கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

கூட்டமைப்பாக இருந்து… ஒவ்வொரு குடும்பத்திற்கும் “நாம் செய்ய வேண்டிய அருள் சேவை…”

 

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் மேகங்களில் படர்ந்து மேகங்கள் அனைத்தும் ஒன்று கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து வளர்ந்து ஊரும் உலகமும் உலக மக்களும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

மனிதர்களாக வாழக்கூடிய நாம்…
1.பல கோடித் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடலை வளர்த்த உணர்வுகள்
2.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு மேலே சொன்ன உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது இது அனைத்திலும் கலந்து
3.எந்தெந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொண்டோமோ அதற்குள் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து சர்வ தீமைகளையும் அகற்ற உதவும்.

தீமைகள் வரப்படும் பொழுது… அது எப்படி நமக்குள் கலக்கின்றதோ… அந்தத் தீமை எப்படி இயக்குகின்றதோ… இதைப் போன்றே
1.அந்தத் தீமை செய்யும் உணர்வுகளுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கலக்கப்படும் பொழுது
2.மழை மேகங்களுக்குள் அருள் சக்திகளைப் பரப்பப்படும் போது அந்தத் தீமைகள் அகற்றப்படுகின்றன.

அதே சமயத்தில் ஆங்காங்கு கூட்டுத் தியானங்கள் இருக்கப்படும் பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன…?

ஒருவர் நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாலும் தியானமிருப்போர் அனைவரும் ஒன்று சேர்த்து மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து… அவரை அறியாது தீயவினைகளால் விளைந்த நோய்கள் நீங்கி… அவர் உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும் என்று “பல முறை சொல்லுங்கள்…”

1.இந்த உணர்வின் ஒலிகளைப் பரப்பப்படும் பொழுது இந்த உணர்வு எல்லோருடைய செவிகளிலும் பட்டு…
2.இந்த உணர்வை அவரும் நுகரப்படும் பொழுது அவர் நோயின் கடுமை குறைவதைப் பார்க்கலாம்.

இதை மீண்டும் மீண்டும் அவர் எண்ணத் தொடங்கினால்… அனைவரும் சேர்ந்து அவர் உடல் நலம் பெற செய்ய வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் அவருக்குள் ஓங்கி வளர்ந்து அந்த கடுமையான நோயைத் தணிக்க இது உதவும்.

இதையெல்லாம் நாம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.

தியானம் செய்து கொண்டிருந்தாலும்… ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனையோ சாப அலைகள் உண்டு. நாம் தியானத்திற்குச் செல்லும் போது
1.அங்குள்ள சாப அலைகள் நீங்கி தீய வினைகள் நீங்கி அந்தக் குடும்பம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்க வேண்டும்.
2.நாம் இப்படி வலுவான நிலைகள் கொண்டு பதிவாக்கும் இந்த உணர்வலைகளை வீடுகளில் உள்ள காந்தப்புலனறிவு கவர்ந்து கொள்ளும்.
3.இந்த உணர்வுகள் அந்த வீட்டில் உள்ளோருக்கு மீண்டும் நினைவூட்ட உதவும்….
4.தீமை அகற்றும் எண்ணங்கள் அங்கே தோன்றுகின்றது.

அ\ந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் இந்த உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது “ஒவ்வொரு நிமிடத்திலும் நன்மை பயக்கும் சக்தியாக மாறுகின்றது…”

ஒரு குடும்பத்தில் அதிகமான சிரமம் என்று கேள்விப்பட்டால் தியானம் செய்யும் இருபது பேர் அங்கே சென்று அமர்ந்து தியானித்து மகரிஷிகளின் உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்போது அவர்கள் தொழில் வளம் பெறவும் கடும் பிணிகளில் இருந்து மீளவும் அருள் ஞானம் பெருகவும் ஞானத்தின் வழியில் அவர்கள் வழி நடக்கவும் இது உதவும்.

அந்த வலிமையான உணர்வுகளை நாம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். “குடும்பம் நலம் பெற வேண்டும்…” என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு ஆங்காங்கு கூட்டமைப்பாகச் செயல்படுத்துங்கள்… நன்மை பயக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதைச் செயல்படுத்தி… அவர்கள் மகிழ்ந்து வாழ்வதைக் கண்டு “மகிழ்ச்சியான உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்…”

1.இதை அனைவரும் செயல்படுத்துங்கள்
2.அருள் ஞானம் பெறுங்கள்… அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையுங்கள்.
3.அருள் வழிகளிலே இந்த வாழ்க்கையை வழிநடத்துங்கள்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்
5.அருள் ஞான உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து அந்த மகரிஷிகள் சென்ற அந்த இடத்திற்கு நாமும் செல்வோம்.

அனைவரும் பிறவி இல்லா நிலைகள் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான்

 

வீட்டை அழகாகக் கட்டுகின்றோம்… தூசி பட்டால் தூய்மைப்படுத்துகின்றோம். ஆடைகளை அழகாக அணிகின்றோம்… அழுக்குப் பட்டால் துவைத்து விடுகின்றோம். நம் உடலில் அழுக்குப்பட்டாலும் குளித்து விடுகின்றோம்.

அப்போது நம் ஆன்மாவில் அழுக்குப்பட்டால் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…! அதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம். உபதேசத்தைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம் உபகாரமும் செய்கின்றோம் அவர் வேதனைப்படுவதை நம் கண்கள் பதிவாக்குகின்றது மீண்டும் நினைவாக்கும் பொழுது கண் வழி அந்த உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ரேடியோ டிவி இவைகளுக்கு ஏரியல் ஆண்டன்னா இருப்பது போன்று
1.நமது கண்கள் இந்த உடலுக்கு ஆண்டென்னாவாகச் செயல்படுகின்றது.
2.பதிவு செய்ததை மீண்டும் எண்ணும் பொழுது காற்றிலிருந்து கவருகின்றது.
3.அதனால் தான் அதைப் பரமாத்மா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
4.கண்களைக் கண்ணன் என்று பெயர் வைத்தாலும் “கண்ணன் – திருடன்…” என்று விளக்க உரை கொடுக்கின்றார்கள்.

