இன்றைய மனிதன் இயந்திர மனிதனாகவே (ROBOT) மாறி விட்டான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Artificial intelligence

இன்றைய மனிதன் இயந்திர மனிதனாகவே (ROBOT) மாறி விட்டான் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

அலை வரிசைகளின் மூலம் இன்று நாம் பார்த்து.. கேட்டுக் கொண்டிருக்கும் ரேடியோ… டி.வி. இண்டெர்னெட்… எல்லாமே எவ்வமிலத்தில் உலோகத்தைப் பூசி ஒலி பரப்பப்பட்டதோ.. அது காற்று மண்டலத்தில் பரவி… எத்தொடரில் ஒலிபரப்பானதோ… அவ்வொலியின் பலவாகப் பரவும் செயல் ஜீவன் கொண்டு… ஒரு இடத்தில் ஒலிப்பரப்பப்பட்ட நிலை இக்காற்று மண்டலம் முழுமைக்கும் பல மைல்களுக்கப்பால்… அதன் தன்மை கொண்ட அமில மோதல் தொடர்பில் ஜீவன் பெற்று விடுகிறது.

அந்த இணைப்பு பெறும் தொடர்பிலெல்லாம் ஒலிப்பரப்பாகும் ஒலியை நாம் அவ் ஈர்ப்பில் கேட்கும் பொழுது
1.எவ்விஷ அலையின் முலாம் பூசப்பட்ட அமில ஈர்ப்பின் ஒலிப்பதிவு
2.இந்தக் காற்று மண்டலத்தில் ஜீவன் பெற்றதோ
3.மீண்டும் அதே அலையின் உணர்வை நம் எண்ண உணர்வு எடுக்க எடுக்க
4.இவ்வுடலும் அவ்விஷ அலையின் ஈர்ப்பிற்குத்தான் செல்ல முடியும்.

எப்படி இயந்திரங்களை ஒன்றின் இணைப்பு கொண்டு பிறிதொன்றை இணைத்து ஓட்டும் பொழுது… அதன் தொடர்பில் இதுவும் ஓடுகின்றதோ அதைப் போன்று… உணர்வின் எண்ண அலையின் தொடர்பு அலையில் எத்தொடர்பில் ஒலி அலை.. ஒளி அலை பதிவு பெற்றனவோ… அவற்றின் ஈர்ப்பிற்கு மனிதர்கள் தம் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது… அவ் ஓட்டத்தின் சுழற்சியில் தன் உணர்வும் சிக்கி… அவ்விஷ அலையில்தான் இம்மனித ஆத்மாவும் செயல் கொள்ளத் தொடங்கி விட்டது.

இந்தக் குறுகிய நூற்றாண்டில் வளர்ச்சி கொண்ட இவ் அலையின் தொடர்பினால்… “பல கோடி ஆண்டுகளாக” வளர்ச்சியுற்ற வலுக் கொண்ட இவ்வுயிர் ஆத்மாவை நல் உணர்வின் ஞானமுடன் செயல்படுத்த முடியாத நிலை ஆகி விட்டது.

இன்றைய செயற்கை மின் காந்த ஒலி… ஒளிக் காட்சிகளின் தொடர்பினால்…
1.ஆத்மாவானது உயரும் நிலை பெறாமல்
2.உடலை விட்டு உயிர் பிரிந்தவுடன்
3.உயிருடன் வலுக் கொண்டு… உயிருடன் ஆத்மா வலுப் பெறாமல்
4.ஆத்மா சிதறுண்ட நிலையில் இக்காற்று மண்டல சுழற்சியில்
5.மனித உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அந்தந்த மோதல் நிலை பெற்று
6.தன் வலு நிலையை இழந்து விடுகின்றது.

ஆகவே.. ஆத்மாவுடன் கூடிய உயிரும்… ஆத்மா பிரிந்த அவ்வுயிரும் வலுவிழந்த நிலையில்… பிறப்பின் தொடருக்கு மீண்டும் மிகவும் கீழ் நிலையான உயிரின நிலைக்குத்தான் செல்ல முடிகின்றது.

இன்று இக்காற்று மண்டலமே மிகவும் நஞ்சாக உள்ளது. மனித உணர்வின் எண்ண ஆத்மாவிற்கு வேண்டிய உயர் காந்த மின் அலையை எடுக்கும் உயர் ஞானத்தின் சக்தி நிலை பெறத்தக்க சூழ் நிலையை
1.இன்றைய விஞ்ஞானம் காற்று மண்டலத்தில் கலக்க விட்டுள்ள பல அலையின் செயலினால்
2.அந்த மனித சக்தியையே வலுவிழக்கச் செய்துவிட்டது.

விஞ்ஞானத்தில் செயல்படும் நிலையே தன் ஞானம் செயல்படக்கூடிய வழி வளர்ந்த தொடரில் வளர்ந்திருந்தது என்றால்
1.இன்று இப்பூமியில் கலியின் கடைசியை அழிவு நிலை இல்லாமல்
2.மனிதனின் உயர்வு வளர்ச்சியான அடுத்த கல்கி அவதாரத்தை மனிதர்கள் பெற்றிருக்கலாம்.

சில நிலைகள் வெளிப்படுத்திய நிலையும் யூதர்களினால் அன்று மனித உணர்வின் ஆத்மா வலுப்பெற்ற நிலையும் அழிவு நிலைக்குச் சென்று விட்டது.

அன்றைய ஞானிகள் மனித ஆத்மா உயர்வு பெற மனிதன் எச்சக்தியையெல்லாம் பெற முடியுமென்ற தத்துவத்தை விளக்கிக் காட்டினர்.

1.அதை வளர்க்கும் நிலையைக் காட்டிலும் எதிர்க்கும் நிலையும்
2.தன் தேவைக்குத் தந்திரமான முறையில் செயல்படுத்தப்பட்டதினால்
3.இன்று அவை எல்லாம் வேறு ரூபமெடுத்துவிட்டன.

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

cosmic power of gurudevar

கோழியை (கோடி) அறுத்துக் சாப்பிடுடா…! என்பார் குருநாதர் (கோழி என்று உச்சரித்தால் தெலுங்கில் “கோடி” என்று பொருள்)

 

கோடி… கோடி… கோடி.. என்கின்றபோது எங்கேயோ தோன்றிய நிலைகள் பேரண்டத்தில் இருந்த உணர்வுகளும் “கோடிக் கோடியாக…” மாறுகின்றது.

பல கோடிக்குள் மற்றதின் அணுக்கள் சேர்த்து
1.இன்று நாம் மனிதனாக வருவதற்குக் கோடியில்… கோடி
2.எத்தனையோ கோடியில் கோடி… கோடியில் கோடி… கோடியில் கோடி…!

இப்பொழுது எண்ணம் கொண்டு பேசுகிறோம் என்றால் இதைப் போல் வான் வீதியில் இருக்கக்கூடிய உணர்வுகள் தான் இங்கே (அந்தப் பேச்சாக) வருகின்றது.

