இறந்த தாய் தந்தையர்களோ நம் முன்னோர்களோ கனவில் வந்தால் நாம் என்ன நினைக்கின்றோம்…?

Dosam

இறந்த தாய் தந்தையர்களோ நம் முன்னோர்களோ “கனவில் வந்தால்…! நாம் என்ன நினைக்கின்றோம்…?

அம்மா அப்பா அல்லது மூதாதையர்கள் இறந்தார்கள் என்றால் அவர்கள் நினைவாக இன்று என்ன செய்கிறார்கள்…?

கறியைச் சாப்பிட்டவர்கள் என்பதால் கறியை வைத்தேன். வெண்டைக்காயைச் சாப்பிட்டார்கள் என்றால் வெண்டைக்காயை வைத்தேன். சுண்டைக்காய் சாப்பிட்டார்கள் நான் சுண்டைக்காயை வைத்தேன்.

நீங்கள் உடுத்திய துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கின்றேன். “நீ எங்கேயும் போகாதே…!” என்று சொல்லிச் சொந்த பந்தம் என்று எல்லாரையும் கூப்பிட்டு கும்பிட்டுக் கொள்கின்றோம். இப்படித்தான் நினைவு நாளில் செயல்படுத்துகின்றோம்.

இப்படிக் கும்பிட்ட பின் அப்பாவோ அம்மாவோ யாராவது கனவில் வந்து விட்டால் என்ன சொல்கிறார்கள்…?

தினம் தினம் கனவில் வருகின்றார்கள். அதனால் நான் சீக்கிரம் போய்விடுவேன். எங்கள் அப்பா (அல்லது அம்மா) இருக்கிற இடத்திற்கு கூப்பிடுகின்றார்கள்…! என்று இப்படி ஒரு சாஸ்திரம் உருவாகிவிட்டது.

கடைசியில் என்ன செய்வோம்…? கனவில் வராமல் இருப்பதற்காக வேண்டி எங்கெங்கெயோ ஓடி அலைந்து காசைக் கொடுத்துச் செலவழித்து
1.இப்படி வருகின்றார்… அப்படி வருகின்றார்… என்று இரவெல்லாம் புலம்பி
2.ஐய்யய்யோ…! நான் போய்விடுவேனே போய்விடுவேனே…! என்று சொல்லிக் கொண்டு
3.பல துன்பங்கள் வருவதால் அவர்கள் கனவில் வரக்கூடாது…
4.வந்தால் நம்மைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களே…! என்ற இந்தப் பயம்.
5.ஆனால் பிடித்தமானது எல்லாவற்றையும் வைத்து “அவர்களைக் கூப்பிடுவது நாம் தான்…!”

அதற்காக வேண்டிப் பிண்டத்தை வைத்துக் கொடுத்தால் அவர்கள் போய்விடுவார்கள் என்று ஒரு சாங்கியத்தைச் செய்வார்கள்.

இறந்தவர்கள் சுடுகாட்டிலே எரிக்கும் பொழுதோ அல்லது புதைக்கும் பொழுதோ இடது கையால் வைத்துச் செய்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும். இல்லை என்றால் திரும்பி வந்து விடும்…! அதனால் அந்த நினைப்பை விட்டுவிடாதே…! என்று இப்படி எல்லாம் சாங்கியத்தைச் சொல்லி நம்மைச் சிந்திக்கவிடாமல் செய்து வைத்திருக்கின்றார்கள்.

ஆனால் நம்மைப் பெற்று வளர்த்து நமக்காக வேண்டிப் பாடுபட்டவர்களின் உயிராத்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்து ஒளியின் சரீரமாமாக்கி அவர்களை விண்ணிற்குச் செலுத்தும்படி ஞானிகள் காட்டியிருந்தாலும் அந்த முறைப்படி யாருமே செய்யவில்லை.

இறந்தவர்களை அழைத்துச் சாப்பாடு போடவேண்டும் என்பார்கள். ஆனால் எந்தச் சாப்பாட்டைப் போட வேண்டும்…?
1.கிடைப்பதற்கு அரிய பொக்கிஷமான ஞானிகளின் உணர்வுகளை
2.அந்த அருள் ஞான உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இப்படிச் செய்தால் “ரிமோட் கண்ட்ரோல்…! (REMOTE CONTROL)

இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு சிறு பொம்மையைக் கூட ரிமோட் (REMOTE) மூலம் இயக்கிக் காட்டுகின்றார்கள்.
1.ஒரு பட்டனைத் தட்டியவுடனே என்ன செய்கிறது…?
2.பொம்மைக்குள் இருக்கக்கூடிய மேக்னட்
3.நாம் எண்ணியவுடனே “இங்கே போ…! என்று சொன்னால் அவ்வாறு இயங்குகின்றது.
4.”நில்…!” என்று சொன்னால் அது நிற்கின்றது.
5.உணர்வின் ஒலி அலைகளுக்குத் தக்க பொம்மையைச் செய்து ஆட வைக்கின்றான் விஞ்ஞானி.

அன்றைய மெய் ஞானிகளோ முன்னோர்களை விண் செலுத்தி அவர்களைப் ஒளிச் சரீரம் பெற்ச் செய்து அவர்கள் மூலம் விண்ணின் ஆற்றலை ரிமோட் சக்தியாகப் பெறுவதற்கு நமக்கு வழிகாட்டினான்.

விண்ணின் ஆற்றலை வளர்த்து அந்த மெய்ஞானி உணர்வைக் கொண்டு
1.இதை உன்னுடைய கண்ட்ரோலிற்கு (CONTROL) கொண்டு வந்து
2.”பிறவா நிலைக்குக் கொண்டுபோ…! என்று தெளிவாக்கியுள்ளான்.

குழந்தை இல்லாதவர்கள் நரகலோகம் போவார்கள் என்று ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்தான். இறந்தபின் உயிராத்மாவை உந்தி மேலே விண் செலுத்தவதற்குக் குழந்தை வேண்டும்.
1.அருள் உணர்வுகளை வினையாகச் சேர்த்து
2.விண்ணுக்குச் செலுத்த அன்று அப்படிச் சொன்னான் ஞானி
3.அதை மறந்துவிட்டோம்.

ஆனால் இப்போது குழந்தை இருக்கின்றவர்களுக்கு பெரிய நரகலோகமே இருக்கின்றது. ஏனென்றால்
1.குழந்தை என்ன செய்கிறானோ…? எங்கே போனானோ…?
2.நம் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறானே…?
3.நான் சம்பாதித்த காசைப் பார்ப்பானா…? பார்க்க மாட்டானா…?
4.இப்படி இருக்கின்றானே…? அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…?
5.இப்படி அவனை நினைத்து நினைத்துக் கை கால் குடைகின்றது என்று வேதனையைப் பட்டுப் பட்டு அவஸ்தைப்படுகின்றோம்
6.அவனையும் நரகலோகமாக ஆக்கி விடுகின்றோம்.
7.கடைசியில் நாமும் அங்கேதான் போய் விடுகின்றோம்.

இதிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத்தான் அன்று அந்த மகா ஞானிகள் விநாயகர் தத்துவத்தைக் கொடுத்து நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்…? என்று கேள்விக் குறி போட்டுக் காட்டியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய தத்துவப்படி நல்ல வினைகளை நமக்குள் நாம் சேர்க்கின்றோமா…? நம் முன்னோர்களைப் பிறவி இல்லா நிலை பெறச் செய்தோமா…? நம் குழந்தைகளை அந்த அருள் வழியில் வழி நடத்துகின்றோமா…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

காசைக் கொடுத்து விலைக்கு வாங்குவதில் தான் நாட்டம் செலுத்துகின்றோமே தவிர யாரோ செய்து கொடுப்பார்கள் என்று தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லை…!

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…!

Image

hold the truth

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…! – விளக்கம்

திடீரென்று யாராவது உங்களைக் கோபித்தால் உங்கள் உடலில் என்ன செய்கின்றது…? ஜிலு…ஜிலு…ஜிலு…! என்று கோபம் அப்படியே “சுர்ர்ர்….ர்ர்…!” என்று ஏறும். ஏறுகிறதா இல்லையா…?

சண்டை போடுபவர்களையும் திட்டுபவர்களையும் பார்த்தவுடனே “சுர்ர்…ர்ர்..” என்று ஏறி உடலெல்லாம் நடுக்கமாகின்றது பதட்டம் வருகின்றது…!

உங்கள் பையன் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அவனை இரண்டு பேர் சேர்ந்து உதைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…! அப்படியா…? என்று சொல்லி உடம்பெல்லாம் கிடு…கிடு… என்று ஆடுகிறதல்லவா…!

அதைப் போல நீங்கள் துன்பம் என்று எம்மிடம் (ஞானகுரு) சொல்லும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று
2.என்னுடைய கூர்மையான எண்ணங்கள் கொண்டு உங்களை ஆசீர்வதித்து
3.அதை உங்களைச் சுவாசிக்க வைக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி போனவுடனே கெட்டதெல்லாம் மாறி அந்த நரம்புகளுக்குள் இருக்கும் சிக்கல் உடலில் இருக்கும் பிடித்தங்கள் எல்லாமே விட்டு விலகுகின்றது.

அப்படி விலகும் பொழுது சில பேர் “ஐய்யய்யோ…!” எனக்கு ஏதும் அருள் வந்து விட்டதோ…! பேய் பிடித்துவிட்டதோ…! என்று இப்படி நினைப்பவர்கள் சில பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்த பின் உடலிலிருக்கும் விஷமான தன்மை அது அடங்கிப் போகும்.
1.அப்பொழுது அந்த உணர்வின் தன்மையாகும் பொழுது
2.”நடுங்குவது போல” உங்கள் உணர்வுக்குள் இருக்கக்கூடிய வலி குறைந்து அது இறங்கும்.
(தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் உடலுக்குள் அந்த நடுக்கத்தை உணரலாம்)

அது எப்படி இறங்குகிறது..? இறங்குகிறதா இல்லையா..? என்று யாம் அவர்களிடம் கேட்டோம் என்றால் தொட்டுப் பார்ப்பார்கள்… இறங்குகிறது…. வலி இல்லை…! என்று சொல்வதற்கு மிகவும் திகைப்பாக இருக்கும்.

1.உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகலும்…!
2.தீமைகள் நீங்கி எல்லாம் சரியாகப் போகும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று தான்
4.யாம் சொல்லி வாக்காகக் (சக்தியை) கொடுக்கின்றோம்

நீங்கள் சொல்கிறீர்கள்… என்னை விட்டு இந்தத் துன்பம் எங்கெங்கே போகின்றது…! நான் நன்றாகத் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

உங்கள் வலியும் வேதனையும் போய்விடும் என்று உள்ளுக்குள் சொல்லி அந்தச் சக்தியை யாம் அவர்களுக்குள் பாய்ச்சிய பிற்பாடு
1.வாபஸ் நீ வாங்கிக்கோ…!
2.என் உடலில் இருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
3.திருப்பி அதையே சொல்கிறார்கள்.

அவர்கள் தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் கூட வந்தவர்கள் சும்மாவா இருக்கின்றார்கள்…? உங்கள் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்று யாம் சொன்னால் கேட்கிறார்களா…?

அப்படி இல்லைங்க…! இது… மூன்று மாதமாக விடாத “பெரிய சனியன்…! பெரிய தொல்லையாக இருக்கிறது…!” என்கிறார்கள்.

அதனால் தான் உங்களுக்குப் பல முறை சொல்கிறேன். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். உங்களை அறியாது வந்த துன்பங்கள் அனைத்தும் போக வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உபதேசித்த உணர்வுகளை நீங்கள் அப்படியே பதிவாக்கி ஏற்றுக் கொண்டால் இது குருவாக நின்று உங்களைக் காக்கும்…!

குரு வாக்கு என்பது சாதாரணமானதல்ல…!

எல்லோரும் பெறக்கூடிய ஞானம் எது…?

Gurudevaa

எல்லோரும் பெறக்கூடிய ஞானம் எது…?

ஆவியான அகண்ட பேரண்டத்தில் (COSMOS) ஒலி ஒளி நீர் இவற்றின் சக்தியுடனே சகல திரவியங்கள் உருவங்கள் பல கோடி நிலைகள் ஏற்படுகின்றன.

இவற்றுடன் மனித உயிராத்மாக்களின் எண்ண நிலையும் கலந்துறவாடி எடுக்கும் சுவாசம் கொண்டு அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
1.ஆவியான ஒலி ஒளி நீரில் இருந்து தான்
2.எல்லா ஜீவனுமே உருவாகின்றது.

பாலில் நீர் கலந்தாலும் எண்ணையில் நீர் கலந்தாலும் அந்த நீர் தன் நிலையைக் காட்டுவதில்லை. நீர் தனித்து எதிலும் எதுவாகவும் எப்படிக் கலக்கின்றதோ அதைப் போன்று எல்லாவற்றிலும் எல்லாமாக ஆண்டவனின் சக்தி கலந்துள்ளது.

அது போல
1.நம் எண்ணங்கள் எல்லாவற்றிலும் கலந்திருந்தாலும்
2.அந்த எல்லாமில் எல்லாமாக இருந்தே
3.மெய் ஞானத்தை நாம் பெறுதல் வேண்டும்.

