“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.

இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.

அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்

1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.

கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.

மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக” அந்த நோய் இருக்கும் இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்

ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.

ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… ஆகாரத்துடன் கலந்து… அது நஞ்சாக மாறி… அது தான் நோயாக மாறுகின்றது.

ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.

வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக… எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.

“நல்லதைப் பெற வேண்டும்” என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று “உங்களைச் சார்ந்தவர்களுக்கும்” அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.

ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி… மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.

ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக “நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”

1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ… அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை… அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற “இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”

அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை எல்லோருமே பெற முடியும்.

இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக “நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது” என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

 

இந்த மனித வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் வெறுப்பு வேதனை தன்னை அறியாமல் இப்படிப் பல நிலைகள் நமக்குள் வந்து சேர்ந்தது
1.நாம் பலவீனமாகும் பொழுது இந்த நினைவலைகள் தான் நமக்குள் வருகின்றது.
2.அந்த நினைவலைகளைத் துரித நிலையில் கொண்டு நாம் சுவாசிக்க நேர்கின்றது.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அடிக்கடி நினைவு வரும் பொழுது நாம் உணர்வுக்குள் எடுத்து உடலில் சோர்வடையச் செய்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உமிழ் நீராகச் சேர்ந்து நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்துடன் கலந்து அந்த சத்தினைச் செயலாக்க விடாதபடி அதையும் நஞ்சாக்கி விடுகிறது.

நஞ்சாக மாறி அதற்குள் விளைந்த இந்த உணர்வின் சத்துகள் நமக்குள் (சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் குரோதம் என்று) கலந்து கொண்டால் நம் உடலுக்குள் கை கால் குடைச்சல் மூட்டு வலி வாத நோய்கள் போன்று உருவாகின்றது.

இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இரத்தத்திற்குள் கலந்து… அதீதமான நிலைகள் இரத்தத்தின் துடிப்பு வேகமாகும் பொழுது “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பினால் எரிச்சலாகி…
1.அதனால் வேதனையின் உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது
2.நாம் மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை அதாவது சர்க்கரை அந்த இனிப்பான சத்துகள்
3.மற்றதுடன் இணைந்து செயல்படாது அந்தச் சர்க்கரைச் சத்து தனியாகப் பிரிந்து விடுகின்றது.
4.அந்தச் சுவையான சத்து இதனுடன் இணையாதபடி விலக்கி விடுகின்றது.

உதாரணமாக இனிப்பை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிய நாம் கடைக்குச் செல்லும் பொழுது இனிப்பை நாம் வாங்கிப் புசிக்கின்றோம். அதை ரசித்துச் சாப்பிடுகின்றேன்.

அதே போல ஒருவன் காரத்தை அதிகமாகப் புசித்துப் பழகியவன் அந்தக் கடையிலே வந்து காரத்தை வாங்கி அதை ரசித்துச் சாப்பிடுகிறான்.

அவனைப் பார்த்த உடனே என் வாய் எரிவது போல் எரிச்சல் ஆகின்றது. அந்தக் காரத்தைச் சாப்பிடுபவனுக்கோ நாம் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்க்கப்படும் பொழுது “இப்படிச் சாப்பிடுகின்றானே” என்று உமட்டல் வருகின்றது.

காரணம் இதற்கும் அதற்கும் எதிர் நிலை.

இதைப்போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த உணர்ச்சிகள் நமக்குள் இரண்டறக் கலந்து
1.அது இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது எரிச்சலின் தன்மை பிரிந்து
2.அதே சமயம் சர்க்கரை இனிப்பான நிலைகள் இதனுடன் கலந்து இயங்காத நிலைகள் ஆகின்றது.

பால் பிருத்து விட்டால் எப்படி அதன் சத்தின் தன்மைகள் கெட்டுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் காண முடிவதில்லை.
அந்த வெண்ணையின் சத்து அது செயலிழக்கப்பட்டு விடுகின்றது.
2.நீரிலே இந்தச் சத்தின் தன்மை பிரிந்து விடுகிறது.
3.பிருத்த பாலிலிருந்து நாம் வெண்ணெய் எடுக்க முடியாது.

பாலைப் பக்குவமாகக் காய்ச்சினால் தான் அதனுடன் இரண்டறக் கலந்திருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுக்க முடிகின்றது.

