இராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சுமணன் சிவசக்தி – விளக்கம்

Image

jai-anjanaeya

இராமன் ஆஞ்சநேயர் இராமபாணம் நாராயணன் ஆதிசேஷன் லட்சுமணன் சிவசக்தி – விளக்கம்

 

1.இராமன் ஆஞ்சநேயர் இராமபாணம்:-
புழுவிலிருந்து மனிதனாகும் வரையில் நாம் எடுத்துக் கொண்ட குணங்கள் தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலாக விளைந்து அந்த விளைந்த உணர்வின் சத்தைத் தன் உயிராத்மாவோடு சேர்க்கப்படும்போது சீதா ராமா.

இராமனுக்கு என்ன சேர்கிறது…? இராமனுக்கு முன்னாடி ஆஞ்சநேயர். ஒரு குணத்தின் நிலையில் நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொள்கிறோமோ அதிலே அந்தக் குரங்குப் பிடியாகத்தான் இருப்போம்.

பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கிறது? தன் பிடியின் தன்மையிலே தான் நிற்கும். நம் உடலுக்குள் கோடிக்கணக்கான குணங்களை எடுத்தாலும்
1.அந்தந்தக் குணத்தின் தன்மை கொண்டு தான் உணர்வின் எண்ண ஒளிகள் பாயும்.
2.”அதனின் பிடியிலே தான் நாம் இருப்போம்…!” என்ற
3.இந்த உண்மையை உணர்த்துவதற்குத்தான்
4.இராமனுக்கு முன்னாடி ஆஞ்சநேயரும் இராமன் கையிலே அம்பையும் போட்டுக் காட்டினார்கள் ஞானிகள்.

நாம் எடுத்துக் கொண்ட ஒரு உணர்வின் தன்மையை (மீண்டும்) எண்ணிப் பாய்ச்சும் போது இந்த உணர்வுகள் தாக்கி அதே உணர்வின் சக்தியை உணரச் செய்கின்றது. அதைத் தான் இராமபாணம் என்பது.

சீதாராமா… பரசுராமா… பலராமா… ஜானகிராமா… என்று சொல்வதெல்லாம் ஒவ்வொரு குணத்தின் தன்மையை நாம் சிறப்புற எடுத்துக் கொண்ட உணர்வின் வித்து தனக்குள் விளைந்து உயிராத்மாவுடன் சேர்க்கப்படுவதைத்தான் “இராமன்” என்று அதை அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

2.நாராயணன் ஆதிசேஷன் – லட்சுமணன்:-
ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன் என்று காட்டியிருப்பார்கள் ஞானிகள். அதாவது விஷத்தின் இயக்கமே சூரியனை இயக்கச் செய்து ஆற்றல் மிக்கதாக அதை உருவாக்கியது.

நாராயணன்… நான் மனிதனாக இராமனாகப் பிறக்க போகின்றேன். நீ என்னுடன் “லட்சுமணனாக வா..!” என்று ஆதிசேஷனை அழைத்துச் செல்வதாகக் காவியங்களில் உண்டு.

சூரியன் தனக்குள் மோதும் விஷத்தைப் பிரித்து வெப்பம் காந்தம் என்று உருவாக்கினாலும் பிரிந்து செல்லும் கடைசி விஷத்தை இந்தக் காந்தம் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

இந்தக் காற்றுக்குள் இருக்கக்கூடிய அனைத்துச் சக்திகளையும் சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

NEGATIVE POSITIVE என்கிற நிலைகளில் இன்று கரண்ட் எப்படி உற்பத்தி ஆகின்றதோ இதைப்போல நான் ஒரு குணத்தை எடுத்துக் கொண்டால்
1.என் குணத்தைக் காத்துக் கொள்வதற்கும்
2.என்னை இயக்கச் செய்வதற்கும்
3.இந்தக் காற்றிலிருந்து வந்த எந்த உணர்வின் குணமாக இருந்தாலும்
4.எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டாலும்
5.அதே குணத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்றால் இந்த விஷம் (லட்சுமணன்) தேவை.

ஒவ்வொரு காந்தத்திற்குள்ளும் விஷத்தின் ஆற்றல் உண்டு. ஒரு உணர்வின் (குணத்தின்) சத்தை நாம் சுவாசித்து நம் உயிரிலே பட்ட உடனே என்ன நடக்கின்றது…?

ஒரு தேள் கொட்டினால் எப்படி “ஜிர்…” என்று உடல் முழுவதற்கும் துடிப்பின் நிலைகள் ஏறுகின்றதோ அது போல
1.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் இந்த விஷத்தின் ஆற்றலே ஊடுருவி
2.எந்த குணத்தை எடுத்துக் கொள்கின்றோமோ
3.அந்த குணத்தின் இயல்புக்குள் அதை இயக்கச் செய்து
4.அந்தக் குணத்தின் இயக்கமாக நம்மை இயக்கச் செய்கிறது.

3.சிவசக்தி:-
அதனால் தான் இராமனை ஒருத்திக்கு ஒருவன் என்று காட்டுகின்றார்கள். சீதா இராமனே தவிர இராமா சீதா அல்ல. இலட்சுமி நாராயணனே தவிர நாராயணா இலட்சுமி அல்ல. அதாவது சிவ சக்தி…!

பல சக்திகள் கொண்ட உயிரும் ஒரு சக்தி. அதே போலத் தாவர இனச் சத்தும் ஒரு சக்தி தான். இந்த இரண்டு சக்திகளும் சேரும் போது உயிர் ஈசனாகிறது – ஆண்பால். அதே சமயம் தாவர இன சத்து பெண்பால் ஆகின்றது.

ஒரு பெண்தான் கருவுற்றுத் தனக்கும் அந்தக் கருவை வளர்க்கும். புறத்திலிருந்து எடுக்கும் இச்சக்தியின் தன்மையைப் பெண்பாலாகக் காட்டி அது திடமான உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.உடலுக்குள் இணைந்து மீண்டும்
2.சிவசக்தியாக இயங்குகிறது என்று காட்டுகின்றார்கள்.

