குண அமிலம் என்றால் என்ன…?

குண அமிலம் என்றால் என்ன…?

 

ஒரு நாள் தோன்றி மறு நாள் மடிகின்றது காளான். அதே போல் ஒவ்வொரு தாவர வர்க்கத்திற்கும் அது அது ஜீவிக்கும் கால நிலைகள் உண்டு. ஆலமரம் பல நூறு ஆண்டுகள் உள்ளது. வைரம் பாய்ந்த ஆயிரம் காலத்து மரங்களும் பல உள்ளன.

ஆனால் ஆயிரம் ஆண்டுகள் வாழும் மரம் உருவான ஆரம்பக் கால நிலையே காளானின் வழித் தொடர்ச்சி தான். இயற்கையின் தாவர இன முன்னோடி “காளான் தான்…!”

அவ்உயிரணு அவ்வமில வண்ணமுடன் இடியும் மின்னலும் தோன்றும் காலத்தில் ஒன்றுடன் ஒன்று இன வர்க்கங்கள் மோதும் நிலையில் அதற்கு மேல் இந்த மழை நீர் படும் பொழுது வெடிக்கும் தன்மை உருவாகிறது.

அப்படி வெடிக்கும் தருணத்தில்
1.இரண்டு வகை அமில குணத்தின் வெடிப்பில் தோன்றும் அமிலமானது இந்தப் பூமியில் மோதுண்டவுடன்
2.அதன் மேல் படும் ஒளி அலையின் ஈர்ப்பினால் உயிரணு தோன்றி தாவரம் வளர்ந்து
3.ஒவ்வொரு நிலை கொண்ட தாவர இன வர்க்கங்கள் மாறி மாறித் தோன்றுகிறது.

முதலில் காளான் தோன்றி அதன் ஆயுள் முடிந்தவுடன் அந்தக் காளானது அழுகிய நிலையில் பூமியில் படர பூமியிலிருந்து வெளிப்படும் உஷ்ண அலையின் வெக்கை அதன் மேல் பட்டு அதிலிருந்து வெளிப்படும் அமில குணத்தைக் கொண்டு மீண்டும் பூமியில் படர்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் உயிரணுவின் இன வளர்ச்சி சிறிது மாற்றம் கொண்டு மீண்டும் அதிலிருந்து சில வளர்ச்சி நிலைகள் மாறுகிறது.

மாற்றம் ஏற்பட்டு இப்படியே பல இயற்கை வளங்கள் தோன்றி ஒன்றுடன் ஒன்று அமிலத் தன்மைகள் மாறி மாறி உருவாகிப் பல வழிகள்… பலவித உயிரணுக்களும் கனி வளங்களும் வளர்ந்து கொண்டே மாறி மாறி வாழ்ந்து கொண்டே சுழன்று ஓடிக் கொண்டே உள்ளன.

ஓடும் ஓட்டத்தில் வெளிப்படும் அமில குணத்தில் பல உயிரணுக்கள் அந்த மோதலில் வெளிப்படுகின்றன. “ஒன்றில்லாமல் ஒன்றில்லை…” என்பதன் பொருளும் இதுவே..!

1.எந்த அணுவும் உதிக்க வேண்டும் என்றால் “இந்த மோதல் தான்…” காரணம். (இது முக்கியம்)
2.அமில குணங்கள் மோதுண்டு அதன் மேல் படும் மழை நீரின் ஜீவனால் வெடிப்பு நிலைப்பட்டு உருவாகின்றது உயிரணு.
3.அதன் தொடர்ச்சி நிலை சேர்க்கை தான் ஜீவனின் சேர்க்கையினால் இந்த ஜீவ அணு தோன்றுகிறது.

ஆண் பெண் சேர்க்கையினால் இந்த இரண்டு குண நிலை கொண்ட அமிலத்துடன் ஜீவன் கொண்ட மற்றோர் எண்ண அமிலமான உயிராத்மா தனக்குகந்த அமில குணம் கொண்ட தாயின் தந்தையின் பிறப்பில் கருவுக்கு வருகின்றது.

பல வகையான அமில குணங்களின் சேர்க்கை கொண்டது… இவ்வுலகின் ஈர்ப்பு அமில குணம் ஒன்று தான். இவ் ஈர்ப்பு நிலைக்கொப்ப பல நிலைகளை நம் பூமி வளர்த்துக் கொள்கிறது. பூமி வெளிக்கக்கும் உஷ்ண அலையின் ஈர்ப்பில் பல குண நிலைகள் மாறு கொள்கின்றன.

பல வகையான அமில குணம் கொண்ட இந்தக் காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம் என்றாலும்… “நம் எண்ண நிலைக்கொப்ப சுவாச அமிலம் தான்…” நம் சுவாச ஈர்ப்புக்கு வரும்.

