வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்

இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.

இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.

ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.

வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.

நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.

அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)

மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.

அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”

கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.

தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.

அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.

கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.

அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்கு தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது

1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.

இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

அதிவிரைவில் தன் ஞானத்தை (அருள் ஞானம்) ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள்

அதிவிரைவில் தன் ஞானத்தை (அருள் ஞானம்) ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள்

 

இவ்வுலகில் மனிதனின் எண்ண சக்தியில் அறிவு நிலையின் வளர்ச்சி குணத்தை ஞானத்தின் பால் செலுத்தும் வழி முறைப் பக்குவத்தை மாற்றிக் கொண்டதால் ஒரு சாரார் ஏற்படுத்திக் கொண்ட அறிவின் ஞான முதிர்ச்சியினால் தன் ஞானம் பெற்றதை விஞ்ஞானம் கண்டு வளர்த்திட்டான் அதன் வழி சக்திகளை.

இப்படி மனித ஞானத்தின் வளர்ச்சியையே விஞ்ஞானம் கொண்டு உணர்ந்து செயலாற்றும் பல நிலைகளை உணர்ந்துள்ளான் மனிதன்.
1.ஆனால் அம்மனித விஞ்ஞானத்தைத் தன் ஞானத்திற்கு எட்டும் பொருளாக மனிதர்கள் யாவரும் உணர்வதில்லை
2.பிறப்புடன் கூடிய “அபூர்வ சக்தியின் வழி பெற்றிட்டான் அந்த மனிதன்…!” என்று
3.போற்றிப் புகழ்ந்து அம்மயக்கத்தில் தான் அடிபணிந்து வாழ்கிறான்,
4.இதே நிலை எல்லா வட்ட நிலைகளிலும் (துறைகளிலும்) உண்டு.

பக்தி மார்க்கத்தில் சித்தன் நிலை கொண்டு செயலாற்றுபவனையும்
1.அவன் தாள் பணிந்து உயர்த்தி – தான் தாழும் செயல் வடிவாக உள்ளான் மனிதன்.
2.வாழ்ந்த வழி பெற்ற நிலையின் தொடரிலும்… பிறரின் புகழ் பாடி வணங்கும் முறையிலும் வாழ்ந்தால் நம் ஆத்ம பலம் வளம் பெறாது.

எந்தச் சக்தியாக இருந்தாலும் இந்தக் காற்றின் ஈர்ப்புக்குச் சொந்தப்பட்டது தான். அதே காற்றின் சுவாச அலையுடன் வாழும் நாம் நம் சக்தியைக் குறைத்து ஒன்றின் தொடர் நிலையில் வாழாமல் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் உகந்த ஞான ஒளியின் ஈர்ப்பை நமதாகப் பெற வேண்டும்.

அதிவிரைவில் தன் ஞானத்தை ஒவ்வொருவரும் கூட்டிக் கொள்ளுங்கள். நம் பூமியின் ஓட்டப் பாதையில் சில மாற்றங்களாகி வழக்கமான பாதையிலிருந்து சிறிது மாற்றமுடன் ஓடிக் கொண்டுள்ளது.

ஆகாயத்தில் கோட்டை கட்டி (INTERNATIONAL SPACE STATION) விஞ்ஞான ரீதியில் செயல் முறைக்கு வந்துவிட்டார்கள் விஞ்ஞானிகள்.

அதே போல் இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு மேல் சென்று விட்டால் அதே போல் மற்ற மண்டலங்களும்… ஏன் வளர்ச்சியுற்ற நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்புக்குக் கூட இல்லாத நிலையில்… இங்குள்ள சுவாச நிலையை எடுத்துச் சென்று… அதற்குகந்த மருத்துவ நிலையில் அங்குள்ள அலையின் சுவாச நிலையை ஏற்கும் அமில குணத்தை… சிறுகச் சிறுக வழிப்படுத்தி மனித ஆத்மா சென்றாலும் அங்கேயும் வாழ முடியும்.

1.ஆனால் மனிதன் இன்று செய்யும் இந்த விஞ்ஞானமே
2.நூறு ஆண்டுகளுக்கு முந்திய மார்க்கத்தில் செயல்படுத்தி இருந்தான் என்றால் வெற்றி கண்டிருப்பான்.

இவன் செயல் முறை காலத்திற்குள் “உலக மாற்றமே நிகழப் போகும் நிலையில்… அந்தர வாழ்க்கையில்…!” அதன் நிலையை உணர்த்தப் போகின்றான்.

நூறு மாடிக் கட்டிடம் எழுப்பும் மனிதன் அந்த நூறு மாடிக் கட்டிடத்திற்கு உகந்த “அதே உயரத்திற்கு உகந்த அஸ்திவாரத்தையா…” பூமியில் போடுகின்றான்…?

இந்தப் பூமியில் வாழும் வளரும் பூமியிலிருந்து பிரித்து எடுத்த பொருள்களும்.. நாம் அமைத்த எல்லாமும்… பூமியின் ஈர்ப்பின் பிடிப்புடன் சுழன்று ஓடிடும் நிலையில்
1.சக்தி கொண்ட நிலை மாறு கொண்டதால் தான்
2.இன்று வலுவிழந்த சில கட்டிடங்களும் பாலங்களும் விழுவதின் உண்மையும்.

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் ஏற்கனவே விஷத் தன்மைகள் அதிகரித்து விட்டது. பூமிக்கடியிலிருந்து உறிஞ்சப் பெற்ற பல சக்திகளின் தன்மையினால் பூமியின் மையைப் பகுதியும் வலு குறைந்து விட்டது.

