குருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் அப்பொழுது அவர் உணர்த்திய உண்மைகளும்….!

Image

Guru - sabdharishi mandalam

குருவின் உயிராத்மா விண் சென்ற உணர்வும் “அப்பொழுது அவர் உணர்த்திய உண்மைகளும்….!”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி நான் (ஞானகுரு) இதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

விண்ணின் ஆற்றலை அவர் உடலிலே விளைய வைத்துக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அவர் உயிராத்மா எந்தெந்த நிலைகள் செயல்படுத்தியது…?

அவருடைய உயிராத்மா வெளியில் செல்லும் பொழுது மற்ற எந்த ஆத்மாக்களும் அதைக் கவர்ந்து இழுக்காதபடி இவருடைய உயிராத்மா எந்தெந்த வழிகளில் செயல்பட்டது…?
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற
2.அவர் உயிராத்மாவின் இயக்கச் சக்தியை
3.எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டினார்.

அவர் ஆரம்ப நிலைகள் கொண்டு அவர் உடலுடன் இருக்கப்படும் பொழுதே இத்தகைய ஆற்றலைக் காட்டி அந்தச் சக்தியை எனக்குள் பெறச் செய்தார்.

1.உடலை விட்டுப் பிரிந்த குருநாதரின் உயிராத்மா வெளியில் எவ்வாறு செல்கிறது…? என்ற நிலையும்
2.பிரிந்து சென்ற பின் அந்த உயிராத்மாவின் செயலாக்கங்களையும்
3.சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அது எப்படி ஈர்க்கப்படுகிறது…? என்பதையும்
4.தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டினார்.

அதே போல் ஒரு சாதாரண மனிதனின் உயிராத்மா வெளியில் செல்லும் பொழுது அந்த உயிராத்மாவின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது…? என்று இதையும் குருநாதர் காட்டுகின்றார்.

அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் எப்படி இணைக்க வேண்டும்…? என்பதையும் காட்டினார்.

உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாக்களுடன் தொடர்பு கொண்டவர்களை – அதாவது….
1.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ உறவினர்களையோ நண்பர்களையோ வைத்து
2.அவர்களின் ஆத்ம சக்தியின் வலுவைக் கூட்டச் செய்து
3.மகரிஷிகளின் எண்ணத்தை அவர்களுக்குள் ஓங்கச் செய்து
4.அந்த (இறந்தவர்களின்) உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்கச் செய்யலாம்.

உடலை விட்டுப் பிரியும் உயிராத்மாக்கள் அவர்கள் தவமிருக்கவில்லை என்றாலும் தியானமே எடுக்கவில்லை என்றாலும் கூட அவர்களையும் இவ்வாறு விண் செலுத்த முடியும் என்று குருநாதர் காட்டுகின்றார்.

உடலுடன் உள்ளவர்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை வலுக் கொண்டு எடுத்துத் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்ட பின்
1.உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் உறவினர்கள் நண்பர்களின் அனைத்து உயிராத்மாக்களும்
2.சப்தரிஷி மண்டல ஒளிக் கடலில் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து
3.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் உங்கள் உடலில் இருப்பதால் அதனின் துணை கொண்டு உங்கள் எண்ணத்தால் உந்தி விண்ணிலே செலுத்தப்படும் பொழுது “அந்த எடையற்ற உயிராத்மாக்கள்…” புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றார்கள்.

அங்கே இணைக்கப்படும் பொழுது சப்தரிஷி மண்டலத்தின் உணர்வை எடுத்து அங்கே வளரத் தொடங்குகின்றார்கள். சப்தரிஷிகளாக ஆகின்றார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வை எடுத்துத் தான் உங்களுக்கு இதைப் போதிக்கின்றோம். உங்கள் முன்னோர்கள் விண் சென்றால் அதன் வழி நீங்களும் அங்கே செல்வது மிகவும் எளிதாகும்.

உங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்… “தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்…!” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Image

Maharishi worlds

உங்கள் ஆயிரத்தெட்டு குணங்களிலும்… “தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்…!” – பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 

நீங்கள் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்திருந்தாலும் அவர்கள் பதிலுக்கு நன்மைகள் செய்யாது இடைஞ்சல் செய்யும் பொழுது அதில் யார் யாரெல்லாம் துன்பத்தை விளைய வைத்தார்களோ அவர்களை எண்ணிச் சங்கடப்படுகின்றீர்கள்… ஆத்திரப்படுகின்றீர்கள்…!

உங்கள் குழந்தைகள் உடம்புக்குச் சரியில்லை இல்லை என்றால் அப்பொழுது குழந்தைகள் நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். ஒருவர் மீது அதிகப் பற்றும் பாசத்துடனும் இருக்கும் பொழுது அவர் நல்லவராக வர வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.

ஆனால் இவை எல்லாம் நீங்கள் எண்ணியபடி நடக்காமல் தடைப்படும் பொழுது என்ன ஆகின்றது…? நம்மை அறியாமல் வேதனைப்படுகின்றோம். துயரப்படுகின்றோம் துன்பப்படுகின்றோம்.
1.இதைப் போன்ற துன்ப உணர்வுகள் நம் உடலுக்குள் இருக்கும்
2.ஆயிரெத்தெட்டு நல்ல குணங்களிலும் படிந்து விடுகின்றது.
3.நம் நல்ல குணங்களின் செயலாக்கங்கள் வலு குறைந்துவிடுகின்றது

நடந்த சம்பவங்களையும் இடைஞ்சல்கள் செய்தவர்களையும் நினைவுப்படுத்தும் பொழுது அந்த உணர்வுகள் மீண்டும் நம்மை இயக்கிக் கொண்டேயிருக்கின்றது.

அவ்வாறு அது இயக்குவதை அடக்குவதற்குத்தான் உங்கள் நல்ல குணங்களுக்குள் மாமமகரிஷிகளின் அருள் சக்தியை இந்த உபதேச வாயிலாக இணைத்து இணைத்துக் கொடுக்கின்றோம்.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும்
2.ஒவ்வொரு மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தியை
(அகஸ்தியர்.. போகர்.. வான்மீகி.. வியாசகர்.. அத்திரி.. கொங்கணவர்.. பிருகு.. கோலமாமகரிஷி.. காளிங்கநாதர்.. ஈஸ்வரபட்டர்..)
3.எல்லோரையும் உங்கள் நினைவிற்குக் கொண்டு வரச் செய்து
4.உங்கள் நினைவாற்றலை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தச் செய்து
5.அவர்கள் அருள் உணர்வை உங்களுக்குள் ஈர்க்கும்படிச் செய்து
6.உங்கள் உடலிலுள்ள ஆயிரெத்தெட்டு நல்ல குணங்களிலேயும் அதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அவ்வாறு பதியச் செய்த பின் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் உங்களுக்குக் கிடைத்து உங்கள் நல்ல குணங்களுடன் கலந்த தீமையான உணர்வுகளை அடக்கி தெய்வ குணமாக ஓங்கி வளர்க்கச் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா….! என்று உங்கள் உயிரிடம் வேண்டி அந்த உயர்ந்த குணங்களை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.

நம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல்களும்… அதைச் சமப்படுத்தும் வழி முறையும்…!

divine breathing

நம் மனதிற்குள் வந்து மோதும் பல விதமான எண்ணச் சிதறல்களும்… அதைச் சமப்படுத்தும் வழி முறையும்…!