இதைப் போன்று தான் உயர்ந்த சத்தின் தன்மையை எடுக்கும் நிலையில் ஆத்திரமும் வேதனையும் கலந்து அதிகமாக எடுக்கப்படும் பொழுது
1.இரத்தத்திற்குள் இரு முனையான இரு நிலையான நிலைகளாகச் செயல்படும் பொழுது
2.நல்ல உணர்வினைச் சேர்க்காவண்ணம் தடுத்துத் தனித்துப் பிரித்து விடுகின்றது.
3.காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலந்தால் தான் அது சுவை மிக்கதாக மாறுகின்றது.

ஒரு குழம்புக்குள் காரம் புளிப்பு மற்ற பொருள்களைச் சமமாகப் போடப்படும் பொழுது அது ருசியாக அமைகின்றது.

அதில் எத்தன்மை அதிகமாகக் கூடுகின்றதோ அதற்குள் நாம் இனிப்பையோ அல்லது எதைப் போட்டாலும் அந்த இனிப்பு இயங்கா வண்ணம் அதை ஒதுக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம் காரம் எவ்வளவு இருந்தாலும் இனிப்பை அதிலே எவ்வளவு சேர்த்தாலும் இதனுடன் இணைக்கச் செய்து காரத்தின் தன்மையைத் தான் காட்டுகின்றது.

ஆக… வேதனையான எண்ணங்கள் நமக்குள் உருவாகி விட்டால் அந்த விஷம் அதை நினைக்கும் பொழுதே மயக்கமும் மற்ற சோர்வான நிலைகளும் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.காரத்துடன் இந்த வேதனையான விஷங்கள் கலக்கப்படும் பொழுது
2.இனிப்பான சத்தைப் பிரிக்கப்படும் போது நம் உடலில் அது ஊடுருவி
3.இயக்க நிலை வரும் பொழுது இரு நிலைப் போராகி
4.எண்ணங்களை எண்ணும் பொழுது மயக்க நிலை வருகின்றது.

நாம் எண்ணி ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று நடக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் உடலை அழைத்துச் செல்லும் நிலைகள் இழந்து “மயக்க நிலை” வருகின்றது. அதே போல நம் உடலின் உறுப்புகளுக்குள் அதை இயக்கும் சக்திகளும் குறைகின்றது.

இயக்கச் சக்தி குறையப்படும் பொழுது விஷத்தின் உணர்வலைகள் அதிகமாகச் சேரும் பொழுது சுவைமிக்க நிலைகள் வரும் பொழுது
1.நாம் பேசிய உணர்வலைகள் சூரியனுடைய காந்தப்புலனுக்குள் பட்டு
2.வேதனை கொண்ட உணர்வுகள் விஷத்தின் தன்மையாக நம் ஆன்மாவிலே சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் இருக்கும் இனிப்பின் சத்து வெளிப்படும் பொழுது மற்ற கிருமிகள் தாக்கப்பட்டு
4.நம் உடலில் இருந்து வரக்கூடிய வாசனை அது கிருமிகளாக உருவாகின்றது.

கிருமியின் சத்து நமக்குள் உருவாகி நம் உடலில் எங்கே அது ஒட்டுகின்றதோ உடலிலே சிறு புண்ணாகி விடுகின்றது. புண்ணாகி விட்டால் அதனுடைய மலம் கழிக்கப்படும் பொழுது தசைகளைப் பூராம் அழிக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

சர்க்கரைச் சத்து வந்தவர்களுக்கு “சிறிதளவு புண்ணானாலும் அதை ஆற்ற முடிவதில்லை…”

நாம் வேகமாக எண்ணங்களை எண்ணி… வேதனையான உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.ஒரு பக்கம் நரம்பு அல்லது நம் சுவாசப்பையில் உள்ள குழாய்களோ அதீதமான நிலைகள் வேகத்தால் துடிக்க ஆரம்பித்தால் “பலூனைப் போல் உப்பி”
2.அந்த உணர்வின் தன்மை மூளை பாகம் இயக்கப்படும் பொழுது அந்த மூளையின் நரம்புகள் வீக்கமாகி
3.இரத்தக் கசிவாகி மனிதனை மாய்த்து விடுகிறது…. இருதய அடைப்பு என்றும் சொல்வார்கள் மூளைக் கசிவு என்றும் சொல்வார்கள்
4.ஆக நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் நல்ல உணர்வின் சத்தை இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் சாதாரண மனிதர்களை எண்ணும் பொழுது இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதை யார் துடைப்பது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்

 

எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.

அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.

இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.

இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.

இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.

மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.

நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.

அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.

இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.

அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு

 

ஒரு விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள் கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால் தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.

இதைப் போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.

நாம் கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச் செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.

பொருளைச் சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின் தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில் கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.

கண்களில் உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.

இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஆகவே இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.

இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும் கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.

பலவிதமான உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி விடுகின்றது

ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது

1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து முடிவில் தான் தெரிய வரும்.

உதாரணமாக கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும் போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய மணம் அப்பொழுது தான் வீசும்.

1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.

சிறுகச் சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய விடுகின்றது.

நவீன விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.

இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர் என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.

காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான் இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக் கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்

 

இப்பொழுது நம் உடலில் வேதனை என்ற உணர்வுகள் அடர்த்தியானால் கேன்சருக்குண்டான அணுவாக உருவாகின்றது. அப்பொழுது விஷத்தைத் தான் அது உணவாக உட்கொள்கின்றது.

அந்த அணுக்கள் உருவானவுடன் விழுதுகளைப் பரப்புகின்றது. எந்தப் பாகத்தில் போகின்றதோ அந்தப் பாகத்தில் எல்லாம் பரப்புகின்றது. அந்த விஷத்தைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
1.விஷம் இருந்தால் தான் அது இயக்கும்.
2.அப்பொழுது என்ன செய்கின்றது…? நம் உடலில் கேன்சர் வருகின்றது.
3.ஆக வேதனை ஒரு பக்கம் அதிகமாகக் குமியும். நல்ல அணுக்களைச் செயலற்றதாக்கும்.

இப்பொழுது நமக்குள் சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்று அதிகமானால் நம் நுரையீரல்களில் அது அதிகமாகச் சேர்கின்றது. அப்பொழுது அது சளி கட்டும் தன்மை வரும்.

இந்த வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் கிட்னி ஃபெயிலியர் ஆகி இரத்த நாளங்களில் இருக்கக்கூடியது நீர்ச்சத்தாக மாறி நெஞ்சுகளில் அதிகமாக ஆகும்.
1.கிட்னி சரியாக இயங்குவதில்லை… நீர்ச்சத்தாக மாறும்.
2.துரித நிலைகள் கொண்டு மனிதனை அழித்துவிடும்.

அடிக்கடி வேதனை என்ற உணர்வு அதிகமானால் பித்த சுரப்பியின் உணர்வுகள் அதிகமாகின்றது. இந்தப் பித்த சுரப்பிகள் அதிகமாகி விஷத்தின் தன்மை கூட்ட நம் இரத்தத்துடன் அது கலக்கப்படும் பொழுது தலை சுற்றும் கிறு… கிறு… என்று வரும்.

ஆகவே இந்த வேதனை என்ற உணர்வுகளை நாம் பார்த்தால் நினைப்பு வேதனை. ஆனால் இங்கே பித்தங்கள் அதிகமாகும். நாம் தவறு செய்யவில்லை. அந்த விஷத்தின் தன்மை பெருகுகின்றது.

அதே மாதிரி இந்த விஷத்தின் தன்மை பெருக்கப்படும் பொழுது நம் உடலில் மேலே தடிப்பாகின்ற மாதிரி கல்லீரலில் அதே மாதிரித் தடிப்பானால் நம் உடலில் இனம் புரியாத வலி ஏற்படும்.

அப்பொழுது அந்தக் கல்லீரல் வீக்கம் ஆகத் தொடங்கி விடும். கல்லீரல் வீக்கமானால் மண்ணீரலிலும் இதைப் போன்று பல வீக்கங்கள் தொடரும். அதைப் பார்த்தோம் என்றால் ஈரல் பக்கம் முழுவதும் பெரிதாகிவிடும். அது நீண்டு வளரத் தொடங்கிவிடும்.
1.ஆக அந்த மாதிரி அணுக்களை உருவாக்கினால் ஈரலைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.
2.டாக்டரிடம் சென்றால் ஈரலை குறைத்தால்தான் நல்லது என்று சொல்வார்கள்.
3.ஆனால் அதைக் குறைத்து யாரும் பிழைத்த மாதிரிக் கண்டதில்லை.

