
கணவன் மனைவி வாழ்த்த வேண்டிய வாழ்த்து
உங்கள் வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும் என்றால் நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்தும் மனைவி கணவனை மதித்தும் நடக்க வேண்டும். சாவித்திரியைப் போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிட வேண்டும் இரு உணர்வும் ஒன்ற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் போன்று எண்ணினால் எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்.
அப்படி என்றால் எமன் யார்…?
1.பிறருடைய வேதனையான உணர்வுகளை எடுத்து அதை நுகர்ந்து கொண்டால் வெறுப்பு வேதனை நோய் என்ற நிலை நமக்குள் வருகின்றது.
2.அப்படி நுகர்ந்த உணர்வே நமக்குள் எமனாகின்றது பல நோய்கள் வருகின்றது… அவர் உணர்வே நமக்குள் வலுவாகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்கு எப்போதுமே கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் தன் மனைவிக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அந்த அருள் என்றுமே எனக்கு உறுதுணையாக இருந்து
2.அந்த ஆசி கொடுத்தல் வேண்டும் என்று எண்ணிக் கணவன் வெளியிலே செல்லுதல் வேண்டும்.
அதே சமயத்தில் மனைவியும் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அவர் எந்தக் காரியம் செய்தாலும் அது நல்லவையாக அமைய வேண்டும்.
2.அவரைப் பார்ப்பவருக்கு எல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எப்போதுமே மனைவி வாழ்த்துதல் வேண்டும்.
வெளியிலே எங்கே சென்றாலும் என் கணவருக்கு அந்த அருள் மணம் பெற வேண்டும் தொழிலில் செழித்திருக்க வேண்டும் அவர் பார்ப்பவர்களுக்கெல்லாம் நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று மனைவி எண்ணுதல் வேண்டும்.
. இதே மாதிரி எண்ணி இருவரும் வாழ்தல் வேண்டும்.
ஒருவன் தனக்குத் தீங்கு செய்தான் என்ற நிலையில்… அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தீங்கு செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது அவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இதே மாதிரி எண்ணினால் அவனுக்குப் புரை ஓடுகின்றது.
வாகனம் ஓட்டும்போது எண்ணினால் விபத்தாகின்றது. தொழிலில் இதே போன்று எண்ணினால் சிந்தனை குறைகின்றது… எந்திரங்களில் சிக்கி விடுகின்றார்கள்.
ஒரு கணக்கோ பொருளோ நல்ல முறையில் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது சிந்தனை குறைந்து முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால் கணவன் வெளியில் செல்லும் போதெல்லாம் அவருக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மனைவி வாழ்த்துக் கூறுதல் வேண்டும்.
அதே சமயத்தில் வெளியில் செல்லக்கூடிய கணவனும்
1.என் அன்னை தந்தையின் அருளால் மனைவியின் அருள் துணை எனக்குக் கிடைக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி என்றுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக் கணவனும் செல்லுதல் வேண்டும்.
இருவருமே இதைப் போன்று எண்ணி வாழ்ந்து வந்தால் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இணைந்து வாழ்கின்றோம் என்று பொருள்.
ரோட்டில் செல்கின்றோம். எதிர்பாராது எங்கிருந்தோ ஒரு பஸ் தறி கேட்டு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்தச் சந்தர்ப்பத்திலே “மனைவியின் உணர்வுகள் கணவனை அங்கே போக விடாது தடுக்கும்…”
அல்லது பஸ்ஸிலே ஏறப்போகின்றோம் என்றாலும் இதே நிலைகள் வளரப்படும் பொழுது “மனைவியின் உணர்வுகள் அந்தப் பஸ்ஸில் ஏற விடாது தாயின் உணர்வுகள் அங்கே தடுக்கும்…”
இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக நாம் நடந்து செல்லப்படும் பொழுது நமக்கு எதிரியாக இருப்பவர்கள்… “எனக்குத் துரோகம் செய்தான் அல்லது இடைஞ்சல் செய்தான்” என்று எண்ணும் பொழுது மேடு பள்ளம் தெரியாதபடி விபத்தாகி விடும்.
அல்லது ஒரு வாகனம் வந்தாலும் தெரியாதபடி புரையோடுவது போன்று சிந்தனைகள் இழந்து விடும். இனம் புரியாதபடி விபத்தாகி விடும். இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில சம்பவங்கள்.
ஆனால் இதை மாற்ற அன்னை தந்தையரை எண்ணி… “அவருடைய அருள் துணை எனக்கு என்றும் இருக்க வேண்டும்…” என்று எண்ணிச் சென்றால் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வரும்.
தாய் எப்போதுமே தன் பிள்ளைகள் வாழ்க்கையிலே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆசி கொடுத்துக் கொண்டே இருக்கும். அதே சமயத்தில் மனைவியின் எண்ணங்கள் வரும் பொழுது அந்த அன்பான எண்ணங்கள் மகிழ்ச்சியான உணர்வு கொண்டு எங்கே சென்றாலும் காக்கும் சக்தியாக வரும்.
தீமை என்று வரப்படும் பொழுது “அந்த எண்ணமே எமன்…”
1.எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்… இணைந்து வாழ்வதே சாவித்திரி.
2.ஆகையினால் மனைவி அருள் உணர்வு கொண்டு எண்ணப்படும் பொழுது அந்தச் சக்தி என்றுமே உறுதுணையாக இருக்கும்.
நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே தாய் தந்தையரை வணங்கி மனைவியின் அருள் பெற வேண்டும் என்று கணவன் வெளி செல்வதும் கணவன் வெளியிலே செல்லும் போதெல்லாம் மனதில் நினைத்து ஆசீர்வதித்து மனைவி அனுப்புதல் வேண்டும்.
தொழிலுக்குச் சென்றாலும் சரி அவர் செய்யும் தொழில் எல்லாம் உற்பத்தியாகும் பொருள்களிலும் அதை வாங்குவோர் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே “மனைவி கணவனை வாழ்த்திக் கொண்டிருத்தல் வேண்டும்…”
கணவன் மீது மனைவி பிரியமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கக்கூடிய சொந்த பந்தங்களோ நாத்தனாரோ மற்றவர்களோ வந்து கொஞ்சம் வேதனைப்படும்படி பேசி விடுகின்றார்கள்.
அந்த வேதனையால்… கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் “பாவிகள் இப்படிப் பேசுகின்றார்களே…” என்று இந்த உணர்வுகளைச் சேர்த்துத் தன் கணவனை எண்ணும் பொழுது இதே உணர்வுகள் அவர் எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் தடைப்படும்.
அவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது மனைவி எண்ணினால் அவருடைய சிந்தனை இழக்கப்பட்டு விபத்தாகும்.
1.சாதாரண மனிதனுடைய உணர்வுகள் எண்ணும்பொழுது அந்த உணர்வு எப்படி இயக்குகின்றதோ இதைப் போன்று தான்
2.கணவன் மனைவிக்குள் மற்றவர்கள் செய்யும் உணர்வைத் தனக்குள் எடுத்துத் தன் கணவரை எண்ணினால் அங்கே தடையாகின்றது.
இதை எல்லாம் தடைப்படுத்த வேண்டும் அல்லவா.
ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று குறை கூறுவோர் நிலைகளை இப்படி மாற்றிப் பழகுதல் வேண்டும்.
என் கணவருக்கு அந்த அருள் உணர்வு பெற வேண்டும். பேரானந்த நிலைபெறும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி கணவனை உயர்ந்த நிலை பெற எண்ணுதல் வேண்டும்.
இதே மாதிரிக் கணவனும் எங்கே சென்றாலும் மனைவியை எண்ணி மனைவிக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இப்படி எண்ணினால் அன்று அகஸ்தியன் எப்படி வாழ்ந்தானோ
2.அதைப்போல வாழ்க்கையில் வரக்கூடிய இருளை நீக்க முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் (ஞானகுரு) சொல்லும் தியானத்திற்கு மந்திரம் சொல்ல வேண்டும்… அது எனக்கு மறந்து போய் விட்டது…! என்று எல்லாம் நீங்கள் சொல்லத் தேவை இல்லை.
ஈஸ்வரா… என்று உயிரை உங்கள் புருவ மத்தியில் நினைக்கின்றீர்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..! என்று உடலுக்குள் இந்த உணர்வைச் செலுத்தினாலே போதும்.
எந்த நல்லதைச் செய்ய விரும்புகிறீர்களோ அந்தக் காரியம் நல்லதாக இருக்க வேண்டும் என்று என்ணினாலே போதுமானது.
ஆனால் துருவ நட்சத்திரத்தை நினைத்தேன்… தொல்லை என்னை விட்டுப் போக மாட்டேன் என்கின்றது… என்றைக்குத் தான் போகுமோ…? என் வயிற்று வலி என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்று இருக்கிறது என்று இதைத் தியானித்தால்
1.இன்னும் விஷம் அதிகமாகப் போகும்
2.சுத்திகரிக்கும் நிலையே மாறிவிடும்.
ஆகவே இதைப் போன்ற நிலைகளை விடுத்து விட்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறுகின்றேன். துருவ மகரிஷிகளின் அருள் சக்தி என் இரத்த நாளங்களில் கலக்கின்றது. என் உடல் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது. நோய் நீக்கும் சக்தி அந்த அரும் பெரும் சக்தியை நான் பெறுகின்றேன்…! என்று எண்ணுதல் வேண்டும்.
சர்க்கரைச் சத்தோ… இரத்தக் கொதிப்போ… வாத நோயோ… எதுவாக இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எனக்குள் சர்க்கரைச் சத்தை நீக்கும் அந்த அரும் பெரும் சக்தி வளர வேண்டும்.
அதே மாதிரி இரத்தக் கொதிப்பை நீக்கிடும் அரும்பெரும் சக்தி பெற வேண்டும். ஆஸ்துமா போன்ற நோய்கள் நீக்கி அந்த அரும்பெரும் சக்தி எனக்குள் பெற வேண்டும் என்று இதை மாற்றியமைக்க வேண்டும்.
இதைப்போல தியானத்தின் முலம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வாருங்கள்.
1.இந்த உணர்வை நீங்கள் அடிக்கடி அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்
2.இதை நுகர நுகர உங்கள் இரத்த நாளங்கள் பரிசுத்தமாகும்
3.எந்த நோயாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றி அமைக்கும் நிலை வரும்.
உங்கள் எண்ணத்தால் தான் நோய் வருகின்றது. உங்கள் எண்ணத்தாலேயே அதைப் போக்கவும் முடியும்.
எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றது…? பிறர் படும் தீமைகளை அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வை உற்றுப் பார்க்கின்றோம். அவர் உடலில் இருந்து வருவதை நுகர்கின்றோம்.
நுகர்ந்தது நம் இரத்த நாளங்களில் கலந்து நம் நல்ல குணங்களுக்கும் இதற்கும் போர் முறைகள் வருகின்றது. ஒன்றுக்கொன்று மோதல் அதிகமாகும்போது இந்த உணர்வின் தன்மை வரும்.
இடைப்பட்ட நேரத்தில் இதைச் சமப்படுத்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் இதைச் சமப்படுத்தலாம்.
இதில் ஒன்றும் சிரமம் இல்லை…!
ஏனென்றால் ஒருத்தருக்கொருத்தர் குடும்பத்தில் சண்டை போட்டுப் பல சிக்கல்கள் வருகின்றது. இதை யார் பஞ்சாயத்து செய்தாலும் ஒன்றும் நடக்காது.
அந்த உணர்வுக்கொப்பத் தான் இப்படிப்பட்ட செயலாக்கங்களும். அந்த உணர்வுக்கொப்பத்தான் இந்த எண்ணங்களும் வரும்.
அதை மாற்றிட…
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.என்னை இயக்கும் இந்த சக்தியிலிருந்து நான் விடுபட வேண்டும்.
3.என் பார்வையில் அனைவரும் நலமாக வேண்டும்
4.அனைவரும் நல்ல உணர்வுகளைப் பெறும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வை எண்ணினால் பகைமையான உணர்வு நமக்குள் வளர்க்காது பாதுகாக்கலாம்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து ஒவ்வொருவரும் மீண்டிட குரு அருள் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். இனி வரும் காலத்தில் அனைவரும் பிறவி இல்லை என்ற நிலை பெற வேண்டும்.
ஏகாந்த நிலைகள் கொண்டு… எதுவுமே நம்மைத் தாக்கிடாது… எதையுமே வென்றிடும் உணர்வுகளை நாம் இந்த மனித உடலில் உருவாக்கினால்தான் உடலை விட்டு உயிர் சென்றபின்… இந்த உணர்வின் துணை கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இல்லையென்றால் மீண்டும் மீண்டும் உடலின் தன்மை பெற்று அந்த உடலைக் காத்திடும் எண்ணங்கள் தான் வரும். உயிராத்மாவை ஒளியாக்கும் எண்ணம் வராது.
ஆனால் நம் உணர்வுகளை ஒளியாக்கி விட்டால் இருள் என்ற நிலை வராதபடி ஒளிச் சரீரம் நாம் பெறலாம். ஒளியாக மாற்றும் அந்தத் திறனை உருவாக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி இருவருமே துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் அன்னை தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.இப்படி நாம் அடிக்கடி எடுத்துப் பழகுதல் வேண்டும்.
ஆகவே அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம். ஏகாந்த நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழ்வோம்.


உங்களுக்குள் பதிவான ஞானிகளின் உணர்வின் சத்தைச் சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும்
துன்பம் வரும் பொழுது உங்கள் நினைவினை அகஸ்தியன் பால் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
நாரதன் கலகப் பிரியன்… நாரதன் கையிலே இனிமையான இசை உண்டு.
1.பிடிவாதமான உணர்வுகளை வளர்த்திடாது அருள் ஒளி கொண்டு இருளை நீக்கி இனிமை என்ற உணர்வினை இணைவாக ஏற்றி
2.மகிழச் செய்யும் உணர்வினை நமக்குள் வளர்த்திடல் வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குகின்றேன்.
இந்த வாழ்க்கையில் குறுகிய காலமே வாழும் நாம் இந்த உடலின் இச்சையை வளர்த்திட வேண்டாம். அருள் உணர்வின் தன்மையாக அவன் (அகஸ்தியன்) அருள் பெற வேண்டும் என்று இந்த இச்சையைக் கூட்டுங்கள்.
1.ஒளியின் உணர்வாக என்றும் நிலை கொண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்
2.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வை உணவாக எடுப்போம்
3.வருவது அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றுவோம் என்ற இந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதை நம் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைக் கண் காட்டுகின்றது.
நமக்குள் அருள் ஒளி என்று பதிவான பின் மீண்டும் அது கண்ணுக்கு எட்டப்படும் பொழுது
1.எதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்தோமோ அந்த இடத்திற்கே கண் நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வினை நுகரச் செய்கின்றது… பகைமை உணர்வை மாற்றுகின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வை உருவாக்குகின்றது.
ஆகவே அருள் ஒளியைப் பெறுவோம் என்று நாம் தியானிப்போம். இந்த வாழ்க்கையில் அறியாது சேர்ந்த வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் இதைப் போன்ற உணர்வுகளை நீக்குவோம்.
நோயாளியை அன்புடன் பண்புடன் பார்த்தாலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவரைக் காக்க உதவுகின்றது. ஆனால் நம்மைக் காக்கும் நிலை அற்று விடுகின்றது. நம்மைக் காக்கும் நிலை இல்லை என்றால் நல்லது அழிந்து விடுகின்றது.
நல்லவைகள் அழிந்திடாது அருள் ஞானத்தைப் பெருக்கித் தீமையை நீக்கும் சக்திகளை நாம் பெற வேண்டும் என்று ஏங்கி… நம்முடைய சக நண்பர்களுக்கும் அதை உணர்த்தி
1.அவர்கள் அந்த ஆற்றலைப் பெற வேண்டும்… அவர்களும் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும்
2.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
3.அவர் உணர்வு கொண்டு நாமும் வளர முடியும்… நம் உணர்வு கொண்டு அவரை வளர்க்கவும் முடியும்.
நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் இந்தப் பரலோகத்தில் பரவுகின்றது. அந்த உணர்வின் தன்மை “நம் எண்ணமே நம்மைக் காக்கின்றது…”
அருள் ஒளியை நாம் பெற்றால் அனைவரும் அது பெற வேண்டும் என்று எண்ணினால் அனைவருடைய உணர்வுகளும் நமக்குள் ஒன்றென இணைகின்றது.
பகைமையற்ற உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. நாரதன் கலகப்பிரியன் தீமைகளை அகற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குகின்றது…
1.அதைப் பெருக்குகின்றது… அதுவே நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்வின் இயக்கமாக உயிர் ஒளியாகின்றது.
இதை நாம் அனைவரும் செயல்படுத்துவோம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.
ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.
மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.
ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.
ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.
பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.
இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதை முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.
சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.
இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.
உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.
மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.
1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.
இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.
வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும்… அழியாத நிலைகள் பெறலாம்.


மெய் உலகை உருவாக்குவோம்
எம்முடைய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள்… நேரமாகிவிட்டது வீட்டுக்குச் செல்ல வேண்டும்… தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று சிலருடைய எண்ணங்கள் இருந்தால்… உங்கள் எண்ணங்களைப் பல நிலை கொண்டு அலைய விட்டால்… இந்த அருள் உணர்வுகளைப் பெறுவது கடினமாகி விடுகின்றது.
ஆலயங்களுக்குச் செல்கிறோம் என்றால் மலர் பூஜை விளக்கு பூஜை என்று எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்துகின்றார்கள். அதைச் செய்ய நாள் கணக்கில் மணிக்கணக்கில் கூட உட்கார்ந்து இருக்கின்றோம்.
யாகங்கள் வேள்விகளைச் செய்தால் அங்கேயும் அமர்ந்து… தான் எந்த ஆசையில் போனோமோ “அவன் அதைக் கொடுப்பான்” என்று ஆர்வத்தில் உட்கார்ந்து இருக்கின்றோம்.
ஆனால் அந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்றால் தெய்வத்தையே பழித்திடும் நிலைகள் வருகின்றது. ஆக ஆசைக்கொப்பத் தான் நாம் அங்கெல்லாம் செல்கின்றோம்.
அவ்வாறு இல்லாதபடி
1.நமது ஆசை அனைவரும் நலம் பெற வேண்டும் என்றும்
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும் என்றும்
3.என் பார்வை சொல் செயல் எல்லாம் அனைவரும் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்று
4.உயிரான நெருப்பில் இந்த உணர்வின் அலைகளைப் பரப்பினால்
5.உண்மையான யாகம்… உயிரின் நிலைகள் கொண்டு அவ்வாறு உருவாக்கும் சக்திகள் தான்.
அதாவது எண்ணத்தின் உணர்வு கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் உணர்ச்சிகளைப் பரப்புவதும்… அந்த உணர்வின் அணுக்களாக மாற்றுவதும்… சொல்லின் உணர்வுகள் அனைவருக்கும் பரவச் செய்து…
1.கண்ணின் நினைவாற்றல் கொண்டு யாரை எண்ணுகின்றோமோ அந்தச் சொல்லின் ஆற்றல் அங்கே ஊடுருவி
2.அவர்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் ஒன்றி வாழ வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணும் போது
3.நம் எண்ணத்தின் உணர்வுகள் கண்ணின் நினைவு கொண்டு அவர்கள் மேல் பாய்ச்சப்படுகின்றது.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை நாம் எண்ணும் பொழுது “அவருடைய தீமை நமக்குள் வராதபடி தடுக்க இது உதவும்…”
ஆகவே ஒவ்வொருவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம். உலக மக்கள் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழத் தியானிப்போம். நமது பார்வையும் சொல்லும் செயலும் புனிதம் பெறுவோம். அனைவரையும் புனிதமாக்கும் உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.
உலக மக்கள் நலம் பெறத் தியானிப்போம். விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழும் அனைவரும் அந்த அஞ்ஞான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மெய்ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்று தியானிப்போம்.
உலக மக்கள் அனைவரும் இந்த மனித வாழ்க்கையிலேயே ஒளி என்ற உணர்வை உருவாக்கும் பிறவி இல்லாத நிலை என்ற நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்று தியானிப்போம்.
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்றும்
2.அவரவர்கள் குடும்பத்தில் பற்றுடன் வாழ வேண்டும் என்றும்
3.எதிர்காலக் குழந்தைகள் மெய்ஞானத்தை வளர்க்க வேண்டும்… மெய் உலகை உருவாக்க வேண்டும் என்றும்
4.எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.
என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது
இதுதான் ஆத்மசுத்தி என்பது.
மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.
உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.
இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.
எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.
எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.
டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது
அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.
ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.
அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.
பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.
இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.
யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.
அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.
1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்
ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.
இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.
ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.
ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.
இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.
ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.
1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.


சோம்பேறியாக இருக்கும் நம்மை உஷார்படுத்தும் சந்தர்ப்பம்
நம்மை ஒருவன் தவறாகப் பேசுகின்றான் பழித்துப் பேசுகின்றான் சங்கடமான நிலைகளில் தொல்லை கொடுக்கின்றான் என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1அவன் எண்ணிய உணர்வுகளை நமக்குள் வளர்த்து அவன் நினைவிலேயே நாம் வளர்ந்து விடுகின்றோம்.
2.நல்ல உணர்வுகளை இழக்க நேர்கின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பகைமை உணர்வுகள் நமக்குள் விடாதபடி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
பகைமை கொண்டு ஒருவன் பேசினால் அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களும் அந்தப் பகைமை உணர்வுகள் ஒன்றுக்கொன்று வீரியத்தன்மை அடைந்து மேல் வலி கை கால் குடைச்சல் இது போன்று வேதனையின் நிலைகளைத் தோற்றுவித்து விடுகின்றது.
ஆகவே நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு உள்புகாது காத்திடல் வேண்டும். ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி தீமை உள்புகாதபடி தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் நுகர்ந்து அதை வலுவான நிலைகள் கொண்டு உருவாக்குதல் வேண்டும்.
1.அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.
2.ஒருவன் தீமை என்ற நிலையில் அதிகமான அளவு தொல்லை கொடுக்கின்றான் என்றால்
3.அதை மறக்க அருள் ஒளி பெற வேண்டும் என்று இதை உருவாக்கிடல் வேண்டும்.
4.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகின்றது.
5.நாம் சும்மா இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்திருக்க மாட்டோம்.
6.ஆனால் ஒருவன் தீமை செய்யும் உணர்வுடன் வரும் பொழுது அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குகின்றோம்.
7.அந்த வலுவின் தன்மை நமக்குள் உருவாகின்றது
8.சோம்பேறியாக இருந்தவனை உஷார்படுத்தியது போன்று வந்து விடுகின்.றது.
வயல்களிலே தண்ணீரை வாய்க்காலிலிருந்து பாய்ச்சுகின்றோம். கவனக்குறைவாக இருந்தால் தண்ணீர் போகும் பாதையில் உடைப்பாகிவிட்டால் நீர் வேறு பக்கம் சென்று விடும். சீரான நிலையில் கொண்டு நம் வயலுக்குப் பாய்ச்ச முடியாது.
அதைப் போன்று நாம் இந்த வாழ்க்கையில் நமக்குள் நல்ல உணர்வின் தன்மையைத் தடைப்படுத்தும் நிலை எதுவாக இருந்தாலும் அவ்வாறு இடைமறித்தால் அதையெல்லாம் நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.
நம் கண்ணுக்குப் பெயர் இடையன் என்றும்… நல்ல எண்ணம் கொண்டு நாம் செல்கின்றோம் இடைமறித்துத் தவறான உறவுகள் நமக்குள் வந்தால் அதனின்று காத்து நல்வழி செயல்படுத்தும் உணர்ச்சிகளை ஊட்டிடல் வேண்டும்.
நம் கண்களுக்குப் பெயர் கண்ணன் என்றும் இடையன் என்றும் அவன் மாடுகளை மேய்ப்பவன்… இந்தக் கண் நம்மை மேய்க்கின்றது. தவறு என்ற உணர்வு வரப்படும் பொழுது இந்த உணர்வுகள் நம்மை இடைமறித்து நல்வழியான நல்ல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றது.
நண்பனுக்குள் ஒருவருக்கொருவர் பழகிக் கொள்கின்றோம் திடீரென்று எண்ணங்கள் உதயமாகும். நண்பரைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினால் “அவர் வேறு ஒரு தெருப் பக்கம் சென்று கொண்டு இருந்தாலும்” நம் கண்ணின் நினைவாற்றல்கள் அங்கே செல்லும். அவரை இழுத்துக் கொண்டு இங்கே வரும்.
அதைப் போன்று
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றி ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
2.அதை பதிவாக்கிக் கொண்ட பின் நம்மை எங்கே அழைத்துச் செல்லும்…?
3.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
ஒரு நோயாளியை உற்றுப் பார்க்கிறோம் உதவி செய்கிறோம் என்றால் அதை வலுவாக்கினால் இதே கண் அந்த நோயாளி மடிந்த பின் நம் உடலுக்குள் அந்த ஆன்மாவை அழைத்து வந்துவிடும்.
ஆகவே இந்தக் கண்ணின் இயக்க நிலைகளை கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். எதன் உணர்வை வலுப்பெறுகின்றாயோ அதன் தன்மையை நீ அடைகின்றாய் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
ஆகவே நாம் இந்த உடலுக்கு பின் எதுவாக வேண்டும்…? அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
குரு பலம் நாம் பெற வேண்டும்
எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!”
1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.
அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.
இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.
ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.
1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.
ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.
ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா…!
அதைப் போல் நீங்கள் பேசும்… எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.
மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.
அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்…! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!)
இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி… அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்… நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.
1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.
அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை… நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.
அதை எடுத்துச் சுத்தப்படுத்தி… வேக வைத்து… அதனைச் சமப்படுத்தி… சமைத்து… ருசியாக்கி…
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.
உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்… உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்…!”


