“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”

“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”

 

மலைகளில் உள்ள சில மரங்களில் “மெர்க்குரி…” போன்று வெளிச்சம் வரும். அதனின் மரப்பட்டைகளில் எடுத்துக் கொண்டால் மெர்க்குரி போல ஒளி வரும்.

1.அத்தகைய மரங்கள் மின்னலில் இருந்து ஒளிக்கற்றைகளைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் சக்தி பெற்றது.
2.மிகவும் இருண்டு விட்டால் அந்த ஒளி அலைகளை வெளி பரப்பும்.
3.இதை “ஜோதி மரம்” என்று சொல்வார்கள்.

காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று அந்த இயற்கையின் மணங்களை நீ பார்…! என்று காட்டினார்.

அதே சமயத்தில் இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருக்கும் புல்லைத் தூருடன் எடுத்துக் காட்டச் சொன்னார். பார்த்தால் அதிலிருந்து வெளிச்சங்கள் வருகின்றது. “ஜோதிப் புல்” என்று சொல்வார்கள்.

ஒரு பேட்டரி லைட்டை நாம் உபயோகிப்பது போல அன்று காட்டு விலங்குகளுடன் வாழ்ந்து வந்த மனிதன் இதை எல்லாம் பயன்படுத்தித் தனக்கு வேண்டிய வெளிச்சத்தை உருவாக்கிக் கொண்டான். இந்த வெளிச்சத்தில் பல உண்மைகள் அறிந்து கொண்டான்.

புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் இத்தகைய இயற்கையின் உண்மையை அறிந்து கொள்ளும் சக்தி பெற்றனர். புலஸ்தியர் வம்சத்தின் வழி வந்தவன் தான் அகஸ்தியன். இன்று கதைகளில் நாம் சொல்லும் அகஸ்தியர் அல்ல. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தவர்.

அந்தப் புலஸ்தியர் வம்சத்தில் வந்தவர்கள் காட்டு விலங்குகளில் இருந்தும் மற்ற விஷ ஜந்துகளிடம் இருந்தும் விஷமான காற்றுகளிலிருந்தும் (மணம்) தங்களைப் பாதுகாத்துக் கொளள “பல மூலிகைகளைக் கண்டுணர்ந்தார்கள்…”

ஏனென்றால் சில செடிகள் இருக்கும் பக்கம் மனிதர்கள் சென்றால் அந்த விஷக் காற்று பட்டால்.. மனிதனை மயக்கச் செய்யும். மிருகங்களையும் கூட மயக்கச் செய்யும்.

இது போன்ற நிலைகளில் இருந்து தப்புவதற்கு அன்று மனிதனாக வந்த புலஸ்தியர் வம்சத்தை சேர்ந்த அந்தக் குடும்பம்
1.பல தாவர இனங்களை எடுத்துத் தன் உடலில் அணிகலன்களாக அணிந்து கொண்டனர்.
2.விஷ ஜெந்துகளிலிருந்தும் பூச்சிகளிலிருந்தும் இருந்தும் மின்னல்கள் தாக்குவதிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்.

பூமியில் மின்னல்கள் ஏற்பட்டால் கடலிலே தாக்கினால் மணலாகின்றது. மரத்தைத் தாக்கினால் மரம் கருகிவிடுகின்றது. மனிதனைத் தாக்கினால் மனிதன் கருகி விடுகின்றான்.

பூமியைத் தாக்கினால் பூமியின் நடு மையம் சென்று அது கொதிகலனாக மாறி
1.இந்த பூமிக்குள் பல பொருள்களை உருவாக்கும் வீரியத்தைக் கொடுக்கின்றது.
2.அதற்குள் பல கலவைகளை மாற்றி… ஆவியாக மாற்றி அது வெளிவரப்படும்போது
3.பல பல உலோகங்களைக் கூட உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதைப் போன்ற மின்னலின் இயக்கத்தை அடக்குவதற்கு என்று மூலிகைகளை அந்தப் புலஸ்தியர் கண்டுணர்ந்தனர். அந்த மூலிகையை அணிகலன்களாக அணிந்திருப்பதனால் மின்னலின் வீரியம் தணிந்து நாம் சாதாரண மின் ஒளி விளக்குகளைக் கண் கொண்டு பார்க்கின்றோமோ இதைப்போல அன்று கண்களால் மின்னலை எளிதில் கண்டார்கள்.

