பூமிக்குள் விளைந்ததை உட்கொண்டு மனிதனாக வாழும் நாம் “விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்து வளர்ந்தால்” மெய் ஞானிகளைப் போன்று மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்…!

 

cosmic power of human

“இயற்கை” அதாவது விண்ணிலிருக்கக்கூடிய மிக ஆற்றல் மிக்க சக்திகள் இந்தப் பூமிக்குள் கல் மண் மரம் செடி கொடிகள் மற்ற உயிரினங்களை வளர்க்கின்றது.

அந்த விண்ணின் ஆற்றலை விஞ்ஞானிகள் இன்று பல கருவிகளை வைத்துத் தனக்குள் பெருக்குகின்றார்கள். ஆனால் ஞானிகள் மனிதனாக வாழும் பொழுது அந்த விண்ணுலக ஆற்றலைத் தங்கள் புலனறிவால் ஈர்த்துத் தங்களுக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்டார்கள்.

இப்பொழுது நாம் பூமிக்குள் விளைந்த பொருள்களைத்தான் சமைத்துச் சாப்பிடுகின்றோம். ஆனால்
1.விண்ணிலிருக்கக்கூடிய சக்தியை நேரடியாக எடுத்து
2.அந்த உணர்வின் சத்தாக மாற்றும் நிலையைத் தனக்குள் ஏற்படுத்திக் கொண்டால்
3.விண்ணிலிருந்து வரும் அனைத்தையும் தன் உணர்வாக மாற்றி ஒளியின் சரீரமாகப் பெற முடியும்.
4.அப்படிப் பெற்றுச் சென்றவர்கள் தான் சப்தரிஷிகள்.

அவர்கள் காட்டிய உண்மை தான் இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் சிவ புராணம் விநாயக புராணம் அனைத்துத் தத்துவமும்.

புராணம் என்பது பழமை. அதாவது ஆதியிலே உருவான நிலைகளை நாம் அறிந்து கொள்ளும் நிலைக்கு ஞானிகளால் ஏற்படுத்தப்பட்டதே புராணங்கள்.

1.நம் உடலுக்குள் நம் உயிர் ஈசனாகவும்
2.நம் கண்கள் கண்ணனாகவும்
3.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக நம் மனித உடலும்
4.ஒட்டு மொத்தமாகச் சேர்த்துக் கொண்ட சக்திகள் அனைத்தும் உடல் சிவமாகவும்
5.இது அனைத்தும் ஒன்று சேர்த்துச் சுவை மிக்க நிலையாக
6.சூரியன் தான் கவர்வதை எல்லாம் ஒளியாக மாற்றுவது போல
7.ஆறாவது அறிவு கொண்டு நாம் உணர்வை ஒளியாக மாற்றி
8.விண்ணிலே அழியாத நிலைகள் கொண்டு வாழும் திறன் படைத்தவர்கள் என்பதை அறிந்து கொள்வதே நல்லது.

ஆகையினாலே அந்த மெய் ஞானிகள் சென்ற வழியில் அந்தப் பேருண்மைகளை அறிந்துணரும் தகுதி பெற்று விண்ணின் ஆற்றல்களைப் பெறுவோம்.

விண்ணின் ஆற்றல்களை உணவாக எடுத்து விண்ணுலகம் சென்று என்றுமே மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்வோம்.

Leave a Reply