நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

நம் உடலில் உள்ள கணையங்களுக்கு நாம் தியானிக்க வேண்டிய முறை

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வைப் பாய்ச்சுங்கள்.
1.கல்லீரல் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தணிகின்றது
2.அசுத்தங்கள் இருந்தால் அகற்றப்படுகின்றது.

கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை ஊட்டும் பொழுது இரத்தத்தைப் பரிசுத்தப்படுத்தவும் உணவாக வரும் நிலையில் அதிலுள்ள அசுத்தங்களை அகற்றி நல்ல உணர்வாக மாற்றும் திறனும் பெறுகின்றது.

கல்லீரல் மண்ணீரலைச் சீராக இயங்கச் செய்யும் அந்த ஆற்றல் நமக்கு இப்பொழுது கிடைக்கும்.

இரத்தத்தைச் சமப்படுத்தும் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் சீரானால்
2.உப்புச் சத்தைக் குறைக்க சர்க்கரைச் சத்தைக் குறைக்க இரத்த கொதிப்பை குறைக்க உதவும்.

எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும் போது அத்தகைய குறைபாடுகளைத் தூண்டும் அணுக்களை எல்லாம் வடிகட்டி நமக்குள் சமப்படுத்தும் நிலைகள் பெறும்.

தீமைகளைச் சமப்படுத்தி ஒன்றாக்கி நல்ல உணர்ச்சிகளை ஊட்டும் தன்மை நம் கணையங்கள் இப்பொழுது பெறுகின்றது.

சமையல் செய்யும்போது பல சரக்குகளைப் போடுகிறோம். எல்லாம் ஒன்றாகிச் சமமாக இருந்தால் சுவை கூடுகின்றது. குறைந்தால் சுவை குறைகிறது.

ஒரு காப்பியைப் போடுகின்றோம் என்றால் சமமான சூடாக இருந்தால் காப்பித்தூள் இனிப்பு எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுவையாக இருக்கும்.

சூட்டின் தன்மை குறைந்தால் போடக்கூடிய காப்பித்தூளையும் பாலையும் இனிப்பின் தன்மையும் ஒன்றாக்காதபடி சுவையைக் குறைத்து விடுகின்றது.

அதைப் போன்று தான் நம் உடலில் உள்ள கணையங்கள் சமமாக்கும் அந்தத் தெளிவான நிலைகள் பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் “அருள் கணையங்களாக” மாற்றிக் கொள்ள முடியும்.

அந்தக் கணையங்கள் சீராக இயங்குவதை இப்பொழுத் நீங்கள் உணர முடியும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் பொழுது
1.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் ஒரு புத்துணர்ச்சி பெறும்.
2.சர்க்கரைச் சத்து உப்புச் சத்து போன்ற குறைபாடுகளை நாம் அகற்ற முடியும்.

புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

 

உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!

ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது

சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்துவிட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.

மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.

அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.

அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.

ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.

“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.

1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.

பளிச்… பளிச்… என்று ஊசி குத்துவது போல் உடலில் வலி எதனால் வருகிறது…?

பளிச்… பளிச்… என்று ஊசி குத்துவது போல் உடலில் வலி எதனால் வருகிறது…?

 

சாதாரணமாக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு தடவை கோபமாகப் பேசியிருப்போம். அந்த உணர்வு பட்டவுடனே பாவிப் பயல்… இப்படிப் பேசுகின்றானே…! என்று அந்த உணர்வுகள் அவரிடமிருந்து வெளிப்படும்…!

அப்போது
1.நாம் கேட்கும் போது நமக்குள் பதிவாகிறது… அணுவாகிறது.
2.எவ்வளவு வேதனைப்பட்டார்களோ அதனுடைய உணர்வின் அணுக்களை
3.அது தன் ஆகாரத்திற்காக எடுக்கப்படும் போது போது பளீர்… பளீர்… என்று நம் உடலில் மின்னும்.

நாம் நினைப்போம்… நாம் ஒன்றும் சொல்லவில்லையே. அவர்கள் தவறு செய்ததனால் தானே நாம் கோபித்தோம்…! என்போம்.

ஆனால் அதிலே உருவான அந்த வேதனையான உணர்வின் அணுக்கள் நமக்குள் இங்கே விளைந்த பின்
1.அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது கிளர்ச்சிகளைச் செய்யும்.
2.அந்த நேரத்தில் பளீர்…ர்ர்.. என்று மின்னல் தாக்குகிற மாதிரி (ஊசி குத்துவது போல்) இருக்கும்.

