பூமியின் பருவ கால மோதலினால் ஏற்படும் மாற்றங்கள் போல் தான் மனிதனுக்கும் ஏற்படுகிறது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Polariss

பூமியின் பருவ கால மோதலினால் ஏற்படும் மாற்றங்கள் போல் தான் மனிதனுக்கும் ஏற்படுகிறது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது… சூறாவளி… காற்று வீசுவது… எரிமலை வெடிப்பது… பூகம்பம் வருவது…! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே….
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்… பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று… நடப்பது ஒன்றாக உள்ளது… “எல்லாம் விதியின் செயல்…!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்… ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது… உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி… மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர் படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்…
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த காவியங்களில் உள்ள மூலப் பொருள்களை (இரகசியங்களை) அறிந்து கொண்டால் நல்லது

Lord shiva and arjuna

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த காவியங்களில் உள்ள மூலப் பொருள்களை (இரகசியங்களை) அறிந்து கொண்டால் நல்லது

நம் கண்ணில் உள்ள கரு விழியில் அந்த மகரிஷிகளின் நினைவாற்றலைக் கொண்டு வந்து தனக்குள் பதிவு செய்யும்போது அந்தக் கரு விழி… ருக்மணியாக மாறுகின்றது – கண்மணி.

அதாவது… கண்ணுக்குள் இருக்கும் மணி நமக்குள் பதிவு செய்யும் நிலைகளாக மாறுகின்றது. அது தான் ருக்மணி….!
1.கண்மணி ருக்மணியாக மாறுகின்றது.
2.பின் அந்த உணர்வின் தன்மையைக் கவரப்படும்போது உண்மையைச் சொல்லும் சத்தியபாமாவாக மாறுகின்றது.

உதாரணமாக ஒரு தீமை செய்பவனை உற்றுப் பார்க்கும்போது “தீமை செய்கின்றான்…” என்ற உண்மையை உணர்த்துகின்றது சத்தியபாமா.

ஆனால் அந்தச் சமயத்தில் தீமையை அகற்றிய உணர்வின் தன்மையை கண்மணியில் பதிவு செய்து புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டப்படும்போது
1.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி தனக்குள் வலுப் பெறும் நிலையாக உணர்த்தி
2.சத்தியபாமாவாக தீமையை அகற்றும் உண்மையின் நிலைகள் நமக்குள் வளருகின்றது.

அந்த மூலப் பொருளை நாம் அறிகின்றோம்.

மகாபாரதப் போரை குருக்ஷேத்திரப் போரை நடத்தியது யார்…? இந்தக் கண் தான்.

இந்தப் பாரதமான நிலைகள் படர்ந்திருப்பதை… நம் உடலுக்குள் அணுக்களாகப் பதிந்திருப்பதை வழி நடத்திக் கொண்டே இருக்கின்றான் கண்ணன். ஆனால் உயிரான ஈசனோ அதை உருவாக்கிக் கொண்டுள்ளான்.

இதைப் போன்றுதான் நமக்குள் அர்ஜுனன் இருக்கின்றான் நகுலன் இருக்கின்றான் சகாதேவன் இருக்கின்றான். சகாயம் செய்பவனும் இருக்கின்றான். வலிமை பெற்ற குணமும் நமக்குள் இருக்கின்றது.

அது தான் மகாபாரதப் போரில் ஒவ்வொரு குணங்களின் இயக்கங்களை அதனதன் தன்மை கொண்டு ஒருக்கிணைந்து தன் நிலைகளில் வலுப் பெறச் செய்வது. எப்படி..?

1.மிகச் சக்தி வாய்ந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தோமென்றால்
2.இது அனைத்தையும் அது ஒன்று சேர்த்து
3.நமக்குள் ஒவ்வொரு நிலையும் சகாயமாக
4.வலுவின் தன்மையாக அரவணைத்துச் செல்லும்…!

