால் தான் அதை நீக்க முடியும்…
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகர் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டி அருள் நெறிப்படி
5.நாம் எதை எண்ண வேண்டும்… எதனை நாம் பருக வேண்டும்…?
6.எதனை நாம் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
7.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
8.ஞானிகள் உணர்வினை வினைக்கு நாயகனாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்ற நிலையை
9.என் காலில் ஆணி இருக்கின்ற வரையிலும் நடந்து பல நிலைகளைச் செயல்படுத்தினார் குருநாதர்.

மகரிஷிகள் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றி விண்ணுலகில் இன்று சுழன்று கொண்டிருக்கிறார்கள். தீமையை அகற்றிய நிலைகள் அவர் உடலில் விளைய வைத்த சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்தார். இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்து ஞானிகளின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார்.

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

 

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!

நான்…! (என்பது) யார் என்று புரிந்ததா…?

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

இப்பொழுது நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

உயிருடன் நாம் உரையாடுகின்றோமா…?

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே… சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

இதை உணர்த்துவதற்காகத்தான் சிவ ரூபத்தைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

சிவனுக்குப் போட்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் யானைத் தொலி (தோல்) புலித் தொலி மான் தொலி என்று காட்டியிருப்பார்கள். நாம் அந்தந்தச் சரீரத்தை எல்லாம் பெற்றுத் தான் இந்த மனித உடலாக வந்தோம்.

சிவன் கையிலே திரிசூலம் இருக்கும்… அதிலே உடுக்கையும் இருக்கும்.
1.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற இதனின் இயக்கத்தில் தான்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் எது எது இணைகின்றதோ அது “ஒலியாகின்றது…” (திரிசூலத்தில் உடுக்கையை வைத்தது இதற்குத் தான்)
3.முதலில் மோதும் இசைகள் அதனுடன் ஒடுங்கி விடுகிறது
4.மீண்டும் மற்றொன்றின் ஒலிகள் இணைந்த பின் மறுபடியும் சுருதிகள் மாறுகின்றது.
5.சிவன் உலகை ஆட்டிப் படைக்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஆக சிவ உருவத்தைக் கண்ணுற்றுப் பார்த்தாலே உண்மையின் இயக்கங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைக் காட்டுகின்றார்கள்.

சிரசில் பட்டைகள் மூன்று இருக்கும். விபூதியால் பூசப்பட்டிருப்பினும் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும்
1.தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
2.அது தனக்குள் அங்கீகரித்துக் கொள்கிறது… தன் நிலையை மாற்றிக் கொள்கிறது என்ற நிலையை
3.நாம் அறிவதற்காக இவ்வாறு வைத்துள்ளார்கள்.

சிவனின் சிரசில் கங்கையும்… சிவன் பாதி சக்தி பாதி என்றும் காட்டுகின்றனர். ஒவ்வொரு அணுவிலும் வெப்பம் கலந்தே இருக்கும். அந்த வெப்பத்தின் இயக்கத்தால் தான் அனைத்தும் இயங்குகிறது என்று பராசக்தியாகக் காட்டி “இந்த வெப்பம் சர்வத்தையும் உருவாக்கும்…” என்ற நிலையை இங்கே தெளிவாக்குகின்றார்கள்.

சிவன் உடல் முழுவதிலும் பாம்பைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள். ஜடா முடியிலும் இந்த விஷப் பாம்பு இருக்கும்.
1.ஒவ்வொரு அணுக்களிலும் உள்ள இந்த விஷமே
2.இயங்குவதற்கு மூல காரணம் என்ற நிலையைத் தெளிவாக்குகின்றனர்.

இப்படி ஒரு உருவத்தைக் காட்டி அருவ நிலையின் செயலாக்கமும்… சேர்ந்த பின் இந்த உருவத்தின் நிலைகள் எவ்வாறு…? (உருப் பெறுகிறது) என்று தெளிவாக்குகின்றது நம் வேதங்கள்.

வேதங்களின் மூலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரிக் சாம அதர்வண யஜூர் என்று முழுமையாக யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி அறிந்து கொண்டால்
1.எப்படி எல்லாம் உருவாகி இன்று மனிதனாக வந்துள்ளோம்…! என்று தன்னை அறிந்திட முடியும்.
2.தன்னைத் தான் அறிந்தவன் (ஞானிகள்) வெளிப்படுத்திய உணர்வு தான்
3.சூட்சமத்தில் நடப்பதை உருவமாக எப்படி வருகிறது…? என்பதனை உருவத்தை அமைத்துத் தெளிவாக்கினார்கள் ஞானிகள்.

ஜடாமுடியில் கங்கை… சிவன் பாதி சக்தி பாதி… என்று உடலில் சரி பகுதி வைத்துள்ளார்கள்… அர்த்தநாரீஸ்வரர். சிரசிலே பிறைச் சந்திரன்.

காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் இரண்டறக் கலந்து விட்டால் அதுவும் இதுவும் கலக்கப்படும் போது சரி பகுதியாக மாறுகின்றது. இதன் ஒளியும் மங்குகிறது… அதன் ஒளியும் மங்குகிறது.

இப்படி மாறுவதைக் காட்டுவதற்குத்தான் சிவனின் சிரசிலேயும் பிறைச் சந்திரனைப் போட்டுள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒவ்வொரு நாளும் நமக்குள் எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்திருந்தாலும் தினமும் அதிகாலை துருவ தியான நேரத்தில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று இரத்ததில் அந்த அரும் பெரும் சக்திகளைக் கலக்கச் செய்ய வேண்டும்.

ஜீவ அணு:
ஜீவ அணு என்றால் உதாரணமாக ஒரு பாம்பை நாம் அடிக்கின்றோம் என்றால் அந்த அணுக்கள் (பாம்பு வேதனைப்பட்ட) நம் உடலில் ஜீவ அணுக்களாக இரத்தத்திலே வளரும். உடலில் உள்ள உறுப்புகளில் போய் இணையும்.

அதற்குச் சாப்பாடு தேவை. வேதனைப்பட்ட அலைகளை எடுத்துத் தான் அது சாப்பிடும். நமக்கு வேதனையைக் கொடுக்கும்.

ஜீவ ஆன்மா
அந்தப் பாம்போ (பாம்பின் உயிராத்மா) மனிதனை உருவாக்கிய இந்திரீகத்தில் அது கருவாகப் போய்ச் சேர்ந்துவிடும் அடுத்த உருவைப் பெறுவதற்கு…!

அந்த உருவைச் சேர்த்த பின் அந்தப் பாம்பின் தன்மை கொண்டு அந்த அணுவாக நமக்குள் உருவாகும். அதற்கு மாற்றத் தெரியாது. அதே உணர்ச்சிகளைத் தான் தூண்டிக் கொண்டிருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள்
2.அதற்குள்ளும் சேர்கின்றது (பாம்பின் ஆன்மா ஜீவான்மாவாக உள்ளதுக்கு).
3.மனிதனாகும் அந்த உணர்வுகள் கருக்களிலும் இந்த உணர்வை மாற்றும் வல்லமை பெறுகின்றது.
4.அந்த அணுக்கள் இந்தச் சக்தியைப் பெறும் போது இதுவும் நமக்குள் ஒத்தாசையாக வருகின்றது.

ஏனென்றால் நமக்குள் வந்து மனிதனாக உருப்பெறும் உணர்வை அங்கே வளர்த்திருக்கின்றது. ஆனால் அருள் ஒளியின் தன்மையை நாம் கூட்டும் போது இதுவும் அந்த ஒளியின் சுடராக மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் அது வளர்த்துக் கொண்ட உணர்வுகள் நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் நாம் பார்த்தவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்வது..!

வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் செயல் எல்லாம் ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்த்தோர் குடும்பமெல்லாம் வைரத்தைப் போன்று ஜொலிக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
1.என்று எத்தனை தடவை சொல்கிறீர்களோ
2.அது வரை உங்களுக்கு நன்மை தரும்.

இராமாயணத்தில் காட்டுகின்றனர்… ஜனகச் சக்கரவர்த்தி தன் வளர்ப்பு மகளான சீதாவைத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அங்கே வருவோர் அவரவர்கள் திறமைகளைக் காட்டும்படி சொல்கின்றனர்.

வந்தவர்கள் அனைவரும் அங்கிருக்கும் வில்லை எடுத்து அதில் அம்பை ஏற்றிக் குறி வைத்துத் தாக்குகின்றனர்… அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி..!

ஆனால் இராமன் வந்தவுடன்… அவன் உணர்வுப்படி தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான். ஏனென்றால்…
1.தீமை செய்யும் எண்ணத்தை நீக்கிய பின்
2.சீதா அந்த மகிழ்ச்சி பெறும் குணத்தைத் தன் உடலுடன் அரவணைத்துக் கொண்டான்.
3.அதைத்தான் கல்யாணராமா என்பது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

 

எல்லா உயிரையும் ஈசனாக மதி…! அந்த உடல்களை ஆலயமாக மதி… அந்த ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் உயர்ந்த குணங்களை மனிதனாக உருவாக்க உதவிய நற்குணங்களை எல்லாம் தெய்வமாக மதி.

ஒவ்வொரு மனிதனும்… அவன் தீமையிலிருந்து அகன்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்… “நீ பிரார்த்தனை செய்…”

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எதைப் பிரார்த்தித்தேனோ… எதை உபதேசித்தேனோ
2.எவ்வாறு அதையெல்லாம் நீ கூர்ந்து கவனித்தாயோ அந்த உணர்வுகள் அனைத்தும் உனக்குள் பதிவாகி
3.அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது
4.நான் கூறிய உணர்வையும் நான் உணர்த்திய உணர்வையும் நீ பெறும் தகுதி பெறுகின்றாய்.

கீதையின் சாரத்தை” அன்று வியாசகர் உணர்த்தியது போன்று… நான் உனக்கு உபதேசித்ததை நீ எடுக்கப்படும் போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!”

ஆகவே… பிறருடைய தீமைகளை அகற்றி அதிலிருந்து அவர்கள் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு.

நான் உனக்கு உபதேசித்து உணர்த்திய ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைப் பருக வேண்டும் என்று நீ எண்ணு.
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நீ அதைப் பெறுவாய் என்றால்
3.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது… அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியை நீ பெறுகின்றாய்.

மெய் ஞானிகள் உணர்வை நீ பெறும் பொழுது அது உனக்குள் விளைந்து சொல்லாக வெளிப்படும் போது அதைக் கேட்பவர் உணர்வுளிலும் ஆழமாகப் பதிகின்றது.

ஆழமாகப் பதிந்த பின் அவர்களை மீண்டும் அதை நினைவு கொள்ளும்படி செய். அவர்கள் எப்போது நினைவு கொள்கின்றனரோ அந்தத் தீமையிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு நான் உணர்த்திய உணர்வை
3.அதன் துணை கொண்டு நீ கண்டறிந்த அறிவிந் ஞானத்தை எல்லா மக்களுக்கும் உபதேசி.
4.அவர்களுக்குள் அது பதிய வேண்டும் என்று நீ செயல்படுத்து
5.அருள் ஞானிகள் உணர்வை அவர்கள் பெறும் தகுதியாக அந்த உணர்ச்சிகளை அவர்களுக்குத் தூண்டு.

அதன் வழியில் அவர்கள் அதைப் பெற்றார்கள் என்றால் அவரை அறியாது உள் புகுந்த தீமைகளை அகற்ற இது உதவும்.

காரணம்… அவர்களுடைய நல்ல குணத்தால் உயர்ந்த பண்பால் பரிவால் பிறரைக் காத்திடும் நிலைகள் கொண்டு… பிறரைக் காத்திடும் செயலாகச் செயல்பட்டாலும் பிறர் படும் துயரத்தின் உணர்வுகள் நுகர்ந்தறிந்தே அவர்களால் செயல்பட முடிகின்றது. அந்தத் துயரங்களை நுகர்ந்தறிந்த பின்
1.அதிலிருந்து பிறரை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தும் அந்த நல்ல மனிதர்களுக்குள்
2.அவரை அறியாது அந்த தீமைகள் புகுந்து விடுகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டது போன்று… நல்லவையாக இருக்கும் இந்த உணர்வுக்குள் விஷம் கலந்த பின் அவர்கள் செயலற்றதாக ஆகிவிடுகின்றனர்.

1.பிறரைக் காக்கின்றனர்… ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றன.
2. நான் கொடுக்கும் உபதேசத்தினை அத்தகைய நல்லோரைக் காத்திடும் தன்மைக்கு நீ பயன்படுத்த வேண்டும்
3.தீமையை அகற்றிடும் செயலாக “எனது வாக்கு” உனக்குள் இருந்து வேலை செய்யும்.

ஆகவே ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று அந்த உடல்களை நினைத்து அந்த உடலில் இருக்கும் உயர்ந்த குணங்களைக் காத்திடும் நிலையாக…
1.நான் சொன்ன உபாயத்தின்படி விண்ணை நோக்கி நீ ஏகி அந்த உணர்வின் தன்மை பருகி
2.அதனை நீ சொல்லாக வெளிப்படுத்தி கேட்பவர் உணர்வுக்குள் அருள் ஞானிகளின் வித்துக்களை ஆழமாகப் பதியச் செய்.

யாரெல்லாம் நீ சொல்வதைப் பின்பற்றித் தொடர்ந்து செய்து வருகின்றார்களோ… தீமை அகற்றிடும் சக்தி அவர்கள் பெறுகின்றனர்.

அவர்கள் பெற வேண்டும் என்று நீ அவர்களை நினைத்துத் தியானித்தாய் என்றால் அவர் எண்ணும் பொழுது அவர்களுக்கும் தீமை அகற்றும் சக்தி கிடைக்கின்றது.

ஒரு நெலைச் சமைத்து யாரும் அதை உணவாக உட்கொள்ள முடியாது நீ ஒருவனாக இருப்பினும் ஒரு நெல் மற்றவர்கள் பசியைப் போக்க உதவாது.

மற்றவர்கள் உணர்வுகள் எண்ணங்களை ஒருக்கிணைத்து…
1.உயர்ந்த எண்ணங்களை எல்லோரையும் வளர்க்கச் செய்து
2.அந்த அருள் ஆற்றல் மிக்க நிலைகளை “பெரும் குவியலாக” நாம் சேர்க்க வேண்டும்.

அனைவரும் தெரிந்து தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணி ஏங்கி…
1.நான் உனக்குக் கொடுத்த உபதேசத்தின் சக்தியை
2.அதன் மூலம் நீ பெற்ற அந்தத் தகுதியினை…
3.எல்லோர் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிவு செய்து
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் அனைவரையும் நீ ஒருங்கிணைத்து வலுப்பெறச் செய்.

அவர்கள் எல்லோரும் வலு பெற வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ அதைப் பெறுகின்றாய். எல்லோரும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கி எண்ணுகின்றாயோ அது அனைத்தையும் பெறும் தகுதியை நீ பெற்று… உனக்குள் விளைந்து… அது சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்பார் உணர்வுகளிலும் அது பதிவாகி அவர்கள் அறியாத வந்த தீமைகளை நீக்கிடும் செயலாக ஆகின்றது.

குருநாதர் எனக்குக் கொடுத்த அனைத்தையும்… அப்படியே உங்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன் (ஞானகுரு).

“கல்லா அறிவு” பெற்ற மகான்களின் ஆசி நமக்கு வேண்டும்

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
6.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
1.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?
2.அதற்கு எது முக்கியம்..?
3.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
4.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது. ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே… தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

குரு நாடி

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும்… புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையின் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

 

நமது வாழ்க்கையில் எத்தகைய வேதனை வந்தாலும் அதைத் துடைக்க… துடைத்திட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத் தான் அன்றைய ஞானிகள் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

1.என்னை அறியாது வந்த பிழைகளை நீக்கிட அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.எந்த உயிர் மனிதனாகச் சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே “ஈஸ்வரா…” என்று வேண்டி
3.எந்த மனிதன் இவ்வாறு ஏங்குகின்றானோம் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நாம் எண்ணியது அனைத்தையும் உயிர் தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்குத் தான் இராமயாணம் மகாபாரதம் கந்தபுராணம் போன்ற காவியங்களை ஞானிகள் தீட்டிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி செய்தனர்.

அதாவது
1.சூட்சுமத்தில் நமக்கு முன் இருக்கும் காற்றலைகளில் படர்ந்துள்ள நிலையையும்
2.நாம் எண்ணிய உணர்வுக்குள் சூட்சுமமாக மறைந்த நிலையினையும்
3.நம் உயிருக்குள் பட்டு ஓ… என்று ஜீவனாகி அந்த உணர்வின் சத்து ம்… என்று நாம் சரீரமாகும் நிலையையும் காவியத்தின் மூலம் காட்டினார்கள்.

எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்கி அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு… நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலையும் ஆனால் வேதனை என்று விஷமான உணர்வை ஒரு துளி எடுத்தாலும் உடல் சோர்வடைந்து நல்ல குணங்கள் எவ்வாறு மறைந்து விடுகின்றது…? என்பதையும் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அத்தகையை தீமைகளை அடக்க வேண்டும் என்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். நம்முடைய ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்றும் காட்டியுள்ளார்கள்.

முருகு என்பது மாற்றி அமைக்கும் சக்தி… முருகன் என்பது அழகுபடுத்தும் நிலை…! என்று
2.இப்படி நமது ஆறாவது அறிவு கொண்டு நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட முடியும் என்றும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பித்தரைப் போன்று நமது குருநாதர் சாக்கடையிலும் அருவருப்பான இடங்களிலும் அமர்ந்து தான் எனக்கு (ஞானகுரு) இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார்.

அந்தச் சாக்கடையை அவர் சாக்கடை என்று எண்ணவில்லை உலகையே சாக்கடையாகக் கருதினார்…
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற நிலையில்
2.அருள் ஞானிகளின் உணர்வைச் சத்தாக நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை உலகிற்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக என்னையும் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார்.

“எனக்குக் கல்வி அறிவே இல்லை என்றாலும்” அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழிப்படி… காட்டிய நெறிப்படி… ஆற்றல் மிக்க சக்திகளை நான் கவர்ந்தேன். எனக்குள் அதை வளர்த்துத் தீமைகள் வராதபடி காத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உபதேசிக்கின்றேன். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

இந்த மனித உடலிலேயே முழுமை பெறுவோம் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு தொடருங்கள்.

கடலிலே செல்லும் பொழுது ஒரு எல்லையைக் குறிக்கோளாக வைத்துத் தான் செல்கின்றோம். ஒரு தீவுக்குச் செல்ல வேண்டுமென்றால் படகைச் செலுத்துகின்றோம்.
1.இடைவெளியில் வரும் அலைகளைப் பிளந்து விட்டு
2.”அந்தத் தீவை அடைய வேண்டும்” என்ற எண்ண வலு கொண்டு தான் அங்கே செல்கின்றோம்.

மீன் பிடிக்கச் சென்றாலும் மீன் இருக்கும் இடமாகத் தேடிச் செல்கின்றோம். கடலில் வரும் அலைகளைப் பிளந்து அந்த இடத்தை அடைந்து மீன்களைப் பிடிக்கின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல அலைகள் மோதிக் கொண்டே இருக்கின்றன
1.பழி தீர்க்கும் அலைகள் மோதுகின்றன
2.இடையூறு செய்யும் எண்ண அலைகள் மோதுகின்றன
3.தீமை செய்யும் உணர்வுகள் மோதுகின்றது
4.தொழில்களில் எத்தனையோ சங்கட அலைகள் மோதுகின்றன
5.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமையாகி வெறுப்பான அலைகள் மோதுகின்றன.

இதைப் போன்ற பல அலைகள் மோதி “நாம் போகும் பாதை எது…?” என்று அறியாது இன்று தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே நிலை தான்.

ஆகவே மகரிஷிகள் காட்டிய வழியினை நாம் பின்பற்றி… அவர்கள் வாழும் எல்லையை அடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து வாழ்க்கையில் வரும் அலைகளைப் பிளந்து
2.மன உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

 

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆனால் உங்களுக்குள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி உண்டு….!
1.நீங்கள் ஏன் உங்களை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்…?
2.நான் (ஞானகுரு) என்னை நம்பியதால் தான் குரு காட்டிய வழியில் அனைத்து சக்திகளையும் பெற முடிந்தது
3.என்னைப் போல் நீங்களும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விஞ்ஞான உலகத்தால் ஏற்படும் நஞ்சான சூழ்நிலையில் இருந்து மீட்டிக் கொள்ளும் எண்ணங்கள் உங்களுக்குள் வர வேண்டும். தீமைகளிலிருந்து அகற்றிடும் சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்… மெய் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாது வந்து இருளை மாய்க்க வேண்டும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற வேண்டும். இந்த மனித உடலிலிருந்தே ஒளியின் சரீரமாகும் ஆற்றல் பெற வேண்டும்.
1.அந்த அருள் ஞானிகள் எல்லையை நீங்கள் கைப்பற்றி அதை அடைய வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்
2.உங்களை நம்புங்கள்… உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள்

ஆகவே… உங்களை மனிதனாக வளர்த்திட்ட உயர்ந்த குணங்களைத் தெய்வ நிலைகளாக எண்ணுங்கள்.

அனைத்தையும் அறிந்திடும் நிலையாக
1.உங்களுக்குள் அமைந்திருக்கும் “கலைவாணி” என்று சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் உங்களுக்குள் உண்டு.
2.சர்வத்தையும் உங்களுக்குள் வளர்த்திடும் “இலட்சுமி” உண்டு… சர்வத்தையும் உருவக்கிடும் “பராசக்தி” உண்டு
3.அனைத்தையும் அறிந்திடும் “சர்வ சக்தி” உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆகவே… உங்களை முழுமையாக நீங்கள் நம்புங்கள்.

இந்த உணர்வினை அறிந்திடச் செய்திடும்… இந்த உபதேசத்தை இப்பொழுது கேட்டிடும் உணர்வும் உங்கள் உயிரின் நிலையே.

ஆகவே அந்த உணர்வின் தன்மையை நீங்கள் பருகும் நிலையாக ஏங்கினால்… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனுக்கு நீங்கள் செய்யும் காணிக்கையாக இது அமையும்.

மகரிஷிகள் சென்ற எல்லையை அடைய உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன் நிச்சயம் அதற்கு வழிகாட்டுவான்.
1.எண்ணி எடுக்கும் போது அதையே அவன் விளைய வைக்கின்றான்…
2.மகரிஷிகள் வாழும் எல்லையை அடையச் செய்கின்றான்.

அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்…! ஆகவே இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதன் வழி தியானித்து உயர்ந்த சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை குருநாதர் காட்டிய வழியில் தியானத்தின் மூலம் பெற முடியும்… நிச்சயம் பெறுவேன்…! என்ற தன்னம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

1.நீங்கள் எங்கே சென்றாலும் அருள் ஞானிகளை எண்ணினால் அந்தச் சக்தியை பெற முடியும்
2.எங்கே எந்த இடத்தில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்
3.அத்தகைய சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் (ஞானகுரு).

தியானத்தில் சக்தி பெறும் போது சிரசின் பின்புறம் வலி ஏற்படுவது ஏன்…?

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

 

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

உயிர்க் காற்று

 

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது…!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது… செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

 

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஒரு வழிப்பாதை

 

விஞ்ஞானிகள் ஒரு இராக்கெட்டை பூமியின் பிடிப்பிலிருந்து விடுபட்டு விண்ணிலே வீசுவதற்கு “மிகவும் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தான்” அதைச் செயல்படுத்துகின்றார்கள்.

விண்ணின் ஆற்றலை இங்கிருந்து அறிந்துணர்வதற்காக “ரேடர்” என்ற சாதனமும் “எக்ஸ்ரே” போன்ற சில செயலாக்கங்களையும் அதனுடன் பொருத்துகின்றார்கள்.

ரேடர் என்ற நிலையும் எக்ஸ்ரே என்ற நிலையும் வைத்துத் தான் பல பல உணர்வின் தன்மையைக் கண்டறிகின்றனர் விஞ்ஞானிகள்.

இதைப் போன்று தான்
1.மனிதனாக இருக்கும் நாமும் “ஞானிகள் உணர்வின் சக்தியை” நமக்குள் செலுத்தி விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.
2.கண்ணை ரேடராக வைத்து… கண்ணின் நினைவலைகளை எக்ஸ்ரேவாக வைத்து…
3.மற்ற காந்த அலைகளுடன் தொடர்பு கொள்ளும் போது விண்ணின் சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

ஆனால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலி ஒளி என்ற… “காந்தப்புலனின் ஆற்றல் மிக்க நிலைகளை…” அது எந்த அளவிற்கு இணைக்கின்றோமோ அதன் வழி கிடைக்கின்றது.

அதாவது பல காந்தங்கள் (மேக்னட்) கொண்டு சுழற்றப்படும் போது (ஜெனரேட்டர்) எந்த அளவிற்கு மின்சாரம் அதிகமாக அதிலே உற்பத்தி ஆகின்றதோ… அதைப் போன்று நாமும் ஆற்றலைப் பெற முடியும்.

இதைப் போன்று தான்
1.விண்ணிலிருந்து வெளிப்படும் காந்த அலையின் தன்மை அது படர்ந்து பரவி வருவதை… பூமியின் செயல்கள் அது இழக்கச் செய்தாலும்
2.அதே உணர்வின் தன்மையை காந்த அலைகளாக நாம் மோதும் பொழுது
3.ஒரு சீரான நிலைகள் கொண்டு… ஒரு வழிப் பாதையில் நம்முடைய எண்ணங்களை ஒருங்கிணைக்கச் செய்யப்படும் பொழுது
4.உடலை விட்டு உயிராத்மாக்கள் பிரிந்து வெளியே சென்றால் அந்த உணர்வுடன் நாம் தொடர் கொண்டு…
5.அனைவரும் சேர்ந்து ஏக குரலில் நாம் உணர்வின் ஒலியை எழுப்பி உந்தித் தள்ளப்படும் போது
6.அந்த உயிராத்மாக்களை விண் செலுத்த முடிகிறது… விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பெறவும் முடிகிறது
7.எந்தக் குடும்பத்தில் யார் இதைச் செயல்படுத்தினார்களோ அந்த குடும்பத்தார் ஈர்ப்புக்கு சப்தரிஷி மண்டல ஒளி அலைகள் கிடைக்கின்றது.

ஆகவே… குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவருமே உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்தி… குலதெய்வங்களாக அவர்களை எண்ணி… அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது… அந்த ஞானியர்கள் நம் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர்கள் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க சக்திகளை சுலபத்தில் நாம் எடுத்துச் சுவாசிக்க முடியும்.

அந்த மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்களை நீக்கி…
1.மெய் ஒளியின் சுடராக எப்படி ஆனார்களோ…
2.எந்த விண்ணின் நிலை அடைந்தார்களோ…
3.அவர்கள் சென்ற பாதையில் நாமும் சென்று அதை எட்டிப் பிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

இது தான் ஞானிகள் கண்ட வழி…!

இந்த உடலில் நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரணம்… காற்று மண்டலம் நச்சாக இருக்கும் இந்த வேளையில் வராகன் எப்படிக் கெட்டதை எண்ணாது… அந்த நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்து எடுத்ததோ இதைப் போன்று தியானம் எடுத்துக் கொண்ட அனைவருமே தனது வாழ்க்கையில் வரக்கூடிய
1.சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ சோர்வோ வெறுப்போ பயமோ ஆத்திரமோ அதை எல்லாம் பலவீனப்படுத்தும் நிலையாக
2.ஒவ்வொரு நிமிடத்திலும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு
2.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனக்குள் உருவாக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.

நாம் எண்ணி எடுக்கும் உணர்வுகளைப் பிரம்மமாக இருந்து நம் உயிர் தான் சிருஷ்டிக்கின்றது. ஆகவே உயிரை நாம் ஈசனாக மதிப்போம். அந்த உயிரின் துணை கொண்டு தான் உயர்ந்த சக்திகளை நாம் பெற முடியும். அந்தப் பக்குவத்தைத்தான் இப்பொழுது உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞானிகள் ரேடார் என்ற சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து விண்ணின் ஆற்றலைச் சுலப நிலைகள் கொண்டு எப்படி அறிந்து கொள்கின்றார்களோ இதைப் போன்று தான்
1.மூதாதையரின் ஆன்மாக்களை நாம் உந்தி விண்ணிலே செலுத்தி ஒளிச் சரீரம் பெறச் செய்யும் போது
2.சப்தரிஷி மண்டலத்தின் ஆற்றல் நமக்குள் பெருகுகின்றது… எண்ணும் பொழுதெல்லாம் அது கிடைக்கிறது.

அந்த உணர்வின் தன்மையைச் சுவாசித்து உடலுக்குள் ஒவ்வொரு நிலையிலும் சேர்க்கப்படும் போது மெய் ஒளியின் சுடராக நாம் எடுக்க முடியும்.

ஆகவே… வாழ்க்கையில் வரும் தீமைகளை மறந்து… மெய் ஒளி பெற வேண்டும் என்ற எண்ணங்களை உங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் ஒருங்கிணைத்து… இதைப் பதிவு செய்கிறோம்.

ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்தத் தகுதி ஏற்படுத்துகின்றோம்
1.மகரிஷிகளும் இதைத்தான் செய்தார்கள்
2.என் குருநாதரும் அதைத் தான் செய்தார்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கும் அதைத் தான் யாம் செய்கின்றோம் (ஞானகுரு).

“காற்று நூல்” தருவது எதற்கப்பா…?

 

ஜீவ பிம்பச் சரீரத்தின் அகக்கருவிகளான மனம் அறிவு நினைவாற்றல் செயல்படுதலின் முனைப்பு கொண்டு அண்டசராசரங்களையும் பஞ்ச பூதத் தத்துவமாகச் சரீரத்தில் கண்டுணர்ந்த செயலுக்குத் தெய்வீக உருவ அமைப்புகளை ஞானிகள் காட்டியதே “உயர் ஞானத் தெளிவிற்கே…!”

அதனை எல்லாம் இன்று இந்த மனித குலம் எடுத்துக் கொண்ட விதங்களை என்ன என்று சொல்வது…?

பக்தியாகப் பஜனைகள் பாடுகின்றார்கள்
1.ஆனால் நாத விந்து தான் நாராயணன் என்பதை உணர்ந்தானா…?
2.நாராயணன் நீருக்குள் சர்ப்பப் பஞ்சணை மேல் பள்ளி கொண்டுள்ளான்…! என்று சித்தர்களால் சூட்சமமாகக் காட்டப்பட்டது.

“பச்சை வண்ணப் பரந்தாமன்…” என்று கூறிய நாராயணன் வயிற்றுப் பகுதியுள் நாபியுள்ள இடத்தில் சர்ப்பம் போல் வட்டமிட்டு ஓடும் பஞ்ச பூதத் தத்துவ நாடிகளைச் செயல்படுத்திடும் பத்துத் தலைகள் போன்ற பச்சை வண்ண நாடி நீரமிலம் என்று கூறப்பட்ட தொப்புள் இடத்தில் (நாபி) சுதியுற்றுச் செயல்படும் விதமே
1.குளிர்ந்த நீருக்குள் நாராயணன்…
2.அதாவது சரீர உஷ்ணத்தைக் குதம் என்றிட்ட மலவாய்ப் பகுதியில் சிறிது தூரத்தில் மேலே உள்ள
3.வெப்பமிலம் செயல்படும் அதி உஷ்ணத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திடும் செயலே “உஷ்ண நாதம் – காத்திடும் விஷ்ணு…!” என்பது.

மூலத்தைக் கணபதி என்றும்…
குறிப்பகுதி பிரம்மன் என்றும்…
நாபிப் பகுதி விஷ்ணு என்றும்…
இருதயப் பகுதியை உருத்திரன் என்றும்…
கண்டப் பகுதியை மஹேஸ்வரன் என்றும்…
நெற்றிப் பகுதியை சதாசிவன் என்றும்…
சிரசின் உச்சிப் பகுதியை ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையினுள் ஆகாய ஜோதி என்றும்… ஈஸ்வரர் என்றும்…
மறை பொருளாக நற்சுவாசம் கொண்டு உண்மையை உணர்த்த வந்த ஞானிகளின் செயல் இன்று மாறு கொண்டு விட்டது.

இந்தக் காற்று நூல் தருவதெல்லாம் எதற்கப்பா…?

எந்தப் பொருளிலும் உண்மையை அறிதலே ஞானம். காற்று நூல் காட்டி உண்மையை உணர்த்தியது மூச்சைப் பிரித்தறியும் எண்ணச் செயலுக்கு அல்லவப்பா…! அந்த எண்ணம் கூடச் சுவாசத்தை மாற்றிவிடும்.

ஈஸ்வரபட்டனாகிய யான் சுட்டிக் காட்டும் இந்தப் பேரின்பத் தியான வழிதனில் நல்லெண்ணம் கொண்டு ஆத்ம வலுவைக் கூட்டி உயர்ந்த நிலை பெறவே “எல்லோரையும் அன்புடனே அழைக்கின்றேன்…!”

எண்ண வலு பெற்றிடும் நம் தியானத்தில்
1.சுவாசத்தின் செயலை உணராது செயல்படாமல்
2.உணர்வுடன் கூடிய சுவாசம் எடுத்திட்டாலே அனைத்து நற்பயன்களும் சித்திக்கும்…!
3.ஆத்மாவும் சுயப் பிரகாசத்தைப் பெற்றிடும்…!

தொழில் வளம்

 

தொழிலுக்காக ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் எத்தனையோ உண்டு.

ஒருவன் நடந்து போகும் போது கீழே விழுவான்… சைக்கிளில் இருந்து விழுவான்… ஒருவன் பராக் பார்த்துக் கொண்டு செல்வான்… ஒருவன் பஸ்ஸை வேகமாக ஓட்டிக் கொண்டு வருவான்… அதற்குள் ஒருவன் குறுக்கே நடப்பான்… வண்டிக்காரன் தொந்தரவு கொடுப்பான்… வேண்டுமென்றே பஸ்ஸுக்கு பஸ் இடைஞ்சல் செய்து கொண்டிருப்பார்கள்.

இதையெல்லாம் பார்க்கக்கூடிய நம் மனம் என்ன செய்கின்றது…?

1.அந்த உணர்வுகளை எல்லாம் சுவாசித்து வெறுப்பும் ஆத்திரமும் கோபமும் விரக்தியும் பயம் இது போன்ற எல்லா உணர்வுகளுமே உருவாகின்றது
2.இப்படி நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை நாம் எண்ணுவது அனைத்தையும் சதாசிவமாகிக் (உடலாக) கொண்டே உள்ளது.
3.நாம் எண்ணிய இந்த உணர்வின் சக்திகள் உமிழ் நீராகச் சேர்ந்து… உடலுக்குள் கெட்ட சக்தியாக உருவாகின்றது (சதா சிவமாக)
4.அதாவது நல்ல குணங்களுக்குள் இவைகள் ஊடுருவி அசுத்தங்களாகச் சேர்ந்து விடுகிறது.

வராக மூர்த்தியாக (பன்றியாக) இருக்கும் பொழுது கெட்டதை நினைக்காதபடி இருந்தது.

ஆனால் மனிதனாகும் பொழுது இப்பொழுது என்ன செய்கின்றோம்…? கெட்டதை எல்லாம் அதிகமாக நினைக்க வேண்டி வந்துவிடுகிறது.

மனிதனின் உடல் விஷத்தை நீக்கக்கூடிய சக்தி பெற்றதுதான். நல்ல வாசனையான உணவுப் பொருளைச் சாப்பிட்டாலும் அதில் இருக்கக்கூடிய மறைந்துள்ள நஞ்சை நம் உடல் நீக்குகின்றது.

இதைப் போன்று அதிலிருந்து தோன்றிய உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் இருந்தாலும்… நாம் கடைக்குச் செல்லும் பொழுது மேலே சொன்ன அத்தனை சம்பவங்களையும் பார்க்க நேர்ந்தது.

இத்தனை எண்ணங்களுடன் கடையைத் திறந்தால் வியாபாரம் சரியாக இருக்குமா…! ஆகவே… கடையில் சேர்ந்து அமர்ந்த உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்காக வாங்கி வைத்த சரக்குகளை எல்லாம் “உற்றுப் பார்த்து”
1.மகரிஷிகளின் அருள் சக்தி இந்தப் பொருள்கள் அனைத்திலும் படர வேண்டும்
2.இதை உபயோகப்படுத்துவோர் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அவர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
4.என் சொல் அவர்களுக்கு இனிமையாக வேண்டும்
5.என் பார்வை அவர்களுக்கு உயர்ந்த நிலை பெறச் செய்ய வேண்டும்
6.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
7.என்னுடைய வாடிக்கையாளர் அனைவருமே வாழ்வில் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இந்த எண்ணங்களுடன் தான் கடையில் இருக்கும் சரக்குகளை நாம் உற்றுப் பார்க்க வேண்டும். எனக்கு வியாபாரமாகவில்லை நஷ்டம் ஆகின்றது என்று எண்ணக் கூடாது.

செய்யும் தொழிலே தெய்வம்…!

அங்கே நீங்கள் தெய்வமாக இருந்து வருவோரின் பசிக்கோ மற்ற நிலைகளுக்கோ பொருளைக் கொடுத்தாலும்… அவர்கள் அதற்காகக் காசு கொடுத்தாலும்… நம் பார்வையால் சொல்லால் உயர்ந்த உள்ளத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். நம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைப் பயன்படுத்தும் போது அவர்களுக்குள் அது மகிழ்ச்சியூட்டும் நிலையாக வரும்.

ஆனால் சங்கட உணர்வுகளை எண்ணிக் கொண்டு கடையில் அமர்ந்து… வரும் வாடிக்கையாளர் இரண்டு தரம் கேட்டால்… பதிலுக்கு நாம் அழுத்தமாகச் சொல்லிவிட்டால் அந்தச் சங்கடத்தால் வெறுப்பாகி வியாபாரம் குறைவாகிவிடும்… நம் நல்ல சரக்கையே மட்டமாக்கி விடும்.
1.நம்முடைய சொல்லே நம்மிடம் அணுக விடாதபடி
2.மற்றவர்களை விலகிச் செல்ல செய்துவிடும்.

அது போன்ற நிலை உருவாகாதபடி தொழிலிலும் நம் சொல்லுக்குள் நல்லதை உருவாக்கும் நற்சக்திகளாக… நல்ல தெய்வங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் இருக்கக்கூடிய 1008 சக்திகள் கொண்டு நாம் இடும் மூச்சலைகள் பிறருக்கு நன்மையாகும் பொழுது… தொழிலில் நாம் எடுத்துக் கொண்டது நல் உணர்வை ஊட்டும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

இதைத்தான் “ஓம் நமச்சிவாய…” என்று சொல்வது.

நாம் எடுத்துக் கொண்ட சக்தி சிவமாக சக்தியாகி… சிவாய நம ஓம்… நம் உணர்வுகள் உடலுக்குள் நல் சக்திகளாக விளைந்து அந்தச் சக்தியின் சொல்லின் உணர்வின் நிலையை தான் மற்றவர்களை இயக்கச் செய்கின்றது.

இது தான் “சிவாய நம ஓம்” நமச்சிவாய என்ற தத்துவத்திற்குள் இருக்கக்கூடிய உள் பொருள் இதுதான்.

ஆகவே எங்கே சென்றாலும் அங்கே அமர்ந்து இது போன்று செய்து பழகுங்கள்.

கடைக்குச் சென்று வீட்டுக்கு வந்தாலும்… வீட்டிற்குள் வந்தவுடன் ஆத்ம சுத்தி செய்து…
1.நம் வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.என் சொல் என் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிமை ஊட்ட வேண்டும்
3.என் பார்வை என் வீட்டில் உள்ளவரை நலம் பெற உதவ வேண்டும்
4.குடும்பத்தில் ஒற்றுமை வர வேண்டும் வீட்டிற்கு வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
5.இது போன்று சிறிது நேரம் எடுக்க வேண்டும்.

ஏனென்றால் வராகனாக இருக்கும் பொழுது அந்தச் சரீரத்திலே இதைத்தான் செய்தது. அப்படிச் செய்து தான் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம் கெட்டதை நீக்கும் ஆற்றலைப் பெற்று வந்துள்ளோம்.

அந்த ஆற்றலை நாம் செம்மையாகப் பயன்படுத்த யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த முறையைத்தான் கையாள வேண்டும்.

இயற்கையின் மூலாதாரம்

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு “மின்காந்தச் செயலாக” நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவபடி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலகோதய நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களூம் ஞானிகளும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சிரமமான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால்…
1.இந்த அருள் உணர்வுகளை எடுத்துச் சொல்லி…
2.இதன் வழிகளில் மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்… உங்கள் உடல் நலம் பெறும்…
3.குடும்பத்தில் கஷ்டம் நீங்கும்… உங்கள் தொழில்கள் வளம் பெறும் என்ற வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

இந்த வாக்கினை ஏற்றுக் கொண்டோர் உணர்வுகளில் அந்த உணர்வுகள் பதிவாகி அவர்கள் நினைவாற்றல் அவர்களைக் காக்க உதவும். நோய்களை அகற்றவும் இது உதவும்.

உதாரணமாக ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரை வேண்டுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கித் தியானித்துக் கொள்ளுங்கள்.

யார் நோய் என்று சொன்னார்களோ அவர்களிடம்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படரும்… உங்கள் உடல் வலி குறையும்…! என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் நோயின் வலிமை குறைய வேண்டும் அருள் ஒளி அங்கே படர வேண்டும் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

சொன்ன வாக்கின்படி அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தியால் “என் நோய் குறைய வேண்டும்…” என்று எண்ணினால் அவர்கள் உடலில் அந்த வலி குறைவதையும் நோய் நீங்கும் சக்தியும் பெறுகிறார்கள்.

ஏனென்றால் உங்களுக்கு இந்தச் சக்தி இருக்கிறதா… இல்லையா…! என்று இப்படிப் பரீட்சித்துப் பாருங்கள். உங்களுக்குண்டான ஆற்றலை நீங்கள் பார்க்கலாம்.

அதே போல் யாம் கொடுக்கும் பிரசாதத்தில் உள்ள காசை உங்கள் வீட்டில் பூஜை அறையில் விநாயகருக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள். பாலும் தீர்த்தமும் வைத்து யாம் சொன்ன முறைப்படி தியானித்து விட்டு முடிந்த பின் பாலையும் தீர்த்தத்தையும் எடுத்துப் பாருங்கள்.

1.நீங்கள் தியானத்தில் கவர்ந்து கொண்ட அலைகள் அதிலே படரப்படும் போது
2.அந்தப் பாலிலேயும் இந்தச் சக்தி படர்ந்திருக்கும்
3.அது நீங்கள் வைத்த பாலாக இருக்காது. அது சுவை கொண்ட பாலாக மாறும்.
4.தீர்த்தமும் நீங்கள் வைத்த தண்ணீராக இருக்காது… சுவை கொண்ட தீர்த்தமாக மாறும்.
5.ஏனென்றால் நாம் எடுத்த அந்த மகரிஷிகளின் அலைகள் அங்கே படர்கிறது.

இதைப் போல் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க எடுக்க நம் வீட்டுக்குள் இருக்கும் தரைகளிலும் சுவர்களிலும் மற்ற உடமைகளிலும் இந்த அலைகள் படரும். அப்பொழுது தீமைகள் அகற்றும் சக்திகள் கிடைக்கின்றது.

நாம் அனைவரும் இதைப் போல் ஒருக்கிணைந்து அந்த அருள் உணர்வுகளைப் பெற முற்பட்டால்
1.இந்த வாழ்க்கையில் அனைவரும் நலம் பெற உதவுகின்றோம்.
2.நமக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களிலும் நலம் பெறும் சக்தியாக மாற்றிடும் நிலை வருகின்றது.

ஆகவே ஒவ்வொருவரும் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.. ஈசன் வீற்றிருக்கும் ஆலயமாக அதை மதித்துப் பழகுங்கள்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றுமே ஒன்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

மனிதனின் கீழ் நோக்கிய ஈர்ப்பு நிலையும்… “ஞானிகளின் மேல் நோக்கிய ஈர்ப்பு நிலையும்…”

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த மகா மகான்களும் மகா மகரிஷிகளும் எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில்
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில் காமத்தின் அடியாக எழும் மோகமாக கீழான ஈர்ப்புச் செயலாகச் சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது உலகோதய நடைமுறை வாழ்க்கையில் கீழாம் ஈர்ப்பாக உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால்
1.இந்த மோகத்தை வென்ற ஞானி.. உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே… மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.
3.இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியவற்றில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெற வேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

வாழ்க்கையில் குடும்பம் என்ற நிலையில் எவ்வளவோ அன்புடன் பண்புடன் வளர்ந்தாலும் சந்தர்ப்பத்த பேதத்தால் ஒருவர் ஒரு தவறைச் செய்து விடுகின்றார். உடனே சுர்.. என்று கோபம் வருகிறது.
1.ஒரு தடவை இப்படிக் கோபம் என்று நமக்குள் பதிவாக்கி விட்டால்
2.அடுத்த தரமும் அதே தவறைச் செய்தால் கோபம் எல்லை கடந்து விடுகிறது.

வேதனைப்படும் நிலைகள் ஆகி… நாசமாகப் போகிறவனே… ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…? என்று நம்மை அறியாமலே சாபமிடும் நிலை வந்துவிடுகின்றது. அவனைக் கெடுக்கும் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாது நம் குடும்பத்தில் வளர்ந்து விடுகிறது. இதிலிருந்து நாம் மீள்வது எப்படி…?

அதே போல்… தொழிலின் நிமித்தம் நாம் ஒருவருக்கு உதவி செய்கிறோம். கடனாகக் கேட்கிறார் என்று பணத்தைக் கொடுத்து உதவி செய்கிறோம்.

இத்தனை நாள்களுக்குள் திரும்பக் கொடுக்கின்றேன் என்று சொல்கிறார். ஆனால் மாதக் கணக்காகி விடுகின்றது. அப்பொழுது நம் மனதில் பணத்தைக் கொடுப்பானா… கொடுக்க மாட்டானா…? என்று எண்ணத் தொடங்குகிறோம்.

நம்முடைய இந்தச் சந்தேக உணர்வு அங்கே அவனுக்குள் இயக்கப்பட்டு நண்பரின் தொழில் வளர்ச்சியையும் தடைப்படுத்தும்.
1.அவனுடைய சந்தர்ப்பம் வருவாய் வருவதைத் தடுக்கும்.
2.பணத்தைக் கொடுக்க வேண்டுமே என்ற வேதனையும் வரும்.

கொடுக்க முடியவில்லை என்று ஏங்கிக் கொண்டிருக்கும் போது நாம் என்ன செய்கிறோம்.

இத்தனை நாளைக்குள் தருகிறேன் என்று பணத்தை வாங்கிச் சென்றாயே…! ஏம்ப்பா…! இன்னும் பணத்தைக் கொடுக்கவில்லை..? என்று வேகத்துடன் கேட்போம்.

சொல்லி வாங்கிச் சென்றாயே…! ஏன் இன்னும் உன்னால் கொடுக்க முடியவில்லை…? என்ற எண்ணத்துடன் கேட்போம். இந்த வெறுப்பின் தன்மை அடையப்படும் பொழுது
1.பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தாலும் வேதனையை வளர்த்துக் கொள்கிறான்.
2.அதை நுகரப்படும் பொழுது நமக்குள்ளும் வேதனை உணர்வே வளர்ந்துவிடுகிறது.
3.அப்போது நண்பனக இருந்தாலும் பகைமையாகி விடுகின்றது.
4.பகைமை உணர்வுகள் நமக்குள் வளர்ந்த பின் நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிவிடுகின்றது.

இதைத் தான் இந்திரலோகத்திற்குள் இரண்யன் புகுந்து இத்தகைய நிலைகளைச் செயலாக்குகின்றான் என்று காவியத்தில் காட்டுகின்றார்கள்.

அதை மாற்ற அதோ வருகிறான் நாரதன்…! என்று கண்ணன் (கண்கள்) காட்டிய வழிப்படி “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவரை எண்ணி…
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல் முழுவதும் படர வேண்டும்.
2.அவருடைய தொழில்கள் வளம் பெறவேண்டும்
3.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
4.பணத்தைத் திரும்பக் கொடுக்கும் எளிதான நிலைகள் வர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் நம் எண்ணம் அவனைக் காக்கின்றது. அதே சமயத்தில் அவனின் உணர்வும் வலுவாகின்றது. பணத்தைத் திரும்பச் செலுத்தும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளைக் கூட்டுத் தியானத்தில் கூட்டமைப்பாக நாம் எண்ணித் தியானித்து வலு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அதிகாலை துருவ தியானத்தில் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து நம் வாழ்க்கையில் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் வைரத்தைப் போல் அவர்கள் குடும்பம் ஜொலிக்க வேண்டும் அவர்கள் தொழில்கள் ஜொலிக்க வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் என்று அவர்களை நாம் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வெல்லாம் நம் உடலில் இருக்கின்றது. நமக்குள் அந்த உனர்வின் தன்மை விளையப்படும் போது அவர் பணம் திரும்பக் கொடுக்கவில்லை என்ற நிலையில் நம் உடலில் உருவான வேதனை அணுக்களுக்கு ஆகாரம் கிடைப்பதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவைத் தூய்மையாக்குகின்றோம்.

மனிதனானவன் பிரம்மாவைச் சிறை பிடித்தான் என்ற நிலையில் இது போன்ற தீமைகளை அகற்றிவிட்டு தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை நமக்குள் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

இதனைக் காட்டுவதற்குத்தான் விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்தனர்… அங்குசபாசவா…! கார்த்திகேயா மனிதனான பின் ஆறாவது அறிவு கொண்டு இதை அடக்க முடியும். இதன்படி நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

ஆகவே
1.எல்லோருடைய நிலைகளையும் மகரிஷிகளின் ஒளி கொண்டு நமக்குள் சமப்படுத்தும் போது
2.நம் எண்ணங்கள் ஒன்றாகின்றது. தீமைகளை நீக்கிவிடுகின்றது…!

சாதாரண ஆன்மாக்களின் இயக்கமும்… குருநாதர் ஆன்மாவின் இயக்கமும்…!

 

சந்தர்ப்பத்தில் திடுக்… என்று நாம் பயந்துவிட்டோம் என்றால் பய உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள் நமக்குள் வந்துவிடும். அடுத்து அதனுடைய எண்ணத்தை (பயத்தை) நமக்குள் தூண்டும்.

பயமான எண்ணங்களுடன் இருந்தோம் என்றால் அந்த ஆத்மா நமக்கு ஒத்துழைக்கும். ஆனால்…
1.நல்லதை நாம் எண்ணிக் கொண்டிருந்தோம் என்றால் அந்த நேரத்தில் பய உணர்வுகளை அந்த ஆன்மா ஊட்டும்
2.நாம் நல்ல காரியங்கள் செய்வதை அப்போது தடைப்படுத்தும்.

காரணம்… அந்த ஆன்மா கடைசி நேரத்தில் எந்த பயத்தால் உடலை விட்டு உயிர் பிரிந்ததோ அதே நிலையில் இருந்து தான் நமக்குள் அது செயல்படும்.

ஆனால் நாம் நல்லதை நினைக்கும் பொழுது அதற்கு எதிர் நிலையாகும் நல்ல உணர்வுகளுடன் நம்முடைய நினைவை செலுத்திச் சுவாசிக்கும் பொழுது நம்மை அறியாமலே பயத்தை ஊட்டிக் கொண்டிருக்கும்

தியானத்தில் நாம் எடுக்கும் சக்தி கொண்டு உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் (உயிரான்மாக்கள்) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நாம் இந்த உணர்வின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அந்த உயிரான்மா நமக்குள் அடங்கி
2.நல்ல சக்திகளைப் பெறும் பொழுது “நம் எண்ணத்தை ஓங்கிச் செயல்படுத்த” இது உதவும்.

பேய் என்கின்றோம்… அருள் என்கின்றோம்…! பல ஆன்மாக்கள் இப்படி நமக்குள் வந்து இயங்கி விடுகின்றது. அவைகள் நம்முடன் இணைந்து செயல்படுவதற்கு நம் உடலுக்குள் இருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும்.

உதாரணமாக பஸ்ஸிலே நாம் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அன்புடன் பண்புடன் நாம் இருக்கின்றோம். அந்தச் சமயம் எதிர்பாராதபடி ஒரு மனிதன் பஸ்ஸின் குறுக்கே ஓடுகின்றான்… நாம் பார்த்து விடுகின்றோம்.

1.அடிபட்டு விடுவானே…! என்ற பயத்தை ஓங்கி ஆ… என்று ஏக்கத்தில் நாம் பார்க்கின்றோம். ஆனால் அவன் தப்பி விடுவான்
2.அடிபட்டு விட்டால் என்ன ஆகும்…! என்று அவன் மேல் உள்ள ஏக்கத்தினால் பயத்தின் உச்சகட்டம் அடையும் பொழுது
3.பய உணர்வாலே இதற்கு முன் அடிபட்டு இறந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்து விடும்.

அப்படி வந்துவிட்டால் அது எப்படிப் பயமான எண்ணங்கள் கொண்டு செயல்பட்டதோ… அந்த உடலில் “கடைசி நிமிடம் பட்ட அவஸ்தைகள் அனைத்தும்” நமக்குள் வந்து இயங்கத் தொடங்கும்.

ஆகவே என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என்னுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோம் என்றால் “அந்த ஆன்மாக்களுக்கும் ஒரு புண்ணியம் கிடைக்கும்…”

உடலை விட்டு நாம் எப்போது பிரிந்தாலும் நம் உடலில் இருந்த ஆன்மாக்களும் வெளியில் வந்து… நல்ல ஆத்மாவாக… மனித உடலைப் பெறக்கூடிய தகுதி பெறும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

1.உடலை விட்டு குருநாதர் பிரிந்து சென்ற பின் அவரின் உயிராத்மா அது எந்தெந்த நிலைகளைச் செயல்படுத்தியது…? என்றும்
2.வெளியிலே செல்லும் பொழுது “மற்ற ஆத்மாக்கள் கவராத வண்ணம்” இவரின் ஆன்மா எந்தெந்த வழிகளில் எல்லாம் செயல்பட்டது…? என்பதையும்
3.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுது “அதனுடைய இயக்கச் சக்தியை” எமக்கு உணர்த்திக் காட்டினார்
4.அவருடைய ஆன்மா எவ்வாறு விண்ணுலகம் செல்கின்றது…? அது எந்தெந்த நிலைகள் செயல்பட்டது…? என்பதையும் எனக்கு உணர்த்தினார்.
5.எனக்குள்ளும் (ஞானகுரு) அந்தச் சக்திகள் உணரப்பட்டது… உணர்ந்து கொண்டேன்.

ஆனால்… சாதாரண மனிதர்களின் உயிரான்மா… உடலை விட்டுச் செல்லும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழல முடிகின்றது..

அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் (உடலுடன் உள்ளவர்கள்) ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து… எண்ணத்தை ஓங்கச் செய்து… அவர்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க முடியும். அந்த ஆன்மாக்கள் தவமோ தியானமோ செய்யவில்லை என்றாலும் அவர்களை உந்தித் தள்ளி அங்கே இணைக்க முடியும்.

ஏனென்றால் உடலுடன் உள்ளவர்களிடம்… அவரின் உணர்வுகள் உண்டு.
1.சப்தரிஷி மண்டல ஆற்றலை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்
2.எண்ணத்தால் உந்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வுகளை எடுத்து வளர்கின்றார்கள்… ஒளியின் சரீரம் பெறுகிறார்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுதெல்லாம் அந்த உயர்ந்த சக்திகளை நாம் எளிதில் பெற முடியும். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் குருநாதர் வழியில் உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரம் கொடுப்பது போன்று…
1.துவண்ட நிலையில் இருக்கும் உங்கள் நல்ல குணங்களுக்குள்
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து
3.அந்தத் தூண்டுதலின் உணர்வு உண்டு செவிப் புலனால் ஈர்க்கச் செய்து
4.மகரிஷிகளின் உணர்வு கொண்டு ஒவ்வொன்றையும் இயங்கச் செய்வதனால்
5.சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது விண்ணை நோக்கி உங்களால் ஏக முடியும்
6.மேல் நோக்கி நீங்கள் எண்ணும் பொழுது உங்கள் சுவாசத்திற்குள் அது ஈர்க்கப்படும்.

ஆக… அரும் பெரும் சக்திகளைப் பெறும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலை துருவ தியானத்தில் எடுக்கும் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளே…”
1.நமக்குப் பெரும் சொத்து… அழியாச் சொத்து…
2.என்றும் நிலையான சொத்து…
3.பேரின்பப் பெருவாழ்வு என்று பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் சக்தி (சொத்து) ஆகும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை பிறவி இல்லா நிலை அடைவது தான்.

பிறவி இல்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று ஆறாவது அறிவை ஏழாவது நிலையாகdh தனக்குள் சிருஷ்டிக்கும் வளர்ச்சியின் பாதையில் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே நம் கடைசி எல்லை.

காரணம்… இந்தச் சூரியக் குடும்பம் செயலிழக்கும் தருணம் வந்து விட்டது. அதனால் இதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள கோள்களும் மறைந்துவிடும்.

சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் அது ஒவ்வொன்றும் சூரியனைப் போன்றே தனி ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் செல்லும் நிலை வந்துவிட்டது.

கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் போன்றவைகள் சூரியக் குடும்பங்களாக மாறுவதனால் நம் சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றது.

அதாவது நமக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து அவர்களுக்குத் திருமணமான பின் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து செல்வது போன்று தான்.

அவர்கள் பிரிந்து சென்றால் இங்கே இந்தக் குடும்பம் பலவீனம் அடைகிறது. பலவீனம் அடையப்படும் பொழுது குழந்தைகளிடமிருந்து எதுவும் எதிர்பார்க்க முடிவதில்லை.

அதைப் போன்றுதான் இந்தச் சூரியனும் அழியலாம்…!
1.ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர்
2.அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த வழியில் நாம் செல்வோம் என்றால் என்றுமே வேகா நிலை அடையலாம்.

நெருப்பில் விழுந்தால் நம் உயிர் வேகுவதில்லை. உணர்வின் அணுக்கள் வெந்து விடுகின்றது. ஆகவே…
1.அந்த உயிரைப் போன்றே நம் உணர்வுகளை எல்லாம் வேகா நிலை என்று உருவாக்கி
2.அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலை பெறுதல் வேண்டும்.

அது தான் பிறவி இல்லா நிலை என்பது…!

சப்தரிஷிகளுடன் ஒன்றிணைந்து நீங்கள் வாழுங்கள்

 

விஞ்ஞானிகளால் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட அணுகுண்டுகளும் விஷக்கதிரியக்கங்களும் நம் பூமிக்குள் தான் சுழன்று கொண்டுள்ளது. அவர்கள் பூமிக்குள் வெடித்ததும் சரி… பிரபஞ்சத்திற்குள் வெடித்ததும் சரி… சூரியனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் “நஞ்சின் தன்மையாகப் படர்கின்றது…”

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப்படும் பொழுது…
1.மனிதனுடைய சிந்தனைகள் பூண்டோடு அழிக்கப்பட்டு
2.ஆரம்ப காலங்களில் எப்படி மனிதர்கள் வாழ்ந்தார்களோ… அதாவது மிருகங்களைப் போன்று வாழும் நிலை உலகம் பூராம் மாறப் போகின்றது.

ஆனால் இந்த பூமி மீண்டும் பரிசுத்தமாக வேண்டும் என்றால் பல நூறு ஆண்டுகள் ஆகலாம். அப்படி ஆநாலும்… காட்டு மனிதர்கள் அவர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி… மீண்டும் மனிதனுடைய நிலைகள் இப்போது எப்படி வளர்ச்சி ஆகி வந்ததோ… அதைப் போல் பல சுற்றுகளில் நாம் வந்து… இந்தப் பூமி பல முறைகள் மாறி… மனிதனாக வரும் நிலை பின்னாடி தான் உருவாகும்.

ஆகையினால் நம் பூமி கூடிய சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் தகுதி பெறுகின்றது

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத்தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் சேர்க்கப்பட்டு… சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கிடைக்காது தடைப்படுத்தும் நிலை வரப்போகின்றது. அப்படித் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது…
1.நீர் நிலைகள் பூமியிலே அதிகமாகப் பெருகி எடை கூடி… அதனால் சுழற்சியின் வேகம் அதிமாகி
2.சூரியனுடைய ஈர்ப்பை விட்டு விலகிச் செல்லும் நிலை வருகின்றது.
3.அப்படி இறங்கும் நிலை வந்து விட்டால் ஐஸ் பாறைகளாகக் குளிர்ந்து விடும்
4.எந்த நேரத்தில் இது ஏற்படும்…! என்று சொல்ல முடியாது.
5.ஒரு நொடிக்குள் இந்த பூமியினுடைய சுழற்சி வட்டத்தில் இருக்கும் நீர்கள் அனைத்தும் உறைந்து பனிப் பாறைகளாகிவிடும்.

நன்றாகத்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருந்தார்… திடீரென்று மயக்கம் ஆனார். பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தமே இல்லை என்பார்கள். ஏனென்றால் சில் விஷத்தின் தன்மை பாய்ந்த உடனே இரத்தத்தில் இருக்கும் செவ்வணுக்கள் பூராம் மாறி… வெள்ளை அணுக்களின் இயக்கம் அதிகமாகி… அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சிவிடும்.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் ஒரு நொடியில் பெரும் கோளாக மாறி வியாழன் கோளைப் போன்று வெகு வேகமாகத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் வந்த சந்திரனும் இதன் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய் மற்ற கோள்களும் பிரிக்கப்படுகின்றது ஏனென்றால் சூரியனுடைய ஆற்றலைக் காட்டிலும் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் கொண்ட சில நிலைகள் சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் வெகு காலமாகும். குருநாதர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு இந்த உண்மையை இயக்கங்களை அது எவ்வாறு…? என்பதை அவர் காட்டினார். அவர் சொன்ன வழிப்படி தான் இதை வெளிப்படுத்துகின்றோம்… ஆகவே
1.இனி கூடுமானவரையிலும் நம் நினைவலைகளை
2.ஞானிகள் காட்டிய வழியில் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

இல்லை என்றால் கூடிய விரைவில் மனிதனுடைய சிந்தனைகள் அது மாறப் போகின்றது. நாம் அதிலே சிக்கக் கூடாது.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இப்போது யாம் உபதேசிக்கும் இதைப் போன்ற ஞானத்தின் வழித் தொடர்பைப் பெறும் சந்தர்ப்பமும் அபூர்வம்…!

என் (ஞானகுரு) மனைவி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது குருநாதரைச் சந்திக்க நேர்ந்த்து. மனைவியை அவர் குணப்படுத்திணார். அதன் மூலம் எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் தான் இந்த ௷ய் ஞானத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.

எனக்குக் கல்வியறிவு இல்லா விட்டாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் அவர் பதிவு செய்த ஞான வித்துக்களைக் கூட்டி வளர்த்துக் கொண்டேன்.
2.அப்படி வளரத்ததிலிருந்து பல வித்துக்களை உருவாக்கும் தன்மையை குருநாதர் உருப்பெறச் செய்தார்.

அதைக் கேட்டறியச் செய்து ஆற்றல் மிக்க நிலைகளை உங்கள் உடலில் உள்ள 1008 நல்ல குணங்களுக்குள் பதிவு செய்து… உரமாக… ஊட்டம் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

அதனின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்து எதிர்காலத்தில் வரும் தீமைகளிலிருந்து உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள இது உதவும்.

அதற்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.

யாம் உபதேசிப்பதை அடிக்கடி அடிக்கடி நீங்கள் கேட்கப்படும் பொழுது
1.சூரியனின் காந்தப்புலனால் அது கவரப்பட்டு இங்கே நாம் வாழும் இடங்களில் சுழன்று கொண்டே இருக்கும்.
2.யாரெல்லாம் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றார்களோ
3.அவர்கள் எல்லோருக்கும் இது கிடைக்கக்கூடிய வாய்ப்பாக அமையும்.

தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கும் தீமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும். மனிதன் என்ற முழுமை அடைய முடியும்.
1.சப்தரிஷிகள் அவர்கள் குடி கொண்டிருக்கும் இடங்களுக்கு
2.அவர் உணர்வுடன் கலந்து… அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ முடியும்.

அந்தத் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தை உங்களுக்குக் கொடுப்பது.

தியானத்தின் மூலம் தான் எதையுமே அறியவும் உணரவும் முடியும்

 

பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெற வேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சியாகிக் கண்கள் தோன்றிய பின்… ஒவ்வொன்றிலும் “தான் நல்லது என்று நினைத்து…”
1.தன்னைப் பாதுகாக்கும் உணர்வைப் பார்த்துப் பார்த்துத் தான் சுவாசித்த உணர்வின் தன்மை
2.”பாதுகாக்கும் உணர்வை விளைய வைத்து… அந்த வித்தின் சத்தைத் தொடர்ந்து தனக்குள் கூட்டிக் கொள்கிறது…”

அவ்வாறு ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட விளைவின் தன்மை அனைத்தும்… உயிருடன் ஒன்றித் தனதாகின்றது. இதனால் தான் மனித உடல் பெறுவதற்கு முன்
1.முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த உயிர் என்று
2.அதைப் பத்து அவதாரம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.மனித உடலுக்குள் உயிரின் தன்மை கொண்டு வந்தபின் நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

அன்று ஒரு அசுரன் (விஷம்) எனக்கு எதிலுமே அழிவில்லை என்று விஷ்ணுவிடம் கேட்கின்றான். வானத்திலும் அழிவில்லை… மூன்று உலகிலும் எந்த விதமான அழிவும் இருக்கக்கூடாது… மிருகத்தாலும் நான் சாகக்கூடாது… மனிதனாலும் நான் சாகக்கூடாது என்ற வரத்தை வாங்கிக் கொண்டு வருகின்றான்.

எதிலுமே ஊடுருவக்கூடிய சக்தி தான் விஷம் (தீய சக்தி எதிலுமே ஊடுருவும்). பால் தூய்மையாக இருக்கிறது என்றாலும் அது சத்து உள்ளது தான் ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால்… பாலின் சத்து அனைத்துமே இழக்கச் செய்து… விஷம் தனது கவர்ச்சிக்குள் வைத்துவிடும்.

இதே போன்றுதான் விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள்… சூரியன் ஆனாலும் “இயக்கச் சக்தியாக” தனக்குள் அடக்கி வரும் பொழுது அது செயல்படுத்துகிறது.

ஒருவர் தவறு செய்கின்றார் அல்லது ஒரு குழந்தை தவறி கீழே விழுகிறது என்றால் அதை நாம் நேர்முகமாகப் பார்க்கப்படும் பொழுது ஊடனே வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனை என்ற விஷம் உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அசுரன் நமக்குள் புகுந்து நல்லதை அவனுக்குள் அடிமையாக்கச் செய்கின்றான். இந்த உட்பொருளைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுப்பதாக காண்பிக்கப்பட்டு மிருகத்திலும் சேர்ப்பில்லாதபடி மனித உடலிலும் சேர்ப்பில்லாதபடி ஆகாயத்திலும் இல்லாத படி பரந்த வெளிகளிலும் இல்லாத படி வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகள் கொண்டு
2.இந்த உயிரிலே மோதும் நிலைகள் நமக்கு வாசல்படி மூக்கு

நாராயணன் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான். இந்த உடலுக்குள் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தியாக நமது உயிர் இருக்கின்றது.

ஆகையினால் நர நாராயணன்…! இந்த வாசல்படியில் அமர்ந்து அசுர உணர்வின் வேட்கைகளை உள்ளே நுழையாத வண்ணம் தீய உணர்வின் தன்மையை மாய்த்து விடுகின்றான்.

அதாவது
1.உயிரின் பால் (புருவ மத்தியில்) கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.ஆற்றல் மிக்க மகரிஷிகளின் துணை கொண்டு வாசல்படியில் வைத்து அசுர உணர்வுகளை மாய்த்து விட்டால்
3.நல்லதைக் காத்துக் கொள்ள நம்மால் முடிகிறது.

மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஒளியின் சக்தியைத் தனக்குள் கூட்டி ஆற்றல் மிக்க நெருப்பாகக் கூட்டி… அந்த நெருப்புக்குள் தீய விஷத்தின் தன்மை மாய்த்தால் அது தான் நரசிம்ம அவதாரம் என்பது. பத்து அவதாரத்தில் இது முக்கியமானது. மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்.

1.இந்த ஆற்றல்மிக்க சக்திகளை எவர் ஒருவர் பெறுகின்றனரோ
2.அவரே நாராயணன் தொடர் கொண்ட ஒளியின் சிகரமாகப் பெற முடியும்.

மகாபாரதத்திற்குள் அன்று வியாசக பகவான் இவ்வளவு தெளிவாக நமக்குக் கொடுத்துள்ளார் நரசிம்ம அவதாரம் என்றால்… கடவுள் எங்கோ இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான்… என்று நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.

சுவாச நாடிகளைக் காட்டுவதே நாகர் உருவம்

 

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகோதயப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெற வேண்டி கீழான நிலையை விலக்கித் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துமே போதனை ஆக்கப்பட்டன.

இந்த மனித சமுதாயம் நல் நிலை பெற வேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாகச் (ஒளிச் சரீரம்) சக்தி பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

குரு துணை அவசியம் வேண்டும்

மெய் வழியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வருவோருக்கு அந்த உணர்ச்சிகளை உந்தச் செய்து ஞானிகள் உணர்வான சத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).
1.இதைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு எவ்வாறு ஏற்படுத்தினாரோ அதே போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.
2.மெய் உணர்வுகளை அவர் எப்படித் தனக்குள் படைத்தாரோ… அதைப் போன்று ஒவ்வொரு நொடியிலும் நான் அதை எடுத்துக் கொள்கின்றேன்.

உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது நட்சத்திரங்களின் சக்தியையும்… சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… அந்த உணர்வின் தன்மைகளை ஈர்த்து எடுத்துக் கொண்டுதான் உங்களுக்கு உபதேசிப்பது.
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் பல கோடி உணர்வுக்குள்ளும் அதை இணைத்து மாற்றி
2.நல்ல உணர்வாகப் பெறக்கூடிய தகுதியை எற்படுத்துகின்றோம்.

காரணம்… மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகளை சாதாரண மக்கள் கவர முடியாது. அதற்குண்டான வலுவான காந்த சக்தி தேவை.

சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர வேண்டும் என்பதற்கே யாம் இப்போது உபதேசிப்பது. உபதேசத்தின் வாயிலாகத் தான் அதை நீங்கள் பெற முடியும்.

புத்தகங்களில் படிப்பதைப் போன்று அந்த ஞானிகள் உணர்வைப் படித்தாலும்… படித்த நிலைகள் கொண்டு அந்த ஞானிகள் அருளைப் பெறும் தகுதி இல்லை.
1.காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனை நீங்கள் பெற முடியும்.
2.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
3.அந்த சக்திக்குண்டான வித்து தேவை…
4.அதற்குத்தான் “குரு வேண்டும்…” என்று சொல்வது… அவரின் துணை இருந்தால் தான் அதை எடுக்க முடியும்.

என்னுடைய (ஞானகுரு) முயற்சி எது…? என்றால் மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு வருவதும்… துன்பம் வரும் போது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதும் தான்…!

யாம் பதிவு செய்த வித்திற்கு ஒரு அரை மணி நேரா௳அவது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணி எடுத்து… உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும்.

பின்… உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணினால் யாம் பாய்ச்சிய உணர்வின் சக்தி உரமாகக் கிடைத்து
1.உங்களுக்குள் மன கலக்கமோ குழப்பமோ அவைகளை அகற்றி
2.உடல்களில் வலியோ வேதனையோ இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு உதவும்.

அப்படி உதவுவதற்குத் தான் தியானமும் ஆத்ம சுத்தியும் பயிற்சியாகக் கொடுப்பது.

ஞானிகள் இங்கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை எல்லாம் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.ஒரு செயின் தொடர்பு போன்று அந்த ஞானிகள் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டால்
2.ஆத்ம சுத்தி செய்யும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்… துன்பங்களைத் துடைக்க முடியும்.

நீல வண்ண ஆத்மா

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதிசக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.(சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்)

செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொண்டிட இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” (எங்கும் நிறைந்தது) என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

மனித சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலகோதய வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து
1.தியான வழித் தொடர்பில் நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.

ஆகவே… நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

உயிர் வழி சுவாசம்

 

எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” (உயிர்) அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?

காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்…!

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
1.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
2.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்ம சக்தியையே நீல வண்ண இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயனுறும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து அறுபது நாழிகை ஒரு நாள் என்று காட்டினான்.

“சத்ரு மித்ரு… பாசிடிவ் நெகடிவ்” – உயிருக்குள் நடக்கும் (உணர்வின்) இயக்கங்கள்

 

ஒருவர் மீது நாம் பாசமாக இருக்கின்றோம். ஆனால் அவருடன் வேறு ஒருவர் சண்டையிடுகின்றார்… அதனால் இவர் சோர்வடைகின்றார். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

பாசத்தால் சோர்வான எண்ணமும்… சண்டையிட்டவர் மீது வெறுப்பும் நாம் அடைகின்றோம். நல்ல குணங்களுடன் நாம் இருந்தாலும்
1.அந்த நேரத்தில் இந்த இரண்டையும் கலந்து சேர்த்துச் சுவாசிக்க நேர்கின்றது.
2.அவ்வாறு சுவாசித்தவுடனே போர்…! சுவாசித்தது உயிரிலே பட்டவுடனே இங்கே எரிச்சல்
3.இந்தத் துடிப்பின் உணர்வலைகள்… உந்தி நம்மை இயக்குகிறது.

உதாரணமாக ஒரு கம்ப்யூட்டரில் நாம் ஆணைகள் இட்டவுடனே அது எலெக்ட்ரானிக்காக மாறி… நம கொடுத்த அழுத்தத்தின் (COMMAND) தன்மை கொண்டு அது எந்த உணர்வின் செயலோ அதற்குத் தக்கவாறு அந்தக் கம்ப்யூட்டர் இயங்குகிறது.

அதே போல் நாம் சுவாசித்த உணர்வுகள் (வெறுப்பும் சோர்வும்) உயிரிலே பட்டவுடனே அந்த உணர்வுக்கொப்ப உயிருக்குள் கடினமான எண்ணங்கள் தோன்றுகிறது.
1.அந்த உணர்வு நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் செல்களில் இயக்கியவுடனே
2.அதற்குத் தக்கவாறு நம் உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

உதாரணமாக தறியிலே துணியை நெய்யப்படும் பொழுது ஒரு நெறிக்கட்டையை வைத்து எம்பிராய்டரி பூ வேலைகளைச் செய்வார்கள். அந்த இயந்திரத்தில் ஒன்றை (PEDAL) மிதித்தால் போதும்.

அதனின் காலகட்டப் பிரகாரம்… ஒவ்வொரு நிமிடத்திற்குத் தக்கவாறு அந்தப் பின்களை (PIN) மாற்றி மாற்றி அழுத்திப் போடும் பொழுது அந்தத் துணியில் அழகான பூ வேலையாகச் செயல்படுத்தும்.

அதைப் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு உணர்வின் செயலாக
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்களை இயக்குவதும்
3.பேசிய உணர்வலைகள் கொண்டு திருப்பிப் பேசுவதும்
4.கண்ணிலே எதிர்நிலையான அலைகள் பாய்வதும் அதைக் கொண்டு ஒரு பொருளைப் பார்ப்பதும் போன்ற இயக்கத்தின் நிலைகள் அமைகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. இருந்தாலும்… கண் கொண்டு தவறு செய்வோரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. பார்த்தாலோ… அவர் செய்யும் தவறின் உணர்வுகள் நம் உயிரிலே பட்டு… உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றது.

இந்த உணர்வலைகள் சீறிப்பாய்ந்து உடல் முழுவதும் படரப் படும்பொழுது போர்… நெகடிவ் பாசிடிவ்…! அதாவது நம்முடைய உயிருக்குள் வெப்பமாகும் பொழுது… அதே சமயத்தில் கதிரியக்கச் சக்தி அந்த இரண்டின் நிலைகள் மோதும் போது போர்.

அந்தப் போரின் நிலைகள் கொண்டு… எதிர் சக்தியான வியாழன் கோளின் சத்தும் அதனுடைய கதிரியக்கங்கள் இரண்டும் சேர்க்கப்படும் பொழுது
1.சுழற்சியாகிக் (திருகிக்) கொண்டிருக்கும் இந்த உணர்வின் தன்மையை
2.எதிர்நிலையான நிலையில் தாக்குதலாகும் பொழுது அது சீர்பட்டு நேர் துடிப்பாகின்றது,
3.இப்படி… போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டுள்ளது.
4.சத்ரு மித்ரு என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

உதாரணமாக… ரோட்டிலே நாம் செல்கிறோம் என்றால் அந்த நேரம் ஒரு பஸ் வேகமாக வருகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

இந்த உணர்வின் வேகத் துடிப்பு நமக்குள் ஈர்க்கப்பட்டு… அது நல்ல உணர்வுகளுடன் மோதும் போது தான்… “நமக்கு ஆபத்து…” என்று அறிந்து கொள்கின்றோம்.

ஆக… வேகமாக இயக்கப்படும் பொழுது
1.பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.

ஓவ்வொரு உணர்வும் இப்படித்தான் நம்மை இயக்குகிறது. ஆகவே அருள் ஞானிகள் உணர்வை அடிக்கடி நாம் எண்ணி எடுத்தால் அந்த உணர்வுகள் நம்மை இயக்கும்… நம்மை அருள் வழியில் அது அழைத்துச் செல்லும்.

“எப்பொழுது… எந்த நிலையில் ஆன்மா பிரிந்தாலும்…” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்

 

விண்ணின் ஆற்றலும்… மனிதனுக்குப் பின் அடுத்த நிலை என்ன…? என்ற நிலையும்… நமது குருநாதர் காட்டிய வழியில் உபதேசித்து அதனை வலுக் கொள்ளச் செய்து கொண்டே வருகின்றோம்.

அவர் உணர்த்திய வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைச் செய்யும் சக்திகளை நாம் அனைவரும் பெறுகின்றோம்.

அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அதிகாலை நான்கிலிருந்து ஆறரை மணி வரையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானத்தில் இருந்து… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் வலுவாக்கி… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலைகள் அடைந்து…
1.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று “உந்தித் தள்ளினால்” ஒளிச் சரீரம் பெறுகின்றனர்…
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே வாழத் தொடங்குகின்றார்கள்.
3.”ரிஷிகளுடன் ரிஷிகளாக” அவர்கள் ஒன்றி வாழும் தகுதி பெறுகிறார்கள்.
4.அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின் நம்முடைய நினைவாற்றல் மகரிஷிகளுடன் எளிதில் இணைகின்றது.

பின் ஒவ்வொரு நாளும் துருவ தியான நேரங்களில் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும் பொழுது… நாம் விண் செலுத்திய குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வரும் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

அவர்கள் முன் சென்றால் பின் அவர்கள் உணர்வின் துணை கொண்டு நாமும் அங்கே செல்கின்றோம்.

முதலில் மனித உடலை நம் முன்னோர்கள் பெற்றனர். அவர் உணர்வுடன் ஒன்றி அவரைப் போல நாமும் மனிதராக உருப்பெற்றோம்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுச் சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால்… அந்த உணர்வுடன் ஒன்றி நாமும் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

1.வழி வழி செய்து கொண்ட இந்த நிலைகள் காலத்தால் மறைந்தே போய்விட்டது
2.ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியில் முன்னோர்களை விண் செலுத்துவோம்.

விஞ்ஞானத்தினால் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நமது நுகரும் சக்தியை… என்றுமே துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலையாக மாற்றி அமைத்தல் வேண்டும்.

எப்பொழுது எந்த நிலையில் இந்த ஆன்மா பிரிந்தாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையும் பருவமாக ஏற்படுத்தினால் ஒழிய மீளும் மார்க்கம் வேறு இல்லை.

காரணம்…
1.மீண்டும் மனித உடல் பெறும் காலம் எப்பொழுது…” என்று சொல்ல முடியாது… வெகு காலம் ஆகிவிடும்
2.நஞ்சு கலந்த உலகமாக மாறும்போது நஞ்சு கலந்த உணர்வைச் சேர்த்து விட்டால் அடுத்து மனிதனல்லாத உடலைத்தான் நாம் பெற முடியும்.

பின் அதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என்றால் அதற்குள் “இந்த உலகம் இருக்குமா…?” என்று சந்தேகத்தைத் தோற்றுவித்துவிடும். ஆகவே
1.இன்று இப்போது நல்ல நினைவிருக்கும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து அதன் வழிகளில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! என்று இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த உலகமோ இந்த உடலோ நமக்குச் சொந்தம் அல்ல… ண்ஹாம் சொந்தமாக்க வேண்டியது அருள் உணர்வுகளைத் தான். இன்றைய செயல் நாளைய சரீரம்…!

சிவ சக்தி – ஆதி சக்தி

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூறிட முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாக குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது. உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது.

அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூல சக்திகளை தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிடல் வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனித சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

“உலகைக் காத்திடும் கடவுள்களாக” நாம் வளர்ச்சி பெற வேண்டும்

 

பிறவியில்லா நிலை அடையும் தகுதியை இப்போது இருக்கும் இந்த உடலில் இருந்து நாம் உருவாக்கத் தவறினால் இனி அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுது…? என்று நமக்குத் தெரியாது…!

புழுவாகப் பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்ட பின் அறிந்த உணர்வுகள் கொண்டு ஒளியாக மாறிய அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து அவர்கள் பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் எல்லையில் நாம் என்றும் நாம் நிலையாக வாழலாம். பிறவி இல்லா நிலை அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்…
1.எதனின் சேர்க்கையில் இந்தத் துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் நாமும் இணைந்து
3.அகண்ட அண்டத்தில் சுழன்று சென்று வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுவோம்.

அகண்ட அண்டத்தில் என்றும் பதினாறாகச் சிறிதாகவே நாம் இருப்போம். அந்த நிலையிலேயே வளர்ச்சியின் பருவத்திலே “பல கோடி ஆண்டுகள்” வாழும் நிலை வரும்.

இந்த அண்டமே முழுமையாக ஒளியின் சரீரமாக அடையும் பருவம் என்பது… அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகலாம்.

1.எத்தனையோ கோடிச் சூரியன்களும் உண்டு
2.எத்தனையோ கோடிக் கோள்களும் உண்டு
3.இப்படி எண்ணிலடங்காத நிலைகள் அகண்ட அண்டத்தில் இருக்கப்படும் பொழுது அதனின் உணர்வை நாம் நுகர்ந்து
4.நம் உயிரின் துணை கொண்டு என்றுமே ஒளியின் சரீரமாக மாறுதல் வேண்டும்.

நமக்குள் உருவாகும் அந்த ஒளியான உணர்வினை வெளிப்படுத்தும் போது மற்ற சூரியன்கள் இதைக் கவரும் நிலை கவர்கிறது.
1.அந்தச் சூரியக் குடும்பங்களில் மனித இனங்களும் உண்டு.
2.அவர்களுக்கும் இந்த உணர்வுகள் பயன்படும்.
3.அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக வளர்ச்சி பெற வேண்டும்… “இந்த மனித உடலிலிருந்தே…!”

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் சென்ற பின் தீமையை வென்றிடும் அரும் பெரும் சக்தியான கடவுளாக வருகின்றது. நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நம் உயிர் அமைகின்றது.

நம் உயிர் அமைந்தது போல் நுகர்ந்த உணர்வின் அணுக்கள் அதன் வழியில் என்றும் ஒளியின் சரீரமாக… உருவாக்கும் கடவுளாக… ஈசனாக நமக்குள் உருப்பெறச் செய்யும்…!

ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் என்றால் இது அறியாமை தான். ஒன்று என்ற நிலை அகண்ட நிலையில் எங்குமே இல்லை.
1.பலவும் சேர்த்து ஒருமை ஆகின்றது
2.ஒன்று சேர்த்துப் பலவாகின்றது
3.பலவும் சேர்த்து ஒன்றாகினறது.

இப்படித்தான் இயற்கையின் நிலைகள் அது மாறிக் கொண்டே வருகின்றது. இருந்தாலும்… “மாறாத நிலைகள் கொண்டது உயிர் தோன்றிய பின் ஒளியாக மாறுவது தான்…!”

ஒளியின் சரீரம் பெற்றாலும்… ஒளி நிலை பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் விளைந்த நிலையில்… ஒன்றுடன் ஒன்று அது ஒன்றி வாழ்ந்தால் தான் அது வாழ முடியும்.

அப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்… அவர்கள் தனித்து வாழவில்லை.

அங்கே சென்று ஐக்கியமாவது தான் நம் பிறவியின் பயன்..!

நாம் “சுத்த சைவமாக” இருக்க வேண்டும்…!

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால் “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது
3.அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3,மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.

இந்த உலகிற்கும் நமக்கும் இனி எது தேவை…?

மனிதனுக்கு மனிதன் இரக்கமற்றுக் கொன்று அதை ரசித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளே அதிகமாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாற்றம் அடைந்து… விஷக் கிருமிகளும் அதிகமாக உருவாகிக் கொண்டே உள்ளது… கொடூர நோய்களும் உருவாகின்றது கொடூரச் செயலைச் செயல்படுத்தும் தன்மைகளும் மனித உடலுக்குள் ஊடுருவிக் கொண்டுள்ளது.

அதே சமயத்தில் வான் வீதியில் விஞ்ஞானிகள் பரீட்சித்துப் பார்த்த விஷத்தன்மைகளும் (குண்டு வெடிப்புகள்) அதிக அளவில் பரப்பப்பட்டதனால்
1.பிரபஞ்சத்தில் உள்ள கோள்களும் நச்சுத்தன்மை அடைந்து விட்டது.
2.அது உமிழ்த்தும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து ஜீரணிக்கும் சக்தியை இழந்து விட்டது.

அதே போன்று நமது உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நஞ்சினை வென்றிடும் ஆறாவது அறிவைப் பெற்றிருந்தாலும்… மாறுபடும் தன்மை வரும் பொழுது மனித உடலையே சீர்குலையைச் செய்யும் நிலை ஆகிவிடுகின்றது… சிந்தனையை இழக்கச் செய்கின்றது. உடலை விட்டுச் சென்றால் அடுத்து மனிதனல்லாத உருவாகத் தான் உயிர் உருவாக்கும்.

நமது உயிரின் துடிப்பு நிலைகள் சீராக இயக்கிக் கொண்டிருக்கும் போதும் அது அதற்குத் தக்கவாறு உடலில் உள்ள எல்லா அணுக்களை இயக்குகின்றது. அதே சமயம் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலிலும் இதைப் போல அது சீராக இயங்கிக் கொண்டுள்ளது.

அதாவது…
1.ஒவ்வொரு உயிரும் எலக்ட்ரிக் என்ற நிலையில் இயக்கத் துடிப்புகளை உருவாக்குகின்றது
2.அதன் உணர்வின் துணை கொண்டு தனக்குள் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மையை
3.அது எது எதுவோ அதனின் உணர்வாக எலக்ட்ரானிக்காக மாற்றி அமைக்கின்றது.

இருப்பினும் வான் வீதியில் வீசிய கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகி விட்டது. இந்தப் பூமியிலிருந்து வெடிக்கப்பட்ட அணுக்கதிரியக்கங்களால் துருவப் பகுதியில் ஓசோன் திரையும் கிழிந்து விட்டது. ஆகையினால் துருவத்தின் வழியாக வடிகட்டப்படாத விஷத்தன்மைகளே பூமிக்குள் வந்து கொண்டிருக்கிறது.

விஷங்கள் பூமிக்குள் வரப்படும் பொழுது மனிதனுடைய செயலும் விஷத்தன்மையாகின்றது
1.கதிரியக்கப் பொறிகள் தாவர இனங்களிலும் பரவப்பட்டு அவைகளின் குணங்களும் மாறத் தொடங்கி விட்டது
2.அதை உணவாக உட்கொள்ளும் மனிதனுடைய குணாதிசயங்களும் மாறுபடுகின்றது.
3.விஷத்தன்மை கொண்ட அணுக்களாக மாறி ஒவ்வொரு உடல்களிலும் மாற்றங்கள் ஆகின்றது.

சூரியன் தனக்குள் கவரும் சக்திகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது “எலக்ட்ரிக்கின் இயக்கச் சக்தி” அதிகமாக வளரத் தொடங்கி விட்டது.

உதாரணமாக ஒரு எலக்ட்ரிக் வயரிலே இரு மடங்கு மின்சாரம் அதிகரித்தால் அதனுடன் இணைக்கப்பட்ட பல்புகளோ மற்ற இயந்திரங்களோ அது பியூஸ் (எரிந்து) ஆகிவிடும். அப்போது ஒலி அதிர்வுகள் அதிகமாகின்றது. நாம் இயக்கக்கூடிய சாதனங்களும் வேகமாக இயங்கி… பழுதடைந்து விடுகின்றது.

அது போல் தான் ஒவ்வொரு உயிரினங்களின் துடிப்பும் இரு மடங்கு ஆகும் போது
1.மனித உணர்வின் எண்ணங்கள் துரித கதியில் இயங்கி
2.சிந்திக்கும் திறனை இழக்கச் செய்து விடுகின்றது.

மனிதனுக்குள் சிறு மூளை பாகங்களில் விஷத் தன்மை பரவினால் “உணர்ச்சியின் வேகங்கள் அதிகரிக்கும்…!” பித்து பிடித்த உடலில் பார்த்தால் நரம்புகளில் பல மடங்கு வீரிய சக்தி உண்டு

இதைப் போன்று தான் மற்ற உயிரினங்களில்… காட்டு விலங்குகளில் உயிரின் இயக்க ஓட்டம் அதிகரிக்கப்படும் பொழுது அதுவும் மாற்றம் அடைந்து காடுகளிலிருந்து அகன்று “அசுரத்தனமான தாக்குதலில் இறங்கவும் கூடும்…”

இத்தகைய நிலைகள் நம் பிரபஞ்சத்தில் உருவாகிக் கொண்டுள்ளது.
1.கதிரியக்கப் பொறிகளால் சூரியனுக்குள் மின் உற்பத்தி அதிகமாகி… மின் அணுக்களின் வேகத் தொடர் அதிகரிக்கப் போகிறது.
2.அதனால் இந்தப் பிரபஞ்சமே சீர் கெடும் நிலையும்… அதனின் செயலாக்கம் தணியும் நிலையும் வந்து கொண்டிருக்கின்றது.

ஆதியிலே… சந்தர்ப்பத்தால் நஞ்சை வென்றிடும் சக்தி பெற்று வளர்ந்த அகஸ்தியன்… அவன் வளர்ச்சியில் துருவத்தின் ஆற்றலைக் கண்டுணர்ந்து துருவத்தின் ஆற்றலைப் பெற்று கணவன் மனைவி இருவருமே உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியாக்கி நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்றுத் துருவ நட்சத்திரமாக… அகண்ட அண்டத்தில் வருவதையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் உணர்வலைகள்
1.நமக்கு முன் இந்தக் காற்றுக்குள் இருப்பதை நுகர்ந்து பழகுவதற்குத் தான்
2.கூட்டுத் தியானங்களை உங்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.

அதே சமயத்தில்…
1.நாம் தியானத்தில் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் தணியத் தொடங்கினால் விஷத்தன்மைகள் ஆட்கொண்டு விடும்
2.பல கோடிச் சரீரங்களில் சம்பாதித்த சக்தியை வலிமை பெற்றதை அழித்துவிடும்.

ஆகவே… இந்த உலகமே விஷத்தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில்… வராகன் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வைக் கவரும் சக்தியாக நஞ்சினைப் பிரித்திடும் மனித உடலை உருவாக்கிய “பரசுராம்” என்ற நிலையில்… அதன் வழி வளர்ச்சி பெற்றவன் தான் அழியாத நிலைகள் கொண்டு “ஒளிச் சரீரமாக விண்ணிலே உள்ளார்கள்…!”

ஆனால் உடலில் இச்சைக்குச் சென்றோர் அரசராக ஆனார்கள். மற்றவர்களை வீழ்த்தி அதிலே மகிழ்ச்சி பெற்று… பல மதங்களாக பல இனங்களாகப் பிரிக்கப்பட்டு அழித்திடும் நிலையாக வளர்ந்து விட்டது.

ஆனால் அத்தகைய அரசர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் இன்று மக்களாட்சி என்று வந்துள்ளது. மக்களாட்சி என்றாலும்…
1.அரசியலிலும் அதே நிலைகள் இன்று வளர்ந்து விட்டது
2.அதிலும் எத்தனையோ பிரிவுகள்… ஒருவருக்கொருவர் பகைமை.

நன்மையை எதிர்பார்த்திருக்கும் மக்களோ கலக்க உணர்வு கொண்டு சிந்திக்கும் தன்மை குறைந்து எப்படி வாழ்வது…? என்ற நிலையிலேயே உள்ளார்கள்.

ஆகவே சிதறுண்டு போகும் இந்த நிலையில் இருந்து மீட்டிட
1.நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியானத்தில் உலக மக்கள் அனைவருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று
2.தனக்குள் அந்த ஆற்றலை விளைய வைத்து மக்களுக்கு இந்த அலைகளை அனுப்ப அனுப்ப
3.நல்லதை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இது உதவியாக அமையும்.

துருவ தியானத்தில் எத்தனை ஆயிரம் பேர் இப்படி எண்ணி எடுக்கின்றோமோ… பரவச் செய்கின்றோமோ… தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று யாரெல்லாம் எண்ணுகின்றார்கள் அவர்களுக்கு இது கிடைக்கும்.

இரு மடங்கு அதிகரிக்கப் போகும் மின் அணுக்களின் தன்மைகளிலிருந்து நாம் அனைவரும் மீள்தல் வேண்டும்.

அதற்காக அகஸ்தியன் சென்ற வழியில் அவன் உணர்வை மட்டும் அவனுடைய வளர்ச்சியில் இருந்து நாம் பிரித்து எடுத்து வளர்த்துப் பழக வேண்டும்.

கடந்த காலங்களில் பிரபஞ்சத்தின் இயக்கமும்… மற்ற நிலைகள் எவ்வாறு…? என்று உபதேசித்த உணர்வுகளிலிருந்து அதை மாற்றி
1.அகஸ்தியன் வழியில் அவன் சென்ற பாதையில் அவன் உணர்வையே தொடர்ந்து வளர்த்து
2.துருவ நட்சத்திரமான நிலையை வரிசைப்படுத்தி… நம் உடலில் உள்ள அணுக்களை அதன் வழி மாற்றி
3.இனி இந்த உடலில் இருந்து எப்பொழுது நாம் அகன்றாலும்… பகைமை உணர்வு தாக்கப்பட்டாலும்
4.நம்முடைய நினைவாற்றல் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே இருத்தல் வேண்டும்.

இது நமக்குள் வளர்ச்சியாக வளர்ச்சியாக… பிரபஞ்சத்திலிருந்து வரும் தீமைகளிலிருந்து நாம் விடுபட உதவும்.

ஆகவே நமது குரு காட்டிய வழியில் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற மறவாதீர்கள்…! தீமைகளை அகற்றும் அந்த வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சுண்ணம்

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…!

இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

எதையுமே தன் எண்ணத்தால் உருவாக்கும் ஆற்றல் கொண்டவன் தான் மனிதன்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… தான் பெற்ற கலைகள் அனைத்தையும் தன் மனைவிக்கு உபதேசிக்கின்றான். நுகர்ந்த உணர்வுகள் மனைவி உடலில் விளைகிறது.

ஆண் பெண் என்ற நிலையில் இணைந்து தன் இனத்தை விருத்தி செய்யும் நிலையாகக் குழந்தைகள் இன்று எப்படி உருவாகின்றதோ இதைப் போன்று தான்
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் ஒன்றி வாழ்ந்து… இரு உயிரும் ஒன்றாக்கப்பட்டு…
2.நஞ்சினை வென்றிடும் உணர்வாக இருவரும் விளைவித்துக் கொள்கின்றனர்.
3.ஒளிக்கதிர்களை உருவாக்கும் சக்தி பெறுகின்றனர்.

அதாவது… அவர்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து… கணவன் உயர வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் மனைவி உயர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்… தனது வாழ்க்கையில் கண்டறிந்த உணர்வுகள் அனைத்தும்
1.கணவன் உயர்ந்த சக்தி பெற வேண்டும்… அந்த அருள் எனக்குள் வளர வேண்டும் என்றும்…
2.மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும்… என்று அந்த அருள் ஒளி எனக்குள் கூட வேண்டும் என்றும்
3.இருவருமே இந்த உணர்வுகளை எண்ணி ஏங்கப்படும் பொழுது
4.இரு உயிரையும் ஒன்றாக இணைத்திடும்… ஈர்த்திடும் உணர்வுகள் ஒன்றிடும் பருவத்தை அடையச் செய்கின்றது.

இப்படி அடைந்த உணர்வுகள் தான் உடலை விட்டுச் சென்ற பின் சத்தியவான் சாவித்திரி…! இன்னொரு உடலுக்குள் அழைத்துச் செல்லாது “ஏகாந்த வாழ்க்கை” வாழும் நிலை பெற்றனர்.

ஆகவே உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மை ஒன்றி வாழும் பொழுது “சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவனை மீட்டினாள்…”

நம் பூமிக்குள் வரும் அந்த உணர்வினைக் கூர்மையாக உற்றுப் பார்த்து இருவருமே ஒன்றாக அந்த உணர்வை ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்ற உணர்வினை அவர்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் அணுவாக வளர்த்துக் கொண்டார்கள்.

அவ்வாறு வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி…
1.தான் நுகரும் உணர்வுகள் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக…
2.“இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகும் அனைத்தையும் ஒளிக்கதிராக மாற்றிக் கொண்டுள்ளார்கள்…”

அணுக்களாகி… வளர்ச்சியில் கோளாகி… கோள் நட்சத்திரங்களாகி… நட்சத்திரம் சூரியனாக எப்படி ஆனதோ இதைப் போன்று தான் உயிரணுவாகி… பல கோடிச் சரீரங்கள் பெற்று… பரிணாம வளர்ச்சியில் மனித உடலை உருவாக்கி… மனிதனான பின் “தன் எண்ணத்தால்” உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.

சூரியன் ஆனபின் தான் மற்றொன்றைத் தனக்குள் வளர்த்து தீமைகள் அகற்றி ஒளியின் சுடராக மாற்றுவது போன்று உயிரணு மனிதனாகத் தோன்றிய பின்… அனைத்தையும் ஒளியாக்கும் தகுதி பெற்றது தான் அது.

சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது தான் ஒவ்வொரு பொருளும் உருவாகின்றது. ஆனால் மனிதனான பின் ஒன்றைக் கவர்ந்து உருவாக்கும் திறன் பெற்றவன்.

அத்தகைய திறன் பெற்ற நாம்… அதைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

அதற்காக வேண்டித் தான் அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சி அருள் ஞானிகள் பெற்ற உணர்வினைப் பெறும்படி செய்கிறேன் (ஞானகுரு).

அதே சமயத்தில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை அந்தத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் சென்று
2.அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக அமைந்திருக்கும் அதனுடன் உங்கள் நினைவினை இணைக்கச் செய்து
3.கூர்மையாக நினைவாக்கி அதைக் கவரும் பருவம் உங்களுக்குள் ஆக்கப்படும் பொழுது
4.உங்களை அறியாது தீமையை விளைவிக்கும் அணுக்களுக்கு அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் இரையாகி
5.உங்கள் உடலுக்குள் இருக்கும் பகைமை உணர்வுகள் அகன்று “ஞானத்தின் வழியில் வளர்ச்சி பெறும் தகுதி பெறுவீர்கள்…”

ஆத்மாவைச் சுகமாக்க வேண்டும்

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

குலதெய்வ வழிபாடு

 

இன்று மனிதனாக இருந்தாலும் இதற்கு முன்… நாம் தேளாகவோ பாம்பாகவோ இருந்திருப்போம் அதனிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நம் தாய் தந்தையர் அடித்திருப்பார்கள் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமது உயிர் அவர் உடலில் புகுந்து விடுகின்றது.

ஆகவே…
1.நம்மை மனிதனாக உருவாக்கிக் கொடுத்தவர்கள் தாய் தந்தையரே… அவர்களே “கடவுள்”
2.நம்மைக் காத்தருளிய நம் தாய் தந்தையரே “தெய்வம்”
3.நல்வழி நமக்குக் காட்டிய தாய் தந்தையரே “குரு”
4.என்னை உருவாக்கிச் சீராட்டித் தாலாட்டி வளர்த்து ஆளாக்கி நல்வழி புகட்டியது என் அன்னை தந்தையரே என்று எண்ணி
5.என் தாய் தந்தையர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும்
7.எங்கள் வாழ்க்கையில் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
8.அன்னை தந்தையரின் அருளாசி என்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் ஆலயத்தில் எண்ணும்படி செய்தார்கள் ஞானிகள்.

ஆலயத்திற்குச் சென்று இப்படி யாராவது வணங்குகின்றோமா…? இல்லை…! நம் உயிரை மதிப்பது இல்லை… அம்மா அப்பாவிற்கு உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுவதில்லை…!

ஆனால் கந்த புராணத்திலே இதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்

நாரதன் ஞானக்கனி கொண்டு வந்து கொடுப்பதாகவும்… “உலகை முதலில் வலம் வருபவருக்கே இதைக் கொடுக்கலாம்…” என்றும் உணர்த்துகின்றார்கள்.

விநாயகர் என்ன செய்கின்றார்…?
1.அம்மா அப்பாவைச் சுற்றி வந்து உடனே கனியை வாங்கிக் கொள்கின்றார்.
2.சாதாரண மனிதனுக்கும் புரியும்படியாகச் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.

அதையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா…!

ஆனால் முருகன் என்ன செய்கின்றான்…? விரிவடைந்த உணர்வின் தன்மை கொண்டு அலைந்து நான் பெறுவேன் என்று செல்கின்றான். ஆனால் விநாயகன் முந்திக் கொண்டான்
1.உடலான சிவனில் ஒன்றிக் கொண்டான்
2.உடலுக்குள் இருந்த சக்தியின் சொரூபத்தில் இவன் ஒன்றிக் கொண்டான் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

விரிவடைந்த எண்ணத்தின் நிலைகள் அனைத்திலும் எண்ணி எடுத்து இந்த உணர்வின் தன்மை ஒளியாக்க முடியும் என்றவன் முருகன். ஆனால் பின் வந்தவர்கள் அந்த்த் தெளிவுரைகளை மறைத்தே விட்டார்கள்… அந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.

கொசு நம்மைக் கடிக்கிறது… இரத்தத்தைக் குடிக்கிறது. அது மடிந்த பின் நம் உடலுக்குள் வந்துவிடுகிறது… மனிதனாக உருப்பெறும் கருவாகின்றது. ஒன்றைக் கொன்றால் உடனே தாக்கும் நிலை கொண்டு நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

உணர்வை எடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது.

இயற்கையின் செயலாக்கங்களை நீ எப்படிப் பெறுகின்றாய்…? என்பதை எனக்கு இப்படித் தான் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்.
1.நீ மனிதனாக ஆனாய்…! எதன் வழி கொண்டு…?
2.உனக்குக் கடவுள் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
3.உனக்குத் தெய்வம் யார்…? உன் அன்னை தந்தையர் தான்
4.உனக்கு குரு யார்…? வாழ வழி வகுத்துக் கொடுத்து நல்வழி காட்டியது யார்…? உன் அன்னை தந்தை தான்
5.உன் அன்னை தந்தையரை உருவாக்கியது யார்…? அவருடைய அன்னை தந்தையர்
6.ஆகவே அந்தக் குல வழியில் தான் நீ மனிதனாக ஆனாய்… என்று தெளிய வைத்தார் குருநாதர்.

அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என்ன…?

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வமான அந்த உயிரான்மாக்கள்… ஒளியின் சரீரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் (சப்தரிஷி மண்டலம்) இணைய வேண்டும்.
1.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
2.என்றென்றும் அறிவின் ஒளியாக இருக்க வேண்டும்
3.உணர்வின் அறிவாக நாங்கள் அதைப் பெற வேண்டும்
4.எங்களை அறியாது வந்த இருளை அகற்ற வேண்டும் அந்தத் திறன் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.குலதெய்வங்கள் மூதாதையர்களை விண் செலுத்தும்படி சொன்னார் ஈஸ்வரபட்டர்..

அதைத் தான் உங்களுக்கும் சொல்கிறோம் (ஞானகுரு).

நொடிக்குள் பெற வேண்டிய உன்னத சக்தி

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களை எல்லாம் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்களை தன்னைப் (ஆன்மா) பாதித்திட வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!
1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.
1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.
3.தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில்
4.அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்து விசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்தி… சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கனவே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேர செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தன் ஒளிகாந்த சக்தியால் வலுக் கூட்டிக் கொண்டு அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
5.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

புத்தரைக் கொல்ல வந்த காட்டுக் கள்வன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும் அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய
1.அந்தப் புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற்றிட வேண்டும்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தை நாமும் பெற வேண்டும்

 

அகஸ்தியனின் தாய் தந்தையர் கொடூர மிருகங்களிடமிருந்தும் விஷ ஜந்துக்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளை அரைத்துத் தங்கள் உடலிலே பூசிக்கொண்டார்கள்.

பூசிய பின்… உடலின் வெப்பத்தால் வெளி வரக்கூடிய அந்த மணங்களை மற்ற மிருகங்கள் நுகரப்படும் போது அவைகளுக்கு எதிர்நிலையாகி… அதனின் வலுவை இழந்து விடுகின்றது… மிருகங்கள் விலகி ஓடி விடுகின்றது.

புலியானாலும் யானையானாலும் தேளானாலும் பாம்பானாலும் அஞ்சி ஓடி விடுகின்றது. அவைகள் எல்லாம் விஷத்தின் இயக்கம் கொண்டது தான். ஆனாலும்
1.விஷத்தை முறிக்கும் பச்சிலைகளை உடலில் முலாமாகப் பூசியபின்
2.அந்த மணத்தை அந்த விஷம் கொண்ட உயிரினங்கள் நுகரப்படும் பொழுது இவர்கள் அருகிலே வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவர்கள் தாய் தந்தையர்கள் அத்தகைய பாதுகாப்பு கொண்டு தான் வாழ்ந்தார்கள். அதே சமயத்தில் கணவன் மனைவி இணைந்து கர்ப்பமான பின் இந்த மணத்தைக் கருவில் இருக்கும் குழந்தையும் நுகர்கின்றது.

நஞ்சை வென்றிடும் சக்தியாக அந்தக் குழந்தை உருவாகிறது. பத்து மாதமும் அந்த உணர்வுகளை நுகர்ந்து குழந்தை பிறக்கிறது. அப்படி உருவானவன் தான் அகஸ்தியன்.

ஏனென்றால் இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தை நீங்கள் கூர்மையாகக் கேட்டுப் பதிவாக்கி…
1.நினைவு கொண்டு அதை நுகரப்படும் பொழுது
2.உயிர் உங்களுக்குள் நஞ்சை வென்றிடும் அணுவாக மாற்றுகின்றது.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும்… அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்றும் நம் பூமியில் உண்டு. அகஸ்தியன் கண்டுணர்ந்த…
1.விண்ணில் தோன்றிய உணர்வுகள் அது எவ்வாறு…? என்பதை இணைத்து
2.ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றம் அடைந்ததை இணைக்கப்படும் பொழுது
3.அண்ட சராசரத்திலே விளைந்த உணர்வுகளையும் உங்களால் நுகர முடியும்
4.அகஸ்தியன் நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக அமைந்த நிலையும் உங்களுக்குள் கலக்க நேரும்.

அத்தகைய அணுக்களாக உங்களுக்குள் விளைந்து விட்டால்… அது தன்னுடைய இரைக்காக உணர்ச்சிகளை உந்தப்படும் போது… அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள். தீமைகளை அகற்றும் சக்தியும் நீங்கள் பெற முடிகின்றது.

அகஸ்தியன் தனக்குள் நஞ்சினை முறித்திடும் உணர்வுகளை தாய் கருவிலேயே பெற்றதனால்… சிறுகச் சிறுக வளர்ந்து எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் அந்த விஷத்தை முறித்திடும் ஆற்றலும் அவனுக்குள் விளைகின்றது.

ஆனால் சாதாரண மக்களாக இருப்போர்… நோயுடன் வேதனைப்படுவோரை ஒரு கருவுற்ற தாய் நுகர்ந்து விட்டால் அந்தச் சிசுவிற்குள்ளும் அது இணைந்து விடுகிறது.

அதாவது… இன்னொரு மனித உடலில் விளைந்த ஆஸ்துமாவோ கேன்சரோ கடுமையான நோய்வாய்ப் பட்டதை… ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால்
1.அந்தக் கஷ்டங்களை தாய் அறிய முடியும்… தாய் உடலுக்குள் அணுக்களாக விளைகின்றது
2.கருவிலிருக்கும் குழந்தைக்கோ இந்த உணர்வுகள் பட்டு விஷ அணுக்களாக உருவாகும் தன்மை வருகின்றது.

பிறந்த பின்… ஆரம்பத்தில் குழந்தைப் பருவமாக இருக்கும் பொழுது தெரியவில்லை என்றாலும்
1.எந்தப் பருவத்தில் எந்த மனித உடலில் அந்த உணர்வுகள் வந்ததோ
2.அந்தப் பருவம் வரும் பொழுது… அந்த உடலில் உருவான அதே நோய் இங்கேயும் வரும் பார்க்கலாம்.

இதெல்லாம் தாய் கருவிலே விளையும் உணர்வுகள்.

இதற்குத் தப்பியவர்கள் நல்ல உடலாக நாம் இன்று பெற்றிருக்கின்றோம். ஆனாலும் கஷ்டங்களையும் துன்பங்களையும் சாப வினைகளையும் தாய் கேட்டு அறிந்திருந்தால்… கருவிலே அது பதிவாகி இருந்தால்… நம்முடைய திறமைகள் எத்தனை இருந்தாலும் குடும்பத்தில் அந்தச் சாப அலைகள் தொல்லைகளாக வரும்.

எனென்றால் உயிர் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கமாக மாற்றி விடுகின்றது. இப்போது (பிறந்ததிலிருந்து) அல்ல… தாய் கருவிலேயே இந்த வித்துக்கள் ஊன்றப்படுகின்றது. அதனுடைய காலப் பருவம் வரும் பொழுது அதனுடைய விளைவுகளை விளைய வைத்துவிடும்

ஒரு தென்னை மரம் வளர்ச்சியானாலும் அதனுடைய காலப்பரும் வரும் பொழுது தான் காய்க்கின்றது. செடியோ தாவரமோ எதுவாக இருந்தாலும் அதனுடைய காலப்பருவம் வரும் பொழுது தான் அதனுடைய விளைச்சல்கள் வருகின்றது.

நெல் போன்ற தானியங்களை எடுத்துக் கொண்டாலும் அதே போன்று தான் நான்கு மாதம் அல்லது ஆறு மாதம் அது விளைந்து வருகின்றது.

மூன்று மாதத்தில் விளையக்கூடிய நெல் வகைகளையும் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறார்கள் இணை சேர்த்த நிலைகள் கொண்டு துரித காலத்தில் விளைவதும் உண்டு.

அது போன்று தான்
1.கர்ப்பமுற்ற தாய் உற்றுப் பார்த்த உணர்வுகள் பிறக்கும் குழந்தையை மாற்றி விடுகின்றது
2.இது தான் “பூர்வ புண்ணியம்” என்று சொல்வது.

தீமை செய்வோரையோ திருடுவோரையோ அல்லது குற்றங்கள் செய்வோரையோ கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து… இப்படிச் செய்கின்றார்களே…! என்று கூர்ந்து அதை நுகர்ந்தால் கருவிலேயும் இந்த உணர்வின் சக்தி இணைந்து விடுகிறது.

குழந்தையாகப் பிறந்த பின் அவன் வளர வளர தவறு செய்பவனாகவே அவன் மாறுகின்றான். என்னதான் அவனைத் திருத்த முயற்சி செய்தாலும் முடியாது.

சாமிக்குத் தீபாராதனை காட்டியோ… சாமியாருக்கு பணம் கொடுத்தோ… ஜோசியக்காரனிடம் சென்றாலும் அதை எல்லாம் மாற்ற முடியாது.

ஏனென்றால் இயற்கையின் நிலைகள்…
1.நமது உயிர் நாம் நுகர்ந்த உணர்வை ஓ… என்று இயக்கி
2.ம்… என்று உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆனால் அதே தாய் மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று ஏங்கி… இந்த உணர்வைப் பல முறை பாய்ச்சினால் தான் அவனைத் திருத்த முடியும்.

இரகசியங்களை யாம் வெளிப்படுத்துவதன் உண்மையான நோக்கம்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்று கவி புனைந்தவனும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றே உரைத்த வகையிலும்
3.எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.
3.எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்று
4.புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்… தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து… அந்தப் பேரருளைக் கூட்டி
3.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
4.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

1.என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) உயர்ந்திட வேண்டும் என்பதற்காக
2.சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
3.அது அனைத்தையும் நீங்கள் பெற்று “என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும் சொல்லில் உபதேசமும் உரைத்திடும் எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…! எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!

நம்முடைய கூர்மை (இலக்கு) எதன் மீது இருக்க வேண்டும்…?

 

உயிர் தோன்றி அணு தோன்றி சூரியனாக வளர்ச்சி பெற்றது வரையிலும்… சூரியனின் வளர்ச்சியில் உயிரணுக்களை உருவாக்கி மனிதனான பின் மனிதனின் நிலைகளில் பிறவி இல்லா நிலை அடைந்த மகரிஷிகளின் உணர்வுகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உபதேசிக்கின்றோம்… உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி அதனின் வலுக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை நாம் அனைவரும்
1.அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பின் துணை கொண்டு அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
2.அதே சமயம் அந்த ஒளிக் கதிர்கள் இந்த உயிரான்மாக்களின் மீது படப்படும் பொழுது உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றன.
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் அறிவு நிலைத்து என்றும் அழியா ஒளிச் சரீரமாக வளர்ச்சி பெறத் தொடங்கி விடுகின்றது.

அந்தக் காலங்களில் இவ்வாறு விண் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக… முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எண்ணிலடங்காதவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு பிறவியில்லா நிலை அடைந்துள்ளார்கள்.
1.ஏனோ காலத்தால் பக்தி என்ற நிலையாக அது மாற்றப்பட்டு மனித உடலின் இச்சைக்கு என்றே மாற்றிவிட்டார்கள்.
2.உண்மையின் உணர்வுகள் மறைந்தே போய் விட்டது… மெய்யின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தப்பட்டது.

இதைக் கேட்டறிந்த அனைவரும் உங்கள் குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் இனியாவது இதன் வழி தியானியுங்கள்.

அருள் வழியை உங்களுக்குள் பெருக்குங்கள். இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள். உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள். ஒளி பெறும் அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.

அருள் மகரிஷிகளின் உணர்வைத் துணை கொண்டு என்றும் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் முன்னோர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் பின் நாமும் அங்கே செல்கிறோம். அந்தப் பேரின்பப் பெரு வாழ்வை அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.
1.அகண்ட அண்டத்தில் எங்கும் செல்லலாம்
2.இருப்பிடத்தில் இருந்து கொண்டே எதையும் நுகரலாம்… அருள் ஒளியின் தன்மையைப் பெறலாம்.

இந்த மனித உடலில் இப்போது நினைவிருக்கும் பொழுதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பெருக்கி ஒளியின் சரீரமாக உருவாக்குங்கள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இங்கே உபதேசிக்கின்றோம். உணர்வைப் பதிவு செய்கின்றோம்.
1.உங்கள் நினைவின் ஆற்றலை விண்ணுக்குச் செலுத்தச் செய்கின்றோம். அந்த உணர்வைப் பெறத் தகுதி ஏற்படுத்தினோம்.
2.அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியதை உயிர் உருவாக்குகின்றது…
3.உணர்வின் ஆற்றலைப் பெருக்குகின்றது… நினைவின் எண்ணம் கூர்மையாகின்றது.

அதன் வலிமை கொண்டு எதன் மீது நினைவைக் கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ அங்கே அழைத்துச் செல்கின்றது இந்த உயிர்.

ஆகவே… நம்முடைய கூர்மை துருவ நட்சத்திரத்தின் மீதும் சப்தரிஷி மண்டலங்களின் மீதும் இருத்தல் வேண்டும். கூர்மை அங்கே இருந்தால் நாம் எந்த நேரத்தில் உடலை விட்டுச் சென்றாலும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து உடல் பெறும் உணர்வுகளை மாற்றி ஒளி பெறும் உணர்வாக விளைந்து பேரின்பப் பெருவாழ்வு அடைவோம்.

ஆகவே… இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் மற்றவருடைய தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர வேண்டும்.

உயிர் + ஆன்மா – கற்பு நிலை

 

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி…!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு…” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி…” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்…
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்…?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாக சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது மோகம் என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவானப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது…! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்… காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்…! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனை கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

குனிந்து (விலகிச்) செல்ல வேண்டிய பக்குவம்

 

“வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம்” எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி…!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ…?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன…? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்…?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் – அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து… ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம்… ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும்… இலட்சியத்தை எய்தும்…!

இராமபாணம் திரும்புவதைப் போல்… செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

தியானம் செய்கிறோம்…! இருந்தாலும் தீய எண்ணங்கள் வருகிறதே… என்று நினைக்கலாம்

 

மழை பெய்யாத காலங்களில் “கட்டாந்தரை” போன்று இருப்பினும் மழைக் காலம் வந்து மழை பெய்தபின் மண்ணிற்குள் மறைந்துள்ள வித்துகள் அனைத்தும் தழைத்துப் புல் பூண்டுகளாக எழுந்து வளரத் தொடங்குகிறது.

1.இதைப் போன்று தான் நம் உடலில் ஏற்கனவே பதிவான அணுக்களின் இயக்கங்களும்
2.இப்பொழுது செய்யக்கூடிய தியானத்தால் அவைகளை மாற்றி அமைத்தாலும்…
3.அவைகளுக்கு வேண்டிய சத்து கிடைத்தால் மீண்டும் கிளர்ந்தெழத் தான் செய்யும்.

காரணம்… சோர்வு சஞ்சலம் சலிப்பு குரோதம் வெறுப்பு பயம் போன்ற உணர்வுகளை பதிவு செய்திருக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்துக்களாக நமக்குள் இருக்கும்.

சந்தர்ப்பத்தில் ஒரு சோர்வுடன் இருப்பவரை உற்று நோக்கினோம் என்றால்…
1.ஊழ்வினையாக உள் இருப்பதற்கு நம் கண் மீண்டும் உஷாராக்கி அந்த உணர்வுகளை ஜீவன் கொடுத்துவிடும்.
2.அதை நுகரும் பொழுது நம்மை அறியாமலே அந்தச் சோர்வு வரத் தொடங்கும்.

அத்தகைய நேரங்களில்… மீண்டும் வளர விடாது அவைகளைத் தடுப்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் எப்பொழுதோ நடந்த நிகழ்ச்சிகள்… மற்றொருவர் திட்டியது நாம் வெறுப்படைந்தது… இது எல்லாமே ஒருவரைப் பார்த்த்தும் நம் நினைவுக்கு வரும்.

“எவ்வளவு தியானம் எடுத்தாலும் கூட…” ஒருவர் மீது நாம் வெறுப்படைந்த உடன் அந்த உணர்வை நுகர்ந்த பின் கண்ணின் கருவிழி பதிவாக்கப்படும் பொழுது உள்ளே பதிவான வித்திற்கு அது உஷாராக்கி விடுகிறது.
1.அப்போது அதற்குண்டான ஆகாரமாக அதை எடுத்து வளரத் தொடங்குகிறது.
2.உணர்வை இழுத்த பின் (சுவாசித்ததும்) உயிரிலே பட்டபின் அந்த உணர்வின் எண்ணங்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கும்.

இவ்வளவு நாள் தியானம் செய்கின்றோம்… இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றதே…! என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது வரும் பொழுது அதை இப்போது நாம் மாற்றி அமைக்க வேண்டும்.

ஒருவர் மீது வெறுப்படைவதோ சலிப்படைவதோ கோபப்படுவதோ அத்தகைய உணர்வுகள் வருகிறது என்றால்… உடனே அடுத்த கணம் “ஈஸ்வரா…” என்று உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த நினைவினைக் கண்ணுக்குக் கொண்டு வந்து உயிருடன் இணைத்து விடுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது மிகச் சக்தி வாய்ந்தது.

உள்ளுக்கே ஏற்கனவே பதிவு செய்த பகைமை உணர்வோ வெறுப்பு உணர்வோ அதனுடன் இதைக் கலக்கப்படும் பொழுது
1.பிறருடைய உணர்வுகள் ஈர்க்கப்படுவதை இது தடைப்படுத்துகின்றது.
2.வந்தாலும் அதை அடக்கித் தீமை இல்லாத அணுக்களாக அது விளையச் செய்யும்.

அத்தகைய அணுக்களாக நாம் மாற்றிக் கொண்டே வந்தால் நம்முடைய எண்ணங்கள் கூர்மையாகத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது.

இந்த வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்க்கச் சேர்க்க அந்த அணுக்களும் வளர்ச்சி பெறும். ஆகையினால் நாம் இடைவிடாது அதைச் செயல்படுத்த வேண்டும்.

நம் தொழிலில் எல்லாம் நலமாக இருப்பினும் ஒருவர் என் வியாபாரம் நஷ்டமாகி விட்டது… ஒரே கஷ்டமாக இருக்கின்றது என்று சொன்னால் போதும்.

கண் அவரைப் படம் எடுத்த பின் அந்த உணர்வின் சக்தியை நுகர்ந்து கஷ்டம் நஷ்டம் என்று உணர்கின்றோம். இருப்பினும் அந்த உணர்வுகளை நமது உயிர் அணுவாக மாற்றி விடுகின்றது.

ஏற்கனவே கஷ்டம் நஷ்டம் என்று சொன்ன உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.
1.அதற்கு இடம் கொடுக்காது இருந்தால் ஈர்க்கும் சக்தி குறைகின்றது.
2.இடம் கிடைத்துவிட்டால் வேதனை என்ற உணர்வு நுகரப்படும் பொழுது அதை ஈர்க்கும் சக்தியாக நமக்குள் வந்து விடுகிறது.

புதிதாகப் பார்க்கப்படும் பொழுது ஊழ் வினையாக முளைத்து விடுகின்றது பின் அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுவின் தன்மையாக விளைகின்றது.

அணுவின் தன்மை விளையப்படும் பொழுது நாம் நுகர்ந்தது இரண்டாவது அதே உணர்வுகள் உயிரிலே உராயப்படும்போது இந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… அந்த எண்ணங்கள் வருகின்றது.

ஆகையினால் அத்தகைய எண்ணங்கள் நமக்கு வராதபடி ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் மையம் கொண்டு நிலை நிறுத்தி விட வேண்டும்…”

துருவ நட்சத்திரத்தின் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை இடைமறிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்படி இணைக்கப்படும் பொழுது தீமை செய்யும் அணுக்கள் வலு இழக்கின்றது… அருள் உணர்வுகள் வலு கூடுகின்றது
1.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயர்ந்த சக்திகளை
2.புதுப் புது அணுக்களாக நாம் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தியானம் செய்பவர்கள் அவசியம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கஷ்டம்… துன்பம்… என்று எதுவுமே சொல்லாதீர்கள் என்று நான் (ஞானகுரு) அடிக்கடி சொன்னாலும் பெரும்பகுதியானோர் கேட்பதில்லை,
1.சீக்கிரம் நன்றாகிவிடும்…! என்று நல்ல வாக்கினை யாம் சொன்னால்
2.இரண்டாவது தரம்… குடும்பத்தில் ஒரே தொல்லையாக இருக்கிறது என்றும்
3.குழந்தைக்கு இப்படி இருக்கிறது என்று திருப்பி இப்படிக் கேட்டு
4.யாம் சொன்னதைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

வாக்கின் மூலமாகத் தான் ஞான வித்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அதை வளர்த்துக் கொண்டால் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தை வளர்க்க முடியும்.

ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் தான் மீண்டும் மீண்டும் அப்படிக் கேட்கிறார்கள். ஏனென்றால்
1.உங்களுக்குள் ஏற்கனவே எது பதிவானதோ அந்த உணர்வுதான் அப்படி இயக்குகிறது
2.அதை மாற்றும் வல்லமை இல்லாது இருக்கின்றது.
3.அதன் உணர்வுக்கொப்ப அந்த அணுக்கள் தான் வளர்கிறது.

ஆக… அதை மாற்றும் வல்லமை உங்களுக்கு வேண்டும் என்பதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு அந்த வலுவான நிலைகள் கொண்டு என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்… குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்…. எங்கள் தொழில் நன்றாக வளர வேண்டும்.. எங்கள் வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று அதற்குண்டான சக்தி வேண்டும் என்று கேட்டால் அந்தச் சக்தியைப் பெற்று நீங்கள் வளரலாம் அல்லவா…!

நீங்கள் இதைக் கேட்டு… அதன்படி நடக்கும்…! என்று நான் சொன்னால் அந்த அருள் சக்தியைப் பெற்று உங்களுக்குள் தீமை வளராது தடுக்க முடியும். உங்கள் சொல் செயல் மற்றவரையும் நல்லதாக்கும்…!

ஏனென்றால்… விரும்பிக் கேட்பது தான் கிடைக்கும்…!

காரணம்… நம்மை ஆள்பவன் உயிர் தான்…!
1.ஆண்டவனாக இருப்பதும் நாம் எண்ணியதை உருவாக்குவதும் நம்மை ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்.
2.அவனிடம் நீங்கள் வேண்டுங்கள்…
3.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலில் படர வேண்டும்
4.எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
5.மெய்ப் பொருள் காணும் சக்தி பெற வேண்டும்
6,எங்கள் பார்வை அனைவரையும் புனிதமாக்க வேண்டும்
7.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.கனியைப் போன்ற இனிமையான நிலை எங்கள் வாழ்க்கையில் பெற வேண்டும்
9.எங்கள் சொல்லைக் கேட்போரும் அந்த நிலை பெற வேண்டும்
10.வைரத்தைப் போன்று எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்
11.நாங்கள் பார்ப்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்
12.எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும் என்று உங்கள் உயிரிடம் கேட்டுப் பாருங்கள்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் மேலே சொன்ன உணர்வுகளை அதிகமாகக் கூட்டிப் பழகுங்கள்.

மற்றவர்களுடைய துயரத்தையும் துன்பத்தையும் கேட்டறிந்தாலும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் வேதனையான உணர்வுகளை அதிகமாக நுகர்ந்தாலும் அடுத்த கணம் அந்த அருள் ஒளியை நீங்கள் எடுத்துப் பழகுங்கள்.

ஒளியான உணர்வுகள் வரும் போது தீமைகள் வராது தடுக்கும்.. பேரருள் உணர்வுகள் கூடும்… அதன் வழி நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழலாம். வாழ்க்கையில் வரும் துன்பத்தை அகற்றலாம்.

1.அருள் ஒளி பெறுங்கள்… அருள் ஞானம் பெறுங்கள்…! அருள் வழியில் பேரின்பம் பெறுங்கள்.
2.பிறவி இல்லா நிலையை அடையும் பருவம் பெறுங்கள்.

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்

 

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவராக இருந்தாலும்… சந்தர்ப்பம் அவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அடுத்த கணமே “அழுது… அவருடைய ஆன்மாவைக் கவர்ந்து இழுத்து விடாதீர்கள்….!”
1.அந்த ஆன்மாவை அருள் ஒளி பெறச் செய்யுங்கள்
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
3.அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்யுங்கள்
4.ஒளி பெற்ற அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.
5.அவர்களைப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழச் செய்யுங்கள்.

பாசத்தால்… பண்பால்… எங்களுக்கு உதவி செய்தாயே…! எனக்கு நன்மை செய்தாயே…! என்று நன்மை செய்தவர்களை இப்படி எண்ணக்கூடாது.

எனக்கு நன்மை செய்தார் துன்பத்தைப் பெற்றார்…! “இனியாவது” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வு கரைந்து பேரின்ப பெரு வாழ்வு பெற வேண்டும்.

நாங்கள் அடைந்த துன்பத்தை கேட்டாய் அதை உனக்குள் வளர்த்தாய். ஆகவே அந்தத் துன்பத்தின் நிலைகள்… இத்துடன் கரைத்து விட்டு அருள் ஒளியின் சுடராக நீ என்றுமே நிலைத்திருக்க வேண்டும்… இனி பிறவியில்லா நிலைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு இந்த உணர்வுகளை நீங்கள் பாய்ச்சுங்கள்.

1.உதவி செய்தவர்களை உங்கள் பாசத்தால் எண்ணி “இழுத்தால்…” அந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் தான் வருகின்றது.
2.மீண்டும் துன்பத்தைத் தான் இங்கே விளைய வைக்க முடியும்.
3.பாசத்தால் நமக்குள்ளும் அந்த நோயை வளர்த்து விடுகின்றோம்.
4.அவரும் அடுத்து இழி நிலையான சரீரமாகத் தான் பிறக்கச் செய்ய முடியும்.

அத்தகைய நிலையில் இருந்து உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை மீட்டுங்கள். உங்களுக்கு இன்பத்தை ஊட்டிய அந்த ஆன்மாக்களை அழுது யாரும் இழுக்காதீர்கள்… பாசத்தால் கவர்ந்து விடாதீர்கள்.

“பாசத்தை”
1.எல்லை கடந்த நிலைகள் கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையச் செய்யுங்கள்
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள்… ஒளிச் சரீரமாக அவர்களை மாற்றுங்கள்.
3.அது தான் உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு செய்யக்கூடிய கடமைகள்.

இதை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.

அந்த அருள் ஒளியை நீங்கள் பெற எமது குரு அருளும் எனது அருளும் உறுதுணையாக உங்களுக்கு இருந்து இந்த சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றால் அதன் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த உடலை விட்டுச் சென்றால் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வை மாற்றி ஒளி பெறும் உணர்வாக உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்.

என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடைவோம். மனிதனின் கடைசி எல்லை அது தான். இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் மூச்சு பிறருடைய துன்பங்களை நீக்கும் அருள் சக்தியாகப் பெறுதல் வேண்டும்.

ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்

 

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா…? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அடிக்கடி நான் (ஞானகுரு) உங்களுக்கு வற்புறுத்துவது எல்லாம் இது தான்…!
1.அழியாப் பேரின்பச் செல்வத்தை நாம் தேடுவதற்குத் தான்
2.மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே உபதேசிக்கின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய கஷ்டங்கள் வந்தால் அதை மாற்றும் தன்மைக்கு நாம் வரவேண்டும். ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வே அந்த உணர்ச்சியை ஊட்டி அதைச் செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.

1.நாம் நுகரும் உணர்வு எதுவோ இந்த உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் வருகிறது.
2.நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் அரங்கநாதங்களாகி
3.தீமைகள் அகற்றும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்… ஆண்டாள்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெறுகின்றது.

இதை நீங்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நிமிடமும் காலை துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தை கேட்டுப் பதிவாக்கிக் கொண்டீர்கள். இந்தப் பதிவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடல் நலமாக வேண்டும் என்று இதை எண்ணி எடுத்துக் கொண்டாலே போதும்.

1.இந்த உணர்வுகள் உங்கள் உடல் என்ற அரங்கத்தில் நாதங்களாகின்றது
2.ஏங்கிப் பெறும் போது அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயக்குகிறது.
3.இந்த உணர்ச்சிகள் வரும் பொழுது உங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது குறையும்.

ஆனால் இதை விடுத்து விட்டு எனக்கு வேதனையாக இருக்கின்றது… என்னால் முடியவில்லை…! என்ற எண்ணத்திற்குப் போக வேண்டியதில்லை.

நோயாக இருக்கிறது என்று வேதனைப்பட்டுச் சொன்னால் அதைக் கேட்டு அதற்கு மருந்து கொடுக்கும் நிலைக்கு இல்லை. “மருந்து கொடுத்து நோயை நீக்கும் வழியைச் சொல்ல வரவில்லை…”

மருந்துக்கு முன்னாடியே…
1.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல்
2.அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வைக் கிரகித்து இழுக்கும் வலிமை கிடைக்கின்றது.
4.அந்த வலிமை கொண்டு பல தீமைகளைப் போக்கும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்கு இத்தனை உபாயங்களும் சொல்லிக் கொண்டு வருகின்றேன். ஏனென்றால் யாரோ செய்வார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக ரோட்டில் நடந்து செல்கிறோம். ஒரு மாட்டைப் பார்க்கிறோம். அழகாக இருக்கிறது என்று இரசிக்கவும் செய்கின்றோம். ஆனால் சாதாரணமாக இருக்கும் அந்த மாடு திடீரென்று நம் பக்கம் வெகுண்டு திரும்பினால் உடனே “ஆ…” என்று அலறுகிறோம்.

அந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு அந்தப் பயம் என்ன செய்கிறது…? நம்மை ஒதுங்கி ஓடச் செய்கிறது. அந்தப் பயத்தால் நம் உடல் நடுக்கமாகி அது அடங்கச் சிறிது நேரம் ஆகிறது.

ஆகவே நம்மை அங்கே எது இயக்குகிறது…? நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மை ஆட்டிப் படைக்கின்றது.

இதைப் போல் நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்… இருளை அகற்றும் அந்தப் பேரருள் பெற வேண்டும்… என்று ஏங்கினால்
1.அந்த உணர்வு உங்களுக்குள் அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் உணர்ச்சிகளாக உங்களை இயக்கும்.
2.நல்ல சிந்தனையும் நற் செயலும் வரும்.

இதை எளிதில் பெறச் செய்வதற்குத்தான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் சாமி செய்து தருவார் என்று என்னைத் தான் நம்புகிறீர்களே தவிர உங்களை நீங்கள் நம்புவதில்லை.

உங்களால் அந்த அருளைப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்தக் காற்றிலே அந்த ஞானிகளின் உணர்வுகள் பரவி உள்ளது. அதை எடுக்ககூடிய எண்ணத்தைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

திட்டியவனை எண்ணியவுடன் உங்களுக்குக் கோபம் வருகிறதல்லவா. திட்டியவுடன் அந்தச் சந்தர்ப்பத்தில் சோர்வடைந்து உங்கள் காரியங்கள் தடையாகிறது அல்லவா.

அதற்கு முன்னாடி நம் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்திருப்போம். ஆனால் ஒருவன் திட்டி அதனால் நாம் சோர்வடைந்த பின் குழந்தையை இரண்டு சாத்து சாத்துவோம்.

முதலில் குழந்தையை அனுசரிப்போம். சோர்வடைந்த நேரத்தில் குழந்தை ஒரு பேப்பரைக் கிழித்துப் போட்டால் போதும்…! போங்கடா… உங்களுக்கு இது தான் வேலையா…? என்று இந்தக் கோபம் நிச்சயம் வரும்.
1.எந்தக் குழந்தை மேல் மிகுந்த பாசமாக செல்லமாக இருந்தோமோ அந்தக் குழந்தை மீதே இந்த வெறுப்பு வரும்.
2.அந்த நேரத்தில் கோபிப்பது யார்..? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

அந்தச் சோர்வான உணர்வு இயக்கப்படும் பொழுது தன் குழந்தை மீது இருக்கும் பாசத்தைக் கூட மறந்து குழந்தையைத் தாக்கும்படி செய்கிறது.

இதைப் போல் தான் ஒரு தீமை செய்யும் உணர்வை ஏங்கிப் பெற்றால் அந்த உணர்வின் இயக்கம் வளர்ந்து நம்மை நல்ல வழிக்கே விடுவதில்லை

1.ஆனால் நல் வழி வளர்க்கும் அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
2.அந்த உணர்வின் தன்மை நம்மை நல்வழி நடத்தும்.

“ஒளி கொண்டு… ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும்” மெய் ஞானம்

 

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது…!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன…?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா…?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா…?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன…?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு… சரீர உணர்வின் இயக்கத்தால்… “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்…” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்… எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்… குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு… “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது…!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு… அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி…?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

நம் கண்களுக்குண்டான ஆற்றல்

 

1.அருள் ஞானிகள் உணர்வுகளை… அருள் ஒளி பெறும் சக்திகளை…
2.துருவ நட்சத்திரம்… சப்தரிஷி மண்டலங்கள்… என்று வரிசைப்படுத்தி யாம் உபதேசிக்கும் போது
3.கூர்ந்து கவனித்தால் உங்கள் நினைவாற்றல் “அங்கேயே” அழைத்துச் செல்கின்றது.

ஒளியாக உருப் பெற்ற அந்த உணர்வின் தன்மையை… அகஸ்தியன் துருவனாகி நஞ்சினை முறித்த உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது அந்தச் சக்தியைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

உதாரணமாக… ஒரு டிவி ஸ்டேஷனை அமைத்தப் பின் எந்தெந்த அலை வரிசைகளில் அதை ஒளிபரப்ப வேண்டும் என்று
1.அதில் இருக்கக்கூடிய மேக்னட் ஒன்றுடன் ஒன்று கலந்து
2.அதனுடைய இணைப்பின் ஆற்றல் வரப்படும் பொழுது ட்ரான்சாக்சன் ஆக மாற்றுகின்றது.

இந்த உணர்வின் ஒளி அலைகளை இது மாற்றிய பின் “டிவி ஒரே பெட்டியாக இருப்பினும்…” எங்கிருந்தோ ஒளிபரப்பாகும் அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி எல்லாப் பக்கமும் பரவச் செய்தாலும்…
1.அதே அலைவரிசையில் இந்தப் பெட்டியைத் திருப்பி வைத்து
2.ஆண்டென்னா என்ற ஒரு சாதனத்தை வைக்கப்படும் பொழுது
3.அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி பெட்டிக்குள் ஈர்க்கும் சக்தி வருகின்றது.

இதைப் போன்று தான் எல்லாவற்றையும் உணர்ந்து நுகர்ந்து இந்த மனித உடலை உருவாக்கிய “கண்” நமது உடலுக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

எந்த உணர்வின் தன்மை ஒளி அலைகளாகத் தாக்கப்படுகின்றதோ… அந்தந்த உணர்வின் தன்மை கண்களில் உந்தப்பட்டு…
1.எது என்று அதை அறியும் ஆற்றலும்
2.நுகர்ந்து உயிருடன் உணர்வின் ஒலிகளைப் பரப்பி
3.அதற்குத்தக்க (அலை வரிசைக்குத்தக்க) குணங்களின் அடிப்படையில் உடலை இயக்கச் செய்கின்றது.

ஆனால் எதனின் உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கின்றோமோ இந்த உணர்வின் அலைகள் கூடும் பொழுது மனிதனின் உருக்களும் மாறுகின்றது… நினைவுகளும்… செயல்களும் மாறுகின்றது.

மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் அலைகளாக மாற்றி வரும் பொழுது அதைக் கூர்ந்து நாம் கவனித்தோம் என்றால்… இதன் வழி நமக்குள் பதிவானது அதன் வழியே தனக்குள் கொண்டு வருகின்றது.

ஆண்டென்னாவாக இருப்பதும்…
1.ஒரு காந்தப்புலனறிவு பிற நிலைகள் இயக்குவதை இணை சேர்த்து ட்ரான்சாக்சன் ஆக இயக்கப்பட்டு
2.இந்த உணர்வின் தன்மை இரண்டும் கலக்கப்பட்டு இங்கே பதிவாக்கும் நிலைகள் கொண்டு (அது பதிவானால்தான்) ஈர்க்கும் சக்தி வருகின்றது.
3.இணைத்து நாடாக்களில் பதிவாக்கவில்லை என்றால் அது பதிவாகாது…. அலைகளை ஈர்க்காது (ஆண்டென்னாவைத் திருப்பி வைப்பது)

இது எல்லாம் இந்த இயற்கையின் நிலைகளை மனிதன் கண்டுணர்ந்து விஞ்ஞான அறிவால் இதை மாற்றுகின்றான்.

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது… ஒரு செடியின் சத்தை நுகர்ந்து கொண்டால் அதனின் மணத்தை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று உணர்வின் தசைகளாகும் பொழுது (உடலாக) மின் அணுவின் தன்மையை நாம் எந்தத் தாவர இனத்தை உணவாக உட்கொண்டோமோ இந்த உணர்வின் எதிர் அலைகளைப் பாய்ச்சும் பொழுது… தாவர இனத்தின் உண்மையின் உணர்வுகளைக் கவர்வதையும் பார்க்கலாம்.

இதெல்லாம் மனிதனுக்குண்டான ஆற்றல்…
1.மனிதனான பின் எதனையும் கவர்ந்து… அதனைப் பதிவாக்கி நுகர்ந்து விடலாம்
2.இதனின் தன்மை கொண்டு… நாம் இனி பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்

“விஷத்தையே உணவாக எடுத்து” ஒளியின் கதிராக அதை மாற்றியவன் தான் அகஸ்தியன்

 

பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று… மற்றொன்றுக்கு இரையாகி வேதனைப்பட்டு… நரகலோகத்தை அனுபவித்துத் தான் நாம் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
1.சொர்க்கபூமியாக மனித உடலை வளர்த்து… சொர்க்கலோகமாக உருவாக்கி உள்ளது உயிர்
2.சொர்க்கவாசலாக அமைந்திருக்கும் உயிரின் துணை கொண்டு தான் நாம் “என்றும் சொர்க்கலோகமாக வாழ முடியும்…!”

துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் சொர்க்கலோகத்தை அடைந்தது. ஆகவே இந்தச் சொர்க்க பூமியை நாம் சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை மாற்றி அமைத்தலே… (அடுத்து) “பிறவி இல்லாத நிலை அடைதல்” என்பது. நமது சாஸ்திரங்களும் வேதங்களும் இதைத் தான் தெளிவாகக் கூறுகின்றது.
1.இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னால் உங்களுக்கு இது விளையாட்டாகத் தெரியலாம்.
2.ஆனால் எமது உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகிவிடும்.
3.அது உங்களை ஞானிகளாக உருவாக்கச் செய்யும் ஆற்றல் கொண்டது.

தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது “நஞ்சை முறித்திடும் உணர்வுகள்” அகஸ்தியன் உடலிலே விளைந்தது.
1.அவன் பார்வையிலே படும் ஒவ்வொன்றும்… அது எத்தகைய நஞ்சாக இருந்தாலும் ஒடுங்கி
2.நஞ்சை முறித்திடும் அணுக்களாக அவனுக்குள் விளைகின்றது.

சூரியனை அவன் உற்றுப் பார்த்தாலும்… அதில் நஞ்சின் கடுமை இருப்பினும் எதிர்மறையான நிலைகள் அது உமிழ்த்தும் அல்ட்ரா வயலட் என்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
1.அந்தக் கடும் நஞ்சினை இவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் தன்மை இவன் உடல் உறுப்புக்களைப் பாதிப்பதில்லை.
2.ஆனால் “உணர்வின் ஒளிச் சுடர்கள்” கதிரியக்கப் பொறியாக நட்சத்திரங்கள் உமிழ்த்துவது போன்று இவனில் விளைகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை கண் கொண்டு அவன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது… இவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.அந்த விஷத்தை ஒடுக்கி… விஷத்தை ஏற்று… தனக்குள் அதையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலையும்
2.அதன் அறிவாக இந்த உணர்வின் தன்மை அவனுக்குள் ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுகின்றான் அகஸ்தியன்.
3.அவனுக்குள் ஒளியான அணுக்களாக விளைந்து கொண்டே வருகிறது.

பிரபஞ்சத்தின் சக்தி துருவத்தின் வழியில் பூமிக்குள் வந்து தாவரங்களாக எப்படி உருவாகின்றது…? என்று… அந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்று நோக்கி அதனின் உண்மையின் உணர்வை அறிந்து கொண்டவன் அகஸ்தியன்.

இப்படி அறிந்து கொண்ட பின்… அதன் வழி வரும் நஞ்சினை முறித்திடும் உணர்வும்… தனக்குள் ஒளிக்கதிர்களாக மாற்றிடும் தன்மையும் அவனுக்குள் வருகின்றது.

அவனின்று விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாகப் பரப்பி வைத்துள்ளது.
1.அதனை யாம் நுகர்ந்து உங்களுக்கு இப்போது வெளிப்படுத்த முடிகின்றது.
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய உணர்வுகள் (அவர் கற்றுணர்ந்த உணர்வுகள்) அவர் அதை வெளியிடும் பொழுது
3.அவரின் துணை கொண்டு அவர் ஊட்டிய உணர்வு கொண்டு அதை நுகர்ந்து… அதனின் உணர்வின் செயலாக்கங்களை அறிய முடிகின்றது.
4.அதுவே எனக்குள் அணுக்களாக விளைகின்றது.

நீங்கள் அதை இப்போது நுகரப்படும் பொழுது… நுகர்ந்த உணர்வுகளை உங்கள் உயிர் அணுவாக மாற்றும். அந்த உணர்வின் சக்தியை “உணவாக” ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் பொழுது
1.அந்த உணர்வுக்கொப்பச் சிந்தித்து செயல்படும் திறனும்
2.தீமைகளை அகற்றிடும் ஆற்றலும் நீங்கள் பெறுவீர்கள்.

அதற்கே அடிக்கடி உங்களுக்குள் இதைப் பதிவு செய்வது

நீங்கள் வளர நான் வளர முடிகின்றது. நீங்கள் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த உண்மையின் உணர்வை நுகரப்படும் பொழுது எனக்குள்ளும் அது விளைகின்றது.

உணர்வின் ஒளி அலைகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நீங்கள் நுகர்ந்தறியும் பொழுது உங்கள் உயிர் அதை அணுவாக மாற்றுகின்றது.
1.அணுக்களாக ஆன பின் தன் இரைக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
2.அதை நுகரும் பருவம் வரும் பொழுது “அந்த ஞானத்தின் தன்மை இயக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்…”

இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் ஈஸ்வரா…! – “ஒளியான உயிரணுக்களின் சங்கமம்…”

“சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…” என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம்… முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை… யார்… எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட…பொட…!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்…!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே – நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்…! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா…?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்…” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்… நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்…!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன…? எப்படி…?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ…ம் ஈஸ்வரா…! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன…?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ…ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்…” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்…!

February 2024 உபதேசம்

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

 

மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.

அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.

விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.

செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”

இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!

அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.

அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.

நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).

அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.

ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.
3.ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

நம்முடைய கடைசி எல்லை

 

மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.

அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!

அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.

உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

 

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…!”
1.எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.
3.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
4.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
5.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டித் தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி… ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாய மான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது

 

ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ (நீருக்குள்) ஒரு கல்லினைப் போட்டால் அந்த இடத்தில் பளீர் என்று விலகிக் கொள்ளும். அடுத்து அது மூடிக்கொள்ளும்.

அது போன்று தான்
1.பக்தி மார்க்கத்தில் மூழ்கிய நிலைகள் கொண்டு உண்மைகளை மறைத்த நிலைகள் கொண்டு
2.அந்த ஞானிகள் உணர்த்திய உண்மைகளைச் சொல்லி அதற்குண்டான விளக்க உரைகளை இப்போது யாம் (ஞானகுரு) கொடுத்தாலும்
3.கேட்கும் பொழுது பளிச்… என்று அலைகள் உங்களுக்குள் படர்கிறது.
4.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மூடி சம நிலை அடைந்து விடுகின்றது.

நல்ல உணர்வுகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமையின் நிலைகள் வளராது உடனுக்குடன் அதைத் தடுப்பதற்குத் தான் இதனை உங்களுக்குள் அறிவிப்பது.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து உள்முகமாகச் செலுத்தி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி ஐந்து முறை ஆறு முறை உள்ளே சக்கரம் போன்று சுழற்றுங்கள்.
3.உங்கள் ஜீவான்மாக்களைச் சுத்தப்படுத்துங்கள்… உங்களுக்கு முன் இருக்கக்கூடிய ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

தொழிலோ மற்ற எந்தக் காரியங்களோ அங்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்களுடன் தொழில் செய்பவர்கள் எங்களிடம் வேலை செய்வோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிலை வளம் பெறச் செய்ய வேண்டும்… அறியாது சேர்ந்த இருளை நீக்கும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்…! என்று ஆன்மாவை அடிக்கடி இப்படி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கை வாழ்ந்தால் என்றுமே அது மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும். வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிட முடியும்.

அதே போல் உங்கள் குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வர வேண்டும்.

1.இந்த உடல் உங்களது அல்ல
2.எண்ணும் எண்ணம் உங்களது அல்ல
3.உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது
4.உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
5.அறிவின் உணர்வாகத் தான் நம் உணர்வின் தன்மை செயல்படுகின்றது.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய அருள் உணர்வுடன் ஒன்றுவோம் அருள் ஞானிகள் பெற்ற ஆற்றலை நாம் பெறுவோம். அறியாது வந்த தீமைகளை அகற்றுவோம்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தை எல்லையாகக் குறி வைத்து
2.இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட எமது குரு அருளும் எமது ஆசியும் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். உங்களை அறியாத வந்த தீமைகள் அகன்று… மெய் உணர்வுடன் ஒன்றி… பேரானந்தப் பெருநிலை பெறுவீர்கள் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு).

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

 

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?

நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.

இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!

கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.

அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.

அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.

அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.

எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.

உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது. நம் பூமி துருவத்தின் வழி அதை இழுத்துக் கவர்கிறது. “துருவத்தில் அந்த அடர்த்தியின் தன்மை அடைகிறது…!”

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருள் பேரொளியை
1.அந்த நேரத்தில் நாம் கவர்ந்து நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்குள்ளும் கணங்களுக்கு அதிபதி கணபதியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிபதியாக்கிடல் வேண்டும்.

அப்பொழுது நாம் சுவாசித்த உணர்வு நந்தீஸ்வரன் அதனின் உணர்வின் இயக்கமாகத் தீமையை நீக்கிடும் உணர்வாக நமக்குள் உருவாகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி நுகர்ந்தோம் என்றால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று சொல்வது போல்
1.தீமையை நீக்கும் உணர்வின் கணக்குகள் கூடி
2.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்வோம்.

குருநாதர் காடு மலைகள் எல்லாம் எம்மை (ஞானகுரு) அலையச் செய்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

1.அதை நுகரும் போது உன் உடலுக்குள் மாறுபடும் உணர்வுகள் எப்படி வருகிறது…?
2.பயத்தின் எல்லை கடந்து செல்லும் போது அந்த உணர்வின் தன்மை எப்படி இயக்குகிறது…?
3.உன் உடலில் பதட்டங்கள் எப்படி வருகிறது…? சிந்தனைகள் எப்படிச் சிதறுகிறது…?
4.சிந்தனையில்லாத நிலையில் உன் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வருகிறது…?
5.உடலில் இரத்த அழுத்தங்கள் (BLOOD PRESSURE) எப்படி அதிகமாகிறது…?
6.அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு எப்படி மாற்ற வேண்டும்…? என்று நேரடியாக அனுபவ வாயிலாகத் தெளிவாக்கினார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். அது பதிவானால் உங்களுக்குள் சிந்திக்கும் ஆற்றல் கூடும்.

1.நாம் தவறு செய்கின்றோமா…?
2.நாம் நுகர்ந்த உணர்வு தவறு செய்ய வைக்கிறதா…? என்று
3.நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஞானத்தின் வழியில் நீங்கள் வழி நடந்து தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமைகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் எனக்குக் குருநாதர் எப்படி உபதேசித்தாரோ அதே உணர்வைப் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து பதிவாக்க வேண்டும்.

1.உங்கள் உயிர் கடவுள்
2.உங்கள் உடல் ஆலயம்
3.ஆண்டவன் வீற்றிருக்ககூடிய அந்த ஆலயத்தில் அருள் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது
4.இதை நீங்கள் உற்றுக் கேட்டு நுகர்ந்தால் தீமைகளை அகலச் செய்யும்…
5.உங்கள் உடலான ஆலயத்தைப் பரிசுத்தமாக்கும்.

அத்தகைய தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்களாக விளையும். பரிசுத்தமான எண்ணங்களை உங்களுக்குள் தோற்றுவிக்கும்.

ஆகவே உங்கள் உயிரான கடவுளை நீங்கள் மதிக்க வேண்டும்.
1.அவன் வழியே அவனுடன் சேர்த்து ஒளியின் உணர்வாக இருந்து
2.இருளை நீக்கிப் பொருளைக் காணும் செயல்படுத்திய அந்த உணர்வுடன்
3.நீங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

நீங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) சொல்லும் பொழுது எனது ஈசனும் அதே வழியில் செயல்படுத்தும்.

எத்தனையோ பேரிடம் பழகினாலும் அவர்களும் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… பொருள் காணும் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது நான் என்னும் இந்த உணர்வுகளை உயிரான ஈசன் எனக்குள் இதை உருவாக்குகின்றான்.

அதே வழியில் நீங்களும் செயல்படுத்திப் பாருங்கள். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல… ஆனால் உயிர் அழியாதது….! அதைத் தான் நாம் சொந்தமாக்க வேண்டும். உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக்கி அதைச் சொந்தமாக்க வேண்டும்.
1.ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
2.நமக்குள் செருகேற்றிக் கொள்ள வேண்டும்… உயிரிலே மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

 

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகியார் காட்டினார்.

அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் ஒளி காந்தம். உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.

எண்ணங்களின் எதிர் மோதல்களிலிருந்து எப்படித் துன்பமுறா மனப்பாங்கு கொண்டு நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் அது…!”
1.மனிதன் பெறும் பெற வேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி)
3.ஓர் சல்லடையாகச் சலித்துப் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
4.எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.
5.அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் வான் இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

 

மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”

ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.

இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.

1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.

ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!

குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.

அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.

அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.

நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.

இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.

நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.

பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.

இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

காமாட்சி

 

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து
1.ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி
2.ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை
1.அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும்
2.சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வான இயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி
3.உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மேலை நாட்டில் இது நடந்த நிகழ்ச்சி…!

ஒரு சிறுவன் பாலத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்து விட்டான். கீழே விழுகும் பொழுது… “ஒரு கம்பியைப் பிடித்து” அனாதையாக மூன்று நாள் தொங்கிக் கொண்டே இருக்கின்றான்.

அதை விட்டு விட்டால் கடலில் தான் விழுக வேண்டும். ஆனால் விழுகாதபடி தொங்கிக் கொண்டே இருக்கின்றான். அவன் தொங்கிக் கொண்டிருக்கக்கூடிய இடத்திற்குப் போக முடியாத நிலை.

ஏனென்றால் அது ஒரு மலை உச்சி. அவனைக் காப்பாற்ற நான்கு நாள் ஆனது.
1.அது வரையிலும் அவன் மன உறுதி கொண்டு இறுக்கிப் பிடித்திருக்கின்றான்.
2.இப்படி எல்லாம் இயற்கையின் நியதிகள்… தன் மன வலுவால் தன்னைக் காக்கும் நிலை அவனுக்கு வருகிறது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய மன வலிமை எதிலே… எப்படி இருக்க வேண்டும்…?

அந்த அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்ற மன வலிமை எந்த நேரத்திலும் நமக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மன உறுதி இருந்தால்
1.சிந்தித்துச் செயல்படும் தன்மையையாக அது இயக்கச் செய்யும்
2.நம்மைக் காத்துக் கொள்ளும் அருள் உணர்வுகள் வளரும்.

அதற்குத்தான் தொடர்ந்து உங்களுக்கு உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு). இந்த அருள் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தச் சிந்தித்துச் செயல்படும் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1.ஆக.. உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர
2.நான் (ஞானகுரு) காப்பாற்றுவேன்…! என்ற இந்த எண்ணத்தில் இருந்தால்
3.தான் எடுக்கக்கூடிய சக்தியை இழந்து விடுகின்றோம் என்று தான் பொருள்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடுமையான விளைவுகள் வருகின்றது. அதிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக அருளைப் பெருக்கும் நிலையை உங்களுக்குள் உருவாக்குகின்றேன். அதைப் பெருக்கும் அருள் ஞானம் உங்களுக்குள் வளரட்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் இந்தத் தூண்டுதலைக் கொடுத்து அதன் மூலம் ஞானிகளின் உணர்வை உங்களைச் சுவாசிக்கச் செய்கிறோம்.

ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது உங்கள் இரத்தங்களில் ஒரு புது விதமான ஓட்டங்கள் இருக்கும். அந்த உணர்வின் தன்மை பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.

சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் கருத்தன்மை (அணுவாக மாறும் தன்மை) உங்களிலே உருவாகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் அருள் ஞானத்தைக் கொண்டு வாழ்க்கையைச் சீரபடுத்த “உங்கள் எண்ணம் உங்களுக்கு உதவும்…!”

காரணம்… அத்தகைய அணுக்கள் உருவாகி விட்டால் அந்த உணர்வின் தன்மை நுகரும் போது
1.உங்கள் உயிரிலே படுகின்றது… சிந்திக்கும் ஆற்றல் வருகிறது.
2.நல்ல உணர்வை நுகரச் செய்கிறது… நல்ல அணுக்கள் உடலில் விளைகிறது… அருளைப் பெருக்குகிறது.
3.இந்த உடலுக்குப் பின் ஞானிகளின் அருள் வட்டத்தில் நாம் செல்கிறோம்.
4.எந்த ஞானி இருளை நீக்கி ஒளியாக மாற்றினானோ அவன் ஈர்ப்பு வட்டத்திற்கே நாம் செல்ல முடியும்.

ஆகவே… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தைச் சென்றடைவதே மனிதனின் கடைசி எல்லை…!

உயிர் ஒளியானது… எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து தப்பிடும் உணர்வு பெற்றுத் தான் இந்த மனித உடலை அமைத்தது நம் உயிர்.

எல்லாத் தீமைகளையும் வென்று உணர்வின் தன்மை ஒளியாக ஆனவன் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன்.

குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்

 

நம்முடைய மூதாதையர்கள் பண்டைய காலங்களில் இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறை வரையிலும் ஒன்றாகச் சேர்த்து “ஒரு பெரிய குடும்பமாக” வாழ்ந்து வந்திருப்பார்கள்.

காலத்தால் சிறு வேதனைகள் வளர்ந்து மனஸ்தாபம் ஆகி ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால் இவர்களுக்குள் சொத்து பாகங்கள் பிரிக்கப்படும் பொழுது சிறிதாகிவிடும்.

ஏகமாக இருக்கப்படும் பொழுது சொத்தின் பெருமான அளவு அது அதிகரித்திருக்கும். ஆனால் பிரித்து வரப்படும் பொழுது
1.அவர்கள் உழைப்புக்கொப்பத் தன் பங்காகத் தனக்கு நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்
2.அது குறைவாக வரப்படும் பொழுது “என்னை இப்படி மோசம் செய்து விட்டார்களே…” என்று சாப அலைகளை விடுவார்கள்.

நான் ஒன்றி வாழ்ந்தேன்… நம்பி இருந்தேன் என்னை மோசம் செய்து விட்டார்கள்…! என்ற இந்த உணர்வின் சக்தியை வளர்த்து விட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் காணும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வரும். “இதுவும் தியானம் தான்…”

அந்த வெறுக்கும் தன்மை வளர்ந்து வளர்ந்து இவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வெறுப்பும்… அவரைப் பார்க்கும் பொழுது இவருக்கு வெறுப்பும் இப்படி வந்து விடுகிறது.

அதே சமயத்தில் இவரைச் சார்ந்தவர்கள் இரண்டு பேர் சாட்சியாக வருவார்கள் அதே மாதிரி அவர் பக்கம் ரெண்டு பேர் சாட்சியாக வருவார்கள்.

சார்ந்து பேசினாலும் இவர்கள் இடும் சாப அலைகள் அவருடன் இணைந்த மற்றவர்களுக்கும் இது இணைந்து விடும்.

எனக்கு மோசம் செய்தானே… இவன் எல்லாம் உருப்படுவானா…? அவன் குடும்பம் நன்றாக இருக்குமா…? என்று இப்படிச் சொல்லும் பொழுது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நீ இப்படிச் சொல்லலாமா…? நீதான் அப்படி ஆவாய். அவனுக்குச் சாட்சியாக இருந்து அவனைக் கெடுத்தவனே நீ தான்…! என்று
1.நண்பனுக்காக அல்லது இவனைப் போற்றி வளர்க்கும் நிலைகள் சாட்சியாகச் சொல்லப்படும் பொழுது
2.கேட்டறிந்த உணர்வுகள் கடும் சாப வினைகளாக இப்படிச் சிக்கிக் கொள்கின்றார்கள்.

அடிக்கடி இப்படிப் பேசி வித்தாக ஆனபின் என்ன நடக்கிறது…?

ஒரு மரத்தில் விளைந்த வித்தை ஒரு இடத்தில் நாம் ஊன்றினால் அந்த உணர்வின் துணை கொண்டு… காற்றிலிருந்து தன் தாய் மரத்தின் சத்தை நுகர்ந்து அது அதே மரமாக விளைகின்றது.

அது போன்று
1.ஒருவன் சாபம் இட்ட உணர்வுகள் நாம் கேட்டறிந்த பின் அந்த வித்தாக நமக்குள் விளைந்து
2.அந்த வித்து தன் மணத்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை அதைக் கவரும் பொழுது
3.ஆன்மாவாகச் சேர்த்து நம் உணர்வுடன் சேர்க்கப்படும் பொழுது
4.”அந்தச் சாபமிட்ட நிலைகள்” அடுத்து நாம் எந்தக் காரியம் செய்தாலும் அதைத் தடைப்படுத்துவதாக இது வந்து கொண்டேயிருக்கும்.

பாலில் பாதாமைப் போட்டு எவ்வளவு சுவையாக வைத்திருந்தாலும் அதிலே ஒரு மிளகாய் பட்டு விட்டால் அந்தக் காரத்தின் சுவை முன்னணியில் இருந்து அதை ரசிக்க விடாது செய்யும்.

இதைப் போன்று தான் சாபத்தின் நிலைகள்
1.உயர்ந்த குணங்கள் கொண்டு இருந்தாலும்… நல்லதைச் செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது
2.இவர் என்ன பெரிதாகச் செய்தார்…? என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
3.அவர் சொன்ன அந்தச் சொல்லையே நாம் திரும்பத் திரும்ப எண்ணி இதுவே நஞ்சாகி… கடுமையான வினைகளாக நமக்குள் விளைந்து விடும்.

அந்தச் சாப அலையின் தொடர் குடும்பத்தில் பாய்ந்து தாய்மார்கள் கர்ப்பமுற்றார்கள் என்றால்… இத்தகைய உணர்வுகளைக் கேள்விப்பட்டு அதைக் கவர நேர்ந்தால் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் குல வழியில் சாப அலைகள் தொடர்ந்து விடுகிறது.

குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தன்னை அறியாமலே சில தவறான நிலைகளும்… பல பல நோய்களும் உருவாகி விடுகின்றது.

ஆக… கருவில் இருக்கும் போது சாபங்களைக் கேட்டு நுகர்ந்தறிந்தால் தான் அது பதிந்து அந்த நிலை வருகின்றது

1.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால் எல்லோருக்கும் அந்த சாப அலைகள் சாடுவதில்லை.
2.சாபமிட்டதைப் பற்றிப் பேசி… சாபமிட்ட குடும்பத்தைப் பற்றிப் பேசி இருந்தால்
2.கருவற்றிருக்கும் குழந்தைகளில் அது வித்தாகி… அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

சாப அலைகள் “குல வழியில்” இப்படித்தான் வருகிறது…!

இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்… சந்தர்ப்பத்தால் எதனை உற்றுக் கேட்டு அதைக் கவர்ந்தனரோ வந்து இவ்வாறு இயக்கிவிடுகிறது.

இதையெல்லாம் துடைப்பதற்காக எத்தனையோ வழிகளை மகா ஞானிகள் கண்டுணர்ந்தார்கள். அதைத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

பூமியின் சுவாச அலையில் சிக்காது… “மெய் ஞானிகளின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”

 

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையை வங்கிட்டு… அதை மறைத்து விட்டு… ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி… அழியா ஒளி நிலை பெற நமக்கு வழிகாட்டுவது தான் “விநாயகர் தத்துவம்…”

அதற்காகத் தான் இந்தப் பிள்ளையார்…? என்று கேள்விக்குறி இட்டு நம்மைச் சிந்திக்கும்படி வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

உயர்ந்த ஒளியின் உணர்வாகத் தனக்குள் அரசாட்சி புரிந்து வருவது அனைத்தையும் மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தோம் என்றால் “அவனுடன் ஒன்றிய அவனாக” நாம் மாறுகின்றோம்.

1.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் “நான்” என்றாலும் தனித்த நிலைகள் கொண்டு உயிரே இயக்குகின்றது
2.அதிலே நாம் எண்ணிய உணர்வுகள் எது எதுவோ… அதனுடன் இணைந்து செயல்படும் பொழுது தானாகின்றது.
3.ஆனாலும் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது
4.அது தான் “நான் தானாகி – தான் நானாகின்றது.

உயிர் ஒளியின் தன்மையாக இருந்தாலும்… நுகரும் உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி மறைத்தாலும்
1.”தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதே”
2.பின் உணர்வின் ஒளியாக மாறிய பின் – மீண்டும் “ஒளி சிகரமாக மாறிய பின் நானாகின்றது…”

நான் தானாகி… தான் நானாகின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? என்று நினைவுபடுத்தி நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகப் பயன்படுத்தி விண் செல்ல வேண்டும் என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தியவர்கள் ஏழாவதாக ஒளி என்ற நிலை அடைந்து என்றும் பதினாறாக விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சை அடக்கும் சக்தி பெற்ற சூரியனோ அது கொதிகலனாகும் போது நஞ்சினைப் பிரித்தாலும்
1.அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் அதே நஞ்சினைக் கவர்ந்து ஓர் இயக்கச் சக்தியின் நிலையாகப் படர்கின்றது.
2.இருப்பினும் இந்தச் சூரியன் அது அழிந்திடும் நிலை தான்.

ஆனால் அதனின்று விளைய வைத்த உயிரின் ஒளி நிலைகள் தான் கவர்ந்த உணர்வை ஒளியாக மாற்றிவிட்டால் பின் எதிலுமே அது வேகுவதில்லை.
1.அத்தகைய வேகா நிலை பெற்றது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
2.அந்த நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

“நக்கீரனை எண்ணி…” சங்கின் குணத்தைப் பெற வேண்டும்

 

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக…!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு – நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன…?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி… ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி… நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட… சங்கு நீர் அமில குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்…! சூட்சமப் பொருளை மனதில் கொள்க…!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்

 

அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தால் தான் யாம் கொடுக்கக்கூடிய வாக்குகள் உங்களுக்குள் நல்ல முறையில் வேலை செய்யும்.

காரணம்…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுகளைத் தூண்டி
2.அந்த ஏக்க உணர்வுகளின் அடிப்படையில் தான் பதிவு செய்கின்றேன்.

அதே சமயத்தில் எப்போதுமே அன்னை தந்தையரை வணங்கிப் பழகுங்கள். அவர்களுடைய அருளாசியால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இது மிகவும் முக்கியம்.

யாம் கொடுக்கும் இந்த உபதேச வாக்குகளைச் சீராக உற்று நோக்கி அதைப் பதிவு செய்தால் ஞான வித்தாக வளர்ந்து
1.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.ஆத்ம சக்தி செய்யும் போது அந்த நேரத்தில் உடனுக்குடன் சிரமங்களைப் போக்க அது வழிகாட்டும்

ஆக… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உணர்வுகள் உடலைத் தனக்குள் அணைத்துக் காட்டும். எண்ணிய உணர்வின் ஞானமாக உணர்த்தும்.

அதன் வழியில் உங்களைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகையினால் யாம் உபதேசிக்கும் பொழுது கூர்ந்து கவனித்து இந்த வாக்குகள் பதிவாக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் இருங்கள்.
1.எந்த நல்லது பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வந்தீர்களோ
2.நல்ல முறையில் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் உடலில் அறியாது வந்த நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இப்பொழுது கிடைக்கும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போர் எல்லாம் நலம்பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் சொல்லிலே இனிமை பெற்று என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
12.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
13.பல உயர்ந்த உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்
14.உங்கள் உடலை எத்தகைய பிணிகள் இருந்தாலும் நீங்கும்… வலியோ வேதனையோ இருந்தால் குறையும்
15.தீமைகள் உங்களை விட்டு அகலும்… உங்கள் உணர்வுகளால் அறிய முடியும்.

ஆகவே யாம் கொடுக்கும் இந்த (மகரிஷிகள்) அருள் வாக்குகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவு கொண்டால் நீங்கள் ஏங்கும் போதெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீங்கள் சொல்லிப் பாருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள்

பாலோ தண்ணீரோ அல்லது பதார்த்தங்களையோ வைத்து இவ்வாறு ஜெபித்து அதற்கு அப்புறம் அதை எடுத்து உட்கொண்டு வாருங்கள். நல் மருந்தாக அமையும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

வடக்கு திசையின் முக்கியத்துவம்

 

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம் அதாவது…
1.காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலைப் (ஆகாரமாக) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

விசுவாத்திர மாமகரிஷிக்கு “
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சொர்க்கத்தை அடையும் தகுதி பெற்ற இந்த மனித உடலில் பிறருடைய குறை உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
1.நம் காரியங்கள் அனைத்தும் செயலற்றதாக ஆகிவிடுகிறது.
2.நமக்குள் குழப்ப நிலைகளை உருவாக்கிச் சிந்தித்துச் செயல்படுத்தும் சக்தியையும் இழக்கின்றோம்
3,துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியையும் இழந்து விடுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கிறேன் (ஞானகுரு) ஞான வித்தை உங்களுக்குள் உருவாக்குகிறேன். குரு காட்டிய அருள் வழியில் அந்த வித்தினை உங்களுக்குள் பெருக்க வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் இனிப் பிறவி இல்லா நிலைகள் அடைவேன்.
2.அரும் பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்…
3.அருள் வழியில் இந்த வாழ்க்கையை வாழ்வேன்…
4.என் கடைசி எல்லை பிறவி இல்லா நிலை தான்..! என்ற
5.இந்த உறுதி கொண்ட உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்
6.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆனால் மற்ற எந்த ஆசை கொண்டு எண்ணி எடுத்தாலும் அத்தகைய ஆசைகளால் செல்வங்கள் நிலைப்பதில்லை.

செல்வம் இருப்பினும் இந்த உடல் உபாதையான காலங்களில் கூட அது செலவழிக்கப் போதுமானதாக இருப்பதில்லை. பணம் அதிகமாக இருப்பினும் உடல் நலிவுற்ற நேரங்களில் நல்ல உணவையும் உட்கொள்ள முடிவதில்லை.

இது போன்ற நிலைகளில் விடுபட்டு பிறவி என்ற இந்தக் கடனைக் கடந்து பிறவி இல்லா நிலை அடையும் நிலையைச் செயல்படுத்துதல் வேண்டும்.

கீதையிலே சொல்வது… நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
1.நமது வாழ்க்கையில் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று நினைத்தால்
2.அருள் ஒளியின் சக்திகளை வளர்க்கின்றோம்… அதுவாக ஒளியாகின்றோம்.

அது இல்லாது இவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி… அவன் அப்படி…! என்ற நிலைகளில்
1.பார்க்கும் அனைவருக்குள் இருக்கும் குறைகளையும் கண்டு… அதையே கூறிக் கொண்டிருந்தால்
2.குறையின் உணர்வுகள் வளர்ச்சியாகி நோயின் தன்மையாகி இது நமக்குள் அதுவாகவே ஆகின்றது.

நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும் போது நம் தொழிலே குந்தகமாகின்றது. இது போன்ற எதிர்க்கும் உணர்வை வளர்த்து வளர்த்து… நமக்குள்ளேயே எதிரியை உருவாக்கி.. அடுத்து மனிதனல்லாத உருவை உருவாக்கும் தன்மை வந்துவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.

1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற மறவாது இருக்க வேண்டும்.

அதற்குத் தகுதியான நேரம் இந்த அதிகாலை துருவ தியான நேரமே…! நான்கிலிருந்து ஆறுக்குள் விழித்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம்… வளர்வோம்…! நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம். நம்மைப் பார்க்கும் அனைவரது தீமைகளும் அகலட்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

 

உந்து விசை கொண்டு புவியின் ஈர்ப்பைக் கடந்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றனர். புவியில் விளைந்த எரிபொருளின் துணை கொண்டு அதை இயந்திரத்தில் அடக்கி அழுத்தத்தால் உந்தி விண்வெளியில் வீசுகின்றனர்.

இராக்கெட்டை விண்ணிலே பறக்கும்படி செய்து. விண்ணிலிருக்கும் பல நிலைகளை எளிதில் கவர்ந்து அதை அறிகின்றனர். உடல் வாழ்க்கைக்காக (சுகத்திற்காக) விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

மெய் ஞானிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதனின் வலு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆனார்கள்
1.ஆதியில் அகஸ்தியன் இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தாலும் தன் அருகில் உள்ள சீடர்களுக்கு இதனை உபதேசித்தருளி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் உடலை விட்டு அகலும் போது “உந்து விசையால்… என்னை உந்தித் தள்ளுங்கள்…!” என்றான்
3.முதல் முதலிலே அகஸ்தியன் அவ்வாறு விண்ணுலகம் சென்றான்.
4.அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் விண்ணுலகில் ஏழாவது அறிவாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக விளைந்தார்கள்.

அக்காலங்களில் எழுத்தறிவு இல்லாததால் “உடலில் விளைய வைத்த உணர்வின் தன்மை கொண்டு பிறருக்குள் பதிவு செய்து…” அந்தப் பதிவின் நினைவின் ஆற்றலால் அவர்கள் வாழ்க்கையை இயக்கி… அவ்வாறு ஆரம்ப நிலையில் வளர்ந்தவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பிற்காலங்களில் மனிதனின் அறிவின் ஞானம் வளர… மனிதனின் உடலுக்கு இச்சைகள் சேர… இதுவே சொர்க்கம் என்ற நிலையில் அரசர்கள் சென்று விட்டார்கள்.

அரசனும் சரி… அவன் காட்டிய வழியில் சிக்கியவர்களும் சரி… அனைவரும் விண் செல்லாது அவர்கள் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் பேயாகச் சுழன்று… பேயின் உணர்வு கொண்டு தாக்கும் நிலைகளும்… பின் மிருக நிலைகளுக்கே சென்றனர். அரசன் வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம் (ஞானகுரு).
1.அருள் வழியில் உங்கள் உணர்வுகளை உந்தச் செய்து… உணர்ச்சிகளைச் தூண்டும்படி செய்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நினைவு கொண்டு உங்களைத் தியானிக்கும்படி சொல்கிறோம்.

ஆகவே வேகா நிலை பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வினை நமக்குள் வினையாகச் சேர்த்து அதை நாயகனாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் நம்மைச் சாடுகின்றதோ அத்தருணத்தில் “ஈஸ்வரா…” என்று அந்த மகரிஷிகளை எண்ணி அந்தச் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உள் செலுத்தி நாம் கேட்டறிந்த தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் தீமை செய்தவர்களுக்கும்… அதிலிருந்து அவரை மீட்டிட மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் பாய்ச்ச வேண்டும்.

இது தான் அன்றைய மகரிஷிகள் செய்த நிலைகள். அதனை நீங்கள் அனைவரும் பற்றிட முடியும் சாதாரண மக்களும் விண்ணின் ஆற்றலைப் பெரும் வண்ணம் தான் எளிதாகக் கொடுத்துள்ளார்கள் நமது தத்துவ ஞானிகள்.

தாமரை மலர்

 

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூல சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…? சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக
2.அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உபதேசத்தைப் பதிவாக்குவோர் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்க்கையில் அகஸ்தியனின் அருளாற்றலைப் பெற்றுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறலாம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை நமக்குள் பெருக்கி நம் உடலில் உள்ள அணுக்களை உயிருடன் ஒன்றாக்கப்படும் போது ஒளியின் உடலின் உணர்வாக மாறுகின்றது.

இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தான் நாம் இதைச் சேர்க்க முடியும்.

1.இதிலே நாம் சற்று சலிப்படைந்தாலோ அல்லது சிறிது தடையானாலோ
2.இந்த மனிதனின் வாழ்க்கையில் விஷத் தன்மைகள் நம்மை ஆட்கொண்டுவிடும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கவரப் பழகிக் கொள்ளுங்கள்.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் ஞானத்துடன் நீங்கள் வாழ்ந்து
2.இல்லற வாழ்க்கையிலும் சரி… தொழில் வழியிலும் சரி… மற்ற நிலைகளிலும் சரி…
3.தீமைகளை அகற்றும் வல்லுநராக நாம் ஆக வேண்டும்.

தீமையை அகற்றும் வல்லுநராக ஆக வேண்டும் என்றால் ஒவ்வொரு நிமிடமும்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிக் கவர்ந்தே ஆக வேண்டும்.
2.உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பரப்பியே ஆக வேண்டும்.

இத்தகைய நிலைகளில் வாழ்க்கையில் நீங்கள் செயல்படுவீர்கள் என்றால் இந்த உயிர் மனித உடலை உருவாக்கிய நிலை கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை பெறலாம் அது தான் “விஜய தசமி…”

நம் உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பத்தாம் நிலை என்ற நிலை அடைந்து… “ஏகாதசி…” என்றுமே அழியாத தன்மையாக அந்த ஒளியான நிலைகளை நாம் முழுமை அடையும் தன்மை பெறுகின்றோம்.

எதை வைத்து…?

இந்த ஆறாவது அறிவை வைத்துத் தான்…! அதனால் சற்று சிந்தித்து இந்த மனித வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வது.

ஏனென்றால்
1.சர்க்கஸில் விளையாடுவது போல்
2.“கரணம் தப்பினால் மரணம்…!” என்ற நிலையில் தான் இன்றைய மனித வாழ்க்கை நிலை உள்ளது.

நாம் எத்தகைய நல்ல மனிதராக இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பேதங்கள் வரும் பொழுது நம் நல்ல சிந்தனை இழந்து தவறு செய்வோனாகவே மாறுகின்றோம்.

நல்ல பண்புள்ளவராக இருப்பினும் பிறர் செய்யும் தவறுகள் நமக்குள் வந்தால் நம் குணங்களும் மாறுபட்டு நாமும் தவறு உள்ளவர்களாக மாறுகின்றோம்.

தவறு செய்தே வாழும் தன்மை வரப்படும் பொழுது இந்த உடலுக்குப் பின் மீண்டும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல முடிகின்றது. இந்த உடலில் எத்தகைய உணர்வை நுகர்ந்தோமோ அதற்குத் தக்க தான் இந்த உடலை மாற்றுகின்றது உயிர்.

ஆகவே தினமும் காலை துருவ தியானத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை ஏங்கித் தியானித்து
2.இந்த உடலில் பதிவாக்கி அதன் உணர்வைச் சுவாசமாக்கி எடுத்துக் கொண்டால்
3.தீமையை நீக்கிடும்… நஞ்சினை வென்றிடும்… நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்

 

மனிதனின் வாழ்க்கையில் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்து வரும் நஞ்சினை ஆறாவது அறிவு பெற்ற இந்த மனித உடல் மலமாக மாற்றி விடுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மையால் “இயக்கும் சக்தி” நமக்குக் கிடைக்கின்றது. அதாவது நஞ்சு கொண்ட உணர்வினை நீக்கித் தெளிந்த உணர்வு கொண்டு விளைந்திட்ட அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை அகற்ற வேண்டும்.

அதை அகற்றவில்லை என்றால் நஞ்சு கலந்து… பின் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.

உடலில் அழுக்குப் பட்டால் குளிக்கின்றோம். வேலை செய்யும் போது கையில் அழுக்குப் பட்டால் சுத்தப்படுத்தி அதற்குப் பின் உணவை உட்கொள்கிறோம்.

நாம் அணியும் ஆடைகளில் அழுக்கு அதிகரித்து விட்டால் சோப்பைப் போட்டு நுரையேற்றித் துணியுடன் இரண்டறக் கலந்த அழுக்கினைப் போக்குகின்றோம். மனிதனின் ஆறாவது அறிவினுடைய செயல்கள் தான் இது எல்லாம்.

ஆனால் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள்…?

1.அன்றைய மகரிஷிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி
2.”சக்தி வாய்ந்த உணர்வைத் தனக்குள் நுகர்ந்து”
3.தன்னை அறியாது புகுந்த உணர்வினை ஆறாவது அறிவால் நீக்கி
4.தன் எண்ணத்தைத் தெளிவாக்கித் தெளிந்த உணர்வு கொண்டு வாழ்க்கை வாழ்ந்து
5.அருள் ஒளியின் சொத்தாகத் தன் உயிருடன் ஒன்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவரில் விளைந்த உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது காற்று மண்டலத்தில்… அதாவது பூமிக்குள் பரமாத்மாவாவிலே கலந்துள்ளது.

இதைப்போல மற்ற தாவரங்கள் உமிழ்த்தும் “அதனதன் உணர்வும்… அதனதன் மணமும்… அதனதன் குணமும்…” வெளிப்பட்டு வருவதை இதே சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாவிலே சுழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதருக்குள் எத்தகைய நோய்களாக விளைந்ததோ அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நோயின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமாத்மாவில் கலந்துள்ளது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆவதற்கு முன் நாம் உயிரினங்களாக வாழும் பொழுது
1.அந்தந்தச் சரீரத்தில் தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு விளைந்த உணர்வுகள் இதே பரமாத்மாவில் தான் உண்டு.
2.ஒவ்வொரு சரீரத்திலும் காத்திடும் உணர்வை ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த வித்தின் தன்மையாக
3.அந்தந்த உடலிலே காத்திட்ட உணர்வுகளும் இந்தப் பரமாத்மாவிலே கலந்துள்ளது.

இவ்வாறு “எத்தனை சரீரங்களில் நம்மைக் காத்திடும் உணர்வாக எடுத்துக் கொண்டோமோ” அது அனைத்தும் நமக்குள் வித்தாக இருப்பினும்
1.அதில் விளைந்த உணர்வுகள் அலைகளாகப் படர்ந்து இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்துள்ளது.
2.அத்தகைய நல் உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வளர்த்திடும் நிலையாக வர வேண்டும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலையை உணர்ந்து… நம்மை அறியாது மூடி மறைக்கும் தீமைகளை ஆறாவது அறிவு கொண்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றப் பழகிடல் வேண்டும்.

கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் அது விலகாது

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

சாப வினை எப்படி வருகிறது…?

 

கடந்த காலங்களில் குடும்பத்தில் பற்றும் பாசத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதில் கொடுக்கல் வாங்கலிலோ… உணவாக உட்கொள்ளும் நிலைகளிலோ… அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பொழுதோ அந்தச் சந்தர்ப்பம்… ஒருவர் அதிகமாகச் செலவழித்து ஒருவருக்கு அதைக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பேதங்கள் வருகிறது.

1.அவர் போகும் போது தனக்கு வேண்டியதை மட்டும் சௌகரியமாக எடுத்துக் கொண்டு செல்கின்றார்
2.நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ற இந்தப் பகைமை உணர்வுகள் விளைந்து விடும்.

பொறுத்திருந்து… அவர் போகும் போது கொடுத்திருக்கலாம் என்றாலும் அது வரை பொறுக்காது கோபம் மேலிட்டு… வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த வெறுப்பு ஊழ்வினை என்று வித்தாக ஆழமாகப் பதிவாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவர்களுக்குள் வெறுப்பு வளரத் தொடங்கி விடுகிறது.

அது பரவி வர வர அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு. வெறுப்பான உணர்வு கொண்டு அடுத்து சுடு சொல்லாகத்தான் வரும். பெரியவர்களாக இருந்தால் மதிக்கச் சொல்லாது.

ஆகவே… மதிப்பற்ற நிலைகள் நம் சொல் வெளிப்பட்டு நம்மைப் பார்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் சேர்த்த வெறுப்பான உணர்வுகளும் அவர்கள் சுவாசித்து நம் மீது வெறுப்படையும் தன்மையாக விளைந்து விடுகின்றது.
1.மூதாதையர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பொழுது
2.நாளுக்கு நாள் பகைமைகள் உருவாகி இத்தகைய இடையூறுகள் வந்துவிடுகிறது.

அடுத்து பாகப்பிரிவினை வரும் பொழுது எனக்கு இவ்வளவு தான் கொடுத்தார்கள் அவனுக்கு நிறையக் கொடுத்தார்கள் என்று பாசத்துடன் ஒன்றி வாழ்ந்த நிலைகளில் இதைப் போன்ற நிலைகள் தடைப்படுகிறது.

தடைப்பட்ட பின் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தாலும்… மூத்தவராக இருக்கப்படும் பொழுது அவர்கள் பிள்ளைக்குத் தனியாகச் சலுகை செய்கின்றார்கள்… என் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை…! என்ற இந்த உணர்வு நஞ்சின் தன்மையாக விளைந்து விளைந்து “நாளடைவில் விஷத்தின் தன்மையாக விளைந்துவிடுகிறது…”

பின் யார் மீது இந்த வெறுப்பு அதிகமாக விளைந்ததோ “அடப்பாவி இப்படிச் செய்கின்றாயே… இப்படிச் செய்கின்றாயே…” என்ற நிலைகள் இந்த உடலில் அதிகமாக விளையப்பட்டு “வெளிப்படும் மூச்சுகள்…” அந்தக் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுப்பானாலும் வெறுப்பற்றவர்களோ…
1.எதற்காக நீங்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள் என்ற உணர்வுடன்
2.ஒன்று சேர்ந்து வாழ நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும்
3.பாகப்பிரிவினையால் விளைந்த பேத உணர்வுகள் அங்கேயும் சேர்த்து அறியாதபடி… அவர்களுக்குள்ளும் வெறுப்பின் உணர்வுகளே விளையும்.

எனக்கு இப்படிச் செய்தானே… அவன் குடும்பம் உருப்படியாகுமா…? என்ற இந்த உணர்வுகள் அதிகரித்து விடுகிறது. இது போன்ற சாப உணர்வுகளை வெளியிட்டால்… வெளியிட்ட அந்த அலைகள் அவர்கள் உடலில் மறைந்து “வித்தாக” விளைந்து வரத்தொடங்கும்.

இரண்டு தலைமுறைக்குப் பின் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் கரு உருவாகிக் குழந்தைகள் பிறந்த பின்…
1.அதே சாப அலைகள் தொடரப்பட்டு
2.மூதாதையர்கள் உடலில் விளைந்த உணர்வின் உமிழ் நீர் (அமிலங்கள்) கூடி… அந்த உணர்வின் சத்து வித்தாக மலர்ந்தது
3.இங்கே சொல் வடிவில் இணை பிரியாது வந்து கொண்டே இருக்கும்.
4.சாப அலைகளாக குடும்பங்களில் அது இயக்குவதை இன்றும் பார்க்கலாம்… நம்மை அறியாமலே மறைமுகமாக வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் எத்தனை இன்னல்கள் பட்டோமோ… மனிதனான பின்னும் இப்படிப்பட்ட தீமைகளில் சிக்குண்டு… தீமைகளை அகற்ற முடியாத நிலைகள் தான் நாம் சுழன்று கொண்டுள்ளோம்.

மூதாதையர்கள் குடும்பத்திற்குள் இட்ட சாப அலைகள் பதிந்து அவருக்குள் விளைந்தது அலைகளாகப் பரவி உள்ளது. அதிலே ஒருவருக்கொருவர் தான் எண்ணியதற்குத் தடை வரும் போது பகைமையாகி அதனால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அடுத்தவருக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தி… அதைக் கண்டு ரசித்து மடிந்தவர்களும் பலர் உண்டு.

வேதனைப்பட்டவர்களைக் கண்டு ரசித்த உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது குடும்ப குடும்பத்தின் சந்ததியினருக்கும் இது வருகின்றது. உடல்களில் இருந்து குல வழியில் இது வருகின்றது.

1.உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் எல்லாம் மூதாதையர்களால் விளைந்தது தான்
2.ஒருவருக்கொருவர் இன்னல் படும் பொழுது “தான் என்ன செய்வது…?” என்று பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
3.அதே சமயத்தில் வேதனைப்பட்ட உணர்வுகளால் உறுப்புகள் சீராக இயங்காது
4.உமிழ் நீர்கள் சுரக்கப்படும் பொழுது உறைந்து அது நெஞ்சுச் சளியாக உருவாகின்றது.

விஷத்தன்மை கொண்டு அங்கே உருவான அத்தகைய உணர்வுகள் அணுவாக மலர்ந்து வித்தாக உருப் பெற்று வருகின்றது. அதன் வழிகளிலும் குல வழிகளில் பின் தொடர்ந்து வருகின்றது.

தனித்த மனிதர் நம்மிடமிருந்து இப்போது அந்த நோய் வரவில்லை. முந்தி எத்தனையோ நிலைகள் விளைந்தது… குல வழியில் நமக்குள் பின் தொடர்ந்து வருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிய அந்த சாப அலைகள் கொடூரத் தன்மை கொண்டது.
1.கொடூரத் தன்மை கொண்டு நமக்கு கிடைக்கும் நல்ல நிலைகளை அது கிடைக்க விடாதபடி தடுத்து
2.இருள் சூழ்ந்த நிலையாக்கி மனிதனுக்குள் எதிர்நிலையாக வருகிறது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் வாழ்க்கையில் இது போன்ற நிலை வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். யார் மீது அவர் பற்று கொண்டு வாழ்ந்தாரோ அவர் தற்கொலை செய்ததைக் கேள்விப்பட்டு ஆ…! என்று அதிர்ச்சி அடைந்தால் போதும். அந்த ஆன்மா இவர் உடலுக்குள் வந்துவிடும்.

இப்படி இந்த உடலுக்குள் வந்த பின் அந்தப் பேய் மனம் கொண்ட உணர்வுகளையே இந்த உடலுக்குள் தூண்டும். ஆனால் புகுந்த உடலில் எந்த எரிச்சல் இல்லை என்றாலும் இது (புகுந்த ஆன்மா) “எரியுதே… எரியுதே…!” என்று எரிச்சலை ஊட்டும்.

இந்த உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் மடியத் தொடங்கும்.
1.இத்தகைய நிலைகள் ஆன பின் தாங்காது
2.இதுவும் அதே வேலையைச் செய்யும்.

இதிலிருந்து நாம் எப்படி மீள்வது..?

ஆனால் பக்தியின் தன்மையில் நாம் இதற்கு என்ன செய்கிறோம்…? கோவிலில் போய் அர்ச்சனை செய்தால் இந்தக் கஷ்டம் தீரும்… அதற்கும் முடியவில்லை என்றால் யாகத்தை வளர்த்துப் பாவத்தைப் போக்கிக் கொள்…! என்று சொல்கிறார்கள்.

யாகத்திலே அவர்கள் சொல்லும் மந்திரத்தைக் கேட்டுப் பதிவாக்கிக் கொள்கிறோம்.
1.இன்ன மந்திரத்தையே நீ சொல்லிக் கொண்டிருந்தால் உனக்குத் தொந்திரவு இல்லை
2.காளி உன்னைக் காப்பாற்றும்…! என்று எந்தக் காளியை அவர் வணங்குகின்றாரோ இவ்வாறு சொல்வார்கள்.

உதாரணமாக புலியைக் கண்ட பின் மற்ற மிருகங்கள் எல்லாம் அஞ்சத் தான் செய்யும். பொதுவாகக் “கோப உணர்வு கொண்டு இறந்த ஆன்மாக்கள்…” அந்தக் காளியை வணங்கத் தான் நேரும்.

அந்த மந்திரத்தைச் சொல்லியே வாழ்ந்து கடைசியில் அந்த ஆன்மா வெளியிலே வந்தது என்றால் அதே மந்திரத்தைச் சொல்லும் போது “காளியை (ஆனால் அது ஆவி) நான் வசியம் செய்துவிட்டேன்…!” என்பார்கள்.

இதற்குள் ஒரு உணர்வினைச் செலுத்தி கரு மையாக்கி உடலிலே ஒரு இரட்சையாகப் (தாயத்து) போட்டுவிடுவார்கள்.

போட்ட பின் புலியைக் கண்டு எப்படி மற்ற மிருகங்கள் அஞ்சி ஓடுகின்றதோ இதே போல் அந்த இரட்சையைத் தொட்ட பின் உடலில் இருக்கும் அந்த ஆன்மா (முதலில் புகுந்தது) பயந்து ஓடும்.

