அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

அருள் ஞானிகளின் சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்… குரு அருள் உறுதுணையாக இருக்கும்

 

உலகில் நடக்கும் எத்தனையோ நிகழ்ச்சிகளை… நடப்புகளை ஒளிபரப்பு செய்கின்றார்கள். டி.வி. மூலம் அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கும்போது அந்த அலைவரிசையில் இருந்து அதை நாம் காண முடிகின்றது.

இதைப் போல
1.மனித வாழ்க்கையில் தீமை நன்மை என்ற நிலையில் நாம் பதிவு செய்துள்ளோம்.
2.தீமை செய்வோரை எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது… தீமையின் செயலாக ஆக்குகின்றது
3.தீமையின் உணர்வே நமக்குள் உருவாகின்றது… நோயாகவும் மாறுகின்றது.

அவ்வாறு ஆகாதப்படி தடுக்க தீமை அகற்றிய அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அதை நினைவுக்குக் கொண்டு வந்து மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெறுவோம்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி இந்த வாழ்க்கையைத் தொடருங்கள்.

1.துன்பமோ நஷ்டமோ கஷ்டமோ வந்தாலும் அதை மனதில் பதிவு செய்யாதீர்கள்.
2.மகரிஷிகள் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்…
3.உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று அதை வலுவாக்குங்கள்.

நோயாளியைப் பார்த்தால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் அந்த நோய் நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்றும் எண்ணுங்கள். பின் மகரிஷிகள் சக்தியால் அவர் நோய்கள் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்று சொல்லுங்கள்.

அவர்களையும் இதைப் போன்று மகரிஷிகள் அருள் சக்தியால் உடல் நலம் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று சிறிது நேரம் எண்ணும்படி சொல்லுங்கள். அவ்வாறு அவர்களைப் பெறச் செய்தால்
1.முதலில் அவர்களை உற்றுப் பார்த்து நாம் பரிவுடன் நுகர்ந்து அவருக்கு உதவி செய்திருந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வராது தடுத்து
2.அருள் ஒளியை அவருக்குள் பாய்ச்ச முடியும்… இருளை அகற்ற முடியும்.

இந்த முறைப்படி செயல்பட்டு வாருங்கள்… எந்தத் தீமையும் நமக்குள் வளராது தடுக்க முடியும். தொழிலில் நஷ்டம் வந்தாலும் நஷ்டத்தைப் பற்றி எண்ணாதீர்கள்.

ஒரு வீட்டைப் புதிதாகக் கட்ட வேண்டும் என்றால் எத்தனையோ நிலைகளை அதற்குத் தயார் செய்கின்றோம். அதிலே குறைபாடுகள் வந்தால் திருத்திக் கொள்கின்றோம்.

இது போன்று புறநிலையில் குறைகள் வரும் போது அவைகளை நாம் திருத்திக் கொள்கின்றோம்.

1.எத்தகைய சூழ்நிலையிலும்… வாழ்க்கையில் நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் வேதனைப்பட வேண்டியது இல்லை.
2.நாளை இதைச் சீர்படுத்துவோம்… உயர் ஞானத்தால் அதை மாற்றியமைப்போம்… தொழில் வளம் பெறுவோம்
3.எல்லா நலமும் வளமும் பெறுவோம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4.உங்கள் எண்ணம் அதை ஈடேற்றும்… செயலாக்கும்.
5.மகரிஷிகள் உணர்வுகளுடன் ஒன்றியே நீங்கள் இதைச் செயல்படுத்துங்கள்.

எம்முடைய உபதேசங்களை எல்லாம் நீங்கள் கேட்கின்றீர்கள். விடிய விடிய அதைக் கேட்டுவிட்டுக் காலையில் எழுந்த பின் இராமனுடைய சகோதரி சீதையா…? என்பது போன்று மீண்டும் கேட்டு விடாதீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த அருளை நீங்கள் ஒவ்வொருவரும் பரப்புங்கள். அறியாது வரும் இருளைப் போக்குங்கள். உங்கள் அருகில் உள்ளோருக்கும் உங்கள் பார்வையால் அவர்கள் தீமையைப் போக்கும் சக்தியாக நீங்கள் வளருங்கள்.

அந்தச் சக்தியை நீங்கள் பெறவே அடிக்கடி உபதேசிக்கின்றோம். அருள் உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம்.

டி.வி.யில் நாம் குறிப்பிட்ட ஸ்டேஷனைத் திருப்பி வைத்த பின் அதன் மூலம் கவர்ந்து படங்களை நாம் காணுவது போன்று அருள் ஞானிகள் உணர்வுகளைக் காற்றில் இருந்து எளிதில் பெற முடியும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கினால் அந்த அருளை உங்களுக்குள் பெற ஏதுவாகும். உங்கள் சொல் பிறர் தீமைகளை அகற்றும். உங்கள் எண்ணம் உங்கள் தொழிலை உயர்வாக்கும்… வாடிக்கையாளர்களை உயர்வாக்க உதவும்.

ஆகவே… தியானத்தின் மூலம் உங்களுக்குள் அருள் சக்திகளைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
1.இருந்த இடத்திலிருந்தே உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க யாம் உதவி செய்கின்றோம்.
2.அருள் வழியில் வாழுங்கள்… அருளானந்தம் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்

துருவ நட்சத்திரத்தின் “உணர்வு “- அழுத்தம்

 

தையல் கடையில் துணி தைப்பவர் லேசாகத் தைக்கிறார் என்றால் நாமும் அவ்வாறு தைக்க முடியுமா…? அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே மற்றவரிடம் பேசிக் கொண்டே சீராகத் தைத்து விடுவார். அந்த உணர்வின் இயக்கம் சீராக வேலை செய்கின்றது.