மேன்மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி உயர் மின் அலைகளைக் கடலிலிருந்தும் காற்றிலிருந்தும் இந்த மனிதன் சுகம் காணப் பிரித்து எடுத்துக் கொண்டே இருப்பதால்
1.தன் குறுகிய கால சுகத்திற்காக இந்தப் பேரண்ட உலகையே வலுவிழக்கச் செய்து
2.மீண்டும் வலுப் பெற வைக்கப் போகின்றான்.

இதனின் உண்மை என்ன…? என்பது புரிந்ததா…

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தி வழி கூடி இழுக்க வேண்டும்

 

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்

எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.

அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.

எப்படி…?

சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.

அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.

இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.

ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.

உயிரிலே பட்டால் தான் இயக்கும்.

உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.

அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?

அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.

குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.

இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.

அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),

இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.

ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.

கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.

நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.

அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.

செய்து பாருங்கள்…!

உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…?

உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…?

 

1.தன் உயிராத்மாவை நல் ஞானம் பெறும் வழி பெற்ற ஞானியின் செயலால் என்ன பயன்…? என்ற வினாவும்
2.உயிராத்மாவின் வலுவைக் கூட்டுவதனால் என்ன பயன்…? என்ற வினாவும் எழும்பலாம்.

ஆனால்… பயன் கண்டு இந்தச் சுழற்சி வாழ்க்கை வாழ்ந்து மட்டும் எந்தப் பயனை எந்த ஆத்மா (சாதாரண நிலையிலுள்ள ஆன்மா) கண்டது…?

ஆதி சக்தியின் பரம்பொருளின் உண்மையை அடைய… உணர… பல ஆத்மாக்களுக்கு ஆவல் உண்டு.

தன் உயிரணுவின் ஆத்ம பலத்தை நாம் கூட்டிக் கொண்டால் அந்தப் பரம்பொருளின் அலையில் உள்ள உயர்ந்த சக்தியின் ஈர்ப்பை நம் எண்ணத்தினால் ஜெபம் கொண்டு ஈர்க்கவல்ல முறை பெற்று நம் உயிராத்மாவிற்கு நல் உரத்தைச் சேமிக்கலாம்.

1.நம் எண்ணத்தைப் பல நிலைகளில் செயல்படுத்தி வாழ்ந்து
2.நம் உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களையும் அதனதன் எண்ண நிலைக்கொப்ப வாழ விடாமல்
3.அனைத்து உயிரணுக்களும் நம் உயிரணுவிற்கு… நாம் எண்ணும் ஒரு நிலை கொண்ட எண்ணத்தில் செயல்படும் வழி முறைக்குக் கூட்டி
4.வாழ்க்கையில் ஏற்படும் எந்த நிலைக்கொப்ப எந்த எண்ணத்தின் தொடரின் ஈர்ப்பிலும் நாம் சிக்காமல்
5.அதே சமயத்தில் அதிலிருந்து ஒதுங்கிச் சலிப்புற்றும் வாழாமல்
6.எவ்வட்டச் சுழற்சி எண்ணத்தையும் நாம் எண்ணியே அடிமைப்படாமல்
7.பரம்பொருளின் உண்மைச் சக்தியின் வீரிய குணத்தின் அலைத் தொடரில் ஐக்கியம் கொண்டே
8.அப்படி வாழக்கூடிய பக்குவத்தை நாம் பெறுவது தான் “நம் உயிராத்மாவின் பலத்தைக் கூட்டிக் கொள்ளும் நிலை என்பது…!”

நாகப் பாம்பு விஷத்தையே ஈர்க்கும் சுவாச குணமுடையதாக இருப்பதனால் அதன் எண்ண நிலை “எதன் நிலைக்கும்” மாறு கொள்வதில்லை.

விஷ ஜெந்துவாக நாம் காணுகின்றோம். ஆனால் அந்த விஷத்தையே அது உரமாக்கி… வைரமாக்கி… மாணிக்கமாகச் சேமித்து வளர்த்து… “ஒரு நிலையில் வாழ்கிறது…” அந்த நாகப் பாம்பு.

பல பல நினைவலைகள் உள்ளவன் தான் மனிதன். இருந்தாலும் அந்தப் பலவற்றில் ஒன்றான உயர் அமில ஞான குணத்தை எண்ணிடும் வழி முறையைப் பெறுதல் வேண்டும். அதைப் பெற்றுத் “தன் பலம் காணுங்கள்…” என்று உணர்த்துகின்றோம்.

இயற்கையில் உள்ள அனைத்து நிலைகளுமே அதனதன் வட்டத்தில் தான் ஒரு நிலையில் ஈர்த்து வளர்த்து வாழுகின்றன.

ஒன்றுடன் ஒன்று வளர்ச்சி பெற்று வளர்ந்துள்ள இயற்கையில் இஜ்ஜீவ ஜெந்துக்களின் நிலையில் தான் பல மாற்ற குணங்கள் உண்டு.

ஆனால்…
1.தன் நிலையுணர்ந்து மனிதன் வாழ்ந்தால்
2.உலக ஞானத்தையும் மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று உணர்த்தும்
3.அந்தப் பரம்பொருளின் உண்மையையும் நிச்சயம் உணர முடியும்…!

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

 

சந்தர்ப்பத்தால் எந்தத் தீய உணர்வுகள் நம் உடலில் உள்ள எலும்புகளில் வித்தாகப் பதிவானதோ
1.அந்த வித்தைச் சுற்றிலும்
2.அடுத்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யப்படும் போது
3.அதைச் சுற்றி செல்கள் உருவாகும்.