அதாவது “உயிரினங்களின் இயல்புகளுக்கு வரும்போது…” வளர்க்கும் சக்தியின் தன்மையைக் காரணப் பெயர் வைத்து “சிவசக்தி” என்று காட்டினார்கள் ஞானிகள்.

வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை… எண்ணையை வைத்து வறுத்து அகற்றுவது போல் “மகரிஷிகள் உணர்வை வைத்து” நம்மையறியாது இயக்கும் தீமையான உணர்வுகளை அகற்ற வேண்டும்

Image

Sages light

வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை… எண்ணையை வைத்து வறுத்து அகற்றுவது போல் “மகரிஷிகள் உணர்வை வைத்து” நம்மையறியாது இயக்கும் தீமையான உணர்வுகளை அகற்ற வேண்டும்

உதாரணமாக உடைகளில் அழுக்குப் பட்டதும் துவைத்து விடுகின்றீர்கள். உடலில் அழுக்குப் பட்டதும் குளித்து விடுகின்றீர்கள்.
1.உங்கள் உணர்வுடன் சேர்ந்த அழுக்கைத் துடைக்க வேண்டும் என்று
2.நீங்கள் எண்ணவில்லை என்றால்… யார் அதைத் துடைப்பது…?
3.துடைக்கக்கூடிய சக்தி உங்களிடம் இருக்கின்றது.
4.அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமல்லவா…!

அதைப் பயன்படுத்தாமல் என்ன செய்கின்றோம்…?

அங்கே சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் வேடிக்கை பார்த்தோம். உற்றுப் பார்த்த அந்த உணர்வுகள் அந்தந்த குணத்தின் அணுக்களாக விளைந்து அது நம் உடலில் நோயாக மாறுகின்றது.

அம்மம்மா… ஐய்யய்யோ ஐய்யயோ…! என்று நம் உடலில் அதுவாக ஆகி விடுகின்றோம். அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா…!

நாம் எல்லோரும் படித்து விட்டு வரவில்லை. படித்து விட்டு வந்தாலும் கூட இதிலே (நமக்குள் இயக்கும் உணர்வுகளில்) கவனம் இருப்பதும் இல்லை.

படித்தவர்களும் சரி. படிக்காதவர்களும் சரி. சந்தர்ப்பத்தில் நாம் கடுமையான வேதனைப் பட்டுவிட்டோம் என்றால் அந்த வேதனையிலிருந்து மீள முடியவில்லை… மீளத் தெரியவில்லை…!

ஆனால் அந்த வேதனை நம் உடலில் நோயாக உண்டாக்கிக் கொண்டு இருக்கின்றது. நம் சொல் தொழிலையும் கெடுக்கின்றது. குடும்பத்தில ஒற்றுமையும் கெடுக்கின்றது.

வீட்டில் இருக்கும் பொழுது அந்த வேதனையான எண்ணங்களையே நாம் எண்ணிக் கொண்டிருந்தால் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி விடுகின்றது.

பின்பு வீட்டில் நாம் சும்மா இருந்தாலும் கூட அந்தச் சங்கட அலைகள் நம் மீது பாய்ந்து அந்தச் சங்கடத்திற்குத் தக்கவாறு நம்மை இயக்கும்.

அடிக்கடி சங்கடமாக வேதனையாகப் பேசிக் கொண்டு அந்த உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் மழை மோடம் (வெயிலில்லாது இருட்டாகி) போட்டால் போதும்.

அப்போது வீட்டிற்குள் என்ன செய்யும்..? வீட்டில் “கபகபா…!” என்று அந்த உணர்வலைகள் வரும். அப்போது அந்த நேரத்தில் சண்டை போட்டது… போனது வந்தது… “என்ன வாழ்க்கை…?” என்று வெறுப்பான உணர்வுகள் தான் தோன்றும். “பார்க்கலாம்…!”

மழை பெய்யும் அந்த நேரத்தில் வீட்டில் உட்கார்ந்து பாருங்கள்.

என்னத்த இது…? அப்படி இருக்கிறதே… இப்படி இருக்கின்றதே…! என்ற உணர்வுகள் தன்னை அறியாமலே பல வெறுப்பான நிலைகள் கொண்டு போவதைப் பார்க்கலாம். உங்களை அப்படி எண்ண வைக்கிறதைப் பார்க்கலாம். உடல் சோர்வடையும்.

இந்த மாதிரி உணர்வுகளை மாற்றுவதற்கு வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து தின்று கொண்டு இருந்தால் இது கொஞ்சம் மாறும்.

வாய்க்கு ருசியாக என்று சொல்லும் பொழுது லட்டு ஜிலேபி இருந்தால் ஒத்துக் கொள்ளாது.
1.காரசாரமாக அந்த உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய காரம் தான் வேண்டும்.
2.ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கம் அது.

காரமான பதார்த்தத்தை எடுத்துச் சாப்பிட்டோம் என்றால் “ஜிர்…ர்….ர்…” என்று அந்த உணர்ச்சிக்குப் போய்விடும். அப்போது இது அதை மாற்றுவதற்கு அது உதவுகிறது.

இதைப்போல நாம் ஒவ்வொரு உணர்ச்சிகளும் நமக்குள் என்ன செய்கின்றது…? எப்படி இயக்குகிறது…? என்கிற வகையில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் சண்டையிடுவதையும் துன்பப்படுவதையும் உற்றுப் பார்த்தோம். அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து நோயாகிச் சிரமப்படுகின்றோம்.

இந்த இக்கட்டான நிலை வரப்போகும் போது நம் பையன் வந்து விளையாண்டு கொண்டிருக்கும் பொழுது “டப்…!” என்று ஒரு பாத்திரம் கீழே விழுந்தால் போதும்.

தொலைந்து போகிறவன் இப்படிச் செய்து கொண்டு இருக்காயேடா…! என்று ஆத்திரம் வரும். அவனைச் சாபமிட்டுப் பேச வைக்கச் சொல்லும்.

ஆண் பிள்ளையாக இருந்தால் “ஒரு அடி போட்டேன்…! என்றால் பாருடா…! என்று அவனை உதைக்கச் சொல்லும்.