மின்சாரத்தின் (ELECTRIC) துணை கொண்டு ஒரு கம்ப்யூட்டரை இயக்கப்படும் பொழுது எதனின் அழுத்தத்தைக் கொடுக்கின்றோமோ அதை எலெக்ட்ரானிக்காக (ELECTRONIC) மாற்றி அதற்குத் தக்க செயல்களைச் செய்து இயக்கிக் காட்டுகின்றது.

அந்தக் கம்ப்யூட்டர் இயங்குவது போலத்தான் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உயிரிலே மோதியவுடனே உணர்ச்சிகள் (எண்ணங்கள்) தோன்றி நம் உடல் முழுவதற்கும் பரவிக் கிடக்கும் அந்தந்த செல்களை இயக்கியவுடனே அதற்குத் தக்கவாறு நம்முடைய உடலின் இயக்கங்கள் ஆகின்றது.

ஒரு துணி நெய்யும் இயந்திரத்திலோ (SPINNING) அல்லது எம்ப்ராய்டரி (EMBROIDERING) பூ வேலைகளைச் செய்யக்கூடிய இயந்திரத்திலேயோ ஒன்றை அழுத்தி ஆணையிட்டால் (AUTOMATIC) போதும்.

அதனுடைய நேரப் பிரகாரம் (TIME) ஒவ்வொரு நிமிடத்திற்கும் மாற்றி மாற்றிப் இயக்கப்படும் போது அங்கே சரியான அமைப்புகளையோ (DESIGN) அல்லது பூ வேலைகளையோ அந்தத் துணிகளில் நெய்யும். அதைப் போன்று தான்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை எதுவோ அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு
2.ஒவ்வொரு குணத்திற்குத் தக்கவாறு நம்முடைய அங்கங்கள் இயக்குவதும்
3.நம்முடைய சொல்கள் வெளி வருவதும் (நம் பேச்சு)
4.கண்ணிலே எதிர் நிலையான அலைகள் உணர்வலைகளாகப் பாய்வதும் (நம் பார்வை)
5.ஒரு பொருளைப் பார்க்கும் நிலைகளும் அதனின் இயக்கமாக அமைகின்றது.
6.நாம் தவறு செய்யவில்லை என்றாலும்.. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

ஆனால் கண் கொண்டு நாம் ஒருவரைப் பார்க்காமல் இருக்க முடியாது. அப்படிப் பார்த்தாலோ அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நம் உயிரிலே பட்டவுடனே அந்த உணர்ச்சிகள் “பொங்கி எழுகின்றது….!”

அந்த உணர்வலைகள் சீறிப் பாய்ந்து நம் உடல் முழுவதற்கும் படரப்போகும் போது போராகின்றது. நெகட்டிவ் பாசிட்டிவ் (+/-). நம்முடைய உயிரின் துடிப்பின் நிலையே அப்படித்தான் இருக்கின்றது.

உயிரணுவிற்குள் இருக்கக்கூடிய கதிரியக்கச் சக்தியும் வெப்ப காந்தமும் இரண்டும் மோதும் போது போர். அதனுடன் வியாழனின் சத்தின் எதிர் கதிரியக்கம் சேர்க்கப்படும் போது சுழற்சியாகின்றது.

1.உயிரணுவிற்குள் இப்படித் “திருகிக் கொண்டு” இருக்கும் இந்த உணர்வின் தன்மைள்
2.அந்த எதிர் நிலையான தாக்குதலாகும் போது தான் அது சீர்பட்டு
3.நேர் துடிப்பாக உயிருக்குள் துடிப்பு ஏற்படுகின்றது.
4.ஆக போர் முறைகளில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

சத்ரு… மித்ரு… என்ற இயக்கச் சக்தி இல்லை என்றால் நம் வாழ்க்கையில் சீராக ஒன்றும் செய்ய முடியாது.

நாம் ரோட்டிலே போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பஸ் வேகமாக வருகின்றது. அந்த உணர்வின் வேகத் துடிப்பை நமக்குள் ஈர்த்து நம் நல்லதுடன் மோதும் போது தான் “நமக்கு ஆபத்து…! என்று அறிந்து விலகிக் கொள்கின்றோம்.

அந்தப் பஸ்ஸின் வேகத்திற்குத் தக்கவாறு இந்த உணர்வின் இயக்கம் நம்மைக் காத்துக் கொள்ளும் உணர்வாக நம்மை உந்தித் தள்ளுகின்றது.
1.மனிதனின் வாழ்க்கையில் மோதும் உணர்வுகள் அனைத்தும்
2.இதைப் போன்று தான் இயக்குகின்றது.

நாம் நல்ல குணத்தைக் கொண்டு இருக்கும் போது ஒருவன் தவறு செய்கிறான் இருந்தால் இந்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டுக் குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதே சமயம் நம் நல்ல குணங்களுக்குள் சேர்ந்தவுடனே மேல்வலி தலைவலி வந்து விடுகின்றது. உடலுக்குள் மகாபாரதப் போராகின்றது.

இந்த பூமிக்குள் தோன்றிய அனைத்துச் சக்தியும் அது ஒன்றுக்குள் ஒன்று மோதிப் போராகும் நிலையை மகாபாரதப் போர் என்று ஞானிகள் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி சுவாசிக்கும் போது ஒவ்வொரு அணுக்களின் செல்களிலும் எதிர் நிலையாகி அது நமக்குள் மாறுபட்டுக் கலக்கும் நிலைகள் கொண்டு நம்மை அறியாமலே உடல் வேதனையும் மற்ற நிலைகளும் ஏற்படுவது உண்டு.

உதாரணமாக நல்ல குணம் கொண்டு நாம் வீட்டிலிருக்கும் பொழுது எதிர் வீட்டிலே ஒருவருக்கொருவர் காரசாரமாக திட்டிச் சண்டை போடுகிறார்கள். அதை நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

நல்ல குணம் கொண்டு நாம் பார்த்தாலும் அவர்கள் வெளிப்படுத்தும் சண்டையின் உணர்வுகள் நமக்குள் மோதியவுடன் ஈர்க்கும் சக்தியான காந்தம் இந்த எதிர் நிலையான வலுவை நமக்குள் ஈர்க்கின்றது.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணு செல்கள் அதை இழுத்து நம் ஆத்மாவாக மாற்றுகின்றது. பரமாத்மாவிலிருந்து இழுக்கின்றது.

நம் பூமி ஒரு பரம். விண்ணிலிருந்து வரும் சக்திகளைப் பூமி தனக்குள் எடுத்துக் கொண்டாலும் இதிலிருந்து வெளிப்படும் சக்தியை சூரியனுடைய காந்த சக்திகள் தனக்குள் கவர்ந்து பூமியின் ஆத்மாவாகப் பரமாத்மாவாக (காற்று மண்டலமாக) மாற்றுகின்றது.

சண்டை செய்வோரிடமிருந்து வெளிப்படும் சக்தியைச் சூரியனின் வெப்ப காந்தங்கள் கவர்ந்து கொள்கின்றது. கண் கொண்டு பார்க்கும் போது அந்த அலைகளை நாம் சுவாசிக்க நேர்கின்றது.

நாம் பாசமாக இருக்கின்றோம். அங்கே ஒருவர் அடிபடுகிறார். அதைப் பார்த்ததும் சோர்வடைகின்றோம். அதே சமயத்தில் யார் அடிக்கின்றார்களோ அவரைப் பார்த்ததும் வெறுப்படைகின்றோம்.