இதனுடைய வலிமை அதிகமானால் அந்த வேதனை என்ற நிலைகள் தணிந்துவிடும். நாம் எப்படி ஆத்ம சுத்தி செய்து மற்ற உணர்வுகளை மாற்றுகின்றோமோ அதைப் போன்று தான்
1.உங்கள் உடலுக்குள் எலும்பில் உள்ள ஊனுக்குள் விளைந்த தீமையான உணர்வுகளை மாற்றி அமைத்தல் வேண்டும்.
2.ஞானிகள் கண்ட உண்மைகள் இது…!

அவர்கள் காட்டிய வழியில் நாம் ஊனுக்குள் மாற்றி அமைத்தால் அந்தத் தீமையை நுகரும் உணர்வுகள் அழிக்கப்படுகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர நுகர தீமையை நீக்கும் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி… ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது நல்ல அணுக்களாக மாறி… நமக்குள் சிந்திக்கும் ஆற்றலும்… உடலுக்குள் இருக்கும் உறுப்புகளைத் தெளிவாக்கும் நிலையும் ஏற்படுகின்றது.

நம் வாழ்நாளில் இதற்கு முன்னாடி நாம் அறியாது சேர்த்த நோய்களை மருந்துகளைக் கொடுத்து நீக்கினாலும் மீண்டும் ஊனுக்குள் பதிவான வித்து (முந்தைய பதிவுகள்) முளைத்துக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் கடுமையான நோய்கள் வந்திருந்தால் அதைக் கட்டுப்படுத்த அதற்கு வேண்டிய பத்தியங்களையும் டாக்டர்கள் (கட்டுப்பாடுகள்) சொல்வார்கள்.

இந்த பத்தியங்களை நாம் கடைப்பிடிக்க முற்படும் போது என்ன நடக்கிறது…?

உதாரணமாக… சர்க்கரைச் சத்து வந்து விட்டால் அது (இனிப்பு) இல்லாதபடி உணவையோ மற்றவைகளையோ உட்கொள்ளும் பொழுது அந்தக் கசப்பு வருகிறது… அதனால் வேதனை வருகிறது.
அடிக்கடி வேதனைகளைச் சேர்க்கப்படும் பொழுது
1.கட்டுப்பாடாக இருந்து சர்க்கரைச் சத்தை மறைத்து விடலாம்
2.ஆனால் இரத்தத்தில் கசப்பின் உணர்வு புது விதமாக மாறும்.

இருந்தாலும் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று ஆசைகள் தூண்டும். ஒரு ஜிலேபியைப் பார்த்தால் “என்னால் சாப்பிட முடியவில்லையே…!” என்று வேதனை வருகின்றது. மற்றொருவர் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்த்தால் நம்மால் சாப்பிட முடியவில்லையே என்ற வேதனை வருகிறது.

உடலில் உள்ள சர்க்கரைச் சத்தை நீக்கிவிடலாம். ஆனால் “ருசியாகச் சாப்பிட முடியவில்லையே..” என்ற வேதனையான உணர்வின் தன்மை உமிழ் நீராக மாறி விஷத்தின் தன்மையாக நம் உடலுக்குள் கலக்கின்றது.

இதைப் போன்ற நிலைகள் நம்முடைய வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய செயல் நாளைய சரீரம்…!

ஆக… பகைமை கொண்ட உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ சந்திக்க நேரும் பொழுது நாம் அவைகளை மாற்றத் தவறினால்
1.எத்தனையோ சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக வந்திருந்தாலும்
2.நான் நுகர்ந்த தீமைகள் இரத்தத்தில் இந்திரலோகமாகி
3.அணுவின் தன்மையாக பிரம்மலோகமாக மாறும் பொழுது
4.நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் தின்று விடுகின்றது
5.நல்ல அணுக்களுக்குச் செல்லும் ஆகாரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்தத்தில் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

விஞ்ஞான முறைப்படி இரத்தத்தைப் பரிசீலித்துப் பார்த்தால் சோகையாக இருக்கின்றது (ஹீமோகுளோபின் குறைவு)… சர்க்கரை சத்து இருக்கின்றது… உப்புச் சத்து இருக்கின்றது என்றெல்லாம் கண்டறிந்து சொல்வார்கள்.

ஏனென்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்த்த்தில் கலந்த பின் அந்தக் கலவையில் இப்படிப் பிரித்துவிடுகின்றது.

உதாரணமாக… உப்புச்சத்து அதிகமாகி அந்த இரத்தம் நுரையீரலுக்குள் சென்றால்
1.வேர்வையாகி… உப்பு கசிவது போன்று போகும் பக்கமெல்லாம் கசிவாகிறது
2அதனால் உடலில் நீர் அதிகமாகி உடலெல்லாம் “உப்ப ஆரம்பிக்கின்றது…”
3.நல்ல அணுக்களும் உப்புச் சத்தினால் கெட்டுப் போகின்றது
4.கிட்னியும் பலவீனம் அடைந்து விடுகின்றது.

இது எல்லாம் யார் தவறு செய்தது…?

சந்தர்ப்பத்தால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் நல்ல அணுக்கள் இவ்வாறு மடியத் தொடங்கி விடுகின்றது. இரத்தத்தைப் பரிசீலனை செய்து அதற்குத் தக்க டாக்டர்கள் மருந்துகளைக் கொடுத்தாலும் ஊனுக்குள் இருக்கும் மூல வித்தை அவர்களால் மாற்ற முடிவதில்லை.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் ஊனுக்குள் பாய்ச்சி ஒளியான வித்துகளாக மாற்றுவோம்.

எனக்கு (ஞானகுரு) எப்படி அந்த அருளைப் பெறும் தகுதியை குருநாதர் ஏற்படுத்தினாரோ… அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தாரோ… அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன்.

