பூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம் “விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்து வளர்ந்தால்” மெய் ஞானிகளைப் போன்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்…!

Image

 

cosmic power of human

“இயற்கை” அதாவது விண்ணிலிருக்கக்கூடிய மிக ஆற்றல் மிக்க சக்திகள் இந்தப் பூமிக்குள் கல் மண் மரம் செடி கொடிகள் மற்ற உயிரினங்களை வளர்க்கின்றது.

அந்த விண்ணின் ஆற்றலை விஞ்ஞானிகள் இன்று பல கருவிகளை வைத்துத் தனக்குள் பெருக்குகின்றார்கள். ஆனால் ஞானிகள் மனிதனாக வாழும் பொழுது அந்த விண்ணுலக ஆற்றலைத் தங்கள் புலனறிவால் ஈர்த்துத் தங்களுக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்டார்கள்.

இப்பொழுது நாம் பூமிக்குள் விளைந்த பொருள்களைத்தான் சமைத்துச் சாப்பிடுகின்றோம். ஆனால்
1.விண்ணிலிருக்கக்கூடிய சக்தியை நேரடியாக எடுத்து
2.அந்த உணர்வின் சத்தாக மாற்றும் நிலையைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டால்
3.விண்ணிலிருந்து வரும் அனைத்தையும் தன் உணர்வாக மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.
4.அப்படிப் பெற்றுச் சென்றவர்கள் தான் சப்தரிஷிகள்.

அவர்கள் காட்டிய உண்மை தான் இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் அனைத்துத் தத்துவமும்.

புராணம் என்பது பழமை. அதாவது ஆதியிலே உருவான நிலைகளை நாம் அறிந்து கொள்ளும் நிலைக்கு ஞானிகளால் ஏற்படுத்தப்பட்டதே புராணங்கள்.

1.நம் உடலுக்குள் நம் உயிர் ஈசனாகவும்
2.நம் கண்கள் கண்ணனாகவும்
3.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக நம் மனித உடலும்
4.ஒட்டு மொத்தமாகச் சேர்த்துக் கொண்ட சக்திகள் அனைத்தும் உடல் சிவமாகவும்
5.இது அனைத்தும் ஒன்று சேர்த்துச் சுவை மிக்க நிலையாக
6.சூரியன் தான் கவர்வதை எல்லாம் ஒளியாக மாற்றுவது போல
7.ஆறாவது அறிவு கொண்டு நாம் உணர்வை ஒளியாக மாற்றி
8.விண்ணிலே அழியாத நிலைகள் கொண்டு வாழும் திறன் படைத்தவர்கள் என்பதை அறிந்து கொள்வதே நல்லது.

ஆகையினாலே அந்த மெய் ஞானிகள் சென்ற வழியில் அந்தப் பேருண்மைகளை அறிந்துணரும் தகுதி பெற்று விண்ணின் ஆற்றல்களைப் பெறுவோம்.

விண்ணின் ஆற்றல்களை உணவாக எடுத்து விண்ணுலகம் சென்று என்றுமே மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்…!” நாமும் அகஸ்தியனைப் போன்று வளர்ச்சி அடைய வேண்டும்

Agastya lopamudra

“அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனான்…!” நாமும் அகஸ்தியனைப் போன்று வளர்ச்சி அடைய வேண்டும்

இயற்கையில் ஒன்றுடன் ஒன்று மோதி மோதி (அணுக்கள்) பல கோடி (எண்ணிலடங்காத) உணர்வின் சக்திகளாக மாறி மாறிப் பல செடி கொடி மரங்களாக மலர்கின்றது மாறுகின்றது.

அதே போல செடியில் புழுக்கள் உருவாவதைப் பார்க்கின்றோம். ஒரு பூவில் புழு உண்டாகியது என்றால்
1.அந்தப் பூவிற்கு எப்படி மொட்டுகளும் மொக்குகளும் இருக்கின்றதோ
2.அதைப் போன்ற மீசைகளும் ரோமங்களும் வளர்ந்து
3.பட்டாம் பூச்சியாக அது வளர்ச்சி அடைகின்றது.

சில பூக்களைத் தொட்டால் ஒரு விதமான பவுடர் மாதிரிக் கையில் ஒட்டிக் கொள்கின்றது. பட்டாம் பூச்சி போன்ற உயிரினங்கள் பூவிலிருந்து உருவாகும் நிலையில் அந்தச் சத்தை எடுத்து வளர்த்தால் அந்தப் பூவின் நிறமும் அமைப்பும் அப்படியே (XEROX போன்று) வரும்.

இப்படித்தான் பரிணாம வளர்ச்சியில் ஒரு உயிரணு பல கோடித் தாவர இனச் சத்துக்களைத் தான் உட்கொள்கின்றது… பரிணாம வளர்ச்சி அடைகின்றது.

அடுத்து வண்டைப் பல்லி விழுங்குகின்றது. வண்டுகளைத் தவளைகள் விழுங்குகின்றது. பல பூச்சிகளைக் குருவிகள் விழுங்குகின்றது.

இதைப் போன்று ஒரு உயிரணு புழுவாகத் தோன்றியதிலிருந்து ஒன்றுடன் ஒன்று கலந்து பல பல கலவையின் நிலைகள் கொண்டு ஒன்றுக்கு ஒன்று இரையாகி உருமாறி உருமாறி இப்பொழுது நம்மை மனிதனாக உருவாக்கியிருக்கின்றது உயிர்.

நம்மைச் சிருஷ்டித்தது நம் உயிர். “ஆண்டவா…!” என்கிற பொழுது நம்மை ஆள்பவன் யார்…? நம்முடைய உயிர். நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையுமே இயக்கிக் கொண்டிருப்பது நம் உயிர் தான்.

இறைவா…! நாம் எண்ணிய எண்ணங்களே நமக்குள் இரையாகின்றது. அந்த உணர்வின் செயலாகத்தான் நாம் வந்துள்ளோம் என்ற உண்மையை அகஸ்தியன் அன்று தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆனால் இப்படி மனிதனாக வந்த நாம் பரிணாம வளர்ச்சியில் அடுத்து எந்த நிலை அடைய வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…?

அகஸ்தியரைப் பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லி இருக்கிறேன்.
1.தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் வென்றான்.
2.நம் பூமி நுகரும் பாதையை துருவத்தை எண்ணினான்.
3.துருவத்தின் வழியாகப் பூமிக்குள் வரும் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்தான்
4.அந்த ஆற்றல்கள் கல் மண் தாவர இனங்களாக எப்படி உருவாகிறது என்று அறிந்தான்
5.தாவர இனத்தை உயிரினங்கள் உணவாக உட்கொள்கிறது என்பதையும் அறிந்தான்
6.உயிரினங்கள் ஒன்றுக்கு ஒன்று இரையாகி வளர்ச்சி அடைந்ததையும் அறிந்தான்

வான இயல் புவி இயல் தாவரவியல் உயிரியல் என்று அனைத்தையும் அறிந்துணர்ந்தான். அந்த ஆற்றல்களை எல்லாம் தனக்குள் வளர்ந்துக் கொண்டான்.

திருமணமான பின் “தமக்கு எது வேண்டும்…?” என்ற நிலையில் அகஸ்தியனும் மனைவியும் இரு மனமும் ஒன்றாகி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகச் சேர்ந்தார்கள்.

