புருவ மத்தியின் இரகசியம் என்ன…? உயிர் – நட்சத்திரம் – வைரக்கல்

Spiritual Third eye.jpg

புருவ மத்தியின் இரகசியம் என்ன…? உயிர் – நட்சத்திரம் – வைரக்கல்

ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை “தன் உயிருடன் ஒன்றி… மலம் போன்று உண்டு”.

அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.

அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ
1.மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை
2.“ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக… ஒன்று” உருவாகின்றது.
3.யானைக்கும் இத்தகைய நிலை உண்டு “யானை மதக்கல்” என்பார்கள்.
4.நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.

உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.

அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்…” போட்டு வைப்பார்கள்.

அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று… “ஜொலிக்கும்”.

இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.

இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.

ஆனால் வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.

120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.

இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து
1.உயிர் வழி (புருவ மத்தியின் வழியாக) நாம் சுவாசித்தால்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும்.

ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

“உயிருடன் ஒன்றி..” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

“நம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்” என்றால் இதை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்

Image

blissful lights

“நம் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்” என்றால் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

 

தியானத்தைக் கடைப்பிடித்து வரும் அன்பர்களும் உலகை ஒத்து வரப்படும் பொழுது அரசியல் நிலைகளிலும் சரி மற்ற நிலைகளிலும் சரி பிறர் செயலைக் கண்டு மிகுந்த வேதனைப்படுகின்றனர். ஆனால்

1.தவறு செய்பவர்கள்… திருந்த வேண்டும்… என்ற “வலுவான எண்ணங்களை எண்ணுவதில்லை”.

2.எல்லா உண்மைகளை அறிந்தும் இவர்கள் பிழைகள் செய்கிறார்கள் என்ற

3.”வேதனையைத் தான்” தனக்குள் வளர்க்க முடிகின்றது.

 

1.அவர்கள் மூலத்தை அறிய வேண்டும்

2.மூலக்கூறுகளை அறிய வேண்டும்

3.மூலத்தை அறிந்து அவர்கள் செயல்படவேண்டும் என்று

4.தன் எண்ணத்தை ஓங்கி வளர்க்கின்றனரா? என்றால் “இல்லை…!”

 

காரணம் நாம் சாங்கிய உணர்வுகளை வளர்த்துக் கொண்ட வலுவின் துணை கொண்டே

1.பிறர் செய்யும் செயல்களைக் குறையாக எண்ணி

2.அந்தக் குறைகளையே எண்ணி… அதைப் பேசி… அதை வளர்த்து…

3.நல்லதைப் பலவீனப்படுத்தும்… “வேதனை” என்ற உணர்வையே நமக்குள் வளர்க்க முடிகின்றது.

 

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசித்து மெய் உணர்வின் தன்மையைத் தெளிவாகக் காட்டி வருகின்றோம். அதனின் வலுக் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

 

பிறர் செய்யும் தவறின் உணர்வுகள் நமக்குள் வேதனையாக உட்புகுந்து நமக்குள் விளைவிக்காதபடி பாதுகாக்கும் சக்தியாக உங்களுக்கு ஆத்ம சுத்தியை ஆயுதமாகக் கொடுத்துள்ளோம்.

 

உபதேச வாயிலாகப் பதிந்த உணர்வின் தன்மை கொண்டு மகரிஷிகளை நினைவு கொள்ளும் பொழுது உங்களுக்குள் அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு வளர்க்கச் செய்து வருகின்றோம்.

 

ஆனாலும் அவரவர்கள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் வினையே அது வலு பெற்ற நிலைகளாக இயங்கி…, வரும் குறைகளைச் சீர்படுத்தும் நிலை மாறி… “அந்த நிலையிலே சிக்குண்டு” மீளும் வழி இல்லாது தவிப்போர் பலர் உண்டு.

 

1.”ஒரு சிலரே…” இதனின் நிலையை உணர்ந்து அறிந்து

2.தீமைகளை அகற்றிடும் உணர்வின் வலிமை பெற்று

3.தன்னுள் தீமை நாடா நிலையும்

4.தன்னைச் சார்ந்தோருக்கும் தீமைகள் நாடாத நிலையாக

5.”சொல்வாக்காக…” அவர்கள் பதியச் செய்து வருகிறார்கள்.

 

“இப்படி வளர்ந்து கொண்டுள்ள அன்பர்களும் உண்டு”.

 

ஆகவே இதைத் தெரிந்து கொண்டோம். இனி நாம் தெரிய வேண்டியது என்ன? என்பதைத் தெளிந்து “வாழ்க்கையைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

 

அன்றாடம் நடக்கும் சம்பவங்களைக் கண்டு நம் வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகளில்

1.அந்த இருளைப் பிளந்து

2.பொருள் காணும் உணர்வை நமக்குள் வளர்த்து

3.என்றென்றும் மெய்ப் பொருள் கண்டுணரும் நிலையும்

4.இருளைப் பிளந்திடும் உணர்வின் தன்மைகளைப் “பேரருள் பேரொளியாக” வளர்க்க முடியும்.

 

நமக்கு அழியாச் சொத்து அதுதான்.

“வைரஸ் காய்ச்சலை” நீக்கச் செய்தார் குருநாதர் – அனுபவம்

“வைரஸ் காய்ச்சலை” நீக்கச் செய்தார் குருநாதர் – அனுபவம் 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இருளெல்லாம் வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக இருக்கின்றான் “துருவ நட்சத்திரமாக….”