ஆனால் நாம் கூர்மையாகப் பார்த்துச் செய்தாலும் கூட தையல் கோணல் மாணலாக நெளிந்து கொண்டே போகும்.

1.அது போல் தான் இந்தத் தியானத்தினை நாம் சீராகப் பழகிக் கொண்டால்
2.வாழ்க்கையில் எதிர்நிலை வந்தால் “டக்…” என்று அதை மாற்றி விட முடியும்.

கம்ப்யூட்டர் மூலமாக இன்று எத்தனையோ வேலைகளைச் செய்கின்றார்கள். ஒரு வேலை செய்கிறார் என்றால் அதிலே தவறுகள் வந்து விட்டால் “ஏன் அவ்வாறு வந்தது…?” என்று அதைச் சரி செய்வதற்கு “மாற்று அழுத்தத்தைக் கொடுத்து விடுகிறார்கள்…”

1.அந்த மாற்று அழுத்தம் வந்தபின் தவறுகளை மாற்றி மறுபடியும் அதைச் சீராக்குகின்றது.
2.தவறு என்று வந்தாலே அதைக் காட்டிலும் அழுத்தமான உணர்வு கொண்டு அதை அழித்து விட்டு நல்ல உணர்வுகளைப் பதிவு செய்கின்றான்.

நாம் காகிதத்தில் தவறாக எழுதினால் அழித்து அதைத் திருத்துகின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக். ஒரு பொருளின் ரூபத்தைக் கொண்டு வரும் பொழுது அழுத்தத்தின் தன்மை கொண்டு அது சீராகவில்லை என்றால் அழுத்தத்தை மாற்றி அந்த உணர்வுக்கொப்ப கொண்டு வருகின்றார்கள். கெமிக்கல் கலந்த உணர்வுகளில் உணர்வின் தன்மை அழுத்தம் எதுவோ அதன்படி அது கொண்டு வரும்.

1.விளக்குகள் சிறிதாகவோ பெரிதாகவோ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் எந்த உணர்வுக்கொப்ப எப்படி அது எரிகின்றதோ
2.இது போன்று அந்த உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி இந்த ஒலியின் நிலையை உருவாக்குகின்றார்கள்.

அப்போது எழுத்தின் வடிவம் வருகின்றது. விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

இதைப் போன்று தான் நாம் கண் கொண்டு பார்க்கும் போது ஒருவன் வேதனைப்படுகிறான் என்று பார்த்தால் நல்ல உணர்வுகளை எலக்ட்ரானிக்காக மாற்றி அதை அழித்து அந்த (வேதனை) உணர்வைக் கொண்டு வருகின்றது.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் செலுத்தி “அந்த உணர்வின் அழுத்தத்தை நாம் கொண்டு வந்தால்”
2.அது அந்த வேதனையை மாற்றி தெளிந்த உணர்வின் தன்மையை நமக்குள் கொண்டு வரும்.

ஏனென்றால் நமது உயிரும் எலக்ட்ரிக் தான். நாம் நுகரும் உணர்வுகள் எலக்ட்ரானிக்.

விஞ்ஞானி காட்டுகின்றான் இன்று அகண்ட அண்டத்தையும். அன்று மெய்ஞானியோ தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சினான்… உணர்வுகளை அறிந்தான்.உணர்வுக்கொப்ப எண்ணத்தை வளர்த்தான். அந்த உணர்வின் ஆற்றல் அது செயல்படும் நிலைகளை அகண்ட அண்டத்தையும் அகஸ்தியன் அறிந்தான்.

1.அகஸ்தியன் உடலில் விளைந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்தில் கலந்துள்ளது.
2.குருநாதர் கண்டார்… அதைப் பெற்றார் அந்த உணர்வை எனக்குள் பதிவாக்கினார்… அதை நினைவு கொள் என்றார்… அதன்படி நடக்க வேண்டும் என்று சொன்னார்.
3.அதை அறிந்து தான் நான் பேசுகின்றேன். கல்வியால் கற்றுணரவில்லை… எழுத்து வடிவில் நான் பார்க்கவில்லை.
4.குரு காட்டிய உணர்வைப் பதிவாக்கினேன்… நினைவு கொண்டேன்… அதை அறிய முடிகின்றது. அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன்.

அதை நீங்கள் பதிவாக்கிவிட்டால் நினைவு கொண்டால்… அருள் ஞானி பெற்ற உணர்வை நீங்களும் பெறலாம். உங்களுக்குள் அறியாது வந்த இருளை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

நல்லதைக் காக்கும் சக்தி அவசியம் நமக்குத் தேவை

 

1.சக்தி இருக்கின்றது என்ற நிலையில் “நான்…” என்ற திமிர் வந்தால் அது முதலில் உன்னை அடக்கிவிடும்…
2.உன் நல்ல குணங்களை அது கொன்று விடும் என்று குரு சொல்கின்றார்.

இதே போன்று எம்மைப் பார்ப்போரும் ஒரு சிலர் சாமி நம்மை ஒன்றும் செய்ய மாட்டார் என்று திட்டிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அது தான் உங்களுக்குள் விளையும்.

ஆனால் அவர்களுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நான் எண்ணும்போது எனக்குள் அது நல்லதாக விளைகின்றது.

சில பேர் நினைப்பார்கள் சாமியிடம் நிறையச் சக்தி இருக்கின்றது… எல்லோருக்கும் நல்லது தான் செய்கின்றார். ஆனால் சாமியை இத்தனை தூரம் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். பார்த்துக் கொண்டு அவர் சும்மா இருக்கின்றார் என்று நினைத்தால் கெடுதலுக்கு அல்ல.
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதித்து விடக்கூடாது.
2.அவர்களுக்கு நல்ல புத்தி வர வேண்டும் என்று தான் நாம் எண்ண வேண்டும்.
3.அவரவர் எடுக்கும் உணர்வுகளுக்கு அவரவர் உயிரே தண்டனை கொடுக்கின்றது. நாம் ஏன் தண்டனை கொடுப்பானேன்…?