அகஸ்தியன் தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவியும் பெறவேண்டும் என்று எண்ணினான். அகஸ்தியன் துருவ வழியில் கண்ட நிலைகளை எல்லாம் மனைவியிடம் சொன்னான். இந்த உணர்வு மனைவியிடம் வளர்ந்தது.

அகஸ்தியனின் மனைவி என்ன செய்கிறது…? தன் கணவர் உயர்ந்த சக்தி பெறவேண்டும். தானும் அவர் பெற்ற உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றது மனைவி.

மனைவி உயர்ந்த நிலை பெறவேண்டும் அது என் வழியில் இருக்க வேண்டும் என்று அகஸ்தியன் எண்ணுகின்றான்.

இதுவெல்லாம் இரண்டு பேரும் சேர்த்துத்
1.தங்கள் பார்வையில் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
2.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
3.அந்த உணர்வின் எண்ணங்களைக் கொண்டு வந்தார்கள்.
4.அந்த நல்ல எண்ணம் கொண்டு எந்தத் துருவத்தை அகஸ்தியனும் அவர் மனைவியும் நுகர்ந்தார்களோ
5.அங்கே போய் என்றும் பதினாறு என்று ஏகாந்தமாக பேரானந்தப் பேருநிலை பெற்று
6.மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
7.துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பரிணாம வளர்ச்சியில் அகஸ்தியனும் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் இந்த மனித வாழ்க்கையில் பரிணாம வளர்ச்சி அடைந்து “என்றும் பதினாறு” என்ற நிலையை அடைய வேண்டும்.

நம் பூமியின் வட துருவத்தில் விண்ணிலே இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலையை அடைவோம். எல்லோரும் அந்த நிலை பெறத் தவமிருப்போம்.

விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

 

Ursa major - Sabdharishi mandalam

விண்ணுலகம் செல்லும் மெய் வழி…!

சப்தரிஷிகள் அனைத்தும் தான் மனிதனாக இருந்து தன் உயிராத்மாவை “ஒளியாக மாற்றி”
1.விண்ணிலிருந்து வரக்கூடிய அனைத்துச் சக்திகளையும்
2.உணவாக எடுத்துத் தன் உடலாக மாற்றிக் கொண்டு
3.சப்தரிஷி மண்டலங்களக என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள் அனைத்தும் இன்று விண்ணிலே படர்ந்து கொண்டிருக்கின்றது. அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன். நாராயணனின் அபிமான புத்திரன் என்பார்கள்.

விண்ணுலகை அறிந்து ஆற்றல்மிக்க சக்தியாக வளர்ந்த அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய உணர்வான அந்த அணு தான் “நாரதன்…!” என்பது.
1.நாரதனோ கலகப்பிரியன்.
2.கலகமோ நன்மையில் தான் முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் தொடர்ந்து நாம் எத்தனையோ ஆசைகள் கொண்டு நாம் உழன்று கொண்டிருந்தாலும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேராற்றலை நுகர்ந்தால் நம்முடைய ஆசை அலைகளை மாற்றி நம் உணர்வை ஒளியாக மாற்றிவிடும்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும் பொழுது அந்த ஒளியான அணு நமக்குள் சிக்கி விட்டால் இந்த மனித உடலுக்குள் நம்மை அறியாது சேர்த்த கோபமோ வெறுப்போ சஞ்சலமோ சங்கடமோ இதைப் போன்ற நிலைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கும் திறன் அதற்குண்டு.
1.நமக்குள் இருக்கும் மனித உணர்வுகளை மாற்றிவிடுகின்றது.
2.அப்பொழுது தான் கலகப் பிரியனாகின்றது.

சப்தரிஷிகள் மெய் ஒளியை விண்ணிலே எப்படிக் கண்டுணர்ந்தார்களோ அந்த ஞானமாக நமக்குள் தோற்றுவித்துத் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய நிலையில் விண் செல்லும் நிலையைப் பெறச் செய்கின்றது.

என் தாய் தந்தையர் உடலை விட்டுச் சென்ற பின் அவர்கள் உயிராத்மாக்களை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று நான் (ஞானகுரு) விண் செலுத்தினேன்.

என் தாய் தந்தையரின் உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சூட்சம சரீரம் பெற்ற பின் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நான் ஏங்கிச் சுவாசிக்கும் பொழுது எனக்குள் (ஞானகுரு) அந்த மெய் உணர்வும் தென்படுகின்றது.

அந்த விண்ணின் ஆற்றலை நான் சுவாசித்து இப்பொழுது உபதேசிக்கும் பொழுது உங்கள் செவிப்புலன்களிலே நீங்கள் கேட்கும் பொழுது அந்த ஆற்றல் மிக்க உணர்வுகள் உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

உதாரணமாக உங்களை ஒருவர் கடுமையான நிலைகளில் ஏசுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். செவிகளில் அதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கின்றது…?

அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் தூண்டப்பட்டு அதை நினைத்த மாத்திரத்திலே உங்களுக்கு ஆத்திரமும் வெறி கொண்டு தாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டி அதன் வழிகளிலே உங்கள் சரீரத்தை இயக்கச் செய்கின்றது.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
1.அந்த மெய் உணர்வுகள் தூண்டப் பெற்று
2.என் தாய் தந்தையரின் உயிராத்மாக்களை விண் செலுத்தினேன்.
3.அங்கிருந்து பல ஆற்றல்களைப் பெறும் தகுதியும் பெற்றேன்.

அந்தத் தகுதியை நீங்களும் பெறவேண்டும் என்ற இந்த ஆசையில்தான் உங்களிடம் இதைச் சொல்கின்றேன்.

ஒரு வயலைப் பண்படுத்துவது போன்று உங்கள் மனைதைப் பண்படுத்தி ஈர்ப்பின் உணர்வுகள் கொண்டு ஆற்றல்மிக்க இந்த வாக்கினை உங்களுக்குள் நல்ல வித்தாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெருக்கப்படும் பொழுது உங்கள் மூதாதையர்களின் உடல விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தவும் அதன் மூலம் நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறும் தகுதியும் பெறுகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுடன் உறவாடிய இந்த உணர்வின் சக்தி கொண்ட
1.குலங்களின் தெய்வங்களான அந்த உயிராத்மாக்களை விண் செலுத்திவிட்டால்
2.விண்ணின் ஆற்றலை நீங்கள் சுலபமாகப் பெற முடியும்.
3.நாம் உடலை விட்டுச் சென்றாலும் விண் செல்வது மிகவும் சுலபமாகின்றது.

தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம்

 

ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

தியான சக்தியைக் கூட்டுவதற்குத்தான் தபோவனம் 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொள்பவர்கள் “எப்படி இருக்க வேண்டும்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்வது நல்லது.

ஏனென்றால் ஒரு சிலர் இதை சோம்பேறி மடம் மாதிரி ஏதோ வந்தோம் சாப்பிட்டோம் போனோம் என்கிற நிலையில் தியானம் செய்யும் நேரத்தில் கூடத் தூங்குவதற்கு ஆரம்பிக்கின்றார்கள்.

இங்கே வருபவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று அனுமதித்தாலும் அவர்கள் இந்த நிலைகளைச் செய்கின்றனர். அதே சமயத்தில் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுத்து ஒரு வேலையைச் செய்யுங்கள் என்றால் என்ன செய்கின்றார்கள்…?