வெறுப்பான உணர்வும் சோர்வான உணர்வும் இரண்டும் கலந்து நம் நல்ல குணங்களுடன் சுவாசிக்க நேர்கின்றது. சுவாசித்தவுடனே நமக்குள் போர் நடக்கின்றது. உயிருக்குள் பட்டவுடனே இங்கே எரிச்சலாகின்றது.

சுவாசிக்கும் உணர்வுகள் நம் உயிருக்குள் மோதும் போது நல்லது கெட்டது என்று இயக்கி அதிலிருந்து அந்த நேரம் விலகினாலும் உடலுக்குள் செல்லும் அந்தத் தீமையான உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்குள் நோய் வரக் காரணமாகின்றது.

1.நாம் சந்திக்கும் சந்தர்ப்பம்…
2.நாம் நுகர்ந்த உணர்வு எதுவோ… அது தான் நம்மை இயக்குகின்றது என்பதை
3.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

“பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…!” என்பது போல் சந்தர்ப்பங்களை நல்லதை உருவாக்கும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

தீமை செய்யும் உணர்வுகள் நமக்குள் உருவாகாதபடி மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்க்கும் பழக்கம் வந்து விட்டால் அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் அடைந்த எல்லையை நாமும் அடைய முடியும்.

மூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்பிச் சக்தி பெற முடியுமா…?

Real Kundalini Power

மூலாதாரத்திலோ அல்லது முதுகுத் தண்டிலோ தட்டி ஏழுப்பிச் சக்தி பெற முடியுமா…?

தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அந்த வலுவின் துணை கொண்டு முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண்ணிலே உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும். அவர்களை ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

அவர்களை அங்கே இணைத்து விட்டால் அவர்கள் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எளிதில் பெற முடியும்.

1.ஒரு செயின் தொடர் போல நாம் எடுத்துக் கொண்டால்
2.அடுத்து நாம் ஆத்ம சுத்தி செய்யும் போது
3.மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை எண்ணியவுடனே
4.அந்த ஞானிகளால் வெளியிடப்பட்ட சக்தியைப் பெறுகின்றோம்.

எந்த ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக இருக்கின்றார்களோ அவர்கள் துணை கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நண்பர்களின் உறவினர்களின் (ஏனைய) உயிராத்மாக்களையும் அங்கே உந்தித் தள்ளும் ஆற்றல்கள் பெறுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளை உருவாக்கச் செய்வதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த தியானத்தின் உட்பொருள். குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் அல்ல.

1.மூலாதாரத்தைத் தட்டி எழுப்புவதும்…
2.முதுகுத் தண்டை தட்டி எழுப்புவதும்…
3.குரு சொன்ன நிலைகள் படி நான் செய்ததும்
4.ஜிர்…ர்ர்ர்… என்று எனக்குள் சக்திகள் இறங்குகிறது என்று சொல்வதெல்லாம் பைத்தியக்காரத்தனமானது.

“மந்திர ஒலி…” கொண்டு எந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்டனரோ அது அந்த இயக்கத்தின் தன்மை சிலதுகள் தெரியும். (மந்திர ஒலி என்பதே மனித உடலில் விளைய வைத்து எடுக்கப்பட்ட உணர்வு தான்)

மனித உணர்வுக்குள் நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற நிலைகள் மந்திர ஒலியால் எடுக்கப்பட்ட நிலையை
1.அதை மீண்டும் நினைவூட்டும் போது
2.இன்னொரு மனித உடலுக்குள் இணைக்கப்பட்ட இந்த உணர்வுகள்
3.அதைத் தொட்டவுடன்… “ஜிர்…ர்ர்ர்…!” என்று இருக்கும்
4.உடனே… ஆகா…! இவர் பெரிய மகான் என்று போற்றுவோம்.
5.அவர்கள் எடுத்துக் கொண்ட மந்திர ஒலிக்குள் சேர்க்கப்பட்ட சில நிலைகள் தான் அவ்வாறு செயல்படுத்துகின்றது.
6.மெய் ஞானியின் அருள் சக்தியைப் பெறும் தகுதி இல்லை
7.அதன் அருகிலே சென்றாலும் அந்த எண்ண அலைகள் இவர்களைச் சுட்டுப் பொசுக்கி விடும்.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்திருக்கும் விஷத்தை நம் உடல் மலமாக மாற்றிவிடுகின்றது. நல்ல சத்தை உடலாக மாற்றிக் கொள்கின்து.

அதைப் போன்று தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களை நாம் எடுத்து உடலில் சேர்த்து விளையை வைத்துக் கொண்டால் நம் உயிராத்மா வெளியே வந்த பின்
1.உணவில் மறைந்த விஷத்தை உடல் கழித்துவிடுவது போல்
2.உடல் பெறும் உணர்வைக் கழித்துவிட்டு
3.எந்த விண்வெளியின் ஆற்றலை நுகர்ந்தோமோ நம் உயிராத்மா அங்கே தான் போய்ச் சேருமே தவிர இங்கே அல்ல.
4.ஆக சாதாரண மனிதன் யாரும் நம்மைக் கவர்ந்து கொள்ள முடியாது.
5.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் யாம் சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரி தான் என்பார்கள்.

வீட்டிற்குள் போய் உட்கார்ந்தவுடன் என் பையன் சொன்னபடி கேட்காமல் இருக்கின்றானே…! இப்படியே தப்பு செய்து கொண்டிருக்கின்றானே…! என்று எண்ணினால் போதும்.

அவன் மேல் உள்ள பாசத்தினால் இத்தகைய வெறுப்பான எண்ணங்களை எடுத்துக் கொண்ட பின் உடலை விட்டுப் பிரியும் நம் உயிரான்மா அடுத்து நேராக அந்தப் பையன் உடலுக்குள் தான் போகும். வேறு எங்கேயும் போக முடியாது.

நாம் வாழ்ந்த காலத்தில் வெறுப்பும் சலிப்பும் வேதனையும் கோபமும் ஏற்படுத்திக் கொண்ட பின்
1.வேறு எந்த உடலுக்குள் சென்றாலும்
2.இதே உணர்வின் தன்மை தான் அங்கேயும் இயக்கும்.
3.அதிலிருந்து மீளும் வழி இல்லை…!

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மீளுவதற்குத் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் இந்த உபதேசத்தின் தன்மை கொண்டு அந்த மகரிஷிகளின் ஆற்றல்களைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

செடிகளுக்கு உரமிட்ட பின் அந்தப் பயிர் செழித்து வளர்வது போல் உங்களுடைய நினைவலைகளை அங்கே அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளச் செய்து பேராற்றல்களைப் பெறச் செய்கின்றோம்.

உபதேசித்த உணர்வுகள் கொண்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டுச் சென்றால்… “அவதார புருஷனாகக் கல்கி…!” என்ற நிலையை நிச்சயம் அடைகின்றீர்கள்.

நம்மைப் போன்று மனிதர்களாக வாழ்ந்தவர்கள் சென்றடைந்த எல்லை அது தான்.

நம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்படும் நிலைகளையும்… அதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களையும்… “இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது…!”

