முளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…!” என்று வளர்வது போல் யாம் கொடுக்கும் அருள் ஞான உபதேசத்தின் மூலம் “மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்..!”

Image

Nature

முளைப்பாரி நிழலில் வெயிலை நாடி “நெடு…நெடு…!” என்று வளர்வது போல் யாம் கொடுக்கும் அருள் ஞான உபதேசத்தின் மூலம் “மகரிஷிகளின் உணர்வை நீங்கள் எட்டிப் பிடிக்க முடியும்..!”

ஒரு தென்னை மரத்தின் அருகில் அடர்த்தியான நிலைகளில் அதே இனமான தென்னை மரங்கள் நிறைய இருந்தால் அதற்கு வேண்டிய சூரியனின் காந்த சக்தி கிடைக்காது.
1.அப்பொழுது அதனின் ஈர்ப்புக்குள் சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால்
2.தென்னை மரம் வளைந்து நெளிந்து சூரியனைப் பார்த்து நிற்கும்.

அந்தச் சூரியனின் காந்த சக்தி தன் மீது பட்டபின் தான் அது பூமியிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளும். அப்பொழுது தன் இனமான சத்தை எடுத்து அது வளரும் ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு தாவர இனங்களும் சூரியனை நோக்கி அந்த உணர்வின் ஆற்றல் இருக்கும். அந்த உணர்வின் ஆற்றல் இருப்பதால் தான் அந்த நிலை.

ஒரு செடியை நாம் நிழலில் வைத்து விட்டால் சாதாரண வெப்ப அலைகள் படுகின்றது. இன்று முளைப்பாரியை நிழலுக்குள் தான் போட்டு வளர்க்கின்றார்கள்.

1.வெயிலில் உருபெற்ற அந்தப் பயிரினங்களை
2.வெயிலற்ற நிலைகளில் நாம் வைக்கப்படும் பொழுது
3.வெயிலின் தன்மை எங்கிருக்கின்றதோ
4.அந்த நிலையை இழுத்து வருவதற்காக நெடு…நெடு… (முளைப்பாரி) என்று வளரும்.
5.அதனின் “உயரத்தில் தான்” வளர்ச்சி இருக்குமே தவிர சத்தின் தன்மை வளராதபடி இருக்கும்.
6.படைக்கும் நிலை அற்றதனால் குளிர்ச்சியாக இருக்கும்.

ஆனால் வெயிலின் அருகில் வைத்து விட்டால் அது பூராம் சாய்ந்து அந்த வெயிலின் தன்மை தனக்குள் எடுத்து அதற்கப்புறம் தான் தன் சத்தின் நிலைகள் பெற முடியும்.

அதே சமயத்தில் “குரோட்டன்ஸ்” போன்ற செடிகளை வளர்க்க வேண்டும் என்றால் நிழலில்… வெப்பத்தின் தன்மை குறைந்த இடத்தில் வளர்க்க வேண்டும். அந்த வெப்பத்தின் தன்மை எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதனின் சத்தை அது கவர்ந்து கொள்ளும் சக்தி பெறுகின்றது.

இயற்கையின் நிலைகள் இவ்வாறு தான் இருக்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறவேண்டும் என்றால் நமக்குள் மறைத்திருக்கும் அந்த ஆற்றலைத் “தட்டி எழுப்ப வேண்டும்….!”

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நோயினாலேயோ மன நோயினாலேயோ அல்லது
2.மற்ற எத்தனையோ தொல்லைகள் ஏற்பட்டுத் துன்புற்றுக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகளுக்குள்
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அருள் மகரிஷிகளின் உணர்வின் சத்தை உங்களுக்குள் செலுத்துகின்றோம்.

மரம் செடி கொடிகளுக்கு உரத்தைச் சேர்த்து அதிகப் பலன்களைப் பெறுகின்றோம். அதைப் போன்று தான் அந்த மெய் ஞானத்தின் பலன்களைப் பெற மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த அருள் உணர்வுகளை உங்களுக்கு உரமாகக் கொடுக்கின்றோம்.

நமது குருநாதரின் அருள் துணை கொண்டு அவர் காட்டும் அருள் வழிகளைக் கடைப்பிடித்து நீங்கள் செழிப்புடன் வளர முடியும்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வந்தாலே போதுமானது. அது உங்களுக்குள் வளர வளர அதனின் பலன்களைப் பார்க்கலாம்.

கட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் தின்றுவிடுமோ அதே போல் சில சந்தர்ப்பங்களால் நம் நல்ல குணங்கள் பாழாகிவிடுகிறது – அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

Image

Good or bad.jpg

கட்டுச் சோற்றுக்குள் எலியை விட்டால் எப்படி அதைத் தின்றுவிடுமோ… அதே போல் “சில சந்தர்ப்பங்களால்” நம் நல்ல குணங்கள் பாழாகிவிடுகிறது – அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

சந்தர்ப்பத்தால் ஏற்படும் குறைகளை நிவர்த்திக்கும் பழக்கத்திற்குத்தான் நாம் மாற வேண்டுமே தவிர
1.கஷ்டம்… கஷ்டம்…! என்று எண்ணி
2.அத்தகைய சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கவே கூடாது.

எங்கள் தொழில் வளர வேண்டும். எங்கள் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நாம் தொழில் செய்யும் இடத்தில் உதாரணமாக ஒரு கெட்டவன் வந்து நம்மிடம் வேலை செய்கின்றான்… என்று வைத்துக் கொள்வோம்.

அவன் வேலையைப் பார்க்கும் பொழுது திருடனாக இருக்கின்றான் என்று தெரிந்து கொள்கிறோம். அப்பொழுது அவனை நாம் “திருடன்…” என்று சொல்ல வேண்டியது இல்லை.

1.நீ எங்கேயாவது போய்… நல்லவனாக இருந்து கொள்
2.நீ நல்லது செய்…! என்று சொல்லி அவனை வேலையை விட்டுப் போகச் சொல்லி விட வேண்டும்.
3.ஏனென்றால் அவன் திருடன் என்று ஒரு தரம் பார்த்துவிட்டோம் என்றால்
4.அந்த உணர்வே அங்கே வளர்ந்து கொண்டு இருக்கும்.

அடுத்தாற்போல இவன் மோசமானவன் என்று இன்னொருவரிடம் சொல்வான். பின்னாடி அவனும் இவன் செய்வதைச் செய்ய ஆரம்பிப்பான்.

திருடன் என்று நாம் தெரிந்து கொண்டோம். நீ செய்வது தவறு. இருந்தாலும் உன் தவறைத் திருத்திக் கொள். நல்லபடியாக நடந்து கொள். உன் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்று நல்ல வழியைக் காட்ட வேண்டும்.

அப்போது அதில் அவன் திருந்தவில்லை என்று சொன்னால் “நீ எங்கேயாவது நல்ல வழியாகப் பார்த்துப் போப்பா…!” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட வேண்டும்.