வெளியில் இருக்கும் பொழுது எந்தத் தவறு செய்து அவர்களுடைய வாழ்க்கையிலும் குறைகள் ஏற்பட்டதோ அந்தக் குறையையே இங்கும் உருவாக்கத் தொடங்கி விடுகின்றனர்.

அவர்களை ஆதரித்து நல்ல நிலைகள் பெறச் செய்து அதனால் இங்கே வரக்கூடிய மற்றவர்களுக்கும் நல்ல நிலையைச் சொல்வார் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை.

தயவு செய்து இங்கே வருபவர்கள் எல்லோருமே தியானத்தைச் சீராகப் பயன்படுத்தி உயர்வதற்கு இனியாவது முயற்சி எடுங்கள்.

பிறருக்காக என்றும் நண்பர் என்ற நிலைகளில் அனுமதித்தோம் என்றால் அவர்கள் தவறுகளில் இருந்து மீளாத நிலைகள் வருகின்றார்கள். எந்தத் தவறைச் செய்தனரோ அந்தத் தவறையே செய்ய வருகின்றனர்.

திருந்த வேண்டும் என்ற நிலைக்குத்தான் நாம் இத்தனை சிரமமும் படுகின்றோம்.

தபோவன வளர்ச்சியின் தன்மையைப் பேசுவதற்கு மாறாகத் தன் சுயநலத்திற்கு எதிர்பார்த்து வருவதும் அது ஈடேறவில்லை என்றால் தபோவனத்தைக் குறை கூறும் நிலைகளுக்கும் வந்து விடுகின்றனர்.
1.அப்படிப்பட்ட அன்பர்கள் இருந்தால் அது உங்களுடைய பெரும் குற்றமாகும்.
2.அத்தகைய நிலை பெற்றால் நீங்கள் எண்ணியதை உயிர் உங்கள் உடலில் உருவாக்கும்.
3.அதன் பலனை அறிந்த பின்னாவது நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் உணர்வுகளையோ மனம் புண்படும்படி எவரும் இந்த நிலையை உருவாக்கினால் அதன் உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் உருவாக்கி “நீங்களே அதை அனுபவிக்கும் நிலையை…!” உங்கள் உயிர் உருவாக்கிவிடும்.

1.நல்லதைச் செய்து நல்ல நிலை பெற வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கினால்
2.அது உங்களுக்குள் நலம் பெறும் சக்தியாகும்.
3.உங்கள் சொல் மற்றவரையும் நலம் பெறும் சக்தியாகும்.
4.நண்பர் என்ற நிலையில் அரவணைக்கும் தன்மையும் வரும்.

ஏனென்றால் புதிதாக வருவோர் தபோவனம் வந்தால் எப்படி இருக்க வேண்டும் என்ற நிலைகளை அறிந்து கொள்தல் வேண்டும்.

எந்த ஊரில் இருந்தாலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை அனைவரும் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். சந்தர்ப்பத்தில் குறைகள் வந்தால் ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அருள் ஞானம் பெற வேண்டும் என்றால் அவர்களுக்கு இத்தகைய நிலைகளை போதித்துத் தபோவனம் சென்றால் உங்களுடைய நிலைகள் இப்படி இருக்க வேண்டும் அந்தக் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்ற நிலையை வழிப்படுத்த வேண்டும்.

இங்கு அருள் நெறிகளை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிலைகளும் வெளியூரிலிருந்து வரப்படும் போது அவர்களுக்குத் தபோவனத்தின் நன்மதிகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் பெருக்கி நாம் யாருடன் பழகினாலும் நமது பார்வையில் அவர்கள் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்றும் உலகுடன் ஒத்து வாழும் நிலையும் சகோதர உணர்வுகள் வளர்ந்திட வேண்டும் என்ற நிலைகளில் தியானிக்க வேண்டும்.

அன்பர்கள் ஒவ்வொருவரும் தபோவனம் நலமாக இருக்க வேண்டும். அது உயர்ந்த நிலைகள் பெற வேண்டும். உயர்ந்த பண்புகளுடன் விளங்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆகவே உங்கள் பார்வையில் மற்றவருடைய தீமைகளையும் பிணிகளையும் போக்கக் கூடிய சக்திகளாகவும் உலகுக்குக் எடுத்துக்காட்டாக நீங்கள் ஒவ்வொருவரும் வளர வேண்டும் என்று (ஞானகுரு) வேண்டிக் கொள்கின்றேன்.

கருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் எப்படி உபதேசிக்கின்றான்…?

krishna-upadesh

கருவிலிருக்கும் குழந்தைக்குக் கண்ணன் எப்படி உபதேசிக்கின்றான்…?

 

அன்றைய அரசர் காலங்களில் வாழ்ந்தவர் தான் திருஞான சம்பந்தர். தெய்வ நெறிகள் கொண்டு நல் ஒழுக்கத்தைக் கற்பித்து இது தான் இறை உணர்வுகள் என்ற நிலையில் அதை ஏக்கமாகக் கொண்டு அதன் வழி சீராகப் பண்படுத்திய தாயின் வயிற்றில் பிறந்தவர்.

சீர்காழி என்ற ஊரில் நீண்ட நாளாகக் குழந்தை பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த அந்தத் தாய் தன் தீமையை மறந்து மெய் ஒளியைப் பெற்று அந்த உணர்வின் ஆக்கபூர்வமாகத் தாய் சுவாசித்த உணர்வின் தன்மைக்குள் தனக்குள் உரு பெற்றவர்தான் திருஞானசம்பந்தர்.

கண்ணன் கருவிலிருக்ககூடிய குழந்தைகளுக்கு உபதேசித்தான் என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது. அதாவது கண்ணன் என்றால் கண்கள்.
1.நம் கண்ணுக்குள் (கருவிழிக்குள்) மெய் உணர்வுகளைச் (நினைவினைச்) செலுத்தி
2.அதே நினைவின் ஆற்றலைத் தன் கருவுக்குள் (உடலுக்குள்) செலுத்துவது தான்.

இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு வெகு நாளாகக் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தாலும்
1.தன் கருவுக்குள் மெய் ஒளியின் தன்மையை அந்தத் தாய் ஊட்டியதனால்
2.குழந்தைப் பாக்கியமாகக் கிடைத்தது.
(பராசக்தி ஞானப் பால் ஊட்டியது என்றும் சொல்வார்கள்)

தாய் கண்களால் உற்றுப் பார்த்த மெய் உணர்வுகளே உடலிலே கருவாக உருவாகி “ஞானக் குழந்தையாக….!” திருஞான சம்பந்தராக அங்கே உருவாகியது.

மெய் ஞானிகளின் அருள் வாக்கை உங்களிடம் அடிக்கடி சொல்வது அதற்காகத்தான்…! சும்மா சும்மா சாமி (ஞானகுரு) இதையே பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டாம்.

உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் ஞானிகளின் உணர்வை இணைக்கும் படி செய்து மெய் ஒளியின் உணர்வைக் கருவாக… “ஒளியான அணுக்களாக உங்கள் உடலில் உருவாகச் செய்து கொண்டிருக்கின்றோம்….!”

நீங்கள் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் ஆற்றலை உங்கள் உடலுக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் ஊடுருவச் செய்கின்றோம்.

அந்த மெய் ஒளியைச் சீராக நீங்கள் பெறவேண்டும் அது உங்களுக்குள் என்றுமே நிலைத்ததாக உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி உபதேசம் கொடுப்பது.