காரணம் இந்த அணுவின் தனமை தனக்குள் ஆகாரத்திற்காகப் பளீர் என்று மின்னும். அதற்குப் பின்
1.நினைவு அந்த இடத்திற்கே வரும்.
2.நினைவு வரப்படும் போது உள்ளுக்குள் எடுத்து அந்த ஆகாரத்தை விஷத்தைப் பரப்பும்.

அதே போல் சந்தர்ப்பவசத்தால் நாம் அடிக்கடி வேதனைப்படுகின்றோம் என்றால் அந்த வேதனையின் அணுக்கள் டி.பி. நோயாக மாறுகிறது.

நல்ல உணர்வின் அணுக்களாக இருந்தால் அதனின் மலம் பட்டால் நம் எலும்புகள் சீராக இருக்கும். ஆனால் வேதனையால் உருவான அணுகக்ளின் மலம் பட்டால் எலும்புகளை அது அரிக்கத் தொடங்கும்.

நம் சுவாச நாளங்களில் இத்தகைய விஷமான அணுக்கள் பட்டால் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நுரையீரலை இது சாப்பிட ஆரம்பிக்கும். ஓட்டை ஓட்டையாக விழுந்துவிடும்.

இதைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாலோ…
1.அதனுடைய கிளர்ச்சியைச் செய்த பின் அம்மம்மா…! என்போம்
2.அந்த வலி எடுக்கும் போது இப்படிக் கூடி
3.அந்த உணர்வைத் தூண்டி அது தன் சாப்பாடை எடுத்துக் கொள்ளும்.

அதாவது ஒரு பக்கத்தில் நம் உடலில் பளீர் என்று மின்னினால் அந்த உணர்வுக்காக அந்தக் கிளர்ச்சியைச் செய்கிறது என்று அர்த்தம்
1.கிளர்ச்சி செய்த பின் இந்த ஆன்மாவில் இழுக்கும்.
2.எந்த அணு கிளருகிறதோ அது தான் சாப்பாட்டுகளைக் கவரும்.
3.இது கிளர்ச்சிகளைத் தூண்டவில்லை என்றால் நமக்கு அந்த (வேதனை) நினைவு வராது.

ஆனால் கிளர்ச்சியைத் தூண்டும் போது கண்ணுக்கு நினைவு வரும்.
1.கண்ணில் உள்ள கருமணி இங்கே பதிவு செய்கிறது.
1.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ “யாரைப் பார்த்து வேதனையைப் பதிவு செய்ததோ…”
3.அந்த மனித உடலிலிருந்து வந்ததை இது (மீண்டும்) எடுக்கும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாம் ஒருவரைக் கோபித்துப் பேசினாலும் அல்லது ஒருவரைச் சாபமிட்டுப் பேசினாலும் அது வேறு.

ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் இரக்க உணர்வுடன் பார்த்தாலும் அந்த உணர்வின் அணுக்கள் நமக்குள் வந்துவிட்டால் மேலே சொன்ன அதே கிளர்ச்சியைச் செய்யும்.

ஆக… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்ற நிலையில் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது அதே உணர்வின் அணுக்கள் நமக்குள் விளையும்.
1.அப்பொழுது அதற்குச் சாப்பாடு வேண்டும்
2.இந்த உயிரின் மூலமாகத்தான் அது எடுத்துக் கொள்ளும்.

சூரியன் தன் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சப்படும் போது ஒரு செடியில் தாக்கி அந்தச் செடியை இயக்கச் செய்து அந்த உணர்வின் தன்மையை அதே காந்தத்தால் அதனின் உணர்வை இழுக்கச் செய்கிறது.

இருந்தாலும் செடி தன் மணத்தால் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. இதைப் போல் நாம் அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவான பின் அதே உணர்வின் தன்மை இங்கே கிளரும்.

1.ஸ்ஸ்…ஸ்ஸ்… அப்பா……! என்று இந்த நினைவு எண்ணியவுடனே கண்ணுக்குத் தான் வரும்.
2.நேராக அந்த அணுக்களுக்குச் சாப்பாடாகப் போய்ச் சேரும்.
3.எம்மா……! என்று நினையுங்கள்… இந்தச் சாப்பாடு போனவுடனே கொஞ்சம் அடங்கும்.

அந்த நேரத்தில் யாராவது சந்தோஷமாக நம்மிடம் வந்து சிரித்துக் கொண்டே ஏதாவது சொன்னால் கோபம் வரும். சொல்பவர்கள் மீது வெறுப்பு அதிகமாக வரும். நமக்குள் வேதனை அதிகமாகும்.