ஒருவன் நல்லதைச் செய்கின்றான். நாம் உற்றுப் பார்த்தால் நல்லது செய்யும் உணர்வினைக் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அவன் உடலிலிருந்து வெளிப்படும் அந்த நல்ல உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது.

மோதிய உணர்வுகள் அந்த நல்லது நம் ரத்தத்தில் கலக்கின்றது. நல்லது செய்யும் உணர்வுகளை இதே கண்கள் தான் கவர்கின்றது… திருடுகின்றது. அதே உணர்ச்சிகள் மீண்டும் இயக்கப்பட்டு “நல்லது செய்ய வேண்டும்…” என்று எண்ணம் வருகின்றது.

ஒருவன் கோபமாகப் பேசுகின்றான். கருவிழி ருக்மணி அந்த கோபக்காரனைப் பதிவாகிய பின் அந்தக் கோபத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டு இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இதே கண்கள் தான் அந்த காரமான உணர்வினைத் திருடுகின்றது.

அதனால் தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகிறான் என்று காட்டுகின்றார்கள். இப்படிப் பிறருடைய தீமைகளை எடுக்கப்படும் பொழுது அதை கவர்ந்து நம் உடலுக்குள் சேர்த்து விடுகின்றது.

நாம் எத்தகைய மனிதனாக இருப்பினும் கண் கொண்டு ஒருவரை உற்றுப் பார்த்தால்
1.அந்த உயர்ந்த குணங்கள் வரும் பொழுது உணர்வின் தன்மை பதிவாக்கி நாமும் உயர வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.
2.ஆனால் தவறு செய்கிறான் என்ற உணர்வினை நுகர்ந்து கொண்ட பின் அதே உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறு செய்பவனாக மாற்றுகின்றது.

அந்த வெண்ணையைத் திருடிய பின் அதன் உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. இது எல்லாம் கண்களுக்குள் நடக்கக்கூடிய இயக்கங்கள்.

அது தான் பரமாத்மா…!
1.நமக்கு முன் பரவிக் கிடக்கக்கூடிய நிலையினைக் கண்கள் இழுத்துக் கவர்ந்து
2.நமக்குள் ஒவ்வொன்றையும் தெரியப்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்பதைக் கண்களுக்குக் காரணப் பெயர் வைத்துத் தெளிவாக்கி உள்ளார்கள்.

அடிக்கடி வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை நுகர நேர்ந்தால் என்ன ஆகும்…? வேதனை என்ற அந்த விஷத்தின் தன்மையால் நரம்புகள் வழி கூடி நல்லதைச் சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்பட்டு கண்கள் இருண்டு விடுகின்றது… குருடாகி விடுகின்றது.

வேதனைகளை அதிகமாகச் சுவாசித்தால் உயிரிலே பட்டு நம் ரத்தத்தில் கலந்து உடலில் விஷத்தின் தன்மை பாய்ந்து விடுகின்றது. இது தான் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்று இதே உணர்வுகள் வரப்படும் பொழுது அதற்குத் தக்க இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

கண்கள் இருண்டு விட்டால் நாம் எதைப் பார்க்க முடியும்…? பார்க்க முடியாது. இது எல்லாம் எதனால் வருவது…? நாம் சுவாசித்ததனால் வருவது. சுவாசித்ததை உயிர் தான் உருவாக்குகின்றது.

அதை மாற்ற வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் உடல் நஞ்சை எப்படி மலமாக மாற்றியதோ… ஆறாவது அறிவு வாழ்க்கையில் வந்த நஞ்சினைப் பிரிக்கும் சக்தி பெற்றது.
1.விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சையும் வென்று ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாற்றுகின்றது. துருவத்தின் வழி பூமி கவருகின்றது.

அதைப் பெறச் செய்வதற்கு தான் இத்தனை உபதேசங்களையும் கொடுக்கின்றோம். அதை ஆழமாகப் பதிவு செய்த பின் நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

உங்கள் உடலுக்குள் இருக்கும் எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யக்கூடிய பயிற்சியாக அமைத்துக் கொள்ள வேண்டும். எத்தகைய வேதனையாக இருந்தாலும் தீமையான உணர்வாக இருந்தாலும் அதை ஒடுக்கி தீமை புகாது நீங்கள் தடுத்துக் கொள்ள முடியும்.

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்

 

யாம் குருநாதர் உரைத்த வண்ணம் ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு நான்கு முனை சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில் என்னை அமரும்படிச் செய்தார் குருநாதர்.

அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு மிகவும் அற்புதமாக இருந்தனர்.

அவர்கள் காரை நிறுத்திவிட்டு யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம் “டீ கொடுங்கள்…” என்றனர்.

ஆனால் டீ போடும் ஆளுக்குக் காது கேட்கவில்லை. அவர்கள், “அட.. தம்பி…. இங்கு… வா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால் ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி “உனக்குக் காது கேட்கவில்லையா…?” என்று கேட்டனர்.

டீ கடைக்காரர் “எனக்குச் சுத்தமாகக் கேட்காது…” என்றார்.

அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள் “முருகா…! ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…? உன் பிள்ளைக்குக் காது கேட்கவை முருகா…” என்றனர்.

உடனே அவருக்குக் காது கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின் “எனக்கு முதுகுவலி தலைவலி இடுப்புவலி…” என்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டுக் குணமாகத் தொடங்கியதும் எங்கிருந்து அவ்வளவு கூட்டம் வந்ததென்று தெரியவில்லை…! அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.