உயர்ந்த சக்திகளைப் பெற உங்களுக்கு “அந்த நினைவு தான் வேண்டும்…”

தீமை என்று தெரிந்து கொண்டாலே…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதைப் பெற வேண்டும் என்று ஏங்கி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிரிலே வலுவாக்கினால்
4.எத்தகைய வேதனையும் உள் புகாது தடுத்து விடுகின்றது.

பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…?

பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…?

 

இந்தக் காற்றிலும் நீரிலும் இருந்துதான் மின் அலையை விஞ்ஞானிகள் எடுக்கின்றார்கள்.
1.இந்த உலகில் தோன்றும் மின் அலைகளின் துளிகள் தான் உயிரணுக்கள் யாவையுமே.
2.உயிர்த் துடிப்பு ஏற்படவே அம்மின் அலை இருந்தால் தான் செயல் கொள்ள முடியும்.

நீரைப் பாய்ச்சிச் சுழலவிட்டு மின் அலையை எடுத்து ஒளியையும் பல இயந்திரங்களை இயக்கவும் சாதன முறை கொண்டு செயலாக்குகின்றோம்.

இந்தப் பூமி பல மண்டலங்களிலிருந்து வரும் ஒளி அலைகளையும் அந்த மண்டலங்களின் இயற்கை குணத்தையும் ஒன்றுக்கொன்று ஈர்த்து எடுக்கிறதென்றால் காந்த அலையின் ஈர்ப்பினால் ஒவ்வொன்றும் சுழன்று செயல்படுகின்றது.

நம் பூமி சூரியனின் ஒளி அலையை ஈர்த்து வெளிப்பட்டு இந்த உலகச் சுழற்சி ஓட்டத்தில் ஓடியே செயல்படுவதுவும் ஒவ்வொரு உயிரணுவும் ஜீவ உடல்களும் வாழுகிறதென்றால் “காந்த மின் அலையின் சக்தி நிலையில் இருந்து தான் எல்லாமே செயல் கொள்கின்றன…”

1.மின்சாரத்தை விஞ்ஞானத்தில் மட்டும் காண்கின்றீர்.
2.இந்த உடலும் மற்ற எல்லாமே மின் அலையின் கூட்டுத்தான்.

மிகவும் சக்தி வாய்ந்த உயிரணுவின் ஆத்ம கூட்டை இந்த உடல் என்ற பிம்ப வாழ்க்கைக்குச் சொந்தப்படுத்தி இப்பந்தச் சுழற்சியிலேயே நம் சக்தியையும் செயலையும் விரயப்படுத்துகின்றோம்.

அது மட்டுமல்லாமல் பல சஞ்சலங்கள் கொண்ட ஆவேச உணர்ச்சியில் எல்லாம் நம் உயர் சக்தியை நம்மை அறியாமல் விரயப்படுத்துகின்றோம்.

பல கோடி கோடி உயிரணுக்களின் நிலை கொண்டு உயிர் வாழும்
1.நாம் இந்த வட்டச் சுழற்சியில் வாழ்க்கை என்ற நிலையிலும் நிறைவு பெறாத வாழ்க்கை வாழ்ந்து
2.மனிதனாக வாழ்ந்த வாழக்கூடிய செயலைப் பெற்ற நாம் இந்த எண்ணச் சுழற்சியிலும்
3.எதற்கும் பயன்படாத நித்தியக் கடனில் மூழ்கி வாழ்கின்றோம்.

கடமை கடமை என்று சொல்கிறோம்…! பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கிக் கடைசியில் இறந்து போவது தான் கடமையா…? பின் அந்தப் பிள்ளைகளும் அவர்களுக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அவர்களும் இறப்பது தான் கடமையா…? இது தான் நித்தியக் கடமையா…?

தாய் தந்தையர் என்ன பலனைப் பெற்றார்கள்..? பிள்ளைகள் என்ன பலனைப் பெற்றார்கள்…? வாழும் வாழ்க்கையில்… படைப்பின் படைப்பில் “பலன் எது…?”

மனிதனாக பிறந்த நிலையில் இந்தப் பிறவிக் கடனைத் தீர்க்க வேண்டுமா இல்லையா..?

தன் சக்தி நிலை கூடக் கூட ஆத்ம பலம் வலுவேறித் தன் உயிராத்மாவிற்கு வீரிய உரம் ஏற்றி தன் பலம் என்னும் உண்மை பலத்தை இந்த மனித ஆத்மாக்கள் பெறக்கூடிய நிலை பெற வேண்டும்.

“தன் பலம்” பெறத்தக்க வழி முறையை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.
1.மண் மணலாகி…
2.மணல் உருண்டு வளர வளரச் சிறு கல்லாகி..
3.பாறையாகி.. மலையாகி… வாழவில்லையா…?

ஒன்றுடன் ஒன்று சக்தி நிலை கூடிக் கூடி வலுப் பெற்று வளர்ந்து கொண்டே தான் உள்ளது. மனிதனின் வளர்ந்த நிலை தான் எல்லாவற்றின் ஐக்கியமும்.

அறிவாற்றல் கொண்ட மனிதன் தன் ஞானத்தை இவ்வழித் தொடரில் உரம் பெற்று ஆத்ம பலம் பெறப் பெற… மனிதனின் உயிரணுவின் வளர்ச்சி வளரப் பெறுகிறது.

உயிரணுவாக… உயிராத்மாவாக… இந்தச் சுழற்சி வட்டத்தில் பிறந்து வாழும் நாம்… அந்த வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு இயற்கையும் பலவாக வளரும் பொழுது
1.இயற்கையின் உயர் சக்தியான மனிதன் தன் உயிராத்மாவிற்கு உரம் கூட்டி
2.அவ்வுயிராத்மாவ வளர்க்கக்கூடிய பக்குவ ஞானத்தைச் செயல் கொண்டு வளர்த்திட்டால்
3.இந்த மனிதனின் உண்மையின் உயர்ந்த பலம் கூடி உயர் நிலை பெறலாம்.