இதைத் தெரியப்படுத்துவதற்காக குருநாதர் என்ன செய்தார்…?

என் கையில் விழுது ஒன்றைக் கொடுத்துவிட்டார். ஆனால் அது எதற்கு என்று எனக்குத் தெரியாது. நீ மின்னலைப் பாருடா…! என்றார்.

மின்னலைப் பார்த்தால் கண் எல்லாம் போய்விடும்.. நான் பார்க்க மாட்டேன் சாமி…! என்று சொல்கிறேன். இரண்டு பேருக்கும் சண்டை வருகிறது.

நான் சொல்வதைச் செய்வேன் என்றாய் அல்லவா.. நீ மின்னலைப் பார்… என்றார் குருநாதர்.

அதைப் பார்க்க மாட்டேன்… நான் பெண்டு பிள்ளைக்காரன்… குடும்பம் எல்லாம் இருக்கிறது..! என்றேன்.

அவர்களை எல்லாம் விட்டுவிட்டுத் தானே இங்கே என்னுடன் வந்தாய்… நான் சொல்வதைக் கேள்… என்றார்.

உன் சம்சாரத்தை நோயிலிருந்து எழுப்பிவிட்டேன். சில உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்குத் தான் காட்டிற்குள் உன்னைக் கூப்பிட்டேன். இப்பொழுது நீ மாட்டேன் என்று சொன்னால் எப்படி…? என்று கட்டாயப்படுத்துகின்றார்.

மின்னல்கள் வருவதைப் பாருடா…! என்கிறார். ஆனால் என் கையில் விழுதைக் கொடுத்தது எனக்குத் தெரியாது. தொடர்ந்து வாதிக்கிறார் குருநாதர்.

கையில் விழுது இருக்கிறது… என்று சொல்லிக் கொடுத்தால் தானே எனக்குத் தெரியும். மின்னலைப் பாருடா… பாருடா…! என்றே சொல்கின்றார்.

அப்புறம் அதைப் பார்த்தபின் என் கண்கள் கூசவில்லை. நம் மெர்குரி லைட் எவ்வாறு இருக்குமோ அது போன்று இருக்கிறது.

ஏனென்றால் அந்த மின்னலின் வீரியத்தை அடக்கக்கூடிய சக்தி அந்த விழுதுக்கு உண்டு. அப்பொழுதுதான் அதை உணர்ந்தேன்

இருபத்தேழு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதிர்நிலையான உணர்வு கொண்ட நிலையில் மோதி மின்னலாக மாறினால் காட்டிலிருக்கும் மரம் செடி கொடிகளில் பட்டால் அது கருகிவிடும்.

மின்னல் தாக்கப்படும்போது அதற்கு எதிர்நிலையான மரங்கள் தான் கருகுமே தவிர அதன் அருகில் வேறு மரங்கள் இருந்தால் அவை கருகுவதில்லை.

பனை மரம் என்றால் பனை மரம் கருகும். தென்னை மரம் என்றால் தென்னை மரம் கருகும். மாமரம் என்றால் மாமரம் மட்டும் தான் கருகும். அதன் அருகிலே இருக்கக்கூடிய மற்ற செடி கொடிகள் எதுவும் கருகுவதில்லை.

இந்த இயற்கையின் சீற்றங்கள் எப்படி இயங்குகின்றது…? என்று குருநாதர் இதையெல்லாம் தெளிவாக உணர்த்தினார். அதைத் தான் உங்களிடமும் சொல்கிறேன்.

இன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

இன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

தியானம்

தியானம்

 

நம்முடைய அம்மா அப்பா தான் நாம் மனிதனாக உருவாகக் காரணமானவர்கள். தெய்வமாக நம்மைக் காத்து இது வரை நமக்கு நல்வழியைக் காட்டி அவர் வழியிலே வளர்ந்தவர்கள்தான் இந்த ஞானத்தை உணரும் சக்தியும் இன்று பெறுகின்றோம்.