தர்மர் தன் நிலைகளை இரக்கத்துடன் செய்தாலும் சூழ்ச்சியால் அங்கே அடக்கப்படுகின்றது. அதாவது நல்ல குணங்கள் கொண்டு இருப்பினும் ஏமாற்றுவோர் கையில் தான் நாம் சிக்க முடிகின்றது…! என்று காட்டுகின்றார்கள்.

அவன் சூழ்ச்சிக்குள் சிக்கப்பட்டுத் தன் குடும்பத்தையே அடமானம் வைத்து சூதாடுகின்றான் என்றால்… தன் நிலைகள் அறியாது செயல்படுகின்றது நம் உணர்வலைகள்…!

இது போன்ற நிலைகளில் கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் உண்டு. அந்த உணர்வுகளில் வலுப் பெற்ற நிலைகளை
1.நூறு பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையும்
2.ஐந்து பேர் சகோதரர்களாக இருப்பதன் வலிமையையும்
3.ஒரு தந்தைக்குப் பின் ஒரு தாய்க்கு வளர்ந்த நிலைகள் இவ்வாறு என்று பிரித்துக் காட்டுகின்றான்.

அதன் வழியில் ஒவ்வொரு நிலைகளிலும் இந்தப் பூமியில் உருவான உணர்வின் தன்மை நமக்குள் எப்படிப் போராக நடக்கின்றது…? என்ற நிலையை அது தெளிவாக்கப்படுகின்றது மகாபாரதப்போராக…!

ஆனாலும் இது அனைத்தையும் வழி நடத்திச் செல்வதே கண்ணன்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்து அதை வைத்துக் குருக்ஷேத்திரப் போராக நடத்தி அந்த தீமைகளை அடக்க வேண்டும். அருள் ஞானியின் உணர்வினை நமக்குள் முன்னணியில் கொண்டு வர வேண்டும்.

1.ஆக… அந்த அருள் ஞானியின் உணர்வை நமக்குள் வினைக்கு நாயகனாக்க வேண்டும்.
2.இந்த உடலில் உள்ள அனைத்தையும் அடக்கிடும் அரசனாகக் கணங்களுக்கு அதிபதியாக மாற்றிடல் வேண்டும்.
3.அப்படி மாற்றினால் தான் தீமையின் உணர்வு தனக்குள் வராது
4.எத்தகைய தீமையையும் நீக்க முடியும்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

நாம் அந்த விநாயகரை நாம் எண்ணும்போது துவைதம். அங்கே பார்க்கும் போது ஞானிகள் காட்டிய அருள் சக்தியை நாம் நினைவில் கொண்டு இந்த உணர்வின் தன்மை விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.

சேர்த்து… நம் உடலுக்குள் உள் புகுந்து எதிரியாக இருக்கும் வலிமை மிக்க வாலியை வீழ்த்திட வேண்டும். மகரிஷிகளின் பால் நம் எண்ணம் செல்லும் போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து வாலி என்ற எதிரியை… (தீமை செய்யும் உணர்வை) வீழ்த்துகின்றது.

நமது காவியத் தொகுப்புகள் எதுவும் தப்பில்லை. ஆனால் தனித்துப் பிரித்து பார்த்தால் உண்மையைப் பார்க்க முடியாது…!

ஒரு இயந்திரத்தைக் காண்பித்த பின் இது இன்ன வேலை செய்யும் என்று அதை வைத்து விட்டால்… அது தான் முக்கியம்…! என்று அதனை மட்டும் பார்த்தால் என்ன ஆகும்..?

அதனுடன் இணை சேர்க்கும் நிலைகளைக் கவனிக்காமல் இருந்தால் அந்த இயந்திரம் சரியாக இயங்காது.
1.இதிலேதான் தப்பு… இல்லை இல்லை… அதிலே தான் தப்பு…! இருக்க வேண்டும் என்று
2.சரியாகக் கவனிக்காமல் அதை விட்டால் அந்த இயந்திரம் அப்படியே தான் இருக்கும்
3.அதனுடைய முழுப் பலன் கிடைக்காது…!

இதைப் போன்ற போர் முறைகள் வருவது போல் நமக்குள் வரும் தீமையின் செயல்கள் எவ்வாறு இயக்குகிறது..? என்ற நிலையில் அந்த இயந்திரத்தை எப்படி நாம் கண் கொண்டு பார்க்கின்றோமோ… இந்த உணர்வின் இயக்கங்களே நம்மை இயக்குகின்றது… என்ற நிலையில் நம்மை இயக்கும் உணர்வின் இயக்கங்களை அறிய வேண்டும்.

1.ஏனென்றால் ஒவ்வொரு உணர்வுமே வலிமை பெற்றது தான்…
2.இருந்தாலும் அந்த அருள் ஞானியின் உணர்வுகள் அதைக் காட்டிலும் வலிமை பெற்றது.

ஆகவே அத்தகைய சக்தியை மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நாம் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தியை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை எல்லாம் பார்க்கின்றீர்கள்.. சண்டை போடுகின்ற சக்திகளை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்துள்ளது. சண்டை போடுபவர்களை எல்லாம் உங்களிடம் பதிவு செய்து வைத்துள்ளீர்கள். எண்ணினால் மீண்டும் அந்தச் சக்திகள் அந்து உங்களையும் சண்டை போட வைக்கும்.

இதைப் போல் தான் தீமைகளை நீக்கிய அருள் ஞானியின் உணர்வுகளை உங்களிடம் சொல்கின்றேன்… இது காற்றிலே படர்கின்றது… அதே சமயத்தில் உங்களிடமும் பதிவாகின்றது.

1.உங்கள் எண்ணங்களைக் கிளரச் செய்து ஞானியின் உணர்வை இணைக்கின்றோம்
2.ஒவ்வொரு நிமிடத்திலும் இப்பொழுது நீங்கள் சுவாசிக்கும்போது
3.அந்த ஞானியின் உணர்வை நுகரச் செய்து தீமைகளை அடக்கும் சக்தியை
4.உங்களுக்குக் கிடைக்கப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசம்.

நினைவு கொண்டு இதை நீங்கள் பருகுவீர்கள் என்றால் இந்த உணர்வின் வலிமை கூடி உங்களுக்குள் தீமை வராது அதை அடக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…?

 

பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலையை” மனிதன் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SIDDHAS WORLD

பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலையை” மனிதன் பெறவேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில் தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

 

“நம்மை நாம் அறிந்தால் தான்…” நம்மைக் காக்கும் திறனைப் பெற முடியும்

self realizations

“நம்மை நாம் அறிந்தால் தான்…” நம்மைக் காக்கும் திறனைப் பெற முடியும்

உயிரணுவை வளர்ப்பதும்… “உயிரின் நிலைகள் கொண்டு உணர்வை ஒளியாக மாற்றும் நிலைகளுக்கும்” மனிதனான பின் தான் இது முடிகின்றது.

இதெல்லாம் கொஞ்சம் கடினமாக இருக்கும்…! ஆனால் இதை உங்களுக்குள் பதிவு (ஞானகுரு) செய்கின்றேன்… உங்களைக் காக்க இந்த எண்ணம் உதவும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கம் நமக்குள் எவ்வாறு இருக்கின்றது…? என்ற நிலையை நாம் உணர்ந்து கொண்டால் போதும். “தன்னை அறிதல்…!” என்ற நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஈஸ்வரபட்டர் இதைப் போன்று தான் எனக்குக் கொடுத்தார்…
1.விண்ணின் ஆற்றல் உன்னில் எவ்வாறு அது இயங்குகின்றது…? என்ற நிலையை உன்னை நீ அறி
2.உனக்குள் இயக்கத்தை நீ பார்
3.காலத்தால் இயக்கும் உணர்வுகள் மாறுபடுவதும்
4.அதனின் இயக்கத்தால் ஏற்பட்ட உன்னுடைய மாற்றங்களையும்
5.நீ உருவான நிலைகள் கொண்டு உன்னை அறிந்தால் உன்னைக் காக்கலாம்.
6,உன்னை அறியவில்லை என்றால் உன்னைக் காக்கும் திறனே இழக்கப்படுகின்றது
7.உன்னைக் காக்கும் திறன் வந்தால் உன்னைச் சார்ந்தோரையும் காக்க முடியும்.
8.அவரைக் காக்கும் எண்ணம் வளர்த்தால்… அவர் வளர… உனக்கும் காக்கும் உணர்வுகள் வளரும் என்ற
9.இந்தப் பேருண்மையைத்தான் தன்னில் தன்னை அறிந்துடும் எண்ணங்களை எனக்குள் பதிவு செய்தார்.

ஆகவே அதைத்தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன். இதன் மூலம் சந்தர்ப்பத்தில் இது நினைவுக்கு வந்து உங்களைக் காத்திடும் உணர்வுகள்… எண்ணங்கள்… தோன்றும். அந்த எண்ணத்தைக் கொண்டு உங்களைக் காத்திடவும் இது உதவும்…!

ஏனென்றால் யாம் உபதேசிக்கும் போது “புரியவில்லையே…!” என்று உங்களுக்குள் மடக்கி விட்டால் இது புரியாது போகும்.

1.புரியும் நிலைகள் எனக்குள் வர வேண்டும் என்ற எண்ணத்துடன் நுகர்ந்தால்
2.உணர்வின் தன்மை பதிவாகி…
3.அதன் உணர்வின் அலை மீண்டும் தொடரப்படப் போகும்போது
4.அதனுடைய நினைவே உங்களுக்குள் அது புரிந்திடும் நிலையும்… அறிந்திடும் ஆற்றலும்…
5.அறிந்து நுகர்ந்திடும் நிலையும் உங்களுக்குள் உருவாகும்.

ஏதோ சாமி சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று இடைமறித்துத் தடைப்படுத்தினால் அது புரியாத நிலைகளாக உங்களை மறைத்துக் கொண்டு இருக்கும்.

ஒரு ஒளியின் தன்மை வரும்போது அதற்கு முன்னாடி ஒன்றை வைத்து அடைத்து விட்டால் வெளிச்சத்தால் இங்கு எதையும் அறியும் தன்மை வராது.

இதைப் போலத்தான் “நமக்குப் புரியவில்லையே…” என்ற உணர்வினை நீங்கள் இடைமறித்து விட்டால் அது புரியாத தன்மையே ஆகிவிடும்.

உதாரணமாக… ஒருவர் சண்டையிடுகின்றார் என்ற நிலைகளில்
1.அந்த சண்டையின் அர்த்தத்தைக் கேட்காமல் இருந்தால்
2.நமக்கு எதுக்கு ஊர் வம்பு என்று எண்ணிவிட்டால்
3.மீண்டும் அவர் தவறு செய்த எண்ணங்கள் நமக்குள் வராது.

ஆனால் என்ன செய்தார்…? ஏன் சண்டையிட்டார்…? என்ன பேசினார்…? என்று கூர்மையாகப் பார்த்தால் அவர் சண்டை செய்த நிலையயும்… அவர் இப்படி இப்படியெல்லாம் செய்தார்… என்றும் அடுத்தவர்களிடம் சொல்ல முடியும்.

அப்படிச் சொல்லும்போது..
1.அவரின் உணர்வை நுகர்ந்து அவனிட்ட சண்டையை நமக்குள் வளர்க்க முடியும்.
2.அந்தச் சண்டையிடும் உணர்வுகள் நமக்குள்ளும் விளையும்.

நமது உயிரின் வேலை இவ்வாறெல்லாம் செயல்படுகின்றது…! ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆகவே “தன்னைத்தான் அறிதல் வேண்டும்…” என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் தெரியப்படுத்துவது.

சண்டையிடுவோரின் உணர்வைப் பதிவாக்குவது போல் இங்கே உபதேசிக்கும் உணர்வைப் பதிவாக்கினால் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கண்ட அனைத்தையும் உங்களால் புரிய முடியும்… அறிய முடியும்… உணர முடியும்… காண முடியும்…!