1.கட்டுச் சோற்றுக்குள்ளே எலியைக் கட்டி வைத்தோம் என்றால் என்ன செய்யும்..?
2.இருக்கின்ற சோற்றை எல்லாம் அது தின்றுவிடும்.
3.அவனை எண்ணித் “திருடன் திருடன்…! என்று நாம் சொல்லும் போது
4.நம் நல்ல குணங்கள் எல்லாம் தின்று கொண்டே இருக்கும்.
5.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் அவனின் தவறான உணர்வுகள் மாற்றிவிடும்.
6.நம்முடைய செயல்களும் மாறிவிடும்.

நம் வாழ்க்கையில் ஏற்படும் சில சில சந்தர்ப்பங்களால் நமக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றது…? எதனால் நம் செயல்கள் மாறுகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்வது.

ஒரு நோயாளியைச் சந்திக்கின்றீர்கள். அவருடைய நோய் போக வேண்டும் என்று வெறுமனே எண்ணாதீர்கள். மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அப்போது மகரிஷிகள் உணர்வுகள் அவருக்குள் வளர தீமைகள் விலகிப் போகும். நல்ல தண்ணீரை ஊற்றியவுடனே அங்கே இருக்கக்கூடிய அழுக்குகள் போகும். இது ஒரு பழக்கத்திற்கு நாம் வந்து விட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தை போதித்தாரோ அதைப் போன்று தான் உங்களுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் போதிக்கின்றோம்.

1.ஞானிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால்
2.உங்கள் வாழ்க்கையில் அந்தந்த நேரங்களில் அதுவே உங்களுக்கு வழிகாட்டும்.
3.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்.

தவறு செய்தார்கள் என்றால் அந்தப் பொருளை நாம் காண முடியும். அப்பொழுது இருளைப் பிளக்கின்றது. பொருளைக் காணச் செய்யும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பழக்கம் வந்துவிட்டால் நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளக்கும். இதைப் போல சிறிது காலம் கடைப்பிடியுங்கள்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலம் மிகவும் நச்சுத் தன்மையாக இருக்கின்றது. ஐயோ…! நச்சுத் தன்மையாக இருக்கின்றது என்று பதிவு செய்து விட்டோம் என்றால் அடுத்தாற்போல் நம் உடலிலும் நச்சுத் தன்மை வரும்.

மகரிஷிகள் அருள் சக்தி இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர வேண்டும். எல்லோரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் உயர்வு கிடைக்க வேண்டும் என்று இதை எண்ணி நீங்கள் பரப்பிக் கொண்டே வாருங்கள்.

அந்த மெய்ப் பொருளைக் காணும் நிலைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் வர வேண்டும். “குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்…!”

நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

Gita upadesam Kannan

நமக்குள் தினசரி நடக்கும் போராட்டம்

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் போர் அது மகாபாரதப் போர் என்று வியாசகர் காட்டியுள்ளார்.

சூரியனிலிருந்து வரக்கூடியது
1.வெப்பம்
2.காந்தம்
3.விஷம்.
அது மூன்று என்றாலும் உதாரணமாக புலியை ஒரு மாடு சந்திக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். புலியின் உணர்வை அது எடுத்துக் கொண்டால் அதன் வலிமையை எடுத்துக் கொள்கின்றது.

கண்ணன் (கண்கள்) அந்த உணர்வைப் பார்த்து வலிமையைக் கொடுத்து அர்ச்சுனனுக்கு தாக்கும் உணர்ச்சிகளைக் கொடுக்கின்றது. அதுதான் “அர்ச்சுனன்…!”

அந்த வலிமையை எடுத்துக்கொண்டால் அதனுடைய இயக்க உணர்ச்சிகள் – “நகுலன்…” இந்த மூன்றுக்குள் (வெப்பம் காந்தம் விஷம்) இது வருகின்றது நகுலன்.

இந்த உணர்ச்சிகள் ஒரு உடலுக்குள் சேர்த்து அதன் உணர்வை உருவாக்க இந்த உணர்ச்சியின் அமைப்புகள் அமைகின்றது, அதுதான் “சகாதேவன்…!”

இந்தப் புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் அது உருவாக்கி விட்டால் பீமன். புலியின் உணர்வுகள் மாட்டின் உடலுக்குள் சேர்ந்து விட்டால் பீமன்.

அப்பொழுது அந்த வலிமை கொண்டு அந்த உடலில் மற்றவைகளை அடக்கும் சக்தி பெறுகின்றது. மிக வலிமையானது “பீமன்…”

வலிமையாகிவிட்டதென்றால் அதன் வழி இயக்கச் சக்தியாக அடுத்த உடலை உருவாக்கி அதன் வழி சாந்தமாக இயக்கும் தன்மை வருகின்றது “தர்மன்…!”

உடலிலே உருவாக்கிய உணர்வுகள் எல்லாம் கௌரவர்கள். எந்தெந்த உணர்வுகள் கொண்டு அந்த உடல்களை வளர்த்துக்கொண்டதோ அந்த உடலைக் காக்கும் அந்த கௌரவப் பிரச்சினைகள் வரும், அந்த உணர்வின் தன்மை தான் காக்கின்றது.

கௌரவர்கள் நூறு பேர். நூறு விதமான குணங்கள் ஒவ்வொரு நிலைகளிலேயும் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒற்றுமையுடன் அவர்கள் இருப்பார்கள்.

எல்லாம் சேர்ந்து உடலுக்குள் ஒற்றுமையாக இருக்கும்போது பஞ்ச பாண்டவர்கள் நாம் நல்லவைகளை நுகர்ந்து நல்லவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்ற நிலையில் செயல்படுகின்றோம்.

அப்பொழுது இந்த நூறு பேரும் உடலுக்குள் இருக்கும் அந்த நூறு விதமான உணர்வுகள் அந்த நல்ல உணர்வுகளை உள்ளே விடாது தடுக்கின்றது. நம் உடலிலே வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் அதிகரித்தால் அது கௌரவர்கள்.

1.எப்படியும் நல்லதைச் செய்ய வேண்டும் என்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
2.உள்ளுக்குள் இருக்கக்கூடிய அந்தக் கௌரவர்கள்
3.அவர்களுடைய அழுத்தத்தால் விடுவதில்லை.

காரணம் நமது கண் கண்ணனாக இருப்பினும் நமது உயிர் கண்ணனின் சகோதரி திரௌபதை.

இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஆசையில் நல்லதைச் செய்ய வேண்டும் என்று இந்த உடலில் உள்ள ஆறாவது அறிவால் மாற்றி அமைக்க வேண்டும் என்று எண்ணினாலும்
1.உடலுக்குள் முன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது கௌரவர்கள்.
2.உடலில் நோயாக இருந்தால் அதுவும் கௌரவர்கள்.
3.ஆசை கொண்டு பொருளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதுவும் கௌரவர்கள் தான்.

நம்மிடம் கடன் வாங்கியவன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம். “இப்படிப் பண்ணுகிறானே..” என்ற கோபம் வந்து உயிரிலே படுகின்றது, குரு.

இந்தச் க்ஷேத்திரத்தில் அவன் செய்த தவறின் உணர்வு போர் முறையாக நடக்கின்றது. அதனின் உணர்வு கொண்டு நாம் எதை எண்ணுகின்றோமோ இந்தக் கண் என்ன செய்கின்றது..? வழி… காட்டுகின்றது.