1.அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ
2.அந்த ஆற்றல்கள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது.
3.அதை எடுத்துக் “கற்றுக் கொள்ளடா..,” என்றார் நமது குருநாதர்.

அதை எடுத்து எனக்குள் வளர்த்துக் கொண்டே இருக்கின்றேன். எடுத்து வளர்த்தாலும் குருநாதர் எம்மிடம் ஒன்று சொன்னார்.

அதாவது நீ எல்லாம் நல்லதைச் சொல்கிறாய். உன்னைச் சந்திக்க வருபவர்கள் எல்லோரும்
1.“கஷ்டம்…கஷ்டம்…கஷ்டம்…,”
2.“நஷ்டம்…நஷ்டம்…நஷ்டம்…,” என்று சொல்வார்களே
3.நீ அப்பொழுது என்னடா செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார் குருநாதர்.

உனக்கு இவ்வளவு பெரிய சக்தி கொடுக்கிறேன். ஆனால் இதை நீ எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?

ஒரு நூறு பேருக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அப்பொழுது அவர்களுடைய கஷ்டமான உணர்வுகளை எல்லாம் நீ கவர்ந்தால் என்ன ஆகும்?

இதை எனக்கு அனுபவமாகவே காட்டினார் குரு.

பழனிக்கு அருகில் பாப்பம்பட்டி என்று ஒரு ஊர். அப்பொழுது அந்த ஊர் முழுவதும் “டிங்கி”(டெங்கு) காய்ச்சல் பரவி இருந்தது. அந்த நோயின் விஷத்தன்மையால் மஞ்சளாக வாந்தி எடுப்பார்கள்.

அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கும். அவர்களால் நடக்கவும் முடியாது, ஒன்றும் செய்ய முடியாது. இந்த வேதனையை அவர்களால் சகிக்க முடியவில்லை.

இந்த மாதிரி நேரத்தில் தான் குருநாதர் என்ன செய்தார்? அவர்களுக்கெல்லாம் “விபூதியை நீ சொல்லிக் கொடுடா.., ஆசீர்வாதம் செய்து கொடு” என்றார்.

அந்தச் சிறிய கிராமத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தவுடனே எல்லோரும் நன்றாக ஆனது.., நோய் போய்விட்டது.., நல்லதாகிவிட்டது.., என்று சொல்கிறார்கள்.

அதற்கு முதலில் டாக்டர்களிடம் சென்று மாதக்கணக்கில் பார்க்கிறார்கள். ஊசி மருந்து எல்லாம் போட்டும் அவர்களால் முடியவில்லை.

ஆனால் இந்த விபூதியைக் கொடுத்தவுடன் எல்லோருக்கும் வலி குறைந்து விட்டது உடல் நன்றாக ஆனது.

அடுத்து பார்த்தோம் என்றால் இதைக் கேள்விப்பட்டு பக்கத்துக் கிராமத்திலிருந்து ஏராளமான பேர் வருகின்றார்கள். அவர்களுக்கும் கொடுத்தவுடன் நன்றாக ஆனது. இது நடந்த நிகழ்ச்சி.

கடைசியில் என்ன ஆனது?

1.எனக்கே வலி வர ஆரம்பித்துவிட்டது.
2.என்னதான் தடுத்தாலும் அவர்கள் எல்லோரும் சொல்லச் சொல்ல எனக்கு வலி ஆரம்பித்துவிட்டது.

வருபவர்களிடம் அந்த “மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்… எனக்கு உடல் நன்றாக ஆக வேண்டும்…” என்று சொல்லிக் கேளுங்கள் என்று சொன்னேன். ஆனால் அதை அவர்கள் எங்கே கேட்கிறார்கள்?

1.என்னால் நடக்க முடியவில்லை,
2.எழுந்து நிற்க முடியவில்லை என்று தான் கேட்கின்றார்கள்.
3.என் காதில் இது விழுகின்றது.
4.என் கண் அவர்களைப் பார்க்கின்றது.
5.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் சுவாசிக்கின்றது.
6.என் உயிரில் படுகின்றது.

எனக்கு அந்தச் சக்தி வைத்துத் துடைத்துத் துடைத்துப் போக்கிப் பார்த்தேன் முடியவில்லை.

அப்பொழுது குருநாதர் இங்கே பழனியில் இருந்தார்.

“டேய்…! உடனே கிளம்பி வாடா…” என்றார் குருநாதர். நான் உன்னைச் செய்யச் சொன்னது என்ன..? நீ செய்வது என்ன…! என்கிறார்.

அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆனது. எனக்கு அந்தக் காய்ச்சல் வந்துவிட்டது. அப்புறம் குருநாதரிடம் புறப்பட்டுச் சென்றேன்.

போனவுடன் அவர் எனக்குச் சிலதுகளைச் சொல்லி மாற்றி மறுபடியும் போடா என்றார். நீ போய்ச் சொல் என்றார். அப்புறம் வந்தவர்களுக்குச் சொல்லி அவர்களுக்கும் நன்றாக ஆனது.

நல்லதாக ஆக வேண்டும் என்றுதான் வருகின்றார்கள். ஆனால், அவர்களை மாற்றிக் கொள்ள முடிகிறதா என்றால் இல்லை. இந்த மாதிரிச் சில நிலைகள் அவர்களுக்கு.