உங்கள் உள்ளங்களில் இது பதிவாகின்றது. நீங்கள் வெளிவிடும் மூச்சலைகள் சூரியனின் காந்தப் புலனால் கவரப்பட்டு அலைகளாகப் படர்கின்றது. மெய் உணர்வுகளாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்கின்றது.

நம் பூமிக்குள் பல உணர்வுகள் இருந்தாலும் ஒருக்கிணைந்த நிலைகளில் நாம் ஞானிகளின் அருள் சக்திகளைப் பரப்பபடும் பொழுது
1.ஞானத்தைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தவிக்கும் உணர்வுகள் உள்ளோருக்கும்
2.அவர்கள் எங்கிருந்தாலும் இதை நினைவு கொள்ளும் பொழுது
3.அவர்களும் இந்த ஆற்றல்மிக்க சக்தியைப் பெற முடிகின்றது.

வராகன் தன் உடலுக்குள் அசுத்த சக்தி இருந்தாலும் இந்தப் பூமியில் அசுத்தங்கள் படர்ந்திருந்தாலும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்துக் கொள்கின்றது.

அதைப் போல இன்றிருக்கும் விஷத் தன்மையான விஞ்ஞான உலகிலிருந்து நம்மை அறியாது எத்தகைய தாக்குதல் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டி ஒளியின் சரீரமாக நாம் அடைய முடியும்.

யாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. பில்லி… சூனியம்… என்ற பேச்சுக்கே இடமில்லை…!

Black magics

யாம் சொல்லும் பயிற்சியை எடுத்துக் கொண்டால் ஏவல்.. பில்லி… சூனியம்… என்ற பேச்சுக்கே இடமில்லை…!

1.என் உடலுக்குள் ஆவி (பேய்) பிடித்து என்னை ஆட்டிப் படைக்கின்றது.
2.என்னைக் கடுமையான துன்பத்திற்குள் ஆழ்த்துகின்றது.
3.என் நல்ல சிந்தனைகளைக் குறைக்கின்றது
4.பில்லி சூனியம் செய்து என்னைச் செயலிழக்கச் செய்துவிட்டார்கள் என்பார்கள்.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி இந்தத் தியானப் பயிற்சியை… மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எடுத்துக் கொண்டால் “பில்லி சூனியம் ஏவல் என்ற பேச்சுக்கே இடமில்லாது செய்ய முடியும்…!”

எந்த உணர்வுடன் அந்த ஆன்மா தன் உடலை விட்டு வெளியேறியதோ “அந்த ஒரு நினைவில் தான்” அது இருக்கும். அதற்கு மேற் கொண்டு வளராது. தன்னை மாற்றவும் தெரியாது. தன் உணர்வின் ஆற்றலைத்தான் நம் உடலுக்குள் இருந்து செயலாக்கும்.

அதனுடைய இயல்பை மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தியை நம் உடலுக்குள் வலுவேற்றிக் கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நம் உடலுக்குள் ஜீவித்துக் கொண்டிருக்கும் அந்த இன்னொரு ஆத்மாவிற்குள் ஊடுருவிச் செலுத்தி அதற்கும் ஞானத்தைப் “போதிக்க முடியும்…!”

அந்த மெய் ஞானிகளின் பால் நம் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி
1.நமக்குள் ஆட்டிப் படைக்கும் இன்னொரு ஆத்மா அது எதுவாக இருந்தாலும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி அந்த ஆன்மா பெற வேண்டும் என்ற உணர்வை
3.அடிக்கடி நினைவு கூர்ந்தாலே போதுமானது.
(ஒரு நாளைக்கு ஐம்பதிலிருந்து நூறு முறையாவது)

அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை உடலிலிருக்கும் அந்த ஆன்மாவிற்கு ஊட்டப்படும் பொழுது அதனுடைய வீரியத் தன்மை ஒடுங்கும்.

மகரிஷிகளின் அருள் ஞானம் எங்கள் உடலிலுள்ள ஆன்மாவும் பெறவேண்டும் என்று அதற்குக் கொடுக்கும் பொழுது
1.நமக்குள் நின்றே அந்த ஆன்மா மெய் ஞானத்தைப் பெறும் தகுதி பெற்று
2.நம்முடன் ஒத்துழைக்கும் தன்மையாக இணைந்து வாழும் தன்மை பெறுகின்றது.

இதைப் போன்று அறியாது இயக்கும் நிலைகளிலிருந்து ஒவ்வொரு நொடியிலேயும் உங்களைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் மெய் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலேயும் பதியச் செய்கின்றோம்.

ஆகையினால் இதைப் படித்துணர்ந்தோர் அனைவருமே “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியின் உங்கள் உயிரை எண்ணி விண்ணிலிருக்கும் மகரிஷிகளின் பால் கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.

பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று அதை இழுத்து ஏங்கிச் சுவாசியுங்கள். கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்துங்கள்.

அடுத்து
1.எங்கள் பேச்சுக்குள் இனிமை பெறவேண்டும்
2.எங்கள் செயல் அனைத்தும் நலம் பெறவேண்டும்
3.நாங்கள் பார்ப்பதெல்லாம் வளம் பெறவேண்டும்
4.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் என்ற
5.இந்த நல் உணர்வுகளை உங்களுக்குள் படைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு படைத்த உணர்வலைகளை மூச்சலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் பெருக்கும்.

மீண்டும் அதே நினைவலைகளை நாம் கூட்டும் பொழுது நமக்கு அது “பெரிய பாதுகாப்புக் கவசமாக” மாறும். நல் உணர்வைத் தோற்றுவிக்கும் நிலையாக நம் சந்தர்ப்பங்கள் அமையும்.

ஆகவே இதனால் நமக்கும் நல்லதாகும். நம்மைச் சார்ந்தோரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாகப் படர்ந்து அவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்ய இது உதவும்.

நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியனாக மாறி 27 பிரபஞ்சமாக மாறிக் கொண்டிருக்கின்றது…! (புதிது புதிதாகப் பார்க்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்வது இதைத்தான்…!)

Image

New planets

நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியனாக மாறி 27 பிரபஞ்சமாக மாறிக் கொண்டிருக்கின்றது…! (புதிது புதிதாகப் பார்க்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்வது இதைத்தான்…!)

 

நம் பூமி கூழாகிக் கொண்டே வருகின்றது. ஏனென்றால் விஞ்ஞானத்தின் அணுக் கதிரியக்கத்தினால் நம் பூமி மட்டுமல்ல சூரியனுக்குள்ளும் இதனுடைய பிரதிபலிப்பு அதிகமாகி விட்டது.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாக் கோள்களிலும் நம் பூமியைப் போல் நில நடுக்கங்கள் அதிகமாகிவிட்டது. நடு மையத்தில் வெப்பங்கள் அதிகமாகிக் கரையும் நிலை மேல் ஓடு வரைக்கும் வந்தாகிவிட்டது. எல்லாமே மாயும் தன்மை வந்துவிட்டது.