அவனிடம் போய் “நீ எப்படி இப்படிச் செய்யலாம்..?” என்று இரண்டில் ஒன்று பார்க்கலாம் என்று கேட்கும் நிலைகளுக்கு வழி காட்டுகின்றது. அப்பொழுது இங்கே போர் நடக்கின்றது.

ஆனால் நடந்தாலும் நாம் இதில் தப்புவதற்கு வழி இல்லை. குருக்ஷேத்திரப் போர் நடந்தவுடன் உடலுக்குள் போய் என்ன செய்கின்றது…? அவன் செய்த வேதனைப்படும் உணர்வுகள் அர்ச்சுனன், குறி வைத்துத் தாக்கி விடுகின்றான்.

நம் இரத்தத்தில் போனவுடன் என்ன செய்கின்றது? நகுலன். அவனின் வேகமான உணர்ச்சிகள் என்ன செய்கின்றது…? ஒரு மிளகாயை வாயில் போட்டவுடன் “ஆ..!” என்று நம்மை அலறச் செய்கின்றது. நகுலன், விரிந்து உள்ளுக்குள் போகின்றது.

சகாதேவன் அதிலுள்ள காந்தம் இரண்டற இணைக்கின்றது. இணைத்தவுடன் என்ன செய்கின்றது…? அதன் பின் கோபமான உணர்வு வரும்போது பீமன். நமக்குக் கோபம் வந்துவிடுகின்றது. பயங்கரமான கோபம் வருகின்றது.

அப்படிப் பீமனாகும் பொழுது அடிக்கடி கோபம் வந்து வலுவாகும் போது நமக்குள் இரத்தக் கொதிப்பாகின்றது.
1.எப்படி ஒரு வேப்பமரத்திற்குப் பக்கம் ரோஜாப்பூவின் மணத்தை விடுவதில்லையோ
2.இதைப்போல நல்ல சுவாசத்தையும் நல்ல உணர்வுகளையும் உள்ளே விடாதபடி
3.இதைத் தடுத்து விடுகின்றது எதிர் நிலை…!

ஆனால் திரௌபதை (உயிர்) என்ன செய்கின்றது?

பஞ்ச பாண்டவர்கள் அதாவது ஐந்து புலனறிவை இயக்கி நீங்கள் நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணிணாலும் உள்ளுக்குள் (உடலுக்குள்) உள்ள கௌரவர்கள் இதை அவமதிக்கின்றனர். திரௌபதை (உயிர்) அப்பொழுது படாத துயர்படுகின்றது.

ஒவ்வொரு வீட்டிலும் பார்த்தோம் என்றால் “எனக்கு ஒரே மனக் கலக்கமாக இருக்கின்றது.. அப்படி இருக்கின்றது.. என் வீட்டுக்காரர் இப்படிச் செய்கின்றார்…! என் பையன் இப்படிச் செய்கின்றான்..!” என்று இந்தப் போர் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

நல்லவைகளைச் செயல்படுத்துவதற்காக உடலுக்குள் எப்படிப் போர் முறைகள் நடக்கிறது…? என்பதனைத் தெளிவாக்கத்தான் மகாபாரதப் போரைக் காட்டினார் வியாசகர்.

நம் சாஸ்திரங்களில் இவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள். அதில் தவறு எதுவும் இல்லை. நாம் புரிந்து கொண்டோமா…?

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள்

Kalki Aavtar 2017

கிரேதா… திரேதா… துவாபரகா.. கலி… கல்கி யுகங்கள் 

தாவர இனங்கள் அனைத்தும் கிரேதா யுகம் தான். ஒரு உயிரணு தோன்றினாலும் அது எதை எதை எல்லாம் கவர்ந்ததோ அதுவும் கிரேதா யுகம் தான். எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து உயிர் மனிதனாக வளர்த்தாலும் அதுவும் “கிரேதா யுகம் தான்…!” (கிரேதா என்றால் கிரகிக்கும் நிலை)

உயிரால் வளர்க்கப்பட்டு இந்த உடல் உருவான பின் தாவர இனச் சத்தின் மணங்கள் உயிரிலே பட்டு எண்ணங்களாக இயக்கப்படும் பொழுது அது “திரேதா யுகம்…!”

திரேதா யுகத்தில் எந்தக் குணத்தின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோமோ
1.அந்தச் சத்தின் தன்மை கொண்டு உடல் இயக்கப்படுகின்றது.
2.ஆகவே நம் உடல் திரேதா யுகம். (திரேதா என்றால் ஒரு உடலுக்குள் எண்ணங்கள் இயக்கும் நிலை)

இந்த உடல் வாழ்க்கையில் நாம் உற்றுப் பார்த்த உணர்வுகளை நுகரப்படும் போது இது நல்லது இது தீமை என்ற உணர்ச்சிகளை நமக்குள் தோற்றுவிப்பது நமது உயிரே.

தீமை என்ற உணர்வை உணர்ந்தபின்
1.நம் உடலில் உள்ள அணுக்கள் இந்தத் தீமையில் இருந்து தப்புவதற்கு
2.அதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
3.அது “துவாபரகா யுகம்…!” (உடலுக்குள் தன்னைக் காக்கும் உணர்ச்சிகள் தோன்றுவது துவாபரகா)

அதைத் துவாரகா யுகம் என்றும் சொல்வார்கள். இந்த உடலைக் காக்கும் உணர்ச்சிகள் கண்களாகத் தோன்றுகின்றது. அதன் வழி இந்த உடலைக் காக்கும் சக்தி வருகின்றது.

இருப்பினும் இந்த உடலுக்குள் நாம் சுவாசிக்கும் சாந்தம் ஞானம் விவேகம் என்ற உணர்வுகள் கொண்டு நாம் இயக்கி வந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் போன்ற உணர்வுகளையும் நுகர நேர்கின்றது.

அத்தகைய குணங்கள் நம் உடலுக்குள் சென்று நன்மை செய்யும் குணங்களை அந்த உணர்வுகளை அழித்து விடுகின்றது.
1.அதாவது தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.
2.இது தான் கலி யுகம் என்பது.

இப்படி ஒவ்வொரு உயிரும் பல உடல்களைப் பெற்று ஒன்றை ஒன்று வென்றிடும் நிலையில் எதன் வலு பெற்றதோ அதன் உணர்வின் தன்மை பெற்ற பின் கலி யுகம் தான்.

ஒரு வேதனைப்படும் மனிதனைப் பார்த்து அவன் வேதனையை நாம் நீக்க விரும்பினாலும் அந்த வேதனை என்ற விஷத் தன்மைகள் நம் இரத்தத்தில் கலக்கப்பட்டு நாம் சிந்தித்துச் செயல்படும் நல்ல அணுக்களை அது வீழ்ச்சியடையச் செய்து விடுகின்றது.

ஏனென்றால் நம் உடல் உறுப்புகளில் வேதனை என்ற விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது
1.உடல் நலிகின்றது.
2.உணர்வுகள் நலிகின்றது.
3.சிந்திக்கும் ஆற்றலும் குறைகின்றது.
4.இதைப்போன்று ஏற்படும் போதும் கலி என்ற நிலைகள் அடைகின்றது.

இப்படி உருமாற்றமாகும் விஷத்தின் வலிமையிலிருந்து வென்று இந்தக் கலியை கடந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமானது. அது கல்கி யுகம்.