ஏனென்றால் அந்த எரிச்சலான உணர்வுகள் நம் உடலில் நோயால் வந்த இக்கட்டைச் சமாளித்து கொண்டு இருக்கும் போது குழந்தைகளைப் பார்த்தவுடனே தன்னை அறியாமல் இந்த நிலைகளைச் செய்வோம்.

தவறு யார் செய்வது…? இதைத் தான் கீதையிலே எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய் என்று காட்டுகின்றார்கள்.

இப்போது நாம் குழம்பு வைக்கும் போது காய்களில் இருக்கக்கூடிய காரலை நீக்குவதற்காக வேக வைத்து விடுகின்றோம்.

வெண்டைக்காயில் வழுவழுப்பு இருக்கிறது என்றால் எண்ணெய் வைத்து லேசாக ஒரு தரம் வறுத்து விட்டோம் என்றால் அந்த வழுவழுப்பு இருக்காது வெண்டைக்காய் ருசியாக இருக்கின்றது.

ஆனால் அதே வெண்டைக்காயை வறுக்காமல் அப்படியே குழம்பில் போட்டால் என்ன செய்யும்…? குழம்பெல்லாம் வழுவழு என்று ஆகிவிடும். குழம்பை ஊற்றிச் சாப்பிட முடியவில்லை. சுவையும் மாறுகின்றது.

ஆக அந்த வெண்டைக்காயை முதலில் எண்ணெயை விட்டு வறுத்துவிட்டு அந்தக் குழம்பில் போடும் போது சுவையாக இருக்கும். “ரொம்பப் பிரமாதமாக இருக்கின்றது…!” என்கிறோம்.

அப்போது என்ன செய்கிறது…?
1.அந்த வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பை
2.அது கக்காத நிலைகள் கொண்டு அதற்குள் அடக்கி விட்டு விடுகின்றது.
3.அது நமக்குத் தெரிகின்றது. அதனால் அதை ருசியாகச் சமைக்கின்றோம்.

நாம் குழம்பு வைக்கும் போது இத்தனை ருசியாக வைத்து அதனுடைய நிலைகளை அடக்கிச் சமைத்து விடுகின்றோம். இதைப்போல நம் உடலில் வேதனையான உணர்வுகள் வருகின்றது என்றால் அதை அடக்கக்கூடிய சக்தி வேண்டுமல்லவா…!

அதற்காகத்தான் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். அவர்கள் நஞ்சினை அடக்கிப் பழகியவர்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் பேரருள் உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் நம்மையறியாமல் இயக்கும்
1.தீமையான உணர்வுகளை இயக்கவிடாது அடக்கித்
2.தீமைகளைப் பிளந்து “அவைகளை”
3.நன்மையின் பயனாக மாற்றிக் கொண்டு வர முடியும்.

ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானப் பயிற்சி…!”

Sage Agatheeswara

ஒவ்வொருவரையும் அகஸ்தியராக மாற்றச் செய்யும் “தியானம்…!”

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்போது அந்த ஒளியின் சுடர் உங்களுக்குத் தெரியும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் தனக்குள் விளையச் செய்து
2.அந்த உணர்வின் அலையை எமக்குள் (ஞானகுரு) பாய்ச்சச் செய்து
3.அந்த அகஸ்தியன் உணர்வுகளை முதலில் பார்த்த (பெற்ற) நம் குருவின் உணர்வலைகளை
4.அவர் ஒளியின் நிலையாகத் திகழ்ந்து கொண்டிருப்பதை
5.குரு அருளின் துணையால் அகஸ்தியன் உணர்வுகளை இப்பொழுது நீங்களும் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

அதை உணரும் அறிவு பெற்று உங்கள் உடலுக்குள் பதிவாகி அதனின் நினைவாக நீங்கள் எண்ணும் போதெல்லாம் அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். இப்போது
1.உங்கள் புருவ மத்தியில் இருந்து
உங்கள் உடலுக்குள் ஒளிக் கதிர்கள் பரவுவதை
உங்களால் உணர முடியும் (ஒளியின் சரீரமாவது போன்று…!”)

அகஸ்தியன் குழந்தைப் பருவத்தில் தன் தாய் தந்தையைப் பார்க்கும் போது அவர்கள் உடல்களில் இருந்து வந்த அந்த பச்சிலை வாசனைகள் இப்பொழுது உங்கள் சுவாசத்திற்குள் வரும்.
1.அதை இப்பொழுது நீங்கள் நுகரும் ஆற்றல் பெறுகின்றீர்கள்
2.அந்தப் பச்சிலைகளின் வாசனையை உணர முடியும்.
3.உங்கள் உடலில் உள்ள பல பிணிகளைப் போக்க இது உதவும்.

அகஸ்தியன் தன் நினைவினைத் தாய் தந்தை பால் செலுத்தி அவர் உடலில் இருந்து வந்த மணங்களை நுகரும் போது அவன் மகிழ்ச்சியுற்ற உணர்வுகள் எவ்வாறோ அதைப் போன்று உங்களுக்குள்ளும் அந்த மணங்கள் கிடைக்கும்.

1.அகஸ்தியன் நுகர்ந்த மணங்கள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று இரத்தங்களில் கலந்து
2.கடும் தீமைகளை அடக்கி உங்களுக்குள் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக வரும்
3.அகஸ்தியன் அடைந்த அதே மகிழ்ச்சி உங்களுக்குள்ளும் இப்பொழுது பெருகுவதைப் பார்க்கலாம். உணரலாம்.

உதாரணமாக மலைப் பகுதிகளில் செல்லும் போது
1.ஆங்காங்கு இருக்கும் தாவர இனங்களின் மணங்களை “நுகர்வது போன்று”
2.இப்பொழுது நம்முடைய சுவாசத்தில் நம் உடலுக்குள் பல அற்புத மணங்கள் பரவும்.
3.நினைவுகள் அனைத்தும் மகிழ்ச்சி பெறும்.

அகஸ்தியன் தாய் கருவில் பெற்ற அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் பூமியின் துருவப் பகுதி வழியாக வரும் பிரபஞ்சத்தின் ஆற்றலை அறிந்தான். துருவன் ஆனான்.