ஆனால் ஞானம் பெற்று “நான்…!” என்ற அகந்தை வந்துவிட்டால் அந்த ஞானமும் செயல்படாது. ஏனென்றால் ஞானம் என்பதே நமக்காக மட்டுமல்ல. நாம் பெறும் ஞானத்தைக் கொண்டு பலர் ஞானங்களைப் பெறச் செய்ய நமக்கு ஏற்பட்ட நல் ஞானம் என்றுணர்ந்து
1.நீரைப் போல் நம் ஞான சக்தி இருக்க வேண்டும்.
2.நீர் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
3.நீரைப் போல நாம் பெற்ற ஞானத்தை (அந்த மாமகரிஷிகளின்) வழி நடத்திடல் வேண்டும்.

பக்குவ நிலை – அனுபவங்கள்:-
இரும்பை உலையிலே பழுக்க வைத்தபின் அதைத் தட்டி நமக்கு வேண்டிய உருவமாக அதை உருவாக்கிக் கொள்கின்றோம்.

அது போல்
1.எந்த ஒரு பொருளையும் அதனை உருவாக்க
2.எந்த உருவத்தில் காண உருப்படுத்துகின்றோமோ
3.அதற்குகந்த பக்குவ நிலை ஏற்படுத்த வேண்டும்.
4.அத்தகைய பக்குவ நிலையை ஏற்படுத்தினால் தான் நாம் காண விரும்பும் பொருளை உருவாக்க முடியும்.

அதைப் போன்று அந்த மகரிஷிகள் பெற்ற மெய் ஞானத்தை நாம் பெறவும்
1.நம் எண்ண ஞானத்தைப் பல நிலைகளில் பக்குவம் (அனுபவம்) கொண்டால் தான் நாம் பெற முடியும்.
2.அனுபவம் இல்லை என்றால் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தான்…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது…

Image

Gana gurusamiji

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது… 

காட்சி:-
ஒரு மீனவன் துண்டிலைப் போட்டு மீன் பிடிப்பதைப் போன்றும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதும் தெரிகின்றது.

விளக்கம்:-
மீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் மாட்டியிருக்கும் புழுவை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.

அதைப் போல மெய் ஞானத்தின் சக்தியை பெறத் தன் ஒளியை இந்த உலகிலுள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அந்த ஒளியை எந்த ஆத்மாக்கள் ஈர்க்கின்றதோ அந்த ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் மாமகரிஷிகள்.

குறிப்பிட்ட ஆத்மாக்களைத் தன் சக்தியின் பால் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஈர்க்கவில்லை. உலகிலுள்ள எல்லா உயிராத்மாக்களுக்குமே அவர்கள் பெற்ற பேரொளி பாய்ச்சப்படுகின்றது.
1.மற்றவர்களை உயர்த்தி
2.தானும் வளர்ந்து (உயர்ந்து) பேரொளியைப் பெருக்கி
3.அதன் மூலம் இன்னும் பல ஆன்மாக்களை அருள் வட்டத்தில் வளரச் செய்து
4.இப்படித்தான் தன் சக்தியைச் செயலாக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தப் பேரண்ட மாமகரிஷிகள்.

இதைத் தெரிந்து நம் பயணத்தின் பாதையை நாமாகத்தான் அந்த மகரிஷிகளின் பால் செலுத்த வேண்டும். யாரும் வந்து நம்மை அங்கே அழைத்துச் செல்வதல்ல…!

இது முக்கியம்…!

அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி”

Solar system - sages'

அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி” 

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும் அது எவ்வாறு இயங்குகின்றதென்ற நிலையை இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாம் தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட ஞான ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும் பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும் கவர்வதற்கும் எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதேபோல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்களை வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகி பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப்போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

கட்டிடத்தைப் பிளந்து வளரும் அரசைப் போன்று… நல்லதை ஓங்கி வளர்க்கும் முறை

Pipal tree vinayagar

கட்டிடத்தைப் பிளந்து வளரும் அரசைப் போன்று… நல்லதை ஓங்கி வளர்க்கும் முறை 

அரசையும் வேம்பையும் இங்கே விநாயகருக்கு முன்னாடி வைத்துக் காட்டியுள்ளார்கள். ஏன்…?

உதாரணமாக ஒரு குருவியோ அல்லது மற்ற பட்சியோ அரசம் பழத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அதனின் மலத்தை எங்கோ ஒரு இடத்தில் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1.அந்த மலத்திலிருந்து வெளிப்பட்ட அரச வித்து விழுந்த இடம்
2.ஒரு பாழடைந்த இடமாக நீரைக் கண்ணிலே பார்க்க முடியாத இடமாக இருக்கின்றது
3.இருந்தாலும் காற்றிலே கலந்துள்ள காந்தத்திற்குள்
4.அந்த நீரின் சத்தைக் கவர்ந்திருந்தால் அதைப் பருகித்
5.தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்த்து அந்த அரச வித்து மரமாக வளரத் தொடங்குகின்றது.

எதையும் எதிர்பார்க்காது எந்தத் தீய வினையும் தன்னை அணுகாது தனக்குள் உணர்வின் சக்தியை ஓங்கி வளரும் நிலைகள் பெற்றது அந்த அரச மரம்.

1.நம் வாழ்க்கையில் வந்த வெறுப்பின் தன்மையை விடுத்து
2.கசப்பான உணர்வுகளைச் சிறுக்கச் செய்து
3.அந்த அரச மரத்தைப் போன்று நாமும் நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்யவேண்டும்.

இதை நினைவு கூறுவதற்காகத்தான் அரச மரத்தை வைத்து விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கில் பார்க்க வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஏனென்றால் மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பாழடைந்த துருவத்தின் (நம் பூமியின் வட துருவம்) அருகிலே நின்று இங்கே வரும் உணர்வின் சத்தைத் தனக்குள் அந்த ஒளியின் சிகரமாக வளர்த்து
1.ஒளியின் அலைகளாகத் தான் வீசி
2.உணர்வின் வேகத்தின் நிலைகள் விழுதுகளாகப் பாய்ச்சி
3.என்றும் நிலையாக இருந்து கொண்டிருப்பவர் அகஸ்தியர்.

அந்த அகஸ்திய மாமகரிஷி துருவத்தின் சக்தியாக துருவ மகரிஷியாக
1.துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஓங்கி வளர்ந்து
2.பாழடைந்த நிலைகளில் வரும் அந்த விஷத்தின் தன்மையை முறித்து
3.ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்க முடியும்… இருக்க வேண்டும்… இருந்திட வேண்டும்…!

இந்த நிலையை நாம் பெறுவதற்காகத்தான் விநாயகனை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து வணங்கச் செய்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.

அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது கண்டுணர்ந்த “இந்தப் பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள்…!”

Image

spiritual-food-agastya

அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது கண்டுணர்ந்த “இந்தப் பிரபஞ்சத்தின் இயக்க நிலைகள்…!”