1.வெங்காயச் செடி அதன் கார அமிலச் சுவாசத்தை ஈர்க்கின்றது.
2.மிளகாய்ச் செடி நெடி கலந்த கார அமிலத்தை ஈர்க்கின்றது.
3.கருணை சேனை இவற்றின் குண அமிலம் அரிக்கும் தன்மை உடைய அமில குணத்தை ஈர்த்து அவை வளர்கின்றன.

தாவர வர்க்கங்கள் ஒவ்வொன்றிற்கும் அதனதன் நிலைக்கொப்ப ஒரே தன்மையுடைய அமிலத்தைத்தான் ஈர்த்துப் பழக்கப்பட்டு வளரும் தன்மையுடையது.

ஆனால் பலவற்றையும் புசிக்கும் மனித ஆத்மா தான் உண்ணும் உணவின் உணர்வைத் தவிர “எண்ணும் எண்ணத்தின் அமில குணத்தையும்” அறியவல்ல ஆற்றல் கொண்டவன்.

1.உடம்பின் மேல் மிளகாயின் காரம் பட்டவுடன் “எரிகிறது..!” என்று அறிகின்றோம்
2.வெங்காயத்தின் காரத்தினால் “கண்ணில் நீர் வடிகிறது…!”
3.சேனை கருணை போன்ற கிழங்குகளில் அமில நீர் பட்டவுடன் அவ்விடம் “பிய்ப்பு எடுக்கின்றது…”
4.இந்நிலையான அமில குணத்தை நம் உடலும் உணர்வும் ஈர்க்கா விட்டால் அதன் தன்மையின் பாதிப்பை நாம் அறிவோமா…?

மிளகாயின் குணம் நெடி கலந்த குணம்… வெங்காயத்தின் குணம் அதற்குகந்த கார குணத்தினால் அதன் தன்மையை உணரப்படுகின்றோம்.

எல்லாமே இந்தக் காற்றின் ஈர்ப்பில் தன் ஈர்ப்புக்கொப்ப வளர்கிறது. இந்நிலைகளைப் போன்று தான் நம் மனித ஆத்மாவின் எண்ண நிலைக்கொப்ப “அமில குணங்களைச் சேமிக்கிறது…” என்பதை அறியவில்லை.

நம் எண்ண நிலைக்குகந்த ஈர்ப்பில் நாம் எடுக்கும் சுவாசத்தைக் கொண்ட நிலையுடனே எந்த எண்ணத்தில் எல்லாம் நாம் இருந்து கொண்டுள்ளோமோ… அதன் நிலைக்கொப்ப அமில குணங்கள் நம்முள் சேமிதம் கொண்டே வாழ்கின்றோம் நாம் எடுக்கும் சுவாசத்தினால்…!

“குண அமிலம்” என்பதன் நிலை புரிந்ததா…?

இந்தக் குண அமிலத்தின் நிலையை உணர்த்துவதன் உண்மை நிலை என்ன..?

ஒவ்வொரு மண்டலத்திற்கும் நட்சத்திர மண்டலத்திற்கும் பால்வெளி மண்டலங்களுக்கும் அதனதன் தன்மைக்குகந்த குண அமிலம் உண்டு. அதன் வளர்ச்சி வட்டத்திலே தான் இயற்கையின் அமில குணங்கள் செயல் கொண்டு வாழ்கின்றன.
1.இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட குண அமிலத்தைப் பெறவல்ல ஆற்றல்
2.அதாவது தனக்குகந்ததைப் பெறும் சக்தி மனித ஆன்மாவுக்கு உண்டு.

இயற்கை வளங்கள் ஒரு வகையான அமில குணத்தை ஈர்க்க வல்லது. ஆனால் மனித ஆத்மாவோ… எண்ண நிலைக்குகந்த அமில குணத்தை எல்லாம் ஈர்த்து ஈர்த்து வாழ்கின்றான்.

எண்ண நிலை கொண்ட மனிதனால் தனக்குகந்த அமில குணத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்றால்
1.இந்தக் குணங்களிலேயே சிறந்த குணமான
2.“ஆண்டவன்…” என்னும் நிலை கொண்ட குணத்தைப் பெற முடியும்.

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

 

வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். இருந்தாலும் பிறர் தவறு செய்வதையும் பார்த்து தவறு என்று உணர்கின்றோம்.
1.அதற்குத் தக்க விலகிச் செல்கின்றோம் அல்லது
2.அந்த உணர்வுக்கொப்ப நாமும் போருக்குச் (எதிர்நிலையாகி) செல்கின்றோம்.