இப்படி மனிதனுக்குள் அது பட்டபின் இதனின் நிலை தனக்குள் மாறுகின்றது என்பதனை உணர்வதற்குத்தான்
1.எனக்கு (ஞானகுரு) அடியைக் கொடுத்து
2.அடித்த அடியில் என்னைப் பிரமைப் பிடித்த மாதிரி ஆக்கி
3.அந்த வேகத்தில் விண்ணை நோக்கி ஏகச் சொன்னார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்)

அவர் என்னை நேரடியாக அடித்தார். உங்களுக்கு நான் சொல் அடி கொடுக்கின்றேன். இந்த உபதேசத்தின் உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிந்தபின் இது சீதாராமா ஆக… அம்புகளாகப் பாய்கின்றது. இந்தச் சொல் உங்கள் உணர்வுகளைத் தூண்டுகின்றது.

கோடியில் கோடி… என்ற நிலைகளில் விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வை ஒளியாக மாற்றிய குருநாதர்…
1.அவர் கண்டுணர்ந்த உணர்வை “அடி” (உதைத்து) மூலம் எனக்குக் கொடுத்து
2.உணர்வின் தன்மை என்னை அங்கே ஒன்றச் செய்து
3.விண்ணுலக உணர்வின் அளவுகோலை அறியும்படிச் செய்தார்.

அவர் அடிக்கும் அடி மூலம் எப்படி அவருடைய சக்தி உறைகின்றதோ இதைப் போன்றுதான் அந்த உணர்வின் தன்மை விண்ணின் ஆற்றலும்… அது உருவாகும் மாற்றமும்… மண்ணுலகில் வரப்படும்போது கோடிக் கோடிக் கோடி… என்ற நிலையில் வருவதைக் காட்டுகின்றார்.

இங்கே நீ இந்த கோழியை அறுத்துச் சாப்பிடுகிறாய். கோழியைச் சாப்பிட்டவுடன் நீயும் கோழியாகப் பிறப்பாய். ஆகவே… அந்தக் கோடியை நீ சாப்பிட்டால்… இந்தக் கோடியினுடைய நிலைகளை நீ வெல்வாய்…! என்பார்.

(ஞானகுரு தெலுங்கு பேசுபவர். தமிழில் கோழி என்று சொன்னால் அது தெலுங்கில் கோடி…! தமிழில் கோடி என்று சொன்னால் அது தெலுங்கில் கோழி..! இதை வைத்தே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் சொல் தொடரில் சூட்சமமாக இயற்கை உண்மைகளைப் பேசுகிறார்கள்)

நான் (ஞானகுரு) கோழி என்று சொல்லும்போது நீ இந்தக் கோழியை நீ அறுத்தாய் என்றால் நீ அடுத்தாற்படி கோழியாகப் பிறப்பாய். அப்படியென்று சொல்லிவிட்டு அந்தக் கோழி… “அந்தக் கோடிடா…!” என்பார்.

“அந்தக் கோடி…!” என்றால்…
1.சப்தரிஷி மண்டலங்களில் உள்ள பல கோடி உணர்வுகள்
2.கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளில் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு
3.உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்தக் கோழிடா..
4.அதை அறுத்துச் சாப்பிடுடா…! என்கின்றார்.

குருநாதர் சும்மா சாதாரணமாகப் புரிய வைக்கவில்லை… இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்.

சாதாரண நிலைகள் உணவாக உட்கொள்ளும் நிலைகள் இருந்தாலும் அதை நீ… எதை… எப்படி உருவாக்க வேண்டும்…? என்ற நிலைகளை
1.நான் தெரிந்தோ தெரியாமலோ கேள்வி கேட்டாலும்
2.அந்த கேள்விக்குள்ளேயே கேள்வியைக் கேட்டு
3.கேள்வியின் உணர்வைக் கொண்டே பதிலையும் கொடுப்பார்.

அது எவ்வாறு இயக்குகின்றது…? நீயா…? அல்லது நானா…? ஆக நீ பேசுவது நீயா…? நான் பேசுவது நானா…? ஆக நான் என்பதற்கு எதுவாகின்றது…? என்பார் ஈஸ்வரபட்டர்.

எடுத்துக் கொண்ட உணர்வு உயிருடன் இயக்கத்தைக் கொண்டு வரும்போதுதான் “நான்…” இங்கே மைக்கிலே (MIC) பேசிய உணர்வின் தன்மை கொண்டு கரண்ட்டில் இயக்கப்படும்போது அந்தச் சொல்லின் தன்மையை அது இயக்கும்.

நம் உயிரின் ஓட்ட நிலைகளும் இதே போன்று தான். உணர்வுகள் எதுவோ அதைத் தான் உயிர் இயக்கும் என்ற இந்த நிலைகளையும்… மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை அது எவ்வாறு…? என்ற நிலைகளையும்… பூமிக்குள் மண்ணாவதற்கும்… கல்லாவதற்கும்… வைரம் ஆவதற்கும்… “மூலம்” பல கோடி நிலைகளை இது விழுங்கியதுதான்…!

அந்த உணர்வின் தன்மை விளைந்து அதிலே தாவர இனங்களாக விளைந்து மனிதனுக்குள் எண்ணமாக வருவது என்றால் அது கோடி தான்… கோடி என்று இல்லாதபடி வேறு எதுவும் இல்லை.

இந்தக் கோழிக்கும் கோடிக்கும் வித்தியாசம் சொல்லின் தொடர்கள் எதுவாக இருப்பினும் அது பாஷையின் முறை கொண்டு அது வேறாக மாறினாலும் நான் கோடி என்கின்றேன் நீ கோழி என்கின்றாய் என்பார் குருநாதர்.

இதைப் போல விண்ணின் ஆற்றலை என்னை நேரடியாகவே நுகரும்படி செய்கிறார் குருநாதர்.
1.என் உடல் இங்கே இருக்கும்
2.குரு என்னை உதைத்ததும் அந்த உதைத்தத்ன் உணர்வுகள் அவரோடு ஒன்றும்
3.ஒன்றிய உணர்வுகளை அங்கே விண்வெளியில் பரப்பச் செய்வார்.
4.அந்தப் பரவிய உணர்வுகள் அங்கே அடையும்.
5.அடைந்த உணர்வுகள் என்னை அடித்த உணர்வுகள் கொண்டு இங்கே இழுக்கும்.
6.அப்படி இழுத்த உணர்வு கொண்டு தான் எனக்குள் விண்ணுலகை அறிவித்தார் ஈஸ்வரபட்டர்.

நீ யார்…? எப்படி வந்தாய்…? எந்தெந்த வழியில் எல்லாம் வந்தாய்…? என்று குருநாதர் கேட்டுவிட்டு கனவு காணுவது போல் காட்டுகின்றார்.

