தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்

milky way

தீமைகளை நீக்கிடும்… “தூய்மைப்படுத்தும் சக்தி கொண்ட ஆன்மாவாக” மாற்றிக் கொள்ளுங்கள்

அற்புத சித்துகளை எல்லாம் உங்களுக்கு நான் (ஞானகுரு) கற்பித்துக் கொடுக்கலாம். அந்த மாதிரிக் கொடுத்தவர் யாரும் கரை சேர்ந்ததில்லை.. நல்ல நிலையிலும் இல்லை…!

அவரவர்கள் ராஜாவாக… தனிக்காட்டு ராஜாவாக “நான் சர்வத்தையும் அறிந்து கொண்டேன்…!” என்ற நிலைக்குப் போய் விடுகின்றார்கள்.

ஆகவே அந்த அற்புதங்கள் நமக்குத் தேவை இல்லை. நமக்குள் இருக்கும் அற்புதம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.நமது பார்வை பிறருடைய தீமைகளை நீக்க வேண்டும்
2.நமது பார்வை அவர்களுக்குள் அருள் ஞானத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.
3.நம்மைப் பார்ப்போர் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று மனம் மகிழ வேண்டும் என்ற
4.இத்தகைய நிலையை நாம் பெறுவோம் என்றால் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

என்னைப் பார்ப்போர் மனம் மகிழ வேண்டுமென்றால்… நாம் படுகின்ற வேதனையைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி பெறுவதல்ல.
1.நம் சொல்லால்
2.நம் பேச்சால்
3.நம் செயலால்
4.நம் பார்வையால்
5.அவர்கள் அதைப் பார்த்து… “நான் நல்லதானேன்…!” என்று அந்த மகிழ்ச்சி அங்கிருந்து வர வேண்டும்.

ஆகவே… உங்கள் பார்வை பிறருடைய தீமையை நீக்கும் சக்தியாக வர வேண்டும். உங்களுடைய உணர்வின் தன்மை “தூய்மைப்படுத்தும் சக்தியின் ஆன்மாவாக” மாற்ற வேண்டும். தூய்மையான நிலைகள் கொண்டு தீமையைத் தனக்குள் வராமல் ஒளியாக மாற்ற வேண்டும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய நிலைகளை (பெரும் பெரும் பாறைகளை) நொறுக்கி அதனுடைய நிலைகள் துகள்களாகப் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. அதைத் தூசியாக மாற்றி மற்ற கோள்கள் எடுக்கின்றது.

அதிலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து துகள்களாக மாறுகின்றது பின் அதன் ஓட்டத்தில் தூசிகளாக மாறுகின்றது. அதனின் தன்மை தனக்குள் கவர்ந்து “ஒளிச் சுடராக” மாற்றுகின்றது.

இதைப் போல் தான்
1.மாமகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் பால்வெளி மண்டலங்களாக மாற்றி
2.உங்களுக்குள் இருக்கும் எண்ணிலடங்காத குணங்களில் இதை இணைத்து இணைத்துக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய நஞ்சுகளையும் அதனின் தன்மைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே… அதன் உணர்வின் தன்மை பெற வேண்டுமென்ற இந்த நோக்கத்துடன் தான் இதை உபதேசிக்கின்றோம்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் உங்களிலே இயங்கி
2.தீமையை அகற்றித் தூய்மை பெறும் உணர்வின் தன்மைகள் உங்களிலே விளைந்து
3.இந்த உடலை விட்டு அகன்றால் “என்றும் தூய்மையின் நிலைகள் பெறமுடியும்…!” என்ற
4.தன்னம்பிக்கை உங்களுக்கு வரவேண்டும்…! என்பதற்குத்தான் இதைச் செய்வது.

ஒவ்வொருவரும் “நீலவண்ணக் கண்ணனாக…” ஆக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord krishna - blue color

ஒவ்வொருவரும் “நீலவண்ணக் கண்ணனாக…” ஆக வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எப்படி ஒன்றை ஒத்த முறையில் ஒன்றில்லாமல்
2.ஒவ்வொன்றுமே “வளர் சக்தியில் வளர்கின்றதோ”
3.அதைப் போன்று இவ்வுடல் ஆத்மாவின் வளர் நிலையும் அப்படித்தான்…!

இந்த ஜீவ சரீரக் கலவையில் இப்பூமி எடுக்கும் சத்து அனைத்தும் உள்ளத்தினால் இச்சரீர பிம்பச் செயலில் கூட்டும் ஞானச் செயலுக்கும் “அந்தந்தக் கலவைக்குகந்த ஒளி பெறலாம்…”

சூரியன் சமைத்த வண்ணம் “ஆறு…” சமைப்பின் சக்தி ஒளியாய் “ஏழாம்…” அதாவது ஒளி பெறும் அந்தப் பூமியின் “வெளிச்சம்” என்பது
1.சூரியனின் சமைப்பு அமில வண்ணம் மோதியவுடன் தான்
2.பூமிக்கு வெளிச்சமே ஏற்படுகின்றது

ஆக… ஏழாம் நிலையாகச் சூரிய சமைப்பின் கலவையைப் பூமி பெறும் ஒளியில் பிரகாச நிலை கொண்டு… அந்தந்த இடங்களுக்கு ஏற்படும் வண்ணக் கலவையின் விகிதாச்சார படிவத்திற்கொப்ப… பூமியின் நில வள உலோக வளர்ச்சி ஏற்பட்டு… அத்தொடரின் வளர் சக்தி வலுக்கொள்கின்றது.

நாம் சாதாரண அடுப்பை எரிக்கும் பொழுது அதனின் வண்ணம் மஞ்சளாகவோ சிவப்பாகவோ பச்சையாகவோ வெண்மையாகவோ எரிகின்றது.

மேலே சொன்ன நிறங்களில் நெருப்பின் ஜுவாலை எரிந்தாலும் அந்த உஷ்ண நிலை அதனுடைய பக்குவ நிலைக்கு ஏற்படாமல்… வைக்கப்படும் பாத்திரத்தில் “கரி” மண்டுகின்றது… ஒரு பக்கமாக எரிகின்றது… அதனால் “தணல் கக்கும் உஷ்ண நிலை” சீராக அமைவதில்லை.

ஆனால் எரிவாயுவின் பக்குவ எரி ஒளி நிலை “நீலமாக…!” எரியும் பொழுதுதான் அதனுடைய “உஷ்ணம்” பக்குவ நிலை கொள்கின்றது. அதைப் போன்று இவ்வொளி வண்ணங்கள் ஆறு நிலை கொண்டதாகச் சூரிய சமைப்பு வெளிப்படுத்துகின்றது.

ஆகவே…
1.ஜோதி நிலையான நீல வண்ணத்தின் ஒளி சமைப்பு நம் ஆத்மாவாக வேண்டும்.
2.காலை சூரிய ஒளியும் மாலை ஒளியும் நீல நிறமாக நம் கண்ணிற்குத் தெரிகின்றது.
3.நம் அருகில் உள்ள நீர் வெண்மை கொண்டதாகத் தெரிந்தாலும்
4.கடல் நீரோ… இப்பூமியின் சமைப்பு அலையின் நிறமாக… நீல வண்ணமுடன் நமக்குத் தெரிகின்றது.