Image

Valmiki - ramayana

நம் உயிரின் செயலாக்கங்களையும்… எண்ணங்களால் இயக்கப்படும் நிலைகளையும்… அதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களையும்… “இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது…!”

1.தசரதச் சக்கரவர்த்தி (உயிர்):-
நாராயணன் மூன்றாவது அவதாரமாக சீதா ராமனாகத் தோன்றுகிறார் என்று காட்டி ஒரு உடலுக்குள் உணர்வுக்குத் தக்க எண்ணங்கள் எப்படி உருவாகிறது என்று காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையும் இந்த உயிரில் எண்ணங்கள் அதிகமாக… “ஆசைகள்” வரும் போது… எந்தெந்தக் குணங்களை நுகருகின்றோமோ அது எல்லாம் இந்த உயிருடன் ஒன்றிய சக்தியாக மாற்றுகிறது என்பதைத் தசரத சக்கரவர்த்தி என்று காட்டுகின்றார்கள்.

நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் அதற்குண்டான சக்தியாக மாற்றுகிறது.
1.அதிலே இணைந்த நிலைகள் அது அது
2.தன் தன் இனத்தைப் பெருக்கத் தான் அது முயற்சிக்கும்.

அதில் இராமனுடைய தாயோ சாந்தமானது. அவளுக்குப் பிறந்ததோ சாந்தமான குணம். அவன் தான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளக் கூடியவன். இந்த உடலில் அனைவரையும் அரவணைத்து தனக்குள் வாழும் நிலை பெற்றவன் என்று இராமனின் தாய் எண்ணுகிறது.

தலைமகன் “இராமன்” அந்த நல்லவனுக்குப் பட்டம் சூட்டினால் இந்த சாம்ராஜ்யம் நன்றாக இருக்கும் என்று தசரதன் நினைக்கிறான்.

2.கைகேயி:-
இருந்தாலும் இவன் (தசரதன்) ஆசையால் நுகர்ந்த உணர்வுகள் அந்த உணர்வின் சக்தியாக உருவானது தான் கைகேயி. கைகேயி தன் மகன் பரதனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதன் கொடுத்த வரப்படி சொல்கிறது.

கைகேயி தன் ஆசையின் தன்மை கொண்டு பரதனை வளர்த்தாலும் சகோதர ஒற்றுமை கொண்ட இவன் அண்ணனே (இராமன்) சிறந்தவன் என்ற நிலையில் இருக்கின்றான்.

இங்கே இராமன் இருந்தால் பரதன் அவனுடன் இணைந்து “அவன் போக்கிற்கே போய் விடுவான்…!” என்று கைகேயி எண்ணுகின்றது. அதனால் இராமனைக் காட்டுக்கு அனுப்புகிறது.

காட்டுக்குள் 14 வருடம் வனவாசம் சென்றால் அந்த ஒரு மண்டலத்துக்குள் பரதன் சிறப்பான நிலைகள் அடைந்து விடுவான். இவனுடைய ஆட்சி நிலையாக இருந்தால் இராமன் வெறுத்து விடுவான் என்று தாய் “சூது” செய்கின்றது.

இதற்கென்று சூது உபதேசம் கொடுப்பவரின் (கூனி) நிலைகளைத் தாய் தன் செவிகளில் கேட்கிறது.
1.பிறிதொன்றின் மீது ஆசைப்பட்டு அந்த உணர்வுகளை நுகரப்படும் போது
2.அந்த ஒவ்வொரு உணர்ச்சியும் ஆசையின் நிமித்தமாகத்
3.தன்னை எப்படி மாற்றுகிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள்.

ஒருவர் வாழ்வதைப் பார்த்த பின் அந்த வாழ்க்கையே வாழ வேண்டும் என்று தன் மகனையே (பரதன்) அது காக்கின்றது.

நமக்குள் எடுத்துக் கொண்ட குணங்கள் எந்தெந்தச் சக்தியோ அதனுடைய இனத்தைப் பெருக்கத் தான் நம்முடைய குணங்கள் அது வரும் என்பதைத் தெளிவாக்குகின்றனர்.

இந்த உயிர் (தசரதன்) சந்தர்ப்பத்தால் நுகர்ந்தது அதன் சக்தியாக ஆனாலும் அது மீண்டும் தன் இனத்தையே பெருக்கும் என்பதையே தெளிவாகக் கூறுகின்றார் வான்மீகி மாமகரிஷி.

பத்தாவது நிலை அடையும் உயிர் பல உணர்வுகளை எடுத்தாலும் நல்லவனான இராமன் ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணும் பொழுது சந்தர்ப்பத்தால் நுகர்ந்த ஆசையின் உணர்வுகள் அதனின் வளர்ச்சியில் வரப்படும் போது… “எந்த நிலை ஆகின்றோம்…?” என்று காட்டுகிறார்கள்.

3.இராவணன் (உடல்):-
இதன் வழிப்படி வரப்படும் போது இந்த உணர்வின் சத்து இந்த உடலுக்குள் இயக்கும் சக்தியாக இருப்பினும்
1.நுகர்ந்த உணர்வுகள் உடலாகின்றது.
2.அதன் வழி கொண்டு உறுப்புகளாகின்றது.
3.அந்த உறுப்புகளின் வளர்ச்சி கொண்ட இந்த உடல் தான் இராவணன்
4.இராவணன் (நம் உடல்) சகல கலா வல்லமை பெற்றவன் – எல்லா இசையிலும் வல்லவன்
5.புழுவிலிருந்து மனிதன் வரையிலும் உணர்வுக்கொப்ப இசைகள் வளர்ந்தது.
6.அந்த இசைக்கொப்ப மனித உருவைக் கொடுத்தது.
7.இராவணன் “சிவ பக்தன்… சிவனை வணங்குபவன்…!” உடலின் பற்று கொள்கின்றான். (உடல் என்றால் சிவம்)

சிவம் என்ற நிலையில் உடல் வரப்படும் போது தன்னுடன் (இராவணன்) இணைந்து செயல்படும் சகோதரி சூர்ப்பணகை. இந்தச் சகோதரி மற்றொருவரின் (காட்டில் இராமனின்) அழகைக் கண்டு ரசிக்கின்றது.

இராமனைத் தனக்குள் கவர வேண்டும் என்று எண்ணும் பொழுது… அவன் மனைவி அழகாக இருக்கின்றாள். அவளை விரட்டினால் தானே அது நடக்கும் என்பதற்காக சீதாவின் அழகைப் பற்றி இராவணனிடம் வர்ணிக்கின்றாள்.

மேலும் சீதா தன் அழகினால் “என்னை அவள் அவமதித்தாள்… அவமதித்தாள்…!” என்று சூர்ப்பணகை இராவணனிடம் குறையாகக் கூறுகின்றாள். இந்த உணர்வின் தன்மையை உற்று பார்க்கும் போது இராவணன் சீதா மீது ஆசைப்படுகின்றான்.

இந்த ஆசையின் உணர்வு அவனுக்குள் வரும் போது சகல வல்லமை பெற்று பத்தாவது நிலை அடையும் இராவணனுக்குள் பகைமை உணர்வுகளை எப்படித் தோற்றுவிக்கிறது…? என்று காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் முழுவதும் தூங்குகின்றது… அது கும்பகர்ணன். அவன் மிக மிக நல்லவன்.