அணுவாகத் தோன்றி உயிரணுவாக (நீ) உன் உயிரே உண்டானது என்ற நிலைகளையும்… விண்ணிலே உயிர்கள் உண்டாகுவதற்கும் இதிலேயும்… பல கோடிக் கோடிக் கோடி… என்ற நிலைகளைப் பார்த்தால் “உயிரின் துடிப்பு” ஒன்றாக இருக்கும்.

எத்தனை கோடி உணர்வுகள் கலந்து.. உயிரின் துடிப்பிற்குள் இணைந்து… அது இயக்கமாக உருவாகின்றது…? என்ற நிலைகளும் ஒரு அணுவின் தன்மை மற்ற கோள்களின் நிலைகள் கலந்து வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை கோடி… கோடி… கோடி… கோடி… கோடி…

அந்தக் காரத்தின் உணர்வின் தன்மை எவ்வாறு ஆனது…? எத்தனை கோடி சேர்ந்து கசப்பாக மாறுகின்றது….? இதைப்போல சுவையின் உணர்வும் மணத்தின் நிலைகள் எது இணைந்ததோ அது மணமாக எப்படி மாற்றுகின்றது…? இவையெல்லாம் சேர்த்துத் தான் கோடி…கோடி…கோடி..! என்பது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள்

Power of Eswarapattar

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “கோடி… கோடி… கோடி…” என்று அடிக்கடி சொல்வதன் உட்பொருள்

 

அதாவது இந்த விண்வெளியில் எத்தனையோ வகையான நட்சத்திரங்கள் இருக்கின்றது. அந்த நட்சத்திரத்திற்குள் இந்தத் தூசி (துகள்கள்) வருவதற்கு… ஒளிகள்… நிறங்கள் கவர்வதற்கு எத்தனை கோடி அண்டங்களிலிருந்து சக்தி கிடைக்கிறது தெரியுமா…? என்பார்.

ஒரு நட்சத்திரம் ஒளியைக் கொடுப்பதற்கு எத்தனையோ கோடி நட்சத்திரங்களின் அந்தச் சக்தி சேர்த்துத் தான் வருகின்றது.
1.இந்த நட்சத்திரம்… இது கோடி…!
2.அது கோடி… கோடி… கோடி…

அதிலிருந்து கோடியாக வரப்படப்போகும் போது இந்தத் தாவர இனங்களில் அது ஒவ்வொன்றும் காரமாக வருவதற்கு எத்தனை காரம்…? தெரியுமா..?

உடனே “மிளகாய் கோடி… கோடி… கோடி…” என்பார்.

இந்தக் காரம்… கோடிக்குள் கோடியாக எப்படி உண்டானது…? அந்தக் கோடியின் உணர்வுகள் காரத்தின் ருசியாக வருவது போல்..
1.நமக்குள் இதே மாதிரியான எண்ணங்கள் பல சேர்த்து
2.அது கோபத்தின் உணர்ச்சிகளாக உருவாகும்.

கோபத்தின் உணர்ச்சிகள் உடலுக்குள் வளரப்படும்போது இந்த உணர்வின் பொறிகள் எப்படி நோயாக மாறுகின்றது…? என்று இப்படிக் கேள்வி எழுப்புகின்றார் குருநாதர்.

இப்படிக் கோடி… கோடி… கோடி… என்று அன்று பூராம் எனக்குச் சோறு அந்த அடி தான்…! (குருநாதர் கோடி கோடி என்று சொல்லி அடிப்பார்)

ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்வதற்குத்தான் சொல்கிறோம். என்னமோ… சாமி லேசாக உங்களிடம் வந்து சொல்கின்றேன் என்று இல்லாதபடி உங்களுக்குள் குருநாதர் காட்டிய உணர்வலைகளை உணர்த்திக் கொண்டே வருகின்றோம்.

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலே நம்மை கோபக்காரனாக ஆக்கி விடுகிறது…. வேதனைப்படுவோனாக ஆக்கி விடுகிறது… தாய் தந்தையை மறக்கச் செய்து விடுகின்றது….!

1.தாய் தந்தை நம்மை நன்றாக வளர்க்க வேண்டுமென்று எண்ணினாலும் இடைப்பட்ட உணர்வுகள் தடுக்கின்றது.
2.தன் தாய்க்கும் தன் மனைவிக்கும் ஆகாது. என்கிற நிலை வரும்போது இந்த உணர்வை இழுக்கின்றது
3.இதைப் பிளந்து தள்ள வேண்டுமென்றாலும் முடிவதில்லை.

சில குடும்பங்களில் இப்படி எல்லாம் இருக்கிறது. அதே சமயத்தில் தாய்க்கும் மகனுக்கும் ஆகவில்லை. தாய் தான் கடவுள் என்கின்றோம் தாய் தான் தெய்வம் என்கின்றோம் தாய் தான் குரு என்கிறோம்.

ஆனால் யாம் சொன்னதற்கும் இதற்கும் புறம்பாகப் போகின்றது. காரணம்… ஒரு உடலில் ஒரு உணர்வின் தன்மையை அந்தக் குணத்தின் வித்தினை விளைய வைத்தால் அது பல கோடி ஆகின்றது.

ஒரு உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டு மற்ற உணர்வோடு அதைச் சேர்க்கப்படும்போது இங்கே மனிதன் என்ற தன்மையே பிரிக்கப்படும். இந்தப் பிரிவிலிருந்து மீள்வதற்கு முடியவில்லை.

மிளகாயை இணைத்துவிட்டால் காரம்… காரம் தான்…! என்று சொல்லும். அதற்குப் பக்கத்தில் இஞ்சியை எடுத்துக் கொண்டால் அதையும் காரம்… காரம்… என்று தான் சொல்லும்.

ஏனென்றால் இந்த உணர்வு அதைத் தான் சொல்லும். காரத்திற்குள் இஞ்சி மிளகு எல்லாம் ஒன்றாகுவதுபோல் இந்தக் கோப குணங்களிலே நியாயங்களையும் பேசும்.

ஆனால் அந்தக் கோபங்கள் என்ன செய்யும் என்றால் தன் இருப்பிடத்தை வலுப்படுத்திக் கொண்டே இருக்கும். அதைப் போக்க வேண்டும் என்பதற்குத் தான் இப்பொழுது சொல்வது.

காரணம் இதையெல்லாம் குருநாதர் என்னிடம் இருக்கக்கூடிய வெறுப்புகளை எல்லாம் வெளியே கொண்டு வந்து குருநாதர் என்னை அடித்து அந்த விண்ணுலக ஆற்றலைக் காட்டினார்.

அப்பொழுது தெரியவில்லை என்று நான் சொன்னால் அதற்கு ஒரு அடி விழும் திடீரென்று…!

உன்னை பேய் பிடித்து ஆட்டுகின்றது என்பார்.

பேய் என்றால் என்ன….?