பின்… இதே உணர்வின் தன்மையைச் சில காலம் சுவாசித்தால் போதும். தாயத்து கட்டி இருப்பவர்கள் பெரும்பகுதியானோர் உடலில் எல்லாம் பார்க்கலாம். கை கால் குடைச்சல் இருந்து கொண்டே இருக்கும்…! (தாயத்தில் இருக்கும் பிறிதொரு ஆன்மாவின் இயக்கம்)

இந்த உணர்வுகள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு எதிர்நிலையாகி இடையூறு ஊட்டும்.
1.இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசித்தால் அப்புறம் இன்னொருத்தரிடம் போய் தாயத்தைக் கட்டச் சொல்லும்.
2.இன்ன இடத்தில் போய்த் தாயத்தைக் கட்டினால் நன்றாகும் என்று கேள்விப்பட்டவுடனே அங்கே போவோம்.
3.இப்படி ஒவ்வொரு மந்திரக்காரர்களிடம் நாம் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டியது தான்…!

நாம் இறந்த பின் என்ன நடக்கும்…? இதே மந்திரத்தைச் சொல்லி நம் ஆன்மாவைக் கைவல்யப்படுத்திக் கொள்வான் “இன்னொரு மந்திரவாதி…”

முதல் மந்திரக்காரன் என்ன வேலை செய்தானோ அதே வேலைக்கு நம்மை இவனும் பயன்படுத்துவான். யானை தேய்ந்து கட்டெறும்பாக ஆன மாதிரி ஆக வேண்டியது தான்…!

நாம் நினைக்கின்றோம் உடலில் இருக்கும் பொழுது பல தொல்லைகள் என்று…! ஆனால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் எந்த நிலை ஆகின்றோம்…! என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

ஆனால் விஞ்ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்கள். ஒரு தாய் கருவுற்ற பத்து நாளிலேயே அந்தக் கருவில் வளரும் சிசுவை ஒரு காந்த ஊசி கொண்டு (கதிர்கள் மூலமாக) இலேசாக எடுத்து மோதச் செய்கிறார்கள். அப்பொழுது அந்தச் சிசு வேதனையால் துடி துடிக்கின்றது…!

இதை எல்லாம் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர். ஏனென்றால் அன்றைய ஞானிகள் இதை எல்லாம் மிகவும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.

1.கருவுற்ற தாய் ஒன்றைக் கூர்மையாக உற்றுப் பார்த்துப் பயந்து அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது
2.கருவில் வளரும் உயிருக்கும் இந்த உணர்வுகள் பாய்ச்சப்பட்டு
3.தாய் பயப்படுவது போன்றே அந்தக் குழந்தையும் பயப்படுகிறது.

நாம் துடிப்பதைப் போன்றே கருவில் இருக்கும் குழந்தையும் துடிக்கின்றது. இதுகள் எல்லாம் கருவில் வளரும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

“நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமானது…” என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

சில செடி கொடிகளை (வாசனையை) நாம் நுகர்ந்தால் மகிழ்ச்சியும் சில செடிகளை நுகர்ந்தால் மயக்கமும் வரும். அது போல்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை “எது அதிகமாக வருகின்றதோ” அதுவே நம் உடலில் மணமாக (ஆன்மா – மனம்) மாறும்.
2.இந்த மனம் அதிகமாகப் படும் பொழுது ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் பொழுது சிறுகச் சிறுகக் கலந்து
3.அதனின் வலு குறையாது அந்த மண(ன)த்தை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் நஞ்சுக்கு வீரிய சக்தி ஜாஸ்தி. காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் ஆகும் பொழுது என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் நம்மிடம் வந்து மீண்டும் மீண்டும் “ஐயா…ஐயா…” என்று திரும்பத் திரும்ப கேட்டது நமக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

காசை எடுத்துக் கொடுப்பதற்கு முன்… “இத்தனை தரம் கேட்கின்றானே…” என்று அந்த நேரத்தில் அவனை எப்படி வெறுத்தோமோ வீட்டிற்குள் வந்த பின் பையன் மீது வெறுப்படைவோம்.

பிச்சைக்காரன் இரண்டாவது தரம் மூன்றாவது தரம் எப்படிக் கேட்டானோ அதே போன்று நாமும் பையனிடம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பிப்போம். பையன் நம் மீது வெறுப்படைவான். வீட்டில் பெண்களிடம் சொன்னாலும் இனம் புரியாது அவர்களும் வெறுப்பார்கள்.

இதைப் போய் ஜோசியக்காரனிடம் சென்று இப்படி இருக்கிறது என்று சொல்லிக் கேட்டால்
1.உங்களுக்குக் கெட்ட காலம்… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கின்றான்…
2.உங்கள் நட்சத்திரப் பிரகாரம் இப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்வான்… உறுதிப்படுத்திவிடுவான்.

இதுகள் எல்லாம் நம்மை அறியாது உடலுக்குள் விளைந்த உணர்வுகளின் இயக்கம் தான். ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான்.. நம்மை அவன் முறைத்து முறத்துப் பார்த்தான் நாம் பதிலுக்குப் பேசினோம் என்று இருப்போம்.

ஒரு பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டால் யார் குடித்தாலும் காரமாகத்தான் இருக்கும். நல்ல சுவையை அது இயக்க விடுமா…?

நான் நல்லவன்… எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று சொன்னாலும் அவர் அந்தப் பாலைக் குடித்தாலும் இந்தக் காரம் தான் முன்னாடி வரும்.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வு நமக்குள் இயங்கப்பட்டுக் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்… இனம் புரியாத வெறுப்பு…! தனக்கு முதியவர்கள் இருந்தாலும் இதே நிலைகள் உருவாக்கப்பட்டு வீட்டில் கலக்கங்கள் வந்துவிடும்.

ஏனென்றால்
1.எந்தப் பிச்சைக்காரன் உடலில் அந்த உணர்வுகள் விளைந்ததோ
2.“ஐயா……” என்ற இந்த சோகமான உணர்வு அவன் எப்படி வேதனைப்பட்டானோ
3.அது நமக்குள் ஆகி நம் உயிரிலே பட்டு இயக்கங்கள் ஆகும் போது அந்த உணர்ச்சிகள்
4.நம்மை… நம் குடும்பத்தை… மற்றவர்களை… எப்படி இயக்குகிறது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் அது வித்தாகி அதன் வளர்ச்சிக்கு வரும் பொழுது இந்த நிலையைத் தான் செயல்படுத்தும். இதெல்லாம் இயற்கையினுடைய சில செயல்கள்.

தொழில் செய்யும் இடத்திலும்… நான் முதலாளியாக இருக்கின்றேன்…. நிர்வாக நிமித்தமாகச் சுற்றிப் பார்க்க வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

இதே உணர்வின் வேகங்கள் அங்கேயும் சொல்லாக வரும். வேலை செய்யும் அந்தத் தொழிலாளி செவிகளில் இது பட்டபின் நம்மை உற்றுப் பார்ப்பான்.

பார்க்கப்படும் பொழுது பிச்சைக்காரனிடம் எந்த வெறுப்படைந்தோமோ அவன் மீது பட்டு முதலாளி என்று அச்ச உணர்வுகள் இருப்பினும் அவனை பலவீனப்படுத்தும் நிலையே அங்கே வரும்.

முதலாளி வந்தார் பார்த்தார் என்று சென்றாலும்… அடுத்த கணம் அகன்ற பின் அந்த வெறுப்படைந்த உணர்வுகள் அவன் இயந்திரத்திலோ மற்ற நிலையில் அவன் வேலை செய்யப்படும் பொழுது அல்லது கணக்குகளை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.இவன் உணர்வுக்கொப்ப கண்ணின் புலனறிவு ஓடும்.
2.ஒரு இயந்திரத்தை அவன் இயக்குகிறான் என்றால் இயந்திரத்திற்குள் இந்த உணர்வலைகள் பட்டு
3.அந்த காந்தப் புலனறிவால் துரித நிலையில் இயக்கப்பட்டு அதனுடைய ஈர்ப்புத் தன்மை மாறி
4.நாம் எந்த வெறுத்த உணர்வு கொண்டு உற்று நோக்கினோமோ அது இயக்கப்பட்டு (ஏனென்றால் எல்லாவற்றிலும் காந்தப்புலன் உண்டு)
5.அந்த இயந்திரம் சீரற்ற நிலையாகி… “உற்பத்தியாகும் பொருள் தரமில்லாது பாதிப்படைந்து விடும்…”

ஆக முதலாளி பார்த்தார் என்றாலும் வேலை செய்கின்றவரின் உணர்வுக்குள் அது ஊடுருவி அங்கே தவறுகளை உண்டாக்கி விடும் நம்முடைய சோர்வான உணர்வு மற்றவர்களின் செயல்களுக்குள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு நம் தொழிலையும் அது பாதிக்கும்.

தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தால் நமக்குள் விளைந்த வெறுப்படைந்த உணர்வுகள் “அங்கே மற்றவர்களுக்குள் கலந்து கலந்து…” நம்மை உற்று நோக்கி எதிர்பார்ப்பவரின் உணர்வுக்குள் இயங்கி… “நமக்கே எதிரியாக்கிவிடும்…”

அதே சமயம் அந்த உணர்வு கொண்டு வீட்டிற்குள் நாம் அமரும் இடத்திலும் இது அதிகமாகப் பதிவாகின்றது.
1.அதிலே சூரியனின் காந்த சக்தி (வெப்பம்) படரப்படும் போது அது அலைகளாக் கிளர்ந்து அங்கே (வீட்டிற்குள்) பரவத் தொடங்கும்.
2.ஆன்மாவில் அது கலந்து அதிகமாக அதையே நினைவு கூறும் தன்மை வந்துவிடும்.

தொழிலில் கஷ்டமும் நஷ்டமும் எடுத்துக் கொண்ட பின்… எதை எதை எல்லாம் உடலில் விளைவிக்கின்றோமோ… அந்த உணர்வுகள் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது ஆழமாக அங்கே (தரைகளிலும் சுவர்களிலும்) பதிந்து
1.அதுவே மீண்டும் மீண்டும் நினைவாற்றலாக வரும்… சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கும்.
2.இதையெல்லாம் நீக்க வேண்டுமா இல்லையா…! இதை யார் நீக்குவது…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே… ஒளி நிலை பெறும் மார்க்கம்”

 

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக… கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

1.தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான்
2.”மாமகரிஷியாக நம்மை ஆக்கும்…” என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் “ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்…”

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

(நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பிக் கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது… அதைக் காக்காது… மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே… இருளுக்குள் சென்று விடுகின்றோம்)

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் சரி… அதை வைத்து இந்த உடலை நாம் அழகு படுத்தினாலும் சரி…
1.இந்த உடலை நாம் காக்கப் போவதில்லை… இது நிலைத்திருக்கப் போவதும் இல்லை… இது நிலையானதும் இல்லை.
2.நிலையாக இல்லாத இந்த உடலுக்கும் நிலையற்ற சொத்துக்கும் தான் அது பயன்படுகிறது.

இதைக் காக்க எவரால் முடியும்…!

1.சொத்தை வைத்து என் பிள்ளையைக் காப்பேன்…! என்று யாராலும் உறுதி கூற முடியுமா..?
2.தேடிய சொத்தை என் பையன் வைத்துக் காப்பான் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா…?

அப்படி வைத்திருந்தாலும் வேதனையை உருவாக்கும் நிலை தான் வருகின்றது. செல்வத்தைத் தேடினாலும் பையன் குறும்புத்தனம் செய்தான் என்றால் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையை உங்களுக்குள் வளர்த்து உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கத்தான் முடியுமே தவிர… அவனைக் காக்க முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் மனிதன் விடுபட வேண்டும் என்பதற்குத் தான் முன்னோர்களை விண் செலுத்தும் தத்துவத்தைத் தெளிவாகக் கொடுத்தார்கள் ஞானிகள்.

ஆகவே… நம்மைச் சார்ந்த முன்னோர் மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண்ணுக்குச் செலுத்தி அவர்களை முதலில் பிறவியில்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.

ஒரு தேரை இழுக்கிறோம் என்றால் ஒருவரால் இழுக்க முடியாது. பலரும் சேர்ந்து தான் அந்தத் தேரை இழுக்க வேண்டும்.

1.கூட்டுத் தியானத்தின் மூலம் பலரும் சேர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வின் சக்தியை நுகர்ந்து வலுவாக்கிக் கொண்டு
2.நம் மூதாதையர்கள் ஆன்மாக்களை (இதற்கு முன் நம் செய்யத் தவறியதை) முறைப்படி நாம் விண் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலமே விஷத் தன்மையாகி விட்டது. அதை நுகரும் போது விஷ அணுக்கள் நமக்குள் உருவாக்கப்பட்டு… சிந்தித்துச் செயல்படும் திறன் இழக்கப்பட்டு… அசுர உணர்வு கொண்ட கொடூர செயல்களைச் செய்யும் தன்மை இன்று உருப்பெற்று வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபடுதல் வேண்டும்.

உயிர் மனிதனாக நம்மை உருவாக்கிய பின்… பௌர்ணமி எப்படி ஒளியாக… முழுமையாகப் பிரகாசிக்கின்றதோ அதைப் போல் அறிந்திடும் அறிவாற்றல் பெற்றவர்கள் தான் நாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒளியின் சரீரமான அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது… நினைவு கொண்டு நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீங்களே அகற்றும் சக்தியும் அருள் ஒளியை வளர்க்கும் சக்தியையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

1.அந்த நிலை பெறச் செய்வதற்கே “எமது குருநாதர்” காட்டிய அருள் வழியில்…
2,இல்லை… நமது குரு…!
3.ஏனென்றால் அவர் காட்டிய அருள் வழியை நீங்கள் ஏற்றுக் கொண்டால் “நமது” என்று வருகின்றது.
4.ஆனால் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இல்லை என்றால் “எனது குரு…” என்று தான் வருகிறது.

அவர் காட்டிய முறைப்படி அந்த அண்டத்தின் சக்தியை இந்தப் பிண்டத்தில் சேர்த்து உணர்வின் சக்தி ஒளியாக ஆக்கும் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கிறேன் (ஞானகுரு).

களி நடனம்…!

 

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி… வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு… பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே…!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெற வேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெற வேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்

 

பூரண நிலவாக இருக்கப்படும் போது சந்திரன் முழுமையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை எந்தக் கோளும் இடைமறிப்பதில்லை…. நேரடியாகச் சந்திரனுக்கு வருகின்றது.

பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசிக்கின்றது. இருந்தாலும் அடுத்த நாளை எடுத்துக் கொண்டால் மற்ற கோள்கள் இடைமறிக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக பதினைந்து நாட்களில் தேய்பிறையாக மாறிவிடுகின்றது அதனுடைய ஒளி மங்கிக் கொண்டே வருகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த ஒளிக்கதிர்களை மற்ற கோள்கள் தடைப்படுத்துவதனால் இருளடைந்து அதனுடைய முடிவுக்கு வருகின்றது… முழுமையாக மறைந்து விட்டால் அமாவாசை.

அதே போல் அது சமயம்
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை மறு பிரதி பிம்பமாக (கண்ணாடி போல்) வெளிப்படுத்தும் சக்தி
2.சந்திரனிலிருந்து வருவது நம் பூமிக்கும் கிடைப்பது தடைப்படுகின்றது.
(பௌர்ணமி முழுமையாக இருந்தால் பூமியில் இரவிலும் அந்த வெளிச்சம் தெரியும்)

ஆனால்
1.அமாவாசைக்குப் பின் வெள்ளிக் கோள் அதன் அருகில் வந்து ஒளிக்ற்றைகளை எடுத்துக் கொடுக்கின்றது
2.சிறுகச் சிறுக சூரியனின் ஒளியைப் பெறப் பெற… சந்திரன் மறுபடியும் பூரண நிலவாக “பௌர்ணமியாக” வருகின்றது.

உயிரணு தோன்றி எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர். முழு நிலா எப்படி இருக்கின்றதோ இதைப் போல்
1.மனிதன் இயன்றவரை அனைத்து நிலைகளையும் அறிந்து…
2.தீமைகளை அகற்றி வாழக்கூடிய உணர்வின் உணர்ச்சிகளை எழுப்பும் மனித உடலாக அமைக்கின்றது நமது உயிர்.

இப்படித் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கார்த்திகேயா என்று காட்டுகின்றார்கள். அதாவது நமது ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

மனித வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிந்து கொண்டு பிறிதொரு மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவன் அவனுக்கு ஆகாதவனை வெறுத்துக் கோபமாகப் பேசுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனின் சிந்திக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.

கோபமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் செயலினை நாம் பார்த்தால்…
1.நமக்குள்ளும் கோபத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
2.சிந்திக்கும் தன்மை இழந்து நிந்திக்கும் உணர்வு நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் புழுவிலிருந்து எத்தனையோ கோடி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையில்
1.தன்னைக் காட்டிலும் வலிமையான உயிரினங்களிடம் சிக்கி
2.அது துன்புறுத்தி உணவாக உட்கொள்ளும் போது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில்
3.உணவுக்காக அந்த மிருகம் இதைக் கொன்று தசைகளைத் தின்றாலும்
4.அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுவாகி
5.இந்த உயிரான்மா அந்த உடலுக்குள் சென்று அதனுடைய உணர்வை எடுத்து அதே உடலாக மாறுகின்றது.
6.அதனுடைய குட்டியாகும் போது அது இதைப் பாதுகாக்கிறது.

இதே மாதிரி ஒவ்வொரு உடலிலும் “தான் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரான ஈசனை நாம் மதித்து நடக்க வேண்டும்…”

வீட்டை அழகாகக் கட்டி வைத்திருந்தாலும் எப்படியும் அதில் தூசிகள் படுகின்றது… நூலாம்படைகளும் வருகிறது. அதை எல்லாம் துடைக்கத் தவறினால் தூசிகள் அதிகமாகி நெடி வந்துவிடும்.

அந்த வீட்டில் அடுத்து நாம் அமர முடியாது… குடியிருக்க முடியாது

அது போல் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ தீமைகளைச் சந்தித்திருந்தாலும் அதை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய உடல் அமைப்பைக் கொடுத்தது நமது உயிர்.

சிந்தித்துச் செயல்படும் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி இந்த உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் தான் மனிதர்களான நாம்.

உடல் என்பது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடல் ஒரு ஆலயம்… இது ஒரு கோட்டை.

ஆறாவது அறிவைக் கொண்டு தூய்மையான உணர்வுகளை இந்த உடலுக்குள் பெருக்கி… உயிருடன் ஒன்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் பருவம் பெற்றது…
1.இதே உயிர் தான்…! அவனை ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி
2.வாழ்க்கையில் வரும் தீமைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தவறினால் அழுக்குகள் அடைந்து ஒவ்வொரு குணமும் பாழ்பட்டுவிடும்..

எப்படிப் பூரண நிலா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முழுவதுமாக இருள் அடைவது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருளடைந்து… உயிர் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு வெளியே சென்றுவிடும்.

வெளியில் சென்றாலும் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்ட மிருக இனங்களாகத்தான் அடுத்துப் பிறக்க வேண்டி வரும். மனிதனல்லாத உருவாகத் தான் பிறக்க நேரும்.

அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் தீமைகள் உங்களுக்குள் வரும் பொழுதெல்லாம்
1.வெள்ளிக் கோள் தன் ஒளிக்கற்றைகளால் சந்திரனுக்கு (அமாவசைக்குப் பின்) ஜீவன் ஊட்டியது போல்
2.அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகப் பெருக இருளகன்று என்றுமே ஒளியின் அறிவாக நிலைத்திருக்க முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பாம்பு மிரட்டி நரி மிரட்டி புலி மிரட்டி யானை மிரட்டி என்றெல்லாம் சில தாவர இனங்களைச் சொல்வார்கள். அதிலே ஒரு பச்சிலையைக் கையில் வைத்துக் கொண்டால் தேள் கொட்டாது.

உதாரணமாக ஈயம் பூசும் நமச்சாரத்தைச் சுண்ணாம்புடன் கலந்தால் கேஸ் (GAS) உண்டாகும். தேள் கொட்டியது என்றால் அபப்டியே நசுக்கி மோந்து பார்த்தால் விஷம் மேலே ஏறாதபடி கீழே இறக்கிவிடும்.

அதே சமயத்தில் கொடுக்கு பட்ட நரம்பில் அந்த விஷம் இருந்தால் கடு கடு என்று இருக்கும். அதிலே சுண்ணாம்புடன் சேர்த்த நமச்சாரத்தைப் போட்டு விட்டால் கடு கடுப்பு இருக்காது. சிறிது நேரம் தான் இருக்கும்.

இப்படி விஷத்தைத் தணியச் செய்யும் பல பல பச்சிலைகள் உண்டு.

“சிரியா நங்கை” என்ற பச்சிலையை வாயிலே போட்டு மென்றால் கசப்பாக இருக்கும். ஆனால் விஷம் இருந்தால் கசக்காது. அதை அதிகமாக மென்று தின்று விட்டு கசக்கி நன்றாக மோந்து பார்த்தால் உடனே விஷம் குறையும்.

1.சுண்ணாம்பில் இதை நசுக்கி கொஞ்ச நேரம் நுகர்ந்து பார்த்தால் மூளை பாகம் வரை இது சென்று
2.மேலே செல்லும் விஷத்தை இது தடுத்து நிறுத்திக் கீழே இறக்கி விட்டு விடும்.
3.சிரியா நங்கைக்கு அந்தச் சக்தி உண்டு.

இந்த மாதிரி ஒவ்வொரு பச்சிலைகளுக்கும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மைகளைப் முறிக்கக்கூடிய சக்தி உண்டு.

பாம்பு ஒரு மனிதனைக் கடித்ததும் ஐய்யய்யோ…! பாம்பு கடித்துவிட்டதே…! என்று பதறினால் அந்த விஷம் உடலில் ஏறி உயிர் வெளியில் வந்த பின் பாம்பின் நினைவு கொண்டு பாம்பின் உடலுக்குள் சென்று அடுத்தாற்போல் துரிதமாகப் பாம்பாகப் பிறக்கச் செய்யும்.

1.ஆனால் இது போன்ற விஷங்களை எல்லாம் முறிக்கக்கூடிய வல்லமை
2.மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு என்று கண்டுணர்ந்த ஞானி இதைச் சொல்லியுள்ளான்
3.காலத்தால் அது மறைந்து விட்டது.

விஷத் தன்மையிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வு கொண்டு இருப்பினும் அதைச் சீராகப் பயன்படுத்தாது வைத்திய ரீதியிலும் தவறான ரீதியில் கொண்டு சென்று விட்டார்கள்.

1.எனக்குத் தெரிந்த உண்மை அடுத்தவருக்குத் தெரியக் கூடாது என்று சுத்தமாகவே மறைத்து விட்டார்கள்
2.காலப் போக்கில் இன்று முழுவதும் மறைந்து கொண்டிருக்கிறது.

அக்காலத்தில் “பாட்டி வைத்தியம்…” என்று சொல்வார்கள்.

கைக் குழந்தைக்கு உடல் நலம் சரியாக இல்லை என்றால் குழந்தை வெளிப்படுத்தும் மலத்தை வாயில் வைத்துப் பார்த்து… அதனின் தன்மையை அறிந்து “அதற்குண்டான இன்ன மருந்தைக் கொடுத்தால் சரியாகும்…” என்று முந்தைய காலத்தில் செய்வார்கள்.

ஏனென்றால் கைக் குழந்தையால் ஒன்றும் சொல்ல முடியாது…
1.தன் உணர்வால் நுகர்ந்து
2.அந்த உடலில் வரக்கூடிய மலத்தை வைத்து
3.எந்த வகையான மலமாக அது இருக்கிறது (இன்று விஞ்ஞான முறையில் பரிசோதனை செய்வது போல்) என்று காண்பார்கள்.
4.கொடிய நோயாக இருந்தாலும் அவர்கள் ஒரு பச்சிலையை அரைத்துக் கொடுப்பார்கள்… அந்த நோய் சரியாகிவிடும்.

காமாலை நோய் என்று இருந்தால் அதற்கு என்று ஒரு பச்சிலையை அரைத்து மோந்து பார்க்கச் செய்வார்கள். அல்லது உள்ளங்கையில் அதைத் தேய்த்து விடுவார்கள். அது வழியாக ஊடுருவிய பின் அந்த நோய் குறையும்.

அந்தக் காலத்தில் இது போன்ற பச்சிலைகள் ஏராளம் உண்டு. குப்பை மேட்டில் எல்லாம் இருக்கும். இப்பொழுது அந்தப் பச்சிலைகளைக் காணவே முடியவில்லை.

அக்காலத்தில் இருந்த பெரியோர்கள் அதைச் சீராகப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்பொழுது இருப்பவர்கள் விஞ்ஞான மருத்துவம் வந்த பின் எல்லாம் மறந்து விட்டார்கள். என்னிடம் (ஞானகுரு) வந்து கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பேதிக்கே போக வேண்டும் என்றால் அதற்கு ஒரு பச்சிலை உண்டு. எடுத்து உள்ளங்கையில் தேய்த்துவிட்டார்கள் என்றால் முகர்ந்தால் உடனே பேதியாகும். மருந்தே சாப்பிட வேண்டியதில்லை.

ஏனென்றால் பச்சிலைகளுக்கு இவ்வளவு சக்திகள் உண்டு. காலத்தால் இவை எல்லாம் மறைந்தே போய்விட்டது.

“உலகோதய நான்… பரப்பிரம்மமாகிய நான்” ஆக வேண்டும்

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து அந்த எண்ண வழித் தொடரில் “பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..?” என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான் “கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்றுவிட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற “அத்தனை உயிரணுக்களையுமே” என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில் தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும் உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன்
2.கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரம் உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து எவ்வாறு செயல்பட வேண்டும்…?

 

நம் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்கவில்லை… அவன் மீது கவலையும் வெறுப்பும் கோபமும் வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த நிமிடமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரிலே அதை மோதவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்து
3.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று “நாம் முந்திக் கொள்ள வேண்டும்…”

அந்த வலிமையைச் சேர்க்க சேர்க்கத் தவறான உணர்வுகளிலிருந்து மீட்டிடும் சக்தியாக அது வரும்.

பின் பையனைப் பார்த்து…
1.சிந்தித்து செயல்படும் சக்தி பெற்று நீ ஞானி ஆக வேண்டும்
2.தெளிந்தவனாக வரவேண்டும் தெளிவானவனாக நீ வரவேண்டும்
3.தெளிந்த நிலையில் நீ நிச்சயம் வருவாய்…! என்று இதை நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் அவன் குறைகளை நீங்கள் நுகர்வது இல்லை. அவன் குறை உணர்வு இங்கே வந்து அவனைக் குற்றவாளியாக்கும் உணர்வுகளிலிருந்து நீங்கள் தப்பலாம். இல்லையென்றால் பாசத்தால் குழந்தையை வளர்த்த நிலையில் அவனைக் காக்கும் நிலை வராது

அதே போன்று தொழில் செய்யும் இடங்களிலும் எத்தனையோ இன்னல்கள் வருகின்றது.

நமக்குக் கடன் கொடுத்தவன் நாளைக்கு வந்து கேட்டால் நாம் கொடுக்க வேண்டுமே…! என்ன செய்வது என்று தெரியவில்லையே…? என்று எண்ணினால்
1.அந்த உணர்வு மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் அது கனலாக எழும்புகின்றது
3.என்ன செய்வது…? ஏது செய்வது…? என்ற பதட்டங்கள் வருகின்றது

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை… உணர்ச்சிகள் இப்படி வரப்படும் பொழுது “உங்கள் எண்ணங்கள் நலமாக சீராக இருக்கின்றதா…? இல்லை…! பலவீனம் அடைகின்றது…”

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான மூலத்தில் மோதச் செய்து… மோதிய உணர்ச்சிகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று..
1.துரிதமாக இந்த உணர்வினைச் செலுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செலுத்தி விட்டால் அடுத்து நல்ல சிந்தனைகள் வரும்
3.ஏன்…? எதனால்…? என்ற கேள்விக் குறி வரும்.
4.அப்படி அந்தக் கேள்விக்குறி வைக்கப்படும் பொழுது சிந்தனை சீராகி அதை நிவர்த்திக்கும் “உபாயம்” வரும்.

நிவர்த்திக்கும் உபாயங்கள் வந்த பின் நண்பரிடத்திலே சென்று இதை இப்படிச் செய்ய வேண்டும்… இப்படிச் செய்தால் நிச்சயம் நலமாக இருக்கும்… “அதற்கு உன்னுடைய உதவி வேண்டும்…” என்று சொன்னால் நீங்கள் எண்ணிய வலுவாந உணர்வுகள் நண்பனுக்குள் ஊடுருவி… உதவி செய்யும் பண்பு வரும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி இங்கிருந்து போகும் பொழுதே… நான் கடன் வாங்கினேன் கொடுக்க முடியாதபடி சந்தர்ப்பம் விரயமாகி விட்டது என்ற வேதனை வந்தால் என்ன ஆகும்…?
1.மூலாதாரத்தில் வேதனைகள் மோதி
2.மூண்டெழும் கனலாக அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி
3.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பலவீனமடைந்து நண்பரிடத்தில் கஷ்டத்தைச் சொல்வோம்.

அவர் செவிகளிலே படுகின்றது. நம் கஷ்டத்தை எல்லாம் கேட்கப்படும் பொழுது அவருக்கு அந்த சந்தேகம் தோன்றுகிறது. பணம் கொடுத்தால் மீண்டும் வருமா…? என்ற சலனங்கள் அங்கே தோன்றி கேள்விக்குறியாக எழும்பிவிடும்.

“நம்முடைய மனமே” அவர் நமக்குக் கொடுத்து உதவும் அந்தப் பண்பை இழக்கச் செய்து விடுகிறது. அதனால்தான் இதை மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிந்து செயல்படும் அந்தச் சக்தி வேண்டும் என்று சொல்வது.

ஆகவே… அப்போது அந்தக் கருத்தை அறிந்திடும் நிலையாக…
1.அது எப்படி வருகின்றது…? எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று
2.மனவலிமையை நமக்குள் கொண்டு வர வேண்டும்.

அப்படி மன வலிமையைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதிகாலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பதிவு செய்து வலு சேர்க்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.அந்த மூலாதாரத்தில் இந்த அருள் உணர்வுகளைக் கனலாக நாம் மூண்டெழச் செய்தல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
3.கண்ணின் நினைவுகளை உடலுக்குள் செலுத்தி சோர்வை அகற்றி
4.வீரிய உணர்வாக எடுத்து நமக்குள் உற்சாகப்படுத்தி… மன வலிமையைக் கொண்டு வருதல் வேண்டும்.

தொழிலை எப்படிச் சீராக நடத்த வேண்டும்…? என்று அதற்குண்டான தெளிவான சிந்தனைகள் வரும். எல்லோரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக வரும்.

மூலச்சக்கரம்

 

மனித சரீரத்தின் பஞ்ச உறுப்புகளில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி ஓடுகின்ற நாடி குய்யம் என்றிட்ட மூலாதார நாடியுடன் இணைந்து செயல் கொள்கிறது.

தீய எண்ணங்களின் குணங்களும் நினைவை மறக்கச் செய்யும் ஆத்திரமான செயல்களினாலும் வாழ்க்கை நடைமுறையில் அந்த எண்ணமே தீவிரமாகச் செயல் கொள்ளும் காலத்தில் மூலாதார உஷ்ணத்தினால் தாக்கப்படுவது அந்த நாடியே…!

எண்ண எதிர்பார்ப்பு அற்ற நிலையில் கூட அதிர்ச்சியால் ஏற்படும் அதி பய உணர்வே
1.இந்த நாடியின் செயலைச் செயல் நடத்திடும்
2.நாபிக் கமல நீர் சக்தி நாடி கலந்து செயல்படும் இடத்தில் தடை ஏற்பட்டு
3.ஒலி ஏற்படுத்திடும் செயல் தன்மைகளை மாற்றிவிடும்.

கோலமாமகரிஷி தீய குணங்களின் செயலையே மாற்றித் தாய் சக்தியின் அருளாசி பெற்றுத் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொண்ட உயர் ஞான வளர்ப்பினை
1.மூகமாகச் செயல்படும் திறத்தை… அந்த இரகசியத்தை
2.தாய் சக்தியாகப் பெற்ற பேராற்றல் ஞான வளர்ப்பை
3.”அவரது அனுமதியுடன்…!” அந்த வழி முறைகளாகச் சிறிது கோடி காட்டுகின்றோம்.

கோலமாமகரிஷி தன்னை உணர்ந்து கொண்ட அறிவின் தெளிவில்
1.உயிராத்மாவின் சக்தியைக் குழந்தையாகப் பாவனைப்படுத்தி
2.எண்ணத்தில் தன்னையே தாயாக்கிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியின் வளர்ப்பிற்கு அன்பு கொண்டு ஜெப ஆகாரம் ஊட்டிட்டாரப்பா..!
4.இத்தகைய தனித்துவத் தன்மையை விளக்கிட்டாலும் உண்மையின் கருப்பொருளை அறிந்து கொள்வார் இல்லையப்பா…!

பூமியே சிவமாகவும் பூமியின் இயக்கமே சக்தியாகவும் உயர் ஞான சிந்தனையாகத் தெளிந்து தன் சரீர கதியிலும் தொடர்பு கொண்டே உணர்ந்து கொண்டதிலும் தாய் சக்தியின் ஆக்கம் தன் நிலையுயர்த்தக் கூட்டிக் கொண்டால் எல்லா உண்மை நிலைகளையும் உணர்ந்து கொண்டிடலாம்.

சமூக அமைப்பில் இந்தச் சக்திதனை நாடி வரும் அனைவரும் அதைப் பெற்றிட வேண்டும் என்ற அன்பு கொண்டு சூட்சம நிலையில் மூலச் சக்கரமாக உருவாக்கினார் ஆதிசங்கரர் உடலினின்று செயல்பட்ட கோலமாமகரிஷி.

அதாவது “சர்வக்ஞ பீடம் என்ற மூலச்சக்கரமாக…” ஆதிசங்கரரால் மூகாம்பிகை கோவில் அமையப் பெற்றிருக்கும் இடத்திலிருந்து நேர் கிழக்காக “குடசாஸ்திரி” என்று அழைக்கப்படும் மலையில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

பின் அந்த அமைப்பையே கவர்ந்து சென்றிடும் அரசர்களின் அதி ஆசை செயல்களுக்கு அகப்பட்டுவிடாமல் அந்த மூலச்சக்கரம் மறைக்கப்பட்டது. அந்த மலையில் ஒரு புறத்தே அமையப் பெற்ற குகைக்குள் பேழை ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளது.

மூகாம்பிகை அம்மன் சக்தியாலும் கோலமாமகரிஷியால் அருள் ஒளி பாய்ச்சிடும் செயலுக்கே ஆதிசங்கரரே அவருடன் செயல்படுகின்றாரப்பா…!

அந்தப் பகுதியில் அமைந்துள்ள மலைகள் அனைத்திலும் இரும்புக் கனி வளங்கள் நிறைந்துள்ளது. வனப் பகுதியின் மையத்தில் மலைகளால் சூழப்பட்டு யாரும் நெருங்கிடாவண்ணம் சரிவின் தாழ்வறையில் ஒரு “காந்தக் கிணறும்…” உண்டு.

மூலச் சக்கரம் வைக்கப்பட்டுள்ள குகைக்கும் மூகாம்பிகைக் கோவிலுக்கும் தொடர்பு கொண்ட ஒரு நீண்ட நெடிய குகை வழிப்பாதை உண்டு. சுயம்பு காந்தலிங்கம் இந்தக் குகையின் வழிப் பாதையில் நீண்டே செல்கின்றது.

லிங்கத்தின் உச்சியில் காணப்படும் தங்க ரேகை குகை வழிப்பாதையில் நீண்டு படர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உயிரணுவாகத் தோன்றிப் பல கோடிச் சரீரங்கள் பெற்று மனிதனான பின்… அகஸ்தியன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளான்.

அவன் வழியைப் பின்பற்றியோர் அனைவரும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் வருகின்றனர்.
1.பிறவி இல்லா நிலை அடைந்து என்றும் நிலை கொண்டுள்ளனர்
2.எதிரியே இல்லாத நிலைகள் கொண்டு…!

அதாவது…
1.எந்த விஷத்தின் தன்மை கொண்டு இயக்கும்
2.எந்த உணர்வுடன் கலந்து ஒரு இயக்கமாக அது இயக்குகின்றதோ
3.அதே இயக்கத்தின் மோதலில் (வெப்பம்) ஒளியாக மாற்றி
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றான்.

ஒரு நஞ்சு கொண்ட பாம்பினம் மற்ற உயிரினங்களில் தன் விஷத்தைப் பாய்ச்சப்படும் பொழுது அங்கே இருள் சூழச் செய்து அதை உணவாக எடுத்துக் கொள்கிறது.

இப்படி வளரும் நாகப் பாம்பு தனக்குள் அந்த விஷத்தின் தன்மை வளர்க்க வளர்க்க
1.அந்த விஷப் பையே ஒளியின் சுடராக மாறிவிடுகின்றது…
2.”நாகரத்தினமாக” மாறுகின்றது…!

பாம்பினம் விஷத்தின் தன்மையை ஒடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அடைகின்றது. ஆனால் விஷத்தைப் பாய்ச்சி உணவாக எடுத்துத் தான் அந்த உணர்வின் தன்மை பெறுகின்றது.

நாகம் மட்டுமல்ல… மற்ற பாம்பினங்களும் தனது விஷத்தைப் பாய்ச்சிப் பிற உயிரினங்களை இரையாக்கினாலும் விஷங்கள் வடிக்கப்பட்டு விஷம் அதிகரித்து உறையும் பொழுது அதனின் ஒளிச் சுடர் வரும்.

இதைப் போல் மனிதனின் நிலைகளிலும்…
1.உயிர் வாழும் (இருக்கும்) இடங்களில் இந்த உணர்வின் தன்மை கொண்டு “முத்தாக” விளையும்
2.முத்தாக விளையும் தன்மை வரப்படும் பொழுது உடல் மடியும்.
3.உடலில் வளர்த்த மற்ற உணர்வுகள் அலைகளாக மாறும்…. முத்தாக ஆன பின் செயலற்றதாக ஆகும்.

மனிதனின் இச்சைக்குள் பல காலம் வாழ்ந்தால்… 120 வருடத்திற்கு மேல் வளர்ந்தால் அந்த உடலிலேயே ஒரு அணுவின் தன்மை முத்தாக விளையும்.

யானைக்கும் அதுவே… மற்ற உயிரினங்களுக்கும் மற்றது சாடாத நிலைகள் வரும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டு அதிலே விளையும்.

ஆனால் உணர்வின் அணுக்களை ஒளியான ஜீவனுள்ள அணுவாக மாற்றிடும் தன்மை பெற்றவன் அகஸ்தியன்.
1.அவன் ஒளியின் சுடராக உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக
2.பேரண்டத்தின் அகண்ட நிலைகளில் மகிழ்ச்சியாகப் பேரானந்தப் பெரு நிலையுடன் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அவன் உணர்வைக் கருவாக்கி உருவாக்கி அந்த உணர்வின் தன்மையை ஒளியின் சுடராக மாற்றும் வல்லமை நம் அனைவருக்கும் உண்டு.

மனதை ஒன்றாக்க வேண்டிய அவசியம்

 

இந்த உலகம் விஷத்தன்மை வாய்ந்ததாகப் போய்க் கொண்டிருப்பதால்… எத்தகைய துயரமோ சங்கடமோ சலிப்போ பயமோ போன்ற நிலைகளைப் பார்க்க நேர்ந்தால்… அதை நுகர நேர்ந்தால்… அடுத்த கணம்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வின்படி ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணுங்கள்.
2.அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
3.உங்கள் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்யுங்கள்
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
4.கவலையோ மற்ற எதுவாக இருந்தாலும் அதை மாற்றிப் பழகுங்கள்.

அங்குசபாசவா…! மனிதனான பின் இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றுகிறது. நஞ்சைக் கழிக்கும் சக்தியான கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வலுப்பெற்றால் நம் எண்ணங்கள் அனைத்தும் பழுதாகிவிடும்… நம் உடலும் பழுதாகிவிடும்… நம் செயலும் பழுதாகிவிடும். அவ்வாறு பழுதாகாதபடி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

காரணம் சிறிது காலம் தான் இந்த உடலில் நாம் வாழுகின்றோம். அதற்குள் நல் உணர்வுகளை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும். அதற்காகத் தான் இராமேஸ்வரத்தில் “இராமன் மனதைக் குவித்து ஒன்றாக்கினான்…” என்று ஞானிகளால் உணர்த்தப்பட்டது.

வாழும் காலத்தில்…
1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…
2.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
3.தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று
4.பிறர் மேல் இருக்கும் பகைமைகளை மறந்து ஒன்றாக்கினால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றுகின்றது.

ஆனால் எனக்கு இப்படித் தொல்லை கொடுத்தார்களே… சும்மா விடுவதா…? என்று எண்ணினால் மனம் இருண்டு விடுகின்றது. மீண்டும் புவியின் பற்றுக்குத் தான் வந்து விடுகின்றோம்.

ஆகவே வாழக்கூடிய குறுகிய காலத்தில் பகைமைகளை மறந்து அருள் ஞானத்தைப் பெருக்கி எல்லோரும் ஒன்று சேர்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வினைக் கொண்டு வர வேண்டும்.

இதற்குத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மனதைக் குவித்தான் என்று காட்டினார்கள். ஆனால் அந்த உண்மையின் இயக்கங்களை அறிய முடியாதபடி போய்விட்டது.

ஆகவே ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் பெற்ற பேரருளும் அவன் துருவனாகித் துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
1.ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக நீங்கள் மாற வேண்டும்
2.அந்த மகரிஷிகள் வாழும் எல்லையை உங்கள் இருப்பிடமாக்க வேண்டும்..

தாய் சக்தி

தாய் தந்தை குரு என்று வழிபடும் முறைகளில் மனிதனின் சிந்தனை சீர்பட.. மனம் ஒருமுகப்படுத்தப்பட… தீதெண்ணச் செயலுக்குச் சென்றிடாவண்ணம் ஆரம்ப ஞான வளர்ச்சியின் ஆக்கத்திற்குச் சக்தி ஈர்த்துத் தன் வளர்ச்சியைப் பக்குவப்படுத்திட பரப்பிரம்ம சூத்திரத்தில் அனைத்துமே ஜெபத்தில் வழியாகத்தான் செயல்படுத்த முடியும்.

அன்பென்னும் வசமாக… பரிவு என்ற இரக்க குணம் காட்டி… பாசம் கொண்ட செயல் மூலம்…!
1.உயிரை நேசிக்கும் பக்குவத்திற்கு வருவோர்கள்
2.தன் தாய் சக்தியைத் தன்னுள்ளே வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் வழி வகைகளை அறிந்து
3.அதன் வழியில் செயல்பட்டால் “அற வழியில் ஜெப நிலையை உணரலாம்…!”

தாய் சக்தி என்றும் ரிஷிபத்தினி (மனைவி) சக்தி என்றும் பெண்மையின் அமில குணங்கள் பாசமுடன் செயல்படுவது என்பது அன்பு கொண்டு தான்.

அன்பு பரிவு பாசம் இந்த மூன்று குணங்களும் கருவின் திருவாக சிசு வளர்ச்சியுறும் பொழுது தாய்ச் சக்தியால் ஊட்டப்பட்டுப் பிறப்பின் செயலில் மனிதனாக வளர்ச்சி பெற்று வாழும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பல பல அனுபவங்களைப் பெறுகின்றார்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் கிடைக்கும் சிந்தனைத் திறனால் அறிவின் ஞானம் வளர்ச்சியுற்றாலும் அதுவே தியான வழிதனில் பரிணாம வளர்ச்சியின் முதிர்வாக்கி
1.மனிதனுக்கு அடுத்த ஞானி என்ற உயர் நிலை பெறுவதற்கு
2.ஆத்ம பலம் கொண்ட எண்ணமே மிகவும் முக்கியம்.

ஆணின் தன்மையில் பெண்மை குணமும் பெண்ணின் தன்மையில் ஆணின் குணமும் இயற்கை கதியில் சரீரத்தில் மின் காந்தப் புலத்தின் செயல் நிகழ்வாக அறிவின் எண்ணம் கொண்டு வழி கண்டிடும் பக்குவத்தில் மாற்றம் கொண்டாலே செயல் வேறாகுமப்பா..!

அதாவது
1.POSITIVE NEGATIVE என்ற இணைப்பில் மின்சாரத்தின் இயக்கம் செயலுக்கு வருவது போல்
2.ஆண் பெண் என்ற அந்த இணைப்பு இல்லை என்றால் இயக்கமே இருக்காது
3.எல்லாம் சூனியமாகிவிடும்…!

பெண்மை குணங்களை அகற்றிடும் சிந்தனைக்கு வலுக் கூட்டினால் என்ன ஆகும்…?

தன்னுள் திணித்துக் கொண்ட ஆபாச எண்ணங்களின் வலுவால்
1.போற்றப்பட வேண்டியதன் “உயிரான்ம வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடிய பெண்மையின் சக்தியை…”
2.மோகம் என்ற குணத்தையே மேன்மேலும் வளர்ச்சிப்படுத்தும் செயலாக ஆகிவிடும்.

அத்தகைய செயலால் அகங்காரம் ஆணவம் முதலிய தீய குணங்கள் தனக்குள் வளர்ச்சி ஆகித் தன்னுள் தான் வளர்க்க வேண்டிய வளர்ச்சிக்கு வளர்ப்பாக்கும் “தாய் சக்தியையும் இழந்து…” அவசரம் ஆத்திரம் என்ற தொடரில் அறிவின் விவேகத்தையே இழந்து விடுகின்றான்.

இந்த உண்மையை உணர்ந்து கொள்வது மிகவும் நலம்.

ஆகவே உயர் ஞான வளர்ப்புக்குச் செயல் கொள்ளும் பொழுது தன்னுள் வளர்ச்சிப்படுத்திக் கொண்டுள்ள அசுர குணங்களை விலக்கிடும் நற்செயலுக்குச் சிந்தனையைச் செலுத்தி நல் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.

ஆனால் உயர் நிலை பெற வேண்டும் என்ற வைராக்கிய சிந்தனையில்
1.பெற்றே தீருவேன்…! என்ற கடுமை காட்டிடலாகாது.
2.சாந்த குணம் கொண்டே சம நிலை பெற வேண்டும்.
3.அன்றைய சித்தர்களால் காட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் இந்தப் பொருள் தான் உண்டு.

பெண்மையின் குணங்களை மட்டும் வளர்ச்சிப்படுத்திக் கொள்வோர் சிறுகச் சிறுக ஆணின் குணத் தன்மைகளை இழந்து இறை சக்தியைப் போற்றி பக்தி நெறி வளர்ச்சி கொள்ளும் பொழுது தன்னையே பெண்ணாகப் பாவனைப்படுத்திட்டு இறைச் சக்தியுடன் ஒன்றிட வேண்டும் என்ற எண்ணமாக கவிமாலைகள் புனைந்ததுவும் அதுவும் ஒரு வகை தான்.

ஆகவே சிவ சக்தி என்ற குணங்களால் தான்… நல்லெண்ணம் கொண்ட… நற்சுவாசத் தியானத்தின் ஈர்ப்பு வழிகளில் மண்டலங்களாகப் படைக்க முடியும்.

ஆணவம் அகங்காரம் என்ற குணங்களைக் களைந்திடும் (ஆசை) முயற்சி இருந்தால் மௌனம் கொண்டு
1.ஞானம் வீரம் சாந்தம் ஆகிய நற்குணங்களை வளர்ச்சிப்படுத்திடும் பெண்மையின் சக்தியைக் கொண்டு
2.அசுர குணங்களை நீக்கி ஒளி கண்டு இருள் விலகுவதைப் போல் உயர் நிலை பெற்று
3.ஞானத்தின் முதிர்வு நிலையை எய்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்திவிடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும்… நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது

நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.

உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…
1.இந்தக் கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.

தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”

1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா…! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்

பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்…! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.

இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.

இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.

புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.

அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…
1.நான் தோற்றுவிட்டேன்…
2.உன் காலடியிலேயே நான் இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.

ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.

1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.

மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.மனிதனான பின் இந்த உடலை நாம் எப்படிக் காக்க வேண்டும்…?
2.உயிரான ஈசன் துணை கொண்டு நாம் எதனை உருவாக்க வேண்டும்…? என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் ஆறாவது அறிவால் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து அதை நமக்குள் உருவாக்குதல் வேண்டும். அந்த அருள் ஒளி பெறும் தன்மையே உணர்த்துவதற்கே ஆலயம்.

நம் உடலே ஆலயம். நம் உணர்வே தெய்வம்…! எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப செயலாகின்றது.

கோபமாக இருந்தால் காளி… சலிப்பும் சஞ்சலம் கொண்டால் வெறுப்பும் வேதனையும் கொண்டு இதைப் போல் ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயரை வைத்து ஆலயத்தில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நாம் நுகர்ந்த அந்தந்த உணர்வே உடலை இயக்கினாலும் அதில் தீமை என்று வந்தால் அதை நீக்க அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுவதற்கு
1.நாம் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று
2.ஆலயத்திலே ஒவ்வொருவரையும் இப்படி எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள்.

ஏனென்றால் இந்த உடலுக்குள் (அதாவது) உடலான குடும்பத்திற்குள் எல்லோரும் ஒன்றியே வாழுகின்றனர். எல்லோர் உணர்வுகளும் இங்கே உண்டு.

ஒரு பிச்சைக்காரனாக இருந்தாலும் ஐயா…! என்று கேட்கும் பொழுது அந்த உணர்வு உடலுக்குள் அது ஒன்றிவிடுகின்றது.
1.ஒருவனுக்குக் காசு கொடுத்தாலும் அடுத்து ஒருவன் மீண்டும் ஐயா… என்பான்.
2.அவனுக்கும் காசைக் கொடுப்போம்
3.இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் அவர்கள் உடலில் எந்தத் தரித்திரம் ஆனதோ
4.அது எல்லாம் உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

நான் எல்லோருக்கும் தர்மத்தைக் கொடுத்தேன்… கடைசியில் ஆண்டவன் என்னை ஓட்டாண்டியாக ஆக்கிவிட்டான்…! நான் இல்லை என்று யாருக்குமே சொல்லவில்லை… ஆனால் என்னை ஆண்டவன் இப்படிச் செய்துவிட்டானே…! என்று தான் வேதனைப்படுகின்றோம்.

எல்லா ஆலயங்களுக்குச் செல்வோரும்… எல்லா மதத்திலேயும்… இப்படித்தான் “ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றான்…!” என்று புலம்புகின்றனர்.

ஆகவே ஆண்டவன் யார்…?

1.நாம் எண்ணியதையெல்லாம் உருவாக்குவது நம் உயிரே… அதை ஆள்பவனும் உயிரே.
2.எண்ணியதை இறையாக்குகின்றான்… உணர்வின் செயலாக உடலாக்குகின்றான்.
3.அந்த உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது அதே வழியிலே நம்மை நடத்துகின்றான் என்ற நிலைகளை மறந்து விட்டோம்.

ஆக… ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று பார்த்து நாம் உதவி செய்தாலும் அவனின் வேதனை உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க என்ன வழி…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று முந்தியே டெலிஃபோன் செய்துவிட வேண்டும்.

எப்படி…?

1.தீமை என்ற உணர்வு வராது…
2.அதை நுகர்ந்து விடாதே…! என்று நம் உயிரான ஈசனிடம் சொல்லி விட வேண்டும்.

பின் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வலுவாக்கிக் கொண்டு அந்த வேதனைப்பட்டோர் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் அவர்கள் எதிர்காலம் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கை உயர்ந்திட வேண்டும் அந்த அருள் வழி அவர்கள் பெற வேண்டும் என்று இந்த மாதிரி எண்ணி விட்டு அதற்ப்புறம் காசைக் கொடுத்தோ அல்லது மற்ற உதவிகளைச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகிறது… அவர்கள் வேதனை நமக்குள்ளும் வராது தடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எண்ணச் செய்வதற்குத்தான் ஆலயங்கள்…!

“மூகம்…” (ஃ) என்ற உயிரின் சக்தி

 

ஒலி ஒளியால் விண்ணிலே உதித்த ஒரு உயிரணு பூமிக்குள் வந்து ஜீவன் என்ற உயிராத்மாவாக மனிதன் என்ற ஜீவ பிம்பச் சரீரம் பெற்றிட்டதின் உண்மை நிலை என்ன…?

1.ஞானம் கொண்ட தியானத்தின் வழி முறைகளைக் கடைப்பிடித்து
2.ஞானியாக உருவாக உயர் ஞான வளர்ப்பில் ஓ…ம் என்ற நாதத்தைக் கூட்டி
3.ஒலி நாதமே ஒளி சக்தியாக்கும் சூட்சமத் தொடர்பின் நிலை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் எண்ணத்தின் வழியாக வரும் விஷ வித்துக்களை நீக்கிடவே “மூகம்” என்ற செயலாக அனுபவ ஞானம் கொண்டு
1.கோலமாமகரிஷி காட்டிய மூகாம்பிகையின் பொருளறிந்து செயல் கொள்ள வேண்டும்.
2.“தெய்வம் நின்று கொல்லு(ள்ளு)ம்…!” என்று கூறப்பட்டதன் உண்மையை உணர்தல் வேண்டும்.

நம் உயிராத்மா தெய்வ சக்தியாக வளர்ச்சி கொள்ள அறிவின் ஆற்றல் விவேகம் கொண்டு செயல்பட்டு ஜீவகாருண்யம்… ஒழுக்கம்.. என்ற நற்பண்புகளால் உண்மைப் பொருளை ஈர்த்துக் கொள்வதே “தியானத்தின் மூலமாகும்…!”
1.அறிவின் தெளிவே ஆக்கம்.
2.மற்ற செயல்கள் அனைத்தும் தேக்கம் தான்…!

மனிதனின் எண்ணத்தில் “தனக்குள் இயக்கும் குணங்களை அறிந்து கொண்டிடும் பகுப்பாற்றல் (பிரித்து அறியும்) செயல் கொண்டான்…” என்றால் மனிதன் ஞானத்தை உணர்கின்றான்…! என்று அர்த்தமாகும்.

அவ்வாறு தன்னை உணர்ந்து கொள்ளும் நிலையில் குணங்களின் எதிர் மோதல்களைத் தெளிந்து ஞானி ஒருவன் கருத்தில் நற்குணங்களைத் தனக்குள் மேலும் உரமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காகத்தான்
1.தீமையான குணங்களின் கேடுகளை உலகினுக்கு உணர்த்தி
2.உண்மைப் பொருளாக… மெய்ப் பொருளாகத் தானே (மெய் ஞானி) நிலை நின்றான்.

தீமை செய்யும் குணங்கள் மனிதச் சரீரத்தில் அறியாத நிலைகள் ஈர்க்கப்பட்டு அது பதிவு நிலை பெற்று விட்டால் அந்தப் பதிவின் தொடரில் அதே எண்ணம் கொண்டு மீண்டும் மீண்டும் ஈர்த்திடும் சுவாச ஓட்டச் செயல் நிலையால் உடலில் என்ன நடக்கின்றது…?
1.தீதெண்ணப் (தீமையான எண்ணம்) பதிவு வலுவாகி..
2.அது வீரியமாக நம் உடலுக்குள் உரமே(ற்)றிக் கொண்டு
3.அதனின் எதிர் மோதலாக நம் சரீரத்தையே பிணிக்குள் சிக்கச் செய்து விடுகின்றது.

இதையே தத்துவப் பொருளாக… அந்த அசுர சக்தியின் எண்ண வலு வீரியத்தை அடக்கிட
1.மூகம்… என்ற மூகாம்பிகைச் சக்தி என்பதே சூட்சமப் பொருளப்பா…!
2.மனிதச் சரீரத்தில் வாய்ப் பகுதியில் அடி நாக்குத் தொடங்கி
3.மூலாதார நாடியுடன் (புருவ மத்தியில்) இணையும் ஓர் நாடி செயல்படும் விதம் உண்டு (ஃ).
4.அந்த நாடியின் செயலால் நமக்குள் வரும் அத்தனை அசுர சக்திகளையும் அடக்கிட முடியும்…! என்பதே
5.கோலமாமகரிஷி ஆதிசங்கரர் உடலில் செயல்பட்டு மூகாம்பிகையாக (மூலச்சக்கரம்) உருவாக்கியதன் உண்மைத் தத்துவம் ஆகும்

பஞ்சேந்திரியங்களால் உருவானது தான் “மனிதச் சரீரம்” என்று செப்பி அந்த ஜீவ பிம்ப உடல் செயல்படும் விதம்… அறிவின் உயர் ஞான வளர்ப்பாக உணர்ந்து தெளிந்திட்டவர்கள் நம்முடைய சித்தர்கள்.

உலக ஜீவன்களில் பகுத்தறியும் திறன் கொண்ட… “மனித குலம்…”
1.தன்னைத் தான் உணர்ந்து
2.தன் தெய்வீகத் தன்மை நிலை அறிந்து கொண்டிட
3.வளர்ச்சியின் வளர்ப்பாக உயர்ந்திட
4.உலகினுக்கு எடுத்துக் காட்டாகத் தாங்களே நிலை நின்று போதனைப்படுத்திக் காட்டிட்ட வழி முறைகளில்
5.தங்களை உணர்ந்து கொண்ட அக்கணமே தான் யார்..? தன் செயற்பாடு என்ன..?
6.இறைச் சக்தியின் கூத்தாட்டும் செயல் என்ன…? என்று சிந்தித்துத் தெளிந்து
7.தான் உணர்ந்ததை எல்லாம் வெளிக் கொணர்ந்து அறிவின் கருவூலமாக ஞானப் பொக்கிஷமாக அதையே உலகினுக்கு ஈந்து
8.மறை பொருளாக மனித குலச் சிந்தனையைச் சுய வளர்ப்பாக வளர்ச்சி கொள்ளச் சூசகப்படுத்தியவர்கள் தான் “சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்…!”

அவர்களின் அருளாசி பெற்று அறிவின் ஞானம் கொண்டு நாம் தெளிந்து வாழ்தலே மிகவும் சிறப்பு…!

புனித தேசத்தை உருவாக்குங்கள்

 

வீட்டில் கர்ப்பமுற்றார்கள் என்று தெரிந்தால் அந்தக் கருவில் வளரும் குழந்தை அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அந்த அகஸ்தியன் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று தியானித்து… உருவாகும் குழந்தைகளை ஞானிகளாக உருவாக்க வேண்டும்.

அந்தப் பத்து மாதம் இவ்வாறு நீங்கள் ஒத்துழைத்து ஞானிகளைக் கருவிலேயே உருவாக்குங்கள். விஞ்ஞான அறிவால் இனி வரக்கூடிய பேரழிவுகளில் இருந்து உங்களைக் காக்கத் தாய் கருவில் வளரும் அந்த ஞானிகள் உதவுவார்கள்..
1.ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செயல்படுத்த முடியும்
2.நம்மைக் காப்பது அவனாகத்தான் இருக்க முடியுமே தவிர “வேறு எந்தக் கடவுளும் நம்மை காக்கப் போவதில்லை… முடியாது…”
3.ஆகவே நாமே கடவுளாக இருந்து… ஞானக் குழந்தைகளைக் கருவிலேயே உருவாக்கிடல் வேண்டும்.

ஆனால் கர்ப்பமுற்றிருக்கும் தாய்… சந்தர்ப்பத்தால் நடக்கக்கூடிய சில தவறான செயல்களைப் பார்த்துவிட்டு… “இவன் திருட்டுப் பயலாக இருக்கின்றான்…” என்று திருடனைப் பார்த்து அவன் செயலை நுகர்ந்தால் கருவிலே வளரக்கூடிய குழந்தை “திருடனாகத்தான் பிறப்பான்…”

உலகில் எங்கு பார்த்தாலும் அநியாயம் நடக்கிறது… கொள்ளை அடிக்கின்றார்கள்… வெட்டுகின்றார்கள்… குத்துகின்றார்கள்… கொலை செய்கின்றார்கள்… என்ற அந்த உணர்வை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வு பெருகி… பிறந்த பின் “அந்த வேலையைத்தான் அவன் செய்வான்…”

ஓரு மனிதன் வெட்டப்பட்டுப் துடிதுடித்துக் கொண்டிருக்கும் உணர்வுகளை கர்ப்பிணித்தாய் நுகர்ந்தால் அந்தக் குழந்தை உடலில் உள்ள உறுப்புகளும் அது போல் “சிதைந்து விடுகின்றது…”

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்…!

சில வீடுகளில் பார்த்தால் ஒருவருக்கொருவர் தாக்குவதும்… கலவரம் செய்வதும்… குழந்தை கை கால்கள் ஊனமாவதும் அங்கங்கள் குறைவதும் இது எல்லாம் வருவதற்குக் காரணம்…
1.அந்த கர்ப்பிணித்தாய் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது தான்… அதனால் வரக்கூடிய தீயவினைகள் தான்.
2.யாரையும் நாம் தவறாகச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்.

கர்ப்பமுற்றிருக்கும் தாய்மார்கள் எடுக்கும் உணர்வுகள் தான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைகிறது. நீங்கள் தான் அந்தக் கடவுளாக இருக்கின்றீர்கள்.
1.கருவிலே வளரக்கூடிய குழந்தைகளை ஞானிகளாகவும் உருவாக்க முடியும்… நோயற்றதாகவும் மாற்ற முடியும்
2.உலக ஞானம் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தி “உங்கள் கையிலே உண்டு…”

அந்த பத்து மாதம் எத்தகைய தீமையும் வராதபடி
1.உங்கள் முகத்தையே நீங்கள் உற்றுப் பார்த்துக் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.கருவில் இருக்கும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.
4.அவன் உங்களைக் காப்பான்… புழு பூச்சியாக உங்களை மாற விட மாட்டான்.

அவன் வளர வளர உங்கள் தெருவிலோ ஊரிலோ தோஷங்களோ தீயவினைகளோ எது இருந்தாலும் அது மாறும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

குடும்ப வம்சத்தையே அருள் வழியில் அழைத்துச் செல்லும் “பெரும் மகரிஷியாகின்றான்…!”

அவன் வளர வளர நீங்கள் அவனைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்… அந்த அருள் உணர்வு உங்களுக்குள் சேரத்தான் போகின்றது. அதன் வழி உங்களை அவன் உன்னத நிலைக்கு அழைத்துச் செல்வான்.

இதன்படி செய்து
1.புனித தேசமாக உருவாக்குங்கள்
2.இந்தக் காற்று மண்டலத்தையும் புனிதமாக்குங்கள்
3.அத்தகைய ஞானிகளை உருவாக்குங்கள்…!

இதைத் தவிர இனி வேறு வழியில்லை.

ஆனால் இன்றைய நடைமுறையில் அசுர உணர்வு கொண்டு எத்தனையோ செயல் நடந்து கொண்டுள்ளது. குடும்பத்தில் கருவுற்ற பின் “அது பெண் குழந்தை என்று தெரிந்தால்… எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி ஈவு இரக்கமற்றுக் கொல்கின்றார்கள். குழந்தையை உருவாக்கிய தாயே இதைச் செயல்படுத்துகின்றது

கரு உருவாவதற்கு முன்னே தடைப்படுத்தினால் கூட ஒன்றும் இல்லை.
1.கருவுற்ற பின் அதைக் கொல்வது மிகவும் தவறு.
2.ஏனென்றால் அவ்வாறு கருச்சிதைவு (ABORTION) செய்யப்படும் பொழுது அந்தச் சிசு எத்தனை வேதனைப்படுகிறதோ
3.அந்தத் தாய் நிச்சயம் அது அவஸ்தைப்பட்டே தீரும்… அந்தக் குடும்பமும் அதே நிலையில் சிதைவுண்டு போகும்.

நிறைய இடங்களில் வறுமையும் கொடுமையும் மற்ற நிலைகளும் சேர்ந்து இத்தகைய அசுர உணர்வுகள்… சமுதாயத்தை எங்கோ அழைத்துச் சென்று கொண்டுள்ளது.

இதிலிருந்து எல்லாம் மக்கள் அவசியம் மீள வேண்டும்.

தியானம் செய்வது என்பது சொத்துக்கும் சுகத்திற்கும் அல்ல…!

 

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடையும் பருவம் பெற்றவர்கள் தான் நாம்… இதே உயிர் தான்…!
1.அந்த உயிருடன் ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தினால்
2.இந்த வாழ்க்கையில் கண்டறிந்த தீமையான உணர்வுகளை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்த முடியும்.

ஆனால் தூய்மைப்படுத்தத் தவறினால் ஒவ்வொரு குணத்திலும் அழுக்குகள் சேர்ந்து… பூரண நிலா அது பௌர்ணமிக்கு பின் எப்படிச் சிறுகச் சிறுகக் குறைந்து… கடைசியில் முழுமையாக இருட்டாவது போன்று நம் உடலில் அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருள் அடைந்து விடுகின்றது.

இருளடைந்து விட்டால் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு இந்த உயிர் வெளியே சென்று விடுகின்றது. அந்த அடிப்படையில் உயிர் வெளியே சென்றால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு… அதற்குத் தகுந்த உடலாக… “மனிதனல்லாத உடலை” இந்த உயிர் உருவாக்கி விடும்.

மனிதனல்லாத உடலை உருவாக்கி விட்டால் மீண்டும் அந்த உடலைக் காக்கும் உணர்வுகள் பெற்றுத் தன்னைக் காட்டிலும் வலுக் கொண்ட உடலிந் உணர்வுக்கே செல்லும். ஆனால் மனிதனாக வர முடியாது.

நம் பையனை (குழந்தைகளை) நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் நாம் எண்ணியபடி குழந்தைகள் சரியாக வரவில்லை என்றால்
1.தவறு செய்கின்றான் என்று ஆவேசமான உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படுகின்றது.
2.அப்பொழுது பேய் மனமாக மாறுகின்றது.

முதலில் நல்ல முறையில் வளர்க்கத் துடித்தோம். ஆனால் தவறு செய்கிறான் என்று தெரிந்த பின் பேயைப் போல அவனைத் தாக்கவும்… அறிவை இழக்கச் செய்வதும்… இதைப் போன்ற நிலைகள் வந்து விடுகின்றது.

நமக்குள் வளர்ந்த அறிவினை… “நாமும் நல்ல முறையில் வளர்க்க முடியாது” தடைப்படுத்தும் நிலையாக ஆகிவிடுகின்றது.

பூரண நிலா சிறுகச் சிறுக எப்படி மறைகின்றதோ… அதைப் போல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாகவே மாற்றி வரக்கூடிய நிலையாகி விடுகின்றது அப்படிச் செயலற்றதாக ஆகிவிட்டால் மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டி இருக்கும்.

ஆகவே… இந்த உடலில் முழுமையான ஒளியாக மாற்றும் நம்முடைய ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குப் பயிற்சி கொடுத்து… மகரிஷிகள் ஆற்றலை அருள் வாக்குகளாகக் கொடுக்கின்றோம்

பூரண நிலா போன்று நமது உயிர் என்றும் பரிபூரண நிலையை அடைவதே மனிதனின் முதிர்வு நிலை.
1.இந்தச் சந்தர்ப்பதை இழந்தால்
2.இந்த உடலில் படும் துன்பத்தைக் காட்டிலும் எத்தனையோ கோடித் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்துவிடும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி… நல் உணர்வுகளை உயர்வாக்கி… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்
1.அதற்குத்தான் நமது தியானமே தவிர
2.சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.
3.அருள் ஞான சொத்தை அந்தப் பேரின்பச் சொத்தைத் தான் நாம் தேட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்

தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது… அதைப் பயன்படுத்தும் முறை முக்கியமானது

 

மனித எண்ணத்தின் ஆற்றல் தியானத்தின் வழியாக எண்ணுகின்ற எண்ணமே ஒன்றை எண்ணிப் பெற்றிட வேண்டும் என்ற தீவிர வைராக்கிய சிந்தனைகே முதலிடம் தந்து ஈர்த்திடும் பக்குவத்தில் செயல்படுகிறது.

சரீரத்தில் மறைந்து கிடக்கும் சக்திகளை ஒழுங்குபடுத்திட யாம் கூறிடும் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் எண்ணி எடுக்கும் தியானத்தைப் பயிற்சியாகக் கொண்டிட்டால்
1.ஒருமுகப்படுத்தப்படும் சக்தியின் குவிப்பால்
2.விண்ணிலிருந்து வரும் ஒளி காந்த நுண் அணுக்களின் ஒளி அமில சக்திகளை ஈர்த்து
3.வளர்ப்பின் வளர்ப்பாக வளர்ப்பவனின் செயலில் நாம் பேரருளை வளர்க்க முடியும்.

இன்று உடல் பயிற்சி முறைகளுக்கும் தற்காப்புக் கலைகளுக்கும் இதே போல் பல தொடர்களுக்கும் தியானம் (YOGA, KUNDALINI) கற்பிப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படிக் கற்பித்தாலும் அவர்கள் தங்கள் எண்ணத்தில் திணித்துக் கொண்டிட்ட மாற்று எண்ணச் செயல்கள் (கோபம் சலிப்பு சங்கடம் வேதனை) வீரியமாக இருந்திட்டால் தியானத்தில் பெறும் சக்திகள் அனைத்தும் அவ்வெண்ண வலுவிற்கே செயல்படுமப்பா…!

வெறும் தியானம் மாத்திரம் நல்ல நிலை அளித்திடாது…! (இது மிகவும் முக்கியமானது)

சந்தர்ப்பத்தால் தனக்குள் ஊட்டப்பட்ட சங்கட வித்துக்களின் காந்த ஈர்ப்பின் செயல் தொடர்பால்
1.எந்தக் காழ்ப்பு உணர்வு கொண்டு ஊட்டப்பட்டதோ
2.அதைச் செவிமடுப்போர் கொண்டிடும் எண்ணம் அனுதாப நீர் (உமிழ் நீர்) பாய்ச்சி
3.விஷ விருட்சமாகச் செயல் கொண்டால் அதை உடலிலிருந்து களைந்திடும் செயல் மிகவும் கடினமப்பா…!

“இராமபாணம்…” உரமேறிய ஆச்சா மரங்களைத் துளைத்தது என்ற தத்துவ உண்மை உண்டு…!

அதைப் போல் சமமான உணர்வாக… நல்லெண்ணச் சுவாசமாக… உயிரான ஈசனுடன் ஒன்றி… ஞானிகள் காட்டிய நல் நெறியைச் சீராகக் கடைப்பிடித்து மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று பிறவாமை என்ற நிலை பெற வேண்டும்.
1.இந்த எண்ண உறுதியே…
2.சங்கட அலைகளைத் தகர்த்திடும் “அருமருந்து….”

(ஏனென்றால் நடக்காத… முடியாத… நடைபெறாத ஆசைகளை… முன்னாடி வைத்துக் கொண்டு “அதை எப்படியும் அடைந்தே தீர வேண்டும்…!” என்று முயற்சி செய்து முயற்சி செய்து அதனால் தோல்வியாகும் பொழுது சங்கடமும் சலிப்பும் ஏற்படுகிறது. அதனால் எந்த நன்மையையும் நாம் அடைய முடியாது. நடக்காததை மறந்து விட்டு நடக்கக்கூடியதை… நடக்க வேண்டியதை… எண்ணிச் சீர்படுத்திக் கொள்வதே தியானத்தைப் பயன்படுத்தும் முறையாகும்)

நல்லெண்ணம் கொண்டு பெற்றிடும் உண்மை ஞான வளர்ப்பால் நல்லாக்கம் பெற்றிடுவோம் என்ற எண்ணத்தின் உத்வேகச் செயலுக்கு “விவேகம் தான் தேவை…!”
1.வேகமும் வலிமையும் மட்டும் இருந்தால் இலக்கை அடைய முடியாது…
2.விவேகமும் ஞானமும் சாந்தமும் அவசியம் தேவை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக வேதனைப்படுவோரை அதிகமாக நாம் உற்று நோக்கிப் பார்ப்போம் என்றால் வேதனை அணுக்கள் உடலிலே உருவாக்கி விடுகின்றது,

இதனின் அளவுகோல் அதிகமாகி விஷத் தன்மைகள் பெருக்கமாகும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் நலிவடையும் தன்மை ஏற்படுகிறது.

உதாரணமாக… சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் என்ற புலனறிவுகள் நாம் சொல்லும் (வெளிப்படுத்தும்) உணர்வுகளை அது நுகர்கின்றது.

பின் அந்த உணர்வின் சத்து தன்னுடன் இணைந்து அதன் மணம் விஷத்தின் தன்மையால் வெளிப்படுத்துகின்றது. ஆகவே புலனறிவு ஐந்து.

ஒரு மனிதன் வேதனைப்பட்டால்…
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற நிலையில் அவன் வேதனையும் கூடும் பொழுது
2.நமக்குள் இருக்கும் விஷம் அந்த வேதனை உணர்வுடன் இணைந்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடலில் நல்ல குணங்களை அதே புலனறிவு தான் (வெப்பம் காந்தம் விஷம்) இயக்குகின்றது.

ஆக அதன் வழி நல்ல குணங்களை நல்ல உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது நல்ல அணுக்களாக மாறுகின்றது. ஆனால் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் விஷத்தின் அளவுகோல் அதிகமாகின்றது… கேன்சராக மாறுகின்றது.

அந்த விஷத்தின் தன்மை அதிகமானால் நம் நரம்பு மண்டலம் வழி கூடி உடல் முழுவதும் விழுதுகளைப் பாய்ச்சி நோயாக (நமக்குத் தெரியாமல்) உருவாகின்றது.

நீரே இல்லாத இடத்திலும்… ஒரு அரச மரம் காற்றில் உள்ள நீர் சத்தைக் கவர்ந்து தன் விழுதுகளைப் பரப்பி நீர் உள்ள பக்கம் விழுதுகளை அனுப்பித் தனக்குள் அந்தச் சக்திகளை எடுத்துக் கவர்ந்து ஓங்கி வளர்கின்றது.

இதைப் போன்று தான் விஷத்தின் தன்மை ஊடுருவி உடலுக்குள் வளர்கிறது. எல்லா அணுக்களிலும் இயக்கச் சக்தியாக இந்த விஷத் தன்மை உண்டு. அதை எடுத்து அது வளரத் தொடங்கும்.

உதாரணமாக…
1.நமக்கு வேண்டாதவர்களாக இருந்தால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று
2.அந்த வேதனைப்படுவோரைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.
3.வேதனைப்படும்படியாக ஒரு சொல்லைச் சொல்வோம்… அதைக் கண்டு ரசிப்போம்.

இத்தகைய நிலைகள் நமக்குள் நுகர அந்த வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் கேன்சர் என்ற நிலை வரும் போது அந்த அணுத் தன்மை இந்த உடல் முழுவதும் நரம்புகள் வழி பாய்ச்சி மற்ற அணுக்களுக்குச் செல்லும் விஷத்தை அது கவர்ந்து விடுகிறது.

அவ்வாறு அந்த விஷத்தின் தன்மை கவர்ந்தால் நல்ல அணுக்களுக்குச் செல்லும் விஷத் தன்மையை இது கவர்ந்து கொண்டால் நல்ல அணுக்கள் இயங்க விஷத்தின் தன்மை இல்லை என்றால் இயக்கம் இல்லாது பலவீனமான நிலைகள் அடைந்து விடுகின்றது.

தேவாங்கு போன்ற சில உயிரினங்களுக்கு விஷத்தின் துடிப்பு குறைவாக இருப்பதனால் அந்த உயிரினத்தின் வேகத் துடிப்பு குறைவாக இருக்கும்.

இதே மாதிரி சில உயிரினங்களுக்கு விஷத்தின் தன்மை குறைவாக இருக்கும் நிலைகள் அது வேகத்தின் நிலைகள் குறைவாக இருக்கும்… சிந்திக்கும் தன்மைகளும் குறைவாகவே இருக்கும்.

இதைப் போன்று தான் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டும் போது நாம் சுவாசிக்கும் உணர்வே விஷம் கலந்ததாக மாறி நமக்குள் கேன்சர் நோய் பரவுகின்றது.

அந்தக் கேன்சரை நீக்க வேண்டும் என்றால் அதைக் கொல்ல கடுமையான மருந்துகளை… அதாவது அதைக் காட்டிலும் விஷமான மருந்துகளைத் தான் அந்த மருந்துக்குள் விஷத்தைக் கூட்டி அதனின் வேகத்தைக் கூட்டுதல் வேண்டும்.

1.ஆனால் அந்த விஷத்தைக் கூட்டினால்
2.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களும் மடிந்துவிடும்

அதே போல் வைத்தியரீதியிலும் விஞ்ஞானரீதியிலும் அது செயலற்றதாக மாற்றிட உடலில் எந்தப் பாகத்தில் அந்த விஷத்தின் தன்மை கூடுகின்றதோ எலெக்ட்ரிக் எலெக்ட்ரான் (கரெண்ட் ஷாக்) என்ற முறை கொண்டு அந்தக் குறித்த பாகத்தில் வெப்பத்தின் தணல் கூடி அந்த அணுக்களை மடியும்படி செய்கின்றனர்.
1.அவ்வாறு மடியும்படி செய்தாலும் இந்தத் தசைகளில் உள்ள
2.மற்ற நல்ல செல்கள் அது வளரும் தன்மையைக் குறைத்து விடுகின்றது.

பின் அதற்குள் இந்த விஷத்தின் தன்மை பரவும் தன்மை தான் இருக்கின்றதே தவிர மாற்றும் தன்மை இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு வேதனைகளை நமக்குள் வளர்க்காது பிறர் படும் வேதனைகளை ரசிக்காது அருள் ஒளி கொண்டு அகற்றி மற்றவர்களும் அந்த அருள் ஒளி பெற்று வேதனையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணினால் இது போன்ற கொடுமையான விளைவுகளிலிருந்து தப்பலாம்…!

பிடர்தல்

 

தியானத்தின் மூலம் மகரிஷிகளின் பேரருள் பேரொளியை ஈர்த்திடும் செயல் முறையில் “விழிப்பார்வை கொண்டு…” வீரிய சக்தியைக் கொண்டு செயல்படுத்தும் விதத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

1.நமக்கு முன்னே மறைந்துள்ள திரையை (அறியாமை) நீக்கும் பொருட்டு
2.வேகம் என்ற சொல்லில் – “அறிந்து கொள்ளும் மன எண்ண வீரிய சக்தியாலும்”
3.முயற்சி என்ற ஞான சூத்திரம் கொண்டு – “உள் மனத் தெளிவின் ஆற்றல் கொண்டு அறிந்திட வேண்டும்…!’

“பிடர்தல்…” என்ற எண்ண உந்து சக்தியின் துணையால் இலட்சியம் கொண்டு பயணமாகும் மெய் ஞானப் பாதையில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது அதை நம் அறிவின் ஞான எண்ணம் கொண்டு சமைத்து அந்தப் பேரின்பப் பொருளின் சத்தைப் பிரித்தெடுத்து ஆக்கம் கொண்டிடும் செயல் முறைகளில் செயல்படுத்துதல் வேண்டும்.

சிலர் தங்கள் சரீரத்தில் இயற்கையின் ஈர்ப்பு அமிலச் சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
1.எண்ணத்தின் பிடர்தல் சக்தி கொண்டு அறிந்திடும் வழி முறையெல்லாம்
2.பூமியின் ஊடே செல்லும் நீரோட்ட வீரியத்தை
3.தன் சரீர அமில வீரியம் உடல் சமைப்பில் எழும் எண்ணத்தைக் கொண்டு மூச்சலைகளாக வெளிப்படுத்தும் பொழுது
4.அதில் செலுத்தப்படும் எண்ணம் பூமியின் சுவாச சமைப்பில் வெளிக் கக்கும் அமில அலைத் தொடர்புகளில் மோதுகிறது.

சரீரத்தின் எண்ண ஈர்ப்பில் காந்த வலுவின் வீரியம் கொண்டு சுவாச அலைகளால் தன்னுள் ஈர்க்கப்படும் பொழுது சமைக்கும் சமைப்பெண்ணமும்
1.எந்த இடம் நீர் சக்தி உள்ள இடமோ அந்த இடத்தில் நிற்கும் பொழுது
2.நாம் செலுத்திய உணர்வின் துடிப்பலைகளின் செயல் நிகழ்வாக
3.சரீரத்தைச் சுற்றி ஓடும் சப்த அலைகளின் காந்த வீரிய சுழல் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகின்றது.

இதைப் போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளிகளுக்குள் இருக்கும் நிலைகளை
2.ஒலி ஒளி என்ற நிலையில் பிரித்துப் பார்க்கும் பக்குவமாக வழி அமைத்து விட்டால்
3.அனைத்துப் பேருண்மைகளை அறியவும் உணரவும் முடியும்.

குழந்தைகள் படங்களைப் பார்த்த அந்தப் படத்தின் கருத்தை உணர்ந்து கொள்வதைப் போல்… நாம் சுவாசிக்கும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளிக்குள் இருக்கும் கருத்தாற்றலை உணர்ந்திடும் சூட்சம சக்தியின் ஆற்றலும் பெற முடியும்.

அந்தச் சூட்சமச் செயலின் வீரியமாக அந்த மகரிஷிகளின் அருள் ஆற்றலை ஈர்த்தெடுத்துத் தன்னுள் சமைக்கும் பக்குவத்தையும் பெற்றிடலாம்.

இந்த வலு வீரியத்தைக் கூட்டிடும் சக்தியின் தொடர் தன்னுள் வலுக் கொள்ள…
1.காந்த அமில குண வீரியத் தாய் சக்தியும் ரிஷிபத்தினி சக்தியும் சேர்த்துச்
2.சிவசக்தியாக உயிரான்மாக்களின் கலப்பாக கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடும் பக்குவம் பெற வேண்டும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

பௌர்ணமி தியானத்தின் முக்கியத்துவம்

 

உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் ஆன்மாக்களையும் நண்பர்கள் உறவினர்கள் ஆன்மாக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் கவர்ந்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணையச் செய்ய முடியும்.
1.காரணம் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதால்
2.அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ள முடியும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உடலில் பெற்ற நஞ்சுகள் அனைத்தும் கரைந்து உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளி அலைகள் நிலைத்திருக்கும்.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா. கார்த்திகேயா என்றாலே ஒளி… அனைத்தையும் அறிந்து கொண்ட நிலை. பல கோடிச்ச் சரீரங்களில் வந்த தீமைகளை நீக்கி மனித உடல் பெற்றது.

அத்தகைய ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளினை மாற்றி உணர்வினை ஒளியாகப் பெறச் செய்யும் முறைதான் இப்பொழுது துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி.

மூதாதையர்கள் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்தால் அவருடைய உயிர் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நிலையாக நிற்கும்.

அவர்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்து விட்டால்
1.அவர்கள் விண் சென்ற உணர்வை நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது
2.அவர் வாழ்ந்த காலத்தில் நம் உடலில் பதிவான சில தீமையான உணர்வுகளை மாற்றி விடலாம்.

அதாவது… அவர் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட
1.வேதனையோ வெறுப்போ மற்ற நோய்களோ அதிகமாக இருப்பினும்
2.அதன் தொடர் வரிசையில் நமக்குள் வந்திருக்கும் இந்த நோய்களை மாற்றிவிடலாம்.

அல்லது அவர்கள் வாழ்க்கையில் சாப அலைகள் விடப்பட்டிருந்து… அந்த அலைகள் உடலில் இருந்தால் அந்த சாபச் அலைகள் நம்மையும் சாடும். ஆனால் அவர்களை விண் செலுத்தி விட்டால் அதன் உணர்வின் துணை கொண்டு அவர் வழியில் வந்த சாப உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கலாம்.

ஆகவே… யார் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த ஆன்மாக்களை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் விண் செலுத்திப் பழகுதல் வேண்டும். விண் செலுத்தி அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அவர் உடலில் உள்ள நோய்களோ மற்றதுகளோ நமக்குள் வளராது தடுக்க முடியும்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… எப்படியும் நாம் பிறருடன் பழகத் தான் செய்கின்றோம். அவருடைய உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமலே வளர்ந்து விடுகின்றது.

அதை எல்லாம் கரைப்பதற்கு… உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பௌர்ணமி அன்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்து உடல் பெறற நஞ்சுகளைக் கரைக்கப் பழகிக் கொடுக்கின்றோம்.

அப்படிச் செய்து பழகிவிட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரும் முறைப்படி செய்யப்படும் பொழுது
1.இந்த உடலுக்குப் பின் நாம் எளிதில் சப்தரிஷி மண்டலம் அடையலாம்.
2.இல்லையென்றால் மற்றவருடைய பழகிய உணர்வுகளில் புவியின் ஈர்ப்புக்குள் நம்மை அழைத்து வந்துவிடும்

இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்வதற்குப் “பௌர்ணமி தியானத்தைச் சீராக நாம் பயன்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்…”

“எம்முடைய உபதேசத்தைக் கேட்க விரும்புவோருக்கு” அதனின் பலன் நிச்சயம் கிடைக்கும்

 

ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்…!

இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.

ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்… ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்… நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.

உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.

எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.

உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.

ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.

அதைப் போன்று தான்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.

இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.

அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.

1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை

ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.

1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.

இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது…” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.

ஏழுமலையான்

 

1.கோயில் கட்டுபவன் பிழைத்திருப்பதில்லை.
2.கோயில் வேலைக்குச் சென்றிட்டால் பலி வாங்கிவிடும் என்று
3.கதை கட்டியவர்கள் எல்லாம் இக்கலியில் வந்தவர்கள் தான்.

இக்கலியில் வந்த சாமியார்களெல்லாம் மடாலயம், மடம் என்றதன் நிலையை உயர்த்தத் தன் புகழை உயர்த்தத் தான் பெற்ற சிறு அருளையும் சிதறடித்து விட்டார்கள்.

ஆதியில் திருப்பதி மலையில் கோயில் கட்டிய கொங்கணவர் உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரமாகி ஏழுமலையான் என்ற நாமத்தில் வரும் பக்தர்களின் எண்ணத்திற்கு அச்சக்தியின் அருளினால் பெற்ற அருள் செல்வத்தை அள்ளி அள்ளி அளிக்கின்றான்.

அவன் நிலைக்கும் பல கோடிச் செல்வங்கள் வந்து குவிகின்றன. அவ் ஏழுமலையானை நினைத்திட்டால் ஏழை என்ற எண்ணமே எந்த மனிதனுக்கும் வந்திடாத வண்ணம் எழுந்தருளச் செய்துள்ளான் அந்தக் கொங்கணவ மாமகரிஷி.

ஏழு ஜென்மங்கள் பெற்றவனும் அவ் ஏழுமலையானை எண்ணி வேண்டிட்டால் தான் பெற்ற சக்தியின் அருளினால் பல ஆற்றல்களை அளிக்கின்றான் அந்தக் கொங்கணவ மகாதேவன்.

இக்கலியில் வந்த மனிதர்கள் அவ் ஏழுமலையானின் கதையையே பல உருவில் பல வழியில் மனிதர்களுக்குப் புரியாத வண்ணத்தில் மாற்றி விட்டார்களாப்பா.

நீ எந்த ஊரில் எந்த நிலையில் இருந்து அவ் ஏழுமலையானை எண்ணி ஒரு நிலையில் வேண்டிக் கொண்டாலும்
1.அவனுக்குத் தெரிந்துவிடும் எல்லாமே.
2.அவன் பெற்ற சக்தியின் அருளினால் வந்து குவிகின்றது உன் வேண்டுதலுக்கு உகந்த தன்மை.

இந்நிலையில் வந்தது தான் நம் பழனி மலையும் பர்வத மலையும் வள்ளி மலையும் பெரும் அண்ணாமலையும் திருச்செங்கோடு மலையும் இன்னும் பல சித்தர்கள் ஏற்படுத்திய சில மலைகளும்.

அந்தந்த இடத்தில் அவர்கள் கட்டிய கோவிலில் இன்றும் ஜெப நிலையில் உள்ளார்கள் பல கோடிச் சித்தர்கள். கோவில் கட்டித்தான் அக்காலத்தில் அவர்களால் அந்த நிலையில் இருந்திட முடிந்தது.

1.கோவில் கொண்டு அந்த நிலையில் அடக்கமானவர்களும்
2.வேறு பல நிலையில் அடக்கமான ரிஷிகளும் யோகிகளும்
3.இவ்வுலக ஆரம்ப நிலையில் இருந்து மனித உடல் எய்தி இத்தன்மை பெற்ற பல கோடி ரிஷிகளும்
4.இன்னும் இக்கலியின் காலம் வரை காற்றுடனும் மழையுடனும் ஒளியுடனும் தான் பெற்ற சக்தியின் நிலையைக் கொண்டு
5.இவ்வுலக மக்களின் நன்மைக்காகப் பல முறையில் பல வழியில் உணர்த்துகிறார்கள்.

அதை உணர்ந்தார்களா இக்கலியில் உள்ள மனிதர்கள்…? பெரும் பேராசை பிடித்தவர்களப்பா இக்கலியில் உள்ள மனிதர்கள்.

ஒவ்வொரு மனிதனின் எண்ணம் எந்த நிலையில் உள்ளதோ அந்நிலையிலே தான் அக்கடவுளும் உள்ளான்.
1.கல்லென்று திட்டுகிறான்… கண்ணில்லையா…? என்கின்றான். கல்லும் கண்ணுமல்ல கடவுள்.
2.உன்னுள் இருக்கும் அக்கடவுளையே உன் வாயால் நீ திட்டுகிறாய்.

கடவுள் எங்குள்ளான்… என்று இப்பொழுது புரிந்ததா…? கால தேவனே தான் கடவுள். காற்றே தான் கடவுள். ஒளியே தான் கடவுள். மழையே தான் கடவுள். உன் மனமே தான் கடவுள். நீ விடும் சுவாசமே தான் கடவுள். நீயே தான் உனக்குக் கடவுள்.

கடவுள் என்பது யார் என்று புரிந்ததா…?

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பூமிக்குள் ஏற்படும் உணர்வுகள் (கல் மண் தாவரம் உயிரினங்கள் வெளிப்படுத்துவது) சூரியனால் கவரப்படும் பொழுது அது பிராணாயாமம்.

மற்ற உயிரணுக்கள் அல்லது உயிரினங்கள் இந்த உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வுகள் இயக்கப்பட்டு அதன் உணர்வின் வழியிலேயே அதை இயக்கத் தொடங்குகின்றது.

உதாரணமாக ஒரு வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே அது பட்டால் பிராணாயாமம். அதாவது
1.நமக்குள் இப்படி எந்தெந்த உணர்வு வருகின்றதோ “பிராணன்…!”
2.அதை ஜீவனுள்ளதாக இயக்குகின்றது என்பதனை அவ்வாறு காட்டுகின்றனர்

ஆனால் இங்கே “பிராணாயாமம்” என்று சொல்லி…
1.மூச்சை (காற்றை) இழுத்து உடலுக்குள் அதிகமாகச் செலுத்தப்படும் பொழுது
2.நம் உடலில் “எதன் வேக உணர்வுகள் அதிகமோ” அதைக் கவர்ந்து விடுகிறது.

இயற்கையாகவே… சுவாசிக்கும் உணர்வுகளை எல்லாம் உயிரிலே ஃபில்டர் செய்யக் கூடிய “சளி” இதை வடிகட்டிவிடும். அதிகமானால் வெளித் தள்ளிவிடும். இப்படி வடிகட்டிய நிலைகள் கொண்டு தான் சுவாசம் உள்ளே போகிறது.

ஆனால்… உணர்வின் தன்மை உந்து விசை அதிகரிக்கப்படும் பொழுது காற்றை இழுத்துச் சுவாசிக்கும் போது
1.நம் உடலில் உள்ள சுவாசப்பைகளில் அதிகமாகச் சென்று விட்டால்
2.நாளடைவில் அந்த உறுப்புகளில் பல விதமான இருமல்கள் வரும்.

இதே உணர்வுகள் நுரையீரலில் அழுத்தப்பட்டு உடல் முழுவதற்கும் இந்த வாயுவை உந்தப்படும் பொழுது அந்த வாயு மண்டலத்தை இழுத்துச் செல்லும் நரம்பு மண்டலங்களுக்குள் சென்றுவிடும்.

அப்படிச் சென்றவுடன் இது எதை எடுத்தார்களோ அதனின் உணர்வின் தன்மை விஷத் தன்மையாகி கடு…கடு என்று கிடு…கிடு என்கிறது என்றெல்லாம் “மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் பெரும்பகுதி கடைசியில் கேட்டால் இதைத் தான் சொல்வார்கள்…!”

இன்று இவர்கள் மூச்சை இழுத்து பின் வெளி விட்டு… இதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் வேதனைப்படுகிறான் என்ற நிலைகளில்… அவன் என்ன செய்கிறான்…? என்று எடுத்துச் சுவாசிக்கலாம். அப்பொழுது அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரும் பொழுது வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மையாக வரும்.

பிராணாயாமம் என்று இதை எடுத்துக் கொண்டு முதல் நிலையானாலும்
1.பிறருடைய உணர்வுகளைச் சுவாசித்துப் பார்த்தால் “சரம்”
2.அவன் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன மோதுகின்றது…?
3.அவன் என்ன நினைக்கின்றான்…? அவன் உடலில் என்ன இருக்கின்றது…? என்ற நிலையை
4.பிராணாயாமம் – சுவாசித்து உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உணர்ந்தாலும்
5.பிறருடைய எண்ணங்களையும் அவரவர் குணத்தின் எண்ணங்களைக் கவரத் தொடங்கி விடுகின்றது.

கவர்ந்த இந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் சென்றால் வாயு மண்டலங்களில் விஷத் தன்மையாகிக் “கை கால் குடைச்சல்” என்ற நிலைகள் உருவாகிவிடும்.

ஏனென்றால் அந்த உணர்வுகளை நேரடியாகச் செலுத்தி இரத்த நாளங்களில் கலப்பதற்கு முன் வாய்வால் (காற்றாக) இது சுவாசப் பைகளில் சென்று உடலில் விஷத் தன்மைகளைப் பரப்புவதால் அந்த நிலை ஏற்பட்டு விடுகிறது.

வட கிளை தென் கிளை என்று சுவாசித்து… வடிகட்டும் திறனை இழந்து… இயல்பாக இருப்பதை மூக்கை அடைத்து இதைச் செயல்படுத்துவது என்பது இவர்கள் சொல்வது.

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்… அதைத் தான் உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).

1.நேரடியாகச் சுவாசித்து (அந்தந்தக் குணத்தின் உணர்வுகள்) உயிரிலே பட்டு வாயிலே உமிழ் நீராகி…
2.அந்த உமிழ் நீர் உணவுடன் கலந்து அந்த உணர்வுக்குள் உயர்ந்த நிலை ஆன பின் இது இரத்தமாக மாறும் பொழுது…
3.நாம் எந்தக் குணத்தை நாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வு கொண்டு பிராணாயாமம்.

அருள் உணர்வுகளைப் “பிராணன்…” உருவாக்கி இதன் வழி நமக்குள் உருவாக்குதல் வேண்டும் என்பது தான் ஞானிகள் காட்டியது.

நமக்குத் தெரியாமலே நம்மை இயக்கும் சில சக்திகள்

 

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள பத்திரிக்கைகளைப் படிக்கின்றோம் ஒரு அதிர்ச்சியான செயலை… “ஓடும் ரயிலிலே கொள்ளையடித்தான்…” என்று கேள்விப்படுகிறோம். அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அது நமக்குள் பதிவாகி விடுகின்றது.

அந்தப் பதிவு என்ன செய்கின்றது…?

அடுத்து ஒரு சந்தர்ப்பம் நாம் ரயிலில் பயணம் செய்கிறோம் என்றால்… நாம் பதிவு செய்த்து அதிர்வின் தன்மை ஆன உடனே அச்சுறுத்தும் உணர்வாக வருகிறது.

“கொள்ளையன் இங்கே வந்து விடுவானோ…!” என்ற இந்த உணர்வு அச்சுறுத்தினால்… (கொள்ளையடிப்பவன் மற்ற பெட்டிகளுக்கு அநேகமாகச் செல்லவில்லை என்றாலும்)
1.இங்கிருந்து வெளிப்படும் அச்சுறுத்தும் உணர்வலைகள் படரப்படும் போது
2.கொள்ளை அடிப்பவன் இந்தப் பெட்டியிலேயே வந்து கொள்ளையடிப்பான்… இதைப் பார்க்கலாம்.

இதே போன்று பேருந்துகளில் பயணம் செய்யப்படும் பொழுது “விபத்தில் சிக்கி விடுவோமோ…” என்று அதிர்ச்சி ஆகி அந்தப் பேருந்தின் டிரைவரை எண்ணினால்
1.இந்த உணர்வலைகள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு அவன் வண்டியைத் திருப்பி அங்கே விபத்து ஆகும்.
2.இவன் எண்ணியபடி அந்த வண்டியை அணைத்து… இவன் வண்டிக்குள் இருந்தாலும் இவனை உராய்ந்து அடிபடும் நிலை வரும்.
3.ஆனால் மற்றவர்களுக்கு ஒன்றும் ஆகாது.
4.இவன் எடுத்துக் கொண்ட எண்ணத்திற்கொப்ப டிரைவரையும் இயக்குகின்றது தன்னையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால்… நம்மை அறியாது இயக்கும் உணர்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

ஒரு கம்ப்யூட்டரில் ரிமோட் செய்து… அதிலே ஆணையிடும் அழுத்தத்திற்கொப்ப இயக்கச் சக்தியாக எப்படிக் கொண்டு வருகின்றார்களோ அது போன்று
1.நமது உயிரும் ஒரு எலக்ட்ரிக்காக இருக்கின்றது.
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை (அழுத்தத்திற்கொப்ப) அது எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது
3.அதன் வழி தான் இந்த உடலையே அது இயக்குகின்றது என்பதை
4.இன்று நாம் விஞ்ஞான அறிவில் இருப்பதால் அந்த வழிப்படி உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? நம்மை அறியாது தவறுகள் எப்படி வருகிறது…? நுகர்ந்த உணர்வு நம்மை எப்படி நோய்க்கு அழைத்துச் செல்கின்றது…? நோயின் தன்மை இந்த உடலை எப்படி நலியச் செய்கின்றது…? என்ற நிலைகளை மெய்ஞானிகள் தெளிவாக்குகின்றார்கள்.

தெளிவாக்கினாலும் அஞ்ஞான வாழ்க்கையே இன்று வாழ்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களும் அருள் ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வை நுகராது அதை வளர்த்திடாது தணியப்படும் போது… அஞ்ஞான வாழ்க்கையே பக்தி மார்க்கத்திலும் வளர்கின்றது.

ஆலயத்திற்குள் சென்றால் அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது நாம் எண்ண வேண்டியது எது…?

தீபத்தால் வெளிச்சத்தைக் காட்டிய பின்…
1.பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் எல்லாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
4.தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்… அங்கே தீப ஆராதனை காட்டப்படும் பொழுது மறைந்திருக்கும் பொருள்கள் தெரிகின்றது. அந்த வெளிச்சத்திலே தெய்வத்தைப் பார்க்கின்றோம். “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்” என்று காட்டப்படுகிறது… இது துவைதம்.

தெய்வச் சிலைகலாக உருவமாக்கி அந்த எண்ணத்தை எடுத்து அதைக் காவியமாகப் படிக்கும் போது (மேலே சொன்ன மாதிரி) பத்திரிக்கையில் படிக்கும் பொழுது அந்த அசம்பாவிதங்களைக் கண்ட பின்… “உணர்ச்சிகள் எப்படித் தூண்டப்படுகின்றதோ… அதே போல் அருள் உணர்வுகளை நமக்குள் நம்மை அறியாமலே தூண்டச் செய்வதற்கு” அன்றைய ஞானிகள் இவ்வாறு வழி காட்டிச் சென்றார்கள்.

கொள்ளையர்கள் வந்துவிடுவார்களோ என்ற உணர்ச்சியின் தன்மை “நாளை என்ன செய்வது…?” என்ற அச்சுறுத்தும் உணர்வுகளைத் தூண்டுகின்றது. அப்பொழுது நாம் பயந்தே வாழும் நிலை வருகின்றது.

வாகனங்களில் செல்லப்படும் பொழுது இந்த உணர்வுகளே அதிகமாகத் தோன்றி நாம் நுகரும் உணர்வுகள் அந்த அணுக்களுக்கு அது வீரிய உணர்வாக உணவாக ஊட்டி… அச்சுறுத்தும் அணுக்களாக நமக்குள் விளைந்து விடுகிறது.

அதனால் இந்த உடலை நலியச் செய்யும் உணர்வுகளாக ஆகி நல்ல உணர்வுகளை நாம் பறிகொடுத்து விடுகின்றோம். அவன் அங்கே பொருளைப் பறிகொடுத்தான்..
1.ஆனால் பத்திரிக்கையைப் படித்த பின் நுகர்ந்த உணர்வோ இங்கே நமக்குள் நோயாகி
2.இந்த உடலையே பறிகொடுக்கும் நிலையாக வந்து விடுகிறது

இதையெல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டி அருள் வழியில் யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் உணர்வின் துணை கொண்டு… பத்திரிக்கையைப் படித்த அடுத்த கணமே அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவாந்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

பின்… நாளை நடப்பதெல்லாம் மகரிஷிகள் காட்டிய வழியில் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணி “அதிர்ச்சியான உணர்வுகள் நமக்குள் புகாதபடி” தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இந்தத் தியானப் பயிற்சியைச் சீராகப் பயன்படுத்தி அருள் வழியில் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றித் துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றினால் பிறவி இல்லா நிலை அடைகின்றோம்.

தீமை என்ற உணர்வுகள் அதிகமாகப் பற்றிவிட்டால் அந்தப் பற்றின் தன்மை கொண்டு மீண்டும் பிறவியின் நிலைக்கே வருகின்றோம். நோயின் உணர்வுகளை நுகர்ந்தால் இந்த மனித உருவை அழிக்கத் தான் அது உதவும்.

ஆகவே…
1.மகரிஷிகளின் ஆற்றலை உங்களில் பெருக்கி… அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை அகற்றி அருள் ஞானத்துடன் நீங்கள் வளர்ந்து
3.வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி…
4.அருள் உணர்வைப் பற்றுடன் பற்ற வேண்டும் என்று உங்களை வேண்டிப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

சித்தாதி சித்தன்

 

சக்தியின் குணங்கள் மூன்று வகைப்பட்டது.
1.ஆக்குபவளும் அவளே… காப்பவளும் அவளே… அழிப்பவளும் அவளே…!
2.காற்றாகவும் நீராகவும் ஒளியாகவும் உள்ளவளும் அவளே.
3.மூன்று குணங்கள் உள்ள சக்தி தான் இவ்வுலகையே ஆக்கிக் காத்து அழிக்கிறது.
4.”அச்சக்தியின் சொரூபம்.. சக்தியின் வடிவம்… சக்தியின் சுயநிலை… அறிந்தவர்கள் எல்லாம் “பெரும் பாக்கியம் படைத்தவர்கள்…!”

அந்நாளில் வாழ்ந்த தவயோகிகள் இவ்வுலகைக் காப்பதற்காக அச்சக்தியின் சொரூபத்தைத் தன் நிலையில் ஈர்த்துக் கொள்ளவே பெரும் தவமிருந்தார்கள்.

அவ்வழியின் அருளைப் பெறப் பல நாள் தவமிருந்து பல ஜெபங்கள் இருந்து அச்சக்தியின் சொரூப நிலையை அதாவது ஆக்கி… காத்து.. அழிக்கும்… நிலையைத் தன் நிலையில் ஈர்த்துக் கொண்டார்கள்.

சக்தியின் நிலை என்னப்பா…?

1.எதற்காக அவர்கள் கடும் தவமிருந்து அந்த நிலையைப் பெற்றார்கள்…?
2.தான் வாழ… தன் புகழ் ஓங்க… தன் சுற்றத்தாரை வாழ வைக்கவா… அந்த நிலையைப் பெற்றார்கள்…?

இல்லையப்பா…!

அவர்கள் பெற்ற அருள் எல்லாம் தன் நிலையைக் காத்து… தன் ஆசையை அழித்து.. தன்னுள் சக்தியின் ஜீவனை வளர்த்துக் கொண்டார்கள். அந்த நிலை பெறுவதற்காக மிகவும் கடும் தவம் ஜெபம் எல்லாம் இருந்தார்கள்.

ஆதியில் வந்த சித்தர்கள் பெற்ற சக்தியின் அருள் எப்படியப்பா…?
1.தன் உயிர் அணுவின் தொடர்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவையும்
2.தன் நிலைக்கு இயங்கும்படி அச்சக்தியின் அருளைப் பெற்றார்கள்.

அதாவது… “கோபம் வருவதும் மகிழ்ச்சி வருவதும் சம நிலை எய்துவதும்” என்ற பாகுபாடு தன் உடலில் இல்லாமல்
1.மன எண்ணத்தில் எந்த நிலையைப் பார்த்தாலும் தன் நிலையை ஒரே நிலையில் வைத்துக் கொள்ள
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் ஒரு நிலைப்படுத்தி விட்டார்கள்.

அந்த நிலையில் அவர்கள் ஜெபித்த ஜெபமெல்லாம்… அவர்கள் பெற்ற அருள் எல்லாம்… “ஒரு சிறு அணுவளவு எந்த எண்ணத்தில் ஒருவர் மேல் பாய்ச்சுகின்றார்களோ… அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுகிறார்கள்….”

இத்தகைய ஆற்றல் பெற்றவர்கள் பெரும் மழைக்கும் சுழல் காற்றுக்கும் தன்னைச் சுற்றி எந்த நிலை வந்து தாக்கினாலும் அவர்களின் நிலைக்கு எந்த நிலையும் தெரிந்திடாது.

அவர்கள் எண்ண நிலை ஜெப நிலை எல்லாம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது… அவர்கள் உடலுக்கு உணவும் உணர்வும் சுவாசமும் எந்த நிலையும் வேண்டுவதில்லை.

அவர்கள் நிலை எல்லாம் “அச்சக்தியின் நினைவே தான்…!” அச்சக்தியின் நிலையை உணர்ந்து அச்சக்தியின் அருளில் உள்ள பல கோடானு கோடி அணுக்களில் தன் உணர்வுக்கு வேண்டிய அணுவை மட்டும் ஈர்க்கிறார் இச்சித்தாதி சித்தன்.

அந்த நிலையில் உள்ள சித்தன் இவ்வுலக உயர்வுக்காக இவ்வுலகில் உள்ள மனிதர்களுக்கு எந்த வழியில் கற்பித்தால் புரிந்து விடும் என்ற நிலையில் தான் பெற்ற அருளினால் தன் உடல் அழிந்திடாமல் ஒரு நிலையில் அமர்ந்து
1.இவ்வுலக மக்களுக்குப் புரியும் வண்ணம்
2.அச்சக்தியின் உருவ அமைப்பைக் கல்லினாலோ பல உலோகத்தினாலோ செய்து
3.அந்த நிலையில் அச்சித்தன் உடலுடன் அமர்ந்து பல காலம் ஜெபம் செய்கின்றான்.
4.அந்த ஜெபத்தின் பலனைத்தான் நீ அக்கோயிலுக்குச் செல்லும் பொழுது அச்சித்தனின் அருளினால் பெற்று வருகிறாய்.

அக்கால ஆதிகாலச் சித்தாதி சித்தர்களும் பல கோடி ஞானிகளும் ரிஷிகளும் அமர்ந்து அச்சக்தியின் அருளைப் பெற்று எய்திய கோயில்கள் தான் இப்பொழுது நீ சென்று பூஜிக்கும் பல கோயில்களும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த மனித வாழ்க்கையில்…
1.அன்றாடம் நாம் எத்தனை பேரைச் சந்திக்கின்றோமோ
2.எத்தனை பேர் துயரங்களைக் கேட்டோமோ
3.அவர்களுக்கெல்லாம் நாம் உதவி செய்தாலும் அந்த உணர்வுகள் (துயரம்) எல்லாம் நமக்குள் இயக்கமாகிறது.
4.நமக்குள்ளும் அந்தத் தீமையின் உணர்வுகளாக விளைந்து விடுகிறது.

ஆகவே நம் உடலான ஆலயத்திற்குள் எதைச் சேர்க்க வேண்டும்…?

எத்தனையோ உணர்வுகளை நாம் நுகர்ந்தோம். அதிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்று உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும்
2.அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும். என்று
4.இந்த உணர்வுகளை உட்செலுத்தி வலுவாக்கிக் கொள்ள வேண்டும்,

பின்… எங்கள் வாழ்க்கையில் எத்தனை பேரைச் சந்தித்தோமோ பார்த்தோமோ… அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கை எல்லாம் வளம் பெற வேண்டும்… அவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்று எண்ணி எல்லோரையும் (எல்லா உணர்வுகளையும்) ஒன்று சேர்க்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றாக ஆன பின் என்ன ஆகிறது…?

1.ஒரு வேம்பின் உணர்வைக் கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் எப்படி ஓடுகின்றதோ
2.ஒரு விஷமான செடியின் மணத்தின் தன்மை கண்ட பின் ரோஜாப்பூவின் மணம் சுழற்சி ஆகின்றதோ
3.இதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுக்கும் பொழுது
4.தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவிலிருந்து அகன்று ஓடிவிடும்.

ஒவ்வொருவரும் இதே போல் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டு எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு இப்படி வெளிப்படுத்தும் இந்த உணர்வுகள் எல்லாம் அலைகளாக மாறினால் நமக்கு முன் இருக்கும் மற்ற நஞ்சான தீமை செய்யும் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளிவிடும்… பரமாத்மா (காற்று மண்டலம்) தூயமையாகும்..!

இந்தப் பூமியின் நிலைகளை மாற்றுவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் ஞானிகள் இதைச் செய்தார்கள்.

ஆகவே தீமையை நீக்கிய உணர்வை இந்த முறைப்படி வினைக்கு நாயகனாக ஆக்கப்படும் பொழுது இது நமக்குள் இணைந்து வலிமை மிக்க சக்தியாக மாறுகின்றது.

இதே உணர்வை வைத்து…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று உயிரிலே மோதச் செய்தால்
2.அது எப்படித் தீமைகளை நீக்கியதோ அந்த உணர்வுகள் தெய்வ ஆணை…! தீமையை நீக்கிய அந்த எண்ணங்கள் நமக்குள் வருகிறது
3.அந்த ஆணைப்படி செய்தால் இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி.

நம் ஞானிகள் மிகவும் அற்புதமாக சாதாரண மனிதனும் புரிந்து தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்ற இவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.

இதை நாம் அன்றாடம் செய்கின்றோமா…? இல்லை…! ஞானிகள் சொன்ன முறைகளுக்கு மாறான நிலைகளைத்தான் நம் வாழ்க்கையில் அமைத்துக் கொள்கிறோம்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும்… உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா…!

 

இவ்வுலகின் தன்மையிலே மனிதனின் எண்ணத்திற்கும் ஆவி உலகின் எண்ணத்திற்கும் பல கோடிப் பாடங்களைப் பகர்ந்திடலாம்.
1.விதி வந்து விட்டது… அதனால் மடிந்து விட்டான்…! என்கிறோம்.
2.விதி வந்து அந்த உடல்களை மடியச் செய்வதில்லை
3.ஆயுளை ஆண்டவன் அளிப்பதல்ல…!

பிறப்பும் இறப்பும் “இறைவன் இட்ட பிச்சை” என்கிறார்கள். பிறப்பும் இறப்பும் இறைவன் இட்ட பிச்சை அல்ல. காலம் தோன்றியவுடன் வந்த அணுக்கள் தான் காலமுடன் கலந்து வந்துள்ளது பல பிறப்புகளில்.

எந்த அணுவும் எக்காலத்திலும் மடிவதில்லை.

கலி முடிந்து கல்கி வருகிறது…! என்று சொன்னேன். கலியில் முடியும் இவ்வுயிர் அணுக்கள் எல்லாமே கல்கியில் அவ்வொளியின் கதிர்கள் பட்டவுடன் பல நிலை கொண்ட பிறப்பாக உயிர் பெறுகின்றது. அந்த நிலையில் சுழல்கிறது அந்த உலகத்திலேயே.

உலகத்தன்மை தான் மாறுபடுகிறது. உயிரணுவின் தன்மையும் மாறுபடுகிறது. எல்லாமே என்றென்றும் அழிவதில்லை… மாறுபட்டு மாறுபட்டுத் தான் உலகில் சுற்றிக் கொண்டே வருகிறது.

மனிதன் மனிதனாகவும் பிறப்பதில்லை. மற்ற ஜீவராசிகள் அந்தந்த உடலிலேயும் பிறப்பதில்லை. அவ்வுலக ஆரம்பத்தில் உலக நிலையில் இக்காற்றுடன் கலந்துள்ள அணுக்கள் எல்லாம் அதனதன் மன நிலையில் விடும் சுவாசத்தின் தன்மையிலே ஆரம்ப நிலையில் வந்து உதிக்கின்றது புழுவாக… பூச்சியாக… மீனாக… நண்டாக…!

ஆதியில் மனிதன் கல்கியின் ஆரம்பத்தில் முதல் அவதாரத்தில் தோன்றிய உயிரணுக்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்தன. அந்நிலையில் விட்ட சுவாசத் தன்மையிலே உருவங்கள் மாறுபட்டு மாறுபட்டுப் புழுவாகி அடுத்த நிலையில் கொசுவாகிக் கொசுவின் நிலை மீனாகி அந்நிலையில் இருந்து மனித உடல் பெறுகின்றன.

மனித உடலின் எண்ணத்திலே மாறுபட்டு மாறுபட்டு ஏழு ஜென்மங்கள் எடுத்து…
1.ஏழு ஜென்மங்கள் எடுப்பவனும் மனித உடலில் சில காலங்கள் தான் சஞ்சரிக்கின்றான்.
2.மனித உடலில் மாறுபட்டுத் தான் மிருகமாகின்றான். மனிதனில் இருந்து தான் மிருகம்.
3.மிருகத்தில் இருந்து பறவையாகி நீரில் வாழும் ஜீவராசிகளாகி கொசுவாகிப் புழுவாகி
4.உலக ஆரம்பத்தில் உள்ள நிலைக்கே கலியின் கடைசிக்கும் வருகின்றான்.
5.கல்கியின் முதலுக்கும் அந்நிலையில் தான் வருகின்றான். அந்த நிலையில் தான் பிறகும் ஜென்மம் எடுக்கின்றான்.

இந்த ஜென்மச் சுற்றிலிருந்து விடுபடுவதற்குத் தான் இத்தியான நிலை. தியானத்தின் மூலம் உங்கள் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திடுங்கள்.

இப்பொழுது இந்த உடலில் உள்ள ஜென்மம் மட்டுமல்ல உங்கள் ஜென்மம். இந்த உலக ஆரம்பத்திலேயே வந்து விட்டது உங்கள் ஜென்மம்.

ஜென்மப் பயனை எடுத்திடுங்கள்… ஈசன் அருளைப் பெற்றிடலாம்…! என்பதெல்லாம் இதுவே தான். இறைவன் என்பவன் யாருமில்லை. “அவனவன் உள்ளத்தில் தான் இறைவன் உள்ளான்…!” என்று பல முறை உணர்த்தினேன்.

இறப்பும் பிறப்பும் இறைவன் செய்ததல்ல. வந்தது எல்லாம் அவரவர் (உங்கள்) வழியில் தான். “வினை விதைத்தவன் வினை அறுப்பான் விதை விதைத்தவன் விதை அறுப்பான்…” என்ற பொருளும் இதுவேதான்.

உன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியில்
1.பிறப்பு எடுத்ததும் நீயே தான்
2.பிறவியை இழப்பதும் நீயே தான்.

இறைவனின் படைப்பல்ல பிறப்பும் இறப்பும். உன்னுள்ளே தான் எல்லாமே உள்ளதப்பா… எண்ணத்தின் சுற்றலிலே…! சுவாசத்தில் வருவது தான் பிறப்பும் இறப்புமே.

பாட நிலை புரிந்ததா…?

பிறர்படும் வேதனையை நுகரவே கூடாது… அதைக் கண்டு ரசிக்கவும் கூடாது

 

மற்றவர்கள் வேதனைப்படுவதை நுகர்ந்து “அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும்…” என்று அதை ரசித்து அத்தகைய உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து விட்டால்… அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

தன் குடும்பத்திற்குள் பண்பு கொண்ட நிலைகள் என்று இருப்பினும்… வேதனையை ரசித்த உணர்வுகளை… அந்த விஷத்தன்மையை இங்கே கொண்டு வரப்படும் பொழுது… அவர்களும் சிந்திக்கும் திறன் இழக்கின்றனர்.

சிந்திக்கும் திறன் இழக்கப்படும் பொழுது…
1.பாசத்தால் தன் பையனை இதைச் செய்… அதை செய்… இப்படியெல்லாம் நீ இருக்க வேண்டும்…! என்று அடிக்கடி சொல்வார்.
2.அவர் சொல்லச் சொல்ல இவருக்கு சும்மா இதே தான் வேலையாகிப் போய்விட்டது என்று
3.வெறுத்திடும் உணர்வாக… வெறுப்பை ஊட்டும் அணுக்கள் இங்கே விளையத் தொடங்குகிறது.

அடுத்தவர்கள் துயரைப்படுவதைக் கண்டு அந்த வேதனைகளை ரசித்து நுகர்ந்ததன் நிலையில்… தன் குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்று இவர் வெளிப்படுத்தும் உணர்வு
1.“தன்னுடன் இணைந்த மக்களைப் பிரித்து விடுகின்றது….”
2.அதே சமயத்தில் தன்னுடன் இணைந்து வாழும் தன் சமூகத்தினருடனும் “வெறுப்படையும் தன்மையை” உருவாக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வேகங்கள் கூடும் பொழுது… விஷம் கலந்த உணர்வின் சொல்லாக மற்றவர் செவிகளில் கேட்கப்படும் பொழுது… தன்னை அறியாமலே நண்பனையும் (மறைமுகமாக) எதிரியாக உருவாக்கி விடுகின்றது…

ஆதே விஷம் கொண்ட உணர்வுகளைத் தன் வியாபாரத்திலும் அதிகமாகப் பேசப்படும் பொழுது… அதாவது சொல்லால் பொருளின் தரங்களைப் பற்றிப் பேசப்படும் பொழுது… தன்னை அறியாது அங்கே “உணர்ச்சிகள் மாறுகிறது…”

நல்ல பொருளுக்குள் விஷத்தின் தன்மை பட்டால் அதன் வேகத் துடிப்பு கொண்டு அதனைப் பயன்படுத்துவோரை எப்படி அது மயங்கச் செய்கின்றதோ இதைப்போல கேட்பவரின் சிந்தனையைக் குறைக்கச் செய்து விஷத்தின் துடிப்பால் வாடும் பொழுது… “நல்ல சொல்களைச் சொன்னால் கேட்க முடியாது…”

அடிக்கடி பிறருடைய வேதனையைக் கண்டு ரசித்த அவர்கள்…
1.தன் இன மக்களிடமோ நண்பர்களிடமோ பேசும் பொழுதெல்லாம் விஷம் கலந்த உணர்வுகள் தோன்றி
2.அவருடன் பற்று கொள்ளும் பொழுது விஷ அணுக்களை உருவாக்கி
3.நாளடைவில் இவர் உணர்வே பகைமையாக்கிவிடும்… இவரை வெறுக்கும் உணர்வே அங்கே வளர்கின்றது.

இதையெல்லாம் யார் செய்வது…? இதைத் தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…” என்று சொல்வது.

ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அவனுக்குள் இருக்கும் வேதனை (வேதனை என்பதே நஞ்சு) என்ற வலிமை கொண்ட உணர்வுகளை நுகர்ந்தறியப்படும் போது அது தனக்குள் வளர்ச்சியாகி அது நம்மை நலியச் செய்கின்றது வலு இழக்கச் செய்கின்றது நல்ல குணத்தை.

இதை எதைக் கொண்டு நாம் செயல்படுத்த வேண்டும்…?

வெப்பத்தின் தணல் கொண்டு உலோகத்தினை உருக்கி இளகச் செய்து நமக்கு உபயோகமாகக் கூடிய ஒரு பொருளாக அதை மாற்றுகின்றோம்.

அப்படி மாற்றுவதற்கு என்ன செய்கிறோம்…?

நெருப்பிலே அந்த உலோகத்தைன் வைத்து அது சிவந்த பின் ஒரு இடுக்கி கொண்டு அதை நகர்த்தி… சம்மட்டி கொண்டு அடித்து வேண்டிய உருவாக மாற்றுகின்றனர்.

அதே போல் அந்த உலோகத்தை உலையில் வைத்து தண்ணீர் போல் உருகச் செய்து
1.தனக்குத் தேவையான உருவத்திற்கு மோல்டுகளை (MOULDING) வைத்து அதிலே உருக்கிய உலோகத்தை ஊற்றப்படும் போது
2.மோல்டிற்குள் இருக்கும் சந்து இடங்களில் நுழைந்து (FILLING)… எண்ணிய உருவமாக உருவாக்குகின்றார்கள்.
3.உறைந்து ஆறிய பின் எடுத்து… அதில் பிசிறுகள் இருந்தால் அகற்றித் தூய்மையாக்குகின்றனர்.

இப்படித்தான் பல பொருள்களையும் இயந்திரங்களையும் மோல்டுகளாகச் செய்து உருவாக்குகின்றார்கள் மனிதன் தன் அறிவாற்றல் கொண்டு.

இதைப் போன்று தான் நாம் பிறருடைய குறைகளையும் துயரங்களையும் வேதனைகளையும் கேட்டறிந்தால்
1.அந்த விஷத்தின் தன்மைகளை உருவாக்கும்… “நமக்குள் உருப்பெறும் உறைவிடமாக” அது மாற்றி விடுகின்றது.
2.நல்ல குணங்களுடன் இது கலந்து செல்லப்படும் பொழுது அதைச் செயலற்றதாக (தீமையின் உணர்வுகள் கலந்து மோல்ட் போன்று) ஆக்கி விடுகின்றது.
3.நன்மை செய்யும் உணர்வுகள் குறைந்து தீய விளைவுகளை உருவாக்கச் செய்கிறது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…! நம்மை நாம் எப்படிக் காப்பது…?

மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்றவன் துருவன் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன். விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து அந்த உணர்வின் வலிமை கொண்டு வளர்ச்சி பெற்றவன் அகஸ்தியன்.

தான் பெற்ற சக்தியை… தான் கண்டுணர்ந்த பேராற்றல்களை… திருமணமான பின் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
1.அகண்ட அண்டத்தில் உருவாகும் நிலையும்… அணுக்களின் தன்மையும்
2.”தீமைகளைப் பிளக்கும் நட்சத்திரங்களின் இயக்கமும்”
3.இதைப் போன்று அவன் கண்டுணர்ந்த உணர்வுகளை எல்லாம் தன் மனைவியின் செவிகளில் ஓதுகின்றான்.
4.இவன் சொல்வதை மனைவி “கண் கொண்டு கூர்ந்து உற்றுப் பார்க்கின்றது…”
5.இவனின்று வரும் உணர்வினை அது நுகரும்படி செய்கிறது
6.உயிரிலே இந்த உணர்வுகள் பட்ட பின் அறியும் ஆற்றல்மிக்க அணுக்களாக விளைகிறது.

இருவரும் ஒன்றிய நிலைகள் கொண்டு இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து… இரு உயிரும் ஒன்றாக இணைந்து உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக… அழியாத நிலையாக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெற்றால் அவர்களைப் போன்றே நாமும் நஞ்சினை அடக்க முடியும்… “உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக்க முடியும்…” மகிழ்ந்து வாழ முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையவும் முடியும்.

உடல் வலு… உயிரான்ம வலு… இரண்டுக்கும் உள்ள வித்தியாசம்

 

மனிதன் “செயற்கையாக” வலுக்கொண்ட உணர்வுகளைச் சுவாசிப்பதற்காகத் தன் உடல் தசைகளை இயக்குகின்றான். எப்படியும் உடலில் வலுவைச் சேர்க்க வேண்டும் என்று அந்த உணர்வின் தன்மை கொண்டு “கை கால் அங்கங்களை மூட்டையைக் கட்டி அடிப்பதும்… கை கால்களை ஓங்கி அசைப்பதும்…” இந்த உணர்வின் தன்மை சிறுகச் சிறுக எடுக்கப்படும் பொழுது… தசைகளில் வலுவின் தன்மை வருகின்றது.

வலுவான நிலையினை உருவாக்கும் நிலையாகப் பித்த சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கின்றது. இப்படிச் சுரக்கப்படும் பொழுது என்னவெல்லாம் நடக்கிறது…?

1.சாதாரண மனிதன் கால் கிலோ கறியைச் சாப்பிடுவதே சிரமம்.
2.ஆனால் இவன் பத்துக் கோழியைச் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாக கூட்டி தன் உணவாக உட்கொண்டு தன் உடலிலே (தசைகளில்) வலு சேர்ப்பான்.

மிருகத்தின் விஷத் தன்மை கொண்ட உணர்வுகளை இவனுக்குள் சேர்க்கச் சேர்க்க பித்த சுரப்பிகளும் அதிகமாகச் சுரக்கப்பட்டு… மிருகங்களுக்கு எப்படி வலு இருக்கின்றதோ அதைப் போல் அவன் உடலில் தசைகளில் வலு உருவாகி… “சாதாரண மனிதனைக் காட்டிலும் மிருக பலம் கொண்டிருப்பான்…”

சாதாரணமாக… இரண்டு இன்ச் (2”) கனமுள்ள ஒரு கம்பியை வலுவான கருவி கொண்டு தான் வளைக்க முடியும். ஆனால் இவனோ தன் கையிலேயே ஒரு முறுக்கைச் சுழட்டுவது போன்று சுற்றி வளைத்து விடுவான்.

யானைக்கு எந்த வலு உண்டோ… அது போல பல மிருகங்களின் உணவை உட்கொள்ளும் பொழுது அவனின் உழைப்பும் இந்த உணர்வின் தன்மை நினைவும்… இவனுக்குள் வலு சேர்க்கும் உணர்வாக வளர்கின்றது.

இப்படி வளர்ச்சி அடைந்தவன் சாதாரண மனிதனைக் காட்டிலும் வலுக்கொண்டவன் ஆகிவிடுன்றான். ஆனால் அனேகமாக அவனுக்கு நோயே அதிகமாக வருவதில்லை…!

கடுமையான விஷம் இருக்கும் பொழுது மிருகங்கள் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. நாளடைவில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாகி முதிர்வடையப்படும் பொழுது மிருகங்கள் அதனுடைய வளர்ச்சியின் தன்மை வாழும் காலம் குறுகியதாக இருக்கின்றது…. அதற்குள் மடிந்து விடுகின்றது

அதே போன்று ஒரு மனிதன் இப்படி விஷத்தன்மையைத் தனக்குள் வலுவாக்கிக் கொண்டாலும்…
1.விஷத்தின் தன்மை உடலில் அதிகரிக்கப்படும் பொழுது
2.இருதய வாயில்களிலோ சிறு மூளை பாகங்களிலோ உடனடியாகத் தெறித்து இரத்தக் கசிவாகி
3.நோய்வாய்ப் படாதபடி அவன் மடிந்து விடுவான்.

ஆக… அசுர உணர்வு கொண்டு மனித உடலை விட்டுச் சென்றால் எந்தக் கோழிகளை அதிகமாக உட்கொண்டானோ இறந்த பின் உயிரான்மா கோழியின் ஈர்ப்புக்குள் தான் செல்லும்.

பெரும்பகுதி பயில்வானாக இருப்பவர்கள் அனைவருமே கோழியைத்தான் அதிகமாக உட்கொள்வார்கள். மற்ற பறவை இனங்களையும் உட்கொள்வார்கள் பறவை இனங்கள் அனைத்தும் விஷத்தன்மைகளை அதிகமாக உட்கொண்டாலும் அதை ஜீரணிக்கக் கூடிய வல்லமை பெற்றது.

ஆகவே அந்த உடல் உறுப்புகளை இவன் உணவாக உட்கொள்ளும் பொழுது அது எப்படி விஷத்தினை அதனின் உணர்வு கொண்டு தனக்குள் வலுவானதோ இதைப் போன்று இவனுக்குள் உணவாக உட்கொள்ளும் ரசங்கள் பித்த சுரப்பிகளின் வளர்ச்சி அதிகமாகின்றது.

அதன் வழி கொண்டு அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷத்தன்மையாக வருகின்றது. யானைக்கு எப்படி வலுவோ புலிக்கு எப்படி வலுவோ மற்ற மிருகங்களுக்கு எப்படி வலு வருகிறதோ இதைப்போல இவனுக்குள் வலு வருகின்றது.

1.ஆனால் இவன் மிருக குணம் கொண்டு தான் இருப்பான்
2.அவனிடம் யாராவது சாந்தமாகப் பேச முடியுமா என்றால் இல்லை.
3.அசுர உணர்வு கொண்டு பேசுவதும்… அவனை எதிர்த்துக் குறையாகப் பேசும் நிலை வந்தால்… அவனைத் தாக்கும் நிலையில் தான் வருவான்.

ஆகவே… அவனை மதித்து நடக்க வேண்டும். குத்துச்சண்டை வீரர்களிடம் நாம் அணுகினால் அசுர உணர்வைத் தான் அவன் காட்டுவான் மனித உடலிலேயே மிருகமாக மாற்றிக் கொள்கின்றனர்.

மற்றவர்கள் தன்னைப் போற்ற வேண்டும் என்று எண்ணுகின்றான். கோழி மற்ற பறவைகள்… விஷத்தை முறிக்கும் உணர்வுகள் அவன் உடலில் விளைந்ததால்… விஷத்தன்மையை ஒடுக்கும் தன்மை வருகிறது. வலுக் கொண்டவனாக இருக்கின்றான்.

ஆனாலும் விஷத்தை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது “அடுத்த பிறவி எது…?” என்றால் கோழியாகத்தான் பிறப்பான்.
1.இன்று ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றான்.
2.எதை ரசித்து உட்கொண்டானோ உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் உயிருடன் சேர்த்து ஆன்மாவாக மாறும்.
3.எந்த மணத்தின் தன்மை ஆன்மாவிலே பெருகியதோ உடலை விட்டுச் சென்ற பின் அங்கே கோழிக்குள் தான் செல்வான்.

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது “மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ணத்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது… வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள “ஒரு உடலை” எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை “எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா….”
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்…
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது… என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில்… “ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

அறியாது நமக்குள் வரும் தீமைகளையும் வேதனைகளையும் “நாம் துடைக்க மறுக்கக்கூடாது”

 

மனிதன் பல கோடிச் சரீரங்களில் தேர்ந்தெடுத்த ஆறாவது அறிவாகப் பெற்ற நிலையில் பிறிதொரு மனிதன் வேதனைப்படுவதை நுகர்ந்து விட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அறிவை அப்போதே அது மறைத்து விடுகின்றது.

1.அந்த வேதனையை நாம் துடைக்க மறுத்து விட்டால்… துடைக்கத் தவறிவிட்டால்…
2.அது சிறுகச் சிறுக நமக்குள் வளரத் தொடங்கி தேய்பிறையாக
3.அமாவாசைக்கு பின் சந்திரன் குறைவது போன்று குறைந்துவிடும் (கண்ணுக்கு புலப்படாது.

ஆகவே உயிரின் தன்மை கொண்டு ஒளி ஒடுங்கி விடுகின்றது மீண்டும் நல்ல உணர்வை நுகர்ந்தால் தான் நல்ல அறிவாகக் (பிரகாசத்தை) காண முடியும்.

உயிரணு தோன்றிய பின் மனிதனாக வரும் பொழுது பூரண சந்திரனைப் போன்று அனைத்தையும் அறிந்திடும் அறிவாகப் பெறுகின்றோம். ஆனாலும்
1.அந்த அறிந்திடும் அறிவின் தன்மை கொண்டு பிறிதொரு கஷ்டங்களைக் கேட்டறிந்தால்
2.சிறுகச் சிறுக நம்முடைய நல்ல குணங்கள் அனைத்தும் நஞ்சு கலந்து நாம் தேய்பிறையாக மாறிவிடுகின்றோம்.

அதை மாற்ற வேண்டுமல்லவா…!

பௌர்ணமியைப் போன்று பூரண ஒளி பெற்ற துருவ நட்சத்திரம் பேரருள் பேரொளியாக நம் துருவப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அதைப் பின்பற்றிய அனைவரும் சப்தரிஷி மண்டலங்களாக அதனின் ஈர்ப்பு வட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைப் பெறக்கூடிய தகுதிக்கே உங்களுக்குள் இப்போது உபதேசிக்கப்படுகின்றது. உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோம்.
1.யாரெல்லாம் இதை மீண்டும் “கூர்மையாக நினைவுக்குக் கொண்டு வருகின்றார்களோ”
2.”துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்கின்றார்களோ…” அவர்களே அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.
3.அவ்வாறு தகுதி பெற்ற பின்… தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்கும் அதே போன்று கணவனுக்கும் கிடைக்க வேண்டும் என்று
4..யாரெல்லாம் இருவரும் ஒன்றிச் செயல்படுகின்றனரோ அவரே தீமைகளை வெல்லும் அருள் சக்தி பெற்றவர்களாகின்றார்கள்.
5.விண்ணின் நிலைகளை யாரெல்லாம் கூர்மையாகப் பார்க்கின்றார்களோ அவரே பிறவில்லா நிலை அடைகின்றனர்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்காகத் தான் விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நாம் கிழக்கே பார்த்து அதை விண்ணை நோக்கி எடுக்கும்படி வைத்தனர் அன்றைய ஞானியர்.

இன்று நாம் மனிதச் சரீரம் பெற்ற நிலையில் பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி அடைந்து வந்திருந்தாலும் அன்பு பரிவு பாசம் என்று பேரன்பு கொண்ட நிலையில்… பிறருடைய துயரத்தைக் கவர்ந்த பின் அதைத் துடைக்கத் தவறினால்… துடைக்க மறுத்தால்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் தீயவினைகளாகச் சேர்ந்து விடுகின்றது.

1.ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால் “அதை நாம் துடைக்க மறுத்து விடுவோம்…” இருக்கட்டும்… அவனை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்போம்.
2,ஒருவர் மீது பாசமாக இருந்து ஏதாவது ஆகிவிட்டால்… அவன் படும் வேதனையைப் பார்த்து
3.அவனுக்கு இப்படி ஆகிவிட்டதே… ஆகிவிட்டதே… என்று தான் சொல்வார்கள்… “வேதனைப்பட்டதைத் துடைக்க மறுப்பார்கள்…”

அவரிடம் நீங்கள் சொல்லிப் பாருங்கள் அதைத் துடைக்க மறுப்பார்கள்…!
1.மறுத்து விட்டால் அல்லது மறந்து விட்டால் அது தீமையின் உணர்வாக விளையத் தொடங்கும்
2.மனிதனின் வளர்ச்சியைத் நம்மைத் தேய்பிறையாக மாற்றிவிடும்.

இதை உணர்த்துவதற்குத்தான் அங்கே விநாயகருக்கு அருகில் வேம்பை வைத்துக் காட்டினார்கள். அதன் அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள்.

இந்த பிரபஞ்சத்தில் உருவான நஞ்சினை அடக்கி ஒளியாக மாற்றியவன் துருவ மகரிஷி… அரசைப் போன்று அவன் ஓங்கி வளர்ந்தவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்
1.ஆகவே அதனின்று வரும் அருள் ஒளியின் தன்மை எடுத்தால் எத்தகைய நஞ்சின் தன்மையையும் அது பிளந்து விடும்
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் தகுதி நாம் பெறுகின்றோம்.

கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான உணர்வை இருவருமே எடுத்து இணைத்துக் கொண்டால்… ஒளியின் அணுக்களாக மாற்றி விட்டால்… நஞ்சினை வென்றிடும் அணுவாக அது விளைகிறது.

அந்த உணர்வின் ஒளியைப் பெருக்க முடியும் அந்தத் தகுதியை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதற்கு தான் விநாயகர் தத்துவமாகக் கொடுத்தது.

அந்தத் தத்துவப் பிராகரம்… சாதாரண மனிதனும் தன் வாழ்க்கையில் தன்னை அறிதல் என்ற நிலைக்குத் தனக்குள் வரும் தீமைகளை… மேல் அழுக்கைப் போக்குவது போல ஆன்மாவில் படும் அழுக்கைப் போக்கி… தன் உடலுக்குள் ஜீவான்மாவை மறைத்திருக்கும் தீமையின் அழுக்குகளையும் நீக்க முடியும்.

ஆகவே அருவ நிலைகள் செயல்படுவதை அறிந்து கொள்ள விநாயகரை உற்றுப் பார்க்கப்படும் போது (அது துவைதம்) ஞானிகள் காட்டிய காவியத்தின் பிரகாரம் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அங்கே காட்டப்பட்டிருக்கும் உண்மைப் பொருள்களை நாம் உணர்ந்து அதன் வழியில் நாம் நுகர்ந்தால் அத்வைதம்
2.இந்த உணர்வுகள் உயிரிலே பட்டு உடலில் விளைந்து மீண்டும் நுகந்தறியப்படும் போது விசிஷ்டாத்வைதம்
3.அந்த உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்பட்டு அதன் வழி நாம் விண் சொல்லும் நிலையாகப் பிறவியில்லா நிலை அடைய அது உதவும்.

“தாய் சக்தி.. மனைவி சக்தி…” என்ற ரிஷிபத்தினி சக்தியின் கலப்பு

 

கொங்கணர் ஞானம் பெற்ற நிலைகளை விவரிக்கத் தொடங்கினால் அது எந்த வகை என்றுரைக்க நினைப்பதற்கு அடங்கிடுமோ..?

“மாடி வீட்டு அரசன்… கோடி வீட்டுப் புருஷன்…!” என்ற வகை உண்மை நிலையில் இவர் வேறு… அவர் வேறு…! என்று பிரித்துச் சொல்லும் வகையில் “கோடி வீட்டுப் புருஷார்த்த புருஷனே கொங்கணர்…!” என்றாலும் அவர் எடுத்த அவதார நிலைகளே பாலாஜி… வெங்கடேஸ்வரன்… ஸ்ரீனிவாசன்…!

இருந்தாலும் பின் அவரே மாடி வீட்டு அரசன் ஆக ஆன செயலில் இரு வகைச் சூட்சமங்கள் பெற்ற அவதாரமே ஸ்ரீனிவாசன் என்னும் வெங்கடேசக் கொங்கண மாமகரிஷி.

ரிஷி மூலம் பார்க்காதே… நதி மூலம் பார்க்காதே…! என்று அக்காலங்களில் சொல்வார்கள். அதனின் வகையில்
1.மெய்ப் பொருளைக் கண்டறிந்த அந்த மாமகரிஷிகள் பெற்ற ஞானத்தை மட்டும் நாம் அறிந்து
2.அதைப் பெறுகின்ற ஞானத்தின் வளர்ச்சிக்கு முயல்வோம்.

அறிவின் வளர்ச்சிக்கு வளச்சியூட்டும் செயலாக அந்தக் கொங்கணர் பெற்ற சூட்சமத்தின் தொடர் நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய கால கட்டங்களில் ஞானி சித்தனாகி… சித்தன் முனிவனாகி… பின் ரிஷியாகும் தொடர்பில் அனைத்தையும் அனுபவ ஞான வளர்ச்சி என்னும் தொடர்பில் பெற்றவர்கள் தான்.

தனது அறிவின் ஞான வளர்ப்பை மீண்டும் மீண்டும் வளர்ப்பாக வளர்த்திடவும் இந்த உலக மக்கள் உய்வு (பிறவியில்லா நிலை) எய்திடவும் ஏற்படுத்தப்பட்டது தான் ஜெப நிலையும் தியான நிலையும்.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய… வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மூச்சலைகளையே ஒவ்வொரு உயிரும் உண்ணும்படியாக தியானத் வழித் தொடரை ஏற்படுத்தினார்கள்.

எந்தெந்த உயிராத்மாக்கள் எண்ணி ஏங்குகின்றதோ அவர்களுக்கெல்லாம்
1.தாங்களே (மகரிஷிகளே) உணவும் ஆகி
2.உணவாக்கிட விறகாகவும் எரிந்து
3.ஆகாரமாகப் புசிக்கும் பக்குவ கதியில் அதாவது நமது உயிரான்மாக்கள் ஆன்ம சக்தியைக் கூட்டிடும் ஆகார கதிக்குத் தானே ஆகாரமாகி
4.பேரருள் பேரொளி சக்தியையே அளித்திட்ட வள்ளல் பெருமக்களே மகரிஷிகள் ஆவர்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிராத்மாக்களும் தன் வளர்ப்பில் வளர்ச்சி கொள்வதற்காக வித்திட்டவர்கள் மகரிஷிகளே.

நம்முடைய வளர்ச்சிக்கு வழி காட்ட உறுதுணையாக இருந்து… நாம் பெறும் சக்திக்கே சக்தி அளித்திட்ட..
1.அந்தச் சக்தியின் செல்வங்கள் (மகரிஷிகள்) பெற்ற நற்சக்திக்கு வலு சேர்க்கும் விதமாக
2.நம்முடைய ஞான சக்தியை வளர்த்திடும் நிலையாக நாம் அனைத்தையும் அறிந்து உணர்ந்திட வேண்டும்.

கோபம் குரோதம் காமம் ஆசை விருப்பு வெறுப்பு என்னும் தொடரிலே அவசரம் ஆத்திரம் பழி பாவம் என்று வரும் நிலையில் அவை அனைத்தையும் நாம் நீக்கிடும் உயர் ஞான சக்திக்கு அந்தக் கொங்கணவர் பெற்ற… பெற்று அளித்துக் கொண்டிருக்கும் அனுபவப் பாடம் நமக்குப் பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் கொங்கணவர் தன் தாய் சக்தியின் தொடர்பு மூலமாகவும் தன் மனையாளின் சக்தி (பத்தினி) மூலமாகவும் தான் துர்க்கதியை அகற்றி நற்கதியை அடைந்தார்.

தாய் சக்தி.. மனைவி சக்தி… என்ற ரிஷி பத்தினி சக்தியின் கலப்பு பெற்ற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் ஏங்கிப் பெற்றால் அவர்களின் வளர்ச்சியின் அருள் ஒளி வட்டத்தில் நாம் அனைவரும் கலந்திடலாம். அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்…!

சைவ சித்தாந்தம்… வேதாந்தம்

 

இயற்கையின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைச் சைவ சித்தாந்தங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஒவ்வொரு உணர்வும் அது இணைந்து கொண்ட பின்
1.உணர்ச்சியின் வேகங்கள் எவ்வாறு சூரியனால் மாற்றப்படுகின்றது…?
2.நுகர்ந்த உணர்வின் ஆற்றலை எவ்வாறு மாற்றுகின்றது…? என்ற நிலையை
3.தாவர இனச்சத்தைக் கவர்ந்த சூரியனின் காந்தப்புலன்கள் தாவர இனங்களுக்கு இரையானாலும்
4.அதே உணர்வுகளை உயிரணு நுகரப்படும் போது – “சைவ சித்தாந்தமாக இருந்து… வேதாந்தமாக” அது மாறுகின்றது.

உணர்வின் ஒலியின் தன்மை கொண்டு உணர்வின் ஒலிகளை எழுப்பி அந்த உணர்வுக்கொப்ப உடல் மாறி… சைவம் அசைவமாக எவ்வாறு மாறுகின்றது…? அசைவத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது உணர்வின் அணுக்கள் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றது…? என்பதைச் சைவ சித்தாந்தம் தெளிவாகக் கூறுகிறது.

“சைவ சித்தாந்தம்” – தாவர இனங்களில் மாற்றம்… செடி கொடிகள் அது உருமாறுவதும் அதனுடைய உணர்ச்சிகளைக் கூட்டுவது.

“வேதாந்தம்” – உயிர் அணுக்கள் உருவான பிற்பாடு அதனின் உணர்ச்சியின் தன்மை கொண்டு இயக்கச் சக்தி என்று “உடல் பெற்ற அசைவம்” என்ற நிலை தான்.

ஆனால் சைவ சித்தாந்தம் படித்தவர்கள் வேதாந்தத்தைக் கண்டபின் அவர்கள்ள் இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முறைத்துக் கொள்வார்கள். நீ பெரிதா…? நான் பெரிதா…? நீ படித்தது இவ்வளவுதான்… நான் படித்தது இவ்வளவு…! என்று வாதித்துக் கொண்டு கற்றுக் கொண்ட உணர்வுகளை முழுமையைத் தெரிவதில்லை.

ஒருவருக்கொருவர் “நான் தெரிந்து கொண்டேன்… என்னால் அனைத்தும் முடியும்…!” என்று அகம் கொண்டு செயல்படுவார்கள்.

உதாரணமாக மிளகாயை எடுத்துக் கொண்டால் காற்றிலிருந்து காரத்தின் சத்தை எடுத்துத் தான் அந்த கார குணம் கொண்ட மிளகாயாக வளரும்.

இதைப் போன்று… “படித்துணர்ந்தவர்கள்” எதனின் உணர்வைத் தனக்குள் எடுத்துக் கொண்டனரோ அதனின் இயக்கமாக… அதனின் நிலையிலேயே… மற்ற உண்மைகளை அறியாதபடி… எதன் வலிமை பெற்றார்களோ அதன் நிலைகளிலே சென்று அடைகின்றார்.

சைவ சித்தாந்தத்தின் உண்மை இன்று தலை கீழாக மாறிவிட்டது.

காரணம் அரசர்கள் போர் முறை கொண்டு வரப்படும் பொழுது இந்த உண்மையின் இயக்கங்களை அறியாது… காலத்தால் மாற்று அரசர்கள் வரும் பொழுது…
1.அன்று தத்துவஞானிகள் கொடுத்ததைத் தனக்குச் சொந்தம் என்று
2.தனக்குகந்த சட்டங்களாக இயற்றப்பட்டுக் காவியமாகப் படைக்கப்பட்டு
3.அதைத் தன் மக்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது “இதுவே அவர்களுக்குள் கடவுளாகிறது…”

கடவுளுக்கு இன்னென்ன சாங்கியங்களைச் செய்தால் போதும்… அதன் உணர்வின் செயல்கள் இப்படி இருக்கும்…! என்று இவ்வாறு அரசர்களால் உருமாற்றப்பட்டு “அசைவம்…” (என்றால் என்ன…?) என்ற நிலைகளை அறிய முடியாத நிலைகளாகக் காலத்தால் மறைந்து விட்டது.

இப்படி ஒவ்வொரு அரசனும் தான் கண்டறிந்தது மாற்று அரசர்கள் கண்டால் உண்மையின் இயக்கங்கள் அது போய்விடும்… மற்றவர்களுக்கு அது தெரியக் கூடாது என்று மறைத்து விட்டார்கள்.
1.அப்படி மறைக்கப்பட்ட உண்மைகளைத் தான் இன்று இதுவா… அதுவா…? என்று ஊசலாடிக் கொண்டு
2.கடவுளை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்…!

வேதாந்தங்கள் என்பது வேதங்களாக மாற்றப்பட்டு விட்டது தமிழ் மொழியின் இசை (ஒலி) வேதங்களில் உண்டு. சில ஒலிகள் அதனுடைய இசை தான் மாற்றப்பட்டுள்ளது.

தமிழில் இருந்து தான் வேதங்கள் உருவானதா…? வேதத்திலிருந்து தமிழ் உருவானதா…? என்றும் போர் முறை கொண்டு உண்மைகளை அலசி ஆராய்ந்து… தேடிக் கொண்டுள்ளோம்.

இதுதான் உண்மை… அது பொய்…! என்று போர் முறை கொண்டு மொழி அடிப்படையில் ஒருவருக்கொருவர் பகைமை உணர்வை வளர்த்துக் கொள்ளத்தான் முடிகின்றது.

உண்மையின் இயக்கங்களை நாம் அறிய முடியாதபடி
1.குறுகிய கால வாழ்க்கையில் நம்மை அறியாதபடி குறைகளை வளர்த்துக் கொள்வதும்
2.நிறைவு பெறும் நிலைகளை இழந்து நற்செயல்கள் இழக்கப்பட்டு
3.மனிதனல்லாத உருவை உருவாக்கும் உணர்வையே மனிதர்கள் இன்று வளர்த்திடும் நிலையாக வந்து விட்டது.

உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…

 

உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கிக் கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட… எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது “எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி…”
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் “தன் முயற்சி கொண்டு” கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8.குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை.

“தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.

அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா…. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் அனைவரது உடல்களிலும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானியுங்கள்.

கூட்டுத் தியானங்களில் இப்படி எண்ணி எடுக்கும் பொழுது இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு அந்த உயர்ந்த உணர்வைச் சுவாசிக்கும் தகுதி பெறுகின்றோம். சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

அதனின் வலுக் கொண்டு கை கால் குடைச்சலோ அசதியோ தலை வலியோ உடலில் நீர்ப் பிடிப்போ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ இருதய வலியோ இது போன்ற நோய்களை அகற்ற முடியும்.

1.“துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.இந்தச் சுவாசத்தை எடுக்க எடுக்க உங்கள் இரத்த நாளங்களில் அந்தச் சக்தி கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள வலிகள் குறையும்… அதை நீங்கள் உணரலாம்.

இடுப்பு வலியுடனோ கால் வலியுடனோ தலை வலியுடனோ வயிற்று வலியுடனோ வேறு எந்த வலியுடன் இருந்தாலும் அந்த வலி நீங்க வேண்டும் என்ற நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடலில் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற்று “எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போல் பாயும்
2.நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் இரத்த நாளங்களில் கலந்து
3.உங்கள் உடலில் உள்ள விஷத் தன்மைள் கலைந்து செல்லும்
4.உங்கள் உடலில் உள்ள நோய்கள் அகலும்.

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த தீமைகள் அகற்றிய அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடல் முழுவதும் இப்பொழுது பரவும்.
1.சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்.
2.எத்தகைய நோயாக இருப்பினும் அது எல்லாம் குறையும்
3.உடலில் உள்ள சிக்கல்கள் நீங்கி உடல் நலம் பெறும் சக்தியாக மாறும்
4.குடலில் நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

புத்திர பாக்கியம் வேண்டுவோர்
1.தன் உடலில் புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
2.அதே போல் என் கணவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பெண்கள் எண்ண வேண்டும்.
3.ஆண்களும் தன் மனைவிக்கு புத்திர பாக்கியம் பெறும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணி
4.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்த நாளங்களில் புது விதமான உணர்ச்சிகள் தூண்டி
1.கருப்பைகளில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும்
2.கரு விந்துகளிலும் இதன் உனர்வுகள் உணர்ச்சிகள் கூடி
3.குழந்தைகள் பெறும் உணர்வின் அணுக்கள் வளர்ச்சி அடையும்.

1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று மனைவியும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவனும் எண்ண வேண்டும்.
3.புத்திர பாக்கியம் பெறும் அணுக்கள் எங்கள் இருவருக்குள்ளும் ஓங்கி வளர வேண்டும் ஈஸ்வரா என்று
4.கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் நெற்றியைப் பார்த்து
5.மேலே சொன்ன உணர்வுகளை எல்லாம் பாய்ச்சுதல் வேண்டும்.

சீக்கிரமே கரு உருவாகி ஞானக் குழந்தையாக உருப்பெறச் செய்யும் சக்தி பெறுவீர்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்…
2.துருவ நட்சத்திரம் ஒளியாக மாற்றி அனுப்பும் அதன் உணர்வுடன் நாமும் சேர்ந்து விட்டால்
3.துருவ நட்சத்திரத்தைப் போன்றே இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் கோணத்தில் எந்த அகண்ட அண்டத்திலிருந்து வருவதையும்
4.ஒளியாக மாற்றிடும் ஆற்றலை நாமும் பெற்று ஒளியின் உடலாகப் பிறவியில்லா நிலை அடைவோம்.
5.இது தான் மனிதனின் கடைசி நிலை… இந்தச் சூரியனுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை…!

சூரியனால் உருவாக்கப்பட்டது தான். ஆனால் இந்த உயிர் இந்த உணர்வின் துணை கொண்டு தனித்தன்மை வாய்ந்ததாகப் பிற மண்டலங்களிலிருந்து வருவதை ஒளியின் உடலாக மாற்றிக் கொள்கின்றார்கள் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்.

அதாவது… இந்தப் பிரபஞ்சத்தில் அகண்ட அண்டத்தில் “சூரியனாக…” அது எப்படி உருவானதோ அதே போல் இந்தப் பிரபஞ்சத்திற்குள் உயிரணு தோன்றி இந்த உணர்வுகள் முழுவதையும் ஒளியாக மாற்றித் தனித்தன்மை வாய்ந்ததாக மாறுகிறது.

இதை எல்லாம் குருநாதர் இந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகள் எப்படி இயங்குகிறது…? கடவுள் யார்..? என்று தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

1.ஓர் சாந்தமான உணர்வுக்குள் ஒரு வலிமையான உணர்வு இணைந்தால்
2.அது உள் நின்று அந்தச் சாந்தத்தை மாற்றித் தன் வழிக்கே அது அழைத்துச் செல்கிறது.

இதைப் போலத் தான்
1.நாம் அந்த ஒளியின் உடல் பெற்ற உணர்வினை நமக்குள் எடுத்தால்
2.உள் நின்று இருளை நீக்கி ஒளி என்ற உணர்வினை மாற்றுகின்றது.

பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல் உணர்வினை உடலாக ஆக்கி எல்லாவற்றையும் அறிந்திடும் கார்த்திகேயனாக வருகின்றது.

ஆகவே தீமை என்று தெரிந்து கொண்ட பின் தீமையை நீக்கும் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

தீமையை நீக்கிய உணர்வு பெற்ற அகஸ்தியன் உணர்வுகளை நாம் கவர்ந்து நமக்குள் அதை எடுத்து விளையச் செய்தால் தீமைகளை நீக்கும் உணர்வு பெற்று
1.இந்த வாழ்க்கையில் பிறவியில்லா நிலை அடையும் அந்தப் பேரானந்த நிலை பெற்று
2.என்றுமே ஒளி உடலாகப் பெறும் அந்த அருள் சக்திகளைப் பெற முடியும்.
3.இதுவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையும் மார்க்கம்.

அருள் ஒளியின் உணர்வை நமக்குள் வலிமை ஆக்கிக் கொண்டால் தீமைகளை எளிமையாக்கி இந்த வாழ்க்கையில் புனிதம் என்ற நிலைகளை நாம் ஒவ்வொருவரும் அடைய முடியும்.

ஆக.. பகைமையற்ற நிலையை உருவாக்கி மனிதர்கள் ஏகாந்தமாக விண் செல்ல வேண்டும் என்பதே ஞானிகள் நமக்குக் கொடுத்த பேருண்மைகள்.

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

 

உதாரணமாக கோழியோ பாம்போ கருவுற்றால் அவைகள் கேறும். குருவி மற்ற அதைப் போன்ற முட்டையிடும் சில இனங்கள் அனைத்துமே கேறத்தான் செய்யும்.

மனிதனின் வாழ்க்கையில் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து (சுவாசித்து) விட்டால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பின் கருத்தன்மை அடைகின்றது.

1.மீண்டும் மீண்டும் அவரின் வேதனையை எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் இந்த உணர்வுகள் முழுமை அடைந்தால்
2.எந்த உடலிலே அந்த வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்ததோ
3.அதே மாதிரி நம் இரத்த நாளங்களிலும் அந்த அணுவை உருவாக்கும் “கரு முட்டைகளாக” மாறி விடுகின்றது.

அவ்வாறு கரு முட்டைகள் ஆகும் பொழுது அந்த இரத்தம் இரத்தநாளங்கள் வழியாகச் சுழலும் போது அந்தக் குறித்த காலம் வரும் பொழுது என்ன நடக்கின்றது…?

வேதனைப்படுவோரை… “அடப்பாவமே… நல்ல மனிதன் இப்படி அவதிப்படுகின்றானே…!” என்று தான் அவர்கள் நோயாக அல்லது துன்பத்தில் வாடுவதை நாம் எண்ணுகின்றோம்.

கோழி எப்படிக் கருவுற்ற பின் அது கேறுகின்றதோ அதைப்போல நுகர்ந்த உணர்வுகளை “மீண்டும் மீண்டும் திரும்ப எண்ணும் பொழுது” அது கோழி கேறுதல் போன்று ஆகிவிடுகிறது

அவர் உடலிலே நோயாக உருவாக்கிய அணுவின் தன்மை நம் இரத்தங்களிலே கருவுற்று முட்டையாக மாறுகின்றது.
1.அந்த முட்டை இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது உடலுக்குள் சிறு மூளை பாகம் வரை செல்லும்… மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று வரும்.
2.முட்டையாக இருக்கும் பொழுது முதலில் அந்த வேதனை நமக்குத் தெரியாது.

ஆனால் இரத்த நாளங்கள் வழியாக நம் உடல் உறுப்புகளுக்குள் சுழன்று வரும் பொழுது… இருதய வாயில்களில் இரத்தங்களை வடிகட்டி வரும் அந்த இடத்தில் இந்த முட்டை சென்றால்… இது வடிகட்டும் திறன் கொண்டு இழுத்து அனுப்பப்படும் பொழுது துடிப்பின் தன்மை அழுத்தமாகும் பொழுது அந்த முட்டை வெடித்து விட்டால் போதும்.

வேதனையை உருவாக்கும் அந்த விஷமான அணு அந்த இருதய பாகத்தில் சேர்ந்து விடுகிறது. சேர்ந்த பின்
1.அந்த மனிதன் எப்படி வேதனைப்பட்டானோ அதே வேதனை உணர்வுகள் இருதய வாயிலே தோன்றி
2.பளீர்… பளீர்… என்று மின்னும்… ஊசி குத்துவது போல் இருக்கும்.
3.நெஞ்சு வலிக்கின்றது… எப்படியோ எனக்கு மயக்கமாக வருகிறது என்று சொல்லத் தொடங்குவோம்.

நெஞ்சு வலிக்கின்றது என்று ஒரு அணுத்தன்மையாக முதலில் அடைந்தாலும்… முட்டை வெடித்து முட்டையை விட்டு வெளிவந்த குஞ்சுகள் தன் இரைக்காக (வேதனைப்படும்) உணர்ச்சிகளை உந்தும்.

கோழி முட்டைகள் பொரிந்த பின் வெளி வந்த குஞ்சுகள் கத்தும். அப்போது தாய்க்கோழி கூவி இரையைத் தேடித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.

அதைப் போல நமது உயிர் நாம் எண்ணியதை அணுக்களாக உருவாக்கிய பின் உணவு கொடுக்கும்.
1.இருதய வாயிலில் உருப்பெற்ற அணுக்களுக்கு… அந்தக் குஞ்சுகள் இரைக்காக உணர்ச்சியைத் தூண்டும்.
2.அப்போது வலி வரும்… மீண்டும் வலிக்கின்றதே வலிக்கின்றதே என்று எண்ணும் போதெல்லாம்
3.அந்த வலியின் உணர்வை எடுத்து அந்த அணு தன் இனத்தையே பெருக்கத் தொடங்கும்.

முதலிலே லேசாகத்தான் நெஞ்சுவலி இருந்தது பின் அது அதிகரித்து அணுக்களின் தன்மை தன் இனத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் பொழுது “இருதய வால்வுகள்” விஷத்தன்மையான நிலைகள் கொண்டு “அது விரிவடையும்… அல்லது ஒடுங்கி நிற்கும்….”

விஷ வாயுவின் தன்மை உற்பத்தியாகத் தொடங்கினால் அதனுடைய முடிவு… தாங்காதபடி அந்த ரத்த நாளங்கள் வெடித்து விடும். வெடித்தால் ஒன்றும் செய்ய முடியாது… இது ஒரு பக்கம்.

ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்…. திடீரென்று இயக்கச் சக்தி குறைவு.

ஆனால் அவர் ,மீது பற்று கொண்ட ஒருவர் அவர் மீது நினைவாற்றலைச் செலுத்தி… “திடீரென்று இறந்து விட்டாரே…” என்று அடிக்கடி இந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் இந்த அணுத்தன்மை சிறு மூளை பாகம் செல்லும் பொழுது அங்கே வெடித்து விட்டால் இந்த உணர்வின் தன்மை கூடும்.

அது உயிர் பாகம் வரும் பொழுது… நமது உயிரோ கண் காது மூக்கு உடலுக்கு ஆணையிடும். எந்த மனித உடலிலிருந்து இந்த விஷத்தன்மை நுகரப்பட்டு அணுவானதோ அதைக் கவர்ந்து அதே உணர்வின் தன்மையை இங்கே நமக்குள் உருவாக்கும்.

பின்…
1.சிறு மூளை பாகங்களில் இருதயத்தை இயக்கக்கூடிய அந்த நரம்புகளில் தொடர்பு இழந்து விட்டால்
2.இருதயம் இயங்காதபடி ஒரு நொடிக்குள் நாளை மாய்த்து விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… எத்தகைய தீமைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்க… கேட்க… நுகர நேர்ந்தால் அதை மாற்றிட நமது குருநாதர் காட்டிய வழியில்
1.உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து.
3.தீமைகள் இரத்தத்தில் கருத்தன்மையாக உருவாகதபடி தடுத்து நம் வாழ்க்கைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு தான் உணர்வின் இயக்கங்களை உங்களுக்குள் தெளிவாக்கி வேதனைகளை மாற்றி அமைக்கும் உபாயங்களைச் சொல்லி… அருள் வழியில் இந்த வாழ்க்கை வாழ்ந்திட… “அதற்குண்டான ஒரு பழக்கமாக… ஒரு பயிற்சியாக… இதைக் கொடுக்கின்றோம்…”

“வாயு ஸ்தம்பம்…”

 

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் “மேலிருந்து கீழுமாக… கீழிருந்து மேலுமாக…”
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

அறுபது வயதை “முதுமை” என்று ஏன் சொல்கிறோம்…?

 

நமது உயிர் பூமிக்குள் வந்தபின் தாவர இனச் சத்தை நுகர்ந்து உடல் பெறுகின்றது. அவ்வாறு உடல் பெற்ற நாள் தான் “சிவன்ராத்திரி…” உயிரோ ஈசனாகின்றது… உணர்வு இயக்கும் சக்தியாகின்றது நுகர்ந்த உணர்வு சத்தாக உயிருடன் ஒன்றப்படும்பொழுது உடலாகின்றது… சிவம் ஆகின்றது.

நமது உயிர் வான் வீதியில்…
1.அதாவது இந்தப் பிரபஞ்சத்தில் உயிராக உருப்பெற்ற நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்று
2.இந்த ஆறுபது ஆண்டுகளில் நமது உயிர் உருப்பெற்ற நாளாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

பொதுவாக உயிரணுக்கள் வான்வீதியில் உருப் பெற்ற நாளை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது. உயிரின் இயக்கச் சக்தியை ஈசன் (ஈஸ்வரன்) என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

சூரியனோ… மற்ற தாவர இனங்களின் சத்துக்களை எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

தாவர இனத்தில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் போடும்போது… நிலத்தின் ஈர்ப்புத் தன்மை கொண்டு தன் தாய்ச் செடி உணர்வின் சத்தை நுகர்ந்து அந்த இனத்தின் செடியாக அது உருப்பெறுகின்றது.

ஆனால் உயிரோ… எந்தச் செடியின் சத்தை நுகர்ந்து அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாக்கியதோ இதற்குப் பெயர் “ஈசன்…” இந்த உணர்வின் சத்து நம் பூமிக்குள் வந்து இந்த உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உடலாக்கப்படும் பொழுது “சிவம்…”
1.ஈசனான உயிர் இல்லை என்றால் உடலான சிவம் சவம் தான்.
2.ஆகவே “அவனின்றி அணுவும் அசையாது” என்று சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஈஸ்வர ஆண்டு என்று ஆரம்பித்து… இதனுடைய சுழற்சி அறுபது ஆண்டுகள் முடிவடையும் தருணம்… மீண்டும் ஈஸ்வர ஆண்டு என்று வரும்.

இது எல்லாம்… மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் அறுபது ஆண்டு நிறைவடையப்படும் பொழுது அந்த அறுபது ஆண்டுக்குள் பெற்ற சக்திகள் வேறு. அடுத்த அறுபது என்பது வேறு…!

அந்த அறுபதைக் கடந்து செல்லப்படும் பொழுது
1.மறுபடியும் பிரபஞ்சத்தில் சூரியனின் காந்தப் புலனறிவு மற்ற கோள்களின் திசை மாற்றங்கள் வரும்
2.இந்த அறுபது ஆண்டில் மற்ற கோள்கள் திசை மாறும் பொழுது நட்சத்திரங்களின் இயல்புகளும் மாறுகின்றது.

அவ்வாறு மாற்றி வரப்படும் பொழுது அறுபது வருடத்திற்குள் இருந்த நிலை வேறு… அதற்குப்பின் உருமாற்றங்கள் வேறு…!
1.முதுமை அடைகின்றது… உணர்வுகள் சோர்வடைகின்றது.
2.சோர்வின் பால் “மற்ற உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது” உணர்வின் தன்மை உடலைக் குறையச் செய்கின்றது.

அடுத்த அறுபதுக்குள் இந்த உடலில் விளைய வைத்த உணர்வினை இதே உயிர் இந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலாக உருமாற்றி அதனின் செயலாக்கத்திற்குக் கொண்டு வருகிறது.

விஷ வைத்திய சாஸ்திரம்

 

இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.

அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் “இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து…” அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் விஷ வைத்திய சாஸ்திரம் பிறந்ததன் காரணம்.

தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் மகான்கள் இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட அளித்த வைத்திய பொக்கிஷங்களை எல்லாம் மறை பொருளாக்கப்பட்டதன் காரணம் என்ன என்றால் நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்…!”

போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.

அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!

அன்று பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.

அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது…” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்…!”

(மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை)

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு விஷம் கொண்ட பாம்பு அது தன்னைப் பாதுகாக்க மற்றதைத் தீண்டும். பாம்பு மனிதனைத் தீண்டி விட்டாலோ அந்த மனிதனின் நினைவு பூராமே பாம்பின் பால் வந்துவிடும்.

ஆனால் பாம்பு தீண்டுவதற்கு முன் மனிதன் அதை அடித்துக் கொன்று விட்டால் பாம்பின் உயிர் அடித்தவர் உடலில் வந்துவிடும்.

இதைப் போல் நான் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியில் மற்ற எந்தெந்த உடலைப் பெற்றிருந்தேனோ
1.என் தாய் வழி அல்லது என் தந்தை வழி அடிக்கப்பட்டு
2.இந்த உயிர் அவர்கள் உடலில் சென்று சிக்கி
3.எனது உயிர் அவர்களுக்குள் ஈர்க்கப்பட்டு
4.அதன் வழி என்னை மனிதனாக உருவாக்கக் காரணமாக இருந்தார்கள் “என் அன்னை தந்தை தான்…”

ஆகவே மற்ற உடலிலிருந்த என்னை மனிதனாக உருவாக்கிய என் தாய் தந்தை தான் எனக்குக் கடவுள். என்னை மனிதனாக்கிய தாய் தந்தை தான் எனக்குக் கடவுள்.

மனிதனாக உருவாக்கினாலும் அதே சமயத்தில்
1.என் தாய் எப்பொழுதுமே எனக்கு நல் வழி காட்டி
2.நல் வழி நான் வாழ வேண்டும் என்று உபதேசித்த முதல் குருவும் அது தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் குறிப்பறிந்து என்னைத் தாலாட்டிச் சீராட்டி இன்று இத்தகைய ஞானத்தைப் பேசும் உணர்வுக்கு என்னை ஆளாக்கியது என் தாய் தான் அந்தத் தெய்வம்…!

இத்தகைய நிலைகளுக்கு என்னை ஆளாக்கிய என் தாய் தந்தையைக் கடவுளாக வணங்குகிறேன்.

1.என்னை மனிதனாக உருவாக்கிய கடவுளை
2.என்னை மனிதனாக்கித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்த என் அன்னை தந்தையை
3.என்றுமே என் வாழ்வில் கடவுளாக வணங்குகிறேன்.

உங்கள் ஒவ்வொருவரையும் மனிதனாக உருவாக்கிய உங்கள் உயிர் கடவுள் என்றும் அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம் என்பதை எமது குரு எனக்கு உபதேசித்த அருள் வழிப்படி வணங்குகிறேன்.

நீங்கள் செவி கொண்டு என்னுடைய உபதேசங்களைக் கேட்டாலும் கண் கொண்டு பார்த்து மூக்கு வழி சுவாசித்து ஞானிகளின் உணர்வைக் கவரப்படும் பொழுது அது உங்கள் உயிரிலே பட்டு அந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாகி உங்கள் உடலில் இது ஐக்கியமாகின்றது.

உங்கள் கண்ணின் கருவிழி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ நான் வெளிப்படுத்தும் உணர்வைக் கவர்கின்றது. உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நான் பேசும் போது வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்தப்புலன்கள் கவர்ந்து வான்வீதியில் பரமாக இருக்கும் பரமாத்மாவாக மாற்றுகின்றது.

ஆகவே… உங்கள் கருவிழி என்னைப் பதிவாக்கிய பின் நான் வெளிவிடும் உணர்வை உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து உங்கள் உயிரின் காந்தப் புலன் கவர்கிறது… உயிரிலே மோதுகின்றது. மோதிய பின் உணர்ச்சிகளாக ஒலிகளாக எழும்புகிறது. உடல் முழுவதும் அதைப் பரவச் செய்கிறது.

அதை தான் நாம் அறிவதற்காக
1.சப்தத்திற்குச் சங்கு என்றும்
2.எந்த உணர்வுகளை நுகர்கின்றோமோ அதன் உணர்வுப்படி இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் சுழல்வதைச் சக்கரம் என்றும்
3.அதன் வழிப்படி தான் எண்ணம் சொல் செயல் கொண்டு நாம் செயல்படுகின்றோம் என்று
4.ஞானிகள் காரணப் பெயர் வைத்து “சங்கு சக்கரதாரி” என்று நமக்குக் காட்டுகின்றார்கள்.
5.நம் உயிரை விஷ்ணு என்று காரணப் பெயர் வைக்கின்றனர்.

நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் உயிரை நாம் புரிந்து கொள்வதற்குத் தான் உருவக வழிப்படுத்தி அதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவினார்கள் மகரிஷிகள்.

1.இயக்கம் ஈசன் என்றும்
2.அதில் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்றும்
3.ஈர்க்கும் காந்தம் இலட்சுமி என்றும்
4.இந்த முறையில் மூன்று நிலைகளில் நம் உயிர் வேலை செய்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் நல்லதைத் தான் செய்கிறேன்… என் பையனுக்கு எத்தனையோ நல்லதைச் செய்தேன் ஆனால் என் பையன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான்…! என்று தாய் தந்தையர் சொல்வார்கள்.

முதலில் அவனைப் பற்றி உயர்வாகப் போற்றித் தான் பேசுகிறோம். ஆனால் சிறு தவறுகள் நடந்த பின் “நான் நல்லதைச் சொன்னேன் கேட்க மாட்டேன் என்கிறான்…!” என்ற நிலையில் பக்குவம் தவறி நாம் என்ன செய்கிறோம்…!

அவனைக் குறை கூறும் உணர்வு வந்து விடுகிறது. குறை கூறும் நிலை வரப்படும் பொழுது அந்தக் குறை நமக்குள்ளும் வந்து நம்மையும் குறை உள்ளவனாக மாற்றுகிறது.

1.ஆனால் குறை காணும் பொழுதெல்லாம் அவனுக்கு ஞானிகள் காட்டும் அருள் வழியைக் காட்டினால் அது நன்மை பயக்கும்
2.சிறிது பொறுமையுடன் இருந்து அந்த மகரிஷிகளின் உணர்வை ஊட்டினால் அவன் ஞானியாக ஆவான்.

தொழில் செய்கிறோம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் வருகிறது.
1.அன்றைக்குக் கொடுத்தேன்… ஏண்டா திரும்பக் கொடுக்கவில்லை…? என்று சொல்லி அதட்டிக் கேட்கும் பொழுது
2.அங்கே அந்தப் பக்குவம் தவறுகிறது… வெறுப்பின் தன்மை அதிகமாகி கொடுத்த பணமும் வராது போகிறது.

இதே போல் நம் வாழ்க்கையில் எதை எல்லாம் எண்ணுகின்றோமோ அந்தப் பக்குவம் தவறிவிட்டால் மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் மாற்றித் தீய உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

இதைப் போல் நம் வாழ்க்கை முழுவதற்கும்… ஒவ்வொரு நொடியிலும் நாம் சந்திக்கும் இடங்களில் குடும்பத்திலும் சரி… மற்ற எந்த இடத்திலும் சரி… சில தவறுகளும் ஏற்பட்டாலும் பக்குவப்படுத்தும் முறை கொண்டு நாம் நடக்க வேண்டும்.

மருமகள் வீட்டில் கூட்டிக் கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

மாமியார் பார்த்து.. வீட்டைப் பெருக்கி இருப்பதைப் பார்…! அன்று மருமகளிடம் சொல்லும். இப்படிக் குறையாகச் சொல்லும் பொழுது மாமியார் மீது மருமகளுக்குக் கோபம் வருகிறது.

உடனே போய் தன் வீட்டுக்காரரிடம் சொல்கிறது… நான் எந்த வேலையைச் செய்தாலும் உங்கள் அம்மா இப்படிக் குறை சொல்கிறார்கள் என்று…!

ஆனால் இதை மாமியார் காதிலே கேட்டால் “நான் என்னத்தைச் சொன்னேன்..? நீ என்னைக் குற்றம் சொல்கிறாய்…!” என்று இந்தப் பகைமை வரும்.

இந்த மாதிரி நேரங்களிலும் நாம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். குடும்ப வாழ்க்கை என்றாலும் குறைகள் வரும். அது வளராதபடி உடனுக்குடன் துடைத்துப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால்…
1.சந்தர்ப்பம் இது போன்ற தீமைகளை நமக்குள் வளர்க்கும்
2.நாம் அருள் ஒளி கொண்டு எடுத்துத் தூய்மையாக்கிடல் வேண்டும்.

இதே மாதிரித் தான் பள்ளியில் படிக்கும் குழந்தைகளாக இருந்தாலும் ஏதோ சந்தர்ப்பம் படிப்பில் குறைவாக இருந்தால் ஆசிரியர்கள் கோபமாகத் திட்டுவார்கள் அல்லது அடிப்பார்கள்.

ஆனால் திட்டுவதனாலேயோ ஏசுவதனாலேயோ மிரட்டுவதனாலேயோ அந்தக் குழந்தையின் கல்வியின் தரம் உயராது.

பக்குவப்படுத்தி உண்மையை உணர்த்தினால் தான் அந்தக் குழ்ந்தைகளை ஞானிகளாக மாற்ற முடியும். இதைச் செய்யத் தவறினால் நாம் கற்றுணர்ந்தும் பயனற்ற நிலை ஆகிறது.

1.ஏனென்றால் பள்ளிக் குழந்தைகளிடம் எது பதிவாகின்றதோ
2.ஒரு தரம் மிரட்டி விட்டால் ஆசிரியரைப் பார்த்தாலே வெறுப்பு வரும் பயமும் வரும்…
3.பயத்தால் சிந்தனை குறையும்… சிந்தனை குறைந்தால் பாடத்தை எப்படிச் சரியாகப் படிப்பான்…?

இதைப் போன்ற நிலைகளில் ஆசிரியர்களும் ஞானிகளை உருவாக்க வேண்டும் என்றால் அந்தப் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

பள்ளியில் படிப்பவர்களைப் பற்றி நிறைய உயர்வாகச் சொன்னாலும் இது போன்று பக்குவம் தவறி குறைகள் வளர்ந்து விட்டால் குழந்தைகளை உயர்த்துவதற்கு மாறாக வெறுப்பின் உணர்வை வளர்த்து விடுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு நாம் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் கூட்டி அந்தப் பரிபக்குவ நிலை கொண்டு சிந்தித்துச் செயல்படும் பழக்கம் வர வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள்… ஈசன் வீற்றிருக்கும் அந்த உடல் ஆலயம்.. அங்கே அறியாமல் சில செயல்களும் சில சொல்களும் வெளிப்படுகிறது என்று சொன்னால்
1.ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று
2.அந்த நேரத்தில் நாம் எண்ணுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் நம்முடைய நல்ல உணர்வுகளும் காக்கப்படுகின்றது. நம் மனதில் அமைதியும் கிடைக்கின்றது. அருள் சக்திகளும் நமக்குள் கூடுகின்றது. நம் சொல்லைக் கேட்கும் மற்றவருக்கும் நல்லதாகின்றது.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலையை எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டும்படி சொல்கிறோம்.

எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்…!

 

நண்பனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்… உதவி செய்கின்றோம். ஆனால் அவன் மீது சிறிது வெறுப்பாகி விட்டால் “எனக்குத் தீங்கு செய்கின்றான்… இவனுக்கு எப்படி நன்மை செய்வது…?” என்ற எண்ணம் வருகின்றது.

அப்பொழுது நன்மை செய்வதற்குப் பதிலாக தீமை தான் செய்வோம். தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அந்த தீமையை விளைவிக்கும் அணுக்களே நமக்குள் உருவாகின்றது.

நண்பன் தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்ற நோக்கத்தில்
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு அவன் பெற வேண்டும்
2.தீமையிலிருந்து அவன் விடுபட வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்”
3.தீமையிலிருந்து விடுபடச் செய்யும் உணர்வின் அணுக்கள் உடலிலே உருவாகி
4.நமக்குள் “தீமையை நீக்கும் சக்தியாக” உருவாகின்றது (இது முக்கியம்)

கோபமாக இருக்கும் பொழுது ஒரு பொருளின் தரத்தை நம்மால் சரியாகக் காண முடிகின்றதா…! ஒரு நூலையோ துணியையோ அல்லது மற்ற பொருள்களையோ பதார்த்தத்தையோ காண முடிகின்றதா…? கோபமாக இருக்கும் போது தரத்தை நிர்ணயிக்க முடியாது.

நண்பனாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் அவனைப் பார்க்கப்படும் பொழுது அவன் ஒரு நல்லதைச் சொன்னால் இந்த நேரத்தில் நீ ஏனய்யா இங்கே வந்து வம்பு செய்து கொண்டிருக்கின்றாய்…? என்று அவரிடம் நாம் கோபமாகத்தான் பேச ஆரம்பிப்போம்.

அவர் நல்லதைச் சொல்லும் போது “நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ…! ஏன் வம்பு செய்கின்றாய்…?” என்று தான் சொல்வோம்.
1.இதைப் போன்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அதுவாகின்றோம்
2.கீதாச்சாரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மனிதனின் வாழ்க்கையில் நாம் எண்ணியதை உயிர் தான் உருவாக்குகின்றது… உடலாக்குகின்றது. மீண்டும் நினைவாக்கும் பொழுது அதனைச் செயலாற்றுகின்றது அந்த நினைவுகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழிப்படி உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்.
1.இந்தப் பேருண்மையை நீங்கள் நினைவாக்கிக் கொண்டால்
2.உங்களை அறியாது வரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.அதை பெற வேண்டும் என்பதற்கே இதைச் செய்கின்றேன்.

ஆகவே… இயற்கையின் இயக்க நிலைகளைத் தெளிவாக்குவதற்காக ஞானிகள் எத்தனையோ காவியங்களைக் கொடுத்துள்ளார்கள். காவியமாகப் படைத்து அந்தக் கருத்தினை நான் நுகரப்படும் பொழுது அந்தக் கருத்தே நம் உடலில் உணர்வின் சக்தியாக நமக்குள் விளையத் தொடங்குகின்றது.

உதாரணமாக… தமாசுக்காக ஒருவரைக் கேலி செய்து பாருங்கள்… இந்த உணர்வுகள் விளைந்து கொண்டேயிருக்கும். ஆனால் இவர் சும்மா தமாசு செய்து கொண்டே இருக்கின்றார்…! என்று அவர் நினைப்பார்.

கொஞ்சம் கொஞ்சமாக அவர் நம் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டு வருவார். ஒரு நாள் என்ன ஆகும்…? நான் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்… பொறுத்துக் கொண்டேயிருக்கின்றேன்… “இரு உன்னை என்ன செய்கின்றேன் பார்…!” என்று பகைமை ஆகிவிடும்.

விளையாட்டாகத் தானே…! என்று நாம் நினைப்போம் ஆனால் கடும் விளைவுகளை உண்டாக்கிவிடும். இதனுடைய வளர்ச்சி முதுமைக்கு வரும் பொழுது இப்படித்தான் வரும்.

இரண்டு பேர் சண்டை போடுவதை (அடிக்கடி) வேடிக்கையாகப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாளடைவில் இவன் மோசமான ஆள் என்று அடுத்தவரிடம் சொல்ல ஆரம்பிப்போம்… திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்போம்
2.இந்த உணர்வுகள் அடுத்து “நம்மையே மோசமான ஆளாக” மாற்றக்கூடிய அளவுக்கு அணுக்களாக விளையத் தொடங்கும்
3.எதை “மோசம்” என்று சொன்னோமோ அதுவே இங்கு வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இதைப் போன்ற நிலையெல்லாம் மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடனுக்குடன் தூய்மைப்படுத்த வேண்டும். அதற்கடுத்து…
1.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
2.நல்லதை நுகரும் சக்தி அவர்களுக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

முதலில் அவர் செய்யும் தீமையைக் கண்ணின் கருவிழி பதிவாக்கி உயிரிலே பட்டு நுகரும் போது தான் அதை அறிகின்றோம். ஆனால்
1.அதற்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்து விட்டால் அது அடங்குகின்றது
2.நமக்குள் தீமையை வளர்க்கும் தன்மையைக் குறைக்கின்றது.

இவையெல்லாம் ஆலயத்தின் பண்புகளாக ஞானிகள் நமக்குத் தெளிவாகக் காட்டப்பட்ட நிலைகள்.

அகண்ட உலகில் உருவாகும் உணர்வினைச் சூரியன் நுகர்கின்றது… பிரபஞ்சமாக உருவக்கி வாழ்க்கையைத் தொடங்குகிறது… உயிரணுக்களை உருவாக்குகின்றது.

உயிரணுவாகத் தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனாக்குகின்றது உயிர். தீமைகளை மாற்றி விட்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி மனிதனுக்குத் தான் உண்டு.

மிருக நிலையில் இருந்து வளர்ச்சியாகி மனிதன் ஆன நிலையில் ஆதிமூலம் என்றும் விநாயகர் என்றும் உயிரால் உருவாக்கப்பட்ட நிலையை விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டுகின்றது. ஆக மனிதனாக உருவானபின் அவனே முழு முதல் கடவுள்.

அதே சமயத்தில் இந்த மனித உடல் பெற்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளியாக மாற்றி ஒளிச் சரீரமாக உருவாக்கவில்லை என்றால்
2.அடுத்து நாம் தேய்பிறை தான்… வளர்ச்சி குன்றுகிறது (மனிதனல்லாத உருவாகப் பிறக்க வேண்டி வரும்).

மனிதனைக் காட்டிலும் மற்ற உயிரினங்கள் எப்படி எல்லாம் வேதனைப்படுகிறது என்று பார்க்கின்றோம் அல்லவா. நாம் இன்று மனிதனாக இருக்கலாம். சந்தர்ப்பத்தால் விஷத்தன்மையை அதிகமாக நுகர்ந்து விட்டால் விஷம் கொண்ட ஜந்துக்களாக உயிர் மாற்றிவிடும்.

காரணம் விஷத்தன்மை கொண்ட அணுக்கள் வளர்ந்து விட்டால் உடலை உருவாக்கிய அணுக்களை அது உணவாக உட்கொள்ளும் டிபி போன்ற எத்தனையோ கொடிய நோய்களாக வந்து கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டி வருகிறது.

அப்போது உணர்வுகள் குறைந்து விட்டால் உடலும் சுருங்கிவிடும். உடலில் வேதனை அதிகரிக்கும் பொழுது எவ்வளவு வலுக் கொண்டவர்களாக இருந்தாலும் சுருங்கி விடுகின்றது. இதெல்லாம் இயற்கையினுடைய சில நியதிகள்.

1.ஆனால் அருள் ஒளியின் உணர்வை நாம் கூட்டக் கூட்ட
2.“என்றும் ஒளியின் சுடராகப் பரவுகின்றது… இருளை மாய்க்கின்றது…”

இருளை மாய்த்து ஒளியின் உணர்வின் சக்தியைப் பெற வேண்டும் அதற்குத்தான் இந்தப் பயிற்சியை உங்களுக்கு திரும்பத் திரும்ப கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

ஆகவே நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான். பேரின்பப் பெரு வாழ்வு என்றும் பெருவீடு பெரு நிலை என்றும் அது வளர்ச்சி ஆகிக் கொண்டே இருக்கும்.

ஆங்காரத்தை ஓங்காரமாக்கினால் “உலகோதயம் நம் காலடியில்…!”

 

மனிதனான நமக்குள் பல பல எண்ணங்கள் இருந்தாலும் இந்த உடல் வாழ்க்கையில் மோதும் உலகோதய உணர்வுகளிலிருந்து உயர் ஞான வழியின் வழியை உணர்ந்து செயல்படும் பக்குவம் பெற வேண்டும்.

1.நான் என்ற ஆணவம் ஒரு மலம்
2.காமம் என்ற சபல குண மோகம் ஒரு மலம்
3.உலகோதய ஆசை என்னும் மாயை மூன்றாவது மலம்.

இந்த மூன்றையும் அறிந்து அந்த மும்மலத்தையும் நீக்க வேண்டும் என்றால் சத்தியம் சிவம் சுந்தரம் என்ற கருத்தின் பொருளைக் காண வேண்டும்.

மெய் ஞானிகள் உணர்வுடன் தொடர்பு கொண்டு மனத் தெளிவு பெற்று சத்தியம் என்பதன் உண்மைப் பொருள் விளங்கி நம் எண்ணம் சொல் செயல் மூன்றும் நேர்கோடாகப் பரிணமித்தல் வேண்டும். சத்தியம் என்ற அந்த மெய் ஞானமே உண்மை ஞானமாக அறிந்து செயல்பட வேண்டும்.

சத்திய வழி சிவம் பெறுதல் என்பது என்ன..? சிவத்தை எங்கிருந்து பெறுவாய்…?
1.உன்னிடத்தில் உள்ளதடா சிவம்… என்று
2.சித்தன் காட்டிய வழியில் உன்னை உணர்ந்து பாரப்பா…!

காமம் என்பதே உயிர்களுக்கு அன்பு. காமம் சமமான பக்குவத்தில் இருந்தால் அதுவே சிவமாகும். அந்த அன்பு தானப்பா “சிவம்…!”

மனதில் அன்பு கொண்டு விட்டால் உயிரான்மாவின் சக்தியின் வலுவிற்குச் சுலபமான வழி கிட்டிவிடும். அதுவே சுந்தரம்…! சுந்தரத்தைப் பெறுவது என்றால் “அழகு” என்று பொருள் கொள்வாய்.
1.அந்த அழகு என்பது எதுவப்பா..?
2.நீ நினைக்கும் உடல் அழகு அல்ல…!

அழகு என்பது ஆன்ம வலுவின் ஒளி காந்த சக்தி கொண்டு “சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜோதித் தத்துவம் ஆகும்..!” அதைப் பெற வேண்டும் என்றால் மும்மலம் நீக்கப்பட வேண்டும்.

அதை நீக்கிய பிறகு மெய் வழி கண்டு மெய் வழி அறிந்து மெய் ஞானம் மலர்ந்து
1.விரிந்து மணம் வீசும் ஒரு மலர் போல
2.ஆன்ம சக்தியின் சத்தியம்.. சிவம்… சுந்தரம்… என்ற எண்ணத்தில்
3.கடைப்பிடிக்கும் அந்தச் சத்தியத்தை நிலை நிறுத்தி அதை மேன்மைப்படுத்தினால்
4.அன்பு என்ற சிவத்தைப் பெறுகின்றாய்.

அன்பாம் சிவ ஈர்ப்பின் வலுச் செயலினால்… சுந்தரமாம் ஆன்ம அழகின் ஜோதியாக… ஜோதியின் சக்தியே பிரகாசமாக… பிரகாசத்தின் ஒளி நிகழ்வாக… “மூலத்தின் மூலமாகச் செயல் கொண்டிடலாம்…!”

சிற்றின்ப போகத்தையே பேரின்பப் போகமாக்கிய போகநாதர் சத்தியம் சிவம் சுந்தரத்தைப் பெற்றது… மும்மலத்தை மாற்றியமைத்து நற்குண வழிச் செயல் ஆக்கத்தின் ஆக்கம் பெற்றதால் தான்…!

முருகனுக்கு மயிலையும் சேவலையும் காட்டி நாகம் வேல் என்ற தொடரையும் காட்டுகின்றார்கள். அதன் சூட்சமம் அறிந்தோமா…? போகப்பெருமான் வளர்த்துக் கொண்ட அனுபவ ஞானத்தை நாமும் அறிந்து கொண்டால் நம்முடைய வளர்ச்சி நல் வழி ஆகுமப்பா..!

விநாயகர் ஞானக்கனியைப் பெற்றார். இடும்ப குண வசத்தால் முருகனுக்குக் அது கிடைக்கவில்லை என்ற கதையின் தத்துவத்தில் உள்ள உண்மையையும் தெளிந்து கொள்ள வேண்டும்.

வினையின் நாயகன் அந்த விநாயகனே நாம் தானப்பா…! நாம் எப்படி ஞானக்கனி பெறுவது..?

உயிரின் மூலமாகிய “சிவ சக்தி…!” என்று சொரூபப்படுத்திக் காட்டிய
1.சுழற்சியின் வேகமான சிவத்திற்குள்… சக்தி உருக்கொள்ளும் தன் உயிர் சக்தியை
2.தன்னைத் தான் உணர்ந்து தன்னுள் அந்தச் சிவ சக்தியைக் கண்டு
3.வலுக் கொண்ட செயலின் ஆக்கமாகத் தன்னைத் தான் அறிவதே ஞானக்கனி பெறுவது என்பது.

(சூட்சமப்படுத்திக் காட்டிய நிலையில்) தன்னுள்ளே சிவ சக்தியைக் கண்டு அதைச் சுற்றும் வழித் தொடரில் அதை வலம் வந்து அந்த வினையின் நாயகனாக நாம் பெறுவதே “ஞானக்கனி…!”)

அகஸ்திய மாமகரிஷியின் தொடர்பு கொண்டு… போகப் பெருமானின் குரு காளஞ்சி நாதர் (காலிங்கநாதர்) சொன்ன முறைப்படி
1.இருந்த இடத்திலேயே (வெளியிலே தேடிக் கொண்டிருக்காமல்) ஞானக்கனி பெறுதல் என்பதில் அந்த ஞானம் கனிந்து விட்டால்
2.அதனின் சுவையைப் பெற்று விட்டால்
2.அந்தச் சுவையின் “மூலம் அறிய…” வழி பிறக்கும்.

இப்படித் தத்துவங்களையெல்லாம் காட்டிச் சூட்சமங்களை எல்லாம் உள் புகுத்தி “மும்மல நீக்கத்திற்கு வழி காட்டி” வாழையடி வாழை என வரும் ஞானச் செல்வங்கள் தன் சக்தியை வளர்த்துக் கொள்வது என்பது மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் வழியாகும்.

கோப குணத்திற்குச் சிறிதளவு சக்தியை ஊட்டிவிட்டால் அது நாம் பெற்ற தியான சக்தியின் சேமிப்பைத் தனக்குகந்த ஆகாரமாகச் சாப்பிட்டுத் தன் வலுவை தன் கோப குணத்தை மீண்டும் வலுக் கொள்ளச் செய்துவிடும்.

கோபத்தை விலக்கலே உயர் ஞானத்தின் முதல் படி. கோபத் தன்மை இருந்தால் மும்மலங்களும் தீய வினைகளுக்கு அடிகோலும்.

ஆணவம்.. மோகம்… உலக மயக்கம் என்னும் மாயை…! இவைகளை ஞானச் செல்வங்களால் வென்று காட்டியதைத்தான்
1.வேலின் வடிவமாக
2.வேல் விண்ணிலே பறந்து சென்றது…! என்று சூட்சமாகக் காட்டப்பட்டது.

முருகன் ஆணவத்தை அடக்கிவிட்டார்… மோக குணத்தை வென்றிட்டார்… உலகோதய மாயை என்னும் விஷ நாகத்தை அடக்கி விட்டார்… என்பதெல்லாம் உலக மக்களுக்குப் படிப்பினையாகச் சொல்லப்பட்டது.
1.அந்த நல் வழியக் கண்டுணர்ந்து செயல் கொண்டால்
2.“வேல் விண்ணிலே பறந்ததின் சூட்சமம் புரிந்துவிடும்…!”

மயிலிற்கும் பாம்பிற்கும் பகை என்ற நிலை போல உலகோதய இன்பம் பெறுபவன் கூட ஆணவம் கொண்டிட்டால் பகை என்ற எதிர் மறை நிலைதான் செயல் கொள்ளும்…! என்ற உண்மையை அறிந்துணர வேண்டும்.