நம் வாழ்க்கையில் இப்படிப் பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும்… அவர்கள் செய்யும் தவறுகளையும்… பார்க்க நேர்ந்தால் கேட்க நேர்ந்தால் அவைகளைத் தூய்மைப்படுத்தவில்லை என்றால் நமக்குள் நிச்சயம் “தோஷங்களாக” மாறும்.

1.தீமைகள் எப்படி வருகின்றது?
2.தீமைகளை எப்படிப் போக்க வேண்டும்?
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காத்துக் கொள்வது எப்படி…? என்று மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.

எமக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்.

எமலோகத்தை உருவாக்குவதும் சொர்க்கலோகத்தை உருவாக்குவதும் “நம் எண்ணத்தினால் தான்…”

Image

Two gates to heaven and hell. Choice concept.

எமலோகத்தை உருவாக்குவதும் சொர்க்கலோகத்தை உருவாக்குவதும் “நம் எண்ணத்தினால் தான்…”

 

உதாரணமாக ஒருவர் தன் வாழ்க்கையில் வேதனை தாளாது நெருப்பை விட்டு எரித்துக் கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எரிச்சல் தாங்காத நிலையில் உயிர் பிரிகின்றது.

 

அதே சமயத்தில் ஒருவர் ஒருவருக்குத் துன்பத்தை உருவாக்குவார். அதனால் துன்பப்படுபவரோ தன் குடும்பத்தில் எரிச்சலான நிலைகள் கொண்டு துடி துடிப்பார்.

1.“இப்படிச் செய்கிறார்களே… பாவிகள்” என்று எரிந்து விழுந்து

2.அவர்கள் உருப்படுவார்களா…! என்ற ஏக்கத்தில் பேசினால் போதும்.

 

இந்த எரிச்சலின் நிலைகள் கொண்டு ஏங்கப்படும் பொழுது தீயை வைத்து எரித்து இறந்து போன அந்த உயிரான்மா இவர் ஏக்கத்தில் இவருக்குள் வந்துவிடுகின்றது.

 

முதலில் தன்னைத் தான் எரித்துக் கொண்டது அந்த ஆன்மா.

 

இந்த உணர்வின் தன்மையை அடுத்தவர்கள் எண்ணும் பொழுது அந்த ஆன்மா இந்த உடலுக்குள் வந்துவிடுகின்றது. வந்தவுடன் இவர்கள் என்ன சொல்வார்கள்?

 

“ஐய்யய்யோ… எரிகிறதே…எரிகிறதே…” என்பார்கள். டாக்டரிடம் சென்று பரீட்சித்துப் பார்த்தால் ஒன்றும் இருக்காது.

1.இரத்தத்தில் சுழலும் இந்த ஆன்மாவை

2.அவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

 

ஆனால் இவர்கள் “எனக்கு எரிகிறது… இங்கே எரிகிறது… அங்கே எரிகிறது…” என்று சொல்வார்கள். அந்த உயிரான்மா இந்த உடலுக்குள் வந்தவுடன் எரிச்சலையூட்டி அதே எரிச்சலான நிலைகளை அங்கே செயல்படுத்துகின்றது.

 

நாம் எடுத்துக் கொண்ட எண்ணம் எமனாகும் பொழுது எமன் என்ன செய்கின்றான்? அங்கே “தீச்சட்டிக்குள் போட்டு வாட்டுகின்றான்…” என்று காட்டுகிறார்கள்.

 

தீச்சட்டிக்குள் போட்டு எரிச்சலாகும் பொழுது  “ஐயோ அப்பா…!” என்றால் முடிகிறதா…? இந்த உடலில் எரிச்சலை எடுத்து “இப்படிப் பேசினார்களே…” என்று எரிந்து எடுத்துக் கொள்ளக்கூடிய எண்ணம் இங்கே எமனாக வருகின்றது.

 

இந்த உணர்வுகள் வந்தவுடன் சீக்கிரம் விளைந்து விடுகின்றது.

 

சித்திரபுத்திரன் என்ன செய்கின்றான்? கணக்குப் பிரகாரம் “நீ முடித்துக் கொள்…” என்று எமனிடம் ஒப்படைத்துவிடுகின்றான்.

 

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான். நம்முடைய எண்ணம் தான் நம் அடுத்த உடலைச் சிருஷ்டிகின்றது.

 

நாம் எந்தெந்த குணத்தை எடுத்தோமோ அதற்குத் தகுந்த உடலைப் பெற்றுவிடுகின்றோம். மனித உடலோ அல்லது வெறொரு உடலோ பெறுகின்றோம்.

 

“என்ன வாழ்க்கை…!” என்று எண்ணித் தற்கொலை செய்து தன்னை எரித்து மாய்த்துக் கொண்டாலும் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கேயும் “எரிகிறதே…எரிகிறதே…” என்று எரியச் செய்யத்தான் முடியும்.

 

பின் அந்த உடலையும் மாய்த்து அடுத்து எரிச்சல் உணர்வு கொண்ட ஒரு மிருகமாகவோ எரிப்பூச்சியாகவோ பிறக்கும்.

1.அதை யார் தொட்டாலும் எரிச்சலாகும்.