தாய் கருவில் விஷத்தை அடக்கும் நுண்ணிய அணுவின் தன்மையைப் பெற்ற இந்த அகஸ்தியன் தனது வளர்ச்சியில் வலு கொண்ட உணர்வுகள் கொண்டு தீமைகளை அகற்றினான்.

திருமணமான பின் கணவனும் மனைவியும் இருபாலரும் சேர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றார்கள்.

நமது துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து தாவர இயலாக மாற்றினாலும் அதனின் வளர்ச்சியில் உயிர் இனங்களைத் தோற்றுவித்து உடலை வளர்க்க இச்சைப்பட்டு எத்தனையோ கோடி உணர்வுகளைக் கடந்து மனிதனாக உருவாக்கியது.

அப்படி மனிதனான நிலையில் அகஸ்தியன் அதே துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் வரும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றினான்.

ஒரு பாம்பு தன் உடலில் உள்ள விஷத்தை மற்றோர் உடல் மேல் பாய்ச்சி அந்த உடலைச் செயலற்றதாக்கி அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மையான பின் அதை இரையாக எடுத்து விழுங்குகின்றது.

விஷம் கொண்ட பாம்பினங்கள் அனைத்தும் இவ்வாறு தான் தன் உணவினை எடுக்கின்றது. ஒவ்வொரு உயிரினத்திலும் ஒவ்வொரு விதமான விஷத் தன்மை உண்டு.

இதை எல்லாவற்றையும் கலந்து பாம்பு தனக்குள் விஷத்தின் தன்மைகளைப் பெருக்கப்படும் போது எல்லா விஷத்தையும் ஒன்றாக்கி நாகரத்தினமாக மாறுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனான பின் பற்பலவிதமான விஷத்தை அகற்றி அந்த ஒளியென்ற உணர்வினை ஒவ்வொரு அறிவாகத் தெளிந்து கொண்டவன் அகஸ்தியன்.

1.எந்தத் துருவத்தின் வழியாக நம் பூமிக்குள் விண்ணிலிருந்து சக்திகள் வருகின்றதோ
2.அதையே அகஸ்தியன் நேரடியாக உணவாக உட்கொண்டு
3.அதனின்று வரும் நஞ்சினை அடக்கித் தனக்குள் அந்த அகத்தின் தன்மையைச் சீர்படுத்தி
4.தன் உடலிலுள்ள மனிதனாக உருவாக்கிய அனைத்து அணுக்களையும்
5.உயிரைப் போன்றே உணர்வின் அறிவின் ஒளியாக உருவாக்கினான்.

தீயிலே குதித்தால் உயிர் வேகுவதில்லை. உடல் மட்டும் தான் கருகுகின்றது.

ஆக அழியாத நிலைகள் கொண்ட அந்த உயிரைப் போன்றே தன் உணர்வின் அணுக்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஓர் ஒளியின் தன்மையாக மாற்றி ஒளியான உடல் பெற்றவன் அகஸ்தியன்.

மனிதனாக இருக்கும் பொழுது கணவனும் மனைவியும் சேர்ந்து தன் இனக் குழந்தைகளை உருவாக்குகின்றனர்

அதைப் போல அகஸ்தியனும் அவன் மனைவியும் இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக்கப்படும் போது உயிரைப் போன்றே ஒளியின் உணர்வை உருவாக்கும் திறன் பெறுகின்றனர்.

அகஸ்தியரும் அவர் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவன் மனைவியை மதிப்பதும் மனைவி கணவனை மதிப்பதும் என்ற உணர்வுகள் இயக்கி இணை பிரியாத நிலைகளில் வாழ்ந்ததனால் இரு உயிரும் ஒன்றி பேரருள் பேரொளியாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

காரணம் துருவத்தின் வழியாகப் பூமி நுகரும் உணர்வுகளை அதிலுள்ள நஞ்சை நீக்கிய அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த விஷத்தையே ஒளியின் உணர்வாக மாற்றிக் கொண்டனர்.
1.அப்படி உருவானது தான் துருவ நட்சத்திரமும்
2.அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலமும்.
3.அது தான் கல்கி யுகம்.

மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருமே அவர்களைப் போன்றே ஒளியின் தன்மை பெற்று அந்தக் கல்கி யுகத்திற்குச் செல்ல வேண்டும்.

இந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செல்ல வேண்டும்…?” என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை…!

Image

sivalingeswaran

இந்த மனித உடலுக்குப் பின்… நாம் யாருடன்… “எங்கே செல்ல வேண்டும்…?” என்ற எண்ணமே யாருக்கும் வருவதில்லை…!

ஐயப்பா…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே எனக்கு இப்படி எல்லாம் சிரமமாக வருகிறதே..! என்று சொல்லித் தான் ஐயப்பனை வணங்கி வருகின்றார்கள்.

மக்களைக் காக்க அவர் பல நன்மைகளைச் செய்தாலும் ஐயப்பனை எண்ணித் தன் கஷ்டத்தை எல்லாம் சொல்லி இன்னும் கொஞ்சம் வேதனையை அவரிடம் கொட்டி அவரைக் கீழே இழுக்கும் நிலை தான் அது…

எந்த ஞானிகளை எண்ணினாலும் இப்படித்தான் சாதாரணமாக நம் கஷ்டங்களையும் குறைகளையும் வேதனைகளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் பெற்ற ஆற்றல்களை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

திருமூலரைப் பற்றி எடுத்துக் கொண்டாலும் பதஞ்சலி முனிவராக இருக்கப்படும் பொழுது மந்திரம் யந்திரம் என்று பல நிலைகளில் அவர் செயல்பட்டவர் தான்.

பின்னாடி… மந்திரம் யந்திரம் எல்லாம் “தவறு…!” என்று உணர்ந்து இன்னொரு (மாடு மேய்ப்பவன்) உடலுக்குள் வந்தாலும் உண்மையின் நிலையைத் “திருமூலம்…!” என்று கண்டுணர்ந்தார்.

திருமூலம் என்பது இயற்கையின் உணர்வின் அலையை அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்ததைத் தனக்குள் உணர்ந்து… உணர்ந்த நிலைகளைத் திருமூலராக நின்று வெளிப்படுத்திக் காட்டினார்.

1.ஒவ்வொரு நிலைகளிலும் உள்ள இயக்கச் சக்தியை உணர்ந்து
2.(நாம்) மனிதனாவதற்கு முன் உயிர் எப்படி ஒளியானதோ
3.அந்த ஒளியின் தன்மையை (நம்மை உருவாக்கிய சக்தியை) அதைத் தான் திருமூலம் என்பது.
4.அணுவிற்குள் இருக்கும் இந்த உணர்வின் தன்மையைத்தான் திருமூலர் இயக்கினார்… உணர்ந்தார்…!

உயிரின் இயக்கத்தையும் அணுவிற்குள் இருக்கும் ஆற்றலையும் அந்த மூலத்தையும் அவர் உணர்ந்து வெளிப்படுத்தியிருந்தாலும்
1.அவர் சொன்னதைத் “திருமூல மந்திரம்…” என்று நாம் சொல்லி
2.அவன் அருள் பெறவேண்டும் என்று ஏங்கினாலும்
3.இந்த உடலின் சுகபோகத்திற்குத்தான் பயன்படுத்துகின்றோம்
4.விண் செலுத்தும் மார்க்கமோ… விண் செல்லும் மார்க்கமோ… இல்லாதபடி ஆகிவிட்டது.