நாம் தவறு செய்ததனால் இது வரவில்லை.
1.நாம் தவறு செய்தவர்களைப் பார்க்கப்படும் போது
2.அந்த உணர்வின் அணுக்கள் உடலிலே விளையப்படும் போது
3.அதனின் உணர்வுக்கு இரைகளை எடுக்க கிளர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.ஆன்மாவில் வந்த பின் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் சத்தை எடுக்கிறது.

இதை எல்லாம் தெரிந்து கொண்ட நிலையில் குருநாதர் காட்டிய வழியில் அவ்வப்போது ஆத்ம சுத்தி செய்தால் அதை எல்லாம் மாற்றி நல்ல அணுக்களாக நம் உடலில் விளையச் செய்ய முடியும். தீமை செய்யும் அணுக்களின் விளைச்சலைத் தடைப்படுத்தவும் முடியும்.

அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன…?

அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்களுக்குச் சர்க்கரை நோய் வரக் காரணம் என்ன…?

 

நமக்குத் தெரியாமலே நம் உடலில் கோபமும் வெறுப்பும் அதிகமாகச் சேர்ந்து விட்டது என்றால் எந்த வேலையைச் செய்தாலும் வெறுப்பாகவே வரும்.

கோபம் வரும் சமயங்களில்… குடும்பத்திலோ அல்லது தொழிலிலோ யாரைப் பார்த்தாலும்
1.ஏதாவது வேலை சொல்லிக் கொண்டிருக்கும்போது திருப்பிக் கேட்டால் உடனே கோபம் வரும்
2.இப்படி அடிக்கடி செய்தோம் என்றால் இரத்தக் கொதிப்பாக மாறும்.

அதே சமயத்தில் இந்தக் கோபமும் வெறுப்பும் வரப்படும் போது ஒருவர் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து… அவர்கள் சிரிப்பதைப் பார்த்தால் உடனே அது எதிர்நிலையாகும்.

எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று அடிக்கடி அதைப் பார்த்து அவர்கள் சந்தோஷத்தைக் கண்டு வெறுத்தோம் என்றால் நம் உடலில் சர்க்கரைச் சத்து உண்டாகும். இந்த இனிப்பு பிரிந்துவிடும்.

1.அவர்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்ற அந்த உணர்வை எடுத்து
2.எதைக் கண்டு இப்படிச் சிரிக்கிறார்கள்…? என்று இந்த வெறுப்பு வரப்படும் போது
3.மற்ற உணர்வுகள் இங்கே சேர்த்தவுடனே சர்க்கரை பிரிந்துவிடும்.

பொதுவாக… நமக்குள் ஒரு மகிழ்ச்சியை ஊட்டுவதும் ஒரு இயக்கச் சக்தியாக இருக்கக்கூடியதற்கு அந்த (சந்தோஷம்) உணர்வு வந்து தான் சுவை கொடுக்கும்.

ஆனால் மேலே சொன்னபடி நாம் வெறுக்கும் போது
1.அந்தச் சுவை பிரிந்து சென்றால் சர்க்கரைச் சத்து வந்துவிடும்.
2.இந்தக் காரமும் அதுவும் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இரண்டும் சண்டை போடும்.
3.சண்டை போடுவதற்கே நேரம் பத்தாது.

இது பெருகினால் உடலில் நிச்சயம் இரத்தக் கொதிப்பு வரும். சர்க்கரைச் சத்துடன் இந்த இரத்தக் கொதிப்பும் சேர்ந்தால் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதும் போது இருதயம் பலவீனமாகும்.

சண்டை போட்டோம் என்றால் இருதயத்தில் இரத்தம் செல்லும் வால்வுகள் வீக்கமாகி விடும். அப்புறம் அது எடுத்துத் தள்ள முடியாதபடி அந்த வால்வுகள் கெட்டுப் போகும்… இருதய சம்பந்தப்பட்ட நோய் வரும்.

நாம் தவறு செய்யாமலே இப்படி எல்லாம் வரும்.

பெண்கள் நிறையப் பேருக்கு இருதய வலி உண்டு…! நெஞ்சு வலி நெஞ்சு வலி என்று இருதயங்களில் இரத்த வால்வுகளில் பலவீனம் அடையப்படும் போது அது சரியாக வேலை செய்யாது.

1.டாக்டரிடம் சென்றால் உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்பார்
2.படி மேல் ஏறினால் மூச்சுத் திணறலாகும்… அது ஆகும்… இது ஆகும்…! என்று பயத்தை ஊட்டிவிடுவார்கள்.

இந்த எண்ணங்களைக் கொஞ்சம் வேகமாக எண்ணினால் “இப்படி ஆகிவிட்டதே… பிள்ளை குட்டிகள் இருக்கின்றதே… தொழில் இருக்கிறதே…! என்று வேதனையை வளர்த்துக் கொள்கிறோம். நாம் தவறு செய்யாமலே நமக்குள் இத்தகைய எண்ணங்கள் வந்து விடுகிறது.