ஆகவே ஆணவ மலத்தை அடக்கிச் செயல் கொண்டாலும் உலகோதயச் செயல் தத்துவத்தில் தேவையை அழித்திடல் ஆகாது. (ஏனென்றால்) “அது தான் உயிர் சக்தி…!”

அதுவும் ஞான வழித் தொடருக்கு வழி காட்ட மயிலிற்கும் பாம்பிற்கும் பகையாக இருந்தாலும் ஆணவத்தை நீக்கி ஞானம் பெற்றுவிட்டால்
1.இரண்டுக்கும் உள்ள பகை நீங்கி
2.”மயிலின் காலடியில் பாம்பு எப்படி வாழ்கின்றது…?” என்ற உண்மை ஞானம் தெளிவுபடும்.

மோகக் குணத்தைப் பேரின்ப ஞான குணத்திற்கு எப்படி வழி வகுப்பது…? என்றால் மோக குணத்தை அதன் ஆங்காரக் குணத்தை ஓங்காரமாக்கும் செயலாக சேவல் கூவுகிறது என்ற பொருளில்
1.நம்மைக் காக்கும் சக்தியாக மாற்றி
2.அறிவின் ஞானத்தைப் பெருக்கும் வேலாயுதமாகப் பயன்படுத்தினால்
3.”உலகோதயம் நம் காலடியில்…!” என்ற பொருளை உணரலாம்.

அபிஷேகம்

 

உயிருக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… அதனால் ஏற்படும் காந்தம் லட்சுமி… நாம் சுவாசிப்பதை இழுத்துத் தனக்குள் உருவாக்கும் நிலை வரும் பொழுது “பிரம்மமாகின்றது…”

சுவாசித்த உணர்வு எதுவோ அதனின் ஞானப்படி மணமாக நுகர்ந்து “அணுவாக உருவாக்கப்படும் பொழுது” அதன் செயலாக நம்மை இயக்குகின்றது.
1.வேதங்கள் இதைத்தான் கூறுகின்றது
2.சைவ சித்தாந்தமும் இதைத்தான் கூறுகின்றது.

நாம் நுகரும் சத்து சைவம். அந்த உணர்வின் சக்தியை நுகரப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் உணர்வின் தன்மை மறைமுகமாக நமக்குள் இயக்குகின்றது.

நுகர்ந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்… அது அணுவாகி நம் உடலாகின்றது… அது (திடமாகும் போது) துவைதம்.

இதை எல்லாம் ஆலயத்தின் பண்புகளாகக் காட்டினார்கள் ஞானிகள். ஆலயங்களில் பக்தி கொண்டு நல்ல உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

தீப ஆராதனை காட்டும் போது அங்கே பொருள் தெரிகின்றது. அதைப்போல பொருளறிந்து செயல்படும் திறன் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று நுகர்ந்து அதை நமக்குள் அணுவாக மாற்ற வேண்டும்.

1.தீபத்தின் ஒளி எப்படி மற்ற இருளை விலக்குகின்றதோ…
2.மறைந்த பொருளை அதனால் எப்படிக் காண முடிகின்றதோ
3.நமது நினைவாற்றல் தீமையின் உணர்வுகளை உள் புகுந்து அதை நீக்கிடும் அறிவின் ஒளியாகப் பெற வேண்டும்
4.பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும்படி வைத்தார்கள் ஆலயங்களில்.

அதே சமயத்தில் தீபத்தால் அங்கிருக்கும் (தெய்வ) உருவங்களைக் காட்டப்படும் பொழுது துவைதம். சிலையாக வடித்து வைத்தாலும் அந்தத் தெய்வ குணத்தின் தன்மை காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காவியப்படி…
1.தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்
3.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் இந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்.
5.ஆலயம் வரும் குடும்பம் முழுவதும் தெய்வ நிலை பெற வேண்டும்
6.அவர் உடல் முழுவதும் இந்த தெய்வ நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இது பக்தி…!

அதே சமயத்தில் அபிஷேகம் செய்கிறோம் என்றால் அந்தக் கல் சிலைக்கு அல்ல…! அங்கே அபிஷேகம் செய்யும்போது அதை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நாம் சுவாசித்தோம் என்றால் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உடல் முழுவதும் அபிஷேகம் ஆகிறது. நல்ல குணங்களுக்கு அது அமுதாகக் கிடைக்கிறது.

உதாரணமாக… பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம்… அவர் படும் வேதனைகளைச் சுவாசிக்கப்படும் பொழுது நஞ்சு கலந்ததாக நம் உடலுக்குள் பரவி விடுகின்றது.

குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் விஷத்தன்மைகள் பாய்ந்த பின் அதைத் தாங்காதபடி புழு குளவியையே நினைத்துத் துடிக்கின்றது. குளவியின் விஷத்தின் தன்மை ஊடுருவி… புழு – குளவியாக மாறுகின்றது.

அதே போன்றுதான்
1.வேதனைப்பட்ட ஒரு மனிதன் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை அபிஷேகமாகி
2.விஷத்தன்மை உடலுக்குள் பரவி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் விஷமாக மாறுகின்றது
3.விஷம் என்ற அந்த வேதனையை நுகரச் செய்கின்றது… அதன் வளர்ச்சி பெறுகின்றது
4.வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வேதனையை உருவாக்கும் அணுக்களாக மாறுகின்றது
5.பின் நோயாகி மீண்டும் வேதனையைத் தான் நாம் அனுபவிக்க வேண்டி வருகின்றது.

ஆகவே வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் அது நம் உயிரிலே பட்டு… அந்த உணர்வு உடல் முழுவதும் விஷ அணுக்களாகப் பரவுகிறது… அது துடிக்கின்றது பதறுகின்றது மயக்கம் அடைகின்றது.

ஆகவே அபிஷேகிக்க வேண்டியது எது…?
1.வேதனையை அல்ல.
2.அருள் ஞானிகள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து
3.இந்த உணர்வை உடலுக்குள் பரப்புதல் வேண்டும்… அபிஷேகித்தல் வேண்டும்.

தன்னைத் தான் உணர வேண்டியது மிகவும் முக்கியமானது

 

சொல்லாக எழுத்து வடிவில் எத்தனையோ சூட்சமங்களை “ஈஸ்வரபட்டனாகிய யான்” இங்கே வெளிப்படுத்தி வரும் நிலையில் நீங்கள் இதைக் கேட்டுப் படித்து அதைச் செயல்படுத்துவது என்பது மேன்மை தான்,

ஆனாலும் சொல்லப்பட்ட சூட்சமங்களைத் தன்னுடைய சிந்தனைத் திறனால் தன்னில் அறிந்துணர்ந்து தெளிதலே அதிமேன்மையாகும்.
1.”வாயு ஸ்தம்பம்…!” என்றிட்ட
2.ஸ்தூல சரீரத்தையே மிதக்க வைத்திடும் செயலுக்கும் பொருள் உண்டு.

பைராகிகளின் தொடர்பால் போகப் பெருமான் வைத்திய சாஸ்திரங்களை அறிய முற்பட்டார். பல கோடித் தாவரங்களின் சத்துக்களைப் பற்றியும் அதனின் இயல்புகளையும் அறிந்து கொண்டார்.

அது எல்லாவற்றையும் அறிந்த பின் அனுபோக முறை (தனக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்து) மருத்துவ ஸ்வரூபம் காட்டியது அவர் பெற்ற உயர் ஞான வளர்ச்சியால் தான்,

மூலிகைகளின் சாறு கொண்டு ஏற்றப்படும் அகல் விளக்கில் வேறு சில மூலிகைகளையும் பதப்படுத்திப் பக்குவமாக இணைத்து திரியைப் போட்டு தீபமாக ஏற்றப்படும் பொழுது அந்தத் தீபத்திலிருந்து புகை வெளி வருகின்றது. (இன்று இராக்கெட்டில் வெளி வரும் அடர்த்தியான புகை போல)

காற்றின் அடர்வைக் காட்டிலும் மெலிதான அந்தப் புகை மேல் நோக்கிக் கிளம்பும் சூட்சமத்தை உணர்ந்து உலோகக் கூண்டுகளில் உள்ளே நிரப்புகின்றார்கள்.

நிரப்பிய அந்தக் கூண்டுகளை வான்வெளியில் பறக்கச் செய்யும் செயலாக அந்தக் கூண்டுகளுடன் இணைக்கப்பட்ட தூளியில் அமர்ந்து காற்றின் போக்கில் வான்வெளியில் சஞ்சரித்தார்கள் “அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும்…”

இன்று பூமியில் உள்ள கனி வளங்களை எடுத்து அதை எரி பொருளாக எரித்து இராகெட் மூலம் செயற்கைக் கோள்களை அனுப்புவது போல்
1.ஞானிகள் தங்களுக்குள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தின் அடிப்படையில் இயற்கை முறையில் செய்வித்தார்கள்.
2.அதாவது பூமித் தாயின் இயற்கைச் சக்தியை “இன்றைய விஞ்ஞானம் நச்சாக மாற்றிக் கேடாக்கும் செயலைப் போன்று அல்லாமல்…”
3.தன்னுடைய அறிவின் ஞானம் கொண்டு அன்றைய சித்தர்கள் செயல்படுத்தினார்கள்.

அவர்கள் வெளிப்படுத்திய சூட்சமங்களையே இன்றைய விஞ்ஞானிகள் நுகர்ந்து தங்களுடைய கண்டுபிடிப்புகளாக உருவாக்குகின்றார்கள். இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு மூலமே அன்றைய சித்தர்களின் மெய் ஞானம் தான்.

மெய் ஞானம் கொண்டு உயிரான்மாவின் சக்தியை வலுக் கொண்டு சரீரத்தையே மிதக்க வைக்கும் செயலாக
1.சிவஸ்வரூபத்தைத் தன்னுள் கண்டு தெளிந்து
2.சிவஸ்வரூபத்தின் மூலத்தை அறிந்து
3.அதனுள் அதுவாகத் தான் ஒன்றி “தான் வேறல்ல… ஈசன் வேறல்ல…!” என்ற மனப்பக்குவம் கொள்வதே
4.அகத்தின் பொருளை… அந்தப் பரம் பொருளை அறியும் மார்க்கம் ஆகும்.

இதைச் சொல்லால் வெளிப்படுத்துவ்தை அறிந்து கொண்டால் மட்டும் போதாது…!
1.அறிந்ததை உனர்ந்து கொண்டு
2.தானே ஈஸ்வரனுடன் ஒன்றும் “பிரம்ம சாயுஜ்யம்…!” பெறும்
3.ஆனந்த லயத்தை அனுபவிக்கும் எண்ண வலுவிற்கு ஒவ்வொருவரும் வலுக் கூட்ட வேண்டும்.
(சாயுஜ்யம் என்றால் உயிருக்குள் (ஈசனுக்குள்) புகுந்து அவனை ஆகர்ஷிப்பது)

மிருகங்கள் பறவை முதற் கொண்டு ஐந்தறிவு பெற்ற அனைத்து ஜீவன்களுக்கும் ஞானம் உண்டு. இயற்கையுடன் ஒன்றி அறியும் திறனும் உண்டு.
1.ஆனால் ஐந்தறிவு படைத்த மனிதனோ
2.பகுத்தறியும் அறிவாற்றல் பெற்ற மிகுந்த திறன் உடையவன்.

இயற்கை ஞானத்தை மெய் ஞானமாக வளர்க்கும் பக்குவத்தில் அண்டங்களின் செயல்பாட்டை மூலச் சக்தியை அறிந்து கொள்ளும் செயலுக்கு ஒவ்வொரு மனிதனும் முற்பட வேண்டும்.

அந்த நிலையை அடைவதற்கு மகரிஷிகள் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை உடல் என்ற இந்தப் பிண்டத்தில் பக்குவமாக ஒவ்வொரு நாளும் விளைய வைக்க வேண்டும்.

எப்படி…?

1.உலகோதய ஆசை என்ற வலைக்குள் சிக்காமல்
2.அகத்தின் (தனக்குள்) எண்ணச் செயலில் தூய்மையும் சொல்லிலே அன்பும் கனிவும் கொண்டு
3.பரம்பொருளை அறிந்து கொள்ளும் வைராக்கியத்தைப் பெற்றிடும் பாக்கியமாகத் தன்னை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

மூல சக்தி… அது ஆட்டுவிக்கும் மூவுலகம்…!” என்ற செயலை உணரும் பக்குவம்… தன்னைத்தான் உணரும் செயலில் தான் (அது யாராக இருந்தாலும் சரி) அறிந்து கொள்ள முடியும்.

நீல வண்ண குணத் தன்மை

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தித் தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் “முருகா…” என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

நிறம், மணம், நீர் அமிலம் என்ற முத்தொடர் மூலத்திலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து கோடானு கோடி உயிரணுக்கள் செயல்படும் அமில குணத் தன்மைகளை பூமியிலிருந்து வானத்தைப் பார்க்கும் பொழுது காண முடிகிறது.

அதாவது இரவிலே இருள் என்ற கரிய வண்ணமும் (பேரண்ட இருள் பால்வெளி சூட்சமம்) சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் படர்ந்திடும் பகல் பொழுதில் நீல வண்ணக் குணத் தொடரிலும் பார்க்கலாம்.

ஆனால் அவைகளுக்கு அருகாமையில் நெருங்கிச் சென்று… உணர்வால் சுவாசத்தால் ஈர்த்தெடுத்து உணர்ந்திடும் பொழுது
1.உயிரணுக்கள் பெற்றிட்ட நீல வண்ண குணத் தன்மை உட்சென்று
2.உணர்ந்து அறியும் செயலில் தூய வெண்ணிற ஒளி தான் புலப்படும்.
3.மூல சக்தி செயலில் நடை பெறும் கிரியைகளை நாம் உணர்ந்து அறிதலே சிறப்பு.
4.அது தான் தனித்துவ சக்தி நிலை பெறும் “உயர் ஞான வளர்ப்பின் ஆக்கம் ஆகும்…!”

இன்றைய உலக மாற்றத்திற்கு வித்திட்ட சில நிகழ்வுகள்

 

பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் கதிரியக்கச் சக்திகளை ஒலிப்பேழைகளிலே விஞ்ஞானிகள் கவர்கின்றார்கள். அதே அலைவரிசையில் அனுப்பி 27 நட்சத்திரங்களின் நிலைகளை
1.இராணுவ ரகசியமாகவும் அந்த நாட்டினுடைய ரகசியமாகவும் வைத்துக் கொண்டுள்ளார்கள் விஞ்ஞான அறிவால்.
2.இதையெல்லாம் பத்திரிக்கை வாயிலாக நீங்கள் காண்பது மிகவும் கடினம்.

ஏற்கனவே இத்தகைய கதிரியக்கச் சக்திகளை நட்சத்திரத்திலிருந்து கவர்ந்து கொண்டுள்ளார்கள் என்று பல முறை சொல்லியும்… அதை ஏற்றுக் கொள்வார்கள் இல்லை.

ரஷ்யாவில் மனிதனின் உணர்வுக்குள் இயந்திரத்தினைப் பதிவு செய்து அந்த உணர்வின் ஓட்டத்தால் மனிதனின் கண்ணின் நிலைகள் கொண்டு விண்ணிலே பறந்து செல்லும் ராக்கெட்டினை அன்று வீழ்த்தினார்கள்.

ஆரம்பத்தில் அமெரிக்கா ராக்கெட்டுகளை விண்ணிலே ஏவும் போது அது மேலே சென்று கீழே இறங்கி வரும் நிலைகளில்
1.உடலில் பதிந்து கொண்ட உணர்வின் துணைகொண்டு மனித உணர்வால் பாய்ச்சப்பட்டு
2.அந்த ராக்கெட்டைச் செயலிழக்கச் செய்தார்கள்…. இவ்வாறு தான் வீழ்ச்சி அடைந்தது

முதலிலே வெற்றிகரமாக ஏவினார்கள்… அதைக் கொண்டாடவும் செய்தார்கள் அதற்கு அடுத்து இரண்டாவது ஏவப்படும் பொழுது அதை வீழ்ச்சி அடையச் செய்தார்கள் அதற்கடுத்து செலுத்தப்பட்டதும் வீழ்ந்தது… வெற்றி பெற முடியவில்லை.

முதலில் வெற்றி பெற்ற இயந்திரம் பழுதடைந்த பின் தான் சிந்திக்கத் அமெரிக்கா தொடங்கினான். அந்த நுண்ணிய அலைகளை… கதிரியக்க சக்தியால் கண்டறிந்த பின் ரஷ்யாவில் அணு உலைகள் வைத்திருக்கும் இடங்களை லேசர் கதிரியக்கங்களைப் பாய்ச்சி… அந்த அணு உலைகளை இவர்கள் தகர்த்தார்கள்.

அது வெடித்தபின் அதிலிருந்து வெளிப்பட்ட கதிரியக்கங்கள் பூமிக்குள் பரவி… அதிக நிலநடுக்கங்கள் உருவாகி அந்த நகரமே குலுங்கி கட்டிடங்களும் சிதைவுண்டது… அந்த நாடே மிகவும் அல்லல்பட்டது.

இதைப் போன்று ஒன்றல்ல… இரண்டாவது அணு உலை அங்கே சிதறப்பட்ட பின்பு தான் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால்…
1.“நட்சத்திரப் போர்…” உருவாகி அணு உலைகள் வெடிக்குமேயானால்
2.அந்த கதிரியக்கத் துகள்களால் மொத்த நாடே அழிந்துவிடும் என்ற நிலையில்
3.இவர்களுக்குள் கம்யூனிசமா சோசியலிசமா போர் முறைகள் ஓய்ந்து சமாதான முறைகளுக்கு வந்தார்கள்.

இப்படிப்பட்ட யுத்தங்கள் தன் நாட்டைக் காக்க மதத்தின் அடிப்படையில் இயக்கப்பட்டது.

அதே சமயத்தில் முகமதியர்களும் போர் செய்து உலகம் முழுவதும் மதப்போராகி ஒவ்வொரு நாட்டையும் ஆங்காங்கே இருக்கக்கூடிய மக்களை தன் இனத்தில் சேர்த்துக் கொண்டால் கடவுள் உனக்கு எல்லாம் தருவார் என்று உலகம் முழுவதும் பரப்பி இந்த நிலையை உருவாக்கினார்கள்.

கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களும் “எங்கள் கடவுள் உங்களுக்கு இன்னது செய்வார்…” என்று அவர்களும் இப்படிப் பறைசாற்றினார்கள். யூத மதத்தைச் சேர்ந்தவர்களும் மந்திரத்தின் நிலைகள் கொண்டு “கடவுள் உங்களுக்கு இதைச் செய்வார்…” என்று அவர்களும் செயல்படுத்தினார்கள்.

யூத மதத்திலிருந்து வந்ததுதான் முகமது மதமும் கிறிஸ்தவ மதமும் இப்படிப் பிரிக்கப்பட்டு உலகம் முழுவதும் மதப் போராக மாறி இந்தியாவுக்குள்ளும் பரவியது.

முகமதியர்கள் முதலில் இங்கே ஆட்சி செய்ய வந்தார்கள் அது உருவானாலும் அதற்கடுத்து வந்த கிறிஸ்தவ மதம் ரோமானிய மதம் என்று உலகம் முழுவதும் அப்படிப் பரவும் நிலை வந்தது. இஸ்ரேல் நாடும் ரோமானியர்களுக்கு அடிமைப்பட்டுத் தான் இருந்தது.

அரசர்களால் உலகம் முழுவதும் இப்படி ஏற்பட்ட நிலைகள் தான்… மதத்திற்குள் புகுந்த கடவுளும்… எல்லாமே.

அரசர்கள் மதத்தை உருவாக்கி கடவுள் என்று பெயரில் சட்ட நீதிகளையும் ஒழுக்க நெறிகளையும்
1.அந்த நாட்டு அரசனுக்கு ஏற்றவாறு இதைப் பதிவு செய்து அவர்கள் உடல்களிலே பதிவான பின்
2.யார் யாரெல்லாம் இதைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கினார்களோ
3.ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

அதாவது… “ஓ” என்று பிரணவமாக்கி அவர்கள் கூறிய உணர்வின் சத்தை “ம்” என்று உடலாக்கி… இந்த உடலிலிருந்து மீண்டும் நினைவைக் கூட்டும் போது அது இயக்கி… அந்த மதத்தின் அடிப்படையில் அவனைக் காத்திடும் உணர்வு வருகிறது.

அதையே கடவுளாக மதித்துக் கொண்ட பின்…
1.மற்றவர்கள் சொல்வதை எதிர்நிலை கொண்டு மற்ற மதங்களைச் சாடுவதும் தாக்குவதும் அழிப்பதும் தான்
2.அன்றைய அரசர்களால் உருவாக்கப்பட்டது… உலகம் முழுவதும் பரவி வந்தது.

இன்றைய படித்த விஞ்ஞானிகளாக இருந்தாலும் சாஸ்திரங்கள் தெரிந்த சாஸ்திரவாதிகளாக இருந்தாலும் அனைவருக்கும் இது தெரியும் ஆனால் இதனுடைய உண்மைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

விஞ்ஞான அறிவில் கற்று வளர்ச்சி அடைந்து இருந்தாலும்… மதத்தைச் சார்ந்த நிலையில்
1.தன் மதமே பெரிது என்றும் எங்களுடைய சாஸ்திரங்களே பெரிது என்றும்
2.மதத்தின் அடிப்படையில் தான் இன்று உலகம் முழுவதும் பரவி… அதுவே ஓங்கி வளர்ந்து கொண்டுள்ளது.

January 2024 உபதேசம்

போகரின் பூர்வாங்கம்

 

“கசாங்” என்ற நாமம் கொண்ட ஒருவர் சீனாவில் மஞ்சள் நதி பாயும் பாதையில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு உயிர் பிரியும் துறவிக்கு உதவி செய்கிறார். அவருடைய ஆசியும் உபதேசமும் கிடைத்ததும் ஞானியாகும் வாய்ப்பைப் பெற்று மூலிகை வைத்திய நிபுணராகின்றார்.

சில சித்துகள் செய்யும் பொழுது அந்த நாட்டு அரசனின் கோபத்திற்கு ஆளாகித் தப்பிக் காட்டுக்குள் மறைந்து வாழ்கின்றார். சில அபூர்வ சக்திகளும் பெறுகின்றார்,

பின்னர் திபெத்தில் துறவிகளிடம் கலைகள் பல பயின்று இந்திய நாட்டுக்குள் நுழைந்து தெற்கே வருகின்றார். காளிங்கராயரிடம் தொடர்பு ஏற்பட்டதும் அவரையே குருவாக ஏற்கிறார்.

காளிங்கராயரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்து வரும் சமயம் கஞ்ச மலைக்கு (சேலம் அருகில்) வருகின்றார்கள். அந்த மலையின் மூலிகை விசேஷ குணத்தினால் இளமை பெறும் வாய்ப்பு பெற்று அதன் தொடரில் கஞ்ச மலையில் உள்ள காந்தப் பாறையில் இருவரும் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போகரின் (கசாங்) அழகிய தோற்றம் கண்டு அழகன் என்ற பொருளில் முருகா என்று அழைக்கும் குரல் கேட்டு அதைக் குரு தனக்குக் கொடுத்த அருள் வாக்காக ஏற்று அதனின் ஈர்ப்புத் தொடரிலேயே ஓம் முருகா என்ற நிலையில் உணர்வைச் செலுத்துகின்றார் போகர்,

அதன் பின் வாழ்க்கைச் சக்கரம் என்ற சூழலில் அகப்படும் வாய்ப்பாக அமையும் தருவாயில் குரு குறிப்பால் உணர்ந்து போகருக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுகின்றார்.

1.பிறவியின் பயனை எப்படி அடைவது…? என்ற நிலையை உணர்த்தி
2.அதன் வழியில் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்பதை சூசகமாக உணர்த்தி
3.காயகல்பமாகப் பேரின்பப் பெருவாழ்வு எப்படி வாழ வேண்டும்…? என்று போகருக்கு ஆசி கூறுகின்றார் காளிங்கநாதர்.

காளிங்கநாதர் தான் பறக்கும் நிலை பெற்ற சித்து நிலையில்
1.சரீரத்தையே இரும்புக் கல் தாதுவாக்கி
2.விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவை ஒளியாக மாற்றி மண்டலமாகச் சுழலச் செய்து
3.இன்றும் பேரொளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

போகர் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்துக் கடுமையான தியானப் பயிற்சிகள் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்துகின்றார். அவர்களும் அதில் தேர்ந்து வளர்ந்து வருகின்றார்கள். அதிலே முதன்மை பெறுகின்றார் புலிப்பாணி.

அப்பொழுது உண்டாக்கப்பட்டதே தந்த வைத்திய முறையும் நாடி ஜோதிடமும். அப்பொழுது திடீரென்று போகரைக் காணாமல் அவர் சென்ற இடத்தை அறியாமல் சீடர்கள் திகைக்கின்றனர்.

புலிப்பாணியார் தன்னுடைய ஞானத்தால் போகர் சீனாவில் இருப்பபதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வருகின்றார். நேராக இருவரும் பழனிக்கு வருகின்றார்கள்.

போகர் தான் சீன சென்ற நிலையில் தன்னுடைய தவ சக்தியை இழந்ததாகக் கூறி மீண்டும் அந்தத் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்குக் குரு உபதேசம் அவசியம் என்று உணர்ந்து கஞ்ச மலைக்குச் சென்று தன் குருவாகிய காளாஞ்சி நாதரைத் தேடுகின்றார்.
1.அவர் தன் சரீரத்தையே கல்லாக்கி மண்டல சுழற்சியில் செயல்படும் விதம் அறிந்து
2.அவர் கூறிய வழியிலேயே அவரை விஞ்சிக் காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
3.பழனிக்கு வந்து தன் சீடராகிய புலிப்பாணியையே குருவாக ஏற்கின்றார்.

சிஷ்யன் எப்படிக் குருவாக முடியும்…! என்று அவர் சங்கடப்படுகின்றார். போகர் அவரைத் தேற்றி அதற்குரிய வழிகளைக் கூறுகின்றார்.

போகர் தன் கையில் உள்ள தண்டத்தை ஒரு பீடத்தில் வைத்து அந்தத் தண்டத்திலே சூட்சமமாகப் புலிப்பாணி இருந்து குரு பீடம் ஏற்று உபதேசிக்கும்படி வேண்டுகிறார்.

புலிப்பாணி வான இயலின் தத்துவத்தைப் போகருக்கு அருளுகின்றார். குருவிற்குச் சிஷ்யன் உபதேசம் செய்ததால் “தகப்பன் சுவாமி…! என்ற பெயர் நிலைக்கின்றது.

தண்டத்திலிருந்து உபதேசம் பெற்று தன் சக்திக்கு வலு கூட்டியதால் போகநாதர் “தண்டபாணி…” என்ற நாமம் பெறுகின்றார். பின்னர் தண்டபாணிக்குச் சிலை செய்ய எல்லோரும் முடிவெடுத்துப் பழனியில் ஒன்றுகூடி ஞான திருஷ்டியினால் நவபாஷாண மூலிகைகளைத் தேடி உலகெங்கும் பறக்கும் சக்தியினால் சென்று தேடிக் கொண்டு வருகின்றனர்.

கல்வம் (மருந்து அரைக்கும் ஒரு குழிக்கல்) என்ற கருவியில் அதை இட்டு அரைத்து காற்றில் காயும் முன் அதைச் சிலையாக உருவாக்குகின்றார்கள்.

மீன் செதில் போல் முருகன் சிலை உருவெடுக்கின்றது. அதைப் பராமரிக்கும் பணி புலிப்பாணியாருக்குக் கொடுக்கப்படுகின்றது.

போகர் அதன் பின் அரபு நாடுகளுக்குச் சென்று அங்கே சில வேலைகளைச் செய்கின்றார் (மக்காவில்)
1.அங்கே உருவமற்ற இறைவனாகப் படைத்தார்.
2.”ஆயிரம் ஜோதிலிங்கம்…” என்றும்
3.சுவாசமாகிய நிலையைக் குறிக்க யானையின் தலை மீது வீரியத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஒரு சக்தி பீடத்தின் மேல் அமைத்தார்.
4.அதை அடையாளப்படுத்தும் விதமாக “சொர்க்கத்தின் கல்…” என்று பெயர் வைத்து
5.அந்தக் கல்லில் நேர் மையத்தில் நடுப்பாகத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அமைப்பை உண்டு பண்ணி “ஜோதிலிங்கத்தை” ஸ்தாபித்தார் போகர்.

பழனி மலை முருகன் போல் ஐவர் மலையில் கோரக்கர் கோரக்கும்பர் கோரக்நாத் என்று அழைக்கப்படும் ஒரு ரிஷியின் தலைமையில் புலிப்பாணியால் முருகன் சிலை செய்யப்படுகின்றது. சிலை பூர்த்தியாகும் நேரம் போகரும் வருகின்றார்.

கோரக்நாத்தைப் போகர் இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வரப் பணிக்கின்றார். அங்கே உள்ள பூமியின் பொக்கிஷங்கள் ஈர்ப்பின் செயல் வளர்ச்சி முதலியவற்றை அறிகின்றார் அவர்.

பின்னர் போகர் தான் “நிர்விகல்ப சமாதி…!” நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துகின்றார். கோரக்நாத் ஐவர் மலை முருகன் சிலை ரகசியம் அறிந்து பிருகு மகரிஷியின் வழித் தொடரால் தான் அது ஸ்தாபிதம் செய்யப்படும் நிலை தெரிந்து கதிரிக்குச் சென்று போகர் போல் அவரும் சமாதி நிலை கொள்கின்றார்.

இறைவன் தெய்வம் குரு

 

மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.

அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.

நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.

நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்பட்த் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!

ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.

கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.

கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.

நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

 

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு…”

மெய் ஞானத் தத்துவத்தால் மாற்றி அமைக்க வேண்டியது…!

 

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில்…
1.சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை
2.“நான்”என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உண்மைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனிதத் தத்துவத்திலும் “மெய் ஞானத் தத்துவத்தால்” மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

 

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

“நான்…!” என்னும் பலன்

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்… கண் இமை மூடித் திறப்பதும்… செவி ஒலி கேட்பதும்… சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்… தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்க வேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்லதை எண்ணும் போது பிறிதொரு தீமை வந்தால் அந்த நேரத்தில் நமக்குள் (மனதில்) போர்கள் எப்படி வருகிறது…? தன் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கும் நாம் நுகரும் உணர்வுகளுக்கும் நமக்குள் எப்படிப் போர்கள் எப்படி நடக்கின்றது…?

கண்களால் பார்க்கும் உணர்வுகள் நாம் நுகர்ந்து உயிரிலே படப்படும் பொழுது இங்கே குருக்ஷேத்திரம்.

இந்த உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கும் போது…
1.நமக்குள் ஏற்கனவே இருக்கும் எண்ணத்திற்கு மாறான உணர்வை நுகரப்படும் போது
2.இங்கே போர் முறைகள் எப்படி வருகிறது…?

அந்தப் போர் முறை கொண்ட உணர்வுகள் அது இணைத்து அந்த உணர்வின் தன்மை உடலில் வரப்படும் போது
1.நம் உடலில் நல்ல அணுக்களுக்கும் மற்றதுக்கும் போர் எப்படி வருகிறது…?
2.நம் உடலுக்குள் தீமைகள் எப்படி வருகிறது…?
3.சிந்தனை எப்படி இழக்கப்படுகின்றது…?
4.இதைப் போன்ற செயல்களை எப்படி மாற்ற வேண்டும்…? என்று வியாசகர் தெளிவாகக் கூறியுள்ளார்.

நாம் நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும்… பிறருடைய நிலை கௌரவர்கள்… “நான் எதை வளர்த்துக் கொண்டேனோ அதன் வழியே நான் வழி நடத்துவேன்…!”

அவன் (பிறர்) சொல்வதோ செய்வதோ நல்லதாக இருந்தாலும்… அதை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படுகின்றது.

மனிதனாக வாழும் நிலையில் இந்தக் கௌரவப் பிரச்சினைகள் எப்படி வருகிறது…? என்ற நிலையைத் தான்… கௌரவர்கள் என்ற நிலையில் கௌரவப் போர் நடத்தினார்கள் என்ற நிலையில் மகாபாரதத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

இதை எல்லாம் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஒவ்வொரு மகான்களும் அவர்கள் கண்ட பேருண்மையை மக்கள் எப்படிப் பெற வேண்டும்…? எதன் வழி வாழ வேண்டும்…? என்ற நிலையில் நமது நாடு மட்டுமல்ல உலக நாடுகள் எல்லாவற்றிலும் தோன்றிய எல்லா ஞானிகளும் இதைத்தான் கூறியுள்ளார்கள்.

ஆனாலும் இன்று மனிதனின் வேட்கை என்ன…?

நாட்டாசை வரப்படும் பொழுது தன் மதத்தைப் பெருக்கி விட்டால் தன் இணக்கத்திற்கு வந்து விடுவான் என்று செயல்படுகிறார்கள். அவன் தன் இணக்கத்திற்கு வரவில்லை என்றால் உடனே போர் முறை வருகிறது.

இப்படித்தான் அநாகரீகத் தன்மை தான் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

எப்படி வாழ்ந்தாலும்… இந்த உடலை விட்டு ஒரு நாள் சென்றே தான் ஆகவேண்டும். எதன் உணர்வை இங்கே உடலில் வளர்த்தோமோ இந்த உயிர் வெளியே சென்ற பின் அசுர உணர்வு கொண்டு தாக்கி வாழும் மற்ற மிருக இனங்களாக நம்மை உயிர் உருமாற்றிவிடும்.

இந்தத் தருணத்திலிருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? சற்று யோசனை செய்து பாருங்கள்…! நாம் எத்தனை கோடிச் செல்வங்கள் வைத்திருப்பினும் அவைகள் நம்முடன் வருகின்றதா…?

அழகான உடலாக நாம் வைத்திருந்தாலும் அன்பு பரிவு கொண்டு பண்புடன் பிறரின் கஷ்டங்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அவனுடைய கஷ்டம் தான் நமக்குள் வந்து அவர்கள் பட்ட வேதனை தான் நமக்குள்ளும் வளர்கிறது.
1.நம் அழகான உடலும் குறைகிறது
2.தேடிய செல்வமும் அழிகிறது
3.கடைசியில் அதிக வேதனை என்ற உணர்வே வருகிறது.

எல்லோருக்கும் நன்மையைச் செய்தேன்… எனக்கு இப்படி நிலை வந்தது…? என்று இந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் என்ன நடக்கின்றது…?

இந்த வேதனை என்ற உணர்வை எடுத்தால் உடலுக்குப் பின் உயிர் நீ எதை வேதனைப்பட்டாயோ அதன் வழி கொண்டு
1.விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் அதிலே நீ சென்று அடங்கி
2.அங்கே விஷத்தைப் பாய்ச்சி இரசித்து வாழும் உடலாகப் பெறுவாய் என்று (விஷ ஜெந்துக்களாக) அமைத்துக் கொடுக்கின்றது உயிர்.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொல்லப்பட்டது.

“இருக்கட்டும்… அவனை நான் தொலைத்து விடுகின்றேன்…!” என்ற உணர்வு கொண்டு நாம் இருந்தால் அதன் வழி பழி தீர்க்கும் உணர்வைக் கொண்டு வருகின்றது.

இதன் உணர்வை எடுத்துக் கொண்டால் பிறரை அழித்திடும் உணர்வு வருகின்றது. இந்த உணர்வுகள் விளைந்து விட்டால் நல்ல குணங்களை நமக்குள்ளேயே கொல்கிறது.

கொன்று கொண்ட இந்த உணர்வின் தன்மை தான் இந்த உயிரிலே மிஞ்சுகிறது. இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் தருணம் அது தான் வருகிறது.

அப்படிப்பட்ட உணர்வுடன் வெளியே சென்ற பின் அடுத்து புலியின் ஈர்ப்புக்குள் சென்று அங்கே புலிக் குட்டியாக மாற்றி மற்றொன்றை இரக்கமற்றுக் கொன்று சாப்பிடும் தன்மை வருகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

யோகா…!

 

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு என்று உணர்த்தினார்.

ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.

1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.

விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.

மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.

இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.

இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.

ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன் அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.

இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை ௳ட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தை படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!

தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்

ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.

மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.

அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.

2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்

அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.

ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.

ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.

குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.

நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன் என்று சாதாரண மனிதன் பலருக்கு உபதாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்… நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!

குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.

எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.

மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார் தீமைகள் இருந்து மீள வேண்டும் என்று.

இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்

பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.

ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.

அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.

1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.

நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.

நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… சேவை என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும் என்று கதறுகின்றார்.

இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.

இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?

அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.

ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.

உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார். இவர்கள் சொல்லும் குண்டலினியை அவர் செயல்படுத்தவில்லை.

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்முடன் வாழ்க்கையில் எத்தனையோ பேர் பழகுகின்றனர். அவர்களைப் பற்றி நாம் கேட்டறிகின்றோம். அவர் உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு.

அத்தகையவர்கள் சந்தர்ப்பத்தால் உடலை விட்டுப் பிரிந்து சென்றால் அந்தச் செய்தியைக் கேட்டறிந்தவுடன் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்..?

சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் ஒரு இரண்டு நிமிடமாவது வலு சேர்த்துக் கொண்டு
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.
4.அந்த ஆன்மாக்களை விண் செலுத்த… இந்த முறைப்படி செய்து பழக வேண்டும்.

ஏனென்றால் அவரின் உடலின் உணர்வுகள் நாம் கேட்டறிந்து நமக்குள் அதிகமாக இருப்பின் அந்த ஆன்மா நமக்குள் வந்து விடும். அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டும்.

அல்லது அந்த ஆன்மா பிரிந்து போன பின் நாம் இந்த உணர்வின் தன்மை மற்றவர்கள் சந்தித்தோர் மூலம் கேட்டறிந்தாலும் அவரின் உடல் உணர்வுகள் நுகர்ந்தறிந்தால் அவர் உடலில் இருந்த நோயின் தன்மையை நமக்குள் உருவாக்கும் தன்மை வந்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட
1.நண்பர்களானாலும் மற்றவர்களானாலும் எந்த உடலிலிருந்து ஆன்மா பிரிந்து சென்றாலும்
2.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
3.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இத்தகைய நிலையை நாம் எண்ணினால் நம் ஆன்மாவில் அத்தகைய வளர்ச்சி பெறும் தன்மைகள் தடைப்படுகின்றது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் அனைத்தும் அங்கே சென்று விடுகின்றது.

உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது. அதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து கொள்கிறது. நம் ஆன்மாவும் இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகிறது.

கூட்டுத் தியான அமைப்புகளில் யாம் (ஞானகுரு) வெளியிட்ட நூல்களையும் ஒலி உபதேசங்களையும் ஒரு அரை மணி நேரமாவது அந்த உணர்வுகளை அங்கே கேட்கும்படி செய்து அந்த அலைகளைப் பரவச் செய்யுங்கள்.

அதன் பின் இதன் வழிப்படி தியானத்தை வழி நடத்துங்கள். அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைக்கும்படி செய்யுங்கள். உங்கள் குடும்பத்திலேயும் இந்த அருள் ஞான கருத்துக்களைப் பரவ முயற்சி எடுங்கள். ஒரு அரை மணி நேரமாவது கேட்கச் செய்யுங்கள்.

அதை ஏங்கிப் பெறச் செய்து உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்கு அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஊட்டுங்கள்.

1.உபதேசத்தைப் படித்து விட்டோ அல்லது கேட்டு விட்டோ பேசாமல் விட்டு விடக் கூடாது
2.ஏனென்றால் குடும்ப வாழ்க்கையில் அல்லது பிறர் வாழ்க்கையில் வரும் தீமைகளோ நம் உடலில் புகாது தடுக்க
3.அருள் உணர்வை இப்படி வலு கொண்டு செருகேற்றினால் தான்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் தீமைகளை ஒதுக்கித் தள்ளும் வலிமை பெறும்.

இல்லை என்றால் விஷம் என்ற உணர்வுகள் அதை அடக்கிவிடும். இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீள கூட்டாக உங்கள் வீட்டிலேயாவது செய்து வலுப்படுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும்… யாம் கொடுக்கும் இந்த உபதேசங்களைச் சிறிது நேரம் கேட்கச் செய்யுங்கள்.
1.அமைதி கொண்டு இருக்கும் நேரத்தில் இது அவர்களின் செவிகளில் பட்டபின்
2.கேட்க வேண்டும் என்ற உணர்வு தோன்றினால்
3.அவர்களுக்குள்ளும் இந்தப் பற்று வளர்ந்து குடும்பத்தில் பற்றுடன் வாழும் நிலை வரும்.

வெறுக்கும் போது இதைச் சொல்ல வேண்டாம்…!

ஆனால் அமைதி கொண்டிருக்கும் போது நீங்கள் அதை அவர்கள் பெற வேண்டும் என்று சொல்லால் வெளிப்படுத்துங்கள். அவர்கள் செவிகளில் விழுந்தால் அந்த உணர்வுகள் அவருக்குள்ளும் விளையும். உங்கள் குடும்பத்தில் பற்றும் பாசமும் வரும்.

தீமைகளை அகற்றும் பேரருளையும் பேரொளியையும் உங்களுக்குள் உருவாக்க இது உதவியாக இருக்கும். அதற்குத் தான் இதை எல்லாம் சொல்கிறோம்.

“தூர திருஷ்டி…”

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே
3.நம் ஆத்மாவில் நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய “ஐந்தாம் நிலையான… ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…! (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த “ஆறாம் நிலையில்… அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை” நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.”ஏழாம் நிலையான… படைப்பின் படைப்பாக்கும்” செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த “உயிரும் ஆத்மாவும்” இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (“நம் விழிப்பு நிலை”) இந்தக் கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை “மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்…”

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான “நம் உயிர் ஈர்ப்பது போல்” அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் “ஆன்மாவின் விழிப்பு என்ற… அந்தக் கண்கள் வழியாக” நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்.

அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

 

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கோப உணர்வின் தன்மையை மீண்டும் மீண்டும் எண்ணி நாம் சுவாசித்தால் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகித் தன் இனத்தை விருத்தி செய்து கொண்டே இருக்கும்.

இரத்தத்தில் முதலில் ஒரு அணுவாக இருந்து அந்த உணர்ச்சியின் தன்மை வரும் பொழுது பல அணுக்களாகப் பெருகி விடுகின்றது. இப்படி உருவாகி விட்டால் பல அணுக்களும் அந்தக் கார உணர்வை உணவாக உட்கொள்ளும் தன்மை வரும். அப்பொழுது என்ன செய்யும்…?

கோபப்படுவோரை வேடிக்கை பார்த்தோம். அந்த உணர்வுகள் நமக்குள் அணுவாக விளைகிறது, அந்த உணர்வின் அணுக்கள் பெருகப்படும் பொழுது அதனின் மலம் இரத்தத்தில் கலக்கின்றது.

இரத்தத்தில் கலந்து நம் உடல் முழுவதும் சுற்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் வேகம் உணர்ச்சிகள் உச்சகட்டம் அடைகின்றது.

அதாவது ரேடியோக்களில் ட்ரான்சாக்சன் என்று சொல்வார்கள்…! நம் உயிரிலே இந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
1.அது எந்த உணர்ச்சியோ அது ட்ரான்சாக்சன்… இழுத்து இந்த உணர்வுகளை மூளை வரையும் சிந்திக்கச் செய்து
2.அந்த உணர்வின் அலைகள் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது
3.நுண்ணிய நரம்புகளுக்குள் இந்தக் கார உணர்ச்சிகளானால் அப்படியே பலூன் மாதிரி உப்பிவிடும்.
4.அப்பொழுது நம்மை அறியாதபடி தலை கிண்… என்று இருக்கும்.
5.கண்களிலும் இதே போல் இருக்கும்.

குழந்தை மீது பாசமாக இருந்தாலும் இந்த மாதிரி நேரத்தில் ஒரு சாமானை அந்தக் குழந்தை கீழே போட்டான் என்றால் “அறிவு கெட்டதனமாகப் போடுகிறான் பார்…!” என்று உடனே இந்த வேகம் வரும்.

அதே போல் தன் மனைவியையே கூப்பிட்டு ஒரு பொருளை எடுக்கச் சொன்னாலும் அவர்கள் அதை எடுக்கச் சென்றாலும் சரி…
1.சொன்னார்கள்… சரி மெதுவாக எடுப்போம்…! என்று மனைவி கொஞ்சம் சாதாரண நிலைகளிலிருந்தால்
2.“நடப்பதைப் பார்…!” நான் என்ன சொல்கிறேன்..? நீ எப்படி வேலை செய்கிறாய்…? என்று மனைவி மீது வெறுப்பான பேச்சு வரும்.

அதே சமயத்தில் தொழில் செய்யும் இடங்களில் நம்மிடம் வேலை செய்யும் பையனைக் கூப்பிட்டு வேலை சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் சரிங்க சார்…! என்று கொஞ்சம் சாந்தமாகப் போனால் அவன் போகும் பொழுதே
1.நடையைப் பார்… இவன் போகும் வேகத்தைப் பார்…! இவனெல்லாம் உருப்படுவானா..?
2.நான் சொல்கிறேன்… இவன் எப்படி வேலை செய்கிறான்..? என்று
3.நம்மை அறியாமலே அவனை இப்படி எல்லாம் திட்டுவோம்.

ஆக ஓ…ம் நமச்சிவாய..! சிவாய நம ஓ…ம்…! நாம் திட்டிய உணர்வுகள் அவனிடம் இதைச் சொன்ன பின் அவன் காதிலேயும் இது கேட்கிறது.

இதைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் இதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு என்ன…? சார்… நம் மீது இப்படிக் கோபிக்கிறாரே…! என்று அவனுக்குள்ளும் இதே கோபம் தூண்டும்.

அவன் போகும் பொழுதே இந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அந்த ஒரு ஃபைலை யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுக்காதபடி வேறு ஒருவரிடம் கொண்டு கொடுத்து விடுவான்.

நான் கொடுத்து விட்டேன் என்பான். ஆனால் நாம் சொன்னவரிடம் அது போய்ச் சேர்ந்திருக்காது.

அந்த நபரிடம் ஃபைல் வந்து சேர்ந்ததா பார்த்து விட்டீர்களா…? கணக்கு பார்த்தாகியதா…? என்று கேட்கிறோம் என்றால் அவர் வரவில்லையே என்பார்.

அந்தப் பையனை மீண்டும் கூப்பிட்டு… ஏண்டா உன்னை எங்கே கொடுக்கச் சொன்னேன்…? எங்கேயடா கொடுத்தாய்..? என்று கேட்போம்.

1.ஏனென்றால் இந்த உணர்வுகள் நாம் வெளிப்படுத்தியது தான் அந்தப் பையனுக்குள் சென்று இயக்குகிறது.
2.அதன் வழி அந்தப் பையன் வேலையைச் சரியாகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது.

குற்றம் யார் செய்தது…?

இது தான் ஓம் நமச் சிவாய… சிவாய நம ஓம். நம் உணர்வுகள் இப்படி மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் நுகர்ந்த உணர்வுகளே அந்தந்த உணர்ச்சிகளை ஊட்டச் செய்கிறது.

அதே சமயத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் கருவாகி அந்த கார உணர்வின் அணுக்களின் தன்மை பெருகுகின்றது.

உதாரணமாக வீட்டிலே பெண்கள் கணவருக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பார்த்ததுமே அந்த ஆவேசம் வரும்.

வைக்கும் பொழுது கொஞ்சம் சும்மா நின்றால் போதும். போட்டு விட்டுப் போக வேண்டியது தானே… என்று அங்கேயும் இந்த அளவுக்கு கோபம் பாய்ந்து வரும்… அடுத்து சண்டையும் வரும்.

ஆனால் உடலைப் பரிசோதித்தால் இரத்தக் கொதிப்பு இருக்கும். எதைப் பார்த்தாலும் அந்தத் துடிப்பின் வேகம் தான் வரும்.

இந்த வேகம் எல்லாம் என்ன செய்யும்..?

1.சிறு மூளையில் போய் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய இடத்தில் அதிர்வுகளை உருவாக்கும்
2.பலூன் மாதிரி உப்பிவிடும்…!

அது எந்த இடத்தில் இந்த மாதிரி உருவானதோ அதன் மூலம் உடலில் இயக்கக்கூடிய எந்த பாகமோ உதாரணமாக நுரையீரல் பாகமாக இருந்தால் அது விரிவடைந்து விடும். மூச்சுத் திணறல் அதிகமாகும்.

மூச்சுத் திணறல் அதிகமானால் சிறிது நேரத்தில் சிந்திக்கும் தன்மை இல்லாது போகும். இயக்கம் சீராக இல்லை என்கிற பொழுது அது மனிதனை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

அதே போல் கையோ கால் பாகமோ இருந்தால்.. ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியின் வேகம் வரும். அப்பொழுது இதனின் அழுத்தமானால் அதைச் செயலிழக்கச் செய்துவிடும்.

கையோ காலோ இயக்கமில்லாது போகும். டபக்.. என்று சுண்டி இழுத்துப் பிடித்துவிடும்.

ஏனென்றால் அந்தச் சிறு மூளையிலிருந்து ஆணைகள் போகக் கூடிய உணர்ச்சிகளை (நரம்புகளுக்குள்) தடைப்படுத்திவிடுகின்றது. இது எல்லாம் பலூன் மாதிரி உருவான நிலையால் ஏற்படும் விளைவுகள்.

கைகளையோ கால்களையோ சுருக்கி விட்டால் அபுறம் அதற்கு வேண்டிய மருத்துவங்களைப் பார்க்க வேண்டியதிருக்கும்.

அதே சமயத்தில் அங்கே பலூன் மாதிரி இருக்கும் இடத்தில் அது வெடித்து விட்டால் மரணம் தான். இரத்தக் கொதிப்பாக இருந்தது. ஆனால் திடீரென்று மரணம் அடைந்து விட்டார் என்று இத்தகைய நிலை வரும்.

இது எல்லாம் நாம் நுகர்ந்த கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைந்து அதிகமாகப் பெருகி விட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமக்கு வேண்டியவர் உடல் நலக் குறைவானால் அந்த நோயாளியை நாம் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகின்றான் என்ற உணர்வை நாம் சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றுகிறது.

அவனைக் காக்க வேண்டும் என்ற ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
1.ஆனால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்த பின்
2.நம் உடலுக்குள் அவர் உடலில் விளைந்த நோயின் தன்மை புகாது தடுக்க வேண்டும்.

அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவினை ஈஸ்வரா… என்று உயிருடன் ஒன்றி
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி
3.உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
4.உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் நம் கண்ணின் நினைவு கொண்டு உபதேசித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எல்லா அணுக்களிலும் வலுக் கொண்ட பின்
1.இரத்தங்களில் கலந்து வந்தாலும் அந்தத் தீமைகளை ஏற்றுக் கொள்ளாது
2.அதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் சுழலப்படும் பொழுது கிட்னி (சிறுநீரகங்கள்) இந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது.
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரப்படும் பொழுது அதைப் பிரித்து விடுகின்றது.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நாம் எண்ணி எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் உணர்வுகள்… நம் உடல் உறுப்புகளில் கலந்து அங்கே வலுப் பெற்று… நம் கிட்னி விஷத் தன்மை கொண்டு செயலற்றதாக மாறுவதற்கு முன்…
1.அந்தக் கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்குள்
2.நாம் எடுத்துத் தூய்மைப்படுத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளி அங்கே படர்கின்றது.
3.பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மை கொண்டு அதை வெளியேற்றி விடுகின்றது.

ஆனால் வேதனைப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் உடலில் அணுக்களாக விளைந்து கிட்னி அந்த விஷத்தைக் கண்ட பின் அதைச் சிறுநீராகச் சரியாகப் பிரிக்காதபடி… இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்ற உறுப்புகளிலும் சேர்கின்றது.

அந்த விஷங்களை வடிக்கத் தவறினால் நமக்குள் கடும் நோயின் தன்மை உருவாகி மடியும் தன்மையே வருகின்றது.

ஆகவே நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

நான் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம். இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ கடுமையான வேதனைகளை அனுபவித்தேன்.
1.வேதனையான உணர்வுகள் எப்படி வருகிறது…? என்று உணரும்படிச் செய்தார் குருநாதர்.
2.அந்த வேதனை தாக்கப்படும் பொழுது அதை எவ்வாறு நீ மாற்ற வேண்டும்…?
3.இதற்கு நீ என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.

அதனின் உணர்வு கொண்ட வித்தினை உருவாக்கித் தான் “ஞான வித்தாக” உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

மகரிஷிகள் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும்…!

 

பல கோடிச் சரீரங்களில் உயிர் கடவுளாக நின்று எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதாவது
1.பரமாத்மாவாக மாறுவதைத் ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக மாற்றுகிறது
2.அதுவே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளையும் உறுப்புகளையும் நமக்குள் உருவாக்குகிறது

இவ்வாறு உருவுக்கு உறுதுணையாக நம் உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தான் அன்று வியாசகன்

ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் மிகத் தெளிவான நிலைகள் வியாசகன் கொடுத்தான்.

ஆனால் இதையெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றப்பட்டு… மனிதனின் முழுமையின் உண்மை நிலைகளை அறியாதபடி…
1.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலை தடுமாறி
2.கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பாற்றுவான் என்றும்
3.அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் அவன் மகிழ்ந்து எனக்கு உதவி செய்வான் என்றும்
4.இத்தகைய எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கி விட்டார்களே தவிர
5.மனிதன் மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் எடுத்தால் தீமையான உணர்வுகளில் இருந்து மீள முடியும்
6.அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை நாம் அடைய முடியும் என்று உணர்த்தவில்லை.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள்…
1.அவர்கள் சொன்னது அனைத்தையும் உங்களுக்குத் தினசரி பதிவாக்கி தெளிவாக்கி
2.அதன் உணர்வை நினைவாக்கி உங்களைக் காப்பதும்
3.உங்கள் மூதாதையர்களை விண் செலுத்திக் காப்பதும்
4.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை எம்மை அறியச் செய்து எல்லோருக்கும் உணர்வைப் பதிவு செய்யும்படி சொன்னார்.

அந்த அருள் வழிப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றித் தீமையற்ற உணர்வைத் தன்னில் விளைய வைக்க முடியும்.

வான்மீகி படித்தவன் அல்ல வியாசகரும் படித்தவர் அல்ல. அதைப் போன்று தான் கிராமத்தில் வாழக்கூடிய படிப்பறிவில்லாத மக்களாக இருந்தாலும்
1.எம்முடைய உபதேச உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால் போதும்
2.இந்த நினைவு உங்களைக் காத்திடும் எண்ணமாக வரும்.

எத்தகைய தீமையாக இருந்தாலும்… உங்களைக் காத்து மற்றவர்களைக் காத்தாலும்… அந்தத் தீமைகள் உங்களைச் சாடாது “உங்களைக் காக்கும் வலுவான எண்ணங்களை நீங்கள் பெற முடியும்…” என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

“எத்தகைய தீமையை உருவாக்குபவரை” நீங்கள் உற்றுப் பார்த்தாலும் அதன் உணர்வை நுகர நேர்ந்தாலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்த தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து விடாது.

அதே சமயம் அந்த மகரிஷியின் உணர்வால் உங்களைக் காத்திட முடியும். தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அந்தத் திரவகம் அதில் சேர்ந்த செம்பையும் பித்தளையும் ஆவியாக நீக்குகின்றதோ… இதைப் போன்று
1.உபதேசம் கேட்கும் அனைவருக்கும் இந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் எம்மால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டு
2.எப்போது எந்த நிமிடத்தில் பிறருக்கு உதவி செய்கின்றீர்களோ
3.அவர்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களுக்குப் பரிவான நிலைகள் கொண்டு உதவி செய்தாலும்
4.ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி விட்டால்
6.திரவகம் போன்று இருக்கும் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமையைக் கேட்டறிந்தத் தூய்மைப்படுத்தும்.

அதைத் துடைத்து விட்டு… தீமையில் வாடுபவர் அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் அவர் நோய் நீங்க வேண்டும் அவர் எதிர்காலம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் படைத்திடல் வேண்டும் (இது முக்கியம்).

இந்த உணர்வின் செயலாக வெளிப்படுத்துவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.எவர் கேட்டுணர்ந்தாலும் அவர் உடலிலும் புகுந்து
2.அந்தத் தீமையை அகற்றிடும் சக்தியாக விளையும்.

விநாயகர் தத்துவத்தில் இத்தகைய நிலையைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.தன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…?
2.தன் வாழ்க்கையில் வரும் நன்மைகளை எவ்வாறு காக்க வேண்டும்…?
3.பிறருடைய தீமைகளிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…?
4.தீமையில் வாடுவோருக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்…?
5.தீமையான நிலைகள் தன்னைப் பற்றிடாது எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்…? என்ற இந்த நிலையை
6.சாதாரண பாமர மக்களும் அறிந்துணர்ந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது ஞானிகளால்…!

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

 

உபதேசம் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு). மீண்டும் அதை ஞாபகப்படுத்தும் நிலையாகத் திரும்பச் சொல்லும் பொழுது
1.”சாமி சொன்னதையே திரும்பச் சொல்கிறார்…” என்ற நினைவு வந்துவிடும்.
2.அப்புறம் பார்க்கலாம் என்று “இதைக் கேட்பதை மறந்து விடுவார்கள்…”

ஒரு செடி கசப்பின் தன்மை கொண்டு உருவான பின் மீண்டும் அந்தக் கசப்பினை நுகர்ந்தால் தான் அந்தச் செடியின் தன்மை வளர முடியும். ரோஜாப் பூ தன்னுடைய நறுமணத்தை மறந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் அதை நுகர்ந்தறிந்தால் தான் ரோஜாப்பூ நறுமணம் அங்கே வரும்.

1.ஒரு மாடோ ஆடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
2.அதை மீண்டும் நினைவு கொண்டு உட்கொண்டால் தன் இனமாக… உடலாகி… நோயற்றதாக வாழும்.

ஆனால் அந்தத் தாவர இனைத்தைப் புசித்த மாடு மாற்றுத் தாவரத்தை அது சாப்பிடுமே என்றால் இந்த உணர்வுக்கு எதிர்நிலையாகி மாட்டிற்கு நோய் வந்துவிடும்.

ஆகவே நுகர்ந்து பார்த்துத் “தன் இனம் அல்ல” என்றால் அதை உட்கொள்ளாது விலகிச் செல்கின்றது. இதைப் போன்று தான்
1.நாமும் தீமை என்ற நிலைகளைக் கேட்டறிந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி அதிலிருந்து விடுபட வேண்டும்
2.அவ்வாறு விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் புகுத்துதல் வேண்டும்
3அவ்வாறு புகுத்தி விட்டால் அது தீமை அடக்கிடும் சக்தியாக நமக்குள் மாறும்.

இதை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத் தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்று தெளிந்த மனம் கொண்டு வாழ்வதற்குச் சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது…
1.சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை
2.அதை அறிவதற்காக வேண்டி உருவமாக்கி… அதைக் கதைகளாக்கிக் காவியமாகப் படைத்துள்ளார்கள் மெய் ஞானிகள்.

எண்ணத்தால் நமக்குள் அதைப் பதிவு செய்து… அந்த எண்ணத்தின் துணை கொண்டு ஞானிகள் காட்டிய உண்மை வழிப்படி காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அடிக்கடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1.எதுவுமே பதிவு செய்யாதபடி நினைவுக்கு வராது
2.பதிவு இல்லை என்றால் நினைவு ஏது…?

ஒருவர் என்னைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் தான் அது மீண்டும் நினைவுக்கு வரும். திட்டியது பதிவாகவில்லை என்றால் அந்த நினைவு வராது.

உதாரணமாக… இரயிலில் பயணம் செய்யும் பொழுது ஒருவர் நம்முடன் நல்லவராகப் பேசிக் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பயணம் செய்யும்பொழுது அவர் உள் உணர்வுகளில் எதிர்பாராதபடி திடீரென்று பயத்தினால் துடிக்கின்றார்… பார்க்கின்றோம்… பதிவாக்குகின்றோம்.

“ஐயோ நல்ல மனிதன்…! இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாரே… இப்பொழுது திடீரென்று அவர் துடித்து விட்டாரே…!” என்று அடுத்தாற்போல் போல் நாம் இதைத்தான் சொல்வோம்.

1.ஆகவே அவரைப் பற்றிய அந்தப் பதிவு இல்லை என்றால் நினைவு மீண்டும் வராது
2.அதே போல் பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது அதிலே பதிவு இல்லை என்றால் படித்தது மீண்டும் நினைவிற்கு வராது.

ஆகவே எதிலுமே பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது. அதற்காக வேண்டித் தான் அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவு செய்து அதை நீங்கள் நினைவு கொள்ளும்படிச் செய்கின்றேன்.

அவ்வாறு நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால்
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்
2.உயிரோடு ஒன்றலாம்… அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
3.மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்லலாம்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

 

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி – அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் – காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் – அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

 

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டால் அதைத் தீர்க்க “சாங்கிய சாஸ்திரத்தின்படி” இன்று முயற்சிக்கின்றார்கள்.
1.இங்கே கேட்டால் எனக்கு நல்லதாகும்… அங்கே கேட்டால் என்னுடைய கஷ்டங்கள் தீரும்
2.இன்ன இடத்தில் அல்லது இன்ன ஆலயத்தில் யாக குண்டம் இறங்கினால் எனக்கு நல்லதாகும்
3.கற்பூரத்தைக் கொளுத்தினால் எனக்கு நல்லதாகும் என்று
4.தனக்குள் எண்ணும் இத்தகைய எண்ணங்களை வலுக்கூட்டி விட்டு…
5.இன்றைய நிலைகளுக்கு (பிழைப்புக்கு) இதைப் பெற்றால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுவது “அது தீமையே…”

நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டால் அந்த மணம் சிறிது சிறிது நேரத்திற்கே இருக்கும்… அடுத்த கணம் மறைந்துவிடும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் நிலைகள் கொண்டு மேலே சொன்ன வழியில் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பொழுது… இந்த உணர்வலைகள் படரும்… நினைவுகளைக் கூட்டும்… ஆனால் அடுத்து அது எல்லாமே அழிந்துவிடும்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் செயல்படுவோம் என்றால்
1.மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.
2.அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படத் தேவையில்லை
3.பொருள்களை (செல்வம்) நாம் விரயமாக்க வேண்டியது இல்லை.
4.எங்கெங்கோ தேடிச் சென்று அவர் செய்வாரா…? இவர் செய்வாரா…? என்ற எதிர்பார்ப்பில்
5.மற்றவர்களை நாட வேண்டியதில்லை… அவர்களை எண்ணி ஏமாறவும் வேண்டியதில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திர விதிப்படி ஒவ்வொரு ஊரிலும் தெருக்களில் மாரியம்மன் உண்டு… தெருவின் மூலைகளில் விநாயகனையும் அமைத்து இருப்பார்கள்.

முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினாலே போதும்…! மெய் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் உண்மைகள் உங்களுக்குள் பதிவாகி
1.உங்கள் எண்ணங்கள் வலுவாகி… மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து… தீமைகளைச் சுட்டுப் பொசுக்க உங்களால் முடியும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உயிரே கடவுளாக நின்று
3.தீமைகளைப் போக்கும் சக்தியாகப் பரப்பித் தீமையற்ற உணர்வாக மாறும்.

துருவ மகரிஷியுடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் உங்கள் நினைவு கூர்மையாகி (கூர்மை அவதாரமாக) அது வலுவாகும் போது வராகனாக மாறி தீமையான நிலைகளைப் பிளந்து விடும்.

என்றும் அழியாத நிலைகள் கொண்டு பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகளில் தெளிவாக நாம் அடைய முடியும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனாக உருவாக்கிய உயிர் நீங்கள் நுகர்ந்த உணர்வின் அறிவையே எண்ணங்களாக “ஓ…” என்று ஜீவனாக்கி… இயக்கி… உடலாக மாற்றிவிடுகிறது.

மனிதனான பின் எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையைக் கண்டுணர்ந்த மகரிஷிகள் தனக்குள் வலிமைமிக்க சக்திகளைப் பெற்று தீமைகளிலிருந்து நீக்கிடும் நிலைகளைக் காட்டினார்கள்.
1.அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும்
2.தீமைகளை நாம் எளிதில் அகற்ற முடியும்
3.அந்த மகரிஷிகளுடன் ஒன்றாக இணைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செயல்படுத்துங்கள்.

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

 

ஐம்பூதத் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்கிப் பெருகிடும் செயல் நிலைகள்… வளர்ப்பின் செயலாக்கம் வளர்ச்சியின் முதிர்வாக… மறைபொருள் சக்தி உறை பொருள் உருக்கோலம் கொள்ளும் வளர்ப்பாக… உறை பொருளின் பரிணாம முதிர்வு வினை செயலுருவது…
1.விடா சிந்தனை (முயற்சி) என்றே கதியுற்றுச் செயலுருங்கால்…
2.மதி என்ற தோன்றா நின்ற அறிவை ஞானத்தின் ஆக்கமாக…
3.எண்ணத்தின் வழி நாதத்தை உண்டு பண்ணி…
4.வினை செயல் அறிவுறுத்தும் அறிவு எதுவோ அந்த அறிவால் நிலை நின்று
5.முன்… பின்… நடு… என்றே கால நியமனங்களைக் கருத்தில் காட்டும்
6.சாயுஜ்யப் (தெய்வத்துள் புகும் நிலை) பெரு நிலையை… அறிவை அறிவால் அறிவர் ஞானியர்.

“ஊழ்” என்று முன் கடந்த வினைப் பயன்…
1.செய்யப்பட்ட வினையாக “எது பதிவின் நிலையோ”
2.அப்பதிவைச் செயல் நடத்தும் தொடருக்கு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்ட மனித உடல் இயக்க கதியில்…
3.செய்த வினையாகின்ற வளர்ச்சியின் வளர்ப்பில் காந்தம் செயலுருங்கால்
4.வீரிய மின் சக்தியாக இயற்கையின் சக்தியே வெளிப்படும் வேகமாகச் செயல்படுகின்ற செயல்பாட்டில்
5.சரீரத்தின் எலும்பினுள் ஊண் “செய்யப்பட்ட வினையாகச் செயல்படும் சூட்சுமம்” உண்டு.

“புதிதாக” உதிக்கின்ற உயிரணு, ஜீவன் கொண்ட உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்தபின்… “செய்யப்பட்ட வினை இதில் எது…?” என்ற வினா எழும்பலாம்.

ஆகாயம் நீர் காற்று நெருப்பு நிலம் என்றே உரைத்திடும் ஐம்பூதங்கள் ஒன்றினில் ஒன்று பொருந்தி… ஆகாயமாய் வியாபித்துள்ள மறைபொருள் செயல்பாட்டின் தன்மைகள் செயல்படுங்கால்… பிரதிவித் (பூமி-உலகம்) தத்துவம்… ஆக்கம் தத்துவம்… அதே தன்மையாக ஜீவன் உருக் கோலம் கொள்ளும் செயலிலும் உண்டு.

கோடானு கோடி நிறங்கள் கோடான கோடி மணங்கள் கோடான கோடி குணங்கள் நீரமில சக்தியுடன் கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கும் காந்தமாக உள் நிறைந்தே உதிக்கும் உயிரணுவின் செயலில்
2.உருப்பெறுவது எண்ணம் கொண்ட ஆத்மா என்றே உரைத்து வந்தோம்.

இங்கு எண்ணம் எதுவப்பா…?

செயல்பாட்டின் மூல சக்தியே… தனக்கொத்ததை வளர்க்கும் ஈர்ப்பில் “உறை பொருள் ஆக்கும் செயலுக்கே” செயல்படும் செயலை ஊன்றிப் பார்.

எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும் செயலில்… ஜீவன் கொள்ளும் கருத்து நடைமுறைச் செயலில… நாம் ஏற்படுத்திக் கொண்ட சுற்றுச்சூழலில் அப்படியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எது காரணம்…?

எண்ணம் என்பாய்.

முழுவதும் விளக்கி விட்டால் அறிவின் சுடர் பிரகாசிக்க அதுவே தூண்டுகோலாகுமப்பா.

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

மனிதனான நாம் இப்போது எல்லோருக்கும் பல நன்மைகள் செய்திருப்பினும் நன்மை செய்வதருடைய நிலைகள் கடைசியில் என்ன ஆகிறது…?

தன் குடும்பத்திலோ அல்லது ஒரு ஆயிரம் பேருக்கோ நன்மை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

அதிலே ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால்
1.அந்த வேதனைப்படுவர் உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டு அவருக்கு இரக்கப்பட்டு
2.பரிவுடன் அதிகமாக உதவி செய்ய நெருங்கும் போது அவருக்குள் விளைந்ததை இவர் நுகரப்படும் போது
3.அந்த வேதனை உணர்வுகள் இவருக்குள் ஊடுருவி… அவரின் நோயை இங்கே உருவாக்கி விடுகின்றது.

காரணம் கூர்மையாகப் பார்த்துத் தான் அந்த வேதனையை உணர்கின்றார்… உதவி செய்கின்றார். அப்படி உற்றுப் பார்த்து “அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…” என்று பக்தியில் கடவுளே… தெய்வமே… முருகனே… விநாயகனே…! என்று அந்த உணர்வின் தன்மை சொல்லி அங்கே நுகரப்படும் பொழுது இது உருப்பெற்று விடுகின்றது.

இது கூர்மை அவதாரமாக மாறி அவன் உடலில் உருவான தீமை இங்கே உருவாகி அதே நைந்திடும் உணர்வாக நோயாக இங்கே விளைந்து விடுகின்றது.

நாம் என்ன செய்வோம்…?
1.கஷ்டப்பட்டவருக்கு அனைத்து உதவியும் செய்தேனே…
2.கடவுளே…! எல்லோருக்கும் நான் நன்மை தானே செய்தேன்… எனக்கு இவ்வாறு நோய் வந்து விட்டதே…! என்று
3.அந்த வேதனையை நோக்கியே மீண்டு சென்று
4.எந்தத் தெய்வம் காக்கும் என்று எண்ணினோமோ “அவன் காப்பான்…” என்ற நோக்கத்திலேயே குறைகளை எல்லாம் சொல்லி
5.அது நிறைவேறும் என்ற நோக்கத்தில் (எதிர்பார்த்து) வேதனைகளை அதிகமாகஸ் சுவாசித்து
6.நிறைவுபெறும் எண்ணமே இல்லாது அழிந்திடும் உணர்வு கொண்டு அதையே நொந்திடும் உணர்வாக வளர்ந்துவிடுகிறது.

ஆனாலும்… நாம் இப்படி வேதனைப்படும் பொழுது… நமக்கும் இதே போன்று இன்னொருவர் உதவி செய்ய வருவார். “அடப்பாவமே…! இவர் எல்லோருக்கும் உதவி செய்தார்… இவருக்கு இப்படி ஒரு துன்பமா…?” என்று எண்ணும் போது… தன் கதைகளை எல்லாம் சொன்னால் அவர் கூர்ந்து கேட்டால்
1.ஆகா… நீயாவது எனக்கு இரக்கப்பட்டாயே…! என்று
2.கடைசியில் இறந்த பின் நம் ஆன்மா இவர் உடலுக்குள் தான் போகும்.

இப்படி இந்த உணர்வின் தன்மைகள் மாறி மாறி மீண்டும் பூமியின் தன்மைகளில் தேய்பிறைக்கே வந்து கொண்டுள்ளோம்.

பல கோடிச் சரீரங்களில் கூர்மையின் நிலையாக தன்னைக் காட்டிலும் வலிமையான நிலைகளைப் பெற்றுப் பெற்று
1.அதனின் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சி ஆகி மனிதனான பின்
2.இரக்கம் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகளில் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புடன் வளரக்கூடியவன்
3.மற்றவருடைய நோய்களைக் கூர்மையாக எடுத்து உணர்வின் தன்மை அவருக்கு உதவி செய்தாலும்
4.புவியின் ஈர்ப்புக்குள்ளே தான் மீண்டும் சுழலும் நிலை வருகின்றது.

இதிலிருந்து மீளும் மார்க்கம்…?

இதற்குண்டான விளக்கங்களை யாம் இப்போது சொல்ல வந்தால்
1.”நன்மையே செய்யக்கூடாது” என்று நீங்கள் சொல்கின்றீர்களா…? என்ற இந்த வினாவில் தான் எல்லோரும் உட்கார்ந்து இருப்பீர்கள்…!
2.நன்மை செய்தவர் இப்படியானால் “எந்தக் கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறார்…?” என்ற இந்த கேள்விக்குறியில் தான் இங்கே இருப்பீர்கள்.

அதனால் தான் இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) நீ சிந்தித்துப் பார்…! என்று விநாயகன் உருவமாகக் ஞானிகள் காட்டினார்கள்.

ஆதிமூலம் என்பது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றது. இந்த கணங்களுக்கெல்லாம் இந்தக் குணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்… கணேசா…!

நாம் எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ மூஷிகவாகனா அதற்கொப்ப அடுத்தடுத்து உடல்கள் மாறி மாறி வந்தது. இந்த மனித வாழ்க்கையில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?

மான் புலியை பார்த்து அதனுடைய கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வுகளைத் தன் உடலுக்குள் விளைய வைத்து இந்த உடலை விட்டுப் பிரியும் போது கூர்மையாக அந்தப் புலியையே எண்ணி
1.புலியின் உணர்வைச் சுவாசித்த நிலைகள் கொண்டு மூஷிகவாகனா
2.அந்தப் புலியின் உணர்வே இதை வாகனமாக அழைத்துச் சென்று தன்னுடன் அணைத்து
3.இதனுடைய தசைகளை அது உணவாக எப்படி உட்கொண்டதோ அதைப் போல
4.புலியின் உணர்வை இந்த மான் அதிகமாகச் சுவாசிக்கப்படும் பொழுது தன் இனமான சத்தைத் தனக்குள் கவர்ந்து
5.மானின் உயிரான்மா இந்தப் புலியின் உணர்வின் துணை கொண்டு புலியாக உருவாக்கச் செய்து விடுகின்றது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்… கடவுளின் செயலும் இது தான் ஒன்றுக்குள் ஒன்று செல்லப்படும் பொழுது உணர்வின் செயலாக கடவுளாக உள் நின்று இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

 

ஜீவாத்மா பரமாத்மாவாகும் செயல் நிலைகளை நிரூபணம் ஆக்கிக் காட்டு என்கின்ற வினாவிற்கு எளிமையாகப் பதில் உரைத்திட்டாலும்…
1.அறிவதை உணர்த்தலும் உணர்ந்ததைத் தெளிதலும்
2.தெளிந்த பின் நிலை நிற்றல் என்று செயல்படும் செயலை
3.”தியான வழி அனுபவத்தால்” மட்டுமே உணர்ந்து கொண்டிட முடிந்திடும்.

சூரியனின் சுழற்சி வேகத்தால் ஏற்படும் வெப்பத்தினால்… அதை நெருங்க முடியாத வெப்ப நிலை என்று பௌதீகப் பொருள் விளக்கம் கூறும் விஞ்ஞான நிரூபணங்கள் அறுதியிட்டு உறுதியாக விளக்கங்கள் கூறினாலும்… அனுபவம்… மெய் ஞானம் கொண்டு அகப்பொருள் தெளிதல் என்ற நோக்கில் “சூரியன் குளிர்ந்திட்டது என்று இயம்புகின்றது…”

வினாக்கள் தொடுக்கின்றவன் அனுபவத்தால் உணரட்டும்.

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மனோசக்தியால் சிந்தனையை வலுக்கூட்டும் ஆத்ம பலம் பெற்றிடும் எளிய முறை தியானத்தின் வழியில் தான்…!

1.ஆத்ம நிலை பெற்றே பிறப்பிற்கு வந்திடும் “உயிர் சக்தி”
2.மனிதன் என்ற ஜீவ பிம்பத்தில் தான் யார்…? என்கின்ற சிந்தனை தொட்டு
3.தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் விழிப்பு நிலையே ஆத்ம விழிப்பு.

அதுவே ஜீவன் கொண்ட செயலாக… ஈர்ப்பின் செயலின் “உயரிய மின் நுண் காந்த அலைகள்” ஈர்க்கப்பட்டு… ஆத்மா ஜீவன் கொண்ட ஜீவாத்மா நிலை பெறுவதெல்லாம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுத்து விண்ணின் சக்திகள் ஈர்த்திடும் வளர்ப்பில் சூரிய சக்தியாக… அதே தொடரில் மின் நுண்காந்த அலைகள் மேலும் ஈர்ப்பில் சேர்க்கப்பட்டு… பரவெளியில் படர்ந்துள்ள பால்வெளி சூட்சும சக்திகள் அனைத்தையும்…
1.அனைத்திலும் கலந்து செயலுரும் பரமாத்மாவாக
2.”தன்னிலை உயர்த்தும் ஜீவாத்மா…” பரமாத்மா பௌருஷமாகச் செயல் கொள்கிறது.

எண்ணத்தின் உயர்வு என்பது… வலுக் கொண்டு எடுக்கும் நற்சுவாச தியானத்தால் மனத்தின் பக்குவமாக…
1.வான்நோக்கும் உயர்வாக ஆத்மா எங்கெங்கிலும் சஞ்சரித்து
2.தனக்கொத்ததை ஈர்த்து வளர்ச்சியின் வளர்ப்பாக்கும் (மகரிஷிகளின் செயல்).

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

 

பரமாத்மா என்று உரைத்திட்ட உரையின் உட்பொருள் என்ன…?

“நிலைபெற்ற நித்திய நிலை எதுவோ” அதுவே பரவிப் படர்ந்த… எங்கும் நிறைந்த மின் காந்தமாக… ஒளி காந்த சக்தியாக வியாபித்து… நிறம் மணம் குணம் என்ற வகையில் உதிக்கும் கோடான கோடி உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கிச் செயல்படும் சூட்சமத்துள்
2.மூலம் எதுவோ அதுவே பரமாத்ம தத்துவம்.

செயல்படும் செயலைப் பிரம்மம் என்று ஒளியின் ஊடே பரவிப் படரும் “உஷ்ணம்” செயலுரும் தன்மையால் ஆத்ம நிலை பெறும் உயிரணு… தன் எண்ணம் கொண்ட சுழற்சியில் “உயிராத்மாவாகின்றது…”

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள நுண் மின்காந்த சக்தியில் “தன் இச்சையாகப் பெற்றிடும்…” ஈர்ப்பின் நிலை கொண்டு பெற்றிடுவது ஆத்மா.

அதுவே பேரருள் செல்வம் என்றிட்ட ஆத்மாவின் “மூலம்…!”

உயிரணு தன் சுழற்சியின் செயல் நிலையால் எண்ணம் கொண்டிட்ட சுவாசமாக… தான் எவ்வித அமில குணங்களில் உதித்ததுவோ அதற்கொத்த அமிலக் கூறுகள் சுவாசம் கொண்டு ஈர்த்து… எண்ணம் கொண்ட சுழற்சியில் வலுப்பெற்று… அவ்வலுவின் வலுவால் உயரிய ஜீவன் கொண்ட ஜீவாத்மாவாக… தன் எண்ணத்திற்கொப்ப பிறப்பிற்கு வருகின்றது.

பிறப்பின் ஜீவித பரிணாம முதிர்வு கொண்டிட்ட பஞ்சபூத இயற்கை தத்துவ வளம் பெற்றிட்ட நம் சூரியக் குடும்பத்தில்
1.இந்தப் பூவுலகில் ஜீவாத்மாவாகப் பிறப்பிற்கு வரும் தொடரில்தான்
2.ஆத்மா அனுபவ விசேஷ காரிய நிலைகளுக்கு உட்பட்டு
3.அலசிப் பிழிந்த தன் எண்ணத்தின் உயர்வால்
4.பிறப்பிற்கு வந்திட்ட புவியீர்ப்பின் பிடிப்பிலிருந்து விடுபடும் பயன்
5.மேல் நோக்கிய சுவாசத்தால் நன்னிலை பெறுவதே.

“ஆதிசக்தி எனும் பேரருள் செல்வத்தில் கலந்து பிறவாமை பெறுவது…” உதித்திட்ட ஜீவனின் ஆக்கம்.
1.மனிதன் என்ற பிறப்பின் தொடருக்கு வந்திடும் உயிரணு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்டு
2.தன் வளர்ச்சியின் செயலில் தன்னைத்தான் உணர்ந்திடும் பக்குவம் பெற்று
3.தன்னை உணர்ந்திடும் தியானத்தின் மூலம்.. ஒழுக்க நன்நெறியாக வாழ்வியலில் பண்பு நிலை கொண்டு
4.மனம் பக்குவப்படுத்தப்பட… தூண்டப்படும் அறிவின் ஆற்றல் கொண்டு “சுவாச கதியில்” அறிந்திடுவது முதல் படி.

தைப்பூசம்

 

தைப்பூசம் என்றால் முருகனுக்கு நன்னாள். அதாவது நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையெல்லாம் நமக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று உணர்த்தும் நாள் அது.

முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது “காவடிகளை” எடுத்து ஆடுகின்றோம் காவடியில் “மயில் தோகைகளை” வைத்துள்ளார்கள்… முருகனுக்கு உகந்தது அந்த மயில் என்று வைத்திருக்கின்றோம்.

அதனின் உட்பொருள் என்ன…?
1.மயில் தன்னுடைய வாழ்க்கையில் விஷ ஜந்துகளை உணவாக உட்கொண்டாலும் அது மகிழ்ச்சியாகத் தோகை விரித்து ஆடுகின்றது
2.அதே சமயம் அந்த நஞ்சினையும் உள் அடக்குகின்றது.

இதைப் போன்று தான் ஆறாவது அறிவு கொண்ட நாமும் நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றவர்கள்.

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்குகின்றோம் தொக்கி உள்ள நஞ்சினை நீக்கப் புளி காரம் உப்பு இவைகளை வைத்து அடக்குகின்றோம்.

அதாவது
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு முதலில் கருணைக்கிழங்கில் நஞ்சு இருக்கிறது என்றும் அறிந்து கொள்கின்றோம்
2.அதை நீரிலே இட்டு வேக வைத்துக் கொதிகலனாக்குகிறோம்
3.அந்த நீரின் சத்து விஷமான கிழங்குக்குள் ஊடுருவி அதனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் விஷத்தன்மைகள் ஆவியாக மாற்றுகின்றது.
4.புளியை இணைத்தபின் தொக்கி உள்ள விஷத்தன்மையை அடக்குகின்றது.
5.மிளகாய் சீரகம் உப்பு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது சுவை மிக்கதாக உருவாகின்றது.

அதைத்தான் ச ர ஹ ண ப வா… குகா… என்று சரணம் அடையச் செய்யும் சக்தியாக மனித உடலான குகைக்குள் இருக்கின்றது. நாம் சுவையாக உணவை உட்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றுகின்றது.

இது தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா. உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அணைத்து தீமையான நிலைகளை நீக்கிவிட்டு சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக

இந்த உடலான குகைக்குள் நின்று… கந்தா வருவதனைத்தையும்… கடம்பா உருவாக்கி… கார்த்திகேயா…! நாம் அந்தக் கருணைக்கிழங்கு குழம்பைச் சுவையாக வைத்து எப்படி மகிழ்ச்சியாக உட்கொள்கின்றோமோ அதைப்போன்று தீமையான உணர்வுகளை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வுகளை உடலாக மாற்றுகின்றது.

இவ்வாறு நல்ல உடலாக மாற்றிய இந்த உணர்வின் சக்தியைத்தான் கார்த்திகேயா தெரிந்திடும் நிலை.

கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை அறிந்து… அந்த நஞ்சினை நீக்க அதை வேக வைத்து மற்ற நிலைகளை இணைத்துச் சுவையாக்குவது போன்று.. வாழ்க்கையிலும் அந்த நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
1.அது தான் முருகு மாற்றி அமைக்கும் சக்தி
2.முருகா அழகு படுத்தும் மகிழச் செய்யும் நிலையாக “மகிழ்வாகனா…” என்று
3.மயிலை வாகனமாக வைத்து அதன் கீழ் பாம்பினை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

இதை நினைவுபடுத்தும் நாளாகத் தைப்பூசம் அன்று காவடி எடுத்து “மயில் தோகைகளை அதில் வைத்து” ஆனந்தக் கூத்தாடி நாம் மகிழ்கின்றோம். அந்த மயில் எவ்வாறு நஞ்சினை நீக்கியதோ இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும்… எத்தனை பேருடன் நாம் பழகினாலும்
2.சந்தர்ப்ப பேதத்தால் அறியாது வரக்கூடிய அந்த நஞ்சின் தன்மைகளை நீக்க
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ் நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்ப்பித்து
4.அந்த நஞ்சினை அடக்கி மகிழச் செய்யக்கூடிய சக்தியாக நாம் உருவாக்க முடியும்.

அப்படி உருவாக்கும் சக்தியை நினைவுபடுத்தி… எல்லோரும் அதைப் பெறக்கூடிய நன்னாள்தான் தைப்பூசம். அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாள் தைப்பூசம். நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தும் நாள் தைப்பூசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் நினைவை இப்பொழுது கண்ணுக்கே கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் மீண்டும் ஏங்கித் தியானியுங்கள்.

1.உங்கள் நினைவை அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்குச் செலுத்துங்கள்.
2.அவன் உடலில் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வுகளையும்
3.அருள் ஞானத்தைப் பெற்ற அருள் உணர்வுகளையும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷியின் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அகஸ்தியன் வாழ்ந்த காலமான அந்தக் காலத்திற்கு உங்கள் நினைவாற்றலை அழைத்துச் செல்லுங்கள்.

அகஸ்தியன் பெற்ற பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் இட்ட மூச்சலைகள்
1.காடு மலைகளிலும் அந்த வனாந்திரங்களிலும் பரவி உள்ளது
2.நாடு நகரங்களிலும் படர்ந்திருக்கின்றது
3.அந்த உணர்வை நுகரும் போது அதைக் காட்சியாகவும் அறிய முடியும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி எங்கித் தியானியுங்கள்.

.திருமணமானவர்கள்… மனைவி கணவனை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி கணவர் உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

அதே போல் கணவன் மனைவியை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி மனைவி உடல் முழுவதும் படர்ந்து அவர் இரத்த நாளங்களில் கலந்து அதில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது உங்கள் இரு மனமும் ஒன்றென இணைகிறது.
2.இரு உயிரும் ஒன்றென இணையும் சந்தர்ப்பம் உருவாகிறது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்க இது உதவும்.

குழந்தைகள் தங்கள் தாய் தந்தையரை எண்ணி அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் பேரருள் எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அவர்கள் பெறும் பேரருளை நீங்களும் பெறலாம்…!

1.அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் நுகர்ந்தறிந்த
2.பல விதமான மூலிகைகளின் உணர்வுகள் அந்த அருள் உணர்வின் மணங்களை
3.நஞ்சினை வென்றிட்ட அந்த அருள் மணங்களை நீங்களும் நுகரலாம்.
4.உங்கள் ஆன்மாவில் அது அதிகமாக இப்பொழுது பரவும்… அதை உணரலாம்.

அகஸ்தியனுக்குள் விளைந்த நஞ்சினை வென்ற உணர்வை நாமும் கவர இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்

 

இன்றைய காற்று மண்டலத்தில் பரவியிருக்கும் நஞ்சானது ஞானிகள் உணர்வுகளை அடைத்துக் கொண்டு… யாரும் அதை நுகர விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றது.

நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் வரும் போது
1.ஞானிகள் உணர்வை நாம் பெற வேண்டும் என்றால்
2.இதைக் கடந்து உணர்வுகள் வெளிச் செல்வதில்லை.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது ஞானிகள் நிலைகளை அங்கே அடைய முடிவதில்லை
4.அந்த நஞ்சின் உணர்வுக்குள்ளேயே மீண்டும் சிக்கப்பட்டு ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை இழக்கச் செய்து விடுகிறது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் நல்ல உணர்வுகளில் நஞ்சு கலந்த பின் தீமையே வருகின்றது… நல்லதை அழித்திடும் உணர்வுகளாகப் பரவுகின்றது.

உதாரணமாக… நஞ்சின் தன்மை ஒரு குடம் பாலுக்குள் விட்டு விட்டால் அந்தப் பாலைக் குடிப்போர் அனைவரும் நஞ்சின் தன்மையே அடைந்து விடுகின்றனர்.

ஆனால் அந்த ஒரு குடம் பாலில் பல ஆயிரம் குடம் நல்ல பாலை விடப்படும் பொழுது நஞ்சின் தன்மை சிறுத்து அந்தப் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது.

இன்றைய உலகில் வாழும் மக்கள் வேதனை என்ற உணர்வை அடிக்கடி எடுத்து அதை விளைய வைத்துக் கொண்டால் அந்த மூச்சுலைகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. அதனால் இந்தக் காற்று மண்டலமே விஷத்தின் தன்மையாக மாற்றி விடுகின்றது.

அதிலே வாழும் நமக்குள்ளும் அந்த உணர்வின் சத்து நம் ஆன்மாவில் வலுவாகி நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி… உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையும்… சிந்தனயற்றதாக உருவாக்கும் நிலையும்… இங்கே உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உலகில் யார் யாரிடம் எல்லாம் நாம் பழகினோமோ…
1.அவர்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அவர் பட்ட வேதனை உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

நாம் சந்தித்த அனைவருக்கும் இந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது போல் அனைவரும் அதே ஏகோபித்த நிலை வரப்படும் பொழுது
1.அது சிறு புள்ளியாக கோலத்தில் அடக்குவது போன்று அடக்கி
2.உயர்ந்த பாதையின் தன்மை ஒன்றாக இணைத்து அதை உள்ளடக்கி விடுகின்றது.

ஏகோபித்த நிலைகள் கொண்டு நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் ஏகமாகப் படரப்படும் பொழுது தீமைகள் மறையப்படுகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்து
1.அதை எல்லோருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கலந்து
2.நம் எண்ணத்தால் அலைகளாகப் பரப்பச் செய்யப்படும் பொழுது நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியாகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஏகோபித்த நிலையில் எண்ணி அதை மூச்சலைகளாகப் பரப்பப்படும் பொழுது… பல ஆயிரம் குடம் பால்களை நாம் ஊற்றுவது போன்று…
1.மகரிஷிகளின் உணர்வலைகள் காற்றுக்குள் கலந்து அலைகளாகப் படர்ந்து
2.இந்தப் பூ மண்டலமே அது தூய்மைப்படுத்தும் சக்தியாக வலுக்கொண்டதாக மாறுகின்றது.
3.அந்தத் தூய்மையின் வீரிய உணர்வுகள் இந்த நஞ்சுகளை மாற்றுகின்றது.

ஆக… ஒரு குடம் பாலில் நஞ்சினை பட்டாலும் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றப்படும் பொழுது நஞ்சற்ற நிலையாக ஆவது போன்று நாம் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தை நஞ்சற்ற நிலையாக மாற்றி… நல்ல உணர்வுகளை நுகரும் சக்தியாக வருகின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து
1.நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகள் – அது ஒன்றுடன் ஒன்று ஒன்றச் செய்து இணையச் செய்து
2.ஒவ்வொரு உறுப்புகளிலும் அருள் உணர்வுகளை இணையச் செய்து மகிழ்ச்சியூட்டும் நிலையாகப் பெருக்க வேண்டும்.

இது போன்று எல்லா மனிதர்களுடைய உணர்வுகளையும் கலந்து மகிழ்ச்சியூட்டும் நிலையாக நாம் செயல்படுத்தும் போது இந்தப் பூ மண்டலம் சுத்தமாகின்றது… நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளான இந்த மண்டலமும் தெளிவாகின்றது.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற… மகரிஷிகளுடன் நம் நினைவாற்றலை இணைக்கின்றது. அங்கே சீராக நாம் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தடையாக வரும் நிலைகளைப் பிளந்து… ஒருக்கிணைந்து இயக்கி… தெளிந்திடும் அறிவின் தன்மையை நமக்குள் வருகின்றது.

கோலங்களிடப்படும் பொழுது
1.அதற்குள் புள்ளிகள் அமைந்து அது வெளியே வர முடியாது தடைப்படுத்தப்படுவது போன்று
2.நமக்குள் இருக்கும் தீமைகள் அது ஒன்றுக்குள் அடங்கி… தீமை இயக்க முடியாதபடி அடங்கி விடுகின்றது.

தெளிந்த மனதும் பகைமைகள் வளர்ந்திடாது ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் உணர்வினை இது வளர்த்துவிடும்.
1.தனக்குள் ஒளியின் சுடராக வளர்த்திட்ட அருள் ஞானிகள் உணர்வினைக் கவர்ந்து
2.அதை நமக்குள் இணைத்து உருவாக்கும் நந்நாள் தான் “தைப்பூசம்…”

பச்சை வண்ண நாடிகள்

 

“சிந்தனைச் சிற்பி” என்பவன் அறிவின் ஆற்றலை மனோ சக்தியாகக் கண்டு கைகொள்ளும் காரியார்த்த செயல் நிலைகளாகக் கருத்தோன்றி தெளிந்து… மற்ற உயிராத்மாக்கள்
1.குறிப்பாக மனித குலம் மெய் சக்தியாக வளர்ச்சியுற ஏதாகிலும் ஓர் வழியாக மனம் உவந்து ஈர்த்தளிட்ட உபதேசக் காவியங்களை
2.ஓதி உணர்வோர் அந்த நுண்பொருள் தத்துவங்களை நற்கனியின் சாறு போல் ஞான தாகத்தால் அருந்திடுவீர்.

ககன மார்க்கமாகச் சென்றிட “ககனமணி சூட்சுமம் கொண்டு” இச்சரீரம் கொண்டே உலகெங்கிலும் சென்று… இயற்கையின் படைப்பில் இயற்கையுடன் மனம் ஒன்றி உயிராத்ம வளர்ச்சிக்கே அவ்வனுபவங்கள் கொண்டு “என்றும் நிலைபெறும் பேறு பெற்றனரப்பா…”

ஆழ் கடலும் கண்டான்… அடர் வனமும் கண்டான்… பாலையின் தன்மைக்குப் பின் பனி மலைகளின் ஊடே வாழ்ந்தான்…! பூமியின் தன்மை நினைத்து “உள் சென்று” விண்ணின் உயர்வாம் வேத வேதாந்த ஒலி நாதப் பொருளும் கண்டான்.

கண்டு… பெற்ற… அந்த முயற்சி கடினமப்பா…!

இன்றோ…
1.சகல மகரிஷிகளின் அருளாசி எனும் அமுது உண்டு
2.அரண் எனும் இல்வாழ்க்கையில் தவ நெறி நின்று
3.இருந்த இடத்திலிருந்து சக்தியின் வலு கூட்டுகின்றாய்.

கடினம் என்று ஒன்றுமில்லை கடினமாம் மனநிலை என்றால் கடினத்தையும் எளிதாகக் கடந்து பேரருள் செல்வமாக வாழ்ந்திடலாம்.

கண்ணனுக்கு உருவைக் கொடுத்த காவிய ரிஷி கண்டது நீர்க்கரையின் பசும்கொடி மலரையப்பா. மலர் என்றால் எளிதாக எண்ணி விடாதே.

“சீதை வனம்” உண்மை என ஸ்வரூபங்கள் கூறுகின்றன. சத்தியத்தின் சக்திக்கு என்றும் அழகுண்டு மணமுண்டு பண்புண்டு… “நன்னெறி வழிகாட்டும் வழியுமுண்டு…”

ஆதவனை மேகம் மறைத்து விட்டதாக எண்ணிவிடாதே. கரங்கள் கொண்டு கண்களைப் பொத்தி விட்டால் ஜோதிச் சுடர் மறைந்து விடுமா…? ஒளியின் வெள்ளத்திற்கு அணையிடவும் முடிந்திடுமா…?

இயற்கையின் சிருஷ்டிகளில் அனைத்திலும் “ஈஸ்வரனைப் பார்…”

வியாசக பகவான் அன்று கண்ட அற்புதம் “அவ்வனத்தில் இன்றும் உண்டு…” கண்ணனின் உருவைப் பசும்கொடு மலர் மேல் கண்டான். பச்சை வண்ணக் கொடியும் அந்தக் கொடியில் பச்சை வண்ண மலரும் அந்த மலரின் மகரந்தம் கண்ணனின் உருவாக வளர்ச்சியுற்று… ஒரு பாதம் வளைத்துப் புல்லாங்குழல் ஊதும் பாவனையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி… பவளநிற உதடுகளும் கரிய நிற கண்களும் பொன் நிற வேய்குழலும் கொண்டு மலரும் அற்புதத்தை…
1.அண்டத்தில் கண்டதைப் பிண்டத்திலும் கண்டு
2.அந்தக் கண்ணனின் உருவைத் தன்னுள் உணர்ந்திட்ட மாயம்தான் அந்த “மாயக்கண்ணன்…”

வனத்தின் பாங்குக்கு விளக்கமும் வேண்டுமா…? தங்கத்தைச் சுத்தி செய்து அணிகலன்கள் ஆக்குவது போல் எண்ணத்தின் செயலும் உயர்வு கொண்டிடல் வேண்டும்.

பஞ்சபூதங்களைத் தன்னுள் உணர்ந்தது அதுவும் “ஓர் மலர்” காட்டிய விந்தை. செந்நிறம் கலந்த கரிய நிறமும் ஐந்து தலைகளுடன் படமெடுத்தாடி பாம்புடன் இணைந்து ஈரடி நீளமாக வால் பகுதி பூமியை நோக்கி நின்று காற்றினில் ஆடிடும் பொழுது தூரத்தில் காண்பவர் கடின சித்தமும் கலங்குமப்பா.
1.அச்சர்ப்பக் கொடி மலரில் சிவலிங்கமும் உண்டு…
2.சித்தன் கண்டிட்ட அனுபவங்கள் அளவிட முடிந்திடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் தாய் தந்தையரை வளர்த்தவர் யார்..? அவர்களுடைய தாய் தந்தையர். அவர்கள் குலவழியில் தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

நம் குலதெய்வங்களாக… நம்மை உருவாக்கிக் கொடுத்தவர்களும் நம்மைக் காத்தவர்களும் நம் பாட்டன் பாட்டி தான்…!
1.அவர்கள் தன் பேரக் குழந்தைகள் சுட்டித்தனம் செய்வதைப் பார்த்தால் “கீழே விழுந்துவிடாதே…” என்று பதறுவார்கள்.
2.மண்ணில் விளையாண்டு கொண்டிருந்தாலோ.. விளையாடதடா…! என்று
3.தாங்கள் கண்ட அனுபவங்களை எல்லாம் சேர்த்து நல் உணர்வுகளை ஊட்டிக் கொண்டே இருப்பார்கள்.

தாய் தந்தைக்குக்கூட அவ்வளவு பாசம் இருக்காது. பாட்டன் பாட்டிக்குப் பார்த்தால் தன் பேரக் குழந்தைகள் மீது பாசம் அதிகமாக வந்துவிடும்.

குழந்தைகளாகிய நாம் ஏதாவது சேஷ்டை செய்தால் “இப்படிச் செய்கின்றானே… செய்தால் உடம்புக்கு என்னாவது…?” என்று இந்த மாதிரி உணர்வுகளை எடுத்து அதை வளர்த்துக் கொள்கின்றனர்.

நம்மை அறியாமலே பாட்டன் பாட்டிக்கும் நாம் தீமையைத் தான் செய்கின்றோம்.

இதைப் போன்ற நிலை இல்லாது.. இதற்கு முன் செய்யத் தவறி இருந்தாலும் இனியாவது
1.எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற எங்கள் குலதெய்வமான பாட்டன் பாட்டிகள்
2.அந்தச் சப்தரிஷிகளின் அருளும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்.
3.எங்களுக்காகப் பட்ட அந்த வேதனை உணர்வுகள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
4.பேரருள் உணர்வுகள் எங்கள் அன்னை தந்தையரை ஈன்ற பாட்டன் பாட்டிக்குக் கிடைக்க வேண்டும் என்று
5.இப்படி உயர்ந்த சக்திகளை அவர்களுக்கு இணைத்து வாழ்தல் வேண்டும்.
6.இந்த உணர்வுகளை அவர்களுக்குச் செலுத்தினால் உடலை விட்டு அவர்கள் அகன்றாலும் விண் செல்ல ஏதுவாகிறது.

எப்படி…?

அவர்களின் உடல் தான் நாம். ஆக அந்த அருள் ஒளி பெற்ற உணர்வை நமக்குள் வலுவேற்றிக் கொண்ட பின் அந்தச் சூட்சம சரீரமாகும் பொழுது (உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா) நம் உணர்வின் தன்மை அதிலே பதிவாகின்றது.

ஆகவே அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பேரருள் பேரொளியுடன் ஒன்றி என்றும் பிறவியில்லா நிலை என்னும் நிலை அடைய வேண்டும் என்ற
1.இந்த உணர்வுடன் அவர்கள் உயிரான்மாக்கள் அனைத்தையும்
2.வானிலே சப்தரிஷி மண்டலத்தின் பால் உந்தித் தள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டல ஒளியுடன் கலந்த பின் உடல் பெறும் உணர்வுகளைக் கருக்கிவிடுகிறது. வாழ்ந்த அந்த அறிவின் தெளிவை அங்கே நிலைக்கச் செய்கின்றது. நம் பாட்டன் பாட்டி ஒளிச் சரீரம் பெறுகின்றார்கள்.

காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதய நேரத்தில் உடல் பெறும் உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து சென்று விடுகிறது. இங்கே பரமாத்மாவும் தூய்மை அடைகிறது.

திரும்பும் இடத்தில் எல்லாம் விநாயகரையும் மாரியம்மனையும் ஞானிகள் வைத்ததன் நோக்கம் என்ன..?

 

விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் தான் வாழ்ந்திட… இளம் குழந்தைகளைத் திருடிச் செல்கின்றார்கள்.

திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் அறியாத குழந்தைகளை ஏமாற்றிக் கடத்தி அழைத்துச் சென்று… கண்களை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள்… மூளையையும் எடுக்கின்றார்கள்.

முதுமை அடைந்த மனிதனை இளமையாக்குவதற்கு அதை இன்ஜெக்ஷன் ஆக உருவாக்கப்பட்டு பொருளுக்குத் தக்கவாறு விஞ்ஞானிகள் இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

1.பொருள் இருந்தால் போதும்
2.இந்தப் பூமியிலே வாழ்ந்தால் போதும்
3.இன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி தேவை என்ற நிலைகள் கொண்டு
4.ஒவ்வொரு மிருகமும் மற்றொன்றை எப்படி இரக்கமற்று வீழ்த்தித் தன் உணவுக்காகப் புசிப்பது போன்று தான்
5.இன்றைய மனிதனுடைய செயல்கள் வந்து விட்டது.

மிருகங்களோ ஒன்றை ஒன்று அடித்தாலும் அது பரிணாம வளர்ச்சியில் உள்ளது ஆனால் பரிணாம வளர்ச்சியில் வென்று முதிர்ச்சி பெற்றவன். இது போன்ற மிருக நிலைகளுக்கு நம்முடைய செயலாக்கங்கள் சென்றால் மீண்டும் இழி நிலையான கீழ் நிலைக்குத் தான் சென்ல்வோம்.

பௌர்ணமி தேய்ந்து கடைசியில் அது முழுமையாக இருள் சூழ்கின்றது. மீண்டும் சிறுகச் சிறுக ஒளி பெற்று மற்ற கோள்கள் மறைப்புகளிலிருந்து விடுபட்டு பூரண நிலைகள் பெறுகின்றது.

இதைப் போல மனிதன் மற்ற உணர்வின் எண்ணங்களுக்கு அடிமையாகி அதன் வழியில் தான் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இன்று உயிரைக் காக்கக்கூடிய படித்த டாக்டர்களாக இருந்தாலும் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான நுட்பங்கள் கொண்டு வருபவருடைய நோய்களை அறிந்து உறுப்புகளை மாற்றி குணப்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாக இருந்தாலும்
1.தொழில் அடிப்படை என்று வரும் போது பொருள் பணம்) வேண்டும் என்ற நிலையே அதிகமாக வளர்ந்து விட்டது.
2.பண வசதியற்றவன் ஒருவன் சிக்கினால் அவன் நோய் தீர்க்க என்று வரும் போது அவனுக்கு நோயே இல்லை என்றாலும்
3.அவனுக்குத் தெரியாமலே அவனுடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல உறுப்புகளை எடுத்து… கடைசியில் அவன் உயிரை வாங்கி விடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு விஞ்ஞான அறிவுகள் சென்றுவிட்டது.

தான் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தாலும் வாழ வேண்டிய மற்றவர்களின் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். திருடியதற்காக… கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்கின்றான்

சிந்தித்து செயல்பட்டு மனிதனைக் காத்திடும் நிலைகள் கொண்டு வளர்ந்த டாக்டர்கள் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கிறார்கள். அதைப் பின் தொடர்ந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.

1.இந்த மனித உடல் வாழ்க்கை தான் சிறந்தது என்று எண்ணுகின்றனர்
2.ஆனால் உலகை விட்டுச் சென்றால் எங்கே போகின்றோம்…? எந்த நிலையில் இருப்போம் என்பதை அறவே மறந்து விட்டார்கள்.

காரணம்… இந்த வாழ்க்கையில் எதையெல்லாம் யாரையெல்லாம் எப்படி எல்லாம் இம்சிக்கின்றோமோ இம்சைப்பட்டவருடைய கண் கூர்மையான நினைவாற்றல் கொண்டு யாரால் ஏற்பட்டது என்று எண்ணப்படும் போது
1.யார் இத்தகைய திருட்டுத் தொழிலைச் செய்தாலும் அந்த உணர்வலைகள் ஊடுருவி
2.இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் அதிலே இருக்கக்கூடிய காந்தங்கள் நுகரப்பட்டுப் பதிவு செய்து
3.அவன் பட்ட இம்சையின் உணர்வுகள் உடலுக்குள் புகுந்து “அதே இம்சையைக் கொடுக்கும்…” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

மற்றவர்களை இம்சிக்கலாம் அதை ரசிக்கவும் செய்யலாம் ஆனால் இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்த நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றச் செய்து “நீ இதை அனுபவி…” என்ற நிலையில் இதைப் பல காலம் வேதனைப்படும்படியாக வரும்.

இந்த நிலையிலிருந்து மீட்டிக்கொள்ள… ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் வழி நடந்திடல் வேண்டும்.

பக்தி என்ற நிலையில் மூட நம்பிக்கை கொண்டு… அசுரத்தனமான எண்ணம் கொண்டு… தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் என்னை அந்தத் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும்… மற்ற உயிரினங்களைப் பலி கொடுத்தால் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கல்வியில் சிறந்து மனிதனைக் காத்திடும் நிலை வந்தாலும்…
1.தன்னைக் காத்திட “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்று
2.பிறருடைய துன்பத்தை அறியாது துன்பத்தை உருவாக்கும் நிலை தான் இன்று உருவாகிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் ஊர் தோறும் முச்சந்தியிலே விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தெரு மூலையை எடுத்துக் கொண்டாலும் மாரியம்மன் தெய்வத்தை வைத்திருக்கின்றனர்.

நாம் சிந்தித்துப் பார்க்கும் நேரங்களில்
1.தன்னை அறியாது ஏற்படும் தவறுகளையும்
2.நல்லது செய்தாலும் அதிலே இன்னொரு தீய விளைவுகள் எப்படி மாறி (மாரி) வருகின்றது…? அதை எப்படி நீக்க வேண்டும்…? என்பதை உணர்த்துவதற்கு
3.மாரியம்மனையும் விநாயகரையும் திரும்பும் பக்கம்… நினைக்கும் பக்கம்… பார்க்கும் பக்கம் எல்லாம் உருவாக்கிக் கொடுத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆனால் பின் வந்தோர் அனைவரும் என்ன செய்தார்கள்…?

தன்னக் காத்திட பூதகணங்களாக உருவாக்கி… அந்தப் பூதங்கள் தான் நம்மை காக்கும் என்று பலி பீடங்களை அமைத்து உயிர்ப் பலிகளை இடச் செய்து அது தான் நம்மைக் காக்கும் என்று அசுர உணர்வுகளை வளர்த்துக் கொண்டு மனித நேயமற்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் நஞ்சு உருவாகும் உணர்வின் எண்ணங்களை அழித்து நஞ்சினைத் தனக்குள் அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

விண்ணிலே உருப்பெற்ற உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து உடல் பெற்ற பின் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக அடுத்தடுத்து உடல்களை எப்படி மாற்றி வந்தது…?

ஒவ்வொரு நிலையிலும் தான் சுவாசித்த உணர்வுகள் மூஷிகவாகனா… அதாவது எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வின் மணங்களை நுகர்ந்து
1.அதுவே வாகனமாக இந்த உடலை அழைத்துச் சென்று அந்த உடலைக் காத்திடச் செய்தது
2.காத்திட்ட உணர்வுகளை எல்லாம் வினையாகச் சேர்த்து அதனின் அடிப்படையில் ஞானம் வளர்ந்து
3.அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து மனிதனாக வந்தது என்பதை உணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை நீக்கி நல் வினையை நாம் எப்படிச் சேர்க்க வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எப்படி விண் செல்ல வேண்டும்…? என்பதை சாதாரண மனிதனுக்கும் உணர்த்துவதற்கே திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகனை அன்று வைத்தார்கள் ஞானிகள்.

வியாசகனும் கண்ணனும்

 

நீர் சக்தியை முதன்மைப்படுத்திடும் “கணபதி இராசாயணம்” என்பதே அகஸ்திய குரு முனிவரின் தொடர்பு பெற்றிட்ட பொழுது… தாகவிடாய் கொண்டு நீர் தேடி அலைந்த பொழுது
1.அகஸ்தியர் தொடர்பினால் பெற்றுக் கொண்ட அனுபவமே
2.“தருமபுத்திரனுக்கு… தர்ம தேவதை அருளிட்ட உபதேசங்கள்…!”

தாய்மையின் பேறு என்ற மாளப்பெரிய பூமியின் மாண்பு ஒலி காட்டும் வேகம் அறிவின் சமத்துவ பாவனை என்றே… பண்பின் வழி நாடும் ஆத்மாக்கள் உயர்வு கொண்டிட்ட எண்ணத்தால்… மனித ஜீவித வாழ்க்கையிலும் வேண்டுவது ஒன்று உண்டு.

அது… அரிதாகிய மானிடப் பிறவி… உயர் ஞானத்தால் தான் பிறவா நிலை பெறல் வேண்டும் என்பதே.

“காவிய ரிஷி” (வியாசர்) கண்டு தெளிந்த அனுபவ ஞானம். இமயத்தில் மெய் ஒலி கேட்கும் நிசப்த ஏகாந்தத்தில் அறிந்து கொண்டிட்டது என்ன…?
1.அரிதாகிய மானிடப் பிறவி
2.சுயநோக்கின் (சுயநலம்) செயல்வழிப் போக்கால் கடமை கொண்ட மனத்தின் பாங்கு…
3.தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் என்பதே,

விட்டில் பூச்சி எனத் தோன்றி மறையும் பிறப்பாக… அதைக் கௌரவர்களாகச் சுட்டிக்காட்டி… அதன் நோக்கில் மாமகான் பெற்றிட்ட அனுபவ ஞான அனுபவத்தை… இன்றும் இமயத்தின் சாரல் செல்வோர் கண்டு உணரலாம்.

மெய் ஞான விழிப்பிற்கே அது விருந்து (வியாசர் விருந்து).

மாலைப் பொழுதில் தோன்றிடும் ஏராளமான பனி லிங்கங்கள் புலர் காலைப் பொழுதிற்குள் மறைந்துவிடும் இயற்கையை… இயற்கையின் செயலில் உயர் ஞானத்தால் அன்று தெளிந்தான் வியாசக மாமகான்.

கண்ணனையும் கண்டான்…! கிருஷ்ணா என்ற ஜெபத்தைக் காட்டிடும் உருவை… (தான் கண்டதை) விண்டு கூறிடும் அனுபவத்தின் முன் உருவமாகக் காட்டி
1.மனத்தின் வளத்தை நன்னெறிப்படுத்த உயர் நோக்கால் அன்று காட்டியது…
2.இன்றோ உருவ வழிபாட்டின் வியாபாரக் கூடமாக்கியது… அது மனித மனத்தின் விந்தை.

“பச்சை வண்ண நீரமில சுவாச நாபிக் கொடியைப் பிண்டத்தில் கண்ட பொழுது…” ககன மார்க்க வழி செல்லும் வியாசக பகவான்… அண்டத்திலும் ஓர் இடத்தில்… நீர்க் கரையில் இயற்கையாகக் கண்ணன் உருக் கண்டு… அவ்வுருவைக் காட்டித் தத்துவ விளக்கங்கள் அளித்திட்ட செயலை அறிந்து கொண்டிட வேண்டும்.

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

 

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது

“அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டும்

 

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி…!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”

நமக்கு ஜாதகம் இல்லை

 

ஜாதகம் குறிப்போர்… நட்சத்திரத்தின் நிலைகள் வைத்துப் பூமியின் நிலையை அந்த இயக்கச் சக்தியை மனித உயிரணுவிற்குள் இணைக்கப்பட்டு எழுதி வைத்துள்ளார்கள்… “ஞானிகளுக்குப் பின் வந்தோர்…”

ஆனால் மனிதன் என்பவன் முழுமை பெற்றவன் – முழு முதல் கடவுள்… உருவாக்கும் திறன் பெற்றவன். இருந்தாலும் ஜாதகக் கணிப்புகளை வைத்து இன்று எதைச் சிருஷ்டித்துக் கொள்கின்றார்கள்…? என்று பார்ப்போம்.

ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் (அந்த நேரப்படி)
1.இன்ன நேரத்தில் இன்னென்ன நட்சத்திரங்கள் இன்னென்ன கோள்கள் வந்தது
2.ஆகவே இன்னென்ன கோள்கள் இன்னென்னதற்கு ஆகாது என்பார்கள்.

அதற்குண்டான சாஸ்திரங்களை எழுதி வைத்திருப்பார்கள். அதன் அடிப்படையில் வைத்து ஜாதகங்களை எழுதிக் கொடுப்பார்கள். எந்த மதமானாலும் ஜாதகம் எழுதாதவர்கள் யாரும் இல்லை.

விண்வெளியின் ஆற்றலை (வான இயல்) இயக்கத்தின் நிலைகளை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் மதத்துடன் இணைத்து இது கடவுளின் அவதாரம்… கடவுளின் செயல்… என்றும் இன்ன நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும் என்றும் அவரவர்கள் உணர்வுக்கொப்ப அந்தந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி மதங்கள் அமைத்து மதத்திற்குத்தக்க கடவுளை அமைத்துள்ளார்கள்.
1.அதன் அடிப்படை ஆச்சாரப்படி வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு
2.ஜாதகக் குறிப்புகளை வைத்துக் கொண்டிருப்பார்கள்.

குழந்தை பிறந்து விட்டால் அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரை பஞ்சாங்கத்தை அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பார்க்கின்றோம்.

இன்ன நட்சத்திரத்தில் இந்த நிலையில் குழந்தை பிறந்து இருக்கின்றது. இதைக் குறிப்பாக எடுத்துக் கொடுத்தவுடன் அந்தச் சட்டத்தை அவன் வாசிப்பான்.

அவர்கள் எதை எதையெல்லாம் எழுதி வைத்திருக்கின்றார்களோ…
1.இது ஆகாது… இது இப்படி இருக்கின்றது… கஷ்ட காலம் இன்ன நேரத்தில் வரும்…
2.ஏழரை நாட்டான் சனி வருகின்றான் இப்பொழுது பிறந்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு ஆகாது என்றும்.
3.அதனால் வியாபாரம் கெடும்… குழந்தை பிறந்த இந்த நேரத்திற்குக் குடும்பத்தில் வரிசையாக சிக்கல்கள் வரும் நோய்கள் வரும் என்று
4.வரிசையாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

அவர் சொல்வதை எல்லாம் “ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்து… எப்படித் திருப்பி இயக்குகின்றோமோ…” அதைப் போன்று நமக்குள் அவர் சொன்னதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

பின் அந்தக் குழந்தையை நினைக்கும் பொழுதெல்லாம் எந்த வியாபாரத்திற்கு சென்றாலும் “ஏழரை நாட்டுச் சனி இருக்கின்றானே… ஆகையினால் எப்படி வியாபாரம் செய்வது…?” என்ற எண்ணங்களையே வளர்த்துக் கொண்டு வருவோம்.

இதை எல்லாம் யார் சிருஷ்டித்துக் கொடுத்தது…?

தன் மதத்தை வளர்த்துக் கொள்ள… அதன் கீழ் அரசன் வாழ்ந்திட… மக்களை ஒன்று சேர்க்க… அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு… அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து… பிழைகள் ஏற்பட்டால் அந்த தெய்வத்திற்கு யாகத்தைச் செய்து விடு…! என்று ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

எல்லா மதங்களுமே இப்படித்தான்…!

“ஜாதகக் குறைகள்” ஏற்பட்டு விட்டால் மதத்தின் அடிப்படையில் காட்டிய நிலைகள் கொண்டு இதை நீக்கிட
1.ஆண்டவனுக்கு இதைச் செய்… அல்லது மற்றவர்களை வைத்து இதை ஓதச் செய்.
2.ஆண்டவனிடத்தில் இதற்காக வேண்டி யாகத்தைச் செய்து பரிகாரம் செய்… என்று சொல்வார்கள்.

இப்படி அவர்கள் குறித்து வைத்ததை மதத்துடன் இணைக்கப்பட்டு நமக்குள் பதிவு செய்யப்படும் போது “அது கடவுளாக…” நாம் எண்ணியதை உயிர் படைத்து விடுகிறது… நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின் என்ன நடக்கும்…?
1.குடும்பத்தில் குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்
2.சகோதரர்களுக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கலிலே தடை ஏற்படும்.
3.”எதுவும் உருப்படியாகாது…” என்ற நினைவு எண்ணியவுடனே அலைகளாக மாறி விடுகின்றது.

வெளியிலே எங்கே சென்றாலும் இந்த ஜாதகக் குறிப்பை நினைவுபடுத்தி வைத்துக் கொள்வோம். எண்ணியவுடனே இந்த வாசனை வந்துவிடும்.

யாரிடமாவது வியாபாரம் பேசச் சென்றால் “இவர் என்ன சொல்வாரோ…?” இந்த சந்தேக உணர்வுடன் தான் போவோம். எப்படியும் ஜீவித்து வாழ வேண்டுமே என்று அவரிடம் பேசப்படும் பொழுது நாம் எதையாவது ஒன்று சொன்னால் “அவர் காதிலே கேட்ட பின்” இந்த உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கப்படும் பொழுது நாம் எத்தகைய சந்தேக உணர்வை எண்ணி எடுத்தோமோ அந்த உணர்வின் மணம் முன்னாடி நிற்கும்.

இதை நுகர்ந்த பின் அவருக்குள் என்ன நடக்கிறது…?
1.முதலில் நமக்கு எப்படிக் கலக்கமானதோ
2.அங்கேயும் கலக்கத்தை ஏற்படுத்தி அவருடைய உணர்வுக்குள் கலந்த பின் “பார்ப்போம்…!” என்ற நிலைகள் வந்துவிடும்.

இதற்கு முன்னாடி எல்லாம் சரியாகக் கொடுத்திருப்பார் ஆனால் இப்பொழுது ஏதாவது காரணத்தைச் சொல்லி அப்புறம் பார்ப்போம் என்பார். ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.ஜாதகத்தில் சொன்னது சரியாக இருக்கிறது
2.எல்லாம் அப்படியே நடக்கின்றதே என்று
3.நமக்குள் பதிவு செய்ததையே திரும்ப எண்ணி அதையே நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.

காரணம் நாம் எண்ணுவதைத் தான் உயிர் படைக்கின்றது… உணர்வின் செயலை மாற்றுகின்றது.

ஆனால் வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனைப்படுகின்றோம் எதிர்காலத்தில் அடுத்து என்ன செய்வது…? என்று சோர்வடைகின்றோம் இதையெல்லாம் கொடுத்தவுடனே அதையும் உயிர் படைத்து விடுகின்றது.

வியாபாரத்தை மந்தமாக்கி… அழகான உடலுக்குள் நோயாக்கி… சுருதியின் திறன் குறைந்து விடும் வீணை வாசிக்கப்படும் பொழுது அதில் இருக்கக்கூடிய நரம்பு கொஞ்சம் தளர்ந்து இருந்தால் கணீரென்று சப்தம் கொடுத்த நரம்பு டொய்ய்ய்ங்ங்… என்று சுருதி மாறிவிடும்.

இது போன்று நமது சொல்லின் தன்மையும் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் நாதங்கள் சுருதிகள் மாறி… அந்த சுருதிகள் மாறி வெளிப்படும் பொழுது கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி… நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

இப்படித்தான் ஜாதகக் குறிப்புப் பிரகாரம் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதன் முழு முதல் கடவுள் என்கிற போது நாம் எதைச் சிருஷ்டிக்க வேண்டும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… நம்மை அறியாமலே வேதனையும் துன்பத்தையும் வாழ்க்கையில் நமக்கு நாமே தடை விதித்துக் கொண்டு செல்கின்றோம். இதிலே மதம் இனம் குலம் என்று பிரிக்கப்பட்டு இது என் குலத்திற்கு ஆகாது அல்லது அவர்கள் குலத்திற்கு ஆகாது என்போம்

சம்பந்தங்கள் செய்யும் பொழுது இந்தக் குடும்பத்தாருடன் சம்பந்தம் செய்தால் தான் குலத்துக்கு ஆகும். வேறு குடும்பத்தில் கல்யாணம் செய்தால் என்றெல்லாம்
1.எத்தனையோ வகைகளில் பேதங்களை உருவாக்கி
2.பகைமைகளையே வளர்த்துக் கொண்டு அழித்திடும் உணர்வுகளாகத் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

யாரும் தவறாக எண்ண வேண்டாம்…!

கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று நம் உடலுக்குள் எது பதிவாகின்றதோ நாம் எண்ணியது மீண்டும் அதை நினைவுபடுத்தப்படும் பொழுது அது தான் நம்மை இயக்கிக் கொண்டுள்ளது.

மனிதன் முழு முதல் கடவுள்… அவனுக்கு ஜாதகம் இல்லை…!

செம்பான்

 

பரமேஸ்வரர் மாமகரிஷியின் வாசஸ்தலமாக விளங்கும் கோகர்ணக் கடற்கரையை ஒட்டி மீனவர் குப்பம் தென்படுகின்றது. கடல் ஓடும் மீன்பிடி நாவாய்கள் கூடுதலாக வைத்திருப்பவன் எவனோ அவனே அந்த இனத் தலைவனாக அந்த இனத்தையே ஆளும் தகுதியை பெறுவான்.

வாய்ச் சொல்லின் கட்டளைக்கு ஏற்பக் கட்டுப்பட்டு ஒழுகும் வைராக்கிய இன மக்களின் பிறப்பில் வந்தவன்தான் நாவாய்கள் உடைய “செம்பான்…”

அந்த இனத்தின் முக்கிய குல வழக்கம் கடல் ஓடும் மரக்கலங்களை மறித்து கொள்ளை ஆடிப்பது தான். இருந்தாலும்… கொள்ளையடிக்க விருப்பம் காட்டும் அந்த மக்களில் தெய்வீக நம்பிக்கை கொண்டே வாழ்ந்தவன் செம்பான்.

இனத்தாரின் வற்புறுத்தல்களை ஏற்றுக்கொண்டு கொள்ளையிடச் சென்றாலும்… மீன் பிடித்தே வாழ்க்கை நடத்தும் லட்சியமாக ஒதுங்கி வாழ்ந்த செம்பானை ஆட்கொள்ளப்பட்ட சக்தி தான் என்ன…?

கொள்ளை இடச் சென்ற சமயத்தில்… ஆயுதம் கொண்டு போர் புரியும் காலத்தே… உடைமைகளைக் காத்திடல் வேண்டும் என்றே போர் புரிந்திடும் இரு குழுக்களின் தன்மைகளை விடுத்து ஒதுங்கி இருந்தான் செம்பான்.

அப்போது தெறித்து வந்த ஒரு ஆயுதம் செம்பான் உடலில் தைத்து சரீரம் மரண காயப்பட்டது. சிறிய படகொன்றில் தப்பிச் சென்றிட முனைந்த பொழுது சூறாவளி ஏற்பட்ட்து.

அங்குள்ள அனைவருமே கடல் கொந்தளிப்பில் மாய்ந்துவிட அந்தச் சூறாவளியில் சிக்கி உயிருக்காக போராடும் அச்செம்பானின் உடலில் செயல்பட வந்திட்ட ரிஷியை நீ அறிவாயப்பா…!

அலை கடலின் சூறாவளியில் சிக்குண்ட செம்பான்… உடல் துன்பமுற ஜீவன் பிரிந்து விடும் அந்தக் காலகட்டத்தில்… இவன் புசித்திட விழைந்த மீன் இனத்தால் அலை கடலில் கரையில் ஒதுக்கப்பட்டான்.

அப்போது
1.அந்தச் சரீரத்தை “சூட்சும முனிவனால்” இயக்கப்பெறும் பேறு பெற்று எழுந்து
2.உயிரின் ஆதி மூலமாகத் தன்னுள்ளே உபதேசம் பெற்று
3.தான் வேறல்ல தன்னுள் இயங்கும் அந்த மாமகான் வேறல்ல என்கின்ற நிலையின் கருத்தொருமித்த கூட்டாகி…
4.தன்னை இயக்க வந்த சக்தியையே உபாசிக்கும் பரமாத்மாவாக உபதேசம் ஏற்ற செம்பான் (ஜீவாத்மா)
5.தான் ஏற்றுக் கொண்ட பக்குவத்தால் ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று சேரக்கூடிய சந்தர்ப்பமாக அது அமைந்த்து.

கடமையைச் செய்தலின் பிரதிபலன் எதிர் நோக்கா மனத்தின் பக்குவம்… ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலந்திடும் லயத்தின் மெய்யொலி மெய் ஞானமாக… கீதையின் ரசமாக வடித்துத் தந்தவர் யார்…? என்ற உண்மையை… இன்று உம்மை இயக்கிடும் சூட்சமத்தால் தெரிந்து கொள்.

கிருஷ்ணாவதாரக் காலம் நிகழப் பெற்ற சம்பவங்களின் கோர்வையில்… பக்தி ரசம் சொட்டும் லீலைகளாகக் காட்டிடும் கோபியர்கள் என்றிட்ட ஆனந்த லயமாகும் மனத்தின் செயல் காட்டி… அசுர குணத்தன்மைகளை மாய்த்திட்ட உயிர் சக்தி… ஆத்ம பலம் காட்டும் அர்ஜுன உபதேச கீதையில் உணர்த்த வந்திட்டது எது…?

கலியில் உழன்றிடும் மனிதனின் மன நிலை அதி பேராசை உணர்வுகளும்… வினைப் பயன் கூட்டும் விந்தைகளும்… மகாபாரதக் கதை முழுக்க வியாசரின் அனுபவங்கள் பேசுகின்றனவப்பா.

1.சரீரம் கொண்டு வாழும் உலகியல் நிலையில் மனத்தின் கண் எழும் மாபெரும் போராட்டமும்
2.பஞ்சேந்திரியங்கள் அடங்கும் நிலையும்… துர்க்குண சம்காரம் நிகழ்த்தப் பெறும் நிலையில்
3.கலியின் செயல் சூட்சுமம் காட்டிடும் பண்பு நெறி விலக்கிடும் அதர்ம காரியங்கள் நிகழப் பெற்று உயிராத்மா வதைபடும் நிலை உணர்ந்தால்
4.சாதுர்ய அறிவின் ஆற்றலாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் முழுமையை விளக்குவதில்
5.மகாபாரத வியாசர் பெற்றிட்ட அனுபவங்கள் விரிவாக அறிய வேண்டிய ஒன்று.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் எத்தனையோ உணர்வுகளாக உருவாகிக் கொண்டே இருக்கின்றது. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்ததில் தீமை செய்யும் உணர்வுகளும் உண்டு.

அப்படி உருவான அணுக்களுக்கு உணவு தேவை. நாம் நுகரப்படும் பொழுது அந்தந்த எண்ணத்தின் நினைவே வருகின்றது.

இதிலிருந்து நாம் எவ்வாறு மீள வேண்டும்…? என்பதற்காகத்தான் அதிகாலையில் துருவ தியானத்தின் மூலம் விண்ணிலிருந்து வரும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொல்கிறோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி… அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்தநாளங்களில் அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர கண்ணின் நினைவு கொண்டு அங்கே செலுத்தும் பொழுது
2.நம் கண் ஈர்ப்பின் தன்மை இங்கே வருவதை (தீமை செய்யும் உணர்வுகளை) ஈர்ப்பதில்லை.
3.நினைவின் தன்மை விண்ணிலே செல்லும் பொழுது மேல் நோக்கிய சுவாசம் இங்கே உருவாகின்றது.

அதே சமயத்தில் அந்த அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தி அது வலு பெறும் பொழுது நமக்குள் இருக்கும் எத்தனையோ கொடிய உணர்வுகளை அது வலு இழக்கச் செய்கிறது.

கொடிய உணர்வுகள் என்றால்… பத்திரிக்கை வாயிலாகவோ டி.வி மூலமாகவோ பிறர் செய்த கொடிய செயல்களைப் பார்த்துப் படித்திருந்தாலும்.. வேடிக்கையாக அல்லது பொழுது போக்காக என்று எண்ணினாலும்… அது எல்லாம் நமக்குள் பதிவாகிவிடும்.

அப்படிப் பதிவான உணர்வுகள் விளைந்த பின் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசித்திடும் நிலையாக வளர்ந்து விடும்.

1.அதை எல்லாம் மாற்றிடும் சக்தி நாம் பெற வேண்டும்
2.அந்தத் தீமைகள் நமக்குள் விளையாது தடுத்துப் பழக வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெற்றுப் பேரொளியாக மாறும் திறன் நாம் பெறவேண்டும்.

அந்த அருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து நமக்குள் அறியாது வந்து சேரும் தீய வினைகளையும் பகைமைகளையும் அகற்றிட வேண்டும்.

அதை அகற்றிடும் மார்க்கத்தைத்தான்… உடல் அழுக்கைப் போக்குவது போல்
1.தன் வாழ்க்கையில் கவர்ந்து வந்த தன் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க
2.அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளியைப் பெருக்க
3.அந்த அழுக்கினை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே சென்று விடுகிறது.

நமக்குள் தெளிந்த மனம் வருகிறது. இதை மீண்டும் மீண்டும் நாம் நினைவில் கொண்டால் அந்த ஒளியான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது.

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ அசம்பாவிதங்கள் நடக்கின்றது… உடனுக்குடன் நாம் பார்க்கின்றோம். அது எல்லாம் தீய வினைகளாக உருவாகிக் கடும் விளைவுகளாக நமக்குள் வந்து கொண்டிருக்கின்றது.

காற்று மண்டலத்தில் இத்தகைய தீய வித்துக்களே அதிகமாகப் பரவி உள்ளது. அதை நாம் வாழும் இடத்திலிருந்து அகற்ற வேண்டும்.

உதாரணமாக விவசாயத்தில் பயிர்களை வளர்க்கப்படும் பொழுது
1.அந்த இன வித்துக்களை மீண்டும் மீண்டும் ஊன்றவில்லை (மகசூல்) என்றால்
2.ஈர்க்கும் சக்தி இழந்தால் அந்தச் செடியின் சத்துகளே மறைந்துவிடும்
3.ஏனென்றால் சூரியன் அழைத்துச் சென்றுவிடும்.
4.பூமியிலே ஈர்க்கும் வன்மை இல்லை என்றால் அது கரைந்துவிடும்.
5.பின் அந்த இனத்தை உருவாக்கும் அந்த உணர்வின் தன்மையை இழந்துவிடும்.

முந்தைய காலங்களில் நெல் வகைகளில் “தலைவிரித்தான்” என்று ஒரு வகை உண்டு. அதற்குப் பெயர் தொப்பி என்றும் வைப்பார்கள். அந்த ரக அரிசியே காலத்தால் மறைந்தது. இணை சேர்த்து அது மாறியது.

அந்த வித்தே இன்று இல்லை… அதை வளர்த்த உணர்வின் சத்துக்களைச் சூரியன் கவர்ந்து சென்று விட்டது. இப்பொழுது அத்தகைய நெல்லும் இல்லை.

இருந்தாலும் அத்தகைய வித்து ஒன்றை ஊன்றினாலும் அது இழுத்துக் கொண்டு போகிறது. விளையாது… மண்ணுடன் மடிந்தேவிடும்.
1.இத்தகைய உணர்வின் சத்து தாவர இனங்களுக்கும் அதுவே
2.நம் உடலில் உள்ள உணர்வுகளுக்கும் அதுவே.

இது போன்று இந்த இயற்கையின் நிலைகளை நாம் உணர்ந்தறிந்து இந்த வாழ்க்கையில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று உண்மையை உணர்த்துவது தான் விநாயகர் தத்துவம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றோம் (ஞானகுரு).

முன்னோர்களின் ஆன்மாக்களை “மிருக உடலின் ஈர்ப்புக்குள்” நாம் செல்ல விடக்கூடாது

 

சப்தரிஷி மண்டலங்களையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் நாம் தியானித்து இந்த உடலில் வலுப்பெற்ற பின்
1.எந்த மூதாதைகளின் குல உணர்வுகள் நமக்குள் இருக்கின்றதோ
2.உடலை விட்டு பிரிந்து சென்ற அந்தச் சூட்சம சரீரம் ஆனவர்களை உந்தித் தள்ளி
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்ய வேண்டும்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றி உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து எப்படி ஒளியின் சரீரம் ஆனார்களோ… அதே போன்று மூதாதையர்களை அங்கு அனுப்பப்படும் பொழுது அந்த உயிராத்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாறி வாழத் தொடங்கும்.

விண்ணிலே அந்த உயிரான்மாக்களைச் செலுத்தப்படும் பொழுது அவர்கள் உணர்வின் அறிவே நமக்குள் உண்டு. நாம் எண்ணும் போதெல்லாம் அந்த விண்ணின் ஆற்றலை எளிதில் பெற்று… வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்றிக் கொள்ள முடியும்.

முதலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் வலுவாக்கி அதன் துணை கொண்டு மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

நம் முன்னோர்கள் எத்தனையோ துயரப்பட்டுத் தான் நம்மை வளர்த்தார்கள். அவர்களின் உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கப்படும் பொழுது உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றார்கள்… வேகாநிலை…!

உணற்வின் தன்மைகள் சாகாக்கலையாக இயக்கினால் அந்த விஷத்திற்குத்தக்க மீண்டும் உடலை அமைத்துவிடும். ஆகவே இதை மாற்றி விண் செலுத்த வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் மூதாதையர்களைச் செலுத்தவும்… ஞானிகள் உணர்வுகளை வலுவாக்கி… தியானத்தின் வலுவின் துணையால்
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை
2.நம் பூமியின் துருவத்தின் எல்லை ஓரத்தில் இருந்து சுழன்று கொண்டிருக்கும்
3.துருவ நட்சத்திரத்துடன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய ஏதுவாக இருக்கும்.

அதன் வழியில் இணைத்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. அவர்களும் சப்தரிஷிகளாக ஆகிவிடுகின்றார்கள்.

அவர் உயிர் பெற்று உணர்வின் தன்மை உடல் பெற்ற பின் அவர்களும் உயிருடன் ஒன்றிய உணர்வு ஒளியாக்கப்படும் பொழுது இந்த உணர்வினை நாம் எளிதில் பெற்று வாழ்க்கையில் வரும் துன்பங்களை நாம் அகற்ற முடியும்.

அத்தகைய தன்னம்பிக்கையை ஊட்டத்தான் இதிலே பல அனுபவங்களையும்…
1.உயிரான்மாக்களை எப்படி விண் செலுத்துவது…? என்று அனுபவ ரீதியிலே கொண்டு வந்ததனால்
2.உங்களில் இந்த உணர்வைக் கூட்டி… “ஆயிரக்கணக்கோர் இந்த உணர்வுடன் துணை கொள்ளும் பொழுது” எளிதில் விண் செலுத்த முடியும்.

ஆனால் இதற்கு முன் அதைச் செய்யத் தவறிவிட்டோம் இப்பொழுது இங்கே சொல்லும் முறைப்படி முன்னோர்களை விண் செலுத்தலாம்.

1.இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அங்கே ஆவியாகத்தான் இருக்கும்
2.அந்த உடல் மடிந்த பின் அந்த உடலைக் கடந்து வெளியே வந்தால் மிருக உடலைப் பெற்று விடும்
3.மிருக உடல் பெற்றால் அவர்களை நாம் யாரும் மாற்ற முடியாது.

ஒரு உடலுக்குள் ஆவியின் நிலையாக இருக்கும் போது நாம் விண் செலுத்துவதற்காகப் பாய்ச்சும் உணர்வுகள் அவர்கள் சுவாசிக்கும் உணர்வுடன் கலக்கின்றது. (ஏனென்றால் சுவாசத்தில் கலந்து தான் அந்த ஆவியின் இயக்கமும் வருகிறது).

சுவாசித்த உணர்வு அவர்களுக்குள் செல்லப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் ஆவியாக இருக்கும் முன்னோரின் ஆத்மாவிற்குள் இது சேர்க்கப்பட்டு உடல் பெறும் உணர்வை மாற்றி அமைக்கும் அமைப்புகள் வருகின்றது.

1.இப்படி அமைத்த பின் உடலை விட்டு அந்த ஆன்மா வெளியே வந்தால்
2.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தினுடைய வலுவை நாம் சேர்த்துக் கொண்டு
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்தினால்
4.அந்த ஆன்மாக்களை நாம் எளிதில் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய முடியும் (மிருக உடல் பெறுவதை மாற்றி அமைக்க முடியும்).

ஆனால் செய்யத் தவறினால் என்ன ஆகும்…?

அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பட்ட துயரமும் அவருடைய உணர்வின் எண்ணங்களும் நமக்குள் பதிவாகி இருக்கும். அவருடைய நினைவாற்றலும் நமக்கு அடிக்கடி வரும்… அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் எண்ணுவோம்.

1.அப்போது அவர் பட்ட வேதனை நமக்குள் உருவாகும்… பரம்பரை நோயாக உருவாகி விடும்.
2.நமக்குப் பின் வரும் சந்ததிகளுக்கும் இதே உணர்வு வந்துவிடும்.
3.ஆக… குல வழியில் ஒரு பக்கம் கெட்டது என்றால் அந்த கெட்ட உணர்வின் தன்மையே நமக்குள் வளர்த்து விடும்

இது போன்ற நிலையில் இருந்து எல்லாம் விடுபடுவதற்கு நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களை விண் செலுத்த முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தோறும் அதற்காகத்தான் இதை உபதேசிக்கப்பட்டு எல்லோருடைய உணர்வுகளையும் அங்கே குவிக்கச் செய்து உங்களுக்குள் வலு சேர்க்கின்றோம்.

அந்த உணர்வினைக் கொண்டு தியானித்து சப்தரிஷி மண்டல உணர்வுகளை ஏங்கிப் பெற்று “முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தப் பழகிக் கொள்ளுங்கள்…”

கணையாழியும் சூடாமணியும்

 

மனிதன் பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக் கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.

நன்மை பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின் சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக் காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயுபுத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.

வெட்டன மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது) கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன் தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.

விண் ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயுபுத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி… ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம் உடல் கொண்டு பிறந்த நிலை.

1.இராமனாகிய உய(யி)ர் சக்தி அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச் சுடராக மிதக்கும் தன்மை).

இக்கலியின் மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்.

ஸ்ரீராம ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின் பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”

ஆஞ்சநேயர் கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு ண்ஹீ உணர்ந்திடப்பார்.

உணர்வுகள் மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல் என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின் நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து கொண்டிடல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தியானம் என்பது… உட்கார்ந்து தியானிப்பது மட்டும் தியானமல்ல. வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

எப்படி…?

நமக்குள் பெற்ற சக்தியின் தன்மையை நமது நண்பர்களோ மற்றவர்களோ நம்மை அணுகித் தொழில் செய்யும் நிலைகள் வரப்படும் பொழுது “நாங்கள் பெற்ற சக்தி அவர்கள் பெற வேண்டும்…” என்ற எண்ணத்தை எடுங்கள்.

உதாரணமாக… ஒரு கஷ்டமோ நஷ்டமோ அவர்கள் படுகின்றார்களென்றால் அப்பொழுது நம்மை அணுகி வருவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் கற்றுணர்ந்த உணர்வை உபதேசமாகச் சொல்லுங்கள்.
1.அப்பொழுது நீங்கள் அதை தியானிக்கின்றீர்கள்
2.அருள் ஒளியை அவர்களுக்குக் கொடுக்கின்றீர்கள்.

ஏனென்றால் அவருடைய கஷ்டத்தையோ துன்பத்தையோ உங்களுக்குள் பதிவாகாதபடி
1.அருள் ஞானத்தின் சக்தியை அவர்களுக்குக் கொடுத்து
2.நீங்கள் இதைச் செய்யுங்கள்… நலமாக இருப்பீர்கள் என்று
3.இந்த அருளைப் பெறவதற்குண்டான வழியைச் சொல்லுங்கள்.

நாம் நண்பர்களுடன் பழகும்போது அவர்களின் துன்பத்தைப் பற்றிக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பக்குவமாக்கிட வேண்டும். இப்பொழுது இருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் “இப்படியெல்லாம் பேசுகின்றார்கள் நியாயமா…?” என்று நம்மிடம் சொல்ல வருவார்கள்.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
1.சண்டை போடுபவர்களிடம் சென்று… கட்டாயப்படுத்தி அந்த நல்லதைச் சொல்லப் போனால்
2.அதற்கு எதிர்ப்பு உணர்வுகள் தான் வரும்.

இப்படிச் சொல்கின்றார்கள் என்று நண்பர் உங்களிடம் அணுகி வரப்படும் பொழுது இந்தத் தத்துவத்தை அந்த நண்பருக்குச் சொல்லுங்கள்.

1.அவருடைய உணர்வை உங்களுக்குள் வளர்க்க வேண்டாம்.
2.எதிரியை உங்களுக்குள் ஒதுங்கிச் செல்ல வழி விடுங்கள்.
3.எதிர்த்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் நல்ல செயலை எல்லாம் குறைத்துவிடும்…! என்று
4.நண்பரிடம் தெளிவாக இதை எல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.

சண்டை போட்டவர் உடலில் விளைந்த தீமையை உங்கள் உடலில் விளையாதபடி தடுக்க
1.“மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று எண்ணுங்கள்.
2.உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணுங்கள்
3.இந்த எண்ணங்களை நீங்கள் ஒரு பாதுகாப்புக் கவசமாக வளர்த்துக் கொள்ளுங்கள்…! என்று உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

இதை எல்லாம் அவர் கடைப்பிடிக்க நேர்ந்தால் அவர்களது எதிரியின் உணர்வுகள்… “இந்த எதிரியான அணுக்கள்” நண்பர் உடலுக்குள் விளையாதபடி தடுக்க இது உதவும்.

அதே சமயத்தில் நண்பர் மூலமாகக் கேட்டறிந்த அந்த உணர்வுகள் நம்முள்ளும் வளராது தடுக்கப்படுகிறது. நண்பருக்குச் சொல்லும் நிலையில் அந்த அருள் ஞானத்தை நாம் நினைத்துச் சுவாசிக்கும் பொழுது இதுவே நமக்குத் தியானமாகி விடுகின்றது.
1.பிறருக்கு நாம் எடுத்துச் சொல்லும் பொழுது
2.நம் நினைவுகள் வேறு எங்கும் (தீமைகளுக்கு) போவதில்லை.

இதைப் போல வாழ்க்கையில் எப்பொழுது எங்கே எதனின் நிலைகளில் தீமைகள் ஏற்பட்டாலும் அப்பொழுது நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்துவிட்டு இந்தத் தத்துவத்தைச் சொல்லுங்கள்.

1.தீமைகள் எதனால் வருகின்றது..?
2.நாம் எண்ணியதை நம் உயிர் எப்படி உருவாக்குகின்றது…?
3.அதனால் நம் உடலில் தீமைகள் எப்படி உருவாகின்றது…?
4.தீமையை நாம் எந்த வழியில் அடக்க வேண்டும்…? என்று சிந்திக்கும்படி செய்து
5.ஆத்ம சுத்தி செய்யும் உணர்வுகளை அவர்களுக்குக் கொடுத்து
6.சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துச் சொல்ல முற்படுங்கள்.

இதன் மூலம் தீமைகளை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் சுவாசித்து உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டால் அவர்கள் செய்த தீமைகள் நமக்குள் வருவதில்லை.

இவ்வாறு நாம் தடுக்கும் சமயத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வு நமக்குள் அதிகமாக இணைகின்றது. அதை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது உங்கள் உடலிலுள்ள உணர்வுகளிலும் அணுக்களிலும் அது வளரத் தொடங்கி அதற்கு நல்ல ஆகாரமாகக் கிடைக்கின்றது.

ஆனால் சண்டை போடுபவர்களை நாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து சண்டை போடும் அணுக்களுக்கு (அந்த உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களுக்கு) ஆகாரமாகக் கிடைக்கும்.

அடுத்த நிமிடமே… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் எடுக்க வேண்டும். வேடிக்கை பார்த்தாலும்… அவர்களுக்குள் சகோதரத்துவம் வளர வேண்டும்.. எங்கள் பார்வை வைரத்தைப் போல் ஜொலிக்க வேண்டும்.. அவர்கள் வாழ்க்கையை ஜொலிக்கச் செய்யும் ஆற்றல் எங்களுக்குள் வளரவேண்டும்… என்று இப்படி உங்களுக்குள் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்கள் செயல் அனைத்தும் எல்லோரையும் நல்லவராக்கும் செயலாக எங்களுக்குள் உருவாக வேண்டும்.

எங்கள் சொல்லைக் கேட்போர் வாழ்வில் மகிழும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி இதை ஒவ்வொரு நாளும் கூட்டிக் கொள்ளுங்கள்.

1.உங்களை உங்கள் எண்ணமே காக்கும்
2.அதுவே கடவுள் ஆகின்றது.

எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து உருவாக்குகின்றது. உங்கள் உணர்வின் தன்மையை இப்படி உருவாக்கப்படும் பொழுது அதுவே உங்களுக்குள் அதிகமாக உருவாகும் சக்தி பெறுகின்றது.

இப்படி அந்த உருவாக்கும் ஆற்றலை நமக்குள் பெருக்கிக் கொண்டே வந்தால் என்றும் அருள் ஒளியின் சுடராக இந்த வாழ்க்கையை நாம் நிச்சயமாக வாழலாம்.

“அவன் (உயிர்)” நானாகி… நான் அவனாகுதல் வேண்டும்

 

கருணைஸ்வரூபா:-
“கருணைஸ்வரூபா” என்றால் நாம் எதையெல்லாம் எண்ணி எடுக்கின்றோமோ “அந்த உணர்வின் ரூபமாக என்னை மாற்றுபவன் உயிர் குரு…” நாம் எண்ணியதையெல்லாம் ஈசனாக இருந்து உருவாக்குவது உயிர்.

உணர்வின் தன்மை எதை உருவாக்குகின்றோமோ… உருவான இந்த மனித உடலுக்கும் உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் “உயிரே குரு…”

என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா:-
என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்றால்
1.நீ உயிராக இருந்து ஒளியை எப்படி உருவாக்குகின்றாயோ உணர்வின் அறிவாக எப்படித் தெரிவிக்கின்றாயோ அதைப்போல
2.எனது உணர்வுகளும் இந்த உடலில் இருக்கும் அனைத்தும் மாறி
3.உன்னுடன் அரவணைத்து அதுவாகவே என்னை மாற்று…!
4.ஒளியாக மாற்றும் அந்த அருளை எனக்குள் உருவாக்குவாய் என்றுதான் பொருள்.

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா:-
ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா என்றால் “விஷத்தின் தாக்குதலால் தான்” துடிப்பாகி வெப்பமானது நம் உயிர். விஷம் என்ற நிலை ஆனாலும் அதன் நிலை வருகின்றது.

வெப்பத்தின் உணர்வு கொண்டு அனைத்தையும் உருவாக்கும் சக்தி பெற்றாய். அருள் ஒளியை அறிந்திடும் ஆறாவது அறிவாக ஆனாய். உணர்வின் தன்மை தெளிவாக்கும் உணர்வை எனக்குள் உருவாக்கினாய்.
1.இது எல்லாம் அவனே தான் நாம் அல்ல.
2.அவனே தான் நாம்… அவன் உணர்வின் தன்மை அவனோடு இணையப்படும் பொழுது அவனாக நாம் மாறுதல் வேண்டும்
3.அவன் நானாகி நான் அவனாக வேண்டும்.

இப்பொழுது நானாகி அவனாகும் நிலை வேறு…! ஆனால்
1.அவனாகி அவன் நானாகுதல் வேண்டும்.
2.அவன் நானாகி… நான் அவனாகுதல் வேண்டும் என்பதுதான் இதனின் பொருள்.

என் இசையில் நீ இசைப்பாய் என் நினைவில் நீ வருவாய்:-
நமது உயிர் அரங்கநாதனாக இருக்கின்றது. நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அந்தந்த உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. ஆக எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் இசையாக அவன் இயக்குகின்றான்.

1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ இருளை அகற்றுகின்றதோ
2.அந்த உணர்வின் இசை எனக்கு வேண்டும்.

நான் சொல்வதைக் கேட்ட பின் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி வர வேண்டும் தெளிவான மனம் அவன் பெற வேண்டும்… தெளிவாக வாழ்ந்திடும் வாழ்க்கை வர வேண்டும்… எனக்குள் தெளிவான உணர்வுகள் வர வேண்டும். எனக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் அந்தத் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்.

ஒளியாக இருக்கும் அந்த உணர்வின் தன்மை வரும் போது… என் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும்
1.அந்த ஒளியின் சிகரமாக இருளை அகற்றிடும் நிலையாக
2.அருள் வழி வாழ்ந்திடும் நிலையாக எனக்குள் வளர வேண்டும் என்பதுதான் பொருள்.

உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன்:-
உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப்போல என் நினைவுகள் அனைத்தும் ஒளியாகும் உணர்வாக வருவதற்கு என் நினைவுகள் எல்லாவற்றையும் “உன்னிடமே ஒப்படைத்து விடுகின்றேன்…”

நீ எப்படித் தெளிவாக அறிவாக இந்த உலகை அறிவிக்கின்றாயோ அதைப்போல உலக அறிவை அறிந்திடும் அந்த சக்தி எல்லாம் உன்னுடன் ஒன்றி அதன் வழி தெளிந்து வாழ வேண்டும்.

ஓம் ஈஸ்வரா… ஓம் ஈஸ்வரா:-
நாம் எண்ணி ஏங்கியதையெல்லாம் ஓ…ம் ஈஸ்வரா…! என்று பிரணவமாக்கி அதை ஜீவ அணுவாக உயிர் மாற்றிக் கொண்டே உள்ளது. உயிரைப் போலவே அணுவாக உருவாக்குகின்றது.

அதைத்தான் “ஓம் ஈஸ்வரா” என்று அடிக்கடி சொல்வது.

நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய்:-
நான் இல்லை நீ இல்லா இவ்வுலகில் என்றால் இந்த உயிர் இந்த உடலான உலகில் இல்லை என்றால் நான் இருக்க முடியுமா…?

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் விடுபட வேண்டும் என்ற உணர்வின் தன்மையை எடுத்து எடுத்துத் தான் இந்த உடலை உருவாக்கினாய்.

1.நீயே தான் என்னை உருவாக்கினாய்
2.நீ எல்லாவற்றையும் அறிந்திடும் உடலை உருவாக்கினாய்
3.நீ இல்லை என்றால் நான் இல்லை.

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று உணர்வைப் பெற்ற… தீமையிலிருந்து விடுபடும் உடலைப் பெற்ற நாம்… இந்த உயிரான ஈசனுடன் ஒன்றுதல் வேண்டும்.

உயிரிலே பட்ட பின் தான் “தீமை என்று அறிகின்றோம்…” தீமையை அறிந்து கொண்ட பின் அதன் அறிவாக
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடும் வலிமையான உணர்வு எனக்கு முன் வந்து
2.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்தி நான் பெற வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்ட அறிவின் தெளிவு பெற்ற பின்… அந்த அறிவின் தெளிவு கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நான் பெற வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா:-
எண்ணையைக் காய வைத்து நாம் வடையைச் சுடுகின்றோம். பக்குவ நிலை இல்லாதபடி வடையை டப்… என்று போட்டால் கொதிக்கும் எண்ணெய் நம் மீது பட்டுச் சுட்டுவிடும்.

அதே சமயத்தில் பாத்திரத்தில் பொங்கி வரும் பொழுது பக்குவ நிலை கொண்டு துணியை வைத்து அதை இறக்கினால் சுடாது.

நமது வாழ்க்கையில் எந்த நன்மையைச் செய்தாலும் பிறருடைய தீமைகளை உணர்ந்த பின்பு தான் உதவி செய்கின்றோம். இருந்தாலும்
1.அந்தத் தீமை தனக்குள் வராதபடி பரிபக்குவமாக
2.நம்மைக் காத்திடும் உணர்வினை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

சாதாரண வாழ்க்கையில் நாம் எண்ணிய உணர்வின் தன்மைகளை உயிர் உருவாக்கி… அதன் வழி நமக்குள் குருவாகி அதன் வழியே தான் நம்மை வழி நடத்தும்.

அப்பொழுது பரிபக்குவம் எப்படிப் பெறுவது…?

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று தீமை தனக்குள் புகாதபடி தடுத்து
2.அதன் உணர்வின் தன்மை நமக்குள் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.
3.தீமை என்று கண்டாலே அதை நீக்கிடல் வேண்டும்.

கையில் அழுக்குப்பட்டால் அடுத்து கையைக் கழுவி விட்டுத் தான் சாப்பிடுகின்றோம். உடலில் அழுக்குப் பட்டால் குளித்து விடுகின்றோம்.

இதைப் போன்று பிறிதொருவருடைய உணர்வுகள் நம் ஆன்மாவிலே பட்டு அழுக்காகும் பொழுது… அந்த அழுக்கை நீக்க அருள் உணர்வை உடலுக்குள் செலுத்தி இருளை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

சிந்தனையற்ற நிலைகள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உள் புகுத்தி நம்மை அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

அதுதான் பக்குவ நிலை…!

பிறர் கஷ்டப்படுவதைப் பார்த்து அவருக்கு நாம் உதவி செய்கின்றோம். அந்தப் பக்குவம் இல்லை என்றால் அவருடைய கஷ்டம் நமக்குள் வந்துவிடும். அப்போது
1“நான் எல்லோருக்கும் உதவி செய்தேனே எல்லாம் செய்தேனே”
2.ஆனால் எனக்கு இப்படி நடக்கிறதே…! என்று இத்தகைய பாட்டைத் தான் நாம் பாடுகின்றோம்.

அதனால் தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று வேண்டுதல் வேண்டும்.

என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா:-
என் ஆசை என்னுள்ளே வளர்ந்து விடாமல் என்றால் நான் என் பிள்ளைக்கு இதைக் கொடுத்தேன்.. ஆனால் அவன் இந்த மாதிரி செய்கின்றானே…! அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துத் தான் கொடுத்தேன்… இப்படி இருக்கின்றான் என்று இந்த உடலின் ஆசை தான் வருகின்றது.

ஒருவருக்குக் கடன் கொடுத்தேன்… அவர் கடனைத் திரும்ப கொடுக்கவில்லையே…! என்ற இதைப் போன்ற பற்று தான் வருகின்றது. இந்த உடலை வளர்க்கும் ஆசைதான் வருகின்றது.
1.இதைப் போன்ற ஆசை எனக்குள் வளராதபடி
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா.

உயிர் எப்படி ஒளியாக இருந்து இருளை நீக்குகின்றதோ தெளிவாக்குகின்றதோ ஆறாவது அறிவை உருவாக்கியதோ இதைப் போல என்றும் இருள் சூழா நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு “அவனுடனே நாம் ஐக்கியமாகுதல் வேண்டும்…”

இராமாயணத்தில் சீதா… இராமா…! அந்த உணர்ச்சிகள் எண்ணங்களாக இயக்கினாலும் பல துன்பங்கள் அது பட்டாலும்… தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் இணைந்து விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது. யார்…? சீதா…!

உடலென்ற உணர்வின் சத்து தனக்குள் எடுத்துக் கொண்ட பின் அந்த சீதா என்ற சுவை மண்ணைப் பிளந்து மண்ணுடன் மண்ணாகி விடுகிறது.
1.சீதா என்ற உணர்வின் உணர்ச்சிகள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமானது.
2.மனிதனின் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்ற உணர்வு தோன்றி உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் தன்மை தான் “சீதா..”

ஆகவே சுவைக்கொப்ப எண்ணங்களும் உணர்ச்சிகளும் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

இந்த மனித வாழ்க்கையில் உயிருடன் என்றுமே ஒன்றி வாழும் நிலை வர வேண்டும்.
1.இந்த உடல் அனைத்தும் ஒளியின் சரீரமாக என்றும் நிலையான சரீரமாக உன்னுடனே ஒளியின் உணர்வாக நான் இருக்க வேண்டும்
2.இன்னொரு உடல் எனக்கு வேண்டாம் ஈஸ்வரா…!

சந்தர்ப்பவசமும் சாப விமோசனமும்

 

ஒன்றினுள் இயங்குகின்ற இயக்கம்… அந்த இயக்கமாகச் செயலுறும் சக்தி… உயிர்த் தொகைகள் எதுவாயினும்… பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட மனிதனாகினும் சரி… “சந்தர்ப்பவசம் என்பது”
1.உயிரணுக்கள் உதித்திட
2.இணைந்து கொண்டிடும் உருவாக்கச் செயல் நிகழ்வுகள் ஒன்றினுள் மற்றொன்று ஒன்றி…
3.தத்தமது குண இயல்பு நீங்கப் பெற்றுப் புதிதென உருக்கொள்ளும் செயல் கூறுகள்.

வான் தொடர்பின் சூட்சமங்களை… ஞானம் பெற விழையும் ஞானச் செல்வங்கள் தாம் பெற்று உயர்ந்து கொண்டிட… தம்முள் விளங்கிக் கொள்வதே சந்தர்ப்பவசம்.

உலகோதய நடைமுறை வாழ்க்கைச் சம்பவங்களின் “வித்தியாசங்களைக் காட்டவல்லவையப்பா சந்தர்ப்பவசம்…!”

பால்வெளியில் கலந்து இயங்கும் இயக்க கதிகள்… செயல்படுநிலையை படைப்பின் படைப்பாக வளர்ச்சியுறும் ஆக்கமும்… அந்த ஆக்கமே மறைபொருளாகின் இவ்வாழ்க்கை சாகரத்தில் ஜீவன் கொண்ட உயிர் நிலைகள்…
1.சரீர நிலை விடுத்த இயக்கத்தில் ஓடி (இறப்பு)
2.தமக்கொத்த எண்ணத் தொடர்பு கொண்டிட்ட சரீர இயக்க கதி ஜீவனுடன் ஒன்றி விடுவது
3.புவி ஈர்ப்பில் செயலுறும் உயிர்த்தொகைகளின் மறைபொருள் இயக்க சந்தர்ப்பவசம்.

வான் இயக்கம் புவி இயக்கம் இந்த இரண்டு தொடர்களில்… புவி ஈர்ப்பின் இயக்க வான் தொடர்பு… சந்தர்ப்பவசம் ஆக்கும் உயிர் நிலைகாட்டும்.

மாமகரிஷிகள் இந்நிலையை விளக்குவதே “சாப விமோசனம்…”

தாய்மை என்ற அன்பு குணம் வளர்க்கும் மனத்தின் திறன் கொள்ளும் ஜெபம் எதுவோ “அதுவே மந்திரம்…” சகலத்திற்கும் மனத்தின் திறன் விளக்கிக் கொள்ளவே அனுபவ ஞான உதய மெய்ஞான விழிப்பால் வளர்வது.. சுடர்தல் எனும் ஆத்ம பலம் பெற்றிடும் ஒளி நிலையப்பா.

இராம காவியத்தில் நடைமுறை சந்தர்ப்பவச சாபங்கள் என்று
1.இராவணன் பெற்றுக் கொண்டிட்ட சாபம்
2.தசரதன் பெற்றிட்ட சாபம்
3.வாலி பெற்றிட்ட சாபம்
4.கந்தர்வன் பெற்றிட்ட சாபம் என்று
5.பல இடங்கள் சந்தர்ப்பவசம் நிகழ்த்தும் முன் வினைத் தொடர் என்று உணர்த்தினாலும்
6.விமோசனம் என்பதன் பொருள் காண வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் அவரவர்கள் உயிரான ஈசனை வேண்டி… தியானத்தில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோருக்கும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானமிருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்கள் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற்று அவர்கள் உடல்களில் உள்ள சர்வ நோய்களும் சர்வ தோஷங்களும் நீங்கிட வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அவரவர்கள் உடலில் இடுப்பு வலியோ தலை வலியோ கை கால் வலியோ வயிற்று வலியோ இருதய நோயோ கிட்னி கோளாரோ மூல நோயோ இருந்தது என்றால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று தியானியுங்கள்.
1.உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கும்
2.எல்லோரும் இந்த நோய் நீக்கும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணியபின் இந்த உணர்வை ஏங்குங்கள்.
3.நோயை நீக்கும் அரும் பெரும் சக்தி இப்பொழுது பெறுவீர்கள்.
4.உங்கள் உடல் முழுவதுமே “ஒரு கரண்ட்…” பாய்கிற மாதிரி இருக்கும்.

உங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ ஆஸ்த்மாவோ முல நோயோ இருதய நோயோ இதைப் போன்றிருந்தால் அந்த உறுப்புகளில் எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் அந்த அருள் சக்திகள் பாயும்.

1.அந்த உடல் உறுப்புகள் எல்லாம் சீராக இயங்கத் தொடங்கும்
2.உங்கள் உடலில் உள்ள வலிகளும் வேதனையும் குறையும்.
3.அனைத்து நோயிலிருந்தும் விடுபடும் சக்தி பெறுகின்றீர்கள்.
4.கேன்சர் டி.பி. போன்ற கடுமையான நோய்களும் குறையத் தொடங்கும்
5.அது குறைந்து உங்கள் உடலிலிருந்து இறங்கும் தன்மையையும் நீங்கள் உணரலாம்.

எங்கெல்லாம் உங்கள் உடல்களில் குறைபாடுகள் இருக்கின்றதோ அதில் எல்லாம் இப்பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள் படரப்பட்டு உங்கள் உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் உங்களிலே தோன்றும்.

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று பேரொளி என ஆகி மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

குருநாதர் எனக்கு ஊட்டிய ஆசை

 

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று யானைகள் வரும் இடமாக என்னைப் போகச் சொல்கின்றார்.
1.யானையின் மணத்தை நுகர்ந்து உனக்குள் வலுவாக்கினால்
2.யானையின் மணம் உனக்குள் வந்த பின்
3.மணத்தால் நுகர்ந்து அறியக்கூடிய அந்த மிருகங்கள் உன்னை ஒன்றும் செய்யாது.
4.நீ பயம் கொண்டு சென்றால் யானைகள் நிச்சயம் அடிக்கும்
5.ஆகையினால் பயத்தின் உணர்வு இல்லாதபடி அதனின் மணத்தினை நுகர்ந்து செல்ல வேண்டும் என்றார்.

உதாரணமாக யானைப்பாகனாக இருந்தாலும் அவனும் யானையைக் கண்டு பயந்தான் என்றால் அந்த யானை அவனைத் திருப்பி அடிக்கும். உணர்வின் தன்மை யானையின் மணத்தின் வலுவைக் காட்டப்படும் பொழுது தான் அது அடங்கும்.

ஆகவே குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானை அருகே நான் சென்று விட்டேன். யானை தன் காதை விடைத்து விட்டால் அடுத்து மனிதனை அடிக்கத்தான் செய்யும். ஏனென்றால் ஏற்கனவே வேட்டைக்குச் சென்று எனக்குப் பழக்கம் உண்டு.

அப்போது காதை விடைத்தவுடன் எனக்குப் பயம் வருகின்றது குருநாதர் சொன்னபடி யானையின் மணத்தை நுகர்ந்தேன்… இருந்தாலும் அடுத்து… “யானை என்னை அடித்து விடுமே…” என்ற பயத்தைத் தான் நுகருகின்றேன்.

யானையின் உணர்வின் மணம் எனக்குள் வரவேண்டும் அந்த வலுப்பெற வேண்டும் என்று நான் எண்ணவில்லை அது என்னை அடித்து விடும் என்ற மணம் வரப்படும் பொழுது எனக்குள் நடுக்கம் ஆகிறது.

அப்பொழுதுதான் முன் வைத்த காலைப் பின் வைக்காதே என்று குருநாதர் சப்தமிடுகின்றார். நான் கூறிய உணர்வை நினைவில் வை…! என்றார்.

அவன் சொன்னபடி
1.பயம் வரும் பொழுது அந்த யானை உணர்வின் மணத்தை நுகர்வதற்கு அவர் சொன்ன சில முறைகள் உண்டு
2.அதை வைத்து அதனுடைய மணத்தை எடுக்கப்படும் பொழுது யானை என்னை ஒன்றும் செய்யவில்லை.

யானையை விரட்டக்கூடிய பச்சிலையையும் குருநாதர் கையிலே எனக்குக் கொடுத்து இருக்கின்றார். அதை எல்லாம் நான் மறந்து விட்டேன் இந்த உணர்வின் நினைவே எனக்கு வரவில்லை. யானை அடித்து விடும் என்று நினைவு தான் ஓங்கி வந்தது

இதை மாற்றப்படும் பொழுது அவர் சொன்ன உணர்வுகள் நுகரப்பட்டு அந்த மணம் அங்கே ஆகும் பொழுது அது தன்னுடைய வலுவை இழக்கிறது.

1.அதாவது துப்பாக்கியையும் கையில் வைத்துக் கொண்டு
2.புலி வருகிறது புலி வருகிறது என்று நடுங்கிக் கொண்டிருக்கின்ற மாதிரி…
3.அந்த இடத்தில் அவ்வாறு எனக்குக் காட்டுகின்றார்.

சுடும் மார்க்கத்தைக் காட்டியிருந்தாலும்… அதை அடக்கும் தன்மை இருந்தும்… இல்லாதபடி ஆகிவிட்டது. இதை எல்லாம் அனுபவரீதியிலே குருநாதர் கொடுத்தது.

அவர் சொன்ன முறைப்படி நுகர்ந்த பின் யானை என்னை ஒன்றும் செய்யவில்லை ஆனால் அந்த கூட்டத்தோடு வந்து ஒரு குட்டி என்னைத் இடித்துத் தள்ளுகின்றது… தொடுகின்றது… என்னை இழுக்கின்றது.

பெண் யானை என்ன செய்கின்றது…? அப்படியே முறைத்து நிற்கின்றது. என் மனதைக் கொண்டு… உள்ளபூர்வமாக நீ போ சாமி…! என்று இந்த உணர்வலைகளை வெளிப்படுத்தும் போது… அந்தக் குட்டி யானை அதனின் தாய் இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

இயற்கை உண்மை நிலைகளை அறிவதற்குத் தான் என்னை இப்படிக் காடு மேடலாம் குருநாதர் என்னை அலையச் செய்தார்… சாதாரணமாக அல்ல…!

உங்களிடம் இப்போது பேசுகிறேன் என்றால் அந்தக் குரு வழியினை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இருளுக்குள் தான் நான் சிக்க முடியும். உடலின் ஆசை தான் எனக்குள் வளரும்.

இந்த உடலில் ஆசை ஆனால் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது பல மிருகங்கள் இருந்தும் மரணம் அடைய வேண்டி வரும்.

இதற்கு அடுத்து என்னைத் திருப்பதிக்குச் செல்லும்படி சொல்கின்றார். நாரதர் மன்றம் என்று ஒன்று உண்டு அதையும் கடந்து தாண்டி செல்லச் சொல்கின்றார்.

பழங்கள் காய்க்கும் மரங்கள் ஏராளமாக அங்கே உண்டு. வருடம்தோறும் ஒவ்வொரு காலத்திற்கு எத்தனையோ கனிகள் அதிலே உருவாகும். கொய்யா… நவாப்பழம் போன்று எத்தனையோ வரும். அத்தனையும் அங்கே உருவாகின்றது.

துறவறம் பூண்டு தவத்திற்காகச் செல்பவர்களுக்கு அது தான் அங்கே உணவு. பழங்களை உண்டு தான் அங்கே தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடத்திற்கு என்னைப் போகச் சொல்கின்றார்.

கனிகளை பறித்துச் சாப்பிட்டு அங்கே இருக்கலாம் என்றாலும் அந்தக் கனிகளை உட்கொள்ள அதைத் தேடி கரடி போன்ற மிருகங்கள் வருகின்றது… குரங்குகளும் வருகின்றது…!

அவைகள் அதைப் பறித்துச் சாப்பிடுகின்றன. நான் மரத்தில் ஏறித் தான் சாப்பிட வேண்டும் அல்லது கீழே விழுந்ததை எடுத்துச் சாப்பிட வேண்டும்.

ஒரு கரடிக் கூட்டம் அங்கே வருகின்றது.
1.முதலில் பயம் வந்தது..
2.பின் குருநாதர் சொன்ன முறைப்படி அந்த மணத்தை எடுத்தவுடன்… பேசாமல் முர்ர்…முர்ர்…முர்ர்.. என்று உறுமிக் கொண்டே போய்விட்டது.

எல்லாமே அனுபவ ரீதியில் தான் குருநாதர் கொடுக்கின்றார்.

பகலிலே குரங்குகள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு எல்லாவற்றையும் துரத்தி அடித்து விரட்டுகின்றது. ஆனால் அங்கே இன்னொரு குரங்கு குட்டி போடுகின்றது.

அதனுடன் சேர்ந்த குரங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து குழந்தை பிறந்த பிற்பாடு முத்தம் கொடுக்கின்றது. ரவுடிக் குரங்கிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றது.

ஆனால் அது ரவுடித்தனம் செய்தாலும் குழந்தைப் பாசத்தால் “குட்டிக்கு அதுவும் முத்தம் கொடுக்க ஆசைப்படுகின்றது…” அதனுடைய பாசத்தால் இச்.. இச்.. என்று குழந்தையை நாம் கொஞ்சவது போன்று கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

அது நகர நகர… மற்ற குரங்குகள் அனைத்தும் உஷாராகின்றது. ஆனால் தாய் குரங்கு வெவ்வேவ்வே… என்று கத்த ஆரம்பிக்கின்றது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி… குட்டியிடம் சென்று தொட்டு முத்தம் கொடுக்கின்றது.

ஏதாவது ஆனால் எல்லாக் குரங்குகளும் அதைத் தாக்குவதற்கு உஷாராக இருக்கின்றது. ஆனால் குட்டிக்கு ஒன்றும் தெரியாது இதை குருநாதர் பார்க்கும்படி செய்கிறார்.

குரங்கு தன் குட்டியை எவ்வாறு பாதுகாக்கின்றது…? அதனுடைய இனங்கள் எல்லாம் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றது…? என்று காட்டுகின்றார்.

அப்பொழுது குடும்பத்தின் பால் என் நினைவுகள் செல்கின்றது மனைவியை விட்டு விட்டு வந்தோம்.. பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு வந்தோம். ஒரு பிள்ளையை மட்டும் தான் கட்டிக் கொடுத்தது. பாக்கி யாரையும் கட்டிக் கொடுக்கவில்லை. ஒரு கைக்குழந்தையும் இருக்கின்றது.

குரங்கையும் அதன் குட்டியையும் பார்த்தவுடன் என் ஞாபகம் அங்கே செல்கின்றது
1.அந்த ஆசை வரப்படும் போது என்னைப் பாதுக்காக்கும் உணர்வு போய்விடுகின்றது… பயமும் மற்ற நிலைகளும் வருகின்றது.
2.கரடி அடித்து விடுமோ பாம்பு கொத்தி விடுமோ புலி அடித்து விடுமோ இந்த உணர்வெல்லாம் வருகிறது.

ஆனால் அந்த உணர்வை நுகராது இருக்கும் வரை பயமில்லை. என் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்ற ஞாபகம் வந்த பின் பயம் எல்லாம் வருகின்றது. இந்த உணர்ச்சியை ஊட்டி அனுபரீதியாக எனக்கு அங்கே காட்டுகின்றார்.

1.நான் கொடுத்த சக்தியை நீ எப்படிப் பயன்படுத்துகின்றாய்…?
2.நான் எப்படிப் பயன்படுத்தும்படி சொன்னேன்…? என்று வினாக்களை எழுப்பி எனக்கு உண்மைகளை உணர்த்துகின்றனர்.

அது மட்டுமல்ல. இன்னொரு வேலையும் குருநாதர் செய்கின்றார். சிறிது நகர்ந்து ஒரு இடத்தில் உட்கார்ந்தேன். உட்கார்ந்த இடத்திலே அந்தக் காலத்து அரசர்கள் மண்ணிலே புதைத்து வைத்த காசு அங்கே வெளியே வருகிறது.

அதுவாக வந்ததா…! அல்லது குருநாதர் அப்படி வரும்படி வரவழைத்தாரா…? அது எப்படி…? என்று எனக்குத் தெரியாது. பார்த்தால் தங்கக் காசாக இருக்கின்றது. மொச்சைப் பயர் அளவு தடிமனாகவும் வட்டமாகவும் நீளமாகவும் இருக்கின்றது.

அதை எடுத்தவுடன் ஆசையை ஊட்டுகிறார். இது எதற்காகச் சோதிக்கின்றாரோ… தெரியவில்லை…! எனென்றால் குழந்தையை அந்த நேரத்திலே நினைக்கின்றோம் அல்லவா…!

இதை எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வரலாமா என்ற இந்த எண்ணத்தை ஊட்டுகின்றார்.
1.அப்பொழுது அந்த இடத்தில் எனக்குள் மனப்போராட்டமாகின்றது.
2.குருநாதர் சொன்ன வழியில் ஞானத்தின் வழியில் செல்வதா அல்லது காசைப் பார்த்த பின் இந்த ஆசையின் வழி செல்வதா…?
3/குடும்பத்தில் குழந்தைகளைக் காக்க வேண்டுமே…!

குரங்கு தன் குட்டியைப் பாதுகாத்தது. அது போல் இதை எடுத்து என் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வரலாமா…? என்று மனப் போராட்டத்தைக் கொடுக்கின்றார்.

இத்தனையும் நான் ஜெயித்து வர வேண்டி இருக்கின்றது. பின் அதற்கப்புறம் நான் அதை எடுத்து அந்தக் காசை எல்லாம் திருப்பதி உண்டியலில் கொண்டு போய்ப் போட்டேன்.

இது நடந்தது 1972 அல்லது 1973ல் இருக்கும். பத்திரிகைகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஏனென்றால் குருநாதருடைய பரிசோதனை
1.“அவர் கொடுத்த சக்தியைச் சீராக நான் பயன்படுத்துகின்றேனா…? என்று
2.பல வகைகளிலும் மனப் போராட்டங்கள் வருகின்றது.
3.இத்தனையும் வென்று தான் நான் வர வேண்டி இருக்கிறது.

இதைக் கடந்த பின் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு துன்பப்படுகின்றான்…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இப்படி எத்தனையோ சிரமப்பட்டு அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு ஞானத்தின் வழித் தொடராக மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உங்கள் நினைவினை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பால் செலுத்தி அவர் நமக்குக் கொடுத்த அருளும்… ஞானிகள் பெற்ற உண்மையையும் நாம் அறிந்து இந்த வாழ்க்கையைச் சீர்படுத்தவும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவும்… அதன் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் சக்திகளைப் பெறத் தகுதி உடையவர்களாகவும் உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

அதற்காக வேண்டும் உங்கள் உயிரைக் கடவுளாக வணங்கி உடலைக் கோவிலாக எண்ணி அவனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் ஈசனுக்கு நற்பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

1.அதன் வழியில் நல்ல உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் பாதுகாத்தால்
2.உயிரான ஈசனுடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறக்கூடிய தகுதி நீங்கள் பெறுகின்றீர்கள்.

இந்த ஆசையைத்தான் குருநாதர் எனக்கு ஊட்டினார்…!

சிருஷ்டியின் இரகசியம்

 

மூலத்தில் கலந்து இலயிக்கும் ஆனந்தப் பெருநிலை… மூலப் பிரகிருதி சகலமும் சகலமாகக் கலந்து முகிழ்தலின் செயல் நிலை… சூரியனின் சக்தியே வெப்ப ஒளிக் கதிர்களாக… சிவலிங்க அணுக்களாக… சமைத்திடும் நிலைகள் “பரவெளியில் வீசிப் படர்ந்து செயல்படும் சக்திகள்…”

அதை எல்லாம் பூமி தன் ஈர்ப்பின் சமைப்பில் பெற்று… வளர்த்து… வளர்ந்து வரும் பரிணாம வளர்ச்சி என்னும் செயல் நிகழ்வுகளை எல்லாம் “பிண்டத்தைக் கொண்டு” அன்றே மாமகரிஷிகள் உணர்ந்தனர்.

முத்தொழில் உணர்ந்திடும் உயர்வு கொண்டு… சரீர முச்செயல்களால் தங்கள் மெய்ஞானத்தைக் கூட்டி அறிந்து… அதன் வளர்ப்பாக ஞான விழிப்பார்வை கொண்டு அண்டத்தை அறிந்து கொண்டிடும் ஞான திருஷ்டியின் வழியாக… தெய்வீக நிலை பெற்றிடும் மனிதனின் உயர்வைக் கோளங்களின் செயல்பாட்டில் சூரியனை முதன்மையாகக் காட்டி… பூமியின் ஈர்ப்பில் காலைப் பொழுது நண்பகற் பொழுது இராக்காலப் பொழுது என்றே இவ்வண்டத்தில் நடைபெற்றிடும் சூட்சும இரகசியங்களை… நல்லெண்ண நற்சுவாசம் கொண்டே தியானத்தின் வழியாகப் பெற்று உயர்ந்திட நற்போதனைகளாகக் காட்டியவற்றுள்… மாமகரிஷிகள் வழிகாட்டி உயர்ந்ததைப் போல் இக்கலியின் வேகத்திலும் உண்மை உணரும் ஞானச் செல்வங்கள் பிறவா நிலை எனும் அதனினும் சிறப்புற்ற பேரானந்தப் பெரு நிலையை எய்திட முடியுமப்பா.

இராம காவியம் காட்டிய ரிஷி உணர்த்தும் வான் தொடர்பில்…. “மகாலட்சுமி உலவிடும் வேளை…” என்று வாய்மொழிச் சொற்கள் போதிக்கப்பட்டதே… சிருஷ்டியின் முதல் இரகசிய காத்தல் தொழில் எனும் சூரிய சமைப்பு நிலைகள் பூமி பெற்றிடும் காலத்தே… உணர்வலைகள் குணங்களாக ஆத்மா என்றிட்ட பதிவு நிலை பெற்றிடும் தெய்வீக உயர்வைக் கூட்டிக் கொண்டிட… இந்த மனித குலம் பெற்றிடவே “போதனைப்படுத்தப்பட்ட உண்மைகள்…”

1.படைப்பின் படைப்பு செயலுருவே பிரம்மனின் ஹேம அணுக்களாக உலவி ஓடிடும் சிவ சதா மண்டலமும்…
2.சூரியன் சமைப்பில் புலனாக வீசிடும் சிவலிங்க அணுக்களாகக் கலந்து…
3.பூமியின் தொடர்பில் மனிதன் தன் உயர் ஞானத்தால் பெற்றிட…
4.அறிவைத் தூண்டுகின்ற சக்தியாகப் பிரணவ ஆகாச வாணி என்னும் ஒலி சக்தியாக (சரஸ்வதியாக)…
5.தியானத்தில் பெற்றிடும் உண்மைகள் அதி வெப்ப சக்தியால் படைப்பின் ஜீவ ஆதாரம் செயல் கொண்டிடும் சமைப்பு வெப்ப அலைகளால் சமைத்திட்ட சமைப்பு…
6.செயலுறும் மாலை தொடங்கிய இரவின் பொழுதையே சிருஷ்டியின் சமைப்பே ருத்திரனாகவும்
7.அதன் உத்வேக ஊட்டம் அளித்திடும் துர்க்கை என்றே பெயர் நாமமிட்டு அழைத்து…
8.விண்ணின் சக்திகளை இம்மண்ணிலே ஜீவிதம் பெற்றிடும் உயிராத்மாக்கள் பெற்றிடவே…
9.உயிரின் குரு சூரியன் என்றே முதன்மைப்படுத்திட்டு…
10.மாமகான்கள் மெய்யறிவை அறியும் ஞானம் சுடர்ந்திடும் விளக்கைத் தூண்டிடும் தூண்டுகோல் என்றே அளித்த வழி வகைகள்…
11.இந்தக் கலியில் மனிதன் கொண்டிட்ட அறிவின் மெத்தனப் போக்கால்… பாகுபாடு கண்ட செயல்களால்…
12.சிருஷ்டியின் இரகசியங்கள் மாமகான்களால் மறைபொருள்படுத்தப்பட்டன.

“அரசு அன்று கொள்ளும்” என்ற சித்தன் சொல் இம்மனிதனால் “அரசு அன்று கொல்லும்” என்று மாற்றிட்ட சொல் வழக்கு போல் “தெய்வம் நின்று கொள்ளும்? என்பதில்
1.எது அறிவைத் தூண்டுகின்றதோ
2.எது நின்று நிலை பெற்ற ஒளிப்பொருளோ அப்பொருளை வணங்குதல் மாத்திரம் அன்று
3.அந்த மெய்ப்பொருளாகத் தன்னை வளர்த்து… ஒளி எனும் ஜோதித்துவ நிலை பெற்றிட…
4.எண்ணம் கொள்ளல் எது பேரருள் ஒளிச்செல்வமோ… அதனைச் சிந்திக்கத் தலைப்படும் எண்ணத்தின் உயர்வால்
5.நற்சுவாச ஒளி நுண்காந்த அலைகள் ஈர்த்திடும் பக்குவத்தால்
6.சிந்தனையில் கொள்ளும் பொருள் எதுவோ… “அதுவாக இவன் ஆதல்…” என்பது
7.”தெய்வ நிலை பெற்றிடும் மனிதன் நிலை நின்று கொள்ளும்…” பாங்கு அதுவே.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் பூமியில் பரிணாம வளர்ச்சியில் மனிதனானவர்கள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றிவிட்டு ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களின் எண்ணங்களை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாமும் அந்த எல்லையைச் சென்றடையலாம்.

ஆக… தீமைகளை வென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்தால்
1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாமும் வென்று
2.என்றும் ஒளியாக அந்த மகரிஷிகள் வாழ்வது போல் பிறவியில்லா பெரு நிலைகள் அடையலாம்.

இதைத் தான் வேகா நிலை என்பது…!

மாறாக… இந்த வாழ்க்கையில் பந்தம் பாசம் என்ற நிலைகள் வந்து விட்டாலோ… நம்முடைய பார்வையில் பிறர் செய்யும் தீமைகளை அதிகமாக எண்ணி அந்தத் தீமையின் பற்று வளர்ந்து விட்டாலோ… நாம் புவியின் ஈர்ப்புக்கே வந்து விடுகின்றோம்.

அதை எல்லாம் விடுத்துவிட்டு அந்த மெய் ஞானியின் உணர்வின் தன்மை நாம் நினைவு கொண்டால் இந்த மனித உடலிலிருந்தே அந்தச் சொர்க்க பூமியான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ முடியும்.

1.கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றாகி இரு உணர்வுகளும் ஒன்றாகி
2.நாம் நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளி உணர்வுகளாக மாற்றி
3.அழியா ஒளிச் சரீரம் பெற்று… சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்திட முடியும்.

இந்தப் பிரபஞ்சம் முழுமையாக அழிந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்கள் அழிவதில்லை.

இதைப் போல் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் உண்டு. அதில் விளைந்த மனிதர்களும் இதைப் போல் விண் சென்றவர்கள் பேரண்டத்தில் வெளி வந்த பின் அவர்கள் ஐக்கிய உணர்வு கொண்டு இந்த ஒளியின் சரீரமாக வாழ்கின்றார்கள்.

அதன் வழியில் பிறவியில்லா பெரு நிலை பெற்று இந்தப் பேரண்டமே ஒளிமயமாகும். அந்த நிலை அடையப் பல கோடி ஆண்டுகளாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய் உணர்வுகளை நமக்குள் எடுத்து வளர்த்து… நமக்குள் வரும் தீமைகளை அகற்றி அந்த மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற நாம் தியானிப்போம்.
1.நமக்குள் தீமைகள் புகாது தடுப்போம்.
2.நாம் பார்ப்போருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக (மணியாக) மாற்ற குருநாதர் எனக்குக் கொடுத்த பயிற்சி

 

ஒரு சமயம் எதிரி என்ற நிலை உருவாக்கப்படும் பொழுது ஒரு மரத்தைக் காட்டுகின்றார் குருநாதர். ஒரு சொல்லைச் சொல்லும்படி சொன்னவுடன் அந்த மரம் தூக்கி வீசப்பட்டுப் பறந்து போய் விழுகிறது.

யாராவது எதிரிகள் வந்தால்… இப்படி எண்ணினால் அவனைத் தூக்கி எறிந்து விடலாம்… வெற்றி பெறலாம்… நம்மை யாரும் எதிர்க்க முடியாது…! என்ற உணர்வுகள் எனக்கு வருகின்றது.

ஒருவன் சிறிது தவறு செய்தாலும் இதே உணர்வை நீ பாய்ச்சப்படும் போது அந்த வலிமை தான் வரும். “உனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை… அது அடித்துச் சென்றுவிடும்…!” என்றார் குருநாதர்.

காற்று வேகமாக வீசினால் என்ன செய்யும்…?
1.தனியாகக் கெட்டதை மட்டும் தூக்கிச் செல்லுமா…?
2.சேர்த்து நல்லதையும் தான் தூக்கிச் செல்லும்.
3.அந்த நல்லதையும் குப்பையுடன் சேர்த்துக் கலக்கத்தான் செய்யும்.

இதைப் போன்ற நிலைகளைக் காட்டி நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் உன் உடலுக்குள் என்ன செய்யும்…? என்பதை அங்கே தெளிவாக்குகின்றார்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்த பின்… ஆஹா…! என்னை யாரும் எதிர்க்க முடியாது என்ற நினைவு வருகிறது. பல முறை அதைச் சோதித்துப் பார்க்கும்படி சொன்னார். இன்னும் சோதித்துப் பார்…! என்றார்

பல முறை செய்த பின் அந்த வேக உணர்வு தான் தோன்றுகின்றது

1.அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது தீமைகளை உருவாக்கும் உணர்வுதான் உனக்குள் வரும்.
2.அப்போது இந்தத் தீமைகளை யார் அடக்குவது…? யார் நீக்குவது…? என்று நிலைகளை வினா எழுப்புகின்றார்.

உன் ஆறாவது அறிவைக் கொண்டு…
1.தீமையை நீக்கும் உணர்வை எடுத்து அதனுடைய செயலாக்கங்களை மாற்று…!
2.அப்பொழுது தான் அது அடங்கும் என்றார்.

அடுத்து இன்னொரு வேலையும் குருநாதர் செய்தார்.

ஒரு இரும்புக் கரண்டியை வாங்கி வரச் சொன்னார்… ஈயக்கட்டியையும் வாங்கி வரச் சொன்னார். மலைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார். அவருக்குத் தெரிந்த பல பச்சிலைகளையும் குப்பைகளையும் எல்லாம் “இதிலே கொஞ்சம்… அதிலே கொஞ்சம்…” என்று எடுத்து வரச் சொன்னார். அங்கங்கே உள்ள தூசிகளையும் போடச் சொன்னோர்.

ஒட்டு மொத்தமாகக் கரண்டியில் போட்டு அதைத் தீயை வைத்து எரிடா..! என்றார்.
1.எரிந்த உணர்வுகள் அதில் வரும் வெப்பத்துடன் கலக்கின்றது.
2.அது கலந்த பின் என்ன செய்கிறது…? ஈயம் “பள… பள…” என்று மின்னுகிறது.

எப்படிடா இருக்கிறது…? என்று கேட்டார். சாமி…! தக…தக… என்று இருக்கின்றது…! என்று சொன்னேன்.

மீண்டும் எப்படிடா இருக்கின்றது என்றார்…? தக…தக… என்று இருக்கிறது என்று சொன்னேன்.

விட்டார்… ஓங்கிப் “பளார்…” என்று ஒரு அடி கொடுத்தார். எப்படி இருக்கிறது…? சொல்லுடா…! என்றார்.

மீண்டும் தக…தக… என்றேன். என்னடா தக…தக…?

அப்புறம் “தங்கம் போல இருக்கின்றது சாமி” என்று சொன்னேன்.

தூ…! என்று சொல்லி அது எல்லாவற்றையும் மூடுடா என்றார். சூடு எல்லாம் ஆறிய பண்பு பார்த்தால் நல்ல “சொக்கத் தங்கமாக” இருக்கிறது.

இதைக் கொண்டு போய்க் கடையில் விற்கச் சென்றால்.. “நீ பைத்தியக்காரிடம் சுற்றிக் கொண்டிருந்தது எதற்காக…? என்று இப்பொழுது தான் தெரிந்தது…! தங்கம் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டாய். தங்கம் எவ்வளவு வேண்டுமானால் கொண்டு வா… உனக்குக் காசு தருகிறேன்…! என்றார்.

இன்னொருவர் என்ன சொல்கின்றார்…! நீங்கள் செய்து கொடுத்தால் உங்களுக்கு மாட மாளிகை கட்டித் தருகிறேன். நீங்கள் விற்க வேண்டாம்…! என்று இப்படிச் சொல்லிக் கொண்டு என் பின்னாடி சுற்றி திரிந்தவர்கள் ஏராளம்.

விற்றுவிட்டு வந்த பின் குருநாதர் என்ன செய்தார்…? காசை எல்லாருக்கும் ஒவ்வொரு ரூபாயாகக் கொடுத்து விட்டார்.

முதலில் அவர் தங்கம் செய்யச் சொல்லும் போது எல்லாவற்றையும் நான் பார்த்தேன் அல்லவா. அவர் இல்லாத பொழுது நான் தனியாகத் தங்கம் செய்து பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்தேன்

அதே மாதிரித் தங்கம் வந்துவிட்டது.

ஆசை வந்துவிட்டது அல்லவா…! இரண்டாவது இதை விற்று விட்டு வரலாம் என்று கடையிலே சென்று கொடுத்தேன். எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா என்றார்கள்.

குருநாதர் அங்கிருந்து வந்தார். உனக்கு இப்பொழுது எப்படி இந்த ஆசை வருகின்றது…?
1.உன் மனதைத் தங்கமாக்குவதற்கும் அதே சமயத்தில் பாதரசத்தில் மணியைச் செய்யும்படி சொன்னேன்.
2.எல்லா உணர்வுகளையும் சேர்த்து உயிர் எப்படி ஒளியானதோ அது போன்று உணர்வின் தன்மை ஒளியாக்கச் சொன்னேன்
3.தங்கத்தை போன்று மனம் ஆகி மங்காத நிலையாக உருவாகி உணர்வின் தன்மை தெளிவாக்கி
4.அந்தத் தெளிவின் தன்மை உயிர் ஆக்கப்படும் பொழுது இது பாதரசங்களாக மாறும்.

இதன் உணர்வை எல்லாம் சேர்த்து… இங்கே ஈயத்திற்குள் எப்படித் தங்கமாக மாறியதோ… இதைப் போன்று தான் தாவர இனங்களைச் சாரணையாக்கி உணர்வின் தன்மை ஒளி ஆனது. மனித உடலை உருவாக்கக் காரணமானது என்று அறிந்தவன் போகன்.

உணர்வின் தன்மை சிலையாக உருவாக்கி அதிலே சாரணை ஏற்றி மணத்தை வெளிப்படுத்தும் போது…
1.வரும் மக்கள் தீமைகளிலிருந்து விடுபடுவதற்கு அந்த முருகன் சிலையைப் பார்த்து நுகரும் போது
2.நல்ல நிலைகள் உருவாகி… மகிழ்ச்சி என்ற உணர்வு வரும்.
3.அதன் நினைவாக இதை எடுத்து “தன் மனதைத் தெளிவாக்க” இப்படி ஒரு உபாயத்தைச் செய்தான் போகன் அன்று…!

ஆனால் நீ என்ன செய்கின்றாய்…? உன் ஆசை தங்கம் செய்து அதை விற்றுக் காசை சம்பாதிக்கலாம் என்று வந்துவிட்டாய். இந்த ஆசை வந்தால் நீ அடுத்து எதை எடுப்பாய்…? உன் உடலுக்கு உதவும். எல்லோரும் வரவேற்பார்கள் ஏகபோகத்தில் செயல்படுத்துவார்கள். நீ எங்கேடா போகிறாய்…? என்று கேட்டார்.