அதே போல 5300 ஆண்டுகளுக்கு முன் அணுவின் ஆற்றலின் இயக்கத்தின் தன்மையைக் கண்டறிந்த போகனோ அவன் உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அவன் விண் சென்றாலும் கூட போகன் மந்திரம் என்று “சம்போ மகாதேவா…!” என்று மாற்றிவிட்டார்கள்.

தாவர இனச் சத்தின் போதையை மாற்றி அதனின் உணர்வு கொண்டு இன்றைய உடலின் சுகத்திற்கும் தன்னுடைய பெருமைக்கும் தான் இன்று அதைச் செயல்படுத்துகின்றனரே தவிர
1.அந்தப் போகமாமகரிஷி சொன்ன உணர்வின் தன்மை கொண்டு
2.விண் செல்ல வேண்டும்…! என்று யாரும் எண்ணவில்லை.

தனது உடலின் ஈர்ப்புக்குத் தனது சுகத்திற்கு அவனுடைய சக்தியை நாம் உணர்ந்து அவனின் சக்தியின் துணை கொண்டு இந்த உடலே பிரதானம் என்ற நிலைகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சதமற்ற இந்த உடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.

1.இந்தச் சதமற்ற உடலை விட்டுப் பிரிந்து
2.என்றும் ஒளியின் சரீரமாக உயிருடன் ஒன்றி
3.அவனுடன் அவனாக (உயிருடன்) அவனாக வாழ வேண்டும் என்று விரும்பிய
4.அந்த மகரிஷிகளின் நிலையை நாம் காணவில்லை.
5.அந்த நிலைகளை இப்பொழுது யாரும் எண்ணுவதில்லை.

சீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை – “நம் உடலுக்குள் தோன்றும் எண்ணங்களைப் பற்றிய விளக்கம்”

Image

vanmiki-ramayana

சீதா லட்சுமி கல்யாணராமா குகன் இராவணன் சூர்ப்பணகை – “நம் உடலுக்குள் தோன்றும் எண்ணங்களைப் பற்றிய விளக்கம்”

 

உதாரணமாக சீறிப் பாய்ந்து தன் உணவுக்காகத் தாக்கும் புலியின் ஆக்ரோஷமான உணர்வின் தன்மையைச்
1.சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொண்டால் அது சீதா லட்சுமியாக மாறுகின்றது.
2.புலியை உற்றுப் பார்த்து அந்த உணர்வினை நாம் நுகர்ந்தால் சீதா இராமனாக அதே எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அதைப் போன்று தான் எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து மீண்டு இன்று நாம் மனிதனாக வந்தாலும் ஒருவன் செய்யும் தவறை உற்றுப் பார்க்கும் பொழுது கோபமான உணர்வுகளை நாம் அதிகமாகச் சுவாசிக்கின்றோம்.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுக்களாக உருபெற்று அதனதன் செயலாக்கங்களை நம் உடலுக்குள்ளே செயலாக்குகின்றது.

காட்டுக்குள் விலங்குகளும் பட்சிகளும் மற்ற உயிரினங்களும் எப்படி வாழுகின்றதோ அதாவது…
1.ஒன்றை ஒன்று வென்று… கொன்று… விழுங்குகின்றதோ…!
2.இதே போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது உடல் உறுப்புகளில் உள்ள அணுக்களில்
3.அதைக் கொன்று குவித்துத் தன் உணவை எடுத்து வளர்க்கிறது.
4.மனித உறுப்புகளை இது சீர் குலைக்கிறது. நம் உணர்வின் நிலைகள் மாறுகின்றது.

காட்டுக்குள் இராமனும் சீதாவும் செல்லும் போது குகன் என்ற ஒரு படகோட்டியைச் சந்திக்கிறார்கள். குகன் ஆற்றில் படகை விட்டு வாழ்ந்து கொண்டிருப்பவன்.

குகன் சமாதானப்படுத்துகிறான். அந்தக் குகனை இராமன் நண்பனாக ஆக்கிக் கொண்டதாகக் காட்டுவார்கள். நம் இரத்த நாளங்களில் நல்ல உணர்வின் தன்மை இந்த ஓட்டங்கள் (இரத்த ஓட்டம்) ஓடுகின்றது என்பதை இராமாயணத்தில் தெளிவாக்கப்படுகின்றது.

அதாவது ஆறு என்பது நம் இரத்த நாளங்களில் ஓடும் இரத்தம். நம் இரத்தத்தில் நட்புள்ள உணர்வுகளைச் சேர்க்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

1.உடலுக்குள் எதை நீங்கள் அழைத்துச் செல்கிறீர்களோ அந்த உணர்வின் தன்மை வருகின்றது
2.உயர்ந்த குணங்களின் தன்மையை நாம் அதிலே ஏற்றினால்
3.உயர்ந்த செயல்களை இந்த உடலுக்குள் செயலாக்கும் என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகிறது.

காட்டுக்குள் சாந்தமான மானைக் கண்டு சீதா ஆசைப்படும் போது இவள் அழகைக் கண்டு அசுரன் (இராவணன்) அங்கே ஆசைப்படுகின்றான். இராமனின் அழகைக் கண்டு இராவணனின் தங்கை சூர்ப்பணகை ஆசைப்படுகின்றது.

நம் வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆசையின் நிகழ்ச்சிகள் வரப்படும் போது இது எவ்வாறு உணர்வின் போர் முறைகள் வருகின்றது…? உணர்வின் எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…? என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

காடுகளில் வாழும் உயிரினங்கள் எப்படி ஒன்றுக்குள் ஒன்று போராடுகின்றதோ அதை போன்று தான் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள்ளும் போர் முறையாகி ஒன்றை ஒன்று விழுங்க எண்ணுகின்றது.

அத்தகைய போராட்டத்தினால் தான் நமது உடலுக்குள் எத்தனையோ வேதனைகள் வருகிறது. இவை அனைத்தையும் சாந்தப்படுத்த வேண்டும் என்றால் அதற்குத் தேவையான வலிமை எது…? என்றும் அதை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்பதையும் வான்மீகி மாமகரிஷி இராமாயணத்தில் தெளிவாக்கியுள்ளார்.

1.நாம் அதைக் கதைகளாகப் படித்துவிட்டோமே தவிர
2.கதைகளில் சொல்லப்பட்ட உருவங்களைத் தான் நேசித்தோமே தவிர
3.அந்த உருவத்துக்குள் வான்மீகி கொடுத்த மூலக்கூறின் செயலாக்கங்கள் எப்படி என்பதை நாம் அறியவில்லை
4.பின் வந்தோரும் அதைத் தெளிவாக்கவில்லை.

சாதாரணமான மனிதரும் இராமாயணக் காவியத்திலுள்ள கருத்துகளை அறிந்து அந்தக் கருத்துக்களை நுகர்ந்து தனது செயலாக்கங்களை – தன்னைத் தான் அறிந்து கொள்ளும் நிலைக்கே காவியத்தைப் படைத்தனர் ஞானிகள்.