டாக்டர்கள் உடலை முழுமையாகப் பரிசீலனை செய்த பின்பு… ஹார்ட் அட்டாக் வரலாம்… மூளையைப் பாதிக்கும்… கை கால் வராது…! என்றெலலம் அடுக்கிக் கொண்டே போவார்கள். இந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் இல்லை என்றால் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.

எல்லாவற்றையும் சொன்னவுடன் இன்னும் கொஞ்சம் வேகமாக அதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம்.

உதாரணமாக இது எதுவுமே தெரியவில்லை… டாக்டரிடம் செல்லவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடலில் மேல் வலி..! கிறு…கிறு… இருக்கிறது என்று சொல்லி சுக்கையோ மிளகையோ எதையாவது எடுத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு சிலர் பேசாமல் இருப்பார்கள்.

ஆனால் டாக்டரிடம் சென்று இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்த பின் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது… படி மீது ஏறினால் இன்னும் பாதிக்கும் என்று சொன்னால் போதும்.

1.முதலில் சிறிதளவு அதிகமாக இருந்த இரத்த அழுத்தத்தை “இரண்டு பங்காக்கி விடும்…”
2.200… 250க்கு மேல் சென்றுவிடும்… அதற்குப் பின் அவர்கள் சொல்லும் மருத்துவத்தைச் செய்யாமல் இருக்க முடியாது.
3.நம் எண்ணங்கள் பலவீனம் அடைந்தால் இது எல்லாம் ஆகத்தான் செய்யும்.

இப்படித்தான் நம்மை அறியாமல் நம் ஆன்மாவில் எத்தனையோ அழுக்குகள் சேர்கிறது. இதை நாம் துடைக்க வேண்டுமல்லவா… துடைப்பதற்கு என்ன வழி வைத்திருக்கின்றோம்…?

ஆறாவது அறிவைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இங்கே உபதேச வாயிலாக அந்த ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

யாம் உபதேசிக்கும் இந்த அருள் ஞானிகள் உணர்வு உங்களுக்குள் பெருகப் பெருக மன பலமும் உடல் நலமும் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானமும் பெருகும். நோய் வராது தடுக்கவும் முடியும்.

இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி

இரத்தம் போகும் பாதையில் உள்ள அடைப்புகளை நீக்கும் தியானப் பயிற்சி

 

இருதய வலி (நெஞ்சு வலி) போன்ற உபாதைகள் வந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்து சிறிது பின்னுக்கே சாய்ந்து சிறிது நேரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் விண்ணிலிருந்து இழுத்துச் சுவாசியுங்கள். (ஆபரேஷன் செய்தவர்கள் செய்யக் கூடாது…)

1.மெதுவாக மூச்சை அடக்கி மறுபடியும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற அந்த மூச்சை எடுங்கள்.
2.இரண்டு நொடி உடலுக்குள் நிறுத்துங்கள். மறுபடியும் மெதுவாக விடுங்கள்.

காரணம் நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதையில் அடைப்புகள் இருக்கும்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகளில் புகையிலையோ அல்லது
2.பீடி சிகரெட் பிடிப்பவர்கள் புகை விடுவதை நுகர்ந்திருந்தாலோ
3.நாம் பிடிக்கவில்லை என்றாலும் அந்த மாதிரிப் பிடிக்கிறார்கள் என்று எண்ணினால் போதும்.
4.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று இரத்தங்கள் போகும் பாதைகளில் உறைந்து விடுகின்றது.

உறைந்து விட்டால் இருதத்திலிருந்து இரத்தம் ஒரு பகுதி வழியாகப் போகவில்லை என்றால் அடுத்த பகுதி வழியாகப் போகும்.

நுரையீரலுக்கோ மற்றதுக்கோ இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும். இந்தப் பாதையும் அடைபட்டு விட்டால் இதே போல் அடுத்த பக்கமும் அடைபடும்.

மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்று வழியாகப் போனால் தான்.

இல்லை என்றால் அந்தப் பாதைகள் அடைபட்டு விட்டால் இருதயம் சீராக இயங்காதபடி இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வந்துவிடும். நெஞ்சு வலி அதிகமாகி மனிதனை மடியச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இடுப்பிலே கையை வைத்து அந்தச் சுவாசத்தை மேலே சொன்னபடி அந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும். அந்த அடைப்புகளை நீக்கிவிடும்.