ஆகவே அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அவர் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணின் கருமணி வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எண்ணி
2.அந்தச் சக்தியை அது ஈர்க்கும் சக்தி பெறும் போது கருமணிகளில் அந்தக் கனமான ஒரு உணர்வுகள் வரும்.

அடுத்து உங்கள் புருவ மத்தியில் ஈசனாக இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் உங்கள் உயிரின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

கண்ணை மூடுங்கள். கண் வழியாகக் கவர்ந்ததை உயிர் வழியாக (புருவ மத்தி) துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.புருவ மத்தி வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈர்க்கும்போது
2.அந்த உயிரின் இயக்கம்… துருவ நட்சத்திரத்தின் வலுவை அப்படியே பெறும்போது
3.உங்களுக்குள் ஈர்க்கும் சக்தி அதிகரிக்கும்…!
4.துருவ நட்சத்திர உணர்வுகள் புருவ மத்தியில் நேரடியாக மோதும் போது
5.அந்த உணர்ச்சிகளின் அழுத்தமும்… ஒளிக்கற்றைகளின் வெளிச்சமும் தெரியும்.

இவ்வாறு ஒரு நிமிடம் எண்ணி ஏங்கினால் நம் உடலுக்குள் புகும் தீமைகளை எல்லாம் விலக்கிவிடும். அதே சமயத்தில்
1.உடலுக்குள் தீமையை விளைய வைக்கும் அணுக்களுக்கு
2.தீய உணர்வுகள் உட்புகாது இப்பொழுது தடைப்படுத்துகின்றோம்.

அதாவது நம் உடலுக்குள் தீய உணர்வுகள் சென்று தீய அணுக்கள் வளராது தடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா..! என்று கண்ணின் நினைவினை இரத்தத்தில் செலுத்தி இரத்த நாளங்களிலும்… அந்த இரத்த நாளங்களில் இருக்கும் ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது கண்கள் மூலமாக இந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் போது…
1.இரத்தங்களில் தீமையை உருவாக்கும் கரு முட்டைகளோ அல்லது நோயாக மாறும் அணுக்களோ எது இருப்பினும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறும்போது நல்ல அணுக்களாக மாற்றும் சக்தி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்

இப்பொழுது கண்ணின் நினைவினை உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அதைக் கவரும்படி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த உடல் உறுப்புகளுக்குள் அந்த அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெறும்போது உங்கள் உடல் முழுவதற்கும் ஒரு புது நல்ல உணர்ச்சிகள் ஏற்படும். இதை நீங்கள் உணரலாம்.

ஏனென்றால் இந்தப் பயிற்சி மூலம் உங்கள் உடல் உறுப்புகளான சிறு குடல் பெரும் குடல்.. கணையங்கள்.. கல்லீரல் மண்ணீரல்… நுரையீரல்… சிறுநீரகங்கள்… இருதயம்… கண்களில் உள்ள கருமணிகள்… நரம்பு மண்டலம்… எலும்பு மண்டலம்.. விலா எலும்புகள்.. குருத்தெலும்பு… எலும்புக்குள் உள்ள ஊண்.. தசை மண்டலம்… தோல் மண்டலம்… அதை உருவாக்கிய எல்லா அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்…!

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிரளயத்தினால் பூமிக்கு வளர்ச்சி நிலை உண்டா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமி தோன்றிய நாள் கொண்டே இந்தப் பூமிக்கும் ஓர் எண்ண நிலையுண்டு. இரண்டு ஆத்மாக்கள் ஒன்றுபட்டு சக்தி நிலையைச் சேமித்து இப்பூமி என்னும் பிம்பத்தை வளர்த்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் கிடைக்கக்கூடிய சக்தி நிலையை வைத்துப் பல நிலைகளிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் நிலைப்படுத்தி இப்புண்ணிய பூமியைச் சிறுகச் சிறுக வளர்த்து… இன்று இப்பூமியே தன் எண்ண நிலையில் தானே கற்றும் நிலையில் உள்ளது.

பூமி வளர்த்த உயிரணுக்களின் சுவாச நிலையுடன் தன் சுவாச நிலையைக் கலக்கவிட்டே இப்பூமியே சுவாச நிலை எடுத்து ஓ…ம் என்ற ஓங்கார நாதத்தில் சுழல்கின்றது.