அதனின் வளர்ச்சியில் இந்தப் பிரபஞ்சத்திற்கு எவ்வாறு சக்தி கிடைக்கிறது என்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்தான். துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியன் கண்டுணர்ந்தது போன்று அதன் அறிவின் தொடராக அறிந்துணரும் சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள். அகஸ்தியன் வழியில் அனைவரும் அருள் ஞானம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

(இவ்வாறு தியானிக்கும் பொழுது அவரவர்கள் உங்களுக்கு என்ன கிடைத்தது…? என்ன தெரிந்தது…? என்று முடிந்த மட்டும் சொல்லுங்கள்…! – ஞானகுரு)

ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றேன்.
1.அந்த “ஈர்க்கும் சக்தி” இப்பொழுது வரும் போது
2.நினைவுபடுத்தி (அகஸ்தியனை) அதைப் பெறுகின்றீர்கள்…! அதை உணர்கின்றீர்கள்.

உதாரணமாக பாட நூல்களைப் பள்ளியில் படித்த பிற்பாடு இன்னதுதான் என்கிற வகையில் ஒரு பொருளை இணைத்து விஞ்ஞான அறிவில நீங்கள் காணுகின்றீர்கள் அல்லவா…!

அதைப் போல…… உங்கள் உணர்வால் அகஸ்தியன் கண்டுணர்ந்த
1.அண்டத்தின் உணர்வுகளையெல்லாம் காட்சியாகக் காணும் நிலைகளைப் பெறுகின்றீர்கள்.
2.அந்தச் சக்தியாக நீங்கள் மாறுகின்றீர்கள்
3.அகஸ்தியனாக மாறுவதற்குத் தான் இதைச் சொல்வது

சொல்வது…..! உங்களுக்கெல்லம் அர்த்தமாகின்றதல்லவா…!

நாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு – விளக்கம்

Image

Lord Shiva wisdom fruit

நாரதன் கனியை ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகள் உண்டு – விளக்கம்

 

உதாரணமாக ஒரு மாமரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த மரம் பூப்பூத்துக் காய்க்கும் நிலையில்
1.பிஞ்சாக இருக்கும் போது துவர்க்கின்றது.
2.காயாக இருக்கும்போது புளிக்கின்றது.
3.கனியாகும் போது இனிக்கின்றது.
4.கனியான பின் அந்த உணர்வின் சத்து வித்தாகின்றது.

இதைப் போலதான் தாய் தந்தையருடைய உணர்வின் தன்மை கொண்டு தான் நாம் குழந்தைகளாக உருவாகியுள்ளோம். தாய் தந்தையர் உடலில் முதுமையாகும் போது அவர்களைக் கனியாக்க வேண்டும்.

தாய் தந்தையர் கனியாக ஆக்கப்பட வேண்டும் என்றால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவர்களின் உயிராத்மாக்களை
1.அந்த மகரிஷிகள் இருக்கும் பக்கம் சப்தரிஷி மண்டல எல்லையிலே
2.உந்தித் தள்ளச் செய்வது குழந்தையினுடைய நிலை.

மாமரத்தில் எப்படிக் கனியான பின் வித்தாகின்றதோ அந்த வித்தின் தன்மைதான் தன் உணர்வின் சத்தை எடுத்து அந்த மரத்தை வளர்க்கச் செய்கின்றது.

கனியின் தன்மை பெறவில்லை என்றால் அதிலிருந்து வித்துகள் வருவதில்லை. அதைப் போல ஆகாதபடி நாம் நம் தாய் தந்தையரைக் கனியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

1.அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின்
2.அந்த உயிராத்மாக்களைச் சப்தரிஷி மண்டல அலையுடன் இணைக்கச் செய்யும் போதுதான்
3.அது ஒளியின் சுடராக அது கனியாகின்றது.
4.ஆக மனிதனானபின் கடைசியில் அந்தக் கனியாகின்றது.

ஏனென்றால் நமது உயிர் விண்ணிலே தோன்றி ஒளியாகப் பூமிக்குள் விஜயம் செய்கின்றது. பல கோடி உணர்வின் சக்திகளை உயிர் எடுத்துப் பல உடல்களாகப் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வருகின்றது.

மனிதனாக வரும்போது உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி ஒளிச் சரீரம் பெறுவது தான் “கனி…!” என்பது.

ஆகையினால்தான் நாரதன் கனியைக் கொண்டு வந்து ஈசனுக்குக் கொடுப்பதாகக் கதைகளையும் சொல்லிச் சுருக்கமான நிலைகளில் மனிதர்கள் நாம் உணர்ந்தறிந்து
1.இந்த வாழ்க்கையில் மெய் உணர்வைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி
2.எல்லோரையும் மெய் ஞானத்தைப் பெறச் செய்து
3.மனித உயிராத்மாக்களுக்கு உய்விக்கும் வழியைக் காட்டினார்கள் மெய் ஞானிகள்.

ரிஷியின் மகன் நாரதன்… என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும்… காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் துருவனாக துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். அவனைப் பின்பற்றிய மனிதர்கள் சப்தரிஷி மண்டலமாக அவனைச் சுழன்று கொண்டுள்ளார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் ஒளியான அணுக்களே நாரதன். ஆகவே ரிஷியின் மகன் நாரதன்…!

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிவரும் பேரருள் பேரொளி உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு துருவப் பகுதியின் வழியாக நம் பூமிக்குள் வருவதை நாரதன் என்று காட்டியுள்ளார்கள்.

நாராயணன் என்றால் சூரியன். ஆகவே நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன்…!

நம்முடைய குலதெய்வங்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான… ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்…!”

motcha-deepams

நம்முடைய குலதெய்வங்களின் உயிராத்மாக்களை “விண்ணின் திருக்கடலான… ஒளிக் கடலிலே.. இணைக்கச் செய்ய வேண்டும்…!”

நம்முடைய குலதெய்வங்களைப் பக்தி கொண்டு பூஜித்தாலும் அந்த உயிராத்மாக்கள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவர்களை “அருளாடச் செய்து விடுகின்றோம்….!”

