சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

சிற்றின்பத்தை விடுத்துப் பேரின்பம் பெற வேண்டியதன் முக்கியத்துவம் – ஈஸ்வரபட்டர்

 

போகம் என்பது உடலியலில் அனுபவித்தல் என்று பொருள்படும்.

உயிரணுக்கள் உயிரின் செயலுக்கு உணர்வுகளின் வழி அனுபவிக்கும் செயல் போகம் சிற்றின்ப போகம் என்றும்… பேரின்ப போகம் என்றும் வழி அமைத்து
1.சிற்றின்ப போகம் சந்ததியின் வளர்ச்சிக்காக மட்டும் என்றும்
2.அந்த வளர்ப்புப் பெற்று விட்டால் மனிதன் பேரின்பப் போகமாக்கும் தன்மைகளை வகைப்படுத்தி
3.உணர்வுகளின் சஞ்சலம் மாற்றியமைத்துப் பெறும் பேறே பேரின்ப போகம் என்று அறிந்ததே “போகநாதர் சொன்ன போகமாகும்…!”

நாம் எடுக்கும் தியானத்தின் பலத்தால் காயகல்ப நிலைக்கு உட்படுத்தி தெய்வீக சக்திக்கு வழியமைத்து உயிரான்மா உயர்ந்த சக்தி பெறும் மார்க்கத்தைப் போகர் உணர்ந்தார்.

வானிலே சுழன்று கொண்டிருக்கும் விண்மீன்களின் அமில சக்திகளையும் நவக்கோள்கள் என்ற நவபாஷாண சக்திகளையும் நம் உயிராத்மா பெறுவதற்காக முருகன் சிலையை நிர்மாணித்தார்.

வானுலக ஆற்றலை… அந்த அமுதத்தைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் யார் யார் எல்லாம் முருகா என்ற ஏக்கத்தில் வருகின்றார்களோ அந்த ஆன்மாக்களையும் தன்னுடைய ஈர்ப்பிலே வளர்ச்சிப்படுத்தி
1.புவியியல் தன்மையை வானியல் படுத்தி போகர் “போகமாமகரிஷி” ஆனார்.
2.பேரின்பப் போகமாகிய ஆனந்தப் பரவச பேரானந்தச் சூட்சம நிலை பெற வழி அமைத்தார்.
3.போகமாமகரிஷியின் அருளாசி வேண்டி வணங்குகின்றேன் ஈஸ்வரா…!

உயிரான்மாவின் தத்துவத்தில் உயிர் சக்தியின் தொடர்பு உச்சி முதல் உள்ளங்கால் வரை மேலிருந்து கீழுமாகவும் கீழிருந்து மேலுமாகவும் ஓடிடும் அமைப்பு உள்ளது.

உயிரணுக்கள் சரீரம் பெற்ற பின்பு உயிரோட்ட ஒளி சக்தி மனிதச் சரீரத்தில் மேலிருந்து கீழுமாக ஓடிடும் நிலையில் மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் சுழலச் செய்யும் செயலினால்
1.ஞான விழிப்பார்வை கொண்டு உற்று நோக்கினால்
2.”ஆத்ம லிங்கம்…!” என்ற ஆத்மா புலப்படும். அதுவே “சிவஸ்வரூபம்…!”

விழி படம் எடுத்து நாசியின் சுவாசம் கொண்டு எண்ணத்தின் பிடர்தலில் (மெய் ஞானிகளின் வழியில்) அறிந்திடும் தொடரில் அறியும் செயலுக்கு நாம் வளர வேண்டும்.

ஞானத்தின் வளர்ப்பில் நல்லாக்கம் என்பது எது…?

1.எண்ணம்… சொல்… செயல்…! மூன்றிலும் நேர்கோடாகக் கடைப்பிடிக்கும் தத்துவத்திற்கு வர வேண்டும்.
2.தீவினையான எண்ணங்களை விடுத்துப் பரிசுத்தம் என்ற நிலையில் நல் வினைகளை வளர்க்கும்
3.திடமான – வைராக்கியச் சிந்தனை கொண்டிட்டால் அகத்தின் பொருளை நிச்சயம் அறியலாம்.