ஆகாயத்தைக் காணும் பொழுது கருமையும்… வெண் புகை நிலையும்… மஞ்சளான ஒளித் திட்டுக்களும் தெரிந்தாலும்… ஆகாயத்தை ஊன்றிப் பார்க்கும் பொழுது “நீல மேகமாகத்தான்” தெரிகின்றது.

அத்தகைய “நீல வண்ண ஒளியை” நம் ஜீவ ஆத்ம ஒளி ஒளி பெற… இச்சரீர கோளத்தில் உள்ள வண்ணங்களை நீல சக்தியாக ஒளி கொள்ள… இங்கே உபதேசித்து வரும் வழி முறையை ஒவ்வொருவரும் செயல் கொண்டிடுங்கள்.

கீதா உபதேசத்தில் கண்ணணைக் காட்டி…
1.கண்ணணின் வாயைத் திறந்தால் உலகமே தெரிந்தது என்றும்
2.கண்ணனின் விளையாட்டுத் தரத்தை உலகமாய கர்ம காரியத்தில் இவ்வாத்மா விளையாடிச் சத்து பெறும் வழியையும்
3.”நீலவண்ணக் கண்ணன்” என்று நாமமிட்டனர் அன்றிய ஞானிகள்.

நம் உருவத்திற்கே “நீல நிற ஒளி…!” பெற வேண்டும் என்றும்… கீதையில் பல உன்னத உயர்ந்த சக்தி நிலை பெற
1.ஒவ்வொரு சரீரத்தையும் மாயக் கண்ணனாக்கி
2.அச்சரீரத்தில் வளர்க்கும் நீல வண்ண ஒளித்தன்மை பெற
2.பல வழி சூட்சுமங்கள் அந்தக் கீதையில் உண்டு.

இக்கலியில் செயற்கை விஞ்ஞான வார்ப்பு உடலாக இச் சரீர வார்ப்பு செயல் கொள்ளும் செயல் முறையை… உணர்வின் எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞானத்தால் “ஜோதி நிலை பெற்று” வளர் தொடர் வளர்ப்பில் நம் வளர்ப்பு செல்லும்.

இங்கே காட்டப்படும் வழித் தொடரில் ஒவ்வொருவரின் ஞானத்தையும் கூட்டி… எண்ணத்தின் செயலை “ரிஷித் தொடர்புடன் தொடர்பு படுத்தியே” ஆத்ம சொத்தாக வழி பெறும் “ஒளி நிலைக்கு” உயர முடியும்..

1.கர்ம காரிய சரீர ஜீவ பிம்பத்திலிருந்து “ஆத்ம உயர்வுக்கு”
2.ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் உயர் ஞானம் பெற்று
3.சித்து நிலை கொண்டு ரிஷித் தொடர்புடன் “ரிஷியாகலாம்…!”

உணர்வின் எண்ணப் பகுத்தறியும் செயல் வலுவை மனிதன் விரயப்படுத்தாமல் “தன் ஞானம் கொண்டு… ஆத்ம ஞானத்தால் ஒளி ஞானம்..” பெற வேண்டும்.

ஒளி ஞானத்தின் நிலை பெற்றால்… ஒளியின் வழி செயல் “என்றுமே வளர்ச்சி கொள்ளும்…!”

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

Thilagam

நெற்றியில் திலகமிடும் பழக்கத்தை ஞானிகள் நமக்கு ஏற்படுத்தியதன் சூட்சமம் என்ன…?

 

நெற்றியில் திலகம் வைத்தாலும் அந்தத் திலகத்தின் தன்மை எதுவாக இருக்க வேண்டும்…? என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் குறித்துக் கொள்ளுங்கள்

வீட்டில் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மாற்றிவிட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எனக்குள் மன பலம் பெற வேண்டும்… மன வளம் பெற வேண்டும்.
3.எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலைகள் வேண்டும்.
4.குடும்பத்தில் யாராவது நோய்வாய்ப் பட்டிருந்தாலும் அவர்கள் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்.
5.அவர்கள் நோய்கள் நீங்க வேண்டும்… அவர்கள் அறியாத இருள் நீங்க வேண்டும் என்று
6.விரலால் தொட்டு அந்தத் திலகம் இடுவதற்கு முன் இந்த நினைவலைகள எண்ணுங்கள்.
7.நீங்கள் எண்ணிய அந்த உணர்வின் நிலைகள் உங்கள் உடலுக்குள் அலை அலையாகப் பரவிப் படர்கின்றது.

இந்த எண்ணத்துடன் திலகத்தை இடுங்கள்.

அதைப் போல யார் யாரெல்லாம் நலம் பெற வேண்டுமோ திலகம் இடும் பொழுது எண்ணி அவர்களை எல்லாம் நலம் பெறச் செய்யுங்கள்

யார் யாரெல்லாம் நம் மேல் வெறுப்பு அடைந்தனரோ… அந்த வெறுப்பை அகற்ற அவர்களுக்கும் தெளிந்த மணங்கள் வர வேண்டும்…! என்று எண்ணத்தை எண்ணி நீங்கள் திலகமிடுங்கள்

ஏனென்றால் “தொட்டுக் காட்டுவது” (பொட்டில்) என்று சொல்லும் பொழுது
1.பிறர் தொட்டுக் காட்டுகிறார்… என்றால்
2.அவருடைய எண்ணங்களைத் தொட்டுக் காட்டும் பொழுது
3.அவருடைய நிலைகளைத் தான் நமக்குள் நாம் எண்ணிச் சுழலச் செய்கின்றோம்.

ஆகையால் அதைப் போன்று இல்லாது நீங்கள் உயர்ந்த எண்ணங்களை எண்ணி “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஐம்பது முறையாவது எண்ணி அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்.

உங்கள் குடும்பத்தில் யார் யாருக்கெல்லாம் எந்தெந்த வகையில் அவர்கள் நன்மை பெற வேண்டுமோ அவர்களுக்கு எல்லாம் எண்ணத்தால் எண்ணிப் “புருவ மத்தியில்” திலகத்தை வையுங்கள்.

அப்போது இந்த உணர்வுகள் அங்கு ஆழப் பதியும்… நினைவலைகளாகத் தெளிவாக வரும்…. உங்கள் சிந்தனைகள் சீர்குலையாது. வெறுப்பின் அலைகள் உங்களுக்குள் புகாது அதைத் தடுக்க இந்த முறைப்படி நீங்கள் திலகமிட வேண்டும்.

இன்று நீங்கள் உடைக்குத்தக்க பல அணிகலன்கள் அணிகின்றீர்கள். அது எத்தனையோ ஃபேஷனாக இன்று வந்துவிட்டது.