தங்கம் மங்காது என்று சொன்னீர்கள் தங்கத்தை நோக்கிச் செல்கிறேன் என்றேன்.

1.உன் ஆசை என்ன செய்கின்றது…? தங்கம் செய்து செய்து விற்கத்தான் செல்கிறது…?
2.அப்போது உன் மனது தங்கம் ஆகுமா…? ஆகாது…!
3.தங்கத்தின் மீது ஆசை அதிகமாகும்…!
4.விற்று வளர்ந்துப் பல தவறுகளைச் செய்யும்படிச் செய்யும்
5.கடைசியில் இந்த மனித உடலை அது அழிக்கத்தான் உதவும்.

இரண்டாவது தரம் தங்கம் செய்தவுடன் இதைத்தான் எனக்கு உபதேசித்தார். தங்கம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவும் செய்தார். அதனால் வரும் பின் விளைவுகள் என்ன…? என்பதையும் காட்டினார்.

ஆகையினால் அவர் சொன்ன முறைப்படி நீங்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… அந்த உயர்ந்த மனம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்தில் நான் செயல்படுத்தும் போது… நீங்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி எனக்கு உயர்ந்த சத்தாகிறது.

எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீங்களும் அதே போன்று எண்ணினால் உங்களுக்கும் அது உயர்ந்த சத்தாகும்.
1.நான் ஒருவன் மட்டும் செய்து பெருமையைக் காட்டினால் நல்லது நடக்குமா…?
2.அருளைப் பெருக்கினால் தான் இருள் விலகும்… அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

உன்னுடைய ஆசைகள் அதனதன் வழியில் செல்லப்படும் பொழுது அதனுடைய பின் விளைவுகள் என்ன ஆகின்றது…? கடைசியில் நிராசையாக எப்படி மாறுகிறது…?
1.அந்த நேரங்களில் எல்லாம் உன் மனதை எப்படிப் பண்படுத்த வேண்டும்…? என்று
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படித்தான் அனுபவமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

அந்தணன்

வான்மீகியார் இராமனாக நாம ஜெபம் உபதேசிக்க…
1.அதைத் தன்னுள் ஏற்றுக் கொண்டிட்ட… பூரண முழுமையை உபதேசிக்கத் தகுந்த நிலை பெற்றிடும் விஸ்வாமித்திரன்
2.தனித்துவ தன்மையை உலகினுக்கு உணர்த்தி வழி காட்டவே
3.விஸ்வாமித்திரன் வான் தொடர்பாக பூமியின் ஈர்ப்பில் “அபூர்வ தனித்துவ குணத்தன்மைகள் பெற்றிடவே”
4.நடந்திட்ட யாகத்தை வில்லேந்தும் செம்மல் எண்ணத்தின் பலமே…
5.நற்சுவாச நல்நோக்கு செயல்படும் காலத்தில்
6.எண்ணத்தின் பாங்கே ஆங்கு சக்கர வியூகமாகக் காத்திடும் செயலை உபதேசித்து அருளி
7.நல்வழி செயல் நடத்திடும் மெய் யாகத்தின் தன்மைகள் அன்று மறைபொருள் ஆக்கப்பட்டது.

இன்று உம்மையே (இதைப் படிப்பவர்கள்) அச்செயல் நடத்திடும் பாத்திரப் படைப்பாக்கினேன்.

“அக்னி அஸ்திரம்” என்ற எரி அம்பு பாதுகாவலாக… இராமனாக… வான்மீகியால் விசுவாமித்திரர் பெற்று உயர்ந்திட… யாகம் காக்கப் பெற… அதிலும் “ஓர் சூட்சுமம்” மறைபொருள் காட்டும்.

மூர்க்க குணத்தன்மைகளை வென்று காட்டிய “வான்மீகி” வனவேடு குலத்தினனாக அந்தணர்களும் சத்திரியர்களும் ஒருவரை ஒருவர் அழித்திட முனைந்த செயலை நீக்கிட்டுக் கர்வ சம்ஹார மூர்த்தியாகக் கீர்த்தி பெற்றிட்டதே அவரின் ஆக்கம்.

அந்தணன் என்பவன் யார்…? என்று வழி அமைத்திட்ட வழக்கங்களைப் பழக்கத்தில் கொண்டிட முனைந்தனரா…?

அக்கால நாகரீக மேம்பாட்டிலே அந்தணருக்கு என்று சிறப்பு இடம் உண்டு. அதைத் துஷ்பிரயோக செயல்கள் நடத்திட்டு… பெற்றிட்ட கீர்த்தியை மாய்த்திட்ட நிலைகளும் உண்டு.

1.தனக்கென வாழாதவனும்… பிறருக்காக வாழ்பவனும்… இந்த இரண்டு சொற்களின் கருத்துக்களை கடைப்பிடிப்பவனே அந்தணன்… பிறப்பினாலன்று…!
2.சகல ஜீவர்களுக்கும் தவம் கொண்டு உயர் ஞான சித்தில் திளைத்து
2.சித்தன் நிலையாகப் பெறும் பேறு காந்தப்புல இயற்கையின் சக்தியை சக்தியுறச் செய்திடும் செயலுக்கு
3.இவ்வுலகிற்கு வழிகாட்டுபவன் யாராக இருந்தாலும் அவன் அந்தணனே…!

பிறப்பில் வேடுவன்… செயலில் அவன் அந்தணன்…!
1.விஸ்வாமித்திரர் தான் வெற்றி பெற்றிட்ட சக்தியின் வலிவு கொண்டு அந்தணன் சம்ஹாரச் செயல் நடத்திட முனைந்த போது வான்மீகியால் தடுத்து ஆட்கொண்ட செயலும்…
2.பிறப்பில் அந்தணன்… பரசுராமர் சத்திரிய சம்ஹாரம் செய்திடுவேன் என்று கொண்ட எண்ணத்தின் வஞ்சத்தை மாற்றி அமைத்து
3.சாந்த குணசீலனாக்கிய… வஞ்சம் தவிர்த்த வேடனை வழி நடத்திய அந்தணன்
4.இராம காவியம் இன்று நிலை உலகின் கண் பல இடங்களில் பரப்பிட்ட விஸ்வாமித்திரன் உத்வேக செயலுக்கு வழி நடத்திட்ட மாமகான் – வான்மீகி.

மனிதன் தெய்வநிலை பெற்றிடும் சூட்சம இரகசியங்கள் நாற்பூத புரவிகள் ஐம்பூத சக்தியாகச் செயலுறும்… இயற்கையின் தத்துவ சாரங்களை அனைவரும் பெற்றிடவே… காட்டிட்ட அனுபவ ஞான வழிகள் பல உண்டு.

பாடத்தின் கடினம்… விண்டு உரைப்பதில் தாமதம் ஆகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒரு சமயம் குருநாதர் காட்டிற்குள் என்னை (ஞானகுரு) அழைத்துச் சென்றார். பனை மரம் ஒன்று இருந்தது. அந்தப் பனை மரத்தில் ஒரு கோடு போடச் சொன்னார்…

போட்டேன்…!

இராத்திரி இந்தப் பனை மரத்தில் ஒரு இராட்சசன் வந்தான்.. ஆகையினால் இந்த வழியாகப் போகும் பொழுது பார்த்துப் போங்கள்…! என்று யாரிடமாவது சொல்லு…! என்றார்.

அதே மாதிரிச் சொன்னேன்.

இந்த எண்ணத்தைப் பதிவு செய்த பின் அதே எண்ணத்திலேயே அங்கே போகின்றார்கள்.
1.வெண்மையாகக் கோடு போட்டத்தைப் பார்த்ததும்
2.இவன் எண்ணத்திற்கு அது தெரியப்படும் பொழுது பளீர்… பளீர்…! என்று மின்ன ஆரம்பித்தது.
3.இராட்சசன் வருகின்றான்…! என்ற உணர்வு அவனுக்கு வருகிறது.

ஏனென்றால் இதே எண்ணத்தில் இறந்த ஆன்மாக்கள் இவனுக்குள் குவிக்கப்படுகின்றது. வந்ததும்… அது இவனுக்குள் வருவதாகவே அந்த நினைவு வருகின்றது.

அப்படி வந்ததும் இவனின் இதயங்கள் வேகமாகத் துடிக்கின்றது. உணர்ச்சி வேகங்கள் இரத்தநாளங்களில் ஆனவுடனே அது வெடித்து விடுகின்றது… அல்லது இதயத்தில் வெடித்து விடுகின்றது. இரத்தம் இரத்தமாகக் கக்குகின்றான்.

இப்படி அச்சுறுத்தும் நிலை வரும் பொழுது “பேயடித்து விட்டது..!” என்று சொல்கிறார்கள். அவன் இப்படிக் கிடக்கின்றான் என்றவுடன் அடுத்தாற்போல் அந்தப் பக்கம் யார் போனாலும் இதே பயம் வருகிறது.

1.ஏனென்றால் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள்
2.அதே நினைவு கொண்டு அதையே நமக்குள் உருவாக்குகின்றது.

இப்படித்தான் ஆலயங்களில் இந்தத் தெய்வம் அதைச் செய்யும் இதைச் செய்யும் என்றும் யாகங்கள் நடத்தி… அந்த உணர்வை நமக்குள் உருவாக்கி வைத்துள்ளார்கள். அந்த உணர்வின் நினைவு வரப்படும்போது அது தான் பக்தி என்று நாமும் எண்ணுகிறோம்.

சில தெய்வங்களுக்கு ஆட்டையும் கோழியையும் வெட்டி அதில் நைவைத்தியம் செய்து படைக்கின்றார்கள். இப்படிச் செய்தால் அந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்…! என்று நினைக்கின்றோம்.

இது போன்ற தெய்வங்களுக்கு என்று விசேஷமான வாத்திய இசைகள் உண்டு. உறுமி மேளம் அது போன்று மற்றதை வாசிப்பார்கள். அதையும் நமக்குள் பதிவு செய்து வைத்திருப்போம்.

பூஜைக்கு என்று எதை வெட்டி அங்கே படைத்துக் கொடுத்து விட்டு நாம் அதைச் சாப்பிடுகின்றோமோ அதன் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் வளர்ந்தபின் நாம் இறந்தபின் என்ன நடக்கின்றது..?

அடுத்தாற்படி பூஜைக்கு வருபவர்கள்..
1.இந்த உறுமிக் கொட்டை மீண்டும் கொட்டியவுடனே… அதைக் கேட்டு அந்த உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.அவர்கள் உடலில் போய் இந்த ஆன்மாக்கள் சேர்ந்துவிடும்.

சேர்ந்த பின்… ஏன்டா எனக்கு இன்னும் ஆடு கொடுக்கவில்லை…? உன் குடும்பத்தை நான் பார்க்கின்றேன் பார்…! என்று அருளாடும்.

இது எல்லாம் மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் தான்…!

ஏனென்றால்.. அதே உணர்வு கொண்டு இங்கே எண்ணி ஏங்கி வரப்படும்போது இந்த உடலுக்குள் அது புகுந்து விடுகிறது. அந்த அசுர குணங்கள் கொண்டே அது கேட்கும்.

ஆனால் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்றால்…
1.அந்த மாடனுக்கு அதைச் செய்யவில்லை
2.அதனால் இந்த நிலை உருவானது என்று…!

இவை எல்லாம் அரசர் காலங்களில் “ரிக்கியர்கள்…” என்று சொல்வார்கள். மாட்டுக்கு ஒரு உணர்வும் பன்றி போன்ற மற்ற மிருகங்களுக்கு என்று அதனின் அசுர குணங்களும் உண்டு. அதைப் பலியிடுவார்கள்.

இதைப் போன்ற மிருக உணர்வுகளைச் சொல்லி (மந்திர ஒலி கொண்டு) அந்த உணர்வைத் தனக்குள் உருவாக்கப்பட்டு அந்த உணர்வின் மந்திரத்தை இதே மனிதனுக்குள் எடுக்கப்பட்டு இதே மாமிசத்தை அவனுக்குள் உணவாக உட்கொள்ளச் செய்வார்கள்.

இந்த உணர்வின் தன்மை பதிவானபின் அந்த அசுர குணங்கள் கொண்டு மனிதனே அசுரனாக மாறுகின்றான் இதனுடைய நிலைகளில்.

அக்கால அரசர்கள் தனக்குப் பாதுகாப்புக்காக இப்படி மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய அருள் உண்மையின் உணர்வுகளை இவர்களுக்குச் சாதகமாக்கித் தீமையின் விளைவாக உருவாக்கிக் கொண்டார்கள்.

அதர்வண என்று நல்ல குணங்களை அடக்கி எதிரி நாட்டு அரசனையோ அவன் நாட்டு மக்களையோ அடிமைப்படுத்தும் நிலைகள் கொண்டு வந்தார்கள்.

இதே அசுர உணர்வுதான் மக்கள் மத்தியிலும் சுழன்று கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இன்றைய விஞ்ஞான உலகில் இவையெல்லாம் கடந்து போய்விட்டது. விஞ்ஞான அறிவு ஓங்கிவிட்டது. கதிரியக்கச் சக்திகள் அதிகமாகப் பரவியிருக்கின்றது.

சிந்தனை குறையும் நிலைகள் வந்துவிட்டது. மனிதனுக்குள் இருக்கும் நல்ல சிந்தனையே இழந்து மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால் இதையெல்லாம் வென்று பழகியவன் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
1.அதை நுகர்ந்து உடலுக்குள் வலுவாக்கினால் எதிர்பாராது வரும் எத்தகையை தீமையிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
2.ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம்
3.அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

உயிரை யாரும் ஏமாற்ற முடியாது…! அவனிடமிருந்து தப்பவும் முடியாது…!

 

கம்ப்யூட்டரில் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளை வைத்து அதில் எதன் அதிர்வோ அதை வைத்து மாற்றி அமைக்கும் பல வேலைகளை விஞ்ஞானி கொண்டு வருகின்றான்.

பாஷைகளை எழுதினால்… அல்லது பேசினால்…
1.எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலையில் அதனுடைய மோதல்களுக்கு ஒப்ப உணர்வின் அறிவாக எழுத்தின் ரூபத்தைக் கொடுத்து
2.ஒரே நிலையில் ஒரே அழுத்தத்தின் தன்மை கொண்டு தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் என்று
3.உலகில் உள்ள எத்தனையோ நூறு பாஷைகளில் அதை மொழி பெயர்த்து
4.அதனுடைய உருவத்தின் அமைப்பைக் கொடுக்கின்றான் கம்ப்யூட்டரின் துணை கொண்டு.

“அதிர்வின்” நிலைகள் கொண்டு தான் அதைஸ் செயல்படுத்துகின்றான். இதையெல்லாம் நாம் இன்று கண்கூடாகப் பார்க்கின்றோம் அல்லவா.

எதன் விஷத்தின் தன்மை அதிலே கலக்கின்றானோ அந்த உணர்வுக்கொப்ப அதில் இணைத்தால் இன்ன ரூபமாகும் என்று ஒரு நொடிக்குள் கொண்டு வருகின்றான்,

ஆனால் நாம் அந்த பாஷைகளை எல்லாம் கற்றுணர்ந்து மொழி பெயர்ப்பை எல்லாம் தெரிந்து அதை எழுத்து வடிவிற்கு நாம் கொண்டு வருவதற்கு முன்பு… அதிவேகமாக மொழி பெயர்க்கக் கூடிய சக்தி பெற்றிருக்கின்றான் விஞ்ஞானி.

இதே போன்றுதான்
1.அருள் உணர்வின் தன்மை பெற்று ஒரு நொடிக்குள் எதையும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெற வேண்டும்.
2.அத்தகைய திறன் பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவர்கள்… சப்தரிஷி மண்டலங்களாக வாழுகின்றனர்.

மனிதனானவன்… தன் இனமாக வாழப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உணர்வைப் பெற்று தன் முன்னோர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

தாய் தந்தையர்… மூதாதையர்கள்… அவர்களின் குல வழியில் வந்தவர்கள் தான் நாம் அனைவருமே. அவர்கள் சப்தரிஷி மண்டலம் செல்லவில்லை என்றாலும்
1.அவர்கள் பெறத் தவறிய சக்திகளை நாம் பெற்று
2.அந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும்… அல்லது செல்லவில்லை என்றாலும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் உடலுக்குள் செலுத்தி… அந்த வலுவின் தன்மை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற குலதெய்வங்களின் உயிரான்மக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ளி… பிறவி இல்லாத நிலையை அடைய வைக்க முடியும்.

நம் மூதாதையர்கள் தங்களைக் காக்க எத்தனையோ வேதனைகள் பட்டனர். பரிவு கொண்டு நம்மையும் காத்தார்கள். நம்மை வளர்ப்பதற்காக எத்தனையோ வேதனைகளை அவர்கள் நுகர்ந்தார்கள்.

அவருடைய கிளை வழி விழுதுகள் நாம் அவர்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்க வேண்டும்.

ஆனால் இன்று பிள்ளை இல்லை என்றால் “எங்களுக்குக் கொள்ளி வைப்பதற்கு ஆள் இல்லை… அதனால் தத்துப் பிள்ளை எடுக்கின்றோம்…” என்று செயல்படுத்துகின்றார்கள். ஏனென்றால் “இவன்தான் கொள்ளி வைத்து என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான்…” என்று எண்ணுவார்கள்.

முதலில் எனக்குப் பிள்ளை இல்லையே என்றிருப்பார்கள். ஆனால் வளர்த்துக் கொண்டு வரப்படும் போது… அந்தப் பிள்ளை சுகமாக வளர்ந்த பின் “அதைக் கெஞ்ச வேண்டும்…”

1.பிள்ளையை எண்ணி வேதனை உணர்வுகளை எடுத்து வளர வளர அவன் மீது இருக்கும் பற்றே அற்றுவிடும்
2.கடைசியில் நான் வளர்த்து ஆளாக்கினேன் எல்லாம் செய்தேனே என்று வேதனைப்பட்டு இறந்த பின்
3.அங்கே கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளை என்பதற்கு மாறாக அவன் உடலில் இந்த ஆன்மா புகுந்து அவன் நிலையே தான் ஆகும்.
4.மீண்டும் பிறவிக்குத் தான் வர முடியும்

நன்றாக யோசனை செய்து பாருங்கள். இதிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டுமாக இல்லையா…?

காற்று மண்டலமே இன்று நச்சுத்தன்மையாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் சிந்தனை இழந்த நிலையில் உள்ளான். தீவிரவாதம் என்றும் கொலை கொள்ளை என்றும் மனிதனை மனிதனே இரக்கமற்று அழித்திடும் நிலைதான் இருக்கின்றதே தவிர மனிதனைக் காக்கும் நிலை இல்லை.

1.மனிதர்களைக் காத்திடும் நல்ல உணர்வுகளைப் பெறுவதற்கு ஆலயங்களை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்திருந்தாலும்…
2.அதிலேயும் ஏமாற்றித் தன் பிழைப்புக்காக நல் வழி பெறக்கூடிய தகுதியை இழக்கச் செய்யும் நிலை தான் இன்று உள்ளது.

அல்லது ஆண்டவன் பெயரைச் சொல்லி நரபலி கொடுத்து அதிலே சக்தி பெற்று விடுவோம் என்று இப்படி மந்திர தந்திரங்களில் வருகின்றார்கள். ஏமாற்றித் தந்திரமாக அழைத்துச் சென்று “நரபலி கொடுத்தால்” மெச்சி தனக்கு அந்தத் தெய்வம் கொடுக்கும் என்று…!
1.ஆனால் அப்படி நரபலி கொடுத்தாலும் அந்த உடலை விட்டு பிரிந்த ஆவி
2.கொன்றவன் உடலுக்குள்ளே வரும் என்பதை மறந்து விட்டான்.

அதாவது… எவன் கொலை செய்கின்றானோ அவன் உடலுக்குள்ளே தான் அந்த ஆன்மா செல்லும். பின் அதே நிலைகளில் “அவனையும் ஆட்டிப் படைத்து வீழ்த்தும்…” என்பதை மறந்து விட்டான்.

ஏனென்றால் எந்தெந்த வழியில் இன்று உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.ஊரை ஏமாற்றலாம் உலகை ஏமாற்றலாம்
2.இந்த உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது… யாரும் இதை மறந்து விடக்கூடாது.
3.நான் அதைச் செய்வேன் யானையச் செய்வேன் பூனையைச் செய்வேன் என்று ஏமாற்றலாம்
4.ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு எதுவோ… அதன் வழி நமக்குள் அணுவாக உருவாக்கி
5.உடலில் அதைச் சேர்த்து வளர்த்துக் கொண்டே இருப்பான் உயிர்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றயோ நீ அதுவாகின்றாய்…! பிறரைக் கொலை செய்ய வேண்டும் என்றால் அந்தக் கொலை செய்யும் உணர்வு வளர்ந்து மனிதனாக உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது கொன்று விடும்.

1.கொலை செய்து அவனைக் கொன்று போட்டேன் என்று எண்ணலாம்
2.ஆனால் அவன் வேறு எங்கும் போக மாட்டான்
3.கொலை செய்தவன் உடலுக்குள் வந்துவிடுவான்.

நுகர்ந்த கொன்றிடும் உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து பிரம்மம் ஆகின்றது. அதன் உணர்வு கொண்டு துரித நிலையில் கடைசி நேரத்தில் இந்த உடலிலே மாற்றங்கள் ஏற்படும். இதிலிருந்து யாரும் தப்பவே முடியாது…!

1.நானும் இப்பொழுது உபதேசிக்கின்றேன்
2.உபதேசித்து விட்டுத் தவறான வழியில் சென்றால் நானும் என் உயிரிடமிருந்து இருந்து தப்ப முடியாது.

ஆகவே… குரு இட்ட கட்டளைப்படி உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்கின்றேன் உங்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

நான் கொடுத்த சக்தியை அதற்குத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் இப்படித்தான் எனக்கு அதை உணர்த்தினார்.

விஸ்வாமித்திரனும் வான்மீகியும்

“வான் நோக்கிய நோக்கில்” உயர் ஞான வேதம் உள் நிறைந்து நிலைக்களன் ஆக்கிட… உயர் காந்த ஒளி அணுக்கள் நூறிள் ஒருவருக்குப் பாய்ந்திடும் செயல்… உயர்வெண்ண நினைவோட்ட சிந்தனையின் வசத்தால் ஆங்கு கிட்டியது “மெய்ஞான மகிழ்விப்பு…”

பறவையை வீழ்த்திய பின்…
1.“வான்மீகியின் கண்டத்தில் இருந்து எழுந்திட்ட ஒலி நாதம்” திரும்பத் திரும்பக் கீதமாக மனதின் கண் எழ
2.மௌடீக மாயை அகல… மோகத்தை வேரறுக்கும் “மனத்தின் திண்மை” செயலுற்றது.

மெய்ப்பொருளைத் தேடி பரத கண்டம் முழுக்க யாத்திரையாக உலவிப் பற்பல அனுபவ நிலைகளைப் பெற்று…
1.அகத்தின் பொருள் நாடிடும் நிலையாக நாரத மாமகரிஷியின் தொடர்பில்
2.அகத்தினுள் அகண்ட அண்டத்தை அறிதல் என்பதாக மேலாம் நிலை விளக்க
3.கீழாம் அறிவு செயல்படா நிலை பெற “ஆச்சா மரம் வீழ்த்தும் மராமரம்” நாரதரால் உபாசிக்கப்பட்டது.

இரு வித அமில குணங்கள் செயற் கொண்டிடும் மராமரத்தில் வான்மீகி கண்டு கொண்டது மாசற்ற மனம் கொள்ளும் தியானமாக உளநலன் கண்டது மராமரா.

உடலை வறுத்திடும் உணர்வுகள் உள்ளத்தின் உணர்ச்சியாம் மோக நிலைகளை வேருடன் வீழ்த்த… மனிதன் கொண்டிடும் எண்ண உயர்வால் தெய்வீக நிலை கண்டிடும் மராமரா என்றே அதைக் கண்டதும் உண்டு.

புறப் புயலாக எழுந்த கௌசிகனின் கோபம் களைய… அந்த வேந்தனுக்கு உபதேசம் தந்திட வான்மீகி கடைப்பிடித்த உபாயம்… நாட்டரசனை உலகாளும் அரசனாக்கி…
1.உலகையே நேசித்த விசுவாமித்திரன் சமுதாய நலன் பேண
2.இராம காவியத்தை இந்தப் பூமி எங்கும் பரப்பிட்ட செயலுக்கு வித்திட்டதே “வான்மீகி மாமகரிஷி தான்…”

ஜீவன்களுக்கு ஏற்படும் மரணத்தை வென்றிடத் துடித்து எழுந்த “கௌசிகனின் தவ சக்தியைக் காத்திடவே…” மாட்டுக்காரனாகக் கோலூன்றி… வரும் வழியில் காத்திருந்த வான்மீகியாரின் எண்ணம் ஈடேறிற்று.

ஓர் கிணற்றருகே சிறு தோட்டம். அந்தத் தோட்டத்தின் செடி கொடிகள் வேருடன் பிடுங்கப்பட்டு
1.வேர் மேல் இருக்க கிளைகள் பூமியில் புதைந்திருக்க
2.சகல செடி கொடிகளையும் இதே தன்மையாக அமைவுப்படுத்தி
3.ஓட்டை மண் கலையத்தில் நீர் இறைத்து
4.அந்த மாட்டுக்காரன் நீர் குடத்தைச் சுமந்து கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சிட ஓடுவான்.

அங்கு நீர் மிஞ்சுமா…? மிஞ்சாது…!

வெறும் கலயத்தை வேர்ப்பாகம் மேலிருக்கும் செடிகளின் மீது கவிழ்ப்பான். “நீர் இல்லையே…” என்று மீண்டும் ஓடுவான். மீண்டும் நீரை இறைப்பான்.

வியர்க்க விறுவிறுக்க மீண்டும் ஓடுவான். காலிக் கலயத்தைக் கவிழ்ப்பான். நீர் இல்லையே என்று ஏங்குவான். களைத்துப் போய் மர நிழலில் படுப்பான். விருட்டென எழுந்தே மீண்டும் நீர் சுமக்க ஓடுவான்.

இதுவே செயலாகப் பல முறை நிகழ சூரியன் உச்சிப் பொழுதை காட்டிற்று.

வழிப்பயணத்தில் நடந்து வந்த களைப்பும் தாகமும் மேலிட நீர் தேடி அலைந்த கௌசிகன் இந்த அரிய காட்சியைக் கண்டு தாகவிடாயும் மறந்து இது என்ன விபரீதச் செயல்…? இவன் மாட்டுக்காரனா… அல்லது தோட்டக்காரனா…? இது என்ன புதிர்…! என்று எண்ணிக் கோபம் முற்றும் நீங்கப் பெற்று “இதில் ஏதோ பொருள் உண்டு…” என்று எண்ணி அப்பனே இது என்ன செய்கை…? என்று வினவினான்.

பதில் ஏதும் கூறாமல் கார்மேகக் கண்ணனாக எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமல்… பொழுது சாயும் வரை இப்படியே நடைபெற்றது.

கௌசிகனும் விடவில்லை வான்மீகியும் பதில் உரைத்திடவில்லை. நடந்து நடந்து கால் ஓய்ந்தது. கௌசிகனுக்கோ கேள்வி கேட்டுக் கேட்டுக் குரல் ஓய்ந்தது.

இருவரும் அந்த மரத்தடியில் அமர்ந்து ஒருவரை மற்றொருவர் பார்த்துச் சிரிக்க… சிரிப்பின் ஒலி உச்சத்தை அடைய நீர் மொள்ளும் ஓட்டைக்கலயம் கை தவறி விழுந்து உடைந்தது.

மீண்டும் கௌசிகன் வினா தொடுக்க… “பிச்சி கொண்ட அறிவு இப்படித்தான் செயலுறும்… இது என்ன கூத்து…?” என்று தலைகீழாக நடப்பட்ட செடி கொடிகளைக் காட்டி கேட்கின்றான்.

வான்மீகியோ
1.விரைவாகப் பலன் பெற்றிடவே
2.இயற்கையின் கதியை மாற்றி அமைத்தேன் என்றார்.

இது நடைபெறக்கூடிய காரியமா…? என்றான் கௌசிகன்.

இயற்கையின் கதியை மாற்றி அமைக்க நீ முயலலாம்… ஏன்…? அது என்னால் சாத்தியப்படாது…! என்று எதிர் வினா தொடுக்கின்றார்.

கௌசிகன் வாயை அடைக்கச் செய்து மீண்டும் விளக்குகின்றார் வான்மீகி.
1.மரணத்தை வெல்கின்ற மார்க்கமாகத் தன் சக்தியைக் குறைவு நிலைப்படுத்திக் கொண்டாய் அன்று நீ…!
2.ஆனால் உன் சக்தியை வலுக்கூட்டும் செயலாக… “ஜீவர்களுக்கு உரையாகப் புகட்டி… முறையாக வெல்லுதல் நன்று…”

இயற்கையுடன் ஒன்றியே சக்தியை வளர்ப்பாயாக..!.
1.வளர்ந்து பெறுகின்றவன் தன்னை வளர்ப்பதோடு மட்டுமின்றி
2.இயற்கையின் சக்திக்கே சக்தி அளித்துச் சப்த நாதத்தில் கலந்து இயங்கும் வாழ்வாங்கு வாழ்வான்.
3.நீ இயற்கையின் சத்துரு அன்று…! இயற்கையின் மித்திரன் (நண்பன்)
4.வானில் இயங்கும் ஒளி நிலையை உன் முயற்சியால் தான் பெற முடியும்…! என உபதேசித்தார்.

நாட்டரசனும் காட்டரசனும் சமத்துவ மனோபாவனையாக்க் கலந்தது “ஒன்றின் முழக்கம்… மற்றொன்றின் எதிர் முழக்கம்…”

உணர்வுகளின் தீமை நிலை தாடகை. அது உள்ளத்தில் மூண்டெழுலும் ஞான நெருப்பை அணைத்திடும் மாய நீரூற்று. ஆஅக… தீமையின் குணத்திற்குப் பேதம் ஏது…?

1.வென்றிட்டவன் அடைவதோ தாய்மையின் பேறு
2.காமத்தை ஆட்சி புரியும் ஞான அரசாட்சி.
3.அதுவே ஞான விழிப்பின் பின் “சுடரும் நிர்விகல்ப… மோன தவ… சாயுஜ்ய… பெரு நிலை மாட்சி…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சூரியன் சுழற்சியாகும் பொழுது மற்ற உணர்வினைக் கவர்ந்து ஒளியாக மாற்றுகின்றது. ஆனால்
1.உயிர் வழியாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.உயிரின் துடிப்பின் நிலை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கொள்கிறது.

நஞ்சின் தாக்குதலால் தான் நெருப்பானது (வெப்பம்). நெருப்பாக உருவான பின் அந்த நஞ்சினை ஆவியாக மாற்றி விடுகின்றது.

இதைப் போன்று தான் நஞ்சின் தாக்குதலால் சூரியனாக மாறியது.
1.சூரியனாக உருவான பின் மற்றதைக் கவரும் பொழுது
2.தன் வெப்பத்தின் தணலால் நஞ்சினைப் பிரித்து விடுகின்றது.
3.பூமியில் அதனின் மோதலில் ஒளிக்கற்றைகளாகப் பரவச் செய்கிறது.
4.அனைத்து உணர்வுகளையும் அது இயக்கச் செய்கின்றது.

இதைப் போல் தான் மனிதனான நாம் தீமையினை அகற்றிடும் உணர்வினைச் சீராகப் பயன்படுத்தினால்… நஞ்சினைப் பிரித்து விட்டு நல்ல உணர்வினை வளர்த்திடும் அருள் ஒளியாக நம் உடலிலிருந்து வெளிப்படும்.

அதன் வழி கொண்டு வாழ்ந்தால் அடுத்து… பிறவியில்லா நிலை அடையலாம். எத்தகைய விஷத் தன்மை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.

1.வைரம் கடும் விஷத்தை எப்படித் தனக்குள் ஒளியாக மாறிக் கொண்டுள்ளதோ
2.இதே போல் நம் உயிரின் தன்மை ஒளியைப் பெருக்கும் அருள் சுடராக மாற்றி விடுகின்றது.

சூரியனால் வெப்பத்தை உருவாக்க முடிகின்றது. மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு கொண்டு வெப்பமில்லா ஒளிக் கற்றைகளை உருவாக்கிட முடியும்.

அதன் மூலம் மகிழ்ந்து வாழும்… மகிழச் செய்யும்… ஆனந்தப்படும்… என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வினை மாற்றிடும் தகுதி பெறுகின்றோம்.

ஏனென்றால் ஆறாவது அறிவினை உருவாக்கிய நிலைகள் கொண்டு இந்த உடலிலிருந்து “என்றும் ஏகாந்த நிலையை நமக்குள் உருவாக்குவதே…” நமது குரு காட்டிய அருள் வழியில் நாம் தியானிக்கும் இந்த உணர்வு.

அதைப் பெருக்குவதற்கே ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தைச் செயல்படுத்துகின்றோம்.

ஞானிகள் நமக்குக் கொடுத்ததெல்லாம் தப்பா…?

 

ஆண்டவன் பெயரைச் சொல்லி… சாமி பெயரைச் சொல்லி… நான் அதைச் செய்து தருகின்றேன்
1.ஆண்டவனயே என் கையில் வைத்திருக்கிறேன்… தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கின்றேன்
2.உனக்குப் பல கோடி கிடைக்கும் என்று ஆசைகளை ஊட்டுவோர் வழியில் சிக்கி மனித ரூபத்தையே இன்று சிதறடித்துக் கொண்டுள்ளோம்.

ஏனென்றால் கடைசி நிலையாக இருக்கக்கூடிய நாம் இன்று எதைப் பெறுகின்றோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள். மனித உடலில் சகலத்தையும் உருவாக்க முடியும் என்று அரச நிலைகள் கொண்டு சாகாக்கலை ஆகின்றோம்.

ஆனால்
1.ஞானிகள் வேகாநிலை பெற்றவர்கள்.
2.மீண்டும் ஒரு உடலுக்குள் புகாது ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

வேகாக்கலை என்றால் நாம் தீயிலே குதித்தாலும் இந்த உயிர் அது வேகுவதில்லை. உணர்வுகள் கருகுகின்றது உணர்ச்சிகள் மாறுகின்றது உடல்கள் கருகுகின்றது.

உடலை விட்டுச் சென்ற பின் அந்த கருகிய உணர்வை உயிர் எடுத்துக் கொண்டு அந்த உணர்வுக்குத் தக்கவாறு “எரி பூச்சியாக” அடுத்து உருவாக்கி விடுகிறது.

ஆனால் அதே சமயத்தில் இறக்கும் தறுவாயில் நண்பா..! நான் போகின்றேன்…! என்று பாசத்துடன் எண்ணப்படும் பொழுது அந்தப் பற்று கொண்ட உடலுக்குள் சென்று… எரிச்சல் தாங்காது நண்பனையும் கருக்கும் நிலைகளுக்கே கொண்டு சென்று விடுகிறது… தற்கொலை செய்யும்படி ஆகிவிடுகின்றது.

நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

இந்த வாழ்க்கையிலே நம்மால் தாங்க முடியவில்லை என்றால் உடனே தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது செய்யும் போது நண்பன் மீது மிகுந்த பாசத்துடன் இருந்தால் அந்த உடலுக்குள் சென்று அவனையும் தற்கொலை செய்யும்படி உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

சில வீடுகளில் ஆக்ஸிடென்டுகள் ஆகட்டும்.
1.ஐயோ…! இப்படி ஆகிவிட்டதே… இறந்து விட்டாரே…! என்று சொல்லப்படும் பொழுது
2.விபத்தான அதே உணர்வுகளை எடுத்தால் மீண்டும் மீண்டும் விபத்துக்களை அங்கே உண்டாக்கிக் கொண்டே இருக்கும்.

என்ன வாழ்க்கை…? என்று தாங்க முடியாது தற்கொலை செய்து இருந்தால் அந்த உணர்வின் தன்மை வந்து குடும்பத்தில் எதிர்பாராத நிகழ்வுகளும் விபத்துக்களும் வந்து கொண்டிருக்கும்.

இதெல்லாம் சில குடும்பங்களில் இன்று பார்க்கலாம் இதையெல்லாம் தடுப்பது யார்…? மந்திரம் தந்திரம் எந்திரம் செய்து மாற்றிவிடலாம் என்றால் முடியுமா…?

சம்பாதித்த காசை எல்லாம் அவனுக்கு கொடுத்து விட்டு “எல்லாவற்றையும் செய்தேன்… ஒன்றும் முடியவில்லை” என்ற உணர்வு கடைசி முடிவாகி தற்கொலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடலின் வளர்ச்சியைக் கொன்று விட்டு நாம் எங்கே தப்ப முடியும்…?

இந்த உணர்வின் தனக்குள் எடுத்துக் கொண்ட பின் உயிர் கடைசியில் ஆனபின் இதே உணர்வின் நிகழ்ச்சிகள் வரும். அடுத்து அதற்குத்தக்க அடுத்த உடலாக மாறும்.

பாம்புகளை எடுத்துக் கொண்டால் அதனின் கடைசிக் காலத்தில் “தாங்க முடியவில்லை” என்றால் தன் உடலில் தானே கொத்திக் கொண்டு மரணம் அடைகின்றது. அதாவது
1.விஷத்தின் ஆற்றலை அது உருவாக்கப்படும் பொழுது தன்னால் முடியவில்லை என்றால்
2.கடைசி நிமிடம் இந்த உடலிலே வேதனைப்படுவதற்கு மாறாக தன்னையே கொத்தித் தீண்டி விடும்
3.விஷங்கள் பட்டபின் மடிந்துவிடும்.

விஷத்தின் தன்மை உணவாக உட்கொண்டு உணர்வின் தன்மை அந்த விஷமே ஜீரணிக்க உதவினாலும்… உடலில் மேல் இந்த விஷத்தன்மை பட்டபின் அது விஷத்தன்மைகள் ஊடுருவி அந்தப் பாம்பும் மரணம் அடைகின்றது.

நல்ல பாம்பின் விஷத்தை நாம் சாப்பிட்டால் நம்மை ஒன்றும் செய்யாது அதே சமயத்தில் நம் உடல் மீது எங்காவது புண் இருந்து… அந்த விஷம் இதுலே லேசாகப்பட்டால் போதும்… ஊடுருவி நம்மைக் கொன்று விடும்.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது என்று ஞானிகள் கண்டுணர்ந்தனர். அதைப் பின்பற்ற வேண்டுமா இல்லையா…?

யாரும் தவறு செய்யவில்லை. அன்பு கொண்டு பரிவு கொண்டு பண்பு கொண்டு பாசம் கொண்டுதான் வாழுகின்றோம்.
1.அந்தப் பாசத்தால் பிறர்படும் துயரத்தை நுகர்ந்து அறிகின்றோம் நம் உயிரிலே படுகின்றது.
2.அவன் உணர்வு இரத்தத்தில் கருவாகி இந்திரலோகமாகின்றது
3.பின் இங்கே அதை உருவாக்கிவிடுகின்றது.

அவன் உடலில் விளைந்த விஷத்தின் உணர்வுகள் எல்லா அணுக்களிலும் ஊடுருவி இதன் உணர்வின் தன்மை கருவாக்கி நல்ல அணுக்கள் மாற்றமாகும் தன்மையே பெறுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

சர்வ தீமைகளையும் நஞ்சினையும் வென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. உயிர் தோன்றி மனிதனாக வளர்ச்சி பெற்ற பின்… அகஸ்தியன் என்றும் ஒளிச் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அந்தத் “துருவ நட்சத்திரத்தின் சக்தி” – இன்றும் என்றும் பூமிக்குள் நமக்கு முன் வந்து கொண்டே உள்ளது.
2.அதைக் கவர்ந்து அந்த நம் உடலில் சேர்த்துக் கொண்டால்… இருளை அகற்றி நாம் ஏகாந்தமாக வாழ முடியும்

இந்த விஞ்ஞானிகள் பல மருந்துகளை மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு மனிதனை 1500 வருடங்கள் வாழ வைக்க முடியும் என்று சொல்கின்றார்கள்.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
1.பல ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக வாழ முடியும்
2.இந்தச் சூரியன் அழிந்தாலும்… பிரபஞ்சமே காணாமல் போனாலும்
3.இந்தப் பிரபஞ்சத்திலிருந்து… அகண்ட அண்டத்தில் வரும் தூசிகளை நுகர்ந்து ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று விடுகின்றோம்
4.மனிதனான பின் அந்த வளர்ச்சிக்கு நாம் போக முடியும்

வான்மீகி ஞானம் பெறக் காரணமான “அதிர்ச்சி வைத்தியம்”

 

மோகத்தைப் பேரின்ப இலயமாக அனுபவித்தல் என்பதே… அதை வென்று காட்டிடும் மனோ தைரிய வலுவை வளர்க்கும் செயல்பாடாக… எவ்வளவு வீரியம் பெற்றிருத்தல் வேண்டும்…?

மோகத்தின் வசமான மனம் கொண்டவன்… அதிலே ஏமாற்றம் கொண்டிட்டால்
1.அப்போது கனன்று எழும் கோபாக்கினியின் உணர்வலைகள்
2.மனோ பீஷ்டம் (விருப்பம்) நிறைவேறிடாத அந்த (தன்) எண்ணமே ஓர் தடைக்கல்.

தடையை அகற்ற முயலும் மனம் “நிதானத்தையும் இழந்து விட்டால்” அறிவுறுத்தும் அனுபவ ஞான உரையால் என்ன பயன் காட்டும்…?

கனன்று எழும் மனத்தின் கோபக்கனல்…
1.அது சுட்டெரிக்கும் விழிப் பார்வையில் காட்டிடும் கோபப் புயலாக எண்ணம் கொண்டவுடன்…
2.நாண் ஏற்றும் உத்வேக கோபாக்கினிப் புயல் என்றே… சம்ஹரிக்கத் துடித்திடும் நிலையாக எழும்.

இதனின் “சூட்சுமம் உணர்ந்து கொள்க…”

மூடனாக அலைந்திடும் வில்வேடனை (வான்மீகி) மோகத்தீயில் மூட்டிய கனல் தகித்தாலும்… அவனுக்குள் சிந்தனா சக்தியைத் தூண்டப் பெறும் அனுகூலமாக… ஞானத்தின் வழி தொடர… அந்த நல்வழியை உணர்த்திட… அவன் எதிர்கொள்ள வந்துற்ற வினையின் செயல் “ஓர் அதிர்ச்சி வைத்தியம்…”

பட்சிகளின் நயன பாஷைகளை அறிந்து கொண்டிடாச் செயலில்… இயற்கையின் அரவணைப்பில் குதூகலமிட்டு ஒன்று கலந்து மகிழ்ச்சியாக இருக்கும் ஆண் பெண் பட்சிகளை வான்மீகி கண்ணுற்றவுடன்… “மோகக்கனல் தகிக்க” இடக்கரம் வில்லை உயர்த்த வலக்கரம் நாணைத் தொடுக்க போடப்பட்டது ஓர் ஏரி அம்பு.

அக்கினி அஸ்திரம் சுட்டெரிக்கும் ஜுவாலையாக பட்டெனத் தைத்து உயிர் குடிக்க இணைப் பறவை துடி துடித்து கீழே விழுந்தது. கண்ணுற்றான் வேடன்.

1.கத்திக் கூக்குரலிட்டு வேதனை ஒலி எழுப்ப…
2.பதறித் துடித்து இணையைச் சுற்றி வரும் அப்பறவையின் நிலை
3.ஏவப்பட்ட கணையைப் போல… பன் மடங்கு வேகமாக வில் வேடன் மனதில் தைக்க…
4.அவன் கண்டத்தில் இருந்து எழுந்த குரல் “ஹா…!”

வேதனையுற வைத்துவிட்டான் வான்மீகி… துயர் துடைக்க வழி என்ன…?

இவ்வொலியின் நாதம் வட்டமிட்டுச் சுழன்றிடும் ஒலி வேக நிலையால்… பதிவு கொண்டிடும் செயலாக எழுந்திட்ட வினாவின் ஏக்கமாக… அதை வென்றிடத் துடித்த அனுபவ ஞான உரையே… “வான்மீகியின் இராம காதை…”

1.அந்த நேரத்தில் வானை நோக்கிய பார்வையின் ஏக்கம்…
2.கொண்ட மோகத்தை வென்றிடும் மார்க்கம்…
3.தெய்வீக இலட்சண அறிவை ஒலி அணுக்களாக
4.வானெழுந்து பாய்ந்த செயல்… அதை வெளியிட அனுமதி இல்லையப்பா…!

கடைபிடிக்கும் வழி முறைகள் கொண்டால் அந்தப் பேருண்மைகளை உங்களுக்குள் உணர்த்தும்.

வேடுவன் ஞானம் வேந்தருக்கு உரைத்தல்
தியாகம் உணர்த்திய யோகம்
பண்டு இணைவென்ற விமோசனம்
ஆறாம் அறிவு உணர்த்திய சாந்தம்
மாடு மேய்ப்பவன் தலைகீழாக நட்ட செடி.

போகன் காட்டும் மெய் வழி

 

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… நவக்கோளின் உணர்வுகளையும்… நவக்கோள்களால் விளைந்த தாவர இனங்களையும் சேர்த்து… சிலையாக போகன் உருவாக்குகின்றான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் பாதரசம் தான் எல்லாவற்றிலும் கலக்கிறது. பாதரசம் எதனைக் கவர்கின்றதோ அது விந்தாக மாறி அதன் உணர்வே கருவாகி உருவானது என்பதை சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

பாதரசத்தை வைத்து நவக்கோள்களில் உருப்பெற்ற பாஷாணத்தையும் இணைத்து ஒரு உருவமாக மனிதனைப் போன்று வடிக்கின்றான். இதன் உணர்வைக் கவர்ந்த பின் ஒவ்வொரு தாவர இனங்களிலும் இந்த ரசங்கள் உண்டு. அதை எல்லாம் அந்தச் சிலைக்குள் “சாரணையாகக்” கொடுக்கின்றான் போகன்.

தாவரங்களை ஆடு மாடுகள் தின்றாலும்… புலி அதை அடித்துச் சாப்பிட்டாலும்… இந்த உணர்வு அதிலே எப்படியும் அதற்குள் கலக்கின்றது. அதனின் உணர்வுகள் சிறுகச் சிறுகக் கலவைகள் ஆகி… தீமைகளை நீக்கும் மனித சரீரமாக உருவாக்குகிறது என்பதனை உணர்ந்தவன் அருள் ஞானி போகன்.
1.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதை உணர்ந்தவன்.
2.ஆனால் ஆதியில் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவனுடைய அறிவு கொண்டு போகன் செயல்படுத்தினான். அதன் வழி முருகன் சிலையை உருவாக்கிப் பழனி மலையில் ஸ்தாபித்தான்.

1.அந்தச் சிலையின் மீது சிறிது நீரை விட்டால் போதும்
2.அது வெப்பமாகும்.. ஒரு ஆவியின் தன்மை கிளம்பும்…
3.”அதை நுகர்ந்து நமது ஆன்மாவாக ஆக்கிடல் வேண்டும்…”

அதாவது… நாம் கீழிருந்து மேலே படியில் ஏறும் போதே அதைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் “முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அந்த மணங்களைச் சுவாசிக்க நேர்கின்றது…”

இடையிலே இடும்பன் மலை என்றும் வைத்திருப்பார்கள்

காரணம்… மேலே ஏறிச் செல்ல வேண்டும் என்கிற போது வேதனையென்ற உணர்வாகிவிட்டால் கை கால்களை முடங்கச் செய்து விடுகின்றது… ஆப்படி இடைமறித்துத் தடுப்பதை இடும்பன் என்று காட்டினார்.

மீண்டும் ஏக்க உணர்வுகளை மேலே செலுத்தி… களைப்பை நீக்கி அவன் அருளைப் பெற வேண்டும் என்று கிரிவலம் வந்தால் அங்கே தூப ஸ்தூபி இருக்கும்.
1.அதற்கு நேராக நின்று வானை நோக்கி எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்வதற்காக அதை வைத்தார்கள்.

அந்த உணர்வுடன் ஆலயத்திற்குள் சென்று அவன் அறிவின் தொடர் கொண்டு… முருகன் சிலையிலிருந்து வரும்… தீமைகளை நீக்கிடும் ஆவியின் தன்மையை நுகர்தல் வேண்டும்.

1.சிலையைக் கண் கொண்டு உற்றுப் பார்த்து நாம் பதிவாக்கப்படும் பொழுது கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்.
2.சிலையைப் பதிவாக்கிய பின் அதிலிருந்து வரக்கூடிய மணத்தைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கின்றது
3.நுகர்ந்து உயிரிலே பட்டபின்… இந்த உணர்ச்சியின் தன்மை தீமையை நீக்கும் சத்தாக
4.போகன் வடித்த உணர்வை… அந்த வெண்ணையை…
5.நம் கண் திருடி… நம் உடலுக்குள் தீமையை நீக்கிடும் சக்தியாகப் பரவச் செய்கின்றது.

வெண்ணை என்றால் நெய்யாக நம் உடலுக்குள் அது எப்படிச் சத்தாக ஆகின்றதோ… அதே போல் சிலையிலிந்து வரும் மணத்தின் சத்தை நாம் வடிக்கப்படும் பொழுது… நம் உடலில் தீமையை நீக்கும் அருள் சக்தி கிடைக்கின்றது.

கண்டுணர்ந்த மெய் ஞானியான போகன்… கண்ணின் இயக்கமும் உயிரின் இயக்கமும் உடலின் அமைப்பும் என்ற நிலையில்
1.சாதாரண மக்களும்… தன்னைத் தான் தனக்குள் இயக்கும் நிலைகளை அறிந்து கொள்ள
2.தீமையை நுகரும் பொழுது என்ன நடக்கின்றது…? என்றும்
3.தீமையை நீக்கிய அருள் ஞானிகள் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.இந்த உடலில் என்ன விசித்திரங்கள் நடக்கிறது…? என்பதையும் காட்டினான்.

ஏனென்றால் தீமையான உணர்வுகளை நல்ல குணம் கொண்டோர் நுகரும் பொழுது அது எத்தகைய விஷத்தன்மையாக மாறுகிறது…? நல்ல குணங்கள் ஏப்படி மாறுகின்றது…? உடல்கள் எப்படி நலிகின்றது…? என்பதை அறிந்த போகன் தன் இன மக்களுக்கு அதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று அன்று செயல்பட்டான்.

தன் இன மக்கள் என்றால் சாதாரணமாக எண்ணவில்லை…!

ஒவ்வொரு மனிதனின் உயிரும் கடவுள்.. அவனால் அமைக்கப்பட்ட ஆலயம் அந்த உடல். அந்த ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தவே அதைச் செய்தான் போகன்.

ஏனென்றால் உயிரே கடவுள்… அவனே உள்ளிருந்து ஆளுகின்றான்… “பிறருடைய நிலைகளை அந்த ஆண்டவன்…” என்று எண்ணிச் செயல்படும் பொழுது… மகிழ்ச்சி என்ற உணர்வை வெளிப்படுத்தும் போது… எல்லோரும் அதன் உணர்வின் தன்மை பெறுவதற்க்காக போகன் அந்த வழியில் செய்தான்.

1.யாரெல்லாம் போகனை எண்ணி அதைச் செயல்படுத்துகின்றனரோ
2.ஆயிரக்கணக்கானோர் அந்த ஆலயத்தில் நலம் பெறும் சக்தியாகக் கிடைக்கின்றது.

மனித உடலில் இருக்கும் போது தான் இத்தகைய வேலைகளைச் செய்தான்.

தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மை பெற்று… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி… ஒளியின் சரீரமாக… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக போகன் இன்றும் உள்ளான்.

1.அவன் ஒளியான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது
2.அவன் சென்ற பாதையில் நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகி
3.இருளை நீக்கிடும் அருள் சக்தி பெற்று இந்த உடலுக்குப் பின் அவன் வழியிலே அங்கே (சப்தரிஷி மண்டலம்) செல்ல முடியும்.
4.போகன் அதைப் பெறவே… அதன் உணர்வைப் பெற்று அங்கே பெற்றான்.
5.அவன் வழியில் செல்லப்படும் போது… நாமும் அங்கே செல்ல முடியும்.

போகன் காட்டிய தூப ஸ்தூபியின் முன் நின்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதை வட மேற்காக வைத்திருப்பார்கள். விநாயகரை வைத்தது போலேயே முருகன் சிலையையும் போகன் அவ்வாறு தான் வைத்துள்ளான்.
1.நாம் வட கிழக்காகப் பார்த்து அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணும் பொழுது
2.அவன் காட்டிய முறைப்படி நாமும் நஞ்சை வென்று… அவன் அடைந்த எல்லையை அடைய முடியும்

வான்மீகியின் “பூர்வாங்கம்”

 

எண்ணுகின்ற எண்ணத்தின் அசைவுகளை அறிந்து கொண்டிடும் ஆற்றலாக… அதை உணர்த்தி அறிவுறுத்தும் மாமகரிஷிகளின் ஒளி காந்தத்துடன் ஒன்றி… உண்மையின் சக்தியாய் இக்காலத்தில் பெறுகின்ற நிலையே “முக்காலமும் உணரும் நிலை…!”

நேற்றைய பாடநிலையில் “அகால மரணத்தின் முன்னறிவிப்பை”
1.மெய் ஞான அறிவால் அறிந்து கொண்டிட
2.காட்சிப் புலனாகும் விழிப்படலங்களின் சூட்சுமம் (கண்ணில் உள்ள பாப்பா) பற்றி உரைத்திருந்தோம்.

மனிதன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில்… உலகோதய தொழில் அறிவு வாழ்வின் ஜீவித செயலுக்கு அவரவர்கள் வழியமைத்துக் கொண்டு செல்லும் அனுபவ உண்மை (அது).

1.இன்று வழக்கு நடையில் உரைத்திட்ட நாட்டரசன் கோட்டை
2.அதுவே வான்மீகி மாமகரிஷி ஞானப்பயிர் வளர்க்க வந்திட்ட ஊர்.

ஏடறிவு அற்ற வில் வேடர் குலத்தில் பிறந்தவன் வான்மீகி. வில் அம்பை வைத்து வேட்டையாடுதல்… கிழங்கு கள்ளி எடுத்தல்…தானியங்கள் பயிரிடுதல்… இதுவே முன்பு வாழ்ந்த வனவேடுவ குலத்தின் வித்து,

வில்வீரன் என்ற பெயர் நாமத்தில் உலவி… தாய்மையின் பேறு… கற்பு நெறி காக்கும் இராமாயண மாகாவியத்தைப் படைத்தது.

வேடுவ குலத்தின் திருமண விழாவில் முக்கிய பங்கு ஏற்பது வில்லும் அம்பு தான். வில்லின் வித்தைகள் பயிற்சிக்கும் செயலில் வீரத்தை உடலின் வலிமையைக் கொண்டு… வெற்றி பெற்றிடத் துடிக்கும் விவேகமற்ற மௌடீக வைராக்கியத்தைக் காட்டி… மணம் முடிக்கத் துடித்த நிலையில்… அவன் வில் ஒடிந்ததால் களரியில் அன்று நாணம் மேலிடத் “தலை குனிந்தான்,..”

தன் வாழ்க்கையில் பங்கேற்கத் தேர்வு செய்த மங்கை… வெற்றி வாகை சூடிய மற்றொருவனுக்கு மாலை சூட்டியதால் ஏற்பட்ட மனத்தின் ஊடல்கள்… மோகத்தின் வசம் எழுந்த கோபமாய் அந்த வித்து அவனுக்குள் (வான்மீகி) வேரூன்றி விளைந்த்து.

அஸ்திரத்தில் ஏவப்படும் பொழுது அக்கினியை உருவாக்கிடும் முறையைக் காண இச்சம்பவமே வழி வகுத்தது.

1.ஐம்புலன்களையும் ஒன்றாக நிறுத்தி… ஐம்புலன் அடக்கம் என்கின்ற நிலை கொண்டு வளர
2.காட்டில் ஒரு சித்தன் மூடனாக உலவிய இந்த வேடனிடம் தானாக முன் வந்து
3.இவனின் உயர்வை அன்றே கண்டு… அஸ்திரங்கள் ஏவுதலின் நாட்டத்திற்கு வழிகாட்டினான்.

தானாக தன் அனுபவத்தில் “தென்னம்பாளையினுள் அக்கினியைக் கண்டது…” எத்தகைய ஞானமப்பா…?

தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு
காதையின் வழிகொண்டுகொள் விருப்பு

1.தென்னம்பாளையினுள் கிளைத்து ஓடும் காம்புகளை கடின நுனியில் பஞ்சு போல நைத்து…
2.அம்பின் நுனியில் கட்டி வில்லில் அதை நாணேற்றி முழு வேகம் கொண்டு எய்ய
3.காற்றின் உராய்வில் தென்னம்பாளை பற்றி எரியும் சூட்சுமம் அறிந்து கொண்டது ஏகாந்த விளையாட்டிலப்பா.

அத்துடன் சிறு நுனியில் வைக்கப்படும் சில பொருள்கள் எரியூட்டும் குணத்தன்மைகள் கொண்டது. எய்யப்படும் வேகத்தில் பாளைப் பஞ்சில் பற்றி இணைக்கப்பட்டு இருக்கும் எரிபொருளும் பற்றி எரிந்து செயல்படுதல் “அக்கினி அஸ்திரம்” என்று பெயர் சூட்டப்பட்டது.

சிற் சில பாளைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அக்கினிப் பொறிகள் வெளிப்படுதலை அறிந்திட்டதைப் போல்… சிற் சில பாறைகளிலும் அதே சூட்சுமத்தைக் கண்டறிந்தவர் வான்மீகி மாமகரிஷி.

சகலத்திலும் சகலமாய்க் கலந்து பரவிப் படர்ந்த
1.ஆதி அமில குண சக்திகள் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படும் செயலின் நிகழ்வுகள் பிரம்மமாக
2.அந்த மறைபொருள் உறைபொருளாக விளைந்து உருக்கோலம் கொண்டிட்ட பிறகு
3.பூமியே சிவலிங்கமாக சுழன்றோடிக் கொண்டிருக்கும் இயக்க கதியில்
4.ஈர்ப்பின் பாசம் சமைத்திடும் சமைப்பு… உள்ளிட்ட நிகழ்வே சக்தியாக… ஒலி ஒளி இணைந்து கொண்டிட்ட சிவ சக்தியாக
5.விண்ணுலக சக்திகள் “வான் எழுந்து ஈர்க்கும் கரு எதுவோ…” அதை நிறைவாக்க
6.தெய்வீக வடிவம் பெற்றிடும் ஜோதியின் உள் குளிர்வு – ”நீல வண்ணமாக”
7.தன்னுள் (வான்மீகி) வான்கொண்டு வானில் ஒளி பெற்றிட்ட செயல் போல் அனைவரும் பெற்றிட
8.ஞான முன்னோடியாகக் காட்டும் நிலை ஞானச் செல்வங்களும் பெற்றிட வேண்டுமப்பா.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றை ஒன்று புசித்துத் தான் எல்லாமே வாழ்கிறது. ஆடு சாந்தமான உணர்வுடன் வந்தாலும் புலி அதைக் கொன்று புசிக்கத்தான் செய்யும்.

இதைப் போல் நமக்குள் நல்ல உணர்வுகள் இருப்பினும் நாம் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வு உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் டி.பி. வந்துவிடுகிறது.
1.உடலில் உள்ள நல்ல அணுக்களை அது கொன்று புசிக்கத்தான் செய்கிறது
2.எலும்புகள் இருக்காது… காணாமலே போய்விடும்.

ஆக நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கிறது.

அதே போன்று தான் மனிதனில் விளைந்த மூச்சின் அலைகள் அங்கே தாவர இனங்களில் விளைந்து (பூச்சிகளாகவும் புழுக்களாகவும்) எதைப் புசித்தோமோ அதைக் கொன்று புசித்து நமக்கு உணவில்லாதபடி இங்கே கொல்கிறது.

இங்கே மட்டுமல்ல…! தாவர இனத்திலும் இதே தான் கொல்கிறது.

தென்னை மரத்தில் கருக்கல் நோய் என்று வரும். விவசாய ஆராய்ச்சி மையங்களில் அதில் கருவுறும் நிலைகளை எடுத்து அதனின் உணர்வின் சாறை எடுத்து அதிலே தீமையை விளைய வைக்கும். அதாவது “ஒலைக் கருக்கல்” என்ற நிலைகளில் அதனின் சத்துகளை உறிஞ்சிச் சாப்பிடும் கொசுக்களை மற்ற இனங்களைக் கொல்ல என்ன செய்கிறார்கள்..?

அதற்குண்டான எதிர்மறையான மற்ற உணர்வைச் சேர்ந்து அதிலேயே கருவை உண்டாக்குகின்றான். விஞ்ஞான அறிவு கொண்டு போடுகின்றான். அதிலே படர்ந்தவுடனே அந்த ஓலையின் சத்தை எடுக்கும்.

அதே சமயத்தில் அந்த ஓலைச் சத்தைத் தின்று கொண்டிருக்கும் கிருமிகளையோ பூச்சிகளையோ இது கொன்று புசிக்கும். அவை முழுவதும் செத்த பின் இதுவும் மடிந்து விடும்.

அதே மாதிரித்தான் உங்களுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்திகளையும் மெய் ஞானிகளின் உணர்வுகளையும் எடுத்துக் கொள்ளும்படி செய்கிறோம்.

ஏனென்றால் தீமைகளை வென்றவன் அருள் ஞானி. அதை வைத்துத் தீமைகள் செய்யும் உணர்வுகளை அடக்க வேண்டும்.

1.மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளை எது கொன்று புசிக்கின்றதோ
2.அது இருக்கும் வரை அந்த உணர்வுகளை இந்த அருள் உணர்வுகள் கொன்று புசித்துக் கொண்டே இருக்கும்.
3.பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலைத்தே இருக்கும்.

மனிதனின் எல்லை அழியாத ஒளிச் சரீரம் தான்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமான அந்த உணர்வினை நாம் நுகர்ந்து அந்த உணர்வுகளை மூச்சலைகளாகப் பரப்பினால் இந்த ஊரும் உலகமும் நலமும் பெற உதவுகின்றது. நம் மூச்சும் பேச்சும் உலகை நன்மை பயக்கச் செய்கிறது.

இதே உணர்வுகள் மேகங்களில் படர்ந்து நல்ல மழை நீராகப் பெய்யத் தொடங்குகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் தாவர இனங்களில் படரப்பட்டு தாவர இனங்களும் செழித்து வாழத் தொடங்குகிறது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்று மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு வெளிப்படுத்தும் உணர்வுகள் அனைத்தும் சூரியனால் கவரப்பட்டு ஒன்றுடன் ஒன்று கலந்து மேகங்களில் கலக்கப்படும் பொழுது அது விஷத் தன்மை கொண்ட மழை நீராகத் தான் படர்கிறது.

மழை நீராகக் கொட்டும் பொழுது எந்தப் பகுதியில் இது அதிகமானதோ அப்பகுதி எல்லாம் இந்தத் தீமையை விளைவிக்கும் சக்திகளாகவும் புதிய நோய்களாகவும் உருவாகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட என்ன வழி…?

விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாம் வானை நோக்கி ஏங்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
1.ஊர் மக்கள் அனைவரும் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.ஊரில் அமைதி பெற வேண்டும்
3.எங்களுக்குள் பற்றும் பாசமும் வளர்ந்து பகைமை அகற்றப்பட வேண்டும்.
4.ஊரில் விளையும் தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்
5.நாங்கள் ஒற்றுமையுடன் வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
6.இந்த முறைப்படி எண்ணி வளர்த்து இந்த உணர்வை நாம் பரப்புதல் வேண்டும்.

அப்பொழுது நமது தெரு மக்களும் ஒற்றுமையாக வாழ்வார்கள். நம் வீட்டிலும் ஒற்றுமையாகும். ஊருக்குள்ளும் ஒற்றுமையாகும் அன்பும் வளரும்…. அரவணைப்பும் வளரும்…! பண்பும் வள்ரும்… பரிவு கொண்டு வாழவும் முடியும். பேரின்பப் பெருவாழ்வு வாழ முடியும்.

தீமை என்ற நிலையை அறவே அகற்றவும் முடியும். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவோம் என்றால் பிறவியில்லா நிலை பெறும் அந்த அருள் சக்தியை நாம் பெற முடியும்.

இந்த உடலுக்குப் பின் இனி பிறவியில்லை. உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் பெறுகின்றோம். அத்தகைய நிலை பெறச் செய்யத்தான் விநாயகர் தத்துவம்.

ஆகையினால் இந்த முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவாக்கி வலுவாக்கி
1.உங்கள் ஊர் நலம் பெற வேண்டும்
2.உங்கள் வீடு நலம் பெறவேண்டும்
3.மக்கள் நலம் பெற வேண்டும்
4.மக்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும்.
5.ஒருவருகொருவர் அரவணைத்து வாழும் அருள் சக்தி வளர வேண்டும்
6.பண்பும் பரிவும் வளர வேண்டும்… பற்றுடன் வாழ்ந்திடும் அருள் சக்தி எங்கள் ஊரிலே வளர வேண்டும்.
7.இந்த உலகம் முழுவதும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அதே போல் விவசாய நிலம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்ற உணர்வுகளை எடுத்துப் பாய்ச்சுதல் வேண்டும்.
1.பயிரினங்கள் செழிக்க வேண்டும்
2.அதில் விளைவதை உணவாக உட்கொள்ளும் மக்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்ற
3.இத்தகைய உணர்வை நாம் செயல்படுத்துவோம் என்றால்
4.நாம் வாழும் பூமியும் நலம் பெறுகின்றது.. மக்களும் உடல் நலம் பெறுகின்றனர்.

நம் உணர்வுகள் நல்ல உயர்வு பெறுகின்றது. நம் மூச்சும் பேச்சும் உலக மக்களை உயர்வு பெறச் செய்கிறது. உலகை நன்மை பெறச் செய்கிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உலகில் பெருகத் தொடங்கும் போது…
1.அங்கே பகைமைகள் அகற்றப்படுகின்றது… அன்பு மலரத் தொடங்குகிறது.
2.ஒவ்வொருவரும் பிறவி இல்லா நிலை அடைய முடிகிறது.

ஆகவே இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நமது குரு அருள் உங்களுக்குள் பரவப்பட்டு இருளை அகற்றி மெய் உணர்வைக் கண்டு…
1.உயிருடன் ஒன்றி உங்கள் உணர்வுகள் ஒளியின் சரீரமாகட்டும்.
2.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அருள் சக்தி பெற்று பேரின்பப் பெரு வாழ்வு பெறும் அந்த அருள் சக்தி உங்களிலே வளரட்டும்.
3.உங்கள் மூச்சும் பேச்சும் பிறரை மகிழச் செய்யட்டும்… மகிழ்ந்த உணர்வைப் பெறச் செய்யட்டும்.
4.உலக மக்களை நலம் பெறச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் மலரட்டும்
5.உங்கள் உடலில் இருக்கும் அனைத்து உணர்வுகளும் நலம் பெறும் உணர்வாக மலரட்டும்.
6.அருள் உணர்வுகள் பெருகி… அருளானந்தம் பெருகட்டும்…! பேரானந்தமும் பெருகட்டும்…!

இது அனைத்திற்கும் குரு அருள் உறுதுணையாக இருக்கும். இந்த விஞ்ஞான உலகில் வரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி பெருகிட எமது அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

ஆகவே இருளை அகற்றிடும் நல்வினைகளாக… ஞான வித்துக்களாக… நீங்கள் நுகரும் உணர்வுகளை எல்லாம் உங்கள் உயிர் ஓ…ம் நமச்சிவாய… ஓ…ம் நமச்சிவாய… என்று உங்கள் உடலாக்கி…
1.ஒளியாக உருவாகும் உணர்வின் தன்மை
2.உங்களிலே உருப்பெற வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றும் அமிர்தங்கள் (அமிலங்கள்)

 

முருகனுக்குப் பல பழங்களைப் போட்டுப் பஞ்ச அபிஷேகம் செய்கின்றோம் ஐந்து கனிகளைப் போடும் பொழுது வெப்பம் காந்தம் விஷம்… இதெல்லாம் சேர்ந்து தான் சத்தின் தன்மை (பொருளை) எடுத்துக் கனியின் தன்மை அடைந்தது.

அதாவது எதன் பொருளை எடுத்துக் கவர்ந்து கொண்டதோ புலனறிவு ஐந்தாகின்றது.
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே முருகனுக்கு பஞ்சபிஷேகம் நடக்கிறது என்றால்
2.அதைப் போன்ற மணங்கள் பெற வேண்டும்… அந்தச் சுவையின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்கி
3.அந்த உணர்ச்சிகளை நம் உயிரில் இணைத்து அபிஷேகம் செய்தால்
4.அது எப்படி ஐந்து விதமான சுவைகளை ஊட்டி அது பஞ்சாமிர்தமாக ஆனதோ
5.அந்த ஐந்து வகையான அமிர்தங்களாக நமக்குள் சுவை ஊட்டுகின்றது.

நம்முடைய ஐந்து புலனறிவினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கொண்டால் இவை அனைத்தும் “பஞ்ச அமிர்தம்” என்று வருகின்றது. அது தான் காயத்ரி.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த எண்ணத்தை இயக்கினால் இதற்குப் பெயர் வசிஷ்டர்…! அந்த உணர்வின் தன்மை உயிரிலே படும் பொழுது அந்த உணர்ச்சிகளின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

உடலுக்குள் செல்லப்படும் போது…
1.அன்று அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதை எப்படி வென்றானோ
2.அந்த உணர்வின் ஆற்றல் நம் உடலில் சேர்கின்றது.

தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு… தீமைகளை வென்றிடும் சக்தி பிரம்மமாகிறது. அதனின் இயக்கமாக நம்மைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும். அதன் சக்திக்கு அருந்ததி என்று காரணப் பெயர் வைக்கிறார்கள்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பத்தாவது நிலை அடையக்கூடிய மனித உடலில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எப்படி எல்லாம் சேருகின்றது என்று.

அருந்ததி என்றால் எதன் உணர்வின் தன்மை பிரம்மமாகி உடலாக ஆனதோ… அதனுடன் இணைந்து வாழும் சக்தி என்று தெளிவாக்கப்படுகின்றது.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் – முருகு மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற்றவன். எப்படி…?

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம். புளி உப்பு காரம் என்று பல பொருட்களைச் சேர்த்து அதைச் சுவையாக உருவாக்குகின்றோம்.
1.சுவையாக அதை உணவாக உட்கொள்ளும்போது…
2.நம் உணர்ச்சிகள் அது பஞ்ச அபிஷேகமாக அந்த உணர்வுகள் நல்ல உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அந்த உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அமிலங்களாக உருவாக்குகின்றது
4.அந்த அமிலங்கள் உமிழ் நீராக மாறுகின்றது.

உணவாக உட்கொள்ளும் சக்திக்குள் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளை ஊட்டப்படும் பொழுது அது நம் இரத்த நாளங்களில் கலந்து அந்த அணுக்களின் மலமாகி நம் உடலில் நல்லதாகி… நம்மை ஆரோக்கியமாக்கும் நிலை வருகின்றது.

ஆகையினால்
1.ஆறாவது அறிவால் விஷம் அடக்கப்படுகின்றது… மகிழ்வாகனா (மயில்வாகனா)
2.மயில் தோகை விரித்து அது மகிழ்ச்சியாக ஆடுகின்றது… நஞ்சினை விழுங்குகின்றது
3.அது உடலில் உள்ள உறுப்புகள் அந்த நஞ்சை அடக்குகின்றது.

விஷத்தைக் காலடியில் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக “உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டி…” அதனுடைய இயக்கத் தொடர் பரிணாம வளர்ச்சியில் எப்படி எல்லாம் நாம் வளர்ந்து வந்தோம்…?

1.பல கோடிச் சரீரங்களில் ஒன்றன் பின் ஒன்றாகத் தீமைகளை நீக்கி நீக்கி
2.இன்று மனிதனாக வளரக் காரணமானது என்பதைக் காட்டுவதற்கு
3.மயிலின் காலடியில் பாம்பைப் போட்டு உணர்த்துகின்றார்கள்… இந்த உண்மையைக் கண்டுணர்ந்த ஞானிகள்.

நாம் இந்த உண்மைகளை உணர்ந்தறிவதற்காக வேண்டி எல்லாவற்றுக்கும் காரணப் பெயர்களை வைத்து
1.எது எதனுடன் இணைக்கப்படும் பொழுது
2.எதன் வழியில் நாம் எப்படி நல்லதாக உருவாக்க வேண்டும் என்று காட்டினார்கள்.

விஞ்ஞானி ஒரு பொருளைக் கண்டுபிடித்த பின் அவன் அதற்கென்று ஒரு காரணப் பெயரை வைத்து… அதில் இன்னென்ன பொருள்கள் கலக்கப்படும் பொழுது இன்னது இன்னது தான் செய்யும் என்று அனுபவ ரீதியிலே தெரிந்து அதைச் செயல்படுத்துகின்றான்.

இது இதற்குக் காரணம் ஆகும்…. இது மற்றதை இப்படி உருவாக்கும் என்று பல வகையிலும் அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகின்றான்

அதே போல் பல பல திரவ(க)ங்களை விஞ்ஞான அறிவில் புதிதாக உருவாக்குகின்றார்கள். சிறுநீரில் அதை இணைத்துக் காய்ச்சப்படும் பொழுது சிறுநீரில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் காட்டுகின்றது. அதே போன்று இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தையும் காட்டுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு இதையெல்லாம் காணுகின்றார்கள் அது போன்றுதான்
1.இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வைச் சாதாரண மக்கள் அறிந்து உணர்வதற்காக
2.ஒவ்வொன்றுக்கும் ஞானிகள் காரணப் பெயரை வைத்து நாம் தெளிந்து தெரிந்து தெளிவான நிலையில் வாழும்படி வழி காட்டுகின்றார்கள்.

எதையுமே பஸ்பமாக்கிடும் சக்தி

 

வான்மீகி மாமகரிஷியின் வாழ்வின் ஞான அனுபவ நடைமுறைகள் வரலாற்று சரிதமாக உரைத்திடும் முன்… அவர் காட்டிய அனுபவ தத்துவ உண்மை நிலைகளை அறிந்து கொண்டால் நல்லது.

1.நாராயணன் கையில் கோதண்டம்… ஆஞ்சநேயன் கையில் கோதண்டம் என்பது
2.மனோ சக்தியின் வலிமை கொண்டிட்ட ஆற்றல்… பீஷ்டம் (வேண்டியதை அடையும்) என்ற நிறைவு நிலையாக… செயல் சக்தி பிரவிகிக்க (பொங்கி வர)
3.துர்க்குண சம்காரமும்… நற்குணங்களைக் காக்கும் “நிலைக்களன்” எனும் உபதேசிக தத்துவ முழுமையே – “கோதண்டம்”
4.அதுவே உஷ்ண நாதம்… காக்கும் விஷ்ணு… அதுவே நம் பூமியின் சுழல் சக்தியில் ஏற்படும் உராய்வின் வெப்பம்.

பால்வெளியிலிருந்து புவி ஈர்ப்பிற்குள் நுழையும் தீய நிலை அமில அணுக்கள் கூட்டம்… உருக் கோலம் கொண்ட திடப்பொருள் (மிதக்கும்) சக்திகள்… பஸ்பமாய்த் தம்மை மாற்று நிலை பெற்றிட்டு… மீண்டும் பால்வெளியில் மூல அலோக அமிலங்களாக ஓடிக்கொண்டே உள்ளன.

1.கோதண்ட சூட்சும ரகசியங்கள்
2.மகரிஷிகள் காட்டிட்ட மெய்ஞான விழிப்பாக
3.உயர் நன் நிலை பெற்றிட வேண்டுமப்பா.

அவ்விடத்தின் உபதேசிகன் யார்…? என்று உரைத்திட எந்த மாமகான்கள் ஆனாலும் “அவர்கள் அனுமதி தேவையப்பா…” ஏகாந்த ரகசிய உண்மை நிலைகளே ஆயினும்… “தெய்வீக இரகசியங்கள்” கடைபிடிக்கப்படும் செயலில் தான் உண்மைகள் அடக்கம் பெறுகின்றன.

இன்றைய குரான் எனப்படும் இஸ்லாமிய மறைநூலில் கலிமா என்றே “ஐந்து கட்டளைகளை” கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் என்று கூறப்பட்டுள்ளது.

ஹஜ் எனப்படும் புனித யாத்திரை சென்றிடும் போது… “அல்லாஹ் ஹும்ம லப்பை…” என்றே இறை நாமத்தை முழக்கங்கள் இட்டாலும்… ஹராபத் எனப்படும் பாலைவெளியில் தொழுகை எனப்படும் இறை நோன்பு செய்யினும்… மனநிலை மாறு கொண்டிடாதபடி ஒருமை நிலை என்ற சமத்துவ சகோதரத்துவ சகிப்புத்தன்மை கொண்டு புனித ஜம் ஜம் நீரூற்று அருந்திடுவோர் யாராகினும்… பற்பல வாயில்கள் கொண்ட மக்கா எனும் இடத்தில் முகமது நபியின் ஒலி அலைகள் பதிவு நிலை பெற்றிட்ட அந்த இடத்தில் ஓதப்படும் நிலையில் ஏற்கப்பட்டன.

இறைவனின் கருணைக்கதிர்கள் அவர் மீது இறங்கின என்ற சூட்சுமத்தில் அந்த உண்மைகளை அறிந்தோர் உண்டா…?

1.வான்மீகி ஆகாயத்தை நோக்கினான்…! அப்போது…
2.வானில் இருந்து “க்ஷண நேரத்தில் உயர் மின்காந்த உயர் நுண் அலைகள் பாயப்பெற்றன…” என்பதில்
3.அதற்கு முன் ஆட்கொண்ட கனமான சுவாசத்தின் அலைகள் நீக்கம் பெற்று
4.மின்னலென உருவாகிய மனத்தின் திட சித்தம் கொண்டு… தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டிட
5.ஒளி கொண்ட உயிரணுக்கள்… ஆங்கு நிலை கொண்டு அவருக்குள் வளர்ந்ததப்பா.

குரானிலும் மறைபொருளாக… சக்திகளை ஈர்த்துக் கொண்டிட்டு உயர்நிலை பெற்றிடும் முறைகள் காட்டப்பட்டுள்ளது… கடைப்பிடிப்போர் அந்த உயர்வால் உயர்வை எய்துவர்.

மரணத்தின் வேதனைகளை வென்றிடும் பக்குவம்… தியானத்தில் ஈர்ப்பலையின் வளர்ச்சியில்… நாதத்தால் விந்து கலையாக்கிடும் தன்மைகள் கூட்டிக் கொண்டிருப்பினும்… மகரிஷிகளால் உவந்து ஊட்டப்பட்டு இருப்பினும்…
1.ஒளி காந்த உயர் அணுக்களை… எண்ணம் கொண்ட சக்தி வளர்ப்பில் வளர்த்துக் கொண்டிட…
2.எதிர் நிகழ்வுகள் தொடர்ந்து இருப்பின்… ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டிட “சிறு கோடிட்டுக் காட்டுகின்றோம்…”

எப்படி எரிமலைகள் குமுறிக் கொந்தளிக்கும் முன் பூமியின் சுவாச சமைப்பு நுண் அதிர்வலைகள் ஒத்த எண்ண நிலை கொண்டு எதிர் நிலைகள் நேர்கோடாக தியான வழிதனில் அறிந்து கொண்டிடும் ஆற்றல் நிலை உமக்கு முந்தைய பாட நிலைகளில் உரைத்திட்ட அதே நிலைகளின் தொடரில் மற்றும் ஓர் சூட்சுமம் உரைக்கின்றோம்.

கருவிழியில் உள் அமைப்பில் “பாப்பா” என்று அழைக்கப்படும் அதனுள் சுரந்திடும் அமிலக் கூறுகளால் கருவிழியே பளபளப்புற்று எண்ணெய் பூசிய தன்மையாக… சூரிய ஒளியைக் காண விழி அஞ்சும்.

மூன்று நாட்கள் தொடர்ந்து இருப்பின் அதுவே அவன் கொண்டிட்ட வினையின் முடிவு…!
1.வென்று காட்டுவதெல்லாம் நாம் சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் மூலம்தான்..
2.உத்தரவு பெற்று வெளியிட வேண்டும்…!

வான்மீகி மகரிஷி உணர்த்தும் வானியல் தத்துவம்

 

1.வானம் தொடர்பாக பூமியில் சிருஷ்டிப்பு நிலைபெற்றிடும் உயிரணுக்கள்… ஆவியாக அமிலங்களாக உருக்கொண்டு உருவாகி
2.சூரியக் குடும்பக் கோள்களின் ஈர்ப்பின் சமைப்பு அலைகள் பர வெளியில் வீசிடும் நிலை கொண்டு…
3.சூரியன் வெப்ப சமைப்பு நிலை தொடர்பு கொண்டிட்டு
4.தனக்கொத்த தன்மைகளை ஈர்த்துக் கொண்டே
5.எண்ணம் கொண்ட சுழற்சியாக
6.சுழற்சியின் உராய்வினால் சமைக்கும் சக்தி கொண்ட வெப்பமாக
7.ஒளியின் தொடர்பு கொண்டிட்ட ஒலி நாதமாக உருக் கொண்டு
8.அதே நிலையின் தொடர்ச்சி கோடான கோடி அணுக்கள் ஈர்ப்பினால் சமைக்கப்பட்டு… தனக்குள் பிறிதொன்றை உருவாக்கி
9.அதே தொடரில் உருக் கொள்ளும் குண நிலைகள்… கோடானு கோடியாக…
10.மறைபொருள் – விளைபொருளாக… பின் விளைபொருளின் முதிர்வு – உறைபொருளாகும் தன்மையில்… “ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டிட்டு”
11.கன பரிமாணம் கொண்ட திட அமிலம் உருவாக்கிடும் பூதியில்…
12.பல பல வளர்ச்சி கொண்டு புதிய புதிய கோளங்கள் உருக் கொள்வதும்
13.ஈர்ப்பின் சுழல் வேக சக்தி நிலையின் ஈர்ப்பாம்… அந்த அமில நிலை எதனை வேகம் கொண்டு அதனின் ஈர்ப்பின் திறம் வலுப்பெற்றதோ
14.அதற்கொத்த சமைப்பு நிலையின் வேகம் வலுக்கொண்டிடும்
15.ஜீவித வளர்ச்சி நிலை பெற்றிடும் உயிரணுக்களின் ஓர்மித்த கூட்டமைப்பாம்
16.சுழற்சி வேகம் “சுழற்சியே” சக்தியாகப் பரிணமிக்க…
17.பால்வெளியின் ஈர்ப்பின் செயல்… “சமைப்பினால் சுவாசமும்… சுவாசம் கொண்ட சுழற்சியில் வெப்பமும்” (பால்வெளியில் உராயும் பொழுது)
18.ஈர்ப்பின் அமில குணங்களும்… சமைப்பின் அமில குணங்களும்…
19.சுவாசம் கொண்ட சுழற்சியின் எதிர் மோதல் சந்திப்பில்
20.சூரியக் கோள்கள் உருக்கொள்ளும் செயல் முன்
21.பால்வெளியில் சங்கிலித் தொடர் போல் நிறம் மணம் குணம்…
22.எங்கும் எதிலும் படர்ந்துள்ள சகலத்திலும் வியாபித்துள்ள காந்தத்தின் சூட்சுமம் செயற்கொள்ளும் முன்
23.சகலமும் அதுவாக நின்ற… புதிர்களை விளக்குவோம்.

விண்ணின் சக்திகள் சிருஷ்டியின் விளையாட்டில்… உயர்நுண் ஒளி காந்த அணுக்கள் நீலவண்ண ஒளியாக ஆத்ம பதிவு நிலையாகத் தன்னுள் இட்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொண்ட மாமகான்கள்… உலகினுக்குப் போதனை எனும் பாங்கில்… புவியியல் உயிரியல் வானியல் என்று தம் தம் அனுபவ ஞான சிருஷ்டிகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஒளி அலைகளாகக் காற்றில் ஓடிக்கொண்டிருக்கும் அவைகளை ஈர்த்திடும் செயலில்… உத்வேக சக்தி பெற்றிடும் அதி உன்னத சூட்சும நிலை என்றே… பல வழிகளாக வகுத்து ஊட்ட வந்த “அந்த அமுத சுரபிகளை” உமக்கு ஊட்டுகின்றோமப்பா…!
1.எடுக்க எடுக்கக் குறைவு படாத அமுதம்…! ஞானமாம் அந்த அமுதத்தைச் சுரக்கின்ற சுரபி போல்…
2.“ஞானச் செல்வங்களின் நினைவு… உயர்ந்து நிற்றல் வேண்டும்…”

ஞானப் பசி தீர்க்கும் மாமகரிஷிகள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பாக்கியத்தை யார் பெற்றிடுவர்…?

அனைவரும் அதைப் பெறவே அன்பு கொண்டு அழைக்கின்றோம்.

வானியலை வகுத்துத் தந்த வான்மீகி மாமகரிஷி… அவர் கொண்டிட்ட அனுபவ உயர் ஞானச் செயல் ஆக்கத்தன்மைகளைக் கற்போரும் பெற்றிடவே… உணர்ந்தோருக்கும் ஊட்டிடவே… இங்கே உபதேச வாயிலாக உரைக்கின்றோம்.

அதைப் பெற்றுத் உயர் ஞானச் சித்தாகத் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திக் கொள்ளும் ஆன்மாக்களை… எமது சித்தத்தில் மகிழ்கின்றோம்.

காட்டரசன் ஆனவன் நாட்டரசனாக உயர்ந்து ஓதும் ஆன்மாக்களின் எண்ணத்தில் குடி கொண்ட ராஜிய பரிபாலன… சக்தி ஈர்த்து… சக்தி அளித்து…
1.சக்தியாக உருமாறும் காரண காரியங்கள் முறைகள் நிறைவாக அறிவோம்
2.வான்மீகி மாமகரிஷியின் அருளாசியை வேண்டிப் பெறுங்கள்…!

வலிமை மிக்க சக்தி எது…?

 

1.நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தன்னைக் காத்திடும் உணர்வுகளைச் சேர்த்து சேர்த்து
2.நூறு குணங்கள் ஒன்றாகித் தீமைகளை நீக்கிடும் உடலாக்கியது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினை மலமாக வெளியேற்றி… நல்ல மகிழ்ச்சி பெறும் உணர்வின் தன்மையை அறியும் அறிந்திடும் அறிவாக வைத்தது. இது ஆண்பால்… முருகா…!

பல கோடித் தீமைகளை நீக்கிடும் சக்தியாக… தீமைகளை நீக்கிடும் வலிமை பெற்றது இந்த மனித உடல். தீமைகளை நீக்கிடும் அந்த உணர்ச்சிகள் அது பெண்பால்… வள்ளி…! (வலிமைமிக்க சக்தி – வல்லி)

மனித உடலில் இருந்து நஞ்சை மலமாக்கும் தன்மை வரப்படும்பொழுது அது ஆண்பால் அதிலிருந்து அந்த உணர்வின் அறிவாக இயக்கப்படும் பொழுது பெண்பாலாக. ஆகின்றது.

அதற்குக் காரணப் பெயர் என்ன வைக்கின்றார்கள்…? “வள்ளி” அந்த வலிமைமிக்க சக்தியைப் பெண்பாலாக அப்படி வைக்கின்றனர். வள்ளி
1.அந்த வலிமைமிக்க சக்தி கொண்டு தான்
2.(அடுத்து) வலிமைமிக்க சக்திகளை நாம் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி… தீமைகளை நீக்கிடும் அந்த வலிமைமிக்க சக்தி பெற்று அது துருவ நட்சத்திரமாக ஆனான் என்பதனை மனிதனின் அறிவில் தெரிந்து கொண்ட ஞானிகள்…
1.இதை நமக்கு அறிவிக்க அந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்கள்.
2.அதை நாம் பதிவாக்கி விட்டால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற முடிகின்றது.

ஞானிகள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை முருகனாக வடிவமைத்து… அருவத்தின் சக்திகளை நாம் பெறுவதற்கு வழி காட்டினார்கள். ஏனென்றால் உயிரணு தோன்றி பல தீமைகளையும் கொடுமைகளையும் வென்று விஷத்தின் ஆற்றலை மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற்றது துருவ நட்சத்திரம்.

பாம்பினங்களோ தன் உடலில் உருவான விஷத்தை இன்னொரு உடலிலே ஊடுருவச் செய்து… அந்த விஷத்தின் இயக்கமாக அந்த உடலில் உள்ள விஷத்துடன் இதைப் பாய்ச்சி அதனுடன் ஐக்கியமாக்கி… அதை விழுங்குகிறது.

விழுங்கிய பின் ஜீரணித்து…
1.இந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து மீண்டும் விஷத்தின் சேமிப்பாகி
2.அதன் உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது… அது உறையும் தருணம் வந்தால்
3.சேமிக்கப்பட்ட அந்த விஷமே “நாகரத்தினமாக” மாறுகின்றது…!

பாம்பு பல உயிரின்ங்களின் விஷத்தினை அடக்கி… அதை எப்படி நாகரத்தினமாக (ஒளியாக) மாற்றுகின்றதோ… இதைப் போன்று பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நாம் எடுத்துப் பழகிக் கொண்ட உணர்வுகள்… நஞ்சினை மலமாக மாற்றிடும் உடல் அமைப்பாக உருவாகியது.

ஆக…
1.வலிமைமிக்க சக்தி கொண்டு நஞ்சினை நீக்கிடும் அந்தச் சக்தி பெற்றது மனித சரீரம்.
2.அதனால்தான் அந்த வலிமை மிக்க சக்தியை வள்ளி என்று காட்டினார்கள் ஞானிகள்.

இதைப் போல் அகஸ்தியன் தன் வாழ்நாளில் நஞ்சினை வென்று உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான். அகஸ்தியன் ஒளியாக ஆன ஆற்றலை வலிமைமிக்க சக்தி கொண்டு தான் நாம் அதைப் பெற முடியும்.
1.அதைப் பெற வேண்டும் என்று இப்போது நாம் ஏக்கம் கொண்டால்
2.நமக்குள் அந்தச் சக்திகள் அதிகமாகச் சேருகின்றது

அது தான் வசிஷ்டர்… கவர்ந்து கொண்ட சக்தி.

எந்த்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டுக் கவர்கின்றோமோ… அது நமக்குள் இணைந்து அருந்ததியாக
1.அவன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ
2.அதே வழியில் நாமும் அந்த அகஸ்தியனை போன்று ஒளியின் தன்மை பெற முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இப்பொழுது நான் (ஞானகுரு) இங்கே பேசுகின்றேன். இந்த உணர்வுகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது… வினையாக மாறுகின்றது.
1.இதை நீங்கள் நுகர்ந்து அறிந்தால் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.இந்த உணர்வுகளை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாறுகிறது உயிர்.

சிவனுக்கு முந்தியவன் விநாயகன்… சிவனின் பிள்ளை விநாயகன்…!

நான் சொல்லாகச் சொல்லும் உணர்வுகள் (வினை) இது முந்தியது… விநாயகன். உயர்ந்த உணர்வின் சக்தியை இப்பொழுது சொல்கிறேன். இந்த உணர்வின் தன்மையை நீங்கள் கேட்டு நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாகி உடலானால் இது சிவமாகின்றது.

ஆகவே சிவனின் பிள்ளை விநாயகன். இவ்வளவு தெளிவாக ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

1.நான் சொல்லும் உணர்வை நீங்கள் நுகரும் பொழுது அது சிவனுக்கு முந்தியது (அந்த வினை – விநாயகன்)
2.இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் அணுவானால் அது சிவனின் பிள்ளை விநாயகன்…!
3.உடல் சிவமாகிறது… இந்த உணர்ச்சிகள் வினை இயக்குகிறது என்பதனைத் தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள்.

இப்படிப் பல கோடிச் சரீரங்களில் நாம் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றோம் கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…! கணங்களுக்கு அதிபதி கணபதி…! என்று உயிரை வணங்கும்படி சொல்கிறார்கள் ஞானிகள்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் வரும் நஞ்சினை உடல் மலமாக மாற்றுகின்றது. நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வினை உடலாக மாற்றி நமக்குள் தெளிவாகிறது.

ஆகையினால் தான் இதைத் தெரிந்து கொண்ட உணர்வு கொண்டு அங்குசபாசவா…!
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின் அதனை அடக்கும் வல்லமை பெற்றது என்று
2.விநாயகர் கையில் அங்குசத்தைக் கொடுத்துள்ளார்கள்.

விஷத் தன்மை கொண்ட ஒரு கொசு என்ன செய்கிறது…?

மனிதனாக உருவாவதற்கு முன் விஷத் தன்மை அதிகம்.

யானையின் உடல் மேல் உள்ள தோல் மிகவும் வலுவானது.. ஆனால் இந்தக் கொசு அந்த யானைத் தோல் மீது அமர்ந்து தன் உடலில் உள்ள விஷத்தை அங்கே பாய்ச்சி அந்தத் தோலை அப்படியே விரியச் செய்து அதனின் இரத்தத்தைக் குடிக்கிறது.

யானை உடல் வலுப் பெற்றது. இருந்தாலும் தன் எண்ணத்தின் வலு கொண்டு அதிலிருந்து தான் தப்பிக்க வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொண்டு எண்ணத்தின் வலுப் பெறுகின்றது.

மண்ணை வாரித் தன் மீது வீசிக் கொள்கிறது.. வாலால் அடிக்கிறது… கொசுவிடமிருந்து தப்ப…!

இப்படிப் பல கோடிச் சரீரங்களில்…
1.”தீமையிலிருந்து விடுபட வேண்டும்..” என்ற வலுவான உணர்வுகள் கொண்டு எண்ணி எடுத்து
2.மாற்றியமைத்த உடல் தான் இந்த மனித உடல் என்று காட்டுவதற்கு
3.சாதாரண மனிதனும் புரிந்து கொள்வதற்கு யானையின் தலையை மனித உடலில் போட்டு விநாயகா என்று காட்டுகின்றார்கள்.

விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டு வைத்துள்ளார்கள். உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்து அவரின் உணர்வினை நுகர்ந்தால் மூஷிகவாகனா (மூச்சு).

அந்த உணர்வு ஆன பின் அதே உணர்ச்சிகளைத் தூண்டி அவருக்குத் தக்க உதவிகளைச் செய்யச் செய்கின்றது.

நுகர்ந்தறிந்த உணர்வுகள் கொண்டு அவருக்கு நாம் உதவி செய்தாலும் அவரின் வேதனை உணர்வுகள் நம் நல்ல குணங்களை வங்கிட்டு விடுகிறது. அதனால் தான் அங்கே எலியைப் போட்டு வைத்துள்ளார்கள்.

ஒரு குளவி கொட்டினால் புழுவின் உடலின் அணுக்களுக்குள் அந்த விஷம் எப்படிச் சேர்கிறதோ அதைப் போல்
1.இந்த வேதனை என்ற உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி விடுகிறது
2.அது வங்கிட்டுக் கொள்ளும்.. அதற்குள் குடியிருந்து கொள்ளும்
3.இதைக் காட்டுவதற்குத் தான் எலியைப் போட்டுக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் வளர்த்துக் கொண்ட “நல்ல குணங்களைக் காக்க வேண்டும்…” என்பதற்கே ஞானிகள் அருவத்தின் செயலை ரூபமாகக் காட்டி இப்படித் தெளிவாக்கியுள்ளார்கள்.

“மனிதன் தெய்வ நிலை அடைவதற்காகத் தான்” காவியங்கள் படைக்கப்பட்டன

 

உலகிலே உதித்த உடல் கொண்ட
1.உடல் தொடர்பின் வானியலை வழி வகுத்த மாமகரிஷிகள்
2.மனிதன் பெறுகின்ற பேறு என உண்மைகளை முழுவதும் பெட்டகத்தில் வைத்துப் பூட்டிடவில்லை.

தனித்து இயங்கும் ஆற்றலாக… முகிழ்விக்கும் ஞானம் செயற்கொண்ட வளர்ச்சியின் முதிர்வாக… மெய்ஞான அனுபவங்கள் உலகின் கண் செயல் கொண்ட காலத்தே…
1.உலகோதய வாழ்க்கை நெறி வழி மெய் ஒலி மெய்ஞானம் பிறந்திட…
2.க்ஷண நேர சலனம் அக்கணநேரம் என்பது படி…
3.பலன் உருவாக விளைய மீண்டும் மீண்டும் கூட்டிக் கொண்டிட்ட அனுபவ நிலைக்களன்களே (சான்றோர்) சாட்சி.

காவியமாகப் படைத்து அளித்திட்ட நிலைகள் எதற்கப்பா…?

இன்று சமுதாய சீர்திருத்தம் என்ற நிலையில் மக்கள் நலன் பெற உழைக்கின்றோம் என உரைக்கின்றவர்கள்… வாழ்வின் மாளிகை அமைக்கப் பெறும் அஸ்திவாரத்தைக் கூட அறிந்து கொண்டார்களா…?

வாழ்வின் நலன் காக்கும் ஒழுக்கம்… ஒழுக்கத்தின் வழி நற்பண்புகள்… அப்பண்புகள் நெறி கொண்டு சமைத்த பாசம்… சங்கட நிலை விலக்கி நீதியை நிலைநாட்டும் வீரம்… எதிர் மோதல் குணங்கள் நெருங்கிடாக் கவசம்… என சீரிய சிந்தனையாக தானம்… நெறி முறையை மாற்றிக் கொண்டிடும் செயல்களுக்குத் தக்க ஒறுத்தல் (தண்டனை) என்ற சட்ட நிபுணத்துவங்கள்…! இவை அனைத்தும் உலகிற்கு அன்புடன் அளித்திட்டாலும் “அதில் ஓர் சூட்சமம்” உள்ளது.

1.”ஒளி கொண்டு ஈர்த்தல்” என்றே தன் நிலையின் உயர்வைக் கூட்டிக் கொண்டிட…
2.வெளியிடாத காரியார்த்த உண்மைகளும் உண்டு.

வான்மீகி மாமகரிஷி மனிதன் தெய்வ நிலை பெற்றிடும் வளர்ச்சியின் வழியையே… குணங்கள் நிறங்கள் சூட்சும மணங்கள் என்று மகிழ்ச்சியுடன் அளித்திட்ட உண்மைகளை இனி உரைப்போம்.

அன்றோ காட்டுக்கு அரசன்… இன்றோ இராம ராஜ்ய ஜெப விசால அரசருக்கு அரசன்…! மூடமதி விலகிட “க்ஷண நேர சபலம்… மின்னலின் ஒளி என வித்தாக ஆனது…”

துருவ நட்சத்திரத்தின் பற்றை அதிகரித்துப் புவியின் பற்றைத் தகர்க்க வேண்டும்

 

நாம் பார்த்து கேட்டு நுகர்ந்த தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காதபடி தடுக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை துரிதமாக எடுத்து உடலுக்குள் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்க உதவும்.

இதை எல்லாம் அதிகாலையில் நாம் அதிகமாகப் பெருக்கி வர வேண்டும்
1.அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் பற்று நமக்குள் அதிகரிக்கிறது.
2.இந்தப் புவியின் பற்றை நாம் தகர்த்துக் கொண்டே வருகின்றோம்.
3.இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது.

இந்த உயிர் உடலில் சேர்த்த தீமையின் உணர்வுகளை… துருவ நட்சத்திரத்தின் அருகில் இந்தத் தீமைகள் செல்லப்படும் பொழுது
1.உடலில் பெற்ற தீமையின் உணர்வுகளைக் கருக்கிவிட்டு இருளை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது
2.எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அது மாற்றி விடுகின்றது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக உட்கொண்டாலும்… அந்த விஷம் அதற்குள் மீண்டும் சேமிக்கப்பட்டு நாகரத்தினமாக மாறுகின்றது.

அது போல் நமது வாழ்நாளில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கச் சேர்க்க… நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றது.

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்.

மிருகங்கள் தான் வாழ தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது அந்த உணர்வை வளர்த்து… அந்த உடலுக்குப் பின் மாற்று உடலாகப் பரிணாம வளர்ச்சிக்கு வருகின்றது.

மனிதரான நாம் அன்பும் பரிவும் கொண்டிருப்பினும் பிறருடைய நோய்களைக் கேட்டறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் வலிமை மிக சக்தி வாய்ந்தது… விஷம் கலந்தது.

அதை நாம் நுகர்ந்தால் அந்த விஷத்தின் உணர்வுகள் நம் நல்ல குணங்களுடன் கலந்து விடுகின்றது… பின் அந்த நல்ல குணங்களையும் வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய உணர்வுகள் கலக்கக் கலக்க மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் நலிந்து அந்த அணுக்கள் மடியத் தொடங்கும்… உடல் உறுப்புகளும் குறையத் தொடங்கும்.

குறைந்த உணர்வின் தன்மை இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது உயிர் உடலை விட்டுச் செல்லும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும்.

ஆனால்
1.அருள் மகரிஷிகள் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலை விட்டுச் செல்லும் ஆன்மா
2.எதன் வலுக் கொண்டதோ அதன் அருகில் அழைத்துச் செல்லும்.
3.அங்கே வெளிப்படும் தீமைகளைக் கருக்கிடும் உணர்வுகள் பட்ட பின்
4.இந்த மனித வாழ்க்கையில் நம் ஆன்மாவில் பட்ட தீமைகளைக் கருக்கி விட்டு
5.உயிரின் ஈர்ப்பு துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… பேரருள் பேரொளியாக அழியாத ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.

இந்த உயிர் தோன்றி மனிதனாக ஆன பின் தான் உயிர் முழுமை அடைகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றது. ஆகவே
1,நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
2.அந்த மகரிஷிகள் பெற்ற அழியா ஒளிச் சரீரத்தை நாமும் பெறுவோம்.

வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிப் பேரருள் பெற்று இல்லற வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு என்று நீங்கள் வாழப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று… சப்தரிஷி மண்டலத்தின் பேரருளைப் பெற்று… நீங்கள் இந்தத் தியானத்தின் மூலம் வலுவாக்கிக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

உதாரணமாக உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் இந்தத் தியானத்திலேயே இல்லாது இருந்தாலும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தோர் இந்தத் தியானத்தில் கலந்து கொண்டு… ஒருக்கிணைந்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அந்த உணர்வின் வலிமை கொண்டு அவர்களை விண் செலுத்த முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை உந்தித் தள்ளி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தால் அங்கே சென்றடைகிறது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு படர்ந்த பின் அந்த உணர்வின் தன்மையை அங்கே கரைக்கப்படுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக அங்கே நிலைக்கின்றது.

தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாளும் இவ்வாறு தியானித்தோம் என்றால் அவர்களும் பிறவி இல்லா நிலை அடைகின்றார்கள். அதே சமயத்தில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நம் உடலில் படரப்பட்டு
2.எந்த நோயுடன் அவர்கள் ஆன்மா பிரிந்ததோ
3.அவர்களுடன் பற்றுடன் பற்றியிருந்த அந்த உணர்வின் பரம்பரை நோயாக நமக்குள் இருப்பினும்
4.அந்த உணர்வுகள் இயக்காது நம் உடலுக்குள் அந்த அருள் ஒளியைப் பெற்று நோய் வளராது தடுக்க முடியும்.

ஏனென்றால் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ ஆஸ்த்மாவோ வலிப்பு நோயோ இது எல்லாம் பரம்பரை நோயாக வரும். அதனின் அணு தொடர்ந்து வரும்.

அது நமக்குள் வளராதபடி தடுக்க வேண்டும் என்றால் இந்த முறைப்படி அவசியம் அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்து பெரு வீடு பெரு நிலை என்ற நிலை அடையச் செய்தல் வேண்டும்.

48 நாளும் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒவ்வொருவரும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தத் தியானித்தால் அந்த ஆன்மாக்களும் ஒளிச் சரீரம் பெறுகிறது. அவர்கள் மூலம் நாமும் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

அவர்கள் உடலில் விளைந்த உணர்வுகள் நம் உடலில் இருப்பதை மாற்றிட அந்த அருள் ஒளியைப் பெருக்கப் பெருக்க உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்ற இது உங்களுக்கு உதவும்.

ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள். உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகளையும் சாப வினைகளையும் அகற்றிப் பழகுங்கள்.

உங்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து… அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்யுங்கள்.

அவர்கள் முன் சென்றால் அந்த உணர்வினை நாம் பின்பற்றினால் உடலை விட்டு எந்த நேரம் நாம் சென்றாலும் அதைப் பற்றுடன் பற்றப்படும் பொழுது
1.இந்தப் பிறவியிலேயே நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்
2.சப்தரிஷி மண்டலம் அடைய இது உதவும்…. இந்த உணர்வுகளை நாம் பெறும் தகுதியைப் பெற்றிடல் வேண்டும்.

ஏனென்றால் சிவ தனுசு என்று இந்த உடலின் பற்று கொண்டு அது வளர்ந்திடாது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் உயிரான விஷணுவில் உயிருடன் ஒன்றச் செய்தல் வேண்டும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு சிவ தனுசை வீழ்த்தி விஷ்ணு தனுசு என்ற உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் மாறுதல் வேண்டும்.

இது இராமாயணத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாம் இந்த முறைப்படி செய்தோம் என்றால்
1.இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித வாழ்க்கையில் வரும் சிறு சிறு குறைகளையும் பகைமைகளையும் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

அருள் ஒளி பெற்று இருளை அகற்றி… மகிழ்ந்து வாழும் உணர்வை ஊட்டி… மன பலம் கொண்டு உடல் நலம் கொண்டு நாம் வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

 

“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.

சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.

வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”

1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.

வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.

அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.

இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.

உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”

“மறைபொருள் விளக்கம் பெறும் கட்டத்தில் இருக்கின்றோம்…!”

 

வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!

ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.

வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.

வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”

அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.

அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.

1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.

வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.

1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”

மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்… அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.

1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
அ3.ச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.

ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.

1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.

தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.

கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.

அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அகஸ்தியன் அவன் கண்டுணர்ந்த நஞ்சினை வென்றிட்ட வழிகளிலேயே நாமும் செயல்பட வேண்டும்.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு மனமும் ஒன்றிட வேண்டும் என்று உணர்வின் தன்மையை வளர்த்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இரு உணர்வும் ஒன்றி ஒளியின் உணர்வாக உருவாக்கி எத்தகைய நஞ்சினையும் வென்றிடும் ஒளியின் தன்மை பெற்று ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவன் வழியிலேயே நாமும் சென்று எந்த நேரம் இந்த உடலிலிருந்து நாம் பிரிந்தாலும் பிறவியில்லா நிலை என்ற முழுமை அடைந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்திட நாம் ஒவ்வொரு நாளும் முயற்சிப்போம்.

இதை ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால் இந்த மனித வாழ்க்கையில் நமது செல்வம் நிலைப்பதில்லை நம் உடலும் நிலைப்பதில்லை.

நிலையில்லாத இந்த உடலுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டு தேடிய செல்வத்தைச் சீராக பயன்படுத்தத் தவறும் போது அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகி விடுகின்றது.

ஏனென்றால் நாம் சேமித்த செல்வத்தை நம் பிள்ளைகள் செலவழிக்கின்றார்கள் அல்லது கடன் கொடுத்தது திரும்ப வரவில்லை என்றால் அதன் வழி கொண்டு வேதனையைத் தான் எண்ணுகின்றோம்.

1.அந்த வேதனைப்படும் நிலையே நமக்குள் எதிரி என்ற உணர்வுகளை உருவாக்கி
2.செல்வத்தைக் காக்கும் செயலை இழந்து
3.உடலின் தன்மை கொண்டு நாம் செல்வத்தைச் சேமித்தாலும்
4.அதனால் வேதனை என்ற உணர்வுகள் நுகர்ந்து இந்த உடலையே அழித்திடும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தச் செல்வம் நம் உடலைக் காப்பதில்லை. அந்தச் செல்வம் நல்ல குணங்களையும் காப்பதில்லை. இருப்பினும் மனிதன் என்ற நிலையைச் சீர்குலையச் செய்து செல்வத்தால் பேரழிவு வருகின்றது.

செல்வத்தையே தேடும் நிலையோ அல்லது அதை நமக்குள் பெறும் நிலையோ வரும்போது
1.ஈகை என்ற நிலை வராது… இரக்கம் என்ற நிலைகளும் வராது…!
2.பண்பென்ற நிலைகளை அழிக்கப்படுகிறது
3.துன்புறுத்தும் உணர்வே அங்கே விளைகின்றது… ஒதுக்கும் நிலையே இங்கு வருகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் தன்மைகளத் தனக்குள் எடுக்கும் பொழுது செல்வத்தால் நமக்குள் தீமையின் தன்மை தான் வருகின்றதே தவிர நன்மை இல்லை.

செல்வத்தைப் பெற்றிருந்தாலும்… கடைசியில் செல்வத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்…! என்று பின்னாட்களில் வேதனை என்ற உணர்வே வருகின்றது.

ஆக… தேடிய செல்வத்தால் விஷத்தின் தன்மை தனக்குள் உருவாக்கப்பட்டு உடலிலிருந்து நாம் அகன்ற பின் விஷத்தின் உணர்வு அதிகரித்தால் மனிதன் சிந்தனையை இழக்கப்பட்டு மனிதனல்லாத உடலை உருவாக்கிடும் நிலையே வருகிறது.

இன்னொரு பற்று கொண்ட மனித உடலுக்குள் இந்த உயிரான்மா சென்றாலும்… எடுத்துக் கொண்ட வேதனைப்படுத்தும் உணர்வு கொண்டு ஒருவர் நமக்குக் கொடுக்கவில்லை என்றால் இவன் தான் என்னை வேதனைக்குள்ளாக்கினான் என்று எண்ணினால் அந்த உடலுக்குள் புகுந்து இதே வேதனை என்ற உணர்வை உருவாக்கி அதையும் வீழ்த்தத் தான் செய்யும்.

வீழ்த்திய பின் அடுத்து பாம்பினமோ தேளினமோ போன்ற நிலையை உயிர் உருவாக்கி விடுகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

ஏனென்றால் விஷத்தின் தன்மை அதிகரித்தால் அந்த விஷத்தின் துணை கொண்டு மற்றதைக் கரைத்து தான் உணவாக உட்கொள்ளும் இதற்கே உதவும்.

தன் உணவுக்காக ஊர்ந்து சென்று பிறிதொரு எதிரி என்ற நிலை தன்னை தாக்கிடாது அஞ்சி வாழும் நிலையில் நரக வேதனையே அது அனுபவிக்கின்றது. அத்தகைய நரக லோகத்தின் நிலைக்கு நம் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

1.ஆகவே பல கோடிச் சரீரங்களைக் கடந்து
2.சொர்க்க பூமியாக சொர்க்க உடலாக சொர்க்க லோகமாக உருவாக்கிடும் உயிரை நாம் மதித்திடல் வேண்டும்
3.தீமைகள் நமக்குள் உருவாகாதபடி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை உருவாக்க வேண்டும்.

ஆக்ஞா சக்கரம் (ஆக்ஞை – ஆணை)

 

1.”சூட்சும இரகசியங்கள்” செயல்படுகின்ற காரியத்தன்மைகள் அகம் புறம் இரு நிலைகளிலும்
2.நாவின் சூட்சமம்… ஒலி நாத செயலாகச் சிரசின் உச்சியில் நடிக்கின்ற (இயக்கம்) சிவ நடனம் காட்டுவதன் மறைபொருள் என்ன…?

அஷ்டமம் என்பது எட்டாம் இடத்தின் நிலை. எட்டு என்பதே பூரண சந்திரனைக் குறிக்கும். சந்திரன் வியாபகமாக “நீல வண்ண ஒளித்தன்மை நிலைபெற்றிடும் வாழ்வு…”

இதையே இன்றைய காலகட்டத்தில் ஜோதிட விற்பனர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அஷ்டமத்தில் சனி என்றும்… செவ்வாய் என்றும்… சித்தன் காட்டிய பேருண்மைகளை வேறு பொருள் காட்டிவிட்டனரப்பா.

“சரீரத்தின் ஆதிக்க நிலை” – சூரிய சக்தியின் ஒளி பெறும் சந்திரன்… தன் சுயப்பிரகாச நிலையை அதனுள் உள்ளிட்டு (தனக்குள் எடுத்து) வெளிப்படுத்துதல் போல்… அனிமாது (அஷ்டமாசித்து) சித்துக்கள் கொண்டு உயர் நிலை வளர்ச்சி பெறுதல் என்பதில் கடைப்பிடிக்க வேண்டிய காரிய நிகழ்வுகளும் உண்டு.

அறிந்து தெளிந்திட… சிந்தனையை அதன் ஓட்டத்தைச் செலுத்திடத் தான் வேண்டும். பிரம்மத்தின் நின்று சித்து கிளைத்த விந்தையாம் “விந்தை அடக்கு…” என்பார் வேதாள மகரிஷி.

ஓர் கனியினைச் சுவைக்கின்றோம். சுவைத்து அந்தக் கனியின் சுவையின் பொருள் அறிகின்றோம். அந்தக் கனியின் சுவை உண்டான முறையை உணர்தல் என்பதே சூட்சுமம்.

கனிவு என்பது நாம் உரையாடும் வார்த்தைகளினால் வெளிப்போந்து வந்து… உள்ளத்தின் தன்மைகளை உணர்த்துகின்றோம்.
1.இந்நிலை உருவாகின்றதே… உள்ளத்தில் அங்கு இருக்கின்றது சூட்சமம்.
2.உயர் ஞான சக்தியை உணர்ந்து கொண்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பக்குவங்கள் அதனில் அடங்கும்.

“விந்தையாம் விந்தை அடக்கு” என உரைத்ததில் பொருள் உண்டு. சித்துக்களின் செயல்பாடு ஒவ்வொரு நிலையைக் காட்டும்.

ஓசை என ஓர் கலை உண்டு.
1.ஓங்காரப் பொருள் காட்டும் அதன் தத்துவம் “நாவின் அடி சூட்சுமம்…” இந்நிலை பிரம்மம் என உரைப்பர்.
2.அதனைச் செயல்படுத்துகின்ற சக்தியானது கண்டத்தின் சூட்சுமத்தில் உள்ளது.
3.நாபிக் கமலத்திலிருந்து மேல் எழுகின்ற பிரம்ம இலய நாதம்
4.கண்டத்தின் சக்தியைத் தூண்டி நாவின் பிரம்ம நிலையில் வியாபித்து
5.ஆக்ஞா சக்கரம் என்ற அறுகோணக் கருவறைரை நெற்றியினுள் எண்ண சிவம் நடிக்கும் (இயக்கும்).

தீமைகளை நீக்க வேண்டும் என்றால் “அதற்குண்டான முயற்சி” அவசியம் தேவை

 

ஒரு காரியத்தை மனமுவந்து செய்ய விரும்பினோம் என்றால் அதை எளிதில் செயல்படுத்த முடியும்.
1.ஒருவரைக் கட்டாயப்படுத்தி “நீங்கள் இதைச் செய்யுங்கள்…” என்று சொன்னால் அங்கே அந்த மனம் குறையும்.
2.இவர் என்ன சொல்வது…? நான் என்ன செய்வது…? என்று வந்துவிடும்.
3.சொல்லும் பொழுது அழுத்தமாகி அதிர்வாகி அந்த நிலை ஆகிறது.

ஆனால்… மனதை ஒன்று சேர்த்துச் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த இயக்கம் வலிமை பெறுகின்றது.

ஒரு காரியத்திற்கு நண்பர்களாகச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். “அவர் செய்கின்றார்… நாமும் செய்வோம்…” என்று எண்ணம் கொண்டு செயல்படுத்தத் தொடங்கினால் அங்கே மகிழ்ச்சி வருகின்றது.

நீங்கள் இருங்கள் நான் செய்கிறேன் என்று சொல்வார். அது அல்லாதபடி நான் இதைச் செய்கிறேன் நீ இதைச் செய் என்கிற பொழுது “நீ என்ன சொல்வது…?” என்ற அந்த உணர்வு வந்து விடுகிறது.
1.இருங்கள்… நான் செய்கிறேன் என்று சொல்லப்படும் பொழுது
2.இல்லை… நானும் செய்கிறேன்…! என்று சொல்ல வருகின்றது
3.அப்பொழுது ஒன்றுபட்டு இயங்கும் நிலை வருகின்றது.
4.தியானம் இருப்போர் நம் எண்ணங்களை இவ்வாறு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவி இந்த உணர்வு கொண்டு ஒன்றி வரப்படும் பொழுது இந்த உணர்வின் நினைவாற்றல் பெருகப் பெருக… குடும்பப் பற்றும் வரும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்

அவ்வாறு வந்துவிட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் தொழில் வளமும் மற்ற அனைத்துமே சீராக வரும். அனைவரையும் மகிழ்ந்து வாழ செய்யும் சக்தியாக… நம்மையும் மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக… நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.

1.இத்தகைய நல்ல உணர்வலைகள் வீட்டிற்குள் பரவப் பரவ நம் வீட்டின் தரைகளிலும் சுவர்களிலும் புவிஈர்ப்பிலே பதிந்து
2.நாம் பேசிய அந்தப் பேச்சு மூச்சும் அவ்வாறு பரவும் போது “நம்முடைய உணர்வே நமக்குப் பாதுகாப்பாக (ஓசான் திரையாக) மாறும்…”

நாம் வெளியில்… ரோட்டிலோ அல்லது வாகனங்களிலோ செல்லும் போது அசம்பாவிதங்களைப் பார்க்கின்றோம்… அல்லது பத்திரிக்கை டிவி வாயிலாக அதைப் பார்க்கும் போது அந்த விஷத்தின் தன்மை அதிகமாகக் கவர்ந்து விடுகிறோம்.

“அதே உணர்வுடன்” வீட்டிற்குள் வரும் பொழுது அத்தகைய அசுத்தமான உணர்வுகள் நம் வீட்டில் பதிவாகி விடுகின்றது.

அதே சமயத்தில் ஒரு அசுர உணர்வு கொண்டவர் பேசுவதைப் பார்ப்பதையும் கேட்பதையும் நுகர்ந்து… அந்த அறிவின் தன்மை வந்தால் நம் உடலுக்குள் வரப்படும் பொழுது இதே போன்ற மூச்சலைகளாக வீட்டிற்குள் பதிவாகி விடுகிறது.

அப்படிப் பதிவாகி விட்டால்…
1.வீட்டிற்குள் நாம் நுழைந்தாலே நம் நல்ல உணர்வைத் திசை மாற்றிவிடும் “நம்மை அறியாமலே…”
2.நாமல்ல…! சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் அவரவர்கள் சந்திக்கும் நிலைகளுக்கொப்பத் தான் இதனுடைய நிலைகள் வருகின்றது.

இதை எல்லாம் மாற்றிட… ஒவ்வொரு நாளும் கூட்டுத் தியானம் இருந்து கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ்ந்திடும்… ஒன்றான இயக்கத்தை உருவாக்கி விட்டால்… நம்மைச் சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லும்.

இல்லை என்றால் நுகர்ந்த உணர்வின் இயக்கமாக… பற்றென்ற நிலை வரப்படும் போது… நம்மை அறியாமலே விஷத்தின் தன்மையாக்க் கவர்ந்து… கணவன் மனைவிக்குள் வேற்றுமை உருவாகி… நம் நல்ல உணர்வுகளை… ஒன்று சேர்த்து இயக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

மன வேற்றுமை கொண்டு அடுத்து செயல்பட்டால் தொழிலும் சீராக வராது. நஷ்டமாகும் போது மீண்டும் அதிகமான சோர்வும் வேதனையும் தான் வரும்.

இதே உணர்வுகளைக் குழந்தைகள் மேல் பாய்ச்சப்படும் பொழுது இந்த குழந்தைகளும் நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை வரும்…. ஒன்று சேர்த்து வாழும் நிலை இல்லாது போய்விடுகிறது.

இதைப் போன்ற நிலைகள் இருந்தெல்லாம் நாம் விடுபடுவதற்குத் தான் உபதேச வாயிலாக உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருவது.
1.அதன் வழியில் அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்டு வாருங்கள்…
2.அதற்குண்டான முயற்சிகளை எடுங்கள்… முயற்சி எடுத்தால் தான் தீமைகளிலிருந்து மீள முடியும்.

ஒரு கட்டிடமே கட்ட வேண்டும் என்றால் மேடு பள்ளங்களைச் சமப்படுத்தித் தான் கட்டுகின்றோம். ஒரு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றாலும் சமமான நிலைகள் கொண்டுதான் அதை இயக்க முடியும்.

இதே போன்று ஒரு குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றால் “நமது முயற்சி” கணவன் மனைவி ஒன்று சேர்த்து வாழ வேண்டும் என்ற நிலையில் இருவரும் ஒன்றி… அப்படி வளரச் செய்யும் பருவத்தைக் கொண்டு வர வேண்டும்.
1.அப்படிக் கொண்டு வந்தால் தான் குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீக்க முடியும்…
2.எதிர்நோக்கி வரும் சில தீமைகளையும் அகற்ற முடியும்
3.எத்தகைய நிலைகள் இருந்தாலும் அதை வெல்லும் சக்தியாக இருவருக்குள்ளும் வருகிறது.

பெண்களின் உணர்வுகளும் கணவனுடைய உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்தால் “எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…”

இப்படிப்பட்ட ஒன்றுபட்ட உணர்வு வரும்பொழுது தீமை என்ற உணர்வு குடும்பத்திற்குள் வந்து இருவரையும் பிரிக்கும் நிலையோ நோயாக மாறும் நிலையோ வராது.

ஆனால் என் மனைவி இப்படி இருக்கிறதே அல்லது என் கணவர் இப்படி இருக்கின்றாரே…! என்று எண்ணினால் வேதனையான உணர்வுகள் நமக்குள் ஊடுருவி அதீதமான தீமைகளாக விளைந்து அதுவே நோயாகிவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். அருள் வழியில் பற்றை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று இருவருமே ஒன்று சேர்த்து
1.கணவன் ஒளி பெற்று உயர வேண்டும்
2.மனைவி அந்த அருள் ஒளி பெற்று உயர வேண்டும்
3.எங்கள் இரு மனமும் இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எண்ணிப் பழக வேண்டும்.

இவ்வாறு “எவரொருவர்” குடும்பத்தில் செயல்படுத்துகின்றனரோ அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் மகிழ்ச்சியும் வரும். குழந்தைகள் ஞானக் குழந்தைகளாக வளருவார்கள்.

நம்முடைய சொல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரும். எந்தச் செயல்கள் செய்தாலும் அது எல்லாம் வளர்ச்சியின் பாதையிலே செல்லும் சீராக வரும். விவசாயம் செய்தாலும் பயிர்கள் நல்ல மகசூல் தரும்.

இதையெல்லாம் நாம்
1.குடும்பத்தில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்து நிரூபித்து காட்ட வேண்டும்
2.குரு கொடுத்த அருளின் துணை கொண்டு எல்லாவற்றையும் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்றுடன் ஒன்று இணைந்து எண்ணிலடங்காத் தாவர இனங்கள் உருவாகி அதை உயிரினங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக உருப்பெறுகின்றது.

மனித உடல் மடிந்த பின் இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அழுகிய நிலைகள் ஆகும்போது அதிலே புழுக்கள் உருவாகின்றது.

அந்த உடலை உருவாக்கிய அணுக்களை எல்லாம் அது உணவாக உட்கொண்டு அதுவும் மடியும் போது அந்த மடிந்த நிலைகள் கொண்டு மற்றொரு ஆகாரத்தை எடுத்து அந்தப் புழுக்கள் பூச்சிகளாக மாறுகின்றது.

அது போன்ற புழுக்களின் தன்மை மடிந்த நிலையில்… மழைக்காலம் வந்தால் வெப்பமும் மற்றதும் இணைந்து கொண்டபின் பல பல பூச்சிகள் உற்பத்தியாவதைப் பார்க்கலாம்.

இதிலே பெரும்பகுதி மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவு தானியங்களில் இது பட்டால் அதை எல்லாம் அழித்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்பதை குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் செல்லப்படும்போது அக்காலங்களில் எவ்வழியில் மனிதன் வளர்ந்தான்…? மனித உடலில் விளைந்த நிலைகள் எவ்வாறு அலைகளாகச் செல்கின்றது…? என்று காட்டினார்.

1.மனிதனாக வளரும்போது உடலில் அணுக்களாக இருக்கின்றது.
2.மடிந்தால்… உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின்
3.தனித்து அதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் அந்த உணர்வின் அணுக்களின் தன்மை எதுவோ
4.அதற்குத்தக்க புழுவின் தன்மை அடைகின்றது.

அந்தப் புழுக்களும் மடிந்த பின் இந்த உணர்வின் தன்மை கொண்டு மீண்டும் மற்ற தாவர இனங்களில் விழுந்து அதை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றது..

தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் புழுத்தன்மையை அடைந்தபின் இந்த உடல் மடிந்தால் இது நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப பூச்சிகளின் ரூபங்களாக வருகின்றது.

பார்க்கலாம்… பல விதமான புழுக்களையும் பூச்சிகளையும்…!
1.மழைக் காலத்திற்கு முன்னாடி இருக்காது
2.மழை பெய்த பின் புவியின் வெப்பத்தின் தன்மை கொண்டு… இந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு…
3.உருவாகும் சக்தி பெறுகின்றது…! என்பதனைக் குருநாதர் காட்டுகின்றார்.

இந்த உண்மைகளை குருநாதர் எவ்வாறு காட்டுகின்றார்…?

அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த உணர்வின் தன்மை வெளிப்பட்டு அவன் அறிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

குருநாதர் அதைப் பின்பற்றி எடுத்து அந்த உண்மையின் உணர்வை வெளிப்படுத்தும் போது எமக்குள் பாய்ச்சினார்.
1.சூட்சுமத்தில் நடப்பதைக் காட்சிகளாகவும் அந்த உணர்வை நுகர்ந்தபின்
2.நுகர்ந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையையும் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவு கொண்டு கற்றுணர்ந்த பின் ஆய்வுக்கூடத்தில் (LABORATORY) வைத்து மனித உடலில் பல பல பரிசோதனைகளைச் செய்கிறார்கள்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றது… பித்தப்பையில் கற்கள் உருவாகின்றது… என்றால் கற்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன…? என்று அன்று மெய்ஞானி கண்டான்

நம் உடலுக்குள் வரும் நோயை போக்க பல விதமான ஆங்கில மருந்துகளை இன்று உட்கொள்கிறோம். இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது அந்த உணர்வின் சத்து இரத்தங்களில் கலந்து உடல் முழுவதும் சென்ற பின் பித்தசுரபி அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் வடிக்கின்றது.

அப்படி வடிக்கப்படும்போது உறைக்கும் உணர்வு கொண்ட மருந்து அங்கே சேர்ந்தபின் அது உறையும் தன்மையாக வருகின்றது. பித்த சுரபிகளில் கற்களாக உருவாகின்றது.

அதே சமயத்தில் இரத்தத்தில் கலந்து வருவதைக் கிட்னி அது சுத்திகரிக்கக்கூடிய நிலை வரும்போது உப்புத் தன்மை அடைந்திருந்தால் அங்கேயும் உறையும் தன்மை அதிகரிக்கின்றது.

பின் சிறு மணலாக மாறினால் அதனின் வளர்ச்சியின் தன்மை கல்லாக மாறுகின்றது… ஒரு சிலருக்குப் பெரும் கல்லாகக் கூட மாறுகின்றது.

இது எல்லாம்…
1.இந்த இயற்கையின் நிலைகள் ஒவ்வொன்றும் தான் சுவாசித்த நிலைகளும் உணவாக உட்கொள்ளும் நிலைகளும்
2.தான் வாழ்க்கையில் மற்ற உணர்வின் தன்மைகளைக் கவர்ந்திருந்தாலும்
3.அந்த உணர்வுக்குள் ஏற்படும் இரத்தத்தின் கசிவுகளை (உப்பு நீராகக் கசிவது போல்) இது எப்படி மாற்றுகின்றது…? என்று குருநாதர் காட்டுகின்றார்.

காரணம்… சந்தர்ப்பத்தால் பிறர் வேதனைப்படும் உணர்வுகளையோ சலிப்பு கொண்டவர்களையோ நாம் காண நேர்கின்றது. உதாரணமாக ஒரு சிறுநீரகக் கோளாறு உள்ள மனிதனை உற்றுப் பார்க்கின்றோம்… பழகுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதிகமாக அவரிடம் பழகி இருந்தால் அவனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகரப்படும் போது அவன் உடலில் உணர்வான அந்த உறையும் தன்மை நமக்குள்ளும் வருகின்றது.

1.ஆனால் டாக்டர்கள் பார்க்கப்படும்போது
2.நோயை நீக்க வேண்டுமென்ற உணர்வு வரப்படும்போது இதைக் கவர்வதில்லை.
3.ஒரு இரக்கம் ஈகை கொண்ட டாக்டர் இதை உற்று நோக்கி அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தால் அவருக்கும் இதே நோய் வரும்.

ஆகவே இதைப் போல் தான் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் கலந்து நம் இரத்தநாளங்களில் கலக்கப்படும்போது
1.ஒன்றில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் அதே செயல்களாகச் செயல்படுகின்றது என்று
2.இதையெல்லாம் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர்.

“திருமால்” எனும் தெய்வப் பேறு

 

இயற்கையின் படைப்பில்… ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான) செயல் கொள்கின்றான்.

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்…
2.மூச்சு – ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் – உண்டிடும் உண்டி… அருந்திடும் நீர்… சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.

மேல் நோக்கியது – தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.

இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு… தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக… தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்…
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் – உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் – போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.

இந்நிலை பெறுகின்றவர்… நெறிப்பயிர் விளைவாக்கும் “கிழார்” என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.

எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில்… சுவாசக் காற்று என்பதின் தொடர்பு… “தூங்காமல் தூங்கி அரிதுயில்” எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?

பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்…
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக…
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.

“உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக “இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து” என்பார்.

அதாவது… மகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் “அநேக விளக்கங்கள்” உண்டு.

இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள்… கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் – மனத்தின் பிரிவு கொண்டதாம்.

இருந்தாலும்… எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை… சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.

இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம்… ஒன்று கலந்திடும் தன்மையாக
பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.

சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு… எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட… அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய… எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.

தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு… கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்

முகம் காட்டிடும் கண்ணாடி… தான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?

1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது “கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது “கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் “ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக “அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி/… தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான்… பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.

பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட… குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று… ஓடியாடி வளர்ந்து… இசைவாக எண்ணம் கொண்டு… உறுதியின் நிலை நிற்றலை…
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே “அனைவரையும் அழைக்கின்றோம்…”

எல்லாவற்றையும் தூய்மை செய்கிறோம்… நமது ஆன்மாவைத் தூய்மை செய்கிறோமா…?

 

அன்றாடம் நம் வீட்டை எவ்வாறு தூய்மைப்படுத்துகின்றோமோ அது போன்று நம் ஆன்மாவையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும்.

1.வீட்டைத் திறக்காது சில காலம் பூட்டி வைத்து விட்டால் நெடி ஏறிவிடும்
2.அடுத்து அங்கே உள்ளே செல்ல வேண்டும் என்றால் “நுழையும் பொழுதே சங்கடமாக இருக்கும்…”

அதே போன்று நாம் தினசரி குளிக்காமல் இருந்தால் உடலில் அசுத்தங்கள் ஏறிவிடும்… மேலெல்லாம் அரிப்பாகிவிடும். நம்முடைய உடைகளையும் அவ்வப்போது தூய்மைப்படுத்தவில்லை என்றால் அழுக்கு ஏறி… துணியே இத்துப் போகும்.

அதைப் போன்று தான் நம் ஆன்மாவையும் அடிக்கடி அந்த அருள் ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு நாம் தூய்மைப்படுத்துகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் “பேரருளாக மாறும்…”
2.எதையுமே நல் சொல்லாகும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.
3.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
4.நம் சொல்லின் உணர்வுகள் பிறருக்கு நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் “பேரொளி…” ஆக… அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளர்ந்து பேரொளி என்ற நிலை அடைகின்றது. ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இல்லற வாழ்க்கையில் அருள் வழி வாழுங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழும் நிலைக்கு வரவேண்டும். அதற்குண்டான வழிகளை… உபாயங்களைக் கூட்டுங்கள்.

கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் அந்த ஊருக்கு மட்டுமல்ல… தெருவுக்கு மட்டுமல்ல… வீட்டுக்கு மட்டுமல்ல… எல்லோருக்கும் நன்மை பயக்கும் சக்தியாக வருகிறது.

இது போன்று
1.ஒரு பத்துக் குடும்பங்கள் ஒன்றுபட்டு வாழும் நிலை வந்தால் அந்தத் தெருவே பரிசுத்தமாகும்..
2.அங்கிருக்கக்கூடிய மக்களும் தெளிவடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாது சேரும் பகைமை உணர்வை மாற்றிடும் சக்தி பெற முடியும்.

அந்த வீடோ தெருவோ ஊரோ சொர்க்கலோகமாக மாறும். மற்றவர்கள் அங்கே வந்தாலும் அவர்களுக்கும் அங்கே ஒரு மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வரும். ஆகவே… தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் குடும்பங்களில் முதலில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் “இரண்டு பேரும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…” என்று முயற்சிகளைக் கொண்டு வாருங்கள்.

மனித வாழ்க்கையில் எத்தனையோ அன்பும் பண்பும் கொண்டு வளர்ந்த நாம்… பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து அதைப் பதிவாக்கி இருப்பதனால் பிறருடைய ஆன்மா… அதாவது உடலை விட்டு சென்ற பின் அது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
1.வந்த பின் அதனின் உணர்வை நம்மை அறியாமலே இயக்குகின்றது
2.நல்லதைப் பேசும் உணர்வுகளை அது மாற்றி விடுகின்றது.

ஆகவே எல்லோரும் ஒன்றுபட்ட உணர்வு கொண்டு கூட்டுத் தியானம் இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுத்து “மன உறுதி” வரும்படி செய்ய வேண்டும்.

பின்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அந்த ஆன்மா பெற வேண்டும்… அந்த உடலில் இருந்து அவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாருடைய உடலிலாவது இப்படி வித்தியாசமான மன நிலை இருந்தால் கூட்டுத் தியானங்கள் அமைத்து அவரை எண்ணி ஒரு பாலை வைத்துத் தியானம் இருக்கச் செய்ய வேண்டும்.

தியானித்து முடிந்த பின் அவருக்கு அதைக் கொடுத்து… பாலைப் போன்ற தெளிந்த மனம் பெற வேண்டும் அந்த உடலில் இருக்கக்கூடிய ஆன்மா தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை வளர்த்து அங்கே பாய்ச்சிப் பாருங்கள்.

இவ்வாறு செய்தால்
1.நமக்குள் எத்தகைய நிலை இருந்தாலும் அருள் வழியில் வலிமை பெற்ற அணுக்களாக மாற்ற முடியும்
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.

உங்கள் உயிர் ஈஸ்வரலோகமாக இருக்கின்றது… எண்ணியது எதுவோ அதன் உணர்வினைக் கருவாக உருவாக்கி வளர்க்கும் சக்தியாகச் செயல்படுகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதன் உணர்வையே வளர்க்கிறது

ஆகவே இந்த இல்லற வாழ்க்கையில் அருள் வாழ்க்கை வாழ்ந்து நாம் அனைவரும் பிறவியில்லா நிலை அடைவோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பல கோடித் தாவர இனங்கள் வளர்ச்சிக்குப் பின் பல கோடி உயிரினங்கள் உருவாகி… உணர்வுக்கொப்ப உடல் பெற்று அதிலிருந்து உணர்வின் எண்ணங்கள் ஏராளமாக உண்டு.

1.மற்ற உயிரினங்கள் நுகர்ந்தது… ஒரு உடலுக்குள் ஒரு உடல் ஐக்கியமாகி விடுகின்றது
2.ஆனால் மனித உடலுக்குள் உருவான உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தது.

அதை எல்லாம் சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்தந்த உணர்வைத் தாங்கி இன்றும் அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது “சூரியனின் இயக்கச் சக்தியாக…”

சூரியனைப் போல் தான் நாம் உயிரின் தன்மையும்…!

நாம் எதை எல்லாம் நுகர்கின்றோமோ இந்த உயிரின் துடிப்பால் அதை இயக்கிக் கொண்டே உள்ளது… அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது.
1.உடலை விட்டு உயிர் வெளியே சென்றாலும்
2.இந்த உடலின் தன்மை கரைந்தாலும்
3.உயிருடன் இந்த உணர்வுகள் நிலைத்தே இருக்கும்.

அதாவது… இந்த உயிருடன் நிலைத்து இருந்தாலும் இந்த உணர்வுக்கொப்ப உடல் இல்லை என்றாலும்… “உடலில் வேதனைப்பட்ட உணர்வுகள் அதிலே நிச்சயம் உண்டு…”

ஒரு மனிதன் உடலுக்குள் இது சென்றால் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அங்கேயும் அதே உணர்வாக இயக்கும்.

ஒரு இயந்திரத்தில் நாம் ஒரு நாடாவில் பதிவு செய்து கொள்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அதையே நீங்கள் எடுத்து மற்ற இயந்திரங்களில் போடும் போது அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ட்ரான்சாக்ஸன் கொடுத்து ஒலி/ஒளிப்பதிவைப் பதிவாக்கவும் ஒலி அலைகளைப் பெருக்குவதும் உணர்ச்சிகளைத் தூண்டுவதும் என்று பல செயல்களைச் செயல்படுத்துகின்றோம்.

ஒரு மைக்கின் (MIC) வழி கூடி நாம் சொல்வது போல…
1.இயந்திரமான இந்த உடலுக்குள் ஒரு மனிதனுக்குள் விளைந்த உணர்வை நுகரப்படும் போது
2.உயிரான காந்த ஊசியில் இந்த உணர்வலைகள் படர்ந்து அதன் மூலமாக
3.அந்த எண்ணங்களை அந்த உணர்ச்சிகளையும் நாம் அறிகின்றோம்.
4.அறிந்தாலும் இதை உயிர் உடலுக்குள் ஜீவ அணுக்களாக மாற்றி விடுகின்றது.

இந்த இயற்கை நிலைகளை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன் அவனில் வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே உண்டு.

மனிதனாக வளர்ந்தவர்கள் தீமைகளை விளைய வைத்தாலும் சரி… தீமையினுடைய உணர்வுகள் அவர்கள் உடலிலிருந்து வந்தாலும் சரி… அடுத்தவர்கள் உடலுக்குள்ளும் ஊடுருவி… அங்கும் அது விளைந்து… அதன் உணர்வுகள் இவ்வாறு பரவிக் கொண்டே தான் இருக்கின்றது… அழிவதில்லை…!

ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டான் என்றால் அந்தத் தற்கொலை செய்து கொண்ட உணர்வின் அலைகள் வெளிப்படும்போது
1.ஒரு மனிதன் பாசத்தால் அந்த உணர்வைக் கவர்ந்து கொண்டால்
2.அதே தற்கொலை செய்யும் உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு
3.இவனையும் தற்கொலை செய்யும் நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தற்கொலை செய்யும்போது… அவன் உடலை எப்படிச் சிதையச் செய்ததோ இதே உணர்வுகள் வெளி வந்தபின் இதே சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

எப்போது… எந்த மனிதன் சோர்வடைந்து… என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பு அடைகின்றானோ அப்பொழுது இந்த உணர்வுகள் ஊடுருவுகின்றது.

அதே உணர்வுகள்… அதே உணர்ச்சிகள் அவனை இயக்கி… அவனையும் தற்கொலை செய்யும்படி செய்கின்றது. அவனாக அதைச் செய்வதில்லை. (உள் புகுந்த அலைகள் தான் இயக்குகிறது)

இந்த உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் எண்ணங்கள் செயலாக்கி அவனை அறியாமலே அந்த உடலைத் தற்கொலை செய்ய இயக்குகின்றது.

அதைப் போலவே… தீமைகள் வரும்போதெல்லாம்
1.நாம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்று எண்ணி
2.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்தால்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதன் உணர்வை நாம் கவர்ந்தால்
4.நமக்குள் தீமையை அகற்றும் உணர்வின் வலுகூடும்.

ஏனென்றால் வலிமை கொண்ட உணர்வுகள் கொண்டு அதை அடக்கி விட்டால் நமக்குள் தீமையை அடக்கும் சக்தியாக அது மாறி… அந்த உணர்வின் ஞானமாக நமக்குள் இயக்குவதும்… நம் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் இது உதவும்.

“சதாசிவ மண்டலம்” எனும் சப்தரிஷி மண்டலம்

 

ஒலி கொண்டு ஒளி பெற்று… ஒலி ஒளியாக ஆத்ம வலுக் கொண்டு… சீரிய சுடர்தல் எனும் நிலையாகத் தன்னை வளர்த்து… உயர்நிலை கொண்டிடும் ஒலி(ளி) ஜீவன்கள் ஒன்றாக மிளிர்ந்திடும் சூட்சும உலகே “சதாசிவ மண்டலம்…” (சப்தரிஷி மண்டலம்)
1.ஆதி சக்தியின் வளர்ப்பையே வளப்பாக்கும் செயல் கொண்டு
2.பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டிட்டவர்கள் அவர்கள் தான்…!

அவர்களுடன் இணைந்து…
1.வளர்ப்பின் பக்குவத்தில் தன்னை வளர்த்திடும் உயர் ஞான எண்ணம் கொண்டிடும் ஜீவன்கள்
2.அந்த மகான்கள் அருள் எனும் ஒளி நெறி கண்டு… தாமும் அந்த நிலை பெற்றிடவே
3.பேரருள் பேரொளி கொண்டு சிவமாக… “தான் சமைத்து” சிவ சூரிய நிலை என்னும் உயிராத்ம உயர் ஒளி நிலை பெறுவர்.

இங்கே உபதேசிக்கும் நிலை கொண்டு மெய்ஞான முகிழ்விப்பாக சக்திகளை வளர்த்திடும் ஆத்மாக்கள்
1.அந்த மகான்களுடன் தொடர்பு கொண்டு
2.ஈஸ்வரர் நெறி நின்று வளர்வது கண் கூடு.

மதங்கள் எனும் போர்வை போர்த்திக் கொண்ட பற்பல தத்துவ விசாரங்களும்… “படைப்பின் படைப்பு” எனும் சூட்சுமத்தைக் கூறத்தான் செய்கின்றன.

இருந்தாலும்… தவ நெறியில் நிற்காத தன்மையினால் அதனைக் கொள்பவர் இன்றி… விட்டேத்தியான வாதங்கள் புரிந்து வேடமிடும் நிலையில்… உண்மையின் பொருள் உணர்ந்தார் இல்லை.

இறை சக்தியின் முன்பு உரையாடினார் என்றும்… உலகக் கோட்பாட்டின் மாய இருள் விலக்க உண்மையின் பொருள் கொணர்ந்தார் என்றும்… புர்க்க என அழைக்கப் பெறும் ஓர் வாகனத்தில் பயணம் செய்து ஒளி மண்டலம் கண்டு திரும்பினார் நபி…! என உரைக்கின்ற வேதம் அதனின் சூட்சுமப் பொருள் “இந்தத் தியானத்தின் வழி தான்” என அறிந்து கொண்டிட்டவர் யார்…?

நமக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசம்

 

நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களும் விஷத்தன்மையான செயல்களையும் நாம் நுகரப்படும் பொழுது… நமது ஆன்மாவை… இந்த உடலுக்குப் பாதுகாப்பாக இருப்பதை… சுத்தமாக அதை வலு இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்திகள் என்று உண்டு. அந்த எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்களை… அந்த அமிலத்தின் தன்மைகளைக் குறைந்து விடுகின்றது. ஆக…
1.எதிர்ப்பு சக்தி இல்லாததனால் தீமை செய்யும் உணர்வுகள் ஒரு நொடிக்குள் ஊடுருவி
2.உடலில் சீக்கிரம் நோய் வருவதும்… பல தொல்லைகள் கொடுப்பதுமாக வந்துவிடுகிறது.

இன்று உலகெங்கிலும் நடக்கும் மத பேதம், இன பேதம் மொழி பேதம் இது போன்ற அசுர உணர்வுகளால்… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்ததனால்… நாம் கண் கொண்டு பார்த்து அவைகள் நமக்குள் பதிந்த பின் என்ன நடக்கிறது…?

விஷத் தன்மை கொண்ட கதிரியக்கங்கள் பரவி பூமியில் எப்படி ஓசான் திரை கிழிந்ததோ… இது போன்று மனித உடலுக்குள் நம்மைக் காக்கும் நமது ஆன்மா பாதுகாப்பான நிலைகளிலிருந்து அதுவும் பிளக்கப்பட்டுவிடுகிறது.

அதனால் மனிதனுடைய நல்ல சிந்தனைகளைச் சீர்குலைக்கச் செய்துவிடுகிறது. மனிதன் உறுதியான உடல் பெற்று இருந்தாலும்
1.தீமைகளை எதிர்க்கும் அந்த சக்தி கொண்ட அந்த அமிலங்கள் குறைத்து விட்டதனால்
2.நம் உடலில் உள்ள பாதுக்காப்புக் கவசத்தை அது மறைந்து விடுகிறது.

அதை எல்லாம் மாற்றிட கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றச் செய்து… அதிலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் சேர்த்துக் கொண்டால் “நம் ஆன்மாவை… அந்தப் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்…” தீமைகள் புகாது ஆன்மாவை வலுவாக்கிக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் விதமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை ஆங்காங்கு இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
1.எல்லோருக்கும் “அவருடைய உயர்ந்த சக்தி” கிடைக்க ஏதுவாகின்றது.
2.ஒன்று சேர்க்கும் உணர்வுகள் வருகின்றது
3.பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு அன்பு கொண்டு அரவணைத்து வாழும் நிலைகள் வருகின்றது.
4.உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்கின்றது… உடலைக் கோவிலாக மதிக்கச் செய்கிறது
5.மனிதனுக்குள் உள்ள பண்பு கொண்ட உணர்வுகளைத் தெய்வமாக மதிக்கும் தன்மை வருகிறது
6.இன பேதம் அகற்றப்படுகின்றது… மன பேதம் அகற்றப்படுகிறது…
7.வெறுப்பு வேதனை போன்றவைகள் நமக்குள் நெருங்காது தடுக்க முடிகிறது.
8.அருள் உணர்வுகளை வளர்த்து நாளடைவில் பகைமை உணர்ச்சிகளை அறவே அழித்திடும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு நான் (ஞானகுரு) தொடர்ந்து உபதேசம் சொல்கின்றேன். ஆனாலும் எத்தனையோ பேர் வந்து கஷ்டங்களை எல்லாம் சொல்கின்றீர்கள்… நான் கேட்கின்றேன்.

ஒருத்தர் கஷ்டம் என்று சொல்வதை நீங்கள் கேட்டாலே உங்களுக்கு முடியாது போய் நோய் வருகின்றது.
1.ஆயிரம் பேர் கஷ்டம் என்று சொல்வதை நான் கேட்டால் எனக்கு எத்தனை நோய் வரும்…?
2.உங்களைக் காட்டிலும் பல வேதனைகள் எனக்கு வரும்.
3.எனக்கு அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அப்புறம் நான் குருவாக உங்களிடம் வந்து சொல்ல முடியாது.

தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டும். இல்லையென்று சொன்னால் அந்த நோயெல்லாம் என்னைச் சேரும். கடைசியில் என்னையே மாற்றிவிடும்.

பாலிலே பாதாமைப் போட்டிருந்தாலும் சிறிது விஷத்தைப் போட்டால் என்ன ஆகும்…? அந்த நிலைதான் அடையும். ஆகையினால் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் மாற்றிக் கொள்கிறேன்… தூய்மைப்படுத்திக் கொள்கிறேன்.

உதாரணமாக ஒரு விஷமான பொருளைக் கையால் எடுத்துப் பயன்படுத்துகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலை முடிந்ததும் அந்த விஷத்தை நீக்கிட அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்ததை வைத்துக் கையைக் கழுவிக் கொள்கிறோம் அல்லவா…!

வயல்களிலே பூச்சிகளைக் கொல்லும் மருந்தினைத் தெளிக்கின்றார்கள். எல்லாம் தெளித்துவிட்டுச் சாதாரண தண்ணீரில் கையைக் கழுவி விட்டு உணவை உட்கொண்டார்கள் என்றால் அந்த மருந்தின் விஷம் உடலுக்குள் ஊடுருவிப் போய்விடும்.

அப்புறம் அவர்கள் இருக்க மாட்டார்கள்…!

பூச்சியைக் கொன்றார். இருந்தாலும் அதற்குத்தகுந்த சோப்பை எடுத்துச் சுத்தமான நிலைகளில் கைகளைக் கழுவவில்லை என்றால் இவரைக் கொன்றுவிடும்.

இதைப் போலத்தான் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும் வேதனைப்படுவோரை எல்லாம் சந்தர்ப்பத்தால் உற்றுப் பார்க்கின்றோம்… விபரங்களையும் நாம் கேட்டறிகின்றோம்.
1.உயர்ந்த மனிதர் என்ற பண்பால் பல உதவிகளை நாம் செய்தாலும்
2.அவர்கள் கஷ்டம் நமக்குள் வந்த பின் நம் நல்ல குணங்கள் இங்கே அழிந்து விடுகின்றது.

இதைச் சுத்தமாக்க வேண்டுமா இல்லையா…?

நம் உயிர் ஒளியானது… நுகர்ந்த உணர்வைக் கொண்டு உடலை உருவாக்கியது. உடலைக் கொண்டு இருளை நீக்கும் ஒளியின் தன்மை பெற்றது… கார்த்திகேயா…!

நம்மை அறியாமல் வரும் தீமைகளை அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அகற்றி… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்வதே அது.

இந்தத் தெய்வம் செய்யும்… அந்தத் தெய்வம் செய்யும்…! என்பது எல்லாம்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்களே
2.நமக்குள் தெய்வமாக… அந்த உணர்வாக நம்மைச் செயலாக்கும்.

இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மையைத் தான் உயிர் இயக்குகின்றது. ஈசனாக இருந்து அதனின் உணர்வுகளை… நாம் எண்ணியதை நமக்குள் இருக்கும் மற்றதுடன் இரண்டறக் கலக்கின்றது. அது பிரம்மமாக நமக்குள் உடலாகச் சிருஷ்டிக்கின்றது.

இந்த உயிருடன் இயக்கப்படும் அதன் தொடர் வரிசையில் எக்குணமோ அதை இயக்கி அதனின் நிலைகள் கொண்டு இங்கே வளர்க்கின்றது நமது உயிர்.

1.நாம் தவறே செய்யவில்லை என்றாலும்… தவறு செய்வோனை உற்றுப் பார்த்தால்
2.அந்த உணர்வின் சக்தி நமக்குள் இயக்கப்பட்டு… தவறை அறியச் செய்கின்றது.

ஆனாலும் அறிந்த தவறின் உணர்வோ நம் உடலுடன் ஒன்றி விடுகின்றது. ஒன்றிய நிலைகள் கொண்டு உயிரின் இயக்கத்தால் நம் அறிவால் அறியச் செய்யும் அதனதன் அறிவை அது இயக்குகின்றது.

வேப்ப மரம் தன்னுடைய கசப்பின் அறிவால் தான் தனது மணத்தைக் காற்றிலிருந்து நுகர்ந்து அது வளர்கின்றது. அதே சமயம் தன் மணத்தால் அது தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது.

ரோஜாப்பூவும் தன் நறுமணத்தால் தன்னைப் பாதுகாத்து கொள்கின்றது. தன் உணர்வால் தன் சத்தை எடுத்து கொள்கின்றது.

இதைப் போல்தான் நாம் எத்தனை கோடி மணங்களை நாம் நுகர்ந்தாலும் எத்தனை கோடி குணங்கள் இருந்தாலும் அதை எல்லாம் அறியச் செய்யும் நமது உயிர். அறிந்ததை மீண்டும் ஜீவ அணுவாக… உடலாக மாற்றிவிடும் நமது உயிர்.

உணர்வின் தன்மை உடலாக்கப்படும்போது ஓ…! என்று ஜீவனாக்குகின்றது உயிர். அதே சமயம் அந்த உடலாக இயக்கப்படும்போது அதுவும் ஓ…! என்று ஜீவனாக இயங்கிக் கொண்டிருக்கும்… அதன் தொடர் வரிசையில்…!

1.தவறு என்று கண்டு கொண்டாலும் அதை நாம் சுத்தப்படுத்தவில்லை என்றால்
2.அதுவும் நம் உடலுக்குள் ஜீவன் பெற்று விடும். இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் நலம்.

ஏனென்றால் நான் படிக்காத மூடன் பேசுகின்றேன்…! ஆனால் இயற்கையின் உணர்வின் அளவை குரு காட்டிய உணர்வு கொண்டு அதை அறியும் ஆற்றலைப் பெற்றேன்.

1.நான் படித்துப் பேசவில்லை… அனுபவப்பட்டுப் பேசுகின்றேன்.
2.குருநாதர் எமக்குள் இருக்கும் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு என்று உணர்த்தினார்
3.ஒவ்வொரு உணர்வும் எம்மை அது எவ்வாறு இயக்குகின்றது..? என்று அறிந்து பார்…! என்று
4.தனித்துத் தனித்துத் தனித்துத் தனித்துப் பிரித்துக் காட்டினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் நுகரும் ஆற்றல் உனக்குள் எவ்வாறு வருகின்றது…? நுகர்ந்தபின் அந்த உணர்வின் குணங்கள் உனக்குள் எவ்வாறு ஜீவன் பெறுகின்றது….? அந்த உணர்வால் உன்னை எப்படி இயக்குகின்றது…? என்ற இந்தத் தெளிந்த மனதை குருநாதர் அனுபவப்பூர்வமாக எமக்கு ஊட்டினார்.

உடலில் இருக்கப்படும்போதே… அவருக்குள் கற்றுணர்ந்த உயர்ந்த உணர்வை… அவரின் உணர்வின் வலு கொண்டு எனக்குள் பதியச் செய்தார்.
1.பதிவு செய்ததை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டு எடுக்கும்படி சொன்னார்
2.அதனின் துணை கொண்டு அதை எடுத்து வளர்ச்சியின் தன்மை பெற்றேன்.

அதே வழிப்படித்தான் உங்களுக்கும் இதை உணர்த்த்துகின்றேன்…!

“துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக அதை வளர்க்க வேண்டும்

 

நாம் எந்தெந்த உணர்வின் ஒலியைப் (மொழி) பெருக்குகின்றோமோ அதற்குத்தக்கவாறு நம்முடைய நினைவாற்றலும் பல சக்திகளும் நமக்குள் உருமாறுகின்றது.

ஆகவே…
1.எந்த வகையிலும் எத்தகைய நிலை வந்தாலும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை விடாது அதை எடுக்கப் பழகிக் கொண்டால்
3.இந்த வாழ்க்கையில் நமக்கு அது பேருதவியாக இருக்கும்.

ஏனென்றால் ஒருவர் அவர் பேசுவதை எங்கிருந்து எண்ணினாலும் அந்த உணர்வுகள் அலைகளாக நமக்குள் வருகின்றது… கவரப்படுகிறது.

அது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்ததனால்… அதை நீங்கள் மனதில் எண்ணி… உங்கள் வாழ்க்கையில் எப்போது சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ கோபமோ பயமோ மற்ற எந்த உணர்வை நுகர நேர்ந்தாலும்
1.அப்படி நுகர்ந்த அந்த சக்தி உங்களுக்குள் பெருகுவதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை உடலுக்குள் செலுத்தித் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.நாளை நடப்பதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்… நல் செயலாக இருக்க வேண்டும் என்று அந்த உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
4.ஒவ்வொரு நாளும் இதைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையே தியானம் ஆகின்றது.

வராகன் தன் உணவுக்காகச் சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்வது போன்று… தீமையான உணர்வுகள் உள் செல்லாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனித்துப் பிரித்து நமக்குள் சேர்ப்பிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று செல்லும் போதோ உணவு உட்கொள்ளும் பொழுதோ இரவு படுக்கைக்குச் செல்லும் பொழுதோ மற்றவர்களுடன் கலந்து பேசும் பொழுதோ அல்லது பேசிய பின்போ
1.ஒரு நொடி துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதைக் கலந்து மாற்றிக் கொண்டே வந்தால் நமது உணர்வுகள் பூராமே தூய்மைப்படுத்தும் சக்தியாக வளர்கின்றது.

வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுத்தது போன்று… வெளியிலிருந்து வரக்கூடிய மற்ற தீமைகளைப் பிளந்து விட்டுத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடத்திலும் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை நமக்குள் நுகர்ந்து கொண்டே இருந்தால் கசடான உணர்வுகளைப் பிளந்து விட்டு நம் உயிர் ஒளியின் தன்மையாக மாறும்…. பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் செல்ல இது உதவும்.

அன்று மெய் ஞானிகள் எப்படி இயற்கையின் இயக்கங்களைக் கண்டறிந்தார்களோ… அந்த இயற்கை வழியிலேயே தான் செயல்படுத்த வேண்டும். அதைத்தான் தியானம் என்று சொல்வது.

வரும் தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்கிப் பேரருளைப் பெற்று பேரொளியாக மாற முடியும். பேரருள் என்றால் இருளைப் போக்கும் சக்தி.
1.ஒவ்வொரு நொடியிலும் இப்படி எண்ணிப் பழகி விட்டால்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி தன்னாலே தன்னிச்சையாக வந்து சேரும்.

இதில் ஒன்றும் சிரமமில்லை.

கோபமோ சலிப்போ வரும் போது நம்மை அறியாமலே அதன் வழிக்கு இழுத்துச் செல்லும். அதே போன்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டால் தீமைகளை எளிதில் மாற்றிவிடலாம்.

ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து வாழ்க்கையில் வரும் தீமைகள் புகாது தடுத்து இந்த வாழ்க்கையை அருள் வாழ்க்கையாக வாழ முடியும்.

1.உங்களுக்கு மன பலம் கிடைக்கின்றது.
2.உடல் பிடிப்பு வராது… செல்வத்தின் பிடிப்பும் அதிகமாக வராது.
3.அந்தப் பிடிப்பு வராது என்றாலும்… செல்வம் நம்மைத் தேடிக் கொண்டு வரும்… மகிழ்ச்சி வரும்…!
4.ஒளியான உணர்வைக் கொண்டு நம்மை காக்கும் சக்தியாக வளரும்

ஆனால் உடலை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “எனக்கு இப்படி ஆகிவிட்டதே…” என்று வேதனைகளைச் சுவாசித்தால் அந்த வேதனை வந்த பின் மகிழ்ச்சி பெறும் உடலாக்க் கூட நாம் காண முடியாது.

அடிக்கடி “துருவ நட்சத்திரத்தின் ஒளி கொண்டு” நம்மைக் காத்திடும் சக்தியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்… பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

குரு அருள் உறுதுணையால் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள். உங்கள் பேச்சு மூச்சும் புனிதம் பெறும்… இந்த உலகையும் நீங்கள் காக்க முடியும்.

ஏனென்றால்
1.சிறுகச் சிறுக அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அதைப் பல லட்சம் பேர் குவிக்கப்படும் பொழுது
2.துருவத்தை நோக்கி ஒன்று சேர்த்து அந்தப் பகுதியில் ஓட்டையாகப் பிளந்திருந்ததை நாம் அடைக்க முடியும
3.விஷத் தன்மைகள் பூமிக்குள் புகாது தடுக்கவும் முடியும்

எப்படி நம் ஆன்மாவில் தீமைகள் புகுவதைத் தடுத்து ஒரு பாதுகாப்புக் கவசம் உருவாக்குவது போன்று நம் எண்ணத்தைக் கொண்டு இந்த பூமிக்குப் பாதுகாப்பாக இருக்கும் “ஓசோன் திரை கிழிந்ததையும்” நாம் அடைக்கவும் முடியும்.

ஏனென்றால் அணு குண்டுகளும் கதிரியக்கங்களும் பல விஷமான உணர்வுகளும் பரவியதால் ஓசோன் திரை கிழிந்தது அதே சமயத்தில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணத்தை அந்தத் திசை நோக்கிச் செலுத்தினோம் என்றால் அது நாளடைவில் நல்லதாகும்.

1.குருநாதர் இட்ட கட்டளைப்படி நம் அனைவரது எண்ணங்களையும் ஒருங்கிணைத்து
2.அந்தத் துருவத்தை எண்ணி குறித்த காலத்தில் அது அடைபட வேண்டும் என்று செயல்படுத்த முடியும்.

சிவ சூரியன்

 

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.

மனித சரீரத்தினுள்… சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து… சிரசின் நெற்றிப் போட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் “சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு… இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன்… தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற “சூட்சுமங்களை” முயன்று பெற்றிட வேண்டும்.

இந்த நிலை எதனுள் அடங்கும்…?

சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது…
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி… உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி…
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு… தான்… தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.

முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.

சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள்… வேதாள மகரிஷி…!

உணவை உண்டு உடலை வளர்க்கின்றோம்… உயிரை வளர்க்கும் வழி…?

 

“இந்திரஜால வித்தை” என்று கர்ம சித்துக்கள் ஆரம்ப நிலை ஆயினும்… அதனையும் வென்றிட்டவன் சித்தன் நிலையில் சித்துக்கள் பெறுகின்றான்.

ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுவதும்… இருக்கின்ற பொருளை வேறு ஒரு பொருளாகக் காட்டுவதும்… அது ஜால நிலையே. அத்தனையும் தத்தம் செய்து கர்ம பல தியாகம் என்று காத்திட்டது வேதாள மகரிஷி கைக் கொண்ட சூட்சமம்,

1.ஞானக்கண் திறந்து… பிடரிக்கண் பார்வை அறிந்திட்ட சக்தியாக…
2.சிவாக்கினி உள்நாக்கின் மேலன்னத்தில் உருவாகி… சூட்சும தேகம் அதனுள் மூழ்கி
3.உலகப் பிடிப்பின் அதி ஆவலால் பொசுங்கிட்ட தன்மையால்
4.கைக்கொண்டிடும் தியானத்திலும் உயர்வாகப் பெறுகின்ற நிலையே சித்துக்கள் கைவரத்தக்க நிலை.

கர்ம தியாகம் கொள்கின்றவன் “மூலக்கறி” சமைத்து உண்கின்ற பேரருளின் பேராற்றல் பெறுகின்றான். உணவு சமைத்து உண்ணுகின்ற கறியால் அதனைக் கொண்டு குடிலை (உடலை மட்டும்) அலங்கரித்து வைப்பதால் பலன் என்ன…?
1.அதனை உண்ணுகின்ற முறை அறிந்து
2.உடல் வளர்த்து… “உயிர் பேணுகின்ற தன்மை உண்டல்லவா…!”

ஆத்ம நிலக் கூடமும் உயிர் மூலக்கறி வளர உண்ணுகின்ற முறை உணர்ந்து சமைப்பின் பலனைச் சமைத்திட்ட உட்பொருள் தன்மையின் தொடர் வழி ஈர்த்து உண்ணுகின்ற உணவு சிதாக்கினியைக் காட்டும்.

அங்கு உருவாகிடும் ஜாலம் எது தெரியுமா…?

1.உயிராத்ம சக்தியினை இணைத்து விழுப்பொருள் என்கின்ற தன்மைக்கு ஊட்டுவித்து…
2.சகலத்தையும் ஆட்டுவிக்கின்ற “சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்கின்ற சக்தியாகப் பயிர்ப்பித்தல்… அதுவே மகோன்னத ஜாலம்…!

இது எல்லாம்… இன்று புதியனவாக உணர்த்த வந்த நிலை அன்று. அத்திரி மகரிஷியும் அன்று ஊட்டுவித்ததால் பெற்றதே அனிமாது சித்துகளில் ஏழாம் நிலை.

ஒரு நிலை தவற விட்டதால் பிறப்பின் சூட்சுமத்திற்கு அதுவே வித்து எனும் நிலை உண்டாயிற்று. இந்த ஏழு நிலைகளுக்கும் சப்தரிஷிகளினால் “சப்த மாதாக்கள்” என்று பெயர் நாமப்படுத்திட்ட… உருவாக்கிட்ட சக்திகள் உண்டு.
1.சகலத்திலும் சகலமாகக் கலந்து அனுபவித்தல் என்ற பேரின்ப நிகழ்ச்சி
2.அதுவே எட்டாம் நிலை…!

உபதேசிப்பது புரியவில்லை என்று எண்ணுவதற்கு மாறாக… அதைப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள்

 

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை எல்லாம் புரியவில்லை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது ஆனால் சந்தர்ப்பத்தால் டிவியைப் பார்த்து அதற்குள் பதிவாகி விட்டால் அதன் உணர்வின் நினைவு கொண்டே குழந்தைகள் பாடவும் ஆடவும் செய்யும்.

மிருகங்களுக்கும் தெரியாது ஆனால் நாம் சொல்லும் உணர்வுகள் பதிவாகி விட்டால் பின்… இங்கே வாடா…! என்றால் வருகின்றது போ…! என்றால் போகின்றது நாயோ பூனையோ பெரிய மிருகங்கள் கூட மனிதனுடைய உணர்வைப் பாய்ச்சிய பின்… நம் பார்வையில் வைத்துக் கொண்டால் அதற்குத் தக்க அந்த மிருகங்களும் இயங்குகிறது.

இதைப் போன்று தான்
1.அருள் ஒலிகளை… மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்
2.அந்தப் பதிவான உணர்வுகளை நினைவு கொண்டு… உங்கள் எண்ணத்தால் அதைப் பெற முடியும்… தீமைகளை அகற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

காரணம்… எண்ணியதை இயக்குவதும் உங்கள் உயிரே…! எண்ணியதை உடலாக்குவதும் உங்கள் உயிரே…! ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் பெறுங்கள்.

எத்தகைய விஞ்ஞான விஷத்தன்மைகள் உலகில் பரவி இருந்தாலும் அருள் உணர்வின் தன்மை பதிவான பின் தீமையை ஈர்க்கும் நிலைகள் மறந்து… பதிவு செய்த உணர்வு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கினால் நமக்குள் விஷத் தன்மை வராதபடி தடுக்க முடியும்.

ஆகவே… இருளான உலகிலிருந்து நீங்கள் மீளுங்கள். இருளிலிருந்து அனைத்து மக்களும் மீள வேண்டும் என்று “ஒன்று சேர்த்த உணர்வை” வளர்த்துக் கொள்ளுங்கள். இந்தக் காற்று மண்டலத்தில் பரவி இருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்ற… அதற்குண்டான வலிமையைப் பெறுங்கள்.
1.கூட்டமைப்பாக அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள்
2.அந்த உணர்வின் அதிர்வுகளை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இந்தப் பூமியில் பரப்புவோம்.
3.நமக்கு முன் பரவிருக்கும் நச்சுத்தன்மைகளை அகற்றும் சக்தியாக நாம் செயல்படுவோம்.

அப்போது தீமை செய்யும் உணர்வுகளை நாம் ஈர்க்க மறுக்கப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடும்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவில் வந்த தீமைகளையோ அசம்பாவிதங்களையோ கொலைகளையோ கேட்டறிந்த உணவுகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி… காலை துருவ தியானத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று வலுவாக்கிக் கொள்ளும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அனைவரும் ஒன்று சேர்த்து இழுக்கப்படும் பொழுது
2.காலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமை செய்யும் உணர்வுகளை சூரியன் கவர்ந்து மேலே எடுத்துச் சென்று விடுகின்றது.

எந்தச் சூரியனிலும் சிக்காது இருப்பதை… வெகு தொலைவில் இருக்கும் “வால் நட்சத்திரம்” என்று சொல்வதை… சூரியன் கவரப்படும் பொழுது அதை எடுத்து எவ்வாறு மாற்றிக் கொள்கின்றதோ… அதைப் போல் மனிதர்களாக இருக்கும் நாம் “தீமைகளை ஈர்க்கத் தவறினால்” அதைச் சூரியன் கவர்ந்து சென்று தனக்குள் இருக்கும் உணர்வு கொண்டு அதை மோதி அந்த நஞ்சினைக் கரைத்து “மாற்றுப் பொருளாக” உண்டாக்கி விடுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொரு மனிதரும் ஆறாவது அறிவால் செயல்படும் உணர்வுகள் கொண்டு இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழ்வோம்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… உடலால் தேடிய செல்வங்களும் சொந்தமல்ல.
1.இந்த மனித உடலில் நாம் தேடும் அருள் உணர்வுகளே நமக்குச் சொந்தமாகின்றது… இருளை அகற்றுகின்றது.
2.நமது வாழ்க்கையில் மகிழ்ச்சி ஊட்டும் சக்தியாக வளர்கின்றது
3.அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகளை நமக்குள் சேர்த்து இனி அடுத்து என்றும் பேரானந்த நிலை என்ற
4.பெருவீடு பெருநிலை என்ற பெருவாழ்வு என்ற நிலை அடைய “இந்த மனித உடல் தான் சிறந்த இடம்…”
5.இதிலிருந்து தான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வாக வாழ்வோம்.

ஞானச் செல்வங்களுக்கு வழிகாட்டுகின்றோம்

 

1.புகழ் கொண்ட ஜீவன் பல்லக்கில் செல்கின்றது…
2.அதே ஜீவன் சிவத்தின் தன்மை நீக்கம் பெற்று “சவம்” எனப்படும் நிலையில் அதுவும் ஊர்வலம் செல்கின்றது.

இரண்டும் காரண பேதங்கள் என்றாலும்… சுமந்திடும் பல்லக்கு மூங்கிலால் உருவானதே.

கலைஞன் கை பட்டு இளந்தளிர் மூங்கில் அதன் பக்குவம் கொண்ட திடம் என்ற வளர்ச்சியில் அது வளைக்கப்படும் பாங்குகளில் வளைந்து… வளர்ந்து… பல்லக்கு உருவாக்கிடும் கலைஞனின் கைவண்ணத்திற்கொப்ப வளர்ந்து நிற்கின்றது.

வெட்டிடத் தழைக்கும் திழைவுறுகின்ற தன்மை தன்னிச்சையில் மூங்கில் உயர்ந்து வளர்ந்து நின்றாலும் பக்குவத்தின் வளர்ச்சி அற்ற தட்டை எனப்படும் மூங்கிலானது அது வளர்ந்துள்ள புதரின் கண்வாசம் செய்திடும் “இசை வண்டு” வளர்ச்சியின் திடமற்ற மூங்கில்களைத் துளைத்து விட்டு அதனுள்ளும் வாசம் செய்திடும்.

காற்றில் அசைந்திடும் அந்த மூங்கில்கண்
1.அதனுள் நுழைந்திடும் காற்று உண்டாக்கிடும் ஓசை… மூங்கிலை இசை பாட வைக்கின்றது.
2.ஆனால் வண்டு துளைத்த மூங்கில்கள் “இறுதி ஊர்வல நிலைக்கே…”
3.மற்றும் மனிதனின் தேவைப்படும் காரியங்கள் ஆற்றிடக் கொண்டு செல்கின்றான்.

கலைஞன் கைபட்டு உருவாக்கிட்ட பல்லக்கு… தேவ ஆராதனை பெற்றிடும் சிறப்பாகப் பரிணமித்து விளங்குகின்றது. அது போல் ஆத்ம பலம் கூட்டிடும் செயலாக ஜீவன் பெறுகின்ற சத்தியத்தின் சக்தி எனும் வளர்ப்பு பக்குவம் காட்டிடும் உனது பண்பை.

அன்று வேதாள மகரிஷி வேதாந்த நாதனுக்கு உரைத்ததைப் போல்
1.“வண்டு துளைத்திடாப் பக்குவம்” என்றே
2.ஆத்ம பலம் நாடிடும் உயர் ஞானச் சித்தின் நலம் விரும்பும் ஞானச் செல்வங்கள் பக்குவம் கொண்டிடவே
3.”கர்ம தியாகம்” வழி காட்டப்பட்டது
4.இந்தச் சொல்லை வியாசக பகவான் உரைத்தது.

அர்ஜுனனும் கிருஷ்ண பரமாத்மாவும் “நரநாராயண ஐக்கிய நிலை” என்றிட்ட சூட்சுமத்தை அன்று அந்த மகான் உரைத்த நிலையையே இன்று இந்தக் கலியில் அதனை முழுமைப்படுத்திக் காட்டியவர் ஐயப்பன்.

ஐயப்பன் உரைத்தது என்ன…?
1.சிவத்துக்குள் நான் இருக்கின்றேன்…
2.நாராயணன் உள்ளும் நான் இருக்கின்றேன்…!

மத பேதங்கள் கடந்திட்ட தெய்வ நிலை காட்டிடும் ஓர் சிறந்த தத்துவத்தை இந்தக் கலியிலும் மனிதன் கேடுறுத்துகின்றான்.

1.அவர் பெற்று வளர்த்திட்ட ஜோதிஸ்வரூப நிலையை என்றும் காணலாம்
2.அதிலே பல சூட்சுமங்கள் உண்டு…!

நமக்குச் சரியான வழிகாட்டி துருவ நட்சத்திரம் தான்

 

திட்டியவர்களைப் பற்றியோ வேதனைப்படுவோரைப் பற்றியோ உங்களுக்குள் பதிவானால்
1.அவர்களை நினைக்கும் போது கோபம் வருகின்றது
2.அதே சமயத்தில் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று கோபத்துடன் வெறுப்புடன் எண்ணினால் அங்கே புரை ஓடுகின்றது
3.நன்மை செய்தவனைப் பற்றி உயர்வாக எண்ணினால் அங்கே விக்கலாகி அவனுக்கு நன்மை ஆகின்றது… நமக்கும் நல்லதாகிறது.

பாசத்தால் தன் குழந்தையை எண்ணுகின்றோம். அவன் வெளிநாட்டில் இருக்கின்றானே… அவன் என்ன செய்கின்றான்..? என்று பதட்டத்துடன் குழந்தையைத் தாய் வேதனையான நிலையில் எண்ணிப் பார்க்கப்படும் பொழுது
1.கெட்டிக்காரனாக இருந்தாலும் அங்கே அவன் சிந்திக்கும் திறன் இழந்து அவன் தோல்வியைத் தழுவும் நிலை வந்து விடுகிறது.
2.தாய் வேதனையுடன் எண்ணும்போது இந்த உணர்வு தாக்கப்பட்டு அவன் நடந்து சென்று கொண்டிருந்தால் எதிரில் வரும் வாகனங்களை அறியாதபடி விபத்துகள் ஏற்பட்டுவிடும்
3.அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றால் தாய் வேதனையாக எண்ணிய உணர்வுகள் குறுக்காட்டி… எதிரில் வரும் வாகனத்துடன் மோதி விபத்தாகிவிடும்.

இப்படி… மனிதனுக்கு மனிதன் நாம் தொடர்பு கொண்டு தான் வாழுகின்றோம். அதிலே நம்மை அறியாது வரும் தீமைகளிலிருந்து மீள வேண்டும் அல்லவா. அதற்குண்டான சிந்தனையாக உங்களுக்கு விட்டு விடுகின்றேன்.

“குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எம்மை (ஞனாகுரு) எப்படிப் பெறச் செய்தாரோ” அதே போல் அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கி உங்களைக் காத்திடும் சக்தியாக அது வளர வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன். இந்தப் பதிவை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் உணர்வே உங்களைக் காக்கும்.

அகஸ்தியன் தீமைகளை வென்று இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து நம் பூமியின் துருவ எல்லையில் துருவ நட்சத்திரமாக வீற்றிருக்கின்றனர்.

அதிலிருந்து வெளி வரும் ஒளிக்கற்றைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதை அலைகளாக மாற்றுவதும்… நம் பூமியின் துருவப் பகுதி வழியாக நாம் வாழும் பகுதிக்குள் கொண்டு வருவதும்… அதை நாம் இப்போது நுகர்வதும் ஓர் நல்ல சந்தர்ப்பம் தான்.

கடலுக்குள் செல்வோர்…
1.இரவாகி விட்டால் இந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பார்த்துத் தான் பாதைகளை அறிந்து செல்வார்கள்
2.துருவ நட்சத்திரம் எந்தத் திசையில் தோன்றுகிறதோ வடக்கு தெற்கு கிழக்கு என்ற நிலைகள் என்று திசைகளை அறிந்து செல்வார்கள்.

நிலப்பகுதியில் உள்ளது போன்று அங்கே ரோடு இல்லை… வழி காட்டி இல்லை. துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத் தான் அவர்கள் போக வேண்டிய திசைகளில் செல்வார்கள். நாம் எந்த ஊரிலிருந்து வந்தோம்…? எங்கே செல்ல வேண்டும்…? என்பதைக் கப்பலில் செல்வர் அனைவரும் இதை வைத்துதான் செயல்படுத்துகின்றனர்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை வைத்து ஈர்க்கும் சக்தி கொண்டு தெற்கு வடக்கு என்ற நிலையில் இயந்திரத் துணை கொண்டு காணுகின்றார்கள்.

ஆனால் அன்று இயந்திரத் துணை இல்லாத பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை உற்று நோக்கி
2.அதையே எல்லையாக வைத்து வாழ்ந்தவர்கள் தான் பலர்
3.துருவ நட்சத்திரம் தான் அன்று அவர்களுக்கு வழிகாட்டி…!

ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ வினாக்கள் தோன்றுவதை… அதற்குண்டான விடைகள் கிடைக்க வேண்டும்… எதிர்படும் தீமைளிலிருந்து விடுபட்டு உங்களுடைய சிந்தனைகள் தெரிந்து தெளிவாக செயல்பட வேண்டும்… தெளிந்த மனதாக மாற்றிப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத் தான் இதைக் காட்டுவது.

தீமை என்ற உணர்வுகள் மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது உங்கள் உணர்வை உங்களை இயக்கும். உங்களில் அது வளரும் அந்த தன்மை பெற வேண்டும் இனி வரும் எத்தகைய தீமையில் இருந்தும் உங்களை மீட்டிடும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவாக்குவது

வானை நோக்கி நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெற முடியும்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் போது… அவன் நஞ்சினை ஒடுக்கி அதை எப்படி ஒளியாக மாற்றினானோ
1.அவன் கண்டறிந்த அறிவுகள் அனைத்தையும் நாம் பெற முடியும்
2.கற்று அல்ல… இந்தப் பதிவின் மூலமாக…!
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

முதல் மனிதன் அகஸ்தியன் அடைந்த அந்த எல்லையை நாமும் அடைய வேண்டும்.

December 2023 உபதேசம்

“கர்ம தியாகம்”

 

மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”

“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.

இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”

ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.

சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!

நுணுகி ஆய்வு செய்வதிடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்…?

 

நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்
1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.

எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வு நாம் சொல்வோம் “எனக்குப் பதட்டாமகிறது என்று…!”

தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்… கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது… அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்… அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளிவருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.

அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.

அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன் அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.

திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்… இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.

அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.

கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.

தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.

காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது… நல்ல அலனைக் கொடுக்கின்றது.

நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது… அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்… எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ… அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.

பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான் நமது உயிரும்…!

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்… வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து “குரு” – விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி “ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது…”
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது… அந்தத் துடிபின் நிலையே உயிர்…!

எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது… உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி… அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.

இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று…!

மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.

அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டி பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்… டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்… தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை… கற்று வரவில்லை…
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.

குரு எனக்குப் பதிவாக்கியது போன்று… அதை நான் அதை நுகர்ந்தது போன்று…
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்

விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மைகொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.

அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.

மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.

சோமாஸ் ஸ்கந்தன்

 

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”

அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் காட்டப்பட்டதே…”

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

 

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி…?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். “எந்தக் கெமிக்கலில் கலந்து” இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக… சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்… கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு… அது… இது… என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை “நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது” இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்… ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக… அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்… உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

 

வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.

1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்… எண்ணங்கள் எலக்ட்ரானிக்.

கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி… கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.

ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி… காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து…
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.

ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.

தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.

இதைச் செய்… நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்…! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்… அந்த உணர்ச்சிகள் உந்தி… கண் வழி ஆன்மாவாக மாற்றி… உயிருடன் இணைக்கச் செய்து… இரத்தத்தில் கலக்கச் செய்து… அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.

அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்

அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..

அறுகோணக் கருவறை எழுதி… அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

 

அறுகோணக் கருவறை என்பதும் கர்ப்பவாசம் எனப்படுவதும் ஜீவன் கொள்கின்ற அணுக்களின் செயலாக நடைபெற்றிடும் ஓர் சிருஷ்டி..
1.சகல ஜீவன்களும் இதனுள் அடக்கம்.
2.சிருஷ்டிக்கும் காரண மூலம் அதன் செயலைக் காட்டுவதே முத்தலை சூலாயுதம்.

அறுகோணக் கருவறை சிருஷ்டிக்கும் நிலையில்… எண்ணத்திற்குகந்த பிறப்பிற்கு வந்திடும் உயிரணுக்கள்… ஈர்த்து நிலையாக நின்று உயர்த்திச் செயல்படுகின்ற சுழற்சி.

பஞ்சபூதங்களின் சேர்க்கையாய் உருக் கோலம் கொள்கின்ற அந்த உயிரணுக்கள் உலகின் ஜீவித வாழ்க்கை கொண்டு செயல்படும் ஜீவன்கள் தாவரங்கள் நீர் வாழ்பவை ஊர்வன உலவுகின்ற மிருகங்கள் பறக்கும் பறவைகள் மனிதன் என்பவையே அறுகோண சக்கரத்துள் உயிரணுக்களின் சிருஷ்டியாக ஜீவன் கொள்பவை.

1.முத்தலை சூலத்தின் வளைந்த பகுதி… சரீரத்தினுள் நுழைந்திடும் அணுக்கள்
2.சூலத்தின் கூர்மையான மையப்பகுதி… உயிரணுக்கள் அறிவின் தொடராக கர்ப்பவாசம் காக்கப்படும்
3.மற்றொரு வளைந்த பகுதி… ஜீவன் கொண்டு பிறப்பின் செயலாக வெளி வருவது.

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

 

“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”

திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”

1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.

உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

 

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

 

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

 

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

உலகோதய மோதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி

 

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் என்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

 

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

பகலவர்

 

சேகைத் திறந்த வழி என் நிலை அண்டியதோ…?
பேண் அகத்து என்ற நிலை பெற்று
முன் நிலை தவிர்த்து…
ஒளி கொண்ட தலைமை காண வேண்டும்.

1.அரசின் தலைமை கண்டவன் அகத்தின் தலைமை கண்டான்
2.அத்திரி மகரிஷியின் தொடர்பு அன்று அரவணைத்தது… தொடர்ந்து அமுதம் ஊட்டுகின்றது.

மகா புருஷன் என்போரே பகல் (ஒளி) அறிந்தவர்…! சிருஷ்டிக்கும் பாங்கு செயல்படும் நிலையே விழிப்பும்… அறிவின் ஆற்றலும் இணைந்து… உணர்வென்னும் ஊற்று எண்ணத்தின் வழி ஊட்டப் பெறுகின்ற செயல் அதுவாக உள்ள தன்மைகளை பிரம்மன் படைக்கின்றான் என்று சொல்வது. அது பல யுகங்கள் ஒன்று சேர்ந்த ஒரு பகல் காலம்.

இவை அனைத்தும் உலக மாற்றம் செயல் கொண்டிடும் காலம் வரை அனைத்து ஜீவன்களும் இயக்கம் கொண்ட செயலினையே சகல சிருஷ்டிகளும் ஓர் பகல் என்றும்… இரவு காலத்தில் பொருட்கள் கட்டுப்படாத் தன்மை போல் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும்… இருள் எனும் போர்வைக்குள் அடங்கி இருத்தல் தன்மையாகச் சிருஷ்டியின் ஒடுக்கம் அதன் அதன் அமிலக் கூறாகக் கலத்தல்…! என்று முந்தைய பாட நிலைகளில் உரைத்திருக்கின்றோம்.

1.சிருஷ்டியின் ஒடுக்கமே இரவென்றும் (இருள்)
2.மீண்டும் “உயிர் அணுக்கள்” ஜீவன் கொண்டு பலவெனப் பெருகத் தொடக்கம் பெறும் யுகம்
3.அதுவே பிரம்மனின் விழிப்புக் காலம் என்றும் மறைபொருளாக மாமகான்கள் உரைத்திட்டது… தத்துவ நோக்கின் படிகள்.

சிருஷ்டியின் பாங்கை அறிந்து கொண்ட… சிருஷ்டிக்கும் செயலின் கர்த்தா தியான ஒடுக்கவெனவும்…
1.அந்நிலை செயல் கொள்வதைத் “தூங்காமல் தூங்கிடும்… அரிதுயில்” என்றெல்லாம் விளக்கம் காட்டி
2.ஆற்றல் என்பது புருஷ குணம் சிருஷ்டியின் பாங்கைத் தன்னுள் தெளிந்து சிருஷ்டியின் ஒடுக்கமற்று
3.வியாபித்த பகலாகச் சிருஷ்டிக்கும் தன்மைகளை உணர்ந்து கொண்டிட்டவர்களே மகா புருஷர்கள் எனும் மாமகான்கள்.
4.அவர்கள் அடைந்த ஒளித்தன்மைக் குறிப்பிடவே அவர்களைப் (மகரிஷிகளை) “பகலவர்” என்று சுட்டிக்காட்டிய நிலை.

அகங்காரம் எனப்பட்டது… புவி ஈர்ப்பின் பிடிப்பில் துர்க்குண நிலைகளைக் காட்டி… மேலாம் அறிவு சித்தித்திடும் தன்மைகளைக் கேடுறுத்தி… கீழாம் அறிவு எனும் மோக நிலையில் வசப்படுத்திடும் நிலை தான் அது.

பிரம்மா விஷ்ணு என்று சிருஷ்டியைச் சித்தர்கள் காட்டியதைப் போல் அகங்கார குணம் மோகத்தின் வசம் நம்மை ஆழ்த்தி… வீர குணம் வீழ்த்தி… இந்திரீய நீக்கம் காட்டிச் செயல்படும்.

இதே குணத்தன்மை “மேலாம் அறிவு சித்திக்கும் செயலில்” மோகவலைப்படுத்தும் நிலையைச் சம்ஹரித்தது
1.சிவத்தின் தன்மை காட்டி விந்து நிலை ஒளித்தன்மையாக ஊர்த்துவ சக்தியாக மேலெழுந்து…
2.”வீணையின் நாயகன் எனும் உயிர்சக்தியை” வலுக்கூட்டும் உணர்வுகளின் கவச முலாம் ஆத்மாவாகச் சிருஷ்டிப்பதே
3.மெய்ஞானச் சுடர் எனும் காரண மூலம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமல் அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த விஷத் தன்மைகள் நம் சிறுநீரகத்தைச் சீராக இயக்க விடுவதில்லை.

இரத்தத்தில் கலந்து வரும் அந்த அசுத்தத்தின் தன்மைகளை… அது நீக்கும் சக்தி இழந்து விடுகிறது. இந்த விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
1.காரணம் உப்புச் சத்து என்ற நிலைகள் அதிலே உருவாகிவிடுகின்றது.
2.உப்பை வைத்தால் எப்படி ஒரு பசபசப்பாகக் கசிகின்றதோ அதைப் போல் நுரையீரல் கல்லீரலில் கசிவுகள் அதிகமாகி விடுகின்றது
3.அதனால் அடிக்கடி வாந்தி என்ற நிலையும் வருகின்றது.
4.அதே போல் சர்க்கரையை நீக்கும் உடலிலே அதைச் சமப்படுத்தும் சக்தி இழந்து விட்டால் அதுவும் இணைந்துவிடும்.
5.இத்தகைய நிலைகள் ஏற்பட்டால் “உணர்வின் உந்துவிசை அதிகமாகி விடும்…: இரத்தக் கொதிப்பும் இதனுடன் கலந்துவிடும்.

இதைப் போன்ற உணர்வு நமக்குள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுக்கும். பின் வேதனை உணர்வு அதிகமாகி… உடலில் இதே உணர்வு கொண்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறச் செய்ததைச் சீராகப் பயன்படுத்தி… உங்கள் உடலில் எத்தகைய நோய் இருப்பினும் யாம் சொல்லும் முறைப்படி தியானித்து,,, உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீக்க முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது
2.அதே எண்ணத்தால் அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கிவிட்டு… கண்களை மூடி அந்த அருள் சக்திகள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.சிறுநீரகத்தில் குறை இருந்தால் அந்தப் பாகத்தில் நினைவைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்பிலே படரப்பட்டு நஞ்சினை நீக்கி…
3.என உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று உங்கள் உடலில் வாத நோயோ கீழ்வாதமோ முடக்கு வாதமோ சர்க்கரைச் சத்தோ ஆஸ்த்மாவோ அந்தந்த நோய்கள் நீங்கி நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

உங்கள் எண்ணத்தை இவ்வாறு செலுத்தினால் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படர்ந்து டிபி.யிலிருந்து கேன்சர் வரையிலும் நீக்கும்.

“கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வது போல் உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதை உடலுக்குள் செலுத்தி உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் இவ்வாறு செலுத்தச் சொல்வதன் நோக்கம் என்ன…?

நண்பன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்… இரண்டு பேரும் சண்டையிட்டு அவனை நினைத்து “இப்படிச் செய்தானே பாவி” என்று எண்ணினால்… கண்களால் செலுத்தப்படும் போது உடனே அங்கே புரையோடித் தீமையின் செயலாக இயக்குகிறது.

அதே சமயத்தில்… “தக்க நேரத்தில் எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் உடனே விக்கல் பாய்ந்து அங்கே நல்லதாகிறது.

இதைப் போல்
1.நம் உடலுக்குள் கண்களால் பதிவான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.கண்ணால் நுகர்ந்தறிந்த அந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்ததை
3.கண்ணின் நினைவை அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த உணர்வின் சக்தியை உடலுக்குள் பரப்பி
4.நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று எளிதில் இணைத்து… அதைப் பெறச் செய்ய முடியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த தீமைகள் கருவாகி அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சியைத் தூண்டி தன் இனத்தைப் பெருக்கும்.

இவ்வாறு அதன் இனத்தைப் பெருக்கும் அந்தச் சக்தியைக் குறைக்கத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உடலுக்குள் செலுத்தி அதை வளர்த்துக் கொண்டே வாருங்கள் என்று சொல்கிறோம்.

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட
2.எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மகரிஷிகள் காட்டும் கற்பு

 

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர்ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.

அலைபடுபேதம்

 

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே முயற்சி வழி.

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

தீமை வரும் போதெல்லாம் “அலைவரிசையை (FREQUENCY) மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்”

 

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும். பதிவானதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

1.மனித வாழ்க்கையில் தீமைகளைக் காண நேர்ந்தால் அந்த இடத்திலே நாம் “விழித்திருத்தல்” வேண்டும்.
2.வேதனைப்படுகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் சங்கடப்படுகிறார்கள் வெறுப்படைகிறார்கள் கோபப்படுகிறார்கள் நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால் அந்த ரெக்கத்தில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்.
3.காரணம் நாம் எடுத்த தியானத்தை உஷார்படுத்தித் தெளிவுபடுத்தி சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

கஷ்டப்படுகிறார் என்று பார்க்க கேட்க நேர்ந்தாலும் நன்மை செய்ய வேண்டும் என்று நிலையில் தான் அவரின் கஷ்டத்தை அறிய விரும்புகின்றோம்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

கேட்டறிந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஆன்மாவை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அந்தச் சிரமப்பட்டவர்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய். நோயிலிருந்து நீ விடுபடுவாய் நீ உடல் நலம் பெறுவாய் என்று சொல்லிவிட வேண்டும்.
1.அவருடைய கடும் வேதனைகள் நமக்குள் புகாதபடி விழித்திருந்து
2.வேதனையை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அந்த இடத்தில் வலுவாக்கிக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அவர்களைக் காக்க முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

அவரிடம் சொல்லி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்கி உன் நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்லுங்கள்.

காரணம் அவரால் வேதனையிலிருந்து மீள முடியாத அந்த நேரத்தில் நாம் அந்த அருள் ஒளியை அவருக்குப் பாய்ச்சினால்… அவரும் எண்ணத் தொடங்கினால்… நம்முடைய சொல் அவர் நோயை நீக்கக் காரணமாகும். ஓரளவுக்கு மன உறுதி பெறவும் உதவும்.

நமது வாழ்க்கையில் எதிர்படும் பல தீமையின் உணர்வுகளைக் கேட்டு அறிந்தால் நம்மைக் காத்து மற்றவர்களையும் காத்திடும் நிலையாக வர வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அதை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து ஒலி ஒளியாக நமக்குக் காட்டுகின்றது.