அகத்தினை அறிந்திடும் அருள் வழியில் தன்னுடைய சிந்தனையை வீரியமாக்கி…
1.நற்செயலுக்கு வழி அமைத்து…
2.அதைச் சொல்லால் வெளிப்படுத்தும் அன்பிலும்
3.அந்தச் சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் நடைமுறைப் பண்பிலும்
4.நிகழ்த்தும் செயலை எவன் ஒருவன் கைக் கொள்கின்றானோ
5.அவன் பரம்பொருள் என்ற சூட்சமத்தில் கலந்திடும் தகுதி பெறுகின்றான்.

மார்க்கண்டேய தத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மார்க்கண்டேய தத்துவத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்… பின்னும்… மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்…!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்…!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை…”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில் சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை “நான்” என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உணமைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனித தத்துவத்திலும் மெய் ஞானத் தத்துவத்தால் மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.

அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே.

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது…?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி…?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் – பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே…!

காணிக்கை செலுத்த வேண்டிய முறை

காணிக்கை செலுத்த வேண்டிய முறை

 

1.நமது உயிரான ஈசனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
2.நம் உடலான சிவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
3.நம் கண்ணான கண்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்றால்
4.பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக நம்மை உருவாக்கிய அந்த வினைகளை நாம் போற்றித் துதிக்க வேண்டும் என்றால்
5.நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

நமக்குள் தெளிந்த மனதாக “கார்த்திகேயா…” என்ற அறிந்திடும் அறிவு கொண்ட இந்த அறிவின் துணை கொண்டு அதைச் சீராகப் பயன்படுத்தும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
1.பின் அந்த ஊழ்வினை என்ற வித்தினை நீங்கள் நினைவு கொண்டு மதியை (மகரிஷிகளின் அருளை) வளர்த்து
2.மதி கொண்டு விதியை வென்று அருள் ஒளிச் சுடராக என்றும் நிலை கொண்டு வாழ்ந்திடும் நிலையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சிகளில் நாம் குறைகளையோ தவறுகளையோ கோபத்தையோ வேதனையையோ வாழ்க்கை என்ற நிலைக்கு நுகர்ந்தறிய உதவினாலும்
1.அடுத்த கணம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் ஏங்கிப் பெற்று
2.உங்கள் உயிரான ஈசனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளையே காணிக்கையாகச் செலுத்துங்கள்.
3.உடலான சிவனுக்கும் அந்த அருள் சக்தியான அமுதை ஊட்டுங்கள்.
4.உங்களுக்குள் சக்தியாக இயக்கும் ஒவ்வொரு ஞான சக்திகளுக்கும்
5.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை “ஞான விருந்தாக…” கொடுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் இந்த வாழ்க்கையில் ஆத்ம சுத்தி என்ற நிலைகளை எடுத்துத் தீமைகள் வருவதை எல்லாம் சுத்திகரித்துக் கொண்டால்
1.உங்கள் உயிரான ஈசனுக்கு உதவி செய்கின்றீர்கள்
2.உடலான சிவனுக்கு உதவி செய்கின்றீர்கள்
3.கார்த்திகேயா என்ற அறிவின் தன்மை மங்காது ஒளியின் சுடராக மாற்றிட உதவி செய்கின்றீர்கள்.

முருகா என்றால் மாற்றி அமைக்கும் சக்தி… ஆக நாம் நுகர்வது அனைத்தையும் அருள் ஒளியின் சுடராக நாம் மாற்றிடல் வேண்டும்.
1.இப்படிப்பட்ட உருவாக்கும் திறன் நம்மிடம் இருந்தும்
2.அதைப் பயன்படுத்தாது விட்டுவிடாதீர்கள்…!”

ஒவ்வொரு நாளும் இங்கே உபதேசிக்கும் இந்த உணர்வின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் எதைப் பார்த்தாலும் தீமைகளை நுகர்ந்தறிந்தால் அது வளராது அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்றும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்றும் அருள் ஒளி என்னிலே வளர வேண்டும் என்றும் இதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நோய் உள்ளவர்களை நாம் சந்தித்தாலும்… மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்… உங்கள் நோய் அகன்றுவிடும்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முயற்சி எடுத்து ஏங்குங்கள்… அது உங்களைக் காக்கும்… உங்கள் உடல் நலம் பெறும்…! என்று இந்த வாக்கினை அவருக்குள் பதிவாக்குங்கள்.