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் போதெல்லாம் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரை நினைவிற்குக் கொண்டு வர வேண்டும். ஏன்…?
1.நாம் எதைப் பெற வேண்டும் என்று ஏங்குகின்றமோ….
2.அகஸ்தியன் கண்டுணர்ந்த அகண்ட பேரண்டத்தின் உண்மைகளை அறிய வேண்டும் என்று
2.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு ஏங்கினால் தான்
3.அது நல்ல முறையில் நமக்குள் பதிவாகும்.

அக்காலங்களில் வாழ்ந்த அகஸ்தியரின் தாய் தந்தையர்கள் எதை எதையெல்லாம் எண்ணி அவர்கள் பெற்றனரோ அவை அனைத்தும் தாய் கருவிலே வளர்ச்சி பெற்ற அகஸ்தியருக்கும் கிடைத்தது.

அவருடைய தாய் தந்தையர்கள் அவர்கள் உடல்களிலே மற்ற பச்சிலைகளைப் பூசிக் கொண்டு அதனுடைய மணத்தை வெளிப்படுத்தும் போது நுகர்ந்து தன் உணவிற்காகத் தேடி வரும் மற்ற உயிர் இனங்களோ கொசுவோ விஷ ஜந்துக்களோ இவை அனைத்தும் அவர்களை அணுகாது இருந்தது. தங்களைக் காத்துக் கொள்வதற்காக வேண்டி அவ்வாறு செய்தார்கள்.

அவர்கள் சூரியனை உற்றுப் பார்க்கப் படும்போது சூரியனின் முகப்பில் தான் சுழற்சியின் வேகத்தால் மோதும் நிலைகள் கொண்டு விஷங்கள் பிரிக்கப்பட்டு உயர்ந்த சக்திகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு ஒளிக் கதிர்களாக வீசிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றார்கள்.

ஒளிக் கதிர்கள் சூரியனிலிருந்து வெளிப்படும்போது தன் முகப்பில் பிரிக்கப்பட்ட அந்த விஷத் தன்மையைத் தான் நுகர்ந்து பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டு இருப்பதையும் அவர்கள் காணுகின்றார்கள். ஏனென்றால்
1.பல விஷங்களை வெல்லக்கூடிய முலாம்களை அவர்கள் உடலிலே பூசிக் கொள்வதால்
2.அதை அவர்களால் காண முடிகிகின்றது.
3.அவர்கள் கண் வழி பெறும் இந்த உணர்வுகள் அவர்கள் உடல்களிலே பதிவானாலும்
4.கருவிலே வளரும் அந்த அகஸ்தியனுக்கும் தாய் ரூபத்தில் அது பதிவாகின்றது.

இவ்வாறு வளர்ச்சி பெற்றுப் பிறந்த பின் அகஸ்தியன் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் போது தாய் கண்ட உணர்வுகளை அந்தச் சூரியனின் இயக்கங்களைப் பார்க்கின்றது.

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிப்பட்டு மற்ற கோள்கள் கவர்ந்து அலைகளாக அனுப்பப்படும் போது அதை சூரியன் தனக்குள் கவர்ந்து தன் முகப்பில் அந்த விஷத்தைப் பிரித்து ஒளிக் கதிர்களாக மாற்றி அமைப்பதை இந்தக் குழந்தை (ஆரம்பத்திலேயே) பார்க்கின்றது.

ஆனால் அவனால் சொல்ல முடியவில்லை. தனக்குள் கவர்ந்த உணர்வுகள் சிரித்துக் கொண்டே பார்க்கின்றான் பல நிலைகளில். அதே சமயத்தில் இந்தக் குழந்தை பிறந்த பின் தனியாக இருந்தாலும் கொசுவோ விஷ வண்டுகளோ மற்ற ஜெந்துகளோ இவன் அருகில் வருவதில்லை.

இவன் உடலிலிருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது அந்த வண்டுகள் மயங்கி விழுகின்றது. விஷ ஜந்துக்களோ அப்பால் விலகிச் சென்று விடுகின்றது.

சூரியன் தனக்குள் விளைந்த ஒளிக் கதிர்களால் மற்ற உணர்வுகள் மோதும் போது விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெப்ப அலைகள் உருவாகின்றது என்ற நிலையை முதன் முதல் அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் காணவில்லை.

ஆனால் இந்தக் குழந்தை (சொல் வடிவில் சொல்ல முடியாத நிலையில்) அது ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டு வருகின்றது.

மற்ற உயிரினங்களையோ மிருகங்களையோ இது பயமற்ற நிலையில் பார்க்கின்றது. மற்ற உயிர் இனங்களும் மற்ற விஷ ஜந்துகளும் இவனைக் கண்டால் மயங்கி விழுகின்றது. இந்த மயக்கத்திற்காக அஞ்சி விலகி அப்பால் ஓடுகின்றது.

இப்படி அகஸ்தியன் இளம் பருவத்தில் வளர்ந்து வரும் போது அவனுடைய தாய் தந்தையர்கள் தன் குழந்தையின் உடலில் இருந்து நிகழ்த்தக்கூடிய நிலைகளைப் பார்த்த பின்
1.இது கடவுளின் பிள்ளை… கடவுளின் அவதாரம்…! என்ற
2.அப்படிப்பட்ட எண்ணங்களை எண்ணத் தோன்றுகின்றது.
3.அக்காலத்தில் இதைத்தான் அவர்கள் எண்ண முடியும்.

குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கப்படும் போது பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளை நட்சத்திரங்கள் கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதையும் இந்தப் பிஞ்சு உள்ளம் பார்க்கின்றது. ஆனால் சொல்லத் தெரியவில்லை.

நாம் எப்படி இப்போது சீனியைப் போட்டு ஒரு மிஷினைச் சுற்றிய பின் “பஞ்சு மிட்டாய்” உருவாகின்றதோ இதைப் போன்று தான் அந்த நட்சத்திரம் சுழலும் போது அதிலிருந்து வெளிப்படும் மலங்களே பிற மண்டலங்களில் இருந்து வரும் அவை அனைத்தும் நூலாம்படைபோல அதிலே கவரப்பட்டு உறைந்து விடுகின்றது.

அவ்வாறு உறைந்த பின் இந்த நட்சத்திரம் சுழலும்போது இதனுடன் சேர்ந்து சுழற்சியடையப்படும் போது தூசிகளாக மாறுகின்றது. அதே சமயம் சூரியனுடைய காந்த சக்திகள் அந்தத் தூசிகளைத் தனக்குள் கவர்ந்து அதை உணவாக எடுத்துக் கொள்வதையும் அகஸ்தியன் காணுகின்றான்.

ஒரு நூலாம்படை பூச்சி அதன் வலையில் சிக்கும் ஈயைத் தனக்குள் இருக்கும் மூக்கின் நுனி கொண்டு அந்த ஈயின் உடலுக்குள் ஊடுருவச் செய்து அதற்குள் இருக்கும் ஊனைக் கரைத்து உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த ஈ முழுதாகவே இருக்கும்.