நாம் விலகிச் சென்று விட்டால் பாதகம் இல்லை.

வெள்ளம் வருகின்றது… வீட்டை அடித்துச் சென்று விடும் என்றால் வீட்டுப் பக்கம் வராமல் மறித்து வேறு பக்கம் திசை திருப்பி விடலாம். கரையைப் போட்டுக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் கட்டிடத்தைச் சாய்த்து விடும்.

1.இது போன்று ஒரு உணர்வின் தன்மை நம்மைப் பாதிக்கிறது என்றால் அது நம் மீது மோதாதபடி திசை திருப்ப வேண்டும்.
2.இத்தனை பழக்கமும் வேண்டி இருக்கின்றது.

குளத்திலே தண்ணீர் முழுவதும் நிறைந்துவிட்டது. விஞ்ஞான அறிவு கொண்டு என்ன செய்கின்றார்கள்…? அந்த இடத்திலே மணலை மூடடைகளாகக் கட்டி மொத்தமாகப் போட்டால் அந்தத் தண்ணீரை ஓரளவுக்கு நாம் தடுக்க முடியும். அடுக்கடுக்காக மேலே போடப் போட வலுவாகி விடுகிறது. தண்ணீர் மேலே ஏறி வருவதில்லை.

இந்தத் தந்திரம் இல்லை என்றால் வேறு எந்தப் பொருளைப் போட்டாலும் தண்ணீர் அரித்துக் கொண்டு சென்று விடும். கற்றுக் கொண்டவர்கள் இந்த நிலையைச் செயல்படுத்துகின்றார்.

இதைத்தான் மெய்ஞானியான நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஒருவன் வேதனைப்படுகிறான் என்று காணுகின்றோம் சக்தி இருந்தாலும் அதைக் கொண்டு தாக்கினோம் என்றால் நம்முடைய நல்ல நிலைகள் சிதைந்து விடும்

ஏனென்றால் நல்லது கெட்டது எப்படி நடக்கிறது…? என்று இயற்கையில் அனுபவபூர்வமாக எல்லாவற்றையும் தெரியும்படி செய்தார்.
1.சக்தி கொடுப்பார்.
2.ஆனால் அதைப் பயன்படுத்தக்கூடிய முறைகள் இப்படி இருக்கிறது.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒருவர் மீது நாம் கோபப்பட்டு “அவரைத் தொலைந்து போக வேண்டும்…” என்று சொல்லலாம். சந்தோஷமும் படலாம். ஆனால் அந்தச் சந்தோஷம் உங்கள் உடலில் உள்ள நல்ல குணங்களைத் தொலைத்து விடும்.

சந்தோஷத்தை ஊட்ட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் சேர்த்து இருளை நாடாதபடி தடுத்துப் பழகினால் என்றும் பேரருள் பேரோளியைப் பெறலாம்.
2.இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கிரகணம்

கிரகணம்

 

இந்த வாழ்க்கையில் பிறிதொரு தீமையான உணர்வு வரப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு நம் ரத்தங்களிலே கலந்து விடுகின்றது.
1.அப்படிக் கலந்த உணர்வுகள் நம் நல்ல அணுக்களின் செயலை… அது நல்லதை நுகர விடாது தடுத்து விடுகின்றது.
2.அந்தத் தீமை பெறுகப் பெறுக நல்ல அணுக்களும் கெட்டதாக மாறத் தொடங்குகிறது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் சிறுகச் சிறுகத் தெரிந்திடும் நிலையாக அனைத்தையும் தெரிந்திடும் நிலையாக மனிதனாக இப்பொழுது வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.

அப்படி வந்தாலும் மனிதன் தன்னுடைய அன்பால் பண்பால் பரிவால் பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தால்… அந்தத் துயர உணர்வுகள் அனைத்துமே நம் ரத்த நாளங்களிலே கலந்து விஷத்தின் தன்மையாகி உடலில் உள்ள நல்ல அணுவின் செயலை மறைத்து விடுகின்றது.

சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டு வெளிச்சமாகத் தெரிந்தாலும் மற்ற மற்ற கோள்கள் அதை மறைக்கத் தொடங்குகிறது. பூரண நிலவாக இருப்பது பூமி மறைக்கத் தொடங்கியபின் சிறுக சிறு இருளாகின்றது. அதே சமயத்தில்
1.இன்னொரு கோளின் தன்மை மறைத்து சந்திரனின் ஒளி பூமிக்குக் கிடைக்காது இருக்கும் பொழுது அதைக் “கிரகணம்” என்று சொல்கின்றோம்.
2.இப்படி ஒரு கோளின் தன்மை இடைமறித்தால் சூரியனுடைய ஒளிக்கதிர்கள் பெறாதபடி விஷத்தின் தன்மை கலந்து விடுகின்றது.

அத்தகைய கிரகண காலங்களில் அதை நாம் நேரடியாக உற்றுப் பார்த்தால் கண் கருவிழிகளில் விஷம் பாய்ந்து விடுகின்றது. அது பதிந்து விட்டால் கண்களில் கோளாறும் வருகின்றது.

அந்த விஷம் நுகரப்பாட்டு நம் ரத்தங்களிலே கலந்து அணுக்களிலும் சேர்ந்து கொள்கிறது. கிரகணம் அன்று அவ்வாறு சாப்பிட்டால் ஜீரணிக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

1.காரணம் இன்னொரு விஷமான கோளின் தன்மை மறைக்கப்படும் பொழுது
2.சந்திரனின் குளிர்ச்சி ஊட்டும் சக்தி அது நமக்குக் கிடைக்காதபடி தடுக்கப்படுகின்றது.

