தூக்கத்தில் பயந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…?

courageous-wisdom

தூக்கத்தில் பயந்து விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்…?

 

தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்துத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு வரும் ஒரு சிலருக்குத் தூக்கத்தில் “திடுக்” என்று முழிப்பு வரும். சிலர் பயந்துவிட்டேன் என்பார்கள். கறுப்பாக உருவம் தெரிந்தது.. அல்லது வெள்ளையாக ஆவி தெரிந்தது…! என்பார்கள்.

அது மட்டுமல்ல…
1.அந்த நேரத்தில் கை கால்களை என்னால் அசைக்க முடியவில்லை…
2.பேச முடியவில்லை… எழுந்திருக்கவும் முடியாது போல் தோன்றியது என்று சொல்வோரும் உண்டு.
3.இன்னும் சிலருக்கு உடல் முழுவதையும் அமுக்குவது போலவும் மூச்சுத் திணறல் போல இருந்தது…! என்றும் கூடச் சொல்வார்கள்.

இதுகள் எல்லாம் நாம் ஏற்கனவே நமக்குள் எடுத்துக் கொண்ட சில மனித உணர்வுகள் அது இறக்கப்படும் பொழுது நுகர்ந்த உணர்வுகள் ஆகும். நம்முடைய ஈர்ப்புக்குள் வந்த பின் அது இப்படி எல்லாம் தெரியும்.

ஏனென்றால் நாம் புலனடங்கித் தூங்கும் பொழுது நம் நினைவோட்டம் இல்லாத நேரத்தில்
1.அத்தகைய உணர்வுகள் தன் பசிக்குப் பகலில் உணவை எடுக்க முடியாதபடி வரும் பொழுதும்
2.நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியால் அது களைந்து நல்லதாக மாறும் சமயங்களிலும்
3.உயிரிலே மோதும் சமயம் அத்தகைய உருவங்களும் உணர்ச்சிகளும் நமக்குத் தெரிய வரும்.

இதைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை….!

அப்படித் தூக்கத்தில் முழிப்பு வந்து விட்டது என்றால் எழுந்து ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து
1.புருவ மத்தியில் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா…! என்று மூன்று முறை சொல்லி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
3.அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கலாம்.
4.இல்லை பாதி நினைவு இருந்தாலும் அப்படியே படுக்கையில் படுத்தபடியே திரும்பத் திரும்ப அதைச் சொல்லிச் செய்யலாம்.
5.மீண்டும் தூக்கம் தன்னாலே வந்து விடும்.

முக்கியமாகப் புருவ மத்தியில் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று
1.நம் உயிரை அழுத்தமாக எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இழுத்துச் சுவாசித்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த வலுக் கூடினால் எந்த ஆன்மாவின் இயக்கமும் நம் ஈர்ப்புக்குள் வராது. நம்மை இயக்காது. பயத்தின் உணர்ச்சியாக நம்மை இயக்காது. அந்த அச்சுறுத்தும் உணர்வுகளுக்கு நாம் எடுக்கும் அருள் சக்திகள் அச்சுறுத்தலாகிவிடும்.

சந்தேகமோ பலவீனமோ நமக்குள் வராது. நமக்குள் மன பலம் அதீதமாகக் கூடும்… தெளிந்த சிந்தனையும் வரும். பிற உணர்வுகளின் இயக்கங்களை முன் கூட்டியே அறியவும் முடியும்.

செய்து பாருங்கள்…!

கடவுள் எங்கே எப்படி எந்த ரூபத்தில் இருக்கின்றான்…?

Athi Karumaro

கடவுள் எங்கே எப்படி எந்த ரூபத்தில் இருக்கின்றான்…?

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமே.. அண்டமே… அகண்ட நிலைகள் கொண்டிருப்பினும் அது “இருண்ட நிலைகள் கொண்டது தான்…!”

1.ஒரு வீட்டைத் தொடர்ந்து சில நாள்கள் அடைத்து வைத்திருந்தால்
2.அதற்குள் தன்னிச்சையாக வெப்பமாகி அதில் ஓர் ஆவி போல் உருவாகும்.
3.அந்த ஆவி நாளடைவில் ஒரு நெடி கலந்த “விஷத் தன்மை” அடைகின்றது.

இதைப் போல் தான் பேரண்டம் அகண்ட நிலைகளில் இருக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது. அந்த வெப்பத்தின் தணலால் அது ஆவியாக மாறி “அடர்த்தி ஆகி விஷத்தின் தன்மை” அடைகின்றது.

அடுத்தடுத்து இந்த விஷத்தின் தன்மை ஆகி அதனால் ஆவியின் தன்மைகள் வரப்படும் பொழுது
1.இந்த விஷத்தின் தன்மை மீண்டும் தாக்கப்படும் பொழுது வெப்பமாகின்றது.
2.வெப்பத்தின் தன்மை அடையும் பொழுது நகர்ந்து ஓடுகின்றது.
3.ஓடும் பொழுது ஈர்க்கும் காந்தம் என்ற நிலை வருகின்றது.

முதலில் வெப்பம்… பின் ஆவியின் நிலை நாளடைவில் விஷமாகி… மீண்டும் சாந்த நிலைகள் கொண்டு வரப்படும் பொழுது இது அணுக்களாகப் பிரிந்து சென்ற பின்
1.வெப்பம் காந்தம் விஷம் என்ற இந்த மூன்று நிலை பெறுகின்றது.
2.இதைத் தான் மும்மலம் என்று சொல்வது.
3.ஆதிபராசக்தி என்பது வெப்பம்… ஆதிலட்சுமி என்பது காந்தம்… ஆதி சக்தி என்பது விஷம்.
4.விஷத்தின் தன்மை கொண்டு இப்படி மூன்று சக்திகளாக இயங்குகின்றது.

இருப்பினும் அணுத் தன்மை பெற்ற பின் இதைப் போன்று ஒரு உணர்வின் சத்து உருவாகிறது என்றால் காந்தம் தன்னுடன் அதை இழுத்த பின் மோதுகின்றது.

மோதிய நிலைகள் கொண்டு அது தன்னுடன் இணைத்த பின் அந்தச் சத்தின் தன்மை இரண்டறக் கலந்து விடுகின்றது.
1.அந்தச் சத்திற்குப் பெயர் சீதா என்றும்
2.அந்த மணத்திற்குப் பெயர் ஞானம் என்றும்
3,.இந்தச் சத்து தன்னுடன் இணைத்து இரண்டறக் கலந்து கொண்டால் பரப்பிரம்மம் என்றும்
4.”பிரம்மா உருவாக்குகின்றான்…!” என்றும் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் சத்து ஞானம் என்று இப்படி ஐந்து நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது. எந்த மணத்தை இதனுடன் இணைத்ததோ “புலனறிவு ஐந்து…!” என்று ஆகின்றது.

எதற்குள் சென்றாலும் அதன் வலு கொண்டு தனக்குள் இருக்கும் அந்த மணத்தை இயக்கும் என்று பொருள் படும்படியாக நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. இப்படி உருவானது தான்… எல்லாமே…!