2.ஆக மொத்தம் எல்லாவற்றையும் எரிக்கும் நிலைகள் தான் வருகின்றது.

 

இது தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்பது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

 

இயற்கையின் உண்மை நிலைகள் அனைத்தும் ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் தெளிவாக உள்ளது. இன்று அதையெல்லாம் சாங்கியமாக சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டு அதிலுள்ள மூலங்களை அறியாது வாழ்கின்றோம்.

 

நாம் எடுத்துக் கொள்ளும் எண்ணத்திற்குத் தக்கவாறு தான் எமனாவதும் சொர்க்கலோகமாவதும்.

மிக மிகத் திறமையுள்ளவர்களாக நாம் இருந்தாலும் வேதனை அதிகமானால் அந்தத் திறமை திறமையற்றதாகி “அழித்திடும் உணர்வாக நம்மை இயக்கும்”

Image

Suffering quote

மிக மிகத் திறமையுள்ளவர்களாக நாம் இருந்தாலும் வேதனை அதிகமானால் அந்தத் திறமை திறமையற்றதாகி “அழித்திடும் உணர்வாக நம்மை இயக்கும்”

 

சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

ஒருவன் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்க்கப்படும் போது அவன் படும் வேதனை நமக்குள் வந்தபின் வேதனையின் உருவாக அது நம் உடலுக்குள் வலுப் பெறுகின்றது.

 

ஒருவன் கோபமாகப் பேசும் நிலையில் கொடுரமான உணர்வின் தன்மை வருகின்றது. இது அதிகரித்து விட்டால் நமக்குள் வலுவான நிலைகளில் அது விளைந்து விடுகின்றது.

 

நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ அதே நிலைகள் சாரதியாக அது அமைந்து அவனை உதைக்கச் செல்கின்றோம். அந்த உணர்வுகள் அவனைத் தாக்கும் உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

 

இதைத்தான் “கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ… நீ அதுவாகின்றாய்” என்று காட்டப்பட்டது.

 

அவன் செய்யும் கோபமான உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் போது அதுவாக மாறி “நாமும் கோபக்காரனாக” மாறுகின்றோம்.

 

வேதனைப்பட்டவனின் உணர்வுகளை அதிகமாக நுகரும் போது வேதனைப்படுவரின் உணர்வைச் சுவாசித்துவிட்டால் மயக்கப்படுவோரும் உண்டு.

 

அடிப்பதைப் பார்த்தவுடன் சில பேர் அப்படியே மயங்கிக் கீழே விழுந்துவிடுவார்கள்.

 

கொடூரமாகத் தாக்குவதைப் பார்த்தால் சில பேர் அவனை விடக் கூடாது என்ற நிலையில் வேகமாகத் “தாக்க வேண்டும்” என்றும் எண்ணுவார்கள்.

 

விஷத் தன்மையை அதிகமாக நுகரப்படும் போது இத்தகைய நிலைகள் வந்துவிடுகின்றது. வேதனையைச் சுவாசிக்கப்படும் போது அது சாரதியாக அமைந்து அந்த உணர்வின் தன்மை அந்த மனிதனைக் கீழே வீழ்த்தச் செய்கின்றது.

 

நல்ல குணங்கள் அனைத்தும் இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது.

 

1.நாம் மிக மிகத் திறமையுள்ளவர்களாக இருப்பினும்

2.வேதனை உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது

3.அந்தத் திறமை திறமையற்றதாக மாற்றிவிடும்.

 

நாம் எவ்வளவு வலு கொண்ட நிலைகளில் இருப்பினும் வேதனை என்ற விஷத்தின் தன்மைகளை நமக்குள் கவர்ந்துவிட்டால் நம்முடைய உயர்ந்த குணங்கள் அனைத்தையும் அது மடியச் செய்துவிடும்.

 

“கராத்தே மாஸ்டர்” என்று சினிமாக்களில் அன்று காட்டியிருப்பார்கள். கராத்தேயில் உலகிலேயே அவன் பெரிய சாம்பியன்.

1.அவன் எல்லாவற்றிலும் வெற்றி கொண்டு செல்கிறான் என்ற நிலையில்

2.சூட்சமத்தில் அவன் உணவுடன் ஒரு துளி விஷத்தைக் கலந்துவிட்டார்கள்

3.அவன் செயல் அனைத்தும் போய்விட்டது.

 

உடலின் வலிமை அவனுக்குள் எவ்வளவு இருப்பினும் ஒரு துளி விஷம் அவனை அழித்து மரணமடையச் செய்துவிட்டது.

 

அவன் இந்த உடலில் விளைவித்த உணர்வுகள் அனைத்தும் சோர்வின் தன்மை அடைந்தபின் அவன் மீண்டும் மனிதனல்லாத நிலைகள் கொண்டுதான் செல்ல நேர்கின்றது.

 

எவ்வளவு வீரியத் தன்மைகளை அடைந்தானோ அந்த நிலையை அவன் சிந்தித்துப் பார்க்கும் போது அவனுக்குள் பழி தீர்க்கும் உணர்வுடன் விஷத்தின் தன்மை கலந்ததாக இவனின் ஆன்மா வெளி வருகின்றது.

1.எவன் அந்த விஷத்தை வைத்தானோ

2.எவன் சூழ்ச்சியின் நிலைகள் செய்தானோ

3.அவன் நினைவு அங்கே வந்து அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கும்.