ஒன்றும் செய்ய முடியவில்லை… மிகவும் தொல்லை கொடுக்கிறது என்றால் தியான வழியில் இருப்பவர்கள் ஒரு ஐந்தாறு பேர் சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டமைப்பாக எண்ணுங்கள். அவருக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சுங்கள்.

இங்கே கொடுத்த விபூதியையோ அல்லது தண்ணீரையோ தியானத்திற்கு முன்னாடி வைத்து அதற்குப் பின் அந்தத் தீர்த்தத்தை அவரை அருந்தச் செய்யுங்கள்.
1.அவர் உடலில் உள்ள இருதய வலி நீங்கி… இருதயம் சீராக இயங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று இந்த எண்ணத்தில் நீங்கள் கொடுங்கள்.
2.அவர் குடிக்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று உங்கள் பார்வையைச் செலுத்துங்கள்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நீங்கள் சீர்படுத்த வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று அவர்களுக்குள் இதைப் பாய்ச்சப்படும் போது இது நல்லதாகும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

வெளியிலிருக்கும் எதிரிகளைக் காட்டிலும் நமக்குள் உருவாகும் எதிரிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் கூட அடுத்தவர்கள் நம் மீது ஏதாவது குறையாகச் சொல்லி விட்டால் அவர்கள் உணர்வுக்கொப்ப அது ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

நமக்குள் பதிவாகி விட்டால் “என்னை இப்படிச் சொன்னானே… செய்தானே…!” என்ற இந்த உணர்வுகள் நமக்குள் எதிரியை வளர்த்துக் கொண்டே இருக்கின்றது. அப்பொழுது
1.நம் நல்ல குணங்களுக்கு இரையே கொடுப்பதில்லை… அதை வளர்ப்பதும் இல்லை
2.நம் நல்ல குணங்களை ஒடுக்க நாமே காரணமாகின்றோம்

அந்த நல்லதைக் காப்பதற்காகச் சாதாரண நிலைகளில் கொடுக்கப்பட்டது தான் விநாயகர் தத்துவம். அன்று மெய் ஞானியான அகஸ்தியனால் இது உருவாக்கப்பட்டது.

அவன் தனக்குள் கண்டுணர்ந்ததைத் தன் இன மக்கள் அனைவரும் பெறுவதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்தான்.
1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின் ஆற்றலை நாம் பருகினோம் என்றால்
2.எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்… ஒடுக்க முடியும்… அதைப் பழக்கப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நம்மைத் திட்டி விடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை உற்றுப் பார்த்த பின் நமது உயிர் அதை இழுத்து அந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அடுத்து உடலுக்குள் அதை அணுவாகவும் இதே உயிர் தான் உருவாக்குகின்றது. எவ்வளவு வேதனைப்படும்படி அவன் சொன்னானோ அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக இங்கே விளைந்து விடுகின்றது.

இதைத்தான் உயிரான விஷ்ணு வரம் கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. விஷ்ணுவுக்குப் பிறந்த குழந்தை (பிரம்மா) அந்த விஷத்தின் தன்மையாக உருவாகி விடுகின்றது.

ஆகவே பிரம்மா உருவாக்குகின்றான்… அது மீண்டும் தன் இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி… அந்த ஞானமாக வேதனையாக இயக்கும்.

எந்த வேதனையை உருவாக்கும்படி முதலிலே சொன்னானோ அதனால் உருவான அந்த உணர்வுகள் பிரம்மமாகத் தன் இனத்தை மீண்டும் சிருஷ்டிக்கும் வன்மை பெற்றது.

1.வேதனைப்படச் செய்த அந்த அணு மீண்டும் அதே வேதனையை இங்கே உருவாக்குகிறது.
2.அந்த ஞானத்தின் வழிகளிலேயே அது செயல்படும் என்று
3.இவ்வளவு கருத்துடன் அந்த இயற்கையின் நிலைகளை நாம் கண்டுணர இதைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

ஒரு விஷமான வித்து காற்றில் இருந்து தன் விஷமான உணர்வின் சத்தை நுகர்ந்து தான் அது விஷச் செடியாக வளர்கின்றது.

அதே போல் தான்
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படச் செய்தானோ
2.அவனின்று வரும் இந்த உணர்வை அந்த அணு நமக்குள் அது கிளர்ந்து… சுவாசித்து
3.அதனின் மலத்தை உடலிலே இடும் பொழுது நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த வேதனை தாங்காது
4.அதனுடய செயலைக் குறைக்கச் செய்கின்றது..
5.நம் உடலில் அது நோயாக வருகின்றது

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்…!