அது அந்த விஷமான கோள் மறைவாகும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை சந்திரனுடன் கலந்து நாம் பார்க்கப்படும் பொழுது சுவாசித்து உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது. நம்மை அறியாமல் விஷத்தன்மைகள் பாய்ந்து விடுகின்றது.

இது போன்று நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ கிரகணங்கள்… அதாவது மற்ற மனிதர்களின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த உணர்வுகள் நம் ரத்தங்களிலே கலக்கக் கலக்க அது மாசுபடுகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்குத் தான் ஞானிகள் எத்தனையோ வழிகளைக் காட்டி உள்ளார்கள்.

அகஸ்தியன்… அவன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு “நஞ்சினை வென்று விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வளர்ந்து” அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக உள்ளான்.

1.அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்து நம் இரத்தங்களில் அடிக்கடி கலக்கக்கச் செய்தோம் என்றால்
2.நம்மை அறியாது இப்படி உள் புகும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!

குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!

 

சமையல் கூடத்தில் பல காய்கறிகளையும் பல வகையான பொருட்களையும் இணைத்துக் கூடடமைப்பாகச் (சமையல் மாஸ்டர்) சமைக்கின்றார்கள். அவர்கள் செய்கின்றார்கள் என்று அதே மாதிரி நாமும் செய்தால் என்ன ஆகும்…?

அவர்கள் அதையெல்லாம் பக்குவப்படுத்தி
1.வேக வைக்கும் நேரம் பார்த்து எதனுடன் எதைச் சேர்க்க வேண்டும்…? எப்பொழுது சேர்க்க வேண்டும்…? என்று செயல்படுத்துவார்கள்
2.ஒரு பகுதி வெந்த பின் தனியாக எடுத்து வைத்து விடுவார்கள்.

அதாவது கடினமான காயாக இருக்கும். அதைத் தனியாக வேக வைத்துத் தாளித்து எடுத்து வைத்துக் கொள்வார்கள். சீக்கிரம் வேகுவதைத் தனியாகப் போட்டு எடுத்து வைத்துக் கொள்வார்கள் அதற்குப்பின் இதை இரண்டையும் சமமாகக் கலக்கும் பொழுது ஒன்று போல இருக்கும்.

ஆனால் நாமும் செய்கிறோம் என்று இரண்டு காயையும் ஒன்றாக வைத்து வேக வைத்தால் என்ன ஆகும்…? நேரம் கழித்து வேகுவதும் சீக்கிரம் வேகுவதும் ஒன்றாகச் சமைக்கப்படும் பொழுது ருசி இல்லாமல் போய் விடும்.

அவர்கள் செய்தார்கள் ருசியாக இருக்கின்றது. நாம் செய்தோம் ருசி வரவில்லை என்பர்கள்.

அதே போல அந்த கொதித்து வரும் பருவத்தைப் பார்த்து உப்பைச் சேர்ப்பார்கள்… அது மேல் பருவமாக இருக்கும்.
1.ஆனால் ஒரு சிலர் குழம்பில் முதலிலேயே உப்பைப் போட்டு விடுவார்கள் காய்கறி அந்த உப்பை எல்லாம் எடுத்துக்கொள்ளும்.
2.குழம்பில் உப்பு இல்லை என்று மீண்டும் சேர்ப்பார்கள்… எல்லாமே மாறி விடும்.

சில பெண்கள் அந்தந்த சமயம் பார்த்து குழம்பைக் கிளறி விடுவார்கள். அந்தக் காலப்பருவங்களைப் பார்த்து அது கொதிக்கும் நிலையினைக் கண்டு அந்த நெருப்பை அவர்கள் கூட்டிக் குறைத்து வைப்பார்கள்.

1.குழம்பு வைக்கும் போது நெருப்பைக் கூட்டுவதிலும் குறைப்பதிலும் அத்தனை வித்தியாசம் இருக்கின்றது. அந்தக் குழம்பின் மணமும் நன்றாக இருக்கும் சுவையும் நன்றாக இருக்கும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள் என்ன நடக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக… ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் குழந்தைக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுக்கின்றார். “அ” என்று சொல்கின்றார். ஆனால் ஆ என்று குழந்தை திருப்பிச் சொன்னால் அப்படிக் கிடையாது அ என்று சொல்ல வேண்டும் என்று திருப்பிக் கற்றுக் கொடுப்பார்.

1.குழந்தை “ஆ…” என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
2.இவனுக்குப் படிப்பு வராது என்று சொல்லி பள்ளியை விட்டு ஆசிரியர் அவனைப் போகச் சொல்ல முடியுமா…?
3.பள்ளியிலே கற்றுக் கொடுப்பவர்கள் அந்த நெறிப்படித் தான் சொல்லி வழி நடத்துகின்றார்கள்.

அது போலத் தான் நம் குழந்தையாக இருந்தாலும் அவன் சுட்டித்தனம் செய்யும் போது அவர்களை நெறிப்படுத்தும் நிலையாக தாய் தந்தையர் ஞானத்தைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். “என்ன சொன்னாலும் இப்படியே செய்கிறான்… இவன் உருப்பட மாடடான்…!” என்று சொல்லி விடக்கூடாது.

1.என் குழந்தை அருள் ஞானியாக வரவேண்டும் உலகைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக வளர வேண்டும் என்று கருவிலேயே இந்த உணர்வுகளை ஊட்டினால்
2.தெய்வக் குழந்தைகளாக நிச்சயம் உருவாக்க முடியும்… அந்தச் சக்திகளைத் தாயும் பெறுகின்றது குழந்தையும் பெறுகின்றது.