அதே சமயத்தில் நம் சூரியக் குடும்பபத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் அதனதன் உணர்வுக்கொப்ப “கிரேதா யுகம்…,” அதாவது தன் உணர்வின் தன்மையைக் கவர்ந்து அதன் அடிப்படையில்
1.நம் சூரியப் பிரபஞ்சம் எப்படி உருவானதோ அதைப் போல
2.ஒவ்வொரு நட்சத்திரமும் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
3.ஒரு ஏழு நட்சத்திரம் வரை சூரியனாக (குடும்பமாக) மாறிவிட்டது.
4.மீதி நட்சத்திரங்களும் முழுமையாகச் சூரியனாக மாறும் தன்மைக்கு வந்து கொண்டிருக்கின்றது.

ஏனென்றால் அடுக்கு வரிசையில் தன் உணர்வுகளை எடுக்கும் பொழுது மேல் வரிசையில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் அனைத்தும் முதலில் சூரியனாக மாறுகின்றது.

அதன் உணர்வை எடுத்து அடுக்கு அடுக்காக வரப்படும் பொழுது இந்த 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பங்களாக மாறும் தகுதியும் வருகின்றது.

அதற்கு முன் இந்தச் சூரியக் குடும்பம் சூரியனே கரைந்து குழம்பாகி விட்டால் அதனுடன் சேர்த்த நம் பூமி சுக்குநூறாகிவிடும். பின் சூரியனின் ஈர்ப்புக்குப் போய் ஆவியாக மாற்றிப் புயல் போல் எல்லாமே மாற்றப்பட்டுவிடும்.

இந்த 27 நட்சத்திரங்களும் நாம் வாழும் இந்தச் சூரியக் குடும்பத்திலிருந்து அது வளர்ந்தது தான்.
1.புயலாகக் கரையும் உணர்வுகளை (இதில் சமைத்த உணர்வுகள்) எடுத்து
2.இந்த 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான பிரபஞ்சங்களாக சூரியக் குடும்பமாக
3.இன்றைய செயல் நாளைய செயலாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற உலகில் தான் நாம் வாழ்கின்றோம். ஆனால் என்றுமே ஏகாந்த நிலையில் நாம் வாழ வேண்டும் என்றால் நம்முடைய கடமைகள் எதுவாக இருக்க வேண்டும்…?
1.நம் உயிரை ஈசனாக மதிக்க வேண்டும்.
2.மகரிஷிகள் உணர்வை எடுத்து நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும்.
உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு உயர்ந்த உணர்வுகளை நாம் நுகர்ந்ததைத்தான் கிரேதா யுகம். நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகளை நமக்குள் மாற்றியமைக்கின்றது.

நம் உடலுக்குள் சென்றால் “திரேதா…!” எதை நுகர்ந்து… “கிரேதா…” சேர்த்துக் கொள்கின்றோமோ உடலுக்குள் அந்த நல்ல உணர்வின் எண்ணங்களை எடுக்கும் பொழுது நல்ல எண்ணங்கள் கொண்டு தீமைகளை நீக்குகின்றோம்.

அதாவது “துவாரகா…!” நம் உடலுக்குள் தீமை என்ற உணர்வு வந்த பின் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொண்டால் “கல்கி…!”

இங்கே துவாரகா யுகத்தில் வேதனை என்ற உணர்வானால் “கலி…!” இந்த மனித உடலை மாற்றி விஷம் கொண்ட உயிரினமாக அமைத்துவிடும்.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் கல்கி. இந்த உயிருடன் ஒன்றி என்றும் ஏகாந்த நிலையான அழியா ஒளிச் சரீரம் பெறலாம். ஆகவே
1.இந்த மனித உடலுக்குப் பின் “பிறவியில்லா நிலை…!” அடைவதே
2.மனிதனின் கடைசி நிலை…!

நாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்றான்…! – எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்

Image

Sita devi Booma devi

நாராயணன் திரேதாயுகத்தில் சீதா இராமனாகத் தோன்றுகின்றான்…! – எண்ணத்தின் தோற்றமும் எண்ணத்தின் இயக்கமும்

 

மனிதனின் வாழ்க்கையில் “அவன் இதைச் செய்தான்… இவன் இதைச் செய்தான்…! என்ற வேதனையான உணர்வைக் கூட்டினால் உடலுக்குள் விஷத்தின் தன்மை அதிகமாகி நோய்வாய்ப்படும் நிலை வருகின்றது.

தன்னைப் பாதுகாக்கும் நிலை இழந்த பின்பு பழி தீர்க்கும் உணர்வு வந்தால் நமக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல உணர்வுகளையும் அது தீர்த்துக் கட்டிவிடும்.

ஆகவே நமக்குள் அறியாது நடக்கும் இதைப் போன்ற நிகழ்வுகளிலிருந்து நாம் மீள்தல் வேண்டும். ஏனென்றால்
1.இன்றைய மக்களினுடைய உணர்வுகள்
2.”தான் எதைச் செய்கின்றோம்…?” என்று தெரிவதில்லை.
3.தெரிந்து தவறு எவரும் செய்வதில்லை.

உலகில் அன்றாடம் பலதரப்பட்ட உணர்வலைகளை நுகரப்படும்போது அந்த உணர்வுகள் பதிவாகி அதை வளர்க்கப்படும் போது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களைப் பாதுகாக்கும் நிலையே அற்று விடுகின்றது.

நல்ல குணங்கள் கொண்டு வாழ முடியாது தடைப்படுத்துகின்றது. இதைத்தான் இராமாயணம் காட்டுகின்றது.

இராவணன் சகலகலா வல்லமை பெற்றாலும் இசையில் வல்லமை பெற்றாலும் அவனுடைய ஆசை “அழகியை நுகர்ந்து” அதனை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

அனைத்து இசைகளைக் கண்டு அதில் வல்லவனாக இருந்தாலும் சீதாவை அடைய வேண்டும் என்ற நிலையில் சிறைப் பிடிக்கின்றான்.

இந்த இச்சையின் உணர்வுகள் வளரப்படும்போது அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளால் அந்த இராவணன் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் எப்படி மடிகின்றது என்று அங்கே காட்டுகின்றார்கள்.

பத்தாவது நிலை அடையும் உயிரைத் தசரதச் சக்கரவர்த்தி என்று காட்டித் தனது மகன் என்ற நிலைகளில்
1.தன்னுடன் இணைந்த எத்தனை விதமான குணங்கள் இருக்கின்றதோ
2.ஒவ்வொரு குணமும் தன் தன் இனத்தின் நிலையே வளர்க்க விரும்பும் என்று காட்டுகின்றார்கள்.

இராமனின் தாயோ சாந்தமானவள். நல்ல குணத்தால் உருவான இராமன் சாம்ராஜ்யத்தை ஆளும் தகுதி படைத்தவன் என்று தசரதன் எண்ணினாலும் தன் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட மற்ற குணங்களின் உணர்வுகள் என்ன செய்கிறது.

அது (கைகேயி) தன் மகனே சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்று விரும்புகின்றது. நம் வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்…?

நல்ல குணங்களை வளர்த்துக் கொள்கின்றோம். இருந்தாலும் கோபம் வந்துவிட்டது என்றால்… “இரண்டில் ஒன்று பார்ப்பேன்…! பார்க்கலாம்…! என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம். இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்…
2.ஒவ்வொரு குணத்தையும் நாம் நுகரப்படும் போது
3.அது உயிருடன் ஒன்றிய அந்தச் சக்தியாக இயங்குகின்றது… இயக்குகின்றது.