அன்றாடம் பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
1.நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ரேடியோ டிவிகளில் எப்படி வேறு அலைவரிசைகளை மாற்றுகின்றோமோ அதைப்போல
2.பிறர் படும் துயரத்தை நுகர்ந்தோம் என்றால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.இந்த அலைவரிசையை நமக்குள் எடுத்து தீமைகள் (அந்த அலைவரிசை) நமக்குள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

“இப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நாம் வந்தால் தான்” வாழ்க்கையில் அறியாது சேரும் தீயவினைகளிலிருந்து நாம் விடுபட இது உதவும்

ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஞானிகள் காட்டிய மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் பிறவியில்லா நிலை அடைந்த அவர்களின் உணர்வை நாம் பெற்று… இந்த வாழ்க்கையைச் சீராக அமைத்து… உடலுக்குப் பின் நாம் விண் செல்ல வேண்டும்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிரான ஈசந் தான். நாம் விரும்பியதை உருவாக்குவதும் அவனே.
1.நம் ஆறாவது அறிவால் தெளிந்த மனம் கொண்டு அருள் உணர்வினை நுகர்ந்தால் உயிர் அதை உருவாக்கி
2.அதன் வழியில் நம்மை வழிநடத்தி இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறச் செய்யும்.

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

 

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்…!

ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

 

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனுக்கு மனிதன் இங்கே நாம் நேரடியாகப் பழகி ஒருத்தருக்கொருத்தர் நண்பர்கள் என்று உதவி செய்து கொண்டால் உதவி செய்த உணர்வு இரண்டும் கலந்து வெளி வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கிறது.

இது அலைகளாக மாறும்போது… நீங்கள் அமெரிக்காவில் இருந்தாலும்
1.நண்பன் ஒரு நல்ல காரியம் செய்யும் பொழுது
2.நான் அமெரிக்காவிற்கு வந்ததே அந்த நண்பனின் உதவியால் தான்…! என்று எண்ணும்போது
3.உடனடியாக அங்கே அந்த நண்பனுக்கு விக்கலாகின்றது.

அதே சமயத்தில் ஒரு நண்பருடன் சந்தோஷமாக இருந்து பழகி பின்னாடி.. தொழில் விஷயத்தில் ஒருவருக்கு ஒருவர் பகைமையாகி விட்டால் இருவருமே என்ன நினைக்கின்றோம்…?
1.இவரால் தான் நஷ்டமானது… இவனெல்லாம் உருப்படுவானா…? என்று
2.இருவருக்குள்ளும் இந்த உணர்வுகள் கூடி.. இரு உடலிலிருந்தும் இப்படிப் பரவச் செய்துவிடுகின்றோம்.

அடுத்து இவர் அமெரிக்காவிற்குச் சென்றாலும் இன்னொரு நண்பர் இங்கே வருகின்றார். நான் அமெரிக்காவில் உன் நண்பரைப் பார்த்தேன். அந்த நண்பர் உயர்ந்த நிலை பெற்று நல்ல நிலையில் இருக்கின்றார் என்று சொல்கிறார்.

சொன்னவுடன் பாவிப்பயல்… எனக்கு மோசம் செய்தவன் அங்கே போய் விட்டானா…! அவன் எல்லாம் உருப்படமாட்டான்…! என்று அந்த உணர்வை வெளிப்படுத்தினால்
1.அது அங்கே சென்று அவனுக்குள் ஊடுருவுகிறது.
2.ஏற்கனவே பதிவானதன் துணை கொண்டு இந்த வீரிய உணர்வுகள் அவரின் உடலில் பாயத் தொடங்குகின்றது.

அந்தச் சமயத்தில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால்… இந்த உணர்வுகள் அந்த நேரத்தில் இது பாய்ந்தால்… உறுப்புகள் சீராக இயங்காதபடி புரை ஓடும். புரை ஓடும்போது நுரையீரல் பாகம் ஒரு சோற்றுப் பருக்கை இழுத்து விட்டால் போதும். திக்கு முக்காடச் செய்துவிடும்.

உதாரணமாக வாய்க்காலில் ஒரு பக்கம் தண்ணீர் போகின்றது என்றால் அதில் ஒரு பக்கம் சிறு ஓட்டை விழுந்தால் போதும்…!
1.அதன் வழி தண்ணீர் சென்றால்…
2.தண்ணீர் வரும் நிலைகள் இருந்து காற்றின் நிலைகள் வரும்.
3.ஜிர்ர்..ர்ர்ர்… என்று இழுக்கும்…. இந்த இடத்தில் சுழிக்காற்று வரும்.
4.இனம் புரியாத நிலையில் அந்த பக்கம் ஒரு ஓசையும் வரும்.

அதைப்போலத்தான் இங்கே இந்த உணர்ச்சியின் தன்மை வரப்படும்போது குறுக்காட்டி நுரையீரலில் அந்த உணர்வின் வேகம் கூடிய பின் நாம் உணவாக உட்கொள்ளும் நிலையை இடைமறித்து வேகமாக இழுத்துவிடும்.

நுரையீரலில் உணவுப் பொருள் சென்று விட்டால் நாளடைவில் நாற்றமாகி அதிலே புழுக்கள் உருவாகி நுரையீரல் பின்னமாகிக் கடும் நோயாகி… மரணமடையவும் நேரும்.

அதே போல் ஒரு காரையே ஓட்டிச் சென்று கொண்டிருந்தாலும் கண் கொண்டு முன்னாடி உற்றுப் பார்த்து… உணர்வினை நுகர்ந்தறிந்து இந்த வாகனத்தைச் சீராக ஓட்டினாலும்..
1.ஓட்டிக் கொண்டிருக்கும் போது இங்கே நண்பர் வந்து
2.உன் நண்பர் அமெரிக்காவில் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால்
3.அவன் எங்கே சென்றாலும் தொலைந்து போவான்… அடிபட்டுச் சாவான்…! என்று எதாவது உணர்வினைச் சொன்னால் போதும்.

அந்த உணர்வின் தன்மை இங்கே ஊடுருவி… அவன் உணர்வை நுகரக்கூடிய தன்மை வந்து…
1.அதே சமயத்தில் இந்த இரண்டு எண்ணங்கள் கலந்து உயிரிலே பட்ட பின்
2.வேகமான உணர்வுகள் வந்து சிந்திக்கும் தன்மை இழந்து
3.வாகனத்தைச் சீர்படுத்த முடியாத நிலையில் எங்கேயாவது ஆக்சிடெண்டாகும்.

எதிரே ஒரு மனிதர் வந்தாலும் பிரேக்கை அணைக்கும் தன்மை இழந்துவிடும். மோதியபின் தான் தனக்குள் தெரிய வரும். இப்படி எல்லாம் மனிதனை அந்தச் சந்தர்ப்பங்கள் இயக்கிடும் நிலை வருகின்றது.

உதாரணமாக கர்ப்பத்தில் குழந்தை இருக்கின்றது என்று வைத்து கொள்வோம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் யாராவது சாபமிட்டு இருந்தால் அதன் வழியில் அந்தக் குடும்பத்தின் சார்புடையோர் வேதனைப்பட்டால் போதும்.

இப்படிச் செய்தார்களே… அவர்கள் குடும்பம் உருப்படுமா…! என்று இந்த உணர்வின் சாப அலைகள் கர்ப்பிணித் தாய் நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய இந்தச் சிசுவிற்கும் பாதிப்பாகிறது.

அந்த நேரத்தில் வீட்டிற்குள்ளும் ஒரு நெடி கலந்த உணர்வுகள் வரும்.

ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பியோ சகோதரர்களோ வீட்டிற்குள் பாகம் பிரிப்பதில் தவறான முறையில் பிரிக்கப்பட்டால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அது வீரியம் கொண்டதாக மாறுகிறது.

கண்ணின் நினைவலைகளை இங்கே ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் போது அந்த எல்லையில் வரும்போது இந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது. அதே எண்ணத்தின் உணர்வுகளை இங்கே பரப்புகின்றது.

இத்தகைய உண்மைகளை எல்லாம் அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெற்றவன் என்பதனையும் உணர்த்தி அகஸ்தியனின் ஆற்றலை நாம் அனைவரும் பருக வேண்டும் என்று தெளிவாக்கினார் குருநாதர்.

எந்தப் பிள்ளையை வளர்க்கச் சொன்னார்கள் ஞானிகள்… எந்தப் பிள்ளையை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்…?

 

சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று நம் சஸ்திரம் கூறுவதன் பொருள் என்ன…?

ஒரு நோயாளி வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
1.அந்த உணர்வுகள் சித்திரம்… நுகரும் போது அதற்கொப்ப எண்ணங்கள் வருகின்றது
2.நம் உடலுக்குள் அது அணுவாக (புத்திரனாக) உருவாகின்றது.

அந்த வேதனை என்ற கணக்குகள் அதிகமாகும் போது உடலில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட பாம்பாக உயிர் மாற்றி விடுகின்றது.

அதாவது நோயாளி வேதனைப்படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகும் போது சித்திர புத்திரனின் கணக்காகி… அந்த எண்ணம் நமக்குள் எமனாக வருகின்றது.

என்னை இப்படிக் கோபிக்கின்றானே… பாவிப்பயல் இப்படிச் செய்கின்றானே என்ற உணர்வின் தன்மை தனக்குள் எடுத்தால்… சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம்
1.எந்த மனித உடலை உற்றுப் பார்த்து இந்த உணர்வை நுகர்ந்தோமோ அதே வேதனையை நமக்குள் எடுத்து…
2.உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அங்கேயும் வேதனையை உருவாக்கி விஷத்தினைக் கூட்டி
3.அங்கேயும் நரக வேதனையைத் தான் படும்.

அந்த உடலில் இருக்கும் மகிழ்ச்சிகள் நீங்கி அவன் உடலில் விஷத்தைத் தான் உருவாக்கும். விஷத்தை உருவாக்கிய பின் அந்த உணர்வின் வழிப்பிரகாரம் அந்த எண்ணமே எமனாக மாறி அந்த உணர்வுக்கொப்ப இதைப் போன்று மாற்று உடல்களை உருவாக்கி விடும்.

அதனால் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது அந்த எமன் யார்…? “நமது எண்ணம்தான்…!”

உதாரணமாக ரோட்டிலே ஒருவன் வேதனைப்படுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்கின்றோம். கண்ணிலே பார்க்காமல் செல்ல முடியுமா…?

பார்த்தவுடனே அந்த வேதனைப்படும் உணர்வுகள் “அது சித்திரம்” எனக்குள் வந்து அது புத்திரனாக மாறுகின்றது அதே வேதனையை உருவாக்குகின்றது. நான் அதைப் பிள்ளையாக எடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றேன்.

ரோட்டிலே கிடந்தான் வேதனைப்பட்டான் துயரப்பட்டான் என்று
1.அவனுடைய உணர்வை எடுத்துச் சாப்பாடாகக் கொடுத்து இந்த பிள்ளையை
2.அவனால் நுகர்ந்து உடலுக்குள் உருவான அணுக்களுக்கு உணவாக்க கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வை வளர்த்தால் இதுவே நமக்குள் “நோய்” என்ற எமனாக வருகின்றது

எந்த வேதனைப்பட்டு அவன் வேதனையால் துடித்தானோ அல்லது மடிந்தானோ அதன் வழிப்படி அதே அளவுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்…! என்பதைத்தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று கதையாக எழுதி நமக்கு இந்தப் பேருண்மையை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

எல்லாம் படிக்கிறோம் அல்லவா…! ஆனால் படித்துவிட்டுச் சித்திர புத்திரன் எங்கே இருக்கின்றான்…? என்றால் அவன் எங்கேயோ இருக்கின்றான்… நாம் செய்யும் தவறுகளைக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான்… எங்கேயோ இருக்கின்றான் என்று எண்ணுகிறோம்
1.ஆனால் “நமக்குள்ளே தான் அவன் இருக்கின்றான்…” என்பதை மறந்து விட்டார்கள்
2.அதைத்தான் ஞானிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றார்கள்

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்கின்றோம் உயிரிலே பட்டபின் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் செல்வதற்கு….!

உள்ளே சென்ற பின் “ஓ… பிரணவம்” அந்த வேதனைப்பட்ட உணர்வு பிரம்மமாகின்றது. ஏனென்றால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கருவாகின்றது. பின் அந்த உணர்வே இயக்கச் சக்தியாக மாறும்பொழுது பிரம்மம் ஆகின்றது.

அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அந்த வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகிறது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…!
1.ஐயோ… அம்மா… என்று அவன் கத்துவான்
2.அதை உணர்வு இங்கே ஆன பின் இந்த உடலிலும் ஐயோ… அம்மா… என்ற நாதங்களைச் சொல்லும்படி வைக்கும்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் பிரம்மம் ஆன பிற்பாடு அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் சிவமாகின்றது. சிவமாக மாறும்பொழுது உடலில் வேதனை…!

இந்த உடலில் நல்லதை உருவாக்கும் அனைத்துமே அலறத் தொடங்குகிறது. ஐய்யய்யோ இந்திரலோகத்தில் இரணியன் புகுந்து எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்வதாக இப்படி ஒரு கதை எழுதி நமக்கு உண்மை உணர்த்துகின்றனர் நாம் புரிந்து அருள் வழி வாழ்வதற்கு.

ஆனால் இதை விளக்கம் கொடுப்பவர்கள் இந்திரலோகமும் தேவர்களும் “எங்கேயோ இருக்கின்றார்கள்…” என்று தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் உணர்வின் இயக்கம் இந்த உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்று தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் புரியாத நிலையில் எங்கெங்கோ கொண்டு போகின்றோம்..

ஆனால் இத்தனையும் ஞானிகள் காட்டிய வழியிலே குருநாதர் சொன்ன முறைப்படி இதை நான் சொல்லும் பொழுது “நான் சொல்வது புரியவில்லை” என்று சொல்கின்றார்கள்.

மற்றவர்கள் சொன்ன கதையைப் பதிவாக்கி வைத்திருக்கின்றார்கள்… அது அவர்களுக்குள் வலுவாக இருக்கின்றது. இப்பொழுது நான் சொல்லிக் கொண்டு வருவதைக் கேட்டு விட்டு
1.சாமி சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிறையப் பேர் இப்படித் தான் சொல்கின்றார்கள்
2.எனக்குப் புரியவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள்.

இந்த தத்துவங்கள் எல்லாம் இயற்கையின் நிலையில் “எண்ணங்கள் எப்படி உருவானது…?” அன்று அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட இராமாயணம்.

1.அகஸ்தியன் கண்ட உண்மைகளை அவன் உணர்த்திய உண்மையைத்தான் வான்மீகி வெளிப்படுத்தினான்
2.அந்தத் தத்துவங்களைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அத்திரி மாமகரிஷி நமக்குக் கொடுக்கும் “மெய்ஞான விழிப்பு”

 

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலியினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலோகதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… அந்த நச்சுப்புற்றாக வளர்ந்துவிடுகிறது…!

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.

1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்…. இதனை உணர்ந்து நீ நட…!

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

 

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வதெல்லாம் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் பார்ப்பது கேட்பது இவை அனைத்தையும் ஜீவ அணுவாகப் பெறும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நாம் எண்ணியது அனைத்தும் அணுத்தன்மையாகி நம் உடலாகச் சேர்ப்பதைத் தான் ஓ…ம் ஈஸ்வரா…! என்றும் உடலுக்குள் எத்தகைய குணங்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியதோ அவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எந்தெந்தக் குணங்களை நாம் நுகர்ந்து அறிகின்றோமோ அறிந்த உணர்வுகள் அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாகி விடுகின்றது.

அதே சமயம் நல்லது கெட்டது என்று எத்தனை வகையிலே நாம் நுகர்ந்தறிகின்றோம். ஆனால் அவை அனைத்தையும் நமது உயிர் அந்த குணத்தின் அணுவாக உருவாகும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நம் உடலில் நல்ல அணுக்கள் உருவானால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது. வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்துவிட்டால் வேதனை உருவாக்கும் கருவாக உருவாகிவிடுகின்றது.

எந்தெந்த உடலில் இருந்து எத்தகைய குணங்கள் வெளிப்பட்டதோ அதை அனைத்தையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்று வித்தாக நமக்குள் அமைந்து விடுகின்றது
1.நாம் நல்ல குணங்கள் கொண்டு பலதைச் செய்தாலும்
2.தீமையான குணங்களைப் பிறர் வெளிப்படுத்தும் போது நாம் அதை நுகர்ந்து விட்டால்
3.அதன் உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிவிட்டால் நாமும் தீமை செய்வோராகவே மாறி விடுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் நோய்களும் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகள் வருவதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வடக்கு திசையில் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நமது பூமி கவர்ந்து பரவச் செய்து கொண்டே உள்ளது.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கேட்டுணர்ந்தால் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகி விடுகிறது.

ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவு இல்லை. நமது குருநாதர் அதை எவ்வாறு நம் உடலில் பதிவாக்க வேண்டும்…? என்று கூறியிருந்தார்.

அதன் வழி கொண்டு அவர் காட்டிய நெறிகள் கொண்டு பத்து இருபது வருடமாகக் காடு மேடெல்லாம் அலைந்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன அந்த முழு உண்மையின் உணர்வுகளை அறியும்படி செய்து
3.அதன் பின் அதனை வரிசைப்படுத்தி எவ்வாறு ஆனது…? என்று உணர்ந்த பின்
4.எனக்குள் அது பதிவாகி அதை நினைவு கொண்டு நுகறும் ஆற்றல் வந்தது (ஞானகுரு). அதனைக் கவர்ந்து கொண்டேன்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவு செய்தாரோ… அதே போன்று தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதன் மூலம்… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளினை அகற்றி மெய்ப்பொருள் கண்டுணரும் உணர்வின் சக்தி நீங்களும் பெற வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை உபதேசித்து வருகின்றேன்.

அந்தச் சக்தியை உங்களுக்குள் பெருக்கும் மார்க்கம் தான் குருநாதர் காட்டிய அருள் வழி தியானம்.

1.உபதேச வாயிலாகப் பதிவான இந்த உணர்வின் தன்மையை அடிக்கடி நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதை ஏங்கிப் பெற்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பெருக்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் பெற முடியும் இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வாக வளர இது உதவும்.

மக்களின் கணிப்பும்… மகரிஷிகளின் கணிப்பும்…!

 

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மலை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே.

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை.

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

 

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்… அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்

நஞ்சை அமுதமாக்கிடும் “நீலி”

 

உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட… அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.

கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.

வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்… சுவாச செயலாக நின்று…
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்…
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”

இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.

சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.

நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே…!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்… விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”

மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனை கைக்கொள்வோர் மிக அரிது.

மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்…
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்… சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

1.ஈசனால் உருவாக்கப்பட்ட நம் உடலில் தீமையான உணர்வுகள் ஊடுருவி
2.தீமையின் உணர்வுகள் உடலிலே வளர்ந்து விட்டா;ல்
3.உயிரால் உருவாக்கப்பட்ட இந்த ஈசனுக்கே நாம் தீங்கு செய்வது போன்று ஆகும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றித் தங்கதைப் பரிசுத்தப்படுத்துவது போன்று உங்களை அறியாது நல்ல உணர்வுடன் இரண்டற இணைந்த தீமையான உணர்வுகளை அகற்ற
1.“இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கும் இந்தச் சக்தியின் துணை கொண்டு…”
2.நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவீர்கள் என்றால்
3.உங்களை அறியாது சேர்ந்த பாவ வினைகளோ சாப வினைகளோ தீய வினைகளோ
4.இவை அனைத்தும் அகல உங்கள் எண்ணம் உங்களுக்குள் உதவும்.

இப்படி… அறியாது சேர்ந்த தீமைகளை நீக்க… அந்தத் தீமைகளை நீக்கிய அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை… சப்தரிஷி மண்டலத்தில் விளைந்த உணர்வுகள் இங்கே முன்னாடி படர்ந்திருப்பதை நீங்கள் கவருவதற்கே இதை உபதேசிப்பது.

இதைப் பதிவு செய்து கொண்டபின் நீங்கள் “எப்போது எண்ணினாலும்…” அந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்.

உதாரணமாக சாதாரண ஆண்டனா மூலம் லோக்கலில் ஒளிபரப்பு செய்வதை டி.வி. அதை ஈர்த்து நமக்கு முன் படமாகக் காட்டுகின்றது… நாம் காணுகின்றோம்.

இதைப் போல சப்தரிஷிகளின் அருளாற்றல்களை… சக்தி வாய்ந்த நிலையாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கிறோம். அப்பொழுது உங்கள் கண் சக்தி வாய்ந்த ஆண்டனாவாக மாறுகின்றது.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… அன்பான குணமோ கோப குணமோ தீய குணமோ உங்களுக்குள் ஏற்கனவே பதிவானதை மீண்டும் எண்ணினால் அது கண்ணின் நினைவிற்கே வருகின்றது.

அப்பொழுது அந்த நினைவின் ஆற்றலை யாருடன் பகைமை கொண்டோமோ யாருடன் அன்பு கொண்டோமோ யாருடன் பரிவு கொண்டோமோ யாருடன் பண்பு கொண்டோமோ இதைக் கவர்ந்து நாம் அறியவும் முடிகின்றது.

ஆனால் தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை உங்களைப் பெறச் செய்யும்போது…
1.சக்தி வாய்ந்த ஆண்டனாவாக உங்கள் கண் மாறுகின்றது.
2.அதனின் துணை கொண்டு நமக்கு முன் படர்ந்திருக்கும் மகரிஷியின் உணர்வை நுகரப்படும் போது நம் ஆன்மாவாக அது மாற்றுகின்றது
3.பின் அந்தத் தீமையின் உணர்வை அகற்றும் நிலையாக அது நமக்குள் நிலை பெறுகின்றது.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் இப்பொழுது கூட்டுத் தியானத்தில் பலருடைய உணர்வையும் ஒன்றாக இணைத்து… ஒரு நிலை கொண்டதாக உருவாக்கி.. அந்த உணர்வின் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

இது சக்தி வாய்ந்த ஆண்டனாவிற்குப் பொருந்தும்…!

ஆகவே இதனின் துணை கொண்டு உங்கள் மூதாதையரை எளிதில் விண் செலுத்தவும் முடிகின்றது. ஏனென்றால் மூதாதையரின் உணர்வு தான் உங்கள் உடலே…!

அவர்களை விண் செலுத்திய பின் ஒளியின் சரீரமாக நிலை கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் போதெல்லாம்… அந்த உணர்வின் ஆற்றல் இங்கே பதிந்திருக்கும்… படர்ந்திருக்கும்… பேரருள் பேரொளி உணர்வின் தன்மையை எளிதில் நுகர முடிகின்றது.

1.ஆகவே நீங்கள் செய்த இந்தச் சக்தியினை விரயமாக்காது
2.ஒவ்வொரு நாளும் இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம் சப்தரிஷி மண்டலங்களை எண்ணி எடுத்து
3.தங்கத்தில் திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் நீக்குவது போல்
4.மேலுக்குக் (உடல்) குளிப்பது போல் உங்கள் உணர்வைச் சுத்தப்படுத்துங்கள்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீர் ஊற்றும் போது அழுக்கு நீர் குறைந்து கொண்டே வரும். செம்பும் தழும்பாது. ஞானியரின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கச் சேர்க்கச் சேர்க்க… அது பெருகப் பெருக அந்தத் தீமைகள் தணியும்.

உதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அது குடிப்போரை மடியச் செய்கின்றது.
1.இதில் பல ஆயிரம் குடம் பாலை ஊற்றும் போது
2.விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் குறைந்து
3.அந்தப் பாலிற்கே வீரிய சக்தியாக இந்த விஷத் தன்மை அமைகின்றது.

இதைப் போல் நமக்குள் விஷம் கொண்ட உணர்வுகள் நமக்குள் பல இருப்பினும்…
1.நஞ்சினை வென்ற அருள் ஞானியின் உணர்வை நாம் நூறு முறையாவது எடுத்துக் கொள்வோம் என்றால்
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு தூய்மைப்படுத்தும் சக்தியாக மாறும்.
3.நம் நினைவின் ஆற்றலும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே ஒன்றுகின்றது.

அதைப் பற்றுடன் பற்றும் நிலையும்… அந்த அருள் ஞான சக்தியை நமக்குள் பற்றுடன் பற்றச் செய்வதற்கும் தான் இதைச் சொல்கிறோம்.

எம்முடைய உபதேசங்களை “அடிக்கடி பதிவாக்கினால் தான்” தீமைகளை நீக்கும் வலிமை கிடைக்கும்

 

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சங்கடத்தைப் பார்க்கின்றீர்களோ… அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் உள்ளுக்கே அடைத்துப் பழக வேண்டும்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது.

அதை நாம் நுகரும் பொழுது உடலுக்குள் செல்கின்றது இது வலுப்பெற்று விடுகிறது.

அன்றாட வாழ்க்கையில்… காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை இத்தனையும் எடுத்திருக்கின்றோம்… அது நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

1.இந்தப் பதிவுகள் நம் ஆன்மாவில் இருக்கும்
2.ஆன்மாவிலிருந்து நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொன்றாக வரிசையாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரில் மோதினால் அந்த எண்ணங்கள் எல்லாம் நமக்கு வரும்.

சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட… அவன் சண்டை போட்டான் இவன் என்னை ஏமாற்றினான்… சம்பந்தமில்லாமலே ரோட்டிலே ஒருவன் போனான்… கீழே விழுந்தான்…! என்று எல்லா உணர்வும் வரும்.

பதிவான அந்த உணர்வுகள் நமக்குள் மீண்டும் நினவாகி… தனது இனமான உணர்வை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்படி அதை நுகரும் போது என்ன ஆகிறது…?

உயிரிலே பட்டால் அந்தந்த உணர்ச்சிகளை நாம் அறிய முடிகின்றது உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்கள் சோர்வடைகிறது… சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.இங்கே யார் தவறு செய்தது…? யாரும் தவறு செய்யவில்லையே.
2.ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அதற்குக் காரணம்.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நம் உயிர் உடலுக்குள் உருவாக்குகிறது… அது ஒரு சந்தர்ப்பம்.

அதை மாற்றி அமைக்கத் தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுதல் வேண்டும். அதை நுகர்வதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அதை வளர்த்தால்… தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வரும்.

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மமாகிறது. மனிதன் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி உயிரிலே நுகர நேர்ந்தால்… அதை உருவாக்கினால்… “துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் பிரம்மமாகிறது…”

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன். கார்த்திகேயா…! இந்த ஆறாவது அறிவால்… தீமை என்று தெரிந்து கொண்ட பின்… அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று அறிந்து கொண்ட உணர்வை வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்ந்தால் அருள் ஒளியை உருவாக்கலாம்.

அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கும் போது தீமையை நீக்கும் சக்தி கிடைக்கும். ஏன் இது நம்மால் முடியாதா…?

அதற்காக வேண்டித் தான்
1.அவ்வப்பொழுது தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்… நினைவூட்டுகின்றோம்.
2.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்காகத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

சிறிது நேரம் சொல்லிவிட்டுச் சென்றால் “நன்றாக இருக்கின்றது…” என்று சென்று விடுவார்கள்… உள்ளே பதிவாகாது. பதிவாகவில்லை என்கிற போது குருநாதர் என்ன சொன்னார்…? என்று கேட்பார்கள்.

அதற்காக அழுத்தமாகக் கொடுக்கப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது அதை வைத்து உங்களைக் காக்கும் எண்ணங்கள் வரும்.

இப்படித் தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்கிறோம்…. அடிக்கடி பதிவாக்குகின்றோம்.
1.இதை நினைவு கொண்டால் அந்த அருள் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது
2.இருளைப் போக்கும் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்

வேதத்தின் ஒலிகளை ஆளும் “வேதாள மாமகரிஷி”

 

அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.

வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.

ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.

குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.

பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.

செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.

வேதையும் ஓர் அம்பை ஏவியது.

1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.

“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.

“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.

ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.

பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.

புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.

திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.

அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக ஒரு மனிதன் மிகவும் பயந்த நிலைகள் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அவனின் உடலில் விளைந்த உணர்வுகள் “ஐயோ… பயமாக இருக்கின்றது… பூதம் வருகின்றது…” என்று நாம் கற்பித்த உணர்வின் தன்மை கொண்டு (விளையாட்டாகப் பேய் பிசாசு ஆவி என்று சொல்கிறோம் அல்லவா…!) அவன் ஏற்றுக் கொண்ட உணர்வுகள் அந்த அலைகளாகப் படர்ந்து அவனுக்குள் விளைந்து விடுகின்றது.

தான் கற்பனையாகச் செய்து கொண்ட “பூதகணங்கள்…” இவ்வாறு இருக்கிறது என்ற அச்சத்தால் கவர்ந்து கொண்ட உணர்வின் தன்மை இவனுக்குள் விளைந்த பின் அவன் வெளியிட்ட இந்த அலைகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

அதே சமயத்தில் இவனைப் போலவே இன்னொரு மனிதன் அச்சப்படுவான் என்றால்
1.ஏற்கனவே முதல் மனிதன் பயந்த உணர்வுகள் வெளிப்படுத்தியதை
2.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்த அச்ச அலைகளை இவன் நுகர நேருகின்றது.

நுகர்ந்த பின்… “பூதம் வருகின்றது… இதோ பேய் வருகிறது…! என்று சொல்ல ஆரம்பிப்பான். நமக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்குத் தெரியும்.

என்னென்ன உணர்வு கொண்டு அதைப் பிரித்தார்களோ அந்தந்த உணர்வு கொண்டு பூதம் வருகின்றது… ஐயோ… ஐயோ… என்னை நசுக்க வருகின்றது…” என்னைப் பிடிக்க வருகின்றது…! என்று சொல்வதை நாம் கேட்கலாம்.

1.நல்லது… கெட்டது… என்ற நிலைகளில் சூட்சும நிலைகளில் உலகில் எது… எப்படி இயக்குகின்றது….?
2.நுகர்ந்த அறிவாகத் தனக்குள் வந்தபின் உடலில் அது எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துள்ளார்கள் மகரிஷிகள்.

இயற்கையில் மனிதனாக உருவானதையும் மற்ற உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் எப்படி உருவானது…? என்ற நிலையையும் தெளிவாகத் தெரிந்து கொண்டவர்கள் அந்த “மகரிஷிகள்…”

மகரிஷிகளிலே அகஸ்தியன் தான் முதன்மை பெற்றவன். அவன் கண்டுணர்ந்த உணர்வு தான் மெய் (ஞான) உலகிற்கு இன்றும் வழி காட்டிக் கொண்டுள்ளது.

அவன் வழியினைப் பின்பற்றிய மெய் ஞானிகள் காட்டிய உணர்வுகள் அனைத்தும் மனிதனுக்குள் உணர்வலைகளாகப் படர்ந்து படர்ந்து… அது பரவிக் கிடப்பதைத் தான் எழுத்தறிவு என்று வரப்படும்போது விண்ணுலக ஆற்றலை வான இயல் சாஸ்திரம் என்று கொண்டு வருகின்றார்கள்.

இன்னென்ன இடத்தில் சூரியன் இருக்கின்றது… வியாழனும் மற்ற கோள்களும் இருக்கின்றது… என்ற நிலையும் அதனின் திசைகளையும் அதனின் ஓட்ட நிலைகளையும் அதனின் ஓட்டப் பாதைகளையும் அதனுடைய பாதையின் திசைகளையும் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகஸ்தியன் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியுள்ளான்.

அவனில் வெளிப்பட்டதைப் பின் வந்த வியாசகன் தன் உணர்வின் ஆற்றலால் அதைக் கண்டுணர்கின்றான். அகஸ்தியன் கண்டுணர்ந்த கோள்கள் எதுவோ…
1.அவனுக்குள் படமெடுத்த உணர்வுகள் எண்ண அலைகளாகப் பரப்பியதையும்
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வுகளயும் வியாசகனால் அது சந்தர்ப்பத்தால் கண்டுணர முடிகின்றது.

ஏனென்றால் இதை எல்லாம் நம் தத்துவ ஞானிகள் சந்தர்ப்பத்தால் இதைப் பெறுகின்றனர். ஆகவே வியாசகன் அவனுக்குள் எதை விளைய வைத்தானோ அந்த உணர்வின் அணு செல்கள் வரப்படும்போது அது மற்றொரு உடலுக்குள் வரும்போது அதுவே வரும்.

ஆகவே
1.ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் நம்மையும் அது ஞானியாக மாற்றும்
2.நீங்கள் எல்லோரும் ஞானியாக மாற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை

 

ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.

நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அம்மாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”

சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?

சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.

சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.

பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.

பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.

மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?

நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.

எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.

உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”

1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”

சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் எனக்குச் சொல்லிக் கொடுத்தது

 

கடவுள் யார்…? உன் உயிரே உள் நின்று இயக்குகின்றது… நுகர்ந்த உணர்வே அது உள் நின்று கடவுளாக இயக்கும்… அது கடவுள் தான். உள் நின்று நுகர்ந்ததை எல்லாம் உணர்த்துவது “உயிர் தான் கடவுள்…”

உணர்ந்த பின்… ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால் “எது வலுவோ அதன் வழி தான் உன் வாழ்க்கை அமையும்…”

இன்றைய செயல் அடுத்த சரீரம். சாக்கடையில் அமரச் செய்து குருநாதர் இதைச் சொல்லிக் கொடுக்கின்றார்.
1.அவர் சொல்லச் சொல்ல அந்த சாக்கடை நாற்றமே பூராம் போய் விட்டது.
2.அந்தச் சாக்கடை நாற்றத்தைக் காணோம்… எங்கேயோ போகின்றது.

அப்போது தான் வான மண்டல உணர்வுகளை எடுத்து… ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வுகள் ஒன்றுக்குள் ஆகி விஷத்தின் தன்மை தணிந்து ஞானத்தின் உணர்வுகள் ஒளியாகி எப்படி மாறுகின்றது…? என்று உணர்த்துகின்றார்.

வான மண்டலத்தில் உள்ளது எல்லாம் இந்த உடலுக்குள் உண்டு. இந்தப் பிரபஞ்சம் எப்படியோ உயிர் இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி உள்ளது.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்தெந்த உறுப்புகளின் வலுப்பெற்று தீமைகளை நீக்கும் சக்தியாகப் பெற்றதோ… அந்த வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால் மீண்டும் கீழான நிலைகளுக்குச் சென்று விடுவோம்.
1.அதற்குத்தான் அந்த குரு பலம் வேண்டும் என்று சொல்வது
2.அருள் உணர்வுகளைச் சேர்த்து. அதன் துணை கொண்டு தான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்.

உயிரின் வலு கொண்டு.. குரு என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைக் குருவாக்கினால் அது குரு என்ற நிலைகள் கொண்டு இருளை நீக்கிப் பொருளைக் காணும் அந்த சக்தியை நீ பெறுவாய்.

அதே சமயத்தில் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்…!

ஏன் சாமி தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்..?

வேறு எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்றார். ஏன் தட்டுகின்றேன்…? என்று கேட்கின்றாய்.
1.நான் டெலிஃபோன் செய்கின்றேன்… ஆண்டவனுக்குத் தந்தி கொடுக்கின்றேன்…!
2.இங்கே தட்டுகின்றேன்… காதில் படுகிறது உனக்குள் ஒளியாகின்றது,
3.அந்த உணர்வு இருளை நீக்குகின்றது என்று சொல்வார்.

போஸ்டில் தட்டுவதற்கு இப்படித்தான் விளக்கம் கொடுக்கின்றார்.

நாம் சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நஞ்சினை நம் உடல் பிரித்து அதை மலமாக மாற்றுகின்றது. இது எப்படி வந்தது…?

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அத்தகைய சக்தி பெற்ற பன்றியின் உடலை உருவாக்கியது இந்த உயிர். பன்றியாகப் பிறந்தபின் தீமையைச் சுத்தமாகவே நீக்கிவிட்டு தீமை நீக்கக்கூடிய வல்லமை பெற்ற மனித உடலை உருவாக்கியது.

மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா. அதை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் திட்டுகிறார் என்றால்… திட்டியவனை விடுவேனா…? நான் என்ன செய்கிறேன் பார்…! என்று சொன்னால்
1.இந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவிலே வலு சேர்ந்துவிடும்
2.வலு சேர்ந்த பின் தீமைகளாக உருவாகிவிடும்.

ஆகவே தீமைகளைப் பிளக்கக்கூடிய ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதற்குத்தான் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வை “ஆழமாகப் பதிவு செய்தார்…”
1.இதை நினைவு கொள்… அதிலிருந்து அருள் ஒளிகள் வருகின்றது
2.அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ அதை வைத்துத் தீமைகளை நீக்கப் பழகிக் கொள் என்றார்.

நான் வந்து துடைக்க முடியாது… நீ தான் துடைக்க வேண்டும் நான் இங்கே வாழ்ந்த நிலையில் தீமைகளை நீக்கி விட்டு நான் சென்று விடுகின்றேன். நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது…? என்று உடலோடு இருக்கும் பொழுது குருநாதர் கேட்கின்றார்.

இந்த உடலில் நான் சிறிது நாள் வாழுகின்றேன்…. இந்த உடல் எனக்குச் சதம் இல்லையே.
1,உயிரோடு ஒன்றி சதமாக இருப்பதற்கு நான் போகின்றேன்
2.நீ இங்கே இருந்து என்ன செய்யப் போகின்றாய்…?
3.நான் அங்கிருந்து வந்து உன் தீமையைத் துடைப்பேனா…?
4.அந்த உணர்வுகள் விளைந்தது நான் அழிவதில்லை
5.இருளை ஒளியாக்கினேன்… அந்த ஒளியின் உணர்வு இங்கே பரவி உள்ளது… அதை நீ எடுக்கப் பழகிக் கொள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசம் செய்கின்றோம். பெரும்பகுதியான படித்தவர்கள் என்ன நினைக்கின்றார்கள்…? யாம் சொல்வதை சரியா தப்பா…! சரியா தப்பா…? சரியா தப்பா…? என்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால் அந்த அளவுக்குப் படிப்பில்லாதவர்கள்
1.யாம் என்ன சொன்னாலும் அதைப் பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
2.குருநாதர் சொன்னார் அல்லவா… இதை நாம் செய்து பார்ப்போமே…! என்று
3.அந்த உணர்வுகள் தூண்டும்போது அவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கின்றார்கள்…?

நான் மகாபாரதத்தைப் படித்தேன் கந்த புராணத்தை படித்தேன்… பிரம்ம சூத்திரத்தையும் படித்தேன். ஆனால் அதையெல்லாம் இங்கே சாமி (ஞானகுரு) சொல்லவில்லை.

ஆக அவர்கள் படித்ததைப் பதிவு செய்து கொள்வார்கள். ஆனால் இங்கே யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகள்
1.அந்த அருள் ஞானிகள் பெற்றதைச் சொல்லும்போது இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
2.காலி செய்து கொண்டே இருப்பார்கள்…
3.தான் பதிவும் ஆக்க முடியாது… அதைப் பெறவும் முடியாது.

அவர்கள் படித்த பிரம்ம சூத்திரத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
1.மனிதனான பின் இந்த தீமைகளை அகற்றுவது எப்படி…?
2.தீமையை அகற்றியவன் யார்…?
3.தீமையை அகற்றிய உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது…? என்று
4.இந்த மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு.

மனுஷாள்…! என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அந்தச் சாஸ்திரத்தை தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

மனு நீதி சாஸ்திரத்தை நான் படித்து இருக்கின்றேன்… இவர் சொல்வது எங்கே இருக்கின்றது…? காணவில்லையே…! இந்த நிலைகள் தான் படித்தவர்களுக்கு எண்ணமாக வரும்.

மகாபாரதத்தைப் படிக்கும்போது படித்த நிலைகள்… அந்தப் படித்தது மட்டும் தான் இருக்கும். குருநாதர் சொல்வதை அதிலே காணோமே…! என்பார்கள்.

உதாரணமாக கேரளாவில் மொக்கை அரிசியைச் சாப்பிடுகின்றார்கள். அதனின் ருசி வேறாக இருக்கின்றது. இங்கே நாம் பொன்னி அரிசியைப் போட்டுச் சாப்பிட்டோம் என்றால் அந்த ருசி வேறு இருக்கும்.
1.அந்த ருசியை இதிலே காணோமே… என்பது போன்று
2.அந்தப் படித்த உணர்வுகள் எதுவோ அதே தான் வரும்.

நம்மிடம் மொக்கை அரிசியைச் சாப்பிடச் சொன்னால் பார்த்தவுடனே “பொன்னி அரிசியின் ருசி அதில் வரவில்லையே…” என்று தான் சொல்வோம்.

ஏனென்றால் அந்தந்த உணர்வின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே போல் தான் உணர்வினை இயக்கும். ஆக மதங்கள் ஆனாலும் இனங்கள் ஆனாலும்
1.எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ
2.அதன் சுவை தான் அவர்களுக்கு ரசிப்பாக இருக்கும்.

படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டுமென்றால்…
1.படித்தது பாதைகளை அறிவதற்கு உதவும்.
2.ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு அருள் ஞானியின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.
3.ஞானத்தை வைத்துத்தான் படித்த கல்வியின் நிலைகள் ஞானத்தில் கொண்டு செல்ல முடியும்.

கல்வி உடலின் உணர்வுக்குதான் உதவுமே தவிர… உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

நமக்கு நற்பாதையை காட்டுவதற்குத்தான் கல்வி. அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி
1.அந்த அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால்
2.இன்றைய விஞ்ஞான உணர்வின் தீமையான விளைவுகளை மாற்றியமைக்கலாம்.

பல கோடிச் சரீரங்களில் “தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும்”

 

நான் இல்லை…! நீ இல்லா இவ்வுலகில் “எல்லா நினைவையும் பெற்றிடவே எனக்கருள் செய்வாய் ஈஸ்வரா…!”

உயிர் இல்லையென்றால் இந்த உடலான உலகில் நாம் இருக்க முடியுமா…? முடியாது.

ஆரம்ப நிலைகளில் புழுவிலிருந்து நாம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றோம்

புழுவாக இருக்கும் பொழுது குளவி கொட்டுகின்றது. குளவி கொட்டியபின் புழுவிற்கு வேதனை வருகின்றது.
1.வேதனை வந்தபின் குளவியின் மீதே நினைவு செல்கின்றது.
2.அப்படி நினைவு செல்லும்பொழுது குளவியின் உணர்ச்சிகள் என்ன செய்கிறது…?
3.புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்குள் ஊடுருவி புழுவைக் குளவியாக மாற்றுகின்றது.

வேதனைப்பட்டோம்… குளவியை நினைத்தோம் குளவியாக மாறுகிறது. வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று எண்ணினோம். விஷத்தையே பாய்ச்சி விஷத்தை உருவாக்குகிறது குளவி.

குளவி முதலில் தன் உமிழ் நீரால் மண்ணைப் பிசைகின்றது. அதை எடுத்துக் கொண்டு வந்து கூடாகக் கட்டுகின்றது தன் உடலில் இருந்து வரக்கூடிய விஷத்தைப் புழுவின் மீது பாய்ச்சுகின்றது.

இந்த விஷம் புழுவின் உடலுக்குள் செல்கின்றது… மயங்கிவிடுகிறது.. புழுவைக் கூட்டிற்குள் உள்ளே தள்ளி மூடி விடுகின்றது .கூட்டின் மீது அடிக்கடி அந்த குளவினுடைய ஞாபகத்தை ஊட்டுவதற்காக டுர்ர்ர்ர்… என்று ஒரு இரைச்சலிடுகிறது.
1.இந்த அதிர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.இழுக்கும் (ஈர்க்கும்) நினைவு வரும்.

விஷத்தின் தன்மையால் புழு துடித்த பின் உமிழ் நீரால் கூட்டிய கூட்டின் மீது அந்த ஒலிகள் பட்டபின… அந்த அதிர்வுகள் உள்ளே இயங்கிக் கொண்டே இருக்கின்றது.

இந்த உணர்வுக்கொப்ப புழுவின் அணுத்தன்மைகள் என்ன செய்கின்றது…? குளவியாக ரூபம் மாறுகின்றது.

ஆகவே…
1.எப்படிக் குளவி கொட்டியபின் சுரீர்ர்ர்… என்று குளவியை எண்ணி அந்த உணர்வினை இழுத்துக் குளவியாக நான் ஆனேனோ
2.மற்றதை இதைப்போல உருவாக்கும் சக்தி நான் பெற்றேனோ
3.இந்த நினைவுகள் எல்லாம் எனக்குள் வர வேண்டும்.

பாம்பு எலியைக் கண்ட பின் என்ன செய்கின்றது…? விஷத்தைப் பாய்ச்சுகின்றது… விஷத்தைப் பாய்ச்சியவுடன் எலி மயங்குகின்றது…. வேதனை தாளாது துடிக்கின்றது.

விஷத்தால் தாக்கப்பட்டால் நாம் துடிக்கின்றோம் அல்லவா. அது போல் துடிக்கும் வேகம் ஆன பின் விஷத்தின் தன்மை எலிக்குள் அதிகமாகின்றது. அப்போது அதனுடைய வலு இழக்கப்படுகின்றது.

எலி என்ன செய்கிறது…? எந்த விஷத்தால் தாக்கப்பட்டதோ “அதையே நினைவு கொள்கின்றது…” அந்த உணர்வின் இயக்கமாக எலியின் உயிர் நுகரப்படும் போது அந்த உணர்வின் துடிப்பாகிறது.

அதைத் தாங்காது இந்த உடலை விட்டு உயிர் வெளியே செல்கின்றது. பாம்பு “தன் விஷத்தின் தன்மையை” எலி உடலுக்குள் பாய்ச்சியதால் பாம்பின் உடல் எலியைத் தனக்குள் இழுக்கின்றது.

இழுத்துக் கொண்டபின் எலியின் உயிரான்மா உள்ளே புகுந்து விடுகின்றது. உள்ளே சென்ற பின் பாம்பை உருவாக்கிய உணர்வுகள் அதன் விஷம் எதுவோ அந்த விஷத்தின் தன்மை கொண்டு கருவாகி முட்டையாகிறது.

பாம்பு விஷத்தைப் பாய்ச்சி எலியை உணவாக உட்கொண்டது
1.பாம்பின் விஷம் எலியின் உடலுக்குள் இது இரையாகி
2.அந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை பாம்பாக உருவாகும் கருத்தன்மை அடைகின்றது.
3.அதனுடைய வலுப்பெற்ற பின் பாம்பு இழுத்துக் கொள்கிறது.
4.அதற்குள் சென்றவுடன் முட்டையாகின்றது… முட்டையான பின் பாம்பு அதை அடைகாக்கின்றது.
5.அதற்குத்தக்க அமிலங்கள் உற்பத்தியாகின்றது முழுமை அடைந்த பின் முட்டை வெளியே வருகின்றது.
6.முட்டை வெளியே வந்தபின் தன் உணர்வின் தன்மை கொண்டு அடைகாக்கிறது.

இந்தத் துடிப்பின் நிலைகள் எப்படி குளவி மண் கூட்டின் மீது இரைச்சலானதோ அந்த உணர்வின் அதிர்வைக் கொண்டு தனக்குள் இழுக்கச் செய்ததோ இதே உணர்வின் தன்மைகொண்டு அந்த முட்டை மீது பட்ட உடனே இந்த சூடு அதை இயக்கித் துடிப்பு ஆகிறது.

அந்தத் துடிப்பு ஆகும் பொழுது உணர்வின் நினைவு கொண்டு அதே பாம்பாக உருவாகின்றது.

மணத்தால் நுகர்ந்தறிந்து வாழக்கூடிய சக்தி பெற்றது தான் உயிரினங்கள். ஆகையினால் மணத்தால் நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு பாம்பு தன்னைத் தாக்கும்போது அந்தப் பாம்பையே நினைக்கின்றது.

அதிலிருந்து தப்ப வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. தப்புவதற்கு என்ன வழி…?
1.வேதனையாகி உடலை விட்டு உயிர் சென்ற பின் அதுவாக ஆன பின்
2.பாம்பின் மணத்தை நுகர்ந்து வலு பெற்ற பின் தப்பும் மார்க்கம் வருகிறது… பாம்பாக மாறுகிறது.

எலி பாம்பாக ஆன பின் அதே பாம்பைப் போன்று மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி உனவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒவ்வொரு சரீரத்தில் இருக்கும் போதும்…
1.தப்ப வேண்டும் தப்ப வேண்டும் என்று பல கோடிச் சக்தி வாய்ந்த உணர்வுகளை எடுத்து மனிதனாக வளர்ந்துள்ளோம் .
2.அப்படி அந்த பல கோடிச் சரீரங்களிலும் எடுத்துக் கொண்ட…
3.தான் தப்புவதற்காக வளர்த்துக் கொண்ட அந்த எல்லா நினைவுகளும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எங்களுக்கு தீமையிலிருந்து மீண்டிடும் சக்தியாக அது வரவேண்டும் என்பது தான் இதனுடைய பொருள்

உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம் “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்”

 

கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்

இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”

திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.

1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.

மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.

தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”

“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.

மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.

கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.

மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.

கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.

கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.

சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…/

சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.

மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?

1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).

கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நமது வாழ்க்கையில் எத்தனையோ சலிப்பு பட்டவர்கள் சங்கடப்பட்டவர்கள் கோபப்பட்டவர்களை எல்லாம் பார்த்திருப்போம்… நுகர்ந்திருப்போம். அந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் தீய வினைகளாக இருக்கும். அதே போல் நாம் தாய் கருவில் இருக்கப்படும்பொழுது பெற்ற பூர்வமும் இருக்கின்றது.

அதாவது தாய் கர்ப்பமாக இருக்கும் பொழுது நோயாளியைப் பார்த்திருப்பார்கள்… சாபமிட்டவரைப் பார்த்திருப்பார்கள்… எத்தனையோ வேதனைப்பட்டோரையும் பார்த்திருப்பார்கள். அதே சமயத்தில் ஒரு சிலருக்குச் செய்வினை செய்திருக்கின்றார்கள் என்றெல்லாம் கூடக் கேட்டிருப்பார்கள்.

இந்த உணர்வை எல்லாம் தாய் நுகர்ந்த பின் தாய் கருவில் இருக்கும் பொழுது அது “பூர்வ புண்ணியமாக” நமக்குள் விளைகின்றது.
1.இது எல்லாம் அந்தந்தக் காலகட்டங்களில் அந்த வளர்ச்சிகள் வரும் போது
2.நம்மை அறியாது எத்தனையோ நோய்களாகவோ மற்ற தீமை செய்யும் இயக்கங்களாகவோ வருகிறது.
3..நாமும் தவறு செய்யவில்லை… தாயும் தவறு செய்யவில்லை
3.நுகர்ந்த உணர்வோ தாய் தந்தையரால் நுகரப்பட்டது தான்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது அந்தத் தாய் விஷத் தன்மையில் இருந்து தப்பிப்பதற்காகப் பல பல பச்சிலைகளையும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளையும் நுகர்ந்தது.

1.அந்த உணர்வுகள் தாய் கருவிலே இருக்கும் அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாகின்றது
2.விஷத்தை முறிக்கும் சக்திகளை அகஸ்தியன் பெறுகின்றான்.
3.அதன் மூலம் அவன் அண்டத்தையே அறியும் அருள் சக்தி பெறுகின்றான்
4.நஞ்சை ஒடுக்கி ஒளியாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றான்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைப் பெற்றால் தான் முதலிலே சொன்ன… அறியாமல் வந்த எத்தனையோ தீய வினைகளிலிருந்தும் தாய் கருவிலே பெற்ற பூர்வம் என்ற நிலைகளிலிருந்தும் ஒவ்வொருவரும் தப்ப முடியும்.

அந்தச் சக்திகளைப் பெற நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து… ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் அனைவரும் பெற்று எங்கள் இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி பேரருள் பெற்றுப் பேரொளியாகி… தெளிந்த மனமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வும் பெற்று.. பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று… தொழில் வளம் பெருகி செல்வம் பெற்று… அருள் ஞானம் பெருகி அருள் வாழ்க்கை வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
1.கூட்டுத் தியானங்களில் இது போன்று எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
2.பின் எந்த நேரம் எண்ணினாலும் அந்த ஆற்றலை எளிதில் பெற முடியும்.

கடவுள் காப்பாற்றுவார் என்று தான் நம்புகிறோம்… அந்தக் கடவுள் யார்…?

 

இன்று தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக ஆகிவிட்டார்கள். உலகெங்கிலும் எத்தனையோ வன்முறைகளும் தீவிரவாதங்களும் நாட்டுக்கு நாடு… ஊருக்கு ஊர்.. பெண்களாக இருந்தாலும் குழந்தைகளாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவமதிக்கும் நிலைகள்… துன்புறுத்தும் நிலைகள் பெருகிவிட்டது.

அந்த மாதிரியான உலகத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மற்றவர்கள் அதைச் செயல்படுத்துகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம் அதைக் கண்டு பயப்படவும் செய்கின்றோம்.
1.ஆனால் நமக்கு அதே மாதிரி ஒரு இக்கட்டான நிலை வரப்படும் பொழுது
2.நாமும் பதிலுக்குச் செய்தால் என்ன…? என்ற எண்ணங்கள் வந்து விடுகிறது.

ஆகவே எது வளர்கின்றது…? நேற்று வரை நல்லவர்களாகத் தான் இருந்தார்கள் என்று நினைக்கின்றோம் ஆனால் இப்படிச் செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாதே…! நாங்கள் அப்படி நினைக்கவில்லையே…! என்பார்கள்.

காரணம் இந்த உணர்வின் தன்மை மாற்றி நாம் எதை எண்ணுகின்றோமோ அது தான் அங்கே ஆட்சி புரிகின்றது. அப்படியானால் நம்மை எது ஆட்சி புரிய வேண்டும்…?

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

எது ஆட்சி புரிய வேண்டும்…?
1.இருளை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து
2.தீமை புகாத நிலையில் அதைத் தடுத்து
3.அந்தத் தீமை புகாத நிலையே நமக்குள் ஆட்சி புரியும்படியாக நம் எண்ணங்கள் வர வேண்டும்.

அது தான் நம்மை ஆட்சி புரிய வேண்டும்.

எண்ணிய உணர்வின் தன்மை… எதை நாம் நுகர்ந்தோமோ உயிர் அதைத்தான் செயல்படுத்துகின்றது.

சாமி காப்பாற்றும்… சாமியார் காப்பாற்றுவார்… நடந்து சென்றால் ஐயப்பன் காப்பாற்றுவார்… முருகன் காப்பாற்றுவார்… என்று எண்ணினாலும் அங்கே கோவிலுக்கு செல்வோரையும் கொள்ளையடித்துக் கொண்டு செல்கின்றார்கள். அவர்களைக் காக்கின்றாரா…? இல்லையே.

முருகன் கோயிலுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றுவிட்டு வந்த பின் வீட்டிலே அவர்களிடம் கத்தியைக் காட்டிக் கொள்ளையடிக்கின்றார்கள். அப்போது சாமி அங்கு அவர்களைக் காப்பாற்றுகின்றதா…?

பாத யாத்திரை செல்பவர்கள் முருகா…! என்று சப்தமிட்டுக் கொண்டு அந்த எண்ணத்தில் செல்கின்றார்கள் பின்னாடி முன்னாடி வாகனங்கள் வந்தால் ஹாரன் கொடுத்தாலும் கூட கேட்காமல் இருக்கின்றார்கள்.

முருகா என்று சப்தமிடும் எண்ணத்தில் செல்லும் பொழுது கவனிக்காது பஸ்ஸில் அடிபட்டு இறக்கின்றார்கள். அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது…? முருகன் அப்பொழுது அந்த இடத்தில் சிந்தித்து போடா அந்தப் பக்கம் என்று இழுத்துக் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா. ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் அல்லவா.

எல்லாக் கோவில்களுக்கும் எத்தனையோ பக்தர்கள் சென்று வருகின்றார்கள். இருந்தாலும் அதிலே எத்தனை விபத்துகள் நடக்கின்றது…? ஏன் அவர்களைக் காப்பாற்றக் கூடாதா…?

காரணம்…
1.நம்முடைய எண்ணங்கள் எதை எடுத்து முன்னணில் வைத்துச் செயல்படுத்துகின்றோமோ
2.அதே ஆவேச உணர்வுடன் உடலை விட்டு பிரிந்து ஆவியாகச் சென்ற உணர்வுகள் இங்கே வருகிறது.

சம்பந்தப்பட்ட நண்பர்களோ குடும்பமோ சொந்தமோ
1.அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுடன் அது (ஆன்மாக்கள்) உள்ளே சென்ற பின்
2.உயிர் அதே உணர்வை இயக்கி அது போன்ற விபத்துகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றது

அதனுடைய பின் விளைவுகள் குடும்பத்தில் உள்ள அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விடுகின்றது.

அப்போது எது நடக்கிறது…!

ஆண்டவன் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லோரும் எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றனர் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்றுகின்றானா…? யார் அந்தக் கடவுள்…?

உண்மையின் உணர்வின் தன்மையினை எடுப்பதற்குத் தான் ஞானிகள் தெய்வச் சிலைகளை ஆலயத்தில் அமைத்தார்கள் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்துவிட்டு “நீ காப்பாற்று…!” என்று சொன்னால் அது எப்படி காப்பாற்றும்…?

1.ஆலயத்தில் காட்டப்பட்ட தெய்வீக குணங்களை நாங்கள் பெற வேண்டும்
2.என் சொல் செயல் அனைவரையும் காக்க வேண்டும்…
3.அருள் உனர்வுகள் பெற வேண்டும்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இத்தகைய தெய்வீக உணர்வை எடுத்தால் அது நம்மை காக்கும்.

சிலை காப்பாற்றாது… நாம் எடுக்கும் தெய்வீக எண்ணம் தான் நம்மைக் காப்பாற்றும்.

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் நாம் அதை அறிந்திருக்கின்றோமா…?

 

ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”

இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.

மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.

அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.

உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.

வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?

சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.

அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?

பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!

அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.

நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?

பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசக்கதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.

தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).

இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.

ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.

உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய “கைம்மாறு”

 

குடும்பத்தில் யாராவது உடலை விட்டுப் பிரிந்தால்… எனக்கு எல்லா உதவியும் செய்தார்… திடீரென்று போய்விட்டாரே…! என்று ரொம்பப் பாசத்துடன் எண்ணுகிறோம்.

என்னைக் காப்பாற்றினார்… எவ்வளவோ பணம் கொடுத்தார்… என்றெல்லாம் சொல்கின்றோம். சாகப் போகும் போது எனக்கு எவ்வளவு உதவி செய்தார்…? அவர் எத்தனையோ நேரத்தில் என்னை பக்குவப்படுத்தினார் இப்படி விட்டு விட்டுப் போய்விட்டாரே…! என்று வேதனையாக எண்ணுகிறோம்.

அந்த வேதனை கலந்த உணர்வுடன் எண்ணும் போது அவர் உடலில் விளைந்தது நமக்குள் உண்டு… உதவி செய்ததும் உண்டு…! வேதனைப்பட்டதும் உண்டு.

எல்லோருக்கும் உதவி செய்தார் என்று சொன்னாலும்…
1.கடைசியில் அவர் பட்ட கஷ்டத்தை எல்லாம் வாங்கி
2.மூட்டையைக் கட்டி நமக்குள்ளும் நோயாக மாற்றுகின்றோம்.

உடலுடன் இருக்கும் போது நன்மை செய்தார். எல்லோருடைய உணர்வையும் கேட்டு அந்த உடலில் நோயாக மாறியது… உடலை விட்டுப் பிரிகின்றார்.

பிரிந்த பின்… எனக்குப் பக்குவம் செய்தாயே இப்படி எல்லாம் விட்டு விட்டுச் செல்கின்றாயே…! பார்த்தால் மண்ணிலே விழுந்து புரள்வார்கள். அத்தகைய வேதனை உணர்வுகள் நுகர்ந்து கொண்ட பின் நமக்கும் அந்த நோய் வருகிறது.

அவர் உதவி செய்தார்…. ஆனால் விட்டு விட்டுப் போய்விட்டார்… என்று பாசமாக எண்ணப்படும் போது
1.அந்த ஆன்மாவைச் சும்மா விடுவதும் இல்லை.
2.அந்த ஆன்மாவை இழுத்து என்னுடனே வந்துவிடு… என் கஷ்டத்தை எல்லாம் நீயும் அனுபவி…! என்ற நிலையாகிவிடும்.

ஏப்படி…? அந்த ஆன்மா இங்கே வந்த பிற்பாடு என்ன செய்யும்…?

சில உடல்களில் ஆவிகள் வந்த பின் படுகின்ற அவஸ்தையைப் பார்க்கலாம். அதனுடைய உணர்வின் தன்மை உணர்த்தி உடலையும் பாழாக்கி… விஷத்தின் தன்மை இந்த உயிருக்குள் இருக்கும் அணுவிற்குள் சேர்ந்த பின்… அந்த ஆவி இந்த உடலை விட்டுச் சென்ற பிற்பாடு என்ன ஆகும்…?

அதாவது
1.நீ உதவி செய்தாய் அப்பா
2.நான் (உடலை விட்டுப் பிரிந்த உன்னை) எடுத்துக் கொண்டேன் அப்பா
3.என்னிடம் நீ வந்துவிடப்பா…
4.நான் செத்த பிற்பாடு (இந்த உடலிலிருந்து) நீ போய் விடப்பா…!

மொத்தமாக நம்முடைய வேதனை எல்லாம் சேர்த்து வெளியிலே போன உடனே அந்த ஆன்மா எந்த நிலை ஆகும்…?

புலி மற்ற மிருகங்களை வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது நரி நாய் அவைகளும் வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றது பாம்பு விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை அழுங்காமல் எடுத்துக் கொள்கின்றது இவை எல்லாமே நரக வேதனைப்படுத்தித் தான் சாப்பிடுகின்றன.

அது போல் இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நரக வேதனையை எடுத்தோமோ… என்னை இப்படி எல்லாம் விட்டுவிட்டுச் செல்கின்றாயே…! என்று அந்தக் கடுகடுத்த நிலையில் துன்பத்தை எல்லாம் நினைத்து எண்ணினால்… அந்தத் துன்ப உணர்வுகள் எல்லாம் இங்கு வந்து சேரும்.

மொத்தமாகச் சேர்த்து இந்த உடலிலே எடுத்ததை வளர்த்துக் கொண்டு இந்த உடலை வீழ்த்தி விட்டுப் போய்விட்டு வா…! என்று செய்யும்.

எனக்கு நீ எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தாய்… நீ நாயாகப் பிற நரியாகப் பிற… புலியாகப் பிற…! என்று தான் “அவர் உதவி செய்ததற்குக் கைம்மாறாக நாம் செய்ய முடியும்…”.

1.நமக்கு எத்தனை உதவி செய்தார்…?
2.நமக்காக எத்தனை நன்மைகள் செய்தார்…?
3.நம்முடைய கஷ்டங்களை எப்படிக் கேட்டார்…? அந்த உணர்வு அறியாது வந்து எத்தனை வேதனைப்பட்டார்…?
4.நமக்கு உதவி செய்தவர் இனி எந்தக் காலத்திலும் அவர் பிறவி இல்லாத நிலை அடைந்து…
5.”துன்பமே இல்லாத பெரு வாழ்வாக வாழ வேண்டும்” என்று எத்தனை பேர் நீங்கள் எண்ணுகின்றீர்கள்… சொல்லுங்கள் பார்க்கலாம்…!

சாஸ்திரங்கள் அதைத் தான் கூறுகிறது.

ஆகவே உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களுக்கு நாம் எதை எண்ணி எடுக்க வேண்டும்…?

நோயின் தன்மை கொண்டு உடலை விட்டுப் பிரிந்தாலும்
1.அந்த உயிரான்மாவை இங்கிருந்து நாம் உந்தித் தள்ளி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செலுத்தி…
2.உடலில் பெற்ற நஞ்சினைக் கரைத்து பிறவி இல்லா பெரு வாழ்வு வாழ்ந்து
3.என்றும் அங்கே மகரிஷிகளின் அருள் வட்டத்தில் பேரருள் பேரொளியாக வாழ வேண்டும் என்று செயல்படுத்த வேண்டும்.

இங்கே உடலில் வாழும் போது எங்களை எப்படி மகிழச் செய்தாயோ அதே போல்
1.என்றென்றும் எங்களை மகிழச் செய்யும் உணர்வாக “ஒளியாக மாறி”
2.எல்லோருக்கும் பேரன்பைக் கொடுக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இப்படி எத்தனை பேர் எண்ணுகின்றோம்…? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

நமக்கு உதவி செய்தார் என்று நல்லதை எண்ணுகிறோம். ஆனால் உதவி செய்தாயே… என்னை விட்டு விட்டுப் போகிறாயே…! என்று தான் சொல்கிறோம்.

எங்கே விட்டு விட்டுப் போவது…!

உன்னிடமே வந்து விடுகின்றேன்…! என்ற அந்த நிலையைத்தான் இங்கே உருவாக்குகின்றார்கள். இதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஞானிகள் காட்டிய வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களைத் “தனக்குள் இழுக்காதபடி” விண் செலுத்தப் பழக வேண்டும்.

தேரின் அச்சாணி போல் வழி நடத்த நான் இருக்கின்றேன்

 

கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!

யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?

ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”

சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?

1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.

சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.

தேரின் மையம் எது தெரியுமா…?

“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.

சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.

“வேதாள மாமகரிஷி” அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் வீட்டில் சிறு குழந்தையாக இருப்பது டி.வி.யைப் பார்க்கும் பொழுது அதில் வரும் பாடலோ ஆடலோ அது மனதில் பதிவாகிறது. மற்ற கலக்கம் இல்லாத நிலையில் தான் குழந்தை டி.வி.யைப் பார்க்கின்றது.

இப்படி அந்த ஆடல் பாடல்களை உற்றுப் பார்க்கப்படும் பொழுது மீண்டும் அதே உணர்வுகள எண்ணத்தால் எண்ணும் போது ஆடிக் காட்டுகின்றது… பாடவும் செய்கிறது.

குழந்தை இதை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. பதிவானது இயக்குகிறது.. இயங்குகிறது.

இதைப் போல் தான் இங்கே யாம் (ஞானகுரு) உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் அருள் உணர்வுகளை
1.நீங்கள் கற்கவில்லை என்றாலும்… கற்றறியும் திறன் இல்லை என்றாலும்
2.யாம் சொல்வதைக் கூர்ந்து பதிவாக்கப்படும் பொழுது
3.மீண்டும் இதனின் நினைவாற்றல் வந்தால் இந்த ஞானத்தின் உணர்வின் இயக்கமாக மாற்றும்.
4.உங்களில் உள்ள தீமைகளை மாற்றிடும் தன்மையும் வரும்.

நான் கற்காதவனாக இருந்தாலும் கல்வியற்றவனாக இருந்தாலும் குருநாதர் எனக்குள் அதைப் பதிவு செய்தார். அந்த உணர்வை நுகர்ந்தேன். அந்த உணர்வின் அறிவாக எனக்குள் அது இயக்கச் சக்தியாக வளர்ச்சி அடைந்தது.

1.அப்படி வளர்ச்சி அடைந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
2.அதன் செயலாக்கங்களாக… அதே வழியில்… உங்களுக்குள்ளும் உருவாக்கும் நிலைகள் வர வேண்டும் என்பதற்குத் தான் இதனைச் சொல்வது.

ஏனென்றால் நான் வெறும் வார்த்தையாகப் பேசவில்லை…!

1.குரு அருளின் உணர்வுகள்தான் வாக்காக… ஞான வித்தாக… உங்களுக்குள் அது பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
2.அதன் துணை கொண்டு உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை நீக்கிடும் மனிதர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும்…
3.அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அந்த நிலை பெறாதபடி இங்கே வேதனை என்ற உணர்வு கொண்டால் மனிதனல்லாத ரூபமாக மாற்றி நரக வேதனைப்படும் உணர்வின் அணுக்களாக மாற்றிவிடும். நஞ்சின் தன்மை அடைந்து விட்டால் மனித உடலை இழந்து விடுவோம்.

அப்படியே தப்பித் தவறி மனிதனாகப் பிறந்தாலும் “அசுர சக்திகள்” கொண்டு செயல்படும் உணர்வாகத் தான் அது மாற்றும். ஆகவே இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதாவது… மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்றாலும் மனித உடலில் வாழும் போது “யார் உணர்வைக் கவர்ந்தோமோ” அந்த உடலுக்குள் சென்று தான் இந்த உணர்வைக் கருவாக்க முடியும்.

ஆனாலும் இப்பொழுது வாழும் இந்த மனித உடலில்… நஞ்சு கொண்ட உணர்வுகளால் நல்ல அறிவின் ஞானத்தை இங்கே இழந்து விட்டால்… அந்த உணர்வின் அணுக்களாகத் தான் நம் உயிராத்மாவிலே விளையும்.

உடலை விட்டுப் பிரிந்தாலும் மீண்டும் பற்று கொண்ட மனித உடலுக்குள் நாம் செல்லப்படும் பொழுது இங்கே விளைந்த உணர்வுகள் அந்த மனிதனையும் வீழ்த்திடும் உணர்வைத்தான் உருவாக்கும்.

அங்கே சென்று குழந்தையாகப் பிறக்காதபடி நஞ்சினை வளர்த்திடும் நிலை கொண்டு… மனித ரூபத்தையே மாற்றிவிட்டு… மாற்றிடும் உணர்வின் தன்மை கொண்டு வெளி வந்த பின்
1.மனிதனல்லாத உணர்வின் வலு கொண்ட உடலுக்குள்ளே ஈர்க்கப்பட்டு அதனின் ரூபமாக நம் உயிர் மாற்றிவிடும்.
2.இன்றைய செயல் நாளைய சரீரமாக ஆகும்.
3.ஆகவே இன்றைய நம் செயல் எதுவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு நாமும் ஞானியாக வளர்ந்திட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

சதிபதி

 

ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.

வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.

எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.

ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கபட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்

ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”

இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷியில் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாக காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.

இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தை தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.

இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.

“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).

அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.

விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.

மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.

செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.

சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.

குருநாதர் அவர் வழிக்கு என்னைத் திருப்பிய விதம்

 

இரண்டு பேர் இருக்கின்றார்கள் அங்கே கிழங்கு இருக்கின்றது… இதைச் சாப்பிட்டால் “நன்றாக இருக்கும்…!” என்று ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அங்கே வருகின்றார். ஐய்யய்யோ…! இந்தக் கிழங்கை அன்றைக்கு ஒருவர் சாப்பிட்டார்… அதனால் அவருக்கு வயிற்று வலியே வந்து விட்டது…! என்று சொல்கின்றார்.

ஆனால் அவர் சாப்பிட்ட நேரம் எது…?

1.கிழங்கு… சத்து அதிகமுள்ளது
2.உடலில் நோய் இருக்கும் போது… ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் கிழங்கைச் சாப்பிடும் பொழுது வயிற்று வலியானது.
3.அன்றைக்கு அவர் பட்ட அவஸ்தை அதிகமாகி விட்டது.
4.அந்த உணர்வை இங்கே ஊட்டியவுடன் என்ன செய்யும்…?

கிழங்கைப் பார்த்தவுடனே இவருக்கும் இங்கே அதே பலவீனமாகிவிடும். சாப்பிட்டால் அடுத்து என்ன செய்யும்…? அதே உணர்வுகள் அந்த உமிழ் நீரைக் கூட்டி இயக்கிவிடும்… வயிற்று வலியாகிவிடும்.

அந்த ஆள் சொன்னார்.. சொன்னது சரியாகப் போய்விட்டது என்று நாம் சொல்ல ஆரம்பிப்போம். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

1.உணர்வின் இயக்கங்கள்… நம் உயிர் எப்படி இயக்குகின்றது…?
2.எதை எண்ணுகின்றோமோ அதுவே… அந்த எண்ணமே நம்மை ஆட்சி புரிகின்றது.
3.நன்றாக யோசனை செய்து பாருங்கள்… சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் இது தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதைப் போன்று தான் இங்கே சாக்கடை உபதேசமாகக் கொடுக்கப்படும் போது அந்தப் பன்றி வந்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்லதை அது எப்படி நுகர்ந்து சாப்பிடுகின்றது பார்த்தாயா…? என்று கேட்கிறார் குருநாதர்

ஆனால் குருநாதருடன் சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் வேலைக்கும் சரியாகச் செல்வதில்லை. வீட்டில் என் மனைவி அப்போது தான் நோயிலிருந்து மீண்டு எழுந்து வந்திருக்கிறது.

ஏனென்றால் இயற்கையிலேயே ஒவ்வொரு சந்தர்ப்பமும் மனிதனுக்கு எப்படி எல்லாம் வருகின்றது என்று தெரிந்து கொள்வதற்கே இதைச் சொல்கிறேன்.

குருநாதர் என் மனைவியைக் காப்பாற்றினார் என்ற நிலையில்
1.வாக்கு வாங்கியவுடன் நான் அவரிடம் போய்ச் சிக்கிக் கொள்கின்றேன்.
2.சாக்கடை அருகே அமரச் செய்து இத்தனை வேஷத்தையும் அங்கே போடச் சொல்கின்றார் குருநாதர்.

சாக்கடை அருகே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சிரிக்கின்றார்கள். நையினாவிற்குப் (ஞானகுரு) பைத்தியம் பிடித்து விட்டது என்கிறார்கள்.

காதில் இதை எல்லாம் கேட்டால் என் மனம் எப்படி இருக்கும்…? ஆனால்
1.என் மனதை உறுதியாக்குவதற்காக வேண்டி
2.அந்த இடத்திலே குருநாதர் பரீட்சை வைக்கின்றார்.

மனைவியைக் காப்பாற்றிய உடன் நான் சொல்வதைச் செய்கிறாயா…? என்றார்.

நான் செய்கிறேன் என்று சொன்னேன் (மனைவியை அவர் எழுப்பி விட்டதால்)

காரணம் டி.பி. நோயால் என் மனைவி அவதிப்பட்ட போது டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட நிலை. குருநாதர் வந்த பின் என் மனைவி பிழைத்து எழுந்து விட்டது. அப்போது என்னிடம் வாக்கு வாங்குகின்றார்.

என்னை நம்புகின்றாய் அல்லவா…! நம்புகிறேன் என்று சொன்னேன் சொல்வதைக் கேட்பாய் அல்லவா…! கேட்கிறேன் என்று சொன்னேன். இதை எல்லாம் கொடுத்த பின் சாக்கடை அருகே உட்கார வைத்து “என்னை வாட்டுகிறார்… வறுத்து எடுக்கின்றார்…”

எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள்… என் மாமியார் காதிற்கும் செய்தி போகிறது.

“தொலைந்து போகிறவன்…” என் பிள்ளையை இங்கே படுக்க வைத்துவிட்டுப் பைத்தியத்தோடு இவன் சுற்றிக் கொண்டிருக்கின்றான் என்று என்னைச் சாடிப் பேசுகின்றது.

எப்படி இருக்கும் பாருங்கள்…? இயற்கையின் உணர்வுகள் நம்மை எப்படி எல்லாம் இயக்குகின்றது…? என்று அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்வதற்கு கொடுக்கின்றார் குருநாதர்.

அப்போது தான் கேட்கிறார்…. கடவுளின் அவதாரம் யார் தெரியுமாடா…? வராகன் (பன்றி) என்று சொன்னார்.

வராகன் கடவுள்… என்று சொன்னால் அவதாரங்கள் பற்றிய கதைகளை எல்லாம் நான் அதிகமாகப் படித்தவன் இல்லையே… எனக்குத் தெரியாது.

வராகன்… அது தான்டா கடவுள்…! என்றார் குருநாதர்.

என்ன சாமி…? பன்றியைப் பார்த்துக் கடவுள் என்று சொல்கின்றீர்கள் சாக்கடைக்குள் சுற்றுகிறது… கடவுள் இப்படியா இருக்கும்…! என்று குருநாதரிடம் நான் கேட்கின்றேன்.

பன்றி என்ன செய்யும் தெரியுமாடா என்று கேட்டார்…? உன் காபியிலே சாக்கடையை அள்ளிப் போட்டதும் ஓய்… என்று நீ வாந்தி எடுத்தாய். ஆனால் பன்றி சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளக்கின்றது. நாற்றத்தைப் பிளந்து விட்டு நல்லதையே அது நுகருகின்றது.
1.தீமையை நீக்கி நல்லதை உருவாக்கக்கூடிய நிலைகள் வராகன் என்று
2.பன்றித் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டுகின்றான் ஞானி…!
3.மனிதர்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

கண்களிலே பார்க்கிறோம் அல்லவா. குழந்தை வெளிக்குச் சென்றால் பன்றி வேகமாக அங்கே செல்லும் முட்டித் தள்ளிவிட்டு அதற்குள் ஜீரணமாகாத பருப்பு இருந்தால் அதைச் சாப்பிடும்.

ஆனால் நன்றாக ஜீரணித்து மாவாக வெளியில் போயிருந்தால் அதை நுகர்ந்து பார்த்து… விட்டு விட்டு வந்துவிடுகிறது. ஆனால் ஜீரணிக்காத நிலையாகி அதில் பருப்பு இருந்தால் அதைக் கிளைந்து எடுத்துச் சாப்பிடுகின்றது.

இத்தனையும் நான் பார்க்க வேண்டும்.. குருநாதர் கட்டாயப்படுத்தி இதை எல்லாம் பார்க்க வைக்கின்றார். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…? என்னை அப்படித்தான் அந்தந்த இடங்களுக்கு குருநாதர் இழுத்துக் கொண்டு செல்கிறார்.

எல்லாரும் இதைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். ஆனால் இதுதான்டா கடவுள் என்று சொல்கின்றார். அந்தப் பன்றி தான் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று சொல்கின்றார். அதற்கு என்ன சொல்வது…?

பன்றி தான் உங்களை மனிதனாக உருவாக்கியது என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா…!

பன்றி தான்டா உன்னை மனிதனாக உருவாக்கியது… வேறு யாருடா உன்னை உருவாக்கியது…? அவன் தான்டா கடவுளின் அவதாரம்…! என்று சொல்கின்றார்.

குருநாதர் சொல்லச் சொல்ல நான் மறுக்க… அடுத்தாற்படி எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்து விட்டது. கன்னா…பின்னா… என்று என்னைத் திட்டுகின்றார்.

டேய் தெலுங்கு இராஜ்யம்… உன்னைக் கொன்றுவிடுவேன்டா…! என்று சொல்கின்றார். என்னை எதிர்க்கின்றாயா…? அந்த அகத்தை அடக்கி விடுவேன்டா என்றார்.

ஏனென்றால் நாம் இந்த அறியாமையில் இருக்கக்கூடிய அந்த அகத்தை அழித்து விடுவேன் என்று அவர் சொல்கிறார்.

தெலுங்கு இராஜ்யத்தைத் திட்டுவார்… என்னைத் திட்ட மாட்டார். நான் தெலுங்கு பேசுகின்றேன் அல்லவா… அந்தத் தெலுங்கு இராஜ்யத்தை அப்படிச் சொல்கிறார் குருநாதர்.

தெலுங்கு இராஜ்யம் என்றால் வெங்கடாஜலபதி படுத்து இருக்கின்றார் அவருக்குச் செல்வம் தான் தேவை என்று இங்கிருந்து கொண்டு போய்க் கொட்டுகின்றார்கள்.

1.உனக்கு வேண்டியது மரியாதையும் செல்வமும் தான்
2.மரியாதையை வைத்துச் செல்வத்தை நீ தேடுகின்றாய் அதிலே இருக்கின்றதடா தெலுங்கு இராஜ்யம்.
3.பார்… உன் அகந்தையைக் கொன்று விடுவேன் என்று சொல்கின்றார்… “மறைமுகமாகச் சொல்கிறார்…”

கொன்று விடுவேன் என்று அவர் சொன்னவுடன் நான் திருப்பிக் கேட்டேன். ஏன் சாமி…? கொன்று விட்டால் உங்களுடைய வார்த்தையை நான் எப்படிக் கேட்பேன்…? என்றேன்.

உன்னை யாருடா கொல்வேன் என்று சொன்னது…! அந்தத் தெலுங்கு இராஜ்யம் அவனைத் தான் நான் கொல்வேன் என்று சொல்கிறார்.
1.ஒவ்வொன்றுக்கும் அழுத்தங்கள் கொடுத்து என்னை அவர் வழியில் அது கேட்கும்படி செய்து பல அர்த்தங்களைக் காட்டுகின்றார்.
2.அப்படி தெரிந்து வந்து தான் உங்களிடம் இதை எல்லாம் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).

இங்கே காட்டப்படும் நெறிகளைக் கடைப்பிடிப்போன் மெய் ஞானியாகின்றான்

 

இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.

அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.

போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.

போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?

1.தியானத்தின் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?

சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.

கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!

மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,

பேரின்ப நிலை கிடைக்கப்பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.

இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.

வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.

மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்

காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!

சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”

தீமையை நீக்கும் எண்ணத்தையே… “கண்கள் வழி” நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்

 

வீட்டில் பையன் ரொம்ப சேட்டை செய்கிறான்… அவனுக்குப் புத்தி வரட்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் சொல்லும் பொழுது
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கின்றான்.
2.இவன் அடங்கவே மாட்டான் என்று தான் அடுத்தவரிடம் சொல்கின்றோம்

“எப்பொழுது பார்த்தாலும் சேட்டை செய்து கொண்டே இருப்பான்” என்று அவனுடைய உணர்வை எடுத்து அதிகமாக விளைய வைத்துக் கொள்கின்றோம்.

அவனுடைய உணர்வை எடுத்து விளைய வைத்தபின் கண்ணில் பார்க்கின்றோம். அடுத்தாற்போல் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் “சேட்டைக்காரன்…” என்று தான் அவனை மாற்றுகின்றோம்.

அதே உணர்வை நாம் எடுத்துக் கொண்ட பின் “எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தன்ம் செய்வான்” என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

அவன் சும்மா இருந்தால் கூட நாம் மிரட்ட ஆரம்பிப்போம் இத்தகைய மிரட்டல் என்ன செய்யும்…? அங்கே இருப்பதைத்தான் நாம் நமக்குள் சமைத்து விளைவிக்கின்றோம்.

அதே சமயத்தில் நம் நினைவு எல்லாம் எப்படி இருக்கும்…?
1.இப்படிக் குறும்புத்தனம் செய்கின்றானே… என்ன செய்வது என்று தெரியவில்லையே
2.அவனுக்கு இப்படி செய்தால் பரவாயில்லையா…! அப்படிச் செய்தால் பரவாயில்லையா…! என்று இந்த கவலை இருக்கும்.

கவலை கலந்த உணர்வுகள் வந்தவுடன் வெறுப்புடன் தான் பையனிடம் பேசுவோம். வெறுப்புடன் சொல்லப்ப்படும் போது
1.இந்த வெறுப்பு அவனுடன் கலந்து அவனுக்குள் உருவான வித்திற்கு உரம் போட்ட மாதிரி ஆகிவிடும்
2.அடுத்து அவன் கெடுதல் தான் அதிகமாகும்…. அதைத் தான் உருவாக்கும்.

அவனுக்கு இந்த உணர்வு தான் அதிகரிக்குமே தவிர நல்லது உருவாகாது. அவனிடம் விளைந்ததை நமக்குள் எடுத்து மீண்டும் நமக்குள்ளும் அதைத்தான் கூட்ட முடியும்.

இவனை பார்த்துப் பார்த்து… பேசிப் பேசி என் கை கால்கள் எல்லாம் ஓய்ந்து விட்டது… எனக்கு இப்படி ஆகிவிட்டது அப்படி ஆகிவிட்டது… என்று இத்தனை உணர்வுகள் வரும்பொழுது அடுத்து சமையலுக்குப் போனால் அங்கே சீராகச் செயல்படுத்த முடியாது.

ஒரு துணியைச் சுத்தம் செய்து துவைக்க வேண்டும் என்றால் கூட கை ஓய்ந்துவிடும். அதில் இருக்கக்கூடிய அழுக்கைப் போக்க முடியாது

ஏனென்றால் இந்த உணர்வுக்குத் தக்கவாறு அந்தச் செயல் வரும். பொழுது ரொம்ப அழுக்காக இருந்ததைப் பார்த்த உடனே ஒரு விதமான சடவு வரும்… அதை நீக்க முடியாது.

அதே போன்று ஒருவர் நல்லது சொல்கின்றார் என்று நாம் அதைக் கேட்கும் பொழுது நம்மை அறியாமலேயே ஒரு சோர்வும் சஞ்சலமும் வரும். என்னுடைய பையன் நன்றாக இருக்கின்றான் என்று அவர் சொன்னவுடனே அதைக் கேட்க விடாது. சோர்வும் சஞ்சலமும் தான் வரும். அப்பொழுது
1.மீண்டும் நமக்கு வேதனை தான் உருவாகின்றது… நல்லதை விடுவதில்லை
2.அந்த உணர்வே ஆட்சி புரியத் தொடங்குகின்றது… நல்லதை விடாதபடி நமக்குள் தடுதலாகின்றது
3.இதைத்தான் மகாபாரத்தில் கௌரவர்கள் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள்.

நல்லதாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் கௌரவப் போராகின்றது. நல்லவர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்ன செய்கிறது…? நல்லதைச் சொன்னார்கள் என்றால் மீண்டும் வெறுப்பாகி அந்த நல்லதை உள்ள விடாதபடி கௌரவர்கள் போர் செய்கின்றார்கள்.

கண் இழுத்து உண்மையைச் சொல்கிறது. கண்ணுடன் சேர்ந்தவுடனே திரௌபதி உயிர் அந்த உணர்வை எடுத்து உள் உணர்வை ஊட்டுகின்றது ஊட்டிய உடனே நல்லது என்று சொன்னவுடன் அதை அவமதிக்கின்றது.

உடனே கோபமான உணர்வுகளைத் தூண்டி… திரௌபதியை நாம் கேவலப்படுத்தத் தொடங்குகிறோம் நல்ல உணர்வுகள் இல்லாதபடி கேவலமான வார்த்தைகளைப் பேசுகின்றோம்… நல்லதை இயக்க விடுவதில்லை.

அப்பொழுது எது செயல்படுகின்றது…?

நம் பையன் மீது நினைவு வரும் போது
1.இப்படிச் சேட்டை செய்கின்றானே என்று இந்த உணர்வுகள் தான் வருமே தவிர
2.கண்கள் நுகர்ந்து நல்ல உணர்வின் தன்மை ஊட்டினாலும் உள்ளுக்கே விளைந்த உணர்வின் தன்மை (கௌரவர்கள் – பையனைப் பார்த்து நுகர்ந்தது)
3.சிந்தனையற்ற நிலையில் கொண்டு நமக்குள் போர் முறையே வருகின்றது.

இதனுடைய வலு எது…?

நம்முடைய கூர்மையான எண்ணங்கள் அர்ஜுனன். நுகரப்படும் போது நகுலன்… காந்தப்புலன் மாற்றி அமைத்து அதன் தெளிவான நிலைகளை நமக்கு ஊட்டும். நுகர்ந்த உணர்வு உடலுக்குள் இணைந்து விட்டால் சகாதேவன். நுகர்ந்த உணர்வின் சத்து உடலுக்குள் வலுவாகும் போது பீமன் வலுவின் தன்மைகொண்டு இயக்கும் சக்தியாக வருகின்றது.

மகாபாரதத்தில் திரௌபதை கண்ணனுடைய சகோதரி பெண்பால் இது ஆண்பால் ஆனால் கண்…! கண்ணுடன் சேர்ந்த கருவிழிக்குப் போகும் பொழுது தெரிவதில்லை… அந்தச் சக்தி மனைவியாகின்றது ருக்மணி.

கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா தவறு செய்யும் உணர்வை நுகர்ந்து நம் உயிரிலே சேர்த்து உண்மையை உணர்த்துகின்றது தனதாகவே மாற்றுகின்றது. சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கண்ணனுடைய சகோதரி உடலுக்குள் நமக்கு உணர்த்துகின்றது.

பகைமை என்ற நிலையில் பையனைப் பற்றி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கப்படும் பொழுது நல்லவர் வந்து சொல்கின்றார்கள் என்று சொன்னால் அந்த வலிமைமிக்க நிலைகளைச் சொல்லப்படும் பொழுது அதை (அர்ஜுனனை) விடுவதில்லை. அதாவது நல்லதை வலுவாக்கும் அந்த உணர்வுகளை விடுவதில்லை..

நீங்களே ரொம்ப சங்கடமாக இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் ஈஸ்வரா…! என்று சொல்லி உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கலாம் என்றால்
2.அந்தச் சங்கடம் அதை எடுக்க விடுமா…? என்று பார்க்கலாம்.

அப்போது எது செய்கிறது…? அந்தக் கௌரவர்கள்… “என்னை இப்படிப் பேசினார்களே…” என்ற இந்த உணர்வு முன்னணியில் வரும் பொழுது நல்லதை விடுவதில்லை.

நல்லதை விடுவதில்லை என்கிற பொழுது
1.அதை மாற்றுவதற்குண்டான அந்த வலுவான சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.உபதேசத்தினை மீண்டும் மீண்டும் உங்களுக்கு அழுத்தமாகக் கொடுப்பது.

இந்த உணர்வின் தன்மை நீங்கள் ஆழமாகப் பதிவு செய்து அதைத் திருப்பி எண்ணும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை எடுத்துக் கலந்த பின் உங்களுக்குள் வலுவாகின்றது. அதை எடுத்துச் சங்கடத்தை நீக்க முடியும்.

அழுத்தமாகப் பதிவாக்கவில்லை என்றால் அடுத்தவர்கள் நல்லதைச் சொன்னால் அதை ஏற்க விடாதபடி மீண்டும் கவலை அதிகமாகும். உயிர் நல்ல உணர்வுகளை விளையச் செய்யப்படும் பொழுது கௌரவர்கள் அவமதிக்கின்றார்கள்.
1.கௌரவர்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டு அதை அவமதிக்கின்றார்கள்
2.திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள் சபையில் வைத்து.

சூதாட்டம் ஆடி சூதிலே ஜெயித்த பிற்பாடு பாண்டவர்கள் ஐந்து பேரையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் அவர்களின் மனைவியையும் அடிமையாக்கி விடுகின்றார்கள் இந்த உணர்வின் தன்மை என்ன ஆகிறது…?

எதை இயக்கியதோ அது மற்றதை அடிமையாக்கப்படும் பொழுது இவர்கள் வேலை ஒன்றும் ஆவதில்லை. அவனுக்குக் கீழ் அடிபணிந்து தான் அவர்களால் இருக்க முடிகிறது.

சபையில் வைத்து திரௌபதியின் துகிலை உறிகின்றார்கள். துகிலை உறியும் போது திரௌபதி என்ன செய்கின்றது…?
1.கண்களைத் தான் எண்ணுகின்றது. கண்ணா…! என்று கண்களை எண்ணுகின்றது
2.அவர்கள் செய்யும் அவமதிப்பை எண்ணுவதில்லை.
3.தெளிவாக நமது சாஸ்திரம் காட்டுகின்றது… மகாபாரதத்தில் வியாசகன் கொடுத்த உண்மைகள் இது.

பின்னாடி வந்தவர்கள் அதை எப்படி எப்படி எல்லாம் திருத்தி விட்டார்கள் சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

திரௌபதி சபையில் மற்றவர்கள் யாரையும் எண்ணவில்லை
1.கண்ணனை (கண்களை) மட்டும் தான் எண்ணுகின்றது தன்னுடைய அண்ணனை.
2.அவன் எனக்கு ஆபத்திலிருந்து காப்பாற்றுவான்… எனக்கு அவன் உதவி செய்தான் என்ற உணர்வை எடுக்கின்றது.
3.அப்பொழுது உள்ளுக்கே அவமதிக்கும் தன்மை தடைப்பட்டு ஓய்ந்து விடுகின்றது.

எவ்வளவு அழகாக மகாபாரதத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். நன்றாக யோசனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்…! வியாசகன் கொடுத்த அந்தப் பேருண்மையைத் திரித்துக் கூறி எப்படி எப்படியோ இன்று மாற்றிவிட்டார்கள்.

குறிப்பு:-
1.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் நம் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போக வேண்டும் என்று சொல்வதன் தத்துவமே இதற்குத் தான்.
2.நம்முடைய கண்களால் மற்றதை எண்ணாது துருவ நட்சத்திரத்தை எண்ணினால் தான் உயிரிலே படும் அந்த அவமதிப்பை மாற்ற முடியும்.
3.ஞானகுரு அவர்கள் கண்களைத் திறந்து பின் கண்களை மூடி மீண்டும் கண்களைத் திறந்து மூடி இப்படி மாற்றி மாற்றித் துருவ நட்சத்திரத்தினை எண்ணச் சொல்வதும் இதற்குத் தான்.
4.எந்தக் கண்ணால் நம்மை அறியாதபடி தீமைகள் உள்ளே வந்ததோ அதே கண்களால் தீமைகளை நீக்கிய சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்.
5.நம் எண்ணத்தை இப்படி மாற்றினால் தான் எதையும் மாற்றி அமைக்க முடியும்.
6.எண்ணத்தை மாற்றாதபடி கண்களில் தீமைகளைப் பற்றியே அழுத்தமாக எண்ணிக் கொண்டிருந்தால் அது தான் மீண்டும் வலுவாக இயக்கும்.
7.பின்… என்னால் ஒன்றும் முடியவில்லை என்ற சொல் தன்னாலே வரும்… நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“ஈஸ்வர ஜோதி” சிரசில் எப்போது தோன்றும்…?

 

பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,

அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?

“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)

வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”

பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?

சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது)

அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?

உன் முயற்சி தான் ஏற்பு.

1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”

கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சிவாய என்றிட்ட சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8.(பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்).

வேடிக்கை பார்த்தது தீய வினையாக எப்படி மாறுகிறது…?

 

ரோட்டில ஒருவன் செல்கின்றான். அவன் நடையையும் மற்ற நிலையும் பார்க்கிறோம்… அவன் ஒரு தினுசாக நடந்து போவான். நாம் என்ன செய்கின்றோம்…? அவனைப் பார்த்தவுடன் இவன் டான்ஸ் ஆடிக்கொண்டு போகின்றான்… நடக்கிற நடையைப் பார்…! என்ற வகையிலே அந்த நடிப்பு போன்ற செயலைப் பார்த்ததும் “வெறுப்பு” வருகின்றது.

இன்னொருவன் அங்கே பிக்பாக்கெட் அடிக்கும் நோக்கத்துடன் செல்கின்றான். பர்ஸ் வைத்திருப்பவனைப் பார்த்ததும்… அப்படியே அவன் காலைத் தட்டி விட்டு அவனைக் காப்பாற்றுகிற மாதிரி பாக்கெட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கின்றான்.

பார்க்கின்றோம் ஆனால் சொல்ல முடியவில்லை. அடுத்த தடவை அவன் வரும் பொழுது பார்த்தவுடனே நமக்குப் பதட்டம் வருகிறது

இன்னொரு பக்கம் ஒருவன் உதைக்கும் நோக்கத்துடன் செல்கின்றான்… அடுத்தவனை உதைக்கின்றான். அந்த உணர்வை நுகர்கின்றோம். இவன் போக்கிரிப் பயல்… எல்லாரையும் அடிக்கின்றான்… இவனைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுகின்றார்கள் என்று நாமும் பார்த்துவிட்டு அந்தப் பக்கம் செல்லாமல் வேறு பக்கம் சென்று விடுகின்றோம்.

ஏனென்றால்
1.கடைவீதியில் நாம் நடந்து செல்லும் போது இப்படி ஒரு தடவை நடந்து விட்டால்
2.அந்த உணர்வு பதிவாகி விட்டால் அந்த உணர்வு நம்மை இனம் புரியாதபடி பயப்பட வைக்கிறது.

இரண்டு பேர் நண்பராகச் சந்தோஷமாக இருக்கிறோம். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை வந்து விடுகிறது… ஏமாற்றி விட்டார் என்று…!

அடுத்தாற்போல் அவனைப் பார்த்தவுடனே என்ன நினைக்கின்றோம்…? அந்தத் திருட்டுப் பயல் போகின்றான் பார்… ஏமாற்றுகிறவன் போகின்றான் பார்…! என்போம்.

அவன் அங்கே நல்லதைப் பேசிக் கொண்டிருப்பான். ஆனால்
1.நாமோ அவன் ஊரை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகின்றான் என்று
2.நம்மை அறியாமலேயே இந்தச் சொல்களைச் சொல்லும்படி வைக்கும்.

அப்பொழுது எது இயக்குகின்றது…?

நாம் பார்வையில் பார்த்து எடுத்துக் கொண்ட பிறிதொருவரின் உணர்வு… அவன் செயல் காற்றிலிருக்கின்றது; அதை நாம் நுகர்கின்றோம்.

அவன் இல்லாத பொழுது… அவன் இந்த மாதிரியான ஆள்…! என்று யாராவது சொன்னால் “ஆமாம்…” அன்று நான் பார்த்தேன் என்று அந்த உணர்வை எடுத்து அவனுடைய செய்கைகளை நம் இரத்தத்திலே கலந்து விடுகின்றோம்.

இந்த உணர்வுகள் எல்லாம் என்ன செய்கின்றது…?

இரத்தத்தில் கலந்த பின் அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்தண்த உணர்வை எடுத்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றது.

நான்கு பேரிடம் இதைச் சொன்னால்… தட்டி விட்டான் பிட்பாக்கெட் அடித்தான் உதைத்தான் என்று இந்த உணர்வுகளை எடுத்து வளர்த்து விட்டால் அடுத்து நம்முடைய நினைவின் எண்ணங்கள் என்ன செய்யும்…?

கண்ணிலே அந்த பர்ஸ் யாரிடமாவது தெரிந்தால் போதும்… பிட்பாக்கெட்டாக அதை எடுக்கலாமா…? மற்றவர் எதாவது நமக்கு இடைஞ்சல் செய்தால் உடனே உதைக்கலாமா…? என்று இந்த மனம் போகும்.

ஏனென்றால்
1.நாம் அந்த தவறு செய்தோரின் உணர்வுகளைப் பார்த்து நுகர்ந்து அதை வளர்த்துக் கொள்கிறோம்.
2.இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நமக்குள் அதிகமாக…
4.அதன் உணர்வே அதன் வழிக்கு நம்மை வளர்த்து விடுகின்றது என்பதை நாம் மறந்து விடுகிறோம்.

மனிதனான பின் பிறிதொருவர் செயலைப் பார்க்கின்றோம். தவறு என்று பார்த்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அதைத் தடுப்பதற்காக அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
2.இப்போது அதைத் தான் இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கின்றோம்.

பிறிதொரு மனிதனின் உணர்வு இயக்கினால் அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.அவன் அறியாது செய்யும் தவறிலிருந்து விடுபட வேண்டும்…
2.பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் பொருள் திருடு போனால் அவன் எப்படிப் பதறுவானோ அதை உணர்ந்து அதற்குத் தக்க சிந்திக்கும் ஆற்றல் வரவேண்டும் என்று
3.நாம் இந்த உணர்வைப் பாய்ச்ச வேண்டும்.

இப்படிச் செய்தால் நாமும் நம்முடைய நிலைகளில் நல்ல உணர்வுகளைச் சேர்த்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு நல்ல சாப்பாட்டைக் கொடுத்து சிந்திக்கும்படியான செயலுக்கு வருகின்றோம்.

ஆனால் தவறு செய்கிறார்கள்… தவறு செய்கிறார்கள் என்று சொன்னால் அந்தத் தவறு செய்யும் உணர்வே நம்மை இயக்கி விடுகின்றது. நாம் இதிலெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

`

எவ்வளவு நன்றாக இருந்தாலும்… கெட்டது வந்தால் அதைத் தான் பிடித்துக் கொள்கிறோம்… நல்லதை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை

 

பல கோடிச் சரீரங்களில் துன்பங்களை நீக்கி நீக்கி… அந்த வலுப்பெற்றது தான் பன்றியின் உடலை உருவாக்குகிறது. இதே உயிர் தான்.

பன்றியின் உடலாக உருவாக்கிய பின்… பன்றியோ சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளந்து விடுகின்றது… அதில் உள்ள நல்லதை எடுத்து உட்கொள்கிறது.

நல்ல பருப்பைச் சாக்கடைக்குள் போட்டால் நாம் அதை நுகர்ந்தால் அங்கே நல்ல வாசனையா வருகின்றது…? இல்லையே…!

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைச் சாக்கடைப் பக்கமாக அழைத்துச் சென்றார்,. அங்கேயே உட்காரச் சொன்னார்.

முறுக்கு நிலக்கடலை பொரிகடலை மூன்றையும் கடையில் வாங்கி வரச் சொன்னார் சாக்கடைக்குள் அதைப் போட்டுவிட்டு அந்த மூன்றையும் சாக்கடையிலிருந்து நுகர்ந்து “பிரித்து எடு…” என்று சொல்கின்றார்.
1.சாமி சாக்கடை நாற்றம் தான் வருகின்றது என்று சொன்னேன்.
2.நுகர்ந்தால் சாக்கடை வாசனை தானே வரும்…! என்று சொன்னேன்.

ஆனால் அதற்கு முன்னாடி குருநாதர் என்ன செய்தார்…? கடைக்குச் சென்று காபி வாங்கிக் கொண்டு வா என்றார். அவருக்கு டீ எனக்குக் காபி. நான் டீ சாப்பிட மாட்டேன்.

சாக்கடையிலிருந்து எடுத்து வெளியிலே குப்பைகளைப் போட்டிருப்பார்கள் அல்லவா. அதை எடுத்து என் காப்பியிலே போட்டு கலக்கிச் சாப்பிடுடா… ஜோராக இருக்கும் என்று சொல்கின்றார்… குருநாதர்.

எனக்கு எப்படி இருக்கும்…?

“ஜோராக இருக்கும்…” என்று அவர் சொல்கின்றார்.

இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகின்றது சாமி…! உள்ளுக்குள் எப்படிப் போகும்…? என்று நான் சொல்கின்றேன்.

நான் எப்படிச் சாப்பிடுகிறேன் என்று பாருடா…! போட்டேன் ரசித்தேன்… ஆகா…! என்று சாப்பிடுகின்றார்.

சாக்கடையில் அந்த வரிசையில் கக்கூஸ் எல்லாம் போயிருக்கின்றார்கள்… கழுவியது எல்லாம் தான் வருகின்றது. ஆனால் அவர் சாப்பிடுகிறார்.

அந்த நேரத்திற்குச் சரியாக பன்றியும் வருகின்றது. ஆனால் இவர் வரவழைத்தாரோ… எல்லது என்ன கிரகமோ தெரியாது…! தள்ளிக் கொண்டு முட்டிக்கொண்டு வருகின்றது.

நடந்த நிகழ்ச்சி இது..! சாக்கடை உபதேசமாக குருநாதர் எனக்குக் கொடுத்தது.

அந்தப் பக்கம் போவோர் வருவோர் அனைவரும் என்னைப் பார்த்து… நைனாவிற்கு (ஞானகுரு) நல்ல பைத்தியம் பிடித்து விட்டது…! என்று என் காது படப் பேசுகின்றார்கள்.

இவருக்கு ஏன் இந்த ஆசை…? பைத்தியத்தோடு சேர்ந்து கொண்டு சாக்கடையில் அமர்ந்து… இப்பொழுது அரைப் பைத்தியமாக இருக்கின்றது அடுத்து முக்கால் பைத்தியம் ஆகிவிடும் என்று சொல்கிறார்கள்.

காரணம்… நான் அவர் சொல்வதை எல்லாம் கேட்டு ஆடுகின்றேன் அல்லவா.. நான் என்ன செய்வது…? எனக்கு வேறு வழி இல்லை.

வருவோர் போவோர் அனைவரும் என்னைக் கேலி பேசுவதற்கு ஆரம்பித்து விட்டார்கள். நல்லய்ய நாயக்கர் மருமகனுக்கு ஏன் இப்படி ஒரு புத்தி வந்துவிட்டது…? என்று என் மாமனாரைச் சாடி பேசுகின்றார்கள்… என்னையும் திட்டுகின்றார்கள்.

இப்படித்தான் நிகழ்ச்சி அங்கே நடக்கிறது.

பன்றி வருகிறது. முகர்ந்து கொண்டு வந்தபின் ஓடுடா…! என்று சொல்கின்றார் கடலைப்பருப்பு முறுக்கு பொட்டுக்கடலை மூன்றையும் சாக்கடையிலே போடச் சொல்கின்றார்.

முறுக்கு ஒரு பக்கமும் கடலைப்பருப்பை ஒரு பக்கமும்… பன்றி முன்னாடி வரக்கூடிய பாதையிலே பொரிகடலையைப் போட்டேன். அவர் சொன்னபடி நான் போட்டேன்.

இதை மார்க் செய்து கொள்…! என்று சொன்னார். கோட்டைப் போட்டு வைத்துக் கொண்டேன்.

முதலில் பொரிகடலை இருக்கும் பக்கம் நுகர்ந்த பின் அதை விட்டுவிட்டு இந்தப் பக்கமாக வருகின்றது… நிலக்கடலைப் பருப்பு இருக்கும் இடத்திற்கு வருகின்றது.

வேகத்தில் அந்த வாசனையை நகர்ந்து அதை முதலில் எடுத்துச் சாப்பிடுகிறது… போட்ட பருப்பு அனைத்துமே சாப்பிடுகின்றது.

அடுத்து முறுக்கை எடுக்க வருகிறது. அதில் எண்ணெய் வாசனை இருப்பதால் அதை எடுத்துச் சாப்பிடுகின்றது.

கடைசியிலே திரும்பி வந்து இதை ஏன் விடுவானேன்…! என்று பொரிகடலையையும் சாப்பிடுகின்றது. ஏனென்றால் வறுத்தது… வாசனை இல்லை. அதையும் சாப்பிடுகின்றது.

பார்த்தாயா…?
1.நான் சாக்கடையைச் சாப்பிடேன் என்றால் அதையா சாப்பிட்டேன்…?
2.நல்லது என்று நினைத்தேன்… அதாவது சாக்கடைக்குள் நல்லதை நினைத்தேன்
3.காப்பியில் இருக்கும் நல்லதை நினைத்தேன்
4.சாக்கடை வாசனை எனக்கு வரவில்லை…. அதனால் வாந்தி வரவில்லை.
5.நீ நல்லதை நினைக்கவில்லை… ஆனால் சாக்கடையை நுகருகின்றாய்…
6.அதனால் அந்த வாசனை வருகிறது… உனக்கு வாந்தி வருகிறது…! என்று
6.எனக்கு அந்த இடத்திலே உபதேசமாக்க் கொடுத்து இதைத் தெளிவாக்குகின்றார்.

உன்னுடைய உணர்வுகள் எதைச் செய்கின்றது…? எதை இயக்குகின்றது…? நீ எப்படி வாழ்கின்றாய்…? நீ எப்படி எல்லாம் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்தாய்…?

நுகர்ந்து பார்த்து தான் உணர்வின் தன்மை கொண்டு இரைக்குத் தேடி வந்தது. முகர்ந்து பார்க்கும் வலுவைப் பெற்று கெட்டதை நீக்கிவிட்டு நல்லதை நுகர்கின்றது பன்றி.

ஏனென்றால் அந்த மாதிரி சேர்த்து ஒவ்வொன்று சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட உறுப்புகள் இப்படி விளைந்த்து… பன்றியிலிருந்து மனிதனாக வந்திருக்கின்றோம்.

இதை எல்லாம் நான் சாக்கடையில் அமர்ந்து தான் கேட்டேன் நீங்கள் நல்ல இடத்திலே நன்றாக அமர்ந்து கேட்கின்றீர்கள்…!

1.நான் அனுபவித்துச் சொல்கின்றேன்.
2.இலேசாக இருக்கிறது என்று அலட்சியப்படுத்திக் கேட்டீர்கள் என்றால் இந்நேரம் வரை கேட்ட உபதேசமும் வீணாகிவிடும்.

இயற்கையின் நியதிகள்… இந்த உயிர் எதைக் கவர்கின்றது…? எதன் உணர்வின் தன்மை கொண்டு வருகிறது என்று தான் எனக்கு அனுபவத்தைக் கொடுத்தார்.

கூர்படு சிந்தை கொள்

 

அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?

“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.

வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.

அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).

அன்பின் நிறம் என்ன தெரியுமா…?

அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.

சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.

கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!

சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.

“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”

மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.

கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.

நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.

முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?

தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.

அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?

சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.

உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கடவுள் என்றால் என்ன…? உணர்வு என்றால் என்ன…? என்ற நிலையை
1.தனக்குள் இயங்கும் அணுவின் இயக்கங்களையும்
2.விண்ணின் அணுக்களின் இயக்கமும்
3.மண்ணின் அணுக்களின் இயக்கமும்
4.தாவர அணுக்களின் இயக்கமும்
5.தாவர இனச் சத்தை நுகர்ந்தபின் அணுக்களின் இயக்கமும் என்ற இந்த உட்பிரிவினை எல்லாம் அறிந்துணர்ந்ததனால்
6.அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.

அவனுக்குள் விளைந்த உணர்வுகள் வெளிப்பட்டதை சூரியனின் காந்த சக்தி தனக்குள் கவர்ந்து வைத்துள்ளது.
1.இன்றும் அது இருக்கின்றது… அது அழியவில்லை அழிந்து போகவுமில்லை.
2.அணுக்களாக உலாவிக் கொண்டுள்ளது நம் பூமியில்…!

சந்தர்ப்பத்தால் நமக்குள் நுகர்ந்து அதை பதிவாக்கி விட்டால் அதே நினைவின் எண்ணங்கள் வருகின்றது.
1.அதைக் கவர்ந்து நமக்குள் வளர்க்கவும் முடியும்…வளரவும் முடியும்.
2.மற்றோரை வளர்த்திடவும் முடியும்…! என்று இந்த நம்பிக்கையை ஊட்டியுள்ளது.
3.அகஸ்தியன் தன்னுள் கண்டுணர்ந்த அந்தச் செயலாக்க உணர்வுகள்.

நான் சொல்வது கொஞ்சம் கடினமாக இருக்கும்…. நீங்கள் புரிந்து கொள்வதற்கு. ஏனென்றால் இன்றைய உலகில் கற்றுணர்ந்த உணர்வின் நிலைகளை எழுத்தறிவாகப் பாட உணர்வுகளைக் கொடுக்கப்பட்டு அதனின் பதிவாக்கங்களாகத் தான் வந்துள்ளது.

ஞானியர்கள் உண்மைகளைக் காட்டியிருந்தாலும் அதன் பின் வந்தவர்கள் தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அவர்கள் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்களுக்குகந்த சட்டங்களை இயற்றுகின்றனர்.

ஒவ்வொரு மதமும் தனக்குள் எண்ணத்தால் உருவாக்கப்பட்டதை அதைப் படித்து உணர்ந்தால் அவை நமக்குள் கடவுளாக இயங்கத் தொடங்குகின்றது “உள் நின்று அந்த உணர்வுகள்…”

ஆகவே ஒவ்வொரு மதமும் அதற்குள் எத்தனையோ வகையான உணர்வுகளைப் பதிவு செய்தாலும்… “அதற்குள் இனங்கள் பல” தான் எண்ணிய உணர்வுகளைப் பதிவாக்கப்படும்போது அது உள் நினறு கடவுளாக நம்மை உருவாக்குகின்றது.

இப்படி மதங்களால் எண்ணங்களை உருவாக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அவைகளை நமது பூமியில் பரவச் செய்துள்ளது. அதுவும் இன்றுள்ளது…!

இருந்தாலும்…
1.அந்த மெய்யை நம்மில் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால்
2.அகஸ்தியன் வழியில் நாம் சென்றோமென்றால் தான்
3.அந்த அணுவின் இயக்கப்பொறியின் ரூபங்கள் எவ்வாறு…? என்ற நிலையை நாம் அறிந்திட முடியும்.

அதற்குத் தான் இதைத் தெளிவாக்குகின்றோம்.

உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை இருக்கும் “அணைந்திடாத அக்கினிக் குண்டம்”

 

அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டுகொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.

நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.

1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.

தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.

வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.

அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?

கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.

அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.

அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.

உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ நிலைகளைக் கடந்து வந்த மனிதன் நாம்
1.உயிரை நாம் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2.உயிரைச் சிக்கனெப் பிடித்து… அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ
3.அதே அறிவின் தன்மையாக நாம் பெற வேண்டும்.

ஆதியிலே தோன்றிய மனிதன் அகஸ்தியன் தன் உணர்வினை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கோண்டிருக்கும் அந்த உணர்வை எடுத்து
1.நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தங்களிலே கலக்கப்பட்டு
2.நம் உடலுக்குள் அதைச் சேர்க்கப் பழக்கப்படுத்த வேண்டும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால் நாளடைவில் இந்த உடலை விட்டுச் செல்லப்படும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தோமோ உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்.

இதில் ஒன்றும் சிரமம் இல்லை.

காட்டிற்குள் போய்த் தவம் இருந்து தனித்து ஜெபம் இருந்து ஆண்டவனின் அருளைப் பெறப் போகின்றேன் என்று அங்கே சென்றால் என்ன நடக்கும்…?

காட்டுக்குள் அமர்ந்து எந்த ஜெபத்தின் தன்மை எடுக்கின்றானோ… அந்த உணர்வு… நம்மை ஆள்பவன் எவனோ அங்கே தான் சென்றடையும்.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்று அதே உணர்வுகள் எவன் ஒருவன் பிரமை பிடித்து இதே மாதிரி ஆனானோ
1.வாக்கிலே ஒன்றை எடுத்துக் கொண்டு வரும் பொழுது அவன் ஒன்றைப் பார்த்தாலே போதும்.
2.இது வலுவானால் அவருடைய நிலைகள் சாபமாக… நீ தொலைந்து போடா என்று போக வைத்து விடும்.
3.இந்தப் உணர்வுகள் வலுவாகி அவனை இறக்க வைத்துவிடும்.

ஆக “இவர் பெரிய முனி” அப்பா என்று வரும் ஆனால் நல்ல நிலைகளில் வளரப்பா…! என்ற நிலைகளுக்கு வருவதில்லை.

கணவன் மனைவியாக ஒன்றிணைந்து நல்ல உணர்வினை இருவரும் சேர்த்து வளர்த்துப் பழகினால் நல்ல உணர்வுகள் வளரும்.

ஆனால் தெரியாத நிலைகள் கொண்டு தவமிருந்து நான் ஆண்டவனை அடையப் போகின்றேன் என்று… மனைவி இல்லாது இந்த உணர்வுகளை வளர்க்கப்படும் பொழுது “முனி” தான். அந்த முனி என்ற வீரியத் தன்மை மற்றதை அழிக்கச் செய்யும்.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வு எதுவோ நம்மை ஆள்வது நம் உயிர் தான். அது தான் ஆண்டவன். அவனிடம் எதைச் சேர்க்கின்றோமோ அதன் வழி தான் செல்கிறது.

ஆனால் கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியன்… உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினான்… நஞ்சினை வென்றான்… நஞ்சையே ஒளியாக மாற்றினான்.

சூரியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பாதரசமாக உருவானாலும் தன் அருகே வரக்கூடிய விஷத்தன்மையுடன் மோதப்படும் பொழுது அந்த நஞ்சு பிரிந்து சென்று ஒளியின் உணர்வாக வருகின்றது.

ஆக அந்த ஒளியின் உணர்வுக்குள் நஞ்சின் தன்மை கவர்ந்து விட்டால் அதை நுகர்ந்தால் நம்மை இருள் சூழச் செய்து விடும்.

அதாவது ஒளியாக மாற்றுகின்றது…. ஆனாலும் ஒரு விஷத் தன்மையைக் கவர்ந்தால் அதை மனிதன் நுகர்ந்தால் மற்றவருடைய உணர்வின் இயக்கத்தை இருளச் செய்கின்றது. ஏனென்றால் இதே சூரியன் தான்.

ஒரு பக்கம் விஷத் தன்மை பரவுகிறது என்றால் சூரியனுடைய காந்த சக்தி கலந்தால் அதனின் அலைகளாகப் படர்கிறது. அதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் உள்ள அணுக்களை இருளச் செய்து விடும்.

1.அந்த இருளை மாற்றிய உணர்வின் தன்மை ஒளியாகப் பெற்ற அனைத்திலும் உயர்ந்தது துருவ நட்சத்திரம்
2.அதை அனைவரும் பெற வேண்டும்.

மனிதனான பின் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும். ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகி மின்னல்களாகப் பாய்கிறது.

தாய் கருவிலே விஷத்தை வென்றிடும் ஆற்றல் பெற்ற அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அத்தகைய மின்னலை எல்லாம் உற்றுப் பார்க்கின்றான்.
1.பார்க்கும் பொழுது அதிலுள்ள விஷக் கதிரியக்கங்களை அடக்கி
2.அதை எல்லாம் ஒளிக்கதிர்களாக மாற்றும் தன்மையாக
3.தன் உடலில் ஒளியான அணுக்களாக மாற்றும் தன்மை அவனுக்குள் உருவாக்குகின்றது.

இதைப்போல சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மையும் அந்தக் குழந்தை உற்றுப் பார்க்கின்றது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதற்குள் நட்சத்திரங்கள் எப்படி உருவானதோ…? அகண்ட அண்டங்கள் எப்படி உண்டானதோ..? இந்த உணர்வெல்லாம் சூரியனுக்குள் உண்டு.

இதன் வரிசைப்படுத்தி வந்த உண்மைகளை எல்லாம் அந்த நட்சத்திரங்களின் சக்திகளை இவன் நுகரப்படும்போது அந்த உணர்வின் எண்ணங்கள் (ஞானமாக) வருகின்றது.

ஒரு குளவி மண்ணைப் பிசைந்து கூட்டைக் கட்டி அதற்குள் புழுவை எடுத்து வந்து வைக்கின்றது. புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. எத்தனையோ உணர்வுகள் கலந்து தான் அந்த விஷத்தின் தன்மை குளவிக்குள் வருகின்றது.

குளவி புழுவைத் தன் விஷத்தால் கொட்டிய பின் அந்த விஷம் புழுவின் உடலுக்குள் சென்று…
1.அந்த விஷத்தின் தன்மைகள் கொண்டு துடிப்புகள் அதிகமாகிறது.
2.அதுவே புழு உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இந்திரீகமாக மாறி… இந்திரலோகமாக மாறி
3.அந்தப் புழு குளவியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் இவன் அறியவில்லை என்றாலும் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் வரப்படும் பொழுது நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்களையும் மற்றவைகளையும் இவன் அடக்குகின்றான்.

உதாரணமாக பல நட்சத்திரங்களின் சக்திகள் வந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் சக்தியைச் சூரியன் கவரும்பொழுது அடுத்த நட்சத்திரத்தின் சக்தி அங்கே வந்தால் இந்த இரண்டும் மோதும் போது எர்த் (EARTH) ஆகின்றது.

அப்பொழுது பளீர்…” என்று மின்னுவதும் அந்த உணர்வுகள் மற்றதோடு ஊடுருவதும் அதன் அலைவரிசையில் ஊடுருவும்போது மரங்களில் விழுந்தால் அதைக் கருக்கி விடுகின்றது.

இந்த மின்னல்கள் அடுத்து பூமியின் ஈர்ப்புக்குள் அதிகமாகச் சேர்த்தால் இது கொதிகலனாக மாறுகின்றது.

அணுவைப் பிளந்து அதன் வீரியத்தன்மை கொண்டு அணு உலைகளில் (ATOMIC POWER STATION) வைக்கும்போது அது எவ்வளவு வேகமாக வெப்பத்தை உண்டாக்குகின்றதோ இதைப்போலத்தான் இந்த மின்னல்கள் ஊடுருவி அந்த பூமியின் அடியில் சென்றபின் கொதிகலனாக மாற்றுகின்றது.

வெப்பத்தின் துரிதத்தால் பாறைகள் உருகுகின்றன. உருகிய பின் அந்தப் பாறைகள் கீழே இறங்கப்படும் போது நிலநடுக்கம் வருகிறது. அந்த ஒரு நொடிக்குள் எல்லாம் கூழான பின் இதில் அடங்கி விடுகின்றது.

அதே மின்னல்கள் கடல்களிலும் பாய்கிறது. கடல்களில் உள்ள ஹைட்ரஜன் அது உப்புச்சத்து கொண்டது. அதிலே மின்னல்கள் பரவினால் இது பூராமே அடக்கி மணலாக மாற்றுகின்றது. கதிரியக்கத் தனிமங்களாக உருவாகிறது.

1.இதைப் போலத்தான் அகஸ்தியனுடைய பார்வையில் மின்னல்கள் பட்டாலும்
2.விஷத்தை ஒடுக்கும் சக்தி இவனுக்குள் இருக்கும்போது
3.அந்த உணர்வின் தன்மை கடல் எப்படி தனக்குள் அடக்கியதோ
4.இதே உணர்வின் அணுவாக இவனுக்குள் இவனுக்குகந்த அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றான்.
5.அவன் இளமை பருவத்தில் அவனுக்குத் தெரிந்தல்ல.

அவனுடைய சந்தர்ப்பங்கள் அவன் அத்தகைய நிலைகளில் வளர்ச்சி பெறுகின்றான். அப்படி வளர்ச்சி பெற்றவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றோம் என்றால் நாமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே அழுத்தமாகவும்… உங்களுக்குத் தெளிவாக்கவும் சிறிது வேகமாகச் சொல்கிறேன் (ஞானகுரு).

1.யாம் உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மைகளை யார் கூர்மையாக எண்ணி எடுக்கின்றார்களோ
2.அவர்கள் உடலிலே இந்த அணுத் தன்மை பெருகும்.
3.தீமைகளை அடக்கும் வல்லமை பெறுகின்றீர்கள்.

புரியவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை கலக்கப்படும் போது அதே தான் ஆகும்.

ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக்கை வைத்து எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள். ஒரு நாடாவில் முலாம்களைப் பூசி அதை உயர் அழுத்தத்தில் இணைக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒலிகள் அதிலுள்ள அதிர்வுகளை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

அதன் ஒளி அதிர்வுகளை இந்த எலெக்ட்ரிக் தன்னுடைய ஒளிப் பேழைகளில் மாற்றியமைத்து ரூபமாகவும் எழுத்தாகவும் ஆணைகளாகவும் கூட்டுகின்றது.

இதிலே இடைமறித்து எதையாவது தவறுதலாக ஓசை மாறி விட்டால் உடனே அதனின் அழுத்தங்கள் மாறிவிடுகின்றது.

1.ஏனென்றால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்க வேண்டும் என்றால்
2.அல்லது இந்த நேரத்தில் நிறுத்த வேண்டும் என்றால் இடைமறித்து இது தாக்கப்படும் பொழுது
3.குறித்த நேரத்தில் இது தாக்கி அந்த இயந்திரத்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

இப்படி இயந்திரங்களை இயக்குவதும் விமானங்களை ஓட்டுவதும் இராக்கெட்டுகளை இயக்குவதும் விஞ்ஞானத்தில் செயல்படுத்துகின்றனர்.

இதே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற பேழையை அங்கே வைத்து விட்டு அதன் ஒலி அதிர்வுகள் கதிர்களை இயக்கப்படும் பொழுது தொலை தூரத்தில் செல்லும் இராக்கெட்டையே இயக்கச் செய்கின்றது.

இராக்கெட்டுகளில் ஏதாவது குறைகள் இருந்தாலும்…
1.கம்ப்யூட்டர் மூலம் இந்த ஒலி அதிர்வுகளை ஏவி அதன் கட்டளைப்படி
2.அதை எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மீண்டும் சீராக்குகின்றான் மனிதன்.

ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வளர்ந்த நாம் விஞ்ஞானத்தை நம்புகின்றோம். ஞானிகள் கொடுத்த மெய் ஞானத்தை இழந்து விட்டோம்.
1.மெய் ஞானத்தின் உண்மைகளை அறிந்தால் மனிதனுக்கு உதவும்.
2.பிறவியில்லா நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் அடைய உதவும்.

ஆனால் மனித ஆசையின் உணர்வுகள் கொண்டு ஒவ்வொன்றையும் வளர்க்கப்பட்டால் அது இந்த உடலுக்கே உதவும். இந்த உடல் அழிந்து விட்டால் இதிலே சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மீண்டும் அடுத்த உடலாக மாற்றிவிடும்.

மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை வளர்த்து விட்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் மெய் ஞானியின் உணர்வுடன் ஒன்றச் செய்யும்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றச் செய்யும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உபதேசங்களைக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

கண்களைத் திறந்து பின் கண்களை மூடி… ஆத்ம சுத்தி செய்வது என்பது “மிக மிக வீரியமான சக்தி” – இது ஒரு பயிற்சி

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி… “கண்களைத் திறந்து தியானியுங்கள்…”
1.இப்பொழுது உங்கள் நினைவனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று “திரும்பத் திரும்ப” எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி உடலில் உள்ள ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது
1.உங்கள் உடலில் புது விதமான உணர்வுகள் படரும்.
2.இரத்தங்களில் மிகச் சக்தி வாய்ந்த அந்த உணர்வுகள் கலக்கும்.
3.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் பெறும்… வலிமையும் பெறும்.

மேலே சொன்ன மாதிரி இப்படி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும். பழகிக் கொண்டபின்… உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது சலனமும்… சஞ்சலமும்… வெறுப்பும்… வேதனையும்… பகைமையான உணர்வுகளூம் உங்களுக்குள் தோன்றுகின்றதோ
1.அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று கண்களைத் திறந்து ஏங்கித் தியானியுங்கள்.

அடுத்து கண்களை மூடி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
1.கண்களை மூடி உங்கள் நினைவை உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை மீண்டும் காலிலிருந்து தலை வரை செலுத்துங்கள்.
2.இப்படி ஒரு ரெண்டு மூன்று தடவை செய்தால் உங்கள் கவலைகள் அனைத்தும் நீங்கும்
3.அருள் உணர்வுகள் பெருகும் அதன் வழி உங்களுக்குள் மன வலிமை கிடைக்கும்
4.சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்… பகைமைகளை அகற்றும்… மகிழ்ச்சி என்ற உணர்வுகளை தோற்றுவிக்கும்

தியானத்தில் எடுத்தவர்கள் இதே மாதிரி அவசியம் செய்து பழக வேண்டும்.

குறிப்பு:-
கண்களைத் திறந்து… அடுத்து கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஞானகுரு எடுக்கச் சொல்வதில் ஒரு முக்கியமான சூட்சமம் உள்ளது.
1.கண்களைத் திறந்து செய்யும் போது கேமராவில் படம் எடுக்கிற மாதிரி புருவ மத்திக்கும் விண்ணிலிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் நினைவு செல்ல வேண்டும் (அதாவது படம் பிடிக்க வேண்டும்)
2.படம் பிடித்ததை… அந்த நினைவை… அப்படியே கண்களை மூடி… கண்ணால் சுவாசத்தின் வழி கூடி தலையிலிருந்து கால வரை செலுத்த வேண்டும்

மேலே சொன்ன SL NO 1, 2யும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் செய்து உடலுக்குள் செலுத்த செலுத்த… வட துருவத்தின் வழி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்கள் பனிப் பாறைகளாக உறைவது போல் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலுக்குள் இருக்கும் சகலத்திற்குள்ளும் உறையத் தொடங்கும்… அதாவது முலாம் பூசுவது போல் படரும்.

படரச் செய்யும் போது மூக்கு வழி செல்லும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சுவாசம்… உடல் முழுவதும் சுழன்று வருவதும்… அது வாயிலே உமிழ் நீராக மாறி… நம் அன்னக் குழாயிலிருந்து… ஜீரண உறுப்புகளிலிருந்து… தோல் மண்டலம் வரை கண்ணைத் திறந்து மூடி இப்படி மாறி மாறிச் செய்ய வேண்டும்.

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால்
1.“எத்தகைய கடுமையான நிலைகள் இருந்தாலும்… அதை நல்லதாக மாற்ற முடியும்…”
2.ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய சரியான முறை இது தான்.
3.ஆத்மா மட்டுமல்ல உடலும் நலம் பெறும்… “மன பலம் மன நலம் அதிகமாகக் கிடைக்கும்…”

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

 

விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.

ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.

மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.

யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.

இச்செயல் எப்படி நடந்தது…?

1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.

சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு உருவான உயிரணுக்கள் மண் தன்மையினுள் கலந்து பிருத்வி கண்டு அண்டத்தில் நுழைகின்றன.

ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?

மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.

அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.

உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!

அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.

கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.

“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்..

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் தலையிலிருந்து கால் வரை அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்று அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுகின்றீர்கள்.

உங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்கி உடலில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உருவாகி அந்த அருள் ஞான சக்தி உங்களுக்குள் பெருகும்.

நோயற்ற வாழ்வு வாழும் அருள் ஞான சக்தி உங்களிலே விளையும். நோயுடன் வந்தோர் நோய்கள் நீங்குவதை இப்போது நீங்கள் உணரலாம். கை கால் குடைச்சலோ சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ மன நோயோ இவை அனைத்தும் அகலும்.

அருள் ஞான ஒளி உங்களிலே பெருகும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடல் முழுவதும் படர்ந்து உங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் விளைந்து உங்கள் பேச்சால் மூச்சால் பிறரை மகிழச் செய்யும் உணர்வுகள் உங்களில் விளையும். உங்களை மகிழச் செய்யும் அணுக்கள் விளையும்.

அருள் ஒளி வளரும் மெய்ப் பொருள் காணும் திறன் பெறுவீர்கள். உங்கள் பார்வையால் உங்கள் நினைவால் உங்கள் சொல்லால் பிறருடைய துன்பங்களைப் போக்கும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

பிறருடைய துன்பங்களைப் போக்கும் வலு பெற்றால் பிறருடைய துன்பங்கள் உங்களை அணுகாது தடைப்படுத்த முடியும் உங்கள் உணர்வால்…!

தியானமிருக்கும் அனைவரது உடலிலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து சர்வ ரோகங்களும் நீங்கி மகரிஷிகளின் அருள் சக்தி உங்களிலே படர்ந்து மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறுவீர்கள்.

உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களை மகிழச் செய்யும் உணர்வாகப் படரும். சகோதர உணர்வுகள் விளைந்து மத பேதமின்றி இன பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அத்தகைய அருள் சக்திகள் கொண்ட உங்கள் மூச்சலைகள் காற்றிலே படர்ந்து உலக மக்களைக் காத்திடும் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்திட குருவைப் பிரார்த்திக்கின்றேன்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களில் படர
2.மகிழ்ச்சி பெறும் உணர்வை நீங்கள் வளர்த்திட
3.அந்த உணர்வுகளை உங்கள் உயிரான ஈசன் கவர்ந்து
4.அந்த உயர்ந்த உணர்வுகளை உங்கள் உடலான சிவமாக்கி மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக உருவாக்கி
5.உங்களுக்குள் மகிழ்ச்சி பெறும் சொல்லாக உருவாக்கும் சீதா இராமனாக எண்ணங்களைத் தோற்றுவிக்கவும்
6.அருள் ஒளி படர்ந்து உங்களுக்குள் நல்வினையாக விளைந்திடவும்
7.மகரிஷிகள் உணர்வுகள் உங்கள் உடலுக்கு அரணாக அமைந்து
8.இந்தப் பிறவியிலேயே பேரின்பப் பெரு வாழ்வு பெற்றிடவும்
9.எண்ணியதை உங்கள் உயிரான ஈசன் உருவாக்கி அதையே பிரம்மமாக்கிடவும்
10.உங்கள் உடலைச் சொர்க்கலோகமாக்கி… உங்கள் உயிரைச் சொர்க்க வாசலாக அமைத்திடவும்
11.அந்த மாமகரிஷிகளின் அருளாசி படர்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
12.உங்கள் பார்வையிலேயே தீமைகளை அகற்றிடவும் மெய் ஒளியைப் பரப்பிடவும்
13.என்றுமே அழிவில்லா வாழ்க்கையாக வாழ்ந்திடவும்
14.மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்திடும் அருள் ஒளி உங்களில் படர்ந்திடவும்
15.உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உத்தம உணர்வுகள் வளர்ந்திடவும்
16.அருள் மகரிஷிகளின் உணர்வு உங்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்திடவும்
17.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்திட குரு அருள் உங்களுக்குள் எப்பொழுதும் உறுதுணையாக இருந்திடவும்
18.அந்த அருள்.. ஞான குரு வழியில் உங்கள் எண்ணங்கள் அருள் ஞானத்தை வளர்த்திடும் அருள் சக்தியாக விளைந்திடவும்
19.நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்… தியானிக்கின்றேன்…!

இதைக் கேட்டுணர்ந்தோர் உடல்களில் கடும் நோய்கள் குறைந்திருப்பதையும் காணலாம்.

இதைப் போன்ற அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள அதிகாலை துருவ தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும்… இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… நல்ல இரத்தங்கள் உருவாக வேண்டும்… நல்ல ஞானங்கள் எங்களுக்குள் வளர வேண்டும்… என்று ஒரு பத்து நிமிடமாவது ஏங்கிப் பெறுங்கள்.

இப்போது கொடுக்கும் இந்த அருள் ஞான வித்துக்களை உங்கள் நினைவால் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணும்போது
1.உங்கள் உயிரே அந்த அணுக்களை வளர்த்து
2.உங்களை நலம் பெறும் சக்தியாக உடலில் வளர்த்து
3.மன பலம் மன நலம் பெறச் செய்து
4.அருள் ஒளி பெறும் அருள் ஞான வழியில் அழைத்துச் சென்று
5.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் உணர்வின் உடலாக மாற்றியமைக்கும் உங்கள் உயிர்…!

ஆகவே
1.எண்ணியதை உருவாக்குவது உயிரான ஈசன்.
2.எண்ணியதை உடலாக்குவதும் உயிரே
3.எண்ணியதைக் காத்தருளுவதும் உயிரே
4.ஆண்டவனாக இருப்பதும் உயிரே.
5.உயிரை நாம் வணங்க வேண்டும்… மதிக்க வேண்டும்… எப்போதும் மறக்கக் கூடாது.

நன்றாகத் தியானம் செய்பவர்கள்… அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

 

1.நம் உடலுக்குள் இருக்கும் எல்லா அறிவுகளையும் தெளிவாக்கும் நாள் தான் கார்த்திகை தீபம்… கார்த்திகை ஜோதி
2.அதாவது எல்லா அணுக்களுக்கும் தெளிவான (ஒளியான) உணர்ச்சிகளை ஊட்டும் நாள் இது.

கோபப்படுபவரை நாம் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. நோயோடு வாடுகின்றான் என்று பார்த்து அதை மீண்டும் எண்ணினால் நம் மனம் இருண்டு விடுகின்றது. சிந்தனை இழக்கச் செய்து நம்மைச் சோர்வடையச் செய்கின்றது.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது… அத்தகைய இருண்ட நிலைகளை எல்லாம் தெளிவாக்கிச் சிந்தித்துச் செயல்படும் சக்தியை நமக்கு ஊட்டுகின்றது.

நமது சாஸ்திரங்கள் கூறிய தத்துவத்தின்படி விதியை மதி கொண்டு மாற்ற முடியும்.
1.நமது உயிரின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.உடலில் இருக்கும் எல்லாவற்றையும் அருள் ஜோதியாக இருள் சூழாத நிலைகள் கொண்டு
3.ஏகாந்த நிலையாக… என்றும் ஏகாதசி என்ற பத்தாவது நிலையை அடைய முடியும்.

மனிதன் ஒருவன் தான் இதைச் செயல்படுத்த முடியும்…! இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் அழைத்துச் சென்று
2.அது வெளிப்படுத்தும் உணர்வுகளை கவரச் செய்து
3.அதை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் இரத்தத்திலே அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்திகள் சேருகின்றது.
4.உங்கள் உடலில் சோர்வோ எங்கேயாவது வேதனையோ இருந்தாலும் அது குறையத் தொடங்குகின்றது.
5.இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அந்த உணர்வுகள் குறையத் தொடங்கும்

அது மீண்டும் குறைய… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நமக்குள் இருக்கும் பிணிகளை மாற்றி… சிந்தித்து செயல்படும் வலுவைக் கூட்டி… அருள் உணர்வின் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையைத் தெளிவாக்கி ஒளியின் சுடராக நாம் மாற முடியும்.

ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டாலும்
1.நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அந்த அணுக்கள் நல்லதாக மாறும் பொழுது உடலிலே வலி தெரியும் …!
2.தீய உணர்வுகளை நுகரப்படும் பொழுது… அந்தத் தீயது நல்லதாக மாறும் பொழுது வலிகள் வரும்

நல்லதாக்க வேண்டும் என்ற நிலையில் ஆத்ம சுத்தியோ தியானமோ செய்து… அந்தந்தச் சந்தர்ப்பங்களில் மாற்றும் பொழுது
1.எல்லாம் மாற்றினேன்… ஆனால் வலிக்கிறது என்று கொஞ்சம் சங்கடம் இருக்கும்… வெறுப்பு கூட இருக்கும்.
2.ஆனாலும் ஒளியின் சுடராகும் பொழுது நம்மைத் தெளிவாக்கும்
3.ஓரளவுக்கு மாற்றிக் கொள்ளும் வலுவும் கிடைக்கிறது.

ஆகையினால் எப்படி இருந்தாலும் நம் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றப்படும் பொழுது தீமையின் உணர்வாக வளர்த்த… “இந்த உடலும் கரைகின்றது…”

அதே சமயத்தில் ஒளியின் சுடராக மாறி உயிருடன் ஒன்றி உயிரான்மா வெளி செல்லும் பொழுது பேரருள் பேரொளியாக ஏகாந்த நிலை அடைகின்றது.

ஆனால்… இந்த மனிதனின் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் அதிகமானால்… அதனதன் உணர்வுகள் கலக்கப்பட்டு அதற்குத் தக்க உடலாக… புலியோ நரியோ நாயோ பாம்போ தேளோ இதைப் போன்ற உடல்களுக்கு அழைத்துச் சென்று “நம்மை உருமாற்றிவிடும் நமது உயிர்…”

இன்றைய செயல் நாளைய சரீரமாக மாற்றிக் கொண்டே உள்ளது உயிர். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்திந் உணர்வுகளைக் கலக்கும்படி செய்தோம்.
1.இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்களை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு அமுதாகச் சேர்கிறது…
2.”அருள் வழியில் வளரும்” அத்தகைய அணுக்களாக மாற்றும்.

அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டும் அதற்கே இதைச் செயல்படுத்துகின்றேன் (ஞானகுரு).

ஒளி நிலை பெற மகான்கள் காட்டிய மூன்றாவது வழியினைப் பின்பற்ற வேண்டும்

 

மகான்கள் இறை (தன்னை) உணரும்படியாக வழி காட்டியதில் மூன்று உண்டு.
1.உருவம் கொண்டு அறியும்… வழிபடுகின்ற நெறி ஒன்று
2.உயிருதய கமலாயத்தில் ஜெபிக்கின்ற தியான வழி இரண்டு

“ஆரம்ப நிலை” தியான வழி ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டது இந்த இரண்டு தான்……

உயர் நிலை என்னும் ஒளி நிலை பெற்ற மாமகரிஷிகள்… தம்மை எண்ணிடும் உருவம் கொண்ட ஜீவன்களை சதாக்கியமாக (சதா சர்வ காலத்திலும்) இயங்கி வழி நடத்துவர். (ஜீவன் என்றால் உயிர்)

அந்த ஒளி நிலையை உணர்ந்து கொண்டிடும் வழியாக அனுபவ ஞான லயமாக… சத்தியத்தின் சக்தியாக இங்கே போதனையாகத் தந்ததை,
1.எது பேருண்மை பொருந்திய நாத விந்துக் கலை என்ற முத்தொடரோ…
2.சூரிய சந்திர ஆத்ம ஒளி நிலையோ (காற்று நூல் – சுவாச நாடிகளின் இயக்கமாக)
3.அதனுள் சிவன் நடிக்கும் நடனம் ஜீவனுள் சிவமாக
4.ஈஸ்வர ஜோதியாக வளர வழிகாட்ட வந்த செயலில்… அதைப் பெற்று வழி காண முயல்வோர் முயலட்டும் (மூன்றாவது வழி)

பஞ்ச பூத ஒளிவண்ண ஈர்ப்பில் தேகம் பெறுகின்றவன் அப்படி மனிதன் எனும் குணச் செயலாக வந்துற்ற ஆத்மாக்கள் அனைவரும் “தேகி” (உயிருடன் ஒன்றுதல்) என்ற பெயர் நாமம் பூண்டு விட இயலாது.

சதா ஒலி அணுக்கள் அசைந்திடும் உராய்வின் ஒலி நாதமாக
1.வான இயல் தத்துவம் அறிந்து கொள்ள முயல்வோருக்கு
2.யாம் சுட்டிக் காட்டும் ஒளி மண்டல தியானமாக
3.சிரசின் உச்சியில் எண்ணி (புருவ மத்தி – பிடர் வழி) எடுத்திடும் ஞான திருஷ்டியின் நோக்கால் தன்னுள்ளே சகலத்தையும் காணலாம்.

ஒளி அணுக்கள் அசைந்திடும் ஒளி நுண் மின்காந்த அலைகள் போல்… தனக்குள்ளும் அசைந்திடும் ஒளி அணுக்களின் செயலைச் செயல் கொள்ள…
1.வான் தொடர்பாகக் கொண்டிடும் நினைவோட்ட ஒளி மார்க்க எண்ண அம்பு வீசிடும் செயலாக (கண்ணின் ஆண்டென்னா சக்தி)
2.குவியும் குவிப்பு ஆகாய ஒளி அணுக்களின் உராய்வில் தன் உயர்வு எண்ண அணுக்களும் உராய்ந்து
3.சகலமும் சகலமாகப் படர்ந்துள்ள பால்வெளியில் நிறைந்ததை… நிறைந்த பொருளை…
4.அறிந்ததை அறிவால் அறிந்துணர்ந்து ஈர்த்தலே “ஞானத்தின் திருஷ்டி நோக்கு…”

தேகம் கொண்டவன் தேகி என்று தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் பஞ்சபூதங்கள் அமைப்புப் பெற்ற தேகத்தில்… அந்தத் தேகத்தையே தாங்கிச் செயல் புரிந்திடும் ஜீவன் – தன்னுள் அமைவு கொண்டிட்ட ஒளியே ஆத்மா என்பது.

தேகத்தை உணர்ந்து கொண்டவருக்கு ஜீவனும் ஒளி தான். ஜீவனால் அமைவு கொண்ட ஆத்மா பேரானந்தப் பிரகாசம் தான்.

அதனுள் சிவ நடனம் காட்டிடும் ஜீவன் சிவன் கலந்த ஜீவஜோதியின் அசைவாம் நடனம் காட்டி அனுபவிக்கச் செய்திடும் செயலை எடுத்துரைக்க முடியுமோ…?

அகம் கனன்ற கனல் சிவ நடனம் கண்ட ஜீவன் தன்னை மாற்று நிலைத் தன்மைகள் நெருங்கிட முடிந்திடாது.

ஏன்…? என்ற வினா எழும்பலாம்

ஜீவன் அந்த மனப்பரியை (கட்டுக்கடங்காத எண்ண ஓட்டங்கள்) அடக்குகின்றதே…! கடினமான ஒரு பாட நிலை தான்.

மனம் கீழ் நிலைக்குச் சென்றிடும் பொழுது… விந்து நீக்கம் பெற்றே ஜீவனைச் சூழ்ந்து கொண்டிடும் துர்க்குணங்கள்… எண்ணத்தின் ஈர்ப்பலையாகத் தன்னைத்தான் கேடுறுத்தும் செயலை… “வேதாள மாமகரிஷி” உரைத்ததன் நிலை என்ன…?

யானைக்கு மதம் பிடிக்கின்றது அது தன் அகன்ற காதுகளை அசைத்து விரைந்து ஓடி வருகின்றது… கடுவாய் கொண்ட சிங்கமானது சீறிச் சினந்து ஓடி வருகின்றது.

அவைகள் கொண்டிட்ட வீரியத் தன்மைகள்… குணங்களில் கொடூரமும்… உணர்வையே மறக்கச் செய்திடும் ஆவேசமும்… எந்த நிலையாகினும்…
1.எரிகின்ற நெருப்பினைத் தன் அருகே கண்டு விட்டால்
2.உணர்வையே மறக்கச் செய்த தன் நிலையில்
3.உணர்வின் மாறுதல் கொண்டு அந்த இடத்தை நெருங்கிடாது.

நமக்கும் இதைப் போன்ற தீய குணங்களிலிருந்து மீண்டு பயணம் செய்திட ஒரு வாகனம் உண்டு.
1.அது “ஊர்த்துவம்” (மேல் நோக்கிய… அதாவது கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது) என்ற பெயர் நாமத்தில்
2.விந்து ஒளி நிலையாக மேலெழும் செயலாக… சிரசினுள் நாத விந்துவாக விளங்கிட
3.மனப்புரவி (கல்கியின் உருவம்) என்றும் நீக்கமற உண்டு.

தான் தணலாக (நெருப்பாக) ஆகுங்கால் மாற்றொத்த நிலைத் தன்மைகள் (நஞ்சுகள்) நெருங்கிடாத் தன்மையாக… ஜீவன் சிவ நடனம் (பேரானந்தப் பெரு நிலை) காணும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இராமாயணத்தில் காட்டப்பட்ட ஜனகச் சக்கரவர்த்தி என்பது சூரியன். பூமியிலிருந்து வெளிப்படும் சத்துக்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கிறது.

அதிலே சுவை கொண்ட உணர்வின் எண்ணங்கள் கொண்டே மனிதனாக நம்மை உருவாக்கியது என்ற நிலையை உணர்த்துவதற்காக ஜனகச் சக்கரவர்த்தி என்று சூரியனைக் காட்டுகின்றனர்.

ஒரு நிலத்தினைப் பண்படுத்தி நல்ல வித்தினை ஊன்றினால் அதிலே விளைந்த சத்து (வித்துகள்) சீதா என்றும் அதை உணவாகச் சுவைக்கப்படும் பொழுது மகிழ்ச்சியின் நிலைகளை நாம் பெறுகின்றோம் என்று காட்டுகின்றனர்.

1.அதாவது உணர்வின் சத்தைத் தான் சூரியன் கவர்ந்து வைத்திருக்கின்றது
2.ஜனக சக்கரவர்த்தி அதைத் தத்தாக எடுத்து (சீதா என்ற சத்தை) அவன் வளர்க்கின்றான் என்ற பேருண்மையைக் காட்டுகின்றார்கள்.

மனிதனில் எடுத்துக் கொண்ட கோபமோ காரமோ மற்ற உணர்வுகள் எல்லாமே சீதா தான். அதைத்தான் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

ஆனால் காடுகளில் விளைந்த விஷத் தன்மைகளை நாம் நுகர்ந்தால் என்னவாகும்..? நம்மைக் கொன்றுவிடும். இதைப் போல உணர்வுகள் அதனதன் விளைவுகளை… அதன் ஒலி அலைகளைப் பாய்ச்சப்படும்போது அதனுடைய திறமைகளைத்தான் காட்டும்…! என்பதனை உணர்த்துகின்றனர்.

அதே சமயத்தில் ஜனக சக்கரவர்த்தி சுயம்வரத்தை வைக்கின்றார். திறமைகளைக் காட்டுபவர்களுக்கே தன் வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து தருவேன் என்று…!

ஒரு கொடியவன் மற்றவரை வீழ்த்திடும் திறமையைக் காட்டுகின்றான். வில்லிலே நாண் ஏற்றி அம்பை எய்து மற்றவரை மரணமடையச் செய்கின்றான். மற்றதைத் துன்புறுத்தும் நிலைகளையே அவன் உருவாக்குகின்றான்.

முதலிலே சொன்ன மாதிரி காடுகளின் விளையும் விஷச் செடிகளின் உணர்வினை நாம் நுகர்ந்தால் அது நம்மைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால்
1.மனிதனாக உருவான பின்… மனிதன் வளர வேண்டும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து
2.அந்த உணர்வினைச் சீதாவாக எடுத்து சூரியன் வளர்க்கப்படும்போது
3.அதனை நாம் அரவணைக்கும் சக்தியாக எப்படிப் பெற வேண்டும்…? என்று தான் இராமயாணத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதனை நாம் சற்றும் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.

இராமாயணம் என்ற காவியத்தைக் கடவுளாக்கப்பட்டு அந்தக் கடவுளை வேண்டினால்… இராம நாம ஜெபத்தை நாம் ஜெபித்தால் நமக்கு உதவி செய்வான்…! என்று இப்படித்தான் நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

அந்த இராம நாமத்தை நாம் சொன்னாலும் நாம் எந்தக் குணத்தை எடுத்தோமோ அது தான் சீதா. உதாரணமாக…
1.நான் வாழ வேண்டுமென்ற உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.ஒருவன் எதிரியாக வரும்போது அவனைப் பழித்துப் பேசும் உணர்வு கொண்டு
3.அவனைத் தாக்கும் நிலைகளே வரும்… ஒதுங்கி நிற்கும் நிலைகளே வரும்…!

இது போன்ற தீமைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்காகத் தான் சீதாவைத் திருமணம் செய்வதற்காக… தன் மகளைத் திருமணம் செய்ய அவரவகள் திறமைகளைக் காட்டும்படி செய்தார் என்ற நிலையைக் காவியமாகப் படைத்து நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

அவரவர்கள் திறமையைக் காட்டும் போது அங்கே பிறரைத் தாக்கக்கூடிய அம்புகளை வைத்து… மற்றவரைக் குறி வைத்துத் துன்புறுத்தும் இயக்கங்களே வருகின்றது.

ஆனால் பிறரைத் துன்புறுத்தும் அந்த உணர்வின் தன்மையை…
1.இராமன் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்
2.பிறரைத் துன்புறுத்தும் எண்ணத்தை அகற்றி விட்டால் அந்த வேதனை என்ற நிலையே வராது.

சுவை கொண்ட உணர்வினைத் தனக்குள் உணவாக்கும் போதுதான் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நமக்குள் ஒன்றி வாழும் தன்மை வருகின்றது.

ஆகவே அந்தக் குணத்தை எடுத்து அரவணைக்கும் தன்மையாகப் பெற்றான்… கல்யாணராமா…! இராமயாணக் காவியத்தில் உள்ள மூலங்களை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் பிடிக்க வேண்டிய “பித்து”

 

அன்று குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டி… ஒலிகளை எழுப்பி அது எப்படி வருகிறது…? எதற்காக அதைச் செய்கிறேன்…? என்று எனக்கு உணர்த்தினார்.

போஸ்டில் நான் கல்லைத் தட்டுவதைப் பார்த்து என்னைப் பித்தன் என்று சொல்கின்றார்கள். ஆனால் பித்தன் யார்…? என்று நீ சிந்தித்துப் பார் என்ற நிலையைத் தெளிவாக்கினார்.

ஒரு காரியம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
1.எண்ணியபடி அந்தக் காரியம் நடக்கவில்லை… அதைத் தடைப்படுத்துகிறார்கள் என்றால் எத்தனாகவே மாறிவிடுகின்றோம்… எதிரிகளாக மாற்றுகின்றோம்.
2.உன்னால் என்ன செய்ய முடியுமோ… செய்து பார்…! என்று வீம்பின் தன்மை பேசுகின்றோம்…!

அப்பொழுது எத்தனாகவே மாறிவிடுகின்றோம்.

அங்கே அப்படி மாற்றியது யார்…? சந்தர்ப்பம் தான் அப்படி மாற்றுகின்றது
1.சிந்திக்கின்றோம்… தவறு செய்யக்கூடாது என்றும் எண்ணுகின்றோம்.
2.ஆனால் சந்தர்ப்பம் நம்மைச் செய்ய வைக்கின்றது… அதிலிருந்து மீள வேண்டும் அல்லவா.

அதற்குத்தான் அதிகாலை துருவ தியானத்தின் மூலம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளி… சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

அங்கே இணைத்து இந்த உடலில் பெற்ற நஞ்சுகள் கரைய வேண்டும் என்று செயல்படுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் எல்லோரிடமும் அன்புடன் பண்புடன் தான் நாம் பழகி இருக்கின்றோம்
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களை யார் யார்…? என்று நாம் தனித்து எண்ண வேண்டியதில்லை.
2.அவர்களுடன் ஒரு நாள் பழகி இருந்தாலும் அவருடைய உணர்வு நம்முடன் கலந்து தான் உள்ளது.
3.இதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களையும் நாம் விண் செலுத்த முடியும்.

குருநாதர் இதைத்தான் எனக்குக் காட்டினார்

அறியாது செய்த தவறினால் நோயின் தன்மை ஆகி இறந்தால் அவர்கள் மீண்டும் பிறவிக்கு இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி விண் செலுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுக் கொண்டு அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.

அந்த உடலில் உருவான இருள்களை அங்கே கரைக்கப்படும் போது சூரியனின் காந்த சக்தியினால் கவரப்பட்டால்… அதன் உணர்வை மாற்றி… மாற்றுப் பொருளாக உருமாற்றி விடுகின்றது.

இது போன்ற நிலைகளை நாம் செய்து பழகினோம் என்றால் “கூட்டுப் பிரார்த்தனை” என்பது இதுதான்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து “மொத்தமாகவே…” எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள்… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து… பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்து அழியாத ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் விண் செலுத்த வேண்டும்.

உடலுடன் இருக்கக்கூடிய நண்பனும் நாமும் ஒருவருக்கொருவர் அன்புடன் கலந்து உறவாடினால் “எனக்கு நன்மை செய்தான்” என்று எண்ணும் போது விக்கலாகிறது. “தீமை செய்தான் பாவி…!” என்று எண்ணினால் அங்கே புரையோடுகிறது.

இந்த மனித உடலையே இப்படி இயக்கிடும் நிலை வரும் பொழுது மனிதனுடன் பழகி இருக்கும் உணர்வு கொண்டு அந்த உயிரான்மாக்களை அங்கே விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைந்து ஒளிச் சரீரம் பெறும்.

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து விளைகின்றது… அந்த உணர்வுகளும் இந்தப் பூமியில் பரவுகின்றது

அதன் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினால் அவர் வாழ்ந்த காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டாரோ அதையெல்லாம் நீக்கி அவரால் நமக்குள் உருவான பரம்பரை நோய்களை… பரம்பரை குணங்களை… மாற்றி நாமும் பிறவி இல்லாத நிலை அடைய முடியும்.

இதைத்தான் நமது குருநாதர் அருள் வழியாகக் காட்டினார்.

நான் தட்டியது வெறும் போஸ்ட் அல்ல…!
1.அங்கே தட்டி “என் உயிரான ஈசனிடம் வேண்டினேன்”
2.எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று எண்ணினேன்
3.அந்தப் பித்து பிடித்து அதைச் செய்தேன்.

ஏனென்றால் ஒவ்வொரு உயிரும் கடவுளே.. அவன் தான் அந்த உடலை ஆளுகின்றான். உயிர் எப்படி ஒளியாக இருந்து இந்த உலகை அறிவிக்கின்றதோ “அதன் உணர்வு நான் பெற வேண்டும் என்று இந்தப் பித்து தான் என்னிடம் உள்ளது…” என்றார் குருநாதர்.

அதைத் தான் நானும் (ஞானகுரு) இன்று உங்களுக்குச் சொல்வது

எனது குருநாதர் சொன்னது போல நானும் உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உணர்வுகள் ஒளியாக மாற வேண்டும்… உங்கள் உடலில் அறியாது சேர்ந்து தீமைகள் அகல வேண்டும்… அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று
1.என் குரு வழியில் “நானும் பித்தனாக இருக்கின்றேன்…”
2.நீங்கள் அந்த அருள் ஒளி பெற வேண்டும் அந்த ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது

இப்படி நாம் ஒவ்வொருவரும் அந்த அருளைப் பெற்றால் இந்தப் பூமிக்குள் வரும் இருள்களை நீக்க முடியும்.
1.அருள் வழி நாம் வாழ முடியும்
2.மற்றவரை நாம் வாழ வைக்கவும் முடியும்.

ஆஅகையினால் உங்கள் உயிரான ஈசனை மதித்துப் பழகுங்கள் உடலை ஆலயமாக உங்கள் மதியுங்கள். உங்களை உருவாக்கிய தாய் தந்தையைக் கடவுளாக மதியுங்கள். தெய்வமாகக் காத்த தாய் தந்தையரை மதித்து நடங்கள். நம்மைக் காத்த முதல் தெய்வங்களும் அவர்கள் தான்.

நமக்கு நல் வழி காட்டிய அந்த நல் உணர்வுகளைப் பதிவாக்கிக் குருவாக மதியுங்கள். நல்ல உணர்வை எப்போதுமே நம் தாய் நமக்குள் பதிவாக்கியிருக்கின்றது. ஆகவே… எந்த நிமிடத்திலும்
1.அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த நல்ல உணர்வுகளை எளிதில் பெற முடியும்… நமக்குள் அறியாது சேர்ந்த இருளை நீக்க முடியும்
3.அந்தப் பேரருளைப் பெற முடியும்… நாம் பேரொளியாக மாற முடியும்.

அன்னபூரணியின் ஆகாரக் குறிப்பு

 

காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.

காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!

“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.

இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.

மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.

பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.

சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”

காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.

அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”

இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இயற்கையின் உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் எத்தனையோ இம்சைகளை எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்… முழுவதும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப் பட்டேன்.

ஏனென்றால் சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…? அதிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தார் குருநாதர்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது.
1.ஆனால் அந்த உயிரை மதிக்கமாட்டேன் என்கின்றார்களே…!
2.உடலைத்தான் மதிக்கின்றார்கள்… இந்த உயிரை யாரும் மதிப்பதில்லை.

நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…? இதையாவது மக்களுக்கு எடுத்துச் சொல்… ஆண்டவனுக்கு இந்தச் சேவையைச் செய்…! என்றார் குருநாதர்.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு உடலை ஆளுகின்றது. அப்பொழுது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? என்று உணர்த்தினார் குருநாதர்.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். குருநாதர் எனக்கு உணர்த்திய இந்த வழிப்படி
1.இப்பொழுது இங்கே சொல்லக் கூடிய உபதேசங்களை நீங்கள் நுகரப்படும்போது
2.அந்த ஆண்டவனுக்கு இந்த உணர்ச்சியின் தன்மை இந்த அருள் உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.

எது…?

கோவிலில் பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல குணத்திற்குப் பாலாபிஷேகம்…! அதாவது நம் நல்ல குணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் “அந்தப் பாலைப்போல் மனம் பெற வேண்டும்…” என்று நாம் எண்ண வேண்டும்.

ஆனால் வேதனை உணர்வை எடுக்கப்படும் பொழுது பாருங்கள். இந்த வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வார்கள். இந்த உயிரில் அந்த வேதனை தான் அபிஷேகம் ஆகும்.

வேதனை உணர்ச்சிகள் முன்னாடி இருக்கின்றது. அப்பொழுது பாலாபிஷேகம் செய்தால் என்ன செய்யும்…?
1.விஷத்தில் பாலை ஊற்றினால் என்ன செய்யும்…! பாலும் விஷமாக மாறிவிடும்
2.அது போல் தான் யாம் கொடுக்கும் வாக்கும் பயனற்றதாகப் போகும்.

நான் பல முறை சொல்லியிருக்கின்றேன். இதைப் பயனற்றதாக ஆக்காதீர்கள் என்று. சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து… அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழக வேண்டும்.

1.உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும்
2.அவனை மதித்து அந்த அருளைப் பெற்றீர்கள் என்றால்
3.இந்த உடலுக்குப் பின் நீங்கள் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.

என்ன தான் ஆபரேஷன் செய்து உடலை நலம் பெறச் செய்தாலும் அடுத்தாற்படி மனிதனின் கடைசி முடிவு எங்கே செல்கிறது…! எடுத்துக் கொண்ட விஷமான உணர்வுக்குத் தக்க… இந்த உயிர்… நீ செய்தாய் அல்லவா…! என்று விஷம் கொண்ட உயிரினங்களில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

ஆனால் இதை எல்லாம் நமக்குள் தெரியச் செய்வது கார்த்திகேயா… சேனாதிபதி…! பாதுகாக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது.

1.அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால்..
2.நாம் இன்றைக்கு மனிதன்… நாளைக்கு எடுத்துக் கொண்ட வேதனைக்குத் தக்க வேறு ஒரு உருவம்.

இது போன்ற நிலைக்கு உயிர் மாற்றிவிடும் என்ற நிலைகளில் தான் இத்தனையும் என் உடலில் பாய்ச்சி
1.நீ கெட்டதை நுகரப்படும்போது அது என்ன செய்கின்றது…?
2.எவ்வளவு நேரத்தில் அது உடலில் என்னென்னவெல்லாம் செய்கின்றது…? என்று குருநாதர் காட்டினார்.
3.அவஸ்தைப்பட்டுத்தான் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன்.

அதற்குப் பின்
1.அதை எப்படித் திருத்துவது…? என்று குருநாதர் சொன்ன நிலைகளைத் திருப்பி எடுத்து எனக்குள் மாற்றி அமைத்துக் கொண்டேன்.
2.அதைத் தான் இப்பொழுது உங்களிடம் சொல்கின்றேன். அதை நீங்களும் எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

உயிரணு தோன்றி உணர்வின் தன்மை முழுமையானது துருவ நட்சத்திரம்…! அதிலிருந்து வரக்கூடிய உணர்வை உங்களுக்குள் செலுத்தி எப்படியாவது அந்தச் சக்தியைப் பெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

காரணம்… இந்த நாடு… உலகம்… காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக உள்ளது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் அல்லவா…!

பிறந்துவிட்டோம்… மனிதராக வளர்ந்துவிட்டோம் மனிதனுக்குபின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அது தான் கடைசி நிலை…!

நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்குபவன் உயிர். அது ஈசனாக இருக்கிறது. உருவாக்கிய உணர்வு உடலாகி சிவமாகின்றது. உடலான இந்தச் சிவத்திற்குள் தீமையை நீக்கிய உணர்வு மணம் அந்தக் குணம் ஆறாவது அறிவாக இருக்கின்றது.

1.ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.உயிரான ஈசனிடம் வேண்டி
3.ஒளியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து
4.உங்களைத் தெளிவாக்கி கொள்ளுங்கள் என்று தான் யாம் சொல்கிறோம்.

அந்தத் தீமையை நீக்கிய உணர்வின் தன்மையை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலிலுள்ள இரத்தத்தில் கலக்கப்படும்போது அந்த ஒளியான அணுக்கள் உங்களுக்குள் பெருகும்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி

 

காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.

1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”

இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.

கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.

அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.

சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”

சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.

அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?

கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்

அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்

அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.

1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.

“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.

மகாபாரதப் போரைக் கண்ணன் ஏன் வழி நடத்துகிறான்…?

மனித உடலில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போர் முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. மகாபாரதப் போரைக் கண்ணன் (கண்கள்) வழி நடத்துகின்றான் என்று காட்டுகின்றார்கள். ஏன்…?
1.கண்கள் தான் ஒன்றைப் பார்த்து அதன் வழி நுகர்ந்து
2.உயிரிலே பட்ட பின்… நாம் எண்ணியதை உயிர் இயக்குகின்றது.

எண்ணத்தினால் தான் கண்கள் உருவானது. நாம் எதை நினைக்கின்றோமோ அதைக் கவர்ந்து அந்த எண்ணத்தை ஊட்டுகின்றது கண்கள்.

பரிணாம வளர்ச்சியில் கண் இல்லாத பொழுது. “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற எண்ணங்களை எடுத்தது அதன் உணர்வின் தன்மை வளர்ந்து அப்படித் தான் கண்கள் உருவானது.

கண்கள் உருவான பின் ஒன்றைப் பார்க்கப்படும் போது அதைக் கவர்ந்து அந்த உணர்வின் எண்ணங்கள் வருகிறது. நாம் எதை எடுத்து அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றோமோ அதன் நிலையே வருகிறது.
1.ஒருவனை நாம் ஏமாற்ற வேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவனைக் கண்டதும் ஏமாற்றுகின்றோம்.
2.அதே சமயத்தில் நண்பனை ஏமாற்றினால் அவன் நம்மை விடமாட்டான் என்றால்
3.அதற்குத் தகுந்த மாதிரித் தான் நாம் நடந்து கொள்வோம்.

இப்படி நம் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ஆறாவது அறிவு கார்த்திகேயா பல சூதுகளிலும் பல நிலைகளிலும் மாறி மாறி வளர்ந்து வந்தது.

உதாரணமாக பூனை எலியைப் பிடிக்கத் தந்திரமான வேலை செய்கின்றது. தந்திரமாகப் பிடிக்கும் நிலைகள் அதற்கு வருகின்றது எலியும் பூனையிடமிருந்து தப்பிக்க எத்தனையோ வழிகளைச் செய்கின்றது.

பூனையின் மணத்தை எலி கண்டபின் உற்றுப் பார்க்கின்றது மணத்தால் நுகர்கின்றது…. அங்கே பூனை இருக்கிறது என்றால் தப்பி விலகி ஓடுகின்றது.

ஆனால் பூனை என்ன செய்யும்…?

1.அந்த எலியின் மணத்தை வேகமாக நினைத்து இழுத்து வைத்துக் கொள்ளும்
2.சப்தமில்லாதபடி அந்த வாசனையை அது ஏங்கிப் பெறும் பொழுது பூனையின் பக்கம் அந்த மணங்கள் வருகின்றது… பூனை ஒளிந்து கொள்கிறது.
3.மறைந்திருக்கும் போது எலியின் மணம் அங்கிருந்து (பூனையிடமிருந்து) வருகிறது
4.எலியோ தன் கூட்டாளி அங்கே இருப்பதாக எண்ணி வேகமாக வரும்.
5.வேகமாக வந்த பிற்பாடு லபக் என்று பிடித்துக் கொள்கின்றது.

பூனை இதே மாதிரி தான் அதை உணவாக உட்கொள்கின்றது. இயற்கையின் சில நியதிகளில் அதனதன் உணர்வுக்கு உணவு தேட இப்படி வேலை செய்கிறது.

இது போன்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் அடுக்கடுக்காகச் சேர்க்கப்பட்டு… அணுக்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு அதன் வளர்ச்சியின் தன்மை பெற்றுத் தான் இன்று மனிதனாகப் பிறந்து வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனான பின் இந்த உடலின் இச்சை தான் வருகின்றது உடலைக் காக்க எத்தனையோ உபாயங்களை நாம் கையாளுகின்றோம்.

ஒருவர் நீதிப்படி நல்ல முறையில் ஒன்றை வளர்க்க வேண்டும் என்றால்… சூதின் வழி தான் அவரைக் கவர்ந்து கொள்கின்றோம்.

நல்லவரைப் பார்த்தாலும் நல்லது செய்தார் என்று எண்ணமே நமக்கு வருவதில்லை.
1.நமக்கு நல்லதே அவர் செய்திருந்தாலும் வெறுப்பின் உணர்வுகள் கவர்ந்திருந்தால்
2.அவர் என்ன நல்லது செய்தார்…? என்று தான் கேட்போம்.

காரணம்… அவர் செய்த உண்மையின் இயக்கத்தை நாம் எந்தக் கண்களால் பார்த்து
1.எத்தகைய உணர்வைப் (அன்போ வெறுப்போ பகைமையோ) பதிவாக்கினோமோ அந்த எண்ணங்கள் தான் வருகின்றது.
2.அந்த எண்ணத்தை நாம் நுகரப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் தான் இயக்குகின்றது.

இந்த உணர்ச்சியின் வழி தான் அந்தந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது என்பதை “மகாபாரதப் போரைக் கண்ணன் வழி நடத்துகின்றான்…” என்று காட்டுகின்றார்கள்.

இத்தகைய போராட்டங்களை மாற்ற வேண்டும் என்றால் நம் கண்ணின் நினைவு எங்கே இருக்க வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வரும் பேரருள் பேரோளியைக் கவர்ந்து உயிரிலே அதை மோதச் செய்ய வேண்டும். அந்த உணர்வு நம்மை இயக்கும்படி செய்ய வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வுகளை அறிவதற்கும் அந்த ஆற்றலைப் பெறுவதற்கும் 20 வருடம் பல கஷ்டங்களை (ஞானகுரு) அனுபவித்தேன்.

அதை எல்லாம் இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது 10 நிமிடம் கூட உட்கார முடியாமல் எழுந்து செல்பவர்களும் உண்டு. உட்கார்ந்து இருக்கின்றேன்… “கால் வலிக்கின்றது…” என்று சொல்பவர்களும் உண்டு.

சீக்கிரம் சாமியிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்தால் இப்படியே என்னத்தையோ அறுத்துக் கொண்டிருக்கின்றார்…! என்று நினைத்தால் நிச்சயம் உங்களுக்குக் கால் வலி வரும்… இடுப்பு வலி வரும்… கொஞ்ச நேரத்தில் எழுந்து போகலாம் என்ற சொல்லும் வரும். ஏனென்றால்
1.இந்த உபதேசத்தின் உணர்வினை நீங்கள் ஈர்க்கவில்லை என்றால் இந்த உணர்வின் தன்மை இயக்கத்தான் செய்யும்.
2.ஆனால் அதைப்  பெற வேண்டுமென்ற ஏக்கத்துடன் இருந்தால் நிச்சயம் உயர்ந்த சக்திகளைப் பெறலாம்.

சாதாரணமாக கதாகலாட்சேபம் செய்பவர்கள் சிரிக்கப் பேசுவார்கள். கிண்டல் செய்தால் ஆகா…! என்று சிரித்து எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.

நான் அப்படிச் சொல்வதற்கில்லை…!

மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற்றால் இருளை அகற்ற முடியும் என்று நிலைக்குத் தான் சொல்கிறேன். பொறுமையுடன் பொறுத்து இருந்து உணர்வின் தன்மை பதிவாகி இதை நுகரப்படும்போது உங்கள் இடுப்பு வலி கால் வலி நெஞ்சு வலி எல்லாம் குறையத் தொடங்கும்.

ஹார்ட் பட…பட.. என்று துடிப்பவர்களும்… உட்கார முடியவில்லை…! என்று சொல்பவர்களும் கூட அமர்ந்து கேட்பார்கள். இதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் உள்ளே போகப் போக உங்களை அது அமைதிப்படுத்திவிடும்.

ரொம்ப நேரம் உட்கார முடியாது என்று சிலர் இருப்பார்கள். அரை மணி நேரத்திற்கு மேல் உட்கார மாட்டேன் என்று சொல்லியிருப்பார்.
1.ஆனால் இப்பொழுது இரண்டு மணி நேரம் உட்கார்ந்திருப்பார்.
2.எப்படி உட்கார்ந்திருந்தோம்…! என்று தன்னை மறந்திருப்பார்.
3.ஏனென்றால் எதன் உணர்வைக் கவர்ந்து கொண்டோமோ அந்த ஞானிகளின் உணர்வின் தன்மை நமக்குள் வளரப்படும்போது
4.மற்ற தீமைகள் நமக்குள் நுகர முடியாதபடி தடைப்படுகின்றது.

அருள் உணர்வுகள் வளர்கின்றது தீமையைக் குறைக்கின்றது. அதனால்தான் “மணிக்கணக்கில்…” சொல்லி ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

1.உடலைப் பற்றியோ தொழில் நிலைகளைப் பற்றியோ மறந்துவிட்டு
2.சாமி சொல்லும் அந்த அருள் ஒளியை பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
3.எவர் உட்கார்ந்திருக்கின்றனரோ அவருக்கு அந்த அருளுணர்வு பதிவாகின்றது
4.உங்கள் நினைவு தீமையிலிருந்து விடுபடும் சக்தியாக மாறுகின்றது.

ஆனால் நம்முடைய பழக்க வழக்கத்தில் அடுத்தவர்கள் பேசினால் நாம் ஒட்டுக் கேட்போம். நம்மைப் பற்றி என்ன நினைக்கின்றான்…! என்ன சொல்கிறான்…? என்ற எண்ணத்தில் ஒட்டுக் கேட்போம்.

ஒட்டுக் கேட்டபின் அந்தத் தீமையின் நிலைகளையே பேச ஆரம்பிப்போம். அவன் செய்யும் தீமையின் உணர்வை ஒட்டுக் கேட்டபின் “அவனை எப்படிக் கெடுப்பது…” என்ற உணர்வுகள் தான் வரும். பதிவான பின் அந்த நினைவே அதிகரிக்கின்றது.

இதைப் போலத்தான் நீங்கள் என்ன செய்ய வேண்டும்…?
1.உடலுக்குள் நினைவைச் செலுத்தி “நீ இருப்பா… கொஞ்ச நேரம்…!”
2.சாமி சொல்லும் துருவ நட்சத்திரத்தின் அருளை கொஞ்சம் ஒட்டுக் கேட்டுக் கொள்கிறேன் என்று
3.இந்த உணர்வின் தன்மையை இப்படி ஒட்டி வைத்தால் தீமையை நீக்கும் அரும் பெரும் சக்தியாக மாற்றுகின்றது.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!

நமது குருநாதர் எம்மை இது போன்று தான் அனுபவத்தைப் பெறச் செய்தார். ஒவ்வொரு நொடியிலும் அதை அறிந்துணர்ந்து கொள்வற்கு எனக்குள்ளும் தீமைகளைப் பாய்ச்சினார்.

அந்த உணர்வின் நினைவுகள் எவ்வாறு ஆகின்றது…? என்ற நிலையை உணரச் செய்தார். அந்தத் தீமைகளிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…? என்று அத்தனை துன்பங்களையும் அனுபவித்து மீள்வதற்குக் காட்டினார்.

ஆய்வுக் கூடங்களில்…
1.இன்று எப்படி ஒரு பொருளின் தன்மை திரவத்தை ஊற்றிப் பரிசோதித்துப் பார்த்து
2.அதிலிருக்கும் உண்மைகள் ஒவ்வொன்றையும் பெறுகின்றோமோ அதைப் போல்
3.என் உடலிலேயே இந்த உணர்வுகளைப் பாய்ச்சி மெய் உணர்வின் தன்மை அறியும்படி செய்து
4.அத்தகைய நிலையை உருவாக்கினார் நமது குருநாதர்.

ஆகவே இதை (குரு வழியில் தீமையை நீக்கும் அனுபவங்களை) நமது என்ற நிலைகளில் சொந்தம் கொண்டாட முடிகின்றது.

எனது குருநாதர் என்று இருந்தாலும்…
1.அதை நீங்களும் உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் போது
2.அந்த குரு வழியில் நமக்குள் “நமது…” என்று ஒன்று சேர்த்து வாழும் தன்மை அங்கே வருகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் கண்டுபிடித்த “பச்சிலை மூலிகைகளின் வீரிய சக்தி”

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் ஒரு மனிதனுக்கு வயிற்று வலி வருகிறது என்றால்
1.சில பச்சிலைகளை எடுத்துக் கையிலே உரசித் தேய்ப்பார்கள்.
2.தேய்க்கும் போது அந்த உணர்வுகள் இரத்தங்களுடன் கலந்துவிடுகிறது
3.அதாவது இன்று இன்ஜெக்ஷன் போடுகிற மாதிரி மேலே அரைத்துத் தேய்ப்பார்கள்.
4.அந்தப் பச்சிலையின் உணர்வுகள் இரத்தத்துடன் கலந்து அவன் வயிற்று வலிக்குக் காரணமானதை நீக்கி விடுகின்றது.
5.அந்த விஷத்தை ஒடுக்குகின்றது… வலி நீங்குகிறது.

அனுபவத்தில் அப்படி அறிந்தவர்கள் தான் அன்றைய மனிதர்கள். புலஸ்தியர் (புலனறிவால் நுகர்ந்தறிபவர்கள்) என்பர்கள்.

அறிந்ததைப் பதிவு செய்யும் போது தான் பதிவு செய்ததை மீண்டும் நினைவாக்கிக் கொள்கின்றான். அந்த நினைவின் தன்மை கொண்டு
1.தனக்கு எப்பொழுது ஆபத்துகளோ விபத்துக்களோ வருகின்றதோ
2.மிருகங்களிலிருந்தும் அறியாது வரும் நோய்களிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இம்முறையைக் கையாண்டு வருகின்றனர்.

ஏனென்றால் காட்டு விலங்குகளுடன் இருக்கும் போது அந்த விஷத் தன்மை கொண்ட மிருகங்கள் தன்னைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

இப்படி அந்த விஷத்தை முறித்திடும் சக்திகள் தனக்குள் தெரியப்படும் பொழுது… இரவிலே உறங்கச் செல்லப்படும் பொழுது
1.விஷத்தை முறித்திடும் பல மூலிகைகளை அவர்கள் அரைத்துப் பூசி கொள்வதும்
2.தாங்கள் படுத்து இருக்கும் குகைகளுக்கு முன் அதைப் பரப்பி வைத்துக் கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றார்கள்/.

சில காடுகளில் அத்தகைய புலையர்கள் இன்றும் இருக்கின்றார்கள். இவர்களின் மணத்தைக் கண்ட பின் யானைகள் விலகிச் செல்லும்… புலிகள் விலகிச் செல்லும்… விஷ ஜந்துக்களும் விலகிச் சென்று விடும்.

அது போன்றுதான் அக்காலத்தில் இத்தகைய பச்சிலைகளை அவர்கள் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்ட பின்… கணவன் மனைவியாக வாழ்பவர்கள் கர்ப்பமுற்றால் அந்தக் கருவில் இருக்கும் குழந்தைக்குத் தாய் நுகரும் உணர்வுகள் அனைத்தும் விஷத்தை முறிக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

அதே சமயத்தில் மின்னலை அடக்கிடும் சில பச்சிலைகளும் உண்டு. மின்னலால் தாக்கப்படும் போது அந்த அதை அவர்கள் வைத்திருப்பதினால் அதன் மணத்தால் அதிலிருந்து காக்கப்படுகிறார்கள்.

1.யார் இதை அனுபவத்தால் கண்டுபிடித்தார்களோ
2.மின்னலின் நிலைகளை மாற்றிடும் பச்சிலையை யார் அந்தக் காலங்களில் வைத்தனரோ
3.மின்னலின் தாக்குதலை அடக்கிடும் அந்தப் பச்சிலைகளை
4.அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் உடலில் அரைத்துப் பூசியதனால்
5.தாய் அந்த மணத்தை நுகரப்படும் போது கருவிலிருக்கும் அகஸ்தியனுக்கு வீரிய சக்தியாக அது கிடைக்கின்றது

இரவிலே படுத்திருக்கும் போது பாதுகாப்பிற்காக அதைப் பரப்பி வைத்திருந்தாலும் மிருகங்களிடமிருந்து மட்டுமல்ல… மின்னல் தாக்கினால் அந்த விஷத்திலிருந்தும் அவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள்.

அப்படிப் பாதுகாக்கப்பட்ட அந்தப் பச்சிலையின் மணத்தை நுகர்ந்ததனால் தான் கர்ப்பமாகும் பொழுது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்கு அது கிடைக்கின்றது.
1.மின் கதிர்கள் வெளிப்படும் உணர்வினை நுகர்ந்து
2.அதன் உணர்வின் அறிவும் கருவிலேயே அவனுக்குள் விளைகின்றது
3.இப்படி விளைந்தது தான் அவனுக்குள் பேராற்றலாக வளர்கின்றது

இந்த மின்னல்கள் கடலில் தாக்கப்பட்டால் அது மணல்களாவதும் அதன் கீழ் ஒரு மீன் இனம் சென்றால் மின்னலின் அழுத்தம் தாக்கப்பட்டு அதற்குள் ஊடுருவி இது ஒரு கருத்தன்மை அடைந்து எலக்ட்ரிக் மீனாக மாறுகிறது.

எலக்ட்ரிக் மீனாக உருவான பின் “அதன் உணர்வின் அறிவாகி” அது பல வகைகளையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்ற மீனாக எப்படி வளர்ந்ததோ அதைப் போல் தான்
1.அகஸ்தியனும் அறிவின் ஆற்றலாக உருப்பெற்றான்.
2.மிகச் சக்தி வாய்ந்தவனாக மாறுகின்றான்.

இதை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). இதை நீங்கள் நினைவு கொண்டால்… உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் “சில கடுமையான விஷத் தன்மைகளிலிருந்தும்… நோய்களிலிருந்தும்… உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்…”

அக்ஷி

 

முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.

“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.

விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.

அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி… மறைக்கப்பட்டு… பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.

சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?

எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”

அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.

அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.

1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!

சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து இன்னல் பட்டுத் தான் மனிதனாக வந்துள்ளோம். இந்தச் சரீரத்திலும்… வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்களிலிருந்து விடுபடும் உணர்வைத் தான் நாம் எடுக்க வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் கடுமையாகப் பேசுகின்றார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

அதிலே ஒருவன் மற்றவனைச் சாபமிட்டு “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்று சொல்கிறான். அதை நாம் கூர்ந்து பதிவாக்கினால் அவன் சொன்ன உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டுகிறது.

அந்த உணர்வுகள் உமிழ்நீராகும் போது நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து அது இரத்தமாக மாறுகின்றது. உடல் முழுவதற்கும் போகின்றது.

1.அந்தக் கரு முட்டை… (நாசமாக வேண்டும் என்ற வினை – வித்து) எங்கே போய்த் தேங்குகின்றதோ அந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு
2.ஒரு தட்டான் பூச்சி பூக்களில் முட்டையிட்ட பின் பல பல பட்டாம் பூச்சியாக வருவது போல்
3.நம் கல்லீரலிலோ நுரையீரலிலோ இதயத்திலோ அந்த அணுக் கரு போகப்படும் போது
4.இதயம் வடிகட்டினாலும் ஒரு முட்டை போனாலும் போதும்
5.அந்த இடத்தில் வீக்கமாகி இரத்தம் மாசுபடுகின்றது.

அப்பொழுது அந்த அணுவின் மலம் பட்டவுடன் இருதயத்தில் போய் உறைந்து விடுகின்றது. அப்புறம் படக்…படக்… நெஞ்சு வலி வரத் தொடங்குகிறது.

நெஞ்சு வலிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றால் எத்தனையோ இலட்சம் வேண்டும். அப்பொழுதுதான் சரி செய்ய முடியும். ஆனாலும் ஆபரேஷன் செய்து எத்தனை நாள் நன்றாக இருக்கின்றோம்…?

சம்பாதித்த காசைக் கொடுத்துச் செலவழித்துக் கொஞ்ச நாள் வாழச் செய்கின்றோம். அப்புறம் என்ன செய்கின்றோம்…?

1.நான் சம்பாரித்தேனே… இப்படியெல்லாம் செய்தேனே… கடைசியில் காசை எல்லாம் இப்படி டாக்டருக்குக் கொண்டு போயி கொடுத்தேனே…! என்று இப்படி ஒரு வேதனை.
2.அடுத்தாற்படி வீட்டில் இருக்கக்கூடிய சண்டையோ சச்சரவோ குறையுமா என்றால் இல்லை….! பணம் குறைந்தவுடன் இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகும்.
3.அப்பொழுது இந்த வேதனை அதிகமாகும்போது நம் உடலிலே பலவிதமான நோய்கள் வருகின்றது.
4.என்னடா இது…! ஒன்று போனது… பாக்கி எல்லாம் சேர்த்து நம் உடலிலே இப்படி ஆகிவிட்டதே…! என்று
5.இந்த உடலில் வேதனையெல்லாம் எடுத்த பிற்பாடு இந்த உயிர் வெளியில் செல்லும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த வேதனை என்ற நஞ்சுக்குத் தக்கவாறு உயிரினங்களின் உடலிலே கொண்டு விட்டு விடுகிறது.

ஆக… எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் மதிக்க வேண்டுமா இல்லையா…?

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்த சக்தி எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்.

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள்.

பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும். இது மிகவும் முக்கியமானது.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள்… சண்டையிடுகிறார்கள்… என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

“உங்கள் தாயின் நல்லாசி இருப்பதால் தான்” எம்முடைய உபதேசங்களை உங்களால் கேட்க முடிகிறது

 

தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்குவோம். அவர்கள் தான் கடவுள் நம்மை மனிதர்களாக உருவாக்கிய தெய்வங்கள் அவர்கள் உடலில் தான் நாம் வளர்ந்தோம்… “குடியிருந்த கோவில் அது…!”

பிறந்த பின் தெய்வமாக இருந்து நம்மைக் காத்ததும் அவர்கள் தான். நம்மைk காத்த முதல் தெய்வங்கள் அவர்கள். எதை எடுத்தாலும் இது நன்றாக இருக்க வேண்டும்… நீ இப்படி இருக்க வேண்டும்… ஒவ்வொரு நிமிடத்திலும் குறிப்பறிந்து நம்மைக் காப்பாற்றி வந்தது நமது தாய் தான்.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை… தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள். தாய் தான் நாம் குடியிருந்த கோவில்.

1.தெய்வமாகக் காத்ததும் அதுதான்
2.கடவுளாக இருந்து உருவாக்கியதும் அதுதான்
3.அந்த நல்வழி காட்டும் குருவை நாம் அடைதல் வேண்டும்

ஏனென்றால் நம் தாய் நம்மை எப்பொழுதுமே நீ நல்லவனாக இருக்க வேண்டும்… எல்லோரும் போற்றும்படியாக நீ வளர வேண்டும் நீ நலமாக இருக்க வேண்டும்… என்று எத்தனையோ நல்ல வழிகளைக் காட்டுவது அவர்கள் தான்.

இதை செய்தால் தவறு… ஆபத்து… என நம்மை அறிவுறுத்துவது தாய் தான். நாம் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது தவழ்ந்து செல்லும் பொழுது அறியாது ஒரு நெருப்பைப் பார்த்ததும் அதை ஆனந்தமாக போய்த் தொட முயற்சிப்போம்.

டேய்…டேய்…டேய்… நெருப்புடா…! அது உன்னைச் சுட்டுவிடும்… என்று நம்மை அந்த இடத்தில் காப்பது நமது தாய் தான். நாம் ஆனந்தமாக அதைத் தொடப் போகின்றோம்.

ஆனால் தாயோ பதறிப் போய் குழந்தை நெருப்பிலே பட்டால் என்ன ஆகும்…? என்று வேகத்துடன்… அவ்வளவு தூரம் நம்மை அரவணைத்து உடனடியாகக் காப்பாற்றுகின்றது.

அந்த இடத்தில் நம்மைக் காக்கக்கூடிய தெய்வம் நம் தாய் தான்….! பிறந்து விட்டாலும் வளரப்படும் பொழுது எத்தனையோ வகைகளில் நம்மைக் காக்கின்றது.

அறியாத பருவத்திலே மண்ணை அள்ளித் தின்றால் வயிறு வலிக்க ஆரம்பிக்கும். அப்படி ஆகிவிட்டால் நாம் அதற்குப் பின் நலமுடன் வாழ முடியுமா…?

இது போன்று எத்தனையோ நிலைகளைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி… நம்மை மனிதனாக ஆளாக்கி…
1.இன்று இந்த அருள் உபதேசங்களை கேட்கக்கூடிய அளவிற்கு வைத்தது நம் தாய் தந்தையர் தானே…!
2.அவர்களை நாம் மறக்கலாமா…? நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது.
3.இப்பொழுது இவ்வளவு தூரம் என்னுடைய இந்த அருள் உபதேசங்களைக் கேட்கின்றீர்கள் அல்லவா…!

உங்களைப் பள்ளியிலே படிக்க வைத்து பல நல்ல வழிகளைக் காட்டி நல்லதைச் சொல்லி நல்ல ஆடைகளைக் கொடுத்து… தான் எல்லா கஷ்டங்களையும் பட்டுச் சம்பாதித்து வளர்த்து நம்மை ஆளாக்கிக் காப்பாற்றியது யார்…? நம் தாய் தந்தை தானே…!

இப்பொழுது இதை எல்லாம் சொல்கிறோம். எத்தனை பேர் நம் தாய் தந்தையரை மதித்துச் சரியான முறையில் வழி நடக்கின்றோம்…?

“இத்தனையும் இப்பொழுது கேட்கின்றீர்கள்…” என்றால் தாய் தந்தையரால் நாம் மனிதர்களாக உருவாக்கப்பட்டுத் தெய்வமாக நம்மைக் காத்து எல்லா வழிகளையும் நமக்கு நல்வழி காட்டிய அதை மறந்து விட்டால் என்ன ஆகும்…? அப்படி இருக்கக் கூடாது
1.எப்பொழுதுமே அந்த ஞானிகள் காட்டிய வழியிலே தாய் தந்தையரை நாம் முதலிலே மதித்துப் பழக வேண்டும்
2.இது மிகவும் அவசியமான ஒன்று

அவர்கள் உயிர் கடவுள். நம்மை உருவாக்கிய முதல் தெய்வங்கள் அவர்கள் தான். தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றியதும் நல் வழி காட்டியதும் அவர்கள் தான்.

ஆகவே அத்தகைய குரு (தாயின்) காட்டும் வழியில் நாம் நடப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம். குருவின் துணையால் அதாவது தாய் தந்தையரின் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்த அருளை நாம் பெறுவோம்.

1.தாயின் துணை கொண்டு அன்று அகஸ்தியன் அவன் எப்படி அந்த உயர்ந்த சக்தியைப் பெற்றானோ
2.அந்த உணர்வை எல்லாம் நாமும் நம் தாய் தந்தை அருளால் பெற வேண்டும் என்று அடிக்கடி நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

அந்தக் குருவின் துணையால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை நாம் வேண்டித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் இரத்த நாளங்களில் கலந்து அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற்று
1.அவர்கள் என்றென்றும் மன மகிழ்ச்சியுடன் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
2.நம் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஏங்கித் தியானிப்போம்.

அக்னி அஸ்திரம்

 

1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.

கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.

உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.

மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.

உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.

தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?

தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.

1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்

நீ ஈர்த்துக்கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.

ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.

ஆதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).

1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.

படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

மனிதனின் உணர்வின் இயக்கங்களைப் பார்த்தோம் என்றால் அவன் அப்படிச் செய்கின்றான்… நான் இப்படிச் செய்கின்றேன்…! என்ற நிலைகளில்
1.நான் தான் செய்தேன்…
2.நான் செய்து கொண்டிருக்கின்றேன்…
3.என்னால் தான் முடியும்…
4.இது அனைத்தையும் நான் செய்தேன்…! என்று பலருக்குப் பல உபகாரம் செய்வார்கள்.

இப்படிப் பல உபகாரம் செய்தவர்களின் உணர்வுகள் “நான்…” என்ற உணர்வு வரப்படும்போது இங்கே கௌரவர்கள் ஆகின்றது.

அதே சமயத்தில் சிறிது குறைவானால் “அன்றைக்குச் செய்தேன்… பார்… இன்று என்னை மதிக்கின்றானா பார்…!” என்று இந்தக் கௌரவப் போர் வருகின்றது

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் போது அவர்களைப் பார்த்தவுடனே குருக்ஷேத்திரப் போர். அதை மீறி உடலுக்குள் போனவுடன் மகாபாரதப்போர் ஆகிறது.

கௌரவம் என்ற நிலைகள் கொண்டு எடுக்கும் உணர்வின் தன்மை புலனறிவு ஐந்து வழியாக உள்ளுக்குள் செல்லும்பொழுது பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர்.

போர் என்று உடலுக்குள் வரப்படும்போது நமக்குள் இருக்கும் பல அணுக்களுக்குள் மகாபாரதப்போராக மாறுகின்றது. கலக்கமும் பல நிலைகளும் மற்ற நிலைகளும் இரத்தத்திற்குள் நடக்கும் போது மகா போராக இது உடலுக்குள் நடக்கின்றது.

ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வின் நிலைகளையும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பின் உணர்வை சந்தர்ப்பத்தில் எடுத்து வைத்திருக்கின்றோம்.

அப்பொழுது நாம் நல்லது என்று எண்ணப்படும் பொழுது அதனுடைய நிலைகளை கௌரவர்கள் விடுவதில்லை.

ஒவ்வொரு நாளும் இதைப் போல் நமக்குள் கௌரவப் போர் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது என்று பார்க்கலாம்.
1.என் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
2.மனைவி நல்லது சொன்னால்… மனைவி சொல்வதை நான் கேட்பதா…?
3.மனைவி தப்பு செய்து விட்டால் “கணவருக்குத் தெரிந்தால் திருப்பிப் பேசுவார்…” என்று கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
4.குழந்தை ஒரு தப்பு செய்து விட்டால் “அப்பா திட்டுவார்” என்றால் இல்லவே இல்லை பொய் சொல்லும்.
5.அதே சமயத்தில் நாம் நல்லவன் என்று பெயர் எடுத்திருப்போம். சந்தர்ப்பத்தில் அறியாமல் தப்பு செய்திருப்போம். கேட்டால் “இல்லவே இல்லை…” என்போம்.

ஆக… தவறை மறக்கும்போது இத்தகைய கௌரவப் பிரச்னை வருகிறது. ஏனென்றால் குற்றவாளி என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை மூடி மறைக்க என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.