அதைப் போன்று இல்லாதபடி
1.குலதெய்வங்களாக இருக்கும் குடும்பப் பற்று கொண்ட அந்த உயிராத்மாக்களை
2.நாம் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்து
3.அங்கே அழியாத ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

குலதெய்வங்கள் அனைவரும் அங்கே அந்த ஒளிக் கடலில் இணைந்து விட்டால் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது அந்த அருளாற்றல் நமக்கு எளிதில் கிடைக்கும்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்கள் அனைத்தையும் போக்கும் சக்தியைப் பெறுவதற்கு நாம் விண் செலுத்திய மூதாதையர்களின் உயிராத்மாக்கள் பெரும் உதவியாக இருப்பார்கள்.

குலதெய்வங்களின் உணர்வுகள் நமக்குள் இருப்பதால் அதனின் துனை கொண்டு அவரவர் குடும்பத்தைச் சார்ந்த உயிராத்மாக்களை எளிதில் விண் செலுத்தலாம்.

ஆகவே ஏக காலத்தில் எண்ணி… ஒளி அலைகளாக ஒளி வெள்ளங்களாக நாம் அனைவரும் திரண்டு…! உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ள வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நாம் தியானித்து அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.அந்த எடையற்ற உயிராத்மாக்களை
2.விண்ணின் திருக்கடலான அந்த ஒளிக் கடலிலே கலக்கச் செய்ய வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தி அவர்களுக்கு உணவாகி அந்த உணர்வின் ஆற்றல் பெருக அவர்கள் ஒளிச் சரீரம் பெற ஏதுவாகும்.

குலதெய்வங்களை விண்ணிலே செலுத்திய பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் அந்த உணர்வின் அலைத் தொடரிலேயே நம் எண்ணங்கள் இருந்து அந்த நிலைகளை நாமும் பெற முடியும். இது தான் விஜய தசமி.

அதாவது உயிர் என்று விண்ணிலே ஒளியாகத் தோன்றியதோ பூமிக்குள் விஜயம் செய்த பின் அந்த உணர்வாலே பல உடல்கள் பெற்று இன்று மனிதனாக வளர்ந்துள்ளோம்.

மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி சிருஷ்டிக்கும் தன்மையாக அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்கே இந்தத் தவமும் தியானமும்.

மனிதனாக வாழும் நிலையில் இந்த வாழ்க்கைக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்று இதைத்தான் “தியானம்” என்று சொல்கிறோம்.

ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து என்றும் பதினாறு என்ற நிலை அடைதல் வேண்டும்

இந்த உடலில் இருக்கும் பொழுது நாம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ இந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்து நின்று விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் ஆற்றல்கள் அனைத்தையும் புசித்து மகிழ்ச்சி கொள்ளும் நிலையாக நாம் பெறுதல் வேண்டும்.

கருணைக் கிழங்கில் உள்ள விஷத்தை நீக்கி அதனுடன் உப்பு புளி காரம் என்று பல பொருள்களைச் சேர்த்து நாம் இரசித்துச் சாப்பிடுகின்றோம் அல்லவா…!

இதைப் போல உணர்வின் ஒளிச் சரீரமாக ஆன பின் விண்ணிலே தோன்றும் எத்தகைய விஷத் தன்மையான உணர்வாக இருந்தாலும் அதை உணவாக எடுத்து நமக்குகந்த சக்தியாக்கி உணர்வின் ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியை நம்மால் பெற முடியும்.
1.மனிதனின் கடைசி நிலை இது தான்.
2.அழியா நிலை இது தான்.
3.அழியாச் சரீரமாக என்றுமே ஒளியாக வாழும் நிலையை இந்த மனித உடலிலிருந்து தான் பெறவேண்டும்.

“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் சக்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் – “குரு பலம்” பெறுங்கள்…!”

Image

Venugopalaswamigal

“உபதேச வாயிலாகத்தான்” உங்களுக்கு பேராற்றல்களையும் சக்திகளையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் – “குரு பலம்” பெறுங்கள்…!”

 

வாழ்க்கையிலே நல்லதை எண்ணினாலும் நம்மை அறியாது உடலுக்குள் சேரும் தீமைகளின் விளைவுகளை நாம் போக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டால் தான் மனிதன் மனிதனாக நாம் வாழ முடியும்.

இல்லை என்றால் நம்மை எங்கேயோ இட்டுச் சென்றுவிடும். ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும் பழக்கம் நமக்கு அவசியம் வர வேண்டும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால்
1.சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்கிற மாதிரித் தெரியும்…!
2.புதிதாகப் படிப்பவர்களுக்கு ஏதோ புதிதாகச் சொல்வதாகத் தெரியும்.
3.ஆனால் முன்னாடி (முந்தி) சொன்னதைக் காட்டிலும் சிலதுகளைப் புதிதாகச் சொல்வதாகவும் உங்களுக்குத் தெரியும்.
4.ஏனென்றால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி (அவர் எனக்கு இட்ட கட்டளைப்படி)
5.“விண்ணின் ஆற்றல்களை…” உங்களுக்குள் ஒவ்வொரு சமயத்திலும்
6.இந்த “உபதேசத்தின் வாயிலாகத்தான்” வித்துக்களாகப் பதிவு செய்கின்றோம்.
7.குரு பலம் என்பது இது தான்.

மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று தியானித்து அதை உங்களுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.யாம் (ஞானகுரு) உபதேசித்த வித்துக்குச்
2.சக்தியும் ஆற்றலும் அப்பொழுது கிடைக்கின்றது.

அதன் வழி கொண்டு தான் விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்று வளர்த்துக் கொள்ள முடிகின்றது. அந்த விண்ணின் ஆற்றலை நீங்கள் பெற்றால் உங்களுக்குள் இருக்கக்கூடிய துன்பத்தைப் போக்க உங்களால் முடிகின்றது.

1.“பிறர் செய்து கொடுப்பார்…!” என்பதற்குப் பதில்
2.இந்த முறைப்படி நீங்கள் வீட்டிலிருந்து சுலப நிலைகள் கொண்டு
3.இருந்த இடத்திலிருந்தே (எந்த இடத்திலிருந்தாலும்) நீங்கள் பெற முடியும்.