நீர் சக்தியை உருவாக்கும் அகஸ்தியன்
இந்தப் பிரபஞ்சத்தில் நமது பூமிக்குள் எவ்வாறெல்லாம் சூரியன் கவர்ந்து இந்த உணர்வுகள் வளர்ந்துள்ளது…? தாவர இனங்கள் எதனெதன் நிலையை எடுத்துக் கொண்டதோ அது வித்தான பின் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தைக் கவர்கின்றது.
பல உணர்வுகளை இரண்டறச் சேர்த்து ஒரு வித்தாகச் செடியாக மாறினால் அதிலிருந்து வரும் அதனின் வித்து அந்தத் தாய்ச் செடியின் சத்தை எப்படிக் கவர்கின்றது…? என்பதை அணுவின் ரகசியத்தை அகஸ்தியன் உணர்கின்றான்
1.ஒன்றுடன் ஒன்று மோதி உணர்வின் தன்மை மேகமாக மாறி அதன் வழி கொண்டு மேகத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு
2.இவனுக்குள் பல தாவர இனங்களை நுகர்ந்து வியர்வை போன்று வரும் உணர்வின் தன்மை உடலில் உருவாக்கிய பின்
அவன் எந்தப் பாறை மீது அமர்ந்தாலும் தனக்குள் ஈர்க்கும்… நீராக உருவாகும் ஊற்றாக உருவாகின்றது.
மின்னல்களோ மற்ற நிலைகளோ மோதி ஆவியின் தன்மை எடையற்ற நிலைகள் கொண்டு மேகங்களாகக் கூடினாலும்
1.இதனை ஈர்க்கும் சக்தி எடையற்ற நிலைகள் அந்த அகஸ்தியன் அமர்ந்த தரைப் பாகங்களில் பட்டால்
2.அங்கே ஈர்க்கப்பட்டு நீர் ஊற்று உருவாகும் நிலை வருகின்றது.
மலை உச்சியில் இந்த ஊற்றுகள் உருவாகின்றது. ஆனால் மலையின் அடிவாரத்தில் நீர் இருப்பதில்லை. கீழே தோண்டினாலும் நீர் வருவதில்லை. ஆனால் வெறும் பாறையாக இருக்கின்றது.
1.அதன் உணர்வின் தன்மை வியர்த்து அதன் உணர்வுடன் கரைக்கப்பட்டு
2.அதன் வழி பாறைகளின் இடைவெளிகளில் நீரூற்றுகள் தோன்றுகின்றது.
அகஸ்தியன் இருந்த இடங்களில் எல்லாம் நீர் சத்து கலந்தே வருகின்றது. ஆக பல பல உணர்வின் தன்மை அவன் உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையும் அவன் தாய் கருவிலேயே உருப்பெற்ற நிலைகள் தான் அவை.
ஆகவே முதல் மனிதனான அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை மாற்றியமைக்கும் சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கின்றது. இப்படிக் கிடைத்த மனிதன் தான் தன் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது காடுகளுக்குள் எங்கே சென்றாலும் அவனுக்கு எதிர்ப்பே இல்லாத நிலைகள் வருகின்றது.
காட்டு அரசன் என்ற நிலைகளில் அவனுக்குப் பெயர் சூட்டுகின்றனர்.
1.மிருகங்கள் அனைத்தும் அஞ்சுகின்றது. விஷம் கொண்ட மனிதர்கள் இவனைக் கண்டு அஞ்சுகின்றனர். இவன் வழியே இணங்கி வருகின்றனர்.
2.இப்படி ஒடுக்கும் உணர்வுகள் அவனுக்குள் வளர்ந்து அவன் அறியாமலே செயல்கள் செயல்படுகின்றான்.
ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அதே சமயத்தில் சாந்த குணம் கொண்ட ஒருவன் கடையிலே சென்று சில்லறை கேட்கின்றான் என்றால் போயா…! உனக்கு இல்லை என்பான் கடைக்காரன்.
ஆனால் அந்தப் போக்கிரி கேட்டால் அவன் அறியாமலேயே அவனை இயக்கச் செய்து சில்லறையைக் கொடுத்து விடுகின்றான்.
இதைப் போல உணர்வின் இயக்கங்கள் உற்று நோக்கும் பொழுது அகஸ்தியனுக்கு எப்படிச் சாதகமாக இயங்குகின்றது…? என்றும் இது எல்லாம் சந்தர்ப்ப இயக்கங்கள் தான்.
இயற்கையில் கோள்கள் எதை நுகர்ந்ததோ அதைத் தனக்குள் நுகர்ந்திடும் வல்லமை பெற்றது. சனிக்கோளோ மற்ற அணுக்கள் மோதும் பொழுது ஆவியாக எடையற்ற நிலையாகப் பரவுவதும் தன் சுழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் நீராக மாற்றும் சக்தி பெற்றது.
இதைப்போல மனித உடலுக்குள்ளும்
1.தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருந்த நிலையை நீராக மாற்றுவதும் விஷக்கழிவினை நீராக மாற்றி விஷத்தை நீக்கி விட்டு
2.நமக்குள் உமிழ் நீர் என்று ஜீரணிக்கும் உமிழ் நீராக மாற்றுகின்றது.
நமக்குள் ஊறும் உமிழ் நீர்கள் உணவாக உட்கொள்ளும் அந்தப் பொருளை அமிலமாக மாற்றி அதை இரத்தமாக மாற்றுகின்றது. குளுக்கோஸ் ஒரு சுவையின் தன்மை மாற்றுவதும் அது சுழன்று வரப்படும் பொழுது வடிகட்டும்போது அமிலமாக மாற்றுவதும் அது ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது வாயு உற்பத்தியாகின்றது.
அந்த வாயுவின் தன்மை கொண்டு கை கால்களைச் சுருக்குவதும் மடக்குவதும் போன்ற நிலை வருகின்றது. எண்ணத்தின் உணர்வு கொண்டு செயல்படுத்தும் பொழுது நரம்பு மண்டலம் சீராக இயங்கி எதை எண்ணுகின்றோமோ அதை இயக்கிச் செயல்படுத்துகின்றது.
நண்டை எடுத்துக் கொண்டால் தன் உணர்வின் வலு கொண்டு எதிலே எண்ணத்தைப் பாய்ச்சுகின்றதோ அது இயக்குகின்றது. ஆனால் அதற்கு நரம்பு மண்டலங்கள் கிடையாது.
இருந்தாலும் கூட்டாக அமைந்திருக்கும் அதனுடைய உணர்வுக்குள் அமிலங்கள் இரண்டறச் சேர்க்கப்படும் பொழுது அந்த உணர்வின் அழுத்தத்தால் வாயு உருவாகின்றது.
இடுக்கி போன்ற தன் கை கால்களை இயக்குவதும் தன் உணர்வின் வலுக் கொண்டு அதைச் செயல்படுத்துவதும் நரம்பு மண்டலம் இல்லாமலே நண்டினங்கள் செயல்படுத்துகின்றது. தேள் இனங்களும் அவ்வாறே இயக்குகின்றது.
இதையெல்லாம் குருநாதர் இயற்கையின் உண்மையின் உணர்வால் அதை எவ்வாறு இயக்குகிறது என்பதையும் இந்த உண்மையை உனக்குள் அறிந்து கொள். இதை எல்லாம் கடந்து தான் நீ மனிதனாக வந்திருக்கிறாய்.
1.அவை அனைத்தையும் அறியும் உணர்வின் தன்மை உனக்குள் உண்டு.
2.கார்த்திகேயா என்று உனது எண்ணத்தை எதன் பால் செலுத்துகின்றாயோ அதனை அறியும் பருவம் பெறுகின்றாய்.
3.தீமையை அகற்றும் உணர்வினை நீ நுகர்ந்தால் தீமையகற்றிடும் சக்தியைப் பெறுகின்றாய் என்று
4.குருநாதர் அடிக்கடி இவ்வாறு எனக்கு உணர்த்துவார்.
அவர் கண்ட உண்மையின் உணர்வுகளைப் பதிவாக்கி நினைவு கொண்டு உற்று நோக்கிச் சுவாசிக்கும்படி செய்து தீமைகளிலிலிருந்து விடுபடும் உணர்வை உருப்பெறச் செய்யும்படி சொல்வார்.
தீமைகளிலிருந்து விடுபடும் சக்திகள் உனக்குள் அது உருப்பெற்றுவிட்டால்
1.உன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளுக்குள் இத்தகைய ஆற்றல்கள் பதிவாகி அவர்களும் தீமையிலிருந்து விடுபட இது உதவும்.
2.உன் சார்புடையோர் அனைவருக்கும் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை அவர்கள் வளர்த்து விட்டால்
3.தீமையை அகற்றிடும் வல்லமை கொண்ட காற்று மண்டலம் இங்கே சுழலுகின்றது.
எந்த நண்பனின் நிலைகளில் தீமைகளை அகற்றிடும் நிலைகளைப் பதிவாக்குகின்றோமோ அந்த நண்பன் அவன் உடலில் விளைய வைத்த உணர்வுகள் உனது ஆன்மாவாக மாறுகின்றது. அதன் உணர்வை உணவாக உட்கொள்ளும் அணுக்கள் உன் உடலில் உருவாகின்றது.
1.ஒரு மனிதனை இவ்வாறு உருவாக்க வேண்டும் என்றால் அவனைக் காக்க வேண்டும் என்றால்
2.நீ கண்டறிந்த உணர்வினை உன் சார்புடைய மக்களுக்கு இதை எடுத்துரைத்து அவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்.
தீமையை நீக்கும் உணர்வுகள் அங்கே விளைந்தால் உனக்குள் தீமை அகற்றிடும் உணர்வுகளாக… அவர்களுக்குள் அது உற்பத்தியாகும் பொழுது தான் அந்த நிலை வருகின்றது.
சிறு துளிகளாக மழை பெய்கின்றது. ஆனால் அதை ஆங்காங்குள்ள பூமியினுடைய நிலைகள் இழுத்து விடுகின்றது… வெள்ளமாகச் செல்வதில்லை.
ஆனால் அதே சமயத்தில் சிறு துளிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்பெறும் போது வெள்ளமாக ஓடத் தொடங்குகிறது. இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் பெற்ற உணர்வினை அருள் ஒளியை உருவாக்குதல் வேண்டும். உணர்வின் வலிமையை உருவாக்குதல் வேண்டும்.
அவர் உடலிலிருந்து வெளிப்படும் அத்தகைய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டால்
1.நம் உணர்வு அவர் உடலிலும் அவர் உணர்வு நம் உடலிலும் ஈர்க்கப்படும் போது
2.இருவரது உணர்வுகளும் ஒன்றாக இணைகின்றது.
கோபமான உணர்வு ஒரு உடலிலே பதிவானால் அந்தக் கோபமான உணர்வுகளும் இரண்டறக் கலக்கத்தான் செய்கின்றது. நமக்குள் நல்ல குணங்களை மீறி அந்தக் காரத்தின் உணர்ச்சியை ஊட்டும் பொழுது அத்தகைய அணுக்கள் விளைந்தால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
இதை அருள் ஞானிகள் உணர்வு கொண்டு அடக்கினால் தனது நண்பனுக்கும் அந்த நிலை பெற வேண்டும் என்று சந்தர்ப்பத்தால் வேதனையோ துன்பங்களை ஏற்படும் பொழுது அருள் ஒளி பெற வேண்டும் என்று தனக்குள் எடுத்து அதை உருவாக்க வேண்டும்.
அதாவது ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவன் உடலுக்குள் ஊடுருவி தவறிலிருந்து மீட்கும் நிலையாகச் சிந்திக்கும் செயலாகப் பெற வேண்டும் என்று உணர்வை ஊட்டிடல் வேண்டும்.
பல முறை நாம் செய்தால் அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வராது தடுக்கின்றோம். நண்பன் என்று பேசப்படும் பொழுது ஏற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் வருகின்றது. அத்தகைய உணர்ச்சிகளை ஊட்டி அதை ஏற்கும்படி செய்து அது அங்கே பதிவானால் நினைவு கொண்டு தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெறுகின்றான்.
1.அந்த அருள் வழியில் என்றும் இணைந்து வாழலாம்.
2.இப்படிப்பட்ட கூட்டமைப்பை அதிகமாகச் சேர்த்தால் வலு கொண்ட உணர்வாகச் செல்கின்றது.
இராமாயணத்தில் வாலி என்ற நிலை வரும் பொழுது விஷம் கலந்த உணர்வுகள் எதனையுமே தாக்கிடும் நிலையாக அந்த ஆற்றல் பெற்றது. அது வாயுபுத்திரன் தான். உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விஷத்தின் தன்மை பாய்ச்சுகின்றது.
வாலி எவரைக் கண்டாலும் அவனுடைய வலுவையும் சேர்த்து சம வலிமை பெறுகின்றான். ஒரு நோயாளியின் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நமது கண்கள் உற்றுப் பார்க்கின்றது.
அவனின்று வெளிப்படும் உணர்வினை நல்ல குணங்களை அடக்கிடும் வாலியாக அது வருகின்றது. அதை நுகர்ந்தால் நல்ல குணங்கள் செயலிழந்து விடுகின்றது. நம்முடைய வலிமையும் இழக்கச் செய்கின்றது.
1.அதைப்போல சுக்ரீவன் என்று வரப்படும் பொழுது அது அவனுடைய சகோதர இனம் தான்.
2.சூரியனின் நிலைகள் கொண்டு அதீதமான வெப்பத்தையும் மற்ற உணர்வுகளையும் விஷத்தின் தன்மை கலந்து
3.வாயு என்ற நிலையில் அதிகரிக்கப்படும் பொழுது சூறாவளி போன்று தீமைகளை அடித்துச் செல்லுகின்றது.
ஆஞ்சநேயர் என்பது வாயுபுத்திரன் தான்.
நாம் எண்ணும் எந்த உணர்வின் தன்மையோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவி உணர்ச்சிகளைத் தூண்டி நாம் சொல்லைக் கேட்போர் உடலுக்குள் இந்த உணர்வுகள் தாவிச் சென்று அந்த உடலான கோட்டைக்குள் ஊடுருவி உணர்வின் உணர்ச்சிகளை உந்தி மெய் உணர்வாக அறியச் செய்கின்றது.
இதைப் போல தான் உணர்வின் தன்மை ஒன்றிலே மோதும் போது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றது…? அந்த உணர்ச்சியின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? வெளிப்படுத்தும் உணவுகள் சூரியனுடைய காந்த சக்தி கவரப்படும்போது சீதா லட்சுமி ஆக மாறுகின்றது.
வேதனைப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் வாலி என்று வருகின்றது. கோபப்படும் உணவை நுகர்ந்து கொண்டால் காளி என்றும் இதைப் போன்று பல பல உணர்வுகள் தீமைகளை அடக்கும் தன்மை வருகின்றது.
1.ஓர் விஷத்தின் தன்மை கொண்ட நிலையில் மற்ற விஷத்தினை இதற்குள் கலக்கப்படும் பொழுது அடக்கும் தன்மையாக வருகின்றது.
2.தாவர இனங்களிலே பல விதமான விஷங்கள் உண்டு… அதிலே ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது
3.இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளாது… அந்த விஷம் அதை ஒடுக்குகின்றது.
இதைப் போன்று நமக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது விஷ அணுக்களை உருவாக்கும் தன்மை கொண்டால் அதை எப்படி மாற்ற வேண்டும்…?
மனிதனாக இருக்கும் நாம் நல்ல மருந்துடன் விஷத்தினைக் கலக்கின்றோம். அதை உட்கொள்ளும் பொழுது வேகமாக உடலுக்குள் பரவுகின்றது. உடல் முழுவதும் விஷ வாயுவாக உருவாக்குகின்றது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது அந்த இரத்தத்திலிருந்து தான் விஷ அணுக்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றது.
1.நல்ல மருந்துடன் விஷத்தைக் கலந்து உள்ளே அனுப்பப்படும் பொழுது நல்ல மருந்திற்கு வீரிய சக்தியாக அமைந்து
2.நம் உடலில் இருக்கும் விஷமான அணுக்களை மடியச் செய்கின்றது.
விஷமான உணர்வைக் கொடுத்து நல்ல மருந்தினைக் கொடுத்து அடக்கினாலும் நாம் அடுத்து அதை நிறுத்தாவிட்டால்
1.நல்ல மருந்து மற்ற விஷத்தை ஒடுக்கிய இந்த உணர்வுகள்
2.நம் உடலில் விஷத்தை உருவாக்கும் வேறொரு அணுக்களாக உருவாக்கி
3.மற்ற அணுக்களைக் கொன்று குவிக்கும் நிலை வருகின்றது.
அதனால் தான் டாக்டர்கள் குறித்த அளவு கொண்டு இந்த மருந்தினை உட்கொள்ளும்படி சொல்வார்கள். அந்த அளவுகோல் மீறி அந்த மாத்திரையை உட்கொண்டால் அதுவே நமக்குள் கடும் நோயாக மாறி விடுகின்றது.
சித்த வைத்தியர்களை எடுத்துக் கொண்டாலும் விஷத்தின் தன்மை கொண்டு மாற்றி அமைக்கும் தன்மை கொண்டு வருவார்கள். ஆனால் அவர் சொன்ன அளவுகோலுக்கு மீறி அதை உட்கொண்டால் விஷத்தின் தன்மை உடலில் பரவி நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகள் வந்து விடுகின்றது.
நல்ல அணுக்களைக் கொல்லும் நிலைகளுக்கும் மற்ற உயிரைக் கொல்வது போன்று இதைப் போன்று இயற்கையின் உண்மை நிலைகளை அன்று அகஸ்தியனால் கண்டுணரப்பட்டது தான்.
மற்ற மனிதனின் உணர்வுகள் தன்மை கொண்டு எவ்வாறு வாழ்கின்றனர்…? எதன் எதன் உணர்வின் இயக்கங்கள் மாறுகின்றது…? நம் உயிர் எவ்வாறு செயலாக்குகின்றது…? என்ற நிலையை உண்மையினை நீ உணர்ந்து கொள் என்றார் குருநாதர்.
ஒருவன் ஏசுகிறான் என்று உற்றுப் பார்த்தால் அந்த உணர்வின் தன்மை சிவலோகம் என்ற நிலையை அந்த உயிரின் இயக்கமாக உணர்ச்சிகள் உடலுக்குள் தூண்டுகின்றது.
1.சுழற்சியின் உணர்வை ஊட்டுகின்றது உணர்வின் தன்மையாக இயக்குகின்றது.
2.இரத்தத்துடன் கலந்து கருவுறும் தன்மை வருகின்றது. இந்திரலோகமாக இந்திரீகமாக மாறுகின்றது.
கோழி முட்டை எப்படி உருவாகின்றதோ நம் இரத்த நாளங்களில் அது கருவுறும் அணுவாக உருப்பெறும் தன்மை பெறுகின்றது. கரு என்ற உணர்வுகள் உருவாக்கி விட்டால் அதனின் காலக்கெடு வரப்படும் பொழுது அந்தக் கருமுட்டை வெடிக்கின்றது. எக்குணத்தின் தன்மை பெற்றதோ அந்த அணுவின் தன்மையாக வருகின்றது.
இரத்த நாளங்கள் எங்கே சுழல்கின்றதோ எந்த உறுப்பில் அது வெடிக்கின்றதோ அந்த உறுப்புகள் நஞ்சாகி விஷத்தின் தன்மை பாய்ச்சி நல்ல அணுக்களைக் கொல்லும்… அல்லது செயலிழக்கச் செய்கின்றது.
நல்ல உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் மடிந்தால் அல்லது அஞ்சி நடுங்கினால் உடலுக்குள் ஒரு விதமான வேதனை வருகின்றது. கல்லீரலோ மண்ணீரலோ மற்ற சுரப்பிகள் நரம்பு மண்டலங்களிலோ மாற்றப்பட்டால் கடும் வேதனைகள் வருகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
இதைப் போன்ற உணர்வுகள் எவ்வாறு மாற்றம் அடைகின்றது என்பதனை குரு உணர்த்துகின்றார். அகஸ்தியரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள் நஞ்சினை வென்றிடும் உணர்வு கொண்டு நஞ்சின் இயக்கத்தை உணர்ந்தவன் அவன்
1.நஞ்சினை அடக்கிடும் உணர்வு பெற்றவன்.
2.விண்ணை நோக்கி உற்றுப் பார்த்து மின் கதிர்களை நுகர்கின்றான் அதை அடக்குகின்றான்.
3.மின்னட்டாம் பூச்சி போன்று தன் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளிக்கதிராக மாற்றும் அணுக்களாக மாற்றுகின்றான்.
4.துருவப் பகுதியில் வரும் ஆற்றலை நுகர்ந்து துருவனாகின்றான்.
5.கடும் விஷங்களையும் அடக்கிடும் ஆற்றல் சந்தர்ப்பத்தால் இந்த உணர்வுகள் விளைகின்றது.
அந்த ஆற்றல்களை நாம் அனைவரும் பெறுதல் வேண்டும். அதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்
2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெற வேண்டும் என்று
3.அடுக்கடுக்காக நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்த இயக்க நிலை கொண்டு
1.“அகஸ்தியர் வாழ்ந்த காலத்திற்கு உங்கள் நினைவினைச் செலுத்துங்கள்…”
2.அகஸ்தியனை நினைவுக்குக் கொண்டு வந்து அவரின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று
2.மீண்டும் மீண்டும் இந்த நினைவினை ஒரு சக்கரம் சுழல்வது போன்ற திரும்பத் திரும்ப இணைத்து
3.இரத்த நாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்ற நினைவினை
4.அதன் அடிப்படையிலேயே சுழல விடுங்கள்… உங்கள் இரத்த நாளங்களில் அந்த ஆற்றலைப் பெருக்குங்கள்.
இப்படி ஒரு ஐந்து முறையாவது திரும்பத் திரும்ப எண்ணி எடுத்துச் செயல்படுத்துங்கள். உங்கள் உடலில் எந்த உறுப்புகளில் எல்லாம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டு அங்கே உள்ளே செலுத்துங்கள்.
இதே மாதிரி சுவாசத்தை எடுத்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று உடல் முழுவதும் பரப்புங்கள்.
1.எத்தகைய நோயாக இருப்பினும்… நோய்க்குக் காரணமாக எத்தகைய அணுக்கள் இருப்பினும்
2.அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று அந்தச் சக்திகளை உடலுக்குள் அடிக்கடி செலுத்துங்கள்.
இந்த அருள் சக்தி உயரும் பொழுது நோயை உருவாக்கும் அணுக்களின் செயலாக்கங்கள் சிறுகச் சிறுக தணியும். இதற்கு முன் உடலில் அறியாது சேர்ந்த நோய்களை உருவாக்கும் அந்த அணுக்களின் வீரிய சக்திகளைக் குறையச் செய்யும். நோயை உருவாக்கும் அணுக்கள் பலவீனமடையும்.
ஒவ்வொரு நாளும் இரவு முழுவதும் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடனே உறங்கச் செல்லுங்கள்.
1.இந்த நினைவாற்றல் உங்களுக்கு அரும் பெரும் சக்தியாக வளரும்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உங்கள் உணர்வலைகளை அழைத்துச் செல்லும்
3.இயற்கையின் உண்மையின் உணர்வினை உங்களுக்குள் உணரச் செய்யும்.
4.அகண்ட அண்டத்தின் ஆற்றல்… உடலான நம் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகிறது…? என்ற உணர்வினை அறிய முடியும்.
அந்தச் சக்தி இந்த உபதேசத்தைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று உங்களுக்காக நானும் (ஞானகுரு) இரவில் பிரார்த்திக்கப் போகிறேன்… தியானிக்கப் போகின்றேன்.
நீங்களும் அதே நிலையில் அந்த உணர்வின் சக்தியை எடுத்து தியானனத்தின் மூலம் உங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நினைவாற்றலைப் பெருக்கி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.


அகஸ்தியனுக்குள் விளைந்த நுண்ணறிவுகள்
1.அகஸ்தியன் கற்றறிந்து வந்தவனல்ல.
2.தாய் கருவிலே கவர்ந்த உணர்வுகள் அந்த அணுக்களே இயக்கி அவன் உடலுக்குள்ளே விளைந்தது.
3.விஞ்ஞானி எப்படி உணர்வுகளை உருமாற்றுகின்றானோ அதைப்போல
4.இயற்கையின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி அந்த உணர்வினைக் கண்டுபிடிக்கும் மெய்ஞானி ஆகின்றான்.
விஞ்ஞானி ஒன்றைப் பதிவு செய்து அதைப் பெற வேண்டும் என்று தன் உணர்வைக் கூட்டுகின்றான். அதன் வழி நுகர்ந்தறிந்த உணர்வு கொண்டு ஒவ்வொரு பொருளையும் அவன் உருவாக்குகின்றான்.
உருவாக்கும் உணர்ச்சிகள் அவனுக்குள் வரப்படும் பொழுது அந்த அணுக்கள் அவனுக்குள் உருவாகின்றது. அப்படிப்பட்ட அணுக்கள் உருவான பின் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உணர்வின் அறிவாக அது இயக்குகின்றது.
மேலும் மேலும் இவன் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாகவும் அதைச் செயலாக்கும் உணஸ்சிகளின் செயல்களும் மற்ற உணர்வுகளை நுகந்தறிந்து செயலாக்கத்தையும் கண்டுணர்ந்து விஞ்ஞானி ஆகின்றான்.
அதைக் கண்டுணர்ந்தவன் எந்திரத்தை உருவாக்கி அதை எப்படிப் பிரிப்பது…? என்று தத்துவத்தைக் கண்டு இவன் கண்டு கொண்ட ஒரு பொருளுக்குள் மறைந்த உணர்வை எவ்வாறு பிரிக்க வேண்டும்…? என்றும் அதற்குள் இன்ன பொருள் இருக்கிறது என்றும் விஞ்ஞானி காணுகின்றான்.
ஆனால் அதே சமயத்தில் இன்ஜினியர் அதற்குண்டான உறுப்புகளைச் செய்து விஞ்ஞானி கண்ட உணர்வுகளை எந்திரத்தின் துணைகொண்டு இவனின் உணர்வைக் கொண்டு
1.எதனை எதனுடன் கலந்தால் வெப்ப நிலைகள் எப்படி இங்கே கூடுகின்றது…?
2.வெப்ப நிலைகள் கொண்ட பின் ஆவியாக ஆன பின் இதை உறையச் செய்யும் மார்க்கம் என்ன…? என்ற
3.டெக்னிகலை இன்ஜினியர்கள் அதைக் கண்டுகொள்கின்றார்கள்.
அவன் கொடுத்த கருவினை இவன் உருவாக்கி இதைப் பிரித்துச் சேமிக்கும் உணர்வாக விஞ்ஞானி கொடுக்கும் நிலைகள் கொண்டு “இதனுடைய ஆக்கச் சக்தி இவ்வளவுதான்” என்ற அளவீடு கொண்டு வரப்படும் பொழுது இன்ஜினியர் அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்கி உறுப்புகளுக்கு வலுக் கொடுத்து அதிலே வரும் தடைகளைச் சீர்படுத்தி உருப் பெறும் உணர்வுகளைப் பிரித்து அதை எவ்வாறு செயல்படுத்துவது…? என்ற நிலைகளைக் கொண்டு வருகின்றார்கள்.
உதாரணமாக மணல்களைக் கடலிலிருந்து எடுத்து வந்து அதிலே பிரிக்கப்படும் போது வெடிக்கும் நிலை வந்து விட்டால் என்ன செய்வது…? ஹைட்ரஜன் என்ற நிலையில் ஊடுருவப்பட்டு கடலின் தன்மை கொண்டு உப்புச் சத்தின் நிலைகள் அதிலே மின்னல் தாக்கப்படும் பொழுது “யுரேனியமாக” அது மாறுகின்றது.
அதே கடலின் சத்தின் தன்மையை எடுத்து இது பிரிக்கப்படும் பொழுது ஆவியின் தன்மை அடைந்த பின் இதற்குள் அடைத்து மீண்டும் கிடைக்கும் உணர்வு கொண்டு இதைக் கரைத்து அணுத் தன்மை கொண்டதாகப் பல நிலைகள் பிரிக்கின்றார்கள்.
1.அணு விசைகளை அணுக் கதிரியக்கங்களை தனக்குள் ஒரு பவுடரைப் போன்று உருவாக்குகின்றார்கள்.
2.மணலில் இருக்கும் தன்மைகளை மணலைக் கருக்கி அதனுள் வரும் உணர்வினைப் பிரித்து அணுகுண்டுகளைத் தயார் செய்கின்றான்.
3.அந்தக் கடுகளவு இருக்கும் அணு விசைகளைக் கொண்டு ஒரு இயந்திரத்தில் இணைக்கப்படும் பொழுது
4.அதனுடைய வேகத்தடிப்பு கொண்டு இயந்திரத்தையே துரிதமாக இயக்கச் செய்கின்றது.
இது எல்லாம் விஞ்ஞானி கண்ட நிலைகள்.
இதைப் போன்று தான்
1.”விஷத்தின் துடிப்பு கொண்ட நிலைகளைத் தாய் கருவிலே பெற்ற அகஸ்தியர்”
தன் உணர்வின் எண்ணம் கொண்டு மூன்றாவது வயதிலே வானத்தை உற்றுப் பார்க்கின்றான்.
3.அந்த வானுலகம் எவ்வாறு இயங்குகின்றது…? என்பதையும் அது எப்படிப் பிரபஞ்சமாக மாறுகிறது…? என்பதையும்
4.அதிலிருந்து வரக்கூடிய சக்திகளை நமது பூமி துருவத்தின் வழி எவ்வாறு கவர்கிறது…? என்பதையும்
5.நஞ்சு கலந்ததாக வருவதைத் தனக்குள் இவன் ஒடுக்கி அந்த உணர்வின் இயக்கப் பொறிகளை அகஸ்தியன் கண்டுணர்கின்றான்.
அவ்வாறு கண்டு கொண்ட நிலையில் அந்தக் காட்டுக்கே அரசனாக மாறுகின்றான் தன் 5 வயதிலேயே…!
இறைச்சிகளை உணவாக உட்கொண்ட அவன் இன மக்கள் இறைச்சிகள் அல்லாத உணவை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்று கனிகளையும் மற்றதுகளையும் உட்கொள்ளும்படி செய்தான்.
பல பயிர்களை இட்டு பல பல வித்துக்களை ஒன்றாக்கி அதையெல்லாம் விளைய வைத்த பின் உணவாக உட்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வருகின்றான்.
தனக்குள் உணர்ந்த நிலைகள் கொண்டு இறைச்சிகளை உட்கொள்ளாது அருள் ஒளி உணர்வினை உருவாக்கும் தன்மை பெறுகின்றான். முதல் மனிதன் அணுவின் தன்மையை அறிந்த அகஸ்தியன் பல பல தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
அதன் வரிசையில் மனித நிலைகளுக்குள் சிறுகச் சிறுக ஊடுருவி இதன் உணர்வின் எண்ணங்கள் வலுப்பெற்று விஞ்ஞானி ஆகின்றார்கள். கற்றுணர்ந்து உணர்வினை அறியும் அறிவுக்கு வரும் பொழுது இவன் உணர்வினை எதற்குள் செலுத்துகின்றானோ அதில் வளர்ச்சி பெற்று விஞ்ஞானி ஆகின்றான்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒன்றின் இயக்கங்களைத் தனித்துப் பிரித்து ஒழுங்குபடுத்தும் நிலைக்கு வருகின்றான் மனிதன். விவசாய நிலங்களில் கால சூழ்நிலைக்கொப்ப வெயில் காலங்களிலும் வளரும் பயிர்களை உருவாக்குகின்றான்.
வெயில் காலத்தில் நமக்கு வியர்க்கின்றது. சனிக்கோளின் உணர்வுகள் மற்ற மற்ற அணுக்களில் இருக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று வெப்பத்தின் தணல் ஆகும் பொழுது ஆவியாக மாறுகின்றது.
1.ஆவியின் தன்மை வரப்படும் பொழுது அதிலிருந்து நீர் சத்தைப் பிரிக்கின்றது.
2.அந்த நீர்சத்தை உணவாக உட்கொள்ளும் தாவர இனங்களை உருவாக்குகின்றான்.
மறைந்த நிலையில் நமக்குள் வியர்க்கின்றது. அதுவே அந்த அணுவின் உணவாக உட்கொண்டு பயிரினங்கள் வளரும் தன்மையும் அதை உருவாக்குகின்றான் விஞ்ஞானி.
அன்று மெய்ஞானி இத்தகைய நிலைகள் காலப்பருவத்திற்கொப்பத் தனக்கு உணவு தேவை என்றும் பல பல உணர்வுகளை இணைத்து மனிதனுக்கு உகந்த தாவர இனங்களாக உருவாக்கினான்.
இறைச்சிகளை உணவாக உட்கொள்ளாது தாவர இனத்தைப் பிரித்து அந்த உயர்ந்த குணங்களைத் தனக்குள் சேர்த்து உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியான அணுக்களாக உருவாக்குகின்றான் அகஸ்தியன்.
அவ்வகையில் வளர்ந்தவன் தான் பல தாவரங்களின் நிலைகளை உண்மையை அறியும் பொழுது அதையெல்லாம் நுகந்தறிந்து தனக்குள் அணுவாக உருவாக்குகின்றான்.
1.அறியும் உணர்வுகள் இவனுக்குள் இரு மடங்கு மோதப்படும் பொழுது ஞானத்தின் தன்மை பெறுகின்றான்.
2.ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கங்கள் எவ்வாறு என்றும் தனக்குள்ளேயே அறிகின்றான்.
3.அவன் எவ்வாறு அறிகின்றான்…? என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை எல்லாம் அனுபவபூர்வமாக அறிந்தேன்.
அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்தப் பாறையினுடைய தன்மை.
திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.
இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்தப் பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,
கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.
இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.
ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.
புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!
உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!


குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு
ஒரு கம்ப்யூட்டர் என்ற சாதனத்தில் எலக்ட்ரிக் என்ற அறிவின் தன்மை கொடுத்த பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு அது ஒரு ரூபத்தையே அமைத்துக் கொடுக்கின்றது.
இதைப் போன்று
1.நம் உயிர் உயிர் துடிக்கும் நிலையில் எலக்ட்ரிக்காக இயங்கினாலும்
2.நுகரும் உணர்வுகள் இணைந்த பின் பொறிகளைக் கிளப்பும் எலக்ட்ரானிக்காக (உணர்வுகள்) மாறுகின்றது.
அந்த உணர்வுகள் எப்படி இயக்குகின்றது…? விஞ்ஞான அறிவிற்கும் அன்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்ததற்கும் நுகர்ந்த உணர்வுகள் ரூபமாக எப்படிக் காட்சி தருகின்றது…? என்ற நிலையைக் காட்சியாகவே காட்டுகின்றார் குருநாதர்.
ஒரு உயிரினத்திலிருந்து (என்றோ வாழ்ந்து மடிந்த) வெளிப்பட்ட உணர்வினை நுகர்ந்தறியும் பொழுது… அதன் வாழ்க்கையும் அதன் உணர்வின் தன்மையையும் கம்ப்யூட்டரால் விஞ்ஞான அறிவு கொண்டு ஒலி அதிர்வுகளைக் கூட்டி… அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய இயக்கங்களும் உணவுக்காக அது தேடி அலைந்ததும் அதன் ரூபத்தையும் அதனின் குணத்தையும் விஞ்ஞானிகள் அறிகின்றார்கள்.
அதாவது…
1.எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் இருப்பினும் பாறைகளுக்குள் மக்கிய உணர்வுகளும் அது ஆவியாகக் கலந்த பின்
2.அந்த ஆவியின் தன்மை அந்தப் பாறைகள் அமைந்த இடத்தில் எப்படிச் சுழல்கின்றது…? என்பதையும்
3.அந்த உணர்வைக் கவர்ந்து அது வாழ்ந்த காலங்களில் அதனுடைய உருவத்தைப் படமாக வரையப்பட்டு
4.அதனுடைய செயலாக்கங்களை விஞ்ஞான ரூபமாக இன்று காணுகின்றார்கள்.
இதைப் போன்று தான் நமது குருநாதர் அவர் வாழ்க்கையில்
1.அகண்ட அண்டத்தினை… அகஸ்தியன் கண்ட உணர்வினைக் கண்டுணர்ந்தார்
2.குரு தனக்குள் பெற்றதை நீ எவ்வாறு பெற வேண்டும்…? எதனை…? எவ்வாறு…? என்பதை எனக்கு (ஞானகுரு) அந்த வழியைக் காட்டி
3.செவி வழி ஓதி… உணர்ச்சிகளை உந்தச் செய்து… உணர்வினை அறியும்படி… நுகர்ந்தறியும் ஆற்றலை எனக்குக் கொடுக்கின்றார்.
நுகரும்போது உணர்ச்சியால் உடலில் அறிவதும் உணர்வின் தன்மை குவியும் பொழுது காட்சிகளாகத் தெரிவதும் இதைப் போன்று அறியும்படி செய்கின்றார்.
1.அதன் வழி அறிந்தேன்
2.அதனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
3.அதை நீங்கள் ஏங்கிப் பெற்றால் அதற்குத் தக்கவாறு உங்களுக்குள் உருப்பெறும் தன்மையாக அது இணைகின்றது.
உணர்வுகள் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் தெரியும் கண் திறந்திருந்தாலும் சரி கண் மூடி இருந்தாலும் சரி உணர்வின் தன்மை அலைகளாக மாறும் தன்மை வரும்.
ஆக தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடினால் உணர்வின் தன்மை புற நிலை அடக்கி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை உயிருக்குள் உணர்வின் தன்மை காட்சியாகவும் நாம் அறியும் உணர்வாகவும் உணர்வின் தன்மை குவித்து ரூபமாகக் காட்சிகளாகத் தெரிய வரும்.
குருநாதர் பெற்றார் எனக்குள் அதை எனக்குள் பெறும்படி உபதேசித்தார். எனக்குள் பதிவானது பதிவின் நிலைகள் அறிவாக இயக்கி அந்த இயக்கத்தின் தன்மை எனக்குள் உருவாக்கினேன்.
அதையும் நீங்கள் பெற வேண்டும் என்று உபதேசிக்கின்றேன். ஏனென்றால் ஒரு வித்து யாருக்கும் பசி தீர்க்காது.
1.அந்த உணர்வின் சத்தை எல்லோருடைய உணர்வுகளிலும் படரச் செய்து
2.அதை நீங்களும் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றனை இணைத்து விடலாம்.
சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது புவிக்குள் அது இணைந்து விடுகின்றது. அதே சமயத்தில் சிறு துளி பெருவெள்ளம் என்பது போன்று
1.பலரும் பல உணர்வுகள் கொண்டு சிறு துளிகளாக இருப்பினும்
2.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் எண்ணங்களை இணைத்தால் பெரும் வெள்ளமாக மாறி
3.அரும் பெரும் சக்திகளை நாமும் பெறலாம்… நம்முள் வரும் தீமையான உணர்வுகளை அதை நீக்கவும் செய்யலாம்.
கூட்டமைப்பின் தன்மையில் நாம் உபதேசித்த உணர்வின் துணை கொண்டு கூட்டுத் தியானங்கள் மூலம் அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அருள் ஒளியைப் பெருக்கவும் அது உதவும்.
அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் தெளிவாகக் கூறிக் கொண்டு வருகின்றேன் அதை எளிதில் கண்டுணர… இந்தப் பூமி என்பது பரம். உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமான பரலோகத்தில் பரவி உள்ளது. நாம் அதை நுகர்ந்தறிந்தால் சிவலோகமாக மாற்றுகின்றது.
1.உயிரின் துணை கொண்டு அருள் உணர்வுகளைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது ஒளி என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.இரத்தங்களில் கலக்கின்றது… நாளடைவில் உறைகின்றது
4.உணர்வுகள் கருவாகின்றது கருவின் தன்மை அணுவாகின்றது
5.எதன் வழி கொண்டு அணுவானதோ அந்த உணர்வை அது உந்துகின்றது.
6.உணர்வை நுகரச் செய்கின்றது
7.நுகரும் தன்மை வரப்படும் பொழுது அருள் உணர்வுகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது
8.உயிரின் தன்மை வரப்படும் பொழுது உணர்ச்சியின் தன்மை அறிவென்ற நிலைகள் அறிகின்றோம்.
9.அந்த அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் அருள் ஒளியின் அணுக்கள் விளைகின்றது.
10.தீமைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக நாம் பெறுகின்றோம்
ஆகவே… இருளை அகற்றி மகிழ்ச்சி பெறும் தன்மை பெற்றிட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும். அதற்கே இதை உபதேசிக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்முடைய சூரியக் குடும்பத்திலிருந்து கார்த்திகை நட்சத்திரம் விலகிப் போய்விட்டது. அதனால் நம் பிரபஞ்சத்தில் அறிவின் ஞானம் சூனியமாகிப் போய்விட்டது. ஏனென்றால்
1.ஒன்றுடன் ஒன்று மோதி… அந்த உணர்வின் தன்மை
2.”அறிவு ஒளியாக..” வருவதெல்லாம் குறைந்து விட்டது.
கார்த்திகை நட்சத்திரம் போல ஏனைய சில நட்சத்திரங்களும் விலகிக் கொண்டுள்ளது. அதனால் நம் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது.
சில ஆயிரம் ஆண்டுகள் செல்லப்படும் போது நம் சூரியன் தனித்துப் பிரிந்து விடும். நம் பூமிக்குள் நீர் வளம் அதிகமாகிவிடும். இந்த எடையின் தன்மை கூடும் போது ஈர்க்கும் தன்மையாகி சூரியனை விட்டு விலகிச் செல்லும்.
சூரியனை விட்டு விலகினால் அப்பொழுது பூமி முழுவதும் பனிப்பாறைகளாக (வியாழன் கோள் போல்) மாறும். அதற்குள் இங்கே இருக்கக்கூடிய உயிரினங்கள் தாவர இனங்கள் அனைத்தும் பூமிக்குள் (பனிகளுக்குள்) ஒடுங்கி விடும்.
ஐஸ் (பெட்டிக்குள்) பாறைகளுக்குள் வைத்து மறுபடியும் சுழலும்போது சிதறுண்டு போகும் போது உயிரணுக்கள் எல்லாம் அடுத்த பிரபஞ்சத்திற்குள் பரவும்.
நம் உயிரான அணுக்கள் அப்படிப் பரவப்போகும் போது அது எடுத்துக் கொண்ட… நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப… வேறு எங்கேயோ போய் உருவாக்கும். இதைத் தான் நாம் பெற முடியும்.
இப்படிப்பட்ட கால கட்டத்தில் இந்த உடலில் நாம் இப்பொழுது நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே குறுகிய காலத்திற்குள் நாம் ஒளி நிலை பெற வேண்டும்.
1.ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் நாம் வாழுகின்றோம்…? என்று தெரிகிறது. (அறுபதே எழுபதோ அவ்வளவு தான்…!)
2.நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக வாழ வேண்டும்…! என்று தான் கஷ்டப்பட்டுச் சம்பாரிக்கின்றோம்.
3.அதைச் செலவழிக்கவும் செய்கிறோம். ஆடம்பரப் பொருளுக்காகவும் செலவழிக்கின்றோம்.
ஆனால் இது எல்லாம் நமக்கு உதவியாக இருக்கிறதா…?
சம்பாதித்து வீடு சொத்து பணம் பொருள்கள் மனைவி மக்கள் எல்லாமே அழகாக வைத்திருந்தாலும் கூட
1.நமக்கு நோய் என்ற உணர்வு வந்தால் என்ன செய்கிறோம்…?
2.அதை எல்லாம் தள்ளி விட்டுத் தூக்கித் தூக்கி எறிகிறோம்.
3.உடல் சரியில்லை என்றால் நல்ல உணவை உட்கொள்ளும் எண்ணமோ சொத்தையும் சுகத்தையும் உடைகளையும் நகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா…? இல்லையே…!
4.அப்போது எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் என்ற எண்ணம் தான் வருகிறதே தவிர “நன்றாக இருக்க வேண்டும்…!” என்று அது நமக்கு உதவுகிறதா…?
அதே போல் நாம் நன்றாகத் தான் இருக்கிறோம். அடுத்தாற்போல யாராவது வந்து நம்மை ஏளனமாகச் சிரித்து கேவலப்படுத்தினால் என்ன நினைக்கின்றோம்…?
பார்…! என்னை எப்படிக் கேவலப்படுத்துகின்றான்..? இப்படிக் கேவலப்படுத்துகின்றானே…! என்ற இந்த உணர்வைத் தான் எண்ணுகின்றோம்.
அந்த உணர்வை எடுத்தவுடனே நாம் நன்றாக இருந்ததை மறந்து விட்டு அவர் மேல் கோபமும் வெறுப்பும் வேதனையும் ஆகி அவர்கள் எதை எதை எல்லாம் சொல்கிறார்களோ… அதை நமக்குள் விளைய வைக்கின்றோம். அதைத் தான் பழகி வைத்திருக்கின்றோம்.
அதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று தெளிவாக்குகின்றார்கள்…!
1.அவர்கள் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…
2.அவர்களுக்கு நல்ல புத்தி வரட்டும்…
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து
4.அவர்கள் சொல்லும் தீமை நமக்குள் வராது தடுக்கப் பழக வேண்டும்.
அதனால் தான் ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள். அந்த அருள் ஞானத்தை நாம் பெருக்கப்படும் போது அது நமக்குப் பாதுகாப்பாக வரும்.
அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? நாம் எந்த மகரிஷிகளை எண்ணுகின்றோமோ அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் நினைக்கப்படும் போது உயிர் அதை உருவாக்குகிறது.
அது தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. அறிந்துணர்ந்து செயல்படும் அந்தச் சக்தியைக் “கார்த்திகேயா…!” என்று காட்டுகின்றார்கள்.
வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் தீமையின் உணர்வின் தன்மையாக நம்மை மாற்றும். அதைத் தடுக்க அருள் ஒளியை உருவாக்கும் அணுவை நமக்குள் பெருக்கினால் அது நம்மைக் காக்கும்…!
இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!