நமக்குள் ஆசையின் நிமித்தமாகவோ அல்லது சந்தர்ப்பத்தாலோ தீமையான உணர்வை நுகர்ந்து விட்டால் நம் நல்ல குணங்கள் அனைத்தும் தூங்குகிறது என்று காட்டுகின்றார்கள்,

ஆக தான் நுகரும் உணர்வுகளில் எது உருவாகின்றதோ வெறுக்கும் உணர்வும் ஆசையின் உணர்வும் மாறி மாறி வரப்படும் போது இவனுள் விளையும் உணர்வே இவனுக்கு எதிரியாகின்றது. இராவணனுடைய மகனே அவனை எதிர்க்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் அவன் ஆசையின் நிலைகளை வளர்க்கப்படும் போது தீமை என்ற உணர்வு வந்தால் அதை வெறுக்கும் தன்மை வருகின்றது. ஆகவே இவனுக்குள் விஷத்தின் தன்மை கலந்து இவனுடைய செயலாக்கங்கள் அனைத்தும் எந்த இசைகளைக் கண்டானோ சோக இசையாக மாறுகின்றது.

4.இராமன் சீதா ஆஞ்சநேயர் (எண்ணங்கள் இயக்கும் நிலைகள்):-
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் எந்தச் சத்தைத் தனக்குள் எடுத்துக் கொள்கிறதோ அந்தக் குணத்தைக் காக்க இந்த உணர்வின் தன்மை ஊடுருவி அதைக் காக்கும் செயலாகச் செயல்படும்.

கவர்ந்த சத்து சீதா. சத்தின் மணம் உயிரிலே படும் பொழுது எண்ணங்கள் இராமன். இராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் செயல்படுத்துவார்.

அதாவது உதாரணமாக நாம் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை தன்னைப் பாதுகாக்கும் நிலையாக மற்ற எண்ணங்களை அடக்கும்.

எதைக் கவர்ந்தோமோ அந்த உணர்வை – அந்தச் சீதா என்ற சுவையைக் காக்கும் உணர்ச்சிகளை அங்கே தூண்டும் என்பதை ஆஞ்சநேயன் என்று காட்டுகின்றார்கள். தாவிச் செல்லும் உணர்வுகளுக்கு ஆஞ்சநேயன் என்று காரணப் பெயர் வைத்தனர் ஞானிகள்.

5.இராமாயணக் காவியத்தின் மூலம்:-
1.ஒரு உணர்வின் உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றது…? என்ற நிலையும்
2.மற்றொன்றுடன் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையும்
3.எண்ணங்கள் எப்படி உணர்வுகள் ஆகின்றது…?
4.உணர்வுகள் எப்படி அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது…?
5.அந்த உணர்வுகள் எப்படி உடலாக்குகின்றது…? என்ற நிலையில்
இதையெல்லாம் அன்று வான்மீகி மூடனாக இருந்தாலும் அவன் அந்தப் பட்சியின் உணர்வால் அதை அறியும் ஆற்றல் பெறுகின்றான்.

தான் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை இராமாயணக் காவியமாகப் ப்டைத்து அதன் மூலம் கருத்துக்களை மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தார் வான்மீகி மாமகரிஷி.

இந்த உயிரும் (தசரதன்) உடலும் (இராவணன்) சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளுக்கொப்ப (தோன்றும் எண்ணங்களுக்கொப்ப) “கடைசியில் எந்தெந்த நிலையை அடைகிறார்கள்…!” என்பதைக் காவியமாக உணர்த்தியுள்ளார்.

“தீமைகளை வகுந்திட…” நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்

Naranarayanan

“தீமைகளை வகுந்திட…” நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும் 

பத்து அவதாரத்தில் நரசிம்ம அவதாரம் முக்கியமானது. நாம் இப்போது அந்த நரசிம்ம அவதாரத்தில் இருக்க வேண்டும். அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்குப் பயன் தரும்.

நரசிம்ம அவதாரம் என்றால்
1.அதாவது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.
2.ஆகாசமும் இல்லை பரவெளியும் இல்லை.
3.வாசல்படியில் வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று காட்டியிருப்பார்கள்.

நாம் சுவாசிக்கும் நிலை நம் மூக்கு தான் நமக்கு வாசல்படி. நாம் கோபமான உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த அசுர சக்திகள் நம் சுவாசத்தின் வழியாகப் புகுந்து… உயிரிலே பட்டு பிரணவமாகி (ஜீவன்)… அணுக்களாக விளைந்து… நம் உடலாகின்றது…!

இரண்யன் எப்படிப்பட்ட வரம் கேட்கின்றான்…? எந்தத் திக்கிலிருந்தும் வந்து என்னை யாரும் எதுவும் அழிக்கக் கூடாது…! என்று தான் கேட்கின்றான்.

இரண்யன் என்றால் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்விலும் அந்த விஷங்கள் உண்டு. அந்த விஷத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத்தக்கத் தான் அந்த உணர்வின் தன்மை (குணம்) நம்மை இயக்கும். அதனால் நம் உடலுக்குள்ளும் மாற்றமாகும்.

பல கோடிச் சரீரங்களில் நாம் நுகர்ந்த அத்தகைய விஷங்களைக் கழித்துக் கழித்துத்தான் அதற்குத் தகுந்த உறுப்புகள் உருவாகி மனித உடலாக இன்று வந்திருக்கின்றோம்.

மனிதனான பின் விஷத்தை ஒளியாக மாற்றும் நிலை இந்த மனித உடலிலிருந்து பெறவேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகின்றது.

அதற்காக வேண்டித் தான் இங்கே வாசற்படியிலே வைத்து… “இரண்யனைப் பிளக்க வேண்டும்…!” என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

வாசல்படிக்கு மேலாகப் புருவ மத்தியில் தான் நம் உயிர் இருக்கின்றது. ஆக உயிர் – மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.

ஆற்றல் மிக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை உயிரின் நினைவுகள் கொண்டு நுகர்ந்து வாசலில் வைத்து அடைத்து விட்டால் அசுர உணர்வின் சக்திகள் உடலுக்குள் புகாது மாய்க்கப்பட்டு விடுகின்றது.

அப்பொழுது தீமைகளை நாடாது நமக்குள் நல்லதை வளர்க்கும் தன்மை வருகின்றது. ஆகையினாலே மனிதனாகப் பிறந்த நாம்
1.அந்த மெய் ஒளியின் ஆற்றலை எடுத்து
2.உயிரிலே வைத்து நெருப்பாகக் கூட்டும் பொழுது – நர நாராயணனாக ஆகி
3.நம்மை அறியாது நுகரும் விஷத்தின் தன்மைகள் மாய்க்கப்படுகின்றது

ஆகவே வாசற்படியில் வைத்து இரண்யனைப் பிளக்கும் இந்த நிலையைத்தான் நரசிம்ம அவதாரம் என்று ஞானிகள் சொன்னார்கள். இதை மனிதன் ஒருவன் தான் செய்ய முடியும்.

எந்த அளவிற்கு (எத்தனை தடவை) நாம் மகரிஷிகளின் உணர்வை எண்ணிப் புருவ மத்திக்கு நம் நினைவாற்றலைக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்குப் பலன்களைப் பெறமுடியும்.
1.தீமைகள் நம்மை அணுகாத நிலையும்
2.மெய் ஒளியின் சுடராக நம் உயிராத்மா மாறுவதையும்
3.நிச்சயம் உணர முடியும். காணவும் முடியும்.