ஆனால் அதே சமயம் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற அந்த உணர்ச்சியால் உருவாகும் அமிலத்தைக் கொண்டு நூலாம்படையாக உருவாக்கி இன்னொரு ஈயைக் காற்றுப் புகாமல் சுற்றி விடுகிறது.

அப்படிச் சுற்றும் போது தனக்குள் உருவாகும் அமிலத்தை அதன் உடலுக்குள் செலுத்தி விடுகின்றது. ஈயின் அணுக்களுக்குள் இது சேர்த்துக் கொண்ட பின் அந்த ஈயின் உயிரான்மா வெளியிலே செல்லாதபடி அந்த ஈயை உருவாக்கிய அணுக்கள் பூராமே நூலாம்படைப் பூச்சியாக உருமாறுகின்றது.

விஞ்ஞானிகள் ஆண்களைப் பெண்களாக மாற்றுவதற்காகச் சில வகைத் திரவங்களைச் (HARMONES) செலுத்துகின்றார்கள் அப்பொழுது பெண்கள் போல ஆணின் உறுப்புகள் மாறிவிடுகின்றது.

மனிதனுக்குள் விஞ்ஞான அறிவால் சேர்த்த இந்த உணர்வு போலத்தான் நூலாம்படைப் பூச்சி அது தனக்குள் இருக்கும் இந்த உணர்வுகளை ஈக்குள் சேர்த்த பின் கருத்தன்மை உரு மாற்றி தன் இனமாக உருவாக்கி விடுகின்றது.

அதே போலத்தான் 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து வருவதை பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து தூசிகளாக வருவதை உணவாக உட்கொள்கின்றது.

இதற்குள் சேர்த்துக் கொண்ட இதன் ஈர்ப்பு வட்டத்தில் சேர்ந்து சுழலும் அந்தப் பால்வெளி மண்டலத்தில் அது சிறுகச் சிறுக வளர்ச்சி அடைந்து அதனுடைய அமிலத்தைத் தன்னுடன் சேர்த்துச் சேர்ந்து சுற்றும் நிலைகள் வருகின்றது.

சூரியனுக்கு அருகில் கோள்களும் அதிலிருந்து வெகு தூரத்தில் நட்சத்திரங்களாகவும் இருப்பது போல ஒவ்வொரு நட்சத்திரமும் தான் உமிழ்த்தும் பால்வெளி மண்டலத்தில் இதைப் போன்ற உணர்வுகளைச் சேர்த்து விடுகின்றது.

இப்படி வளர்ச்சி பெற்று வரும் இருபத்தேழு நட்சத்திரங்களிலேயும் ஆண் பெண் என்ற நிலைகள் அதிலே எடுக்கும் துகள்களும் தூசிகளும் ஒன்றாக இணைக்கப்படும் போது இரண்டறக் கலந்து கருவாகி ஒரு பொருளை உருவாக்கும் தன்மைகள் அடைகின்றது.

இதை அந்தப் பிஞ்சு உள்ளமாக இருக்கும் அகஸ்தியன் தனது இரண்டாவது வயதில் பார்க்கின்றார். பார்த்த உணர்வு கொண்டு
1.அவனால் சில சொற்களைச் சொல்லும் தன்மையும் வருகின்றது.
2.அந்த உணர்வுகள் எதிரொலி (ECHO) வருகின்றது.
(அதைக் குருநாதர் காட்டுகின்றார்.)
3.இரண்டாவது வயதில் அவன் காணும் உணர்வுகளைத் தன் தாய் தந்தையரிடம் சொல்கின்றான்.

அவன் உடலிலே விளைந்த அந்த உணர்வின் எண்ணங்கள் இதே சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து நம் பூமியில் அலைகளாகப் படரச் செய்துள்ளது.

அந்தக் குழந்தைப் பருவத்தில் அவன் சொல்லும் மழலைச் சொல்லுக்குள் அந்த உண்மையின் தன்மை எப்படி உருவாகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டுகின்றார். எனக்குள் அது பதிவாகின்றது.

மீண்டும் அதை நான் (ஞானகுரு) நினைவு கொள்ளும் போது அந்த இளம் பருவத்தில் அகஸ்தியன் எப்படிக் கண்டுணர்ந்தானோ அதைப் பார்க்க முடிகின்றது… உணரவும் முடிகின்றது.

இப்பொழுது உங்களுக்கும் அதே போலத்தான் புதிதாகத் தெரியும் போது என்ன…? ஏது…? என்று இப்பொழுது திண்டாடுகின்றோம். அல்லவா…!

இதைப் போன்று தான் அகஸ்தியன் அன்றைக்கு அவனுக்குக் கிடைத்த சக்தியைத் தன் தாய்க்குச் சொல்லுகின்றான். அந்தச் சொல்கள் வெளிவருகின்றது.
1.அதே உணர்வுகளை உனக்குள் பதிவு செய்கின்றேன்.
2.இந்த நினைவின் தன்மை கொண்டு அகஸ்தியன் எதைச் சொன்னான்…? எதைப் பார்த்தான்…? என்ற நிலைகளை நீ பார்…! என்கிறார் குருநாதர்.
3.அதை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.

ஏனென்றால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்ட உணர்வுடன் ஒன்றியேதான் அங்கே உங்களை அழைத்துச் செல்கின்றேன். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர வேண்டும்.

அகஸ்தியர் கண்டுணர்ந்த அந்த உணர்வுகள் அனைத்தும் நம் பூமியில் பதிந்துள்ளது. பதிவானதை நினைத்து நீங்கள் தியானிக்கும் போது அதைப் பார்க்க முடியும். அகஸ்தியர் உணர்வின் தன்மை உங்களுக்குள் வளர்க்க இது உதவும். அதற்குத்தான் இதைச் செய்வது.

இதை மீண்டும் மீண்டும் நினைவாக்கும் போது அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகளை நீங்களும் உணர முடியும்.

தன் உடலில் வந்த தீமைகளை அகற்றி வேகா நிலை என்ற நிலை அடைந்து துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை எல்லோரும் பெற முடியும்.

அதன் வளர்ச்சியில் அனைவரும் இந்த வாழ்க்கையில் அகஸ்தியனைப் போன்று வளர முடியும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் மீண்டும் தெளிவாக்கி உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருவது…!

தன் பிள்ளைகள் மீது உள்ள பாசத்தால் அவர்கள் செய்யும் தவறைக் கண்டு பொறுக்க முடியாமல் அடித்து உதைப்பார்கள் – அடிப்பவர்களின் நிலை கடைசியில் என்ன ஆகும்…?