ஏனென்றால் கடவுள் எப்படி இருக்கிறான் என்ற நிலையில் நாம் தெரிந்து கொள்வதற்குத்தான்…
1.கடவுள் எங்கேயோ இருக்கின்றார்…
2.அவரே தான் நம்மைக் காக்கின்றார்…! என்ற நம்பிக்கை தான் மனிதர்களிடத்தில் இருக்கின்றது.

ஆனால்
1.உணர்வின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று உள் நின்று இயக்கும் நிலை தான் கடவுள் என்றும்
2.ஒன்றினுள் ஒன்று இணைக்கப்படும் பொழுது உருவாவது ஈசன் என்றும்
3.ஒன்றுடன் ஒன்று இணைத்திடும் பொருள் பரப்பிரம்மம் என்றும்
4.இப்படி இயற்கையின் நிலைகள் எப்படி உருவாகிறது என்ற நிலையைத் தெளிவாக்கியது ஆதியிலே தோன்றிய அகஸ்தியன் தான்.
5.அந்த அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து தான் இப்பொழுது அதை நான் (ஞானகுரு) பேசுகிறேன்.

அகஸ்தியன் தனக்குள் கண்டறிந்து அவனுக்குள் விளைந்து வெளிபட்ட அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்கு முன்னாடி இங்கே படர்ந்திருக்கின்றது.

அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது. நீங்களும் அதை நுகரலாம்.
1.இந்த உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் அந்த உணர்வின் எண்ணத்தை ஏங்கிப் பதிவு செய்து
2.அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது பெற முடியும்.
3.அதைத்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்வது.
4.தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை எல்லோராலும் பெற முடியும் என்பதே அதனின் தத்துவம்.

இப்பொழுது ஒருவர் திட்டிவிட்டார் என்றால் “என்னைத் திட்டுகிறான்…! என்ற எண்ணத்தைப் பதிவு செய்துவிட்டால் மீண்டும் என்ன செய்கிறீர்கள்…?

என்னைத் திட்டினான்.. திட்டினான்… திட்டினான்…! என்றால் அந்த உணர்வுகள் வளர்ச்சியாகி அவன் மேல் வெறுப்பாகி நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள்ளும் வெறுப்பின் தன்மை கலந்து இரத்தக் கொதிப்பு போன்ற பலவிதமான நோய்கள் வரக் காரணமாகின்றது.

ஆகவே ஒரு திட்டியவனின் உணர்வைக் கவர்ந்து பதிவாக்கி அதை நினைவாக்கும் பொழுது நோயாக உருவாவது போல்
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட பேரண்டத்தின் உண்மைகளையும்
2.இயற்கை எப்படி விளைகின்றது என்ற உண்மைகளையும் பதிவாக்கிக் கொண்டு
3.மீண்டும் அதை நாம் நினைவுக்குக் கொண்டு வந்தால்
4.நாமும் அந்த அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும்.
5.அதற்காக வேண்டித்தான் இதை உபதேசிக்கின்றோம்.

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

sivalinga atoms

அரூபலிங்கம்… ஸ்வரூபலிங்கம்…! பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆண்டாண்டு காலமாக மனித குல சமூக நெறி வாழ்க்கை அமைப்பில் ஒழுக்கவியலாக வரைமுறை மீறாச் செயலுக்கும் உயர்வெண்ணம் சிதறிடாத் தன்மை பெற்றிட வாழ்க்கை நெறிச் சட்டங்கள் மகரிஷிகளால் உணர்த்தப்பட்டதிலெல்லாம்
1.அறிவின் ஆற்றலும் வைராக்கிய சிந்தனையுமாகத் “தான் யார்…?”
2.இந்த ஜீவ பிம்ப சரீரம் பெற்றதன் நோக்கம் என்ன…? என்று
3.தன்னை உணரக்கூடிய வழி பிறந்து…
4.உயர் நிலை பெறவேண்டிய ஞானம் கொண்டு பெறும் மெய்ப் பொருளை
5.நாம் உணரத் தான் முடிந்திடும்.

மனோசக்தியின் ஆற்றலே இன்றைய விஞ்ஞானத்திற்கும் “புரியாத ஒரு புதிர் தான்…!”

அப்படியானால்… தன்னைத்தான் உணர்ந்து உயர் ஞான சிந்தனை கொண்டு மெய் ஞானத்தின் பொருளாக இயற்கைச் சக்திகளை அறிந்து கொண்டது எந்தச் சக்தியால்…?

1.உயிராத்ம சக்தி பலம் பெற்றிருந்தால்
2.அதை வெளிப்படுத்தும் செயல் தன்மை கொண்டாலே மனோசக்தி என்று பெயர் பெறுகின்றது.
3.ஆனால் இவைகளைக் கண்டு வியப்பு மேலிடுவதைத் தவிர ஆக்கச் சக்திக்கு அது ஒன்றும் பயன் இராது.

பிண்டமாகிய சரீரத்தைக் கொண்டே அண்டத்தை அறிந்து கொள்ளும் செயலில் பூமித்தாய் ஈர்த்திடும் சூரியனின் சக்திகளை சுவைத்து வளம் பெற்ற இயற்கையின் செயலைத் தன் சரீரத்தின் உள்ளேயும் அதே தொடர் நிகழ்வு பெறுகின்ற தன்மைகளை அறிந்து கொண்டாலும்
1.பரவெளியின் சூட்சமத்தில் சூரிய ஒளிக்கதிர் தன்மைக்குள்
2.இருவித உயிரணுக்கள் (சிவசக்தி அணுக்கள்) கலந்து செயல்படும் செயலை
3.ஞான விழிப்பார்வை கொண்டு அறிந்து கொள்வதே “அரூபலிங்கம்…!”

அந்த உயிரணுக்கள் சரீரத்தில் செயல்படும் நிலைகளில் சரீரம் கொண்டு ஆண் பெண் உடல் கூறுகளாக உயிர் தொகைகளாக ஜீவாத்மாக்களாகின்றது.

அரூபலிங்கம் என்ற அந்தப் பால்வெளி சூட்சமத்தைச் சரீர செயலில் கண்டு தெளிந்து அந்த உயர் சக்திகளை வான இயல் தன்மைகளில் உண்மைப் பொருள் காட்டி ஸ்வரூபலிங்கமாகச் சமைத்துப் பேரின்பச் சக்திகளைப் பெற்று “உயர் ஞான வளர்ப்பாக உயர் நிலை பெறவே வழி வகைகளை ஞானிகள் காட்டினார்கள்…!”

அப்படிக் காட்டியிருந்தாலும்.. இன்றோ சிவலிங்க வடிவு (உடலின் ரூபங்கள்) என்றாலே சிற்றின்ப இரசனைக்கே எண்ணத்தைச் செலுத்தித் தன் நிலையையே மறக்கின்றான் மனிதன்…! எண்ணுகின்ற எண்ணம் அன்றோ செயல்படுகின்றது.