தினசரி ஒன்றை நம்முடன் இணைத்துக் கொண்டுதான் உள்ளோம். அந்த உணர்வின் சக்தி நமக்குள் வரும்போது அது அந்த எண்ணங்களின் அணுக்களாக உடலுக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

ஆகையினால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களைப் பிரதிபலிக்க முடியாது அல்லது பாதுகாக்கும் தன்மைகள் இழந்து விடுகின்றோம்.

இதைத்தான் அங்கே இராமாயணத்தில் இராமனுக்குப் பட்டம் சூட்டினால் அவன் ஆட்சி புரியும் போது எல்லாம் ஒழுக்கமாக இருக்கும் என்று தசரதன் ஆசைப்பட்டாலும் அந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்த முடியவில்லை.

ஏனென்றால் பரதனின் தாயோ தன் மகனுக்குத் தான் பட்டம் சூட்ட வேண்டும் என்று கேட்கின்றார்.

பரதன் இராமனுடன் பழகியதால் அவன் ஆணைப்படி நடக்க வேண்டும் என்று விரும்புபவன். அந்த நல்ல உணர்வுடன் அவன் இணைந்தவன்.

அதனால் தாய் சூழ்ச்சி செய்து அவனை இங்கே இருக்கவிடாது செய்து தன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிடுகின்றது. இராமன் இங்கே இருக்கக்கூடாது என்பதற்காக அவனைக் காட்டிற்கு அனுப்பிவிடுகின்றது.

இராமனுடன் இணைய வேண்டாம். சாம்ராஜ்யம் உனக்குத்தான் தான் என்று பரதனுக்குக் கொடுக்கின்றது. ஏனென்றால்
1.எந்த உணர்வின் தன்மைகள் நம் உடலுக்குள் உருபெற்றதோ
2.அந்த வித்திற்கு அந்த இனமான உணர்வின் சத்தே உணவாகச் செல்லும்.

ஆக இந்த மனித உடலுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை கலக்கங்கள் ஏற்படுகின்றது…? எந்தெந்த நிலையெல்லாம் இணங்கிச் (அடங்கி) செயல்படுகின்றது…? நாம் எடுத்து கொண்ட உணர்வின் எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது…? என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

நுகரும் உணர்வுகள் உயிரில் பட்டுச் “சப்தங்களாகி…” (இசை) உணர்ச்சிகளாக உயிர் இயக்கினாலும் சுவாசித்த உணர்வுகள் உறைந்து உடலாகும் பொழுது சிவமாகின்றது.

இப்படிப் புழுவிலிருந்து மனிதனாக நம் வந்த பல கோடிச் சரீரங்களில் பல விதமான ஓசைகளை எழுப்பி இருப்போம். சுவாசித்திருப்போம்.

அதனால் தான் இராவணனை இசையில் மிகவும் வல்லவன் என்று காட்டுகின்றார்கள். சகலகலா வல்லவன் பத்தாவது நிலை அடையும் தகுதி பெற்றவன் என்றாலும் அவனுடைய ஆசை எங்கே வருகின்றது…?

இவனுடைய சகோதரி சூர்ப்பணகை இராமனின் அழகைக் கண்டு ரசிக்கின்றாள். அவன் இசையவில்லை என்பதால் சீதாதான் அதற்குத் தடையாக இருக்கின்றது என்ற நிலை கொண்டு தன் சகோதனிடம் சீதா தன் அழகால் ரொம்பவும் அவமதிக்கின்றாள் என்று குறையான உணர்வைத் தூண்டுகின்றாள்.

அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின்… “அப்படியா…! அவளை நான் அடைந்தே தீருவேன்..!” என்று இராவணன் சொல்கிறான். அந்த விஷத்தின் தன்மை இங்கே போதித்த பின் தன் சிந்தனை இழக்கின்றான்.

சீதாவைப் பிரித்து விட்டால் இராமனை அடையலாம். ஆனால் அதே சமயத்தில் இவனுடைய ஆசைக்கு சீதாவும் இணங்கி விட்டால் “நம் காரியம் ஜெயிக்கும்…!” என்று இதையெல்லாம் காவியத் தொகுப்புகளில்
1.நம்முடைய எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து
2.எப்படி எல்லாம் உணர்வுகள் மாறுபடுகின்றது என்பதைத்
3.தெளிவாகக் காட்டுகின்றது நம் இராமயாணக் காவியம்.

இதைத் தெரிந்து கொண்டால் நம்மையறியாது இயக்கும் உண்மையின் உணர்வுகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

இராவணன் சீதாவைச் சிறைப்பிடித்துக் கொள்கின்றான். ஆனால் இவனுடைய சகோதரன் கும்பகர்ணன் தூங்கிக் கொண்டேயிருக்கின்றான். அதாவது
1.நல்லவைகள் இல்லை என்கிறபோது – தீமை என்ற நிலைகள் வந்தவுடன்
2.நல்ல குணங்கள் எல்லாம் உறங்குகின்றது. (தெளிவாகவே காட்டுகின்றார்கள்)
3.பகைமையான குணங்கள் வரும் போது நம் நல்ல குணங்கள் என்ன செய்கின்றது…?
4.நல்லதைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆகவே ஒவ்வொரு நிலையிலும் நல்லவைகள் உருவாகும் உணர்வுகளை உருவாக்காதபடி அது எதிரியாகப் பெறுகின்றது. இராவணனுடைய மகனே அவனுக்கு எதிரியாகின்றான்.

இவன் நுகரும் உணர்வுகள் எதுவோ இவனுள் இணைந்து அது செயல்படும்போது இவனுடன் ஒத்துவராதபடி
1.எந்தப் பகைமை உணர்வுகளை இவன் எடுத்தானோ
2.அது இவனுக்குள்ளேயே பகைமையாகி இவனையே எதிர்க்க ஆரம்பிக்கின்றது.

அதாவது சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எதை உற்று நோக்கி எந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் பதிவாக்குகின்றானோ அந்த ஆசையின் உணர்வுகள் தான் இங்கே வளர்கின்றது.

ஆனாலும் இராவணன் எண்ணிய உணர்வுகள் கடைசியில் அவன் ஆசை நிறைவேறவில்லை. இவன் எதன் மேல் இச்சைப்பட்டானோ அந்த உணர்வின் தன்மையை வளர்த்த பின் நல்லதைப் பெறும் நிலையே தடைப்பட்டுவிடுகின்றது என்பதனைக் காவியத் தொகுப்பாகக் காட்டினார் வான்மீகி மாமகரிஷி.

உணர்வின் இயக்கங்கள் உடலாவதும்… உடலுக்குள் ஆனபின் உணர்வின் எண்ணங்கள் என்னவாகின்றது…? தீமையான நிலைகள் வந்தால் அதை அடக்குவதற்கு என்ன வழி..? என்ன உபாயம்…? என்ற நிலையை நம்மைச் சிந்திக்கும்படி செய்கின்றார்கள்.

“நாராயணன் திரேதாயுகத்தில் சீதா ராமனாகத் தோன்றுகின்றான்” என்று காட்டுகின்றார்கள். அதனின் விளக்கம் என்ன…?

நாராயணன் என்றால் சூரியன். திரேதா என்றால் சரீரம். சீதா என்றால் சூரியன் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து கொண்ட சத்து. இராமன் என்றால் எண்ணங்கள்.