ஆனால் இது போன்ற உணர்வின் தன்மை வரும்போது கடைசியில் இந்த வேதனை என்ற உணர்வுகள் வரும். இருளை நீக்கி மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது. வேதனை என்ற போர் முறைகள் வருகின்றது.

கடைசியில் அடிக்கடி வேதனை என்று நம்முடைய எண்ணங்கள் வரும் பொழுது
1.கண்ணும் (கண்கள் – கண்ணன்) பார்வையை இழக்கின்றது.
2.அர்ஜூனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகள் சோர்வடைகின்றது
3.நமக்குள் வலுவான உணர்வுகள் பீமன் என்ற நிலைகள் அழிகின்றது… தாக்க முடியவில்லை.

மகாபாரதப்போர் முடிவில் கண்களை இழந்தபின் அர்ஜூனனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே திருடிக் கொண்டு போகின்றார்கள். அவனால் தடுக்க முடியவில்லை.

கண் பார்வை (கண்ணன்) இழந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பிரித்து காட்டித் தெளிவாக்குகின்றார்கள்.

அர்ஜூனன் எல்லாவற்றையும் செய்தேன் என்பான். கண்கள் இழந்தபின் என்ன செய்ய முடியும்…? கண் இழந்தபின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்கள்.

கடைசியில் தர்மன் என்ன செய்கின்றான்….?

இது எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்…
1.மோப்பத்தில் அறிந்து கொண்ட உணர்வுகள்தான் எனக்கு எல்லா வகையிலும் வழி காட்டியது
2.நன்மை தீமை என்று எனக்கு அறியச் செய்தது
3.தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அதன் வழியில் தான் எடுத்தேன்…! என்று தர்மன் சொல்வதாகக் காட்டுகின்றனர்.

அவன் யாருக்கு மோட்சத்தைக் கேட்டான்…?

1.முதலில் தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு என்று தான் கேட்டான்.
2.நாம் சுவாசித்த (நுகரும் சக்தி – மோப்பம்) உணர்வின் தன்மைதான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
3.தீமை நீக்கும் உணர்வு தான் (சுவாசம்) எனக்கு வழிகாட்டியாக வருகின்றது.
4.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மைக்கு… “அதற்கே அந்த ஒளியாகும் தன்மை வேண்டும்…” என்று
5.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

யாராவது இதைப் பற்றிச் சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள்…! எவ்வளவு பெரிய பேருண்மையைக் காட்டியுள்ளார்கள்.

குருக்ஷேத்திரப் போர் நடப்பதும் கௌரவப்போர் உள்ளுக்குள் நடப்பதும் மேல் வலிக்கின்றது தலை வலிக்கின்றது என்று உடலுக்குள் நடப்பதைக் காட்டி வெளியிலே ஒருவருக்கொருவர் கௌரவப் போர் வந்தாலும் எல்லாம் ஒன்றாக உள்ளுக்குள் நடக்கும்போது மகாபாரதப்போர் என்று வருகின்றது.

நமது கண்களால் எடுத்துக் கொண்ட உணர்வு எண்ணங்களாக உருவாகி
1.அந்த எண்ணத்தால் ஏற்படும் உணர்ச்சிகள் நமக்குள் போர் முறைகளாக எப்படி வருகின்றது…?
2.உணர்வின் இயக்கம் எந்த நிலையில் இருக்கின்றது…?
3.மகாபாரதப்போர் நம் உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்ற நிலைகளையும்
4.மகாபாரதப் போர் என்று சித்தரித்துக் காட்டுகின்றார்கள் ஞானியர்.

அலை பாய்ந்து கொண்டே இருக்கும் “நம்முடைய மனம்”

 

மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.

மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.

அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.

அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.

அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.

வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.

விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.

உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.

துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”

நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.

ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.

புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?

ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?

வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).

இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.

நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வரும்.. அருளைப் பெற முடியாது

 

ரோட்டிலே ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள்… அநாகரீகமாகப் பேசவும் செய்கிறார்கள்… நாம் பார்க்கின்றோம்… அந்த உணர்வின் தன்மை அறிகின்றோம் இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அடுத்து வேதனைப்படுகின்றோம்.

அதைத் துடைக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று நமக்குள் நம்மை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.

பின்… அவர்கள் இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்ல உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அவர்கள் சண்டையிட்ட தீமையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… மாற்றப்படுகிறது..

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று வரும் நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… தியானம் தான் செய்கின்றேன்…! என்று நீங்கள் இருந்தாலும்
1.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் (இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது) பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
2.ஏமாந்து விட்டால் அந்தந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் வலுப்பெற்று விடும்
3.அதைத் துடைக்காமல் விட்டு விட்டால் இரத்தத்தில் கருவாகிவிடும்… பின் அணுவாகி அதனின் தீமையை உருவாக்கத் தொடங்கும்.

தனி மிளகாயை உட்கொண்டால் என்ன செய்யும்…? ஆ…! என்று எப்படி அலறுகின்றோம். தனியாக உப்பை வாயில் வைத்தால் ஓ…ய் என்று உமட்டலாகின்றது. ஆனால் அதே மிளகாயையும் உப்பையும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த உணவு சுவையுள்ளதாக மாறுகின்றது.

இது போன்று
1.பிற உணர்வுகளை நாம் பார்த்து நுகர கவர நேர்ந்தால்
2.அதற்குள் நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலவையாக்கி ருசியாக மாற்ற வேண்டும்
3.இது தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமை என்ற நிலை நமக்குள் வராதபடி தடுக்கும் சேனாதிபதி ஆறாவது அறிவு தான்.

அது நம்மைப் பாதுகாக்கக் கூடிய சேனாதிபதியாக இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக வரும்.

ஆறாவது அறிவு எனக்கு இருக்கின்றது நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்… தெரிந்து கொண்டேன்…! என்றால்
1.அறிய வேண்டும் என்ற நிலையில் கெட்டதெல்லாம் உள்ளுக்குள் புகுந்து
2.வேதனை வெறுப்பு சஞ்சலம் பயம் எல்லாமே நமக்குள் வந்துவிடும்.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்.

இதையெல்லாம் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் அருளைப் பெருக்கச் செய்து… இருளை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நான் கண்ட உண்மைகள் அனைத்தையும் உங்களிடம் மொத்தமாகச் சொல்லி
2.சிறுக்க முடிவுக்கு (கடைசியில்) வருவதற்கு முன்னாடி உங்களுக்குக் கஷ்டம் வந்து விடும்… உட்கார முடியாது.
3.நான் பட்ட கஷ்டங்கள் ஏராளமானது அதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால்
4.உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வருமே தவிர அந்த அருளைப் பெற முடியாது.
5.ஆகையினால் அந்தந்தச் சமயத்திற்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆகவே கார்த்திகேயா… என்ற நிலையில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் “எந்தத் துயரம் வந்தாலும்” அதை வளர விடாதபடி தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்குத் தான் இதை எல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில்ல் உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ துன்பங்களோ வேதனைகளோ வந்தாலும் அதை மாற்றி மறந்து… சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக…
1.தனித்த உப்பை… தனித்த மிளகாயை… தனித்த கசப்பை.. மற்ற பொருள்களுடன் சேர்த்து சுவையாக எப்படி மாற்றுகின்றோமோ
2.அது போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சுவையாக மாற்ற முடியும்.
3.எது வந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அதற்குள் கலக்க வேண்டும்.

என் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் நல்ல பண்புகள் வளர வேண்டும் அவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம்மை யாராவது திட்டினால்… அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும்… அவர்களுக்குத் தெளிவான எண்ணங்கள் வர வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எடுத்து
1.பிறருடைய தனித்த உணர்வு நமக்குள் வராதபடி
2.நம் உடலுக்குள் வளராதபடி இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மாற்றி அமைக்காதபடி அந்தந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் கலந்து.. நம் நல்ல குணங்களைச் சுத்தமாகக் கெடுத்துவிடும்.

நல்ல குணங்கள் அப்படி மாறிய பின் பிறரை எண்ணி வேதனைப்படுவோம்… அடுத்து கோபப்படுவோம்.
1.அது எல்லாம் நமக்குள் நோயாக மாறிவிடும் (உடல் நோய்)
2.உடல் உறுப்புகள் கெடும்… நினைவுகள் எண்ணங்கள் மாறும் (மன நோய்).

இதைப் போன்ற நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு “வாழ்க்கையே தியானம் ஆக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…”

பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி அருள் ஞானத்தைப் பெருக்குவதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம். சுருங்கச் சொல்லி பதிவாக்குகின்றோம்.

இதை நீங்கள் அடிக்கடி நினைவு கொண்டு தியானம் ஆத்ம சக்தி செய்து அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

மின்னலையே ஒடுக்கும் பச்சிலையின் மகத்துவம்… புலஸ்தியர் கண்டது

 

ஒரு சமயம் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று எனக்குத் தெரியாமலே ஒரு பச்சிலையைக் கொடுக்கின்றார்… குருநாதர். மின்னலைப் பாருடா…! என்கிறார். உடனே அவருக்கும் எனக்கும் சண்டை வந்துவிட்டது.

அவர் கையிலே பச்சிலையை வைத்துக் கொண்டார்… என்னைத் தொடுகின்றார்… தொட்டுக் கொண்டு இப்போது மின்னலைப் பார்…! என்கின்றார்.

சாமி…! நான் பிள்ளை குட்டிக்காரன் நீங்கள் கூப்பிட்டீர்கள் என்று உங்களுடன் வந்து விட்டேன். மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய் விட்டால் நான் என்ன செய்வது…? என்றேன்.

நான் சொல்வதைக் கேட்கின்றேன் என்று தானே என்னுடன் வந்தாய். இறக்கும் தறுவாயில் இருந்த உன் மனைவியை உடல் நலம் பெறச் செய்தேன் அல்லவா..! அந்த நேரத்தில் நான் சொல்வதைக் கேட்கிறேன் என்று தானே சொன்னாய்.

அப்படி என்றால் நான் சொல்வதை நீ இப்போது கேட்க வேண்டுமா இல்லையா…? என்று இப்படிக் கேட்கின்றார்.

அப்பொழுது நான் என்ன செய்வது…! வேறு வழி இல்லை.

அப்பொழுது தான் அந்த இடத்திலே என்னைத் தொடுகின்றார் மின்னல் பாய்கின்றது… அதைப் பார்…! என்று சொல்கின்றார்.

உதாரணமாக
1.வான் வீதியிலே விஷங்கள் ஓன்றுடன் ஒன்று தாக்கப்படும் பொழுது தான் மோதலாகின்றது
2.விஷம் தாக்கப்பட்ட பின் தான் வெப்பம் ஆகின்றது
3.விஷத்தின் தாக்குதலால் தான் நம் உயிரிலும் வெப்பம் உண்டாகிறது… அதனால் இயக்கமும் ஆகிறது.
4.ஆனால் அதிக விஷம் தாக்கப்படும் பொழுது இருளாகின்றது நம் உடலில் இருக்கும்

நம் உடலில் ஒவ்வொரு அணுக்களுக்கும் அதற்குண்டான விஷங்கள் உண்டு. ஆனால் விஷம் அதிகமாகி விட்டால் நாம் செயலையே மறக்கச் செய்துவிடும்.

நாம் உணவு உட்கொள்வதில் உப்பு சேர்த்தால் நன்றாக இருக்கும். உப்பு அதிகமாகி விட்டாலோ ஓ…ய் என்று வாந்தி வந்துவிடும்… சாப்பிட முடியாது. அளவை அறிந்து அதன் உணர்வு கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதைப் போன்று… மனிதன் இந்த வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்காக இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

பின் அவர் சொன்ன முறைப்படி மின்னலைப் பார்க்கும் பொழுது ரொம்ப ஆனந்தமாக இருக்கின்றது.
1.அறிந்து கொள்ளக்கூடிய உணர்வுகள்… அறிவின் தன்மையாக எனக்குள் வருகின்றது
2.அந்த மின் கதிர்கள் எங்கெங்கே ஊடுருவிச் செல்கின்றதோ… வான மண்டலத்தையே பூராம் அறியும்படி செய்கின்றார்.
3.அதையெல்லாம் தெரியப்படுத்துகின்றார்… அறியக்கூடிய சக்தியும் எனக்கு வருகிறது.

ஆனால் முதலில் பச்சிலையைக் காண்பிக்கவில்லை அவரிடம் வைத்துக் கொண்டுதான் என்னைத் தொடுகின்றார். மின்னலைப் பார் என்று சொல்கின்றார்… நான் மாட்டேன்…! என்று சொல்கிறேன்.

1.உனக்குச் சக்தி கொடுப்பதற்காகத்தான் நான் இதைச் செய்கின்றேன்
2.இந்தப் பச்சிலையால் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியனுக்குச் சக்தி கிடைத்தது
3.அதன் துணை கொண்டு தான் அவன் ஒளியாக மாறினான்.
4.அதே பச்சிலையின் உணர்வுகளை நீ எடுக்கப்படும் பொழுது…
5.அவன் பெற்ற உணர்வை நீ பெறும் பொழுது உனக்குள்ளும் தீமைகள் வளராது…
6.அந்த விஷத்தை முறிக்கும் சக்தி உனக்கும் கிடைக்கின்றது…! என்று என்னைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

அதன் பின் நான் மின்னலைப் பார்க்கின்றேன் அவர் சொன்னபடி நான் பார்த்து அந்த மின்னல்கள் இயக்கக் கூடிய உணர்வை நான் நுகரப்படும் பொழுது
1.என் இரத்தங்கள் முழுவதும் அது கலந்து… உடல் முழுவதும் அந்த இரத்தம் சுழலச் தொடங்குகின்றது.
2.என் உடலில் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது.

எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறை கொண்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு “டைனோசர்” என்ற உயிரினங்கள் வாழ்ந்த இடங்களை அது புதையுண்ட இடங்களை எப்படிக் கண்டுபிடித்தார்களோ அதைப் போன்று
1.அகண்ட அண்டமும் அதனின் நிலைகளும் எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் அன்று கண்டான்…
2.அதன் உணர்வை நீ அறிய வேண்டாமா…? என்று கேட்கின்றார் குருநாதர்.
3.அதற்காக வேண்டித் தான் உன்னை மின்னலைப் பார்க்கச் சொன்னேன்
4.அதன் வழி நீ நுகர்ந்து கொண்ட பின் அந்த உணர்வு உனக்குள் வருகின்றது என்றார்.

இப்பொழுது என்னுடைய எண்ணங்கள் அதைப் பதிவு செய்யப்படும் பொழுது இந்தக் காற்றில் இருப்பதை அறிய முடிகின்றது… அந்த உணர்வை வைத்து நான் இப்போது பேசவும் முடிகின்றது.

பேசிய உணர்வுகளை இப்பொழுது நீங்கள் செவி வழி கேட்டு… படித்துத் தெரிந்து கொள்கின்றீர்கள். இதைச் சொல்லிக் கொண்டு வரும் பொழுது
1.அதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால்… வசிஷ்டர்..
2.இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு பிரம்மம் (சிருஷ்டி) ஆகின்றது..

பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி தான் நமது உயிர்… இந்த மனித உடலை உருவாக்கி அதை ஆட்சி புரிகின்றது. மனித உடலில் விளைந்த ஆறாவது அறிவை வைத்து எப்படி இயக்க வேண்டும்…? என்று அந்த இடத்திலே விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.

அந்த உயர்ந்த சக்தியை நீ கவரப்படும் பொழுது வசிஷ்டர் பிரம்மகுரு… கவர்ந்து கொண்ட சக்தி… மனைவி அருந்ததி.
1.எந்த உணர்வின் சக்தி உனக்குள் அறிவாக வந்ததோ அந்த அறிவின் உணர்வுகள் உனக்குள் உருவாக்கப்பட்டு
2.அந்த அறிவின் துணை கொண்டு தீமைகளை நீக்கி “உள்பொருளின் உணர்வின் ஞானத்தை நீ அறிய முடியும்…” என்று காட்டுகிறார் குருநாதர்.

குருநாதர் காட்டியதை நீங்களும் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் என்னை அலையச் செய்து இந்த உண்மையை அறியும் பழக்கத்தைக் கொண்டு வந்தார். ஒவ்வொன்றாக அனுபவத்தைக் கொடுத்தார்.

எத்தனையோ பேர் குருநாதரிடம் பழகினார்கள். இருந்தாலும் இந்த மாதிரித்தான் எனக்குக் காண்பித்தார். தெரிந்து கொண்டேன்… அதை வளர்த்தேன்… உங்களிடமும் அதை இப்போது பதிவு செய்கின்றேன்.

நான் காட்டிற்குள் அலைந்து திரிந்து பார்த்தேன். குருநாதர் வெளிப்படுத்திக் காட்டினார். துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு உங்களுக்குள் இதைப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்த பின் மீண்டும் எண்ணும் போது உங்களுக்குள் அந்த அறிவாக வந்து அகஸ்தியன் அக்ண்ட உண்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அது மட்டுமல்ல…!
1.அகஸ்தியன் வாழ்ந்த காலத்திற்கே நீங்கள் போக முடியும்.
2.அவன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நீங்களும் ஆவதற்கு இது உதவும்.
3.அவன் செய்த அறிவுகள் எல்லாமே உங்களுக்கு வரும்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ இது உதவும்.

சப்தரிஷிகள் தேர்ந்தெடுக்கும் ஞானத்தின் வித்துக்கள்

 

குணங்களாக உள் அடக்கும் “ஓர் மறை பேறு” என்பதே மனித மனம் வளர்த்துக் கொள்கின்ற குண நலன்கள்… அகத்தின் அருட் சிந்தனையில் பிரகாசிப்பதே “உயர் ஞானம்…”
1.ஞானச் செல்வங்கள் (நீங்கள்) அகத்தின் அருள் செல்வத்தினை
2.உங்கள் சிந்தையில் பற்றுக…! என அன்பு கொண்டே அழைக்கின்றோம்.

காலமாம் வேக கதியில்… அனைத்துமே மறைதல் தத்துவம் பெறுகின்றது.

உயிர் சக்தி வலு கூட்டிக்கொள்ள இந்தச் சரீரமும் காக்கப்பட வேண்டும். நோயுற்ற ஒருவனைப் பிழைத்தெழ வைத்திடும் வைத்திய நூல் கற்று அதனைச் செயல்படுத்திக் காட்டிட்ட எத்தனையோ மருத்துவர்கள் உள்ளார்கள்.

இருந்தாலும் அவர்களும் காலத்தின் பிடியில் தான் சிக்கி உள்ளார்கள். உடலை விட்டு எப்படியும் பிரிந்து தான் ஆக வேண்டும்.

ஆனால்
1.மெய் ஞானத்தின் விழிப்பு கொண்டு உயர் ஆத்ம சக்தியை வலுக் கூட்டிய மாமகான்கள்
2.காலத்தால் இன்றும் அழியாது வாழ்ந்து வருகின்றனர்…

அவர்கள் செயல் கொள்கின்ற நிலை என்ன…?

காலில் அணியும் சலங்கை பார்த்திருக்கின்றாய் அல்லவா. உயர்ந்த உலோகத்தால் உருவாக்கப்படும் கால் சதங்கை ஒலிப்பது எவ்வாறு…?

பொருத்தமான பரல்கள் உள்ளிட்டு அமைக்கப்படும் அந்தச் சதங்கை வாய் ஒலிக்கின்ற ஒலி போல்…
1.இங்கே யாம் காட்டும் பொருளை
2.ஆத்ம பலம் கூட்டிடும் ஞானத்திற்கே காணுதல் வேண்டும்.

பொருந்தாப் பொருள் அமையப் பெற்ற சதங்கை எவ்வாறு ஒளி நாதத்தைக் காட்டாதோ அதைப் போன்றே
1.சரீரத்தின் அனைத்து அணுக்களும் “உயர் மின் நுண்காந்த அலைகளை…” ஈர்த்துக் கொண்டிடும் பக்குவம் இல்லை என்றால்
2.மனிதச் சரீரத்தை ஒளியாக்கிடும் சித்தன் நிலை குறைவுபடுமப்பா.

நாம் ஈர்க்கின்ற உயர் காந்த சக்தியை… சரீரத்தில் உள்ள அனைத்து அணுக்களும் பெற்று… உயிர் ஆத்ம சக்தியின் வலுவால் ஒலிக்கின்ற நாதமே பின் “விந்து கலையாகும்…”

அந்த நிலையின் பக்குவம் பெற்றுவிட்டால் “துடி முழவின்” (இசைக் கருவி) ஒலி கேட்டிருக்கின்றாய் அல்லவா. அத்தகைய முழங்கு நாதம்… சொல் (உன் சொல்) அறப்பெற்றிடலாம். இதையே சரீரத்தின் தொடர்பிற்கும் உணவினை உட்கொள்ளும் குணங்களாகக் காணலாம்.

உடல் பொருந்துகின்ற உணவினையே உட்கொள்ளல் வேண்டும் உணவின் குண மாறுபாட்டால் நம் சரீரத்திற்குள் பிற உயிர்த்தொகைகள் உட்கொள்ளும்… உணவின் குண விசேஷ வாசனையால் ஆட்கொண்டு உடல் வாழ்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

சமைக்கப்படும் உணவில் அதன் வாசனைக்கொத்த உயிரணுக்கள் அசைகின்ற தன்மைகளையும் அதன் செயல்பாட்டையும் காட்டி இருக்கின்றோம். “இலையில் திகழ்கின்ற பிண்டம்…!” என்று உரைத்திருக்கின்றோம்.

அல்லாமே வாசனைகள் ஆகுகின்றன. ஆனாலும்
1.குணங்களின் வேகத்தை அது எத்தகையதாக இருந்தாலும்
2.ஆத்ம பலத்திற்கே அதைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

தொழில் புரியும் ஓர் தொழிலாளி… கருத்தொன்றி தொழில் நாட்டம் கொண்டிட்டால் பசி தாகத்தை உணர்வதில்லை. சிலர் பொருளைப் பெற்றிடும் வேகத்தால் உத்வேகம் ஊட்டப்பெறும் ஒன்றின் கருத்தால் பசியினை மறந்தும் தொழில் புரிகின்றார்கள்.

இப்படி வாழ்க்கையில் எத்தனை எத்தனையோ சம்பவங்களைக் காண்கின்றோம் அதுவும் கருத்தொருமித்த நிலை தான்.

அதே மனநிலையைத்தான் “இந்தத் தியானத்திற்குச் சிறிதளவேனும் செயல் கொள்ளுங்கள்…” என்று உரைப்பதெல்லாம்.

1.ஞானத்தின் வித்துக்களைத் தேர்ந்தெடுக்கும் வேகத்திற்கே சப்தரிஷிகள் செயல் கொள்கின்றனர்…
2.ஆக்கம் அனைத்தையும் காக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

டாக்டருக்குப் படித்தவர்கள் உடல் கூறில் எந்தக் குறைபாடு வந்தாலும் அந்த நோயைக் கண்டுபிடிப்பார்கள். ஸ்கேன் வைத்து அதிர்வுகள் மூலம் பார்ப்பார்கள். அதன் மூலம் உடலிலுள்ள உறுப்புகளையும் பார்க்கின்றார்கள். நாமும் தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் உங்களிடம் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லும் போது வைத்திய ரீதியாகத்தான் பேச வேண்டும். அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு உங்களை நீங்கள் அறிய விரும்பினால் உடலின் ஓட்டத்தினை நீங்களும் பார்க்கலாம்.

ஆனால் இது நமக்குத் தேவையற்றது.

என்ன பார்க்கலாம்…? என்றால்
1.என்னவெல்லாம் தெரிகின்றது என்ற நிலையில்
2.சில பேர் எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
3.அப்படிப் பார்க்கும் போது பார்த்த நிலைகள் கொண்டு அங்கிருக்கும் தீமையைத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.

சில பேர் என்ன செய்கின்றார்கள்…?

மந்திரத்தால் பில்லி சூனியங்கள் ஏவப்படுகிறது அதனால் சில விலை உயர்ந்த பொருட்கள் கூட காணாமல் போகின்றது. குடும்பத்திலும் முடக்கங்கள் ஏற்படுகின்றது.

சாமிக்கு (ஞானகுரு) சக்தி இருக்கின்றதல்லவா…! சாமி எங்களுக்கு இதை எல்லாம் சரி செய்து கொடுக்கலாம் அல்லவா…! என்று கேட்கின்றார்கள்.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எல்லாச் சக்திகளையும் எமக்குக் கொடுத்தார் என்று சொன்னோம் என்றால் அதை வைத்து “மந்திர தந்திரம் செய்பவர்களை நான் அடக்க வேண்டும்” என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நான் செய்வேன் என்று சொன்னால் நானா…?
1.குருநாதர் உபதேசித்த உணர்வுகளை நான் எடுத்தேன்
2.அந்த உணர்வின் வழிப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை வந்தது.

குருநாதர் ஞான வித்தை எனக்குள் விதைத்தார்… வளர்த்துக் கொண்டேன்.
1.அதே வழிப்படி உங்களுக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
2.அதற்குண்டான சக்திகள் அனைத்தும் இந்தக் காற்றில் இருக்கின்றது.
3.அதை நீங்கள் எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
4.உங்களுக்குள் தீமையைப் போக்கக் கூடிய சக்தியாக அது வரும் என்று தான் சொல்கிறோம்.

நான் செய்தேன் என்றால் இதை நான் செய்யவில்லை…! குருநாதர் காட்டிய வழியில் அருளைப் பெருக்கும் போது அது அந்த வழியை உங்களுக்குள் காட்டும். அதன் வழியில் நீங்கள் செல்லலாம்.

ஏனென்றால் ஆரம்பத்தில் சில பேருக்கு இதைச் செய்யும்போது எனக்கு அந்தக் கடவுள் தெரிகின்றது உடலில் இருப்பது எல்லாம் தெரிகின்றது என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
1.காட்சி என்று தெரிந்தாலே “எனக்கு எல்லாம் தெரிகின்றது…” என்று
2.அடுத்தவருக்குக் குறி சொல்வது போல் சொன்னார்கள்.

கடைசியில் வீணாக அடுத்தவர்கள் கஷ்டங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வம்பிலே போய் மாட்டிக் கொள்கிறார்கள். கஷ்டத்தைத் தான் வாங்கிக் கொள்கின்றார்கள்.

தெரிந்ததைச் சொல்லப்படும்போது இதில் வருவதைக் கழிக்கத் தெரிய வேண்டுமல்லவா…? அது மிகவும் முக்கியம்…!

ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின்… அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஆனால் அப்படி எடுக்கவில்லை என்றால் அந்த விஷம் இங்கே வந்து விடுகின்றது. அங்கிருக்கும் தீமைகளைத் தான் மீண்டும் தனக்குள் வளர்க்க முடியுமே தவிர நல்லதை வளர்க்க முடியாது.

அருள் சக்திகளைப் பெறும் பொழுது அந்த உணர்வை நாம் நுகர்கின்றோம்…. தெரியச் செய்கிறது. தெரிந்து கொண்டாலும் அந்த தீமைகள் வருவதை அறிகின்றோம்.

அடுத்த கணமே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று இதைத் தனக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் நுகர்ந்த பிறர் உணர்வுகளை உடனடியாக நீக்க வேண்டும். அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் புகாது விழிப்புடன் இருக்க வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளால் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.அவ்ர்களை அறியாது சேர்ந்த தீய வினைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.அவர்களின் வாழ்க்கை எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்.
4.அவர்கள் தொழில்கள் நன்றாக இருக்க வேண்டும்
5.அவர்கள் குடும்பம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று
6.நம் உணர்வை இந்த மாதிரி அவர்களுக்குப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு நாம் அவசியம் வர வேண்டும்.

November 2023 உபதேசம்

சகுனியின் சூதாட்ட சூழ்ச்சி

 

உதாரணமாக (பிறரிடம்) நம் காரியத்தைச் சாதிக்க வேண்டும்… பணம் வாங்க வேண்டும் என்றால்… நண்பன் (அல்லது அதற்குண்டானவர்கள்) எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை வரும். அப்படி ஏற்றுக் கொள்ளும் தன்மை வரப்படும் பொழுது சாந்தமாகும்.

சாந்தமான நிலைகள் வரப்படும் பொழுது “தர்மன்” என்ற நிலை அடைகிறது.

சாந்தமான நிலை வருவதற்கு முன் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளின் தன்மை எது இருந்தாலும்
1.காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு…
2.நம் மனதை அடக்கிச் செயல்படுத்தும் பொழுது
3.நம் எண்ண வலுவில் தன்மைக்குள் நண்பனின் உணர்வு நமக்குள் திணிக்க்கப்படுகிறது… அப்பொழுது அதன் வலு தான் “அர்ஜுனன்…”

நமக்குப் பணம் தேவைப்படுகின்றது (நண்பனின் தயவு) என்று கண் கொண்டு நண்பனை உற்றுப் பார்க்கின்றோம். ஆறாவது அறிவால் மனதை அடக்கி… அவர் சொல்வதை எப்படியும் நாம் கேட்டாக வேண்டும். ஏனென்றால் கேட்டால் தான் நமக்குச் சலுகை கிடைக்கும். அவன் சொல்லும் உணர்வுகள் அர்ஜுனன் வலிமையானது.

ஏனென்றால் அந்த நண்பன் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம் காந்தம் என்ற நிலையில் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அதை நுகர்ந்தால் அர்ஜுனன்.

நண்பன் பேசும் உணர்வுகளைக் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் பரப்பிரம்மம் என்ற அணுத்தன்மை அடைகின்றது. அந்த உணர்வின் சத்தி அதை இயக்கக்கூடிய பரப்பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வின் தன்மை அதனுடன் இணைந்து சரஸ்வதி ஆகின்றது… பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

அந்த அணு இப்படிக் கவர்ந்து கொண்டால் அந்த ஞானத்தின் வழியே அதனின் வித்தாகிறது.

இருந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ளாத மனமாக இருக்கப்படும் பொழுது
1.பணம் வாங்கும் காரியத்திற்காக ஏற்றுக் கொள்கின்றோம்.
2.ஆனாலும் அதை இந்த மனது ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் ஏற்றுக் கொள்கின்றது.

இதைப் பார்த்து மற்றவர்கள்… என்ன…? அவருடன் இப்படிக் கூடிக் குழாவுகின்றாய் என்று கேட்பார்கள். என்ன செய்வது…! அவரிடம் காசு வாங்க வேண்டி இருக்கின்றது அல்லவா. இல்லை என்றால் எப்படிக் கிடைக்கும்…? என்ற நிலையில் இருக்கின்றோம்.

அந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அதைத்தான் சூழ்ச்சி என்பதாக… சூதாட்டம் ஆடுவதாக
2.சூட்சும நிலைகள் கொண்ட “சகுனி” என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.

சகுனி தாயக் கட்டைய உருட்டுவது போல் நம் காரியத்தை எண்ணி அதை நாம் உருட்டி எடுக்கின்றோம். அதாவது நாம் என்ன செய்கின்றோம் என்றால்
1.நம் காரியத்தைச் சாதிப்பதற்காக அவருடைய எண்ணத்தை “உருட்டி” எடுக்கின்றோம் “சூதின் மூலமாக…!”
2.அப்போது நாம் ஜெயித்து விடுகின்றோம் (பணத்தை வாங்கிவிடுகின்றோம்)

முந்தி அவர்கள் நல்லதைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள்… அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பணம் வாங்குவதற்கு மட்டும் உள்மனதாக வைத்து இதைக் கலந்து ஏற்றுக்கொள்ளும் அந்த உணர்வு ஆகிறது.

பணம் வாங்கி ஓரளவுக்கு வசதியாக ஆன பிற்பாடு என்ன செய்கின்றோம்…? சமயம் வரும்பொழுது அவருக்கு என்னவெல்லாம் தீங்கு செய்ய வேண்டுமோ அதெல்லாம் செய்வோம்…! (எல்லோருமே இதை அனுபவத்தில் பார்த்திருப்போம்)

சகுனி தாயம் போட்டு சூதாட்ட விளையாட்டிலே தோற்கடித்து விட்டேன் என்ற நிலை வருகிற மாதிரி நமக்குள் சூதின் உணர்வுகள் வந்து விடுகிறது.

முதலிலே அந்த நண்பனின் உணர்வுகள் அர்ஜுனன் ஆகின்றது. அவன் எதையுமே குறிவைத்துத் தாக்கும் தன்மை பெற்றவன். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் “நகுலன்” உடலுக்குள் அது இணைந்து செயல்படும் தன்மை வருகின்றது.

நாம் எண்ணும் ஆந்த உணர்வை உயிரிலே சேர்த்து… சேர்த்துக் கொள்ளும் உணர்வாக எண்ணும் போது அதற்கு இடம் கொடுக்கின்றோம். அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது “சகாதேவன்…” ஆகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஏற்றுக்கொண்டால் “பீமன்” ஆகின்றது. அவர் சொன்ன உணர்வு அந்த வலுவும் நமக்குள் வருகின்றது. பீமன் என்ற அந்த வலுவான உணர்வுகள் ஆனால் அதன் வழி தர்மன் ஆகின்றது

நம் உடலுக்குள் இத்தனை போர் நடந்து கொண்டிருக்கின்றது

இருந்தாலும்… நம் எண்ணங்கள் அவரை ஏமாற்றும் விதமாகச் செயல்படும் பொழுது
1.”சகுனி…” நமக்குள் இருந்து அதன் உணர்வாகக் கலந்து தான் நமக்குள் ஏற்றுக்கொள்கிறதே தவிர
2.நண்பன் நமக்கு நல்லதைச் சொன்னார் என்ற நிலையில் ஏற்கும் பருவமில்லை.

இப்போது இங்கே தியானம் செய்கின்றோம் என்றால்… பல வகைகளிலும் பலவிதங்களை எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றோம்.

எப்படியோ தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும்… தியானம் செய்தால் நமக்கு நல்லதாகும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் வருகிறோம்.

அவ்வாறு ஆசைப்பட்டு சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகள் தான் .வரும். நாம் எண்ணிய அந்த உணர்வுகள் பதிவாகிறது. பதிவின் உணர்வு மீண்டும் நினைவாகும் பொழுது நம்மை இயக்குகின்றது.

நாம் எந்தத் தொழிலின் நிமித்தம் இணைத்து “இந்தத் தியானத்தைச் செய்தால் நாம் நன்றாக இருப்போம் என்று எண்ணினோமோ…” அதன் எல்லை வரை இது வளரும்.

தான் எதிர்பார்த்த நிலைகள் இல்லை என்றால் உடனே குருக்ஷேத்திரப் போராகிறது. எங்கே…? இந்த உயிருக்குள்…!
1.இவ்வளவு நாளும் என்னத்தைத் தியானத்தைச் செய்து என்ன பலன் கிடைத்தது…? என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.எண்ணியபடி நடக்கவில்லை என்றால் இந்தப் போர் நடக்கின்றது.
3.தியானத்திற்குப் போவோமா வேண்டாமா…!
4.தியானத்தைச் செய்வோமா வேண்டாமா…? என்ற இந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிக்கும் நமக்குள் உயிரிலே இந்த குருக்ஷேத்திரப் போர் நடந்து கொண்டே உள்ளது. ஏனென்றால் நம் உணர்விற்கும் புறத்திலிருந்து வரக்கூடிய நிலைகளுக்கும் இந்த வித்தியாசம் ஆகிறது.

அதனால் தான்… நாம் நம் மனதைக் குவிக்க வேண்டும்… அனைத்து உணர்வுக்குள்ளும் பகைமைகளை அகற்றிய ஞானிகளின் உணர்வுகளைச் சேர்த்து உயிருடன் ஒன்றச் செய்ய வேண்டும்… ஒளியாக மாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

“மனம் தான் நம்முடைய பகைவன்…!”

 

காலம் குறுகியது என்று பல முறைகள் உரைத்திட்டோம் அதை எத்தனை பேர் அறிவில் தெளிந்து கொண்டனர்…?

பேரண்ட சூட்சும இரகசியத்திற்குள்… காலத்தின் நிலையால்
1.இதுவரை கடந்து சென்றிட்ட வெகு நீண்ட கால நிகழ்வுகள்…
2.எதிர் கொள்ள இருக்கின்ற வெகு நீண்ட காலத்தின் நியதிகள்…
3.இதிலே உன்னுடைய பங்கு எவ்வளவு என்று கூற முடியுமா…?

பேரண்டத்தின் அளவீட்டில் மானிடப் பிறப்பு என்பது அணுவிற்குள் அணுவே. ஈர்த்து உயர்த்திக் கொண்டிடும் செயல் வேகம் கண்டாயா…?

மனிதன் என்ற ஜீவ பிம்ப வாழ்க்கையின் குறுகிய காலத்தினை அறிந்து கொண்டு காலச்சக்கரத்தில் அனைத்தும் மறைந்துவிடும் மாயை…! அதுவே புனிதமாகத் தோன்றும் செயலின் சித்து. சித்து என்பது எதுவப்பா…?

ஜடப்பொருளாகப் புறப்பொருள் காட்டுவது சித்து விளையாட்டு.

சிருஷ்டியின் சித்து சகலமாய்ச் சகலமும் தோன்றிடும்… ஜீவ பிம்பம் காட்டிடும் அனைத்து பொருட்களும்… மற்றும் அதனுள் அடங்குவது ஜடப்பொருள்களும் தான்.

சித்தன் நிலை பெற்றால் சித்து நிலை விளங்கும்.

சகலமும் பொருள்கள் என்றே உரைத்திட்டோம். காலம் குறுகியது என்பதை உணர்ந்து விட்டால் நாம் உரைத்த சகல பொருட்களின் தன்மையும் விளங்கும்.

தோன்றி மறையும் அனைத்தும் வேகம் வேகம் வேகம் தான்…! நிலை பெற்றிடும் பொருள் எது…?

மனித மனத்தின் சிந்தனை ஓட்டம் செயல்படுவதை ஊன்றிப் பார்த்திருப்பாய். இந்தப் புற உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கே பொருள் தேடுகின்ற மனிதனின் ஆசைக்கு எல்லை உண்டா…?
1.பொருள் தேடும் சிந்தனையில் பேராசை வயப்படுகின்றான்… அந்தப் பொருளுக்காக உலகினை நேசிக்கின்றான்.
2.பொசுக்… என பொருள் மறைந்தால்…? உலகின் கண் பகைமை காட்டுகின்றான்.
3.மனித மனத்தின் முரண்பாடே ஒரு பொருளாக இரு செயல் நிகழ்வுற்று
4.அந்த இரண்டிலும் பாதிப்புக்கு உள்ளாவது பகைதான்… “மனது தானப்பா பகை…!”

இவைகளில் உழலுகின்ற மனிதன் “நிற உலகு…” ஒன்று இருப்பதை அறியவா போகின்றான்…? அந்த வட்டச் சுழற்சியில் இருந்து விடுபட்டு உயரவே இவ்வளவு “கடுமையாக உரைக்கின்றோம்…”

நிற உலகு என்பது “ஒளிதானப்பா…”

இகழ்ந்துரைக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும். உலகம் பழிக்கின்ற செயல் இது என வழிகளாக நெறிமுறைகள் வகுத்துத் தந்த மாமகான்கள்… நன்நெறியில் வளர்ப்பாக்கும் செயலில் மனிதன் தெய்வநிலை பெற்றிட மெய்ஞானச் சுடராக விளங்கிட போதனைகள் உரைத்திட்டனர்.

இகழ்ந்துரைக்கும் நிலை மாற்றுகின்ற மனம் வேண்டி உறுதியாக நிலை நின்று மனிதன் செயல் கொண்டால் “உட்பொருள்… தன் பகை நீக்கும்…”

பாடநிலையின் ஆரம்பத்தில் கொடுத்த வினாவிற்கே வருகின்றோம்.

1.மனிதன் புறப்பொருளைப் பிரிந்த ஏக்கத்தால் பேராசையின் அதிர்வு கொண்டிட்ட ஆவேசம்
2.வெறுப்பின் சிந்தனையில்… புற உலகினைப் பகைப்பதாக எண்ணித் தன் மனதையே தான் பகையாக்கி
3.வாசம் செய்திடும் இறை சக்தியை… உட்பொருளை… அகத்தின் அருட் சிந்தனையை… பகை உணர்வு கொண்டுவிடுகின்றான்.

அப்படிப் பகை கொள்கின்ற (தனக்குள்… தனக்குத் தானே) செயலின் வீரியம் எந்த நிலை பயக்கும்…? என உணர்ந்திருப்பாய்.

1.”உட்பொருள்…” தன் பகை நீக்கும் வழி வகைதனைக் காட்டி விட்டோம்
2.தியானத்தின் மேன்மையை அக உணர்வால் உண்ணல் வேண்டும்

சித்து… சடம்… இரண்டிலும் “ஈஸ்வர ரூபம்…” மனித மனத்தின் அகலவொண்ணா பொருள் அதுவே. அதைப் பெற்று உயர்ந்திட எனது ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாந்த குணங்கள் கொண்ட நாம் பிறரின் கோபிக்கும் உணர்வுகளைச் சந்தர்ப்பத்தால் காண நேர்கின்றது. அப்பொழுது அவர் வெளிப்படுத்தும் அந்தக் காரமான உணர்வை நுகர்கின்றோம் (சுவாசிக்கின்றோம்).

அவர் வெளிப்படுத்தும் கோப உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றினாலும்… நாம் உற்றுப் பார்த்து அதை நுகரும் போது நம் சுவாசத்திற்குள் வந்து… உயிரிலே பட்டு அந்தக் காரமான உணர்வின் சத்தாக உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் இணைகிறது.

இணைந்து இரத்தத்துடன் கலந்து உடலிலே சுழன்று வரும் பொழுது முட்டையாக மாறி அந்தக் கார உணர்ச்சியைத் தூண்டும் அணுவின் கருவாகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.

சாந்தமான உணர்வு கொண்டு நாம் இருக்கப்படும் போது அந்த வேகத் துடிப்பு வருவதில்லை. ஆனால் அந்தக் கோபித்தோரின் உணர்வை நுகர்ந்த பின் அது ஓமுக்குள் ஓ…ம் ஆகி சாந்த உணர்வுகளுக்குள் எதிர்மறையாகத் தாக்குகின்றது. துடிப்பு அதிகமாகின்றது… உணர்ச்சி வசப்படுகின்றோம்.

1.இயல்பாக ஒரு கடினமான பொருளை வைத்து மற்றொன்றோடு தாக்கப்படும் பொழுது
2.அங்கே அந்த வெப்பம் உருவாகின்றது
3.அந்த உணர்ச்சியின் வேகத்தினால் வலியும் வேதனையும் அதிகரிக்கின்றது.

இதைப் போன்று தான்
1.அந்த வேகத்தின் உணர்வுகள் (கோபம்) நம் சாந்த உணர்வில் தாக்கப்படும்பொழுது
2.இந்த அணுவிற்குள் ஊடுருவி இது அணுவின் தன்மை அடைந்து
3.அந்தச் சாந்தத்தை அடக்கும் வல்லமை பெறுகின்றது.
4.ஓமுக்குள் ஓமாகி மாறி அதனை இது அடக்கும்
5.அதற்குள் இது அடங்கி சாந்தத்தின் செயலாக்கத்தைக் குறைக்கின்றது.

ஏற்கனவே இருக்கும் சாந்த குணமும் சாந்த எண்ணங்களும்… “தன்னை வளர்க்கும் தன்மை இழந்து…” இந்தக் காரத்தின் உணர்வை இதற்குள் வளர்க்கப்படும் போது அதற்குள் நாம் பார்க்கும் இனத்தை எல்லாம் (மற்ற குணங்களை) அது அடக்கிவிடும்.

ஓமுக்குள் ஓ…ம்… ஓமுக்குள் ஓ..ம்… ஓமுக்குள் ஓ..ம்…! என்ற நிலைகளில் இந்தக் கார உணர்வுகள் இதற்குள் ஒடுங்கி… ஒடுங்கி… ஒடுங்கி… வருகின்றது. நல்ல உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

இப்படி நல்ல மணத்தை உருவாக்காத நிலைகள் கொண்டு வரப்படும்பொழுது தான் மனிதனுக்கு இரத்தக் கொதிப்பே வருகின்றது.
1.இரத்தக் கொதிப்பு வந்தோரை டாக்டர் பரிசோதித்தால்
2.அவரின் துடிப்பின் நிலையும் கொதிக்கும் நிலையும் இரத்தத்தில் அதிகரித்திருப்பதைப் பார்க்கலாம்.

நேரடியாகச் சுவாசித்திருந்தாலும் சரி… அல்லது வேடிக்கை பார்த்திருந்தாலும் சரி… அதை நுகர்ந்தால் இது போன்று ஆகிவிடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.அதைத் தூய்மைப்படுத்துவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுத்து
2.அடிக்கடி உங்கள் இரத்தங்களில் அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துத் தூய்மைப்படுத்தும்படி சொல்கிறோம்.

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

 

எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.

நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைள் பட்டு… பல அவஸ்தைப்பட்டுகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.

கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”

சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.

அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்துவிடுகிறது.

தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.

பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்

காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?

பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.

ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?

விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.

கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.

ஏன்… எதனால்…?

உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.

எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.

உணவு உட்கொள்ளும் பொழுது ஈதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது

இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.

ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.

கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.

இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.

நான் கொடுத்தேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?

ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.பத்து ரூபாய் கொடுத்தாலும் 100 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.

இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”

ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).

மனிதனுடைய விதியும்… ஞானியரின் விதியும்…!

 

பூமியின் இயக்கச் சுழற்சி அது கதியுறும் ஓட்ட அமைப்பு தொடர்பு கொண்ட கோளங்களாக சூரியக் குடும்ப அமைப்பில் அவை அவை ஈர்த்திடும் நிலைக்கொப்ப வளர்க்கும் வளர்ப்பாக்கி… காலத்தின் சுழற்சியாக இயற்கையின் நிகழ்வில் பூமியில் நடைபெறும் மாற்றங்களை… மனிதன் “விதி” என்று உரைக்கின்றான்.

உடல் நலக் குறைவுபடும் காலத்தை நோய் என்று பெயரிட்டு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையுடன் நோயின் குணம் நாடிப் பத்தியமும் இருக்கின்றோம்.
1.மருத்துவர் அளித்திடும் மருந்தினைக் “கசப்பு” என்று விலக்கிடுவோமா…?
2.இங்கு நோயைப் போக்க வேண்டும் என்ற கருத்தே முதன்மையாகின்றது.

மனிதச் சரீரமும் பூமியும் ஒன்றே. கருத்தொன்றும் செயல் என விலக்கிடுவோமா…? ஆனால் கருத்தொன்றும் செயல் என்பான் மெய் ஞானி.

பூமியின் இயற்கை மாறுதல்களில் பூமித்தாயின் நலன் கருதி…
1.அதை ஏற்றுக் கொண்டிடும் பக்குவ மனது வேண்டும்
2.இவை அனைத்தும் மன வலிமை கொண்டு ஈர்த்திடும் செயலாக…
3.ஜெபத்தின் வளர்ப்பில் வளர்ப்பாக்கவே உரைப்பதெல்லாம்.

கண்ணாடிக் குடுவையில் வைக்கப்படும் வண்ணம் கலந்த நீர் அது எந்த வண்ணமோ அந்த வண்ணத்தையே குடுவையில் காண்கின்றோம். இது மனித மனத்தின் நிலை.

ஆனால் மெய் ஞானிகளுக்கோ ஆத்ம நிலை எந்த நிலையிலும் பாதிக்கப்படாது.

இந்தக் கலியின் மனித மனத்தின் நிலை உயிர் ஆத்ம சக்தியைக் கேடுறுத்தும் செயலுக்கே செயல்படுகிறது என்று பல முறை கூறிவந்துள்ளேன்.

சாயம் ஏறிய நூல் போல் இன்றைய மனிதன் தான் கொண்டிட்ட தீய எண்ணத்தின் வலுவால் தன் ஆத்மாவையே கொடுமைக்கு உள்ளாக்குகின்றான்.

இதை எந்த வார்த்தையில் உரைப்பது…?

தனக்கு உகந்த இரையை நாடிச் செல்லும் நாரையானது செல்கின்ற தூரம் எவ்வளவு இருப்பினும் அந்தத் தூரத்தைப் பறந்தே கடந்து செல்கின்றது.
1.பறந்தே ஏகுகின்ற அதன் வலிமையை மனதில் கொள்…!
2.”பார்வையின் கூர்மை… அது இரையை நாடுகின்ற நாட்டம்…”

மனிதனுக்கு நரை திரை நாட்டம் ஏற்படுகின்றது பார்வையின் ஒளியும் குன்றுகின்றது. நரை திரை நாட்டத்தின் செயலே உலகோதயம்.
1.அத்தகைய குறைவு நிலைகளை… “போ…!” என்றால் போகும்படி செய்வார்களா…! மெய் ஞானியர்… இல்லை…!
2.”ஆத்ம பலம் நாடும்… சிந்தனா சக்தி அன்றோ இங்கே முதன்மை வழி…”

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

 

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

பஞ்ச பூதங்களின் இயக்கமும்… நாம் தீர்க்க வேண்டிய ஞானப் பசியும்

 

உயிரணுவின் ஈர்ப்பின் செயலால் ஆத்ம நிலை பெற்று ஜீவ பிம்பம் பெற்றிடும் செயலில் சரீரத்தினுள் அடக்குவது பஞ்சபூதங்கள் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம்.

இவற்றின் கூறுகள் மூலசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலில்… அளப்பரியா அவைகளின் செயல் நிகழ்வுகள் இயல்பாக இயங்கிடும் சக்தி அண்டசராசரம் முழுவதிலும் உண்டு.

மனிதன் என்ற சரீரத்தினுள்ளும்… சரீரம் பெற்றிட்ட உயிர்த்தொகைகள் அனைத்தினுள்ளும் அந்தப் பஞ்சபூதங்களே கட்டுக்குள் அடங்கிச் செயல் புரிகின்றன.

ஆனால் பகுத்தறிவு கொண்ட மனிதன்…
1.அந்த ஆற்றலின் துணையினால் மனதின் இயக்க சுதந்திரம் பெற்று வாழும் வகைகள் அறிந்த பின்னும்
2.பஞ்சபூத சக்தியைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனிதன் உரைக்கின்றான்… “மனதினை அடக்க இயலவில்லை என்று…”

பிறர் தர்ம செய்கையால் ஞானத்தின் வழியில் நிற்போர் மனத்தின் பாதிப்பு நிலைக்கு ஆட்படல் ஆகாது. ஏனென்றால்
1.மற்றவர்களின் காரியங்களால் நாம் பாதிக்கப்படும் நிலை பெறுவதல்ல.
2.பிறர் மேல் நாம் கொண்டுள்ள கருத்துக்களால்… “அவர்களின் செயல்கள்…” நம்மைப் பாதிப்பதாக எண்ணுகின்றோம்.

ஆவேச உணர்வுகள் நீக்கம் பெற்று ஜெபநீர் ஆடிடவே அழைக்கின்றோம்

1.”வலைஞன்” வீசுகின்றான் வலை. அந்த வலையினுள் படுகின்ற மீன்களைத் தன் ஆகார நியதிக்கே கொண்டு செல்கின்றான்.
2.அவன் பற்றியது ஒன்று அப்பற்றும் பொருளினால் அவனுள் குடிகொண்ட குறிக்கோள் மற்றொன்று.

இடையில் நடைபெறும் காரண காரியங்களின் சூட்சுமப் பொருளை அறிந்து கொண்டவனப்பா நீ.

1.தன்னுள் சுரந்து வெளிவரும் ஓர் பசையினால் வலையைப் பின்னுகின்றது “சிலந்தி…” அதுவும் வலை விரித்தே காத்திருக்கின்றது.
2.தன் வலையில் விழும் சிறு உடல் ஜீவன்களை நேரடியாகத் தன் நிலைக்கே புசிக்கிறது.

மனக்கருவைக் குணங்களாகக் காணல் வேண்டும். ஆவேச நிலையின் இயக்கத்தைக் காட்டிடவே பாடங்கள்,

ஆகாரத்தின் நிலைக்கு மற்றொரு பொருள் காட்டுவோம்.

1.”திகம்பரன்” (சந்நியாசி) செய்யும் பூஜை… அவனும் ஆகார நியதியை அளித்தே
2.அறிந்து கொண்ட வழிமுறைகளால் “ஏதோ” ஒன்றினைப் பெற்றிட முயல்கின்றான்.

மேலே சொன்ன மூன்று நிலைகளையும் (வலைஞன், சிலந்தி, திகம்பரன்) விளங்கிக் கொள்…!

ஜெபத்தின் தன்மையாகச் சிந்தனையில் கொண்டு பார்… ஆவேச நிலைகள் நமக்கு உரியனவன்று.

தாகவிடாய் கொண்டவன் அருந்த நீர் கேட்பான்… தாகம் தீராமல் நீராட முயல்வானா…? ஞானமும் அத்தகையது தான்…!

1.தவசியே ஆனாலும் “அருந்த வேண்டிய பசி” ஒன்று உண்டு
2.ஞான தாகம் தீர்ப்பதே மகரிஷிகள் வழி காட்டிய போதனைகள்.
3.அதைப் பெற்று அந்தப் போதனையின் வழி நடந்து முனைவது மனக்குளத்தின் ஜெபநீர் ஆடிடவே.

உணர்வுகளை மாற்றிடும் ஆவேசம் நீக்கு…! என்றே இங்கே இந்தப் பாட நிலையில் பகர்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிற மண்டலங்களிலிருந்து வருவதை 27 நட்சத்திரங்கள் நவக்கோள்கள் கவர்ந்து வெளிப்படுத்துவதை சூரியன் கவர்ந்து தன் சுழற்சி வேகத்தால் அந்த அணுக்களில் உள்ள விஷத்தினைப் (அல்ட்ரா வயலட்) பிரித்து விடுகின்றது.

மனிதனுடைய ஆறாவது அறிவோ நாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி அதை நீக்கிவிடுகின்றது.

இந்த மனித வாழ்க்கையில் எத்தனையோ பேருடன் நாம் பழகுகின்றோம்… பார்க்கின்றோம். ஆனால் சந்தர்ப்பத்தால் அவர்கள் படும் வேதனைகளைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுக்க வேண்டும்.

1.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.அந்த அருள் உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக்கிடும்… அந்த அறிந்திடும் தெளிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

ஆனால் வேதனை கொண்ட நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையை இதிலே கலந்து விட்டால் இங்கே மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது. நுகர்ந்தாலும் அதை வைத்து உங்கள் வேதனைகளை நிவர்த்தி செய்ய முடியாது.

1.அதாவது பிறிதொரு மனிதன் வேதனைப்பட்ட உணர்வு நம் நல்ல அறிவை மறைக்கும் போது
2.இன்னொரு சாதாரண மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து அதை மாற்ற முடியாது.

மாற்ற வேண்டும் என்றால் “வேதனை என்ற நஞ்சினை நீக்கி… அதை ஒளியாக மாற்றிடும்…” அந்த மகரிஷிகளின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று உடலுக்குள் இணைக்க வேண்டும்.

மீண்டும் இதைத் தெளிவாக்குகின்றேன்…!

உங்கள் வாழ்க்கையில் நல்லது செய்வதாக எண்ணி ஒரு வேதனைப்படும் மனிதனை உற்றுப் பார்த்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்கின்றீர்கள்… உதவி செய்கின்றீர்கள்…!

ஆனால் உங்களிடமிருக்கும் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவரின் வேதனைப்பட்ட அந்த விஷமான உணர்வு இணைந்து உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது… மறைத்து விடுகின்றது. இதுதான் சிறு திரை – “சித்திரை…” என்பது.

அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும். அதற்குத்தான் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் அடிக்கடி பதிவாக்குகின்றோம்.

1.உங்கள் நினைவாற்றலை அங்கே ஞானிகளின் பால் ஒன்றச் செய்து
2.இங்கே நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை உங்களுக்குள் இணைக்கின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளுடன் இணைத்து விட்டால் அந்த வேதனையான உணர்வினை நுகர்வதைத் தவிர்த்து அருள் உணர்வுகளை வலுப் பெறச் செய்யும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரின் ஏக்கத்துடன் விழிப்பார்வை இருக்க வேண்டுமப்பா…!

 

மனித நேயமனம் அன்பினுக்குகந்த அறவழி நடக்கலுற்று… பகுத்தறியும் ஆற்றல் வழி பண்பு கொண்ட தவமயர் இல்லறத்தின் வழி நடந்தே… மகோன்னத முனைப்பாற்றல் சக்தியை நிறைவாகப் பெற்று… அந்த ஆற்றலின் சிறப்பாக வளர்ச்சியில் வளர்ந்திட முடிந்திடும்.

பகல் இரவு என்று எண்ணாத எறும்பு ஊர்ந்து சென்று தன் இனங்களுக்கு ஊட்டும் சேமிப்பாகவே உணவினைத் தேடுகின்றது. அது போல்
1.அகம் ஜெபித்திடும்… (தனக்குத் தானே – உயிருடன்)
2.ஆத்ம பலம் கூட்டிடும்… (தன்னை வளர்ப்பதற்கு)
3.மெய்ப் பொருள் செல்வம் எனும் சேமிப்பின் சூட்சுமம் கொண்டு வளர்ந்திட… (உயிரான்மாவிற்குச் சேமிக்கும் அழியாச் சொத்து)
4.வழி நடத்தும் வழி முறைகள் காட்டியதே வல்லார் (மகரிஷிகளின்) தம் ஞான நிலை.
5.தவமாக வாழ்வின் நிறைவு பெற்ற மாமகான்களே அவர்கள்…!

அதை எண்ணி ஈர்த்திடும் பக்குவத்தில் வளரும் நம் ஞான நிலை.

1.நம் ஒளி காந்த சக்தியுடன் அந்த மகரிஷிகள் ஒளி காந்த சக்தியாக ஒன்றிச் செயல்படுகின்ற
2.அந்தத் தவப்பயன் வழியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகத்தின் அழகு பற்றி வழக்கில் உரைக்கும் உரையைச் செவி வழியாக அறிந்திருப்பாய். எது அகத்தின் அழகு…?
1.அல்லார் எனும் நிலை விடுகின்ற பொழுது அக மலர் மலர்ந்து மணம் வீசுகின்றது.
2.விருப்பு வெறுப்பற்ற தன்மை அக வாழ்வினோடு புற வாழ்க்கைக்கும் அது பொருந்தும்.

அந்த நிலை பெற்ற மனத்தின் மாண்பு செயலுறும் விதம் என்ன…?

அத்தகைய அக அழகு பெற்றவனும் ஏங்குகின்றான்… அது உயர்வு எண்ண ஏக்கமப்பா…!
1.அக அழகின் கண் ஏங்கும் வழிப்பாதை… விழிப்பார்வையில் உண்டு.
2.ஈஸ்வரா…! என்ற எண்ணமுடன் ஈர்ப்பின் நிலை ஏக்கமாகப் பெற்றிருத்தலே “விழிப் பார்வையின் காப்பு…”

இந்த நிலையால் மனத்தின் மாண்பு உயர்ந்து கொண்டிடும்.

நான் உங்களைக் காப்பாற்றுவேன் என்று “நீங்கள் எண்ணினால் அது தப்பு…”

 

ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கையில் மன வலிமையை நாம் எப்படிக் கொண்டு வருதல் வேண்டும்…?
1.அருளைப் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற மன வலிமை பெற்றால்
2.சிந்தித்துச் செயல்படும் வலிமையாக இயக்கச் செய்யும்.
3.நம்மைக் காக்கும் உணர்வுகளும் வளரும்.

திரும்பத் திரும்ப இந்த உபதேசத்தின் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை நினைவு கொண்டால் சிந்தித்துச் செயல்படும் ஞானம் உங்களுக்குள் வர வேண்டும்.

உங்களைக் காக்க உங்கள் நினைவு தான் வர வேண்டுமே தவிர “நான் காப்பாற்றுவேன்…” என்று எண்ணத்தை நீங்கள் எண்ணினால்
1.தனக்குள் அந்த உயர்ந்த சக்திகளை எடுக்கும் தகுதியை
2.நீங்கள் இழந்து விடுகின்றீர்கள் என்று தான் அர்த்தம்.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் கடும் விளைவுகள் வருகின்றது. இந்த விளைவில் இருந்து நாம் தப்ப வேண்டும்.

உங்களுக்குள் உபதேசித்த உணர்வின்படி அருளை நீங்கள் பெருக்கிக் கொண்டால் தீமை நீக்கும் சக்தி பெறுகின்றீர்கள் அதைப் பெருக்கக் கூடிய ஞானம் உங்களுக்கு வர வேண்டும்.

அந்த ஞானம் உங்களுக்குள் வரவேண்டும் என்றால் இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உங்களுக்குள் அந்த அருள் உணர்ச்சிகளைத் தூண்டி உங்களை அதன் வழியில் சுவாசிக்கச் செய்கின்றோம்.
1.சுவாசிக்கும் பொழுது உங்கள் இரத்தங்களில் புது விதமான உணர்ச்சிகளின் ஓட்டங்கள் இருக்கும்
2.அந்த உணர்வுகள் பல நிலைகள் பல கலவைகள் ஆகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலைப் பெருக்கும் அத்தகைய கருத் தன்மை உங்கள் இரத்தத்தில் உருப்பெறுகின்றது

இதை வளர்த்துக் கொண்டே வந்தால் அந்த அருள் ஞானத்தை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.

அத்தகைய அணுக்கள் உடலில் உருவாகிவிட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரும் போது உயிரில் படுகின்றது சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது நல்ல உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றது. நல்ல அணுக்கள் உங்கள் உடலில் பெருகத் தொடங்குகிறது அருளைப் பெருக்குகின்றது அருள் உணர்வுகள் நமக்குள் பெருகுகின்றது.

1.இந்த உடலுக்குப் பின் அந்த ஞானியின் அருள் வட்டத்திலே செல்கின்றோம்
2.”எந்த ஞானி இருளை நீக்கினானோ” அவன் ஈர்ப்பு வட்டத்திற்கு… துருவ நட்சத்திரத்துடன் நாம் செல்ல முடிகின்றது.

இது தான் நமது கடைசி எல்லை உயிர் ஒளியானது… அந்த உயிரோடு ஒன்றி ஒளியின் தன்மை நாம் பெற வேண்டும்

ஆனால் நான் (ஞானகுரு) சாமியாராக இருக்கின்றேன்… உங்களைக் காப்பாற்றுவேன் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தப்பு. சாமி சொன்ன உணர்வின் தன்மையைப் பெற்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மைக் காக்கும் என்று எண்ணினால் அது தான் சரி.

ஏனென்றால் பல கோடிச் சரீரங்களில் எல்லா வகையான தீமைகளிலிருந்தும் தப்பிக்கும் உணர்வு பெற்று இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்.

உயிர் மனித உடலை உருவககிய பின் பல கோடித் தீமைகளையும் வென்று உணர்வை ஒளியாக மாற்றியவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று
1.குருநாதர் காட்டி அருள் வழியில் எனக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவாக்கி நினைவாக்கும்படி செய்கின்றேன்
2.உங்களை காக்க அந்த அருள் ஞானம் கிடைக்கும்.
3.இருளை நீக்கிடும் ஞானிகளாக நீங்கள் உருவாக முடியும்

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

 

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்…”

“முதல் பண்ணவனிடத்தில்” நற்றேன் பருகிடல் வேண்டும்

 

நரலாகும் (மண்ணிலே விளையும்) பொருள் உணவாகும் பொழுது அதைச் சுவைக்கின்றோம். எப்படி…?

மனிதன் எண்ணுகின்ற எண்ண ஓட்டத்தில் உலகோதய நடைமுறைச் செயலுக்கு கவனத்தைச் செலுத்தி உணவை உட்கொண்டிடும் பொழுது அது சுவைபட அருந்தும் நிலையன்றி இப்பரு உடலினுள் அமைவு பெற்றிருக்கின்ற பை “இரைப்பை…!”

அந்தப் பையினுள் எரிகின்ற நெருப்பு தன்னில் இடப்படுகின்ற எரியைச் செரித்திடும் முன்பாக
1.நாசியில்… சுவாச ஓட்ட கதியில்… எண்ண ஓட்ட வாசனைக்கொப்ப சமைப்பின் சமைப்பு தொடங்கப் பெற்றே
2.இரசமாகிய சக்தி நரம்புகளின் சுவாச ஓட்டச் செயலில் ஈர்த்துக் கொண்டிடும் துடிப்பு அலைகளாக ஓடி
3.இரைப்பையில் இடப்பட்ட எரிவைப் பயனுறும் செயலாக்கி
4.கழிவையும் நீக்குகின்ற உடல் தொழில் சூட்சுமத்தில் “ஆத்ம பலம் கூட்டுமப் பொருள் காண வேண்டும்…”

நரல் என்று தேனை உரைத்தோம். முதல் பண்ணவன் (உயிர் – குரு)) இடத்தில் நற்றேன் பருகிடல் வேண்டும். நேற்றைய பாடத்தின் தொகுப்பில் மறைபொருளாகக் காட்டியதையே விண்டு உரைக்கின்றோம்.

நாத நாதாந்தம் காட்டிடும் எண்ணக் குவிப்பாக உயிரான்ம சக்தியை ஜெபிக்கின்ற வழிதனில்
1.உயிரே குரு என அழைத்திடும் முதல் பண்ணவன்
2.”உயிரை எண்ணி,,,: அகம் விடாது ஜெபித்திடும் ஜெப நிலையில்
3.நாதவாகினி அமுதமாகப் பெருகிடும் ஜெபத்தின் சக்தியே “நாம் கூற வந்த நரல்…” (உயிருடன் ஒன்றும் நாதம்)

புற உடல் பயனுறச் செயல் கொள்ளும் நிலை போல் அக உடல் அருந்தும் ஞானத்தேன் எந்த நிலை பெறும்…?

அனைத்துமே அவரவர்களின் எண்ணத்தின் செயல்பாட்டில் இயங்குகின்றதப்பா…!

காட்சி:- வெற்றிடமான இடம்… பின்பு தென்னங்கன்றுகள் நடப்பட்டு வளர்ந்து தோப்பாகின்றது. தன் இனத்தைக் கூவி அழைத்து உணவு உண்ணும் காக்கை. உணவினை எடுத்துச் செல்கின்ற சிற்றெறும்புகளும்.

இதன் பொருளைக் கூறும் முன் தெரிய வேண்டியது… எரிகின்ற அக்கினியில் போடப்படுகின்ற பொருள்கள் எல்லாமே ஒரு நிலை பெற்று “கனன்று…” உருமாறி பொருள் தன்மையே மாறி விடுகின்றது.

ஆனால் பரு உடலில் இயங்கிடும் மறைமுக அக்கினி பொருளின் ரசத்தினைப் பிரித்து உடல் செயல் கொண்டிடச் சேமிப்பாக்குகின்றது.

சேமிப்பின் நிலையைப் பற்றிக் காட்டிடவே காட்சியின் விளக்கம்…!

நீர் நிலை கொண்ட இடமாகத் தேர்வு செய்து பயிர் வளர்த்து வளர்ந்த பின் அது தோப்பாகின்றது. அதையே தனக்கு உகந்த இடம் எனத் தேர்வு செய்து கூடு கட்டுகின்றது காகம்.

தன் இனத்திற்கு உணவை ஊட்ட… அரற்றியே கரைகின்றது… உணவை உண்கின்றது… தன் குஞ்சுகளுக்கும் ஊட்டுகின்றது. உணவாம் சேமிப்பு செயல் கொண்டிட அது கொண்டிட்ட உணர்வால் சேமிப்பின் வழிமுறைகள் இன்றி உலவுகின்றது.

ஆனால் எறும்போ ஊர்ந்து கொண்டிருக்கும். தன் தொழிலின் நிலையில் தன் இனத்திற்கு ஊட்டும் சேமிப்பையும் பெற்று விடுகின்றது.

அப்படி என்றால் நமக்கு இனமூட்டும் சேமிப்பு எது…?

ஜீவ ஆதார சக்தி வலு கொண்டிடும் ஜெபமாக…
1.சரீர உயிரணுக்கள் அனைத்திலும் ஒளியை ஊட்டமாகப் பெற்று
2.அதை வழி நடத்தும் தன்மையாக தொழில் படவே இனமூட்டும் சேமிப்பை உரைத்தோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பிறர் வேதனைப்படுவதைப் பார்க்கும் போது உங்கள் மனம் இருண்டு விடுகின்றது. உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்லறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அதை மாற்றுவதற்குத்தான் சப்தரிஷிகளின் அருளையும் துருவ மகரிஷியின் அருளையும் சப்தரிஷி மண்டலங்களின் உணர்வலைகளையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரச் செய்து உங்கள் கண்ணின் வாயிலாகப் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஆறாவது அறிவை…
2.எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திடவே இதை உபதேசிப்பது.

உங்களை அறியாமலேயே பதியச் செய்கின்றோம்.

பதிவானதை மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும். தீமைகளை நீக்கிடும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானியின் உணர்வை நுகரும்படி செய்கிறோம். மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றோம்.

உங்களை அறியாது நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு திரையை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களின் நல்ல குணங்களுக்குள் ஆழமாக இணைக்கச் செய்கின்றோம்.

எல்லா குணங்களுக்குள்ளும் உணர்வுகளுக்குள்ளும் அதை இணைக்க இணைக்க உடலில் உள்ள அணுக்கள் ஒளியாக மாறும்… உயிருடன் ஒன்றும் நிலை பெறும்.

ஒளியாக மாறிய பின் இந்த உடலை விட்டுச் சென்ற பின் இந்த உயிராத்மா பிறவியில்லா பெரு நிலைகள் அடையும்.
1.அத்தகைய நிலை பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றிடவும்
3.தீமையற்ற செயலாக நம் உடலுக்குள் வளர்த்திடவும்
4.நம் எண்ணத்தால் நம்மைக் காத்துக கொள்வதற்கும் தான் இதை உபதேசிப்பது.

இப்போது பதிவு செய்ததை நீங்கள் ஒவ்வொரு நொடியிலேயும் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்…!

அந்தந்தச் சந்தர்ப்பத்தில் உங்களைக் காத்திடும் சக்தியாக அது வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்றைய சூழ்நிலையில் காலையிலிருந்து இரவு வரையிலும் பண்பு கொண்ட மனிதன்… அன்பு கொண்ட மனிதன்… பரிவு கொண்ட மனிதன்… ஈகை கொண்ட மனிதன்… பிறருடைய துயர்களைக் கேட்கப்படும்போது அதை நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வுகள் உராய்ந்து அந்த உணர்ச்சிகள் தான் உடல் முழுவதும் சுழல்கின்றது.

அதனால் துயரப்படும் உணர்ச்சிகளே இயக்குகின்றது. ஆக.. மனிதன் தனது வாழ் நாளில் கேள்விக்குறியாகவே இன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளோம்.

ஏனென்றால் இன்று உலக நிலைகளில் அரசியல் நிலைகள் பூராமே மனிதனை முழுமையாக அறவே அழிக்கச் செய்து அரக்க உணர்வுகள் பெறும் சக்தியே விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்டு விட்டது.

நாம் செல்வத்தைத் தேடினாலும்…
1.அந்தச் செல்வத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம் என்று சொன்னாலும்
2.அதற்கு வேண்டிய உத்திரவாதமும் இன்று இல்லை.

அதே சமயத்தில் உயர்ந்த குணங்கள் கொண்டு நாம் வாழ்ந்தாலும் நமது நல்ல பண்புகள் நமக்குள் நிலைத்திருக்குமா…? என்று பார்த்தால் “அதுவும் இல்லை…” என்ற நிலை தான் உள்ளது.

பண்பு கொண்டு வாழ வேண்டும்… அன்புடன் வாழ வேண்டும்… அரவணைத்து வாழவேண்டும்… என்ற எண்ணங்களை மக்கள் எண்ணினாலும் “வேதனை… வேதனை…” என்று அதைத்தான் அதிகம் சுவாசிக்க நேருகின்றது.

சீரிய பண்பு கொண்டு வாழவேண்டுமென்று இருப்பினும் இன்று அத்தகைய பண்பு கொண்ட மனிதர்கள் அனைவரும் வேதனை… வேதனை… வேதனை… என்ற உணர்வினையே சுவாசிக்க நேருகின்றது.

அந்தப் பண்பும் பரிவும் பாசமும் தன்னுடன் நிலைத்து இருப்பதில்லை…! அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசுபவர்கள் என்றால் ஏதோ கொஞ்சம் ஓரளவுக்கு வசதியாக இருப்பவர்கள் தான் அவ்வாறு பேசிக் கொள்வார்கள்.

ஆனாலும் அப்படி வசதியாக இருப்பவர்கள் மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணத்தில் உதவி செய்தாலும்… அவர்கள் படும் வேதனை… வேதனை… என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டு… அதை நுகர்ந்து அறியக்கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக… வேதனைப்படுத்துவோரைப் பார்த்து “இப்படி நடக்கின்றதே…!” என்று அந்த வேதனை உணர்வைத்தான் சுவாசிக்க நேருகின்றது. அதைத்தான் அதிகமாக நேசிக்க முடிகின்றது.

பத்திரிக்கைகளைப் படித்தாலே “உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது…” நாம் எப்படி நாளை இங்கே வாழ முடியும்…? என்ற நிலைகள் வருகின்றது.

1.பத்திரிக்கையைப் பார்த்தாலே மனிதன் வேதனைப்படும் உணர்வே வருகின்றது
1.இந்த சகஜ வாழ்க்கையில் அன்பு கொண்ட உள்ளங்கள் அனைத்தும்
2.அரவணைக்கப்பட வேண்டுமென்ற உள்ளங்கள் அனைத்தும்
3.கடும் வேதனையைத்தான் அவர்கள் நுகர நேருகின்றது.
4.அந்த வேதனையைத்தான் அவர்கள் உடல்களில் உருவாக்க முடிகின்றது.

இதிலிருந்து விடுபட வேண்டாமா…? என்று சற்று சிந்தியுங்கள்.

நான் தவறு செய்துவிட்டேன் என்று உணர்வதுமில்லை… ஒத்துக் கொள்வதுமில்லை

 

ஒரு சமயம் குருநாதரும் நானும் (ஞானகுரு) பழனிக்குப் போவதற்காகப் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகிலே வந்து கொண்டிருந்தோம். அப்போது குருநாதர் என்ன செய்தார் தெரியுமா…?

ஒரு பஸ் வேகமாக வந்து கொண்டிருக்கின்றது. திருப்பத்திலே (CORNER) அது திரும்பும் பொழுது குறுக்கே புகுந்தால் எப்படி இருக்கும்…? என்ன பண்ண முடியும்…?

நாங்கள் இரண்டு பேருமே பஸ்ஸின் குறுக்கே புகுந்தோம். ஆனால் இவருடைய சக்தியால் பிரேக் போட வைத்து விடுகின்றார்… டிரைவரும் பிரேக் இடுகின்றான்… வண்டி நின்று விடுகின்றது.

அடுத்தாற்போல் அந்த டிரைவர் என்ன சொல்கிறார்…? யோவ் கிழட்டுக்… என்று கெட்ட வார்த்தையாகச் சொல்லி குருநாதரை திட்டுகின்றார்.

நீ வயசுப் பையனாக இருக்கின்றாய்… கிழவனுக்குத் தான் புத்தி இல்லை நீயாவது புத்தி சொல்லலாம் அல்லவா…! என்று டிரைவர் என்னையும் திட்டுகின்றான்.

கொச்சை வார்த்தைகளில் குருநாதரும் டிரைவரும் மாறி மாறிப் பேசுகின்றார்கள்… ஒருவரை ஒருவர் திட்டுகின்றார்கள்.

பாருடா…! டிரைவர் என்னை எப்படித் திட்டுகின்றான் என்று…! குருநாதர் சொல்கின்றார்.

அந்தத் திட்டும் உணர்வுகள் “நாம் செய்தது தப்பு” என்று தெரிகின்றது. ஆனால் டிரைவர் அசிங்கமாகத் திட்டும் பொழுது மட்டும் ரோஷம் வருகின்றது. இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

நாம் செய்தது தப்பு… இருந்தாலும் கௌரவப் பிரச்சினை…! பஸ்ஸில் இருக்கும் அத்தனை பேர் முன்னாடி கேவலமாகப் பேசுகின்றான் என்ற நிலையில் “என்னய்யா செய்ய வேண்டும் என்று சொல்கின்றாய்…?” என்று நானும் கோபமாக டிரைவரிடம் பேசுகின்றேன்.

டிரைவர் அதற்குப்பின் பஸ்ஸை ஸ்டார்ட் செய்கின்றான். வண்டி நகரவில்லை… நகர மாட்டேன் என்கிறது.

என் புத்தியைப் பார்த்தாய் அல்லவா… அவனை வண்டி எடுக்க விடாமல் நான் நிறுத்தி விட்டேன் அல்லவா. உன் புத்தி என்ன செய்கின்றது…? அவனை உதைக்க வேண்டும் என்று விரும்புகின்றாய்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என் புத்தியில் அவனை நிறுத்துகின்றேன் நீ உன் புத்தியில் அவனை உதைக்க வேண்டும் என்று திட்டுகின்றாய் ஆனால் நாம் இரண்டு பேரும் குறுக்கே சென்றது தவறா இல்லையா…?

இதையெல்லாம் அனுபவத்தில் கொண்டு வருகின்றார் குருநாதர்.

“தப்புதான் சாமி…” என்று நான் சொல்கின்றேன். ஆனால் நான் என்ன சாமி செய்தேன்…? நான் ஒன்றும் செய்யவில்லை. நீங்கள் தானே என்னைக் குறுக்கே இழுத்தீர்கள் என்று சொல்கின்றேன்.

நான் எப்பொழுதடா உன்னை இழுத்தேன்…? நீ தான்டா என்னை இழுத்தாய்…! என்று மீண்டும் வம்பிழுக்கின்றார்… மடக்கிப் பேசுகின்றார்.

பஸ் நகரவில்லை என்று சொன்னவுடனே அவன் ஸ்டார்ட் செய்து பார்க்கின்றான் முடியவில்லை. குருநாதர் சிரிக்கின்றார்.

என்னைத் திட்டினான்… அதனால் என் சக்தியால் வண்டியை நிறுத்தி விட்டேன். அதே போன்று நீயும் இன்னொரு வண்டியை நிறுத்துகின்றாயா…? என்று என்னிடம் கேட்கின்றார். நீ இன்னொரு பஸ்சுக்கு முன்னாடி போடா…! பஸ் நிற்கின்றதா இல்லையா பார்க்கலாம்…! என்கிறார்.

என்னைக் கட்டாயப்படுத்தி இன்னொரு பஸ்சுக்கு முன் குறுக்கே போகும்படி தள்ளுகின்றார். அடுத்த பஸ்ஸுக்குக் குறுக்கே நான் சென்றதும் அதுவும் நின்று விட்டது. அதுவும் நகர மாட்டேன் என்கிறது.

இப்படிச் செய்துவிட்டார் குருநாதர். நீ எப்படிடா அதைச் செய்தாய்…? என்று என்னிடம் கேட்கின்றார். அவரே செய்துவிட்டு என்னை இப்படிக் கேட்கின்றார்.

வண்டியை எடுக்க முடியாது… ஓட்ட முடியாது…! நீ அவனிடம் சொல் என்று சொல்கின்றார். ஸொன்ன பின் அந்த வண்டியும் ஓடவில்லை.

வண்டி ஓடவில்லை என்ற உடனே… அந்த இரண்டு டிரைவரும் இது என்னடா…? இரண்டு கிரகங்களும் சேர்ந்து கொண்டு ஏதோ மந்திர வேலை செய்கின்றார்கள். வண்டி நகரவில்லை என்று பயப்படுகின்றனர்…!

ஒரு பக்கம் எனக்கு பஸ்ஸை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷம் வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் இருவருமே திட்டுகின்றார்கள் ஏதோ மந்திர தந்திரங்கள் செய்து பாவிகள் நம்மை வேதனைப்படுத்துகின்றார்கள் என்று திட்டுகின்றார்கள். காதிலே அதுவெல்லாம் கேட்கின்றது.

சந்தோஷமாக வரும் பொழுது இப்படி வருகின்றது ஆனால் அவர்கள் திட்டும் பொழுது அதைக் காதிலே கேட்ட பின் அவர்கள் கை கால் வராதபடி செய்தால் என்ன…? என்ற வேகம் எனக்கு வருகிறது.

நாம் செய்தது தப்பு…! ஆனாலும் அவர்களைக் கை கால் வராதபடி நாம் செய்தால் என்ன…? என்று எனக்கு இந்த உணர்வு வருகின்றது.

அப்போது தான் என்னிடம் கேட்கின்றார் குருநாதர். ஏண்டா…? தப்பு நீ செய்கின்றாய் ஆனால் உன்னுடைய எண்ணம் எப்படிப் போகின்றது பார்…! இப்படி ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் உணர்ச்சிகள் எப்படி ஓடுகின்றது…?

1.தன் உடலைக் காக்க… கௌரவத்தைக் காக்க
2.இந்த உணர்வின் எண்ணங்கள் தவறைத் தயங்காதபடி செய்யச் சொல்கின்றது.

இதே உணர்வின் தன்மை உன் உடலில் ஏற்பட்டால் அவர்கள் இடும் சாப அலைகள் சாதாரணமானதல்ல.

அவன் படும் வேதனை உணர்வுகள் அவனில் விளைந்தது உன் செவிகளில் பட்டு இப்படிப் பேசுகின்றானே என்று வேகமாகத் தாக்குகின்றது உன்னுடைய இரத்தத்தில் கலக்கின்றது… கலந்தது அணுக்களாக விளைகின்றது.

இன்று உனக்குத் தெரியாது… ஆனால் அடுத்து என்ன ஆகும் தெரியுமா…? என்று இந்த உணர்ச்சியின் போர் முறைகள் உள்ளுக்குள் கலக்கங்கள் ஏற்படுவதை அப்படியே உணர்த்துகின்றனர் இன்றைய செயல் நாளை என்ன ஆகும்…?

1.உடலுக்குள் நல்ல அணுக்களுக்கும் நுகர்ந்த அணுக்களுக்கும் போராட்டங்கள் ஆகி
2.உன் உடலில் நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அது பலவீனம் அடையப்படும் பொழுது
3.மூச்சு இழுக்கின்றது… திணறலாகின்றது நடக்க முடியவில்லை ஓட முடியவில்லை வேலை செய்ய முடியவில்லை என்று
4.இத்தனை நிலையும் உனக்குள் நாளை வரும் என்று சொல்கின்றார்… அங்கே அப்படியே காட்டுகின்றார்.

இது எதனால் வருகின்றது…?

நீ தவறு செய்தாயா…? அவன் தவறு செய்தானா…? இந்தச் சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்யும்படி நான் தூண்டினேன். அதன் உணர்வின் தன்மை இவ்வாறு ஆகிவிட்டது.

இப்படி வரும் பொழுது அவருடைய நிலை என்ன ஆகிறது…? நம்முடைய சந்தர்ப்பங்கள் பின் விளைவு என்னென்ன ஆகிறது…? இதற்கு நான்கு மணி நேரம் உபதேசங்களைக் கொடுக்கின்றார் குருநாதர்.

பதட்டமும் பயமும் எனக்குள் வருகின்றது.
1.தான் பேசியது சரியா இல்லையா என்று
2.உள் மனதில் இப்படி வினாக்கள் தூண்டும்படி உணர்த்திக் காட்டுகின்றார்.

ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால் நாம் நல்லதைத் தான் செய்து கொண்டிருப்போம். திடீரென்று ஏதாவது ஒன்று வந்துவிடும்.

நாம் தவறு செய்திருப்போம் ஆனால் நாம் தப்பிப்பதற்காக அடுத்தவனைக் குற்றவாளி ஆக்குவதற்கு என்ன வேலையோ அதை எல்லாம் செய்வோம்.
1.அடுத்தவனைக் குற்றவாளி ஆக்கத் தான் பார்ப்போமே தவிர
2.நாம் தவறு செய்தோம் என்பதை உணர முடிவதில்லை.

ஆக சக்தி இருக்கிறது என்றால் அதை வைத்து நீ அடுத்தவர்களுக்குத் தப்பு செய்யத்தான் முடியுமே தவிர நல்லதை உன்னால் உருவாக்க முடியாமல் போகின்றது என்று அங்கே உணர்த்திக் காட்டுகிறார்.

இந்த உடலைக் காக்க உணர்வின் தன்மை ஆனால் தவறை நீக்கி அவன் நல்வழி வரவேண்டும் என்று தான் தவறு செய்து விட்டோம் என்ற இந்த உணர்வை மாற்றி
1.என்னை அறியாத நிலைகள் இருந்து விடுபட வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை எண்ணினால் நமக்குள் வளரும் தீமையை முதலில் தடுக்கலாம்.

சாதாரண மனிதனாக இருந்தால் இது முடியாது.

நல்ல நிலைகளை உருவாக்க வேண்டும் என்றால் தியானத்தின் வழிகளில் வரப்படும் போது இது போன்ற சந்தர்ப்பம் நிகழ்ந்தால் ஒருவனுக்குத் தொல்லை கொடுக்கவோ… பிறரை இம்சிக்கவோ அல்லது இது போன்ற மற்ற உணர்வுகள் தோன்றினால் அதை எதைக் கொண்டு அடக்க வேண்டும்…?

அங்குசபாசவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த நஞ்சை வென்ற உணர்வுகளை வைத்துத்தான் அடக்க வேண்டும். இப்படித்தான் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் நமக்குள் வரும் தீய விளைவுகளையும் நம்மை அறியாத உடலில் ஆட்டிப்படைக்கும் நோய்களையும் மாற்றிக் கொள்ள முடியும்.
1.பண்பு உள்ளவர்களாகவும் நாம் மாற முடியும்
2.பிறரைக் காத்திடும் சக்தி பெற்றவர்களாகவும் வாழ முடியும்.

எரியடி தண்டம்

 

இன்றைய மனித வாழ்க்கை புற வாழ்க்கைச் செயலில் அதி ஆவல் எனும் பற்று கொண்டு… பிறப்பு எனும் சுழற்சி வட்டத்தில் உழல்கின்ற தன்மையாக உழன்று கொண்டுள்ளது.

ஆனாலும்… “உயிர் துடிப்பு எனும் ஜீவன்…” வலுக்கொண்டிடும் வளர்ப்பைச் செயலாக்கிடும் அக வாழ்வு இன்பத்தின் சுரப்பாகப் பேரானந்த பெருவாழ்வு வாழ்ந்திட… வானியலாக வழி அறிந்து உயர்ந்திடும் செயலாக்கம் தான் என்ன…?

உடல் கடந்து… அகம் ஜெபிக்கும் உணர்வெண்ணத் தியானத்தில்… மேலும் ஓர் படி அறிந்ததைத் தெளிதலே சிறப்பு.

காட்சி:- மதகு நீர் வற்றிய வண்டல் மண்ணும்… கோடையின் வெப்பத்தில் ஆற்றின் மணல் ஊற்றில் சுரக்கின்ற நீரை மக்கள் கொண்டு செல்லுதல்.

இது ஆத்ம பலம் அறிவுறுத்தும் பாடம்…!

மதகு நீரடி மண் கோடையின் வெப்பத்தில் மண்ணின் உள்ளிட்ட நீரும் வரும் வழியாகக் காய்ந்து அந்த மண்ணில் நீ சுரந்திடாத தன்மையாக வெடிப்பு ஓடிக் காணப்படுகின்றது அல்லவா.

இதுவே இந்தக் கலியில் வாழும் மனிதன் கொண்ட மன எண்ண நிலையப்பா…!

கோடையிலும் மேன்மை சிறப்பு உருவாய் என்று உரைத்திட வந்ததே…
1.வாழும் வாழ்க்கையில் கோடையின் அதி வெப்பம் போல் எண்ணத்தின் மோதல்கள் இருந்திட்டாலும்
2.நாம் கொண்ட அன்பு எனும் ஊற்று மனத்தின் நிறைவாகத் தன்னுள் ஆத்ம பலம் கூட்டிடும் தேவையின் பூர்த்தியைச் சிறக்கச் செய்வதோடு
3.அது மற்றவருக்கும் அமுத நீராகிய ஞானத்தைப் போதனையாக வழங்கிடும் ஆசான் என்று அழைக்கப் பெறும் போதினியாக
4.தன்னை உயர்த்திக் கொள்தலே மெய்ஞான விழிப்பின் பலனாகப் பெற்றுச் சுடர்ந்திடும் ஞானத்தின் அமுத ஊற்று.

இந்த நிலையின் வழியறிந்து பெறுகின்ற மனத்தின் திறன் எத்தன்மையாக விளங்கிடல் வேண்டுமோ… அதுவே எரியடி தண்டம்…!

மனத்தின் சஞ்சலம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எண்ண ஓட்டத்தின் வேகம் நிலை பேர் அறியாத செயலாகக் கொள்கின்ற வழித்தொடர் ஈர்ப்பின் நிலை கொண்டு நாம் அளித்திட முடியும்.

கரவுகின்ற (வஞ்சனை கொண்ட) மனம் எண்ணத்தின் செயலால் அன்பின் சிறப்பு அற்றுப்போய்விடும்.

மதகு நீர் குறைந்து விட்டால் நீர் வற்றிய பின் ஆங்கு படிந்துள்ள வண்டல் மண்… சூரியனின் வெப்பத்தால் இறுகி வெடிப்பு ஓடிக் கெட்டிப்பட்ட தன்மையாக ஆன பின்… அந்த மண்ணைத் தோண்டினால் நீர் சுரந்திடும் ஊற்று நிலை காணுவது அரிது.

அதுவே கரவுகின்ற மனம் மதகின் நீரடி மண்ணாக அன்பின் சிறப்பு அற்றுவிடும் என உரைத்திட வந்தோம்.

கோடை எனும் வாழ்க்கையாக ஆற்றின் நீரடி மணலாகத் தோண்ட சுரந்திடும் ஊற்று நீர் போல் “அன்பின் சிறப்பு” கொள்கின்றாய். அத்தகைய மனத்தின் பாங்கையே மேன்மை சுரப்பு உருவாய் என்று அழைக்கின்றோம்.
1.உயர் ஞானத்தின் வழி உயர்வெண்ண செயல் வான் தொடர்பாகப் பெற்றால்
2.அந்த அன்பின் சிறப்பு… எரியடி தண்டமாக்கும் உன்னை.

அக்கினியை அக்கினியால் அணைத்திட முடியாது…! எரிகின்ற அக்கினியை எரிகின்ற கைப்பந்தம் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக வீசிப்பார்.
1.மேலும் அக்கினியின் சுடர்தான் பிரகாசிக்குமே தவிர அது குறைவு படாது.
2.அந்த நிலையே உடல் கடந்து அகம் ஜபித்திடும் சூட்சும நிலை…!

இன்னும் விளங்கக் கூற வேண்டும் என்றால் இயேசுநாதரை சிலுவையில் அறையப்பட்ட பொழுது… உடல் துன்பம் உணர்ந்திடாத நிலையில் புற உடல் தவிர்த்து… அவர் உடல் வாழ்ந்த விதம் என்ன…?

அக்கினியில் போடப்படும் பொருள்கள் எல்லாமே சருகாகி அக்கினியை மேலும் அது வளர்க்கும். அது போல் தான் எத்தகைய துன்பங்களும் ஆத்ம ஞானிகளைத் தாக்கிடாது.
1.அவர்கள் கொண்ட எண்ணத்தின் வலு வீரியம் உடல் கடந்து…
2.அக உடல் வாழ்வாங்கு வாழ்ந்ததைப் போல் அன்பு கொண்டே உங்களையும் அழைக்கின்றோம்.

சுவரினை நோக்கி வீசப்படும் பந்து சுவற்றில் மோதுண்டு… எய்தப்பட்ட செயல் எய்த இடத்திற்கே திரும்புகின்ற செயல் போல்… அழுக்காறு எனும் பொறாமை குணமும்… சினம் என்று உரைக்கின்ற கோபத்தின் குணமும் கொண்ட உலகோதய நடைமுறை வாழ்க்கையில் உள்ள மக்கள் வெளிப்படுத்தும் அத்தகைய உணர்வுகள்… உண்மையான உயர் ஆத்ம ஞானத்தை வளர்த்திடல் வேண்டும் என்று செயலுறும் ஆத்ம ஞானிகளை அது நெருங்கிடாது.

உறுதியாக உரைக்கின்ற வாசகம் இது.

இன்றைய மனிதர்களின் மனோபாவனை… நடைமுறை வாழ்க்கை எவ்வாறு இருக்கின்றது…?

பாலைவனத்தில் மணல் குன்றைப் பார்த்து இருக்கின்றாய் அல்லவா…! இன்று ஓர் இடத்தில் இருக்கும் அந்த மணல் குன்று மறுநாள் வேறொரு இடத்தில் தோன்றுகின்றதே அது எப்படி…?

காற்றால் இடம் மாறும் மணல் குன்று போல் தான் இன்றைய மனிதனின் வாழ்க்கை.

ஆனால் நாம் உரைத்திட வந்திட்ட உயர் ஞானம் கடைபிடிக்கும் மனித மனத்தின் நிலை அதுவே உறுதி மலை.
1.மனத்தின் திடத்தைத் தான் உரைக்கின்றோம்
2.உறுதி மலை மேல் நின்று அகன்றிடாத் தொடர் ஜெபத்தால்
3.வானியலாகச் சக்தி பெற்று உயர்ந்திட எமது ஆசிகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

தன் குழந்தையைக் காக்கத் தாய் தந்தையர்கள் எத்தனையோ வேதனைகள் படுகின்றார்கள். பிள்ளைகளுக்காக வேண்டிச் சேமித்து வைக்க வேண்டும் என்ற நிலை தான் வருகின்றது.

நாம் கஷ்டப்பட்டோம் ஆனால் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.. ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என்று விரும்புகின்றனர்.

பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டுமென்று எண்ணும்போது
1.பிறர் வேதனைப்படுத்தும் உணர்வுகளையோ வேதனையான செயல்களையோ பார்க்கப்படும்போது
2.தன் குழந்தையைக் காக்க வேண்டுமென்ற உணர்வு தான் வருகின்றது
3.இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு முதலில் உள்ளே நுழைந்து விடுகின்றது.

அதே போல் நாம் எண்ணியபடி குழந்தை வளர வேண்டும் என்று விரும்புகின்றோம். பள்ளியில் அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே… எதிர்காலத்தில் எப்படித்தான் இவன் வாழப்போகின்றானோ…! என்ற வேதனை வருகின்றது.

வேதனை வரும்போது அடுத்து கோபம் வரும். இந்த உணர்வு உடலிலே பட்டபின் சிவ தனுசு (உடலைக் காக்கும் உணர்வு) என்ன செய்யும்…?

1.இப்படிச் செய்கின்றானே…! என்று சொல்லி நாம் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது
2.அது அவனைப் போய்த் தாக்கும்.

எது…?

நம்மை அறியாமலேயே நாம் இந்த ஆயுதத்தைப் (சிவ தனுசை) பயன்படுத்துகின்றோம்.

அப்போது நமக்குள் உருவானது ஓ…ம் நமச்சிவாய…! உடல் சிவமாகின்றது. மீண்டும் சிவாய நம ஓம்…! “இப்படிச் செய்கின்றானே…!” என்று அவனைச் சொல்லப்படும் போது அதே உணர்ச்சிகள் அங்கே பாய்கின்றது.

ஆக…
1.அவனைத் திருத்துவதற்கு மாறாக அவன் செயலையே மீண்டும் ஊக்குவிக்கும் நிலைக்குத்தான் நாம் செல்கின்றோமே தவிர
2.அவன் செயலை நல்லதாக மாற்றும் தன்மை இல்லாது போய்விடுகிறது.

குழந்தை படிக்கவில்லை என்றால் உடனே என்ன செய்கின்றோம்…?

அவன் எதிர்காலத்தைப் பற்றி வர்ணிக்கின்றோம். அவன் படிக்கவில்லையே என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்துக் கொண்டபின்… இப்படி இருக்கின்றான்… எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்ற வேதனை வருகிறது.

வேதனையின் தன்மை வரப்படும்போது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம். அந்த சிந்திக்கும் தன்மை இழந்தபின் திருப்பிப் பேசுகின்றோம். அதுதான் ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம்.

வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வரப்படும்போது வாலி ஆகின்றது.
1.வாலி என்ற உணர்வுகள் உள்ளே சென்று
2,நம் நல்ல குணங்களைச் செயலிழக்கச் செய்து அது வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்ற பின் “நம் குழந்தை தான்…” என்று காக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட அந்தச் சந்தர்ப்பத்தில் அவனை உதைக்கத்தான் சொல்லும்…. அல்லது அவனைத் திட்டச் சொல்லும்… அவனைச் சாபமிடச் செய்யும்…!

இதை எல்லாம் அவன் நுகர்ந்தால் என்ன செய்யும்…? அவன் என்ன செய்வான்…?

நம்மைப் பார்த்தாலே ஜிர்…! என்று வருவான். ஓ…ம் நமச்சிவாய சிவாயநம ஓ…ம். அதாவது இராமன் அம்பை எய்தால் தன் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான்.
1.நாம் எதைச் சொல்கின்றோமோ
2.திருப்பி அந்த பதில் தான் நமக்கும் வரும்.

எவ்வளவோ சொத்து வசதி எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு தடவை உங்கள் பையனைத் திட்டிப் பாருங்கள். அங்கிருந்து என்ன பதில் வரும்…! என்று தெரியும் உங்களுக்கு.

இரண்டாவது தடவை மூன்றாவது தடவை திருப்பிச் சொல்லிச் சொல்லி இரண்டு பேரும் கடைசியில் எதிரி ஆகிவிடுவார்கள்.

என் பிள்ளையாவது..? என் அம்மாவாவது என் அப்பாவாவது..! என்று இப்படித்தான் வரும். இது தான் சிவதனுசு… தன் தன் உடலைக் காக்க இந்த உணர்வின் நிலைகள் எதைப் பெற்றதோ இந்த உடலைக் காக்கத் தான் (நுகர்ந்த உணர்வுகள்) அது எண்ணுகின்றது.

ஆனால் விஷ்ணு தனுசு…! இந்த உயிரின் நினைவு கொண்டு உடலில் வந்த தீமைகளை நீக்கி ஒளியானது துருவ நட்சத்திரம். வாழ்க்கையில் வந்த இருளை அகற்றிப் பேரொளியாக ஆனது தான் அங்கே…!

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று
1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி
2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.
4.அப்பொழுது நமக்குள் வந்த கோபத்தையும் வேதனையையும் அது அடக்குகின்றது.

நற்குணங்களின் வலுக் கொண்டு தீயகுணங்களை விழுங்க வேண்டும்

 

நதி ஜீவ நதி – புதுப்புனல் பெருகிடும் மகா நதியின் மூலம் – சிறு துளி பெருவெள்ளம்.

சுரந்திடும் நீர்த்திவலைகள்… ஒன்று ஆயிரமாகப் பல்கிப் பெருகி ஓடிடும் சிற்றாறாக… ஓடி அதனுடன் இணைந்து கொண்டிடும் பல சிற்றோடை நீர் நிலைகள் மாநதியாக உருவெடுத்துக் கடலுக்குள் சங்கமிக்கின்றது.

ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் செயலும் அதே நிலைதான்…!

ஞான ஆற்றல் கொண்டிடும் அறிவின் கருவூலம் ஆத்ம பலம் எனும் சேமிப்பு நிலையைக் காட்டிடவே… மனித அறிவின் விஞ்ஞானம் பகுத்தறிவின் ஆற்றலின் வளர்ப்பால் இயற்கையை வென்று காட்டிடும் மதிநுட்பம்… நதி ஓட்டத்தின் குறுக்கே அணையை நிறுவி நீரின் சேமிப்பால் பயிர்களை வளர்க்கும் முறைகள் கண்டது.

மெய்ஞானத்தின் நெறிப்பயிர் வளர்க்கும் பக்குவம் உயிராத்மா பலம் பெற்றிடும் அமில முலாமை ஜீவகாந்த ஒளி சக்தியின் வலுவை உலகோதய உணர்வுகள் மோதிடும் எந்த நிலையிலும் விழிப்பாற்றல் குறைவுபடும் செயலுக்கே செயல் கொண்டிடும் மன எண்ணத்தின் நிலையை விளக்கிடவே முன்பு காட்டிய நிலைகள். ஆனால்
1.வானியல் தன்மைக்கே செயலுறுருங்கால்
2.மெய்ஞான விழிப்பாக வளர்த்திடும் சேமிப்பே “அதி உன்னதமான பொக்கிஷமாகும்…”

மலருக்குள் தேன் இருக்கும் வரை அது மது. தேனீக்கள் அதனை உண்டு உமிழ்கின்ற செயலில் அதுவே மருந்து. அது செயல்படும் தொழிலோ இயற்கை… அதன் செயல்பாட்டின் பொருளை நடத்திடும் மாற்று குண நிலைகள் செயற்கை.

மரத்தின் உச்சியில் தேன் கூட்டின் அடையில் சேமிப்பாகிடும் மருந்து போல் நாம் செயல் கொள்ளும் “மெய்ஞான விழிப்பாக்கும் ஈஸ்வர தியானத்தால் பெற்றிடும் உயர் நுண் மின்காந்த ஒலி அலைகள்…” சமைப்பின் ஒளியாக ஆத்ம முலாமின் சேமிப்பாகச் செயல்படுவதே ஆக்கம்.

1.நற்குணங்களும் அசுர குணங்களும் கொள்ளப்படும் செயலில்
2.அறிவை அறிவுறுத்தும் ஞானம் உலக நடைமுறையில்
3.சராசரி மனிதனுக்குப் பிடர்தலின் குணங்களாக அவன் வலுக் கொண்டிடும் எந்தக் குணங்களோ
4.அவன் சிந்தனை வசமாகும் வரை சுவைகள் வெளித் தோன்றாது.

ஆனால் ஆத்ம பலம் பெற்றிட எண்ணி ஏங்கிடும் ஆத்ம ஞானிகளுக்கு அறிவின் விவேகம் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் தெய்வீக குணங்களால் தன் உயர்வைத் தானே கூட்டிக் கொள்ள… “அல்லாதவைகள் (தீமைகள்) தானே விலகும் என்பதே மாண்பு….”

உணர்வுகள் கூட்டிக் கொள்ளும் செயலுக்கு ஒரு உவமானம்.

மது வண்டின் தேன் ஒரு துளி பாறை மேல் சந்தர்ப்பத்தில் படர்ந்திட… மலையில் வாழ்ந்து வரும் ஓர் கரடி அதனைச் சுவைத்துவிட… மேலும் துளித்திடும் தேனால் கவரப்பட்டுக் கரடி அந்தத் தேன் கூட்டையே கேடாக்கத் துணிந்த செயலுக்கு இருவித நிலைகளை உரைத்தோம்.

1.தீதெண்ண குணங்கள் நற்குண சேமிப்பின் சக்தியைச் சுவைத்திட்டால்
2.நாம் வளர்த்துக் கொள்ளும் அந்த குணங்களுக்கே வலு வீரியமாகச் செயல் கொண்டு
3.மனித ஞானம் வளர்ப்பில் தேக்கத்தைப் பெறும்.

ஆனால் தீதெண்ண உணர்வுகள் மோதிட்டாலும்… ஜெபித்திடும் தியான வழியில் நற்குணங்களின் வலு வீரியம் செயல் கொண்டு தீதெண்ண நிலைகள் நீக்கிட…
1.கூட்டையே சிதைத்திடும் கரடியை… தான் கொண்ட வீரியத்தால் தேனீ கொட்டி வீழ்த்திட்ட நிலை போல்
2.அல்லாதென அமில நிலைகள் அகல… நல்லவை பெருகிடும் அமுதமாக
3.சேமிப்பின் ஆற்றல் பெருகி வழிகாட்டிடும் உபாயமாக அதுவே “வான் திறப்பின் திறவுகோலாகின்றது…”

நோயை நீக்குவதற்கு யாம் கொடுப்பது “வாக்குகள் தான்…” மருந்து அல்ல…!

 

அடிக்கடி யாம் (ஞானகுரு) வற்புறுத்துவதெல்லாம் நாம் தேட வேண்டிய அழியாச் சொத்து “அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத்தான்…”

அதை எடுத்துக் கொண்டால் எத்தகைய கஷ்டங்கள் வந்தாலும் அதை மாற்றும் தன்மை உண்டு

நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அந்தந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்கி அது செயலாக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ நம் உடல் ஒரு அரங்கம்… உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயங்குகின்றது
2.ஆகவே நாம் பேரருள் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால்
3.அந்த உணர்ச்சிகள் அரங்கநாதனாக மாறி தீமைகளை அகற்றிடும் உணர்வின் தன்மை நம்மை ஆளும்.
4.தீமைகள் புகாது தடுக்கும் அந்தச் சக்தியையும் நாம் பெறுகின்றோம்

பல முறை உங்களுக்கு இதைச் சொல்லி உள்ளேன்.

நீங்கள் எம்மை எண்ண வேண்டிய முறையே… இந்த உபதேசத்தை மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அதன் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எனக்கு உடல் நலம் ஆக வேண்டும் என்று “மனதில் எண்ணி ஏங்கி இருந்தாலே போதுமானது…”

இந்த உணர்வுகள் உங்கள் உயிரான அரங்கத்தில் பட்டு அது நாதங்களாக உடல் முழுவதும் பரவுகின்றது. ஏங்கிப் பெறும் பொழுது அந்த சக்திகள் உங்களுக்குள் அதிகமாகப் பெருகுகின்றது.

இந்த உணர்வு வளர நிச்சயம் உங்கள் நோய்கள் அகலும்

ஆனால் எம்மை எண்ணும் பொழுது “இப்படி இருக்கின்றதே… வேதனையாக இருக்கின்றதே…” என்று இப்படித்தான் சில பேர் எண்ணுகின்றார்கள்.

ரொம்ப நாளாக இந்த நோய் இருக்கின்றது…! என்று எம்மிடம் இப்படிக் கேட்டால் எந்த வாக்கு உங்களுக்குள் பதிவாகும்…? இப்படிக் கேட்பதையே ஒரு பழக்கமாகவும் வைத்திருக்கின்றனர்.

ஏனென்றால் உங்கள் தீமைகள் அகல வேண்டும் நீங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று தான் நான் உங்களுக்கு அந்த வாக்கினைக் கொடுக்கின்றேன்.

அந்த அடிப்படையில் நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குள் அது சரியான முறையில் வேலை செய்யும். நோய் நீங்க வேண்டும் என்றால் நான் உங்களுக்கு மருந்து சொல்வதற்கு வரவில்லை.

1.சொல்லின் வாக்காலே உங்களுக்கு அந்த நோய் போகும் உடல் நலம் பெறுவீர்கள் என்று தான் கொடுக்கின்றேன்.
2.உங்களுக்குள் பதிவாகி அதை மீண்டும் எண்ணினால் அதுதான் நல்லதாக வேலை செய்யும்.

மருந்து கொடுத்து அல்ல…!

1.மருந்துக்கு முன்னாடியே இந்த வாக்கு உள்ளே சென்று வேலை செய்யும்.
2.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…! என்பது போல் யாம் கொடுக்கும் வாக்கை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
3.இந்த உணர்வு அந்த நோயைத் தீர்க்கும் வலிமையாக உங்களுக்குள் கூடுகின்றது.

அந்த வலிமை கொண்டு நீங்கள் எத்தகைய தீமையையும் நீக்கிடும் சக்தி பெறுகின்றீர்கள். அதைப் பெறச் செய்வதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் யாம் சொல்கின்றோம்.

கோவிலுக்குச் சென்று சாமிடம் வரம் கேட்பது போல் தான் எம்மிடமும் கேட்கும் பழக்க வழக்கங்கள் வந்து விடுகிறது. இதையெல்லாம் முழுவதுமாக மாற்றிப் பழகிடல் வேண்டும்.

எம்மிடம் கேட்க வேண்டிய முறையே நோயிலிருந்து விடுபட வேண்டும் அதற்குண்டான அருள் சக்தி வேண்டும் அதற்குண்டான உபாயங்கள் வேண்டும்… என் பையன் நல்லவனாக வேண்டும் என்று தான்…!

அதன்படி நடக்கும் என்று வாக்கினைக் கொடுத்துப் பதிவு செய்தால் உடனடியாக அது நல்லதாகும்.

ஆகவே எதுவாக இருந்தாலும் அது நல்லதாக வேண்டும் நலம் பெறக்கூடிய சக்தியாக வரவேண்டும் அந்த அருள் வழியை நாம் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டால் அதன்படியே நடக்கும். நீங்கள் எண்ணியபடி அது நல்லதாக அமையும்.
1.நான் பதிவு செய்தால்… உங்கள் எண்ணம் அதனுடன் இணைந்து
2.அந்த உணர்வினை இயக்கி உங்களுக்கு நிச்சயம் நல்லதாகும்.

பல முறை இதைச் சொல்கின்றேன். யாரும் இதை அதிகம் சட்டை பண்ணுவது இல்லை.

ஏனென்றால் நீங்கள் எண்ணுவது எதுவோ உங்கள் உயிர் அதைத் தான் இயக்குகின்றது. இந்த உணர்வுகள் தான் உடலில் படர்கின்றது. அது தான் உங்களை ஆட்சி புரிகின்றது என்று பல முறை நான் சொல்கின்றேன். நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று தான் பெரும் பகுதியானவர்கள் எண்ணுகின்றார்கள். ஆகவே “அருள் வழியில் வாழ்க்கை நடத்துவோம்…” என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அருள் வழியில் வாழக் கற்றுக் கொள்தல் வேண்டும்.

எத்தனையோ செல்வங்களை நாம் தேடி வைத்திருந்தாலும் நம்முடன் அது வருவதில்லை. இந்த உடலுக்குப் பின் என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை அடைவதே முழுமை…!

1.இந்த உயிர் தோன்றி எத்தனையோ கோடி இன்னல்களில் இருந்து தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்து மனிதனான பின்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் கோடி உணர்வுகளையும் வெல்லும் சக்தி இந்த மனிதனுக்குத் தான் வருகின்றது.
3.அதை வென்று விட்டால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது… ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

அதற்கு நாம் தயாராக வேண்டும்.

இதன் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் நமக்கு எண்ண வலு கிடைக்கின்றது. சிந்தித்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்கின்றது… அருள் ஒளியைப் பெருக்கச் செய்கின்றது அருள் வாழ்க்கை வாழச் செய்கின்றது நம் பார்வையில் சர்வ தோஷங்களும் போக்கப்படுகின்றது பிறருடைய தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் சக்தியும் வருகிறது.

ஆகவே இதைச் சீராக வளர்த்துக் கொள்ளுங்கள்
1.அருள் வழியில் வாழ்வோம்
2.அருள் வழியில் அனைவரையும் வாழச் செய்வோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம் குழந்தை தவறு செய்கின்றான். அதனால் நமக்கு வேதனை வருகின்றது. அந்த வேதனை நம் உடலுக்குள் போனால் இது ஓ…ம் நமச்சிவாய என்று உடலாகின்றது (சிவமாகின்றது).

அந்த உணர்ச்சியின் உணர்வுகள் அங்கே எண்ணங்களாகின்றது சொல்லாக வரப்படும் பொழுது இந்த உணர்ச்சிகள் அங்கே எப்படித் தூண்டுகின்றது…? உணர்வின் தன்மை அணுவாகும்போது நமக்குள் அந்த அணுத்தன்மை எப்படி இயங்குகின்றது…? என்பதைத்தான் அங்கே இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றான்.

இதெல்லாம் நான் (ஞானகுரு) எதற்குச் சொல்கின்றேன் என்றால் பெண்கள் குடும்பப் பற்றுடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாசத்தால் நாம் எப்படியோ நினைக்கின்றோம். ஆனால் சில குழந்தைகளால் எத்தனையோ சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதே மாதிரி தொழில் நடத்தும்போது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நன்றாக நடக்க வேண்டுமென்று நினைக்கப்படும்போது நம்மை அறியாமலேயே வியாபாரம் கம்மியாகிவிட்டது என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.
1.இந்த வாலி உள்ளே புகுந்துவிடுகிறான்.
2.இது நம் நல்ல குணத்தையே கெடுக்கின்றது.

வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். ஒருத்தர் மேல் அதிகமான அன்பையும் பண்பையும் பெற வேண்டும்… சிநேகிதமாக வாழ வேண்டும்… ஒருத்தருக்கொருத்தர் கொடுத்து வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்.

ஆனால் அது சரியாக வரவில்லை என்றால் வேதனை என்ற உணர்வு வந்துவிடுகின்றது. அந்த வாலி என்ற நிலைகள் புகுந்து விடுகின்றான். அந்த வலிமை உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணத்தைப் பாதுகாக்கும் நிலை இல்லை.

ஆக பாதுகாக்க முடியவில்லை என்றால்…
1.நாம் நுகர்ந்த உணர்வோ அது நம் உடலுக்குள் வேதனைப்படுத்தும் கருவாக உருவாகி
2.வேதனை என்ற உணர்வு பிரம்மமாகி அது தன் வேதனையை உருவாக்கும் அந்தச் சக்தியாக
3.தன் இனத்தைப் பெருக்கும் சக்தியாக மாற்றிவிடுகின்றது.

இயற்கையின் நியதிகள் இவ்வாறு தான் இருக்கின்றது. ஆனால் நாம் இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது இராமயாணம்.

ஒரு பாறையை வைத்து மேலே கல்லை வைத்திருப்பான். படம் போட்டுக் காண்பித்து அதாவது துவைதம் உருவ நிலையைக் காட்டி அருவ நிலையை நமக்குள் புரிய வைக்கின்றான்.

குகைக்குள் இருக்கின்றான் வாலி…! அரக்கர்களிடம் இருந்தான் அவனுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கின்றது.

அப்போது இராமன் என்ன செய்கின்றான்..?

அவன் (வாலி) செயலைப் பார்க்கவில்லை. அந்தக் குகைக்கு மேல் இருக்கும் பாறையை எடுத்து மூடிவிட்டான். மூடி விட்டால் வாலி வெளியில் வருவானா…? முடியாது…!

நம் குழந்தை தவறு செய்கின்றது அல்லது கடையில் நஷ்டமாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கே வேதனை என்ற உணர்வு வரப்படும்போது அது வலிமை பெற்றுவிடுகிறது.

1.அப்பொழுது சிந்திக்கும் திறமை வருகின்றதா…? வியாபாரத்தைச் சீராக நடத்த முடிகின்றதா…?
2.இந்த உணர்வின் தன்மை நாளை என்ன ஆகுமோ…! என்ற பயம் வருகின்றது
3.நடுக்கம் ஆகின்றது… சிந்தனை இல்லாமல் போகின்றது…!

இந்த எண்ணங்கள் நமக்குள் எப்படி உருவாகின்றது…? நமக்குள் தீமையின் வலிமை எப்படிக் கூடுகின்றது…? நம் மகிழ்ச்சி என்ற உணர்வு எப்படித் தடைப்படுகின்றது…?

நாம் இதை எல்லாம் எப்படி மாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டித் தான் இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

அதாவது வேதனையை நுகர்ந்தால் அடுத்த கணமே கண்ணின் நினைவு கொண்டு
1.ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தினை அங்கே நிலை நிறுத்தினால்
3.அந்த வேதனை என்ற உணர்வு உட்புகாது நின்றுவிடும்.

நாம் ஈர்க்கத் தவறிய வேதனைகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து சென்று விடும்.

நம் உடலுக்குள் போகவில்லை என்றால் அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் வராது… வேதனை என்ற அணுவும் நமக்குள் உருவாகாது. வேதனையை உருவாக்கும் அணுவின் தன்மை கருவாகவும் ஆகாது…! நம் சிந்தனையும் தெளிவாகும்.

அப்போது தொழிலைச் சீராக்கும் உணர்வுகளும் குழந்தைக்கு எப்படி நல் வழி காட்ட வேண்டும் …? என்ற தெளிந்த உணர்வுகளும் நமக்குள் தோன்றும்.

குருதேவரின் விளையாட்டு…! என்று எண்ணலாமா…?

 

மனிதன் என்றே பெயர் பெரும் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற உயிராத்மா தான் தன் சுய வளர்ப்பால் வளர்ந்து… உயர் ஞானத்தின் தொடரில் தன்னைத்தான் உணரும் பக்குவ கதியால்… தன்னை வளர்த்துக் கொள்ளும் ஆற்றலில் உணரும் அனுபவ உயர் ஞானமாகத் தன்னுள் தெளிந்து… மனித குல சமுதாய நன்மைக்குத் தான் கண்ட பேரின்ப அனுபவ லயத்தை உவப்புடன் உலகினுக்கு ஈந்து… மனித மனத்தின் திறன் எண்ண வலுவால் உயர்ந்திட… உயர்வெண்ண மனித குலத்தின் நலன் நாடும் அன்பு இராஜ்ஜியமாக இக்கலியில் மனிதன் வாழ்ந்து காட்டிவிட்டால்… “சப்தரிஷிகளின் செயல்களுக்கே சக்தி அளித்திடும் மெய்ஞான விழிப்பு ஏற்பட்டு விடுமப்பா…!”

1.”உற்றுறுத்துக் கேட்டலும் அதிசயத்து நோக்கலும்…” எப்படி எல்லாம் நம் ஆத்மாவை கேடுறுத்தும் என்று ஏற்கனவே படிப்படியாக்க் கூறி வந்துள்ளேன்
2.நாம் கூறும் வளர்ச்சியில் வளர்ந்து காட்டிடும் மெய் வித்துக்களே இந்தக் கலியில் தேவையப்பா.

இதை அறிவுரை என்றே எடுத்துக் கொள்தல் வேண்டும்.

அனுபவங்கள் கொண்டே அறிவுறுத்தும் தன்மைகளில் மெய்ப்பொருளை உணரல் வேண்டும் (இது மிகவும் முக்கியம்). குருதேவரின் விளையாட்டு…! என்ற எண்ணம் கொண்டால் அங்கே நடந்த அனுபவத்தைப் பார்த்தாய் அல்லவா.

தாய் தன் நகையைக் கழற்றி மகனிடம் கொடுக்கின்றாள். மகன் அதைத் தரையில் வைத்து விட்டுத் தியானத்தில் ஈடுபடுகின்றான். ஒரு சிறு எலி ஆனது அதைத் தன் வளைக்குள் இழுத்துச் சென்று விடுகின்றது.

திரும்பி வந்த தாய் நகை எங்கே…? என்று கேட்கிறாள். மகன் தேடுகிறான்… தாயும் தேடுகிறது…! தியானத்தின் சக்தியில் வலுக்கொண்ட குடும்பம் தாய் தன் மகனைச் சந்தேகிப்பாளா…?

மகன் சிரித்துவிட்டு “இது குருதேவரின் விளையாட்டு…” என்று கூறுகின்றான். தியானத்தின் மூலம் காட்சியில் எலி வளையில் நகை இருப்பதை இருவரும் பார்க்கின்றார்கள்.

தேடும் பொழுது நகையை வளையில் கண்டு எடுக்க மீண்டும் “இது குரு தேவரின் விளையாட்டு…” என்றே கூறுகின்றான்.

ஆக விவேக உணர்வு கொண்டு நிதானத்தைக் கூட்ட வேண்டுமப்பா. அவனும் மெய்ப்பொருள் நாடும் நன்னிலை பெற்றவன்தான்.
1.எதையும் அலட்சியப்படுத்தி விடாமல்
2.சிறு பிராணியின் செயலை எமது விளையாட்டு என்று உரைத்திடாதே…! (புகழ்ந்து விடாதே)

நாம் உரைக்கும் கருத்தின் வழி நிற்றல் தான் உலகத் தேரில் பவனி வரும் ஆரம்ப அனுபவமப்பா. மறு சமைப்பை பற்றி வினா எழுப்புகின்றாய்

ஒலிப்பதிவை (செயற்கைத் தன்மை) மீண்டும் அதே ஒலி நாதத்தைக் கேட்டிடும் சமைப்புத் தன்மைகள் பற்றி அறிய நினைக்கின்றாய். ஒலி நாத வேறுபாட்டில் கருப்பொருள்தான் முதன்மையப்பா (இயற்கைத் தன்மை).

கண்டத்தில் எழுப்பும் ஒலி… ஒலி அலைகளாக மாறுவதை உணர்ந்துள்ளாய். எண்ணுகின்ற அத்தனை எண்ணங்களும் ஒலி அலைகளாகச் சமைக்கப்படும் சமைப்பை… அவைகள் ஓடிக்கொண்டே இருக்கும் ஓட்ட கதியை உணர்ந்து கொண்டாயா…? உணர்ந்து கொள்…! மன எண்ணத்தின் அசைவு தெளிவுபடும்.

கண்ணாடிக் குடுவையில் காய்ச்சப்படும் நீர் வெப்ப சக்தி கொண்டு நீராவி அமில நிலை பெற்றுப் பின் குளிர்ச்சி நிலை பெறும் பொழுது… மாற்றுக் குடுவையில் சேமிக்கும் நீராக ஏற்கப்படுகின்றது.

பரிணாம தத்துவப்படி… கொள்ளப்படும் பொருளும் ஏற்றுக்கொண்டிடும் மன நிலையும் தான் முக்கியம். கருத்துக்களில் தீய உணர்வுகளை ஏற்றிடும் அமில அணுக்களின் தன்மைகள் ஜீவ ஆதாரம் அற்ற தன்மையாக சமைப்பின் சமைப்பில் உராய்வு கொண்டு… கருத்தின் தன்மையும் ஜீவனற்று ஆத்ம பயிர் வளர்ச்சி உறாத செயலுக்கே செயல் கொண்டிடும்.

1.உயிரணுக்களை மாய்த்திடும் விஷப்பொருளில் விஷத்தையே உண்டு வாழும் உயிரணுக்கள் வாழ்வதைப் போல்
2.ஒலிபெருக்கியில் ஒலி நாதத்தைக் கேட்டிடும் செயல் எல்லாம் நோய் உண்டவன் வாழ்வதைப் போல்
3.ஒலி நாத வேறுபாட்டால் தாக்குண்ட இந்தக் காலகட்டத்திலும்
4.அமுதம் கொண்டிட்ட உயர் ஞான கருத்துக்களின் தன்மைகள் எந்த ஒலி சமைப்பின் மறு சமைப்பிலும்
5.உயர்நிலை அணுக்கள் தன் சுவாசத்தைக் கொண்டு தன்னைத்தான் காத்துக் கொள்ளும்.

அறிந்ததைத் தெளிவதே உயர் ஞானத்தின் வழி பெற்றே உயர்ந்திட ஆசிகள்.

அக்கினி குண்டத்தின் தத்துவம் என்ன…?

 

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்று ஞானிகள் ஆலயத்திலே உருவத்தைக் காட்டி அருவ நிலைகள் நாம் உணர்ந்து இந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்று தெளிவாகக் கூறியதை நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?

ஆலயப் பண்புகளை மறந்து தன் சுயநலத்தைக் கொண்டு நடந்து கொள்கிறோம்…! யாராவது நமக்குத் தொல்லை கொடுத்தால்
1.உடனே அவன் குடும்பம் நாசமாக வேண்டும்
2.அவன் குடும்பம் பிள்ளை குட்டி எல்லாம் சாக வேண்டும்
3.அவன் தொழில் எல்லாம் நாசமாக வேண்டும் என்று கருப்பணசாமி ஆலயத்திலோ மாரியம்மன் ஆலயத்திலோ
4.மண்ணை வாரித் தூற்றி எனக்குத் தொல்லை கொடுக்கின்றான் என்ற நிலையில் அவர்கள் நாசமாக வேண்டும் என்று தான் கும்பிடுகின்றோம்…

ஆக ஆலயத்திற்குச் சென்று நாம் எதை வளர்க்கின்றோம்…?

பிறிதொருவன் தவறு செய்யும் உணர்வை நாம் நுகர்ந்தால்… அந்த உணர்வுகள் மாறி அவன் செய்யும் தவறையே நமக்குள் செய்யும் நிலை வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

ஒரு உடலிலே நோய் அதிகமாக இருந்தால் பாசத்துடன் அவனை நுகரப்படும் பொழுது அதே நோய் நமக்குள் வந்து நம்முடைய நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

அது தான் மாரியம்மாள்…! (அடுத்தவர் உணர்வு மாறி நமக்குள் வருவது).

ஆனால் மாரியம்மனை வணங்கி வரும் பொழுது ஆகாதவர்கள் இருந்தால் என்ன செய்கிறோம்…? அவர் குடும்பத்தைக் கெடுப்பதற்காக உனக்கு ஆட்டைக் கொண்டு வந்து வெட்டிப் பலி கொடுக்கின்றேன்…! என்று ஆலயப் பண்புகளை இப்படித்தான் கொண்டு வருகின்றோம்.

பிறிதொரு வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தால் அதே உணர்வு நமக்குள் மாறி (மாரி) அவன் உடலில் வந்த நோய்கள் நமக்குள்ளும் வருகின்றது.

இந்தத் தீமைகளை நீக்குவதற்கு நோயை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று பச்சையாகவே அங்கே காட்டுகின்றார்கள்… அக்கினி குண்டம் இறங்க வேண்டும் என்று…!

ஆனால் அக்கினி குண்டம் நாம் எப்படி இன்று இறங்குகிறோம்…?

1.தீ மிதித்தால் “தீ நம்மைச் சுடும்…!” என்று தெரிகின்றது ஆனாலும் மிதிக்கின்றோம்
2.ஏனென்றால் நேர்த்திக் கடனுக்காக நான் மிதித்துச் செல்கின்றேன் என்று செல்கின்றார்கள்
3.ஆனால் ஒருவனுடைய தீமை நம்மைக் கொல்கிறது என்று தெரிகின்றது
4.அந்தத் தீமையை நீக்கும் (சுட்டுப் பொசுக்கும்) நல்ல உணர்வுகளை எடுக்கின்றோமா என்றால் இல்லை.

நெருப்பைக் கொண்டு எப்படி மற்ற பொருளை வேக வைக்கின்றோமோ ஒன்றைக் கருக்குகின்றோமோ இதைப் போன்று நம் உயிரான நெருப்பிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள இணைத்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் நுகர்ந்து
1.நம் உடலுக்குள்ளே அதைப் பரப்பினால் இது ஒரு குண்டம்.
2.தீமையை நீக்கிய அந்த அருள் உணர்வு நமக்குள் வந்தால் தீமைகளைப் பொசுக்கி விடுகின்றது.

பின்… யார் நமக்குத் தீமை செய்தார்களோ அவனுக்குச் சிந்தித்து செயல்படும் சக்தியும் பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் வரவேண்டும் என்றும் இத்தகைய எண்ணங்களை நாம் எண்ணினால் அவனுடைய தீய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

தீமை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலில் இரத்தத்தில் கலந்து தீமை என்ற உணர்வை மாற்றுகிறது.

நாம் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல உணர்வுகள் வரவேண்டும்… நல்லது செய்யும் எண்ணங்கள் வரவேண்டும் என்று எண்ணினால் அந்த உணர்வு உயிரிலே பட்டு… அந்த உணர்ச்சிகள் நம் உடலில் நல்லதாக இயங்குகின்றது.

அதனால் தான் நாம் எதை எண்ணுகின்றோமோ நம் உடல் ஒரு அரங்கம்.
1.பிறர் நல்லவராக வேண்டும்… தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று உணர்வுகளை நுகர்ந்து
2.உயிரிலே பட்டால் அந்த உணர்ச்சிகள் நாதங்களாக மாறி அதற்கொப்ப எண்ணம் சொல் செயல் நம்மிடமிருந்து வருகின்றது
3.இந்த உணர்ச்சிகள் தான் நம்மை ஆளுகின்றது ஆண்டாள்…!

இப்படி இன்று நாம் வழக்கப்படுத்த வேண்டிய தெய்வீகப் பண்புகளைக் காட்டுகின்றது நம் சாஸ்திரங்கள். நாம் அதன்படி நடக்க வேண்டுமல்லவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஞானிகள் தெய்வங்களை உருவமாக்கி அதன் மூலம் அருவத்தின் நிலைகளை நாம் எப்படி நுகர்தல் வேண்டும்…? இருளை எப்படி அகற்றுதல் வேண்டும்…? என்று தான் ஆலயங்களை அமைத்தனர்.

இந்த உடலின் இச்சைக்குத் தான் அர்ச்சனை அபிஷேகம் இதை எல்லாம் நாம் செய்கின்றோமே தவிர ஞானிகள் சொன்ன வழியை நாம் எடுக்கவில்லை.

1.அருள் ஞானத்தை நாம் நுகர்ந்து
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கி அதை அர்ச்சனையாக்கி
3.அந்த ஒளித் தன்மையை நமக்குள் கூட்டி நம்மை அறியாது வரும் இருளைப் போக்கி
4.மெய்ப் பொருள் காண வேண்டும் என்ற உணர்வை நீங்கள் ஆலயங்களிலே தியானியுங்கள்.

இந்த அருள் ஒளியின் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரான ஈசனிடம் படப்படும் பொழுது இருளை அகற்றுகின்றது. மெய்ப் பொருளை உணர்த்துகின்றது.

இந்த நிலை பெறச் செய்வதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள்.

ஆனால் அந்த ஆலயத்தை இன்று நாம் அவமதிக்கின்றோம். எவருக்கோ காசைக் கொடுத்து அவர் எல்லாம் செய்து கொடுப்பார்… வாங்கித் தருவார்…! என்ற நிலையில் தான் நம்பிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானத்தின் வழி எட்டிப் பார்க்கும் நிலை இல்லை… அதைப் பெறும் நிலையும் இல்லை…!

உயர்ந்த நிலைகளைச் சொன்னால்… அதைப் பின்பற்றி அந்த உயர்ந்தது எனக்குள் வளர வேண்டும் என்ற இதைத் தான் நாம் பெறுதல் வேண்டும்.

ஒருவன் தீமை என்ற நிலையைச் செய்கின்றான்… நாம் பார்க்கின்றோம். அவன் தீமை செய்கின்றான் என்று எண்ணும் போது
1.அதே தீமையை எண்ண எண்ண நமக்குள்ளும் அது வளர்கின்றது.
2.நாமே தீமை செய்வோராக மாறிவிடுகின்றோம்.

அதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஞானிகள் காட்டிய வழி சென்றால் நாம் தெளிவான வாழ்க்கை வாழ முடியும். வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.

கடலிலே நீந்திச் செல்லப்படும் பொழுது எத்தனையோ அலைகள் வந்து மோதுகின்றது. நாம் எந்தக் கரையை எல்லையாக வைத்தோமோ அதை அடைய வேண்டும் என்ற மன உறுதி கொண்டால் நாம் அங்கே செல்கின்றோம்.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனான பின் நம் எல்லை எது…?

உயிருடன் ஒன்றி இனி உடல் இல்லை என்ற நிலை கொண்டு உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ஒளியான அந்த சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அடைதல் வேண்டும்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன்
2.ஒவ்வொரு நொடியிலும் இங்கே வரும் துன்பங்களை அந்த அருள் ஞானம் என்ற துடுப்பை வைத்துத் தள்ளிவிட்டு
3.நம் எல்லை அந்தத் துருவ நட்சத்திரம் தான் என்ற நிலை வரும் பொழுது சங்கடங்களோ மற்ற துயரங்களையோ நாம் நீக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பற்றுடன் பற்ற வேண்டும்.

அத்தகைய அரும் பெரும் சக்தியை நம் குருநாதர் அருளால் உங்களுக்குள் பதிக்க முடிந்தது. அந்த ஞானத்தை உங்களுக்குள் விதிக்க முடிந்தது. இதைப் பெற வேண்டும் என்ற அந்த மதி கொண்டு தீமைகளை மாற்றிட முடியும்.

வாழ்க்கையில் சங்கடம் வேதனை என்று இது அதிகமானால் இந்த விதிப்படி மீண்டும் பிறவிக்குச் செல்கிறது.
1.மதி வழி இனி உடல் வேண்டாம்.
2.மதி என்றாலே ஒளி…! அந்த மதி கொண்டு விதியை வெல்லுங்கள்
3.இனி உடல் என்ற விதிக்குச் செல்ல வேண்டாம்…!

மதி கொண்டு என்றும் நிலையாக இருக்கச் செய்யும் ஒளி என்ற நிலைக்கு வாருங்கள். உங்களால் அதைப் பெற முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். இந்தக் காற்றிலே மகரிஷிகள் உணர்வுகள் உண்டு. அதை நாம் நுகரப் பழக வேண்டும். அந்த வலுவைப் பெறுவோம்.

நம் முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவோம். அவர்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்வோம். அந்த உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

மற்றவர்களின் தீமைகளை நீக்கி அவர்களையும் மெய்ப் பொருளைக் காணச் செய்வோம்…!

பதட்டத்தையும் பயத்தையும் போக்கத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தே ஆக வேண்டும்

 

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற நினைவை நம் உடலுக்குள் செலுத்தினால் தீமைகளை அடக்கி நமக்குள் சிந்திக்கும் ஆற்றலாக உருவாகின்றது.

அதற்குப் பின் நோயாளியைப் பார்த்து “நீ நன்றாகி விடுவாய்…” என்று இந்த உணர்வைச் சமைத்து இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு ஊக்கமூட்டும் உணர்ச்சிகளாக இது அமைகிறது. அதே சமயத்தில்
1.நோயை நீக்க அவன் உட்கொள்ளும் மருந்தைச் சீராகப் பயன்படுத்தும் நிலையும்
2.அந்த மருந்து உடலுக்குள் சென்று நன்கு வேலை செய்யும் தன்மையும் வருகிறது.

ஆனால்… இப்படி ஆகிவிட்டதே என்று அவன் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து… வேதனையும் பதட்டத்தையும் பட்டு… பயத்துடன் நாம் அந்த மருந்தினைக் கொடுத்தால்
1.இதே உணர்வுகள் இயக்கப்பட்டு
2.அந்த மருந்துக்கே வேலை இல்லை என்று ஆகி எதிர் நிலையாகிவிடும்.

ஒரு சிலர் பாருங்கள்… நோயான பின் பதட்டத்தோடு மருந்தினைக் கொடுப்பார்கள். இப்படி எத்தனை மருந்து கொடுத்தாலும் அந்த நோயிலிருந்து அவர்கள் விடுபட முடியாது.

ஏனென்றால்… பாசத்தாலோ அல்லது நண்பர் என்ற நிலையிலோ பழகிய நிலைகள் கொண்டு இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே… இப்படி ஆகிவிட்டதே…! என்று தியானிப்பார்கள்.
1.அவர்கள் உடலிலும் இத்தகைய தீமைகள் விளையும்
2.அதே சமயத்தில் அந்த நோயாளி உடலிலும் அதே உணர்வுகள் விளையும்.

இதுவும் தியானம்தான்…!

இதையெல்லாம் மாற்றிட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி அந்தத் தீமை என்ற நிலைகளை நாம் அடக்கிப் பழக வேண்டும்.

அதற்குப் பின் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நோயுற்றவர் உடலில் படர வேண்டும்
1.அவர் நோய்கள் நீங்க வேண்டும்
2.அவர் மன உறுதி பெற வேண்டும்
3.நல்ல உணர்வுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்
4.சிந்திக்கும் ஆற்றல் அவருக்குள் பெருக வேண்டும்
5.மன வலிமையுடன் வளரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்தால் இந்த வலு நமக்குக் கிடைக்கின்றது.

அந்த உணர்வோடு அவரிடம் சொல்லி “சீக்கிரம் நலமாகி விடுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்…” என்ற உணர்வினை இங்கே சமைத்தால்… அந்த உணர்வின் சொல் அவர் செவிகளிலே பட்டு நல்ல உணர்ச்சிகளைத் தூண்டி… அவருடைய இரத்தங்களிலே கலந்து அவர் தீமையின் உணர்வை அடக்கி நல்ல உணர்ச்சிகளை அவருக்குள் ஊட்டும்.

உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அவர் எடுத்த வேதனையை நமக்குள் எடுத்து உனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணினால் நமக்குள்ளும் அதே பயமும் பதட்டமும் வேதனையும் வருகின்றது.

திருப்பி இதையே வலுவாக்கிச் சொல்லப்படும் பொழுது நோயே வலிமை பெறுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நீக்குவதற்குத் தான் ஆலயங்களிலே சிலைகளை வடித்து… அதன்படி நாம் எப்படி நல்ல குணங்களைச் சேர்க்க வேண்டும்…? தீமையிலிருந்து எவ்வாறு விடுபடுவது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…! என்று ஸ்தல புராணங்களை வடித்து வைத்துள்ளார்கள்

ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…?

அங்கே அபிஷேகங்களையும் ஆராதனையும் செய்துவிட்டு… இப்படி நோயுடன் இருக்கின்றார்களே… தெய்வமே…! கஷ்டமாக இருக்கின்றதே… நீ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! என்ற வேதனை கலந்த உணர்வைத்தான் நாம் எடுத்து வளர்த்து
1.அவர்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணினாலும்
2.விஷத்தைக் கலந்து பாலைக் கொடுத்தது போன்றாகி விடுகின்றது.

ஏனென்றால் வேதனை (நஞ்சு) கலந்த பின் இப்படித்தான் ஆகும். ஆகவே கோவிலுக்குச் சென்றால் நான் எப்படிச் செயல்பட வேண்டும்…?

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும்… வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற வேண்டும் என்ற உணர்வைத் தனக்குள் படைத்து… இந்தத் தெய்வீக பண்புகள் அவருக்குள் வளர வேண்டும்.. தீமைகளை அகற்றிடும் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அருள் வழி வாழும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று எந்த நோயாளியை பார்த்து நாம் எண்ணினோமோ
1.அருள் உணர்வை எண்ணிச் சுவாசித்து இங்கே படைத்தால் நம் உயிருக்கு இது அபிஷேகம் ஆகின்றது.
2.இந்த உணர்ச்சிகள் நம் இரத்தங்கள் முழுவதும் கலக்கின்றது
3.தீமையை அகற்றிடும் நல்ல அணுக்கள் நமக்குள் விளைகின்றது.

இந்த உணர்வின் சொல்லை வெளிப்படுத்தும் போது… எந்த ஆலயத்தில் நாம் இதை உற்றுப் பார்த்து எண்ணுகின்றோமோ அங்கே “நாம் தெய்வமாகின்றோம்…!”

அவ்வாறு நாம் தெய்வமாகி அவன் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இது தான் ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரம்.

“மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்… தேவனின் இராஜ்ஜியம் சமீபத்தில்…!”

 

1.சரீரமில்லா செயல் நிலை உடைய உயிரணுக்கள் (ஆவி ஆத்மாக்கள்) சரீர கதிச் சுழல் காந்த அமில ஈர்ப்பின் குணத்தின் வசம் அகப்பட்டு
2.தனது சுவாச அமில நிலைக்கொப்ப சரீர செயல் சமைப்பு முறை அமில குண சுவாச நிலையில் குணத்துடன் ஒன்றி
3.தனது சரீரமற்ற ஆவித்தன்மையின் வீரிய குண எண்ணத்தை செயல் நடத்திட
4.சரீரமுடைய காந்த அமில குண சுழற்சியில் அகப்பட்டுச் சுவாச கதி அலையில் உட்சென்று தான் செயல் கொண்டிட
5.தனக்கு என்று ஓர் வாய்ப்பு நிலை ஏற்படுத்தும் “நரம்பு மண்டல செயல் நிலைகளில் நகர்ந்து ஓடி…” அதே கதியில் செல்லும் அவைகள்
6.தங்கள் எண்ணத்திற்கொப்ப ஆங்குள்ள உயிரணுக்கள் செயலை விட மிக வீரியமான தம் குண எண்ண நிலை கொண்டு வெற்றி உலா வந்து
7.தன் எண்ணம் கொண்டு சரீர கதியையே மாற்றி அமைத்துத் தமது எண்ணத்தின் வலுவை வலுவாக்கி
8.அதன் செயல் கொண்டு செயலுறும் இயந்திரகதி சரீரமாக்கி
9.தனது இச்சைகளை பூர்த்தி செய்து கொள்கின்ற பாங்கில் துர் ஆவிகள் புகுந்த உடலில் செயல்படும்.

ஆவிகளின் துர்க்கதி வினைச் செயலை நீக்கிட… மார்க்கம் காட்டிய அன்பு நிலை வெளிக்காட்டும் மாமகரிஷியின் தொடர்பு பெற்ற “தேவகுமாரன் இயேசுபிரான் அவர்கள்” துர் ஆவிகளை விரட்டிச் சொஸ்தப்படுத்தியது அறிய வேண்டிய சூட்சுமம்.

“பன்றிகள்” என்று துர்க்குணங்களைச் சுட்டி காட்டிய இயேசுபிரான் அந்தப் பன்றிகள் வாசம் செய்யும் இடம் சைத்தான் என்று மனித சரீரத்தைக் காட்டினார். ஏன்…?

துர்குண எண்ணமாகிய பன்றியின் குணங்கள் கொள்ளும் பொழுது… பன்றி கழிவை உண்டு அந்தக் கழிவின் தீய செயல் குண அமிலங்களைத் தனது சரீரத்திற்கு ஏற்றுக் கொண்டு அப்பன்றியியின் கழிவில் நல்ல நிலைகளை வெளித்தள்ளும் செயல் சரீர செயலிலும் நடைபெறுதல் போலவே (பன்றியின் மலம் துர்வாசனை வீசுவதில்லை)…
1.அதே பன்றி குணம் கொள்ளும் மனிதன் தன் ஈர்ப்பின் செயலுக்குத் துர் ஆவிகள் அவன் உடலில் ஏறி (சைத்தான்)
2.சரீரம் கிடைத்தவுடன் மனித சரீரத்திற்குள் அவை நுழைந்து
3.மனிதர்களை ஆட்டுவிக்கும் செயலாக… தன் இச்சைகளை அங்கே பூர்த்தி செய்து கொள்ளும் செயலுக்கு
4.எந்தச் சரீரத்தில் ஏறியதோ அங்கே பயமுறுத்தும் காரியார்த்தவாத செயல் நிலைப்படுத்தி
5.தங்கள் இஷ்டம்போல் அச்சரீர உயிர் ஆத்மாவையும் அடிமை கொண்டிட அதி ஆவேச செயல் நிலைப்படுத்தும் என்பதை
6.அந்த ஆவிகள் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் செயல் திறத்தால் அறியலாம்.

ஆனால் அந்தத் துர் ஆவிகளை இயேசு பிரான் கடலில் சென்று விழச் செய்து மாள வைத்தார் என்பதன் பொருள் என்ன…?

அத்துர் ஆவி ஆன்மாக்கள் மனிதச் சரீர செயலில் தன் தனது நடைமுறைகளுக்கொப்ப செயல் கொண்டிடும் விதம்… நாத குணங்கள் போக்கி… தான் செய்யுறும் குணநலன்படுத்தி ஆட்டுவிக்கும் செயலில்…
1.உயரிய சக்தி பெற்ற ஆத்ம ஞானிகள் அவைகளை நீக்கச் செய்திட்ட சூட்சுமப் பொருள் என்ன…?
2.அவைகளை விரட்டிட்ட செயல் சூட்சுமத்தை நாம் அறிந்திட வேண்டும்

“துர் ஆவிகள் பன்றிக்குள் நுழைந்து…
கூட்டம் கூட்டமாகக் கடலுக்குள் விழுந்து செத்தொழிந்தன…
நீங்கள் சுகம் அடைந்தீர்கள்
இனி மனத்தை தேவன் வசம் ஒப்படையுங்கள்
தேவனின் ராஜ்ஜியம் சமீபத்தில்…!” என்று
ஏசுபிரான் போதனைப்படுத்தி வழிகாட்டிய அந்தச் செயல் முறையால் ஆவி ஆத்மா வசம் அகப்பட்டவன் எப்படிச் சுகம் அடைந்தான்…?

பன்றிக்குள் நுழைந்தன ஆவிகள் என்பது… எப்படி அவைகள் பன்றியின் செயல் நிலையில் ஒன்றி ஒடுங்கின…? என்பதை அத்துர் குணங்களின் வசம் உள்ள ஆவி ஆன்மாக்கள் அக்குணங்களையே ஆட்கொள்தல் என்பதே… “பன்றியின் உள் நுழைதல் என்று சூட்சுமம் காட்டி…” அவைகளைக் கடலுக்குள் தள்ளியதாகக் கூறும் விதம்… அத்துர் குணங்களாகிய பன்றிகள் மாய்க்கப்பட்டுக் கடலுக்குள் தானே விழுந்து விட்டன…! என்ற தத்துவ ஞான போதனையை யார் ஏற்றுக் கொண்டார்கள்…?

தங்கள் மனம் போல் வியாக்கியானப்படுத்தும் இந்த உலகம் அந்த உண்மையை அறிந்து கொண்டதா…? அதன் செயல் நிகழ்வு எப்படி நடைபெறுகின்றது…?

இச்சரீர கதியில் என்பது துர்குணம் வாழும் ஆவி ஆத்மாக்களை ஞானக்கடலிலே விழச் செய்தான் தேவகுமாரன்.. ஞானக்கடல் எங்கிருந்து வந்தது…?
1.தன் சக்தியின் சக்தியை அவர்களுக்கு (ஆவிகளுக்கு) ஊட்டுவித்து
2.தன்னையே அவர்களிடம் ஒப்புவித்து… தானே அவர்களானான் என்பதே
3.அன்பால் வசப்படுத்தும் மனதினன் அவ் அன்பு நிலை எம் மக்கள் செயலில் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ
4.அதே நடைமுறைச் செயலில் நல்வினை ஆக்கும் செயலுக்குப் போதனைப்படுத்திய ஞானவான்
5.தன் மன நிலையுடன் அவர்களின் மன நிலையை ஒன்றச் செய்து
6.தன் வசமாக்கி… தெளிவுபடுத்தி… மனங்களின் அன்பை அருந்த “ஞான நிலை போதனை கொடுத்து…”
7.குரு காட்டிய வழி (உயிரான்மா அறிந்த சொல்) என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தும் பொழுது
8.அவனுள் ஏற்படும் மாற்ற நிலையானது மனம் அன்பின் வசப்படும் தன்மையும்
9.அதனுள் சுரக்கும் ஞானக்கடல் நிலை என்பது ஞானத்தின் பரிமாணத்தைக் கூறும் சூட்சும செயல்படுத்தி
10.அந்தச் செயல் முறையின் நடைமுறையைக் காட்டினான் தேவகுமாரன் அன்று.

ஆகவே… ஞானத்தின் வசம் ஒப்புவிக்கப்படும் மனமானது… “அன்பின் வசம் உற்று…” நல்வினைப் பயன் ஏற்பட நற்குண வழிகாணும் செயல் நிலை வந்தது. (அன்பால் தான் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த முடியும்… நம் வசத்திற்குக் கொண்டு வர முடியும்)

எந்தெந்த நற்குண செயல் போதனைப்படுத்தப்படுகின்றதோ… அவைகளைத் தனக்குகந்த போதனையாக ஏற்று… அந்தப் போதனைகள் வழி மனம் செலுத்தப்பட முயற்சி என்ற நம்பிக்கை வேண்டும்.

அந்த முயற்சி தானே உருவாகும் செயலுக்கு முன்பு யார் போதனைப்படுத்துகின்றார்களோ “அவர்களின் காந்த வீரிய எண்ணச் சுழற்சி செயலில்…” மனம் நாட்டம் கொண்டிடல் வேண்டும்.

எண்ண வலுவின் செயல் கொண்டிடும் நிலையானது எந்த நிலையானாலும் அது பக்தியோ ஞானமோ அல்லது வேறு உபாய காரியச் செயல் முறையோ “அந்தத் துர் ஆவிகள் விலகும்…” என்பது அவைகள் குணங்களுடன் (துர்க்குணங்கள்) ஒன்றி வாழும் பொழுது… அக்குணங்களையே களைவிக்கும் மந்திர ஜெபம் என்ற சூட்சமப் பொருளானது… நாம் எடுக்கும் தியானத்தின் வழியில் தான்.

தியானத்தின் மூலம்… நற்குண வீரிய சொல் ஏற்கும் மன ஜெப நிலை வசம் உயரும் முறையாக அது மாறி தன் நற்குணத்தில் சுகம் பெறும் என்பது
1.அந்த ஆவி ஆத்மாக்களின் வீரிய குணம் நற்குண அதி வீரிய ஜெப குணம் ஞானத்தால் அடக்கப்பட்டு
2.அந்தத் துர்குணங்கள் மாய்க்கப்படுவதையே ஞானமாம் கடலில் பன்றிகள் விழும் பொழுது
3.அதனுள் வாசம் செய்த துர் ஆவிகளும் செத்தொழிந்தன (அதன் வீரியத்தை அடக்குதல்) என்கின்ற சூட்சுமம்.

மனநிலையை ஞானத்தால் உயர்த்திக் கொண்டால்… நற்குணத்தின் வீரியத்தால் சுகம் பெறலாம்…! என்பது தேவகுமாரன் காட்டிய அன்பின் தத்துவம்

உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!

 

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பதிவாக வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன். அந்தப் பதிவின் துணை கொண்டு உங்களை நான் (ஞானகுரு) பிரார்த்திக்கும் பொழுது உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும் உங்கள் உயிரான ஈசனுக்கு அமுதைக் கொடுப்பதும் அது அபிஷேகிக்கும் நிலையாகவும் அடைகின்றது.

அதை நீங்கள் சுவாசிக்கப்படும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று நல்ல உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் சந்தர்ப்பமாக இப்போது உருவாகின்றது.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து நான் தியானிக்கின்றேன்.
2.உங்களை எண்ணி நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அது உமிழ் நீராகி அருள் சக்தியாக மாறுகின்றது
3.அருமருந்தாக மாறுகின்றது. அருள் வழி வாழவும் முடிகின்றது.
4.உங்களால் நானும் நன்மை அடைகின்றேன்… என்னால் உங்களுக்கும் நன்மை ஏற்படுகிறது.

ஆகவே நாம் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எது இருந்தாலும்… இந்த உலகம் முழுமைக்குமே தீவிரவாதம் என்ற நிலைகளில் மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலையாக வந்துவிட்டது.

1.கருவில் இருக்கும் பிண்டங்களை அழித்து
2.அதையே உணவாக உட்கொள்ளும் நாகரீகம் உலகமெங்கும் பரவி விட்டது.

தாய்லாந்து அமெரிக்கா சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் கருச்சிதைவாக்கப்பட்டு கருசிதைவான அந்தக் குழந்தைகளை உணவாக எடுக்கப்படும் பொழுது “முதுமையானவன் இளமையாக முடியும்…” என்று விஞ்ஞான அறிவில் கூறப்பட்டு… தவறான வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படி நடந்து கொள்வோர் நாளை எங்கே செல்வார்கள்…?

நரமாமிசத்தை உட்கொள்ளும் அகோரிகள் இங்கே இந்தியாவில் இருக்கின்றார்கள் சுடுகாட்டில் வெந்து கொண்டிருக்கும் உடல்களை “அதைத் தள்ளி விட்டு எனக்குக் கொடு… என்பார்கள்.

அவருடைய தசைகளைத் தின்று சொர்க்கத்துக்கு அவனை அனுப்புகிறேன் என்று சொல்லும் அகோரி என்ற சாமியார்களும் உண்டு.

இதைப் போன்ற அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகைக் காக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து
2.உடலுக்குள் அருள் ஞான சக்திகளைப் பெருக்கி
3.உங்கள் மூச்சும் பேச்சும் உலக இருளை நீக்கிடும் சக்தியாக நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவனான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த அருள் சக்தியை நாம் பெற்று எந்நாட்டரையும் பெறச் செய்தால் அவர்கள் அறியாத நிலையில் இருந்து அவர்களும் மாறுபட்டு மனிதன் மனிதன் என்ற நிலைகள் உணர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன்.

உபதேசிகன்

 

ஜெபத்தின் சூட்சும ரகசியங்கள் என்ன…?

தன்னைத்தான் உணர்ந்து… தன்னைத்தான் நம்பி… தன்னுள் இறை குணத்தன்மைகளைத் தாய்மை குழந்தையைச் சுமப்பது போல சுமந்து கொண்டிட வேண்டும்.

உலகோதய நடைமுறை வாழ்க்கையில் தனக்கு எத்தகைய இன்னல்கள் பிறரால் ஏற்படுத்தப்பட்டிருப்பினும்… இறை குணத் தாய்மையைச் சுமந்து… அன்பு கொண்டு குழந்தை போல் நேசிக்கும் மனம் கொண்டவன்…
1.ஈசன் வேறல்ல… தான் வேறல்ல என்ற வகையில்
2.தோற்றத்தில் பணிவும் சொல்லில் கனிவும் கொண்டவனே “உபதேசிகனாக” வளர முடியும்

அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகம் உய்ய வேண்டும்… அனைத்து உயிர்களும் இன்புற வேண்டும்… என்ற முழுமையாக நிலை நிற்றல் போல… அன்பு கொண்ட குருவாகத் தன்னை வெளிப்படுத்தியவர் இயேசு.

1.உள்ளொன்றும் புறம் ஒன்றும் கொண்டு சாதாரண நடைமுறையில் தூசிக்கும் மாக்கள் போல்
2.தன் உணர்வில் தான் வலு கொண்டிட்ட எண்ணத்தை வெளிக்காட்டி
3.உயர்ஞானம் வலுக்கொள்ள வேண்டிய வளரும் ஞானப்பயிர்களின் ஊடே – சூட்சுமமாகப் பேதமையை ஏற்படுத்தி
4.தன்னையே எண்ணித் துதிக்கும் திருக்கூட்டங்களை ஏற்படுத்தி அந்த ஆத்மாக்களைத் தனக்கு அடிமை கொண்டு
5.தன் உயிராத்மா வலுக் கொள்ள வேண்டும் என்ற சுய தேவை காரணமாகத் தான் சக்தி ஈர்த்திட்டே
6.உங்களுக்கு அளித்திடுவேன் என்ற சொல் வாக்கினால் நம்பிக்கையை ஊட்டி
7.அவ்வாய் வார்த்தையே சதம் என்று நம்பி
8.பேரருள் சக்தி பெற்றிட வேண்டிய தன் உயிராத்மாவை எண்ணிடாத ஜீவர்களின் எண்ணங்களை வசப்படுத்தி
9.குரு என்ற பெயரில் உலவிடும் எத்தனையோ ஆத்மாக்கள் போல் அல்லாதபடி
10.உண்மையின் ஜெபத்தை ஊட்ட வந்த அன்பு மகான் இயேசு.

அந்த மகானின் போதனைகளைத் தியான வழியில் கைக் கொள்வோரைக் காண்பதுவும் அரிதாகிவிட்டது.

ஆணவத்தில் இருந்து பேச்சும் மூச்சும் என்று… பற்பல தத்துவ விளக்கங்கள் ஞானவான்கள் என்று கூறிக் கொள்வோர்… “உயர் நிலை பெற வேண்டிய ஜீவர்களைப் பாவிகள் என்று அழைத்து…” ஆவேச உணர்வுகளை ஊட்டும் வழியாகத் தேனிற்குள் மறைந்த கசப்பாக ஊட்டுபவர்கள்… உண்மையின் சாரத்தை உணர்ந்து கொண்டார்களா…?

சிலுவையைச் சுமந்ததும் சிலுவையில் அறையப்பட்டதும்… பின் உயிர்த்தெழுதலும் தான் கொண்ட அனுபவ அவஸ்தையே.

மனித ஆத்மாக்கள் பிறப்பு வளர்ப்பு சாக்காடு என்ற வகையாக உலகினுக்குப் பேருண்மைகளைப் போதனையாக்கிடவே தன்னையே ஆட்படுத்தி உரைத்ததில்…
1.உடல் என்ற சிலுவையில் ஆணவத்தன்மையால் ஆத்ம அறிவு அறையப்பட்ட பின்
2.மரித்தல் என்ற செயலுக்கு ஆணவமும் அகப்பட்டு மாய்ந்து
3.உயிர்த்தெழுதலாக மெய்யறிவும் தோன்றுதல் என்பதிலும்
4.”அறையப்படும் அவஸ்தை வேண்டுமோ…?” (மீண்டும் மீண்டும் உடல் பெறுதல்)

வினாவின் விடையைத் தெளிந்து கொள்…!

1.ஐந்து அப்பங்கள் என்பதே பஞ்சேந்திரியங்கள் செயல்படும் இந்த உடலப்பா…
2.இணை மீன்கள் இரண்டு என்பதே பஞ்சேந்திரியங்களில் செயல்படும் சுவாசமப்பா.

தன்னையே எண்ணி ஜெபித்திடலே சூட்சமம்….!

நானே அப்பமுமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவனுக்கு எந்தவிதப் பசியும் இல்லை…! என்று உரைத்தவற்றில் தியானமே முதன்மையாக்கப்பட்டது.

உபதேசம் கொள்வோனிடம் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டை விளக்கிட வேண்டாமா…? அதுவும் உண்டு.

என்னையே காட்டிக் கொடுக்கும் சீடன் என்னிடத்திலிருந்து அப்பம் பெறுவாண் என்று காட்டிக் கொடுக்கும் அந்தச் சீடனுக்கு அப்பத்தையும் அளித்து… அந்தச் சீடன் கொண்டிட்ட எண்ணத்தையே சைத்தான் தன் செயலைத் தொடங்கி விட்டான் என்று கூறியதன் பொருள் என்ன…?

ஞானம் கொள்ள வந்தோர் பெற்றது அப்பம். ஞானம் கொண்ட சீடன் பெற்றதும் அப்பம்.
1.உபதேசம் ஒன்று தான்…
2.கொள்ள வேண்டியவன் கொண்டிட்ட “எண்ணத்தின் மாறுபாடு புரிந்ததா…?”

நீரில் மறைந்துள்ள காற்றைக் கொண்டு வாழும் மீனின் தன்மை போல் மனிதன் “தியான எண்ணத்தின் வழி… சுவாசத்தின் வழி…” ஈர்த்திடும் பக்குவம் கூறப்பட்டது.

ஒலி கொண்டு ஒளி பெறும் சூட்சுமமாகச் சப்த ஒலி நாதங்கள் செயல் கொண்டிடும் ஆத்மாவின்… உள் நிறைவாகச் சேமிப்பாகக் காட்டவே “ஏழு” கூடைகளுக்குள் நிரப்பப்பட்ட ஆகாரம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சில ஜோதிடம் பார்ப்பவர்கள் என்ன செய்வார்கள்…? வருவோரை உற்று நோக்கி நுகர்ந்து நுகர்ந்து பார்ப்பார்கள். ஏதாவது உணர்வு ஒன்றைச் சொல்வார்கள்.

1.சொல்லும்போது நம் தலை அசைவதைப் பார்ப்பார்கள்.
2.“ஓ… இப்படியெல்லாம் இருக்கின்றது…!” என்று (அறிந்து கொண்டு) ஒரு கேள்வியைப் போடுவார்கள்.
3.உங்கள் வீட்டில் இப்படியெல்லாம் கஷ்டம் இருக்கின்றது என்று தொடர்வார்கள்.

அதாவது வாஸ்து சாஸ்திரக்காரர்கள் வீட்டிற்கு வந்தவுடன் அப்படியே உங்கள் முகத்தைப் பார்ப்பார்கள். சில மந்திரங்களைச் சொல்லி… முகத்தைப் பார்த்து… வீட்டைப் பார்த்தவுடன் என்ன செய்வார்கள்…?

வீட்டில் பையன் ஏதாவது தொல்லை செய்கிறானா…? என்பார்கள்.

ஆமாம்…! என்று சொன்னால் போதும். அதைப் பிடித்துக் கொள்வார்கள். அப்படியே வரிசையாக எடுத்துச் சொல்லிவிட்டுக் கடைசியில் இரண்டு வார்த்தையைச் சொல்லி விட்டுக் காசைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்கள்.

அவர் சொன்னதைக் கேட்டு உங்கள் வீட்டை மாற்றி அமைப்பீர்கள்…!

ஆனால் வீட்டில் பத்துப் பேர் இருப்பார்கள். அதிலே ஒருவன் இனம் புரியாதபடி ஒரு ஆக்சிடண்ட்டைப் பார்க்கின்றான். அதிர்ச்சியால் புத்தி பேதலித்துப் போகின்றது.

அப்போது அவனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்போது இந்த வேதனை எல்லோருக்கும் வந்தால்… அவன் சொன்ன வாஸ்து என்ன செய்கின்றது…?

வாஸ்து என்றால் யார்…?

1.உயிர்…! வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான் என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
2.நாம் நுகர்வதையெல்லாம்… சுவாசித்ததை எல்லாம்… உருவாக்கக் கூடியது “நம் உயிர் தான்…” என்று இந்த இடத்தில் காட்டுகின்றார்கள்.

தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வு உடலுக்குள் வரப்படும்போது வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறந்தான். “பார்க்க வேண்டும்…” என்ற இந்த உணர்வுகள் கொண்டு கண்கள் தோன்றுகின்றது என்று காட்டுகின்றார்கள்.

ஜோதிடக்காரன் சொன்னதைக் கேட்டால் வாசுதேவன் (உயிர்) என்ன செய்கின்றான்…? அந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

உங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றதா…? என்றால் ஆமாம்…! என்று சொல்கின்றோம்.

அடுத்தாற்படி இந்த வீட்டின் வாசலை உடைத்தால்தான் சரியாக இருக்கும் என்பான். வீட்டின் நிலையை இப்படி மாற்றி வை என்பான் அல்லது இந்த ஓரத்தில் ஏதாவது ஒன்றை வை என்பான்.

அவன் சொன்னபடி வைத்துவிட வேண்டும். வைக்கவில்லை என்றால் நான் அன்றைக்கே சொன்னேன்… நீ வைக்கவில்லை என்ற நிலையானால்… அந்த வேதனையால் என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ… என்ன ஆகுமோ…? என்று இந்த உணர்வின் தன்மை மீண்டும் அதையே வளர்த்துக் கொள்ளும்.

இன்னொன்றும் சொல்வார்கள். நியுமராலஜி…! அம்மா அப்பா வைத்த பெயரெல்லாம் ஒழுங்காக முழுதாக இருக்கும். உங்கள் பெயரில் இந்த எழுத்தை இப்படிப் போட்டீர்கள் என்றால் உங்கள் எதிர்காலம் நியுமராலஜிப்படி நன்றாக இருக்கும் என்பார்கள்.

இந்த எழுத்துக்களை அந்த நம்பர்கள் பிரகாரம் இப்படிப் போட்டால் ராசியாக வரும் என்று அவன் சொன்னதைக் கேட்டுப் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கின்றோம்.

ஏனென்றால் நமக்குள் இருக்கும் வேதனை உணர்வை நீக்க வேண்டும் என்றால் அதை எல்லாம் நீக்கிய அருள் ஞானியின் உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.

காரணம்… எப்படி இருந்தாலும் இந்த உடல் மடியத் தான் செய்கின்றது. ஆனாலும் உடலிலே வாழ்வதற்குத்தான் செல்வங்களைக் கோடிக் கோடியாக வைத்துள்ளார்கள்.

இராமயாணத்தில் என்ன செய்கின்றார்கள்…? என்றால் தனுசுகோடி. தனுசு என்றால்
1.இப்பொழுது நான் சொல்லும் உணர்வுகள் உங்களைத் தாக்குகிறது… தனுசு.
2.அதே நேரத்தில் இந்த உபதேசங்கள் உங்களை மகிழச் செய்யும் தனுசு.

தனுசு என்றால் அம்பு சமஸ்கிருதத்தில்…!

கோடிக்கரை என்ற கடைசி எல்லையில் மனிதப் பிறவியில் இப்பொழுது நிற்கின்றோம்.
1.இந்த மனித வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் அகற்றினால் தனுசுகோடி.
2.ஒளி உடல் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தth துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்று அடைய வேண்டும்.

அது தான் நம் சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள்.

இந்த உலகையே காக்கப் போகும் “மகரிஷிகள் நாடான இந்தியா”

 

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நாளும் வளர்க்க
1.நாம் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு மட்டுமல்லாதபடி…
2.அது வலுவாகும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் இன்னொரு பிறவிக்கு வராதபடி
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதிற்கு நாம் சென்று இந்த உடல் பெற்ற நஞ்சுகளை அங்கே கரைத்து
4.பிறவி இல்லா நிலை அடையவும் இது உதவும்.

அதற்கு நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களை விண் செலுத்தினால் அவருடைய தொடர் கொண்டு நாம் அந்த சக்தி எளிதில் பெற முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி தீய உணர்வுகளை நல்ல அணுக்களாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

எப்படி ஊசி மூலம் மருந்தை ஏற்றி அதை இன்ஜெக்ஷன் செய்து இரத்தத்தில் கலக்கச் செய்து நோய் உருவாக்கும் அணுக்களை மாற்றி அமைக்கின்றார்களோ அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் எண்ணி
2.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.உடல் முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

உடலை உறுப்புகளை உருவாக்கி அணுக்களில் எல்லாம் காந்தம் உண்டு. இதை இணைத்து அங்கே பெருக்கச் செய்ய வேண்டும். உடலில் இருக்கக்கூடிய தீமைகள் அனைத்தும் நீங்கும். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

கஷ்டம் என்பதைத் தள்ளி விடுங்கள். குடும்பத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று எண்ணுங்கள்.

நீங்கள் இடும் மூச்சலைகள் அனைத்தும் இந்தக் காற்று மண்டலத்திலே பரவி இந்தப் பூமியும் பரிசுத்தமாகும் ஊரில் வாழும் மக்கள் அனைவரும் தெளிவாக இது உதவும்.

ஆகவே இந்தத் தியானத்தை மேற்கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் பரப்புங்கள்
1.இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றிடுங்கள்
2.அருள் ஞானத்தின் உணர்வைக் குவியுங்கள்… எல்லா இடங்களிலும் பரவச் செய்யுங்கள்
3.இந்த பூமியில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளை மாற்றி அமையுங்கள்.

அருள் உணர்வு கொண்டு சகோதர உணர்வை வளர்த்து ஒன்றுபட்டு வாழும் சக்தியைப் பெருக்குங்கள் இதை நாம் செய்தோமென்றால் சகோதர உணர்வுகள் வளரும். அருள் ஞானம் பெருகும்.
1.அருள் வாழ்க்கை வாழும் இந்தியாவாக… மகரிஷிகள் நாடாக மாற்றலாம்
2.இதை வைத்து உலகையே மாற்ற முடியும்.

ஏனென்றால் அணுவிசையால் இந்த உலகையே அழித்திடும் தன்மைகள் வரப்படும் பொழுது அந்த அணுக்கதிரியக்கங்கள் பரவாதபடி தடுத்து நிறுத்தும் சக்தி
1.இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் பெறுவோம் என்றால்
2.உலகையும் நாம் காக்கும் திறன் பெற முடியும்… அணுகுண்டுகள் வெடிக்காதபடி நாம் செய்ய முடியும்.
3.விஷத்தன்மை பரவாதபடி கதிரியக்கங்கள் வெளிப்படாதபடி செய்ய முடியும்.

முழுமையாக இதை நம்புங்கள் உங்களுக்கு அந்தத் திறன் உண்டு உலக இருளைப் போக்குவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். விஞ்ஞானத்தின் செயலினால் வரும் தீமைகளில் இருந்து மக்களை விடுவிப்போம்.

ஆகவே… அருள் உணர்வுடன் வாழ்க்கையை நீங்கள் தொடருங்கள் என்று பிராத்திக்கின்றேன்.

தட்டியவன் திறப்பான்… கேட்பவன் கிடைக்கப் பெறுவான்… தேடியவன் கண்டு கொள்வான்…!

 

ஸ்தூல தேகம் கடந்து சூட்சும தேகத்தில் வாழும் தன்மை நிலை பெற்று விட்டால் சரீரம் கொண்டு துன்பங்களாக உணரும் தன்மைகள் அனைத்தும் துன்பங்களாகத் தோன்றிடாது.

அத்தகைய பாக்கியம் பெற்ற மகான் தான் இயேசு.

வாழ்க்கை நடைமுறை மோதலில் ஏற்படும் உரையாடலில் உணர்ந்திடும் குணங்களையே பெரும் துன்பங்களாகப் பெரிதுபடுத்தியே… எண்ணத்தின் கடுமையாகச் சொற்களின் விஷ வித்துக்களை விதைத்திட்டால்… அதை உரைப்பவனும் அந்த உரையைக் கேட்பவனும் விதைத்திட்ட விதையின் பலனை அறுவடை செய்வானப்பா…!

அதைத் தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்று சொல்வது.

இயேசு மகான் சுட்டிக் காட்டியது அன்பு வழி வாய்மை. சொல்லும் சொல்லிலும் நிதானம் தேவை.

1.உலகோதயத் துன்பங்கள் ஞானிகளுக்கு மக்களால் ஏற்படுத்தப்படும் தன்மைகளில்
2.தேகம் கடந்து வாழும் தன்மையால் ஞானிகளுக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது.

மெய்ஞானத்தின் முழுமைத்துவம் பெற்றிடும் செயலில் மனத்தின் பக்குவமே மெய்ஞான விழிப்பாகச் செயல் கொண்டு நல்லாக்கம் பெறுதலே உண்மை ஞானத்தின் சிறப்பு.

தனக்கு இழைத்திட்ட துன்பச் செயல்களைக் கூட… கல்வாரி மலை மீது சிலுவையில் அமைக்கப்பட்ட காலத்தில் கூட…… மன்னிக்கும் மனம் படைத்த இயேசுவின் செயலை
1.அவர் பெற்று வளர்ச்சிப்படுத்திக் கொண்ட அவரின் சக்தியை
2.தாமும் பெற்றிட முடியும் என்ற எண்ணத்தைக் கொள்வோர் யாரும் இல்லை.

சூட்சும உடல் வாழும் வாழ்க்கை வாழ்ந்து காட்டிட்ட மகான்தான் இயேசு. தியானத்தின் வழியைச் சூட்சுமமாக மறைபொருள் தன்மையில் உரைத்திட்ட போதனைகள்… அவரால் கொண்ட கருத்தின் தெளிவு.

எழுத்தின் வடிவத்தில் சமுதாய நலத்திற்கு அவர் கொண்டிட்ட எண்ணத்தின் சப்த அலைகளை… நேரடியாக ஈர்த்திடும் பக்குவச் செயல் அனைத்தும்… காற்றினில் ஓடிடும் ஒலி அலைகளை… அவர் காட்டிய போதனைகளைப் பெறுவது என்பதெல்லாம் “தியான ஈர்ப்பின் மூலம் தான் பெற முடியும்…”

“உயிர்த்தெழுதல்” தத்துவத்தையே சூட்சும உடல் வாழும் தன்மை கொண்டிட்ட செயலாகத் தத்துவத்தின் உண்மைப் பொருள் உணர்த்தப்பட்டது. அது எந்த வகை…? என்ற வினாவுக்கு “ஆத்ம வலு கொண்டிடும் மூலசக்தியே” நிலைக்களன் (சான்று).

உயிர் ஜீவன் கொண்டிட்ட இந்தச் சரீரமே சிலுவையாக…
1.உடல் என்ற சிலுவையில் பொருந்த அமைவு பெற்ற ஆத்மா
2.சக்தி வலுக் கொண்டு மூல சக்தியாகக் கலந்துறவே எழுதல் என்பது சூட்சுமம்.

தான் கொண்ட எண்ணத்தின் வலுவைப் பிறர்க்கும் ஊட்டிடவே… தான் தேடிக் கண்டு கொண்ட நல்லது போன்றே மற்ற மனித ஜீவன்களும் தேடிக்கொள்ள வேண்டும் என்று
1.ஆத்மாவை மறைபொருளாகச் சுட்டிக்காட்டி…
2.தேடிக் கண்டு கொள்பவன் கொள்ள வேண்டிய எண்ணத்தில் சிரத்தை இருந்தால்
3.“தட்டியவன் திறப்பான்…
4.கேட்பவன் கிடைக்கப் பெறுவான்…
5.தேடியவன் கண்டு கொள்வான்…” என்பதில்
6.எண்ணத்தின் செயல்பாட்டிலே “சிரத்தையே அதிமுக்கியம்…” என்று உரைத்தவர் இயேசு.

அவரைக் கூட்டம் கூட்டமாகப் பின் தொடர்ந்து வந்து சூழ்ந்தவர்களுக்கு அவரால் போதனை அளிக்கப்பட்டது என்றும்… குழந்தைகளும் பெண்களும் ஆடவர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் பசியோடு இருந்தவர்களுக்காக அப்பமும் மீனும் அதை இரண்டையும் தூபப்படுத்தி ஆசீர்வதித்து… அனைவரும் உண்ணும் மட்டும் பகிர்ந்தளித்து… சாப்பிட்ட உணவின் மீதம் ஏழு கூடைகளில் நிரப்பப்பட்டது என்று “விவிலிய நூல்…” கூறுகின்ற பொருளின் உண்மையை அறிந்தவர்கள் யார்…?

அதைப் பின்பற்றுபவர்களும்… அதைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்பவர்களும்… பெற்றிடும் திறன் இல்லாது அது மாற்று நிலை பெற்று விட்டதப்பா.

1.நானே அப்பமாக இருக்கின்றேன்… என்னைப் புசிப்பவன் நித்திய ஜீவனுமாக இருப்பான்…! என்று
2.அவர் உரைத்திட்ட சொல்லிலும் மறைபொருளாகவே கூறப்பட்டது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கல்வியில் சிறந்தவன் ஆனாலும் “ஞானம் இல்லை” என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.

ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவான். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.

மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தைப் பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.

குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன்… இதைச் செய்தேன்… என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ராகிங்) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.

இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்

கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?

எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.

தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.

இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.

நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.

அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.

ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.

தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.

ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.

ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்…!

 

யாம் சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியை தியானத்தின் மூலம் பெற்றுக் கொண்டே வருகின்றீர்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்கு நீர் எப்படிக் குறைகின்றதோ அது போல் இதற்கு முன்னாடி அறியாது சேர்த்துக் அசுத்தமான உணர்வுகளை நாம் நீக்க முடியும்.

ஆனால்… குறைகளைச் சொல்லித் திருத்தவே கூடாது (இது முக்கியம்).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண் வழி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
2.ஏனென்றால் அனைத்துமே நம் கண்கள் வழி தான் பதிவானது
3.கண் வழியாகத் தான் நம் உடலுக்குள்ளும் சென்றது
4.அதே கண் கொண்டுதான் மீண்டும் உடலுக்குள் உயர்ந்த சக்திகளைச் செலுத்தவும் முடியும்.
5.அப்படிச் செலுத்தப் பழகிவிட்டால் மீண்டும் இந்த நினைவுகள் கண்களுக்கே வரும்
6.அப்பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் பெருக ஆரம்பிக்கும்.

அது பெருகப் பெருக உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள்… பரிவுடன் பார்த்துப் பிறருடைய வேதனைகளை நுகர்ந்தது போன்ற உணர்வுகளை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த ஞானிகள் பெற்ற அருளை நீங்கள் பெறும் போது தீமை நீக்கக்கூடிய சக்தியாக வரும். உங்கள் பேச்சும் மூச்சும் கேட்போர் உணர்வுகளில் இருளை அகற்றும்.
1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தியை உங்களால் முடியும்.
2.தீமைகள் உங்களுக்குள் புகாது தடுத்து… பிறர் தீமைகளைப் போக்கும் அருள் ஞானிகளாக நீங்கள் வாழ முடியும்.
3.ஆக… ஊரையும் உலகையும் காக்கும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

ஏனென்றால் உங்களுக்கெல்லாம் அந்த அருள் சக்தி பெருக வேண்டும் இருளை நீக்கும் அருள் ஞானம் பெருக வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்… என்று தான் எண்ணி நான் சதா தவமிருக்கின்றேன்.

இதை நான் எண்ண எண்ண… என் உயிரிலே இது பட்டு… எனக்குள் அந்த உமிழ் நீராக மாறுகிறது… அந்தச் சக்திகள் எனக்குள் கூடுகின்றது. உங்களுடைய கஷ்டம் நஷ்டங்கள் எத்தனை நான் கேட்டிருந்தாலும் இதை வைத்து நான் அதை மாற்றி விடுகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்த நிலைகள் கொண்டு அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்ற தகுதியை ஏற்படுத்துகின்றேன். ஏனென்றால் உங்கள் உயிர் கடவுள்… உங்கள் உடல் ஒரு கோவில்… உங்கள் ஆலயத்தை நான் சுத்தப்படுத்துகின்றேன்.

1.உங்களைச் சுத்தப்படுத்த நான் எண்ணும் பொழுது என் உடலான ஆலயமும் எனக்குள் சுத்தமாகின்றது
2.என்னை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்கள் எனக்குள் அந்தத் தெய்வீக பண்பு கொண்டு
3.அந்த அருளைக் கொண்டு… இருளைப் போக்கும் உணர்வு கொண்டு… “என்றும் ஒளி” என்ற உணர்வைப் பெறச் செய்கின்றது.
4.என்னுடைய எண்ணமே உயிருடன் ஒன்றி… என்றும் ஒளியின் தன்மை பெறுகின்றது

அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணையால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரம் அந்த அருள் சக்தி நீங்கள் அனைவரும் பெற்று… உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்… அருள் வழி வாழும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற்று… இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி பெற்று… அருள் வாழ்க்கை வாழ்ந்திட எமது அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்

அன்பு தானப்பா கடவுள் – LOVE IS GOD

 

1.அன்பு வழி காட்டி… அன்பு கொண்டே ஊட்டிடும் செயலாகச் செயல்படுபவன் …
2.தன்னுள் ஈர்த்துக் கொண்டு தன்னை வளர்ச்சிப்படுத்தும் தன்மைக்கு “அன்பே கடவுள்” என்று சொல்லிய சொல்லிலும்
3.பிற உயிர்களையும் தன் உயிர் போல நேசிக்கும் செயல்பாடு உடையவனாக இருத்தலும்
4,தன்னுள்ளே வேரூன்றி வளர்ச்சி கொண்டிட்ட அன்பினில் நிறைவு போதனையாக வெளிப்படும் பொழுதே
5.போதனையை ஏற்றுத் தன் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அந்த உபதேசத்தை ஏற்றவன்
6.அந்த நன் நெறியில் பிறழாமல் “அந்த அன்பையே பற்றுக்கோடாகக் கொண்டிட்ட எண்ண செயலினால்…”
7.நல்வழி வகைச் செயலைக் கடைப்பிடிப்போன்… மனிதன் என்ற முழுமை பெறுகின்றான்.

அன்பும் பரிபூரணத்துவம் பெறுகின்றது.

இயேசு காட்டிட்ட அன்பு வழி அதனுடைய நிலைகள் இன்று ஆக்ரோஷ வலைக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது. யாரையும் குற்றம் குறைகள் காண்பதல்ல நம்முடைய வழி…!

மனித எண்ணத்தையும் அன்பு சாமராஜ்யத்தையும் ஆள வந்த அந்த மகானுக்கே தந்த பரிசு “சிலுவையில் ஏற்றப்பட்டதுதான்…” இன்றும் உண்மைகளைப் புகட்டினாலும் ஏற்றுக் கொள்வோர் இல்லையப்பா.

அன்பு வழி காட்டிய மாமகான் இயேசு தான் தெளிந்த உண்மைகளை இந்த உலகினுக்கு உவட்டாமல் ஊட்ட வந்த நிலை என்னப்பா…?

குழந்தைக்குத் தாய் உணவை ஊட்டும் பொழுது தாயின் மனத்தின் எண்ண நினைவு எத்தகையதோ அதே உணர்வால்
1.உலக மக்கள் படும் இன்னல்களுக்காகத் தன்னையே அர்ப்பணிக்க வந்த மகான் இயேசு
2.தாய்மையின் உணர்வு கொண்டே ஜெபம் கொண்டு உயர் ஞான சித்தியின் வழி
3.உயர்நிலை பெறவே ஊட்டிட்டார் ஊட்டிட்டார் அன்பு கொண்டே ஊட்டிட்டார்.

தாய் முகம் கண்ட குழந்தை தாயிடம் தாவி ஓடுவதைப் போல் மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு உபதேசங்களைச் செவிமடுத்தனர்.

ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் அரசாட்சியின் அதிகாரத்தில் அறிவின் ஆற்றல் செயல்படாதொழிந்த அந்தக் குழப்ப சூழ்நிலையில்… உண்மையை உணர்த்தி அவர் அளித்திட்ட போதனைகள் மக்களுக்குத் தெளிந்த சிந்தனை அளித்து… அதனால் ஈர்க்கப்பட்டனர் என்றால் “அந்த அன்பின் திறத்தை என்னவென்பது…?”

அன்பு தானப்பா கடவுள்…!

சத்திய நிலை கடைப்பிடித்த அந்த மகான்களுக்கே அவச்சொல் என்றால் சிந்தனா சக்தி செல்லும் வழி தான் என்ன…?
1.தன் குடும்ப நலத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவா… அல்லது வளப்படுத்திக் கொள்வதற்காகவா… கூட்டங்களை அவர் கூட்டினார்…?
2.இன்றைய நடைமுறை வழி அதைத்தான் காட்டுகின்றது.

ஆனால் அன்று அவர் காட்டிய அன்பு வழியில் உயர் ஞான சக்தி பெறுபவர்… எண்ணிக்கையில் பலர் இருப்பினும் அவர்களும்… வழி வந்த குருக்களின் போதனையால் அறியாத உணர்வுகளுக்கே செலுத்தப்படுகின்றனர்.

உண்மை வழியை அறிந்து அந்த மகான் காட்டிய வழிதனைக் கடைப்பிடிக்க முயல்வோர் முயலட்டும்.

அன்பு கொண்டு குணங்களின் செயலைத் தன்னில் கண்ட இயேசுபிரான் “சைத்தான்” என்று காட்டியது தீய குணங்களைத்தான்.

தீய குணங்களுக்கு மனம் ஆட்படும் பொழுது அதி ஆசைகளின் வழி செல்லும் மாற்று நிலைகளைக் காட்டி… அவைகளைப் பக்குவமாக விலக்கிடவே தியானத்தின் வழியாக காட்டப்பட்டது தான் அப்பமும் மீனும்.

வழி தவறிச் செல்லும் ஆடுகளை மீட்க வந்த மேய்ப்பர் என்று அவரை அழைக்கின்றார்கள். நேசிக்கும் மனோபாவத்தை அன்பு நிலையைக் கூற வந்த மகான் இயேசு உபதேசித்த நெறிமுறைகள் அனைத்தும் ஒலி அலைகளாக இந்தப் பூமியின் நாதத்தில் கலந்து சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த அரிய போதனைகளைத் தியான வழி ஈர்ப்பின் செயலில் ஈர்த்தே உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ண வலுவிற்குச் சிந்தனை வசப்பட்டு அதை முயற்சி செய்வோர் இல்லையப்பா.

1.நாம் சொல்வது யார் மனதையும் வேதனைப்படுத்துவதற்காக அல்ல.
2.உண்மைகளை கூறினாலும் ஏற்றுக் கொள்வோரும் மிக அரிதாகவே உள்ளனரப்பா
3.அவைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…
4.தியானத்தின் வழிதனில் அதை அறிய முயல்வோர்கள் முயலட்டும்.

இருளை நீக்கிடும் முயற்சி இருந்தால் “ஒளியை நிச்சயம் காணுவாய்…”

 

குணங்களை உள் அடக்கும் மறை பேராம்
1.மனித ஆற்றலின் மகோன்னத சக்தியாக வழியறிந்து கொண்டவன்
2.அவன் வழிப்பயணாமாகும் செயலில் தடை எதுவும் கிடையாது.

ஆசையும் மோகமும் வாழ்க்கை அனுபவத்திற்குள் அடங்கும். அவைகளைக் காட்டிலும் சினத்தின் குணமே வலிமை உடையது. மனிதன் சினத்தின் வசம் ஆட்படும் போதெல்லாம் உலக சிருஷ்டியை பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.நாம் ஏனையோரை வழி நடத்த வந்துள்ளோம் அல்லவா…?
2.நாமே கோபப்பட்டால் தகுமா…? என எண்ணிடல் வேண்டும்.

யானைக் கூட்டங்களை வழி நடத்தும் வலிமை கொண்ட மன்மத யானை பக்குவமாக மேய்ச்சல் இடம் காட்டி… அருந்துவதற்கு நீர் நிலையையும் காட்டித் தன் குழுவைப் பாதுகாப்பது போல்… நல் நிலையில் செயல்படுவோம்… உயர்வோம்…! என்ற சிந்தனை கொள்ளல் வேண்டும்.

சகல சிருஷ்டிகளும் அணுத் திறளால் ஆனது. மனிதனும் ஓர் பொருள். “வளர்ந்து கொண்டிருக்கும் உயிராத்ம சக்தியால்…” மனிதன் உயர் நிலை பெறுகின்றான்.

1.மரணத்தை வென்றிடும் மனோதிடம் கொள்ளுதல் தான்
2.சித்தனாகும் உயர்வுக்குப் படிக்கட்டு.

மனத்தினை மெய்ஞானத்தின் பால் செலுத்திவிட்டால்… அது மீண்டும் மாற்று நிலை பெற்றிடா வலிமை கொண்டு விடும். பஞ்சு திரி ஆவதைப் போல்…!

காற்றினால் உந்தப்படும் பஞ்சு அலைக்கழிந்து ஓடுகிறது. அந்தப் பஞ்சானது நீரினை உண்டு விட்டால் விழும் நிலையும்… அதே பஞ்சு நெருப்பினை உண்டு விட்டால்… தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
1.இதை அழியும் நிலை பாடம் என்று எண்ண வேண்டாம்
2.வானுறப் பறக்கும் பருந்துக்கும் பாடமுண்டு
3.சுட்டிக் காட்டுதல் எல்லாமே மனத்தின் பக்குவத்திற்கே.

“வராமல் வந்துற்ற மாமணியை… உயிராத்ம சக்தியை… மெய் உணர்வால் அறிந்து கொண்டிட்ட பின்… அதைச் சாராமல் நீ போவாயோ…?”

இரு வித செயல்நிலைகள் ஒவ்வொரு குணத்தின் செயல்படு நிலையில் சாந்த குணத்தை வளர்க்க… சமமான நிலை நிலைக்க… யாம் சுட்டிக் காட்டிடும்
1.மனத்தின் கரு விழித்து விட்டால்
2.சித்தன் நிலை (உன்) கை வசமே…!

ஆற்றெடுத்த மன வாழ்வில் இரு நிலை தவிர்த்திருத்தல் (நன்மை/ தீமை… இன்பம்/துன்பம்) என்பது
1.ஞானத்தின் பால் திருப்பப்படும் மனமே
2.திரியான பஞ்சு. எண்ணத்தை மறைந்திருக்கும்
3.மாயை எனும் மூட மேக இருள் நீக்கப்படும் போது தான் மனிதன் உயர்கின்றான்.

சூரியனை மறைத்திடும் மேகக்கூட்டம் விலகிடும் செயலில்
1.முன்பாகவே ஒளிக்கதிர்கள் காட்டிடும்
2.அவ்வாதவனின் நிலையை மனத்தின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்.

மேக இருள் விலக்குதல் என்பதே முயற்சி…!

ஞானச்சுடராம் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சூட்சமப் பொருளைச் சுவாசித்திடும் பொழுதே “உணர்ந்து கொள்வீர்கள்…”

உலகைக் காக்க… உலக மக்களைக் காக்க… நம்மைக் காக்க… நாம் செய்ய வேண்டியது

 

அந்தந்தக் கால கட்டங்களில் குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளை அவ்வப்பொழுது துணுக்குத் துணுக்காகத் தான் யாம் (ஞானகுரு) சொல்லி வந்தது. அதை ஒன்று சேர்த்துப் பதிவாக்கிக் கொண்டு வந்தால் உங்களுக்குள் உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. தியானத்திற்கு முன்
1.பாலோ அல்லது தண்ணீரோ அல்லது ஒரு பதார்த்தத்தை வைத்து
2.தியானம் முடிந்த பின் அந்தப் பொருளை எடுத்து அதில் என்ன வாசனை வருகிறது என்று பாருங்கள்…?
3.நல்ல மணங்கள் அதிலிருந்து வரும். சுவாசிக்கும் பொழுது உங்களுக்குள்ளும் அருள் மணம் கிடைக்கும்.

ஒவ்வொருவரும்… ஒவ்வொரு ஊரிலும்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உலகம் முழுவதும் பாய்ச்சி உலக மக்கள் மன பேதமின்றி இன பேதம் இன்றி மொழி பேதம் இன்றி சகோதர உணர்வுடன் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகள் அருள் சக்தியும் துருவ மகரிஷிகள் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மேகங்களிலே படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்பி தாவர இனங்கள் செழித்து ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது
1.ஆங்காங்கே இருக்கக்கூடியவர்கள்… உலகில் எங்கிருந்து தியானம் செய்பவர்களும் இந்த உணர்வுகளை வானிலே பாய்ச்சுங்கள்.
2.மேகங்களைக் கூட்டி மழை பெய்ய வேண்டும் என்று தியானியுங்கள்
3.இப்பொழுது உபதேசிக்கக் கூடிய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படரப்பட்டு
4.அந்த மழை நீர் மூலமாக தாவர இனங்களிலே இணைந்து அருள் தாவர இனங்களாக விளையும்.

ஆனால் அதே சமயத்தில் மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ நோய்களாக வந்து நம் உடலை வேதனைப்படச் செய்கின்றதோ இந்த உணர்வெல்லாம் என்ன செய்கிறது…?

நாம் எந்தத் தாவர இனத்தை உணவாகப் புசித்தோமோ… நம் உடலில் இருந்து வெளிப்படும் வேதனைப்படும் உணர்ச்சிகள் தாவர இனங்களில் பட்டு அந்தத் தாவர இனத்தையே உண்டு விடுகின்றது. நமக்கு உணவில்லாது ஆக்கி விடுகின்றது.

உரத்தைப் போட்டுப் பூச்சி மருந்தைப் போட்டு பயிர்களை வளர வைத்து மகசூல் எடுக்கலாம் என்று கொண்டு வருவதற்கு முன்
1.நாம் வெளிப்படுத்தக்கூடிய வேதனை என்ற விஷத்தின் தன்மை
2.தாவரங்களில் அதிகமாகப் படர்ந்து விஷத் தாவரங்களாக அது விளைந்து
3.அதையே நாம் மீண்டும் உணவாக உட்கொள்ளும் நிலை ஆகிவிடும்.

ஆகையினால் இதை மாற்றி அமைக்க முதலில் சொன்ன மாதிரி அகஸ்திய மாமகரிஷிகள் உணர்வுகளை வானிலே பாய்ச்சி மேகங்களைக் கூடச் செய்து நல்ல மழை பெய்ய வேண்டும் என்று மேகங்களில் எண்ணத்தைச் செலுத்தினால் அந்த மழை நீர் தாவரங்களில் பட்டு இணையும்
1.காரணம் எல்லாவற்றிலும் காந்தப் புலனறிவுகள் உண்டு.
2.அந்த அலைகளை எடுத்து நாம் பாய்ச்சி அதற்குள் இணைக்க முடியும்.

எப்படி ஒரு அணு பட்டு அந்தச் சத்தினை நுகர்ந்து அதை வைத்து உடல் பெற்றதோ இதைப்போல இதே சத்தினை நுகர்ந்து அதன் உணர்வின் தன்மை மலமாக்கி அந்தத் தாவர இனங்களுக்கு நாம் பாய்ச்சும் போது நல்ல சத்தாக மாறும்.

பயிரினங்களில் அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று இது ஒரு கூட்டமைப்பாகப் பாய்ச்சிப் பாருங்கள்.

1.உங்கள் வயலை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்… பயிரினங்களை நினையுங்கள்
2.அதற்குள் அருள் சக்திகளைப் படரச் செய்யுங்கள்… நல்ல அணுக்கள் உருவாகி நல்ல வளர்ச்சி பெறும்.

வைரஸ் என்ற அணுக்கள் நம் உடலில் பாய்ந்தால் நம்மைக் கொல்கிறது. நம் உறுப்புகளைக் கொல்லக்கூடிய அந்தத் தீய அணுக்களைக் கொன்று நல்ல உறுப்புகளை உருவாக்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞான அறிவு கொண்டு “அத்தகைய வைரஸ்களாக… மாற்று மருந்தாக உருவாக்குகின்றார்கள்….”

இதே போல் மனிதனான நாம் அருள் உணர்வுகளை மழை மேகத்துடன் கலந்து விட்டால் நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.

ஆனால் நாம் இன்று உலகெங்கிலும் என்ன செய்கின்றோம்…?

தவறான உணர்வுகளையும் வேதனைப்படும் உணர்வுகளையும் மனிதனுக்கு மனிதன் அழிக்க வேண்டும்… மற்றவனைக் கொன்று அவனை வீழ்த்தி விட்டு அவன் செல்வத்தை அபகரித்துத் தான் வாழ வேண்டும்… என்ற உணர்வுகள் தான் அதிகமாகப் படர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த உணர்வுகள் எல்லாம் தாவரங்களில் பட்டால் பயிரினங்களும் அழிகின்றது. உரத்தையும் மருந்தையும் போட்டு விளைய வைத்தாலும் அதை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலுக்குள் விஷத் தன்மை பெருகி நல்ல குணங்களைக் கொன்று குவித்துவிடும் (அது தான் இன்று இயங்கிக் கொண்டுள்ளது)

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள்தல் வேண்டும்.
1.மற்றவர்களுக்கும் இதைத் தெரியப்படுத்தி மேகங்களைக் கூடச் செய்து அருள் மழையாக பொழிய வேண்டும்…
2.ஊர் செழிக்கட்டும் நாடு செழிக்கட்டும் என்று இது போன்று நாம் செய்து பழக வேண்டும்.

