48 நாள்கள் என்பதை ஒரு மண்டலமாக நம் முன்னோர்கள் முறைப்படுத்தியது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!
நம் சூரியக் குடும்பத்தில் உள்ள 48 மண்டலங்களிலிருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.
இந்தப் பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இந்தப் பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது. மனித ஆத்மாக்கள் அந்த 48 மண்டலங்களிலும் இல்லை.
1.ஆனால் இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான்
2.இந்தப் பூமியில் உள்ள மனிதர்களின் நிலையெல்லாமே உள்ளது.
ஒரு மண்டலம்… “48 நாள்…” என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளார்கள். ஏன் என்பதை நாம் அறிந்துள்ளோமா…?
நமக்கு முதலில் இருந்த சித்தர்களும் ஞானிகளும் கடும் தவமிருந்த நிலையில்
1.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மணடலம் என்ற 48 நாளைத் தியானத்திற்குகந்ததாக எடுத்து
3.பேரண்டத்தின் பல உண்மைகளை அந்த ஜெபத்தினால் அறிந்தனர்
4.அதன் வழியில் வந்தது தான் நாம் இன்று சொல்லும் ஒரு மண்டலம் 48 நாள் என்ற முறையெல்லாம்.
நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்குப் புரிந்திடும்.
கண்ணில் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுதே வானத்தில் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைக் காண்கின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியைக் காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன. நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்களும் உள்ளன.
புள்ளியாகத் தெரியும் அத்தகைய மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இந்த மனித உடல் பெற்ற ஜீவாத்மாக்கள் உள்ளன. பல மண்டலங்களில் நம்மைக் காட்டிலும் திறன் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த இந்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை,
இந்த உலகிலே நாம் மனிதனாகப் பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றோம். அந்தச் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் வழியில் ஜெபத்தின் அருளைப் பெற்று எண்ணத்தையும் நினைவையும் தூய்மையாக்கி நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தியாக்கிடல் வேண்டும்,
விஞ்ஞானத்தின் செயற்கை நிலையால் இக்கலி என்னும் காலத்தில் மீண்டு கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
1.ஆசை என்னும் நிலை கொண்டே ஈஸ்வரபட்டனாகிய நான்
2.இந்தப் பாட நிலை எல்லாம் அருளுகின்றேன்.
3.ஒவ்வொருவரும் இனி வரும் கால நிலையைக் கடத்திடாமல் அருள் பெறுங்கள்.
இந்த உலகில் உதித்துள்ள மனித உயிரணுக்களுக்கெல்லாம் தாம் செய்யும் ஜெப நிலையில்
1.நாம் வேறல்ல இந்த உலகம் வேறல்ல
2.இந்த உலகைச் சுற்றியுள்ள பிற மண்டலங்கள் வேறல்ல
3.தனித்து நிற்பவை எவையுமில்லை
4.எல்லாவற்றிலும் எல்லாமாகக் கலந்துள்ள நாம்
5.நம் உயிராத்மாவைப் பெரும் சக்தியுள்ளதாக ஆக்கி சகல நிலையையும் ஈர்த்தெடுத்து அறிந்திடலாம்.
6.இந்த உலகத்தின் உண்மையை மட்டுமல்ல சகல மண்டலங்களின் நிலையையும் அறிந்திடலாம்.
ஏனென்றால் உங்கள் எல்லோருக்குமே அந்தத் தகுதி உண்டு…!
1.படைத்தவனின் படைப்பான நீங்கள்
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக… படைப்பின் படைப்பாக
3.படைக்கும் நிலைக்கு உருத் தாருங்கள்…!
மனம் அலை பாய்வதிலிருந்தும் மனச் சஞ்சலத்திலிருந்தும் எப்படி விடுபடுவது…? நல்ல காரியங்களை நாம் நம்பிக்கையுடன் எப்படிச் செய்து முடிப்பது…?
கேள்வி:-
மனம் ஏதாவது ஒரு வகையில் அலை பாய வைத்துத் தியானம் செய்ய முடியாது வைத்து விடுகிறது. நினைவு மட்டும் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்குகிறது. ஆனால் பிடி கிடைக்காமல் நிறையத் தவிக்கிறேன். என்ன செய்ய வேண்டும் ஐயா…? ஒரு சில காரணத்தால் சஞ்சலத்தில் மனம் உள்ளது…!
பதில்:-
சூடாக இருக்கும் காபியையோ டீயையோ அப்படியே குடிக்க முடியாது. ஆற வைத்த பின் தான் குடிக்க முடியும். அப்படியே குடித்தால் வாய் தான் வெந்து போகும். அது போல் தான் உங்கள் கேள்வியே உள்ளது.
எந்த ஒரு சிக்கலாக இருந்தாலும் அதை நேரடியாக நாம் அணுகினால் அதனுடைய பாதிப்பை நம் உயிர் உடனடியாக உணர்த்திக் காட்டும்.
1.அது வெறும் உணர்ச்சி தான்.
2.நிஜம் இல்லை.
ஏனென்றால் நம் உயிர் நுகர்ந்தத்தைத்தான் இயக்கும். உயிரிலே படவில்லை என்றால் எதுவுமே இயக்காது… எந்த ஒரு உணர்ச்சியும் வராது…!
உதாரணமாக நீங்கள் போட்ட காபியில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டு விட்டால் அப்படியே சாப்பிடுவீர்களா…? இல்லையே…!
அடடா… தெரியாமல் போட்டு விட்டேன் போல் தெரிகிறது… என்று சொல்லி விட்டு அதைக் கீழே ஊற்றி விட்டு மீண்டும் சரியானபடி சர்க்கரையைப் போட்டு நல்லதைத் தான் நீங்கள் குடிப்பீர்கள்.
நீங்கள் மட்டுமல்ல… யாராக இருந்தாலும் அதைத்தான் செய்வோம். சரியில்லை என்றால் சரியானது வேண்டும்… என்று தான் விரும்புவோமே தவிர பரவாயில்லை..! இன்று ஒரு நாள் சர்க்கரைக்குப் பதிலாக உப்புப் போட்ட காபியைக் குடிப்போம் என்று யாரும் குடிக்க மாட்டோம்.
ஆக மொத்தம் இந்த வாழ்க்கையில் எது வந்தாலும் நாம் எண்ண வேண்டியது
1.எனக்கு நல்லது வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும்
3.எனக்கு நல்லதாக ஆக வேண்டும் என்ற நிலையில்
4.பிடிவாதமாக… நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்…! நல்லது வேண்டும்..! நல்லது வேண்டும்…! என்று
5.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அழுத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்
6.மேலும் நல்லது நடக்கும் வரை… “உன்னை விடவே மாட்டேன்..! என்று உயிரிடம் நினைவைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் (இது தான் நீங்கள் பிடிக்க வேண்டிய “பிடி…!”)
7.இமயமலையில் செய்யும் தவம் என்பது இது தான் அதாவது இமைகளுக்கு மத்தியில் ஒற்றைக் காலில் நின்று நல்லதுக்காகச் செய்யும் தவம்…!
இதற்குப் பிறகு நினைவை விண்ணிலே செலுத்தி எனக்கு வந்த இதே சிக்கல் ஒரு மெய் ஞானிக்கு வந்தால்
1.அவர் எப்படி இதிலிருந்து விடுபடுவாரோ…?
2.இதை நல்லதாக எப்படி மாற்றுவாரோ
3.அவர்களைப் போல் நானும் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று சுவாசிக்க வேண்டும்.
பின் நம்மை இயக்கும் உயிரான ஈசனிடம் சொல்லி விட்டோம்… நமக்கு வழிகாட்டும் மகரிஷிகளிடமும் சொல்லி விட்டோம்… இந்தப் பிரச்சனை நம் பிரச்சனை இல்லை. நம் பிரச்சனை இனி அவர்கள் பிரச்சனை ஆகி விட்டது.
நல்லதாக வேண்டும் என்று வலிமையாக இரண்டு பேரிடமும் சொல்லி விட்டோம். இனி நாம் “அடுத்த வேலையைப் பார்ப்போம்…!” என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாலே போதும்.
சிறிது நேரத்தில் நீங்கள் எண்ணிய எண்ணங்களுக்கொப்ப உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் நல்ல பதிலாக மிகத் தெளிவாகக் கிடைக்கும்.
1.சிக்கலை ஏற்படுத்தியவர்கள் விலகிச் செல்வார்கள்.
2.அல்லது நீங்கள் பயந்தது போல் அந்தக் கெட்டது நடக்காது. மாறாக எதிர்பாராதபடி நல்லதாகும்
3.அல்லது அந்தச் சிக்கலுக்கு என்ன செய்ய வேண்டும்..? யாரை அணுக வேண்டும்..? இன்னாரிடம் நேரடியாக நாம் பேசுவோம் அப்பொழுது கண்டிப்பாக நல்லதாகும்…!
4.இப்படி அடுக்கடுக்காக உங்களுக்குள் புதுப் புது நல்ல உணர்வுகளாக உற்சாகம் ஊட்டும் நிலைகளாக எண்ணங்கள் தோன்றும்
5.அதன் படி (முதலில் சொன்னபடி) உயிரிடமும் மகரிஷிகளிடமும் சொல்லி இந்த மாதிரிச் செய்யப் போகின்றேன்.. எனக்கு நல்லதாக வேண்டும் என்று மீண்டும் மீண்டும் எண்ணத்தைச் செலுத்தினீர்கள் என்றால்
6.மனம் அலை பாயாது… தியானம் வலுவாகும்… நல்லதைச் செய்ய ஆற்றலும் சக்தியும் அதிகமாகும்…!
7.சஞ்சலத்திற்குப் பதில் இப்படித்தான் செய்ய வேண்டும்… இது கண்டிப்பாக நல்லதாகும்…! என்று ஒரு புயல் போல் அந்த எண்ணம் உறுதியாகும்.
8.நன்மைகள் செய்யத் துணிவு தன்னாலே உங்களுக்கு வரும்.
9.நல்லது உங்களைத் தேடி வரும்… நீங்கள் தேட வேண்டியதில்லை…!
“இன்றைய காலகட்டத்தில்” அகஸ்தியனின் ஸ்டேசனைத் திருப்பி வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்
விண்ணிலே தோன்றிய ஒரு உயிரணு நம் பூமிக்குள் வந்தது என்றால் அது தாவர இனத்தில் விழுந்து புழுவாக உடல் பெறுகிறது. அப்படி உடலாகத் தோன்றியவுடனே முதலில் அதற்குக் கண் இருக்காது. கண் இல்லாத புழுவாகத்தான் இருக்கும்.
கண் இல்லை என்கிற பொழுது “பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் புதிதாகத் தோன்றித் தோன்றித் தான் அதற்குக் கண் வர வேண்டும். ஆனால் இப்படிக் கண்ணில்லாத புழுவாகப் பிறந்தாலும்
1.கண்ணுள்ள மற்ற உயிரினங்கள் அதை உணவாகக் கொத்தித் தின்றால்
2.இந்த உணர்வின் தன்மை (கண்களின்) கலந்து
2.கண்ணுள்ள உயிரினமாக அது மிகவும் சீக்கிரம் வந்துவிடும்.
ஆனால் ஆரம்பத்திலே இந்த உயிரணுக்கள் வளர்ச்சி இல்லாத பொழுது “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…!” என்ற உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து உடலில் எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி ஒளியின் கதிராக வருகின்றது,
இப்படிப்பட்ட உணர்வுகளை ஒளியின் கதிரைப் பல சரீரங்களில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப “பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தான்…” கண்ணாக உருவாகின்றது. (ஆரம்பத்தில்)
ஆனால்
1.மனிதனின் மலத்தில் வெளிப்படும் உணர்வும் மற்ற உணர்வுகளும் சேர்ந்து உருவாகும் கொசுவிற்குக் கண் வந்துவிடுகின்றது.
2.சாக்கடையில் உருவாகும் புழுக்களுக்குக் கண் இருப்பதில்லை.
3.ஆனால் ஒரு குருவி அதைக் கொத்தித் தின்றால் அதற்குக் கண் வந்துவிடும்.
4.ஒரு எறும்பு அதைக் கடித்தது என்றால் இறந்த பின் எறும்பின் உடலுக்குள் அந்த உயிர் வந்து அதற்குக் கண் வந்துவிடும். மிகவும் சீக்கிரம் கண் வந்துவிடும்.
இறந்த மனித உடலைப் புதைத்து விட்டால் அதிலிருந்து பலவிதமான குணங்களுக்கொப்ப பலவிதமான அணுக்களும் வளரும். அது வெளியில் வந்த பிற்பாடு என்ன செய்கிறது…? அது கண் உள்ளதாகத் தான் உருவாகின்றது.
ஆனால் நம் மலத்திலேயே கண் இல்லாத புழுவைப் பார்க்கலாம். வெளியில் வந்த அந்தப் புழுவை மற்ற பட்சிகள் கொத்திச் சாப்பிட்டால் அதனுடைய உணர்வை எடுத்துக் கண்ணுள்ளதாக அடுத்துப் பிறக்கும். இப்பொழுது இருக்கக்கூடிய மாற்றங்கள் இது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.
இன்று இந்தப் பூமி முழுவதும் மனிதனாக உருவாக்கிய பின்
1.மனிதனுக்குள் உருவாக்கிய உணர்வின் தன்மைகள் அனைத்தையும்
2.கருவாக உருவாகும் அணுவின் தன்மையாக
3.இந்தச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.
(ஒரு சேமிப்புக் கிடங்கு போல்)
மனிதன் வேதனைப்படும் உணர்வுகளைப் பரப்பி வைத்திருந்தால் இன்னொரு மனிதன் வேதனைப்பட்டால் இந்த வேதனை அணுக்களை அங்கே இரையாக்கி சீக்கிரம் அந்த உணர்வின் தன்மை அவனையும் வேதனைப்பட வைக்கும்.
அதே போல மனிதனுக்குள் எத்தகைய நோய்கள் உருவானதோ இவனின்று வெளிப்பட்டது காற்று மண்டலத்தில் இந்த விஷத் தன்மை கொண்டதாகத் தான் இருக்கும். அந்த உணர்வுகளை இன்னொரு மனிதன் நுகர்ந்தான் என்றால் அவனையும் நோயாக்கும்,
1.இதைப் போன்ற நிலைகளை நீங்கள் அனைவரும் தெளிந்து கொள்ளுங்கள்..
2.தெரிந்து கொள்ளுங்கள்.
இதே காற்றிலே மெய் ஞானிகள் தீமையை நீக்கிய உணர்வுகளும் உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற உணர்வுகளும் அலைகளாகப் பரவி உள்ளது. சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அதைப் பதிவு செய்து… எப்படி அதைக் கவர வேண்டும் என்பதையும் உணர்த்தினார். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை மக்களை எப்படிப் பெறச் செய்ய வேண்டும் என்பதையும் காட்டினார்.
அவர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம். அந்த மெய் ஞானியான… “அகஸ்தியனின் ஸ்டேசனைப் பதிவாக்குகின்றோம்…!”
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழகிக் கொண்டாலே போதுமானது,
உங்களுக்குள் அது வளர்ச்சியாகும் பொழுது அந்த ஞானிகள் எதன் வழியில் தீமைகளை அகற்றினார்களோ மகிழ்ந்து எப்படி வாழ்ந்தார்களோ அதை நீங்களும் பெற முடியும்.
கண் இல்லாத புழு கண் உள்ள உயிரினத்தின் உணர்வுகளை நுகர்ந்து கண் உள்ள உயிரினமாக மாறுவது போல்
1.நாமும் மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து
2.மெய் ஞானியாக நிச்சயம் ஆக முடியும்.
ஆண்டவனின் சக்தியைப் பெறுகிறோமா… அல்லது பிறிதொரு ஆவியின் சக்தியைப் பெறுகின்றோமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது
இன்று இவ்வுலகில் ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கின்ற மக்களின் எண்ணம்… வாழ்க்கை முறை… இதைப் பொறுத்து அங்கங்கு வாழும் மக்கள் அவர்கள் எந்த நிலை கொண்ட சுவாச நிலையில் வாழ்ந்தார்களோ உடலை விட்டுப் பிரிந்த பின் அந்தந்த நிலையிலேயே அவ்வாவிகள் சுற்றிக் கொண்டேயுள்ளன.
இந்தியா என்று பெயர் வைத்துள்ள இந்தத் தேசத்தில் தெய்வப் பற்றும் ஒற்றுமைப் பற்று கொண்ட கூட்டு நிலை கொண்ட குடும்ப நிலைகளும் உள்ளது.
ஏனென்றால் அன்று வாழ்ந்த சித்தர்களின் நிலையினால் இங்கு ஆண்டவன் என்ற பக்தியை மக்களின் மனதில் பல ரூபம் கொண்ட கல்களிலே வடித்து உணர்த்திச் சென்றதால் இங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் எல்லாம் ஏறக்குறைய ஒன்று போல் சுற்றிக் கொண்டுள்ளது.
தெய்வத்தைக் கல்லின் ரூபத்தில் பக்தி கொண்டு வணங்கிய நிலை கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் அவரவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்த சுவாசத்தையும் எண்ணத்தையும் கொண்டே கடைசியில் உடலை விட்டுப் பிரிகின்றார்கள்.
உடலை விட்டு ஆவி பிரிந்து சென்ற பிறகும் அந்நிலையிலேயே தான் அந்த ஆவிகள் சுற்றிக் கொண்டுள்ளன.
அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ஆவிகள் கோவில்களுக்குச் சென்று வணங்கிடும் நிலையில் உள்ளவர்களின் நிலையில் அந்த ஆவி அவர்களின் உடலுக்குள் சென்று சில நிலைகளைச் சொல்கிறது.
1.அதாவது சாமி வந்து அருள் வாக்குச் சொல்கிறது என்பதுவும்
2.அருள் வந்து ஆடுவதுவும் எல்லாம் இந்நிலை கொண்ட இந்த நாட்டில் தான்
3.நம்மை நம் முன்னோர்கள் நடத்திச் சென்ற பாதையில் வந்ததுவே இந்த நிலை.
இதே நிலை ஒவ்வொரு நாட்டிலும் வேறுபட்ட நிலையில் உள்ளது.
அங்குள்ள மக்களின் எண்ண நிலைகளும் வாழ்ந்த நிலைகளும் பக்தி தெய்வப் பற்று எத்தன்மையில் இருக்கின்றதோ அதற்குத் தக்க அந்த ஆன்மாக்கள் அவர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்றன.
அந்த நிலை கொண்டு அது சுற்றிக் கொண்டுள்ள நிலையில் தன் எண்ணத்திற்கும் செயலுக்கும் உடைய உடல்களை ஏற்று வருகின்றது அங்கங்கு (மற்ற நாடுகளில்) உள்ள நிலை.
1.ஆனால் பக்தி என்னும் நிலையில் இங்கு ஏன் இந்த நிலை…?
2.இங்கு மட்டும் தான் அந்த ஆண்டவன் உள்ளானா…?
3.ஆண்டவன் எந்த நிலையில் இங்கு அருள் தருகின்றான்..? என்றெல்லாம் எண்ணினாலும்
4.அந்த ஆண்டவனின் நிலையைப் பற்றி நம் சித்தர்கள் நமக்குத் தெளிவாக உணர்த்திய நிலையை
5.நாம் ஏற்றுக் கொண்ட நிலையால் வந்தது தான் இந்த நிலை.
உலகில் உள்ள பல பாகங்களில் பல நிலைகள் கொண்டு அந்த ஆண்டவனை எண்ணி பல வழிகளிலும் வணங்குகின்றார்கள். அவர்கள் எல்லாம்
1.எந்த நிலையில் அந்த ஆண்டவனின் அருள் வருகிறது…? என்றே
2.புரியாத நிலை கொண்டு வணங்குகின்றார்கள்.
அதே சமயத்தில் இன்று இந்த உலகில் உள்ள எல்லாப் பாகங்களிலுமே தன்னத் தான் நம்பாமல் ஜோதிடம் என்ற நிலையில் நம்பி வாழ்கின்றார்கள்.
அந்த நிலையை எல்லாம் யார் சொல்கிறார்கள் என்று உணராமல்
1.பல ஆவிகளின் தொடர்புடன்
2.தன்னைத் தான் நம்பாமல்
3.பிற ஆவிகளுக்கு அடிபணிந்து வாழ்கின்றதப்பா… இன்றைய இந்த உலகமே…!
ஆவியின் நிலை எந்த நிலையில் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொள்ளலாம் என்று சுற்றிக் கொண்டுள்ளது. அந்த நிலைக்கே அடிபணிகின்றான்.
1.ஆண்டவனின் ரூபமாக அந்த ஆவியையே வணங்கி இன்றைய மனிதன் வாழ்கின்றான்.
2.எந்த நிலையில் வாழ்ந்தால் என்ன..? அந்த ஆவியே வந்து நமக்கு நல்ல உபதேசம் அளிக்கும் பொழுது…!
3.பல நன்மைகளை நமக்குச் செய்யும் பொழுது நாம் ஏன் அதை ஏற்கக் கூடாது என்று எண்ணுகின்றார்கள்.
(முருகன் சொன்னான்… அம்மா வந்து சொல்கிறது… ஆத்தா சொல்கிறாள்… அது சொல்கிறது… இது சொல்கிறது… பரிசுத்த ஆவி… எல்லாமே இந்த நிலை தான்)
எல்லா ஆவிகளின் நிலையுமே எந்த மனிதனின் மேல் சென்று அதன் காரியத்தைச் செலுத்துகின்றதோ “அதே நிலையில் அந்த மனிதன் உள்ள நாள் வரைதான்…!” அது அவனுக்கு உதவி செய்யும்.
அதன் எண்ணமும் அது ஏற்றிருக்கும் மனிதனின் எண்ணமும் மாறுபடும் பொழுது…
1.எந்த நிலை கொண்டெல்லாம் அது மனிதனுக்கு உதவியாக வந்ததோ
2.அதற்கு மேல் தீமை செய்ய வல்லது அந்த ஆவிகளின் நிலைகள் எல்லாம்.
இந்தப் பூமியில் மனிதப் பிறவி எடுத்த உயிராத்மாக்களின் நிலை எல்லாம் ஒரே ஆத்மாவைக் கொண்டு இந்த உடலில் வாழ்ந்திடவில்லை. பல ஆத்மாக்களின் நிலை எல்லாம் தாக்கித் தான் மனிதன் வாழ்கின்றான்.
இதிலிருந்து மனிதன் மீள்வதற்குத் தன்னைத் தான் நம்பும் நிலைக்கு வர வேண்டும். தன்னுள் எந்தத் தீய சக்திகளுக்கும் இடம் கொடுக்காமல் கோபத்தையும் அச்சத்தையும் அகற்றித் தன் நிலையைச் சமமாக்கிடல் வேண்டும். தான் எடுக்கும் எண்ணத்தையும் சுவாசத்தையும் நல் நிலையாகப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
ஆகவே நல் உணர்வை எடுங்கள். ஈஸ்வரபட்டனாகிய நான் நல் வாழ்த்து அருள்கின்றேன்… “அஜ்ஜெகஜோதி வாழ்க்கை வாழ்ந்திடுங்கள் என்றே…!”
சுவாசிக்கும் காற்று எப்படி உடலாக மாறுகின்றது… நம் உறுப்புகளின் இயக்கங்களை அது எப்படி மாற்றுகின்றது…?
நம்மை ஒருவன் துன்பப்படுத்துகின்றான். அப்பொழுது “இப்படிச் செய்கின்றானே…!” என்று எண்ணுகிறோம். திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
2.கருவாகி 48 நாள் ஆனபின் நம் உடலில் இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது
3.அது வேதனையை உருவாக்கும் அணுவாக அது உருவாகின்றது.
4.அணுவாகி உடல் உறுப்புகளில் ஒட்டிவிட்டால் நம் இரத்தங்களிலிருந்து தான் ஆகாரம் எடுக்கும்.
சூரியன் மற்ற தாவர இனச் சத்துக்களை எல்லாம் தனக்குள் எடுத்துக் காற்றுகளாக மாற்றியமைத்து வைத்துக் கொள்கிறது. ஒரு செடியில் விளைந்த வித்தினை நாம் நிலத்தில் ஊன்றும் பொழுது
1.காற்றுடன் காற்றாகக் கலந்து வரும்
2.தன் இனமான சத்தின் உணர்வைப் பிரித்தெடுத்து அந்தச் செடி விளையும்.
டி.வி ரேடியோ இவைகளில் ஒலி ஒளி அலைகளாக ஒலி பரப்பு செய்கிறார்கள், எத்தனையோ இடங்களிலிருந்து பரப்புகின்றார்கள். இருந்தாலும் நாம் எந்த அலை வரிசையில் எந்த ஸ்டேசனை வைக்கின்றோமோ இந்தக் காற்றிலிருந்து அந்த ஸ்டேசனிலிருந்து வருவதை மட்டும் பிரித்து நமக்குக் காட்டுகின்றது.
இதைப் போல நாம் எந்த உணர்வின் தன்மையை நாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் தன்மை நமக்குள் எடுக்கும். நமக்குள் அதை இழுத்தே கவர்கின்றது.
1.வேதனைப் பட்டோம் என்றால் வேதனையைக் கவரும்.
2.கோபத்தை எண்ணினால் கோபமான உணர்வைக் கவரும்.
இப்படி எந்தெந்த எண்ணத்தின் உணர்வை கவர்ந்தோமோ அந்த அணுவின் தன்மை நமக்குள் கரு முட்டையாக மாறும். இரத்தத்துடன் கலந்து சுழன்று வரும் பொழுது எந்த உறுப்பின் பாகங்களில் இது இணைகின்றதோ அந்தக் காலப் பருவமாகும் பொழுது அது அணுவாக மாறுகின்றது. கூட்டை விட்டு வெளி வருகின்றது.
நத்தைகளைப் பார்த்தால் அந்த ஓட்டுடன் ஒட்டி இருக்கும். அந்த ஓடு அதற்குப் பாதுகாப்பு. அதே போல் நாம் கவர்ந்த உணர்வுகள் அனைத்தும் அணுக்களாகப் பாதுகாப்பாக நம் உடலின் உறுப்புடன் ஒட்டி உருவாகின்றது.
அது எந்த உணர்வு கொண்டு உருவானதோ அதனின் சத்தை இரத்தத்தின் மூலம் வருவதை உறிஞ்சி உணவாக எடுத்து அதன் மலத்தை இட்டு உறுப்புகளாகச் சேர்க்கின்றது.
1.ஏனென்றால் அணுவை நாம் பார்க்க முடியாது.
2.ஆனால் அந்த அணுவின் மலம் தசையாக உடலாக மாறும் பொழுது காண முடிகின்றது.
உறுப்புகளில் சேர்க்கும் பொழுது என்ன ஆகின்றது…?
ஏற்கனவே நல்ல அணுக்களால் ஆன உறுப்புகள் உடல் நன்றாக அழகாக இருக்கும். ஆனால் வேதனை என்ற உணர்வுகள் அதிலே சேர்த்து இணைந்து விட்டால்
1.உதாரணமாக நுரையீரலிலோ கல்லீரலிலோ அந்த மாதிரி அணுக்கள் தேங்கி விட்டால்
2.விஷத்தின் தன்மை பாய்ந்த பின் அந்தந்த உறுப்புகள் நலிகிறது.
அடுத்து நம் இரத்தங்களைப் பிரிக்கும் இருதயத்தில் உட் புகுந்து அங்கிருந்து பல உட்பிரிவுகளாகச் செல்கின்றது. இருதயத்தில் இயற்கையாகவே மூன்று வால்வுகள் இருக்கின்றது.
அதிலே இiந்த வேதனைப்படும் அணுக்கள் உருவாகினால்
1.மூன்றில் ஒன்று அடைபட்டாலும் இரண்டு எடுக்கும்
2.இரண்டில் அடைபட்டாலும் ஒன்று எடுக்கும்.
3.ஆனால் ஒன்றில் எடுக்கப்போனால் திணறல் அதிகமாகும்.
4.கடைசி அந்த ஒன்றிலும் அடைபட்டால் அவ்வளவு தான்.
விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் எத்தனையோ காட்டுகின்றார்கள். வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் இந்த உறுப்புகள் உருவாகின்றது, மற்ற மிருக இனங்களில் இத்தகைய நோய்கள் வருவதில்லை.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் (ஞானகுரு) என்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு உணர்வுகளை எடுக்கப்படும் பொழுதும்
1.நம் உடலுக்குள் என்ன நடக்கின்றது…?
2.உறுப்புகளுக்குள் என்ன மாற்றங்கள் நடக்கின்றது…?
3.அணுக்களுக்குள் என்ன நடக்கின்றது…? என்று குருநாதர் ஒவ்வொன்றாகக் காட்டினார்.
4.அதை நேரடியாகப் பார்த்ததால் தான் உங்களிடம் சொல்கிறோம்.
சாமிக்கு ஈஸ்வரபட்டர் எல்லாச் சக்திகளும் கொடுத்தார். நாம் இதையெல்லாம் பார்க்க முடியுமா…? என்று எண்ணினீர்கள் என்றால் நான் கொடுக்கும் நிலைகளை நீங்களே தடைப்படுத்திக் கொள்கின்றீர்கள்
யாம் உபதேசம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே
1.நாம் இதை எல்லாம் என்றைக்குப் பெறப் போகின்றோம் என்று
2.உங்கள் எண்ணத்தை இப்படிக் கொண்டு போனால்
3.நான் சொல்வது உங்களுக்குள் பதிவே ஆகாது – அந்த ஆற்றல்களை எடுக்கவும் முடியாது.
ஏனென்றால் 4நம் எண்ணத்தால் எப்படி நமக்கு நோய் வருகின்றதோ அதே எண்ணத்தால் அந்த நோய் நமக்கு வராமலும் தடுக்க முடியும். ஆகவே தீமைகள் தாக்கும் பொழுது நீங்கள் அதிலிருந்து விடுபட வேண்டும்.
அதற்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்த சக்திகளை பல கோணங்களில் உங்களுக்கும் சொல்லி அந்த ஆற்றல்களை ஆழமாகப் பதிவாக்குகின்றோம். எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!
இவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.
மனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.
இந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்
1.நம் சக்தியை…
2.நம் திறனை…
3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதறவிட்டு…
4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்
5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.
இச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது. அதாவது
1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்
2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்
3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு
4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்
1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்
2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.
3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.
ஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே… நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…! தியான நிலையில் இருந்திடுங்கள்…!
இதைப் படிப்போர் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று
1.சகல சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் நமக்குள் வந்து
2.நமக்கு அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே… அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்…!
“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்…!” என்ற நிலைக்கேற்ப அந்த மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். பேரருள் பேரொளி பெற்றுப் பேரானந்த நிலையை அடையுங்கள். உங்களால் முடியும்…!
தொழில் செய்யும் பொழுது அடிக்கடி நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணத்துடன் வியாபாரத்தில் அமர்கின்றீர்கள். அந்த நேரத்தில் “வேதனைப்படுத்தக் கூடியவர்கள் தான்…” கடைக்கு வந்து நம்மை அணுகுவார்கள்.
வியாபாரத்திற்குத் தான் வந்தார்கள் என்ற நிலையில் நியாயமான உணர்வுகளைப் பற்றி நாமும் பேசுவோம் அவர்களும் அதையே பேசுவார்கள். அப்படிப் பேசப்படும் பொழுது அவருக்குள் நாம் இணைந்து விடுவோம்.
1.ஆனால் அவர் ஏமாற்றுபவராக இருப்பார்…
2.நம்மை ஏமாற்றத் தெரிந்து கொண்டவர். அதனால் அவருக்குப் பயனாகின்றது.
3.பார்… நான் எல்லாம் செய்தேன்… நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவனே… என்னை மோசம் செய்துவிட்டான்…! என்போம்.
வேதனை உணர்வுகளால் நம் சிந்திக்கும் தன்மை இழந்து எப்படி இந்தக் கஷ்டத்திலிருந்து மீளலாம் என்ற உணர்வு தான் முதலில் நமக்குள் தூண்டப்பட்டிருக்கும்.
இருந்தாலும் நாம் வேதனையுடன் இருக்கும் இந்தச் சமயத்தில் ஏமாற்றுபவர்கள் இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
1.அத்தகைய ஆள்கள் தான் அந்த நேரத்தில் நம்மிடம் வருவார்கள்.
2.நல்லவர்கள் வருவதோ நமக்கு நல்ல யோசனை சொல்வதோ வராது.
3.நல்லவர்கள் அப்படி வந்து யோசனை சொன்னாலும் இவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் தான் நமக்கு வரும்.
4.நம்முடைய வேதனை நல்லவரை நம்பாதபடி செய்துவிடும்.
ஆனால் வேதனையான குணத்திற்குத் தக்கவாறு நினைக்கும் பொழுது நம்மை ஏமாற்றும் நோக்கத்தில் வந்தவர்… நல்லவராகவே தோன்றும். ஏமாற்றிய பின் தான் நாம் உணர்வோம்.
இதைப் போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே பல சூழ்நிலைகள் உருவாகி நம்மை இயக்குகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்…?
“ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அதிகாலையில் கண் விழித்தவுடன் துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கும் சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
1.இந்த வாழ்க்கையில் எத்தகைய நிலை ஆனாலும் சரி
2.தொழில் செய்யும் பொழுதும் சரி
3.உறங்கும் பொழுதானாலும் சரி
4.உணவை உட்கொள்ளும் பொழுதும் சரி
5.வெளியிலே போகும் பொழுதும் சரி
6.வியாபாரத்தில் ஒரு பொருளைக் கையில் எடுத்துக் கொடுக்கும் பொழுதும் சரி…!
7.ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
8.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைத்தே வாழ வேண்டும்.
நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாடிக்கையாளரும் அவர் குடும்பத்தாரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
இப்படிச் செய்தால் உங்கள் வேதனைகள் அகலும். மனமும் அமைதி ஆகும். மகிழ்ச்சி தேடி வரும். அதனால் தொழிலும் நன்றாக இருக்கும்.
அதே மாதிரி நம் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்று மிகுந்த வேதனைப்படுகின்றோம். அதற்குக் காரணம் என்ன…?
உதாரணமாக ஒரு சந்தர்ப்பத்தில் தேள் வருகிறது என்று அதை அடித்துக் கொன்று விடுகின்றோம். அந்த உயிர் நம் உடலுக்குள் உறைவிடமாக வந்து விடுகின்றது.
வந்த பின் அந்த அணுவின் தன்மை கருவிலே விளையப்படும் பொழுது கருவுக்குள் வரப்படும் பொழுது தான் அந்தச் சந்தர்ப்பத்தையே உருவாக்கும்.
தேளைக் கொன்ற அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரப்படும் பொழுது அந்த வேதனையின் அணுவின் கருவாக இங்கே நமக்குள் “மனிதனாக உருவானாலும்…!”
1.இது கருப்பையில் தங்கப்படும் பொழுது
2.அந்த வேதனை உணர்ச்சிகள் தோன்றும்… அந்த அலைகளை இழுக்கும்…!
3.வேதனையின் உணர்வின் தன்மை நம் உடலில் இருக்கும்.
(ஏனென்றால் அந்த அணுக்களின் தன்மை)
அப்பொழுது அந்த அணுவிற்குண்டான நிலைகள் “வேதனைப்படுத்தியே பிழைக்க வேண்டும்…!” என்ற உணர்வு அதற்குள் வந்து அப்படிப் பிறந்த பின் அடுத்தவர்களை வேதனைப்படுத்திக் கொண்டே இருப்பான்.
அவனைத் திருத்த வேண்டும் என்றால் எப்படிச் செய்வது…?
நாம் சமையல் செய்யும் பொழுது எவ்வளவு காரலாக காரமாக கசப்பாக இருந்தாலும் அதை எல்லாம் வேக வைத்துச் சுவையாக மாற்றுகின்றோம். சுவையாகச் சமைத்துத் தானே உட்கொள்கின்றோம்….!
அதைப் போல நம் குழந்தை அப்படி இருந்தாலும் அவனைப் பற்றி வேதனையாக எண்ணி
1.நமக்குள் நம் எண்ணத்தை எமனாக்கிவிடக் கூடாது (இது முக்கியம்)
2.மாறாக நம் எண்ணத்தை நாம் கடவுளாக்க வேண்டும்.
3.அதாவது அருள் ஒளி கொண்டு இருளை அகற்றும் கடவுளாக… நம் எண்ணத்தை மாற்றுதல் வேண்டும்.
அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். பின் குழந்தையை எண்ணி
1.அவன் மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும்.
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.அவன் அருள் ஞானம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத் தான் நம் உயிர் உருவாக்குகின்றது, அந்த எண்ணத்தின் தன்மை நம் உடலில் இணைந்து
1.உள் நின்று இயக்கும் பொழுது உயிர் கடவுளாகின்றது.
2.அதை மீண்டும் செயலாக்கும் பொழுது அதுவே தெய்வமாகக் காக்கின்றது.
3.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதுவே குருவாகின்றது.
ஆகவே அத்தகைய குருவின் செயலாக நன்மையின் நிலையையே நாம் மனதில் கொள்ள வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுவோம்.
மனிதன் மனிதனாக இல்லாமல் மிருகத்தனமாகச் செயல்படுபவர்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!
மனித நிலையில் உள்ள பொழுது கோபம் குரோதம் கடும் விஷம் கலந்த பகைமை நிலையிலெல்லாம் மனதைச் செலுத்தி வாழும் மனிதர்கள் அவர்கள் உடலை விட்டு ஆவி பிரிகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்
அவர்கள் உடலுடன் உள்ள பொழுது எந்த நிலையில் சுவாசம் பெற்றுச் சப்த அலைகளை வெளியிட்டார்களோ அந்த நிலையிலேயே அவர்களின் ஆவியைச் சுற்றியே அவர்கள் வெளியிட்ட சப்த அலைகளும் சுற்றிக் கொண்டேயிருக்கும்.
அதே நிலையில் (கோப குரோத) இருக்கும் ஒரு மிருகத்தின் நிலையும்
1.அந்த மிருகத்தைச் சுற்றிக் கொண்டுள்ள மிருகத்தின் சப்த அலையும்
2.உடலை விட்டுப் பிரிந்த மனிதனின் சப்த அலையும் ஒன்று போல் உள்ள பொழுது
3.ஒன்றை ஒன்று எதிர்படும் தன்மையில் இரு சப்த அலையும் ஒன்றுபட்டு
4.இந்த மனிதனின் உயிரணு (உயிராத்மா) அந்த மிருகத்தின் உடலுக்குள் செல்கிறது.
இந்நிலையில் அந்த மிருகத்தின் இரத்த நாளங்களில் கலந்து மிருகத்தின் ஜெனனத்திற்கு அந்த மனிதன் வருகின்றான்.
1.மிருகமாகப் பிறக்கும் தன்மைக்கு வந்து
2.மனிதன் மிருக நிலைக்கும் வருகிறான்…! என்பதன் பொருளும் இதுவே.
சில மனிதர்களின் ஆவிகள் மிருக உடலுக்குள் வந்த பிறகு அந்த மிருகத்தின் ஆயுள் காலம் முடிந்து அந்த மிருகம் இறக்கும் வரை அந்த உடலிலிருந்து பின் வெளிப்படும் நிலையில் மனிதனல்லாத பிற ஜென்மத்திற்குத்தான் வர முடிகின்றது.
மிருக உடலுக்குள் சென்ற உயிரணு (மனித ஆன்மா) ஏன் அந்த உடலிலிருந்து வெளிப்பட முடிந்திடாதா..? என்று எண்ணிடலாம்.
மிருக உடலுக்குச் சென்ற பிறகு அந்த மிருகத்தின் சுவாச நிலை மாறுபட்டால் தான் இந்த அணு வெளி வர முடியும். மிருகத்தின் எண்ணம் ஒரே நிலையில் இருக்கும் பொழுது இந்த மனித உயிரணு எப்படி மீண்டு வெளி வந்திட முடியும்..?
1.ஆக்ரோஷம் கொண்ட மனித ஆவிகள் எல்லாம் மிருகமாகவே தான்
2.மிருகத்தின் சப்த அலையுடன் கலந்து மிருகமாகவே செல்கிறது.
மிருக சரீரத்திற்குள் சென்ற உயிரணுக்கள் அதே சரீரத்தில் அந்த மிருகம் எடுத்த சுவாச நிலையையே தானும் பெறுவதால் அந்த மிருகத்தின் உடல் பழுதுபட்டவுடன் இந்த உயிரணுக்கள் எல்லாம் புழுவாகின்றன.
சில உயிரணுக்கள் வெளிப்பட்டு அந்த மிருகத்தின் உடலுடன் கூடிய நிலையில் எந்த நிலை கொண்ட சுவாச அலைகளைப் பெற்றதோ அதே நிலையில் தான் மிருக ஜெனனத்திற்கு வருகின்றது.
மனிதனின் உயிரணுக்கள் மட்டும் மிருகத்தின் சுவாச நிலைக்குச் செல்கிறது என்பதல்ல…! மிருகத்தின் உயிரணுவும் (மிருகத்தின் ஆவியும்) மனிதனின் சரீரத்தில் வந்து சேரும் நிலை உண்டு.
மனிதன் சுவாசிக்கும் நிலையில் அவன் எண்ணும் நிலைகளில் மிருகத்தின் குணங்கள் பெற்று கோபம் வெறி குரோதம் இந்நிலை கொண்ட உணர்வுகளைப் பெற்றான் என்றால்
1.மனித உடலின் அந்தச் சுவாச நிலைக்கும்
2.மிருகத்தின் சுவாச நிலைக்கும் ஒன்றுபடும் பொழுது
3.மிருகத்தின் உயிரணு மனிதனின் உடலுக்குள் சென்று
4.அந்த மனிதனையே அந்த உயிரணு மிருகமாக்கும் தன்மையில்
5.மிருகத்தின் குண நிலைக்கு அம்மனிதனின் நிலையும் செல்வதனால் மிருக நிலையிலிருந்து மாறுபட முடியாமல்
6.மென்மேலும் விரோதத்தைதையும் வெறியையும் அதிகமாக்கி வாழும் நிலைக்குத் தான் மனிதனின் தன்மையும் வருகின்றது.
அத்தகைய இறந்தான் என்றால் மீண்டும் மனித உடலுக்குள் வராதபடி மிருக உடலுக்குள் சென்று மிருகமாகத் தான் பிறக்க நேரிடும். இன்று நல்ல மனித உடலில் இருந்தாலும் சந்தர்ப்பத்தால் எடுக்கும் அதீத தீமையான உணர்வுகளால் சுவாசம் மாறுபட்டு மனிதன் மிருகமாகத்தான் மாற முடியும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.மனிதன் மனிதனாகவே வாழும் தன்மைக்கு வர
2.அன்பு பாசம் என்ற சாந்தமான நிலையில்
3.கோபம் துவேஷம் வஞ்சம் இப்படிப் பல கெட்ட குணங்களைத் தன்னை விட்டகற்றி
4.என்றும் அன்பையே தெய்வமாக அன்பென்னும் தெய்வ சக்தியைத் தனக்குள் பெற்று
5.அவ்வாறு வாழ்ந்திடும் தன்மையில் தான் மீண்டு வந்திட முடியும்.
ஆகவே இன்று இந்த மனிதச் சரீரத்திலிருக்கும் பொழுதே நாம் ஈசனின் சக்தியைப் பெறும் அன்பு பண்பு என்ற பாச அலைகளைப் பாய்ச்சி அந்த அலைகளிடையே நாம் வாழ்ந்திடல் வேண்டும்.
1.அப்படி வாழ்ந்தால் நம் உயிரணு நல் ஊட்டம் பெறுகிறது
2.நம் நிலை என்றும் மாறாத நிலையாகிறது
3.நம் ஆத்மா அரும் பெரும் சக்தி பெறுகிறது
4.ஞானிகளும் மகரிஷிகளும் வாழும் சூட்சம உலகிற்குச் செல்லும் திறன் பெறுகின்றது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் – எமனை வதம் செய்த இடம்
“எனது சுயநலம்… பொதுநலம்… பேராசை…” எல்லாமே உங்களை மகிழ்ச்சிப்படுத்துவது தான்
எந்த நேரத்திலும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்
ஜாதகத்தில் உள்ள கெட்டது
குருவுடன் இணைந்து விண் செல்ல வேண்டும்
தொழில் வளம் பெறுவீர்கள்
எங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
அகஸ்தியன் நடந்து சென்ற பாதச் சுவடிகளில் பதிந்துள்ள ஆற்றல்கள்
அருளானந்தம் பெறுவீர்கள்
எளிதான பயிற்சி மூலம் சிறு மூளையிலிருந்து பெரு விரல் வரை நரம்புகளை உற்சாகப்படுத்தலாம்… CALCIUM (சுண்ணாம்புச் சக்தி) பவர் கூடும்
முன்னோர்களை விண் செலுத்துவோம்
நிலையில்லாத இந்த உலகத்திற்கு நீ ஏண்டா என்னிடம் வாதாடுகிறாய்…? என்று ஈஸ்வரபட்டர் மெய்ப்பொருளை எனக்குக் காட்டுவார்
ஆத்ம சுத்தி
எனது பிரார்த்தனையும் சந்தோஷமும்
உடல் என்ற கூட்டை விட்டு நாம் எப்படி விண் செல்ல வேண்டும்…?
பட்டுப் புழு கூட்டைக் கட்டி அதிலிருந்து விடுபட வலுவான எண்ணங்களை எடுத்துப் பறக்கும் இறக்கைகள் முளைத்து பறக்கும் பூச்சியாக வருகின்றதோ அதைப் போல் எந்த அருள் ஞானியின் உணர்வைச் நாம் சேர்க்கின்றோமோ அவன் உணர்வு கொண்டு பிறவியில்லா நிலையை அடைய முடியும்.
இன்றைய உலகில் தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல் தான் வாழ்க்கை உள்ளது
விஞ்ஞானத்தின் வளர்ச்சியாலும் அதற்கு நாம் அடிமைப்பட்டு வாழ்வதாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி அழித்திடும் நிலையே உள்ளது. உலகில் உள்ள மதங்கள் மக்களை நல்வழியில் நடக்க வேண்டும் என்று போதித்தாலும் அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை.
தெய்வங்கள் காட்சி தருமா…? அதனின் உண்மைகள் என்ன…?
பல பக்தி கொண்டவர்களின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனின் அலைகள் நமக்குள் படமாகவும்… பேசுவது போலவும் காட்சிகள் தெரியும்.
காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய தியானம்
காலையில் கண் விழித்ததும் அருள் மகரிஷிகளின் உணர்வை ஒரு பத்து நிமிடம் எடுத்துப் பாருங்கள். தீமைகளிலிருந்து விடுபடும்பல அற்புத சக்திகள் உங்களுக்குள் உருவாகும்.
நீங்கள் ஒவ்வொருவரும் அகஸ்தியராக மாறவேண்டும்… மாற முடியும்..!
மனிதனுடைய கடைசி எல்லை எது…? அழியாப் பேரின்பச் சொத்து எது…? அந்த எல்லையைத் தெரிந்த ஞானிகள் நாம் அனைவரும் எதைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்…? உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை விண் செலுத்தி நாமும் விண் செல்ல வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற கணவரின் உயிரான்மாவை விண் செலுத்தும் முறை
கணவர் நம்முடன் இல்லையே என்று எண்ணக் கூடாது. அகஸ்தியன் அவர் மனைவியுடன் ஒரு உயிரும் ஒன்றி வாழ்வது போல் நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். நமக்கு அழியாச் சொத்து அது தான்…!
நாரதன் என்ற உணர்வின் இயக்கம்
தீமை செய்பவர்களுக்கு நாம் அருள் உணர்வைப் பாய்ச்சினால் அங்கே பகைமையை அகற்றச் செய்யும். உண்மையை உணர்த்தும்.
புரை உணர்வின் இயக்கம்
சந்தேக உணர்வினால் ஏற்படும் பகைமை உணர்வுகளை நாம் எப்படி மாற்ற வேண்டும்…?
வாழ்க்கையில் வரும் சோர்வைப் போக்கும் வழி
நம்முடைய சுவாச உணர்வுகளால் உடலுக்குள் சில உபாதைகள் ஏற்படுகின்றது. சில உயிரினங்கள் வீட்டுக்குள் உருவாகும் நிலையும் ஏற்படுகின்து. அதை மாற்ற வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் உணர்வு கொண்டு இப்படித்தான் (நல்லதாக) இருக்க வேண்டும் என்று வலுப்படுத்த வேண்டும்…?
நம் உடலில் இருக்கும் 5 6 லிட்டர் இரத்தத்தைப் பரிசுத்தமாக வைக்க வேண்டும்
நம் உடலில் உள்ள இரத்தங்களில் நட்பு கொண்ட உணர்வுகளை உருவாக்க வேண்டும். அதனால் தான் இராமன் குகனை முதலில் நட்பாக்கிக் கொண்டான் என்று வான்மீகி – இராமாயணத்தில் குறிப்பிடுள்ளார்.
துருவ தியானத்தில் கவரும் சக்தியின் விளக்கம்
அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைக் கவருங்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் கவருங்கள். அந்த நேரத்தில் கிடைக்கும் சக்தியைப் பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள்
இராமகிருஷ்ண பரமகம்சரும் விவேகானந்தரும் ஞானம் பெற்ற நிலைகள்
இராமகிருஷ்ணர் பெற்ற ஆற்றல்கள் எ;பப்டிப்பட்டது…? விவேகானந்தர் அவரிடம் கடவுளைப் பற்றி எப்படித் தெரிந்து கொண்டார்….? சில அகோரிகளின் செயல்கள்
நாடி சாஸ்திரத்தின் உண்மை நிலைகள்
அகஸ்தியர் நாடி விசுவாமித்திரர் நாடி என்றும் மந்திரங்களைச் சொல்லி யாகம் வளர்ப்பதும் போன்ற நிலைகள் பற்றிய தெளிவான விளக்கம்
வியாசர் சக்தி பெற்றதும் அத்திரி பிருகு புஜண்டகர் அவர்களின் நிலையும்
அகஸ்தியர் பெற்ற உண்மைகளை வியாசர் எப்படிப் பெற்றார்..? அவர் ஞானம் பெற்ற சந்தர்ப்பம் எது…? அவர் கண்டதை பின் வந்த பிருகு எப்படிப் பெற்றார் என்ன ஆனார்…?
துருவ நட்சத்திரத்துடன் ஐக்கியமாகுங்கள்
சிவன் ராத்திரி
அகஸ்திய மாமகரிஷி -1
ஓசோன் திரையை அடைக்க முடியும்
(துருவ வழியில் மகரிஷிகளின் உணர்வைக் கவர்ந்து ஓசோன் ஓட்டையை அடைக்க முடியும்)
துருவ நட்சத்திரம் – மின்னல் – 27 நட்சத்திரம்
ஒரு நொடிக்குள் உணர்வை ஒளியாக்கும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல். இருளை நீக்கி ஒளி ஒளி பெறும் ஆற்றல்
புருவ மத்தி தியானம் – THIRD EYE
புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி தீமைகள் புகாது அடைத்துப் பழக வேண்டும்.
போஸ்ட் கம்பியில் கல்லைத் தட்டுகிறார் குருநாதர்
எல்லோரும் நல்லவராக வேண்டும் என்ற பித்து எனக்கு என்று சொல்கிறார் குருநாதர்
முருகன் சிலையை போகர் உருவாக்கிய உண்மையின் நிலைகள்
நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி
மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளியின் சுடரை நமக்குள் உருவாக்க வேண்டும்.
அகக்கண் தியானம்
உட்கார்ந்த இடத்திலிருந்தே அகண்ட அண்டத்தை அறிந்த அகஸ்தியனின் ஆற்றலைப் பெறும் தியானம்
தியானம் செய்ய வேண்டிய முறை
எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் இந்தத் தியானத்தைச் செய்ய முடியும். ஆற்றல்மிக்க சக்திகளை நமக்குள் சேர்த்து நம்மை நாம் காத்திடும் தியான பயிற்சி
தீமையை நீக்கும் சக்தி
தீமை வரும் போது நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி தீமைகளைப் பிளக்கும் ஆற்றல்
ஒளி நிலை தியானம்
ஒளிப் பிளம்பாக நீங்கள் மாற முடியும். உங்கள் ஆன்மா ஒளியாக மாறும். உங்களைச் சுற்றி ஒளி வட்டம் பெருகும்.அழியா ஓளிச் சரீரம் பெறுங்கள்.
மின்சார தியானம் – நோய் நீக்கும் ஆற்றல்
உங்கள் உடலில் சர்க்கரைச் சத்தோ இரத்தக் கொதிப்போ வாத நோயோ, ஆஸ்மா நோயோ மூல நோயோ, இருதய நோயோ இதைப் போன்று இருந்தால் அதில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி மின்சாரம் பாய்ந்தது போலப் பாய்ந்து அந்த உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்கும்.
பிராணாயாமம்
“தம் கட்டி” துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சுவாசத்தின் மூலமாக நம் உடலில் எல்லா அணுக்களையும் பெற்ச் செய்யும் தியானம்.
தீமைகளை நீக்கலாம், எத்தகைய கொடிய நோயையும் நீக்கலாம், ஒளிசக்தியைக் கூட்டலாம், துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழலாம்
சப்தரிஷிகள்
சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் நாங்கள் கடைப்பிடித்திட அருள்வாய் ஈஸ்வரா
சுகபோகத்தில் வாழ்ந்த காந்திஜி மகானாக மாறக் காரணம் என்ன..?
இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.
அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.
ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!
காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.
இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.
ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.
ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?
ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.
மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.
காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.
பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.
அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!
படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?
மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.
வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.
அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.
சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.
”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.
அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.
நாம் அனைவரும் சகோதரர்களே…! என்றார் காந்திஜி. அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
அவர் உணர்த்திய சகோதரத்துவத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் பகைமைகளிலிருந்து விடுபடலாம். மன பலமும் மன வளமும் பெறலாம்.