1.நம் எண்ணங்கள் எப்படித் தோன்றுகின்றது…?
2.எண்ணத்தால் பகைமை எப்படி வருகிறது…?
3.பகைமையான உணர்வுகள் உடலுக்குள் வளரும் பொழுது
4.நமக்குள் பல தீமைகளை அது உருவாக்குகின்றது என்று தான் இராமாயணத்தில் காட்டப்படுகின்றது.

இராமன் கல்யாணராமனாக எப்போது ஆகின்றான்…?

மற்றொன்றின் மேல் பகைமை உணர்வைச் சாடாது தன்னுடன் அரவணைக்கும் நற் குணங்களை இணைத்துக் கொண்டால் நாம் அனைவரும் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் நமது எண்ணங்கள் கல்யாணராமனாகின்றது.

நமக்குள் எண்ணங்கள் ஒருங்கிணைக்கப்படும் போது தான் மகிழ்ச்சியின் தன்மை வருகின்றது.
1.அந்தச் சுவை (சீதா) மகிழ்ச்சியின் உணர்வை ஒளியாக மாற்றுகிறது.
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இணைகின்றது.

மகிழ்ச்சி பெறும் சத்தினை நாம் நுகர்ந்தால் அந்தச் சக்தி நம் உயிருடன் ஒன்றி இராமனுடன் இந்த உணர்வுகள் ஒன்றி ஒளியின் மகிழ்ச்சியின் உணர்வாக ஒளியாக மாற்றி அமைக்க முடியும் என்று
1.எண்ணங்களின் தலைப்புகளை முகப்புகளை (கதாபாத்திரங்கள்)
2.அந்தந்த உணர்வுக்குத் தக்க அது தெளிவாக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் மனித வாழ்க்கையில் காலத்தால் மறைமுகமாக இயக்கும் உணர்வுகளைப் பற்றி நாம் நுகர்ந்து அறிய உதவுகிறது.

ஆனாலும் அது அணுவாக மாறி பின் விளைவுகள் நமக்குள் எவ்வாறு செயலாக்குகிறது…? உடல் உறுப்புகளை எப்படி மாற்றுகிறது..? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? உணர்ச்சிகள் எப்படிச் செயல்படுகின்றது…? என்ற நிலையைத் தான் இராமாயணம் மகாபாரதம் விநாயக புராணம் கந்த புராணம் சிவ புராணம் போன்ற காவியங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு அந்தக் காவியங்களைப் படித்துப் பாருங்கள்.

அதிலுள்ள மூலங்களை உங்களால் காண முடியும். பேருண்மைகளை உணர முடியும். இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்ற நிலை தெள்ளத் தெளிவாக உங்களுக்குத் தெரியும்.

மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

raining-003

மழை பெய்ய வைக்கும் சக்தி எது…?

இன்று நாம் வாழும் இடங்களில் மழை எப்படிப் பெய்கின்றது…? ஒரு இடத்தில் பெய்து இன்னொரு இடத்தில் மழை பெய்யாமல் போவதன் காரணம் என்ன…?

எந்தெந்த அளவுக்கு மக்களின் நல்ல எண்ணங்கள் இருக்கின்றதோ அதற்கொப்பதான் அங்கே மழை பெய்யும்.
1.நாம் நல்ல உணர்வுகளை எடுத்தோம் என்றால்
2.அந்த இடத்தில் “நிச்சயம்” மழை பெய்யும்.

வெறுப்பும் சண்டையும் குரோதமும் இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எண்ணினார்கள் என்றால் அந்த அந்த உணர்வுகள் பரவி அங்கே மழை மேகங்களைக் கலைத்து மழை பெய்வதைத் தடுத்துவிடும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளின் மோதல் ஏற்படுகின்றது என்றால் அந்தப் பக்கத்தில் மழை இல்லாது போகும்.

அன்பு கலந்த உணர்வுடன் நாம் ஒவ்வொரு நிமிடமும் அருள் மகரிஷியின் உணர்வைப் பெற வேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வுகளைப் பரவச் செய்து மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைச் செலுத்தினால் அப்பகுதியில் உங்களால் நிச்சயம் மழை பெய்ய வைக்க முடியும்.
1.உங்களை நம்புங்கள்.
2.ஒரு மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு.

ஒரு பாடலை இனிமையாகப் பாடி இந்த உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பி அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லை என்றால் பெண்கள் தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு போவார்கள். காட்டுப் பக்கம் போய் பக்தி கொண்டு இரண்டு பாடலைப் பாடியவுடனே கொஞ்ச நேரத்தில் மேகம் கூடும்.

மழையை நேராக வீட்டுக்கு இழுத்துக் கொண்டு வருவார்கள். அப்படியே மழை பெய்யும். அந்தக் காலத்தில அதைச் செய்தார்கள்.

இன்றைக்கு அதெல்லாம் போய்விட்டது. நம்முடைய அந்த நாகரீகம் எல்லாம் போய்விட்டது. நமது பண்பாடு எல்லாம் போனது. அநாகரிகம் தான் வந்து விட்டது.

இன்றைக்குப் பெண்கள் நாகரீகமான உடைகள் எல்லாவற்றையும் போட்டு வித்தியாசமாக நம்முடைய பண்புகளை இழக்கச் செய்து எங்கேயோ இருந்த நாகரீகத்தை இங்கே கொண்டு வந்து விட்டோம்.

மேலை நாட்டு நாகரீகத்தினால் அநாகரீகத்தை நாம் வளர்த்துக் கொண்டு இருக்கின்றோமே தவிர நாகரீகம் என்ற பெயரில் “அநாகரீகத்தை” வளர்க்கின்றோம். இதன் உணர்வு கொண்டு வெறுப்பின் உணர்வை நாம் பரப்புகின்றோம்.
1.வெறுப்பு உணர்வுகள் இருந்தால்
2.இந்தப் பெண்கள் மழையை எங்கே கூட்டிக் கொண்டு வரப்போகின்றார்கள்…?

முந்தி எல்லாம் மழையைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். நான் (ஞானகுரு) சிறு பிள்ளையாக இருக்கும் போது தண்ணீருக்காக வேண்டி எல்லாரும் குடத்தை எடுத்துக் கொண்டு போவோம். வரும் போது நனைந்து கொண்டு தான் வருவோம்.

இன்னும் கூட சில பகுதிகளில் இது உண்டு….! “பழமைவாதிகள்” அங்கே இருந்தார்கள் என்றால் மழையைக் கூட்டிக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இப்பொழுது நாம் மழை இல்லை என்றால் வறண்டு போய்விட்டது வறண்டு போய்விட்டது என்று எல்லோரும் பேசுவது போல நாமும் பேசுவோம்.

ஆனால் தப்பித் தவறி மழை பெய்யும் போது என்ன சொல்வோம்…? தொலைந்து போன மழை இந்த நேரத்திற்குத்தான் வர வேண்டுமா…? என்று இப்படித்தான் நாம் பேசுகின்றோம்.