குரு இல்லாத வித்தை வித்தையாகுமா…?

Dhakshinamoorthy

குரு இல்லாத வித்தை வித்தையாகுமா…? 

மெய் ஞானிகளால் வெளியிடப்பட்ட… மாமகரிஷிகள் வெளிப்படுத்திய ஆற்றல்களைச் சக்தி வாய்ந்தவர்கள் அல்லாதபடி “சாதாரண மக்களால்” அதைக் கவர முடியாது.

அத்தகைய சக்தி வாய்ந்த அந்தச் சக்தியை நீங்களும் கவரும் வண்ணம் அதைச் செய்வதற்கே இப்போது இந்த உபதேசம்.

சாதாரண நிலைகளில் ஏட்டுச் சுவடிகளில் படித்தோ புத்தகங்களில் படித்தோ அந்தப் படிப்பின் நிலைகள் கொண்டு அந்த ஞானியின் அருளை நீங்கள் பெறும் தகுதி இல்லை.

காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனின் தன்மையை நீங்கள் பெற முடியும்.
1.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
2.அந்தச் சக்திக்கு உண்டான வித்து தேவை.
3.அதற்குத் தான் குரு வேண்டும் என்பது…!
4.குரு தனக்குள் படைத்து அந்த உருவின் தன்மை தனக்குள் இருந்தால் தான் அந்தச் சக்தியை எடுக்கும்.
5.குரு இல்லாத வித்தை வித்தையாகாது.
6.குருவின் பலம் உங்களுக்கு வேண்டும்.

அதனால் தான் மெய் வழியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கும் உங்கள் அனைவருக்குள்ளும் அந்த உணர்ச்சியை உந்தச் செய்து அந்த ஞானிகளின் உணர்வான சத்தைப் பெறவேண்டும் என்ற உணர்ச்சியைத் திரும்பத் திரும்பத் தூண்டச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை எமக்கு (ஞானகுரு) ஏற்படுத்தினார். அந்த ஆற்றல் மிக்க சக்தியை எம்மைப் பெறும்படி செய்தார்.

அவர் எனக்குள் எப்படி அதைப் படைத்தாரோ அதே போன்று ஒவ்வொரு நொடியிலும் அந்த ஞானிகளின் நிலைகளை நான் எடுத்துக் கொள்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தியும் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்கின்றேன்.
1.அந்த உணர்வின் தன்மை எமக்குள் ஈர்க்கப்பட்டு
2.அதே உணர்வின் இயக்கமாகத்தான் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்,

உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய பல கோடிக் குணங்களுக்குள்ளும் அதை நிகழ்த்தி அதை மாற்றி நல்ல உணர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியும் ஏற்படுத்துகின்றோம்.

ஞானிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று யாம் சதா உங்களுக்காகப் பாய்ச்சும் பொழுது நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தாலே போதுமானது.

அதுவே உங்களுக்குள் குருவாக அமைந்து அந்தச் சக்தியைப் பெறும் தகுதியே ஏற்படுத்தும். மேலும் நீங்கள் செல்ல வேண்டிய ஞானப் பாதையையும் குருவாக இருந்து அதுவே வழி காட்டும்.

அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்…!

மந்திர தந்திரம் செய்பவர்களுடன் நாம் பழகலாமா…?

Image

manthra thantra

மந்திர தந்திரம் செய்பவர்களுடன் நாம் பழகலாமா…? 

குருநாதர் எமக்கு (ஞானகுரு) ஆரம்பத்தில் சில சக்திகளைக் கொடுத்து அனுபவம் பெறச் செய்தார்.

தனியாகக் காட்டுக்குள் அழைத்துப் போய் ஒரு மரத்தைப் பார்த்து விரலை நீட்டி அவர் சொன்ன அந்தச் சொல்லை நான் சொன்னவுடன்… “மரம் அப்படியே தூக்கி வீசி எறிகின்றது….!”

அப்படி ஆனவுடனே எனக்கு என்ன செய்கிறது…? திமிரே எனக்குள் வருகின்றது.

யாராவது வரட்டும்… ஒரு கை பார்க்கிறேன்…! எந்த மந்திரவாதி வந்தாலும் அவர்களை நான் என்ன செய்கிறேன் பார்…? என்று இந்த அகந்தை எனக்குள் வருகிறது.

விரலை நீட்டி மரத்தைத் தூக்கிப் போட்டவுடனே எனக்கு இப்படி வருகிறது. அப்போது தான் குருநாதர் சொல்கிறார். உனக்குள் அகந்தை எப்படி வருகிறது பார்த்தாயா…?
1.நீ எதைத் தூக்கி எறிய வேண்டும்…?
2.தீமை செய்வோரின் எண்ணம் உனக்குள் வராதபடி
3.அந்தத் தீமையைத் தான் தூக்கி எறிய வேண்டும்.

அந்தத் தீமையான நிலைகள் உன்னை ஆட்டிப் படைக்காதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உன் உடலில் தீமை என்ற நிலையைத்தான் தூக்கி எறிய வேண்டும்.

மரத்தை வீசி எறிந்ததும் அப்பொழுது யாரை நினைக்கின்றாய்…? உன்னை யார் எதிர்த்தாலும் அந்த மனிதனைக் கொல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றாய்.

ஆனால் அவனுக்குள் இருக்கக்கூடியது எது…? அந்தத் தீமையான செயல்…!
1.அந்தத் தீமையை அவனிடமிருந்து நகர்ந்து ஓடக்கூடிய நிலைகளில்
2.நீ எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகளை அங்கே பாய்ச்சி
3.அந்தத் தீமையைத் தூக்கி எறிய வேண்டுமே தவிர
4.நீ அவனை வீழ்த்தக் கூடாது…! என்று தெளிவாக்குகின்றார்.

திருநெல்வேலியில் ஒரு டாக்டர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி இது. அவர் குடும்பத்தில் பழகின தோஷத்தில் மந்திரவாதிகள் பல வேலைகளைச் செய்தனர்.

அவர்கள் வீட்டில் பணம் வைத்திருந்தால் காணாமல் போய்விடும். என்ன தான் வீட்டை மூடி வைத்திருந்தாலும் பாத்திரங்கள் காணாமல் போகின்றது. புடவைகள் காணாமல் போகின்றது.

அப்புறம் இவர்கள் தியானத்தை எடுத்து அது ஓரளவுக்கு நிற்க ஆரம்பித்தது. இருந்தாலும் கூட மறுபடியும் என்ன செய்தார்கள்…?

வீடு பூட்டியிருக்கின்றது. வீட்டிற்குள் ஒரு முட்டை வருகின்றது. அதில் கரு மை தடவி இருக்கின்றது. அப்போது அவருக்கு மீண்டும் இந்த நினைவை ஊட்டுகின்றது.

மந்திரவாதிகள் செய்த உணர்வு காற்றிலிருக்கிறது. அதை மீண்டும் அவர்கள் எடுத்துச் சுவாசித்த அடுத்த கணம் வீட்டிலிருந்து பொருள்கள் காணாமல் போகின்றது.

இவையெல்லாம் இன்னொரு உடலில் உள்ள இந்த ஆவியின் தன்மைகள் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்கின்றது. அவர்களும் ஆன மட்டுக்கும் பார்த்தார்கள். எல்லா மந்திரவாதிகளிடமும் போய் முடிந்த மட்டுக்கும் பார்த்து வந்தார்கள். ஒன்றும் ஆகவில்லை.