கடப்பாரையைக் கொடுத்துள்ளார்கள். அதை வைத்துப் பூமிக்கடியில் செல்லும் எலெக்ட்ரிக் வயரை எடுக்க வேண்டும் என்றால் சூதானமாகத் தோண்ட வேண்டும். வேகமாகத் தோண்டி விடலாம் என்று கடைப்பாரையால் குத்தினால் வயரிலே பட்டால் உடனே எர்த் ஆகும். அதுவும் பழுதாகி விடும்… நம்மையும் தூக்கி எறிந்து விடும்.

இதை எல்லாம் ஏன் சொன்கிறோம் என்றால்
1.குருநாதர் எனக்குச் சக்தி கொடுத்தாலும்… ஆயுதம் இருக்கின்றது என்று தவறு செய்வதற்கு அல்ல…!
2.நன்மை செய்வதற்குத்தான் குருநாதர் சக்தி கொடுக்கின்றார்.

அதை நாம் சீராகக் கையாள வேண்டும். அதற்குத்தான் தான் இத்தனை பக்குவங்களையும் சொல்லிக் கொடுக்கின்றோம்.

உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவாக்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் துணை கொண்டு யாம் இயற்கையின் இயக்கப் பேருண்மைகளை அனுபவ ஞானமாகப் பல சிரமங்களுக்கிடையே தான் பெற்றோம்.

அதை உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் பொழுது அந்த அருள் உணர்வுகளை உங்களுடைய கருத்தில் பதிய வைக்காமல் விட்டு விடுகின்றீர்கள்.

எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஆர்வமுடன் இருப்பீர்கள். ஆனால் அருள் ஞான உபதேசங்களைக் கேட்டுப் படித்த பிறகு சில நிமிடங்களில்…
1.சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைப் பார்த்து அதனின் உணர்வை ஈர்த்து உங்களுக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள்.

உதாரணமாக… ஒரு குரு தம் சீடரை அழைத்து அவருடைய கையில் காசைக் கொடுத்துக் “கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வா” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

சீடரும் தாம் கடைக்குச் சென்று கொழுக்கட்டை வாங்கி வருவதற்குக் கிளம்பினார்.

சீடர் கடைக்குச் செல்லும் வழியில் குறுக்கே ஒரு சாக்கடை இருந்தது. சாக்கடையைத் தாண்டித்தான் கடைக்குச் செல்ல வேண்டும். சாக்கடையில் இருந்து வரும் நாற்றமோ சீடரால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருந்தது.

சீடர்… “அத்ரி… சீ… தூ…” என்று சொல்லிக் கொண்டு மூக்கைப் பொத்தியவாறு சாக்கடையைத் தாண்டிச் சென்றார். இப்படிச் சென்றவர் நேராகக் கடைக்குப் போய் நின்று “கொழுக்கட்டை தாருங்கள்” என்று கேட்பதற்குப் பதிலாக “அத்ரி… சீ… தூ…” கொடுங்கள் என்று கேட்டார்.

அதாவது… எமது அருள் ஞான உபதேசங்களை நீங்கள் கேட்பீர்கள். பின்னர் என்ன செய்வீர்கள்…?
1.நல்லவைகளை அறிந்து கொண்ட பின் சாலையில் சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
2.அதைக் கண்களால் பார்த்து அதன் உணர்வுகளை விலைக்கு வாங்கிக் கொள்வீர்கள்.

இதன் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட நிலையில் வீட்டிற்குள் போவீர்கள். வீட்டில் மனைவி மீதும் குழந்தை மீதும் வெறுப்பு இருக்கும். குழந்தை சிறிது குறும்புத்தனம் செய்தால் போதும்.

இவன் இப்படிச் சேட்டை செய்கிறான்…! நாம் எப்படி இருக்க வேண்டும்…? என்று “சாமி” உபதேசம் செய்கிறார்.
1.ஆனால் வீட்டில் மனைவி குழந்தைகள் இப்படி இருக்கின்றார்களே…! என்று
2.தன்னை நியாயப்படுத்திக் கொண்டு தன் மனைவி குழந்தைகளிடம் வேக உணர்வைக் காண்பிப்பார்கள்.

ஏனென்றால் நமக்குள் எதிர்நிலையான உணர்வுகளான பின் நமக்குள் உணர்வுகள் வேகமாகின்றது.

ஆனால் அருள் ஞான உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து வளர்த்து
1.”உங்களுடைய உணர்வுகள் எதிர்நிலைக்கு மாறாதிருந்தால்” உங்களுடைய உடலில் உள்ள நோயை குறைக்க முடியும்.
2.குடும்பத்தில் உள்ள சிக்கலை நிவர்த்திக்கும் ஆற்றலும்… சிந்தித்துச் செயல்படும் தன்மையும் வரும்.

அருள் ஞான உணர்வுகளை நீங்கள் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் ஊழ்வினை என்ற நிலையில் பதிவாகுகின்றது. யாம் சொல்லிக் கொண்டு வருவதனைத்தையும் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் உங்களுடைய கருவிழி ருக்மணி கவர்ந்த உணர்வலைகளை உங்களுடைய செல்களில் பதிவாக்குகின்றது.

ஒருவரை எமது அருள் ஞான புத்தகங்களைப் படிக்கச் சொல்லி அவரைத் தாம் படித்ததைத் திரும்பச் சொல்லும்படிக் கேட்டால் அவருக்குச் சொல்லத் தெரியாது. ஏனென்றால் புத்தகங்களில் கருத்துகள் அடுக்கடுக்காக வரும்.

தியானத்தில் இருப்பவர்கள் திரும்பச் சொல்கின்றார்கள் என்றால் அவர்கள் தியானத்தில் இருப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
1.யாம் தந்தருளிய தியான முறையினைக் கடைப்பிடித்து வருபவர்கள்
2.தாங்கள் படித்த கருத்தினுடைய மூலங்களை அடுக்கடுக்காகச் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

காரணம் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…!
1.பதிவான உணர்வுகள் எலக்ட்ரான் என்ற முறைப்படி அது காற்றில் இருப்பதை எடுத்து
2.நம்முடைய இயக்கச் சக்தியாக்கக் கூடிய ஞானம் நமக்கு வருகின்றது.