இயற்கையின் செயல்பாட்டை உயர் ஞானத்தால் அறிந்த ஞானிகள் பூமியின் சுழற்சியில்
1.ஆகாயம் காற்று நீர் நிலம் நெருப்பு என்ற பஞ்சபூதத் தன்மைகளில் ஓசை ஒளி என்ற செயல் நிகழ்வுகளையும்
2.ஞாயிறு கோள் திங்கள் கோள் பூமியின் தொடர்பு கொண்ட செயல்பாட்டையும்
3.உயிரணுக்களின் அசைவு நிலைகளையும்
4.ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட செயல்பாட்டில்
5.தன் எண்ணத்தால் தெளிந்த அந்தப் பேரானந்தப் பெருநிலையை
6.”கூத்தாண்டவன்…!” என்ற உருவச் சமைப்பில் இயற்கையின் தத்துவத்தைக் காட்டினார்கள்.

சிவன் உருவமும்… உருவத்தின் ஆனந்த லயமும்… அலங்கரித்துக் காட்டிய தத்துவங்களும்…
1.“இயற்கையின் பால் ஒன்றச் செய்த தன்மைகளை உணர்ந்து கொண்டால்…”
2.மனித எண்ணத்திற்கு மரண பயமில்லை…!

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”

super-computer

விளக்க உரையுடன் “தியானமும் பயிற்சியும்”

உதாரணமாக வேதனைப்படும் ஒருவரைப் பார்த்தால் அந்த உணர்வு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் அந்த விஷத்தின் வேதனை என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

பின் நம் உடலில் உள்ள உணர்வுகள் எந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வுகள் வெளி வந்ததோ அதை அனைத்தையும் நம் கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் உயிரிலே மோதச் செய்கின்றது.

அப்படி மோதச் செய்யும் பொழுது அந்த வேதனையான உணர்ச்சியின் இயக்கமாக எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளில் நமக்குள் இயங்கத் தொடங்குகின்றது. எப்படி…?

சிறு குடல் பெரும் குடல்:-
1.அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் உமிழ்நீராக மாறும் பொழுது
2.சிறுகுடல் பெரும் குடலில் உள்ள அணுக்களை மயக்கமடையச் செய்கின்றது
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் நஞ்சாகக் கலந்து அங்கே நஞ்சான அமிலங்களாக மாறிவிடுகின்றது.
4.அப்பொழுது நமக்குக் குடல் உபாதைகள் எல்லாம் வந்துவிடுகின்றது.

கணையங்கள்:-
இதைக் கடந்து இந்த அமிலங்கள் அடுத்த உறுப்புக்குள் சென்றால் நம் கணையங்களை உருவாக்கிய அணுக்களில் அங்கேயும் சிறு வேதனை வரும்.

கல்லீரல் மண்ணீரல்:-
கணையங்களைச் சீர்படுத்தும் நிலை இல்லை என்கிற பொழுது அந்த அமிலங்கள் நம் கல்லீரலிலும் மண்ணீரலிலும் கலக்கின்றது. அப்பொழுது அங்கிருக்கும் அணுக்களும் இந்த விஷத்தால் சரியாக இயங்காதபடி வரும். கல்லீரலிலும் மண்ணீரலிலும் வேதனைகள் வரும்.

நுரையீரல்:-
நுரையீரலில் இது கலந்தால் அந்த நுரையீரலில் உள்ள அணுக்கள் அனைத்தும் இதைச் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் சளி உருவாகின்றது.

நெஞ்சுச் சளி போன்ற நிலைகளும் ஆஸ்த்மா போன்ற நோய்களும் வேதனை அதிகமானால் டி.பி. போன்ற நோய்களும் உருவாகிவிடுகின்றது.

கிட்னி – சிறுநீரகங்கள்:-
1.அந்த வேதனை என்ற அமிலம் கலந்த உணர்வுகள் கிட்னிக்கு வந்தால்
2.அது இரத்தத்திலிருக்கும் நீரைப் பிரிக்கும் சக்தி இழந்து
3.இரத்தத்துடன் நீர் கலந்து சென்று உடல் முழுவதும் புஸ்… என்று உப்பிப் போகும்.
4.நாம் உடல் உப்பி இருக்கிறோம் என்று நினைப்போம்.
5.ஆனால் நமக்குள் சென்ற பின் இரத்தத்தில் கலந்து ஓர் நீர் சத்துள்ள இரத்தமாக மாற்றிவிடும்.
6.அதனால் பல உபாதைகளும் வருகின்றது. சோக நீர் போன்று ஆகி சோக நோய் உடலில் உருவாகிவிடுகின்றது.
7.சர்க்கரை உப்பு போன்றவற்றைச் சரியாகப் பிரிக்க முடியாதபடி அந்த குறைபாடுகளும் ஆகின்றது.

இருதயம்:-
அடுத்து அந்த உணர்வுகள் நம் இருதயத்தில் கலக்கப்படும் பொழுது இருதயம் பலவீனமாகி விடுகின்றது. நம் எண்ணம் சொல் செயலைச் சீராக இயக்காதபடி ஆகிவிடுகின்றது.

இதைப் போன்று நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இந்த நிகழ்ச்சிகள் நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளை எல்லாம் பாழாக்குகின்றது.

கண்களின் கருமணிகள்:-
அதே சமயத்தில் நம் கண்ணில் கவர்ந்த விஷத் தன்மை கருமணிகளில் தோய்ந்து விடுகின்றது.

வேதனப்படுவோரைப் பார்த்துவிட்டு
1.ஒரு நல்ல கணக்கை எழுத வேண்டும் என்றாலும்
2.ஒரு நல்ல தொழிலைச் செய்ய வேண்டும் என்றாலும்
3.அந்த கருமணிக்குள் வேதனை என்ற விஷம் கலந்த பின்
4.அந்த நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது சிந்திக்கும் வலு இழக்கப்படுகின்றது… சிந்தனையும் குறைகின்றது.

நரம்பு மண்டலம்:-
கண்களின் வழி அந்த வேதனை என்ற விஷம் நரம்பு மண்டலங்களில் அதிகரிக்கும் பொழுது விஷத் தன்மை தோய்ந்து கை கால் குடைச்சல் என்ற நிலை வருகின்றது.

எலும்பு மண்டலம்:-
அதே உணர்வுகள் எலும்பு மண்டலங்களில் இது படரப்படும் பொழுது அந்த எழும்புகளுக்குள்ளும் இனம் தெரியாது வேதனைகள் வருகின்றது. எலும்புகள் தேய்மானம் போன்ற நிலை ஏற்படக் காரணம் ஆகின்றது.

தசை மண்டலம் தோல் மண்டலம்:-
அதே சமயத்தில் நம் தசை மண்டலங்களிலும் விஷத் தன்மை ஆகி தசை வலிகள் வருகின்றது. தோல் மண்டலங்களில் வரும் பொழுது இனம் புரியாத அரிப்புகளும் தோல் வியாதிகள் போன்ற நிலையும் வந்துவிடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் கூர்ந்து கவனித்த உணர்வுகள்
1.நம் நெஞ்சு எலும்புக்குள் ஊழ் வினை என்ற வித்தாகிவிட்டால்
2.எந்தக் கண்ணால் வேதனைப்படுவோரைப் பார்த்தோமோ அவர்களைப் பார்க்கும் பொழுது நினைவும்
3.அந்த நினைவானால் காற்றிலிருந்து சுவாசித்து நம் இரத்தங்களில் மாசுபடும் உணர்வே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்குத்தான் இந்தத் தியானம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அனைத்து அணுக்களும் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை இந்தத் தியானத்தின் மூலம் உருவாக்குகின்றோம்.

1.நாம் கண் வழி எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது
2.கண்ணிலிருந்து நரம்பு மண்டலம் வழியாக எல்லா உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பால்
3.உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய முடியும்.
4.மாசுபடும் இரத்தங்களை மாற்றிப் பரிசுத்தமாக்கி ஒவ்வொரு உறுப்பையும் சீராக இயக்க முடியும்.
5.நோய் வராதபடியும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் நிச்சயம் பெற முடியும்.

ஆண் பெண் ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

siva sakthi power

ஆண் பெண் ஆத்ம ஐக்கியக் கலப்பு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒலியாகி ஒளியாகி நீராகி உருவமானது தான் அண்டவெளியில் அனைத்துமே…!

சப்த நாத சுழலும் சக்தி (ஒலி) உயிரணுவின் ஈர்ப்பில் எண்ணம் கொண்டு வளரும் செயல் நிலையில் ஈர்த்தெடுக்கும் அனைத்துச் சப்த அலையின் குண விசேஷ ஆகார அமில நியதி என்ற வகையில் தன் ஒளி சக்தியின் காந்தத்தைப் புடமேற்றிக் கொள்கிறது.

தனக்குள் புடமேற்றிய நிலையில் எண்ண வலுவாக்கும் சுழல் சக்தியாக எந்த அமிலத்தின் வீரியத்தைக் கொண்டு ஈர்த்ததோ அந்த நட்சத்திர அமில சக்தியின் நிறம் மணம் அனைத்தையும் காத்திடும்
1.ஆதி சக்தியின் நீரமிலத் தொடர்பில் எண்ணம் கொண்டு அத்தகைய உயிரணுக்கள் பிறப்பிற்கு வந்தாலும்
2.சரீரத்தைச் சுற்றியும் அந்தச் சப்த அலை நாதங்கள் சுழல் வட்டமாகச் சழன்று ஓடிக் கொண்டே இருக்கும்.

ஆத்மாவை உணரத் தலைப்படும் ஞானி… ஆத்மாவின் தொடர் சரீரமாக உருமாறும் பஞ்ச பூதங்கள் செயல் தன்மையில்… அந்தப் பஞ்சபூத ஆரோக்கிய அமிலத்தை ஈர்த்திடும் பக்குவமாக… அமுதமாகச் செயல் கொள்ள சரீரம் ஈர்த்திடும் செயலுக்கு…. பரவெளியில் உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமமே சரீரம் பெற்ற பிறகு…
1.ஆண் பெண் என்ற இரு சரீரத்தில் செயல்படும் விதம் உயிரணுக்களின் செயல் தன்மை…
2.ஆணின் உடலிலிருந்து வருவதைச் சுக்கிலம் என்றும்
3.பெண்ணின் உடலிலிருந்து வருவதைச் சுரோனிதம் என்று கூறிய வகைகளில்
4.சிவ சக்தியின் கலப்பு ஆண் பெண் என்று பேதம் உள்ளது.

இருந்தாலும் உயிர் சக்தியின் வலுவிற்கு ஒவ்வொருவரும் உயிரான்ம இணைப்பின் செயலுக்கு வலுக்கூட்டிக் கொள்ளும் பஞ்சபூதத் தொடரில்
1.ஆண் சுக்கிலத்தையும் பெண் தன் சரீரத்தில் சுரோனிதத்தையும்
2.உயர் ஞான வளர்ப்பின் செயலுக்கு வலுக் கொள்ள வேண்டும்.

அதாவது சரீர கலப்பில் உயிர் தொகையை (குழந்தைகளை) உருவாக்குவது போல் எண்ண வலுவின் வீரிய சக்தியால்
1.ஆத்ம ஐக்கிய நிலையில் ஒத்த எண்ணம் கொண்டு
2.சிவசக்தி ஜோதிக் கலப்பாக மூலத்தில் படைப்பின் படைப்பு சக்தி கொண்டு
3.நமக்கென்று ஒரு மண்டலத்தையே சிருஷ்டிக்கலாம்.

சரீரம் கொண்ட நிலையில் காந்த ஒளி அலைகளை எண்ணம் கொண்டு பாய்ச்சி நெற்றிக் கண் என்ற ஞான விழிப்பார்வையால் அறிந்து ஈர்க்கும் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்குத் தன்னைச் சுற்றி ஓடும் சப்த நாத அலைகளை ஈர்த்துச் செயல் கொண்டால் அதுவே தான் பெறும் சக்திக்கு உறுதுணையாகப் பாதுகாப்பு வளையமாக நம்மைக் காத்திடும்.

வளர்ச்சியின் நல் வினைச் செயலுக்கு எதை எண்ணி ஈர்க்கின்றோமோ…
1.அந்த எண்ணத்தின் ஜீவத் துடிப்பிற்கே வலுக்கொடுக்கும்
2.அதிதீவிர எண்ண வலுககூட்டும் அபூர்வ ஒலி ஈர்ப்பாக உயர் ஞான ரிஷி பத்தினி சக்தியை ஈர்த்திடும் நிலைக்கு
3.அதே தொடரில் ஈர்க்கப்படும் அனைத்துச் சக்தியின் வழிமுறைக்கும்
4.இச்செயலின் தொடரில் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்…!

நல்லதைக் காக்க வேண்டும் என்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது…!

Valmiki - ramayana

நல்லதைக் காக்க வேண்டும் என்றால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது…!

தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு கல்யாணம் செய்து கொள்கிறார் என்றும் கங்கணமே கழட்டவில்லை என்றும் காவியத்தில் சொல்வார்கள். அதாவது
1.விண்ணிலிருந்து வந்த ஒரு உயிரணு
2.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்தியைத் தனக்குள் கவர்ந்து
3.தன்னுடன் சேர்த்துக் கொண்டே உள்ளது என்பதை அவ்வாறு காட்டுகின்றார்கள்.

தசரதச் சக்கரவர்த்தி என்றால் நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றி மனிதன் ஆனபின் “பத்தாவது நிலை (கல்கி – ஒளி நிலை) அடையக்கூடிய பருவம் பெற்றவர்…” என்று பொருள்.

நாம் எண்ணக்கூடியது அனைத்தையும் நம் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அந்தச் சக்தியைத் தன்னுடன் இணைத்து தன்னுடன் இயங்கச் செய்கின்றது.

அதனால் தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தருணத்தில் அவர் என்ன ஆனார் என்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
1.ஏனென்றால் அவருக்குள் எத்தனையோ விதமான குணங்கள் இருக்கின்றது
2.அது எல்லாம் அவருடன் சேர்ந்து இயக்கும் சக்தி (மனைவி) என்று பொருள்.

இராமனின் தாயோ எல்லாவற்றையும் அது பரிவுடன் பண்புடன் அரவணைக்கும் சக்தி கொண்டது. அதனால் அந்தச் சக்தியின் துணை கொண்டு அதனின்று உருவாகும் இந்த உணர்வின் அணுக்கள் மற்றவர்களை அரவணைக்கும் சக்தி கொண்டது என்று உணர்த்துவதற்காக
1.இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்து
2.அவனிடம் இந்தச் சாம்ராஜ்யத்தை ஒப்படைக்கலாம்…! என்பது தசரதச் சக்கரவர்த்தியின் எண்ணம்.

தனக்குள் எடுக்கும் நல்ல குணம் கொண்டு அந்த நல்ல குணத்தைக் கொண்டே இந்த உடலை ஆட்சி புரிய வேண்டும் என்ற எண்ணங்கள் கொள்கின்றார் தசரதன்.

அந்த நல்ல குணங்கள் கொண்டு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று எண்ணுகின்றார். இருப்பினும்
1.பரதனின் தாயாரோ தனக்குள் ஆசை கொண்டது.
2.தன் பையனுக்கே பட்டத்தைச் சூட்ட வேண்டும் என்று அது பிடிவாதம் பிடிக்கின்றது.

(உயிர் – தசரதன்; உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் – மனைவியாக இணைகிறது; அதனால் தான் தசரதனுக்கு எண்ணிலடங்காத மனைவிகள் என்று சொல்வது.)

அப்படிப்பட்ட அந்த உயிரின் இயக்கத்தில்
1.எந்த உணர்வின் தன்மை வலிமை பெறுகின்றதோ
2.அந்தக் குணத்தின் தன்மை – தன் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று விரும்புகின்றது.
3.அதனால் உடலுக்குள் உருவான மற்ற நல்ல அணுக்களுக்கெல்லாம் கலக்கங்கள் ஏற்படுகின்றது என்பதைக் காட்டுகின்றனர்.

இருந்தாலும் உடலுக்குள் சகோதரத்துவமாக வளர்ந்த பரதனோ அண்ணனே (இராமனே) ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினாலும் “தன் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டும்…” என்ற இந்தப் பிடிவாத குணங்கள் அங்கே கைகேயிக்கு எப்படி உருவாகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்.

நல்லதைக் காக்க வேண்டும் என்ற நிலையில் சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலுக்குள் வந்த பின் அது விளைந்து
1.அதனுடைய பருவ காலம் வந்த பின்
2.நல்லதையே இயக்கவிடாது எப்படித் தடுக்கிறது…? என்பதையே அங்கே தெளிவாக்குகின்றார் வான்மீகி.

தீமை என்று அறிந்த கணமே அதை நமக்குள் சேராது அது நம் உடலுக்குள் விளையாது தடுக்க வேண்டும். அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உடலுக்குள் இப்படிச் செலுத்தினால் இதற்குப் பெயர் ஆத்ம சுத்தி.

நஞ்சை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலுக்குள் சென்று அது அணுவாக விளைந்து அதிலிருந்து வெளிப்படும் மணம் தீமைகளை வேக வைத்து அதை ஒளியாக மாற்றிவிடும். தீமைகள் அனைத்தும் செயலற்றதாகின்றது.

கொம்பாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Elephant-head ord ganesha

கொம்பாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட வேண்டியது எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உலகோதய எண்ண ஓட்டத்தில் நாம் செயல்படும் காலங்களில் கீழாம் அறிவு நிலையில் பூவி ஈர்ப்பின் சுவாச ஈர்ப்பில் சிக்குண்டு ஒவ்வொரு நாளும் நாம் அலைக்கழிக்கப்படுகின்றோம். (இதை இல்லை என்று யாரும் சொல்ல முடியாது)

அலைக்கழிக்கபடுவதோடு மட்டுமல்லாது
1.நம்முடைய எண்ண வலு வீரியமும் கீழான அறிவு என்ற செயலுக்கே ஈர்க்கப்பட்டு
2.அந்தந்த இச்சையின் குணங்களை ஏற்படுத்திக் கொண்டு கலக்கமுறும் காலங்களாக
3.மீள வழியில்லாதபடி மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் கால சகடத்திலேயே (CYCLE) சுழன்று கொண்டிருக்கின்றோம்.

உண்மை உயர் ஞானத்தைப் பெற விழைவோனுக்கு இதைப் போன்ற பந்தக் கட்டுக்களைத் தகர்த்தெறிய ஞானிகளால் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்டதே “மத்தகமும் கோடும் (கோடாயுதமும்)…!”

1.தீதெண்ணச் சங்கட அலைகளை எல்லாம் தவிர்த்து
2.மனித எண்ணம் என்ற உறுதி… “மலை மேல் நின்று…!”
3.காரிருளாகக் காட்டிய அசுர குண மாயைகளை “கோடாயுதத்தைக் கொண்டு…” மாய்த்தொழிக்க வேண்டும்.

சிற்றறிவின் ஆசைகள் எல்லாம் அகன்று பேரின்ப சாயுஜ்யமாக (உயிருடன் கலக்கும் நிலை) மேலாம் அறிவின் ஞானமாகப் பரவெளி ஞானத்தில் கலந்திடும் செயலுக்குத் தத்துவமாகக் காட்டப்பட்டதே “நீல வண்ண ஒளி பெறும் ஆத்மாவின் மறைபொருள்…”

1.மத்தகம் என்றாலே முன் மூளைப்பகுதி இரண்டும் சிறு மூளைப் பகுதி ஒன்றாக
2.ஞான உணர்வின் எண்ணம் ஆட்கொண்ட காலத்தில்
3.நெற்றிப் பொட்டில் ஜோதித் தத்துவமாக அறிந்திட வேண்டிய செயல் ஆகும்.

நீலவண்ண ஆத்மா சூட்சமத்தில் கலந்திடவே பேரின்பப் பெருநிலையில் இணைந்து செயல் கொள்ளும் மேலெழும் சக்தியாகக் காட்டியதே கணங்களின் பதி… “கணபதி…”

1.பரவெளியில் படர்ந்துள்ள ஒளிகாந்த மின் நுண் அணுக்கள் (நடத்திடும்) எண்ணம் கொண்டு (நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள்)
2.ஒன்றுடன் ஒன்று இணையும் செயலில் உயிர் ஆத்மாவாக மேலும் எண்ண வலு கூட்டிக் கொள்ள ஈர்த்திடும் தொடரில்
3.அதன் எண்ணமே வீரியமாகச் செயல் கொண்டிடும் பக்குவத்தில்
4.சரீரத்தில் ஆண் பெண் சங்கமத்தில் கருவாகத் தோன்றி வினையின் நாயகன் விநாயகன் என்ற சொல்லுக்கேற்ப
5.மேற்கொண்டு தான் ஈர்த்து உயிராத்மாவாகப் பின் கருவாக வந்துதித்த செயலில்
6.அதே எண்ண வலுவின் ஈர்ப்பினால் மேன்மேலும் உயிரணுக்களைக் கூட்டிக் கொண்டு
7.கணங்களாகிய சரீர உயிரணுக்களுக்கு.. “உயிராத்மா” – பதி என்ற பொருள்பட கணபதி ஆகின்றது.

அதே நிலை மனிதச் சரீரத்திலும் உயர் ஞான அறிவு கொண்டு விளங்கிக் கொள்ளும் பக்குவத்தில் ஓ…ம் என்ற ஒலி நாதம் சொல் வடிவ சூட்சமாகச் சுட்டிக் காட்டினர் ஞானிகள்.

1.சிரசைக் காட்டி சிரசில் மேற் பகுதி அசையா நிலையும்
2.தாடை என்ற கீழ்ப் பகுதி அசையும் நிலையும்
3.ஓ…ம் என்ற பிரணவமாகிய யானைகள் கலந்தன..! என்று சூசகப்படுத்தி
4.வாயிலும் உள் நாக்கில் மேலெண்ண நடுப்பகுதியும் உச்சிக்குக் கீழும் ஒளியின் சுடர்ந்த நிலையைத் தெளிவுபடுத்திக் கூறியவற்றில்
5.கடைவாயின் பற்கள் விநாயக உருவத்தில் கொம்பு என்றெல்லாம் மறைமுகப்படுத்தியதற்குப் பொருள்கள் பல உண்டு.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்று உணர்ந்திடல் வேண்டும்.

மனிதனுடைய இந்த உலக வாழ்க்கையில் உடல் பற்றில் வரும் எத்தனையோ எண்ணங்களையும் உணர்வுகளையும்
1.வைராக்கிய சிந்தனை என்ற கொம்பாயுதம் கொண்டு
2.மத்தகத்தால் தகர்க்கப்பட்டால்
3.மெய் ஞானிகள் பெற்ற மேலாம் அறிவு நிச்சயம் சித்திக்கும்…! என்பதே பொருள்.

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

Strength-Courage

இந்த வாழ்க்கையில் நம்முடைய வைராக்கியம் எதன் மீது அதிகமாக உள்ளது…?

 

நம் வாழ்க்கையில் “நமக்கு இப்படியெல்லாம் ஒருவன் துரோகம் செய்தான்… அவனை விடுவதா…?” என்று இறுக்கப் பிடித்துக் கொண்டால் இந்த உடலுக்குப் பின் அவன் உடலுக்குள் தான் நாம் செல்வோம்.
1.அந்த உடலுக்குள் சென்று நோயைத்தான் உருவாக்குவோம்.
2.பின் அந்த உடலை விட்டுச் சென்ற பின் மனிதனல்லாத உடலை நம் உயிர் உருவாக்கிவிடும்.

அதே போல் நம் பையன் மேல் அதிகப் பற்றும் பாசமாக இருந்தால் அவன் வழியில் அவன் உடலுக்குள் சென்றுவிடும். ஏனென்றால் தன்னுடைய குழந்தைகளின் மீது மிகுந்த ஆசையாக இருக்கும் பொழுது சந்தர்பப்பத்தால் ஏற்பட்ட இன்னல்களால் “தன்னால் முடியவில்லை” என்ற நிலையில்… தாங்காதபடி தற்கொலை செய்து கொண்டால் அந்த நிலை ஆகிவிடும்.

எந்தக் குழந்தை மீது பாசமாக இருக்கின்றதோ அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று தற்கொலை செய்யும் பொழுது “எத்தனை வேதனை இருந்ததோ” அதை எல்லாம் அந்தக் குழந்தை உடலிலும் உருவாக்கும்.
1.குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று உருவான அந்த நல்ல உணர்வுகள்
2.கடைசியில் குழந்தையைக் காக்க முடியாது போய்விடுகின்றது.
3.(இதை எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்)

ஏனென்றால் இன்று தீவிரவாதம் என்ற நிலையில் உலகம் முழுமைக்குமே விஷத் தன்மை பரவியிருக்கும் நேரத்தில் வெறித் தன்மையாகப் பிறரைத் தாக்கிக் கொல்லும் உணர்ச்சிகளே அதிகமாகின்றது.

அந்தக் கொல்லும் உணர்ச்சிகள் உடலிலே சேர்க்கப்படும் பொழுது மனித நிலையையே இழக்க நேர்கின்றது. மிருகங்கள் மற்றதை அசுரத்தனமாகத் தாக்கிக் கொல்வது போல் இந்த அசுர உணர்வுகளை உடலில் சேர்த்தவுடனே அசுர உணர்வின் அணுக்கள் நமக்குள் அதிகரித்துவிடுகின்றது.
1.மனிதனுடைய சிந்தனை இழக்கப்பட்டு
2.மனிதனும் மிருகச் செயல்களைச் செயல்படும் தன்மைக்கே இன்று மாறிவிட்டான்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட உணர்வுகள் அனைத்தும் அதே சமயத்தில் மதம் இனம் மொழி என்ற நிலைகளால் தீவிரவாதம் என்று ஏற்பட்ட விளைவுகளாலும் உடலுக்குப் பின் நாம் மிருகங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.
1.இன்று நாம் மனிதனாக இருந்தாலும் மனிதனின் உணர்வுகள் இழக்கப்பட்டு
2.மிருகத்தின் உணர்வுகளாக மனிதன் இப்பொழுது இயக்கும் காலமாக மாறிவிட்டது.

இதைப் போன்ற நிலைகளை நமக்குள் வளராது தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நான்கிலிருந்து ஆறு மணி வரையிலும் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வினை முறைப்படி துருவ தியானத்தின் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து வாழ்க்கையில் அவ்வப்பொழுது வேதனை என்ற உணர்வினை நுகர்ந்தால் அது நமக்குள் உட்புகாது தடுத்துப் பழகுவதே துருவ தியானத்தின் நோக்கம்.

ஆகையினால் ஒவ்வொருவரும் இந்த வாழ்க்கையில் கஷ்டங்களைக் கேட்டறிந்தால் அறிந்தபின் உடனே
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் செலுத்திவிட்டு
2.அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து
3.எங்கள் உடலில் உள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா..! என்று ஏங்கி ஒரு நிமிடம் உடலுக்குள் செலுத்தித் தியானித்தால்
4.நம் உடலில் உள்ள அணுக்கள் மற்றவர் சொல்லும் கஷ்டமான உணர்வுகளை நம் உடலில் சேராது அது நீக்கிவிடும்… சுத்தப்படுத்திவிடும்…!

அதற்குப் பின் யார் கஷ்டம் என்று சொன்னார்களோ அவர் உடலிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பாய்ந்து அவர் உடலில் உள்ள கஷ்டங்கள் நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் குடும்பம் நலமாக வேண்டும் என்று சொல்லிவிட வேண்டும்.

1.இதை நாம் வைராக்கியமாகச் செயல்படுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லதாகின்றது.
3.அதே சமயத்தில் நமக்கும் நல்லதாகின்றது.
4.நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்து விடுகின்றது.
5.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் நிலை பெறுகின்றோம்.

சாகாக்கலை பெரிதா… வேகாநிலை பெரிதா…!

Subtle state

சாகாக்கலை பெரிதா… வேகாநிலை பெரிதா…! 

நிறையப் பேர் சொல்லுவார்கள். “நாங்கள் சாகாக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம். உங்களுக்கு சாகாக்கலை தெரியுமா…?” என்று எம்மிடமே கேட்கின்றார்கள்.

போகர் சொன்னாராம்… சாகாக் கலையைப்பற்றி…! சில பேர் காயகல்பத்தைப் போட்டுச் சாப்பிட்டு அதையெல்லாம் நான் வைத்திய ரீதியில் சாகாக் கலையைக் கற்று இருக்கின்றேன்.

ஆகையால் அந்த மருந்தெல்லாம் போட்டு மந்திரங்களைச் சொல்லி போகர் காட்டிய வழியில் நான் சாகாக்கலை கற்றிருக்கின்றேன். உங்களுக்கு என்ன தெரியும்…? என்பார்.

இவ்வாறு நான் சாகமாட்டேன் என்று சொன்னவர் மருந்திலே எதிர்நிலை ஆகிவிட்டால் என்னமோ.. எதிலோ குறையாகி விட்டது… எனக்கு இப்படி வந்துவிட்டது…! என்பார்கள். இது சாகாக் கலை.

இப்பொழுது யார் இதை உணர்த்தினாரோ அவர் இறந்த பிற்பாடு இன்னொரு உடலில் பிடித்துக் கொண்டு இதே ஆசையில் இருப்பார். இதே உணர்வில் எண்ணிவிட்டு அந்த மந்திரம் எல்லாம் கற்றுக் கொண்டு இவர் போவார்.

அங்கு போனவுடன் சாகாக் கலையில் அவரும் இதே கதியாக அதைச் செய்தேன்.. இப்படியாகி விட்டதே…! என்று பைத்தியம் பிடித்த மாதிரி இரண்டு உணர்வும் சேர்ந்தவுடனே இருக்கின்றவனை எல்லாம் பைத்தியமாக்கி விடும்.

அவர்களிடம் மருந்து வாங்கிச் சாப்பிடுபவர்களெல்லாம் என்ன ஆவார்கள்…? இதைக் கண்டுபிடித்தேன்… என்று
1.கடைசியில் நெகடிவ் பாசிட்டிவ் என்ற நிலையில்
2.மருந்து சாப்பிடுபவர்களையும் சாகாக் கலையாக நீயும் வாயேன்…! என்று இழுத்துக் கொண்டு போகும்.
3,இது சாகாக் கலை.

யாம் (ஞானகுரு) இப்பொழுது உபதேசிப்பது கல்கி… – பத்தாவது நிலை. அடுத்து ஒளியாகி விட்டது. இனிப் பிறவி இல்லை. இது வேகாக்கலை

1.ஒரு மனிதன் எவ்வளவு முழுமையாக இருக்கட்டும்.
2.தீயில் குதித்து விட்டால் என்ன ஆகின்றது…?
3.உடல் கருகிறது. உயிர் அழிவதில்லை

அணுகுண்டு போட்டுக்கூட வெடிக்கச் செய்கின்றான். ஒரு அணுவின் ஆற்றல் கதிரியக்கம். பாறைக்குள்ளிருப்பதும் கதிரியக்கம் தான்.

கதிரியக்கத்தினால்தான் தன் சக்தி எந்தப் பாறை மண்ணுக்குள் இருக்கின்றதோ எண்ணி இழுத்துத் தன் இனமான சத்து எதனுடன் கலந்து இருக்கின்றதோ அந்த உணர்வைத் தனக்குள் எடுத்துப் பாறையாக விளைகின்றது.

அதற்குள் தன் இயக்கத்தின் வலுக்கொண்டு அதனுடன் எது விளைந்து உருவானதோ அதே கதிரியக்கச் சக்தியால்தான் இரும்பு உலோகமும் உருவாகின்றது.

1.இதுவே அந்த நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய மற்ற பொருட்களுடன் கலந்து
2.மற்ற பொருள் உருவாக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மையைப் பிளந்து
3.கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துக் கொண்டவன் விஞ்ஞானி.

அந்தக் கதிரியக்கத்தைத் தனக்குள் எடுத்துச் சேமித்து மீண்டும் வெடிக்கச் செய்யப்படும்பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து தன் இனமான நிலைகள் எதுவோ அதிலெல்லாம் மோதும்.

அது மோதியபின் புயலைப் போன்று தான் எதனை உருவாக்கியதோ அதனுள் இருக்கும் உணர்வைக் கரியாக்கிவிட்டு தன் கதிரியக்கச் சக்தியுடன் இணைந்து சத்தை ஒளியாக எடுத்துக் கொள்ளும். இது கதிரியக்கச் சக்தி.

இதைப் போலத்தான் மெய் ஞானிகளின் உணர்வலைகளைக் கொண்டு வரப்படும் பொழுது உணர்வுக்குள் இருக்கும் அணுவைப் பிளந்து விட்டு அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஒளியாக மாற்றி
1.எத்தகைய உணர்வின் தன்மை தனக்குள் வந்தாலும் இந்த உணர்வின் தன்மை பிளந்து
2.உயிருடன் ஒன்றிய ஒளியாக நிற்பது… இதுவே “வேகாக்கலை…!”

தீயிலே ஒரு மனிதன் இறந்து விட்டால் தீயிலே கருகிவிட்டாலும் அணு குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து அதனின் உணர்வு தசைகளைக் கருகச் செய்தாலும் அந்த உடலில் இருக்கும், உயிரை ஒன்றும் செய்ய முடியாது. “உயிர்” வேகாக் கலை பெற்றது.

அதனின் உணர்வு கொண்டு நமது உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மையை அணுவைப் பிளந்து அணுவின் தன்மை ஒன்று சேர்த்து அதனை வெடிக்கச் செய்யும் பொழுது தன் இனத்தைப் பெருக்கும்

அதைப் போல அந்த மெய் ஞானி தன் உணர்வின் சக்தியை உணர்வின் எண்ணங்களை மாய்க்கச் செய்து உணர்வின் தன்மையை தன் ஒளியாக மாற்றி இந்த உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு வேகாக்கலையாக
1.இன்றும் எதனின் நிலையாக நஞ்சுகள் வந்தாலும் அதனைப் பிளந்து
2.உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையில் வேகாநிலை அடைந்து
3.சப்தரிஷி மண்டலமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அணுகுண்டை வெடித்தபின் எந்த உலோகத்திற்குள் இருந்தாலும் அதை பிளக்கச் செய்து தன் இனத்தின் தன்மையை அது வளர்த்துக் கொள்கிறது.

இதைப்போலத்தான் அந்த மெய் ஞானிகள் தன் உணர்வின் ஆற்றலை இந்த உணர்வுக்குள் இருப்பதைப் பிளந்து உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து அணுவின் தன்மையை ஒளியாக மாற்றியவர்கள்.

மெய் ஞானிகள் அனைவரும் உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து வேகாக்கலை என்ற நிலையை அடைந்தவர்கள்.
1.எத்தகைய அணுகுண்டும் அவர்களை அசைக்காது,
2.எத்தகைய நஞ்சு கொண்ட நிலைகள் வந்தாலும் தீயில் இட்டாலும் அவர்களைப் பாதிக்காது.

அவ்வாறு உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாக என்றும் நிலைத்து இருக்கும் அதனின் துணை கொண்டு
1.நாம் அனைவரும் அந்த வேகாக்கலை என்ற உணர்வின் சக்தியைப் பெற வேண்டும்
2.ஒவ்வொருவரும் இந்த மனித உடலில் இருந்துதான் பத்தாவது நிலை அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் எமக்கு உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசித்து இந்த உணர்வைக் கேட்டறிந்த அனைவரும் அடுத்து கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த துருவ மகரிஷியின் அருள் சக்தியைப் பெறும் தகுதி பெற்றவர்கள் ஆகின்றோம். வேகா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம்.

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும்…?

Image

om vinayakar

“நீலவண்ண உயிராத்மாவாக…” எப்படி ஆகவேண்டும் 

 

“மெய்யை மெய்யால் உணர்தலும் ஒன்று…
அறிவை அறிவால் அறிதலே நன்று…!
1.கோடாயுதம் கொண்டு மத்தகத்தால் தகர்க்கப்பட
2.மேலாம் அறிவு சித்தித்தது…! என்பது மெய்ப் பொருள் காணும் நிலை.

வழிவழியாக வந்த இந்தத் தத்துவங்கள் அனைத்தும் “குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்…!” என்று மறைபொருள் ஆக்கப்பட்டுவிட்டது. குரு என்பவன் மெய்ப் பொருளின் உண்மையை நாடிக் கோபம் சுடு சொல் தவிர்த்து மெய் ஞானம் உரைத்தலே நன்று.

ஆனால்
1.இனிய சொல்லால் வார்த்தைகள் ஆடி (ஏமாற்றும் நிலை)
2.நிலையற்ற பொருள் செல்வத்தை அடைவதிலும் அல்லது அதை அளிப்பதற்கும்
3.தான் ஒரு கருவியாகச் செயல்படும் எண்ணத்தையும் தவிர்த்திடல் வேண்டும்.

ஆக தான் பெற வேண்டியதைப் பெற்றே உயர்த்திடும் வழியாகப் பேரருள் செல்வத்தைப் பெற்றிடவே பூமியின் ஈர்ப்புப் பிடிப்பில் சிக்குண்டுவிடும் எண்ணச் செயல்களை எல்லாம் களைந்திடல் வேண்டும்.

குரு என்பவன் மெய்ப் பொருளை வாய்மையால் உபதேசிக்கும் நிலையில் நின்று அறிவின் அமைதிக்கு வழி காட்டிட வேண்டுமப்பா…!

ஆனால் இன்றைய குருமார்கள் செல்வத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் செல்வத்தைக் கண்டுபிடிக்கப் போகின்றார்கள்…?

வாழ்க்கை நிலையில் அருள் செல்வம் பெற்று உயர் நிலை பெறவேண்டியவன்…
1.செல்வச் செழிப்பை எண்ணத்தில் கொண்டு…
2.அதி ஆசைக்குத் தன்னையே அடகு வைத்து…
3.உயர் ஞானத்தால் ஆத்ம பலம் பெற்றிட வழிகாட்ட வந்த உபதேசியின் (குரு) நிலை எல்லாம்
4.குறி சொல்பவனின் நிலை ஆகிவிட்டது…!

அந்த நிலை நமக்கு வேண்டாம். “நான் தான்…!” என்ற நிலையே உயர் ஞான வளர்ப்பிற்குத் தடைக்கல் ஆகிவிடும்.

அறிவை அறிவால் அறிவது என்பதே தத்துவப் பொருள் காட்டப்பட்ட உண்மையின் சாரங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்பதே.

ஆகாரத்தை நாம் உண்ணும் நிலையில்… உண்ணும் ஆகாரங்களின் சுவை குணம் மணத்திற்கொப்ப கண்களால் பார்த்து எடுக்கும் சுவாசத்தின் எண்ணத்தால் ஜீரணத்தின் செயல்பாடு தொடங்கினாலும் “வாயின் கடைவாய்ப் பகுதியில் நடைபெறும் ஓர் சூட்சமம் உள்ளது…!”

ஓ…ம் என்ற வடிவத்தின் நாதமாக ஆகாயவெளி உயிரணுக்களின் கலப்பால் அந்த ஓங்கார நாதத்தையே ஒலி கொண்டு ஒளியாக்கும் தொடருக்கு வருதல் வேண்டும்.

மனிதச் சரீர அமைப்பில் சிரசையே ஓ…ம் என்ற வடிவமாகக் கண்ணுற்றுப் பார்க்கலாம். சிரசின் கீழ் தாடைப் பகுதி அசைவதிலும் ஓர் சூட்சமதைக் கண்டு கொண்டு வான இயல் தத்துவத்தையே எண்ணத்தால் உணர்ந்து தெளிந்தவர்கள் மெய் ஞானிகள்.

சிவசக்தியின் அணுக்கள் கலந்திடும் செயலில் கண்டப்பகுதியை (தொண்டை) ஆகாயம் என்றும் அங்கு கலந்திடும் அணுக்களுக்கு “{மஹேஸ்வரன் – லலிதை” என்று சூட்சமப்படுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

அதாவது உணவாக உட்கொள்ளும் ஆகாரத்தையே அமில மூலங்களாக” மாற்றி… “பஞ்சேந்திரியங்கள் வழியாகச் செயல்படுத்திடும் நாடிகள் சரீரத்தின் கதியை இயக்குகிறது.

நாம் வழி காட்டிடும் தியானத்தின் தொடரில் உணர்வு (உணர்ச்சிகளாக) கொண்டு எடுத்திடும் ஒளிகாந்த சக்தியின் வீரியம் கொண்டு சரீரத்தில் சக்தியை ஈர்த்துப் பெற்று அதை விளைய வைத்து “நீல வண்ண ஒளி ஆத்மாவாக” ஒவ்வொருவரும் ஆக்கம் பெற வேண்டும்.

1.உடலுக்குள் பரப்பும் சக்திகள் அனைத்தும் மேலான அறிவெண்ணம் கொண்டு
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் தியானமாக ஒன்று குவிக்கப்பட்டு
3.நீல வண்ண ஆத்மாவாக்கிடும் செயலுக்கு – “உந்திடும் விசைத் தன்மையாக”
4.கீழ் தாடைப் பகுதியினுள் அமைவு காட்டப்பட்ட மறை பொருளைத் தெளிவாக்கிவிட்டால்
5.அங்கு செயல்படும் உண்மை தெளிவுறும்…! (நீலகண்டா…! என்று கழுத்தளவில் நிறுத்தி விஷத்தையே ஆக்கச் சக்தியாக மாற்றிடும் பக்குவ நிலை கிடைக்கும்)