ஆக… நாம் எப்படி ஒருவருடைய நிலைகளை மகிழ்ந்திடும் நிலைகள் செய்கின்றோமோ அதைப் போல “நம் எண்ணங்களை உயர்ந்ததாக்கி” அதையே நாம் ஆபரணங்களாக அமைக்க வேண்டும்.

என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும்… எப்போதும் மகிழ்ச்சி பெற வேண்டும்…! என்று இந்த முறையைச் சிறிது காலம் சொல்லிப் பாருங்கள். அது உங்களுக்குள் தெளிவான நிலைகளாக வரும்.

இப்படி அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நாம் செயல்படுத்துதல் வேண்டும். இவ்வாறு செயல்படுத்தினால் நமது பற்று அந்த மகரிஷியின் பால் செல்கின்றது. அந்த மகரிஷியின் உணர்வு ஓங்கி வளருகின்றது.

அத்தகைய பற்றின் தன்மை
1.அந்த மகரிஷிகளின் சக்திகள் கணக்கு எந்த அளவுக்குக் கூடுகின்றதோ
2.அதன் வழிப்படி நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

அதே சமயம் நம் குடும்பத்தில் வரும் எத்தகைய தீமையும் நம்மை அணுகாது பார்த்துக் கொள்ளுகின்றோம். நம் நினைவின் ஆற்றல் விண்ணை நோக்கிச் செல்லுகின்றது.

விண்ணை நோக்கி செல்லும் நிலையை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால்
1.“சித்திர புத்திரன்” கணக்கின் பிரகாரம் தான் உடலுக்குப் பின் அடுத்த நிலை என்பது போல்
2.எந்த விண்ணின் பற்றை நாம் அதிகமாகக் கூட்டுகின்றோமோ
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் அனைவரும் ஐக்கியமாகின்றோம்.

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

golden jewellery

தங்க நகைகளை அணியும் போது எந்த எண்ணத்துடன் அணிய வேண்டும்…?

 

தங்க ஆபரணங்களை நீங்கள் அணிந்திருந்தால் அந்த ஆபரணங்களை எண்ணி… நம்மைப் போன்றே மற்றவருக்கும் இது கிடைக்க வேண்டும்…! என்று எண்ணுங்கள்.

1.அந்தத் தங்கத்தைப் போன்ற நல்ல மனம் எங்களுக்குள் வளர வேண்டும்.
2.எங்களைச் சார்ந்தோர்… எங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் “தங்கத்தைப் போன்ற மங்காத மனம்” கிடைக்க வேண்டும்.
3.வாழ்க்கையில் தங்கத்தைப் போன்ற பளிச்சென்ற மங்காத நிலைகள் எல்லோரது மனதும் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால் வெறும் நகையாக மட்டும் தங்கத்தை அணிந்து கொண்டிருப்பதற்கு அல்ல…!

தெய்வங்களுக்குத் தங்கத்தை மாலைகளாகப் போட்டு பல விதமான ஆபரணங்களாக அணிந்து பார்க்கின்றோம் அல்லவா…! அந்தத் தங்கம் எவ்வாறு மங்காது இருக்கின்றதோ… இதைப் போன்று நமது எண்ணங்கள் மங்காது அனைவருடைய அரவணைப்புடன் இருக்க வேண்டும்.

காரணம்… குடும்பத்திற்குள் எல்லோருடனும் நாம் மகிழ்ச்சியாக இருப்பினும் அந்த மகிழ்ச்சிக்குள் சிறிது குறை ஏற்பட்டால் உடனே அவர்கள் மேல் கோபமோ ஆத்திரமோ வேதனையோ ஏற்பட்டு நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்கள் மறையத் தொடங்குகின்றது.

அப்பொழுது நம் நல்ல எண்ணங்கள் மறையாது இந்தத் தங்கத்தைப் போன்று மங்காது பாதுகாத்திடல் வேண்டும்.

அவர்களுடைய குறை உணர்வுகள் நமக்குள் வந்ததைத் துடைத்துவிட்டு “பளிச்…” என்ற நிலையில் அவர்களுடைய உணர்வும் தெளிந்திட வேண்டுமென்ற எண்ணத்தை நாம் எடுத்து நமக்குள் வளர்த்திட வேண்டும்.

ஏனென்றால் தியானம் என்றாலே இது தான்…! நமக்காக மட்டுமல்ல…!

சூரியன் எவ்வாறு பிற கோள்களின் நிலைகளைத் தனக்குள் நுகர்ந்து அதிலுள்ள தீமைகளைக் கழித்துவிட்டு ஒளியின் நிலையாக அது உருப்பெற்று வளர்ந்து கொண்டே இருக்கின்றதோ இந்தப் பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கின்றதோ… இதைப் போல நமது எண்ணங்கள் எப்போதுமே அந்தப் பிரகாச நிலைகள் கொண்டு இருத்தல் வேண்டும்.

பிறர் மேல் இருக்கும் குறையோ… குற்றமோ… வெறுப்போ,,, நாம் நுகர்ந்து அறியப்படும்போது… அது நமக்குள் வளராது…
1.அந்த மகரிஷிகளின் உணர்வு கொண்டு பளிச்சிடச் செய்து
2.”தங்கம் கருகாது” எப்படி அதனுடைய உணர்வு என்றுமே ஒளி வீசுவது போல்
3.நம் ஒவ்வொருவருடைய மனதையும் தங்கத்தைப் போன்று மங்காத நிலை பெறச் செய்து
4.நாம் எதிலே ஈடுபட்டாலும் நம் உணர்வுகள் மங்காத நிலைகள் பெறச் செய்ய வேண்டும்.

இதை நாம் வழிப்படுத்த வேண்டும்.

ஜோதி நிலை பெறுவதற்கு… மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

cosmic breathing

ஜோதி நிலை பெறுவதற்கு… மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இன்று நாமுள்ள நிலை பூமிப் பிடிப்பில் சிக்குண்டு சுழலும் நிலைதான்.

உருளுகின்ற உலகினிலே உதித்த உயிரணுக்கள். அவற்றின் பிடிப்புச் சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பில் தான் சுழற்சியுடன் சிக்குண்ட நிலையில் சுழலுகின்றோம்.

1.உணர்வில் குளிரும் வெயிலும் ஏற்படுத்து.ம் உணர்வு எண்ணமுடனும்
2.சுவை உணர்வு… உடல் இச்சையின் தேவை உணர்வு எண்ணத்தில் மோதும் எண்ண அலை உணர்வுடனும்…
3.இதைப் போன்ற விழியெடுக்கும் பட உணர்வும்… செவி கேட்கும் நாத ஒலியின் உணர்வுடனும் நாமெடுத்து
4.அவற்றின் பிடிப்புத் தொடரில் பூமியில் சிக்குண்டு தான் உருளுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பூமியின் இயக்கத்தில் வளரும் தாவர கனி வள திரவ நீர் இவைகள் “பிடிப்பு” நிலையிலும்…
2.ஊர்வன பிடிப்பில் “ஊரும்” தன்மையிலும்…
3.ஜீவராசிகள் “ஓடவும் நடக்கவும்” இடம் விட்டு மாறிச் செல்லவும் வளர்ச்சி பெற்றும்
4.ஜீவ சரீரம் கொண்ட பட்சிகள் “பறக்கும்” நிலை பெற்றிருந்தாலும் அதன் தொடரிலும் வந்து அமரக்கூடிய பூமி ஈர்ப்புடன் தான் வளம் பெற்று வாழ்கிறது.