1.ஒரு மனிதனின் உடலின் விளைந்த உணர்வுகள்
2.அவனை ஆட்டிப்படைத்த அதே செயல்
3.அவன் எந்த உடலை அழிக்க எண்ணினானோ
4.தன் உடலையோ அல்லது மற்றவர் உடலையோ அழிக்க வேண்டும் என்ற ஆணவம் கொண்ட உணர்வுகள் அங்கே விளைந்தது.
5.அந்தக் கார உணர்ச்சிகளுடைய உணர்வுகளை நீ வேடிக்கையாகப் பார்க்கின்றாய்
6.தர்மத்தை நீ கடைபிடிக்கின்றாய்… ஆனாலும் அவனைப் பார்த்த அந்தப் பேய் குணம்
7.உன்னில் வந்து உனக்குள்ளும் அதைப் படைத்துவிடுகின்றது.

உனக்குள் அதைப் படைத்தபின் உன்னுடைய நியாயம் இந்தக் கோபத்தைக் கொண்டே அதை நீக்க வேண்டும் என்று சொல்கின்றது.

உதாரணமாக நாம் சொல்லிப் பார்க்கின்றோம்… கேட்கவில்லை… தப்பாகச் சொன்னால் இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் வருகின்றது.

நம் நல்ல குணத்தை மாற்றிவிட்டு இரு நான் பார்த்துவிடுகின்றேன் என்று வருகிறது. இதுதான் ஓம் நமச் சிவாய சிவாய நம ஓம். நம் உணர்வின் செயல்கள் இப்படி எல்லாம் வந்து சேர்ந்து விடுகின்றது

இதைப் போன்ற நிலை எல்லாம் மாற்றிட வேண்டும் என்பதற்குத்தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

drink addictin

கவலை எல்லாம் மறந்து… நான் மகிழ்ச்சியாக இருப்பதற்காகக் குடிக்கின்றேன்…! என்றாலும் உடலுக்குப் பின் நரகம் தான்…!

குடிப் பழக்கம் உள்ளவரை நீங்கள் அணுகி அவரிடம் இரண்டு மூன்று தடவை பேசிப் பாருங்கள். அந்த உணர்வின் அணுக்கள் ஆகிவிடும். அப்புறம் அந்த நினைவு நமக்குள் வரும்.

அந்த நினைவு வந்தபின் கொஞ்சம் குடித்துப் பாரப்பா…! என்று அவர் சொன்னால் அந்தப் பழக்கம் நமக்கும் வந்துவிடும்.
1.அப்புறம் ஒரு தரம் குடித்து விட்டால் அந்த அணுக்களுக்கு அது குடித்துத் தான் ஆக வேண்டும்.
2.குடிக்கவில்லை என்றால் இது விடாது…. அங்கே இழுத்துக் கொண்டே போகும்.

அப்புறம் என்ன செய்யும்…?

அந்த உணர்வின் தன்மை ஆனபின் நாம் சிந்திக்கும் நிலையே மறக்கும். இதனின் உணர்வு பட்டபின் இதைப் போல குடித்துக் கொண்டிருந்தால்
1.கடைசியில் நாம் இறந்துவிட்டால்
2.ஆன்மா அந்தக் குடியின் மணத்துடன் இருப்போர் உடலுக்குள் தான் போகும்.

குடிப்போர் உடலுக்குள் புகுந்து விட்டால்… குடிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர் எவ்வளவு தான் எண்ணினாலும் இது விடாது. அது குடிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.
1.ஏனென்றால் அதற்கு உணவு தேவை
2.அப்புறம் குடித்துக் கொண்டே இருக்கச் சொல்லும்.

அதர்வண வேதத்தில் இந்தப் போதை மருந்தைக் கொடுத்துதான் மாமிசத்தையும் கொடுத்து… இந்த உணர்வின் தன்மை நினைவிழக்கச் செய்வார்கள். பின் தீயில் இட்டுப் பொசுக்கி அதிலே எடுக்கும் மந்திரத்தைச் சொல்லி இந்த உணர்வினைக் கவர்ந்து இழுப்பார்கள்.

அதாவது அந்த அதர்வண வேதப்படி… மனிதன் உணர்வுக்குள் மந்திரங்களை ஓதி அதனின் தன்மை கொண்டு உருவாக்கி அவனின் நினைவை இழக்கச் செய்து இந்த மதுவை அவருக்குள் கொடுத்து இது சிறுகச் சிறுக இந்த எண்ணத்தை அங்கே அது பதியச் செய்வார்கள்.

மது குடித்தவர்களைப் பாருங்கள்… அது எதாவது யார் மேலயாவது கோபம் வந்தால் சரி. அதிலேயே தான் நிற்கும்.
1.யாரை நினைத்துக் குடித்தார்களோ…
2.இன்றைக்கு அவரை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று சொன்னால்
3.அந்த இரண்டில் ஒன்று பார்க்கச் சொல்லும்.

அப்புறம் அந்தச் சண்டையில் சமரசத்திற்கு ஆயிரம் பேர் சொன்னாலும் கேட்காது.

இதைப்போல அன்று மந்திரத்தில் இந்த மதுவினைச் செருகி மந்திரத்தை ஏற்று… இந்த உணர்வின் தன்மை செருகாக்கிய பின் அது கேட்டுணர்ந்தபின்
1.இந்த மனிதன் இறந்தான் என்றால்
2அதே மந்திரத்தைச் சொல்லி மதுவையும் வைத்தால் அந்த ஆன்மா இவர் கைவல்யம் ஆகும்.

இப்படி அந்த மது அருந்ததுவோரின் உணர்வுகள் எல்லாம் மந்திரக்காரன் கையில் சிக்கி அது என்னென்ன எண்ணங்களுக்குப் பயன்படுத்துகின்றாரோ அதற்குப் பயன்படும்.

நாம் சாதாரணமாக நினைக்கின்றோம். ஆனால் இந்த மதுவின் வேலைகள்… அந்த அதர்வண வேதத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தியது.

ஏனென்றால் அதர்வண என்ற நிலைகளில்
1.தீமையை விளைவிக்கும் விஷத்தின் தன்மை கொண்டு
2.ஒரு மனிதனுக்குள் இருந்து எடுத்து
3.அந்த நல்ல குணத்தை அழித்துவிட்டுத் தன் எண்ணத்தைப் புகுத்தி
4.அதனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த மனிதன் இறந்தபின்
5.இந்த மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அங்கே கைவல்யம்.

மதுவின் தன்மை வைத்து அந்த உணர்வின் தன்மை கவரப்படும்போது தன் இச்சைக்கு அது வரும்.

அந்த அதர்வண வேதத்தில் இந்த மந்திரம் ஓதுவோர் அனைவரும் மதுவை வைத்திருப்பார்கள்… மாமிசத்தை வைத்திருப்பார்கள்.

அதை வைத்துத்தான் இந்த மந்திரங்கள் ஓதி மற்ற ஆவிகளை அவர்கள் கைப்பிடிப்பார்கள். இத்தகைய நிலையை மனிதனைக் கைவல்யப்படுத்தி விட்டால் அவன் ஆட்டிப் படைக்கும் படைப்பாகப் போய்விடும்.