இப்பூமியில் உள்ள அனைத்து சப்த அலைகளையுமே இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டேயுள்ளது.

சிறு எறும்பு முதற்கொண்டு… எண்ணங்கள் கொண்டு சுவாச நிலையை ஈர்த்து வெளிப்படுத்தும் அனைத்து ஜீவராசிகளின் சுவாச நிலையும்… தாவர வர்க்கங்களின் சுவாச நிலையும்… இயந்திர வர்க்கங்களின் சப்த ஒலியும்… அனைத்துமே இக்காற்றுடன் கலந்து இப்பூமியின் சுவாசத்திற்கு வந்து சென்று கொண்டுள்ளன.

இப்பூமிக்கும் ஜீவன் உண்டு… எண்ணம் உண்டு… சுவாச நிலையும் உண்டு. அழியா ஆயுட்காலமும் உண்டு.

மாறி மாறிப் பிரளய நிலை ஏற்படுவதெல்லாம் இன்று நாம் எப்படி பிறப்பெடுத்து வாழ்ந்து இவ்வுடல் என்னும் இப்பிம்பம் செயல்படாமல் போகும் நிலையில் நம் ஆத்மா பிரிந்து செல்கின்றதோ அந்த நிலை போன்றது தான்.

அதாவது பூமியின் பிரளய நிலையினால்…
1.இப்பூமியின் ஆத்மா ஜீவன் இல்லாமல்… பிரிந்து செல்லாமல்
2.ஜீவனுடனே தன் ஆத்மாவைக் காத்து கொண்டே பிரளய நிலை ஏற்படுத்தி
3.தான் வளர்த்துச் செயலாக்கிய உயிரணுக்களின் மற்ற இயற்கையின் தன்மையைச் சிறிது மாற்றி
4.”பிரளயம்…” என்ற மாற்றத்தினால் சுற்றிக் கொண்டே வாழ்கின்றது.

பூமி சுழல இந்தச் சப்த அலைகள்தான் இப்பூமிக்கு உயிர் நாடி. பேரிரைச்சல் கொண்ட இக்கடல் அலைகளும் ஜீவ ராசிகளின் சுவாச நிலையும் இருந்தால்தான் இப்பூமியைச் சுற்றியுள்ள இக்காற்று மண்டலத்திற்கே செயல் நிலை வருகின்றது.

பூமி தோன்றிய நாளில்… இன்று இருக்கும் ஓங்கார நாதத்தின் உயிர் நாடியின் சப்த அலையை விட ஒலியின் சப்த நிலை குறைவாகத்தான் இருந்தது. இப்பூமி வளர வளரத்தான் சப்த அலை ஓங்காரமுடன் வளர்ந்து கொண்ட வந்துள்ளது.

இப்பூமியைக் காட்டிலும் சூரிய மண்டலமும் வியாழன் மண்டலமும் பெரியவை. அவற்றின் சுழலும் வேகமும் இதை விடப் பல மடங்கு அதிகம் என்று உணர்த்தியுள்ளேன்.

சூரிய மண்டலத்தில் உள்ள உயிரணுக்களின் தன்மையும் நம் பூமியின் தன்மையும் மற்ற மண்டலங்களின் தன்மையும் மாறு கொள்கின்றது என்று உணர்த்தினேன்.

அந்தந்த மண்டலத்தின் சீதோஷ்ண நிலைக்கொப்பத்தான் அம்மண்டலத்திலுள்ள உயிரணுக்களின் நிலையும் இருந்திடும்.

எந்த மண்டலத்திலும் உயிரணுக்கள் இருந்து சுவாசம் எடுத்திடாமல் இருந்தால் அந்த மண்டலத்திற்கே ஜீவனில்லை.
1.நடமாடும் பறக்கும் ஊரும் ஜெந்துக்களுக்கு மட்டும்தான் ஜீவன் உண்டு என்ற பொருளில்லை.
2.ஒவ்வொரு மண்டலத்திலும் அம்மண்டலத்துடனே வளர்ந்துள்ள கல் மண் நீர் அனைத்திற்குமே ஜீவனுமுண்டு… சுவாசமுமுண்டு.