விவசாயம் செய்பவர்கள் இதைப் போன்று செய்து பழக வேண்டும் உங்கள் நிலத்தை உற்றுப் பார்த்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவை அங்கே உற்றுப் பார்த்து அந்தச் சக்திகளைப் பாய்ச்சுங்கள்.
3.பயிரினங்கள் செழித்து வளர வேண்டும் என்று நினைவை உணர்வை பாய்ச்சுங்கள்… உங்கள் எண்ணம் அங்கே ஊடுருவும்.

ஏனென்றால் தாவரங்களில் விளைந்ததை உணவாக எடுத்துத் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். அந்த உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாக இருக்கின்றது அந்த எண்ணத்தைக் கொண்டு அருள் உணர்வுகளை நாம் பாய்ச்ச முடியும்

மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த முடியும்… அவசியம் நாம் இதைச் செய்ய வேண்டும்.

குரு காட்டிய நெறிப்படி தியானிக்க வேண்டும்

 

யாம் ஞானகுரு) சொன்ன முறைப்படி யார் இந்தத் தியான வழியினைச் சீராகக் கடைப்பிடித்து வழி நடக்கின்றார்களோ “அவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்…”

ஆனால் தீமை என்ற அடிப்ப்படையில் ஆசை நிலையில் அதைக் கொண்டு வந்தால் பாலிலே பாதாமைப் போட்டு பல சத்துக்களைப் போட்டு விஷத்தைப் போட்ட மாதிரி ஆகிவிடும்.

அதாவது செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆசையுடன் தியானத்திற்கு வந்தார்கள் என்றால்… நிச்சயம் அவர்களுக்குக் கெடுதலாகும் அவர்கள் வார்த்தையைக் கேட்டு வழி நடப்பவர்களுக்கும் கெடுதலாகும்.

ஏனென்றால் அவர்கள் ஆசையைக் கூட்டப்படும் பொழுது அதை ஆசை அடுத்தவர்களுக்கும் வந்து சேர்ந்து விடுகின்றது கடந்த காலங்களில் இப்படித்தான் யாம் கொடுத்த பல உயர்ந்த சக்திகளை எல்லாம் கெடுத்து விட்டார்கள்.

அதையெல்லாம் எவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்தேன்… ஆனால்
1.நல்லதை எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு அது எப்படியும் தனித் தனித் தன்மைகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று
2.இப்பொழுது விளக்கமாகச் சொல்லி வருகின்றேன்… அருள் உணர்வுகளைக் கிடைக்கும்படி செய்து கொண்டிருக்கின்றேன்..

என்னை நீங்கள் தேடுவதற்குப் பதில் எங்கிருந்தாலும் அங்கே அமர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் பெற வேண்டும்.
1.எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்
2.சர்வ தோஷங்களையும் நீக்கக்கூடிய அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.மறுபடி மறுபடி இந்த உணர்வைக் கூட்டிக் கொண்டே வாருங்கள்.

உட்கார்ந்து தியானியுங்கள்.. இதையே எண்ணி ஒரு பழக்கமாகக் கொண்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க முடியும்.

நீங்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
2.உங்களை எண்ணி சதா நான் தவம் இருக்கின்றேன்.

நண்பன் என்று அவன் அமெரிக்காவில் இருந்தாலும் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்றால் எப்படிப் புரையோடி அவனை இயக்குகின்றதோ… அதே சமயத்தில்… நன்மை செய்தான் என்று எண்ணினால் எப்படி விக்கலாகிறதோ அதைப் போன்று உங்களை எண்ணி நான் தவம் இருக்கும் பொழுது அந்தச் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

ஏக்கமாக இருக்கும் பொழுது உங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது… ஆகவே ஏங்கித் தியானிக்க வேண்டும்.

ஆனால் “ஆசையை வேறு பக்கம் வைத்து” அவன் இப்படிச் செய்கின்றான்… இவன் ஏன்னைக் கேவலமாகப் பேசுகின்றான்… இவன் என்னைத் தவறாகச் சொல்கின்றான்… என்ற இந்த உணர்வு வரும் போது கலக்கமாகிறது.
1.என்னா சாமி…? எல்லாம் செய்தேன் ஒன்றும் நடக்கவில்லையே…! என்பார்கள்.
2.ஏனென்றால் இந்த ஆசையோடு கலக்கப்படும் பொழுது இந்தக் கலக்கம் தான் வரும்.

ஆகவே… தியானத்தைச் சீராகக் கடைபிடித்து வாருங்கள்… பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுவீர்கள்.

நீங்கள் எல்லோருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி இந்தக் காற்று மண்டலத்திலே சூழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத்தன்மைகளை விரட்டக் கூடியவர்களாக நீங்கள் வளர்ச்சி பெற வேண்டும்.

எல்லாருக்கும் அதைக் கிடைக்கக் கூடிய சக்தியாக நீங்கள் பெற்று… விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து மீட்க வேண்டும்.

மெய்ஞானத்தின் முதிர்ச்சி எது…?

 

1.மனதில் கொள்ளப்படும் குண நலன்களால்
2.நான் எனும் உயர் நிலையைச் சிறக்கச் செய்திடும் மனிதன்
3.கனிவுறும் ஞான தேசிகனாகின்றான்.

உலகத்தின் இயக்கம் போல் உடலின் இயக்கம்… சமைப்பின் குணம் காட்டும் உணர்வின் அலைகள்… எங்கிலும் ஜீவன் கொண்டே இயங்குகிறது. காலத்தின் இயக்க கதி ஓட்டத்திலிருந்து மனிதன் தன்னைப் பிரித்துக் காணல் என்பது ஒவ்வாத செயல்…!

ஆதி சக்தியின் சக்திக்கே சக்தி அளித்திடும் இணக்க இயக்கமாக… ஆத்ம பயிர் வளர்த்தல் என்பதே…
நற்குண…
நன்னெறி கொள்ளும்…
மனத்தின் திட சங்கல்ப…
“உறுதி நிலை…”

மோகம்… கோபம்… அதி ஆசை… என்கின்ற குணங்களின் வளர்ப்பு மனிதனை இயற்கையின் இயக்கத்தில் இருந்து தனிமைப்படுத்திக் காட்டும்.

குணங்களின் முற்றுதல் என்பது
1.நெருப்பைத் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற விறகு போல்
2.”அதிக ஆசையே – வீசும் காற்றாக…” வளர்த்துக் கொண்ட குணங்களின் உராய்வால்
3.மனம் ஆகிய பெருங்காட்டில் அதுவே பற்றிக் கொள்ளும் அக்கினியாகிவிடும்.

நல்ல நிலை வளர்ப்பாக்கும் செயல் இருநிலை தவிர்த்திருத்தல் என்பது சூட்சுமம். உலகின் கண் உற்பாதங்கள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் உரையின் பொருள் மறைத்து உரைப்பதில் பொருள் கிடையாது என்றே மெய்ஞானச் சுடர் ஆக்கும் பக்குவத்தின் பாகமாய் உரைக்கின்றோம்.

ஞானம் என்பது எது…?

பகுத்தறியும் அறிவு பெற்ற மனிதன் அந்த அறிவின் முதிர்வின் பக்குவத்தில் நன்மை தீமைகளை உணர்கின்றான்.
1.நாம் கூறிடும் பக்குவம்…
2.இதற்கும் மேலாக “சமமான நிலை…”

உயிராத்ம சக்தியின் தெய்வீக நிலையை உணர்ந்தே “அதைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று செயல்படுவதில் இருக்கின்றதப்பா ஞானம்…” தீய குணங்கள் விலக்கி நற்குணத் தன்மைகளை கடைப்பிடிக்கும் போது தான் ஞானம் வெளிப்படுகிறது.

1.தன் மனத்தின் உறுதியால்
2.பிறருக்கு நாம் செய்திடும் சேவையாக விளங்கி
3.பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தவிர்த்திடுதல் எதுவோ… அதுவே மெய் ஞானத்தின் முதிர்ச்சி…!

மெய் ஞானப் பாடத்தைப் புகட்டும் வழி

 

மனிதன் ஏடறிவால் கற்கின்ற கல்வி…
1.புவியியல் எனப்படுகின்ற உன்னதத் தன்மைகள்
2.உயிரியல் எனப்படுகின்ற சூட்சும நிலைகள்
3.வானியல் என்கின்ற மூலபிரக்ருதி ஆதியின் அந்தம் உணர்ந்து கொள்கின்ற செயல் தன்மைகள் அனைத்தும்
4.மெய்ஞானத்தைக் கூட்டி போதனையின் வழி அறிந்ததைத் தன்னுள் தான் தெளிந்து
5.பெற வேண்டிய உண்மை நிலை எதுவோ அந்நிலையாய் விளங்கிடவே
6.அன்று சித்தர்கள் காட்டிய சீரிய உண்மைகளை இன்றைய புத்தக அறிவால் மாத்திரம் அறிந்து கொள்ள முடியுமா…?

கற்கின்ற கல்வியின் சாரங்கள் எந்நிலையாயினும் தொடருமா…? கற்பவை கற்ற நிலையில் வராது.

செவி வழியாக அறிந்து கொண்டிடும் காரிய உண்மைகளை அப்படியே மற்றவர்களுக்கு உரைத்திட சொல்லின் கோர்வைகள் மாறுபடா நிலையாக உரைத்திட இயலாத கல்வியின் தன்மை… அறிந்து கொண்டதை கொண்ட வழியிலே உரைத்திட வழி உண்டு.

மெய்ஞானத்தின் வழி உற்றவைகள் (உகந்தவைகள்) நற்குணங்களாகப் பரிணமிக்க நன்னெறி வளர்ப்பில் திட மனது கொள்கின்ற நிலையும்… அற்றவைகள் (ஆகாதவைகள்) என்று உரைக்கின்ற மனிதனின் நடைமுறை வாழ்க்கை செயலில் அதை எண்ணிச் செயல்படும் பொழுது உற்ற பயனே வரும் என்ற எண்ணிடாத் தன்மையாக… அற்றவைகளின் செயலில் அந்நிலையையே மீண்டும் எண்ணி ஏக்கமாகச் செயல்படும் பொழுது அந்த வினையின் தொடரே “விதி…” என யார் தான் உணர்கின்றனர்…?

மெய்ஞானத்தின் சுடராக நீக்கமற விளங்கும் மெய்ஞானச் செல்வங்களே…!
1.”முக்தி…!” என்று பக்தி வழியாக அதை உரைத்திட்டால் உரைக்கின்ற உரையின் முழுமை (உங்களுக்கு) விளங்கிடாது.
2.குழந்தைக்கு மருந்து புகட்டிடும் தாய் சுவையான பதார்த்தங்களைக் காட்டி நோய் அகலக்கூடிய அந்த மருந்தை அளிப்பதை போல்
3.இன்றைய மனித குலத்தையே மனித குணத்தையே பீடித்துள்ள எண்ணத்தில் செயல்படுகின்ற வினைகள் அகல
4.மாமகரிஷிகள் உவந்து (மகிழ்ந்து) ஊட்டுகின்றனர்… இவை அனைத்துமே பாட நிலை தான்.

ஆத்ம பலம் பெற்று… உயிர் ஆத்மக் கலப்பாக… ஆதிசக்தி எனும் “ஜோதித்துவ சங்கமத்தின் சங்கமேஸ்வரனாய்” சிறப்புற விளங்குதலே… சித்தன் சூட்டிய சொல்… அகம் காட்டிடும் அழகு… என்றும் அகலா “ஞான முறுவலாகப் (மகிழ்ச்சிக் குறி) பூத்திட வேண்டுமப்பா…!”

ஞான முறுவல் காட்டிடும் முகம்… அகம் வாழ் ஜெபமாய் சித்தி நிலை பெற்றிருக்கும்…! என்பது உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை.

1.ஞான முறுவல் கொள்கின்ற மனத்திற்குள் கோபம் ஏது…?
2.கோப குணம் தவிர்த்திட நந்தி ஞான முறுவல் கொள் என்பார்கள் சித்தர்கள்
3.உள்ளன்போடு உவந்து சினம் தவிர்க்கும் உபாயம் விருப்பமோடு செயல் நிலை ஆக்கிடவே இதை உரைக்கின்றோம்.

தியானப் பயிற்சி

 

1.எம்மை நேரடியாக நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.
2.இருக்கும் இடத்திலிருந்து எண்ணினாலே என்னுடைய (ஞானகுரு) அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

அந்தப் பயிற்சியைத் தான் இங்கே கொடுக்கின்றேன்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணுங்கள். அம்மா அப்பா தான் முதல் தெய்வங்கள் அவர்களால் தான் நாம் உடல் பெற்றோம். அவர்களின் நல்லாசி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று இந்தப் பேருண்மைகளை எல்லாம் எனக்கு உணர்த்தியது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அந்த மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

ஈஸ்வராய குருதேவரின் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். கண்ணிலே ஏங்கி நேராக உற்றுப் பார்த்துத் தியானியுங்கள்.

இப்போது கண் வழியாக அதை இழுத்துக் கவர்கின்றீர்கள் அடுத்து கண்ணின் நினைவு புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

அங்கே காந்தம் இருக்கின்றது அதிலே நாம் துருவ நட்சத்திரத்தினைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம்.

ஆனால் வழக்கமாக நாம் மூக்கு வழியாகச் சுவாசிக்கின்றோம். நுகர்கின்றோம் உயிரிலே மோதி அந்த உணர்ச்சிகள் நம்மைத் தெரிய வைக்கின்றது… இயக்குகின்றது.

ஆனால் அதை முதலில் சொன்ன முறைப்படி புருவ மத்தி வழியாகத் துருவ நட்சத்திரத்தை அந்தக் காந்தத்தின் வழி கவரும் பொழுது பிற தீமைகள் சுவாசத்தின் வழி உள்ளே புகாதபடி துருவ நட்சத்திரத்தில் உணர்வுகள் அடைப்பாகி விடுகிறது.

ஆகவே தீமைகள் நமக்குள் போகாது நாம் தடைப்படுத்தி விடுகின்றோம்.

ஆனால் உள்ளே சென்றுவிட்டால் இரண்யன். நல்ல அணுக்களை அது கொன்றுவிடும் அது வேதனை கடும் நஞ்சு அதை நாம் குரு காட்டிய வழியில் தடைப்படுத்தி துருவ நட்சத்திரத்தினை கண்களிலே நினைத்து இங்கே கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா கண்ணைத் திறந்தே தியானியுங்கள். பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் என்று அப்படியே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிக் கொண்டே இருங்கள்.

பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த இரத்தங்களில் அதனைக் கலக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தத்தில் கலக்க வேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று செலுத்தி விட்டு அடுத்து அந்த இரத்தம் போகும் பாதைகள் அனைத்துமே அந்த இரத்தங்கள் முழுவதுமே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளி படர வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

அது உடல் முழுவதும் சுழன்று எல்லா உறுப்புகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய எல்லா ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

நாம் மற்றவருடன் பிரியமாக பழகி அன்புடன் இருந்து அவர் திடீர் இறந்து விட்டால் நம் மீது பாசமாக இருந்தால் அந்த ஆன்மா நம் இரத்தத்தில் தான் இருக்கும்.

அவருடைய கெட்டதெல்லாம் இரத்தத்தில் இருந்து கொண்டு நமக்கு அது தொல்லைப்படுத்தும் நிலையாக வரும். நம்முடைய சிந்தனைகளைக் குறைக்கும். அது உடலுக்குள் வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

அதனால் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற அவசியம் நாம் அந்த நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பரவ வேண்டும் என்று நினைவைச் செலுத்த வேண்டும்.

அடுத்து இந்த வாயு மண்டலங்கள் அதாவது அந்த நரம்பு மண்டலங்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அதில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

நாம் சர்வ காலம் கண்களில் எத்தனையோ உற்றுப் பார்க்கின்றோம். எக்ஸ்ரே எப்படி ஊடுருவிச் செயல்படுத்துகின்றதோ அது போன்று கண்களால் பார்த்த்து எலும்புக்குள் ஊனாக இருக்கும்.

நான் எதையெல்லாம் பார்க்கின்றோமோ வரிசையில் அங்கே பதிவாக்கிக் கொண்டே இருக்கும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து அதில் இருக்கக்கூடிய ஊனில் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

மீண்டும் புருவ மத்திக்குக் கண்ணின் நினைவைக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே நினைவைச் செலுத்துங்கள்.

இப்படியே மாற்றி மாற்றி எல்லா இடங்களுக்கும் நினைவைச் செலுத்தி பல முறை தியானியுங்கள்.
1.இப்படிச் செய்ய இது என்ன காசா பணமா…? ஒன்றும் இல்லை.
2.உங்கள் நினைவு மட்டும் தான். இதைச் செய்வதற்கு என்ன வந்தது…?
3.சிறிது நாளைக்குப் பழகிக் கொண்டால் தன்னாலே வேலை செய்யும்.

நல்லது திட்டியவனையோ அல்லது உடல்நிலை பற்றிய வேதனையோ திரும்பத் திரும்ப எண்ணுவதற்குப் பதிலாக அருளைப் பெற வேண்டும் என்று நாம் எண்ணினாலே போதுமானது.

ஏனென்றால் இனி வரக்கூடிய காலங்கள் மிக விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடியவர்களாக நீங்கள் வரவேண்டும்… அந்தச் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு பல வகைகளிலும் எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

கடவுளின் அவதாரம் வராக அவதாரம் பன்றி எப்படிச் சாக்கடைக்குள் உள்ள நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்ல மணத்தை நுகர்கின்றது.

அதே போன்று நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று அதன் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து எத்தகைய விஷத்தன்மையாக இருந்தாலும் அதைப் பிளந்து விட்டு உங்கள் சிந்தனை கலையாது உங்கள் வாழ்க்கையை அருள் ஞானத்தை போதிக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

1.இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தோடு இணைய வேண்டும்
2.பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று அதைப் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேசம்.

“அருள் வழியில் வாழ்ந்து காட்டுவோம்…” என்ற உறுதி கொள்ளுங்களப்பா…!

 

வாழும் வாழ்க்கையின் இயல்(பு) கொண்டு… வானியல் அறிந்திடும் செயலுறும் எண்ணத்தின் உயர்வால்… ஞானத்தின் சுடர்தல் தெளியும்.

வாழ்வேனும் சமுத்திரம் கண்டாய்…!
1.ஞானச்சுடர் வாழ்வியல் ஆக்கும் தெளிவின் வழியை அறிவுறுத்தி
2.எது செயல்படும் ஆக்கமோ அவ்வழி நிற்றல் “மனத்தின் திறன்” என்றே
3.செயலுறும் செயல்பாட்டின் வேகம் “வானியல் (விண்ணுலக ஆற்றல்) பெற்றிடும் விவேகத்தில் நிலைநிற்றல் வேண்டும்…”

பால்வெளியின் உவர் அமில அடர்வு செயலுறும் தன்மைகள் கண்டோம். நீரமில சக்தியில் கலந்திட்ட அந்நிலை உருக்கோலம் கொண்டிட்ட செயலில் மாமகான்கள் தத்துவங்களாகக் காட்டியதில் உருக்கோலம் கொண்ட உவர் அமில அடர்வு நீரின் ஆழம் காணச் சென்றதாக உரைப்பதும் உண்டு.

பக்தியின் தொடர் காட்டும் செயலில் பெற்று உயர்வது எக்காலம்…?

உயிரணுவைச் சுவாசமாகச் சூழ்ந்திட்ட நல் உணர்வெனும் ஆத்ம முலாம் சுடர்ந்திடும் செயலுக்கு எல்லாமே எண்ணம் தான்.

ஞானத்தின் செயலுக்குக் காட்டிடும் வேகம் உணர்வெண்ணத்தின் மாற்றத்தில் முன்பு கூறிட்ட “அதே விவேகம்” தியானத்தின் வழியாக மெய்ஞானச் சுடர் எனும் விழுமிய வேதப் பொருளாக நன்நிலையை உயிர் ஆத்ம சக்தி பெற்று வளர்த்து உயர்த்திக் காட்டும்.

மாமகான்கள் உரைத்திட்ட நல்ல நெறிகள் வெறும் போதனை மாத்திரம் அன்று. வாழ்க்கையின் நிலைகாட்டி உயர் ஞான வலுவில் மெய்ஞானியாய் வாழும் வகை காட்டியதே போதனாமூர்த்திகளான அப்போதினிகள் கைக்கொண்ட செயல் நிலையை “எளிமையாக உரைக்கின்றோம்…”

வாழ்க்கையே மணல் குன்று…!
1.ஏற சறுக்கும் மணல் குன்று…
2.சாணுக்கு முழம் சறுக்கும் என்று மெய்ஞானியர் சுட்டிக்காட்டுவதில்
3.மெய்ஞானத்தின் விழிப்பு விவேகமாகத் தன்னைத்தான் வளர்த்துக் கொண்டிடவே இந்த எளிய தியான முறை.

“மணல் குன்று” என்று வாழ்க்கையை ஒப்பிட்டால் சறுக்குமே…! என்று ஏறாது இருக்க முடியுமா…?
1.”வாழ்ந்து காட்டுவோம்…” என்ற மனதின் உறுதிக்கு
2.அந்தப் புறச்சான்றுகளைக் காட்டினோமப்பா.

அகத்தின் உயர்வு கூட்டும் அதே மன உறுதி தான் தியான நிலையில் ஆத்ம பலம் கூட்ட எண்ணுகின்றோம். பிறப்பறுக்கும் உயர்வாம் ஆத்ம கலப்பாக எண்ணுகின்றோம்.
1.உணர்வலைகள் தொழில்படும் ஜீவ சரீர பிம்பத்தில்
2.“சகல உயிரணுக்களும்… சக்தியின் வலு கூட்டிக் கொள்ள எண்ணுகின்றோம்….”

சித்தன் நிலையைப் பெறச் செய்யும்… சித்தத்தின் சிந்தனா சக்தி குவிக்கப் பெறும் ஓர்முக நினைவோட்ட குணத்தன்மைகளில்… “பிடர்தல்” எனும் எண்ணத்தின் பாங்கு வான் இயல்பு காட்டிடும் முறைகள் முறையாக உரைப்போம்.

நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாகின்றாய்…!

 

நம் உடல் ஒரு கோவில்… எதன் உணர்வை நாம் எண்ணுகின்றோமோ அது இறையாகின்றது. உணர்வின் தன்மை இறையான பின் மீண்டும் அதை எண்ணும் பொழுது இறையின் உணர்வு செயலாகும் பொழுது அதுவே தெய்வமாகின்றது.

1.வேதனை என்ற உணர்வாகும் பொழுது வேதனைப்படுத்தும் செயல்களையே சேர்த்து…
2.வேதனைப்படுத்தும் தெய்வமாக நமக்குள் குடிகொள்கின்றது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா. இதற்காகத்தான் ஞானிகள் கோவிலை அமைத்தது.

நமக்குள் இருக்கக்கூடிய நூறு உணர்வுகளை ஆலயமாக மாற்றுகின்றனர். கோவிலுக்குச் சென்ற பின் இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று சொல்கின்றனர்.

நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது இங்கே அசுரனாக மாறி விடுகின்றது. பத்துத் தலை இராவணன் என்ன செய்கின்றான்…? சீதாவைச் சிறைப் பிடித்து விடுகின்றான்.

இப்பொழுது கோவிலுக்கு சென்று நீங்கள் சந்தோஷமாக இருங்கள் பார்க்கலாம். என்னிடம் (ஞானகுரு) வருவோர்களை இங்கே நல்லதை எண்ணிக் கேட்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்…!

என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்… என் தொழில் நஷ்டமாகிக் கொண்டே போகின்றது… எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று இதைத்தான் சொல்கின்றார்களே தவிர…
1.சீதா என்ற அந்தச் சந்தோஷத்தை ஏதாவது நீங்கள் இயக்குகிறீர்களா…?
2.கஷ்டத்தை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றீர்கள்.

எவ்வளவுதான் நான் சொல்லிப் பார்த்தாலும்… இங்கே பிரசாதம் கொடுக்கும் போது பாருங்கள். என் பையன் இப்படி இருக்கின்றான். எல்லாம் நான் நல்லதைத் தான் செய்தேன் ஆனால் என் குடும்பத்தில் கஷ்டமாக இருக்கின்றது என்று தான் சொல்கிறார்கள்.
1.கஷ்டத்தை நீக்குவதற்குச் சக்தி கொடுங்கள்…
2.கஷ்டத்தை நீக்கக்கூடிய வழியைக் கொடுங்கள்… என்று யாருமே கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

கீதையிலே சொன்னது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்

கஷ்டம் என்ற உணர்வு வரும் பொழுது கண்ணின் நினைவு பையனிடத்தில் செல்கின்றது. நான் சொல்லும் நல்ல எண்ணத்திற்கு இங்கே வருவதில்லை… விலக்கி விட்டு விடுகிறது. அப்பொழுது வேதனையைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள்

கோவிலிலே சிலையைக் கண்ணுற்றுப் பார்க்கின்றோம்… “இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும்…” என்ற எண்ணத்தை எண்ணும் பொழுது…
1.நல்லதைச் செய்யக்கூடிய அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் அந்த நன்மை பெற வேண்டும்
3.இந்தக் கோவிலுக்கு வரும் குடும்பம் எல்லாம் அந்த நல்ல நிலை பெற வேண்டும் என்று எண்ணினால்
4.நம் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் அதுவாக (நல்லதாக) ஆகின்றோம்.

எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் கண்ணிலே காட்டுகின்றது பையனுடைய எண்ணங்களை வைத்துக் கண்ணை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டுச் சிலையை பார்த்தால் என்ன நடக்கும்…?

அழுகை தான் வரும்

அப்பொழுது நாம் அதுவாக ஆகின்றோம்… மீண்டும் நாம் வேதனையைத் தான் சேர்க்க முடிகிறதே தவிர நல்லதை நாம் பெற முடிகிறதா…? கோவிலை நாம் யாராவது மதிக்கின்றோமா…?

நமக்குள் சூட்சமாக இருப்பதை அறிந்து… அதை எவ்வாறு சீராகச் செயல்படுத்த வேண்டும்…? என்று ஞானிகள் காரணப் பெயரை வைத்து ஸ்தல புராணங்களைக் காட்டி “இந்தக் குணத்தைச் சுவாசித்தால் உனக்கு அது நன்மை செய்யும்…! என்று சொல்கிறார்கள்.

நன்மை பெறுவதற்காகச் சிலையை வடித்துக் காட்டியுள்ளார்கள். பக்தி என்றால் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பம் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் கடன் கொடுத்திருப்போம். அவருக்கு நல்ல வருமானம் வேண்டும்… திருப்பிக் கொடுக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் பணம் வந்து சேரும்.

ஆனால் மாறாக நாம் எப்படி எண்ணுவோம்…?

கடன் கொடுத்தேன்…! பாவிப்பயல் என்னை ஏமாற்றுகின்றானே… மோசம் செய்கின்றானே…! என்று கோவிலில் வந்து இப்படிச் சொன்னால் என்ன ஆகும்…?

யாருக்கு நாம் கடன் கொடுத்தோமோ… அவனை மேலே எழுந்திருக்க விடாதபடி… சம்பாதிக்க விடாதபடி… கடனைத் திருப்பிக் கட்ட முடியாதபடி… நம்முடைய எண்ணமே அங்கே தடையாகிறது.

அதுதான் நடக்கின்றது… நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றது அவனால் பணத்தைத் திரும்பக் கொடுக்க முடியாது. உங்களால் வாங்க முடிகிறதா…?

இது எல்லாம் கண்ணின் இயக்கங்களைப் பற்றி…
1.நாம் நுகரும் உணர்வுகள் ஆதன் வழி வாழ்க்கை எப்படி நடக்கின்றது…? என்பதை
2.நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் ஒவ்வொருவரும் காலை துருவ தியான நிலையில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெற்று அந்த சக்தி மனைவிக்குப் பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்குப் பெற வேண்டும் என்றும் தங்கள் தாய் தந்தையருக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் இப்படி யாரெல்லாம் தியானிக்கின்றீர்களோ அப்பொழுது பிறவியில்லா நிலை அடையும் அருள் சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்…!

இந்த மனித உடல் கிடைத்த பின் இந்த உடலிலிருந்தே சொர்க்க பூமி என்றும்
1.நம் உயிர் சொர்க்கவாசல் என்றும்
2.நாம் எண்ணும் உணர்வுகள் அதன் வழி (உயிர்) சென்று
3.பிறவியில்லா நிலை அடையும் அருள் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நமக்கு எதுவுமே சொந்தமானது இல்லை… “நிரந்தரமானது” என்று எதுவும் இல்லை.

உயிருடன் ஒன்றிய இந்த உணர்வை ஒளியாக மாற்றுவதுதான் நமக்குச் சொந்தம். பேரின்பப் பெருவாழ்வு என்ற பேரானந்த நிலை கிடைக்கின்றது. அதுவே ஏகாந்த நிலை என்று ஆகின்றது.

இதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

நாம் அனைவரிடமும் பழகுகின்றோம். பழகும் போது ஒவ்வொருவர் உடலிலும் பகைமை உணர்வுகள் சலிப்பு உணர்வுகள் குரோத உணர்வுகள் கோப உணர்வுகள் கொதித்தெழும் உணர்வுகள் இதைப் போன்று எத்தனையோ உணர்வுகளை நாம் கேட்டறிகின்றோம்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளராதபடி தடுப்பதற்காகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

1.நாம் பார்ப்போர் உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில்கள் வளம் பெற வேண்டும்.
4.அவர் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
5.எங்கள் பார்வையில் அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்.
6.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
7.எங்களைப் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் என்று
8.இந்த முறைப்படி எண்ணினால் இது தான் ஏகாதசி விரதம்…!

சரியான நேரத்தில் நல்லதைச் செயல்படுத்த முடியாதபடி போவதன் காரணம் என்ன…?

 

அன்றைக்கு எனக்கு வரம் கொடுத்தீர்கள் அல்லவா… அந்த வரத்தை இப்பொழுது கேட்கின்றேன். என்று கைகேயி தசரதனிடம் கேட்கின்றது அந்த வரத்தை நீங்கள் கொடுக்கவில்லை என்றால் உலகம் உங்களைத்தான் தூற்றும். சத்தியத்துக்கு விரோதமானவர் என்று உங்களைத் தான் சொல்லும் என்று சத்தியம் பேசுகிறது.

தசரதன் பல வகைகளிலும் யோசிக்கின்றான் என்ன செய்வது என்று…!

வரத்தைக் கொடுத்த பின் இப்படிக் கேட்கின்றாளே…! இராமனுக்குப் பட்டம் சூட்ட முடியாது போகின்றதே…! என்ற வேதனை அதிகரிக்கிறது.
1.ஆனால் அன்று வெற்றி பெற உதவியாக இருந்தது.. அப்போது மிகவும் சந்தோஷப்பட்டான்.
2.தன் உடலிலே இருந்து அது என்ன செய்கின்றது…?
3.தன் மகனுக்கே (பரதனுக்கு) பட்டம் சூட்ட வேண்டும் என்று அதன்படி அங்கே வேதனையைத் தான் உருவாக்குகின்றது.

தசரதன் பல வகைகளிலும் சிந்திக்கின்றான். அவனால் ஒன்றும் பேச முடியவில்லை… மௌனியாகின்றான்.

இதைப் போன்று தான் உங்கள் உடலில் வெறுப்பும் வேதனையும் அதிகமாகி விட்டால்
1.உங்களால் ஏதாவது பேச முடிகின்றதா…? நல்லதை ஏதாவது செயல்படுத்த முடிகின்றதா…?
2.வேதனை உணர்வுகள் எடுக்கப்படும் பொழுது நல்லதைச் செயல்படுத்த முடிகின்றதா..?
3.வேதனை என்ற உணர்வு வந்து விட்டாலே நல்ல பட்டாடைகளை… புதுத் துணிகளைக் கொடுத்து அணியச் சொன்னால் முடியுமா…?
4.அதை ஏற்றுக் கொள்ள முடிகின்றதா…? இல்லை.

உடலுக்குள் வேதனை அதிகமான பின் நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை. பல உணர்வுகள் நமக்குள் வந்து புலஸ்தியர்… புலனறிவைக் கொண்டு வரப்படும் பொழுது சந்தோசம் என்ற நிலையை உருவாக்க முடியவில்லை.

தன்னால் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற அந்த வேதனை உணர்வு தான் முன்னணியில் வருகின்றது.
1.அங்கே வேதனைப்படுத்தினான் முதலிலே
2.அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்தான்… ஏனென்றால் அதை இச்சைப் பட்டான்
3.மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்று பல கொலைகளைச் செய்தான்… அதை ரசித்தான்
4.அந்த உணர்வின் தன்மை பிரம்மகுருவாக ஆகி அதன் உணர்வே இங்கே செயல்படுத்துகின்றது.
5.தன் உடலுக்குள் இருந்து நல்லதைச் செயல்படுத்த முடியவில்லை…!

அவன் எண்ணியதை அங்கே செயல்படுத்த முடிகின்றதா…? அதற்கு மாறாகக் கைகேயி என்ன செய்கின்றாள்…?

இராமனைக் கூப்பிட்டு… “உன் தந்தை சொல்கின்றார்… நீ காட்டிற்குச் செல்… துறவறம் பூண்டு செல்…” என்று சொல்கிறது.

அதன்படி “தந்தை சொல்லிவிட்டார்” என்று தாய் என்ற நிலையில் தட்டாது அவன் சென்று விடுகின்றான்.

அவன் காட்டிற்குச் சென்ற பின் கைகேயி தன் மகன் பரதனைக் கூப்பிட்டு அனுப்புகின்றாள். அவனை வரும்படி செய்தபின் அங்கிருந்து வருகின்றான்.

நகருக்குள் வந்தபின் நாடே சூனியமாக இருக்கின்றது. ஒருவரும் பேசவில்லை… ஊமையாக மௌனமாக இருக்கின்றார்கள் சோர்வாக இருக்கின்றார்கள்…? ஏன்…? என்று வினாக்களை எழுப்புகின்றான்.

ஒருவரும் வாய் திறக்கவில்லை ஏனென்றால் நடந்த நிகழ்ச்சிகளைச் சொன்னால்… யார் செய்தது…? என்று சொல்லும் போது அதனால் பெரும் வெறுப்பாக வளர்ந்து விடும்…! என்று குற்றத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எல்லோரும் அதனால் மௌனமாக இருக்கின்றார்கள்.

இராமனின் தாயாரிடம் கேட்டால் அதுவும் மௌனமாக இருக்கின்றது. மற்ற உறவினர்களைக் கேட்டாலும் அவர்களும் மௌனமாக இருந்து விட்டார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. மக்களிடத்திலோ சேனாதிபதிகளிடமோ யாரிடம் கேட்டாலும் எல்லாருமே மௌனமாக இருக்கின்றார்கள்.

கடைசியில் தன் தாயிடமே கேட்கலாம் என்று வருகின்றான்.

அப்பொழுதுதான் தாய் சொல்கின்றது. அன்று போர் செய்யப்படும் பொழுது எனக்கு வாக்குகளைக் கொடுத்தார். அந்த வாக்கின்படி தான் கேட்டேன் அவர் கொடுத்தார் கொடுத்த பின் வேதனையால் அவர் மடிந்து விட்டார்.

நான் தவறு செய்யவில்லை..!

இராமனுக்குப் பட்டாபிஷேகம் சூட்ட முடியவில்லை என்று ஏக்கத்திலே இறந்து விட்டார். உனக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்ற நிலை வந்து விட்டது ஆகவே நீ இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்…! என்று தாய் சொல்கின்றது.

அப்போதுதான் பரதன் சொல்லுகின்றான் உன் தாயார் வீட்டிலும் இது தான் நடந்தது…!

யாரிடத்தில் அந்த வேதனை (முதலில்) உருவாகின்றதோ அது தாயாகின்றது. அதன் உணர்வுகள் எப்படி இயங்குகின்றது…? என்று உணர்வின் எண்ணங்கள் எதன் வலுவோ அதன் வழி எப்படி இயக்குகின்றது…? என்பதை இராமாயணத்தில் தெளிவாக காட்டுகின்றது.

1.உன் தாயார் வீட்டில் இதே தான் நடந்தது.
2.அதனின் மகளாக இருந்து நீ இங்கே வந்ததனால் எங்கள் சாம்ராஜ்யத்தையும் நீ சூனியம் ஆகிவிட்டாய்
3.அன்றே உன்னைக் கொன்றிருந்தால் இந்த நிகழ்ச்சிகள் இங்கே நடந்திருக்காது.

அதாவது எந்தத் தீமை என்ற நிலையை இச்சைப்படுகின்றோமோ அன்றே நாம் அதை அழித்திருத்தல் வேண்டும் என்று இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையக்கூடிய தகுதி பெற்ற நாம்
1.அந்த உண்மையின் உணர்வை எடுக்காதபடி உடலுக்குள் தீமை புகுந்து விட்டால்
2.அது விஷம் என்ற நிலையில் அதனுடைய கடுமைகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற
3.உணர்வின் இயக்கத்தின் வலிமையை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

“ஈஸ்வர அனுபூதி…” பெற வேண்டுமப்பா…!

 

உலக நடைமுறை வாழ்க்கையினை உணர்ந்து செல்லும் வழி… நிதான நடைமுறையைக் குறிக்கும்.
1.ஊருடன் ஒன்றி வாழவும் வேண்டும்
2.நாம் கொள்ளும் “ஈஸ்வர அனுபூதியால்” பெற்று வளர்த்துக் கொண்டிட்ட “தனித்துவ மெய்ஞானச் சுடராக”
3.மற்றவர்களுக்கு வழிகாட்டிடவும் வேண்டும்.

பேரருள் ஜோதியாக நம் உயிர் ஆத்ம சக்தியை வலு கூட்டிக் கொள்வதின் “பயன் இது…” என்று அன்பு மகரிஷிகளும் இயற்கையில் ஒன்றி வழி நடத்திடும் விதம்தான் என்னப்பா…?

ஆசையுடன் வாழும் மேன்மையையே ஆரம்ப நிலையிலிருந்தே உரைத்துக் கொண்டு வருகின்றோம்.

1.வாழ்வேனும் சாகரத்தில் அலைகள் ஓய்ந்தபின்
2.படகில் பயணம் செய்ய நினைக்கின்ற மனிதன் “பித்து நிலை பெற்றவனப்பா…”

அலைகளும் சுழல்களும் திமிங்கலம் போன்ற எத்தனையோ விஷமான ஜீவஜந்துக்களும் அனைத்தும் உள்ளிட்ட சாகரம் தான் மனிதன் வாழுகின்ற வாழ்க்கையின் நிலை.

தத்துவம் உரைத்திட நான் வரவில்லை…!

வள்ளுவச் சித்தன் உரையே “பிறவிப் பெருங்கடல்… அதனைக் கடந்திடும் காப்பெனும் கவசம் ஈஸ்வர தியான வழிமுறை…!” அதுவே ஒளி தந்து ஒளியாக்கும் செயலுறும் நிலை.

நூல் வழியில் அதை அறிந்து கொண்டவனப்பா நீ.

நீர்க்கரை ஓரம் வேரோடு வளர்ந்திட்ட விருட்சம் புதுப்புனலில் கரை கரைந்து தலை சாய்த்த விதமும்… நீர்க்கரை கொடி நிலை நின்ற விதமே…
1.இவ்வாழ்வின் சாதுரிய வாழ்க்கையின் நடைமுறை என்பதிலும்
2.ஜெபத்தின் வழி தியானமாகத் தன் உயர்வைத் தான் கூட்டி…
3.கிளர்ந்தெழும் ஐந்தடக்கிச் (அதி ஆசை நிலை விடுத்தல்) செயல்படும் காலத்தே
4.சிந்தனையில் உணர்ந்திட்ட “சித்தன் நிலை பெற்றிடும் வாய்ப்பு…”

“உவர் அமிலம்” என்பது மூலகப் பொருளாக பால்வெளியின் தன்மையாக மூலக்கூறுகள் இணைவதும் அந்த உவர் அமில அடர்வு நம் பூமியின் வட தென் துருவங்களாக ஈர்ப்பில் செயலுறும் குளிர்விப்பாக… அம் மூலக அடர்வுகள் நீர் சக்தியின் முத்தொழில் தன்மைகளில் ஒன்றாகச் செயலுறுகின்றது.

திடம் கொண்டிட்ட நீர் சக்தி (பனிப்பாறைகள்) திரவ நிலை பெற்றிடும் நீராக செயலுறுங்கால்… ஈர்ப்பின் செயலில் உவர் அமிலம் நீரினுள் கரைந்து அடர்ந்து விட்டால்… உவர் அமில அடர்வில் மிதக்கும் உடல் நீர் மேல்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் அணுக்களுக்குள் இணைக்கும் முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

ஏனென்றால் புருவ மத்தியில் இப்படி எண்ணி விட்டால்… இதற்கு முன்னாடி நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளுக்கு ஆகாரம் போகாதபடி தடுக்கின்றோம்.

அருள் ஞானத்தின் உணர்வுகளை உயிர் வழி நமக்குள் பரப்புகின்றோம்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரிலே மோதும் போது ஒளிக்கற்றைகள் தோன்றும்.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப் போன்று
3.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவரப்படும் பொழுது… அது நமக்குள்
4.அறியாமை என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையை உருவாக்கும்.

உங்கள் நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி… உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

எப்படி ஊசி மூலம் மருந்தை எடுத்து உடலுக்குள் செலுத்திய உடனே இரத்தங்கள் முழுவதும் அந்த மருந்து பரவுகின்றதோ அதேபோன்று
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று
2.உங்கள் கண்ணின் நினைவு கொண்டு உள்ளே செலுத்துங்கள்.

எங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறும்படியாகக் கண்ணின் நினைவை உள்ளே செலுத்துங்கள்.

உறுப்புகளை எவ்வளவு தூரம் என்ன முடியுமோ உறுப்புகளில் அந்த சக்தி படர வேண்டும் என்று ஏங்கி நினைவைச் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் இப்பொழுது புது விதமான உணர்ச்சிகள் தோன்றும்… அதை உணரலாம்.
1.தீமையான அணுக்கள் இருந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தி அதிலே படும் பொழுது அது பலவீனமடையும்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

உடல் உறுப்புகளில் எத்தகைய தீய அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது வலு இழக்கின்றது.

கண்ணின் நினைவை அவ்வாறு செலுத்தப்படும் பொழுது…
1.அந்த ஜீவ அணுவின் காந்தமும் உங்களுடைய உணர்வின் நினைவும் செலுத்தப்படும் பொழுது
2.எளிதில் உங்கள் உடல் உறுப்புகளுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

ஒரு நல்ல மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் உருவாகும்.

தியானம் எடுப்பவர்களுக்கு வேக குணம் ஆகாத ஒன்று…!

 

மண்ணிற்குள் மறைந்திருக்கின்றது கிழங்கு. பசியின் வேகம் இருந்தாலும் அந்தக் கிழங்கினை அகழ்ந்து எடுக்கின்ற செயல் மிருக இனங்களில் ஒன்றான காட்டுப்பன்றி மூர்க்க குணம் கொண்டே வளர்ந்தது அதன் செயல்.

பூமிக்குள் மறைந்து கிடக்கும் கிழங்கை அறிந்து கொண்டு தன் கொம்புகளால் மண்ணை அகழ்ந்தது அந்தக் கிழங்கைப் பற்றி எடுக்கின்றது. காரணம் பசியின் வேகம்…!

காட்டுத் தீ பற்றி எரிகின்றது. பிறகு பெய்கின்ற மழைக்குப் பின் மண்ணிற்குள் மறைந்து கிடக்கும் கிழங்கு துளிர்விட்டுத் தழைத்து வளர்கின்றது.

பெரும் நெருப்பாகப் பற்றி எரிகின்ற காட்டுத் தீ… மரம் செடி கொடிகள் பசும்தளிர்கள் அனைத்தையும் பஸ்பமாக்கிப் பின் ஒருவாறு அடங்குகின்றது.

காய்ந்த மரம் பற்றி எரிகின்ற பொழுது பசுமை நிறைந்த மரங்களையும் தன் வெப்ப நாக்குகள் வெளிப்படுத்திடும் உஷ்ணத்தினால் தகித்து… பின் அதுவும் கனன்று பற்றிக் கொள்கின்றது.

அந்த வனத்திற்குள் வாழ்கின்ற கொடிய ஜந்துக்கள் அப்பொழுது வாழ்வது எங்கே…?

மண்ணிற்குள் மறைந்த கிழங்கை அகழ்ந்து எடுத்திடும் காட்டுப்பன்றியானது பசியின் வேகத்தால் கிழங்கினை அறிந்து கொள்ளும் அறிவு பெற்றது தான்.

இருந்தாலும்…
1.காட்டுத் தீயின் பெரும் நெருப்பில்… பன்றி தன்னைக் காத்துக் கொள்ள ஓடிடும் வேகத்தைக் காட்டிலும் நெருப்பின் வேகம் அதிகம்.
2.மூர்க்கத்தனமான அறிவு அங்கே செயல்படாது ஒழிந்தது.
3.குணங்கள் அறிவுறுத்தும் தன்மைகள் அனைத்திலுமே மனத்தின் பக்குவம் அறிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

திருமுல்லைவாயில் என்னும் இடத்தில் பௌர்ணிகர் ஒருவர் காட்டு வழிப் பாதையில் தாகத்திற்கு அருந்த நீர் கிடைத்திடாத வனப்பகுதியில் நீருக்காக அலைந்து ஏங்கி ஓடிய பொழுது பற்றிக்கொண்ட காட்டுத் தீயானது விரட்ட… ஓடி அலைந்து அவருடைய உயிர் நீங்கப் பெறும் தருவாயில் “வேதாள மாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டார்…!”

அவர் அன்று ஒலித்த ஞானத்தின் சுடர்தல்… இன்றும் இந்தக் காற்று மண்டலத்தில் ஓடி உலவுகின்ற கருத்தின் கோர்வைகளப்பா.
1.அப்பொருள்களையே இங்கே உரைக்கின்றோம்…
2.உரைத்துக்கொண்டே வருகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எம்முடன் (ஞானகுரு) 20 வருடம் பழகியவர்களும் அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் இங்கே வந்தால் (தபோவனம்) தீட்டு…! உள்ளே போகக் கூடாது…! என்று எண்ணுகின்றார்கள்.

1.இறந்த பின் இன்னொரு இடத்திற்குப் போகக் கூடாதா…?
2.கோயிலுக்குப் போகக் கூடாதா…?
3.கோயிலுக்குப் போகாமல் நல்ல நிலை பெறச் செய்வது எது…?

நல்ல நிலை பெறச் செய்வது தான் ஆலயம்…! அனைவரும் கூடி உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாவை ஒளி நிலை பெறச் செய்ய வேண்டும். இது தான் ஞானிகள் காட்டியது.

தீட்டு… தோஷம்… என்று சொல்லிக் கொண்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 48 நாட்கள் கழித்து இன்னொரு உடலுக்குள் போன பிற்பாடு தான் இங்கே வரப்போகின்றார்கள்.

இது எல்லாம் எந்த நல்ல நிலையைச் செய்தாலும் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை பெற்றாலும் யாம் சொன்ன நிலைகளை மறந்து விடுகின்றார்கள்.

இங்கிருந்து திருப்பதிக்குப் போனவுடனே உண்டியலில் காசு போடுகின்றோம் அல்லவா…? போகும் போது என் சார்பாக நீங்கள் என் காசையும் உண்டியலிலே போட்டு விடுங்கள்…! என்பார்கள்.

ஏனென்றால் இப்படித் தேடிக் கொண்டு வந்து போடச் சொன்னால் அதற்காக வேண்டி நமக்குச் “செல்வத்தைக் கொடுப்பான்…” என்ற நிலைகளில் அந்தப் பழக்கத்தில் தான் சிலர் உள்ளார்கள்.

அதே பழக்கத்தில் தான் இங்கே என்ன செய்கின்றார்கள்…?

“இறந்து விட்டார்…” என்று சாங்கியம் செய்து சாம்பலை எடுத்துக் கரைத்து விட்டு ஆற்றுக்குச் சென்று எல்லாரும் குளித்துவிட்டு மந்திரத்தைச் சொல்லி வீட்டிற்கு வந்து எண்ணெய் தேய்த்து முழுகி விட்டுச் சுற்றமும் உறவும் புத்தாடைகள் கொடுத்து அணிகின்றனர்.

பின் மாவிளக்கு செய்து நெய் தீபம் இட்டு விநாயகருக்குக் கொண்டு அர்ச்சனை செய்து மோட்சத்திற்கு அனுப்பும் பழக்கம் தான் உள்ளது.

1.இந்தப் பக்குவம் பெற்ற அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற்று
3.அவர் (இறந்தவர்) உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு நேரடியாக விண் செலுத்த வரவில்லை.

ஏனென்றால் என்னுடன் (ஞானகுரு) நீண்ட நாள் பழக்கமான சித்தையைன் என்ற அன்பரின் ஆன்மா திடீரென்று மறைந்து விட்டது. தகவல் கொடுத்தார்கள். தியானத்தின் மூலம் உந்தி மோட்சத்திற்கு அனுப்பி விட்டோம்.

பழனிச்சாமி இங்கே வருகின்றார். எல்லாம் இருக்கின்றது… ஆனால் மருமகன் இறந்து விட்டார்…! என்றால் உடனே அழுகை வருகின்றது.

ஏன் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு வரக் கூடாதா..? என்றேன்.

“தீட்டு…! என்று சொல்கின்றார்கள்…” என்கிறார்.

நாம் அனைவரும் மோட்ச லோகம் போக வேண்டும்… நாம் அதற்காக மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துத் தியானிக்க வேண்டும்…! என்ற நிலைகள் இல்லை.

செய்த பாவங்களை நீக்குவதற்காகச் சாங்கியங்கள் செய்யும் நிலைக்குத் தான் வருகின்றார்கள். இந்த உணர்வுகள் அடிப்பட்டால் மந்திரத்திற்குள் சிக்கி இன்னொருவனின் ஏவலுக்கு ஆளாகி ஆவியின் நிலையாகத் தான் இயக்க முடியுமே தவிர “உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியாது…”

நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இதைத் தெளிவாக்குகின்றோம்.
1.நாம் எதனின் வளர்ச்சியில் குரு காட்டிய வழியில் அருள் உணர்வைப் பெறுகின்றோமோ
2.அதன் வழியிலேயே தான் செல்ல வேண்டும்.

ஏனென்றால் இன்று விஷம் கொண்ட உலகில் வாழுகின்றோம். அதனை அகற்றிடும் நிலைகள் பெற வேண்டும்.

குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த ஆன்மாவை உந்தி விண் செலுத்தினால் உடல் பெறும் உணர்வை… அந்த இருளை அகற்றிவிட்டால் “அவர் நினைவு வரும்போதெல்லாம்..” நமக்குள் வரும் நஞ்சினை மாற்றும் அரும் பெரும் சக்தியாக வரும்.

1.உடலை விட்டுப் பிரிந்தவர்கள் யாரையும் இனி நாம் இங்கே இந்தப் பூமிக்குள் இழுக்கக் கூடாது.
2.அவர்களை அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்பி அந்த உடல் பெறும் உணர்வுகளை அங்கே கருக்க வேண்டுமே தவிர
3.“சுட்ட சாம்பலை இங்கே கருக்கிவிட்டால் பாவம் போய்விடும்…” என்றால்
4.அசாத்தியமான நிலைகள் கொண்டு நமக்குள் தவறின் வழிகளிலே நாம் பிழை கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.

என்னிடம் சொன்னவுடனேயே அந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்தில் யாம் இணைத்து விட்டோம். ஆனால் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் ஒரு ஈ கூட வரவில்லை.

ஏனென்றால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமாம்…!

கோயிலுக்குள் போகக் கூடாது… போனால் பாவமாம்…! ஆனால் கோவிலுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் என்ன செய்வார்கள்…? “கோவிலையே தூக்கிப் பேர்த்து எடுத்து விடுவார்களா…?”

நல்ல ஒழுக்கம் கொண்டு நல்ல உணர்வுகளை வளர்ப்பதற்கு யாம் சொன்னாலும் இந்தத் தியான வழியில் என்னுடன் பழகி 20 வருட காலத்தில் அனுபவப்பட்ட குடும்பமே இந்த நிலையானால் இன்று வருவோர் என்ன நிலை ஆவார்கள்…?

1.அருள் ஒளி பெற வேண்டும் என்ற நிலையையும்
2.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் நிலையையும்
3.என்றுமே பிறவியில்லா நிலை பெற வேண்டும் என்றும்
4.நாம் எண்ணியதைத் தான் உயிர் உருவாக்குகிறது என்றும் தெளிவாகச் சொல்கிறோம்.

ஆனால் இவர்கள் வழிபடும் தெய்வம் தான் இவர்களைக் காப்பாற்றும் என்றால் “அவர்கள் குடும்பத்தில் ஏன் சிக்கல் வருகின்றது…?”

ஏனென்றால் இதைப் போன்ற நிலையில் ஒன்றை நாம் வளர்த்துக் கொண்டால்… “நான்…” என்ற நிலைகளில் மற்றவர்களை அடக்க வேண்டுமென்ற உணர்வுகள் அங்கே வரப்படும் பொழுதுதான் பகைமை என்ற உணர்வுகளாகின்றது.

அதனால் ஒருவருக்கொருவர் வேதனை என்ற உணர்வுகள் வந்து… கடும் நோயாகி மனிதனல்லாத உருவாக மாற்றும் நிலையே வருகின்ற்து.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த மறைந்த நிலைகளைத் தான் மீண்டும் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இன்று விஞ்ஞான உலகில் மனிதனுடைய உருவே முழுமையாக அழியும் தன்மையிலிருந்து மீண்டிடும் நிலையைப் பெற வேண்டும் என்று சொல்கிறேன்…!

கேட்பார் யாருமில்லை…!

ஏனென்றால் 20 வருடம் பழகியவர்களே இந்த மாதிரி இருக்கின்றார்கள் என்றால் அப்புறம் எப்படி இருக்கும்…? விடிய விடிய உட்கார்ந்து எல்லா உண்மைகளையும் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன்.

நான் ஞானம் பெற்ற நிலை… வளர்ந்த நிலை…! என்று எல்லாமே சொல்லியிருக்கின்றேன். அவர்களே இந்த நிலையில் இருக்கின்றனர் என்றால் அப்புறம் அதில் வேறு என்ன இருக்கின்றது…?

ஏனென்றால் எல்லாரும் அருள் ஞானம் பெற வேண்டுமென்ற ஆசை எனக்கு இருக்கின்றது. என் ஆசை என்றும் குறைந்ததில்லை…! எல்லாரும் பெற வேண்டுமென்ற ஆசையின் உணர்வு இருந்தால் நிச்சயம் அந்த அருள் ஒளியை நாம் பெறுகின்றோம்.

ஆனால் இப்படிச் சாங்கியத்தை செய்து பாவத்தைப் போக்கும் ஆசை இருந்தால் அவர்கள் அந்த வழியிலே போகட்டும்.

ஒவ்வொரு நொடிகளிலும் இந்த மனித வாழ்க்கையில் நாம் எதனின் நிலையை எடுக்கின்றோமோ நம்மை அறியாது சில குறைகள் எடுத்தால் அருள் ஒளி பெற்று நம்மை நாம் திருத்தி கொள்ளப் பழகுதல் வேண்டும்.

பிறரின் குறைகளைப் பற்றிச் சொல்லும் போது தனக்குள் இருக்கும் குறை வருவதில்லை. குறைகளை உணர்ந்தாலும் குறையைத் தான் திருப்பி வளர்க்க முடிகின்றதே தவிர குறையை நீக்கும் மார்க்கம் இல்லை.
1.ஆகவே நம்மை அறியாது இயக்கும் இது போன்ற அறியாமையிலிருந்து மீள்தல் வேண்டும்.
2.அப்படி மீள்வதற்கே இந்த அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிப்பது…!

அசுர குணங்களிலிருந்து நாம் மீளக்கூடிய நன்னாள் தான் தீப ஒளித் திருநாள்

 

தீப ஒளி என்றால் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் மற்ற தன் அருகில் இருக்கக்கூடிய பொருள்களை எல்லாம் காணச் செய்கின்றது.

இதே போன்று நமது உயிர் நமக்குள் ஒளியாக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை இந்த ஒளி கொண்டு அந்த உணர்வின் குணத்தையும் மணத்தையும்… “உணரும் வழியில் – மணத்தின் வழியில்” நமக்கு உணர்த்துகின்றது… அறியச் செய்கின்றது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலையில் அறியச் செய்கின்றது.

நமது உயிர் நமக்குள் தீபமாக இருந்து… சுடராக இருந்து… நாம் எதை எண்ணுகின்றோமோ அப்பொருளை நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்வின் துணை கொண்டு அந்த உணர்ச்சியை ஊட்டி
1.உணர்வால் நம்மை அறியச் செய்கின்றது
2.மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் அதை நினைவுபடுத்தும் நன்னாள்தான் தீப ஒளி நன்னாள்

அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… கூட்டுத் தியானங்களிலிருந்து மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறக்கூடிய நன்னாளாக நாம் அமைத்திடல் வேண்டும்.

இன்றைய நாள்… எப்படி நாம் புத்தாடையைப் போர்த்தி அணிந்து மகிழ்கின்றோமோ… இதே போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வுகளை நம் நல்ல குணத்துடன் இணைத்து… இந்த வாழ்க்கையில் அந்த தூய்மைப்படுத்தும் உணர்வினை…
1.அந்த மகரிஷிகளின் உணர்வுகளைத் தெளிந்த மனதுடன் தெளிந்திடும் சக்தியாகப் போர்த்தச் செய்வது தான்
2.இந்த உபதேசமும் அதன் வழியில் தியானத்தின் மூலம் பெறக் கூடிய சக்தியும்.

பகைமை உணர்வுகள்… பாசத்தால் கேட்டறிந்த பார்த்துணர்ந்த வேதனை உணர்வுகள்… சந்தர்ப்ப பேதத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகள்… இவையெல்லாம் அசுர குணங்கள் கொண்டது.

அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளை நாம் அனைவரும் ஒருக்கச் சேர்ந்து… ஏகோபித்து அந்தச் சக்தியைப் பெற்று… நம்மை அறியாது இயக்கும் அத்தகைய அசுர குணங்களிலிருந்து மீட்டிடும் நன்னாளாக நாம் நினைவு கொண்டு… அதனின் வலு துணை கொண்டு… அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்து வரவேண்டும்.

எண்ணத்தில் உதயம் வேண்டுமப்பா…!

 

மண்ணினால் பாண்டங்கள் செய்கின்றான் கலைஞன். அந்தக் குயக்கலைஞன் பாண்டங்கள் வடித்திடும் பொழுது
1.தன்னுடைய ஆகாரத்திற்காகத்தான் அந்தத் தொழிலைச் செய்கின்றான் என்றாலும்
2.“மனக்கருவின் திருவை” (திருவை – பானை செய்யும் சக்கரம்) செய்தொழில் கலையாகச் சிறக்கச் செய்கின்றான்

(பானைகள்) குயக்கலங்கள் வடிவத்தில் சிறிதாக இருந்தாலும்… அந்த உருவம் தந்திடும் எண்ணத்தின் சிறப்பு… “எண்ணுவதால் கலத்திற்கும் சிறப்பு…!”

குயக்கலத்தின் சிறப்பை… செயலின் திறத்தை எண்ணுகின்ற மனம்… உயிர்த்தொகைகள் வடிவு எடுக்கின்ற எண்ணற்ற பிறவிகளில் மானிடப் பிறப்பே பகுத்தறியும் ஆற்றலின் வன்மையால் காணச் சிறப்பு எது…?

குரல் – உடல் என்றும்… குருமுனி என்றும் அழைக்கப் பெறுதலின் குரல் உடல் கொண்ட மனிதன் குருமுனிவன் ஆன விதம் என்ன…? குரல் உடல் பெற்ற சிறப்பு.

குயக்கலம் போல்…
1.குரல் உடல் பெற்றுக் கொண்டிட்ட மனிதன்… வளர்த்துக் கொண்டிட்ட விதம்
2.“காணாச் சிறப்பே கண்ணுறும்…” என்ற சொல்லுக்கொப்ப செய்தொழில் செய் திறத்தால் அமைவது என்னும் பாங்கில்
3.மெய்ஞானம் மெய்ஞான விழிப்பாகி… முகிழ்ந்த பின் மெய்ஞானச் சுடர் எனும் சுடர்தல் தன்மையாக
4.குரல் உடல் குருமுனியாகி… மாமகரிஷியாகி சப்தரிஷிகளுடன் கலந்து வாழ்ந்திடும் இயக்க நிலையை…
5.ஞானச் செல்வங்கள் அறிவால் அறிந்துணர்ந்து அதைப் பெற்று உயர்ந்திடவே அழைக்கின்றோம்.

சூரியன் தன் முகம் காட்டிய பின்பே உயிர்த்தொகைகள் உருக்காட்டுகின்றன (கண்ணுக்குப் புலப்படுவதாக) என்றால் என்னப்பா…?

சகல ஜீவன்களும்… ஜீவ ஆதார வித்துக்களும்… உயிரணுக்கள் தன்மையில் வளர்ந்த ஆத்மாக்களும்… ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு உயர்நிலை வளர்ப்பாக்கும் மெய் ஒலி… ஒளியின் கூட்டுறவாம் இயக்க சுருதி நாத லய மறைபொருள் தன்மைகள் என பல பல உரைத்தாலும்
1.இருளுக்குப் பின் ஒளி கண்டு இருளினில் மறைந்த பொருள்கள் புலப்பட்டு
2.கட்புலனாய்க் (நமக்குத் தெரியக்கூடியதாக) காணப்பட்டு உணர்கின்றோம்.

ஆக… எண்ணத்தில் உதயம் (பொருளறிந்து செயல்படும் நிலை) வேண்டுமப்பா…!

1.உணர்கின்ற தன்மையே (தன்னைத் தான் அறிதல்) மனத்தின் ஒளியாகும்
2.அந்த ஒளியினால் கருக்கொள்ளும் மனத்தின் திரு ஆத்ம முலாமாகச் சுடர்ந்திடவே…
3.மறைபொருள் தன்மைகளை (மறைக்கப்பட்ட… மறைந்து போன… உண்மைகளை) இங்கே உணர்த்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

கண்ணின் நினைவு கொண்டு பிறர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வுகள் நமக்குள் அணுவானால் நரகாசுரனாகி விடுகின்றது.

இருவர் சண்டை இடுகின்றனர்… அதிலே ஒருவன் கொலை செய்கின்றான்…! என்பதை நாம் உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாக மாறி நம் நல்ல குணங்களைக் கொன்று தின்று கொண்டே இருக்கும்.

1.கண்களால் பார்த்துத் தான்
2.நமக்குள் நுகர்ந்தறிந்து “அதைத் தீமை” என்று உணர்கின்றோம்.
3.இருந்தாலும் நம் உயிர் நுகர்ந்த உணர்வினை உடலுக்குள் அணுவாக மாற்றி விடுகின்றது.

இதிலிருந்து நாம் மீள வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரம் அருள் ஒளி பெற்று உணர்வின் ஒளியாக இருக்கின்றது. சூரியனின் காந்தப் புலனறிவு அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அதிலிருந்து வெளிப்படும் உணர்வைத் தாங்கி அலைகளாகப் பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது.

நம் பூமியோ துருவத்தின் நிலைகள் கொண்டு அந்த அலைகளைக் கவருகின்றது. நமக்கு முன் பரவி வருகிறது.

தீப ஒளித் திருநாள் அன்று அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு ஒன்று கூடி அந்த அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் அனைவரது உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று அந்த வலுவைக் கூட்ட வேண்டும்.

உதாரணமாக நம் பிள்ளை சேட்டை செய்திருப்பான். அவனை வெறுத்துப் பேசுவதற்கு மாறாக அவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவனுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். அவன் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அன்னை தந்தையருடன் ஒன்றுப்ட்டு வாழ வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுதல் வேண்டும்,

அதே போல் மற்றவர்களிடம் முதலில் நண்பராகப் பழகி இருப்போம். ஆனால் சந்தர்ப்பத்தால் பகைமை உணர்வு வந்து ஒருவருக்கொருவர் வெறுப்படைந்திருப்போம்.

அதை எல்லாம் தடுப்பதற்காக நாம் பார்த்த நண்பர்கள் குடும்பங்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும். அவர் குடும்பத்தில் அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் சாப அலைகள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அவர் குடும்பம் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். இப்படி எல்லோரும் ஏகோபித்த நிலைகள் எண்ணுதல் வேண்டும்.

பிறிதொருவர் என்று சொன்னாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் உண்டு…! உதாரணமாக
1.ஒருவர் நம்மைத் திட்டினார் என்றால் அவர் உணர்வு நமக்குள் வந்து
2.நாமும் பதிலுக்குத் திட்டும்போது அவரின் உணர்வு உடலில் வந்துவிடுகின்றது.
3.(அவர் உணர்வு இயக்கித் தான் நாமும் பதிலுக்குத் திட்டுகிறோம்).

அவன் திட்டிய உணர்வுகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. அது நமக்குள் வந்து விடுகிறது. ஏனென்றால் உற்றுப் பார்க்கின்றோம்… பதிவாகிறது. பதிவானதை மீண்டும் எண்ணும் போது அந்த அலைகள் நமக்குள் வரத் தொடங்குகிறது.

ஒரு செடியில் வளர்ந்த சத்தினைச் சூரியன் எடுத்து வைத்துக் கொண்டால் அதிலே விளைந்த வித்தினை மீண்டும் நிலத்தில் ஊன்றும் போது நிலத்தின் துணை கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அந்தச் சத்தினை எடுத்துத் தான் அது செடியாக அது வளர்கின்றது. அந்தச் செடியின் இனப்பெருக்கங்கள் அதிகமாகின்றது.

இதே போல் தான் நமக்குள்ளும் பிறர் திட்டியது வேதனைப்பட்டது போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால்… உடலுக்குள் வந்து அந்த அணுவின் தன்மையாக அடைந்து விட்டால் அது அது தன் இனத்தை வளர்க்கத் தொடங்குகிறது.

நம்மைக் காக்க அல்லது மற்றவருக்கு உதவி செய்ய என்று நாம் பரிவுடன் கேட்டறிந்தாலும் பிறர்படும் வேதனை உணர்வுகள் நமக்குள் அணுவாகின்றது.

1.ஏற்கனவே சொன்ன மாதிரி அந்த வேதனைப்பட்ட உணர்வுகளை எல்லாம் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது.
2.அது நமக்குள் புகாதபடி தடுக்கவில்லை என்றால் அதே வேதனை அதே கோபம் நமக்குள்ளும் விளைந்து
3.அசுர குணங்களாக நமக்குள் மாறத் தொடங்கும்.

ஆகவே நாம் கண்களால் பார்த்து நுகர்ந்து இது போன்ற அசுர உணர்வுகளாக வளர்வதைத் தடுக்க வேண்டும்.

அதற்குத் தான் அதிகாலை துருவ தியான நேரத்தில் அந்த அருள் ஒளி பெற வேண்டும் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அப்பொழுது அந்த வேதனையான உணர்வைத் தணிக்கச் செய்கிறது. அதே சமயத்தில் அது போன்ற தீமைகளை நீக்கக்கூடிய சக்தியும் நாம் பெறுகின்றோம்.

இப்படி எல்லோரும் எண்ணும் போது அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை (அலைகளை) காலை ஆறு மணிக்கெல்லாம் சூரிய உதயம் வரும் பொழுது அது கவர்ந்து பூமியின் காற்று மண்டலத்தைக் கடந்து லேலே பிரபஞ்சத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றது…. அங்கே கரைத்து விடுகின்றது.

அதனால் பகைமை ஊட்டும் உணர்வுகள் நம் பூமியில் தணிகின்றது இப்படி நம்மை நாம் காத்துக் கொள்ளும் வழிகளைத்தான் அன்று ஞானிகள் தெளிவாகக் கூறி உள்ளார்கள்.

நீங்களும் என்னைப் போன்றே ஞானத்தின் வழியில் வளர்ந்து வர முடியும்

 

வான் வீதியில் ஜீவணுக்கள் உருவாகின்றது… “வைரஸ் உருவாகின்றது” என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர் இங்கிருந்து செயற்கைக்கோள்களை விண்ணிலே அனுப்பி அங்கே பார்க்கப்படும் பொழுது இதையெல்லாம் காணுகின்றார்கள்.

சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு நான் (ஞானகுரு) ஏற்கனவே இதை எல்லாம் வெளிப்படுத்தி உள்ளேன்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகளும்… இரண்டு நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கங்களும் அந்த அலைகள் உள்ளே வந்தால்… வியாழன் கோளின் கதிரியக்கமும் அதனுடன் சேர்ந்தால் இந்த உணர்வின் தன்மை சேர்ந்து உயிர்த் துடிப்பாகி உயிரணுவாக உருவாகும் என்று ஏற்கனவே குரு வழியில் விளக்கம் கொடுத்துள்ளேன்.
1.துடிப்பாகும் பொழுது இயக்கமாகிறது…
2.அதனுடைய இயக்கத்தை “ஈசன்” என்று ஞானிகள் பெயரை வைத்துள்ளார்கள்.

ஆனால் வைரஸ் என்ற நிலையானால் எதன் உணர்வைக் கவர்ந்ததோ அதை வளர்க்கும் அந்த அணுவாகின்றது.

உயிரணு தோன்றுவது அங்கே பால்வெளி மண்டலத்தில். பூமி இழுத்துக் கொண்டால் மற்ற சத்தினைக் கவர்ந்து கொள்ளும் பொழுது வைரஸ்.

அதே சமயத்தில் பூமிக்குள் வந்தால் இதன் உணர்வை எடுத்து… அடுத்து இதைக் காட்டிலும் வலுவான தாவரங்களை எடுத்து உடலாக மாற்றிக் கொள்கிறது. கவர்ந்து கொண்ட தாவரத்தின் உணர்வுக்குத் தக்க புழுவாகவோ பூச்சியாவோ உருப் பெறுகின்றது

மனித உடலுக்குள் வந்தால் இந்த உணர்வை உட்கொள்ளும் விஷத்தன்மையாக மாறுகிறது. விஷத்தின் தன்மை எடுக்கப்படும் பொழுது (புதிய வைரஸ்கள்) எந்தெந்த நிலை ஆகின்றது…? என்பதை முன்பே நான் சொல்லி உள்ளேன்.

ஆனால் “ஆராய்ச்சியில் இன்று கண்டுபிடித்தார்கள்” என்று சொல்கின்றார்கள்.

ஏனென்றால் குருநாதர் காடுகளிலும் மேடுகளிலும் மலைகளிலும் பல இடங்களுக்கு என்னை அனுப்பி இந்தக் காற்று மண்டலத்தில் என்னென்ன இருக்கின்றது…? என்ன உருவாகின்றது…? என்று தெளிவாகக் காட்டினார்.

1.நான் கண்ட உண்மைகள் அதிகம்…
2.ஒரே தடவையில் அனைத்தையும் சொல்ல முடியாது
3.சிறுகச் சிறுக அதைச் சொல்லி வருகின்றேன்.
4.சிறுகச் சொன்னால்… சாமி சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.

ஒரு நாடாவிலே டேப் மூலம் பதிவாக்கி விட்டால் திருப்பி அதை இயக்கப்படும் பொழுது… எது பதிவோ அதை அப்படியே பேசுகின்றது.

அதே போன்றுதான் யாம் சொல்லக்கூடியதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவாக்கி விட்டால் சந்தர்ப்பம் உங்களுக்கு மீண்டும் அது (எம்முடைய பேச்சு) நினைவுக்கு வரும்.

ஒரு தீயவனைப் பார்த்தால் அவனுடைய உணர்வு வராதபடி தடுக்க வேண்டும் என்றால்… ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற புருவ மத்தியில் எண்ணிவிட்டால் அந்தத் தீய உணர்வு நமக்குள் புகாது தடுக்கப்படுகிறது.

அவ்வாறு தடுத்து நிறுத்தி விட்டு… அடுத்து நல்லதை எண்ணி நமக்குள் கலக்க வேண்டும். அதைச் செய்யப் பழக்கப்படுத்துவதற்குத் தான் இந்த உபதேசம்.

ஆக மொத்தம் நீங்கள் எல்லோருமே என்னை நம்புகின்றீர்கள்… இல்லையா…!
1.ஏன்..? நானும் மனிதன்தான்… நீங்களும் மனிதன் தான்…!
2.குரு வழியில் நான் எந்த உணர்வைப் பெற்றேனோ அதே உணர்வை நீங்களும் பெற்று ஏன் இதை வளர்த்துக் கொள்ளக் கூடாது…?

“சாமி செய்து தருவார்…” என்று மட்டும் எண்ணுகின்றீர்கள் ஆனால் “சாமி சொன்ன வழியினை…” நாம் பின்பற்றினோம் என்றால் நிச்சயம் அந்த நன்மை பெற முடியும் என்ற அந்தத் தன்னம்பிக்கை உங்களுக்கு வர வேண்டும்.

என்னுடைய பார்வை என்னுடைய பேச்சு பிறருக்கு எப்படி நல்லதாகின்றதோ “அதே உணர்வை ஒத்து” நீங்களும் உங்கள் பார்வையால் உங்கள் பேச்சால் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கு நல்லதாக்கலாம் அல்லவா… தீமைகளைப் போக்கலாம் அல்லவா…!

பிறர்படும் கஷ்டங்களைப் பாசத்துடன் கேட்கின்றோம் அந்த உணர்வு வந்தபின் உடலுக்குள் வேதனையைத் தான் கொடுக்கின்றது நோயையும் உண்டாக்குகின்றது. இதைப் போன்ற தீமை உங்களுக்குள் வரக்கூடாது

1.ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எத்தனை வகையான வேதனைகள் வரலாம்.
2.அதை எல்லாம் தவிர்த்துக் கொள்வதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
3.அந்த உணர்வின் தன்மை இங்கே நிறுத்தப்படுகின்றது.

இந்தப் பயிற்சியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்னத்தின் மேல் அமர்ந்துள்ள “கலைமகளின் மறைபொருள்”

 

மொழி வளர்ச்சி உற்ற விதத்தில் எண்ணுகின்ற எண்ணத்தை வெளியிடும் விதமாக வளர்ந்து… முதிர்வின் மூலமே சப்தஸ்வர நாதலயமாக (இசை) மொழி அமைப்பின் கோர்வை கொண்டு… உள்ளக்கிடக்கையை வெளியிடும் ஏற்றதோர் அமைப்பாக்கி வெளியிடும்… கருத்தின் பாங்கை இரசனையாக உணர்ந்து கொண்ட இடம்… செயலை… யாதென உரைக்கலாம்…?

பாணன் இசைக்கின்றான்… அந்த இசைக் கலைஞன் ஸ்வர பேதமின்றி உள்ளன்போடு இசைக்கின்ற பொழுது “அந்த இசை… உயிரைப் பற்றி நிற்கின்றது…”

இப்படி உரைக்கின்ற பொருளின் உண்மை நிலையே…
1.உணர்வின் எண்ணத்தை மாற்றிக் கொண்டிடும் நிலையால்
2.தீமையான எண்ண குணங்களின் வசம் ஆட்படும் மனது
3.உயர் தன்மையின்… உயர்வு எண்ண நிலை பெற்றிட முடியாது.

நற்குணத் தன்மைகளின் செயல்பாட்டில் “தெய்வீக இசை…” உடல் கடந்து “உயிரைத் தொடுகின்றது” என்ற சொல்லில் ஈர்த்துக் கொண்டிடும் குணச் சிறப்பு விளங்கும்.

மோகத்தின் பால் சிக்குண்ட மனம்…
1.அக்கணையால் தாக்கப் பெற்று… அந்த மோகக் கனலால் தகிக்கப் பெற்று
2.ஆத்ம நிலையே அதனால் தேய்ந்துவிடும் நிலைக்குச் சென்று விடுகிறது.

அதே சமயத்தில் இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டு செயல்படுகின்ற அறிவின் ஆற்றலாக… மோக குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டிய ஆகார ஜெப ஆற்றலை அருந்துவதே… சித்தன் சுட்டிக்காட்டிய “அன்னம்”

1.மெய் ஞான விழிப்பைச் செயல்படுத்திடும் அறிவாகிய அன்னம்
2.தீதெண்ண குணத்தன்மைகள் விலக்கி… நற்குணத் தன்மைகள் சுரந்திடும் ஈர்ப்பின் அமுதத்தை அருந்த வேண்டிய செயலையே
3.பாலுடன் கலந்த நீரை விலக்கிப் “பாலை மட்டும் அருந்தும் அன்னம்” என்று உரைக்கப்பட்டது

அத்தகைய பகுத்தறியும் ஆற்றல் கொண்டிட்ட அறிவாகிய “அன்னத்தின் மேல் பிரம்மனுடன் சரஸ்வதியாகக் காட்டப்பட்டது மறைபொருள்…”

அந்த நிலையே சிவ சக்தியின் கலப்பாக… ஓங்கார நாதத் தொனியாக… “நாதத்தின் தலைவியாம் கலைமகள்…” பிரம்மத்துடன் கலந்து செயல்படும் சக்தியாக… ஓ…ம் என்ற ஓங்கார நாதம் கேட்பது எங்கே…?

ஊன் உயிர் கலந்திட்ட ஒன்றிய மனத்தின் செயல் தன்மையாக…
1.நாம் உரைக்கின்ற தியானத்தின் வழியாகக் கடைப்பிடிக்கும் ஞானச் செல்வங்கள்
2.அந்த ஓ…ம் என்ற ஓசை கேட்கும் நிலை அடைவர்… மெய்ஞானச் சுடராக விளங்குவர்.

மகரிஷிகளின் செயலை அறிந்து… “அவர்கள் வழி செயல்பட முயல்வோர் முயற்சிக்கட்டும்”

 

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலால்… தன்னை வளர்த்துக் கொண்டிடும் “ஒலி மின் நுண்காந்தப் புலமாய்”
1.தனக்குள் ஆட்டுவிக்கும் சக்தியைத் தன்னை ஆட்கொண்ட “ஈஸ்வரரின் அருள்” என்றே உரைக்கின்றாய் அல்லவா.
2.அந்த வார்ப்பினைக் காத்துக் கொண்டிருக்கும் செயலில் “காட்டும் உறுதி”
2.சகல மகரிஷிகளினாலும் அன்பு சப்தரிஷிகளினாலும் அருள் நோக்கால் கணிக்கப்படுகின்ற செயலை அறிந்து கொண்டே
3.இத்தியான வழியில் பெற்றிடும் பக்குவத்தில் பெற்று வளர்த்திட “முயல்வோர்கள் முயற்சிக்கட்டும்…!”

“ஈர்ப்பின் கனி” ஈர்த்துக் கொண்டிடும் செயல் பற்றிக் கூறியவை போல் “விளத்தின் கனி” பற்றி அறிந்திடும் ஆக்கம் கூறுவேன்.

ஜீரணிக்கக் கூடிய செரிமானத் தடையைப் பற்றிப் பேசுகின்றாய்.
1.மனத்தின் பரிமாணம் கொள்ளும் உணர்வுகள்
2.தமக்குகந்த “சலனத்தின் நிலை” ஏற்பட்டு விடாத மனத் திறனே
3.உடலைக் காத்திடும் கவசம் ஆகும்.

ஓடு நெகிழ்ந்து அக்கனியின் சேமிப்பாம் சக்தியே… அந்த ஓடு உடைந்து விடாத வண்ணம் வெளிக்கொண்டு வரும் செயல் நிகழ்வு எப்படி உண்டானது…?

வேழம் தன்னுள் கொண்டிட்ட ஈர்ப்பின் வலு வீரிய சக்தி கொண்டுதான்…! தன் ஜீவனைப் பற்றிச் சிந்திக்கும் செயலற்ற நிலையாக இருந்தாலும்… “மாற்று நிலைகள் உட்பகுந்திடாதபடி” அந்த வேழத்தின் வலு வீரியம் நாம் வழிநடத்தும் இந்த தியான வழியிலே செயல்படுமப்பா.

1.மனச்சோர்வினுக்கு மருந்து எது…”
2.மனத்தினைத் தெளிவுபடுத்திடும் இந்தத் தியானமே ஆகும்.

வரும் வேக அப்பொருளைக் காப்பது யார்…?

உன் உயிர் குரு வழி நடந்திடும் பக்குவத் தன்மையில்தான்…! என்றே அதை உரைத்திடல் வேண்டுமோ…?

மாலைக்குப் பின் இருள் வரும்…! ஆனால்
1.மாலை வருவதற்கு முன்பே நம் பார்வையில் இருள் காட்டினால்
2.நாம் கொள்ள வேண்டிய பக்குவம் இன்னும் அதிகமாக வலுவாக்கப்படுதல் வேண்டும் என்பதே “அப்பொருள்…!”

அருள் வழியில் தன்னுள் வளர்ப்பாக்கும் சகல சக்திகளையும் செயல்பாட்டில் உலகினுக்கு வழிகாட்டி… சோர்வு நிலை நீக்கி… திண்மையின் மனம் ஏந்தி… ஞானச் செல்வங்கள் (நீங்கள்) நிலைபெற்று வளர்ந்து வலுவாகி… சிவ சக்தியாக ஆதி சக்தியின் கலப்பாக வேண்டும். அதுவே எமக்கு மகிழ்ச்சி.

எமது ஆசிகள்.

“துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம்” நமக்குள் பெருக வேண்டும்

 

கொடூரமான புலி மற்ற சாந்தமான உயிரினங்களை அடித்துக் கொல்வது போல்… சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடலின் உறுப்புகளையும்… அதை உருவாக்கிய அணுக்களையும் கொன்று புசித்துவிடும்..

இதிலிருந்து மீள்வதற்கு நம்முடன் வாழ்ந்து வளர்ந்த முன்னோர்கள் மூதாதையர்களின் ஆன்மாக்களை விண் செலுத்தி… அந்தப் பேரருள் உணர்வுகளை நம் உடலுக்குள் உள் செலுத்தித் தீமையான நிலைகளை மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.

கோடிச் செல்வம் தேடினாலும்… அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை. ஏன்…! இந்த உடலும் நம் கூட வருவதில்லை. ஆனால்
1.பேரருள் என்ற உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றப்படும் பொழுது
2.ஒளியின் உணர்வாக நாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
3.”இதை விரும்புவோர் தான் செயல்படுத்த முடியும்…”

உடல் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை இந்த உடலுக்குள் எடுத்து வளர்த்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்து செயல்படும் தன்மையும்… தேடிய செல்வத்தைக் காத்திடும் நிலையும்… இந்த உடலைச் சீராக வைத்துக் கொள்ளும் நிலையும் வரும்.

“செல்வத்தை நாம் தேட வேண்டியதில்லை… அந்தச் செல்வமே நம்மிடம் வந்து சேரும்…” ஆனால் செல்வம் குவிகின்றது என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால் நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் உடலின் பற்றுக்கே வந்து விடுகின்றது.

ஞானத்தினை நாம் வளர்க்கும் பொழுது அருள் ஞானத்தின் வழிகளில் நாம் சென்று இருளை அகற்றி மெய்ப்பொருளைக் காண முடியும்

ஆகையினால் காலையில் ஐந்தரைலிருந்து ஆறரை மணிக்குள்
1.தினசரி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுத் தீமைகளை நீக்கிப் பழகுதல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நாள் முழுவதும்… மற்றும் அவ்வப்போது சேரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாக… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கி அருள் வழியில் நாம் சிந்தித்துச் செயல்படும் தன்மையாக… இந்த இல்லற வாழ்க்கையில் தெளிந்த மனம் கொண்டு வாழ முடியும்.

வேதனை என்ற விஷமோ கோபம் என்று கார உணர்வோ பகைமையான உணர்வுகளோ சாபம் என்ற உணர்வுகளோ நம்மைத் தாக்கப்படும் பொழுதெல்லாம்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து நம் உடலுக்குள் அதை உட்செலுத்தித் தீமைகளை அவ்வப்பொழுது மாற்றிக் கொண்டால் பகைமைகள் வளராது.

தீமை என்ற நிலையே நம் உடல் அணுக்கள் பெறாதபடி தடுத்துக் கொள்ள முடியும். துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம் உடலில் அணுக்களாக உருவாக்கிக் கொண்டால்… நம் சொல்லும் செயலும் புனிதம் பெறவும்… நம் உடலில் தெளிந்த நிலையும் உருவாகும்.

1.அந்தத் துருவ நட்சத்திர ஈர்ப்பின் வட்டம் நமக்குள் பெருகும் போது
2.உடலில் விளைந்த சூட்சும சரீரம் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து
3.நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வது உறுதி.

எத்தகைய குறைபாடுகளையும் நீக்கும் பயிற்சி தியானம்

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் தியானம் இருக்கும் அனைவரது உடல்களிலும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர்களது உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த சாப வினைகளால் விளைந்த தீய வினைகளால் விளைந்த பாவ வினைகளால் விளைந்த பூர்வ ஜென்ம வினைகளால் விளைந்த கேன்சர் டிபி இரத்தக் கொதிப்பு சர்க்கரைச் சேர்த்து ஆஸ்த்மா இருதய நோய் மூலநோய் சரவாங்கி நோய் வாத நோய் போன்ற சர்வ நோய்களையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.

தியானத்தில் இருப்பவர்கள் எல்லோரது உடல்களிலும் சர்வ தோஷங்களும் நீங்கி அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

அவரவர்கள் உடலில்… இடுப்பு வலியோ கை கால் வலியோ தலை வலியோ வயிற்று வலியோ கிட்னி கோளாறோ இருதயத்தில் கோளாறோ மூல நோயோ இருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள அந்த நோய்கள் நீங்க வேண்டும் என்று இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் சர்வ நோய்களையும் நீக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது. எல்லோரும் இந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

நோய் நீக்கும் அரும்பெரும் சக்தி இப்போது நீங்கள் பெறுகின்றீர்கள்
1.உங்கள் உடலில் கரண்ட் பாய்வது போல் இருக்கும்
2.சர்க்கரைச் சத்தோ வாத நோயோ ஆஸ்த்மாவோ மூலநோயோ இருதய நோயோ இருந்தால்
3.அங்கெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தி மின்சாரம் போல் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
4.உங்கள் உடலில் எந்த வலியாக இருந்தாலும் குறையும்… வேதனைகள் அகலும்.

கேன்சர் டிபி போன்ற கடுமையான நோய்களும் குறைய தொடங்கும் அது உங்கள் உடலில் இருந்து கலைந்து கீழே இறங்குவதை நீங்கள் உணரலாம்.

எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் அதிலே மகரிஷிகளின் உணர்வுகள் படர்ந்து உடல் நலம் பெறும் உணர்ச்சிகள் இப்பொழுது தோன்றும்.

நீங்கள் சுவாசிக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்த நாளங்களில் கலக்கப்பட்டு உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் கலைந்து சென்று அது விலகும்.

1.உடலில் நோய்கள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும் சக்தி பெறுகின்றது
2.அகஸ்தியன் அறிந்த… தீமைகளை அகற்றிடும் அருள் உணர்வு உங்கள் உடல்களில் இப்போது படரும்.

சர்வ பிணிகளும் நீங்கும்… இருதயம் சீராக இயங்கும்… எந்த நோயாக இருப்பினும் அது மாறும். உடலில் இருக்கக்கூடிய சிக்கல்கள் மாறும். உடலில் நல்ல ஜீரண சக்தியும் கிடைக்கும்.

புத்திர பாக்கியம் பெற தியானிக்க வேண்டிய முறை:-
புத்திர பாக்கியம் வேண்டுவோர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு
1.தன் உடலிலே புத்திர பாக்கியம் பெறும் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
2.கணவருக்கு அது கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
3.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் ஏங்கித் தியானியுங்கள்.

உங்களுக்குள் புத்திர பாக்கியம் பெறும் அருள் உணர்ச்சிகள் உங்கள் உடலில் உருவாவதைக் காணலாம்.

உங்கள் இரத்த நாளங்களில் புதுவிதமான உணர்ச்சிகள் தோன்றி
1.கருப்பைகளிலே கரு உருவாகும் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதும்
2.விந்துகளிலும் அந்த அருள் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
3.குழந்தைகள் உருவாகும் உணர்வின் அணுக்கள் உருப்பெறுவதை உங்கள் உடல்களில் உணரலாம்.

ஈஸ்வரபட்ட(ருடன்)ரின் நேரடித் தொடர்பு

 

மான் இனம் தனது குட்டிக்கு ஊட்டுகின்ற பாலானது அது ஊட்டுகின்ற செயலை… மாற்று குணம் பொருந்திய எதிரி விலங்கினங்களைக் கண்டுவிட்டால்… ஈர்ப்பின் அலை செயல் புரிந்திடும் விதமாக…
1.அந்த அலையானது மானின் சுவாசத்திலே பட்டவுடன்
2.பால் ஊட்டுகின்ற சுரப்பை சட்டென நிறுத்தித்
3.தன்னைக் காத்துக் கொள்ளும் விழிப்புணர்வைப் பெற்றுவிடும்.

அதே போன்றது தான் நீங்கள் தியானத்தில் எடுக்கும் சக்தியும்… அதை உங்களுக்குக் கொடுக்கும் நிலையும்.

அதாவது… மகரிஷிகளின் பேரருள் பேரொளி சக்தி உங்களுக்குள் பாயப் பெற்றிடும் நிலையில்… அந்த மகான்களின் சப்த அலைகள் நுண் ஒலி காந்த அலைகளாகப் பரவ விட்டுச் சுழன்று ஓடிக்கொண்டிருக்கும் ஓட்ட கதியில்
1.ஈஸ்வரராய் அளிக்கப்படும் (உயிர் வழி சுவாசம்) சுரக்கும் அமுதமாகிய அருளாசி கொண்டு உரைக்கப் பெறும் அருள் உபதேசங்கள்
2.எண்ணத்தின் கூர்மை மாற்று அலையின் சிந்தனையில் சிறிது மோதியவுடன் (சந்தர்ப்பத்தில் தீமைகள் மோதும் போது)
3.காட்சியின் ஒளிப்பதிவு நிலைகள்… ஒலி அலைகளாக மாறு கொண்டிடும் நிகழ்விற்கே “சற்று தடங்கலும் காட்டி…”
4.இப்படியும் நிகழ்ந்தனவா…? என்ற அதிசயப் பொருளாக வினா தொடுத்தால் (ஞானத்தின் வழியில் அறியும் எண்ணம் கொண்டால்)
5.காட்சிப் புலனறிவு பதிவு பெற்ற ஒலி அலைகளை நேரிடையாக உணர்ந்து கொண்டிடும்
6.ஞான திருஷ்டி எனும் விழிப்பார்வை கொண்டு காலத்தின் நிகழ்வுவை எம்மால் உணர்த்தப்படும். (ஈஸ்வரபட்டரின் நேரடித் தொடர்பு).

எமது (ஈஸ்வரபட்டர்) சர்வ ஆக்ஞையில் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் ஞானச் செல்வங்களுக்காகக் (உங்களுக்காக) காரண காரிய செயல்முறைகள் இதிலே காட்டப்பட்டுள்ளது.

மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று ஏன் சொல்கிறோம்…?

 

நம் சூரியக் குடும்பத்தில் ஞானத்தில் பகுத்தறிவைப் பண்படுத்தும் மனிதத் தன்மை எப்படிச் செயல் கொள்கின்றதோ அதைப் போன்ற நிலை ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் உண்டு.

நம் பூமியில் ஞானமும் விஞ்ஞானமும் வளர்ந்துள்ளதைப் போன்று மற்ற சூரியக் குடும்பத்தில் நமக்கு மேல் வளர்த்த ஞானத்தின் அலை நிலையின் தொடர்பை நம் பூமியிலும் “ரிஷிச் சக்திகள்” தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளார்கள்.

தன்னைத் தான் உணரும் சக்தியால் தன் சக்தியைக் கொண்டு ரிஷிகளின் சக்தியுடன் நம் ஆத்மாவின் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.

ரிஷிகளின் சக்திக்கும் நம் சக்திக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் முறைதான் இந்தத் தியான முறை. ரிஷிகளின் சக்தி அனைத்தும் பால்வெளி மண்டலத்தில் (பரம்பொருளாக) படர்ந்துள்ள செயலில் எல்லோருக்கும் கிடைக்கும்படியாகத்தான் படரவிட்டுள்ளார்ககள்.

அத்தகைய மாமகரிஷிகள் தன் தன் இயக்கத்திற்கொப்ப… தன் வளர்ச்சிக்கொப்ப வலுவை வலு கூட்டிக் கொள்வதற்காக… தன் குணத்தை… மணத்தை… ஒளித் தன்மையில் நட்சத்திர ஒளியாகத் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் எண்ணிலடங்காத நிலையில் இந்தப் பிரபஞ்சத்தின் சுழற்சியில் சுழன்று கொண்டே உள்ளனர்.

அந்தச் சுழற்சியின் கதியின் இயக்கத்தைச் செயல்படுத்தக்கூடிய வளர்ச்சிக்கு அறிவின் ஞானத்தை எடுக்கவல்ல எண்ணம் கொண்ட மனிதர்களை எல்லாம் தன் வலுவின் தொடரில் ஈர்க்கின்றார்கள்.

1.அத்தகைய மெய் ஞான வித்து ஓங்கி வளரத்தான்
2.தெய்வ குணங்களும் தெய்வ சக்தியும் இன்றும் சூட்சம கதியில் செயல்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.மலர் விரிந்து மணம் பரப்பி எப்படிக் காற்று மண்டலத்தை இனிமையாக்குகின்றதோ
4.அதைப் போன்று இன்றும் ரிஷி சக்திகளின் செயல் செயல்பட்டுக் கொண்டே தான் உள்ளது. (அருள் மணங்களாக)

தெய்வ குணத்தையும் தெய்வ சக்தியையும் வளர்க்கக்கூடிய மெய் ஞானிகளின் சிந்தனையால் தன் அறிவின் வளர்ச்சியைச் சூட்சமத்தின் துணை கொண்டு மேலோங்கி வளர்த்ததின் தொடரில் தான் இன்றைய உலகில் இருக்கும் மருத்துவம் விஞ்ஞானம் எல்லாமே வளர்ந்தது.

இருந்தாலும் இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தைப் போன்றே மனித அறிவின் பெருக்கமும் “ரிஷிகளின் சிந்தனை சக்தியுடன் தொடர்பு கொண்டு…!” தன்னை உணர்ந்து ஆத்ம பலம் பெற்றிருந்தார்கள் என்றால் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் சிந்தனைகள் வேதனை பயம் கோபம் குரோதம் அச்சம் என்ற விபரீத வினையினால் வரக்கூடிய பல கொடிய வியாதிகளினாலும் கொடிய விபத்துக்களினால் வேதனைப்பட்டு இறக்கும் நிலையிலிருந்து தப்பியிருக்கலாம்.

1.ஏனென்றால் இன்று ரிஷிகளின் அலையைக் காட்டிலும்
2.வேதனை ஒலி கொண்ட ஆவி உலக ஆத்மாக்களின் அலைத் தொடர் அதிகமாக மனிதனைச் சாடிக் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக யாம் சொல்லக்கூடிய தியான முறையின் தொடர்பில் ரிஷிகள் வழி காட்டிய துருவ மகரிஷியையும் சப்தரிஷி மண்டலத்தை இயக்கும் துருவ நட்சத்திரத்தினையும் எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தை புருவ மத்தியின் வழியாக எண்ணித் தியானம் எடுக்கும் பொழுது
1.நம் எண்ணத்தின் ஒலி செலுத்தக்கூடிய தொடரில்
2.அந்தத் தொடரின் அமில ஒலியின் உயிர் ஒளித் தொடர்பு ஜீவ உயிர் காந்த சுழற்சியில்
3.நம் ஆத்மாவில் ரிஷிகளின் தொடர்பலைகள் ஈர்க்கப்பட்டு
4.அவ்வாறு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் தியானத்தின் சிந்தனை சக்தியால் (அதனால் தான் மகரிஷிகளுடன் பேசுங்கள் என்று சொல்கிறோம்)
5.இந்தப் பூமியின் பிடிப்பலையிலிருந்து நம் ஆத்மாவை ரிஷிகளின் சக்தியுடன் இணைத்து விடுகின்றோம்.

இப்படிப்பட்ட தியானத்தின் மூலம் ரிஷிகளின் தொடர்பில் நம் ஆத்மாவும் கலக்கும் பொழுது
1.அந்த இறைத் தன்மை கொண்டோரின் இறைக்கு நாம் உட்படுத்தப்பட்டு
2.நம் ஆத்மாவும் தெய்வ நிலை பெறும்.
3.பிறப்பின் பலனை ஒவ்வொரு உயிராத்மாவும் பெறும்.

செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

 

நாம் எடுக்கும் எண்ணங்கள் கொண்டு அவை உணர்வாக ஆனாலும் உடலுக்குள் சென்று அணுவின் தன்மையாக ஆன பின்
1.சுவாசித்த உணர்வுக்குள் மோதல்கள் எப்படி…?
2.இந்த உடலில் மனக்கலக்கங்கள் சஞ்சலங்கள் வெறுப்புகள் வேதனைகள் எப்படி எல்லாம் வருகின்றது…?

வீட்டில் செல்வம் இருக்கும் எல்லோருக்கும் நிம்மதி இருக்கின்றதா…?

தசரதன் (கைகேயியின் துணையால்) மற்றவர்களை அடக்கித் தன் சாம்ராஜ்யத்தை வெற்றி பெறச் செய்தான். இருந்தாலும் அதே உணர்ச்சிகள் இங்கே “கூனி” கைகேயியிடம் என்ன சொல்கிறது…?

1.இராமனுக்குப் பட்டம் சூட்டி விட்டால்… நீ வேலைக்காரியாக ஆகிவிடுவாய் என்று “உள் மனது… உணர்த்துகிறது…!” என்பதை
2.அதாவது அப்படித் தோன்றும் உணர்வுகளை உருவமாக்கிக் காவியங்களைப் படைத்து
3.கருத்தினை மக்களைத் தெளிவாக்குவதற்காகக் கூறப்பட்ட இந்த உபாயத்தை
4.அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துத் தெளித்து விட்டனர்
5.அந்த உண்மையின் மூலக்கூறை அறிந்தோர் இந்த உடல் இச்சைக்குத் தான் பெற முடிந்தது.

தான் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும்… மற்றவர்களை அடக்க வேண்டும்… என்ற உணர்வை இவரகள் எப்படிப் பெற்றானோ அதே உணர்ச்சி தான் தசரதச் சக்கரவர்த்திக்கும் வருகின்றது.

தன் மகனை நல்லவனை வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தன் உடலுக்குள் மற்றவர்களை துன்புறுத்திய உணர்வுகள் இந்த உயிரோடு வளர்ந்து… பத்தாவது நிலை அடையும் மனிதனாகத் தான் இருக்கின்றது.

ஆனால் எல்லாம் இணைந்து வரப்படும் போது என்னாகின்றது…?

இரண்டு மனைவி இருக்கக்கூடிய வீட்டிலே சக்களத்திப் போராட்டம் வருகின்றது. ஆனால் உயிரோடு (உயிர் தான் தசரதச் சக்கரவர்த்தி) சேர்த்துப் பலவிதமான உணர்வுகள் வரும் பொழுது போராட்டம் எத்தனை வரும் எப்படி இருக்கும்…?

ஒரு கணவனுக்கு இரண்டு மனைவி இருந்தால் எப்படி இருக்கும்…? மூன்று மனைவி வைத்திருந்தால் எப்படி இருக்கும்…?

அது போல் தான்
1.உயிர் என்று நிலைகள் வரும் பொழுது இதனோடு சேர்த்து
2.அத்தனை சக்திகளும் (மனைவியாக) சேர்த்து….இந்த உடலையே இயக்குகின்றது
3.அதனதன் உணர்வுகள்… அது அது பெறுகின்றது… அதிலே எதன் உணர்வு வலு ஓங்குகிறதோ அதன் வழி தான் நடக்கின்றது.

இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றான் தசரதன்.

ஏனென்றால் இராமன் அன்பு கலந்தவன் அரவணைக்கக்கூடியவன் பண்பு கொண்டவன் பரிவானவன் அறவழியில் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பொறுப்புடையவன் பொறுமையுடையவன் சிந்தித்து செயல்படுபவன் என்ற நிலையில் இருப்பினும் இராமனுக்குப் பட்டம் சூட்டுவதைக் கைகேயி விரும்பவில்லை.

அவனுக்குப் பட்டம் கிடைத்தால் என் மகன் பரதன் வேலைக்காரன் ஆகிவிடுவான். அவன் வேலைக்காரன் ஆனால் நானும் வேலைக்காரியாக ஆகிவிடுவேன் என்ற உணர்வுகள் அங்கே தோன்றுகின்றது

தசரதனுடைய எண்ணம் என்ன…? அடுத்த இராஜ்யம் வளர்ந்து விட்டால் அது தன்னை அடக்கிவிடும். அதற்குப் பதில் அவனை வலு இழக்கச் செய்து விட்டால் தனக்கே அந்த சாம்ராஜ்யம் சொந்தமாகின்றது.
1.அவன் எண்ணிய இந்த உணர்வின் சக்தி மனைவியாக இப்படி வருகின்றது
2.சாம்ராஜ்யத்தை ஆள்வதற்காக தசரதன் அதைச் செய்தாலும்
3.இவனுக்குள் இருக்கும் சாம்ராஜ்யத்தை இதுவே வந்து ஆளத் தொடங்குகிறது.

மற்றவர்களைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு அதை ரசித்தான். ஆனால் இவன் உடலுக்குள் இவனைத் துன்புறுத்தும் தனமையாக அந்த “மனப்போராட்டம்” வருகின்றது.

ஓவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் உணர்வுகளால் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது என்பதை இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது

அந்தக் காவியத்தின் கருத்தின்படி
1.ஒரு அணுவின் தன்மை எவ்வாறு செயல்படுகிறது…? என்பதை
2.பல உபதேசங்கள் வாயிலாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இணை சேர்த்து உங்களுக்கு விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

இது உங்களுக்குள் வளர்ந்தால் அதற்குண்டான ஞானம் கிடைக்கும். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியாக உருவாக்குகிறேன்.

பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்றால் இந்த உடலுக்குள் எத்தனை போர் முறைகள் வருகின்றது…? அதைச் சமாளிக்கக்கூடிய சக்தியும் அதற்குண்டான அருள் ஞானமும் உங்களுக்குத் தேவை.

அதற்குத் தான் இந்த உபதேசம்..!

எம்முடைய உபதேசங்களை வெறுமனே… கேட்பதையோ படிப்பதையோ விட “பதிவாக்க வேண்டியது மிக முக்கியம்”

 

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்தச் சக்தி “எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்…”

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. தியானத்தில் உட்கார்ந்தாலும் என்னால் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

மனிதனின் நினைவாற்றல் எப்படி இயக்குகிறது…? எப்படி இயங்குகிறது…? எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

 

மனிதச் சரீர ஆற்றலின் உண்மையைச் சிந்தனையில் (விஞ்ஞான அறிவு கொண்டு) சீர்படுத்திப் பார்த்தோம் என்றால்… விஞ்ஞானத்தால் காந்த அமிலம் பூசப்பட்ட நாடாக்களில்… மின் ஒளியைக் கொண்டு ஒலி அதிர்வால் பேசுபவற்றை எப்படிப் பதிவு செய்து மீண்டும் இயக்கச் செய்கிறார்களோ அதைப் போன்று…
1.இச்சரீரத்தின் காந்த ஒலியானது நாம் எண்ணி எடுக்கும் செயல் கொண்டு
2.ஆத்மாவின் பதிவான நினைவின் ஓட்டம் ஏற்கும் செயல் நிகழ்வால் “மனிதனின் நினைவாற்றல் இருக்கின்றது…”

ஆனாலும்…
1.சுவாச கதியில் “கணம் கொண்டு” எடுக்கப்படும் எண்ண ஓட்டங்கள்தான்
2.பதிவின் நினைவில் மீண்டும் மீண்டும் நினைவு பெற “எண்ணத்தில் மோதுகிறது…”

ஜீவ உற்பத்தி முதற்கொண்டு ஒவ்வொரு செயலுக்குமே… காந்த ஒளி நிகழ்வால் செயல்படும் உண்மைகளை… இன்று விஞ்ஞான அறிவால் (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்) உணர்ந்த நாம்…
1.எப்படி மனோதத்துவத்தால் அன்று மந்திரவாதிகள் மட்டும் உபயோகப்படுத்தினார்களோ அதே வழி முறை போன்று
2.ஓர் மனிதனின் எண்ணப் பதிவு நிலையை எடுக்கும் ஆற்றல் கொண்ட கருவியாக
3.விஞ்ஞான முறை கொண்டு செயலாகின்றது “விஞ்ஞான யுகமாக…”

1.ஒலி நாடாக்கள் பேசும் உண்மையை விஞ்ஞானம் வழிப்படுத்தியது.
2.“மெய்ஞானத்தில் விழிப்படையும் – மகோன்னத சக்தியை” நம் ஒவ்வொருவருக்குள்ளும் நாம் அறிதல் வேண்டும்.

அதாவது… மெய்ஞான ஒலியால் காந்த அமிலத்தைத் தியானத்தின் நிகழ்வால் ஆத்மாவில் பதிவுபடுத்தும் முறை கொண்டு… மனித சக்தியின் உயர்ந்த ஒளி காந்த சக்தியாக மனித ஆற்றலின் விழிப்பை விவரிக்க முடியாத அளவுக்கு உண்மையின் செயல்திறன்… “எண்ணத்தால் எடுக்கும் ஆத்ம தியானத்தால்” அறியவும் உணர்வும் முடியும்.

நமது வளர்ச்சிக்கு… சூட்சுமத்தின் ஒளியான ரிஷிகளின் எண்ணமுடன் ஒன்றிய தெய்வ குண எண்ணமாக… நம் எண்ணத்தைச் செலுத்தும் பக்குவ முறையைக் கைக்கொள்ள வேண்டும்.

பேரருள் பேரொளி சக்தி கொண்ட மகரிஷிகளின் எண்ண ஓட்ட உணர்வுடன்… இச்சரீர உணர்வுடன் கொண்ட எண்ணத்தைச் செலுத்தும் நம் மூச்சலையின் நிகழ்வால்… ஆத்மாவில் பதிவானது மகரிஷிகளின் ஒளி அலை அமிலங்கள்.

ஜீவகாந்த சரீரத்தில் (நமது உடலில்) சாந்த உணர்வு கொண்டு…
1.பேரருள் பேரொளி பெற்ற மகரிஷிகளின் அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று…
2.அந்த மகரிஷிகளுடன் நாம் சூட்சுமத் தொடர்பு கொண்டிட வேண்டும்.

அம்மகரிஷிகள் பெற்ற ஞானத் தொடர்பின் அலைகள் நம் உணர்வில் மோதும் பொழுது… காற்றலையில் பரவியுள்ள உன்னத தத்துவ ஞானத்தை ஒலியாகவும் ஒளிப்படங்களாகவும் (உணர்வுபூர்வமாக) நாம் காண முடியும்.

நிகழ்ந்த ஒளியும்… ஒளிப்படங்களும்… வலுக்கொண்ட செயல்கள் எவையுமே… ஜீவகாந்த சரீரத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிப்பட்ட நிலைகள் அழிவதில்லை.

பல வருடங்களுக்கு முன் சிறு பிராயத்தில் நமக்கேற்பட்ட சில நிகழ்வுகள்… அதாவது அந்த நேரத்தில் கனமாக எடுக்கப்பட்ட எண்ணங்களை… வயது முதிர்ந்த பிறகும் நம்மால் நினைவு கொண்டு எடுக்க முடிகிறது.

அதைப் போன்று
1.ஞானிகள் மகரிஷிகளின் ஒளி காந்த தத்துவங்களை… அவர்கள் உடலில் விளைய வைத்த பேராற்றல்களை…
2.விஞ்ஞானத்தின் பதிவால் ஒலியையும் ஒளிப்படங்களையும் காண முடிவது போல… காண முடியும்.

அதே சமயத்தில்… இந்த மனித ஆற்றலின் உண்மையில்… ஜீவகாந்த சரீரப் புலனில் எடுக்கும்… ஒலி காந்த மின் அலையின் செயல் கொண்டு வளர்க்கும் வழித்தொடருக்கு… ரிஷி சக்திகளின் ஒளி சக்தியின் எண்ணத்தால் (அவர்கள் எண்ணமும் நம் எண்ணமும் ஒன்றுபட வேண்டும்) ஆத்ம சக்தி வலுப்பெற சிவசக்தியின் (கணவன் மனவியாக) தொடர்பாக எடுக்கும் தியானத்தின் சூட்சுமத்தில்… பல ஆற்றல் மிக்க உண்மைகள் உண்டு

நான் ஓர் ஓடக்காரனப்பா…!

 

பிறப்பு வளர்ப்பு இறப்பு (எல்லாவற்றிலும்) எனும் உண்மைகளை உணர்ந்து… தம் ஆத்ம நிலையைக் காத்துக் கொள்ள… உள்ளபூர்வமாக… இதயத்தின் ஒளியாக…
1.யாம் சுட்டிக் காட்டிய தியானத்தின் வழித் தொடராக
2.பயணம் செய்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனரப்பா…!

ஆனாலும் பிறவி என்னும் மகா சமுத்திரத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில்… இக்கலியின் மக்கள் “மாக்களாக மாறிடும் நிலையை நீக்கிட”
1.அறிவு பூர்வமான ஆக்க செயல்களை உணர்த்தி
2.மாய தளைகளை அகற்றி
3.”விழிப்பாக உணர்ந்திடும்” – ஞானச் செல்வங்களை (உங்களை)
4.பிறவிக் கடல் கடந்து அழைத்துச் செல்லும் “யாம் (ஈஸ்வரபட்டர்) ஓர் ஓடக்காரன்…”

கால தேச வர்த்தமானம் எண்ணிடாதபடி… என் கடமையின் வினைச் செயலாக… இரவு பகல் “எந்த நேரமும் நான் காத்திருக்கின்றேன்…”

1.இரவிலோ… இன்னும் பேரருள் பிரகாசம் என்னும் ஜோதியைக் கையில் ஏந்தி
2.உங்கள் வாழ்க்கையின் பயனைக் காட்டிடவே சூட்சுமத்தில் செயல் கொள்கின்றேன்.

பயன் கொள்ளுங்களப்பா…!

“குரு வழியில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்

 

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமை மிக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும். ஆனால்…
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் “குரு வழியில்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்றுத் தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும்… ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும்.

ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்…! அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் “துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்”

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அது தான் நம்மை இயக்கிக் காட்டும்.

உதாரணமாக… தீமை என்று தெரிகின்றது… அப்போது அதை அகற்றப் பழக வேண்டும் அல்லவா…! அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.

ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவப் பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது

ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்… இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.

ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் – ஆறாவது அறிவு முருகன்)

தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?

1.சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும்.
2.இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)

பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.

உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.

அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.

இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்

அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.

உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.

அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!

அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.

உயிரை நாம் உணர வேண்டியதன் அவசியம்

 

இன்றைய மனித வாழ்க்கையில்
1.எண்ணத்தின் உணர்வு சரீர இயக்கத்தின் கதியால் இருப்பதாலும்
2.”சரீரத்தையே நான்…!” என்ற முறைப்படுத்திச் செயல்படுத்துவதாலும்
3.சரீரத்திற்காக மட்டுமே பிறப்பின் தொடர் கொண்டு தன் வாழ்க்கையை அமைத்து வாழ்வதாலும்
4.கடைசியில் இறப்பு நிலையை எய்துகின்றனர்.

உயிரின் உயர்வை ஒவ்வொருவரும் இனியாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

இஜ்ஜீவிதத்தில் அதாவது மனிதனாக உருப் பெற்ற நிலையில் உயிர் என்ற சூட்சம ஒளிச் சரீரத்தின் இயக்கத்தில் சுழலும் தன்மையில்
1.தன் எண்ணத்தின் உணர்வை
2.எந்தச் சுவையின் தொடரில் சுவைப்படுத்துகின்றோமோ
3.அதற்கொத்த செயலாக உயிரும் ஆத்மாவும் வலுத் தன்மை கொண்டு
4.இந்தப் பிறப்பின் தொடரிலிருந்து பிறவா நிலை பெற முடியும்.
5.உங்களால் முடியும்.. உங்களை நீங்கள் நம்புங்கள்…!

இந்தச் சரீர இயக்கத்தின் கதியில் ஓடக் கூடிய உயிரணுக்களின் உணர்வுக்கொப்ப சரீர ஆத்மா அதனுடைய செயலைச் சரீர எண்ணத்தில் மோதக்கூடிய இயக்க நிலைதான் மனித இயக்க நிலை.
(1.அதாவது வெளியிலிருந்து சுவாசித்து உடலாக உருவான நிலையில் அதனின் இயக்கமாகவும்
2.அதிலே எது எது வந்து மோதுகின்றதோ அதனின் இயக்கமாகவும் தான் நாம் இன்று வாழ்கின்றோம்)

இப்படிப்பட்ட மனித இயக்கதில் பிறப்பு இறப்பு கதி ஓட்ட கால சுழற்சியின் வாழ்க்கை என்பது…
1.எந்த உணர்வுக்கொப்ப வாழ் நாள் செல்கிறதோ
2.(வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் பொருள் போல)
3.அதன் சுழற்சியில் சிக்கி இந்தப் பூமியின் இயற்கையின் கதியுடன் தான் மீண்டும் மீண்டும் சுழல முடியும்.

இதிலிருந்து மனிதனில் மறைந்துள்ள உண்மை நிலையின்
1.“நான் என்பது யார்…?” என்ற உயிரின் தன்மையை உணர்ந்தால் தான்
2.மனித தத்துவம் “ரிஷித் தன்மை” பெற முடியும்.

நம் ஆத்மாவின் வலு “திடம் பெற வேண்டியது” மிகவும் முக்கியம்

 

பூமியின் சுழற்சியுடனே பல வார்ப்பில் வளர்ந்த நாம் நம்முடைய இந்த மனித வாழ்க்கையின் தொடரில்
1.தன் உயிராத்மாவின் வளர்ச்சியை வளர்க்காதபடி
2.உடலின் இயக்கத்துக்கு மட்டும் அடிமைப்பட்டு வாழ்ந்தால்
3.இந்தப் பூமியின் இயக்கச் சுழற்சியில் மட்டும் தான் சிக்கிக் கொண்டிருக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட வேண்டும். ஏனென்றால் இந்தப் பூமியின் வளர்ச்சியில் வலுப் பெற்ற வளர்ச்சியே மனிதனின் நிலை தான். பூமியின் செயல்பாட்டிலேயே உயர்ந்த நிலை கொண்டதும் மனிதனின் நிலை தான்.

மனிதன் தன்னைத் தானே உணரும் ஞான ஒலியை… அதாவது அந்த “ஆத்மாவின் விழிப்பையும்…” அதன் மூலமாகப் பெறும் ஆத்ம ஒளியின் செயல்பாடு கொண்ட சக்தியினால் தான் சூட்சம இயக்கம் சுழல்கிறது.

1.கனம் கொண்ட கயிறைச் சுற்றி முறுக்கும் பொழுது “திடம்” பெற்று விடுகின்றது.
2.சில பொருள்களை வேக வைக்கும் பொழுது அதனுடைய “மணம்” வெளிப்படுகின்றது.
3.சில பொருள்கள் எரியும் பொழுது அதனுடைய மணமும் எண்ணமும் “ஆவியாக” புகை நிறத்தில் வெளிப்படுகின்றது.

அந்தந்தச் செயல்பாடுகளுக்கொப்ப அடுத்த நிலையின் மாற்றத்தில் (வேக வைத்தலோ அல்லது எரித்தலோ) திடமாகும் பொழுது
1.அதனுடைய வார்ப்பு நிலை
2.கயிறைத் திரித்தவுடன் முறுக்குவதைப் போன்று
3.கெட்டித் தன்மை ஏற்பட்டு விடுகின்றது.

பொருளை வேக வைக்கும் பொழுது ஆவி வெளிப்பட்டுப் பொருள் திடப்படுகின்றது. பொருளை எரிக்கும் பொழுது நீர்ச் சத்து வெளியேறி அந்தப் பொருள் பஸ்பமாகிச் சாம்பல் தான் திடமாகின்றது.

அதைப் போன்று இந்த ஆத்மாவின் இயக்கம்…
1.சரீரத்தின் ஓட்டத்தில் வாழும் காலத்தில்
2.ஆத்மாவின் வலு வளர்ச்சியைத் திடமாக்கிக் கொள்ள வேண்டும்
3.ஏனென்றால் ஆத்மாவின் வலு திடம் பெற்றால் தான் உயிரின் பரிமாணம் அதிகரிக்கப்படும்.

மனிதனுக்கு அடுத்த உயர்வு நிலையான ஞான நிலை எய்திட அந்த மெய்யை அறியும் மெய் அறிவிற்கு முலாமாக்கும் நிலையாக (சக்தியைச் சேமிக்கும்) ஆத்மாவின் முதிர்வு நிலையை “விழிப்பு…” நிலையாக்கினால் தான் முடியும்.,

அத்தகையை ஆத்ம விழிப்பு நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும்
1.அந்த ஆத்மாண்டவனை..
2.நம் உயிரான ஈசனைப் புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று எண்ணி
3.மெய் வழியைக் காட்டிக் கொண்டிருக்கும் சகல ரிஷிகளின் நேரடி அலைத் தொடர்பில்
4.உயிர் வழிச் சுவாசமாக ஈர்த்தெடுக்கும் பேரருள் பேரொளி வளர்ப்பினால் தான் முடியும்.

திடீரென்று இருதய அடைப்பு (அட்டாக்) ஏன் வருகிறது…?

 

நாம் சாப்பிடுகின்ற ஆகாரத்திற்குள் நல்ல வாசனையான பொருளைப் போட்டு. ருசியாகத் தான் சாப்பிடுவோம். சத்துள்ளதை எல்லாம் அதிலே போடுகின்றோம். ஆனால் அதற்குள் மறைந்து இருக்கும் அந்த விஷமான சத்தை நம் உயிர் என்ன செய்கிறது…?

அந்த நஞ்சை எல்லாம் பிரித்து மலமாகக் கொண்டு வருகின்றது நம் உடல். அதாவது உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது.

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா என்று இப்படி இருக்கப்படும்போது அதை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்…?

உதாரணமாக… வியாபாரத்தில் நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை… ஏமாற்றுகின்றான்…! என்று தெரிகின்றது. இது கார்த்திகேயா.

ஏமாற்றுகிறான் என்று சொன்னவுடனே நாம் வேதனைப்படுகின்றோம். நம் தலை சுத்துகின்றது. கொடுத்தேனே என்னை ஏமாற்றுகின்றானே…! என்று இதுவும் தெரிகின்றது கார்த்திகேயா.

ஏமாற்றுகின்றான் என்று சொல்லும்போது நாம் இன்னொன்று என்ன நினைக்கின்றோம்…? அந்த நேரத்தில் இன்னொருவருக்கு நாம் காசு கொடுக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.

ஏனென்றால் கடனுக்கு வாங்கித் தான் நாமும் தொழில் செய்கிறோம். பொருள் வாங்கியவரிடம் பணம் கொடுக்கின்றேன் என்று சொல்லிவிட்டுத் தான் நாமும் வாங்குகின்றோம். அந்த நாணயத்தைச் செலுத்த வேண்டும்.

ஆனால் பொருளை விற்கும் போது நம்மிடம் வாங்கியவன் பணத்தைக் கொடுத்தால் தான் நாம் வாங்கியவருக்குக் கொடுக்க முடியும் என்ற நிலையில் நாமும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது…?

அதை நினைத்தாலே கோபம் வரும்… கண்கள் சிவக்கும்…! நரம்பு மண்டலமெல்லாம் விடைக்கும். இப்படி ஆகின்றதே என்று அந்த நேரத்தில் வேதனையும் விஷமும் சேர்த்தால் எப்படி இருக்கும்…?

இந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலந்து நம் உடலிலே கை கால் குடைச்சலை உண்டாக்கும். சில பேருக்கு மூட்டு மூட்டிற்கு வலி இருக்கிறது… என்று சொல்வார்கள்.

அதாவது “சரவாங்கி நோயாகி விட்டால் மூட்டு மூட்டுக்கு வலி வந்துவிடும். அதே சமயத்தில் எவ்வளவு திடமாக இருந்தாலும் அந்த வேதனை என்ற உணர்வு வரப்படும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த கோபமும் வேதனையாக ஆன பிற்பாடு நமது கவன நரம்பில் சென்று அங்கே இந்த அழுத்தம் ஆன பிற்பாடு என்ன செய்கின்றது…?
1.பலூன் மாதிரி உப்பிவிடும்
2.பலூன் மாதிரி உப்பிவிட்டது என்றால் நம் இருதயத்தைச் சரியாக இயக்க முடியாது
3.மூச்சு இழுத்தது கீழே இறங்காமல் நிற்கும்.
4.அப்படியே ஹார்ட் அட்டாக் ஆகிறது… உடனே இறந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே சமயத்தில் இரத்தம் போகும் நுண்ணிய நாளங்கள் வெடித்து விட்டதென்றால் அப்படியே சுத்தமாவே நின்றுவிடும்.

1.நாம் நினைக்கின்றோம் சாதரணமான நிலைகள் என்று….!
2.ஆனால் நாம் பார்க்கின்ற உணர்வெல்லாம் நம் உடலிலே இப்படிச் செய்து கொண்டே இருக்கும்

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நாம் சம்பாரிக்க வேண்டும் என்று நினைத்தோம் தொழிலில் லாபம் வரும் என்று நினைத்தோம். நாம் ஏமாற்றவில்லை…! இங்கே வாங்கிக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையுடன் கடன் வாங்கினோம்.

கொஞ்சப் பணம் இருந்தாலும் கடனுக்கு வாங்கி வியாபாரம் செய்து இதிலே லாபம் வரும் என்று தான் ஆசையுடன் இருக்கின்றோம். கடையில் நம் வியாபாரத்தைப் பெருக்க வேண்டும் என்றும் கார்த்திகேயா அது நமக்குத் தெரிகின்றது.

ஆனால் பணம் திரும்ப வரவில்லை என்று தெரிகின்றது. நாம் பொருள் வாங்கியவர்கள் நம்மிடம் பணத்தைக் கேட்பார்களே…? அவர்களுக்கு என்ன சொல்வது…? என்கிற பொழுது நாம் மயங்கி விடுகின்றோம்.

அந்த மாதிரி நேரத்தில் யாம் (ஞானகுரு) உங்களுக்கு உபதேசித்த அருள் வழிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள்.

1.கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
2,அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவருக்கு நல்ல வருமானம் வர வேண்டும்
5.நமக்குப் பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும் என்று இப்படி எண்ண வேண்டும்.

இவ்வாறு செய்தால் பணம் வந்து சேரும். வேதனையோ கோபமோ வராது… நோயாகவும் மாற்றாது.

நமக்குள் மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க வேண்டும்

 

ஜீவன்கள் வாழ இந்தப் பூமியின் ஜீவ நாடியாக நீர் உள்ளதற்குப் பூமியில் எப்பொழுதுமே மழை பெய்து கொண்டிருப்பதில்லை. மேகங்கள் கருத்து இடியும் மின்னலும் தோன்றுகிறது. அப்பொழுது பல இடங்களில் பெய்யக்கூடிய அந்த மழை வெள்ளமாகின்றது.

வெள்ளமே ஆறாகக் கரை புரண்டு ஓடி நீர் நிலைகள் பூமியில் நிறைகிறது. அந்த நீரைக் கொண்டு தான் பல ஜீவராசிகள் உயிர் வாழ்கிறது. ஒரு இடத்தில் பெய்யும் மழை ஆறாகும் பொழுது பல இடங்களுக்குச் செல்கிறது.

இதே நிலை போல் மீண்டும் மீண்டும் அந்தந்த இடங்களுக்கொப்ப ஏற்படக்கூடிய நிலைகளைக் கொண்டு ஜீவராசிகளின் நிலையும் தாவர இனங்களின் வளர்ச்சியின் பயனாகக் கனியும் பூக்களும் (புஷ்பங்களும்) வளர்கிறது.

1.கனியும் பூக்களும் வருவதைப் போன்று தான்
2.மனித உணர்வில் மெய் ஒலி பெற.. மெய் ஒளி பெற… மெய் ஞானமாக்க..
3.பல நிலைகளில் நம் உணர்வின் எண்ணமுடன் மோதிடும் இன்னல்கள் ஏற்படுத்தும் காலங்களை
4.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த ஜீவித உணர்வில் எடுக்கும் ஒலி கொண்டு தான் ஒளியாக மாறும்…!
5.அதாவது இடி மின்னலைப் போன்றே ஒலி ஒளி செயல் ஏற்படும் இன்னல்கள் அனைத்தையும் பேரொளியாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் ஏற்படக்கூடிய எண்ணத்தின் மோதலை இடி மின்னலைப் போன்று உணர்வின் சமைப்பாக நாம் மாற்றும் பொழுது
1.நீரான பெருக்கம் மழையாகி ஜீவன்களை வளர்க்கப் பூமிக்கு வலு ஏற்படுகின்றதோ
2.அதைப் போன்று எண்ணத்தில் எதிர்படும் பல மாற்றங்களையும் உணர்வில் எடுத்து
3.நம் உணர்வுடன் எந்த எண்ணத்தின் மாற்று நிலைகள் மோதினாலும்
4.மேகத்தின் கருமை கொண்டு இடி மின்னல் வெடித்து மழை வருவதைப் போன்று
5.நாம் போகும் மார்க்கத்தில் ஞானத்தின் மெய் ஞானம் அறிய…
6.மோதிடும் எதிர் தன்மைகளை உணர்வின் எண்ணத்தால் மாற்றி உயர்ந்த ஞானத்தின் ஒலியாக நாம் எண்ணினால்தான்
7.அந்த ஒலியே (எந்த ஒலியாக இருந்தாலும்) ஒளியாகும்… நம் ஆத்மா பேரொளியாக ஆகும்.

மெய் ஒலி… மெய் ஒளி பிறக்க… மெய் ஞானிகள் அன்று
1.வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதிய “எண்ணத்தின் ஓட்டத்தின் கதியைக் கொண்டுதான்…”
2.எண்ணத்தால் எதிர்படும் எதிர் நிலைகளை ஞானத்தின் பகுத்தறிவால் உணர்ந்து
3.மெய் ஒலி மெய் ஒளி பெற்று… மெய் ஞானியாகும் குணங்களைத் தன் ஆத்ம ஞானத்தால் வளர்த்து
4.ஆத்ம சக்தியின் சூட்சமத்தை… ஆதிசக்தியின் ஒளி சக்தியாக..
5.அகிலத்தில் படர்ந்துள்ள பரமாத்மாவின் பரம்பொருளை
6.”தனக்குள்ளேயே…!” மெய் ஞானிகள் அன்று கண்டார்கள்.

மெய் ஞானத்தின் ஒலி கொண்டு… ஒளி பாய்ச்சும் ஏக்கத்தில்… மெய் ஞானி பெற்றான் “ரிஷிச் சக்தி…!”

அந்த ரிஷிச் சக்தியின் செயல் நிலை தன் தன் கதியின் சுழற்சிக்குச் செயலாக்குவதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்துள்ள ஞானத்தைக் கொண்டு
2.வலுவை வளர்க்க வழியமைக்கும் நிலையைத்தான் இங்கே உணர்த்துகின்றேன் (ஈஸ்வரபட்டர்).

யாம் உபதேசிப்பது வெறும் சொல் அல்ல… அகஸ்தியனின் பேராற்றல் அது…!

 

இன்று யாகத்தை எப்படி நடத்துகிறார்கள்….?

நெருப்பை உருவாக்கி அதில் பல புஷ்பங்களையும் நறுமணங்களையும் மணங்களையும் போட்டு… மந்திரத்தைச் சொல்லி இப்படித்தான் யாகத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் உண்மையான யாகம் எது…?

நமது உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுக்கக்கூடிய (சுவாசிப்பது) உணர்வுகள் புருவ மத்தியில் இருக்கும் உயிரிலே மோதுகிறது. மோதிய பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது.

ஒவ்வொரு குணங்களையும் பற்றி அதனின் இயக்க நிலைகளைத் இந்த உபதேசத்தின் வாயிலாகத் தெளிவாகச் சொல்கின்றோம். அதற்குள் தீமை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளைக் கலக்கும்படி சொல்கிறோம்.

அப்போது தீமையை நீக்கும் அந்த மெய் ஞானியின் உணர்வுகள் யாகத்தீயிலே… அதாவது உங்கள் உயிரிலே படுகின்றது.

அந்த அருள் உணர்வை இயக்கச் சக்தியாக மாற்ற வேண்டும்… துருவ நட்சத்திரத்திந் உணர்வு உங்கள் உடலில் படரப்படும் பொழுது ஒளியின் அறிவாக… உணர்வின் ஞானமாக வளர்கின்றது

ஆக… இப்பொழுது அந்த உண்மையான யாகத்தை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

எம்முடைய அருள் உபதேசத்தைக் கேட்டு உங்களுக்குள் அதை வளர்த்து நீங்கள் வெளிப்படுத்தும் மூச்சலைகள் வெளியிலே பரவும் பொழுது எல்லோருக்கும் நல்லதாகிறது.

உதாரணமாக என் உடலில் மேல் வலி தலைவலி கை வலி கால் வலி இடுப்பு வலி என்று சொல்வார்கள். இடுப்பு வலி இருக்கும் போது இங்கே குருநாதர் சொல்வதை “உட்கார்ந்து கொண்டு நான் எப்படிக் கேட்பது…? நான் எப்படி அமர்ந்து தியானம் செய்வது…?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அவர்கள் எல்லாம் இப்பொழுது இந்த உபதேசத்தைக் கேட்க ஆரம்பித்தால்… நேரம் ஆக ஆக அந்த வலி எல்லாம் காணாமலே போய்விடும்… உட்கார்ந்து தாரளமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

வலியே தெரியாதபடி இருக்கும். அடுத்தது ஒன்றுமே இல்லை என்று சொல்வார்கள்.

ஆனாலும் ஏற்கனவே இடுப்பு வலியால் வேதனைப்பட்டுத் தனக்குள் பதிவான உணர்வுகள் என்ன செய்யும்…? “அந்த ஞாபகம்” வந்தவுடனே என்னிடம் (ஞானகுரு) வந்து இடுப்பு வலிக்கின்றது என்று தான் மீண்டும் கேட்பார்கள்.

முதலில் வரும்போது வலி இருந்தது… உபதேசம் கேட்கும் பொழுது இடுப்பு வலி இல்லையே… ஆகையினால் இப்பொழுது இல்லை அல்லவா…! என்று நான் திருப்பிச் சொன்னால் ஏற்கனவே பதிவான நினைவோடு தான் மீண்டும் கேட்கின்றார்கள்.

அது போல் ஒரு சிலருக்குக் கை கால் குடைச்சல் இருக்கும். இந்த உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின்… அவர்கள் உடலில் இருக்கும் அந்தப் போர் முறை மாறுகின்றது… கலக்கங்கள் நீங்குகின்றது.

மகரிஷிகள் உணர்வுகளைச் சுவாசித்த பின்… தீமைகளை அது நீக்குகின்றது. வலி நீங்கி… உங்கள் உடல் வெடுக்கென்று “சொடக்கு எடுத்தது போன்று…” இலகுவாக இருக்கும்.

நீங்கள் கதைப் புத்தகம் படிக்கின்றீர்கள்… அல்லது சினிமா பார்க்கின்றீர்கள் என்றால் ஊங்கள் உடல் ஏதாவது நெளிகிறதா…? கையையோ காலையோ நெளித்து அசைக்கின்றோமா…? இல்லை. கூர்மையாக உற்றுப் பார்க்கின்றோம்… கவனிக்கின்றோம். இடுப்பு வலி தலைவலி எதையுமே நினைப்பதில்லை… கால் வலியைக் கூட நினைப்பதில்லை.

அது போல் தான் எம்முடைய உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்கக் கேட்க இருதயத்தில் படபடப்பு இருந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தச் செலுத்த… அதை நீக்கி இதயத்தை வலுவாக்குகின்றது…. வேதனை குறைகிறது.

ஏனென்றால் நான் வெறும் சொல்லாக உபதேசிக்கவில்லை. அகஸ்தியன் பெற்ற அருள் ஆற்றலை அவன் கண்ட… அவன் பெற்ற… அவன் வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை… செவி வழி கூடி இந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் உந்தச் செய்து அதை நுகர வைக்கின்றோம்.

நுகரும் போது அந்த அகஸ்தியன் பெற்ற உணர்வெல்லாம் உங்கள் இரத்தங்களிலே கலந்து அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகிறது. தீமைகளை நீக்கக்கூடிய சக்தி உங்கள் உடலில் அது எப்படியும் ஊடுருவ வேண்டும்… நீங்கள் நலம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இப்படிச் செய்கிறேன்.

வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்தால் தன்னாலே வேதனை வருகிறது அல்லவா. அடுத்து இரவிலே கெட்ட கனவு வருகிறது…! மேல் வலிக்கிறது… உடம்பை அமுக்குகிறது… வயிறு வலிக்கின்றது… கண் வலிக்கின்றது எல்லாமே வரும்.

காரணம்… நாம் நுகர்ந்த அந்த வேதனைப்பட்ட உணர்வு ஆகாரத்துடன் கலந்த பின் அதற்குத்தக்க உடலுக்குள் சென்று உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கும் அதற்கும் எதிர்மறையாகி ஒன்றுக்கொன்று போராகிறது.

நுரையீரலுக்குச் சென்றால் வலி கல்லீரலுக்குச் சென்றால் வலி இதயத்துக்குச் செல்லும் பொழுது வலி… என்று இப்படி அந்தந்த உறுப்புகளுக்குச் செல்லும் பொழுது போராட்டமாகி… எதிர்மறையான உணர்வின் இயக்கங்களாக வலியாக வேதனைப்படும்படி செய்கின்றது.

இரத்தம் செல்லும் இடமெல்லாம் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு போர் நடந்து கொண்டு இருக்கின்றது.

இதைப் போன்ற நிலையிலிருந்து மீள்வதற்குத் தான் அன்று அகஸ்தியன் பெற்ற உணர்வை உங்கள் செவிகளிலே கேட்கும்படி செய்து… கண்ணின் நினைவாற்றலுக்குக் கொண்டு வரச் செய்து… அதை நுகரும்படி மூக்கின் வழியாகச் சுவாசிக்கும்படி செய்து… உயிர் வழி இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் பரப்பும்படியாகச் செய்து… இந்த உபதேசத்தின் உணர்வுகளை உமிழ் நீராக உங்கள் ஆகாரத்துடன் கலக்கும்படி செய்து… அதை நல்ல இரத்தமாக மாற்றும்படி செய்து… இரத்தத்தில் கலந்த பின் தீமைகளை நீக்கும்படியாக… உங்கள் தீமைகளைப் போக்கும் அரும்பெரும் சக்தியாகக் கிடைக்கச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்…! நான் சும்மா வேடிக்கையாகச் சொல்லவில்லை… எல்லாம் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல வரவில்லை.

காரணம்… நமக்குள் எத்தனையோ விஷங்கள் இருக்கிறது. இதை ஒவ்வொரு நிமிடமும் மாற்றி எடுத்துக் கொண்டு வந்தால் அந்த விஷமே வலுவாகி உயர்ந்த சக்திகளைப் பெற (சரியான) வழியாகும்.

பாம்பிற்கு “விஷம் எப்படி வலுவாகிறதோ” இதைப் போன்று விஷத்திற்குள் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாகச் சேர்க்கப்படும் போது… நமக்குள் வீரிய சக்தியாகக் கிடைக்கின்றது… அதை நீங்கள் பெற முடியும்.

ஏனென்றால் குருநாதர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குத் தொட்டுத் தொட்டுக் கொடுக்கின்றோம். அடுத்து அடுத்து வரும் போது ஒவ்வொரு நிலையிலும் நல்லதை உருவாக்குவதற்கு… ஞானத்தின் வழியில் வளர்வதற்கு இது உதவும்.

உங்கள் உயிர் கடவுள்… அவனால் உருவாக்கப்பட்ட உங்கள் உடல் ஆலயம்… அதில் அசுத்தங்கள் சேராது அந்தக் கோயிலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற சேவையாக… குரு சொன்ன நிலைகளைத் தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.

ஆகவே நீங்கள் எல்லாம் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்…!

நம்மைச் சித்தனாக்கும் “சிந்தனா சக்தி”

 

“ஒருமையுள் ஆமை போல் ஒன்றடக்கல்…” என்ற வள்ளுவச் சித்தனாரின் வேதம் உரைக்கும் பொருளின் உண்மை என்ன…?

1.பஞ்சேந்திரியங்கள் எனச் சொல்லப்படும் மெய் கண் மூக்கு செவி வாயினால்
2.உடல் இயக்கும் எண்ணத்தின் வழியாகச் செயல்படும் இந்த உறுப்புகளையா…?
3.அல்லது காற்று நூல் உரைத்த பஞ்சேந்திரியங்களின் உட்செயல் காட்டும் பஞ்சபூதங்களையா…?

அதாவது அடக்கப்பட வேண்டியது ஐம்புலன்களையா… அல்லது அவைகளை இயக்கும் காற்றையா…? (மூக்கு வழி புகும் காற்று)

குதிரையைச் செலுத்துபவன் அதற்குக் கண் முகப் படலமிட்டு… அதற்கு மேல் கடிவாளமிட்டு… தான் அமர்ந்து செல்வதற்காக வேண்டிய சேணத்தையும் இட்டு… இத்தனை அமைப்புகளுக்கும் பிறகு
1.எங்கே செல்ல வேண்டும்…? என்று உதித்திடும் எண்ணத்திற்கொப்ப
2.கடிவாளத்தின் தூண்டுதலை உணர்ந்து… நேர் பாதையாகத் தன் வழி உணர்ந்து செல்லுதலுக்கொப்ப
3.மனித சரீரத்தில் செயல்படும் பஞ்சபூதங்களின் செயலையே
4.உயர்ந்த நன்மார்க்க சிந்தனையாக… ஆத்ம பலம் பெற வேண்டும் என்ற சிந்தனையாக
5.சித்தின் நலம் பெற விளையும் சிவசக்தி தத்துவ சாரமாக…
6.(தன்) மன எண்ணத்தின் இலயிப்பு விளங்கிடல் வேண்டும்.

அதுவே சித்தனாக ஆகும் சீரிய வழியாகும்…!

அப்படி அல்லாதபடி… பஞ்சபூத புரவிகள் இயங்கிடும் இயக்கம்… செயலுறும் செயலில்… “மன எண்ணத்தின் எழுச்சி சிந்தனையை மாற்றிவிடும் கருத்தாக இருந்து விட்டால்…”
1.அப்புரவிகளின் வலு கட்டுக்கடங்காத செயல் நிலையாக
2.பஞ்சபூதங்களாய் வழி நடத்தும் “உயிரான்ம சக்தியின் உயர் நோக்க செயல்” என்ன ஆவது…?

ஆகவே…
1.சிந்தனை சக்தியின் கூர் பார்க்க… (பார்த்து)
2.சிந்திப்பின் அவலங்கள் நீக்கப்பட்டு…
3.தர்மத்தின் செயலுறும் வழியில்… சத்தியம் என்ற மெய்ப்பொருளை உணர வைத்து (தனக்குத் தானே உணர்ந்து)
4.அதிலே உவகை மகிழ்ச்சி தரும் பேரின்ப நிலையை அனுபவித்தலே சித்தின் நிலையப்பா…!

தாய் தந்தையரிடம் தினமும் ஆசீர்வாதம் (நல்ல வாக்குகள்) வாங்கும் பழக்கம் நம்மிடம் இருக்கின்றதா…?

 

நாம் தாய் தந்தையை முதல் தெய்வமாக வணங்கச் சொல்கிறோம்…!

ஆனால் திடீரென்று கேட்பார்கள்… என் அம்மா என்னைச் சும்மா தினமும் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அம்மா எப்படி எப்படியோ செய்து என்னை என்னமோ என்னைச் சொல்கிறது…! என்று இப்படியெல்லாம் பேசுவார்கள்.

தாயைக் கடவுளாக மதிக்கச் சொல்கிறாயே… எங்கள் அம்மாவுக்காக வேண்டச் சொல்கிறாயா…? என்றெல்லாம் இப்போது சாதாரணமாகச் சொல்கின்றார்கள்.

ஆனால் நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது தாய் எத்தனை அவஸ்தைப்பட்டிருக்கும்…? அது நமக்குத் தெரிகின்றது.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம். கர்ப்பமாக இருக்கின்ற தாய் எத்தனை அவஸ்தைகள் படுகின்றார்கள்… எத்தனை வேதனைப்படுகின்றார்கள்… என்று.

அன்னை தந்தை நமக்காக வேண்டி நம்மை வளர்த்திட எத்தனையோ வேதனைகளையும் சிரமத்தையும் அனுபவித்தார்கள். அது அனைத்தும் அவர்கள் உடலில் தீய வினைகளாக இருக்கும்.

அது அனைத்தையும் நீக்க…
1.மகரிஷிகளின் அருள்சக்தி என் அன்னை தந்தை பெற வேண்டும்.
2.என்னால் பட்ட நஞ்சுகள் அங்கே கரைய வேண்டும்.
3.மகரிஷிகளின் அருளுணர்வு என் அன்னை தந்தை உடல் முழுவதும் படர வேண்டும்
4.என்னை வளர்த்திட்ட என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட… நான் பார்க்க வேண்டும்
5.அந்தப் பேரானந்த பெருநிலையான நிலைகள் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று
6,இதை வினையாக ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும்.

இப்படித் தான் அம்மா அப்பாவை வணங்கச் சொல்லி சொல்கின்றார்கள். அதை யாரும் நினைக்கவில்லையே…!

தன் பிள்ளை கருவில் இருக்கப்படும்போது எந்த நிலையை அந்தத் தாய் செய்ய வேண்டும்…?

கருவில் வளரப்படும்போதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று தாய் எண்ணுதல் வேண்டும்.

அதே போல் கர்ப்பமான அந்தத் தாயைப் பார்ப்பவர்களும் இதை எண்ணி அந்தக் கருவில் வளரும் சிசு
1.இருள் நீக்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
2.உலகையே காத்திடும் உணர்வுகள் அதிலே விளைய வேண்டும் என்று
3.அந்த உயர்ந்த ஞானத்தைப் பெற வேண்டும் என்றும்
4.அந்தக் கருவில் வளரக்கூடிய குழந்தைக்கு இந்த அருள் சக்திகள் எல்லாம் வினையாகச் சேர வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.

அதே தாய் உலகில் உள்ள அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வு பெற வேண்டும் என்று அதை எண்ணும்போது இந்த உணர்வுகள் அனைத்தும் தாய் கருவிலே வளரும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

பிறக்கும் குழந்தை ஞானக் குழந்தையாகப் பிறக்கும். அனைவரும் போற்றும்படியாக ஞானவானாக வளரும். இப்படித்தான் அன்று ஞானிகள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள்.

நாம் இதைச் செய்கின்றோமா…?

சர்வத்தையும் அமுதமாக்கிடும் திறன்

 

1.வாழ்க்கையின் எல்லா நேரங்களும் நல்ல நேரம் தான்
2.நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது இல்லையப்பா…!
3.விஷ அமில குணங்களையே (துன்பங்களையும் இன்னல்களையும்) அமுதமாக்கிடும் திறன் நாம் செய்யும் தியானத்திலேயே கிடைக்குமப்பா.

நம்முடைய எண்ணத்திலும் சுவாசத்திலும் மாற்றம் கொண்டு விடக் கூடாது…! என்று கூறுவதெல்லாம்
1.விஷத்தின் அமிலத் தன்மையில் ஒலி பிறப்பதைப் போல் (ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது)
2.நம் மீது மோதும் அனைத்திலுமே நம் உயிராத்மா வலுவான சக்தியைப் பெறுவதற்குண்டான
3.அத்தகைய செயற்பாடுகள் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

நவக் கோள்களின் விஷத்தையே “நவபாஷாணச் சிலையாக” முருகனின் சிலையாக உருவாக்கியவர் போகர். ஜோதி நிலை பெறுவதற்காக
1.தன் எண்ணத்தின் தன்மையை ஞானவேல் என்ற ஆறாவது அறிவை உயர்த்தி
2.வான இயல் சக்திகளைப் புவியியலில் உள்ள மனிதர்கள் அனைவரும் பெற்றிட 5300 ஆண்டுகளுக்கு முன்பே வழி காட்டினார் அந்தப் போகமாமகரிஷி.

அதே தத்துவத்தை… அதாவது நவக் கோள்களின் சக்தியை தியான வலு ஈர்ப்பு கொண்டு
1.ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவின் முலாம் பிரகாசித்துச் சக்தி பெறுவதற்காக
2.நீல வண்ண இராமனாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.
3.அனைத்துமே ஆத்ம வலு பெற்றிடும் செயல் முறைகள் தான்.

நாம் சுட்டிக் காட்டும் தியான வழிகளில் உயர் ஞான சிந்தனை வசம் நிலைப்போர் ஒவ்வொருவரும் தன் உயிராத்மாவை வளர்ச்சி கொண்டதாக ஆக்கிட
1.அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை
2.நவஜோதிகளாக உங்கள் உயிரான ஆத்ம ஜோதியில் கலக்கச் செய்யுங்கள்.

அந்த ஆதிசக்தியில் (இயற்கை) ஒன்றிட வேண்டும் என்று எண்ணம் கொண்டு உயர்ந்திட வேண்டும் என்று எண்ணுவோர் அனைவருக்கும் எமது (ஈஸ்வரபட்டர்) ஆசிகள்.

ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிரணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தே தான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

October 2023 உபதேசம்

ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

 

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிரணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தே தான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

 

சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.

மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?

மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.

இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.

இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.

அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.

எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.

வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.

அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.

அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.

நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.

உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”

உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..

சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்

வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.

அமிர்தவர்ஷினியின் ஆசி வேண்டுமப்பா…!

 

சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.

ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.

சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?

1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.

மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?

தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.

என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.

அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?

1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?

அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.

அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.

மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.

சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?

“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?

“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.

ஜோதித்துவ பொருளுக்கும் – உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்த அரும் பெரும் சக்தியை… என்னை எப்படி அதைப் பெறச் செய்தாரோ நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும். அவர் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதை நீங்கள் சிந்தனை செய்து அந்த தவறு செய்யும் உணர்ச்சிகளைத் தடுக்கப் பழக வேண்டும்.

அதற்கு வேண்டிய கடும் ஆயுதமாகத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் போது… தவறென்ற உணர்வு உங்களுக்குள் வராதபடி… உங்கள் உடலுக்குள் தீமையை விடாதபடி தடுக்கும். அது தான் கார்த்திகேயா…!

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நம் ஆறாவது அறிவால் தான் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்து கொண்டாலும் அந்த வேதனை உடலுக்குள் புகாதபடி தடுக்கும் சக்தியாக… நம் ஆறாவது அறிவை சேனாதிபதியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்படுதல் வேண்டும். அதை நுகர்ந்தால் நமக்குள் கிரியை ஆகின்றது. கிரியை ஆகும் போது “தீமையை நீக்கும் அந்த ஞான சக்தியாக” வருகின்றது.

முதலில் சொன்ன மாதிரி நண்பன் என்ற நிலையில் ஒருவர் மீது பாசமாக இருக்கின்றீர்கள். நோயுடன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்க்கின்றீர்கள்.

அதை இச்சைப்பட்டுக் கேட்டறியப்படும் போது உங்களுக்குள் கிரியையானால் அந்த வேதனை உணர்வு தான் ஞானமாக உங்களை இயக்கும். அந்த நண்பருடன் சேர்ந்து நீங்களும் வேதனையில் தான் உழல முடியும்.

நோயால் வேதனைப்படுகின்றான் என்று தெரிந்து கொண்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “அதை இச்சைப்பட வேண்டும்…” உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்..

அடுத்து அந்த நண்பன் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… அவன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.

இப்படி இச்சைப்படும் போது அந்த அருள் சக்தி இங்கே கிரியை ஆகின்றது. தீமை நீக்கும் உணர்வு உங்களுக்குள் வலிமை ஆகின்றது.

அதற்குப் பின் அவன் செவிகளில் படும் படியாக… நீ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்படு. அவ்வாறு நீ இச்சைப்பட்டால் அது உன் தீமைகளை நீக்கும்… நீ நன்மை பெறுவாய்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

இது எல்லாமே நம் புராணங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனாக ஆனபின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட கார்த்திகேயா என்று நம் உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வானால் உயிர் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது… உணர்வுகள் ஒன்றாகின்றது தெளிவாகின்றது… பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.

காரணம்… நாம் இந்த உடலில் “நீடித்த காலம் இருப்போம்…” என்று எண்ண வேண்டாம் முழுமையான நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் உலகில் விஷத்தன்மை இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து வலு சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே உபதேசிக்கும் அருள் ஞானக் கருத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உங்களுக்குள் பதிவாக்குங்கள்.

ஜாதகமோ ஜோதிடமோ வாஸ்து சாஸ்திரமோ மற்ற நியூமராலஜியோ “நமக்கு எல்லாம் செய்யும்” என்று அதை நம்பிக் கொண்டு… நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதபடி… காலத்தால் வரும் தீமைகளை அகற்றும் அருள் ஞான சக்தி நமக்கு உண்டு என்று “உங்களை நம்பிப் பழகுங்கள்…”

அத்தகைய அருள் சக்தி தான் இப்பொழுது உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதைப் பெருக்கி வாழ்க்கையிலே பேரின்பம் பெறுங்கள்… ஏகாந்த நிலை என்ற பகைமயற்ற உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

புதுப் புது மருத்துவத்தை விஞ்ஞானம் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை இல்லை

 

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.தம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.தன் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… தன் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது…!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப் போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

விஞ்ஞானிகள் எந்தக் கோள் எங்கே… எந்தத் திசையில் செல்கின்றது…? என்ற உணர்வினை தொலைநோக்கிகள் மூலம் கவர்ந்து ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்குகின்றார்கள். பின் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றார்கள்.

பெருக்கிய பின் என்ன செய்கின்றனர்…?

இந்த உணர்வின் அதிர்வுகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டபின் எந்தக் கோளின் உணர்ச்சிகள் (FREQUENCY WAVES) வருகின்றதோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றார்கள்.

1.நாடாக்களில் பதிவு செய்து
2.இராக்கெட்டை உந்து விசையால் விண்ணிலே உந்தச் செய்து அதனின் முகப்பில் வைக்கின்றான்
3.திசை… எல்லை… பாதை… எதுவுமே அமையாமல் இருக்கும்போது
4.எந்த கோளின் உணர்வலைகள் அங்கே பரவிக் கொண்டுள்ளதோ
5.அந்த திசைப் பக்கம் வந்தபின் அழுத்தமானபின் இராக்கெட் அதனுடன் சேர்ந்து செல்கின்றது
6.அதன் உணர்வின் ஒலி அதிர்வுகள் ஆனபின் தரை மார்க்கத்தில் இருந்து எடுக்கின்றான்.

இதைப் போலத்தான் அன்று மெய் ஞானி தனது மனிதனின் வாழ்க்கையில் நாம் எதை எப்படிப் பெற வேண்டும்…? என்று உணர்ந்து மனிதன்… பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவாக்கினான்.

இந்த உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனை எப்படி உருவாக்கியது…? என்ற நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்க்கும்படி செய்து நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தான்.

விநாயகருக்கு முன்னாடி எலியை வைத்தான்… மூஷிகவாகனா..! (சுவாசநிலை).
1.நாம் சுவாசித்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் நடந்து வந்த ஒவ்வொரு நிலைகளும்
2.கணங்களுக்கு அதிபதியாகி இன்று பரிணாம வளர்ச்சியாகி நாம் மனிதனாக வந்தோம்
3.நாம் உணவுகளை எப்படி உட்கொள்கின்றோம்…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
4.இந்தப் பிள்ளையார் (பிள்ளை யார்…?) என்று கேள்விக்குறி வைத்து நம்மைச் சிந்திக்கச் செய்கின்றனர்.

காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஆற்றிலே குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம்… துணி அழுக்கைப் போக்குகின்றோம். அன்றைய கால வழக்கத்தில்…!

கரையேறி வந்தபின் விநாயகரை உற்றுப் பார்த்து… ஆதிமூலம் என்ற (நம்) உயிர் பல பல உணர்வின் தன்மைகளை இந்த உயிர் ஈசனாக இருந்து மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? என்ற உண்மையை அறிவதற்காக இந்தக் கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா…” என்று உயிரை வணங்கச் செய்கின்றனர்.

பின்… அன்று வாழ்ந்த அகஸ்தியன் இந்த உலக உண்மைகளை எல்லாம் உணர்ந்து… தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி… கணவனும் மனைவியுமாக இரண்டறக் கலந்து விண்ணுலகை உணர்வினை ஒளியாக மாற்றி…
1.இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதை நினைவாக்கிப் பதிவாக்கிக் கொள்ள
2.நம் நினைவினை விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார்.

இந்த உணர்வின் தன்மையை நமக்குள் பதிவாக்கி அந்த அகஸ்தியன் நஞ்சினை எப்படி வென்றானோ அதே வழியில் நாமும் நஞ்சை வெல்லும் சக்திக்காக விநாயகரை இங்கே வைத்தான். ஆகவே
1.காலையில் எழுந்தவுடனே அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா… என்று
3.அவனிடம் வேண்டி அந்தச் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ பகைமை உணர்வை நாம் கண்டிருப்போம். அதன் வழி தொடர்ந்து நம் உறுப்புகளில் அந்த அணுக்கள் சேர்ந்திருக்கும்.

ஏனென்றால் நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து தான் உணர்வின் தன்மையை மற்ற அணுக்கள் பகிர்ந்து கொள்கின்றது.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த விஷத்தின் தன்மை இங்கே வராதபடி நமக்குள் நட்பின் தன்மை வர வேண்டும் என்பதற்குத்தான் இரத்தங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நேரடியாகச் சேர்க்கச் சொல்கிறோம்.

ஆக இராமன் காட்டிற்குள் செல்லும்போது எப்படிக் குகனை நண்பனாக்கிக் கொண்டானோ அது போல்
1.அருள் மகரிஷிகளின் உணர்வை உடலுக்குள் சேர்க்கப்படும் போது
2.நமக்குள் பகைமை உணர்வுகளை ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு
3.உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு வருகின்றது.

இத்தகைய சுவையின் உணர்வுகளை ஒளியின் தன்மையை மனிதன் தனக்குள் எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றது நம் சாஸ்திரம்.

இராமாயணத்தில் உள்ள மூலங்களை இது போல் தெரிந்து கொண்டால் மனிதன் தன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்…? என்ற உண்மையை உணர முடியும்.

இவ்வாறு மனிதர்களான நாம் இனி எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைப்படுத்திக் காட்டினான் அருள் ஞானி.

ஓடம் தேரில் செல்லுமா…! அல்லது தேர் ஓடத்தில் செல்லுமா…!!

 

இராமன் குகன் மீது நட்பு கொண்டான்… குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்…
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக…
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது

ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.

ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக… மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.

ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.

அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!

உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்

புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,

மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர…
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்

ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)

இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!

ஞானவனம்… தபோவனம்…!

நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்…” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.

ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.

இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து… தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.

அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி… உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்… நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்…!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.

நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.

உதாரணமாக… ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.

அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ… நாய் கடித்து விடுமே…! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.

அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்… இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு… மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.

அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா…..” என்று நீ சொல்லப்பா… நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.

“அம்மா…” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா… என்று சொன்னாலே போதுமானது… பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.

ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே…. எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்… சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.

காரணம்… அது அவருடைய குறை அல்ல…!

அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட… இது போன்று சந்தித்த பின்… எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே…” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.

காரணம்… எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.

தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

 

நாம் பிறருடைய தீமைகளைப் பார்க்கும்போது நம் நல்ல உணர்வுகளை அந்த விஷத் தன்மையான உணர்வுகள் மறைத்து விடுகின்றது. (ஒரு திரை போல்)

அப்படி மறைத்ததைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் கவர்ந்து
2.அவ்வப்போது நம்மை மறைக்கும் அந்தச் சிறு சிறு திரைகளை அகற்றிட வேண்டும்.
3.அன்றன்று அறிவின் தன்மை கொண்டு நாம் தெளிவாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

எதன் துணை கொண்டு…?

அதற்குத்தான் இப்போது இடைமறித்து இடைமறித்து உங்களுக்குள் ஞானிகளைப் பற்றித் திரும்பத் திரும்ப உபதேசிகின்றேன். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்றால் உங்களுடைய உணர்வின் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுடன் இணைக்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் ஒவ்வொரு அறிவிலும் (உணர்விலும்) இணைத்த பின்
2.தீமைகளைக் கவராது “அந்தந்த அறிவு” அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்.

அத்தகைய நிலைகளை உருவாக்கினால்தான்… இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளும் காற்று மண்டலத்தில் இருக்கும் நச்சுத் தன்மைகளும்… பிற மனிதன் செய்யும் தவறான உணர்வும்… விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளும் நமக்குள் புகாது… நம்மை இயக்காது… தடுக்க முடியும்.

பகுத்தறிவு கொண்டு படித்திடும் விஞ்ஞான அறிவை எழுத்து வடிவில் உற்றுப் பார்த்து அதன் உணர்வை நாம் கவர்ந்து நமக்குள் பதிவு செய்து கொண்டாலும்… இங்கே பூமியிலே பரவிக் கொண்டிருக்கும் உணர்வுகளை நாம் கவர்ந்தாலும்… அது எல்லாம் நம் ஆன்மாவில் இணைந்து கொண்டே உள்ளது.

அதாவது… எப்படி இந்தப் பிரபஞ்சத்தில் தீமைகள் படர்ந்துள்ளதோ அது நம் பூமியான இந்த பரமாத்மாவில் (காற்றிலே) வளர்ந்துள்ளதோ இதைப் போல நம் ஆன்மாவிலும் இது உண்டு.

அதே சமயத்தில் நம் உடலுக்குள் எண்ணிலடங்காத அணுக்கள் ஜீவான்மாக்களாக வாழுகின்றது. ஆகவே இந்தப் பூமியில் எந்த அளவுக்குத் தீமைகள் பரவி உள்ளதோ அந்தத் தீமையின் உணர்வுகளை நம் எண்ணத்தால் (நம் சந்தர்ப்பம்) பதிவாக்கி இருந்தால் அந்தத் தீமையின் அணுக்கள் உடலுக்குள்ளும் விளையும். அந்த அணுக்கள் தீமைகளைத் தான் விளைவித்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் எலும்புக்குள் ஊனாக இருக்கின்றது. அந்த எலும்புக்குள் ஊனாக இருக்கப்படும் பொழுது அதனின் வளர்ச்சி
1.ஒரு மனிதனைக் கண் கொண்டு பார்க்கும்போது அவர் தவறு செய்கின்றார் என்று பதிவாக்கி விட்டால்
2.மீண்டும் அதே நினைவு கொண்டு கண்ணுக்கு வரப்படும்போது
3.எந்த மனித உடலிலிருந்து தவறு செய்யும் உணர்வுகள் அலைகள் வந்ததோ
4.அந்த உருவத்தை நமக்குள் நுகரச் செய்து அதே கோபத்தின் உணர்வுகளையோ அல்லது
5.அவனைக் கண்டு அஞ்சியிருந்தால் அந்த அச்சத்தையோ நமக்குள் செயலாக்குகின்றது.
நமக்குள் பதிவு செய்த இந்த வித்து… “ஊழ்வினை” என்ற நிலையில் வினைக்கு நாயகனாக அந்த உணர்வின் இயக்கமாக்கி நம்மை அதன் வழிகளில் வளர்த்துக் கொண்டுள்ளது.

1.அதைப் போன்ற தீமைகளை (வினைகளை) மாற்றுவதற்குத்தான் திரும்ப திரும்பச் சொல்லி
2.உங்கள் உணர்வின் ஈர்ப்புகளை ஞானிகளின் பால் கொண்டு வரச் செய்கிறோம்.

எந்த அளவுக்குக் கூர்ந்து பதிவாக்கி அந்த அருள் சக்திகளை எண்ணி உங்களுக்குள் எடுக்கின்றீர்களோ முந்தைய நிலையில் உங்களுக்குள் சேர்ந்த தீய விளைவுகளையும் இதன் மூலம் மாற்றி அமைக்க முடியும்.

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

 

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில்
1.தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
2.ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப் போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களை படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி…” நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக… பூச்சியாக… பாம்பாக… தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… விஷத் தன்மைகள் உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் தான் விஷத் தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்ள முடியும். அதற்குத் தான் தொடர்ந்து இதைச் சொல்கிறோம்.

அன்று நாம் அரசனுக்கு அடிமை… இன்று இயந்திரங்களுக்கு (ARTIFICIAL INTELLIGENCE) நாம் அடிமை

 

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயர் ஞானத்தால் கிடைக்கும் “விமோசனம்”

 

1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி… பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.

மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”

ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது…
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”

தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.

“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இருவிதமான செயல்கள் உண்டு (இடது வலது).

சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.

அதே போல்
1.தாய்மையின் மேன்மையை… சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.

ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.

பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.

வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.

அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் – ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

மண்டலக் கணக்கு – 48 நாள்கள்

 

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.

தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”

 

விஞ்ஞான அறிவு… எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வினை லேசர் என்ற இயக்கத்தைக் கொண்டு அதைக் கவர்ந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரில் பதிவாக்கி அதனின் உணர்வின் ஓசைகளைக் கவர்ந்து கொள்கின்றார்கள்.

அதைப் பதிவாக்கி இராக்கெட்டை உந்து விசையால் செலுத்தப்படும் பொழுது வான் வீதியிலே பறக்கின்றது. எதன் உணர்வின் தன்மையோ அந்த ஒலிக்கொப்ப அந்தக் கோள் இருக்கும் இடத்திற்கு இழுத்து அழைத்துச் செல்கின்றது. அதாவது இந்த இராகெட்டை அங்கே இழுத்துச் செல்லும் தன்மை வருகிறது.

அந்தக் கோளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தரையில் இருந்தே மனிதன் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றான். அந்தக் கோளிலே என்னென்ன நடக்கின்றது என்று அறியும் ஆற்றல் வருகிறது.

அன்றைய மெய்ஞான அறிவுக்கும் இன்றைய விஞ்ஞான அறிவிற்கும் உங்களுக்கு தொடர்பு கொடுத்துச் சொல்கின்றோம். சாமிக்கு என்ன தெரியும்…? என்று விட்டு விடாதீர்கள்…!

இதை எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் கொடுத்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை உங்கள் சுவாசத்திற்குள் மறுக்கும் சக்தியாக அது வர வேண்டும்… அத்தகைய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

இல்லை என்றால் அந்த விஷத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு மனிதனுடைய ரூபத்தை மாற்றும் சக்தியாக வந்துவிடும். குருநாதர் அதைத்தான் சொன்னார்.

அவர் காட்டிய வழியில் உயர்ந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்கின்றேன். பதிவானதன் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுதல் வேண்டும்

பத்தாவது நிலை பெற்றது… வசிஷ்டர்…! அதாவது கவர்ந்து கொண்ட உணர்வுகள். நமக்குள் அது பதிவாக்கப்படும் பொழுது பிரம்ம குருவாக வருகிறது.

அதன் வழி ஞானத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது பிரம்மம் ஆகி அதனுடன் இணைந்து அருந்ததி… எதன் சக்தியின் ரூபம் பிரம்மம் ஆனதோ… அதன் மணத்தின் உணர்ச்சியாக அது இயக்கும்.

பெண்கள் இதையெல்லாம் அவசியம் கூர்ந்து… கவனித்து… அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்குள் ரெக்கார்ட் ஆகி விடுகின்றது பெண்களுக்கு அணுத் தன்மையாக மாற்றும் சக்தி அதிகம் உண்டு.

தன் கணவருக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று அந்த உணர்வுகள் மோதும் பொழுது என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்; சிந்தித்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்; அவர் பார்வையில் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று பெண்கள் உங்களுக்குள் இதை உருவாக்கி கணவருக்குப் பாய்ச்சினால் உங்கள் எண்ணம் நிச்சயம் அவரைக் காக்கும்.

ஏனென்றால் செல்வத்தைத் தேட என்று அவர் வெளியிலே தொழிலுக்குச் செல்லும் பொழுது எத்தனையோ எதிர்ப்புகள் வரும்… மாறுபட்ட உணர்வுகளைச் சந்திக்க நேரும்.

என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினால் அவரை தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்.

என் கணவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.

அதே சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்தால் “என் கணவர் மாதிரி இல்லை…” என்று மெச்சுவோம். அதிலே சிறிது குறைவானால் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிடுகின்றார் என்று வேதனை வரும்.

இரண்டு தடவை இப்படி ஆனால் போதும். அடுத்து… இப்படிச் செய்து கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது…? எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு என்ன செய்வது…? என்று சந்தேகங்கள் வந்துவிடும்.

காரணம்… உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் எழும்ப… உணர்வின் செயல்களாக அது வருகின்றது. எதைப் பதிவு செய்கின்றோமோ உயிர் கவர்கின்றது… உயிரிலே படுகின்றது… இரத்தத்தில் கலக்கின்றது தீமையின் உணர்வாக உடலுக்குள் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அவ்வாறு ஆகாது தடுப்பதற்காக வேண்டித் தான் வாழ்க்கையில் எவ்வாறு தெரிந்து வாழ வேண்டும் என்று எவ்வளவவோ சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள். நல்லதை எண்ணி எடுத்து அதன்வழி செயல்படுத்தும் போது அதுவே தெய்வமாக வந்து இயக்குகிறது.

ஆனால் இந்த வாழ்க்கையில் ஆசையின் பால் செல்லப்படும் பொழுது எத்தனையோ துயர்கள் வந்து சேருகின்றது… தன்னைக் காக்கும் சக்தியையும் இழந்து விடுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இந்த உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு குருநாதர் என்னை 20 வருடம் காடு மேடெல்லாம் அலைய வைத்து “எத்தனை துன்புறுத்தினார்…?” என்று எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சந்தர்ப்பம் நுகர்ந்த உணர்வால் கொண்டு எப்படி எல்லாம் துன்பப்படுகின்றனர்… வேதனைப்படுகின்றனர்… வேதனை வந்த பின் எத்தனை நோய்கள் அவருக்கு வருகின்றது…? அதிலிருந்து மீட்டிட என்ன செய்ய வேண்டும்…? என்று தான் காட்டினார்.

அவர் எனக்குப் போதித்ததைத் தான் உங்களுக்கும் வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து உங்களை மீட்டிடும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக கோழி விஷமான உணவுகளை (ஜெந்துக்களை) உணவாக உட்கொண்டாலும் அந்த விஷத்தின் தன்மையை ஒடுக்கி தன் தசையாக மாற்றித் தன்னிலை அடைகின்றது. அதே போல் மயில் போன்ற பெரும்பகுதி பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தி கொண்டவைகள்.

இதைப் போலத்தான் மனித வாழ்க்கையில் வந்த கடும் தீமையினுடைய நிலைகளையும் அதனுடைய செயலாக்கங்களை ஒடுக்கித் தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.

அப்படி செயல்பட்டவர்கள்… தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர்.

1,துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட பேரருள் உணர்வுகளை…
2.அதன் பின் வந்த மனிதர்கள் கவர்ந்து தன் உடலில் அது ஒவ்வொன்றிலும் இணைக்கப்படும்போது
3.மீண்டும் மனித உடல் பெறும் நிலைகளை மாற்றி அமைத்தனர்.

அவ்வாறு உயிருடன் ஒன்றி ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலம் என்பது. துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே அவர்கள் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அதாவது உணர்வின் தன்மை ஏழாவது நிலை அடைவதுதான் சப்தரிஷி என்பது. மனிதன் தன் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளைத் தனக்குள் செயலாக்காது தடுத்து ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் அடக்கி ஒளியின் உணர்வாகத் தன் உடலிலே வளர்த்துக் கொண்டால்
1.இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
2.எந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
3.அதன் உணர்வுகள் நமக்குள் வலுப்பெறப்பட்டு
4.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாகி வளர்ந்து கொண்டுள்ளோரோ
5.அந்த ஈர்ப்பு வட்டத்திற்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை அது ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நமக்குப் பிறவி இல்லை.

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

 

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்… பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாதாரண எண்ணத்துடன் ஆராய்ச்சி செய்தால் மெய் உணர்வைக் காண முடியாது

 

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

அருள் மகரிஷிகளின் அருளால் நாம் நம்முடைய மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

அவர்கள் அந்த ஒளி நிலை பெற்றால் அதனுடைய துணை கொண்டு நாம் இந்தப் புவியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட முடியும்.

உடலுக்குள் வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு நம் உணர்வின் தன்மை என்றும் நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம். உயிரை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதையே உருவாக்குகின்றது.

உதாரணமாக
1.ஒருவருக்கு நாம் கடுமையான தீங்கு செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்
2.அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது.
3.அதனின் செயலாகவே அந்தத் தீமை செய்யும்படி நம்மைச் செய்கின்றது.

அதே சமயத்தில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம். அந்த நல் உணர்வின் தன்மையை உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

ஆனாலும்…
1.நாம் தீமையின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணினால்
2.அந்தத் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
3.இந்த உடல் அழுகுகின்றது… வேதனைப்படுகின்றது….!

எவரை வேதனைப்படச் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ அந்த வேதனைப்படும் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அதே வேதனையை உருவாக்குகின்றது.

கீதையிலே சொன்னபடி “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” என்று அதனின் வளர்ச்சியாகத் தான் நாம் அடைகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
2.தீமையை அகற்றிய அருள் ஞானிகளின் உணர்வை நுகர்ந்தால்
3.தீமையை அகற்றும் உணர்வுகள் நமக்குள் பெருகி
4.தீமையற்ற உணர்வாக நமக்குள் ஆகி… “நாம் அதுவாகின்றோம்…”

ஆகவே முதலில் மூதாதையருடைய உயிரான்மாக்களை விண் செலுத்துங்கள். ஒவ்வொரு நொடியிலும் இதைப் போலச் செய்யுங்கள்… மறவாதீர்கள்…!

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

 

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்

அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.

நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”

எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.

ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நம்மைத் திட்டியவரை நினைத்தால் நாம் கணக்குகள் பார்த்துக் கொண்டிருந்தால் அது தப்பாகும். வேறு எந்த வேலை செய்தாலும் நம்மால் அதைச் சீராகச் செய்ய முடியாது.

அந்தத் திட்டியவனை எண்ணி… நமக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று அவனை எண்ணும் போது அவனுக்குள்ளும் இது சென்று அவன் காரியங்களுக்கும் இடைஞ்சலாகும்.

அதே போல் ஒரு வேதனைப்படுவோரை நாம் நுகர்ந்தால் அது ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகின்றது. நமக்கும் அதே வேதனை வருகிறது.

ஆனால் இது போன்ற தீய வினைகளை எல்லாம் வேக வைத்து விட்டால் முளைக்காது.

பண்புடன் பரிவுடன் தான் அந்த வேதனைப்படுவோரிடம் கேட்டறிகின்றோம். அவனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்கின்றோம்.

ஆனால் உதவி செய்தாலும்… ஈஸ்வரா… என்று உயிரை வேண்டி நம் நினைவுகள் அனைத்தும் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இவ்வாறு புருவ மத்தியில் தடைப்படுத்திய பின்
2.அந்த வேதனைப்பட்ட உணர்வு நமக்குள் புகாது தடைப்படுகின்றது.

அங்கே நிறுத்திய பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது…
1.அந்த வேதனை உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி
2.துருவ நட்சத்த்திரத்தின் உணர்வு வலு பெற்ற பின் தடுக்கப்படுகின்றது.
3.அப்பொழுது நம் ஆன்மா தூய்மை அடைகின்றது.

பின்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் வேதனைப்படுவோர் உடல் முழுவதும் படர வேண்டும். அந்த வேதனையிலிருந்து அவர் மீண்டு சிந்தித்துச் செயல்படும் திறன் பெற்று பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வை நாம் எண்ணி அதை அவர் மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

அப்பொழுது அவர் உடலில் உள்ள வேதனைகளை மாற்றிட இந்த உணர்வை எடுத்துக் கொண்டால் பரவாயில்லை.

மகரிஷிகளின் அருள் சக்தியால் “நீ உடல் நலம் பெறுவாய்…!” என்று நாம் சொல்லும் உணர்வுகள்
1.அவர் செவிகளில் மோதி அந்த உணர்வுகள் அங்கே பாயும் போது சிறிதளவாவது பாயும்.
2.அதே சமயத்தில் அவரின் வேதனையான உணர்வுகளை நமக்குள் வராதபடி தடுத்து விடுகின்றோம்.

துருவ நட்சத்திரம் என்பதை “சுக்ரீவன்” என்று காரணப் பெயர் வைத்துள்ளனர்.

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவி செய்யும் தன்மை கொண்டவன்…! ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்த பின் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற ஏங்கினால் அந்தத் தீயது உடலுக்குள் போகாதபடி தடுக்கின்றது.

அசுர உணர்வுகள் வந்தாலும்… அகஸ்தியனைப் போன்று அதை அடக்கக்கூடிய “ஜீரணிக்கும் வல்லமை” பெற வேண்டும்

 

அகஸ்தியன் காட்டிற்குள் செல்கின்றான்… அங்கே வாதாபி என்று அரக்க சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் ரூபத்தை மாற்றக் கூடியவர்கள். (இன்றும் இது போன்ற ரூபத்தை மாற்றக்கூடிய புலையர்கள் காட்டுக்குள் இருக்கின்றார்கள்). வாதாபி சகோதரர்கள் அகஸ்தியனை விருந்தாளியாக வரவேற்கின்றார்கள்.

விருந்தாளியாக வருபவர்களுக்கு மாமிச உணவு கொடுப்பது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

இல்லைங்க… எங்கள் ஊருக்கு யார் வந்தாலும் நாங்கள் இதைக் கொடுக்கத் தான் செய்வோம்… அது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கின்றார்கள்.

நடைமுறையில் பார்த்தோம் என்றால் எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வந்திருக்கிறீர்கள் சிறிதளவு காபி சாப்பிடுங்கள் என்பார்கள். ஆனால் சர்க்கரைச் சத்தாக இருக்கும்.

எனக்கு எதிரியாகும்… வேண்டாம்…! என்று சொன்னாலும்… பாசத்தால் நான் சாப்பிட்டேன் என்றால் என்ன ஆகும்…? சர்க்கரைச் சத்து அதிகமாகும்.

அல்லது முதலில் சாப்பிட்டு வந்திருப்பேன்… இங்கே மீண்டும் குடிக்க வற்புறுத்தும் பொழுது சாப்பிட்டால் அஜீரணம் ஆகிறது அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? தள்ளாட்டமாகும்.

“வேண்டாம்…” என்று சொன்னாலும் கூடக் கொஞ்சமாவது அதைச் சாப்பிட வேண்டும் என்று அன்பால் கட்டளை இடுவார்கள். சாப்பிடவில்லை என்றால் மனவருத்தம் ஆகிறது.

“வருத்தப்படுகிறார்களே…” என்று எண்ணி நான் அதை உட்கொண்டால் என் உடல் தான் நலிவடைகின்றது.

அதே போல் கல்யாணத்திற்கு மற்ற விசேஷத்திற்கோ பத்திரிக்கை கொடுக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு முறை தான் வருகின்றீர்கள் நீங்கள் கண்டிப்பாகக் காபி சாப்பிட வேண்டும் அல்லது கொஞ்சம் பலகாரத்தையாவது சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களா இல்லையா…!

நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் இல்லை. போற்றுவதற்கு அந்த நிலையைச் செய்கிறோம்.

அதே மாதிரித் தான் அக்காலத்தில் வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் அகஸ்தியனைக் கட்டாயப்படுத்தி “மாமிசம் சாப்பிட வேண்டும்” என்று சொல்கின்றார்கள்.

எங்கள் விருந்தாளிக்கு நாங்கள் செய்து தான் ஆவோம். நீங்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.

அகஸ்தியர் சரி என்று சொல்கிறார்… ஏனென்றால் அப்பொழுது அவர் புரிந்து கொள்கின்றார்.

வாதாபி ஆடாக மாறுகின்றான்… மற்றவன் அறுத்துச் சமைக்கின்றான் அகஸ்தியனுக்குக் கொடுக்கின்றான்.

சாப்பிட்டு முடிந்தபின் ஏ…வ்வ்வ்…! என்று அகஸ்தியன் ஏப்பம் விடுகின்றான்… ஏனென்றால் அவர் புரிந்து கொள்கின்றார் கணங்களுக்கு அதிபதியாகித் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் தான் அந்த அகஸ்தியன்.

அதனால் ஏ…வ்… என்று ஏப்பமிட்டபின் “வாடா வாதாபி…!” என்று தன் சகோதரனை அழைக்கின்றான்.

அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டானப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

ஆஹா அப்படியா…! உன்னை நான் இப்போது கொன்று சாப்பிடப் போகின்றேன் பார்… என்று அடுத்தவன் சொல்கின்றான். அகஸ்தியன் தன் பார்வையிலேயே அவனைச் சுட்டு பொசுக்கி விடுகின்றான்.

இராமாயணத்தில் படித்துப் பாருங்கள்… இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் புராணங்களில் இதை எப்படி மாற்றுகின்றார்கள் என்றால் “அகஸ்தியன் கணபதியை வணங்கிச் சென்றதால்தான்…” அரக்கனைக் கொன்றான். ஆகையினால் அந்தக் கணபதியை “வாதாபி கணபதி” என்று சொல்கின்றனர்.

அரக்க உணர்வு கொண்டு மற்றவர்களை வேதனைப்படுத்திய அந்த அரக்கனைக் கொன்றவன் அவன்…! ஆகையினால் “அந்தக் கணபதிக்கு” நீங்கள் அபிஷேகம் அர்ச்சனை செய்தால் உங்கள் பாவம் தோஷம் எல்லாம் போகும் என்று காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைதான்.

யாரும் தப்பாக நினைக்காதீர்கள்…!

அகஸ்தியன் தீமைகளை வெல்லும் வலிமை பெற்றான்… அரக்க உணர்வுகளை அடக்கினான். திருமணமான பின்… தான் கண்ட ஆகண்ட அண்ட்த்தின் உண்மைகளை எல்லாம் மனைவிக்குப் பாய்ச்சினான் அகஸ்தியன்.

இருவருமே ஒருவரை ஒருவர் உயர்த்திடும் நிலையாக… மனைவி உயர வேண்டும் என்று கனவனும் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் அருள் உணர்வென்ற கருவை உருவாக்கச் செய்தனர்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு மனமும் ஒன்றாகி… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிப் பேரருள் உணர்வை உருவாக்கி… உயிரைப் போன்றே உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கும் தனமை பெற்றனர்.

அவருடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது.

அந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் தீமைகளைச் சுட்டு பொசுக்குமா இல்லையா… இந்த வழியை யாரும் காட்டவே இல்லையே…!

ஆனால் இப்பொழுது நான் (ஞானகுரு) இந்த விளக்கத்தைச் சொன்னால் “சாமி ஏதோ புதிதாகச் சொல்கின்றார்… கதை விடுகிறார்…” என்று தான் நினைக்கின்றார்கள்.

இயற்கையின் உண்மை நிலைகளை குரு எனக்குக் காட்டினார் அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடிகிறது.

சித்தனாக… மகரிஷியாக… ஆகும் செழுமை

 

பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?

தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.

1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.

பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.

அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.

அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டு கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.

மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது சத்திய சோதனையின் துவக்கம் என்று நீ எண்ணுவாய். அது சோதனை அல்லவப்பா…!

தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை எந்தெந்த உயிராத்மாக்கள் தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.

உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.

காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக்காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.

ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!

கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.

நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்துவிடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.

ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.

1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”

மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!

போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டியதற்கு குருநாதர் கொடுத்த (சூட்சம) விளக்கங்கள்

உயிரணுக்கள் ஆரம்பத்தில் தேடியது எந்த நிலையோ இதைப் போன்று பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்த நாம் வேதனை வெறுப்பு சங்கடம் சலிப்பு என்ற உணர்வினை நம் உடலில் சந்தர்ப்பவசத்தால் சேர்த்துக் கொண்டே வருகிறோம்.

அதை எல்லாம் நுகரப்படும் போது பல கலக்கங்களும் சிந்தனையற்ற நிலைகளும் உருவாகி இந்த உடலைக் காக்கும் செயலையே நாம் இழந்து இருக்கின்றோம்.

இன்று இந்த கோயிலுக்குச் சென்றால் நல்லதாகுமா…? அந்தக் கோவிலுக்குச் சென்றால் நல்லதாகுமா…? இந்த ஜோசியம் பார்த்தால் நல்லதாகுமா…? ஜாதகத்தை பார்த்தால் நல்லது நடக்குமா…? அல்லது மந்திரத்தைச் சொன்னால் நன்றாக இருக்குமா…? என்று இதையெல்லாம் எடுத்து அதைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோமே தவிர “நமக்குள் உயிர் எப்படி இயங்குகின்றது…? என்று அறியாது இருக்கின்றோம்.

விஞ்ஞானம் சர்வத்தையும் மெய்ப்பிக்கும் இன்றைய காலத்தில் நம்மை அறியாமலே “பித்தனாக…” இருக்கின்றோம்.

இதைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிக் கொண்டிருப்பார்.

என்ன சாமி…! சும்மா இருக்கும் போஸ்டில் கல்லைக் கொண்டு எறிகின்றீர்களே…! என்று நான் (ஞானகுரு) கேட்டேன்.

நீ தான்டா என்ன…? என்று கேட்டாய் மற்றவர்கள் கேட்கவில்லை. ஆனால் “என்னைப் பைத்தியக்காரன்…” என்று நினைக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு மனிதனும் எதன் மீது ஆசைப்பட்டானோ அந்தப் பித்து பிடித்து… அதைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றான்.

தன் அருகிலே நல்ல பொருள் இருந்தாலும் கூட அதை எடுக்கும் வழி இல்லை. தன் உடலில் நல்லது இருந்தாலும் அதை வளர்க்கும் வழி இல்லை. இப்படிப் பித்தனாக அலைந்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் போஸ்டில் தட்டும் ஓசை வெளி வருகின்றது. இந்த ஓசையைக் கேட்டு “ஏன்…” என்று நீ கேட்டாய். அதற்கு நான் விளக்கம் கொடுக்கின்றேன்.

நான் தட்டுவதைப் பார்த்து ஒருவன் “இவன் பைத்தியக்காரன்… தட்டிக் கொண்டிருக்கின்றான்…” என்று எண்ணுகின்றான். நான் தட்டும் இந்த ஓசையை அவன் கேட்டு… அவன் உணர்வுகள் பைத்தியக்காரனாக எண்ண வைக்கிறது.

என்னைப் “பைத்தியக்காரன்” என்று அவன் அவ்வாறு எண்ணும் பொழுது அவன் அதைச் சுவாசிக்கின்றான்… அவன் உயிரிலே படுகின்றது… அதை உணர்த்துகின்றது.

அவன் எதை (பைத்தியம் என்று) எண்ணினானோ அந்த உணர்வின் தன்மை அவன் உடலில் ஓடுகின்றது. அப்போது “அவன் பித்துப் பிடித்திருக்கின்றான்…” என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்த பித்தின் நிலைகள் அவனுக்குள் விளையத் தான் செய்கின்றது.

ஏனென்றால் நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்த உணர்வு உயிரில் பட்டபின் அரங்கநாதன்… அந்த உணர்ச்சிகள் நம்மை அப்படி ஆளுகின்றது. பைத்த்தியக்காரன் பைத்தியக்காரன் என்று அதையே எண்ணிச் சுவாசிக்கும் போது அந்த உணர்வு நம்மை ஆளத் தொடங்குகிறது… நாம் அதுவாகின்றோம். (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)

இதை ஞானிகள்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அதற்குண்டான காரணப் பெயர்களை வைத்து அதை அறியச் செய்கின்றார்கள்.

என் செயலைப் பார்த்தாய்… நீ சுவாசித்தாய்… நுகர்ந்து என் அருகில் வந்தாய்…! என்ன…? என்று கேட்டாய். நான் உனக்கு விளக்கம் சொல்கின்றேன். நீ புரிந்து கொண்டாய். அப்போது தீமையிலிருந்து மீளும் உபாயத்திற்கு “உன் அறிவு இங்கே வந்தது…”

ஆனால் மற்றவனுடைய அறிவு… நான் என்ன செய்கிறேன்…? என்று தெரியாதபடி அவன் பித்தாக இருக்கின்றான்.

ஆதே சமயத்தில் “அவன் என்ன தப்பு செய்தான்…?” என்ற எண்ணத்தில் நான் வந்தால் “நான் பித்தனாகத்தான் வளர முடியும்…” அவன் பித்தன் என்று நான் எண்ணினால் நான் பித்தனாகத் தான் ஆக வேண்டும்.

நான் தட்டி எழுப்பும் இந்த ஓசையின் எதிரொலிகளைத் திரும்பிப் பார்க்கப்படும் பொழுது… ஏன்…? என்று கேட்கும் பொழுது… இந்த நிலையை நீ செய்தால் உனக்கு நல்லதாக இருக்கும் என்று நான் சொன்னால்… “அந்த உணர்வை அவன் நுகர்ந்தால் அவனுக்குள் நன்மை பயக்கும்…”

அவன் என்னைப் பித்தனாக எண்ணுகின்றான் அவன் பித்தன் என்று அவனே உணர முடியவில்லை.

குருநாதர் போஸ்டிலே கல்லைக் கொண்டு தட்டி அதனால் வரும் ஓசைக்கு இத்தனை வியாக்கியானங்கள் எனக்குக் கொடுக்கின்றனர். மனித இயல்பில் “உயிரின் உணர்வுகள் எப்படி வருகின்றது…?” என்று…!

“சூட்சம உலகிற்கு எல்லோரையும் ஞானியாக அழைத்துச் செல்லவே” ரிஷிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

இருளைப் போக்கும் அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது”

ஒரு நோயாளியையோ ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தாலோ உங்களால் தாங்க முடியவில்லை. நான் (ஞானகுரு) அத்தனை பேர் கஷ்டத்தையும் கேட்க வேண்டி இருக்கின்றது… எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காட்டிற்குச் சென்று தவமிருந்தோ… அல்லது மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தோ ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று செய்வார்கள்.
மந்திரங்களை ஜெபிக்கலாம்… அந்த உணர்வுகள் உடலில் பெருகும்… உடலை விட்டு ஆன்மா போகும். எங்கே…?
1.இதே மந்திரத்தை மீண்டும் எவன் ஜெபிக்கின்றானோ அங்கே அந்த உடலுக்குள் தான் செல்லும்.
2.சாகாக்கலையாக அந்த உடலில் விளையும். விளைந்த பின் அவன் பெரிய மேதை ஆகி விடுவான் ரிஷியாகக் கூட ஆகிவிடுவார்
3.எல்லாம் தெரிந்தவராகின்றார்… அவர் பிழைப்புக்குப் போக ஆரம்பிப்பார்.

என்னிடம் வந்து கஷ்டங்களை நீங்கள் சொல்கின்ற மாதிரி அய்யா… சாமி… கஷ்டமாக இருக்கின்றது என்று எல்லோரும் அவரிடம் சொல்வார்கள். அவர் அதற்குப் பக்குவம் சொல்லி… பதிலுக்கு “நான் செய்தேன்…!” என்ற புகழுக்கு ஏங்குவார்.

விஷத்தைத் தான் சேர்ப்பார்… விஷத்தின் சேமிப்புகள் அதிகமாகும் அவர் ஆசை அந்த உடலில் பெருகும்… கடைசியில் அதனால் அவர் மடிவார்.

ஆன்மா வெளி வரும். வந்த பின் சாகாக்கலையாக மீண்டும் எந்த விஷத்தின் அளவுகோல் அந்த உடலில் அதிகமானதோ அதற்குத் தக்க உயிரினங்களாகத்தான் உயிர் பிறக்கச் செய்யும் உயிர்.

இதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

இப்படி
1.அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலுக்குப் புகழ் தேடி வாழ்கிறோம் என்றால்
2.மனிதனுடைய ஈர்ப்புக்குள் தான் மீண்டும் வர முடியும்.

ஏன்…?

புகழுக்காக ஏங்கி அதனால் பிறர் போற்றும் நிலை வரும் போது அடுத்தவர்கள் துயரங்களை எல்லாம் கேட்டால் என்ன ஆகும்…?

வீட்டிலே பெண்கள் பிள்ளைகளை எல்லாம் விட்டு விட்டுச் “சாமியாராக” வெளியே வந்து விடுவார்கள். வெளியில் மற்ற இடத்திலே நல்ல வரவேற்புகள் இருக்கும்.

ஆனால் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகல கஷ்டங்களையும் இவரிடம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

1.நுகர்ந்த உணர்வுகள் இவர் உயிரிலே படும்.. பட்டதும் அந்த உணர்ச்சிகள் வருகின்றது
2.வேண்டாம் என்று தடுத்தால் அங்கே கோபம் வரும்.

ஏனென்றால் “சும்மா தொல்லை கொடுக்கின்றார்கள்…!” என்று அதைக் கேட்டவுடனே “சொல்ல வேண்டாம்…” என்று இவர் சொல்வார்… மனதிற்குள் இங்கே போர் ஆகி இவருக்குக் கோபம் வரும்.

ஆனாலும் இவர் இல்லை என்று சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா என்றால் விடமாட்டார்கள்.

இங்கே எத்தனை பேர் என்னிடம் (ஞானகுரு) வந்து கஷ்டம்… கஷ்டம்… நஷ்டம்… என்னால் முடியவில்லை…! என்று அதைத்தான் சொல்கின்றார்கள்
1.எனக்கு அந்த அருள் பெற வேண்டும்
2.இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது…”

நானும் பலமுறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது…!

அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் நான் என் செவிகளில் கேட்டு அந்த உணர்வினை நான் நுகர வேண்டும்… அவர்கள் கஷ்டத்தை என் உடலில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சக்தியை குருநாதர் வழியில் பெற்றிருந்தாலும் கூட
1.கஷ்டத்தைச் சொல்பவர் நிலைக்குத் தான் நான் செல்ல வேண்டி இருக்கின்றது
2.நான் சொல்வதை அவர்கள் பின்பற்றும் நிலை இல்லை என் பையன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.

என் பையன் ஞானியாக வேண்டும்; சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் அந்த அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்… என்னுடைய நிலத்தில் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் நான் தொழில் செய்யும் இடங்களிலே என்னுடைய வாடிக்கையாளர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… என்னிடம் வாங்கிச் சென்ற பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும் சக்தி வர வேண்டும் என்று எண்ணி கேட்கின்றோமா…!
1.யாராவது ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம்
2.யாரும் நினைப்பதில்லை…!

சோகமா…! அல்லது அது தான் சுகமா…?

இமைகளின் துரித கதி இயக்கத்தின் ஊடே (தூசி) உள் நுழையும் செயலே சந்தர்ப்பவசம்.

ஞானத்தின் பாங்கு செயல்பட விழிப்பு கொள்ளும் மனம்… வாழ்க்கையின் நடைமுறை அனுபவ சந்தர்ப்பங்கள்… படர்தல் எனும் எண்ணத்தின் குணம் நம்முள் இயங்கி அனுபவ நிகழ்வுகளை உணர்த்துகின்றன.

1.இமை காத்திடும் செயலின் கவனம்
2.அந்த இயற்கை உணர்வின் உந்துதல்… நொடிக்கும் குறைவான காலமே.

கண்ணில் படிந்த தூசியின் உறுத்துதல் “உடனடியாக உணர்த்துவதைப் போன்று…”
1.மெய் ஞானத்தின் ஆன்ம வலு காட்டிடும் செயலில் நாம் ஊட்டிக் கொள்ளும் குணங்களின் செயலில்
2.அக்குணங்களின் வலுவைக் கூட்டும் ஈர்ப்பின் சந்தர்ப்பவசங்கள்…
3.வாழ்வின் நடைமுறை அனுபவ நிகழ்வுகள் காட்டுவதை மனிதர்கள் உணர்வதில்லை.

நடைமுறை அனுபவங்களில் நாம் சந்திக்கும் துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அதை அனுபவித்திடும் செயலாக அதே உணர்வுகளின் வலுவைக் கூட்டிக் கொள்வதினால் மாமகரிஷிகள் சுட்டிக்காட்டிய “சோ..க…ம்” கிடைக்குமா…?