இருளான இப்பூமி… தன் சுழற்சி வட்டத்தால் ஒளி பெறும் தன்மையை சூரியன் பூமிக்கு எத்திசையில் சந்திப்பு கொள்கின்றதோ அந்நிலைக்குப் பூமி ஒளி பெறுகின்றது.

அதைப் போன்று பூமிக்கு மேல் எண்ண செயல் கொண்ட இம்மனித ஞானத்தால் எண்ண உணர்வைச் சமமானதாக்கி “இருளிலிருந்து ஒளி பெறும் வலுவை” நாம் கூட்ட வேண்டும்.

சூரியன்… பூமியின் நேர் பார்வையில் வரும்போது தன்னைத்தானே சுழன்று ஓடும். ஓட்டத்தில் சூரியனின் தொடர்பு கொண்டவுடன்… “ஒளி பெற்று” பூமியின் அந்தந்த இடங்களில் வளரும் வளர் சக்திக்கு வலு கூட்டிக் கொள்கின்றது.

அதைப் போன்று
1.சம உணர்வு தொடர்பு எண்ணத்தை இச்சரீர இயக்கம் செயல் கொண்டவுடன்
2.நற்சக்தியின் வலுத் திறமையைப் பகுத்தறியும் ஞான எண்ணமுடன் விண்ணிலே எண்ணத்தைச் செலுத்தி
3.இவ்வுடல் பிம்பத்தில் பூமி எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தைக் கீழ் நோக்கி எடுக்காமல்
4.மகரிஷிகளின் அருள் அலையை நேராக மேல் நோக்கிய சுவாசமாக
5.இச்சரீர இயக்கச் சுவாசத்திற்கு எடுக்கும் பழக்கம் வருதல் வேண்டும்

இருளான இப்பூமி சூரியனின் நேர் சந்திப்பு பெற்றவுடன் ஒளி பெறுவதைப் போன்று ஒளி வளர்ப்புச் சரீரமாய் இச் சரீர அணுக்கள் வலுக்கொண்டு “நம் உயிராத்மா ஜோதி நிலை பெற்றவுடன்” உடலின் இயக்கத் தொடர்புடன் ஆத்ம ஒளி எத்தன்மையையும் அறியும் ஆற்றலையும்… வளர்க்கும் வலுத்தன்மையும் பெற்று விடுகின்றது.

பாம்பின் சுவாசம் மேல் நோக்கிய தன்மை கொண்டது,

விஷமான உடலைக் கொண்ட பாம்பு அது எடுக்கும் சுவாச அலை உணர்வு கொண்டு மனிதனை ஒத்த பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் இல்லா விட்டாலும் அதன் சுவாச இயக்கத்தில் எடுக்கும் அலை உணர்வினால் விஷமான உடலில் பல காலங்களுக்கு அவை உயிர் வாழும்,
1.தன் உடலிலேயே மாணிக்கக் கல்லை வளர்க்கும் வலுவைப் பெற்று
2.ஒளி கொண்ட கல்லைப் பாம்பு தருகின்றதல்லவா…!

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வை ஜீவ காந்த சரீர இயக்கத்தில் சமமான நிலைபடுத்தி… சாந்தமுடன் கூடிய வலுத் தன்மை கொண்டு ஞான்னிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களை இஜ்ஜீவ காந்த சரீரம் வளர்த்ததென்றல்
1.இச்சரீரமே மண்டல சக்திக்கு உருவாகும் ஒளி சக்தியாக
2.ஒளி கொண்ட சக்தி நிலையாய் அழியா ஆனந்த நிலை பெற முடியும்.

 

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

Prayer Bhakti

உண்மையான பக்தியும் உண்மையான தியானமும்

 

கோவிலுக்குச் செல்வோர் சிலர் வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்…?

தாய் தன் பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கும். கோவிலுக்குள் போனவுடனே… “ஆண்டவனே என் பிள்ளை இப்படிச் செய்கின்றானே…? நான் பிள்ளையக் கஷ்டபட்டு வளர்த்தேனே… ஊரெல்லாம் அவனை இப்படிச் பேசுகிறதே…! அவன் என்றைக்குத் தான் திருந்துவானோ…?

பையன் தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் விநாயகனிடம் போய் “ஊரெல்லாம் பேசுகிறதே… திமிராகப் பேசிக் கொண்டிருக்கின்றானே… என்றைக்குத் தான் திருந்துவானோ…? நீ என்றைக்குத் தான் பார்க்கப் போகின்றாயோ…? என்று இத்தகைய இந்த வினைகளைத் தான் சேர்த்துக் கொள்கின்றோம்.

நல்ல ஒழுக்கங்களை எப்படி நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் என்று ஞானிகள் காட்டியிருந்தாலும் இந்த நிலைகள் இப்படித்தான் இருக்கின்றது.

முதியவர்களை எடுத்துக் கொண்டால் தெய்வத்தின் மேல் நல்ல பக்தி இருந்தாலும்.. தெய்வத்தின்மேல் நல்ல ஒழுக்கம் நம்பிக்கை இருந்தாலும்… ஞானிகள் காட்டிய வழிப்படி
1.நாம் தெய்வமாக வேண்டும் என்று சொல்லியிருந்தாலும்
2.அந்தத் தெய்வமாக யாரும் ஆகுவதில்லை.

நாம் எண்ணிய எண்ணங்கள் எதுவோ சுவாசித்தது எதுவோ… அதை எல்லாம் நம் உயிர் “ஓ…” என்று ஜீவனாக்கி அந்த உணர்வின் சத்தை “ம்…” என்று உடலாக்கி… நினைவின் ஆற்றலை தெய்வமாக நமக்குள் இயங்க வைக்கின்றது. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தியானத்தில் இருப்பவர்கள் நீங்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் தியானமும் செய்கின்றார்கள்… ஆனால் அங்கே கோவிலுக்கும் போகின்றார்கள்…! என்று இப்படிச் சொல்லாதீர்கள்.

கோவிலுக்குப் போக வேண்டும். ஞானிகள் காட்டிய அருள் வழியை மற்றவர்களைக் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஏனென்ரால் கோவில் நம்மைப் புனிதப்படுத்தக் கூடிய இடம்தான். அதனால் அதை முறைப்படுத்திக் காட்ட வேண்டும். ஆகவே யாம் சொல்லக்கூடியதை நினைவுபடுத்துங்கள்

நீங்கள் செய்வதைக் கண்டால் மற்றவர்களும் என்ன..? என்று பார்ப்பார்கள். கோவிலுக்குச் சென்றால் இந்த மாதிரி கும்பிடச் சொன்னார்… குருநாதர்.