நம்மை வேதனைப்படச் செய்தான்… அவனைச் சும்மா விடுவேனா…? என்று கோபத்துடன் எண்ணும் போது இந்த விஷத் தன்மையான அணுக்கள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது.

மீண்டும் அவர்களை எண்ண… எண்ண… நமக்குள் நோயாகவே விளைகின்றது… எதிரியாகின்றது…!
1.எதிரிக்கு நாம் இடம் கொடுத்து விடுகிறோம்…
2.நம்மை நாம் மறந்து விட்டோம்…! என்ற நிலைதான் இங்கே வருகின்றது.

குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் இதை எல்லாம் எனக்கு (ஞானகுரு) அனுபவபூர்வமாகக் கொடுத்தார். அவர் கொடுத்த அதே வழியில் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்குள்ளும் அந்த ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்கின்றோம். ஆகவே அந்த மெய் ஞானியின் உணர்வைப் பெற நாம் தியானித்தல் வேண்டும்.

பிறர் நம்மை வேதனைப்படச் செய்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அவனிடம் வேண்டி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்துதல் வேண்டும்.

எத்தகைய நஞ்சான உணர்வும் நம் உடலுக்குள் உருவாகாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!

சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு உப்புச் சத்து மூச்சுத் திணறல் இது எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது தான்…!

 

நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அதில் உள்ள சத்துகள் எல்லாம் நம் உடலிலே முதலில் அமிலமாகத்தான் மாறும்.

விஷத்தன்மை கொண்ட நம் பித்த சுரபி…
1.அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு சாப்பிடும் ஆகாரத்திற்குள் கலந்து
2.அந்த அமிலத்தன்மையை குளுக்கோஸாக மாற்றுகிறது.

குளுக்கோசாக மாற்றி வரப்படும் பொழுது இரத்தங்களிலே இருக்கக்கூடிய செல்கள்
1.இந்த உணர்வின் தன்மையைச் சுழலச் செய்து சுழலச் செய்து
2.அதைச் சிவப்பணுக்களாக மாற்றி விடுகின்றது.

அப்படி மாற்றும் தன்மை அங்கே இல்லை என்றால் விஷத்தின் தன்மையால் அந்தக் குளுக்கோஸ் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது. இப்படி அந்தக் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து இரத்தத்திலே அதிகமாகிவிடும்.

காரணம்… அடிக்கடி வேதனையான உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அல்லது வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது அல்லது வேதனையான உணர்வுகளை எடுக்கும் போது உடலில் விஷத் தன்மைகள் அதிகமாகிறது.

உதாரணமாக ஒருவர் செய்யும் தவறான செயலைப் பார்த்து நம்மால் அதைத் தாங்க முடியவில்லை என்றால் சோர்வான உணர்வைத்தான் நுகர்கின்றோம். அதை நுகரப்படும் பொழுது கோபமான உணர்வுகளைக் கலந்து நாம் சுவாசிக்க நேருகின்றது.

இது நமக்குள் கூடியபின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோஸை சிவப்பணுக்களாக மாற்றும் தன்மைக்கு மாறாக இதனுடைய உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பு நோயாக மாறும்.

1.சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கு ரொம்பச் சீக்கிரம் இந்த இரத்தக் கொதிப்பும் வரும்.
2.காரணம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (சோர்வு வேதனை கோபம்) அணுக்களின் தன்மை வீரியம் அடைகின்றது.

வைத்திய ரீதியில் எடுத்துக் கொண்டாலும் கூட இரத்தத்தைப் பரிசோதித்துத் தான் இரத்தக் கொதிப்பு இருக்கிறது… சர்க்கரைச் சத்து இருக்கின்றது என்பார்கள்.

அதே சமயத்தில் இந்த இரண்டும் மோதும் பொழுது சலிப்புத் தன்மை அடைந்து பிரிக்கப்படும் பொழுது… ஆஸ்த்மா போன்ற சளித் தன்மையும் அதிகமாகின்றது.

சர்க்கரை அதிகமாகும் போது சளி உருவாகி எல்லா இடத்திலும் அது உறைந்து அந்த அமிலங்கள் மாறுகின்றது. உடலுக்குள் ஒவ்வொன்றையும் இப்படி மாற்றுகின்றது.

பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ காலமாகப் பல சரீரங்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும்…
1.நாம் இன்று சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மூலம் உடலில் அணுத் தன்மைகள் மாறி
2.கடைசியில் வேதனை என்ற உணர்வே மிஞ்சுகின்றது…
3.மனிதனின் ரூபத்தையே மாற்றும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

ஆக அந்த வேதனை எதில் உருவாகிறது என்றால் சந்தர்ப்பத்தால் இணைத்த உணர்வு கொண்டு தான் நமக்குள் அது வருகின்றது.