போர்முறையாகிறது (வெளியில்) என்று வைத்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் நம் உயிரிலே பட்டுத் தான் இயக்கமாகிறது. உயிர் தான் உடலுக்குள் குருவாக இருக்கிறது.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வுகள் (தவறு என்று நுகர்ந்தது) உயிரிலே படும் பொழுது “குருக்ஷேத்திரப் போராகிறது…”
1.என்னை இப்படிப் பேசி விட்டான் என்றோ அல்லது
2.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்துவிட்டான் என்றோ நாம் எண்ணும்போது
3.அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகள் உடலுக்குள் பரவிய உடனே
4.இந்த உடலைக் காக்க உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் போர்முறைக்கு (அதிகமாக) வருகின்றது – “மகாபாரதப்போர்…”
5.அவனை உதைக்க வேண்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் அவனைத் தாக்கும் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது
6.அதே சமயத்தில் அவன் நம்மைத் தாக்கி விடுவான் வலுவானவன் என்று சொன்னால் நம்மை விலகிச் செல்லும்படி செய்கின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். ஒருவன் போக்கிரி என்று தெரிகின்றது வருபவரை எல்லாம் அவன் மிரட்டுகின்றான். நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக… வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு குறை (எதிர்நிலை) வந்தால் போதும்…! கணவர் என்னை இப்படிப் பேசி விட்டாரே என்று மனைவி சொல்லும்.

ஆனால் ரோட்டிலே செல்லும் பொழுது போக்கிரி நம்மைக் கண்டபடி பேசுகின்றான்… அடிக்க வருகின்றான்.

ஐய்யய்யோ… என்று சொல்லித்தானே ஓடுகின்றோம் அவனைத் திருப்பி அடிக்கும் நிலையோ அல்லது அசிங்கமாகப் பேசுகின்றான் என்று சொல்ல முடிகின்றதா…?

இல்லை.

அடுத்தாற்போல் மற்றவர்கள் விசாரிக்கின்றார்கள். அவன் உன்னை என்ன செய்தான்…? என்று…!

போக்கிரி என்னை அடித்தான்… திட்டினான்… என்று அங்கே அவனுக்கு முன்னாடி சாட்சி சொல்ல முடிகிறதா…! அடித்தாரா…? என்று கேட்டால் நாம் “இல்லை…” என்று தான் சொல்வோம்.

காரணம்… “அடித்தான்” என்று சொன்னால் நம்மை மீண்டும் உதைப்பான். இது தான் நடக்கின்றது.

ஆனால்
1.வீட்டில் “ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று கணவன் மனைவியிடம் கேட்டால் கணவன் மீது மனைவிக்குக் கோபம் வருகிறது சண்டை வருகிறது அல்லது
2.மனைவி கணவனைக் குறையாகச் சொன்னால் கணவனுக்குக் கோபம் வருகிறது.

ரோட்டிலே நாம் வேடிக்கையாகத் தான் பார்த்தோம். அந்தப் போக்கிரி என்னடா வேடிக்கை பார்க்கின்றாய்…? என்று நம்மை அதட்டிக் கேட்கின்றான். அவன் தவறு செய்தே பழக்கப்பட்டவன்.

வேடிக்கை பார்ப்பதற்கு “என்னடா…” என்று கேட்கின்றான். சும்மா…! என்று சொன்னால் “என்னடா சும்மா…?” என்று அடிக்க வருகின்றார். அடித்தவுடன் என்ன செய்கின்றோம்…? நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை… பேசாமல் இருக்கின்றோம்.

இது போன்றுதான்…
1.நமக்குள் எத்தனையோ நல்ல குணங்கள் இருப்பினும்
2.நாம் பார்த்து நுகர்ந்த தீய உணர்வுகள்… எந்த நல்ல குணத்தோடு நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்தை (போக்கிரியைப் போன்று) அடக்கி விடுகின்றது

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்… சுவாசித்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று அது அதிபதியாக இருந்து நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

போக்கிரியின் உணர்வுகள் நமக்குள் கூடி… பயம் அதிகரித்து விட்டால் வீட்டில் நமக்கு அமைதியே இருக்காது. சிந்தனை இழந்து… சிந்தனையற்றவர்களாகி விடுகின்றோம்.
1.அடுத்து யார் எதைச் சொன்னாலும் நம்முடைய சொல்லும் கடுமையாகி விடுகின்றது
2.குடும்பத்திற்குள் ஒற்றுமை இழக்கப்படுகின்றது… குடும்பத்திற்குள் மட்டுமல்ல.
3.உயிரிலே குருக்ஷேத்திரப் போராக நடக்கப்பட்டு உடலுக்குள் பார்த்தால் மகாபாரதப் போரே நடக்கின்றது.