ஆகவே இவ்வாறு கும்பிட்டால் நாம் தெய்வமாக மாறுவோம்…! என்று நீங்கள் சொல்லுங்கள் இது தான் பக்தி.
1.நல்லதைப் போற்ற வேண்டும்…
2,எல்லாரும் போற்றும் நிலைக்கு வளர வேண்டும்…
3.எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
4.விநாயகரை வணங்கும் போதெல்லாம் இப்படி எண்ணுதல் வேண்டும்.

கடை வைத்திருக்கின்றோம் என்றால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே சமயத்தில் நம் பிள்ளைகளிடம் சொல்லும் பொழுது.. விநாயகரிடம் போய்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பா…!
3.இது போல் நீ வேண்டிக் கொண்டு வந்தால் உனக்கு நன்றாக இருக்கும் என்று நாம் போதிக்க வேண்டும்.

இது பக்தி… இதையே நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அது தான் தியானம். நாம் அந்த உயர்ந்த எண்ணங்களைத் திருப்பி எண்ணும்போது நூறு முறை சொல்ல வேண்டும்

ஏனென்றால் இதை எல்லாம் குருநாதரிடம் அடிபட்டு உதைபட்டுத்தான் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டேன். அடி உதை எதுவும் இல்லாமல்… சொல்லால் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே தெரிந்து கொள்கின்றீர்கள்.

இதை நீங்கள் சீராகத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது நடக்கும் பக்தி கொண்டு கோவிலுக்குச் செல்வது நல்லது தான். ஆனால் கோவிலுக்குப் போனால் எப்படிச் சாமி கும்பிட வேண்டும்…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும். எங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த ஆலயத்திற்கு வருவோர் குடும்பங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே கோவிலுக்குச் சென்று விநாயகரை வணங்கும்போதெல்லாம்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும்
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இதை வினையாகச் சேருங்கள்.
4.இதைக் கணங்களுக்கு அதிபதியாக ஆக்குங்கள்.
5.இதையே பக்தியாகக் கொண்டு வாருங்கள்.
6.இதையே தியானியுங்கள்…. இந்தத் தியானமே உங்களுக்குக் கைகொடுக்கும்.

அந்த நிலை பெறுங்கள்… எமது அருளாசிகள்…!

வணக்கத்திற்குரிய நம் குருவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

soul and its atoms

வணக்கத்திற்குரிய நம் குருவைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எப்பொருளைச் செய்விக்கவும் அதற்குகந்த சத்து நிலை.. பொருள்.. எல்லாம் தேவைப்படுகின்றது. பலகாரம் பட்சண்ங்கள் செய்யும் பொழுது அந்தந்தப் பொருளைக் கூட்டும் நிலை கொண்டு தான் அதற்குகந்த நாமம் பெறுகின்றது.

அதைப் போன்று தான்
1.“மனிதக் கரு அமிலச் சேர்க்கையில் வளர்ச்சி பெற”
2.இவற்றின் மூல வித்தை இந்தப் பூமி எடுக்க
3.பல வழிகள் ரிஷிகளினால் வளர்க்கப் பெற்று இன்றளவும் வளர்ந்து கொண்டுள்ளன.

அவர்கள் வகுத்த வளர்ப்பில் சூரியனின் ஒளிச் சமைப்பை இந்தப் பூமி எடுக்க… இந்தப் பூமி சமைப்பமில வளர்ப்பாகப் பல வளர வழி காட்டிய வழியில் வந்த நமக்கு…
1.குரு என்பது
2.நம் உயிராத்மாவே தான்.

உயிராத்மாவின் உயர்வை எண்ணத்தால் உணரும் பக்குவத்தைக் கொண்டு இந்த உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களுக்குச் சேவை செய்து குருவை வணங்கிட வேண்டும். ஆக… வணக்கத்திற்குரிய குரு நம் உயிராத்ம குரு தான்.

அந்தக் குருவிற்கு எண்ணத்தால் நாம் எடுக்கும் உயர்ந்த உணர்வு கொண்டு
1.இந்த உடலின் கோடானு கோடி அணுக்களும் இந்த ஆத்ம உயிரை வணங்கியே…
2.தெய்வமாக்கியே… தெய்வமாகியே…
3.ஆதம உயிரின் தெய்வக் குழந்தைகளாக…
4.உடல் உறுப்பில் வளரும் அணுக்கள் அனைத்தையும் ஒன்று போல
4.குருவின் உயர்வில் ஒவ்வொரு அணுக்களும் ஒவ்வொரு “ஒளி ஜோதிநிலை…” பெறுகின்ற செயல் நிலைக்கு
5.நம் எண்ண உணர்வைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இந்த எண்ணத்தால் உணர்வைக் கூட்டும் குண நிலைக்கொப்பத்தான் உடலின் அணுத் தன்மையே வளர்கின்றது. நம் உடலை நாமே இம்சித்துத்தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாம் எடுக்கும் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப உணவைத்தான் உடல் பெறுகின்றது. எதை நாம் இந்த உடலில் செலுத்துகின்றோமோ அதன் சத்தைத்தான் இந்த உயிராத்மாவும் பெறுகின்றது.

வஞ்சனை கோபம் ஆத்திரம் சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை ஆகியவற்றில் எதை எடுக்கின்றோமோ அதைக் கொண்டு தான் நம் உயிராத்மாவிற்கு… நாம். நம் குரு தெய்வத்திற்கு… அபிஷேகம் செய்கின்றோம்.

உணர்வின் எண்ணத்தைச் செலுத்தும் வழியிலேயே…
1.ஞானிகள் மகரிஷிகள் காட்டிய வழியில் நடப்பதற்கு ஆசையைக் கூட்டுங்கள்
2.நடக்க வேண்டும்…! என்ற செயலை ஞானம் கொண்டு செய்யுங்கள்.
3.எண்ணும் அந்த எண்ண நிலைக்கொப்ப நன்மையாகவே முடியும்.

ஆனால்… செய்யும் செயலுக்கு அதி பேராசையைக் கூட்டி… ஆர்வத்தின் உந்தலை அதிகமாக்கித் தடைப்படும் சமயத்தில் சஞ்சலமும் சோர்வு கொண்டு…
1.செயலின் வேகத்தைச் சாந்தமில்லா முறையில் செலுத்தினால்
2.அதிலே எதிர்ப்படும் நிலையை இந்த உடல் தாங்குவதில்லை.

சமமான நல் உணர்வு எண்ணத்தை நாம் எடுக்க… செயலின் வேகத்தைச் செலுத்தும் செயலும் நல் வழி பெற… “இவ்வெண்ணத்தைக் கூட்டும் உணர்வைப் பக்குவமாக்குங்கள்…!”

நல்லதே நடக்கும்.

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

power of eyes

கண் பட்டு விட்டது… கண் திருஷ்டி..! என்று அடிக்கடி சொல்கிறோம் அதிலே என்ன உண்மை இருக்கின்றது…?