 

இவனை அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அவன் உணர்வு கொண்டு இந்த உடலை இந்த நஞ்சு அழித்தாலும் இவன் நினைவாற்றல் விஷம் வைத்தவனை… “அழிக்க வேண்டும்…” என்ற உணர்வு முன்னனியில் வந்துவிடுகின்றது.

 

அழித்திடும் உணர்வு “முன்னனியில் வந்தபின்” என்ன நடக்கின்றது? அவன் உடலுக்குள் சென்று அது பழி தீர்க்கும் உணர்வாக மாற்றிவிடும்.

1.இந்த உடலின் வலிமை இழந்துவிடுகின்றது.

2.நஞ்சின் வலிமை கூடிவிடுகின்றது.

 

ஒரு உடலுக்குள் சென்றபின் அவனை அழித்துவிடுகின்றது. இவனையும் மனிதனற்ற நிலைகளுக்கு மாற்றிவிடுகின்றது.

 

இவை அனைத்தும் அந்தந்த உடலிலே விளையும் தன்மை “உயிரின் வேலைகள்” என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

பிள்ளைகள் மீது மிகுந்த பாசமாக இருந்தாலும் அவர்களை எண்ணி வேதனைப்படக் கூடாது… ஏன்…?

Spiritual Bodies

பிள்ளைகள் மீது மிகுந்த பாசமாக இருந்தாலும் அவர்களை எண்ணி வேதனைப்படக் கூடாது… ஏன்…?

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின்
1.எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ
2.அந்த உடலுக்குள் தான் போவோம்
3.அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”.

1.பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும்
2.வேதனையுடன் செல்லும் பொழுது
3.பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”. ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும். இதையெல்லாம்
1.ஒரு உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா
2.அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்
4.என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ்கிறோம்…! என்பதைப் படம் பிடித்தது போல் குருநாதர் காட்டியதை யாம் பார்த்ததை உங்களிடம் வெளிப்படுத்துகின்றோம்.

இயற்கையின் உண்மை நிலைகளை குருநாதர் எமக்கு எப்படி உணர்த்தினாரோ அவர் காட்டிய அருள் வழிப்படியே உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம்.

ஏனென்றால் உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் தீய உணர்வுகளிலிருந்து மீண்டு அந்த மெய் ஒளியான மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவதற்காகத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்தக் கணக்குக் கூடினால் இனி அடுத்து…
2.நாம் இன்னொரு உடலுக்குள் செல்ல மாட்டோம்.

ஆகவே நாம் மனிதர்களாகப் பிறந்தவர்கள் உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலையாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

அது தான் மனிதன் அடைய வேண்டிய எல்லை.

“நல்லது நடக்கவில்லையே… நல்லது கிடைக்கவில்லையே…” என்று சோர்வடையாதீர்கள் – அருள் சக்தியால் “காரிய சித்தி” அடையுங்கள்

spiritual success

“நல்லது நடக்கவில்லையே… நல்லது கிடைக்கவில்லையே…” என்று சோர்வடையாதீர்கள் – அருள் சக்தியால் “காரிய சித்தி” அடையுங்கள்

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனையோ நிலைகளை இன்று நாம் பதிவு செய்து கொள்கின்றோம். உதாரணமாக
1.புத்திர பாக்கியம் வேண்டுமென்றால்
2.“புத்திர பாக்கியம் வேண்டும்…” என்று பதிவு செய்து கொண்டால்
3.அந்தப் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், அதற்கு மாறாக “புத்திர பாக்கியம் இல்லையே… இல்லையே… இல்லையே…” என்று இப்படிப் பதிவு செய்து கொண்ட பின்
1.அந்த உணர்வுகளே அதிகரித்து
2.அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைப்பது காலதாமதமாகி விடுகின்றது.

காரணம் சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் போது இந்த அணுக்கள் வீரியத் தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது.

அது பலவீனம் அடைந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் “பதிவு செய்து கொண்ட நிலைகள்” எல்லாம் நாம் மீண்டும் நினைக்கும் போது இயக்கத்திற்கு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

அதே மாதிரி ஒரு குழந்தைக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” வருபவர்கள் எல்லாம் வந்து வந்து செல்கின்றனரே…” என்றுதான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும் போது நம் ஆன்மாவில் கலந்து
1.பெண் பார்க்க வருபவர்கள் நம் சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
2.நம் சொல்லைக் கேட்கும் போது
3.அவர்களும் சோர்வின் நிலையை அடைகின்றார்கள்.

அப்பொழுது “நம் எண்ணமே…” பார்க்க வருபவர்களின் நிலைகளைச் சீராக பேச்சுத் தொடராதபடி அதன் வழியே அந்தத் திருமணங்கள் நடைபெறாது போய்விடுகின்றது.

நாம் எண்ண வேண்டியதை விட்டு விடுகின்றோம். ஆகவே நாம் எப்படி எண்ன வேண்டும்?

நமது பெண் “எங்கே” திருமணமாகிச் சென்றாலும்
1.அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்
2.அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்.
3.அந்தச் சக்தி நம் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.அடிக்கடி நாம் எண்ணுதல் வேண்டும்.