அந்தக் கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டு வந்து “ஐயா…! நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம் கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார்… அவரைக் குணப்படுத்துங்கள்…!” என்று கேட்டனர்.

சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டு “முருகா…! உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா…? இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா…! அவர் உன்னை நினைக்கவில்லையா…? அய்யா…! நீங்கள் முருகனை நினையுங்கள்…” என்கின்றனர்.

முடமானவரும் முருகனை வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் “முருகா… உன் பிள்ளையை எழுப்பிவிடப்பா… கொஞ்சம் இவர் மேல் கருணை வை…!” என்று சொல்கின்றனர்.

இப்படிச் சொன்னவுடனே முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.

“முருகா…! இவரை இந்த கல்லைத் தூக்கச் செய்யேன்…” என்றனர்.

அவரும் உடனே எழுந்து போய் நான்கு பேர் தூக்க முடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த அனைவருக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனே… அங்கு வந்ததாக அந்தக் கூட்டம் நம்பியது.

கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள் “நாங்கள் முருகன் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்…” நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா மக்களையும் முருகன் பெருமையை உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே, அங்கிருக்கும் கூட்டத்தினர் தாங்கள் போட்டிருக்கும் நகை மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.

சாமியார் வேடம் பூண்டவர்களும் அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம்… அனைவரும் வாருங்கள்…!”

அங்கு வரும் பொழுது உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் முருகனிடம் சொல்லித் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் போய்விட்டனர்.

1.இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம்.
2.உலகில் எத்தனை விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…? என்பதைக் கண்டுணரும்படி செய்தார் குருநாதர்.

நகைகளையும் பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின் 2 அல்லது 3 மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

“எனக்கு முருகனே நேரில் வந்தார் காட்சி கொடுத்தார் குணமாக்கினார்…” என்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று “ஐயோ… அம்மா…!” என்று கத்திக் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.

காது கேட்காமலிருந்த டீ கடைக்காரருக்கு மறுபடியும் காது கேட்கவில்லை.

இது எப்படியென்றால் இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.

1.உலகில் உள்ள மக்களை எத்தனையோ வகைகளில்
2.கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?

அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.

அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும்… தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.

இப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.

தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.

ஆனால் நாம் கையை வைத்தால் “கொட்டு… கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.

அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.

யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மணத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.

காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும்… அருகில் வராது.

புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை… விலகிச் சென்று விடுகின்றது.

அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மணங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.

அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மணத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.

இன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.

புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.

சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.

விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.

நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.

ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.

பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது… ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு… உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.

பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.

உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை… உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.

பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.

பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு…
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!

நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக்… என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.

ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.

1.இதை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.

ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,

இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்… கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.

மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.

குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.

தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.

தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி இருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.

சில குடும்பங்களில் இயற்கையில் இப்படி நடக்கும் பொழுது இது “பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.

இங்கே யார் தவறு செய்தது…?

1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

 

குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில் நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால் நமது காருக்குக் குறுக்கே ஒருவர் திடீரென்று வந்து விட்டால் சடாரென்று காரை நிறுத்திக் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு அவரைத் திட்டுகின்றோம்.

இப்படிக் காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பதுடன் மட்டுமல்லாமல் ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது…? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.

இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி… மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி… இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது.

காரின் குறுக்கே வந்தவருக்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால் பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால் பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில் “ஓம் நமச்சிவாயா…” என்று உடலாக மாறி விடுகின்றது.
1.நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும் அதிர்ச்சியின் உணர்வுகளும் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
2,அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி நமது உடலையே நடுங்கச் செய்கின்றது.

அது சமயம் நாம் எதைச் செய்வது…? என்ற சிந்தனை இல்லாதபடி “பிரமை பிடித்தது…” போன்று ஆகி விடுகின்றோம்.

ஆனால் ஒருவர் தான் அறியாது திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால்… அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள் வியாபாரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை அதனால் சஞ்சலமும் சோர்வும் ஏற்பட்டுக் கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது…? என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.

அதே சமயத்தில் நம்முடைய வருமானம் இவ்வளவுதான்…! ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்க வேண்டும் நாளை என்ன செய்வது…? என்ற நிலையில் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது
1.எதிரே வரும் வாகனத்தையோ எதிரே வரும் மனிதரையோ அல்லது
2.எதிரே இருக்கும் பள்ளத்தையோ பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

இப்படித் திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும் காரின் டிரைவர் ஒலியை எழுப்பிச் சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால் காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது.

அது சமயம் காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது
1,நமது உயிரான ஈசன் அந்த உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து அதன் வழி நம்மை இயக்குகிறது.
2.இதனின் உணர்வின் தன்மை நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.

நன்கு வசதியுள்ள வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள் இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து விட்டபின் என்ன ஆகிறது…?

இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து இதையே எண்ணி இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால்
1.அவருடைய உடலில் பலவிதமான நோய்களும் உடலில் நடுக்க வாதமும்
2.சிந்திக்கும் தன்மையை இழப்பதும் இனம் புரியாத கோபம் வருவதும்
3.இனம் புரியாத பயம் உருவாவதும் போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.

இதே போன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இருந்து ஆடோ மாடோ நாயோ ஏதோ ஒன்று குறுக்கே வரும்.

இதன் மீது மோதாமலிருக்க எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறு பக்கம் திருப்பும் பொழுது வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.