ஆகவே உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்…! என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

இந்த வாழ்க்கையில் எங்கே போகப் போகின்றோம்…? என்ற எண்ணத்தில்
1.இருக்கும்வரை… “தன்னை மறந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு…”
2.அவர்கள் செய்தார்கள்… இவர்கள் தப்பு செய்தார்கள்…! என்று எண்ணத்தில் குடித்தால்
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அடுத்த கணம் மந்திரவாதி கையில் நேரடியாகப் போய்ச் சேரும்.

இல்லையென்றால் இன்னொரு உடலுக்குள் சென்று அந்தக் குடிப் பழக்கம் உள்ளவர் உடலில் சென்று இன்னும் கொஞ்சம் குடிக்கச் செய்யும். அந்த இரண்டும் ஒன்றாகி விட்டால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் மீண்டும் அதே மந்திரவாதி கையில் சிக்கும்.

ஒன்றை ஆயிரமாகப் பெருக்கி அந்த உணர்வின் எண்ணத்தைப் பெருக்கிவிட்டால் அது அதர்வண என்று பொருள்

ஆகவே எதனின் மதுவை வைத்து இதை செய்கின்றார்களோ இன்னொரு ஆன்மாவைக் கைவல்யப்படுத்துகின்றான்.

ஆகவே இது போன்ற நிலைகளில் சிக்குண்டு தவிப்பதிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

 

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

Good and bad segregation

ஆன்மீகப் பாதையில்… மற்ற வழிகளைப் பின்பற்றுவோரிடம் வாதம் செய்யத் தேவையில்லை…!

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எவ்வாறு பெறவேண்டும்…? என்று யாம் (ஞானகுரு) தொடர்ந்து உணர்த்தினாலும்… பக்தி கொண்டவர்கள் சிலர்… முனித் தன்மை கொண்ட பாடல்களைப் பாடிப் பழகிக் கொண்டால் அந்தப் பாடலின் உணர்வுகளே அவர்களுக்கு முன்னாடி வரும்.

1.அது முன் வரப்படும் பொழுது
2.இங்கே கொடுக்கப்படும் அருள் ஞான இணைப்பை அது இணைக்க விடாது தடுக்கும்.

முனித் தன்மை கொண்ட பக்தி மார்க்கங்களிலும்… மதத்தின் அடிப்படையால் அவர்கள் கவிப் புலமையால் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளையும் மற்ற பாடலுடன் பதிவு செய்து கொண்டால் அந்தப் புலமைகள் கொண்ட புலவர்கள் பால் எடுத்துக் கொண்ட உணர்வே முன் நிற்கும்.

இங்கே உபதேசிக்கும் பொழுது அது முன் எழுந்து நின்று விடும்.

இந்தப் புவியின் பற்றை அற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைக்கத் தொடங்கினாலும் அவர்களுக்கெல்லாம் இணைப்பது மிகவும் கடினம்.

அந்த வகையில்… பக்தியின் புலமையில் அதிகமாக எடுத்துக் கொண்டோரின் நிலைகளிலும் ஒரு சிலரே மீள்வர். நூற்றுக்கு ஒரு பத்துப் பேர் தேறுவதே மிகக் கடினம்.

காரணம்… அவர்கள் மதத்தின் நிலைகள் கொண்டு ஞானிகள் என்ற நிலைகளும் புலமைகள் பாடியும்… பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த உயிரினங்களின் உணர்ச்சியைப் பற்றிப் புலமைகள் பேசினாலும் “அந்தப் புலமைகளே முன் வந்து எழும்…”

ஆனால் மூலத்தை இவர்கள் அறியார். மூலமற்ற நிலைகள் கொண்டு வாதிக்கும் நிலையே தான் அவர்களுக்குள் அதிகமாக விளையும்.
1.வாதிடும் திறமைகள் உண்டு.
2.ஆனால் மெய் ஒளி பெறும் உணர்வினை ஏற்றுக் கொள்ளும் மனப் பண்பு வராது.

வாதிடும் திறமைகள் ஆகப் படும் பொழுது அந்த முனித் தன்மை என்ற நிலையே இங்கே அடையும். இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஏனென்றால் இந்த முனித் தன்மை கொண்டோரிடம் வாக்குவாதத் தன்மை அதிகமாகி விட்டால்… “சாமி நமக்குன் இவ்வளவு சொல்லி இருக்கின்றாரே…!” என்ற நிலைகளைக் கலந்து…
1.எதிர் மறையான பொறிகள் – ஒரு கல்லுடன் உராயப்படும் பொழுது பொறிகள் எழும்புவது போல்
2.நமக்குள் வெறுப்பும் வேதனையும் அதிகமாகத் தொடர்ந்து விடும்.

இதனால் நமக்குள் உறைந்திடும் உணர்வு கொண்டு கலவைகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்துவது போல் நம் உயர்ந்த குணத்திலேயும் மாற்றம் ஏற்படும் நிலையே வந்துவிடுகின்றது.

ஏனென்றால் பல நிறங்கள் தனித் தன்மையாக அவை இருப்பினும் அதனுடன் மற்ற நிறத்தை இணைக்கப்படும் பொழுது… நீங்கள் என்ன தான் வாயிலே சொன்னாலும்… சொல்லச் சொல்ல… அவர்கள் வெறுக்க வெறுக்க… அந்த மாற்றுப் பொருளாகச் சொல்வார்கள்.

அப்பொழுது உங்கள் உணர்வுகளும் அதைப் போல மாறுபட்டு நாம் போகும் பாதைக்கே ஒரு தடை விதிக்கும் நிலையாக வந்துவிடும்.

“இதிலே மிகவும் கவனம் தேவை…!”

காரணம் அதைப் போன்ற நிலைகள் வந்தாலும் உங்களுக்குக் காட்டிய அருள் வழி கொண்டு யாம் கொடுத்த…
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்…! என்று எண்ணத்தால் எண்ணி
2.அதைப் பல முறை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
3.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
4.அவர்கள் மெய்ப் பொருள் காணும் நிலைகள் பெறுதல் வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் உண்மையை உணர வேண்டும்.. நிச்சயம் உணர்வார்கள்…! என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும்.

 

அழிவை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் காட்டும் வழியில்” செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiritual circle of sages

அழிவை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மீண்டு “மகரிஷிகள் காட்டும் வழியில்” செல்ல வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் உணர்வின் எண்ணம்… தன் ஞானத்தின் உயர் ஞானத்தால் படைப்பின் பல பொருள்களை எல்லாம் இவ்வுடல் தேவைக்குச் செயலாக்கித் தன் சரீர ஜீவிதத்தை இன்று பக்குவப்படுத்திக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று… இவ்ஈர்ப்புப் பிடிப்பில் பூமியின் சுழற்சியுடன் சிக்குண்ட இஜ்ஜீவ உடலின் “உயிரையும்… உயிரணுக்களையும்…” இந்த உடலில் உள்ள பொழுதே இது வரை யாம் சொன்ன வழித் தொடர்பினால் உயர் காந்த மின் அலைகளை எடுத்துச் சேமிக்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

1.இஜ்ஜீவ காந்த சரீரம் இப்பூமிப் பிடிப்பின் சுவாசத்தை எடுத்து
2.சாதாரண வாழ்க்கையில் வளரும் நிலையிலிருந்து
3.உயர் தன்மைக்கு வீரியத்தைச் செலுத்திடல் வேண்டும்.
4.இப்படி மேல் நோக்கி ஈர்க்கப்படும் தொடர் சுழற்சியினால் இக்காற்று மண்டலப் பிடிப்பில் சிக்காமல் தப்ப முடியும்.