நஞ்சை முறிக்கும் சக்தி
ஒரு தேள் வெள்ளாட்டைத் தீண்டி விட்டால் விஷம் பாய்ந்து அந்த ஆடு மடிகின்றது. ஆனால் அதே சமயத்தில் கோழி பட்சி மற்ற பறவைகள் இதை உணவாக உட்கொள்கின்றது. அவைகள் பயப்படுவதில்லை… அதற்கு வீரிய உணர்வுகள் வருகின்றது.
உதாரணமாக கருடனை எடுத்துக் கொண்டால் அதுவும் விஷத்தை ஒடுக்கும் நிலைகள் பெற்றது… அதை ஒடுக்கி விடுகின்றது தேள் கொடுக்கு மிகவும் விஷம் கொண்டது. தேள் இறந்தாலும் அந்தக் கொடுக்கை வைத்து லேசாகக் குத்தினாலே அதில் உள்ள விஷங்கள் நமக்குள் கடுகடுப்பை ஊட்டிவிடும்.
ஆனால் கோழி மற்ற பறவைகள் அதை உணவாக உட்கொள்கின்றது அதனின் உடலில் இருக்கக்கூடிய அமிலம் இந்த விஷத்தைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது… வீரிய நிலைகளும் பெறுகின்றது.
கருடனைப் பாம்பு சீறித் தாக்கினால் அதனுடைய விஷம் அதற்குள் ஏறுவதில்லை. கருடன் அதை தாங்கிக் கொள்கின்றது. அது கூட்டைக் கட்டிக் குஞ்சுகளைப் பொரிக்கின்றது.
1.இரும்புக் கம்பிகள் கொண்டு அந்த குஞ்சுகளை நாம் விலங்கிட்டோம் என்றால்
2.கருடன் பறந்து சென்று அதை முறிக்கக் கூடிய தாவர இனங்களைத் தேடிச் செல்கிறது.
3.அதனுடைய குச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து அந்த இரும்புக் கம்பி மேல் போடுகின்றது… அந்தக் கம்பிகள் அறுந்து விடுகின்றது.
அந்தத் தாவர இனத்தைக் கண்டு கொள்ள வேண்டும் என்றால் நம்மால் முடியாது.
ஒரு வாய்க்காலிலே நீர் வேகமாக ஓடுகிறது என்றால்
1.அந்தக் கருடன் குஞ்சுகளை வைத்திருந்த கூட்டைப் பிரித்து அதில் போட்டால்
2.அது (மீன்களைப் போல்) எதிர்நீச்சல் அடிக்கும்.
மெய்ஞானிகள் சில முறைப்படுத்தி இதை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள் விஷத்தை ஒடுக்கும் உணர்வாக மற்ற உலோகங்களை முறித்திடும் நிலையாக அத்தகைய தாவர இனங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.
இது எல்லாம் இயற்கையில் விளைந்த உணர்வுகள் தான்.
ஒவ்வொரு உயிரினங்களும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எவ்வாறு இயங்குகின்றது…? என்று இதையெல்லாம் அறிவதற்காகப் பல நிலைகளை எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.
ஒரு சமயம் நான் கொல்லூரிலே குருநாதர் காட்டிய வழியில் தியானமிருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே ஆற்றங்கரை ஓரங்களில் கருநாகம் போன்று மிகப் பெரிய பாம்புகள் உண்டு… காளிங்கராயன் என்று சொல்வார்கள்.
அந்த ஆறு குடசாஸ்திரி என்ற மலையிலிருந்து பச்சிலைகளையும் மூலிகைகளையும் பல பல தாவர இனங்களின் சத்துக்களையும் கவர்ந்து கொண்டு இங்கே வருகின்றது.
அங்கிருக்கக்கூடிய ஒரு பாறையிலே தான் அமர்ந்து இயற்கையின் உண்மை நிலைகளை அறிவதற்காக இரவு முழுதும் தியானம் இருப்பேன். காலையில் எழுந்து காலைக்கடன் கழிப்பதற்காக எழுந்து நடக்கின்றேன்
அவ்வாறு நடந்து செல்லப்படும் பொழுது என்னை அறியாமலேயே ஒரு செடியின் புதரிலே காலை வைத்து விட்டேன்.
1.சிர்….ர்ர்ர்…! என்று அந்தப் பாம்பு எழுந்து நின்றது. சுமார் 70 அடி நீளம் இருக்கும்
2.என் தலைக்கு மேலே “சுளவு” போன்று படத்தைப் பிடிக்கின்றது.
அப்பொழுது குருநாதர் சொல்கின்றார். நீ அந்தப் பாம்பை இடறி விட்டாய். ஆனால் அது உன்னைச் சீறித் தாக்கவில்லை. நீ தெரியாமல் மிதித்து விட்டாய் என்பதை அது உணர்கின்றது… ஆகையினால் தாக்கவில்லை.
1.இங்கே வாழ்ந்த சில ரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகளை அந்தப் பாம்பு நுகர்ந்துள்ளது.
2.அதனால் அதனுடைய பரிமணம் சில விஷத்தன்மைகளை நீக்கும் வல்லமையும் பெற்றது என்று குருநாதர் இதையும் காட்டுகின்றார்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எங்கெங்கு எங்கெங்கு ஏங்குகின்றனரோ அந்த ஏக்கத்தின் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது தான் என்னால் உபதேசமே கொடுக்க முடியும். நானாகப் (ஞானகுரு) பேச முடியாது.
ஏக்கத்தின் உணர்வின் தொடர்பு வரப்படும் போது அந்த உணர்விற்கொப்பத்தான் பேசும். ஞானிகளின் உணர்வுகளை நானாக எடுத்துச் சொல்வது என்றால்
1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது
2.மின்னலாகி ஒளிக் கற்றைகளாக மாறி அந்த அலைகள் எப்படிப் படர்கின்றதோ
3.அதைப்போலத் தான் இங்கே ஏங்கி உள்ளோர் உணர்வுகளை நுகர்ந்து தான் நான் பேசுகின்றேன்.
தீமைகள் எப்படி இயக்குகிறது…? என்று இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி தீமையைப் பிளக்கும் மெய் ஞானிகளின் உணர்வினை உங்களை நுகரச் செய்து கொண்டிருக்கின்றோம்.
மெய் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்து அதை உங்களுக்குள் உருவாக்கச் செய்து அறியாது வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றி கல்யாணராமனாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.
ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. சொல்வதைக் கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போனீர்கள் என்றால்
1.சாமி சொல்கிறார்… பார்க்கலாம்…!
2.சாமி எனக்கு வேறு என்ன செய்தார்…? என்று எண்ணாதீர்கள்.
இன்னும் இதைவிட என்ன உதவி செய்ய வேண்டும்…? மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
2.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை எண்ணிச் சதா தியானம் இருக்கிறோம்.
அந்த உணர்வை நுகரும் பருவம் நீங்கள் இழந்து விட்டால்…! நல்ல சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு அதை உட்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்…?
விவசாயப் பண்ணைகளில் நல்ல வித்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்ததை மண்ணிலே விதைக்காமல் வெளியிலே இறைத்து விட்டால் என்ன செய்யும்…?
1.எறும்போ மற்ற பூச்சிகளோ பறவைகளோ எடுத்துத் தின்று விட்டுப் போகும்… முளைக்காது…!
2.அப்படியே முளைத்துப் பயிர் வந்தாலும் தகுந்த பருவத்தில் நீரோ உரமோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக அழித்து விடுகின்றோம்.
ஆகவே யாம் பதிவு செய்யும் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால் தான் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.
அருள் ஞானத்தின் வழியில் வாழ முடியும். இருளை அகற்றிப் பேரொளியாக மாற்றும் ஆற்றலைப் பெற முடியும். பிறவியில்லா நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
இது உங்கள் கையில் தான் இருக்கிறது…!


சொர்க்கலோகம்
பல கோடி நஞ்சுகளை வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனான். அவன் உணர்வை நாம் பெற்றோம் என்றால் சொர்க்கலோகம் என்ற நிலையை அடைகின்றோம்.
சொர்க்கவாசல் என்பது
1.நம் உயிரின் நிலை கொண்டு எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்கின்றோமோ
2.நுகர்ந்த உணர்வுகள் உயிருடன் ஒன்றி அது விண் செல்லச் செய்கின்றது.
நாம் சுவாசிக்கும் உணர்வு எதுவோ நரகலோகம் செல்வதும் அதன் வழியே… ஆனால் சொர்க்கலோகம் செல்வதும் அதன் வழியே…! ஆனால்… ஆறாவது அறிவின் துணை கொண்டு எவர் ஒருவர் சொர்க்கத்தின் உணர்வை உருவாக்குகின்றனரோ அவரே விண் செல்கின்றார்.
அகஸ்தியன் அணுவின் இயக்கத்தைத் தன்னுள் உணர்ந்து அவன் வெளியிட்ட உணர்வுகள் அவனில் விளைந்த நிலைகள் இந்தப் பரமான பூமியில் பரலோகமாகப் படர்ந்து கொண்டே உள்ளது.
1.அவன் பெற்ற உணர்வை நாம் நுகர்ந்து சிவலோகமாக மாற்றி அருள் லோகமாக மாற்றி
2.இருளை அகற்றி அருள் ஒளி என்ற உணர்வின் தன்மை ஊட்டி உருவாக்கி
3.எதனை உற்று நோக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று ஏங்கினோமோ – அதன் வழி கொண்டு சொர்க்கலோகம்
4.எந்தத் தீமையும் தனக்குள் வராது ஒளியின் சிகரமாகத் தனக்குள் உருவாக்கும் நிலைகள் பெறச் செய்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தை இழந்தால் எதன் உணர்வை நமக்குள் அதிகரிக்கின்றோமோ அதன் வழி கணங்களுக்கு அதிபதியாகி உயிர் உடல்களை மாற்றி அமைத்துவிடும்.
அதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடும் நிலையாக நமது குரு ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி நாம் அருள் ஒளி பெற்று பிறவியில்லா நிலை அடைந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்வோம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அலைகளை அதிகாலை நேரம் சூரியன் துருவப் பகுதி வழியாகப் புவியின் ஈர்ப்புக்குள் நமக்கு முன் அழைத்து வருகின்றது.
1.அதைப் பருகுவதற்கு எம்முடைய உபதேசத்தின் உணர்வைப் பதிவாக்கி
2,அந்த உணர்வின் எண்ணத்தை வலுவாக்கி விண்ணை நோக்கி ஏகி அருள் ஒளியின் உணர்வைச் சுவாசியுங்கள்.
3.சுவாசித்த உணர்வுகளை உயிர் உருவாக்கும் அதை நாம் உருவாக்குவோம்
4.இருளை அகற்றும் அருள் சக்தியை நாம் அனைவரும் பெறுவோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.
ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?
அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.
அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.
வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.
ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.
இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.
கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.
கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.
சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.


“நம் கண்ணுடன் இணைந்தே” பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது
ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் முதலிலே கெடுகின்றோம்…” கெடுமதியின் உணர்வைப் பாய்ச்சுகின்றோம்… பாய்ச்சும் உணர்வுகள் கேட்போருக்குள் பதிவாகின்றது.
1.பதிந்த உணர்வுகள் அவர்களையும் கெடுக்கின்றது அவர்களில் விளைந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது.
2.எங்கே வித்தாகி உருவானதோ மீண்டும் இன்னொரு உடலில் விளைந்த உணர்வின் சத்தாக நமக்குள் கவர்ந்து அவரும் கெடுவர் நாமும் கெடுவோம்.
ஒருவர் கெட வேண்டும் என்ற உணர்வைப் பதிவாக்கி அவரைப் பார்த்த பின் அவரை எப்படியும் வாழ்க்கையிலே கெடுக்க வேண்டும் துன்பத்தை ஊட்ட வேண்டும் என்ற உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது.
அவ்வாறு தூண்டி அந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. இந்த உணர்வு எவர் கெட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அவர் மீது பாய்ச்சுகின்றோம்.
மீண்டும் அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது. பகைமைகளைத் தான் நாம் வளர்க்கின்றோம். விளைந்த உணர்வுகளைப் பிறருக்குப் பாய்ச்சுகின்றோம்.
அவர்களும் நினைவு கொண்டு இதைக் கவர்கின்றனர் இருவருமே கெடுகின்றனர். கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். ஒருவரைக் கெடுக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தக் கெடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கின்றோம். பிறரைக் கெடுக்கும் இச்சை வளர்கின்றது.
இதே போன்று
1.அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கி
2.நாம் பார்க்கும் அனைவரும் இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும் என்று உணர்வுகளை உருவாக்கினால்
3.அருள் ஒளி என்ற உணர்வுகளை நமக்குள் உருவாக்குகின்றோம்… நாமும் அதுவாகின்றோம்.
ஆகவே… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும்பெரும் சக்திகளைப் பெற வேண்டும்… நாம் பார்ப்போருக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் நாம் அதுவாகின்றோம்.
அருளொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வித்தாக்குவோம். ஊழ்வினையாக உருவாக்குவோம். இந்த உணர்வின் துணை கொண்டு அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள் அனைவரது உணர்வுகளும் உண்டு.
அவர்கள் நலம் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வுகளும் நமக்குள் நலம் பெறுகின்றது. கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். நம் கண்கள் கூறியது போன்று
1.ஒருவன் நலம் பெற வேண்டும் என்று எண்ணத்துடன் உற்றுப் பார்த்துப் பதிவாக்கிய பின்
2.அவரைப் பார்த்த பின் நன்மை செய்ய வேண்டும் என்று உணர்ச்சிகள் தூண்டுகின்றது.
3.அதன் வழி நன்மை செய்யும் உணர்வுகளை நுகர்கின்றோம்… நல்வழிப்படுத்தும் உணர்வினை இயக்கச் சக்தியாக மாற்றுகின்றோம்.
இதை உணர்த்துவதற்காகக் கண்ணனும் பலராமனும் ஒன்றெனெ இணைந்தவர்கள்… “சகோதரர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
சுவை மிக்க உணர்வுகளை எண்ணும் பொழுது சீதா ராமன் என்றும் இப்படி பல கோடிஸ் சரீரங்களைப் பெற்ற நிலையில். கண்கள் ஒன்றைக் காட்டி அந்த உணர்வை நுகர்ந்து அந்த எண்ணங்கள் வருகின்றது.
அந்த எண்ணத்தின் உணர்ச்சியால் நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்ற நிலைகளைத் தெளிவாகக் கூறுகின்றனர்.
1.நம் கண்ணுடன் இணைந்தே பல உணர்வின் எண்ணங்கள் வாழுகின்றது.
2.அதனால் தான் கண்ணனின் சகோதரன் பலராமன் உடன் பிறக்கவில்லை என்றாலும்
3.உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழும் சக்தி பெற்றவர்கள் என்று காட்டுகின்றார்கள்.
எண்ணங்களின் இயக்கங்களுக்குக் காவியங்களாகப் படைத்து நமக்குக் காட்டுகின்றார்கள்.
நமக்குள் இணைந்து வாழும் நிலைகள் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை… நண்பன் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எண்ணினால் அந்த கண்கள் உற்று நோக்குகின்றது உதவி செய்யச் சொல்கின்றது.
ஆகவே
1.எண்ணங்கள் வரும் பொழுது இந்தப் பார்வை அதைச் செய்கின்றது.
2.நண்பனைப் பார்த்த உடனே நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது.
3.ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலையை அருள் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.
4.கண்ணன் வேறல்ல நம் எண்ணங்கள் வேறல்ல.
கண்கள் இல்லாத பொழுது பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் வருகின்றது. அந்த எண்ணங்கள் பல கோடிச் சரீரங்களில் வலுப் பெற்று உருவாகின்றது. உருவான உணர்வுகள் உடலுக்குள் தான் எண்ணி ஏங்கிய பின் வாசுதேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணன் பிறக்கின்றான்.
கம்சன் என்ற இருளை நீக்கிப் பொருள் காணும் நிலைகளைச் செயல்படுத்துகின்றது என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
உதாரணமாக… புழுக்கள் இரண்டு நாள் வாழும் அல்லது நான்கு நாளைக்கு இருக்கும். இப்படி மடிந்து மடிந்து… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டிக் கூட்டி அந்த உணர்வின் தன்மை பெற்ற பின் தான்
1.வாசு… சுவாசித்த உயிரான தேவனுக்குத் தனக்குத் தேவையான உணர்வு என்ற நிலையில் அந்த எண்ணங்கள் உருவாக்கப்படும் பொழுது தான்
2.வாசுதேவனுக்கும் தேவகிக்கும் உடலான சிறைச்சாலைக்குள் கம்சனை வெல்ல
3.அந்த நாராயணன் ஒளிக்கதிராக இருக்கும் இந்த உணர்வின் தன்மை
4.”ஒளியை ஊட்டி… ஒளியை அறிவாக்கும்… அதை அறிந்திடும் உணர்வின் தன்மை” தனக்குள் காட்டுவதே கண்ணன்.
ஆக… கண்ணனாகப் பிறந்தான் நாராயணன்…. துவாரகா யுகத்தில் இருளை நீக்கிக் கண் ஒளி கொண்டு உணர்வின் அறிவாகத் தான் இயக்கும் சக்தி பெற்றான். அதே நாராயணன் நமக்குள் இருக்கிறான் என்ற நிலைகளில் காட்டுகின்றார்கள்.
இவ்வாறு
1.கண்கள் எண்ணத்தால் தோன்றியது
2.பின் பார்வையால் நுகரப்படும் பொழுது எண்ணங்கள் வருகின்றது
3.எண்ணத்தால் எதை நாம் எண்ணி ஏங்குகின்றோமோ கண் அதைக் காட்டுகின்றது.
இப்படி எண்ணங்கள் பல உண்டு. பல கோடிச் சரீரங்களைப் பெற்ற பின் பலராம் என்ற நிலையினை மனிதன் அடைகின்றான். இதை மனிதன் தான் உணர்கின்றான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக அவ்வாறு செய்வார்கள்.
அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப் பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப் பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.
அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்…? எந்த ஒரு அரசனையும் அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்…!” என்று உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.
உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.
திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும் உணர்வுகள் தனக்குள் எது… என்ன…? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.
அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற அதைப் பாடுகின்றாள்.
யார்…? வாசுகி…!
துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும். ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு வறுமை.
சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.
அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.
ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன் பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்… வையகமெல்லாம் பரவியது…!” என்று சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.
ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார். அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.
தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி விடுவான்.
ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.
“கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது…!” என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.
கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.
“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.
ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)
ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.
அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்…! அதனால் நேரமாகிப் போய்விட்டது.
வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.
கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா…! என்கிறது வாசுகி.
கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.
கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.
கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.
ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.
1.நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது.
2.அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின்… நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று
3.வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…”
அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?
ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு இங்கே இருக்கிறது.
அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்ததை வெளிப்படுத்துகின்றேன். நான் மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்… உணரலாம்… நுகரலாம்…! உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.


மலைப் பகுதிகளில் குருநாதர் எனக்குக் காட்டிய இயற்கையின் பேருண்மைகள்
அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் எத்தனையோ வகையான மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பச்சிலைகளைக் கண்டு எடுக்கின்றார்கள்.
1.அந்தப் பச்சிலைகள் எப்படி உருவானது…?
2.அதற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது…? என்பதனைக் குருநாதர் எனக்குக் காட்டுகின்றார்.
தொடர்ந்து மலைப்பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் அங்கே அலைந்து திரிந்தேன்.
அக்காலங்களில் ஒரு மிருகம் மற்றொன்றை எப்படிக் கொன்று புசித்தது…? அதைக் கொன்று புசித்த பின் அந்த மாமிசத்தை மற்றவைகள் உட்கொள்ள முடியாத நிலை ஆகிறது.
கழுகு காக்கைகள் மட்டுமே உட்கொள்கின்றது. ஆனால் சிறிது காலம் கழித்து அது அழுகிய மணம் வந்த பின்பு தான் அந்தக் கழுகுகள் பறந்து வந்து அதனை நுகர்ந்து உட்கொள்ள வருகின்றது.
ஆனால் அதே சமயம் இது மடிந்த பின் இது உடலில் இருந்து வரக்கூடிய ஆவியின் தன்மையை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… அலைகளாக மாறுகின்றது… பரவுகின்றது…!
அந்த உடலை (அழுகிய) உருவாக்கிய அணுக்கள் திறந்த வெளிக்கு வந்தபின் அதையே உணவாக உட்கொள்ளும் புழுக்களாக அதிலே உருவாகின்றது. புழுவாக உருப்பெற்றாலும் உட்கொண்டு இரை தீர்ந்தபின் அவைகளும் மடிந்து விடுகின்றது.
1.மடிந்த உயிரான்மாக்கள் வெளியே செல்கின்றது.
2.சென்றாலும் எந்தெந்த உயிரினங்களை இது அடித்து உணவாகப் புசித்ததோ அந்த உணர்வின் துணை கொண்டு
3.அந்தந்த மிருகங்களின் உடலில் பட்ட பின் ஈக்களாக உண்ணிகளாக உருவாகின்றது.
4.அதன் ரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்கின்றது.
இதையெல்லாம் காட்டுப் பகுதியில் வைத்து குருநாதர் காட்டுகின்றார்.
தாவர இனங்களை உணவாக உட்கொண்டு உடல் பெற்றுத் தான் வாழும் நிலையானாலும் அது மடிந்த பின் மற்றதைக் கொன்று குவிக்கும் புலியோ நரியோ நாயோ மற்ற உடலைப் புசிக்கும் உணர்வு கொண்ட நிலைகள் மடிந்த பின் இவை எல்லாம் என்ன ஆகின்றது…? என்பதனை காட்டுக்குள் அழைத்துச் சென்று பார்க்கும்படி செய்கின்றார்.
உடலில் இருந்து சென்ற ஆவிகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து அலைகளாக மாற்றுகின்றது. ஒரு ஆட்டின் உடல் பெற்ற பின் நரியின் உணர்வைக் கவர்ந்து கொண்ட பின் இதைக் கண்ட பின் ஆட்டின் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுவதும் ஓடு பாதையில் இன்னொரு தாவர இன சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கொண்டால் இதற்குள் ஊடுருவி சுழற்சியின் தன்மை அடைந்து ஒன்றுடன் ஒன்று மோதுகிறது.
மற்ற உயிரினங்களாகப் பெற்ற பின் இதனுடைய மணம் வெளிப்பட்ட பின் இது மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.
மோதலில் ஏற்படும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொண்ட பின் தாவர இனத்தின் அடர்த்தி அதிகமாகி இதனுடன் இணைந்து விடுகின்றது. இணைந்த பின் ஒரு வித்தாகின்றது… நிலத்தில் பதிவாகின்றது.
வித்தான பின் புவியின் கால நிலைகள் கொண்டு மழை நீரோ மற்ற ஈரப்பசை கொண்ட காற்றலைகள் வரப்படும் பொழுது செடியாக முளைக்கின்றது. முளைத்து விட்டால்…
1.இது எதையெல்லாம் கொன்று புசித்ததோ அந்தச் செடி தன் அருகிலே வரக்கூடிய மிருகங்களை உயிரினங்களை
2.தன் கொடிகளைப் பாய்ச்சி அதனின் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றது.
உயிரணு பெற்ற பின் மீண்டும் தாவர இனங்களுடன் இணைந்து தாவர இனச் செடியாக மாறினாலும்
1.நீரை உணவாக உட்கொள்ளும் நிலை இருப்பினும்
2.அதே சமயத்தில் இரத்தத்தை உறிஞ்சி உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொள்ளும் நிலைகள் பெறுகின்றது.
இப்படிப் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது… இது எவ்வாறு நடக்கிறது…? என்ற நிலையைக் காட்டுகின்றார் குருநாதர். இதையெல்லாம் அறிவதற்கு நான் சாதாரண உணவை உட்கொள்ளவே முடியாது.
சில பச்சிலைகளைக் கொடுத்து வாயிலே ஒதுக்கிக் கொள்ளும்படி சொல்வார். அதை மென்று கொண்டே இந்த உணர்வினைச் சுவாசிக்கும்படி செய்வார்.
நடந்து செல்லும் போது சில இடங்களில் ரொம்பக் களைப்பானால் நீரைக் குடிக்கும்படி சொல்வார், நீரைக் குடித்த பின் வயிறு உப்பிக் கொள்ளும்
சில இடங்களில் செடிகளின் இலைகளைத் தண்ணீரில் கசக்கிப் பிழிந்து விட்டால் நொங்கு போன்று ஆகிவிடும். அதை எடுத்து உணவாக உட்கொள்ளும்படி சொல்வார்.
இப்படி எல்லாம் பல தாவர இனங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைக் காட்டுவார்.
உயிரணு பெற்று அந்த உடலின் நிலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொண்டால் ஒன்றுடன் ஒன்று மோதி அது மீண்டும் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது எந்த உயிரினத்தில் இருந்து இந்தச் செடியுடன் கலந்ததோ அத்தகைய உயிரினங்கள் வரப்படும் பொழுது… இந்த இலைகள் அதனுடன் ஒட்டப்பட்டு இரத்தத்தைக் குடிக்கின்றது. இப்படிப் பல விதமான தாவர இனங்கள் உருபெறுகின்றது.
வேறு சில இடங்களுக்குச் சென்றால் அங்கே மனிதனையே பலியிட்டு உணர்வுகளைப் பிரித்து விட்டு அவருடைய உயிரை வெளியே எடுத்து இருப்பார்கள்.
1.அந்த உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகள் தாவர இனத்தின் மணத்தை கண்டபின் ராட்சசத் தன்மை கொண்டு ஆவிகள் வேகமாக ஓடுகின்றது.
2.இன்றும் சில இடங்களில் இந்தச் சுழிக்காற்றுகளைப் பார்க்கலாம்.
3.சில குறித்த நேரங்கள் வரும்பொழுது உயிர் பலி இடப்பட்ட இந்த உணர்வுகள் அதைக் கண்ட பின்
4.மற்ற தாவர இனங்களில் சுழிக் காற்றாக அடித்து ரொம்ப வேகமாகத் தள்ளிக் கொண்டு இருக்கும்.
அதற்குள் யாராவது மனிதன் சிக்கினால் உயிருக்குள் பட்டபின் காக்காய் வலிப்பு போன்று வந்துவிடும். கர்ப்பிணி யாராவது நுகர்ந்து விட்டால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பாதிப்பாகி அதனுடைய உறுப்புகளைச் சீராக உருவாகாதபடி செயலிழக்கச் செய்துவிடும்.
இது எல்லாம் காட்டிற்குள் சென்ற பின்
1.இயற்கையின் நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அக்கால மக்கள் எப்படி வாழ்ந்தனர்…?
3.கடும் பூதங்களாகவும் ராட்சசர்களாகவும் எப்படி உருவானார்கள்…? என்று காட்டுகின்றார்.
இன்றும் சில பகுதிகளில் மனிதன் பக்தி கொண்டு மந்திர ஒலிகளைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்ட பின் அவன் மடிந்தால் அந்த உயிரணுக்கள் எதனின் எல்லை கொண்டு இருப்பானோ அதன் பகுதிகளிலே அது சுழன்று கொண்டிருப்பதும் அந்த அலைகள் குவிவதும்… அங்கே செல்வோர் அஞ்சினால்… அந்த உணர்வை நுகர்ந்து அந்த உருவங்கள் தெரிவதும் அப்படிப் பல நிலைகள் உருவாகின்றது.
சில மலைப் பகுதிகளுக்குச் செல்லப்படும் பொழுது ராட்சச உருவம் கொண்டு மற்றவர்களைக் கொன்ற நிலையில்… அங்கே மற்றவர் படுத்திருக்கும் பொழுது அந்த உணர்வலைகள் அங்கே குவிகின்றது.
குவிந்தபின்
1.படுத்திருக்கும் உடலை எப்படிச் செயலற்றதாக அமுக்குகின்றது…?
2.அமுக்கிய பின் இரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றது…?
3.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின் அதன் நிலை கொண்டு அதுவும் காற்றலைகளுடன் கலந்து எவ்வாறு செயல்படுகிறது…? என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
தீமைகள் வளர்ந்து வளர்ந்து மனிதனின் நிலைகளில் அக்காலங்களில் இருந்து இக்காலங்கள் வரையிலும் இதைப் போன்று தான் நடந்து வருகின்றது.
இந்த உடலில் எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு சாகாக்கலையாக இந்தப் புவியில் தான் மீண்டும் மாறி மாறி உடல்கள் பெறுவதும் நரகலோகத்தைச் சந்தித்து மீண்டும் சொர்க்கலோகம் வருவதற்குப் பல காலமாகின்றது.
இதிலிருந்து மீள்வதற்கு அக்காலங்களில் முதல் மனிதனானவன் தாவர இன்ங்களைப் பயன்படுத்தியவர்களைப் பற்றி மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ புலஸ்தியர்கள் என்று சொல்வார்கள்.
புலஸ்தியர் என்றால் காட்டுவாசிகள்…! அன்று அடர்த்தியான காடுகளில் அவர்கள் இருந்தாலும் அதன் உணர்வின் தன்மை கொண்டு இந்த இடத்தில் வாழ்ந்த அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்…? என்ற நிலையும் காலங்கள் எவ்வாறு சென்றது…? என்பதையும் உண்மையின் உணர்வைச் சொல்லி வருகின்றனர்.
எவ்வழியில் எதனை நாம் செயல்படுத்த வேண்டும்…? என்ற நிலைகளில் பின் தெளிவாக அவர்கள் கூறிய நிலையில் எழுத்து வடிவுக்கு வரும் பொழுது இதனைக் கூறியுள்ளார்கள்.
ஆனால் எழுத்து வடிவிற்கு வரப்படும் பொழுது அரசன் அந்த எழுத்தின் அறிவைக் கொண்டு வரப்படும் பொழுது ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மைகள் காலத்தால் மறைந்தும் போய் விட்டது.
இப்படித்தான் மறைந்து… மறைந்து…
1.விஞ்ஞான அறிவுகள் வளர்ந்த பின் விஞ்ஞான வளர்ச்சி முதிர்ந்து
2.இன்று மனிதனையே சீர்குலைக்கும் உணர்வாக விளைய வைக்கும் இந்தக் காலத்தில்
3.விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
4.இருந்தாலும் இனி நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை குருநாதர் அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.
அஸ்ஸாம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே காட்டு விலங்குகள் அதிகமாக இருக்கின்றது. அந்த மலைப்பாங்குகளில் எவ்வாறெல்லாம் தாவரங்கள் எப்படியெல்லாம் மாற்றம் அடைந்துள்ளது என்பதனைக் காட்டுகின்றார்.
குருநாதர் ஒரு பச்சிலையை எடுத்து நசுக்கி என்னிடம் கொடுத்தார்… இதை வைத்துக் கொள்…! என்று.
அது எதற்கு…? என்று எனக்குத் தெரியாது ஆனால் அதை வைத்துக் கொண்டு நடந்து செல்லும் பொழுது ஒரு யானைக் கூட்டமே அங்கே வருகின்றது.
கூட்டமாக வரக்கூடிய யானைகள் இந்த பச்சிலையின் வாசனையைக் கண்டபின் அது பிளிறுகின்றது… அஞ்சுகின்றது கத்துகின்றது… அருகிலேயே வராதபடி ஓடுகின்றது.
ஒரு காண்டாமிருகம் வருகின்றது. அது யானையைக் கூட ஒரு தட்டுத் தட்டி எறியக்கூடிய வலு பெற்றது. அது நடந்து வரப்படும் பொழுது
1.சந்தர்ப்பத்திலே ஒரு செடியிலே உராய்ந்து விடுகின்றது.
2.பட்டபின் இரத்தத்தை அந்தச் செடி உறிஞ்சி விடுகின்றது… அப்படியே கீழே விழுகின்றது.
முதலிலே ஒரு சில இதை நுகர்ந்து விடுகின்றது… அதனால் அந்தப் பக்கம் வருவதில்லை. ஆனால் காண்டாமிருகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுத் தாக்குதல் ஏற்பட்டுத் தப்பி ஓடும் வேகத்தில் வரும் போது… இந்தச் செடிகளிலே உராய்ந்த பின் இரத்தத்தை உறிஞ்சிய பின் கீழே விழுந்து விடுகின்றது. இதைக் குருநாதர் காட்டுகின்றார். காடுகளில் இத்தகைய செடி கொடிகள் சில இடங்களில் உண்டு.
கேன்சர் நோய் என்றால் மருத்துவத்திற்கு இன்று ஏதேதோ செய்கின்றோம்.
1.ஆனால் இத்தகைய செடிகளின் சத்தை உடலின் மேலே முலாமாக அரைத்துப் பூசினால்
2.கேன்சர் எந்தப் பாகமோ அதற்குள் ஊடுருவி அந்த நோயை அழித்து விடுகின்றது… அதோடு அந்தக் கேன்சர் நோய் தீர்ந்து விடுகின்றது.
டிபி போன்ற நோய்களுக்கும் இந்தத் தாவர இனங்களை மேலே முலாமாகப் பூசினால் சுவாசிக்கும் பொழுது அந்த டிபி அணுக்கள் மடிந்து விடுகின்றது… நோயும் நீங்கி விடுகின்றது.
எப்படி எல்லாம் இது செயல்படுகிறது…? என்பதனை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளச் செயல்பட்டதையும் இன்று விஞ்ஞான அறிவால் எப்படிச் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்…? என்பதனையும் குருநாதர் காட்டுகின்றார்.
தன் உணவுக்காக வேண்டிக் கனிகளையும் மற்ற மிருகங்களையும் மற்ற உயிரினங்கள் கொன்று உணவாகப் புசித்தாலும் அத்தகைய மிருகங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அகஸ்தியன் என்று சொல்லும் அவருடைய தாய் தந்தையர்கள் இத்தகைய பச்சிலைகளின் இரகசியங்களை அறிந்து கொண்டார்கள்.
1.ஒருவர் அறிந்ததை மற்றவருக்குச் சொல்வதில்லை.
2.அதன் செயலாக்கங்களை அவரவர்கள் மட்டும் வலுவாக வைத்துக் கொள்கின்றார்கள்.
இன்றும் ஒரு சிலர் பச்சிலைகளுடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால்… வசதி உள்ளவராக இருப்பார். சில நோய்களுக்காக வேண்டி இதை ஒரு சாமியார் கொடுத்தார். நான் தான் அதைப் பயன்படுத்துவேன் என்று சொல்வார்கள்.
ஆஸ்மா நோயைப் போக்குவதற்காக வேண்டி யாரோ ஒருவர் ஆந்திராவில் சொன்னதை
1.ஒரு மீனை எடுத்து அதற்குள் மருந்தைப் போட்டு முழுதாக விழுங்கப்படும் பொழுது
2.அந்த உயிரணுவின் செல்கள் ஊடுருவி ஆஸ்மா நோய் உருவாக்கும் அணுக்களை அது விழுங்கி விடுகின்றது என்ற இரகசியத்தைச் சொன்னார்கள்.
இது குடும்பப் பாரம்பரியத்தில் உண்டு. முழுதாக அந்த மீனை விழுங்கிய பின் உடலுக்குள் சென்று ஜீவ அணுக்களாக மீண்டும் அணுக் கருக்களாக மாற்றுகின்றது.
1.அந்த ஆஸ்மாவை உருவாக்கும் சளி எங்கே இருக்கின்றதோ அதற்குள் அணுக்களாக வெடித்து
2.சளியை உருவாக்கும் அணுக்களை விழுங்கி விடுகின்றது…. ஆஸ்மா நோய் நீங்கி விடுகின்றது.
இப்படி எல்லாம் சில முறைகள் எவ்வாறெல்லாம் அது இயங்குகிறது…? என்பதையும் நமது குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
இதைப் போன்று அன்றைய காலங்களில் காடுகளில் வாழ்ந்தவர்கள் விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் வேட்டையாடி வந்த நிலையில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் காட்டு விலங்குகளிடமிருந்து தப்பித்து வாழ்ந்தார்கள்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதல் மனிதன் அகஸ்தியனை… தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்று எத்தனையோ நிலைகள் கொண்டு அவனைத் தான் நாம் போற்றுகின்றோம்.
அவனுடைய தாய் தந்தையர்கள் தான் பற்பல விதமான மூலிகைகளைப் பச்சிலைகளைத் தாங்கள் படுத்துறங்கும் குகைக்கு முன் போட்டுக் கொள்வதும் தங்கள் உடலிலே முலாமாக அரைத்துப் பூசிக் கொள்வதும் போன்ற நிலைகளில் இருந்தார்கள்.
காரணம் இந்த மணத்தை விஷ ஜந்துக்களோ மிருகங்களோ நுகர்ந்தால் அவைகளுக்கு ஒரு மயக்கம் போன்று வரும்… அதனால் இவர்கள் அருகிலே அவைகள் வருவதில்லை. தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவ்வாறு செயல்படுத்தினார்கள்.
இந்த மணம் அவர்களுடைய சுவாசத்தில் கலந்து இரத்தத்திலும் கலக்கின்றது. கர்ப்பம் ஆகும்போது கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கும் இது இணைகின்றது.
அகஸ்தியனுடைய தாய் தந்தையர் அந்தப் பச்சிலைகளின் மணங்களை நுகர நுகர இது எல்லாம் சந்தர்ப்பம் தான்.
1.கருவில் இருக்கக்கூடிய அகஸ்தியனுக்கு இந்த உணர்வுகள் கிடைக்கப் பெறுகின்றது.
2.நஞ்சை வென்றிடும் அணுக்களாக அவனுக்குள் உருப்பெறுகின்றது.
3.அதன் வழிப்படி அவன் உடலும் உருப்பெறுகின்றது
4.கருவிலேயே அத்தகைய ஆற்றல் பெற்றுப் பிறக்கின்றான்.
5.பிறந்த பின் இவன் அருகிலே விஷ ஜெந்துக்களோ மிருகங்களோ யானையோ மற்ற கொடூர மிருகங்களோ வருவதில்லை.
6.அவன் தான்… தன்னுடைய வளர்ச்சியில் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகின்றான்.
இதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். அதில் “சில விளக்க உரைகளைக் கூட்டி… இணைத்துத் தான்… ஒவ்வொரு தடவையும் கொடுப்பது…”
ஒவ்வொருவரும் தெளிந்த மனம் கொண்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
1.அந்த அருள் ஞானி ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அரும்பெரும் சக்திகளை
2.நீங்கள் பெற “இது உதவும்” என்பதற்கே மீண்டும் பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றேன்.
3.இதை நுகரச் செய்து… பதிவாக்கி மீண்டும் அதை நினைவாக்கப்படும் போது கடும் விஷத்தன்மையிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்கள் எண்ணம் உதவும்.
ஆகவே
1.எதனின் எண்ணத்தைப் பதிவு செய்கின்றீர்களோ
2.கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏங்கி நுகரும் போது அது வளர்ச்சி வரும் சக்தியாக அடைகின்றது.
3.அந்த வழியிலே நீங்கள் வளர வேண்டும்.
4.விஞ்ஞானப் பேரழிவிலிருந்து காக்கும் சக்தியாக வளர வேண்டும்
5.எப்பொழுது இந்த உடலை விட்டு அகந்றாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.
தீமை என்ற நிலையில் சிக்கி இன்னொரு உடலுக்குள் புகுந்து பிறப்பின் தன்மை அடையும் நிலையிலிருந்து விடுபட்டு இன்று நல்ல நினைவிருக்கும் பொழுதே அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்துத் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவி இல்லாப் பெரு நிலை அடைவதே நல்லது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு குழந்தை பிறந்து விட்டது என்ற உடனேயே நாம் ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.
அவன் பார்த்து விட்டு குழந்தை பிறந்த நேரம் சரியாக இல்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் மிருக குணம் அதிகமாக இருக்கும். அவன் அசுர செயல்கள் கொண்டு செயல்படுவான் என்று அந்த ஜாதகம் பார்ப்பவன் கணக்குப் போட்டுச் சொல்கிறான்.
1.இந்தக் குழந்தை ஏழரை நாட்டுச் சனி பிடித்தவன்.
2.உங்கள் குடும்பத்திற்கே ஆகாது என்று சொல்கிறான்.
மிருகங்கள் எப்படி தன்னைக் கட்டுபடுத்தாத நிலைகள் கொண்டு செயல்படுமோ அதே உணர்ச்சிப்படியே இவன் போவான். “அவனால் உங்கள் குடும்பத்திற்கே சனியன் பிடிக்கும்…!” என்று விளக்குகிறான் ஜாதகக்காரன்.
ஆனால் அந்தக் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லை.
குழந்தை பிறந்த ஜாதகத்தை அவன் கட்டத்தைப் போட்டு எழுதுகிறான். நாம் நம்பிக்கையுடன் போனவுடனே இதை எடுத்து நமக்குள் உருவாக்கி வைத்துக் கொள்கிறோம்.
அடுத்தாற்போல என்ன செய்கிறோம்…?
“குடும்பத்திற்குச் சனியன் பிடித்துவிட்டதே…!” என்ற இதே உணர்வை எடுத்துக் கொண்டவுடன் தொழில் ரீதியாக ஒருவரிடம் வியாபாரம் செய்தாலும் நம் பணத்தை இவன் கொடுப்பானா.. கொடுக்க மாட்டானா…! என்று நினைத்துக் கொண்டே பொருளைக் கொடுக்கிறோம்.
நம்முடைய இந்தச் சோக உணர்வு அவனுக்குள் போன பின் அவன் நம் பணத்தைக் கொடுக்கவே மாட்டான். நம் எண்ணமே அதை மாற்றி விடுகிறது.
ஏனென்றால் ஜாதகக்காரன் சொன்ன அந்த உணர்வைப் பதிவு செய்யும் போது அது நமக்குள் கடவுளாக மாறுகிறது. “அவன் தான் நம்முள் சிருஷ்டிக்கிறான்…!” என்ற நிலைகள் கொண்டு எண்ணத்தால் எடுத்து நமக்குள் இப்படி அறியாத நிலைகள் கொண்டு உருவாக்கி விடுகிறோம்.
அதே சமயத்தில்
1.ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை வேண்டி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்
3.அந்தக் குழந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருவிலிருந்து வளர்த்துப் பாருங்கள்.
4.குடும்பத்தில் தரித்திரம் இருந்தாலும் “அதை எல்லாம் நீக்கிடும் வல்லமை பெற்றவனாக” அந்தக் குழந்தை வளர்ந்து வருவான்.
சில வீட்டில் கர்ப்பமாக இருக்கும் போது பாருங்கள். ஆயிரம் சண்டை போடுவார்கள். பிறந்த பிற்பாடு அந்தக் குழந்தை என்ன செய்வான்…?
1.அந்தச் சண்டை போடும் வழக்கத்திற்கே போவான்.
2.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் வீட்டிற்குள் இழுத்துக் கொண்டு வருவான்.
ஏனென்றால் சண்டையை உற்றுப் பார்த்த உணர்வுகள் தாய் உடலில் ஊழ்வினையாகின்றது. கருவில் வளரும் குழந்தைக்கோ அது பூர்வ புண்ணியமாகின்றது.
ஆகவே இதை எல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அன்றைய அரசன் தன்னுடைய குழந்தை மிகவும் வலிமையாக இருப்பதற்காக என்ன செய்தான்…? அரசனின் மனைவி கர்ப்பம் ஆகி விட்டது என்றாலே ஒரு முடியில் விஷத்தைத் தொட்டு அதை உணவுடன் கலந்து அந்தத் தாய்க்குக் கொடுப்பார்கள்.
இப்படிப் பிறக்கும் குழந்தை வீரியமான வலு கொண்டதாகவும்… மற்றவர்கள் விஷத்தைக் கொடுத்தாலும் கொன்று விடமுடியாத அளவிற்கு இதைச் செய்தார்கள்.
மக்கள் யாரும் அதைச் செய்யவில்லை.
ஆனால் அதே சமயத்தில் குடும்பத்தில் கர்ப்பம் என்று தெரிந்தாலே ஒவ்வொரு நிமிடத்திலேயும் கருவில் இருக்கும் குழந்தை மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும். உலகில் வரும் தீமைகளை எல்லாம் அகற்றக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். நஞ்சை வென்றிடும் உணர்வு பெற வேண்டும் என்று குடும்பத்தில் இருக்கிறவர்களெல்லாம் சொல்லுங்கள்.
கர்ப்பமான தாயும் இந்த முறைப்படி எண்ணி அந்த மெய் ஞானிகளுடைய உணர்வை எடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தை அபூர்வ சக்தியாக ஞானக் குழந்தையாக வளர்வான்.
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். நீங்கள் ஜாதகக்காரனைத் தேட வேண்டியதில்லை…!


அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்
அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வேண்டினால் நமக்குள் பகைமை உணர்வுகள் வராது தடுக்கப்படுகின்றது. அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணி எடுத்தால் அது நமக்குப் பாதுகாப்பாகவும்… நமக்குள் நன்மை செய்யும் சக்தியாகவும் மாறும்.
அதே சமயத்தில் உலகுடன் ஒத்து வாழ வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.
அன்று தாய் கருவிலே உருப்பெற்ற அகஸ்தியன்…
1.அவனின் தாய் சந்தர்ப்பத்தால் விஷத்தை வென்றிடும் உணர்வுகள் பெற்று அந்த உணர்வின் சக்தியைத் தான் நுகர்ந்தாலும்
2.அதன் வழி கொண்டு தாய் கருவிலே விளைந்த உணர்வின் துணை கொண்டு
3.அவன் பிறந்த பின் தன் தாய் தந்தையை இன்னொரு பிறவி இல்லா நிலைகள் அடையச் செய்தான்.
துருவ நட்சத்திரம் என்று சொல்கின்றோமே…
1.அகஸ்தியனுடைய தாய் தந்தையும் அகஸ்தியனின் மனைவியும் இவர்கள் நான்கு பேரும் பிரம்மமாக நின்று அன்னை தந்தை அரவணைப்புடன்
2.நஞ்சை வென்றிட்ட உணர்வினைத் தன்னுடன் அரவணைத்து ஒன்றிய நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக உருப்பெற்று
3.அதனின் அரவணைப்பில் சப்தரிஷி மண்டலங்களாகத் தன் ஈர்ப்பு வட்டத்தில் வாழச் செய்து கொண்டுள்ளான் அன்று அகஸ்தியன்.
இதனை வழிப்படுத்தி கர்ப்பமுற்ற தாய் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஒவ்வொரு நாளும் மகரிஷிகள் உணர்வுகளைக் கருவில் இருக்கும் சிசு பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
1.துருவ மகரிஷியின் ஆற்றல் அங்கே பெற்று
2.நஞ்சை வென்றிடும் உணவுகள் பெற்று உங்களையும் காக்கும் உணர்வாக வருகின்றான்.
நமக்குள் வளர்ந்த இனமாக இருப்பினும் “நாம் எண்ணிய உணர்வின் கருவின் உணர்வை அது ஒளியாக மாற்றுகின்றது…” நமக்குள் தெளிவாக்கும் உணர்வின் தன் மகனாகவும் வருகின்றது. நமக்கு அருள் ஞானத்தைப் போதிக்கும் அருள் ஞானக் குழந்தையாகவும் வளர்கின்றது.
மனிதனின் வாழ்க்கையில் கர்ப்பம் என்று அறிந்தாலே துருவ மகரிஷியின் உணர்வுகள் கருவில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் உலக ஞானம் பெற வேண்டும் உலகைக் காத்திடும் உத்தம ஞானியாக வேண்டும் என்ற உணர்வினை நாம் எடுத்துக் குழந்தை பிறக்கும் வரையிலும் இந்த உணர்வினை வலுக்கூட்டிச் செயல்படுத்த வேண்டும்.
குழந்தை பிறந்த பின் உலக ஞானத்தை அவன் அறியும் தன்மையும் உலகைக் காத்திடும் உணர்வுகளும் அவனுக்குள் விளையும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அருள் ஞானிகள் உணர்வுகளைக் கருவில் வளரும் சிசுக்களுக்கு ஊட்டுதல் வேண்டும்.
எப்படி அகஸ்தியனின் தாய் தந்தையர் சந்தர்ப்பத்தால் விஷத்திலிருந்து விடுபடும் உணர்வுகளைத் தனக்குள் முலாமாகப் பூசும் போது… அவர்கள் நுகர்ந்த உணர்வுகள் கருவிலே வளரும் சிசுவுக்குள் இணைந்து… நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்று அதன் வாழ்க்கையில் நஞ்சை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றது போன்று…
1.நீங்களும் இந்த உணர்வின் தன்மையை அருள் ஒளி பெற வேண்டும் என்ற நினைவினைக் கூட்டி
2.அருள் ஞானக் குழந்தையாக உருவாக்கி உங்களைக் காத்திடவும்
3.இந்தப் புவியில் வாழும் மனித இனத்தைக் காத்திடும் உணர்வாக உங்களில் அருள் ஞானம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
4.அருள் ஒளிச் சுடராக அருள் ஞானக் குழந்தைகள் உருவாகட்டும்… உலகைக் காத்திடும் சக்தியாக மலரட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.
அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.
1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.
மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.
அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.
கந்த… அதாவது பல விதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!
அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பல விதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.
அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.
கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.


மனிதனின் வாழ்க்கையில் தன் தாயை மறந்தால் அவன் மனிதனே இல்லை
சிறு வயதிலே நாம் பல குறும்புத்தனங்கள் செய்கின்றோம்… தாய் என்ன செய்கின்றது…? தூக்கி நம்மை வெளியே எறிந்து விடுகின்றதா…? இல்லை.
அவன் எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும்… எதை எதையோ சொல்லி அவனை அரவணைத்து “இந்தடாக் கண்ணு அதைச் சாப்பிடுடா இதைச் செய்யிடா…! என்னடா இப்படிச் செய்கின்றாய்…?” என்று குழந்தையைக் கெஞ்சிப் பராமரித்து வருகின்றது.
ஆனால் வளர்ந்த பின் தன் தாய் ஏதாவது சொன்னால்… தாயைப் பார்த்து “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகின்றாய்…” என்று தாயைப் பேசுபவர்கள் தான் பலர் உள்ளார்கள். தாயை மறக்கும் நிலையே வருகின்றது.
1.தாயை மறந்திடாது எண்ணத்தில் கொண்டு வந்தால்
2.அந்த அருள் எப்பொழுதுமே உறுதுணையாக இருக்கும்.
ஒரு பித்துப் பிடித்த தாயாகவே இருந்தாலும் தன் குழந்தையை இன்னார் இந்த இடத்தில் அடித்து விட்டார்கள் என்று சொன்னால் போதும்.
பிள்ளை மீது கவனம் முழுமையாக இல்லை என்றாலும் “அடித்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்ட பின் உடனே பதறி அழுகும். ஆனால் அந்தப் பித்துப் பிடித்த தாயை ஒருவர் அடித்தால் அதனுடைய பிள்ளை இதைக் கேள்விப்பட்டு “கிரகம்…! அப்படித்தான் வேண்டும்” என்று சொல்லும்.
தாயைக் கவனித்துப் பார்ப்பார்களா…? என்றால் இல்லை. ஏனென்றால் இன்று மனிதனுடைய உணர்வுகள் அந்த வழிக்குச் சென்று விட்டது.
அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில்
1.தாயை எந்த அளவிற்குப் போற்றித் துதிக்கின்றோமோ
2.அந்த உணர்வுகள் என்றும் உறுதுணையாக இருக்கும்.
நண்பனுக்குள் உதவி செய்வது போன்று பின் தாயின் உணர்வுகள் நமக்கு உதவுகிறது. தாயை எண்ணி ஏங்கினால் அந்த உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும்.
ஒரு காரியமே நடக்கவில்லை என்றால்
1.அம்மா…! என்று ஏங்கித் தாயினுடைய அருளைப் பெற்று
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உடனடியாக அது கிடைக்கும்.
இதையெல்லாம் செயல் வடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மனிதன் என்ற முழுமை பெற வேண்டும் என்றால் இந்த நிலை அடைய வேண்டும். அதற்காக வேண்டித் தான் அம்மா அப்பாவை நினைவுபடுத்தி அக்காலத்தில் வணங்கும்படி செய்தார்கள் “விநாயகர் ஆலயத்தில்…”
இதை வினையாக்க வேண்டும் அருள் உணர்வுகளை கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.
நம் பாட்டன் பாட்டி… அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாகப் பிறந்து இருக்கின்றோம். அவர்கள் உடலை விட்டுச் சென்றிருந்தால்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களான முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி பெறும் சரீரம் பெற வேண்டும். பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் ஈஸ்வரா என்று
3.காலை துருவ தியான நேரத்திலே அவர்களை எண்ணி விண் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் ஒளியின் சரீரம் ஆகின்றார்கள். சப்தரிஷியுடன் ரிஷியாகின்றார்கள். அவர்கள் உணர்வு நமக்குள் இருக்கின்றது மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் உடனடியாக அந்தச் சக்தி இங்கே கிடைக்கும்.
இதை வளர்த்துக் கொண்டால் நாம் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம்முடைய உயிரான்மா அந்தச் சப்தரிஷி மண்டல எல்லைக்குச் செல்லும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டிவிட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.
சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.
டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.
இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப் பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.
இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.
நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.
அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.
உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?
ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.
அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட் புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.
அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப் போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.
விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.
சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்
யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம் என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.
ஏனென்றால் நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.
அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம்.
எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


“என்றோ நடந்தது…” என்றாலும் நீங்களும் அதைப் பெற முடியும்
ஆதியிலே… ஒவ்வொரு அணுக்களும் மோதி மேகமாகி மேகம் அடர்த்தியாகி எடையற்ற நிலைகளில் கூடுகின்றது. இப்படி ஒரு அடர்த்தியின் தன்மை அடைந்தபின் இந்த அணுக்கள் மேகக் கூட்டத்திற்குள் மோதுகின்றது.
மோதலான பின் நீராக வடிகின்றது. நீரான பின் பல விதமான உணர்வு கொண்ட அணுக்கள் அதனுடன் சிக்கி எடை கூடுகின்றது… நகர்ந்து ஓடத் தொடங்குகிறது.
ஓடும் நிலையில் உராய்கின்றது… வெப்பமாகின்றது… ஆவியாக மாறுகின்றது இந்த உணர்வுகள் இரண்டறச் சேர்த்து ஒரு பொருளாக உருவாகின்றது.
அதாவது… இயற்கை அதனுடைய சந்தர்ப்பத்தில் இதைக் கடந்த நிலைகள் கொண்டு ஒன்றின் தன்மை அடைந்த பின் ஓடும் வேகத்தில் சூடாகி ஆவியாகி இதற்குள் சிக்கிய உணர்வுகள் அணுத் தன்மையாகும் போது பரமாகிறது.
பரம் என்றால் எல்லை… ஒரு பொருளாகின்றது… ரூபம்…! அதற்குத் தான் “பரம்பொருள்” என்று காரணப் பெயரை வைக்கிறார்கள்.
1.இது எல்லாம் இயற்கை எப்படி விளைந்தது…? என்று அகஸ்தியன் மனிதனான பின் அணுவின் இயக்க ஆற்றலைக் கண்டுணர்ந்தவன் அவன்.
2.அவனுள் அவன் கண்டு… உண்மைகளை உணர்ந்து… உணர்வின் இயக்கம் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாக்கினான்
3.அவனுள் விளைந்த இந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டதை நமது சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
என்றோ நடந்தது…!
ஆனால் மனிதனான பின் தன்னை அறிந்து கொள்ளும் உணர்வால் அறிந்த அவன் (அகஸ்தியன்) அவனுள் விளைந்த உணர்வின் ஒலியலைகளைப் பரப்பப்படும் பொழுது சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது நமது பூமியில்.
ஏனென்றால் திட்டியவர்களை எண்ணும் பொழுது உடனே உங்களுக்குக் கோபம் வருகிறது. வேதனைப்படும்படி ஒருவன் செய்வதைப் பார்த்தவுடன் பாவிப்பயல் இப்படிச் செய்கிறானே….! என்ற உணர்ச்சிகள் தூண்டுகின்றது… இது விளைகிறது.
இதைப் போல
1.இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தப் பூமியில் படர்ந்திருப்பதை
2.எமது குரு… அவன் அருளைப் பெறும் உணர்வினை எனக்குள் பதிவு செய்து
3.நினைவு கொண்டு அதனைப் பார்…! அதை நுகர்ந்து அறி…! உலகம் எப்படி உருவானது என்ற உண்மையை உன்னில் நீ காண்.
4.இந்த உணர்வின் தன்மையை உனக்குள் விளையச் செய்
5.இயற்கை எப்படி விளைந்தது…? நீ மனிதனானது எவ்வாறு…? மனிதனான பின் நீ எவ்வாறு செயல்பட வேண்டும்…?
6.உன்னுடைய வாழ்க்கையினுடைய கதி என்ன…? (ஏனென்றால்) இந்த மனிதனுக்குப் பின் உடல் இல்லை.
உயிர் ஒளியானது… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுதல் வேண்டும். அந்த அருளைப் பெற்றவன் அகஸ்தியன். அவன் மண்ணுலகை வென்றான்… விண்ணுலகை அடைந்தான்… வானுலகையும் அளந்தான்… அண்டத்தையும் அறிந்தான்…!
அந்தச் சக்திகள் எல்லாம் பிண்டத்திற்குள் எப்படி விளைந்தது…? என்ற நிலையை அவன் கண்டுணர்ந்ததனால் அவனுக்குப் பின் வந்தவரால் “அகஸ்தியன்” என்று காரணப் பெயராக வைக்கப்பட்டது.
1.ஆதியில் நமது பூமியோ சூரியனோ இல்லாத காலங்களிளிருந்து “அதையெல்லாம்” அவன் அறிந்து உணர்ந்தவன்.
2.அவனுள் விளைந்த இந்தச் சக்தியைப் பெற்றால் அவன் அடைந்த எல்லையை நீங்களும் அடைய முடியும்,
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.
அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.
ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!
காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.
இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.
ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.
ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.
மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.
காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.
பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.
அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!
படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?
மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.
வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.
அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.
சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.
”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.
அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.


எண்ணவில்லை என்றால் “பதிவில்லை…” மீண்டும் நினைக்கவில்லை என்றால் “ஈர்ப்பு இல்லை”
ஒருவர் திட்டி விட்டார்… என்னை இப்படித் திட்டுகின்றான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்து விட்டால் மீண்டும் என்ன செய்கின்றோம்…?
திட்டினான்… திட்டினான்… திட்டினான்… என்று அவனுடைய உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி அவன் மீது வெறுப்பாகி இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் இதற்கும் வெறுக்கும் தன்மை வந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது… பல விதமான நோய்கள் உடலிலே உருவாகின்றது.
இதையெல்லாம் இயற்கை எவ்வாறு விளைகிறது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கே உணர்த்துகின்றேன். பொறுமையாகக் கேளுங்கள்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று அஞ்ஞான வாழ்க்கை வாழுகின்றோம். அண்டத்தையும் அளந்தறியும் சக்தியாகக் கம்ப்யூட்டர் என்று சாதனம் மூலமாகக் காணுகின்றார்கள். உடலின் இயக்கத்தையும் அறிகின்றான்.
எங்கோ காணா இடத்தில் இருப்பதையும் (கோள்கள்) இங்கிருந்து நுகருகின்றான். எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று நிலைகளில் இங்கே பதிவாக்கிப் பல ஆயிரம் மடங்கு பெருக்கி உந்து விசையால் விண்ணிலே ஏவுகின்றான்.
கோள் எங்கே இருக்கின்றதோ அதை இங்கே பதிவாக்கி அதை வைத்து இராக்கெட் என்ற சாதனத்தை விண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
1.தன் இனமான உணர்வு கண்டபின் அந்தக் கோளுக்கே இவன் செலுத்திய இராக்கெட்டை அழைத்துச் செல்கின்றது…
2.அங்கிருப்பதையும் அறியும்படி செய்கிறது.
இவ்வாறு இருக்கும் இன்றைய விஞ்ஞானக் காலத்திலே பக்தி மார்க்கங்களில்… யாரோ செய்வார் சாமியார் செய்வார் எந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் ஜாதகம் செய்யும் யாகம் செய்யும் வேள்விகள் செய்யும் என்ற நிலைகளில் தான் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.
நமக்குள் தீமை என்ற நிலை இருப்பினும் அதை நீக்கிட
1.அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அதை நமது உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகிறது
2.அவ்வழியில் அதைத் திரும்ப எண்ணும் பொழுது நமக்குள் அந்த நன்மை செய்விக்கும் நம் உடலை நலம் பெறச் செய்யும் சக்தியாக வளரும்
3.நம் சொல்லைக் கேட்போருக்கும் நலம் பெறும் சக்தியாக மாறும் என்பதனைத் தெளிவாகக் கூறி இருப்பினும்
4.அதை நாம் யாரும் இதுவரையிலும் பின்பற்றவில்லை.
சாமியார் வந்துவிட்டால் சாமியாரிடம் தான் பெரிய சக்தி இருக்கிறது என்று அவரிடம் ஆசி வாங்கச் சென்று விடுகின்றோம். ஆனால்
1.சாமி சொன்ன இந்த உணர்வின் சக்தியைப் பதிவு செய்து அதை மீண்டும் நினைவு கொண்டால் அந்த உயர்ந்த குணத்தை நாம் பெற முடியும்.
2.தனக்குள் தீங்கு விளைவிக்கும் உணர்வுகளை மாற்றி அமைக்க முடியும்.
3.நம் சொல் பிறரைப் புனிதமாக்க உதவும் புனிதமாக்கும் உணர்வுகள் நமக்குள் விளையும் என்ற இந்தத் தன்னம்பிக்கை வர வேண்டும்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அடிக்கடி நாம் ஒருவரைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் அடுத்து நாமும்… குறையான செயல்களைச் செயல்படுத்தும் அதுவாக மாறி விடுகின்றோம்.
அடிக்கடி ஒருவரை வேதனைப்படும்படி செய்தோம் என்றால் வேதனைப்படச் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து “ஐயோ எனக்கு மேல் வலிக்கின்றது… தலை வலிக்கிறது…” என்று வரும்.
இவர் நினைப்பார்…! நான் எல்லோருக்கும் நல்லதைத் தான் சொன்னேன். அவர் தவறு செய்வதைத் தானே நான் சொன்னேன் என்று…! ஆனால் தன்னை நியாயப்படுத்தி வேதனைப்படும்படி புண்படுத்தும்படி சொல்லைச் சொல்வார்.
இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்த பின்… கை வலிக்கின்றதே கால் வலிக்கின்றதே மேல் வலிக்கின்றது…! நான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே…! என்று பெரும் பகுதி பிறரைக் குறை கூறிப் பேசும் நிலைகளே நடக்கின்றது.
ஆனால் இவர்கள்
1.தெய்வத்திற்குப் பூமாலை சூட்டுவதும் அபிஷேகங்கள் செய்வதும் ஆராதனைகள் செய்வதும் இப்படிச் செய்தாலும்
2.பிறரிடம் சொல்லும் போதெல்லாம் தன்னைத்தான் எண்ணாது தவறுகளைச் செய்து கொண்டே அதை நுகர்வதும்
3.அப்படி நுகர்வதை உயிர் அந்த அணுவாக மாற்றி இவர் உடலாக மாற்றி அந்த உணர்வின் சக்தியாகத் தனக்குள் இயக்கும் என்பதை மறந்து விட்டார்.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் இயற்கை எப்படி விளைந்தது…? கடவுள் ஒருவனா…? கடவுள் ஒருவன் இல்லை…!
வெப்பம் காந்தம் விஷம் மணம் அந்தச் சத்து இந்த ஐந்தும் சேர்ந்து இயக்கும் நிலைகளில் உருவாக்கும் சக்தி பெற்றது. கடவுள் ஒருவன் என்றால் எப்படி நியாயமாகும்…!
ஓரு செடியானாலும் அது தான். ஐந்து புலனறிவு கொண்டு தான் எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் நிலையில்
1.ஒன்றுக்குள் சென்று உள் நின்று இயக்குவதே கடவுள்.
2.ஒரு உயிரணு இதை நுகர்ந்தால் உருவாக்குவதை ஈசன் என்றும்
3.உருவான பொருளைப் பிரம்மம் என்றும் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றும்
4.உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் துடிப்புக்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு என்று சாஸ்திரங்கள் தெளிவாக நமக்கு இப்படி உணர்த்துகின்றன.
நான் (ஞானகுரு) இப்போது பேசுகிறேன் என்றால்…
1.இது எல்லாம் ஆதியில் விளைந்த அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த அவனுள் விளைந்த உணர்வுகள் தான்
2.வெளியிலே பரவி உள்ளது… அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
3.அதை நீங்களும் நுகரலாம்…!
இந்த உலகில் மனிதனாகப் பிறந்தோர் அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து கொண்ட பின் அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது அதைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.
எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.
பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.
பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.
பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.
1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.
உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீல நிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.
நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.
இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.
தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப் பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.
அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,
இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.
அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.
ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்… என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்…!” இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.


எம்முடைய உபதேசங்கள் அனைத்தையும் கேட்டுப் பதிவாக்க வேண்டும்
எம்முடைய அருள் உரைகளைக் கேட்கும் அனைவரும் நீங்கள் இதை ஆழமாகப் பதிவு செய்து உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி அந்த மெய்ஞானியின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து
1.என்றும் அழியா பெருவீடு பெருநிலை என்று ஒளிச்சரீரம் பெற்று
2.நீங்கள் இந்த வாழ்க்கையிலே இருள் சூழ்ந்த நஞ்சினை நீக்கி ஒளி பெறும் உணர்வின் தன்மை உங்கள் உடலிலே வளர்த்து
3.அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நூல் வடிவிலே உங்களுக்கு நினைவு கூறுகின்றோம்.
உபதேச வாயிலாகக் கொடுத்ததை எழுத்து வடிவில் கொண்டு வரும் பொழுது சொல் வடிவிற்கும் எழுத்து வடிவிற்கும் சில குறைபாடுகள் இருப்பதினால் யாமே இதை எழுத முடியாததால் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவரை வைத்து இதை எழுதுவதினால்
1.சிறிது மாற்றங்கள் குறைகள் இருந்தாலும்
2.அதை மீண்டும் நீங்கள் தியானிக்கும் பொழுது இதனின் உணர்வுகளை நீங்கள் நிறைவு பெறும் சக்தியாகப் பெறுகின்றீர்கள்.
ஆகவே அந்தக் குறைகளை எண்ணாது மீண்டும் மீண்டும் இதைப் படிக்கும் பொழுது இடைவெளியில் விடப்பட்ட சிறு குறைகளையும் அதை நீக்கக்கூடிய சக்தியாக உங்கள் உணர்வுக்குள் தோன்றி அதில் நிறைவு செய்யும் நிலையை நீங்கள் அடைகின்றீர்கள்.
1.நீங்கள் படிக்கும் பொழுது எத்தகைய குறை வந்தாலும் மீண்டும் இதைத் திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்றால்
2.அந்த அருள் மகரிஷியின் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
3.எழுத்து வடிவில் வரும் குறைபாடுகளை நீக்கிவிட்டு மூலப்பொருளை நீங்கள் அறிந்துணர்ந்து
4.உண்மையை உங்களுக்குள் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.
இந்த உணர்வோடு நீங்கள் படித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் அந்த மகரிஷியின் அருள் சக்தியை சேர்த்துப் பாருங்கள்.
1.எழுத்து வடிவில் மாற்றங்கள் இருந்து உண்மைகள் மறைந்து இருந்தாலும்
2.அந்த உண்மைகளைத் தெளிந்திடும் சக்தியாக உங்களுக்குள் உணர்வதை நீங்கள் பார்க்கலாம்.
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழிப்படி விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று இந்த மண்ணின் ஆற்றலுக்குள் இருந்த தீமைகளை அகற்றி இந்த உணர்வின் சக்தியை ஒளியாக மாற்றி விண்ணின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்து என்றும் அழியா ஒளிச்சரீரமாக அதைப் பெறும் நிலையாக உங்களுக்குள் ஊட்டப்படுவது தான் இந்தத் தியானத்தின் அறவழிகள்.
ஆகவே இதைத் தெளிவாகத் தெரிந்து இதைக் கடைப்பிடித்து இந்த வாழ்க்கையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று அந்த உணர்வின் சக்தி ஒளியாக மாற்றும் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் உங்கள் நினைவலைகள் சென்று என்றுமே அந்த மகரிஷிகளின்ன் நினைவுடன் நீங்கள் இருக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றோம்.
தபோவனத்தில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட
1.அனைத்துப் புத்தகங்களையும் அனைத்து ஒலி நாடாக்களையும் அதில் வெளிப்பட்டுள்ள உபதேசங்களை நீங்கள் படித்து கேட்டு…
2.மேற்கூறியவாறு சக்தி பெற வேண்டும் என்று உங்களைச் சதா பிரார்த்திக்கின்றோம்.
கூட்டுத் தியானம் இருப்போம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். ஆத்ம சக்தி செய்வோம்… அன்றாட வாழ்க்கையில் வரும் நஞ்சினை வெல்வோம். மகரிஷிகளின் அருள் சக்தியால் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனைப் பெறுவோம்.
பொன்னான இந்த மனிதச் சரீரத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுடன் வாழ்ந்து வளர்வோம்
1.நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று சதா பிரார்த்திப்போம்.
2.நாம் பார்க்கும் எல்லோரும் நலம் பெற வேண்டும் வளம் பெற வேண்டும் என்று தியானிப்போம்.
3.தபோவன தியான மண்டபத்தில் நீங்கள் அமர்ந்து தியானித்தால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.
இது எதனால் வருகிறது…?
சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.
ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.
அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.
அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.
அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.
யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.
ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.
ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.
1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!
ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.
1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.
கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.
உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.
இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.
அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.
ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.
இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின்… தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.
ஏனென்றால் அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.
அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.
வலுக்கொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.