Image

Protected zone - divine

தன் பிள்ளைகள் மீது உள்ள பாசத்தால் அவர்கள் செய்யும் தவறைக் கண்டு பொறுக்க முடியாமல் அடித்து உதைப்பார்கள் – “அடிப்பவர்களின் நிலை கடைசியில் என்ன ஆகும்…?”

 

என் பிள்ளை மேலே ரொம்பப் பிரியமாக இருக்கின்றேன். அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். அவன் பெரிய கல்விமான் ஆக வேண்டும். பெரிய டாக்டருக்குப் படிக்க வேண்டும். பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்த ஆசை எல்லாம் வைத்துக் கொண்டு இருக்கும் போது இந்தக் குழந்தை புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு போகிறது. போனவுடனே அங்கே இரண்டு குழந்தை கோலிக்குண்டு விளையாடுகின்றது. கூப்பிடுகின்றது…!

டேய்…! நான் இதிலே இவ்வளவு காசு பார்த்தேன்… அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன்…! என்று சொன்னவுடனே குழந்தை நின்று பார்க்கின்றது. குழந்தைக்குள் இந்த உணர்வின் தன்மை பட்டுவிடுகின்றது. பார்த்த உணர்வுகள் குழந்தையிடம் பதிவாகின்றது.

வேடிக்கைப் பார்த்து விட்டுப்போன குழந்தையிடம் அங்கே பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சொல்லிக் கொடுத்தாலும் குண்டு விளையாண்டதைப் பார்த்த உணர்வுகள் இது முன்னணியில் இருக்கும்.

ஆனால் வாத்தியார் சொன்னதைத் திருப்பிக் கேட்கப் போகும்போது அந்த நினைவுகள் முன்னாடி இருப்பதால் பதில் சொல்ல வராது.

நான் சொன்னதைக் கேட்கிறாயா…! அல்லது எங்கேயாவது விளையாண்டு கொண்டிருக்கின்றாயா…? என்று சொன்னவுடன் “உள்ளதும்” சுத்தமாகப் போய்விடுகின்றது

அப்போது அந்த வாத்தியார் சொல்வது எல்லாம் கடுமையாகிப் போகும். அப்புறம் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்றால் இந்த உணர்வு குழந்தைக்கு என்ன செய்யும்…?
1.விளையாடுகின்ற பக்கம் போய்க் கொஞ்சம் வேடிக்கை பார்த்து
2.குண்டு விளையாடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கும்.

வாத்தியார் பார்த்துவிட்டு… பையனைப் பார்த்தால் குண்டு விளையாடுகின்ற இடத்தில் இருக்கிறான் என்று உங்களிடம் வந்து சொல்வார்.

நாம் இவ்வளவு காசு கொடுத்துச் செலவு செய்து கொண்டிருக்கின்றோம். இவன் படிக்காமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறானா…? சரி இருக்கட்டும்… பார்க்கின்றேன்…! என்று முதலில் வித்து உங்கள் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

விளைந்த பின் என்ன செய்யும்…? எட்டிப் பார்க்கும். டேய்…! இப்படி எல்லாம் செய்கிறாயேடா… அப்பா கண்டால் உன்னை உதைப்பார்..! என்று லேசாகக் கோபிப்பீர்கள்.

அடுத்தாற்போல அதையே மீண்டும் செய்தால் “தொலைந்து போகிறவனே…! இப்படிச் செய்கிறாயேடா…! என்று சொல்லி விட்டு உங்கள் பிள்ளையைச் “சொத்து…சொத்து…சொத்து…சொத்தென…! அடிப்பீர்கள்.

உன்னை நான் எப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தேன்…? இப்படி பண்ணுகிறாயேடா…! என்று பிள்ளையை அடித்துப் போட்டு அப்புறம் “புஸ்…புஸ்னு…” அழுகத் தொடங்குவீர்கள்.

தன்னை அறியாமலே அழுகை வந்து விடும். பிள்ளை மீது பாசமான நிலைகள் இருந்தாலும் இப்படி ஆகின்றது.

அதற்குத்தான் காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள். புலியை ஏன் வைத்தார்கள்..? புலி தன் பசியைப் போக்குவதற்காகத் தனக்கு முன்னாடி எது கிடைக்கின்றதோ அதை இரக்கமில்லாமல் அடித்துச் சாப்பிடும்.

இதைப் போன்றுதான் தன் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை அடிக்க அடிக்க அந்த உணர்வின் வேகம் தீருகிற வரையிலும் போட்டு அடிப்பீர்கள்.

இப்படிப் பண்ணுகிறானே… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று சொல்லி உங்கள் கை வலித்தாலும் சரி… வேறு என்ன ஆனாலும் சரி… “சொத்து…சொத்து…சொத்தென..” போட்டு அடிப்பீர்கள்.

புலியைப் போன்று இந்தக் கோபமான உணர்வை எடுத்தவுடனே உயிருக்குள் பட்டு அந்தக் கோப உணர்வின் சக்தியாகக் காளியாக வந்து விடுகின்றது.

சிவன் என்ன செய்கின்றான்…?

அந்தக் கோபமான காரத்தின் உணர்ச்சி இயக்கி “தொலைந்து போகிறவனே… அப்படிப் போகிறவனே… இப்படிப் போகிறவனே…” என்று இந்த உடலான சிவன் “ருத்ர தாண்டவம் ஆடி…!” சொத்து சொத்தென பையனை அடித்துப் போட்டுத் தாய் அழுகத் தொடங்கும்.

“சக்தியோ” தனக்குள் என்ன செய்யும்…? ஆவேசம் அடங்காதபடி பையனை நினைக்கும் போதெல்லாம் புஸ்…புஸ்னு இருக்கும்…! அந்த ஆத்திரம் வரும்…!

விநாயகருடைய வாகனம் எது…? மூஷிக வாகனா எலியைக் காட்டியிருப்பார்கள். ஆக பையனை அடித்து நொறுக்கி விட வேண்டும் என்ற இந்த உணர்வு அந்த ஆத்திரத்துடன் சேர்ந்து நம் நல்ல குணத்தை எலி வங்கு போட்ட மாதிரி வந்து விடுகிறது.

பன்றி என்ன செய்கிறது…? கெட்டதை நீக்கி நல்லதைப் பெற்றது. அதிலே சேர்த்து கொண்ட விளைவு மனிதனாகி நமக்குள் வரும் கெட்டதை நீக்கி விட்டு நல்லதைச் சமைத்துச் சாப்பிடுகின்ற சக்தியாகக் கிடைத்தது.

ஆக பையன் நல்லதாக வேண்டும் என்று நினைத்தோம். நம் ஆசைப்படி அவன் எண்ணவில்லை… அது சரியான முறையில் அவன் செய்யவில்லை என்றால் இப்படி வந்து விடுகின்றது. காளியாக மாறிவிடுகிறது.

அங்கே புலி இருக்கின்றது. இரக்கமற்று நாம் அவனை அடித்து விட்டோம்.
1.அவன் அலறுவதைப் பார்த்து ரசிப்போம்.
2.ரசித்த உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே நல்ல குணத்துடன் சண்டை போடுகின்றது.
3.நல்ல குணத்துடன் சண்டை போடும் போது அது தனக்குள் கிளர்ந்து தாங்க மாட்டாதபடி
4.அந்த உணர்ச்சிகள் பொங்கி தாய் நிச்சயம் அழுகும்.
5.இப்படிச் செய்கின்றானே என்று வேதனைபட்டு அழுகும்.
6.வேதனையான உணர்வு உள்ளுக்குள் போனவுடனே முதலில் நெஞ்சு வலி வரும்.
7.அப்புறம் இடுப்பு வலிக்கிறது மேல் வலிக்கிறது… இவனை நினைத்து நினைத்து எனக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது என்பீர்கள்.

அதே சமயத்தில் சுவாசித்த வேதனையான உணர்வுகள் விஷத்தின் தன்மை ஆகி அன்னக் குழாய்க்குள் சென்று அது எரிச்சல் ஊட்டி ஜீரணிக்கும் சக்தியைத் தடைப்படுத்தும்.

ஒரு காகம் வாயைத் திறந்து கொத்தி அது மூடிக் கொண்டு தன் இரையை எடுத்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுகிறது. ஆனால் அதற்கு வேண்டாததை வாயில் போட்டால் என்ன செய்யும்…? அது அள்ளித் துடிக்கிறது…!

அதைப் போல இந்த விஷத்தின் தன்மை இங்கே குடலில் பட்டவுடனே இது உதறித் தள்ளி அது உள்ளே ஜீரணிக்க முடியாத நிலை ஆகிவிடும்.

பின் இந்த விஷத்தின் தன்மை இரத்தக் குழாய்க்குள் போய் இரத்தத்துடன் கலந்து அதைச் சுத்தப்படுத்தும் பிஸ்டன் (இருதயம்) இரத்தத்தை இழுத்துக் கொண்டு போகும் பொழுது வேதனையான நிலைகளால் வீக்கமாகி இரத்தம் சரியாகக் கிடைக்காத நிலையில் அது திண்டாடும்.

எது…? இங்கே (இருதயம் – நெஞ்சில்) திண்டாடுகிறது மட்டுமல்ல. நல்ல குணத்துடன் சேர்ந்தவுடனே முதலில் நெஞ்சு வலிக்கிறது. அப்பறம் இடுப்பு வலிக்கிறது. பிடரி வலிக்கிறது. கண் வலிக்கிறது. தலை வலிக்கிறது. பாரமாக இருக்கிறது. ஒன்றுமே செய்ய முடியவில்லை இது எல்லாம் வரிசையாக வந்துவிடும்.

அப்பொழுதாவது நிறுத்துவோமா என்றால் இல்லை…! தொலைந்து போகிறவனை நினைத்து நினைத்து நினைத்து இப்படி ஆகிவிட்டது…! என்று இதைத்தான் சொல்கின்றோம்.

ஏனென்றால் பெரும்பகுதியான நிலைகள் நாம் சுவாசிக்கும்
1.அந்த உணர்வுக்கொப்ப தான் நம் பேச்சும்
2.அந்த உணர்வுக்கொப்பதான் செயலும்
3.அந்த உணர்வுக்கொப்ப தான் சொல்லின் நிலையும் கேட்போருடைய உணர்வும் அதுதான்.

பையனைப் பார்க்கும் போது வேதனை வந்து விடும். பையன் நம்மைப் பார்க்கும் பொழுது எல்லாம் வெறுத்துப் பேச ஆரம்பித்து விடுவான். தவறு யார் செய்தது…? நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள்…!

வாழ்க்கையின் அத்தகைய சந்தர்ப்பங்களில் நல்லதைச் செய்ய ஆசைப்பட்டோம். அதன் வழி வரவில்லை என்கிற போது உங்களுக்கு வெறுப்பு வரும். அதே வெறுப்பின் தன்மை வரும் போது பையனும் உங்களை வெறுத்து விடுகின்றான்.

அப்போது அங்கே போர் முறை வருகிறது. ஆனால் அவன் எண்ணிய நிலைகளை நமக்குள் சேர்தோம் என்றால் நம் நல்ல குணமெல்லாம் சண்டை போடுகின்றது.

இதைப்போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வருகிறது என்று காட்டுவற்காகத்தான் காளிக்கு முன்னாடி புலியும் முருகனுக்கு முன்னாடி மயிலும் இங்கே விநாயகருக்கு முன்னாடி எலியும் போட்டுள்ளார்கள்.

எந்த நிலையை இணைக்கின்றாயோ
1.அது உனக்குள் வினையாகச் சேர்கின்றது.
2.வினைக்கு நாயகனாக உடலாக்குகின்றது.

எந்த நிலையை எண்ணுகின்றாயோ
1.அந்த வினைக்குத் தகுந்தவாறு அந்தக் குணம் இயக்குகின்றது
2.அது வினையாக விளைந்து வினைக்குத் தகுந்த அடுத்த சரீரமாகின்றது.

பிள்ளை மேலே பிரியமாக இருப்பார்கள். அப்படி இருக்கின்றான். இப்படி இருக்கின்றான் என்று குறையைப் பேசியிருப்பார்கள். அடுத்தாற்போல அம்மம்மா… ஐய்யய்யா.. இடுப்பு வலிக்கிறது… மேல் வலிக்கின்றது… என்னால் எழுந்திரிக்கவே முடியவிலை என்று வீட்டிலே பெண்கள் சொல்வதைப் பார்க்கலாம்.

தவறு யார் செய்தது…? உயிர் நாம் கொடுப்பதைப் படைத்துவிடும். இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாகக் காட்டினார்கள் ஞானிகள்.

இதை எல்லாம் தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் சொல்கிறோம்.

சொன்ன உபதேசத்தையே திரும்பத் திரும்ப சாமி (ஞானகுரு) சொல்கிறார் என்று எண்ணுவார்கள் – ஏன்…?

Image

divine-energy-and-power

சொன்ன உபதேசத்தையே திரும்பத் திரும்ப சாமி (ஞானகுரு) சொல்கிறார் என்று எண்ணுவார்கள் – ஏன்…?

 

சாதாரணமாக நாம் காய்கறிகள் நறுக்கினால் கையைச் சும்மா கழுவி விடுகின்றோம். அதிகமான அசுத்தமான பொருளைத் தொட்ட பின் நாற்றம் வருகின்றது என்றால் சோப்பைப் போட்டு கழுவி விடுகின்றோம்.

அதே சமயத்தில் விஷமான பூச்சி மருந்துகளையோ மற்ற கெமிக்கல்களையோ பயன்படுத்தினால் அதைக் காட்டிலும் சாணம் ஏதாவது போட்டுத் துடைத்து விட்டு அதன் பிறகு சோப்பைப் போட்டுக் கழுவி விடுகின்றோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமாகக் கழுவுகின்றோம் அல்லவா..! அதற்கப்புறம் தான் நாம் சாப்பிடுகின்றோம்.

அதைப் போன்று தான் இன்றைய தினசரி வாழ்க்கையில்
1.ஒரு பக்கம் போனவுடனே சந்தோசமாகக் கேட்கின்றீர்கள்.
2.மறு பக்கம் போனால் கோபமாகக் கேட்கின்றீர்கள்.
3.இன்னொரு பக்கம் போனால் வேதனையான வார்த்தைகளைக் கேட்கின்றீர்கள்.
4.இன்னொரு பக்கம் வேதனையாக நடக்கும் செயல்களைப் பார்க்கின்றீர்கள்.
5.அதையெல்லாமே நுகர வேண்டியதிருக்கின்றது நுகர்கின்றீர்கள்.

அந்த உணர்வுகள் நம் உடலில் சேர்கின்றது. உடலில் நாம் சேர்த்தவுடனேயே ஒவ்வொன்றும் நம் உடலில் தீய விளைவுகளாகச் சேர்கின்றது. அதையெல்லாம் நாம் துடைக்க முடிகின்றதோ…?

என்னுடைய (ஞானகுரு) உபதேசத்தைக் கேட்டுப் பழகியவர்களுக்கு சொல்வதையே அடிக்கடி சொல்கின்றேன் என்று தோன்றும். புதிதாகப் படிப்பவர்களுக்கு “ஆகா…!” என்று ஒரு அதிசயத்தை உண்டாக்கும்.

இரண்டாவது தரம் சொல்லப்படும் போது சாமி சொன்னதை ஏறகனவே கேட்டோம், இன்றைக்கும் மீண்டும் “அதைத்தான் சொல்கிறார்…!” என்ற எண்ணம் வரும்.

ஆனாலும் ஒரு தடவை அதை எண்ணி உங்கள் உடலில் பதிவு செய்தாலும் சாமி என்ன சொன்னார்…? என்று திருப்பிக் கேட்டால் சொல்லத் தெரியாது.

ஆனால் மீண்டும் சொல்லும் போது உங்கள் நினைவிற்கு வரும். அந்த நினைவின் படி நன்றாகப் பதிவாக வேண்டும் என்று எண்ணினால் உங்கள் உடலுக்குள் விளையும்.
1.ஆனால் நேற்றுச் சொன்னது தானே… “ஹூம்….!” என்று
2.சாதாரணமாகச் சொல்லி விட்டு விட்டால்
அது வளர்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.

நீங்கள் செடிக்கு நேற்று உரம் போட்டீர்கள். நேற்றைக்கு உரம் போட்டது தானே என்ற வகையில் அந்தச் செடி அந்த உரத்தை ஏற்றுக் கொள்ளாது இருந்தால் செடி வளர்ச்சி ஆகுமா…?

ஏனென்றால் அந்தச் செடி நன்றாக வளர வேண்டும் என்றால் அவ்வப்பொழுது அதற்குகந்த சத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றால் மகசூல் காண முடியாது. வளர்ச்சி குறைந்துவிடும்.

அதைப் போல நீங்கள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஒரு தரம் வித்தானாலும் அந்த உணர்வின் சத்துக்குள் நினைவுபடுத்தி அந்த உணர்வைத் தூண்டச் செய்ய வேண்டும்.

அந்தத் தூண்டுதலான உணர்வுகள் கொண்டு உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும். அதற்காகத்தான் யாம் திரும்பத் திரும்பச் சொல்வது.

இராமாயணக் காவியத்தைக் கதையாகச் சொல்லும் போது நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுதும் அதே கதையைத் தான் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கும் அதே கதையாகத் தான் சொல்கின்றார்கள்.

முதலிலேயே இராமயாணத்தைச் சொல்லியாயிற்று…! அதே கதையைத் திரும்ப எதற்காகச் சொல்ல வேண்டும்…? என்று யாராவது சொல்லாமல் இருக்கின்றார்களா…? அல்லது கேட்காமல் விட்டார்களா…?

முன்பெல்லாம் இராமயாணமோ மகாபாரதமோ பெரியவர்கள் சொன்ன கதையோ அல்லது வாழ்க்கையில் ஒருவன் கெட்டுப் போன நிலைகளிலிருந்து எப்படி மீட்டுக் கொண்டான் என்று கிராமப்புறங்களில் ஒரு கதையாகச் சொல்லி நல்ல உணர்வுகளையும் நல்ல உணர்ச்சிகளையும் பதிவு செய்தார்கள். விடிய விடிய உட்கார்ந்து பேசிக் கொண்டே இருந்தார்கள்.

இப்போது கிராமப்புறங்களில் இராமயாணத்தை யாரவது கதை சொன்னால் பொழுது போகாமல் வேலையற்றுப் போய் உட்கார்ந்து கொண்டிக்கின்றார்கள் என்று நாம் சொல்கிறோம். அதைப் பார்க்கும் போது வெறுப்பு வருகின்றது.

இன்று கோவிலில் விழாவோ மற்றதுகளோ வைத்தார்கள் என்றால் அதிலே கரகாட்டமும் ஆட்டமும் பாட்டும் வரும். அந்தக் கரகாட்டத்தை வைத்து விடிய விடிய கொச்சை கொச்சையாகப் ஆடுவதும் பாடுவதும் வேடிக்கை பார்ப்பதும் இதுதான் பொழுது போக்கு.

அதே சமயத்தில் இங்கே டி.வி.யைப் போட்டு உட்கார்ந்தால் “டமார்… டுமார்…!” என்று சத்தம் போட்டு இங்கே பாட்டு கேட்டதென்றால் உடனே என்ன இங்கே வந்து விடுவார்கள்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த டி.வி.யில் ஏதாவது கொஞ்சம் தகராறு ஆகி கொஞ்சம் படம் “கர்…புர்…” என்று இருந்தால் அந்த டி.வில் வைத்திருப்பவரைப் பார்த்து “ஏனய்யா…! நீ டி.வி.யா வைத்திருக்கிறாய்…?“ என்று உதைக்கவே போய்விடுவார்கள்.

அந்த அளவுக்கு இன்றைய மனிதர்களின் உணர்ச்சியின் வேகம் இருக்கின்றது. மனிதனுடைய வேகத் துடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி விட்டது.

1.அதையெல்லாம் மடக்கிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான்
2.நீங்கள் எல்லோரும் அந்த மகா ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்காக வேண்டித்தான்
3.இத்தனை தடவை திருப்பித் திருப்பி திருப்பித் திருப்பிச் சொல்கின்றேன்.