காற்றில் தான் சகலமும் கலந்துள்ளன. அக்காற்றிலுள்ள அமில குணத்தில் தனக்குகந்த சக்தியை ஒவ்வொரு இயற்கை குணங்களும் அதற்குகந்த அமிலத்தை ஈர்த்து வளர்க்கிறது.

அத்தகைய செயலைப் போல் மனிதனாக வாழும் நாமும் இந்த இயற்கையில் காற்றுடன் கலந்துள்ள அமில சக்தியில் பலவும் உள்ள பொழுது
1,நம் எண்ணத்தைக் கொண்டு நாம் எடுக்கும் சுவாசத்தினால்
2.நாம் எடுக்கக்கூடிய எண்ண நிலைக்கொப்ப அதன் செயல் கொண்ட அமில குணத்தின் சக்தியை நம் சுவாசம் ஈர்த்து
3.நம் உயிராத்மா பலம் கொள்ளும் நிலை வருகிறது.
4.அத்தகைய பலம் கொண்டால் அழியாத நிலைகள் கொண்டு எக்காலமும் வாழலாம் ஞானிகளைப் போல… மகரிஷிகளைப் போல…!

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை குருநாதர் எல்லோருக்குள்ளும் பாய்ச்சச் சொன்னதன் நோக்கம்

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை குருநாதர் எல்லோருக்குள்ளும் பாய்ச்சச் சொன்னதன் நோக்கம்

 

குடும்பத்தில் கருவுற்றிருக்கின்றார்கள் என்று தெரிந்தாலே நீங்கள் ஒரு மகா விரதமாக இருத்தல் வேண்டும்.

பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையோ வேதனைகளையோ கோபங்களையோ பகைமைகளையோ நுகராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அருள் ஞானம் பெருக வேண்டும்… மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.ஆதியிலே வாழ்ந்த அகஸ்தியன் எந்தச் சக்தியைப் பெற்று அவன் துருவன் ஆனானோ துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதனின்று வரும் பேரருளை கருவுற்ற தாயின் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எல்லோரும் தியானிக்க வேண்டும்.
3.உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர்ந்திடவும்
4.உலகில் உள்ள நச்சுத்தன்மைகளைப் போக்கும் சக்தி பெற்றவனாகவும்
5.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சக்தி பெற்றவனாகவும்
6.உலகை ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானியாக வளர வேண்டும் மகரிஷியாக வளர வேண்டும்
7.உலகைக் காத்திடும் பேரின்பப் பெரு வாழ்வை உருவாக்கும் அருள் மகானாக உருவாக்க வேண்டும் என்று
8.கருவில் இருக்கப்படும் பொழுது குடும்பத்தில் அந்தப் பத்து மாதமும் மகா விரதமாகச் செயல்படுத்துங்கள்.

எந்தப் பகைமையும் விடாதபடி உங்கள் குடும்பத்தில் இதைச் செயல்படுத்தினால் அவன் பிறந்த பின் குடும்பத்தில் உள்ள தோஷங்களையும் பாவங்களையும் நீக்கக்கூடிய சக்தியாக வருவான்.

உங்கள் குடும்பத்தைக் காப்பது மட்டுமல்ல உலகையே காத்திடும் அருள் ஞானியாக மகரிஷியாக வருவான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்கிறோமே… அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான். அதை எந்நாட்டவரும் பெற முடியும்.

1.அவன் எப்படி ஒளியாக மாறினானோ… அவனுடைய உணர்வுகள் இங்கே தென்னாட்டிலே அதிகமாக உண்டு
2.அவன் அருளை நாம் பெற்று நமக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்குவோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்
3.உலக மக்கள் அனைவரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் நிலை பெறச் செய்வோம்.

சகோதரப் பண்புடன் அரவணைத்து வாழும் சக்தியும் பேரன்புடன் வாழும் உயர்ந்த சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று குடும்பத்தில் அனைவரும் எண்ணுங்கள்.

கருவில் வளரும் சிசுவிற்கு இத்தகைய உயர்ந்த உணர்வுகளை ஊட்டுங்கள். அந்தப் பத்து மாதமும் கொஞ்சம் பொறுமையாக இதைச் செய்து பழகுங்கள். நம் நாட்டையும் காக்கலாம்… ஊரையும் காக்கலாம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியினைத் தான் இங்கே உணர்த்துகின்றோம். என்னைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்தார்… உண்மைகளைத் தெரியச் செய்தார்… அனைத்தையும் அறிந்து கொண்டேன்,

நான் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அலைந்து திரிந்து அறிந்ததை உங்களுக்கு நீங்கள் அமர்ந்த இடத்திலேயே பாய்ச்சுகின்றோம்… அதைப் பெறும்படி செய்கின்றோம். நீங்கள் எளிதில் பெறலாம்

குருநாதர் இட்ட கட்டளைப்படி உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். மனிதராக உருவாக்கிய அந்த அரும்பெரும் சக்திகளைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்.

தெய்வம் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தப்படுத்த இங்கே கொடுக்கும் உபதேச உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தாலே தீமைகள் அகன்று புனித உணர்வு பெறுவீர்கள்.

ஆகவே…
1.ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையை இவ்வாறு நீ செய்தால்
2.அனைவருடைய உணர்வுகளும் உயர்ந்ததாக உனக்குக் கிடைக்கும்
3.பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை
4.எத்தனை (இலட்சம்) பேருடைய உணர்வுகளுக்குள் பாய்ச்சுகின்றாயோ…
5.அப்படி நீ அதைச் செய்தால் அனைவருடைய உணர்வுகளை நீ பெறுவாய் என்று
5.குருநாதர் இட்ட கட்டளைப்படித் தான் உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றேன்
6.எம்முடைய அருள் உபதேசங்கள் அதற்குப் பயன்படும்…
7.உங்கள் உடலான சிவனுக்கு அது நல் அமுதாகக் கிடைக்கும்.