ஆகையினாலே எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறத் தியானிப்போம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் வலு சேர்த்துக் கொண்ட பின் உங்கள் குலங்களில் தெய்வங்களான மூதாதையர்களை எண்ணி
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து
2.ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று எண்ணி
3.தினமும் இந்த நினைவினைச் செலுத்திக் கொண்டேயிருங்கள்.

ஏனென்றால் மனித உடலில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது தான். குறுகியே காலமே வாழப் போகும் இந்த உடலுக்காக வாழாமல் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக விண்ணிலே என்றுமே ஏகாந்தமாக வாழும் அந்த நிலை பெற ஆசைப்படுங்கள்.

பேரின்பப் பெருவாழ்வு பெறுவீர்கள்…! பேரானந்தப் பெரு மகிழ்ச்சி பெறுவீர்கள்…!

மெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களே…! – ஒன்றும் தெரியாதவர்களே மெய் ஞானியாகும் பொழுது நம்மால் ஆக முடியாதா……?

Image

Kumara guru

மெய் ஞானிகள் ஆவதற்கு முன் அவர்கள் அனைவரும் ஒன்றும் தெரியாதவர்களே…! – ஒன்றும் தெரியாதவர்களே மெய் ஞானியாகும் பொழுது நம்மால் ஆக முடியாதா……?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்தும் மெய் ஞானிகளின் அருள் வித்தாக உங்கள் உடலுக்குள் ஆழமாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே இதைக் கேட்ட அன்பர்கள் அனைவருக்குள்ளும் உங்கள் உடல்களில் வீரிய சத்தாகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள். அதே சமயத்தில் புதிதாக இதைப் படிப்போர் உள்ளத்திலேயும் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் இதையெல்லாம்… “நாம் என்றைக்குத் தெரிந்து எடுக்கப் போகின்றோம்…? நம்மாலே முடியுமா…! என்று விரக்தியான எண்ணங்களை எடுத்து விட்டால் அவர்கள் உள்ளங்களிலே இது பதிவு ஆவது மிகவும் கடினம்.

1.சாமிகள் (ஞானகுரு) சொல்லும் தத்துவம்… அது மிக மிகப் பெரியது..!.
2.அதை எப்படி நாம் முழுவதும் அறிவது…? என்ற நிலையை எண்ணினால்
3.அதனுடைய நிலைகள் தனக்குள் “கதவடைத்த நிலையும்”
4.தன்னை அறியாத நிலையையும் தான் உருவாக்கச் செய்கின்றது.

விஞ்ஞானத்தில் இன்று வெறும் காகிதத்தில் (நாடா) காந்தப் புலனின் அறிவைக் கூட்டி மற்றதை ஈர்த்துப் பதிவாக்கும் தன்மையை ஏற்படுத்தி கம்ப்யூட்டர் (ELECTRONIC) மூலம் படத்தையோ ஒலிகளையோ மற்றவைகளையோ இணைக்கப்படும் பொழுது அதிலே பதிவாகின்றது.

மீண்டும் அதிலே காந்த ஊசியை வைத்த பின் அதிலே பதிவான உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.

நாம் படித்துணர்ந்து அறிந்தவர்கள் ஒரு பாடலை நாம் பாட வேண்டும் என்றால் நம்மால் உடனே முடிவதில்லை. ஆனால் ஒன்றுமறியாத இரண்டு வயதுக் குழந்தை அந்தப் பாடலைக் கூர்மையாக இரண்டு தரம் மூன்று தரம் கவனித்தால் போதும்.
1.அந்தப் பாடல்கள் பதிந்துவிடும்.
2.பின் அந்தப் பாடலைப் பாடு…! என்றால் அது அதன் வழியே தெளிவாகப் பாடும்.

குழந்தைகளிடம் வேறு சிந்தனை இல்லாததால் அறியாத பிஞ்சு உள்ளங்களிடம் இருக்கக்கூடிய அந்தக் காந்தப் புலனின் அறிவுகள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகளை அப்படியே கவர்ந்து பதிவாக்கி விடுகின்றது.

அத்தகைய குழந்தைகள் உள்ளங்களில் மெய் ஞானியின் அருள் வித்துகள் சுலப நிலைகளில் பதிவாகின்றது.

ஆனால் வளர்ந்து பெரிய மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் பல புத்தகங்களைப் படிக்கின்றோம். படித்துணர்ந்த நிலைகள் கொண்டு
1.நாம் இதைப் பெற முடியுமா…?
2.இது மிகப் பெரிய விஷயமாயிற்றே…!
3.சாதாரண மனிதனின் வாழ்க்கையில் இதை எப்படிப் பெற முடியும்…? என்ற உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால்
4.அந்த உணர்வின் செயலாக்கத்தில் தான் நாம் செல்ல முடியும் – இந்த எண்ணமே நம்மைத் தடைப்படுத்திக் கொண்டிருக்கும்…!

படிப்பது எதற்கு…? மெய் உணர்வைக் காணுவதற்குத்தான். ஆனாலும் மெய் ஞானிகள் அனைத்தும் “ஒன்றுமறியாதவர்கள் தான்…!” அவர்கள் உடலிலே பதிவான உணர்வுகளே அவர்களை இயக்கி மெய்யை அறியும்படியும் உணரும்படியும் செய்தது.

ஆகவே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று வேட்கையின் நிலைகள் கொண்டு பல புத்தகங்களைப் படித்தோர் உள்ளங்களில் இது பதிவது மிகக் கடினம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தாலும் அதைத் தகர்த்துவிட்டு குழந்தை உள்ளங்கள் போன்று உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்துங்கள்.
2.மெய் ஒளியின் தன்மையைச் சமத்துவப்படுத்துங்கள்
3.மெய் ஞானியின் அருள் வித்தை உங்களுக்குள் பதியச் செய்யுங்கள்.

பதிந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு மகரிஷிகளின் அருளாற்றலைப் பெருக்குங்கள். மெய் ஞானிகள் காட்டிய அருள் வித்தின் ஞானத்தை நீங்கள் காணலாம்.

உங்கள் சொல்லுக்குள் இனிமை காணலாம். உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்க இது உதவும். “உங்களை நீங்கள் நம்புங்கள்…!”