ஆத்ம சக்தி எனும் அருமருந்தைக் கைகொள்ளும் நமக்கு… எண்ணியதை எண்ணியபடி பெற்றுவிடும் நற்பயனாய்… ஈர்ப்பின் செயல் அச்செயலுக்குள் சமைப்பு…
1.“சமைப்பின் பலன்…” என்றே கொள்ளும் குணங்களின் வலுவை வலுவாக்கிடும் செயலில்
2.சோகம் என்ற நாதம் இன்று மனிதனின் எண்ணத்தில் அது வெறும் துக்கமாகத் தான் காட்டப்படுகின்றது.

கலங்குகின்ற நெஞ்சம் சரீரம் கொண்டு அனுபவித்திடும் துக்கமாகப் பெருக்கிக் கொண்டு இடர்படும் நிலைகள் இராமன் பெற்ற அனுபவங்களாக அதனுள் மூழ்கி… கொண்ட குணங்களை வலுவாக்கிடும் செயலின் துரிதம் போல… நற்குணங்களின் செயல்பாட்டில் உயர்வைக் கூட்டிக் கொள்ள செயல்படும் குணங்களின் தன்மைகளில் “துரிதமும்… செயல்பாடும்… ஒன்றே…!

வானைச் சுட்டிக்காட்டி செயல்பாட்டின் பேதங்களைப் பகுத்தறியும் பண்பாக “சோ…” என்ற ஒலி ஈர்ப்பில் “க…” எனச் சமைத்து “ம்…” எனும் முழுமையாக நம்மால் நற்குண நற்சுவாசமாக எடுத்து… மாறு கொண்ட குணங்கள் நமக்குள் வந்து ஊறு விளைவிக்கும் செயலை மாற்றி… விரிவு கொண்டிடும் நல் ஒளி அணுக்களின் செயல் உறுதியாக்குவதே “சோ…க…ம்…”
(குறிப்பு:- சோகம்… சோகம்… சோகம்… என்று ஒரு பத்து இருபது முறை வேகமாகச் சொல்லிப் பாருங்கள்…)

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

போகரின் சக்தி

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்… வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்…
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்…
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக…
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு…
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலைகொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே…!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்…” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே…!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று… இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா… இந்தியா என்ற நிலையும்…! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி – யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி…!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன…?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்…?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்… புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்…! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது…!

யாரென்று எண்ணுகின்றீர்…?

அல்லாவாய் செயல் கொண்டவரும்… முருகனாய் வழி வந்தவரும்… இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்… “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்…”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்…” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே…
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே…
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்…!

கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.

மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.

நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.

27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது

நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.

அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!

அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது வேண்டும் அல்லவா…!

அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.

ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்

அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்… தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.

எப்படி…?

வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்

இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.

இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.

அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.

உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன் அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.

இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!

குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.

டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”

அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.

நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!

ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.

குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்…!

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

எதிர்நிலையான நட்சத்திரங்களின் மோதலினால் மின்னல்கள் உருவாகின்றது. மின்னல் பாயும் பொழுது மரத்தின் மேல் பட்டால் மரத்திற்குள் ஊடுருவி அது தன் இனத்தை எடுத்துக் கருகி விடுகின்றது.

மின்னல்கள் நிலத்தில் பட்டால் பூமியின் நடு மையமான நிலைகள் சென்றடைகின்றது. இப்படி அதீதமான நிலைகள் உள் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையமானால் “எந்தப் பகுதியில் ஆகின்றதோ… அங்கு கொதிகலனாக மாறி… பாறைகள் எல்லாம் இளகுகின்றது…”

உள்ளே இருக்கும் பாறைகள் இளகும் போது பூமி வெடிக்கின்றது. மேலிருக்கும் பாறைகள் கீழே இறங்குகின்றது. “நிலநடுக்கம்” என்று அடிபாகத்திற்குள் போகின்றது. அதற்குள் அடக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் மின்னல்கள் கடலில் பாய்ந்தால் அந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலுக்குள் படியப்படும்போது மணலாக மாறுகின்றது.

கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… அந்த உப்பின் சத்து மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.

கடலிலே பாயும் இத்தகைய நிலைகள் எல்லாம் மணலாக மாறி அந்த மின் அணுக்களின் துகள்களாக வரப்படும்போது கடலில் வரக்கூடிய மணல் அத்தகைய ஆற்றல்கள் பெறுகிறது.

இதைத்தான் யுரேனியம் என்று பிரித்தெடுக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாகின்றதோ அதற்குத் தக்க கனிமங்களாக உருவாகிறது.

இந்த மணலை எடுத்துப் பிரித்து அதை வைத்துத் தான் அணுவைப் பிளக்கின்றனர் விஞ்ஞானிகள்.
1.இந்த அணுவின் தன்மை மற்றொன்றை அடக்கும் போது
2.வரும் அணுவின் தன்மையைப் பிளந்து உணர்வை எடுக்கின்றான்.
3.இதில் சிதைந்த உணர்வின் தன்மையைத் தான் இன்றைக்கு கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் (SMART PHONE) உபயோகப்படுத்துகின்றனர்.

அதாவது அந்த உணர்வைப் பாய்ச்சி… ஒளி அதிர்வுகளைக் கண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு (COMMAND)
1.அந்த நுண்ணிய “கதிரியக்கப் பொறிகளை” மாற்றும் போதுதான் கம்ப்யூட்டர் என்னும் நிலைகள் வருகின்றது
2.இப்படி மின் அணுவின் கதிரியக்கங்களுடைய நிலைகள் ஒரு காந்தப் புலனறிவில் கவரப்பட்டு
3.கம்ப்யூட்டரில் – ஒரு காந்தத்தைக் கவரும் ஒரு உணர்வின் தன்மையைப் பதிவு செய்து… அந்த உணர்வின் அறிவாக ஆன பின்
4.எதிர் ஒலியின் தன்மை மின் அணு போன்ற இந்த உணர்வின் தன்மை தோன்றும்.
5.அந்த உணர்வின் தன்மை எதுவாகின்றதோ மோதும் ஒவ்வொரு உணர்வுக்கொப்ப அதனின் உருவத்தையும் காட்ட முடியும்.

ஆக… ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகின்றது…? என்ற நிலையும்… ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்றால் அவர்கள் வம்ச வழியில் வந்தவனின் ரூபங்கள் எப்படி இருக்கின்றது…? என்றும் காணலாம்.

ஒரு உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்தக் கம்ப்யூட்டர் எதிர் நிலைகளை (0 1) எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது.

“ஆயிரம் மடங்கு” அதைக் கூட்டுகின்றான். மீண்டும் அந்த உணர்வின் எதிர் ஒலிகள் வரப்படும்போது… வாழ்ந்த உணர்வை… பூமியில் பதிந்ததை எடுத்து… மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

இன்று விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

அதைப் போலத் தான் அன்று வாழ்ந்த மெய் ஞானியின் உணர்வை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாக்கப்படும் போது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து (நுகரப்பட்டு)
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் ஒளியாக முடியும்.

சில பேர் என்ன சொல்வார்கள்…? விஞ்ஞஞான அறிவு எங்கேயோ போகின்றது… சாமி (ஞானகுரு) எங்கேயோ மூலையில் இருக்கிறார் என்று…!

ஏனென்றால் விஞ்ஞானத்தின் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் எல்லாவற்றையும் காட்டினார்.

1.இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கத்தை எப்படி…? என்று
2.கற்றுணர்ந்த பின் தான் அதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

காலம் வரும் போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப இதை நுகரும் போது… அந்தந்த உணர்ச்சிகள் அது கவரப்பட்டு உங்களுக்குள் பதிவு செய்யும் நிலையாக இது வரும்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு விதமாக இருக்கும்.
2.அந்த உணர்வின் வளர்ச்சிக்கு நீங்கள் வரப்படும்போது
3.இந்த இயற்கையின் தன்மை… உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் தான் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும்

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.

அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.

வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.

ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.

வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.

இவ்வுலகையே செயலாக்கிடும் சப்தரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.

ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதிசக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.

சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்த உடலை விட்டு நாம் எப்பொழுது சென்றாலும் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அங்கே சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும். காலை ஐந்து ஆறு மணிக்குள் இந்த உணர்வினைப் பெறலாம்.

1.தியான வழியில் உள்ள சிலரை எடுத்துக் கொண்டால் இந்தக் காலங்களில் தான் (அதிகாலை) ஆன்மா பிரியும்.
2.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் நேரடியாகச் செல்லும் நிலை வரும்.

அங்கே சென்றால் உணர்வுகள் கரைக்கப்படுகின்றது. சூரிய ஒளிக்கதிர் உடல் பெறும் உணர்வை அது கவர்ந்து எடுத்துச் செல்கின்றது. உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உணர்வின் ஒளியாக மாறுகின்றது.

அகண்ட அண்டத்தில் உள்ள எந்த நஞ்சும் நம்மை வென்றிடக் கூடாது. அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிட வேண்டும்.

உதாரணமாக ஒரு பாம்பினம் நஞ்சினைப் பிற உயிரினங்களில் பாய்ச்சி அதை உட்கொண்டு தனக்குள் மகிழ்ச்சி ஆகின்றது. அதில் உறைந்த நிலைகள் தான் இங்கே நாகரத்தினமாக மாறுகின்றது. பாம்பிற்குள் உறையும் கல்லாக இருக்கின்றது. இது ஜீவனற்றது.

ஆனால் நமக்குள் நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் ஜீவ அணுவாக இருக்க வேண்டும். ஜீவனுள்ளதாக கணவனும் மனைவியும் ஈருயிரும் ஒன்றாகி என்றும் ஒளியின் சுடராக மாறுதல் வேண்டும்.

இதைத்தான் ஏகாந்த நிலை “ஏகாதசி…!” என்று சொல்வார்கள். அந்த ஏகாந்த நிலைகள் நாம் பெற வேண்டும்.

ஆனால் ஏகாதசி அன்று “ஆண்டவனுக்கு விரதம் இருந்து சாப்பிட்டால் ஏகாந்த நிலை பெறலாம்…” என்று இப்படி நம்மை அறிவிலிகளாக மாற்றிவிட்டனர்.

ஏகாந்த நிலைகளில் நாம் எப்படி இருக்க வேண்டும்….? விரதம் என்பது எது…?

யாருடன் எல்லாம் பகைமை கொண்டோமோ அவர்களின் பகைமையை மறந்துவிட்டு
1.நான் பார்த்த குடும்பங்களில் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
2.அவர் குடும்பங்கள் ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ வேண்டும்
3.அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்
4.அவர்கள் குடும்பங்களில் ஒன்று சேர்ந்து வாழும் தன்மை பெற வேண்டும்
5.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும்
6.எங்களைப் பார்ப்போர் குடும்பம் எல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று
7.இந்த விரதத்தைத் தான் எடுக்கச் சொன்னார்கள்.

ஏகாதசி அன்று விரதம் இருப்போர்கள் சமையல் செய்து படைப்பார்கள். அன்றைய தினம் சங்கடம் எல்லாவற்றையும் கேட்பார்கள். கேட்டுவிட்டு கடைசியில் இந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு சாப்பிட்டால் என்ன நடக்கிறது…?

பசியாக இருந்து சாப்பிட்டாலும் அன்றைக்கு ஜீரணம் சரியாக இருக்காது. அரிசி சாதம் சாப்பிட்டால் கோதுமை சாப்பிடுகிறோம் என்றும் கோதுமை சாப்பிட்டால் அரிசி சாதம் சாப்பிடுகின்றோம் இது ஒரு விரதம். அல்லது வெறும் வாழைப்பழம் மட்டும் சாப்பிடுகிறேன் என்பார்கள்.

விரதம் என்று இப்ப்டிக் குறைத்துச் சாப்பிட்டால் என்ன ஆகின்றது…?

இவர்கள் உடலிலே வேதனை என்ற உணர்வான பின் குடலில் இருக்கும் ஜீரணிக்கும் அணுக்கள் அப்படியே படுத்துவிடும்…! ஏனென்றால் திடீரென்று உணவைப் (நேரம் கழித்து) போட்டவுடன் ஜீரணிக்கும் சக்தி இல்லை.

இரவு ஆனதும் பார்த்தால் நெஞ்சைக் கரிக்கின்றது… மேல் வலிக்கின்றது… என்று இதைத்தான் நாம் பார்க்கின்றோம்.

நம் உடலில் இருக்கும் உறுப்புகள் அது சீராக இயக்க வேண்டுமென்றால் ஏகாந்த நிலைகள் கொண்டு எப்படி இருக்க வேண்டும்…?
1.அனைவரும் நலம் பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் மலரைப் போல் மணம் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வை எப்பொழுது சேர்க்கின்றனரோ
4.அப்பொழுது தான் பகைமை இல்லாது “ஏகாந்த நிலை” அடைகின்றோம்.

நமக்குள் வரும் நோயைத் தடுக்கும் நிலையும் உடல் ஆரோக்கியமும் வருகின்றது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நாங்கள் பெற வேண்டும்… அருள் மகரிஷிகளின் சக்திகளை அனைவரும் பெற வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எண்ணினால் ஏகாந்த நிலை.

இது தான் உண்மையான ஏகாதசி விரதம்…!

“என்ன நடந்தாலும்” நம்முடைய நப்பாசை உடல் மீது தான் வருகிறது… உயிர் மீது வருகிறதா…?

இன்றைய உலகில் நாளுக்கு நாள்… நாளுக்கு நாள்… யுத்த மேகங்கள் கூடிக்கொண்டே வருகின்றது… பயங்கர விளைவுகள் வருகிறது.
1.நாம் நப்பாசை வைத்து இந்த உடல் இச்சை தான் பெறுகின்றோம்
2.உயிர் இச்சையை யாரும் கொள்ளவே இல்லை.

உடலுக்குப் பின் உயிரோடு சேர்ந்துதான் வாழப் போகின்றோம். மீண்டும் உடல் பெறும் உணர்வுகள் பெறப்படும் பொழுது… எந்த வேதனை கொண்டு நுகர்ந்து… வாழும் இந்த உடலில் நாம் தப்ப வேண்டும் என்று எண்ணினோமோ… வேதனைகள் அதிகரித்து…
1.இந்த உடலில் இருந்து தப்பி… அடுத்து இன்னொரு வேதனைப்படும் உடலுக்குள் தான் போக வேண்டி இருக்கும்
2.உயிர் அதைத்தான் பெறச் செய்யும் என்பதை நாம் மறந்தே இருக்கின்றோம்.

அக்காலங்களில் உலகம் முழுவதற்கும் உள்ள எல்லா இடங்களிலுமே அதிகாலையில் நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற நிலையில் அந்தந்த மதங்களுக்குத் தக்க வேதங்களை ஓதி… மனித உடலில் பதியச் செய்து… அரசின் பற்றும்… நாட்டின் பற்றும் வந்தது.

இருந்தாலும் அப்படி வளர்த்துக் கொண்ட பின் அந்தந்த நாட்டின் அரசன் இறந்தால் அவன் பிள்ளைகளில் மாற்றம்.
1.பின் அதிலே பல பிரிவுகள் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பகைமையாகி
2.முதலில் உருவான தத்துவங்களை மாற்றி அவரவருக்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டனர்.

இன்றைய நம் நாட்டு அரசியலில் எடுத்துக் கொண்டால் காங்கிரசிலிருந்து எத்தனை கட்சிகள் புதிதாக உருவாகி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கைகளை அதிலே சேர்த்து “ஆட்சியைப் பிடிக்க வேண்டும்… தான் அரசாள வேண்டும்” என்று தான் எண்ணினர்.

ஆனால் அன்று காந்திஜியின் சாந்த உணர்வுகள் அதிகரித்ததனால் தான் நம் நாடு விடுதலை அடைந்தது. அவர் வழி நடத்திய தத்துவம்
1.ஒரு மனிதனைக் கோபமாகத் தாக்குவது கோழை
2.ஆனால் நம்மைத் தாக்க வரும்பொழுது மன உறுதி கொண்டு அவருடைய நிலைகளைச் சீர்படுத்திக் காட்டுவது மன பலம்
3.”அமைதி கொண்டு நல் உணர்வை ஊட்டுவது தான் மன வலிமை” என்று தெளிவாகக் காட்டினார்.

அத்தகைய மன வலிமை கொண்டு மக்கள் அனைவரையும் ஊக்குவித்து எல்லோரும் ஒரே நிலையில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வரும்போது பிரிட்டிஷ் ஆட்சி பணியும் தன்மை வந்தது. இலண்டன் சபையிலே காந்திஜியைப் பேசும்படியும் செய்தது… சுதந்திரத்தைக் கொடுத்தார்கள்.

உலகம் முழுவதும் அன்று பிரிட்டிஷ் ஆட்சியாக இருந்தாலும்… மக்களை அவர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும் காந்திஜியின் சாந்த வீரியமே உலகம் முழுவதற்கும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி செய்தது.

ஆனால் அந்தச் சுதந்திரம் இன்று எப்படி இருக்கின்றது…?

அன்று பிரிட்டிஷ்… அரக்க உணர்வுகள் கொண்டு மக்களை அடக்கி ஆட்சி புரிந்தான்.
1.அதே உணர்வு வளர்ந்து ஒவ்வொரு மனிதனும் மற்றதை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்ற தன்மைக்கு
2.இன்று அரசியல் அமைப்புகள் உலகெங்கிலும் வந்துவிட்டது.

நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்பதற்கு மாறாக… நல்ல பண்புகளை அறியாதபடி “தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு மாறாக யார் சென்றாலும் அவனைத் தொலைக்க வேண்டும்…” என்று வந்துவிட்டது.

இப்படிக் கொள்கைகள் வித்தியாசமாகி ஒருவருக்கொருவர் உண்மையை அறியும் தன்மைகள் இழக்கப்பட்டு
1.மக்கள் மத்தியில் குழப்பங்கள் உருவாகி
2.தான் எப்படிப் பிழைக்கப் போகின்றோம்… எப்படி வாழ போகிறோம்…? என்று
3.நம் நாடு மட்டுமல்ல… உலக ரீதியிலே இந்த விஷத்தன்மைகள் பரவி
4.மனித இனத்தையே முழுமையாக அழிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

ஆகவே உலகம் அழியும் தருணம் வரும் பொழுது இந்தப் பிரபஞ்சத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அதன் உணர்வுகளை நாம் பெற்றால் தான் தப்ப முடியும்.

உயிர்ப் பற்றை வளர்த்தவர்கள் தான் உயிருடன் ஒன்றி அழியாத் தன்மை கொண்டு துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

நமது எல்லை அது தான்…!

அகஸ்தியன் புலனை (எலக்ட்ரானிக்) உங்களுக்குள் செருகேற்றுகிறோம்

1.ஒவ்வொரு நாளும் உபதேச வாயிலாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
2.ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் இணைத்துக் கொடுக்கப்படும் பொழுது இதுவே தியானமாகிறது.

அதன் வழி உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெரிந்து செயல்படும் அருள் ஞான சக்தி கிடைக்கும்.

ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவதற்கு விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற அமைப்பை அதனுடன் இணைத்து வைக்கின்றார்கள்.

இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும் சமயம்… ஒன்று அழுத்தம் அதிகமாகி விட்டால் உடனே மோதி அதை மாற்றி அமைத்து இயந்திரத்தைச் சீராக்குகின்றது.

அதே போன்று தான் எலக்ட்ரானிக் என்ற ஞானிகள் உணர்வின் பவரைச் உங்களுக்குள் செருகேற்றுகின்றோம்.
1.எதிர் நிலையான உணர்வு தாக்கப்படும் பொழுது உடனே அதை விலக்கி
2.உங்களைச் சிந்தித்து செயல்படுத்தும் தன்மைக்கு அது இயக்கிக் காட்டும்…!

விஞ்ஞானிகள் இன்று நிரூபிக்கின்றார்கள். கெமிக்கல் கலந்ததில் ஒரு காந்தப்புலன் அறிவை இணைத்து அதனுடைய சுருதிகளைத் தட்டி எழுப்பப்படும் (KEY BOARD) பொழுது அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

அதே போன்று மனிதனுக்குள்ளும் எலக்ட்ரானிக்…! ஒவ்வொரு புலனறிவுக்குள்ளும் எலக்ட்ரானிக் என்ற இந்த உணர்வின் அறிவாகும் பொழுது
1.அவன் எண்ணிய உணர்வு அதிர்வாகி இவன் எண்ணியபடி கண்களால் பார்க்கின்றான்.
2.ஒரு உருவத்தின் தன்மை “இன்னது இப்படித்தான் இருக்கும்…” என்ற நிலையை எலக்ட்ரானிக்… எண்ணங்களை எண்ணும் பொழுது
3.அதற்குத்தக்க ஆந்த உருவத்தையே கம்ப்யூட்டர் போட்டுக் காட்டுகின்றது
4.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று அதிர்வாக்கும் போது அதிலே பூசிய “கெமிக்கல்” அதைக் காட்டுகின்றது.

உண்மையின் உணர்வின் தன்மை அளவுகோலின்படி இவன் எடுக்கப்படும் பொழுது “மனிதனுடைய சிந்திக்கும் சக்தி”
1.எலக்ட்ரான் என்ற முறைப்படி அவன் எண்ணும் கூர்மை இதைக் கவர்ந்து
2.தட்டெழுத்தால் அடிக்கச் செய்த பின் (KEY BOARD) ஆணைகளாக அதற்குள் பதிந்து சில தத்துவங்களைக் கொண்டு வருகின்றது.
3.கம்ப்யூட்டருக்குள் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் இயக்கம்… அதிலே பதிவான கெமிக்கல் தான்.

இதைப் போன்று தான்
1.பல கோடி உடல்களில் நாம் சேர்த்துக் கொண்ட சத்துக்கள் “ஊழ்வினையாக…” எலும்புகளுக்குள் (இந்த கெமிக்கல்) உண்டு
2.ஒவ்வொன்றையும் உற்றுப் பார்த்து உணர்வைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்
3.பதிவான உணர்வின் தன்மைகளை மீண்டும் எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் உணர்வின் இயக்கமாக நாம் இயங்கி வருகின்றோம்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் புலஸ்தியன் வம்சத்தில் வந்த மெய் ஞானி அகஸ்தியன்… “அவன் கண்ட புலனின் இயக்கத்தை” (எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக்)… அவன் அருள் பெற்று நாமும் அதை அறிவோம்.
1.அகஸ்தியனுடைய அருள் சக்திகளைப் பெறுவோம்
2.இருளை அகற்றிப் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.
3.அகண்ட அண்டத்தையும் அறியும் பேராற்றல் பெறுவோம்
4.உலகைக் காத்திடும் மெய் ஞானியாக வாழ்ந்து வளர்வோம்.

நம்மால் நிச்சயம் முடியும்…!

ஞானிகள் கொடுத்த தத்துவங்கள் அனைத்தும் மாற்றம் கொண்ட உருவில் தான் இன்று உள்ளது

வான்மீகி மகரிஷியினால் இயற்றப்பட்ட இராமாயணக் காவியத்தைக் காலப்போக்கிற்கும் அவரவர்கள் வாழ்ந்த எண்ண நிலைக்கொப்ப நாம் மாற்றப்பட்ட இக்காவிய நூலைப் போலவே
1.இன்று இவ்வுலகில் தோன்றிய ஒவ்வொரு நூலும்
2.கால நிலையில் எண்ண நிலைக்கொப்ப மாற்றம் கொண்ட உருவில் தான் உள்ளது.

இயேசு கிறிஸ்து இயற்றியதாக பைபிளை வெளியிட்டு அவ்வுருவில் அவரின் செயலை வெளிப்படுத்துகிறார்கள்.

எழுதியவர் யார்…? வழிப்படுத்துபவர் யார்..? இவ்வுலகம் எந்நிலையில் உருப்பெற்றது…? மனித ஆத்மாக்கள் தோன்றிய நிலையையே ஆதாம் ஏவாள் என்ற இருவரால் மனித வர்க்கம் வளர்ந்தது என்கின்றனர்.

அப்படி இருக்க இயேசு கிருஸ்துவின் உண்மையின் சக்தியான அன்பு ஆசையுடன் கூடிய எல்லா உயிரினங்களையும் ஒன்று போல் அன்புபடுத்திய அவ்வுடலில் ஏறிய மகானின் சக்தியையே பைபிளின் நிலையினால் “உயிரணுக்களை (மாமிசங்களை) உணவாக்கி உண்டிடும் நிலையில் அம் மகான் இருந்தார்…!” என்று உணர்த்துகின்றனர்.

ஏன்…?

அவரது சக்தி நிலையில் பொறாமை கொண்டவரின் எண்ணத்தினால் அம் மகானின் உடலையே அழித்துவிட்டு…
1.அன்று வாழ்ந்த மக்களின் எதிர்ப்பிலிருந்து மீள அவர் வாழ்ந்த காலத்தில் வெளியிட்ட சக்திச் சொல்லை
2.பிறர் ரூபத்தில் வெளியிட்டதின் நிலைதான் இன்றைய பைபிளின் நிலை.

நீங்கள் புசித்திடும் அனைத்துமே அணுக்கள்தான். “ஒன்றை அழித்து ஒன்று வாழ்கின்றது…” என்பதனைத்தான் முன் பாடத்தில் உணர்த்தியுள்ளேன்.

உயிரணுவாய் வளர்ச்சி பெற்று மனித ஆத்மாவாகப் பல எண்ணங்களுடன் பல ஜென்மங்கள் பெற்று இவ்வெண்ண நிலையில் வந்திட்ட நிலையில் மிருகத்தின் நிலையையே உணவாக உண்டால் என்ன ஆகும்…?

நல் நிலையில் உணர்வு பெற்று மனித ஆத்மாக்களாய் உள்ள நிலையில்…
1.நம்மிலிருந்து கீழ் நிலைக்குச் சென்றிட்ட (மற்ற உயிரினங்களின்) எண்ண அணுக்களின் பிம்ப உடல்களைச் சமைத்து உண்ணும் பொழுது
2.நம் எண்ணமுடன் நம்மைக் காட்டிலும் பல எண்ண நிலைகளுடன் வாழ்ந்திட்ட அணு சக்திகள் நம் உடலில் ஏறி
3.நம் நிலையும் அவற்றின் நிலையுடன் சென்றிடும் நிலை தான் ஏற்படும்.

இம் மாமிச உணவுகளிலிருந்து மாறு கொண்ட உணவை உண்டால்…
1.நம் உடலுடன் பல தீய சக்திகளின் நிலைகள் ஏறாமல்
2.நம்மைக் காத்து கொண்டிட முடியும்.

அனைத்துமே அணுக்கள்தான். அணுவில் வந்த கனியும் ஒன்றுதான் பட்சிகளும் ஒன்றுதான். எண்ண நிலையை ஒரு நிலைப்படுத்திய பிறகு எல்லாம் ஒன்றே தான்.

இயேசுபிரான் தான் வாழ்ந்த காலத்தில் அவர் உடலில் ஏறிய அம் மகானுக்கு அனைத்துமே ஒன்றேதான். அன்புடன் அளித்திட்ட உணவு வகைகளை மறுத்திடாமல் எல்லாமே ஒன்றாக எண்ணிப் புசித்திட்டார்.

பாமர ஜென்மங்களாய் வாழ்ந்திடும் நாம்…
1.ஆத்மீக நெறி வழியில் ஆண்டவனின் சக்தி பெற்ற ஜோதிகளாய் வளர்ச்சி பெற்று வந்திட
2.நம் ஆத்மாவுடன் நாம் வாழ்ந்திடும் இந்த உடலில்
3.மற்ற அணுக்களின் எண்ணத் தாக்குதலில் இருந்து மீளத்தான்
4.நம்மைத் தீய சக்திகள் தாக்காமலிருக்கத் தான் வழி முறைகளை உணர்த்துகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் எத்தனையோ கோடி ஜென்மங்கள் தாண்டித்தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்.

புலி ஒரு ஆட்டைக் கண்டால் எத்தனையோ வேதனைப்படச் செய்கிறது. கடித்துக் குதறி அதனுடைய ஜீவனை முழுங்குகின்றது. அதைப் பார்க்கின்றோம்.

வீட்டிலே பார்த்தால் ஒரு எலியைப் பூனை எத்தனையோ அவஸ்தைப்படச் செய்து அதைக் கொன்று குதறி உணவாக உட்கொள்கிறது.

நாய்கள் பூனைகளைக் கண்டாலே விரட்டிச் சென்று கடித்துக் குதறுகிறது. காக்காயோ குருவிகளோ இரைக்காக வேண்டி விட்டில் பூச்சிகளைக் கொத்தி எத்தனையோ இம்சை செய்து உணவாக உட்கொள்கின்றது என்று நாம் இதையெல்லாம் பார்க்கின்றோம்.

தேள் கொடூர விஷம் கொண்டிருந்தாலும் கீரிப்பிள்ளையோ அந்தத் தேளையும் உதறி உணவாக உட்கொள்கின்றது.

இப்படித் தான் பல கோடிச் சரீரங்களில் ஒன்றுக்கு இரையாகும் போது… அந்த உடலிலே துடிதுடித்து… வேதனை தாங்காது…
1.எது தன்னைத் தாக்குகின்றதோ அந்த நினைவிலேயே ஒங்கி வளர்ந்து
2.தன் உடலை மறந்து அந்த வலிமையான உடலுக்குள் உயிர் சென்று
3.அங்கே கருவாகி அந்த உயிரினமாகப் பிறக்கின்றது.

இதைப் போலத்தான் இன்று இந்த உடலிலே வரும் வேதனைகளை எல்லாம் மறந்துவிட்டு
1.மெய் ஞானியின் உணர்வை நாம் தொடர்ந்து
2.அதனின் உணர்வைப் பெற வேண்டுமென்று எண்ணிவிட்டால்
3.இந்த உடலின் வேதனைகள் அனைத்தும் இங்கே மடிகின்றது.
4.மெய் ஞானியின் உணர்வோடு நம் உணர்வுகள் ஒன்றுகின்றது
5.நாம் (உயிர்) அங்கே சென்றடைகின்றோம்.

இவ்வாறு அடையச் செய்வதற்குத்தான் தத்துவ ஞானி சூட்சுமத்தில் நடப்பதை எளிதில் கண்டுணர்ந்து மனிதன் தன்னைத் தானறிந்து கொள்ள சாஸ்திரங்களைப் படைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

தான் யார்…? இந்தப் பிள்ளையார்…? என்ற கேள்விக் குறியைப் போட்டு… கல்லால் சிலைகளை வடித்து யானையின் சிரசை மனிதனின் உடலில் பொருத்தி.. பல காரணப் பெயர்களை வைத்து உணர்த்தினர்.

1.அதன் மூலம் நம் மனித உடல் உருவான நிலையையும் உயிர் தோன்றியதையும்
2.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும் என்றும்… எந்த நிலையை அடைய வேண்டும்…? என்பதையும் காட்டினார்கள்.

துருவ நட்சத்திரத்தின் இனமாக நாம் மாற வேண்டும்

ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கி ஞானிகள் அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே வருகிறோம்.

கூர்ந்து கவனித்துப் பதிவானால் அடுத்து அதை வளர்த்துக் கொள்ள முயற்சி எடுக்கப்படும் பொழுது உங்கள் நினைவைக் கூட்டினால் நிச்சயம் அதைப் பெறுகின்றீர்கள்.

திட்டியவனை எண்ணியவுடன் என்ன செய்கிறது…? இருக்கட்டும்… அவனைப் பார்த்துக் கொள்கிறேன்…! என்று நினைத்தால் அவனும் கெடுகின்றான் நாமும் கெடுகின்றோம்… பகைமை உணர்வு தான் வளர்கின்றது.

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

உங்கள் உணர்வின் குணங்களுக்கெல்லாம்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருளையும் ஞானிகள் பெற்ற நிலைகளையும் கலந்து சொல்லாக யாம் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொழுது
1.உங்கள் செவி அதைக் கவர்கின்றது
2.உங்கள் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.சுவாசித்த பின் உயிரில் படுகின்றது.
4.உயிரின் இயக்கம்… கண் அதைக் கவர்ந்து இந்த உணர்ச்சிகளை உடலுக்குள் சேர்க்கின்றது
5.கருவிழி பதிவாக்குகின்றது… கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் கவர்கிறது… அந்த உணர்ச்சிகளை இரத்தங்களிலே அது பரப்புகின்றது.
6.மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் அணுவின் தன்மை கருத்தன்மை அடைகின்றது.
7.இதை வளர்த்துக் கொண்டே வந்தால் பிரம்மமாகின்றது
8.பிரம்மானது கருவாகி உருவாகும்போது துருவ நட்சத்திரத்தின் இனமாக (அணுவாக) உங்கள் இரத்தத்தில் பெருக்கிக் கொள்ள உதவும்

மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் என்ன செய்கின்றார்கள்…? 1500 ஆண்டு காலம் மனிதனை வாழ வைக்கலாம் கண்டுபிடித்துள்ளார்கள். ஒவ்வொரு மருந்தினையும் உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்து மாற்றிக் கொண்டே வந்தால் 1500 வருடம் மனிதனை வாழ வைக்கலாம் என்று செய்கிறார்கள்.
1.1500 ஆண்டுகள் வாழ்ந்தால் மனிதனுடைய நிலைகள் என்ன ஆகின்றது…?
2.உறவினர்களோ சொந்த பந்தங்களோ யாருமே அறிந்து (அடையாளம்) கொள்ள முடியாதபடி இந்த ஊரே பிடிக்காது போய்விடும்.

காரணம் 50 கோடி மக்கள் தொகை இருந்தது இன்றைக்கு 700-800 கோடியாக மாறிவிட்டது 100 வருடத்தில் இதே மாதிரி மக்கள் தொகை கூடக் கூட உணவுக்கு எங்கே செல்வது…?

மனிதன் வளர மனிதனை அடித்து உணவாக உட்கொள்ள வேண்டியதுதான். இன்று அது தான் நடந்து கொண்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகளாக இருந்தாலும் சரி வளர்ச்சியே இல்லாத நீக்ரோ நாடுகளாக இருந்தாலும் சரி… கையில் பணம் இல்லை… உணவுக்கு இல்லை என்கிற பொழுது மனிதனை அழித்து அந்த மாமிசத்தை உட்கொள்ளலாம் என்று “விஞ்ஞான உலகத்திலே இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது…!”

அஞ்ஞான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.புலஸ்தியர் வம்சத்தில் வந்த அகஸ்தியன் அருளைப் பெறுவோம் இருளை அகற்றுவோம்
2.கல்கி என்ற முழுமை அடைவோம்… பிறவியில்லா நிலை அடைவோம்.

நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே “பெரும் சக்தி…!”

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால் அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இந்தக் காற்று மண்டலத்தில் சூரியனோ அதனுடைய கதிரியக்க அலைகளைப் பரப்பிக் கொண்டே உள்ளது.

இருந்தாலும்… அதன் ஒளி அலைகள் ஒரு செடியின் மேலோ ஒரு மரத்தின் மேலோ மனிதன் மேலோ மற்ற ஜீவணுக்கள் மேலோ படும் பொழுதுதான் அதனுடைய இயக்கத் தொடரே வருகின்றது.

செடியானாலும் அந்த சூரியனின் அந்த காந்த புலனறிவு தாக்கி உருவாக்கினால்தான் அந்த வெப்பம் உருவாகும். அந்தச் செடியும் வளர்கின்றது… புழுவும் வளர்கின்றது… மனிதனும் வளர்கின்றான்…!

1.அந்த வெப்பம் இல்லையென்றால்… ஒரு ஐஸ் பெட்டியில் போட்ட மாதிரி
2.எல்லா அணுக்களும் செத்துப் போகும்… மனிதனே வாழ முடியாது…!
3.ஆகவே இவை அனைத்திற்கும் இந்தச் சூரியனே காரணமாக இருந்து இயக்குகின்றது.

சூரியனின் வெப்பத்தால் ஓங்கி வளர்க்கும் இந்த உணர்வுகளை… பூமி தனக்குள் நடு மையமாக அந்த வெப்பத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்கின்றது.

மார்கழி மாதமோ… அல்லது அதிகமான மழைகள் பெய்யும் காலத்திலோ மேற்பரப்பு குளிர்ந்து விடுகின்றது. இருப்பினும் பூமியின் அடிப்பாகத்தை தோண்டினால் வெப்ப நிலையே வருகின்றது.

1.ஆகவே சேமித்து வைத்த இந்த வெப்ப அலைகள்
2.சூரியனின் வெப்பத் தன்மை தணியும் போது
3.மனிதனுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ மற்ற தாவர இனங்களுக்கோ அது இயக்க
4.இது உதவுகின்றது நமது பூமி வாங்கி வைத்த வெப்பங்கள்.
5.அந்த வெப்ப நிலை இல்லையென்றால் எதுவுமே வளராது… இயங்காது… வாழாது… ஜீவிக்காது…!

கடலுக்குள் மீன் வாழ்கின்றது என்றால் நீருக்குள் தான் அது இருக்கின்றது. நீருக்குள் இருக்கும் காந்தப் புலனறிவு இந்த மீனுக்குள் உறைந்த அந்த காந்தப் புலனறிவுடன் உராயப்படும்போது மின் ஆற்றல் உற்பத்தியாகின்றது… “வெப்பமாகின்றது…”

இந்தக் காற்று மண்டலத்தில் எப்படிப் பல நிலைகள் உருவாகின்றதோ… நீர் குளர்ந்திருந்தாலும் நீருக்குள் வாழும் மீன் அது அதற்குள் இருக்கும் காந்தப் புலன்கள் கொண்டு வெப்பத்தை உருவாக்குகின்றது.

நாம் மின்சாரத்தை உருவாக்குவது போன்று கடலில் மின்சார மீன் என்றும் உண்டு. ஓடும் வேகத்தில் பளீர்…பளீர்…! என்று மின்னும்.

தரைகளிலும் வாழும் வண்டு இனங்களில் மின்னெட்டாம் பூச்சி என்று உண்டு. அந்த மின் மினிப் பூச்சிகள் தான் நுகரும் தன்மை கொண்டு வெளிச்சத்தை உமிழும்.

இரவிலே பார்த்தோம் என்றால் பளிச்… பளிச்… என்று மின்னிக் கொண்டிருக்கும்.
1.அதாவது தனக்குள் ஒளியைச் சேமித்து வைத்து
2.இருளாகும் போது அது “ஒளிரும் தன்மையாக…” ஒளிபரப்பும் தன்மைகள் இந்த உயிரினங்களுக்கு உண்டு.

இவையெல்லாம் இயற்கையின் செயல்கள்…!

அஞ்சனை நேயன் – ஆஞ்சநேயன்

ஒரு நோயாளியின் உணர்வை நாம் நுகர்ந்து
1.”அவருக்கு நோய்” என்று அறிந்த அடுத்த கணம் நமக்குள் அது வராதபடி மாற்றுவதற்குத்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை வைத்து அங்கே அடைத்த பின் அந்த நோயின் உணர்வு அனாதையாகி விடுகிறது.

கூடக் கொஞ்ச நேரம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்க்க நோயாளியை உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து மேலே கொண்டு சென்று விடுகிறது.

அதாவது… செடி கொடிகளில் (வெயில் தாக்கப்படும் பொழுது) அதில் விளையும் சத்தின் மணங்களை ஆவியாக மாற்றிச் சூரியனின் காந்த சக்தி எடுத்துக் கொள்வது போன்று இதையும் எடுத்துக் கொள்கின்றது.

நம் வீட்டிலே சமையல் செய்கின்றோம். எல்லாப் பொருளையும் சேர்த்துக் கலந்து வேக வைத்த பின் ஆவியாகப் போவது எங்கே செல்கின்றது…?
1.நீரை எடுத்தவுடன் கனமான சத்தைச் சூரியன் எடுத்துக் கொள்கின்றது
2.மேலே கொண்டு சென்று மேக மண்டலத்துடன் ஆவியாக நின்று விடுகின்றது.
3.உப்புச் சத்துக்கள் அதிலே கலந்தால் மழையாகப் பெய்கின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்றுதான் நோயாளியைப் பார்த்த பின் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளிப்படக்கூடிய வேதனையான (நோயாளியின்) அந்த உணர்வின் ஆவியை சூரியன் எடுத்துக் கொள்கிறது… நமது ஆன்மா பரிசுத்தம் ஆகின்றது.

புருவ மத்தியிலே துருவ நட்சத்திரத்தின் சக்தியை எண்ணி நிலை நிறுத்தப்படும் போது உடலுக்குள் போகாது தடைப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளிக்குக் கிடைக்க வேண்டும்
2.நோய் நீக்கும் சக்தி அவர் பெற வேண்டும்.. அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
3.இந்த உணர்வை எடுத்து அவருக்குள் இணைக்கப்படும் பொழுது “அஞ்சனை” (பெண்பால்)

சீதா என்ற சுவையை அங்கே உருவாக்குகின்றோம். நோயை எண்ணாதபடி அந்த நோயுற்றவர் நன்றாக வேண்டும்… அவர் நோய் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் சொல்லும் பொழுது சீதாராமா.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும்… என் நோய் நீங்க வேண்டும் என்று அந்த நோயாளியால் எண்ண முடியவில்லை.
1.நாம் எண்ணி இவ்வாறு சொல்லப்படும் பொழுது அது இராமனின் பக்தன் “ஆஞ்சநேயன்” என்று ஆகிறது.
2.அருள் உணர்வுகளை “அவருக்குள் நேயமாக இணைத்து” தீமைகளை நீக்கி நல்லவைகளாக உருவாக்கும் தன்மை.

அது தான் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்…! உயிரிலே பட்டபின் வாயுவாக மாறுகின்றது அவர் (நோயுற்றவர்) உடல் முழுவதும் சுழன்று வருகின்றது. உடலில் எந்த இடத்தில் நோய் இருக்கின்றதோ அந்த உணர்ச்சிகள் அங்கே போய்த் தாக்குகிறது.

சுக்ரீவனின் மந்திரி ஆஞ்சநேயன்…! துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் உடலில் தீமையை நீக்கும் இந்த உணர்வுகளை ஊட்டுகின்றது; வேதனை என்ற நினைவை மாற்றுகின்றது; தீமையான நிலைகளுக்குள் இந்த வலுவின் தன்மை சென்று நோயை நீக்குகின்றது…!

இது எல்லாம் சூட்சுமத்தில் நடப்பதை உருவம் அமைத்து இராமாயணம் (எண்ணம்) எதன் சுவை சீதாராமனாக எண்ணங்களாக வருகின்றது…? என்று காட்டுகின்றார்கள்.

வேதனைப்படும் உணர்வுகள் அதுவும் சீதா… வேதனைப்படுத்தும் சுவை. அதை நாம் நுகரும் போது எண்ணமாக வருகின்றது அதுவும் சீதாராமன் தான். அந்தச் சுவையின் நிலைகள் நுகரப்படும் போது நாம் வேதனைப்படுகின்றோம்.

ஆனால் வேதனையை நீக்கி சந்தோஷத்தை ஊட்டுவது “துருவ நட்சத்திரத்தின் சக்தி… அந்த சீதா…!” நோயை நீக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது இராமனின் பக்தன் ஆஞ்சநேயன். அவன் வாயு புத்திரன்… சுக்ரீவனின் மந்திரி.

இராமனுக்கு சுக்ரீவன் துணை செய்கின்றான் என்று காவியம் காட்டுகின்றது. துருவ நட்சத்திரம் தான் இங்கே சுக்ரீவன். அந்த சுக்ரீவன் என்ற உணர்வைச் செயல்படுத்தும் போது எத்தகைய தீமையாக இருந்தாலும் அதை நீக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.எல்லா இடங்களுக்கும் ஊடுருவி – இலங்கைக்குள் (நம் உடலுக்குள்) வேதனை என்று சீதா அடைபட்டு இருப்பதை மீட்டு
2.சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக மாற்றுவதற்காக அவ்வாறு காட்டுகின்றார்கள்.

ஏனென்றால் நோயாளியின் உணர்வை இந்த உடலுக்குள் (இலங்கைக்குள்) நுகர்ந்தால் சந்தோஷம் தீவுக்குள் (சிறு இடத்திலே) அடைபட்டு விடுகிறது. தீமை என்ற உணர்வுகள் சந்தோஷத்தை ஆடைய விடாதபடி இலங்கேஸ்வரன் (அரக்க உணர்வுகள்) அடைத்து வைத்திருக்கின்றான் என்று காட்டுகிறார்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று சொல்லும் போது…
1.இராமன் சுக்ரீவன் துணை கொண்டு படைகளத்துடன் சென்று இந்த உணர்வின் சொல்லாகச் சொல்லப்படும் போது
2.வாயுவாகப் பல நிலைகளுக்குத் தாவிச் சென்று அவன் சுவாசிக்கும் உடலுக்குள் சென்று
2.சீதாவுக்கு ஊக்கம் ஊட்டி… இராமனின் உணர்வுகளை ஊட்டி… அதே உணர்ச்சியின் உணர்வுகளை
3.சுக்ரீவன் (துருவ நட்சத்திரம்) எதைச் செய்தானோ அதன் உணர்வின் தன்மை இங்கு ஊட்டப்படும் பொழுது
4.வாயு புத்திரனாக உள்ளே சென்று வலுவான உணர்வுகளை ஊட்டி மகிழ்ச்சி உருவாக்குவதாகக் காட்டுகின்றார்கள்.

“தானாய் ஒளிரும்” ஜோதி நிலை பெறுங்கள்

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்துப் புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது…
3.நாமாகப் பிறவிக்கு வரவில்லை… ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நாம் நல்லதே செய்கின்றோம்…! சிறிது நோய் வந்துவிட்டால் நாம் என்ன செய்கின்றோம்…?

ஐயோ என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… உடம்பெல்லாம் வலிக்கின்றதே…! நான் நல்லது செய்தேனே ஆண்டவா… நீ என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! அட தெய்வமே… இப்படிச் செய்கின்றாயே…! பிள்ளையாரப்பா… நீ இப்படிச் செய்கின்றாயே… விநாயகா… கணபதி இப்படிச் செய்கின்றாயே…! வஜ்ர கணபதி..! உனக்கு எல்லாம் செய்தேனே உன்னை வணங்காத நாள் இல்லையே என்று இப்படிப் புலம்புகின்றோம்.

அதாவது நல்ல பதார்த்தத்தை வைத்துச் சுவையாகச் செய்த பின் அதனுடன் விஷத்தைக் கலந்தே நாம் செய்கின்றோம்.

இராமயாணம் மகாபாரதம் கந்த புராணம் சிவபுராணம் இவை எல்லாம் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள்… அது மெய்…!

இதை எல்லாம் சாங்கியங்களாகக் காட்டப்பட்டு ஞானிகள் கொடுத்த சாஸ்திரத்தையே மறைத்து விட்டு மனிதன் போகும் பாதையையே இருள் சூழச் செய்துவிட்டார்கள்.

விஞ்ஞான உலகில் இந்தப் பிரபஞ்சத்தின் நிலைகளிலே விஷத் தன்மைகள் கலந்து நம் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது…!

விஞ்ஞானி அணுவைப் பிளந்தான்… அணுக்கதிரியக்கங்களைப் பூமியில் பரப்பினான் பூமியின் ஈர்ப்பிற்குள் (நடு மையம்) வெப்பத் தணலாகக் கூடி கொதிகலனாக மாறும் நிலை அடைந்து விட்டது.

அதே சமயத்தில் பூமிக்கு வெளியே பிரபஞ்சத்திலும் இதைத் தூவினார்கள். சூரியனின் கதிர் அலைகள் வரும்போது இதே கதிரியக்கச் சக்திகளைத் தாங்கி மீண்டும் பூமிக்குள் வரப்படும்போது
1.நஞ்சினை ஒடுக்கிடும் ஓசோன் திரையைப் பிளந்து விட்டது.
2.அதனால் நம் பூமி நஞ்சை வடிகட்டும் தன்மையை இழந்து மனிதனுடைய சிந்தனைகளையும் இழக்கச் செய்து கொண்டுள்ளது.

ஒரு விஷம் கொண்ட உயிரினம் நம்மைத் தீண்டினால் நல்ல நினைவை நாம் இழப்பது போன்று “மனிதன் என்ற நிலையையே” இழந்திடும் நிலைகளில் வந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞான அறிவு அபரிதமாக வளர்ந்ததனால் மனிதன் என்ற சிந்தனையற்று இருள் சூழ்ந்த நிலைகளாகப் போய்க் கொண்டிருக்கின்றது இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.எப்பகுதியிலும்… எந்த நேரத்திலும்… எந்த நிலையிலும்… இனி எதுவும் நடக்கலாம்.
2.ஏனென்றால் இன பேதம் மன பேதம் மொழி பேதம் என்ற நிலைகளில்
3.உலகம் எங்கும் பகைமை உணர்ச்சிகள் பரவிக் கொண்டிருக்கின்றது.

மதத்திற்குள் மதம்… மதத்திற்குள் இனம்… இனத்திற்குள் இனம்… என்ற நிலைகளில் சிதறுண்டு இன்று தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்த உலகம் முழுவதும் படர வேண்டும் என்ற சிந்தனைகளை நாம் செலுத்த வேண்டும்.

அந்த ஞானிகள் காட்டிய நிலைகள் நமக்குள் நாம் பெருக்க வேண்டும். நமக்குள் விளைய வைத்த ஞானிகளின் உணர்வலைகளைக் காற்று மண்டலத்தில் பரப்பச் செய்து தீமையை விளைவிக்கும் அந்த நிலைகளைப் பிளக்க வேண்டும்.

நம் ஆன்மாவில் மட்டுமல்ல… இந்தப் பரமான பூமியில் இருக்கும் பரமாத்மாவில் உள்ள தீமைகளையும் பிளக்க வேண்டும்…!

1.அதைப் பிளக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு மனிதனும் அந்த மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் வளர்க்க வேண்டும்
2.அந்த மகரிஷியின் உணர்வின் சொல்லாக… செயலாக.. எல்லாவற்றையும் மாற்றுதல் வேண்டும்.

தீமை செய்தோரைப் பதிவு செய்து மீண்டும் அதை நினைவில் கொண்டு வரும்போது தீமை செய்யும் உணர்வுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

1.ஒருவன் தவறு செய்தான்… எதிர்த்துப் பேசிவிட்டான்…! என்றால் பழி தீர்க்கும் உணர்வுடனே நாம் செல்கின்றோம்.
2.அதே பழி தீர்க்கும் உணர்வு நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

ஆகவே உங்களுக்குள் வரும் இந்தத் தீமைகளை அகற்றிடும் நிலையாக ஞானிகளின் அருள் உணர்வுகளை இந்த உபதேசத்தின் வாயிலாகக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்டால் இதையே நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இதைத் தான் ஒவ்வொரு ஆலயத்திலும் ஞானிகள் காட்டியுள்ளனர். ஆலயத்திற்குச் செல்லும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற இந்த முறைப்படி நீங்கள் வணங்கிப் பாருங்கள்.
1.உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கி
2.உங்களை ஞானியாக ஆக்கும்…!

அதற்குத் தான் இந்த விநாயகத் தத்துவமே…!

பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் அசுர உணர்வுகளை “உங்கள் மூச்சலைகளால் துரத்தியடிக்க வேண்டும்…”

யாம் (ஞானகுரு) சொல்லக்கூடிய உபதேசங்களை… புரியவில்லை என்று விட்டு விடாதீர்கள். ஏனென்றால்
1.நான் படித்து வந்ததவன் அல்ல
2.குரு சொன்னதைப் பதித்து வந்தவன்
3.பதிந்த நிலைகளை எடுத்தவன்
4.எடுத்த உண்மைகளை உணர்ந்தறிந்து அதை நீங்களும் பெற வேண்டும் என்பதற்கே உபதேசிக்கின்றேன்.

இது உங்களுக்குள் பதிவானால்… உங்கள் நினைவு மகரிஷிகள் பால் சென்று… இருளை நீக்கி ஒளியான உணர்வைப் பெறும் தகுதியை நீங்கள் பெற முடியும்

உங்கள் பார்வை பிறருடைய தீமைகளை… நோய்களை நீக்கக்கூடிய சக்தியாகத் தான் வர வேண்டும். ஆனால்
1.கோவிலுக்குச் சென்று தெய்வத்தைப் பார்த்து “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…” என்று எண்ணுவது போல்
2.என்னையும் நீங்கள் அப்படி எண்ணி… “சாமி என்னைச் சோதிக்கிறார்…” என்று எண்ணுவதற்கு அல்ல
3.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் “சக்திமானாக” நீங்கள் மாற வேண்டும்
4.இந்தப் பூமியில் படர்ந்துள்ள நச்சுத் தன்மைகளை உங்கள் மூச்சலைகளால் துரத்த வேண்டும் அல்லது அதை அடக்க வேண்டும்
3.உங்கள் உடலில் மட்டுமல்ல…! (எல்லாம் சேர்த்துத் தான்…!

அதைப் பெறச் செய்வதற்கு தான் எல்லோருக்கும் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் நீங்கள் எல்லாம் தீமைகளை நீக்கும் வல்லுனர்களாக ஆகிவிட்டால்… இந்தப் பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தீமைகளையும்… நாட்டுக்கு நாடு போர் என்று பரவி வரும் அசுர உணர்வுகளையும்… நிச்சயம் உங்கள் மூச்சலைகள் அடக்கும்… நல்ல உணர்வுகளை உருவாக்கும்.

அதே சமயத்தில் கருவிலே வளரும் குழந்தைகளுக்கு அருள் உணர்வின் தன்மையைப் பிறப்பிலிருந்தே பெறச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற பேரருளை எல்லாம் கருவிலே வளரும் சிசுக்கள் பெற வேண்டும்.
2.அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்த துருவனின் ஆற்றலை குழந்தை பெற வேண்டும்
3.அணுவின் இயக்கத்தை உணர்ந்த அகஸ்தியனின் உணர்வு கருவில் வளரும் சிசுக்கள் பெற வேண்டும் என்று
4.அந்தந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஏங்கிப் பெற்றால் குழந்தையின் கருவிலேயே அந்த சக்தி உருவாகின்றது.

இப்போது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் அந்தப் பதிவு உண்டு. இந்த நினைவு கொண்டு கர்ப்பமுற்ற தாய் இதை எண்ணி எடுக்க வேண்டும். காற்றிலே அந்தச் சக்திகள் உண்டு… அதை எடுக்கும் போது துருவ நட்சத்திரத்திற்கே உங்களை எட்டும்படிச் செய்யும்.

அகஸ்தியன் எப்படி உயர்ந்த சக்திகளைப் பெற்றானோ அதைப் போன்று கருவில் வளரும் குழந்தைகளை ரிஷிகளாக நாம் உருவாக்க வேண்டும். இனி வரக்கூடிய தீமைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக உங்கள் மூச்சு கருவில் வளரும் குழந்தைகளுக்கு இதைப் பெறக்கூடிய தகுதியாக வருகிறது.

விஞ்ஞான அறிவால் காற்று மண்டலமே விஷத்தன்மையாக மாறியதை அந்த ஞானிகள் வளர்ந்த பின் “இதே உணர்வுகள் தாவர இனங்களுக்குப் போய்ச் சேரும்…”

நறுமணம் வீசும் ரோஜாப்பூவின் உணர்வுகள் பட்டபின் நாம் நுகர்ந்தால் நறுமணங்களாக மாறுகின்றது. இதைப் போன்று மனித உணர்வுகள் விளைந்து வெளிப்படும் பொழுது மற்ற தாவர இனங்களுடன் சேர்க்கப்பட்டு பழையது மறைந்து மீண்டும் புது விதமான நல்ல தாவர இனங்களாக உருவாகும்.

அப்படி உருவான பின் பல உணர்வுகள் இன்று காற்றிலே படர்ந்து இருப்பினும் புதிதாக நம்மால் உருவாக்கப்படக்கூடிய இந்த தாவர இனங்கள் அந்தக் கசடுகளைக் கவர்ந்து இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தும்.

பின் ஞானிகள் என்று நாம் சொல்லும் கருவில் வளரக்கூடிய சிசுக்கள் ஞானக் குழந்தைகளாக உருவானபின் உலகைக் காக்கும் சக்தியாக வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தில் மாசுபட்ட காற்று மண்டலத்தை நல்லதாக மாற்றும் உணர்வுகள் பெற்ற பின்
1.நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றோமோ
2.அதன் உணர்வின் அருள் வழியில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலைபெற்ற உணர்வுகளுக்கு
3.இங்கிருந்து சென்று ஒளியின் உணர்வாக அங்கே மீண்டும் பெருகும் (சப்தரிஷி மண்டலம்).

இதை எல்லாம் உங்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

வாழ்வது சிறிது காலமே… அதற்குள் நாம் எடுப்பது எத்தனையோ அகண்ட அண்டங்கள் வாழும் அந்தச் சக்திவாய்ந்த உணர்வுகள். அத்தகைய ஆற்றலைத் தான் பதிவு செய்கிறேன்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் நாம் பெருக்கும் பேரின்ப நிலையை… ஏகாந்த நிலை அடையும் பருவத்தைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிப்பது.

புத்தர் ஞானம் பெற்றதன் பூர்வாங்கம்

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன…?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது…?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன…?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே…
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து… ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து… உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று… கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்…!” என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்… “கோவிந்தா…!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்… காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்…?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்…!

கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்

உலக ரீதியிலே இன்று விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு விஷக் கதிரியக்கங்களால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயுதங்களையும் குண்டுகளையும் ஒவ்வொரு நாட்டிலும் சேமித்து வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகள் போர் தொடுக்க வருகின்றார்கள் என்றால் இதை வெடிக்கச் செய்து அவனை அழித்து விடுகின்றான். என்னை அழித்தான் என்றால் அவனும் அழிந்து விடுவான் என்று ஒவ்வொரு நாட்டிலும் முகப்புகளில் இப்படி வைத்துள்ளார்கள். நம் நாட்டிலும் கூட உண்டு.

காரணம்…
1.விஷமான குண்டுகளை வெடிக்கச் செய்துவிட்டால் இங்கே வந்து அவனும் ஆட்சி புரிய முடியாது என்று (எல்லாம் சூனியமாகும்)
2.இதே மாதிரி ஒவ்வொரு நாட்டிலும் மனிதன் கடைசி முதிர்ந்த நிலைகள் கொண்டு பிரபஞ்சத்தையே அழித்திடும் நிலைக்கு வந்து விட்டனர்.
3.நிச்சயம் இந்த உலகம் அசுர உணர்வுகளுக்குள் சிக்கும்… மனிதன் அசுரனாக மாறுகின்றான்… அரக்கனாக மாறுகின்றான்…!

பாம்பினங்கள் தன் இனத்தையே உணவாக எப்படி உட்கொள்கிறதோ அதே போல் மனிதனுக்கு மனிதன் விஷம் கொண்ட உணர்வுகளாக தன் இனத்தையே உட்கொள்ளும் நிலை வந்துவிட்ட்து.

ஆடு மாடுகளைக் கொன்று தின்றான். இப்பொழுது மனிதனையே கொன்று தின்றால் நல்லது என்று நிலைக்கு வந்து விட்டார்கள். நீக்ரோ நாடுகள் அனைத்திலுமே மனிதப் பிரேதத்தை புதைத்தால் அது நல்ல சரீரமாக இருந்தால் தோண்டி எடுத்து சமைத்து உணவாக உட்கொண்டு கொண்டிருக்கின்றார்கள்.

மண்ணுக்குத் தான் போகின்றது நான் சாப்பிட்டால் என்ன…? என்று இப்படி நியாயத்தை கற்பித்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

நம் பூமியின் ஆரம்ப நிலை வளர்ச்சியில் அதனுடைய உருவம் நீள வடிவில் பாறைகளாக கூடி வளரப்படும் பொழுது கவிழ்ந்து விடும் சூழ்நிலை வந்தது…!

ஒரு பக்கம் எடை கூடினால் திசை மாறும். அப்படிப்பட்ட திசை மாற்றங்கள் நம் பூமியில் ஏராளம் நடந்துள்ளது. பண்டைய கால நிலைகளில் கடல்களிலும் திசை மாறிய நிலைகள் உண்டு.

அப்படிக் கடல் மாற்றமடையும் போதுதான்… அங்கே வாழ்ந்த உயிரினங்கள் தரை வாழ் நிலைகளுக்கு வந்தது. பல பல உயிரினங்களாக மிருகங்களாக இங்கே உருப்பெற்றது.

அதே சமயத்தில் கடலுக்குள் மறைந்த நிலைகள் அங்கே பல நிலங்களும் உண்டு. பூமியில் பல காலங்களில் திசை மாறியது உண்டு.
1.இப்போது. இன்னொரு திசை மாறும் நிலை வந்து கொண்டிருக்கின்றது.
2.சர்வத்தையும் கூழாக மாற்றும் தன்மை வந்து கொண்டுள்ளது.
3.இந்தப் பிரபஞ்சம் பூராவுமே சிதைந்து போகும் நிலை வருகின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் பிற மண்டலத்தின் விஷத்தின் தன்மைகளை எடுத்துக் கொடுத்ததால் தான் நம் பிரபஞ்சமே உருவாகும் நிலைக்கு முதலில் வந்தது.

இருந்தாலும் இப்போது அவைகள் அனைத்தும் நம் சூரியனைப் போன்று தனித் தனிப் பிரபஞ்சமாக உருவாக்கும் நிலையாக உருமாறிக் கொண்டுள்ளது.

அப்போது சூரியனுக்கு உணவில்லை என்கிற போது சூரியனும் பூமியும் கூழாகி விட்டால் சிதைந்துவிடும்..!

இதற்கு முன்… ஒரு சமயம் வேறொரு பிரபஞ்சத்தைச் சேர்ந்த ஒரு சிதைந்த கோள் நம் பிரபஞ்சத்தின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றது என்று சொல்லியிருந்தேன் (ஞானகுரு).

ஆனால் பிரபஞ்சத்திற்குள் சுழன்ற நிலைகளில் இருக்கும் போது முட்டை வடிவில் இருக்கும்… சிதைவதில்லை. ஆனால் இன்னொரு மண்டலத்திற்குள் வரப்படும் பொழுது அமிலமாக வருகின்றது.

நாலைந்து துணுக்குகளாக வருகின்றது. நம் பூமி மீது நேரடியாக வந்து தாக்கி இருந்தால் பூமியே சிதைந்து இருக்கும்.

40 வருடத்திற்கு முன்பு வந்து கொண்டிருக்கின்றது என்று சொன்னோம் பின்னாடி விஞ்ஞானிகளும் அதைத் தெரியப்படுத்தினார்கள்.
1.அந்த உடைந்த பாகங்கள் வியாழன் கோளில் விழுந்து அமிழ்ந்து விட்டது.
2.அது போல் நம் பிரபஞ்சமும் மாறும் நேரம் வந்துவிட்டது.

பூமியோ மற்ற மண்டலங்களாக எதுவாக இருந்தாலும் எல்லாமே ஆவியால் உருவானது தான். ஆனால் கடைசியில் கரைந்து கூழாக மாறும் பொழுது சூரியனின் சுழற்சி வேகம் கூடி… அதை ஆவியாக மாற்றுகின்றது.

தன் ஈர்ப்பில் உள்ள அனைத்தையும் ஆவியாக மாற்றச் செய்த பின்… 27 நட்சத்திரங்கள் தனித் தனி பிரபஞ்சமாக மாறுகிறது அல்லவா… அதற்கு இதை எல்லாம் உணவாகக் கொடுத்துவிடும்.

சூரியனும் பிரபஞ்சத்தின் நிலைகள் அந்தச் சுழலில் சிக்கி ஆவியாக மாறிவிடும். விஞ்ஞானிகள் ஒரு காலம் இதை நிச்சயம் சொல்வார்கள்.

1.இது எல்லாம் இயற்கையின் நிலைகள் எப்படி மாறுகின்றது…? மாறப் போகின்றது…? என்று குருநாதர் தெளிவாக எனக்குக் கூறியிருந்தார்
2.சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் யாம் இதைச் சொல்வதுண்டு… கேட்போர் யாரும் இல்லை…!
3.ஆக கடைசிக் கட்டத்தில் தான் நாம் இருக்கின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தான் நஞ்சை வென்றான்… உணர்வை ஒளியாக மாற்றினான்…!

கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று ஒன்றி வாழ்ந்தார்கள்… இரு உயிரும் ஒன்றாகி ஒளியின் உணர்வாக உருவாக்கினார்கள்.

துருவத்தின் எல்லையை நோக்கி அதன் வழி வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றினார்கள்… அந்த எல்லையிலேயே துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

அந்த அகஸ்தியன் உணர்வை எந்நாட்டவரும் பெறலாம் என்று அக்காலங்களில் இதைச் சொல்லி உள்ளார்கள்.
1.காரணம் திசை மாறிய நம் பூமியை அன்று சமப்படுத்தியவன் அகஸ்தியன் தான்.
2.அவன் வழி சென்றால் வரும் மாற்றத்திலிருந்து நாம் தப்பலாம்…!

உங்கள் அனைவரையும் எங்களுடன் இணைக்கவே போதனை கொடுக்கின்றோம்

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்…!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒருவருக்கு நாம் உதவி செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மால் அந்த உதவி பெற்ற மனிதனோ உதவி செய்ததற்குண்டான நன்றியைக் கடைசியில் (உடலை விட்டுப் பிரியும் போது) எண்ணுகின்றான். பிரமாதமாக… எனக்கு மகராசனாக உதவி செய்தார் என்று…!

அந்த உடலை விட்டு நீங்கும் போது… உதவி செய்தவரை எண்ணி அந்த உணர்வின் வலுக் கொண்டால் உதவி செய்த நம் உடலுக்குள் அந்த ஆன்மா வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்து விட்டால் அவன் பெற்ற துயரமோ துன்பமோ நோயோ அவை அனைத்தும் நம் உடலுக்குள் இயக்கத் தொடங்குகின்றது. நம்மையும் அது நலிவடையச் செய்துவிடும்.

இதைப்போன்ற நிலைகளை நாம் தடுக்க வேண்டுமென்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நாம் எண்ணத்தால் எண்ணுவது அனைத்தும் நமக்குள் ஜீவ அணுக்களாக மாறுகின்றது. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் பற்றுடன் அந்த ஆன்மா நமக்குள் ஜீவான்மாவாக வந்து அவர் படும் துயரத்தை நமக்குள் உருப் பெறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நிலைகளை அடக்க வேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
2.நம்மைப் பார்ப்பவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.மலரைப் போல் மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர்கள் பெற வேண்டும்
4.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லா நலமும் பெற வேண்டும்.
5.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
6.அங்கே பணி செய்பவர்களெல்லாம் சகோதர உணர்வுகள் பெற வேண்டும்.
7.எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்
8.நாங்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணி
9.நமக்குள் பகைமையற்ற உணர்வினை வளர்க்க வேண்டும்.

இது போன்ற நல் உணர்வுகளை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அதைக் கணங்களுக்கு எல்லாம் அதிபதியாக்க வேண்டும். அதாவது பிறர் தீமையை அகற்றும் அந்த உணர்வின் எண்ணத்தைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும். அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் அதிபதியாக்க வேண்டும்.

சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்… சந்தர்ப்பம்…!

நாம் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம்…! எத்தனையோ வேதனைகள்; எத்தனையோ வெறுப்புகள்; எத்தனையோ சங்கடங்கள்; இதைப் போன்ற உணர்வுகளை அறியாமலே நமக்குள் நாம் பதியச் செய்து விடுகின்றோம்.

இது இரத்தத்தில் கலந்து அணுக்களாக விளைகிறது. விளைந்த அணுக்கள் அதனதன் உணர்வுகளைக் காற்றிலிருந்து பிரித்து உணவாக எடுத்து உடலிலே வளரத் தொடங்குகின்றது.

சூரியன் கவர்ந்து வைத்திருக்கக்கூடிய செடி கொடிகளின் சத்துக்கள் பூமியின் காற்று மண்டலத்தில் படரப்படும் போது அதே இனமான அந்த உணர்வைக் கவரக்கூடிய செடி கொடிகளின் வித்துகள் அதனதன் சத்தைக் கவர்ந்து கொள்வது போன்று
1.எந்த உணர்வின் தன்மை நமக்குள் எடுத்து வினையாக (அணுக்களாக) உருவானதோ
2.அதனதன் உணர்வை எடுத்து நம்மை அதன் வழிக்கு இயக்கி விடுகின்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி/ஒளிபரப்பாகும் உணர்வலைகளை நாம் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அதே அலைவரிசையில் டிவியை இயக்கினால் அதைக் கவர்ந்து காட்சியாகவும் இசையாகவும் காட்டுகின்றது.

அதைப் போன்று தான்
1.திட்டியவனை எண்ணிய உடனே நமக்குள் அந்த வேகமும் துடிப்பும் கொண்டு கோபம் வருகின்றது
2.வீட்டிலே குழந்தைகளாக இருந்தாலும் கோபமாகப் பேசி விடுகின்றோம்.
3.அந்தக் கோபத்தினால் நம் வியாபாரத்தையும் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

ஆக… பதிவான உணர்வுகள் நம்மை மீண்டும் இவ்வாறு இயக்குகின்றது… நம்மை அறியாமலே பல தீங்குகளைச் செய்யச் செய்கின்றது.

“சந்தர்ப்பம் தான் இது எல்லாம்…!”

எதன் வலு அதிகமாகின்றதோ நாம் சோர்வடையப்படும் பொழுது நம் சிந்தனைகள் மாறுகின்றது. விஷம் என்ற நிலை வரும் போது நல்லதுக்காக ஏங்கும் பொழுது நமக்கு இன்னும் கோபம் வருகிறது.

அந்தக் கோபத்தால் சிந்தனை இழந்து… தன்னையோ அல்லது மற்றதையோ அழித்திடும் உணர்வே வருகின்றது. ஏனென்றால் அதிக வேதனையாகும் பொழுது முழுமையாக நினைவிழந்து விடுகின்றோம்

நாம் தவறு செய்தோமா…? எல்லாமே சந்தர்ப்பம் தான்… சந்தர்ப்பத்தால் தான் இன்று இயக்கப்பட்டு வருகின்றோம்…!.

ஆனால் நல்ல சந்தர்ப்பத்தை மனிதனால் (நம்மால்) ஏற்படுத்த முடியும்… எப்படி…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக இருக்கும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நமக்குள் நாம் உருவாக்க முடியும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க முடியும்

சூரியனின் இயக்கங்கள் அது எதை எதைக் கவர்கின்றதோ சந்தர்ப்பத்தால் மோதும் பொழுது மரம் செடி கொடிகள் (இனங்கள்) மாறுகின்றது.

காட்டிலே ஒரு முயல் நரியைச் சந்திக்க நேர்ந்தால் அதனின் சந்தர்ப்பம் அது அதற்கு இரையாகிறது. ஆனாலும் முயல் தான் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு நரியின் வலுவான உணர்வை எடுக்கின்றது.

இருந்தாலும் நரி முயலை அடித்துக் கொல்கிறது உடலை விட்டுப் பிரிந்த பின் முயலின் ஆன்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியின் உருவமாக மாறுகின்றது.

முயலாக இருப்பது அடுத்து நரியாக மாறுவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…!”

இன்று நாம் ஒரு தீமையைச் சந்திக்க நேரும்போது அதை நுகர்ந்துவிடுகிறோம். நமக்குள் தீய வினையாக அது உருவாகிவிடுகின்றது… ஆக தீய வினைகளாக உருவாவது “இதுவும் சந்தர்ப்பம் தான்…”

சந்தர்ப்பத்தால் நாம் பல நல்லதுகளைச் செய்தாலும் தீமையின் வலுவைச் சுவாசிக்கப்படும் பொழுது நமக்குள் இருக்கும் நல்லவைகள் மறைகின்றது… உடலில் நோய்கள் வருகின்றது.
1.இப்படி மாறக்கூடிய “இந்தச் சந்தர்ப்பத்தை” நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?
2.நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

காலையில் நம் உடல் அழுக்கைப் போக்கித் துணியில் உள்ள அழுக்கைப் போக்கினாலும் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வுகளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி… நம் ஆன்மாவில் பட்ட அழுக்கைப் போக்க வேண்டும்..

பல கோடிச் சரீரங்களில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து மனிதனாக உருவாக்கியது ஆதிமூலம் என்ற நம் உயிர்தான்…! இந்தப் பிள்ளை யார் நீ சிந்தித்துப் பார் என்று நம்மைச் சிந்திக்கும்படி செய்வதற்குத் தான் ஆற்றங்கரையோரம் எல்லாம் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

காரணம்… இயற்கையின் பேருண்மைகளை அறிந்தவன் அன்றைய அகஸ்தியன். அகண்ட அண்டத்தையும் அவன் அறிந்தான்… நம் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்றான்.. நஞ்சினை ஒளியாக மாற்றிக் கொண்டான்…
1.தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்தான்.
2.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்தான்
3.இரு உயிரும் ஒன்றாக ஆனது… இரு உணர்வும் ஒன்றாக ஆனது
4.துருவத்தை எல்லையாக வைத்து அதில் வரக்கூடிய நஞ்சினைக் ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

இப்படி ஆதியிலே தோன்றிய (நம்மைப் போன்ற மனிதனான) அந்த அகஸ்தியன் விண் சென்றபின் அதே (தன்) மனித இனத்திற்கு அவன் பெற்ற வழியைப் பெறுவதற்காக… விநாயகர் தத்துவம் என்ற நிலையில் யானைத் தலையைப் போட்டு மனித உடலைக் காட்டி
1.இந்த வாழ்க்கையில் நாம் எதைப் பெற வேண்டும்… எந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்…? என்று
2.விநாயகரைப் பார்க்கும் போதெல்லாம் அதை எண்ணி எடுக்கும்படி செய்தான்.

சந்தர்ப்பத்தால் தான் அகஸ்தியன் உயர்ந்த சக்திகளை எடுத்தான்.. ஒளி உடலைப் பெற்றான். அதைப் போன்று தான்
1.இப்பொழுது உங்களுடைய சந்தர்ப்பம் உயர்ந்த கருத்துக்களைக் கேட்கின்றீர்கள்.
2.இந்த உபதேசத்தைப் படிப்பது “இதுவும் சந்தர்ப்பம்தான்…!”

இந்த வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திப்பது… குடும்பமாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி உறவினர்களாக இருந்தாலும் சரி மத இனங்களாக இருந்தாலும் சரி அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் சரி… அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நம்மை அறியாமலே எத்தனையோ வழிகளில் பகைமை வந்து சேர்கின்றது.

ஆனால் நம்முடைய இந்தச் சந்தர்ப்பம்…
1.மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளை நுகர்ந்து நம்மை அறியாமல் இயக்கக்கூடிய இருளை அகற்றுவது தான்
2.இது சிறுகச் சிறுக நமக்குள் முழுமையாகப்படும் பொழுது மகரிஷிகள் உணர்வினை நமக்குள் உருவாக்கும் சந்தர்ப்பமாக மாறுகிறது.
3.இப்படி உருவாக்கி விட்டால் தீமையை நீக்கும் சக்தியை நாம் பெறுகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பதிலும் நாம் பெறப்படும் பொழுது… எந்த நேரத்தில் எத்தகைய தீமை வந்தாலும் வலிமை கொண்டு அதை மாற்றி பிறவி இல்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

நாம் உருவாக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்… அகஸ்தியன் எங்கே சென்றானோ… நிச்சயம் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் எனக்குத் துரோகம் செய்தான்… தொல்லை கொடுத்தான்… அவன் உருப்படுவானா…! என்ற பகைமையான உணர்வை எடுத்தால் அவன் உடலுக்குள் தான் நாம் செல்ல வேண்டி வரும்.

எந்தப் பக்தியால் தெய்வத்தை வணங்கினோமோ உடலை விட்டுச் சென்ற பின் மந்திரங்களைச் சொல்லப்படும் பொழுது அவனுக்கு அடிமையாகி விடுகின்றோம்.

காலத்தால் ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இப்படித் தான் மாறிவிட்டது. ஆகையினால்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிப்பதும் அருள் உணர்வைப் பதிவாக்குவதும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிர் வழி சுவாசித்து… எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று… கண்ணின் நினைவை புருவ மத்திக்குக் கொண்டு வந்து அதன் வழி ஈர்த்து உடலுக்குள் செலுத்தி இரத்தங்களில் அதை கலக்கச் செய்யப்படும் பொழுது எல்லா அணுக்களிலும் இந்த வலுப்பெறுகின்றது.

காலையிலிருந்து இரவு வரை நாம் பார்த்த எத்தனையோ விதமான தீமையான உணர்வுகளை உடலுக்குள் விளையாதபடி தடுத்து
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் நிலைநிறுத்தி
2.வரும் தீமைகளை அனாதையாக்க முடியும்.

“நான்… செய்வது தான் சரி…!” என்ற எண்ணம் இருந்தால் (ஞானத்தின்) வளர்ச்சி இருக்காது

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது.

தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.
1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை…!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும்… அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலைகொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும்.

தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ்இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாது வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

“சித்ரா பௌர்ணமி…” அது எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போல் நம் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிட வேண்டும்.

ஆனால் பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசித்தாலும் அதற்கடுத்து நாள் மற்ற கோள்களின் தன்மைகள் சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்களை மறைத்தால் அந்த நிழல் பட்டு ஒளி மங்கத் தொடங்குகின்றது.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று அறிந்திடும் அறிவாக கார்த்திகேயா என்று நாம் அறிவின் தெளிவாக இன்று இருக்கின்றோம்.

ஆனால் ஒரு மனிதன் வேதனைப்படும்படியான சொல்களைச் சொல்லும்போது அந்த உணர்வை நுகர்ந்தால் நம் நல்லறிவு இங்கே இருண்டு விடுகிறது.

நல்ல குணத்துடன் தான் நாம் இருக்கின்றோம். அந்த நல்ல குணம் கொண்டு தான் வேதனைப்படுபவரை உற்றுப் பார்க்கின்றோம்.
1.ஆனால் நாம் நுகரும் வேதனைப்படும் உணர்வுகள்
2.நல்ல அறிவை மேலே மூடுகின்றது திரை போன்று…!

ஏனென்றால் எந்தக் குணத்தைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வின் தன்மை இங்கே உண்டு. அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் தான் காட்டுகின்றது. ஏனென்றால் முதலில் கண்கள் வழியாகத் தான் நமக்குள் எதுவுமே பதிவாகின்றது.

கண்ணால் பதிவாகும்போது…
1.“ஒரு தவறு” என்று இருந்தால் அந்த உணர்வின் தன்மையை நாம் நுகரும்போது எண்ணமாகின்றது.
2.அதாவது கண்களால் பதிவானது உயிரிலே நுகரும் போது அந்த எண்ணங்கள் வருகின்றது.
3.ஆனால் பதிவானதை எண்ணும்போது மீண்டும் கண்ணுக்கே வருகின்றது (சொல்வது அர்த்தமாகிறதல்லவா).

“எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணும்போது அந்த மனிதனின் நினைவு கண்ணுக்கு (திரைப்படம் போல்) வருகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் “தப்பு செய்திருக்கின்றான்…” என்றால் கண்ணிலே அவனைப் பார்த்தவுடனே… நமக்குள் பதிவான இந்த எண்ணங்கள் “இவன் எனக்குத் துரோகம் செய்தான் பாவி…!” என்ற வெறுப்பின் உணர்வை ஊட்டுகின்றது.

1.அது தான் கண்ணால் பதிவு செய்வதும்
2.கண்ணால் பதிவானதை மீண்டும் எண்ணும் போது எண்ணத்தால் நம்மை இயக்குவது என்பது
3.(அதாவது அந்த எண்ணம் தான் நம்மை அடுத்து இயக்குகிறது)
4.எண்ணம் என்பது உணர்வுகள் உணர்ச்சிகள் தூண்டுவது.

ஆகவே புறத்தில் இருப்பதை நாம் நுகர்ந்த பின் இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் தீமைகளாக உருவாகாதபடி துருவ தியானத்தில் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு நிலாவாக இருக்கும் சந்திரன் அதற்கடுத்து மற்ற கோள்களின் மறைவு வர…வர வர…வர பௌர்ணமி சுருங்கிச் சுருங்கிக் கடைசியில் அது சிறிதாகி விடுகின்றது.

இதைப் போல் தான் நம்முடைய மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பழி தீர்த்தல் பழி வாங்குதல் என்ற இந்த உணர்வுகள் வந்து விட்டால் நம் நல்ல குணங்கள் முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது.

ஆனால் உயிரின் உணர்வுடைய கடைசித் தொக்குகள் உண்டு. அதாவது உயிரணு விண்ணிலிருந்து பூமிக்குள் வந்து தாவர இனச் சத்தைக் கவர்ந்து ஆரம்பத்தில் எப்படிப் புழுவானதோ அதே போல நல்ல குணங்கள் தேய்ந்து விட்டால் உயிரின் தன்மையில் இருண்டுவிடும்.

1.அப்படி இருண்டு விட்டால் விஷம் என்ற நிலைகள் ஆகி
2.அந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டே அடுத்த உடல் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.

ஆகவே மனிதனாக இருக்கும் நாம் மீண்டும் தேய்பிறையாகக் கூடாது. அருள் ஒளி பெற்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வளர்த்து இனி என்றுமே ஏகாந்த நிலை என்ற பிறவி இல்லா நிலை பெறுவதே இந்த மனித உடலின் முழுமை…!

நான் யார்…? நம் உடல் என்று அல்ல…! உயிரால் வளர்க்கப்பட்டது தான் மனிதனின் உடல்.

1.உயிருடன் (ஒன்றி) இருக்கப்படும்போது நான் என்று வருகின்றது.
2.நான் நானாக… அந்த நானாக (உயிராக) வேண்டும்.
3.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால்தான் “நான் நானாகின்றேன்…!”
4.உயிர் நம்மை இயக்கும் போது நானாகின்றது
5.நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.

ஆகவே உயிரின் உணர்வின் ஒளி எவ்வாறோ அதனின் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்த்தல் வேண்டும்

இன்றைய மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் நீங்கள் தீமைகளில் இருந்து விடுபடுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

ஆட்சியும் நிர்வாகமும் அரச வழி தான்… ஞானிகள் வழி அல்ல…!

குரு வழியில் வாயை மூடி மௌனம் சாதித்து… வலுக் கொண்ட உணர்வுகளைச் சுவாசித்து வேதத்தின் தன்மை கொண்டு அவர்கள் எடுத்துக் கொண்ட சில முறைகள் “ஜைன மதத்தில்” உண்டு.

ஜைன மதங்களுக்கும் புத்த மதங்களுக்கும்
1.குரு வழியில் சுட்டிக் காட்டப்படுவது மலைப்பகுதியில் பாங்காகும் துருவ நட்சத்திரம்.
2.குளிர் பிரதேசமாக இருந்தாலும் காலையில் அந்தப் பகுதியை உற்று நோக்கும்படி செய்து
3.துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைத் தனக்குள் பெறச் செய்தனர்.
4.அந்த அகஸ்தியன் துருவன் ஆகித் துருவ நட்சத்திரம் ஆன உணர்வின் தன்மைகளை நுகரப்படும் பொழுது அவன் வழியைப் பின்பற்றுகின்றனர்.

அகஸ்தியனைப் பின்பற்றினாலும்… மதத்தின் அடிப்படையில் குருக்களாக வருகின்றனர். அதை எடுத்துக் கொண்டாலும் உடலின் இச்சைக்கு அதைச் செயல்படுத்தி… தலை கீழாக மாற்றி அதர்வண வேதம் என்று கொண்டு சென்று விட்டார்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனக்குள் எடுத்து உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக ஆகும் நிலை ஜைன மதத்திலும் புத்த மதத்திலும் கொண்டு வந்தாலும் அதிலே சில கட்டுப்பாடுகள் உண்டு.

அந்த மதத்தின் தன்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தலையை மொட்டை அடிக்க வேண்டும். மொட்டை அடிக்க வேண்டுமென்றாலும் தலை முடிகளை வேதனைப்படுத்தித் தான் நீக்குவார்கள். கையிலே தான் பிடுங்குவார்கள்… பல இம்சைகள் வரும். அவன் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

புத்த துறவிகள் “உலக பந்தம் எனக்கு வேண்டாம்…” என்று சென்றாலும் தலை முடியைப் பிடுங்குவார்கள்…. ஒன்றல்ல… பத்து இருபதைச் சேர்த்துப் பிடுங்குவார்கள். பிட்சுவாக வருவதற்கு அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் உடலில் ஆயுதப் பரிசோதனையும் உண்டு.

உபதேசத்தைக் கேட்டுக் கொண்ட பின் ஊசியால் நகத்தில் குத்துவார்கள். ஆ…! என்று சப்தமிட்டால் உன்னால் இதைச் செயல்படுத்த முடியாது என்று விலக்கி விடுவார்கள். ஆ…! என்று சப்தமிடாதபடி பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதத்தின் அடிப்படையில் சிசுக்களில் இருந்து இவ்வாறு வளர்த்து இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டி வளர்க்கின்றனர். வளர்த்து அதன் வழி வந்தாலும் அவர் சொன்ன வேதங்கள் இங்கே இயக்கப்பட்டு இந்த வலு எடுத்துக் கொண்டு வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் இறந்த பின் “இறப்பிற்கு ஒரு மந்திரத்தைச் சொல்வார்கள்…”

மந்திரத்தைச் சொல்லப்படும் பொழுது அதன் வழி பிரியும் அந்த ஆன்மாவை இவர்கள் பிரித்து எடுத்துக் கொள்கின்றனர். அதாவது பல வகையிலும் கட்டுப்படுத்தப்பட்டு… மந்திர ஒலிகளைக் கூறி “இறைவனை அடையக்கூடிய நிலை” என்று கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் எண்ணிய உணர்வுகள் தான் இங்கே இறைவனாகிறது. எதன் உணர்வின் தன்மை உனக்குள் வலுவோ அதையே நீ அடைகின்றாய் என்று கீதையிலே கூறப்படுகிறது.

காரணம் யாராக இருந்தாலும் எப்படியும் கடைசியில் இறந்து தான் ஆக வேண்டும். உடலில் விளைந்தது எதுவோ அது சாகாக்கலையாகிறது. ஆகவே இறைவனை அடையும் தன்மை இங்கே இல்லை. மீண்டும் உடல் பெறும் நிலை தான் வருகிறது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இவர்கள் எடுத்துக் கொண்டாலும்
2.இறந்த பின் மனித உடல்களுக்குள் பகிரச் செய்து அதன் வழியில் தான் கொண்டு வந்து விட்டார்கள்.

மனிதனுக்கு மதத்தின் தன்மை முக்கியம். அந்த மதத்தின் அடிப்படையில் நாட்டை ஆட்சி புரிவது உண்மை என்று மடாதிபதிகளாக மாற்றப்பட்ட நிலையிலேயே சென்றனர்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாலும்
2.ஆட்சி நிர்வாகம் என்ற நிலையில் செல்லும் போது விண் செல்லும் நிலை தடையாகின்றது.

நாம் வாழ்ந்து காட்ட வேண்டிய முறை

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது… இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்… ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம். ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மைச் சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கும் வழி – குரு எனக்குக் காட்டியது

உதாரணமாக நூறு சதவீதம் வேம்பின் சத்தும் பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்தும் மூன்று சதவீதம் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பத்தால் இரண்டறக் கலந்தால் எடை கூடி புவியில் படிந்து விடுகிறது.

அப்படிக் கலந்த சத்தில்
1.விண்ணிலிருந்து வரக்கூடிய மின்னல் தாக்கப்படும் பொழுது துடிப்படைந்து அதில் இருக்கக்கூடிய காந்தப்புலன் இழுக்கத் தொடங்குகிறது.
2.துடிப்பின் நிலை ஆனபின் அந்தந்தச் செடிகளில்… அந்தப் பங்கின் (100/10/3) விகிதாச்சாரப்படி அதைப் பிரித்து எடுக்கின்றது
3.கருவேப்பிலையாக மாறுகிறது

விஞ்ஞான ரீதியாகவும் இதைப் போன்று தான் அணு உலைகளில் கடலில் இருந்து எடுத்த வந்த மணலை வேக வைத்துப் பிரிக்கப்படும் பொழுது யுரேனியமாகவோ அல்லது மற்ற எத்தனையோ விதமான தனிமங்களாகவோ எடுக்கின்றார்கள்.

அதே சமயத்தில் பூமிக்குள் இருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்… குரூடு ஆயிலை (CRUDE OIL) அதைக் கொதிக்க வைத்துப் பிரிக்கின்றார்கள்.
1.முதலில் எடையற்று வேகமாகப் பிரிந்து செல்வது கேசலின் (GASOLINE) விமானங்களுக்கு அது எரிபொருளாகவும்
2.அடுத்து பெட்ரோல்; கெரசின்; டீசல் என்று இப்படி வரிசையாக எடுத்து
3.கடைசியில் எடை கூடியதாக கல் மண் மற்றவர்களுடன் கலந்து இருப்பதைத் தாராகப் பிரித்து எடுக்கின்றார்கள்.

விஞ்ஞானிகள் இயற்கையில் உருவானதைத் தனித்துத் தனித்துப் பிரிப்பதற்காக வேண்டி இப்படிப் பல வேலைகளைக் கையாளுகிறார்கள்.

இந்த வேலைகள் நடக்கும் இடங்களுக்கெல்லாம் நான் (ஞானகுரு) சென்றதும் இல்லை… அதைப் பார்த்ததும் இல்லை. ஆனால் சினிமா படம் காட்டுவது போன்று இதையெல்லாம் குருநாதர் எனக்குக் காண்பிக்கின்றார்

அதைப் பார்த்துப் பழகுவதற்காக வேண்டி சினிமா தியேட்டருக்கு என்னை அழைத்துச் செல்கிறார் குருநாதர்.

தியேட்டரில் படம் நடந்து கொண்டிருக்கும்… கதவுகள் எல்லாம் மூடி இருக்கும். வெளியில் இருந்து கொண்டே சினிமா எப்படி நடக்கிறது…? பாருடா…! என்பார் குருநாதர்.

எப்படி சாமி அதைப் பார்க்க முடியும்…? என்று கேட்டேன்.

நீ பாருடா…! என்று மீண்டும் சொல்கிறார். அப்போது அங்கே நடக்கின்ற காட்சிகள் தெரிய ஆரம்பிக்கின்றது… நான் பார்க்கிறேன்.

அவரும் கூட வந்து பாருடா பாருடா என்பார். அதையெல்லாம் அப்போது பார்க்கிறேன். இதைப் பார்த்த பின்னாடி என்னுடைய குறும்புத்தனம் சும்மா விட்டதா…?

குழந்தைகளை எல்லாம் அமர வைத்து எந்தெந்தச் சினிமாக் கொட்டகையில் எந்தெந்தப் படம் நடக்கிறது…? என்று கேட்டு “அதைப் பாருங்கள்” என்று அங்கேயே காண்பிக்க ஆரம்பித்தேன்.

அங்கே நடப்பது இங்கே அவர்களுக்குத் தெரிய வருகின்றது… வீட்டில் உட்கார்ந்து கொண்டே சினிமாவைப் பார்க்கின்றார்கள்

1.இயற்கையின் உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது
2.அந்தப் பதிவின் அலைகளை… அதை எப்படிக் கவர முடிகின்றது…?
3.இதைத் தெளிவாக்குவதற்காக குருநாதர் பல பயிற்சிகளை எனக்கு இப்படிக் கொடுத்தார்.

இதை எல்லாம் சாதாரணமாக யாரும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் தெரிந்ததை உங்களுக்குள் பதிவாக்கப்படும்பொழுது
1.சந்தர்ப்பத்தில் அந்த மகரிஷியின் அருள் சக்தி எடுத்து “நல்லதாக வேண்டும்” என்று சொன்னால் இந்த சக்திகள் உங்கள் உடலில் ஊடுருவும்.
2.உடல் நலமடைந்த பின் “நான் சொன்னேன்… நன்றாக ஆனது…!” என்று ஒரு சந்தோஷம் வரும்

ஏனென்றால்
1.நல்லதைச் சொல்லி நல்லதை உண்டாக்கித் தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
2.தீமைகள் புகாது தடுக்கும் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்வதற்குத் தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

உதாரணமாக மனித உடலில் ஏற்படும் உணர்வுகள் ஒருவனைச் சாடிப் பேசிப் பதிவாக்கி விட்டால்… “எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணினால் அமெரிக்காவில் இருப்பவனைக் கூட அது இயக்குகின்றது… புரையோடச் செய்கின்றது வாகனம் ஓட்டிச் சென்றால் குறுக்காட்டித் தாக்கி அவனைச் செயலிழக்கும்படியும் செய்கிறது.

இதெல்லாம் சந்தர்ப்பம் தான்..!

அவனைப் பற்றி எண்ணும் போது இவன் நிலையும் அதே ஆகி இவனும் தவறி விழுகின்றான்… மேடு பள்ளம் தெரியாது கீழே விழுவான். அவனும் கெடுவான்… இவனும் கெடுவான். அவன் மேல் மீது இருக்கக்கூடிய உணர்வுகள் அந்தத் தவறு என்ற உணர்வு இங்கே வந்துவிடும்

அந்த உணர்வு இயக்க வருவது போல் தான்
1.ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றேன்.
2.இது வெறும் சொல் அல்ல…! பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

நம்மையும் தெய்வமாக… நாம் பார்க்கும் அனைத்தையும் தெய்வமாக… வணங்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.

1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தி தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று…!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்… வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற… எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால்
1.மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு
2.அதை நல் நிலைப்படுத்தி எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

காலையில் எப்படி இருந்தாலும் நீங்கள் கணவனும் மனைவியும் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

1.பின் தன் மனைவிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு பேரும் இந்த அருள் உணர்வை எடுத்துச் சேர்க்க வேண்டும். இப்படி இருவருமே எடுத்து உணர்வை ஒளியாக மாற்றினால்தான் அந்த ஒளியின் அணுவாக மாற்றும் தன்மை அடைகின்றது.

அதைத் தான் எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்று சொல்வது…!

உதாரணமாக குடும்பத்திலோ அல்லது உறவினர்களோ நோய்வாய்ப்பட்டிருந்தால் பற்று கொண்ட நிலையில் அவரின் உணர்வை நுகர்ந்து விட்டால் அது நமக்குள்ளும் அணுவாக விளைகின்றது.

அந்த நோயாளி இறந்து விட்டால் அந்த ஆன்மா நமக்குள் வந்து நோயாக உருவாக்குகின்றது. இது போன்ற நிலைகள் வருவதைத் தடுக்க வேண்டும்.

என் கணவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்றும் அதே போல் என் மனைவி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மையை அதனோடு இணைக்கப்படும்போது “எமனிடம் இருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…” என்ற நிலை வருகிறது.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள்…
1.அன்புடன் பரிவுடன் நோய் உள்ளோரைக் கேட்டறிந்தால்
2.அந்த உணர்வு நமக்குள் எமனாகின்றது…
3.இந்த எண்ணம்தான் எமனாகின்றது.

எந்தக் குணத்தின் தன்மையைப் பெறுகின்றோமோ “வேதனை வேதனை…” என்றால் அதன் வழி கொண்டு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

வேதனை என்பதே விஷம்…!

உடலுக்குள் வேதனை அதிகமானால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த விஷம் கொண்ட உடலாக நம் உயிர் உருவாக்கிவிடுகிறது. பாம்பினமாகவோ அல்லது விஷம் கொண்ட ஜெந்துக்களாகவோ அழைத்துச் சென்று விடுகின்றது.

ஆக… இந்த வாழ்க்கையில் நாம் எடுக்கும் வேதனை உடல் முழுவதும் விஷமாகி விட்டால் மனிதனுடைய நல்ல சிந்தனை இழக்கப்படுகின்றது.

அப்பொழுது நாம் எங்கே செல்கின்றோம்…?

மனைவிக்குக் கணவன் இல்லை… மனைவியும் இதே போல் வேதனைப்பட்டால் கணவனுக்கும் மனைவி இல்லை…!

ஏனென்றால் நாம் எடுக்கும் உணர்வு
1.மற்றொன்றோடு ஒன்றி வரப்படும்போது இங்கே தன் மனைவியைப் பிரிக்கின்றது அல்லது கணவனைப் பிரிக்கின்றது.
2.அருள் ஒளியைக் குறைக்கின்றது… நஞ்சு என்ற நிலையை வளர்க்கின்றது.
3.நஞ்சிற்குள் நம் நல்ல உணர்வுகள் அடிமையாகின்றது.

அடிமையான பின் அதன் உணர்வின் உடலாக மாற்றிவிடுகின்றது இது எல்லாம் நம் உயிரின் வேலை.

ஆகவே கணவன் மனைவியும் இருவருமே இதைப் போல காலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எந்த ஊரிலும் இருந்தாலும் சரி… அல்லது எங்கே சென்றிருந்தாலும் சரி… உங்களுக்குள் பதிவு செய்த நினைவை எடுத்து மனைவிக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.. அதன் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று கணவன் எண்ணுதல் வேண்டும்.

அதே மாதிரி மனைவியும் இதைப்போல எண்ணி தன் கணவருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வெண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும்…. அருள் ஒளி பெற வேண்டும்… அவர் பார்வையில் இருள் நீங்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திறன் பெற வேண்டும். அவரின் அருட்பார்வை என்றைக்கும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மையை இருவருமே இப்படி எண்ணிப் பழக வேண்டும்.

இப்படி எண்ணினால் மனிதன் என்ற முழுமை அடையலாம்.

1.எப்படி இரக்கம் கொண்டு எண்ணியபின் ஒரு ஆத்மா நமக்குள் வந்து விடுகின்றதோ…
2.இதைப்போல கணவன் மனைவி இருவரும் ஒன்றானால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

ஆனால் இந்த உணர்வுடன் மற்றவர்கள் உணர்வுகள் நம்முடன் ஒன்றினால் இணைந்த நிலை மாற்றப்பட்டு “உயிரைப் (இருவரையும்) பிரித்து விடுகின்றது…”

ஆனால் அதே சமயம் இரு உயிரும் ஒன்றாக்கிடும் நிலையாக… இரண்டையும் பிணைத்து அருள் ஒளியைக் கூட்டும் போது உடலை விட்டுச் சென்ற பின் இரு உயிரும் ஒன்றாகி அந்த ஒளியின் சரீரமாக… பேரருள் பேரொளியாக மாற்றிக் கொண்டே இருக்கும்.

“சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க வலிமை நமக்குக் கிடைக்கின்றது…!”

ஆபீசில் உட்கார்ந்து பணி செய்பவர்கள்… வேலைக்குச் செல்லாமல் இருப்பவர்கள்… சிறிது நேரம் மண்வெட்டியை எடுத்து வெட்டினால் உடனே சோர்வடைந்து விடுகின்றார்கள்… களைப்பு வந்து விடுகின்றது.

ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் அவர்கள் உணவுக்காக வேண்டிக் கஷ்டப்பட்டுக் கடுமையான வேலைகளைச் செய்கின்றார்கள்.
1.எப்படியும் சம்பாரிக்க வேண்டும் என்று ஏங்கிச் சுவாசிக்கும் உணர்வுகள்
2.அவர்கள் உடலில் உள்ள எல்லா நரம்புகளுக்கும் வலிமை ஊட்டும் உணர்வாக வருகின்றது.
3.அது உமிழ் நீராக மாறி அவருடைய உணவுக்குள் வீரிய உணர்வு உருவாக்கப்பட்டு
4.இரத்தங்களில் கலக்கப்படும் போது நல்ல அணுக்களுக்கு வீரிய சத்து கிடைக்கின்றது.

அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் விடாது கடின உழைப்புகளைச் செய்கின்றனர்… அவர்களுக்கு மூச்சு வாங்குவதில்லை.

ஆனால் சாதாரண மனிதராக இருக்கக்கூடிய நமக்கோ ரெண்டு நிமிடம் அல்லது ஐந்து நிமிடம் தொடர்ந்து வேலை செய்தால் மூச்சு வாங்குகின்றது… உடல் பலவீனம் அடைகின்றது.

ஆனால் கடுமையாக வேலை செய்பவரும் இந்தக் காற்று மண்டலத்தில் வரும் உணர்வுகளைச் சுவாசித்துத் தான் வாழ்கின்றனர் வளர்கின்றனர்.

அவருடைய எண்ணமோ… இந்த வேலையை நாம் செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் வலிமையாகச் செயல்படுத்தப்படும் பொழுது… அந்த எண்ணத்தின் வலிமை அவர்கள் சுவாசித்து அவருடைய ஆகாரத்திற்குள் வலிமை கிடைக்கின்றது.

சில வசதி உள்ளவர்கள் சந்தர்ப்பத்தினால் வசதி குறைந்த பின் அந்த வயிற்றுப் பிழைப்புக்காக எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று “மண்ணைத் தூக்கிச் சுமக்கலாம்…” என்று அத்தகைய வேலைக்குச் செல்வார்கள்.

1.வசதி இருந்து வசதி குறைந்த பின் இந்த வேலையைச் செய்யும் பொழுது வலுவான எண்ணங்கள் வருவதில்லை
2.வலுவிழந்த உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நான்கு நாளைக்கு அவர்கள் இப்படி வேலை செய்தார்கள் என்றால் அவர்களுக்கு கடுமையான நோய் வந்துவிடுகிறது.

வசதி இருந்து செல்வம் குறைந்த நிலையில் இந்த மாதிரி ஆகின்றது. ஆனால் எப்படியும் வேலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுவோருக்கு இந்த நோய் வருவதில்லை.

ஆகவே “நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ… அதற்குத் தக்க அந்த வலிமை கிடைக்கின்றது…!”

கடினமாக வேலை செய்பவரிடம் சென்று யாராவது கவலையாகச் சொன்னால் “
1.ஹும்…! உங்கள் விதி எப்படியோ அப்படித் தான் நடக்கும் என்று அதை அவர்கள் கவலையை நுகர்வதில்லை.
2.கஷ்டத்தையும் வேதனையும் எடுத்துக் கொள்வதில்லை… அதாவது மற்றவர்கள் கஷ்டங்களை அவர் எடுத்துக் கொள்வதில்லை

இப்படி இயற்கையின் சந்தர்ப்பங்கள் அவரவர்
நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் செயலாக்கங்கள் நடக்கின்றது.

அதே சமயத்தில் தொழிலின் நிமித்தம் வசதியைப் பெருக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நாம் பிறரை ஏவித்தான் வேலை வாங்க வேண்டி இருக்கின்றது.

வேலை ஏவி அவர்கள் அதைச் செயல்படுத்தும் போது பொருளைக் கொடுக்கிறோம் என்று எண்ணினாலும்… தான் நினைத்த அளவுக்கு அவர்கள் வேலை செய்யவில்லை என்றால் “பணம் கொடுத்தோம்… சரியாக வேலை செய்யவில்லையே…” என்று மனதில் வேதனை வருகின்றது.

தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றனர். அந்த வேதனையை அதிகமாக எடுத்து.. அதே வேதனையோடு வேலையைச் சொல்லப்படும் பொழுது அவரிடம் வேலை செய்பவர்களையும் சோர்வடையச் செய்து விடுகிறது. அப்போது இன்னும் கொஞ்சம் வேதனை அதிகமாகின்றது.

செல்வத்தைச் சேமிக்க வேண்டும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று செயல் பட்டாலும்… பின்னணியில் பணம் இருக்கின்றது மற்றவர்கள் வேலையைச் செய்கின்றார்கள் என்றாலும்…
1.எண்ணியபடி நடக்கவில்லை என்கிற பொழுது வேதனை உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடல் பலவீனம் அடைகின்றது
2.வெறுப்பு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டுக் கோபம் வருகிறது.
3.கோபம் அதிகமாகிக் கார உணர்ச்சிகள் ஆனால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது
4.வேதனை வித்தாக உருவானால் பின் எப்படிப் பேசுவது என்ற சலிப்படையும் போது உடலில் சளித்தொல்லை வருகின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் தான்… யாரும் தவறு செய்யவில்லை.

அவரவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உடலில் அது முதிர்வடையப்படும் பொழுது “விதி…” என்ற நிலையாக மாறி விடுகின்றது.

இந்த விதியை மதி கொண்டு மாற்ற முடியும்…!

அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வைச் சுவாசமாக அடிக்கடி எடுத்தால் நம் எண்ணங்கள் வலிமையாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் எண்ணம் வலுவாக வலுவாக… நரம்புகளில் அதற்குத் தக்க ஆசிட் உருவாகும்…
2.உடல் உறுப்புகளைச் சீராக இயக்க முடியும்.

எத்தகைய கஷ்டம் வந்தாலும் அதிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கும்.

மகரிஷிகளுடன் இணைந்து வாழுங்கள்

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே… எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே… நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட… குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே… அச்சுழற்சியுடனே… இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு… மித்ரு…” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்…
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்… மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்… மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்… வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை… நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்…
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்… பேராசைக்கும் அடிமை கொண்டு… பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப்போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி.
1.இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது…
2.சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது.
3.ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்…” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்)

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் “அக்காலங்களில் என்ன செய்தார்கள்…? என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.

அன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்…? அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…? இல்லை…!

1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்
2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்
3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.

இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது…? என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டினார்.

ஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.

ஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது…? அதை எவ்வாறு பெற முடியும்…? என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாதர்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.
1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்
2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்
4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.

அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கேதான் முதன் முதலிலே வருகிறது.

1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை
2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.

ஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.

சூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல
1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது
2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்
3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.

அதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.

1.சூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்…
2.இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்…
3.அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.

நான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.

ஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞான ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.

வானியல் புவிஇயல் உயிரியல் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் ஞானிகளால் கண்டுணர்ந்த.. அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் அனைத்தும்
1.அன்றைய அக்கால அரசர்கள் குறுகிய காலத்திற்குத் தனது சுகபோகத்தை உருவாக்குவதற்காக மறைத்து விட்டனர்
2.அவரவர்கள் இச்சைக்குத் தக்க உணர்வுகள் உருவாக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது.

இராமேஸ்வரத்தில்… நேரமாகிவிட்டது

எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் இராமேஸ்வரம்… பரம்… ஒரு எல்லை…! அதை இராமேஸ்வரம் என்று ஸ்தல புராணமாக ஞானிகளால் காட்டப்பட்டது.

கோடிக்கரை…!
1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்றுப் பெற்று…
2.அந்த எண்ணத்தால் மனிதனான உடலை ஈஸ்வரலோகத்தை உருவாக்கியது.

உயிர் எப்படி இதை உருவாக்குகின்றதோ இதைப் போன்று அணுவின் தன்மையும் உயிரைப் போல உணர்வைப் பெறும் தகுதி பெற்றது. ஆகவே நாம் பல கோடி உடல்களைக் கடந்து… கடைசிக் கரையில் இந்த மனித உடலில் கோடிக்கரையாக இருக்கின்றோம்.

தனுசுகோடி…!
1.மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ
2.அப்பொழுதெல்லாம் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து
3.அந்த விஷத்தை நிறுத்திக் கொண்டே வர வேண்டும்… நமக்குள் வளராது தடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மனிதனின் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ விதமான கோப உணர்வுகளையும் வெறுப்புணர்வுளையும் எடுக்கின்றோம். இதைப் போன்று வரும் உணர்வுகளை எல்லாம் தனுசுகோடி…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி
2.அத்தகைய கோடிக்கணக்கான உனர்வுகளையும் உயிரைப் போன்று ஒளியின் பிளம்பாக… ஒளியின் கதிராக நாம் மாற்ற வேண்டும்.

எண்ணத்தால் தான் இது உருவானது இது இராமலிங்கம் உணர்வின் தன்மை ஒளியாக்கப்படும் பொழுது இது சீவலிங்கம் ஜீவனூட்டும் லிங்கம் ஜீவிக்கும் லிங்கம்.

எண்ணத்தால் உருவாக்கும் உணர்வுகள் உயிர் என்று “இராமலிங்கம்” என்று காரணப் பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

1.(இராமேஸ்வரத்தில் – உடலில்) நேரம் ஆகிவிட்டது…!
2.எண்ணத்தால் நாம் ஒளியை உருவாக்க வேண்டும்
3.காரணம்… உடலில் கொஞ்ச நாள் தான் நாம் வாழுகின்றோம் அதற்குள் “மனதை ஒன்றாக்க வேண்டும்…!”

அதாவது மனதில் எல்லாவற்றையும் ஒன்றாக்கிப் பகைமையற்ற உணர்வுகளாக நமக்குள் வளர்க்க வேண்டும். எத்தனை நிலைகள் வந்தாலும் பகைமையாக உருவாகாதபடி அருள் உணர்வினை இணைத்து ஒளியாக்கிட வேண்டும்.

ஆனால் ஞானிகள் நமக்குக் கொடுத்ததை
1.பூஜை செய்ய நேரமாகி விட்டது…
2.ஆகையினால் இராமன் மணலைக் குவித்துப் பூஜித்தான் என்று இப்படிப் பிரித்து மாற்றி விட்டார்கள்.

சுவாச நிலையில் மறைந்துள்ள இரகசியங்கள்

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே…” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து…
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலையினால்தான்… நம் நினைவலைகளும்… சப்த ஒலிகளும்… நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்து சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்… நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்… ஒலி அலைகளையும்…” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்… ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்… நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல… இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்… நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி… “சிறுகச் சிறுகத்தான் பெருகச் செய்து… வழி நடந்திடல் முடிந்திடும்…”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் சாஸ்திரம் மெய் ஆகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் நாம் அடைய முடிகிறது.

ஆனால் அதற்குப் பதில் இன்று சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி… மெய்ப்பொருளின் தன்மையைக் காண முடியாது காலத்தால் மறைந்து விட்டது…!

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் என்பது யாது..? என்ற நிலையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும்
1.நமக்குள் மெய்யை உணர்த்துவதும்
2.மெய்யின் தன்மையை அறியச் செய்வதும்
3.மெய் வழி நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.

மெய் ஞானிகள் அவர்கள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உயிரின் துணை கொண்டு உலகின் நிலையையும் பேரண்டத்தின் நிலையையும் உண்மையை உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தனர்.

தன் உயிருடன் ஒன்றிய மெய்யாக… மெய்யின் நிலையாக… இன்றும் நிலை கொண்டு சப்தரிஷி மண்டலங்களாகத் திகழந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
1.அந்த எல்லையை அடையும் வழி முறைகளைத் தான்
2.நமக்கு சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அக்கினிக்கட்டு

மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்குவோர் குடும்பத்தில் அதிகமான கஷ்டங்கள் வந்தால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே… உனக்காக நான் அக்கினிகுண்டம் இறங்குகின்றேன்…” என்று செல்கின்றார்கள்.

1.ஆனால் அதற்கெல்லாம் சில மந்திர ஒலிகள் உண்டு…!
2.அதாவது “மாரியம்மன்…” என்று அதர்வண வேதத்தில் காட்டிய மந்திர ஒலிகளை ஒரு மனித உடலில் சேர்த்த பின்
3.அவன் இறந்து விட்டால் அந்த அக்கினியைத் தாங்கும் உணர்வின் தன்மை வருகின்றது.
4.அதை எண்ணி எடுத்துக் கொண்டு மந்திரத்தை ஜெபித்து அக்கினியில் இறங்கினால் அந்தத் தீ ஒன்றும் செய்யாது

அதர்வண வேதத்தில் இந்த உணர்வின் தன்மை குவிக்கப்படும் பொழுது “அக்கினிக்கட்டு” என்று சொல்வார்கள்.

மனித உடலில் ஜீவ அணுக்களுக்குள் சேர்த்துப் பரம்பரையாக இந்த மந்திரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதைச் செயல்படுத்தும் கால கட்டத்தில் அந்தக் கோவில் பூசாரி இந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருப்பார்… அவர் சாவகாசமாக அக்னியில் இறங்கி வருவார்.

ஆனால் மற்றவர்கள் வீரிய எண்ணத்தோடு போனாலும் உஷ்…தஷ்…புஷ்.. என்று இறங்கி வேகமாக ஓடி விடுவார்கள்.

பூசாரியை மாரியம்மன் காப்பாற்றுவதால் அவர் தாராளமாகப் போகின்றார். எந்த மாரியம்மன்…?

மாரியம்மனை எண்ணி மந்திரத்தை ஜெபித்து இந்த உடலை விட்டு சென்றவர்களின் ஆன்மாக்கள் அதே மந்திரத்தை ஜெபிக்கப்படும் பொழுது இங்கே வந்துவிடும்.
1.ஜெபித்தவர் உடலில் அந்த ஆன்மாக்கள் குடிகொள்ளும்
2.ஆவிகள் தான் அங்கே செயல்படுகின்றது

உதாரணமாக… தெய்வத்தையே வணங்கி வாழ்ந்து வந்தாலும் சந்தர்ப்பத்தில் (தெய்வத்தை எண்ணி வேதனைப்பட்டு) “மருந்தைக் குடித்து இறந்து விடுகிறார்…” எனறு வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த மந்திரத்தை இந்த ஆன்மா ஜெபித்ததோ அதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபிக்கப்படும் பொழுது இங்கே இவரின் ஈர்ப்புக்குள் வந்துவிடும்.

அல்லது அதே எண்ணத்தை கொண்டு இறந்தபின் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகி திடீரென்று எதிர்பாராத நிலைகள் இறந்து விட்டால் பழகிய அந்த நண்பர் உடலுக்குள் சென்று விடும்.

நேற்றெல்லாம் என்னிடம் பழகினாரே… இப்போது இறந்து விட்டாரே…! என்று எண்ணும் போது இந்த ஆவி இங்கு வந்துவிடும். அது வந்த உடனே அது அதனுடைய நிலைகளை எல்லாம் இங்கே காட்டும்.
1.எத்தனை வேதனை இருந்தாலும் அந்த ஆன்மா தாங்கிக் கொள்ளும்
2.எத்தனை இம்சை செய்தாலும் இவர்களுக்குத் தெரியாது.

சில பேய் பிடித்தவர்களைப் பாருங்கள். “என்ன தான் அடியுங்கள்… அது அடி வாங்கிக் கொண்டே இருக்கும்…!” அது நோகுமா என்றால் நோகாது…! அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்கின்றது. ஆவி விலகிய பிற்பாடு தசைகளில் அடிபட்டதல்லவா… இரண்டு நாளைக்கு அது எழுந்திருக்காது.

இது எல்லாம் ஆவியின் செயல்கள் தான்…!

காளியம்மன் மாரியம்மன் என்று ஜெபத்தால் எடுத்துக் கொண்ட ஆன்மாக்கள்… இன்ன மந்திரத்தைச் சொன்னால் காளி உன்னைக் காப்பாற்றுவாள் என்று சொல்லும்போது அதன் உணர்வை விளைய வைத்த வழி தான் வந்துள்ளார்களே தவிர “இறந்தபின் இன்னொரு ஆவி நிலைக்குத்தான் செல்கின்றோம்.

1.இது சாகாக்கலைக்குத் தான் கொண்டு செல்லும்… மீண்டும் பிறவிக்குத் தான் வரவேண்டும்
2.அடுத்த உடலுக்குள் சென்று அதையும் காயப்படுத்தி அந்த உடலை விட்டு வந்தபின்
3.விஷம் கொண்ட உடல்களுக்குள் தான் உயிர் அழைத்துச் சென்றுவிடும்.

“நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆவதே நமக்கும்…!” என்று எண்ணக்கூடாது

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலிவரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்…
1.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி
2.நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெற வேண்டும்…
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்…
3.அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
4.நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

பிரம்மமுகூர்த்த வழிபாடு மந்திரத்துடன் சென்று விட்டது…

உதாரணமாக வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு சண்டை ஆகிவிட்டது என்றால் என்ன நடக்கிறது…?

நான் ஒன்றுமே செய்யவில்லை… “எதைச் செய்தாலும் கணவர் கோபப்படுகிறாரே…” நான் சும்மா தான் இருக்கின்றேன் என்று மனைவி சொல்கிறது

எதற்கெடுத்தாலும் நான் கோபப்படுகிறேன் என்று இப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நான் என்ன தான் செய்வது என்று கணவர் சொல்வார். இப்படிச் சுவாசிப்பார்

ஆலயத்தில் காளிக்கு முன்னாடி புலியை போட்டுக் காண்பித்து இருக்கின்றார்கள். எதற்காக…?

கோபமான உணர்வை மனைவி முதலில் சுவாசிக்கப்படும் பொழுது கோபம் வந்துவிடுகிறது. அப்போது சும்மா இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே…! என்று திருப்பிச் சொன்னவுடன் கோபம் வருகிறது… கணவருக்கு…!

அப்போது என்ன நடக்கிறது…?

1.நமக்கு முன் எது இருக்கின்றதோ அது தான் இயக்குகின்றது… காளியாகி விடுகின்றோம்.
2.உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆகிறது
3.இரு நான் உன்னை என்ன செய்கிறேன் பார்… உன்னை அடித்தால் தான் சரியாக இருக்கும் என்று வருகின்றது.

அவரவர்கள் உணர்வுக்குத் தகுந்த மாதிரி இப்பபடிப்பட்ட இயக்கங்கள் வருகின்றது. அதற்குத்தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் ஒரு போக்கிரியைப் பார்த்தால் நமக்கு உடனே பயம் வருகின்றது அவன் எத்தனை திட்டினாலும் என்ன செய்தாலும் பேசினாலும் நம்மை ஏதாவது செய்து விடுவான் என்று பயப்படுகின்றோம்.

போக்கிரி அவன் அடித்து விடுவான் என்று தெரிந்த பின் நாம் அவனிடம் திருப்பி ஏதாவது சொல்கிறோமா… இல்லை. பயந்து ஒடுங்கி விடுகின்றோம்… கூடுமான வரை விலகிச் சென்று விடுகின்றோம்…! அவன் போக்கிரிப்பயல் நம்மை அடித்து விடுவான் என்று.

இங்கே வீட்டில்
1.நாம் கோபமாகப் பேசுகின்றோமே… வீட்டுக்காரர் பதிலுக்கு நம்மைத் திட்டுவார் என்ற எண்ணம் மனைவிக்கு இல்லை.
2.கோபித்துப் பேசுகின்றோமே… மனைவி பயந்து எதையாவது செய்து விடுமோ… எங்கேயாவது போய்விட்டால் என்ன செய்வது…? என்று
3அதற்கு உண்டான வழியைக் கணவனும் சொல்வதில்லை.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குணங்கள் உடலுக்குள் மறைந்து எப்படிச் செயல்படுகிறது…? என்று இதையெல்லாம் காட்டுவதற்குத் தான் காளிக்கு முன்னாடி புலியைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள்.

ஆனால் கோபம் அதிகமாக ஆன பின் கணவனுக்கு இரத்தக் கொதிப்பாகி விடுகின்றது. வீட்டிலே கணவன் மனைவி சண்டையாகி இரத்தக் கொதிப்பான பின் அதைப் போக்குவதற்காகக் காளிக்கு நான் பூக்குழி இறங்கி “நேர்த்திக் கடன் செலுத்தப் போகிறேன்…” என்று வேண்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் அக்கினி குண்டம் இறங்கினாலும் அது நிவர்த்தி ஆகின்றதா… அதுவும் இல்லை. பற்றாக்குறைக்கு சாந்தமாக இருக்கக்கூடிய ஒரு ஆட்டையும் அதற்குப் பலி கொடுத்து… அதைச் சமைத்துப் படையல் செய்து நாமும் சாப்பிடுகின்றோம்.

இது எல்லாம் என்ன செய்கிறது…? கோபம் என்ற உணர்வுகள் வளர்ந்த பின்பு அது நம் நல்ல குணங்களை எல்லாம் கொல்கின்றது.

கோபமான உணர்வைச் சுவாசித்தவுடனே உயிரிலே அபிஷேகம் ஆகி இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் சென்று இரத்தக் கொதிப்பாகிறது… கை கால் அங்கங்களை எல்லாம் சுருக்கி விடுகின்றது.

சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். “அப்பாவுக்கு உணவு கொடுத்து வா…” என்று குழந்தையிடம் கொடுத்து அனுப்பும் போது சிறிது நேரம் ஆகி விட்டால் போதும்.

நான் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்… எனக்குச் சாப்பாட்டை நேரத்தில் கொண்டு வருவதற்கு முடியவில்லையா…? என்று கோபம் அதிகமாக வரும். உணவை உட்கொள்வதற்கு முன் பயங்கரமான கோபம் வரும்.

புலி ஆட்டை அடித்து உட்கொண்டாலும் உர்ர்ர்…உர்ர்ர்… என்று உறுமிக் கொண்டு தான் சாப்பிடும். அதைப் போல் புலிக்கு உண்டான குணங்கள் எல்லாம் இங்கே வந்துவிடும்.
1.கோபத்தின் உணர்வு உச்சகட்டம் அடைந்த பின் இப்படித்தான் இயக்கம் ஆகின்றது
2.இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

கோபப்படுவோரையோ வேதனைப்படுவோரையோ அவருடைய உணர்வை நுகர்ந்தால் உயிரான ஈசனிடம் பட்டு இங்கே அது அபிஷேகமாகி அந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது நமக்கும் கோபம் வருகிறது.

நம் உடல் ஒரு அரங்கம்… சுவாசித்தது உயிரிலே பட்டபின் அரங்கநாதன்… அந்த நாதம் வருகின்றது அந்த உணர்ச்சிகள் உடலை ஆளுகின்றது ஆண்டாள்.
அத்தகைய கோப உணர்ச்சி அடுத்தவரை உதைக்கத் தான் சொல்லும்
2.அது தான் ஆட்சி புரியும்.

சூட்சமத்தில் நடக்கும் இயக்கங்களை உருவமாக்கி… மனித வாழ்க்கையில் “நாம் எப்படித் தெளிந்து நடக்க வேண்டும்…?” என்பதைக் காட்டுவதற்குத் தான் ஆலயத்தில் பல உருவ அமைப்புகளைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

அடிக்கடி நாம் கோபித்தால் நம்முடைய நல்ல குணங்களை அது கொன்றுவிடும் என்பதற்காகக் கோபம் வரும் பொழுதெல்லாம் அதை மாற்றி அமைக்க… அக்கினி குண்டம் இறங்கச் சொல்கின்றார்கள்.

ஏன்…? அக்கினி குண்டம் எது…?

இதையெல்லாம் வென்ற அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்.
1.அதிகாலையில் 4:00 மணிக்கு எழுந்து குளித்த பின்
2.அந்தப் பிரம்ம முகூர்த்த வேளையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும்படி சொல்கின்றார்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணச் செய்து பகைமைகளை அகற்றும்படி செய்கிறார்கள்

ஆனால் காலத்தால் அது எல்லாம் மாறிவிட்டது யாரும் அதை எடுப்பதில்லை.

1.காலையில் குளித்த பின் உன் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டுப் பூஜை செய்து கொள்… போ…
2.நெய்வேத்தியங்கள் வைத்து மந்திரத்தைச் சொல் போ…!
3.காலையில் இப்படிச் செய்தால் உனக்கு அந்தத் தெய்வம் சக்தி கொடுக்கும் என்று இப்படித்தான் சொல்லி மாற்றிவிட்டார்கள்.

பூஜையில் மந்திரத்தைச் சொல்லும் பழக்கம் தான் வளர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாராவது தொல்லைப்படுத்துபவனோ தவறு செய்தவனோ வந்தால்
1.நான் உனக்காக வேண்டி இவ்வளவு செய்கின்றேன் தாயே
2.நீ இதைப் பார்க்கின்றாயா… இல்லையா…! உனக்குக் கண் தெரிகிறதா…? என்று அந்த நேரத்தில் இதைத்தான் வளர்க்கின்றோம்
3.தவறைத் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்… ஆலயத்தின் பண்புகளை நாம் மதிக்கின்றோமா…?

உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவித்த நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உதாரணமாக இரண்டு பேர் கோபத்துடன் சண்டை போடுகின்றார்கள். அவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே ஈஸ்வரா… என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கல்க்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளை நம் உடலில் திருப்பி விட வேண்டும்.

இப்படிச் செய்யும் போது அவர்கள் சண்டையிட்ட உணர்வுகளைச் சுவாசித்து நம் உடலுக்குள் அந்தக் கார உணர்வுகள் செல்வதைத் தடுத்து விடுகின்றோம்.

ஏனென்றால் அங்கே உற்றுப் பார்க்கும்போது இங்கே ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது “நம் கண்ணின் கருவிழி…”

ஆனால் துருவ நட்த்திரத்தின் சக்தியை எடுத்து
1.நம் கண்ணின் நினைவினை உள்ளே செலுத்தும் போது இங்கேயும் அடைத்து விடுகின்றது
2.நம் உயிரிலே மோதும் நிலையையும் தடுத்து விடுகின்றோம்.
3.இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் பரவும் போது அந்தக் கார உணர்ச்சிகள் அனாதையாகின்றது… உள்ளே புகாதபடி..!

இப்படி ஒரு சிறிது நேரம் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணிச் சுவாசித்தோம் என்றால் அந்தத் தீமையான உணர்வுகளைச் சூரியன் இழுத்துக் கவர்ந்து சென்று விடுகின்றது. நம் ஆன்மா சுத்தமாகின்றது.

சுத்தமான பின்… சண்டை போட்டவர்கள் இருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் ஒன்றுபட்டு வாழும் தன்மை பெற வேண்டும் என்று இப்படி நாம் எண்ணி அந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இப்படி எண்ணினால் நமக்குள் அந்தத் நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் இரத்தங்களில் கலந்து துருவ நம் உடலுக்குள் பரவுகின்றது. இரத்தத்தின் வழி எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பாய்கிறது.

1.ஆகவே நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும்
2.தீமைகளை நீக்கும் உணர்வுகளை இவ்வாறு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது…!

கண்ணுக்குத் தெரியாமல் சூட்சமத்தில் நடப்பதைத் தெரியப்படுத்துகின்றோம்

ஆலயத்தில் குறைகளை எல்லாம் சொல்லிவிட்டால் “எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்…!” என்ற எண்ணத்தில் தான் பெரும்பகுதியானோர் ஆலயத்திற்குச் செல்கின்றோம்.

அதற்காக வேண்டி அர்ச்சனையும் அபிஷேகமும் செய்கிறோம். அப்படிச் செய்துவிட்டால் “அந்தத் தெய்வம் நமக்கு எல்லாம் செய்யும்…!” என்று சொல்கின்றனர். பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் சந்தன அபிஷேகம் எல்லாம் செய்கின்றோம்.

சாமிக்கு இதை எல்லாம் செய்கின்றோம்…
1.ஆனால் அபிஷேகம் நடக்கும் பொழுது என்ன எண்ணுகிறோம்…? வீட்டில் என்ன நடக்கிறது…?
2.என் வீட்டுக்காரர் நோயுடன் வேதனைப்படுகின்றாரே…! என்று தான் எண்ணுகிறோம்
3.அங்கே தெய்வத்திற்கு பால் அபிஷேகம் செய்கிறோம்… இங்கே தன் உயிரில் வேதனையான உணர்வுகள் அபிஷேகம் நடக்கிறது.

என் வீட்டுக்காரருக்கு “உடல் நலம் சரியில்லையே…!” என்று வேதனையை எண்ணி எடுக்கும் நிலை தான் வருகின்றது. கோயிலுக்குச் சென்று மனைவி இப்படி வேதனையுடன் எண்ணினால் “இந்த எண்ணம்…”
1.வீட்டுக்காரர் ஓரளவுக்கு எழுந்து நடமாடக்கூடிய நிலையில் இருப்பவரை
2.வீட்டிற்குள் பாத்ரூமுக்கு அப்போது நடந்து சென்று கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொண்டால்
3.அந்த நேரத்தில் வீட்டுக்காரருக்கு உடனே நடுக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்.

அதே போல் ஒரு திடமான குழந்தையாக இருக்கட்டும். நாம் அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பி இருக்கின்றோம். ஒரு மாதம் அல்லது பத்து நாட்கள் குழந்தையிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை என்றால் குழந்தைக்கு என்ன ஆயிற்றோ…? ஏது ஆயிற்றோ…? என்று உடனே வேதனைப்பட ஆரம்பிக்கின்றோம்.

ஏனென்றால் குழந்தையின் உணர்வு நம் உடலில் இருக்கின்றது இங்கே தாய் இப்படி வேதனையாக எண்ணும் போது அங்கே பிள்ளை படித்துக் கொண்டிருந்தால் .”இந்த எண்ணம்”
1.அங்கே குறுக்காட்டி… குழந்தைக்குப் படித்தது நினைவுக்கு வராது… தலையைப் பிய்த்துக் கொள்ளும்
2.சரி… கொஞ்சம் நடந்து கொடுத்து வரலாம்… என்று வெளியே செல்லும்
3.அப்போது சிந்தனை குறைந்து… மேடு பள்ளம் தெரியாதபடி கீழே விழுந்து கையிலோ காலிலோ அடிபட்டுக் காயம் ஆகி விடுகின்றது.
4.படித்துக் கொண்டிருக்கும் பொழுது இப்படி ஆகிவிட்டதே… தாயிடம் எப்படிச் சொல்வது…? என்று குழந்தையும் வேதனைப்படும்.

பத்து நாட்கள் கழித்து ஓரளவுக்குச் சரியான பிற்பாடு… இந்த மாதிரி அன்று கீழே விழுந்ததால் தான் தபால் எழுத முடியவில்லை என்று தபால் வரும்.

தாய் இதைப் படித்ததும் “நான் நினைத்தேன்… நினைத்த மாதிரியே தான் நடந்திருக்கிறது…!” என்று சொல்லும். ஆனால்
1.தாய் தன் குழந்தையை வேதனையாக எண்ணிய “அந்த எண்ணம் தான்” இயக்கி
2.”கீழே விழக் காரணமாக இருந்தது” என்று தெரிவதில்லை.

காரணம்… இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சக்திகள்.

ஆலயத்திலே உயர்ந்த அபிஷேகங்கள் நடந்தாலும் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது “கணவருக்கு இப்படி இருக்கின்றது… குழந்தைக்கு இப்படி இருக்கின்றது…” என்று எண்ணும் பொழுது உயிரிலே வேதனை தான் அபிஷேகம் ஆகின்றது.

ஆக அப்போது அங்கே தெய்வத்தின் மீது பாலை ஊற்றினாலும் தேனை ஊற்றினாலும் சந்தனத்தை ஊற்றினாலும் அதை எல்லாம் எண்ணுவதில்லை.

இப்போது இங்கே உபதேசித்துக் கொண்டிருக்கின்றோம்… உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இந்த நேரத்தில் உங்கள் குழந்தை எண்ணி அவன் படிக்கச் சென்றானே… அங்கே என்ன ஆனதோ…? சாப்பாட்டுக்கு என்ன செய்வானோ…? என்று இங்கே இதைக் கவனிக்காது அங்கே நினைவைச் செலுத்தினால் “இந்த எண்ணம்” அவனை குறுக்காட்டி அவனுடைய சிந்தனையைக் குறைத்துக் கீழே விழும்படி செய்யும்.

அப்போது நான் தியானத்திற்கு வந்தேன்… என் பையனுக்கு இந்த மாதிரி ஆகிவிட்டது என்று எண்ணுவார்கள் ஏனென்றால் நம்முடைய நினைவு… இந்தப் பழக்க வழக்கம் வளர்ந்தது… இப்படித்தான் வருகின்றது.

ஆனால் அதையெல்லாம் விடுத்து விட்டு…
1.யாம் உபதேசிக்கும் போது இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்கினால் இது உயர்ந்த சத்தாக உங்களுக்குள் சேர்கின்றது.
2.நுகர்ந்தபின் இது உங்கள் உயிரிலே நல்ல உணர்வாக… சிந்தித்துச் செயல்படும் சக்தியாக… உயர்ந்த அபிஷேகமாக அமைகிறது.
3.இந்த உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலக்கின்றது… அறியும் ஞானத்தையே ஊட்டுகின்றது
4.இரத்தத்திந் வழி உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த சக்திகள் கூடுகின்றது.

சிறிது காலம் இப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் உயர்ந்த நிலை பெற முடியும்.

மனைவி கணவனை எண்ணி வேதனைப்படும் பொழுது அந்த எண்ணம் அவரைக் கெடுதலாக இயக்குகின்றது. அவருக்குக் கஷ்டம் அதிகமான பின் இங்கேயும் சேர்த்து இயக்க ஆரம்பிக்கிறது.

காரணம்… நம்முடைய வழக்கத்தில் ஆலயத்திற்குச் சென்று
1.கஷ்டத்தை எல்லாம் சொன்னால் “அவன் பார்த்துக் கொள்வான்…” என்று இப்படித்தான் வழியைக் காட்டி விட்டார்கள்
2.எவன் பார்ப்பான்…?
3.எதை நுகர்கின்றோமோ அதைத்தான் நம் உயிர் பார்க்கும்… அந்த உணர்வைத் தான் ஊட்டும்.. அதையே இயக்கிக் காட்டும்.

அங்கே பால் அபிஷேகம் செய்யும் போது பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்… அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று அதை எண்ணி எடுக்கச் சொன்னால்… “கஷ்டத்தைச் சொன்னால் அவன் பார்ப்பான்…” என்று ஞானிகள் கொடுத்த வழி முறைகளை மாற்றித் தீமைகளைத் தான் நமக்குள் சேர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆலயத்திற்கு சென்று கஷ்டத்தை எல்லாம் வேதனையுடன் சொல்லி முறையிட்டு வந்தபின் “நடந்து சென்றேன்… கீழே விழுந்து விட்டேன்…!” என்று ஆன பின்
1.“அட தெய்வமே…” இப்பொழுது தானே உனக்கு நான் பாலாபிஷேகம் செய்தேன்
2.எத்தனை தான் நீ என்னைச் சோதிப்பாய்…? என்று சாமியைத் திட்டும் நிலையில் தான் இருக்கின்றோம்.

எத்தகைய குறைபாடாக இருந்தாலும் தெய்வத்தைத் தான் நினைக்கின்றோம்…! ஆனால் வேதனையுடன் எண்ணுகின்றோம்… கோவிலுக்குள் போனாலும் வேதனையுடன் தான் போகிறோம்.

ஞானிகள் காட்டிய நிலைகளோ… அங்கே காட்டிய தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்… தெரிந்து தெளிவான நிலைகள் நாங்கள் பெற வேண்டும். என் கணவருக்கு பாலைப் போன்ற மனம் பெற வேண்டும்; பன்னீரைப் போன்ற தெளிந்த எண்ணங்கள் வர வேண்டும்; சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெற வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று இந்த நல்ல மணங்களை எண்ணி எடுத்து அதை உயிருக்கு அபிஷேகம் செய்து… அனைவருக்கும் அது கிடைக்கும்படி… அந்த உயர்ந்த உணர்ச்சிகளை ஊட்டும்படி தான் அங்கே ஆலயத்தில் காட்டினார்கள்.

ஏனென்றால் உடலில் வலி வந்து விட்டால் எப்பா… எம்மா…! என்று சொல்லி வேதனைப்படுகின்றோம். இதை அடுத்தவர்கள் சுவாசித்தால் என்ன நடக்கின்றது…? அவருக்கும் அந்த வேதனை வருகிறது.

அதை எல்லாம் மாற்றி அமைக்கத் தான் நோயுற்றவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் உடலிலே தெய்வீக குணங்கள் வளர வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வுகளைக் கிடைக்கச் செய்வதற்கு அபிஷேகங்களையும் ஆராதனைகளையும் ஆலயத்தில் காட்டினார்கள்.

காரணம் நாம் நுகர்வது தான் நம் உயிரிலே அபிஷேகம் ஆகின்றது
1.சூட்சமத்தில் நடப்பதை ஞானிகள் நமக்கு இப்படித் தெரியப்படுத்துகின்றார்கள்… நாம் தெரிந்து கொண்டோமா…?
2.இனியாவது தெரிந்து… ஞானிகள் காட்டிய வழியில் நாம் நடந்து பழக வேண்டும்…!

மனித ஆத்மாவிற்குண்டான தெய்வீக சக்தி

மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் மனித உடலுக்குத்தான் பல நிலை கொண்ட அமில சக்தியும் காந்த சக்தியும் கலந்த நிலை நிறைந்துள்ளது. இவ்வுடலுடன் பல அணுக்களின் நிலையும் ஏறி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலையும் குண நிலையும் உண்டு.

நம் ஆத்மாவை நாம் செயல்படுத்திடும் நிலை கொண்டு
1.எந்த நிலைக்குகந்த எண்ண சக்தியை ஈர்க்கின்றோமோ
2.அந்த நிலைக்குகந்த சக்தியுடன் கூடிய நிலைகளை எல்லாம் இவ்வாத்மாவுடன் ஒன்றச் செய்திடலாம்.

இன்றைய செயற்கையில் விஞ்ஞான நிலைப்படுத்தி இரசாயன முறையில் பல செயல்களைச் செய்கின்றனர்.
1.ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கவும் ஒன்றுடன் ஒன்றைச் சேர்க்கவும்
2.பல நிலைகளை இன்றைய விஞ்ஞானத்திலும் செயலாக்குகின்றனர்.

விஞ்ஞான சக்திக்கும்… மெய் ஞான சக்திக்கும்… அனைத்திற்குமே… இக்காற்றிலிருந்து நமக்குக் கிடைத்திடும் சூரியன் அளித்திட்ட அமில சக்தி கொண்டுதான் இவ்வுலக சக்திகள் செயல்படுகின்றது.

அதன் மூலம் நம் ஆத்மாவின் துணையினாலே..
1.நம்முள்ளே அனைத்து சக்தியையும் ஈர்த்துச் செயல் கொண்டிடும் “உன்னத தெய்வீக அருள் கொண்ட நாம்…”
2.இன்றைய கலியில் மிகவும் ஈன நிலையில் அடிமை கொண்ட பேராசையில்
3.இக்குறைந்த வாழ் நாட்களை விரயம் செய்தே வாழ்கின்றோம்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால்… இன்றைய விஞ்ஞானத்தில் கண்டிட்ட சக்தியின் நிலைக்கு மேலே “இவ்வாத்மாவின் சக்தியை ஈர்த்தே…” பல நிலைகளை ஒவ்வொருவரும் செயலாக்கிட முடியும்.

பண்டைய காலம் தொட்டே பல ரிஷி நிலை கொண்ட தேவர்கள் எல்லோரும் அவர்கள் இப்பூமியில் வாழ்க்கையுடன் வாழ்ந்திட்ட நாட்களில்… அவர்களால் உணர்த்தப்பட்ட… பதிவு செய்வித்த அனைத்து உண்மை நிலைகளையுமே… இன்றுள்ள இக்கலியின் எண்ணத்திற்குச் செயல்படுத்திட முடியாத வண்ணம் பல நிலைகள் மறைக்கப்பட்டன.

நம் எண்ண நிலையை ஒரு நிலை கொண்டிட்டால் அவர்களின் துணையுடனே பல நிலைகளை நாம் இன்று பெறலாம்.

தாவரங்களின் நிலையெல்லாம் ஒவ்வொரு தாவரமும் ஒரே நிலை கொண்ட சக்தியைத்தான் (அமிலம்) ஈர்த்து வளர்கின்றது. சில வகைத் தாவரங்களின் நிலையுடன் சில அமிலங்களைக் கலக்கும் போது இப்பூமியில் இருந்து நாம் எடுத்திடும் கனி வளங்களைப் போன்ற பல வகை உலோகங்களை நாம் செய்திடலாம்.

தங்கம் தாமிரம் ஈயம் செம்பு இப்படிப் பல நிலைகள் நாமே செய்திடலாம். செய்து என்ன பயன்…? இப்பேராசையை வளர்க்கும் நிலைதான் ஏற்படும்.

தாவரங்களைப் போன்றே சில ஊரும் நிலை கொண்ட அட்டை என்னும் இன வர்க்கத்தை உடைய புழுவும் இன்னும் சில புழுக்களும் ஒரே அமில சக்தியை ஈர்க்கும் நிலையுடையதாக உள்ளன.

அந்த அட்டைப் புழுவின் நிலையெல்லாம் தாமிர சக்தியை ஈர்த்து வளர்ந்த நிலை. இவ்வுலகினில் இப்படிப் பல நிலைகள் உள்ளன. எத்தகைய விஷத்தையும் எடுத்திடும் தாவர வர்க்கங்கள் பல உள்ளன.

அனைத்து நிலைகளுக்கும் குறிப்பு நிலைகள் நம் சித்தர்களால் பதியச் செய்து மறைக்கப்பட்டுள்ளன.

அது எல்லாவற்றையும் அறிய வேண்டும் என்ற சாதாரண நிலையில் அந்த எண்ணத்தின் நிலைக்கு நாம் அடிமைப்பட்டிடலாகாது என்பதற்காக… “பல நிலைகளை மறைத்தே வெளிப்படுத்துகின்றோம்…!”

இருந்தாலும் சக்தியின் நிலையில்…
1.இம் மனித ஆத்மாவின் தெய்வீக சக்தியை உணர்த்திடவே
2.சில குறிப்புகளை இங்கே வெளிப்படுத்தினோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

இன்று நாம் விவசாயம் செய்யும் போது பயிரினங்களைத் தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கப் பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம்.

பூச்சி மருந்தைத் தூவிய பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது. ஆனால் அந்தப் பூச்சிகள் இடும் முட்டைகளிலும் இந்த மருந்து ஊடுருவுகின்றது. முட்டையில் இருக்கும் அந்த மேல் ஓடு அந்த விஷத்தைக் கவர்கின்றது.

1.மேல் பகுதியிலிருந்து இந்த விஷம் அந்த முட்டைக்குள் ஊடுருவி
2.இதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை… உருவாகும் அந்தப் பூச்சிக்குள் இணைந்து
3.இதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளும் நிலை வருகின்றது..!
4.அதாவது முட்டைக்குள் இருக்கும் இதே பூச்சியை உருவாக்கும் அந்த உயிரணுவிற்கு விஷம் கூடி
4.அதன் வழி புதிதாக பூச்சி உருவாகிறது “வலு கொண்டதாக…!”

இதைப் போல் நாம் தூவும் பூச்சி மருந்துகள் தாவர இனத்துடன் கலந்து நெல்லிலோ கத்தரிக்காயிலோ திராட்சையிலோ மாம்பழத்திலோ எல்லாவற்றிலும் இது இருக்கத்தான் செய்கிறது.

இப்படிக் கலந்து வரும் உணவைத்தான் நாம் தினமும் உட்கொள்கிறோம். அப்போது விஷம் கொண்ட அணுவாக நமக்குள் மாற்றுகின்றது.

பின் அது ஜீவ அணுவாக மாற்றிய பின் அதனுடைய மலம் வெளிப்படும் போது நம்முடைய தசைகளுக்குள்ளும் விஷம் ஊடுருவுகின்றது.

உடல் எல்லாம் நன்றாக இருக்கிற மாதிரித்தான் தெரியும்.
1.ஆனாலும் கை கால் கடு…கடு… என்று இருக்கிறது…
2.கண் வலிக்கிறது… தலை வலிக்கிறது… நெஞ்சு வலிக்கிறது… பிடரி வலிக்கிறது என்றெல்லாம் நாம் சொல்வோம்.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே நம் உணர்வுக்குள் இது கலந்து விடுகின்றது. மனிதனின் சிந்தனைகளையும் குறைக்கச் செய்கிறது.
1.அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
2.நம் உடலில் இந்த வேதனையையே அனுபவிக்கும் நிலை வருகிறது “இந்தப் பூச்சிகளைக் கொல்லும் நஞ்சால்…”

அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து அது சிறுகச் சிறுகக் “கேன்சராக” முளைக்கத் தொடங்கிவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணு இதைப் போல் அதிகமான விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது தன் அருகிலே இருக்கும் தசைகளில் இருக்கும் அணுக்களும் மடியத் தொடங்குகின்றது.

பின் இதனின் இனப் பெருக்கமாகி வந்து விட்டால் இதைப் புற்று நோய் என்று சொல்வார்கள். தன் இனத்தின் தன்மை பெருகிப் பெருகி மற்றதுக்கு இடமில்லாது கலைத்துக் கொண்டே போகும்.

“புற்று” தனக்குள் எப்படிப் பல கண்களாக விளைகின்றதோ… அதைப் போல் தன் இன அணுக்கள் பெருகிப் பெருகி… நம் உடல் தசைகளில் இருக்கும் அணுக்களைக் கொன்று கொன்று… இது உணவாக உட்கொண்டு தன் பெருக்கமாக நல்ல தசைகளிலும் இதனின் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படிக் கொடூரத் தன்மைகள் விளைகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

விஞ்ஞானம் ஊன்றிய நஞ்சின் தன்மை விளைந்து அதனின் மகசூலாக விஷ வித்துக்களாக வந்துவிட்டது

1.எல்லாமே சந்தர்ப்பத்தால் நாம் நுகரக்கூடிய நிலைகளுக்குத் தக்கவாறு தான் இயங்குகின்றது.
2.யாரும் தவறு செய்யவில்லை
3.அவரவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் படும் பொழுது அது முதிர்வடையப்படும் பொழுது “விதி” என்ற நிலை அடைகின்றது.

ஒருவருக்குக் கேன்சர் என்ற நோய் வந்தால் விதிப்படி அது கடுமையான விஷம். மனிதனை உருவாக்கிய நல்ல அணுக்கள் அது இலகுவான விஷத்தால் இயங்கும் தன்மை பெற்றது. ஆனால் இந்தக் கேன்சர் நோய் உடலில் வந்த பின் நல்ல அணுக்கள் இயங்குவதற்குண்டான விஷத்தை எல்லாம் அது எடுத்து வளரும்… தன் இனத்தை அது பெருக்கும்.

நல்ல அணுக்களை எல்லாம் மடியச் செய்துவிடும். மனிதனை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் கேன்சரால் பாதிப்படைந்து… உடலை விட்டுப் பிரியும் நிலை வருகின்றது.

இப்படிப் பிரியும் அந்த ஆன்மா நிச்சயம் பாம்பாகவோ விஷத்தை உணவாக உட்கொள்ளும் ஜெந்துக்களாகவோ தான் அடுத்து பிறக்க நேரும். ஆக விதிப்படி இன்று மனிதனாக இருந்தாலும்
1.உயிரில் விஷத்தின் தன்மை அதிகமான சேமிப்பாகும் பொழுது
2.அத்தகைய உயிரினங்களுக்குத் தான் அடுத்து செல்ல வேண்டி வரும்.

கேன்சர் வந்தவர்களைப் பாருங்கள். அவர்களுக்கு எல்லாமே இருக்கும் ஆனால் அந்தக் கடைசி முடிவு எண்ணங்கள் அனைத்தும் விஷம் தோய்ந்து உடலை விட்டுச் செல்லும் பொழுது பாம்பின் ஈர்ப்புக்குச் சென்று விஷத்தை உணவாக உட்கொள்ளும் அதை ஏற்றுக் கொள்ளும் உடலாக அமைத்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாக வந்தாலும் இப்படி மாற்றங்கள் ஆகி விடுகிறது அது மட்டுமல்ல…
1.மனிதனால் உருவாக்கப்பட்ட கேன்சர்
2.இன்று ஏராளமானவர்களைத் தாக்குகிறது

ஏனென்றால் விஞ்ஞானக் கதிரியக்கப் பொறிகள் மற்றதுடன் தாக்கப்பட்டு அது உடலுக்குள் சென்ற பின்… எந்த உறுப்பில் இந்த அணுவின் தன்மை அதிகமாக உருவாக்கப்பட்டதோ அந்த அணு பெருக்கிய பின் அந்த உடல் உறுப்பு கெடுகின்றது.

அதன் வழி கிளைகளைப் பெருக்கி விஷத்தின் தன்மை கூடுகின்றது அது விளைந்து விடுகின்றது.

இதைப் போல் நம் பூமியிலும் கதிரியக்கப் பொறிகள் பரவித் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது தாவர இனத்தை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் இத்தகைய விஷத்தன்மைகள் அதிகமாகின்றது.

அதாவது தாவர இனங்களை உணவாக உட்கொள்ளும் அந்த உயிரினங்களும் விஷம் தோய்ந்து மடிகிறது.
1.அது எடுத்து வெளிவிடும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனால் கவரப்படுகின்றது
2.மீண்டும் விஷத் தன்மைகளை இங்கே பரவச் செய்கின்றது.

இருப்பினும் இந்த விஷத்தின் தாக்குதல் அதிகமாகி நம் பூமியில் பரவப்படும் பொழுது சூரியனால் கவரப்பட்டு… காந்த அலைகள் தொடர்பு கொண்டு பூமிக்குள் பரவப்படும் பொழுது பூமி சுழற்சி அடையப்படும் பொழுது “நடு மையம் ஈர்ப்பு அதிகமாகி விடுகின்றது…!”

அந்த ஈர்ப்பின் தன்மை அதிகரித்து இதே கதிரியக்கப் பொறிகளைத் தனக்குள் சேர்க்கின்றது. உள்ளே சேர்ந்த பின் கொதிகலனாக உருவாகின்றது.
1.கொதிகலனாக உருவாக்கப்படும் போது கல் போல் இருக்கக்கூடிய பாறைகள் எல்லாம் உருகும் தன்மை வருகின்றது…
2.கரையும் தன்மை வருகின்றது… சேறைப் போல் ஆகிறது.

இரும்பு கெட்டியாக இருப்பினும் நெருப்பை அதிகமாகக் கூட்டும் பொழுது அது கூழாக எப்படிக் கரைகின்றதோ… நம் பூமிக்குள்ளும் கரையும் தன்மை அதிகரித்து… நல்ல பொருள்களைப் பாழாக்கி… “விஷத்தின் தன்மை தோய்ந்ததாகிறது…”

பூமிக்குள் வெடிப்பாகும் போது அந்த விஷத்தின் தன்மையை மீண்டும் வெளிப்படுத்தி
1.தாவர இனங்கள் ஏற்கனவே மண்ணில் உருவான சத்தை எடுத்தாலும்
2.பூமிக்குள் கலவையாகி வெளிப்பட்ட அந்தக் கதிரியக்கங்கள் தாவர இனங்களில் சரியான கரு உருவாகாதபடி…
3.அந்த வெள்ளாமை வராதபடி தடுத்து நிறுத்துகின்றது.

இப்படி விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத் தன்மைகள் எல்லா வகையிலும் பெருகிக் கொண்டே செல்கிறது.

இனம் இனத்துடன் தான் சேரும்

இவ்வுலகம் இன்றுள்ள நிலைக்கொப்ப இக்கலியின் நிலைக்கேற்ப ஆத்மீக நெறியைப் போதிக்கும் நிலையும்… அவ்வழிக்கு வழி நடந்திட வந்திடும் நிலையும்… கால நிலைபோல் மாற்ற நிலையில் உள்ளன.

இப்போதனை நிலையே பல நாட்களுக்கு முதலில் பின் நோக்கிச் சென்றிட்ட அன்று வாழ்ந்திட்ட எண்ண நிலைக்கொப்ப வழி முறைகள்தான் இவ்வாத்மீக நெறி முறையுடன் கலந்துள்ளன.

இன்று நாம் வாழ்ந்திடும் இக்கலியுகத்தில் நாம் வளர்ந்து விட்ட நாகரிகத்துடன் ஒன்றியுள்ள நிலையில் இவ்வாத்மீக நெறியை எந்நிலையில் ஏற்று வழி நடந்திடல் என்பதனை உணர்த்திடவே… இப்பரந்துள்ள உலகில் ஈஸ்வரப்பட்டராகிய யான் “என் பூர்வ ஜென்மத்தின் தொடர்பு கொண்டவர்கள் மூலமாகத் தான்…” இந்தப் பேருண்மைகளை இங்கே போதனைப்படுத்திட முடிந்தது.

இந்த நிலைக்கு ஒப்பத்தான் இவ்வுலகு அனைத்திலுமே…!
1.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட ஒரு நிலைப்பட்ட சக்திகள்தான் ஒன்றுபடுகின்றன
2.இனம் இனத்துடன் எப்படிக் கலக்கின்றதோ அந்த நிலை போன்றே…!

எந்த இனமும் தன் இனத்துடன் மற்ற நிலை மோதும்போது “சத்ரு… மித்ரு…” நிலை ஏற்பதில்லையோ அந்த நிலை போன்றே இவ் உலகில் இவ்வெண்ண நிலைக்கும் தொடர்பு நிலை உள்ளது.

இத்தொடர் நிலை கொண்டுதான் பிறப்பும் இறப்பும் உள்ளன. இந்த ஜென்மம் மறு ஜென்மம் அனைத்துமே இக்கலியில் மனித ஜென்மங்களாய் அறிவாற்றலும் நற்செயலைச் செயல்படுத்திடும் அங்கங்கள் பெற்றிட்ட நாம் நமக்குகந்த நம் உடலுடன் உள்ள இக்காந்த சக்தியை அறிந்திடாமல் நம் கால நிலையைக் களிப்பு நிலை என்ற உல்லாச நிலைக்கு அடிமைப்படுத்தி நம் ஆத்மாவை அடிமையாக்கி வாழ்கின்றோம்.

இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான யுகத்திற்கு வேண்டிய சக்தி அனைத்துமே இக்காற்றில் உள்ள காந்த சக்தியை ஈர்த்து இன்றைய மின்சாரமாகவும் இன்னும் இப்பூமியிலிருந்து ஈர்த்தெடுத்த திரவத்தைக் கொண்டு பல மண்டலங்களுக்குச் சென்றிடும் பல கோளங்களைச் செய்வித்தும் செயலாக்குகின்றனர்.

நம் எண்ணத்தில் நம்மையும் விட இயந்திரத்தின் சக்திக்கு அடிமைப்பட்டிடும் நிலையான வாழ்க்கை இக்கலியில் உள்ளது.

பல நிலைகளைப் புகைப்படமாக எடுக்கின்றீர். பல நாட்களுக்குப் பிறகு பழைய நினைவுகளை காண்பதற்கே. பதிவேட்டில் நம் சப்த அலைகளைப் பதித்துக் கேட்கின்றீர். ஆனால்
1.இன்று இயந்திரத்தின் உதவியுடன் செயற்கையாகக் காணும் இந்த நிலைகள் அனைத்துமே
2.நம் ஆத்மாவின் சக்தியில் (நம்மிடம்) உள்ளன.

இன்று எடுக்கும் மின்சாரத்திற்கு காந்தத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு அச்சக்திகளை ஈர்த்து நமக்கு ஒளியை அளிக்கின்றது. இவ்வுடல் என்னும் கூட்டில் நாம் அங்கமாகப் பெற்றிட்ட நாம் செயல்படுத்திடும் நம் கைகளுக்கு அக்காந்த சக்தி நிறைந்துள்ளது.

“நம் ஆத்மாவின் நிலையினை நாம் உணர்ந்தால்…” இவ்வுலகனைத்தும் தோன்றிய நாள் முதற்கொண்டு இன்றைய நாள் வரை அனைத்து நிலைகளையுமே நாம் பிம்பமாக எந்த நிலையை எண்ணுகின்றோமோ அந்நிலையின் ஆரம்ப நாள் தொட்டு இன்று நடக்கும் நாள் வரை ஒளிக் காட்சிகளாகக் கண்டிடலாம். சப்த அலைகளையும் அந்நிலையிலேயே கண்டிடலாம்.

1.நம் ஆத்மாவுடன் கூடிய காந்த சக்தியை நாம் எவ்வெண்ணம் கொண்டு ஈர்த்து எடுக்கின்றோமோ
2.அவ்வெண்ணத்தின் சக்தி அனைத்தும் தொடர் நிலையாக நாம் அறிந்திடலாம்.
3.இவ்வெண்ண நிலையின் பிறவி நிலையிலும் இத்தொடர் நிலையுள்ளது.
4.அவ்வெண்ணமேதான் அனைத்து நிலைகளுக்கும் முதல் நிலை.
5.இவ்வெண்ணத்தின் நினைவுடன் நாம் எடுக்கும் சுவாசமேதான் நம் ஆத்மாவின் செயல்நிலை.

ஆகவே… ஒவ்வொருவரும் இவ்வுலக சக்தியினை இவ் உடல் என்னும் கூட்டில் உள்ள நம் ஆத்மாவின் ஜோதியையே நற்சக்தியாக்கிடும் நிலைப்படுத்துங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

ஒன்று சேர்ந்து வாழ்ந்தால் தான் குடும்பத்தில் மகிழ்ச்சி வருகின்றது. ஆனால் ஒரு பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அந்த ஒருவனை நினைத்தே குடும்பம் சிக்குண்டு சுக்குநூறாகத் தெறித்து விடுகின்றது. எவ்வளவு கோடிச் செல்வம் இருப்பினும் இதைப் போல் நிகழந்துவிடுகிறது

சூரியனை மையமாக வைத்து ஒரு பிரபஞ்சம் எப்படி இயங்குகின்றதோ நம் உயிர் சூரியனாக இருந்து இந்த உடலை இயக்குகிறது.

பிற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்ததிரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி… அது உமிழ்த்துவதைக் கோள்கள் உணவாகக் கவர்ந்து… கோள்களிலிருந்து வருவதைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்து உட்கொள்கின்றது,

இதைப் போல் பிறருடைய உணர்வுகள் வெளி வருவதை
1.நம் எண்ணத்தால் (நட்சத்திரம் போல்) கவர்கின்றோம்
2.கவர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் உடலாக (கோள்கள் போல்) அந்தச் சத்தாக விளைகின்றது
3.உடலுக்குள் விளைந்த உணர்வின் தன்மை உயிருடன் சேர்த்து உயிராத்மாவாக (சூரியனைப் போல்) விளைகின்றது.

ஆகவே…
1.பிறரிடம் இருந்து வரும் உணர்வுகளை ஒன்று சேர்த்துக் கவர்ந்து
2.அந்த உணர்வுகள் நம் உடலாக ஆக்கப்படும் போது
3..நமக்குள் தெளிந்திடும் உணர்வாக உயிருடன் ஒன்றி…
4.அந்த ஞானியின் உணர்வுடன் நாம் இணைப்போம் என்றால்
5.அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றது போன்று நாமும் பெற முடியும் என்பது தான் ஆலயங்களின் தத்துவம்.

ஆனால் அந்த ஆலயத்தில் இப்பொழுது நாம் எப்படிப் போகின்றோம்…?

வெளியில் கடைகளில் எத்தனையோ தவறுகளைச் செய்கின்றனர் காசுக்காக. ஆனால் அவர்களும் இந்தத் தெய்வத்தை வணங்கக்கூடியவர்கள் தான்.

சாமி பேரைச் சொல்லி ஏமாற்றுகின்றான். அதே சமயத்தில் அர்ச்சனை என்று இங்கே காசைக் கொடுத்து ஏமாற்றச் செய்கின்றான்.

அதை எல்லாம் செய்தால்…
1.ஆண்டவன் நமக்கு அதைச் செய்வான்… இதைச் செய்வான்… என்று
2.நம் ஆசைக்குகந்தபடி தான் நாமும் அங்கே நடக்கின்றோம்.

ஆனால் ஆலயம் என்பது நம்மைப் புனிதமாக்கும் இடமாகும்…!

பெரும்பகுதியான ஆலயங்களுக்கு முன்னாடி பார்க்கலாம்… தெய்வத்தின் பேரைச் சொல்லி நமக்கு நாமே ஏமாற்றும் நிலை தான் அதிகமாக இருக்கின்றதே தவிர… “ஆலயம் வரும் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற நிலைகள் இல்லை…!”

1.சாமிக்காக அபிஷேகம் ஆராதனை என்றெல்லாம் காட்டி
2.அந்த உணர்வினை நுகர்ந்தால் (ஐந்து புலனறிவாலும்) நமக்குள் பஞ்ச அமிர்தமாக அந்தச் சக்திகள் இணையும் என்று
3.ஆறாவது அறிவினைத் தெளிவுற எடுத்துரைத்த அந்த போகனின் நிலையை எடுத்துக் கொள்ளாது…
4.போகன் காட்டிய அறவுரைகளை அழித்துவிட்டு மனிதனின் நல்ல எண்ணங்களை அழித்திடும் நிலையாக
5.வியாபார ஸ்தலமாகத் தான் ஆக்கி விட்டார்கள்.

இங்கிருந்து நாம் அருள் ஒளி பெற வேண்டும் என்று சென்றாலும் புனிதத் தன்மை இழக்கும் நிலைகளைத் தான் அங்கே காணுகின்றோம். அங்கே நிர்வகிப்பவர்களும் அப்படித்தான் உள்ளனர். ஆலயத்தின் மறைவில் தனக்குப் பொருள் தேட வேண்டும் என்று தான் எண்ணுகின்றார்கள்.

1.அந்த மெய் ஞானிகள் காட்டிய தத்துவங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.ஒவ்வொரு மனிதனும் முழுமை பெறவேண்டும்…
3.இந்தப் பூமியில் இருளைப் போக்க வேண்டும்… தீமைகள் அகல வேண்டும்… என்ற நிலைகளை வழி காட்டவில்லை.

அந்த மெய் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களை நாம் யாரும் பெறவில்லை. இன்று யாம் (ஞானகுரு) அதை எல்லாம் சொன்னாலும்
1.இதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லாது
2.இதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்…? என்ற நிலைகளில் தான் உள்ளனர்.

ஒரு மது குடிப்பவரிடம் போய்… “நீ குடிக்காதே…!’ என்றால் ஐயா… உங்களுக்கு என்ன தெரியும்…? இதைக் கொஞ்சம் போட்டால் சொர்க்கமே வரும்… நீங்களும் கொஞ்சம் குடித்துப் பாருங்கள்…! என்று நம்மிடமே திரும்பச் சொல்வார்கள்.

அதைப் போன்று தான் அநாகரீகமான நிலைகளில் அதர்வண வேதத்தின்படி இந்த நிலைகள் உருவாக்கப்பட்ட நிலைகளே இன்றும் உள்ளது.

இன்னென்ன மந்திரங்களைச் சொல்லி விட்டால் அந்த இறைவன் இறங்கி வந்து உனக்கு எல்லாம் செய்வான்..! என்ற நிலைகளில் மந்திர உச்சாடணங்களை அங்கே சொல்லி அதை ஆழமாக நமக்குள் பதிவு செய்து விட்டனர்.

அந்த உணர்வின் சக்திக்கு நாம் வந்த பின் ஒரு போதை ஏற்றியது போன்று இதிலிருந்து மீளாது சிக்கிக் கொண்டு…
1.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் அழிவில் இருந்து தப்ப முடியாதபடி
2.இருள் சூழ்ந்த நிலைகளாகப் போகும் நிலையே அதிகமாக உருவாகிக் கொண்டுள்ளது

ஆக ஐதீகம் என்றும் சாஸ்திரம் என்றும் மனிதனுடைய நிலைகளில் ஆசைகளைத் தான் வளர்க்கப்பட்டுள்ளது.

தவறு செய்யாமலே இன்றைய விஞ்ஞான உலகில் “பல கடுமையான நோய்கள் வருகின்றது”

இப்பொழுது மனிதர்களில் அவரின் உடல் நன்றாக இருக்கும். சந்தர்ப்பத்தில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் என்ற உணர்வுகளை அவர்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால்
1.அதனால் அவர்கள் அடிக்கடி சோர்வடைவதும் சஞ்சலமான நிலைகளிலே இருப்பதும்
2.அவர்கள் பேசும் பொழுது ஒரு விதமான வாசனையும் வரும் அவர் உடலில் இருந்து ஒருவிதமான நாற்றமும் வரும்.

காரணம் அடிக்கடி சலிப்பையும் சஞ்சலத்தையும் அவர்கள் சந்திக்கப்படும் பொழுது சலிப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது சிலருக்கு அந்த உடலில் “ஈர்” போன்று தோன்றி மேலெல்லாம் அரிப்பாகின்றது.

ஒரு சிலருக்கு அது தலையிலே ஈரும் பேனுமாக உருவாகிவிடுன்றது அப்படிப் பேன்கள் உருவாகிவிட்டால் அதை இவர்கள் எவ்வளவுதான் சீவி எடுத்தாலும் மறுபடியும் அது வந்து கொண்டே இருக்கும்.

1.என்னதான் மருந்தைப் போட்டு அதைப் போக்கினாலும் இரண்டு நாட்களுக்கு இருக்காது
2.மீண்டும் உடலில் வரக்கூடிய மணத்தால் கரு முட்டையாகிப் பேன்கள் வரத் தொடங்கும்.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை…!

இதே மாதிரித் தான் மரங்களில் அதன் அருகில் இதைக் காட்டிலும் வீரிய மரங்களின் மணங்கள் அடித்தால்… உதாரணமாக அது வேப்ப மரமாக இருந்தால் அடுத்த மரத்தின் மணத்தினை அது எதிர்கொள்ளும் பொழுது அதனால் வாடி அதிலே பார்த்தால் “பிசின்கள்” அதிகமாக வரும் அல்லது “வாடல் நோய்” வந்து கருகிவிடும்.

பார்க்கலாம்… சில மரங்களிலே…!
1.வெயில் அதிகமாகும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்துக் கொண்ட பின்
2.மனிதனுக்கு நோய் வருவது போன்று சில கிளைகள் அப்படியே அது வாடி காய்ந்து மரத்திலிருந்து கீழே விழுவதை நாம் காணலாம்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இது போன்று தான் நாம் அடிக்கடி கோபப்படுவோரைப் பார்க்க நேர்ந்தால்… இனம் புரியாத நிலைகளில் நமக்கும் கோபம் அதிகமாக வரும் சில மனிதர்களைப் பார்த்தால் நமக்குத் தீய சிந்தனைகளும் வரும்

மனித உடலில் இருந்து வரக்கூடிய மணமும் அவர் எந்தெந்த அளவிலே உடலில் குணங்களைச் சேர்த்து நல்ல குணங்களை அது செயலற்றதாக மாற்றுகின்றதோ அந்த உடலில் உறுப்புகளில் நோயாகவும் காரணமாகின்றது

அதே சமயத்தில் அவர் சொல்லாக வெளியில் சொல்லப்படும் பொழுது கேட்பவர் உணர்வுகளிலும் பட்டு அவர்களுக்கும் நோய் வரத் தொடங்கும்.

இதெல்லாம் சந்தர்ப்பத்தால் நுகரும் இந்த சக்திகள் மனிதனுக்கு மனிதன் உபகாரமும் நல்ல பண்புகளும் பரிவுடன் உதவி செய்யக்கூடிய மனிதனாக இருப்பினும்… பிறர் படும் கஷ்டங்களைக் கூர்ந்து கவனிக்கப்படும் பொழுது… அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது இதை எல்லாம் கேட்டு நுகர நேர்கின்றது. சுவாசித்த உணர்வுகள் இரத்தங்களிலே கலந்து உடலிலே நோயாக வந்து விடுகிறது.

எப்படி மரம் செடி கொடிகளில் எதிர் நிலையான மணங்கள் தாக்கிய உடனே கிருமிகளோ பூச்சிகளோ வண்டுகளோ வந்து விடுகிறதோ… வாடல் நோய் வந்து விடுகின்றதோ இதைப் போன்று மனிதனுக்கு வந்துவிடுகிறது

ஆனால் செடி கொடிகளுக்கு மற்றதை நுகரும் சக்தி இல்லை தன்னுடைய வலுவின் தன்மை கொண்டு மற்றது அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது.

உதாரணமாக பருத்திச் செடி அடர்த்தியாக இருந்தது என்றால் அடுத்த பக்கத்தில் இருக்கும் புகையிலைச் செடியில் புழுக்களைக் கொல்ல மருந்துகளை தூவப்படும் பொழுது அங்கே என்ன நடக்கிறது…?

புகையிலைச் சத்தை எடுத்து அதில் அணுவாகிப் புழுவாகி அதை உணவாக உட்கொண்டாலும் மருந்தைத் தூவிய நிலையில் அந்த விஷங்கள் தாக்கப்படும் பொழுது புழுக்கள் இறந்து விடுகிறது… ஆவியாகக் கரைகின்றது சூரியனும் அந்த ஆவியை கவர்ந்து கொள்கின்றது.

ஆவியாக கரைந்த பின் காற்று எந்தப் பக்கமாக வீசுகின்றதோ அதற்குத் தக்கவாறு… அதனுடைய உணர்வுகள் பட்டபின் மற்ற சாதாரண தாவர இனச் சத்தைக் கவர்ந்த அலைகள் அஞ்சி ஓடும்.

அப்படி ஓடும் பொழுது
1.பருத்திச் செடிகள் இருக்கும் பக்கம் இது சென்றால் அது தன்னுடைய உணர்வை எடுக்கக்கூடிய சக்தி இழந்து விடுகிறது
2.தன் சத்தைப் பிரித்து எடுக்கக்கூடிய சக்தி குறையப்படும் பொழுது அந்தச் செடி வாடுகிறது…. அதிகமான மோதல்கள் ஏற்பட்டால்…!

ஆனால் புகையிலையில் அடித்த விஷத்தின் தன்மை அதில் இருக்கக்கூடிய விஷக் கிருமிகளைக் கொன்றாலும்… கிருமிகள் செத்த உணர்வு வெளிவரப்படும் பொழுது அது உடல்பெற்ற நிலைகள் அந்த முட்டையில் படுகின்றது.

ஆனால் முட்டை சாவதில்லை. விஷத்தின் தன்மை அதை ஏற்றுக் கொண்டு அடுத்து மருந்துகளை அடித்தாலும் அது சாவதில்லை.

முதலில் பூச்சிகள் செத்தால் ஆவியாக வருகின்றது சூரியனால் கவரப்படுகின்றது. விஷத் தன்மை பூச்சியின் உடலில் பட்டபின் ஆவியாக மாறுகின்றது அது வீரியமடைகின்றது.

பூச்சியின் விஷத் தன்மைகள் சூரியனால் கவரப்பட்டுக் காற்றலைகளில் அது போகும் பக்கத்தில் பருத்திச் செடியில் மோதப்பட்டுத் தேங்கி விடுகின்றது.
1.தேங்கிவிட்டால் அந்த இலையை உணவாக எடுக்கக்கூடிய நிலையில் எதிர் நிலையாகி
2.பருத்தி செடியின் இலையின் நுனிகள் கருகி விடுகின்றது நுனியில்
3.இவ்வாறு ஆன பின் வளர்ச்சி குறைந்து பருத்திச் செடி கருக நெரும்.
4.அதனுடைய காய்களில் பார்த்தோம் என்றால் பூச்சிகளும் விழுந்து விடுகின்றது.

இயற்கை நியதிகள் இப்படி மாறிக் கொண்டே உள்ளது.

இவை எல்லாம் எதனால் வருகிறது…?

1.மனிதன் விஞ்ஞானத்தால் எடுத்து விரிய விஷ வித்துக்களை உருவாக்கப்பட்டு
2.அந்த விஷத்தன்மைகளைப் பவுடராகவும் நீருடன் கலந்து தூவப்படும் பொழுது காற்றிலும் வருகின்றது… செடிகளிலும் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் இயற்கையில் விளைவதை கடினமான விஷ உணர்வுகளை உருவாக்கப்படும் பொழுது பலவாறு மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுப் பயிர்களில் சேர்ந்து விடுகிறது.

நெல் செடி என்றால் அதிலே பால் பிடித்துத் தான் அரிசி உருவாகும். சோளமானாலும் பால் பிடித்துத் தான் சோளம் உருவாகும்.
1.ஆனால் விஞ்ஞானத்தால் தூவிய விஷங்கள் காற்றலைகளில் இது கலந்த பின்
2.அந்தப் பாலுக்குள்ளும் விஷத்தின் தன்மை புகுந்து விடுகின்றது.
3.மனிதன் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் நஞ்சின் தன்மை பாய்ந்து விடுகிறது.

அதை மனிதன் உணவாக உட்கொள்ளும் போது சிந்தித்துச் செயல்படும் இரத்த நாளங்களில் விஷத்தன்மை கலந்து உடல் முழுவதும் சுழல்கிறது. காற்றில் எப்படிப் பரவிப் படர்கின்றதோ
1.மனித உடலுக்குள் இந்த விஷங்கள் சுழன்று நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் செயலிழந்து விடுகின்றது
2.உறுப்புகள் சுருங்குகின்றது… அதனால் இருதய வலி நுரையீரல் வலி கல்லீரல் வலி சிறுநீரகம் செயலிழத்தல் போன்ற நோய் வருகிறது.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத் தன்னிச்சையாக ஈர்க்கும் பக்குவம் பெற வேண்டும்

வளர்ந்து வரும் செயற்கையுடன் கூடிய கால நிலையில் ஆவி உலகின் செயலும் நம்முடனே வருகிறது என்பதனை உணர்ந்தே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.

1.இன்று வாழ்ந்திடும் மக்களின் (எண்ணிக்கை) அளவை விடவும் அதிகமாக
2.இவ்வாவி உலகில் ஆத்மாக்களின் தாக்குதலினால் இன்றுள்ள மக்களின் வெறியுணர்வு அதிகரித்துள்ளது.

உயிரணுவாய் உதித்து ஆத்மாவுடன் கூடிய ஜீவ நிலை பெற்று ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்திடும் வாழ்க்கையிலெல்லாம் நாம் உண்ணும் நிலை கொண்டும்… எண்ண நிலை கொண்டும்… நம்முடன் பல உயிரணுக்கள் நம்முள் நம் உயிர் ஜீவ ஆத்மாவுடன் நம் உடலில் ஏறுகிறது.

அதனால் நம் செயல் எல்லாம் நம் ஆத்மாவுடன் கூடியதாக மட்டும் இருந்திடாமல் பல உயிரணுக்களின் நிலைக்கு ஒத்த சக்தியெல்லாம் நம் உடலில் இருப்பதினால் “பல நிலை கொண்ட சக்தி” நம் உடலுடன் வளர்கின்றது.

ஒவ்வொருவரின் உடலிலும் பல நிலைகள் உள்ளன. நம் ஆத்மாவை நாம் செயலாக்கிட…
1.ஒரே வழியான ஜெபம் கொண்ட வழியை நாம் செயலாக்கும் பொழுது
2.நம் உடலில் உள்ள பல நிலைகொண்ட அணுக்களின் சக்தி குறைந்து விடுகின்றது.

நம் உயிராத்மாவுக்கு நம் பூமியின் தொடர்பு கொண்ட சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளி வரும் சக்திகளை நம் உயிராத்மா தன்னிச்சையில் ஈர்க்கும் பக்குவம் பெற்றுவிட்டால் அதிலிருந்து வருவதுதான் நமக்குகந்த ஜெப நிலை.

1.பல தீய அணுக்களின் சக்திக்கு அடி பணிந்தே வாழும் வரை
2.தெய்வீக சக்தி நிலையை அடையும் நிலைக்கு நாம் வருவது மிகவும் கடினம்.

நம் உயிராத்மாவிற்கு வேண்டிய சக்தியினை ஈர்க்கும் நிலைப்படுத்தி வாழுங்கால்
1.நமக்கு சப்தரிஷி மண்டலங்களின் தொடர்பிலிருந்து சேமிக்கும் நிலையை எளிதில் பெற முடியும்
2.இது தான் தியானம் என்பது.

இத்தகைய தியானத்தின் மூலம் பல எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டுத் தெய்வீக சக்தியை ஈர்க்கும் நிலை பெற்று விட்டால் பல ஞான வழிகளையும் சித்து முறைகளையும் சப்தரிஷியின் நிலையையும் நம் உயிரணுவே (உயிர்) ஈர்த்துச் செயல் கொண்டிடும்.

இவ்வுயிர் என்னும் ஜீவக்கூட்டை இருந்த இடத்தில் விட்டுவிட்டு நம் ஆத்மாவுடன் கூடிய சத்து (அமில) நிலையை ஈர்த்துக் கொண்டே பறக்கும் நிலை பெறலாம்.

எந்நிலைக்கும் சென்று நம் ஆத்மாவுடன் கூடிய சத்து நிலையுடன் பிம்ப நிலையையும் ஏற்படுத்தி ஒவ்வொரு மண்டலங்களின் நிலையையும் அறியலாம்.

இக்காற்றுடன் எந்தெந்த ஜென்மங்கள் எடுத்து அச் ஜென்மத்தில் நாம் வெளியிட்ட மூச்சு அலையினால் சப்த அலையின் நிலை கொண்டு பல ஜென்மங்களில் வாழ்ந்த நிலையையும் அறிந்திடலாம். இவ்வுலகினிலும் மற்ற மண்டலங்களின் நிலையை அறிந்திடலாம்.

இவற்றினால் யாது பயன் என்றும் கேட்டிடுவீர்…?

இவ்வுயிர் ஆத்மாவின் சக்தியை இக்காலமுடன் காலமாக இவ்வுடலுடன் கூடிய குறுகிய வாழ்க்கையுடன் சுழல விடாமல் இம் மாற்றம் கொண்டு சுழலப் போகும் “இக்கலியின் நிலையிலிருந்து மீளத்தான் இவ்வழியினை வெளியிடுவதெல்லாம்…!”

நம் சக்தியுடன் பல மண்டலங்களின் சக்தியையும் இணைத்துச் செயல்படுத்திட முடியும். இவ்வழியினை யாவருமே அடைந்திடலாம்

இல்வாழ்க்கையென்னும் பிடியில் பேராசையில் வாழ்ந்திட்டால் செயலாக்குவது கடினம். அன்பு கொண்ட ஆண்டவனாய் வந்திட்டாலே இச்சக்தி நிலையை நம் ஜெபமுடன் பெற்றிடலாம்.

இந்நிலையில் வந்த சித்தர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையுடன் இன்னலில் இருந்து சலிப்புற்ற நிலையில் வந்த பலர் உள்ளனர்.

1.போகரின் நிலையைப் போல் வாழ்க்கையுடன் கூடிய நிலையில் வருவதுவே மகத்துவம்.
2.கோலமாமகரிஷி தன் சக்தியையே ஆதிசங்கரரின் சக்திக்கு அளித்திட்டார்.
3.ஒவ்வொரு ரிஷியும் ஒவ்வொரு நிலை கொண்டு வந்தவர்கள்தான்.
4.புத்தரின் நிலை அனைத்திற்கும் மாறு கொண்ட வெறுப்பற்ற நிலையில் வந்த நிலை.
5.பல ஞானிகள் வந்த நிலையெல்லாம் குடும்பத்துடன் ஒன்றிய ஆத்மீக நெறி கொண்ட அன்பு வழியில்தான்.
6.இவ்வழி அடைவதற்கே சந்நியாசி நிலை உகந்ததல்ல
7.ஆத்மீக நெறி பெறுவதற்கு வயது வரம்பு இல்லை.

இந்நிலைகளை உணர்ந்து ஒவ்வொருவரும் வழி பெற்றிடுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

உலக ரீதியில் எடுத்துக் கொண்டால் அன்று எப்படி பிரிட்டிஷ் ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது அவன் கடுமையான ஆயுதங்கள் கொண்டு உலகை அடக்கிவிட வேண்டும்…! என்றும் அவன் எண்ணினான்.

ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் கிளர்ந்து எழும்போது அதிலிருந்து அவனால் மீட்க முடியவில்லை. பின் தன் பிடிப்பில் இருந்து உலகம் அனைத்தையும் விடுவித்தான் பிரிட்டன்.

ஆனால் அதே சமயம் அணு ஆயுதங்களை எல்லாம் இன்று பெருக்கிக்கொண்டு ஐக்கிய நாடு சபை என்ற நிலைகள் ஒன்றைத் தன் அடிப்படை திட்டமாக அமைத்துக் கொண்டு
1.தன் உளவாளிகளின் தன்மை கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் ஊடுருவி
2.இவன் கண்டுபிடித்த நஞ்சின் தன்மைகளைத் தூவி
3.அதனின் நிலைகள் கொண்டு மனிதனை மிருகமாக்கும் நிலைகள் கொண்டு
4.மதம் இனம் பேதம் என்ற நிலைகளில் தூண்டிவிட்டு… மனிதனைச் செயலிழக்கும் நிலைகள் செய்துவிட்டு
5.நானே தான் உலகிற்கு ராஜா…! என்று இன்று அமெரிக்காவின் செயல்கள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் நம் இந்தியாவின் எல்லைகளில் அசுர குணங்கள் கொண்டு தாக்குபவனை அந்த அசுரனை முழுமையாக அழிக்கச் செல்ல முடியவில்லை.

சாதாரண மக்களை அழித்துக் கொண்டிருக்கும் அந்தத் தீய நிலைகளை சட்டப்பிரகாரம் அவனை அடக்கி அவன் செயலில் இருந்து மீட்டி நற்குணங்களை ஊட்ட வேண்டுமென்று அரசு முயற்சி செய்தாலும்… அவனைக் கைது செய்து அவனுடைய அறிவீனத்திலிருந்து தெளிந்த உணர்வு வர வேண்டும் என்று செய்தாலும்… இதை அங்கிருந்தே கொக்கரித்து கொண்டிருக்கின்றான் அமெரிக்கா…!

மனிதாபிமானம் அற்ற நிலையில் நீ அவனுக்குத் (அசுரனுக்கு) தீமை செய்கின்றாய் என்ற நிலையில்… அங்கிருந்து “நீ மனிதாபிமானம் அற்றவன்…” என்று இந்தியச் சர்க்காரைப் பழி சுமத்தும் நிலைகள் வருகின்றது.

எல்லைப்புறங்களில் எல்லாம் இன்றைய நிலைகளில் பல சாதாரண பொது மக்களை அவன் கொன்று குவிக்கின்றான். இரக்கமற்ற செயல்களை செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனால் அவனைத் தட்டிக் கேட்டு அந்தத் தீயவனை ஒடுக்க இடமில்லாது அவன் நேரடியாக அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசிக்கொண்டு இருக்கின்றான்.

1.அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசும் நிலைகள் கொண்டு
2.தன் உளவாளிகளைக் கொண்டு அவன் எந்த மதத்தை உருவாக்கினானோ
3.அந்த மதத்தின் அடிப்படை கொண்டு இன்றும் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்து
4.நஞ்சினைத் தூவித் தன் இனத்தை பெருக்கும் நிலைகளை இன்று நிலைகள் போய் கொண்டிருக்கின்றது.

குறுகிய காலத்தில் தீமைகளில் இருந்து மீள வேண்டுமென்றால் சகோதர உணர்வுகளை நாம் வளர்த்தே ஆக வேண்டும். குறைகளை அகற்றும் நிலைகள் வர வேண்டும்.

பிறருடைய குறைகளைக் கண்டாலும் விண்ணை நோக்கி நாம் ஏகி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டுமென்றும்
2.தீமைகளில் இருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்றும்
3.ஒருவருக்கொருவர் இந்த அருள் வழியில் நேசித்து கொண்டால்தான்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியை நாம் பெற முடியும்.

எந்த விஷத் தன்மை வந்தாலும் தப்ப முடியும்…!

நல்லதாகிப் போகும்… நலமாகும் போ…!

தீமைகளை வென்றது துருவ நட்சத்திரம் அதனை நீங்கள் கவரும் வழிக்குத் தான் உபதேசித்து வருகிறோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்கள் உடலுக்குள் கலவை ஆக்கிக் கொண்டு வரும் பொழுது தீமையை வென்றிடும் சக்திகள் உங்களுக்குள்ளும் விளையும். ஒளியாக மாற்றிடும் திறனும் பெறுவீர்கள்.

அகஸ்தியன் தாய் கருவிலேயே விஷத்தை வென்றிடும் சக்திகளைப் பெற்றவன். அவன் பிறந்த பின் அவன் பார்வையிலே மற்றவர்கள் நோய்கள் நீங்கியது.

அவனுடைய வளர்ச்சியில் விஷத்தை வடிகட்டும் பூமியின் துருவத்தின் ஆற்றலைப் பெற்ற பின் தன் உடலில் வந்த விஷத்தின் தன்மைகளை… நாகம் எப்படிப் பல விஷங்களைச் சேர்த்து வைரமாக மாற்றுகின்றதோ அதைப் போன்று ஒளியின் தன்மையாக மாற்றும் தன்மை பெற்றவன்… துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளான்.

பாம்பு பல விஷத்தின் தன்மைகளைக் கவர்ந்து கொண்டு உயிரணுவினை ஜீவ அணுவாக மாற்றும்.
1.அந்த விஷம் உறையும் போது வைரமாகி இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகிறது.
2,அதற்கு ஜீவன் இல்லை… ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலை தான் அதற்கு உண்டு.

இப்பொழுது நாம் சில வகையான பெயின்ட்டுகளைத் (FLOURESCENT PAINT) தயார் செய்கின்றோம்.
1.வெளிச்சம் பட்ட பின் அதனுடைய எதிர் ஒளிகளைக் நமக்குக் கொடுக்கின்றது.
2.பகலிலே சூரியனுடைய ஒளி பட்டால் அது சாதாரண பெயின்டாகத் தெரிகின்றது.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…! இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.”புரியாததைச் சாமி சொல்கின்றார்” என்று நினைத்து விடாதீர்கள்.
2.முதலிலே பதிந்த பின்பு… அடுத்து எண்ணினால் புரிகின்றது.

ஆக… புரிய வைப்பது தான் எப்படி…?

ஒன்றும் தெரியாத குழந்தை ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திற்குச் சென்று எழுத்துக்களைப் பார்த்தால் அந்த எழுத்து என்ன…? என்று சொல்லத் தெரியாது. அ… உ… எ… என்று சப்தத்தை எழுப்புவதற்கு “எழுத்தைச் சொல்லி” ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார்.

உ என்று சொல்வதை அ என்று சொன்னால் எழுத்திற்கும் அதற்கும் வித்தியாசமாகிவிடும் அல்லவா.

அதே மாதிரி எந்த மொழிகளை எடுத்தாலும்
1.முதலில் ஒலியின் சப்தங்களைக் கூட்டி
2.அடுத்த சப்தங்களைக் கூட்டும் பொழுது சொல்லின் வன்மைகள் எப்படி இயங்குகின்றது…?
3.அதாவது சொல்லால் சொன்ன பின் புரிந்து கொள்ளும் நிலை வருகின்றது என்று
4.இது அன்று தத்துவ ஞானிகள் எழுத்து வடிவினை இப்படிக் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன் கண்ட உணர்வினைத் திருப்பிப் பார்ப்பதற்கு அன்று எழுத்து வடிவு இல்லை.

1.அவன் காலத்தில் உணர்வின் ஒலியைப் பதிவாக்கி மற்றவர்களை ஈர்க்கச் செய்து
2.இது நலமாகும் போ…! என்று அவர்கள் சொல்லப்படும் போது அவன் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பதிவான பின்
3.அது நல்லதாகிப் போகும் என்று அந்த விஷத்தின் தன்மை முறித்த நிலைகளை
4.”அந்தச் சொல்” அவனுக்குள் சென்று நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.

ஏனென்றால்
1.அவன் சொல்லைக் கேட்டுணர்ந்து இருந்தால் தான் அது வருகின்றது…
2.நஞ்சை வெல்லும் உணர்வுகள் அங்கே வருகின்றது.

எழுத்துக்களை உருவாக்கிய பின் மொழியின் உணர்வின் நாதங்களை மற்றவர்கள் எழுப்புகின்றனர். அதன் உணர்வு பதிவான பின் அந்த நாதத்தில் கூறிய உணர்வின் தன்மையை அறிகின்றனர்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஞானிகள் காலத்திற்குப் பின் அவரின் போதனைகளை வழி நடத்துவோர் அரிதாகவே உள்ளனர்

இயேசு கிருஸ்துவைக் கல்லறையில் அடக்கம் செய்த பிறகு அவர் மூன்றாம் நாளில் எப்படி வெளிப்பட்டார்…? முன் பாட நிலைப்படி அவ் உடலை ஒரு ஞானி ஏற்றார்…! என்று செப்பியுள்ளேன்.

அவ்வுடலை இவர்கள் அடக்கம் செய்த பிறகு அவ் உடல் என்னும் கூட்டிற்கும் அவ்வுடலில் ஏறிய ஞானியின் ஆத்ம சக்திக்கும் தொடர்பற்ற நிலையில் இவர்கள் இம்சித்ததெல்லாம் உடல் என்னும் கூட்டைத்தான்.

இவர்கள் இம்சித்த நிலையில் இவர்கள் எண்ணத்தில்தான் அத்தீய சக்தி இவர்களையே தாக்கிற்று. இயேசு பிரானின் ஆத்மாவையோ அஜ்ஜீவ சக்தியையோ இவர்கள் செய்த இம்சை நிலை பாதிக்கவில்லை.

எப்படி எப்படி எல்லாம் இம்சைப் படுத்திடலாம் என்ற எண்ணம் கொண்டார்களோ அவ்வெண்ணமுடனே சுவாசித்த சக்தி நிலையெல்லாம் இவர்கள் உடலில் தான் ஏறியது.

அம்மகான் இவர்கள் அடக்கம் செய்திட்ட பூத உடலில் இருந்து அந்த ஞானியின் சக்தி வெளிப்பட்டு ஆவியான அமில நிலை கொண்ட ஆத்மாவுடன் கூடிய ஆவி பிம்பத்தைத்தான் இயேசு பிரானாய் இவர்கள் மூன்றாம் நாளில் கண்டது.

இந்நிலை பெறுவதற்கு அவ்வுடலில் ஏறிய அம்மகான் இச்சுவாச சக்தியை எங்கும் பிம்பப்படுத்திடும் நிலை பெற்றார்.

ஆனால் அங்கு வாழ்ந்த மக்களிடையே… இன்று அவ்வழியில் வந்திட்ட அந்நிலையைப் போதிக்கும் ஜெப நிலையில்…
1.அவரை ஜெபப்படுத்தும் நிலையே மாறு கொண்ட நிலையில் உள்ளது
2.சக்தியின் ஜெபத்தை ஈர்த்து ஜெபிப்பார் இல்லை.

ஞான ஒளியைத் தன் ஞானமுடன் ஜெபம் கொண்டு ஈர்த்து இயேசுபிரான் நாமத்தில் வந்திட்டவரின் சக்தியை ஈர்த்து அவருடன் தொடர்பு கொண்டு செயல் படுத்திடும் நிலை அவர்களை வழி நடத்துவோருக்கு எட்டவில்லை.

பல ஜெபங்கள் செய்கின்றனர்… வளர்ந்துள்ள நாகரிக நிலைக்கொப்ப…!
1.ஆத்ம ஜெபம் கொண்டு அவரின் தொடர்பைப் பெற்றிடும் நிலை கொண்டிடவில்லை.
2.பக்தி நிலையை வளரவிட்டு சக்திக்கு அடி பணியும் நிலை உள்ளது.
3.அம் மகானின் தொடர்பைப் பெற்றிருந்தால் இன்று இம் மனித உள்ளங்களின் வெறி உணர்வை மாற்றும் நிலையைப் போதித்திடலாம்.

இன்றுள்ள எண்ண நிலையே வெறி உணர்வும்… காம இச்சையின் நிலையும்… பேராசையின் நாகரிக நிலையும்… “அதி வேகமாக எண்ணமுடன் கலந்து வளர்கின்றன…!”

இந்நிலையின் வளர்ச்சியினால் வரும் அபாயத்தையோ உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்ம சக்தியையோ கடுகளவும் எண்ணுவார் இல்லை.

ஆத்மீகத்தை வழிப்படுத்திட்டால் இன்றுள்ள இவ்வெண்ண நிலைக்கு அமைதி கொள்ளும் அன்பு நிலையைச் செயலாக்கிடலாம்.
1.இன்றும் அங்குள்ள மக்களின் நிலையில் பக்தி என்னும் பய நிலை உள்ளது
2.வழிப்படுத்திடத் தக்க “குரு…” இல்லை.

மற்ற நாடுகளில் தம் தம் எண்ணத்தில் உள்ள கறையை இன்றுள்ள ஜெபாலயங்களில் வெளியிட்டால் எண்ணக் கறையை நீங்கிவிடுவதாகப் போதனை நிலையுள்ளது. இக் கறையுடன் கறையைச் சேர்த்து ஒரே சூனிய நிலையாக்குகின்றார்கள் மனித ஆத்மாக்களை…!

சக்தியின் சக்தியாய் ஆத்ம ஜீவன் கொண்ட மக்களெல்லாம் இன்று வாழ்ந்திடும் அன்பு நிலையிலும் பந்த பாசம் கொண்ட ஆத்மீக நெறியும் இல்லாமல் மிகவும் கீழ் நிலை கொண்ட அவல நிலையிலும் வாழ்கின்றனர்.

மாபெரும் முனிவரின் சக்தி பெற்ற இந்நிலையுள்ள அவ்விடம் இன்று சூனிய நிலையாக உள்ளது…!

செயற்கைக்கு அடிமைப்பட்டுப் பேராசைப் பேயின் பிடியில் சிக்கி நாகரிகப் போர்வை போர்த்தியே ஆத்மீக நெறியினை அறிந்திடாமல் இப்பாட நிலையை யாவருக்கும் பொதுவான நிலைப்படுத்தி வழங்கி வருகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்

நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமாக நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.

அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில்
1.நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால்
2.“சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!

அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்து பதில் சொல்வதை விட்டுக் கண்ணைக் கசக்கி அழுகத் தொடங்கிவிடுவோம்.

நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.

கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.

மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.

ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு “எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும்…!” என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.

மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது…! என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!

இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத்தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.