சில பேர் நகை நட்டெல்லாம் நிறையப் போட்டிருப்பார்கள்…. கடை வைத்திருப்பார்கள்…. கடையிலும் நன்றாக வியாபாரமாகும்.

அதைப் பார்ப்பவர்கள்… பரவாயில்லை… உங்களுக்கு என்னங்க குறை…! என்று சொன்னால் போதும். இந்த மாதிரி ஒரு நான்கு பேர் சேர்ந்து சொன்னால் போதும்

என்னைப் பார்த்து… கடையில் நடக்கும் வியாபாரத்தைக் கண்டு “உலகமே கண் பட்டு விட்டது…!” என்று எண்ணுவோம். இது பக்தி இல்லை.

நன்றாக இருக்கின்றீர்கள்..! என்று அடுத்தவர்கள் சொன்னால்
1.இனி உன் வாக்குப் பிரகாரம் எல்லாமே நன்றாக வேண்டும்
2.என்னைப் போல் நீயும் நன்றாக ஆக வேண்டும்…! என்று
3.திருப்பி சொல்வதற்கு என்ன வந்தது…?

ஆனால் அதைச் சொல்ல மாட்டார்கள்.

நகை போட்டிருக்கின்றேன்…! எங்கே பார்த்தாலும் பொறாமையிலே இப்படிப் பேசுகின்றார்கள்…! என்று அவர்கள் மேல் வெறுப்பு உண்டாக்கி விடுவார்கள்.

யாருடனாவது பேசும் பொழுது இவர்களைப் பார்க்கும் போது சிரித்து பேசினால் போதும். அல்லது அப்படி இல்லையென்றாலும் பார்த்தவுடனே நேற்று பார்த்தோமே…! என்று சிரித்தால் போதும்..! இங்கே உணர்வுகள் மாறிவிடும்.

நான் போகும் பொழுதும்.. வரும் போதும்.. என்னைப் பார்த்தாலே இளக்காரமாகத் தெரிகிறது… என்னைப் பார்த்துச் சிரிக்கின்றார்கள். இப்படிப்பட்ட உணர்வுகள் எல்லாம் பதிவு செய்தால் அதனின் உணர்வாகத் தான் வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் பெண்கள்… இதையெல்லாம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் பழக்கத்தில் இருக்கின்றோம். அந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று அறிய வேண்டும். மற்றவர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு முறை பள்ளிக்கூடத்தில் ஒருவர் தன் குழந்தையை “ஏதோ சொல்லி விட்டார்கள்” என்று கேள்விப்பட்டதும்
1.என் மனதே தாங்கவில்லை…
2.நான் இந்தப் பள்ளிக்கூடம் பக்கமே போக மாட்டேன்
3.ஐயோ… எனக்குத் தூக்கமே வரவில்லை…! என்று அந்த அன்பர் (குழந்தையின் தாய்) எம்மிடம் வந்து சொன்னார்.

அப்படி என்றால் இந்தத் தியானத்திற்கு வந்ததன் காரணம் என்ன…?

யார் அந்தக் குழந்தையை ஏசிப் பேசினார்களோ… யாம் சொன்ன முறைப்படி அவர்களும் அந்த மகரிஷிகளின் அருள் பெற வேண்டும்… பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… தெய்வீக அன்பும் பண்பு அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

யாம் உபதேசித்த வழிப்படி அவர்களுக்கும் அந்தச் சக்தி கிடைகக வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதை விடுத்துவிட்டு அந்த அம்மா சாமி… சாமி…! என்று என்னை உயர்த்தித் தியானித்து விட்டு மற்றவர்களை எல்லாம் குற்றவாளி ஆக்கிவிட்டது. இது எப்படிச் சரியாகும்…?

சண்டைக்குப் போவது… வெறுப்பை உண்டாக்குவது என்ற நிலையில் இப்படி ரொம்பப் பேர் இன்றும் செயல்படுகின்றார்க்சள். இது தியானமே அல்ல…!
1.ஆகவே நாம் எதைத் தியானிக்கின்றோம்…?
2.அசுத்தத்தையும் தீமையான உணர்வையும் தான் தியானிக்கின்றோம்.
3.அதைத் தான் பக்தியாகப் பற்றுகின்றோம்.

ஆக மொத்தம் இன்று உங்கள் கடையில் வியாபாரம் இன்று அமோகமாக நடக்கிறது…! என்று இரண்டு பேரை வந்து சொல்லிப் பார்க்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

உடனே இரண்டு மிளகாயை எடுத்துச் சுற்றி வைத்து விடுவார்கள்…! ஏனென்றால் கண் பட்டுவிட்டதாம்…! (திருஷ்டி)

நல்லது தான் சொல்கின்றார்கள்… இன்னும் கொஞ்சம் உங்கள் வாக்கினால் நல்லாக வேண்டும். நீங்களும் இனிமேல் இது போன்று உயர வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

அது போன்று வந்துவிட்டால் “அவர்கள் சொன்ன வாக்கு” நமக்குள் பதிவாகிவிடும்.

அவர்கள் என்ன செய்கின்றார்கள்…!

1.“வியாபாரம் நன்றாக ஆகிறது… பரவாயில்லையே…!” என்று சந்தோஷத்தில் சொல்கின்றார்கள்.
2.அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனது இல்லை.

ஏனென்றால் இது எல்லாம் “பக்தி” என்று சொல்லிக் கொண்டு என்ன செய்கின்றார்கள்…? கண் திருஷ்டி… ஓமழிப்பு…! என்று தான் எண்ணிக் கொள்கிறார்கள்.

அடுத்தாற்போல் சரக்கு வாங்கப் போகும் போதெல்லாம் இந்த எண்ணம் தான் வரும். அந்தக் குறை உணர்வுடன் அங்கே சென்றால் மட்டமான சரக்காகப் பார்த்து எடுத்து வாங்கிக் கொண்டு வந்து விடுவார்கள்.

மட்டமான சரக்கு கடையிலே சரியாக வியாபாரம் ஆகாது. உடனே என்ன நினைப்பார்கள்…? கண் திருஷ்டி பட்டதிலிருந்து என் சரக்கே வியாபாரம் ஆகவில்லை என்பார்கள்.

அதே மாதிரி வீட்டிற்குள் மற்றவர்கள் வந்து உங்கள் குழந்தை அழகாக இருக்கின்றது…! என்று தொட்டு விட்டால் போதும்.

ஐய்யய்யோ…! என் குழந்தைக்குக் கண் பட்டு விட்டது.. என்ன ஆகுமோ..? என்று எண்ணுவார்கள். திருஷ்டி கழிக்க வேண்டும் என்று சொல்வார்கள். காரணம் இது எல்லாம் பக்தி…!