கல் பேசும் மண் பேசும் என்பதின் பொருளென்ன…? அதனதன் சுவாசமே அதனதன் சொற்கள்தான். சுவாசமில்லாமல் எந்த மண்டலமுமில்லை சுவாசம் எடுத்திடாமல் எந்த உயிரணுக்களும் இல்லை.

1.இஜ்ஜீவத்துடிப்பின் ஒலியினால்தான் ஒவ்வொரு மண்டலமும் வாழ்கின்றது
2.நம் பூமியின் சக்தி நிலையும் கூடிக் கொண்டே வருகின்றது.

கலியின் பிரளயத்திற்குப் பிறகு வரப்போகும் கல்கியின் வளர்ச்சியிலிருந்து நம் பூமி இன்னும் சக்தி நிலை நிறைந்ததாகத்தான் சுழலப் போகின்றது. இன்று சூரியனின் சக்தியினால் சக்தி கொண்டு சுழலும் நம் பூமியே சூரியனின் நிலைக்கொப்பச் சுழலப் போகின்றது.

ஒவ்வொரு பூமியின் நிலையும் ஒவ்வோர் உயிராத்மாவின் சக்தியினால் செயல் கொண்டு சுழல்கின்றது அதனதன் நிலைக்கொப்ப…!

வேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது…? தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…?

வேதனைப்படுவோரைப் பார்த்தவுடன் நமக்கும் அந்த வேதனை எப்படி வருகிறது…? தியானத்தின் மூலம் அதை எப்படி மாற்றுவது…?

 

கண்ணின் கரு விழிக்குப் பின் இருக்கும் நரம்பு மண்டலம் வழி கொண்டு நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திற்கும் கண் இணைக்கப்பட்டிருக்கிறது.

வேதனையான உணர்வுகள் நம் கண் வழியாகச் சென்று நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் இந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

தூண்டிய பின் அதனின் வலுவின் தன்மை கொண்டு அந்த வேதனைப்பட்ட உணர்வுகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நுகரச் செய்து அந்த வேதனையான உணர்ச்சி கொண்டு எண்ணம் சொல் செயல் என்று இயங்கத் தொடங்குகிறது.

அதே சமயத்தில் சுவாசித்தது வேதனையான உமிழ் நீராக மாறி சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது. அதனால் சிறு குடல் பெரும் குடலை உருவாக்கிய அணுக்கள் மயக்கமடைகிறது.

சிறு குடல் பெரும் குடல் பலவீனம் அடைந்தால் நாம் உணவாக உட்கொண்ட இந்த உணவுகள் நஞ்சாக மாறி நஞ்சின் தன்மை கொண்ட இரத்தமாக மாற்றுகின்றது.

அப்படி நஞ்சாக மாறும் போது நம் உடல் உறுப்புகளுக்குள்ளும் இரத்தத்தின் வழி விஷத் தன்மை பரவி நம் உடலில் பல விதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபடுவதற்கு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நம் உடலில் உள்ள அணுக்களை உற்சாகப்படுத்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படி செய்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நாம் அதே கண்கள் வழியாக ஏங்கிக் கவரப்படும் போது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் கண் வழி உள்ள நரம்பு மண்டலம் வழியாக
2.உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் பாய்ந்து உற்சாகமூட்டும் வீரியத் தன்மையாக அடைகின்றது.
3.அதே சமயத்தில் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக இயங்கி
4.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி நம் சிறு குடல் பெரும் குடல்களில் கலந்து உற்சாகம் அடையச் செய்கிறது
5.சாப்பிட்ட ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

பின் அந்தச் சக்திகள் அனைத்தும் நம் உடல்களில் உள்ள உறுப்புகள் அனைத்திற்குமே கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் கணையங்கள் கிட்னி இருதயம் இந்த நல்ல இரத்தங்கள் செல்லப்படும் அவைகளும் உற்சாகம் அடைந்து தீமையை நீக்கும் வலிமையான உணர்வைப் பெறுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளுக்குச் சக்தியைக் கூட்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அடிக்கடி பெற்று தீமைகளைத் துடைத்துக் கொண்டே வந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலிலே அதிகமாகப் பெருகி
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திலே என்றுமே அழியாத வாழ்க்கை நாம் வாழ முடியும்…!