(உடலை விட்டுச் சாதாரண நிலையில் பிரியக்கூடிய உயிராத்மா இந்தப் புவியின் காற்று மண்டலப் பிடிப்பில் தான் சுற்ற முடியும்)

ஆக… வீரியத் தன்மை கொண்ட இவ்வுயிராத்மா மேல் நோக்கிப் பெற்ற உயிர் காந்த மின் அலையின் வளர்ச்சியினால்….
1.உயிருடன் உயிர் அணுக்களும் சேர்ந்த ஈர்ப்பின் உந்தலை
2.எண்ணத்தின் உந்தல் கொண்டு ஒளி கொண்ட ரிஷியின் ஈர்ப்பில் செலுத்தும் நிலையால்
3.ஒளியின் ஒளியாகப் பிரகாச நிலை அடைந்து
4.இந்த மனித உடலிலிருந்தே மனிதன் “பறக்கும் நிலை” பெற்றிருக்கலாம்.

ஆனால் உணர்வின் எண்ணம் இந்த உடல் வாழ்க்கையில் பூமிப் பிடிப்பில் தொடர் நிலையுடன் ஓடும் தன்மையால் சரீரம் அழுகிய நிலையில் உடலின் ஆத்மா பிரிந்ததென்றால்… உடலின் உயிரணுக்களும் வலுவிழந்த தன்மையால் பெற்ற உயிர் சரீர நிலையைக் காட்டிலும்… மீண்டும் பிறப்பு நிலையில் மனிதப் பிறப்புக்கே வந்தாலும் ஞானமும் அங்க அவயங்களின் தன்மையும் “குறுகிய நிலை தான்” பெற முடியும்.

விவசாயத்தில் இன்றெப்படி அதற்குகந்த வீரிய இரசாயண உரங்களைச் செலுத்தி மகசூலில் அதிக நிலையும் காய்கறிகளின் தன்மையை வீரியப்படுத்தி விவசாயம் வளர்ந்துள்ளது. அதைப் போன்று….
1.இச் சரீர உடலின் உயிராத்மாவிற்கு வீரியத் தன்மை தரும்
2.உயர் ஞானத்தின் செயலை மனிதன் செயலுக்குக் கொண்டு வராமல்
3.உடலின் ஆரோக்கியத்திற்கும்… உணவின் சுவைக்கும்தான்… தன் ஞானத்தைச் செலுத்தி விட்டான்.

உயிருக்கும் உயிரணுவிற்கும் தரப்படும் வீரியத் தன்மையில் உணர்வின் எண்ணத்தில் “பிற நிலையின் ஈர்ப்பு நிலையற்று… தன் செயலை வீரியப்படுத்தும் நிலையினால் தான்…” உயர்வு நிலைக்குச் செல்ல முடியும்.

உணர்வுகள் மாற்றப்பட்டு எண்ணத்தின் செயல் பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிற்குச் செலுத்தும் பொழுது மகான்களினால் அன்று வெளிப்படுத்திய சில உண்மை நிலைகளில் மருத்துவ நிலையும் இன்று விஞ்ஞானத்தின் விஸ்வரூபம் எடுத்து விட்டதைப் போன்று
1.அழிவு நிலைக்குச் சென்றுவிடும் பக்குவத்தின் பலனை அறிந்து
2.அதிலிருந்து மீண்டிட மகரிஷிகள் காட்டும் வழியில் செயல்படல் வேண்டும்.

 

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

full moon power

மிக மிகச் சக்திவாய்ந்த உணர்வுகளை பௌர்ணமி தோறும் பதியச் செய்கின்றோம்

இன்று மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ வகையில் நம் உடலை அழகுபடுத்துகின்றோம். அடுத்து ஒரு சிறிய மாற்றமான சொல் வந்தால் போதும்…!

என்னை இப்படிப் பேசி விட்டார்களே..!. என்ற தாங்க முடியாத உணர்வு கொண்டு… விஷத்தையே உட்கொள்ளச் செய்யும். ஒரு நொடிக்குள் இந்த உடலையே அழிக்கும் உணர்வு கூட வந்து விடுகின்றது.

இப்படி மற்றவர்களுடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவருடைய கஷ்டங்களும் மற்றவைகளும் கேட்டுணர்ந்தோர் உங்கள் உணர்வுகளில் படுகின்றது.

உயர்ந்த குணத்துடன் நஞ்சு கொண்ட உணர்வுகள் கலந்த பின் நம் நல்ல குணங்கள் செயலற்றதாக மாறிவிடுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் இதே எண்ணம் தான் அங்கே உயர்த்தவும் சொல்கிறது.

1.ஒவ்வொரு நொடியிலேயும் நம்மைத் தாக்கிடும் அதைப் போன்ற தீமைகளிலிருந்து விடுபட…
2.நம் கண்ணின் நினைவை விண்ணை நோக்கிக் கூர்மையாகச் செலுத்தி
3.நஞ்சை வென்ற அந்த மகரிஷியின் உணர்வை அதைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
4.உங்களுக்கு மன பலம் கிடைக்கும்.. அதிலிருந்து விடுபடும் ஞான்மும் கிடைக்கும்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் அவரவர் கஷ்டங்களை என்னிடம் சொன்னால் அதை நான் கேட்டுணரும் போது அவை யாவும் என்னிடம் கலக்கின்றது.

இருப்பினும் குருநாதர் காட்டிய அருள் வழியில் எனக்குள் வரும் அந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிக் கொள்கின்றேன்.

அதே சமயம் இந்த உபதேசங்களைக் கேட்டு அதன் வழியில் தியானிக்கும் நீங்களும்… பிறருடைய கஷ்ட நஷ்டங்களைக் கேட்டுணரும் போது
1.அந்த உணர்வுகளை நீக்க
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு உறுதுணையாக இருந்து
3.அந்த வழியில் தீமைகள் சேராவண்ணம் பாதுகாப்பாக இருந்து செயல்படுத்துகின்றேன்.

இருப்பினும் நீங்கள் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. போன்ற வகைகளிலும் உலகில் நடக்கும் தீமைகளையும் அசம்பாவிதங்களையும் கேட்டுணர்ந்த பின் உடனே உங்களுக்குக் கொடுத்த தியான சக்தியின் துணை கொண்டு “ஆத்ம சுத்தி செய்து கொள்வதே நலம்…”

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அடிக்கடி உபதேசிப்பது…!

1.மிகவும் சக்திவாய்ந்த மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அந்த அருள் சக்தியை நீங்கள் எளிதில் பெறவும்
2.பௌர்ணமி நாள்களில் உங்களுடைய எண்ணம் விண்ணை நோக்கிச் செல்லவும்
3.விண்ணிலே உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் சேர்பித்தலும்
4.மூதாதையர்களின் உடலில் உள்ள மற்ற உடல் பெறும் உணர்வை அங்கே கரைப்பதும்
5.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக அந்த உயிருடன் ஒன்றி என்றும் நிலை கொண்டு
6.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துவதும் தான் எமது வேலை (ஞானகுரு).

பௌர்ணமி அன்று மிக மிக சக்திவாய்ந்த உணர்வுகளை உங்களில் பதியச் செய்கின்றோம். தியானித்து அதைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

 

உடலைக் காக்க முற்படும் இன்றைய மனிதனின் ஞானத்தால் தன் உயிராத்மாவைக் காக்க முடியாதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Maharishikaludan Pesungal - gnana

உடலைக் காக்க முற்படும் இன்றைய மனிதனின் ஞானத்தால் தன் உயிராத்மாவைக் காக்க முடியாதா…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வ:ளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது…?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக… மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு… அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு… “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்…” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்…
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது… ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா…?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து… உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி…
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க…
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி… அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை… “வீரிய மருத்துவத்திலும்… மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்…
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… மனிதன் ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்துவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

view-of-jupiter

அழிப்பதற்காகப் பயன்படுத்தும் சக்தியை… மனிதன் ஆக்கபூர்வமான செயலுக்காகப் பயன்படுத்துவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பல நூறு டன் எடையுள்ள மணலிலிருந்து” விஞ்ஞானத்தின் செயலில் ஒரு அவுன்ஸ்க்கும் குறைவான சில ரசாயன சக்தியை (URANIUM) மனிதன் பிரித்தெடுத்து இவ்வுலகத்தையே அழிக்கவல்ல வெடி குண்டுகளைச் செய்விக்கின்றான்.

மனிதனின் எண்ணமும் செயலும் எப்படித் தன் ஞானத்தைச் செயல்படுத்திச் சில சக்தி வாய்ந்த அழிவு நிலைக்கு உட்படுத்தும் குண்டுகளை உருவாக்குவது போல்
1.எண்ணத்தின் உணர்வை மாற்றியமைக்கும் உயர் ஞானத்தைக் கொண்டு
2.இவ் உடலின் ஒவ்வொரு அணுவையுமே வீரியத் தன்மைக்கு
3.சம உணர்வு கொண்டு பரிமளிக்கும் செயலினால்
4.மனிதன் தெய்வ நிலை கொண்டு வளர் சக்திகளை உருவாக்க முடியும்.

விஞ்ஞானத்தில் மனிதக் கருவையே உருவாக்கக் கூடிய ஞானமும் செல்கின்றது. தாய் தந்தை இல்லாமல் அமிலச் சேர்க்கையின் உயிரணு வளர்ச்சி கொண்டு, ஜெட பிம்ப வளர்ப்பிற்கு விஞ்ஞானம் செல்கின்றது.

ஆனால் செயலின் பலன் எதிர் நிலையான உணர்விற்குச் சென்று விடும். அப்படி உருவாகும் சிசுக்கள் மனிதனைக் காட்டிலும் வீரிய விஷச் சக்தி கொண்ட பிம்பமாய்த்தான் செயல்படுத்த முடியும்.

இந்தப் பூமியில்… விஞ்ஞானத்தில் தன் ஞானத்தை இக்கலி கடைசியில் இன்றெப்படி மனிதன் செயல்படுத்துகின்றானோ அதற்கு மேல் வீரிய சக்தி கொண்டு வியாழனில் இருந்த மனிதர்கள் அன்று செய்தார்கள்,

1.நம் பூமியில் இப்பொழுது வளர்ந்துள்ள விஞ்ஞானத்தைக் காட்டிலும்
2.பல மடங்கு வீரியத் தன்மை கொண்ட விஞ்ஞானச் செயல்
3.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டதுண்டு.
4.அந்தச் செயலின் தொடர் இன்றளவும் சில நிலைகளில் தொடர் கொண்டுதான் உள்ளது.

தன் ஞானத்தின் உயர் ரிஷி சக்தியை… மனித உணர்வு வளரும் செயலுக்கு
1.தியானத்தில் சம உணர்வு கொண்டு எடுக்கப்படும் உயர் காந்த மின் சக்தியைக் கொண்டு
2.இஜ்ஜீவகாந்த சரீரத்தின் உயிர் ஆத்மா பெறும் உயர்வுதான்
3.ஒளியின் ஒளியாய் எதையும் வளர்க்கும் பிம்பச் செயலுக்குச் செயல்படுத்த முடியும்.

பரப்பிரம்மமாய்.. பிம்பமாய்… பரப்பிரம்மமாகச் செயல் தொடர் பெற.. எண்ணத்தின் உணர்வைக் கொண்டு இஜ்ஜீவகாந்தம் உயர் காந்த மின் ஒளியாய் ஒளி பெறும் தன்மை கொண்டுதான் ரிஷி சக்திக்குச் செல்ல முடியும்.

எண்ணத்தின் உணர்வை இச்சரீர கர்ம காரியத்தில் பொருளீட்டி… உண்டு… உறங்கி… கழித்து… வாழும் வாழ்க்கையில் இச்சரீர ஆசையை வைக்காமல்… எண்ணத்தின் உணர்வை உயர் ஞானத்தில் உய்யும் வழியை உணர்ந்தே… ஒளி பெறல் வேண்டும்.

வாழ்க்கையில் எவ் அலை சுவையை இவ்வெண்ண உணர்வு பெற்றதோ அதன் உந்தலுக்குகந்த இச்சையில்தான் நாம் வாழுகின்றோம்… வாழவும் முடியும்.

ஆனால் மனிதனின் உயர்ந்த தத்துவ சக்தியைக் கொண்டு ஞான ஒளி பெறும் வளர்ச்சிதானப்பா உயர்ந்த வளர்ச்சி…!

1.எல்லா உயிரனங்களிலும் உயர்ந்த நிலை கொண்ட இம்மனிதக் கரு வளர
2.சமமான எண்ணம் கொண்ட சாந்த உணர்வுடன் கூடிய ஜெபத்தால் பெறும்
3.உயர் காந்த மின் சக்தியின் அணுக்களைக் கொண்டு
4.இவ்வுயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே உயர்வு நிலை பெறச் செய்ய முடியும்.

 

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

Gnanaguru Blessings

தியானத்தின் மூலம் நாம் எடுத்துப் பாய்ச்சும் மகரிஷிகள் அருள் சக்தியின் வலு எப்படிப்பட்டது…? நடந்த நிகழ்ச்சி

வட இந்தியாவில் ஒரு சமயம் நானும் (ஞானகுரு) குருநாதரும் (ஈஸ்வரபட்டரும்) போய்க் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது குருநாதர் என்னிடம் காண்பிக்கின்றார்.

ஒரு கூனி இப்படி நடந்து போகின்றான் பார். அவன் கூனியாக (முதுகு வளைந்து) இருக்கின்றான். அவனுடைய சந்தர்ப்பத்தை இப்பொழுது பார்..! என்கின்றார்.

வெகு காலமாக இவன் இப்படிக் கூனிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றான். சிறு பிள்ளையிலேயே இவனுக்கு இப்படி ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து வளர்ச்சியாகி… வளர்ச்சியாகி… அது அவனை வளர விடாமல்… நிமிர முடியாமல்.. இந்த நிலையில் இருக்கின்றது

அவன் குனிந்து கொண்டே போகின்றான். அவனுடைய சந்தர்ப்பம் நீயும் நானும் அவனைப் பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவனுக்கு ஒரு அதிர்ஷ்டம் வந்திருக்கின்றது.. இப்பொழுது பார்…! என்று சொல்கிறார் குருநாதர்.

என்ன சாமி அதிர்ஷ்டம்…? அவன் வேதனைப்பட்டுக் கொண்டல்லவா போகின்றான்…! என்றேன் நான்.

அவன் முதுகுத் தண்டிலே இங்கே உன் கண்ணிலிருந்து நீ அலைகளைப் பாய்ச்சுடா…! என்கின்றார். குருநாதரும் அவனப் பார்க்கின்றார்

உடனே அவனுக்கு அங்கே முதுகிலே அரிப்பு ஆகின்றது. அரிப்பு ஆனவுடனே அவன் என்ன செய்கின்றான்…?

அங்கே ஒரு தூணிலே போய்ச் சாய்ந்து கொண்டு முதுகை வைத்துத் தேய்.. தேய்… என்று தேய்க்கின்றான். தேய்த்ததும் நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விட்டான்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே பரிட்சைக்குப் பார்க்கப்படும்போது அவன் முதுகுத் தண்டில் பார்த்தவுடனே அவனுக்கு அரிக்கின்றது. அப்பொழுது அதைத் தாங்க முடியவில்லை என்று தூணிலே போய்த் தேய்க்கின்றான்.

அதைப் பார்த்ததும் அங்கே இருக்கின்றவர்கள் ஏனப்பா இப்படி…? என்று கேட்கிறார்கள்.

இல்லைங்க… என்னால் அரிப்பு தாங்க முடியவில்லை… என்று சொல்லிவிட்டுத் தூணிலே சொறிந்து கொள்கிறான். நெடு…நெடு.. என்று நிமிர்ந்து விடுகின்றான். இது நடந்த நிகழ்ச்சி…. அவனுடைய சந்தர்ப்பம்…!

1.ஏனென்றால்… அவனை உற்றுப் பார்த்து
2.இந்த உணர்வின் தன்மையை அவன் பெற வேண்டுமென்ற உணர்வைப் பார்க்கப்படும்போது…
3.முதுகு தண்டில் அரிப்புக் கொடுக்கும்போது…
4.இந்தச் சந்தர்ப்பம் அது புற நிலைகளில் இருந்து தாக்கப்படுகின்றது.

உன் பார்வை அவன் மீது பட்டதும் அரிப்பு ஆகி உடனே தேய்க்க ஆரம்பித்து விடுகிறான்… அப்படியே அந்தப் பிடிப்பு விடுகின்றது…! என்று என்னிடம் உணர்த்துகின்றார் குருநாதர்

அவன் சிறு குழந்தையாக இருக்கும் போது “அச்…ச்..” என்று தும்முகின்றான் இரண்டு நரம்பு பிடித்துக் கொள்கின்றது. முதுகை வளைய விடாதபடி செய்கிறது. நிமிர்ந்தால் வலிக்கின்றது.

இப்படியே அந்தக் குழந்தையிலிருந்து வளர்த்து வளர்த்து யாரும் ஒன்றும் செய்யாததனால் அவன் முதுகுத் தண்டு அப்படியே இறுகிப் போய் விட்டது.

அவன் சந்தர்ப்பம் இப்பொழுது அரிக்கப்படும்போது…
1.உணர்வுகள் வேகம் அந்த வாடிய உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
2.அந்தப் பிடிப்பு அகன்றது. அவன் முதுகு நேராகி விட்டது.

ஆனால் இதை எல்லாம் அவனிடம் சொல்லாமல் நானும் குருநாதரும் அப்படியே சென்று விட்டோம். குருநாதருடன் யாம் இப்படிச் சுற்றி வரப்படும் பொழுது சந்தர்ப்பம்… சில பேருக்கு ஆச்சரியப்படும் அளவிற்கு இப்படி நல்லதாகின்றது.

ஆகவே… ஒவ்வொரு நிமிடமும் நாம் வலுவைக் ஊட்டிக் கொள்ள வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது.

குழந்தைகளுக்கு இது மாதிரியான குறைகள் வந்தால் உடனே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதாவது சில குழந்தைகளுக்கு ஊனக் குறைவோ… சிந்தனை இல்லாதோ.. மூளை வளர்ச்சி இல்லாமலோ… இருக்கும். மேலே சொன்ன மாதிரி எண்ணி அந்த மகரிஷிகளின் சக்தியை நமக்குள் வளர்த்துக் கொண்டபின் அதை அவர்களுக்குப் பாச்சுதல் வேண்டும்.

நம்மில் கரு உண்டானதுதான் அந்தக் குழந்தைகள். இதைப்போல அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்ற உணர்வினைக் கூட்டி
1.எங்கள் குழந்தை மகரிஷிகள் உணர்வுகள் பெற வேண்டும்.
2.அது சிந்தனையை வளர்ச்சி பெற வேண்டும்.
3.ஞானத்தின் தன்மை குழந்தையிடம் வளர வேண்டும் என்ற இந்த எண்ணத்தை வலுவாக்கிவிட வேண்டும்.

வலுவாக்கிய சக்திகளை குழந்தைகளுக்கு ஒவ்வொரு நொடியும் உணவு கொடுக்கும் போது இது மாதிரிச் செய்யலாம். அதை தலை வாறும்போது இதைப் போலச் செய்யலாம். அதை பார்க்கும் போதெல்லாம் இந்த நிலை வளர வேண்டும் என்று இந்த உணர்வைப் பாய்ச்சிப் பாருங்கள்.

இதைப் போன்று எண்ணும்போது இந்த உணர்வுகள் நம் குழந்தையைப் பற்றி நமக்குள் மன வலுப் பெறச் செய்வதும் நாம் பாய்ச்சும் அலைகள் குழந்தையின் மேல் படரப் போகும்போது நலமாகும் சந்தர்ப்பத்தை அது உருவாக்கும்.

ஏனென்றால் இவ்வாறு எண்ணிய உணர்வுகள் செயல்படும்போது இது கடவுளாகின்றது. செய்து பாருங்கள்…!