ஆகவே இதைப் போல உறுப்புகளை மாற்றி உறுப்புகளை வளர்த்தாலும் சிறிது காலமே இருக்க முடியும்.

தேடிய செல்வம் எல்லாம் கொஞ்ச நாள் வாழ்க்கைக்கு பல லட்சங்கள் இருப்பதைப் போட்டு தப்பித்து வந்து விடுகிறார்கள். அடுத்தாற்படி வாழ்க்கைக்கு இல்லை என்றால் மறுபடியும் அந்த வேதனையைத்தான் உருவாக்கும்.

ஓரளவுக்கு அரையும் குறையுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நிம்மதியாக இருக்கும். உதவிக்கு ஆள் இருக்க வேண்டும். காசு போய்விட்டால் கடன்காரனாகி விடுவோம். இருக்கிற வீட்டை விற்றுவிட்டுச் சிறிய வீட்டிற்குச் செல்வார்கள்.
1.ரொம்பச் செல்வந்தர்களாக இருந்தாலும் கடைசியில்
2.இதை எல்லாம் எதற்கு…? போ…! என்று போகின்ற நேரம் தான் வரும்.
3.ஆகவே இந்த உடலில் கொஞ்ச காலம் தான் நாம் வாழ்கின்றோம்.

என்றும் ஏகாந்த நிலை என்ற உணர்வுகள் நாம் பெறுவதற்கு நாம் இப்பொழுது சொல்லும் இந்த ஆயுட்கால மெம்ராகப்படும் பொழுது உங்களுக்கு கொடுத்த இந்தச் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

என் பிள்ளை இப்படி வரவில்லையே அது வரவில்லையே என்று கூறிக் கொண்டு அதாவது இந்த உணர்வின் தன்மைக்கு நீங்கள் செலவழித்தால் இதிலிருந்து நாம் என்றைக்கும் மீள முடியாது.

அப்பொழுது
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று இந்த அருள் உணர்வை நீங்கள் பெருக்கி
2.என் பிள்ளைக்கு அருள் ஞானம் கிடைக்க வேண்டும் அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
3.கல்வியிலோ அல்லது வேறு எந்த நிலைகளிலோ தவறானாலும்
4.அவன் செய்யும் அந்தத் தவறான உணர்வு நமக்குள் வளராது காத்துக் கொள்ள வேண்டும்.

அவன் செய்யும் தவறின் உணர்வை நாம் நுகர்ந்தால் வேதனை ஆகி இந்த உணர்வுகள் வந்த பிற்பாடு நமக்கு நோயாகின்றது. நோயாகி வெளியே வந்த பிற்பாடு யார் உடலுக்குள் செல்வோம்…?

யாரைப் பற்றி எண்ணி இந்த விஷங்கள் உருவானதோ அவர் உடலுக்குள் தான் செல்வோம். அவனும் பாழானான் நாமும் பாழானோம். இது தான் நடக்கும்.

ஆகவே தெரிந்தும் தவறு செய்யக் கூடாது.
1.நீங்கள் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகி
2.உலகிற்கு எடுத்துக்காட்டாக நீங்கள் வளர்ந்து தீமைகளை அகற்ற வேண்டும்.

கணவன் மனைவி ஒன்று சேர்த்தே வாழ்தல் வேண்டும். கணவன் வெளியில் சென்றார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும். அவர் செய்யக்கூடிய காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் அவரைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ண வேண்டும்.

கணவன் வெளியில் போகும் பொழுது மனைவிக்கு அந்த அருள் உணர்வுகள் பெற வேண்டும். ஒன்றுபட்ட உணர்வோடு நாங்கள் ஒன்றி வாழ வேண்டும் என்று கணவன் எண்ண வேண்டும்.
1.பண்பு கொண்ட உணர்வுகளை மனதால் நினைத்து அருள் உணர்வைச் சேர்த்து
2.அந்த ரசத்தை… பெண்பாலின் உணர்வைக் கணவன் எடுத்துக் கொண்டால் வெறுப்பு என்ற நிலைகள் மாறும். இருவருக்குமே இது பாதுகாப்பாக இருக்கும்.

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

 

கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.

இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.

எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.

அப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.

யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.

பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”

சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.

சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.

1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.

சிந்தனைகள் குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.

அதுதான் நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.

ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.

கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

 

ஞானிகள் காட்டிய வழியில் உயிரை மதித்து… இந்த உண்மையை உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமாக இருக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வு நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண் கொண்டு கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் பதிவாக்கி
2.மீண்டும் கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி உயிருடன் ஒன்றி கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே ஏற்றி
3.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.என் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
5.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
6.அந்த அருள் ஒளி என் உடலில் வளர வேண்டும் என்று எண்ணும் படி செய்தான்.

உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் மார்க்கத்தை இவ்வாறு காட்டினான் அருள் ஞானி.

வாழ்க்கையில் எத்தனையோ கோடி வேதனை சலிப்பு சஞ்சலம் என்ற உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி அதனுடன் தொடர்பு கொண்டு தன் உடலுக்குள் பெற வேண்டும் என்று “ஒவ்வொரு அணுவிலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றும்படி செய்தான்…”

1.வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மை இங்கே அடைபட்டு விட்டால் இழுக்கும் சக்தி குறைகின்றது
2.வேதனை உருவாக்கி உயிரிலே பட்டு இந்த எண்ணங்கள் தோற்றமாவதை மாற்றுகின்றது.

அதுதான் கடைசி நிலை நரசிம்ம அவதாரம்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளிச் சரீரம் பெற்ற அவனின் உணர்வை உயிருடன் ஒன்றி நாம் நுகர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும். ஏனென்றால் அதன் வழி கவர்ந்து தான் மற்ற அணுக்களுக்கு உணவே செல்கின்றது.

மகரிஷிகளின் உணர்வை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் கண் கொண்டு தான் உற்றுப் பார்த்தோம் மற்றவரை. இந்த உணர்வின் பதிவின் தன்மை கொண்டு தான் ஊழ்வினை என்ற பதிவாக்கி இந்த உணர்வின் துணை கொண்டு தான் கவர்ந்து வருகின்றது.

1.அப்போது நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் கலந்து அதன் வழி வளர்ந்த அந்த அணுக்களின் தன்மை வட்டமிடுதல் வேண்டும்
2.அருள் மகரிஷிகளின் உணர்வு அங்கே செல்லப்படும் பொழுது ஈர்க்கும் வன்மை குறையப்படும் பொழுது
3.காற்றிலிருந்து ஆன்மாவாக மாற்றுவதை அதைத் தடைப்படுத்துகின்றது.
4.அந்த அருள் ஒளி தீமைகளை அகற்றுகின்றது.

கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று மடி மீது இரணியனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து இரணியனை பிளந்தான் என்று சூட்சுமத்தில் நடப்பதைக் காவியமாகப் படைத்து இயற்கையின் உண்மை நிலையை அறிவதற்காக விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகக் காட்டப்பட்டது.

வாழ்க்கையில் சேர்த்த தீமைகள் ஆன்மாவில் வரப்படும் பொழுது அருள் ஒளியை உள் செலுத்தி விட்டால் ஈர்க்கும் வன்மை அந்த அணுக்கள் அடைபடுகின்றது… ஈர்க்கும் வன்மை இழக்கின்றது… அது நீக்கப்படுகின்றது… நமது எண்ணங்கள் மாறுகின்றது.

நுகர்ந்தால் தான் உணர்வின் இயக்கமாக உடல் இயக்குகின்றது. உணர்வின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. அதன் வழி உணவை எடுத்து அது வளர்கின்றது.

இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம்
1.இத்தருணம் உங்களுக்குள் அரும்பெரும் சக்தி படர்கின்றது.
2.உங்கள் உடலில் இருதயங்களிலோ மற்ற உறுப்புகளிலோ கால் மூட்டுகளிலோ எந்த நோய் இருப்பினும்
3.அருள் உணர்வை நுகர்ந்த பின் அந்த நோயெல்லாம் தணியும் குறையும்.

இந்த உபதேசத்தை நுகரப்படும் பொழுது தீமைகளை விளைவிக்கும் அணுக்களில் கவசமிடும் போது அது ஈர்க்கும் சக்தி குறைந்தால் அதனுடைய வலுவை இழக்கும். இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் “நோயின் வலிமை குறையும்..”

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்

 

இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம்… பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும்” அதிகரித்துவிடும்.

பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மைய கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி… உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.

அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.அது உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.

அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் “பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு” அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.

ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.

உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்… எண்ணெய் எந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தணனலைக் கண்டு கொள்கிறார்.

வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது… சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும்… வடை சுவை அற்றுப் போய்விடும்.

ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித்த சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.

ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோபப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.

அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்

 

சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை” அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும் போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின் இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.

1.நாம் எவ்வாறு “ஆ…!” என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம் இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.

இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல் கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச் செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள் “ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும் நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.

காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.

உற்பத்தியான இரத்தத்தை உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.

இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால் ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.

நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள் என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால் பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”

இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.

பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும் பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை என்றால் பட்…! என்று நின்று விடும்.

ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

கடும் நோய்களைப் போக்கி எல்லோரையும் நலமும் வளமும் பெறச் செய்யும் சக்தி

 

உதாரணமாக ஒருவர் திட்டினால் காதிலே கேட்கின்றோம்… அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது… உணர்ச்சிகள் ரத்தத்திலே கலக்கிறது. அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது “ரத்தக் கொதிப்பு” வருகிறது

அதே போல உதாரணமாக ஒரு வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம்… அதை நுகர்ந்தறிந்து உதவி செய்கின்றோம். அவருடைய வேதனையை அறிந்த பின் அந்த உணர்ச்சிகள் நம் ரத்த நாளங்களில் கலக்கின்றது. கருவாகி உருவாகிக் “கடும் நோயாக” நமக்குள் மாறுகின்றது. மனிதனுடைய சகஜ வாழ்க்கையாக இது மாறுகின்றது.

ஆனால் இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைக்க
1.கூட்டு தியானங்கள் இருந்து துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெற்று
2.ஆயிரக்கணக்கானவர்களின் சக்தி வாய்ந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
3.ஒவ்வொருவருடைய செவிகளிலும் இது பட்டு கண்ணின் கருவிழியால் பதிவாக்கி…
4.இந்த உணர்வின் ஈர்ப்பு காந்தமான கண்ணின் காந்தப்புலனறிவால் கவரப்பட்டு உங்கள் உயிரிலே மோதப்படும் பொழுது அரங்கநாதன்…!
5.அத்தனை பேரின் உணர்ச்சிகளும் உங்கள் உடலிலே தீமைகளை நீக்கிடும் உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
6.இந்த உணர்ச்சிகள் உங்கள் உடலிலே அரங்கநாதனாக இருந்து “கடும் நோய்களையும் நீக்கும் சக்தி பெறுகின்றது…”

அருள் உணர்வுகள் உங்கள் ரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரலோகமாக தீமைகளை நீக்கிடும் வலுக்கொண்ட உணர்வின் அணுவாக உருவாக்க இது உதவுகின்றது.

ஆகவே கூட்டுத் தியானத்தின் மூலம் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைச் சேர்த்துக் கொண்டால் தீமைகளை நீக்கும் அந்த அணுக்கள் நம் உடலில் உருவாகிறது.

சர்வ பிணிகளையும் நீக்கிடும் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெறும் தன்மையும் இந்த வாழ்க்கையில் பெற்று நாம் பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தீமைகள் புகாத சக்தியும் நாம் பெற்று பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

“அத்தனை பேரும் சேர்த்த உணர்வுகள்” ஒவ்வொரு செவிகளிலும் பட்டு இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது நாம் எல்லோரும் நலமும் வளமும் பெறுகின்றோம்.

1.கூட்டமைப்பாக உணர்வின் ஒலிகளை எழுப்பப்படும் பொழுது எல்லோருக்குள்ளும் இது ஊடுருவி ரத்த நாளங்களில் குவிக்கின்றது.
2.சர்வ நோய்களிலிருந்து விடுபடச் செய்யும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

ஆனால் நோயுடன் இருப்பவரை உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் நமக்கும் நோய் வருகிறது. அதற்குப் பதிலாக அருளைப் பெருக்கி இருளைப் போக்க வேண்டும் என்ற உணர்வுகளை இதைப் போல கூட்டமைப்பாக நுகரப்படும் பொழுது
1.தீமையை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெறுகின்றோம்…
2.மன வலிமை பெறுகின்றோம்… துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்குகின்றோம்.

இந்த வழியில் நாம் தொடர்ந்து செல்லப்படும் பொழுது நமது வாழ்க்கை சீராகச் செல்ல ஏதுவாகின்றது. இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையும் அடைகின்றோம்.