பெண்ணும் இதே போல் எண்ணினால் துரிதமாக அதற்கு நல்ல வரனும் கிடைக்கும். அது தன் எதிர்காலத்திலும் நல் வாழ்வு வாழும். அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை வாழ வைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொண்டபின் “எப்பொழுதுமே…” வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களுக்குச் செல்லும் போதும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் ஒரு ஐந்து நிமிடம் செலுத்துதல் வேண்டும்.

செலுத்திவிட்டு எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவை அனைத்தும் காரிய சித்தியாக வேண்டும்.

எங்கள் சொல் மற்றவர்களை நல்லவராக்க வேண்டும். எங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் பெண்கள் அடிக்கடி இந்த ஆத்ம சுத்தி செய்து உங்கள் எண்ணத்திற்கு வலுவைக் கூட்டி
1.குழந்தைகளுக்குத் திருமணம் ஆக வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைய வேண்டும்
3.குழந்தைகளுக்குச் சீக்கிரம் தொழில்கள் கிடைக்க வேண்டும்
4.வியாபாரம் பெருக வேண்டும்
5.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேர வேண்டும்
6.வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நீங்கள் இவ்வாறு எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இவ்வாறு எண்ணி வந்தால் உங்களுடைய காரியங்கள் சித்தியாகும்.

பதட்டமும் ஆத்திரமும் நம்மை அறியாமல் உடலை இயக்குவது ஏன்…?

Lord Shiva tandav

பதட்டமும் ஆத்திரமும் நம்மை அறியாமல் உடலை இயக்குவது ஏன்…? 

ஒரு வீணையை வாசிக்கும் பொழுது காதிலே கேட்டவுடன் அந்த இனிமையான நாதம் நம்மை மயக்கச் செய்கின்றது. ஆனால் அதிலே நாதங்கள் பேதங்களாகிவிட்டால் உடனே நம் உடலில் ஒரு விதமான வெறுப்பு ஏற்படுகின்றது.

ஏனென்றால் அந்த நாதங்களை ஒழுங்குபடுத்தி வாசிக்கும் பொழுது நம்முடைய உடல்கள் அசைகின்றது. அதன் மேல் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

வீணையில் நாதத்தின் சுருதிகள் மாறும் பொழுது செவியில் கேட்டவுடன் அந்த உணர்ச்சியின் தூண்டுதலால் அதன் மீது வெறுப்பாகி எழுந்தும் போகச் செய்கின்றது.

உட்கார்ந்து கேட்க முடிவதில்லை.

இதைப் போல் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வெறுப்பான உணர்வுகளானவுடன் நம் உயிரான ஈசனிடத்தில் பட்டு அந்த வேகமான உணர்வுகள் உடலுக்குள் போனவுடன் நல்ல குணங்களெல்லாம் பதறுகின்றது.

இத்தனை குணங்களையும் தாங்கியிருக்கும் உடல் “பட..பட…” என்று துடிக்கின்றது. பயமோ ஆத்திரமோ வந்துவிட்டால் துடிக்கின்றது. நம் உயிரான ஈசனிடத்தில் படும் பொழுது அவனுக்கு எரிச்சலாகின்றது.

அந்த எரிச்சலான குணம் வெறுப்பாகப் பேசுவதைக் கேட்டு வெறுப்பாக நாம் சொன்னாலும் அந்த உணர்வுகள் உயிரிலே படுகின்றது.

நம் உயிரான ஈசனிடத்தில் அந்த மணம் பட்டவுடன் அவனுக்கு எரிச்சலாகின்றது. எரிச்சலான உணர்வு வரும் பொழுது

1.கண்கள் கோவைப் பழம் போன்று சிவக்கின்றது.
2.காதும் விடைத்துவிடுகின்றது.
3.வாயிற்குள் பார்த்தால் எரிச்சல் “ஆ…” என்கிற நிலை வருகின்றது.
4.உடலுக்குள்ளும் எரிச்சல்.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் பாயும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களில் பட்டவுடன் தசைகள் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நல்லதைச் செய்யும் தெய்வமாக எண்ணுகின்றோம். நம் உடல் சிவம்.

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் சுருதிக்கொப்ப நம் “நாடி நரம்புகள்” அப்படியே துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் எரிச்சலாக இருக்கும் பொழுது நம் உடல் இப்படியெல்லாம் மாறுகின்றது. ஒரு இடத்தில் நிலை கொள்ள விடுவதில்லை. ஆத்திரம் வந்தவுடன் “ருத்ர தாண்டவம்” ஆரம்பித்துவிடுகின்றது.

நம் நரம்புகள் துடிக்க ஆரம்பித்துவிடுகின்றது. நம் உடலான சிவன் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்துவிடுகின்றது.

நாம் அல்ல.

கோப உணர்ச்சிகள் வந்தவுடன் ஈசனிடத்தில் பட்டவுடன் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

கோப உணர்வுகள் நம் நல்ல குணங்களில் பட்டவுடன் அது பதறுகின்றது. நல்ல குணங்களைத் தாங்கியுள்ள இந்த உடலான சிவம் என்ன செய்கின்றது?
1.அது தானாகவே அசைய ஆரம்பிக்கின்றது.
2.நீங்கள் கட்டுப்படுத்தினாலும் அது முடிவதில்லை.