குழந்தை அழகாக இருக்கின்றது என்று ஒருவர் சொன்னால்…
1.உங்கள் அருளால் என் குழந்தை நன்றாகச் சாப்பிட வேண்டும்
2.குழந்தைக்கு நல்ல ஜீரண சக்தி கிடைக்க வேண்டு,ம்
3.உங்கள் வாக்காலே குழந்தை என்றுமே நன்றாக இருக்க வேண்டும்…! என்று
4.இந்த எண்ணம் தான் நம் மனதில் வர வேண்டும்.. அதைச் சொல்ல வேண்டும்.

அவர்கள் யதார்த்தமாகக் குழந்தையைப் பார்த்தவுடன் அந்த மகிழ்ச்சி வருகின்றது. அதை வெளிப்படுத்துகின்றார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ளும் மனது நம்மிடம் இல்லை.

இப்படிச் செய்கின்றார்களே…! என்று குழந்தைக்குப் பால் கொடுக்கும் போதெல்லாம் இந்த உணர்வு வரும். அந்த உணர்வு வந்தவுடன் அந்த பிள்ளைக்கு தலை வலிக்கும்… மேல் வலிக்கும்… எல்லாம் வலிக்கும்… வீர்… வீர்… என்று கத்தி அழுகும்.

யார்…? உங்களால் தான் குழந்தைக்கு இப்படி வந்தது…! என்று தெரியாது.

அவர்கள் பார்த்தார்கள்.. என் குழந்தைக்குக் கண் திருஷ்டி பட்டுவிட்டது. உடனே மிளகாயையும் உப்பையும் எடுப்பார்கள். குழந்தைக்குச் சுற்றுவார்கள். அடுப்பில் போடுவார்கள். போட்டவுடனே அதிலே நெடி எதுவும் வராது.

பாவிகள்…! என்ன செய்திருக்கின்றார்கள் பாருங்கள்..?

“நெடி வரவில்லை…!” என்றால் நாம் எடுத்துக் கொண்ட வெறியான உணர்வுகள்… அந்த வெறுப்பான உணர்வுகளுடன் கையில் எடுத்துச் செல்லும் போது அது அந்தக் காரத்தையே போட்டு அமுக்கி விடுகின்றது. நம் எண்ணம் அப்படித் தான் இயக்கும்.

ஆகவே அடுப்பில் அதைப் போட்டாலும் அந்த நெடி தெரிவதில்லை. சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…?

நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பக்தியில் இது என்ன செய்கின்றது…? நல்லதை நினைத்தால் கூட எடுத்துக் கொள்வதற்கு இல்லை.

காசைக் கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்து… அபிஷேகம் செய்தால்… “சாமி காப்பாற்றும்” என்றால் இது பக்தி அல்ல. இந்த முறையை மாற்ற வேண்டும்.

1.கோவிலுக்குச் சென்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.இது தான் பக்தி. இதுவே தான் தியானம்…!

ஆனால் அன்று நான் உனக்குப் (சாமிக்கு) பூமாலை போட்டேனே… உன்னைத் தேடி வந்தேனே… என்னை இப்படிச் சோதிக்கின்றேயே…! என்ற வகையில் எண்ணினால் இந்தப் பக்தி தான் அங்கே தியானமாகின்றது.

நீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்.. கோவிலுக்குச் சென்றாலும் அங்கே நாம் வேதனையைப்பற்றி அதிகமாக எண்ணினால் அதுவாக வளர்ந்து… அதுவாக நாமாகி…. அதுவாகின்றோம்.

ஆகையினாலே நாம் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். இது தான் உண்மையான பக்தி…!

மனித உருக் கரு உருப் பெறும் நிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sadaiyandi hills

மனித உருக் கரு உருப் பெறும் நிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஓர் பொருளைச் செய்யவோ ஓர் பொருளை வளர்க்கவோ பலமான செயல் வலுக்கூடிய பிறகு தான் அந்தப் பொருள் உருப் பெற்று உபயோகமாகின்றது… அதன் பலனையும் பெற முடிகின்றது.

அதே போல இவ்வுயிரான ஆத்மா உருப் பெறவும் பலவற்றில் மோதி பல சக்திகள் பெற்று இப்பிம்ப நிலை பெறுகிறது.

1.தந்தை உடலின் அமிலம்… தாய் தரும் உயிர்த் துடிப்பு… இவற்றுள் கருவாகி வளர
2.தாயின் சத்து நிலையை உணவாகப் பல கோடி உயிரணுக்களை ஜீவ வளர்ச்சி தந்து
3.கர்ப்ப காலத்தில் எடுக்கவல்ல அறு சுவையின் உயிரணுவின் வளர்ப்புக்கு உணவு தந்து
4.கரு தோன்றி வளர்ந்து பிறப்பில் தன் உணர்வின் உயர்வை உணர்வுக்குகந்த உணவூட்டி
5.இவ்வுயிராத்மாவை வளம் பெற வலுத் தரும் இந்த உடலின் கோடானு கோடி அணுக்களுக்கும்
6.உயிராத்மாவின் சேவை நிலை செய்திடல் வேண்டும்.

உடலின் உயிரணுக்களுக்கொப்ப உணர்வு நிலை தோன்றி… உணர்வின் உந்தலில் எண்ணத்தைச் செலுத்தி… அதனதன் தேவைக்குகந்த உணவை அது அது பெறுகின்றது.

உடல் என்ற உருவக் கூட்டில் நமக்கு நண்பனும் உண்டு… எதிரியும் உண்டு.
1.உடலில் உள்ள உயிரணுக்களில் உணர்வுக்கொத்த சேவை நிலையை நம் உயிராத்மா தந்துதான்
2.தான் குடியிருக்கும் ஆலயத்தை பேணி வணங்குகின்றது.

உடலில் ஏற்படும் உபாதைகள் உணர்வில் மோதியவுடன்… இவ்வெண்ணம் மாற்று நிலையில் செல்லாமல்… உணர்வின் வேதனையை உணர்ந்தே உயிரின் ஆத்மாவும் செயல் கொள்ள வேண்டியுள்ளது. அதே போன்று உடலில் ஏற்படும் இன்ப உனர்விற்கும் இவ்வுயிராத்மாவின் செயல் நடக்கின்றது.

உடலின் உணர்வும் உடலில் வளரும் கோடானு கோடி அணுக்களும் உள்ளதென்றால் அவ்வணுக்களில் பல நிலைகள் உண்டு. இந்த உடல் திடம் கொள்ள… ஆறு நிலையான அமிலச் சேர்க்கையின் வளர்ச்சி கூடி ஏழாம் உருவ திடச் செயல் தான் “இப்பிம்பக் கூடு…!”

இந்த உடல் கலவையில் எல்லாமே உண்டு…!

இந்தப் பூமியில் பல இரசாயண அமிலத் தன்மைகள் வளர்ந்துள்ளனவோ அவற்றின் சீரிய குணம் கொண்ட ரசச் சக்தியும் தங்கச் சத்தும் இரும்பின் கருமை நிற அமில சத்தும் காந்த மின் ஒளி நிலையும் இதன் தொடர்பில் பல இரசாயண அமிலங்களும் உண்டு.