நல்லதைக் காப்பதற்காக “அடுத்தவர்களிடம் நாம் வாதம் செய்ய வேண்டியதில்லை”
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கிறது. அதை எல்லாம் மறந்து விட்டு
1.நாம் இப்படித் தான் நல்லதாக வர வேண்டும் என்ற நிலையில் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பாய்ச்சி
2.எல்லோரையும் மகிழ்ந்து வாழச் செய்வதற்குத்தான் கூட்டுத் தியானங்களை அமைத்திருக்கின்றோம் (ஞானகுரு)
3.ஆகவே தியானத்தை கடைப்பிடிப்போர் அனைவருமே வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாகக் கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.
கூட்டுத் தியானத்தில் எடுக்கின்ற சக்தியை வைத்துத் தான் அதிகாலை விழித்ததும் வீட்டிலே நீங்கள் தனித்து எடுத்தாலும் துருவ தியானத்தின் மூலமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாக இருக்கும்.
அதற்கடுத்து உங்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அவர்களைப் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யத் தியானிக்க வேண்டும்.
இதை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மட்டும் செய்துவிட்டு அப்படியே விட்டு விடக் கூடாது… அனுதினமும் செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் எப்போது குறையைக் காணுகின்றோமோ உடனே அது நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும். “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
சந்தர்ப்பவசத்தால் பிறருடைய நிலைகளை நாம குறையாக எடுத்துக் கொண்டோம் என்றாலும் கூட மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நமக்குள் துடைத்துக் கொண்டு
1.“நீங்கள் உண்மையை உணர்வீர்கள்…!” என்று மட்டும் சொன்னாலே போதும்.
2.வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம்… அந்தக் குறை நமக்குள் வராது.
3.அவர்கள் மீது அதிகமான வெறுப்பு உணர்வு கொண்டு ஜாஸ்தி பேச வேண்டியதில்லை.
4.சரி… எனக்கு வேண்டாம்… நீங்கள் சொன்னதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்…
5.நன்றாக இருப்பீர்கள்…! என்ற சொல்லிவிட்டு விலகிக் கொள்ள வேண்டும்.
நல்லதுக்காக நாம் அவர்களுடன் வாதம் செய்து கொண்டிருந்தால் நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
1.அவர்களை நினைக்கும் பொழுதெல்லாம் “என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள்…! என்ற சோர்வும் வேதனையும் நிச்சயம் வரும்.
2.அப்பொழுது அந்த வேதனையை எடுத்தால் சிந்திக்கும் தன்மை குறைகிறது.
3.இத்தகைய உணர்வுகளை எல்லாம் நம் உயிர் உருவாக்கிவிடும்.
4.அவர்களை நினைத்து வெறுப்பையும் வேதனையையும் நம்மை அறியாதபடியே நாம் வளர்த்துக் கொள்கிறோம்.
அந்த மாதிரி ஆகாதபடி அவர்கள் அறியாத இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும். மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும். அவர்கள் அருள் ஞானம் பெற வேண்டும் என்று இந்த நினைவை எடுத்துக் கொள்ள வேண்டும். நமக்குள் வெறுப்பு வராது.
இது நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வந்தாக வேண்டும். குருநாதர் காட்டிய வழியில் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால் மற்றவர்கள் மரியாதை கொடுக்கக்கூடிய அளவுக்கு நாம் வளர்ந்து காட்ட வேண்டும்.
“ஒரு தெய்வீகப் பண்புள்ளவர்கள்…!” என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படித் தோற்றுவிக்கும் நிலைகளுக்கு நாம் வளர வேண்டும். சேவை மனப்பான்மை வர வேண்டும்.
பிறருடைய தீமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் தெளிந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று அருள் உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிட வேண்டும்.
1.நம் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடியதாக வர வேண்டும்.
2.அந்தளவுக்கு நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு மருந்தையோ மற்றதையோ நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தாலும் கூட அவர்களுக்கும் உதவியாக இருக்கும். கூடுமான வரையிலும் அவர்கள் நோய் நீங்கும்.
ஆனால் அதற்காக வேண்டி மருந்து குடிக்காமலே நல்லதாக வேண்டும் என்பதில்லை. உடனடி நிவாரணத்திற்கு அந்த மருந்து உதவும்.
1.ஆனால் அந்த மருந்திற்கு வீரியம் ஊட்ட
2.உங்கள் வாக்கு நிச்சயம் பயன்படும்.
ஏனென்றால் ஒரு கடுமையான வேதனைப்படுவோர் உடலில் நல்ல மருந்தினைக் கொடுத்தாலும் அவரின் வேதனை உச்சகட்டம் ஆகி விட்டால் மருந்து கொடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளாது
அதற்காக வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்து விட்டு அந்த உணர்வுடன் மருந்தை அவரை உட்கொள்ளும்படி செய்தால் உடனடியாக அது நல்லாகும்.
என்ன இருந்தாலும்
1.தூசியைத் துடைக்கின்ற மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்து எடுத்து
2.உடனுக்குடன் நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அதே சமயத்தில் நமது நினைவாற்றல் முழுவதும் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடனே இருக்க வேண்டும்.
4.தீமை செய்யும் எண்ணங்களை முறித்திட வேண்டும். நீக்கிட வேண்டும். அந்த உணர்வுகள் நமக்குள் வளரக் கூடாது.
கல்யாணராமா…! அதாவது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பிறருடைய தீமைகளை அகற்றிவிட்டு தம்முடன் இணைந்து வாழும் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் செயல்படுத்த வேண்டும்.
“ஆயுள் கால மெம்பர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறை இது…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சமையல் செய்யும் பொழுது அதிலே பல பல பொருள்களைப் போடுகிறோம். நெருப்பை வைத்து வேக வைக்கப்படும் பொழுது பார்த்தால் பல விதமான வாசனைகள் வருகிறது.
1.ஏனென்றால் நெருப்பிலே போட்டு இரண்டறக் கலந்து
2.அது வேகப்படும் பொழுது தான் அது ருசியாக மாறுகிறது.
3.இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் இரண்டறக் கலக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
எப்படி…?
நம் உயிர் இந்த உடலுக்குக் குருவாக இருக்கின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கோ வியாழன் கோள் குருவாக இருக்கின்றது.
நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களிலிருந்தும் வெளி வரும் தூசிகள் (கதிரியக்கச் சக்திகள்) ஒன்றுடன் ஒன்று மோதி மின்னல்களாகத் தாக்கப்பட்டு மற்ற கோள்களின் சத்துடன் கலக்கப்பட்டு அந்த உணர்வுகள் வந்தாலும்
1.இவை அனைத்தையும் ஒருக்க ஏற்றி இணைத்திடும் பாலமாக வியாழன் கோள் இருக்கின்றது.
2.ஆக எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வியாழன் கோளின் சத்து கலந்தால் தான்
3.மற்றதுடன் இணைத்து அந்த அணுத் தன்மைகளை மாற்றும் நிலை வரும்.
4.(இல்லை என்றால் வளர்ச்சி இருக்காது)
அதே போல் தான் நம் உயிரின் தன்மையும் குருவாக இயக்குகிறது.
ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் எதை எல்லாம் பார்க்கின்றோமோ கேட்கின்றோமோ நுகர்கின்றோமோ அதையெல்லாம் நம் உயிர் இணைத்து நம் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக மாற்றுகின்றது. இது தான் நம் உயிரின் இயல்பு.
இயல்பாக இப்படி இருந்தாலும்
1.நம் உயிரின் துணை கொண்டு அதாவது உயிரான குருவின் துணை கொண்டு
2.எந்தெந்த உணர்வின் தன்மைகளைச் சேர்க்கின்றோமோ
3.அதற்குத்தக்கவாறு மற்றதை எல்லாம் நாம் மாற்ற முடியும்.
நமது ஆறாவது அறிவை முருகா என்றும் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் என்றும் காட்டினார்கள் ஞானிகள். அதே சமயத்தில் முருகனை “குமரகுரு… குருபரன்…!” என்றும் சொல்வார்கள். ஏனென்றால் அதை வைத்து மாற்றியமைக்கும் தன்மை வருகிறது.
ஆக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய மெய் ஞானிகளின் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி நமக்குள் இணைத்திடல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் உணர்வை இப்படி இணைத்தால் வாழ்க்கையில் வரும் துன்பங்களை எல்லாம் அகற்றி உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அமைக்க முடியும்…!
இதைக் கொண்டு நாம் இணைத்து நல்ல உணர்வுகளை நாம் வளர்த்தல் வேண்டும். நம் ஞானிகள் காரணப் பெயரை வைத்துக் காட்டியதன் நிலைகள் சாதாரணமானதல்ல.
யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்றால் யாரும் செய்து கொடுக்க முடியாது…! உருவாக்கும் சக்தியான உயிரிடேமே வேண்டினால் தான் நாம் மாற்றி அமைக்க முடியும்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.


கண்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி
இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள்…
1.உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உடல் நலத்தோடு இருக்க வேண்டும் என்று அந்தச் சக்தியை முதலிலே நாம் பெறுதல் வேண்டும்.
2.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையை உருவாக்குதல் வேண்டும்.
இந்த உணர்வின் சக்தி கொண்டு குழந்தைகளுக்குள் சில குறைபாடுகள் இருப்பினும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற வேண்டும் என்று குழந்தைகளுக்கு இந்த ஆசியை ஊட்டுங்கள்.
நம்முடைய நினைவுகள் அதுவாக இருக்க வேண்டும்.
கல்வியில் திறன் இல்லை என்றாலும்
1.மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்கள் பெற வேண்டும்
2.கல்வியில் சிறந்தவனாக வளர வேண்டும்
3.என்றும் அருள் வழியிலே வாழ வேண்டும் என்று எண்ணங்களைக் கூர்மையாக அவன் மேல் பாய்ச்சுங்கள்.
அதைப் போல குழந்தைகளும் எண்ணி ஏங்கி இதைப் பதிவாக்குங்கள்.
அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் என்ற உணர்வை ஒன்று சேர்த்து இணையுங்கள்.
அப்படி இணைக்கக் கற்றுக் கொண்டால் இந்த உணர்வின் சக்தி நிச்சயம் குழந்தைகளுக்குள் ஞானமாக வளரும்… அந்த உணர்வின் தன்மை விளைகின்றது. குழந்தைகள் மீது இப்படித்தான் பாசம் வைக்க வேண்டும். கல்வியில் சிறந்த ஞானம் வரும்.
இன்று தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான அறிவில் சிக்குண்ட நாம் ரேடியோ டிவி இதைப் போன்ற நிலைகளில் பார்த்து கர்ப்பமுற்று இருக்கும் காலங்களில் பகைமை உணர்வுகளையும் மற்ற தீமைகளின் உணர்வுகளை அதிகமாகப் பார்க்கப்படும் பொழுது இதைப் பதிவாக்கி விட்டால்… பிறக்கும் குழந்தைகள் அதைத்தான் செய்யும்.
ஆனால் கர்ப்ப காலங்களில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று யாம் உபதேசித்த உணர்வுப்படி
1.அகஸ்தியன் பெற்ற சக்திகளை எல்லாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினைச் செலுத்தினால்
2.வியாசகன் எப்படி விண்ணுலக ஆற்றலைக் கண்டானோ இந்த உணர்வுகள் அனைத்தும்
3.கருவிலே வளரும் குழந்தை அதை அறியும் ஆற்றல் பெறும்.
அகஸ்தியன் எவ்வாறு வானஇயலையும் துருவத்தின் ஆற்றலையும் புவியியலையும் அறிந்தானோ கருவிலே வளரும் குழந்தைகள் அதைப் பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்குங்கள் துருவ தியான நேரத்தில்.
அதன் உணர்வைத் தனக்குள் செலுத்துங்கள்… தன் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
கண்ணின் நினைவை உள்ளுக்குள் செலுத்தப்படும் பொழுது இந்த உணர்வலைகள் கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அது பாயும். நமக்குள் வளர்ச்சி கொண்டிருக்கும் அணுக்களுக்குள்ளும் இந்தச் சக்தி பெருகும்.
கண்ணின் பார்வை எங்கிருந்தாலும் அதைத்தான் “பரமாத்மா” என்று சொல்வது.
1.நாம் இந்த நினைவை… இந்தப் பிரபஞ்சத்திற்குள் எங்கே நினைவைச் செலுத்தினாலும்
2.அதை ஈர்க்கும் சக்தி நம் கண்களுக்கு உண்டு.
அதை ஈர்க்கும் சக்தி கொண்ட மனித உடலுக்குள் உங்களுக்குள் பதிவு செய்யப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற நினைவின் ஆற்றலைச் செலுத்துங்கள்.
எனக்கு குருநாதர் அதை கொடுத்ததால் தான்…
1.அந்த வலிமை கொண்டு பெறும் சக்தியும் அதை அறிந்திடும் உணர்வும் வளர்த்திடும் உணர்வும் பெற்றாலும்
2.உங்களுக்குள் நீங்களும் அதை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தான் உங்களுக்குள் இதைப் பதிவு செய்கிறேன்.
நீங்கள் அனைவரும் பெற்று உங்களைச் சார்ந்தவர்களையும் அதைப் பெறச் செய்து பகைமைகளையும் தீமைகளையும் அகற்றும் சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதை நீங்கள் எல்லோரும் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் மின் கதிர்கள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகித் தாக்கும் பொழுது மின்னல்கள் உருவாகின்றது. அத்தகைய மின்னல்கள் கடலிலே தாக்கப்படும் போது அதற்குள் அடங்கி மணல் பாங்காக மாறுகின்றது. அதை விஞ்ஞானி பிரித்து எடுத்து கதிரியக்கப் பொறியாக மாற்றுகின்றான்.
மாற்றிய கதிரியக்கச் சக்தியை வைத்து அணு உலைகளை உருவாக்கி அணு குண்டுகளையும் உருவாக்கி விட்டார்கள். அணுவின் இயக்கத்தைப் பிரித்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி ஒரு பொருளுடன் மோதச் செய்து வெடிக்கச் செய்து நாட்டையே அழிக்கும் தன்மைக்கு வந்துவிட்டார்கள்.
இயற்கையில் இரு நட்சத்திர உணர்வுகள் மோதும் போது மின் கதிர்களாக எப்படி மாறுகின்றதோ அதே போல விஞ்ஞானிகளால் பிரித்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கதிரியக்கச் சக்திகளையும் அவன் சோதித்து இது இரண்டையும் மோதச் செய்யும் போது அதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது,
பூமியில் உருவான ஒவ்வொரு பொருளுக்குள்ளும் (கல்லானாலும் மணலானாலும் மற்ற எதுவாக இருந்தாலும்) நட்சத்திரத்தின் சக்திகள் பதிந்துள்ளது. செயற்கையில் உருவான நிலைகள் கொண்டு வெடிக்கச் செய்து இரண்டும் மோதும் போது
1.கல்லுக்குள் இருக்கும் உணர்வுகள் அது வீரியம் ஆகி
2.அந்தக் கல்லை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் பஸ்பமாக ஆவியாக மாறி
3.மரங்களுக்குள்ளும் மனித உடலுக்குள்ளும் மற்ற உயிரினங்களுக்குள்ளும் அனைத்திலும் ஊடுருவி
4.அதற்குள் இருக்கும் எதிர் நிலையான நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி மின்னலைப் போன்று மின்னிப் பொசுக்கிப் பூராவற்றையும் பஸ்பமாக்குகிறது.
ஆகவே இதைப்போல விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அணு விசைகள் அனைத்தும் மக்களையும் நாட்டையும் அழிக்கும் உணர்வுகளுக்கே பயன்பட்டது. நாட்டாசை கொண்டு உலகை அழித்திடும் உணர்வுகளுக்கே அதைப் பயன்படுத்துகின்றார்கள்.
அன்றைய அரசர்கள் மந்திரங்களைச் சொல்லி மாயங்களைச் சொல்லித் “தான் சக்தி பெற்று வாழ வேண்டும்…!” என்று அவர்கள் வித்திட்ட அதே உணர்வே இன்றும் இயக்கிக் கொண்டுள்ளது.
அசுர உணர்வு கொண்டு ஒரு மனிதனுக்கு மாமிசங்களைக் கொடுத்து சோம பானம் (மது) என்ற உணர்வுகளைக் கொடுத்து அவனை மதி மயங்கச் செய்து மந்திர ஒலிகளை எழுப்பி அவனுக்குள் அதை வளர்க்கப்பட்டு அவன் இறந்த பின் அந்த உணர்வை மந்திரத்தால் கவர்ந்து கொண்டார்கள் அன்றைய அரசர்கள்.
தனது ஆட்சிக்காக வேண்டி இதைப் போன்ற நிலைகளை ஒரு இயக்கச் சக்தியாக மாற்றி பில்லி சூனியம் ஏவல் என்ற நிலையில் மனித உடலுக்குள் மோதச் செய்து மற்ற எதிரி நாட்டாரைப் பித்தனாகவும் பைத்தியக்காரனாகவும் தன்னை மறந்து செயல்படும் நிலைகளுக்கு அன்று அரசர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தார்கள்.
அதைப் போலத் தான் இன்று விஞ்ஞானிகளும் விஞ்ஞானக் கருவி கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்ற நிலைகள் கொண்டு வந்து மனிதனைப் புத்தி பேதமாக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஆக மொத்தம் நியூட்ரானும்… எலக்ட்ரிக் – எலெக்ட்ரான்… அதே சமயத்தில் கதிர் இயக்கப் பொறியான அந்தக் கதிர் வீச்சின் உணர்வுகள்…! இந்த மூன்றையும் தனித்தனியாக எடுத்தாலும் அதிலே “நியூட்ரான்…” என்ற அழுத்தம் கடும் விஷத் தன்மை கொண்டது.
விஷத் தன்மை கொண்ட நிலையில் சுழல் போல உருவாகி அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதி
1.கட்டிடங்களிலேயோ மரங்களிலேயோ மற்றதுகளிலேயோ மோதும் போது
2.அது பூராவற்றையும் தூசி தூசியாகக் கரைத்துத் தூக்கி எறிந்து கொண்டு போகும்.
வலுக் கொண்ட கட்டிடங்களாக இருந்தாலும் அதற்குள் ஊடுருவி இந்தக் கதிர் இயக்கங்களின் விஷத் தன்மையால் அதனுடைய சக்தியை இழக்கச் செய்து காற்றலைகளாகப் பறக்கின்றது.
1.அதே சக்தி கடல் நீர்களிலே படரப்படும் போது கொதிகலனாக மாற்றி
2.மிகப் பெரிய மேகக் கூட்டங்களைக் கூட்டிச் சூறாவளியாக மாறி
3.நீரை எல்லாம் தனக்குள் அள்ளி வீசி மழை நீர் கொட்டு கொட்டென்று கொட்டி
4.நகரங்களையே சுத்தமாக அழித்திடும் உணர்வுகள் விஞ்ஞான அறிவால் இன்றைக்குப் பெரும் பகுதியான நிலைகள் வருகின்றது.
இன்று (இப்பொழுதும்) மிகப் பெரிய புயல் என்று சொல்கிறார்கள் அல்லவா… (CYCLONE, TYPHOON, HURRICANE). இது எல்லாமே ஏற்கனவே பரீட்சாந்திரமாகச் சோதித்த நிலைகளும் அணு உலைகள் மூலமாகக் கசிந்த கதிரியக்கச் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டுப் பரவியதே காரணம்.
1.பரவி இருக்கிறது என்றால் பூமிக்கு வெளியில் மட்டுமல்ல.
2.பூமியின் நடு மையத்திலும் கலந்து விட்டது.
3ஆகவே எப்பொழுதெல்லாம் அது எதிர்மறையாகின்றதோ அப்பொழுதெல்லாம் எதிர்பாராத நிலைகளாக இது நடக்கும்.
4.எங்கெங்கு அதிகமாக அந்தக் கதிரியக்கங்கள் கசிந்ததோ அங்கே இதனின் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்
5,இவர்கள் வைத்திருக்கும் கருவிகளால் அதை முழுமையாகக் கணிக்க முடியாது. அப்படியே கணித்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஆகவே இதைப் போன்ற சூறாவளி என்று வரப்படும் பொழுது அதன் உணர்வுகள் நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக வளர வேண்டும். விஞ்ஞானத்தால் விளைந்து கொண்டிருக்கும் இத்தகைய இருள் சூழ்ந்த நிலைகளை முறியடிக்கும் சக்தியாக நாம் வளர வேண்டும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன்… தன் உணர்வின் தன்மை ஒளியாக்கி உலகில் உள்ள நஞ்சினை வென்று ஒளியின் உணர்வைப் பெற்றவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.
அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெற்று நாம் இடும் மூச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியில் பரவும் நிலைகள் கொண்டு மக்களை நல்வழிபடுத்தும் உணர்வாக அது அமைந்து அதன் மூலம் நாமும் வாழ்ந்து நமது எதிர் கால சந்ததிகளையும் அருள் வழியில் வாழச் செய்வோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வைக் கூட்டி இருளை அகற்றி உணர்வை ஒளியாக்கி தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடும் நிலை பெறுவோம்.
1.விஞ்ஞான அறிவில் வரும் உணர்வுகளை நமக்குள் வராது
2.ஒரு சுழல் காற்றாக நாம் இடும் மூச்சலைகள் ஒவ்வொன்றும் அது செயல்படும்…!
3.உங்களை நீங்கள் நம்புங்கள்.
4.நம்மைக் காப்போம்… நம் வீட்டைக் காப்போம்.. நம் ஊரைக் காப்போம்… உலகை காப்போம்…! என்ற உணர்வு கொண்டு நாம் செயல்படுவோம்.


“அன்னை தந்தையரின் அரவணைப்புடன் விண் சென்றவர்கள்” எண்ணிலடங்காதோர் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு
அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது பெற்ற ஆற்றல்களை எல்லாம்… அவனைச் சுற்றி இருந்த வட்டாரங்கள் அனைத்தும் இந்த அதிசயங்களைப் பார்க்கின்றது… பார்த்து ஆச்சரியப்படுகின்றார்கள்.
1.இவன் நுகர்ந்த உணர்வுகள் வெளிவரும் பொழுது “உற்றுப் பார்த்தபின்”
2.இந்த உணர்வின் தன்மை அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கும் இதைத் தெரிந்திடும் அறிவாக வருகின்றது.
இவனுக்குள் விளைந்த அலைகளைக் கூர்மையாக அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது இவன் காணும் அதிசயங்களை மற்றவர்களுக்கும் அறியும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகிறது. அவைகள் இன்றும் உண்டு.
அகஸ்தியன் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் பெரும்பகுதி நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது… 10 வருட காலம் காடு ,மேடெல்லாம் அலைந்தது.
1.அகஸ்தியர் எந்தப் பகுதிகளுக்கு எல்லாம் சென்றாரோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையச் சொன்னார் குருநாதர்.
2.குருநாதர் பதித்த உணர்வினை ஆங்காங்கு சென்று அதைப் பதிவாக்கிய பின் எது உண்மை எது பொய் என்பதை அறியும் பருவத்தைக் கொடுத்தார்..
3.இன்றும் எல்லோரும் அதை நுகர முடியும்.
4.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் நிச்சயம் அதை நுகர முடியும்.
5.நுகர்வதற்குத் தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன்.
வானை நோக்கி அகத்தியன் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அவனுக்குள் சிறுகச் சிறுக அந்த ஆற்றல்கள் வளர்கின்றது.
மிருக இனங்களோ விஷ ஜந்துகளோ பூச்சிகளோ எல்லாமே இவனைக் கண்டு விலகி ஓடுகின்றது. கொசுக்களும் எரி பூச்சிகளும் ஓடுகின்றது… இவன் மேல் பட்டால் மடிந்து விடுகின்றது. குரு அருளால் இதையெல்லாம் என்னால் காண முடிந்தது… அறிந்து கொள்ள முடிந்தது.
நான் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்டால் ஓம் நமச்சிவாய…!
1.திருப்பி இந்த உணர்வின் தன்மையை அதிகமாக நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த உண்மையின் உணர்வுகளை நீங்களும் அறியலாம்.
2.பிறருடைய தீமைகளைப் போக்கவும் உங்களால் முடியும்.
சாமி மட்டும் கெட்டிக்காரர் அல்ல. குரு கொடுத்தார்… அதை வளர்த்துக் கொண்டேன். குரு காட்டிய வழியில் உங்களுக்குள்ளும் இதை வளர்க்கச் சொல்கின்றோம்.
வளர்த்துக் கொண்டால் நீங்களும் அதைச் செயல்படுத்த முடியும் பிறருடைய தீமைகள் விடுபட வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் அந்தச் சக்திகளை வளர்த்தால் உங்களுக்குள் தீமையை நீக்கும் சக்தி வளர்கின்றது.
அகஸ்தியரும் அவர் மனைவியும் அவர்கள் இரு உணர்வும் ஒன்றாக இணைந்து… எந்தத் துருவத்தைக் கூர்மையாக உற்றுப் பார்த்து நுகந்தார்களோ… அந்த உணர்வின் வலிமை கொண்டு உடலை விட்டுச் சென்ற பின் அதே எல்லையை அடைகின்றார்கள்.. பூமிக்கு வரும் உணர்வினை ஒளிக்கதிராக மாற்றுகின்றார்கள். “இது ஓர் குடும்பம்…”
அகஸ்தியன் தாய் தந்தையர் அவன் உடலிலே இருந்தார்கள். அந்தச் சக்தி கொண்டு அதே ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
1.இதைப் போன்று சென்றவர்கள் இவருடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றவர்கள் இணைந்து
2.அன்னை தந்தையின் அரவணைப்பில் இருக்கும் இவனைப் போன்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போர் பலரும் உண்டு.
அன்னை தந்தையை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்… உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்… அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில் அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் அழியா ஒளிச்சரீரமாக.
சப்தரிஷி மண்டலங்களிலே பார்க்கலாம் எண்ணிலடங்காத நிலைகள்…!
1.நம் கண்ணுக்கு புலப்படாதது ஏராளம் உண்டு… டெலஸ்கோப்பை வைத்துப் பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய நிலைகள் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அதன்பின் சென்றவர்களும் பலர் உண்டு.
3.அந்த எல்லையை அடைவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக தண்ணீரின் மீது சூரிய வெயில் அடிக்கடி பட்டதென்றால் விஷம் (POISON) உண்டாகிறது. விஷத்தின் தன்மை பச்சை பசேலென்று என்ன கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது. அந்தத் தொட்டியில் உறைகிறது.
அப்புறம் பார்த்தால் கொடி போல உருவாக ஆரம்பித்து விடுகிறது. கொடி போல உருவான பிறகு மனிதனோ மற்ற உணர்வின் உணர்ச்சிகளோள் அதிலே படும்போது அதற்குள் சேர்ந்து அணுத் தன்மை உண்டாகிறது.
தொட்டியிலே முதலில் தண்ணீர் இருக்கும் பொழுது பார்த்தால் ஒன்றும் இருக்காது. ஆனால் மேலே சொன்ன நிலைகள் ஆன பின் பார்த்தால் தண்ணீருக்குள் கொச… கொச… என்று நெளிந்து கொண்டிருக்கும்.
இது எங்கிருந்து உற்பத்தியாகிறது…? சூரியனின் ஒளிக்கதிர்கள் அதனின் உணர்வின் தன்மை உறையும் போது கொஞ்சம் கொஞ்சமாக உறைகிறது.
சாதாரணமாக சிறு நீரைக் கழிக்கிறோம் என்றால் இந்த உடலில் உணர்வுகள் அது மோதல் ஏற்படும். மோதலால் ஏற்படும் உணர்வுகள் உறையும். கொஞ்சம் கொஞ்சமாக உறைந்து சுண்ணாம்புக் கல் போல வரும். சிறுநீர் கழிக்கும் இடங்களில் இதைப் பார்க்கலாம்.
இதே மாதிரி ஒவ்வொரு தன்மையும் நம் இரத்த நாளங்களில் இது கலையும். இதைத் தான் நாம் எடுக்கக்கூடிய உணர்வுகளில் விஷங்கள் வந்தால் நம் கிட்னி (KIDNEY – சிறு நீரகங்கள்) அந்த இரத்தத்தைச் சுத்திகரிப்பு செய்கிறது.
1.ஆகாரத்திற்குள் சேர்ந்து வரும் சில விஷங்களையும் வடிகட்டுகிறது.
2.நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கும் நிலைகளையும் இந்தக் கிட்னி வடிகட்டுகிறது.
3.அதாவது நாம் சுவாசிக்கும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுகள் இரத்தத்தில் தான் மீண்டும் கலக்கிறது. அதை வடிகட்டி அனுப்புகிறது.
வடிகட்டி அனுப்பும் போது வேதனை என்ற உணர்வுகள் அதிகமானால் என்ன செய்கிறது…? இதனுடைய உணர்ச்சிகள் தாங்காது வடிகட்டும் தன்மையை இழந்து விடுகிறது.
அதீதமான வேதனை உணர்வுகளை கிட்னி வடிகட்டும் போது விஷங்கள் அதிகமாகத் தாக்கித் தாக்கிக் கிட்னி பலவீனமடைகிறது. அது பலவீனம் அடைந்து விட்டால் விஷத் தன்மைகள் நம் இரத்த நாளங்களில் அதிகமாகப் பரவுகிறது.
ஒரு சல்லடையில் ஓட்டை அதிகமானால் தொப்… தொப்…! என்று விழுவது போல் இயக்கச் சக்தியின் தன்மை… பிழியும் தன்மை முடியாத நிலை வரும் போது கெட்ட அணுக்கள் இரத்தத்தின் வழி கூடி எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.
அதனால் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு வேண்டிய நல்ல உணர்வுகள் கிடைப்பதில்லை. அசுத்த இரத்தம் பரவும் பொழுது இதயத்தில் உள்ள வால்வுகளில் பம்ப் (PUMP) பண்ணிப் போகும்போது அந்தக் கழிவுகள் இதயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உறையத் தொடங்குகிறது.
ஒன்றுக்கு ஒன்று வடிகட்டிச் செல்லப்படும் போது உறைந்து விட்டது என்றால் நம்ம இதயத்தில் தொந்தரவுகள் அதிகமாகிறது. அப்போது அழுத்தம் அதிகமாகப் போகும் போது இரத்தத்தை இழுக்கும் சக்தி குறைகிறது.
காற்று அடிக்கும் பம்பில் ஒரு ஓட்டை இருந்தால் சரியாகக் காற்றை இழுத்துத் தள்ள முடியாது. அதைப் போல்
1.இருதய வால்வுகளில் ரொம்பப் பலவீனப்படுத்தும்.
2.அடிக்கடி மூச்சுத் திணறல் வரும்.
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் நாம் அறியாமல் நுகரும் வேதனைகளையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ பயமான உணர்வுகளையோ வடிகட்டத் தவறும் பொழுது அதனால் ஒவ்வொரு நிமிடத்திலேயும் வேதனை உணர்வுகள் வரப்படும் போது இப்படி நம் கிட்னி செயலிழக்கும் தன்மை வந்து விடுகிறது.
கிட்னி செயலிழந்தால் மற்ற உறுப்புகளும் சீக்கிரம் பழுதடைந்து விடுகிறது. உங்களுக்கு வைத்திய ரீதியில் இதை எல்லாம் சொல்கிறேன். நான் (ஞானகுரு) வைத்தியம் படிக்கவில்லை. இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி தீமைகளை நுகர்ந்திருந்தாலும் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து…
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி இதயம் தொந்திரவு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது இப்படி இதை எண்ணி எடுக்க வேண்டும்.
அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி பெறும். நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல் பெறும். உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் சீராக இயங்கத் தொடங்கும்.
சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப் போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால் தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.
இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில் நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.


கடவுள் தனித்து ஒருவன் இல்லை
அடிக்கடி ஞாபகப்படுத்துவது எதை ஆரம்பித்தாலும் “ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று நாம் செயல்படுத்துகின்றோம். காரணம் நமது உயிர் “ஓ…” என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
இதைத்தான் ஓ என்று ஞானிகளால் காரணப்பெயர் சூட்டப்பட்டது. நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை ஓ என்று ஜீவ அணுவாக மாற்றுகின்றது. ம் என்று நம் உடலாக மாற்றுகின்றது அதனால் தான் ஓம் ஈஸ்வரா குருதேவா.
1.நான் எண்ணியதை உருவாக்குகின்றாய்.
2.என் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் குணங்களுக்கும் நீயே குருவாக இருக்கின்றாய் என்ற பொருள்படும்படித் தான்
3.இதை நாம் அடிக்கடி பயன்படுத்துவது.
ஈசன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… ஆண்டவன் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்… கர்த்தர் என்று சொல்வதும் இந்த உயிரைத்தான்…!
ஆகவே நமக்குள் இந்த உயிர் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை ஆட்சி புரிகின்றது… அதை இயக்குகின்றது… என்ற பொருள் படும்படித் தான் உணர்த்தியுள்ளார்கள்.
ஆண்டவன் என்று சொல்லும் பொழுது உடலுக்குள் இருக்கும் அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பதும் உயிர்தான். ஆகவே
1.அவனன்றி அணுவும் அசையாது என்பது போன்று
2.நம் உயிர் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாது.
3.அதனால் தான் அவன் இன்றி அணுவும் அசையாது என்று சொல்கின்றோம்.
கடவுள் இல்லை என்றால் எதுவும் அசையாது என்பார்கள்.
நமக்குள் அந்த உயிர் கடவுளாக நின்று இயங்குகின்றது.
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அது எத்தகையதாக எண்ணுகின்றோமோ அவை அனைத்தும் நம் உடலாக இறையாகி…
2.இறையின் உணர்வுகள் நமக்குள் அணுவாகி அணுவின் சக்தியாக நமக்குள் இயங்கப்படும் பொழுது… நம்முள் நின்று இயக்கம் கடவுளாகின்றது.
ஆகவே கடவுள் என்று ஒருவர் தனித்து யாரும் இல்லை.
நமக்குள் பல விதமான குணங்களும் பல விதமான உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே தான் உள்ளது… நாம் இயங்கிக் கொண்டுதான் உள்ளோம்.
நாம் கோபமாகப் பேசுகிறோம் என்றால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் உருவாக்கி… அணுவாக்கி உடலாக்கப்படும் பொழுது நமக்குள் அது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் செயலாக இயக்கப்படும் பொழுது… அதற்குத் தெய்வம் என்று பெயர் வைக்கிறார்கள்… காரணப்பெயர்.
அதே சமயத்தில் நமக்குள் நின்று அது இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது நாம் நினைக்கின்றோம் அதைப் பதிவாக்கிவிடுகின்றோம்.
1.மறுபடியும் அதை நினைத்தோம் என்றால்
2.அது குருவாக வந்து அந்தத் தெய்வமாக நம்மை இயக்குகிறது என்று பொருள்.
ஆகவே அந்த அணுவின் தன்மை நமக்குள் இங்கே நிலை கொண்டிருந்து அதே உணர்வை நமக்குள் இயக்கிக் கொண்டே இருக்கிறது என்றால் “உருவாக்கிக் கொண்டே இருக்கும்…”
ஒரு வித்தினை மண்ணிலே ஊன்றி விட்டால் அது செடியாகித் தன் இனத்தின் வித்தினை உருவாக்குவது போன்று…
1.நமக்குள் கடவுளாக இருந்து அந்தக் குணத்தின் தன்மையைப் பெருக்கிக் கொண்டே இருக்கும் என்று பொருள்.
2.ஆக… கடவுள் தனித்து ஒருவன் இல்லை… இயக்கத்தை ஞானிகள் இவ்வாறுதான் உணர்த்தி உள்ளார்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.உணர்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தான் நாடித் துடிப்பு என்றும்
2.அந்த நாடித் துடிப்பின் வீரிய உணர்வுகளுக்குத் தகுந்த மாதிரித்தான் நம்முடைய செயலாக்கங்கள் என்றும்
3.மருத்துவர்கள் பார்க்கின்றார்கள்
4.(அன்று கருவி எதுவும் இல்லாமல் பார்த்தார்கள்… இன்று கருவிகளை வைத்துப் பார்க்கின்றார்கள்)
ஆகவே “நாடித் துடிப்பு…!” என்றாலும் உடலில் சில நோய்களின் உணர்வுகள் வரப்படும் பொழுது அதில் உறைந்த உணர்வுகளை ஸ்கேன் மூலம் (SCAN) பல விதமான நுட்பங்களை உபயோகித்துப் பார்க்கின்றார்கள்.
ஸ்கேன் மூலம் உடலுக்குள் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் துடிப்புகள் அதிர்வுகளாக ஒலி அலைகள் ஏற்படும். அந்த எக்கோ (ECHO) வருவதைப் பார்த்து
1.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் அதிகம்…
2.நாம் சுவாசிப்பதில் உடலில் அழுத்தம் குறைவு…! என்ற நிலைகளுக்குத் தக்க
3.ஒலி அலைகளைப் பெருக்கிக் காட்டுகிறது…!
4.அதன் மூலம் இரத்த நாளங்களில் எது கூட இருக்கிறது… எது குறைபாடாக இருக்கிறது என்ற வகைகளில்
4.அந்தந்த உறுப்புகளைப் பற்றி “இதிலே இன்னது தான்…! என்று கண்டறிகின்றனர்.
5.பின் அந்தக் குறைபாடுகளை அகற்றி நல்லதாக மாற்றுகிறார்கள்.
இயற்கையில் கை நாடி பார்ப்பது போலத் தான் ஒலி அதிர்வுகளை வைத்து
1.உடல் உறுப்புகளில் எங்கெங்கே மோதுகிறது…?
2.எதன் வழிகளில் அது செயலற்றதாக மாறுகிறது…? என்ற நிலைகளில்
3.மருத்துவத் துறையில் இவ்வாறு விஞ்ஞானி காண்கிறான்.
அதே போல குகை (CAVE) போல் ஒரு புற்று இருக்கிறது. அதற்குள் ஒரு பாம்பு புகுகின்றது என்றால் அதற்குள் சிறு கம்பியைத்தான் (PROBE) விடுகிறார்கள்.
புற்றுக்குள்ளிலிருந்து வரும் உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கவர்ந்து… அதை நுகர்ந்து… உள்ளே என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? என்று அப்படியே தெரிந்து கொள்கிறார்கள்.
இதே மாதிரி கர்ப்பமுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தைக்கும் இதே போல ஒலி அதிர்வுகளைக் கூட்டிக் “கருவிலே வளரும் குழந்தை என்ன செய்கிறது..?” என்று பார்க்கிறார்கள்.
விஞ்ஞானம் இவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்னேற்றம் அடைந்திருந்தாலும்
1.அவர்களால் உடலில் உள்ள தசைகளிலோ அல்லது உறுப்புகளிலோ இருக்கும் நிலைகளைத்தான் சீர் செய்ய முடிகிறது.
2.எலும்புக்குள் ஊனாக இருப்பதை அவர்களால் காணவும் முடியவில்லை… அதை மாற்றவும் முடியவில்லை.
சிறிது காலத்திற்கு இந்த உடல் வாழ்க்கைக்குத்தான் அதைப் பயன்படுத்த முடியும். உடலுக்குப் பின் உயிராத்மாவைக் காக்கும் எந்த நிலையும் அவர்களால் முடியவில்லை,
ஆனால் அன்றைய மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்…?
1.தன்னுடைய உணர்வலையால் – வரும் அலைகளை நுகர்ந்து
2.அதனின் ஆற்றலையும் அதற்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளை அறியக்கூடிய தன்மையையும்
3.அவ்வாறு வரும் அந்த உணர்வுகள் தன்னை இயக்காதபடி மாற்றிக் கொள்ளும் தன்மையையும் வளர்த்து
5.விண்ணின் ஆற்றலைப் பெற்று அதை உடலுக்குள் விளைய வைத்து உயிராத்மாவை வலுவாக்கி
5.உயிருடன் ஒன்றிய ஒளியாக… அழியாத ஒளிச் சரீரம் பெற்றார்கள்.
யார்…? அகஸ்தியன்…!
அவன் தாய் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே விஷத்தை முறிக்கும் ஆற்றல் பெற்றதால் எத்தகைய விஷத்தையும் வென்றிடும் அதனின் உணர்ச்சியின் இயக்கங்கள் அவனுக்குள் விளைந்தது.
அகஸ்தியனுக்குள் விளைந்த அந்த நுண்ணிய ஆற்றல்கள் அனைத்தையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக நமக்கு முன் பரப்பி வைத்துள்ளது. அதை ஒவ்வொருவரும் நுகரலாம்.
1.அந்த அகஸ்தியனின் ஆற்றல்களை நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்று
2.எல்லாவற்றிலும் வல்லவனாக… உயர் ஞானம் பெற்று மெய் ஞானியாக ஆகலாம்…!