நாம் எத்தனையோ நல்லதை எடுத்திருக்கின்றோம். நமக்குள் நல்ல அணுக்கள் உண்டு.. பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய உணர்வுகள் நமக்குள் இருப்பினும்… இத்தகைய தீமையின் உணர்வு நமக்குள் சென்றால் குருக்ஷேத்திரப்போர் இங்கே போகாது தடுக்கின்றது… உடலை இயக்குகிறது

இருந்தாலும் இந்த உணர்வுகள் உடலுக்குள் போய்விட்டால் அந்த உணர்வுகள் உமிழ்நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறிவிட்டால் பயமான எண்ணங்களே வருகின்றது.

இப்படி…
1.நமது வாழ்க்கையில் நல்லது என்று நினைத்து வந்தாலும் நல்லது செய்ய முற்பட்டாலும்
2.கேட்ட உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

இதைத் தான் சீதாவை இராவணன் சிறை பிடித்தான் என்று நம் காவியங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் உணர்ந்தோமா…?

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

“நம் உயிர் ஒரு நெருப்பு…” என்பதை உணர்ந்திருக்கின்றோமா…?

 

ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.

ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.

சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?

இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.

நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.

ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?

1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.

அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!

அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.

மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.

இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!

யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

 

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்). இந்த உலகச் சுழற்சியில்
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கை…. பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித்தான்… நம் அழகை நாம் காண வேண்டும்.

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?”

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்…?”

 

உலகில் அரசர்கள் தன் சுகபோகங்களுக்காக வேண்டி நாடு பிடிக்கும் ஆசை கொண்டு மற்ற மக்களை இரக்கமற்றுக் கொல்வது தான் அரசர்களின் குணங்கள்.

அரச வம்சங்களை எடுத்துக் கொண்டாலே அவன் போக்கிரியாகத் தான் இருக்கின்றான் அப்படிப் போக்கிரியாக இருப்பவன் முதலில் ஒரு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் இரண்டு ஊரை அடிமைப்படுத்துகின்றான்… பின் மூன்று ஊர்களை அடிமைப்படுத்துகின்றான்.
1.அப்படியே ஒரு அரசனாகின்றான்… இதைத்தான் அரச வம்சம் என்று சொல்வது
2.கொள்ளையடிப்பதும் மற்றவர்களைக் கொலை செய்வதும் அதன் வழி வாழ்வதும் தான் அரசருடைய நீதிகள்.

சோழ நாட்டை ஆண்ட அரசர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோம். இங்கிருந்து ஜாவா வரை போர் முரசு கொட்டிச் சென்றார்கள்… வெற்றி பெற்றார்கள்…! என்றெல்லாம் சொல்வோம்.

ஆக… நம் நாட்டின் வீரியத்தைப் பற்றிப் பேசலாம். இருந்தாலும் இதைப் போன்று ஒவ்வொரு நாடும்… மற்ற நாடுகளை நாங்கள் இத்தனை பேரை அடிமைப்படுத்தினோம்…! என்று அத்தகைய வீரியம் தான் எல்லோருக்கும் வருகிறது.

நம் நாட்டில் ஒரு கோவிலிலே தெய்வத்தை வணங்குகிறார்கள் என்றால் அதில் முன்னணியில் வரக்கூடியவர் எனக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும் என்று விரும்புகின்றான்.

மற்றவர்களோ அது என்ன…? அவன் மட்டும் அங்கே ஆட்சி புரிவது…? என்று தெய்வத்தை வழிபடும் இடங்களிலும் அவர்களுக்குள் எதிர்ப்பாகி ஒரு கோஷ்டி… ரெண்டு கோஷ்டி… மூன்று கோஷ்டி… என்று பிரிவாகி விடுகிறது.

ஆலயத்திற்குச் சென்று நாம் எந்த நல்ல குணங்களைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ… கோஷ்டிகள் பிரிவினைகள் ஆனபின்
1.என்னை மதிக்கவில்லை அதனால் தெய்வம் இந்தப் பக்கம் வரக்கூடாது
2.இவன் பூஜை செய்யக்கூடாது என்று தான் மக்கள் மத்தியிலும் எண்ணங்கள் இருக்கின்றது.

அதே போல் குடும்பத்திலே எடுத்துக் கொண்டாலும் முந்தைய காலங்களில் ஒற்றுமையாக வேலை செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் நான் தான் பெரியவன்…! நான் தான் இதை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு வந்தேன்…! என்று சொல்லிக் கொண்டு வந்தால் கடைசியில் எனக்கு இதிலே இரு மடங்கு சொத்து (அந்தப் பங்கு) வேண்டும் என்ற நிலை வருகிறது.

செல்வத்தைச் சேர்த்து வைத்த குடும்பங்களில் எல்லாம் இதைப் பார்க்கலாம். ஒன்றுபட்டு வாழ்ந்து வந்த குணங்கள் இப்படி எல்லாம் பிற்பகுதியில் மாறுகின்றது.