அல்லது நமக்கே ஒரு நோய் வந்தாலும் இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவரும்
1.எந்த நோய் நம் உடலை வாடச் செய்கின்றதோ
2.அந்த நோய் உடலுக்குள் வளர்ச்சியாகாது தடைப்படுத்த
3.அந்த நோயே நமக்கு அருள் ஞானத்தை ஊட்டும் நிலையாக அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.

இந்தத் தியானத்தின் பலனை ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் பெற முடியும்.

நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

நேரத்தையும்… காலத்தையும்… (ஜாதகத்தை) மனிதன் மாற்ற முடியும் என்பதை விஞ்ஞானம் நிரூபிக்கின்றது

 

கர்ப்பிணியாகி தலைப் பிரசவம் என்றாலே மறு பிறப்பு என்று சொல்வார்கள். ஒரு அதிர்ச்சி நிலையானால் பிறக்கப் போகும் குழந்தை தலை கீழாக மாறாது.

குழந்தையின் சிறு நீர் எல்லாம் பனி நீராக மாறி இருக்கும். அப்பொழுது அந்தப் பருவம் வந்து பனிக் குடம் உடைந்த பின் குழந்தை முழித்துக் கொள்ளும். உணர்வின் துடிப்பு வரப்படும் பொழுது காற்றின் தன்மை வாயுவாக உற்பத்தியாகி வெளித் தள்ளும் நிலை வருகிறது.

நெகடிவ்… பாசிடிவ்…! என்ற நிலை வரும் பொழுது தாயின் எலும்பின் தன்மை இலகுவாக்கிக் குழந்தையை வெளிக் கொண்டு வரும் தன்மை வருகிறது.

ஆனால் எலும்பின் தன்மை வலுவாகி விட்டால் குழந்தை சுகப்பிரசவம் ஆவதில்லை.

குழந்தை வெளியில் வர முடியவில்லை என்றால் அக்காலங்களில் மாம்பழத்தில் கொட்டையை நசுக்கி எடுக்கிற மாதிரி தாயின் வயிற்றை நசுக்கி முயற்சி செய்து எடுத்துப் பார்ப்பார்கள். குருநாதர் இதை எல்லாம் காட்டுகின்றார்.
1.அன்றைய வைத்திய முறைக்கும்
2.இன்றைய நவீன விஞ்ஞான மருத்துவ முறைக்கும் உண்டான வித்தியாச நிலைகளைக் காட்டுகின்றார்.

இன்றைக்கும் ஒரு சில நிலைகளில் அக்கால வழக்கத்தைப் பின்பற்றுகின்றார்கள். அப்பொழுது கர்ப்பிணியான அந்தத் தாய் எத்தனை வேதனைப்படுகின்றது என்று பார்க்கலாம்…! ஆனால் குழந்தை பிறந்த பின் தாய் அதைக் கொஞ்சிக் குலாவுகிறது… மகிழ்ச்சி அடைகிறது.

சுகப்பிரசவம் அடையவில்லை என்றால் இன்றைய நவீன முறையில் ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கின்றார்கள்.

சாதாரணமாக உடலில் அடிபட்டால் காயமாகிறது… இரத்தம் கொட்டுகிறது. அது போல் கர்ப்பிணியின் உடலில் ஆபரேசன் செய்யும் போது இரத்தம் வெளியேறாதபடி தடைப்படுத்துகின்றனர்.

குழந்தையை எடுத்த பிற்பாடு அறுத்த தசைகளை இணைப்பு கொடுத்து இஞ்ஜெக்சன் செய்து ரொம்பச் சீக்கிரமே அதை ஒட்ட வைத்து விடுகின்றனர். குழந்தையும் பாதுகாப்பாக எடுத்துக் கொடுக்கின்றனர்.

1.ஆனாலும் இன்று ஜாதகம் பார்த்துக் குழந்தையை எடுக்கும் பழக்கம் கூட வந்து விட்டது.
2.பிறக்கும் குழந்தைகள் இன்ன நேரத்தில் பிறந்தால் ஜாதகப் பிரகாரம் தோஷம் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
3.அதற்காக வேண்டி பண வசதி உள்ள வீடுகளில் எல்லாம் இந்த நேரம் நல்ல நேரமாக இருக்கிறது என்று
4.அதற்கு முன்னாடியே எடுத்து விடுகின்றார்கள்.

ஏனென்றால் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது போன வீடுகள் எல்லாம் தோஷமாகப் போய்விடும் என்று சொல்லி அந்த மூல நட்சத்திர நேரம் வருவதற்கு முன்னாடியே ஆபரேசன் செய்து குழந்தையை எடுத்து விடுகின்றார்கள்.

டாக்டரும் கூடச் சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் ஒரு சிசேரியன் செய்தால் இவ்வளவு காசு வருகிறது என்று கணக்குப் பார்த்து படித்துக் கொண்டு வந்த டாக்டர்களும் இப்படிச் செயல்படுத்துகின்றனர்.

அதே போல் சில குடும்பங்களில் நாள் நட்சத்திரங்களைப் பார்த்து எங்களுக்கு ஞானக் குழந்தையாக வர வேண்டும் என்று அந்தக் குறித்த நேரத்தைச் சொல்லி ஆபரேசன் செய்து குழந்தையை எடுக்கின்றார்கள்.

1.ஆனால் இவர்கள் எப்படி அவசரப்பட்டு அந்தக் குழந்தையை எடுத்தார்களோ
2.அந்தக் குழந்தை உணர்வும் இவர்களின் எண்ணங்களும் ஒன்றான நிலையில்
3.குழந்தை பிறந்த பிற்பாடு எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டுச் செயல்படுத்துவார்கள்.
4.அந்தக் குழந்தையும் அதே மாதிரித்தான் வரும்.

ஏனென்றால் இந்த உணர்வு எதுவோ அந்தக் கருவில் வளரும் உணர்வுகள் மேக்னட் இதனுடைய உணர்வுகளை அது கவரப்படும்.

பெரும்பகுதியான குடும்பங்களில் குழந்தை பிறப்பே ஆபரேசன் செய்து தான் எடுக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ரொம்ப நேரம் ஆனது என்றால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் வந்தது என்றால் குழந்தையைக் காப்பாற்றத் துடிப்பின் தன்மை குறையப்படும் பொழுது அடுத்த கணமே ஆபரேசன் செய்து குழந்தையைக் காப்பாற்றுகின்றார்கள்… தாயையும் காப்பாற்றுகின்றார்கள்.

இத்தகைய விஞ்ஞான உலகில் இருக்கும் போது சாமியாரையும் ஜோதிடத்தையும் பார்த்து… அவன் கொடுக்கும் சக்கரத்தையும் மந்திரத்தையும் வைத்துக் காப்பாற்றலாம்…! என்று சொன்னால் எப்படி இருக்கும்…?

நல்ல மனம் கொண்டு ஒரு வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நம் மனதும் சோர்வடைகிறது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

1.ஆகவே இயற்கையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்
2.தீமை என்ற உணர்வை மாற்றி தீமையை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் எடுத்து வளர்க்க வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! அந்த இயற்கையின் உண்மை நிலைகளைப் பார்க்க முடிகிறது. ஸ்கேன் வைத்துப் பார்ப்பது போல் நானும் பார்க்கின்றேன்.

ஆரம்பத்தில் எல்லாம்… ஸ்கேனில் ஓடுவது போல் மற்றவர்களும் கண் கொண்டு பாருங்கள்… எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்று பார்க்கும்படி செய்தேன். ஏனென்றால் நான் காணுவது போல் “பிறரும் பார்க்க முடியும்…” என்று தெரிவதற்காகக் காண்பித்தேன்.

பார்த்துச் சொல்லும்படி சொன்னவுடன்… அதை எடுத்துத் தவறான வழிகளில் தான் பயன்படுத்தத் தொடங்கினார்கள். பருவம் இல்லாதபடி பிறருக்குக் கொடுத்தால் தீமையின் விளைவே அவர்களுக்குள் விளைகிறது.

பிறப்பின் பலனை அடைவது உயிரா…? அல்லது உடலா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறப்பின் பலனை அடைவது உயிரா…? அல்லது உடலா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா… இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும் மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான ”நானின்…” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

ஏனென்றால்
1.சுவாசம் எடுத்து விடுவதும்…
2.கண் இமை மூடித் திறப்பதும்…
3.செவி ஒலி கேட்பதும்…
4.சுவை உமிழ் நீர் ஊருவதும்… இவை எல்லாமே
5.நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி… தூக்கம்… மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்…
3.தன் தன் கதியில் நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது.
4.பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை…!

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ… தூங்கவோ… வலியை நீக்க வேண்டும் என்றோ…
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்… சோர்வுக்கு உறக்கத்தையும்… செலுத்தக் கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது… இந்த “எண்ணம் தான்…” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில்
4.பொறுக்கி எடுத்த நற்குணம் ஆறு… எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான்… விஞ்ஞானியாகவும் ஆகின்றான்… அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்…!

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா…!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்…!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் போன்று தான் நம் உயிரின் இயக்கமும் உள்ளது

எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் போன்று தான் நம் உயிரின் இயக்கமும் உள்ளது

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்… நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்…!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்…!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா…! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்…?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்…? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்…” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது…?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நலல் மனதையும் கெடுப்பதில்லை… நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே… எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும்…
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்…
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது… நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்…! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது… எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி… அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ…
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா…!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்…” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்… என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வினை வைத்தவன் (விதைத்தவன்) வினை அறுப்பான் – ஈஸ்வரபட்டர்

வினை வைத்தவன் (விதைத்தவன்) வினை அறுப்பான் – ஈஸ்வரபட்டர்

 

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற் சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!” (நாம்)
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி”(தலைவிதி) என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று…
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில்…
1.தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் – செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!” (நாம் தான்…!)

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

பெரும்பகுதியான தெய்வங்களின் காலடியிலே அசுரனைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன…?

 

ஒரு வேதனைப்படும் மனிதனின் உணர்வை நுகர்ந்தால் நம் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை படரப்பட்டு நல்ல அணுக்களை வீழ்த்தி விடுகிறது.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“ஆதி மூலம் என்ற உயிர் தான்…” மிருக நிலையிலிருந்து தீமைகளை நீக்கிட வேண்டும் நீக்கிட வேண்டும் என்ற எண்ணத்தை வலு சேர்த்துச் சேர்த்து பரிணாம வளர்ச்சியாக இன்று நம்மை மனிதனாக உருவாக்கியது

நம் உயிரை ஈசனாகவும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக சிவமாகவும் இந்த உடலுக்குள் சேர்த்துக் கொண்ட அந்த உணர்வு வினைக்கு நாயகனாகவும் இயங்குகிறது என்றும் தெளிவாகக் கூறியுள்ளனர் ஞானிகள்.

உடல் சிவம் என்றாலும் அதிலே நாம் சேர்த்துக் கொண்ட பல கோடி வினைகளுக்கொப்ப நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது…
1.இந்த கணங்களை எல்லாம் உருவாக்கியது உயிர் என்று அந்த உயிரை எண்ணி
2.இந்த கணங்களுக்கெல்லாம் ஈசா… “கணேசா…” என்று உயிரை வணங்கும்படி செய்கின்றனர்.

தீமைகளை நீக்கிக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடல் நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது. கணங்களுக்கு அதிபதி “கணபதி…”

1.நல்ல உணர்வின் தன்மை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.அது தீமையை அடக்கி ஆட்சி புரியும் சக்தி பெற்றது என்ற நிலையை உணர்த்துவதற்காக
3.அங்குசபாசவா…! என்று விநாயகர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது.

உடல் வலு பெற்றுப் பெற்றுத் தான் மிருக நிலையிலிருந்து மனிதனாக வந்தோம் என்று யானையின் சிரசை மனித உடலில் பொருத்திக் காட்டுகின்றனர். ஆனாலும் எண்ணத்தின் வலுக் கொண்டவன் தான் மனிதன்

பல கோடி உடல்களிலே புலிக்கும் வலு அதிகம்… மானுக்கும் வலு அதிகம்… புழுவிற்கும் வலு அதிகம்… ஒரு எறும்புக்கும் வலு அதிகம்…! ஏனென்றால் விஷத்தின் தன்மை அந்த உடலிலே அதிகமாக இருப்பதால் தான் தன் சக்திக்கு மீறிய எடை உள்ள பொருளைத் தூக்கிக் கொண்டு செல்கிறது ஒரு எறும்பு. ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை எதற்குள் அதிகம் இருக்கின்றதோ
2.அதிலே வலுவின் தன்மையும் அதிகம் இருக்கின்றது.

இப்படி உருவான இந்த நிலை தான் நாம் பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி இந்த மனித உடல் பெற்ற நிலை. இருந்தாலும் மனிதனாக ஆன பின் நஞ்சை நீக்கும் அருள் சக்தி பெற்ற நாம்
1.தீமை என்று தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரம் மனிதாக இருந்து (அகஸ்தியன்) எப்படிப் பேரொளியாக மாறியதோ அந்த உணர்வை நாம் நுகர்ந்து நுகர்ந்து அதனின் உணர்வை நம் உடலில் பெருக்கினால் அதன் உணர்வின் தன்மை கொண்டு இருளை நீக்கி துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பிறவி இல்லா நிலைகள் அடைவோம்.

இந்தப் பிறவி இல்லா நிலை அடைவதற்குத்தான் விநாயகரை வடமேற்காக வைத்து வடகிழக்காக நம்மை வணங்கும்படிச் செய்தார்கள். வடகிழக்காகத் தான் துருவ நட்சத்திரம் இருக்கின்றது. விநாயகருக்குப் பின்னாடி வேப்ப மரமும் அரச மரமும் வைத்தார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கசந்த உணர்வைக் காட்ட வேப்ப மரத்தைக் காட்டினார்கள். அதே சமயத்தில்
1.இருளை அகற்றிடும் உணர்வின் தன்மையாக (துருவ நட்சத்திரம்)
2.இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றும் திறன் பெற்றதை அரசு என்றும்
3.அரச மரத்தை வைத்துக் காட்டினார்கள்.

பரிணாம வளர்ச்சியில் ஒவ்வொரு உணர்வும் எதனின் நிலை கொண்டு செயல்படுகின்றதோ அதைத்தான் அங்கே வைத்துக் காட்டுகின்றார்கள்.

புராணத்தில் காட்டியபடி பார்த்தோம் என்றால் முருகனுக்கும் அசுரனுக்கும் போர் நடந்தது என்று சொல்வார்கள். போர் நடக்கும் பொழுது கடைசியில் அசுரனை முருகன் கொல்கிறான்.

அந்தத் தருணத்தில் அசுரன் முருகனிடம் சொல்கிறான்…
1.நான் தோற்றுவிட்டேன்…
2.உன் காலடியிலே இருக்கின்றேன் என்று வரம் கேட்கிறான்.

ஆகையினால் அந்த அசுரனைப் பாம்பாகச் சபித்துத் தன் காலடியிலே முருகன் வைத்துக் கொண்டான் என்று இப்படிக் கதைகளைச் சொல்கிறார்கள்.

1.விஷம் என்ற நிலைகளை அடக்கும் சக்தி பெற்றதை உணர்த்தாதபடி
2.இப்படிப்பட்ட காரணங்களை இடையிலே இணைத்து விட்டார்கள்.

மயில் விஷத்தை உணவாக உட்கொண்டாலும் நஞ்சை அது அடக்கி ஆட்சி புரிகிறது என்று உணர்த்துவதற்காக மயிலின் காலடியில் விஷப் பாம்பைப் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

1.மனிதன் தன் ஆறாவது அறிவால் நஞ்சை அடக்கி
2.மகிழ்ச்சியாக இருக்கச் செய்யும் அருள் உணர்வை நாம் தெரிந்து உணர்ந்து
3.அதன் வழியின் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதற்கு இவ்வாறு காட்டினார்கள்.

“ஆன்மாவின் விழிப்பு நிலை…” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“ஆன்மாவின் விழிப்பு நிலை…” என்றால் என்ன என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே நம் ஆத்மாவில்
3.நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது – “கற்பனையில்…!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக… அந்தப் படமாக… ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக – செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்… உடலில் உணரும் உணர்வுகள்…)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை… கனவு… வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்… ஆத்ம உயிரில்…
1.ஒலி… ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய ஐந்தாம் நிலையான ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி…!” (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த ஆறாம் நிலையில் அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4.ஏழாம் நிலையான படைப்பின் படைப்பாக்கும் செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த உயிரும் ஆத்மாவும் இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு (நம் விழிப்பு நிலை) இந்த கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான நம் உயிர் ஈர்ப்பது போல் அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

1.மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல்
2.”ஆன்மாவின் விழிப்பு…” என்ற – கண்கள் வழியாக நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.
3.இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும்
4.மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்… அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

உள் நின்று இயக்கும் உயிர் கடவுளாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வே நம்மை ஆள்கிறது இயக்கச் சக்தியாக…!

உள் நின்று இயக்கும் உயிர் கடவுளாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வே நம்மை ஆள்கிறது இயக்கச் சக்தியாக…!

 

உதாரணமாக… கோபமான உணர்வுகளை நாம் நுகர்ந்தோமென்றால் அடிக்கடி கோபம் வந்து
1.ஒருவரைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சியே நமக்கும் வருகின்றது.
2.எதைச் சொன்னாலும் தாக்க வேண்டும் என்றுதான் உணர்வு வருகின்றது.

அதே போல் வேதனையை எண்ணினால் “இது என்ன வாழ்க்கை..?” என்று சோர்வடையச் செய்கின்றது.

இதே மாதிரி எந்தெந்த உணர்வுகள் நம் இரத்தங்களில் கலக்கின்றதோ அந்த வேதனையான அணுக்கள் வேதனையை எடுத்து வளரத் தொடங்குகின்றது.

இப்படி எத்தனை வகை குணங்களை நாம் நுகர்ந்து அறிந்தோமோ அத்தனையும் நம் இரத்தத்தில் உண்டு.

நமது பூமியில் காற்றில் உள்ளதை அந்தந்த உணர்வு கொண்ட வித்துக்கள் கவர்ந்து செடி கொடி மரமாக வளர்கின்றது.

இதே மாதிரித்தான் ஒரு மனிதன் கோபப்பட்ட உணர்வுகளை ஈஸ்வரலோகத்தில்… உயிர் இருக்கும் இடத்தில் உருவாக்கி இந்திரலோகத்தில்… நம் உடலில் இரத்தத்தில் கருவாக்கி உருவாக்கி அந்த அணுவின் தன்மை உருவாகும் பொழுது… பிரம்மலோகம்.

அதன் இனத்தை அது பெருக்கும் என்று தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

அந்த அணுவாக உருவாகி விட்டால் உயிர் எப்படி இயக்கமாக இருக்கின்றதோ… ஈசனாக இருக்கின்றதோ அதைப்போன்று அந்த அணுவின் தன்மை துடிப்பு ஆகும்பொழுது விஷ்ணுவாகின்றது. அதன் ஈர்ப்பு காந்தமாகின்றது.

இதைத் தான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன். நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றும் பொழுது அது உயிரின் மறு அவதாரமாக சீதாராமனாகின்றது.

1.சீதா என்றால் சுவை.
2.காரமும் சுவைதான் விஷமும் சுவைதான்

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் எண்ணங்களாக நமக்குள் வரவைத்து அந்த எண்ணத்தின் வழிதான் நாம் இயங்குகின்றோம்… வாழுகின்றோம்…!

அதனால்தான் விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று சொல்கின்றார்கள் ஞானியர்கள்.

எந்தச் சுவையோ…? அதற்குத்தக்க…
1.உணர்ச்சிகள் எண்ணங்களாக வருவதும்
2.உணர்ச்சிக்கொப்ப அணுக்கள் மாறுவதும்
3.உணர்ச்சிக்கொப்ப செயல்கள் மாறுவதும்
4.உணர்ச்சிக்கொப்ப நம் எண்ணங்களும் மாறுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி உருவான இந்த நிலைதான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்பது.

வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற எத்தனை வகையான எண்ணங்களை எண்ணுகின்றோமோ அதன் உணர்வுப்படி உடலாகும் பொழுது பிரம்மம். எந்தக் குணத்தின் தன்மை கொண்டு அணுவாகின்றதோ பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.

கோபமான உணர்வை எடுத்தால் அதனின் ஞானப்படி (சரஸ்வதி) அந்த அணு அதன் உணர்ச்சிகளை இயக்கி அது அதன் வழியில் செயல்படும்.

இப்படி நமது உடலில் பல விதமான எண்ணங்கள் சேர்ந்து அந்த உணர்ச்சிக்கொப்ப மனிதனை உருவாக்கி
1.நம் உடலில் எந்தெந்த உணர்ச்சிகள் இருக்கின்றதோ
2.அதன் வழி அவ்வப்போது அந்த எண்ணங்களை தோன்றச் செய்கிறது
3.அந்த அணு இரத்தத்தில் அதன் சத்தைக் கலக்கச் செய்து விளைகின்றது.
4.அந்த அணுவின் மலம் தான் நம் உடலாக சிவமாகின்றது.

உடலில் விளைந்த உணர்வின் சத்து உயிருடன் இணைந்து அடுத்த உருவை மாற்றுகிறது…!