ஒரு நாயோ பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால் அதைக் காப்பாற்ற எண்ணிச் சிந்தனையை அதன் மேல் செலுத்தி எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால் எதிரே வந்த வாகனமும் இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.

இத்தகைய விபத்தில் சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும் அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து அவரிடத்தில் “மன நோயாக…” மாறிவிடுகின்றது.

இதனால் சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும் தம் குழந்தைகள் தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும் பலவீனமான நிலையில் பயமும் தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால் அதிர்ச்சியும் பயமும் வருகின்றது.

இதன் தொடர் கொண்டு பலவித நோய்களும் வருகின்றது.

பண வசதி படைத்திருப்பதினால் மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால் மன நோயினால் உணர்வின் தன்மை உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும் பயிற்சியும் செய்கின்றனர்.

1.வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும்
2.இது போன்று எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது.

இவ்வாறு சந்தர்ப்பத்தால் நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது…?

துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மனிதனாகப் பிறந்து தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும் தங்கத்தில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.

“துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்” என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்… யார் தவறு செய்தாரோ அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது இவை அனைத்தும் நமக்குள் கலவையாகி நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
1.இதனின் உணர்வுகளை நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து
2.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

“ஒருவர் நல்லவராக வேண்டும்” என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது.

அதே சமயம் நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் நமது உடலில் சேரப்படும் பொழுது நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள் அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.

இது போன்று நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் வலு சேர்க்கச் சேர்க்க நமக்குள் மனத் தூய்மையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.

இவ்வுண்மைகள் அனைத்தும் அருள் ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.

இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும் பிறவியில்லாப் பெரு நிலை பெரும் நிலையாகவும் தாம் அருள் ஞான நெறி துணை கொண்டு தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும்
1.தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாபவினைகள் பாவவினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்றி
2.மெய்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் சக்தி பெற்று
4.பெருவீடு பெருநிலை அடையும் நிலையாகப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

“தீமையை அகற்றக் கூடிய ஃபிட்டரை…” நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்

 

ஒரு வித்து முளைத்து அதனுடைய நுனி வெளி வந்தபின் அதன் துணை கொண்டு காற்றிலிருந்து தன் இனமான சக்தியை எடுத்து வளரும். ஆனால் முளையிலேயே அதைக் கிள்ளி எறிந்து விட்டால் அதனுடைய சத்தையும் எடுக்காது… தொடரையும் எடுக்காது.

இதைப் போன்று தான் பிறருடைய உணர்வுகள் நமக்குள் அணுவின் தன்மையாக வளர்ந்து விட்டால் தீமையின் இயக்கமாக இயக்கிவிடும். ஆனால் அவ்வாறு உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன்பே அதைத் தடைப்படுத்த முடியும்.

ஏனென்றால்
1.வாழ்க்கையில் இடைமறித்து நல்ல உணர்வுகளைத் தடைப்படுத்தும் நல்ல உணர்ச்சிகளைச் செயலற்றதாக ஆக்கும்
2.அது போன்ற நிலைகளை வராதபடி தடைப்படுத்த வேண்டும்.
3.அதாவது… தீமை என்று வந்தால் அதை எப்படித் தடுக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் ஃபிட்டர்களை (FITTER) வைத்திருப்பார்கள்.

தொழிற்சாலையில் பொருள்களை உருவாக்குவார்கள். ஆனால் அந்த இயந்திரங்களில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் ஃபிட்டர் வந்து அதை சரி செய்து தருவார்… இயந்திரத்தை உற்பத்தி செய்பவரிடம் நாம் செல்வதில்லை…!

அதைப் போன்று தான் அந்த ஃபிட்டரை நமக்குள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியாக துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும்.
2.அதற்குண்டான உபாயத்தை அது சொல்லும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் உங்களுக்குள் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்கின்றேன்.

அதை வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழும் உணர்ச்சிகளை ஊட்டும்.

நம்மை உருவாக்கக்கூடிய சக்தியாக உயிர் இருந்தாலும் அவனிடம் நாம் போவதில்லை. தீமைகளை மாற்றி அமைத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது அதற்குண்டான உபாயங்கள் வரும்.

தொழிற்சாலைகளில் ஓடும் இயந்திரங்களை உற்பத்தி செய்தவன் எங்கேயோ இருப்பான். ஆனால் அந்த இயந்திரத்தில் ரிப்பேர் ஆகிவிட்டால் அதைச் சரி செய்பவன் இங்கேயே இருப்பான். உற்பத்தி செய்பவரைத் தேடிச் செல்வதில்லை.

அதற்குத்தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பதிவு செய்கின்றேன். நமக்குள் அந்தச் சக்தி இருக்கின்றது

குறைகள் என்று வந்துவிட்டால்
1.“சாமி சொன்னாரே…!” என்று எண்ணி இதை எடுத்தால் அதைச் சீர்படுத்தும் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.
2.அதற்குத்தான் மணிக் கணக்கிலே உபதேசங்களைக் கொடுப்பது… நினைவுபடுத்துவது… நினைவின் ஆற்றலை உங்களுக்குள் பெருக்கச் செய்வது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைச் சீர்படுத்த வேண்டும் என்று நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அந்த ஞானிகள் உணர்வுகள் அதைச் சீர்படுத்தும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

இயந்திரம் கோளாறாகிய பின் ஃபிட்டரைத் தேடவில்லை என்றால் என்ன ஆகும்…? நாமாக அதைச் சரி செய்ய முடியாது. நாம் எதையாவது செய்யப் போனால் இன்னும் கொஞ்சம் ரிப்பேராகிவிடும். ஆனால் ஃபிட்டரைக் கூப்பிட்டால் உடனே அதைச் சரி செய்து விடுவார்.