ஆகவே அருளைப் பெறுவோம்… மெய்ப்பொருள் காண்போம்… பிறவி இல்லா நிலையை அடைவோம் என்று பிரார்த்திப்போம்.

இவ்ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்

இவ்ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்

 

இந்த உலக மாற்றத்தினால் இந்த உலகிலுள்ள மனித ஆத்மாக்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் உயிரணுவும்… உயிராத்மாவும்… சப்த அலைகளும்… சகல எண்ணத்தில் விட்ட சுவாச அலைகளும்… பூமியின் சுழற்சியில் சுழன்றுள்ள நிலையில் மீண்டும் கல்கி பிறந்தால் இந்த எண்ண வளர்ச்சி எங்கே செல்லும்…?

இந்தப் பூமியின் காற்று மண்டலத்தில் கலந்துள்ள இந்நிலைகள் எல்லாமே அடுத்த நிலைக்கு வர ஏதுவாகின்றதா…? என்ற வினா எழும்பலாம்..!

இதன் நிலையில் இக்கலி மாறி கல்கி வரும் தருணத்தில் சில நிலைகள் ஏற்படலாம்.

இப்பூமியில் இன்று வாழும் ஆத்மாக்களும்… பல கோடி ஜீவ ஜெந்துக்கள்… தாவரங்கள்.. இன்று பூமியில் வளர்ந்துள்ள கனி வளங்கள்… நீர் நிலைகள்.. மனித உடலை விட்டுப் பிரிந்து வாழும் அனைத்து உயிராத்மாக்கள் உயிரணுக்கள்… இது நாள் வரை நம் பூமியின் காற்று மண்டலத்தில் நிறைந்துள்ள சப்த அலைகள் அனைத்து நிலைகளுமே… இந்தப் பூமியின் மாற்றம் நிகழும் தருவாயில் பல நிலைகள் மாறி கலியில் இன்றளவும் வளர்ந்து விட்ட நிலையில் மாற்றம் காணப் போகிறோம்.

இந்தக் கலியில் மாறுகிறது என்றால் இந்த உலக மாற்றத்தில் ஏற்படும் அதிர்வினால் சில ஒளி அலைகள் நம் பூமியின் காற்று மண்டலத்திற்கு மேல் அனைத்திற்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் கலந்து விடும் நிலை பெறுகின்றது.

இன்னும் பல சப்த அலைகள் இந்தப் பூமியின் ஈர்ப்பில் இந்த அதிர்வினால் மோதுண்டு இந்தப் பூமியுடன் கலக்கும் நிலை பெறுகின்றது.
1.பல பல மாற்ற நிலைகள் இந்தக் கலி மாறிக் கல்கியில் காணப் போகின்றீர்கள்.
2.இவ் ஈஸ்வரபட்டன் உணர்த்தும் நிலை பைத்தியமாகத் தோணலாம்.
3.இனிமேல் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை எல்லாம் தடுமாற்றம் கொள்ளப் போகிறது.

உலகின் பல திரையறியச் செயல்படும் கருவிகளும்… இந்தக் காற்றிலிருந்து ஈர்த்து ஓரிடத்திலிருந்து இன்னோரு இடத்திற்கு ஒலி அலைகளைப் பரப்பி வாழும் நிலைகளும்… மற்றும் மனிதனால் செயற்கைக் கோள்களை ஏவி விட்டு அதிலிருந்து உணரும் ஒளி அலைகளும்… ஒலி அலைகளும்,,, இன்று செயலாற்றும் முறைப்படிச் செயலாகாது.

இயந்திரத்தின் துணை கொண்டு காற்று மண்டலத்தில் இவர்கள் இன்று பிரித்து எடுக்கும் நிலையெல்லாம் செயல்படுத்தும் முறையில்
1.இன்றுள்ள நிலைக்கொப்ப செயலாக்க முடியாமல்
2.அதற்காக இன்னும் பல புதிய சாதன முறைகளை மனிதன் உருவாக்கப் பார்ப்பான்.

மீண்டும் இந்தக் காற்று மண்டலத்தின் விஷத் தன்மை கூடி… ஆவி உலகில் வாழும் ஆத்மாக்களின் வெறி உணர்வும் அதிகப்பட்டு… “எண்ணிலடங்கா விபரீத நிலைகள் ஏற்படும் தொடர்…” இனி வரப் போகும் காலத்தில் நிகழத் தான் போகின்றது.

மனித ஆத்மாக்களே…!
1.உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்…!
2.என்றிருந்தாலும் “மடியத்தான் போகின்றீர்கள்…!” என்று எண்ணம் கொள்ளாமல்
3.மனித ஆத்மாக்களால் தான்… நிகழப் போகும் சக்தியை மனிதன் உணர்ந்து செயல்படத்தான்… இங்கே பல நிலைகளைப் போதிக்கின்றோம்.
4.மனிதனாக அறிவு கொண்டு… அன்பு பட்டு… ஞானம் பெற்றிட வாருங்கள்.

இந்த மனித ஆத்மாவிற்குத்தான் அறிவாற்றலை வளர்க்கும் ஆற்றல் உண்டு. அறிவு நிலை கொண்ட மிருகங்கள் வாழ்ந்தாலும் மனிதனை ஒத்த ஞான சக்தி பெறும் தன்மையற்ற நிலையில் தான் மிருக இனம் உள்ளது.