1.நான் தான் சொத்தைத் தேடி வைத்தேன்… அவனுக்கு என்ன கொடுப்பது…?
2.நான் தான் இதற்கெல்லாம் காரணம் என்று
3.இந்த நாடும் அப்படி… வீடும் அப்படி…! என்ற நிலை தான் வருகின்றது.

சகோதரர்களுக்குள் ஓருவன் முதல்வன் ஆனால் எனக்குத் தான் உரிமை உண்டு… நான் தான் இதைச் செய்வேன்…! என்று வருகின்றான். பெரியவன் என்று பார்க்கச் சொன்னாலும் “நான் சொன்னதைக் கேட்கவில்லை…” என்று மறுத்தால் அங்கே போர் முறையாகிப் பகைமை ஆகி விடுகின்றது.

விவசாயம் செய்யும் இடங்களிலும் மாநிலத்திற்கு மாநிலம் மொழித் தகராறு வருகின்றது. வலிமை இருந்தால்… அந்த வலிமை பெற்றவன் செயலே அங்கே ஆளத் தொடங்குகிறது.

ஏனென்றால் அவன் மிக வலிமை பெற்றவன் ஆகின்றான் நான் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற “அதிகார தோரணை…” வந்து விடுகின்றது.

காட்டு விலங்குகளாக வாழ்ந்து வந்த மனிதர்கள் கூட்டமைப்பாக வாழ்ந்து வந்தாலும்… அந்தக் கூட்டமைப்புக்குத் தலைவனாக வரக்கூடியவன் “தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும்…” என்று அந்த அதிகாரம் முன்னணியில் வந்து விடுகின்றது.

1.நல்லவர்களும் அதைச் செயல்படுத்தி வந்தார்கள்
2.ஒற்றுமையாக இருக்க வேண்டும்… இப்படிச் செய்ய வேண்டும்…! என்று அந்த நல்லவர்கள் சொன்னார்கள்.
3.அதன் வழி பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்படி வாழ்ந்து வந்த மனிதர்களும் தனக்கென்று அறியத் தெரிந்த பின் இதைப் போன்று “தான் வாழலாம்…” என்ற நிலைக்கு வருகின்றனர் அதன் வழி அந்த யோசனைப்படி ஒன்றுபட்டு வருகின்றனர்.

அந்த யோசனைப்படி நடந்து நல்லதைச் செயல்படுத்திக் கொண்டு வந்தவன்… வளர்த்துக் கொண்டு வந்தவன்
1.அவன் காலம் முடிந்தால்… அதற்குப் பின் இதை யார் தலைமை தாங்குவது…? என்ற போர் முறை வந்து விடுகின்றது
2.அதில் ஒருவன் நான் தான் பெரியவன் என்று வந்தால் இன்னொருவன் நான் தான் பெரியவன் என்று வருகின்றான்
3.அப்போது அந்த வலிமைக்குத் தக்கவாறு பிரிந்து சென்று விடுகின்றார்கள்.
4.பிரிந்து சென்றவர்கள் அந்தப் போர் முறையிலிருந்து மாறுவதே இல்லை.
5.இதிலே எனது.. உனது…! என்ற நிலைக்கு இப்படி எல்லாவற்றிலும் போர் முறைகளே வருகின்றது.

ஆனால்
1.ஞானிகள் பிறந்த நாடு… மகரிஷிகள் பிறந்த நாடு நம் இந்திய நாடு
2.உயிரணு தோன்றி மனிதனாகி ஒளி உடலாகப் பெற்ற நாடு நமது தமிழ்நாடு.

இதனை நாம் முதலிலே அறிந்து அதற்குத் தக்க… நமது குரு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர… கூட்டத்தைக் காட்டும் நிலைக்கு வரக்கூடாது.

முன்னோர்கள் காட்டிய வழியில் நாம் வாழ வேண்டியது மிகவும் அவசியம்

முன்னோர்கள் காட்டிய வழியில் நாம் வாழ வேண்டியது மிகவும் அவசியம்

 

மனிதர்களால் பல வினாக்கள் எழுப்பப்படலாம். ஆண்டவனை வணங்கி நம்மையே ஆண்டவனாக்கி ஞானம் பெறும் வழியையெல்லாம் இந்த மனித ஆன்மாக்கள் தானே உணர முடிகின்றது.

மிருகங்களுக்கு ஞான உபதேசங்களோ பக்தி வழிபாடோ இல்லை. அவற்றுக்கு இனி வரப் போகும் உலக மாற்றத்திலிருந்து அழியாமல்… இன்றுள்ள நிலையிலிருந்து விடுபட வழி இல்லையா..? என்ற வினா எழும்பலாம்.

மனிதனுக்குத்தான் அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் நிலை கொண்ட எண்ணத் தொடர் உண்டு. மனிதனால் இன்றைய நிலையில் ஆடை உடுத்தாமல் அம்மணம் கொண்டு வாழ்ந்திட முடியுமா…?

மனிதனுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற இல்லறப் பிணைப்பைப் பிணைத்து.. குடும்பம் என்ற குடில் அமைத்து பல நிலைகளை மனித ஞானத்தால் பக்குவ மேம்பாடுபடுத்தி… தானாகப் பெய்யும் மழைக்கு வடிகால் அமைத்து வழிப்படுத்தியவன் மனிதன்.

மனிதன் கல்லைச் சிலையாக வணங்கினான். ஆண்டவன் என்ற பக்தி செலுத்த அதே போல் பல பக்குவ மேம்பாடின் ஞானம் பெற்றான் மனிதன்.
1.மனித அமில குணத்தின் ஞான வளர்ச்சி
2.உயர்ந்தோங்கும் ஆற்றல் கொண்ட “அபரிதமான சக்தியின் ஜோதி வளர்ச்சி ஆகும்…!”

இந்த வழித் தொடரின் அமில குண ஞான அறிவாற்றல் கொண்ட மனித வளர்ச்சியின் நிலைக்கொப்ப மேம்பாட்டின் சக்தி மிருக வர்க்கங்களுக்கு வழிப்படவில்லை.

பல ஆயிரம் ஆண்டுகள் மேல் நோக்கிய சுவாசத்தை ஈர்த்து அந்த ஈர்ப்பின் சக்தி அமிலமான மாணிக்கத்தை ஈர்க்க வல்ல குணமுடைய நாக சர்ப்பத்திற்கே அதன் வட்டத் தொடர்ச்சி அமில குணமானது மனித ஞானத்திற்கொப்ப மேம்பாடு பெறவில்லை,

இதே போல் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் மற்ற ஜீவ ஜெந்துக்களுக்கும் மனிதனைக் காட்டிலும் பல சக்தி அமில குணங்கள் மேம்பட்டு வளர்ச்சியுற்றிருந்தாலும் மனிதனைப் போன்ற செயலாக்க வல்ல ஞான வளர்ச்சியின் செயல் கொள்ளும் வழி முறைகள் அவற்றிடம் இல்லை.

மனிதனிலிருந்து தான் எல்லா மிருக இனங்களும் செயல் கொண்டதா என்றால் அதுவுமில்லை. மிருகத்திலிருந்து மனித இனம் வரவில்லை.

ஆனால் மனிதனாக வாழும் நிலையில்
1.இவன் எடுக்கும் நிலை கொண்ட சுவாசத்தினால்
2.ஏழு பிறவியில் இவன் சேமித்த அமில குணத்தின் நிலைக்கொப்ப ஞான ரிஷியாகவும்…
3.மிருகத்தின் நிலையிலும் சென்று விடுகின்றான். இது தான் உண்மை நிலை.

மிருகங்களிலே ஊரும் ஜெந்துக்களிலே அதனதன் நிலைக்கொப்ப பல அறிவு குணங்கள் நிறைந்துள்ளன. மூட்டைப் பூச்சிக்கு மனிதனின் சுவாசமும் மனிதன் “தன்னைப் பிடிக்கப் போகின்றான்..” என்று அறியும் ஆற்றலும் உண்டு. அதே போல் பல்லியைக் கண்டாலும் “தன்னைப் பிடித்துவிடும்…” என்பதை உணரும் ஆற்றலும் அதற்கு உண்டு.
1.ஒவ்வொரு ஜீவராசிக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையும்
2.தன் ஆகாரத்தை ஒரே குறியுடன் எடுக்கவல்ல சக்தியும் உண்டு.

ஆனால் மனிதனுக்கு மூட்டைப் பூச்சி அவனைக் கடித்தால் தான் அவனால் உணர முடிகின்றது. மனிதனுக்குத் தன்னைத் தானே தற்காப்புக் கொள்ளும் அமிலத் தன்மை குறைவு.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு இவற்றின் வழி பெற்றவன் தான் மனிதன். மனிதன் இயற்கைக் குணமே அவன் ஞானத்தை வளர்க்கும் வழி பெற்ற அமில குணமுடையது தான்.

பூனை.. நாய்… இவை எல்லாம் தன் சுவாசத்தைக் கொண்டு நடப்பதற்கு முதலிலேயே வரப் போகும் நிலையை உணரும் மேம்பாட்டுக் குணமுடையது.
1.இப்படி இயற்கையே கலவையாகி
2.அக்கலவையில் வெளியான உலகில் ஏற்படும் பல கோடி நிலைகளில் கலந்துள்ள நாம்
3.நம் ஞானத்தை நம் முன்னோர்களினால் உணர்த்தப்பட்ட உன்னத வழிக்கோலைச் செயல்படுத்திட வேண்டும்.