ஆகவே உங்களுக்குள் அந்தச் சீர்படுத்தும் உணர்வு கொண்ட அந்த அறிவை பதிவாக்குகின்றேன்.

அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் தீமையை நீக்கும்.
1.அந்த உணர்வு உங்களுக்குள் ஞானமாக இயக்கும் ஞானத்தைப் பெறும் தகுதியும் வரும்.
2.உங்களை அறியாது வரும் இருளைப் போக்க வழி வகுக்கும்.

அதற்குத்தான் இதைச் சொல்வது. நமக்கு முன் எல்லா உயர்ந்த சக்திகளும் உண்டு. அதை நாம் நுகர்ந்தறிய வேண்டும்.

அது தான் கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம்…! ஒன்றைப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது. அதனுடைய வலிமை அதிகமாகும் பொழுது வராகன்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் கூர்மையாகப் பதிவு செய்து விட்டால்
2.தீமையை அகற்றக்கூடிய சக்தி வாய்ந்த உணர்வாக உங்களுக்குள் அது வளர்கின்றது.

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்

தண்டாயுதபாணி – கோவணாண்டியாகக் காட்டியதன் உண்மைத் தத்துவம்

 

தண்டபாணி என்கிற போது இந்த உடலின் வாழ்க்கையின் நிலைகளை தண்டாயுதபாணி என்று சிலையில் “கோவணாண்டியாகக் காட்டினார்கள்…”

அதாவது மனித வாழ்க்கையில் வரும் ஆசை கோபம் வெறுப்பு இத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இந்த உடலுக்குள் கொடுக்கப்படும் பொழுது “இரு… நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்ற நிலை ஏற்படுகின்றது.

இந்த மாதிரி இன்னொரு உடலுக்குள் முற்றிடும் உணர்வை நம் உடலுக்குள் சுவாசிக்கக் கூடாது.
1.அதாவது, நமக்குள் எடுக்க வேண்டிய ஆயுதம் – “நிராயுதம்…”
2.இந்த “உடலுக்குள் உண்டான எண்ணங்களை…” (உடல் பெறும் உணர்வுகள்) எடுக்கக் கூடாது என்பதற்குத்தான்
3.தண்டாயுதபாணியாக… நிராயுதபாணியாக வைத்துள்ளார்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து நமக்குள் “ஊன்றுகோலாக…” வைக்க வேண்டும்.
5.அதன் வழியில் நமக்குள் வரும் தீமைகளைத் தடுத்துக் கொள்ள வேண்டும்
6.அதற்காகத் தான் இப்படி உருவகப்படுத்திக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

குறிப்பு:-
ஞானிகள் இப்படித் தெளிவாகக் காட்டியிருந்தாலும்…
1.”அவன் ஆண்டி..! நீ பார்க்காதே..” கோவணத்தோடு பார்த்தால் உனக்குச் சோறு கிடைக்காது…!
2.ஆண்டி வேஷம் போட்டிருக்கும் பொழுது பார்த்தால் தொழில் போய்விடும் என்று திசை திருப்பி விட்டார்கள்.

அதற்காக வேண்டி “இராஜவேஷம் எப்பொழுதோ…” அப்பொழுது மலைக்குப் போவார்கள். இது மாதிரியெல்லாம் நம்மை அறியாமலே “நமக்குள் ஆசையை வளர்த்துள்ளார்கள்…”

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…?

 

போகன் கண்டறிந்த தத்துவங்களை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பழனியில்… மலை மீது நாம் ஏறுகின்றோம். ஏறும் போது மேல் நோக்கி எப்படி எண்ண வேண்டும் என்ற நிலையை சற்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

1.படியின் கீழ் இருந்து நாம் மேல் நோக்கிச் செல்லும் நிலையில்
2.அந்த போக மாமகரிஷியை எண்ணி “அவன் அருளைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள்… மேல் நோக்கி வருகின்றது…”

கீழிருந்து மேலே முருகனைப் பார்க்கின்றோம். ஏனென்றால் குன்று தோறும் அமர்ந்திருக்கும் முருகா…! என்று நாம் பாடலைப் பாடுகின்றோம். உயரமான குன்றில் சிலையை வைத்த நிலையில்… அவன் அருளைப் பெற வேண்டும் என்று ஏங்குகிறோம்.
1.சூரியனின் காந்த சக்தி ஞானிகள் உணர்வைப் புவியில் (தரையில்) படரச் செய்யாது மேலே மிதக்கச் செய்கின்றது.
2.நாம் மேல் நோக்கி எண்ணும் பொழுது அந்த மலை முகட்டில் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு
3.நம் உயிருடன் ஒன்றி இயக்கத் தொடங்கி விடுகின்றது.
4.இந்த உணர்வுகள் மூன்றும் சேர்த்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
5.தன்னிச்சையாகவே அந்த உணர்வை (நாம் எதை எண்ணுகின்றோமோ) உயிரின் வழி உள்ளுக்கே நுகரும் தன்மை வருகின்றது.

சாதாரண மனிதனும் எளிதில் அந்த உயர்ந்த சக்திகளைப் பெறும்படி வைத்துள்ளார்கள்.

நினைவை நாம் மேல் நோக்கி அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டப்படும் பொழுது அந்த வலிமை பெற்ற உணர்வுகள் நமக்குள் இணைந்து “நம் உடலில் நோய் இருந்தாலும்… அதை மறக்கச் செய்கின்றது…”

மலை மீது ஏறும் போது இந்த உணர்வின் வலிமை எல்லாம் அதற்குள் சென்று விடுகின்றது. நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கி அதனின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்க்கும் போது
1.உடலில் இருக்கும் எதிர்ப்புணர்வுகள்… அதாவது பகைமை கொண்ட உணர்வின் அணுக்களுக்கு
2.ஞானிகளின் உணர்வை ஈர்க்கப்படும் பொழுது பகைமை உணர்வுகள் தணிகின்றது.

அந்த அணுக்களின் வீரிய சக்தி ஒடுக்கப்படும் பொழுது இங்கே வலுக்கூட்டி மலை மீது ஏறும் தன்மை வருகின்றது.

சில பேர் தரையில் கூட நடக்க முடியாமல் இருப்பார்கள். ஆனால் மலை மீது போகும் பொழுது முருகா…! என்று அவன் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணை நோக்கி ஏகும் பொழுது அந்த உணர்வுகள் உள்ளே புகுந்த பின் நான்கு அடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு மாதிரியாக இருக்கும்.

இந்த உணர்வுகள் உள்ளே சென்ற பின் மனித உடலில் பகைமை ஊட்டக்கூடிய உணர்வுகளைத் தணியச் செய்கின்றது. பின் தாராளமாக ஏற முடியும். இதைப் பார்க்கலாம்.

1.ஏறும் போது மேலே நோக்கி மட்டும் எண்ணிப் பாருங்கள்.
2.மூட்டு வலி… என்னால் ஏற முடியவில்லை என்பதெல்லாம் மாறும்.

இதே மாதிரி அங்கு மட்டுமல்ல…! உங்கள் வீட்டின் மாடிப்படிகளிலோ மற்ற உயரமான இடங்களில் ஏற முடியவில்லை என்றாலும் ஈஸ்வரா…! என்று மேல் நோக்கி ஞானிகளை எண்ணி அந்த உணர்வை எடுத்தால் இரண்டு படி ஏறுவது சிரமமாக இருக்கும் மூணாவது படி நாலாவது படி தாராளமாக ஏற வரும்.

விண்ணிலிருந்து வரக்கூடிய ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்று மனிதன் உயர்ந்த நிலை அடைவதற்குத் தான் இத்தனை நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
1.நாம் எடுக்கக்கூடிய அந்த விண்ணினுடைய ஆற்றல்
2.நம் உடல் உறுப்புகளில் சேர்ந்து அதைச் சீராக இயங்கும்படி செய்கின்றது.

மலை மீது ஆலயங்களை ஞானிகள் ஏன் வைத்தார்கள்…? என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு

 

“வைகுண்ட ஏகாதசி” என்ற நிலைகளைக் கொடுத்த ஞானிகள் பெருமாள் விஷ்ணு ஆலயங்களில் “சொர்க்கவாசல்” என்ற நிலைகளை உருவாக்கி மனிதர்கள் தம்மிடத்தில் உள்ள நல்ல குணங்களைக் காக்கும் நிலையைத் தெளிவாக்கினார்கள்.

அதாவது நமது மூக்கு நமக்கு முதல் வழி… நேர்வழி. நாம் நமது கண் கொண்டு பார்க்கும் உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம். நமது உயிர் நாம் சுவாசித்த உணர்வுகளை அதனின் உணர்வின் சக்தியாக நமது உடலில் அமைத்து விடுகின்றது.

1.நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் அணுவாக நமது உடலில் விளைந்து
2.பின் அந்த அணு அதனின் குணத்தின் சத்தைக் காற்றில் கலந்திருப்பதை
3.நம் சுவாசத்தின் வழிக்கூடி நுகர்ந்து… தன்னுள் கவர்ந்து தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

நாம் எந்த குணத்தை எடுத்தோமோ அந்தக் குணத்தை நாம் சுவாசிக்கும் பொழுது “அது உயிரில் மோதி…” அதனின் உணர்வின் சத்தை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது.

ஆனால் அதனின் உணர்ச்சிகள் நமது உடலில் இயங்கி அதற்குத் தக்கவாறு நமது உடலை இயக்கிக் கொண்டுள்ளது என்ற நிலையை நமக்கு உணர்த்துவதற்காக ஞானிகள் “சொர்க்கவாசல்…” என்ற நிலைகளை ஆலயங்களில் ஏற்படுத்தினார்கள்.

நாம் வைகுண்ட ஏகாதசியன்று என்ன செய்கின்றோம்…?

இரவு முழுவதும் கண் முழித்திருந்து காலை 4.00 மணிக்கெல்லாம் சொர்க்கவாசல் திறப்பார்கள் என்று கோவிலுக்குச் செல்கிறோம்.

சொர்க்கவாசல் வழி சென்றால் சொர்க்கத்தை அடைவோம்…! என்ற எண்ணத்துடன்தான் நாம் செல்கின்றோம்.
1.இது எப்படி இருக்கிறது…? என்றால் ஏட்டில் சுரைக்காயை வரைந்து
2.அதைக் குழம்பில் போட்டுச் சமைத்துச் சாப்பிடுவது போன்று இருக்கின்றது.

இரவு உணவு உட்கொள்ளாது விடிய விடிய விழித்திருந்து 4.00 மணிக்கெல்லாம் ஆலயத்திற்குச் சென்று அங்கே சொர்க்கவாசலைத் திறந்ததும் கூட்டத்துடன் முண்டியடித்து மோதிக் கொண்டு சென்று அங்கே வைத்திருக்கும் சிலைக்கு அபிஷேகம் ஆராதனை அர்ச்சனைகள் செய்தால் அந்தத் தெய்வம் நமக்கு நல்லது செய்யும்… நம்மைச் சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்…! என்று “சாங்கிய சாஸ்திரங்களை வைத்துத்தான்” நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நாம் பேருண்மையின் தன்மைகளைக் காண முடியாத நிலைகளில்தான் இருக்கின்றோம்.
1.பேருண்மைகளை யாம் உங்களுக்கு வெளிப்படையாக இப்பொழுது உபதேசித்தாலும்
2.“இது என்ன புதிதாக இருக்கின்றது…?” என்று புதிர் போட்டுக் கேள்வி கேட்டு
3.கேள்விக் குறியாகத்தான் யாம் உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து கொள்கின்றீர்கள்.

யாம் உபதேசிப்பதைக் கேட்டாலும் புதிதாக இருக்கின்றது புதிராக இருக்கின்றது என்றும் இதனின் உணமையை உணர்ந்து கொண்டாலும்,
1.மற்றவர்கள் இதைப் பெற முடியுமா…? இதன்வழி பின்பற்றி நடப்பார்களா…? என்று
2.நாம் மற்றவர்களைப் பற்றித்தான் எண்ணத் தோன்றுகின்றதே தவிர
3.நாமும் பெறுவோம் நம்மைச் சார்ந்தவர்களையும் பெறச் செய்வோம் மற்ற அனைவரையும் பெறச் செய்வோம் என்ற
4.இந்த உணர்வுகள் நம்மிடத்தில் இன்னும் வளரவில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த பேருண்மையின் தன்மைகள் நம் மனதில் இருந்து மறைந்தே போய்விட்டது.

ஆனால் மகரிஷிகள் தமது உடல்களில் விளைவித்து வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நமது பூமியில் படரச் செய்துள்ளது… அது அழியவில்லை.

அவர்கள் சப்தரிஷி மண்டலமாகவும் துருவ நட்சத்திரமாகவும் இருந்து ஒளிச்சரீரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் இந்த[ப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்த காலங்களில் மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி தீமைகள் தம்மைச் சாராத நிலைகள் கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள்.

அவ்வாறு மாற்றிய உணர்வுகளை அவர்கள் தம் உடலில் விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இந்தப் பூமியில் படரச் செய்துள்ளது.

அவர்கள் மனிதச் சரீரத்தில் வாழ்ந்த காலத்தில் பிறவியில்லா நிலை பெறும் நிலையாகத் தமது உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றச் செய்து “வேகா நிலை” என்ற நிலையை அடைந்தார்கள்.

1.இந்தப் பேரண்டத்தில் எத்தகைய மாற்றங்கள் நடைபெற்றாலும் இவர்கள் உயிர் அழிவதில்லை
2.உடலில் இருந்து ஒளியாக மாற்றிய உணர்வுகளும் மாறுவதில்லை.
3.ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி இன்றும் விண்ணின் ஆற்றலை தம்முள் ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளார்கள்.

இதன் நிலைகளை நாமும் பெற வேண்டும் எனும் நிலைக்காகத்தான் அன்று ஞானிகள் நமது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைச் சீராக பயன்படுத்தச் செய்து நமது வாழ்க்கையில் சொர்க்கத்தைப் பெறும் நிலையாகவும்… “சொர்க்கவாசலை எதன் வழி கொண்டு திறக்க வேண்டும்…?” என்பதையும் ஞானிகள் நமக்கு உணர்த்தினார்கள்.

ஆனால் யாரும் அதை பின்பற்றவில்லை. அபிஷேகம் ஆராதனை செய்தாலே போதும்…! என்ற நிலைக்குச் சென்று விட்டோம்.

மெய்யுணர்வை நமக்குள் நுகர்ந்து நம் உயிருக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்து மகரிஷிகளின் அருள் உணர்வை நம் உடலுக்குள் பரவச் செய்து அதனை ஆராதனையாக்கி நம் உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்கு அருள் ஞானிகளின் உணர்வை உணவாகக் கொடுத்து அதனின் நிலையை வளரச் செய்வதற்குத்தான் ஆலயங்களில் சொர்க்கவாசல் என்ற நிலைகளை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நாம் ஒவ்வொரு ஆலயங்களுக்குச் செல்லும் பொழுதும் நேர் வாசல் மூலம் தான் செல்கின்றோம். ஆனால்
1.வைகுண்ட ஏகாதசி அன்று “சொர்க்கவாசல்” என்று மற்றொரு வாசல் (வடக்கு வாசல்) மூலம் உள்ளே வரும்படிச் செய்கின்றார்கள்.
2.நாம் ஏற்கனவே சுவாசித்த பாதையை விட்டு விட்டு
3.நம்மை இயக்கும் உயிரான ஈசனை மதிக்கும் நிலையாக… ஆலயங்களில் செல்லும்படிச் செய்கின்றார்கள்.
4.அந்த வாசல் (உயிர்) வழியாகச் சென்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இதனின் உணர்வை நமக்குள் செலுத்த வேண்டும்.

பின் இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்களது உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஆலயம் வருவோர் அனைவரையும் எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அவர்கள் உணர்த்திய உணர்வின்படி
1.மூக்கு வழி சுவாசிப்பதைக் காட்டிலும்
2.புருவ மத்தியில் நல்லுணர்வை ஈர்த்துப் பருகும் நிலையை நாம் பெற வேண்டும்
3.நமக்கு சொர்க்கவாசல் – புருவ மத்தி வழி… உயிர் வழி.

இப்படி நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நமக்குள் உயிர் வழி சேர்த்துப் பழக வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி அன்று ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது இந்த ஆலயம் வருவோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் தெய்வ குணங்கள் பெற வேண்டும் தெய்வ நிலைகள் பெற வேண்டும் அவர்கள் குடும்பங்களில் அமைதி பெற வேண்டும் அருள் ஒளி படர வேண்டும் என்று நாமும் மற்றும் அனைவரும் எண்ணும் பொழுது நம்முள்ளும் மற்றும் ஆலயம் வருவோர் அனைவரிடத்திலும் நல்ல உணர்வுகள் விளைகின்றன.
1.அந்த உணர்வுகள் நம்முள் விளைந்து ஒளியின் சரீரம் பெறும் தகுதி நாம் அனைவரும் பெறுகின்றோம்
2.ஞானிகள் மகரிஷிகள் சென்ற சப்தரிஷி மண்டல எல்லையை நாம் அனைவரும் அடைகின்றோம்.

இது தான் வைகுண்ட ஏகாதசி…!

தில்லை அம்பலத்தாண்டவா

தில்லை அம்பலத்தாண்டவா

 

அன்று திருமூலர் பதஞ்சலியாக இருந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து மாடு மேய்ப்பவன் உடல் மூலமாக அவன் வீட்டிற்குச் செல்லும் பொழுது
1.அவன் மனைவி கணவனை எப்படி வரவேற்கிறது…?
2.மரியாதை கொடுத்து எப்படிஉபசரிக்கிறது…! என்பதைப் பார்த்த பின் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஆனால் பதஞ்சலியாக… அரசனாக இருக்கப்படும் பொழுது
1.தன்னுடைய சேனாதிபதிக்குப் பயப்பட வேண்டும்
2.தன்னுடைய மனைவி இன்னொரு நாட்டு அரசனுடைய மகள் அவளுக்குப் பயப்பட வேண்டும்
3.தான் சட்டங்களை இயற்றினாலும் மக்களுக்குப் பயப்பட வேண்டும்
4.பின் எதிரிகளுக்குப் பயப்பட வேண்டும் என்று
5.இப்படிப் பயந்த உணர்வுகளே கொண்டு வாழும் நிலைகளே தனக்குள் வந்தது.

இதிலிருந்து தப்பிக்க உயர்ந்த சக்திகள் கொண்டு கூடுவிட்டுக் கூடு பாயும் சக்திகள் பெற்றிருந்தாலும்… அப்படிச் சென்ற பின் தன் உடலை வீழ்த்தி விட்டால் தான் எவ்வாறு மீள்வது…? வழியில்லையே…!

பாம்பினத்திற்குள் சென்ற பின் அங்கங்கள் கொண்டு செயல்படும் வழியில்லை… அப்பொழுது தான் எப்படிச் செயல்படுத்துவது…? என்று இந்த உணர்வின் நினைவு வருகின்றது.

பாம்புக் கூட்டுக்குள் இருந்து விஷத்தைப் பாய்ச்சி இன்னொரு உடலுக்குள் போகும் திறன் தான் உண்டு. எந்த உடலைத் தேர்ந்தெடுக்கின்றோமோ மனித உடலாக இருந்தால் அறிவின் தன்மை இயக்க முடியும்.

இதை உணர்ந்த அந்தப் பதஞ்சலி
1.தான் கற்றுணர்ந்த நிலைகள் கொண்டு அந்த மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அதற்குள் புகுந்து
2.அறிவு வளர்ச்சி இல்லாததாக இருந்தாலும்… “இவன் உணர்வால்” அங்கே வலிமை பெற்று அந்த உடலை இயக்குகின்றான்.

தில்லை நடராஜா…! இந்தப் பூமி அதனுடைய இயக்கத்தில் நிற்காமல் ஓடுகின்றது. அது எவ்வாறு இயக்குகிறது…? என்றும் அதிலே விளைந்தது தில்லை அம்பலதாண்டவா.
1.இந்த உடலான எல்லையில் உயிராக நின்று
2.என்னை ஆண்டு கொண்டு இருக்கும் நிலைகள் தில்லை அம்பலத்தண்டவா…!
3.நான் சுவாசிக்கும் உணர்வு எதுவோ அதை நீ ஆளுகின்றாய்.
4.நான் எதன் உணர்வை எடுக்கின்றேனோ அந்த உணர்வுக்குத் தக்க என்னைக் குறுக்குகின்றாய்
5.என்னை ஆட வைக்கின்றாய்… ஆட்டங்களை ஆட வைக்கிறாய்…!
6.அந்த உணர்வின் இசைக்கொப்ப என்னை இயக்குகின்றாய் என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

அது தான் தில்லை நடராஜா…! என்று நடனக் கலையிலே சிறந்தவன் என்று கூறுவார்கள். நுகர்ந்த உணர்வின் தன்மை சக்தியாகி உணர்வின் தன்மை உடலை எப்படி ஆட்டிப் படைக்கின்றது…? இன்று ஆடுகின்றோம்…! (நம் செயல்கள்)

இந்த உணர்வை வளர்த்த பின் அதற்குத் தக்க அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது என்ற நிலையை… உணர்வின் இயக்கங்கள் தன் உடலில் வரப்படும் பொழுது எவ்வாறு என்று நடனக் கலையாகக் காட்டினார் அன்று திருமூலர்.

தில்லை நடராஜா என்று நிற்காமல் ஓடும் பூமியின் செயலும்… அதற்குள் உராயும் உணர்வுகள் தனக்குள் விளையும் அணுக்களின் மாற்றங்களும்… எதனின் உணர்வு மாறுகின்றதோ அதன் உணர்வின் செயலாகத் தாவர இனங்களும்…
1.நுகர்ந்த உணர்வுகள் தனக்குள் எண்ணங்களாக எப்படி ஆகின்றது…?
2.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு உருவங்கள் எப்படிப் பெறுகின்றது…?
3.அதனுடைய கலைகள் எப்படி இருக்கின்றது…? என்று தெளிவாக “அவர் பாடல்கள் மூலமாக…” உண்மைகளை வெளிப்படுத்தி உள்ளர்.

தில்லை நடராஜா… தில்லை அம்பலத்தாண்டவா…!
1.நான் எண்ணும் உணர்வின் தன்மையை
2.அதாவது… என்னை நீ (உயிரான ஈசன்) எப்படி இயக்குகின்றாய்…? என்ற நிலையை அவன் உணர்த்தினாலும்
3.பின் வந்தவர்கள் “திருமூல மந்திரம்…” என்று திரித்து விட்டார்கள்.