தேவனாக வாழக்கூடிய மனிதன் “தன் நிலை உணர்ந்தால் தேவனாகலாம்…!”

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஆசைப்பட்டு நுகர வேண்டும்

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவைப் “புருவ மத்தியில் வையுங்கள்…” துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று மெதுவாகக் கண்களை மூடுங்கள்.

1.உயிரான ஈசனிடம் வேண்டி உங்கள் நினைவனைத்தும் உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.மூக்கின் வழி செல்லாதபடி புருவத்தின் வழி காந்தத்தால் ஈர்த்து உங்களுக்குள் அந்த உயிர் உணர்வின் ஒளி அலைகளாக மாற்றும்.
3.இப்பொழுது அந்த ஈர்க்கும் சக்தி புருவ மத்திக்கே வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிரிலே வைத்து… உயிரான ஈசனிடம் வேண்டி…
1.துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் முழுமையான எண்ணத்தைச் செலுத்தி
2.அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… ஆசைப்பட்டு அதை நுகருங்கள்.

இவ்வாறு இச்சைப்பட்டு நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் பிரம்மம் ஆனால் பிரம்மகுரு வசிஷ்டரின் மனைவி அருந்ததி…! அந்தச் சக்தியாக நமக்குள் நல்லதை வளர்க்கும் சக்தி பெறுகின்றது.

கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வையுங்கள். உயிருடன் ஒன்றிய உணர்வை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்தநாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நுகர்ந்தது ஜீவ அணு… ஜீவான்மா…! “ஜீவான்மா…” என்பது இன்னொரு மனிதன் மேல் நாம் பிரியப்பட்டு இருந்தால் “இறந்த பின் அந்த ஆன்மா…” நம் உடலுக்குள் வந்தால் அது இரத்தத்தில் தான் இருக்கும்.

இரத்தத்தின் வழி உணர்வை எடுத்துத் தான் அந்த அணுக்களும் வளரும்.
1.உயிர் பாகம் செல்லும் பொழுது அதன் உணர்ச்சிகளை உந்தி அது உணவாக எடுத்துக் கொள்ளும்…
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும்.

ஆகையினால் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் அந்த அருள் உணர்வுகள் பெற நாம் தியானிக்க வேண்டும்.

நண்பனை உற்றுப் பார்த்து அவரை நமக்குள் பதிவு செய்திருந்தால் இறக்கும் போது இறந்ததைப் பாசத்துடன் கண்களால் கவர்ந்திருந்தால் நம் இரத்தத்திற்குள் அது தேங்கி இருக்கும்.
ஆக… ஜீவான்மாக்கள் எதுவாக இருப்பினும் அந்த ஆன்மாக்களுக்கு மாற்றத் தெரியாது. அதனால் மாற்ற முடியாததை துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தத்தில் இருக்கும் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்த வேண்டும்.
1.இவ்வாறு செயல்படுத்தினால் அந்த ஜீவான்மாக்களும்
2.ஒளியின் உணர்வாக மாறும் தகுதி பெறுகின்றது.

இப்படித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்த்துச் சேர்த்து ஒளியின் அறிவாக இயக்கும் அந்த உணர்வை நம் கண்களால் செலுத்தப்படும் பொழுது நல்ல கருக்களாக இரத்தத்தில் உருவாகும்.

இப்பொழுது…
1.உங்கள் உடலில் மின்சாரம் பாய்வது போன்று
2.இரத்த நாளங்களில் மிக சக்தி வாய்ந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கலக்கும்
3.மகிழ்ச்சியூட்டும் உணர்வாக உங்களுக்குள் வளரும்.

ஆனால் ஒரு சிலருக்குத் தீமை என்ற உணர்வு உடலில் இருந்தால் அது அடங்கும் பொழுது அதனால் கொஞ்சம் சோர்வடையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் பித்த சுரப்பிகளில் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.“விஷத்தைத் தணித்திடும் அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்…”
2.நாகன் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணர்வை எடுத்து வளர்த்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ
3.அது போல் நம் உடலில் உள்ள அணுக்களை ஒளியாக மாற்ற முடியும்.

விஷம் இல்லையேல் ஜீரணம் இல்லை…. ஆனால் விஷம் அளவுக்கு அதிகமானால் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் நஞ்சாக மாறி விடுகின்றது.

ஆகவே விஷத்தை மாற்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் பித்த சுரப்பிகளிலே செலுத்தப்படும் பொழுது அது சம அளவாகிச் சாந்தமான அணுக்களாக நல்ல ஜீரணமாக்கும் சக்தி பெறுகிறது.

இதே போல் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் எண்ணங்களைச் செலுத்துங்கள்.

நோய்களை நீக்க விஞ்ஞானிகள் மருந்தைத் தயார் செய்து அதை இரத்தத்தில் தான் கலக்கச் செய்கின்றனர்
1.ஆனால் நோயின் வீரியம் அதிகமாகி விட்டால்
2.நரம்புகளிலே… அந்த வாயு மண்டலங்களிலே அதாவது உடலை இயக்கக்கூடிய நரம்புகளுக்குள்ளேயே மருந்தினைப் பாய்ச்சி விடுவார்கள்.

அதே போன்றுதான் உங்கள் உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் கண்ணின் நினைவினை உறுப்புகளுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளில் ஒரு அற்புதமான உணர்ச்சிகள் வருவதை உணரலாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்கள் உடலில் அற்புதங்களைச் செயல்படுத்தும்.
2.அந்த அற்புத உணர்வுகள் உங்கள் உடல் உறுப்புகளில் படர்ந்து
3.உடலில் இருக்கக்கூடிய விஷத்தன்மை தணிந்து மகிழ்ச்சியூட்டும் உணர்வின் அணுக்கள் விளைய இது உதவும்.