துருவத்தின் ஆற்றல்
உயிரணு தோன்றி மனிதனிலிருந்து விடுபட்டு ஒளியின் உடல் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குப் பழக்கத்தில் பெறும்படி யாம் செய்தது.
இதை நீங்கள் எளிதில் கவர்ந்து நுகர்ந்து உணர்ந்து தீமைகளை நீக்கிடும் ஞானத்தைப் பெற முடியும். அதைத்தான் இப்பொழுது பெறச் செய்தது.
இதை எடுத்துக் கொண்ட பின்
1.அடுத்து எப்பொழுது வேண்டுமென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கண்களை மூடி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று ஏங்கி
5.ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் தியானித்தால் போதும்.
அதை நம் உடலுக்குள் வலுவாக்கி வேதனைப்பட்டோர் உணர்வைக் கேட்டறிய நேர்ந்தாலும் அது நம் உடலுக்குள் வலுப் பெறாதபடி அதை நீக்கி… நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களைப் பாதுகாப்பாக… நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
இல்லையென்றால் அந்த வேதனை என்று அணுக்கள் வளர்ச்சி அடைய கடுமையான நோய்களும் கடுமையான வேதனைகளும் வரும்.
தேடிய செல்வம் எது இருப்பினும் வைத்தியத்திற்குச் செலவழித்து அதை நீங்கள் பாதுகாத்தாலும் உங்கள் உடலில் இருந்த உணர்வுகள் கடைசி நிலை எதுவோ அதன் வழி இந்த உயிர் அழைத்துச் சென்று வேறு ஒரு உடலாக மாற்றிவிடும்.
ஆகவே இந்த உடலில் இருக்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் வளர்த்துப் பிறவி இல்லா நிலை அடைவதே கடைசி நிலை.
ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் வரும் கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று வேதனைப்படுவதோ அல்லது வேதனைப்படுபவர்களை நுகர்ந்தாலோ உடனே நீங்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
ஆறாவது அறிவு கார்த்திகேயா என்றாலும் சேனாதிபதி ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்கின்றோம்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை புருவ மத்தியில் உயிரின் நிலைகள் இணைக்கப்படும் போது
2.கண் வழி கவர்ந்தாலும் கண்ணின் நினைவினை உயிரிலே இணைக்கப்படும் பொழுது
3.உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை ஈர்க்கும் திறன் வரும் பொழுது
4.மூக்கின் வழி செல்லும் தீய உணர்வுகளை அது தடைப்படுத்துகின்றது.
பின் நம்முடைய நினைவாற்றல் நம் உடலில் உள்ள அணுக்களுக்குச் செலுத்தப்படும் பொழுது அதுவும் வலுப்பெற்று நம் உட;லுக்கு முன் முகப்பில் உள்ள விஷத்தன்மைகளை தூர ஒதுங்கிச் செல்லத் தள்ளி விடுகின்றது. நமது ஆன்மா தூய்மை அடைகின்றது.
1.அதே சமயத்தில் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆன்மா ஒரு வட்டம் உண்டு… அந்த ஜீவான்மாக்களும் சுத்தமாகின்றது.
2.இந்த உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியின் அறிவாக அணுக்கள் வளர்ச்சி வரும் சக்தி பெறுகின்றது.
அப்படி ஒளியாக்கப்படும் பொழுது உயிருடன் இணைந்து… ஒளி என்ற அறிவு எப்படி இருந்ததோ அதன் அறிவின் தன்மை பெற்ற அணுக்களை இப்படிச் சிறுகச் சிறுக மாற்றி… இந்த உடலுக்குப் பின் நாம் நமது உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக மாறுவதே கடைசி நிலை.
1.எந்தத் துருவத்தின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ
2.அதன் ஈர்ப்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
செடி நன்றாக வளர்வதற்காக நாம் என்ன செய்கிறோம்…? உரத்தைப் போடுகின்றோம். அது ஆவியாகப் போய் செடியில் இணைந்து விடுகிறது.
1.உரத்தின் சத்து செடியில் இரண்டறக் கலந்த பின் தான்
2.அந்தச் செடி தன் இனமான சத்தைக் காற்றிலிருந்து எடுத்து செழித்து வளர்கிறது.
3.ஆகவே அந்தச் செடியைச் செழித்து வளரச் செய்வதற்கு இந்த உரம் உறுதுணையாக இருக்கின்றது.
ஆனால் செடியில் உள்ள சத்துடன் உரம் இணையவில்லை என்றால் காற்றிலிருந்து இழுக்கும் சக்தி இல்லை. செடி செழிப்பாக வளர்வதில்லை.
அதே மாதிரித்தான் உங்களுக்குள்ளும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை உரங்களாகக் கொடுத்து காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறோம்.
“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் நீங்கள் அதைப் பரப்ப வேண்டும்.
நான் சும்மா வாயிலே சொல்லிக் கொண்டு போனால் இந்த குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போல் தான் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும். யாம் (ஞானகுரு) அப்படிச் சொல்லவில்லை…!
1.அந்த விண்ணுலக ஆற்றலைச் செருக வேண்டும் என்றால்
2.குருவின் அருள் நாம் பெற்று இருக்க வேண்டும்.
3.அதை உங்களிடம் கொடுத்துப் பழக வேண்டும்.
4.அந்தப் பாதை தெரியாமல் நாம் போக முடியாது.
ஆரம்பக் கல்வியும் உயர் கல்வியும் பள்ளிகளில் நமக்குச் சொல்லித் தருகிறார்கள். அதிலே படிப்படியாக வந்த பிற்பாடு விஞ்ஞானிகளிடம் போனால் அந்த விஞ்ஞான அறிவின் கலவைகள் பெருகுகின்றது. அந்த நிலைக்கு வருபவன் விஞ்ஞானியாகவே வளர்வான்.
அதைப் போன்ற பெருக்கத்தின் உணர்வுகளை நமக்குள் கொண்டு வர வேண்டும். அதற்காக வேண்டித்தான்…
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தனக்குள் வளர்த்த மெய் ஞானத்தையும்
2.மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க சக்திகளையும் எடுக்கும் பழக்கத்தை எனக்கு எப்படி ஏற்படுத்தினாரோ…
3.அனுபவ வாயிலாக உணரச் செய்து எனக்குள் மெய் ஞானத்தை எப்படி விளையச் செய்தாரோ…
4.அதைப் போல உங்களுக்குள்ளும் வளர்க்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.
எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்களுக்கு உற்ற துணையாக இருக்கும். மெய் ஞானியாக நீங்கள் வளர்வீர்கள்.


தீமை செய்யும் உணர்வுகளை அடிக்கடி சுவாசித்தால் உடல் உறுப்புகளில் ஏற்படும் நிகழ்ச்சிகள்
எந்த மனிதன் கோபிக்கின்றானோ வெறுப்படைகின்றானோ தற்கொலை செய்து கொள்கின்றானோ குரோதமான நிலைகளில் ஒருவனைத் தாக்குகின்றானோ இவையெல்லாம் நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் சூரியனால் கவரப்பட்டு இந்தக் காற்றிலே அலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
அந்த மனிதனை நாம் பார்க்கப்படும் பொழுது
1.அந்த மனித உடலிலிருந்து வெளிப்பட்டதை
2.நமது கண் அந்த மனிதனை நெஞ்சு எலும்பில் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.
அவன் உடலிலிருந்து என்னென்ன நிலைகள் வெளிப்பட்டதோ அவன் கோபமாகப் பேசுகிறான் என்றால் அல்லது வெறித்தனமாகப் பேசுகிறான் என்றால்
1.அதன் உணர்வுகள் நம் உடலில் பதிவாக்கி
2.அவனை எண்ணும் போதெல்லாம் அந்த வெறித்தனமான சொல்லும் நமக்குள் அந்த செயலும் வருகின்றது.
அல்லது அவன் வெறித்தனமாகச் செயல்படுத்தும் போது அந்த உணர்வு நமக்கு அது பயமாக இருந்தால் அந்த நேரத்தில் வெறித்தன்மையான உணர்வுகள் நம் உடலில் பயத்தையே ஊட்டும். சிந்திக்கும் ஆற்றலையும் செயலற்றதாக மாற்றிவிடும்.
இப்படி
1.நாம் சந்தர்ப்பத்தால் சந்தித்த உணர்வுகள் எல்லாம்
2.நெஞ்சின் எலும்புக்குள் “எண்ணிலடங்காத வித்துக்களாக” ஊழ் வினையாக அது பதிவாகியுள்ளது.
இவை அனைத்தும் அதனதன் உணர்வுகளைக் கவர்ந்து அதற்கொப்ப நம் உடலில் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அத்தகைய அணுக்கள் நம் உடலில் உருவாகத் தொடங்கி விடுகின்றது நம் இரத்தத்தில்.
இந்த இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளில் இவையெல்லாம் கலந்து விடுகின்றது ஆனால் உடலில் நல்லவைகளாக இருந்து வளர்ந்த இந்த உணர்வுகளில் நிலைகளில் நாம் படிப்படியாக வேதனைப்பட்டோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் நுகர நுகர நமது உடலில் அத்தகைய அணுக்கள் விளைந்து விடுகின்றது.
மீண்டும் அவர்களைப் பற்றி எண்ணும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு பயம் கோபம் குரோதம் அது எந்தெந்த குணங்களோ… எண்ணும் போதெல்லாம் அந்த உணர்ச்சிகள் முன்னணியில் வந்துவிடுகிறது.
அப்பொழுது அதனால் நம் உடலுக்குள் நல்ல குணங்களுக்கும் வெறுப்பான குணங்களுக்கும் இது ஒன்றுக்கொன்று இந்த உணர்வலைகள் பாயப்படும் பொழுது
1.உடலுக்குள் பல விதமான வலிகள் பல கலக்கங்கள் நம்மை அறியாமலேயே ஏன் எதற்குச் சங்கடப்படுகின்றோம்…? என்று தெரியாது.
2.அத்தகைய உணர்வுகள் நம் உடலுக்குள் போர் செய்யத் தொடங்கி விடுகின்றது.
நம் கண்ணால் பார்த்தவுடன் அல்லது நினைத்தவுடன் அந்த அதிர்ச்சி வருகின்றது. அதே சமயத்தில் உடலுக்குள்ளும் அந்த அதிர்ச்சியின் உணர்வு தோன்றுகின்றது அன்றைய நிலைகளில். அப்போது நல்லதை எண்ணுவதோ அல்லது அதைச் செயல்படுத்துவதோ முடியாது.
அந்த வெறித்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை கொண்டு அறியப்படும் பொழுது அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி சிறு குடலுக்கு வரும் பொழுது வெறித்தனமான உணர்ச்சிகள் சிறு குடலை உருவாக்கிய அணுக்களை… (நாம் எப்படிப் பயந்தோமோ) அதனின் இயக்கத்தைத் தணியச் செய்து நாம் சாப்பிட்ட ஆகாரத்தை அஜீரணம் ஆக்கி விடுகிறது அல்லது விஷத்தன்மையான இரத்தமாக மாற்றி விடுகின்றது.
இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் பெருங்குடலில் சேர்ந்தாலும் அதே வெறித்தனமான உணர்வுகளைச் செயல்படுத்தும் போது பயத்தின் உணர்வுகள் வந்து ஆகாரத்தை ரசமாக மாற்றும்போது அதிலேயும் இந்த விஷத்தன்மை கலந்துவிடுகிறது.
1.அவை நம் கணையங்களிலே சேர்க்கப்பட்டு அமிலங்களாக மாற்றும் போது
2.அந்த அமிலங்கள் கல்லீரல் மண்ணீரலிலே படும் பொழுது இதே உணர்ச்சியின் தன்மை கொண்டு
3.அந்தக் கல்லீரல் மண்ணீரலில் நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாக அதையும் சரியாக இயக்க விடாதபடி
4.இரத்தத்தில் விஷத்தன்மை கொண்ட அணுக்களாகப் பரவும் தன்மை வருகின்றது.
இப்படி இந்த விஷத்தின் தன்மை பரவி நுரையீரலுக்குள் சென்றபின் அதையும் சீராக இயக்காத படி அந்த நுரையீரலில் கலந்த பின் விஷத்தின் தன்மை நுகந்து சிந்திக்கும் தன்மையை இழந்து நம்மை அறியாமலே ஏன் எதற்கு என்று வெறி உணர்ச்சிகள் வருவதும் அல்லது சோர்வடைவதும் பயமடைவதும் வரும்.
அனால் நாம் தவறு செய்யவில்லை. இதே போல நமது உடலில் அடிக்கடி நிகழும் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் தப்ப வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அண்டத்தில் உள்ளது இந்தப் பிண்டத்தில் (மனித உடலில்) உள்ளது என்று சொல்கிறோம். அண்டத்தில் இருக்கிற சக்திகள் நம் உடலில் எவ்வாறு இயங்கி கொண்டு இருக்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
அண்டம் என்பது அகண்ட அண்டம். அதிலே பிரபஞ்சம் என்பது ஒரு சூரியக் குடும்பம். 27 நட்சத்திரங்களும் நவக் கோள்களும் அதனுடைய உபகோள்களும் சேர்ந்து ஒரு சூரியக் குடும்பமாகின்றது.
ஒரு நூலாம்படைப் பூச்சி வலையை விரித்துத் தனக்குத் தேவையான உணவை எப்படி எடுக்கிறதோ அது போல் சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் வலை வலையாகப் பால்வெளி மண்டலங்களைத் தனக்கென்று அமைத்துக் கொள்கிறது.
நட்சத்திரங்களின் சுழழும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள் நூலாம்படை போல் அது விரிவடைகிறது. விரிவடையும் போது இந்த மொத்தச் சூரிய பிரபஞ்சமும் சுற்றும் நிலையில் அதிலே மற்ற அகண்ட அண்டத்திலே வரக்கூடிய துகள்களைச் சேமித்து வைத்துப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகிறது.
1.கார்த்திகை நட்சத்திரம் முன்னாடி இருக்கிறது. அடுத்து ரேவதி நட்சத்திரம் இருக்கிறது.
2.27 நட்சத்திரங்களும் இப்படி வரிசையில் பல மைல் தூரம் வித்தியாசத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக இருக்கும்.
3.வித்தியாசத்தில் இருக்கிறது என்றால் சூரியனுடைய சுழற்சி வேகத்தில் வரும் போது அது பின் தங்கி வரும்.
4.இரண்டாவது நட்சத்திரம் அதைக் காட்டிலும் பின் தங்கி வரும்.
5.மூன்றாவது அதைக் காட்டிலும் பின் தங்கி வருகிறது.
6.சூரியனை ஒட்டி இருக்கும் கோள்களும் இதைப் போன்று தான். ஒன்றன் பின் ஒன்றாகத் தன்னுடைய சுழற்சியில் பின் தங்கி வரும்.
பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய துகள்கள் நட்சத்திரங்கள் விரித்த வலையில் ஒட்டி கொள்கிறது. நட்சத்திரம் சுழற்சி ஆகும் போது (RICE MILL போல்) பால்வெளி மண்டலமாகிறது… தூசிகளாக மாறுகின்றது.
அதற்கு அடுத்தது இன்னொரு நட்சத்திரம் எதிர்த்து இருக்கும். இது இடைமறித்து வரும் போது இதற்கும் அதற்கும் மோதலாகி இரண்டு கலவைகள். இப்படி 27 நட்சத்திரக் கலவைகள் மாறி மாறித் தூசிகளாக வருவது தான் பிரபஞ்சத்திற்குள் பரவுகிறது.
நட்சத்திரங்களின் மோதலில் வெளி வரும் இந்தத் தூசிகளை இடைமறித்து முதலில் வரக்கூடியதை கேதுக் கோள் அந்த விஷத் தன்மைகளை மட்டும் எடுத்து கொள்கின்றது. வரக்கூடிய கரும் புகைகளை ராகுக் கோள் எடுத்துக் கொள்கிறது.
ஆவியாக வெளிப்படுவதைச் சனிக் கோள் எடுத்து நீராக மாற்றுகிறது. 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கங்களை வியாழன் கோள் எடுத்துக் கொள்கிறது.
நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் துகள்கள் மோதும் பொழுது வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கிறது. மோதலில் உண்டாகும் நாதங்களை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கிறது.
இதையெல்லாம் கலவையாகிச் சூரியனுக்கு அருகில் இருக்கும் புதன் கோளுக்குள் செல்லும் பொழுது அதனின் அதீத வெப்பத்தால் உலோகங்களாக மாற்றிக் கொள்கிறது.
அந்தந்தக் கோள்கள் உணவாக எடுத்து அது வெளிப்படுத்தும் உணர்வுகள் பல கலவையாகின்றது. ஒவ்வொரு அணுக்களிலும் இந்த விஷத் தன்மையின் உணர்வுகள் கலவையாகின்றது.
இந்தக் கலவையின் தன்மைகள் வரப்படப்போகும் போது மற்ற கோள்களுடன் கலக்கப்படும் போது ஒவ்வொன்றும் மாற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் ஏற்பட்டு அதெல்லாம் சூரியனுக்கு வரும் போது அந்த விஷத்தை எல்லாம் தூக்கி எறிந்து விடுகிறது. விஷத்தைப் பிரித்து ஒளியாகப் பாதரசமாக மாற்றுகின்றது.
1.முதலில் அமிலமாக இருந்தது தான் நட்சத்திரங்கள்.
2.அதிலிருந்து வரப்படும் போது இதனுடைய உணர்வுகள் மாற்றமாகி மாற்றமாகி
3.சூரியன் அதைப் பாதரசமாக மாற்றும் நிலை வரும்.
4.அப்பொழுது அது முழுமையான விந்தாக இந்த உலகையே உருவாக்குவதற்கான மூலமாக ஆகின்றது.
பாதரசம் மிகவும் எடை கூடியது. எடை கூடிய நிலைகளாக வரப்போகும் போது மற்றதைத் தள்ளுகின்றது. அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய சக்திகள் நட்சத்திரங்கள் கோள்களில் கலவையான பின் அதைச் சூரியன் இழுத்துக் கவரும் பொழுது மோதலாகின்றது.
சூரியனுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் இந்த மோதலினால் தான் வெப்பமாகின்றது. ஆனால் சூரியன் மிகவும் குளிர்ச்சியானது. சூரியனுக்குப் பல ஆயிரம் மைலுக்கு அந்தப் பக்கம் தான் இந்த மோதல் நடக்கிறது.
வெப்பமாகும் பொழுது கெட்டதைப் பூராம் தூக்கி எறிந்து விடுகிறது. நல்லதைப் பாதரசமாக மாற்றிக் கொள்கிறது. இது மெய் ஞானப்பாடம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதைத் தெளிவாகக் காட்டினார். அந்தப் பாதரசத்தினுடைய நிலைகளை எடுத்துக் காட்டி
1.அது மற்ற பொருளுடன் சேர்க்கும் போது திடப்பொருளாக எப்படி ஆகிறது…?
2.இன்னொரு பொருளைச் சேர்த்தவுடனே ஆவியாகப் பிரிந்து எப்படிப் போகிறது?
3.ஆவியாகப் போன பிற்பாடு பொருள்கள் எப்படி இணைகின்றது…? என்றும்
4.அதன் துணை கொண்டு உலகில் உள்ள எல்லாவற்றுக்கும் உணவாகக் கொடுக்கவும்
5.மற்றொன்றை எடுத்துச் செல்லவும் மற்றொன்றோடு இணைத்து வாழச் செய்யும் நிலையாகவும்
6.சூரியன் எப்படிச் செயல்படுகிறது…? என்று காட்டினார்..
அப்படிப் பாதரசமாக மாறவில்லை என்றால் உலகம் இல்லை. ஆகையினால் தான் இதை “நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…! என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.
ஆதியிலே நாத விந்துகள் என்ற உணர்வின் தன்மை வரப்படும் போது தான் இது எல்லாமே உருவானது.
1.அந்த உணர்வின் இசையின் ஒலிகள் எப்படி உருவானது…?
2.ஒவ்வொன்றும் அந்த உணர்வின் ஒலியாக
3.நமக்குள் சுருதியின் இயக்கமாக
4.அந்த உணர்வின் ஒலியாக
5.அந்த உடலின் ரூபமாக மாறுகின்றது..! என்று இதற்குள் இவ்வளவு கருத்து இருக்கிறது.
27 நட்சத்திரங்களின் கலவைகள் உணர்வின் இயக்கங்களாகவும் நவக் கோள்களின் கலவைகள் உடல் உறுப்புகளாகவும் நமக்குள் அமைந்துள்ளது. உயிர் சூரியனாக இந்த உடலான பிரபஞ்சத்தை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கின்றது.
தியானத்தில் அமரும் பொழுது இதை எல்லாம் இணைத்துப் பார்த்தீர்கள் என்றால் அண்டத்தையே நீங்கள் பார்க்கலாம். ஆர்வத்துடன் கேட்டு இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் தியானத்தில் உங்களை அங்கேயே அழைத்துக் கொண்டு போகும். நிச்சயம் உணரலாம்…!


உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்குத் தான் நம் மனக் கதவைத் திறக்க வேண்டும்
நாம் நண்பர்களாகப் பழகிய அல்லது குடும்பத்தில் பழகியவர்கள் உடலில் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவருடைய உணர்வு நமக்குள் பதிவாகி இருப்பதால்
1.அதே நினைவு கொண்டு நாம் எண்ணினோம் என்றால்
2.அவர் உடலில் இருந்த உணர்வுகளும் நோய்களும் நினைத்தவர் உடலுக்குள் வருகின்றது.
3.இருள் சூழ்ந்த நிலையாகி விடுகிறது.
ஆனால் அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தப்படும் பொழுது ஒளியின் உடலாகின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவான பின்
1.சப்தரிஷி மண்டலம் என்று எண்ணினாலே அந்தச் சக்திகள் நம் உடலுக்குள் புகுந்து தீமைகளை அகற்றி
2.நல் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நல்ல குணங்களுக்கு நம் மனம் இடம் கொடுக்கின்றது.
ஏனென்றால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்…! ஒரு செடியில் எத்தகைய குணம் உண்டோ சுவை உண்டோ அதிலே விளைந்த வித்தினை நிலத்திலே போட்டால் அதைக் கவர்ந்து அதனுடைய சுவை அதனுடைய குணங்களை மீண்டும் காட்டுகின்றது.
இதைப் போல் தான் பிறிதொரு உடலில் விளைந்த நோயின் உணர்வுகள் அது வெளிப்படும் என்றால் “அது வித்து…” நாம் நுகர்ந்து நம் உடலில் பதிவாகி விட்டால் அவரைப் பற்றி எண்ணினால் அந்த நோயின் உணர்வே வரும்.
அதற்கு முன்பு அவர் நல்லதாக இருந்த நிலையை எண்ணும் பொழுது அடுத்து இப்படி ஆகிவிட்டாரே…! என்று தான் வரும். அப்போது அவருடைய முழுமை விஷத்தன்மை அடைவதால் நாம் எண்ணினோம் என்றால் அந்த விஷத்தின் உணர்வே நமக்குள் இயக்கப்பட்டு அவர் எப்படி வருத்தப்பட்டாரோ அதே வருத்தம் நமக்குள்ளும் வருகின்றது.
எத்தனை பேருடன் இப்படி பழகுகின்றோமோ வாழ்நாள் முடிவில் நோயின் தன்மை கொண்டு உடலை விட்டு வெளியேறும் போது அவர்கள் உணர்வுகளும் நமக்குள் உண்டு.
1.ஆக நோய் என்ற உணர்வுகள் கொண்டு பலவும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது
2.அவர்களுக்குள் விளைந்த தீமைகளை நமக்குள் வந்து சேருகின்றது.
இதையெல்லாம் நாம் மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைக்கப்படும் பொழுது நஞ்சுகள் கரைக்கப்படுகின்றது.
2.அந்த எண்ணத்தை நமக்குள் செலுத்தப்படும் பொழுது நஞ்சை நீக்கும் உணர்வும் நல்ல சிந்திக்கும் தன்மையும் நமக்கு கிடைக்கின்றது.
விஞ்ஞான அறிவு கொண்டு வெறும் அட்டையைக் கொடுக்கின்றார்கள். அந்த அட்டையை வைத்து அதில் சாவியைப் (PASSWORD) போட்டோம் என்றால் எந்த அட்டைக்கு எந்தச் சாவி என்று அதைப் பாய்ச்சி விடுகின்றனர்.
அதைச் சரியாகப் போட்டால் தான் திறக்கின்றது… இல்லையென்றால் திறப்பது இல்லை இதைப் போன்று பல விதமான உணர்வின் தன்மைகளை பிளாஸ்டிக் அட்டைகளிலேயே கொடுத்துத் திறக்கும்படி செய்கின்றார்கள்.
இதைப் போல
1.நாம் நமது உடலில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால்
2.நமது எண்ணத்தின் திறவுகோலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது
3.அந்த அருள் ஒளியின் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு இருளை நீக்கி நல்வழி நடத்தச் செய்யும் நிலை வருகின்றது.
ஆகவே நாம் நம் மனதைத் திறக்க வேண்டியது உயர்ந்த சக்திகளைப் பெறுவதற்கு மட்டும் தான்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிரபஞ்சத்திலுள்ள கோள்கள் எல்லாம் ஒரே நேர் கோட்டில் வரப்படும் போது தான் சில பூமியினுடைய ஈர்ப்புத் தன்மை குறைகிறது. (இது ஏற்கனவே இந்த மாதிரி ஆகி விட்டது).
1.அதனால் நம் பூமி ஒரு நிமிடம் வித்தியாசத்தில் வரும்.
2.அதனால் வித்தியாசத்திற்குப் பூமி சூரியனை விட்டு நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகும்.
3.இதே மாதிரி மற்ற கோள்களும் நகர்ந்து நகர்ந்து வித்தியாசமாகப் போகும்.
கீழே இருக்கும் கோள்கள் தடுத்து நிறுத்தி விட்டது என்றால் இந்த (சூரியனின்) ஈர்ப்பு இல்லை என்றால் நகர்ந்து மேலே போகும். அதற்கு மேல் இருக்கும் கோள்கள் அப்படியே நகன்று நகன்று மேலே போகும். (மேலே என்றால் ஈர்ப்பை விட்டு வெளியே என்று அர்த்தம்)
நகர்ந்து மேலே போகும் கோள்கள் எல்லாம் என்ன செய்யும்…? இது நட்சத்திரங்களாக மாறும் சக்தி கிடைக்கிறது. இதே மாதிரி ஈர்ப்புத் தன்மை இல்லை என்கிற போது இந்த 27 நட்சத்திரங்களும் நகர்ந்து செல்லும்.
ஆக அப்படி நகர்ந்து செல்லப்போகும் போது மற்ற உணர்வுகள் எடுத்து நம் பிரபஞ்சம் முதலில் எப்படி உருவானதோ அது போல் இந்த 27 நட்சத்திரங்களும் அது அது தன் வளர்ச்சிக்குண்டான நிலையில் கோள்களை உருவாக்கும்.
கார்த்திகை நட்சத்திரம் ஒரு சூரியக் குடும்பமாக வளர ஆரம்பித்து விட்டது. இதே மாதிரி மற்ற நட்சத்திரங்களும் தனித் தனிப் பிரபஞ்சமாகிவிட்டால் இந்தச் சூரியக் குடும்பத்தில் மங்கல் ஏற்படும்.
அதனால் தான் நம் சூரியனில் அநேகமாக இந்தக் கருப்பு நிலைகள் (SUNSPOT) அதிகமாக வருகிறது. ஒளியாக மாற்றுவதற்குண்டான நிலைகள் மாறிப் போகும்…. மாறிக் கொண்டிருக்கிறது…!
1.அப்படி மாறியது என்றால் இன்னும் கொஞ்ச காலத்தில் சூரியன் மங்கிப் போய்விடும்.
2.அதனுடன் சேர்ந்த (நம்) பூமி எங்கே போகும்…? என்று சொல்ல முடியாது.
மற்றொரு சூரியக் குடும்பம் அழிந்து அதிலிருந்து கரைந்து வந்த ஒரு கோள் வியாழன் கோளில் ஏற்கனவே சுமார் 25 வருடத்திற்கு முன்னாடி விழுந்தது அல்லவா…! பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். (விழுவதற்கு முன்னாடி குருநாதர் காட்டிய வழியில் இந்த மாதிரி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னேன்… பழைய அன்பர்களுக்குத் தெரியும்)
நம் பூமியில் விழுந்திருந்தால் நாமும் அம்போ தான். ஏனென்றால் அந்தக் கல் நம் பூமியைப் போல ஒரு இரண்டு மடங்கு. ஆனால் வியாழன் கோளில் பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதால் அதற்குள் போய் அமிழ்ந்து விட்டது.
வியாழன் கோள் முழுவதுமே பனிப்பாறைகளாக உள்ளது. இப்போது நாம் வாழும் பூமியும் சூரியனின் ஈர்ப்பை விட்டுக் கொஞ்சம் நகன்று விட்டதென்றால் முழுவதும் பனியாக உறைந்து விடும்.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் சூரியனாக வளர்ச்சி ஆகிவிட்டது என்றால் அந்தச் சூரியனுக்கு சாப்பாடு கிடைக்காது பிற மண்டலத்திலிருந்து சக்திகளை நட்சத்திரங்கள் எடுத்து கொடுக்கவில்லை என்றால் சூரியன் மங்கலாகிவிடும்.
கார்த்திகை நட்சத்திரம் ஏற்கனவே விலகிப் போய்விட்டது. அதைப் போல ஒரு ஐந்தாறு (ரேவதி அசுவினி) நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரபஞ்சமாக வளர்ந்து கொண்டுள்ளது. மற்ற நட்சத்திரங்களும் அதைப் போன்ற நிலைகள் கூடிய சீக்கிரம் ஆகும்.
1.நாம் குழந்தையைப் பெற்று அது வளர்ச்சி அடைந்தவுடனே அது ஒரு குடும்பமாகப் பிரிந்து போகிற
2.அதே மாதிரித் தான் சூரிய குடும்பத்திலேயும் நட்சத்திரங்கள் சூரியனாகும் பருவம் வந்த பின்
3.தனக்கென்ற ஒரு குடும்பமாகப் பிரிந்து போய்விடும்.
4.பிரிந்த பிற்பாடு நாளுக்கு நாள் இந்தச் சூரியன் செயல் இழக்கும் தன்மை ஆகும்.
5.அதனுடன் சேர்ந்த பூமி கரைந்து ஓடும்.
அப்பொழுது பூமிக்குள் இருக்கும் உயிர் அணுக்கள் என்ன செய்யும்….? மற்ற உயிரினங்களுக்கு இது குருவாகும். நம் வியாழன் கோளில் இதைப் போன்ற மற்ற நிலைகள் சிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது.
வியாழன் கோளில் இன்னும் உயிர் அணுக்களினுடைய நிலைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. அதிலிருந்து தோன்றியது தான் கொஞ்சம் கொஞ்சமாக வந்து நம் பிரபஞ்சத்தில் பரவப்பட்டு வருகிறது.
அத்தகைய கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதனால் வியாழன் கோள் தான் உயிரணுக்களின் தோற்றத்திற்கு மூல காரணமாகின்றது. அதில் இருந்து வரும் கரு இல்லை என்றால் உயிர் அணுக்ககளின் தோற்றமே இல்லை.
1.அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.
2.சும்மா சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன் (ஞானகுரு).
நாம் வாழும் இந்தச் சூரியனும் செயலிழக்கும் தன்மைக்கு இப்பொழுது வந்துவிட்டது. இன்று நாம் மனிதராக இருந்தாலும் இந்தச் சூரியக் குடும்பம் அழிந்து விட்டது என்றால் அணுக்களாகப் போவோம். மீண்டும் பிரபஞ்சத்தில மிதப்போம். ஏதாவது கோளுக்கு இழுத்துக் கொண்டு போகும்.
அந்த கோள்களில் அதற்குண்டான சத்து இல்லை என்றால் புழுவாகவோ பூச்சிகளாவோ கிருமிகளாவோ தான் வளர முடியும். வேறு வழி இல்லை. நம்மை விஷத் தன்மையாக மாற்றிக் கொண்டு இருக்கும்.
நம் பூமியில் தாவர இனங்கள் இருக்கிறது. அதனால் மனிதனாக இருகின்றோம். தாவர இனங்கள் அழிந்து போய்விட்டது என்றால் உயிரினங்கள் வாழ முடியாது.
1.அப்படி நாம் வெளியிலே போய்விட்டால் அப்புறம் எந்தக் கோளுக்குள் நாம் போவோம்…?
2.என்ன ஆவோம்…? என்று சொல்ல முடியாது.
இதிலிருந்து தப்புவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இத்தனை வேலையும் செய்து கொண்டிருக்கின்றோம்.
விண் சென்ற அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் எடுத்து உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால்
1.இந்த உடலை விட்டுப் பிரியும் நேரம் சேர்த்துக் கொண்ட ஒளியான உணர்வுக்கொப்ப
2.நாம் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.
3.வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
4.உயிருடன் சேர்த்து ஒளியாக்கப்படும் போது அகண்ட உலகில் எங்கே வேண்டும் என்றாலும் நாம் போகலாம்.