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தையே நல்லதாக மாற்றும் நிலைக்குத்தான் உபதேசங்கள் வாயிலாக அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கும் தன்மையாக இங்கே செயல்படுத்திக் கொண்டுள்ளோம் (ஞானகுரு).

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்… அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!

கை வலி… கால் வலி… மூட்டு வலி… தலை வலி… மேல் வலி… இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்

கை வலி… கால் வலி… மூட்டு வலி… தலை வலி… மேல் வலி… இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்

 

நாம் கோபமோ ஆத்திரமோ படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த வேதனையான நிலைகளில் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கடினமான ஒரு பொருளை அந்த வேதனையுடன் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது சுவாசிக்கும் இந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் பாய்ந்தவுடன்
2.இந்த உடலை மடக்கிய நிலைகள் கொண்டு பிராணவாயு செல்லும் பொழுது இங்கே தேங்கிச் செல்லும்.

மூட்டிற்கு மூட்டு அது தேங்கிச் செல்லும் பொழுது அந்த மூட்டினுடைய நிலைகளில் அவயங்கள் வேலை செய்யும் பொழுது, அந்த வேதனையான நிலைகள் வந்தவுடன் அந்த வேதனையான விஷமான உணர்வுகள் அங்கங்கே தேங்கிவிடும்.
1.அது சுவாசத்திற்குள் சென்று கரைக்கும் நிலையை இழந்து
2.அது ஓடிச் சென்று வெளியிலே வரும் முன்பாகவே – நாம் சுவாசிப்பது உள் செல்வதனாலே,
3.இது ஒவ்வொரு இடத்திலும் தேங்கிக் கொள்ளும்.

இதனால்தான் சிலருக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது.

சிலருக்குத் தொழில் நிலைகளில் வேலைகள் செய்யும் சந்தர்ப்பத்தில் எல்லம் இந்த வேதனையை எடுத்தார்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி மூட்டுகளில் வலி வரும்.

நமது பூமி சுழலும் பொழுது விண்வெளிகளிலே இருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது. இதைப் போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்டு எண்ணங்களாக இயங்குகின்றது.

அப்படி இயக்கினாலும் அந்த வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து அது நம் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த வேளைகளில் கூர்ந்து செயல்படும் பொழுது கவன நிலைகளில் எடுக்கப்படும் பொழுது கண் குத்தல்… மண்டைக் குத்தல்… போன்ற நிலைகள் வரும்.

அதைப் போன்று சுவாசத்தினுடைய நிலைகள் சிந்தனையினுடைய நிலைகளை அதிகமாகச் சேர்த்தால் மூக்கு துவாரத்திற்குள் சில நிலைகள் வரும்.

அடிக்கடி சிந்தனை செய்து கொண்டு குனிந்திருந்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தால் மடக்கிய நிலைகள் கொண்டு பிடரியில் பிடரி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

சில நேரங்களில்… ஒரு புறம் சாய்ந்திருந்து இடைஞ்சலான நிலைகளில் நாம் இருந்தால் நாம் சுவாசிக்கும் பிராணவாயு செல்லும் பொழுது சப்பைகள் மூட்டுகளிலே போய் இந்த வேதனையைக் கொடுக்கும். சாதாரணமாக இதை நிவர்த்தி பண்ண வேண்டுமென்றால், வைத்தியர்களால் கொஞ்சம் சிரமம்தான்.

ஏனென்றால்…
1.நரம்பியல்களிலே இருக்கக்கூடிய நிலைகள்
2.எலும்புகளிலே ஒட்டியிருக்கக் கூடிய காந்தத்தினுடைய சக்தி
3.நாம் எடுக்கக்கூடிய இந்த அமிலத்தின் தன்மை (ACID POWER) நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது
4.அதே சமயத்தில் நாம் பிராண வாயுக்களை எடுத்து அதன் ஓரத்திலே இயக்கித்தான்
5.அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களை இயக்கச் செய்து நரம்பியலின் தன்மைகளை இயக்க வேண்டும்.

அப்பொழுது அந்த நரம்புகளில் விஷத் தன்மைகள் பாய்ந்து விட்டால் அதே இடத்தில் அது துடித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் அது வேலை செய்யும். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

சில பேர் கவலைப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தால் வேதனையை அதிகமாக உண்டாக்கும். கை நிமிர்த்துவதே கஷ்டம்… பிடரியில் அதிகம் வலி ஏற்படும்.

எந்த அளவிற்குக் குனிந்து கொண்டிருந்தார்களோ அதற்குத்தகுந்த மாதிரி விஷங்கள் படர்ந்திருக்கும். நிமிர்ந்தவுடன் வலி அதிகமாக இருக்கும்.

வேதனையும் கவலையும் கூடிய நிலையில் நாம் சுவாசித்து அந்த பிராண வாயுக்கள் செல்லும் பொழுது…
1.அதற்குள் நாம் சுவாசித்த உணர்வின் விஷத்தன்மைகள்
2.நம் உடலில் எல்லா இடங்களுக்கும் போய்,
3.எல்லா இடத்திலும் பாய்ச்சி அவற்றை இயங்கச் செய்யும்.

இதையெல்லாம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதை நாம் வெல்ல வேண்டுமென்றால் நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று அழுத்தமாக நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,
2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை
3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நமக்கு எங்கெல்லாம் நோவு இருக்கின்றதோ அந்த இடத்தில் “கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி” மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் படரச் செய்யுங்கள்.

அந்த வேதனையை உண்டாக்கும் உணர்வின் சக்திகள் மறைந்து எங்கள் உடலிலே மகரிஷிகளின் அருள் ஒளி வளர வேண்டும் என்று சிறிது நேரம் நீங்கள் தியானித்தால் போதும்.

உங்கள் உணர்வின் சக்தியைக் கொண்டு நீங்கள் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று உடலில் நோவு வரும் இடங்களில் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த நோவின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தி அந்த இடத்திலே அதைக் கரைக்கும்.

இவ்வாறு தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து வந்தால்… வாத நோயோ ஆஸ்த்மாவோ குஷ்ட ரோகமோ கேன்சர் நோயோ இருந்தாலும் அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்.

நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்

நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்

 

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாது அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.இந்த விஷத் தன்மைகள் கூடி சிறுநீரகங்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
2.இரத்தத்தில் கலந்து வரும் அசுத்தங்களை நீக்கும் சக்தியை அது இழந்து விடுகின்றது.
3.விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
4.இதனால் “உப்புச் சத்து” என்ற நிலை உருவாகி வருகின்றது.

உப்பை வெளியிலே வைத்தால் அந்த வைத்திருக்கும் இடங்களில் எப்படிக் கசிவாகின்றதோ இதைப் போல நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கசிவு அதிகமாகி விட்டால் அதனால் அவர்களுக்கு அடிக்கடி “வாந்தி” வரும்.

சர்க்கரையைச் சமப்படுத்தும் சக்தியும் இழந்து விட்டால் அதுவும் இணைந்து விடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உணர்வின் உந்து விசை அதிகமாகிவிடும். இரத்தக் கொதிப்பும் இதனுடன் சேர்ந்து கொள்ளும்.

இத்தகைய நிலைகள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பதும் வேதனை உணர்வு அதிகமாகி இந்த உடலை விட்டே ஆன்மா பிரியும் தன்மையும் வந்துவிடுகின்றது.

ஆனால் இத்தகைய நோய்கள் இருப்பினும் இது போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு
1.அதிகாலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று
2.அதைச் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் எத்தகைய நோய்கள் இருப்பினும் அதை நீக்க முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தியானித்தால் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீங்களே அகற்ற முடியும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது…
2.அதே எண்ணத்தைக் கொண்டு நோய் நீக்கும் அருள் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டு
3.அறியாது வந்த நோயினைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.உங்களால் முடியும்… நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற இந்த நினைவுடன் எண்ணி ஏங்கித் தியானித்து விட்டு மீண்டும் கண்ணை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை “உடலுக்குள் சர்க்குலேசன் (CIRCULATION) செய்வது போன்று செலுத்துங்கள்…!”

உதாரணமாக… கிட்னியில் குறைபாடு இருந்தால் உங்கள் நினைவினை அங்கே அந்தப் பாகத்தில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உறுப்பு சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

வாத நோயோ கீழ்வாதம் முடக்குவாதம் போன்ற நோயோ ஆஸ்த்மாவோ சர்க்கரைச் சத்தோ இதைப் போல எந்த நோயாக இருப்பினும் அந்தந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும். எங்கள் உடலில் அந்த அரும் பெரும் சக்தி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்… என்பது போல்
2.உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி விட்டு
4.அடுத்த கணம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
5.இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை கலக்கச் செய்ய ஏங்கித் தியானியுங்கள்.

டி.பி.யிலிருந்து கேன்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் இதைப் போல் உங்கள் எண்ணத்தை உடலுக்குள் செலுத்தினால் அந்த நோயை நிச்சயம் நீக்க முடியும். உடல் நலம் பெற முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.