ஆகவே மெய் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கும் ஒவ்வொரு நிலையையும் உங்களுக்குள் பதிவு செய்யும் ஏட்டாக நினைத்துப் பதிவாக்கிக் கொண்டால்
1.மீண்டும் அதை நினைவு கொள்ளும் பொழுது
2.அந்த ஆற்றல் மிக்க சக்திகளை உடனுக்குடன் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
3.அதனின் வளர்ச்சியில் நீங்கள் மெய் ஞானியாகின்றீர்கள்.

இது மனிதனால் சாத்தியமாகக்கூடியது தான்…!

புற வாழ்க்கையில் “போதும்…!” என்ற உணர்வை எடுத்தால் நம்மைத் தேடி வரும் மகிழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

Treasure wisdom

புற வாழ்க்கையில் “போதும்…!” என்ற உணர்வை எடுத்தால் நம்மைத் தேடி வரும் மகிழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

இந்த மனித வாழ்க்கையில் நாம் “பணமே பிரதானம்…!” பணம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது…! என்று இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மனதில் நிம்மதி இருகிறதா என்றால் இல்லை.

பணமிருந்தாலும் நம் உடலுக்குள் நோயைத்தான் அனுபவிக்க முடிகின்றது. மனக் கவலையையும் சஞ்சலத்தையும் அனுபவிக்க முடிகின்றது. பொருள் நமக்கு ஒன்றும் உதவுவதில்லை.

அதே சமயத்தில் நீங்கள் பொருளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. யாம் உபதேசிக்கும் இந்த முறைப்படி தியானத்தை எடுத்துக் கொண்டால்
1.உங்கள் மன வலு கிடைக்கும் பொழுது
2.தொழிலில் உங்களை அறியாமலே உங்களைத் தேடிப் பொருள்கள் வரும்.
3.வியாபாரமும் நன்றாக இருக்கும்.
4.உங்களுக்குள் “போதும்…! என்ற எண்ணமும் தோன்றும்.

இன்று ஐநூறு ரூபாய் வந்ததென்றால் மேற்கொண்டு ஐயாயிரம் வந்தால் வாங்கி வைப்பதற்குக் கூட முடியவில்லை… “போதும்…போதும்…!” என்று சொல்லும் நிலை தான் வரும். “போதும்…!” என்ற எண்ணம் வரும் பொழுது தன்னாலே இது நடக்கும்.

ஆனால் நீங்கள் ஒரு பொருளை எப்படியும் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தால்
1.அது ஓடிக் கொண்டயிருக்கும்.
2.நம் கையில் சிக்குவது மிகவும் கடினம்.
3.பொருளைப் பற்றிச் சிந்திக்காது இரண்டையும் காக்கும் சக்தி இந்தத் தியானத்தில் உண்டு.

நல்ல ஒழுக்கத்தைத்தான் எல்லோரும் எண்ணுகின்றோம். ஆனாலும் அந்த நல்ல ஒழுக்கத்தைக் காப்பதற்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியை அவசியம் நாம் கூட்டிக் கொள்ள வேண்டும். அதைக் கூட்டவில்லை என்றால் நம் நல்ல குணங்களையே நாம் காக்கும் நிலை இழந்துவிடுகின்றோம்.

நல்லதை எண்ணுவோம்…! ஆனால் பிறர் ஒரு துன்புறுத்தும் ஒரு வேதனையான சொல்லை நம்மிடம் சொல்லிவிட்டால் “இப்படிச் சொல்லிவிட்டார்களே…!” என்று பாலுக்குள் விஷம் பட்டால் எப்படி அதைக் குடித்தவுடன் மயங்குகின்றோமோ அந்த மாதிரி மயங்கிவிடுவோம்.

அந்த வேதனையால் நம் நல்ல குணங்கள் அனைத்தும் அடங்கி நம்மை அறியாமலே ஏசவும் பேசவும் துடிக்கவும் செய்து அதே உணர்வுகளை வளர்த்துக் கொண்டு அதன் வழியிலே நம் உடலில் வியாதிகளை வரவழைத்து நாம் நிம்மதி இழந்துவிடுவோம்.

நம்மிடம் பணம் பொருள் ஏராளம் இருக்கும். ஆனால் நிம்மதி இழ்ந்த நிலையில் இதைப் போன்ற எண்ணங்களை எண்ணும் பொழுது சுவைகள் மாறிவிடுகின்றது,

மாறிய சுவை கொண்டு சமைத்த ஆகாரத்தைக் கூடச் சுவைத்துச் சாப்பிட முடிவதில்லை. பணம் நிறைய இருக்கின்றது என்று பணத்தைப் பார்த்தாலும் நமக்கு ஒன்றும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை,

கௌரவமும் மற்ற நிலையும் இந்த உடலில் உயிரான ஈசன் இருக்கும் வரையில் தான் நாம் பார்க்கின்றோம்.
1.இந்த ஈசன் உடலை விட்டுச் சென்றால்
2.நீசனான இந்த உடம்புக்கு எந்த மரியாதையும் இல்லை…!
3.ஆனாலும் இந்த உடல் என்ற நீசத்தை வைத்துத்தான் ஈசனை நாம் வேண்ட முடிகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழும் பழக்கம் வந்தால் நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றுமே இருப்போம்.

மகரிஷிகள் அருள் ஒளி நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைகின்றது. மன அமைதியும் சாந்தமும் விவேகமும் நமக்குள் வளரும். தெய்வீக குணங்கள் வளரும். தெய்வீகத் தன்மை பெறுவோம்.

நமக்குள் அழியாச் சொத்து அந்தத் தெய்வ குணங்கள் தான்…! ஆகவே இந்த மனித உடலிலிருந்து மெய் ஒளியைத்தான் நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

முற்றுப் புள்ளி வைத்து…! விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை

Lord Agasthiyar

“முற்றுப் புள்ளி வைத்து…!” விண் செல்வதே மனிதனின் கடைசி எல்லை

இயற்கையில் இந்த மண்ணிலே விளைந்த தாவர இனச் சத்துக்களைப் பிழிந்து அதை உட்கொண்டே பழகியவர்கள் தான் நாம். நாம் அந்த விண்ணுலக ஆற்றலை நேரடியாக எடுத்து நமக்குள் அதை ஜீரணித்துச் சத்தாக மாற்றும் பழக்கம் வர வேண்டும்.

1.மெய் ஞானியின் அருள் உணர்வை எண்ணத்தாலே நாம் சுவாசித்து
2.அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் சேர்த்து அதைக் கொண்டு
3.விநாயகர் சதுர்த்தி என்று முற்றுப் புள்ளி வைத்துவிட்டு
4.நாம் விண் செல்வதே மனிதனின் கடைசி நிலை

மெய் ஒளியின் தன்மையை அந்தப் புதுமையான வித்துக்களை நமக்குள் சேர்த்து விண்ணுலகம் சென்று அடைவதே விநாயகர் சதுர்த்தி.
1.இந்த மனித வாழ்க்கையில் பெற்ற இந்த நிலையை மாற்றி
2.விண்ணுலகின் ஆற்றலைப் பெறும் தகுதிக்கே இந்த உபதேசம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி யாம் (ஞானகுரு) உபதேசமாகக் கொடுக்கும் உணர்வின் வித்துக்கள் அனைத்தும் உங்கள் புலனறிவுக்குள் ஈர்க்கப்படும் பொழுது உங்கள் உமிழ் நீரெல்லாம் சுவையாகச் சுரந்திருக்கும்.
1.அந்த உமிழ் நீரே நீங்கள் விண்ணின் ஆற்றலைப் பெறக்கூடிய தகுதியாக
2.அமுதாக உங்கள் உடலுக்குள் இணைகின்றது.

நீங்கள் தினசரி அதிகாலையில் எடுக்கும் துருவ தியானத்தால் அந்த வித்தின் தன்மை வளர்ச்சி அடைந்து மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற ஏதுவாகின்றது.

அதன் மூலம் உங்கள் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி குலதெய்வங்களான மூதாதையர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்த இது உதவும்.

மூதாதையர்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின் விண்ணின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற்று
1.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய துன்பமாக இருந்தாலும்
2.அதை நீக்க உங்களுக்கு ஆற்றல் கிடைக்கும்.

“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்… பார்…!” என்று சொல்லும் பழி தீர்க்கும் உணர்வுகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

Image

curse

“உன்னை நான் தீர்த்துக் கட்டிவிடுகின்றேன்…பார்…!” என்று சொல்லும் பழி தீர்க்கும் உணர்வுகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

கோடிப் பணம் நம்மிடம் இருந்தாலும் சாதாரண நிலையில் நாம் பழகிய ஒரு மனிதன் சந்தர்ப்பத்தால் நம்மிடம் கடுமையாகப் பேசி விட்டால் மிகுந்த வேதனைப்படுகின்றோம்.

பின் அவரை எண்ணி… “என்னை இப்படிப் பேசிவிட்டாய்…! இரு.. நான் பார்க்கின்றேன்…! என்று அவர் மீது வன்மம் வைக்கின்றோம். ஆனால் அவரோ இலேசாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்.

நம்மிடம் கோடிப் பணம் இருந்தாலும் இழிவாகப் பேசுபவரைப் பார்த்தவுடனே “உன்னை அடித்து நொறுக்குகின்றேன் பார்…! என்று நாம் சொல்வோம்.

ஆனால் அவரோ நீ நொறுக்குவாயா…? என்பார்.

பார்…! எவ்வளவு திமிரா…? என்று நாம் சொல்வோம். இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அதிகமாகச் சேர்ந்து வளர்க்கப்பட்டு அவரையே எண்ணி ஜெபிக்கும் நிலைகள் வந்துவிடும்.

1.அப்படி ஜெபிக்கும் நிலைகள் வந்து விட்டால்
2.கோடிப்பணம் நம்மிடம் இருந்தாலும் அவர் பேசியதையே திரும்பத் திரும்ப எண்ணி நமக்குள் விளைய வைத்து
3.அவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளாக உடலுக்குள் விளைந்த பின்
4.உடலை விட்டுச் சென்றால்
5.யார் மீது பழி தீர்க்கும் எண்ணத்தை வளர்த்தோமோ அந்த உடலுக்குள் சென்று
6.அவரையும் வியாதியாக்கி அவர் உடலில் எடுத்துக் கொண்ட விஷமும் உயிராத்மாவில் சேர்த்து
7.நஞ்சை அதிகமாக வளர்த்துக் கொண்ட நஞ்சு கொண்ட மிருக உடலுக்குள் அழைத்துச் சென்று
8.துரிதகதியில் நம்மை மிருகமாக மாற்றிவிடும்.

அதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்கின்றான்…! நீ எதை நினைக்கின்றாயோ… அதுவாக நீ ஆகின்றாய்….!
1.அவரைத் தீர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்
2.அது நம் உடலிலிருக்கும் நல்ல எண்ணத்தைத் தீர்த்துக் கட்டி
3.அந்த உணர்வின் தன்மைகளை வளர்த்து மனித உடலையை மாற்றி அமைத்துவிடுகின்றது.

விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா..! என்று காட்டுகின்றார்கள். இன்று நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அந்த உணர்வின் சக்தியே உன் உடலை அழைத்துச் செல்கின்றது.

1.முந்தைய செயல் இன்றைய சரீரம்…!
2.இன்றைய செயல் நாளைய சரீரம்..! என்ற இந்த நிலை
3.விநாயகர் தத்துவத்தில் தெளிவுறக் காட்டப்பட்டிருக்கின்றது.

மிருகமாக வாழும் பொழுது சேர்த்துக் கொண்ட நல்ல வினைகளுக்கொப்ப மனிதனாக வந்திருக்கின்றோம் என்பதைக் காட்டுவதற்குத்தான் யானைத் தலையும் மனித உடலையும் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

மனித உடல் பெற்ற நிலையில் நம் வாழ்க்கையில் மெய் ஞானிகளின் உணர்வை
1.”இன்றைய செயலாக…’ அந்த நல்ல வினைகளைச் சேர்த்துக் கொண்டால்
2.நாளைய சரீரமாக அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.
3.எந்த ஞானி விநாயகர் தத்துவத்தைக் கொடுத்தானோ அந்த அகஸ்திய மாமகரிஷியுடன் ஐக்கியமாகலாம்.