நம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நம் பூமியின் பூர்வாங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தால் தான் என்றுமே நாம் அழியாத வாழ்க்கை வாழ முடியும்

நம் உடலில் உறுப்புகள் பழுதானால் மாற்று உறுப்பு கொண்டு சரி செய்கிறோம். உறுப்பை மாற்றி வாழ்ந்தாலும் சிறிது காலமே வாழ்கின்றோம். ஆகவே இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும்
2.அதன் வழியில் இருளை நீக்க வேண்டும்
3.வாழ்க்கையைச் சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வுடன்
4.இதை ஏங்கிக் கேட்டு கொண்டிருந்தால் உங்களுக்குள் பதிவாகிறது.
5.பதிவான ஞானிகளின் உணர்வை மீண்டும் எண்ணினால் அந்த ஞானத்தை உங்களால் பெற முடியும்… அந்த வழியைக் காட்டும்.

நமக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தாலும் ஒருவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வை உற்றுப் பார்த்தால் அது பதிவாகின்றது.

அவன் தவறு செய்தான்… தவறு செய்தான்… என்று திரும்பத் திரும்பச் சொல்லும் போது அந்த உணர்வை நுகர்ந்து நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம். அதனால் தீய உணர்வே வருகிறது

அதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.

நாம் எண்ணும் எண்ணம் எதுவோ அதிலே நம் கண் பார்வையைச் செலுத்திய பின் இந்த காற்றில் உள்ளதைக் கவர்ந்து (சுவாசித்து) நம் உயிரிலே மோதச் செய்கின்றது. இந்த உணர்வுகள் நம் அறிவாக இயக்கக்கூடிய நிலை வருகின்றது.

1.தீமை என்றால் தீமையின் அறிவாக நம்மை இயக்குகின்றது…
2.அப்பொழுது தீமையின் உணர்வையே நம்முள் வளர்த்து விடுகின்றது.

ஆனால் தீமையை நீக்க வேண்டும் என்ற உணர்வை நாம் எண்ணினால்
1.அதற்குண்டான வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலுவாக எண்ணி எடுத்து
2.தீமையை நீக்கினால் ஒழிய நாம் வேறு வழியில் அந்தத் தீமையை நீக்க முடியாது.

ஒரு வலிமை கொண்டவனின் (போக்கிரி) உணர்வு நமக்குள் வந்தால் நம் சாந்த உணர்வுகள் அடங்கிவிடுகிறது. என்ன தான் நம் மனதைச் சமாதானப்படுத்தினாலும் அந்த வலிமை நமக்குள் திடுக்… திடுக்… என்று அச்சத்தை ஊட்டி உடலிலே கடும் நோயாக வந்து விடுகின்றது.

நாம் எவ்வளவு நல்லவராக வேண்டுமென்று விரும்பினாலும் இதையெல்லாம் நமக்குள் வளர்ச்சியாகி நம்மை அறியாமலேயே நமது வாழ்க்கையில் கடும் நோய்களாக உருவாகின்றது.

இதைத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று நம் சாஸ்திரங்கள் கூறுகிறது.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய குணங்களை அதிகமாகச் சுவாசிக்கின்றோமோ
2.அந்தக் கணக்கின் பிரகாரம் அடுத்த உடலாக நம்மை மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வரும் நஞ்சை வென்ற உணர்வுகளைப் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட்டால் அது வசிஷ்டர் பிரம்ம குரு.

அதை நுகர்ந்து உடலுக்குள் பெருக்கிக் கொண்டால்… இந்த வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமானால்… அந்தக் கணக்கின் பிரகாரம் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஆகவே அதன் மார்க்கங்களை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் தியானத்தில் உங்களுக்கு பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக நம்மை ஒருவன் திட்டினான் என்றால் அந்தத் திட்டியவனை எண்ணி அதை நுகர்ந்த பின் அந்தத் தீமையின் செயலே நமக்குள் வருகின்றது. அதே போல் வேதனைப்படுவோரை எண்ணும்போது அந்த வேதனைப்படும் செயலே நமக்குள் வருகின்றது.

1.வேதனைப்படுவோரை பார்க்கும்போது அதே நிலை.
2.வேதனைப்படுத்துவோரின் செயலை எண்ணும் போது அதுவும் தீய உணர்வாக நம்மை இயக்கி ஆத்திரப்படச் செய்கிறது.

அதைப் போன்ற தீமைகளை நீக்கிடத் தான் உங்களுக்குள் அரும் பெரும் சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்பொழுது பெறும்படி செய்கிறோம்.

அகஸ்தியன் எப்படித் தன் தாயின் கருவிலிருந்தே தீமைகளை நீக்கிடும் சக்தி பெற்றானோ அதைப் போல நுகர்ந்தறியப்படும் போது உங்கள் இரத்தத்தில் கலந்து… அங்கே கருத்தன்மைகள் உருவாகிறது.

கருவான பின் உடல் முழுவதற்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவி உடல் உறுப்புகளில் உள்ள இருளை நீக்கும் உணர்வுகளாகப் அது பெருகத் தொடங்கும்.

1.ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்க்கப்படும்போது
2.எல்லா உறுப்புக்களிலும் இந்த தீமையை நீக்கும் உணர்வுகள் பெருகி
3.ஒளி என்ற உணர்வின் அறிவைப் பெருக்குகின்றது… ஒளியின் சரீரம் பெற நாம் தகுதி பெறுகின்றோம்.

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

நல் வழி நடந்தால்… ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் – ஈஸ்வரபட்டர்

 

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது…!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

முன் பாட நிலைப்படி… மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்… துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்… மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்… வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே…
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்…!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்…
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்…!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்…
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்…!

அழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை

அழியக்கூடிய உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை… “அழியாத உயிருக்கு” நாம் கொடுப்பதில்லை

 

இன்றைய வாழ்க்கையில் நோயை நீக்க மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கே இன்னொரு விஷத்தின் தன்மை கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும்போது அதில் உள்ள விஷமும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

இப்படி மனிதன் நோயை நீக்கப் பல உபாயங்களைச் செய்தாலும் இந்த விஷத் தன்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக நம் உறுப்புகளைப் பாழாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

ஆக… கொஞ்ச காலம் வாழ்வதற்காக நாம் எத்தனையோ உபாயங்களை வைத்துச் செயல்படுத்துகின்றோம்.

மனிதன் உறுப்புகள் செயலிழந்து விட்டால் நுரையீரலில் இருந்து எல்லா ஈரல்களுக்கும்.. கிட்னி… இருதயம்… போன்றவைகளையும் மாற்று உறுப்புகளை வைத்து மனிதனை வாழ வைக்க முடியும்…! என்று விஞ்ஞானி செயல்படுத்துகின்றான்.

ஒரு எலும்பே இல்லை என்றாலும் அந்த எலும்பைப் போல இன்னொரு உடலில் அந்த எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து மோல்ட் (அச்சு) செய்கின்ற மாதிரி செய்து மனிதனுக்குத்தக்க எலும்புகளை உருவாக்கி… கை கால்களுக்கோ மற்ற இடங்களுக்கோ அதைப் பொருத்தி மீண்டும் சாதாரண மனிதனைப் போல வாழச் செய்ய முடியும்…! என்று விஞ்ஞானிகள் செயல்படுகின்றனர்.

ஏனென்றால் எலும்புகள் உருவாக்கிய அணுக்களை வைத்து மீண்டும் அதைப் பெருக்கப்படும் பொழுது அந்த மலம் உருவாகின்றது. அப்படி வளர்த்து மீண்டும் பொருத்துகின்றான்.

பண வசதி உள்ளவர்கள் இதைப் போல் பல லட்சம் செலவழித்து அதை எடுத்துப் பொருத்திக் கொள்கின்றனர். ஆனால் அப்படிப் பொருத்தினாலும்…
1.அங்கங்களை இழந்த நிலையை எண்னும் போது
2.மற்றவர்கள் எல்லாம் சுயமாக இருக்கப்படும்போது நமக்கு மட்டும் இப்படி ஆகிவிட்டதே என்று
3.மீண்டும் அந்த நோயின் உணர்வுகள் கிளர்ந்து வருகிறது.