இதுவெல்லாம் சந்தர்ப்பத்தினால் நிகழக் கூடியது. மனிதனாக இருக்கக்கூடியவர்கள் நாம் இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பிறர் தவறு செய்யும் பொழுது நீ குறைகளைச் செய்கிறாய் என்று சொல்கிறோம். ஆனால் அந்தக் குறையான உணர்வு வரப்படும் பொழுது
1.அந்தக் குறை நம் உடலை ஆட்டிப்படைக்காதபடி
2.நமக்கு ஆத்திரம் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

நமக்கு நாமே நம்மைக் கோபப்படச் செய்யும் குரோதப்படச் செய்யும் வேதனைப்படச் செய்யும் சோர்வடையச் செய்யும் இந்தக் குறைகள் நமக்குள் வராதபடி தடுத்து நிறுத்த வேண்டும்.

அதைத் தடுத்து நிறுத்துவதற்காகத்தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் அந்த அருள் ஞானிகளின் ஆற்றல்களை நீங்கள் எடுத்து உடல் முழுவதும் பரவச் செய்யும் பொழுது
1.உங்கள் மனக்க கலக்கத்தைத் தடுத்து நிறுத்தும்.
2.மன பலம் கிடைக்கும். மன நலம் கிடைக்கும்.

குறையான உணர்வுகளை நாம் எங்கே காணுகின்றோமோ யார் மீது காணுகின்றோமோ எந்த வழிகளில் காணுகின்றோமோ அந்த நேரத்தில் ஆத்ம சுத்தி செய்துவிட்டு அதைப் பார்த்தீர்கள் என்றால் அதன் வீரியம் நம்மைப் பாதிக்காது.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் அவர்களுக்குள் உதயமாக வேண்டும் என்று இந்த உணர்வை அவர்களுக்குப் பாய்ச்சிடல் வேண்டும்.

இதன் மூலம் நமக்கும் நல்லதாகின்றது. நாம் பாய்ச்சி உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்றால் அவர்களுக்கும் நல்லதாகும்.

கண்ணா… பரந்தாமா… ஆபத்பாந்தவா… அனாதரட்சகா…!  – விளக்கம்

Image

Paramathma

கண்ணா… பரந்தாமா… ஆபத்பாந்தவா… அனாதரட்சகா…!  – விளக்கம்

 

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

 

தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எதிலெல்லாம் நினைவைச் செலுத்துகின்றதோ

1.அந்த உணர்வின் நினைவலைகளை

2.கண் கருவிழி “ருக்மணி” முன்னாடி பார்த்து அது படமெடுக்கின்றது.

 

3.அதற்கு எதிர் நிலைகள் வரும் பொழுது “சத்தியபாமா”

4.அந்த உணர்வின் உண்மையினுடைய நிலைகளை அது ஈர்த்து

5.தனக்குள் சுவாசித்து இந்த உடலைப் பாதுகாக்கின்றது.

 

இந்தத் தத்துவத்தைச் சிறுகச் சிறுக எழுதி கண்ணன் மகாபாரதப் போரை நடத்தினான் என்று காவியம் எழுதினார்கள் ஞானிகள்.

 

நாம் ரோட்டிலே செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையிலே செல்கின்றோம்.

 

எந்த உணர்வின் நினைவைச் செலுத்துகின்றோமோ இந்த எண்ணம் நம் கண்ணிலே அந்த உணர்வுகளைச் செலுத்தியபின் அதைக் கொண்டு பார்த்துச் செல்கின்றோம்.

 

அப்பொழுது இடையிலே ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாடு மிரண்டு வருவதைக் கண்ணிலே இருக்கக்கூடிய

1.கருவிழியான இந்த ருக்மணி பார்க்கின்றது.

2.மாடு குதிப்பதை நம் கண்ணுக்குள் அழகாகக் காட்டுகின்றது,

3.மகிழ்கின்றது அந்த ருக்மணி.

 

ஆனால் மாடு மிரண்டு அதிலிருந்து வெளிப்படும் மூச்சலைகளின் உணர்வலைகளை

1.சத்தியபாமா அந்த உணர்வின் சக்தியை இழுத்து

2.என்னைச் சுவாசிக்கச் செய்கின்றது.

 

அப்படிச் சுவாசித்து உயிரிலே பட்டவுடனே எனக்குப் பயத்தை ஊட்டி என் உடலை அசைக்கச் செய்கின்றது. இதற்குப் பெயர்தான் சத்தியபாமா, “உண்மையைச் சொல்கின்றது”.

 

இதுதான் கண்ணா பரந்தாமா. நம் கண் இங்கே பரவிக் கிடப்பதை அனைத்தையுமே தமதாகக் காட்டுகின்றது.

 

கண்ணா, பரந்தாமா, ஆபத்பாந்தவா, அனாதரட்சகா. நாம் ரோட்டில் போகும் பொழுது அந்த மாடு மிரண்டு வருவதை இந்தக் கண் நமக்குக் காட்டி அந்த உணர்வின் சத்தை அது இயக்கிக் காட்டுகின்றது.

 

1.மாடு முட்டுவிடும் என்ற அந்த உண்மையை உணரச் செய்து

2.எனக்குள் பயத்தை ஊட்டி அந்தப் பாதைக்குப் போகாதபடி

3.பயமான உணர்வலைகள் பட்டவுடனே என் கண் மங்கலாகி

4.இந்தப் பக்கமாகத் திரும்பி என்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்குத் திசை திருப்புகின்றது.