இதை எல்லாம் நாம் மாற்றி அமைத்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி வான மண்டலம் முழுவதும் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்

இந்த உணர்வுகளுடன் நம் பார்வையும் அதிலே சேருகின்றது. அந்த மழை நீருடன் மகரிஷிகளின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது அங்கே மழை பெய்யும். அப்போது நல்ல நிலைகள் ஏற்படும்.

நம் உமிழ் நீருக்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் உள்ள சம்பந்தம்…!

Salaivary glands

நம் உமிழ் நீருக்கும் உடலின் ஆரோக்கியத்திற்கும் உள்ள சம்பந்தம்…! 

நோயால் வாடிக் கொண்டு வேதனைப்படுவோரை நாம் பார்த்தால் அதே உணர்வுகளை அவர் எந்தெந்த வகையில் எடுத்தாரோ சிறிது நேரம் நம்மிட,ம் அவர் பேசினார் என்றால் நம் வாயில் சுரக்கும் உமிழ் நீர் வித்தியாசமாக மாறும்.
1.ஒன்று கசப்பு கலந்ததாக இருக்கும். (கவனித்துப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்)
2.அல்லது பித்தத்தைப் போல அவர் நோய்க்குத் தக்கவாறு உமிழ் நீர் மாறும்.
3.சிறிது நேரம் உறவாடிக் கொண்டிருந்தாலே இந்த நிலை ஆகும்.

இந்த உடலுக்குள் – துவாரகாயுகத்தில்
1.நாம் அந்த உணர்வுகளைச் சுவாசித்த பின் இது உமிழ் நீராக மாறி
2.நம் உடலில் நோயாக வரத் தொடங்குகின்றது.

நாம் ஒரு உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நுகரப்படும் பொழுது தான் வலிமை தெரிகின்றது. அந்த வலிமையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அதனின் சத்தாக உமிழ் நீர் சுரக்கின்றது.

ஏனென்றால் சுவாசத்தில் மோதும் உணர்வின் தன்மை உமிழ் நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் சேர்க்கப்படுகின்றது. அது இரத்தமாக மாறி நம் உடலுக்குள் பல விதமான வித்தியாசங்களை உண்டாக்குகின்றது.

யாம் (ஞானகுரு) உபதேசிப்பதை இப்பொழுது கேட்டுக் கொண்டு வருகின்றீர்கள். முதலில் உங்கள் உமிழ் நீர் வேறு சுவையாக இருந்திருக்கும்.

அதே சமயத்தில் இப்பொழுது தொடர்ந்து சொல்லும் பொழுது அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைக் கேட்டவுடன் வித்தியாசமான உணர்ச்சிகள் உங்கள் உமிழ் நீர்களில் சேரும்.

உங்களுக்குத் தெரிகிறதா…? பல ருசிகள் தெரியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்க நேர்ந்தால் உங்கள் உமிழ் நீர் அது மழை நீர் போன்றோ அல்லது கனியின் சுவைகள் போன்றோ உங்களுக்குள் சுரக்கும்.
1.சப்தரிஷி மண்டல உணர்வின் ஆற்றல்
2.ஒரு துளி உமிழ் நீராக நமக்குள் சேர்ந்தால்
3.ஒரு வருடத்திற்கு நமக்குத் தேவையான உயர்ந்த சத்தாக அமையும்.

அருள் உணர்வுகள் நமக்குள் உமிழ் நீராக இவ்வாறு சேரும் பொழுது நம் உடல் ஆரோக்கியம் அடைகின்றது. தீமைகள் அகற்றும் மன வலிமை கிடைக்கின்றது.

அருள் ஒளியின் உணர்வுகள் நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் விளையத் தொடங்கும். ஒளியின் சரீரம் பெறும் தகுதி பெறுகின்றோம்…!

நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றோமா…?

tornado

நாம் எடுக்கும் தியானத்தின் சக்தியைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றோமா…? 

விஞ்ஞானிகள் யுரேனியத்தைத் தனியாகப் பிரித்து அதனுடன் பல பொருளைச் சேர்த்து அதை அணு குண்டாக உருவாக்குகின்றனர் அதை உருவாக்கும் பொழுது அதில் வெளிவரும் கசிவுகளைச் சூரியன் எடுத்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அதே போல நியூட்ரான் என்ற அந்த விஷத் தன்மைகள் தாக்கியபின் மற்ற எல்லாம் அகண்டு ஓடுகின்றது.
1.ஓடும் பாதையில் மற்ற அணுக்களை இயக்கவும்
2.மற்றவைகள் ஒன்றோடு ஒன்று மோதவும்
3.அப்பொழுது இணைந்து கொண்ட உணர்வுகள் கொண்டு அணுக்களின் மாற்றமும் இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படுகின்றது.

ஆனால் நமது பூமியில் நமது நாட்டைக் காக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாடும் அணு குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள். அங்கங்கே அந்தக் கசிவின் தன்மைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இந்த விஷத்தின் தன்மை கவர்ந்து சூரியனால் கவரப்பட்டுப் பரவி வரும் நேரத்தில்
1.இந்த நியூட்ரான் என்ற உணர்வும் இந்தக் கதிர் இயக்கப் பொறியும்
2.இரண்டும் சந்திக்கும் நேரம் வரும் போது தான் இது நகர்ந்து ஓடுவதும்
3.அடுத்து நியூட்ரான் என்ற நிலை மோதும் போது சூறாவளி (TORNADO) போன்று உருவாகி
4.பெரும் பெரும் கட்டிடங்களில் மோதி அதைச் சுக்கு நூறாக்கித் தூக்கி எறிந்து கொண்டு போய் கொண்டு இருக்கின்றது.

இன்றைக்கு எங்கெங்கே அணுக் கதிரியக்கங்களை அதிகமாக உருவாக்கி வைத்திருக்கின்றார்களோ (அணுகுண்டு.. அணு மின் நிலையம்.., லேசர் கதிரியக்கங்கள்) அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் அது எங்கெங்கு உற்பத்தியாகி எதனைப் பரீட்சித்துப் பார்த்தார்களோ அந்த நாடுகளில் பூராமே இந்தச் சூறாவளி உருவாகின்றது.

நம் நாட்டிலும் அணு மின் நிலையங்கள் இன்று அதிகமாகிவிட்டது. நம் நாட்டிலும் அதே போல சூறாவளி வரத் தொடங்கிவிட்டது.

மனிதனைக் காக்க என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகள் செய்தாலும் இந்த இயற்கையுடன் கலந்து வீரியத்தை இவர்களால் தடுக்க முடியாத நிலைகள் ஆகிவிட்டது.
1.அதாவது செயற்கைக் கோள் மூலமாக விண்ணில் இருந்து அறிந்து கொள்கின்றனர்.
2.இயற்கையின் இயக்கங்களைக் காணுகின்றான்.
3.மோதும் சந்தர்ப்பம் வருகின்றது… சூறாவளி வரப்போகிறது… நகரத்தை அழித்துவிடும்…! என்று
4.இதையும் உணர்கின்றார்கள் விஞ்ஞானிகள் – அவர்கள் செய்த விபத்துகளில் இருந்து தான் இது வருகின்றது.