1.நாம் எதை எண்ணுகின்றோமோ (சீதா)…
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகள் (சூரியன் கவர்ந்தது)…
3.நம் உடலுக்குள் (திரேதா)…
4.இந்த உணர்ச்சியின் எண்ணங்களாக (சீதா இராமனாக)… வருகிறது என்ற நிலையைக் காவியமாகப் படைத்துக்
5.கருத்தினைத் தெளிவாக்கி மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்த்துகின்றார்கள்.

இவை அனைத்தும் இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கந்த புராணம் விநாயக புராணம் சிவ புராணம் விஷ்ணு புராணம் எல்லாவற்றிலும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இவை எல்லாம் இன்று ஏமாற்றுபவன் கையிலே தான் சிக்கியுள்ளது. அவன் அவனுக்குகந்த நிலையைப் பயன்படுத்தி மக்களை உண்மையின் நிலையை உணராது செய்துவிட்டார்கள்.

உண்மையின் உணர்வை உணராது செய்த அந்த நிலைகளைக் கேட்கும் நாமும் இன்றைய நிலையில் எதனின் உணர்வின் சுவை (ஆசை) கொண்டோமோ… எப்படி மீள வேண்டும்…? என்று மீண்டும் அந்த ஆசையிலேயே தான் சிக்குகின்றோம்.

திருடுவது தவறு என்று தெரியும். ஒருவன் திருடன் என்றும் தெரியும். இரு உன்னை நான் உதைக்கிறேன் என்று அவன் சொல்லி விட்டால் கடைசியில் அவன் சொன்னபடி கேட்டால் தான் இங்கே வாழ முடியும் என்று அவனுக்கு அடிபணியும் நிலை வந்துவிட்டது.

தவறு என்று தெரிந்தாலும் தன் வாழ்க்கைக்கு எவ்வாறு…? என்று அதிலிருந்து மீளும் நிலையில்லாது தவறின் பாதையிலேயே செல்லும் நிலைகள் இன்று வந்துவிட்டது. இங்கு மட்டுமல்ல. உலகெங்கும் நாடுகளிலும் இந்த நிலை தான்.

மதம் இனம் மொழி என்ற நிலைகளில் பகைமை உணர்வு வளர்க்கப்பட்டு மனித இனமே சீர்குலைந்து மனிதன் இனம் அல்லாது உணர்வுகளைத் தோற்றுவிக்கும் நஞ்சான காற்று மண்டலமாகி விட்டது.

அந்த நஞ்சிலிருந்து மீள வேண்டும் என்று விரும்புபவர்கள். குறுகிய காலம் வாழும் இந்த உடலில்
1.நாம் எதைப் பெற வேண்டும்…?
2.இந்த உடலுக்குப்பின் நாம் எதுவாக வேண்டும்…? என்று சற்று சிந்தித்து
3.இந்தத் தியானத்தை மேற் கொள்ளுங்கள்.

மனிதனாகப் பிறப்பது அபூர்வம்…! பிறந்தாலும் மெய் ஞானத்தைப் பெறுவது மிகவும் அரிது…!

frozen earth.png

மனிதனாகப் பிறப்பது அபூர்வம்…! பிறந்தாலும் மெய் ஞானத்தைப் பெறுவது மிகவும் அரிது…! 

விஞ்ஞான அறிவால் வந்த நிலைகளால் பூமி முழுவதுமே அநேகமாக நச்சுத் தன்மைகளாகப் படர்ந்து விட்டது. நீர் நிலைகளும் பூமிக்குள் மாறிவிட்டது.

வான் வெளியிலேயும் அதே மாதிரி பிரபஞ்சத்திலும் மிக ஆற்றல் மிக்க நிலைகள் பரீச்சாந்திரமாக விண்ணிலே ஏவப்பட்டு அணு குண்டுகளும் ஹைட்ரஜன் குண்டுகளும் வெடிக்கப்பட்டு விஷத் தன்மைகள் படர்ந்து விட்டது.

நம் பூமியும் இந்த ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.
1.பூமிக்குள் வெடித்தாலும் சரி
2.பிரபஞ்சத்திற்குள் வெடித்தாலும் சரி
3.சூரியன் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் இந்த நஞ்சின் தன்மை படர்கின்றது.

வான மண்டலமும் மற்றதும் மாறுபடப் போகும் போது இந்த உணர்வின் தன்மை மனிதன் சிந்திக்கும் செயல் இழந்து “மனிதனின் சிந்தனையே… கூண்டுடன் அழியப் போகின்றது…!”

ஆரம்பக் காலங்களில் மனிதன் மிருகத்தைப் போன்று இருந்தது போல இந்த உலகம் பூராமே அப்படி ஆகப் போகின்றது. மீண்டும் பூமி சுத்தமாக வேண்டும் என்றால் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

அன்று காட்டு மனிதர்களுக்குள் சிறுகச் சிறுக சிந்தனைகள் உருவாகி மீண்டும் மனிதருடைய அறிவின் நிலைகள் வந்ததோ இதைப்போல மீண்டும் பல சுற்றுக்கள் ஆகி…ஆகி மாறி…மாறி அடுத்த நிலையான சரீரத்தைப் பெறும் தகுதி வரும்.

நம் பூமியும் சீக்கிரம் வியாழன் கோள் போன்று பரிமணம் பெறும் நிலை பெறப் போகின்றது.

விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட விஷத் தன்மைகள் அனைத்தும் பிரபஞ்சத்திலே சேர்க்கப்பட்டு சூரியனுடைய ஒளிக் கதிர்கள் பூமிக்கு வருவதைத் தடைபடுத்தும் நிலைகள் வரப்போகின்றது. அவ்வாறு தடைபடுத்தும் போது
1.பூமியில் நீர் நிலைகள் அதிகமாகி
2.எடை கூடிச் சுழற்சியின் வேகம் அதிகமாகிவிடும்.

அப்பொழுது ஈர்க்கும் தன்மையான சூரியனுடைய காந்தப்புலன்கள் தடைப்படும் போது பூமி இறங்கும் நிலை (சூரியனை விட்டு விலகும்) வருகின்றது.

அவ்வாறு இறங்கும் நிலைகள் வந்து விட்டால் பூமி குளிர்ச்சியாகிப் பனிப் பாறைகளாகி விடும். எந்த நிமிடத்தில் இது ஏற்படும்…? என்று சொல்ல முடியாது.

நம்மிடம் ஒருவர் நன்றாகத்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். திடீரென்று கீழே விழுந்து விடுவார். பரிசோதித்தால் உடலில் “இரத்தமே இல்லை…!” என்று சொல்வார்கள்.

அதாவது உடலுக்குள் சில விஷத்தின் தன்மைகள் வளர்ந்தவுடனே
1.இரத்தத்திற்குள் இருக்கக்கூடிய செவ்வணுக்கள் எல்லாம் மடிந்து
2.வெள்ளணுக்களின் இயக்கங்கள் அதிகமாகப் படர்ந்து
3.அதனுடைய சத்துக்களை இது உறிஞ்சி விடுகின்றது.

இதைப் போன்று தான் பூமியின் தன்மையும் பெரும் கோளாக மாறி வியாழனைப் போல வெகு வேகமாக தன்னைத் தானே பிரிந்து செல்லும் நிலை வரும்.