என்னிடம் (ஞானகுரு) அந்த டாக்டர் வந்தார். சாமி…! நீங்கள் இத்தனையும் சொல்கிறீர்கள். நீங்கள் இதைத் தடுக்கலாம் அல்லவா…!

எங்கள் பணமெல்லாம் போய்க் கொண்டே இருக்கின்றது. கட்டிக் கொள்வதற்குக் கூட சேலை இல்லை. கை கால் எல்லாம் எரிச்சலாக இருக்கிறது. என்ன செய்வது…! என்றே ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இதை நிறுத்தலாம் அல்லவா…! என்று எம்மிடம் கேட்கின்றார்கள்.

ஏனென்றால் தியானத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்று சொல்பவர்கள் சில பேர் இத்தகைய வினாக்களை எழுப்புகின்றனர்.

சாமி இத்தனையும் சொல்கிறார்…! ஏன் மந்திரவாதிகளை எதிர்த்துச் அவர் செய்யக்கூடாதா…? நான் தான் தியானம் செய்கிறேன் அல்லவா…! எனக்குச் சாமி இதைச் செய்யக்கூடாதா…? என்று வினாக்களை எழுப்புகிறார்கள்.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நான் (ஞானகுரு) என்ன செய்ய வேண்டும்…? அந்தக் கடுமையான “ஒடியன்… மந்திரத்தை…” நான் ஜெபிக்க வேண்டும். அந்த உணர்வின் தன்மை எடுத்து அவர்களை நன் காப்பாற்றலாம்.

எப்படி…?

என்னிடம் இருக்கின்ற நல்ல குணங்களை வைத்து அவர்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் மந்திரத்தை வைத்து நான் தடுக்க வேண்டும்.

அதாவது….. குருநாதர் சொல்லிக் கொடுத்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் எடுக்காதபடி நிறுத்திக் கொண்டு மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்…!

இவ்வளவும் செய்த பின்பு நான் நல்லதைச் சொல்ல முடியுமா…!

அப்புறம் அந்த டாக்டரிடம் சொன்னேன்…! நீங்கள் எதுவாக இருந்தாலும் அந்த மந்திரவாதிகள் சொல்லை எடுக்க வேண்டாம். எனக்கு இப்படிச் செய்துவிட்டான் என்று எண்ணும் போது மீண்டும் மீண்டும் மந்திரவாதியின் உணர்வுகளைத் தான் நீங்கள் வளர்த்துக் கொள்கின்றீர்கள்.

அதிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களைப் பாதுகாக்கும் சக்தியாக அது வரும் என்று சொல்லி அவர்களை மாற்றினேன். இது நடந்த நிகழ்ச்சி.

இதைப் போன்ற மந்திர தந்திர நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகவும் உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிந்து தீமைகள் புகாது காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் இதைச் சொல்கிறோம்.

ஏனென்றால் மக்கள் எத்தனை நிலைகளில் அவதிப்படுகின்றார்கள் என்று குருநாதர் தெளிவாகக் காட்டினார். பல வகையிலும் பல அனுபவங்களைக் கொடுத்தார். (சும்மா சாதாரணமாக நான் உங்களிடம் சொல்ல வரவில்லை.)

ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால் எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது. நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும். “உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால் உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

ஆகவே யாம் (ஞானகுரு) இப்பொழுது என்ன செய்கிறோம்…?
1.உங்களுக்குள் அந்த மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சி நல்லதாக வேண்டும் என்று தான் யாம் தவமிருக்கின்றோம்
2.இதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

“பாரதம்…” மகாபாரதமாக எப்படி ஆனது…? மகாபாரதப் போர் என்றால் என்ன…? – விளக்கம்

Image

Mahabharatam

“பாரதம்…” மகாபாரதமாக எப்படி ஆனது…? மகாபாரதப் போர் என்றால் என்ன…? – விளக்கம்

 

பூமி தான் ஓடும் வேகத்தில் சூரியனிலிருந்து வெளிப்படுத்தும் ஆற்றல் மிக்க காந்த அலைகளுடன் உராயப்படும் போது தான் பூமி உருவாகிச் சுழல்வதற்கே சக்தி வருகின்றது.

சுழற்சியின் சக்தி வரப்போகும் போது தான் பேரண்டத்திலிருந்து வந்து நம் பிரபஞ்சத்திற்குள் விளையும் மற்ற நட்சத்திரங்கள் கோள்களின் சக்தியை வட துருவம் கொண்டு ஈர்க்கும் சக்தி பெறுகின்றது.

வட துருவத்தின் வழியாக வரும் சக்திகளும் தென் துருவத்தில் இருந்து வரக்கூடிய வெப்ப அலைகளும் இரண்டும் மோதி பூமியின் சுழற்சியினால் உள்ளுக்குள் கலக்கச் செய்கின்றது.

அதே சமயம் சுழற்சியில் எதிர் நிலைகள் மோதி உராயும் தன்மை வரப்படும்போது அந்த இயக்கச் சக்தியினுடைய ஆற்றல்களை உமிழ்த்தி வெளிப்படுத்துகின்றது.
1.பூமி தன் உணர்வின் ஆற்றலால் எதிர் நிலைகள் கொண்ட விஷத் தன்மைகளுடன் மோதும் பொழுது
2.புறத்திலே “ஓ…..ம்…. ஓங்காரமாக…” அதீத வெப்பமாகின்றது.

பிரபஞ்சத்திலிருந்து வரும் அந்த விஷமான சக்திகள் பூமியின் வெப்ப வட்டத்திற்குள் சிக்கிய பின் அந்த விஷத்தின் தன்மை பிரிக்கப்பட்டு அதிலிருந்து வரும் தனிக் காந்தம் பூமிக்குள் ஈர்க்கும் சக்தியாக வந்து சேருகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனித உணர்வின் தன்மைகளுக்குள்ளும் அந்த இயக்கச் சக்தியினுடைய நிலைகள் இருக்கிறது என்பதை அன்று மெய் ஞானிகள் தெளிவாக்கியுள்ளார்கள்.

1.ஒன்றுடன் ஒன்று மோதி இயக்கும்
2.அத்தகைய இயக்கத்தின் தத்துவத்தை
3.ஆற்றல் மிக்க அந்தச் சக்தியின் தன்மைகளை உணர்த்தும் விதமாகக் காட்டப்பட்டது தான் “மகாபாரதம்….!”
ஒரு எல்லைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலைகளை “மகாபாரதப் போர்…” என்று காட்டினார்கள். இந்தப் பூமியின் தன்மையும் அவ்வாறு தான் சிருஷ்டியானது.

அதாவது “இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகள்…” இதைத் தோற்றுவித்ததனால் பாரதம்…! என்ற நிலையும் இந்தப் பாரதத்துக்குள் உருப்பெற்ற இந்தத் தத்துவ இயக்கத்தில் ஓர் அணுவின் இயக்கம் எவ்வாறு என்ற நிலைகளை மகாபாரதம் என்று காட்டினார்கள்.

(அவர்கள் காட்டிய) அந்த உணர்வு கொண்டுதான் நாம் இப்போது இயங்குகின்றோம். இப்போது நாம் பேசுவதும் போர் முறை தான்.

நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிருடன் உராயப்படும்போது
1.அந்த உராயும் தன்மை கொண்டு உடல் சூடாகின்றது
2.உஷ்ணத்தின் தன்மையால் காற்றாகின்றது
3.அதனால் தான் நமது உடலே ஜீவன் பெறுகின்றது.
(உயிர் வெளியேறினால் இந்த உடலில் உஷ்ணம் இருக்காது)

ஆகவே நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை எந்த மணமோ இந்த மணம் பிரணவத்தின் (ஜீவன்) தத்துவத்தை அடைகின்றது.

ஒவ்வொரு உணர்வின் சக்தியையும் நாம் தெள்ளத் தெளிவாகத் தெளிந்து உணர்வதற்காகத்தான் அன்று காவியக் காப்பியங்களாக மெய் ஞானிகள் நமக்குத் தெளிவுற எடுத்துக் காட்டினர்.

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தனக்குள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட அந்தத் தத்துவத்தின் நிலைகளைத் தான் இப்போது வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் விண்ணுலகின் ஆற்றலைத் தன்னுள் அறிந்து தனக்குள் வளர்த்து வெளிப்படுத்திய உணர்வின் எண்ண ஒளிகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு அலைகளாகப் படர்ந்துள்ளது.

அவ்வாறு அவர்கள் வெளிப்படுத்திய உணர்வலைகளைத்தான் உங்களுக்குள் கலக்கச் செய்கின்றோம். அந்த மெய் ஞானிகள் பெற்ற சக்திகளைப் பெறக்கூடிய தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துவதற்குத்தான் இந்த உபதேசமே.

இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் விண்ணும் மண்ணும் போற்றும் மகா ஞானிகளில் ஒருவராக “நீங்களும் இருப்பீர்கள்…!”

இரவிலே தூக்கம் கெடுவதன் காரணம் என்ன…?

om

இரவிலே தூக்கம் கெடுவதன் காரணம் என்ன…? 

மனித வாழ்க்கையிலே நீங்கள் தவறு செய்யாமலேயே எத்தனையோ தீமைகள் உங்களுக்குள் வருகின்றது. நீங்கள் சண்டையே போட வேண்டாம்.

எதிர்த்த வீட்டுக்காரர் அவர் எரிச்சலான நிலைகளில் மற்றொருவரிடன் சண்டை போடுவதை உற்றுப் பார்த்தவுடனே சண்டையிடும் உணர்வுகள் உங்கள் நல்ல குணங்களுக்குள் இணைந்து உங்களைச் சோர்வடையச் செய்துவிடுகின்றது.

நல்ல குணங்களுக்குள் எரிச்சலும் வேதனையும் கலந்து விடுகின்றது. இது பகலில் நடக்கின்றது. அப்புறம் இரவிலே என்ன நடக்கின்றது…?

இரவிலே படுக்கும் பொழுது இடுப்பு வலிக்கிறது… மேல் வலிக்கிறது… கண் வலிக்கிறது… என்னென்னவோ செய்கிறது…! இரவில் எனக்குச் சரியான தூக்கமே இல்லை…! என்பார்கள். இதற்குக் காரணம் என்ன…?

நாம் பல பொருள்களைப் போட்டு அடுப்பிலே சமையல் செய்யும் பொழுது அது “தத…புதா…!” என்று கொதிக்கின்றது.

அதைப் போல் நாம் பகலில் பார்த்த அந்த இருவர் சண்டையிட்ட உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் இரண்டறக் கலந்து நம் உயிரின் ஓட்டத்திற்குள் கலக்கப்படுகின்றது.

அந்த உணர்வின் வேகங்கள் காரமும் எரிச்சலும் வேதனையும் இந்த மூன்றும் கலந்தவுடனே “போர் முறைகள்…!” ஆகின்றது.

ஏனென்றால் பகலிலே எடுத்துக் கொண்ட அந்த உணர்வின் சுழற்சிகள் நாம் ஈர்த்துக் கொண்டது அப்போது மட்டுமல்ல. பகலிலே அதை இழுத்துத் தனது ஆத்மாவாக மாற்றினாலும்
1.புலனடங்கித் தூங்கும் பொழுதும்…
2.அந்த உணர்வின் நிலைகள் அது உடலுக்குள் ஜீவன் பெறும் வரையிலும்
3.அதனின் உணர்வின் இயக்கங்கள் அன்றைய நினைவில் இருக்கும்.

காரம் எரிச்சல் வேதனை என்ற அந்த உணர்வின் துடிப்புகள் முழுமை ஆனபின் அந்த உணர்வின் சத்தாக மாறி நம் நல்ல குணத்துடன் இரண்டறக் கலந்து விடுகிறது.

அவ்வாறு கலந்த பின் காலையில் எழும் பொழுதே உடலெல்லாம் வலிக்கின்றது…! என்ற வேதனையுடன் தான் எழுந்திருப்போம்.

பாலுக்குள் காரத்தை இணைத்து இரண்டறக் கலந்துவிட்டால் எப்படி அதைக் குடிக்கும் பொழுது அந்தச் சுவை எரிச்சலைத் தருகின்றதோ இதைப் போல
1.நாம் சுவாசிக்கும் நிலைகளுக்குள் கலந்து வரும்
2.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு
3.அந்தந்த இயக்கத்தின் சக்தியாக நம்மை இயக்கி விடுகின்றது.

மனிதனுக்குள் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு குணத்திலேயும் இந்த உணர்வுகள் மோதப்பட்டு ஒன்றோடு ஒன்று கலந்து கலந்து நம் உடலுக்குள் (சிவமாக) உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இதைத் தான் நாம் சதாசிவம் என்று சொல்வது.

சந்தர்ப்பத்தில் நாம் நல்ல உணர்வுகளை நுகர்ந்திருந்தால் உடலும் உள்ளமும் மகிழ்ச்சி அடைகின்றது.

ஆனால் தீமையான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால் முதலில் உள்ளத்தால் சோர்வும் எரிச்சலும் அடைகின்றோம். உடலுக்குள் சென்ற பின் உடலிலும் வேதனையாகின்றது.

இதிலிருந்து விடுபடும் நிலையாக அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம். அந்தச் சக்தியை உங்களுக்குள் பெறச் செய்வதற்காகத்தான்
1.“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!” என்று சொல்லிச் சுவாசிக்கச் சொல்கிறோம்.
2.“ஓ…ம் என்பது நம் உயிரின் இயக்கச் சக்தி.
3.நம் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் ஒன்றி “ஈஸ்வரா…!” என்று எண்ணும் பொழுது
4.மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் உற்பத்தி செய்யும் நிலைகள் தான் அது.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் செலுத்தி அந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் உருவாக்கச் செய்வதற்குத்தான் அவ்வாறு சொல்வது.

1.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து
2.அதற்குள் பல சரக்குகளைப் போட்டு வேக வைப்பது போல்
3.உங்களுக்குள் அந்த ஞானிகளின் உணர்வுகளைத் தூண்டச் செய்து
4.நீங்கள் சுவாசிக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் படைக்கும் நிலையாகச் சேர்ப்பிப்பதற்குத் தான்
5.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று சொல்லச் சொல்வது.

அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும் பொழுது உங்கள் ஆன்மா தூய்மை அடைகின்றது. உள்ளமும் மகிழ்கின்றது. உடலும் ஆரோக்கியமாகின்றது. மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெறுகின்றீர்கள்.