ஆண்டவனுக்கு (சிலைக்கு) மாலையை முன்னாடி போட்டுத்தான் வணங்குகின்றோம். பின்னாடி போட்டு அழகு காண்கின்றோமா…?

எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனுக்கே மாலையை முன் போட்டால் என்ன…? பின் பக்கம் போட்டால் என்ன…? என்று செயல்படுத்தாமல் முன்னின்று ஆண்டவனையும் முன்னோரையும் வணங்குகின்றோம்.

அந்நிலைக்கொப்ப
1.நம் முன்னோர்கள் முன்னாடி வழிப்படுத்திய தத்துவ ஞானத்தின் உண்மையை உணர்ந்து…
2.மெய் ஞானத்தின் சக்தியைத் தன் ஞானத்தால் ஈர்க்க வல்ல ஞானம் பெறுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ பேருக்கு நாம் பல நன்மைகளைச் செய்திருந்தாலும் அதிலே தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி அவ்வப்பொழுது சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக… ஊசி மூலம் நம் உடல் இரத்தத்திலே மருந்தை கலக்கச் செய்ய்யும் போது அந்த மருந்து செல்லும் இடங்களில் எல்லாம் தீமைகளை (நோய்களை) நீக்குகிறது.

இந்த மருந்தைக் கண்டவுடன் அந்த அணுக்கள் ஏற்க மறுக்கிறது. மருந்து அணுக்களுக்குள் சேரச் சேர அது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் எடுத்துப் புருவ மத்தியில் எண்ணி உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
2.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவைச் செலுத்தி விட்டால் இது துரிதமாக அந்த அணுக்களிலே போய்ச் சேருகின்றது.
4.மேலே சொந்னது போன்று அறியாது உட்புகும் தீமைகளைப் பலவீனப்படுத்துகிறது.

உதாரணமாக… நண்பர்களுக்குள் பழகப்படும் பொழுது “நன்மை செய்தான்…” என்று எண்ணும் பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது.. நன்மை செய்யும் சக்தியாக இயக்குகிறது.

ஆனால் பகைமை என்று ஆகி “துரோகம் செய்தான் பாவி…” என்று வேதனையுடன் எண்ணினால் நண்பன் உணவு உட்கொண்டிருந்தாலும் அங்கே புரை ஓடுகின்றது.

யார் இப்படி எண்ணுகிறாரோ அவருக்கும் இருள் சூழச் செய்து சிந்தனை இழந்து அடுத்து விபத்தாகின்றது. அதே சமயத்தில் யாரை எண்ணினாரோ அங்கேயும் விபத்தாகிறது. ஆக… நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வின் வழி தான் இயக்கச் சக்தியாக மாறி இயக்குகிறது.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்கள் இருண்டு விடுகின்றது.
1.அந்த நேரத்தில் நேரடியாகப் பார்த்தாலும் மேடு பள்ளம் இருப்பதை நம்மால் பார்க்க முடியாது போகின்றது.
2.கரு விழிகளில் அடுத்தடுத்து இந்த வேதனைகள் படப்படும் போது விஷத்தன்மை என்ற மாசுகள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
3.இப்படிப் பெருகத் தொடங்கினால் கண் கருவிழிக்குள் இருக்கும் கண்மணியும் பலவீனம் அடைகின்றது
4.அது பலவீனம் அடைந்தால் விஷத்தின் தன்மையை அதிகமாகக் கவர்ந்து
5.கண் நரம்பு மண்டலம் முழுவதும் விஷத்தன்மைகள் பரவி விடுகின்றது.
6.விஷத்தன்மை பரவினால் உடல் முழுவதற்கும் அது எளிதில் பரவும் தன்மை வருகிறது.

இது போன்று “ஒன்றுடன் ஒன்று தொடர் கொண்டு” அதன் தொடர் வரிசையில் இயற்கையின் நியதிகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது..

ஆனால் இதையெல்லாம் மனிதன் ஒருவன் தான் மாற்றி அமைக்க முடியும்.

மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று இங்கே கூர்ந்து கவனிக்க வைத்து
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கச் செய்கிறோம் (ஞானகுரு).

பதிவானதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தீமை என்று வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கப் பெருக்க இந்த உடலுக்கு பின் பிறவி இல்லாத நிலை அடையும் தகுதி பெறுகின்றீர்கள்.

முந்தைய நிலைகள் இதை எல்லாம் செய்யத் தவறி இருந்தாலும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் வழி கவர வேண்டும்.

நமக்கு முன் இருக்கும் ஆன்மாவிலே பலவிதமான உணர்வுகள் உண்டு. அதிலே தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் நிலையாக
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்திலே கலக்கச் செய்து
2.இரத்தத்தின் வழி உடலில் உள்ள அணுக்களில் அதைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.துரிதமாக நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

நம்மை அறியாது கோபப்படும் அல்லது வேதனைப்படும் செயல்களையும்… ஏன்… எதற்கு…? என்று அறியாதபடி செயல்படுத்தும் சில தவறுகளிலிருந்து மீட்பதற்குத் தான் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அடிக்கடி இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது தீமைகளை அது ஏற்றுக் கொள்ளாது தடுக்கப்படுகின்றது.