இதனுடன் சேர்ந்து சுற்றும் சந்திரனும் அருகில் இருக்கக்கூடிய செவ்வாய்க் கோளும் மற்றவைகளும் இதிலிருந்து பிரிக்கப்பட்டுவிடும். ஏனென்றால் சூரியனின் ஆற்றல்கள் கிடைக்காமல் தடைபடப் போகும் போது சூரியனை விட்டு விலகிச் செல்லும்.

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள வேண்டும் என்றால் பல வெகு காலம் ஆகும்.

இந்த உணர்வின் இயக்கங்கள் அது எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைக் குருநாதர் காட்டியதனாலே அதை உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அதற்குள் கூடுமான வரையிலும் நம் நினைவலைகளை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லை என்றால் நம்முடைய சிந்தனைகள் அழிந்துவிடும்.

மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித வாழ்க்கையில் இப்பொழுது நாம் வாழ்ந்தாலும் மெய் ஞானிகள் பெற்ற சக்திகளைப் பெறுவது அரிதான (நல்ல) சந்தர்ப்பம் தான்.

ஆனால் எனக்குச் (ஞானகுரு) சந்தர்ப்பம் என் மனைவி உடல் நிலை சரியில்லாத போது ஏற்பட்ட சந்தர்ப்பம் தான் இத்தகைய பேருண்மையைக் கண்டறியும் சந்தர்ப்பம் வந்தது.

1.எனக்குக் கல்வி அறிவு இல்லாவிட்டாலும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதிவாக்கிய அருள் வித்துக்கள் எனக்குள் விளைந்து
3.அதை வளர்க்கும் தன்மையும் வந்தது.

அதே போன்று பல ஞான வித்துக்களை உருவாக்கும் நிலையும் குருநாதர் உருபெறச் செய்ததனால் இத்தகைய நிலையை நீங்களும் பெறும் வாய்ப்பாக இப்பொழுது அமைகின்றது.

இந்த ஆற்றல் மிக்க நிலையை உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நல்ல குணங்களுக்குள்ளும் பதியச் செய்து உரமாகக் கொடுத்து ஊட்டமாக்குகின்றோம்.

இதன் துணை கொண்டு அந்த மெய் ஞானியின் அருள் ஒளியை நீங்களும் வளர்த்துக் கொள்ளுங்கள். நாளை வரும் விஷத் தன்மைகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும். அதற்குத் தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

இதை வளர்த்துக் கொள்வோர் சிறிது பேர் இருந்தாலும் உங்கள் மூலம் இந்தக் காற்று மண்டலத்தில் மெய் ஞானிகள் உணர்வுகள் பரவி மற்றவர்களையும் காத்திடும் சக்தியாகப் பரவும்.

துன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்…!

Image

Horoscope of Rishis

துன்பத்தைப் போக்கும் என்னுடைய ஜாதகம்…!

உங்கள் மகனுக்கு நல்ல நேரம் வருகிறதா…? கேட்ட நேரம் வருகிறதா…? என்று ஜாதகத்தைப் பார்க்கின்றீர்கள்.

“ஏழரை நாட்டான் சனி பிடித்து விட்டான்…!” என்று சொன்னால் போதும்…. அதை உடனே உங்கள் உடலில் பதியச் செய்து கொள்கின்றீர்கள்.

அடுத்தாற்போல் அந்தக் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் ஏழரை நாட்டான் வந்து விட்டான் என்ற நிலையில் எந்தத் தொழில் செய்தாலும் இடைஞ்சல் வருகின்றது.
1.இந்த எண்ணத்தை நீங்கள் எடுத்து எடுத்து
2.உங்கள் உணர்வின் அணு செல்களில் (உடலுக்குள்) பதியச் செய்து
3.அதை நீங்கள் மூச்சலைகளாக வெளியிடும் போது
4.சூரியனுடைய காந்தப் புலன்கள் அதை கவர்ந்து வைத்துக் கொள்கிறது.

திரும்ப எண்ணும் போதெல்லாம் ஜோஸ்யக்காரன் சொன்னது உங்களுக்குள் ஊடுருவி அந்த உணர்வை ஊட்டி உங்களுக்குள் அதை வலுவாக்கிக் கொள்கின்றீர்கள்.

எல்லா மதத்திலும் இதைப் போன்ற நிலை தான்.

அந்தந்த மதத்திற்குத் தக்கவாறு ஜாதகங்களும் நேரமும் காலமும் அதில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்ட பின் வெளியில் எங்கு போனாலும்…
1.ஏழரை நாட்டான் உச்சத்தில் இருக்கின்றான்
2.நாம் வியாபாரம் செய்தால் ஆகுமா…? என்ற நிலையில்
3.எந்தச் செயலைச் செய்ய வேண்டும் என்றாலும் இந்த நினைவலைகளே முன்னாடி வரும்.

அதே உணர்வை எடுத்துச் சுவாசித்து வியாபாரத்தில் யாரிடம் எதைச் சொன்னாலும் கேட்போர் உள்ளத்தில் அவருடைய புலனறிவில் ஈர்க்கப்பட்டு
1.நாம் எப்படிச் சோர்வடைந்தோமோ
2.அந்த உணர்வின் தூண்டுதலை அங்கேயும் உருவாக்கச் செய்து
3.நல்ல பொருளைக் காட்டினாலும் “இது நன்றாக இல்லை…!” என்று சொல்லிப் போய்க் கொண்டே இருப்பார்கள்
4.வியாபாரம் மந்தமாகிவிடும்.

ஏனென்றால் ஜாதகக்காரர் சொன்னது உடலுக்குள் விளைந்து விட்டது. நீங்கள் நினைத்தவுடனே ஏழரை நாட்டான் சனி வந்துவிடுகிறது. அப்போது உங்கள் வியாபாரம் கெடுகிறது.

ஆனால் என்னுடைய (ஞானகுரு) ஜோசியம் என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்….!

மகரிஷிகளின் அருள் சக்தியை இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலையில் ஒரு பத்து நிமிடமும் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பத்து நிமிடமும் (குறைந்த பட்சம்) மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டித் தியானியுங்கள்.

இவ்வாறு செய்து பழக்கப்படுத்திய பின்பு
1.உங்கள் வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும்
2.அல்லது துன்பம் வரும் சமயங்களிலெல்லாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் உரமாகச் சேர்க்கப்பட்டு
5.உங்கள் மனக் கலக்கமோ… மன குழப்பமோ… மன வேதனையோ… உடல் வேதனையோ
6.இதைப் போன்ற நிலைகளை நிவர்த்தி செய்வதற்கு இது நிச்சயம் உதவும்.

ஜோதிடக்காரர் சொன்னதைக் கூர்ந்து கேட்டு உங்களுக்குள் பதிவு செய்த பின் கலக்கமும் சந்தேகமும் சோர்வும் அடைகின்றீர்கள். நல்லதைச் செய்ய முற்படும் பொழுதெல்லாம் அதுவே தடையாகின்றது.

ஆனால் யாம் கொடுக்கும் வாக்கின்படி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாழ்க்கையில் நடப்பதெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணி எடுத்து இதை முயற்சித்துப் பாருங்கள்.
1.இதற்குக் காசோ வேறு எதுவும் தேவை இல்லை
2.உங்கள் எண்ணம் தான் வேண்டும்…!

உங்கள் சந்தேகமும் சஞ்சலமும் விலகும். மனதில் உறுதி வரும். உங்கள் எண்ணம் வலுவாகும். உங்கள் காரியங்கள் நிச்சயம் வெற்றி அடையும்.