அப்போது சூறாவளி உருவாகும் போது நகரத்தை விட்டு ஓடுகின்றார்கள். “ஓடிப் போங்கள்…!” என்று அறிவிப்பும் செய்கின்றார்கள். சுமார் இருபது இலட்சம் பேர் அந்த நகரமே காலி செய்கின்றனர் அமெரிக்காவில் பார்க்கின்றோம். டி.வி.யில் பார்க்கலாம்.

சனிக் கோளின் உணர்வுகள் நீர் இருக்கிற பக்கம் அதிகமாகப் பரவிச் சென்றால் அந்த நீர்களைக் கவர்ந்து பெரும் புயலாக மாற்றுகின்றது. நீர்களைக் கண நீராக மாற்றி அந்த உணர்வுகள் அழுத்தமாகப் போய்ப் பரவப்படும் போது பெரும் மழையாக மாறுகின்றது.

இதைப் போன்ற சம்பவங்கள் உலகில் ஒவ்வொரு மூலையிலும் அனு தினமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்குக் காட்டிய வழிப்படி நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி நமக்குள் விளைய வைத்து பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நாம் பரவச் செய்ய வேண்டும்.

அப்போது இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால் இது சிறுகச் சிறுகக் கூடி ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

விஞ்ஞான அறிவால் வரும் இதைப்போல எதிர்ப்போ சூறாவளி போன்ற காற்றுகளோ அது நம் பக்கம் வராதபடி அந்தச் சுழிக் காற்றை மாற்றி விடலாம்.
1.சூறாவளி வரப்போகும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்து
2.நீங்கள் இருக்கும் இடத்தில் பரவச் செய்து பாருங்கள்.
3.அது திசை மாறிப் போகும்.

தியானம் இருந்தவர்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

சூரியனின் மூத்த மகன் வாலி என்று ஏன் காட்டுகின்றார்கள்…?

Image

polaris-pole-star-sabdharishi

சூரியனின் மூத்த மகன் வாலி என்று (வானரப்படையாக) ஏன் காட்டுகின்றார்கள்…?

 

சீதாவைக் கொண்டு போய் இராவணன் சிறைப்பிடித்துக் கொள்கின்றான் என்று சொல்கின்றார்கள் என்றால் அதனுடைய உட் பொருள் என்ன?
1.நல்ல குணங்களை அடக்கி வைத்துக் கொள்கின்றான்.
2.நல்லதைச் செயல்படவிடாது செய்கின்றான்.
3.அதாவது நான் செய்யும் தவறுக்கு நீ இணங்கி வர வேண்டும்.
4.இல்லை என்றால் உன்னைக் கொன்று தின்று விடுவேன் என்கிறான் இராவணன்.

சந்தர்ப்பவசத்தால் நாம் நுகரும் தீமையான உணர்வுகள் நம்மிடம் இருக்கும் நல்லதைச் செயல்பட விடாதபடி எப்படி இயக்குகின்றது என்பதை இராமயாணத்தில் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இராமாயாணக் காவியத்திற்குள் இருக்கும் மூலப்பொருளைப் பார்த்தால் தெரியும். சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளிலிருந்து மனிதன் எப்படி விடுபட வேண்டும் என்பதை அதில் தெளிவாக்கியுள்ளார்கள்.

சூரியனின் பிள்ளை வாலி என்று காட்டுகின்றார்கள். கோபம், குரோதம் வெறுப்பு வேதனை நோய் இதைப் போன்ற உணர்வலைகளைச் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து கொண்டால் அவைகளை அந்தந்த உணர்வின் அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது (ஒரு வங்கி – பேங்க் போல).

சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் அந்த உணர்வலைகளை ஒரு மனிதன் நுகர்வான் என்றால் அது அவனையும் கோபப்பட வைக்கும்… வெறுப்படைய வைக்கும்.. வேதனைப்பட வைக்கும்… நோய்வாய்ப்பட வைக்கும்…!

அதனால் தான் சூரியனின் மூத்த பிள்ளை “வாலி…!”

மூத்த பிள்ளை என்று சொல்வதற்குக் காரணமே ஆதியில்
1.விஷத்தின் தாக்குதலால் ஏற்பட்டது தான் வெப்பம்.
2.வெப்பத்தின் தணல்களால் ஏற்பட்டது தான் காந்தம்.
3.காந்தத்தால் ஈர்க்கப்பட்டது தான் பல நிலைகள்.

விஷம் தாக்கியவுடன் வெப்பமாகின்றது. வெப்பமாகும் போது நகர்ந்து ஓடுகின்றது. நகர்ந்து ஓடும் போது தான் காந்தமாகின்றது.

ஆக வெப்பம், காந்தம், விஷம் என்று மூன்று நிலைகளில் தான் ஒரு அணுவின் இயக்கம்…
1.ஆதிசக்தி என்பது கடும் விஷம்…
2.ஆதி பராசக்தி எல்லாவற்றையும் உருவாக்கும் சக்தி வெப்பம்.
3.ஆதிலட்சுமி காந்தம் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஞானிகளால் கொடுக்கப்பட்ட இந்த பேருண்மைகளை நாம் புரிந்து கொண்டால் போதும். வாழ்க்கையில் நம்மை எது இயக்குகிறது..? எது நம்மை உருவாக்குகிறது…? எது நம்மை மாற்றுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆதி சக்தி என்ற விஷத்தைக் காட்டுகின்றார்கள். விஷத்தின் தன்மை எதைக் கவர்கின்றதோ அதன் வழி தான் இயக்குகின்றது. அதனால் முதல் மகன் வாலி…! என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்றால் அந்த வேதனையின் உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. கவர்ந்த உணர்வை யார் நுகர்ந்தாலும் அதனுடைய வலிமை அவர்களிடம் உள்ள நல்லதை அடக்கிவிடும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

சூரியன் கவர்ந்த உணர்வுகள் இந்தக் காற்றிலே (வானிலே) அலைகளாகத்தான் பரவச் செய்து வைத்திருக்கின்றது. அதனால் தான் “வானரப்படை” என்று காட்டுகின்றார்கள்.

உதாரணமாக வேதனைப்படுவோரை நாம் பார்க்கின்றோம். நுகர்ந்த பின் நமது நல்ல குணங்கள் ஒடுங்கி விடுகின்றது. நமது செயலும் தடுமாற்றமாகின்றது.

அதாவது வாலி எவரைப் பார்த்தாலும் சம வலுவைப் பெற்றுக் கொள்வான். நல்ல குணங்களை இயங்கவிடாது தடைபடுத்துகின்றான் என்று இராமாணத்தில் தெளிவாக்குகின்றனர்.

அந்த வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேரடியாகத் தாக்கவில்லை.

ஏனென்றால் வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நேரடியாக நுகரும் பொழுது
1.சுவாசித்து உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்கும்.
2.நல்ல உணர்வை நாம் இயக்க முடியாது என்று காட்டுகின்றார்கள்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரிடம் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற அந்த உணர்வை அங்கே நிறுத்த வேண்டும் என்று காட்டுகின்றனர்.

நம் உயிரிலே வேதனைப்படுத்தும் உணர்வை இயக்கவிடாது அருள் உணர்வை உயிரிலே இணைத்து வேதனையான உணர்வைத் தடைப்படுத்தும் நிலையைத்தான் “இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…!” என்று உணர்த்துகின்றார் வான்மீகி மாமகரிஷி…!