1.நம்முடைய சிறுநீரகங்களும் (KIDNEY) துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெற்று
2.இரத்தங்களில் கலந்து வரக்கூடிய மாசுகளைத் தூய்மைப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அப்போது நல்ல இரத்தம் இருதயத்திற்கும் செல்கின்றது… சிந்திக்கும் ஆற்றலும் வலுப்பெறுகின்றது.

வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறக்கூடிய உறுதி உங்களுக்குக் கிடைக்கின்றது.

எத்தனையோ ரிஷிகளின் கூட்டு முயற்சி தான் இங்கே கொடுக்கும் போதனைகள்… நான் ஒருவன் மட்டும் அல்ல…

எத்தனையோ ரிஷிகளின் கூட்டு முயற்சி தான் இங்கே கொடுக்கும் போதனைகள்… நான் ஒருவன் மட்டும் அல்ல…

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும் சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவு பட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு இந்நிலை பெற மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும் என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

 

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது…
1.நாளை கடன்காரனுக்கு எப்படிக் கொடுப்பது…
2.குடும்பத்தை எப்படி வழி நடத்துவது… என்று சோர்வின் நிமித்தம் வேதனை என்ற உணர்வுகள் தான் வருகின்றது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்தால் உடனே மன உறுதி கிடைக்கும்.

1.நாம் எதைச் செய்ய வேண்டும்…? எப்படிச் செய்ய வேண்டும்…? என்று
2.தனக்குள்ளேயே ஞானங்கள் கிடைக்கின்றது.
3.அதன் வழி நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் தொழிலை விருத்தி செய்யவும் மன அமைதி பெறவும் இது உதவும்.

ஆனால் மன அமைதி இழந்து குடும்பத்தில் சிக்கல்கள் அதிகமானால் அந்தக் குடும்பத்தில் இதை நுகர்வோர் உணர்வுகள் அனைத்துமே சோர்வடைகின்றது. சோர்வடைந்து வேதனைப்படும் நிலை வரும் பொழுது சிந்தனை இழக்கப்படுகிறது.

அந்த குடும்பத்தை சார்ந்தவர் வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அந்தக் கலக்கங்கள் – எதிர்பாராத விபத்துகளை உண்டாக்கி விடுகின்றது
2.பட்ட காலிலே படும்… கெட்ட குடியே கெடும்…! என்ற நிலைகளில்
3.சங்கடங்கள் குடும்பத்தில் பரவப்படும் பொழுது விபரீத விளைவுகள் வந்து விடுகின்றது.

மேலும் மேலும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையே முடியாது போய் விடுகிறது. தேடிய செல்வங்களையும் பாதுகாக்க முடியாது போய்விடுகிறது. மேலும் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்கின்றது.

இந்த உடலில் அத்தகைய நிலைகளை வளர்த்துக் கொண்டால் இன்று நாம் மனிதர்கள்.

வேதனை என்ற உணர்வு கூடினால் எந்த ஆசை கொண்டோமோ பேய்…! இன்னொரு மனித உடலுக்குள் சென்று பேயாக ஆட்டி அவனையும் வீழ்த்திவிட்டு வேதனையை உருவாக்கி வெளி வந்தபின் அடுத்து “மனிதனல்லாத உடலை இந்த உயிர் உருவாக்கிவிடும்…”

ஆகவே எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும். அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலைக் கோவில் என்று மதித்துப் பழக வேண்டும்.

அப்படி மதித்தோம் என்றால்… வாழ்க்கையில் சந்திக்கும் சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் குரோதம் பயம் போன்ற நிலைகள் நமக்குள் புகாது தடுக்க முடியும். நல்ல சிந்தனைகள் நமக்குள் கூடும்.

வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்க நேரும் அந்தந்த நேரங்களில் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நம் உடலில் எத்தகைய கஷ்ட்ங்கள் வரினும் அதைச் சிறுகச் சிறுக நாம் தடுக்க முடியும் உடலுக்குள் நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

காரணம்… தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கியது அந்தத் துருவ நட்சத்திரம்…!

1.கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரில் இணைத்து…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணை மூடி…
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவு அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று
4.உயிர் வழி கவர்ந்து நம் உடலுக்குள் சேமித்தல் வேண்டும்.
5.நம் இரத்தங்களிலே இதைக் கலக்கச் செய்ய வேண்டும்
6.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தப்படும் போது நம் இரத்தங்களை அது தூய்மைப்படுத்தி விடுகின்றது.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.