 

அதைத்தான் கண்ணனை – ருக்மணி சத்தியபாமா என்று இரண்டு பேரில் ஒருத்தி ஒரு பக்கம் இழுக்கின்றாள் ஒருத்தி இன்னொரு பக்கம் இழுக்கிறாள் என்றார்கள்.

 

இந்த இரண்டு சம்சாரத்திடமும், “கண்ணன் படுகிற பாடு பெரும் அவஸ்தை” என்று அதற்கு ஒரு கதையை எழுதி நமக்கெல்லாம் புரியும்படி வைத்திருக்கிறார்கள்.

 

ஏனென்றால் “சத்ரு மித்ரு” – எலெக்ட்ரிக்கினுடைய நிலைகள் எப்படி பாசிடிவ் நெகடிவ் என்ற நிலைகள் இயங்குகிறதோ அதே போல மனிதன் வாழ்வதற்கு இத்தகைய சக்தி தேவை.

 

நமக்குத் தெளிவான நிலைகளில் அதை உணர்த்துவதற்குக் காவியப்படைப்பாக நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

 

ஞானிகள் கொடுத்த இந்த மூலங்கள் கொண்டு மகாபாரதத்தைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உணர்வுகளுக்குள் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் இயங்குகிறது?

 

கண்களின் துணை கொண்டு அதை நாம் எப்படித் திரும்பத் திரும்ப அந்த நினைவுகளைக் கொண்டு வந்து இயக்குகின்றோம்?

 

புதுப் புது எண்ணங்கள் எப்படி வருகின்றது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? உணர்ச்சிகளை எது எப்படித் தூண்டுகிறது? உணர்ச்சிக்கொப்ப நம் உடலின் செயல்கள் எப்படி மாறுகின்றது என்பதை நம்மை நாம் அறிய முடியும்.

 

கண்ணன் தான் மகாபாரதப் போரை வழி நடத்துகின்றான் என்று தெளிவாக அன்று வியாசர் காட்டியுள்ளார்.

 

அதே கண்களின் துணை கொண்டு தீமைகளை நாடாது அருள் ஒளியின் தன்மையைப் பெற்று இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்பதையும் நாம் அறிய முடியும்.

எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!

Image

lord-eswara-lingam

எங்கெங்கோ செல்லும் என் நினைவு எல்லாவற்றிலும் “நீ…” இருக்க வேண்டும் ஈஸ்வரா…! உன் நினைவாகவே நான் என்றும் இருந்திட அருள் புரிவாய் ஈஸ்வரா…!

 

என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் உடலின் உணர்வின் ஆசை இல்லாது என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு “ஈஸ்வரா….”

 

இந்த உடலின் உணர்வின் ஆசை எனக்குள் வளர்ந்திடாது

1.“உயிரான… உன்” ஒளியான நிலைகள் கொண்டு

2.அந்த உணர்வின் நினைவாக எனக்குள் என்றும் நீ இருந்துவிட வேண்டும் “ஈஸ்வரா…”

3.உன் நினைவாகவே நாம் இருக்க நீ அருள் புரியவேண்டும் “ஈஸ்வரா…” என்று வேண்டினால்

4.நமக்குள் குருவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் அருளை நிச்சயம் பெறுவோம்.

 

இதனின் துணை கொண்டு நாம் செல்வோம் என்றால் “நான்…!” என்பது ஏது..? அவனுடன் ஒன்றிய இயக்கமே நான் ஆகின்றது.

 

நான் தவறு செய்தாலும் நான் ஆகின்றது. அவனுடன் ஒன்றிய நிலைகள் தவறின் நிலைகள் நமக்குள் வேதனை தரும் பொழுது அவனுக்கும் வேதனை தருகின்றது. அப்பொழுது நமக்குள்ளும் வேதனையை உணர்த்துகின்றான்.

 

வேதனைகளிலிருந்து அகற்றிட

1.அவனின் ஒளி கொண்டு

2.இருளை அகற்றிடும்… இருளைப் போக்கிடும் நிலையாக…

3.ஒவ்வொரு உணர்வையும் “பிளந்து காட்டுகின்றான்”

4.உணர்வின் செயலை உணர்த்துகின்றான்.

 

நமக்குள் அறியாது வந்த தீமைகளைப் பிளந்திடும் ஆற்றல் பெற்ற… அறிந்திடும் ஆற்றல் பெற்ற… “அவனின் நினைவு” எப்பொழுதும் நமக்கு வந்து கொண்டேயிருக்க வேண்டும்.

 

அறிந்திடும் ஆற்றலைக் கொடுக்கும் உயிரின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அறிவின் ஆற்றலை நமக்குள் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 

விண் சென்ற ஞானிகள் அனைவரும் உயிருடன் ஒன்றியே ஒளியின் சரீரம் பெற்றார்கள். உயிரைக் கடவுள் என்று உரைத்தனர். ஆகவே

1.என்றுமே ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு

2.அந்த ஈசனைப் பற்றுடன் பற்றி

3.குருவாக இருந்து வழி காட்டும் நிலைகள் கொண்ட

4.அவனின் அருளை நாம் அனைவரும் பெற வேண்டுவோம்.

 

அவனுடன் அவனாக… அவனாகவே…, “நாம் அனைவரும் ஆவோம்”.