நீர் வாயு குண்டு அணு குண்டு போன்றவற்றைச் செய்விக்க பல உலோக மண் கலவைகளில் இருந்து அதனுடைய சத்தை நுண்ணிய அளவில் எடுத்துச் செய்விக்கின்றனர்.

அந்த நுண்ணிய பொருளினால் உலக்த்தையே அழிக்கவல்ல சத்து நிலை எப்படிச் சேர்க்கபப்டுகின்றதோ அதைப் போன்று இந்த உடல் சேர்த்த அமிலத்தில் சில விஷத் தன்மை கொண்ட அமிலச் சத்துகளும் உண்டு.

மனிதன் இட்ட பெயரில் அவ்வமிலத்தின் செயல் இல்லை. (விஞ்ஞானம் இன்னும் அதைக் காணவில்லை)

உயிரணுக்கள் ஜீவ சரீர ஞானச் செயல்… சொல்லாற்றல் கொண்ட… உருவ உணர்வு எண்ணச் சரீரம் அமைய… அதற்கு வேண்டிய அமிலக் கூறுகள் இந்தப் பூமியில் குறிப்பிட்ட சில இடங்களில் உண்டு.

கடலில் மலைப் பிரேதசங்கள் சிலவற்றிலும்… ஆழ் கிணறுகளிலும்… மனிதக் கரு உருப் பெறவேண்டிய அந்த அமிலச் சத்தை இந்தப் பூமி எடுத்து வெளிக்கக்கும் காற்றின் தொடர்பலைக்குச் செயல்பட
1.பல தெய்வத் தொடர்பு கொண்ட சப்தரிஷிகள் செயல் உருவிலேயே
2.பல ஆயிரம் காலங்களுக்கு முன்பே செயல்படுத்தியுள்ளனர்.

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்

Gnanaguru - papanasam

எப்படிப்பட்ட எண்ணத்துடன் குருவை அணுக வேண்டும்…? என்று அறிந்து கொள்ளுங்கள்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் எனக்கு (ஞானகுரு) உபதேசித்தார்… ஞானிகள் கண்ட பேருண்மைகளை உணர்த்தி அருளினார். அதே சமயத்தில்
1.ஒவ்வொரு காலத்திலேயும் அவர் என்னை அடிப்பார்…
2.சிந்தனையை மேல் நோக்கிச் (வானை நோக்கி) செலுத்தும்படி உணர்த்துவார்.
3.அவருக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை இதே தான்.

ஆனால் நான் உங்களை அடிப்பதில்லை சில நேரங்களில் நீங்கள் தவறு செய்வதைக் கண்டுணர்ந்தபின் “அந்த உணர்வை நீக்க…” அதற்கு அதிர்வின் நிலைகளை ஊட்டி… அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று தான் உங்களிடத்தில் நான் கோபிப்பது.

அருள் உணர்வின் தன்மை பதிந்து… அறியாத இருள்கள் பிளந்திட வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நினைவிற்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஈஸ்வரபட்டர் என்னை அடித்தார்.

அதைப் போன்று உங்களிடம் உள்ள தீமைகளை பிளக்கும்படியாகத்தான் ஒரு சொல்லால்… அந்தச் சொல்லின் வாக்கினைக் கடுமையாகச் சொல்லி யாம் உணர்த்துவது.
1.அதை நீங்கள் வேறு விதமாக… வாழ்க்கையின் நிலைகள் கோண்டு…
2,தவறாக எடுத்துக் கொண்டால்… அது உங்களுடைய பிழைகள் தான்.

ஏனென்றால் உங்களை அறியாது இயக்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தின் நிலைகளிலிருந்து நீங்கள் மீள்தல் வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்கின்றேனே தவிர… இதனால் பல நன்மைகள் உண்டு.

இன்று உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளையும் துன்பங்களையும் குறைகளையும் நீங்கள் கேட்கின்றீர்கள்… பார்க்கின்றீர்கள். அந்தக் கஷ்டங்கள்… வேதனைகள்… அனைத்தும் உங்களில் இணைந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு ஆற்றில் தண்ணீர் போகிறது என்றால் அந்த ஆற்றுக்கு மீறிய அளவில் அதிலே சாக்கடை கலந்தால் என்ன ஆகும்…? ஆறே சாக்கடை மணமாகத் தான் வீசும்.

அதே போல் நீர் போகும் வாய்க்காலில் ஒரு வீட்டின் கழிவு நீர் சென்றால் அந்த வாய்க்காலின் நீரே கெட்டுப் போய் விடுகின்றது.

அதைப் போல பெரும் வெள்ளமாகச் சென்றாலும் அதில் ஊரிலிருந்து வரும் சாக்கடைகள் சேர்க்கப்படும்போது அது என்ன ஆகும்…? அந்த சாக்கடையின் நாற்றமே அந்த ஆற்றில் கலந்துவிடும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் சக்தியை எனக்குள் (ஞானகுரு) சதா எடுத்துக் கொண்டாலும் எம்மிடம் வருவோர் அனைவரும்
1.எனக்குக் கஷ்டம்… எனக்குத் துன்பம்… அதிலே குறை… இதிலே குறை… என்ற வகையில் அடிக்கடி என்னிடம் சொல்லி
2.அந்த ஆறாக ஓடும் நிலைகள் கொண்டு இதை இணைத்தால் அது என்னவாகும்…?

இதைப் பிளப்பதற்கு யாம் எத்தனை கஷ்டப்பட வேண்டும்…?

அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். குருவை எப்படி அணுக வேண்டும்…? என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் வரும் சிரமங்கள் எதுவாக இருப்பினும் அந்தச் சிரமங்களை எல்லாம்
1.இவைகள் எல்லாம் இன்னது எங்களை இயக்குகின்றது.
2.இதிலிருந்து நாங்கள் மீள வேண்டும்.
3.குரு அருள் எங்களுக்கு வேண்டும்… மகரிஷியின் அருள் எங்களுக்கு வேண்டும்…
4.நாங்கள் பொருள் கண்டுணரும் சக்தி பெற வேண்டும் என்று இப்படித் தான் கேட்டுப் பழகுதல் வேண்டும்.
5.அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டிய பருவம் வரும் பொழுதுதான் உங்களுக்கு நல்லதாகின்றது.

ஆனால் ஒரு சிலர் என் கஷ்டம் என்னை விட்டுப் போகவில்லையே…! என்று “ஓ…!’ என்று அழுகின்றார்கள்.

யாம் நல்லாகிப் போகும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாலும் எங்கங்கே அது நல்லாகின்றது…? என்று தான் கூறுகின்றார்கள். அந்த நிலையிலிருந்து அவர்கள் விடுபடுவதில்லை

யாம் எவ்வளவு நல்லதைச் சொன்னாலும் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் முன்னணியில் வைத்து விட்டால் நான் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குள் ஜீவன் பெற முடியாது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் என்னுடைய ஜெபமே உங்கள் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்பது தான்…!

“உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…” என்று யாம் தவமிருக்கும் பொழுது நீங்களும் குரு துணையால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.