இப்பொழுது உங்கள் உடலிலே புது விதமான உணர்ச்சிகள் பரவும். உடல்களிலே வலியோ… எலும்புகளில் வலியோ… மூட்டுகளில் வலியோ… சிரசில் வலியோ குறையத் தொடங்கும்… வேதனைகள் நீங்கும்.

உடலி இருக்கக்கூடிய நரம்புகள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரும் பொழுது அதிலிருக்கக்கூடிய குறைபாடுகள் குறைந்து அருள் உணர்வுகள் பெருகும்.

1.அழுக்குகளை அகற்ற நந்நீரை விடுவது போன்று
2.கண்ணின் நினைவை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி
3.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுக்கும் ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும்.

எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள்

எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள்

 

வரப்போகும் இந்த உலக மாற்றத்தில் இந்தப் பூமியின் குணத்தில் மாற்றம் ஏற்படப் போகும் நிகழ்ச்சி மனித ஆத்மாவினால் நிகழ்கிறது…! என்ற குற்ற உணர்வை ஏன் காணல் வேண்டும்..?
1.இயற்கையின் உந்தலினால் மனித எண்ணமே செயற்கை காண வழிப்பட்டதற்கு
2.”மனிதனைக் குற்றம் காணலாமா…?” என்ற வினா எழும்பலாம்.

ஆனால் மனிதனால் ஏற்படுத்திக் கொண்ட இந்தத் தீய அமில குணத்தினால் தான் நம் பூமியின் இயற்கை பாழ்பட்டது.

மனிதனால் அரசர்கள் என்றும் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும்
1.மனித ஆத்மாவுக்குகந்த குணத்தைப் பிரித்துக் கண்டு
2.ஒருவனை உயர்த்தி… ஒருவனை அடிமை கொண்டு… வாழ்ந்த எண்ணத்தில்
3.போட்டி பொறாமைகள் ஏற்பட்டு… பேராசையில் அதிகப் பொருள் சேர்த்து
4.ஒருவனை அழிக்க ஒருவன் வாழ்ந்து வந்ததின் நிலையினால் குண அமிலங்களில் மாறுபட்டு
5.அணுகுண்டுகளையும் அணுக்கதிர்களையும் காற்று மண்டலத்தில் கலக்கவிட்டு
6.இயற்கையைப் பாழ்படுத்திய மனிதனால் தான் நம் பூமியின் நிலை நிலை தடுமாறப் போகிறது.

ஆக… இந்தக் கலியில் பூமியை நிலை தடுமாற வைப்பவனும் இம்மனிதன் தான். இந்தப் பூமி நிலைக்க கல்கியுகம் காணச் செயல்படுத்தப் போகிறவனும் இந்த மனிதன் தான்..!

மனிதன் மனித ஞானம் பெற்றால் மனிதனால் மனித ஆத்மாக்களைப் பலவாக நிறுத்த முடியும். நம் பூமியில் மனிதக் கரு வளர… நம் பூமியில் மனித ஆத்மாக்களை வளர்க்கும் தன்மை கொள்ள…
1.வியாழனிலிருந்து மீண்ட ஆன்மாக்கள் இருந்ததனால் தான்
2.நம் பூமி வளர்ந்த பிறகு நம் பூமியில் மனித ஆன்மாக்கள் வாழக்கூடிய கருவே வளர்ந்தது.

பல சப்தரிஷிகளும் அவர்களின் வழித் தொடர் பெற்ற பல நிலை கொண்டவர்கள் இருந்தாலும்… இந்தப் பூமியில் வாழ்ந்த மனித ஆத்மாக்களின் சக்தி நிலை உயர்ந்து தன் ஞானம் பெறும் ஆத்மாக்கள் வளர்ந்து வந்தாலும்… இந்தப் பூமியின் மாற்றக் காலத்தில் என்ன ஆகிறது…?

இந்த மனித வாழ்க்கையில் கொண்டுள்ள ஆசாபாசங்களிலும் நித்தியக் கடன்களிலும் மூழ்கியே… இந்தக் கலியின் மாற்றத்தில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள்… கலி மாறும் தருணத்திலும் அதே சுழற்சி ஓட்டத்தில் இருந்து… “தான் இதிலிருந்து மீள முடியாமல் போகிறது…!”

அத்தகைய நிலையில்… மீண்டும் அறிவு ஞானம் கொள்ளும் மனிதக் கரு வளர்ந்து… அக்கருவின் செயலிலிருந்துதான் மனித உருவங்களே இந்தச் சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின் வளர்ச்சியில் மனித ஆத்மாக்கள் வாழும் நிலை வரும்…!
1.அதாவது வியாழனுக்குப் பின் நம் பூமியில் மனிதர்கள் வாழுவது போல்
2.இந்தப் பூமிக்கு அடுத்து மனிதர்கள் சந்திரனில் வாழும் நிலை ஏற்படலாம்…!

நம் சூரியனின் சுழற்சியில் பல மண்டலங்கள் ஓடினாலும் நம் பூமியின் நிலைக்கொப்ப மனித ஆத்மாக்கள் வாழக்கூடிய இச்சக்தி மண்டலத்தின் இந்தக் கலி மாறி கல்கியுகம் பெற்று நம் பூமி சுழலும் தருணத்தில்
1.இன்றைய நிலையில் வாழும் ஆத்மாக்களின் பல கோடி எண்ணங்களை மாற்றிச் செயல்புரிய
2.பல சக்தி நிலைகள் செயல் கொண்டு செயலாற்றித்தான் கல்கியுகம் வாழ முடியும்.

அதற்குத்தான் எம்மைப் போன்ற எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயல்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளது.