நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று மண்டலத்திலிருக்கக்கூடிய தீய சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Courageous meditation

நாம் சுவாசிக்கும் இந்தக் காற்று மண்டலத்திலிருக்கக்கூடிய தீய சக்திகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மன நிலையில் பயந்தவர்கள் தன் நிலையை மறந்து மற்ற நிலைகளின் தன்மையைப் பயந்த நிலையில் ஏற்கும் நிலையை அடையும் தன்மை பெற்று அதனால் உடல் நிலையும் மன நிலையும் கெடும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.

ஏனென்றால் நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்று மண்டலத்தில் எண்ணிலடங்காத நிலைகள் கொண்ட பல உயிரணுக்களும் நல்ல அணுக்கள்… தீமையான அணுக்கள்.. பல ஆவி நிலைகள்… என்று இப்படிப் பல சுற்றிக் கொண்டுள்ளன.

இந்தக் காற்று மண்டலத்தில் தான் ஈரப்பசையும் உள்ளது. மேகங்கள் படிந்துள்ளதும் இந்தக் காற்று மண்டலத்தில் தான் உள்ளது. இந்தக் காற்று மண்டலத்திற்கு மேல் உள்ள காற்றில் ஈரப்பசையில்லை அந்த நிலையில் ஓரே சமமான நிலை தான் உண்டு,

காற்று மண்டலத்தில் உள்ள மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அந்த நிலையில் அலைந்து கொண்டுள்ள பல ஆவிகள் அதனுடைய செயலைச் செயல்படுத்த முற்படுகின்றன.
1.அத்தகைய ஆவிகள் எந்த உடலை ஏற்கலாம்…? என்ற நிலையில்
2.இடிக்கும்… மழைக்கும்… இருட்டிற்கும்.. பயந்த நிலையில் உள்ளவர்களை
3.அந்தத் துர் ஆவிகள் வந்து அண்டிக் கொள்கிறது.
4.இந்த நிலையில் நம்மை அறியாமலேயே நாம் நம்மை அந்த ஆவியின் நிலைக்குச் செல்லும் தன்மை வந்துவிடுகின்றது.

அப்பொழுது பயம் கொண்ட நிலையில் உள்ளவனுக்குத் தன் எண்ண நிலை அற்றுப் போகிறது. எண்ண நிலை இல்லாததினால் செயல் திறன் மங்கி விடுகின்றது.

சோர்வுத் தன்மைக்கு அடிபணியும் தன்மை வந்து மன நிலை மாறுபட்டு உடல் நிலை கெட்டு தன் வாழ்க்கை நிலையே பெரும் சஞ்சலத்தில் செல்லும் நிலைக்குச் செல்வதெல்லாம் “மன நிலையில் தான்…” என்பது இப்பொழுது புரிந்ததா…? ஒவ்வொரு மனிதருக்கும்…
1.அவரவர் எடுக்கும் சுவாச நிலையும் மன நிலையும் பொறுத்துத்தான்
2.அவர்கள் வாழ்க்கை முறையும் உடல் நிலையும் செல்வ நிலையும் சந்தோஷ நிலையும் சோர்வு நிலை பெறுவதும் எல்லாமே…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து சகல சக்தியும் இந்த உலகினிலே சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நமக்கு அவன் அளித்த சக்தியைக் கொண்டு நம் சக்திக்குகந்த நல்ல அணுக்களையும் மகரிஷிகளின் ஆசியைப் பெறும் தன்மையில் நாம் நம் ஆத்ம ஜெபத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆத்மீக வழியில்…
1.நல் வழி ஒன்றிலேயே நாட்டம் கொண்டு ஜெபிக்கும் பொழுது
2.நல் ஆத்மாக்களின் நல் உறவை நாம் பெற்று நல் மனத்துடன் நாம் இருந்தால்
3.நம்மை எந்தத் தீய சக்திகளும் தீய ஆவிகளும் தீண்டும் தன்மையை அகற்றும் நிலை நமக்கு வந்தடையும்.

நம் எண்ணத்தில் அச்சக்தியின் ஒரே சக்தி நிலை மட்டும் சத்திய நிலையில் இருந்து விட்டால் பயம் அச்சம் என்ற நிலையெல்லாம் வந்து அண்டாது.

நம்மை நாமே பரிசுத்தப்படுத்துவதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஜெபம் ஒன்று தான் சகல வித்தையும்…! சகல மந்திரமும்…! மந்திரம்…மாயம்…! எல்லாமே…!
1.அச்சக்தி நிலை பெற்ற சத்தியவானுக்குச் சகல நிலைகளும் தானாக நடந்துவிடும்.
2.எந்த நிலையிலும் சலிப்பிற்கும் சங்கடத்திற்கும் ஆளாகாமல் ஜெப நிலை பெறுங்கள்…! என்பது இந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான்,

இன்று இந்த உலகம் உள்ள நிலையில் ஒவ்வொருவரும் தன் நிலை உணரும் தன்மை அற்றுப் பெரும் சங்கட நிலையில் சலிப்புத் தன்மை கொண்டு வாழுகின்றார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் இதை உணர்ந்து அதிலிருந்து மீண்டு உன்னத நிலை பெற்று வாழ்ந்திட ஒரே வழி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தியான நிலை தான்.

தியானம் என்றாலே…!
1.தன்னைத்தானே சங்கடப்படுத்திக் கொண்டு செய்யும் நிலையாக எண்ணாமல்
2.தன் எண்ணத்தையும் சுவாசத்தையும் எப்பொழுதும் ஒரே நிலை கொண்டு
3.அந்த ஈஸ்வர சக்தி நம்முள்ளே தான் சுற்றிக் கொண்டுள்ளது என்ற நினைவுடன்
4.நாம் எண்ணும் எண்ணத்தில் பரிசுத்தம் கொண்டு வாழ்ந்திட்டாலே
5.இந்த உலகில் சுற்றியுள்ள பல நல்லோரின் ஆசியை நாம் பெறக்கூடிய பாக்கியம் பெறுகின்றோம்
6.எல்லா மெய் ஞானியரின் நல்லாசிகளை நாம் பெறுகின்றோம்.

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த நிலையில் உண்மையறிந்து அந்தப் பரமாத்மாவின் சக்தி பெற்று பலருக்கும் நல் நிலைகளைப் புகட்டி நல் நிலை கொண்டே நலம் பெற்று வாழ்ந்திடுங்கள்.

குழந்தைகள் அங்ககீனமாகவும் அறிவு வளர்ச்சி குறைவாகவும் பிறக்கக் காரணம் என்ன…?

child-in-mothers-womb

குழந்தைகள் அங்ககீனமாகவும் அறிவு வளர்ச்சி குறைவாகவும் பிறக்கக் காரணம் என்ன…? 

கேள்வி:-
ஆக்சிஜன் என்றால் என்ன…?

Recently in one meeting, it was mentioned that during birth when the baby is born if there is lack of oxygen in brain, those cells are destroyed and the impact will be in body conditions,speech, involuntary movements of body parts etc and the baby becomes disabled. Some child will be born like all other children, but their disability (not visible during birth) will be grown when they grow up and the kid become abnormal later.

எல்லோரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க எல்லா செயல்களும் செய்வார்கள். குழந்தை பிறக்கும் தருணம் எப்படிச் சூழ்நிலையை மாற்றி disabled குழந்தையாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது.

அந்த பத்து மாதமும் சேர்த்து வைத்த வலிமையும் நல்ல எண்ணங்களும் எப்படி மாற்றத்திற்கு காரணமாக அமைந்து நல்ல குழந்தையாக பிறக்கச் செய்யவில்லை. In medical terms… Lack of oxygen எப்படி இங்கு காரணமாகிறது…?

பதில்:-
விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுணர்ந்த கண்டுபிடிப்புகளுக்கு அவர்கள் பல பல பெயர்களை வைத்துள்ளார்கள். அதிலே ஒன்று தான் ஆக்சிசன் என்பது.

அன்று வாழ்ந்த மெய் ஞானிகளும் தாங்கள் உணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை மற்றவர்களுக்கு அறியச் செய்ய அதற்குரிய காரண காரியப் பெயர்களை வைத்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள் ஆக்சிஜன் என்று சொல்வதை அவர்கள் பிராணவாயு என்று சொல்கிறார்கள். இரண்டும் ஒன்றாகத் தெரிந்தாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உண்டு.

1.விஞ்ஞானிகள் சொல்வது அந்த வாயுவின் இயக்கங்களை.
2.ஆனால் மெய் ஞானிகள் சொல்வது ஜீவன் பெறச் செய்யும் சக்தியை
3.அதாவது உயிரோட்டம் உள்ளதாக இயக்கும் சக்தியைப் “பிராண வாயு” என்று சொல்கிறார்கள்.

ஆக்சிஜன் என்று சொல்லும் வாயுவை விஞ்ஞானபூர்வமாக ஆய்வுக் கூடத்தில் உருவாக்கி அதைப் பல செயல்களுக்கும் உபயோகப்படுத்துகின்றார்கள்.

ஆனால் ஞானிகள் சொல்லும் பிராணவாயுவைச் செயற்கையாக யாராலும் வெளியிலே உருவாக்க முடியாது. அது இயற்கை.

அதாவது நட்சத்திரங்கள் கோள்கள் சூரியன் இவைகளிடமிருந்து வெளிப்படும் அலைகள் கலந்து கல் மண் தாவர இனங்கள் என்று எல்லாவற்றிலும் கலவையாகி உருவாகி
1.அதிலிருந்து வெளிப்படும் அலைகளை அல்லது மணங்களை
2.உயிரணுக்கள் சுவாசித்து உடலுடன் கூடிய உயிரினங்களாக
3.ஒரு ஜீவன் கொடுக்கும் பிராணன் கொடுக்கும் சக்தியாக வருகின்றது.
4.இதை விஞ்ஞானத்தால் கண்டு கொள்வது என்பது அவ்வளவு சுலபமல்ல…!

ஏனென்றால் பொருளின் அடிப்படையில் பார்க்கும் விஞ்ஞானத்திற்கும் பொருளை உருவாக்கும் சக்திகள் என்ற அடிப்படையில் மூல சக்தியாக இருக்கும் அந்தச் சூட்சமத்தைப் பார்க்கும் மெய் ஞானத்திற்கும் இது தான் வித்தியாசம்.

இரண்டாவது விஞ்ஞானம் என்பது பகுத்துப் பகுத்து அறியும் தன்மை பெற்றது. கணக்கீடுகளின் அடிப்படையில் தான் ஒன்றை ஏற்றுக் கொள்வார்கள். (STATISTICAL ANALYSIS BY MULTIPLE DIMENIONS)

எத்தனை முறை நடந்தது…. அதில் நல்லது எத்தனை..? கெட்டது எத்தனை…? இதை வைத்துத்தான் ஆராய்ச்சியையும் அதன் முடிவையும் கொண்டு வருவார்கள்.

அந்த அடிப்படையில் அவர்கள் சொல்லும் கருத்து தான் அதாவது அந்தக் கணக்கீடு தான்
1.மூளைக்குள் ஆக்சிஜன் போகவில்லை என்றால் குழந்தைக்கு அறிவாற்றல் இருக்காது.
2.மற்ற உறுப்புகளும் செயல் இழந்துவிடும் என்பது.
3.இருந்தாலும் மூளைக்கு ஏன் ஆக்சிஜன் போகவில்லை என்றால் அது ஏன் என்று சொல்லத் தெரியாது.

ஆனால் கர்ப்பமாக இருக்கும் அந்தத் தாய் தன்னுடைய சுவாசத்தில் எதை நுகர்ந்ததோ அதனின் இயக்கமாகத்தான்
1.தாய்க்கும் குழந்தைக்கும் இணைக்கப்படும் அதனின் தொடரில் தான்
2.அந்த சிருஷ்டி அதாவது அந்த ஜீவன் உருவாகிறது.

இன்றிருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தாயின் சுவாச நிலையைப் பாதிக்கும் எத்தனையோ உணர்வலைகளின் இயக்கம் உண்டு, பத்திரிக்கைகளிலோ டி.வி.யிலோ ஃபோன் மூலமாகவோ பக்கத்து வீட்டில் நடந்த சண்டையினாலோ இதைப் போன்ற எண்ணிலடங்காத அதிர்வுகள் ஏற்படுத்தும் எத்தனையோ நிலைகளைத் தாய் கேட்க நேர்கின்றது அல்லது பார்க்க நேர்கின்றது.

அதில் ஏதாவது ஒன்று மாறினாலும்
1.துடிப்பின் இயக்கங்கள் மாற்றப்பட்டு
2.அதனின் அழுத்தமான அதிர்வு அப்படியே குழந்தைக்கு இணைக்கப்படும் பொழுது
3.விஞ்ஞானிகள் சொல்லும் அந்த மூளைக்குச் செல்ல வேண்டிய சக்தியை அது தடைப்படுத்திவிடும். (LACK OF OXYGEN)

உதாரணமாக சில பறவைகள் அது இட்ட முட்டைகளை நாம் கையால் தொட்டுவிட்டாலே அந்தத் தாய்ப் பறவை அந்த முட்டைகளை அடை காக்காது. தள்ளி விட்டுவிடும். குஞ்சாகப் பொரிக்காது.

ஏனென்றால் மற்ற உயிரினங்களின் உணர்வுகள் அந்த முட்டையில் இணைந்தால் தன் இனம் சரியாக உருவாகாது என்று அதற்குத் தெரியும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள். ஞானிகள் கண்ட பேருண்மைகள்.

(அதைப் போல் தான்) கர்ப்பமாக இருக்கும் தாய் சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்கும் உணர்வுகள் தான் மாறுபாடான (நல்லதோ கெட்டதோ) குழந்தைகள் உருவாகக் காரணமே தவிர ஆக்சிஜனோ அதுவோ இதுவோ என்று தேட வேண்டியதில்லை.

இயற்கையிலிருந்து இன்றைய சமுதாய வாழ்க்கை (ARTIFICIAL LIFE) மிகவும் விலகிச் சென்று கொண்டுள்ளது. அதற்குத்தகுந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.

எலெக்ட்ரானிக் சாதங்களுக்கு எப்படி GUARANTEE கிடையாது என்று சொல்கிறார்களோ அது போல் மனித வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் GUARANTEE கிடையாது என்பார்கள்.

ஆனால் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வை எப்பொழுது சுவாசிக்கின்றார்களோ அப்பொழுது தான் மெய்யை உணர்வார்கள். மெய்யை உணர்த்தவும் செய்வார்கள். அந்தக் காலம் வரும் பொழுது நாம் இருப்போமா…! அல்லது அவர்கள் இருப்பார்களா…? என்று சொல்ல முடியாது.

எது எப்படி இருந்தாலும் நம்முடைய சுவாச நிலையைச் சீராக வைத்திருந்தால் தான் இன்றைய செயற்கையின் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியும்.

அதிலிருந்தெல்லாம் தப்புவதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும் என்று சொல்வது.

ஒரு வீட்டில் கர்ப்பம் என்று தெரிந்தாலே குடும்பமே தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் மாறினால் இனி வரும் சமுதாயத்தை நிச்சயமாக மாற்றலாம்.

இந்த உலகைக் காக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொல்லும் மெய் வழி இது தான்…!

 

வேதனையை ஒடுக்கச் செய்யும் “துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக் கற்றைகள்…”

 

Bluish violet Poari rays

வேதனையை ஒடுக்கச் செய்யும் “துருவ நட்சத்திரத்தின் நீல ஒளிக் கற்றைகள்…”

 

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தனையோ பல சிக்கல்கள் வருகிறது. இதைத் தடுப்பதற்கு நாம் எந்த ஆயுதம் வைத்திருக்கின்றோம்…?

உதாரணமாக நாம் வயல்களில் பயிரிடுகின்றோம் என்றால் ஒரு வேலியைப் போட்டு மறைத்து மற்ற உயிரினங்கள் வராதபடி பாதுகாத்துக் கொள்கின்றோம். இதே போல் தான்
1.நம் உடலில் கார்த்திகேயா…!
2.இந்த ஆறாவது அறிவு நாம் தெரிந்து கொள்ளும் அறிவாக வருகின்றது,
3.சேனாதிபதி இந்த ஆறாவது அறிவு தீமைகள் வராது பாதுகாக்கின்றது.

அதே சமயத்தில் ஒன்றை மனிதனின் ஆறாவது அறிவு என்கிற பொழுது தன் எண்ணத்தால் உருவாக்கும் சக்தி பெற்றது. அதாவது ஒன்றை ஒன்றுடன் இணைத்தால் ஒன்று உருவாகும் என்று அறிந்து செயல்படும் அறிவைப் பெற்றவன்.

அருள் ஒளி பெற்றவன்… உணர்வின் தன்மை ஒளியின் தன்மையாக உருவாக்கியவன்… ஒளியின் சரீரமாகப் பெற்றவன்… யார்…? அந்த அகஸ்தியன்…! அந்த ஒளியான உணர்வை நமக்குள் நுகர்ப்படும் பொழுது இருளை அகற்றும் ஒளியின் உணர்வாக நமக்குள் உருவாக்க முடியும்.

நஞ்சை ஒடுக்கிய அந்த ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கப்படும் பொழுது இருள் என்ற நிலைகள் இங்கே அகற்றப்படுகின்றது.

பாம்புகள் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குகின்றது, அந்த விஷங்கள் பாம்பின் உடலில் பல வர்ணங்களாக நாகரத்தினமாக ஆகிறது. ஆனால்
1.அந்தத் துருவ மகரிஷியோ (அகஸ்தியன்) விஷத்தை வென்று ஒளியின் உணர்வாகப் பெற்றவன்
2.அது நீல நிறமாக இருக்கும். இளம் நீலம்…!

நெருப்பு எரியும் பொழுது அதில் நீல நிற ஜுவாலை வந்தால் அது வீரியமான நெருப்பாக வரும். இதே போல தான் துருவ நட்சத்திரத்தின் ஒளியும் தெரியும்.
1.வானத்தில் மற்ற நட்சத்திரங்களைக் காட்டிலும்
2.துருவ நட்சத்திரத்தைப் பார்த்தோம் என்றால் இளம் நீலமாகப் பள…பள..பள.. என்று மின்னும்.
3.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் நுகர்ந்து பழக வேண்டும்.
4.இந்த உணர்வை நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்க வேண்டும்.

உதாரணமாக வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் என்ற உணர்வுகளை நாம் நுகரும் பொழுது ஓ…ம் நமச்சிவாய.. என்று அந்தந்தக் குணத்திண் அணுக்களாக உருவாக்கி அவைகள் எல்லாம் நம் உடலாக மாறுகின்றது.

ஆனால் அத்தகைய உணர்வுகள் நம் உடலாக ஆவதற்கு முன்னாடியே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அதற்கு ஜீவன் கொடுக்காதபடி தடுத்து விட வேண்டும்.

அகஸ்தியனைப் போன்று நாம் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றிடல் வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறோம் (ஞானகுரு).

இறை சக்தி என்றால் என்ன…? அதை எப்படிப் பெறவேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Divine strength

இறை சக்தி என்றால் என்ன…? அதை எப்படிப் பெறவேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.இறை சக்தியைக் கண்டிடவே… இறைவன் பூஜை செய்துவிட்டால் இறைவன் அருள் கிட்டுமா…?
2.அந்த இறைவனின் எண்ணம் மட்டுமே இருந்து…
3.அந்த இறைவனே வந்து நமக்கு எல்லா அருளையும் அருள்வான்…! என்று
4.இறைவனையே எண்ணிப் பூஜித்தால் இறைவன் அருள் கிடைக்குமா…?

ஒரு தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டும் பருவம் முதல் எந்த எண்ணத்தை முதலில் பாய்ச்சுகின்றாளோ அந்த எண்ணம் அந்தக் குழந்தைக்குச் சுற்றிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு குழந்தை அது பிறந்தது முதல் அந்த இல்லத்தில் உள்ளோரின் எண்ணத்தின் சுவாச நிலைகளை வளர்ந்து வரும் அந்தக் குழந்தைக்கும் நாம் அளிக்கின்றோம் என்பதனை உணர்ந்து
1.வளரும் பருவத்திலேயே நல் உணர்வை
2.நாம் அந்தக் குழந்தைக்கு அளிப்பது தான்
3.இறை சக்தியை அதற்கு அளிக்கும் நிலையப்பா…!

இறை சக்தி என்பதைப் பல நாமம் கொண்டு அழைத்து வணங்குகிறோம். அப்படி வணங்கும் பொழுது நம்முள் உள்ள இறைச் சக்தியை
1.நாம் எந்த நிலை கொண்டு நாம் அதன் தன்மையைப் பெற்றுள்ளோமோ
2.அதற்குகந்த சக்தித் தன்மை தான்
3.நாம் அழைத்து வணங்கும் இறை நாமத்திலிருந்து நமக்குக் கிடைக்கின்றது.

இந்த மனித வாழ்க்கையில் நம் எண்ணத்தில் பல கலக்கங்களைக் கொண்டு கோப தாப துவேஷ நிலைகளை எல்லாம் நம்மையே சுற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிலையிலிருந்தெல்லாம் நாம் நம்மைச் சாந்தப்படுத்திச் சமநிலைப்படுத்திக் கொண்டு நாம் எண்ணும் நிலை கொண்டு
1.நாம் அடைந்த இத் தீய நிலைகளை எல்லாம்
2.நம்மையே சுற்றிக் கொண்டுள்ளாமல் இருக்கும் நிலைக்கு
3.நம்மை நாம் பக்குவப்படுத்திச் சாந்த நிலை கொண்டு
4.நம் நிலையில் என்றும் நாம் மாறுபடாமல்
5.சாந்தமான நிலையில் அன்பு கொண்டு வாழ்ந்திடும் வாழ்க்கையே
6.அந்த இறை சக்தியை நாம் பெற்ற வாழ்க்கையாகும்.
7.பூஜையும் பல நாமங்கள் கொண்டு ஜெபிப்பதும் ஆண்டவனின் அருள் பெறும் நிலையல்ல.

மன அமைதிப்படுத்திட நம் மனதை அன்பு கொண்டு அந்த ஆண்டவனின் நாமத்தை அன்புடன் உச்சரிக்கும் பொழுது அந்த நாமத்தின் வழியினிலே
1.“நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளும் நிலை தான்”
2.பல ஆண்டவனின் நாமத்தை நாம் ஜெபித்துப் பூஜிப்பதுவே…!

ஆண்டவனின் அருளைப் பெற நம்மை நாம் பக்குவப்படுத்துவது என்பது
1.அடித்துத் துவைத்து வெளுக்கும் நிலையல்ல.
2.அறிந்து… அந்த அழுக்கைப் போக்க அலசி எடுக்கும் நிலை தான் நம் நிலைக்கு வரவேண்டும்.

ஆண்டவன் என்னும் எண்ணத்தையே பெரும் ஆர்ப்பாட்டமாகக் கோவில்களுக்குச் சென்று பல பூஜைகளைச் செய்து பெறுவதல்ல அந்த ஆண்டவனின் அன்பு.

நம்மை நாம் அன்புப்படுத்தி அறம் கொண்ட வாழ்க்கை வாழ்வது தான் அந்த இறைவன் அருள் பெறும் இன்ப நிலையாகும். இந்த இன்ப நிலை பெறுவதற்கு
1.தன் வாழ்க்கை நிலையை இன்பமாக்கி
2.இறைவன் அருள் பெறுவதுவே இன்ப நிலை என்றுணர்ந்து
3.அந்த இறை சக்தியின் நிலை பெற்று வாழ்ந்திடுங்கள்.

நஞ்சை ஒடுக்கி நீல நிற ஜொலிப்பாக வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் இயல்பு

polaris lights

நஞ்சை ஒடுக்கி நீல நிற ஜொலிப்பாக வெளிப்படுத்தும் துருவ நட்சத்திரத்தின் இயல்பு

 

ஒரு நல்ல பாம்பு தன் உடலில் உருவான நஞ்சை ஒரு எலி மேல் பாய்ச்சி அதை உணவாக எடுத்துக் கொள்கிறது. எலியின் உணர்வை இயக்குவதும் அந்த நஞ்சு தான்.

எலியின் உடலில் உள்ள நஞ்சின் தன்மை வேறு. அதே போல தவளையின் உணர்வுகள் அதில் உள்ள விஷங்கள் வேறு. நல்ல பாம்பு தவளை மேல் தன் விஷத்தைப் பாயச்சி அதையும் உணவாக உட்கொள்கின்றது.

பாம்பு தனக்குள் உருவாகும் விஷத்தைப் பல உயிரினங்களின் பாய்ச்சிப் பல விதமான விஷங்கள் கொண்ட உடல்களை அந்தப் பாம்பு விழுங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

பலதரப்பட்ட உயிரினங்களைப் பாம்பு உணவாக உட்கொள்வதால் பல விஷத்தின் தன்மை அந்தப் பாம்பிற்குள் கலக்கப்பட்டு அது பல விதமான உணர்வின் வர்ணங்களாக இருக்கும்.
1.நாகரத்தினத்தை எடுத்துக் கொண்டால் அதிலே பல வர்ணங்கள் இருக்கும்.
2.ஆனால் வைரத்தின் நிறங்களோ நீலம் கலந்த நிலையில் வரும். அதனுடைய மின்னணு ஒளியின் தன்மை கூடும்.
3.பாம்பு விஷத்தைப் பாயச்சி பல உணர்வுகளை எடுத்ததால் நாகரத்தினத்தில் பல பல நிறங்கள் வரும்.
4.இதுதான் நாகரத்தினத்திற்கும் வைரத்திற்கும் உண்டான வித்தியாசம்.

பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களின் விஷங்களைத் தனக்குள் எடுக்கும் பொழுது அந்த விஷங்கள் உறைந்து விடுகிறது. ஆனால் வளர்ச்சி அற்றது. அது முழுமை அடைந்து விட்டால் அதிலே விளைந்த உணர்வுகள் அந்த ஒளியைத் தான் ஊட்டும்.

1.அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியான நிலையில்
2.பல விதமான கோணங்களில் விஷத்தை ஒடுக்கிய உணர்வுகளைப் பெற்றதால்
3.வைரத்தைப் போன்ற அந்த நீலத்தின் தொடர் கொண்டு நீல நிறமாக ஒளிச் சுடராகக் காட்டுகிறது.

உதாரணமாக நெருப்பு எரியும் போது அது நீலநிறமாக இருந்தால் தான் அந்த நெருப்பிற்கே வீரிய சக்தி உண்டு. சிவப்பாகவோ மஞ்சளாகவோ நிறம் இருந்தால் அதற்கு அவ்வளவாக வலு இல்லை.

நீலம் கலந்த ஒளி வரப்போகும் போது சூடு அதிகமாகும். ஏனென்றால் அந்த உணர்வின் தன்மை குவிக்கப்பட்டு வீரியத் தன்மை பெறுகிறது.

இதைப் போலத்தான் பல கோடிச் சரீரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியில் வந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக வளர்ச்சியாகி இயற்கையில் விளைந்த விஷத்தை ஒடுக்கி ஒடுக்கித் தன் வலுவான நிலைகள் பெற்றவன்.

தன் உடலில் உள்ள அணுக்களை எல்லாம் அத்தகைய வலுவான ஆற்றல்களைப் பாய்ச்சிக் கொண்டவன். திருமணமான பின் அகஸ்தியன் தான் பெற்ற சக்தி அனைத்தையும் தன் மனைவிக்குள் பாய்ச்சினான்.

அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒரு உணர்வாகி இரு உயிரும் ஒரு உயிராக ஒன்றென இணைத்துக் கொண்டவர்கள்,

இருந்தாலும் ஒரு மனிதன் தனித்த நிலைகள் கொண்டு எல்லாவற்றையும் வெல்வேன் என்ற உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்தாலும் பாம்புக்குள் வீரிய சக்தி எப்படி நாகரத்தினமாக மாறுகின்றதோ இதைப்போல தனித் தன்மை கொண்டு வளர்ச்சி பெறும் ஜீவனற்ற கல்லாகத் தான் இருக்கும்.

அதாவது கடும் தவம் என்ற நிலைகள் கொண்டு முனி என்ற நிலையில் எதையும் தாக்கிடும் உணர்வாகத் தான் வரும்.
1.அப்படிப்பட்ட உணர்வைத் தான் பெற முடியுமே தவிர
2.இரண்டறக் கலந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் சக்தி பெறச் செய்யாது.

ஆகவே ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் பேரருள் பேரொளியைக் கவர்ந்து “கணவன் தன் மனைவி பெற வேண்டும்… என்றும் மனைவி தன் கணவன் பெற வேண்டும் என்றும்…!” இரு உணர்வும் ஒன்று சேர்த்து விட்டால்
1.துடிப்பு கொண்ட ஜீவனுள்ள உணர்வின் தன்மையாகப் பேரொளியாக வருகிறது.
2.திடப் பொருளாக மாறாது. பேரருளின் சேமிப்பாக ஒளி அலைகளாகப் பேரொளியாக மாறும்.
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள் இளம் நீல நிறமாக இருக்கும்.
4.தியானம் செய்பவர்கள் அதைக் கண்களால் நிச்சயம் காண முடியும்.

கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் ஜீவன் பெற்று வாழச் செய்யும் “இயற்கையின் படைப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!”

Nature is God

கல்லுக்குள் தேரையும் மாம்பழத்திற்குள் வண்டும் ஜீவன் பெற்று வாழச் செய்யும் “இயற்கையின் படைப்பைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!”

 

சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் இடங்களில் எல்லாம் உயிர் அணுக்கள் ஜீவன் பெற்று வாழ்கின்றன. பூமியின் மேல் பகுதியிலும் அடிப்பகுதியிலும் உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன.

அதே போல் காற்றிலும் பல உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. வான மண்டலத்தில் பல உயிரணுக்கள் பறந்து இக்காற்றினில் வீசிடும் பல உயிரணுக்களையே ஆகாரமாக எடுத்து அந்த நிலையிலேயே முட்டையிடுகின்றது.

அந்த முட்டை மேலிருந்து கீழ் வரும் பொழுது பூமிக்கு வந்து தாக்குவதற்கு முதலிலேயே வான மண்டலத்திலேயே அந்த முட்டை வரும் வேகத்திலேயே வெடித்து குஞ்சு வெளிப்பட்டு அந்தக் குஞ்சு அந்த நிலையிலேயே பறக்கும் நிலை பெற்று உயிர் வாழ்கின்றது.

இப்படி பூமிக்கும் உயிரணுக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலேயே வான மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்கின்றன. அதே போல்
1.பூமியிலும் கல்லுக்கடியில் தேரை எப்படி வந்தது…?
2.அந்தத் தேரை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கத் தாயினம் இருந்ததா…?
3.மாம்பழத்திற்குள் வண்டு எந்த நிலை கொண்டு உள்ளே சென்றது…?
4.பூவிலேயே முட்டையிட்டு அந்த முட்டை அதே நிலை கொண்டு உயிர் பெற்றதா…?
5.பூ காயாகிக் கனியாகும் வரை அந்த முட்டை அங்கேயே முட்டையிலிருந்து புழு வந்து வண்டானதா..? என்று எல்லாம் எண்ணுகின்றோம்.

இதன் நிலையை ஆராய்ந்து உண்மை அறிந்தோர் வெளியிடவும் இல்லை. ஆனால் பல மெய் ஞானியர்கள் அறிந்த பேருண்மை இது.

மாம்பழத்தில் வண்டு வந்ததின் உண்மை நிலை அந்த மரத்தில் பூப்பிடித்துக் காயாகும் தருணத்தில் அந்தப் பூவில் உள்ள ஈரப்பசை கொண்டு அக்காய் பிடித்து அது கனியாக ஆவதற்கு முன்
1.அந்தக் காய்க்கு மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் படும் பொழுது
2.அந்த ஒளிக் கதிரிலிருந்து காயில் உள்ள ஈரப்பசையின் சுவாச நிலைக்குகந்த உயிரணு
3.அந்தக் காயிலேயே தான் உற்பத்தியாகின்றது.

சூரிய ஒளி பட்டவுடன் அவ்வுயிரணு ஜீவன் பெற்றுப் புழுவாகி வண்டாகி அந்தக் காயில் உள்ள மாங்கொட்டையின் பருப்பினையே உணவாக ஏற்று மாங்காயின் உள்ளேயே உயிர் வாழ்கின்றது.

அதன் சுவாச நிலைக்கேற்ப ஆகாரமும் அம்மாங்காயிலே தான் அதற்குக் கிடைக்கின்றது. அந்தக் கனியைப் பறித்து அதை அறுத்துப் புசிக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

அப்பொழுது அந்த வண்டு வெளிப்படுகின்றது. வெளிப்பட்ட வண்டிற்கு வேறு நிலையிலுள்ள (வெளி உலக) சுவாசத்தை ஈர்க்கும் தன்மை இல்லாததினால் கனியிலிருந்து வெளிப்பட்ட உடனே அது மடிகின்றது. அதன் சுவாசத்திற்குகந்த ஆகாரம் இல்லை என்றால் அதனால் வாழ்ந்திட முடியாது.

கல்லுக்குள் தேரை வந்ததும் இதே நிலையே. கல்லிற்குள் இருக்கும் ஈரப்பசையில் கல்லிற்கு மேல் படும் சூரிய ஒளியின் தன்மை கொண்டு அந்தக் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தில் அங்கேயே ஒரு ஜீவன் உற்பத்தியாகி அது வாழ்ந்து அந்தக் கல்லுக்குள்ளேயே மடிகின்றது.

1.எல்லா உயிரணுக்களுக்கும் தாய் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் நிலை இல்லை.
2.தேரை மாம்பழத்தில் உள்ள வண்டு ஈ கொசு எறும்பு விட்டில் பூச்சிகள் ஈசல்கள் பலவிதமான புழுக்கள் இவைகளில் எல்லாம்
3.ஆண் பெண் என்ற நிலை இல்லை… தாய் தந்தை என்ற நிலையும் இல்லை.
4.சூரிய சக்தியிலிருந்து அந்தந்த நிலைக்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு உயிர் பெற்று வாழ்வதுவே.
5.இப்படி இயற்கையின் சக்தியிலே பல கோடி உண்மைகள் உள்ளது.

அதற்காகத்தன் நம் முன்னோர்கள் இயற்கையையே ஆண்டவனாகப் பணித்தார்கள்.
1.இந்த இயற்கை தந்த ஆண்டவனைக் கண்டவர்கள் இந்த உலகிலே யாரும் இல்லை.
2.இந்த உலகில் மட்டுமல்ல… சூட்சம நிலை பெற்ற பாக்கியவான்களாலும்…
3.இயற்கை சக்தி தந்த ஆதி அன்னையை அறிந்தவர்கள் யாரும் இல்லை.

அவள் தந்த சக்தியையே சூரியனையும் காற்றையும் மழையையும் இவற்றின் அருள் பெற்ற இயற்கை அன்னையையும் என்றென்றும் நாம் எண்ணி வணங்கிடுவோம்… போற்றிடுவோம்…!

இயற்கையின் அன்பு நிலையில் நம்மையும் அன்பு கொண்டு
இயற்கைகளின் இயற்கையையும் (படைப்புகளையும்) அன்பாக்கி
இயற்கை அன்னை தந்த – அந்த இயற்கையில் வந்த நாமும்
இயற்கையுடனே ஒன்றி அன்பு கொண்டே என்றும் வாழ்ந்திடுவோம்.

மனிதனை மகரிஷியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்…!”

Protected cirlce of Polaris

மனிதனை மகரிஷியாக மாற்றியமைக்கும் சக்தி துருவ நட்சத்திரம்

 

உதாரணமாக ஒரு மனிதன் விஷத்தினைக் குடித்து விட்டான் என்றால் எருமை மாட்டுச் சாணத்தைக் கரைத்து மிதமான சூட்டில் அதன் மேலே காலை வைத்து விட்டால் உடலில் இருக்கும் அந்த விஷத்தை இழுத்துவிடும். ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷம் ஜாஸ்தி.

சாப்பிடும் ஆகாரத்தில் இருக்கும் விஷத்தை எல்லாம் தன் உடலாக்கிக் கொண்டு நல்ல உணர்வைச் சாணமாக மாற்றுகின்றது எருமை.

எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து கொஞ்ச நேரம் அதில் காலை வைக்க வேண்டும். சாப்பிட வேண்டியதில்லை. ஆனால் பாதத்தை அதில் வைக்கும் போது விஷத்தை முறிக்கும் ஆற்றல் வருகிறது.

இந்த இயற்கையில் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் விஷத்தை மாற்றுவதற்கு இது ஒரு வழி. எருமை மாட்டுச் சாணத்தில் விஷத்தை மாற்றியமைக்கக் கூடிய அந்தச் சக்தி உண்டு.

ஏனென்றால் தான் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தினை எருமை தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது.
1அதிலே வரும் கழிவின் தன்மையை
2.நஞ்சினை மாற்றும் தன்மையாக… அந்தச் சாணம் வருகின்றது.

நம் வாழ்க்கையில் எப்போதெல்லாம் வேதனைப்படும் உணர்வுகளை நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அப்பொழுதெல்லாம் அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தப்பட்டு கண்கள் உற்று நோக்கும். வேதனை உணர்வை நுகரச் செய்யும். உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை நம் உடல் முழுவதும் சுழலச் செய்யும்.

உடல் முழுவதும் வேதனை என்ற உணர்வுகள் சுழலப் போகும் போது நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகிறது.

ஏனென்றால் விஷம் எதிலேயும் ஊடுருவிக் கலந்து விடும்.

நல்ல குணங்களை அதற்கு அப்புறம் நாம் எண்ண முடிகிறதா…? என்ன தான் நீங்கள் எடுத்தாலும் இந்த விஷம் நல்ல குணங்களை அடக்கிவிடும்.

உதாரணமாக நீங்கள் வேதனைப்படும்படியான கடுமையான சொல்லை ஒருவர் சொல்லி விட்டால் அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்…?
1.சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார்… அவர் சொன்னதை விட்டு விடுங்கள்…! என்று
2.யாராவது உங்களிடம் சமாதானமாகப் போகச் சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…?

அட… உங்களுக்கு என்னங்க தெரியும்…? அவன் பேசுவது அவ்வளவு மோசமாக இருக்கிறது. இத்தனை தீமைகளை எனக்குச் செய்கிறான் அவனை எப்படிச் சும்மா விட முடியும்…! என்று தான் வரும்.
1.ஆகவே இது அந்த இயற்கையின் நியதிப் பிரகாரம்
2.இந்த உணர்வுகள் அவன் செயலாக்கங்களைத் தான் இயக்கும்.

ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெருப்பைக் கூட்டி அந்தப் பாத்திரத்தில் என்னென்ன பொருளைக் கலக்கின்றோமோ எல்லாம் கலந்து ஒன்றாகச் சேர்ந்து அது ஒரு பொருளாக மாற்றுகின்றது.

அதே போல் தான் வேதனை என்ற உணர்வுகளை நமக்குள் நுகர்ந்த பின் மற்ற நல்ல குணங்களுடன் அது இணைந்து அதனுடைய விஷத் தன்மையாக நம்மை மாற்றுகின்றது.

அப்படி ஆன பின் அதற்குள் பல அதிகமான நல்ல குணங்களைச் சேர்த்தால் தான் இந்த விஷத் தன்மை தணியும். ஆனால்
1.அதிகமான நல்ல குணங்களைச் சேர்ப்பதற்கு முன்னால்
2.அடுக்கடுக்காக அடுத்தடுத்து அந்த வேதனையை நாம் நுகரும் சக்தியே வந்து விடுகிறது
3.விஷத் தன்மைகள் அதிகமாக நம் உடலில் பரவத் தொடங்குகிறது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அதற்காக வேண்டித்தான் நஞ்சினை வென்ற அந்த அகஸ்தியரைப் பற்றி உங்களுக்குள் திரும்பத் திரும்ப உணர்த்துகின்றோம். அகஸ்தியன் தன் தாயின் கருவிலிருக்கும் பொழுதே நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்றவன்.

பிறந்த பின்… அவன் வாழ்க்கையில் தன் பார்வையில் வரும் நஞ்சினை ஒடுக்கி… ஒடுக்கி… ஒடுக்கி… அந்த நஞ்சினையே ஒளியாக மாற்றும் தன்மை பெற்றவன்.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் விண்ணிலே அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய விஷத்தையும் உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளான்.

அப்படி ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் வேதனை கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் குரோதம் பயம் போன்ற விஷமான உணர்வுகளை எல்லாம் ஒடுக்கிவிடும்.

1.உடலில் வந்த விஷத்தை “மாட்டுச் சாணத்தை” வைத்து ஒடுக்குவது போல்
2.தங்கத்தில் கலந்த செம்பையும் பித்தளையும் “திரவகத்தை” ஊற்றி நீக்குவது போல்
3.நம் உணர்வில் கலந்து வரும் தீமைகளையும் துன்பங்களையும் நீக்க அந்தத் “துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை” ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் சேர்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்க்காமல் நமக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும். ஏனென்றால் துருவ நட்சத்திரம் மனிதனை மாற்றியமைக்கும் சக்தி…!

தியானத்தில் நம் சுவாச நிலையைச் சீர்படுத்தும் வழி

Pranayama - eswarapattar

தியானத்தில் நம் சுவாச நிலையைச் சீர்படுத்தும் வழி

தியானத்திற்கு வரும் பொழுது சுவாச நிலை எடுத்துத் தியானம் பெற வேண்டும் என்பது நம் எண்ணத்தை முதலில் அச்சுவாச நிலையினால் சமப்படுத்துவதற்காகத்தான்.

தியான நிலைக்கு அமரும் நிலையில் “முதலில் அச்சுவாச நிலையை ஈர்த்துக் கொள்…!” என்று அதனால் தான் சொல்கிறோம்.
1.நாம் தியானத்தில் அமர்ந்தவுடனே
2.சுவாசம் ஒரு நிலையில் இல்லாமல்
3.மேலும் கீழுமாக ஆடிக் கொண்டே தான் வரும்.

நம் எண்ணம் முழுவதையுமே அந்த ஜெப நிலையில் நினைவைச் செலுத்திய பிறகுதான்
1.ஒரே நேர்பட்டுச் சம நிலை பெற்று…
2.பிறகு உயர்ந்த நிலையில் நாம் இருப்பதைப் போன்ற
3.நம் உடலும் மனமும் எண்ணும்படி அந்தச் சுவாசம் உயர்ந்து செல்கிறது.

அந்த நிலையில் இவ்வுலகம்… இந்த உடல்.. எல்லாவற்றையும் மறந்து நாம் உயர்ந்த நிலையில் “பறந்த நிலையில்… சஞ்சரிக்கும் தன்மை பெற்றுச் சஞ்சரிக்கின்றோம்…!”

நம் நினைவுகள் அந்தத் துருவ நட்சத்திரத்திலும் சப்தரிஷி மண்டலத்திலும் சஞ்சரிக்கும். உடல் உணர்வு இல்லாதபடி ஏகாந்தமாக மேல் நோக்கி நாம் செல்வது போல் நிச்சயம் உணரலாம்.

1.நாம் செய்யும் தியானத்தில் இதை எல்லாம் உணர்கிறோம் என்றால்
2.அந்த மெய் ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் சக்திகள்
3.அப்பொழுது நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஆகவே நமக்கு முன் தோன்றிய பல மகரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து நாமும் அந்த ஜெப அருளைப் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிறவியில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
1.அந்தச் சூட்சம உலகில் கலந்துள்ள பெரியோர்கள் (மெய் ஞானிகள்) நம்முள் வந்து
2.நமக்குப் அருள் வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் நல் சொத்தாக அந்த மகரிஷிகளின் ஆசிகளை ஏற்று நம் வாழ்க்கையை வழி நடத்துதல் வேண்டும்.

இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் அவர்கள் வாழும் அந்தச் சூட்சம உலக்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டும்.

பால் ஊட்டத் தாய்.. பாடம் புகட்ட குரு… வாழ்ந்திட மனைவி… வளர்த்திட மக்கள்… என்று ஒன்றுடன் ஒன்றி நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்
1.”நான்” என்ற தனி நிலையில் இல்லாத நாம்
2.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று வாழ்வதே
3.நம் உயிரணுவிற்கு நாம் சேர்க்கும் அழியாச் சொத்து என்று உணர வேண்டும்.

மெய் வழியில் நாம் செல்லும் நிலையில் நம்மை இயக்கிச் செல்வதுவே
1.அந்தப் பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.”நான்” என்ற நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.