இதைப் போல் தொடர்ந்து வரும் போது அதௌ முழுமையாக நீக்கும் திறன் இல்லை.
1.செல்வத்தைச் செலவழித்து. உறுப்புக்களை மாற்றி அமைத்தாலும்…
2.உடலில் வரும் அந்த வேதனை உணர்ச்சிகள் (வேதனை என்றாலே நஞ்சு)
3.உடலை விட்டுச் செல்லப்படும்போது… உயிருடன் சேர்ந்தே செல்கின்றது.

சேர்த்துக் கொண்ட இந்த வேதனைக்கொப்ப மாற்று உடலாக மற்ற உயிரினங்களாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

ஆனால் நாம்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் இத்தகைய விஷத் தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கிக் கொண்டால்
1.நமது வாழ் நாளில் தீமைகளைக் கண்டாலும் உடனே அதைத் தடுத்து
2.நல்ல உணர்வாக அந்த அணுக்களையே மாற்றிவிட முடியும்.

இன்று எப்படி விஞ்ஞானி இந்த உறுப்புக்களின் தன்மையைப் பெற்று அந்த எலும்பையே உருவாக்கச் செய்கின்றானோ இதைப்போல நல் அணுக்களைப் பெருக்கி அதைச் சீராக்க இயக்கிட முடியும்.

உறுப்புகளை உருவாக்க முந்தி மற்ற பொருள்களால் செய்து வைத்தான். இப்பொழுது அதே போல் உறுப்புகளையே உருவாக்கிச் செயல்படும் நிலைகளை வைத்து கொள்கின்றான்.

மனிதனின் மேல் தோல் பாழாகிவிட்டால் அதைப் போல் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து வளர்த்து மீண்டும் அழகான உடலாகவும் உருவாக்கும் நிலையைச் செய்கின்றான்.

1.ஆனால்.. இந்த உயிரைப் போல (அழியாத) உணர்வின் தன்மை உருவாக்கும் செயல் விஞ்ஞானியிடம் இல்லை.
2.உடலைக் காக்கப் பல முறைகள் கொண்டு விஞ்ஞானி செயல்படுத்தினாலும்
3.வேதனை உணர்வுகள் மனிதனுக்குள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
4.உடலுக்கு பின் சேர்த்து கொண்ட வேதனைக்கொப்ப இந்த உயிர் மாற்று உடலை உருவாக்கி விடுகின்றது.

இதிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கிக் கொண்டால்… நாம் அந்த நினைவினை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது…
1.ஒரு கஷ்டப்படுவோரோ வேதனைப்படுவோரோ துயரப்படுவோரோ… அல்லது
2.ஒருவர் நம்மிடம் பழகி உடலை விட்டு அவர் பிரியும் போதோ அந்த நேரமெல்லாம்
3.அதைத் தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் நாம் வைத்து
4.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
5.உயிர் வழியாகக் கவர்ந்து நம் உடலுக்குள் கண்ணின் நினைவைக் கொண்டு செலுத்தி
6.நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டுமென்று உள் முகமாகப் பாய்ச்சப்படும்போது
7.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் நம் இரத்தத்தில் பெருகி தீமையான அணு உருவாகாதபடி தடுக்கின்றது.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடலில் உள்ள அணுக்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. ஒளியான உணர்வாக மாறுகின்றது.

வாழ் நாளிலே எத்தனை கோடித் தவறுகளை நாம் பார்த்தாலும் அந்தந்தச் சமயத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டுமென்று உள்ளுக்குள் செலுத்தி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும். எந்த நேரத்தில் உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் உயிரான்மா துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்லும். அழியாத நிலைகள் பெறலாம்.

நல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

நல் உணர்வு கொண்ட ஆத்மாக்களுக்காகவே உலகம் இன்றளவும் நிலைத்திருக்கின்றது – ஈஸ்வரபட்டர்

 

\இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்… நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்… இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே… இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்… மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை…” என்பது…
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று…
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி…
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.