ஞானத்தின் தன்மை வந்தால் நமக்குள் தீமை புகாது வலிமை கிடைக்கும். நான் காட்டிற்குச் சென்று ஞானத்தைப் பெறுவேன்… “பெற வேண்டும்” என்று நினைத்தால் முடியாது.

ஒரு விஞ்ஞானி புதிய ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் இருக்கும் பொழுது பல சங்கடங்களை அனுபவிக்கலாம். அப்படி அவர் பல சிரமங்களை அனுபவித்துக் கண்டுபிடித்த இயந்திரத்தை நாம் சரியானபடி ஏற்றுக் கொண்டோமானால் அந்த விஞ்ஞான அறிவு நமக்கு பயன்படும்.

விஞ்ஞான அறிவு கொண்டு கம்யூட்டரை செய்து கொடுக்கின்றார்கள். சிரமப்பட்டுத் தான் அதைச் செய்து கொடுக்கிறார்கள்.

ஆனால் கம்ப்யூட்டரை விளையாட்டிற்குத் தட்டிக் கொண்டிருந்தால் பயன் ஒன்றும் இருக்காது.

அதைப் போன்று யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கூர்மையாக உற்று நோக்கிப் பதிவு செய்து கொண்டபின்
1.அந்த உபதேசித்த உணர்வுகளை நினைவுபடுத்தி
2.நீங்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை எளிதில் நுகர முடியும்.

உங்கள் உயிர் வழி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளை நுகர்ந்து… உங்கள் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்க முடியும். நாம் அனைவரும் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு கொண்டு வந்துவிட்டோம் என்றால் நாம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்க முடியும்.
1.நமக்குள் தீமைகள் வராது தடுக்க முடியும்.
2.மெய் வழி வாழ முடியும்… மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளை நாமும் கண்டுணர முடியும்.
3.மெய் ஞானிகளுடன் இணைந்து வேகா நிலை என்ற நிலையாக அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.

எமது அருளாசிகள்.

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

எம்மிடம் ஆசி பெற்றாலும் யாம் சொன்னதைக் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம்

 

சாமியாரிடம் ஆசி வாங்கினால் போதும் என்ற நிலையில் என்னிடம் ஆசி வாங்கினால் அன்றைய தினத்திற்கு நன்றாக இருக்கும்.
1.அடுத்து நீங்கள் யாம் சொன்ன வழியைக் கடைப்பிடித்தால்
2.நிலையாக உங்களுக்குச் சரியாகும்.

அப்படி இல்லாது “சாமியிடம் ஆசி வாங்கினேன்… நன்றாக இருந்தது..!” என்று ஒரு சொல்லில் சென்று விட்டால் அடுத்து என்ன ஆகின்றது…?

சண்டை போடுபவன் வேதனைப்படுபவன் சங்கடப்படுபவன் இவர்களை எல்லாம் இரக்கத்துடன் உற்றுப் பார்த்தால்… அடப் பாவமே நல்ல மனிதன் இப்படி ஆகிவிட்டார் என்று வேதனையான உணர்வை உணர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உங்கள் ரத்தத்தில் தான் கலக்கின்றது.

1.கலந்த பின் நல்ல அணுக்கள் பிடிக்காது அதை விட்டு விடுகிறது.
2.நல்ல
3. அணுக்கள் ஏற்கவில்லை என்றால் சிந்திக்கும் தன்மை குறைகிறது… வியாபாரம் செய்தால் மன வலிமை இல்லாது போய் விடுகின்றது.

மன வலிமை இல்லை என்றால் நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்க முடியாது. நல்ல சரக்கை எடுத்தாலும் கூட நம் சொல் வெளிப்படும் பொழுது அதனுடன் வேதனை கலந்து வருகின்றது.

1.நம் கடையில் துணியை எடுக்க வருபவர்கள் இந்தச் சரக்கைப் பார்த்த பின் அவர்களுக்கு அதிலே வெறுப்பு வருகின்றது.
2.ஏனென்றால் நம் உணர்வுகள்… அந்த மணம் அதில் பட்டபின் அவர்கள் அதை நுகரும் பொழுது துணியை வாங்குவதில்லை.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் இப்படி வருகின்றது. இதை எல்லாம் துடைக்க வேண்டும் அல்லவா. இது போன்று நம்மை மறைக்கும் “சிறு திரைகளை” அவ்வப்போது தூய்மைpபடுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி நாங்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை உடலுக்குள் சேர்த்து ரத்தத்தில் கலந்து இருளை மாற்றிப் பழக வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இதைச் செய்து பழக வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம்… உடையில் தூசி படுகின்றது. துணியை அடுத்து துவைத்து விடுகின்றோம். நாம் ஒரு வேலை செய்கின்றோம்… கையிலே அழுக்குப் படுகின்றது. உணவை உட்கொள்ளும் முன் கையைத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதே போன்று தான் ரோட்டில செல்கின்றோம்… ஒருவர் வேதனைப்படுபவதைப் பார்க்கின்றோம்.
1.அது அழுக்காக நம் ஆன்மாவிலே படுகின்றது… ரத்தத்தில் கலக்கின்றது.
2.ரத்தத்தில் அசுத்தமாவதைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

நல்ல உணர்வுகள் இருந்தாலும் பிறருடைய வேதனை உணர்வுகள் அந்த நல்ல குணத்திலே சித்திரை சிறு திரையாக மறைத்து விடுகின்றது… மூடி விடுகின்றது. இந்த வேதனை தான் முன்னணியில் வருகின்றதே தவிர நீக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

இதைப் போன்ற தீமையெல்லாம் நீக்கி ஒளியாக இருப்பது துருவ நட்சத்திரம்.
1.அதை நாம் நுகர்ந்து எடுத்து நம் ரத்தத்திலே கலந்து தூய்மைப்படுத்த வேண்டும்.
2.இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

உடல் உறுப்புகள் சீராக இயங்க அடிக்கடி ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்

 

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி சஞ்சலம் சலிப்பு சங்கடம் என்ற உணர்வுகளை நுகர நேர்ந்தால் ரத்தங்களில் அத்தகைய தீமைகள் அதிகரித்து விடுகின்றது. சலிப்பு சஞ்சலம் என்று வரும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

1.சிறிது நேரத்தில் புளிப்படைந்து உடல் வலு குறைந்து எண்ணங்கள் குறைந்து நமது செயலும் சீராகச் செயல்படுத்த முடியாது போய் விடுகின்றது.
2.புளிப்பின் தன்மை அதிகரிக்கும் பொழுது வாயுவின் தன்மை உருவாகி சோர்வடைகின்றோம்… சிந்திக்கும் தன்மையும் குறைகின்றது
3.தொழில் செய்ய வேண்டும் என்றாலோ மற்ற வேலை செய்ய வேண்டும் என்றாலோ ஒரு கணக்கைப் பார்க்க வேண்டும் என்றாலோ நம்மால் முடியாது போய் விடுகின்றது.

இப்படி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாதபடி உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்திருக்கும் நஞ்சினைப் பிரித்துப் பரிசுத்தமாக்கும் நிலையை ரத்தம் சுத்தமாவது இழந்து விடுகின்றது.

பாலில் சிறிதளவு உப்புப் பட்டால் எப்படிப் பிருத்து விடுகின்றதோ கெட்டுப் போய் விடுகின்றதோ இதைப் போல ரத்தங்களில் தீமையின் நிலைகள் அதிகரிக்க சுத்திகரிக்கும் சிறுநீரகங்கள் பாழடைந்து விடுகிறது.

அதே சமயத்தில் உணவுக்குள் கலந்து வரும் பித்த சுரபி விஷத்தின் தன்மையை அதிகரித்து விட்டால் வாந்தி மயக்கம் தலை சுற்றல் போன்று அதிகரித்து விடுகின்றது.

காரணம் விஷத்தைப் பிரிக்கும் நிலை இழந்து பித்தம் அதிகமாகி ரத்தத்துடன் அதிகமாகக் கலந்து விட்டால் மயக்கம் வருகின்றது.
1.பித்தத்தை உறிஞ்சும் அந்த உறுப்புகளுக்கு கவலை சோர்வு என்ற நிலை அதிகரிக்கப்படும் பொழுது
2.பித்த சுரப்பி சரியாக இயங்கும் நிலை குறைந்து விடுகின்றது. ரத்தங்கள் மாசுபடத் தொடங்குகிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் வேதனை கோபம் வெறுப்பு ஆத்திரம் போன்ற உணர்வுகளை அடிக்கடி நுகர நேர்ந்தால் கல்லீரல் வீக்கம் அடைகின்றது. பல உணர்வுகளை வடித்துத் தெளிவாக்கும் விரிவாக்கம் தன்மை இழக்கப்படுகிறது.

இதே போன்று உடலில் உள்ள உறுப்புகளில் விஷத்தின் தன்மை அதிகரிக்கும் போது உடல் உறுப்புகள் சீராக இயங்காத நிலை ஆகிறது. நஞ்சினைப் பிரிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அப்பொழுது நல்ல ஆகாரங்களை உட்கொண்டாலும் உயர்ந்த சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டாலும்
1.அந்தச் சத்தை நஞ்சாகத்தான் மாற்றுகின்றதே தவிர அந்த சத்தினை உடலுக்குள் நல்லதாக மாற்றுவதில்லை.
2.காரணம் அதை ஜீரணிக்கும் திறன் கொண்ட நல்ல அமிலங்கள் இயங்கது போவதால் ஜீரணிக்கும் இயல்புகளை மாறி விடுகின்றது.
3.உடல் உறுப்புகள் இயக்கங்களைத் தடைப்படுத்துகின்றது.

இதைப் போன்ற நிலைகள் வராது தடுக்க உடனுக்குடன் நாம ஆத்ம சுத்தி செய்ய வேன்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் நிறுத்த வேண்டும். அடுத்து கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று “இப்படிப் பழக்கப்படுத்தி வைத்துவிட வேண்டும்…”

நம் உடல் உறுப்புகளை இப்படி வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்தில் தீமைகள் வந்தால் உடனே ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி
2.துருவ நட்சத்திர்த்தின் வலுவை ஏற்றித் தீமை உள்ளே போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

குரு சொன்னதை நாம் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்

இப்பொழுது யாம் உங்களுக்கு மத்தியில் பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது சமயம் நீங்கள்
1.நம்முடைய வீட்டில் செய்ய வேண்டிய வேலை என்ன…?”
2.வீட்டில் மகன் என்ன செய்து கொண்டிருக்கின்றானோ…! ஏதாவது செய்து விட்டால் என்னவாகும்…?” என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள் என்றால்
3.யாம் சொல்லும் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகாது.

அதைப் போல்… ஒருவர் நம்மிடம் தீமை தரும் உணர்வுகளையோ வேதனை தரும் உணர்வுகளையோ சொல்வாரே என்றால் அது சமயம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் இணைப்போமேயானால அத்தீய உணர்வுகளை நம்முள் புகாது தடுக்கலாம்.
1.அவர்கள் சொல்லும் உணர்வுகள் செவிகளில் கேட்கும்… ஆனால் ஈர்க்காது. 2.இதனை ஒரு பயிற்சிக்குக் கொண்டு வரவேண்டும்.

எத்தனையோ பேர் எம்மிடம் கஷ்டங்களை நிவர்த்திக்க வருகின்றார்கள், அவர்களுடைய வேதனைகளைச் சொல்கின்றார்கள். யாம் அதை ஈர்ப்பதில்லை.

யாம் எம்மைத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளுக்குள் இணைத்துக் கொள்வதால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வோம்.

1.அதன் பிறகு யாம் கோபமாக என்ன சொல்வோம்…?
2.“போங்கள்… உங்களுக்கு ஒன்றுமில்லை போங்கள்…” என்று சொல்வோம்.

அப்படி யாம் சொன்னால்… “சாமி திடீரென்று நம்மைக் கோபிக்கின்றாரே…” என்று எண்ணினால் என்னவாகும்…?

ஏனென்றால் அவர்கள் சொல்லும் வேதனையின் உணர்ச்சிகளை உடனே தாங்கி “மடக்கி” அனுப்புகின்றோம்.

நீங்கள் சாமி நம்மைக் கோபித்துக் கொண்டார் என்று சொன்னால் யாம் என்ன பண்ணுவது…? அப்படியானால், அவர்கள் சொல்லும் கஷ்டத்தை யாம் ஈர்க்க வேண்டுமா…?

யாம் உங்கள் கஷ்டத்தை நீக்குவதற்குத்தான் அப்படிச் சொல்கின்றோம்.

மற்றவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தையெல்லாம் நீங்கள் உற்றுக் கேட்பீர்கள் என்றால் என்னவாகும்…? அந்த உணர்வுகள் உங்களுக்குள் இந்திரீகமாக மாறும். ஆகையால் இந்தத் தீய உணர்வுகளை நீங்கள் உங்களிடத்தில் வராது தடைப்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஆரம்பத்தில் யாம் அநேகம் பேருக்குப் பல நிலைகளைச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்ததின் நிலைகளைத் தோல்வி அடையச் செய்து விட்டனர்.

மனிதரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? அதை நாம் எப்படிக் கொண்டுவர வேண்டும்…? என்று உணர்த்துகின்றோம்.

ஆனால் பெரும் பகுதியானவர்கள் என்ன செய்து விட்டார்கள்…?
1.நாளை என்னவோ நடக்கட்டும்.
2.இன்று நாம் தொழிலில் முன்னேற வேண்டும்.
3.தான் ஒன்றைச் சொன்னால் அவ்வார்த்தையையும் தன்னையும் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று இப்படித்தான் தலைகீழாகப் போகிறார்கள்.
4.அருளைப் பெருக்கி இருளைப் போக்கும் தன்மையை யாம் எவ்வளவுதான் கொடுத்தாலும் எடுபட மாட்டேன் என்கிறது.

ஆகையால் யாம் மற்ற நிலைகளை நிறுத்தி விட்டு இப்பொழுது தியானவழி அன்பர்களைத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக்கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். ஆனால் சாதாரண மின்னல் வருகின்றதே அதை நீங்கள் பார்க்கக் கூடாது.

மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும். நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது. இவையெல்லாம் குரு தன்மையால் வருவது.

1.“சாமி (ஞானகுரு) சொன்னார் இதையெல்லாம் பெற வேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது
2.நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் தனித்தன்மையில் செல்வேன் என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால் “குருநாதர் சொன்னார்” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும். அப்படியில்லாமல் நமது எண்ணங்களை பலவீனமடையச் செய்தால் அந்த உணர்வின் அணு உங்களைத் திசை திருப்பிவிடும்.

ஏனென்றால்
1.“நாம் இம்மனித உடலுக்குப்பின் பெற வேண்டியது எது…?” என்பதை
2.உங்கள் எல்லோருக்கும் தெளிவாக்கும் தன்மைக்குத்தான் கொண்டு வருகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில் யாம் அருள் உணர்வுகளைப் பெற்றோம். ஆகவே யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம்.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் யாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்வுக்குத் தக்க யாம் நன்மைகள் அடைந்தோம்.

அதே போன்று தியானவழி அன்பர்களும் குரு காண்பித்த அருள் வழியில் தாம் நுகர்ந்து கொண்ட அருள் உணர்விற்குத் தக்க நற்பயன்களைப் பெற முடியும்.

1.யாம் சந்திக்கும் அனைவருமே அருள் ஞானம் பெற வேண்டும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
2.இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான் யாம் செயல்படுகின்றோம்.

இது எவ்வளவு பெரிய சக்தி…!

எத்தனையோ வருடம் கஷ்டப்பட்டு என்னென்ன வழியில் செயல்பட்டு எத்தனை சிரமங்கள் அனுபவித்து… அத்தனை சிரமங்களையும் தாங்கித் தாண்டி வருகின்றோமென்றால் எதற்காக…?

அனைவரும் இந்த அரும் பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.

தபோவனம் வளர வேண்டும். தபோவனம் எம்மால் வளரவில்லை… குருநாதரால்தான் வளர்கின்றது.
1.குருநாதருடைய உணர்வு தான் நம் அத்தனை பேருக்கும் அமைந்துள்ள நல் சந்தர்ப்பம் ஆகும்.
2.“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கு வர வேண்டும்.

நமது வாழ்க்கையில் எந்த நிலைகள் இருந்தாலும் உத்தராயணம் என்ற அந்த நிலைகள் வரவேண்டும். அந்த வலிமை நமக்குள் வர வேண்டும். குரு காட்டிய அருள் வழி கொண்டு உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட உடலைச் சிவனாக நாம் மதித்தல் வேண்டும்.

1.இந்த உடலில் பகைமை புகாது… எதிரி வராது… அருள் உணர்வை நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டி
2.இனி “பிறவியில்லா நிலை பெறும் நிலையாக” பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.