ஞானிகள்… நினைவு நாளைக் கொண்டாடச் சொன்னதன் நோக்கம்
உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மாக்களை விண் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால்
1.அவர் உடலில் விளைந்த உணர்வுகள் எப்படி அங்கே கரைந்ததோ
2.உடலில் பெற்ற உணர்வு ஒளியின் உடலாகப் பெற்றதோ அவரை எண்ணி
3.அந்த உணர்வின் தன்மையை ஒளியின் உடலாக பெறச் செய்த இந்த உணர்வுகளை நினைவு கூர்ந்து
4.நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்தும் பொழுது அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை அவர் சார்புடைய நிலைகள் அங்கே இருந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெற்று அவர் சம்பந்தப்பட்ட உணர்வுகள்… ஏனென்றால்
1.கண் கூர்ந்து கவனிக்கும் பொழுது கருவிழியால் பதிவான உணர்வுகளை அதே நினைவு கொண்டு
2.அவர் நினைவு நாளில் இதைப் போன்று நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று செயல்படுத்துவோம் என்றால்
3.அவர் குறை கூறிய உணர்வோ அல்லது குடும்பத்தின் மீது இருந்த வெறுப்புணர்வோ
4.அவர் நோயாக வேதனைப்பட்ட உணர்வோ நமக்குள் பதிவாகி இருந்தாலும் அந்தப் பதிவின் மீது இது வந்து மேலே பதிவாக்கும்.
ஒரு வித்து விளைந்த பின் மற்ற தாவர இனங்களின் வித்துக்களை இதனுடன் கலக்கச் செய்து அதிலே புது விதமான வித்துகளை உருவாக்குவார்கள்.
அதைப் போன்று உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தபின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது போக “அவருடன் உணர்வுகள் ஒளியாக நிற்கும்…”
அந்த நிலையில்…
1.நினைவு நாளில் நாம் அதை எண்ணிக் கொண்டு வந்தோம் என்றால் உடலுக்குள் பதிந்த அவரின் உணர்வை மாற்றி விடலாம்.
2.அதே சமயத்தில் அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள் காற்றலைகளில் இருப்பினும் அதை ஈர்க்கும் சக்தியை இங்கே தடுத்து விட்டால்
3.அவர் உடலில் இருந்த நோயோ அவரைப் பற்றிய பகைமை உணர்வுகளோ நம்மை இயக்காது.
அதற்குத் தான் இந்த நினைவு நாளைக் கொண்டாடச் சொல்வது.
அவரின் உணர்வுகள் நம் உடலில் பதிந்திருப்பதால்
1.அவர் உணர்வுக்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாகப் படைத்தால்
2.நமக்குள் தீமை என்ற உணர்வு இல்லாது மறைக்கப்படுகின்றது.
3.நினைவு நாளைக் கொண்டாடுவதற்கு அன்று ஞானிகள் இவ்வாறு வழி வகுத்தனர்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் அதன் தனித்தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் போது தான் வருகின்றது.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால்… இந்த வாழ்க்கையிலே வெறுப்பு வேதனை சலிப்பு கோபம் பகைமை என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது சிறிது நேரமே செயல்படுத்துகின்றோம். ஒரு நாளைக்கு காலையில் எழுந்ததும் செயல்படுத்துகின்றோம்.
அதற்குப் பின்
1.ஏதாவது சிரமம் வந்தால் அந்தச் சிரமத்தை தான் எடுத்துக் கொள்கிறோம்.
2.ஆனால் அவரைப் பற்றிய நினைவு நமக்கு வருவதில்லை.
3.ஆனால் அந்த வேதனைப்படும் உணர்வுகள் தூண்டி அதை வளர்க்கின்றோம்.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாற்றி அமைக்க… உடலை விட்டுப் பிரிந்து சென்று அந்த ஆன்மாவிற்கு…
1.நம் உடலில் அந்த\த் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவான (அவரைப் பற்றியது) நிலைகளுடன் சேர்த்து விட்டால்
2.அவர் உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் காற்றில் இருப்பதை நாம் நுகராமல்… நமக்குள் அது வளர்ச்சி பெறாமல்… தடுத்து நிறுத்த முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் எந்த உணர்வை எண்ணுகிறோமோ அது “ஓ…” என்று நம் உயிரிலே பட்டுப் பிரணவமாகி அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகிறது.
அவ்வாறு இயக்கப்படும் போது எந்தக் குணத்தை நாம் இயக்கி நம் உடலில் சேர்க்கின்றோமோ நம் உயிர் அதைத்தான் ஆளுகிறது.
1.அதை வைத்துத் தான் நம்மை செயல்படுத்தச் செய்கிறது.
2.அதை வைத்து தான் நாம் சொல்லைச் சொல்கிறோம்.
3.அதன் வழி தான் நாம் செயலைச் செய்கிறோம்.
சங்கடமாகவும் சலிப்பாகவும் இருக்கும் போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கி நம்மை ஆள்கிறது.
1.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது சரியான கணக்குப் பார்க்க முடியுமோ…?
2.சலிப்பாக சஞ்சலமாக இருக்கும் போது ஒருவர் யோசனை கேட்டால் உங்களால் சொல்ல முடியுமோ…? முடியாது.
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை வைத்துத் தான் நம்மை ஆட்சி புரிகிறார். யார்…? நமது உயிர் தான்…! அந்த வழியில் நம்மை இயக்குவதும் நம்மை ஆள்வதும் அவனாகத்தான் இருக்கிறான்.
இருந்தாலும் அதே உணர்வை நம் உடலில் சேர்க்கும் போது அது ஈசனாக இருந்து நாம் எதை நுகர்ந்தோமோ அதை நம் உடலில் சேர்க்கின்றது. நம் உடலுக்குள் புகுந்து விட்டால் அது நம் இரத்தங்களில் கலந்து அது நம் உடலாக ஆகிவிடுகிறது.
நீங்கள் நல்லதோ கெட்டதோ எந்த குணங்களை நுகர்ந்தாலும் அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலிலுள்ள இரத்தங்களில் கலந்து கொண்டே தான் இருக்கும்.
அதில் பலவிதமான வண்ணங்கள் இருக்கும். பலவிதமான உணர்வுகளை உணர்ச்சிகளை ஊட்டிக்கொண்டே இருக்கும். எதன் உணர்வு வலுவாக இருக்கிறதோ அந்த உணர்வு இயக்கமாகி உணர்ச்சிகளை வெளிப்படச் செய்து அது சொல்லாகவும் செயலாகவும் மாறும்.
கோபம் வரும்போதெல்லாம் பார்க்கலாம். ஒருவர் தவறான செயலைச் செய்யும் போது உங்கள் இரத்தங்களில் எப்படி அந்த உணர்ச்சிகள் மாறுகின்றன…? என்று தெரியும்.
இதே மூச்சலைகளை மற்றவர்களும் நம்மைப் பார்த்து நுகரும் போது இந்த உணர்வுகள் அவர்களுக்குள்ளும் இயக்கப்பட்டு அவர்களும் அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலைகள் வரும்.
1.அவர்கள் உணர்வுக்கும் நம் உணர்வுக்கும் என்ன…? என்ற வகையில்
2.அடுத்து கலந்து பதில் சொல்லும் நிலையாக வரும்.
உதாரணமாக நம்முடைய நண்பன் அவனுடைய இன்னொரு நண்பருடன் இருக்கிறான். நம்முடைய நண்பனுக்காக அவன் எதையும் செய்யக்கூடியவன்.
இருந்தாலும் நம் நண்பருடன் சேர்ந்தவன் சரியில்லை… தவறு செய்கிறான் என்ற நிலையில் அவன் தப்பு செய்வதை நாம் திருத்தச் சொல்லிச் சொன்னோம் என்றால் நம் நண்பன் இந்தத் தப்பை ஏற்றுக் கொள்ள மாட்டான்.
1.ஏனென்றால் நம்முடைய நண்பனின் உணர்வுக்கு முன்னாடி அவனின் நண்பன் உணர்வு இருப்பதால்
2.அதை எண்ணி முன்னாடி வலு சேர்த்துக் கொள்ளும் போது
3.நம் உணர்வுகளை நுகர்ந்த உடனே குற்றப் பெருக்குகளைக் கூட்டி
4.நம்மைத் தான் குற்றவாளியாகத்தான் சொல்வான்.
5.ஆக நுகர்ந்த உணர்வுகள் பற்று எதனின் உணர்வு கொண்டு வருகிறதோ
6.அதன் உணர்வு வலு சேர்க்கப்படும் போது நல்ல உணர்வுகள் செயல் குறைந்து போகும்.
7.இரத்தங்களில் கலந்த நிலைகள் கொண்டு இத்தகைய நிலை வருகிறது.
நம்முடைய உணர்வை ஏற்கவில்லை என்னும் போது நம்மிடம் உள்ள நல்ல குணங்களுக்கும் நல்ல குணங்களை உருவாக்கும் அணுவிற்கும் எதிர்ப்பான நிலைகள் வந்து
1.அந்த நல்லது ஒடுங்குகிறது.
2.நல்ல உணர்வை ஈர்க்கும் சக்தியை அது இழக்கிறது.
3.கார உணர்ச்சிகளும் வேதனை உணர்ச்சிகளும் தூண்டப்படும் போது அது ஒடுங்குகிறது… ஏற்றுக் கொள்வதில்லை… பார்க்கலாம்…!
ஏற்றுக் கொள்வதில்லை என்றாலும் நம்முடைய உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகும் போது கூடக் கொஞ்ச நேரம் நிலை நிறுத்தி விட்டோமென்றால் இதற்குச் சாப்பாடு தேவை.
நாம் எப்படி மூச்சு விடுகிறோமோ அதேபோல அந்த இயக்கத் தொடருக்குப் பிரணவம் – ஜீவன் வேண்டுமென்றால் நம் உடலின் உஷ்ணத்தினால் வாயு உண்டாகிறது. அழுத்தமும் ஏற்படுகிறது.
நாம் சமையல் செய்யும் போது எப்படிப்பட்ட வாசனை வருகிறது…? எந்தெந்தப் பொருள்களை அதற்குள் அதிகமாகப் போட்டிருக்கின்றோமோ அந்த வாசனை தான் அதிலிருந்து வெளியிலே வரும். அதிலிருந்து உருப்பெரும்.
அதைப் போன்று நல்ல அணுக்களுக்கு உண்டான ஆகாரம் இல்லை என்கிற நிலையில் மற்ற உணர்வுகளின் அழுத்தத்தினால் உடலிலே ஒருவிதமான மாற்று உணர்ச்சிகள் தோன்றுவதைப் பார்க்கலாம்.
இதையெல்லாம் எது இயக்குகிறது…? நமது உயிர் தான். அது எலெக்ட்ரிக் ஆக இருக்கிறது. நாம் நுகரும் உணர்வுகள் எலெக்ட்ரானிக் ஆக எதிர் நிலையான நிலையில் இயங்குகிறது.
இதைப் போன்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் நம் இரத்த நாளங்களில் பல கலக்கங்கள் ஆவதும் பலவிதமான அணுக்களின் மாற்றம் ஆவதும் நடக்கிறது, நாம் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் மற்றவர்களுடன் பழகும் போது எதன் உணர்வைக் கவர நேருகின்றதோ அதனால் ஏற்படக்கூடிய நிலைகள் தான்…! இவை எல்லாம்.
நல்லவர்களுடன் நாம் அமைதியான நிலையில் கேட்டு வந்து பேசிக் கொண்டு பழகி வந்திருந்தாலும் அடுத்தாற்போல் திடீரென்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டு வெறுப்பாகித் தாக்கிப் பேசும் போது என்ன நடக்கிறது…?
அதை நுகர்ந்தவுடன் நமக்கு மிகவும் இக்கட்டான நிலை\யாகி ஆகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஒன்றுக்கொன்று மோதும் போது சலனங்களும் சஞ்சலங்களும் ஆகி நம்முடைய நல்ல அணுக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது உடல் சோர்வடைகிறது. உணர்ச்சியும் மாறுகிறது.
எந்த உணர்வின் தன்மையை அதிகமாக்குகிறோமோ கண் வழி அதை நுகர்ந்து உயிரிலே பட்டு மீண்டும் அந்த உணர்ச்சிகள் அதிகமாக நம் இரத்த நாளங்களிலே சேர்க்கிறது.
1.இந்த இரண்டு பேருக்குள் சண்டை போட்டுவிடப் போகிறார்களோ…! என்று
2.வேடிக்கை பார்க்கும் நமக்குள் இந்தப் பதட்டம் வருகிறது. (ஆனால் நாம் சண்டை போடவில்லை)
அடுத்து அந்தச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களிடம் சொல்வதற்கு நமக்குத் துணிவு வந்தாலும் சிந்தையான பதில் சொல்லத் தெரியாது.
1.பின்பு நம்மை அறியாமலேயே பகைமை உணர்ச்சிகள் உடலுக்குள் சேரும்.
2.அப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் தான் முதலில் கலக்கிறது.
உயிர் அதை நம் உடல் முழுவதும் பரவச் செய்கிறது என்றும் அதன் வழியே தான் நம்மை வாழச் செய்து ஆளுகின்றது என்பதையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே ஆண்டவன் யார்…? நம்மை இயக்கும் அந்த ஆண்டவனுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?
நற்குணங்களின் உணர்வை நாம் சுவாசமாக்க வேண்டும். நம் உடல் முழுவதற்கும் அந்த உணர்வைப் பரவப் செய்யும் போது நம்மை ஆளும் ஆண்டவனுக்கு ஒரு நிம்மதியையும் சாந்தமும் சாந்தமான நிலைகளையும் தருகிறோம்.
நல்ல உணர்வின் உணர்ச்சிகளை நமக்குள் பரப்பச் செய்யும் பொழுது தீமையின் உணர்வுகளை அடக்கி நம்மை அமைதிப் படுத்தச் செய்கிறது
ஆனால் சாதாரண மனிதனின் உணர்வை வைத்து அதை நாம் அமைதி படுத்த முடியாது. அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
அந்தப் பதிவின் நினைவு கொண்டு “ஈஸ்வரா..!” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எடுத்து அதைத் தடுத்துப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தும் போது ஏற்கனவே பார்த்துப் பதிவு செய்த ஊழ்வினை என்ற (தீமையான) வித்திற்குள் இது கலந்து கொஞ்சம் கொஞ்சமாக இதன் வலு கூடும் போது அதை அடக்கக் கூடிய சக்தி பெற்று விடும்.
அப்பொழுது தீமையை அடக்கி நம் மனதை அமைதிப்படுத்தும் வல்லமையை நாம் பெறுகின்றோம்.


தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் சப்தரிஷி மண்டல எல்லையை அடையும் நெறி
மனிதனின் வாழ்க்கையில் வேதனை வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகின்றது
1.நல்ல குணங்கள் அடங்கிய பின் வேதனை அதிகமாகி
2.”இந்த உடலை விட்டு எப்படா செல்வோம்…” என்ற இந்த உணர்வுகள் வந்துவிடும்
ஆனால் யாம் சொல்லும் தியானத்தைக் கடைப்பிடித்த ஒரு அன்பரின் நினைவு என்ன…?
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற உணர்வுகள் வலுவாக இருப்பதால்
2.அந்த துருவ தியான நேரத்தில் காலை நான்கு மணிக்கு அதனின் வலுக் கொண்டு
3.அந்த ஆன்மா பிரிந்து அதனுடைய ஈர்ப்பு வட்டத்திலே சென்றடைகின்றது.
ஆனால் வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது விஷத்தின் தன்மை கொண்டவர் அனைவருமே அமாவாசை நாளுக்கு அருகிலே தான் உடலை விட்டுப் பிரிவார்கள். அதாவது விஷ அலைகள் பரவும் நேரத்திலே தான் அந்த ஆன்மாக்கள் பிரியும்.
அப்படிச் சென்றால் வேதனையான உணர்வுகளை அதிகமாக எடுத்து விஷத்தின் தன்மை பெற்று அந்த உணர்வோடு வெளி வரப்படும் பொழுது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவாக எடுக்கின்றதோ இந்த விஷம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளும்.
1.அதன் உணர்வு கொண்டு இந்த மனித உடலைச் சவமாக்கிவிட்டு விஷத்தின் அணுக்களாகப் பெருகி…
2.உயிர் பாம்பின் ஈர்ப்பிற்கு அழைத்துச் சென்று நம்மைப் பாம்பாக உருவாக்கிவிடும்,
ஆடு, மாடு மற்ற உயிரினங்கள் எல்லாம் ஓர் விஷத்தின் தன்மையைத் தனக்குள் உடலாக்கிக் கொள்கின்றது. அதனுடைய கழிவை (சாணத்தை) நல்லதாக வெளிப்படுத்துகின்றது.
இத்தகைய தன்மையிலே இந்த மனித உடலில் வேதனை என்று உணர்வு அதிகமாகி விட்டால் விஷத்தின் உணர்வைக் கவர்ந்து அந்த வலுவின் தன்மை கொண்ட மாடாகவோ ஆடாகவோ… அதிகமான விஷமானால் விஷத்தைப் பாய்ச்சிப் பாம்பாகும் நிலை வந்துவிடும்.
காரணம்… ஒருவர் வேதனைப்படுகின்றார் என்று… “அதைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்” என்றால் நிச்சயம் பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.
சந்தர்ப்பத்தால் வேதனைகளின் உணர்வை நுகர்ந்தால்…
1.அந்த வேதனையை மறக்க துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் நாம் சேர்த்துக் கொண்டு வந்தால் அந்த உணர்வு வலுவாகி
2.அந்த அடிப்படையில் உடலை விட்டுச் செல்லும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் எல்லையைச் சென்றடைகின்றோம்
3.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிக்கும் அன்பர்கள் அனைவரும் செயல்படுத்த வேண்டிய நெறி முறை இது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் மலைப் பகுதிகளில் சில பாறைகளில் அமர்ந்துள்ளான். அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் அதிலே பதிவான நிலைகள் கொண்டு அந்தப் பாறைகள் மேகங்களைக் கவர்கின்றது.
மேகங்களை இழுத்துக் கவர்ந்து மோதியவுடனே அங்கே நீராக வடியத் தொடங்குகிறது. அகஸ்தியருடைய கையில் அதனால் தான் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் போய் உட்கார்ந்தானோ அங்கெல்லாம் இத்தகைய தண்ணீர் இருக்கும்.
1.கீழே நீர் இருக்காது.
2.ஆனால் அந்த மலை உச்சிகளில் மேகங்கள் போவதைக் கவர்ந்து நீராக வடிந்து
3.சில தெப்பங்களும் அங்கே இருக்கும்… கர்நாடக மாநிலத்தில் நிறைய இடங்களில் இது இருக்கும்.
பெல்காம் பக்கத்தில் ஒரு மலை இருக்கிறது. அதில் உள்ள ஒரு சிறிய குகையில் சிலை இருக்கிறது. அந்தச் சிலை மீது நெய்யை விட்டால் அது வெண்ணெயாக மாறும். அந்தக் கல்லில் அந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும்.
நெய்யைக் கொண்டு போய் சிலை மீது ஊற்றுவார்கள். பின் தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து முடிந்தவுடன் சுரண்டி எடுத்தோம் என்றால் அந்த வெண்ணெயாக மாறும்.
1.நெய்யில் இருந்து வெண்ணெயாக மாறும்.
2.அந்தச் சிலைக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
3.அபிஷேகத்திற்கு நெய்யைக் கொடுப்பார்கள். மாற்றம் அடைந்தவுடன் வெண்ணெயாக எடுத்து வருவார்கள்.
4.அதை எடுத்து வந்து சாப்பிடுவார்கள்.
அந்த மாதிரி சில இடங்கள் அங்கே உண்டு. அதற்கு மேலே உச்சியில் பார்த்தீர்கள் என்றால் நாழிக்கிணறு. அதில் நீங்கள் தண்ணீர் எவ்வளவு மோந்தாலும் வந்து கொண்டே இருக்கும்.
அங்கே மலை மீது ஏறும் இடத்தில் இன்னொரு குகை இருக்கிறது. அதற்குக் கீழே பார்த்தீர்கள் என்றால் தண்ணீர் இருக்கும். அந்தத் தண்ணீரில் ஏதாவது ஒரு பொருளைப் போட்டோம் என்றால் கீழே ஒரு பாதை இருக்கும். அதிலே மிதந்து வெளியிலே வரும். ஆனால் இந்தத் தண்ணீர் வற்றுவதே இல்லை.
மைசூர் பாகமண்டலம் தலைக் காவிரிக்குப் போனால் அங்கே மலை உச்சியிலிருந்து தண்ணீர் வரும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமாக இப்படி வரும்.
மேக மண்டலங்களை இழுத்து மோதித் தண்ணீராக வருகின்றது. அங்கேயும் அந்தத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். ஏனென்றால்
1.அங்கே அகஸ்தியன் அமர்ந்த இடம்.
2.மேகங்களை இழுத்து தண்ணீராக மாற்றக்கூடிய நிலைகள் அங்கே இருக்கிறது.
அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்
1.நீருக்காக வேண்டி அங்கே மேகத்தை இழுப்பதற்காக வேண்டி
2.பல பச்சிலைகளையும் அங்கே தடவி இருக்கின்றார்கள்.
இயற்கை எப்படி மாற்றங்கள் ஆகின்றது…? நீர் சுரபிகள் எப்படி உருவாகின்றது..? என்று இதெல்லாம் அனுபவபூர்வமாகக் கண்டறிந்தது.
மனிதனுக்கும் இத்தகைய நீர் சுரபிகள் உண்டு. ஒரு பச்சிலையைக் கொடுத்தால் நீர் சுரப்பி எல்லாம் அடைத்துக் கொள்ளும். பின் வறட்சி ஆகிவிடும்.
அதே சமயத்தில் சாப்பிடக்கூடியதை இரத்தமாக மாற்றக்கூடிய சில பச்சிலைகளும் உண்டு. இப்படி எத்தனையோ வகைகள் இருக்கிறது. ஒரு தாவர இனத்தின் உணர்வுகள் மற்றொன்றோடு மாற்றப்படும் போது எப்படி மாறுகிறது…? என்று இது அத்தனையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்தார்… உணர்த்திக் காட்டினார்.
இந்த மாதிரி அதிசயங்களை எல்லாம் யாம் (ஞானகுரு) பார்த்தோம். ஏனென்றால் இதெல்லாம் அந்த மலைப்பகுதியில் நடந்து போய்ப் பார்த்து வந்தது.
அவ்வாறு கண்ட பார்த்த உணர்ந்த உண்மைகளை உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம். இதைப் பதிவாக்கிக் கொண்டால்
1.அன்று வாழ்ந்த மெய் ஞானியான அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நீங்கள் எளிதில் பெறலாம்.
2.அவன் பெற்ற அண்டத்தின் ஆற்றல்களை நீங்களும் பெறலாம்.


“எம்முடைய உபதேசங்களை” மீண்டும் மீண்டும் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்
இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எதை எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தையும்
1.நமது உயிர் ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய… என்று அந்தக் குணங்களில் இயக்கும் அணுவாக நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
2.இவ்வாறு காலையிலிருந்து இரவு வரையிலும் சதாசிவமாக்கிக் கொண்டே உள்ளது நமது உயிர்.
நாம் காலையில் இருந்து இரவு வரையிலும் எத்தனையோ வேதனைகள் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் குரோதம் பயம் ஆத்திரம் இதைப் போன்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அவை அனைத்தையும் நமது உயிர் “ஓ…” என்று ஜீவணுவாக மாற்றி “ம்” என்று நமது உடலாக மாற்றி விடுகின்றது.
உதாரணமாக… செடி கொடியினில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றுகின்றோம். ஆனால் (முதலில் உருவான) அந்தச் செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
நிலத்தில் ஊன்றப்பட்ட அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு… சூரியனால் கவர்ந்து வைக்கப்பட்டுள்ள தாய்ச் செடியின் சத்தை நுகர்ந்து அதே செடியாக விளைந்து அதன் வித்தை மீண்டும் உருவாக்குகின்றது.
இப்பொழுது நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் வேதனை சலிப்பு சஞ்சலம் கோபம் பயம் அவசரம் ஆத்திரம் என்ற உணர்வினை நாம் நுகர்ந்தால்
1.எந்தெந்த மனிதனின் உடலிலிருந்து அந்த வேதனை உருவாகி வெளி வந்ததோ அதனை நாம் நுகரப்படும் பொழுது
2.அதே வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாகி விடுகின்றது.
இப்பொழுது ஒரு செடியில் விளைந்த வித்து எவ்வாறு தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து அது தனது வித்தை உருவாக்குகின்றதோ… தன் இனத்தை உருவாக்குகின்றதோ அதே போல்
1.நம் உடலுக்குள் பிறர்படும் வேதனையோ அல்லது மற்றதையோ வேடிக்கை பார்த்தால்
2.அல்லது சாபமிடுவதைப் பார்த்தால் ஒருவர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்தால்
3.அந்த உணர்வை நாம் நுகர்ந்து வேதனைப்படுகின்றார் என்று அறிகின்றோம்.
ஆனாலும் அத்தகைய உணர்வுகளை நாம் நுகர்ந்த பின் உயிர் அறியச் செய்கின்றது. அவை நம் இரத்தங்களில் கலந்து…
1.எந்த உடலில் அது உருவானதோ அதே அணுவின் தன்மை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது அதற்கு இரை தேவை.
2.எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ அது காற்றில் உண்டு.
3.அப்பொழுது நம் உடலுக்குள் இருந்து அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது அதே உணர்வை நாம் நுகர்வோமென்றால்
4.நமக்குள் இதே போல் வேதனைப்படுவதும் வெறுப்படைவதும் சங்கடப்படுவதும் போன்ற நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.
இவ்வாறு நமக்குள் வருவதிலிருந்து நாம் மீள்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கச் செய்கின்றோம். அதைப் பெற வேண்டும் என்றால் யாம் கொடுக்கும் உபதேச உணர்வினைப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரமோ இப்புவியில் துருவ மகரிஷி அல்லது அகஸ்தியராக இருக்கும் பொழுது தீமைகளை வென்று வானை நோக்கி உணர்வுகளை நுகர்ந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.
அதனின்று வருவதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கிறது. நமது பூமியோ அதைத் துருவப் பகுதியில் கவர்ந்து நமது பூமிக்குள் கொண்டு வருகின்றது.
1.அதனை நீங்கள் நினைவு கூர்ந்து உங்களில் பதிவாக்கி நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற முடியும்.
2.அப்போது நாம் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமையின் அணுக்களை நமக்குள் வளராது தடுக்க உதவும்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வுகளை நமக்குள் அந்த அணுக்களைப் பெருக்கவே நாம் தியானமிருக்கின்றோம்….
3.அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யவும் சொல்கிறோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் என்னைத் தங்கம் செய்யச் சொன்னார் குருநாதர். பாதரசம் ஈயம் காரீயம் இதை எல்லாம் கொண்டு வரச் சொன்னார். ஒரு இரும்புக் கரண்டியையும் கொண்டு வரச் சொன்னார்.
எல்லாம் போட்டு அதிலே அதிலே பாஷாணக் கல்களைப் போட்டவுடனே தண்ணீராகக் கரைகிறது. ரசமாக மாறி குழம்பு மாதிரி ஆகிவிடுகிறது.
அது குழம்பு மாதிரி ஆன பிற்பாடு அங்கே இருக்கிற குப்பை செத்தை எல்லாவற்றையும் போட்டு எரிக்கச் சொன்னார். அது எரித்தவுடனே அதிலே இருக்கக்கூடிய அழுக்குகள் எல்லாம் ஆவியாகப் போய்விடுகிறது.
அதிலே பாதரசம் மாதிரி மிஞ்சுகிறது, பல பொருள்களும் அது வேக வேக இந்த உணர்வுகள் அதிகமாகிறது. கடைசியில் “இது எப்படிடா இருக்கிறது…?” என்று கேட்டார் குருநாதர்.
நெருப்பிலே இருந்தால் எப்படி இருக்கும்..? அது பளீர்…! என இந்த நெருப்பு மாதிரியே தெரிந்தது.
எப்படிடா இருக்கிறது…? என்றார்.
தக…தக…! என்று இருக்கிறது என்று சொன்னேன்.
என்னடா…! தக…தக…? என்று சொல்லி எனக்கு இரண்டு அடி கொடுத்தார். அவர் எப்படி இருக்கிறது என்று கேட்கக் கேட்க நான் தக…தக…! என்று சொல்லிக் கொண்டேயிருந்தேன்.
தக…தக…! என்றால் என்ன…? என்றார்.
தங்கம் மாதிரி இருக்கிறது….! என்றேன்.
தூ……! என்று துப்புடா… போட்டு விட்டார். தூ…! என்று அவர் துப்பினார். இது எனக்குத் தெரியாது. தூ…! என்று உமிழ் நீரைத் துப்பி அதாவது
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லச் சொல்லி விட்டு
2.அந்த உணர்வை எடுத்து அது மேலே துப்புகின்றார்.
மூடுடா…! என்றார். அப்புறம் பார்த்தால் தங்கக் கட்டியாக இருக்கிறது. இதிலே இத்தனை வேலை இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்லி அந்த உணர்வை எல்லாம் எனக்குள் ஊட்டி ஒவ்வொரு அறிவையும் கொடுக்கிறார்.
தங்கத்தைக் கொண்டு போய் கடையில் விற்று வா என்றார் குருநாதர். நகைக் கடை ஆசாரி ஒருவரிடம் கொடுத்ததும் அவர் உரசிப் பார்த்தார்.
அட… அட… அடா…! நைனா… கிடைத்துவிட்டது கிடைத்துவிட்டது…! அவருக்கு வார்த்தையே வர மாட்டேன் என்கிறது. நீங்கள் இதை எதிலே செய்தீர்கள்…? எப்படிச் செய்தீர்கள்…! என்று கொஞ்சம் சொல்ல வேண்டும். பெரிய கட்டிடமாகவே கட்டிவிடலாம் என்று சொல்கிறார்.
நீ கிழவனுடன் (ஈஸ்வரபட்டருடன்) சேர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும் போதே எனக்குத் தெரியும் என்று சொல்கிறார் அந்த ஆசாரி. இன்னும் கொஞ்சம் செம்பை அதிலே சேர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டு வா நான் வாங்கிக் கொள்கிறேன் என்கிறார். அதை விற்று வந்துவிட்டேன்.
ஏனென்றால் குருநாதர் தங்கம் செய்ய என்னென்ன வேலை செய்தார்…? என்று
1.தங்கம் மாதிரி இருக்கிறது என்று சொல்லி
2.அந்த உணர்வுக்குண்டான கலவைகள் என்னென்ன…?
3.அதைச் சொல்லும் பொழுது “என்னென்ன உமிழ் நீர்கள் சுரக்கிறது…?” எனக்கு அந்த உணர்வை ஊட்டுகிறார்.
ஏனென்றால் பல கோடித் தாவர இனங்களையும் சாப்பிட்டு விட்டுத் தான் இன்று மனிதனாக வந்து இருக்கிறோம். அதில் எதை எதைக் கலக்க வேண்டும்…? என்று உணர்த்தி அந்த உமிழ் நீரை அதில் துப்பும்படிச் சொல்லி அதில் பட்டவுடனே எப்படித் திரவகத்தை ஊற்றியதும் நிறங்கள் மாறுமோ அது மாதிரி அங்கே உயர்ந்த தஙகமாகிறது.
இப்படி அனுபவபூர்வமாகச் செய்து காட்டினார் குருநாதர்.
(ஆனால் மற்றவர்கள் தங்கம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பாதரசத்தையும் பச்சிலைகளையும் உருட்டிப் பிரட்டி என்னென்னமோ செய்து பார்க்கிறார்கள். கடைசியில தங்கத்தையும் கலக்கின்றார்கள். எல்லாம் முடிந்ததும் பார்த்தால் போட்ட தங்கம் மட்டும் இருக்கிறது மற்ற எல்லாம் கரைந்து போய்விடுகிறது. தங்கம் செய்வதைக் கொஞ்சம் காட்டிக் கொடுங்கள். உங்களுக்குக் கோவிலையே கட்டிவிடலாம் என்று எமக்குப் (ஞானகுரு) பின்னாடி சுற்றியவர்கள் ஏராளம் பேர்)
அப்புறம் குருநாதர் எப்படிச் செய்தாரோ அதே போல் நானும் முயற்சி செய்தேன். அவர் எங்கெங்கே போய் குப்பை செத்தை எல்லாம் அள்ளச் சொன்னாரோ மறுபடியும் நான் அதை எடுத்தேன்.
1.எல்லாம் செய்து அவர் சொன்ன மாதிரி அந்த உணர்வு கொண்டு தூ……! என்று துப்பினேன்.
2.இரண்டாவது தரம் தங்கமாகிப் போனது…!
நகைக் கடைக்குக் கொண்டு போனவுடனே அந்தக் கட்டியைப் பார்த்தவுடனே “துள்ளுகிறார்கள்…” அடடா…! தினம் இவ்வளவு கொண்டு வந்து கொடுத்தால் போதும்…! என்கிறார்கள்.
அப்புறம் என்னை விரட்டி விரட்டிப் பிடித்தார் குருநாதர்.
1.அவன் ஆசையை ஊட்டி விட்டு உனக்கு யோசனை சொல்கிறான்.
2.”நீ உன் மனதை தங்கமாக்க வேண்டும்…!” என்று நான் சொன்னால்
3.நீ இதைப் போய்த் தங்கமாக்குகிறாயே…!
4.அவன் ஆசையை ஊட்ட நீ தங்கத்தைச் செய்ய எங்கேடா போகிறாய்…?
5.உன்னுடைய ஒவ்வொரு உணர்வும் அது மங்காத நிலைகளுக்கு
6.”அந்தத் தங்கம் போல் உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் செய்யச் சொன்னேன்..!” என்று தெளிவாக்கினார் குருநாதர்.
சாதாரணமாக நான் கற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றிலேயும் “அடி வாங்கித் தான் கற்று வந்தேன்…” சொல்வது அர்த்தம் ஆனதா…?
முதலில் தங்கத்தை விற்றதற்கு ஒன்றரை ரூபாய் கொடுத்தார். இரண்டாவது கொடுக்கும் போது… சுத்தமாகவே நீ பொய் பேசினாய்… ஏமாற்றினாய் அதனால் உனக்குக் காசில்லை… போ…! என்று விற்ற காசு எல்லாவற்றையும் வாங்கி கொண்டு விட்டார்.
அது மட்டுமல்ல. அடி வேறு கொடுத்தார்.
1.நீ திருடன்டா…! என்கிறார்.
2.தங்கம் செய்துவிட்டு ஏமாற்றித் தப்பி ஓடலாம் என்று பார்க்கிறயா…?
3.நீ உன் மனதைத் தங்கமாக்குடா… போடா…….!


இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்க வேண்டும்
கர்ப்பிணியாக இருக்கும் அனைவரும்
1.வியாசகன் அகஸ்தியன் போகர் என்று பெரும் தத்துவ ஞானிகளுடைய பெரும் மகரிஷிகளின் உணர்வுகளை எண்ணி எண்ணி ஏங்குங்கள்.
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தை அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.இவ்வாறு பெரும் மகரிஷிகளை நீங்கள் சிருஷ்டிக்க வேண்டும்.
எதிர்காலக் குழந்தைகள் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளைப் பரப்பினால் தான் விஞ்ஞான அறிவால் பேரழிவாக வந்து கொண்டிருக்கும் நிலையிலிருந்து இந்த உலகை மீட்ட முடியும்.
காரணம்… மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற நிலையில் உருப்பெற்றுக் கொண்டிருக்கும்… அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும்… மனிதனை மனிதன் என்று இல்லாது அசுரத் தன்மை கொண்டு அழித்திடும் உணர்வுகள்… ஒவ்வொரு மனிதனின் நிலைகளிலும் இது ஊடுருவி உள்ளது.
அத்தகைய அசுர உணர்வுகளிலிருந்து மீட்டிட அந்தச் சப்தரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தி கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு உருப்பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கிப் பெறுவீர்கள் என்றால்
1.அந்தக் குழந்தை உங்களையும் காக்கும் உங்கள் குடும்பத்தையும் காக்கும்.
2.எந்த ஊரிலே பிறந்ததோ அந்த ஊரையும் காத்திடும்.
3.அதனின்று உலகைக் காத்திடும் நிலை வரும்.
விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவை அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைகள் அது வளர வளர வளர இந்த உலகில் உள்ள தீமைகளை மாற்றி அமைத்திடும் திறன் பெறும்.
இனி இந்த உலகம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றது. எவ்வளவு கோடிப் பணம் வைத்திருந்தாலும் அவை நமக்கு உதவப் போவதில்லை.
1.இன்று காஷ்மீரிலோ அல்லது இந்தியாவின் சில பகுதிகளை எடுத்துக் கொண்டாலோ
2.அல்லது மற்ற பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ளோர் அனைவருமே தன் பிள்ளை எது…? தன் குழந்தைகள் எது…? என்று
3.செல்வங்கள் அழிந்து… அனாதைகளாக்கப்பட்டு வேதனைப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
4.இது போன்று உலக நிலைகள் அனைத்திலும் ஆப்பிரிக்காவிலும் இன பேதங்களால் பேரழிவுகள் வந்து கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் இது போன்று ஏற்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலையில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில்… அகஸ்தியனால் தீமைகளை அழித்திடும் ஆற்றல் அவனில் பெற்று தீமையற்ற உடலாகத் தான் வளர்த்து… இன்றும் துருவ நட்சத்திரமாக… ஒரு பேரண்டமாக சப்தரிஷி மண்டலமாக வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அகஸ்தியன் காட்டிய அறநெறியைப் பின்பற்றி எத்தனையோ தத்துவ ஞானிகளும் மகான்களும் தோன்றியுள்ளார்கள். ஆகவே… இன்று கர்ப்பிணியாக இருப்பவர் அனைவரும் அந்த அகஸ்தியன் வியாசகன் போகர் போன்ற அந்த மகரிஷிகளுடைய உணர்வுகளைக் கருவிலிருக்கும் குழந்தைக்கு இணைத்துப் பழகுதல் வேண்டும்.
பிருகு அத்திரி போன்றவர்கள் ஆரம்பத்தில் அரசர்களாக இருந்தாலும் பின்பு பெரும் கொண்ட சக்திகளை தங்களுக்குள் பெருக்கி வளர்த்துக் கொண்டார்கள். அத்தகைய மகரிஷிகளின் உணர்வுகளைக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைகள் பெற வேண்டும் என்று சதா அதை உருப் பெறச் செய்யுங்கள்.
1.உலகில் இருக்கும் அசுர சக்திகளை மாற்றிடும் திறன் அந்த எதிர்காலக் குழந்தைகளுக்கு வளர்கின்றது.
2.தீமைகளில் இருந்து உலகைக் காத்திட இந்தத் தென்னாடு பயன்படப் போகின்றது.
உலகில் பேரழிவு வரும் இந்த நேரங்களில்… இந்த உபதேசத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள சகோதரிகள் கர்ப்பிணிகளாக இருந்தால் இதை உபதேசியுங்கள்.
அவ்வாறு நாம் செய்தோம் என்றால்
1.இந்த உலகைக் காக்கும் மகரிஷிகளை நாம் சிருஷ்டிக்கலாம்.
2.அவர்களின் மறைவில் நாமும் பிறவா நிலையை அடையலாம். இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.
தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.
விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.
1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.
குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.
அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..
இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”
ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்று தெளிவாகக் கூறினார் குருநாதர்.
இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.
ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).
அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.
போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.
உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.
ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.
ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.
தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.


இந்த உடலில் நேரமாகி விட்டது
நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் ஒன்றைப் பார்த்து, அதனிடமிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகொண்டு அதற்கு இரையாகி அதனின் உணர்வைக் கவர்ந்து… கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப சரீரம் பெற்று, இப்படி பல கோடிச் சரீரங்களைப் பெற்றுப் பல கோடி சரீரங்களைப் பெற்றதன் பின்
1.இன்று எல்லாவற்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் சக்தியாக
2.நம்மை மனிதனாக உருவாக்கியது… இதுதான் “கோடிக்கரை”.
நாம் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை உருவாக்குகின்றது. உணர்வின் தன்மையை நமது உடலாக மாற்றுகின்றது என்பதனைத் தெளிவாக்குவதற்காக, அன்று ஞானிகள் இராமேஸ்வரம் என்று பெயரை வைத்து, ஸ்தல புராணங்களை வடித்து வைத்தார்கள்.
1.உலகில் எங்கிருந்து சுழன்று வந்தாலும் எத்தனை ஆலயங்களுக்குச் சென்று வந்தாலும் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும்
2.கடைசியாக மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு குணமும் நுகரப்படும்போது, அந்த குணங்களுக்கெல்லாம் அந்தந்த உடலைக் காக்கும் நிலை வருகின்றது. காத்திடும் உணர்வுகள் அந்தந்த உடலில் வரப்படும்போது, அந்த குணங்கள் அனைத்தும் தெய்வமாகின்றது.
நுகர்ந்த உணர்வின் எண்ணங்களை உயிர் உடலாக உருவாக்குகின்றது. அதாவது, எதை நுகர்கின்றோமோ அதை “ஓம் நமச் சிவாய” என்று நமக்குள் ஜீவ அணுவாக மாற்றி, உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவரை நாம் ஏசும் பொழுது “ஏசுகின்றார்” என்ற உணர்வை எடுத்து, அந்த உணர்வுகள் அவரிடத்தில் உடலாகி விட்டால் அவருடைய உடலுக்குள் சேரும் அனைத்தும் “சிவதனுசு”.
நம் உடலுக்குள் அதே ஏசிய உணர்வின் தன்மை பதியும்போது, அதனின் எண்ணங்கள் கொண்டு நமது செயலாக்கங்கள் இருக்கும் என்பதைத்தான் நமக்குக் காவியங்கள் தெளிவுபடுத்துகின்றன.
நமது உடலில் சேர்த்த உணர்வு கொண்டு “ஒருவன் என்னைக் கோபித்தான்” என்று தன் நண்பன் ஒருவரிடம் சொல்லி,
1.“என்னை இது மாதிரியெல்லாம் பேசுகிறான் அவனை விடுவேனா பார்” என்று அங்கு சொல்லப்படும்போது,
2.நமது உடலில் விளைந்த இந்த உணர்வுகள் தனுசாக மாறி கோபமான சொல்லின் உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அதற்குத்தான் “தனுசு” என்று பெயர் சூட்டுகின்றனர்.
ஓருவர் நமக்கு தீங்கு செய்தார் எனும்போது, அதனின் உணர்வின் தன்மை “ஓம் நமச்சிவாய” என்று
1.நமது உடலாகும் பொழுது சிவம் ஆகின்றது.
2.அதனின் உணர்ச்சிகள் சொல்லாக வெளிப்படும் போது சிவதனுசு ஆக மாறுகின்றது.
ஆனால் ஒருவர் நம்மைத் திட்டியதை நமது நண்பரிடம் சொல்லுகின்றோம். நண்பரிடத்தில் சொல்லப்படும் பொழுது, இந்த உடலில் திட்டிய உணர்வுகள் வந்ததனால்“அவனை நான் விடுவேனா பார் அவனைத் தொலைத்துக் கட்டுகிறேன் பார்” என்று நாம் சொல்லுகிறோம்.
ஆனால் நம்முடைய நண்பர் அவருக்கும் (திட்டியவர்) நண்பராக இருக்கும் பட்சத்தில் நம்மைப் பற்றி அவர் (திட்டியவர்), நமது நண்பரிடத்தில் கூறியதை நண்பர் நம்மிடம் வந்து “அவர் உன்னை இந்த மாதிரிப் பேசுகிறார்…” என்று சொல்லும்போது என்ன ஆகின்றது…?
நாம் “ஆ…. அப்படி ஆகிவிட்டதா…! அவனை அடிக்கிறேன் அவனைக் கொல்கிறேன்” என்று இத்தகைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது, சுவாசித்த உணர்வுகள் என்ணங்களாக மாறுகின்றது,
1.அதனின் உணர்ச்சிகளை உடலாக மாற்றுகின்றது
2.சொற்கள் தனுசாக மாறி, எவரைச் சொல்கின்றோமோ
3.அவரிடத்தில், இதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
4.அதனால்தான், நமது உடலிலே விளைந்த உணர்வுகளை “சிவதனுசு” என்று காவியங்கள் தெளிவாக கூறுகின்றன.
ஆகவே நாம் உயிரால் நுகரப்படும் உணர்வுகள் உடல் பற்றுடன் இருக்கப்படும்போது, பற்றின் உணர்வுகள் இந்த உடலைக் காப்பதற்குத்தான் இந்த தனுசு உதவும்.
உடல் பற்றின் தன்மை கொண்டுதான் பல கோடிச் சரீரங்களைப் பெற்று, இன்று “கோடிக்கரையாக” மனித உடலைப் பெற்றோம் என்பதனை இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.
இராமாயணத்தில் “இராமேஸ்வரம்”, எண்ணத்தின் உணர்வின் தனமையை உயிர் இயக்குகின்றது, என்பதை உணர்த்தும் நிலையாக இராமர் தனுசுகோடிக்கு வந்தபின் பூஜைக்கு நேரமாகிவிட்டது என்று அங்கு இருக்கும் மணலைக் குவித்து சிவலிங்கமாகச் செய்து பூஜை செய்தார்.
ஏனென்றால்
1.“நேரமாகிவிட்டது” என்றால் பூஜை செய்ய நேரமாகி விட்டது என்று மற்றவர்கள் சொல்கின்றனர்.
2.ஆனால் “இந்த உடலில் காலதாமதமாகி விட்டது” என்பதுதான் அதனுடைய பொருள்.
3.நமது உணர்வுகளை ஒருங்கிணைத்துச் சேர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கு, இராமர் மணலைக் குவித்து (மனதைக் குவித்து)
4.சிவபூஜை செய்தார்… சிவலிங்கத்தை பூஜித்தார்… சிவலிங்கமாக மாற்றினார் என்று காண்பித்தார்கள்.
5.எண்ணங்களைக் குவித்து உருவானதுதான் இராமேஸ்வரம்.
அனைத்துத் தீமைகளையும் விஷத்தையும் வென்றது, துருவ நட்சத்திரம். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை, காலையில் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. அதை நமது பூமி, துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது.
இப்படி நம் பூமியில் படரும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை, மனிதர்களான நாம், நமது எண்ணம் கொண்டு நம்முள் பெற முடியும். ஆகவே
1.இதிலிருந்து நாம் இராமேஸ்வரம்… நமது எண்ணத்தால்… துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
2.“தனுசுகோடி”, நம் என்ணங்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் நிறுத்தி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நாம் நுகரும்போது,
3.அதனின் உணர்வுகள் நமது உயிருடன் ஒன்றி கடைசி நிலையாகப் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது என்ற நிலையை அறிந்து தியானித்து, இதனின் உணர்வின் எண்ணங்களை நமக்குள் வளர்க்க வேண்டும்.
இதனை நமது எண்ணங்கள் கொண்டு, எப்படி வளர்க்க வேண்டும்…? என்பதைத்தான் இராமாயணம் தெளிவாகக் கூறுகின்றது.
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், தன்னைக் காத்திடும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து நுகர்ந்தறிந்த உணர்வுகளுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
ஆகவே, எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட உணர்வுகள் மனிதராகப் பிறக்கின்றது.
1.தீமையிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து
2.தீமையிலிருந்து விடுபடும் மனிதரின் உடலை நமது உயிர் உருவாக்கியுள்ளது.
3.ஆகவே மனிதர்களான நாம் தான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிலைகளை எண்ண முடியும்.
ஆனால் தனுசுகோடி என்பது உயிர் பல கோடித் தீமைகளை வென்று தீமைகளையும் விஷங்களையும் வெல்லக்கூடிய சக்தி பெற்று உணர்வை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
நாம் அனைவரும் உயிரோடு ஒன்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் எமது அருளாசிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் கடைசிக் கரையாக இதை மனிதன் புரிந்து கொள்வதற்காக ஓரத்தில் ஒதுங்கி ஒரு திட்டுக்குள் கொண்டு வருகின்றார்கள் – கோடிக்கரை.
அங்கே கடல் தெரிகின்றது.
1.அந்தக் கடலுக்கு நேராக வடக்குத் திசையில் அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கும் அளவிற்கு அந்தத் தீவும் அமைந்திருக்கின்றது.
2.அதனால் இராமேஸ்வரம் என்ற ஊரில் அங்கே துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சாதாரண மக்களும் எண்ணி ஏங்கி
3.இந்த உடலுக்குள் சார்ஜ் செய்வதற்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஏற்றி வலுப்படுத்திக் கொண்டபின் அடுத்து தனுசு கோடி.
சந்தர்ப்பத்தில் நம் வாழ்க்கையில் எத்தனையோ வேதனைகளைச் சந்திக்கின்றோம். உதாரணமாக ஒரு பொருள் உடைந்து அதிகமான பணம் செலவழிந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்திவிட்டு, “சரி நாளைக்குச் சம்பாதித்துக் கொள்வோம்…” என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சாதாரண மக்களுக்கும் எளிதில் புரியும் வண்ணம்
1.பக்தி மார்க்கத்திலே பக்தி எப்படி இருக்க வேண்டும்…?
2.மனிதன் தீமைகளை எப்படி நீக்க வேண்டும்…?
3.அதற்கு வேண்டிய உபாயங்களைக் கொடுத்துக் காட்டியுள்ளார்கள்.
ஆகவே தனுசு கோடி எத்தனை கோடி உணர்வுகளைப் பெற்று இன்று இந்த மனிதனாக ஆனோமோ தீமைகளை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த வாழ்க்கையில் எடுத்துக் கொண்டு வந்தால் ஒவ்வொரு நிலைகளிலும் கோடி.
1.இப்படிக் கோடி உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது
2.நம் உயிர் ஒன்றாகின்றது.
கோடி உணர்வின் ஒளியின் ஒன்றாகி அது இன்றைக்கு ஒளியின் சரீரமாக இருப்பது துருவ நட்சத்திரம். அங்கே சென்றால் நாமும் ஒளியின் சரீரம் ஆகின்றோம்.
27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து சூரியன் ஒளியாக ஆகிறது. அதே போல 27 நட்சத்திரத்தின் உணர்வுகளால் விளையப்பட்ட தாவர இனங்களின் உணர்வையெல்லாம் எடுத்து இந்த உயிர் என்ன செய்கிறது…? உணர்வின் ஒளியாக மாறுகின்றது.
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எடுத்து நமக்குள் மனிதனாகி ஒளியின் உணர்வு பெற்றபின்
2.அது ஒளியின் உடலான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நமக்குள் இருக்கும் தீமைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.
சாதாரணமாக நாம் வாழும் (மற்ற) இடங்களில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்க முடியாது. அந்தக் கடலோரப் பகுதிப் பக்கம் போகும் போது இராமேஸ்வரத்தில் வடக்குத் திசையில் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம்.
துருவ நட்சத்திரத்தைப் பார்த்து அதை நமக்குள் உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் ஞானிகள் அன்று அந்த இராமேஸ்வரத்தில் காட்டியுள்ளார்கள்.
இதை யாரும் சொல்வதில்லை. ஆனால் இன்று என்ன செய்கிறார்கள்…?
காசை வாங்கிக் கொண்டு சாங்கியங்களைச் செய்து பாவத்தைப் போக்கும் இடம் என்று
1.தவறான பாதைகளைக் காட்டித் தவறான வழிகளில் போய்
2.அதுதான் நமக்குச் சிறந்தது என்று
3.இதன் வழிதான் பெரும்பகுதி மக்கள் போய்க் கொண்டுள்ளார்கள்.
நமது வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஞானிகள் காட்டிய நிலைகளில் உன் உயிரை நீ மதித்து நட, உன்னை அறியாது சேர்த்த அழுக்கை நீக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஒளியை எடுத்துக் கொள் என்று தான் இராமேஸ்வரத்தை வைத்துள்ளார்கள்.
ஏனென்றால் 27 நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத்தான் பாதரசமாக மாற்றி இந்த உலகையே ஒளியாக ஆக்குகின்றது சூரியன்.
27 நட்சத்திரத்தின் உணர்வால் விளைந்த தாவர இனத்தின் உணர்வை உயிர் உணர்ச்சியின் எண்ணங்களாக ஆக்கப்பட்டு உணர்ச்சிக்கொப்ப நாம் இயங்குகின்றோம். (மனிதனாக்கப்பட்ட நிலை)
27 நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து ஒளியின் உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன்.
1.விஷத்தின் தன்மையை முறித்தவன்,
2.உணர்வின் தன்மையை ஒளியாக்கியவன்
3.ஒளி உடலாக ஆனவன் அகஸ்தியன்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஆண் பெண் என்ற நிலைகளில் இணைந்து ஒளி உடல் பெற்றவன் அவன். உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதிலிருந்து வெளிப்படும் உணர்வலைகளை இதே சூரியன் தான் கவர்கின்றது. நமக்கு முன் வந்து கொண்டிருக்கின்றது.
ஒரு செடியிலிருந்து வெளிப்படும் சத்தை சூரியன் கவர்கின்றது. உயிரணு நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அணுவின் தன்மை உருவாகி உடலாக மாறுகின்றது.
செடியில் விளைந்த சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்தால் அந்தச் செடியின் வித்தை மண்ணிலே ஊன்றினால் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு தாய்ச் செடியின் சத்தை எடுத்து அதே செடியாக விளைகின்றது. அதே உணர்வு அதே வித்து அதனின் நிலையாக உருவாக்குகின்றது.
27 நட்சத்திரத்தின் சத்தை முழுமையாக எடுத்துப் பாதரசமாக சூரியன் மாற்றி உலகை உருவாக்குவது போன்றுதான்
1.இதே உயிர் பல விதமான உணர்வுகளை எடுத்து 27 நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டது.
2.ஒளியின் உடலாக அதே உயிர் கொண்டு நம் உணர்வை ஒளியாக மாற்ற முடியும்.


வேதனைப்படுவது என்பது மனிதனைக் கொல்லும் நஞ்சு
ஒரு விஷம் தாக்கப்பட்டால் எப்படி உடல் எல்லாம் செயலற்றுப் போகின்றதோ “இந்த வேதனை என்ற விஷத்தின் தன்மையினால்”
1.உடலில் உள்ள மற்ற நுண்ணிய பாகங்களில் அது பட்டபின் நம் நரம்பியல்கள் உணர்ச்சியற்ற நிலையாகி விடுகின்றது.
2.தசைகளில் மிஞ்சியுள்ள இரத்தத்தில் அதனுடைய உணர்ச்சிகள் கோபத்தை உண்டாக்குவதும் அங்கங்களைச் செயலற்றதாகவும் மாற்றி விடுகின்றது.
3.உடல்களிலே உணர்ச்சியற்ற நிலையும் உணர்வுகள் இழந்த நிலையில் நரம்புகளில் உள்ள அனைத்தும் சுருங்கப்பட்டு முடக்கு வாதங்கள் போன்று பிரஷர் வந்தவருடைய நிலைகள் கை கால் அங்கங்கள் குறுகி விடுகின்றது.
4.சிறு மூளையில் இது தாக்கப்பட்டால் அதனின் செயலற்ற நிலைகள் வரும்பொழுது கைகால் அங்கங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.
5.பித்த சுரப்பியில் நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் பித்தம் அதிகமானால் தலை சுற்றி கீழே எப்படி விழுகின்றோமோ இதைப் போல் ஒவ்வொன்றும் செயலற்றதாக மாறி அங்கங்கள் சோர்ந்து வீழ்ச்சி அடைந்து விடுகின்றது.
6.சுவாச உறுப்புகள் பலவீனம் ஆகிவிட்டால் சரியாகச் சுவாசம் எடுக்க முடியாத நிலைகளும் ஆகி விடுகிறது.
இதைப் போன்று சிறுகச் சிறுக நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தால் நம்முடைய சுவாச நாளங்களில் உள்ள அனைத்தும் பலவீனமாகி அதில் ஏற்படும் உராய்வின் தன்மை சரியாக இயக்கவில்லை என்றால் ஆஸ்மா போன்ற நோய்களும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களும் உருவாகி விடுகின்றது.
நாம் கூர்ந்து சிந்திக்கும் கண்களுக்கு… பார்வைக்குச் செல்லும் பொழுது வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் நமக்குள் கலக்கப்படும் பொழுது கண் கொண்டு ஒரு பொருளை நாம் காணுவது என்பது அந்த பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் மறைந்து விடுகின்றது… மறைத்து விடுகின்றது.
பொருளைச் சிறிது நேரம் காணுவோம் என்றால் அல்லது அந்தப் போருளைச் செயல்படுத்த முடியாத நிலைகள் சோர்வடையச் செய்து விடுகின்றது.
ஏனென்றால் கண்ணில் இருக்கும் கருவிழியால் அது கவர்ந்தாலும் அதிலே எடுத்த அமில சக்தியின் தன்மை உடல் முழுவதும் ஊடுருவி அடையச் செய்யும் இந்த நாளங்கள் அது மங்கிச் செயலற்றதாகி விடுகின்றது.
இவ்வாறு நாம் அடிக்கடி செயல்படுவோமே என்றால் கருவிழிகளில் படும் பட உணர்வுகளை அது தெளிவாக எடுத்துக்காட்டாத நிலைகள் மங்கும் நிலை அடையப் படும்பொழுது பொருள் காணும் நிலைகளில் கவர்ந்த கருவிழியும் அதுவும் பலவீனமடைகின்றது.
கண்களில் உள்ள அந்த நுண்ணிய படத் திரைகளைக் காட்டும் அந்தத் திரை வழியும் பலவீனம் அடைந்து விடுகின்றது. நாம் பிறரைப் பார்த்தாலும் தெளிவாகத். தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உருவாகின்றது.
இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்து அதன் மூலம் வேதனப்பட்டதால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.
ஆகவே இது சிறுகச் சிறுக விளைந்து
1.இதனின் பலனாக நமக்குள் கோபமும் வேதனையும் வரும் பொழுது
2.குடும்பத்தில் அவசர உணர்வுகள் உந்தப்படும் நிலையும்
3.பிறிதொன்றைப் பார்க்கப்படும் பொழுது நமக்குள் பதிய வைத்த இந்த உணர்வுகள்
4.குடும்பத்தில் உற்று நோக்கும்பொழுது நம்மை அறியாது கோபமும் வேதனையும் பட நேரும்.
இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் ஆன்மாவாக மாறும் பொழுது நமக்குள் இனம் புரியாது மனக்கலக்கங்களும் கோபமும் வெறி கொண்ட உணர்வுகளும் செயல்படுத்திக் கொண்டே இருக்கும்.
பலவிதமான உணர்வுகளை நமக்குள் அவ்வப்பொழுது சந்திக்கும் நிலைகள் கொண்டு நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நமக்குள் மாறுபட்ட நிலைகள் கொண்டு உடலில் “பல பிணிகளை” ஏற்படுத்தும் நிலைகள் உருவாகி விடுகின்றது
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு விதமான எதிர் நிலையாகும் பொழுது கிட்னிக்கோ கண்ணிற்கோ கல்லீரலோ நுரையீரலிலோ இதைப்போன்ற நிலைகள் மாசுபடும் பொழுது இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து விடுகின்றது
1.அதீதமான வேதனைகளை நாம் படுவோமே என்றால் கேன்சர் என்ற வித்தாக முளைக்கத் தொடங்கி விடுகின்றது
2.விஷச் செடியின் தன்மை முளைத்து விட்டால் ஆரம்பமாக இருக்கும் பொழுது தெரியாது… .கேன்சர் நோயும் அப்படித்தான்.
3.அதனின் முதிர்ந்த பருவம் வித்தின் தன்மை முளைத்து முடிவில் தான் தெரிய வரும்.
உதாரணமாக கஞ்சாச் செடி அது முதிர்ந்து கடைசியில் பிசின் ஒழுகும் போது தான் அதனுடைய மணங்கள் தெரிய வரும்.. அதுவரையிலும் அது கஞ்சாச் செடி என்று தெரிந்து கொள்ளவே முடியாது அதனுடைய மணம் அப்பொழுது தான் வீசும்.
1.இதைப் போன்ற துரித நிலையில் மனிதன் வேதனைப்பட்ட இந்த உணர்வுகள் அது சிறுகச் சிறுக விளைந்து
2.கஞ்சா செடியைப் போல\ இந்த உடலின் மணத்தை வேதனையாக உருவாக்கி வரும் பொழுது தான் கேன்சர் என்றே அறிய முடியும்
3.அதுவரையிலும் வயிற்று வலி மற்ற வழி என்ற நிலையில் அல்லது மேல் வலி கை வலி என்ற நிலைகளும்
4.அதை நாம் எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் அது கேட்காது.
சிறுகச் சிறுக வேதனையைக் குறைத்து வந்தாலும் “அது முழுமையான வித்தை அடையப்படும் பொழுது” நாம் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகிய விடுகின்றது.
நவீன விஞ்ஞான அறிவு கொண்டு கருவிகளை வைத்துக் கண்டுணர்ந்தாலும் அதனைத் தடுத்திடவும் முடியாத நிலை ஆகிவிடுகிறது.
1.ஒரு வேதனை என்ற வித்து நமக்குள் தொடர்ந்து விட்டால் அதனுடைய கிளைகள் அதிகமாக உடல் முழுவதும் பரவி
2.நாம் எண்ணிய எண்ணத்துடன் மூளை பாகம் வரையிலும் அதனுடைய தொடர்பலைகள் உண்டு.
3.மூளையிலிருந்து எண்ணத்தால் உருப்பெறும் உணர்வுகள் ஒரு பக்கம் அறுவை சிகிச்சை செய்து அதை எடுத்தாலும்
4.அதனின் விழுதின் தொடர் கொண்டு மீண்டும் அவருடைய தொடர் வரிசையாகத் தான் வரும்.
இன்று இல்லை என்றாலும் பத்து வருடம் கழித்து வேதனை என்ற நிலைகள் உருவாகி அந்த கேன்சர் என்ற நிலை வந்தால் அந்த கேன்சரை எடுத்து விட்டு மீண்டும் அதை மீண்டும் அதை விட்டோம் என்றால் வாழ் நாளுக்குள் மீண்டும் அது தழைத்து ஓங்கச் செயல்படுத்திவிடும். முழுமையாக அறுத்திடும் நிலை இல்லை.
காரணம்
1.நஞ்சினுடைய அதிவீரியத்தன்மையின் செயலாக்கங்கள் தான் இவைகள் எல்லாம்.
2.எக்காரணத்தைக் கொண்டும் வேதனைகளை நம் வாழ்க்கையில் வளர்த்து விடக் கூடாது.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.
அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.
சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது
கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.
அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.
சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.
நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.
மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.
யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.
நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.
சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!
ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”
மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.
அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.
எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.
அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.
இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனையோ நிலைகள் உள்ளது
ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.
நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.
இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.
ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.
ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.
தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!
இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம். எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி “ஒளியின் கூட்டமைப்பாகின்றது…”


பூணூல்
ஒருவன் நம்மைப் பழித்துப் பேசுகின்றான் என்றால் அந்தச் சமயத்தில் நம் உடலில் உள்ள குணங்களைக் காத்திட நாம் ஆவேச நிலைகள் கொண்டு தான் செயல்படுவோம்.
அப்போது… “நாம் எண்ணிய நிலைகள் கொண்டு தான் உயிரே இயக்குகின்றது” என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கே வசிஷ்டாத்வைதம் என்ற நிலைகளை வியாசகன் பிரித்து உடலின் உறுப்புக்குள் இயக்கும் நிலைகளை உணர்த்தினான்.
1.மகரிஷிகளால் உணர்ந்து ஒளியின் சரீரம் பெற்றதை… வியாசகன் கண்டுணர்ந்த இந்தத் தத்துவத்தைத் தான்
2.தனக்குள் அதை ஆதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில்
3.“ஆவணி அவிட்டம்” என்றும் அந்த நாளில் “பூணூல் போடுவது” என்று காட்டினார்.
நமக்குள் எத்தனை நிலைகள் வந்தாலும் அதிலிருந்து தன்னைக் காத்திடல் வேண்டும். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இதை உணர்த்திய மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்று தான் “வசிஷ்டாத்வைதத்தை” வியாசகன் காட்டிணார்.
நம் உடலுக்குள் அனைத்து நிலைகளும் இருப்பினும்
1.அந்த ரிஷிகளுக்குள் தீமைகள் அடங்கியது போல…
2.அத்தகைய அடக்கி ஆட்சி புரியும் நிலைகளைப் பெறும் நன்னாளாக எண்ணுவது தான் “பூணூல் பூட்டும் நாள்…”
சாஸ்திர விதிப்படி பூணூலை அணிந்து கொண்டு என் மதம் என் இனம் என்ற நிலைகளில் எங்கள் இனத்திற்காக நாங்கள் அதை அணிந்து அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று ஒரு சாரார் அவரவர்கள் விதிப் பிரகாரம் அதைச் செயல்படுத்துகின்றார்கள். அன்று இதைச் செய்து சாஸ்திரீகம் சாங்கியம் என்பதைப் பின்பற்றுகின்றனர்.
1.வசிஷ்டாத்வைதம் என்ற நிலையினை நமக்குள் ஆதாரமாக அமைத்து
2.எப்படி இந்த இரு நூலின் தன்மை வலுக்கொண்டதாக மாற்றுகின்றதோ இதைப் போல நமக்குள் இணைந்திருக்கும் நிலைகள் கொண்டு
3.ரிஷியின் தன்மையாக உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றும் இணைக்கும் தன்மையாக
4.நமக்குள் புறநிலைகளிலே ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையைத் தான் உணர்த்தப்பட்டது.
அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன்னை அறியாது தன் சந்தர்ப்பத்தால் மெய் உணர்வின் ஆற்றல்மிக்க நிலைகளைத் தனக்குள் கண்டுணர்ந்து அவனின் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றான்.
1.அவனைப் பின்பற்றி அவன் ஒளியான நிலைகளை வெளிப்படுத்தியதுதான்
2.இந்த 4000 ஆண்டுகளுக்குள் வியாசகரால் சந்தர்ப்பத்தால் விண்ணுலக ஆற்றலை அறியும் ஆற்றல் வருகின்றது.
காரணம் அகஸ்தியன் விண்ணுலக ஆற்றலை அறிந்தாலும் அதைச் சந்தர்ப்பத்தால் அறிந்துணர்ந்த வியாசகரால் சாதாரண மக்களும் எட்டும் அளவிற்கு அவன் கண்டறிந்த நிலைகளை வெளிப்படுத்தினான்.
வெளிப்படுத்தினாலும் அரும்பெரும் சக்திகளைத் தனக்குள் எவ்வாறு பருக வேண்டும் என்ற நிலைகளை மறந்து ஐதீகம் என்ற நிலையில் மாற்றப்பட்டதே தவிர ஐதீகம் என்று சாஸ்திர விதிகளைத் தான் பின்பற்றும் நிலை வந்தது. ஐதீகத்தை எடுத்துக் கொண்டால் சாங்கியம் சடங்குகள் என்று புறநிலைகளுக்குத் தான் வருகின்றது.
அகநிலைகளைக் கூட்டும் நிலைகள் இல்லை.
1.அந்த ஆற்றல்மிக்க அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தியை நமக்குள் உள் செலுத்தி அதனைப் பூணூல் ஆக அதனின் நிலையே நமக்குள் அடக்கி
2.வசிஷ்டாத்வைதத்தை நமக்குள் நம்முடைய நிலைகளுக்குள் அடங்கி நடக்க வேண்டும் என்ற நிலையும்
3.அதனை ராஜரிஷி என்ற நிலைகள் மற்றவர்கள் ஒடுங்குவது போல அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்து
4.நமக்குள் அகங்காரமோ பாசமோ மற்ற நிலைகள் தீமையை விளைவிக்கும் நிலைகளில் இருந்து மீட்டி
5.உயிருடன் ஒன்றிய இந்த ராஜ நீதியை அன்று உணர்த்தினான் வியாசகன்.
அதனின் வழிகளை நாம் பின்பற்றிச் செல்வோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நீங்கள் ஒரு குழம்பை வைக்கப் போகும்போது சமமான நிலைகள் கொண்டு சுவையாக சமைத்து விடுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதிலே சந்தர்ப்பவசத்தால் ஒரு துளி விஷம் பட்டுவிட்டால் உணவாக உட்கொள்ளும் அனைவருமே மயக்க நிலை பெற்று சிந்தனை இழந்து விடுகின்றார்கள்.
அதே சமயம் ஞாபகக் குறைவாக சிறிதளவு மிளகாய்த் தூளை அதிகமாகச் சேர்த்து விட்டால் சாப்பிடும்போது வாயில் காரம் அதிகமாகின்றது. அதிலே உணவு உட்கொள்வது கணவராக இருந்தால் “குழம்பு வைத்திருக்கும் லட்சணத்தைப் பார்…!” என்று கோபமாகப் பேசுவார்கள்.
அதே சமயத்தில் நாம் நன்றாகத் தானே வைத்துள்ளோம்… என்ற எண்ணத்தால் “சந்தர்ப்பத்தால் நாம் ஒரு மிளகாய் அதிகமாகச் சேர்த்தோமா…! என்ற நினைவு இருக்காது.
இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வரும்…!
அப்பொழுது கணவன் இவ்வாறு கோபமாகப் பேசிவிட்டாரே…! என்ற அந்த வேதனை வரும்போது…
1.விஷத்தை ஒரு துளி நுகர்ந்து விட்டால் நம் சிந்தனை குலைந்து விடுவது போன்று
2.சிந்தித்துப் பதில் சொல்வதை விட்டுக் கண்ணை கசக்க அழுகத் தொடங்கிவிடுவோம்.
நான் இப்பொழுது என்ன செய்தேன்…? இப்பொழுது என்னைக் கணவர் இப்படிக் கோபித்துப் பேசுகின்றார்…! நான் நன்றாகத் தான் குழம்பை வைத்துள்ளேன்…! என்று எண்ணுவார் மனைவி.
கணவரோ… நான் என்ன செய்து விட்டேன்…? என்று நீ கண்ணைக் கசக்குகின்றாய்…! என்று சொன்னால் போதும்.
மீண்டும் அந்த உணர்வின் தன்மை விளையச் செய்து இங்கே காரத்தின் உணர்வுகள் மனைவிக்குள் அதிகமாகும்.
ஏனென்றால் இந்தக் காரத்தின் உணர்ச்சியின் நிலைகள் இங்கே இருக்கப்படும்போது அதே உணர்வுகள் தூண்டப்பட்டு எதைச் சொன்னாலும் இப்படித் தான் அழுகும் என்ற நிலைகள் வரும்.
1.கணவரைப் பார்க்கும்போது அந்த வேதனையின் உணர்ச்சிகள் அந்த மனைவிக்கு ஏற்பட்டுவிடுகின்றது.
2.இங்கே மனைவியைப் பார்க்கும்போது கோபத்தின் தன்மை கணவனுக்கு வந்துவிடுகின்றது.
மாமியாருக்கோ… நம் பிள்ளை சொல்கின்றான் ஆனால் பார்..! எதிர்த்துப் பேசும் அளவுக்கு வந்து விட்டாள். இப்பொழுது வர…வர… வர..வர… மருமகளுக்குப் புத்தி கெட்டுப் போய்விட்டது என்று அதைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆக இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள்…!
இப்பொழுது என்ன சொன்னோம்…? என்று நீ அழுது கொண்டிருக்கின்றாய். இப்படியே அழுது கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆகும்…? என்று கேட்கத் தொடங்குவார்கள்.
இவைகள் எல்லாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகளை (அவரவருக்குத் தக்க) நமது உயிர் நம்மை இயக்கிக் காட்டுகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவறு யாரும் செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் இயக்கி
1.இந்த உணர்வுகளை உயிர் உணர்த்துகின்றது… உணரச் செய்கின்றது.
2.உணர்ந்ததை ஜீவனாக்குகின்றது… ஜீவ அணுவாக மாற்றுகின்றது
3.நம் உடலாக மாற்றிவிடுகின்றது உயிர்…!

Like this:
Like Loading...